Everything posted by கிருபன்
-
சிறுவர் தினத்தன்று சிறுவன் கொலை தொடர்பில் நேற்று ஆர்ப்பாட்டம்
சிறுவர் தினத்தன்று சிறுவன் கொலை தொடர்பில் நேற்று ஆர்ப்பாட்டம் editorenglishFebruary 10, 2025 சிறுவர் தினத்தன்று சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மாத்தளை மேல் நீதிமன்றத்தால் பிணைவழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 08 சந்தேக நபர்களின் பிணையை ரத்து செய்து சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என மாத்தளை மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள மாத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட மகாவில்ல நாலந்த தோட்டம் மடவல்ல உல்பத்த பிரதேச மக்கள் நேற்று (09) கவனயீர்ப்புப் பேராட்டம் ஒன்றை நடத்தினர் . இதன்போது பிரதேச மக்கள் சந்தேக நபர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சுலோகங்களையும் ஏந்தி ஊர்வலமாக சென்று தமது கவன ஈர்ப்பினை முன்னெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த வருடம் இடம்பெற்ற சிறுவர் தினத்தன்று மோகன் யூகேஸ் என்ற (வயது 17) வயதுடைய பாடசாலை மாணவன் தனது நண்பனின் காதலியை பார்க்க அவரின் வீட்டுக்கு சொன்ற போது காதலியின் உறவினர்களால் குறித்த மாணவன் தடியாலும், தலை கவசத்தாலும் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான (08) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 08 பேரும் கடந்த ஜனவரி மாதம் 28 திகதி மாத்தளை மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு விடுதலையான இச் சந்தேக நபர்கள் சாட்சியங்களை அச்சுறுத்தியதால் பாதுகாப்பு கோரி மீண்டும் அவர்களை கைது செய்யுமாறு பாடசாலை மாணவர்கள் பிரதேச மக்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சந்தேக நபர்களின் பிணையை ரத்து செய்து அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட வேண்டும் என இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/211051/
-
பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
இப்படி ஒரு கீழ்த்தரமான முறையில் நாமல் தந்தைக்கு நன்றிக்கடன் செலுத்தி போர்க்குற்றத்திற்கு உடந்தையாகின்றார். மகிந்த மனம் வருந்தியிருந்தால் ஒரு விசாரணை நடாத்தி உண்மையைக் கண்டறிந்திருக்கலாம். உலகுக்குச் சொல்லியிருக்கலாம்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
நேற்று இலண்டனில் சீமானின் தம்பிகள் தங்கள் அறிவை வெளிக்காட்டினார்கள்😂 https://www.facebook.com/share/v/15fr3dTQMj/?mibextid=wwXIfr
-
பெரியார் மண்ணில் பெருவெற்றி… ஈரோடு கிழக்கு வெற்றியை வர்ணித்த ஸ்டாலின்
பெரியார் மண்ணில் பெருவெற்றி… ஈரோடு கிழக்கு வெற்றியை வர்ணித்த ஸ்டாலின் 8 Feb 2025, 9:55 PM ஈரோடு கிழக்கு தொகுதியை மட்டுமல்ல, மேற்கு மண்டலம் முழுவதையும் வளப்படுத்த, மேம்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகளை பெற்று அபார வெற்றியை பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 45 பேரும் டெபாசிட் இழந்தனர். இந்த நிலையில் திமுகவின் வெற்றி குறித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 😎 அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். பெரியார் மண்ணில் பெருவெற்றி. நல்லாட்சிக்கு நற்சான்றாக இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமையின் இலக்கணமாகச் செயல்பட்டு, திமுகவின் வெற்றிக்காக உழைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமைக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆற்றிய பணியை மறக்க முடியாது. பல்வேறு சமூக அமைப்புகள், கட்சிகள் திமுக-வின் வெற்றிக்காகப் பணியாற்றினார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தலைமறைவானது அதிமுக திமுக-வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், மக்கள் ஆதரவுடன் 2021-ம் ஆண்டு அமைந்த இந்த ஆட்சிக்கும், நாம் செயல்படுத்தி வரும் உன்னதமான திட்டங்களுக்கும் மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம்தான் இந்த வெற்றி. தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்து விட்ட எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடிய காட்சியையும் முன்கூட்டியே தமிழகம் பார்த்து விட்டது. 2019 முதல் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றப் பொதுத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகிய அனைத்திலும் திமுக கூட்டணியானது தொடர் வெற்றியைப் பெற்று வந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியை அடைவதும் தொடர்கதையாக அமைந்தது. எனவே தேர்தல் களத்துக்கே வராமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பங்கெடுக்காமல் தலைமறைவானது அதிமுக. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக-வுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாரான நிலையில் இங்கும் பதுங்கிவிட்டது. தொடர் தோல்விகளால் ஏற்பட்ட சோர்வும், தேர்தல்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாமலும் போன அதிமுக இன்று மக்கள் மனதில் இருந்து மெல்லமெல்ல மறைந்து மங்கிக் கொண்டிருக்கிறது என்பதே முழு உண்மையாகும். முன்மாதிரி உறுப்பினராகச் செயல்படுவார்! திமுக கூட்டணியைப் பொருத்தவரையில் மூன்றரை ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்கள்முன் வைத்தோம். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் தனிப்பட்ட முறையில் பயனடையும் திட்டங்களை நிறைவேற்றி வருவதை மக்கள் அனைவரும் நேரடியாக உணர்ந்துள்ளார்கள். சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் நிலையையும் தாண்டி, சாதனைகள் என்பவை மக்கள் மனதில் பதிந்ததாக இருந்தது. மகத்தான திட்டங்களைத் தரும் திமுக அரசுக்கு, மகத்தான வெற்றியைத் தர மனமுவந்து மக்கள் முடிவெடுத்தார்கள். தங்களது பெரிய எண்ணத்தை எண்ணிக்கையாகக் காட்டி வாக்குகளை அள்ளித் தந்துள்ள ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சந்திரகுமாரை, வெற்றி வேட்பாளராக ஆக்கி சட்டமன்றத்துக்குள் அழைத்து வர உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள் முத்துசாமி உள்ளிட்ட தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அனைத்து உடன்பிறப்புகளுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், அத்தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக இருந்து தொகுதி மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்படுவார். எங்களது நன்றியின் அடையாளமாக எப்போதும் மக்களுக்கு உண்மையாக இருப்போம். ஈரோடு கிழக்கு தொகுதியை மட்டுமல்ல, மேற்கு மண்டலம் முழுவதையும் வளப்படுத்த, மேம்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவோம். மேற்கு மண்டல மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று உறுதி அளிக்கிறேன்” இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/mkstalin-happy-on-erode-east-win/
-
தலைவர்களை இழந்த தமிழ்த்தேசிய அரசியல்!
தலைவர்களை இழந்த தமிழ்த்தேசிய அரசியல்! February 9, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கட்சிகள் பதினைந்துக்கு மேல் உண்டு. ஆனாலும் தமிழ்த்தேசிய அரசியல் அரங்கிலே ஒரு வலிமையான – அடையாளம் காட்டக் கூடிய – தலைவர் என எவருமே இல்லை. என்பதால்தான் தமிழ்த்தேசிய அரசியற் சக்திகளை ஒருங்கிணைக்கவும் முடியவில்லை. அதனைக் கோட்பாட்டு ரீதியாக வளர்த்தெடுக்கவும் முடியவில்லை. நடைமுறை ரீதியான பிரச்சினைகளுக்கு அதனால் முகம் கொடுக்கவும் முடியவில்லை. அதைப் பலமடையச் செய்யவும் முடியவில்லை. உள்நாட்டில் தமிழ்ச் சூழலிலும் சரி, இலங்கைக்குள்ளும் சரி, இலங்கைக்கு வெளியே சர்வதேச சமூகத்தோடும் சரி, புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலேயும் சரி அதனால் சரியான முறையில் உரையாடலும் தொடர்பாடலைப் பேணவும் முடியவில்லை. தொகுத்துச் சொன்னால், 2009 க்குப் பிறகு தமிழ்த்தேசிய அரசியல் பலவீனப்பட்டே வந்துள்ளது. சரி பிழைகளுக்கு அப்பால் சம்பந்தன் இருக்கும் வரையில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஒரு தலைமை இருப்பதான தோற்றமாவது இருந்தது. ஆயிரம் விமர்சனங்களுக்கு மத்தியிலும் வெளி அரசியற் தரப்புகளோடு உரையாடக் கூடிய – தொடர்பாடலைச் செய்யக் கூடிய நிலையில் சம்பந்தன் இருந்தார். சம்பந்தனையே அவர்கள் தமிழர்களின் பிரதிநிதியாகவும் தலைவராகவும் அடையாளம் கண்டனர். சம்பந்தனின் மறைவுக்குப் பிறகு அதுவும் இல்லையென்றாகி விட்டது. இப்பொழுது தெரு முக்குகளில் பெட்டிக்கடைகள் இருப்பதைப்போல, அங்கங்கே பெயர்ப்பலகைகளோடு ஒவ்வொரு கட்சிகளும் உள்ளன. சில கட்சிகளில் ஐந்தாறு பேருக்குமேல் உறுப்பினர்களே இல்லை. சிலவற்றில் அவர்களே மாறாத தலைவர்களாக இருக்கிறார்கள். அதனால் மாற்றமடைந்துள்ள சூழலுக்குப் பொருத்தமான முடிவுகளை எடுக்க முடியாமலும் புதிய சவால்களை எதிர்கொள்ள முடியாமலும் உள்ளனர். இதனால்தான் கடந்த தேர்தலில் இந்தக் கட்சிகளும் அணிகளும் படு தோல்வியடைந்தன. இதற்குப் பிறகு கூட இவை எந்தப் படிப்பினைகளையும் கொள்ளவில்லை. இன்னும் அதே பழைய பாணியிலேயே தமது அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றன. இதனால் அடுத்த சில மாதங்களில் வரவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் இவை தோல்விடையும் நிலையே பெரும்பாலும் உண்டு. இவ்வளவுக்கும் இவை விடுதலை அரசியலையோ ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலையோ மக்கள் அரசியலையே முன்னெடுப்பவையும் அல்ல. கடந்த முப்பது ஆண்டுகளாக இவை தேர்தல் அரசியலை மட்டுமே செய்து வருகின்றன. அதிலும் தோற்று விட்டன. இவற்றில் மூன்று விதமான குழுக்கள் உண்டு. