Everything posted by கிருபன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது T20 மட்ச் இல்லையே! 50 ஓவர்கள்! பாகிஸ்தான் 🇵🇰 ஜிந்தாபாத்😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் பிரித்தானிய நேரப்படி நாளை 19 பெப் 09:00 க்கு ஆரம்பிக்கவுள்ளன. நாளை புதன் (19 பெப்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 08 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் 16 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். பாகிஸ்தான் ஈழப்பிரியன் ரசோதரன் நுணாவிலான் வாத்தியார் நந்தன் வாதவூரான் பிரபா கிருபன் நியூஸிலாந்து ஏராளன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி வசீ செம்பாட்டான் குமாரசாமி நியாயம் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் கந்தப்பு முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்படி எல்லாம் சொல்லிவிட்டுப் போனால் இந்தத் திரி சோர்ந்துபோய்விடும். எனக்கும் புள்ளிகள் போட மனம்வராது @வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கடைசி இடத்திற்கா முதல் இடத்திற்கா?🤡
-
தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும்
தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும் February 16, 2025 — கருணாகரன் — தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் திஸ்ஸ ராஜமகா விகாரையை அகற்றக் கோரி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். தொடக்கத்தில் – இரண்டு ஆண்டுகளுக்கு முன் – கஜேந்திரகுமாருக்கு நெருக்கமான பத்து இருபது பேருடன், சிறிய வட்டத்திலிருந்த போராட்டம் இப்பொழுது ஈ.பி.டி.பியினர் உட்படப் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கின்ற அளவுக்குச் சற்றுப் பெரிய வட்டமொன்றாக விரிந்துள்ளது. ஆனாலும் இந்தப் போராட்டம் வெற்றியளிக்குமா? இது புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்குமா? இந்தப் போராட்டத்தைத் தேசிய மக்கள் சக்தி எப்படிக் கையாளப்போகிறது? வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கு இது உதவுமா? இந்தப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய தரப்பின் முழுமையான ஆதரவு கிட்டுமா? மத விவகாரத்துடன் இந்த விடயம் இணைந்துள்ளதால், தேசிய ஒருமைப்பாட்டை இது நெருக்கடிக்குள்ளாக்குமா? அந்த வகையில் உணர்ச்சிகரமான எதிர்விளைவுகளை உண்டாக்குமா? என்று பல கேள்விகளை இது எழுப்புகிறது. முதலில் இதொரு சட்டப்பிரச்சினையாகும். எப்படியென்றால் – 1. இந்த விகாரை அமைந்துள்ள காணி தனிப்பட்ட உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. அதாவது மக்களுடைய வாழிடமாகும். ஆகவே அவர்களுடைய காணியில் அவர்களுடைய அனுமதியைக் கோராமல் விகாரையை அமைத்தது தவறு. பௌத்த அடையாளங்கள், தொன்மையான எச்சங்கள் அங்கே இருப்பதாக விகாரையை அமைக்கும் தரப்பு வாதிட்டால், ஏற்கனவே அதற்குரிய ஆதாரங்களை முன்வைத்து, வர்த்தமானி அறிவித்தலைச் செய்து, காணி உரிமையாளர்களிடமிருந்து காணியை அரசாங்கத்தின் மூலமாகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். அதற்குப் பின் உரிய முறைப்படி அரசாங்கம் காணியை விகாரை அமைக்கின்ற தரப்புக்கு விதிமுறைப்படி வழங்கியிருக்க வேண்டும். இதெல்லாம் விதிமுறைகளின்படி நடந்திருந்தால்தான் சட்டத்துக்குட்பட்டதாக இருந்திருக்கும். ஆனால்,இவை எதுவுமே நடக்கவில்லை. 2. அப்படித்தான் அரசாங்கம் முறைப்படி நடந்து விகாரையை அமைப்பதற்கான அனுமதியைக் கொடுத்திருந்தாலும் அதற்குப் பின், விகாரையை அமைப்பதற்கான அனுமதியை குறித்த பிரதேசத்துக்குரிய பிரதேச சபையிடமோ, நகரசபையிடமோ குறித்த தரப்புப் பெற்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. 3. இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் நல்லாட்சிக் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தின்படி குறித்த விகாரையைக் கட்டும் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறியே விகாரையின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே, இங்கும் அரசாங்கத்தின் நடைமுறை விதிகள் மதிக்கப்படாமல் மீறப்பட்டுள்ளன. அதாவது, ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை நாட்டின் உயர் பீடத்தினர் மதிக்காமல் மீறி நடப்பதென்பது, அதனுடைய இயங்கு திறனையும் அடிப்படையையும் செயலிழக்க வைப்பதாகும். இது தற்போதைய ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களுக்கு முரணான – மீறிய – செயல்கள் தொடர்ந்தும் நடப்பதற்கான முன்மாதிரியை இது உருவாக்குவதாகவே அமையும். ஆக மொத்தத்தில் மூன்று இடங்களில் சட்டத்துக்கு முரணான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. என்பதால், இதற்கான பொறுப்பை அரசாங்கமும் விகாரையை அமைத்த தரப்பினரும் ஏற்க வேண்டும். பொறுப்பை ஏற்றுக் கொள்வதென்பது, அதற்கான நிவாரணத்தை அளித்தலாக இருக்க வேண்டும். அத்துடன், தமது தவறுக்காக தண்டனையைப் பெற வேண்டும். ஏனென்றால், அரசாங்கமானது எப்போதும் சட்டத்தையும் அதன் விதிகளையும் மதித்து நடந்து தன்னை முன்னுதாரணமாக்க வேண்டும். அப்போதுதான் மக்களும் அதைப் பின்தொடர்வர். அரசாங்கமே அதை மீறினால் மக்களும் அதை மீறவே முயற்சிப்பர். அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி. இங்கே அடிப்படைப் பிரச்சினைகளாக இருப்பது – 1. யுத்தகாலத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான (மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்கான ) காணிகள், யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்களிடம் மீளளிக்கப்படவில்லை. இன்னும் அவை படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பாதுகாப்பு வலயங்களாகவே உள்ளன. இந்த நிலை வடக்குக் கிழக்கு முழுவதிலும் உண்டு. 2. பாதுகாப்பு வலயங்களாக இருப்பதால்தான் அவற்றில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாகின்றன. வடக்குக் கிழக்கில் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. யுத்தம் முடிந்து, விடுதலைப் புலிகள் முற்றாகவே அழித்தொழிக்கப்பட்ட பின்னர், எதற்காகப் படையினர் தனியார் காணிகளில் நிலை கொண்டிருக்க வேண்டும்? எதற்காக படைவலயங்கள் இன்னும் இருக்கின்றன? பாதுகாப்புத் தரப்பினருக்கு இன்னமும் அச்சமும் சந்தேகமும் பதட்டமும் நீங்கவில்லை என்றால், அவர்கள் தனியார் காணிகளை விட்டு நீங்கி, அரச காணிகளில் நிலை கொள்ளலாம். அதுதான் இயல்பு நிலையை உருவாக்குவதற்கு வாய்ப்பாகும். அரசாங்கத்தின் கொள்கையும் நடவடிக்கையிலும் ஒன்று யுத்த காலத்திலிருந்து மக்களை அமைதிக்காலத்துக்கு, நம்பிக்கையான சூழலுக்கு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருதலாகும். அப்படியிருக்கும்போது, அதற்கு மாறாக மக்களின் காணிகளில் படைவலயங்கள் தொடருமாக இருந்தால் அமைதியும் சந்தேகமும் நம்பிக்கையீனமும் பகையுணர்ச்சியுமே மேலோங்கும். அதுவே இங்கே நிகழ்கிறது. அதனுடைய அடையாளமே இந்தப் போராட்டமும் இப்போது உருவாகியுள்ள நெருக்கடிச் சூழலுமாகும். இதைக் கவனப்படுத்த வேண்டிய பொறுப்பு சமாதான விரும்பிகள் அனைவருக்கும் உரியது. கூடவே தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அனைத்துக்கும் அனைத்து அரசியற் கட்சிகளுக்கும் உண்டு. 3. யுத்தத்திற்குப் பிறகு மகிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சி என 15 ஆண்டுகள் கடந்துள்ளது. இப்பொழுது அநுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலம். எல்லா ஆட்சிக்காலத்திலும் அமைதி, நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சமாதானம் பற்றிப் பேசப்படுகிறது. ஆயிரம் வார்த்தைகளை விட, நூறு பிரகடனங்களை விட, ஒரு செயல் போதும் நம்பிக்கையை உருவாக்குவதற்கு. அதையே அரசாங்கம் செய்ய வேண்டும். ஆம், அநுரவின் (தேசிய மக்கள் சக்தி) அரசாங்கம் செய்ய வேண்டும். இது மாற்று அரசாங்கம். மக்களுடைய ஆட்சி. மக்களுக்கான ஆளும்தரப்பு என்பதால், அதற்கமைய துணிகரமாக – மாற்று நடவடிக்கையாக – அமைதிக்கான, இயல்புச் சூழலின் உருவாக்கத்துக்கான வழிகளை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், முந்திய ஆட்சிக்கும் இப்போதுள்ள ஆட்சிக்கும் இடையில் என்ன வேறுபாடு? என்ற கேள்வியே மக்களிடம் எழும். 