Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. லாஹூரில் ஃபைனல்ஸ் நடக்குது. பாகிஸ்தான் வெல்லுது! அஞ்சு பவுண்ஸையும் நானே வச்சிருப்பேன்! 😂 உங்களுக்கு இந்த 5000 ரஷ்யன் ரூபிளை அனுப்பலாம்🤣
  2. இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு 21 Feb, 2025 | 12:00 PM இஸ்ரேலில் மூன்று பேருந்துகள் வெடித்துசிதறிய சம்பவத்தின் பின்னர் மேற்குகரையில் இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார். இந்த பேருந்து வெடிப்புகள் காரணமாக எவரும் காயமடையாத அதேவேளை இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு பாலஸ்தீன எழுச்சியின் போது இவ்வாறான பேருந்து குண்டுவெடிப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. வேறு இரண்டு பேருந்துகளில் காணப்பட்ட வெடிபொருட்கள் வெடிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐந்து குண்டுகளும் ஒரே மாதிரியானவையாக குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் காணப்பட்டன என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டெல்அவிக்கு வெளியே உள்ள பகுதியில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. பயணத்தை முடித்த பின்னர் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளிலேயே வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/207277
  3. டிரம்ப் கடும் அதிருப்தியில் உள்ளார் - கனிமங்கள் குறித்து உக்ரைன் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் - வெள்ளை மாளிகை 21 Feb, 2025 | 11:23 AM உக்ரைனின் கனிமங்களை அமெரிக்கா பயன்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் மீண்டும் ஈடுபடவேண்டு;ம் என வேண்டுகோள் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத அவமதிக்கும் வார்த்தைகளை உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறித்து வெள்ளை மாளிகை ஏமாற்றமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆதரவிற்கான இழப்பீடாக அல்லது பரஸ்பர உதவிக்காக உக்ரைன் தனது அரிய கனிமங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்கள் உக்ரைனிற்கு மிகச்சிறந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கினோம்,என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா அரிய கனிமங்களை தன்னுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என விடுத்த வேண்டுகோள்களை உக்ரைன் ஜனாதிபதி ஏற்கனவே நிராகரி;த்துள்ளார் எனது தேசம் விற்பனைக்கில்லை என அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள அபூர்வமானகனிமங்களான லித்தியம் மற்றும் டைட்டானியத்தின் ஒரு பகுதியை அமெரிக்க ஜனாதிபதி கோரியுள்ளரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி அந்த கனியவளங்களின் 50 வீதத்தின் உரிமையை அமெரிக்கா கோரியதாலும் எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காததாலும் தான் அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்ததாக குறிப்பிட்டுள்ளார். நான் உக்ரைனை பாதுகாக்கின்றேன் என்னால் அதனை விற்க முடியாது,எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது என வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஸ்யாவை சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகள் மூலம் அமெரிக்கா மீண்டும் சர்வதேச அரங்கிற்கு கொண்டுவந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்கா உதவியை குறைத்தால் ஐரோப்பா என்ன ஆதரவை வழங்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ளார். ரஸ்யாவிற்கு பரந்துபட்ட விட்டுக்கொடுப்புகளை செய்வது குறித்த யோசனைகளை நிராகரித்துள்ள அவர் இந்த யோசனையை உக்ரைன் மக்கள் நிராகரிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார் https://www.virakesari.lk/article/207271
