Everything posted by கிருபன்
-
ராணுவ ரகசியம்
எனக்கு டக்கென்று தெரிந்துவிட்டது! நான் முதன்முதலாக இங்கிலீஷ் ட்ரான்ஸ்லேஷன் செய்தது இந்திய இராணுவத்துக்குத்தான்! பள்ளிக்கூட யுனிபோர்மில் (வெள்ளை சேர்ட், நீலக் காற்சட்டை) சைக்கிளில் போன என்னை மறிச்சு அவர்கள் பிடித்து வைத்திருந்த ஒருவரிடம் ஒரு வேலையை விளக்கச் சொன்னார்கள். பெரிதாக ஒன்றுமில்லை. பனையோலைகளை வெட்டித் தரவேண்டுமென்று கேட்டார்கள். மிரண்டுபோய் இருந்தவர் ஆசுவாசப்பட்டு அதற்கு பெரிய கத்தி வேண்டும்; தான் வீட்டுக்குப் போய் எடுத்து வருகின்றேன் என்றார். இந்தியன் ஆமி அவ்வளவு மொக்கர் இல்லை. ஆள் கழண்டுவிடுவார் என்று என்னையே கத்தியை அவரின் வீட்டில்போய் எடுத்துவரச் சொன்னார்கள். அந்தத் தொட்டாட்டு வேலையும் மொழிபெய்ர்ப்பு வேலையையும் செய்தேன். 😀
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (05 மார்ச்) இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், தென்னாபிரிக்கா அணி (குழு B முதல் இடம்) எதிர் நியூஸிலாந்து அணி (குழு A இரண்டாவது இடம்) 07 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒரே ஒருவர் மாத்திரம் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக்கணித்துள்ளார். போட்டியில் இல்லாத வேறு அணிகளைக் கணித்த 16 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! நாளைய அரையிறுதிப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி வீரர்கள் தொடர்ந்து நிலைத்து ஆடமுடியாததால் 49.3 ஓவர்களில் 264 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி சாதாரணமான இலக்கை விராட் கோலியின் 84 ஓட்டங்களுடனும், கேஎல் ராகுலின் அதிரடியான 42 ஓட்டங்களுடனும் 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்களை எடுத்து எட்டியது. முடிவு: இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்த 17 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. முதலாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @Eppothum Thamizhan மீண்டும் முதல்வராகியுள்ளார்! நிலைத்து நிற்பாரா?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
IND 225/5 42.4 overs Kohli is out!
-
அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா? - கருணாகரன்
அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா? March 1, 2025 — கருணாகரன் — அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியில் சமூக, அரசியல் மட்டத்திலும் பொருளாதார வட்டாரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. “இது ஒரு மாறுதலான வரவு செலவுதிட்டம். மக்கள் நலன், தேசியப் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை முன்னிலைப்படுத்தியதாக இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறது அரசாங்கம். அரசாங்கத்தை ஆதரிப்போரின் கருத்தும் இதுவே. ஆனால், “இதில் எந்தப் புதுமையும் இல்லை. ஐ.எம். எவ்யையும் ரணில் விக்கிரமசிங்கவையும் கடந்து எந்தப் புதுமையையும் காணமுடியவில்லை. ஐ.எம்.எவ் – ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டு வடிவத்தின் இன்னொரு பிரதிமையே இந்த வரவு செலவுத் திட்டம்” என்கின்றன எதிர்க்கட்சிகள். “வரவு செலவுதிட்டத்தில் வடக்கிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அரசாங்கம், கிழக்கிற்கு வழங்கத் தவறியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள். “வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி யாழ்ப்பாணத்துக்குள் மட்டும் செலவழிக்கப்படாமல், வன்னிக்கும் பகிரப்பட வேண்டும். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்கின்றனர் வன்னித் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் அமைப்பினரும். “தேசிய பொருளாதார வளர்ச்சியை எட்டுவதாக இருந்தால் அல்லது அதை நோக்கி முயற்சிப்பதாக இருந்தால் அதற்குரிய வகையில் தேசியப் பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதைச் செய்யாமல் இந்த மாதிரியான சிறு சீரமைப்பு முயற்சிகள், பொருளாதார வளர்ச்சி என்ற கற்பனையான உலகத்தையே உருவாக்கும். அது மக்களுக்கோ நாட்டுக்கோ பெரிய நன்மைகளைத் தராது” என்கிறார்கள் பொருளாதாரத் துறையினர். “ஒப்பீட்டளவில் முன்னேற்றமான பாதீடாக இருந்தாலும் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட செலவீனம் நாடு, பொருளாதாரத் துறையில் முன்னோக்கிச் செல்வதைப் பற்றிச் சீரியஸாகச் சிந்திக்கவில்லை என்பதைக்காட்டுகின்றது. இந்த அரசாங்கத்துக்கும் தடுமாற்றங்கள் உள்ளன என்பதைக் காட்டுகிறது” என்று கூறுகிறார்கள் இன்னொரு தரப்பினர். இப்படிப் பல விதமான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும் இந்தப் பாதீட்டு விவாதத்தின்போது நாம் சில விடயங்களைக் கவனப்படுத்த வேண்டும். வரவு செலவுத்திட்டத்தில் இப்போதே துண்டுவிழும் தொகையாக 2,200 பில்லியன் உள்ளது. எதிர்பார்க்கப்படும் வருமானத்தின் மதிப்பீடு, 4,990 பில்லியன் ரூபாய். செலவு 7,190 பில்லியன் ரூபாய். என்றால் வரவுக்கு மீறிய செலவே. ஆக வரவைக் கூட்டுவதைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். அதாவது அதற்கான ஏற்பாடுகளை. இதற்கு கிராமியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை 3 – 4 வீதமாக அதிகரிக்க முடியும் – வலுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம் 1400 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த அடிப்படையிலான எண்ணக் கருவைப் பகிரவும் திட்டமிடவும் மாவட்டச் செயலாளர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுடன் உரையாடலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதியோ அரசாங்கமோ எதிர்பார்க்கின்றபடி – நம்புகின்றபடி – இதில் எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்பது கேள்வியே! ஏனென்றால், கடந்த காலத்தில் அரச நிர்வாகம் மிகப் பலவீனமானமுறையிலேயே செயற்பட்டுள்ளது. மாவட்டச் செயலகங்களின் திட்டமிடலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பெருங்குறைபாடாகவே இருந்தது. குறைந்த பட்சம் தமது திட்டங்களின் பெறுபேறு என்ன? அவை உருவாக்கிய சமூக விளைவுகள் என்ன என்பதைக் கூட அவை திரும்பிப் பார்த்ததும் இல்லை. மதிப்பீடு செய்ததும் இல்லை. வேண்டுமானால், இதைக்குறித்து மாவட்டச் செயலாளர்களிடத்திலும் திட்டமிடற் பணிப்பாளர்களிடத்திலும் ஜனாதிபதி விளக்கம் கேட்கலாம். அப்படிக் கேட்டால் அதற்குக் கதை சொல்லக் கூடிய (கதை விடக்கூடிய) அளவுக்கு நிபுணத்துவத்திறனைக் கொண்டிருக்கிறார்கள் அத்தனை அதிகாரிகளும். பதிலாக குறைபாடுகளை நிவர்த்தி செய்வதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இதில் அபூர்வமாக ஒரு சிலர் விலக்காக இருக்கலாம். மற்றும்படி பலருடைய நிலை இதுதான். இதற்குக் காரணம், கடந்த ஆட்சிகளில் நடந்த தவறுகளும் பழக்கங்களும்தான். போதாக்குறைக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவித்திட்டங்கள். கருத்திட்டங்கள், பயிலரங்குகள், பயிற்சித்திட்டங்கள், உதவிகள், கலந்துரையாடல்கள், கள ஆய்வுகள் என்றெல்லாம் பெரும் செலவிலும் பெரும் எடுப்பிலும் மேற்கொள்ளப்பட்ட பல திட்டங்களும் பல நடவடிக்கைகளும் தோல்வியடைந்ததே வரலாறு. இதை மறுத்தால், ‘அவை எத்தகைய பெறுபேறுகளை உருவாக்கின?