Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. என்ன சத்தம் இந்த நேரம் -- ஜீவிதா
  2. விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன? அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் விமானப்படைத்தளம் உள்ளது. அம்மாகாணத்தின் டேடன் நகரில் அமைந்துள்ள இந்த விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரிய விமானப்படைத்தளங்களில் ஒன்றாகும். இதனிடையே, கடந்த சனிக்கிழமை முதல் விமானப்படைதளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. அதேபோல், நியூயார்க், நியூஜெர்சி, யுடா உள்பட பல்வேறு மாகாணங்களில் விமான நிலையங்கள், விமானப்படைத்தளங்கள் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இந்த டிரோன் நிகழ்வில் வெளிநாட்டு நபர்களின் சதி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் நியூயார்க், நியூஜெர்சி போன்ற மாகாணங்களில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் அருகே டிரோன்கள் பறக்க ஒருமாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.thaarakam.com/news/3f180f22-dbcc-490f-9a35-8eeb6a4ace9c
  3. கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,காத்மாண்டு விமான நிலைய விதிமுறைகளில், இந்திய விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றன கட்டுரை தகவல் எழுதியவர்,சஞ்சயா தகல் பதவி,பிபிசி நியூஸ் நேபாளி 21 டிசம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,Sanjaya Dhakal/BBC படக்குறிப்பு,காத்மாண்டு விமான நிலைய விதிமுறைகளில், இந்திய விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றன இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்துமஸ் இரவில், காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்ல இருந்த ஒரு இந்திய விமானம் கடத்தப்பட்டு, ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தின் பாதிப்பு இன்று வரை காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் காணப்படுகின்றது. இன்றும், நீங்கள் காத்மாண்டுவிலிருந்து இந்திய விமானத்தில் பயணிக்கும்போது, ஒரு கூடுதல் பாதுகாப்பு சோதனை நடைபெறுகிறது. விமான நிலையத்தில் வழக்கமான பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் மற்றும் பாதுகாப்புச் சோதனைகளை முடித்த பிறகு போர்டிங் படிக்கட்டுகளுக்கு அருகில், தரையில் இருந்து சுமார் இரண்டரை அடி உயரத்தில் உள்ள அறையில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தும் ஒரு மேலதிக சோதனைக்கும் பயணிகள் உட்பட வேண்டும். ஆனால் இந்தச் சோதனை இப்போது தேவையில்லை என்கிறார் நேபாள அரசின் செய்தித்தொடர்பாளர், "முந்தைய காலங்களில் இந்திய விமான நிறுவனங்கள் நேபாளின் பாதுகாப்பை நம்பவில்லை என்ற காரணத்தினால், இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்போது இது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்கனவே செய்துள்ளோம்," என நேபாளின் தகவல் தொடர்பு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் பிபிசிக்கு தெரிவித்தார். படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். அந்த பழைய சம்பவத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, அந்த பயங்கரமான விமானக் கடத்தல் நிகழ்வின் நினைவு நிரந்தரமாக இருக்கும். காத்மண்டுவிலிருந்து இந்திய விமானங்களில் இந்தியா செல்லும் பயணிகளுக்காக, இந்தியா மேற்கொள்ளும் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளால், இரண்டு அண்டை நாடுகளின் உறவுகளில் அந்த கடத்தல் சம்பவத்தின் தாக்கம் இன்னும் மறையாமல் உள்ளதாக நேபாளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது இரு நாடுகள் இடையிலான நம்பிக்கை குறைவு என கருதக்கூடாது. மாறாக இது அந்நாடுகளின் உறவில் ஒரு தனித்துவமான அடையாளமாகக் கருதப்பட வேண்டும் என இந்திய ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். பட மூலாதாரம்,Lokesh Sharma/BBC படக்குறிப்பு,இந்திய விமானங்களில் காத்மாண்டுவிலிருந்து செல்லும் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பிற்காக உள்ள அறைகள் பட மூலாதாரம்,Lokesh Sharma/BBC படக்குறிப்பு,விமானத்தில் ஏறுவதற்கு முன், அறைகள் வழியாகச் செல்வதற்குப் பயணிகள் வரிசையில் நிற்கிறார்கள் பட மூலாதாரம்,Lokesh Sharma/BBC படக்குறிப்பு,இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனை செய்யப்படும் பயணிகள் 8 நாட்கள் நீடித்த கடத்தல் 1999-ஆம் ஆண்டின் டிசம்பர் 24-ஆம் தேதி மதியம், காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் இந்தியாவின் IC 814 விமானம், சுமார் 180 பயணிகளுடன், காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை விட்டு புறப்பட்டபோது கடத்தப்பட்டது. "எங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டவுடன், திடீரென ஒரு மோதல் ஏற்பட்டது, உடனடியாக அனைவரும் கீழே படுத்துகொள்ளும்படி கூறப்பட்டது. உணவுப் பொட்டலங்களைத் திறக்கக் கூட முடியவில்லை. என்னுடைய மனதில் முதலில் வந்த விஷயம், நகைகளைச் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்துகொண்டு இருப்பார்கள் என்பதுதான். ஏனெனில் புதிதாகத் திருமணம் ஆன பல ஜோடிகள் விமானத்தில் இருப்பதை நான் கவனித்தேன்," என்று விமானத்தில் இருந்த நேபாள பயணி சஞ்சயா திடல், அச்சம்பவத்தை நினைவு கூறுகிறார். அவருக்கும் அப்போது புதிதாகத் திருமணம் ஆகியிருந்தது. அவரது மனைவி ரோஜினா பதாகுடன், திருமணமான ஒரு மாதத்திற்கு பிறகு சஞ்சயா திடல் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர்கள் டெல்லி வழியாக பாகிஸ்தானில் உள்ள சஞ்சயாவின் பணியிடத்துக்குப் புறப்பட்டனர். "பிறகு, கடத்தல்காரர்கள் காஷ்மீர் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தது. அவர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு எளிதில் நிறைவேற்றாது என்று உணர்ந்ததும், எங்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது என்று நினைத்தேன்," என்று அவர் கூறினார். கடத்தல் சம்பவத்தின் ஏழாவது நாளில் தன்னுடைய அமைதியை இழந்ததாக அவர் நினைவுகூருகிறார். "கடத்தல்காரர்கள், திடீரென பயணிகள் மீது துப்பாக்கிகளை குறிவைத்து, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகக் கூறினர்," என அவர் கூறினார். எனினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு சூழல் மாறியது. ஒரு வாரம், கந்தஹாரில் தங்கியிருந்த அவர்கள் டிசம்பர் 31 அன்று டெல்லி திரும்பினர். பட மூலாதாரம்,Sanjaya Dhital படக்குறிப்பு,கடத்தப்பட்ட விமானத்தில் சஞ்சயா திடல் மற்றும் அவரது மனைவி ரோஜினா பதாக் ஆகியோர் இருந்தனர் சஞ்சயா திடல், பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள 'அம்டா' என்ற ஜப்பானிய பன்னாட்டு தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்தார், மற்றும் அவ்விடத்திலிருந்து ஆப்கானிஸ்தானின் தொலைவான பகுதிகளுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வந்தார். கடத்தல்காரர்கள், அவரின் பணிகளை தெரிந்துகொண்ட பிறகு, "Chief" என்று அழைக்கப்பட்ட அவர்களின் தலைவர், தனது உடல்நலன் பற்றி விசாரித்தார் என்கிறார் சஞ்சயா திடல் "அதன் பிறகு, என் மீதான அவர்களது அணுகுமுறை சற்று தளர்ந்தது. என்ன வேண்டுமென்று அவர்கள் கேட்டபோது, நான் தண்ணீர் வேண்டுமென்று கேட்டேன்," என்றார் சஞ்சயா. விமானம் கடத்தப்பட்ட பிறகு, பயணிகள் உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்தனர், இது அவர்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தியது. "கடத்தப்பட்ட பிறகு, அடுத்த நாள் காலை மட்டுமே, எங்களுக்கு ஒரு கண்ணாடி குடுவையில் தண்ணீர் மற்றும் சில பிஸ்கெட்டுகள் கொடுக்கப்பட்டன. பின்னர், நாங்கள் கந்தஹாருக்குச் சென்றபோது, சூடு இல்லாத சோறு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன," என சஞ்சய் தெரிவித்தார். கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 மாஸ்கோவில் ரஷ்ய அணுஆயுதப் படைகளின் தலைவர் கொல்லப்பட்டது எப்படி?18 டிசம்பர் 2024 ஊடகங்களால் இழிவுபடுத்தப்பட்ட தம்ராகர் பட மூலாதாரம்,Sanjaya Dhakal படக்குறிப்பு,கந்தஹாரிலிருந்து திரும்பிய பின்னர் தனது கணவர் நோய்வாய்ப்பட்டார் என்று மீரா தம்ராகர் கூறுகிறார் பயணிகளுள், காத்மண்டுவை சேர்ந்த சால்வை வியாபாரி கஜேந்திர மன தம்ராகர் என்பரும் இருந்தார். பகுதி நேர நகைச்சுவை நடிகராக இருந்த இவர், தனது நகைச்சுவை உணர்விற்காக பரவலாக அறியப்பட்டார். "இந்த கடத்தல் சம்பவம், அவரது மனநிலையை மாற்றிவிட்டது. அவர் எப்போதும் நகைச்சுவையாக உரையாட விரும்பும் ஒரு மனிதராக இருந்தார். ஆனால் இந்த விமான கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு, அவர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 42 வயதில் இதயக்கோளாறு காரணமாக அவர் இறந்தார்," என அவரது மனைவி, மீரா தம்ராகர், பிபிசிக்கு தெரிவித்தார். விமான கடத்தல் சம்பவத்தின் போது, தம்ராகர் பயணிகளை சிரிக்கச் செய்து அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க முயன்றார். "அவர் கடத்தல்காரர்களை போல நடித்து, பாலிவுட் திரைப்படமான ஷோலேவின் வசனங்களை கூறினார். ஆனால், அவர் கடத்தல்கார்களில் ஒருவரை போல நடித்த போது, அந்த நபர் கோபமாகி, தம்ராகரின் தலையில் துப்பாக்கியின் பின்புறத்தால் அடித்தார். அதன் பிறகு, தம்ராகர் அமைதியாகிவிட்டார்," என்று திடல் கூறினார். விமானத்தின் உள்ளே மட்டுமல்ல, தம்ராகர் வெளியிலும் துன்பத்தை அனுபவித்தார். 