Everything posted by nunavilan
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காளை காளை படம்: காளை இசை:ஜி.வி.பிரகாஸ்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: மௌனம் பேசும் படம்: அமரகாவியம் இசை:ஜிப்ரன் பாடியவர்கள்:சித்ரா http://youtu.be/Vsdy-LFdh4g
-
கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
இணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் ! · ஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா? என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை தான் பேஸ்புக்கும் இணையமும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்தால் நீங்களும் நிச்சயம் அசந்து விடுவீர்கள். ஆனால் அந்த புகைப்படங்களின் அழகை விட அதன் பின்னே இருக்கும் தாய்மையும் நம்பிக்கையும் தான் உங்கள் உள்ளத்தை தொடும்; நெகிழ வைக்கும். கூடவே நம்பிக்கை என்றால் என்ன என்றும் புரிய வைக்கும். அந்த புகைப்படங்களின் மையமாக இருக்கும் குட்டி தேவைதையின் பெயர் வொய்லெட். 5 வயதாகும் வொய்லெட்டின் தாயான ஹோலி ஸ்பிரிங் ஒரு புகைப்பட கலைஞர். காமிராவை தொழிலாக கொண்ட ஹோலி ஸ்பிரிங் தனது செல்ல மகளை விதவிதமாக புகைப்படம் எடுத்து பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார். ஒரு தாய் தனது மகளை விதவிதமாக படம் எடுக்க ஆசைப்படுவதோ, அதை ஆர்வத்துடன் பகிர்ந்து கொளவ்தோ பெரிய விஷயம் இல்லை. அதிலும் அந்த அம்மா புகைப்பட கலைஞராக இருக்கும் போது இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த புகைப்படங்கள் வழக்கமான புகைப்பங்கள் அல்ல. இவை ஒரு தாயின் பாசப்பதிவுகள். அதன் பதிவுகளின் மையமாக இருக்கும் குட்டி தேவதை ஒரு அசாதரனமான சிறுமி. அதனால் தான் இந்த புகைப்படங்கள் அழகை மீறிய ஆன்மாவோடு கவர்கின்றன. ஐந்து வயதாகும் அந்த குட்டி தேவதை வொய்லெட் ஸ்பிரிங் பிறவி குறைப்பாடு காரணமாக முழுவதும் வளர்ச்சி அடையாத ஒரு கையுடன் பிறந்தவர். அதோடு ஒரு வகையான வயிறு மற்றும் சிறுகுடல் தொடர்பான நோயாலும் பாதிக்கப்பட்டவர். இந்த நோயால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.அறுவை சிகிச்சையின் போது உயிர் பிழைத்து வந்தாள் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து சிறுமியின் வாழ்க்கை சோதனையானதாகவே இருந்து வருகிறது. மகள் அதிக காலம் வாழாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதை விட தாயுள்ளத்தை உலுக்ககூடியது எது? இந்த உணர்வுக்கு ஆளான ஹோலி ஸ்பிரிங், ஒரு வேளை மகள் தன்னை விட்டு பிரியும் நிலை ஏற்பட்டால் அவளது அரிய நினைவுகளுக்கான சாட்சி தன்னிடம் இல்லாமலே போய்விடுமே என கலங்கியிருக்கிறார். அப்போது தான் அவரது கணவர் , காமிரா ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். அதிலிருந்து அவர் தனது மகளின் வளர்ச்சியை புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் தான் வியக்க வைக்கும் தன்மையோடு இருக்கின்றன. இந்த படங்களில் எல்லாம் அவரது மகள் குட்டி தேவதை போல ஒரு கற்பனை உலகின் நடுவே காட்சி அளிக்கிறார். அந்த கற்பனை உலகம் அந்த தேவதையின் உள்ளத்தில் இருந்து உருவானவை. அம்மா அதற்கு காட்சி வடிவம் கொடுத்திருக்கிறார். ஸ்பிரிங் பொதுவாக மகளை மாடலாக்கி படம் எடுத்து வருகிறார் என்றாலும் ஒவ்வொரு