Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் இறையாண்மைக்கும், சுயாட்சிக்கும் சவால் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளார். நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அத்துடன் வியன்னா ஒப்பந்தத்தையும் மீறியுள்ளார். எமது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது அமெரிக்க தூதுவர் முறையற்ற வகையில் செயற்பட்டார். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். ஆகவே இவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம். பாலினம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனம் பல மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளாக அமெரிக்காவின் புதிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் கலாச்சாரத்தை சீரழிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், நிதி பெற்றுக் கொண்டவர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.[ஒ] https://newuthayan.com/article/இலங்கையின்_உள்ளக_விவகாரங்களில்_தலையிடும்_ஜூலி_சங்!
  2. மின் துண்டிப்பு – குரங்குகள் மீது பழி போட வேண்டாம் ; அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? போன்ற பிரச்சினைகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ”மின் துண்டிப்பு குறித்து இந்த சபையில் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு ஏற்ப விநியோகம் இடம்பெறாவிட்டால் மின் தடை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்க தரப்பில் பதில் வழங்க வேண்டும். புதிய உற்ப்பத்தி ஆலைகளைத் திறந்து சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் குரங்குகள் மீது பழி போட வேண்டாம்.” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார். https://newuthayan.com/article/மின்_துண்டிப்பு_–_குரங்குகள்_மீது_பழி_போட_வேண்டாம்_;_அரசாங்கத்திடம்_சஜித்_கோரிக்கை!
  3. திஸ்ஸ விகாரைக்குத் தீர்வுகாண இராணுவத்துடன் பேச்சுவார்த்தை பௌத்தசாசன அமைச்சு அறிவிப்பு யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்குத் தீர்வு காண்பதற்காக, இராணுவத்துடனும், தொடர்புடைய அமைச்சுகளுடனும் விரைவில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி.அத்தப்பத்து மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணம் - திஸ்ஸ விகாரை விடயம் தேசிய ஐக்கியம் தொடர்பில் உணர்வுபூர்வமானதாக காணப்படுகின்றது. இது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்குத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இராணுவம் தற்போது அந்த ஆலயத்தை நிர்வகித்து வருகின்றது. அத்துடன் அந்த விகாரையில் கட்டுமானப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. பௌத்த மதகுரு ஒருவர் அங்கு தங்கியுள்ளார். பாதுகாப்பு அமைச்சு தன்னால் அதனை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது என்றும், பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையைப் பதிவு செய்யவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆதலால், அரசாங்கம் பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் இந்த விகாரையைப் பதிவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. – என்றார். https://newuthayan.com/article/திஸ்ஸ_விகாரைக்குத்_தீர்வுகாண_இராணுவத்துடன்_பேச்சுவார்த்தை
  4. கொழும்பு உயர்நீதிமன்றில் யாழ். பல்கலைத் துணைவேந்தருக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரால் விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜன் என்பவரால் கொழும்பு உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகஜன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது. இந்த வகுப்புத் தடை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தரால் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தியே சட்டத்துறை மாணவன் சிவகஜனால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார்' என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாடு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 9 மாணவர்களுக்கு எதிராக மூன்று வௌ;வேறு சம்பவங்கள் தொடர்பாகக் குற்றச்சாட்டுக்கள் முவைக்கப்பட்டிருந்த நிலையில், அவை தொடர்பில் முறையான விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் பரிந்துரைகள் ஒழுக்காற்று சபையின் பரிந்துரைக்காக விடப்பட்டபோது, ஒழுக்காற்று சபையின் பரிந்துரைகளை ஏற்காது கலைப்பீடாதிபதியின் வலியுறுத்தலின் அடிப்படையில் அந்த மாணவர்களுக்குத் தண்டனையாக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சம்பவம் கலைப்பீடத்தில் பாடத்தெரிவில் வெளிப்படையான ஒரு முறைமை கடைப்பிடிக்கப்படவில்லை என்பது தொடர்பில் வட்ஸ்அப் செயலியில் கருத்துத் தெரிவித்த மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இந்த விடயத்தில் முறைப்படி அமைக்கப்பட்டிருந்த ஒழுக்காற்று விசாரணைக் குழு, இரு மாணவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வழங்குவது என்று மட்டுமே தீர்மானித்திருந்தது. ஆனால் கலைப்பீடாதிபதியின் வலியுறுத்தலுக்கு அமைய ஒரு வருடத்துக்கு மாணவ நிலையிலிருந்து அவர்களை இடைநிறுத்தும் தண்டனை வழங்கப்பட்டது. இரண்டாவது சம்பவம் விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் தலைவராலும், துணைத்தலைவராலும் மாணவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவைக்கும் இடத்தில் போடப்பட்ட பூட்டை உடைத்தது தொடர்பானது. பலமுறை கூறியும் அந்தப் பூட்டுத் திறக்கப்படாததால் பூட்டை உடைத்த குற்றச்சாட்டுக்காக அவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருந்து. மற்றையது பரமேஸ்வரன் ஆலயத்துக்கு அண்மையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பானது. இந்தவிடயத்தில் முறைப்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, ஒரு மாணவனுக்கு எதிராக மட்டும் மதுபோதையில் இருந்தார் என்று தெரிவித்து ஒரு வருடம் மாணவ நிலையில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று முன்மொழிந்திருந்தது. ஆனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதியின் அழுத்தத்தின் அடிப்படையில் ஒழுக்காற்று சபை 5 மாணவர்களுக்கு எதிராகவும் ஒரு வருட இடைநிறுத்தல் தண்டனையை வழங்கியது. இந்த மூன்று விடயங்களும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக அண்மைக்காலம்வரை செயலாற்றிய சி.சிவகஜனால் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது. அவர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி தொடர்பாக எவ்விதமான அவதூறான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட தவறுகள் தொடர்பாக ஒரு சட்ட மாணவனாக, சட்ட வரையறைகளுக்கு உட்பட்டே கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஊடகங்களுக்கு செவ்வி வழங்கியிருந்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதியால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான முடிவுகளை ஏற்கவில்லை என்ற பல்கலைக்கழகப் பேரவையின் முடிவை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி வழங்கிய அழுத்தத்தின்பேரிலும், யாழ்.பல்கலைக்கழ ஆசிரியர் சங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தத்தின்பேரிலும் துணைவேந்தர் ஒருதலைப்பட்சமாக மாற்றியுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பாக உண்மைகளைத் தரவுகளுடன் பேசிய சி.சிவகஜன் என்ற மாணவன் எதிர்வரும் மார்ச் மாதம் இறுதிப் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில், இறுதியாண்டு விரிவுரைகளில் அவர் பங்குற்றாதவகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிருபம் 946இன் பிரகாரம் காலவரையின்றி ஒருவரை வகுப்புத் தடைக்கு உட்படுத்த முடியாது. வகுப்புத் தடைக்கு உட்படுத்த முன்னர் அந்த மாணவனின் கருத்தைக் கேட்க வேண்டும் போன்ற விடயங்கள் பின்பற்றப்படாது அவசர அவசரமாகக் கலைப்பீடாதிபதியைத் திருப்திப்படுத்துவதற்காக துணைவேந்தரால் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தரின் செயற்பாடு ஏதேச்சதிகாரமானதும், பக்கச்சார்பானதுமாகும். கலைப்பீடாதிபதியைத் திருப்பதிப்படுத்துவதற்காகவும், அவர் தனது பதவி விலகலை மீளப்பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் உறுப்புரை 12 உப பிரிவு ஐ, 14 உபபிரிவு (அ) ஆகியவற்றில் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்று நிருபங்களையும், பல்கலைக்கழக பேரவையால் உருவாக்கப்பட்ட துணைவிதிகளை மீறும் செயற்பாடாக இது அமைந்துள்ளது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனுவில் எதிர்மனுதாரர்களாக யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பிடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி போன்றவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த மனு அடுத்தவாரம் சிவகஜனால் கோரப்பட்டுள்ள இடைக்காலக் கட்டளை தொடர்பான விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. https://newuthayan.com/article/கொழும்பு_உயர்நீதிமன்றில்_யாழ்._பல்கலைத்_துணைவேந்தருக்கு_எதிராக_அடிப்படை_உரிமைமீறல்_மனு!
