Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தேர்தல் ஆண்டில் தையிட்டி விகாரை - நிலாந்தன் அரசியல் சமூகச் செயற்பாட்டாளரான செல்வின் அண்மையில் சொன்னார், பலாலியில் தரையிறங்கும் ஒரு விமானத்தின் பருந்துப் பார்வையில் முதலில் தெரியப் போவது தையிட்டி விகாரைதான். பகலில் சூரிய ஒளியிலும் இரவில் இருளின் பின்னணியில் மின்னொளியில் முழிப்பாகத் தெரியப்போவதும் விகாரையாகத்தான் இருக்கும்.எனவே பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கும் ஒரு விமானப் பயணிக்கு யாழ்ப்பாணத்தின் தரை தோற்றத்தில் முதலில் முழிப்பாகத் தெரியபோவது தையிட்டித் தாதுகோபமா ? தையிட்டியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதகல் சம்பில் துறை ஏற்கனவே ஜம்புகோளப் பட்டினமாக பெயர் மாற்றப்பட்டு சிங்கள பவுத்த மயப்படுத்தப்பட்டு விட்டது.அங்கே ஒரு பெரிய விருந்தினர் விடுதி உண்டு. அது யுத்த வெற்றிவாதத்தின் சுற்றுலாவிகளாக வரும் சிங்கள பௌத்த பயணிகளைக் கவரும் நோக்கிலானது.அதையும் படைத்தரப்பே பரிபாலித்து வருகிறது.அங்கேயும் தனியார் காணிகள் பறிக்கப்பட்டிருப்பதாக குற்றச் சாட்டுக்கள் உண்டு. இப்படிப்பட்டதோர் நிலப்பறிப்பு மற்றும் சிங்கள பௌத்த மயமாக்கற் பின்னணியில் தையிட்டி விகாரையை விட்டுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்குமா ? அண்மையில் உயிர் நீத்த ஊடகவியலாளராகிய பாரதியின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த கொழும்பை மையமாகக் கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் பின்வருமாறு சொன்னார்,”தையிட்டி விகாரையின் மையப் பகுதி அதாவது தாதுகோபம் அமைந்திருக்கும் காணி ஒரு மலேசிய ஓய்வூதியருக்குரியது, அவருடைய உறவினராகிய ஒரு பெண் மலேசியாவில் வசிக்கிறார்,அவர் சில ஆண்டுகளுக்கு முன் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அவரைச் சந்தித்து அது தொடர்பாக உரையாடியிருக்கிறார்.அதன் பின் அவர் அப்போதிருந்த தளபதி சவேந்திர சில்வாவையும் சந்தித்ததாகத் தகவல் உண்டு” என்று. இந்த விடயத்தை நான்,அண்மையில் யாழ்.திண்ணை விடுதியில் நடந்த ஐநாவின் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட சுமந்திரனைக் கண்ட பொழுது கேட்டேன்.அவர் அத்தகவல்கள் உண்மையானவை என்று சொன்னார்.அந்தப் பெண் கிட்டத்தட்ட 80 வயதைக் கடந்தவர் என்று கூறப்படுகிறது.அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார் அல்லது அவர் இருக்கிறாரா இல்லையா போன்ற விவரங்கள் சுமந்திரனுக்குத் தெரியவில்லை. ஆனால்,காணி உரிமையாளர் வெளிநாட்டில் என்பது உண்மையான தகவல் அல்ல என்று சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சசீவன் கூறுகிறார்.அப்போதிருந்த தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தலைவர் இது தொடர்பில் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை என்றும், விகாரை கட்டப்பட்டதற்கு அவரும் பொறுப்பு என்று சசீவன் குற்றஞ் சாட்டுகிறார். காணி உரிமையாளர் மலேசியாவில் என்று கூறப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் வேறுவிதமாகப் பார்க்கின்றன. தையிட்டிப் போராட்டத்தின் எழுச்சியை திசைதிருப்பும் நோக்கத்தைக் கொண்ட தகவல்கள் இவை என்று அவர்கள் கருதக்கூடும். அவர்கள் தையிட்டி விகாரையை ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அதை சட்டரீதியாக மட்டும் அணுகக்கூடாது. அதை ஏன் தனிய சட்ட ரீதியாக மட்டும் அணுகக்கூடாது? ஏனென்றால் சட்டவிரோதமானது பிழையானது என்றால் சட்ட ரீதியானது சரியானது என்பதே தர்க்கம். சட்ட ரீதியானது சரியானது என்றால் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் சட்டக் கட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்பலாமா? இல்லை. தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பின் கருவிகளில் சட்டமும் ஒன்று. அண்மையில் அரசியல் பேசும் இளையோர் என்ற அமைப்பின் மெய்நிகர் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுபோல,திருகோணமலையில் பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட இரண்டு புத்தர் சிலைகளுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய கட்டளை உண்டு.அனால் சிலைகள் அகற்றப்படவில்லை.கிழக்கில் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றக் கட்டளை உண்டு.முல்லைத்தீவில், நீராவியடியில்,நீதிமன்றத் கட்டளையை மீறி பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஒரு பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது.அதுபோல பல இடங்களில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி சிங்கள பௌத்த மயமாக்கலும் நில ஆக்கிரமிப்பும் நடந்திருக்கிறது.நடந்து கொண்டிருக்கிறது.எனவே இலங்கைத்தீவின் சட்டக் கட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியைத் தரும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாறாக தையிட்டி விகாரை விடயத்தை நிலப்பறிப்பு,சிங்கள பௌத்த மயமாக்கல் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்; அணுக வேண்டும்; அதற்கு எதிராகப் போராட வேண்டும். கடந்த பௌர்ணமி நாளன்று நடந்த போராட்டம் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒவ்வொரு பௌர்ணமி நாளில் மட்டும் போராட்டலாமென்றால் அது மிகப் பலவீனமானது.ஏனென்றால் நிலப்பறிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் பௌர்ணமிகளுக்காக காத்திருப்பதில்லை.அவை மிகவும் நிறுவனமயப்பட்ட நடவடிக்கைகள்.இக்கட்டுரை எழுதப்படுகையில்கூட எங்காவது ஒரு சிறு குன்றில் ஏதாவது ஒரு விகாரைக்கு ஒரு செங்கல் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே ஒவ்வொரு போயா தினத்தன்றும் போராடி தையிட்டியை மீட்க முடியாது. நில அபகரிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிரான போராட்டம் மாதத்தில் ஒரு தடவை மட்டும் நடத்தப்படும் ஒன்றாக இருக்க முடியாது. ஏனென்றால் நில அபகரிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தொடர் நடவடிக்கைகள்.பல தசாப்தகால தொடர்ச்சியான நடவடிக்கைகள்.மிகவும் நிறுவனமயப்பட்ட, அதிக வளம் பொருந்திய அரசு உபகரணங்களால் முன்னெடுக்கப்படுகின்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள். அதாவது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள்-அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்-தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்கும் நடவடிக்கைகள் கடந்த பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக 2009க்குப் பின்னரும் அது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஆனால் தமிழ் எதிர்ப்புத்தான் குறைந்து போய்விட்டது. இப்படிப்பட்டதோர் பின்னணியில் நில அபகரிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் தமிழ்த் தரப்புக்கு உண்டு.