கொழும்புப் பகுதி மணப்பெண் ஒருவருக்கு கிராமப்புறத்து மாப்பிள்ளை ஒருவரை பேசித் தீர்ப்பதற்காக கலியாண புரோக்கர் மணப் பெண்ணின் தகப்பனை மாப்பிள்ளையின் வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவாகியது. மாப்பிள்ளையின் தொழில் மாணிக்க ( Diamand ) வியாபாரம் எனவும் வயது 20 எனவும், கார் (Car) இருப்பதாகவும் புரோக்கர் கூறினார். காரின் இலக்கம் என்ன எனக் கேட்டபோது தான் இன்னும் காரைக் காணவில்லை எங்காவது போயிருக்கும் என்றார். நீண்ட நாட்களாக இப்படியே சொல்லிச் சொல்லி புரோக்கர் வீட்டு செலவுக்குப் பணம் வாங்கினார். திடீரென ஒருநாள், ஆட்டோ ஒன்றில் வந்த மணப்பெண்ணின் தகப்பன் புரோக்கரை ஆட்டோவினுள் இழுத்துப் போட்டுக்கொண்டு மாப்பிள்ளை வீட்டை இன்று காட்ட வேண்டும் என்றார். கலியானம் பேசிப் பேசியே வழிச் செலவுக்குப் பணம் தந்து கடனாளியாகிவிட்டேன் என்று குறை கூறினார். கலங்கிய கண்களுடன் சென்ற புரோக்கர் சிறியதொரு வீட்டைக்காட்டி இதுதான் மாப்பிள்ளையின் வீடு என்றார். மாப்பிள்ளையின் தாய் முன்னே வந்தார். இருவரையும் உட்காரச் சொன்னார். பழவர்க்கங்களும், பலகாரங்களும், குளிர்பானமும் இருவரினதும் பசியைப் போக்கின. ” மாப்பிள்ளக்கு கார் ஒன்று இருப்பதாகச் சொன்னீர்களே! அதை இன்று பார்க்க வேண்டும்” இது மணப்பெண்ணின் தகப்பன். புரோக்கர் அந்தக் காரைக் காட்டும்படி மாப்பிள்ளையின் தாயைக் கெஞ்சினார். வீட்டு அறையினுள் சென்ற மாப்பிள்ளையின் தாய் தும்புத்தடி ஒன்றை எடுத்து வருவதை கண்டு ” மாப்பிள்ளையின் தாய்க்கு பைத்தியமா?” எனக் கேட்ட்டுக்கொண்டு மாமா தலைதெறிக்க ஓடினார். ஒருவாறு மாமாவை மீண்டும் அழத்துவந்தபோது மாப்பிள்ளையின் தாய் கையில் இருந்த தும்புத்தடியை கட்டிலின் கீழ் போட்டு இழுத்தபோது விளையாட்டு கார் ஒன்று வெளியே வந்தது. புரோக்கரின் முகம் வியர்த்தது. மாப்பிள்ளையின் தாய் ” எனது மகனுக்கு 18 வருடங்களுக்கு முன்னர் வாங்கிக் கொடுத்த கார்” என்றார். புரோக்கர் மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்தார்.