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?18 டிசம்பர் 2024 கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,DEVENDRA MAN SINGH/AFP via Getty Images படக்குறிப்பு,பகுதி நேர நகைச்சுவை நடிகராக இருந்த தம்ராகர், தனது நகைச்சுவை உணர்விற்காக பரவலாக அறியப்பட்டார் சில ஊடகங்களில், கடத்தல்காரர்களில் அவரும் ஒருவர் என கூறின. அச்செய்தி, அவரது குடும்பத்திற்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எந்த மக்களும், இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதை, நேபாளத்தின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர், டாக்டர் ராம் ஷரண் மஹட் ஊடகங்களுக்கு விளக்கினர். "சில ஊடகங்களில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தெரிந்துகொண்டபோது, அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் அமைதியாகிவிட்டார், அவரது சால்வை வியாபாரமும் சரிந்தது. அதுவே அவரது கடைசி விமான பயணம்," என மீரா தம்ராகர் கூறுகிறார் விமானத்திற்கு வெளியே நிலவிய குழப்பம் கடத்தப்பட்ட விமானத்தின் உள்ளே பயணிகள் பீதியடைந்திருந்த நிலையில், விமானத்துக்கு வெளியேயும் குழப்பம் ஏற்பட்டது. "அங்கு நிலைமை மிகவும் தீவிரமாக இருந்தது. சில இந்திய ஊடக செய்திகள், நேபாளத்தின் பாதுகாப்பு பலவீனங்களை மிகைப்படுத்தின. நேபாளத்திற்கு எதிராக இந்தியா சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தோன்றும் அளவுக்கு அந்த செய்திகள் இருந்தன" என்று கெம் ராஜ் ரெக்மி கூறினார். சம்பவம் நடந்த உடனேயே நேபாள அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் உறுப்பினராக கெம் ராஜ் ரெக்மி இருந்தார். மாலை 4 மணிக்கு மேல் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் கடத்தப்பட்டது. டெல்லிக்குச் செல்வதற்குப் பதிலாக, விமானம் இந்தியாவின் அமிர்தசரஸ், பாகிஸ்தானின் லாகூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் என்று திருப்பிவிடப்பட்டு, இறுதியாக ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்குச் சென்றது. விரைவில், இந்திய ஊடகங்கள் நேபாளத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை பற்றிய செய்திகளை வெளியிடத் தொடங்கின. மறுநாளே, நேபாள அமைச்சரவை இந்த சம்பவத்தைப் புலனாய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட உயர்நிலை குழுவை அமைத்தது. இந்தியா உடனடியாக தனது விமானங்களை நேபாளுக்கு அனுப்புவதை நிறுத்திக்கொண்டது. மேலும் இந்தியாவின் இந்த முடிவானது, ஐந்து மாதங்கள் வரை நீடித்தது. நேபாளத்தின் அரசியல் தலைமை, விமானக் கடத்தல் சம்பவத்தை போதுமான அளவு முக்கியமானதாக கருதவில்லையென, பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட இந்தியாவின் உயர்நிலை தலைவர்கள் உணர்ந்ததாக நேபாளத்திற்கான அப்போதைய இந்திய தூதர், கிருஷ்ணா வி ராஜன் பிபிசியிடம் தெரிவித்தார். அவருடைய 'Kathmandu Chronicles' என்ற புத்தகத்தில், இந்த விமானக் கடத்தல் சம்பவம் நேபாளத்தின் பெயரையும் சுயமரியாதையையும், இந்திய மக்களின் பார்வையில் அது எப்போதும் அனுபவித்து வந்த நல்லெண்ணத்தையும் சிதைத்து என ராஜன் குறிப்பிடுகிறார். ஆனால், சில குற்றச்சாட்டுகள் இந்தியா மீதும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். "இந்திய அரசு, அதன் பங்கிற்கு, இந்தியத் தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் தூண்டுதல்கள் மூலம் நேபாளத்தை எதிர்மறையாகக் காட்டுவதை ஊக்குவித்தது. மேலும் இதன் மூலம், இச்சம்பவத்தில் அரசாங்கத்தின் பிழைகளை மறைத்து, கவனத்தைத் திசை திருப்ப முயன்றது" என்று ராஜன் எழுதுகிறார். இவ்வாறான சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பட மூலாதாரம்,SAEED KHAN/AFP/GETTY IMAGES படக்குறிப்பு,கடத்தப்பட்ட விமானம் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது விசாரணைக் குழு என்ன முடிவுக்கு வந்தது? விமானக் கடத்தல் சம்பவம், விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஏற்பட்டது என்பது தெளிவாக இருந்தபோதிலும், பாதுகாப்பு குறைபாடுகளுக்கு யார் அல்லது எது பொறுப்பாகும்? என்று புலனாய்வு குழுவினரால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. "கடத்தல்காரர்கள், சாதாரணப் பயணிகள் போலவே விமான நிலையத்தில் நடைமுறைகளை பின்பற்றினர். ஆனால் அவர்கள் பாதுகாப்பு சோதனைகளின் போது நிறுத்தப்படவில்லை," என்று குழுவின் உறுப்பினர் மற்றும் நேபாளத்தின் முன்னாள் உள்துறை செயலாளர் கெம்ராஜ் ரெக்மி கூறினார். புலனாய்வின் போது விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனைகளை பரிசோதித்ததை பற்றி நினைவுகூரும் அவர், "குழுவின் தலைவராக இருந்தவர் நேபாள் காவல்துறையின் முன்னாள் ஐ.ஜி. நாங்கள் பரிசோதனை செய்யும் போது, எங்கள் குழு எளிதாக பாதுகாப்பு சோதனைகளை கடந்து சென்றது மற்றும் அவரது துப்பாக்கி அங்கு கண்டறியப்படவில்லை," என்று ரெக்மி தெரிவித்தார். அந்த நேரத்தில், விமான நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த 16 கண்காணிப்புக் கேமராக்களில், நான்கு மட்டுமே செயல்படக்கூடியதாக இருந்தது என்று குழு கண்டுபிடித்தது. பாதுகாப்புப் பணியாளர்களுக்கு சரியான பயிற்சி இல்லாமை, முக்கியப் பகுதிகளுக்கு செல்ல அனுமதியளிப்பதில் இருந்த கவனக்குறைவு, மற்றும் அங்கீகாரம் இல்லாத நபர்களுக்கு தேவையற்ற அணுகல் வழங்குதல் போன்ற பிரச்னைகள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டன. முக்கிய பகுதிகளில் சோதனை கருவிகள் மற்றும் ஊடுகதிர் (X-ray) இயந்திரங்களை நிறுவுதல் மற்றும் விமான பாதுகாப்பு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க, அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், விமானம் கடத்தப்படுவதற்கு, சில வாரங்களுக்கு முன்பு விமானக் கடத்தலுக்கான வாய்ப்பு இருப்பது குறித்து, தகவல் கிடைத்திருந்ததை புலனாய்வு குழு கண்டுபிடித்தது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன? "இத்தகைய முக்கியமான விஷயத்தை கையாள்வதில் அரசியல் பொறுப்பின்மை தெளிவாக இருந்தது," என்று ரெக்மி கூறினார். அந்த நேரத்தில் நேபாளத்தின் புலனாய்வு அமைப்பான தேசிய புலனாய்வு துறையின் தலைவர் ஹரி பாபு சௌத்ரி, அதிக கவனமாக இல்லாததற்காக, விமர்சனத்திற்கு உள்ளானார். "இத்தகைய நிகழ்வு நிகழலாம் என்ற வதந்திகள் இருந்தபோதிலும், எங்களிடம் உறுதியான தகவல் இல்லை. ஆனால், பாதுகாப்பு மற்றும் விமான நிலைய மேலாண்மையில் கவனக்குறைவு தெளிவாக உள்ளது," என்று சௌத்ரி பிபிசியிடம் தெரிவித்தார். "எந்த நேபாள அதிகாரி அல்லது பாதுகாப்பு பணியாளரும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது எங்கள் குழு கண்டுபிடித்த ஒரு விஷயம். ஆனால், பாதுகாப்பில் இருந்த கவனக்குறைவு தெளிவாக இருந்தது," என்று ரெக்மி கூறினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, நேபாள விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனைகளை அரசாங்கம் பலப்படுத்தியுள்ளதாக நேபாள அமைச்சர் குருங் கூறுகிறார். பட மூலாதாரம்,SAEED KHAN/AFP/GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா மூன்று கைதிகளை விடுவித்தால் மட்டுமே கடத்தல் சம்பவத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற நிலை ஏற்பட்டது 'அதிகரித்த பாதுகாப்பு' நேபாளத்திற்கான அப்போதைய இந்திய தூதர் கிருஷ்ணா வி. ராஜன், கடத்தல் சம்பவம் இந்திய மக்களின் பொது மனப்பான்மைக்கு பெரும் அதிர்ச்சியாகவும், இரு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்ததாகக் கூறினார். "குடிமக்கள் மத்தியில் நேபாளம் குறித்த நல்லெண்ணச் சிதைவும், அரசியல் மற்றும் அரசாங்கம் மத்தியில் நம்பிக்கைச் சிதைவும் ஏற்பட்டன என்பதில் சந்தேகமில்லை. ஒரு சுற்றுலா தலமாக நேபாளம் இருந்தது. உதாரணமாக தேனிலவுக் கொண்டாடும் இந்திய மக்களுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாக இருந்து, ஆனால் திடீரென்று அது அதன் மதிப்பை இழந்துவிட்டது." "அங்கு இந்தியாவின் பாதுகாப்புச் சோதனைகள் தொடர்வது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நம்பிக்கை இல்லாததைக் குறிக்கவில்லை; அது வெறும் கூடுதல் முன்னெச்சரிக்கை மட்டுமே" என்று ராஜன் பிபிசியிடம் தெரிவித்தார். எனினும், கடத்தல் சம்பவம் இரு நாடுகளின் உறவுகளை முறிக்க வைத்தது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். "அந்த சம்பவத்திற்கு பிறகு, நேபாளத்தின் பாதுகாப்பு மீதான உணர்வு இந்தியாவுக்கு அதிகரித்தது." என நேபாளத்தின் முன்னாள் உள்துறை செயலாளர் கெம் ராஜ் ரெக்மி கூறுகிறார். கடத்தல் சம்பவம் நடந்த பின்னர் உடனடியாக, இந்தியா நேபாளுக்குச் செல்லும் எல்லா விமானங்களையும் நிறுத்திவிட்டது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, நேபாளம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனுமதித்தப் பிறகு மட்டுமே இந்திய விமானங்கள் காத்மாண்டுவுக்கு மீண்டும் செல்லத் தொடங்கின. "இந்தச் சம்பவத்திற்கு பிறகு, இந்தியா விடுவித்த நபர்கள், தெற்கு ஆசியாவில் பல ஆண்டுகளுக்கு ஒரு புதிய பயங்கரவாத அலையை ஏற்படுத்தினர்" என்று நேபாள ஆய்வாளர் சுதீர் ஷர்மா கூறினார். "இந்தச் சம்பவம் இந்தியாவின் உக்திக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தியாவிற்கு நேபாளம் நட்பு அண்டை நாடாகத் தொடர்கிறது. மேலும் நேபாளம் அதன் நிலத்தை இந்தியாவுக்கு எதிராக 'மூன்றாம் தரப்பினரால்' தவறாகப் பயன்படுத்த அனுமதிக்காது என்பதில் நம்பிக்கையும் உள்ளது" என மற்றொரு இந்தியப் பகுப்பாய்வாளர், அதுல் தாகூர் கூறுகிறார். இந்தியா இந்த விமானக் கடத்தல் சம்பவத்தை முடிவுக்குக் கொண்டு வர மூன்று கைதிகளை விடுதலை செய்ய வேண்டியிருந்தது. கடத்தல்காரர்களால் இந்திய பயணிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq6256e2v3no
