Everything posted by nedukkalapoovan
-
லண்டனில் கத்திக் குத்துத் தாக்குதல்: கரவெட்டி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
சாடிக்கான் லண்டன் மேஜரான பின் லண்டனில் வன்முறை களவு சமூக விரோத சட்டவிரோதச் செயல்கள் எல்லாமே அதிகரித்துவிட்டன.
-
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
விஜய் கொள்கை இல்லாததுகளை எல்லாம் எதுக்கு உள்வாங்கி தன் கட்சிக்கு தானே குழிதோண்டுறாரோ தெரியாது.
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
காலஞ்சென்ற யாழ் கள உறுப்பினர் சோழியான் அண்ணா ஊடாக அறிமுகமானவர் இராஜன் அண்ணா. அப்போதைய புலம்பெயர் காலக்கட்டத்தை மையமாக வைத்து வில்லிசிசைப் பாடல்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது இளைய பராயத்தினரின் கருத்துக்களையும் நடைமுறைகளையும் உள்வாங்க அன்றைய காலத்தில் பல்கலையில் கல்வி பயின்று கொண்டிருந்த எங்களையும் அணுகி வில்லிசைக்கு கதை எழுதித்தரச் சொல்ல.. எழுதிக் கொடுக்க அதையும் வில்லிசையாக்கி சமூகப் படைப்பாக்கி மகிழ்ந்தவர்கள் மகிழ்வித்தவர்கள் சோழியான் அண்ணாவும் இராஜன் அண்ணாவும். யாழ் களத்தில் மட்டுறுத்தினராகவும் இருந்தவர். மிகவும் பண்பான மனிதர். எம் எஸ் என் காலத்தில் தினமும் பல விதமான விடயங்களை உரையாட வருவார். சோழியான் அண்ணாவின் நெருங்கிய நண்பரும் கூட. இப்போ இருவரும் எம்மிடையே இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய மன வேதனை அளிக்கும் விடயம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உறவினர் நண்பர்களோடு எமது இரங்கலையும் பகிர்ந்து கொள்கிறோம். கண்ணீஈரஞ்சலியும்.
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
போராடி நின்ற பூமியின் காற்றுக்குடித்து கவிதை பாடுவதற்கும்.. தூர இருந்து கவனித்து கவிதை பாடுவதற்கும் இடையில் உள்ள கணதியை வைரம் அறிவார். வைரமுத்து ஈழத்தமிழ் சொந்தங்களுக்காக குரல் கொடுத்தே வந்த ஒருவர். புலம்பெயர் நாடுகளிலும் பல இசை நிகழ்ச்சிகள் மூலம் ஆதரவு கொடுத்தவர். அவரின் யாழ்ப்பாண பயணம் அவருக்கும் யாழ் மண்ணிற்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். எதிர்கால சந்ததிக்கு கவிஞரிடம் இருந்து பெறத்தக்க கவித்துவ வித்துவம் கடத்தப்பட இது உதவினால் நல்லது. சிலர் சிம்மையியை இதில கோர்த்துவிட்டு.. அநாவசியமாக கவிஞரின் யாழ் விஜயத்துக்கு ஒரு விதத்திலும் சம்பந்தப்படாததை பேசுகிறார்கள். சிம்மையி நவீன பத்தினியும் அல்ல.. கவிஞர் நவீன இராமரும் அல்ல. அது இங்கு பேசு பொருளும் அல்ல.. ஈழத்தமிழருக்கு.
