Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது February 27, 2025 9:46 am ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது. ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் காசாவில் மீண்டும் போர் வெடிக்கும் என்ற அச்சம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. பிணைக் கைதிகளின் உடல்கள் தெற்கு காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நள்ளிரவில் உடல்கள் கெரம் ஷாலோமிடம் ஒப்படைக்கப்பட்டன. மேற்குக் கரை நகரமான ரமல்லாவில் இஸ்ரேல் பணயக்கைதிகளை ஒப்படைத்தது. இஸ்ரேல் கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. இந்த வழியில் இஸ்ரேல் 600 கைதிகளை விடுவித்தது. இதனிடையே, புதன்கிழமை இரவு ஹமாஸால் ஒப்படைக்கப்பட்ட நான்கு உடல்களும் டிஎன்ஏ பரிசோதனைக்காக டெல் அவிவில் உள்ள தடயவியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. முன்னதாக, கைதிகளை விடுவிப்பதில் இஸ்ரேல் தாமதப்படுத்தியது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளை எழுப்பியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கைதிகளை விடுவிக்க மறுப்பதன் மூலம் இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. கைதிகளை விடுவிக்காமல் இரண்டாம் கட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்றும் அவர்கள் கூறினர். இந்தக் கட்டத்தில்தான் மத்தியஸ்தர்கள் முன்முயற்சி எடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்தினர். https://oruvan.com/hamas-hands-over-bodies-of-four-more-hostages-to-israel/
  2. வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. அந்தவகையில் புதன்கிழமை (26) மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை ஆலயத்தில் மாலை 6மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர். இதேவேளை புதன்கிழமை (26) காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்யமுற்ப்பட்ட 8பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைதுசெய்யப்பட்டனர். அந்த செயற்பாடு பதற்றம் ஒன்றை உருவாக்கியிருந்ததுடன், பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது. https://akkinikkunchu.com/?p=314068
  3. மட்டக்களப்பு வாகரை புச்சாங்கேணியில் நடப்பது என்ன? Vhg பிப்ரவரி 26, 2025 மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் எல்லை கிராமமான கட்டுமுறிவை அண்டிய பகுதிகளில் 25 தொடக்கம் 30 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்களை வன இலாகா என கூறிக்கொண்டு அங்கு சென்ற அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். அத்தோடு, மானிடவியலுக்கு ஒவ்வாத நடைமுறைகளை அம்மக்களின் மீது திணித்து தாக்கியதையடுத்து அங்குள்ள மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத்தின் கவனத்திற்கு உடன் கொண்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (25-02-2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தபகுதி மக்களின் ஆதங்கங்களையும், குமுறல்களையும் கேட்டறிந்து கொண்டார். இது தொடர்பாக வாகரைப் பிரதேச செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து தெரிவித்துடன், பிரதேச செயலாளர் ஊடாக அந்தப் பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகருக்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கு அம்மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் பற்றி ஆய்வு செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார். மேலும் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேரடியாக தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று (25-02-2025) இரண்டு மணியளவில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதிக்குச் சென்ற வனவள இலகா பிரிவினர் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களை அச்சுறுத்தி அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அச்சுறுத்தியதோடு மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்காக தகவல்களைச் சேகரித்து சென்றுள்ளனர். அத்தோடு, அங்கு வசித்த மக்களின் குடியிருப்புகளைத் தீக்கிரையாக்கியுள்ளதுடன், அங்குள்ள மக்களையும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கேள்வியுற்று கதிரவெளியில் இருந்து சென்ற இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நியாயம் கேட்டபோது அவர்களும் மிக மோசமாக தாக்கப்பட்டதுடன் கைவிலங்கு போடப்பட்டு குற்றவாளிகளை அழைத்துச் செல்வது போன்று மிகவும் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். இந்தநிலையில், அப்பகுதி மக்களின் மனித உரிமை, மனிதாபிமானம், என்பன அப்பட்டமான இதன்போது மீறப்பட்டதையும், மனித உரிமை ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் அது சார்ந்த அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்து ஆறுதல் வழங்கியதுடன், இந்த விடயம் தொடர்பில் மக்களுடன் தானும், தமிழரசு கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து பக்கபலமாக இருப்போம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2025/02/blog-post_482.html
  4. சங்குச் சின்னத்தில் ஈ.பி.டி.பி.யும் இணையலாம்; சுரேஷ் அழைப்பு சங்கு சின்னத்தின் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடக்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரை இந்தக் கூட்டணியில் இணைய முடியும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று மேலும் தெரிவித்ததாவது: உள்ளூராட்சித் தேர்தலை வடக்கு, கிழக்கில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் நாங்கள் தற்போது கவனம் செலுத்தியுள்ளதுடன், இதற்காகப் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். பல கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்குத் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளன. இந்தக் கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணியாக அல்லாமல், தமிழ் மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் கூட்டணியாகவே அமைய வேண்டும். இன்று (நேற்று) இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் சமத்துவக் கட்சி, சனநாயக தமிழரசு கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி என்பன கலந்து கொண்டன – என்றார். https://newuthayan.com/article/சங்குச்_சின்னத்தில்_ஈ.பி.டி.பி.யும்_இணையலாம்;_சுரேஷ்_அழைப்பு