  4. பட்டிருப்பு-போரதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதான வீதியை திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பம் ! No comments அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீதிகள்,.விவசாய பயிர்நிலங்கள் என்பன பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக வீதிகள் பகுதியளவிலும் முற்றாகவும் பாதிக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் போர்தீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு போரதீவு பிரதான வீதியானது வெள்ளத்தில் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் அதனை சீர் செய்து திருத்தியமைக்கும் பணிகளை நேற்று வெள்ளிக்கிழமை ( 20 ) திகதி வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்தது. இதனிடையில் வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதிக்கு குறுக்காக பாயும் நவகிரி குளம் அதிகளவில் பெருக்கெடுத்தமையால் வாகனங்கள் பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.காபெட் வீதிகளை உடைத்து அருகில் காணப்படும் வயல் நிலங்களுக்கு படை படையாக தூக்கி வீசப்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியை வெகு விரைவில் புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது. இவ்வாறு பழுதடைந்த நிலையில் காணப்படும் வீதியினால் தினமும் விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலர் செல்வதானால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. https://www.battinews.com/2024/12/blog-post_375.html
  5. 15 முன்னாள் அமைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு கடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும் முன்னாள் அமைச்சர் தயாகமகேவுக்கு ஒரு விமானமும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு மூன்று விமானங்களும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுக்கு இரண்டு விமானங்களும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இருபத்தைந்து விமானங்களையும் முன்னாள் அமைச்சர் அலிசப்ரிக்கு இரண்டு விமானங்களையும் பெற்று பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த அமைச்சர்கள் 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விமானப்படை விமானங்களை தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த விமான பயணங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து கிடைத்த பதில் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/15-மனனள-அமசசரகளன-வமன-பயண-வபரஙகள-கசவ/175-349037
  6. ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? கந்தையா அருந்தவபாலன் ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணமாக ஒரு பணியாளரை நியமிப்பதற்கு அல்லது இடமாற்றம் செய்வதற்கு மேலதிகாரி ஒருவர் பெறுவது. ஊழலும் இலஞ்சத்தினுள் அடங்கும் நிலைமைகளும் உண்டு.ஊழல் பெரும்பாலும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனத் தலைவர்களுடன் தொடர்புபட்டிருக்க இலஞ்சம் ஆட்சியாளர் தொடக்கம் அடிமட்ட அரச ஊழியர் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. ஊழல்கள் பல கோடிகளுடன் தொடர்புபட இலஞ்சம் நூறு ரூபா தொடங்கி கோடிகள் வரை செல்லும். சிலவேளை இதனுள் மதுவிருந்து, மாது விருந்தும்கூட அடங்கும். இலங்கையில் இவை தீர்க்க முடியாத ஒரு நோயாக இன்று எல்லாவிடத்திலும் புரையோடிப் போயுள்ளது. ஏதாவது கொடுத்தால்தான் கருமம் நடக்கும் அல்லது விரைவாக நடக்கும் என்பதால் இலஞ்சம் என்பதை தவிர்க்க முடியாத ஒரு நியதியாக மக்கள் இன்று ஏற்கப் பழகிவிட்ட நிலைமையே நாட்டில் பல இடங்களில் காணப்படுகிறது. இலங்கையின் இன்றைய பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குக் குறிப்பாக நாடு கையறு நிலைமைக்குத் தள்ளப்பட்டமைக்குரிய பிரதான காரணிகளில் ஊழலும் இலஞ்சமும் பிரதான காரணிகளென தேச, சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலஞ்சம், ஊழல் என்பன உற்பத்தி திறனைப் பாதிப்பதுடன், உற்பத்திச் செலவு, விலை என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதால் தேசிய, சர்வதேசிய சந்தைப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதனால் நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைவதால் வறுமை நிலை அதிகரிக்கிறது. வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. நாட்டின் நலன்புரிச் சேவைகளின் அளவும் தரமும் வீழ்ச்சியடைகிறது. அரச படுகடன் உயர்கிறது. ‘ரான்ஸ்பரன்சி இன்டநாஷனல்’ நிறுவனத் தரவுகளின்படி இலங்கையின் இலஞ்ச உணர் சுட்டியின் அளவு ( corruption perception index ) 2023 இல் 34 ஆக இருந்தது. இச்சுட்டி 0 தொடக்கம்100 வரையான புள்ளிகளைக் கொண்டது. 0 மிக மோசமான இலஞ்ச நிலையையும் 100 இலஞ்சமற்ற நிலையையும் காட்டும். இது 2020 இல் 38 ஆக இருந்தது என்பதிலிருந்து வருடாந்தம் இலங்கையின் இலஞ்ச நிலைமை கூடிக்கொண்டு செல்வதை அறிய முடியும். 180 நாடுகளைக் கொண்ட இக்கணிப்பீட்டில் இலங்கை 115 ஆம் இடத்தில் இருப்பது இலங்கை உயர்மட்ட இலஞ்ச நிலை கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இவ்வாறான ஒரு நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பீடம் ஏறியுள்ளது என்பதற்கப்பால் அதுவே அவர்களை ஆட்சிப் பீடம் ஏறவும் வழிவகுத்தது. அதுவே அவர்களுக்குப் பெரும் சவாலாகவும் இருக்கப் போகிறது. நோயாளி ஒருவரின் உடலெங்கும் பரவி விட்ட புற்றுநோயைக் குணப்படுத்துவது எவ்வளவு கடினமானதோ அதுபோன்ற ஒரு நிலையே புதிய ஆட்சியாளருக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள இலஞ்சமும் ஊழலும். இதனை ஜனாதிபதி நன்குணர்ந்தவராகவே உள்ளார் என்பதை அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் அவராற்றிய உரை வெளிப்படுத்துகிறது. எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அதனைக் கையாள்பவர்கள் நேர்மையாகவும் சரியாகவும் கையாளாவிட்டால் அச்சட்டங்களினால் எவ்வித பயனும் கிடைக்காது. இலங்கையில் சட்டங்கள் சிலந்தி வலையைப் போன்றுள்ளது. அதில் சிறிய விலங்குகள் சிக்கி விடுகின்றன: பெரிய விலங்குகள் அதைக் கிழித்துக் கொண்டு சென்று விடுகின்றன. அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவதன் மூலமே இலஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியதுடன், 2021 இல் தாக்கல் செய்யப்பட்ட 69 வழக்குகளில் 40 உம் 2022 இல் தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 உம் மீளப்பெறப்பட்டதற்கான காரணத்தை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வெளியிடவேண்டும் என்றும் கேட்டுள்ளமை நாட்டில் புரையோடிப் போயுள்ள இலஞ்ச, ஊழலை அகற்றுவது அவ்வளவு இலகுவானதொன்றல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி இவ்வாறான ஆணைக்குழுக்கள் மற்றும் நாட்டின் நீதித்துறை என்பன எவ்வளவுதூரம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. இலஞ்ச, ஊழல் முறைகேடுகளை அகற்றுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என முக்காலத்துக்குமுரிய சவால்கள் காத்திருக்கின்றன. தேர்தல் காலத்தின்போது தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஊழலற்ற அரசாங்கத்தை அமைப்போம் என்பது மட்டுமல்ல கடந்தகாலத்தில் ஊழல் செய்தோரை நீதிக்கு முன் நிறுத்துவோம் என்பதுவும் அடக்கம். நிகழ்கால, எதிர்கால ஊழல்களை அகற்றுவதற்கு கடந்த ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதும் அவசியமானது. கடந்த காலத்தைப் பொறுத்தவரை 2010 ஆண்டுக்குப்பின் மகிந்தவின் ஆட்சிக்காலத்திலும் மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்திலும் கோதாபயவின் குறுகிய ஆட்சிக்காலத்திலும் பாரிய ஊழல் மோசடிகள் நடந்துள்ளன. ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட’ முறைகேடு தொடக்கம் ‘போட் சிற்றி’ ஊழல் மற்றும் உகண்டாவுக்கு தனி விமானத்தில் பணம் அனுப்பிய வரை பல முறைகேடுகளின் சூத்திரதாரிகளான ராஜபக்‌ஷ குடும்பத்தினரையும் மத்திய வங்கியின் பாரியளவிலான பிணைமுறி மோசடிக்காக மைத்திரி, ரணிலையும் பாரியளவிலான சீனி வரி மோசடிக்காக கோதாபயவையும் நீதிக்கு முன் நிறுத்தவேண்டிய கடப்பாடு தேசிய மக்கள் சக்திக்குண்டு. இவை இலகுவான விடயங்களன்று. திட்டமிட்டு திருடுபவர்கள் இயன்றவரை இயன்றவரை தடயங்களை விட்டு வைக்கமாட்டார்கள். அவ்வாறே ஏதாவது இருந்தாலும் அக்கோப்புகள் காணாமல் போய்விடும். ஏனெனில் செய்யப்பட்ட களவுகள் தனியே அவர்களால் செய்யப்பட்டவையல்ல. அவை யாவும் மேல்மட்ட கூட்டுக்களவுகள். அந்தக் கூட்டுக்களவாணிகள் இப்போதும் அரச பணியில் ஆங்காங்கே இருக்கின்றனர் எனபதுடன்அவற்றை மூடிமறைக்கக்கூடிய வல்லமையுடனும் இருக்கின்றனர். அவற்றையும் மீறி தடயங்கள் கண்டெடுக்கப்படும்போது சம்பந்தப்பட்ட நபர்கள் நாட்டிலிருக்கமாட்டார்கள். அர்ஜுனா மகேந்திரா சிங்கப்பூர் வீதிகளில் சுற்றித் திரிவார். ஆனால் அவரின் முகவரி கிடைக்காததால் நீதிமன்றக் கட்டளையை வழங்க முடியவில்லை என சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் அறிவிப்பர். ஏலவே பஷில், கோதாபய பாதுகாப்பாக வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டார்கள். தேவையேற்படின் இங்குள்ள சம்பந்தப்பட்டவர்களும் பறப்பது