  5. மோடி – டிரம்ப் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் வருகை மிகவும் சிறப்பானது என தெரிவித்த ட்ரம்ப் இந்தியா, மோடியுடனான தனது நல்லுறவைப் பற்றியும் எடுத்துரைத்தார். இவேளையில் அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக கவலை வெளியிட்ட ட்ரம்ப் இந்தியா விதிக்கும் வரியையே அமெரிக்காவும் விதிப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு மட்டுமல்லாது இராணுவம், வர்த்தகம், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப துறை, அணுசக்தித் துறையிலும் அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘Our Journey Together’ என்ற புத்தகத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசாக வழங்கி அதில் ‘பிரதமரே நீங்கள் சிறந்தவர்’ என்றும் எழுதி கையெழுத்திட்டுள்ளார். -(3) https://www.samakalam.com/மோடி-டிரம்ப்-சந்திப்பு-ம/
  6. அமிர்தலிங்கத்தைப்போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை! adminFebruary 13, 2025 முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும் பலவீனமுமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை அன்னாரது பூர்வீக இல்லத்தில்நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். ,மேலும் தெரிவிக்கையில், எனது தந்தையார் நாகலிங்கம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றார். அமிர்தலிங்கம் நேர்மையானவர். மக்களால் இன்றும் மதிக்கப்படுவதற்கு அதுதான் காரணம். அவரது சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லை. அமிர்தலிங்கம் அவரது பாரியார் மங்கையர்கரசி அம்மையாரதும் பேச்சுக்களைக் கேட்டபதற்காக சிறுவயதில் கூட்டங்களுக்கு சென்றமை இப்போதும் எனக்கு நினைவிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் சரி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி அமிர்தலிங்கம் , தந்தை செல்வா ஆகியோர் தம்மை சந்திக்கும் மக்களின் குறைகளைக்கேட்டு குறித்துக்கொண்டு கொழும்புக்குச் சென்று அது தொடர்பில் நடவடிக்கை எடுத்து அதனை அந்த மக்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களின் இத்தகைய பணிகளை மறக்க முடியாது. இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் 1983ஆம் ஆண்டு கலவரத்தை தொடர்ந்து டில்லிக்கு, அமிர்தலிங்கத்தை அழைத்துப் பேசியிருந்தார். மிகப்பெரிய இராஜதந்திரி என்று அமிர்தலிங்கத்தை இந்திராகாந்தி அம்மையார் விழித்துக் கூறியிருந்தார். அமிர்தலிங்கத்தைப்போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை என மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் தூதுவர் சாய்முரளியும் கலந்துகொண்டிருந்தார். https://globaltamilnews.net/2025/211308/
  7. நாமல் மீதான பண மோசடிக் குற்றச்சாட்டு; சட்டமா அதிபரிடம் ஆலோசனை editorenglishFebruary 14, 2025 இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராகப் பணமோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துச் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) நேற்று வியாழக்கிழமை (13/2/2025) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது, சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததாகக் கூறப்படும் 15 மில்லியன் ரூபாய் தொகையை என்.ஆர் கன்சல்டன்சி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் (NR Consultancy (Pvt) Ltd) நிறுவனத்தில் முதலீடு செய்து பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நாமல் ராஜபக்‌ஷ மற்றும் பிற சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முடிந்து விட்டதாகவும், இதனை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் சி.டி.ஐ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இருப்பினும், வழக்கு தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி, வழக்கை ஓகஸ்ட் 07ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனையை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு முதலில் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் போது, நித்ய சேனானி சமரநாயக்க, சுஜானி போகல்லாகம மற்றும் என்.ஆர் கன்சல்டன்சி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பணியாற்றிய சுதர்ஷன கணேகொட ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் 15 மில்லியனை ரூபாய் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/211367/
