Everything posted by nunavilan
-
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
மகிந்தவின் ரனிலுக்கான ஆதரவு அப்புட்டு தானா?
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ஒரு படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார் என்றால் எப்படியான பாட்டு வரும் என ரசிகளுக்கு தெரியுமோ அது போல் தான் சிறிலங்கா தேர்தலும்.🙂
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
அது தானே பார்த்தேன். அவன் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என. இத்திரியின் சாராம்சம் மேற் கூறிய சம்பவம் தான்.
-
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் ஹரிஸுடன் பேசாமல்……. ஜனாதிபதி சொன்னவிடயம்
கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் ஹரிஸுடன் பேசாமல்……. ஜனாதிபதி சொன்னவிடயம். நூருல் ஹுதா உமர் ஜனாதிபதி செயலகத்தில் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து சென்று கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி கடற்கரை பள்ளிவாசல் வீதியால் பிரித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைப் பிரித்து தர வேண்டும் என்று கோரிய போது ஜனாதிபதி சொன்ன விடயம் என்னவென்று தெரியுமா? இதை கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸுடன் பேச வேண்டும். அவருடன் பேசாமல் எந்த உத்தரவாதத்தையும் உங்களுக்கு தர முடியாது என்று. கல்முனை உப பிரதேச செயலகத்தில் நிதி பிரிவை தர வேண்டும், கணக்காளரை நியமிக்க வேண்டும் என்ற போது கூட அதுவும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி ரணில் அவர்கள் அவர்களை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியதன் காரணமாக இந்த மண்ணில் மாதக்கணக்கில் போராட்டம் நடக்கிறது. என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். கல்முனையில் நடைபெற்ற முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் வகிபாகம் மற்றும் கல்முனையின் எதிர்கால நகர்வுகள் தொடர்பான பொதுக் கூட்டத்தில் பிரதான பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பிலும் ரணிலை பாராளுமன்றத்திற்குள் ஜனாதிபதியாக தெரிவு செய்கின்ற தேர்தலில் கூட தமிழ் கட்சிகள் சேர்ந்து டலஸ் அழக பெருமையுடன் ஒப்பந்தம் புரிந்தது. அந்த அளவுக்கு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழர் ஐக்கிய முன்னணி, விக்னேஸ்வரன், பொன்னம்பலம் போன்ற எல்லோரும் கல்முனை பிரச்சினையை முன்னிருத்தி ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இங்கு மாதக்கணக்கில் போராட்டம் நடைபெற்ற போதும் கல்முனை நகரை தமிழர்கள் முற்றுகையிட்ட போதும் ஸ்ரீதரனும், சாணக்கியனும், சுமந்திரனும், செல்வராஜா கஜேந்திரனும், வந்து எமது மண்ணை துண்டாடுவதற்கு முற்பட்ட னர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஆட்சிக்கு வந்தபோது தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை அவருக்கு அளித்ததினால் உரிமையோடு சென்று அவர்களின் தேவைகளை கேட்டார்கள். கிழக்கு முஸ்லிம்கள் உங்களுக்கு எதிராக வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள் என்று கூறி நீங்கள் கல்முனை நகரத்தை துண்டாடித்தாருங்கள் நாங்கள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் வாக்குகளை தருகிறோம் என்று கருணாவும், பிள்ளையானும், வியாலேந்திரனும், கூறிய போது இந்த மண்ணின் உரிமை மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிருந்தது. அந்த காலகட்டம் எனக்கு பெரும் சவாலான காலகட்டமாக இருந்தது. நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கின்றோம். அவர்கள் எல்லாம் ஆளுங்கட்சியில் இருக்கின்றார்கள். ஆனாலும் ஆளுங்கட்சியில் அதாஉல்லா, முஷாரப் போன்றவர்கள் செல்வாக்கற்ற வெறும் எம்.