Everything posted by nunavilan
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
- கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
- இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
தமிழரசு கட்சிக்கு சந்திப்பதற்கு வேறு ஆட்கள் கிடைக்கவில்லையோ??- ஒற்றையாட்சி தமிழர்களை அழிக்கும் - முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார்!
ஒற்றையாட்சி தமிழர்களை அழிக்கும் - முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார்!- உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
Russia launches new ballistic missiles at Ukraine- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இன்னும் 3 அல்லது 4 அமைச்சருக்கான இடங்களும் பிரதி அமைச்சருக்கான இடங்களும் நிரப்பப்பட வேண்டும். இதனை ஒரு முஸ்லிமாவது நிரப்புவார்கள் என முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
முதல் பெண்மணி இல்லாத ஜனாதிபதி,அனுரவின் மனைவி எங்கே? முஸ்லிம் அமைச்சர்கள் இல்லையா?- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
ஜனாதிபதி என்ன கூறினார்?- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
இங்கு சிறிமாவை யாரோ நினைவு படுத்தியது நினைவுக்கு வருகிறது.- பெண் போராளி கருணாநிதி யசோதினியின் தேர்தல் தோல்வி
சந்துரு பேட்டி கண்டதை நான் கேட்டிருந்தேன். கால் கை இழந்த போராளிகளை கண்டும் காணாமல் போகும் எமது மக்கள்( பயம் ஒரு காரணம்) வாக்களிபார்கள் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் கஸ்டப்பட்டு முன்னுக்கு வந்த பெண் எனைய பெண்களுக்கும் உதவி வந்தார். அவரின் மொத்த வாக்குகள் எவ்வளவு என தெரியவில்லை.- அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம் - என்ன நடக்கிறது?
ஐரோப்பிய அரசாங்கங்கள் புடாபெஸ்ட் உச்சிமாநாட்டில் ட்ரம்ப் தொடர்பான உறவுகள் குறித்து விவாதிக்கின்றன Alex Lantier 12 November 2024 மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக வியாழக்கிழமை ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC - European Political Community) தலைவர்கள் புடாபெஸ்டில் ஒன்றுகூடினர். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் முறைசாரா உச்சிமாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டங்கள், ட்ரம்பின் வெற்றியால் ஏற்பட்ட அரசியல் பூகம்பத்திற்கு ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் முதல் எதிர்வினையாக அமைந்தன. குறிப்பிடத்தக்க வகையில், ட்ரம்ப் 2021 ஜனவரி 6 அன்று 2020 தேர்தல் முடிவை மாற்றும் நோக்கில் தீவிர வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்டதோடு, அமெரிக்காவில் தேர்தல் முறையையே முடிவுக்குக் கொண்டுவருவது பற்றியும் பேசியிருந்தார். இடமிருந்து, போர்ச்சுகலின் பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ (Luis Montenegro), ஜேர்மனியின் சான்சிலர் ஓலாஃப் ஷொல்ஸ் (Olaf Scholz), குரோஷியாவின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் (Andrej Plenkovic) மற்றும் பின்லாந்தின் பிரதமர் பெட்டேரி ஓர்போ (Petteri Orpo) ஆகியோர் நவம்பர் 8, 2024 வெள்ளிக்கிழமை, புடாபெஸ்டில் உள்ள புஸ்காஸ் அரங்கில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் போது ஒரு முழுமையான அமர்வில் கலந்து கொள்கிறார்கள். [AP Photo/Denes Erdos] புடாபெஸ்ட் உச்சிமாநாடானது ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பாசிச போக்கிற்கான எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும். இந்த மாநாடு, பில்லியனர் பாசிசவாதி