4. ஆகவே அரசாங்கத்தின் பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக விஞ்ஞான பூர்வமான நிலைப்பாடு இங்கே முக்கியமாகிறது. இது தனியே பாதுகாப்பு அமைச்சின் தீர்மானமாக மட்டும் அமையாது. அரசியற் தரப்புடன் இணைந்த தீர்மானமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் நெருக்கடிகளே (அரசியற் தவறுகளே) பாதுகாப்பு நெருக்கடிகளை – பாதுகாப்புப் பிரச்சினைகளை – பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கியது. ஆகவே அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும்போது, அதற்கான சூழலை உருவாக்கும்போது, அரசியற் தவறுகளைச் சீராக்கும்போது பாதுகாப்புப் பிரச்சினைகள் இல்லாதொழிந்து விடும். எனவே இதைக் குறித்து அரசாங்கம் (ஜனாதிபதி) ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சரியாகச் சிந்தித்துச் செயற்பட்டால், தேவையற்ற பாதுகாப்புச் செலவீனமும் குறையும் இந்த மாதிரிப் போராட்டங்களும் அரசியல் நெருக்கடிகளும் உருவாகாது. 5. வடக்குக் கிழக்கில் படைகள் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பதும் படைவலயங்கள் தொடர்ந்தும் இருப்பதும் வடக்குக் கிழக்கு வாழ் மக்களுக்கு மட்டுமல்ல, முழு இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்துகிறது. இன்னும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்ற உணர்வே சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏற்படுகிறது. அது அரசாங்கத்தின் தோல்வியையே குறிக்கிறது.அதாவது இலங்கை இன்னும் முழுமையான அமைதிக்குத் திரும்பவில்லை என்பதோடு, போரில் இன்னும் அரசுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. பாதி வெற்றியையே படைத்தரப்பு பெற்றுள்ளது. இன்னமும் அது தன்னுடைய அச்ச நிலையிலிருந்து மீளவில்லை. அதனால்தான் இந்தப் பாதுகாப்பு வலயங்களும் படைக்குவிப்புமாகும் என்பதாக. 6. யுத்தம் முடிந்த பின்னும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அபகரித்து வைத்திருப்பது, மக்களுக்கு அரசாங்கம் இழைக்கின்ற அநீதி என்பதோடு, மீள் குடியேற்ற விதிகளுக்கு முரணானதுமாகும். கூடவே அந்த மக்களை மீள் நிலைக்குத் திரும்ப விடாது, அவர்களுடைய கிராமங்களை மீளுயிர்ப்புச் செய்ய விடாது அரசே தடுப்பது, அரசியற் தவறாகும். அத்துடன், மக்களுடைய உரிமையை மறுதலிக்கும் ஒரு செயற்பாடுமாகும். இவ்வாறு பல விதமான அரசியற் தவறுகளின் கூட்டு விளைவாகவே தையிட்டி விகாரைப் பிரச்சினை உள்ளது. தையிட்டிப் பிரச்சினை மட்டுமல்ல, அதைப்போலுள்ள ஏனைய பல பிரச்சினைகளும் உள்ளன. இவற்றைத் தீர்ப்பதற்கு அரசியல் வழிமுறையே சரியானது. அரசியல் உபாயங்கள் பெருமளவுக்குக் கை கொடுக்காது. ஏன் அரசியல் உபாயங்கள் கைகொடுக்காது என்றால், எதன்பொருட்டும் அரசாங்கம் மக்களுடன் சூதாட முடியாது. சூதாடக் கூடாது. இப்போதுள்ள சூழலில், இந்தப் பிரச்சினைக்கும் இது போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்குச் சில வழிமுறைகளே உண்டு. இங்கே அரசாங்கம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். 1. கடந்த காலத் தவறுகளைச் சீராக்கும் நடவடிக்கையின் ஓரம்சமாக இந்த விடயங்களைச் சட்ட விதிமுறைகளின்படி அணுகுவது, தீர்வு காண்பது. இதற்குத் தயக்கம் இருந்தால் அரசாங்கம் எதையுமே செய்ய முடியாது. தவறுகள்,தவறுகள்தான். 2. இணக்கமான முறையில் சம்மந்தப்பட்ட தரப்புகளோடு (பாதிக்கப்பட்ட மக்களோடு) பேசி உடன்பாடு காண்பது.இனிமேல் இதுபோன்ற தவறுகள் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளிக்க வேண்டும்.அதற்கான சட்ட உத்தரவாதத்தை அளிப்பது அவசியமாகும். 3. அல்லது, நாட்டிலே பாரபட்சமும் பிரிவினையும் நிச்சயமாக உண்டு. படைத்தரப்பின் மூலமாக ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது. வடக்குக் கிழக்கு மக்களின் அனைத்து உரிமைகளையும் வாழ்வையும் தீர்மானிக்கும் பொறுப்புப் படைத்தரப்புக்கும் பௌத்த மேலாதிக்க சக்திகளுக்குமே உண்டு என வெளிப்படையாகச் சொல்லி விடுவது. அப்படிச் சொல்லி விட்டால், பிரச்சினையே இல்லை. அதற்குப் பிறகு அங்குள்ள மக்கள் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றிச் சிந்திப்பார்கள். இப்படிச் சமாதானத்தைப் பேசிக் கொண்டு, ஏமாற்றப்படும் சமாதானத்துக்குப் பின்னால் நிற்க வேண்டிய அவசியமிருக்காது. தேசிய மக்கள் சக்திக்கு இதொரு சவாலான விடயமே. யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக வடக்குக் கிழக்கில் வரலாற்று வெற்றியைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, உள்ளுராட்சி மன்றத்திலும் அந்த வெற்றியைப் பெறுவதற்கு வியூகங்களை வகுக்கிறது. அதற்கு இந்தப் போராட்டங்களும் இந்தப் பிரச்சினைகளும் நெருக்கடியைக் கொடுக்கின்றன. இன்னொரு பெரிய பிரச்சினை, இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதாகும். இவை இரண்டையும் அது எப்படிக் கையாளப்போகிறது? தையிட்டிப் போராட்டத்தை நீடிக்க விடும் உபாயத்தைப் பின்பற்றினால், காணாலாக்கப்பட்டோரின் போராட்டத்தைப்போல, நாட்கள் நீளுமே தவிர, தீர்வு கிட்டாத – தீர்வு காணப்படாத ஒரு நிலையை ஏற்படுத்தலாம். அது போராடும் மக்களின் தீவிரத்தைக் குறைவாக்கி, அவர்களைக் களைப்படைய வைக்கும்.அரசியற் கட்சிகள் ஓய்ந்து ஓரமாகி விடும் என அரசாங்கம் உபாயமாக யோசிக்கக் கூடும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மூன்று வகையில் தன்னை முன்னிலைப்படுத்துவதற்குச் சமகாலத்தில் முயற்சிக்கிறார். 1. அரசியல் பேச்சுவார்த்தைகளில் தன்னுடைய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வது. இதற்காகவே அவர் ஏனைய கட்சிகளைக் கூட்டுச் சேர்ப்பதாகும். 2. தையிட்டிப் போராட்டத்தை முன்னெடுப்பதன் வழியாக மக்களுக்காகப் போராடும் தரப்பாகத் தன்னை மக்களிடம் காட்டிக் கொள்வது. இதிலும் தன்னையே தலைமைச் சக்தியாக நிரூபித்துக் கொள்வது. 3. தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் வலுத்திருக்கும் ஆதரவுத் தளத்தை நிர்மூலமாக்குவது. குறிப்பாக உள்ளுராட்சி மன்றுகளுக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை – செல்வாக்கை மட்டுப்படுத்துவது அல்லது இல்லாதொழிப்பது. 4. இனப்பிரச்சினை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் தேசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையில் தீர்வு காணும் தேசிய மக்கள் சக்தியின் முயற்சியையும் நிகழ்ச்சி நிரலையும் நெருக்கடிக்குள்ளாக்குவது. 5. தேசிய மக்கள் சக்தியின் வினைத்திறனைப் பரிசோதனைக்குள்ளாக்குவது. 6. மெய்யான அர்த்தத்தில் மீள் குடியேற்றம், படை விலகல், படை ஆதிக்கத்தைக் குறைப்பு, அரசியல் தீர்வைக் குறித்த ஆர்வத்தைத் தூண்டுதல் போன்றவற்றை உந்தித் தள்ளுவது. 7. பௌத்த மயமாக்கலை தடுத்து நிறுத்துதல். 8. வடக்கில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்களுக்கும் நெருக்கடியை உருவாக்குதல். அல்லது அவர்களைப் பொறுப்புக் கூற வைத்தல். எப்படியோ இந்த வாரங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே முன்னிலை பெறும் அரசியல் அடையாளமாக வடக்கில் உள்ளார். அதைக் கடந்து செல்வது தேசிய மக்கள் சக்திக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் முன்னுள்ள சவாலாகியுள்ளது. கடந்த மாதம் வல்வெட்டித்துறையில் அநுரவுக்காக – அரசாங்கத்துக்கு ஆதரவாகத் திரண்டனர் மக்கள். இந்த மாதம் அதை அண்மித்த மயிலிட்டிக் கடற்கரையில் கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக – அரசாங்கத்துக்கு எதிராகத் திரள்கின்றனர் மக்கள். தமிழ் மக்கள் பிரித்தாளப்படுகிறார்களா? பிரிந்துள்ளனரா? https://arangamnews.com/?p=11809
-