படமும் விஷேசமானவை. முதலில் மகளை விதவிதமான போஸ்களில் தயார் செய்கிறார். சிறுமிக்கு ஆடை அணிவதில் அதிக ஆனந்தம் என்பதால் மகிழ்ச்சியோடு பிடித்தமான உடை அணிந்து தயாராகி விடுகிறாள். அதன் பின் தனது மனதில் தோன்றும் கற்பனைகளை விவரிக்கிறாள். அந்த கற்பனைகளை அம்மா தனியே புகைப்படமாக எடுத்திக்கொள்கிறார். பின்னர் அந்த புகைப்படங்கள் நடுவே மகளை இடம்பெற வைத்து புதிய புகைப்படத்தை உருவாக்குகிறார். இந்த படங்களில் தான் சிறுமி வொய்லெட் குட்டி தேவதையாக, சிண்ட்ரல்லா போல ஒரு படகின் மீது அமர்ந்திருக்கிறாள். அப்பாவியான ஒட்டகச்சிவிங்கியை பார்த்து வியக்கிறாள். தேவதை போல நடுக்காட்டில் கைநீட்டி காட்சி அளிக்கிறாள். ஒரு பட்டாம்பூச்சி போல நிலவை எட்டிப்பிடிக்கிறாள். இப்படி இன்னும் பல வடிவங்களில் அந்த தேவதை வசிகறிக்கிறாள். இந்த படங்கள் ஒவ்வொன்றிலும் விஷேசமான செய்தி இருக்கிறது. தன் மீது நம்பிக்கை கொண்டால் , வாழ்க்கையில் சாதிப்பதற்கு அளவும் இல்லை, எந்த தடையும் இல்லை’ என்னும் நம்பிக்கையை இந்த புகைப்ப்டங்கள் மூலம் அந்த தாய் தனது மகளின் மனதில் ஏற்படுத்த முயன்று வருகிறார். ஒரு வித்திதில் இந்த நம்பிக்கையை கொடுத்ததே அவரது மகள் தான். 2 வயதாக இருக்கும் போது, மகள் அவரிடம் தனது கை எப்போது வளரும் என கேட்டிருக்கிறார். அந்த கை வளராது எனும் உண்மையை சொல்ல முடியாமல் அவர் தனக்குள் அழுது தவித்திருக்கிறார். ஆனால் மகள் அதன்பின் அந்த நிலையை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டு விட்டார். பிஞ்சு உள்ளம் தன்னைதானே மாற்றிக்கொண்ட விதத்தை பார்த்த அம்மா தானும் மன உறுதி பெற்றிருக்கிறார். என மகள் என படங்களுக்கு மாடல் மட்டும் அல்ல, அவள் எனக்கான ரோல்மாடலும் தான், அவளிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன் ‘ என பேட்டி ஒன்றில் ஹோலி ஸ்பிரிங் கூறியிருக்கிறார். மகளுடன் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ஒரு பொக்கிஷம் ,ஒவ்வொன்றும் கொண்டாட்டத்தின் மைல்கல் என்றும் அவர் சொல்கிறார். இந்த புகைப்படங்கள் வளரந்த பின் மகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். ’ இந்த படங்கள் அவளது உடல் குறைபாட்டை மீறி, அவளது வயதை மீறி எல்லையில்லா எதிர்காலத்தை காட்டும் வகையில் இருப்பதாக’ அவர் கூறுகிறார். இந்த புகைப்படங்களை தனது இணையதளம் மூலமு பேஸ்புக் பக்க மூலமும் அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார். பேஸ்புக்கில் இந்த புகைப்படங்களை பார்ப்பவர்கள் அதன் அழகு மற்றும் அதன் பின்னே உள்ள நெகிழ்ச்சியான கதையை அறிந்து உருகிப்பொகின்றனர. பல்ரும் உங்கள் மகள் தான் அழகு என கருத்து தெரிவித்துள்ளனர். ‘ இன்னும் சிலர் இதே போல உடல்ரீதியான குறைபாடு கொண்ட தங்கள் குழந்தைகள் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு , இந்த குறைபாட்டை புகைப்படங்கள் வழியே வெல்லும் முயற்சியை மனதார பாராட்டியுள்ளனர். 97 வய்தான பெண்மணி ஒருவர், நானும் ஒற்றைக்கையுடன் பிறந்தேன்.ஆனால் என்னை ஊக்குவிக்க யாரும் இல்லை.