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகிலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவை முற்று முழுதாகவே தேர்தல் அரசியலையே தமது வரலாறாகவும் வாழ்வாகவும் கொண்டவை. அதற்குத் தோதான வார்த்தைகளை – சுலோகங்களை – பிரகடனங்களை – அவ்வப்போது தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்வதே இவற்றின் அரசியலும் உபாயமுமாகும். அடுத்த குழு, EPRLF, TELO, PLOT உள்ளிட்டவை. இவை முன்பாதி ஆயுதப்போராட்ட அரசியலையும் பின்பாதி தேர்தல் அரசியலையும் கொண்டவை. ஆயுதப்போராட்டத்திலிருந்து வந்தவை என்ற வகையில் இவை வேறு விதமான அரசியற் பண்பிற்குரியவையாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2009 இல் ஏற்பட்ட விடுதலைப் புலிகள் வீழ்ச்சிக்குப் பிறகாவது தமிழ் அரசியல் பரப்பிலும் இலங்கை அரசியற் பரப்பிலும் உருவாகிய சூழலைக் கையாளக் கூடிய விதமாகத் தம்மை உருவாக்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் தேர்தல் அசியலைக் கூடச் சற்று வேறுவிதமாகக் கைக்கொண்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய விடுதலை அரசியலாகவும் மக்கள் அரசியலாகவும் அதைக்கையாண்டிருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. பதிலாக தங்களுடைய இயல்பையும் அடையாளத்தையும் இழந்து, ஏற்கனவே இருந்த மிதவாத அரசியற் சக்திகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி போன்றவற்றைப்போலவே இவையும் சுருங்கின. இன்னொரு வகையில் இதைச் சொன்னால், இவற்றின் தலைவர்களான பத்மநாபா, சிறிசபாரத்தினம், உமா மகேஸ்வரன் போன்றோர் உருவாக்கியிருந்த அடையாளத்தையும் அரசியல் பாதையையும் கைவிட்டு, சம்பந்தன், கஜேந்திரகுமார் வழியிற் செல்ல முற்பட்டன. என்பதால்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயகப்போராளிகள், சிறிகாந்தா – சிவாஜிலிங்கத்தின் தமிழ்த்தேசியக் கட்சி, விக்னேஸ்வரனின் தமிழ்த்தேசியக் கூட்டணி எல்லாம் இணைந்து உருவாக்கிய, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனி அடையாளத்தைப் பெற முடியாமல் போனது. மக்களாலும் நிராகரிக்கப்பட்டது. மூன்றாவது குழு 2009 க்குப் பிறகு ஏற்கனவே இருந்த கட்சிகள், குழுக்கள், அணிகளிலிருந்து பிரிந்து புதிதாக உருவாகியவை. இவை முற்று முழுதாகவே தேர்தல் அரசியலை மட்டுமே குறியாகக் கொண்டவை. சற்று விலக்கானது என்றால் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மட்டும்தான். அதை அரசியற் கட்சியாக நோக்குவதையும் விட, ஒரு செயற்பாட்டு இயக்கமாக – பசுமை சார்ந்த மக்கள் அமைப்பாகப் பார்ப்பதே சரியானதாகும். இந்தச் சூழலில்தான் தமிழ்த்தேசிய அரசியற் பரப்புள்ளது. இதிலும் தமிழரசுக் கட்சி, உள் முரண்பாடுகள் வலுத்து நீதி மன்றம் தொடக்கம் மயானம் வரையில் அணி மோதல்களில் சிக்குண்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்தி, ஒழுங்காக்கி வழிப்படுத்தக் கூடிய தலைமைத்துவம் அதற்கில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானத்தை எவரும் தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. சித்தார்த்தனுக்குப் புளொட்டுக்குள்ளேயே நெருக்கடிகள். ரெலோவுக்குள்ளும் உள் மோதல்கள் பலமடையத் தொடங்கி விட்டன. ஈ.பி.ஆர்.எல். எவ் சத்தமின்றி ஓய்வுக்குப் போகும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே ஈரோஸ் இவ்வாறான ஒரு நிலைக்குள்ளாகியதை இங்கே நினைவிற் கொள்ள வேண்டும். 1989 இல் 14 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த (ஆயுதப்போராட்ட இயக்கங்களில் அதிகூடிய ஆசனங்களைக் கைப்பற்றிய முதலும் கடைசியுமான அமைப்பு ஈரோஸ்தான்) ஈரோஸ், பின்னர் ஒரு உறுப்பினரைக் கூடப் பெற முடியாத நிலையில் அரசியற் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. ஏறக்குறைய அதையொத்த நிலைக்கே இன்றைய ஈ.பி.ஆர்.எல்.எவ் வந்துள்ளது. ஆனால், தம்மைச் சரியாக ஒழுங்கமைத்தால் மீள எழுச்சியடைய முடியும். அதற்கு அமைப்புகளில் இருப்போர் விஞ்ஞான பூர்வமான ஆய்வுக்கும் மனந்திறந்த உரையாடல்களுக்கும் விட்டுக் கொடுப்புகளுக்கும் தம்மை தயார்ப்படுத்த வேண்டும். இப்போதுள்ள தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இரண்டும்தான் பாராளுமன்ற அங்கத்துவத்தைக் கொண்டுள்ளன. இவற்றின் தலைவர்களாக கஜேந்திரகுமாரும் சிறிதரனுமே உள்ளனர். இருவரும் தீவிரப் போக்குடையவர்கள். அதனால், பிறரை, பிற சக்திகளை அரவணைத்துச் செல்ல முடியாதவர்கள். ஆகவே இவர்களால் எந்த அணிக்கும் தலைமை தாங்கவும் முடியாது. எவரோடும் இணைந்து வேலை செய்யவும் முடியாது. ஏனைய தரப்புகளையோ, குழுக்களையோ அணி சேர்க்கவும் முடியாது. எனவே இவர்கள் இருவரும் மட்டுமே ஒரு மேலோட்டமான அரசியற் கூட்டையோ உறவையோ கொண்டிருக்க முடியும். அதிலும் தமிழரசுக் கட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சிறிதரனை விட வேறு தரப்பினரின் கைகளிலேயே – சுமந்திரனின் கைகளிலேயே -உள்ளது. என்பதால், தமிழரசுக் கட்சியின் முழுச் சம்மதத்துடன் எந்தக் கூட்டையும் சிறிதரன் மேற்கொள்ள முடியாது. எனவே சிறிதரனும் கஜேந்திரகுமாரும் இரண்டு தண்டவாளங்களைப் போலத்தான் இருக்க முடியும். இந்த நிலையில் மாற்றுத் தரப்புகள் தமக்கிடையில் ஒரு அணியை உருவாக்கி, தமிழ்த்தேசிய அரசியலுக்குத் தலைமை தாங்க முடியும். ஆனால் அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு முதலாவதாக இதிலுள்ள கட்சிகளும் தலைவர்களும் தம்மைப் புதுப்பித்துக் கொள்வது – மாற்றத்துக்குள்ளாவது – அவசியமாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியைப் போலன்றி, விடுதலை இயக்கப் பாராம்பரியத்திலிருந்து வந்தவர்கள் என்ற வகையில் செயற்பாட்டு அரசியலை –நடைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக, ஜே.வி.பி எப்படி என். பி.பி ஆக பரிமாணமடைந்ததோ அதைப்போலவேனும். இல்லையெனில் அவ்வப்போது அறிக்கை, ஊடகச் சந்திப்பு, கடிதம் எழுதுவது என தமிழர் விடுதலைக் கூட்டணியைப்போலவே இவையும் மாறும் அபாயமுண்டு. இதற்காகத்தான் இவை ஒரு மாற்று உபாயமாக ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொதுவேட்பாளரை உருவாக்கி நிறுத்தின. அதைத் தொடர்ந்து தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளலாம் என்று கற்பனை செய்தன. ஆனால், அது எந்த வகையிலும் உதவப்போவதில்லை என்று இந்தக் கட்டுரையாளர், அரங்கம் – பத்திரிகை என்ற இந்த இணையத்தளம் உட்படப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இறுதியில் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற புயல் இருந்த செல்வாக்கையும் பலத்தையும் அடித்துச் சென்று விட்டது. ஆகவே இப்போது தமிழ்த்தேசிய அரசியலில் உருவாகியுள்ள கோட்பாட்டுப் பலவீனம், தலைமைத்துவ வெற்றிடம், நடைமுறைப் பிரச்சினைகள், சமகால நிலவரத்தைக் கையாளும் ஆற்றல், எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனமான பார்வை, வெளியுறவுகள், பிற சக்திகளுடனான ஊடாட்டம் போன்றவற்றை நிரப்பி மேலெழக் கூடியவாறு எந்தச் சக்தியாவது மேலெழுந்தால்தான் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும். இல்லையெனில் காலத்தினால் கரைந்து போய் விடக் கூடிய சூழலே உண்டு. தேர்தல் அரசியில் மட்டுமே மையங்கொண்டிருந்த காரணத்தினால், தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட கட்சிகளுக்கு அரசியல் அரங்கில் இடமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதை ஒவ்வொரு அரசியற் தரப்பும் கவனத்திற் கொள்வது அவசியம். இது தமிழ்த்தேசியச் சக்திகளுக்கு மட்டுமல்ல, ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றுக்கும் பொருந்தும். எப்போதும் மக்கள் அரசியலில் செயற்பட்டால் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இயங்கக் கூடிய ஒரு வெளியும் அரங்கும் அழியாது இருக்கும். அதுவே அரசியற் பலமாகும். தமிழ்த்தேசியத் தலைமையை உருவாக்க வேண்டுமெனில் இந்த உண்மையிலிருந்து படித்தால் நல்லது. அதாவது தேர்தலுக்கு அப்பாலும் அரசியல் உண்டு. அரசியற் பணிகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். https://arangamnews.com/?p=11779
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
