Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. அட இந்தளவுக்கு நுணுக்கமா இருக்கா. சரி சரிப்படுத்தினால் போச்சு. நன்றி சுட்டிக்காட்டியமைக்கு. ஆம்.. இது வடமராட்சியின் நுழைவாயிலில் இருப்பதால் வல்லை என்று வருதலே பொருந்தும். வடமராட்சியின் ஒரு பகுதிதானே வல்வை எனும் வல்வெட்டித்துறை..!
  2. நிறைய மாளிகைகள் வந்துவிட்டன. அதில் எது சகாரா அக்காவினது என்று தெரியவில்லையே. மேலும்... கொழும்பில் சும்மா பிரித் தான் ஓதுவாங்கள். அதையே தாங்க முடிவதில்லை. இது ரபான் அடிச்சு ஓதிறது. கொடுமை. கேட்கவே சகிக்கல்ல.
  3. புலி வாழ்ந்த மண்.. யாழ்ப்பாணத்தின் மண்டைகாய்கள்.. இப்படி எல்லாம் பெருமைப்பட்டுக் கொண்ட பூமி தான் வல்வை. அண்மையில் அந்தப் பூமிக்குப் போன போது.. வல்லை வளைவை வளைஞ்சு எடுத்தது இந்தளவு தான். அதிலும் வடமராட்சி மக்களின் அன்புடனான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் பின்னர் ஆஞ்சநேயர் தான் வரவேற்றார் வல்லை சந்தியில்.. தலைவர் வாழ்ந்த வீட்டுப் பக்கம் காப்பெட் எட்டியும் பார்க்கல்ல.. அவர் வாழ்ந்த வீடு காடுபத்திப் போய் கிடக்கு. முன்னால் எம் ஜி ஆர் பாவம் சிலை கூட இல்லை திருவுருவப்படமாகவே நிற்கிறார். வல்வை முதல்.. காங்கேசந்துறை செல்லும் கடற்கரை வீதியும்.. கொஞ்சம் கார்பெட்.. மிகுதி இல்லை. என்னடா கார்பெட் என்று பார்த்தால்.. இருமருங்கும் சொறீலங்கா.. இராணுவ பயிற்சிக்கூடங்களும்.. தலைமையகங்களும்... ஏக்கர் கணக்கில் காணிகள் இன்னும் இராணுவம் வசம். கடற்படை வேறு கடல் பக்கமா அபகரிச்சு நிற்குது. எல்லா இடமும் புத்தர் ஒவ்வொரு அரசமரமா குந்தி இருக்கிறார். உவங்கட விசுவாசத்தை பார்த்தால்.. புத்தரே தலை சுத்தி விழுந்துடுவார். ஆனால்.. செல்லடிச் சுவடுகளும்.... கன்போர்ட் எறிகணை சிதறல்களும் இல்லாத மதில்கள் இல்லை இப்பவும். புதிய அடிக்குமாடி மனைகளை மக்கள் எழுப்பி வருகினம். நல்லது தான். மக்கள் இப்போ பிடிக்க வந்த பிசாசோடு வாழப் பழகிவிட்டார்கள். மதியம் பசிக்கும் தானே. அப்போ.. சாப்பிட ஒரு இடம் போனம். விளம்பரத்துக்காக இல்லை. உண்மையாகவே இடமும் உணவும் இயற்கை காட்சிகளும் மனதுக்கு குளிர்ச்சியாக இருந்திச்சு. உள்ளூர் தகவலின் படி (உண்மை பொய் உறுதிப்படுத்தப்படவில்லை) புலம்பெயர் நபரின் முதலீட்டில் உருவான.. ஒரு விடுதியுடன் கூடிய உணவகம் கிடைத்தது. வெள்ளையள் அங்கும் சைக்கிளில் ஓடி ஓடி பேரம் பேசிக்கிட்டு இருப்பதைக் காண முடிக்கிறது. வெள்ளைக்காரனாவது காசை விடுறதாவது. உணவகத்தின் உள்.. எல்லாம் நல்லாத் தான் இருக்குது. உணவும். விலையும் பறுவாயில்லை. ஆனால் உணவகத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள சிங்களப் படைமுகாமில் இருந்து