ட்ரம்ப் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தொடரும் வரை அவருடன் இணைந்து செயல்பட ஐரோப்பிய தலைவர்கள் விரும்புவதை சமிக்ஞை செய்தன. அமெரிக்காவுடனான வளர்ந்து வரும் ஏகாதிபத்தியங்களிளுக்கு இடையிலான பதட்டங்களை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் மீது கடுமையான வரிகளை விதிக்கும் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை, தொழிலாளர் வர்க்கத்தின் வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் மீதான கடும் தாக்குதல்கள் மூலம் தீர்க்க அவர்கள் முயல்கின்றனர். அப்பட்டமாக மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிவலது ஆட்சிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் அணிதிரண்டு வருகின்ற நிலையில், வர்க்க போராட்டத்தின் ஒரு வெடிப்பார்ந்த தீவிரப்படலே இயக்கத்தில் வைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு இடையே ஆழமாக வேரூன்றிய மற்றும் இறுதியில் கையாளவியலாத பதட்டங்கள் நிலவுகின்ற அதேவேளையில், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ட்ரம்புடன் சேர்ந்து வெளிநாட்டில் ஏகாதிபத்தியப் போரையும் உள்நாட்டில் வர்க்கப் போரையும் நடத்துவதன் மூலமாக அவற்றைத் தீர்க்க நம்புகிறது. ஒரு சமீபத்திய பொலிட்டிகோ (Politico) கட்டுரை குறிப்பிட்டது, “ட்ரம்ப் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் ஆழமாக மதிப்பிழந்துள்ளார், அவரை அரவணைத்துப் பெறுவதற்கு அங்கே ஒரு சில அரசியல் புள்ளிகளே உள்ளன.” அமெரிக்க தேர்தல்களில் பிரெஞ்சு மக்களில் வெறும் 13 சதவீதத்தினர் மட்டுமே ட்ரம்பை ஆதரித்ததாக ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. எவ்வாறிருப்பினும், ஒரு பாசிசவாத அமெரிக்க ஜனாதிபதி, “ஒரு அனுகூலமான அதிர்ச்சியாக இருப்பார்... தொற்றுநோய் அல்லது உக்ரேன் போரைத் தொடரும் எரிசக்தி நெருக்கடி போன்றவைகளாகும்” என்று வாதிட்ட அநாமதேய ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரிகளை பொலிடிகோ மேற்கோள் காட்டியது. மற்றொருவர் கூறுகையில், ட்ரம்ப் “கசப்பான மருந்தை” வழங்குவார் என்றும், இராணுவ செலவினங்களை அதிகரிப்பதை நியாயப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உதவுவார் என்றும் தெரிவித்தார். இருப்பினும், உச்சிமாநாட்டின் வடிவமே நேட்டோ ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான தீவிர புவிசார் அரசியல் பதட்டங்களை வெளிப்படுத்தியது. உக்ரேன் போர் தொடங்கிய பின்னர், 2022 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் EPC-ஐ முதன்முதலில் முன்மொழிந்தார். இது ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகள், பிரிட்டன், துருக்கி, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கான ஒரு மன்றமாக, ரஷ்யாவை தனிமைப்படுத்த, அதனுடன் மோதல் ஏற்படுத்த மற்றும் இறுதியில் அதனை பலவீனப்படுத்த திட்டங்களை விவாதிக்க அமைக்கப்பட்டது. ட்ரம்ப்பின் வெற்றி ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC) அடித்தளத்தை உலுக்கியுள்ளது. உக்ரேன் படைகள் முழு முன்னணி அரங்குகளிலும் பின்வாங்கி, நாட்டிற்குள் வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலையில், ட்ரம்ப் இப்போரை “தோல்வியடைந்ததாக” குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இப்போரை “தூண்டியதாக” குற்றம்சாட்டி, வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் போருக்காக செலவிட்ட நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைக் குறித்து விமர்சித்துள்ளார். அமெரிக்காவுக்கு “பங்களிப்பு செய்யாத” ஐரோப்பிய நேட்டோ நாடுகளை ரஷ்யா “விரும்பியபடி நடத்த” அனுமதிப்பதாகவும் அவர் மிரட்டியுள்ளார். ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளே ஜேர்மன் அரசாங்கம் கவிழ்ந்தது, EPC உச்சிமாநாடானது உத்தியோகபூர்வமாக முடிவடைந்த பின்னர்தான் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் வியாழனன்று இரவு உணவுக்கு வந்தார். பேர்லினில் நடந்த அரசாங்க பேச்சுவார்த்தைகள் ஷொல்ஸை முழு EPC கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து தடுத்ததாக பேர்லின் தெரிவித்தது. ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சிமாநாட்டில், மக்ரோன் ட்ரம்பின் வெற்றியை ஏற்றுக்கொண்டார், அவரது ஆட்சி “சட்டபூர்வமானது” என்றும் அவரது கொள்கைகள் “நல்லவை” என்றும் குறிப்பிட்டார். மக்ரோன் கூறியதாவது: “ஐரோப்பிய ஒன்றியத்தில் நமது பங்கு டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிப்பதல்ல, அது நல்லதா கெட்டதா என்பதை மதிப்பிடுவதும் அல்ல. அவர் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் அமெரிக்க மக்களின் நலன்களைப் பாதுகாப்பார், இது நியாயமானது மற்றும் நல்லதுதான்.” ட்ரம்பின் கீழும் கூட உக்ரேனில் ரஷ்யாவுடனான போர் தொடர்வதை உறுதிப்படுத்துவதே ஐரோப்பாவின் முக்கிய நலனாகும் என்று மக்ரோன் வாதிட்டார்: “ரஷ்யா இந்த போரில் வெல்லக்கூடாது என்பதே எங்கள் நலன்கள்... ஏனென்றால் ரஷ்யா வெற்றி பெற்றால், ‘நீங்கள் விரிவாக்கவாதியாக இருக்க முடியும்’ என்று நாம் கூறும் ஒரு ஏகாதிபத்திய சக்தி நமது எல்லைகளில் இருக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும்.” அதேநேரத்தில், மக்ரோன் நேட்டோவுக்குள்ளான பிளவுகளைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவில் இருந்து ஒரு தனியான ஐரோப்பிய ஒன்றிய இராணுவ ஸ்தாபகம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறைக்கு அழைப்பு விடுத்தார். அவர் இவ்வாறு கூறினார், “ஐரோப்பியர்களாகிய நாம் நமது பாதுகாப்பை அமெரிக்கர்களிடம் எக்காலத்திற்கும் ஒப்படைக்க வேண்டியதில்லை. நாங்கள் இப்போது பாதுகாப்பு தீர்வுகளை வழங்குபவர்கள் என்ற செய்தியை அனுப்புவது முக்கியம் என்று நான் நம்புகிறேன் ... இந்த வகை தொழில்துறை உற்பத்தியில் ஐரோப்பிய முன்னுரிமைக் கொள்கையை வெளிப்படையாக அறிவிப்பது.” மக்ரோன் இவ்வாறு கேள்வி எழுப்பினார்: “மற்றவர்களால் எழுதப்பட்ட வரலாற்றை - விளாடிமீர் புட்டின் தொடங்கிய போர்கள், அமெரிக்கத் தேர்தல்கள், சீனாவின் முடிவுகள் - நாம் வெறுமனே படிக்க விரும்புகிறோமா? அல்லது நாமே வரலாற்றை உருவாக்க விரும்புகிறோமா?” ஐரோப்பிய அரசியல் சமூகம் (EPC) ஒரு நம்பகமான, சுயாதீனமான இராணுவ சக்தியாக உருவெடுக்க முடியும் என மக்ரோன் வலியுறுத்தினார்: “வரலாறு, நலன்கள் மற்றும் விழுமியங்களால் இவ்வளவு ஒன்றிணைந்த 700 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வேறு எந்தச் சந்தையும் இல்லை, இந்த மேஜையைச் சுற்றியுள்ள நம்மைத் தவிர.” இபிசி உச்சி மாநாட்டில் ஷொல்ஸ் பேசவில்லை என்றாலும், ஜேர்மன் முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த கன்னைகளும் ரஷ்யா மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக ட்ரம்புடன் கூட்டணி வைக்கும் அதேபோன்றதொரு கொள்கையை முன்வைத்து வருகின்றன. மலிவான ரஷ்ய எரிவாயுவுக்கு பதிலாக அமெரிக்காவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அதிக விலைக்கு வாங்குவதன் மூலமாகவும், மற்றும் ரஷ்யாவுடனான போருக்காக பெரும் அளவிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதன் மூலமாகவும், ஐரோப்பாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதன் மூலமாக