  4. உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்க விசேட பிரதிநிதி இணைந்து நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடு இறுதிநிமிடத்தில் இரத்து 21 Feb, 2025 | 12:54 PM மூன்று வருடகால ரஸ்ய உக்ரைன் யுத்தத்தை எவ்வாறு முடிவிற்கொண்டுவருவது என்பது குறித்த அரசியல் பதற்றம் தீவிரமடைகின்ற அதேவேளை அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் உக்ரைன்ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இடம்பெறவிருந்த செய்தியாளர் மாநாடு இரத்துச்செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட பிரதிநிதி கெய்தகெலொக்கும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியும் இணைந்து நடத்தவிருந்த செய்தியாளர் மாநாடே இரத்துசெய்யப்பட்டுள்ளது. இறுதியில் இருவரும் இணைந்து புகைப்படம் மாத்திரம் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அறிக்கைகளை வெளியிடவில்லை கேள்விகளிற்கு பதில் அளிக்கவில்லை. அமெரிக்க தரப்பினரே செய்தியாளர் மாநாட்டினை இரத்துச்செய்யுமாறு கேட்டனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை உக்ரைனின் கனிமங்களை அமெரிக்கா பயன்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் மீண்டும் ஈடுபடவேண்டு;ம் என வேண்டுகோள் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத அவமதிக்கும் வார்த்தைகளை உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறித்து வெள்ளை மாளிகை ஏமாற்றமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆதரவிற்கான இழப்பீடாக அல்லது பரஸ்பர உதவிக்காக உக்ரைன் தனது அரிய கனிமங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்கள் உக்ரைனிற்கு மிகச்சிறந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கினோம்,என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207283
  5. லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு 21 FEB, 2025 | இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன டிசில்வாவின் மகளான யொகானி அவரை பாராட்டி பாடியுள்ளதை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இனப்படுகொலையை ஆதரிப்பவரை,இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை பாரட்டுபவரை லண்டனில் மாத்திரமல்லவேறு எங்கும் இசைநிகழ்;ச்சிகளை நடத்துவதற்கு அனுமதிக்ககூடாது தமிழ் இளைஞர் அமைப்பின் பிரித்தானியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் இது மிகவும் மனிதாபிமானமற்றது சீற்றத்தை ஏற்படுத்தகூடியது என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை புறக்கணிக்கவேண்டும் ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வை இரத்துசெய்யவேண்டும் என தமிழ் இளைஞர் அமைப்பின் பிரித்தானியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். இனப்படுகொலைக்கு ஆதரவாக குரல்கொடுப்பவருக்கு லண்டனில் நிகழ்வுகளில் ஈடுபடுவதற்கு இடமில்லை என தெரிவித்துள்ள பிரித்தானியாவின் தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் மகேஸ் அவர் எங்கள் போராளிகளை பயங்கரவாதி என அழைத்தார்,யுத்த குற்றவாளிகளிற்காக பாடினார் என தெரிவித்துள்ளார். யொகானி தனது தந்தையின் குற்றங்களை கண்டிக்காத வரை,யுத்த குற்றவாளிகளிற்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்ளாதவரை, இனப்படுகொலை குறித்த விசாரணைக்கான சர்வதேச பொறிமுறைக்கு ஆதரவளிக்காதவரை அவர் இங்கு நிகழ்வுகளை நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ள அரங்கின் உரிமையாளர்கள் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டவேளை யொகானியின் பின்னணி குறித்து தங்களிற்கு தெரியாது,தாங்கள் இந்த நிகழ்விற்கு பொறுப்பில்லை என தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/207275
  6. நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்! ஒத்திவைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் நிறுவனத்தினர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தனர். நாளை காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும். இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தமது சேவையைத் தொடர்ந்தும் கப்பல் நிறுவனம் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் நாளை மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்தனர். https://www.hirunews.lk/tamil/397567/நாகப்பட்டினம்-காங்கேசன்துறை-கப்பல்-சேவை-நாளை-முதல்-மீண்டும்-ஆரம்பம்
