Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. இன்று இரவு யாழ் களம் இயங்காது என்று அறிவித்தல் வருகின்றது. இன்னமும் ஒரு நாளே இருப்பதால் விரைந்து உங்கள் பதில்களைத் தாருங்கள்.. பஸ்ஸைத் தவறவிட்டால் பிடிக்கமுடியாது! @goshan_che @பிரபா @Ahasthiyan, @கந்தப்பு @kalyani @theeya @கறுப்பி @P.S.பிரபா @முதல்வன் @நீர்வேலியான் @ரதி நமக்கும் மண்டையில் இருக்கும் முடியைப் பிச்சுக்கிற வேலைதான்.. அதற்குள் இருந்து கொஞ்சம் தப்பத்தான் இந்தப் போட்டியை வைக்கின்றேன்..!
  2. @புலவர் ஐயா, Jasprit Bumrah விளையாடவில்லை. 26), 30) கேள்விகளுக்கு வேறு பதில்களைத் தாருங்கள் Mitchell Starc உம் விளையாடவில்லை! புதுப்பிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்
  3. @நிலாமதி அக்கா, 30 கேள்விக்குப் பதில் தேவை. Jasprit Bumrah விளையாடவில்லை. வேறு ஒரு பந்து வீச்சாளரின் பெயரைத் தாருங்கள். கட்டாயம் உதவிக்கு ஒருவர் இருப்பார்!
  4. @நந்தன், குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணிக்கான பதில் பிரச்சினையாக உள்ளது. வேறு பதிலைத் தாருங்கள். குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணிக்கான பதில் பிரச்சினையாக உள்ளது (AUS ஐயும் AFG ஐயும் முதல் இரண்டு இடங்களில் வருவதாக தெரிவு செய்துள்ளீர்கள்!. வேறு பதிலைத் தாருங்கள். பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானால் இரண்டாவது போட்டியில்தான் விளையாடும். உங்கள் தெரிவுகளை மாற்றிப்போடவா?
  5. @nunavilan, பதில்கள் மாறி உள்ளன. இந்தியா துபாயிலும், பாகிஸ்தான் லாஹூரிலும் விளையாடும் (தெரிவானால்). இவற்றை மாற்றிவிடவா? @vasee, இந்தக் கேள்விக்கு அணியில் பெயரைத் தரவேண்டும். பதிலைத் தாருங்கள். @வாத்தியார் அண்ணா, இந்தியா அரையிறுதிக்குத் தெரிவானால் துபாயில்தான் விளையாடும். இந்தப் பதில்களை மாற்றிவிடவா?
  6. வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை பணம் மோசடி Published By: Vishnu 15 Feb, 2025 | 01:57 AM வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி, ஆசை வார்த்தைகளை கூறி பெருந்தொகையான பணத்தினை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய் , கிளிநொச்சி உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வெளிநாடு செல்வதற்கு வங்கி கணக்கில் பெருந்தொகை பணம் வங்கி கணக்கில் இருப்பில் இருக்க வேண்டும் என கூறி , வங்கி கணக்கு இலக்கங்களை பெற்று , அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று , வங்கியில் உள்ள பணத்தினை மோசடியாக கும்பல் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளிநாடு செல்ல காத்திருக்கும் இளையோர் , வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு முகவர்கள் ஊடாக பயண ஏற்பாடுகளை செய்து சட்ட ரீதியான முறையில் செல்ல வேண்டும். இது தொடர்பில் இளையோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டாலே இவ்வாறான மோசடி சம்பவங்களில் இருந்து அவர்கள் தப்பிக்கொள்ள முடியும். இல்லையெனில் பெருந்தொகை பணத்தினை இழக்க நேரிடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/206719
  7. வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல அபிவிருத்தி திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை Published By: Vishnu 15 Feb, 2025 | 02:00 AM வவுனியாவில் ஏ9 வீதியை மையமாக கொண்டு பல விவசாய நிலங்கள் மண் போட்டு நிரப்பட்டு ஆக்கிரமிக்கபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக வவுனியா, நொச்சிமோட்டை, தாண்டிக்குளம், யாழ் வீதி, பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய காணிகளில் மண் போட்டு அவற்றை நிரவி புதிதாக வர்த்தக நிலையங்கள், கட்டடங்கள் என்பவற்றை அமைக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இது தொடாபில் ஊடகங்களில் பல தடவை வெளிவந்துள்ளதுடன், விவசாயிகளும் கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கபடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் க.விமலரூபன் அவர்களிடம் கேட்ட போது, எமக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ் வீதியில் விவசாய காணியில் கிரவல் போட்டு நிரப்பும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதனை நிறுத்தி உடனடியாக கிரவலை அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளோம். தாண்டிக்குளம், பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளிலும் குறித்த செயற்பாட்டை இடைநிறுத்துமாறு எமது திணைக்களத்தால் நோட்டீஸ் முதல் கட்டமாக ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும். ஏனைய இடங்களிலும் இவ்வாறு நடந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/206720