சுவிசில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் – இழப்பீடு கோரி வழக்கு
சுவிசில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் – இழப்பீடு கோரி வழக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றவர் மீது மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) உடன் இணைந்து பீட்டர் & மோரேவ் SA சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த எம்மா லிடன் மற்றும் பெனடிக்ட் டி மோர்லூஸ் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இலங்கைக்கு தமிழ் புகலிடம் கோருபவர்களை திருப்பி அனுப்புவதை உடனடியாக நிறுத்தி வைக்கவும், துன்புறுத்தலுக்கான நிரூபிக்கப்பட்ட அபாயத்தை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் மறுபரிசீலனை செய்யவும் சுவிட்சர்லாந்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். “எங்கள் வாடிக்கையாளர் இலங்கைக்குத் திரும்பினால் அவருக்கு ஏற்படும் அபாயங்களை நிரூபிக்கும் பல உறுதியான ஆதாரங்களை சுவிட்சர்லாந்தின் குடியேற்றத்திற்கான மாநில செயலகம் (SEM) வைத்திருந்த நேரத்தில், அவர்கள் துன்புறுத்தலுக்கான ஆபத்தை பகுப்பாய்வு செய்ய மறுத்துவிட்டனர். அவரது கோப்பில் உள்ள புதிய மற்றும் ஆபத்தான தகவல்களையும் அவரது துயரத்தின் தெளிவான வெளிப்பாடுகளையும் புறக்கணிப்பதன் மூலம், அவர் இலங்கைக்குத் திரும்பியதும் கடுமையான துன்புறுத்தல் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு ஆளாக்கினர்” என்று எம்மா லிடன் கூறினார். ஈஎஸ் (ES) என பெயரிப்பட்டுள்ள குறித்த தமிழருக்கு இந்த வழக்கு 150,000 சுவிஸ் பிராங்குகள் தார்மீக இழப்பீடு கோருகிறது. சித்திரவதைக்கு எதிரான மாநாடு மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் கீழ் உள்ள கடமைகளுக்கு இணங்க, சுவிட்சர்லாந்து தனது வழக்கை முறையாக பரிசீலிக்கத் தவறியது, குடியேற்றத்திற்கான மாநில செயலகத்தை (SEM) பொறுப்பாக்குகிறது என்று வாதிடுகிறது. இன்ற செவ்வாய்க்கிழமை (18) ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் இவ்வாறு தெரிவித்துள்ளது. ஈஎஸ் (ES) 17 வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்தார். 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் முடிவில், அவர் தனது குடும்பத்தினருடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார். இலங்கையின் மிகவும் பிரபலமான இராணுவ முகாமான ஜோசப் முகாமில் அவர் தடுத்து வைக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் பூசா தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதுடன், அங்கு அவரது காதில் அடிபட்டு அவரது செவிப்புலன் நிரந்தரமாக சேதமடைந்தது. விடுதலையான பிறகு, பாதுகாப்புப் படையினர் பல சந்தர்ப்பங்களில் ஈஎஸ் (ES)இன் வீட்டிற்கு வந்து, அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வதாக மிரட்டினர், அவரை உடல் ரீதியாக தாக்கினர் என்றுசர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் குறிப்பிட்டுள்ளது. “இது ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கைக்கு ஒரு தமிழர் நாடு கடத்தப்பட்டு, பின்னர் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டதை நாம் கண்ட ஒரே வழக்கு மட்டுமல்ல. புகலிட அதிகாரிகள் ஆயுள் மற்றும் இறப்பு வழக்குகளைக் கையாளுகின்றனர், மேலும் இந்த வழக்குகளை மதிப்பிடுவது அதிகாரிகள் மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும், ”என்று சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டதின் நிர்வாக இயக்குனர் யாஸ்மின் சூகா கூறினார். தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக பெயர் வெளியிட விரும்பாதஈஎஸ் (ES)என்று மட்டுமே அடையாளம் காணப்பட்டிக்கொண்ட அந்த நபர், இப்போது இங்கிலாந்தில் இருக்கிறார், அங்கு அவருக்கு 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் அந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, ஈஎஸ் (ES) தனது கணக்கை உறுதிப்படுத்தும் ஒரு சுயாதீன மருத்துவ சட்ட அறிக்கையைப் பெற்றுக்கொண்டார். அது அவருக்கு சுவிட்சர்லாந்தில் கிடைக்கவில்லை. அவர் இங்கிலாந்தில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் நடத்தும் உளவியல் சமூக ஆதரவு திட்டத்திலும் சேர்ந்தார், இது டிரம்ப் நிர்வாகத்தின் நிதி முடக்கம் காரணமாக இப்போது மூடலை எதிர்கொள்கிறது. https://akkinikkunchu.com/?p=312767
-
தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில்
வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று editorenglishFebruary 18, 2025 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. https://globaltamilnews.net/2025/211616/
-
சட்டத்தரணி,அருட்தந்தையர் உட்பட 10 பேருக்கு தடை உத்தரவு
சட்டத்தரணி,அருட்தந்தையர் உட்பட 10 பேருக்கு தடை உத்தரவு adminFebruary 17, 2025 மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக,நஷ்டம்,தொந்தரவு ஏற்படலாம் எனத் தொிவித்து மன்னார் காவல்துறையினரால் முன் வைக்கப்பட்ட தடை உத்தரவு கோாிக்கைக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(17) மாலை அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிய மணல் அகழ்வு மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குவதற்கு அரச திணைக்கள அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக இரு முறை மன்னார் மாவட்டத்திற்கு சென்றிருந்த போதும் இரு முறையும் மக்களின் ஒன்றினைந்த எதிர்ப்பால் அரச திணைக்களங்கள் உள்ளடங்களாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும் திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறான நிலையில் மீண்டும் குறித்த அரச திணைக்களங்கள் மற்றும் ஒரியன் மினரல் நிறுவனம் ஆய்வுக்காக மன்னார் ஓலைத்தொடுவாய் மற்றும் தோட்டவெளி பகுதிக்கு செல்ல உள்ள நிலையில் பொதுமக்கள் அணி திரண்டு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போராட்ட காரர்கள் என அடையாளப்படுத்தி சிலரின் பெயர்களை குறிப்பிட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் காவல்துறையினர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் ,அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உள்ளடங்களாக 10 பேருக்கு எதிராக தடையுத்தரவை பெற்றுள்ளனர். குறித்த தடை உத்தரவின் கீழ் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.எந்த பொது சொத்துக்களுக்கு தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்த கூடாது .மிக முக்கியமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் ஒரியன் மினரல் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நீதிமன்ற கட்டளை இன்று திங்கட்கிழமை(17 தொடக்கம் 14 நாட்களுக்கு வலுவுள்ளதாக காணப்படும் என குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கையின் போது மன்னார் மக்களுக்கு விருப்பம் இல்லாத கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பகிரங்கமாக தெரிவித்த நிலையில் அவர் ஜனாதிபதியாகி ஒரு வருட காலப்பகுதிக்குள் கனிய மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவதற்கான கூர்ப்பு அறிக்கையை தயார் செய்வதற்கான இரண்டாவது முறை அரச திணைக்களங்கள் மன்னார் மாவட்டத்திற்கு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/211597/
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
@goshan_che எனக்கு iPhone Safari இல் வேலை செய்கின்றது @ க்குப் பின்னர் space அடிக்காமல் முதல் எழுத்தை அடித்தால் list காட்டும் எனக்கு tags வேலை செய்யவில்லை. நேற்று நிலாந்தன் என tag பண்ணமுடியவில்லை
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கடைசியாகப் பதிந்ததால் எல்லோரையும் போலப் பதில்கள் இருந்தால் கடைசியாகத்தானே வரமுடியும்! இங்கிலாந்து அணியில் நன்றாக விளையாடக்கூடிய வீரர்கள் இருப்பதால் அதிக வாய்ப்பு இருக்கின்றது.!