கடினமானதல்ல. போதாக்குறைக்கு அவர்களிடம் வெளிநாட்டுக் குடியுரிமையுமுண்டு. இந்த இலட்சணத்தில் இந்தப் பெருச்சாளிகளை அனுரவினால் இலகுவாக நீதிக்கு முன் நிறுத்த முடியுமா? சரி, கடந்த காலத்தை விடுவோம். நிகழ்காலத்தில் நிலைமை சாதகமாக உள்ளதா? ஊழல், இலஞ்சத்தில் புரையோடிப்போன இலங்கையின் நிர்வாக, நீதிக் கட்டமைப்புகள் இன்னும் அவ்வாறே உள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சர்களும் அவர்களின் செயலாளர்களும் மட்டுமே மாறியுள்ளனர். செயலாளர்கள் கூட ஏற்கனவே அரச துறைகளில் இருந்த அதிகாரிகள்தான். வானத்திலிருந்து கொண்டவரப்பட்டவர்களல்லர். கோதாபயவுடனும் பின்னர் ரணிலுடன் இருந்த ஆலோசகர்கள், அதிகாரிகள் சிலர் இன்னும் அனுரவுடனும் இருக்கிறார்கள். ஜனாசாக்களை கட்டாயம் எரிக்கவேண்டும் என்று கோதாபயவுக்கு குழல் ஊதிய ஒருவரை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்தமைக்கு முஸ்லிம் மக்களிடமிருந்து கண்டனங்கள் இப்போதே எழத்தொடங்கிவிட்டன. போலிப்பட்டம் தொடர்பாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கப் போவதாக பொதுஜன பெரமுன கச்சையைக் கட்டுகிறது. இதில் நகைச்சுவை என்னவென்றால் தனியறையில் மோசடியான முறையில் சட்டப் பரீட்சையெழுதிப் பட்டம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிற நாமல்தான் அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர். அதுமட்டுமன்றி பல இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் பதவியுயர்வுடன் இன்னும் உயர்பதவிகளை அலங்கரித்து வருவதையும் காணமுடிகிறது. அனுரவினதும் அவர் தோழர்களதும் கைகள் மட்டும் சுத்தமாக இருந்தால் மட்டும் போதுமா? சம்பந்தப்பட்ட அனைவரதும் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டுமல்லவா? அது மிகக்கடினம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு போக்குவரவு கண்காணிப்புக் காவல் துறையினரின் நாளாந்த வருமானத்தில் எவ்வித வீழ்ச்சியுமேற்படவில்லை என்பது. நிகழ்காலத்தில் இவ்வளவு சவால்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டு எதிர்காலம் தொடர்பிலும் புதிய அரசாங்கம் கவனஞ் செலுத்தவேண்டியுள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் அவர் சுட்டிக்காட்டியது போல அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவதன் மூலமே இதனை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி எதிர்பார்ப்பது தெரிகிறது. இங்கு எழக்கூடிய நியாயமான ஐயங்களில் ஒன்று தற்போதிருக்கும் அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது உடனடிச் சாத்தியமாகுமா? மற்றது அவ்வாறு கட்டமைப்பு முழுமையாக மாற்றப்பட்டால்கூட இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் முற்றாக மறைந்துவிடுமா என்பது. புதிய அரசாங்கம் தனது பதவிக்காலம் முழுவதும் முயன்றால்கூட அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது கடினம். ஜனநாயக நாடுகளில் இது நீண்டதொரு செயன்முறை. இதில் உள்நாட்டுக் காரணிகள் மட்டுமன்றி வெளிநாட்டுக் காரணிகளும் தாக்கத்தைச் செலுத்தும். அதேபோல ஐனாதிபதி கூறியது போல இலஞ்ச, ஊழல் முறைகேடுகளை சட்டங்களால் மட்டும் தடுத்துவிட முடியாது. அவை தவறானவை என்ற மனப்பாங்கு நாட்டு மக்களின் பண்பாட்டுக் கூறுகளிலொன்றாகவும் உருவாக்கப்படவேண்டும். அது குடும்பம், பாடசாலை, வழிபாட்டிடங்கள் போன்ற சமூக நிறுவனங்களால் சிறுபராயத்திலிருந்து வளர்த்தெடுக்கப்படவேண்டும். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் இதற்கும் பொருந்தும். முன்னைய அரசாங்கங்களின் தவறான அணுகுமுறைகளால் படுத்துவிட்ட இலங்கைப் பொருளாதாரத்தைச் சீர்படுத்தி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே அதிக முயற்சிகளை எடுக்கவேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள புதிய அரசாங்கம் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை களையவேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதை அதன் முன்னெடுப்புகள் காட்டுகின்றன. அதில் முழுமையாக வெற்றிபெறாவிடினும் மக்கள் திருப்தியடையும் வகையிலான முன்னேற்றம் ஒன்றை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அதில்தான் தேசிய மக்கள் சக்தியின் மீதான மக்களின் நம்பிக்கையும் நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கையும் தங்கியுள்ளன. https://thinakkural.lk/article/313893
  7. பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த டயஸ்போரா புலுடாவை விடுகிறார். கோத்தபயவை துண்டை காணோம் துணியை காணோம் என விட்டு கலைத்தது என மகிந்த இலகுவில் மறக்க பார்க்கிறார்.
  8. உடல் நலத்தை கவனிக்க வேண்டும். வேலையில் மூழ்கி இருந்தால் உடல் நலத்தை கவனிக்க முடியாது. காசை உழைத்து அனுபவிக்க முடியாமல் அகால மரணம் அடைவது மிக கொடூரமானது.
  9. ஜேசிபி (JCB)பாவிக்கும் அளவு எனும் போது பெரிய கைகள் தான். காவல் துறையும் கை கட்டி விடுப்பு பார்க்கிறார்கள். பெரிய மணல் கள்ளர் எனும் போது டக்ளசின் பெயரை தவிர்க்க முடியாமல் உள்ளது.
  10. ஈரானை குறிவைத்து ஈராக் மற்றும் சிரியாவில், அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறது Andre Damon 6 February 2024 மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம் அமெரிக்க F-35B மின்னல் வேக ஸ்டெல்த் போர் விமானங்களுடன் விமானப்படையின் B1-B லான்சர் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் ஜப்பான் கடல் மீது பறக்கின்றன. ஈரானை இலக்கு வைத்து மத்திய கிழக்கில் ஒரு வார அல்லது மாதக்கணக்கான தாக்குதல் என்று அதிகாரிகள் கூறிய ஒன்றை அமெரிக்கா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஈராக் மற்றும் சிரியா முழுவதிலும் ஏழு இடங்களிலுள்ள 85 இலக்குகள் மீது 125 க்கும் அதிகமான குண்டுவீச்சுக்களை நடத்த டெக்சாஸிலுள்ள டைஸ் விமானப்படை தளத்தில் இருந்து அணுஆயுதமேந்தும் திறன் கொண்ட B-1B குண்டுவீச்சு விமானங்களை அனுப்பினார். “ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC), கட்ஸ் படை (Quds Force) மற்றும் அதனுடன் இணைந்த போராளிக் குழுக்கள்” பயன்படுத்திய இராணுவ தளங்களை இலக்கில் வைத்ததாக அமெரிக்கா கூறியது. இத்தாக்குதல்கள் சட்டவிரோதமானவையாகும், சிரியா மற்றும் ஈராக் அரசாங்கங்களை மீறி நடத்தப்பட்டன, காங்கிரசின் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டன அல்லது அமெரிக்க மக்களின் ஒப்புதல் அல்லது ஒப்புதலைப் பெறுவதற்கான எந்த முயற்சியும் இல்லாமல் நடத்தப்பட்டதாகும். ஒரு ஈராக்கிய அதிகாரி ஈராக்கில் நடந்த தாக்குதல் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் “ஈராக்கிய இறையாண்மையை மீறுவது” ஆகவும் கண்டித்தார், மேலும் அமெரிக்காவானது “ஈராக்கையும் அப்பிராந்தியத்தையும் எதிர்பாராத விளைவுகளுக்கு இழுக்கும் ஒரு அச்சுறுத்தல்” என்றும் சேர்த்துக் கொண்டார். சிரிய அரசு ஊடக நிறுவனங்களானது “அமெரிக்க ஆக்கிரமிப்பு” செயலைக் கண்டித்தன. 62 மைல்களுக்கும் அதிகமான நீளமுள்ள நாட்டின் பரந்த பகுதியான, கிழக்கு சிரியாவில் குறைந்தபட்சம் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஏகாதிபத்திய-சார்பு சிரிய கண்காணிப்பகம் AFP க்கு அறிவித்தது. கடந்த வாரம் ஜோர்டானில் மூன்று அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. சிப்பாய்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுவதைக் காண பைடென் தனது சொந்த மாநிலமான டெலாவேரில் உள்ள டோவர் விமானப்படை தளத்திற்கு விஜயம் செய்தார். அவர் ஒரு சுருக்கமான மூன்று பத்தி அறிக்கையை வழங்கியபோது, குண்டுவீச்சு விமானங்கள் ஏற்கனவே தங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தன. யதார்த்தத்தில், இந்த சிப்பாய்களின் மரணங்கள், பிராந்தியத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் கடந்த மூன்று மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட பிரமாண்டமான இராணுவ விரிவாக்கத்தின் விளைவேயாகும். காஸாவில் இனப்படுகொலைத் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு நிதி, ஆயுதங்கள், விநியாக ஆதரவு மற்றும் அரசியல் மறைப்பை வழங்கியது போல், பரந்த மோதலைத் தூண்டும் வேண்டுமென்றே என்ற நோக்கத்துடன் அமெரிக்கா அப்பிராந்தியம் முழுவதும் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் படைகளைக் கொண்டு அப்பகுதியை நிரப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை தாக்குதல்களை அறிவிக்கையில், பைடென் இவ்வாறு அறிவித்தார், “அமெரிக்காவானது மத்திய கிழக்கிலோ அல்லது உலகில் வேறெங்கிலும் மோதலை விரும்பவில்லை.” இத்தகைய அறிக்கைகள், ஒவ்வொரு நாளும் வெறுப்பூட்டும் வகையில் திரும்பத் திரும்ப கூறப்பட்டாலும், அர்த்தமற்றவையாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில் முழுவீச்சிலான போரை “விரும்புகிறதோ” இல்லையோ, அது ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிரிழப்புக்கு இட்டுச் சென்ற 2003 ஈராக் படையெடுப்பு உட்பட பல தசாப்தங்களாக அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள நாடுகளின் மீது தொடர்ந்து குண்டுவீசியும், பட்டினி போட்டும் வந்துடன் படையெடுத்தும் வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவை அடிபணிய வைப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சியின் பாகமாக மத்திய கிழக்கை மறுஒழுங்கமைக்கும் இந்த விரிவாக்கப் போரின் இலக்கை அமெரிக்கா “நாடுகிறது” என்பது தெளிவாகிறது. இந்த இலக்கையொட்டி, பைடென் மத்திய கிழக்கில் புதிய இராணுவத் தாக்குதலானது ஒரு நீண்ட