பிக்களாக மௌனமாக வாய்மூடி இருந்து கொண்டிருந்தார்கள். யார் இந்த பிரச்சினையை கோத்தா அரசுடன் பேசி முஸ்லிங்களின் நிலங்களை காப்பாற்றுவது என்று இருக்கின்ற போது. அந்த நேரத்தில் நாங்கள் அவர்களோடு பேசாவிட்டால் கல்முனை பறிபோய்விடும். பறி போனால் மீண்டும் கிடைக்காது என்ற நிலையை உணர்ந்து அவர்களுடன் பேச சென்றோம். எனவேதான் அந்த நேரத்தில் முஸ்லிம் சமூகத்தில் ஜனாஸா பிரச்சனை பெரும் பிரச்சினையாக இருந்தது. அந்த நேரத்தில் தான் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த கோட்டா ஒரு மிருகம் போன்று மனிதாபிமானமே இல்லாது ஜனாசாவை பற்ற வைத்தார். அந்த நிலையிலிருந்து முஸ்லிங்களை பாதுகாக்க பாராளுமன்றத்தில் மன்றாடினோம், வெள்ளைக்கொடி கட்டி போராடினோம். ஒன்றும் நடக்கவில்லை. 17 முஸ்லிம் நாடுகள் கடிதம் எழுதி கோட்டாவுக்கு அனுப்பியது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. ஜனாஸா பற்றி சாம்பலாகி கொண்டிருந்தது. எங்கள் இதயங்கள் துடிதுடித்து போய்க் கொண்டிருந்தது. எங்களால் முடிந்த முயற்சிகளை செய்து கொண்டே இருந்தோம். ஆனால் கோட்டாபய ராஜபக்ச கேட்கவில்லை. ஜனாஸா எரிப்பின் வலி அந்தந்த குடும்பங்களுக்கு மட்டுமே தெரியும். அம்பாறை மாவட்டத்தில் முதல் கொரோனா மரணம். ஒரு வைத்தியரின் தந்தையாகும். அந்த வைத்தியர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணிபுரிபவர். நான் ஒரு வைத்தியர் ஆனாலும் என்னுடைய தந்தையின் ஜனாஸாவை இன்னும் 3 நாட்களில் பற்ற வைக்க போகிறார்கள் என்று அழுது வடித்தார். மர்ஹூம் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்தவர்கள் இதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. கொடுங்கோல் ஆட்சி செய்த கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷையுடன் நாங்கள் மீண்டும் போய் பேசினோம். இதற்கு பரிகாரமாக இருபதுக்கு கை உயர்த்துச் சொன்னார்கள். எங்களின் தலைகளை அடமானம் வைத்து சமூக விடுதலைக்கான தீர்மானத்தை எடுத்தோம். எனவே இப்படி இருக்கும் சூழ்நிலையில் பெரிய தம்பி முதலாளியின் மகனுக்கு கோடிக்கணக்கில் காசு கொட்டுகிறது என்று சமூக வலைத்தளங்களில் எழுதினார்கள். 50/100 இளைஞர்களை தூண்டிவிட்டு எனது காரியாலயத்திற்கு கல்லெறிய வைத்தார்கள். இங்கு நகரம் பறிபோகின்றது, அங்கு மையத்து தீயில் வேகுகிறது, கோட்டாவின் முடிவு வரவில்லை. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். இறைவனுக்கு தெரியும் நாங்கள் 20க்கு வாக்களிக்க அவரிடம் காசி வாங்கினோமா? அல்லது அவரிடம் சென்று தேநீர் குடித்துக் கொண்டிருந்தோமா? என்று. நாகூர் ஆண்டகை தர்கா இந்த பள்ளிவாசல் மீது. அல்லாஹ் மீது சத்தியமிட்டு சொல்கின்றோம். பசில் ராஜபக்சவுடன் பேசுகின்ற போது ஒரு வெறும் துண்டு பீட்சா உடன் தேயிலை குடித்துவிட்டு தான் நாங்கள் தீர்மானம் எடுத்தோம். எனது அரசியல் வாழ்க்கையில் என் மண்ணுக்காகவும் இந்த சமூகத்துக்காகவும் நான் பல தியாகங்களை செய்துள்ளேன். இதை இறைவனும், மக்களும் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள் அதனால் தான் நான் நான்கு முறை மக்களின் அமோக வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்றுள்ளேன். இறைவன் உள்ளத்தையும், எண்ணத்தையும் அறிந்தவன் அதனால் தான் நாங்கள் சமூக விடுதலைக்காக போராடிய போது இறைவன் எங்களை ஒருபோதும் கைவிடவில்லை – என்றார். https://www.supeedsam.com/202337/?fbclid=IwY2xjawEbiMBleHRuA2FlbQIxMQABHUqWvg2KPp7OGHUmco23EGuCpVcS_0b7JHTFyCxOA2nvx5lcIZmmKZ3svA_aem_ENSmRDglNwHjL0tmM7NQHg#google_vignette
-
ஊழலை எதிர்த்ததால் பைத்தியமாக்கி அங்கொடைக்கு அனுப்பினார்கள் சோகத்தின் உச்சம் - வைத்தியர் நாகானந்தன்
ஊழலை எதிர்த்ததால் பைத்தியமாக்கி அங்கொடைக்கு அனுப்பினார்கள் சோகத்தின் உச்சம் - வைத்தியர் நாகானந்தன்
-
மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்துக்கு தமுகூ அரசியல் குழு அங்கீகாரம்
மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்துக்கு தமுகூ அரசியல் குழு அங்கீகாரம் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்ய பட உள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்க பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை ஐந்து திருத்தங்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு ஏக மனதாக ஏற்றுக் கொண்டு உள்ளது என கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் கூறி உள்ளதாவது; சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கம் உருவாகின்ற போது, நிறைவேற்ற பட வேண்டிய வேலைத்திட்டங்களில் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷை கோரிக்கைகள் அடங்கிய ஆவணம், கொழும்பில் கூடிய கூட்டணி அரசியல் குழுவினால் தீவிரமாக ஆராய பட்டது. சமர்பிக்க பட்ட ஆவணம், மேலதிக சில விடயங்கள் சேர்க்கைகளாக சேர்க்க பட்டும், சில திருத்தங்களுடனும் அரசியல் குழுவால் ஏக மனதாக ஏற்று கொள்ள பட்டது. அதன்படி, கல்வி, தொழில் பயிற்சி, இளைஞர் முன்னேற்றம், சுகாதாரம், போஷாக்கு, வாழ்வாதார காணி, தொழில் வாய்ப்பு, வீடமைப்பு காணி, கொழும்பு உட்பட மாநகரங்களில் குடிபெயர்ந்து வாழ்வோருக்கு கல்வி-வீட்டு வசதி, அரச பொது நிர்வாக கட்டமைப்புக்குள் மலையகம், ஆட்சி உரிமையில் பங்கு ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு விடயங்களை அடக்கிய ஆவணம், ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையாக கையெழுத்தாகவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=191013
-
தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்!
தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்! தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். நேற்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஒருவர் தான் அனுபவம் உள்ள அரசியல்வாதி எனவும் ஆனால் இங்கு வரும் அரசியல்வாதிகள் அனைவரும் தமிழர்களுக்கு அதை செய்வோம், இதை செய்வோம் என சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களுக்கு எந்த உரிமையை வழங்கப்போகிறார்கள் எனவும் எந்த அதிகாரங்களை வழங்க போகிறார்கள் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் தௌிவாக இருந்தால் தான் தமிழர்களின் வாக்குகளை வழங்க முடியும் என தௌிவாக தெரிவிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=191014
-
அதிசயக்குதிரை
அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி . வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி . அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு நிறைய முந்திரிப்பருப்பு . " தனியாவா இருக்கீங்க ? அதான் பிள்ளை அமெரிக்கா கூட்டிட்டு போறானா?" " ஆமாம் கொஞ்ச நாளைக்குத்தான் . அப்புறம் திரும்பி வந்துடுவேன் " " நான் கொஞ்சம் முந்திரி பருப்பு சாப்பிடலாமா ?" "தாராளமா எடுத்துக்கோங்க என் பிள்ளை அமெரிக்காலேருந்து அனுப்பியது " போலீஸ்காரர் கொஞ்சம் தாராளமாகவே எடுத்து சாப்பிட்டார் . "உங்களுக்கு முந்திரி பிடிக்காதா அம்மா "? . . . . . . " ரொம்ப பிடிக்கும் ஆனா கடிக்க முடியாது. அதைச் சுத்தி இருக்கற சாக்கலேட்டை மட்டும் சப்பி சாப்டுட்டு முந்திரியை அப்படியே வச்சுடுவேன் "
-
விருப்பு வாக்கை அளிப்பது பொது வேட்பாளர் நிலைப்பாட்டையே தகர்க்கும்
விருப்பு வாக்கை அளிப்பது பொது வேட்பாளர் நிலைப்பாட்டையே தகர்க்கும் | பத்திரிகையாளர் அ. நிக்ஸன்
-
தமிழ்நாட்டில் இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் எத்தனை பேர்? - புதிய அறிக்கை கூறும் தகவல்
முஸ்லிம்கள் உருது மொழி தான் பேசுகிறார்கள்.(வீட்டில்) தமிழும் அவர்களுக்கு தெரியும். ஆந்திராவிலும் முஸ்லிம்கள் உருது தான் பேசுகிறார்கள். தெலுங்கும் அவர்கள் பேசுவார்கள். இது ஓட்டு மொத்த முஸ்லிம்களுமா என தெரியவில்லை.