‘ என்ற புள்ளி விவரத்தைச் சான்றாதாரங்களுடன் எந்த மாவட்டச் செயலகமாவது வெளியிடத் தயாரா? எனவேதான் மாவட்டச் செயலக அதிகாரிகளை நம்பி அரசாங்கம் கிராமியப் பொருளாதார அபிவிருத்தியைப் பற்றிப் பேசுவது பொருத்தமானதல்ல. ஆனால், அவர்களைக் கொண்டுதான் இதைச் செயற்படுத்தவும் வேண்டும். அவர்கள் மாவட்டத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள். அவர்கள்தான் அரசின் நேரடிப் பணிப்புக்கும் செயலாக்கத்துக்கும் பொறுப்பானவர்கள். ஆகவே என்னதானிருந்தாலும் அவர்களுக்கூடாகத்தான் எதையும் செய்ய முடியும். அப்படியென்றால், அவர்களை குணமாற்றம் செய்ய வேண்டும். பொறிமுறைகளை முற்றாக மாற்றியமைக்க வேண்டும். திட்டமிடற் செயலகங்களின் மூளையையும் மனதையும் புதிதாக்க வேண்டும். முழுமொத்தமாக புத்தாக்கத்துக்குரிய வகையில் நிர்வாகத்தையும் அதை இயக்கும் தரப்பினரையும் மாற்றியமைக்க வேண்டும். இதனால்தான் முறைமை மாற்றம் (Systrm change) வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதை அரசாங்கமும் ஏற்றுள்ளது. ஆனால், அதைச் செய்வதற்குத் தயக்கம் காட்டப்படுகிறது? இது ஏன்? நாட்டுக்குத் தேவையாக இருப்பது அறுவைச் சிகிச்சையே. அதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள். என்பதால்தான் வழமைகளுக்கு மாறாக அவர்கள் NPP யை ஆதரித்தனர். அநுர குமார திசநாயக்கவை – விரும்பினர் – நம்பினர், நம்பிக் கொண்டிருக்கின்றனர். பதிலாக பழைய புண்ணுக்கு மேலே களிம்பைப் பூசுவதால் பயனில்லை. இதொன்றும் கடினமான விமர்சனமல்ல. அரசாங்கத்தை உற்சாகப்படுத்துவதற்கான சொற்களேயாகும். கடந்த ஆட்சிகளின்போது நடந்த தவறுகளைப் பட்டியலிடுவது, அதற்கான புள்ளிவிவரங்களை வெளிப்படுத்துவது எல்லாம் அரசியல் நடவடிக்கைகள். இவையெல்லாம் தேர்தல்கால நிகழ்ச்சிகளைப்போலவே உள்ளன. ஒரு சிறிய மாற்றம் என்றால், தேர்தல் மேடைகளுக்குப் பதிலாக பாராளுமன்றத்தில் அவை பட்டியற்படுத்தப்படுகின்றன – வெளிப்படுத்தப்படுகின்றன. ஆகவே அவை காற்றில் கரைந்து விடாமல் வரலாற்றில் இறக்கம் செய்யப்படுகின்றன. என்பதால் அடுத்த கட்டமாக அவை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளன என உணரலாம். இதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள். சட்டத்தின் முன் குற்றவாளிகள், தவறானவர்கள், நாட்டைக் கெடுத்தவர்கள் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு முன் அவர்களை நிர்வாணப்படுத்துவது நல்லதே. அதேவேளை வரவு செலவுத்திட்டத்தில் மக்களைக் குறித்து, உற்பத்திப் பொருளாதாரம் குறித்து மேலும் சிந்திக்கலாம். உதாரணமாக, அரசாங்கம் வாகனங்களுக்கான வரியை உச்சமாக்கியிருக்கிறது. இதில் ஒரு சிறிய நெகிழ்ச்சியை பொருளாதார வளர்ச்சி கருதி ஏற்படுத்த வேண்டும். விவசாயம்,மீன்பிடி மற்றும் கைத்தொழில் முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமைகாவி வாகனங்களுக்கும் உழவு மற்றும் அறுவடை, பதனிடல் அல்லது இறுதிசெய் இயந்திரங்களுக்கும் வரிக் குறைப்புச் செய்யப்படுவது அவசியமாகும். இங்கே வரி விலக்குக் கேட்கப்படவில்லை. வரிக்குறைப்பே கோரப்படுகிறது. அப்படி அமையும்போதுதான் உற்பத்திசார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அது உற்சாகத்தையும் சிரமக்குறைவையும் ஏற்படுத்தும். இதைப்போல எளிய மக்களின் போக்குவரத்துக்கு உதவும் முச்சக்கர வண்டிகள், 150 CC க்கு உட்பட்ட மோட்டார்ச் சைக்கிள்கள் போன்றவற்றுக்கும் வரிக்குறைப்புச் செய்ய வேண்டும். இவை நாளாதாந்த உழைப்பு, வருவாயீட்டல், பணிக்குச் செல்லுதல் போன்றவற்றுக்கு ஏற்புடையதாக இருக்கும். மட்டுமல்ல, இவையெல்லாம் சாதாரண மக்களுக்குரியவை. ஆகவே மக்கள் நலன் அரசு – ஆட்சி என்ற வகையில் இவ்வாறான விடயங்களைக் குறித்துப் பொருத்தமாகச் சிந்திப்பது அவசியமாகும். கூடவே இளையோருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது முக்கியமானது.அதற்கு முதலீடுகள் அவசியம். முதலீட்டாளர்கள் பலரும் அதைச் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர். உள்நாட்டிலும் உள்ளனர். புலம்பெயர்ந்தோரும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவர்கள் தங்களுடைய முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நடைமுறைப் பிரச்சினைகள், நிர்வாக இழுபறிகள், அரசியற் பேரங்கள் எல்லாம் தடையாக உள்ளன. இவற்றைச் சீராக்கம் செய்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உருவாக்கினால் புதிய தொழிற்துறைகள் பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக இதற்காக சிறப்பு அலகு ஒன்று (A special Unit) உருவாக்கப்படுவது கட்டாயமானது. முதலீட்டாளர் ஒருவர் அல்லது ஒரு கொம்பனி அதற்கான கோவையைச் சமர்ப்பித்தால், அதைப் பொறுப்பேற்று, பரிசீலித்தபின் தேவையான திணைக்களங்களோடு தொடர்பு கொண்டு உரிய அனுமதிகளை விரைவாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும் அந்தப் பிரிவு. இப்போதுள்ள நிலைமை அப்படியானதல்ல. ஏராளமான இழுபறிகள்,தாமதப்படுத்தல்கள், தட்டிக் கழிப்புகள் நிர்வாக ரீதியாக உள்ளது. இதை மாற்றியமைக்க வேண்டும். இப்படிப் பல விடயங்களில் அரசாங்கம் கவனத்தைச் செலுத்தும்போதுதான் பொருளாதார வளர்ச்சியும் மீட்சியும் ஏற்படும். அடுத்த ஆண்டுப் பாதீட்டுக்கு முன் அரசாங்கம் ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கையில் (Restructuring action) னில் ஈடுபட வேண்டும்.அது கட்டாயமானது. அரசாங்கத்திற்குள்ள பொறுப்புகள் அதிகம். கடந்த 75 ஆண்டு காலக் குப்பையை அகற்றுவதென்பது எளிதல்ல. ஆனாலும் அதைச் செய்வதாகவே அது தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளது. உறுதியின் முன்னே நிறுத்தியிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அதன் மீதே கட்டப்பட்டுள்ளது. கடந்த (ரணில்) அரசாங்கம் வரியிறுக்கம், தொழிலின்மை, புதிய வாய்ப்புகளைத் தேடுவதில் சிரத்தின்மை போன்றவற்றினால் அழுத்தங்களை உருவாக்கியது.