Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. வெடுக்குநாறி விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகள் தீர்மானம் ! வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில், நாளை மறுதினம் கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தவுள்ளதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/296040
  2. இருட்டறையில் இருந்து 20 சிறுமிகள் மீட்பு! வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக பெங்களூரில் அனாதை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரு சம்பிகேஹள்ளியில் செயல்பட்டு வரும், அனாதை இல்லத்தில் ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கங்கூனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் சம்பிகேஹள்ளி அனாதை இல்லத்தில், பிரியங்க் கங்கூன் தலைமையில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர். இதற்கு அனாதை இல்லத்தின் உரிமையாளர் சமீர், உதவியாளர் சல்மா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு வந்த ஒரு கும்பல், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பிகேஹள்ளி பொலிஸார் அங்கு சென்று, தகராறு செய்த கும்பலை விரட்டி அடித்தனர். பின்னர் அனாதை இல்லத்தில் சோதனை நடத்தியபோது, இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறுமியர் மீட்கப்பட்டனர். இந்த அனாதை இல்லம் பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு இலவசமாக அடைக்கலம் தருவதாக கூறிய சிறுமிகளை சேர்த்துள்ளது. ஆனால் அனாதை இல்லத்தில் சேர்ந்த சிறிது நாட்களுக்கு, பள்ளிக்கு சரியாக அனுப்பினர். அதன் பின்னர் பள்ளிக்கு அனுப்புவது இல்லை. இருட்டு அறையில் அடைத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்த அந்த சிறுமிகள், எங்களை வளைகுடா நாடுகளுக்கு கடத்த முயற்சி நடக்கிறது என கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த இல்லத்தின் நிர்வாகி சமீர், உதவியாளர் சல்மா உட்பட 20 பேர் மீது, சம்பிகேஹள்ளி பொலிஸில், பிரியங்க் கங்கூன் முறைப்பாடு அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 20 சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185235
  3. ஐ.பி.எல் தொடர் துபாய்க்கு மாற்றம்? 17 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது. வருகிற 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியாகி இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22 ஆம் திகதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 7 ஆம் திகதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. பாராளுமன்ற தேர்தல் திகதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது. இதனால் 2 ஆவது கட்ட ஐ.பி.எல். அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2 ஆவது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் சில நிர்வாகிகள் துபாய் சென்றுள்ளனர். 2 ஆவது கட்ட போட்டிகளை இந்தியாவில் இருந்து துபாய்க்கு மாற்றலாமா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிலும், 2014 இல் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஐ.பி.எல். முழுமையாகவும் 2021 இல் 2 ஆவது கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடைபெற்றது. https://tamil.adaderana.lk/news.php?nid=185234
  4. அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு! அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு இன்று (16) எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இன்று மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திசாநாயக்க கிளிநொச்சி சென்றிருந்த நிலையில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து A9 வீதியில் இவ்வாறு அவர் பதாதைகளை கட்டி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -கிளிநொச்சி நிருபர் சப்தன் https://tamil.adaderana.lk/news.php?nid=185232
  5. கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது அனைவருக்கும் பேரிழப்பாகும். Posted By: adminon: March 13, 2024In: இலங்கை, கனடா Print Email குரு அரவிந்தன். கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு பதவியையும் பெற்றுத் தந்தார். அதன் பின்தான் வரவேற்புரையோ அல்லது நன்றியுரையோ மேடையில் ஏறிச் சொல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. சாவகச்சேரி நுணாவில் மேற்கில் விநாயகர் – சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக 28.10.1933 ல் பிறந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் கனடாவில் தனது பவழவிழாவைக் கொண்டாடியிருந்தார். திருமண பந்தத்தின் காரணமாக குரும்பசிட்டியைப் புகுந்த வீடாக்கிக் கொண்டார். இலங்கையில் ஆசிரியராகவும், அருனோதயாகல்லூரியில் அதிபராகவும் கடமையாற்றியவர். உயர் கல்வியை தமிழ்நாட்டில் பெற்ற இவர், இலங்கையில் நாடக கல்வி சார்ந்த டிப்புளோமா பட்டமும் பெற்றிருந்தார். 1988 ஆம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வரும் இவர் நாடகம், கவிதை, சிறுகதை, சமயம் நிகழ்ச்சிகள் என்று எமது இனத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்பணித்தவர். இவருக்கு கவிமணி, மதுரகவி, இலக்கியவித்தகர், திருவருட்கவி, சைவதுரந்தரர், சிவநெறிப்பாவலர் போன்ற பல பட்டங்களைச் சமூக நிறுவனங்கள் கொடுத்திருக்கின்றன. இன்று பல நிகழ்ச்சிகளில் தமிழில் இசைக்கப்படும் கனேடிய தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது. https://uthayannews.ca/2024/03/13/கவிஞர்-வி-கந்தவனம்-எம்மை/
  6. அமெரிக்காவின் மிதக்கும் துறைமுகம் மூலம் நிவாரண உதவிகள் மக்களுக்கு கிடைக்குமா?