நானாக தடைகளை வென்று வளர்ந்தேன் என குறிப்பிட்டு இந்த பஞ்சுக்கு நல்ல வளமான எதிர்காலம் காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மகளின் குறை தெரியாமல் இருக்க அவளுக்கு புகைப்படம் மூலம் புது உலகை உருவாக்கத்தரும் இந்த தாயின் முயற்சியை இணையத்தில் படித்து லட்சக்கணக்கானோர் இந்த குட்டி தேவைதையை கொண்டாடி மகிழ்கின்றனர். ’எப்போதும் உங்கள் குழந்தைகளின் சிறந்தவற்றை வெளிக்கொணர்வதில் நேரத்தை செலவிடுங்கள் , அவர்களுக்கு சுவாரஸ்யத்தை அளியுங்கள், அவர்கள் உங்களுக்கு மறக்க முடியாத தருணங்களை அளிப்பார்கள்’ என ஹோலி ஸ்பிரிங் தனது பேஸ்புக் பக்கத்தில் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். எத்தனை அழகான கோரிக்க்கை அது!. ஹோலி ஸ்பிரிங்கின் பேஸ்புக் பக்கம்:https://www.facebook.com/HSpringPhotography?ref=stream ஹோலி ஸ்பிரிங்கின் இணையதளம்: http://www.hollyspringphotography.com/ ——- நன்றி-விகடன்.காம்- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கதைகளை பேசும் படம்: அங்காடி தெரு இசை: ஜி.வி பிரகாஸ் பாடியவர்கள்: பென்னி தயால், ஹம்ஷிகா வரிகள்: நா. முத்துக்குமார் கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே (கதைகளை..) ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல் கால்கள் எங்கேயோ மிதக்கிறதே ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே (கதைகளை..) கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது வருகிற வாசனை நீயல்லவா உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடியல்லவா கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை வெறும் கரையில் படுத்துக்கொண்டு விண்மீன் பார்ப்பது யோகமடா உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி (கதைகளை..) உனக்குள் தொடங்கி உனக்குள் தானே எந்தன் உலகம் முடிகிறதே உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே எந்தன் நாட்கள் விடிகிறதே ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம் ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம் நேற்றென்னும் சோகம் நெருப்பாய் வந்து தீ மூட்டும் இன்றென்னும் மழையில் அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே (கதைகளை..)- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காத்து காத்து வீசுது படம்:குட்டி புலி இசை: ஜிப்ரன்- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: போ இன்று நீயாக படம்:வேலை இல்லா பட்டதாரி இசை: அனுருத் பாடியவர்கள்:அனுருத் , தனுஸ் போ இன்று நீயாக வா நாளை நாமாகஉன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே லலலா ... ஓஓ .. ம்ம் ... ரரரர ... ரே லலலா ... ஓஓ .. நெஞ்சு ம்ம் ... பொண்ணு நனனனனே போ இன்று நீயாக வா நாளை நாமாக தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு நீ வந்ததால என் சோகம் போச்சு பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு மெதுவா மெதுவா நீ பேசும் போது சொகமா சொகமா நான் கேக்குறேன் இது சார காத்து என் பக்கம் பாத்து எதமாக ஆனாலே ஒரு சாத்து சாத்து லலலலா ... ஓஓ ....ம்ம் .... ரரர ரே லலலலா ...ஓஓ ... ம்ம் .... ரரர ரே போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்ன பாக்காமலே ஒண்ணும் பேசாமலே ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே லலலலா ..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், விசுகு அண்ணா.