இதனால் பலரும் நாட்டை விட்டு வெளியேறினர். அப்படி வெளியேறுவதையே ரணிலும் விரும்பினார். இது மிகப் பெரிய தவறாகும். ஒரு நாட்டின் வளங்களில் முக்கியமானது மனித வளம். அதிலும் உழைப்பாளர்கள், இளையோர், திறனாளர்கள், துறைசார் வல்லுனர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதும் வெளியேற்றப்படுவதும் மிகத் தவறானது. பாதகமானது. ஆனால், அதையே அன்றைய அரசாங்கம் ஊக்குவித்தது. கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒருவரை வளர்த்து, ஆளாக்கி, துறைசார் – தொழில்சார் வல்லுநராக உருவாக்கியபின் அவரை வெளியே விடுவதும் அவர் இன்னொரு நாட்டில் சென்று அந்த நாட்டுக்காக உழைப்பதும் எவ்வளவு இழப்பாகும். அதேவேளை எந்தச் செலவுமே இல்லாமல் பிற நாடுகள் அந்தத் திறனாளரை – உழைப்பாளரை தமக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதை புதிய அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும். இந்த நாட்டை விட்டுச் சென்றவர்களும் இந்த மண்ணுக்கு வரும் வகையில் ஆட்சியை – பொருளாதாரத்தை – வாழும் சூழலை மாற்ற வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படையானது பாதீடாகும். அந்தப் பாதீட்டை விவாதித்து, வளப்படுத்துவதே ஆயிரமாயிரம் வாசல்களைத் திறக்கும். ஆம், சரியான ஒரு பாதீடு, நாட்டின் நெருக்கடியைத் திறக்கும் சிறப்பானதொரு திறவு கோலாகும். அநுர குமாரவின் (NPP) யின் கைகளில் அந்தத் திறவுகோலை வரலாறு ஒப்படைத்துள்ளது. அந்தத் திறவுகோலை திறப்பதற்குப் பயன்படுத்துவதா இல்லை பூட்டுவதற்கு உபயோகிப்பதா என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.வரலாறு அந்தப் பொறுப்பை அவர்களுக்கு அளித்துள்ளது. வரலாற்றுக்கு அவர்கள், தமது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும். https://arangamnews.com/?p=11856
-
உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்திய ட்ரம்ப்!
உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியைஇடைநிறுத்தியது அமெரிக்கா -ரஸ்யா வரவேற்பு 04 Mar, 2025 | 03:59 PM உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை இடைநிறுத்தும் அமெரிக்காவின் தீர்மானத்தை வரவேற்றுள்ள ரஸ்யா தனது நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு உண்மை என்றால் இது உக்ரைன் அரசாங்கத்தை சமாதான முயற்சிகளை நோக்கி உண்மையாகவே திருப்பிவிடும் என கிரெம்ளின் பேச்சாளர் திமிட்ரிவ் பெஸ்கோ தெரிவித்துள்ளார். சமாதானத்திற்கான மிகச்சிறந்த பங்களிப்பு இதுவென அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திக்கொண்டால் உக்ரைனிற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் முயலக்கூடும் என தெரிவித்துள்ள கிரெம்ளின் பேச்சாளர் ஆனால் முக்கியமான அதிகளவான ஆயுதங்கள் அமெரிக்காவிடமிருந்தே கிடைக்கின்றன என தெரிவித்துள்ளது. ரஸ்யாவிற்கு எதிரான தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவகின்றது என வெளியான தகவல்களையும் மொஸ்கோ வரவேற்றுள்ளது https://www.virakesari.lk/article/208263
-
கூட்டமைப்பாக செயற்பட தமிழரசின் கதவுகள் திறந்தே உள்ளது
கூட்டமைப்பாக செயற்பட தமிழரசின் கதவுகள் திறந்தே உள்ளது Mar 4, 2025 - 10:49 AM - கூட்டமைப்பாக செயற்பட தமிழரசு கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது.. தமிழரசுக் கட்சியோடு ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய மூன்று கட்சிகளுமாக நான்கு கட்சிகள் இணைந்து கூட்டமைப்பாக செயற்பட்டு வந்திருந்தோம். ஆனால் கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் தனித் தனியாக போட்டியிட்டு கூட்டாக செயற்படுவதென தமிழரசுக் கட்சி தீர்மானித்தது. ஆனால் அதனை தவறாக சித்தரித்து தமிழரசு தனிவழி என்றவாறாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியிருந்தன. நாங்கள் கூட்டமைப்பை உடைக்க வேண்டுமென நினைக்கவில்லை. இப்போது கூட முன்னரைப் போல மீளவும் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து இயங்குதவற்கான அழைப்பையே விடுத்திருக்கிறோம். அந்த முயற்சியின் தொடராக கூட்டமைப்பில் இருந்த கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறேன். ஆனால் இக் கட்சிகளின் தலைவர்களை நான் சந்தித்த போது சாதகமாக பரிசீலிப்பதாக சொன்னவர்கள் மறுநாளே தாங்கள் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கின்றனர். இப்படி ஒரு திட்டம் அவர்களிடம் இருக்கிறது என்றால் அதனை நேரடியாகவே எங்களிடத்தே சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து ஏமாற்று வித்தை காட்டியமையே எமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் அவர்களிண் புதிய கூட்டணியை எதிர்க்கவில்லை. அது அவர்களது உரிமை. ஆனால் அவர்களின் செயற்பாடே எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை தான் நான் சொல்லி இருக்கிறேன். ஆனால் தாம் ஒரு கூட்டணியை அமைத்துள்ளதாகவும் எங்களது கட்சியின் மத்திய குழுவோடு பேசிவிட்டு வருமாறும் புளொட் தலைவர் சித்தார்த்தன் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது. நாங்கள் ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல. எம்மை யாரும் மலினப்படுத்தக் கூடாது. ஈழத் தமிழினத்திற்காக நாங்கள் மீளவும் கூட்டமைப்பா இயங்குவோம் வாருங்கள் என்றே இணக்கத்தின் இடிப்படையில் அழைப்பு விடுத்தோம். அதைவிடுத்து உங்களது கூட்டணியுடன் நாங்கள் வரப்போவதாக சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் மிகவும் அப்பாவித்தனமாக நாங்கள் இருந்துவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நாங்கள் இப்போதும் கூறுகிறோம் கூட்டமைப்பில் இருந்து செயற்பட்டவர்கள் மீளவும் கூட்டமைப்பிற்கு வருவதற்கான கதவுகள் திறந்தே உள்ளன. அவர்கள் வராவிட்டால் தமிழரசுக் கட்சி மீண்டும் தனி வழியில் போவது இயல்பானது. ஆனாலும் தமிழ்த் தலைமைகளைக் கொண்ட கட்சிகளுக்கே தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும். அதற்காக எங்களுக்கு பயம் என்றில்லை. தந்தை வழியில் வந்தவன் நான். தேசிய தலைவரின் கொள்கையில் நிற்கிறேன். எனக்கு பயம் கிடையாது. ஆனால் தமிழர் நலன் சார்ந்து செயற்பட வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில் தான் சில முயற்சிகளை எடுத்துச் செயற்படுகிறோம் என்றார். https://adaderanatamil.lk/news/cm7uda00p000isleop7olmlo4
-
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் (04) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே, பதவி வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு, பொதுச் சேவைக்கு 64%, எங்களுக்கு 58% நீதியா!, OT வீதத்தை மாற்றாதே, MCA குறைப்பை நிறுத்து போன்ற கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டன. நாடாளாவியரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம்...யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் (04) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான...