  5. யாழில் வெடித்தது மீனவர் போராட்டம் – கலகம் அடக்கும் பொலிஸார் களத்தில்! இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. யாழ்.மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தீபக மீனவ அமைப்புகள் சேர்ந்து முன்னெடுத்துவரும் குறித்த போராட்டத்தின் போது, யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்தில் மனுவொன்றை கையளித்துவிட்டு இந்திய துணை தூதரகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பங்குபற்றியுள்ளனர். “தாண்டாத தாண்டாத எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே” போன்ற கோஷங்களை எழுப்பிய நிலை கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட பேரணி இந்திய துணை தூதரகத்தை அடைந்த நிலையில், அங்கு கடும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்திலிருந்து ஐவரை மட்டும் உள்ளே அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. போராட்டக் களத்தில் கண்ணீர் புகை குண்டுகளுடன் கலகமடக்கும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். https://www.samakalam.com/யாழில்-மீனவர்-போராட்டம்/
  6. தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழைக் கட்டாயமாக்க இயலவில்லை: அன்புமணி editorenglishFebruary 27, 2025 தமிழைக் கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும் இன்று வரை அந்தச் சட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழகத்தில் தமிழை இன்னும் பயிற்று மொழியாகவோ, கட்டாயப்பாடமாகவோ கொண்டு வர முடியவில்லை. தமிழ்மொழியைக் கட்டாயப்பாடமாக்குவதில் தமிழக ஆட்சியாளர்கள் செய்த துரோகங்கள் மிக நீண்டவை. சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளிகள் தமிழைக் கட்டாய பாடமாக்கத் தேவையில்லை; அதற்குப் பதிலாகத் தமிழைக் கூடுதல் கட்டாயப்பாடமாக்கினால் போதுமானது. தமிழ்ப் பாடத்திற்கு சி.பி.எஸ்.இ உள்ளிட்ட வாரியங்கள் தேர்வு நடத்தத் தேவையில்லை; தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டமை மோசடியானது. தனியார் பள்ளிகள் எந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனவோ, அந்தப் பாடத்திட்டத்தின்படி தமிழ்ப் பாடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப் பட்டால் தான் மாணவர்கள் தமிழைப் படிப்பார்கள். மாறாக பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடம் கிடையாது; பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற தமிழ் கட்டாயம் கிடையாது; எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில், தமிழக அரசுத் தேர்வுத்துறை நடத்தும் தேர்வை பெயரளவில் எழுதினால் போதுமானது என்றால் எவரும் தமிழ் படிக்க மாட்டார்கள். இன்னொருபுறம், தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து 200-ம் ஆண்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விசாரணைக்குக் கொண்டு வரவோ அல்லது தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்கிச் சட்டம் கொண்டு வரவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம், தமிழை வெறுக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்குத் தமிழக ஆட்சியாளர்கள் செலுத்தி வரும் பதில் மரியாதை தான். இது தமிழ்த் துரோகம். தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரளம், தெலுங்கானம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இனியும் அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்வதை விடுத்து, தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/212229/
  7. சேவை ஏற்றுமதிக்கு 15% வரிவிதித்தால் அறிவு வளங்கள் நாட்டை விட்டுவெளியேறுவது நடைபெறும்: ஹர்ஷ டி சில்வா editorenglishFebruary 27, 2025 சேவை ஏற்றுமதிகள் மீதான அரசாங்கத்தின் அண்மைய‌ 15% வரிவிதிப்பு முறையை மறுபரிசீலனை செய்யக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் இணைந்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; பொருளாதார நெருக்கடியின் போது, தொலைதூர வேலைகளை நமது நாட்டிலிருந்தே இணையவழியாகச் செய்யும் வேலைகள் தான் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்ததுடன் அறிவுவளமானது நாட்டிலிருந்து வெளியேறுவதையும் தடுத்தது. இலங்கையானது டிஜிட்டல் வேலைகளுக்கான‌ சொர்க்கமாகத் தன்னை உலக முதலீடுகளுக்குச் சந்தைப்படுத்த முயற்சிக்கும் அதேநேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதென்பது முரண்பாடாகவுள்ளது. இந்த வரிவிதிப்பானது முதலீட்டாளர்களுக்குக் குழப்பமான செய்தியைச் சொல்வதுடன் எமது நாட்டின் போட்டித்தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைகின்றது. டிஜிட்டல் தொழில்முனைவோரைச் சோர்வடையச் செய்யும் இவ்வாறான வரிவிதிப்பு முறைகளைச் செயற்படுத்தும் இந்த அரசாங்கமானது எப்படி எமது தகவல் தொழினுட்பப் பணியாளர்களை வளர்க்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இவ்வாறு சேவை ஏற்றுமதிக்கு 15% வரிவிதித்தால் அறிவு வளங்கள் நாட்டை விட்டுவெளியேறுவதுடன் எமது நாட்டின் தகவல் தொழினுட்பத்துறையானது போட்டித்தன்மையை இழந்து மிகவும் பாதிப்புறும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். https://globaltamilnews.net/2025/212224/
  8. பாகிஸ்தான் தங்கள் வீட்டுக் கூரையில் ஏறி கோழி பிடிக்கும் என்று நினைத்தேன்😁 இப்படி கூமுட்டையாக இருக்கும் என்று யார் கண்டார்கள்😩
  9. பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (27 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! இப்போட்டியில் பாகிஸ்தான் தனது பெருமையை கொஞ்சம் காத்து எல்லோருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்குமா அல்லது முட்டைகளை உடைத்து எறியுமா?
  10. வேலையிடத்தில் திரும்புற பக்கம் எல்லாம் ரிவியில் கிரிக்கெட்தான் ஓடிக்கொண்டு இருந்தது. என்றாலும் கடைசி மூன்று ஓவர்களை குமிந்துநின்று பார்த்தோம்!