ரபான் ப்ரித்.. நாள் முழுவதும். செவிக்கும் மனதுக்கும் எரிச்சலூட்டுவதாகவே இருந்தது. சிங்கள பெளத்தர்களே இல்லாத இடத்தில் எதுக்கு இந்த வேலை. மிக வரைவில்.. அந்த இடத்தில் புத்தர் நிரந்தரமாக குடியிருக்கக் கூடிய வாய்ப்புக்களே அதிகம். சரி.. என்று சற்றே நடந்து சுவர்களை நோக்கினால்.. வட ஹிந்திய நடிகைகளுக்கும் ஹிந்திய தலைவர்களுக்கும் முன்னிடம். மோடி ஜீ வேற இருக்கிறார். ஈழத்தமிழர்கள் கப்பல் வரலாறும் ஒரு பக்கம் போட்டிருக்கு. தமிழன் சுழியன்.. என்றது அப்பவே தெரியும். ஆனால் வல்வை மாதிரி சுழியனாக இருப்பது கடினம் தான். அழகான வல்வைக்கடல். ஏனே ஆர்ப்பரிப்பதை நிறுத்திவிட்டது. அதற்கும் வீரம் வீழ்ந்துவிட்டதோ என்னவோ..??! (காட்சிக்கு ஏற்ற வசனம்.. அப்புறம் வல்வை மக்கள் தங்கள் வீரத்தைப் பற்றி கதைப்பதாக சண்டைக்கு வரக்கூடாது. உங்கள் வீரத்தை உலகறியும்.) இந்த விடுதியின் கண்ணாடிக் கூட்டில் இருந்தான பார்வை. இங்கு சிங்களவர்களும்.. குறிப்பாக இராணுவ முகாம்களுக்கு வரும் இராணுவத்தின் உறவினர்கள் பெருமளவில் வந்து போகினம். உண்மையில்.. யாழ்ப்பாணம் காண ஆசையில் வரும் சிங்களவர்களும் உண்டு. அவர்களை வரவேற்பதில் தவறில்லை. நாம் தென்னிலங்கையை ரசிக்கவில்லையா..??! இந்தப் பக்கம் இருந்து தான் அந்த எரிச்சலூட்டும் ரபான் பிரித் வந்தது. ஒரு கடற்கரையை சோலையாக்கி வாழும் வல்வை மக்களுக்கு சலூட். இஸ்ரேலாம் இஸ்ரேல். வல்வையோடு நிற்காமல்.. தீவகமும் போனது.. நயினை.. அம்மாளாச்சி நல்ல பெயிட் கியின்ட் எல்லாம் அடிச்சு நல்ல களையா இருக்கா. என்ன அவாவின் பக்தர்களை காவிக் கொண்டு போற படகுகளுக்கு தான் யாரும் பெயின்ட் அடிக்கிறாங்கள் இல்லை. நயினாதீவு இறங்கு துறையும் இப்ப நல்லா இருக்கு. ஆனால்.. சில அடிப்படை பழவழக்கங்களை மாத்திறது கஸ்டம். எங்கும் கச்சான் கோதும் கஞ்சலும். சிங்களவர்களும் அதே. நயினை நாகபூசனி அம்மன் கோவில்... தற்போது. அம்மனை தரிசிக்க வந்த கணவாய். நாகபூசனி அம்மனுக்கு அருகில் வந்துவிட்ட புத்தர். வெள்ளைவெளேர் என்று பரந்து காட்சி அளிக்கிறார்... சாரி காலை நீட்டி படுத்திருக்கிறார். தீவகத்தின் அழகிய சன் - செட் உடன் முடிச்சுக் கொள்ளுறம். ஆக அலட்டினால்.. வாசிக்கவும் நேரமில்லை.. மிணக்கடவும் நேரமில்லை. இறுதியா.. ஒன்று சொல்ல மறந்தது.. தீவகத்தில் இருந்து அராலிப்பக்கமா தனிச்சிங்களத்தில் எதையோ எழுதி வைச்சு கொப்பேகடுவ.. போய் சேர்ந்த இடத்தை சிங்களவருக்கு மட்டும் திறந்து விட்டிடுருக்கிறாங்கள். ஐயாவுக்கு சிலை வைச்சு புகழஞ்சலியோ இல்லை.. குடியேற்றமோ தெரியாது. எங்கட டமிழ் டேசியக் கட்சிகளுக்கு தமது தேசத்தில் நடப்பத்தைக் கவனிக்க நேரமில்லை. கட்சி பிரிக்கவும் கன்னை பிரிக்கவும் தான் நேரம் போதும். இதனையே சிங்களவர்கள்.. ஹிந்தியா.. சீனா.. சர்வதேசம்.. மட்டுமல்ல.. தமிழர்களில் சிலரும் விரும்பினம். தமிழன் பலமாகக் கூடாது. அதை களத்தில் நல்லாச் செய்யுறாங்கள்.