“தையிட்டி ஒரு தமிழர் பூமி என்பதை நாம் நிலை நாட்டவேண்டும், தையிட்டியில் நிலம் மீட்பு என்பது ஒரு வரலாறாக அமையவேண்டும், விட்டுக்கொடுத்தோமேயானால் நாளை எந்த இடத்திலும் காணியை சுவீகரிப்பதற்கு தையிட்டி ஒரு உதாரணமாக அமைந்துவிடும்.“ Published By: Rajeeban 09 Feb, 2025 | 03:49 PM தையிட்டியில் நிலம் மீட்பு என்பது ஒரு வரலாறாக அமையவேண்டும், விட்டுக்கொடுத்தோமேயானால் நாளை எந்த இடத்திலும் காணியை சுவீகரிப்பதற்கு தையிட்டி ஒரு உதாரணமாக அமைந்துவிடும். அதனை நாங்கள் விரும்பவில்லை , தையிட்டி ஒரு தமிழர் பூமி என்பதை நாம் நிலை நாட்ட வேண்டும் என காணி உரிமையாளர் ஒருவரான சுகுமாரி சாருஜன் தெரிவித்துள்ளார். 12ம் திகதி தையிட்டியில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு மக்களின் பூரண ஆதரவை கோரியுள்ள அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது. தையிட்டி தொடர்பில் எமது பொதுவான நிலைப்பாட்டை ஊடகங்களிற்கும் அதிகாரிகளிற்கும் பொதுமக்களிற்கும் முன்வைப்பதற்காக இந்தஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம். தையிட்டியில் 140 பரப்பளவு காணி சட்டவிரோதமாக, சட்டத்திற்கு முரணாண வகையில இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு,எந்த ரீதியான சட்டரீதியான அனுமதிகளோ எதனையுமோ பெறாமல்,ஒரு சர்வாதிகார மனோநிலையில் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்துடன்; மிகப்பிரமாண்டமான சட்டவிரோத கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு,எந்த தடையும் இன்றி பூஜை வழிபாடுகள் விகாரை என்ற பெயரிலே இடம்பெறுகின்றன. இதற்கு எதிராக நாங்கள் நான்கைந்து வருடங்களாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட போதிலும்,எமக்கான நீதிகளோ நியாயங்களோ வழங்கப்படாத இடத்து,நாங்கள் கடந்தஇரண்டு வருடங்களாக போராட்டங்களை நடத்திவருகின்றோம். அந்த வகையில் எனது கணவரின் தந்தையாருக்கு சொந்தமான 8 பரப்பு காணியை சட்டவிரோத கட்டுமானத்திற்காக கையகப்படுத்தி வைத்துள்ளார்கள். கணவரின் பேரனானரின் காணிகளும் அங்கே உள்ளன எம்மிடம் இதற்காக ஆவணங்கள் உள்ளன,தகுதியான ஆதாரங்கள் உள்ளன. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்த உண்மை நிலைமைய வெளிப்படுத்தவேண்டும். கடந்த 31- 1- 25 கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஜனாதிபதி பங்குபற்றியிருந்தார். அந்த இடத்திலே எங்கள் பிரச்சினை எழுப்பப்பட்டபோது மாற்றுக்காணிகளை வழங்கலாம் என்ற தொனியில் ஆளுநரும் அர்ச்சுனாவும் இந்த பிரச்சினையை திசைதிருப்பினார்கள். மாற்றுக்காணி என்பதற்கு காணி உரிமையாளர்களாகிய நாம் எந்த விதத்திலும் சம்மதிக்கப்போவதில்லை என்பதிலே நாங்கள் ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். விகாரை என்பது முற்றிலும் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டுள்ளது நாம்அந்த இடத்தில் மாற்றுக்காணிக்கு சம்மதிப்போமானால் எமது காணிகளிற்கான உறுதியை அவர்களிற்கு வழங்கவேண்டிய கடப்பாட்டில் இருப்போம். நாம் மாற்றுக்காணிகளை பெற்றுவிட்டால் எமது உறுதிகள் அவர்களிற்கு சென்றுவிட்டால், விகாரை சட்டபூர்வமான கட்டிடமாக கருதப்படும் அதன் பின்னர் காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழே விகாரையின் மேலதிக கட்டுமானங்களிற்காக எங்களிடம் இருக்கின்ற மேலதிக காணிகளையும் அவர்கள் சுவீகரிப்பார்கள். இதற்கு நாமே வழிகோலுவதாக அமையும். இவ்வாறான சட்டரீதியான பல சிக்கல்கள் இருக்கின்ற போது இவை எதனையும் கருத்தில் கொள்ளாது, தெரிந்தோ தெரியாமலோ மாற்றுக்காணிகளை நாங்கள் எதிர்க்கின்றோம் என்ற தகவலை வழங்கியிருந்தார்கள் அதனை நாம் முற்றிலும் எதிர்க்கின்றோம். எமது காணிதான் எமக்கு வேண்டும். மேலும் அந்த இடத்திலே நாங்கள் போராட்டங்களை நடத்துகின்ற போது,எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபடாமல் அகிம்சை வழயில் ஈடுபடுகின்றோம் அங்கே வரும் சிங்கள சகோதாரர்களிற்கு அந்த இடத்தின் நிலைப்படு எமது நிலைப்பாடு அது சட்டவிரோத கட்டிடம் என்பதை உணர்த்துகின்ற போது, அந்த இடத்திலே பொலிஸாரினால் எங்களிற்கு எதிராக வழக்புகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை ஏன் ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ்; கொண்டுசெல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்திடம்கருத்து கேட்கின்றார்கள். ஐசிசிபீஆர் தெரிவிப்பது என்ன? இனமத நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையில் ஏதாவது ஒரு போராட்டம் இடம்பெற்றால் கருத்து வெளியானால், அந்த நபர்கள் கைதுசெய்யப்படவேண்டும் என ஐசிசிபீஆர் தெரிவிக்கின்றது. எனினும் அந்த சட்டத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்தால்,தையிட்டியில் இன மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பது யார் என்று பார்த்தால் அந்த சூழ்நிலையில் எங்களிடம் உறுதி உள்ளது,அப்பாவி மக்களின்காணிகள்பறிக்கப்பட்டுள்ளன, அந்த இடத்தில் அந்த வழக்கை யாருக்கு எதிராக தாக்கல் செய்யவேண்டும். சட்டவிரோத கட்டிடத்திற்கு வரைபடங்கள் கீறிக்கொடுத்தவர்கள்,சட்டவிரோதமாக அனுமதிவழங்கியவர்கள், நிதிபங்களிப்பை வழங்கியவர்கள்,இராணுவதளபதிகள்,அந்த இடம் சட்டவிரோதம் என தெரிந்தும் அந்த இடத்திலே பூஜை செய்தவர்கள்,இவர்களிற்கு எதிராகதான் அந்த சட்டம் இருக்கவேண்டும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிற்கு எதிரானதாகயிருக்க கூடாது. பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு எதிராக இந்த சட்டத்தை பயன்படுத்துகின்ற நாட்டிலேதான் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் ஆகவே ஊடகங்கள் உட்பட சகல மக்களினதும் ஒத்துழைப்பும் எங்களிற்கு தேவை. கடந்த யாழ்மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலேஇந்த கட்டிடம் சட்டவிரோதமானது என கஜேந்திர குமார் பொன்னம்பலம்தெரிவித்த கருத்தினை தொடர்ந்து பௌத்த மகாசம்மேளனம்என்ற பெயரிலே கடிதமொன்று மாவட்ட செயலருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்திலே இந்த தையிட்டி திஸ்ஸவிகாரை புராதனமானது எனவும்,அதற்கு 14 பரப்பு காணி முன்னைய காலத்திலே இருந்ததாகவும்,: தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சுவீகரிக்கப்படவேண்டிய காணிகள் மக்களிடம் இருப்பதாகவும் அந்த காணிகளை சுவீகரித்து தருமாறும் அந்த பௌத்த அமைப்பு கோரியுள்ளது. மேலும் பல கட்டிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்த மகாசம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த கடிதத்திற்கு மாவட்ட செயலாளர் இதுவரை பதில் அனுப்பவில்லை. நாங்கள்அந்த இடத்திலே போராடியிருக்கின்றோம் ஆனால் இப்படியான ஒரு கடிதம் வந்த செய்தியை எங்களிற்கு தெரிவித்திருக்கவேண்டும், யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலே இந்த விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்ட வேளையிலேயே இந்த கடிதம் குறித்து தொவித்திருக்கவேண்டும். • மாவட்ட செயலாளரோ அல்லது ஜனாதிபதியோ இந்த கடிதத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கவேண்டும் அல்லது இதன் உண்மை தன்மையை அறியமுயன்றிருக்கவேண்டும். • ஒரு மாதத்திற்கு முன்னர் இதேபோன்ற கடிதமொன்று சிங்கள அமைப்பொன்றிடமிருந்து வந்துள்ளது, அவர்கள்யாழ்ப்பாணத்தில் தங்களிற்கு காணிகள் இருப்பதாகவும் அவற்றை வழங்கவேண்டும் எனவும் கோரியவேளை உடனடியாக பதிலளித்திருக்கின்றார்கள் உங்கள் உறுதிகளை காண்பியுங்கள் என யாழ்ப்பாண அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். அதேபோன்று இந்த கடிதத்திற்கும் பதில் கடிதத்தை வழங்கவேண்டும். எங்களிடம் உறுதி இருக்கின்றது,இதன் உறுதி தன்மையை கச்சேரியிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். கிட்;டத்தட்ட 100 ஆண்டுகளிற்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டவைகள் எமது காணிகள், பூர்வீகம் பூர்வீகமாக நாங்கள் வாழ்ந்த காணிகள.;. தேவநம்பிய தீசன் காலத்தில் இந்த காணிகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் தேவநம்பிய தீசன் வழங்கிய உறுதிகளை அவர்கள் காட்டட்டும்.மாவட்ட செயலாளரும் ஆளுநரும் இது குறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தவேண்டும். இது தேவநம்பிய தீசன் காலத்து விகாரை எனின் தொல்பொருட்களை காண்பியுங்கள். அவை அழிவடைந்திருந்தாலோ சிதைவடைந்திருந்தாலோ அதன் சிதைவுகளை காண்பியுங்கள். தொல்பொருள்சட்டத்தின் கீழ் அவை அழிவடைந்திருந்தால் அதன் சிதைவுகளை தான் பாதுகாக்கவேண்டுமே தவிர, அந்த இடத்தில் புதிய கட்டுமானங்களை கட்டிவிட்டு விகாரைகளை கட்டிவிட்டு அதனை பாதுகாப்பதற்கு இத்தனையாயிரம் படையினரை பயன்படுத்தவேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கவில்லை. எங்கள் போராட்டத்திற்கு ஊடகங்கள் பெரும் பங்களிப்பைவழங்கியுள்ளன, நாங்கள் பெரும் நன்றி உணர்வோடு இந்த ஊடகங்களை பார்க்கின்றோம். மேலும் 12ம் திகதி பூரணை தினத்தினை முன்னிட்டு நாங்கள் எங்கள் வழமையான தொடர்ச்சியான போராட்டத்தினை அந்த இடத்திலே முன்னெடுக்க இருக்கின்றோம்.அந்த போராட்டத்திற்கு காணி விடுவிப்பு தொடர்பான தென்னிலங்கை அமைப்பான பார்ள் உட்பட வலிவடக்கு மீள்குடியேற்ற சங்கத்தினர் மீனவர் சங்கத்தினர் உட்பட பலர் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்கள் எங்கள் போராட்டத்திற்கு பெரும் ஆதரவை வழங்கவேண்டும். தொடர்ந்து அந்த இடத்திலே நிற்க முடியாவிட்டாலும் 12ம் திகதி மதியம் முதல் 6 மணிவரையாவது உங்களது ஆதரவை வழங்குங்கள். அரசஅதிகாரிகள் தெரிந்தோ தெரியாமலே நிறைய தவறுகளை இழைத்துவிட்டனர்.அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து இனிமேலாவது அவற்றை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு சமர்ப்பிக்க முன்வரவேண்டும்.ஜனாதிபதிக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். தெரிந்தோ தெரியாமலே தையிட்டியில் கைவத்துவிட்டீர்கள் நீங்கள் எடைபோட்டதை போல சாதாரண மக்கள் இல்லை பலபல வரலாற்றை கொண்டவர்கள். எங்கள் முதியோரின் முன்னோரின் ஆசியுடன் இந்த போராட்டத்தை நாங்கள் செய்கின்றோம். தையிட்டியில் நிலம் மீட்பு என்பது ஒரு வரலாறாக அமையவேண்டும், விட்டுக்கொடுத்தோமேயானால் நாளை எந்த இடத்திலும் காணியை சுவீகரிப்பதற்கு தையிட்டி ஒரு உதாரணமாக அமைந்துவிடும்.அதனை நாங்கள் விரும்பவில்லை , தையிட்டி ஒரு தமிழர் பூமி என்பதை நாம் நிலைநாட்டவேண்டும். https://www.virakesari.lk/article/206223
