Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. சாவகர் சேரியில் உலகத்தர சித்திரகூடம் வலையில் பிடித்தது ஜெகன் அருளையா யாழ்ப்பாணத்தில் வதியும் நண்பர் ஜெகன் அருளையாவின் ஆங்கில முகநூற் பதிவொன்றின் தமிழாக்கம் இது. (நன்றி ஜெகன்) வடக்கிற்கு வரும் உல்லாசப் பயணிகள் வெறுமனே கோட்டை, நல்லூர், ஐஸ் கிரீம் இத்தியாதிகளுடன் திரும்பி விடுவது சங்கடமாக இருக்கிறது. சிரமப்பட்டுத் தேடினால் இன்னும் பல விருந்துகள் புலன்களை அடையக் காத்துக்கொண்டிருக்கின்றன. சாவகச்சேரியில் ஒரு சித்திரகூடம் இருக்கிறது. இதற்கு நான் முன்னரும் சென்றிருக்கிறேன். ரி.பி. ஹண்ட் ஆர்ட் கலரி (Tp Hunt Artgallery) என்ற பெயரில் இயங்கும் இச்சித்திரகூடத்தின் ஸ்தாபகரை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன். யோகமணி என்ற நடுப்பெயரில் அழைக்கப்ப்டும் இவாஞ்செலீன் அலகரட்ணம் அமெரிக்காவில் வாழ்பவர் எனினும் வருடத்தின் கணிசமான காலத்தை இங்குதான் செலவழிக்கிறார். அவருடைய பூட்டனார் அருட்தந்தை தோமஸ் பீற்றர் ஹண்ட் அவர்களுடைய நினைவாக இச்சித்திரகூடத்தை சாவகச்சேரியில் நிறுவியிருக்கிறார். இங்கு சித்திரகூடம் (gallery), வரையகம் (studio), ஓவியப் பள்ளி ( art school) ஆகியன இயங்குகின்றன. யோகமணி தனது முயற்சியால் கணிசமான ஓவியங்களைச் சேகரித்து காட்சிப்படுத்தி வருகிறார். இந்நிலையம் செயற்படுவதற்கான செலவிலும் பங்கேற்கிறார். நாடெங்குமுள்ள ஓவியர்கள் தமது ஓவியங்களை இக்கூடத்தில் காட்சிப்படுத்தி வருகிறார்கள். திறமையுள்ளவர்களும் திறமையற்றவர்களும், இளையவர்களும், முதியவர்களும் இங்கு வந்து சில் மணித்தியாலங்களை மகிழ்ச்சியுடன் கழிக்கிறார்கள். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சித்திரங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. டொலரிலும் பவுண்டிலும் செலவு செய்யும் புலம் பெயர் தமிழருக்கு இவ்வோவியங்கள் நியாயமான விலையுள்ளதாகவே தெரிகிறது. கூடத்தின் பராமரிப்புக்கென அறவிடப்படும் 5% த்தைத் தவிர எஞ்சியது ஓவியர்களுக்கே போகிறது. நான் அதிகம் பேசவில்லை, மீதியை ஓவியங்களே பேசட்டும். இவற்றை நீங்கள் இனிமேல் அங்கு பார்க்க முடியாது. அது என்வீட்டுச் சுவர்களை இப்போது அலங்கரிக்கின்றன. இச்சித்திரகூடத்தைத் தரிசிக்க விரும்புபவர்கள் நிலையத்துடன் தொடர்புகொண்டு முற்கூட்டியே பதிவுசெய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இருக்குமிடம் கூகிள் இடம் காட்டி: https://maps.app.goo.gl/k2reXaUCm9pRbmnDA விலாசம்: No 27, Church Road, Chavakachcheri. தொ.பே.::+94 74 313 6077 / +94 77 335 0281 மின்னஞ்சல்: huntartgallery18@gmail.com https://marumoli.com/சாவகர்-சேரியில்-உலகத்தர/#google_vignette
  2. இஸ்ரேல் ஒரு மூலையில் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்களாம்.🙃
  3. தமிழீழ ராணுவம் (TEA)இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்துள்ளார்.
  4. இவ்விடுதலை மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்கின் முடிவை பொறுத்தது என வானொலி செய்தி கூறுகிறது.
  5. பாடலின் ஆங்கில வடிவம்
  6. அருமையான போட்டியை பார்க்க முடியவில்லை. காரணம் போட்டி உரிய நேரத்தில் ஆரம்பிக்காமை. போட்டியின் ரசிகர்கள் ticket 🎫 இல்லாமல் மதில் மேலால் உள்ளே புகுந்தால்அவர்களை கண்டுபிடித்து வெளியேற்றி போட்டி தொடங்க ஒரு மணித்தியாலத்துக்கு மேலாகி விட்டது.
  7. முழுக்கொலை பற்றியும் இவருக்கு (சித்தாத்தனுக்கு) தெரியும். தனியாக நின்று வெல்ல முடியாததால் கூட்டமைப்புடன் ஒட்டிக்கொண்ட பக்கா சுயநலவாதி இப்போ உமாவுக்கு சிலை வைக்கிறாராம்.
  8. ட்ரம்பின் கொலை முயற்சியில் ஈரான் பின்னணியில் உள்ளதாக சி என் என் (CNN)கூறியுள்ளதாம்.
  9. என்னை விட திறமையான (sohot)களை அல்காராஸ் எடுத்துள்ளார் என ஜோகோவிச் தெரிவித்து இருந்தார். அவர் (அல்கராஸ்) வெற்றிக்கு மிக தகுதியானவர் (deserve)என்றும் தெரிவித்திருந்தார்.