  8. வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பான‌ இறுதிக்கட்டக் கலந்துரையாடல் editorenglishFebruary 14, 2025 எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக்கட்டக் கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (13/2/2025) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/211375/
  9. புதிய உறுப்பினரான செம்பாட்டான் (எனது ஊர் அட்ரஸும் செம்பாடு!) போட்டியில் கலந்துகொண்டது சந்தோஷம்😀
  10. நேற்று பதிவான கருத்துக்கள் பல இல்லாமல் போய்விட்டதாக களப்பொறுப்பாளர் மோகன் அறிவித்தல் விட்டுள்ளார். யாராவது நேற்று போட்டிக்கான பதில்களை அல்லது திருத்தங்களை பதிந்திருந்தால் திரும்பவும் பதியலாம். இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் இதுவரை பதில்களைப் போடாதவர்கள் விரைந்து பதில்களைத் தாருங்கள்😀
  11. பிரச்சினையில்லை. பதில்களைத் தரவேற்றும்போது மாற்றிவிடுகின்றேன். இப்போதுதான் master sheet (இரகசியமானது!) புதுப்பித்து வெள்ளோட்டம் விட்டு எல்லாம் ரிப்ரொப்பாக இருக்கின்றதா என்று பார்த்துமுடித்தேன். வெள்ளிக்கிழமையிலிருந்துதான் பதில்களைத் தரவேற்றுவேன் 😀
  12. @ரதியை விட ரதியின் அவதாரில் உள்ள சிவப்பு உதட்டுச் சாய நீலிதான் எப்போதும் உற்சாகம் தருவா😍
  13. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் மோதும் அணிகளின் வீரர்களின் விபரங்கள் - புதுப்பித்து குழு A: இந்தியா (IND) BATTERS: Rohit Sharma (c), Shubman Gill (vc), Shreyas Iyer, Virat Kohli, Rishabh Pant, KL Rahul† ALLROUNDERS: Hardik Pandya, Washington Sundar, Ravindra Jadeja, Axar Patel BOWLERS: Arshdeep Singh, Mohammed Shami, Kuldeep Yadav, Varun Chakravarthy பாகிஸ்தான் (PAK) BATTERS: Mohammad Rizwan† (c), Babar Azam, Fakhar Zaman, Saud Shakeel, Tayyab Tahir, Usman Khan ALLROUNDERS: Salman Agha, Faheem Ashraf, Kamran Ghulam, Khushdil Shah BOWLERS: Abrar Ahmed, Haris Rauf, Mohammad Hasnain, Naseem Shah, Shaheen Shah Afridi நியூஸிலாந்து (NZ) BATTERS: Tom Latham†, Kane Williamson, Will Young, Devon Conway ALLROUNDERS: Mitchell Santner(c), Michael Bracewell, Mark Chapman, Daryl Mitchell, Nathan Smith, Glenn Phillips, Rachin Ravindra, BOWLERS: Lockie Ferguson, Matt Henry, Ben Sears, Will O’Rourke பங்களாதேஷ் (BAN) BATTERS: Najmul Hossain Shanto (c), Jaker Ali, Tanzid Hasan, Towhid Hridoy, Parvez Hossain Emon†, Mushfiqur Rahim † ALLROUNDERS: Mehidy Hasan Miraz, Mahmudullah, Soumya Sarkar, Nasum Ahmed, Rishad Hossain, Tanzim Hasan Sakib BOWLERS: Taskin Ahmed, Mustafizur Rahman, Nahid Rana குழு B: அவுஸ்திரேலியா (AUS) BATTERS: Travis Head, Josh Inglis, Alex Carey †, Marnus Labuschagne, Matthew Short, Steven Smith (c), Jake Fraser-McGurk ALLROUNDERS: Glenn Maxwell, Aaron Hardie, Sean Abbott BOWLERS: Nathan Ellis, Adam Zampa, Ben Dwarshuis, Spencer Johnson, Tanveer Sangha தென்னாபிரிக்கா (SA) BATTERS: Temba Bavuma (c), Heinrich Klaasen, David Miller, Ryan Rickelton, Tristan Stubbs, Tony de Zorzi, Rassie van der Dussen ALLROUNDERS: Aiden Markram, Marco Jansen, Wiaan Mulder, Corbin Bosch BOWLERS: Keshav Maharaj, Kagiso Rabada, Tabraiz Shamsi, Lungi Ngidi இங்கிலாந்து (ENG) BATTERS: Jos Buttler (c), Harry Brook, Ben Duckett, Phil Salt, Joe Root, Jamie Smith † ALLROUNDERS: Liam Livingstone, Jacob Bethell, Brydon Carse, Jamie Overton BOWLERS: Jofra Archer, Adil Rashid, Mark Wood, Gus Atkinson, Saqib Mahmood ஆப்கானிஸ்தான் (AFG) BATTERS: Hashmatullah Shahidi(c), Rahmanullah Gurbaz, Ibrahim Zadran, Ikram Alikhil †, Sediqullah Atal ALLROUNDERS: Rahmat Shah (vc), Rashid Khan, Azmatullah Omarzai, Gulbadin Naib, Mohammad Nabi BOWLERS: Fareed Ahmad, Fazalhaq Farooqi, Noor Ahmad, Fareed Ahmad ஓம். இணைக்கலாம். நான் இன்னமும் பதில்களைத் தரவேற்றம் செய்யவில்லை! புதுப்பித்த வீரர்களின் பட்டியல் இணைத்துள்ளேன். சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
  14. பொறுப்பான பிள்ளையாக இருந்திருக்கின்றார் புங்கை அண்ணா. என்னுடைய நான்கு நண்பர்களின் பெற்றோர்கள் நைஜீரியாவில் ஆசிரியர்கள், எஞ்சினியர்களாக வேலை செய்தவர்கள். நண்பர்களும் அங்குதான் பிறந்தவர்கள். அவர்களின் தந்தைமார்கள் எல்லோருமே வீட்டுப் பொறுப்பால் நைஜீரியாவுக்கு வேலைக்குப் போனவர்கள்.