  11. எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, வெற்றி இலக்கை நோக்கிப் பயணித்தபோதும், ஜோ ரூட்டின் 120 ஓட்டங்களைத் தவிர பிறர் நிலைத்து ஆடாததால் இலக்கை எட்டமுடியாமல் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 317 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் 58 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய 16 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  12. சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் February 26, 2025 06. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளது. எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ’33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்’ என்று குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த சாந்தன் விடுவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் உள்ள தடுப்பு முகாமில் வைத்து நோய்வாய்ப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி காலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. www.ilakku.orgசாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் | February 26, 202506. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின்
  13. இந்தியா – இலங்கை பெற்றோலிய குழாய் இணைப்புத் திட்டம் சாத்தியமாகுமா? இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள பல்துறை பெற்றோலிய குழாய் இணைப்பு, அரசியல் ரீதியாக சாத்தியமானதாக இல்லாவிட்டாலும், பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே நிறைவேறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டபிளியூ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகளை இரு தரப்பினரும் தற்போது மதிப்பீடு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “திட்டத்தின் சாத்தியக்கூறுகளை நாங்கள் மதிப்பிடுவோம். அது சாத்தியமானால் மட்டுமே முன்னேற்றம் இடம்பெறும். அரசியல் காரணங்களுக்காக அதை முடிவு செய்ய முடியாது. இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவற்றை உள்ளடக்கிய முத்தரப்பு திட்டமாக இது முன்மொழியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஜனாதிபதி புதுடில்லிக்கு விஜயம் செய்தபோது இந்தத் திட்டம் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு ஆரம்பட்ட இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தடம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி இணைப்பின் ஒரு பகுதியாகும். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கட்ட இணைப்புக்கான திட்டமும் இதன்மூலம் சாத்தியமாகும். இதற்கிடையில், திறந்த சந்தையில் இருந்து விலைமனுக் கோரல் செயல்முறை மூலம் எரிபொருள் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தாரில் இருந்து நேரடியாக எரிபொருள் கொள்முதல் செய்வது குறித்து இலங்கை பரிசீலித்து வருகிறது. இங்குள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்துடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், அந்த நாட்டின் தொழில்நுட்பக் குழுவுடன் மற்றொரு சுற்று கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் ராஜகருணா கூறியுள்ளார். இருப்பினும், அண்மையில் ஜனாதிபதி அங்கு சென்றபோது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. https://akkinikkunchu.com/?p=313897
  14. பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடின்றி முற்றாக நீக்கவேண்டும்; அதுவே ஊடகவியலாளர் பாரதிக்கான அஞ்சலி - அரசியல்வாதிகள் பலரும் சுட்டிக்காட்டு Published By: Vishnu 26 Feb, 2025 | 02:34 AM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். அதேவேளை அச்சட்டத்தினை பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்குவது மிகமிக அவசியமாகும் என பயங்கரவாதச்சட்ட ஒழிப்பை நீண்டகாலமாகக் கோரிவரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோகணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ராஜநாயகம் பாரதிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவஞ்சலி கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் பாரதியுடனான தமது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டபோதே அவர்கள் மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தினார். அதன்படி முதலாவதாக உரையாற்றிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், 'இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கெனக் கொண்டுவரப்பட்டு, இப்போது பயங்கரவாதத்துக்குத் துணைபோகின்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாகத் துடைத்தெறிவதைத் தவிர வேறெதுவும் நாம் ஊடகவியலாளர் பாரதிக்குச் செலுத்தக்கூடிய சிறந்த அஞ்சலியாக அமையாது. தற்போதைய ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவோம் என்ற மிகமுக்கிய வாக்குறுதியை அளித்து ஆட்சிபீடமேறியவர்களாவர். ஆனால் இன்றளவிலே அவர்கள் அதனை மறுபக்கம் திருப்பி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை பெறமுடியாமல் சிறைச்சாலைகளில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பது தான் அதற்காக அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி, எழுத்தின் ஊடாகப் போராடிய பாரதிக்குச் செலுத்துகின்ற அஞ்சலியாக இருக்கும்' எனச் சுட்டிக்காட்டினார். அவரைத்தொடர்ந்து அவ்விடயத்தை ஆமோதித்துப்பேசிய தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், பயங்கரவாதத்தடைச்சட்டம் குறித்து தானும் பாரதியும் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதை நினைவுகூர்ந்தார். தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறியதாக சுட்டிக்காட்டிய அவர், அதனை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு கடந்த அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகவும், அதுவரை அச்சட்டத்தின் பிரயோகத்துக்கு இடைக்காலத்தடை விதிப்பதாகவும் கூறியிருந்த போதிலும், அவை உரியவாறு நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார். அதேவேளை நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு குறிப்பிட்டார்: 'இங்கு ரவூப் ஹக்கீமினால் முன்மொழியப்பட்டு, மனோகணேசனால் வழிமொழியப்பட்ட ஒரு விடயத்தை நானும் மீளவலியுறுத்த விரும்புகிறேன். பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும். அச்சட்டம் நீண்டகாலத்துக்கு முன்னரே நீக்கப்பட்டிருக்கவேண்டும். இச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் பாரதி ஊடகவியலாளராகப் பணிபுரிந்ததுடன், இச்சட்டத்தின்கீழ் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே வாக்குறுதியளித்ததைப்போல் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவேண்டும். அதேவேளை இச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்கவேண்டியது மிகமிக அவசியமானதாகும்' என வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/207693
  15. பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (26 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 8) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 08 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் 16 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஏராளன் நுணாவிலான் நந்தன் செம்பாட்டான் வாதவூரான் எப்போதும் தமிழன் கோஷான் சே நீர்வேலியான் இங்கிலாந்து ஈழப்பிரியன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி ரசோதரன் வசீ வாத்தியார் குமாரசாமி நியாயம் சுவைப்பிரியன் புலவர் கந்தப்பு பிரபா கிருபன் இப்போட்டியில் யார் புள்ளிகளை எடுப்பார்கள்?
  16. அவுஸ்திரேலியாவுக்கும் தென்னாபிரிக்காவும் இடையேயான ஏழாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது. எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை): தொடர்ந்தும் @alvayan முதல்வராக நிலைக்கின்றார்!