  7. ‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் நாட்டைப் பொறுப்பேற்றது முதல், தற்போது வரை முன்னெடுத்து வரும் அரசியல், வெளிவிடும் கருத்துக்கள், நடந்து கொள்ளும் முறைகள் எல்லாம் வேடிக்கையானதாகவும் விநோதமானதாகவும் வில்லங்கமானதாகவுமே காணப்படுவதனால் மக்கள் மத்தியில் அவர்களின் ‘திசைக்காட்டி’ வலுவிழக்கத் தொடங்கியுள்ளதுடன், மக்களின் விசனத்திற்கும் கிண்டலுக்கும் ‘அனுரகுமார சகோதரர்கள்’ ஆளாகி வருகின்றார்கள். ‘மாற்றம்’ என்ற கோஷத்தினால் மக்களைச் சூடாக்கி, மூளைச்சலவை செய்து, நாட்டையும் ஆட்சியையும் கைப்பற்றிய திசைக்காட்டியினர், இன்று செய்து வரும் அரசியல் உண்மையில் ‘மாற்றம்’ நிறைந்ததுதான். ஆனால், அது என்ன மாற்றம்?,எதில் மாற்றம்? எப்படிப்பட்ட மாற்றம்? என்று சற்று அலசி ஆராய்ந்தால் திசைக்காட்டியினரின் மூளையில் தான் ‘’மாற்றம்’’ஏற்பட்டுள்ளது என்பதனை நாட்டு மக்கள் நன்கறிய முடியும். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பினாமியான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) யின் பலமே அவர்களின் பேச்சாற்றால் தான். தமது ஆவேச உரைகள் மூலம் மக்களை உசுப்பேற்றுவதில் இவர்களை விஞ்ச ஆள் கிடையாது. இதனால்தான் இவர்களிடம் பேச்சு மட்டுமே இருக்கும் செயல் இருக்காது என அரசியலில், “பழம் தின்று கொட்டை போட்டவர்கள்” பலர் கூறியபோதும், ஜே.வி.பி-என்.பி.பி. காரர்களின் ஆவேச பிரசார உரைகள், நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளில் மூழ்கிப்போன மக்கள் நாட்டில் பெரும் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில் இவர்களுக்கு வாக்களித்து ஆட்சி பீடம் ஏற்றினார்கள். இவ்வாறு மக்களின் ‘நம்பிக்கை’யினால் ஆட்சி பீடம் ஏறியவர்கள், இன்று செய்து வரும் அனுபவமற்ற அரசியலாலும் ‘அனுர அலை’யினால் எம்.பியானவர்களும் அமைச்சர்களானவர்களும் வெளியிட்டு வரும் கோமாளிக் கருத்துக்களினாலும் நடவடிக்கைகளினாலும், முழு நாடும் சிரிப்பாய் சிரிப்பதுடன், “பஞ்சு மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என்ற கருத்துபோல, இவர்கள் எதிர்க்கட்சியாகவே இருந்திருக்கலாம் என்ற கருத்துக்களும் வலுப்பெற்று வருகின்றன. இதனால்தான் ‘திசைகாட்டி’ செயலிழக்க முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தி ஓரளவுக்கேனும் வெறியைத் தக்க வைக்க வேண்டுமென்பதில் ‘அனுரகுமார சகோதரர்கள்’ தீவிரமாக இறங்கியுள்ளார்கள். ‘திசைகாட்டி’ மூலம் ‘மாற்றம்’ செய்கின்றோம் என நினைத்து, இவர்கள் செய்யும் ஒவ்வொரு மாற்றமும் “பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை’’யாகவே முடிந்து வருகின்றது. அந்த வகையில், இவர்கள் நாட்டில் இதுவரையில் என்ன மாற்றம் செய்துள்ளார்கள் என்பதனை சற்று ஆராய்வோம். உண்மை, நேர்மை என முழங்கியதுடன், ஊழல், மோசடிகள், போலி. பித்தலாட்டங்களை ஒழிப்போம் என முழங்கியவர், தமது அரசின் முதல் தெரிவாகத் தெரிவு செய்த சபாநாயகரே ‘போலி கலாநிதி’பட்ட சான்றிதழ் சர்ச்சையில் சிக்கி உண்மையை நிரூபிக்க முடியாது, பதவியேற்ற சில தினங்களிலேயே சபாநாயகர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனை ‘குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவுடனேயே பதவி விலகி முன்மாதிரியாகச் செயற்பட்ட சபாநாயகர்.இதுதான் எமது ஆட்சியின் மாற்றம்’’என விழுந்தும் மீசையில் மண்படாத கதையை திசைக்காட்டியினர் கூறி மக்களைத் திசை திருப்பினர். இந்நிலையில், நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு அது தொடர்பிலான சர்ச்சைகள் வெளிக் கிளம்பிய நிலையில், ‘கடந்த அரசு 20 கிலோ சிவப்பு அரிசியை எடுத்து, வெள்ளை அரிசியைச் சாப்பிடுபவர்களுக்குக் கொடுத்து, அதையும் சாப்பிடச் சொன்னதாலும் அரிசியைக் கோழிகள் அதிகமாக உண்பதனாலும்தான் தற்போது நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு ஒரு கையொப்பத்தில் தீர்வு காண முடியும் என முன்னர் ஒரு பேச்சுக்கே கூறியிருந்தேன். எனினும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சவால் மிக்கது’ என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியும் முன்னெப்போதும் ஒருவரும் கூறாத மாற்றான காரணத்தைக்கூறி மக்களைச் சிரிக்க வைத்தனர். இதன் தொடர்ச்சியாக நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டு அது தொடர்பிலான சர்ச்சைகள் வெளிக்கிளம்பிய நிலையில், மக்கள் “வீடுகளில் தேங்காய்ப் பால் பிழிவதும் பால் சொதி வைப்பதும், தேங்காய் சம்பல் செய்வதும் தான் தேங்காய் தட்டுப்பாட்டுக்குக் காரணம்” என கைத்தொழில் பிரதி அமைச்ச சதுரங்க அபேசிங்கவும் “தேங்காய்களைக் குரங்குகள் களவாடுவதனாலும் சேதப்படுத்துவதனாலுமே தேங்காய்களுக்குத் தட்டுப்பாடு” என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவும் கூறி மக்களை விசனப்பட வைத்தனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் ஒன்றரை மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்வெட்டு சில தினங்கள் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மின் நெருக்கடி தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மின்வெட்டுக்கான பழியைக் குரங்கு மீது சுமத்தினார். இவ்வாறு, நாடு தழுவிய மின்தடையை ஏற்படுத்தி எதிர்பாராத ‘மாற்றமாக’ குற்றவாளியான குரங்கு சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது. நாட்டில் ஏதாவது நெருக்கடிகள், பொருள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டால், குற்றங்கள், ஊழல் மோசடிகள் இடம்பெற்றால் முன்னைய அரசுகளின் காலத்தில் எதிர்க்கட்சிகள் அரசு மீதும் அரசுகள் எதிர்க்கட்சிகள் மீதும் பழி போடுவதுதான் அரசியல் கலாசாரம். ஆனால், இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவோம் என உறுதியளித்து ஆட்சிக்கு வந்த ‘அனுரகுமார சகோதரர்கள்’ சொன்னது போலவே ஒரு ‘மாற்றம்’ ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது பழி போடாமல்,குற்றம்சாட்டாமல் தேங்காய் தட்டுப்பாடு, மின் வெட்டுகளுக்கான பழியை, குற்றச்சாட்டை மறுக்க முடியாத, எதிர்த்துப்பேச முடியாத குரங்குகள் மீது போட்டு நாட்டில் முன்னெப்போதுமில்லாத ‘மாற்றம்’ ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி, தேங்காய்களுக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமையை அரசுக்கு ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் குரங்குகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யவும் இலங்கையில் குரங்குகளைப் பிடித்து ஒரு தனித் தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பிடிபட்ட குரங்குகளைக் கொண்டு சென்று விடுவிப்பதற்கு ஒரு தீவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், குரங்குகளைப் பிடிக்கும் பொறுப்பு ஜகத் மனுவரண எம்.பியிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவும் முன்னைய எந்தவொரு அரசும் செய்திராத ‘மாற்றம்’ஆகவே உள்ளது. தமது அரசைப் பாதுகாத்துக்கொள்ள எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்ட முடியாத நிலையில், குரங்குகளைக் குற்றவாளிகளாக்கி, ‘மாற்றம்’ செய்த ‘அனுரகுமார சகோதரர்கள்’ திசைக்காட்டிச் செயலிழக்க முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதிலும் ‘மாற்றம்’ ஒன்றைச் செய்துள்ளனர். அதாவது கடந்த அரசுகள் பாராளுமன்றத்தைக் கூட்டி ஏதாவது சர்ச்சைகள் ஏற்பட்டு சில மணி நேரங்களில் ஒத்திவைத்தால் வீணாகப் பாராளுமன்றத்தைக்கூட்டி மக்களின் கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி நீலிக்கண்ணீர் வடித்த ‘அனுரகுமார சகோதரர்கள்’ கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூராட்சி சபைகளுக்கான சட்டமூல திருத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை அறிவிப்பதற்காகப் பாராளுமன்றத்தை ‘25 நிமிடங்கள்’ மட்டும் கூட்டி மக்கள் பணத்தை வீணடித்தார்கள். அத்துடன், ஒரு வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமானவரோ அல்லது நிதி அமைச்சரோ சமர்ப்பித்து உரையாற்றுவதற்காகப் பாராளுமன்றம் கூட்டப்பட்டு அன்று வரவு-செலவுத் திட்ட உரை மட்டுமே நிகழ்த்தப்படுவதுதான் பாராளுமன்ற சம்பிரதாயம். வரலாறு. ஆனால், கடந்த 17ஆம் திகதி 2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அனுரகுமார திசநாயக்க சமர்ப்பித்து உரையாற்றிய பின்னர், உள்ளூராட்சி சபைகளுக்கான சட்டமூல திருத்தம் தொடர்பான விவாதத்தை நடத்தி பாராளுமன்ற