  15. மக்கள் மயப்பட்ட வைரவர் வழிபாடு தி. செல்வமனோகரன் April 14, 2024 | Ezhuna அறிமுகம் இந்திய மண்ணில் தோற்றம் பெற்ற தொன்மைச் சமயங்களில் ஒன்றான சைவத்தின் தொன்மைப் பிரிவுகளில் ஒன்று வைரவம். இது வடநாட்டில் தோற்றம் பெற்றதாகவே பெரிதும் நம்பப்படுகிறது. காவல் தெய்வமாகச் சித்தரிக்கப்படும் வைரவரை சிவனின் அம்சமாகவும் மகனாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவர் பிரமனின் தலையைக் கொய்தவராகவும், வானவரிடம் கபாலத்தில் இரத்தத்தைப் பெற்றவராகவும், அந்தகாசுரனை வதைத்தவராகவும் சிறுதொண்டர் நாயனாரிடத்துப் பிள்ளைக்கறி பெற்றவராகவும் கூறப்படுகிறார். உக்கிரப் போர்த் தெய்வமாகச் சுட்டப்படுகின்ற இவருக்கு சோதிட நூல்களால் கலக நாளாகக் குறிப்பிடப்படும் செவ்வாய்க்கிழமையே, குறிப்பாகத் தைமாத செவ்வாய்க்கிழமை, உகந்த நாளாகவும் சிவந்த செவ்வரத்தம்பூ உகந்த மலராகவும் பரணி நட்சத்திரம் (போருடன் தொடர்புடையது) உரிய நட்சத்திரமாகவும் கூறப்படுகிறது. புராணங்கள், இவரை “மஹா வைரவர், கால வைரவர், உக்கிர வைரவர், வடுகநாதர், சட்டைநாதர்” எனப் பலவாறு சித்தரிக்கின்றன. சிவ பராக்கியம் எனும் நூல் அஷ்ட வைரவர்களைக் குறிப்பிடுகிறது. இவ் வைரவரின் தோற்றப் பொலிவு பற்றிப் பல விடயங்கள் கூறப்படினும் பொதுவில் கைகளில் கபாலம், தண்டம், தமருகம், சூலம் என்பவற்றை ஏந்தியரவாகக் கூறப்படுகிறார். உக்கிரப் பார்வை, கோரப் பற்கள், சிலம்பு, சிங்கினி மாலை, பாம்பு போன்றவைகளுடன் கூர்மையான வாள், திரிசூலம், பாசம், அங்குசம், வச்சரம், அக்கினி, கதை, வில், அம்பு, தண்டம், கபாலம், சங்கு, சக்கரம், உலக்கை போன்றவற்றுடன் விளங்குபவராகவும் கூறப்படுகிறார். நாய் வாகனத்தை (தெய்வஞாளி, சுவனம்) உடையவராகச் சித்தரிக்கப்படுகிறார். சாதாரணமாக ஒரு மரத்தின் கீழ் திரிசூல வடிவில் இருப்பது முதல் சகல ஆலயங்களிலும் பரிவார தெய்வமாகவும், வைரவர் கோயிலில் கர்ப்பக் கிரக மூர்த்தியாகவும், வீடுகளிலே காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும், எல்லைத் தெய்வமாகவும் வைரவர் வழிபாடு இடம்பெற்று வருகின்றது. இங்கு வைரவர் வழிபாடானது பண்டைய ஐதீகம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபடப்பட்டு வருகின்றது. ஈழத்தில் வைரவர் வழிபாடு ஈழத்து நாட்டாரியல் வழிபாட்டில் முக்கிய காவல் தெய்வமாக வைரவர் காணப்படுகின்றார். முத்தலை சூலத்தை வழிபட்ட மக்கள் அதனை காலனித்துவ காலத்தில் அந்நியரின் மேல் உள்ள பயத்தின் நிமித்தம் தேவை ஏற்படும் பொழுது கிறிஸ்தவ சிலுவையாகவும் (இரு தலைகளையும் மடித்து) பாவித்தனர். இச்சூலத்தை திறந்த வெளிகளில் உள்ள வேம்பு, அரசு, நாவல், ஆல், புளி, மருது போன்ற மரங்களில் கீழ் குத்தி வைத்து வழிபட்டனர். இவையே பின்னர் வைரவராக மாறி உருவ வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்துள்ளது. ஈழத்தில் வைரவர் வழிபாடு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பெரும்பான்மையாக நாட்டாரியல் தெய்வமாகவும், பெருந்தெய்வமாகவும் வழிபடப்படுகின்றது. ஆகமம் சாராத வைரவர் வழிபாட்டிலே வீடுகளில், கோயில்களில், பயிர்ச்செய்கை நிலங்களில், மயானங்களில் இடம்பெறும் வைரவர் வழிபாடுகள் முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றன. இத் தெய்வத்திற்கு மடை பரவுதல் – வடை மாலை சாத்துதல், பொங்கல், மிருகபலி போன்றன செய்து வழிபடும் மரபு இற்றைவரை காணப்படுகிறது. அத்தோடு வைரவருக்கு பிரதேசப் பண்பாட்டுக் கூறுகளுக்கு இணங்கவும் வழிபாடியற்றப்படுகிறது. காவல் தெய்வங்களை காணிக்குள் வைத்து வழிபடும் முறை பொதுவாக எல்லாப் பிரதேசங்களிலும் காணப்படுகின்றது. ஆனால் ‘வைரவன் பந்தல்’ அமைத்து வழிபடும் முறை மட்டக்களப்பு பிரதேசத்தவரின் தனித்துவமான முறையாகும். வைரவர் வழிபாட்டின் போது ஒவ்வொரு ஊருக்கும் ஏற்ற வகையில் வீட்டின் புறம்பாக, எதிர்ப்பக்கம் நோக்கிய வகையில் ‘வைரவர் பந்தல்கள்’ அமைக்கப்பட்டிருக்கும். நிரந்தரமாக அமைக்கும் பந்தலினைப் பலமான மரங்களினாலும், கற்களினாலும் வடிவமைப்பார்கள். தற்காலிக பந்தலினை வேம்பு மற்றும் பூவரசம் கம்பினை கொண்டு தட்டுப்பந்தல் வடிவில் அமைத்து தென்னம் ஓலைகளால் வேய்ந்து தென்னங் குருத்துக்களால் சுற்றி வளைத்து அலங்கரிப்பர். வீட்டில் உள்ள வைரவன் பந்தல்களிலே வருடாவருடம் குறித்த பரம்பரையினரை சேர்ந்தவர்களால் வைரவர் சடங்கானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது “வைரவருக்குச் செய்தல்‟ எனப்படும். வீடுகளில் தீய சக்திகளின் பார்வையினால் தமது குடும்பத்திற்கு எந்தவித கெடுதலும் இடம்பெறாமல் இருப்பதற்காகவும், தமது வீட்டையும் குடும்ப உறுப்பினர்களையும் வைரவர் காப்பார் எனும் நம்பிக்கையிலும், நோய் நீக்கம், நீண்ட ஆயுள், சந்ததி விருத்தி, தனம், தானியம், செல்வ விருத்தி ஏற்படுவதற்காகவும் பாரம்பரியமாக வைரவர் வழிபாடு இடம் பெறுகின்றது. வழிபாட்டு முறைகள் இங்கு பெரும்பாலும் ஆதி வைரவரை அழைத்தே சடங்கு நடாத்தப்படுகின்றது. சில இடங்களில், வீடுகளில் கல்யாண வைரவர், கொங்கை வைரவர், திரிசூல வைரவர், கபால வைரவர், நரசிங்க வைரவர் போன்றோரை அழைத்தும் சடங்கு நடாத்தப்படும். சடங்கு இடம்பெறுவதற்கு முன்னர் தீட்டுக்கள் இன்றி புனிதத் தன்மையைப் பேணும் பொருட்டும், தீய சக்திகளின் பார்வை விலகும் பொருட்டும், மஞ்சள் நீர் தெளித்து வீட்டைக் கழுவி சுத்தம் செய்து சமுத்திர நீர் போன்ற புனித தீர்த்த நீரைத் தெளித்து, வீடு வளவுகளை காவல் செய்து வீட்டினுள் சாம்பிராணி, குங்கிலியம் போன்றவற்றினால் புகையிட்டு வீட்டு முன் வாசலில் வேப்பமிலைப் பத்திரத்தினாலான தோரணம் கட்டுவர். வைரவர் உக்கிரமான தெய்வம் ஆகையால் இரவு வேளைகளிலே இச் சடங்கானது