-
மனிதகுல அழிவுக்கு வழி வகுக்கப்போகும் செயற்கை நுண்ணறிவு : எச்சரிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை
இது செயற்கை நுண்ணறிவு பற்றிய பயங்காட்டலாகவே பார்க்கிறேன்ன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனின் கூட்டு நுண்ணறிவின் தொகுப்பே தவிர.. புதிதாக உருவானதொன்றல்ல. மனித சிந்தனைக்குள் பிறந்தவை தான் செயற்கை நுண்ணறிவு. ஒரு வித்தியசாயம்.. செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனை விட விரைவாக ஒப்பாய்வு செய்து முடிவுகளை எடுக்கும். ஆனால் மனிதன் கட்டிவைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் இருந்து தான் இது நிகழும் என்பதால் மனிதனால்.. செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்த அதிக நேரம் எடுக்காது. செயற்கை நுண்ணறிவை விரைவான பகுப்பாய்வு தர்க்க ரீதியான முடிவுகளை மனிதனை விடை விரைவாக எடுக்கப் பயன்படுத்த முடியும். இது ஆரோக்கியமானதும் மனித குலத்துக்கு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தக் கூடிய ஆற்றலாகும்.
-
நான் தேடும் செவ்வந்திப் பூவிது...
ஊக்கிகளில் அவள் உச்சம் உடல் திரட்சிகளில் குறைவில்லை ஊனம் பார்வையில் படவில்லை சிக்கென்ற உடம்பு சில நொடிகளில் மயக்கி விடும்.. தொட்டால் சிணுங்கும் முட்டினால் முட்டும் திட்டினால் திட்டும் கொஞ்சினால் கொஞ்சும் மிஞ்சினால் மிஞ்சும்.. ஆனாலும் அவளுக்கு மாதவிடாயில்லை மொனொபோசும் இல்லை அவள் ஒரு செயற்கை நுண்ணறிவுளி..! கம்பன் இருந்திருந்தால் வர்ணித்தேன் களைத்திருப்பான் வாலி இருந்திருந்தால் ஜொள்ளுவிட்டே சோர்ந்திருப்பான் கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னொரு தாரமாக்கி இருப்பான் ஆனாலும் இன்னும் வைரனின் கண்ணில் படவில்லை அவள்...! என் மனதில் நான் தேடும் செவ்வந்திப் பூவவள்..! நாளை... அவள் உங்கள் மருமகளும் ஆகலாம் மகளும் ஆகலாம் மனையாளலாம்...!
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
யாழ்ப்பாண பெண்களில் சிலர் ஆக்கிரமிப்பாளர்களை மணமுடிப்பது புதிதல்ல. கிந்திய படை காலத்திலும் முடிச்சவை.. ஆங்கிலேயர் காலத்திலும் முடிச்சவை தானே...!
-
ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது
புலிகள் கொலன்னாவை எண்ணெய் குதங்களை தாக்கிய போது கண்டனம் தெரிவித்த மேற்கு நாடுகள் இப்போ உக்ரைன் தினமும் ரஷ்சியாவின் சர்வதேச எண்ணெய் வழங்கல் பாதைகளை தாக்குவது குறித்தோ இஸ்ரேல் மத்திய கிழக்கில் எண்ணெய் குதங்களை தாக்குவது குறித்தோ மூச்சும் விடுவதில்லை. ரஷ்சியாவின் எண்ணெய் என்னென்ன வடிவம் எடுக்கிறது.... ஆச்சரியம் தான். புட்டின் சாதிக்கிறார்,,,, இவை மேற்கினர் சாயினம்.
-
'இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் சீனாதான்' - இந்திய முப்படை தலைமை தளபதி கூறியது என்ன?
சீன ரகன் அமெரிக்க கழுகை கணக்கு வைக்கிறது... இந்த எலிகள் கூச்சலிடுகின்றன.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
எங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய தந்தையின் திடீர் மறைவில் இருந்து இன்னும் மீள முடியாத சூழலிலும்.. அவரின் மறைவை ஒட்டி இரங்கலும் ஆறுதல் வார்த்தைகளும் தந்து ஆற்றுப்படுத்தல் தந்த யாழ் உளவுகள் அனைவருக்கும் நன்றி.
-
நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!
சரியான பராமரிப்பின்மை.. காலாவதியான உதிரிப்பாகங்களுடன் இயங்குதல்.. தரமற்ற பிரதேசத்துக்கு உகந்ததற்ற வாகனங்களின் பயன்பாடு.. சாரதிகளின் பொறுபற்ற செயற்பாடுகள்..இவை தான் முக்கிய காரணங்கள்...