அடுத்த பௌர்ணமிவரை இன்னுமொரு எழுச்சிக்காகக் காத்திருப்பது பலமானது அல்ல. தமிழ் மக்களுடைய போராட்டத்தின் அளவுதான் இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முடிவையும் தீர்மானிக்கும். ஏனென்றால் இது ஒரு தேர்தல் ஆண்டு. இந்த ஆண்டில் சிங்கள பௌத்த வாக்காளர்களின் வாக்குகளைக் கவர்வதா? அல்லது தமிழ் மக்களுடைய பயங்களை நீக்குவதா? என்று பார்த்தால், அரசாங்கம் சிங்கள பௌத்த வாக்காளர்களின் கூட்டு உணர்வை பாதுகாக்கவே முன் நிற்கும். தையிட்டிப் போராட்டத்தின் பின்னணியில் அரசுத் தலைவர் வல்வெட்டித் துறைக்கு வருகிறார். பிரதமர் வலிகாமத்தின் பல பகுதிகளுக்கும் வருகிறார். மானிப்பாயில் வைத்து பிரதமர் கூறுகிறார், இது தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்று. அதேசமயம் அமைச்சர் சந்திரசேகரன் மீனவக் கிராமங்கள் தோறும் தீயாக வேலை செய்கிறார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தில் ஒருவித இந்திய எதிர்ப்பை லோக்கலாக வெளிப்படுத்துகின்றது. இந்திய மீனவர்களுக்கு எதிராகத் திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுப்பதன்மூலம் தமிழ் கடல் தொழிலாளர் சங்கங்களைக் கவர்வது அவர்களுடைய உள்நோக்கம். அண்மையில் வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையும் தமிழ் மக்களைக் கவரும் நோக்கிலானது. ரணில் விக்கிரமசிங்க எரித்த நூலகத்தை நாங்கள் அபிவிருத்தி செய்கிறோம் என்ற பொருள்பட சந்திரசேகரன் முகநூலில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். நூலக எரிப்புக்கு ரணில் எப்பொழுதோ மன்னிப்புக் கேட்டு விட்டார்.ஆனால் வடக்குக் கிழக்கை பிரித்தமைக்கு; சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் மனிதநேயக் கட்டமைப்பை எதிர்த்தமைக்கு; இறுதிக்கட்டப் போரில் மகிந்தவைப் பலப்படுத்தியதற்கு ஜேவிபி இன்றுவரை மன்னிப்புக் கேட்கவே இல்லை.நூலகத்துக்கு நிதி ஒதுக்கியதன்மூலம் படித்த தமிழ் நடுத்தர வர்க்கத்தைக் தவறலாமா என்று அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதாவது விரைவில் வரக்கூடிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்,பின்னர் வரக்கூடிய மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை இலக்கு வைத்துத் தமிழ் வாக்குகளைக் கவரும் நோக்கத்தோடு அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில் இறங்கி வேலை செய்கின்றது. ஆனால் பிரதமர் ஹரிணி கூறுவது போல இந்த அரசாங்கம் தமிழ் மக்களாலும் தெரிவு செய்யப்பட்டது என்றால்,தையிட்டி விகாரை விடயத்தில் தமிழ் மக்களின் பயத்தையா அல்லது சிங்களபௌத்த கூட்டு உளவியலையா அதிகமாக மதிக்கும்? வரவுசெலவுத் திட்ட அறிக்கையை முன்வைத்து உரையாற்றிய அனுர பின்வருமாறு கூறுகிறார்…”எங்களில் யாரும் லஞ்சம் எடுப்பதில்லை. அப்படி எடுத்தால் அவர்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது. ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்குவேன்.லஞ்சம் வாங்கப் பயப்படும் நாட்டை உருவாக்குவேன்.அப்படிப்பட்ட ஆட்சியால் மட்டும்தான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்.” அவர் கூறுவது சிங்கள மக்களுக்குப் பொருந்தலாம். ஆனால் தமிழ் மக்களுக்குப் பொருந்தாது.தமிழ் மக்கள் ஊழலுக்கு எதிராகவோ அரசு நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவோ போராடவில்லை. நமது தேசிய இருப்பை அழிக்க முற்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் போராடி வருகிறார்கள். எனவே தமிழ் மக்கள் கேட்பது தமது தேசிய இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றுதான். ஊழலற்ற ஆட்சியால்தான் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று கூறுவது தவறு. இனவாதமற்ற,இன அழிப்புக்கு பரிகாரம் தரத் தயாராக உள்ள,அதாவது, இனப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான அரசியல் திடசித்தத்தை- “பொலிட்டிக்கல் வில்லைக்”-கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தால் மட்டுந்தான் இச்சிறிய தீவைக் கட்டியெழுப்ப முடியும். https://www.nillanthan.com/7186/
  2. இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 600 பாலஸ்தீனியர்கள் விடுதலை - இஸ்ரேலிய பிரதமர் சர்ச்சைக்குரிய அறிவிப்பு 23 Feb, 2025 | 11:41 AM இஸ்ரேலிய சிறைச்சாலையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 600 பேரை விடுதலை செய்வதை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் உட்பட ஆறு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பணயக்கைதிகளை விடுதலை செய்யும்போது ஹமாஸ் அவர்களை அவமானப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறான நிகழ்வுகள்இல்லாமல் அடுத்த கட்ட பணயக்கைதிகள் விடுதலை இடம்பெறும்வரை பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யப்போவதில்லை என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார். முதல்கட்ட உடன்படிக்கையின் படி ஹமாஸ் அமைப்பு இன்னமும் நான்கு கைதிகளை மாத்திரம் விடுதலை செய்யவேண்டும்.பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவேளை உயிரிழந்த நால்வரின் உடல்களை ஒப்படைக்கவேண்டும். ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவது உட்பட பல உடன்படிக்கை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/207436
  3. மன்னார் மறை மாவட்டத்தின் 4வது ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் adminFebruary 22, 2025 மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் இன்றைய தினம் சனிக்கிழமை (22) ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பேரருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு செய்யும் நிகழ்வு நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அபிஷேக நிகழ்வு மற்றும் திருப்பலி இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பிறைன் உடைக்வே ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் காடினல் ரஞ்சித் ஆண்டகை, மற்றும் இலங்கையின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும் கலந்து கொண்டனர். -மன்னார் மறைமாவட்டத்தின் 4 வது ஆயராக பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி நியமிக்கப்பட்டார். பரிசுத்த பாப்பரசரினால் புதிய ஆயருக்கான நியமனம் வழங்கப்பட்டது.அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயராக உள்ள இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்திருந்தார். இந்த நிலையிலே இன்றைய தினம் சனிக்கிழமை(22) காலை 9.30 மணியளவில் மன்னார் மறைமாவட்டத்தின் 4 வது புதிய ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/211936/