இப்பிரதேசங்களில் நடாத்தப்படுகின்றது. சில இடங்களில் இச் சடங்கு இடம்பெறும் நாள் அன்று “அம்மனுக்குச் செய்தல்” எனும் “சர்க்கரை அமுது படைத்தல்” படையல் சடங்கானது பகல் வேளையும், இரவு வேளைகளில் “பேச்சியம்மனுக்கு” “பள்ளயச்சடங்கும்” நடைபெறும் வழக்காறு உண்டு. இவ் வழக்காற்று முறைகளின் போது உற்றார் உறவினர்கள், அயலவர்கள் குறித்த குடும்பத்தினருடன் இணைந்து சடங்கிற்கான பங்களிப்பினை மேற்கொள்வார்கள். இவ் வேளை சமூகத்தினர் இடையே பரஸ்பர தொடர்பு, ஒற்றுமை முதலான விழுமியப் பண்புகள் விருத்தியடைகின்றன. வீடுகளில் வைரவருக்குச் சிலை அமைத்து வழிபடும் மரபு காணப்படுவதில்லை. திரிசூலம் அல்லது இரட்டைத் திரிசூலம், கல், தென்னம்பாளை, கமுகம் பாளை, செவ்விளநீர், கருங்காலிப் பொல்லு (தண்டம்) என்பன வைரவர் குறியீடாக வைக்கப்பட்டு “மடை வைத்தல்” சிறப்பாக இடம் பெறுகின்றது. வீடுகளில் பூசை வழிபாடானது குறித்த பரம்பரையைச் சேர்ந்த ஒருவரினாலோ அல்லது பூசகரை அழைத்தோ இடம்பெறும். மட்டக்களப்பு தெய்வ வழிபாட்டு முறையில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேடமான மடைப் பொருட்கள் காணப்படுகின்றன. அரிசிமா ரொட்டி, தவிட்டு ரொட்டி, கஞ்சா ரொட்டி போன்ற ரொட்டி வகைகளும், செவ்விளநீர், கரும்பு, கதலி வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் போன்ற நார்ப்பழ வகைகளும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், பாணக்கம், துள்ளுமா, உளுந்து வடை, பூக்கள், வெற்றிலை, பாக்கு, வில்வம் பத்திரம், வேப்பம் பத்திரம் என்பனவும் சிறப்பாக சிவப்பு நிற மலர்கள், கள்ளு, சாராயம் போன்றவையும் வைக்கப்பட்டு மடை அலங்கரிக்கப்படும். ஆதி வைரவரை அழைத்து சடங்கு செய்யும் சில வீடுகளில் கஞ்சா ரொட்டி, கள்ளு, சாராயம் போன்றவற்றை வழிபாட்டின் போது சேர்த்துக் கொள்வது குறைவு. ஆனால் ஏனைய சில வைரவ மூர்த்தங்களை அழைத்து வழிபாடு செய்கின்ற இல்லங்களில் மதுப் பொருட்கள் வைத்து வழிபடப்படும் மரபு காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் வைரவருக்கு தேன் வைத்து வழிபடப்பட்டிருந்த முறையே பிற்காலத்தில் மதுப்பொருட்களாக மாற்றமடைந்து இருக்கலாம். ரொட்டி செய்யப்படும் போது சில இடங்களில் தேங்காய்ப்பூ, உப்பு என்பன கலந்தும் சில இடங்களில் தனி மாவினாலும் செய்வர். மணி ஒலி எழுப்புதல், தீபம் காட்டுதல், உடுக்கை ஒலித்தல், வைரவ தோத்திரங்கள், காவியங்கள் பாடுதல் என்பவற்றோடு சில இல்லங்களில் வைரவர் உருக்கொண்டு வந்து கலையாடுதல், வாக்குச் சொல்லுதல் என்பனவும் இடம்பெறும். சடங்கு வழிபாடு நிறைவு பெற்றதும் தண்ணீர் தெளித்து மடை பிரிக்கப்பட்டு பிரசாதங்கள் பகிர்ந்து அளித்தலுடன் வீட்டுச் சடங்கு நிறைவுபெறும். வைரவர் சடங்கு வழிபாடுகளில் பொதுவாக மண்டபம் அமைத்தல், மண்டபம் காவல் பண்ணுதல், கும்பம் வைத்து மடைகள் வைத்தல், கலையாடுதல், தேவாதிகளை கட்டுக்கு வைத்து ஆட்டத்தை ஊக்குவித்தல், தேவாதிகளை யாரும் கட்டினால் வெட்டி ஆடுதல், காவியம் பாடுதல், பள்ளயம் அல்லது பலி கொடுத்தல், வழிபடுதல் முதலிய சடங்கு நிகழ்ச்சிகள் இடம்பெறும். வைரவர் சடங்கின் போது தெய்வம் ஆடுதலில் உடுக்கை, தவில், சிலம்பு, அம்மானைக் காய், சாட்டை போன்ற கருவிகள் பயன்படுத்தப்படும். இவ்வேளை வாக்குச் சொல்லுதல், தீய சக்திகளை விலக்குதல், கழிப்புச் சடங்கு, பலியிடுதல் போன்றவை இடம்பெறும். இங்கு பலியிடலுக்காக ஆடு, கோழி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இன்று பலியிடலின் மாற்றீடாக நீத்துப் பூசணிக்காய் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு வைரவருக்குரிய சிறப்பு வாய்ந்த தோத்திரம், காவியம், அகவல், தாலாட்டு என்பன பாடப்படுகின்ற வழக்கம் காணப்படுகின்றது. சுடலைக்கு அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவினர் சுடலை வைரவர் வழிபாட்டினை மேற்கொள்வர். இவ் வழிபாட்டின் போது பனை ஓலைகளினால் இழைத்த பெட்டி ஒன்றினுள் கள்ளு, சாராயம், கஞ்சா ரொட்டி, மொந்தன் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைக்கப்பட்டு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு குறித்த ஒரு இடத்தில் மடை வைக்கப்பட்டு தேங்காய் உடைத்து, கற்பூர தீபம் ஏற்றி குறித்த குடும்பத்தினைச் சேர்ந்த நபரின் மண்டாட்ட வேண்டுதலுடன் சுய வழிபாட்டு முறையில் வைரவர் வழிபாடு இடம்பெறும். வைரவர், ஆகமக் கோயில்களில் பரிவார மூர்த்திகளில் ஒருவராகவும் காவல் தெய்வமாகவும் கூறப்படுகிறார். மகோற்சவ ஆரம்பத்தில் கிராம சாந்தியில் வைரவ வழிபாடு இடம்பெறுகின்றது. ஆலய உற்சவ காலங்களின் போது இக் கிரியையானது குறித்த ஆலயத்தில் உள்ள கிராமத்திற்கு எந்தவித இடையூறும் நேர்ந்திடா வண்ணம் மேற்கொள்ளப்படும். உற்சவம் முடிவடைந்ததும் வைரவர்க்குரிய விசேட அபிடேக ஆராதனையுடன் பூசை இடம்பெறும். வைரவர் கோயிலை காவல் செய்யும் தெய்வம் மாத்திரமல்ல, அவர் சுற்றாடலையும் காக்கின்றார். மகோற்சவ காலங்களில் வைரவரைக் கட்டுதல், வைரவர் சாந்தி செய்தல் முதலானவை நடைபெறுவதையும் அவதானிக்கலாம். ஈழத்தில் சிறு தெய்வமாக, பெருந்தெய்வமாக வைரவ வழிபாடு பெருஞ்செல்வாக்குற்றுக் காணப்படுகிறது. இதற்குப் பின்வரும் காரணங்களைச் சுட்டலாம். கந்தபுராணச் செல்வாக்கு. ஈழத்தில் ஆதிக்க மதமான சைவம் (இந்து சமயத்துள்) இருத்தலும், வைரவர் சிவனின் அம்சமாக எடுத்துரைக்கப்படுதலும். ஒல்லாந்தர் கால சமய அடக்குமுறை அல்லது ஆதிக்க சக்திகளுக்கு எதிரான குரல். சூல வழிபாட்டு முறை – எளிய வழிபாட்டு முறை சைவ மேனிலையாக்கம் அல்லது சமஸ்கிருத மயமாதல் “யாழ்ப்பாணக் கலாசாரம், கந்தபுராணக் கலாசாரம்” என்பார் பண்டிதமணி. கந்தபுராணம் முன்னிறுத்தும் சிவகுமாரர்களுள் வைரவர் ஒருவர் என்பதும் அவர் உக்கிர