-
Posts
32991 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
அதிமுக தான் குறிப்பாக ஜெயலலிதா அம்மையார் எழுவர் விடுதலைக்கு தீர்மானம் இயற்றி விடுதலையும் செய்தவர். அப்புறம்.. கருணாநிதி கும்பல்.. சோனியா குதூகலக்காதல்.. எல்லாம் ஒன்றாச் சேர்ந்து மத்திய அரசினூடாக செல்லாதாக்கி.. மீண்டும் வழக்கை வேறு திசைக்கு மாற்றி உள்ள போட்டு.. இவர்கள் விடுதலையை கால நீட்டிப்புச் செய்து கொண்டே போயினர்.
-
Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah
nedukkalapoovan replied to விசுகு's topic in துளித் துளியாய்
அண்மையில் பிரான்சில் இருந்து ஒருத்தர் நயினாதீவு கும்பாபிசேகத்தன்று தன் மகளின் திருமண நிகழ்வினை முன்னுறுத்தி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வேட்டியும் சேலையும் இலவசமாக.. கொடுத்தாராம். 23 கோடி செலவு. ஓசி வேட்டிக்கும் சேலைக்கும் அலையுற அளவுக்கு எங்கட தாயக மக்கள் இல்லை... சில வருமானம் குறைந்த மக்கள் கூட தரமானதை கொடுத்தால் தான் வாங்குவினம். அது வரவேற்கப்படனும். ஆனால்... குறிக்கட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் ஓடும் பயணிகள் படகுகளில் கைவைச்சுப் பிடிக்க முடியாத அளவுக்கு கறள். ஆணி எல்லாம் கிளம்பி வெளில நிற்குது. ஆண்கள் பெண்கள் என்று அடசி குப்பை தொட்டி கொண்டு போற மாதிரி கொண்டு போறாங்கள் ஆக்களை. இந்த 23 கோடியை வைச்சு இரண்டு தரமான சர்வதேச சந்தையில்.. பிரான்சில் இல்லாத பயணிகள் படகுளா.. வாங்கி.. ஓட்டிறவனின் வயித்திலும் அடிக்காமல்.. ஒரு 20% வருமானத்தை பாரமரிப்பு செலவுக்கு வங்கியில போடு மாதாமாதம்.. மிச்சத்தை நீங்க எடுங்க என்றால்.. சேவை சிறப்பாக நடக்குதோ இல்லையோ என்று பாருங்கள். அங்கால சொறீலங்கா நேவி செகுசுப் படகுகளில் வருகினம்.. போகினம். அவைக்கு மக்களின் வரிப்பணத்தில் உல்லாசம். வரி கட்டிற சனம் கறள் ஆணி குத்தி ஏற்பு வலி வந்து கிடக்கப் போகுதுகள். சேவையில் உள்ள எல்லாப் படகுகளும் மீள் அமைக்கப்படனும்.. நவீன வசதிகளுடன். அதையாவது செய்யுறாங்களா இல்லை. டக்கிளஸ் வாக்கை வாங்கிறான்.. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் பற்றி அவனுக்கு ஒரு சிந்தனையும் இல்லை. என்ன வாற வெற்றிடங்களுக்கு காசை வாங்கிக் கொண்டு தகுதி இல்லாததுகளை போட்டு போலிப் பெயர் வாங்கிக்கிறான். அந்த வகையில்.. லெபரா பாஸ்கியின் இந்த வெற்றிகரமான முயற்சிக்கு பாராட்டுதல் வேண்டும். அதன் வெற்றிக்குப் பின்னால்.. அவர் சந்தித்த சர்ச்சைகளும் பல. -
பிடிபடும் வரை ஆகோ ஓகோ என்று வாங்கி பாக்கெட்டில் போட்டிட்டு.. போதைவஸ்து மாபியா.. தி மு க வை தமிழகத்தில் இருந்தே விரட்டாமல்..போதையை கட்டுப்படுத்த முடியாது. இதில சொறீலங்காவுக்கு பாலம் வேற. எல்லாம்..ஹராம் ஹராம் என்று கொண்டு இந்த தாடிக்கும்பல் செய்யுற கூத்தே.. தாங்க முடியவில்லை. அதுகள் உலகம் பூரா வியாபித்திட்டு.. எனி கட்டுப்படுத்துவது அவ்வளவு இலகு அல்ல.