  10. காமராஜரின் ஆட்சிக்காலம் - தமிழகத்தின் பொற்காலம் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள். இந்திய தேசத்தின் ஈடுஇணையற்ற தலைவர் பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற நாள். விருதுபட்டியிலே பிறந்து, தன் இல்வாழ்வைத் துறந்து, பதினாறு வயதிலேயே பாரதத்தின் விடுதலைக்காகப் பாடுபடத் துவங்கி, அண்ணல் காந்தியின் அகிம்சை வழி நின்று, பலமுறை சிறைசென்று, தீரர் சத்தியமூர்த்தியின் பாசத்திற்குரிய சீடராகத் திகழ்ந்து, தமிழக காங்கிரஸின் தலைவராக உயர்ந்து, தன்னிகரற்ற தலைவராகத் திகழ்ந்த கர்மவீரர் காமராஜர், 13 ஏப்ரல் 1954-ம் ஆண்டு சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை, 9 ஆண்டுகள், காமராஜரின் ஆட்சிக்காலம். அது தமிழகத்தின் பொற்காலம். தமிழ்ப் புத்தாண்டு தினமான 13 ஏப்ரல் 1954 அன்று காமராஜர் தனது அமைச்சரவை சகாக்களுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். எவருடைய தலையீடுமின்றி தனது அமைச்சரவையைத் தேர்வு செய்தார். காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது சட்டமன்ற உறுப்பினராக இல்லை, மாறாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மிக எளிதாக சட்டமேலவை உறுப்பினராவதற்கு அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆயினும், தேர்தலில் போட்டியிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதையே அவர் விரும்பினார். எளிதில் வெற்றி பெறக்கூடிய சாதகமான பல சட்டப்பேரவைத் தொகுதிகள் அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பலர் அவருக்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் முன்வந்தனர். ஆனால் காமராஜர் அதை விரும்பவில்லை. மாநிலம் முழுவதற்குமான பிரதிநிதியாக, முதலமைச்சராக, இருக்கும் தான், மாநிலத்தின் எத்தொகுதியில் இருந்தும் போட்டியிட தயங்கக் கூடாது எனக் கருதினார். அப்போது வட ஆற்காடு மாவட்டத்தில் காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தார். அத்தொகுதியில் காமராஜருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கே. கோதண்டராமன் என்ற வேட்பாளரை நிறுத்தியது. பெரியார் ‘பச்சைத் தமிழனுக்கு’ தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். அண்ணாதுரை தனது கட்சியின் திராவிட நாடு இதழில் காமராஜருக்கு ஆதரவாகக் கட்டுரைகள் பல எழுதினார். ஏகோபித்த ஆதரவு பெற்ற காமராஜர் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட குடியாத்தம் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார். படிப்பறிவில்லாத காமராஜர் எப்படிப் பாராள முடியும் எனப் பலரும் பரிகாசம் செய்த நிலையில் பதவி ஏற்ற அவர் தனது அனுபவம் மிக்க திறமையான நடவடிக்கைகளால் தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை நிரூபித்தார். அவருடைய நியாயமான, எளிமையான அணுகுமுறை கட்சியில் மட்டுமின்றி, ஆட்சியிலும் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தது. சரியான முடிவுகளை விரைந்து எடுப்பதில் அவர் வல்லவராகத் திகழ்ந்தார். தன் தலைமையை விரும்பாதவர்களாயினும் கூட அவர்களது திறமை இந்த தேசத்திற்குப் பயன்படுமானால், அவர்களையும் அரவணைத்துச் செல்ல காமராஜர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவ்வகையில், முதலமைச்சர் பதவிக்கான உட்கட்சித் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியத்தை மட்டுமின்றி, இராஜாஜியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த எம். பக்தவச்சலம், ஏ.பி. ஷெட்டி ஆகியோரையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பி. பரமேஸ்வரன் அவர்களை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக்கினார். அது தீண்டாமையை ஒழிப்பதற்கான காமராஜரின் ஒரு சிறந்த இராஜதந்திர நடவடிக்கையாக அமைந்ததோடு, தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த அக்கறையையும் வெளிப்படுத்தியது. அது தமிழகம் முழுவதும் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவை அவருக்குப் பெற்றுத்தந்தது. 1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, தமிழகத்தில் 1957-ம் ஆண்டு 205 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாவது சட்டமன்றப் பொதுத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று காமராஜர் மீண்டும் முதல்வரானார். காங்கிரஸ் கட்சி 204 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களைக் கைப்பற்றியது. இம்முறை அவருடைய அமைச்சரவையில் நான்கு புதியவர்கள் பொறுப்பேற்றனர். தமிழகத்தின் தொழில்துறையை முன்னேற்றம் காணச்செய்வதற்கு ஆர். வெங்கட்ராமன் அவர்களை தொழில்துறை அமைச்சராகவும், பெண்ணினத்திற்குப் பிரதிநிதித்துவம் வழங்குவதற்காக மீனவ சமூகத்தைச் சார்ந்த கிருஸ்தவப் பெண் லூர்தம்மாள் சைமன் அவர்களை உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், தியாக மனமும், திறமையும் ஒருங்கே பெற்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தலைவர் பி. கக்கன் அவர்களை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், மின்சாரத்துறை அமைச்சராக வி. இராமையா அவர்களையும் தனது அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக்கினார். உள்துறை அமைச்சராக எம். பக்தவச்சலமும், நிதித்துறை அமைச்சராக சி. சுப்பிரமணியமும், வருவாய்த்துறை அமைச்சராக எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கரும் பொறுப்பேற்றனர். 1962-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காமராஜர் மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வரானார். மொத்தமிருந்த 206 தொகுதிகளில் காங்கிரஸ் 130 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறையும் பொது சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகச் ஜோதி வெங்கடாசலம், கூட்டுறவு மற்றும் வனத்துறை அமைச்சராக என்.எஸ்.