ட்ரம்பின் கோபத்தைத் தணிக்க பிரான்க்பியூர்ட்டர் அல்லகேமேன் ஸிட்டுங் (FAZ - Frankfurter Allgemeine Zeitung) அழைப்பு விடுத்தது. அமெரிக்க வர்த்தக தடையாணைகளுக்கு ஐரோப்பாவின் பலவீனத்தை ஒப்புக் கொண்ட அதேவேளையில், FAZ பத்திரிகை இவ்வாறு கூறியது: “இருந்தும் ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பற்றதாக இல்லை. [அமெரிக்க] திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, விவசாய பொருட்கள் அல்லது ஆயுதங்களை வாங்குவதன் மூலம் வர்த்தக உபரியைக் குறைக்க அது முயற்சிக்கலாம். ட்ரம்பைப் பொறுத்த வரையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான மற்றும் குறிப்பாக ஜேர்மனியுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை என்பது ஒரு வெறித்தனமாக உள்ளது. ஆனால் அவரது மிக முக்கியமான பொருளாதார ஆலோசகர்களும் மிகவும் சீரான வர்த்தகத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அமெரிக்க இறக்குமதி வரிவிதிப்புகளை விட சற்றே அதிகமான சுங்கவரிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் குறைக்கக்கூடும்.” இதுபோன்ற சலுகைகளைக் கொண்டு ட்ரம்ப் தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ள முடிவெடுத்தாலும் கூட, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இந்த கொள்கை இரண்டு வெளிப்படையான தடைகளை முகங்கொடுக்கிறது. முதலாவதாக, ஐரோப்பா மீதான ட்ரம்பின் பொருளாதார கோரிக்கைகளின் சுமைகளை தொழிலாளர்களின் தோள்களில் சுமக்கச் செய்வதன் மூலமாக ட்ரம்புடன் ஒரு கூட்டணியைப் பின்தொடர்வதானது, பெரிய, அணுஆயுதமேந்திய இராணுவ சக்திகளுடனான போர்களில் ஐரோப்பாவின் ஈடுபாட்டை ஆழப்படுத்தும். உலக வரைபடத்தில் இருந்து ஈரானை “துடைத்தெறிவது” உட்பட, மத்திய கிழக்கில் போரைத் தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களை ட்ரம்ப் தெளிவாக சமிக்ஞை செய்துள்ளார். உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர விரைவாக பேச்சுவார்த்தை நடத்த தனது “ஒப்பந்தத்தின் கலை” தன்னை அனுமதிக்கும் என்று ட்ரம்ப் கூறினாலும், அவரது கூற்றில் நம்பகத்தன்மை இல்லை. சீன இறக்குமதிகள் மீது பாரிய சுங்கவரிகளை விதிக்க ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார், இது சீன தொழில்துறை மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை சீரழிக்கும். ரஷ்யாவின் எல்லைகளில் மூலோபாயரீதியில் அமைந்துள்ள முக்கிய ரஷ்ய கூட்டாளிகளை நசுக்குவதற்கும் ட்ரம்ப் சூளுரைத்து வருகின்ற நிலைமைகளின் கீழ், ட்ரம்ப் அவற்றை வழங்கினாலும், மாஸ்கோவுக்கு அவரது சமாதான முன்மொழிவுகளை நம்புவதற்கு எந்த காரணமும் இருக்காது. ட்ரம்பின் தேர்தல் வெற்றி இரவில் மாஸ்கோவோ பெய்ஜிங்கோ அவரை அழைத்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. அன்றைய தினம், முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வெடேவ் கூறுகையில், ட்ரம்பால் போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது என்றும், அவர் முயன்றால் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியைப் போல படுகொலை செய்யப்படலாம் என்றும் தெரிவித்தார்: “’நான் ஒரு ஒப்பந்தத்தை முன்வைப்பேன்’ மற்றும் ‘எனக்கு சிறந்த உறவு உள்ளது’ போன்ற வெற்று வார்த்தைகளை கூறும் சோர்வடைந்த ட்ரம்ப்பும் அமைப்புமுறையின் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டியிருக்கும். அவரால் போரை நிறுத்த முடியாது. ஒரு நாளில் அல்ல, மூன்று நாட்களில் அல்ல, மூன்று மாதங்களில் கூட அல்ல. அவர் உண்மையிலேயே முயற்சித்தால், அவர் புதிய JFK ஆக மாறக்கூடும்.” இரண்டாவதாக, இராணுவ தீவிரப்பாடு உள்நாட்டில் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை முகங்கொடுக்கிறது, ஏனென்றால் அது தொழிலாளர்களின் இழப்பில் நிதியளிக்கப்பட உள்ளது. ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ சேவையை குறைக்க தயாரிப்பு செய்து வரும் செலவுக் குறைப்பு ஆணையத்தின் தலைவராக உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை நியமிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். பிரான்சின் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 112 சதவீதமாகவும், அமெரிக்க கடன் 122 சதவீதமாகவும், இத்தாலியின் கடன் 140 சதவீதமாகவும் உள்ள நிலையில், பல தசாப்த கால போர்கள் மற்றும் வங்கி பிணையெடுப்புகளின் ஒட்டுமொத்த நிதியத் தாக்கத்தின் கீழ் தேசிய அரசாங்கங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஐரோப்பிய போர் திட்டங்களுக்கும் காட்டுமிராண்டித்தனமான சமூக தாக்குதல்களும் அவசியப்படுகின்றன. வோல்ஸ்வாகனில் (Volkswagen) மலைப்பூட்டும் வகையில் 30,000 வேலை வெட்டுக்கள் மற்றும் பெல்ஜியத்தில் அவுடி (Audi) உற்பத்தியை நிறுத்துவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர், ஐரோப்பியத் தொழில்துறை முழுவதிலும் பாரிய பணிநீக்கங்கள் நடந்து வருகின்றன. இந்த வாரம் பிரான்சில் இன்னும் ஆயிரக்கணக்கான வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன. Michelin இல் 3,700 வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன. இதில் Cholet, Vannes ஆலைகள் மூடப்பட்டதும், Auchan பல்பொருள் அங்காடித் தொடரில் 2,400 வெட்டுக்களும் அடங்கும். பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள அரசாங்கங்கள் சமூக வேலைத்திட்டங்களில் இருந்து பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை வெட்டுவதற்காக சிக்கன வரவு-செலவு திட்டக்கணக்கிற்கு தயாரிப்பு செய்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியமானது இத்திட்டங்களை மூடிய கதவுகளுக்குப் பின்னால் தீவிரமாக விவாதித்து வருகிறது. “ஒரு புதிய புவிசார் அரசியல் யதார்த்தத்திற்கு” மத்தியில், அது “ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்க உறவுகள்” மீதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் “போட்டித்தன்மை மீதும்” ஒரு மூலோபாய விவாதத்தை நடத்தும் என்று புடாபெஸ்டில் வெள்ளிக்கிழமை உச்சிமாநாட்டின் திட்டநிரல் வெற்றுத்தனமாக குறிப்பிட்டது. மேலதிக சுதந்திர-சந்தை சீர்திருத்தங்களுக்கும், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புத் தொழில்துறையைப் பலப்படுத்துவதற்கும், மற்றும் வணிக நடவடிக்கைகளைப் பாதிக்கும் நெறிமுறைகளைக் குறைப்பதற்கும் அழைப்புவிடுத்து, “புதிய ஐரோப்பிய போட்டித்தன்மை உடன்படிக்கை மீதான புடாபெஸ்ட் பிரகடனம்” என்ற சுருக்கமாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு அறிக்கையை அது ஏற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கைகள், பாதுகாப்பு செலவினங்களில் 100 பில்லியன் யூரோ அதிகரிப்புக்கு நிதியாதாரம் திரட்டுவதற்காக ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்சில் கடந்த ஆண்டு நடந்த வேலைநிறுத்தங்களைப் போலவே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஆழமான எதிர்ப்பை முகங்கொடுக்கும். ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அதிவலது ஆட்சிக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதே முக்கிய பிரச்சினையாகும். அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, சர்வதேச சோசலிசப் புரட்சியின் முன்னோக்கில் தொடுக்கப்பட்ட அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் போராட்டம் அவசியமாகும். https://www.wsws.org/ta/articles/2024/11/12/pjrc-n12.html- Mist of Capricorn