  4. ஆனந்தி அக்காவுக்கு அஞ்சலிகள்.. ஒரு சில கூட்டங்களிலும், நிகழ்வுகளிலும் ஆனந்தி அக்காவின் அழகான தமிழை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. பிபிசி ஆனந்தி அக்கா காலமானார். பிப்ரவரி 22, 2025 பிபிசி ஆனந்தி அக்கா நேற்று இரவு காலமானார்.(பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி’! -என்றவர்- பிபிசி ஆனந்தி ) திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் நேற்று அமைதியான முறையில் காலமானார் . "ஆனந்தி அக்கா" என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம், தமிழ் ஒளிபரப்பில் ஒரு முன்னோடி நபராக இருந்தார், பிபிசி தமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசியின் இயக்குநராக உயர்ந்தார். அவர் டிடிஏ யுகேவின் அறங்காவலராகவும் பணியாற்றினார். ==== விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள். அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். அதையெல்லாம் மீறி புலிகள் ஆதிக்கப்பகுதிக்கு வந்தேன். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் அப்போது பிரபாகரன் இருந்தார். யாழ்ப்பானத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன். குளித்து முடித்து, புலிகளுக்க தகவல் சொல்லலாம் என்பது எனது திட்டம். நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது. திறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கிறார்கள். என்னைக்குறித்து விசாரிக்கிறார்கள். நான் ஆச்சரிப்பட்டுப் போனேன். நான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்கு சென்றுவிட்டது. இதிலிருந்து ஒரு விடயத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள். பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது? பிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்கச் சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார். பலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்த போது கூட ரசித்து சிரித்தார். தானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர். தனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்? விமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுக் காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்கணும் என்றுதான் நானும் போனேன். ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த “செஞ்சோலை குழந்தைகள் இல்ல”த்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம் ஏற்பட்டது. தாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக எத்தனை அக்கறையுடன் அந்த இல்லதைப் பிரபாகரன் அமைத்திருந்தார்! நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனுசனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்! அந்த செஞ்சோலை இல்லத்தை கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டது. வன்னியிலிருந்து திரும்பியதும், பி.பி.சியில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பிட்டேன். பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இவரா இத்தனை பெரிய போராளி அமைப்பின் தலைவர்.. குழந்தை முகமாக இருக்கிறாரே என்றுதான் தோன்றும். அவரை சந்தித்தபோது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூட கேட்க நினைத்தேன். ஆனால் அவரைப் பார்க்கும் போது அந்த கேள்வியே எழவில்லை. சரி, புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்தபோது சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு! உண்மை அதுவல்ல. போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசியபோது ஒரு தகவல் கிடைத்தது. எப்போதாவது உணர்ச்சி வசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால் கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ?’ என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு. அது மட்டுமல்ல.. போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கப்படுவார். அதோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். சிவில் சட்டங்களின் படி அவருக்குத் தண்டனை வழங்கப்படும். பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்., இந்திரா ஆகியோரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு! ஆமாம்.. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் பிரபாகரன். ஈழ மக்கள் அனைவருமே அப்படித்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஈழமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதே போல இந்திராகாந்தி மறைந்த போதும் ஈழமக்கள் மிகுந்த துயர் அடைந்தார்கள். உங்களது ஈழப்பயணங்களின் போது வியக்க வைத்தது எது? பல விடயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டு கால தொடர் போர் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத்தான். அதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. “ இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார். தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்க தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் கவனத்துடன் கணக்கெடுத்தோம். பணப்பயிர்களைத் தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை விவசாயத்துக்கு பழகினோம். மேலும், எமது ஐந்து லட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகாவின் கொடுமை யான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்” என்றனர். புலிகளை ஏதோ வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது தெரியாது. புலிகள், விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர் என்பதே உண்மை. https://www.battinatham.com/2025/02/blog-post_696.html
  5. இன்று ஜெனிவாவுக்கு செல்லும் விஜித தலைமையிலான குழு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று ஜெனிவாவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் நாளை 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையிலேயே குறித்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது, இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் குறித்து விசேட அறிக்கையை இலங்கை தரப்பு சமர்பிக்க உள்ளதுடன், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட தெளிவுப்படுத்தலை முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லும் இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஐ.நா. மனித உரிமைகள் அமர்வுகளில் கலந்துக்கொள்ள உள்ளதுடன், நட்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை பிரத்தியேகமாக சந்தித்து இலங்கை தரப்பு கலந்துரையாடவுள்ளது. மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கவும், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சனைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக உறுதியளித்துள்ளது. ஆனால், ஜெனிவா தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளமையினால் இலங்கை தொடர்பான செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதில் பின்னடைவுகள் ஏற்படக்கூடும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிரந்தர உறுப்புரிமைகளை கொண்ட சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன. அத்துடன், அமெரிக்கா விலகியமையை சுட்டிக்காட்டி, 51/1 நகல்வடிவையும், இலங்கைக்கு எதிராக 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் வலுவிழக்க வைக்கும் கோரிக்கையை ஜெனிவாவில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா, பாக்கிஸ்தான் மற்றும் கியூபா போன்ற நாடுகளின் ஆதரவையும் இலங்கை கோரியுள்ளது. எவ்வாறாயினும் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையிலான நேர்மையான அறிக்கையை ஜெனிவாவுக்கு பதிலளிப்பதாக மாத்திரம் அல்லாது எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த முன்வைப்பதாக அரசாங்கம் ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (S. https://www.tamilmirror.lk/செய்திகள்/இன்று-ஜெனிவாவுக்கு-செல்லும்-விஜித-தலைமையிலான-குழு/175-352476