-
ஸ்டாலின் தலையீடு… ஏலத்துக்கு வந்த சிவாஜி வீடு… பரபர பஞ்சாயத்து!
ஸ்டாலின் தலையீடு… ஏலத்துக்கு வந்த சிவாஜி வீடு… பரபர பஞ்சாயத்து! 3 Mar 2025, 11:19 PM நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடான, அவரது நினைவுச் சின்னமாக இருக்கும் சென்னை. தி.நகர் அன்னை இல்லத்தை ஜப்தி செய்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, சிவாஜி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்தார். கடன் திருப்பி செலுத்தவில்லை. இது வழக்கு விவகாரமானதையடுத்து, மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை வசூலிக்கும் வகையில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்துக்கு வழங்க மத்தியஸ்தர் உத்தரவிட்டிருந்தார். பட உரிமைகளை வழங்க சிவாஜி பேரன் மறுத்தார். இதனால், மத்தியஸ்தர் உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட கோரி தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த்துக்கு சொந்தமான நிறுவனம் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பதிலளிக்காததால் அன்னை இல்லத்தின் மொத்தமுள்ள 53 ஆயிரம் சதுர அடியில், 13 ஆயிரம் சதுர அடியை ஜப்தி செய்து பொது ஏலமிட்டு பணத்தை அந்நிறுவனத்துக்குக் கொடுக்க உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 3) உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிவாஜிக்கு நெருக்கமானவர்களோ சிவாஜி குடும்பத்தின் சொத்துப் பிரச்சினை இரு வருடங்களுக்கு முன்பே முதல்வர் ஸ்டாலினிடம் சென்றது. அப்போது முதல்வர் சில அறிவுரைகளை வழங்கினார். ஆனால் அவற்றை ஏற்று சிவாஜி குடும்பத்தினர் செயல்படுத்தவில்லை. அதனால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். இதுகுறித்து விசாரித்தபோது, “மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு ஆகிய 2 மகன்களும் சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். மகள்கள் இருவரும் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன், தந்தை சிவாஜி கணேசன் தன் உழைப்பில் சம்பாதித்த சொத்துக்களில் எங்களுக்கு பங்கு கொடுக்க எங்கள் சகோதரர்கள் ராம்குமார், பிரபு மறுக்கிறார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே… சாந்தி தியேட்டர் பங்குகளை தங்களுக்குத் தெரியாமலேயே ராம்குமாரும், பிரபுவும் இன்னொரு பில்டருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் இன்னொரு வழக்கு போட்டனர். அதாவது, சாந்தி தியேட்டர் நிறுவனத்தில் சிவாஜி, கமலா ஆகியோர் பெயரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அவர்களது மறைவுக்குப் பிறகு ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் எங்களுக்குத் தெரியாமல் விற்றுவிட்டனர், அங்கே கட்டுமானம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தனர். இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். இந்த பரிவர்த்தனைகள் 2010 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டதாகவும் குடும்பப் பிரச்சினை காரணமாக இப்போது இதை எழுப்பியிருக்கிறார்கள் என்றும் இதை வாங்கிய அக்ஷயா ஹோம் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாதாடியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சிவாஜியின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதேநேரம் சொத்துப் பிரச்சினைக்காக பிரதான வழக்கு தொடர்ந்து நடந்தது. ”சென்னை தி. நகரில் இருக்கும் சிவாஜி இல்லமான அன்னை இல்லம் சிவாஜியால் கட்டப்பட்டது. அவரது மறைவுக்குப் பின் ராம்குமாரும், பிரபுவும் அங்கே வசிக்கிறார்கள். அன்னை இல்லத்தில் எங்களுக்குப் பங்கு கொடுக்கப்படவில்லை. கோபாலபுரத்தில் இருக்கும் சிவாஜி என்கிளேவ் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் எங்களுக்குப் பங்கு வேண்டும். மேலும் சென்னை ராயப்பேட்டையில் சிவாஜி நான்கு வீடுகளை வாங்கினார். அதில் ஒரு வீட்டில் நாங்கள் (மகள்கள்) வசிக்கிறோம். மற்ற மூன்று வீடுகளின் வாடகையும் ராம்குமார், பிரபுவுக்குத்தான் போகிறது. அந்த வாடகையிலும் பங்கு கொடுக்கப்படவில்லை. அசையா சொத்துகள் மட்டுமல்ல… அசையும் சொத்துகளான சிவாஜிக்கு சொந்தமாக ஆயிரம் சவரன் தங்க நகைகளும், 500 கிலோ வெள்ளிப் பாத்திரங்களும் இருக்கின்றன. இவற்றிலும் எங்களுக்கு பங்கு வேண்டும்” என்பதுதான் சிவாஜி மகள்களின் வழக்கு. சிவாஜி உயிரோடு இருந்தபோது, நடிகர் நடிகைகளின் பல்வேறு குடும்பப் பிரச்சினைகளை பேசித் தீர்த்து வைத்திருக்கிறார். இந்நிலையில் சிவாஜி மறைவுக்குப் பின் அவரது குடும்பத்திலேயே சொத்துப் பிரச்சினை தலை விரித்தாடிய தகவல் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 2022 அக்டோபர் 1 ஆம் தேதி சிவாஜியின் 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் இருக்கும் சிவாஜி மணிமண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது ராம்குமார், பிரபு உள்ளிட்டோருடன். சில நிமிடங்கள் முதல்வர் தனியாக உரையாடினார். இந்நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி சாந்தி தியேட்டர் பங்கு வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தது. இதற்கு சில நாட்கள் கழித்து பிரபுவின் வழக்கறிஞரான எஸ்.ராமனிடம் முதல்வர் தரப்பில் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அப்போதே முதல்வர் ஸ்டாலின் தனக்குத் தெரிந்த சில பில்டர்ஸ் நிறுவனத்தினரிடம் இதுபற்றி பேசிவிட்டு… முக்கிய ஆலோசனைகளை சிவாஜி குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார். தனது தந்தை கலைஞரின் உற்ற நண்பரின் குடும்பம் என்ற அடிப்படையில் சிவாஜி குடும்ப பிரச்சினையைத் தீர்க்க முதல்வர் ஸ்டாலின் முயன்றார். ஆனால் சிவாஜி குடும்பத்தினரிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் முதல்வர் ஓரளவுக்கு மேல் அழுத்தம் கொடுக்காமல் விட்டுவிட்டார். முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப் படி செயல்பட்டிருந்தால் இன்று அன்னை இல்லம் ஏலத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டிருக்காது” என்கிறார்கள் நடந்ததை அறிந்த இரு தரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள். https://minnambalam.com/political-news/sivaji-family-property-issue-stalin/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (04 மார்ச்) முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், இந்திய அணி (குழு A முதல் இடம்) எதிர் அவுஸ்திரேலியா அணி (குழு B இரண்டாவது இடம்) 17 பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். மூவர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக்கணித்துள்ளனர். போட்டியில் இல்லாத வேறு அணிகளைக் கணித்த நான்கு பேருக்குப் புள்ளிகள் கிடையாது! நாளைய அரையிறுதிப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
-
மே முதல் வாரத்தில் குட்டி தேர்தல்?