சம்பிரதாயத்தில் வரலாற்றில் ‘அனுரகுமார சகோதரர்கள்’ ‘மாற்றம்’ செய்துள்ளனர். இவ்வாறாக ‘மாற்றம்’ என்ற பெயரில் ‘அனுரகுமார சகோதரர்கள்’ செய்யும் அனுபவமற்ற, கோமாளித்தன அரசியல் எதிர்க்கட்சியாக இருந்தபோது, மக்களினால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மரியாதை செலுத்தப்பட்ட ரில்வின் சில்வா, அனுரகுமார திசாநாயக்க, விஜித ஹேரத், சுனில் கந்துன் நெத்தி போன்ற அரசியல் தலைவர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேசிய மக்கள் சக்தி அரசின் மீது நம்பிக்கை இழக்க வைப்பதுமாகவே உள்ளது. இவ்வாறான அனுபவமற்ற, கோமாளித்தனமான அரசியலை ‘அனுரகுமார சகோதரர்கள்’ தொடர்ந்தால் நாட்டில் மீண்டும் ஒரு ‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாற்றம்-ஏற்பட்டாலும்-ஆச்சரியப்படுவதற்கில்லை/91-352329
  8. வலி- வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - கடற்தொழில் அமைச்சர் வலியுறுத்து! யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிருப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழுகூட்டம் நேற்று நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்; யாழ் - வலி. வடக்கில் 2009ஆண்டு பொலிஸார் மற்றும் முப்படையினர் வசம் 23ஆயிரம் ஏக்கர் காணி காணப்பட்டது. இக்காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்தன. இதன் பிரகாரம் 21ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2640 ஏக்கர் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ளது. இக்காணிகள் மக்கள் பயன்படுத்தும் வகையில் விடுவிக்கப்பட வேண்டும் என்றார். மேலும், வலி.வடக்கில் அண்மைக்காலத்தில் விடுக்கப்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு குடியிருப்பு இல்லையென்ற காரணம் சொல்லப்படுகின்றது. எனவே விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்டிக்கொள்ள அனுமதிக்க முன் வர வேண்டும். அத்துடன் பலாலி - வசாவிளான் சந்தி வரையான வீதி மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு கேப்பாபிலவு காணி விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் கடற்தொழில் அமைச்சர் முன்வைத்த நிலையில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. https://newuthayan.com/article/வலி-_வடக்கில்_காணிகள்_விடுவிக்கப்பட_வேண்டும்_-_கடற்தொழில்_அமைச்சர்__வலியுறுத்து!
  9. வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபடும் பெண்! வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி, கல்வியங்காடு, கோப்பாய், கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து செல்லும் பெண்ணொருவர், தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது எனவும் போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபடுகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண், தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடியாக பெற்று சென்றுள்ளார். பணத்தினை கொடுத்த வெளிநாட்டவர், அது தொடர்பில் தனது உறவினர்களுக்கு தெரிவித்த போதே, குறித்த பெண் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வேறு நபர்களிடமும் பணத்தினை வாங்கியுள்ளமைதெரியவந்துள்ளது. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம் வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு தெரிந்துள்ளது.. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால், விசாரணை நடவடிக்கைகளால் தான் நாட்டுக்கு திரும்ப முடியாது கால தாமதம் ஏற்படும் என கருதி முறைப்பாடு செய்யவில்லை எனவும் பொலிஸ் நிலையத்தில் மோசடி பெண் குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார் பெண்ணின் மோட்டார் சைக்கிள் இலக்கம், பெண் தொடர்பான அடையாளங்களை பொலிஸாருக்கு தெரிவித்தமையின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் அதேவேளை, வெளிநாடுகளில் இருந்து வருவோரை இலக்கு வைத்து, நன்கொடைகள், மருத்துவ உதவிகள் என கோரி வருவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் அறிவுத்தியுள்ளனர். https://newuthayan.com/article/வெளிநாட்டவர்களை_இலக்கு_வைத்து_மோசடியில்_ஈடுபடும்_பெண்!