  8. பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில் காட்டுத் தீ 15 Feb, 2025 | 10:35 AM எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு தீ பரவியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருந்ததாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல். உதய குமார தெரிவித்தார். குறித்த வனப்பகுதியில் தனிநபரொருவர் அல்லது குழு ஒன்றினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/206725
  9. யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி 15 Feb, 2025 | 10:49 AM யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (15) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற பிரதமர், பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடி இருந்தார். யாழ்ப்பாண இந்துக்கல்லூரியை தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தொடர்ந்து இன்று சனிக்கிழமை (15) மாலை, சுழிபுரம், ஏழாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை (16) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206729
  10. அர்ச்சுனா தாக்குதல் சம்பவத்தில் புதிய திருப்பம் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (12) பாராளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது. கைக்கலப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது உயிருக்கு ஆபத்து என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதேவேளை, காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்கும் பரஸ்பர முறைப்பாட்டை வழங்கி இருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் (14) இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும், முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி சமரசமாக செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீர்த்து வைக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cm75plsli003ddvw9cz288uwg
  11. @ரசோதரன், அணியின் பெயரைக் குறிப்பிடுங்கள் 🙃
  12. @நிலாமதி அக்கா, இவர் விளையாடவில்லை. வேறு பெயரைத் தாருங்கள். Rohit Sharma வா அல்லது பின்னர் கூறியது போல Hardik Pandya வா? ஒரு பதிலைத் தாருங்கள்
  13. இதுவரை போட்டியில் பங்குபற்றியவர்கள்: 1 ஈழப்பிரியன் 2 ஏராளன் 3 வீரப் பையன்26 4 சுவி 5 அல்வாயன் 6 தமிழ் சிறி 7 நிலாமதி 8 ரசோதரன் 9 நுணாவிலான் 10 வசீ 11 வாத்தியார் 12 நந்தன் 13 செம்பாட்டான் 14 குமாரசாமி 15 நியாயம் 16 வாதவூரான் பலரின் பதில்களில் திருத்தம் வேண்டும். ஒவ்வொருவராகச் சொல்லுகின்றேன் 😃 @ஏராளன் இருவரும் விளையாடாததால் வேறு பெயர்களைத் தாருங்கள். @suvy ஐயா, இவர் விளையாடவில்லை. வேறு பதிலைத் தாருங்கள்.
  14. அப்ப பெரிய பிரச்சினையில்லை. நிலாமதி அக்காவின் பதில்களை பிறகும் திருத்தலாம்!
  15. விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு! 14 Feb 2025, 9:56 AM தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார். சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தநிலையில், தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதனால் அவரது பாதுகாப்பு கருதி, மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த Y பிரிவு பாதுகாப்பில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அதிகாரிகள், ஆயுதமேந்திய காவலர்கள் என மொத்தம் 8 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இந்த பாதுகாப்பானது தமிழகத்திற்குள் மட்டும் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://minnambalam.com/political-news/union-ministry-grants-y-category-protection-to-vijay/