  4. பிடிபடும் வரை ஆகோ ஓகோ என்று வாங்கி பாக்கெட்டில் போட்டிட்டு.. போதைவஸ்து மாபியா.. தி மு க வை தமிழகத்தில் இருந்தே விரட்டாமல்..போதையை கட்டுப்படுத்த முடியாது. இதில சொறீலங்காவுக்கு பாலம் வேற. எல்லாம்..ஹராம் ஹராம் என்று கொண்டு இந்த தாடிக்கும்பல் செய்யுற கூத்தே.. தாங்க முடியவில்லை. அதுகள் உலகம் பூரா வியாபித்திட்டு.. எனி கட்டுப்படுத்துவது அவ்வளவு இலகு அல்ல.
  5. அதென்ன 1.5 பாகை செல்சியஸ் அதிகரிப்பு..? ஆம்.. தொழில்புரட்சிக்கு முன்னைய காலத்தை விட அதன் பின் அமைந்த காலத்தில் பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தால்.. முக்கியமாக கரியமிலை வாயு எனப்படும் காபனீரொக்சைட் (முக்கியமாக சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளியேறுவது) அளவு அதிகரிப்பால்.. பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்பானது 1.5 பாசை செல்சியஸை தாண்டினால்.. அதன் விளைவு பூமியில் மீள முடியாத அளவுக்கு போகலாம் என்ற எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். அப்போ.. அந்த 1.5 பாகை செல்சியஸ் இப்ப அதிகரிச்சிட்டுதா..? ஆம். 2023 இல் இது பதிவு செய்யப்பட்டிருக்குது. ஆனால்.. இந்த அதிகரிப்பு நிரந்தரமா இல்லையா என்பதை எனி வரும் கால கணிப்புக்கள் தான் சொல்ல வேண்டும். ஆனாலும் கடந்த.. 120,000 ஆண்டு கால பூமியின் வரலாற்றில் 2023இல் தான் ஓர் ஆண்டுக்கான சராசரி பூமியின் வெப்பநிலை இந்த அதிகரிப்பைக் கண்டுள்ளது. சரி இதனால் நமக்கென்ன..?! நமக்கு பல பிரச்சனைகள் வரும். பூமியில் வரட்சி அளவு அதிகரிக்கும். உணவு பயிர்களின் உற்பத்தி குறையும். நுளம்பு போன்ற நோய் பரப்பு பூச்சிகளின் பரவல் எல்லை அதிகரிக்கும்.. புயல்களின் உருவாக்கம் அதிகரிக்கும்.. கடல் மட்டம் இருப்பை விட அதிகரிக்கும்.. துருவ பனியின் உருகும் வேகம் அதிகரிக்கும்.. பஞ்சம் பட்டினி..நோய் தாக்கங்கள் அதிகரிக்கும்.. கடல்வாழ் உயிரினங்கள் அழிவுகளை சந்திக்கும்.. தரைவாழ் உயிரினங்களிலும் பாதிப்புக்கள் அதிகரிக்கும்.. இந்த நிலை தொடர்ந்தால்.. பூமி தரிசாவது நிச்சயம் ஓர் நாள் விரைந்து நிகழும். அது மனிதனால்.. ஊக்குவிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். அதேன்.. இவ்வளவு காலமும் இருக்க இப்பதான் இந்தப் பிரச்சனை வருகுது..?! இது புதிய பிரச்சனை அல்ல. ஏலவே எச்சரிக்கப்பட்ட ஓர் விடயம் தான். வளர்ந்த நாடுகளும் வளர்முக நாடுகளும்.. தங்களின் பொருண்மிய ஆதாயங்களை முன்னிலைப்படுத்தினவே தவிர.. பூமியை பாதுகாப்பதற்கான வழிகளை ஆராய்வதில்.. ஆராய்ந்து