  6. ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் மூவர் கைது யாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் ரயில்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. கல்வீச்சு தாக்குதலில் ரயில்களின் கண்ணாடிகள் சேதமடைந்தும், பயணி ஒருவர் காயமடைந்தும் இருந்தார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ரயில் நிலைய அதிபரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ரயில் பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில் மூன்று சிறுவர்கள் ரயில் மீது கல்வீச்சு தாக்குதலை நடாத்துவது பதிவாகி இருந்தது. குறித்த காணொளியில் அடிப்படையில், மூன்று சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cm7ha0din000ohmzcpb5u6lzi
  7. தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும் என்றும், அதனை அடக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cm7hao8q2001adpm4f49zbf8a
  8. @vasee , முதல்வராக வர உளமார விருப்பம் இருக்கவேண்டும்! நீங்கள் முதல்வர் பதவியை பத்தடிக்கு அங்கால் நின்று பார்ப்பேன் என்று அடம்பிடித்தால் நம்ம கதி என்னாவது?🤨
  9. நாளைக்கு பாகிஸ்தான் வெல்லுது! @vasee ஐ முதல்வர் ஆக்கிறம் 😁
  10. பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு (23 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 05 பேர் மாத்திரம் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஏனைய 19 பேரும் இந்திய அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பாகிஸ்தான் ரசோதரன் நுணாவிலான் வசீ நந்தன் கிருபன் இந்தியா ஈழப்பிரியன் ஏராளன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி வாத்தியார் செம்பாட்டான் குமாரசாமி நியாயம் வாதவூரான் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் கந்தப்பு பிரபா இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்குப் புள்ளிகள் கிட்டும்?
  11. நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி பென் டக்கெற்றின் 165 ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 351 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஜொஷ் இங்லிஸின் அதிரடியான 120 ஓட்டங்களின் உதவியுடன் 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழப்பிற்கு 356 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  12. பிரான்ஸ் ஜனாதிபதியும் பிரித்தானிய பிரதமரும் யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எதுவும் செய்யவில்லை - அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்! பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மெக்ரோனும் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 'எதனையும் செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அடுத்த வாரம் இரு நாட்டுத் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்துரைத்த அவர், யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை எனத் தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் முன்னதாக யுக்ரைன் ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்திய டொனால்ட் ட்ரம்ப்பின் தூதுவர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தார். யுக்ரைன் ஜனாதிபதிக்கும் தமக்கும் இடையே விரிவான மற்றும் நேர்மறையான விவாதங்கள் இடம்பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தூதுவர் குறிப்பிட்டிருந்தார். அண்மையில் யுக்ரைன் ஜனாதிபதியை 'சர்வாதிகாரி" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருந்த நிலையில், அவரின் தூதுவர் யுக்ரைன் ஜனாதிபதியை 'தைரியமான தலைவர்" எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.hirunews.lk/tamil/397638/பிரான்ஸ்-ஜனாதிபதியும்-பிரித்தானிய-பிரதமரும்-யுக்ரைன்-போரை-முடிவுக்கு-கொண்டு-வர-எதுவும்-செய்யவில்லை-அமெரிக்க-ஜனாதிபதி-விமர்சனம்
  13. 2025இல் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு – பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்திய முக்கிய தகவல் February 22, 2025 11:46 am 2025இல் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு கடந்தகாலத்தில் அரசியல் ஆதரவு இருந்தது. அதனால் அவர்களை பொலிஸில் கூட இணைத்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் இருந்தன. பாதாள உலகக் குழுக்களுக்கு தற்போது அரசியல் ஆதரவு இல்லாதுபோயுள்ளது. தமது செயல்பாடுகளை செய்ய முடியாதென்பதால் அவர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர். அதனால் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றனர். 58 பாதாள உலகக் குழுக்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அந்த குழுக்களில் 1400 பேர்வரை உள்ளனர். இந்த குழுக்களின் தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றனனர். 2024ஆம் ஆண்டுடில் 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 18 வாள்வெட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 2025ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வாள்வெட்டு சம்பவங்கள் 5 என மொத்தம் 22 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்களில் 17 விசாரணைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் பின்புலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொலிஸார் அல்லது இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு துறையினரின் ஆதரவு இருந்துள்ளது. இவர்களை இலகுவாக அடையாளம் காண முடியும். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் டி56 ரக துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம். பொலிஸாரின் செயல்பாடுகளுக்கு தற்போது எவ்வித அரசியல் அழுத்தங்களும் இல்லை. கடந்தகாலத்தில் எவ்வாறு இருந்தது என அனைவருக்கும் தெரியும். சர்வதேச ஆதரவுடன் குற்றவாளிகளை பிடிக்கும் செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று சிறைசாலைகளில் இருந்து செயல்படுத்தப்படும் குற்றச் செயல்கள் குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சில சந்தேகநபர்கள் படகுகள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொடர்பில் கடற்படையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாதாள உலகக் குழுக்களுக்கு செயல்பட முடியாது போயுள்ளதால் வெளிநாடுகளுக்குச் சென்று வழிநடத்த முற்படுகின்றனர். பல ஆயுதங்கள் சமூகத்தில் உள்ளன. அவற்றை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. பொது மக்கள் இவை தொடர்பில் ரகசியமான தகவலை 1997 என்ற இலக்கத்துக்கு வழங்க முடியும். டி56 ரக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் 10 இலட்சம் வரை பரிசை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயல்பாடுகளுக்கு பொது மக்களின் ஆதரவு அவசியமாகும். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், 13 T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், 75 12-போர துப்பாக்கிகள், 7 உட்பட பல துப்பாக்கிகள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.” என்றார். https://oruvan.com/17-shooting-incidents-recorded-in-2025-important-information-revealed-by-the-inspector-general-of-police/
  14. மிரட்டலால் சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்ற விஜயலட்சுமி : உயர்நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்! 22 Feb 2025, 10:15 AM மிரட்டலின் அடிப்படையில் தான் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுள்ளார் என சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார் என்று விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு புகார் அளித்தார். சீமான் மீது கடந்த ஆண்டும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இதுதொடர்பாக சீமான் நேரில் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால், வழக்கை திடீரென வாபஸ் பெற்றுக் கொண்ட விஜயலட்சுமி, இனி தான் சென்னைக்கே வர மாட்டேன் என்று கூறி பெங்களூரு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகாரில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுதாக்கல் செய்தார். தனது மனுவில், “2011ஆம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டே விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். அதன் பேரில் வழக்கு விசாரணையை காவல் துறையினர் முடித்து வைத்தனர். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. அதனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு அண்மையில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், விஜயலட்சுமி தனது புகாரை திரும்பப் பெற்றாலும் கூட, பாலியல் வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை காவல் துறை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். சீமானின் மனுவையும் தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், “மிரட்டலின் அடிப்படையில் தான் சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளார். பாலியல் வன்கொடுமை புகார் என்பது தீவிரமானது. அதனை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. விஜயலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள், சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளன. வழக்கை ஆராய்ந்ததில் விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. குடும்பம் மற்றும் திரைத் துறை பிரச்னை காரணமாக சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகியுள்ளனர். சீமான் வற்புறுத்தியதால் தான் ஆறு முறை கருக்கலைப்பு செய்தேன் எனவும், தன்னிடம் இருந்து சீமான் பெருந்தொகையை பெற்றுள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளார்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், புகார் தொடர்பான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/political-news/seeman-vijayalakshmi-case-judgement/
  15. நாதகவில் இருந்து விலகும் காளியம்மாள்… சீமான் ரியாக்சன்! 22 Feb 2025, 12:31 PM நாதகவில் இருந்து விலக காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உண்டு என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்ரவரி 22) தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், தற்போது நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளராக உள்ள காளியம்மாள் பங்கேற்க உள்ளதாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் காளியம்மாளின் நாதக பொறுப்பு குறித்து எதுவும் குறிப்பிடாமல், சமூக செயற்பாட்டாளர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த அழைப்பிதழ் சமூகவலைதளங்களிலும் அதிகளவில் பகிரப்பட்டது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. கடந்த சில மாதங்களாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது பிரச்சாரத்திற்காக காளியம்மாள், அந்த பக்கமே போகவில்லை. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அழைப்பிதழ் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இன்று ஊடகங்களிடம் அவர் பேசுகையில், “நான் என் முடிவை விரைவில் அறிவிப்பேன்” என தெரிவித்தார். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், காளியம்மாள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”நாம் தமிழர் கட்சியில் உள்ள அனைவருக்கு சுதந்திரம் உள்ளது. இன்னைக்கு என் பக்கத்தில் நிற்பவர் கூட நாளைக்கு செல்லலாம். கட்சிக்குள் வந்தால் ’நன்றி’ என தெரிவிப்போம், சென்றால் ‘வாழ்த்துகள்’ என தெரிவிப்போம். பருவக்காலங்களில் இலையுதிர் காலம் மாதிரி, தற்போது எங்கள் கட்சிக்கு களையுதிர் காலம். காளியம்மாளை நாம் தமிழர் கட்சிக்குள் அழைத்து வந்தது நான் தான். அவர் வேறு கட்சிக்கு செல்வது குறித்து முடிவெடுக்க முழு சுதந்திரம் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது” என சீமான் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/seeman-reaction-on-ntk-kaliyammal/
  16. @வாத்தியார் இன் புண்ணியத்தில் எது நடந்தாலும் கவலை இல்லை!
  17. நாங்கள் மெதுவாக, ஆனால் உறுதியாக முன்னேறிக்கொண்டு இருக்கின்றோம்!😃 ஆகவே, நாளை அல்வாயன் முதல்வர் ஆகாமல் இருக்க வைரவர் சூலம்🔱 வச்சிருக்கு 😁
  18. ட்ரம்பை விட பைடன் இஸ்ரேல் மீது அதிக ஆதரவு உள்ளவர் என்று நினைக்கின்றேன். மருதர் ரஷ்ய அமெரிக்க rare earth minerals கம்பனிகளில் பங்கு வாங்குவதில் நேரத்தை செலவழிக்காமல் ஏன் அறளை பெயர்ந்தவர்களுடன் மெனக்கெடுகின்றார்? உக்கிரேனியர், பலஸ்த்தீனியர்கள் மேலான அக்கறையில் என்றுதான் நினைக்கின்றேன்.