  16. புன்சிரிப்பு மாறா பாரதி.. February 12, 2025 — கருணாகரன் — தமிழ்ப் பரப்பில் பத்திரிகையாளராக அறியப்பட்ட இராஜநாயகம் பாரதி காலமாகி விட்டார். பாரதிக்கு வயது 63. மரணம் ஒருவரை எடுத்துச் செல்வதற்கு வயதில்லை. ஆனாலும் பாரதியின் மரணம் எதிர்பாராதது. அவருடைய அண்ணன் பரதனின் மரணமும் அப்படித்தான் நடந்தது. பரதன் இறக்கும்போது அவருக்கு வயது, 61. பரதன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியமான போராளியாக இருந்தவர். 1980 களின் முற்பகுதியிலிருந்து 1990 களின் நடுப்பகுதி வரையில் புலிகளோடு இணைந்து செயற்பட்டவர். இலங்கை – இந்திய இராணுவங்கள் மற்றும் முரணியக்கங்களின் எதிர்ப்பு நிறைந்த சூழலில் தப்பிப் பிழைத்து, லண்டனில் தன் துணைவியோடு நடந்து சென்று கொண்டிருக்கும்போது மரணத்தை சந்தித்தவர். புலிகளுடைய தொலைக்காட்சியான ‘நிதர்சனம்‘, வானொலியான ‘புலிகளின் குரல்‘ ஆகியவற்றை உருவாக்கி, அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பாளராக நீண்டகாலம் இருந்தவர் பரதன். பாரதி, பரமேஸ்வராக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் படிப்பை முடித்த கையோடு ஊடகத்துறைக்குள் நுழைந்து விட்டார். 1980 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘ஈழமுரசு‘பத்திரிகையில் இணைந்து ஆசிரியர் பீடத்தில் பணியாற்றினார். அது போராட்டம் உச்சமான வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்த காலகட்டம். பல இயக்கங்களும் தலையிலும் மனதிலும் முரண் அரசியலைச் சுமந்து கொண்டு குறுக்கும் மறுக்கும் திரிந்து கொண்டிருந்தன. வேறுபாடின்றி இயக்கங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தது இலங்கை இராணுவம். இரண்டுக்குமிடையில் ஊடகவியலாளராகச் செயற்படுவதும் வாழ்வதும் சவாலாகியிருந்த நாட்கள் அது. அப்படியான நாளொன்றில், குண்டு வெடிப்புப் பற்றிய செய்திஒன்றுக்காக யாழ்ப்பாணக் கச்சேரிக்குச் சென்றிருந்தபோது படையிரால் கைது செய்யப்பட்டார் பாரதி. விசாரணைகளின் பின்னர் படையினரால் விடுவிக்கப்பட்டுச் சில காலம் ஈழமுரசுவில் பணியாற்றினாலும் அங்கே தொடர்ந்து இருக்க முடியவில்லை. அதற்குப் பிறகு அப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய ‘முரசொலி‘பத்திரிகையில் இணைந்தார். ஆரம்ப கால ஊடகத்துறையில் பாரதிக்கு வழிகாட்டிகளாகவும் ஊக்கிகளாகவும் எஸ். திருச்செல்வம், சிறி நடராஜா, கிறிஸ்ரி ரஞ்சன், சுப்பிரமணியம் போன்றோர் இருந்தனர். முரசொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் பாரதி ஒரு விபத்தில் சிக்கித் தன்னுடைய கைகளில் ஒன்றை இழந்தார். வடக்கு கிழக்கு மாகாணசபையின் நிகழ்வொன்றுக்காக வடக்கிலிருந்து ஊடகவியலாளர்களை இந்திய அமைதிப்படை (IPKF) கூட்டிச் சென்றபோது ஏற்பட்ட வாகன விபத்து அது. அதனால், இந்திய இராணுவம் உடனடியாகவே யாழ்ப்பாணத்துக்கு பாரதியைக்கொண்டு வந்து,மேலதிக சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு விமானத்தில் எடுத்துச் சென்றிருந்தது. அங்கே சிகிச்கை முடித்து இலங்கைக்குத் திரும்பிய பாரதி, தொடர்ந்து சில காலம் முரசொலியில் பணியாற்றினார். 1990 இல் முரசொலியும் நெருக்கடிகளைச் சந்தித்தபோது, பாரதி அங்கிருந்து கொழும்புக்குச் சென்றார். கொழும்பில் வீரகேசரி, தினக்குரல் ஆகியவற்றின் ஆசிரிய பீடத்தில் ஏறக்குறைய 30ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் பாரதி. இந்தக் காலகட்டத்தில் பாரதியின் செயற்பாடுகள் கொழும்பு மையம் என்பதற்கு அப்பால், தமிழ்ச் சமூகம் என்றே இருந்திருக்கிறது. குறிப்பாகவடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி, அடையாளம், அதனுடைய பாதுகாப்பு போன்றவற்றைக் கவனத்திற் கொண்டிருந்தார். இதற்கான அடிப்படைகளான அரசியல், இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றை தன்னுடைய ஊடகச் செயற்பாட்டிலும் தான் செயற்பட்ட ஊடகங்களின் தளவாக்கத்திலும் முன்னிலைப் பேசுபொருளாக்கினார். தினக்குரல் பத்திரிகையின் வாரப் பதிப்புக்கான ஆசிரியராக இருந்தபோது ‘புதிய பண்பாடு‘என்ற தலைப்பில் பாரதி உருவாக்கியிருந்த சிறப்புப் பகுதி பாரதியின் ஆளுமை, ஆற்றல், கரிசனை, அவருடைய விரிந்த தொடர்பாடற் பரப்பின் அடையாளமாகும். இதற்காகத் தினக்குரலில் பலரையும் எழுத வைத்தார். பலரையும் என்பதன் பொருள், பல்வேறு தரப்பினரையும். பல்வேறு சிந்தனைப்போக்குடையோரையுமாகும். சிவசேகரம் (கோகர்ணன்) யதீந்திரா, அக்கரையூரான், காலகண்டன் (சி.கா. செந்தில்வேல்), பெரிய ஐங்கரன், கா. சிவத்தம்பி எனப் பலரும் எழுதினார்கள். பாரதியின் அரசியல் நிலைப்பாடு தமிழ்த்தேசியத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் இடமளித்திருக்கிறார். அந்த இடம் ஏதோ ஓரத்தில், சம்பிரதாயத்துக்காக வழங்கப்பட்டதல்ல. பாரதியின் விரிந்த மனம், விரிந்த சிந்தனையின் அடிப்படையிலானது. இதற்குக் காரணம், அவருடைய தந்தையார் சு. இராஜநாயகனின் அரசியலும் அவர் உருவாக்கிய பாரம்பரியமுமாகும். இராஜநாயகன் கணித ஆசிரியராக இருந்தாலும் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக இருந்தவர். 