-
சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு!
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
மனிதம் உள்ளவைக்கு இதனை வாசிக்கும் போது கண்ணீர் வரும். என்ன இந்த உலகம் இப்போ அதிக சுயநல மனிதப் பிசாசுகளால் ஆளப்படும் நிலைக்கு மக்களே கொண்டு வந்து விட்டிருப்பது தான் பரிதாபமாகிவிட்டது. கண்ணீரஞ்சலி. -
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சாந்தன் தற்போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில்.. தண்டனைகளின் பின்.. ஹிந்திய உச்சநீதிமன்றத்தால் முற்றாக விடுவிக்கப்பட்ட ஒரு ஈழத்தமிழர். அதற்கு முன் அவர் ஒரு சக மனிதர். தமிழகத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பில் சந்தேகம் இருக்கிறது. ஹிந்தியாவில் கொலைக்குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் எல்லாம் வெள்ளையும் சுள்ளையுமா அமைச்சர் பதவியோடு சொறீலங்காவில் வாழும் போது.. மேலும்.. சாந்தனை முன்னாள் போராளி என்பதோ.. ராஜீவ் மரணம் குறித்தோ.. தமிழ் தேசியக் கட்சிகளின் சிலவற்றின் உண்மை முகம் குறித்தோ இங்கு பேசுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. சாந்தனுடன் கூட இருந்தோரே.. சாந்தனுக்கு அஞ்சலி.. கவலை தெரிவிச்சினமோ தெரியவில்லை. குறிப்பாக பேரளிவாளனின் அம்மா. கனடாவில் ஹிந்தியாவுக்கு வேண்டாத சீக்கிரியரின் மரணத்திற்கு கனடா கொதித்த அளவுக்கு ஹிந்தியாவால்.. ஹிந்திய புலனாய்வுப்பிரிவால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சாந்தனின் மரணத்திற்கு நீதி விசாரணைக்கு.. ஏன் தமிழக அரசு உத்தரவிடவில்லை. நீர்கொழும்பு வைத்தியசாலை பிரதேச பரிசோதனை அறிக்கை உண்மையாக வெளிவருமா..???! -
தமிழகத்தில் மாற்றான் தாய் மனப்பாங்குடன் பலியிடப்பட்ட ஈழத்தமிழர் சாந்தனுக்கு கண்ணீரஞ்சலி. அன்று பார்வதி அம்மா.. கட்டுமரம் கருணாநிதி ஆட்சியில். இன்று சாந்தன்.. கட்டுமரம் மகன்.. ஸ்ராலின் ஆட்சியில்.