  17. மழை குழப்பியதால் இரண்டில் ஒன்று வெளியே போகும் ஏனெனில் இங்கிலாந்து தென்னாபிரிக்காவையும், ஆப்கானிச்தானையும் வெல்லும்💪🦾 அல்வாயனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு! கீழே இறங்காமல் சறுக்குமரத்தில் பணமுடியை எடுக்கப்பார்க்கின்றார்🤣
  18. அவல நாயகன் sudumanal அமெரிக்காவின் நரித்தனம் உக்ரைனில் அரங்கேறுகிறது. 2000 களிலிருந்து -குறிப்பாக 2008 இலிருந்து- ரசியாவை சீண்டியபடி இருந்த அமெரிக்கா ரசியா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சூழலை படிப்படியாக உருவாக்கி உச்ச நிலையில் கொணர்ந்து விட்டது. ரசியா ஆக்கிரமித்தது. நடுநிலையாக இருந்த உக்ரைனை நேற்றோ அமைப்பில் சேர்க்க வேண்டும் என ஜோர்ஜ் புஷ் 2008 இல் றுமேனியாவில் நடந்த நேற்றோ மாநாட்டில் முன்மொழிந்தார். உக்ரைன் மறுத்தது. ஜேர்மனியும் பிரான்ஸ் உம் இது ரசியாவுடனான போரை உருவாக்கும் ஆபத்தை கொண்டது என எச்சரித்தன. 2014 இல் அமெரிக்கா உக்ரைன் ஆட்சி கவிழ்ப்பை செய்து தனக்கு தலையாட்டும் அரசை நிறுவியது. பின்னர் செலன்ஸ்கி உக்ரைன் அதிபராக ஜனநாக முறையில் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டார். அவரும் அமெரிக்காவின் எடுபிடியாக இருந்தார். நேற்றோவில் உக்ரைனை சேர்க்கும் முயற்சியை -மக்கள் விருப்பத்தை அறிவதற்கான வாக்கெடுப்பு இன்றி- தன்னிச்சையாக முடிவுசெய்தார். உக்ரைன் நடுநிலையாக இருக்கவேண்டும் எனவும், நேற்றோ தனது எல்லைவரை வருவது ரசியாவுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும் எனவும் திரும்ப திரும்ப புட்டின் வலியுறுத்தினார். புட்டினின் இந்த சிவப்பு எச்சரிக்கை கோட்டை உக்ரைன் தாண்டியதால் ரசியா உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்தது. உக்ரைன் இதை எதிர்பார்து இருக்கவில்லை. போர் தொடங்கி 7 நாளின் பின் செலன்ஸ்கி தாம் நேற்றோவில் சேர மாட்டோம் நடுநிலையாக இருப்போம் என அறிவித்து ரசியாவுடனான (இஸ்தான்புல்) பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். உடனே அமெரிக்காவும் பிரித்தானியாவும் செலன்ஸ்கியை பேச்சுவார்த்தை மேசையைவிட்டு வெளியேறுமாறும், தாம் போருக்கு உதவி செய்வதாகவும் கூறி உக்ரைனை அழிவுக்குள் தள்ளினர். இவ்வாறாக இந்தப் போரை கனடா ஐரோப்பா சகிதம் 3 வருடமாக நடக்கவிட்டு நாட்டை நாசமாக்கி மக்களை மரணிக்கவிட்டு உக்ரைனை தமது நலன் சார்ந்து பலிக்கடா ஆக்கினர். இப்போ செலன்கி சர்வாதிகாரி எனவும் அவர்தான் இந்த போருக்கு முழுக் காரணம் எனவும் ட்றம்ப் வாய்கூசாமல் பேசுகிறார். இனி தான் உதவிசெய்ய மாட்டேன் எனவும் இதுவரை தாம் செய்த உதவி 450 பில்லியனுக்கான திரும்பச் செலுத்தலாக உக்ரைன் நாட்டின் கனிமவளத்தில் 50 வீதம் தமக்கு சொந்தமாகும் என ஒரு எதேச்சாதிகார ஒப்பந்தம் ஒன்றிற்கு செலன்ஸ்கி கையெழுத்திட வேண்டும் என்றும் ட்றம்ப் மிரட்டுகிறார். (450 பில்லியன் என்பது பொய் எனவும் உண்மையில் 100 பில்லியன் எனவும் சொல்லப்படுகிறது).செலன்ஸ்கி உடன்படாத படத்தில் உக்ரைனில் இன்னொரு ஆட்சி கவிழ்ப்பை செய்து அமெரிக்கா தனது இலக்கை சாத்தியமாக்கும் என ஊகிக்க இடமுண்டு. செலன்ஸ்கி ஒரு தேர்ந்த அரசியல்வாதி அல்ல என்பதாலும் போருக்கு வழங்கப்பட்ட உதவிகளில் பெரும் ஊழல் நடந்திருப்பதாலும் செலன்ஸ்கி அமெரிக்க கொள்ளைக்கு உடன்பட நேரலாம். அமெரிக்கா களவெடுக்க இருப்பது போக மிகுதி வளத்தை களவெடுக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரு பகுதியும் “சமாதானப்படை” அல்லது “உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படை” என்ற பெயரில் உக்ரைனுக்குள் போக ஆயத்தமாகின்றனர். இதுதான் மேற்குலகின் மேக்அப் ஜனநாயகம். சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதி மேற்குலகம் உக்ரைனை நாசமாக்கிய வரலாறு இது. வண்டியை ஓட்டிய அமெரிக்கா இப்போது ஐரோப்பாவை கழற்றி விட்ட பின்னும், ஐரோப்பா இப் போரை இல்லாமலாக்கி சமாதான வழியில் உக்ரைனை மீட்க தயாரில்லை. அவர்கள் உக்ரைனின் கோவணத்தையும் உருவ தயாராகின்றனர். ஐரோப்பாவை அமெரிக்காவின்றி சுயாதீனமான வண்டியாக ஓடவைத்து காட்டும் ஆரம்பப் புள்ளியை நலிந்துபோன உக்ரைனிலிருந்து தொடங்கிக் காட்டும் கங்கணத்தோடு நிற்கிறார்களோ என்று இன்னொரு பக்கத்திலும் யோசிக்க வேண்டியிருக்கிறது. உக்ரைனுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நேரடி போர் அல்ல இது என்பதை -நேற்றோ குடும்பத்தின் பெரியண்ணனாக இருக்கும்- அமெரிக்காவின் மிரட்டல்களும், உக்ரைனை புறம்தள்ளி ட்றம்ப்- புட்டின் பேச்சுவார்த்தை நடைபெறுவதும் தெளிவாக நிரூபிக்கிறது. இந்த பேச்சுவார்த்தை அணுகுமுறையில் ட்றம் புட்டின் இருவருமே தவறிழைக்கிறார்கள். இதை எதன் பெயரிலும் நியாயப்படுத்த முடியாது. செலன்ஸ்கி ஒரு அவல நாயகனாக தோற்றமளிக்கிறார். பாவம் உக்ரைன் மக்கள்! https://sudumanal.com/2025/02/24/அவல-நாயகன்/#more-7071