எஸ். மன்றாடியார், விளம்பரம் மற்றும் தகவல் துறை அமைச்சராக ஜி. பூவராகவன் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.எம். அப்துல் மஜீத் ஆகிய நான்கு புதியவர்கள் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றனர். கல்வித்துறை அமைச்சராக எம். பக்தவச்சலமும், நிதித்துறை அமைச்சராக ஆர். வெங்கட்ராமனும், விவசாயத்துறை அமைச்சராகப் பி. கக்கனும், பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக வி. இராமையாவும் பொறுப்பேற்றனர். அஷ்டதிக்கஜங்களைப் போல் எட்டு அமைச்சர்களை மட்டுமே கொண்ட அவருடைய சிறிய அமைச்சரவை மிகத் திறமையாகச் செயல்பட்டது. “எந்தப் பிரச்சனையாயினும் அதனை எதிர்கொள்ளுங்கள், பிரச்சனைகளைத் தவிர்க்காதீர்கள், அவற்றிற்கு உரிய தீர்வுகளைக் காணுங்கள், நீங்கள் செய்யும் காரியம் சிறிதாயினும் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர்” என்பதே காமராஜர் தன் அமைச்சர்களுக்குச் சொன்ன அறிவுரையாகும். காமராஜர் ஒரு மக்கள் தலைவராவார். அவர் பாமர மக்களில் ஒருவராக இருந்து, இந்த தேசத்தின் விடுதலைக்காகவும், வாழ்விற்காகவும் தன் வாழ்வைத் தியாகம் செய்து, மக்களின் ஆதரவோடு காங்கிரஸ் தலைவராகி, தமிழகத்தின் முதல்வராகி, முதல்வரான பின்னரும் மக்களிடையே நடமாடி, அவர்களது இன்பதுன்பங்களில் பங்கேற்ற ஒரே அரசியல் தலைவர் காமராஜர் தான். அவர் மக்களின் நிலையை அறிவதற்காகவும், நெருங்கிப் பழகுவதற்காகவும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றார். மக்களின் பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளைக் கண்டார். தனிப்பட்ட தன் நலனைப் பெருக்கிக் கொள்ளாமல், பொது நலனைப் பேணிக்காப்பதில் முனைந்து நின்றார். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கினார். 1954-ம் ஆண்டு காமராஜர் முதன்முறை முதல்வராகப் பொறுப்பேற்ற போது முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது. 1957-ம் ஆண்டு அவர் இரண்டாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1962-ம் ஆண்டு அவர் மூன்றாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோது மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் செயல்படத்துவங்கியது. ஐந்தாண்டுத் திட்டப் பணிகளைத் திறமையுடன் செவ்வனே செயல்படுத்திய காமராஜர் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்சென்றார். அதனால் “மிகச் சிறப்பாக ஆட்சி செய்யப்படுகின்ற மாநிலம் தமிழ்நாடு” எனப் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் மனதாரப் பாராட்டினார். காமராஜர் நிர்வாகத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் அளித்ததே இல்லை. பொதுப்பணம் பொதுமக்களின் நன்மைக்குப் பயன்பட வேண்டுமே தவிர யாரோ சிலரின் நலன்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் ஆட்சித்துறை அதிகாரிகளிடம் சுமூகமான உறவினைப் பராமரித்தார். காமராஜரின் எளிமையான, நேரிடையான அணுகுமுறை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஆட்சிப்பணி அதிகாரிகளிடத்தில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது. தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் அதிகாரிகளிடத்தில் சுமூகமான உறவுமுறையைப் பராமரிக்கத் தவறினால், அந்த அமைச்சர்களை நெறிப்படுத்தவும் அவர் தயங்கியதில்லை. காமராஜர் மாநில முன்னேற்றத்தை இடைவிடாது கண்காணித்து முன்னெடுத்துச் செல்வதற்காக, ‘மாநில முன்னேற்றக் குழு’ ஒன்றினை ஏற்படுத்தினார். அதில் அனைத்து அமைச்சர்களும், அனைத்துத் துறையின் தலைவர்களும், செயலாளர்களும் இடம் பெற்றிருந்தனர். அக்குழு ஒவ்வொரு மாதமும் கூடி ஒவ்வொரு துறைகளின் திட்டம் சார்ந்த முன்னேற்றம், செயல்பாடுகள் மற்றும் அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும் ஆராய்ந்தது. இது துறையின் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், தேக்கநிலை குறித்தும் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. இந்த நடைமுறையானது திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதத்திற்கு இடமில்லாமல் செய்தது. இராஜாஜி அவர்கள் கொண்டுவந்த கல்வித்திட்டமே அவர் ராஜினாமா செய்வதற்கும் காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கும் காரணமாக அமைந்தது. அதனால் காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்றதும், இராஜாஜி கொண்டுவந்த அத்திட்டத்தை ரத்து செய்தார். இந்திய அரசியலமைப்பின் வழிகட்டு நெறிமுறைக் கொள்கைகளில் தெரிவித்துள்ளபடி, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை அளிக்க காமராஜர் முடிவு செய்தார். இராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்ததால் ஏற்பட்ட வருவாய் இழப்பின் ஒரு பகுதியைச் சரிக்கட்டுவதற்காக மூடப்பட்ட 6000 பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. அதேசமயம் காமராஜர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார். அதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் இன்னல் படுவதையும், மக்களின் உடல்நலம் பாழாவதையும் தடுத்தார். கர்மவீரரான அவர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சியைக் கொண்டுவருவதற்குக் கடுமையாக உழைத்தார். தமிழகத்தில் இருந்த 15,000 ஆயிரம் கிராமங்களில் 6000 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே இல்லாத நிலை இருந்தது. அதனால் 500க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைத் திறக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி 1954-55 ஆண்டுகளில் 12,967 கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பல பள்ளிகளைத் திறப்பதற்குக் காமராஜரின் அரசங்கம் பெருமுயற்சிகளை மேற்கொண்டது. கல்வியை மேலும் பரவலாக்க முடிவு செய்த காமராஜரின் அரசாங்கம் 1962-ம் ஆண்டு 300க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைத் திறக்க முடிவு செய்தது. அதன்படி, மேலும் 12267 பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன. அதன் விளைவாகப் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைப் பெரிதும் உயர்ந்தது. காமராஜர் கண்ட கனவு நனவாகத் துவங்கியது. காமராஜர் ஆட்சி துவங்கிய 8 ஆண்டுகளில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைப் பல மடங்கு உயர்ந்தது. அதுவரையில் எங்கெல்லாம் பள்ளிகள் திறக்கப்படவில்லையோ, அக்கிராமங்களிலெல்லாம் மத்திய அரசின் நிதியுதவியுடன் ஓராசிரியர் பள்ளிகளை ஏற்படுத்தினார். அதன் மூலம் வேலைவாய்ப்பற்ற படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு ஆசிரியராகும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே கல்வியும் தழைக்கத் துவங்கியது. ஆரம்பக்கல்வி மட்டுமின்றி மேல்நிலைக் கல்வியை மேம்படுத்தவும் காமராஜர் அரசாங்கம் பாடுபட்டது. அதற்காக அமைக்கப்பட்ட இலட்சுமணசாமி முதலியார் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, 7 ஆண்டுகள் தொடக்கக் கல்வி, 4 ஆண்டுகள் மேல்நிலைக் கல்வி, உள்ளடக்கிய 11 ஆண்டுகள் பள்ளிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கணிதமும், அறிவியலும், சமூக அறிவியலும் கட்டாயப் பாடங்களாக்கப்பட்டன. புதிதாகத் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு பெருமளவில் ஆசிரியர்கள் தேவைப்பட்டதால், பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கும் பொருட்டு மாநிலமெங்கும் 40 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. எவ்வளவு ஏற்பாடுகள் செய்தாலும் ஏழ்மையில் உழன்றுகொண்டிருந்த ஏதுமற்ற ஏழை மாணவர்களைப் பள்ளிகளுக்கு வரவழைக்க இயலவில்லை. பசியில் வாடும் பாலகர்கள் படிப்பைப் பற்றி நினைக்கக்கூட இயலாதநிலை இருக்கிறது என்பதை உணர்ந்த காமராஜர் நெஞ்சம் பதறினார். ஏழை மாணவர்களின் வாழ்வை எப்படியேனும் உயர்த்தியே தீருவது என்று முடிவு செய்தார். ஏழைக் குழந்தைகளின் பசியினைப் போக்கி அவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதற்காக, 1956-ம் ஆண்டு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் தமிழகத்தில் மாபெரும் கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவது பெரிதும் அதிகரித்தது. அனைத்து மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவநிலை பள்ளிகளில் ஏற்பட்டது. ஓலைக்குடிசைகளையே உறைவிடமாகக் கொண்டிருந்த ஏழை மாணவர்களுக்கு, உணவு தந்து கல்வி கற்க வகை செய்த காமராஜர், அவர்களுக்கு உடையும் கொடுக்க முடிவு செய்தார். 1960-ம் ஆண்டு பள்ளிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டது. அது மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வைப் போக்கியது. காமராஜர் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை ஒரு கடமையாக மட்டும் கருதாமல் அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைத்தார். “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற மகாகவியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டுவதற்கான காமராஜரின் சீரிய முயற்சிகளுக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றிணைந்து ஆதரவளித்தனர். மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதிலும், சீருடைகள் வழங்குவதிலும் மக்களும் துணை நின்றனர். இயன்றவர்கள் பலரும் பணமாகவும், பொருளாகவும் வழங்கினர். கல்வி வளர்ச்சிக்கென மாவட்டம்தோரும் பள்ளி மேம்பாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. அம்மாநாடுகள் பொதுமக்களின் ஆர்வம் மிகுந்த பங்கேற்புடன் திருவிழாக்களைப் போல் நடந்தன. தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மலர்ந்த கல்வி வளர்ச்சிக்கு பொதுக் கல்வி இயக்குநராக காமராஜரால் நியமிக்கப்பட்ட நெ.து. சுந்தரவடிவேலுவும் பெரிதும் துணை நின்றார். மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் நலன்காப்பதிலும் காமராஜர் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். ஆசியாவிலேயே முதன்முறையாக ஓய்வூதியம், சேமநலநிதி மற்றும் காப்பீடு ஆகிய மூன்றும் இணைந்த பயன்களை காமராஜரின் அரசாங்கம் ஆசிரியர்களுக்கு வழங்கியது. ஆரம்பப் பள்ளிகளைப் போன்று மேல்நிலைப் பள்ளிகளும் முன்னேற்றம் பெற்றன. 1954-55-ல் 1031 ஆக இருந்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை, 1962-63-ல் 1820 ஆக உயர்ந்தது. மேல்நிலைக் கல்வி கற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் 3.82 இலட்சத்திலிருந்து 6.2 இலட்சமாக உயர்ந்தது. பள்ளிக்கல்வி மட்டுமின்றி கல்லூரிக் கல்வியை மேம்படுத்துவதிலும் காமராஜர் கவனம் செலுத்தினார். 1953-54 ஆண்டுகளில் 53 கல்லூரிகளும் அவற்றின் பயின்ற 39 ஆயிரம் மாணவர்களுமாக இருந்த நிலை, அடுத்த 9 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டு 1962-63 ஆண்டுகளில் கல்லூரிகளின் எண்ணிக்கை 63 ஆகவும் அதில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரமாகவும் அதிகரித்தது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆய்வுக் கூடங்களும், நூலகங்களும் துவங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்களைப் போலவே கல்லூரி ஆசிரியர்களையும் பாதுகாத்தார் காமராஜர். 1962-ம் ஆண்டிலிருந்து கல்லூரி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. கல்விக்கு அடுத்தபடியாக காமராஜர் விவசாய மேம்பாட்டில் கவனம் செலுத்தினார். 