மே முதல் வாரத்தில் குட்டி தேர்தல்? உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே முதல் வாரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, டெய்லி மிரருக்கு அளித்த பேட்டியில், இந்த வாரத்திற்குள் திகதி குறித்து கலந்துரையாடவும் இறுதி முடிவை எட்டவும் ஒரு சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்றார். "அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்" என்று அவர் கூறினார். "நாங்கள் அனைத்து பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு சுயாதீன அமைப்பாக, உள்ளாட்சித் தேர்தல் சட்டத்திற்கு இணங்க திகதி அறிவிக்கப்படும்," என்று ஆணைக்குழுத் தலைவர் வலியுறுத்தினார். வரவு செலவுத் திட்ட விவாதம் முடியும் வரை வேட்புமனுக்களை தாக்கலைத் தாமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன, அதே நேரத்தில் அரசாங்கம் முன்கூட்டியே அறிவிக்க வலியுறுத்தியுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) இந்த செயல்முறையை விரைவுபடுத்துவது தொடர்பில் குரல் கொடுத்து வருகிறது. முதலில் 2023 இல் திட்டமிடப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல், வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கிய பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. பல அரசியல் கட்சிகள் இந்த தாமதத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன, 2025 தேர்தலுக்கும் அதே வேட்புமனுப் பட்டியலைப் பயன்படுத்துவது நியாயமற்றது என்று வாதிட்டன. புதிய நியமன செயல்முறைக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதல் தேவைப்படும் என்று நீதிமன்றம் பின்னர் தீர்ப்பளித்தது. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மே-முதல்-வாரத்தில்-குட்டி-தேர்தல்/150-352966
-
நாட்டில் எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை!
எரிபொருள் விநியோக சீர்குலைப்பு - சி.ஐ.டியில் முறைப்பாடு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் சலுகை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையால் எரிபொருள் விநியோக செயல்முறையை சீர்குலைத்து, அரசாங்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்த எரிபொருள் விநியோக முகவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழு முயற்சிப்பதாகவும், இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சாதாரண பொது வாழ்க்கையை சீர்குலைத்து, நிலையற்ற தன்மையை உருவாக்கி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cm7sps4ak0045vbgn23b9l8dk
-
ஆஸ்கர் விருதுகள் பலவற்றை வென்ற ‘அனோரா’
ஆஸ்கர் விருதுகள் பலவற்றை வென்ற ‘அனோரா’ 2024ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இது 97ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல்: சிறந்த இயக்குநர்: ஷான் பேகர் (அனோரா) சிறந்த திரைப்படம்: அனோரா சிறந்த நடிகை: மிக்கி மேடிசன் (அனோரா) சிறந்த நடிகர்: ஏட்ரியன் ப்ராடி ( தி ப்ரூட்டலிஸ்ட்) சிறந்த உறுதுணை நடிகை: ஸோயி சல்டானா (எமிலியா பெரேஸ்) சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஃப்ளோ சிறந்த தழுவல் திரைக்கதை: கான்கிளேவ் சிறந்த அசல் திரைக்கதை: அனோரா சிறந்த ஆடை வடிவமைப்பு: விக்கெட் சிறந்த ஆவணப்படம்: நோ அதர் லேண்ட் சிறந்த ஒளிப்பதிவு: தி ப்ரூட்டலிஸ்ட் சிறந்த ஆவணக் குறும்படம்: ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா சிறந்த எடிட்டிங்: அனோரா சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: தி சப்ஸ்டன்ஸ் சிறந்த ஒரிஜினல் பாடல்: எல் மால் (எமிலியா பெரேஸ்) சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: விக்கெட் சிறந்த அனிமேஷன் குறும்படம்: இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: ஐ ஆம் நாட் ஏ ரோபோ சிறந்த ஒலி: ட்யூன் 2 சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ட்யூன் 2 சிறந்த சர்வதேச திரைப்படம்: ஐ ஆம் ஸ்டில் ஹியர் சிறந்த ஒரிஜினல் இசை: தி ப்ரூட்டலிஸ்ட் இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆவணப்பட Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த புரொடக்ஷன் டிசைன், சிறந்த ஒலி, சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த லைவ் ஆக்ஷன், சிறந்த ஆவணப்பட ஷார்ட் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. https://www.samakalam.com/ஆஸ்கர்-விருதுகள்-பலவற்றை/
-
தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை!