அம்சமாக சுட்டப்படுவதும் இங்கு உற்று நோக்கத்தக்கது. வைரவ வழிபாடு எப்போது ஈழத்திற்கு வந்தது என்பது தெளிவாக உரைக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த ஈழத்தில் சுதேச சமயமான சைவ சமயத்தை நிலைநாட்ட அக்கால மக்கள் பயன்படுத்திய உபாயமாகவும் முக்கிய செயற்பாடாகவும் அமைந்தது திரிசூல வழிபாடாகும். இத் திரிசூல வழிபாடு என்பது பெரிதும் வைரவர் வழிபாடாகவே அமைந்திருந்தது. சுதேச சமய நடைமுறைகளைப் பின்பற்றுதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்ட அச்சூழலில் மரங்கள், நீர்நிலைகள், விவசாய உற்பத்தி நிலங்கள், சில மறைவிடங்கள் என்பவற்றில் இவ் வைரவ வழிபாடு நிகழ்த்தப் பெற்றுள்ளது. ஒல்லாந்த அரசின் அடக்குமுறைக்கெதிரான மௌனக் குரலாகவும் குறியாகவும் சூலத்தைக் குறிப்பிடலாம். அதேவேளை பரமனை மதித்திடாத பங்கையாசனனுக்கு நிகழ்ந்ததே ஒல்லாந்தருக்கும் நிகழும் என்பதைக் குறியீடாக சைவ வழிபாட்டினூடு உணர்த்தியிருக்கக் கூடும். வானவர் தலையைக் கொய்ததன் குறியீடான மண்டையோட்டு மாலையைக் குறிப்பதாக அமைந்த உழுந்துவடை மாலையும் குருதி பெற்ற கதையினடையாளமாக சிவப்புநிற செவ்வரத்தம் பூ தரித்தலும் ஒல்லாந்தருக்கான எச்சரிக்கையாகவும் அல்லது சுதேச சமயத்தை ஒடுக்கும் அதிகாரத்திற்கு எதிராக மக்களைக் கொதி நிலையில், உணர்ச்சிப் பிரவாகத்தில் வைத்திருக்கும் செயற்பாடாகவும் வைரவ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்கலாம். தாம் தாம் விரும்பிய நிலையிலும் வகையிலும் மிருகபலி, மடை பரவுதல் தொட்டு ஆகமப் பண்பாடு வரை வைரவ வழிபாடு அகலக் காலூன்றி நிலைத்து நின்றது. ஆகமப் பண்பாட்டை முன்னிறுத்தி சைவ மீட்டுருவாக்கத்தைச் செய்த ஆறுமுகநாவலர் சிவபெருமானின் மகன்களில் ஒருவராக வைரவரைச் சுட்டி அவ் வழிபாட்டை உள்ளீர்த்தமை யாழ்ப்பாணத்தில் அவ் வழிபாட்டுக்கான மேனிலையாக்கத்தையும் ஸ்திர நிலையையும் வழங்கியது. யாழ்ப்பாணத்தின் அவ்வவ் சமூகத்தின் நோக்கிற்கேற்ப வைரவர் காலவைரவர், வடுகவைரவர், ஆதிவைரவர், கபாலவைரவர், நரசிம்மவைரவர், கிங்கிலியவைரவர் எனப் பலவாறு வழிபடப்பட்டு வருகின்றார். அதேபோல ஆலயம் அல்லது சூலம் அமைந்திருக்கும் இடத்தை வைத்துக் கொண்டு இத்தியடி வைரவர், சுடலை வைரவர், ஆலடி வைரவர் எனப் பலவாறு சுட்டப்படுகிறார். ஆகமக் கோயில்களில் வடுகநாதராகவும், ஷேத்திர பாலகராகவும் காளியின் தலைவராகவும் சுட்டப்படுகிறார். இணுவில், தெல்லிப்பளை, உரும்பிராய், சிறுப்பிட்டி, வடமராட்சி உள்ளிட்ட பல இடங்களில் ஆகம மயப்பட்ட, ஆகம மயப்படாத மிருகபலியோடு கூடிய நாட்டாரியல் பண்புகள் நிறைந்ததான வைரவர் வழிபாட்டு மரபுகள் இன்றுவரை காணப்படுகின்றன. சமகாலப் பயில்வுகள் காலனித்துவ அதிகாரத்திற்கெதிரான, ஒலி வெளிப்படாத, ஆழ ஊடுருவித்தாக்கும் கலகக் குரலாகவே போர்த் தெய்வமான வைரவரும் ஆயுதமான திரிசூலமும் கட்டமைக்கப்பட்டன. ஜனநாயகமான, பேதமற்ற – சாதியக் கட்டுமானம் தாண்டிய மக்கட் தெய்வமாக வைரவர் விளங்குகின்றார். நாவலர் வைரவரை சிவனினம்சமான மகனாக எடுத்துரைத்து மேனிலைத் தெய்வமாக்கினார். இதன்வழி நாட்டாரியல் வழிபாடு, ஆகம வழிபாடு எனும் இருதள மரபிற்குரியதாக, சிறுமரபு – பெருமரபு என வைரவ வழிபாடு மாற்றமுற்றது. பின் இருபதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், இலவசக் கல்வி, போன்றனவும் நகரமயமாதலும் வைரவ வழிபாட்டை பெருமரபாக்கின. இன விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை, போர் என்பன வைரவ வழிபாட்டை மீள் முக்கியத்துவம் பெறச் செய்தன. 1995 இல் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னான மீள் வருகை புதிய அசைவியக்கங்களை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தியது. இராணுவக் கட்டுப்பாடு, மின்சாரம், தொழில்நுட்பத் தொடர்பாடல் வசதிகள், பொருளாதாரத் தடைநீக்கம், திறந்த பொருளாதாரம், சடுதியான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் (சட்ட ரீதியாவும், களவாகவும்), பொருளாதார ஏற்றம், கல்வி என்பன அவற்றுள் சில. இதன் வழி வாழ்க்கைத் தரம் உயர்கிறது. யுத்தத்தின் நேரடித் தாக்கம் ஓரளவு குறைந்ததனால், மக்கள் தெய்வமாக யுத்தத்தின் அடையாளமாக இருந்த வைரவரை மக்கள் தம் மனங்கட்கேற்ப, சாந்த சொரூபியாக ‘ஞான வைரவராக’ மாற்றி விடுகின்றனர். ஆகம மரபுவழி ஆலயங்கள் புனருத்தாரணம் செய்யப்படுகின்றன. பிராமணர்கள் பூசை செய்ய நியமிக்கப்பட்டு அலங்கார உற்சவங்கள் நடைபெறுவனவாக வைரவர் கோயில்கள் மாறின. சில ஆலயங்களில் இரதோற்சவங்களும் நடைபெறுகின்றன. ஆயினும் சமகாலத்தில் வைரவர் வழிபாட்டில் சுதேச பாரம்பரியங்களில் கலப்புகள் ஏற்படுத்தப்படுகின்றது. இதனால் கலப்புறு பண்பாடு தோற்றம் பெறுகிறது. ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்ட அம்சங்களும், ஆகம விதிமுறைகளுக்கு உட்படாத அம்சங்களும் இணையும் போது இங்கு புதிய கலப்புறு பண்பாட்டம்சங்கள் தோன்றி இரண்டு முறையான வழிபாடுகளையும் ஒரே தளத்தில் இடம்பெறச் செய்கின்றன. வைரவருக்கு உயிர்ப்பலி அதிகமாக கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒரு சில இடங்களிலேயே உயிர்ப் பலி மேற்கொள்ளப்படுகின்றது. நகரமயமாதல், உலகமயமாதல், மேனிலையாக்கம் எனும் தளக்கூறுகளின் வழி ஏற்பட்ட சமூக அசைவியக்கமாகவே நாட்டார் பண்பாட்டின் அடையாளமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண வைரவர் வழிபாடு, பெருமரபாக சமஸ்கிருத மயமாதலுக்குள்ளான பெருந் தெய்வமாகி சமூக, சாதி அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கான சமூகக் குறியீடாக சூலக் குறியீட்டைப் புறந்தள்ளி, கருங்கற் தெய்வமாக எழுச்சி