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கோரமான மரணம் ஒன்று கோரமான மரணம் ஒன்று உயிரைக் கொண்டுப் போனதே உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே இசையும் போனது திமிரும் போனது தனிமை தீயிலே வாடினேன் நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் எனையே தேடினேன் கனவே கனவே கலைவதேனோ கரங்கள் ரணமாய் கரைவதேனோ நினைவே நினைவே கரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ கண்கள் ரெண்டும் நீரிலே மீனைப் போல வாழுதே கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையா ஓ ஹோ நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை இது நியாயமா மனம் தாங்குமா என் ஆசைகள் அது பாவமா கனவே கனவே கரங்கள் ரணமாய் நினைவே நினைவே கலைவதேனோ எனது உலகம் உடைவதேனோ- கருத்து படங்கள்
- தமிழீழ பாடல்கள்
பாடல்: ஒரு நூறாண்டாய்- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: கூடை மேலே கூடை வைச்சு படம்: ரம்மி பாடியவர்கள் : வி.வி.. பிரசன்னா - வந்தனா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளர் : டி.இமான் இயற்றியவர் : யுகபாரதி ஆ......ஆ..... கூடை மேலே கூடை வச்சு கூடலூருப் போறவளே உன் கூட கொஞ்சம் நானு வரேன் கூட்டிக்கிட்டுப் போனா என்ன ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேணான்னு சொன்னாலேப் போவேன்டி சேதாரமா கூடை மேலே கூடை வச்சு கூடலூருப் போறவள நீ கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை ஒத்துமையா நாமும் போக இது நேரமா தூவத்தலைத் தேச்சு வச்சா துரு ஏறுமா? நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா சாதத்துள்ள கல்லுப் போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து சரிக்காம சதி பண்ணுற சீயக்காயை போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட உறுத்தாம உயிர் கொல்லுற அதிகம் பேசாம அளந்து தான் பேசி எதுக்கு சடைப் பின்னுற? சல்லி வேர ஆணி வேரா ஆக்குற சட்டைப் பூவ வாசமா மாத்துற நீ போகாத ஊருக்கு பொய்யாக வழி சொல்லுரே கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே நீ கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை எங்க வேணா போயிக்க நீ என்னை விட்டுப் போயிடாம இருந்தாலே அது போதுமே தண்ணியதான் விட்டுப்புட்டு தாமரையும் போனதினா தரை மேலே தலை சாயுமே மறைஞ்சுப் போனாலும் மறந்துப் போகாத நெனைப்பு தான் சொந்தமே பட்டை தீட்ட தீட்டத் தான் தங்கமே உன்னை பார்க்க பார்க்கத் தான் இன்பமே நீ பார்க்காது போனாலே கிடையாது மறு ஜென்மமே ஆ......ஆ..... கூடை மேலே கூடை வச்சு கூடலூரு ஹ...கூடலூருப் போறவளே நீ கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா நீ தாயேன்னு கேட்காமத் தாரேனே தாராளமா ராரார......ராரார......ராரார......ராரார......ராரார...... http://youtu.be/2-5lj6bCgBU- கருத்து படங்கள்
- தமிழீழ பாடல்கள்
தீலிபன் அண்ணா விரும்பி கேட்கும் பாடல் ஓ மரணித்த வீரரே உன் சீருடைகளை எனக்குத்தா உன் பாதணிகளை எனக்குத்தா உன் ஆயுதங்களை எனக்குத்தா https://www.facebook.com/video/video.php?v=10154688761485637- அதிசயக்குதிரை
https://www.facebook.com/video/video.php?v=348105318698468- சிந்தனைக்கு சில படங்கள்...
- அதிசயக்குதிரை
- சென்னை மெட்ரோ ரயில்...