  19. டிராகன் : விமர்சனம்! 22 Feb 2025, 10:56 AM இரண்டரை மணி நேரம் இடையறாத ‘எண்டர்டெயின்மெண்ட்’! ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் என்ன செய்ய வேண்டும்? ‘ஜாலியான’ திரையனுபவத்தைத் தர வேண்டும். அதேநேரத்தில், சமூகத்திற்குத் தேவையற்ற விஷயங்களைக் கிஞ்சித்தும் சொல்லிவிடக் கூடாது. ‘என்ன பாஸ், பூமர் மாதிரி பேசுறீங்க’ என்றொலிக்கும் ‘மைண்ட்வாய்ஸ்கள்’ கேட்கிறது. மேற்சொன்ன இரண்டையும் ஒன்றிணைத்து, சிறப்பானதொரு ‘மெசேஜ்’ உடன் சீராக நகர்கிற ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தைத் தர முடியுமா? ‘முடியும்’ என்ற நம்பிக்கை மிகுதியுடன் ‘டிராகன்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. ‘ஓ மை கடவுளே’ படத்தை இதற்கு முன் இவர் இயக்கியிருக்கிறார். அதுவே, இவரால் அப்படியொரு முயற்சியில் வெற்றியைப் பெற்றிட முடியும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது. ’லவ் டுடே’ இயக்குனர் கம் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், காயாடு லோஹர், ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன், விஜே சித்து, அர்ஷத்கான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார். ‘டிராகன்’ படம் ‘பீல்குட்’ அனுபவத்தைத் தருகிறதா? யார் இந்த ‘டிராகன்’? தனபால் ராகவன் எனும் டி.ராகவன் பள்ளியில் நல்லபிள்ளையாகத் திகழ்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று, நல்லதொரு கல்லூரியில் பொறியியல் படிக்க இடமும் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அதே சூட்டோடு தனது மனதுக்குப் பிடித்த தோழியிடம் காதலைச் சொல்கிறார். அவரோ, ‘உன்னை மாதிரி நல்ல பையன்லாம் எனக்கு செட் ஆகாது; அவனைத்தான் பிடிக்கும்’ என்று அங்கிருக்கும் ‘ரக்டு பாய்’ ஒருவரைக் கை காண்பிக்கிறார். அவ்வளவுதான். அந்த நொடி முதல் ‘பேட் பாய்’ ஆகும் உத்தேசத்தோடு செயல்படத் தொடங்குகிறார் டி.ராகவன். ஆங்கிலத்தில் அவரது பெயரில் உள்ள ‘ஏ வி ஏ’ எழுத்துகளை எடுத்துவிட்டு ‘ஓ’ எனும் எழுத்தைச் சேர்த்து அவருக்கு ‘டிராகன்’ என்று புதிய பெயரைச் சூட்டுகிறார் நண்பன் அன்பு (விஜே சித்து). ஏஜிஎஸ் பொறியியல் கல்லூரியில் (?!) படிக்கச் செல்லும் ராகவன், அங்கு ’டிராகன்’ ஆக உருவெடுக்கிறார். இல்லாத சேட்டைகளை எல்லாம் கற்றுக்கொண்டு, அவற்றைச் செயல்படுத்தி 48 அரியர்களுடன் வெளியேறுகிறார். காதலி கீர்த்தி (அனுபமா), உடனிருக்கும் நண்பர்கள் வற்புறுத்தியும் அவர் கேட்பதாக இல்லை. இரண்டாண்டுகள் கழித்து, ஒருநாள் பொழுது விடுகிறது. வேலைக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் (ஜார்ஜ் மரியான், இந்துமதி) சொல்லிவிட்டு, நண்பர்களின் பிளாட்டுக்கு சென்று பகல் முழுக்க டிவி பார்க்கிறார். மாலை ஆனதும் நண்பர்கள் சிலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வந்து, சம்பளம் வாங்கியதாகச் சொல்லி தந்தையிடம் கொடுக்கிறார். ‘அதற்கு இதற்கு’ என்று சொல்லி அந்தப் பணத்தைத் திரும்ப வாங்குவதோடு, தந்தையின் சம்பளத்தில் இருந்து கொஞ்சம் பணத்தைச் செலவுக்குப் பெற்றுக்கொள்கிறார். இப்பேர்ப்பட்ட டிராகன் தனது ’பேட்பாய்’தனத்தை மூட்டை கட்டி வைக்கிற சூழ்நிலை ஒன்று உருவாகிறது. ‘நீயெல்லாம் கல்யாணத்துக்கு சரிப்பட்டு வரமாட்டே’ என்று சொல்லிவிட்டு ‘பை’ சொல்லிவிடுகிறார் காதலி கீர்த்தி. கோபாவேசம் உச்சத்திற்கு ஏற, அவருக்கு கணவராக வரப்போகிறவரை விட ஒரு ரூபாய் அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டுகிறார். கீர்த்தியைக் கல்யாணம் செய்பவரின் சம்பளம் ஒரு லட்சத்து இருபதாயிரம். இந்த தகவலைக் கேட்டதுமே நண்பர்கள் பதைபதைத்துப் போகின்றனர். அப்போது, கிரிக்கெட் விளையாட்டின்போது அறிமுகமாகும் ஒரு நபர் (அஸ்வத் மாரிமுத்து) மூலமாக ஒரு கன்சல்டன்ஸி பற்றி அறிகிறார் ராகவன். பெற்றோரிடம் பொய் சொல்லி பத்து லட்சம் ரூபாய் வாங்கி வந்து அவர்களிடம் கொடுக்கிறார். கல்லூரி முடித்தது போன்று பொய்யாகச் சான்றிதழ்களை தயார் செய்து, வேறொரு நபரின் உதவியுடன் நேர்காணலில் பங்கேற்று, ஒரு அமெரிக்க ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். ஆனால், அதில் சேர்ந்ததும் வேலைகளைக் கற்றுக்கொண்டு திறம்பட உழைக்கிறார். மூன்றாண்டுகள் கழித்து அவரது சம்பளம் மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாயைத் தொடுகிறது. இஎம்ஐ மூலமாக புதிய வீடு, கார் என்றிருக்கும் ராகவனுக்கு ஒரு பெரிய தொழிலதிபர் (கே.எஸ்.ரவிக்குமார்) தனது பெண் பல்லவியை (காயாடு லோஹர்) கல்யாணம் செய்து தர முன்வருகிறார். இந்த நிலையில், ராகவன் பொய் சொல்லி ஏமாற்றி வேலைக்குச் சேர்ந்தது ஒருவருக்குத் தெரிய வருகிறது. அவர் வேறு யாருமல்ல. ராகவன் படித்த கல்லூரியின் பிரின்சிபல் மயில்வாகனன் (மிஷ்கின்). கடைசி செமஸ்டரில் அவர் முகத்தில் தனது ஐடி கார்டை விசிறியெறிந்துவிட்டு வந்தவர் ராகவன். அவ்வளவுதான். எந்த ரகசியத்தைத் தன்னைச் சார்ந்தவர்கள் அறியக்கூடாது என்று ராகவன் நினைத்தாரோ, அது உடையப் போகிறது. அதன்பிறகு என்னவானது? மயில்வாகனன் என்ன செய்தார்? அதனை ராகவன் எப்படி எதிர்கொண்டார் என்று சொல்கிறது ‘டிராகன்’ படத்தின் மீதி. உண்மையைச் சொன்னால், இதுவும் ‘சதுரங்க வேட்டை’ வகையறா கதைதான். ஆனால், ‘அறம் இல்லாததைச் செய்தால் வாழ்க்கை என்னவாகும்’ என்ற கருத்தைச் சொன்ன வகையில் கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. ’சூது கவ்வும்’ திசை நோக்கிய திரைக்கதையின் முடிவில் ‘தர்மம் மறுபடி வெல்லும்’ என்று அவர் சொல்லியிருக்கிறாரா? அதனை அறிய விரும்புபவர்கள் இந்தப் படத்தைத் தாராளமாகக் காணலாம். போலவே, சுமார் இரண்டரை மணி நேரம் இடையறாது, இமைக்க மறந்து தியேட்டரில் உயிர்ப்போடு ஒரு திரைப்படத்தைக் காண வேண்டுமே என்பவர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது இப்படம். அந்த அளவுக்கு இதில் ‘எண்டர்டெயின்மெண்ட்’ அம்சங்கள் எல்லா தரப்புக்கும் ஏற்ற வகையில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன. ‘பீல்குட்’ அனுபவம்! இந்த படத்தில் நடித்த அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பைத் தந்திருக்கின்றனர். குறிப்பாக பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், ஜார்ஜ் மரியான், இந்துமதி மணிகண்டன், மிஷ்கின் மற்றும் அர்ஷத்கான் நடிப்பு அபாரம். ‘ஜென்ஸீ’ தலைமுறை பாஷையில் சொல்ல வேண்டுமானால் ‘வேற லெவல்’. காயாடு லோஹர் கவர்ச்சிப்பதுமையாக வந்து போயிருக்கிறார். கொஞ்சமாக நடிக்கவும் செய்திருக்கிறார். அது, அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்றுத் தரக்கூடும். இவர்கள் தவிர்த்து கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், விஜே சித்து, ரவீந்தர், பி.