  19. ஹிஹி.. @நந்தன் , ஏதோ சொன்னீங்கள்.. எங்கே நிக்கிறியள்? 😁
  20. பிரித்தானிய நேரப்படி நாளை சனி (22 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 13 பேர் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனவும் 11 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். அவுஸ்திரேலியா ஏராளன் அல்வாயன் தமிழ் சிறி ரசோதரன் நுணாவிலான் வசீ நந்தன் நியாயம் வாதவூரான் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் இங்கிலாந்து ஈழப்பிரியன் வீரப் பையன்26 சுவி நிலாமதி வாத்தியார் செம்பாட்டான் குமாரசாமி சுவைப்பிரியன் கந்தப்பு பிரபா கிருபன் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  21. மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ரியான் ரிக்கெல்ரனின் சதத்துடன் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 315 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 43.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் 208 ஓட்டங்களுக்குப் பறிகொடுத்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  22. எனது அப்பாவின் அப்பாவின் காலத்தில் தோட்டம் செய்வதற்காக கிணறு தோண்டியபோது சூலம் ஒன்று வெளிப்பட்டதாம் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் சைவ சமயம் ஒடுக்கப்பட்டபோது புதைத்தார்களா தெரியவில்லை). தோட்டத்தின் தென்கிழக்கு மூலையில் பிரதான வீதியருகில் கொட்டில் போட்டு சூலத்தை பிரதிட்டை செய்தனர். அப்பாவின் அப்பாவும், அதன் பின்னர் எனது அப்பாவும் தமக்குத் தெரிந்தவகையில் பூசை செய்து வந்தனர். 80களின் ஆரம்பத்தில் கோயிலாகக் கட்டப்பட்டு, சைவ மேனிலையாக்கம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு பிராமண ஐயர் பூசை செய்துவருகின்றார்.. கொழும்பில் இறுதிக்காலத்தில் நினைவு பிறழ்ந்த நிலையிலும் வைரவர் என்ற சொல்லைக் கேட்டால் அப்பா “என்ரை” எனச் சொல்லுவார்.. அவருக்கு திரும்பவும் ஊருக்குப் போகவோ, எள்ளங்குளச் சுடலையில் வேகவோ சந்தர்ப்பம் கிட்டவில்லை. எனது கடவுள் மறுப்புக்கொள்கையால் நான் கோயில் சம்பந்தமாக எதுவும் செய்வதில்லை. ஆனால் கொழும்பில் இருந்த அக்கா ஏதாவது உதவி செய்யக் கேட்டால் ஐயர் குடும்பத்திற்கு “உதவி”யாக இருக்கட்டும் என்று ஏதாவது கொடுப்பதுண்டு. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஊருக்குப்போனபோது ஐயர் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதைப் பார்த்தபின்னர் சின்ன “உதவி”யையும் செய்வதில்லை! இப்போது கோயில் ஊரில் உள்ள 12 குடும்பங்களின் (அதுக்கும் அடிபாடு) பண உதவியுடன் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றது. அக்காவும் பரம்பரைக் கோயில் என்பதால் ஒரு “உரித்து” வைத்திருக்கின்றார். இந்த வருடம் அவருக்குத்தான் “பட்டோலை” பொருட்கள் வாங்கும் கெளரவம் கொடுத்தார்களாம். இனிப் பன்னிரன்டு வருடங்களுக்கு பின்னர்தான் திரும்ப எங்களுக்கு வருமாம். எங்கள் குடும்பத்தின் “உரித்தை”க் காக்க என்னை பட்டோலை பொருட்கள் வாங்கும் சடங்கை முன்னெடுக்கவேண்டும் என்று கேட்டார்.. இங்கு பெரியாரின் கொள்கைகளுக்கு முண்டுகொடுத்துக் கொண்டு பட்டோலைக் கெளரவத்தை வாங்க நான் ஒன்றும் கலைஞர் கருணாநிதி போல மஞ்சள் துண்டு போடுபவன் இல்லையே!😆 நான் அக்காவுக்கு எனக்கு கடவுள் பக்தி எல்லாம் கிடையாது. இப்படி எல்லாம் கோவிலுக்கு செய்ய வெளிக்கிட்டால், எனது கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக முடியும். அதிலும் உரிமைப்போர் செய்யபவர்கள் பலர் இருக்கும்போது இது எல்லாம் தேவையில்லாத ஆணி. எனக்கு பட்டோலையும் வேண்டாம்; பனையோலையும் வேண்டாம் என்று பதில் எழுதினேன்! “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்று எழுதி என்னவாவது செய்யுங்கோ விடயத்தைக் கைவிட்டுவிட்டார்.. நாங்கள் ஆட்டை அடைத்து வைப்பது இல்லை என்பதால் அவிழ்த்துவிட வேண்டிய அவசியம் இல்லை!
  23. இங்கு வந்து என்ன செய்யப்போகின்றார்? 🧐 லாஸ்வெகாஸ் போனால் gambling இல் நேரத்தைப் போக்காட்டலாம்!😝 கிரிக்கெட் வீரர்கள் இங்கு செலிபிரட்டி கிடையாது..
  24. வடக்கிற்கு ஹீரோவான அநுர Sivarasa Karunakaran on February 21, 2025 Photo, @anuradisanayake உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களிலும் தன்னுடைய கொடியை ஏற்ற விரும்புகிறது. இந்த நோக்கத்தையும் சேர்த்தே கடந்த சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கான தன்னுடைய பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வந்த அநுர, மிருசுவில், நெல்லியடி, வல்வெட்டித்துறை என்று பல இடங்களுக்கும் சென்றார். இதன்போது ஜனாதிபதி என்ற பெரிய பந்தா ஒன்றும் இல்லாமல் எளிமையாக (Simply யாக) பழகுவதைப்போலொரு தோற்றத்தைக் காட்டினார் அநுர. இதனால் அநுர செல்லுமிடமெங்கும் சனங்களும் திரண்டனர். சனங்களுக்கு இப்பொழுது அநுரதான் ஹீரோ. இதனுடைய உச்சக்கட்டமாக அநுரவின் வருகையையொட்டி பிரபாகரனுடைய ஊரான வல்வெட்டித்துறையில் கொடி பறக்கும் நிகழ்ச்சி (பட்டமேற்றும் நிகழ்வு) ஒன்றும் மக்கள் சந்திப்பும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசியல் அர்த்தத்தில் ‘காலமாற்றத்தை உணருங்கள்’ என்று சொல்லாமல் சொல்லும் குறியீட்டு நிகழ்ச்சியே இதுவாகும். அதாவது சூழல் மாற்றம், காலமாற்றம், நிலைமாற்றம் ஆகிய மூன்றையும் இது பிரதிபலிக்கிறது எனலாம். இதைப்பற்றிப் பேசியபோது உணர்ச்சி மேலிட “விடுதலைப் புலிகள் புகழோடிருந்த காலத்தில் கூட வல்வெட்டித்துறையில் பிரபாகரன் இப்படி வெளிப்படையாக மக்கள் மத்தியில் வந்ததில்லை” என்றார் அந்த ஊர்வாசி ஒருவர். இப்பொழுது அதே விளையாட்டைக் காட்டுவதற்காக