  10. காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்களப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை போதையில் நின்ற காடையர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த முன்னாள் அதிபரொருவர் உயிரிழந்துள்ளார். சி.விசுவாசம் (வயது 63) என்ற ஓய்வுநிலை அதிபரே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகைதந்த ஒருவர் வைத்த மதுவிருந்தில் பங்கு பற்றியவர்கள், போதையின் உச்சத்தில் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியால் பௌத்த மத குருமார்கள் பயனித்த பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பூநகரி பிரதேசத்துக்குத் தனியார் வகுப்புக்குக் கற்பிக்கச் சென்று கொண்டிருந்த ஓய்வுபெற்ற அதிபர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த அதிபரை பிரதேச மக்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்றுக் காலை சிகிச்சையின்போது அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த சாவகச்சேரி பொலிஸார், சந்தேகநபர்களாக நால்வரைக் கைது செய்துள்ளனர். இன்னொருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைதுசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைதானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://newuthayan.com/article/காடையர்கள்_அடாவடி;_முன்னாள்_அதிபர்_அடித்துக்_கொலை
  11. ”வடக்கில் மட்டுமல்ல கிழக்கில் கூட பல காணிகள் விடுவிக்கப்படவில்லை” பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த சாணக்கியன் எம்.பி ஊடகங்களுக்கு கூறுகையில், நான் இவ் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் குழு உறுப்பினர் என்னும் வகையில் கலந்து கொண்டிருந்தேன் 202.2025. இக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள் என்று பலரும் கலந்து கொண்டனர். இதன்போது மட்டக்களப்பில் உள்ள பல பிரச்சனைகள் தொடர்பாக நான் பல காலமாக முன்வைத்த கோரிக்கைகளை அன்றைய தினமும் இவ் புதிய அரசிடம் எடுத்துரைத்திருந்தேன் . அதனடிப்படையில். மட்டக்களப்பில் உள்ள கையகப்படுத்தப்பட்ட இராணுவ முகாங்களான முறக்கொட்டான் சேனை, பாலையடி வட்டை, குருக்கள் மடம், காயங்கேணி, மற்றும் விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட புதூர் மக்களுக்கு சொந்தமான நிலம், தாண்டியடி துயிலும் இல்லம், அதனுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம், மக்களுக்கு வழங்கப்படவேண்டிய மற்றும் மக்களுக்கு சொந்தமான வாகரை பிரதேச அரச காணிகளில் அநேகமானவை இரானுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றது. இவை உட்பட்ட பல பொது மக்களுக்கு சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அதற்கான குழு ஒன்றினை நியமிப்பது தொடர்பில் ஆராய்வதாக உறுதி அளித்தார். அதனுடன் கடந்தகாலத்தில் திரிபோலி ஆயுத படைப்பிரிவினால் Tripoli Platoon இனால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பான சாட்சிகளை விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தேன் அதனையும் உடனடியாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார். https://www.samakalam.com/வடக்கில்-மட்டுமல்ல-கிழக/
  12. ரஷ்யா மீதான, முக்கியமாக புட்டின் மீதான வசீகரம் என்பது “சுத்தி சுத்தி அடிப்பேன்; ஏயார்ல பாய்ந்து பாய்ந்து அடிப்பேன்” என்ற கதாநாயகனின் மீதான வழிபாடு போன்றது.. தோல்வியால் துவண்ட இனத்திற்கு ஒரு கதாநாயகன் எப்போதும் தேவை! இதில் ஏன் உக்கிரேனுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கவேண்டும் என்று யாழில் பக்கம் பக்கமாக எழுதிக்கிடக்கு. அதற்கு எதிர்ப்பாகவும் பக்கம் பக்கமாகக் கருத்துக்கள் உள்ளன. இப்போது ட்ரம்ப் (ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்டவர்) பின்பற்றுவது முதலாளித்துவம், ஏகாதிபத்யம் என்பதற்குள் எல்லாம் வராது.. வெறும் ரியல் எஸ்டேட் டீல்.. ஒரு கொள்கை எல்லாம் கிடையாது.. அதிகாரம் கொடுக்கும் போதையில் திளைப்பது மட்டும்தான் ட்ரம்ப் செய்வது.. அடுத்த நாலு வருடங்களில் உலகம் எவ்வளவு காலம் பின்னோக்கி நகர்கின்றது என்று பார்ப்போம்.
  13. பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (21 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 06 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் 18 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஏராளன் நுணாவிலான் வாத்தியார் நந்தன் சுவைப்பிரியன் நீர்வேலியான் தென்னாபிரிக்கா ஈழப்பிரியன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி ரசோதரன் வசீ செம்பாட்டான் குமாரசாமி நியாயம் வாதவூரான் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே கந்தப்பு பிரபா கிருபன் இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?
  14. இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும், ரவ்ஹிட் ஹ்ரிடொயின் சதத்துடன் 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 228 ஓட்டங்களை எடுத்திருந்தது. முகமட் ஷமி 53 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி சாதரணமான வெற்றி இலக்கை சுப்மன் கில்லின் ஆட்டமிழக்காது எடுத்த சதத்துடன் 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது எல்லோரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் அனைவருக்கும் இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை):
  15. இது லொட்ரியில் நம்பர்களை சரியாகக் குறித்துவிட்டு ரிக்கெட் வாங்க மறந்த கதையாகக் கிடக்கு🤣
  16. யார் யாரைப் பார்த்து கொப்பி அடிக்கின்றார்கள் என்று எனக்குத் தெரியாதாக்கும்😂🤣😜
  17. செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார் கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். பெயர்:- இஷாரா செவ்வந்தி வயது: - 25 ஆண்டுகள் அடையாள அட்டை - 995892480 முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம. குறித்த பெண் தொடர்பான தகவல்களை கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவின் பணிப்பாளரின் அலைபேசி இலக்கமான 071 - 8591727 அல்லது பொறுப்பதிகாரியின் 071 - 8591735என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், தகவல் வழங்குவோரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/செவ்வந்தியை-கண்டுபிடிக்க-உதவி-கோரும்-பொலிஸார்/150-352334
  18. உலகில் பலர் அறம் சார்ந்து இயங்குவதில்லை.. ஆனால் நாம் அறம் எது என்று புரிந்து அதனை விட்டுக்கொடுக்கக்கூடாது. வலியவர்களும் வஞ்சகர்களும் வெல்கின்றார்கள் என்பதற்காக நாம் அறத்தை விட்டுக்கொடுக்கமுடியாது..