-
தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில்
தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் editorenglishFebruary 17, 2025 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முதலாம் வாசிப்புக்காகக் கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது. வரவு செலவு திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் இன்று காலை 10.30 க்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். வரவு செலவுத் திட்டம் https://globaltamilnews.net/2025/211574/ நேரலை
-
முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி
பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்காலில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் முன்னாள் போராளி editorenglishFebruary 17, 2025 பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16/2/2025) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் சென்று தமது ஆதரவை வழங்கியதோடு குறித்த முன்னாள் போராளியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த போராளியின் கொள்கைகளுடன் தாம் உடன்பட்டுச் செல்வதாகவும் இவருடைய கோரிக்கைகள் அடங்கிய வகையிலே புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் தங்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அது சாதகமாக அமைகின்ற பட்சத்தில் நீங்கள் கேட்கின்ற கோரிக்கைகள் நிறைவேறும் எனவும் தெரிவித்தனர் இருப்பினும் உடனடியாக இதனைச் செயற்படுத்த முடியாத காரணத்தினால் உங்களது உயிரை இழக்க நாங்கள் விரும்பவில்லை, ஆகவே எங்களது இந்த முயற்சிக்கு உரிய ஒரு கால அவகாசத்தைக் கொடுத்துத் தங்களுடைய போராட்டத்தை நிறைவு செய்யுமாறு கோரி இருந்தனர். இருப்பினும் தமிழரசுக் கட்சியினுடைய உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில் மூன்று கட்சிகளையும் சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வந்து குறித்த அரசியல் அமைப்பு விடயத்திலே தனது கோரிக்கைக்கு ஏற்ற வகையிலே தாங்கள் விடயங்களைக் கையாளுவதாக உத்தரவாதம் தரப்படும் பட்சத்தில் தான் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுவதாக குறித்த முன்னாள் போராளி அறிவித்துள்ளார். https://globaltamilnews.net/2025/211568/
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
பொஸ்கோ யாரென்று தெரியாது. எப்படியான செயற்பட்டாளர் என்றும் தெரியாது. கேட்டுத் தெளிவுபெறலாம். ஆனால் ரகு, ரகுபதி, அப்துல்லா என்று சுவிஸில் பலர் வேறு நோக்கங்களுடன் வேலை செய்கின்றார்கள். யார் யாரைப் போட்டுக்கொடுத்தார்கள் என்பது தெரியாது. சுவிஸில் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பை போலித் துவாரகா, “தலைவரைச் சந்தித்தேன்”, “தலைவர் இல்லை” என்று அறிக்கைவிடும் அளவிற்குப் பிரித்துவிட்டார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டிக்கான முடிவுத்தேதி நேற்றுடன் முடிந்துவிட்டதால் 24 பேருடன் நடக்கும் ஐயா!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
25 பேருக்கு மேல் எனது ஷீற் தாங்காது! ஒருவர் வந்தால் பிரச்சினையில்லை! இந்தப் சம்பியன்ஷிப்பில் அதிக மட்சுகள் இல்லாததால் புள்ளிகள் கடைசிநாள் அன்றுதான் அதிகம் மாறும். யாழ்களப் போட்டியில் இதுவரை கலந்துகொண்டோர் 1 ஈழப்பிரியன் 2 ஏராளன் 3 வீரப் பையன்26 4 சுவி 5 அல்வாயன் 6 தமிழ் சிறி 7 நிலாமதி 8 ரசோதரன் 9 நுணாவிலான் 10 வசீ 11 வாத்தியார் 12 நந்தன் 13 செம்பாட்டான் 14 குமாரசாமி 15 நியாயம் 16 வாதவூரான் 17 சுவைப்பிரியன் 18 எப்போதும் தமிழன் 19 புலவர் 20 கோஷான் சே 21 நீர்வேலியான் 22 கந்தப்பு 23 பிரபா 24 கிருபன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்களுக்கு நீங்களே விருப்புக்குறி போடமுடியாதல்லவா😂! அதுதான் இதயக்குறி ❤️உங்கள் கருத்துக்குக் காண்பிக்காது!
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நானும் போட்டியில் குதித்துவிட்டேன்.. # Question Team1 Team 2 Prediction குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND PAK 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 8) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK NZ Select NZ Select BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) PAK #A2 - ? (2 புள்ளிகள்) IND 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS Select SA Select SA SA ENG Select ENG ENG AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) ENG #B2 - ? (2 புள்ளிகள்) SA 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) ENG 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) PAK இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி PAK சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Harry Brook 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Adil Rashid 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Travis Head 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Adam Zampa 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@பிரபா , 16) க்கும் 17)க்கும் ஆன பதில்கள் பொருந்தவில்லை. B1 தெரிவில் AUS அல்லது SA. எது உங்கள் தெரிவு?
-
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதா?
