Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. ஒரு சிலர் தடம்புரள்வது என்பது வழமையான ஒன்று. இப்படி பார்த்தால் கொசாவோ வாக்கெடுப்பு நடந்திருக்காது. கிழக்கு திமோர் வாக்கெடுப்பு நடந்திருக்காது... தென் சூடான் வாக்கெடுப்பு நடந்திருக்காது. ஏன் தென்னாபிரிக்கா விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது. அல்ஜீரியாவில் பிரான்ஸ் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்திருக்காது. ஆக நாம் எமது தார்மீக உரிமைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்னிறுத்தாமல்.. சர்வதேசத்திடம் இதைச் செய் அதை செய் என்று கோரி நிற்க முடியாது. எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் கோடரிக்காம்புகள் உண்டு. அவற்றை விஞ்சி தான் எல்லா உரிமைப் போராட்டங்களும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆயுதப் போராட்டம் தோற்ற நிலையிலும்.. பல போராட்டங்கள் தொடர் உரிமைக்குரலால் வெற்றி பெற்றதே யதார்த்தம். எமது ஆயுதப் போராட்டம் தேவையான அளவுக்கு எமது உரிமைக்குரலை சர்வதேச மயப்படுத்தி இருக்குது. ஆனாலும் தொடர்ந்து நாம் எமது உரிமைக்குரலுக்கு அதற்கான நியாயத்திற்கு முன்னுரிமை வழங்கி சர்வதேசத்தின் முன் தொடர்ந்து எம்மை முன்னிறுத்தாமல்.. எமக்கான உரிமையை தேச விடுதலையை சாத்தியமாக்க முடியாது. தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எப்போதையும் விட இப்போது இன்னும் இன்னும் முன்னிறுத்த வேண்டியதும் அதை தொடர வேண்டியதும் மிக அவசியமாகும்.
  2. மக்களின் வரிப்பணத்தில் வாழும் பிரித்தானிய அரச குடும்பத்தின் ஒன்றுமில்லாத கெளரவ பட்டங்கள் (சேர் பட்டம் உள்ளங்க) தான் இவை. இதற்காகவே தான் தமிழினத்தை காட்டிக்கொடுத்து இன்று நடுவீதியில் நாடற்ற அகதிகளாக்கி விட்டுள்ளனர்.. இராமநாதன் போன்றவர்கள். கடந்த ஆண்டில் இந்த கெளரவ பட்டம் பெற்ற ஒருவர் தான்.. கொரோனா காலத்தில் அரசை தவறாக வழிநடத்தி பல்லாயிரம் உயிர்களை பாதுகாக்க தவறிவிட்டமை அண்மையில் விசாரணை அறிக்கையில் சொல்லப்பட்டிருந்து. உண்மையில் சார்ள்ஸுக்கு இந்த கெளரவப் பட்டங்களை எதுக்கு வழங்கிறம் என்ற புரிதல் இருக்கோ தெரியாது, சிபார்சு செய்யப்படும் ஆக்களுக்கு குத்தி விடுது... இப்படி பல விமர்சனங்கள் பிரித்தானியர்கள் மத்தியில் உண்டு.
  3. தையிட்டி... வவுனியா திருகோணமலை... அரசியல்வியாதிகள் ஒட்டுக்குழு கூலிக்கொலைஞர்கள் கைதுகள் என்று மக்களைப் போக்கு காட்டிக் கொண்டு என் பி பி அரசும் ரணில் செய்ததை தான் செய்யினம்...
  4. ஏன் எல்லா நாட்டிலும் பாடத்திட்டங்களில் இது படிப்பிக்கப்படுகுது.. நிச்சயம் வினாக்களில் வினவப்படுகுது. அதுக்கு அப்புறமும் விளக்கல்லையாமா.. வீட்டில பறைஞ்சு பேச....! இந்த கட்டுரையாளர் பள்ளிக்கூடப் பக்கம் போகாத காட்டு வாசியா...??!
  5. வெடிச்ச குண்டுகள் ஒழுங்கா வெடிச்சிருந்தால்.. இந்த கைதுக்கும் இடமிருந்திருக்காது.. பல நூறு அப்பாவி உயிர்களும் ஒரு இனத்தின் அழிவும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். எல்லாம் காலக் கொடுமையின் தொடர்ச்சி.. இப்படியானதுகள் இன்னும் உயிர் வாழ்வது.