1950 களில் ஈழத்திலிருந்து உருவாகிய புதிய இலக்கிய அடையாளமான ‘மறுமலர்ச்சி‘ இதழ்க் குழுவில் இருந்தவர். அதில் சிறுகதைகளை எழுதியவர். பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இராஜநாயகனின் இந்த அம்சங்களும் அரசியல், சமூக, இலக்கிய ஊடாட்ட உணர்வும் பிள்ளைகள் மூவரிலும் தொடர்ந்தன, பிரதிபலித்தன. மூத்த மகனான பரதன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவில், திரைப்பட இயக்குநராக, இலக்கிய இயக்கத்தைக் கட்டியெழுப்பும் ஆர்வமுள்ளவராக, ஒளிப்படக் கலைஞராக எனப் பல தளங்களில் மிளிர்ந்தார். பாரதி அச்சு மற்றும் இணைய ஊடகத்தில் தன்னை வெளிப்படுத்தி நிலைப்படுத்தினார். கூடவே எழுத்தாளர்கள், கலைஞர்களையெல்லாம் பாரதி மதித்தார். அவர்களுக்குரிய இடத்தை அளித்தார். பெரும்பாலான ஊடகவியலாளர்களைப் போலன்றி, இலக்கிய நிகழ்வுகள், உரையாடல்கள், கலைஞர் சந்திப்புகள், திரைப்பட விழாக்கள் போன்றவற்றிலும் பாரதியைக் காணலாம். அதோடு பாரதி பன்முக வாசிப்பாளராகவும் இருந்தார். தினக்குரலில் அவர் வெளியிட்ட பல ஆளுமைகளுடனான நேர்காணல்கள் அவருடைய வாசிப்பின் வழியாக உருவான மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்தவையே. பாரதியைப்போல இன்னொரு பன்முக வாசிப்பாளரும் பல தரப்புத் தொடர்பாளருமாக இருந்தவர் ‘தராகி‘ சிவராம். சிவராமுக்கு அடுத்ததாக அத்தகையதொரு இலக்கியப் பரிச்சயம், மொழிப் பரிச்சியம் உள்ளவரென்றால், அது பாரதியே. இதனால் இலங்கைக்குள் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளிலுள்ளோரும் தமிழ்நாடு, மலேசியா போன்ற நாடுகளில் உள்ளோரும் பாரதியுடன் உறவைக் கொண்டிருந்தனர். பாரதியின் பன்முகத் தன்மையினாலும் பன்முகப் பார்வையினாலும் சிவசேகரம், செந்தில்வேல், கா.சிவத்தம்பி, யதீந்திரா போன்றோர் தொடர்ந்து எழுதி வந்தனர். அதிலும் மாற்றுக் கருத்தாளராகக் கடுந்தொனியில் எழுதும் சிவசேகரம் (கோகர்ணன்), ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார் என்றால் அது பாரதி உருவாக்கிய ஜனநாயக வெளியின் வெளிப்பாடேயாகும். வீ. தனபாலசிங்கம், வி. தேவராஜா, இ. பாரதி, பூபாலரட்ணம் சீவகன் போன்ற மிகச் சிலரே பன்மைத் தன்மையுடன் தமிழ் ஊடகப் பரப்பில் இயங்கியோர், இயங்கி வருவோர். இவர்கள் ஒவ்வொருவருக்குமான அரசியற் பார்வைகளும் நிலைப்பாடுகளும் வெவ்வேறாக இருந்தாலும் அதற்கப்பால், ஊடக அடிப்படை, ஊடக நெறிமுறை, ஊடக தர்மம் போன்றவற்றின் அடிப்படையில் ஜனநாயக விழுமியத்தோடு செயற்படுகின்றவர்கள். என்பதால்தான் இவர்களுடைய கால ஊடகங்கள் பரிமளிப்பாக இருந்தன. ‘புதிய பண்பாடு‘ பக்கங்கள் ஏறக்குறைய சரிநிகர் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கியது. சரிநிகரின் அடிப்படையும் நோக்கும் வேறாக இருந்தாலும் ஆழமான வாசிப்புக்குரிய வெளியையும் உள்ளீட்டையும் கொண்டிருந்தது. அதற்கு நிகராக இன்னொரு தளத்தில் தினக்குரல் (புதிய பண்பாடு) இருந்தது. பாரதி, தேவராஜ், தனபாலசிங்கம், சீவகன் போல, தமிழ் ஊடகப் பரப்பில் செயற்படும் பெரும்பாலானவர்கள் இருப்பதில்லை. அவர்கள் தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை ஊடகங்களில் அப்படியே வெளிப்படுத்துவர், பிரதிபலிப்பர். என்பதால்தான் அவர்கள் பணியாற்றுகின்ற ஊடகங்கள் உட்சுருங்கியவையாக – சற்றே பெரிய துண்டுப் பிரசுரங்களாக மாறியுள்ளன. பாரதி போன்றவர்கள் வெளிவிரிவை நோக்காகவும் விருப்பாகவும் கொண்ட ஊடகவியலாளர்கள். இந்த அஞ்சலிக்குறிப்புக் கூட அந்த அடிப்படையிலான மதிப்புக்கான மரியாதையுடன் – மதிப்புடன் எழுதப்படுகிறது. பாரதியும் தனபாலசிங்கமும் இணைந்த கலவையின் வெளிப்பாடாக அவர்களுடைய காலத்தில் வெளிவந்த தினக்குரலைப் பார்த்தால் இந்தக் குறிப்பு எதைச் சுட்ட விளைகிறது என்று புரிந்து கொள்ள முடியும். ஊடகம், கலை, இலக்கியம் ஆகிய பரப்புக்கு அப்பால், பாரதிக்கு அரசியற் தரப்பிலும் பலரோடு ஆழமான நட்பும் உறவும் இருந்திருக்கிறது. அவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பின்னணியைக் கொண்டவர் என்று தெரிந்தாலும் அதைக் கடந்து தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட்,ரெலோ, ஈ.பி.டி.பி, சமத்துவக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழர் மகாசபை, புதிய ஜனநாயக மாக்ஸிஸக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.