சென்னை மெட்ரோ டிரெயின் டிரெய்லர்! ‘மெட்ராஸைச் சுத்திப் பார்க்கப் போறேன்… நான் மெட்ரோவில் ஊரைச் சுத்தப் போறேன்!’- என இனி உற்சாக ஸ்டேட்டஸ் தட்டலாம்; ஓடும் மெட்ரோ ரயிலில் சாய்ந்துகொண்டு செல்ஃபி க்ளிக்கலாம்! சென்னையின் பெருமித அடையாளமாக, மிகமிக விரைவில் பறக்கவிருக்கிறது மெட்ரோ ரயில். (ரயிலின் பிரத்யேக ‘தடக் தடக்’ சத்தம் மெட்ரோவில் கேட்காது.) கொல்கத்தா, டெல்லி, பெங்களூருக்கு அடுத்து, இந்தியாவில் ஓடவிருக்கும் நான்காவது மெட்ரோ… சென்னை மெட்ரோ! 2014 டிசம்பர் மாதம் தன் முதல் பயணத்தைத் தொடங்கவிருக்கும் சென்னை மெட்ரோ, முதல் கட்டமாக மேம்பாலங்களில் மட்டும் இயக்கப்படும்; பின்னர் படிப்படியாகச் சுரங்கப்பாதைகளிலும் பறக்கும். சுமார் 14,600 கோடி பட்ஜெட்டில், சென்னை நகரின் உள்கட்டமைப்பையே ‘பட்டி – டிங்கரிங்’ பார்த்து உருவாக்கப்பட்டிருக்கின்றன மெட்ரோவுக்கான தடங்கள். ‘சென்னை மெட்ரோ ரயில்’ என்ற நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், இரண்டு வழித்தடங்களிலுமாக மொத்தம் 45 கி.மீ தூரத்தைக் கடக்கும். மெட்ரோ பயணக் கட்டணம், எட்டு ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 23 ரூபாய் வரை இருக்கலாம். பீச் ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி வரை பயணிக்கும் பறக்கும் ரயில் சேவையை பரங்கிமலை ரயில் நிலையம் வரை நீட்டிக்கவிருக்கிறார்கள். அந்த ரயில் நிலையத்துக்கு அருகிலேயே பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையமும் வரவிருக்கிறது. எனவே, புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் என மூன்று ஜங்ஷன்களும் பரங்கிமலையில் சந்திக்கவிருக்கின்றன. இதனால், பரங்கிமலையின் ரியல் எஸ்டேட் மதிப்பு… எக்கச்சக்கத்துக்கு எகிறலாம்! சரி… மெட்ரோ ரயில் பயணம் எப்படித்தான் இருக்கும்? ஒரு டிரெய்லர் விசிட் அடித்தேன்! போக்குவரத்து நெரிசல், தூசி, புகை, கிளுகிளு கிளினிக் நோட்டீஸ்கள், முறுக்கு வியாபாரம் மற்றும் முறுக்குக் கம்பி விளம்பரங்கள்… என எதுவும் மெட்ரோவில் இருக்காது. ஸ்மார்ட் என்ட்ரி! எஸ்கலேட்டர், படிகள், லிஃப்ட் என சகல வசதிகளும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும். சில ரயில் நிலையங்களுக்கு உள்ளேயே நகரப் பேருந்துகள் வந்துபோகும். புறநகர் ரயில்கள்போல ஏகப்பட்ட பெட்டிகள் இருக்காது. மொத்தமே நான்கு பெட்டிகள்தான். அதனால் பிளாட்பாரமும் சின்னதாகவே இருக்கும். புறநகர் ரயில் நிலையங்களின் பிளாட்பார பெஞ்சுகளில் பொழுதுபோகாமல் கதையடிப்பதும், ஜோடியுடன் சிட்டிங் போட்டு சில்மிஷம் செய்யும் கதையெல்லாம் இங்கே நடக்கவே நடக்காது. பயணத்துக்கான டிக்கெட் வாங்கினால்தான் பிளாட்பாரத்துக்குள் நுழைய முடியும். டிக்கெட், ஸ்மார்ட் கார்டு தொழில்நுட்பத்தில் இருக்கும். அதை இயந்திரத்துக்குள் பொருத்தினால்தான், வாயில் தடுப்பு உங்களை உள்ளேயே அனுமதிக்கும். இதனால் ‘வித்-அவுட்’ பயண வாய்ப்பே இல்லை. க்யூ ப்ளீஸ்… மின்சார ரயில்போல