காலத்திற்கு தொடரும் என்பதை தெளிவுபடுத்தினார். குண்டுத்தாக்குதல்கள், “நாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரங்களிலும் இடங்களிலும் தொடரும்” என்று பைடென் கூறினார். பைடென் மேலும் ஓர் அச்சுறுத்தலையும் சேர்த்துக் கொண்டார், “எங்களுக்கு தீங்கு செய்ய முனையும் அனைவருக்கும் இது தெரியட்டும்: நீங்கள் ஒரு அமெரிக்கருக்கு தீங்கு விளைவித்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.” “இது முதல் தொகுப்புப் பதில்கள்” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார், அவர் “எதிர்காலத்தில் மேலும் பதில்கள் இருக்கும்” என்று கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “நிரந்தர போரின்” தொடர்ச்சியையும் விரிவாக்கத்தையும் குறிக்கின்றன. தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் முற்றிலும் விமர்சனமின்றி இருந்தன, அவை “பதிலடி” மற்றும் “தற்காப்பு” என்ற போலியான நியாயப்படுத்தலை மீண்டும் கூறின. அரசியல் அமைப்பிற்குள் இருந்த விமர்சனம் பைடென் அதிகளவு நடவடிக்கைகள் எடுக்காததற்காக கண்டனம் செய்தது. “பைடென் இறுதியாக ஈரானைத் தடுத்து நிறுத்துவாரா” என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பைடென் அளவுக்கு அதிகமான “கட்டுப்பாட்டை” கடைப்பிடிப்பதாக குற்றஞ்சாட்டியது, வெள்ளை மாளிகையானது “எதிரி இலக்கு நடைமுறைக்கு அமெரிக்க துருப்புகள் இனியும் தீனியாக இருக்காத வகையில் சரியான இலக்குகளுக்கு எதிராக போதுமான பலத்தைப் பயன்படுத்த” அழைப்பு விடுத்தது. அமெரிக்க அரசியல் நிறுவனத்தின் முன்னணி உறுப்பினர்களும் உடனடியாக தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்தனர், செனட் ஆயுத சேவைகள் குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் செனட்டர் ஜாக் ரீட் பகிரங்கமாக அவற்றை ஆதரித்தார். இந்தப் பெரும், நீண்ட தூர குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஈரானுக்குள் இருக்கும் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா எத்தகைய தாக்குதல்களை நடத்தும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கு தெளிவாக நிரூபணம் ஆகும். “அமெரிக்க குண்டுவீச்சு விமானத்தின் திறன் என்னவென்றால், நாங்கள் விரும்பும் நேரத்தில் உலகில் எங்கு வேண்டுமானாலும் தாக்க முடியும்” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் டக்ளஸ் ஏ. சிம்ஸ் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறினார். முக்கியமாக, இந்தக் குண்டுவீச்சு விமானங்கள் அணுகுண்டு தாங்கிகளாக இருக்கின்ற வேளையில், அதே வகையான தாக்குதல்களைச் செயல்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. இத்தாக்குதல்கள் ஈரானின் பிரதான நிலப்பகுதியை நேரடியாக இலக்கு கொள்ளவில்லை என்றாலும், வெள்ளை மாளிகை அவற்றிற்கு முன்னதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஒரு புதிய சுற்று பொருளாதாரத் தடைகள் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. ஜோர்டானில் இருந்து வரும் விமானங்கள் வரவிருக்கும் தாக்குதல்களில் கூட்டுச்சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று வெள்ளை மாளிகை குறிப்புக் காட்டியுள்ளது. இது எந்த அளவிற்கு மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் பிராந்தியப் போரின் பெரும் சுழற்சிக்குள் இழுக்கப்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக் மீதான அமெரிக்க தாக்குதல்கள், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் அடுத்த வாரம் சவூதி அரேபியா, எகிப்து, கட்டார், இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையை உள்ளடக்கிய பிராந்தியத்தில் அவரது சுற்றுப்பயணத்தைத் தொடர்கின்ற வேளையில் நிகழ்ந்துள்ளன. “காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை நிலையாகவும், அதிகரித்த முறையிலும் வழங்க அனுமதிக்கும் மனிதாபிமான போர் இடைநிறுத்தம்” குறித்த பேச்சுவார்த்தை தான் தனது நோக்கம் என்று பிளிங்கன் கூறினார். யதார்த்தத்தில், பிளிங்கனின் விஜயம், ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட பிராந்திய போரை விரிவாக்குவதற்கு வசதி செய்து கொடுப்பதையும், அமெரிக்க ஆதரவுடன் காஸா மக்களுக்கு எதிராக நிர்மூலமாக்கும் போரை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவை முடுக்கி விடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிப்ரவரி 1 அன்று, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “100,000 க்கும் அதிகமான காஸாவாசிகள் இறந்துவிட்டதாகவோ, காயமடைந்துள்ளதாகவோ அல்லது காணாமல் போயுள்ளதாகவோ மற்றும் இறந்துவிட்டதாகவோ கருதப்படுகிறது” என்று கூறினார். யூரோ-மெட் மானிட்டரின் ஜனவரி 13 அறிக்கையை டெட்ரோஸ் மேற்கோள் காட்டினார், அது கொல்லப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் அப்பாவி மக்கள் என்று குறிப்பிட்டது. யூரோ-மெட் இன் புள்ளிவிபரங்களின்படி, 32,246 காஸாவாசிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இறந்துவிட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இறந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது. இவர்களில் பெண்கள் 6,860 பேரும் குழந்தைகள் 12,660 பேரும் உள்ளனர். காஸாவில் 190,000 வீடுகளை இஸ்ரேல் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழித்துள்ளது, இது மொத்த வீட்டுத் தொகுதிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானதாகும். வியாழனன்று, நியூ யோர்க் டைம்ஸ் ஆனது காஸாவில் கட்டிடங்கள் திட்டமிட்டு இடிக்கப்பட்டதை அறிவித்து ஒரு கட்டுரை வெளியிட்டது, அதாவது “நவம்பர் முதல் குறைந்தபட்சம் 33 கவனமாக திட்டமிடப்பட்ட அழிப்புகளாக மசூதிகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் ஒட்டுமொத்த பிரிவுகள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தகர்த்துள்ளனர்,” என்று குறிப்பிட்டது. டைம்ஸ் மேலும் குறிப்பிட்டது, “இத்தகைய தகர்ப்புகளை நடத்த, சிப்பாய்கள் கண்ணிவெடிகள் அல்லது பிற வெடிகுண்டுகளை வைத்து, இலக்கு வைக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குள் நுழைந்து, பின்னர் பாதுகாப்பான தூரத்தில் இருந்து வெடிக்க வைக்கும் விசையை இழுத்து வெளியேற வேண்டும்.” கடந்த வாரம், சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலிய அரசாங்கம் இனப்படுகொலை நம்பத்தகுந்த வகையில் செய்திருக்க முடியும் என்று தீர்ப்பளித்ததுடன், மேலும் இனப்படுகொலை நடவடிக்கைகளையும் அறிக்கைகளையும் தடுக்க உத்தரவிட்டது. ஆனால் இது நடந்த ஒரு வாரத்தில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குறைந்தது 874 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. இதனுடன் பாரிய கூட்டு மரண தண்டனைகள் குறித்து மேலதிக சான்றுகளும் சேர்ந்துகொண்டுள்ளன. அதாவது இந்த வாரம் கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட 30 பேரின் பெரும் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது உட்பட, அவர்கள் உடனடியாக நியாயமான விசாரணையின்றி உடனடியாக கொல்லப்பட்டதாகத் தோன்றுகிறது. ஏகாதிபத்திய சக்திகளால் மத்திய கிழக்கில் நடத்தப்பட்டு வரும் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இலாயக்கற்றவை என்பதையே காஸாவில் நடந்து வரும் மற்றும் அதிகரித்து வரும் இனப்படுகொலையும் மத்திய கிழக்கு முழுவதிலும் பாரிய புதிய அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கையும் தெளிவுபடுத்துகின்றன. ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் இந்த வெடிப்பை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவது அவசியமாகும். https://www.wsws.org/ta/articles/2024/02/06/hixh-f06.html
  11. எத்தியோப்பியா £5 பில்லியன் செலவில் "மிகப்பெரும் விமான நிலையத்தை" உருவாக்குகிறது, இது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விமான நிலையமாகவும், உலகளவில் பரபரப்பான விமான நிலையமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடிஸ் அபாபாவில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள பிஷோப்டுவில் அமைந்துள்ள புதிய விமான நிலையம், 2029 இல் நிறைவடைந்ததும் ஆண்டுதோறும் 110 மில்லியன் பயணிகளால் பயண்படுத்தப்படும் அல்-ஹண்டாசா ஆலோசகர்களுடன் இணைந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தலைமையிலான இந்த திட்டம், ஒரு அதிநவீன முனையம் மற்றும் நான்கு ஓடுபாதைகளைக் கொண்டுள்ளது. தற்போது, அடிஸ் அபாபாவின் போலே சர்வதேச விமான நிலையம், கடல் மட்டத்திலிருந்து 2,334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, எத்தியோப்பியா ஒரு உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக அதன் நிலையை உறுதிப்படுத்துவதால் நெரிசலை எதிர்கொள்கிறது. "மெகா ஏர்போர்ட் சிட்டி" இந்த நெருக்கடியைத் தணிப்பது மட்டுமின்றி எத்தியோப்பியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும், சர்வதேச வணிகம் மற்றும் சுற்றுலாத்துறையில் நாட்டை ஒரு முக்கியப் பங்காளராக நிலைநிறுத்துகிறது. துபாய் மற்றும் ஹீத்ரோ போன்ற உலகளாவிய விமான நிலையங்களுக்கு போட்டியாக இந்த புதிய திட்டம் உள்ளது
  12. ஆம். ஜனாதிபதி தேர்தலில் இருந்து அவரின் வேலை ஜே வி பியை கிளறுவதில் காலத்தை கடத்துகிறார்.
  13. ரனில் கிண்டி எடுத்து உள்ளதை சொல்வார். அமைதி. அமைதி.🙂
  14. சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த செல்வம் அடைக்கலநாதன்
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலிக்கு.