என்ன நினைச்சே -- விக்னேஸ் & ஜீவிதா- நாகேஷ் எனும் நடிகமலை
பாரதியாரின் பாடல்களுடன் பொருத்தமான வரிகளைச் சேர்த்திருப்பவர் கவிஞர் வாலி. இசையமைத்திருப்பவர் வி.குமார். பாடலைப்பாடியிருப்பவர்கள் டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன், மற்றும் கே.சுவர்ணா- ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
கஸ்தூரியை புழல் சிறையில்(பெண்கள்) அடைத்துள்ளார்களாம்.- சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
சீனாவுக்கு யாரும் செல்ல தேவையில்லை. ரில்வினே சீனாவை சிறிலங்கா மக்களுக்கு இலவசமாக காட்டுவார்.- தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
கிழக்கில் ஒரு பெண் உறுப்பினருக்கு போனால் நன்று. இவர்களின் குதறலை அடுத்த தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்குகள் மூலம் பதில் சொல்ல வேண்டும்.- தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் - டக்ளஸ் தேவானந்தா!
இந்த முறை சரிவராது என நினைக்கிறேன். வேறு வழிகளில் பணம் சேர்க்க முயல்வார்.- நாடாளுமன்றத் தேர்தல் 2024 : தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள் - நிலாந்தன்
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆகக்கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா வரலாற்றில் இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். https://lankasara.com/news/record-breaking-womens-representation-in-sri-lankas-new-parliament/- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சத்தியலிங்கத்தின் இறுதிக் கையொப்பம் : காத்திருக்கும் அதிர்ச்சி- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
நாங்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் தமிழர் தரப்பு நிச்சயமாக இழக்கும் என மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும், யாழ். மாநகர சபை முன்னாள் மேஜருமான வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இடதுசாரி கட்சிகளுக்கு ஒரு பண்பு உலகம் முழுவதும் இருக்கிறது. அவர்கள் சட்டங்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி ஆட்சியில் நீண்ட நாட்களுக்கு அகற்றப்பட முடியாதவர்களாக இருக்கும் பல வருடங்களாக இருக்கிறது. வரலாற்று வெற்றியை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி தனக்கு ஏற்றது போல் சட்டங்களை மாற்றும், அரசியலமைப்பை மாற்றும், நாங்கள் வடக்கையும் கிழக்கையும் பறிக்கொடுத்து விட்டு எங்கள் மீது திணிக்கப்படும் திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் நபராக மாறிவிடப்போகிறோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் விரைவில் நடக்கவுள்ள மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி தேர்தலையும் தமிழர் தரப்பு நிச்சயமாக இழக்கும் என தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=196031- Mist of Capricorn
நீ பாதி நான் பாதி கண்ணே -- ஜோன் ஜெரோம் & ஜீவிதா- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
திருத்தத்துக்கு திருத்தம்: அவர் வழக்கறிஞராக தொழில் பார்க்காததால் அவரிடம் வழக்குகள் வருவதில்லை. இருக்கிற சொத்துக்கு வழக்கறிஞராக தொழில் பார்க்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். கதியால் வழக்குகளை தீர்க்க பலர் உள்ளார்கள்.😁 - கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.