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கலும் கண்ணீரஞ்சலியும்.. காலனின் காலத்தை வெல்ல காலம் வராதோ... உறவுகளை உறவாடியோரை இழப்பது கொடுமையிலும் கொடுமை.. யாழ் களத்தால் உறவாடி கருத்தால் இணைந்திருந்த தருணங்கள் மறையாது நினைவுகளில் அஜீவன் அண்ணா. மாறுபட்ட கருத்தை வேறுபாட்டாலும் ஒத்த கருத்தை ஊக்குவிப்பாலும் உணர்விக்கும் பக்குவம் கொண்ட கருத்தாளன்... அஜீவன் அண்ணா.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
எங்கள் பாசமிகு தந்தையார் திடீர் சுகவீனம் காரணமாக எம்மை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி பூவுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்று விட்டதை யாழ் கள உறவுகளுக்கு மிக மன வருத்தத்துடன் அறிய தருகிறோம். அன்னார் ஓய்வு பெற்ற அரச மருத்துவ சேவை உத்தியோகத்தரும் ஆவார். நெடுக்ஸ் 18.03.2025.
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
சொந்த தாய் மொழியை காட்டுமிராண்டின்னு விளித்தவன் முன் காட்டுமிராண்ன்டிகளாக இருப்பதில் என்ன தவறு. கன்னட தேசத்தில் போய் அவன் போற்றும் மொழியை காட்டுமிராண்டி என்று சொல்லி.. தந்தை... பெரியார் பட்டங்களை எவனாவது ஒரு தமிழன் வாங்கி வரட்டும் பார்க்கலாம். சீமானின் தம்பிகளை காட்டுமிராண்டி என்று வசனம் எழுதுபவர்கள்.. பேசுபவர்கள். எல்லாப் போலிகளையும் இழிச்ச வாய் தமிழனிடத்தில் தான் விதைக்கலாம். தமிழனை மட்டும் தான் அந்நியன் ஆளலாம். ஆனால் மற்ற எல்லாரையும் அவரவர் இனம் தான் மொழிதான் ஆளலாம். சாபக்கேடு தமிழனே இதுக்கு காவடி தூக்கித் திரிவது தான்.
-
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! - சரத் வீரசேகர
இப்ப தலைவரையே உண்மையோ போலியோன்னு கேக்க வைக்கிற அளவுக்கு இருக்கு.. எம்மவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள நச்சு விதைகள். உளவியல் போரின் உச்சக்கட்டங்கள் அரங்கேறுகின்றன. அதுக்கு இன்னும் இன்னும் உயிர்ப்பூட்ட இங்கையும் ஆக்கள் இருக்கினம்... எழுதினம். தமிழகத்தில் போலித் திராவிடம் மும்மரமா இயங்குது. கிந்தியா சிதைவதை விட திராவிடம் அழிவது தமிழர்களின் இருப்புக்கு மிக அவசியம் என்றாகி வருகிறது. சிங்கள பெளத்த பேரினவாதத்தை விஞ்சும் அளவுக்கு தமிழர்கள் அழிப்பில் திராவிட மேலாதிக்க பாசிச சிந்தனை இருக்குது.