-
பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
nedukkalapoovan replied to nedukkalapoovan's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
-
பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
nedukkalapoovan replied to nedukkalapoovan's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
அதென்ன 1.5 பாகை செல்சியஸ் அதிகரிப்பு..? ஆம்.. தொழில்புரட்சிக்கு முன்னைய காலத்தை விட அதன் பின் அமைந்த காலத்தில் பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தால்.. முக்கியமாக கரியமிலை வாயு எனப்படும் காபனீரொக்சைட் (முக்கியமாக சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளியேறுவது) அளவு அதிகரிப்பால்.. பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பானது 1.5 பாசை செல்சியஸை தாண்டினால்.. அதன் விளைவு பூமியில் மீள முடியாத அளவுக்கு போகலாம் என்ற எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். அப்போ.. அந்த 1.5 பாகை செல்சியஸ் இப்ப அதிகரிச்சிட்டுதா..? ஆம். 2023 இல் இது பதிவு செய்யப்பட்டிருக்குது. ஆனால்.. இந்த அதிகரிப்பு நிரந்தரமா இல்லையா என்பதை எனி வரும் கால கணிப்புக்கள் தான் சொல்ல வேண்டும். ஆனாலும் கடந்த.. 120,000 ஆண்டு கால பூமியின் வரலாற்றில் 2023இல் தான் ஓர் ஆண்டுக்கான சராசரி பூமியின் வெப்பநிலை இந்த அதிகரிப்பைக் கண்டுள்ளது. சரி இதனால் நமக்கென்ன..?! நமக்கு பல பிரச்சனைகள் வரும். பூமியில் வரட்சி அளவு அதிகரிக்கும். உணவு பயிர்களின் உற்பத்தி குறையும். நுளம்பு போன்ற நோய் பரப்பு பூச்சிகளின் பரவல் எல்லை அதிகரிக்கும்.. புயல்களின் உருவாக்கம் அதிகரிக்கும்.. கடல் மட்டம் இருப்பை விட அதிகரிக்கும்.. துருவ பனியின் உருகும் வேகம் அதிகரிக்கும்.. பஞ்சம் பட்டினி..நோய் தாக்கங்கள் அதிகரிக்கும்.. கடல்வாழ் உயிரினங்கள் அழிவுகளை சந்திக்கும்.. தரைவாழ் உயிரினங்களிலும் பாதிப்புக்கள் அதிகரிக்கும்.. இந்த நிலை தொடர்ந்தால்.. பூமி தரிசாவது நிச்சயம் ஓர் நாள் விரைந்து நிகழும். அது மனிதனால்.. ஊக்குவிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். அதேன்.. இவ்வளவு காலமும் இருக்க இப்பதான் இந்தப் பிரச்சனை வருகுது..?! இது புதிய பிரச்சனை அல்ல. ஏலவே எச்சரிக்கப்பட்ட ஓர் விடயம் தான். வளர்ந்த நாடுகளும் வளர்முக நாடுகளும்.. தங்களின் பொருண்மிய ஆதாயங்களை முன்னிலைப்படுத்தினவே தவிர.. பூமியை பாதுகாப்பதற்கான வழிகளை ஆராய்வதில்.. ஆராய்ந்து செயற்படுவதில்.. கூடிய அக்கறை செய்யாமையே இந்த விளைவு இவ்வளவு துரிதமாக வரக் காரணம். ஏலவே 2100 இல் இந்த நிலை வரும் என்று கூறப்பட்டு.. பின் 2040 என்றான போதும்.. அது 2023 இலே அடையப்பட்டிருப்பது.. தொழில்புரட்சிக்குப் பின்னான நாடுகளின் செயற்பாடுகளில் பூமியை பற்றிய அக்கறையின்மை குறைந்ததே காரணம். அதுக்கு நாங்க என்ன பண்ணுறது..?! இது நாடுகளின் பிரச்சனை என்று பொதுவாக பார்க்கப்பட்டாலும்.. வாழ்ந்த வாழும்..