2007 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானி திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேட்டூர் கால்வாய்த் திட்டமானது சேலம், கோயம்பத்தூர் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 33400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 29 கோடி ரூபாய் செலவில் காவேரி டெல்டா பாசன மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆளியாறு-பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை, அமாராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி போன்ற நீர்த்தேக்கத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்தும் முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் செய்து முடிக்கப்பட்டன. இவற்றில் பல பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றி முடிக்கப்பட்டது அவருடைய நிர்வாகத் திறமைக்குச் சான்றாகும். புதிய கட்டளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் வீடூர் அணை போன்றவை இரண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் முடிக்கப்பட்டவை ஆகும். முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் தமிழகத்திலிருந்த அனைத்து நதிகளும் அதன் அதிகபட்சப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. ஆகவே, மூன்றாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் காமராஜரின் அரசாங்கம் சிறிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியது. ஏரிகள், குளங்கள் போன்றவை தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்பட்டன. 1957-61க்கும் இடைப்பட்ட காலத்தில் 1600 ஏரிகளும், 1628 குளங்களும் தூர்வாரப்பட்டன. 2000 கிணறுகள் வடிகால் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டன. விவசாயிகளுக்கு 25 சதவீத அரசு மானியத்துடன் நீண்ட காலக் கடன்கள் வழங்கப்பட்டன. விவசாய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவும், கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதற்காகவும் அவர் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார். பெரியார் நீர் மின் உற்பத்தித் திட்டம், குந்தா நீர் மின் உற்பத்தித் திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. விவசாயத்திற்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக 23103 கிராமங்கள் மின்சாரம் பெற்றதோடு, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மின்சார நீரேற்றிகளின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்திலிருந்து 5,00,000 ஆக உயர்ந்தது. பாசனத் திட்டங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்கள் மிக நேர்த்தியாகச் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக காமராஜரின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து, மிகை உற்பத்தி கொண்ட மாநிலமாக உயர்ந்தது. மின் உற்பத்தி செய்வதற்கும் அவற்றைப் பகிந்தளிப்பதற்கும் அரசுக் கட்டுப்பாட்டில் மின்சார வாரியம் உருவாக்கப்பட்டது. விவசாயத்திற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்ந்தது. விவசாயத்துறையில் மின்சாரத்தின் பயன் 44 கோடி யூனிட்டுகளிலிருந்து, 186 கோடி யூனிட்டுகளாக அதிகரித்தது. நீர் மின் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தது. மின்சார உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் தொடந்து முன்னேறி மின்சாரத் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழ்ந்தது. காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் தொழில் துறையில் பெரும் ஏற்றம் கண்டது. அடிப்படையில் தமிழகம் விவசாய பூமியாக இருந்த போதிலும் தொழில்கள் பல தழைத்தோங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் இருந்தன. அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார் காமராஜர். தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தி, தமிழ் நாட்டின் தொழில் வளரச்சிக்கு வழிகோலினார். கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் ஏற்படுத்தப்பட்டன. அதன் மூலம் சிறுதொழில் வளர்ச்சி ஊக்கப்படுத்தப்பட்டது. காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கனரகத் தொழிற்சாலைகள் பல ஏற்படுத்தப்பட்டன. சென்னை, நெய்வேலி, தூத்துக்குடி, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் தொழிற்சாலை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆவடி டாங்க் தொழிற்சாலை, திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், ஊட்டி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, சென்னை ரயில்பெட்டித் தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், கிண்டி தொலைநகல் தொழிற்சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற கனரகத் தொழிற்சாலைகள் வெளிநாட்டு முதலீட்டுடனும், மத்திய அரசின் உதவியுடனும் தொடங்கப்பட்டன. மேலும், பள்ளிப்பாளையம் சேஷாயி காகித ஆலை, ராஜபாளையம் ராம்கோ தொழிற்சாலை, சங்கரிதுர்க்கம் இந்தியா சிமெண்ட ஆலை, வண்டலூர் ஸ்டண்டர்டு மோட்டர் தொழிற்சாலை, எண்ணூர் ராயல் என்பீல்டு மோட்டார் தொழிற்சாலை, வடபாதி மங்கலம் சர்க்கரை ஆலை மற்றும் அசோக் லேலண்டு தொழிற்சாலை ஆகிய தனியார் துறை தொழிற்சாலைகளும் தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தின. கனரகத் தொழிற்சாலைகளைப் போலவே, கார்கள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள், டீசல் எஞ்ஜின்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், மின்சார நீரேற்றிகள், மின் மீட்டர்கள், மின் கலங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகளும் வளர்ச்சி அடைந்தன. 9 ஆண்டுக் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 4500-ஐ தொட்டது. தொழில் வளர்ச்சியில் மகாராஷ்டிராவிற்கும், மேற்கு வங்காளத்திற்கும் அடுத்த நிலையில் இருந்த தமிழகம் மேற்கு வங்காளத்தைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. காமராஜரின் ஆட்சிக்காலத்தில் சென்னை இராமானுஜம் கணித நிலையம், சென்னை இந்திய தொழில் நுட்ப நிலையம் (ஐ.ஐ.டி), அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி மண்டல தொழில் நுட்பக் கல்லூரி, கோவை அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி மின்-வேதியியல் ஆய்வு நிலையம், சென்னை அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரி போன்ற அறிவியல், தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அதுதவிர பல பாலிடெக்னிக் கல்லூரிகளும், தொழில் பயிற்சி நிறுவனங்களும் (ஐ.