எல்.தேனப்பன், சுஜாதா பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிராகன்’ படத்தின் மிகப்பெரிய சிறப்பு, தொழில்நுட்பக் கலைஞர்களை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தந்திருக்கும் செறிவு மிகுந்த உள்ளடக்கம். அது, இப்படத்தை அடுத்தடுத்து பல முறை காண வேண்டும் என்ற உத்வேகத்தைத் தூண்டிவிடுகிறது. ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ வரவழைக்கும் அளவுக்குச் சிறப்பான உள்ளடக்கத்தைத் தருவது சாதாரண விஷயமல்ல. அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, படத்தொகுப்பாளர் லியோன் ஜேம்ஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் வி.செல்வா, சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் விக்கி மற்றும் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் ஜேடி, ஒலிக்கலவையைக் கையாண்டிருக்கும் எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், டிஐ, விஎஃப்எக்ஸ், ஆடை வடிவமைப்பில் பங்கேற்றவர்கள் என்று பலரது உழைப்பைச் சிறப்பாகத் திரையில் மிளிரச் செய்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, லியோன் ஜேம்ஸ் தந்திருக்கும் பின்னணி இசை இப்படத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. கல்லூரி மாணவ மாணவியர் கரகோஷம் எழுப்பும்போது ‘பனைமரத்துல வவ்வாலா.. ..க்கே சவாலா..’ என்று குறிப்பிட்ட கல்லூரியை, அதில் பயில்பவரைச் சொல்வது வழக்கம். அது போன்ற முழக்கங்களை வெவ்வேறு சூழல்களைக் கொண்ட காட்சிகளில் புகுத்தி ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’ தந்திருக்கிறார் லியோன். ஆரவாரமிக்க காட்சிகளில் மட்டுமல்லாமல் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிற இடங்களில் மயிலிறகால் வருடுவது போன்ற இசையைத் தந்திருக்கிறார். இனி அவரை தெலுங்கு, இந்தி, மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் முழுதாகக் கொத்திக்கொண்டு போனால் ஆச்சர்யப்படத் தேவையில்லை. ‘டிராகன்’னில் லியோன் தந்திருக்கும் பாடல்களில் ’வழித்துணையே’ சட்டென்று மனதோடு ஒட்டிக்கொள்ளும் ரகம். அது போக ‘ஏண்டி விட்டுப்போன’, ’இட்ஸ் ரைஸ் ஆப் எ டிராகன்’, ’மாட்டிக்கினாரு ஒர்த்தரு’ உள்ளிட்ட பாடல்களும் நம்மைத் திரைப்படத்திற்குள் இழுத்துக் கொள்கின்றன. சுமார் இரண்டே கால் மணி நேரம் இளசுகளின் ஆட்டம் என்றால், கடைசி இருபது நிமிடங்கள் மட்டும் பெரியவர்கள் ‘இது எங்களுக்கான பகுதி’ என்று காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் அளவுக்கு நெகிழ வைக்கிறது ‘டிராகன்’. முக்கியமாக, அறத்தின் வழி நடப்பவர்கள் உண்மையில் தோற்றவர்களா, வெற்றி பெற்றவர்களா என்று சொல்லியிருக்கிறது. அதனைப் பாடமாகச் சொல்லித்தராமல் ‘படமாக’ உணர வைப்பதுதான் ‘டிராகன்’னின் வெற்றி. இதில் பிரதீப் ரங்கநாதன், அவருடன் வருபவர்கள், அர்ஷத் கான் உள்ளிட்ட சிலர் ஏற்று நடித்த பாத்திரங்கள் ஆபாசமாக, கொச்சையாகப் பேசுகிற அல்லது அப்படியான அர்த்தம் தொனிக்கிற வார்த்தைகளைப் பாதியில் முழுங்குகிற இடங்கள் வசனங்களில் இடம்பெற்றுள்ளன. அது போக காயாடு லோஹரின் கவர்ச்சியும் கொஞ்சம் ‘ஏ’ ரகம். இது போக, ’பள்ளி யூனிபார்மில் இருக்கும்போதே தங்கப்பதக்கமும் வாங்கிக்கொண்டு ஒரு கல்லூரியில் பிளேஸ்மெண்டும் கிடைக்க வழி இருக்கிறதா’ என்று லாஜிக் சார்ந்த சில கேள்விகளையும் எழுப்புகின்றன இதில் வரும் சில காட்சிகள். மேற்சொன்ன விஷயங்களைத் தவிர்த்திருந்தால், ‘டிராகன்’ ஒரு முழுமையான, சிறப்பான ‘பீல்குட்’ திரைப்படமாக, குடும்பச் சித்திரமாக இருந்திருக்கும். ‘பூமர் மாதிரி பேசாதீங்க, புஷ்பா மாதிரி படங்களையே குடும்பத்தோடு பார்க்கறப்போ இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்’ என்று சிலர் சொல்லக்கூடும். அவ்வாறு சொல்லத் தயாராக இருந்தால், ‘டிராகன்’ குழந்தைகளையும் பெரியவர்களையும் அழைத்துச் சென்று குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படம் தான். இப்படிப்பட்ட திரையனுபவத்தைப் பெறத்தான் எத்தனை காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது..! https://minnambalam.com/cinema/pradheep-dragon-movie-review/