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதா?16 Feb 2025, 7:45 AM கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி விகடன் இணைய இதழான விகடன் ப்ளஸ் இதழில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி கையில் விலங்கிடப்பட்டது போன்ற ஒரு கார்ட்டூன் வெளியாகியிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 16) இரவு முதல் விகடன் இணையதளத்தை பலரால் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதா என்று பல தரப்பிலும் கேள்விகள் எழுந்தது. இதுதொடர்பாக விகடன் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், “விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. முன்னதாக விகடன் இணைய இதழான ‘விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10, திங்கள்) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது. இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம். ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க விகடன் நிறுவனத்துடன் உடன் நிற்போம் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசை விமர்சித்து விகடன் கார்டூன் வெளியிட்டது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விகடன் இணையதளம் திடீரென்று முடக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒன்றிய அரசு இணையதளத்தை முடக்கியிருக்கலாம் என விகடன் நிறுவனம் சந்தேகம் தெரிவித்துள்ளது. கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் இந்நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க விகடன் நிறுவனத்துடன் உடன் நிற்கும் என்று உறுதியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது. https://minnambalam.com/tamil-nadu/does-vikatan-website-blocked-by-central-government/
-
கிளீன் தையிட்டி - நிலாந்தன்
கிளீன் தையிட்டி - நிலாந்தன்கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான ஐநா அலுவலகம் ஓர் விருந்துபசாரத்தை ஒழுங்குபடுத்தியிருந்தது.இலங்கையில் ஐநாவின் பிரசன்னம் 70 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்றது. இந்த 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக அந்த விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உட்பட ஐநாவின் கட்டமைப்புகளுக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளும் அந்த அலுவலகங்களில் வேலை செய்யும் உள்ளூர் அலுவலர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். மேலும் கட்சித் தலைவர்கள் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,குடிமக்கள்சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அரச அதிகாரிகள் என்று பலவகைப்பட்டவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த நிகழ்வில் பேசிய இலங்கைக்கான ஐநாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளர்,சிவில் சமூகங்களை அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் எதிர் நிலையில் வைத்து பார்க்கக்கூடாது என்று பேசினார். இலங்கைத் தீவில் ஐநாவின் பிரசன்னம் 70 ஆண்டுகள்.ஆனால் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை 70ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது.தமிழ் மக்கள் ஐநாவுடன் நெருக்கமாக வேலை செய்ய தொடங்கியது 2009க்குப் பின்னிருந்து.அதாவது 15 ஆண்டுகள்.அதிலும் குறிப்பாக இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்தோடு நிலைமாறு கால நீதியை இலங்கை தீவில் ஸ்தாபிப்பதற்காக உழைத்தது கடந்த 9ஆண்டுகள்.இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவில் ஐநாவின் 70ஆண்டுகால பிரசன்னத்தால் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை.குறிப்பாக 2009க்குப் பின்னரான கடந்த 15ஆண்டு காலத் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் ஐநா மைய அரசியலாகவே இருந்துவருகிறது.அதிலும் குறிப்பாக 2015,செப்டம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்குப் பின்னிருந்து தமிழ்க் கட்சிகளில் ஒரு பகுதியும் சிவில் சமூகங்களும் மனித உரிமைக் காவலர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் நிலை மாறுகால நீதிக்காக அதாவது போரில் ஈடுபட்ட தரப்புகளை பொறுப்புக்கூற வைப்பதற்காக உழைத்து வருகின்றன. ஆனால் அவ்வாறு உழைத்ததன் விளைவாக தமிழ் மக்கள் பெற்றவை என்ன? கடந்த 2021ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதுவதற்காக சிவில் சமூகங்கள் கட்சிகளை ஒருங்கிணைத்தன. அதற்குரிய இரண்டாவது சந்திப்பு வவுனியாவில் இடம் பெற்றது. இச்சந்தப்பின்போது அதில் பங்குபற்றிய சுமந்திரன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.” 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனையைச் செய்தோம்,அதில் தோல்வியடைந்து விட்டோம்.” ஆறாண்டு காலப் பரிசோதனை என்பது என்ன?அதுதான் 2015ஆம் ஆண்டிலிருந்து நிலைமாறு கால நீதிக்காக உழைத்தமை. நிலைமாறு கால நீதியைப் பொறுத்தவரை கூட்டமைப்பு அதன் பங்காளியாகச் செயல் பட்டது.புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் உள்ள அமைப்புகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நிலைமாறு கால நீதி வேண்டாம், இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதிதான் வேண்டும் என்று கோரிய ஒர் அரசியல் சூழலில், கூட்டமைப்பு நிலைமாறு கால நீதியின் பக்கம் நின்றது.ஆனால் அந்தப் பரிசோதனையில் தாங்கள் தோல்வியடைந்து விட்டதாக சுமந்திரன்-அவர்தான் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளில் தமிழ்த் தரப்பின் பிரதான பங்காளி-அவ்வாறு கூறினார்.நிலை மாறுகால நீதிச் செயற்பாடுகள் இலங்கைத் தீவில் எதிர்மறை விளைவுகளைத்தான் தந்தன.ஆங்கிலத்தில் அதனை “கவுண்டர் ப்ரொடக்டிவ்”என்று கூறுவார்கள். அதாவது நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகள் இலங்கைத் தீவில் தோல்வியடைந்து விட்டன.அதற்குப் பின்னரும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன.ஐநாவை நோக்கிய தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை.2021 ஆம் ஆண்டு தமிழ்க் கட்சிகள் ஐநாவுக்கு எழுதிய கூட்டுக் கடிதத்தில் ஒரு சான்றுகளைத் திரட்டும் பொறிமுறையைக் கேட்டிருந்தார்கள்.குறிப்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது அந்தப் பொறிமுறையானது குறுகிய காலத்துக்குள் சாட்சியங்களைச் சேகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அந்தக் கடிதத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஐநாவின் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான பொறிமுறையானது மிகப் பலவீனமானதாகவே அமைந்தது.அது ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் இயங்கும் ஓர் அலுவலகமாக சுருக்கப்பட்டுவிட்டது.இதுதான் கடந்த 15 ஆண்டுகால ஐநா மையத் தமிழ் அரசியலின் தொகுக்கப்பட்ட விளைவு. இப்படிப்பட்டதோர் பூகோள அரசியற் சூழலில்,திண்ணையில் நடந்த விருந்துபசாரத்துக்கு முதல் நாள் மாலை அதே திண்ணையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் ஐநாவின் வெவ்வேறு அலகுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளும் கலந்து கொண்ட மேற்படி சந்திப்பில்,தமிழ்மக்கள் மத்தியில் உள்ள குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.சந்திப்பில் நிலைமாறு கால நீதியின் தோல்வி குறித்து ஆழமாகப் பேசப்பட்டது.அந்தச் சந்திப்பின் முடிவில் இலங்கைக்குரிய ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளரான மார்க் அன்ட்ரே ஃபிரான்ச்சே எல்லாவற்றையும் தொகுத்துப் பதில் சொன்னார். அவர் பழக இனிமையானவர்;எளிமையானவர்;வெளிப்படையான ஒரு ராஜதந்திரி. கதைப்போக்கில் சில விடயங்களை நறுக்கென்று சொல்லிவிட்டு போகக் கூடியவர்.