அடித்துப் பிடித்து போய் இடம்பிடிக்க முடியாது. ஒரு பெட்டிக்கு நான்கு வாசல்கள். ரயில் வந்து நிற்கும்போதுதான் கதவுகள் திறக்கும். பிளாட்பாரத்தில் கதவு வரும் இடத்தில் கச்சிதமாகத் தடுப்பு அமைத்திருப்பார்கள். லிஃப்ட் வாசல்போல. அங்கே வரிசையாகக் காத்திருக்க வேண்டும். ரயிலில் இருந்து பயணிகள் இறங்கியதும், வரிசையாகத்தான் ரயிலுக்குள் போக முடியும்! ஃபுட்போர்டு இல்லை… ஜன்னல் ஸீட் இல்லை! ரயிலின் சுவர்களை ஒட்டி நீளமாக இருக்கைகள் இருக்கும். பயண தூரம் குறைவு என்பதால் நிற்பவர்களுக்கே அதிக கோட்டா. கதவுகள் இறுகப் பூட்டிக்கொள்ளும். எனவே, ஃபுட்போர்டு டிராவல் வாய்ப்பே இல்லை. முழுக்கவே ஏ.சி என்பதால் எப்போதும் ஜில்ஜிலீர் பயணம்தான். சுரங்கப்பாதை ரயில் நிலையங்களில், பிளாட்பாரத்தைச் சுற்றி கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பயணத்தில் 1,276 பயணிகள் பயணிக்க முடியும். மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும் மெட்ரோவில் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்தலாம். ஒரு பெட்டியில் இருந்து இன்னொரு பெட்டிக்குப் போகலாம். மூன்றாவது கண்! ரயிலுக்குள் சிகரெட், குளிர்பானம், உணவுப் பொருட்கள் போன்றவற்றுக்கு தடா. பான்பராக், வெற்றிலை, மாவா, எச்சில் துப்ப முடியாது. பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலம், உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவாகும். எனவே, பாதுகாப்புக்கு உத்தரவாதம்! எமர்ஜென்சிக்கு என்ன செய்வது? அவசர, அபாய காலங்களில் ரயிலை நிறுத்த அபாயச் சங்கிலி இதில் கிடையாது. பெட்டியில் சில இடங்களில் மைக் பொருத்தப்பட்டிருக்கும். அதில் உள்ள சீலை உடைத்து ஓட்டுநரிடம் பேசி விவரம் சொல்லலாம். ஆனால், தேவை இல்லாமல் அதை உபயோகித்தால், 1,000 ரூபாய் நோட்டைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் அபராதம்! ரயிலின் கதவுகளை ஓட்டுநர்தான் திறக்க/மூட முடியும். அவசரக் காலத்தில் கதவைத் திறக்க, கதவு அருகே ஒரு குமிழ் வைத்திருப்பார்கள். அதன் மூடியை உடைத்து, உள்ளே இருக்கும் சிவப்பு நிறக் கருவியை இயக்கினால் கதவு திறக்கும். மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை! 30 விநாடிகள்தான் ஸ்டேஷன்களில் மெட்ரோ ரயில் நிற்கும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் இறங்க வேண்டும் எனில், பிரத்யேக மைக் மூலம், ‘வரும் ஸ்டேஷனில் மாற்றுத்திறனாளி ஒருவர் இறங்க வேண்டும். கூடுதல் நேரம் ஒதுக்குங்கள்’ என்று ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தால், ஓட்டுநர் கூடுதல் நேரம் வண்டியை நிறுத்துவார். உள்ளே மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு இருக்கைகள் உள்ளன. அதன் அருகிலேயே சக்கர நாற்காலியை வைத்துக்கொள்ள முடியும். மகளிர் மட்டும்! நான்கில் ஒரு பெட்டி மகளிருக்கு மட்டும். அதில் கைப்பிடிகள் தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பெட்டியில் சரிபாதி, ‘முதல் வகுப்பு’க்கு. பிற