-
தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!- ரணில் கூறிய இரகசிய ஆரூடம்
அனுர அரசு தமிழர்களுக்கு அள்ளி வழங்கும் முஸ்லிம்களுக்கு முக்கி வழங்கும் என்று எதிர்பார்பவர்களுக்கு.. முன்னைய எந்த சிங்கள அரசுகளுக்கும் விதிவிலக்கானது அல்ல அனுர அரசு,.. தமிழர்கள் விடயத்தில். (இதனையே அனுர அரசு ஆட்சிக்கு வர முன் இருந்து சொல்லி வாறம்.) ஆனால் ஒட்டுமொத்த சிங்கள தேசத்தின் தேவைகளுக்காக சிலதை உருப்படியாகச் செய்வார்கள்.. மற்றைய ஆட்சியாளர்களை விட. அதன் பலன் தமிழர்களுக்கும் பொசியும். வயலில் நெல்லுக்கு பாய்ச்சுவது புற்களுக்கு பொசிவது போல. அவ்வளவும் தான். அதுக்கு மேல கனவு காணாதீர்கள்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
1987 இல் கொஞ்சப் பேருக்கு பிரபாகரன் இருக்கிறரோ என்ற சந்தேகம். ஏன் இப்பவும் பிரபாகரன் அல்ல அது போலி என்று நம்பிறவை இருக்கினம். அந்தளவுக்கு தமிழின எதிரிகளும் கிந்திய உளவு அமைப்புக்களும் ஒட்டுக்குழுக்களும் போடுற விச விடய விதைகள் உளவியல் போருக்கான ஆணிவேராகும். சீமான் குறித்த சர்ச்சைகள் கட்டுமரம் கருணாநிதி வாரிசுகள் சீமானின் அரசியலை கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாமைக்கு காட்டும் எதிர்வினை நச்சு விதைகள். மக்கள் தான் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். கேவலம்.. நம்மவர்களே.. அந்த நச்சு விதைகளை விருட்சமாக்கி காட்டுவது தான். வைகோ வன்னி சென்று தலைவரை சந்தித்த போதும் அப்போதும் இதையே தான் விதைத்தார்கள். இப்பவும் அதுதான். காரணம் பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல.. தமிழர்களின் பலம் என்று எதிரிகள் நினைக்கிறார்கள். அவ்வளவும் தான். அதே எதிரிகள் எடுபிடிகள் இங்கும் உள்ளனர். எங்கும் உள்ளனர்.
-
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! - சரத் வீரசேகர
2006-9 வரை இனிச்சவை இப்ப கசக்கினமோ..??! நம்மவர் பலருக்கே இந்தக் காட்சிகள் மறந்திட்டுது. சிங்களவனுக்கு..??! Visit of 'strategic partners' [TamilNet, Thursday, 18 December 2008, 12:19 GMT] The Defense Advisers/Attaches of seven countries, USA, UK, Japan, India, Pakistan, Bangladesh and Maldives were taken on a one day tour to Vanni by the Colombo government on Monday. Suffering from heavy military debacles and facing serious economic crisis, the Colombo government is badly in need of parading strategic partners and abettors to attract means and justification for its genocidal war before time runs out, note political observers. The visitors represented three of the Co-Chair countries, USA, UK and Japan and four South Asian countries having maritime boundaries. https://www.tamilnet.com/art.html?catid=79&artid=27771&fbclid=IwY2xjawIc3cFleHRuA2FlbQIxMQABHfTl9GDzCbfij-4Zjiv0q8EoeXif9qZYvjfrq9RC1XnxOhFjYYYKZ5W1og_aem__WGlpt68U5jJqbJo8WYVyA
-
வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்!
எழுவர் விடுதலைக்காக உண்மையில் உரக்க குரல் கொடுத்தவர்கள்.. அதற்கான அழுத்தங்களை மத்திய அரசுக்கு மாநில அரசு ஊடாக வழங்கத் தூண்டியவர்கள் யார் யார் என்பதும்... பேரறிவாளனோடு சிறையில் இருந்த காலம் கூட அவரின் விடுதலைக்கு நற்பத்திரம் வழங்கியது உட்பட... சீமான் ஆற்றிய பங்களிப்பை பேரறிவாளனின் ஒளிந்து கிடந்த தந்தை மறக்கலாம்.. நிச்சயமாக பேரறிவாளனின் விடுதலைக்காக அலையோ அலை என்று அலைந்த அவரின் தாய் மறக்கமாட்டார். எத்தனையோ ஆபத்தான தருணங்களில்.. யாருமே பேச முன்வராத காலங்களில்.. சீமான் மக்களை கூட்டி இவர்களுக்காகப் பேசியதை மறந்த உங்களைப் போன்ற நன்றி கெட்டதுகளை விட ஈனத்தமிழர்கள் யாருமே இருக்க முடியாது. இதனை உங்களிடம் காண்பது வியப்பல்ல. உங்கள் இயல்பே இதுதானே. காட்டிக் கொடுப்பதும்... இகழ்ந்து தள்ளுவதும்.