  16. படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந்த சந்திரமோகனின் தோளைப் பற்றியபடி மெதுவாக நடந்து வெளியில் வந்தான். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். நல்லவேளை என்று டாக்டர் சொன்னது நீலகண்டனின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நல்லவேளைதான். இடுப்பில் அடிபடவில்லை. காலையில் அந்தப் பல்லங்காடிக்குச் சென்றபோது மனம் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வழக்கத்தைக் காட்டிலும் வண்டியை வேகமாக ஓட்டினான். வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வருகையில் வழக்கத்தைக் காட்டிலும் நடை வேகம் கூடியிருந்தது. சொல்லப்போனால் சிறு துள்ளல் இருந்தது. பக்கத்தில் வந்த சந்திரமோகன் வியப்பாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அங்காடியின் நுழைவாயிலுக்கு முன்பு மூன்று படிகள் இருந்தன. நீலகண்டன் தரையிலிருந்து தன்னையறியாமல் துள்ளி மூன்றாம் படிக்குத் தாவினான். மூன்றாம் படியில் காலை வைக்கும்போது கால் பிரண்டு தடுமாறி விழுந்தான். சந்திரமோகன் பதறிப்போய்த் தாங்கிப் பிடித்தான். நீலகண்டன் சுதாரித்தபடி எழுந்து நின்றான். லேசாக வலித்தது. அங்காடியின் நுழைவாயிலில் இருந்த காவலர் தன்னுடைய நாற்காலியில் உட்காரச் சொன்னார். சந்திரமோகன் உள்ளே சென்று தண்ணீர் வாங்கிவந்து குடிக்கச் சொன்னாள். நேரமாக ஆகக் கால் வலி கூடியபடி இருந்தது. ஏதேனும் பெரிதாக அடிபட்டிருக்குமோ என்று பயந்த நீலகண்டன் கால் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க எழுந்து நின்றான். மறுகணம் உடல் முழுவதும் உதறலெடுக்க, சடாரென்று உட்கார்ந்துகொண்டான். காலைக் கீழே வைக்கையில் பொறுக்க முடியாத வலி உடல் முழுவதையும் உலுக்கியது. சந்திரமோகன் பயந்துபோனான். “என்ன ஆச்சு நீலா…” என்று அவன் தோள்களைப் பற்றினான். நீலகண்டன் சற்று ஆசுவாசமடைந்ததும் சந்திரமோகன் கீழே மண்டியிட்டு அமர்ந்து நீலகண்டனின் காலைப் பார்த்தான். “செருப்ப கழட்டு” என்றான். நீலகண்டன் கழற்றினான். சந்திரமோகன் அவன் காலைத் தொட்டதும் நீலகண்டன் விறுக்கென்று காலை இழுத்துக்கொண்டான். சந்திமோகன் கவலையுடன் நீலகண்டனின் முகத்தைப் பார்த்தான். “ஃப்ராக்சரா இருக்குமோன்று தோணுது நீலா…” என்றான் தணிந்த குரலில். நீலகண்டனின் முகத்தில் வலியின் வேதனை படர்ந்திருந்தது. இடுப்பில் ஏதாவது ஆகியிருக்கிறதா என்று லேசாக இடுப்பை அசைத்துப் பார்த்தான். நல்லவேளை. ஒன்றுமில்லை. “எதுக்கு சார் ஜம்ப் பண்ணி வந்தீங்க?” என்று காவலர் கவலையோடு கேட்டார். நீலகண்டன் தலையைக் குனிந்துகொண்டான். சந்திரமோகன் கேட்க விரும்பிய கேள்விதான் அது என்றாலும் இந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஆட்டோ பிடித்து இருவரும் மருத்துவமனை சென்றார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த டாக்டர் எலும்பு முறிவு இல்லை என்று சொன்னார். உள்ளே பலமாக அடிபட்டிருக்கிறது என்றார். அவனை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போன சந்திரமோகன், நீலகண்டன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினான். வண்டியை மாலையில் கொண்டுவருவதாகச் சொன்னான். “உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? படியில ஒழுங்கா ஏற மாட்டீங்களா? அவ்வளவு என்ன அவசரம்?” என்று கேட்டாள் மஞ்சு. நீலகண்டன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து மஞ்சுவே தொடர்ந்தாள். “ரொம்ப பாத்து பாத்துதானே படில ஏறுவீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு?” என்றாள். நீலகண்டன் பதில் சொல்லவில்லை. அவனுடைய அமைதியைக் கண்டு மஞ்சுவும் அமைதியானாள். அவள் முகத்தில் தெரிந்த வேதனை நீலகண்டனை வருத்தியது. “டீ போட்டு தரயா?” என்றான் நீலகண்டன். மஞ்சு எழுந்து உள்ளே போனாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்காடியின் படிகளில் துள்ளி ஏறிய கணம் திரும்பத் திரும்ப அவன் மனதில் தோன்றியபடி இருந்தது. தெருவின் முனையில் இருந்த பிள்ளையார் கோவிலை ஒட்டித் திரும்பியதும் அவன் கண்கள் ரயில் நிலையத்தின் மதில் சுவருக்கு அப்பால் நீளும் தண்டவாளத்தைப் பார்த்தன. ரயில் வருவது தெரிந்தது. ஓட்டமெடுக்கத் தொடங்கினான். இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிலைய வாசல். பிறகு 22 படிகள். பிறகு 50 அடி நடைபாதை. அதன் பிறகு 22 படிகள். நடந்துபோனால் ரயில் வந்துவிட்டுப் போய்விடும். வேகமாக ஓடி ரயில் நிலையத்தை அடைந்து, மக்கள் கூட்டத்திடையே புகுந்து ஓடி, மூன்று மூன்று படிகளாகத் தாவி ஏறி, படிகளுக்கிடையில் இருந்த பாதையை வேகமாகக் கடந்து மூன்று மூன்று படிகளாகத் தாவி இறங்குவதற்கும் ரயில் நிலையத்திற்குள் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ரயிலில் ஏறி ஓரமாக நின்றுகொண்டான். இது அடிக்கடி நடப்பதுதான். 8.36க்கு மாம்பலம் வர வேண்டிய ரயில் இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக வருவது வழக்கம். நீலகண்டன் 8.35க்குள் ரயில் நிலையத்துக்குள் வந்தால் போதும். ஆனால், அப்படி வருவது அபூர்வம். தாமதமாக வந்து இப்படி ஓடியும் தாவியும் ரயிலைப் பிடிப்பதே வழக்கமாகிவிட்டது. சில சமயம் கணக்குச் சற்றுப் பிசகி ரயில் கிளம்பியிருக்கும். அப்படியும் விடாமல் ஓடி அது ரயில் நிலையத்தைக் கடக்கு முன் தாவி ஏறிவிடுவான். பள்ளியில் படிக்கும்போது நீலகண்டன் எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொள்வான். கபடி, கோகோ, வாலிபால், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் என்று எல்லாவற்றிலும் தீவிரமாக ஈடுபடுவான். விளையாட்டின் வேகம் விளையாடாதபோதும் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதையும் மெதுவாகச் செய்யும் வழக்கம் இல்லை. எனவே நடந்து வந்து ஆசுவாசமாக ரயிலில் ஏறவில்லை என்ற குறையே அவனுக்குத் தெரியவில்லை. ஓடி வந்து ஏறுவதையே இயல்பானதாக அவன் மனம் கருதியது. ஓடி வந்து ரயிலில் ஏறுவது, படிகளில் தாவித் தாவி ஏறுவது, இறங்குவது, சைக்கிளை வேகமாக ஓட்டுவது, மழைக்காலங்களில் சாலைகளில் இருக்கும் சிறிய நீர்த்தேக்கங்களைத் தாண்டிக் கடப்பது என வேகமான இயக்கம் உடலில் இயல்பாகிவிட்டது. தேநீர் இதமாக இருந்தது. மஞ்சு மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்ததுக் கொண்டிருந்தான். மாத்திரைகள் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. வலி குறையவில்லை. அவன் கவனம் வலியில் இல்லை. அங்காடியின் முன் படிகளில் தாவி ஏறிய கணம் மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. மாலதி புன்னகைத்தாள். “என்ன இது, சின்னப் பையன் மாதிரி” என்றாள். “எது!” என்றான் அவள் வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றியவாறே. அவன் உள்ளே வர ஒதுங்கி வழிவிட்ட மாலதி, “வாசப்படில ஏறி வர்ரதுக்குப் பதிலா தாண்டி வந்தீங்களே அதைச் சொன்னேன்” என்றாள். நீலகண்டன் சிரித்தான். “தாவியா வந்தேன்? எனக்குத் தெரியல. இதையெல்லாம் யோசிச்சா செய்வாங்க?” என்றான். மாலதியும் சிரித்தாள். “பரவால்ல. நீங்க நேச்சுரல் அத்லீட்தான்” என்றாள். நீலகண்டன் அந்தப் பாராட்டைப் புன்னைகையுடன் ஏற்றுக்கொண்டான். “டீயா, காஃபியா?” “ம்… டீ. கொஞ்ச நேரம் கழிச்சு. இப்பதான் காஃபி சாப்ட்டேன்.” “ஓ.கே…. சொல்லுங்க நீலகண்டன்… ஈவன்ட எப்டி ப்ளான் பண்ணியிருக்கீங்க?” நீலகண்டன் விளக்க ஆரம்பித்தான். மாலதி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய திருத்தமான புருவங்கள், அகன்ற விழிகள், நேர்த்தியான மூக்கு, எப்போதும் புன்னகையைப் பிரதிபலிக்கும் அழகிய உதடுகள், சற்றே துருத்தி நிற்கும் உருண்டையான மோவாய், புஷ்டியான கன்னங்கள், தலையாட்டும்போது அழகாக ஆடும் காதணிகள், அவ்வப்போது முகத்தில் வந்து விழுந்து அழகைக் கூட்டும் மயிர்க் கற்றைகள், அதை விலக்கிவிடும் அவள் விரல்களின் நேர்த்தியான அசைவுகள் என அவளுடைய அழகை ரசித்தபடி நீலகண்டன் பேசிக்கொண்டிருந்தான். “ஜஸ்ட் எ மினிட்” என்று மாலதி எழுந்துகொண்டாள். அவள் வயதுக்குப் பெரிய உடம்புதான். எழுந்திருப்பதில் சிரமம் தெரிந்தது. மெல்ல நடந்து சென்று குளிர்பதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டு இருக்கையின் மீது இரு கைகளையும் ஊன்றியபடி மிகவும் கவனமாக அமர்ந்துகொண்டாள். நடமாட்டத்தில் அவள் பட்ட சிரமங்களைக் கண்டு நீலகண்டன் வருந்தினான். பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுக் கேட்டான். “எனக்குத் தண்ணி வேணும்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிது?” மாலதி புன்னகைத்தாள். வசீகரமான அந்தப் புன்னகை நீலகண்டனை மயக்கியது. “நீங்க பேசும்போது உங்க நாக்கு ட்ரையா இருந்தது தெரிஞ்சுது” என்றாள். நன்றியைப் புன்னகையால் தெரிவித்த நீலகண்டன் பாட்டிலைக் கையில் எடுத்தபடி எழுந்துகொண்டான். “இஃப் யூ டோன்ட் மைன்ட், நானே உள்ள போய் நார்மல் வாட்டர் எடுத்துக்கலாமா? கோல்ட் வாட்டர் குடிக்கறதில்ல” என்றான். “ஓ ஸாரி…” என்றபடி எழுந்திருக்க முயன்றாள். அவள் நினைத்தாலும் சட்டென்று எழுந்திருக்க முடியாது என்பதை அறிந்த