க, மலையக அரசியல் அரங்கம் எனச் சகல கட்சிகளோடும் நேர்மையான உறவைக் கொண்டிருந்தார். இதனால், இந்தக் கட்சிகளின் தலைவர்களெல்லோரோடும் பாரதிக்கு நெருக்கமான உறவிருந்தது. இப்படியெல்லாம் இருந்தாலும் பாரதி எவரோடும் விவாதங்களை நடத்தியதில்லை. அதனால் யாரோடும் முரண்பட்டதுமில்லை. என்றாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் அவர் உறுதியாகவே நின்றார். இதற்கு இரண்டு உதாரணங்களைச் சுட்ட முடியும். ஒன்று, ஈழமுரசுவிலிருந்து விலகிச் சென்று முரசொலியில் அவர் சேர்ந்தது. அதைப்போல வீரகேசரியிலிருந்து விலகிச் சென்று தினக்குரலில் இணைந்தது. இரண்டிலும் நிர்வாக முரண்களுக்கு எதிராக பாரதி நின்றது இதைத் தெளிவாகச் சொல்லும். ஆனால், எப்போதும் தன்னைப் பிரகடனம் செய்வதோ, தன்னை முன்னிலைப்படுத்துவதோ பாரதியின் குணமல்ல. எப்போதும் தள்ளி நிற்பவராக, உடனடியாக அவசரப்பட்டு எதையும் சொல்லாமல், சற்று விலகி நின்று அவதானித்துக் கொண்டிருப்பராகவே பாரதியைக் காண முடியும். அவருடைய சுபாவமே அப்படியானது. குரல் கூட மிக மென்மையானது. பேசும் பாங்கும் அப்படியே. மிகப் பவ்வியமாக, தணிந்த நிலையில்தான் பேசுவார். பெரும்பாலும் மற்றவர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பதே பாரதியின் இயல்பாகும். தன்னுடைய அபிப்பிராயம் என்று அவர் எப்போதாவது அபூர்வமாகத்தான் அவருடைய வாயிலிருந்து வரும். ஆனால், எல்லோரையும் எல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்துத் தனக்குள் ஒரு சித்திரத்தைப் பாரதி உருவாக்கிக் கொள்வார். ஆனாலும் அதற்காக அவர்களைத் தூர ஒதுக்க மாட்டார். தனக்குப் பொருத்தமில்லாத தரப்பினர் என்றால், முரண்பட்டுக் கொள்ளாமல், தானாகவே ஒதுங்கிக் கொள்வார். இது பாரதியின் தந்தை சு. இராஜநாயகனிடமும் இருந்த குணமாகும். பாரதியின் ஊடகப் பங்களிப்பை மதிப்பிடுவதானால், அவர் ஒரு தூக்கலோ துருத்தலோ அற்ற தமிழ்த் தேசியவாதியாக இருந்திருக்கிறார் எனலாம். அதேவேளை தன்னுடைய அரசியலுக்கு அப்பால் உள்ளோருக்கும் ஜனநாயக அடிப்படையில் தாராளமாக இடமளித்திருக்கிறார். இதனால் அவர் ஒற்றைப் படைத்தன்மையான உறவாளராக இல்லாமல் பல தரப்புடனான உறவாடலையும் செய்யக் கூடியவராக இருந்திருக்கிறார். ஜனநாயக விழுமியத்தைப் பேணியதோடு, ஊடகத்தின் பன்மைத்துவமான அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம், கலை, தத்துவம், அறிவியல் என அனைத்தையும் சமனிலையோடு நோக்கி, அவற்றைக் கையாண்டிருக்கிறார். ஊடகப் பரிமாணத்தை உருவாக்கியிருக்கிறார். தமிழ் ஊடகப் பரப்பில் பாரதியின் செயற்பாட்டு அடையாளம் வலுவானது. முன்னுதாரணமானது. ஊடகத்துறையில் பயில்வோருக்கும் பணியாற்றுவோருக்கும் அது தக்கதோர் அடிப்படையாகும். பின்னாளில் பாரதி யாழ்ப்பாணத்திற்கு வந்து ஈழநாடு, பொருண்மியம் என்றெல்லாம் வேலை செய்து, இறுதியில் வீரகேசரியின் பிராந்தியப் பணிமனையில் பணியாற்றியிருக்கிறார். வீரகேசரியை விட்டு நீங்கியவர் வீரகேசரியில் மீள இணைந்ததைப்போலவே, 1960 களிலிருந்து 1990 கள் வரையும் அவர் பிறந்து வளர்ந்த திருநெல்வேலிச் சூழலுக்கு மீண்டும் வந்திருந்தார். அவருடைய இறுதி நாட்கள் திருநெல்வேலியிலேயே கழிந்தன. மரணமும் அங்கேயே நடந்தது. அதுவும் அவர் இருந்த வீட்டிலிருந்து ஒரு 300 மீற்றர் சுட்டு வட்டத்துக்குள். ஆனால், பிறந்த வளர்ந்த வீட்டில் அல்ல. அந்த வீடு வேறு கைகளுக்கு மாறியதால் அவர் வாடகை வீட்டிலேயே வாழ நேர்ந்திருக்கிறது. ஈழப்போராட்டத்தோடு எழுச்சியடைந்த ஒரு ஊடகவியலாளராக பாரதியைப் பார்க்கலாம். அது உருவாக்கிய நெருக்கடிகள், வீழ்ச்சிகள், துயரங்கள் பாரதியையும் பாதித்தது. பாரதியை மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தையும்தான். அவர்கள் இழந்தது அதிகம். பெற்றது மிகக் குறைவு. அதற்குள்ளும் பாரதியும் பாரதியின் குடும்பத்தினரும் இந்தச் சமூகத்துக்கு அளித்தது ஏராளம். அதுவே மேன்மைக்குரியது. அஞ்சலி. https://arangamnews.com/?p=11793
  17. அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர் உட்பட 75,000 பேரை நாடு கடத்த யோசனை ! சர்வதேசம் ;- அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது. புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அந்தக் கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளர். நாட்டின் குடியேற்ற அமைப்பிற்குள் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் வீசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 130,000 ஆக கட்டுப்படுத்த வேண்டும் என பவுலின் ஹான்சன் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர் வீசாக்களுக்கு புதிய சட்டங்கள் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் குடும்ப உறுப்பினர்கள் மாணவர் வீசாக்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்படுவதை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என கட்சித் தலைவர் பரிந்துரைத்துள்ளார். மேலும், புலம்பெயர்ந்த சமூகத்தால் அவுஸ்திரேலியர்கள் தங்கள் பல சலுகைகளை இழக்கும் சூழ்நிலை தற்போது இருப்பதாக One Nation கட்சித் தலைவர் பவுலின் ஹான்சன் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.thaarakam.com/news/d17d283c-0c95-4e39-b5e4-a0e05eeea2b1