-
அவயவங்களை இழந்த வன்னி மக்களுக்கு மறுவாழ்வு ; கனேடிய அரசு கனேடிய வர்த்தக சம்மேளனம் அனுசரணை
அவயவங்களை இழந்த வன்னி மக்களுக்கு மறுவாழ்வு ; கனேடிய அரசு கனேடிய வர்த்தக சம்மேளனம் அனுசரணை 09 Feb, 2025 | 03:25 PM யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக திட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலையின் ஓய்வு நிலை பேராசிரியர் காசி விஸ்வனாதன் செல்வகுமார் மற்றும் கனடா - இலங்கைக்கான வர்த்தக சபையின் இணைப்பாளர் குலா செல்லத்துரை ஆகியோர் இதை தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர்கள் மேலும் கூறுகையில், யாழ். பல்கலைக்கழக பொறியியல்பீடத்தின் center for prosthetics (cfp) மற்றும் இந்தியாவின் spark media இணைந்து மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை வலுப்படுத்தும் இந்த திட்டமாக இது முன்னெடுக்கப்பகின்றது. யாழ் பல்கலை பொறியியல் பீடத்தின் தொழில் நுட்ப அனுசரணையூடாக கனேடிய அரசு மற்றும் கனேடிய வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் நிதிப் பங்களிப்பில் இந்த மறுவாழ்வு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மலேசிய நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வரப்பிரசாதத்தை வன்னியில் உள்ள அவயவங்களை இழந்து நாளாந்தம் பல்வேறு அவமானங்களையும் அசௌகரியங்களையும் கண்டுவருவோர் பெற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த முப்பரிமாண பொறிமுறையூடான அவயவங்களை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பாக பயிற்சிப் பட்டறை ஒன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிமுதல் 9 ஆம் திகதிவரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிள்ளது. இதில் பங்கேற்க இலங்கையில் இருந்து 50 பேரை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேநேரம் இந்த அவயவங்கள் முப்பரிமாண பொறிமுறையூடாக தயாரிக்கப்படுகின்றது. ஆனாலும் இந்த தொழில் நுட்பம் இலங்கையில் இன்மையால் அதை இந்தியாவில் இருந்து முதற் கட்டமாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இதை யாழ் பல்கலை பொறியியல் பீடம் முழுமையாக மேற்கொள்ளும். இதே நேரம் இந்த திட்டமானது யுத்தத்தில் பாதிக்கப்படு அவயவங்களை இழந்தவர்களுக்கு மட்டுமல்லாது ஏனைய விபத்து மற்றும் நோய்களால் அவயவங்களை இழந்தவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவயவங்களை இழந்தவர்களுக்கு அவர்களது சுய மரியாதையை மீண்டும் உருவாக்கல் மற்றும் அவர்களின் பொருளாதார ஈட்டலுக்கான வழியை உருவாக்கல் ஆகியவற்றை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான அவயவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் 0742287850 என்னும் இலக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி பயன் பெற்றுக்கொள்ளுமாறும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/206233
-
வெள்ளை ஈ தாக்கம்!
வெள்ளை ஈ தாக்கம்! adminFebruary 9, 2025 தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரைவிடுத்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் விவசாயத்துறையினர் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் நேற்றைய சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிய வெள்ளை ஈ தாக்கம் தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. குளிரான காலநிலை காரணமாக அதன் தாக்கம் குறைவடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அது பரவத் தொடங்கியுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் அது பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தால் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் குறிப்பிட்டார். தென்னை மரங்களில் பரவும் வெள்ளை ஈ தாக்கத்தை தம்மால் கட்டுப்படுத்துவது சவாலானது எனவும் அதற்கு தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிட்டார். ஏனைய விவசாயப் பயிர்களில் பரவும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இரசாயன முறையைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டார். அதற்கான உதவிகளை வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் ஊடாக வழங்குவதாக, வடக்கு மாகாண பிரதம செயலர் இதன்போது உறுதியளித்தார். தென்னை பயிர்ச் செய்கை சபையினரையும், தென்னை பயிர்ச்செய்கை ஆராய்ச்சி அலகினரையும் அழைத்து விரைவில் சந்திப்பு நடத்தி இதனைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டை துரிதமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். https://globaltamilnews.net/2025/211005/
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
நாடாளுமன்றில் கோமாளிகள்! adminFebruary 9, 2025 இவ்வுலகில் தமிழர்களுக்கென தனி மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை சீர்குலைப்பதற்கு அவ்வப்போது துரோகிகளும், கோமாளிகளும் வந்துசெல்வதும் வழமை. அப்படிதான் இம்முறையும் கோமாளியொன்று நாடாளுமன்றம் வந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பிரதேசவாதம் பேசி தமிழர்களை பிரித்தாள்வதற்காக கைக்கூலியாக வந்துள்ள இந்த நபர், கத்தரிதோட்ட வெருளிகள் பற்றி கதைப்பது வெட்கக்கேடாகும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ளன. எவரும் இரண்டாந்தர பிரஜைகள் அல்லர் என்ற நிலைப்பாட்டிலேயே தேசிய மக்கள் சக்தி உள்ளது. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்ககூடிய கட்சிதான் தேசிய மக்கள் சக்தி. மாற்றம் வேண்டும் என்பதற்காகவே யாழ். மக்களும் எமக்கு அமோக ஆதரவை வழங்கினர். இந்த மக்கள் ஆணையை புரிந்துகொள்ள பக்குவமில்லாத அரசியல் கோமாளி, தற்போது விமர்சன அரசியலை முன்னெடுத்து வருகின்றது. சமூகவலைத்தளங்களில் பிரபல்யமடைவதற்காக வீரவசனங்களை பேசி, தன்னையும், தன்னை சூழவுள்ள ஒரு சிலரை பற்றி மட்டுமே பேசும் கோமாளிகளெல்லாம் தலைவர்களாக முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எமது மலையக உறவுகள் தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு எதிராக நின்றதில்லை. உரிமைப் போராட்டங்களைக்கூட ஆதரித்துள்ளனர். எனவே, இணைந்துவாழும் எங்களை பிரதேசவாதத்தை கிளப்பிவிட்டு பிரித்தாள முடியாது என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றோம். தென்னிலங்கையில் மஹிந்தவும், அவரின் சகாக்களும் செய்த அரசியல் பாணியை, வடக்கில் செய்வதற்கு இந்த கோமாளி முற்படுகின்றது என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/211001/
-
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்? - நிலாந்தன்
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்? - நிலாந்தன். adminFebruary 9, 2025 தையிட்டி விகாரை ஒரு தனியார் காணியில் கட்டப்படுறது என்பதனால் அது சட்டவிரோதமானது என்று கூறி அதனை ஒரு சட்ட விவகாரமாக மட்டும் குறுக்குவது தமிழ் மக்களுக்குப் பொருத்தமானது அல்ல. அது சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, அதைவிட ஆழமான பொருளில் அது ஓர் அரசியல் விவகாரம். இன ஒடுக்குமுறையின் ஆகப் பிந்திய வெளிப்பாடுகளில் ஒன்று. அது ஓர் ஆக்கிரமிப்பு. ஒரு மரபுரிமைப் போர். இலங்கைத் தீவின் சட்டங்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக வளைக்கப்படும் என்பதற்கு அது ஒரு சான்று. 