நீலகண்டன், “ப்ளீஸ்… நீங்க இருங்க. நா எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் பாட்டிலை மீண்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தான். போகும்போதும் வரும்போதும் தன்னுடைய வழக்கமான வேகத்தைக் கவனமாகக் குறைத்துக்கொண்டான். மீண்டும் பேசத் தொடங்கினான். “வீக் என்ட்ல டி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியல கூட்டம் அதிகமா இருக்கும்ன்றதால மாம்பலத்துல வெச்சிருக்கோம். நல்லவேளயா பார்க்கிங் ஸ்பேஸோட பெரிய இடம் கிடைச்சிருக்கு…” என்று சொன்னவன் மாலதி தன் உரையாடலைப் பின்தொடரவில்லை என்பதை அறிந்து பேச்சை நிறுத்தினான். அவள் கண்கள் எதிரில் இருந்த சுவரை வெறித்தபடி இருந்தன. அவள் தற்கணத்தில் இல்லை என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. அவளது பருத்த மார்புகள் விம்மித் தாழ்ந்தன. மடியின் மீது வைத்திருந்த கைகளின் பருமன் ஒரு கணம் அவனை அச்சுறுத்தியது. சற்று அகலமான அந்த இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ள அவள் சிரமப்படுவது தெரிந்தது. அதே அளவுள்ள இருக்கை தனக்கு இடம் கொடுத்துக் கிட்டத்தட்டப் பாதி அளவு காலியாக இருப்பது அவனுக்கு உறைத்தது. இந்தப் பருமன் இயல்பானதல்ல என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. முகத்தின் அழகும் அதில் ததும்பும் குழந்தைத்தனமும் அவள் உடலுக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தன. அதிகபட்சம் இவளுக்கு 30 வயது இருக்கலாம். சூமோ பயில்வானைப் போல உடல் இல்லாவிட்டால் அவளைப் பேரழகிகள் பட்டியலில் எளிதாகச் சேர்த்துவிடலாம். நல்ல உயரம். நீளமான விரல்கள். செதுக்கிய சிலை போன்ற முகம். இவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை என்று நீலகண்டன் வருந்தினான். “நீலன்…” என்றாள். தனிப்பட்ட முறையில் பேசும்போது நீலன் என்றுதான் அழைப்பாள். அவள் பேசவிருப்பது அடுத்த மாத நிகழ்வைப் பற்றியல்ல என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். “யூ நோ… ஐம் எ க்லாஸிகல் டான்சர். போத் பரதம் அன்ட் வெஸ்டன்…” என்றாள். முகத்தில் விழும் மயிர்க் கற்றைகளை விலக்கிய விரல்களின் நளினத்திலும் தண்ணீர் பாட்லை நீட்டிய விதத்திலும் அவளுக்குள் இருந்த நடனமணியை உணர்ந்திருந்ததால் நீலகண்டனுக்கு இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை. தான் கேட்க நினைத்ததை உணர்ந்து அவளே அதைப் பற்றிப் பேசத் தொடங்கியதுதான் வியப்பாக இருந்தது. “காலேஜ் கல்சுரல்ஸ், அவுட்டிங்னு எதுவா இருந்தாலும் என்னோட டான்ஸ் இல்லாம இருக்காது. அதுவும் பஸ்ல ஆடின ஆட்டமெல்லாம் மறக்க முடியாது. சிம்ரன் டான்ஸெயெல்லாம் கேட்டு கேட்டு ஆடச் சொல்லுவாங்க. ஒரு மணிநேரமெல்லாம் சலிக்காம ஆடுவேன்…” என்றாள். நீலகண்டன் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அதற்குத் தேவையும் இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. மாலதி தனக்குள் ஆழ்ந்திருந்தாள். தன்னியல்பாக அவள் குரல் ஒலித்தது. மார்புகள் விம்மித் தணிந்தபடி இருந்தன. “போன மாசம் நடந்த ஈவன்ட்ல நீங்க எனக்குப் பண்ணின உதவிய மறக்க மாட்டேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆம்பளைங்க வயசு வித்தியாசம் இல்லாம என்னை சுத்தி சுத்தி வருவாங்க. நான் எப்பவும் மான்போலத் துள்ளிக்கிட்டே இருப்பேன். காலேஜ் பியூட்டி கன்டெஸ்ட்ல மூணு வருஷமும் நான்தான் வின்னர். பசங்க எங்கூட பேசவும் என்னோட நடந்து வரவும் என்ன வண்டில கூட்டிட்டு போகவும் தவம் கெடப்பாங்க. ஆனா இப்ப ஒருத்தனும் கிட்ட வர்ரதில்ல. என் ஒடம்பு அவங்கள மெரட்டி தொரத்தி அடிக்குது. தூரத்துலருந்தே ஒரு ஹாய், ஒரு ஸ்மைல்னு நிறுத்திக்கறாங்க. அழகில்லாத கேல்ஸ ஆம்பளைங்களுக்குப் பிடிக்கறதில்லன்னு நெனைக்கறேன். க்லோஸ் ஃப்ரென்ஸ்கூட கொஞ்சம் தள்ளிப்போக ஆரம்பிச்சபோதுதான் அந்த க்லோஸ்னஸ்ஸுக்கு அர்த்தம் புரிஞ்சிது. எனக்கு அண்ணன் தம்பி யாருமில்ல. அப்பா நான் சின்னவளா இருக்கும்போதே வீட்ட விட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை நேர்ல பாத்த ஞாபகம்கூட எனக்கு இல்ல. போட்டோல பாத்துருக்கேன். ரொம்ப அழகா, ஸ்லிம்மா, ஸ்மார்ட்டா இருப்பாரு. அம்மா பிரசவத்துக்கப்பறம் கொஞ்சம் குண்டடிச்சிட்டாங்க. சைல்ட் கேர், ஃபேமலி கேர், ஆஃபீஸ் வேலைன்னு மூழ்கிப்போனதுல அவங்க பழைய ஸ்டேஜுக்கு வரவேயில்ல. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்ட நடக்கும். அப்பா கோபத்துல கத்தி எதையாவது தூக்கி வீசிட்டு போயிடுவாரு. அப்படி ஒருநாள் போனவர் திரும்பி வரவேயில்ல. அப்படியும் எப்பவோ ஒரு பொண்ணோட அவரை அம்மா எங்கயோ பாத்துருக்கா. அந்தப் பொண்ணு பாக்க நக்மா மாதிரி இருந்தான்னு எங்கிட்ட சொல்லும்போது அம்மா குமுறிக் குமுறி அழுதா. நக்மா மாதிரின்னா என்னன்னு புரிஞ்சிக்கற அளவுக்கு அப்ப எனக்கு வயசாயிருந்துது. அதுக்கு மேல எதுவும் பேசல. அம்மா இன்னும் அதிகமா குண்டாயிட்டே போனா. ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா. டான்ஸ், கராத்தே, மியூஸிக் எல்லாம் கத்துக்க வெச்சா. அவளே கணக்கு, அக்கவுன்ட்ஸ் எல்லாம் சொல்லித் தருவா. ப்ரில்லியன்ட் டீச்சர். ஒரு வருஷத்து சுமையை ஒரே மாசத்துல கொறச்சிட்டா…” மாலதி மூச்சு வாங்கிக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள். “எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்ல? போன மாச ஈவன்ட்ல நான் படி ஏற கஷ்டப்பட்டபோது நீங்கதான் ஓடிவந்து ஹெல்ப் பண்ணினீங்க. உங்க தோள புடிச்கிக்கிட்டு பாதுகாப்பா படி ஏறினேன் இறங்கும்போதும் மறக்காம என்கூட வந்தீங்க. இவ்வளவு பெரிய ஹால்ல ஸ்டெப்ஸுக்குக் கைப்பிடி வெக்கணும்ன்ற அறிவுகூட இல்லாம கட்டியிருக்காங்க. நான் ஏதாவது ஹெல்ப் கேக்க மாட்டனான்னு என்ன பாத்து ஏங்கற ஆம்பளைங்களைப் பாத்து பாத்து சலிச்சிருக்கேன். அதே ஆம்பளைங்க இப்ப சம்பிரதாயமா ஹாய் சொல்லிட்டு ஒதுங்கறதயும் பாக்கறேன். ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க பண்ணின உதவிய மறக்கவே மாட்டேன்…” நீலகண்டன் நெகிழ்ந்து போயிருந்தான். “அதெல்லாம் ஒரு ஹெல்ப்பா மாலதி? எனக்கு முதுடியலன்னா நீங்க கை குடுக்க மாட்டீங்களா?” “நானா, இப்ப இருக்கற நெலமைலயா?” என்று விரக்தியாகச் சிரித்த மாலதி, “அஃப்கோர்ஸ். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது. அப்டி ஹெல்ப் பண்றதுதான் ஹ்யூமன் டென்டன்ஸி. அப்படித்தான் நானும் நம்பறேன். ஆனா அழகான பொண்ணுக்குக் கிடைக்கற உதவில நூத்துல ஒரு பங்குகூட அழகில்லாத பொண்ணுக்குக் கிடைக்காதுன்றத புரிஞ்சிகிட்டபோது மனசுல கூர்மையா ஒரு வலி வருது. அந்த வலியதான் தாங்க முடியல. அதுவும் எப்பவும் ஜென்ஸ் எங்கிட்ட கையேந்தி நிக்கறத பாத்து வளந்ததுனால இந்த வலி இன்னும் அதிகமாகுது…” மாலதி கண்களைத் திறக்கவில்லை. அவள் முகம் வாடியிருந்தது. நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு நிலவிய மௌனமே அவஸ்தையாக மாறத் தொடங்கியபோது நீலகண்டன் மௌனத்தைக் கலைத்தான். “எப்படி இந்த மாதிரி ஆச்சு மாலதி?” மாலதி கண்களைத் திறந்தாள். “பொண்ணா பொறந்த சாபம் நீலன். மென்ஸ்டுரல் ப்ராப்ளம்லதான் எல்லாம் ஆரம்பிச்சுது. இர்ரெகுலர் பீரியட்ஸ். சில சமயம் மூணு நாலு மாசம்கூட பீரியட்ஸ் வராது. அதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்போய் அதோட சைட் எஃப்க்ட்ஸ் ஒடம்பையும் மனசையும் பாதிக்க ஆரம்பிச்சுது. நடுவுல யாரோ சொன்னாங்கன்னு டாக்டர மாத்தி, ஆல்ட்ர்னேட் மெடிசனுக்கு மாறி, மறுபடியும் ஆலோபதிக்கு வந்து அப்டீன்னு ஏகப்பட்ட அலக்கழிப்பு. இந்த வயசுல எப்பவும் மாத்தர சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு நெனச்சாலே கொலவெறி வரும். பீரியட்ஸ் வரதுக்காக கான்ட்ராசெப்டிவ் மாத்திரை சாப்பிட்டு அதனால ஒபிசிட்டி வந்து, ஒபிசிட்டியால டிப்ரஷன் வந்து, டிப்ரஷனால அதிகம் சாப்ட்டுன்னு விஷஸ் சர்க்கில்ல மாட்டிக்கிட்டேன். ஒருவழியா மாத்திரைகள்லேந்து விடுதலையாறதுக்குள்ள ஒடம்பு ரொம்ப பெருத்துப் போச்சு. அதைக் குறைக்கணும்னா டயட், எக்சர்சைஸ்னு எல்லாத்தையும் கவனிக்கணும். வேலைக்குப் போய்கிட்டே இதையும் கவனிக்க முடியல. ஒரு ஸ்டேஜ்ல போதுண்டா சாமின்னு எல்லாத்தையும் உட்டுட்டேன். ஒடமபு குண்டானதால கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி வலின்னு இலவச இணைப்பா நெறய வலி. இத்தனையும் சுமந்துக்கிட்டு எதுக்காக இன்னும் உயிரோட இருக்கேன்னு எனக்கு நெஜமாகவே தெரியல…” மாலதியின் கண்கள் கலங்கியிருந்தன. கண்களைத் துடைக்க அவள் முயலவில்லை. பார்வை விட்டத்தில் நிலைகுத்தியிருந்தது. அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல அர்த்தமுள்ள ஒரு சொல்கூடத் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நீலகண்டன் மௌனமாக அமர்ந்திருந்தான். “என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம என் பின்னால ஓடிவந்த ஆம்பளைங்க, என் பக்கத்துல நின்னு பேசவே அவ்ளோ ஆசைப்பட்ட ஆம்பளைங்க இப்ப என்னைப் பாத்து அரை சிரிப்பு சிரிச்சிட்டு ஒதுங்கிப் போறததான் என்னால தாங்கவே முடியல…” “அது உண்மையிலேயே அவ்வளோ முக்கியமா மாலதி?” நீலகண்டன் மெல்லிய குரலில் கேட்டான். “ஆக்சுவலா பாத்தா இல்லதான். ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் இருந்த நிலமயோட கம்பேர் பண்ணும்போது மனசு கேக்க மாட்டேங்குது. இதுலேந்து எப்படி வெளில வரதுன்னு தெரியல. மேபி உங்கள மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்போல இருக்கு.” அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்காமல் போக மாட்டார்கள் என்று சொல்ல நினைத்து நிறுத்திக்கொண்டான். இதுபோன்ற ஆயத்த பதில்கள் அவளை மேலும் சோர்வடையச் செய்யும் என்று நினைத்தான். “ஸாரி நீலன். ரொம்ப பேசிட்டேன்னு நெனைக்கறேன். ரொம்ப ஸாரி… நீங்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன். கொஞ்சம் இருங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” கஷ்டப்பட்டு எழ முயன்றவளுக்குக் கை கொடுத்து உதவிய நீலகண்டன், “வாங்க, ரெண்டு பேரும் சேந்து டீ போடலாம்” என்றான். “டீ போடறதுக்கு ரெண்டு பேரா” என்று சொன்னபடியே எழுந்துகொண்ட மாலதி கலகலவென்று சிரித்தாள். கல்லூரியில் அவள் வாங்கிய அழகிப் பட்டங்களுக்கான அடையாளமாய் இருந்தது அந்தச் சிரிப்பு. அந்த அழகான முகத்திற்குக் கீழே மெலிந்த கட்டுடலையும் அந்த உடல் ‘மனம் விரும்புதே’ பாடலுக்கு நடனமாடுவதையும் நீலகண்டன் ஒருகணம் கற்பனை செய்துபார்த்தான். “வலி இப்ப எப்படி இருக்கு?” என்றாள் மஞ்சு. தூக்கத்திலிருந்து முழுமையாக வெளியே வராத நீலகண்டன் காலை அசைத்துப் பார்த்தான் சுரீரென்று வலித்தது. வலியின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததைக் கண்ட மஞ்சு பதறினாள். “அடிபட்ட கால அசைக்கக் கூடாதுன்னு தெரியாதா? எதுக்கு இந்த வேல உங்களுக்கு” என்றாள். நீலகண்டன் அசையாமல் படுத்திருந்தான். “சாப்பிடறீங்களா?” என்றாள் மஞ்சு. “பாத்ரூம் போகணும்” என்றான். மஞ்சு கைத்தாங்கலாக அவனைக் கட்டிலிலிருந்து கீழே இறக்கிக் கழிவறைக்கு அழைத்துச் சொன்றாள். மனைவியாகவே இருந்தாலும் இன்னொருவரின் துணையோடு நடக்க வேண்டியிருப்பதை எண்ணி மனம் வருந்தியது. கல்லூரிகளுக்கிடையிலான வாலிபால் போட்டிக்கான பயிற்சிகளும் பயிற்சி ஆட்டமும் முடிய நெடுநேரம் ஆகிவிட்டது. சாம்பல் போர்வை பூமியின் மீது படர ஆரம்பித்திருந்தது. ஆடுகளத்திலிருந்து வண்டியை ஓடடிக்கொண்டு காலியாக இருந்த கல்லுரி வளாகத்தைத் தாண்டும்போது மதில் சுவரின் ஒரு கோடியில் ஏதோ சலனம் கண்டு திரும்பிப் பார்த்தான். யாரோ ஒருவன் இன்னொருவனைப் பலமாகத் தாக்கியது தெரிந்தது. அடி வாங்கியவன் தடுமாறிப் பின்னால் போனபோது இன்னொருவன் அவனை எட்டி உதைத்தான். அடி வாங்கியவன் பின்புறமாகத் தரையில் விழுந்தான். தடுமாறி எழுந்து ஓடப் பார்த்தவனை மூன்றாமவன் இடுப்பில் எட்டி உதைத்தான். அவன் சுருண்டு கீழே விழுந்தான். நீலகண்டனின் ரத்தம் கொதித்தது. “டேய்…” என்று பெரிதாகச் சத்தம் எழுப்பியவாறே வண்டியை அவர்களை நோக்கித் திருப்பினான். வளாகம் முழுவதும் எதிரொலித்த அந்த கர்ஜனையைக் கேட்டு அவர்கள் மூவரும் இவனை நோக்கித் திரும்பினார்கள். சில நொடிகளில் அந்த இடத்தை அடைந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வேகமாக முன்னேறினான். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது அவன் நண்பன் மூர்த்தி. மூர்த்தியை அடித்த ஆட்களை நீலகண்டன் அந்தக் கல்லூரியில் பார்த்ததில்லை. தங்களை நோக்கி ஒண்டி ஆளாக ஒருவன் தைரியமாக முன்னேறுவதைக் கண்ட அந்த மூவரும் இவனைத் தாக்க ஆயத்தமானார்கள். அவர்களில் ஒருவனை நெருங்கிய நீலகண்டன் சட்டென்று இடது காலைத் தரையோடு முன்புறமாகச் சுழற்றி வலது காலுக்கு வலப்புறமாகக் கொண்டுசென்று அந்தக் காலை ஊன்றியபடி வலது காலைச் சுழற்றிப் பின்புறமாக உதைத்தான். சரியாக மோவாயில் இடிபோல இறங்கியது அந்த உதை. அடிபட்டவன் மல்லாந்து விழுந்தான். கோபத்துடன் தன்னை நெருங்கிய இரண்டாமவனைச் சற்றே குனிந்து இடுப்பில் தோள் கொடுத்துத் தூக்கி அப்படியே கீழே போட்டு இடுப்பில் உதைத்தான். ஒரு கணமும் தாமதிக்காமல் மூன்றாமவனின் தாடையில் எட்டி உதைத்தான். ஓரிரு கணங்களில் மூவரும் தரையில் கிடந்தார்கள். உதைக்கும்போது நீலகண்டன் எழுப்பிய ஹுங்காரங்களைக் கேட்டுச் சாலையிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். அடி வாங்கிய மூவரும் ஆட்களின் தலைகள் தெரிவதைப் பார்த்து எழுந்து ஓடினார்கள். நீலகண்டன் மூர்த்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு மதில் சுவரைத் தாண்டிச் சாலையில் இறங்கி ஒரு ஆட்டோவை நிறுத்தினான். கழிவறையிலிருந்து படுக்கைக்கு வர ஐந்து தப்படிகள் போதும். நீலகண்டன் 18 தப்படிகள் நடந்து வர வேண்டியிருந்தது. மஞ்சு பிசைந்து தந்திருந்த உணவைப் படுக்கையில் சரிந்து உட்கார்ந்தபடி தேக்கரண்டியில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தும் சாப்பாடு இறங்கவில்லை. வண்டியை வேகமாக ஓட்டும் பழக்கம் இருந்தாலும் விவஸ்தையில்லாமல் ஓட்டுவதில்லை. தவறு நேரக்கூடிய இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வான். என்றாலும் ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த வண்டி தன்மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாகத் திருப்பியவன் பின்னால் வந்த வண்டியின் மீது மோதிக்கொண்டான். மோதிய வேகத்தில் வண்டி ஒரு புறமும் அவன் ஒரு புறமுமாகக் கீழே விழுந்ததில் வண்டியின் ஒரு பக்கம் பலத்த சேதம். இவனால் எழுந்திருக்க முடியவில்லை. விளையாட்டிலும் சண்டைகளின்போதும் பலமுறை விழுந்து உடனே துள்ளி எழுந்திருக்கிறான். இப்போது அசைய முடியவில்லை ஆம்புலன்ஸ் வந்துதான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இடுப்பெலும்பு முறிந்ததில் அறுவை சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் என எழுந்து நடக்க எட்டு மாதங்கள் ஆயின. சேமிப்பெல்லாம் கரைந்துபோனது. சம்பள இழப்பும் சேர்ந்துகொண்டது. அதையெல்லாம்விடப் பெரிய வலியை டாக்டரின் அறிவுரைகள் தந்தன. உங்களுக்கு இடுப்பில் கம்பி வைத்திருக்கிறோம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேகமாக நடக்கக் கூடாது. அதிக தூரம் நடக்கக் கூடாது. ஓடவே கூடாது. காலில் இயக்கும் கியர் வைத்த வண்டியை விட்டுவிட்டுத் தானியங்கி கியர் வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள். படி ஏறும்போதும் இறங்கும்போதும் கவனம் தேவை. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. யோகாசனம் செய்தால் முன்னால் வளையும் ஆசனங்களைத் தவிர்த்துவிடுங்கள். பேருந்தில் உட்கார்ந்தபடி நீண்ட பயணங்களைச் செய்யாதீர்கள். மாடி வீட்டில் இருந்தால் கீழ்த்தளத்துக்கு மாறிவிடுங்கள் அல்லது எப்போதும் லிஃப்ட் பயன்படுத்துங்கள். பளு தூக்காதீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. எடை கூடினால் இடுப்பில் வலி எடுக்கும். டாக்டர் சொல்லச் சொல்ல நீலகண்டன் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தான். பதில் தெரிந்திருந்தும் தவிர்க்க முடியாமல் அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஸ்போர்ட்ஸ்…?” டாக்டர் கருணையே இல்லாமல் தலையை இடவலமாக ஆட்டினார். “கேரம்போர்டு, செஸ் இதெல்லாம் ஆடலாம். அதிலும் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது.” சாப்பிட்ட தட்டை மஞ்சு எடுத்துக்கொண்டு போனாள். நீலகண்டன் மாத்திரை சாப்பிட்டான். வேகத்தைக் குறைப்பதற்கான ஐந்து ஆண்டுக் காலப் போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காலையில் எங்கிருந்து அந்த வேகம் வந்தது? ஐந்து ஆண்டுக் காலப் பயிற்சி அந்த ஒரு கணத்தில் என்ன ஆயிற்று? அன்றாடம் எத்தனையோ படிகளைப் பொறுமையாக, மெதுவாக, ஒவ்வொரு படியாக ஏறி இறங்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும் இந்தப் படியைப் பார்த்ததும் அந்தத் துள்ளல் ஏன் வந்தது? நல்லவேளை, பட்ட இடத்திலேயே படவில்லை. காலிலும் எலும்பு முறிவு இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்து மீண்டும் படுத்த படுக்கையாகும் நிலை வந்திருந்தால் என்று நினைக்கும்போதே மனம் நடுங்கியது. நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது. தொலைவில் ரயில் சத்தம் கேட்டது. மாலதிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். https://amruthamagazine.com/2024/11/29/281-aravindan-short-story/
  17. நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.
  18. கட்சிக்குள் தான் வீரம் என்றில்லாமல் கட்சிக்கு வெளியிலும் வீரத்தை காட்ட வேண்டும். புத்தர் சிலை வைப்பு குறைந்து விட்டது என நினைத்தேன். ஆங்காங்கே இப்படி குழப்பவாதிகளும் தமது செயலை தொடர்கின்றனர்.
  19. அரச செலவில் இவ்வளவு எண்ணிக்கையில் சமையல்காரர்களெனில் அவர்களும் நீக்கப்பட வேண்டும்.
  20. சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமைய, பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும். முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/சபாநாயகர்-பதவிக்கு-மூன்று-பெயர்கள்-பரிந்துரை/175-348719

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.