  18. தமிழரசுக்கட்சியை மெல்ல மெல்ல அழிக்கும் சுமந்திரன்-4 மாதங்களுக்கு வழக்கு ஒத்திவைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு அதன் எதிராளி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய இடமளிப்பதா என்பது குறித்து ஆராய்வதற்காக வரும் ஜீன் மாதம் நான்காம் திகதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. அந்தத் திகதியில் எதிராளி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்படும். அதன் பின்னரே வழக்கின் விசாரணை பற்றி ஆராயப்படும். இன்று இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வழக்கு இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டது. வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காகவே இன்று வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், வழக்கின் எதிராளிகளான சிறீதரன் எம்.பி., குகதாசன் எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பி. யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் வழக்கை முடிவுறுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து இன்றைய விசாரணையில் கடும் விவாதங்கள் இடம்பெற்றன. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சியின் மத்திய குழுவில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு, அது பற்றித் தாம் ஒரு எதிராளி என்ற முறையில் நீதிமன்றத்திற்கு விவரமாக விடயங்களைச் சமர்ப்பித்jpருக்கையில், மேற்படி மூன்று எதிராளிகளும் கட்சிக்குத் தெரியாமல் - கட்சியை இருட்டில் வைத்துக்கொண்டு - தம்பாட்டில் ஒரு திட்டத்தை, அதுவும் முன்னைய இணக்க ஏற்பாடுகளுக்கு மாறாக முன்வைத்து, இணக்கத்துக்கான வாய்ப்பை வேண்டுமென்றே குழப்பி அடிக்க முயன்றுள்ளனர் என்று எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சுமந்திரன் தமது தரப்பில் தாமே முன்னிலையானார். கட்சியின் செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் மற்றும் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி சயந்தன் முன்னிலையானார். கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் இரத்தினவடிவில் சார்பிலும் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார். சுமந்திரன், சத்தியலிங்கம், குலநாயகம், இரத்தினவடிவேல் ஆகிய எதிராளிகள் கட்சியின் மத்திய குழுத் தீர்மானபடி 156 உறுப்பினர்களுடன் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கான இணக்கத் திட்டத்துக்குத் தாங்கள் சம்மதிக்கின்றார்கள் எனத் தெரிவித்தனர். அதேசமயம் சிறீதரன், குகதாசன், யோகேஸ்வரன் ஆகியோர் 324 உறுப்பினர்களுடன் கட்சியின் மத்திய குழுவை கூட்டும் திட்டத்தை வலியுறுத்தினர். இதையே ஆரம்பத்தில் எதிராளியான சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்று அவர்கள் மூவர் சார்பிலும் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன் தெரிவித்தார். வழக்கின் எதிராளிகளுக்கு இடையே கருத்து முரண்பாடு இருப்பதை விசனத்துடன் சுட்டிக்காட்டிய வழக்காளி தரப்பு சட்டத்தரணி, இக்காரணத்தால் இணக்கமான தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் அருகி உள்ளன என்றும், வழக்கு விசாரணை நடத்தியே முடிவு காண வேண்டும் எனவும் சுட்டி காட்டினார். இச்சமயத்தில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் எதிராளிகளில் ஒருவரான கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அப்பதவியிலும் இல்லை, அவர் உயிரோடும் இல்லை என்று சுட்டிக் காட்டப்பட்டது. அதனால், அந்த இடத்துக்குப் பதில் தலைவரின் பெயரை வழக்கில் எதிராளியாகச் சேர்ப்பதா என்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக வழக்கு [ஜூன் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்தத் திகதியில் கட்சியின் பதில் தலைவர் எனக் கருதப்படுபவர் வழக்காளியாகச் சேர்க்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அந்த விடயம் தீர்மானிக்கப்பட்ட பின்னரே வழக்கை விசாரிப்பது குறித்த முடிவை நீதிமன்றம் எடுக்கும் என்றும் கூறப்படுகின்றது.அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு வர நீண்ட காலம் செல்லும் என்று சட்ட வட்டாரங்கள் குறிப்பிட்டன https://www.thaarakam.com/news/f0ee6783-0a4a-44df-9662-2db016d6623c