அவர் தனது தொகுப்புரையில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டினார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகப் போவதாகத் தெரிகிறது.இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானங்களில் அமெரிக்கா பிரதான உந்துசக்தியாக இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் இனி வரக்கூடிய ஐநா தீர்மானங்களை இலங்கை அரசாங்கமும் ஐநாவும் இணைந்து நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறையக்கூடும்.மேலும் இப்பொழுது நடைமுறையில் உள்ள சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தின் செயற்பாடுகளையும் அது பாதிக்கக்கூடும் என்ற பொருள் கொள்ளத்தக்க விதத்தில் அவரது உரை அமைந்திருந்தது. அமெரிக்கா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலக நேர்ந்தாலும் சுவிட்சர்லாந்து அந்தப் பாத்திரத்தை வகிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. காசா, உக்ரைன் அழிவுகளின் பின்னணியில், பொதுவாகவே இலங்கை மீதான அதாவது தமிழர் விவகாரத்தின் மீதான ஐநாவின் கவனக்குவிப்பு குறையக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இவை மட்டுமல்ல உலகத்தின் கவனத்தையும் ஐநாவின் கவனத்தையும் ஏன் கொழும்பின் கவனத்தையும்கூட ஈர்க்கக்கூடிய விதத்தில் தமிழ் அரசியல் தொடர்ச்சியாக நொதிக்கும் ஒன்றதாக, கொந்தளிப்பானதாக இல்லை என்பதும் ஒரு காரணந்தான்.இதை இன்னும் கூரான வார்த்தைகளில் சொன்னால்,தமது அரசியலை கொந்தளிப்பானதாக உலகத்தின் கவனத்தை ஈர்க்கத் தக்கதாக கொதிநிலையில் வைத்திருக்கத் தமிழ் மக்களால் முடியவில்லை. இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்,கடந்த புதன்கிழமை தையிட்டியில் நடந்த போராட்டம் ஒப்பீட்டளவில் எழுச்சிகரமானது.தையிட்டியை மையமாகக் கொண்டு இப்பொழுது தமிழ் அரசியல் நொதிக்கத் தொடங்கியுள்ளது. சிறீலங்காவை கிளீன் செய்யப்போவதாகச் செல்லும் ஓர் அரசாங்கத்தை நோக்கி “கிளீன் தையிட்டி” என்று தமிழ்மக்கள் கேட்கிறார்கள்.நில ஆக்கிரமிப்புக்கு எதிரான அரசியல் தொடர்ந்து நொதிக்குமா? கொழும்பின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் தன்னைநோக்கி ஈர்த்து வைத்திருக்க முடியுமா? முடியுமா என்ற கேள்விக்கே இங்கு இடம் இல்லை.அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும்.நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சிங்களபௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகளுக்கு எதிராகவும் தமிழ்மக்கள் தமது அரசியலில் நொதிக்கச் செய்ய வேண்டும்.உலகமும் கொழும்பும் திரும்பிப் பார்க்கத்தக்க எழுச்சிகளை ஒழுங்கமைக்க வேண்டும். தையிடியில் புதன்கிழமை திரண்ட மக்கள் ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல.அதில் முன்பு அரசாங்கத்தின் பக்கம் நின்ற கட்சிகள்,நிலைமாறு கால நீதியை ஆதரித்த கட்சிகள் என்று எல்லா வகைப்பட்ட கட்சிகளும் நின்றன.அது ஒரு திரட்சி.வரலாற்றில் எல்லாத் தேசத் திரட்சிகளும் அப்படிப்பட்டவைதான்.”நீ முன்பு அரசாங்கத்தோடு நின்றாய்”,”மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அரசாங்கம் காணியை அபகரித்த பொழுது உடந்தையாக நின்றாய்”,”நிலைமாறு கால நீதியின் பக்கம் நின்றாய்”… என்றெல்லாம் பழைய தோம்பை இழுத்துக் கொண்டிருந்தால் தேசத்தைத் திரட்ட முடியாது.தேசத் திரட்சிக்குள் எல்லாமும் அடங்கும்.அதற்குத் தலைமை தாங்கும் கட்டமைப்பு உறுதியானதாக கொள்கைப் பிடிப்புள்ளதாக இருந்தால் போதும். புதன்கிழமை ஏற்பட்ட திரட்சி எல்லா கட்சிகளுக்கும் ஒரு செய்தியை மீண்டும் உணர்த்துகிறது.அது புதிய செய்தி அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக கற்கத் தவறிய செய்தி.முள்ளிவாய்க்காலில் இருந்து கற்றுக்கொள்ளாத செய்தி.அது ஒரு தேர்தல் தோல்வியிலிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு செய்தியல்ல. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்ட எல்லாப் பெரிய எழுச்சிகளும் ஒரு கட்சிக்குரியவை அல்ல.அதில் பல கட்சிகள் இருந்தன.குடிமக்கள் சமூகங்கள்,மக்கள் அமைப்புக்கள் இணைந்தன.எனவே இனிமேலும் அப்படித்தான் இருக்கும்.தையிட்டி விவகாரத்தைத் தொடர்ந்து கவனக் குவிப்பில் வைத்திருந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான்.சுமார் 20 மாதங்களுக்கு மேலாக அந்தப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்த அக்கட்சியால் முடியவில்லை.ஆனால் நடந்து முடிந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் விளைவாக அது சூடுபிடித்திருக்கிறது.விரைவில் நடக்கவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலை நோக்கியும் கட்சிகள் உழைக்கின்றன என்பது உண்மை.கட்சிகள் அப்படித்தான் சிந்திக்கும்.ஆனால் யார் எதற்காக உழைக்கிறார்கள் என்பது இங்கு பிரச்சனையில்லை.ஒரு ஆக்கிரமிப்புக்கு எதிராக தேசமாகத் திரள முடிந்தால் அது வெற்றியே.கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்த “ஏழுக தமிழ்கள்” “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி” வரையிலுமான எழுச்சி, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நோக்கிக் குவிந்த வாக்குகள்… எல்லாமும் பல கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் சேர்ந்து திரட்டியவைதான்.அவை யாவும் கூட்டுச் செயற்பாடுகள்தான்.எனவே தையிட்டிப் போராட்டம் தமிழ் கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தியிருப்பது அதனைத்தான்.கட்சிகளைக் கடந்து ஒரு திரட்சியை ஏற்படுத்துவது என்றால்,அதற்கு பல கட்சிகள் சம்பந்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட திரட்சிகள்தான் ஒப்பீட்டளவில் ஐநாவையும் உலகத்தையும் கொழும்பையும் தமிழ் மக்களை நோக்கித் திருப்பும். தமிழர்கள் தமது அரசியலை நொதிக்கச் செய்ய வேண்டும்.கொதிக்கச் செய்ய வேண்டும். கொந்தளிக்கச் செய்ய வேண்டும்.அப்பொழுதுதான் தேசத் திரட்சியைப் பலப்படுத்தலாம்.தமிழ்த்தேசிய வாக்குகள் தமிழ்த்தேசியப் பரப்புக்கு வெளியே சிந்தப்படுவதையும் தடுக்கலாம். https://www.nillanthan.com/7176/#google_vignette
-
இன அழிப்பின் குறியீடே தையிட்டி விகாரை- சி.அ. யோதிலிங்கம்
இன அழிப்பின் குறியீடே தையிட்டி விகாரை- அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம்யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை இன அழிப்பின் குறியீடு என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்றையதினம்(15) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தையிட்டி விகாரை தொடர்பாக தமிழ் மக்களின் ஒன்றிணைந்த போராட்டம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று நடந்து முடிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர். போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்குமிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சிங்கள மக்களை விகாரை வளவுக்குள் அனுமதித்த பொலிஸார் தமிழ் மக்களை அனுமதிக்காததையிட்டு பலத்த கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்கள்; சிலரும் போராட்டத்தை பார்வையிட்டுள்ளனர். தையிட்டி விவகாரத்தை பொறுத்தவரை சகல தரப்பும் ஒன்றிணைந்து நடாத்திய போராட்டம் இதுதான். இதுவரை காலமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே அடையாளப் போராட்டங்களை நடாத்தி வந்தது. இந்தத் தடவை அனைத்து கட்சிகளும், அனைத்து சிவில் அமைப்புகளும் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தன. மரபுக்கு மாறாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், அங்கஜன் இராமநாதன் தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இது தொடர்பாக ஊடகவியலாளர் மாநாட்டையும் நடாத்தியுள்ளனர். இதனை “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை" போராட்டம் போல தமிழ் மக்கள் தேசமாக திரண்டெழுந்த போராட்டம் எனலாம். தேசிய மக்கள் சக்தி மட்டும் இதில் பங்குபற்றவில்லை. அது ஆளும் கட்சியாக இருப்பதும், தென்னிலங்கைக் கட்சியாக இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். பங்குபற்றாவிட்டாலும் காத்திரமான எதிர்ப்பு எதனையும் காட்டவில்லை. மேம்போக்கான எதிர்கருத்துக்கள் மட்டுமே சந்திரசேகரிடமிருந்து வந்திருந்தன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் வர இருப்பதால் தேசிய மக்கள் சக்தி அடக்கி வாசித்திருக்கலாம். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்மாநகர சபையை கைப்பற்றும் கனவும் அதற்கு உண்டு. தமிழரசுக் கட்சியில் சிறீதரன் பிரிவினரும், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர். சுமந்திரன் பிரிவினர் பெரியளவிற்கு பங்குபற்றவில்லை. அப்பிரிவின் முக்கியஸ்தர்களான சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம், சுகிர்தன், சயந்தன் எவரையுமே போராட்டத்தில் காணக்கிடைக்கவில்லை. கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் அவசரப்பட்டு கருத்துக்களை கூறியிருந்தார். அக்கருத்துக்கள் பலத்த எதிர்வினைகளை தோற்றுவித்திருந்தன. “இனவாதம் மதவாதத்திற்கு இடமில்லை" என அவர் கூறியிருந்தார். மதவாதத்திற்கு இடமில்லை என்றால் தேசிய மக்கள் சக்தியும் போராட்டத்தில் பங்கு பற்றியிருக்க வேண்டும். ஏனெனில் போராட்டம் சாராம்சத்தில் மத ஆக்கிரமிப்புக்கு எதிரானது. அதன் வழி மதவாதத்திற்கு எதிரானது. அரசியல் யாப்பு ரீதியாக பௌத்த மதம் முதன்மை மதம் என்பதற்காகவும், அதனை பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை என்பதற்காகவும் தமிழ் மக்களின் சொந்த காணிகளை ஆக்கிரமித்து அடாவடித்தனம் செய்ய முடியாது. உண்மையில் தையிட்டி விகாரை இன அழிப்பின் ஒரு குறியீடு. இன அழிப்பு என்பதே ஒரு தேசிய இனத்தின் நிலத்தை மொழியை, பொருளாதாரத்தை, கலாச்சாரத்தை அழிப்பதுதான். இந்த வகையில் தையிட்டி விகாரை கலாச்சார அழிப்பினதும், நிலப்பறிப்பினதும் ஒரு குறியீடு தான். எனவே இன அழிப்பிற்கு எதிரான போராட்டத்தை மதவாதம் என எவ்வாறு கூற முடியும். சந்திரசேகர் உள்ளூராட்சிச் சபை தேர்தல் வர இருப்பதால் போராட்டத்தை நடாத்துகின்றனர் என போராட்டத்தை கேலி செய்கின்றார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் பற்றிய செய்திகள் வருவதற்கு முன்னரே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விகாரைக்கு எதிரான அடையாளப் போராட்டத்தை தொடர்ச்சியாக நடாத்தி வந்தது. உண்மையில் இப் போராட்டத்தை தக்கவைத்து பேசு பொருளாக்கியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் பாராட்ட வேண்டும். தவிர அமைச்சர் சந்திரசேகர் போராட்டம் இனப்பதட்டத்தை அதிகரிக்கும் என வேறு கூறுயிருக்கின்றார். தம்புள்ளையில் காளி கோவில் ஒன்று சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது எனக் கூறி அகற்றப்பட்டது. அக்கோவிலின் இந்து மதகுரு சில மதச் சடங்குகளைச் செய்த பின் அகற்றுங்கள் என வேண்டிய போதும் அவ் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த பல புத்தர் சிலைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. அப்போதெல்லாம் இனப்பதட்டம் வரவில்லை. இப்போது மட்டும் வரும் என எவ்வாறு கூற முடியும். சந்திரசேகர் தனது கருத்துக்களைக் கூறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களை சிறுபான்மையினம் என்றே விழித்து வருகின்றார். மாக்சிய வாதியான அவரது மரபுக்கு இவ்வாறு விழிப்பது அழகல்ல. தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனமல்ல. ஒரு தேசிய இனம் என்பது இன்று பல வழிகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜே.வி.பி. யின் ஸ்தாபகர் ரோகண விஜேவீரா கூட அதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றார். ஜே.வி.பி.யின் ஆரம்பகால செயலாளராக இருந்த லயனல் போபகே இது பற்றி “தேசிய இனப் பிரச்சினைக்கோர் விளக்கம்" என்ற நூலையும் எழுதியிருந்தார். அமைச்சர் சந்திரசேகர் தமிழ் மக்களுக்கும் தமிழக மீனவர்கள், இந்திய ஆட்சியாளர்கள் என்போருக்கும் இடையிலான முரண்பாட்டில் தமிழ்மக்களின் பக்கமே நிற்கின்றார். அதற்கான எதிர்ப்புக் குரலை ஆக்ரோசமாக முன்வைக்கின்றார். சென்னையில் வைத்துக் கூட எதிர்ப்புக் குரலை எழுப்ப அவர் தயங்கவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கும,; சிங்கள தேசத்திற்கும் இடையிலான முரண்பாட்டில் சிங்கள தேசம் பக்கம் நிற்கவே முயல்கின்றார். இது ஜே.வி.பி.யின் அடிப்படை இனவாதத்திலிருந்து விலக அவர் விரும்பவில்லை என்பதையே காட்டப் பார்க்கின்றது. சிங்கள சமூக உருவாக்கமும் அதன் வழி சிங்கள தேச உருவாக்கமும் பெருந்தேசிய வாத கருத்து நிலையை அடிப்படையாகக் கொண்டவையே! இதன்படி இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது. ஏனைய இனக் குழுமங்கள் இங்கு வாழ்ந்து விட்டுப் போகலாம். ஆனால் ஒரு தேசிய இனமாக எழுச்சி அடைய முடியாது என்பதே இக்கருத்தின் அடிப்படை . எனவே தமிழ் மக்கள் தேசிய இனமாக இருப்பதை அழிப்பது என்பது சிறீலங்கா அரசின் இலக்குகளில் ஒன்று. இதனால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இன அழிப்பை மேற்கொண்டே தீரும். இது விடயத்தில் அளவு ரீதியான வேறுபாடுகள் அரசாங்கங்களிடம் இருக்குமே தவிர பண்பு ரீதியான வேறுபாடுகள் இருக்க மாட்டா. இங்கு வேறுபாடு என்பது நக்கிக் கொல்வதும,; கடித்துக் கொல்வதும் மட்டும் தான் தேசிய மக்கள் சக்திக்கு பல சங்கடங்கள் உண்டு என்பது உண்மைதான். பாராளுமன்றத் தேர்தலின் போது வடக்கில் முதன்மை நிலையைப் பெற்றிருப்பதால் இச்சங்கடங்கள் ஏற்படுகின்றது. அது தனது பெருந்தேசிய வாதத்தை சற்று அடக்கி வாசிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனினும் சிங்கள தேசமா? தமிழ்த் தேசமா? என்ற நிலை வரும் போது அது சிங்கள தேசம் என்ற நிலைப்பாட்டையே எடுக்கும.; சந்திரசேகர் யாழ் மாவட்டத்தில் வாழும் ஐந்து லட்சம் மக்களின் அபிப்பிராயங்களை பெற்ற பின்னரே தையிட்டி விகாரை தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியுமென்றும் கூறியிருக்கின்றார். இதனை ஒரு வகையான பொது வாக்கெடுப்பு என கூறலாம். தமிழ் மக்களும் இந்த பொது வாக்கெடுப்பை வரவேற்பார்கள். ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்தின் பொதுப் பிரச்சினையாக இருப்பதால் தாயகம் தழுவிய வகையில் தமிழ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதே இங்கு பொருத்தமாக இருக்கும். இவ்வாறான பொது வாக்கெடுப்புக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக இருக்கும் எனக் கூறுவது கடினமானது. தையிட்டி விகாரைக்கான அடிக்கல் நல்லாட்சிக் காலத்திலேயே நாட்டப்பட்டது. இக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தது. அரசாங்கத்தை பாதுகாப்பதிலேயே அக்கறையாக இருந்தது. இதன் போது அழுத்தங்களைக் கொடுத்து அடிக்கல் நாட்டுவதை நிறுத்தியிருக்கலாம். கூட்டமைப்பு பெரிய அழுத்தங்கள் எவற்றையும் கொடுக்கவில்லை. சம்பந்தன் தலைமை இதனை விரும்பாது இருந்திருக்கலாம். பொதுவாக சம்பந்தனோ, சுமந்திரனோ ஆக்கிரமிப்பு விவகாரங்களில் பெரிய அக்கறையைக் காட்டுவதில்லை. சிங்களத் தரப்புடன் தங்களுக்குள்ள உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் தான் இதற்கு காரணம். கன்னியா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சம்பந்தனுக்கு அவரது சொந்தத் தொகுதியாக இருந்த போது கூட பெரிய அக்கறையைக் காட்டவில்லை. உண்மையில் நாவற்குழி விகாரை கட்டியெழுப்பிய போது பாரிய எதிர்ப்பைக் காட்டியிருந்தால் தையிட்டி விகாரை முயற்சியினைத் தடுத்திருக்கலாம். இரண்டு விகாரைகளுமே இராணுவத்தின் வேலைத்திட்டம். அன்றைய காலகட்டத்தில் இராணுவத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் அரசாங்கத்திற்கு இருந்திருக்கும் என்றும் கூறமுடியாது. தற்போது இராணுவமும் சற்று பலவீனமாக இருப்பதால் அழுத்தங்களைக் கொடுப்பது