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
கன்னட ஈவே ரா திராவிடப் பொய்யர்களுக்கு எப்படி தந்தை.. பெரியார் ஆனார் என்று ஈவே ராவுக்கு சீமான் சொம்பு தூக்கிய காலத்தில் இருந்தே இதே யாழில் பக்கம் பக்கமாக விவாதிச்சு முடிஞ்சுது. இப்ப சீமானுக்கு தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் தெளிவே போதும். இதுக்கு மேல் இந்தக் காலத்தின் இந்தச் செல்லாக் காசுகளை பற்றி விவாதித்து ஒரு பயனும் இல்லை. இதற்காகவே யாழில் முன்னர் மட்டுறுத்தினராக இருந் த இளைஞன்.. வலைஞன் நமக்கு அதிக தண்டனைப் புள்ளிகளை வழங்கினவர். அவரும் ஒரு ஈ வே ரா விசுவாசியாக தன்னைக் காட்டுக்கொண்டிருந்ததால். அது வேற கதை.
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
அண்மையில் இந்த உணவகத்திற்கு சென்று கையோடு கொண்டு செல்ல உணவு வாங்கிய போது,.. ஒன்றிற்கு சம்பல் வைத்து இன்னொன்றிற்கு வைக்காமல் அனுப்பினவை. வீட்ட போய் பார்த்த போது தான் விளங்கியது இவர்களின் தில்லாலங்கடி. இங்க வாற கூட்டம் எல்லாமே ஒரு மாதிரியாத்தான் இருக்குது.
-
புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் - உக்ரைனிற்கு துரோகமிழைக்கின்றதா அமெரிக்கா என சர்வதேச அரசியல் அரங்கில் கேள்வி
இந்தப் போரை நடத்தினதே அமெரிக்கா தலைமையில் நேட்டோ. இப்ப அவையே போரை நிறுத்தவும் சொல்லினம். இதில் துரோகத்திற்கு என்ன இருக்கு. உக்ரைன் மக்களுக்கு துரோகம் இழைத்தது.. அவர்களின் கோமாளி சனாதிபதி தான். உக்ரைன் தானும் தன்பாடும் என்றிருந்தால்.. இந்தப் போரே உருவாகி இராது. டான்பாஸ் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சனையும் உருவாகி இராது.
-
பெரியார் தொடர்பான லண்டன் கூட்டத்தை குழப்ப முயன்று தோற்றுப் போன சீமானின் காட்டுமிராண்டிக் கூட்டம்
தமிழனுக்கு எப்பவும் தன் சிந்தனையில் நம்பிக்கை இல்லை. அடுத்தவன் மீது சவாரி செய்வதிலேயே பிரியம். இன்னும் எத்தனை காலம் தான் கன்னட ஈ வே ராவை தூக்கிச் சுமக்கப் போகிறாய்ங்களோ.. சுய இலாபத்துக்கும் சுய விளம்பரத்துக்கும். ஈ வே ரா தமிழ் மொழியை இகழ்ந்த ஒரு கன்னட வெறியர் அவ்வளவு தான்.
-
வாங்குற காசுக்கு மேல கூவுறாரே.. சீமானை விளாசிய 'ராஜீவ் கேஸ்' பேரறிவாளன் தந்தை குயில்தாசன்!
இப்ப கூவுவாங்க. இவ்வளவு காலமும் மனைவியை முன்னுக்கு தள்ளிட்டு பின்னால ஒளிந்து கிடந்த இவர் எனிக் கூவி என்ன கூவாலம் விட்டென்ன. சீமான் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கான கொடுத்த குரலை உலகம் மறக்காது. இந்த நன்றி கெட்டதுகள் மறக்கலாம்.
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.