  19. ‘ஆழமான வலிகளுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இடுவதன் மூலம் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். குறித்த பதிவில், “என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று என் தந்தை தெளிவாக சொல்லி தந்திருக்கிறார். கடந்த சம்பவம் ஒரு துன்பியல் சம்பவம். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக என்பதை விட ஒரு வைத்தியராக மனதுக்குள் ஒரு ஆழமான கவலையை உண்டாக்கி இருக்கிறது. காயங்களுக்கு மருந்திடும் கைகளால் காயத்தினை ஏற்படுத்தி இருக்கின்றேன். ஒரு பெண்ணை இழிவு படுத்தி காவாலித்தனம் செய்யும் போது பொறுமையும் ஒரு தடவை செத்து போய்விடுகிறது. ஆழமான வலிகளுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தன்னுடன் வாக்குவாதப்பட்டு, தன்னை பீங்கானால் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த நபரே தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்திருந்த பின்னணியில் தற்போது தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=312203 அர்ச்சுனாவை கைது செய்ய பொலிசாருக்கு என்ன தயக்கம்? நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளையோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளையோ வழங்காது. அவர் மிக உயர்ந்த சபையின் நபர். அவரது நடத்தை மிகவும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எதிர்பார்ப்பது அதைத்தான். பொலிஸார் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்களோ அவ்வாறே பொதுமக்களும் நடந்து கொள்ளவேண்டும். எனவே அந்த வகையில் செயல்படுவது அவரது கடமை. இருப்பினும், அவர் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் சட்டத்தின்படி செயல்படுவோம். எஅந்த சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸ் தற்போதுள்ள சட்டத்தின்படி செயல்படும். யாழ். விருந்தகம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளம குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=312199
  20. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய கோடிக்கணக்கான பக்தர்கள்! திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக வெள்ளிக்கிழமை (14) பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 2025 மகா கும்பமேளா நிகழ்வு தொடங்கியதில் இருந்து 491.4 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதியின் சங்கமம்) நீராடியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 8.54 மில்லியன் மக்கள் வியாழக்கிழமை மாத்திரம் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் தகவல் துறை சுட்டிக்கட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாத பெளர்ணமியில் தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்வு உலகெங்கிலும் உள்ள பக்தர்களை ஈர்க்கும் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார விடயமாக பார்க்கப்படுகிறது. பிரமாண்டமான நிகழ்வு பெப்ரவரி 26 ஆம் திகதி மகாசிவராத்திரி வரை தொடரும். https://akkinikkunchu.com/?p=312255
  21. தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது February 13, 2025 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு அதன் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய இடமளிப்பதா? என்பது குறித்து ஆராய்வதற்காக ஒத்தி வைக்கப்பட்டது. இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்தத் திகதியில் பிரதிவாதி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்படும். அதன் பின்னரே வழக்கின் விசாரணை பற்றி ஆராயப்படும். இன்று (13) இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே வழக்கு இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காகவே இன்று (13) வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது. எனினும் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.ilakku.org/the-case-against-the-tamil-arasu-party-was-postponed-again/