தேசபந்துவை தேடும் பொலிஸ்! முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தங்கியிருந்ததாக கூறப்படும் 5 வீடுகளை குற்றப் புலனாய்வு பிரிவு சுற்றிவளைத்துள்ளனர். சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, அவரைக் கைது செய்ய நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்ற நிலையில் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்புக்கு அருகிலுள்ள இரண்டு சொகுசு குடியிருப்பு வளாகங்களில் இரண்டு வீடுகளும், கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளில் மூன்று வீடுகளும் சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இந்த சுற்றிவளைப்பின் மூலம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை, வெலிகம, பெலேன பகுதியில் உள்ள W15 என்ற சுற்றுலா ஹோட்டலில், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் அதற்கு பழிவாங்கும் வகையில் வெலிகம பொலிஸாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. கொழும்பு குற்றப்பிரிவின் சார்ஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டு மற்றொரு அதிகாரி காயமடைந்த சம்பவம் தொடர்பாக, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் ஆறு அதிகாரிகளைக் கைது செய்ய மாத்தறை நீதவான் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். -(3)
-
சட்டவிரோத ஆயுதங்களைச் செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதனை ஜே.வி.பியினரின் அலுவலகத்தில் இருந்து தொடங்க வேண்டும் - சம்பிக்க ரணவக்க
சட்டவிரோத ஆயுதங்களைச் செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதனை ஜே.வி.பியினரின் அலுவலகத்தில் இருந்து தொடங்க வேண்டும் editorenglishMarch 3, 2025 சட்டவிரோத ஆயுதங்களைச் செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதற்கான ஆரம்பப் பணியை மக்கள் விடுதலை முன்னணியின் பத்தரமுல்லை காரியாலயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச படைகளிமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை மக்கள் விடுதலை முன்னணி பாதுகாப்பு அமைச்சுக்கு முழுமையாக ஒப்படைக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02/03/2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எரிபொருள் கையிருப்பில் எவ்வித நெருக்கடியும் தற்போது ஏற்படவில்லை.எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் எரிபொருள் விநியோகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. எரிபொருள் விநியோகஸ்த்தர்களுக்கு நூற்றுக்கு 3 ரூபாய் என்ற அடிப்படையில் மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு காலத்திலும் இந்த பிரச்சினை காணப்பட்டது. எரிபொருளின் விலை உயர்வடையும் போது வழங்கப்பட்ட மேலதிக கட்டணம் அதிகரிக்கப்படும். இது ஒருமுறையற்றதொரு செயற்பாடாகவே காணப்பட்டது. முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.தற்போது இந்த அரசாங்கம் 3 ரூபாய் மேலதிக தொகையை வழங்குவதை இடைநிறுத்துவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளார்கள். அரசாங்கம் இவ்விடயத்தின் தான்தோன்றித்தனமாக செயற்படாமல், எரிபொருள் விநியோகஸ்த்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் அரசாங்கம் ஒருசில விடயங்களில் தன்னிச்சையாக செயற்படுவது பல பிரச்சினைகளுக்கு பிரதான காரணியாக அமைகிறது. பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களை குற்றஞ்சாங்கம் குற்றஞ்சாட்டுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாதாள குழுக்களின் செயற்பாட்டுக்கான ஆரம்பத்தை மக்கள் விடுதலை முன்னணியே ஆரம்பித்து வைத்தது. விடுதலை புலிகள் அமைப்பின் ஆயுதங்களில் பெரும்பாலானவற்றை பாதுகாப்பு அமைச்சு கைப்பற்றியது. மிகுதி ஆயுதங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அரச படைகளில் இருந்து கைப்பற்றிய பெரும்பாலான ஆயுதங்கள் முழுமையாக பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்கப்படவில்லை.சட்டவிரோத ஆயுதங்களை செயலிழக்க செய்ய வேண்டுமாயின் அதற்கான ஆரம்ப பணியை மக்கள் விடுதலை முன்னணியின் பத்தரமுல்லை காரியாலயத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில் உண்மையை நிலைநாட்டுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுவதை வரவேற்கிறேன். தலதாமாளிகை மீது மக்கள் விடுதலை முன்னணி தான் தாக்குதல் நடத்தியது. ஆகவே அதற்கு அரசாங்கம் நாட்டு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும் என்றார். https://globaltamilnews.net/2025/212533/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் கடைசியாக வரும் என்று ஒருவரும் கணிக்கவில்லை என்பதுதான் ஆறுதல்😂 இல்லையென்றால் இன்னும் கீழே போயிருக்கலாம்!! இப்போது எப்படி ஒரு படிக்கு முன்னால் நிற்பவரின் தோளில் ஏறுவது என்பதுதான் இலக்கு🤪
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
18 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கேள்விகள் 16) இலிருந்து 18) வரைக்கான புள்ளிகள்: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) 16 பேர் அவுஸ்திரேலியா அணியும் 13 பேர் தென்னாபிரிக்கா அணியும் முதல் இரு இடங்களில் வரும் எனச் சரியாகக் கணித்துள்ளனர். 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) ஒன்பது பேர் தென்னாபிரிக்கா அணி முதலாவதாகவும் ஐந்து பேர் அவுஸ்திரேலியா அணி இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்துள்ளனர். 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ஐந்து பேர் இங்கிலாந்து அணி இறுதியாக வரும் எனச் சரியாகக் கணித்துள்ளனர்!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
15 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கேள்விகள் 13) இலிருந்து 15) வரைக்கான புள்ளிகள்: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்திய அணி தெரிவாகாது என @vasee யும், பாகிஸ்தான் அணி தெரிவாகும் என 07 பேரும் பதில் தந்துள்ளனர்! 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்திய அணி முதலாவதாக வரும் எனப் 16 பேர் கணித்துள்ளனர். போலவே நியூஸிலாந்து அணி இரண்டாவதாக வரும் எனப் 15 பேர் சரியாகக் கணித்துள்ளனர். 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ஒருவரும் பாகிஸ்தான் அணி இறுதியாக வரும் எனச் சரியாகக் கணிக்கவில்லை!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றுடன் குழு நிலைப் போட்டிகள் நிறைவுபெற்றன. அரையிறுதிக்குத் தெரிவான அணிகள்: குழு A இந்தியா நியூஸிலாந்து குழு B தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு நிலைப் போட்டிகளின் இறுதியான பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி கடினமான ஆடுதளத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை எடுத்திருந்தது. நியூஸிலாந்து பந்துவீச்சாளார் மாற் ஹென்றி 8 ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுகளை 42 ஓட்டங்கள் கொடுத்துச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, கேன் வில்லியம்ஸின் நிதானமான 81 ஓட்டங்களைத் தவிர பிறரின் ஒத்துழைப்புக் கிட்டாமையால் 45.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. வருண் சக்கரவர்த்தி பத்து ஓவர்கள் பந்து வீசி 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். முடிவு: இந்திய அணி 44 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் 20 பேருக்குத் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்த மற்றைய 04 பேருக்கும் புள்ளிகள் இல்லை. யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை:
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கூட்டிக் கழிக்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை! விரைவில் வரும்!