வகுப்புகளுக்கும் முதல் வகுப்புக்கும் குஷன் இருக்கைகள் மட்டுமே வித்தியாசம்! ‘தடக் தடக்’ இல்லை! மெட்ரோ ரயில் பாதை மீட்டர்கேஜும் இல்லை; பிராட்கேஜும் இல்லை. ஸ்டாண்டர்டுகேஜ். கருங்கல் ஜல்லியின் மேல் தண்டவாளங்கள் போடப்படவில்லை. கடினமான ரப்பர் புஷ் மேல் தண்டவாளங்களை அமைத்திருப்பதால், ரயிலின் பிரத்யேக ‘தடக் தடக்’ சத்தம் இருக்காது. சொற்ப கி.மீ சோதனை ஓட்டமே பரவச அனுபவமாக இருந்தது. மேம்பாலத்தில் உயர உயரக் கட்டடங்களுக்கு நடுவே மெட்ரோ ரயில் வளைந்து நெளிந்து வழுக்கிச் செல்வது… ஆஹா அனுபவம். இனி, சென்னை விடுமுறை பேக்கேஜில் மெட்ரோவும் இடம் பிடிக்கும்! கொல்கத்தா, டெல்லியில் ஊரின் பெயரையே மெட்ரோவுக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் பெங்களூரு மெட்ரோவுக்கு ‘நம்ம மெட்ரோ’ என்று பெயர். ஆக, சென்னை மெட்ரோவுக்கு என்ன பெயர் வைப்பார்கள்? http://senthilvayal.com/2014/09/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F/#more-24584- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபேசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- உங்களுக்கு தெரியுமா?
நம்மில் பலருக்கும் கணக்கு என்றாலே கசப்புதான் எண்களைக் கண்டாலே சற்று பயம். ஆனால் எண்களை நாம் விட்டு விட முடியாது அவை நமது வாழ்க்கையில் நம்மோடு ஒன்றினைந்து விட்டன. எண்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை வரவு-செலவு பார்க்கவும், எண்ணிச் சொல்லவும் சிலப் பொருட்களைக் குறிப்பிடவும் எண்கள் தேவையாகத்தான் இருக்கின்றன வேறு சிலருக்கோ எண்களோடு விளையாடுவதில் அலாதி இன்பம் எண்கள் அவர்களின் இணை பிரியாத் தோழர்கள். மொழியிலும் எண்களுக்கென்று தனி இடம் உண்டு ஆங்கிலத்தில் எண்கள் இடம்பெறும் பல சொற்கள் புதுப்புது பொருளைத் தருகின்றன அவை எண்களின் உண்மையான பொருளைக் குறிக்காமல் வேறு சில விசித்திரமான பொருளைத் தருகின்றன. உதாரணமாக Eleventh hour என்றால் மணி பதினொன்று என்று அர்த்தமல்ல. ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டிய கடைசி நிமிடம் என்பதையே அது குறிக்கும். அந்த நேரத்தில் தோன்றும், அவசரம், பரபரப்பு, கவலை எல்லாமே இந்தத் தொடரில் தொனிக்கிறது. இவை மேலெழுந்தவாரியான பொருளுக்கு அப்பால் ஒரு விரிவான, அழகான, சில சமயங்களில் நறுக்குத் தெறித்தார்ப் போன்ற பொருளைத் தருகின்றன. அத்தகைய சில சொற்களைப் பார்ப்போம்: First Footer: புத்தாண்டு பிறக்கும்போது வீட்டுக்குள் நுழையும் முதல் நபர் First Lady: ஒரு நாட்டின் முக்கிய அதிபரின் மனைவி First String Player: மிகச் சிறந்த விளையாட்டு வீரர் First Water: மிகவும் உயர்ந்த தரத்திலுள்ள களங்கமற்று ஒளிவிடும் வைரம் அல்லது முத்து Oner: நிபுணர், அற்புத மனிதர் அல்லது அற்புதப் பொருள் One horse Town: சிறிய பழைய கிராமம் One Liner: ஒரு ஜோக், வேடிக்கையான குறிப்பு Look after number one: பிறரைப் பற்றி