  19. முகமட் ஷாமி 5 விக்கெட் எடுத்திருக்கின்றார்.. அதிக விக்கெட் வீழ்த்திய எடுத்தவர் என முகமட் ஷாமியை யார் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று பார்ப்போம்😁 @தமிழ் சிறி ஐயாவுக்கு யோகம் அடிச்சிருக்கு 😃
  20. கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல் – அதிபர்கள் மீதான தாக்குதலுக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்! adminFebruary 20, 2025 கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கல்விச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீபன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலை அதிபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழந்துள்ள நிலையில் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபரும், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரொருவரும் கடந்த சனிக்கிழமை பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு வேளை பயணித்துக்கொண்டிருந்த போது தனங்கிளப்புக்கு அண்மித்த பகுதியில் நிறைபோதையில் வந்த காடையர் குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில், ஓய்வு பெற்ற அதிபர் விசுவாசம் இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ள செய்தி கல்விப்புலத்துக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் வாகனங்கள் சில ஏற்கனவே காடையர்களால் இந்த பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தற்போது அறிய முடிகின்றது. அவ்வாறாயின் இத்தகைய குற்றச் செயல்கள் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறையற்று செயற்பட்டு வந்துள்ளமை நன்கு புலனாகின்றது. இந்நிலைமை இன்று ஒரு கல்வியலாளரின் உயிர் பறிக்கப்படுமளவிற்கு சென்றுள்ளது. இது இலங்கையில்,குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் சாதாரண மக்கள் கூட பாதுகாப்பாக பயணிக்கமுடியாது என்ற நிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது. தமது கடைமைகளின் நிமித்தம் கூட சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சென்று வர முடியாத அளவுக்கு காடையர் கும்பலின் ஆதிக்கம் தலைதூக்கியிருக்கும் நிலையில், இத்தகைய சம்பவங்களை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. வடமாகாணத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றதா? அல்லது காட்டாட்சி நடைபெறுகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது. சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி ஆசிரியர்கள் பயணித்த வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதன் போது அவ்வாகனத்தில் பயணித்திருந்த ஆசிரியர்கள் தெய்வாதீனமாக தப்பித்திருந்தனர். குறித்த ஆசிரியர்களின் வாகனப் போக்குவரத்து தொடர்பாக, ஆக்கபூர்மான செயற்பாடுகள் எதனையும் செய்யாமல், வரட்டு வியாக்கியானங்கள் கூறிவரும் வடமாகாண ஆளுநர் செயலகம், ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது சட்டவிரோதமாக தாக்குல் நடத்தியோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் பின்னணியில் வடமாகாண ஆளுநரின் பக்கச்சார்பான செயற்பாடுகள் உள்ளதா? என்ற பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. இப்படியான நிலையில், பூநகரி பிரதேச பாடசாலையின் அதிபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை வெறித் தாக்குதலுக்கும், படுகொலைக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பார்களா? என்பது சந்தேகமே. தெற்கிலே நடைபெறும் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த உடனடியாக செயற்படும் அரசாங்கம், தமிழர் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத மற்றும் குற்றச்செயல்களுக்கு துணைபோய், பாரபட்சங்களை வெளிப்படுத்திவருவது புதிய விடயமல்ல. தமது கடமைகளை சரியாக ஆற்ற முடியாத அதிகாரிகள் பதவியை விட்டு விலகுமாறு அறிவுரை கூறிவரும் வடமாகாண ஆளுநர், வடமாகாணத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கும், ஆகக்குறைந்தது, கல்விச்சமூகம் தனது கடமைகளை உரிய நேரத்தில் ஆற்றுவதற்காக பாதுகாப்பாக பிரயாணத்தை மேற்கொள்வதற்காகவேனும் தனது பதவியை ஆரோக்கியமாக பயன்படுத்துகின்றாரா? என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2025/211764/
  21. புட்டின் ஒரு சர்வாதிகாரி என்பது ட்ரம்புக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் செலன்ஸ்கியை சர்வாதிகாரி என்று தெரிகின்றது. யார் சண்டையை தொடக்கியது என்பதை @ரஞ்சித் எழுதிய பதிவுகளை ட்ரம்புக்கு மொழிபெயர்த்துக் கொடுக்கவேண்டும்! சண்டையில் உக்கிரனை வெல்லமுடியாத ரஷ்யா ட்ரம்ப் மூலம் வெற்றியை இலகுவாக எடுக்கப்பார்க்கின்றது. எப்படியும் புட்டினும் ட்ரம்ப்பும் உக்கிரேனின் கனிமவளத்தைக் கொள்ளையடித்து முடிப்பார்கள்.