-
புதிய கூட்டுக்கள் பழைய பகைமைகள் ? - நிலாந்தன்
புதிய கூட்டுக்கள் பழைய பகைமைகள் ? - நிலாந்தன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கித் தமிழ்க்கட்சிகள் புதிய ஒருங்கிணைப்புகளுக்குப் போகத் தொடங்கியுள்ளன. அதை வரவேற்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளில் முன்னெந்தத் தேர்தலையும்விட தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் எதிராக அணி திரள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு தேர்தல் இது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது பெருமளவுக்கு உள்ளூர் நிலைமைகளை; உள்ளூர் சாதி,சமய,வட்டார உணர்வுகளைப் பிரதிபலிப்பவை.உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களம். ஆனால் அவை உள்ளூர்த் தலைமைகள் மட்டுமல்ல. ஒரு தேசியவாத அரசியலுக்கான அடிக்கட்டுமாணம் என்ற விளக்கத்தோடு மக்கள்மட்டக் கட்டமைப்புகளை அங்கிருந்துதான் பலப்படுத்த வேண்டும். அதாவது உள்ளூர் உணர்வுகளை அவற்றின் அசமத்துவங்களை நீக்கி தேசியக் கூட்டுணர்வாகத் திரட்ட வேண்டும். கீழிருந்து மேல் நோக்கி. அந்த அடிப்படையில் பார்த்தால்,உள்ளூர்த் தலைமைகளை எப்படித் தமிழ் தேசியப் பண்புமிக்கவர்களாக வார்த்தெடுப்பது என்பதற்கான ஒரு பயில் களம்தான் உள்ளூராட்சி மன்றங்கள். ஆனால் தமிழ்க்கட்சிகளிடம் அது தொடர்பாக தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து ஆழமான நீண்டகால நோக்கிலான விளக்கங்களும் பார்வைகளும் உண்டா ? கடந்த வாரம் ஜனநாயகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட கூட்டு எனப்படுவது தேர்தல்கூட்டு அல்ல என்று கூறப்பட்டாலும் அது நடைமுறையில் ஒரு தேர்தல் கூட்டாகத்தான் காணப்படுகின்றது. அக்கூட்டுக்குள் முதலில் காணப்பட்ட இரண்டு கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் வெளியேறக்கூடிய ஆபத்துக்களை இக்கட்டுரை எழுதப்படுகையில் உணரக்கூடியதாக இருந்தது. தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கிலான கூட்டு அது என்று எடுத்துக்கொண்டால்,தமிழ்த்தேசிய வாக்குகளைத் திரட்டுவதற்கான ஒரு கூட்டு என்றும் அதை வியாக்கியானப்படுத்தலாம். ஆயின் அக்கூட்டானது தமிழ்த்தேசிய வாக்குகளை கொத்தாகத் திரட்டும் சக்தி மிக்கதா ? தமிழ்த் தேசியப் பரப்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் இரண்டு விதமான ஒருங்கிணைப்பு முயற்சிகள் உண்டு. ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படுகின்ற யாப்புருவாக்க முயற்சிகளை நோக்கிய ஒருங்கிணைவு. அதில் சிறீதரன் முன்னணியோடு இணக்கமாகக் காணப்படுகின்றார். ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியும் அந்த அணியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மத்திய குழுவும் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு எதிராக இருக்கின்றன. இந்த விடயத்தில் சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான தலைமைத்துவப் போட்டி முன்னணியின் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகிறது. இது ஏறக்குறைய பொது வேட்பாளரின்போது காணப்பட்ட ஒரு நிலை. அங்கேயும் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் உட்பகையானது பொது வேட்பாளர் தொடர்பான நிலைப்பாடுகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் இந்த இரண்டு விடயங்களிலும் சிறிதரன் தேசத்திரட்சிக்கு ஆதரவாக நின்றார்; நிற்கின்றார். அவரைப் பொறுத்தவரை அது தவிர்க்க முடியாதது. கட்சிக்குள் அவருடைய நிலையை பலப்படுத்துவதற்கு அவருக்கு வெளிக்கூட்டுகள் அவசியம். சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பகை கஜேந்திரகுமாரின் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துவதைப் போலத்தான் சந்திரகுமாருக்கும் சிறீதரனுக்கும் இடையிலான பகை, புதிய கூட்டு முயற்சிகளிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். அப்படித்தான் மணிவண்ணனுக்கும் கஜேந்திரக்குமாருக்கும் இடையிலான பகையுணர்வும், தவறாசாவுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பகையுணர்வும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான பகை எனப்படுவது பொது எதிரிக்கு எதிரான பகையுணர்வை விடவும் ஆழமானதாகவும் கூர்மையானதாகவும் வளர்ந்துவருகிறது. அதுபோலவே சிறீதரனுக்கும் சந்திரகுமாருக்கும் இடையிலான பகை என்பது பெருமளவுக்கு மாவட்டமட்டப் பண்பை கொண்டது. அதிகம் உள்ளூர் நிலைமைகளால் தீர்மானிக்கப்படுவது. புதியகூட்டை அறிவிக்கும் முதலாவது சந்திப்பின்போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இக்கூட்டுக்குள் சந்திரகுமார் இருக்கும்வரை சிறீதரனைக் கொண்டு வருவது கடினம் என்று சுட்டிக்காட்டப்பட்ட பொழுது, சந்திரகுமார் கூறியிருக்கிறார், பிரச்சினையில்லை சிறீதரன் இந்த அணிக்குள் வருவார் என்றால் நாங்கள் தமிழரசுக் கட்சியோடு போகிறோம் என்று. கிளிநொச்சியில் சந்திரகுமாருக்கும் சிறீதரனுக்கும் இடையிலான பகையும் சிரீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பகையும் அங்கே புதிய சேர்க்கைகளைத் தீர்மானிக்கின்றன. சுமந்திரனுக்கு ஆதரவான அணி அங்கு சந்திரகுமாருக்கு நெருக்கமாகக் காணப்படுகின்றது அப்படித்தான் மணிவண்ணனின் விடயத்திலும்.மணிவண்ணன் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்மக்கள் கூட்டணியும், ஐங்கரநேசனும் புதிய கூட்டுக்குள் சந்திரகுமார் இணைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறிய தவறாசா அணியும் அக்கூட்டுக்குள் முரண்படுவதாகத் தெரிகிறது. அதற்காக இவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஏதும் புதிய உடன்படிக்கைக்கு போகக்கூடுமா? தவராசா அணிக்கும் சுமந்திரன் அணிக்கும் இடையிலான இடைவெளியும்; மணிவண்ணனுக்கும் முன்னணிக்கும் இடையிலான பகையும் இக்கூட்டுக்களைத் தீர்மானிக்கும் காரணிகளாகும். மணிவண்ணன், ஐங்கரநேசன், தவறாசா அணி போன்றவற்றைச் சுதாகரிப்பதற்காக புதியகூட்டானது சந்திரகுமாரை வெளியே விடுமா? இல்லை. அதற்கான வாய்ப்புக்கள் இப்போதைக்குக் குறைவு. ஏனென்றால் புதிய கூட்டை உருவாக்கும் முன்முயற்சிகளை எடுத்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒரு சினேக சக்தியாக கருதவில்லை. தவிர ஏற்கனவே யாப்புருவாக்க முயற்சிகளுக்காக செல்வம் அடைக்கலநாதனை கஜேந்திரக்குமார் சந்தித்திருக்கும் ஒரு பின்னணியில்தான் மேற்படி கூட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் விக்னேஸ்வரனின் பிரதிநிதியாக மணிவண்ணனும் கலந்து