  20. தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு February 25, 2025 1:05 pm அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் செயல்கள் மொழிப்போருக்கு வித்திடும் வகையில் உள்ளது. அதற்கு தமிழ்நாடு அரசு தயாரக உள்ளது. நீட், நிதிகுறைப்பு தொடர்பாக ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் பதில் இல்லை. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கியிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் கிட்டத்தட்ட 8 தொகுதிகளை குறைக்க நினைக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியா வஞ்சிக்கப்படுகிறது. நீட் மும்மொழிக்கொள்கை, உள்ளிட்ட பிரச்னைகள் அனைத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகளவில் இருந்தால் தான் குரல் கொடுக்க முடியும். தொகுதிகள் குறைக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். ஒட்டுமொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தமிழ்நாட்டிற்கு தான் பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் கூட உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மும்மொழிக்கொள்கை மற்றும் நீட் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனவும், அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும்.” என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். https://oruvan.com/all-parties-should-unite-to-protect-tamil-nadus-rights-stalin-calls/
  21. ரெலோவுக்கு அழைப்பு விடுத்த - தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் Vhg பிப்ரவரி 25, 2025 எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) கலந்துரையாடலுக்கு வருமாறு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற அமர்வுகள் இடம் பெறுவதால் தான் கொழும்பில் நிற்பதாகவும் குறித்த திகதி ஒன்றில் கலந்துரையாடலை நடத்தலாம் எனவும் பதில் வழங்கியுள்ளார். இந்த கலந்துரையாடலானது இவ்வார இறுதியில் இடம்பெற உள்ள நிலையில் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் கட்சிகளும் இணைந்து கலந்துரையாடலை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.battinatham.com/2025/02/blog-post_257.html
  22. இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சை ஹமாஸ் நிறுத்தியதால் காசாவில் மீண்டும் போர் பதற்றம் மேற்குக் கரைக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் நுழைவு Gayan AbeykoonFebruary 25, 2025 இஸ்ரேல் ஒத்தி வைத்திருக்கும் 600க்கும் அதிகமான பலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் வரை இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பு அறிவித்திருக்கும் நிலையில் காசாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 20 ஆண்டுகளில் முதல் முறையாக இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்திருக்கும் சூழலில் அங்கு வன்முறை அதிகரித்துள்ளது. காசாவில் அமுலில் உள்ள போர் நிறுத்தத்தில் கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பு ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த நிலையில் அவர்களுக்கு பகரமாக இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டிய 620 பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதையே இஸ்ரேல் ஒத்திவைத்துள்ளது. வாராந்தம் இடம்பெறும் பணயக்கைதிகளின் விடுதலையின்போது மேடை அமைத்து நடத்தப்படும் நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலையின்போது இவ்வாறான நிகழ்வு இடம்பெறுவதில்லை என்பது உறுதி செய்யப்படும் வரை பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதை இடைநிறுத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் கடந்த ஞாயிறன்று (23) அறிவித்தது. போர் நிறுத்த உடன்படிக்கையின் முதல் கட்டம் எதிர்வரும் மார்ச் ஆரம்பத்தில் நிறைவடையவுள்ள நிலையில், இரண்டாம் கட்டத்திற்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பிக்காத சூழலிலேயே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படும் வரை இஸ்ரேலுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று ஹமாஸ் தலைவர் ஒருவரான மஹ்மூத் மர்தாவி அறிவித்துள்ளார். தவிர, போர் நிறுத்த உடன்படிக்கையின் விதிகளை கடைப்பிடிக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கவும் மத்தியஸ்த நாடுகளான எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இந்தக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை இஸ்ரேலின் எந்த நிபந்தனைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதை எகிப்து நிராகரித்திருப்பதாக இந்தப் பேச்சுவார்த்தையுடன் தொடர்புட்ட அதிகாரி ஒருவர் ஏ.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். பலஸ்தீனர்களின் விடுதலையை எதிர்பார்த்து காசாவின் கான் யூனிஸ் நகரிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லா நகரிலும் குளிரான காலநிலைக்கு மத்தியில் பல மணி நேரமாக காத்து நிற்கின்றனர். ‘இது கடினமாக உள்ளது’ என்று 20 ஆண்டுகள் இஸ்ரேலிய சிறையில் இருக்கும் தனது சகோதரனின் விடுதலைக்காக காத்திருக்கும் ஹசன் யாசீன் குறிப்பிட்டுள்ளார். சகோதரனுடன் இணையும் எதிர்பார்ப்புடன் அவர் ரமல்லா நகரில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் காத்திருக்கிறார். 