ஒவ்வொரு மனிதனதும் பங்களிப்போடு உருவான பிரச்சனை. எனவே காபன் வெளியீட்டு அளவை குறைப்பதன் மூலம்.. குறிப்பாக பச்சைவீட்டு வாயுங்கள்.. (கரியமிலை வாயு.. மீதேன் வாயு.. உட்பட்ட மேலும் சில வாயுங்கள்) வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம்.. பூமி இந்த பச்சை வீட்டு விளைவில் இருந்து மீள்கிறதா என்று நோக்கலாம். குறிப்பாக கோவிட் காலத்தில் நடைமுறையில் இருந்த நாட்டு முடக்கங்களால்.. சில முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டிருந்தாலும்.. கோவிட் முடக்க தளர்வின் பின்.. மீண்டும் நிலை மோசமாகியுள்ளது. நான் இதை எப்படி குறைக்க உதவிறது..?! பல வழிகளில் உதவலாம். குறிப்பாக சுவட்டு எரிபொருள் பாவனையை குறைப்பதன் மூலம்.. வெளியிடப்படும் மாசு வாயுங்கள் உள்ளடங்க.. கரியமிலை வாயுவின் அளவை குறைக்கலாம். இதற்கு சுவட்டு எரிபொருள் வாகனப் பாவனையை குறைக்க வேண்டும். பொதுப்போக்கு வரத்துப் பாவனையை கூட்டலாம். குறுகிய பயணங்களை நேரத்திட்டமிடலுடன் கால் நடையாகவோ.. துவிச்சக்கர வண்டி மூலமோ மேற்கொள்ளலாம். மீதேன் வெளியேற்றத்தைக் குறைக்கதக்க வழிமுறைகளை அல்லது காபன் மீள் கைப்பற்றல் பொறிமுறைகளை.. அல்லது காபன் சமநிலை செய்முறைகளை பின்பற்றலாம். அதென்ன காபன் மீள் கைப்பற்றல்.. காபன் சமநிலை..??! சுவட்டு எரிபொருட்கள் பன்னெடுங்காலத்துக்கு முன் வளிமண்டல கரியமிலைவாயுவை கொண்டான.. காபன்பெறுதிகளால் உருவாகி.. பூமிக்குள் புதைந்து போன உக்கல்களால் உருவான ஒன்று. அதனால் கரியமிலை வாயுவின் அளவு வளிமண்டலத்தில் படிப்படியாக குறைந்து.. . உயிரினங்கள் தொடர்ந்து.. வாழக் கூடிய வெப்பநிலையுடன் கூடிய சூழல் பூமியில் உருவானது. அதுபோக.. பூமியின் பெருமளவிலான கரியமிலைவாயு கடலோடு கலந்து கிடக்கிறது. மேலும்.. பூமி வாழ் தாவரங்களும்.. கரியமிலை வாயுவை உள்வாங்கி நமக்கு சுவாசிக்க அவசியமான பிராண வாயுவை (ஒக்சிசன்) தருகின்றன. ஆக.. வளிமண்டலத்துக்குள் மேலதிமாக விடப்பட்ட கரியமிலை வாயுவை மீள் கைப்பற்றுவதன் மூலம்.. குறிப்பாக தாவரங்களை பயன்படுத்தி.. அதன் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் அதுவா நடக்குது. காடழிப்பு.. வேலி அழிப்பு.. காணிகளில் உள்ள தாவரங்கள் அழிப்பு.. என்று தாவரங்கள் வெட்டி அழிக்கப்படும் அளவுக்கு அவை மீள் உருவாக்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி.. காபன் சமநிலை செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். அதாவது எடுத்துக்காட்டாக.. நீங்கள் (ஒரு தனி மனிதன்) ஒரு நாளைக்கு பூமியில் சேர்க்கும் 400 கிராம் காபன்சார் வாயுக்களை குறிப்பாக கரியமிலை வாயு.. மீதேன்.. இதனை மீள அகத்துறிஞ்சக் கூடிய பயிர்களை வளர்த்து.. அந்தப் பயிர்களில் இருந்து உங்களுக்கு தேவையான உணவை பெறுவதும்.. மீண்டும்.. அந்த உணவின் வழி வெளியேறும் காபன் அளவை மீளக் கைப்பற்றி.. அதாவது பயிர்களை வளர்த்து.. அதனை மீண்டும் உணவாக்குவது.. இப்படி சுழற்சி முறையில் செய்துவரின்.. உங்களால்.. வளிமண்டலத்தில் சேர்க்கப்படும் நிகர காபன் சார் வாயுக்களின் அளவு பூச்சியமாக இருக்கப் பார்த்துக் கொள்ளலாம். இதனை ஒவ்வொரு மனிதனும் செய்யும் போது.. தனிமனிதன் ஒருவன் வெளியிடும் காபன் சார் பச்சைவீட்டு