Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பார் அனுமதியை சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் யாரும் எடுக்க கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? சிறிதரன் போன்றவர்களின் பேர்கள் எப்படியும் வராது? அடுத்து என்ன???
  2. எத்தகைய சட்டங்கள் இருந்தாலும் மே.தகு , இறந்த மாவீரர்களை நினைவு கூரல். றோகண விஜய வீர தமிழர்களை கொல்லவில்லை. அவருக்கான வீர வணக்கம் ஒரு அரசியல் வருடல் என கொள்லாமா? இனப்படுகொலை என பா.மன்றத்தில் சொல்ல ஒரு துணிவு வேண்டும். அது மீண்டும் மீண்டும் ஒலிக்க வேண்டும் எமக்கான நீதி கிடைக்கும் வரை. நன்றி மறக்காமல் திரு சுமந்திரனுக்கு நன்றி சொல்லி தான் வைத்தியர் ஆக கடந்து வந்த மிக கடினமான பாதைகளை விபரிக்கிறார். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ( அவர் சுயேட்சையாக இருந்தாலும்) கொடுக்கும் நேரம் கூட இவ்வளவு "பேதி நேரம் " மிகவும் ஆச்சரியமளிக்கிறது.
  3. இந்தியா ஒரு ஆய்வு கூடம் என்பதில் என்ன சந்தேகம்? பில்கேட்சின் ஆய்வு கூடம் ஆபிரிக்கா அல்லவா?
  4. பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தும் அநுர அரசு!
  5. பதவியில் இருந்து இதை கூட செய்யா விட்டால் உலகம் என்ன சொல்லும்??
  6. HARTLEY COLLEGE · இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளபங்களாதேஷ் 17 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 37.5 ஒவர்களில் 141 ஒட்டங்களை பெற்று சகல விக்கட்களையும் இழந்தது. இப் போட்டியில் யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரியின் வீரா் விக்கினேஸ்வரன் ஆகாஷ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். வாழ்த்துகள்டா தம்பி
  7. ZELENSKY மீது நம்பிக்கை இழந்த மக்கள்- போர்க்களத்தை விட்டு ஓடும் உக்ரைன் வீரர்கள்!
  8. காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றம் நிலவும் வானிலை நிலைமைகள் மற்றும் வடக்கிலிருந்து உள்வரும் எல்லைக் குழப்பம் காரணமாக இன்றைய நாளில் (30) காற்றின் தரக் குறியீடு (SLAQl) 92 முதல் 120 வரை இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பின் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ள தினசரி காற்றின் தர அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்கு உயரலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்றைய காற்றின் தரக் குறியீட்டின் படி கொழும்பு நகரம் 108 முதல் 116 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் யாழ்ப்பாணத்திலும் பொலன்னறுவையிலும் 112 முதல் 120இற்கு இடையில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குருநாகல், வவுனியா, கண்டி, கேகாலை, காலி, பதுளை, திருகோணமலை உள்ளிட்ட பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு 100இற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் தரக் குறியீட்டின்படி, 0-50 நல்லது, மற்றும் 51-100 மிதமானது. அத்தோடு, 101-150 இடையே சிறிது சாதகமற்றது என்பதோடு 151-200 என்பது மிகவும் சாதகமற்ற நிலைமையாகும். 201-300 க்கு இடையே காற்றின் தரம் காணப்படுமாயின் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அந்த எண்ணிக்கை 301-500ஆக காணப்படுமாயின் அது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை காரணமாக உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, களுத்துறை ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் மாத்திரமே காற்றின் தர சுட்டெண் மிதமான மட்டத்தில் இருக்க முடியும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது. இலங்கையின் காற்றின் தர அறிக்கையின்படி, நேற்று (29) பல நகர்ப்புறங்களில் காற்று சற்று ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=196652
  9. பாடகர் பிரதீப்குமாரின் தனிப்பாடல் ஒன்று
  10. பாடல்: ஆசை ஒரு புல்வெளி படம்: அட்டகத்தி இசை:சந்தோஸ் நாரயணன் பாடியவர்கள்: பிரதீப்குமார் & கல்யாணொ நாயர் வரிகள்: கபிலன்
  11. தோல்வியை அரசியல் ஓய்வாக கருதவில்லை
  12. போரில் இறந்த மக்கள் , போராளிகளுக்காக தமிழ் மக்கள் மாவீரர் நாளை கொண்டாடுகிறார்கள். உலகின் பல நாடுகளில் கொண்டாடுகிறார்கள். அதெப்படி ஜே வி பி கொண்டாட ஒரு தடையும் இல்லை.( மகிந்த அரசில்) தமிழ் மக்களுக்கு மட்டும் தடை?