இலகுவானது. இப் போராட்டங்கள் மூலம் தையிட்டி விகாரையை அகற்றுவது தாமதமாக இருந்தாலும் புதிய விகாரைகள் கட்டப்படுவதைத் தடுக்க முடியும். தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தையிட்டி விகாரையை பௌத்தசாசன அமைச்சு பொறுப்பெடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இவ்வாறு இடம்பெறுமானால் தையிட்டி விகாரை முழுக்க முழுக்க அரசியல் தலைமையின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும.; இதன் பின்னர் அழுத்தங்களை கொடுப்பது சற்று இலகுவாக இருக்கும். அரசியல் தலைமை சர்வதேச அழுத்தங்களுக்கும், உள்;ர் அழுத்தங்களுக்கும் கட்டுப்பட்டேயாக வேண்டும். அரசாங்கத்தின் பொறுப்பில் வர இருப்பதால் சமரச முயற்சிகளில் அது ஈடுபடப் பார்க்கும். விகாரைக்கு அளவான காணிகளை மட்டும் ஒதுக்கிக் கொண்டு மீதி காணிகளை மக்களிடம் கொடுக்கப் பார்க்கும் விகாரைக் காணிக்கு மாற்றீடாக வேறு காணிகளையோ, நட்டஈட்டையோ கொடுக்க முயற்சிக்கலாம். பழைய திஸ்ஸ விகாரை காணிகளை இதற்காக பங்கிட முற்படலாம். அந்தக் காணிகளின் உறுதிகள் உண்மையானதல்ல என்ற ஒரு தகவலும் உண்டு. இந்த மாற்று ஏற்பாடுகள் பொருத்தமானதல்ல. தமிழ் மக்கள் விகாரை அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையே முதன்மைப் படுத்த வேண்டும.; அரசாங்கம் உண்மையான அரசாங்கமாக இருந்தால் சகல இனங்களையும் சமமாக மதிக்கும் அரசாங்கமாக இருந்தால் இந்த அத்துமீறிய விகாரை தொடர்பாகவும் ஏற்கனவே கட்டப்பட்ட அத்துமீறிய விகாரைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாகவும் முதலில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். தொடர்ந்து சகல ஆக்கிரமிப்புகளையும் கைவிட வேண்டும் இனிவரும் காலங்களில் எந்தவித ஆக்கிரமிப்புகளும் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இவ்வாறான செயல்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கும் போது தான் அரசாங்கத்தின் முறைமை மாற்றம,; வளமான வாழ்க்கை, அழகான இலங்கை கீளீன் சிறீலங்கா என்கின்ற இலக்குகள் அர்த்தம் பொருந்தியதாக இருக்கும் . முன்னைய அரசாங்கங்கள் போல தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளுமாக இருந்தால் அதன் முறைமை மாற்றம் பற்றிய இலக்கு மாத்திரமல்ல பொருளாதார இலக்குகளும் ஒருபோதும் வெற்றியைத் தர மாட்டாது. உண்மையில் அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா இலக்கும், முறைமை மாற்ற இலக்கும், வளமான வாழ்க்கை, அழகான இலக்கை, என்ற இலக்குகளும் வெற்றியைத் தர வேண்டுமென்றால் ஆக்கிரமிப்புகளை இல்லாமல் செய்தல் என்கின்ற செயல் திட்டத்திலிருந்தே அவை ஆரம்பிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்பாக இருந்த நம்பிக்கைகள் தற்போது இல்லை. தமிழ் மக்கள் சந்திக்கின்ற அரசியல் தீர்வு என்கின்ற அடிப்படைப் பிரச்சினை, பொறுப்பு கூறல் பிரச்சினை, ஆக்கிரமிப்பு பிரச்சினை, காணிப்பறிப்பு, அரசியல் கைதிகள,; காணாமல் போனோர் விவகாரம் போன்ற நிலை மாறு கால நீதிப் பிரச்சினை அன்றாடப் பிரச்சினை போன்ற ஐந்து பிரதான பிரச்சினைகளிலும் சிறிய முன்னேற்றத்தைக் கூட காட்டவில்லை. இதனால் நம்பகத்தன்மை தொடர்ச்சியாக கீழிறங்கி வருகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் மனங்களை வெல்லலாம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைத்தால் அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒருங்கிணைந்த செயற்பாடு மிகவும் அவசியமானது. பெருந்தேசிய வாத ஆக்கிரமிப்புகளை கையாள்வதற்கும், சர்வதேச அரசியலைக் கையாள்வதற்கும் தேர்தல் அரசியலை கையாளவும் ஒருங்கிணைந்த செயல்பாடு மிக மிக அவசியம். இதற்கான ஆரம்பங்களை ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து தொடங்கலாம் .தொடர்ந்து சர்வதேச அரசியலைக் கையாள்வதற்கு இதனை வளர்த்துச் செல்லலாம.; இவற்றிலிருந்து வரும் புரிந்துணர்வு ஊடாக தேர்தல் அரசியலை நோக்கியும் முன்னேறிச் செல்லலாம் . ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் அடையாளப் போராட்டமாக இல்லாமல் பேரெழுச்சியாக உலகம் தழுவிய வகையில் வளர வேண்டும். இக்கட்டுரையாளர் அடிக்கடி கூறுகின்ற விடயம் பெருந்தேசியவாக அரசாங்கம் அச்சப்படுவது தமிழ் மக்களின் உலகளாவிய அரசியல் போராட்டங்களுக்கு தான். எனவே எமது போராட்டங்களும் அரசியல் செயல்பாடுகளும் உலகம் தழுவியதாக அமைதல் முக்கியமானது. தாயகத்தில் போராட்டங்களும் அரசியல் செயல்பாடுகளும் வலுவாக இருந்தால் அது தமிழ்நாடு புலம்பெயர் நாடுகள் என்பவற்றிலும் அவை பரிணமிக்கத் தொடங்கும் இதனூடாக நிலம், புலம,; தமிழகம் தழுவிய ஒருங்கிணைந்த அரசியலையும் முன்னெடுக்க முடியும். எல்லாவற்றுக்கும் நிபந்தனை தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியலைக் கட்டியெழுப்புவதே! இப்போது எழும் முக்கிய கேள்வி தாயகம் இதற்கு தயாராக இருக்கின்றதா? என்றுள்ளது https://www.thaarakam.com/news/edfe354e-315e-4225-bc04-6bcd0c6a8cb9
-
யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கபடாத வலி வடக்கு காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்கள் கேள்வி கேட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பிரதமர் ஹரினி அமரசூரிய பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் உடுவில் தொகுதி மக்கள் சந்திப்பு ஏழாலை ஏழு கோவிலடியில் நேற்று மாலை இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் கூடிய குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான கபிலன் உள்ளிட்ட சிலர் உரையாற்றினர். இறுதியாக பிரதமர் ஹரினி அமரசூரிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் உரையாற்றினார். உரையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமலாக்கப்பட்டோர் விவாகரம் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் எதுவும் தெரிவித்திருக்கவில்லை. இந்நிலையில் பிரதமர் உரையாற்றி விட்டு மேடையில் இருந்து இறங்கி மக்களை சந்திக்க அருகில் வந்தார். இதன்போது பிரதமரை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக பேச காத்திருந்த காணி உரிமையாளரொருவர் பலாலி பகுதியில் காணிகள் விடுவிக்கப்படாது இருப்பது தொடர்பாக தனது ஆதங்கத்தை பிரதமரிடம் நேரடியாக தெரிவித்தார். இதன்போது பிரதமர் ஏனையவர்களுடன் பேச சென்றபோது குறித்த காணி உரிமையாளர் உங்கள் அரசியலுக்காக எங்களை பயன்படுத்த வேண்டாம் என தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தெரிவித்தார். இதன்போது பிரதமரை சூழ்ந்திருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த காணி உரிமையாளரை அங்கிருந்து அகற்றியதுடன் அதனை காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பிரதமர் ஹரினி அமரசூரிய பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். https://www.samakalam.com/யாழ்ப்பாணத்தில்-பிரதமர்/
-
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து!
கருணைநாதன் இளங்குமரனை பிரதமர் பார்வையிட்டார்adminFebruary 15, 2025 விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய பார்வையிட்டார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். https://globaltamilnews.net/2025/211486/
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதுவரை போட்டியில் பங்குபற்றியோர் 1 ஈழப்பிரியன் 2 ஏராளன் 3 வீரப் பையன்26 4 சுவி 5 அல்வாயன் 6 தமிழ் சிறி 7 நிலாமதி 8 ரசோதரன் 9 நுணாவிலான் 10 வசீ 11 வாத்தியார் 12 நந்தன் 13 செம்பாட்டான் 14 குமாரசாமி 15 நியாயம் 16 வாதவூரான் 17 சுவைப்பிரியன் 18 எப்போதும் தமிழன் 19 புலவர்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்கள் பதில்களின்படி 15) BAN 18) SA அல்லது ENG. நீங்கள் இங்கிலாந்தில் இருப்பதால் SA ஐப் போடுகின்றேன். 19) AUS 20) PAK 26) க்கும் 30) க்கும் Rashid Khan ஐப் போட்டுள்ளேன்.