பிரதமர் ஹரிணி அமரசிங்க யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்றிருக்கிறார். யாழ்ப்பாணத்துக்கு வந்த ஹரிணி, போகாத இடமில்லை. சந்திக்காத ஆட்களில்லை என்ற அளவுக்குப் பல இடங்களுக்கும் சென்று திரும்பியிருக்கிறார். போகுமிடங்களில் குழந்தைகள், முதியோர், பெண்கள் என எல்லோரோடும் மிகச் சாதாரணமாக (casually) பழகியிருக்கிறார் பிரதமர். பெரும்பாலான பெண்களுக்கு ஹரிணி, ஹீரோயினி ஆகிவிட்டார். இதற்கு முன்பு வடக்கிற்கு வந்த ஏனைய சிங்களத் தலைவர்களுடன் இந்தளவுக்கு தமிழ்ச்சனங்கள் நெருக்கத்தைக் காட்டியதில்லை. அவர்களும் தமிழ்ச்சனங்களோடு நெருங்கிக் கொண்டதில்லை. அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தால், ஜெட் விங்கில் அல்லது ரில்கோ போன்ற உல்லாச விடுதிகளில் தங்குவார்கள். நல்லூர் முருகன் கோயிலுக்குச் செல்வார்கள். அதற்கப்பால் எனில் ‘உதயன்’ பத்திரிகை அலுவலகத்துக்குப் போவதுண்டு. அல்லது சரவணபன் வீட்டுக்குக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள். மாவட்ட நிர்வாகச் சந்திப்புகளை நடத்துவதாக இருந்தால், U.S உல்லாச விடுதியில் (அரச கணக்கில்) செய்வார்கள். எல்லாமே சனங்கள் நெருங்க முடியாத அளவுக்கு உயர்நிலையில் இருக்கும். அரசியற் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஒரு சில உயர் வர்க்கத்தினரைத் தவிர, வேறு யாரும் நெருங்கவே முடியாத அளவுக்குத்தான் அந்தத் தலைவர்கள் நடந்து கொண்டனர். அநுரவும் ஹரிணியும் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய அமைச்சர்களும் இதையெல்லாம் உடைத்தெறிந்தனர். சாதாரண உடையில், சாதாரணமான நிலையில் தங்களை மாற்றிக் கொண்டு மக்களுடன் கலக்கின்றனர். மாவட்டச் செயலர், பிரதேச செயலர், துறைசார் அதிகாரிகளைக் கூட உத்தியோகத்தர்களும் மக்களும் எட்ட நின்றே சந்திக்க வேண்டியிருக்கின்ற சூழலில் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சர்களும் சாதாரண மக்களுடன் எளிமையாக – எளிதில் – சந்திப்பதும் பழகுவதும் சனங்களுக்கு இன்ப அதிர்ச்சியே. மறுவளமாக யாழ்ப்பாணத்தின் தமிழ் மேட்டிமைத்தனச் சிந்தனையாளர்களுக்கும் அந்த வழியிலான அரசியலாளர்களுக்கும் இதுவொரு அரசியற் கலாச்சார அதிர்ச்சியை அளித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நடவடிக்கைகளும் அணுகுமுறையும் நேரடியாகச் சனங்களிடம் நெருக்கத்தையும் செல்வாக்கையும் உண்டாக்கும் முயற்சிகளாகும் – தந்திரோபாயங்களேயாகும். அதற்கு ஓரளவுக்குப் பயனும் கிடைத்துள்ளது போலவே தெரிகிறது. இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காட்டும் நெருக்கத்தை விட, அவர்களுக்குக் கொடுக்கின்ற வரவேற்பை விட அநுர, ஹரிணி போன்றோருக்கு மக்கள் காட்டுகின்ற வரவேற்பும் நெருக்கமும் கூடுதலாகவே உள்ளது. அநுரவும் ஹரிணியும் தங்களுடைய ஆதர்சத் தலைவர்கள் என்று நம்புகின்றனர் மக்கள். ஜனாதிபதியும் பிரதமரும் மட்டுமல்ல, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமாரகே, காணி, நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த போன்றோரும் வடக்குக்கு வந்து சென்றிருக்கிறார்கள். இதைப்போல இன்னொரு அணி கிழக்கிற்கும் சென்றிருக்கிறது. இதற்கு அடுத்த கட்டமாக இப்பொழுது வரவு செலவுத் திட்டத்திலும் வடக்குக் கிழக்கிற்கு விசேட கவனத்தைக் கொடுத்துள்ளது NPP. காங்கேசன்துறை, மாங்குளம் ஆகிய இடங்களில் கைத்தொழில் பூங்காக்கள். பரந்தனில் இராயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பித்தல். யாழ்ப்பாண பொது நூலகத்தை விரிவாக்கம் செய்தல். முல்லைத்தீவு வட்டுவாகல் (வெட்டுவாய்க்கால்) பாலத்தை நிர்மாணித்தல். தெங்கு முக்கோண வலயத்தை உருவாக்குதல். மீள் குடியேற்றம் மற்றும் வீட்டு நிர்மாணம் உட்பட வடக்குக் கிழக்குக்கு வரவு செலவுத்திட்டத்தில் 5000 பில்லியன் ரூபாயை ஒதுக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள உயர்வு, பல்கலைக் கழக மாணவர்களுக்கான மகாபொல கொடுப்பனவு, முதியோருக்கான உதவித்தொகை அதிகரிப்பு, உடகவியலாளர்கள் – கலைஞர்களுக்கான வசதிகள், புத்தாண்டுக்கான பொதி வழங்கும் திட்டம், கோதுமை மாவின் விலைக்குறைப்பு என வேறு சில பல கவர்ச்சிகரமான அம்சங்களையும் வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் (அநுர) அறிவித்திருக்கிறது. இதன் மூலம் சில விடயங்களை நிறைவேற்ற முற்பட்டிருக்கிறது தேசிய மக்கள் சக்தி. நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கு மாகாண மக்கள், தேசிய மக்கள் சக்தியை ஆதரித்ததற்கான நன்றிக்கடனை நிறைவேற்றுதல். வடக்குக் கிழக்கிலுள்ள அதிலும் குறிப்பாக வடக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்கான சூழலை உருவாக்குதல். மக்களின் ஆதரவைப் பெருக்குதல். உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி கிட்டினால், உடனடியாகவே அது மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடிய சூழலை உருவாக்கும். அதிலும் வெற்றி கிடைக்குமானால், அரசியலமைப்பை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு இலகுவாகக் கிடைக்கும். பிராந்திய அரசியலை ((Regional Politics) முடிவுக்குக் கொண்டு வந்து தேசிய அரசியலை (National Politics) நிலைப்படுத்தக் கூடியதாக இருக்கும். இதெல்லாம் இதுவரையிலும் ஆட்சியதிகாரத்திலிருந்த ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன போன்றவை சாதிக்க முடியாததை, தேசிய மக்கள் சக்தி சாதித்ததாக ஒரு வரலாற்றைப் படைப்பதாக இருக்கும். ஆகவே, முதற் குறியாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் வெற்றியைப் பெறுவதற்கு NPP முயற்சிக்கிறது. அத்துடன், வடக்குக் கிழக்கில் உள்ள ப.