  13. இரண்டு அல்லது மூன்று அமைச்சர் பதவிகளை கொடுத்து இருந்தால் இந்தப்பெரிய கட்டுரை வந்திருக்காது. ஏன் கடந்த அரசுகளில் இப்படியான கட்டுரைகள் வரவில்லை?
  14. பாடல்: மழைக்குள்ளே படம்: புரியாத புதிர் பாடியவர்கள்: ஸெரியா கோசல், கரிசரண் இசை: சாம் சி.எஸ் வரிகள்: சாம் சி.எஸ் மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை போல அல்லவா மனம் உன்னை பார்க்கும் போதில் எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும் } (2) நீயே என் உயிரில் ஆகும் ஒரு புதிய ராகம் தானடா ஏன் ஏன் சிறகு நீள்கிறது பார்க்க தோணுதே ஏனடா பூங்காற்றில் அடி உன் வாசம் அதை தேடி தேடி தொலைந்தேன் நீ மீண்டு வர நான் தானடி என் வாழும் வாழ்வை கொடுத்தேன் யாரோ இவன் யாரோ தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட யாரோ இவன் யாரோ கானா தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட { ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ } (2) நீ ஏன் கரை புரண்ட ஒரு ஆற்றை போல என்னில் சேர்கிறாய் தீயில் கருகிப்போகும் ஒரு பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய் { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஏ ஏ } (2) ஓஹோ ஹோ ஓஹோ நீயும் இனி நானும் நாமாய் சேரும் கோடி இன்பங்கள் கூடனும் தேடும் கரை தேடும் அலைபோல் இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும் { ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ } (2) { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஏ ஏ } (2)
  15. ஓ மரணித்த வீரனே -- யாழ்.ரமணன் யாழ்ப்பாணத்தில் 1984 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஓ மரணித்த வீரனே
  16. இரவு ஊரில் கதைத்த போது மழையும் காற்றும் வெளியில் செல்ல முடியாது என கூறினார்கள். இவ்வளவு மக்கள் வெள்ளத்தை பார்க்கும் போது மாவீரர்கள் தமிழர் மனதில் அதிவிசேடமானவர்கள் என்பதை சொல்லி நிற்கிறது.
  17. ஒரு டாக்டர் (பா.உ)அப்பாவி ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் போது கோமாவில் இருந்தீர்களா?? அர்ஜுனா என்ன கொலையா செய்து விட்டார்??
  18. மாவீரர்களுக்கு வீரவணக்கம். உங்களின் தியாகம் என்றென்றும் நினைவு கூரப்படும்.
  19. இன்று சாவகச்சேரி பகுதியில் மாவீரர் நாள் கடும் மழையிலும் எழுச்சியாக நடைபெற உள்ளதாக எனது தந்தையின் மாணவருடன் பேசும் போது சொன்னார். எந்த வித கெடுபிடிகளும் இல்லை என்பதாகவே சொன்னார். இப்போது அதிகாலை என்பது (அங்கு ) குறிப்பிடத்தக்கது.