டி.ஐ.) துவக்கப்பட்டன. தனியார் துறையிலும் பல அறிவியல், தொழில் நுட்பக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. காமராஜர் ஒரு இலட்சியவாதி மட்டுமல்ல அவர் ஒரு செயல் வீரரும் ஆவார். இந்திய தேசம் பருவ மழைகளையும், விவசாயப் பொருளாதாரத்தையும் சார்ந்தே இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருந்த அவர் விவசாயத்தை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தீவிர கவனம் செலுத்தினார். விவசாய முன்னேற்றத்தில், விவசாயத் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது என்பதை உணர்ந்த காமராஜரின் அரசாங்கம், 1956-ம் ஆண்டு விவசாயக் குத்தகைதாரர்கள் சட்டத்தைக் கொண்டு வந்தது. அச்சட்டம் உழுபவரின் உரிமைகளை உறுதிப்படுத்தியது. 1962-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நில உட்சவரம்புச் சட்டத்தின் படி விவசாய நிலத்திற்கான உட்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டது. அச்சட்டம் அதிகப்படியான நிலம் வைத்திருந்த நிலச்சுவான்தார்களிடமிருந்து உட்சவரம்பிற்கு மேற்பட்ட நிலத்தை எடுத்து, அதை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தது. காமராஜரின் ஆட்சியில் வீட்டுவசதியும், நகர்ப்புற வளர்ச்சியும் வேகம் பெற்றன. அரசு ஊழியர்களுக்கும், காவல் துறையினருக்கும், நேசவாளர்களுக்கும் வீட்டுவசதிகள் செய்து தரப்பட்டன. காந்தியடிகளின் கொள்கை வழி நின்றவரான கர்மவீரர் கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சியிலும், சமூக முன்னேற்றத் திட்டங்களிலும் கவனம் செலுத்தினார். 1960-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி விழாவின் போது தமிழ் நாட்டில் புதிய கிராமப் பஞ்சாயத்துக்களும், பஞ்சாயத்து ஒன்றியங்களும், மாவட்ட வளர்ச்சி மன்றங்களும் துவக்கப்பட்டன. உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அதிகாரங்களும், நிதி ஆதாரமும், உள்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தழ்த்தப்பட்ட நிலையில் இருந்த எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்குக்கென்று சிறப்பு சமூக நலத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், பெண் தொழிலாளர்களின் நிலையினை உயர்த்துவதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. புதிய பஞ்சாயத்து ஆட்சி முறை காமராஜர் கொண்டு வந்த அமைதிப் புரட்சியாகும். தேசத்தின் வளர்ச்சிக்கு மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு பெருந்தடையாக இருப்பதை உணர்ந்த காமராஜரின் அரசாங்கம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அத்திட்டத்தை மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே ஒரு வாரியத்தை உருவாக்கியது. எல்லாவற்றிக்கும் மேலாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குக் காமராஜர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால், ஒரு போதும் தான் தமிழ் மொழியை வாழ வைத்ததாக அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. 1955-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. 1958-ம் ஆண்டு தமிழ் ஆய்வுக் குழுவினை நிறுவியது தமிழ் வளர்ச்சிக்குக் காமராஜர் செய்த மாபெரும் சாதனையாகும். அலுவல் மொழிச் சட்டத்தின் மூலம் தமிழ் ஆட்சி மொழியாக்கப் பட்டதைச் செயல்படுத்தவும், தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்தவும் அக்குழு ஏற்படுத்தப்பட்டது. 14 ஜனவரி 1958-ம் ஆண்டு முதற்கொண்டு தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதே நாளில் தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட்டது. அதேசமயம், தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக காமராஜரின் அரசாங்கம் மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொண்டது. 1961-ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் தான் தமிழ் மொழி கல்லூரிகளில் பயிற்று மொழியாக்கப்பட்டது. 1962-ம் ஆண்டு தமிழ் அகாடமி தனது முதல் தமிழ் கலைக்களஞ்சியத் தொகுதியை வெளியிட்டது. 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காமராஜரின் தலைமையின் கீழ் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலத்தைக் காங்கிரஸ் பெற்றிருந்த போதிலும் கூட, முந்தைய தேர்தலில் 15 இடங்களே பெற்ற தி.மு.க. இத்தேர்தலில் 50 இடங்களைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக, தான் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அப்பதவியை இராஜினாமா செய்ய காமராஜர் முடிவெடுத்தார். முதலமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப் பணிக்காக டெல்லி சென்ற காமராஜரை, பண்டித நேரு அவர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார். தேசிய அரசியலிலும் தன் தனி முத்திரையைப் பதித்த காமராஜர் அசைக்கவியலாத ‘கிங் மேக்கர்’ ஆகத் திகழ்ந்தார். கடைக்கோடித் தமிழனும் கரம் கூப்பித் தொழுத கர்மவீரராக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தேசத்தின் முன்னேற்றமே தன் வாழ்வாகக் கொண்ட தீயாக சீலராகக் காமராஜர் திகழ்ந்தார். “ஏழைகளின் துன்பம் போக்காமல் எந்தப் பதவியிலும் இருப்பதில் எவ்விதப் பயனுமில்லை” என்பதைத் தன் கொள்கையாகக் கொண்டிருந்த காமராஜர் உண்மையிலேயே ஒரு ஏழைப் பங்காளனாகத் தமிழக மக்களின் மனங்களில் நீங்காது நிறைந்தார். - முனைவர் நா.சேதுராமன் (drnsethuraman@gmail.com) https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/25752-2013-12-16-15-06-05