செயற்படுவதில்.. கூடிய அக்கறை செய்யாமையே இந்த விளைவு இவ்வளவு துரிதமாக வரக் காரணம். ஏலவே 2100 இல் இந்த நிலை வரும் என்று கூறப்பட்டு.. பின் 2040 என்றான போதும்.. அது 2023 இலே அடையப்பட்டிருப்பது.. தொழில்புரட்சிக்குப் பின்னான நாடுகளின் செயற்பாடுகளில் பூமியை பற்றிய அக்கறையின்மை குறைந்ததே காரணம். அதுக்கு நாங்க என்ன பண்ணுறது..?! இது நாடுகளின் பிரச்சனை என்று பொதுவாக பார்க்கப்பட்டாலும்.. வாழ்ந்த வாழும்..ஒவ்வொரு மனிதனதும் பங்களிப்போடு உருவான பிரச்சனை. எனவே காபன் வெளியீட்டு அளவை குறைப்பதன் மூலம்.. குறிப்பாக பச்சைவீட்டு வாயுங்கள்.. (கரியமிலை வாயு.. மீதேன் வாயு.. உட்பட்ட மேலும் சில வாயுங்கள்) வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம்.. பூமி இந்த பச்சை வீட்டு விளைவில் இருந்து மீள்கிறதா என்று நோக்கலாம். குறிப்பாக கோவிட் காலத்தில் நடைமுறையில் இருந்த நாட்டு முடக்கங்களால்.. சில முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டிருந்தாலும்.. கோவிட் முடக்க தளர்வின் பின்.. மீண்டும் நிலை மோசமாகியுள்ளது. நான் இதை எப்படி குறைக்க உதவிறது..?! பல வழிகளில் உதவலாம். குறிப்பாக சுவட்டு எரிபொருள் பாவனையை குறைப்பதன் மூலம்.. வெளியிடப்படும் மாசு வாயுங்கள் உள்ளடங்க.. கரியமிலை வாயுவின் அளவை குறைக்கலாம். இதற்கு சுவட்டு எரிபொருள் வாகனப் பாவனையை குறைக்க வேண்டும். பொதுப்போக்கு வரத்துப் பாவனையை கூட்டலாம். குறுகிய பயணங்களை நேரத்திட்டமிடலுடன் கால் நடையாகவோ.. துவிச்சக்கர வண்டி மூலமோ மேற்கொள்ளலாம். மீதேன் வெளியேற்றத்தைக் குறைக்கதக்க வழிமுறைகளை அல்லது காபன் மீள் கைப்பற்றல் பொறிமுறைகளை.. அல்லது காபன் சமநிலை செய்முறைகளை பின்பற்றலாம். அதென்ன காபன் மீள் கைப்பற்றல்.. காபன் சமநிலை..??! சுவட்டு எரிபொருட்கள் பன்னெடுங்காலத்துக்கு முன் வளிமண்டல கரியமிலைவாயுவை கொண்டான.. காபன்பெறுதிகளால் உருவாகி.. பூமிக்குள் புதைந்து போன உக்கல்களால் உருவான ஒன்று. அதனால் கரியமிலை வாயுவின் அளவு வளிமண்டலத்தில் படிப்படியாக குறைந்து.. . உயிரினங்கள் தொடர்ந்து.. வாழக் கூடிய வெப்பநிலையுடன் கூடிய சூழல் பூமியில் உருவானது. அதுபோக.. பூமியின் பெருமளவிலான கரியமிலைவாயு கடலோடு கலந்து கிடக்கிறது. மேலும்.. பூமி வாழ் தாவரங்களும்.. கரியமிலை வாயுவை உள்வாங்கி நமக்கு சுவாசிக்க அவசியமான பிராண வாயுவை (ஒக்சிசன்) தருகின்றன. ஆக.. வளிமண்டலத்துக்குள் மேலதிமாக விடப்பட்ட கரியமிலை வாயுவை மீள் கைப்பற்றுவதன் மூலம்.. குறிப்பாக தாவரங்களை பயன்படுத்தி.. அதன் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் அதுவா நடக்குது. காடழிப்பு.. வேலி அழிப்பு.. காணிகளில் உள்ள தாவரங்கள் அழிப்பு.. என்று