Everything posted by nunavilan
-
ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவது ஏன்?
ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவது ஏன்? இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களை கட்டியுள்ளது. இதில், சுயேச்சை வேட்பாளர்கள் அல்லது பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளர்கள் பலர் களம் காண்கின்றனர். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 40 ஆண்டுளாக தாம் பிரதிநிதித்துவப்படுத்திய யானை சின்னத்தை கைவிட்டு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இலங்கையின் பழமையான, பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடாமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது ஏன்? அது அவருக்கு பலன் தருமா? ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள போதிலும் உண்மையில் அவர் சுயேச்சை வேட்பாளர் அல்ல என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். "ரணில் உண்மையில் சுயேச்சை வேட்பாளர் அல்ல. அவரைச் சுற்றி பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் அந்த கட்சிகள் அனைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்ட பலவீனமான கட்சிகள்." என்கிறார் அவர். ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக நிற்பது அவருக்கு சாதகமாக இருப்பதாகத் தோன்றினாலும் அதில் உண்மையில்லை என கலாநிதி தயான் ஜயதிலக்க கூறினார். ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பாக பேராசிரியர் ஜயதேவ உயங்கொடவுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவது, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி எங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதால் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்து, இதை அவரே ஒப்புக்கொண்டதாக நான் பார்க்கிறேன். சுயேச்சையாகப் போட்டியிடுவதன் மூலம் அவர் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறுவார் என்று எதிர்பார்க்க முடியாது" என்றார். ஆனால், ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பதிலாக சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது மிகவும் சாதகமானது என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டதன் காரணமாக ரணில் விக்ரமசிங்க பல கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக பிபிசி சிங்களத்திடம் அவர் தெரிவித்துள்ளார். "கடந்த இரண்டு ஆண்டுகளில் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காக என்ன செய்தார் என்பது மக்களுக்கு தெரியும். அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சார்பாக போட்டியிடாமல் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெறும் நோக்கில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்." என்றார் அவர். அதன்படி, அதிபர் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக இருக்கலாமா அல்லது கூட்டணியுடன் இருக்கலாமா என்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதித் தலைவர் தெரிவித்தார். பேராசிரியர் ஜயதேவ உயங்கொட குறிப்பிட்டது போல், அண்மைக்காலத்தில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்த பிரதான அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். அதன் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பெரும்பான்மையானவர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறி சமகி ஜன பலவேகய என்ற புதிய கட்சியை உருவாக்கினர். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை மட்டுமே வென்றது. ரணில் விக்ரமசிங்க அந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரானார். கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து எழுந்த எதிர்ப்பையடுத்து, கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுக்க நேரிட்டது. அவருக்குப் பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் ஒரு இடத்தைப் பெற்ற ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் 8 வது ஜனாதிபதியாக பதவியேற்றார். எதிர்பாராத விதமாக ரனில் விக்கிரமசிங்க முதல் முறையாக இலங்கையின் ஜனாதிபதியானார். சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் 2001ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன்மூலம், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார். இலங்கையில் அப்போது பிரதமருக்கு அதிக அதிகாரம் இருந்தது. அந்த காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை ரணில் கைப்பற்றியிருந்தார். இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நார்வே தலையீட்டில் சமாதான பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்த போர் நிறுத்தம் காணப்பட்ட காலப் பகுதியிலேயே 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டிய நிலையில், 2006ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்து, போர் மீண்டும் ஆரம்பமானது. 2005ம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என வடக்கு, கிழக்கு மாகாண மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது. இதனால், அந்த மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிப்பதை பெருமளவு புறக்கணித்திருந்தனர். அந்த தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் வாக்களிக்காமையே, ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கு காரணம் என கருதப்பட்டது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இன்றும் இருக்கின்ற நிலையில், 2005ம் ஆண்டு விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிவிப்பு 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தாக்கம் செலுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான பாரதி ராஜநாயகம், ''இந்த காலக் கட்டத்திலும் அவ்வாறான கருத்து சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட முன்வைக்கின்றது. எனினும், ஜனாதிபதி தெரிவில் தமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என தமிழர்கள் எண்ணுகின்றார்கள். இந்த நிலையில், தேர்தல் புறக்கணிப்பு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அது எந்தளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லமுடியாது" என தெரிவித்தார். (பிபிசி தமிழ்) https://tamil.adaderana.lk/news.php?nid=191967
-
ரணில் தண்டிக்கப்படலாம் - எம்.ஏ சுமந்திரன்
ரணில் தண்டிக்கப்படலாம் - எம்.ஏ சுமந்திரன் | Sooriyan FM |
-
அதிக மாத வருமானம் பெறும் வேட்பாளா்களின் விபரம் வெளியானது!
எட்டாம் இடம் - ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமாரதிஸாநாயக்க (13 லட்சம் டொலர்
-
அதிக மாத வருமானம் பெறும் வேட்பாளா்களின் விபரம் வெளியானது!
முதல் பத்து பணக்காரர்களில் அநுரவும் ஒருவர் என வாசித்த நினைவு.
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
அநுர முதலிடத்தில் இருந்து எப்படி கீழிறங்கினார்?? கடைசியில் இருந்த ரனில் எப்படி மேலேறினார்? அரியநேந்திரன் ஏன் வாக்களிப்பில் இருந்து தவிர்க்கப்பட்டார்?
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ரனினில் நீண்ட கால அரசியலில் தமிழருக்கு செய்த நன்மைகள் எவை என்று யாராவது சொல்ல முடியுமா? சிங்கள மக்களிடன் சேர்த்து சாம்பார் ஆக்காமல் தனித்து தமிழருக்கு செய்த நன்மைகள் எவை?