  11. காவிரி நதிநீரைக் கர்நாடகா தமிழ்நாட்டிற்குத் தர மறுப்பது ஏன்..?- Aram Talkies Special இந்தியாவின் வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக இருக்கும் ஒரே பிரச்சினை காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை தான்.. 1974 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே இந்த பிரச்சனை ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. 50 ஆண்டுகளாக நடக்கும் இந்த பிரச்சனைக்கு என்ன காரணம்..? “தென்னகத்தின் கங்கை” என்று அழைக்கக்கூடிய காவிரி நீரானது 802 கிலோ மீட்டர் வரை நீளம் கொண்டது. கர்நாடகாவில் தொடங்கி கேரளா, தமிழ்நாடு வழியாகச் சென்று இறுதியாக பாண்டிச்சேரியை சென்றடைகிறது. முழுக்க முழுக்க மழை நீரை மட்டுமே நம்பி இருக்கும் இந்தக் காவிரி ஆற்றுப்படுகை 740 TMC (Thousand million cubic feet) வரை சேகரித்துக் கொள்ளும் கொள்ளளவை கொண்டது. இந்த 740 TMC கொள்ளளவில், மழை யின் மூலமாக கர்நாடகாவிற்க்கு 425 TMC தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்க்கோ 252 TMC தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுப்பது ஏன்? வரலாற்றை சற்று பின்னோக்கி பார்க்கும் போது, 1900 களில் கர்நாடகா மாநிலம் மைசூர் சமஸ்தானமாகவும் , தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாகவும் இருந்தது. மைசூர் சமஸ்தானம் மன்னர்களின் கீழ் இருந்த, அதே வேளையில் மெட்ராஸ் மாகாணமோ பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது. 1910 ம் ஆண்டு மைசூர் சமஸ்தானம் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக ஒரு வரைவுத் திட்டத்தை முன் வைத்தது. ஆனால் அதே காலத்தில், மெட்ராஸ் மாகாணமும் அந்த ஆற்றின் மூலமாக நீர்ப்பாசன வசதியை மேற்கொள்வதற்கான திட்ட வரைவை முன் வைத்தது. காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசாங்கம் அணை கட்டினால், நீர்ப்பாசன வசதிக்கு தேவையான தண்ணீர் வரத்து குறைவாகிவிடும் என்று முதல் முதலாக மெட்ராஸ் மாகாணம் எதிர்ப்பு தெ ரிவித்தது அப்ப போதுதான். மெட்ராஸ் மாகாணம் பிரிட்டிஷாரின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டு இருப்பதால், மைசூர் அரசை பணிய வைப்பதற்காக 1924 ஆம் ஆண்டு ( நியாயம் இல்லாத) ஒரு ஒப்பந்தத்தைப் போட்டது. அதாவது 75% தண்ணீர் மெட்ராஸ் மாகாணத்திற்கு விட வேண்டும் என்றும், 23% மைசூர் மாகாணத்திற்கு என்றும், மீதமுள்ள நீர் கேரளாவிற்கு செல்ல வேண்டும் என்றும் 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் 1974 -இல் முடிவுக்கு வந்தது. ஆனால் இதற்கு இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு காவிரி நீரை பயன்படுத்தி 25.8 லட்சம் ஏக்கர் நிலங்கள் வரை சாகுபடி செ ய்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் கிட்டத்தட்ட நீர்ப்பாசனத்தை மட்டுமே நம்பி இருக்கையில், திடீரென அந்த நீர்வரத்து குறைந்தால் தமிழ்நாடு மூன்று விதமான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. விவசாய நிலங்கள் எல்லாம் குறையும் அபாயம். நாடு மற்றும் விவசாயிகளின் நிதிநிலை குறைந்து வேலை இல்லாமல் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் அபாயம். மேலே சொன்ன இரண்டு காரணத்தினால் விவசாயிகளின் கடன் சுமை அதிகமாவது மட்டுமல்லாமல், விவசாயிகள் தற்கொலைக்கும் தூண்டப்படும் அபாயம். இதுதான் காவிரி நதி நீருக்காக பிரிட்டிஷ் அரசால் போடப்பட்ட ஒப்பந்தத்தால் தமிழ்நாடு சந்தித்த முதல் பிரச்சனை . இரண்டாவதாக உள்ள பிரச்சினை காவிரி ஆற்றுப்படுகையில் சீராக மழை பெய்யாதது தான்.. 1993 ஆம் ஆண்டு கீழ் காவேரியில் பெய்த மழையின் கொள்ளளவு 1502.74 MM. ஆனால் 2002ல் பெய்த மழையின் அளவோ 241.88 MM மட்டுமே. பத்தாண்டுகளில் மழைப்பொழிவு ஆறு மடங்கு வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் மேல் காவிரியிலும் 1992 ல் பெய்த மழையின் அளவு 2522.12 லிருந்து 1996ல் 1782.19 ஆக குறைந்தது. இப்படி படிப்படியாக மழை வரத்து குறையக்குறைய காவிரி பிரச்சனை படிப்படியாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் இதை விட ஒரு பெரிய பிரச்சனையும் இங்கு உள்ளது. அது என்னவென்றால், 740 TMC தண்ணீர் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே பங்கிடப்பட்டாலும் கூட, நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் உற்பத்தியும் தண்ணீர் தேவையை அதிகரிக்கவே செய்கின்றன. மாநிலங்களின் தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு 566 TMC தண்ணீரும், கர்நாடகாவிற்கு 465 TMC தண்ணீரும், கே ரளாவிற்கு 99.8 TMC தண்ணீர் மற்றும் புதுச்சேரிக்கு 9.3 TMC என மொத்தமாக 1030 TMC தண்ணீர் தேவைப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட 1031 TMC தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் காவிரி ஆற்றுப்படுகையின் முழு கொள்ளளவு 740 TMC தண்ணீர் மட்டுமே . இதை இரண்டு மாநிலங்களுக்கும் பாதிப்பாதியாக பிரித்தால் கூட தண்ணீர் தேவை இருக்கவே தான் செய்கிறது. தமிழ்நாட்டில் நெல் பயிர் சாகுபடி பிரதானமான விவசாய தொழிலாக இருக்கும் பட்சத்தில் நெல் பயிர் மற்றும் கரும்பு சாகுபடி கர்நாடகாவில் பிரதானமான தொழிலாக இருக்கிறது. இந்த இரண்டு சாகுபடிக்கும் தண்ணீர் தேவை மிக அதிகமாக இருக்கிறது. Water Footprint Network ன் கூற்றுப்படி, ஒரு கிலோ அரிசி விளைவிக்க 3400 லிட்டர் தண்ணீர் தேவை ப்படுகிறது என்றும், ஒரு கிலோ சர்க்கரை விளைவிக்க 1500 லிட்டர் வரைக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்திய நிலப்பரப்பை பொறுத்தவரையில், இந்தத் தே வை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. அதாவது ஒரு கிலோ அரிசிக்கு 5000 லிட்டர் தண்ணீர் என்றும், ஒரு கிலோ சர்க்கரைக்கு 2500 லிட்டர் தண்ணீர் என்றும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் நெல் சாகுபடிக்கு 70% தண்ணீர் நேரடியாக செலவிடப்படுகிறது. மேலும் கரும்பு சாகுபடியில் இந்தியாவின் மூன்றாவது இடத்தில் உள்ள கர்நாடகாவிற்கு 30% தண்ணீர் செலவிடப்படுகிறது. இந்த நீர் வரத்து குறையும் பட்சத்தில் கர்நாடகா விவசாயிகள் பெரும் நிதிச்சுமைக்கு உள்ளாவார்கள். இந்நிலையில் முழுக்க முழுக்க காவிரி நதிநீரை மட்டுமே நம்பி இருக்கும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு, கர்நாடக அரசு தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு இந்த நான்கு காரணிகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும். பிரிட்டிஷ் ஒப்பந்தம், தமிழ்நாட்டின் சார்புத்தன்மை , இரு மாநிலங்களுக்குமான அதிகப்படியான தேவை மற்றும் இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயப் பழக்கவழக்கம்.