  6. தமிழ் நாட்டில் மட்டுமே வாழ வைக்கப்பட்டிருக்கும் போலித் திராவிடம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்கில்லை. ஏன் இதே திரா(விட)த்தை கேராளாவில் பேசி தி மு க ஆட்சி அமைக்கவில்லை..??! கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை..??! தெலுங்கானாவில்.. ஆந்திராவில் ஆட்சி அமைக்க முடியவில்லை..??! எல்லாருக்கும் அரசியல் சவாரிவிட இழிச்சவாய் தமிழன் தான் கிடைச்சான் ஆக்கும். சீமானின் துணிச்சல் பாராட்டத்தக்கது. திராவிடப் பொய் கூச்சலும்.. தமிழ் மொழி.. இன எதிர்ப்பாளர்களான ஈ வே ரா போன்ற துரோகிகளின் பெயரை வைச்சு போலித் திராவிட ஆட்சி நடத்துவதற்கு முடிவு கட்டாமல்.. தெற்காசியாவில் தமிழரின் இருப்பை பாதுகாக்க முடியாது. தென்னிந்தியாவில் திராவிட.. பார்பர்னிய ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தேசம்.. இலங்கையில் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தேசம். ஒட்டுமொத்தத்தில் தமிழர்கள் தேசம் எங்கும் ஆக்கிரமிப்பும் இன அழிப்புப்புமே தொடர்கிறது. ஆனால் சிலர் இந்த விளக்கமின்றி அந்நியநாடுகளில் ஒட்டி வாழ்ந்து கொண்டு சீமானுக்கு வகுப்பெடுப்பது தான் வேடிக்கை விநோதமாக உள்ளது,
  7. சர்வதேச முக்கியம் பெற்ற போதும்.. இந்தப் படுகொலைகளுக்கு இன்று வரை தீர்வில்லை. இதில உக்ரைனில ரஷ்சியாவுக்கு வகுப்பெடுக்கினம்.
  8. சாதாரண சில சிங்களவர்களுக்கு புரிதல் வந்தாலும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் கடற்படை விமானப்படை பொலிஸுக்கும்.. சிங்கள பெளத்த மேலாதிக்க சிந்தனை நிறைந்த சிங்கள பெளத்த பயங்கரவாதப் பிக்குகளுக்கும் இந்த விளம்பரங்களால் அறிவூட்ட விளைவது வீண் முயற்சியாக்கும். புலிகள் சிங்கள மக்களுக்கு புரிய வைக்க தமிழீழ வானொலியில் சிங்கள மொழி நிகழ்ச்சி நடத்தியது தான்.. நினைவுக்கு வந்து போகுது..! பலன்...??????!
  9. தமிழனக் கொலையாளிகளை பாதுகாக்க முனையும் தமிழினவழிப்பாளர்கள். இதில் வியப்பில்லை தானே. ஏவியவர்கள் விசுவாச அம்புகளை பாதுகாக்கவே செய்வர். இல்ல எல்லாரும் மாட்டுப்பட வேண்டி ஏற்படும்.. சங்கிலித் தொடராக.
  10. இவருக்கு எப்படி இங்க நிலம் கிடைத்தது... எம்மவர்கள் விற்றார்களா..???! இல்ல இவர் இடையில் புகுந்து விளையாடுறரோ.. ??! இவர் நயினாதீவில் அடாத்தாப் பிடிச்சதை எப்ப விடப்போறார்..????! இவர் இனக்கொலைஞன் மகிந்தவின் விசுவாசி...! இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவதும் தனித் தமிழீழத்துக்கான ஐநா மேற்பார்வையின் கீழ் நீதியான தேர்தலை வடக்குக் கிழக்கில் நடத்துவதுமாகும். இல்ல இந்தப் பிரச்சனை தொடரும். புங்குடுதீவில் விகாரை,.. நாவற்குழியில் விகாரை... கிளிநொச்சியில் விகாரை.. யாழில் விகாரைகள் என்று.. தமிழர் தாயகம் எங்கும் விகாரைகள் தீர்வின்றி எதிர்ப்புகளையும் தாண்டி முளைத்தே வருகின்றன. இதற்கு முடிவு... சர்வதேச தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்ட தமிழர் தேசத்தை சர்வதேசத்தின் தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி நீதி நிர்வாக பொருண்மிய அதிகாரங்களை தமிழர்களிடம் வழங்குவது மட்டுமே ஆகும். மற்றும்படி.. இதற்கு நிரத்தர தீர்வை எவரும் பெற முடியாது என்பதே கள நிஜமாகும். இந்தப் பிரச்சனை சர்வதேச மயப்படாமல்... தமிழர்களுக்கு விடிவில்லை...!!