-
385வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை மாநகரம்
சிங்கார சென்னைக்கு வாழ்த்துக்கள்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
ஒபாமாவின் கமலாவுக்கான ஆதரவு பேச்சை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தனவா?
-
ரஷ்யா பெரும் தாக்குதலுக்கு தயாராகும் வேளையில் யுக்ரேன் செல்வதா? மோதியை எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
அமெரிக்காவின் அழுத்தமாக கூட இருக்கலாம். போலந்திடம் பல வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்து இடுவதே முக்கிய நோக்கம் என நினைக்கிறேன். மலசல கூடங்கள் இம்முறையாவது கட்டுவாரா மோதி என அமெரிக்காவும் ரஸ்யாவும் உற்று நோக்குகின்றனர்.🙂
-
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவைத் தொிவித்த சிறீதரன்!
சுமந்திரனின் கட்சிக்கு என்ன பெயர்?
-
‘நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள்’: எம்.ஏ.சுமந்திரன் கருத்து
ரனிலுக்கு ஆதரவளிப்பீர்கள் என நினைக்கிறேன்.
-
இலங்கை போவதற்கு 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
விசா சாதரணமாக இணையம் மூலம் எடுத்துக்கொண்டு போகலாம். கடந்த வாரங்களில் இணையம் இயங்காததால் அங்கு சென்றே விசா எடுக்க வேண்டும்.
-
சௌதி இளவரசரின் எழுச்சி - அமெரிக்காவுக்கு இணங்காத, அச்சமற்ற செயல்களால் நாயகன் ஆனது எப்படி?
வழமை போல மேற்கின் சொல்லை கேட்காதது தான் முக்கிய காரணம். பங்களாதேசுக்கு நிகழ்ந்தது போல ஒரு நிகழ்வு நிகழலாம்.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
தமன் இப்படி கலக்கல் பாட்டுக்கள் போடுவதில் வல்லவர். இசை தெரிவு ஒன்றில் நடுவராகவும் உள்ளார்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- வட மாகாண வைத்தியசாலைகளுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர்
பி.எஸ். எஸ். எம் சாள்ஸ் எல்லாத்தையும் அழித்து விட்டு இனி முதலில் இருந்தாம்.😁- ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
விமர்சனத்துக்கு நன்றி ஐயா. பார்க்கலாம் படம் எப்படி என்று. நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை. மக்களே விளம்பரப்படுத்துவார்கள்.- ரணிலுக்கு வாக்களிக்காததே நெருக்கடிக்கு காரணம் – விஜயகலா!
ம் வேறை. அரசியல் புலியாக இருக்குறீர்கள். அவர் நாட்டை கட்டி எழுப்பியது போல் யாரும் பங்களாதேசை கட்டி எழுப்பவில்லை.சிறிலங்காவுக்கு கடல் வழங்கியதாவது நினைவில் உள்ளதா?- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் அறிவிப்பு
தன்னிடம் பணம் ஏதுமில்லை என காட்ட ஆட்டோவில் கூட்டத்துக்கு வந்தாராம்.🙂- நான் ஒரு செவித்திறன் குறைபாடுடைய பெண் என்பதில் பெருமையடைகிறேன் - தென்னாபிரிக்க அழகு ராணி
வாழ்த்துக்கள். வெற்றிகளை குவியுங்கள்.- தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயமே என்கிறார் சாணக்கியன்!
பொது வேட்பாளருக்கு ஆதரவில்லை. வாக்களிகாமல் விட ஆதரவில்லை. சுமந்கிரன் மேற் கூறிய சிலருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இதில் யாருக்காவது ( ரனில் தான்) வாக்களிக்க சொல்வீர்கள். ஏன் என மக்களுக்கு கூறுங்கள். 39 பேர் பிரிக்காத வாக்குகளையா தமிழ் ஜனாதிபதி உறுப்பினர் பிரிக்க போகிறார். மலையக க்திலும் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக ஒரு தமிழர் போட்டியிடுகிறார். அவர் தமிழரின் வாக்குகளை பிரிக்க மாட்டாரா? அவரை பற்றி ஒரு கருத்தும் சாணக்கியன் வைக்கவில்லை. சுரேஸ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் சரி. மாவையரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். எப்படி கட்சிக்குள் இப்போதும் உள்ளார்? நேற்று சக்தி தொலைக்காட்சியில் இவருக்கு 50 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது பற்றி சந்தேகம் எழுப்பி இருந்தார். இன்று அவரின் சொத்துக்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். ( கோவிந்தன் கருணாகரன்)- வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா
இறுதி போரில் சீனாவில் பொன்சேகா நின்றதாக அறிந்தேன்.- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
ஜனாதியாகவே வரமாட்டார். எப்படி இந்த உறுதி மொழிகளை அளித்திருக்க முடியும்??- நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔
இன்று ஒரு கூட்டத்தில் போதைப்பொருள் சிறுவர்கள் பாவிப்பது பற்றியும் அரசியல் வாதிகள், பொலிஸ், பாதாளக்குழு சம்பந்தப்பட்டதையும் சுட்டிக்காட்டி இவற்றை இல்லாமல் செய்வது இலகுவான காரியம் இல்லை என்றும் அதனை இல்லாமல் செய்ய ஜே விபி அர்ப்பணிப்புடன் செயற்படும் என உறுதி அளித்துள்ளார்.- ஜெர்மனியை குறி வைக்கிறதா ரஷ்யா? ஐரோப்பாவில் மீண்டும் பனிப்போர் சூழல்
எரி வாயு தடைப்பட்டதால் நட்டம் ஜேர்மனிக்கு. லாபம் அமெரிக்காவுக்கு. அமெரிக்கா உள்ள வரை சிலுவை யுத்தங்கள் தவிர்க்க முடியாதது. - வட மாகாண வைத்தியசாலைகளுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.