  7. கவிஞர் வி. கந்தவனம் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் மார்ச் 11-ஆம் நாள் திங்கட்கிழமை ரொறன்ரோவில் காலமானார். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவர்தம் துயரிலும் தாய்வீடு பங்குகொள்கிறது. அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
  8. 30 வருடமாக போராடிய மக்கள் தேர்ந்தெடுத்தவர்கள் தானே இவர்கள்?????
  9. உச்சநீதிமன்றத்தில் விவசாயி சின்னம் வழக்கிற்காக நடத்தப்பட்ட திராவிட சதி பிரஸ்மீட்!
  10. ஆயுதம் இல்லாமல் கை கடிக்கும் நேரத்தில் ரனிலை சந்திக்க முடியும். 🙃மக்ரோனின் "இதோ வருகிறோம் என்பது "புட்டினின் நேர்காணலில் தயார் நிலை பற்றி சொல்லி உள்ளார். ஆபிரிக்க நாடுகளின் எதிர்ப்பு புட்டினினின் பின்னணியில் நடைபெற்றதும் ( மாலி உதாரணமாக) மக்ரோனை கடுப்பாகி உள்ளதை விளங்கி கொள்ள முடிகிறது. ஆனால் இரண்டு அணுசக்தி நாடுகள் மோத நினைப்பது மில்லியன் காசா ஆகி விடும் என்பதே உலக மக்களின் அச்சம்.
  11. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென்றாற் போகா
  12. பல பல்கலைகழக விரிவுரையாளர்களின் செவ்வி கேட் க முடிந்தது. உரிய தலைப்புக்கு ஏற்ப விடைகள் பாண்டித்தியம் பெற்றதாக உணர முடிந்தது. இந்தியர்களுடன் ஒப்பிட்டு இப்படி ஒரு பதிலை தருகிறாரா என சந்தேகம் உள்ளது. ஏனையவர்களின் விமர்சனத்தை நேர்முகமாக எடுத்துக்கொண்டு நகர்வோம். பல பத்தாண்டுகள் போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் கூட எதிர்பார்க்கிறாரோ தெரியவில்லை.
  13. ஒவ்வொரு ஆசிரியரையும் எப்படி இவருக்கு தெரியும். ஒரு சிலரை வைத்து இப்படி ஒரு statement ஐ விட முடியுமா?
  14. கேட்ட கேள்விக்கு பதில் வராமல் சுற்றி வளைத்து பதில் சொல்வதை பார்த்திருப்பீர்கள். சொந்த மக்களுக்கே (சிங்கள) இந்த நிலைமை எனில் நாம் எம்மாத்திரம்.
  15. இந்திய மீனவர்களை கண்காணிக்க வந்துள்ளதாம்.😉 ஏதோ அவர்களால் முடிந்தது.
  16. வரலட்சுமிக்கு உளவுத்துறை கேள்விகள் கேட் க வருமாறு கடிதம் அனுப்பி உள்ளதாம். தலைமறைவாகிய ஆதிலிங்கம் வரலட்சுமிக்கு கிழ் வேலை செய்தவராம். புள்ளிகளை இணைத்து பார்க்கவும்.
  17. மேற்குக்கு வந்த எம்மவர்களும் பால் மாவை பாவிக்கிறார்கள். எமது வியாபாரிகளால் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
  18. தமிழ் நாட்டில் மட்டும் மோதி ஜி காலில் விழுவது ஏன்? இம்முறையும் மண்ணை கவ்வுவோம் என்பதாலா?
  19. பாடல்: கட்சி சேர இசையமைத்து பாடியவர்: சாய் அபாயங்கர் வரிகள்: அடேஸ் கிருஸ்ணா எண்ணமே ஏன் உன்னால உள்ள புகுந்தது தன்னால கண்ணமே என் கண்ணால வேந்து செவந்து புண்ணாக ஏதோ நானும் உளற கொஞ்சம் காதல் வளர உள்ள வெட்கம் வளர அவ வந்தா தேடியே தன்ன நேரம் நிக்குது மோகம் சொக்குது வார்த்தை திக்குதம்மா நெஞ்சில் பூட்டி வெச்சத வந்து ஒடைச்சிட்டம்மா கட்சி சேர நிக்குது கண் அழைக்குது பொன் அடைந்திட வா அன்பு தேங்கி நிக்குது வந்து எடுத்துக்கோமா யாரும் பார்த்து நின்னு பேசவில்ல காத்து நின்னு கொடுத்ததில்ல நீயும் வந்து பார்த்ததால பனியும் பத்திக்கிச்சே கண் மறச்சு போற புள்ள முன் அழைச்சதும் யாருமில்ல உன் மனசில்தான் விழுந்தேன் நானும் தங்கிடவே ஹெய் எண்ணமே ஏன் உன்னால உள்ள புகுந்தது தன்னால கண்ணமே என் கண்ணால வேந்து செவந்து புண்ணாக ஏதோ நானும் உளற கொஞ்சம் காதல் வளர உள்ள வெட்கம் வளர அவ வந்தா தேடியே தன்ன நேரம் நிக்குது மோகம் சொக்குது வார்த்தை திக்குதம்மா நெஞ்சில் பூட்டி வெச்சத வந்து ஒடைச்சிட்டம்மா கட்சி சேர நிக்குது கண் அழைக்குது பொன் அடைந்திட வா அன்பு தேங்கி நிக்குது வந்து எடுத்துக்கோமா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.