  11. மலையக தமிழ் மக்களின் நில உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுதலித்து மலையக தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரின இனச்சுத்திகரிப்டஸ்ரீபுக்க துணை போவதே இந்த அழைப்பின் உண்மை நோக்கம். போர் கால பாதுகாப்பு முஸ்லிம் குடிபெயர்வை இனச்சுத்திகரிப்பு என்றவர் இந்த இன சுத்திகரிப்புக்கு தெரிந்தும் துணை போவது ஏன்?? அ. திட்டமட்ட கருத்தடை ஆ. மக்கள் நல அபிவிருத்தி இன்மை இ. உழைப்புக்கு ஏற்ற ஊதியமினமை ஈ. பாதுகாப்பற்ற வாழ்விடங்கள் உ. நீர்தேக்க விரிவாக்கம் என்ற போர்வையில் வாழிட நிலப்பறிப்பு ஊ. நிர்வாகம் கல்வி கலாசாரம் சிங்கள பௌத்த மயமாக்கம் எ. விகிசாதார கல்வி வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு ஏ. தோட்ட மக்களின் நவீன தேவைகளுக்கு பிற நகரங்களை தங்கி இருக்கரசெய்தல் ஐ. திட்டமிட்ட இனக்கலவரங்கள் சொத்தழிப்பு ஒ. இயற்கை அனர்த்தங்களுக்கு சரியான நிவாரணமின்மை.. எதிர்கால அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க நீண்ட கால திட்டங்கள் செயற்படுத்தாமை. இவற்றோடு இயற்கை அனர்த்த அழிவை பயன்படுத்தி மலையக தமிழ் மக்களை துரித இனச்சுத்திகரிப்பு செய்ய நிற்கும் ஜேவிபிக்கு இவர் ஏன் அடி எடுத்து கொடுக்கிறார்????
  12. சாடிக்கான் லண்டன் மேஜரான பின் லண்டனில் வன்முறை களவு சமூக விரோத சட்டவிரோதச் செயல்கள் எல்லாமே அதிகரித்துவிட்டன.
  13. விஜய் கொள்கை இல்லாததுகளை எல்லாம் எதுக்கு உள்வாங்கி தன் கட்சிக்கு தானே குழிதோண்டுறாரோ தெரியாது.
  14. காலஞ்சென்ற யாழ் கள உறுப்பினர் சோழியான் அண்ணா ஊடாக அறிமுகமானவர் இராஜன் அண்ணா. அப்போதைய புலம்பெயர் காலக்கட்டத்தை மையமாக வைத்து வில்லிசிசைப் பாடல்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது இளைய பராயத்தினரின் கருத்துக்களையும் நடைமுறைகளையும் உள்வாங்க அன்றைய காலத்தில் பல்கலையில் கல்வி பயின்று கொண்டிருந்த எங்களையும் அணுகி வில்லிசைக்கு கதை எழுதித்தரச் சொல்ல.. எழுதிக் கொடுக்க அதையும் வில்லிசையாக்கி சமூகப் படைப்பாக்கி மகிழ்ந்தவர்கள் மகிழ்வித்தவர்கள் சோழியான் அண்ணாவும் இராஜன் அண்ணாவும். யாழ் களத்தில் மட்டுறுத்தினராகவும் இருந்தவர். மிகவும் பண்பான மனிதர். எம் எஸ் என் காலத்தில் தினமும் பல விதமான விடயங்களை உரையாட வருவார். சோழியான் அண்ணாவின் நெருங்கிய நண்பரும் கூட. இப்போ இருவரும் எம்மிடையே இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய மன வேதனை அளிக்கும் விடயம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உறவினர் நண்பர்களோடு எமது இரங்கலையும் பகிர்ந்து கொள்கிறோம். கண்ணீஈரஞ்சலியும்.
  15. போராடி நின்ற பூமியின் காற்றுக்குடித்து கவிதை பாடுவதற்கும்.. தூர இருந்து கவனித்து கவிதை பாடுவதற்கும் இடையில் உள்ள கணதியை வைரம் அறிவார். வைரமுத்து ஈழத்தமிழ் சொந்தங்களுக்காக குரல் கொடுத்தே வந்த ஒருவர். புலம்பெயர் நாடுகளிலும் பல இசை நிகழ்ச்சிகள் மூலம் ஆதரவு கொடுத்தவர். அவரின் யாழ்ப்பாண பயணம் அவருக்கும் யாழ் மண்ணிற்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். எதிர்கால சந்ததிக்கு கவிஞரிடம் இருந்து பெறத்தக்க கவித்துவ வித்துவம் கடத்தப்பட இது உதவினால் நல்லது. சிலர் சிம்மையியை இதில கோர்த்துவிட்டு.. அநாவசியமாக கவிஞரின் யாழ் விஜயத்துக்கு ஒரு விதத்திலும் சம்பந்தப்படாததை பேசுகிறார்கள். சிம்மையி நவீன பத்தினியும் அல்ல.. கவிஞர் நவீன இராமரும் அல்ல. அது இங்கு பேசு பொருளும் அல்ல.. ஈழத்தமிழருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.