வாயுக்களின் அளவை குறைக்கலாம். எப்ப பார்த்தாலும் கார் கார் என்று கொண்டு நிற்கிறாங்களே.. இப்ப மின்சாரக் கார் வந்திட்டு அப்பவும் இந்த பிரச்சனை இருக்கா..?? சுவட்டு எரிபொருளை பாவிக்கும் எல்லாப் பயண முறைகளும்.. பச்சைவீட்டு வாயுக்களின் அளவை அதிகரிக்கும். அது காராக இருக்கலாம்.. விமானமாக இருக்கலாம்.. கப்பலாக இருக்கலாம். எனவே அதனை கட்டுப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தின் அளவைக் குறைக்கலாம். ஆம்.. மின்சாரக் கார்கள் வந்துவிட்டன தான். அவற்றால்.. நேரடியாக பச்சைவீட்டு வாயு வெளியேற்றமில்லை. ஆனால்.. மின்சாரக் காரை உற்பத்தி செய்யும் வழிமுறைகளில்.. அதன் மூலப் பொருள் தொடங்கி முடிவுப் பொருள் வரையான பல செயல்முறைகளில் இன்னும் சுவட்டு எரிபொருள் மின்சக்தியே பயன்பாட்டில் இருக்குது. குறிப்பாக நிலக்கீழ் காபன் சார் வாயுக்களை (காஸ்) எரியூட்டி பெறும் மின்சக்தி. ஆக மின்சாரக் கார்கள்.. வீதியில் புகையை கக்கவில்லை என்றாலும்.. அவை உருவான வழியெங்கும் புகை. இவை எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் வரனும் என்றால்.. கார்களின் பாவனையை குறைத்து.. மின்சார பொதுப்போக்குவரத்தை அதிகம் பாவிக்க வேண்டும். குறுந்தூரப் பயணங்களை நடந்து சென்று செய்வதன் மூலம்.. இந்த பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவலாம். ரஷ்சியாவில் இருந்தான இந்த வாயு சப்பிளை குழாய்களை தான் மேற்கு நாடுகள் உக்ரைனை கொண்டு உடைத்தன. அதனால்.. கூடிய ஆதாயம் அடைந்தது அமெரிக்காவின் சுவட்டு எரிபொருள் கம்பனிகள். அவையே இப்போ.. ஐரோப்பாவுக்கான முக்கிய சப்பிளை முகவர்கள் ஆகிவிட்டனர். உக்ரைன் சனநாயகம்.. ஆக்கிரமிப்பு.. யுத்தம் என்பது வெறும் சாட்டு தான்.. அதன் பின்னணியில் இருப்பது.. அமெரிக்காவின் சுயநலம். இந்த யுத்தத்தை நன்கு திட்டமிட்டு ஆரம்பிச்சு வைச்சதே அமெரிக்கா தான். மேலும்.. கூடிய பச்சை வீட்டு வாயுக்களை வெளியேற்றும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா.. சீனா உள்ளிட்ட உலகின் முதன்மை பொருளாதார நாடுகளே முன்னிற்கின்றன. சுழற்சி முறை பயிர்செய்கை உதவுமா..??! ஆம்.. பயிர்களை உற்பத்தி செய்து விளை பொருட்களை ஈட்டிய பின்.. பயிர்க் கழிவுகளை அதே மண்ணில் இட்டு உக்க வைத்து உரமாக்கி மீள் பயிர்செய்கைக்கு அந்த உரமிட்ட வள மண்ணைப் பாவிப்பது.. கூடிய காபன் சமநிலைக்கு உதவும். இதே வீட்டில் பயன்படுத்தும் உணவுப் பொருள் கழிவுகளையும் உரமாக்கி தாவரங்களின் பயன்பாட்டிற்கு அளிப்பதன் மூலம்.. காபன் மீளக் கைப்பற்றலுக்கும்..காபன் சமநிலை செயற்பாட்டிற்கும்.. நாம் சிறுக என்றாலும் பங்களிக்காலம். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் செய்யும் போது காபன் மீளக் கைப்பற்றல் என்பது பெருமளவில் நிகழ வாய்ப்புண்டு. இது தாவர மீதிகளை எரிப்பதனை விட கூடிய காபன் சமநிலையானது. இவ்வளவும் வாசிச்சாப் பிறகு உங்க மூளைக்கு ஒன்னுமே புரியாத மாதிரி இருக்கா.. அதற்கு சுருக்கமாக.. பூமியின் சராசரி வெப்ப அதிகரிப்பு எச்சரிக்கை எல்லை அளவான 1.5 பாகை செல்சியஸை கடந்த ஆண்டில் தாண்டி இருக்குது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னரே நிகழ்ந்துவிட்டது. இது கரியமிலைவாயு போன்ற வாயுக்களின் அதிகரித்த வெளியேற்றத்தால் உருவாகும் பூமி வெப்பமுறுதல் என்ற பச்சைவீட்டு விளைவின் வெளிப்பாடாகும். இதில் மனித செயற்பாடுகளே முதன்மை. இதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனால்.. காபன் சார் வாயு வெளியேற்றச் செயற்பாடுகளை குறைப்போம். (சுவட்டு எரிபொருள் பாவனையை குறைக்கும் எல்லாச் செயற்பாடுகளும் இதற்கு உதவும்) காபன் சார் வாயுக்களை மீள் கைப்பறல் செய்யும் செயற்பாடுகளை ஊக்குவிப்போம். (தாவரங்களை குறிப்பாக மீள் காடாகத்தை ஊக்குவிப்போம். மீள் பயிர்செய்கையை வளப்படுத்துவோம்.) இது நமக்காக மட்டுமல்ல.. நம் எதிர்கால சந்ததிக்கும்.. பூமியின் வளமான எதிர்காலத்திற்குமாகும். உசாத்துணை: https://www.bbc.co.uk/news/science-environment-68110310 https://www.bbc.com/future/article/20231130-climate-crisis-the-15c-global-warming-threshold-explained https://www.ipcc.ch/sr15/ https://www.worldometers.info/co2-emissions/co2-emissions-by-country/ https://www.statista.com/chart/28725/cumulative-co2-emissions-per-country-since-1970/ மேலதிக விளக்கப் படங்கள்: -
தமிழர் பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய IBMS
nedukkalapoovan replied to nedukkalapoovan's topic in தமிழும் நயமும்
நமக்கு விளங்குது உங்கள் தீவிரம். ஆனால் அண்ணா.. நாங்கள் நேரடியாக இந்தத் துறை சாரவில்லை. மருத்துவத்துறை என்பதால்.. பலதையும் அறியும் ஆர்வம் இருக்குது. மின்னஞ்சல்களும் பலதுறை சார்ந்தும் வரும். -
பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
nedukkalapoovan replied to nedukkalapoovan's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
டொலர் தானே அண்ணா.. முந்திரிக்கொட்டை கணக்கா.. தான் தான் முதல்ல என்று நிற்குது. அதுதான். 😄 -
உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்சாரத்தை பெற இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு பற்றாக்குறையாம்... புதுக்கதையாய் கிண்டக் கிண்ட பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி யாருக்கென்ன கவலை..!! எங்கும் ஒரு கூட்டம் எதிலும் வியாபாரம் தனக்கு மட்டும் வேண்டும் இலாபம் இதையே சிந்தனையாக்கி இருப்பதால் பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன் யாருக்கென்ன கவலை..!! எதிர்கால சந்ததியோ தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது 'ரீல்' விட்டே பழகிப் போனதால்.. தொடும் தூர ஆபத்துப் புரியவில்லை.. யாருக்கென்ன கவலை..!! இப்படியே போனால்.. பூமிக்கு அடிக்கும் அனல் குலப்பனில் அழியப் போவது மொத்த உயிர்களொடு தாமும் தான் மனிதப் பதர்களுக்கு புரியும் வேளை ஆபத்து வெள்ளம் அணை தாண்டி ஓடி இருக்கும்..! -------------------------------------- நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024.