-
தமிழ் பொது வேட்பாளர் யார்? சசிகலா ரவிராஜ் அல்லது நீதிபதி. ம. இளஞ்செழியன்?
தமிழ் பொது வேட்பாளர் யார்? சசிகலா ரவிராஜ் அல்லது நீதிபதி. ம. இளஞ்செழியன்? | இரா மயூதரன்
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
ஆச்சரியம் அளிக்கிறது. கிழக்கு மேற்காக ஜேர்மன் இருந்த போது பதங்கங்களை இரு நாடுகளும் போட்டி போட்டு அள்ளுவார்கள்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
கடந்த 70 வருடங்களாக இஸ்ரேல் பலஸ்தீன மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்தது கமாஸ் , PLO போன்றவர்கள் தான் வேண்டாம் என்று சொல்லி உள்ளார்கள்.🙂 பலஸ்தீனியர்கள் ஒரு போராடும் குழு. கியூபா ஒரு காலத்தில் போராடிய நாடு என்ற வகையில் கியூபாவை இழுத்தேன். உப்பிடி பார்த்தால் ஒரு பில்லியன் முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக அல்லவா இருக்க வேண்டும்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
அவரது பிள்ளைகள் சகோதர்கள் பலர் அண்மையில் இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்குள் உள்ள பணய கைதிகளையும் காப்பாற்ற முடியவில்லை.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஆனாப்பட்ட கியூபாவே எங்களுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என நினைக்கிறீர்கள்? கிஸ்புல்லாவை வைத்து செய்ய வேண்டியதை செய்வார்கள். நாங்கள் மொக்குதனமாக முஸ்லிம்களை அடித்துவிரட்ட சிறிலங்கா அரசு முஸ்லிம் நாடுகளில் புலிகள் முஸ்லிம்களை அடித்து கலைக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தின் பலாபலன் தான் அது.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள் பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள். அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? பாலசிங்கம் எங்கை இருந்தவர்?
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஆழ்ந்த அனுதாபங்கள், இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகளின் அழிவு நெருங்கிக்கொண்டு இருக்கிறது.
-
கறுப்பு ஜூலை – நாற்பத்தொரு வருடங்கள் கடந்தும் ஆறாத வடு
- ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுவீச்சில் உயிர் தப்பியவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்?
அணுக்குண்டால் பாதிக்கப்பட்ட யப்பான் அணுகுண்டுகளை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார தடை விதித்தால் நியாயமானது. அறமும் கூட. அணுகுண்டு வீசி யப்பானிய மக்களை கொன்று குவித்த அமெரிக்கா அணுகுண்டு வைத்திருக்கும் , செய்து கொண்டிருக்கும் நாடுகளுக்கு பொருளாதார தடையை விதிப்பது எவ்விதத்தில் நியாயம். ? ஒரு வேளை தம்மீது போட்டு விடுவார்கள் என்ற பய பீதியாக இருக்கலாம்.- பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
ரனில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். எங்கும் தாவலாம் என்ற முடிவோடோ தெரியவில்லை. அல்லது ஒருவரும் சேர்க்கவில்லையா???- மோதியின் யுக்ரேன் பயணம் குறித்த ஊகங்கள்- ரஷ்ய ஊடகங்களில் ஏன் இவ்வளவு விவாதம் நடக்கிறது?
துருக்கி தனது எண்ணை Hub தயார் என்று கூறியுள்ளது. அதன் கருத்து ரஸ்ய எண்ணையை வாங்கி ஐரோப்பாவுக்கு விற்பது தானே. அப்போ ரஸ்யாவின் பொருளாதார தடை என்பது?????- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
25 பேர் ரஸ்யா/ பெலரூசில் இருந்து போட்டிகளில் பங்கு பற்றுகிறார்கள் நாட்டுக்கொடி இல்லாமல்.- கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
பொது கழிப்பறைகள் பொதுவாக கடற்கரை, பூங்காக்களில் உண்டு. அதை தேடி போக வேண்டும். இந்தியர்களுக்கு இது சரிவராது. “ நடு வீட்டில்” என்றொரு பழமொழி தெரியும் தானே அண்ணை.😂- கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
கடற்கரையில் குடில்(மூடிய) போன்றவற்றை அமைப்பதை தடுக்கும் சட்டம் விரைவில் வரவுள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது.- வெனிசுவேலா ஜனாதிபதி தேர்தல் - நிக்கொலஸ் மதுரோ வெற்றி
ஆகா, சிலரின் எண்ணை கனவு பலிக்கவில்லை. - ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுவீச்சில் உயிர் தப்பியவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.