தாவரங்கள் வெட்டி அழிக்கப்படும் அளவுக்கு அவை மீள் உருவாக்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி.. காபன் சமநிலை செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். அதாவது எடுத்துக்காட்டாக.. நீங்கள் (ஒரு தனி மனிதன்) ஒரு நாளைக்கு பூமியில் சேர்க்கும் 400 கிராம் காபன்சார் வாயுக்களை குறிப்பாக கரியமிலை வாயு.. மீதேன்.. இதனை மீள அகத்துறிஞ்சக் கூடிய பயிர்களை வளர்த்து.. அந்தப் பயிர்களில் இருந்து உங்களுக்கு தேவையான உணவை பெறுவதும்.. மீண்டும்.. அந்த உணவின் வழி வெளியேறும் காபன் அளவை மீளக் கைப்பற்றி.. அதாவது பயிர்களை வளர்த்து.. அதனை மீண்டும் உணவாக்குவது.. இப்படி சுழற்சி முறையில் செய்துவரின்.. உங்களால்.. வளிமண்டலத்தில் சேர்க்கப்படும் நிகர காபன் சார் வாயுக்களின் அளவு பூச்சியமாக இருக்கப் பார்த்துக் கொள்ளலாம். இதனை ஒவ்வொரு மனிதனும் செய்யும் போது.. தனிமனிதன் ஒருவன் வெளியிடும் காபன் சார் பச்சைவீட்டு வாயுக்களின் அளவை குறைக்கலாம். எப்ப பார்த்தாலும் கார் கார் என்று கொண்டு நிற்கிறாங்களே.. இப்ப மின்சாரக் கார் வந்திட்டு அப்பவும் இந்த பிரச்சனை இருக்கா..?? சுவட்டு எரிபொருளை பாவிக்கும் எல்லாப் பயண முறைகளும்.. பச்சைவீட்டு வாயுக்களின் அளவை அதிகரிக்கும். அது காராக இருக்கலாம்.. விமானமாக இருக்கலாம்.. கப்பலாக இருக்கலாம். எனவே அதனை கட்டுப்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தின் அளவைக் குறைக்கலாம். ஆம்.. மின்சாரக் கார்கள் வந்துவிட்டன தான். அவற்றால்.. நேரடியாக பச்சைவீட்டு வாயு வெளியேற்றமில்லை. ஆனால்.. மின்சாரக் காரை உற்பத்தி செய்யும் வழிமுறைகளில்.. அதன் மூலப் பொருள் தொடங்கி முடிவுப் பொருள் வரையான பல செயல்முறைகளில் இன்னும் சுவட்டு எரிபொருள் மின்சக்தியே பயன்பாட்டில் இருக்குது. குறிப்பாக நிலக்கீழ் காபன் சார் வாயுக்களை (காஸ்) எரியூட்டி பெறும் மின்சக்தி. ஆக மின்சாரக் கார்கள்.. வீதியில் புகையை கக்கவில்லை என்றாலும்.. அவை உருவான வழியெங்கும் புகை. இவை எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் வரனும் என்றால்.. கார்களின் பாவனையை குறைத்து.. மின்சார பொதுப்போக்குவரத்தை அதிகம் பாவிக்க வேண்டும். குறுந்தூரப் பயணங்களை நடந்து சென்று செய்வதன் மூலம்.. இந்த பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவலாம். ரஷ்சியாவில் இருந்தான இந்த வாயு சப்பிளை குழாய்களை தான் மேற்கு நாடுகள் உக்ரைனை கொண்டு உடைத்தன. அதனால்.. கூடிய ஆதாயம் அடைந்தது அமெரிக்காவின் சுவட்டு எரிபொருள் கம்பனிகள். அவையே இப்போ.. ஐரோப்பாவுக்கான முக்கிய சப்பிளை முகவர்கள் ஆகிவிட்டனர். உக்ரைன் சனநாயகம்.. ஆக்கிரமிப்பு.. யுத்தம் என்பது வெறும் சாட்டு