நோ. கூ. சங்கங்கள், தெங்கு பனை அபிவிருத்திச் சங்கங்கள், கடற்தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், வர்த்தகர் சங்கங்கள் என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் அல்லது செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இயங்குகிறது. இதற்காக தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்களும் அதனுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆட்சேர்ப்பு, அணி சேர்ப்பு, ஆதரவு திரட்டல் எனப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய போர்க்கால நடவடிக்கையைப்போல அதிதீவிரச் செயற்களமொன்று திறக்கப்பட்டுள்ளது. ஊர்களில் யாரெல்லாம் பிரமுகர்களாக – செல்வாக்குள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் வளைத்துப் பிடிக்கும் (வலை வீசிப் பிடிக்கும்) நடவடிக்கை துரிதமாக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியோடு எப்படித் தொடர்பை ஏற்படுத்துவது? எவ்வாறு நெருக்கத்தை உண்டாக்குவது? எனத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது தேடித்திரிந்த தெய்வத்தை நேரில் சந்தித்ததைப்போல ஆகியுள்ளது. இதனால் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவுத் தளம் மேலும் விரிவடையத் தொடங்கியுள்ளது. கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, அனைத்து நிலைகளிலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவே தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கிறது. இது 2008 க்கு முன், விடுதலைப்புலிகள் செயற்பட்டதற்கு ஒத்ததாகும். தமக்குக் கீழ் அனைத்தையும் கொண்டு வருதல். ஆயுதம் தாங்கிய இயக்கங்களிடம் இத்தகைய குணாம்சம் இருப்பதுண்டு. தேசிய மக்கள் சக்தியின் பிரதான மையமான ஜே.வி.பி என்ற ஆயுதம் தாங்கிய வரலாற்றைக் கொண்ட இயக்கம் – அமைப்பு – இருக்கின்ற காரணத்தினால், அதனிடமும் இத்தகைய பண்பு மேலோங்கியுள்ளது. மட்டுமல்ல, மக்களுடன் நெருக்கமாகி வேலை செய்யும் ஒரு நீண்ட அனுபவம் ஜே.வி.பி (NPP) க்கு உண்டு. அதனுடைய அரை நூற்றாண்டுக்கு மேலான வரலாற்றில் அது மக்களுடனான அரசியலையே செய்து வந்துள்ளது. அதிகாரத்துக்கு இப்பொழுதுதான் முதற்தடவையாக வந்திருக்கிறது. ஆகவே, அதிகாரத்துக்கு எதிராக, மக்களுடன் இணைந்திருந்த அனுபவத்தை இப்பொழுது ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது சேர்த்துக் கொண்டு புதிய பயணத்தைத் தொடருவதற்கு அது முயற்சிக்கிறது. இதெல்லாம் தமிழ்த்தேசிய அரசியல் தரப்பினரைக் கலங்கடிக்கிறது. தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தரப்புகளில் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்க வரலாற்றைக் கொண்டவையும் உண்டு. அதற்கு மறுதலையான தேர்தல் மைய அரசியலை வழிமுறையாகக் கொண்டவையும் உண்டு. இரண்டும் நீண்டகாலமாக (1990 க்குப்பின்) முற்று முழுதாகவே தேர்தல் மைய அரசியலையே தொடர்ந்து வந்தன. குறிப்பாக கொழும்பு மையத்தை தேர்தல் அரசியலின் மூலம் எதிர்ப்பதாகவே தம்மைக் கட்டமைத்திருந்தன. இந்த அரசியல் தமிழ்ச் சமூகத்தின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை. பதிலாக மேலும் மேலும் நெருக்கடிகளையே சந்திக்க வேண்டியிருந்தது. இதனால் தமிழ் மக்கள் மிகப் பெரிய பின்னடைவையே எதிர்கொள்ள நேரிட்டது. இதிலிருந்து எப்படி மீள்வதென்று தெரியாமல் குழப்பமடைந்திருந்த சூழலில்தான் தேசிய மக்கள் சக்தியின் அலை தமிழ் மக்களை அள்ளியெடுத்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத் தரப்புகள் தோற்றுப் பின்னடைந்ததற்குப் பிரதான காரணம், அவற்றிடம் செயலூக்கமும் இல்லை, புத்தாக்கத்திறனும் இல்லை (No action, No innovation) என்பதேயாகும். ஆக, தேசிய மக்கள் சக்தி உருவாக்கியிருக்கும் அரசியல் நெருக்கடி, வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ்த் தேசிய அரசியற் தரப்பினரை மட்டுமல்ல, பிராந்திய அரசியலில் (Regional Politics) தம்மைப் பிணைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் தமிழ், முஸ்லிம், மலையக அரசியற் தரப்பினரையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. மட்டுமல்ல, இதுவரையும் அரசாங்கத்துடன் அல்லது தென்னிலங்கை அதிகாரத் தரப்புகளுடன் கூட்டு அரசியலைச் செய்துவந்த டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், அங்கஜன் இராமநாதன் போன்றோருக்கும் சிக்கலை உண்டாக்கியுள்ளது. விஜயகலா மகேஸ்வரன், உமாச்சந்திரா பிரகாஸ் போன்றோரை அரங்கிற் காணவே இல்லை. எல்லாத் தரப்புகளையும் அடித்துப் புரட்டிக் கொண்டிருக்கிறது தேசிய மக்கள் சக்தி என்ற சுனாமிப் பேரலை. இதை எதிர்த்து முறியடிக்கக் கூடிய அரசியல் வியூகமொன்றை வடக்குக் கிழக்கு, மலையக அரசியற் சக்திகள் வகுக்க வேண்டும். அது இலகுவானதல்ல. அதற்கு முற்றிலும் மாறான – வெற்றியளிக்கக் கூடிய புத்தாக்கத்திறனும் செயலூக்கமும் நிறைந்த அரசியல் முன்னெடுப்புகள் அவசியம். அதைச் செய்வதற்கான கால அவகாசம் மிகக் குறைவு. ஏனென்றால், இன்னும் இரண்டு மாதங்களில் (ஏப்ரல், 2025) உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. அது முடிய மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படலாம். பிற தரப்புகள் தம்மைச் சுதாகரித்து எழுவதற்கு முன் அதிரடியாக தாக்குதலை நடத்துவதற்கே தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கிறது. வரலாற்று வாய்ப்பை யார்தான் தவற விடுவார்கள்? எனவே, தற்போதைய சூழலில் – நிலையில் – தனிக்காட்டு ராஜாவாகவே NPP வெற்றிவாகை சூடவுள்ளது என்றே தெரிகிறது. https://maatram.org/articles/11972

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.