  20. 'தமிழ் இந்து‘ வில் ‘இலங்கைத் தேர்தல்கள் உணர்த்தும் செய்தி என்ன?‘ என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் உண்டு. குறிப்பாக – 1. வடக்குக் கிழக்கைச் சேர்ந்த எவரும் அமைச்சுப் பதவிகளில் இல்லை என்பது. அருண் ஹேமச்சந்திர கிழக்கு மாகாணம்– திருகோணமலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதியாவார். 2. தனிச் சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது என்பது. இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள், இரண்டு துணை அமைச்சர்கள் என நான்கு அமைச்சர்கள் தமிழர்கள் உண்டு. 3. 1971 ல் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதற்காக ஜே.வி.பி போராடியது என்பது. அது ஜே.வி.வியின் முதலாவது கிளர்ச்சி. அதில் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி, சோசலிஸ ஆட்சியொன்றை உருவாக்கவே முயன்றனர். வெறுமனே சதிப்புரட்சி மூலம் அதிபர் கதிரையைக் கைப்பற்றுவதற்காக அந்தக் கிளர்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. அப்போது இன்றுள்ளதைப்போல ‘நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர்‘ முறையும் இருக்கவில்லை. 1978 ற்தான் நிறைவேற்று அதிகாரமுடைய அதிபர் முறையை (பிரான்ஸ் நாட்டு முறை) அன்றைய பிரதமராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன உருவாக்கினார். அதற்கான சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு அந்த அதிபர் ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. 4. 1983 இல் தமிழர்கள் மீதான வன்முறையைத் தூண்டியது ஜே.வி.பி என அன்றைய அரசாங்கம் அதைத் தடைசெய்தது என்பது. அந்த வன்முறையைத் தூண்டியதும் வன்முறையை நடத்தியதும் ஜே.ஆர். அரசாங்கமேயாகும். இதைப் பல நூல்களிலும் அதற்கப்பால், நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் வெளிப்படையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, பல நூறு கட்டுரைகளும் வாக்குமூலங்களும் இதை ஆதரப்படுத்தி உள்ளன. ஜே.வி.பி உட்பட நவ சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளைத் தடை செய்தவதற்கும் பழியை அவர்கள் மீது போடுவதற்கும் இதை ஒரு வாய்ப்பாக ஜே.ஆர். அரசாங்கம் முயற்சித்தது. ஜே.வி.பியை மட்டுமல்ல, தமிழ் விடுதலை இயக்கங்களையும் அது பயங்கரவாதிகள் என்று தடைசெய்தது. கடல் வலயச்சட்டம், அவசரகாலச் சட்டம் (இன்றும் அந்தச் சட்டம் நீக்கப்படாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது) எனப் பல சட்டங்களை மக்களின் மீது திணித்ததும் ஜே.ஆரின் ஆட்சியாகும். 5. தமிழ்த்தேசியக் கட்சிகள் உடைந்து தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனது. இதனால்தான் NPP தமிழர் பகுதிகளில் வெற்றியைப் பெறக் கூடியதாக இருந்தது. தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றிருந்தால் NPP பின்தள்ளப்பட்டிருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அடுத்த பந்தியில் இதற்கு முரணாக ‘பயங்கரவாதச் சட்டத்தை நீக்க வேண்டும். மாவீரர் துயிலுமில்லங்களைிலிருந்து இராணுவம் விலக வேண்டும், தமிழர்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், அரசியல் உரிமையைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும், என்பது போன்ற கோரிக்கைகளுக்காக தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அநுரவுக்கு (NPP க்கு வாக்களித்துள்ளனர்‘ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு பல தகவல் பிழைகளும் முரண்களும் உண்டு. தீபச்செல்வன் தமிழ்நாட்டில் வெளியாகும் தீராநதி, உயிர்மை போன்ற இதழ்களிலும் இதேபோன்ற பிழையான தகவல்களோடு பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்; எழுதி வருகிறார். அரசியலில் பார்வைகள், கண்ணோட்டங்கள், நிலைப்பாடுகள், விமரர்சனங்கள், மாறுபட்டிருக்கலாம்; மாறுபட்டிருப்பதுண்டு. அது வேறு. உள்நோக்குடைய தகவல் பிழைகள் இருப்பது நல்லதல்ல. ஊடகக்கற்கையில் படித்துப் பட்டம் பெற்ற ஒருவர், இப்படிப் பொதுவெளியில் உண்மைக்கு மாறான முறையில் எழுதுவதும் பொய்யைக் கட்டமைக்க விளைவதும் தவறு. அதுவும் தமிழ்நாட்டிலுள்ள பெருந்திரள் மக்களிடம் இலங்கைச் சூழலைப் பற்றிப் பிழையாக வியாக்கியானப்படுத்துவது அவர்களுடைய பிழையான புரிதலுக்கே வழிவகுக்கும். இதையே சிலர் நீண்டகாலமாகச் செய்து வருகின்றனர். JVP மற்றும் NPP ஆகியவற்றின் கடந்த காலத்தின் மீதான விமர்சனங்கள் உண்டு. ஏன் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் கூட நிச்சயமாக விமர்சனங்கள் ஏற்படும்… அவை பற்றி தீபச்செல்வன் உட்பட யாரும் தாராளமாக எழுதலாம்; எழுத வேணும். -கருணாகரன், கிளிநொச்சி. https://www.facebook.com/photo?fbid=8941129992597415&set=a.344570618920105
  21. தேசிய தலைவருக்கு 70 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.