  22. இது புதிய களத்தின் வேலை. கலரைக் காட்ட விடுகுதில்லை🥲 எனக்கே எந்தப் பக்கத்தில் எழுதுவது என்று தெரிய நேரம் எடுத்தது! வெளுத்துவாங்கிவிட்டார்கள்🤪
  23. பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (20 பெப்) ஒரு போட்டி நடைபெறவுள்து. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND இப்போட்டியில் அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா அல்லது முட்டைகளா கிடைக்கும்?
  24. முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, வில் யங், ரொம் லதம் ஆகியோரின் சதங்களுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 60 ஓட்டங்களால் வெற்றியீட்டியது நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய 8 பேருக்கும் புள்ளிகள் இல்லை! முதலாவது போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஏராளன் 2 2 வீரப் பையன்26 2 3 சுவி 2 4 அல்வாயன் 2 5 தமிழ் சிறி 2 6 நிலாமதி 2 7 வசீ 2 8 செம்பாட்டான் 2 9 குமாரசாமி 2 10 நியாயம் 2 11 சுவைப்பிரியன் 2 12 எப்போதும் தமிழன் 2 13 புலவர் 2 14 கோஷான் சே 2 15 நீர்வேலியான் 2 16 கந்தப்பு 2 17 ஈழப்பிரியன் 0 18 ரசோதரன் 0 19 நுணாவிலான் 0 20 வாத்தியார் 0 21 நந்தன் 0 22 வாதவூரான் 0 23 பிரபா 0 24 கிருபன் 0 கருத்துக்கள மாற்றம் வர்ணங்களைக் கொண்டுவரவில்லை!
  25. 2025 வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஆசிரியர்கள் அதிருப்தி editorenglishFebruary 19, 2025 2025 ஆம் ஆண்டு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று குற்றம் சாட்டினார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 2025 வரவு செலவுத் திட்டத்தில் தற்போதுள்ள சம்பளப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்ததாகக் கூறினார். சுபோதினி குழு அறிக்கையின்படி மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு சம்பள முரண்பாடுகளைச் சரிசெய்ய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய அதேவேளையில், அரசு ஊழியர்கள் ரூ.20,000 சம்பள உயர்வு கோரிப் போராட்டங்களை நடத்தியதை அவர் நினைவுபடுத்தினார். இருப்பினும், வரவுசெலவுத் திட்டத்தின் படி, சம்பள உயர்வு மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது, இதில் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான ஒதுக்கீடுகள் இருக்காது என்பதைக் குறிக்கிறது. ரூ.7,500 கொடுப்பனவு குறைக்கப்பட்டதன் மூலம், ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் தரம் 1 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ரூ.6,225 சம்பள உயர்வு மட்டுமே கிடைக்கும். சேவை தரம் 2.1 இல் உள்ள ஆசிரியர்களுக்கு ரூ.4,056 அதிகரிப்பும், தரம் 2.2 இல் உள்ளவர்களுக்கு ரூ.2,061 மற்றும் தரம் 3.1 இல் உள்ள ஆசிரியர்களுக்கு ரூ.860 மட்டுமே கிடைக்கும். “நாங்கள் அனைவரும் ரூ.20,000 சம்பள உயர்வை எதிர்பார்த்தோம், ஆனால் சுபோதினி குழு அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட மீதமுள்ள சம்பள உயர்வில் மூன்றில் இரண்டு பங்கை செயல்படுத்துவது பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. பட்ஜெட்டில் அடிப்படை சம்பளத்தில் ரூ.15,000 உயர்வு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது,” என்று ஸ்டாலின் கூறினார். “போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது, ஆனால் இப்போது அரசாங்கத்தால் அவர்கள் கைவிடப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் வழங்கும் பதிலைப் பொறுத்தே அவர்களின் எதிர்கால முடிவுகள் அமையும் என்று அவர் மேலும் கூறினார். https://globaltamilnews.net/2025/211686/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.