பெற்று நிற்பதை இன்று அவதானிக்க முடிகிறது. இம் மேனிலையாக்கம் இன்று வடக்கு, கிழக்கு மட்டுமின்றி இலங்கை முழுவதும் மிகவும் வேகமாக நிகழ்ந்து வருவதைக் காணமுடிகிறது. நிறைவுரை சமஸ்கிருத மயமாதலுக்கும் சாதி, வர்க்கப் படிநிலைக்கும் இடையேயான இயங்கு நிலை அவதானத்திற்கு உரிய ஒன்றாகும். அதிகாரமிகு சாதியத்திற்கும் சமஸ்கிருத மயமாதலுக்கும் இடையிலுள்ள உறவுநிலை கெட்டித்த தன்மையுடையதாகும். அதனாலேயே கீழ்நிலையிலிருந்து மேலெழ விரும்பும் குறித்த மனிதர், குறித்த சாதி, குறித்த வர்க்கம் அதிகார மனிதர்களின் சாதிக்கோ வர்க்கத்திற்கோ சமமாகத் தன் அந்தஸ்தை ஆக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. இம் முயற்சிக்கு அனுசரணை செய்வன பொருளாதாரம், அதிகாரம், சடங்கு எனும் தகுதிப்பாடுகளாகும். இவற்றில் பெரும்பான்மையைத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் தன்னதிகாரத்தை – சமூக அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதன் வெளிப்பாடே சுடலை வைரவரும் கிணற்றடி வைரவரும் முச்சந்தி வைரவரும் ‘ஞான வைரவரான’ வரலாறு. ஆகவே இதில் சாதிய, வர்க்க அமைதி கிடைக்கின்றதே அன்றி உண்மையான ஆன்மீக அமைதி சாத்தியமற்றுப் போகின்றது. தொடரும். https://www.ezhunaonline.com/folk-god-vairavar-in-sri-lanka/
  16. மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் திகதி மரணம் அடைந்தார். அவர் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயரிடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை கவுரவிக்கும் விதமாக அவரது பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதில், “எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை ” எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=311916
  17. வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த ஜப்பான் நிதியுதவி 12 Feb, 2025 | 11:39 AM பெப்ரவரி 11 ஆம் திகதி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா வடக்கு மாகாணத்திற்கான தனது முதல் பயணத்தின் போது, Humanitarian Development Organization (HDO) மற்றும் Nuffield School for Deaf and Blind ஆகிய இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் முன்னிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் மருத்துவ மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் இந்த திட்டங்களுக்காக 173,659 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூபா 50 மில்லியன்) ஒதுக்கியுள்ளது. மோதல்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளில், குறிப்பாக பாதிப்புகளைத் தணிப்பதை ஊக்குவிப்பதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளது. பளை பிரதேச வைத்தியசாலையில் புதிய உள்நோயாளர் பிரிவொன்றை நிர்மாணிப்பதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார சேவையை மேம்படுத்தும் முகமாக "பளை பிரதேச வைத்தியசாலைக்கான மருத்துவ வாட்டை நிர்மாணிக்கும் கருத்திட்டம்" HDO அலுவலகத்தால் முன்னெடுக்கபடவுள்ளது. மீள்குடியேற்றப்பட்ட 14,927 மேற்பட்டோருக்கு சேவையாற்றும் இந்த வைத்தியசாலையானது தற்போது கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் போதிய சுகாதார வசதிகள் இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. "வட மாகாணத்தில் செவிபுலனற்றொர் மற்றும் பார்வையற்றோருக்கான நஃபீல்ட் பாடசாலையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டம்" சிறுவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான கற்றல் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை முழுவதிலுமிருந்து செவிபுலனற்ற மற்றும் பார்வையற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கும் ஒரே தமிழ் மொழி நிறுவனமாக நஃபீல்ட் பாடசாலை திகழ்கின்றது. இந்த திட்டம் பாடசாலையில் மின்சார விநியோகம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் விடுதி வசதிகளை மேம்படுத்த உதவும். இலங்கையில், குறிப்பாக வட மாகாணத்தில், பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் உறுதிப்பாட்டை தூதுவர் இசோமாட்டா மீண்டும் உறுதிப்படுத்தினார். https://www.virakesari.lk/article/206473
  18. டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கு ஹமாஸ் பதிலடி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல் பேச்சுகளைத் தாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மதிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய பணயக்கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலிற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இவ்வாறு குறித்த காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படவில்லை எனில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விடுதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார். காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்த நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் கூறினார். அவருடைய இந்த கருத்துக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி அளித்துள்ள பதிலில், மிரட்டல் விடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியுள்ளார். ட்ரம்பின் கருத்துகள், போர் முடிவுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைக் கடினம் ஆக்குவதற்கு வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் என ஒன்று உள்ளதாகவும் அதற்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஹமாஸ் அமைப்பின் மூத்த செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி வலியுறுத்தியுள்ளார். https://www.hirunews.lk/tamil/396584/டொனால்ட்-ட்ரம்பின்-கருத்துக்கு-ஹமாஸ்-பதிலடி