கவலைப் படாமல் தன்னைப் பற்றி மட்டுமே அக்கறைக் கொள்ளுதல் Second Banana: உதவும் நிலையிலுள்ள ஒருவர் Play Second Fiddle: முக்கியத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் Second Sight: உள்ளுணர்வு, தீர்க்கத்தரிசனம் Second String: மாற்று ஆள் Second Wind: நீண்ட களைப்புக்குப் பின் ஏற்படும் புத்துணர்ச்சி Two Faced: ஏமாற்றுகிற, பொய்யான Two Way Street: வேறு இருவருடைய உதவியை நாட வேண்டிய நிலை Third Degree: குற்றவாளி அல்லது சாட்சியிடமிருந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு உண்மையை வரவழைக்க போலீஸ் மேற்கொள்ளும் கடின முறை, சித்திரவதை Thirds-man: மத்தியஸ்தம் செய்பவர் Third World: ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள முன்னேறாத ஏழை நாடுகள் Three ring circus: ஏகப்பட்ட வேலைகளால் ஏற்படும் குழப்பமான நிலை அல்லது இடம் Three Line Whip: சட்டசபை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போது எப்படி வாக்களிக்க வேண்டுமென்று எழுத்து மூலம் வழங்கும் உத்தரவு Fourth Dimension: காலம் Fourth Estate: பத்திரிக்கை Four Eyes: கண்ணாடி அணிந்தவர் Four Flusher: பிறரை ஏமாற்றுபவர் Four Letter Word: ஆபாச வார்த்தை Fifth Column: சொந்த நாட்டிலிருந்தபடியே எதிரி நாட்டுக்காக இரகசியமாக செயல்படும் குழு High Five: வெர்றியைக் கொண்டாட, வாழ்த்தைத் தெரிவிக்க தலைக்கு மேல் கைகளை உயர்த்தி அடுத்தவரின் உள்ளங்கையில் தட்டுதல் To Take Five: சில நிமிடங்கள் ஓய்வெடுத்தல் Sixth Sense: ஐம்பொறிகளுக்கு அப்பால் சில விஷயங்களை உணர்ந்து கொள்ளும் திறன், உள்ளுணர்வு At Sixes and Sevens: ஒரே குழப்ப மயம் In Seventh Heaven: பெரு மகிழ்ச்சியில் இருத்தல் Behind the Eight ball: மிகவும் ஆபத்தான, இக்கட்டான நிலையில் இருத்தல் On Cloud nine: மிகவும் மகிழ்ச்சியோடு இருத்தல் Nine day's Wonder: சில தினங்களுக்கு மட்டுமே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சி Dressed (up) to the nines: மிகச் சிறந்த உடைகளை அணிதல் Ten to one Chance: அனேகமாக நடக்காது Be ten a penny: மிக மலிவானது, சாதரணமானது Ten Strike: பெரிய அதிர்ஷ்டம் Eleventh hour: கடைசி நிமிடம் Talk nineteen to the Dozen: நிறுத்தமால் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது Thirty Something: சுமார் 30 வயதுடைய நன்கு படித்த நல்ல நிலையிலுள்ளவர் Forty Winks: உணவுக்குப் பின் ஒரு குட்டித் தூக்கம் Go Fifty Fifty: பதிக்குப் பாதி பகிர்ந்து கொள்ளுதல் 64 Thousand dollar question: மிக மிகக் கடினமான கேள்வி Look like a million dollars: மிகக் கவர்ச்சியாக காட்சி அளித்தல் Last ditch Effort: இறுதி முயற்சி Last straw that breaks the camel's back: பொறுமையின் எல்லை Last Word the: மிக மிகச் சிறந்தது அதி நவீனமானதுImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்தனைக்கு சில படங்கள்...