- 8 replies
-
- 15
-
நாங்க கன்றுக்குட்டியை கன்றுக்குட்டி என்கிறம். நீங்கள் இல்ல.. கன்றுக்குட்டி தான் மாடு என்றீங்க. கன்றுக்குட்டியை கன்றுக்குட்டியாக ஏற்றுக் கொண்டு போயிருந்தால்.. இந்த அநாவசிய வெட்டி ஒட்டல்கள் அவசியமில்லை. ஏனெனில்.. இவை ஏலவே மேற்கு சார்பு ஆட்களால் பலவகையாக எழுதப்பட்டு விடப்பட்டவை தான். அவை எப்போதுமே தாங்கள் தான் எல்லாம் முதலில் என்று எழுதித் தள்ளுபவர்கள். நாங்கள் பயங்கரவாதிகள். எங்களுக்கு சார்ப்பானவை எல்லாம் பயங்கரவாதம் சார்பானது என்று எழுதுபவர்களின் ஆக்கங்ளை ஒட்டி கன்றுக்குட்டியை மாடு என்று நிறுவ முற்படுவதை.. யாழ் கள வாசகர்கள் நன்கு உணரக் கூடிய பக்குவமானவர்கள். 😄
-
மேலே சரியான விளக்கம் அளித்த பின்னும்.. தவறான கற்பிதம் என்ற போர்வையில் புலிகளின் தனித்துவங்களை சிறுமைப்படுத்துவதை நாங்களும் அனுமதிக்கப் போவதில்லை. மீண்டும் சொல்கிறேன்.. உக்ரைன் களவெடுத்திருக்கும்.. தற்போதைய ஸ்ரெல்த் வகை வெடிமருந்தேற்றிய அதிவேக சிறிய வகை கடற்கல தாக்குதல்களின் முன்னோடிகள் புலிகளே. அதற்கு முன் நடந்த தாக்குதல்கள் படகுகள் வடிவமைப்புக்களும்.. தாக்குதல் வடிவங்களும் வேறு. முதலில் இதனை தாங்கள் வாசிச்சு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் வீரகேசரியின் மேற்படி கட்டுரையில் சொல்லப்பட்டவை எவையும் மிகையாகத் தெரியவில்லை. களத்தில் அவதானித்ததையே வீரகேசரி ஒப்பிட்டுள்ளது. தமக்கு சந்தேகமானதை சந்தேகத்துடனேயே சொல்லியும் உள்ளது. மேலும்.. புலிகளைப் பற்றி எழுதினாலே.. சர்ச்சை.. விசாரணை என்ற சூழல் நிலவும் இன்றைய காலத்தில்.. வீரகேசரிக்கு.. புலிகளை வைச்சு வியாபாரம் செய்வது ஆபத்தாகவே முடியும். ஒருவேளை சுமந்திரன் போல்.. புலிகளால் எனக்கு ஆபத்து என்று அவிச்சால்.. அதற்கு இருக்கும் சொறீலங்கா அரச.. படை ஆதரவு.. நிச்சயம்.. புலிகள் பற்றிய யதார்த்தத்தை.. அவர்களின் திறமைகளை செப்புவதால் வராது.
-
தமிழர் பாரம்பரிய மாதத்தை கொண்டாடிய IBMS
nedukkalapoovan replied to nedukkalapoovan's topic in தமிழும் நயமும்
எங்கள் பணியிட வைத்தியசாலை மின்னஞ்சல் வழி வைத்தியசாலையின் எல்லா சேவையாளர்களுடனும் பகிரப்பட்ட மின்னஞ்சல் வழி வந்த செய்தியும் கூட.