தான்.. அதன் பின்னணியில் இருப்பது.. அமெரிக்காவின் சுயநலம். இந்த யுத்தத்தை நன்கு திட்டமிட்டு ஆரம்பிச்சு வைச்சதே அமெரிக்கா தான். மேலும்.. கூடிய பச்சை வீட்டு வாயுக்களை வெளியேற்றும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா.. சீனா உள்ளிட்ட உலகின் முதன்மை பொருளாதார நாடுகளே முன்னிற்கின்றன. சுழற்சி முறை பயிர்செய்கை உதவுமா..??! ஆம்.. பயிர்களை உற்பத்தி செய்து விளை பொருட்களை ஈட்டிய பின்.. பயிர்க் கழிவுகளை அதே மண்ணில் இட்டு உக்க வைத்து உரமாக்கி மீள் பயிர்செய்கைக்கு அந்த உரமிட்ட வள மண்ணைப் பாவிப்பது.. கூடிய காபன் சமநிலைக்கு உதவும். இதே வீட்டில் பயன்படுத்தும் உணவுப் பொருள் கழிவுகளையும் உரமாக்கி தாவரங்களின் பயன்பாட்டிற்கு அளிப்பதன் மூலம்.. காபன் மீளக் கைப்பற்றலுக்கும்..காபன் சமநிலை செயற்பாட்டிற்கும்.. நாம் சிறுக என்றாலும் பங்களிக்காலம். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் செய்யும் போது காபன் மீளக் கைப்பற்றல் என்பது பெருமளவில் நிகழ வாய்ப்புண்டு. இது தாவர மீதிகளை எரிப்பதனை விட கூடிய காபன் சமநிலையானது. இவ்வளவும் வாசிச்சாப் பிறகு உங்க மூளைக்கு ஒன்னுமே புரியாத மாதிரி இருக்கா.. அதற்கு சுருக்கமாக.. பூமியின் சராசரி வெப்ப அதிகரிப்பு எச்சரிக்கை எல்லை அளவான 1.5 பாகை செல்சியஸை கடந்த ஆண்டில் தாண்டி இருக்குது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னரே நிகழ்ந்துவிட்டது. இது கரியமிலைவாயு போன்ற வாயுக்களின் அதிகரித்த வெளியேற்றத்தால் உருவாகும் பூமி வெப்பமுறுதல் என்ற பச்சைவீட்டு விளைவின் வெளிப்பாடாகும். இதில் மனித செயற்பாடுகளே முதன்மை. இதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனால்.. காபன் சார் வாயு வெளியேற்றச் செயற்பாடுகளை குறைப்போம். (சுவட்டு எரிபொருள் பாவனையை குறைக்கும் எல்லாச் செயற்பாடுகளும் இதற்கு உதவும்) காபன் சார் வாயுக்களை மீள் கைப்பறல் செய்யும் செயற்பாடுகளை ஊக்குவிப்போம். (தாவரங்களை குறிப்பாக மீள் காடாகத்தை ஊக்குவிப்போம். மீள் பயிர்செய்கையை வளப்படுத்துவோம்.) இது நமக்காக மட்டுமல்ல.. நம் எதிர்கால சந்ததிக்கும்.. பூமியின் வளமான எதிர்காலத்திற்குமாகும். உசாத்துணை: https://www.bbc.co.uk/news/science-environment-68110310 https://www.bbc.com/future/article/20231130-climate-crisis-the-15c-global-warming-threshold-explained https://www.ipcc.ch/sr15/ https://www.worldometers.info/co2-emissions/co2-emissions-by-country/ https://www.statista.com/chart/28725/cumulative-co2-emissions-per-country-since-1970/ மேலதிக விளக்கப் படங்கள்:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.