2009க்கு பின்னரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்பதற்கு அது ஒரு சான்று. சம்பந்தப்பட்ட சில தமிழர்களின் காணி உரிமை பற்றிய ஒரு சட்டப் பிரச்சினையாக அதை அணுகி, தனி நபர்களுக்குத் தீர்வு காண்பதன்மூலம் அதைத் தீர்த்து விட முடியாது. சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு காணியைக் கொடுத்தோ அல்லது காசைக் கொடுத்தோ அதைத்தீர்த்துவிட முடியாது. அது 2009க்கு பின்னரான இன ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளில் ஒன்று. எனவே அதற்குரிய தீர்வும் கூட்டுரிமைகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும். எனவே அந்த விடயத்தை அதற்குள்ள பல்பரிமாணத்தின் அடிப்படையில்தான் அணுக வேண்டும்;முன் வைக்க வேண்டும். அதற்கு அரசியல் தீர்வுதான் தேவை. தையிட்டி விகாரை வடக்கில் உள்ள மிகப்பெரிய கூட்டுப் படைத்தளத்தின் எல்லைக்குள் காணப்படுகிறது. படையினரால் கட்டப்படுகிறது; படையினரால் பாதுகாக்கப்படுகிறது. இலங்கைத் தீவில், தமிழ்ப் பகுதிகளில் அரச படைகளால் பாதுகாக்கப்படாத ஒரு பௌத்த விகாரையாவது உண்டா? அரச போகங்களைத் துறந்து பரிநிர்வாணம் அடைந்த அஹிம்சா மூர்த்தியான புத்த பகவானை இதைவிடக் கேவலமாக அவமதிக்க முடியாது. தமிழ் மக்கள் புத்த பகவானைப் புறத்தியாகப் பார்க்கவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் ஏற்கனவே பௌத்தம் இருந்திருக்கிறது. தமிழ் மொழியின் காப்பிய காலம் எனப்படுவது பௌத்த, சமண மதங்களின் காலம்தான். ஐம்பெரும் காப்பியங்களும் பௌத்த சமணக் காப்பியங்கள்தான். எனவே தமிழ் மக்கள் பௌத்தத்தை எப்பொழுதும் ஒரு பகை மதமாகக் கருதியது இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் எப்பொழுதும் மதப் பல்வகைமை உண்டு. தமிழ்த் தேசிய வாதம் என்பது மதப் பல்வகைமையின் மீதுதான் கட்டியெழுப்பப்பட வேண்டும். எனவே தமிழ் மக்கள் மதப் பல்வகைமைக்கு எதிரில்லை. ஆனால் ஒரு மதத்தை ஆக்கிரமிப்பின் கருவியாக பயன்படுத்தும் பொழுதுதான் அது ஓர் அரசியல் விவகாரமாக மேல் எழுகிறது. இங்கு பிரச்சனை மதப் பல்வகைமை அல்ல. மத மேலாண்மைதான். தையிட்டி விகாரை என்பது மத மேலாண்மையின் ஆகப் பிந்திய குறியீடு. கிண்ணியாவில் ஒரு புத்தர் சிலையானது விவகாரமாக மேலெழுந்த பொழுது, முஸ்லிம் கொங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதுபோல,“புத்தர் சிலைகளை எல்லைக் கற்களாக நகர்த்தும்”ஓர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை அது. உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் படை மைய நோக்கு நிலையிலிருந்து படையினரால் கட்டப்பட்ட ஒரு விகாரை அது. ஒரு விதத்தில் இராணுவ மயமாக்கலின் குறியீடும் தான். எனவே அந்த விடயத்தில் ஆக்கிரமிப்பு ஒன்றை எப்படிக் கையாள்வது என்றுதான் சிந்திக்கலாம். ஒரு வணக்கத் தலத்தை அகற்றலாமா என்ற கேள்வி வரும். அது மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்ற வாதம் முன்வைக்கப்படும். ஆனால் அதற்கு மதப்பரிமாணம் மட்டும் கிடையாது. அதைவிட ஆழமாக அதற்கு ஒரு படைப் பரிமாணம் உண்டு. படையினரால் வெற்றி கொள்ளப்பட்ட ஒரு நிலத்தில் அது கட்டப்படுகிறது. அதற்குள்ள படைப் பரிமாணம்தான் இங்கு பிரச்சனை. அது கட்டப்படும் பிரதேசம் பலாலி காங்கேசன் துறை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கூட்டுப் படைத்தளப் பகுதி ஆகும். அப்பெருங் கூட்டுப் படைத்தளம் உருவாக்கப்பட்ட பொழுது அங்கே ஏற்கனவே இருந்த இந்து, கிறிஸ்தவ மத வழிபாட்டிடங்கள் சுவடின்றி அழிக்கப்பட்டுள்ளன அல்லது சிதைக்கப்பட்டுள்ளன. அக்கூட்டுப் படைத்தளம் பெருப்பிக்கப்படுகையில் இந்து மற்றும் கிறிஸ்தவ மதப் பிரிவினரின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை. தையிட்டி விகாரை அமைந்துள்ள பலாலி, காங்கேசன்துறை கூட்டுப் படைத்தளப் பகுதிக்குள் மட்டும் சிறாப்பர் மடம்,வைத்திலிங்கம் மடம்,சடையம்மா மடம், சுக்கிரதார திரிகோண சத்திரம் ஆகிய இந்து கட்டுமானங்கள் ஒரு காலத்தில் இருந்தன. சுக்கிரதார திருகோண சத்திரம் எனப்படுவது 1800களில் ஒரு சித்தரால் கட்டப்பட்டது. சூரிய உதயத்தை தரிசிக்கும் ஒரு வழிபாட்டு மையமாக அது இருந்தது. அப்பகுதி இப்பொழுது படையினரால் நிர்வகிக்கப்படும் தல்செவன சுற்றுலா விடுதிக்குள் விழுங்கப்பட்டு விட்டது. கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகே ஆதிச் சிவன் கோவில் காணப்பட்டது. அந்த மாளிகைக்கு பின்பக்கம் உச்சிப் பிள்ளையார் கோயில் இருந்தது. அந்தச் சூழலில் பாதாள கங்கை என்று அழைக்கப்படும் வழிபாட்டு முக்கியத்துவம் மிக்க ஒரு தீர்த்தக் கிணறு இருந்தது. அங்குள்ள கடற்படையினரின் படைத்தளப் பிரதேசத்துக்குள் முன்பு கதிரவெளி முருகன் கோவில் இருந்தது. அப்பகுதி மக்கள் கதிர்காம யாத்திரையை அங்கிருந்துதான் தொடங்குவதுண்டு. இவை இந்து மத வழிபாட்டிடங்கள். இவை போல கிறிஸ்தவ மத வணக்கத் தலங்களும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, பலாலியில் இருந்த சென் செபஸ்டியன் தேவாலயம்,மயிலிட்டியில் காணிக்கை மாதா தேவாலயம்,அந்தத் தேவாலயத்திற்கு அருகே இருந்த திருக்குடும்பக் கன்னிர் மடம்,மயிலிட்டி கடற்கரையில் வேளாங்கண்ணி மாதா ஆலயம். போன்றவற்றைக் குறிப்பிடலாம். தையிட்டி விகாரை கட்டப்பட்டுவரும் கூட்டுப் படைத்தளப் பிரதேசத்துக்குள் காணப்பட்ட ஏனைய மதக் கட்டுமானங்கள் இவை. இவை தொடர்பாக மதப் பெரியார்களும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி வருகிறார்கள். இவ்வாறு போர்க்காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு பெரும் படைத்தளத்துக்குள் ஏற்கனவே இருந்த பௌத்தம் அல்லாத மத வழிபாட்டு நிலையங்களை அழித்துவிட்டு, அல்லது சிதைத்து விட்டு,அல்லது அப்பகுதிக்குள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதியை மறுத்துவிட்டு, ஒரு விகாரையை அங்கே கட்டுவதுதான் இங்கு பிரச்சனை. சிங்கள பௌத்தம் அல்லாத ஏனைய வழிபாட்டிடங்களை தடயமும் இல்லாமல் அழிப்பது என்பது இலங்கைத் தீவின் நவீன அரசியல் வரலாற்றின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகும். புழக்கத்தில் உள்ள வழிபாட்டிடங்கள் மட்டுமல்ல,தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பிரதேசங்களில் உள்ள வழிபாட்டிடங்களையும் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் வசிக்கும் கலாநிதி சுஜாதா அருந்ததி மீகம என்ற புலமையாளர் தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பிரதேசங்களில் எவ்வாறு இந்து மத மரபுரிமைச் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதனைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். காலனித்துவ ஆட்சிக் காலத்தில்-19ஆம் நூற்றாண்டில்-பொலநறுவையில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சி தொடர்பான அறிக்கைகளில் பல சிவாலயங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு என்றும் ஆனால் பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை விடுபட்ட பின் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சி அறிக்கைகளில் மேற்படி சிவனாலயங்கள் பலவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இல்லை என்றும் சுஜாதா அருந்ததி மீகம கூறுகிறார். இது முழுக்க முழுக்க ஒரு பண்பாட்டு இன அழிப்பு. இலங்கைத் தீவின் நவீன அரசியலின் ஒரு பகுதி அது. எனவே அந்த வரலாற்றுப் படிப்பினையின் அடிப்படையில்தான் தையிட்டி விகாரை பொறுத்து முடிவெடுக்கலாம்.அதை அதற்குரிய அரசியல் பரிமாணத்தோடுதான் அணுக வேண்டும். தனியே மதத்துக்கு ஊடாகவோ அல்லது சட்டத்துக்கூடாகவோ மட்டும் அணுகமுடியாது. அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இன முரண்பாடுகள் இல்லை என்று கூறுகிறது. ஆனால் அந்த விகாரை இன முரண்பாடுகளின் குறியீடு. 2009 க்குப் பின் இனங்களுக்கிடையே,மதங்களுக்கு இடையே,மொழிகளுக்கிடையே மெய்யான பொருளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் ஏற்படாத ஒரு வெற்றிடத்தில்,சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பால்-அதாவது யாப்பில் ஒரு மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசுக் கட்டமைப்பால்-தமிழ் மக்களின் ஒப்புதலின்றி தமிழ்ப் பகுதிகளில் கட்டப்படும் பெரும்பாலான பௌத்த வழிபாட்டிடங்கள் ஆக்கிரமிப்பு உள்நோக்கமுடையவைகளே. எனவே ஒர் ஆக்கிரமிப்பை எவ்வாறு கையாள வேண்டும் என்றுதான் இங்கு சிந்திக்கலாம். அது ஒரு அரசியல் தீர்மானம். இந்த விடயத்தில் தொடர்ச்சியாக விழிப்பை ஏற்படுத்தி வந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். ஆனால் அந்த விழிப்பு ஒரு கவன ஈர்ப்பாகத்தான் இருந்து வருகிறது. ஒவ்வொரு முழு நிலா நாளன்றும் விகாரைக்குப் போகும் வழியில் நின்று அந்தக் கட்சியின் விரல் விட்டு எண்ணக்கூடிய உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு. அதை ஒரு மக்கள் மயப்பட்ட போராட்டமாக மாற்ற முன்னணியால் முடியவில்லை. குறைந்தபட்சம் ஏனைய கட்சிகளைக்கூட அதில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. அண்மையில் குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரையை ஒழுங்குபடுத்திய பொழுது அந்தக் கட்சி அந்த விடயத்தில் கவனம் செலுத்தியது. “மக்கள் மயப்படுத்தப்பட்ட வேண்டிய அரசியல் ”என்பதே நினைவுப் பேருரையின் தலைப்பு. ஆனால் நினைவுப் பேருரை ஆற்றிய பேராசிரியர் அந்த தலைப்பின் கீழ் உரையாற்றவில்லை. தமிழ் மக்களை தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து எப்படி நிறுவனமயப்படுத்துவது என்ற விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடம் பொருத்தமான தரிசனங்கள் எவையும் கிடையாது. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால்,தமிழ்த் தேசியவாத அரசியலை எப்படி நிறுவனமயப்படுத்துவது என்று தமிழ்க் கட்சிகள் சிந்திப்பதாகத் தெரியவில்லை. ஆக்கிரமிப்பை முன்னெடுக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதமானது அரசுடைய தரப்பு. அதனிடம் அரச வளங்கள் உண்டு; திணைக்களங்கள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக திணைக்களங்கள்தான் அரசின் உபகரணங்களாக ஆக்கிரமிப்பை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அதற்கு எதிராக போராடும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களிடம் கட்டமைப்பு சார்ந்த சிந்தனை கிடையாது. அதாவது ஆக்கிரமிப்பு நிறுவனமயப்பட்டுள்ளது. அதற்கு எதிரான போராட்டம் உதிரியாக,சிறு திரளாக,கவனயீர்ப்பாகச் சுருங்கிக் கொண்டே போகிறது. முள்ளுக் கம்பிகளால் பாதுகாக்கப்படும் தையிட்டி விகாரை வான் நோக்கி எழுகிறது. https://www.nillanthan.com/7148/