கொண்டார். விக்னேஸ்வரனின் கட்சிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான இடைவெளியை தீர்மானிக்கும் அம்சங்களில் மணிவண்ணனும் ஒருவர். எனவே கூட்டிக்கழித்து பார்த்தால் புதிய கூட்டுக்குள் பழைய பகைமைகள் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். தமிழ்மக்கள் உருகிப் பிணைந்த ஒரு தேசத் திரட்சியாக இல்லை. தமிழ்த் தேசியப் பரப்பில் எத்தனை துருவ நிலைகள்? ஆயுதப் போராட்டத்தில் இயக்கங்களுக்குள் ஏற்பட்ட பகைமையின் தொடர்ச்சியாகக் காணப்படும் தியாகி-துரோகி என்ற பகைநிலை. கட்சிகளுக்கு இடையிலான பகை;கட்சிகளுக்குள் காணப்படும் குழுக்களுக்கு இடையிலான பகை;கட்சிகளில் இருந்து வெளியேறியவர்களுக்கும் தாய்க்கட்சிக்கும் இடையிலான பகை… என்றிவ்வாறாக பல்வேறு பகைநிலைகள் உண்டு. இந்தப் பகைமைகள் அனைத்தும் பழையவை. இவை புதிய கூட்டுக்களை எவ்வாறு தீர்மானிக்கப் போகின்றன? இப்பொழுது தமிழ்த்தேசியப் பரப்பில் நான்கு தரப்புக்கள் துலக்கமாக தெரிகின்றன. முதலாவது தமிழரசுக் கட்சி. இரண்டாவது முன்னணி. மூன்றாவது புதிய கூட்டணி. நாலாவது இவற்றுக்குள் வராத சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும். தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி தேர்தலை தனியாகவே எதிர்கொள்ளப் போவதாக தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் தாமே உள்ளதில் பெரிய கட்சி,பிரதான கட்சி, தலைமைதாங்கும் கட்சி என்ற பொருள்பட சுமந்திரன் கருத்துக்கூறி வருகிறார். தேர்தலுக்கு முன் கூட்டுக்களை உருவாக்காமல் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டுக்களை வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் சிந்திப்பதாகத் தெரிகிறது. இது தாங்களே பெரிய கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் வகுத்துள்ள தந்திரம்.தேர்தலுக்குப் பின் கூட்டுக்களை வைக்கும்பொழுது தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஏனைய கட்சிகளின் உயரம் எதுவென்று தெரிந்துவிடும். அந்த அடிப்படையில்தான் அவர்கள் பேரம்பேச முடியும். மாறாக தேர்தலுக்கு முன் கூட்டை வைத்தால்,கட்சிகளின் உயரம் இதுவென்று தெரியாமல் அவற்றின் தகுதிக்கு மீறி இடங்கொடுக்க வேண்டிவரும். இது தாமே தீர்மானிக்கும் கட்சி என்ற அடிப்படையில் கட்சி நோக்குநிலையில் இருந்து எடுத்த முடிவு. நிச்சயமாக தேசத்திரட்சி என்ற நோக்குநிலையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல. தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு இறந்த காலத்திலிருந்து எதையும் படித்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. உள்ளதில் பெரிய கட்சி;தலைமை தாங்கும் கட்சி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு கட்சியானது தேசியவாத அரசியலுக்குத் தலைமை தாங்கும் கட்சி தாங்கள்தான் என்ற பொறுப்பை உணர்ந்து முடிவெடுக்கவில்லை. தேசத் திரட்சியை நோக்கித்தான் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். தேர்தலை நோக்கி அல்ல. அது மிக முக்கியம். அந்த ஒருங்கிணைப்பு 2009க்கு பின்னரான புதிய பண்புருமாற்ற அரசியலாகவும் இருக்க வேண்டும். அது மிக முக்கியம். மாறாக அவரவர் பலத்தின் அடிப்படையில் கூட்டுக்களை வைத்துக் கொள்ளலாம் என்பது முழுக்க முழுக்க தேர்தல் நோக்கு நிலையிலானது. சில சமயங்களில் தேர்தல் நோக்கு நிலையானது தேசத் திரட்சிக்கு எதிராக இருக்க முடியும். தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசியக் கூட்டுணர்வின் அடிப்படையில் பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. தன்னைத் தலைமை தாங்கும் சக்தியாகக் கருதும் தமிழரசுக் கட்சி அதற்குத் தேவையான வழி வரைபடத்தைக் கொண்டிருக்கின்றதா?இல்லை. முதலில் அவர்கள் தங்களை ஒரு உருகிப்பிணைந்த அமைப்பாகக் கட்டியெழுப்ப வேண்டும். தன்னை ஒரு கட்டிறுக்கமான கட்சியாகத் திரட்டமுடியாத ஒரு கட்சியானது எப்படி அரசற்ற, நாடற்ற ஒரு மக்களைத் தேசமாகக் கட்டியெழுப்ப முடியும்? இதுதானே கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது? தமிழரசுக் கட்சி,முன்னணி,புதிய கூட்டணி தவிர ஆங்காங்கே சுயேச்சைகளும் களமிறங்கும் வாய்ப்புக்கள் தெரிகின்றன. நாடாளுமன்றத் தேர்தலைப் போலன்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேச்சைகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம். தென்மாராட்சியில் ஒரு சுயேச்சைக் குழு அவ்வாறு களமிறங்கும் வாய்ப்புகள் தெரிகின்றன. வலிகாமத்திலும் சுயேச்சைக் குழுக்கள் இறங்க முடியும். இதில் சுயேச்சையாக நிற்கக்கூடிய சில அரசியல்வாதிகளோடு சுமந்திரன் உரையாட முற்படுவதாக ஊர்ஜிதமற்ற ஒரு தகவல் உண்டு. இப்படிப்பட்டதோர் பின்னணியில்,உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நோக்கி உருவாகிவரும் புதிய கூட்டுக்கள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நோக்கத்தோடு உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அதைக் கட்சிகள் செய்ய முடியாது என்பதுதான் தமிழ்த்தேசிய அரசியலில் உள்ள கொடுமையான யதார்த்தம். ஏனென்றால் தமிழ்மக்களை வாக்காளர்களாக;விசுவாசிகளாக; பகைக் குழுக்களாக;துரோகிகளாக தியாகிகளாக;ஆயுதக் குழுக்களாக; மிதவாதிகளாக;இன்னபிறவாகப் பிரித்து வைத்திருப்பதே கட்சிகள் தான். தாங்களே சிதறடிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை தாங்களே திரட்டுவது எப்படி?வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது ஒரு தேசமாகத் திரண்டு முடிவெடுக்காத கட்சிகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எப்படித் தமிழ் வாக்குகளைத் திரட்டப் போகின்றன? அவர்கள் ஒன்றாக நின்று தேர்தலை எதிர்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. ஆகக்குறைந்தபட்சம் அந்தந்த உள்ளூராட்சிப் பிரதேசங்களில் பகை தவிர்ப்பு அல்லது போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கை எதற்காவது போவார்களா? அதாவது ஒரு உள்ளூராட்சிப் பிரதேசத்தில் வெல்லக்கூடிய வேட்பாளருக்குப் போட்டியாக மற்றொரு தமிழ்த் தேசியக் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் விடுவதன்மூலம் ஒரு தமிழ்த் தேசியக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவது.செய்வார்களா? அதாவது கட்சி கடந்து தேசமாகச் சிந்திப்பார்களா? https://www.nillanthan.com/7195/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியா 249/9 இந்தியா வெல்ல சாத்தியம் குறைவு. ஸ்பின்னர்கள் ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால் இந்தியா வெல்லலாம்!