  22. உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை - டிரம்ப் 14 FEB, 2025 | 12:22 PM உக்ரைன்யுத்தத்தினை எவ்வாறு முடிவிற்கு கொண்டுவருவது என்பது குறித்து ஜேர்மனியின் மியுனிச்சில் இடம்பெறும்மாநாட்டில் அமெரிக்க ரஸ்ய உக்ரைன் பிரதிநிதிகள் ஆராயவுள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் பிரதிநிதிகளும் எங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார்கள்,உக்ரைனையும் அழைத்துள்ளோம் ஆனால் அந்த நாட்டின் சார்பில் யார் கலந்துகொள்வார்கள் என்பது தெரியவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் மூன்று நாடுகளில் இருந்தும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206661
  23. இன்று முதல் தடையின்றி மின் விநியோகம் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தன. இதன் காரணமாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி நேர மின் விநியோகத் தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு நேரிட்டது. இருப்பினும், பௌர்ணமி தினம் என்பதால் நேற்று முன்தினம் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படவில்லை. அதேநேரம் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் நேற்றைய தினம் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்பட்டது. செயலிழந்த 3 மின் பிறப்பாக்கிகளை இன்றைய தினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று பிற்பகல் வரை செயற்படாமல் இருந்த மின்பிறப்பாக்கிகள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன. அதன்படி, மின் விநியோகத் தடையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.hirunews.lk/tamil/396789/இன்று-முதல்-தடையின்றி-மின்-விநியோகம்-மின்சக்தி-மற்றும்-எரிசக்தி-அமைச்சு
  24. இன விடுதலைக்கான போராட்டம் எப்பொழுதும் தொடரும் மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த போராட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பமாகியிருந்தது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் 2023 ஆகஸ்ட் மாதம் வேழன் சுவாமிகள், MK சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கானது நீண்டகாலமாக தவணையிடப்பட்டு வந்த நிலையில் இன்று (14) குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கிளிநொச்சி சட்டத்தரணிகள் பிரதிவாதிகள் சார்பில் ஆயராகினர். இந்த நிலையில் குறித்த வழக்கானது நீதவானால் கிடப்பில் போடப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வேழன் சுவாமிகள் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த வழக்கானது இன்றைய தினம் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. எத்தனை வழக்குகள் வந்தாலும் இந்த மண் மீதான காதல் மாறாதது. எங்கள் உயிர் இருக்கும் வரை இந்த மண் மீதான காதலும், இன விடுதலையும் அதற்கான போராட்டமும் எப்பொழுதும் தொடரும் என அவர் தெரிவித்தார். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி போராட்டத்தில் பங்குபற்றியமைக்கான வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி சட்டத்தரணிகள் எமது சார்பில் ஆயராகி இருந்தார்கள். கிட்டத்தட்ட 2 வருடங்களாக இடம்பெற்ற இந்த வழக்கு கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றது. எங்களது ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் செய்யும் போராட்டங்கள் மீது சிறிலங்கா அரசின் உத்தரவின் பெயரில் சிறிலங்கா பொலிஸார் அவ்வப்போது பொய் வழக்குகளை போட்டு துன்புறுத்துவதும், அச்சுறுத்துவதும் மிகவும் கண்டிக்க வேண்டிய விடயமாக இருக்கின்றது என தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cm74e4zeg003591ngdek9ld8n
  25. இலங்கையிலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்திய அதானி கிறீன் எனர்ஜி Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 13 , பி.ப. 04:04 இலங்கையின் மன்னாரிலுள்ள தமது காற்றாலை மின்சக்தி திட்டத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாக இந்திய செல்வந்தர் கெளதம் அதானியின் அதானி குழும அதானி கிறீன் எனர்ஜி தீர்மானித்துள்ளது. தமது பணிப்பாளர் சபையின் முடிவை இலங்கைக்கு அதானி கிறீன் எனர்ஜி அறிவித்துள்ளதாக அதானி குழுமத்துக்கான பேச்சாளரொருவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இலங்கையுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதானி குழுமம், இலங்கையரசாங்கம் விரும்பினால் எதிர்கால கூட்டிணைவுக்கு தயாராகவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலங்கையிலிருந்து-வெளியேறுவதை-உறுதிப்படுத்திய-அதானி-கிறீன்-எனர்ஜி/150-351906

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.