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
தையிட்டி விகாரைக்காக மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கெதிராக உறுதியான போராட்டம் editorenglishFebruary 9, 2025 பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய தாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என கூறியுள்ள தையிட்டி காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை (8/2/2025) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறுகையில், “மக்களது காணி நிலங்கள் மக்களுக்கே சொந்தம். அவை மக்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அனுர அண்மையில் யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறிய கருத்துக்கு முரணாகத் தையிட்டி விவகாரம் இருக்கின்றது. அகில இலங்கை பௌத்த மகாசபை ஒருபடி மேல் சென்று விகாரை கட்டப்பட்ட காணி நிலம் மட்டுமல்ல, அயலில் உள்ள காணி நிலங்களும் சுவீகரிக்கப்படும் என இறுமாப்புடன் கூறியுள்ளது. அதேநேரம் தேர்தல் கலங்களில் தேசிய மக்கள் சக்தியின் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூவரும் எம்முடன் இவ்விடையம் தொடர்பில் பேசி, கடந்த கால யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலல்லாது, கடந்த அரசுகள் போலல்லாது தாம் ஆட்சிக்கு வந்ததும் இவ்விடையம் தீர்க்கப்படும் என எமக்கு வாக்குறுதியும் வழங்கியிருந்தனர். ஆனால் இன்று இம் மூவரும் பொம்மைகள் போன்று வாய்பேசாதுள்ளனர். நாம் எமது பூர்வீக நிலங்களையே கேட்கின்றோம். ஆளுநர் கூட எம்முடன் பேசிய விடையத்தை வேறு திசைநோக்கிக் கொண்டு செல்ல முயற்சித்து தவறான அர்த்தத்துடன் ஜனாதிபதிக்கு கூறியிருந்தார். ஆனாலும் அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் எமது பிரச்சினையை எடுத்திருந்தாலும் அவருக்கு பலமாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைக்கொடுத்திருக்கவில்லை. இது வாக்களித்த எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்நிலையில் எதிர்வரும் 11 ஆம்திகதி மாலை 4 மணியிலிருந்து மறுநாள் மாலை 6 மணிவரை எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்கவுள்ளோம். காணி உரிமையாளர்களாகிய எமது போராட்டத்துக்கு பாரபட்சமற்ற வகையில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், போக்குவரத்து மற்றும் சிற்றூர்தி, முச்சக்கர வண்டி சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுக்கிறோம்” என்றனர். https://globaltamilnews.net/2025/211010/
-
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய தேசிய மக்கள் சக்தியின் வரவு-செலவுத் திட்டம்
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய தேசிய மக்கள் சக்தியின் வரவு-செலவுத் திட்டம் editorenglishFebruary 9, 2025 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதுடன், மார்ச் மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை இன்னும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தில் உள்ளது. மேலும் இந்த மாத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்க உள்ளது. இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகள் அல்லது நிபந்தனைகள் எத்தகையதாக உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள். 2024ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிரகாரம் நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்குக் கிடைக்கும். எவ்வாறாயினும், இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது. இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரல் பாராட்டத்தக்க விளைவுகளைத் ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது – மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்தது. 2024ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் 2024ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது. எனினும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை கருத்திற்கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது. இதனை அடுத்த வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படும். எனவே, விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கும் வகையில், 2025 வரவு -செலவு திட்டத்தை சமர்ப்பது முக்கியமாகும் என கூறியுள்ளார். https://globaltamilnews.net/2025/211013/
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இரண்டு குதிரை ரேஸில் கட்டுப்பணம் இழந்ததை இப்படி தொடர்ச்சியாக ஸ்பின் டொக்ரரிங் செய்தால்தானே அடுத்த தேர்தலில் 234 தொகுதிக்கும் கட்டுப்பணம் செலுத்த பணம் சேகரிக்கமுடியும்😆 எல்லாம் ஏற்றம் சொல்லுவதைக் கேட்கவும் நம்பவும் ஒரு சிறுகூட்டம் இருக்கும். அடுத்த தேர்தலில் இளைஞர்கள் எல்லாம் விஜய் பின்னால் போனால் கூடாரம் காலியாகிவிடும் அல்லவா! அந்தக் கணக்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்த தேர்தலில் திமுக கூட்டணி எப்படியும் பாஜகவால் உடைக்கப்படும். பாஜக பின்னால் நேர்மையாகப் போவது பினாமிகள் பின்னால் ஒளிவதை விட நல்லது. அண்ணாமலையை புலிக்கொடியை ஆட்டவைத்தால் நமக்குத் தீர்வு கட்டாயம் கிடைக்கும் மக்களே😄
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இப்படி எல்லாம் கச்சிதமாகத் திட்டம் போட்டவர்கள் தேர்தல் நாளன்று “பூத்”களில் ஏஜென்ட்களையும் நிறுத்தி ஆதரவாளர்களை வாக்குப்போட வைத்திருந்தால் கட்டுப்பணமாவது வந்திருக்கும். 😃
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன் தி. செல்வமனோகரன் 18 நிமிட வாசிப்பு March 8, 2024 | Ezhuna பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது. கருவிக்கையாட்சி, மொழிப்பயன்பாடு என்பவற்றின் வழி மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை தொழிற்படத் தொடங்கியது. அப்போதே இயற்கையின் அதீத ஆற்றல் மனிதனுக்கு அதன் மீது பயத்தையும், பக்தியையும் உருவாக்கியது. தன்னை மீறிய மேம்பட்ட சக்தி உண்டு என்ற பிரக்ஞையும் நம்பிக்கைகயும் மேலோங்கத் தொடங்கின. இயற்கை மீதான பயபக்தி இயற்கை வழிபாடாகவும் பின் இயற்கைத் தெய்வ வழிபாடாகவும் பரிணாமமுற்றது. நிலத்தெய்வங்கள், குலதெய்வங்கள், அச்சத்தால் உருவாக்கப்பட்ட பல தெய்வங்கள் எனப் பல்வகைத் தெய்வங்கள் உருவாக்கம் பெற்றன. காலதேச வர்த்தமானத்திற்கேற்ப தெய்வங்களின் முதன்மையும் மாறத்தொடங்கியது. அவ்வாறு மாறாத, மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்த மரபார்ந்த தெய்வங்கள், நாட்டார்தெய்வங்கள், கிராமியத் தெய்வங்கள் எனப்பட்டன. காலனித்துவத்தின் வழி ஈழத்துப்புலத்தில் உருவான நவீனத்துவம், ஆங்கிலமயப்பட்ட, மேலைத்தேய கருத்தாக்கங்களையும், வாழ்வியலையும், கலாசார பண்பாடுகளையும் வியப்புடன் நோக்கி அவையே மேலானவை எனும் மனப்பதிவைத் தந்தன. அரச உத்தியோகம், மத்தியதர வர்க்கத்தைப் பெருகச் செய்தது. சுதேச கலை, கலாசாரம், பண்பாடு, பொருளாதாரம், தத்துவம், சமய மரபுகள் போன்றவற்றை கீழ்மையானவையாக எண்ணவும் புறமொதுக்கவும் செய்தன. பின்காலனிய உலகமயமாதல் சூழல், ஒற்றைப் பண்பாட்டை அவாவி நிற்கிறது. இது சிறுசிறு இனக்குழுக்களினது தனித்த அடையாளங்கள் சிதைவதற்கும், வரலாறற்றுப் போதலுக்கும் இருப்புச் சார்ந்த கேள்விகளுக்கும் உட்படுத்தலை அவதானிக்கச் செய்தன. இதன் வழி ‘மாற்றுச்சிந்தனை’ முதன்மையுறத் தொடங்கியது. பண்பாட்டுப் பன்மைத்துவத்தின் முக்கியத்துவம், சுதேச அறிவியல், சமயம், தத்துவம், கலாசார மரபுகளின் வழி வரலாறு பற்றிய பிரக்ஞை என்பன மீளக் கட்டமைக்கப்படத் தொடங்கின. மனிதனுக்கு உள்ளார்ந்த சிந்தனை (abstract thinking) தோன்றிய காலத்திலிருந்து இயற்கை சார் உணர்வு ஏற்பட்டது. அதன்வழி இயற்கை, வழிபாட்டுப் பொருளானது. இயற்கைப் பொருட்கள் அனைத்தும் கடவுளர் ஆயின. இவ்வியற்கையின் சக்தியே இயக்கன்; இதனை சமூக மானிடவியலாளர்கள் ‘அனிமிசன்’ என்கின்றார்கள். இயற்கையின் கடவுளர் தன்மை இயக்கன் – இயக்கியாயின், இயக்கனும் இயக்கியும் கொடூரமும், அழகும், அன்பும் நிறைந்தவையாக எடுத்தாளப்படுகின்றன. இந்தியாவின் பிரதான சமயங்களான இந்து சமயம், பௌத்தம், சமணம் போன்றன இயக்கன் – இயக்கியை உள்வாங்கின. குறிப்பாக ஒரு கடவுளை முதன்மைப்படுத்தும் போது அது இயக்கர்களின் தலைவனாக – இயக்கிகளின் தலைவியாகக் காட்டப்பட்டது. சிவன் பூதநாதரானார். இலங்கையின் வரலாற்று