மேலும் 2023 இல் கர்நாடகாவில் பெய்த குறைந்த மழையின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள காவிரி நதி நீர் தேக்கங்களின் இருப்பு 104.5 TMC யில் இருந்து 51.1 TMC ஆக குறைந்தது. ஆனால் அன்றைய ஆண்டில் கர்நாடகாவிற்கு அடிப்படையாக 112 TMC தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2020 லிருந்து 2050 வரை யிலான காலகட்டத்திற்குள் காவிரி நதி நீர் ஆற்றுப்படுகையில் பெய்யும் மழையின் அளவு 20 சதவதீம் வரை குறை யும் என்று BCCI – k ( Bangalore climatic change initiative – Karnataka ) தெரிவித்துள்ளது. மே லும் தொழில்துறை மற்றும் விவசாய உற்பத்தித் துறைகளின் தேவை அதிகப்படியானதினால் நிலத்தடி நீரும் குறைந்து கொண்டேதான் செல்கிறது. இதுதான் காவேரி பிரச்சனை மேலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக உருவெடுத்ததற்கு முக்கிய காரணியாகும். இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் பாதை என்ற முன்னெடுப்பில் முதன்மையாக இருக்கும் பயிர் Millets என்று சொல்லக்கூடிய திணை தானியங்கள். இவற்றுக்கு தண்ணீர் தேவை மிகவும் குறைவு. ஒரு கிலோ திணை தானியங்களை விளைய வைப்பதற்கு தேவையான தண்ணீரின் அளவானது, ஒரு கிலோ அரிசி விலை விற்பதற்கு தேவையான தண்ணீரை விட நான்கு மடங்கு குறைவு. மேலும் இது கோதுமை விளைவிப்பதற்கு தேவையான தண்ணீரின் அளவை விட இரண்டு மடங்கு குறைவு. அதுமட்டுமில்லாமல் கரும்பு விளைவிப்பதற்கு தேவையான தண்ணீரின் அளவை விட ஐந்து மடங்கு குறைவு. மேலும் இவை வறட்சி காலத்திலும் பயிரிட உகந்தவை என்பது இதன் சிறப்பம்சம். அரசாங்கம் இந்த பிரச்சனைக்கு என்று தீர்வு காணும் என்று விடை தெரியாத பட்சத்தில், விவசாயிகளுக்கு ஒரு மாற்று வழியாக கூட இந்த திணை தானியங்கள் விளைவித்தல் இருக்கலாம். மேலும் இந்தியாவில் நாளுக்கு நாள் இந்த திணை தானியங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்று. நாங்கள் கூறிய இந்த தினை தானிய ஊடுபயிர்விவசாயம் என்பது ஒரு சிறு உதாரணம் மட்டுமே . இதுபோல் மாற்று வழிகள் பல இருக்கிறது.. சுமார் 150 ஆண்டுகளாக நடக்கும் இந்த காவிரி நதிநீர் பிரச்சனை ஓயாத பட்சத்தில், ” நமக்கு நாமே ” என்று சொல்லக்கூடிய தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் மாற்று வழியை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். https://aramtalkies.com/2024/why-is-karnataka-refusing-to-give-cauvery-water-to-tamilnadu-aram-talkies-special/
  12. ஒலிம்பிக் தீபத்துடன் ஈழத்தமிழன் பாரீசில்....
  13. பாடல் : ஆசை கூட படம்: think indie பாடகர்கள் : சாய் அபயங்கர் மற்றும் சாய் ஸ்மிர்தி இசை அமைப்பாளர் : சாய் அபயங்கர் பாடல் ஆசிரியர் : சத்யன் இளங்கோ ஆண் : என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை ஆண் : என் வெக்கம் தீர என்ன தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே உன் சிரிப்பும் மாறவில்ல நாள பாத்து மேளம் துள்ள பெண் : என் பக்கம் போனவன தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை பெண் : திக்கும் மனமே போட்ட திட்டமா? ஆ ஆ உன் பாதம் தாளம் போட என் பார்வை மேலோட நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட ஆழம் கூடிட மேகம் தூவிட ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட பெண் : ஆலோலம் ஆழும் தூவானம் தூவும் கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்? ஆலோலம் ஆழும் தூவானம் தூவும் கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும் சேராமல் சேரும் தீராமல் தீரும் மோதாமல் மீண்டொடும் மீண்டொடும் ஆண் : என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை ஆண் : என் வெக்கம் தீர என்ன தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே உன் சிரிப்பும் மாறவில்ல நாள பாத்து மேளம் துள்ள பெண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட ஆழம் கூடிட மேகம் தூவிட ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட
  14. சரத் பொன்சேகா ஒருவரும் சாகவில்லை என்று சொன்னது ???
  15. பொதுவேட்பாளர் மூலம் தமிழர் கோரிக்கைகள் தோற்கடிக்கப்பட இடமளிக்க முடியாது- சாணக்கியன் நாஉ
  16. எத்தனையோ புதை குழிகள் இன்னும் தோண்டப்படாமல் உள்ளன. மக்களுக்கு முன் கையளிக்கப்பட்ட போராளிகள், மக்களை எங்கே என்று சொல்ல வக்கில்லை. தமது உறவினர்களை காணவில்லை என வருடக்கணக்கில் போராடும் மக்கள் பொய்யா சொல்கிறார்கள்? பச்சை இனவாதி மக்களையும் கொன்று விட்டு பொய்யையும் சொல்லி அதே தமிழ் மக்களிடம் வாக்கும் கேட்டிருக்கிறார்.
  17. யூரோ கப் இங்கிலாந்து தோல்வியால் காண்டிக்கு நேர்ந்த துயரம்
  18. மறக்க முடியாத தருணம். நினைவில் இருந்து அகற்றுவது கடினமானது. அது தான் மனதை திசை திருப்ப எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்.
  19. கதைக்க விட்டால் ஜனநாயகம் என மூச்சுக்கு ஒரு தடவை சொல்வார்கள்.போதாதற்கு ரஸ்யா, சீனா, ஈரான், வடகோரியா ஆகிய நாட்டு அரசுகளை, தலைவர்களை கிண்டல், கேலி செய்வது. இவ்வளவு தலைவர்கள் ஏதாவது நாட்டில் சுடப்பட்டார்கள் என நான் நினைக்கவில்லை.
  20. இரத்த பொட்டு புகழ் அமிரும் மங்கையர்கரசியும் இளைஞர்களை உசுப்பேத்தி அவர்களை ஆயுத போருக்கு அடித்தளம் இட்டவர்கள் . குறிப்பாக தமிழர் விடுதலை கூட்டமைப்பினர். ஒரு பா உறுப்பினரின் மகள் உயர்தர பரீட்சையில் குண்டடித்தவர் 😆தற்போது டாக்டராக உள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.