  19. அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம் Editorial / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 09:39 யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலம்புரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எம்.பி.க்கும் இரண்டு நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அர்ச்சுனா-எம்-பி-தாக்கியதில்-இருவருக்கு-காயம்/150-351776
  20. கடவுச்சீட்டு வரிசைக்கு ஏப்ரல் மாதத்தில் முடிவு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை குடிமக்களுக்கு நிலவும் கடுமையான கடவுச்சீட்டு பற்றாக்குறைக்கு முந்தைய ஆட்சிகளின் தவறான நிர்வாகமே காரணம் என்றும் கூறியுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்கிழமை(11) டெய்லி மிரருக்கு அளித்த செவ்வியிலேயே இத் தகவலை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, கடவுச்சீட்டு வரிசைகள் ஒரு மாதத்திற்குள் அனைத்து வரிசைகளும் அழிக்கப்படும். அடுத்த வாரத்திற்குள் 24 மணி நேர சேவை தொடங்கப்படுவதால், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையில் உள்ள அனைத்து ஊழியர்களும் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரவும் பகலும் உழைக்க உறுதிபூண்டுள்ளனர். கடவுச்சீட்டு வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையில் உள்ள அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். தகுதிவாய்ந்த அதிகாரியாக இருப்பதால், நாங்கள் அவ்வாறு செய்ய உறுதியளிப்போம். இருப்பினும், இந்தப் பிரச்சினை கடந்த கால அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள ஊழியர்களை மட்டுமே கொண்டு 24 மணி நேர சேவையை வழங்குவது மிகவும் கடினமான பணி என்று கூறிய அந்த அதிகாரி, பல நாட்கள் வரிசையில் காத்திருப்பதன் மூலம் பொதுமக்கள் அனுபவிக்கும் சிரமங்களுக்கு இது பொருந்தாது என்றார். (S.R) https://www.tamilmirror.lk/செய்திகள்/கடவுச்சீட்டு-வரிசைக்கு-ஏப்ரல்-மாதத்தில்-முடிவு/175-351787
  21. கோப்பாய் காவற்துறை பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்! adminFebruary 12, 2025 கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார். தமிழ் மொழி பேச கூடியவராக இருந்தமையால் கோப்பாய் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இவரை இலகுவில் அணுக கூடியவாறு இருந்தமையால், காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தன. இந்நிலையில், பொறுப்பதிகாரிக்கு, பதுளைக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி பேசக்கூடிய காவற்துறை அதிகாரிகள் கடமையாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வரும் நிலையில் , தமிழ் மொழி பேசக்கூடிய பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/211226/
  22. தையிட்டியில் இரண்டாவது நாளாகவும தொடரும் போராட்டம்!! யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் காணிகளைப் பூர்வீக உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தையிட்டியில் நேற்று மாலை 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த போராட்டம் இன்று மாலை 6 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளாதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, இன்றைய தினம் இடம்பெறுகின்ற போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://www.samakalam.com/தையிட்டியில்-இரண்டாவது-ந/
  23. அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சுனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார். இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார். இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார். இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதன்போது அர்ச்சுனா பீங்கான் ஒன்றினை எடுத்து குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.samakalam.com/அர்ச்சுனா-எம்-பி-யின்-தாக/
  24. 26) ஆவது கேள்விக்கு வேறு வீரரின் பெயரைத் தந்ருங்கள் 30) ஆவது கேள்விக்கு வேறு வீரரின் பெயரைத் தாருங்கள்
  25. கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை adminFebruary 11, 2025 விகாரையை இடிக்க வாரீர்’ என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவொன்று தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, மக்களின் தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றி மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இதன் பின்னர் – ‘விகாரையை இடிக்க வாரீர்’ என்று நான் அழைப்பு விடுத்தது போன்ற விளம்பரம் வடிவமைக்கப்பட்டு போலியான விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ்விடயத்தை அறிந்த உடனேயே எனது உத்தியோக பூர்வ முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தினூடாக, குறித்த செய்தி போலியானது என பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பிலும் போலி விளம்பரம் குறித்தும் எனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தேன். குறித்த விடயத்தை மறுத்து எனது தெளிவுபடுத்தல்களை வெளிப்படுத்தியிருந்த போதிலும், பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 14 ம் திகதிக்கு அழைப்புக்கட்டளை எனக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/211170/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.