21 ஆண்டுகளின் பின்னர் தனது கணவரின் விடுதலையை எதிர்பார்த்து ஐதா அலி டரக்மே தூபாஸில் இருந்த ரமல்லா நகரை வந்தடைந்தபோதும் அவர் எதிர்பார்த்தது போல் விடுதலை இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். காசாவில் 15 மாதங்கள் நீடித்த போரில் 48,000இற்கு அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே கடந்த ஜனவரி 19 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. போர் நிறுத்த காலத்தில் இதுவரை 25 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு பதிலாக நூற்றுக்கணக்கான பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) இராணுவ நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய நெதன்யாகு, ‘எந்த நேரத்திலும் உக்கிர மோதலை ஆரம்பிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்’ என்று எச்சரித்துள்ளார். மறுபுறம் மேற்குக் கரையிலும் இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த படை நடவடிக்கையின் அங்கமாக 20 ஆண்டுகளில் முதல் முறையாக மேற்குக் கரையில் இஸ்ரேலிய டாங்கிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஜெனின் நகர் மற்றும் அதன் அகதி முகாமில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 25க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு வீடுகள், வீதிகள் என உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஜெனின் அகதி முகாமில் இருக்கும் 120 வீடுகளை இஸ்ரேலியப் படை முற்றாக அழித்திருப்பதோடு மேலும் பல வீடுகள் பகுதி அளவு சேதமாக்கப்பட்டிருப்பதாக ஜெனின் மாநகர சபை தெரிவித்துள்ளது. இங்கு இடம்பெற்று வரும் சுற்றிவளைப்புகளில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த படை நடவடிக்கைகளால் மேற்குக் கரையின் வடக்கே உள்ள அகதி முகாம்களில் இருந்து 40,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2025/02/25/world/115601/இரண்டாம்-கட்ட-போர்-நிறுத/
  23. உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்து ஐநாவில் இரண்டு தீர்மானங்கள் - அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவு 25 Feb, 2025 | 10:16 AM உக்ரைன் மீது ரஸ்யா போரை ஆரம்பித்து மூன்று வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பின் போது அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. உக்ரைனின் ஆள்புல ஒருமைப்பாட்டை ரஸ்யா மீறியுள்ளதை கண்டிக்கும் விதத்தில் ஐக்கியநாடுகள் பொதுச்சபை கொண்டுவந்த தீர்மானத்திற்கு ரஸ்யாவுடன் அமெரிக்காவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.இந்த தீர்மானத்தை பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது. இதன் பின்னர் உக்ரைன் மோதலிற்கு முடிவை காணவேண்டும் என தெரிவிக்கும் ஆனால் ரஸ்யாவை கண்டிக்காத ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ரஸ்யாவும் அமெரிக்காவும் ஆதரவளித்துள்ளன. பாதுகாப்பு சபையின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை அமெரிக்காவின் இரண்டுநெருங்கிய சகாக்களான பிரிட்டனும் பிரான்சும் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/207592
  24. சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல - வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் ஜனாதிபதி Published By: Rajeeban 25 Feb, 2025 | 11:41 AM சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்கள் அவசியம் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நானோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியோ பலவீனமான சமாதானத்தை விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவும் அதன் ஜனாதிபதியும் பிரான்சின் சிறந்த நண்பர்கள் என தெரிவித்துள்ளார். உக்ரைனை பாதுகாக்கும் விடயத்தில் ஐரோப்பா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி உக்ரைனின் பாதுகாப்பில் ஐரோப்பா 128 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது ஏனென்றால் ஐரோப்பாவின் கூட்டு பாதுகாப்பின் முன்னணியில் உக்ரைன் உள்ளது என தெரிவித்துள்ளார். உக்ரைன் மக்களின் பெரும் துணிச்சலை நான் போற்றுகின்றேன் பாராட்டுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் வலிமை மிக்கவர்களின் விருப்பத்தை திணிக்க கூடிய,சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளை மீறக்கூடிய உலகில் வாழ்வதற்கு எவரும் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/207605
  25. சிறீதரன், கஜேந்திரகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெரமுன கோரிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிறீதரன் ஆகியோர், தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அந்த விகாரை உடைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டில் இன்று இனவாதத்தைப் பரப்புவது யார்? தேவநம்பியதீசன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு முன்னால் வந்து சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் போராட்டம் நடத்துகின்றனர். அதுமட்டுமல்ல விகாரை இடிக்கப்படும் எனவும் கூறுகின்றனர். இது இனவாதத்தை தூண்டும் செயல் இல்லையா? அவர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை என்ன? யாழ்ப்பாணத்துக்கு சென்று, மக்களை அரவணைத்துக்கொண்டு இனவாதத்தை இடமில்லை என ஜனாதிபதி அறிவிப்பு விடுத்தார். ஆனால் அங்குள்ளவர்களோ இன்று இனவாதத்தைத் தூண்டுகின்றார். அதேபோல யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, கறுப்பு கொடி ஏற்றியுள்ளனர். இது இனவாத செயல் இல்லையா? அரசாங்கம் உண்மையில் இவாதத்துக்கு எதிராகச் செயற்படுகின்றது என்றால், இத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார். https://newuthayan.com/article/சிறீதரன்,_கஜேந்திரகுமார்_மீது_நடவடிக்கை_எடுக்க_வேண்டும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.