நூல்களில் சிங்கதேசக் குடிமகனான விஜயன் இயக்கியாகிய குவேனியைத் திருமணம் செய்தமையும் தலைவனானமையும் இவ்வாறாகவே இருக்கலாம். தமிழர் மரபிலும் ஏனையோர் மரபிலும் இயக்கி பெற்ற இடத்தை இயக்கன் பெறவில்லை. அதேபோல இலங்கை வரலாற்றில் நாகர்கள் பெற்ற வரலாற்றுத்தடத்தை இயக்கர்கள் பெறவில்லை. விஜயனால் குவேனி கைவிடப்பட்ட பின் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து தகாப்புணர்ச்சி வழி குடும்பங்கள் உருவானதாகவும் அவர்களே வேடுவர்கள் எனப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இலங்கையின் ஆதிவேடர்களின் தெய்வம் ‘யக்கு’ என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் வாழ்வில் நிலமானியமுறையும் அதன்வழி கெடித்திருந்த சாதியமும் சமூகவியல் தளத்தில் முக்கியமானவை. தொழில்ரீதியான அடுக்குமுறை பேதத்தைத் இது தந்தது; கலை, பண்பாடு, பொருளாதாரம், சமயம் என எல்லாத் தளங்களிலும் செல்வாக்குச் செலுத்தியது. இதன் வழி சாதியத் தெய்வங்களும், சாதியக் கோயில்களும் உருவாகின. பறையிசைக்கும் குடிகளின் தெய்வமே வல்லியக்கன். வல்லியக்கன் இயற்கை – இயக்க – இயக்கன் – இயக்கி வழிபாட்டின் வழி உருவான வழிபாடாக இதனை இனங்காண்பதோடு ‘யக்’ வழிபாட்டோடும் இணைத்து இத்தெய்வம் பற்றிய முதன்மை ஆய்வினைச் செய்த பேராசிரியர் இரகுபதி கருத்துரைக்கின்றார். இயற்கை வழிபாடு உலகப் பொதுமைக்குமானது. இயற்கை எனும் தமிழ்ச் சொல் இயற்கை வழிபாட்டைக் குறித்து, அது பின் இயக்க வழிபாடாக இயக்கன் – இயக்கி எனும் ஆண், பெண் வழிபாடாக வளர்நிலை பெற்றிருக்க வேண்டும். அதனை ‘யக்’ வழிபாட்டோடு இணைத்தல் அவசியமற்றது. ‘வல்லியக்கன்’ எனும் பெயர் பற்றி பல்வகை அனுமானங்கள் உண்டு. வல்லி – இயக்கன் – வல்லி எனும் பறையிசைக்கும் மக்களின் மூதாதையால் வழிபடப்பட்ட தெய்வம், வல்லியக்கன் எனக் கூறப்பெற்றிருக்கலாம். ஏனெனில் வல்லி, வல்லியப்பன் எனும் பெயர்கள் இன்றும் பறையிசைக்கும் மக்களிடம் செல்வாக்குடன் காணப்படுகிறது. வல்லியின் வழித்தோன்றல்கள் வல்லியக்கனை வழிபடுகின்றனர். வலிமை பொருந்திய இயக்கன் என்ற நம்பிக்கையின் வழி உருவான பெயராக இருக்கலாம். வள்ளிபுனம் – வள்ளி புலம் – வல்லி புரம் வள்ளி – வல்லி எனும் அடிப்படையில் வல்லியின் தலைவன் முருகனைக் குறிப்பதாக எழுந்து பின்பு அது தனித்தெய்வமாக உருப்பெற்றிருக்கலாம். வள்ளி வேடுவர் பெண் என்பதும் இலங்கை வரலாற்றில் இயக்கர் வேடுவர்களாக சித்தரிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. ஈழத்தின் வல்லியக்கன் வழிபாட்டிடங்கள் ஈழத்தில் பறையிசைக்கும் மக்கள் வாழுமிடங்கள் எங்கும் வல்லியக்கன் வழிபாடு இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும் அதற்குப் போதிய சான்றுகள் இல்லை. “கன்னாபுரம் நின்று அந்நாள் நடந்து அறிதரிய ஏழாலை அதில் மீதுறைந்து புன்னாலைக்கட்டுவன் அச்செழுகோப்பாய் புத்தூர் நீர்வேலி வறுத்தலைவிளான் பளையிரண்டு மன்னார் சுழிபுரம் சங்கானை தோலவரம் மற்றுமுள்ள தேசமெல்லாங் கடந்து சுன்னாகம் வாழவரு வல்லியக்கராசனை தொழுவார்க்கு வல்வினைநோய் தொலைந்து போகும்” இப்பாடலை கிறிஸ்தவப் பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசர் தன் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். ஏழாலை வல்லியக்கன் கோயில் பூசாரி வல்லியக்கன் ‘பத்தாசியாக’ கோயில் நிகழ்வுத் துண்டுப் பிரசுரத்தில் அச்சடித்து வெளியிட்டுள்ளார். இது வாய்மொழிப் பாடலாக இருந்திருக்க வேண்டும். இப்பாடல் ஈழநிலத்தின் வடபுலத்தில் வல்லியக்கன் கோயில் இருந்த இடங்களைப் பட்டியற்படுத்துகின்றது. கன்னாபுரம், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், அச்செழு, கோப்பாய், புத்தூர், வறுத்தலைவிளான், பளை இரண்டும், மன்னார், சுழிபுரம், சங்கானை, தொல்புரம், சுன்னாகம் என்பன அவையாகும். இவற்றுள் தெல்லிப்பழையில் ஆலயமுண்டு. கிளிநொச்சி மாவட்ட பளை, விடத்தற்பளை மற்றும் இயக்கச்சி பிரதேசங்களில் வல்லியக்கனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்கானை கோயில் அழிக்கப்பட்டுவிட்டது. அது போலவே தொல்புரம், சுழிபுரம், சுன்னாகம், மன்னார் கோயில்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குடிசனப் பரவலாக்கத்தின் வழி உருவான வேலணை சின்னமடு, நவாலி, சண்டிலிப்பாய், இருபாலை, அச்செழுவின் புதியகோயில் போன்றன கள ஆய்வினூடாகப் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வல்லியக்கன் கோயில்கள் தனிக்காணிகளிலும் வீட்டு வளவுகளினுள்ளும் அமைந்துள்ளமை இது ஒரு குலதெய்வ வழிபாடு என்பதை உறுதிப்படுத்துகின்றது. கோயிலாக இல்லாமல் ஆலமரம், நாவல்மரம், மஞ்சவுண்ணா, பூவரசு போன்ற மரங்களின் கீழ் வல்லியக்கன் அமர்ந்திருந்தார். கல் – மயோசியன் கல் (வெள்ளைக்கல்) சூலம் போன்ற பருப்பொருட்களின் ரூபத்தில் அவர் வழிபடப்பட்டார். மரங்களின் கீழ் திறந்த வெளியிலும் சீமெந்துக் கட்டடங்களிலும் இக்கோயில்கள் அமைந்துள்ளன. இத்தெய்வத்தின் இணைத்தெய்வமாக முடி மன்னர் (கோண்டாவில், அச்செழு, ஏழாலை) காணப்படுகிறார். இதனை விட தற்காலத்தில் இணைத்தெய்வங்களாக காளி (நவாலி), விறுமர், ஐயனார் (கரவெட்டி) என்பன காணப்படுகின்றன. வழிபாட்டு முறைகள் வல்லியக்கனை வழிபடும் முறைகள் பிரதேச வழக்காறுகளுக்கேற்ப சிற்சில மாறுபாடுகளுடன் காணப்படுகின்றன. சில இடங்களில் நித்தம் ‘விளக்கு வைக்கும்’ வழக்கம் உண்டு. ஆனால் பல ஆலயங்களில் வெள்ளிக்கிழமை, விஷேட நாட்கள் போன்ற குறித்த நாட்களில் மட்டும் இவ்வழக்கம் காணப்படுகின்றது. எல்லாக் கோயில்களிலும் ‘வைகாசி விசாகம்’ மிகச்சிறப்பாகப் பொங்கல் வைத்துப் பூசித்து வழிபடப்படும் நாளாகக் காணப்படுகிறது. நாட்டார் தெய்வங்களுக்குப் பொதுவில் வைகாசி விசாகதினம் குளித்தியாக, பொங்கல் நாளாக, மடை நாளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்னின்றும் மாறுபட்டு ஏழாலை வல்லியக்கனுக்கு சித்திரை மாத நான்காவது புதன்கிழமை விஷேடநாளாகக் கருதப்பட்டு மடைப்பண்டம் எடுக்கப்பட்டு பொங்கி வழிபடப்படுகின்றது. கரவெட்டி கோயிலில் பங்குனி கடைசிப்புதன் விஷேடநாளாகும். மடைப்பண்டம் எடுக்கும் மரபு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மடைப்பண்டம் எடுக்கும் முதல்நாள் ஆலயச்சூழல் தூய்மைப்படுத்தப்படும். ‘விளக்கு வைத்தல்’ நிகழும். விளக்கு வைப்பவர், பூசை செய்பவர் பறையிசைக்கும் மக்களில் ஒருவராக இருப்பார். இந்நிகழ்வின் பூசாரியாக அவர் திகழ்வார். ஆனைக்கோட்டை போன்ற சில கோயில்களில் வாய்கட்டிப் பூசை செய்யும் முறைமையும் உண்டு. இது கப்புறாளை (கதிர்காமம்), கப்பூகர் (மண்டூர்க்திர்காமம், செல்வச்சந்நிதி) எனும் வாய்கட்டி பூசை செய்யும் முறையின் செல்வாக்கால் வந்திருக்கக் கூடும். பொங்கலுக்கு உரிய பண்டங்கள், பாத்திரங்கள் இணைத் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்துப் பூசை செய்யப்பட்டு புனிதப்படுத்தப்பட்டு வல்லியக்கன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். மடைப்பண்டம் கொண்டுசெல்லப்படும் போது மடைப்பறை இசைக்கப்படும். ஆலயங்களின் நிகழ்வுகளுக்கு இசைக்கவெனத் தனிப்பறையும் தனியான ‘இசைப்பு’ முறையும் கலைஞர்களும் இருந்ததாக அறியமுடிகிறது. இது மங்கல இசையாக, பறை சாற்றுதலாகக் கூறப்படுகிறது. பலியிடும் வழக்கம் இருக்கவில்லை என எல்லா ஆலயக்காரர்களும் உறுதிபட உரைக்கின்றனர். கரவெட்டி கோயிலில் மட்டும் ஆலயத்துக்கு அப்பால் உள்ள சந்தியில் வைத்து மடைப்பண்டம் எடுப்பதாகவும் மடைப்பண்டம் எடுக்கும் போது ‘கோழியறுத்தல்’ எனும் பலி நிகழ்த்தப்படுவதாகவும் நேர்காணல் (சி.அருணகிரிநாதன், வயது 61) மூலம் அறிய முடிந்தது. வல்லியக்கனை வழிபடுதலினூடாக சந்ததி பெருக்கம், நோய் நொடியில் இருந்து விடுபடுதல் போன்ற நம்பிக்கைகள் காணப்படுகின்றன. தமது நேர்த்தி நிறைவுறும் போது நேர்த்திக்கடன் செலுத்தும் முறை காணப்படுகிறது. இது ‘தெய்வக்கடன்’ என்றே கூறப்படுகிறது. பொங்குதல், மடைபரவுதல் போன்றன அவற்றுட்சில. மட்சம், மாமிசம் படைப்பதில்லை. தற்போது காவடியெடுத்தல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாலய விஷேடதினங்களில் கலையாடி, குறிசொல்லல், திருநீறு போடுதல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. சமகாலப் பயில்வுகள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி மிகவும் நசுக்கப்பட்ட நிலையில் தமது பொருளாதாரத்துக்கு மூலமாக இருந்த பறையை 1950 – 1970 இடையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வின் வழி உடைத்தும் எரித்தும் ‘இனி பறை இசைப்பதில்லை’ எனச் சபதம் செய்து ஈழத்தின் வடக்குப் பிரதேசத்தில் பல பிராந்தியங்களில் பறையிசைக்கும் தொழில் கைவிடப்பட்டது. பெருந்தெய்வவுருவாக்கம் – பெருங்கோயிற் பண்பாடு, சமஸ்கிருதமயமாக்கம் எனும் பிராமணர்க்குக் தம் கோயிலைக் கையளிக்கும் செயற்பாட்டின் வழி ஆலயங்களில் பறை வாத்தியம் வெளியேற்றப்பட்டு தவில் மங்கல வாத்தியமாக்கப்பட்டது. கிழக்கிலும் மலையகத்திலும் இன்றும் ஆலயங்களில் பறை ஓரளவேனும் இசைக்கப்படுகிறது. வடக்கில் செல்வச்சந்நிதி போன்ற ஒருசில ஆலயங்களில் பறையிசைக்கும் மக்களின் குலமல்லாத இறையடியவர் பறை ‘அறை’கிறார். இவ்வாறான செயற்பாடுகளும் இலங்கையின் யாவருக்குமான இலவசக்கல்வி, இலவச உணவு, இலவச உடை, இலவச வைத்தியசாலை போன்ற செயற்றிட்டங்களும் எல்லாச் சமூகங்களையும் வலுப்படுத்தியது. அரசாங்க உத்தியோகத்தர்களை, நிலையான மாதச்சம்பளம், ஓய்வூதியம் பெறுகின்றவர்களை உருவாக்கியது. இவ்வாறு உருவான புதிய வர்க்கம் , உயர்சாதியல்லாத மக்களிடம் ‘சாதிய நீக்கம்’ – உறவு நீக்கம், அடையாள நீக்கம் எனும் உணர்வுகளை செயல்நிலைப்படுத்தத் தூண்டியது. இதற்கு பறையிசைக்கும் மக்களின் படித்தவர்க்கமும் தப்பவில்லை. தம் குலமக்கள் இருந்த இடங்களை விட்டு நகரங்களையும் வேறு நிலங்களையும் நோக்கிப் பெயர்ந்தனர். குல தெய்வங்களைக் கைவிட்டனர். இதன்வழி வல்லியக்கன், ‘சைவம் அகலக்காலூன்றி நின்ற நிலத்தில்’ வல்லிபுரத்தாழ்வார் ஆயினார். தாமே பூசைசெய்து வழிபட்ட வல்லியக்கனை பெருங்கோயில் வழி கட்டமைக்க முற்பட்டு சீதாராமசாஸ்திரிகளை நாடிய போது ‘வல்லி’ எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு கோண்டாவில் வல்லியக்கனை வல்லிபுர ஆழ்வாராக மாற்றினார். அக்கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ந்து பிராமணர் கோயிலாக்கப்பட்டது (பறையிசைக்கும் மக்கள் கருவறைக்குள் செல்லுதல் தடைப்பட்டது). இதன் வழி, தாம் மேற்சாதியானதாக அம்மக்கள் நம்புகின்றனர். இவ்வழி, வேலணை சின்னமடு வல்லியக்கன், நாராயணர் – கிருஷ்ணனாக மாற்றப்பட்டுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு இரகுபதி, யாழ்ப்பாண சைவ உயர் சாதியினருக்கு எதிரான வைணவராக வல்லியக்கன் வழி பறையிசைமக்கள் மாறுவதாகவும், இதில் அம்பேத்கார் சிந்தனையின் சாயல் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார் (இரகுபதி, பொ., 2006, பக்22 – 23). ஆனால் அச்செழுவிலுள்ள வல்லியக்கன் கடந்த 2021 ஆம் ஆண்டில் சிவபெருமானாக மாற்றப்பட்டுள்ளமை இக்கருத்துக்கு மாறானதாக, அம்பேத்கார் வழி சிந்திக்காது ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்க வழி நின்றதையே காட்டுகின்றது. இவ்வாறான மேனிலையாக்கங்கள் பிராமணரை முதன்மைப்படுத்துகிறது. மக்களை வெளித்தள்ளுகிறது. மடைப்பண்டம் எடுத்தல், மடைப் பறையிசைத்தல் முதலான பாரம்பரிய முறைகள், கலைகள், நம்பிக்கைகள் புறந்தள்ளப்பட்டு இல்லாதொழிக்கப்படுகிறது. சீமெந்துக் கற்களால் கட்டப்படட் வல்லியக்கன் கோயில்களில் விஷ்ணுவின் சங்குசக்கரம் (ஆனைக்கோட்டை) பிள்ளையார், முருகன் (சண்டிலிப்பாய்), விறுமர், ஐயனார் (கரவெட்டி) போன்ற சின்னங்கள், தெய்வங்கள் இடம்பிடித்து வருதலையும் சமஸ்கிருதமயமாதலுக்கான வெளி அண்மிப்பதையும் அவதானிக்க முடிகிறது. பறையிசை என்பது இருமரபுக் கோயில்களிலும் இல்லை என்பதும் கோயிற்பறை இல்லாது ஒழிந்து போனதையும் சாவுப்பறை வாசிப்பவர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருத்தலையும் அதுவும் தன் கலைப்பெறுமானத்தை இழந்து வருதலையும் சாவுப்பறையின் இடத்தை ‘பாண்ட்’ (Band) வாத்தியம் ஆக்கிரமித்து வருதலையும் அவதானிக்க முடிகிறது. பெரும்பாலான பறையிசைக்கும் மக்கள் சாதிய – தன்னடையாள நீக்கத்திற்காகவும் வேறுசில நம்பிக்கைகள், தேவைகள் என்பனவற்றுக்காகவும் கிறிஸ்தவத்திற்கு (குறிப்பாக புரட்டஸத்தாந்தம்) மாறிவருகின்றனர். ஆதிதிராவிடர்களுக்கான அடையாளங்கள், தெய்வங்கள், வழிபாட்டுமுறைகள், கலைகள் கைவிடப்படுகின்றன. சமாந்தரமாக, தமிழர் வரலாறு சிதைவுறுதலும் நிகழ்கிறது. நிறைவுரை பறையிசை இசைக்கும் கலைஞர்கள் சாதிய ஒடுக்குமுறையினின்றும் தாழ்வு மனப்பாங்கில் இருந்தும் விடுதலை பெற அவாவிநிற்றலின் வழி தன்னடையாளத்தைத் துறத்தல் நிகழ்கிறது. அதன் ஒரு அங்கமாக, ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவினரான ஆதித் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படும் பறையிசைக்கும் மக்கள், தம் குலதெய்வமான வல்லியக்கனை நாராயணனாகவும் சிவனாகவும் மாற்றி பெருந்தெய்வவழிபாட்டினுள்ளும் சமஸ்கிருதமயமாதலினுள்ளும் கலக்கச்செய்து மேனிலையாக்கம் பெற முயற்சிக்கின்றனர். வல்லியக்கனைக் கைவிடுகின்றனர். தம் சமயம் துறந்து கிறிஸ்தவத்திற்கு மாறி புது அடையாளத்தை உருவாக்குகின்றனர். உலகமயமாதலுள் ஒன்ற முற்படுகின்றனர். வரலாற்றாசிரியர்கள் ஈழத்தில் தமிழர், நாகர் வழி வந்தவர்கள் எனக் கூறுகின்றனர். இயக்கர் வரலாறு குவேனி வழி வேடுவருள் தொலைக்கப்பட்டது. இயக்கரை – வல்லியக்கரை வழிபடும் வழிபாட்டின் வழி தமிழர் வரலாற்றைச் சீரமைக்க வாய்ப்புள்ளது. அத்தோடு ஈழத்தில் மட்டுமே வல்லியக்கன் வழிபாடு நிலவி வருதலும் கவனத்திற்குரியதாகும். தொடரும். ஒலிவடிவில் கேட்க 14352 பார்வைகள் About the Author யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும். https://www.ezhunaonline.com/valliyakkan-the-god-of-the-people-who-play-parai/
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
தமிழை வாசித்து கிரகிக்கவில்லை என்று நினைக்கின்றேன் அல்லது @விசுகு ஐயா எழுதிய சிலவற்றை நான் எழுதியதாகக் குழம்பிவிட்டீர்கள் போலிருக்கு. ஏதாவது உருப்படியான கருத்தை வைத்தால் மந்திக்கு மயிர்வெட்டும் வேலையை விட்டுவிட்டு வந்து பதில் வைக்கின்றேன்.😎
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
இப்படி விழல்க் கருத்துக்களை வைப்பதற்கு இடையிடையே யாழுக்கு நீங்கள் கட்டாயம் வரவேண்டும்😜 உங்களின் கதையின்படி, இங்கிலீசு பேசும் அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், கனடியர்கள், அவுஸ்திரேலியர் எல்லாம் அறிவாளிகள்தான்!😂🤣 என்னிடம் மூன்று திருக்குறள் நூல்கள் உள்ளன. ஒன்று கலைஞர் கருணாநிதியின் உரையுடன்! இலவசமாகப் படிக்க: https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0612.pdf
-
சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – சூ. பற்றிமாகரன்
தகவல் பிழைகளை சரி செய்யலாமே.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
எனக்கும் இந்த தேர்தல் முடிவு வியப்பைத் தந்தது! ஒரு இடைத்தேர்தலில் ஆளும்கட்சி தோற்பது அல்லது மிகக் குறைந்த பெரும்பான்மையில் வெல்லுவதுதான் வழமையாக நடப்பது. ஆனால் பிற எதிர்க்கட்சிகள் போட்டியிடாத தேர்தலில் பல உதிரிகளோடு உதிரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் கட்டுப்பணத்தை இழந்தது பெரிய வியப்புத்தான்😜 அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பல கூட்டணிகள் மோதும்போது தனியே தேர்தலில் நிற்கும் நாம் தமிழர் கட்சி 8% வீதத்தைக் கூட எடுக்கமுடியாமல் மீண்டும் உதிரியாகத்தானே போகப்போகின்றது.. என்னுடன் பல தமிழக என்ஞினியர்கள் வேலை செய்கின்றார்கள். அவர்களுடன் அரசியல் பேசுவது குறைவு என்றாலும் அண்மைய பெரியார்-பிரபாகரன் பிரச்சினையை எப்படி தமிழகத்தில் பார்க்கின்றார்கள் என்று கேட்டேன். ஈரோடு தேர்தலுக்குத்தான் சீமான் பெரியாரை அவதூறு செய்வதைக் கையில் எடுத்தார் என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளார்கள். மற்றும்படி யாரிடம் அதிக பணமும், கோர்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவும், மீடியாவில் ஆதிக்கமும் உள்ளதோ அவர்கள்தான் தேர்தலில் வெல்லுவார்கள் என்று சொன்னார்கள். போகிற போக்கைப் பார்த்தால் பாஜக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக வர அதிக வாய்ப்பு உள்ளது. நாம் தமிழருக்கு “வாய்ப்பில்லை ராஜா”
-
'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?
'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா? Getty Images சித்தரிப்புப் படம் தினுக் ஹேவாவிதாரண பிபிசி சிங்களம் ''எனது முன்னாள் காதலன் மூலமாகவே இது எனக்கு முதலில் அறிமுகமானது. அவர் தான் எனக்கு இதைக் பழக்கப்படுத்தியது'' என 27 வயதான நயோமி தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார். ஐஸ் போதைப்பொருள் என சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற மெத்தம்பெட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் பாவனைக்கு தான் ஒரு வருடத்திற்கு முன்பாக பழக்கப்பட்டதாக நயோமி தெரிவிக்கின்றார். உடலுறவு கொள்ளும் போது தனக்கும், தனது முன்னாள் காதலனுக்கும் போதைப்பொருள் கட்டாயம் அவசியமான நிலைமை ஏற்படுவதாக அவர் மேலும் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். தனது அடையாளத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவரையும், அவரது அனுபவங்களை பற்றி கருத்து தெரிவித்தவர்களையும் குறிப்பிடுவதற்கு பிபிசி புனைப் பெயர்களை பயன்படுத்த தீர்மானித்தது. கெம்செக்ஸ் என்றால் என்ன? உடலுறவில் அதிக இன்பத்தை பெற்றுக்கொள்வதற்காக, உடலுறவிற்கு முன்பாக போதைப்பொருள் அல்லது மருந்து வகைகளை பயன்படுத்திக் கொள்ளும் செயற்பாடு கெம்செக்ஸ் (Chemsex) என அழைக்கப்படும் என்று பாலியல் நோய் தொடர்பான விசேட மருத்துவர் டொக்டர் வினோ தர்மகுலசிங்க பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''உடலுறவு செய்வதற்கு முன் ஏதேனும் ரசாயன பொருட்களை எடுத்துக்கொண்டால், அதை கெம்செக்ஸ் என அடையாளப்படுத்துவோம். பலர் இதனை உடலுறவு இன்பத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் கூறவில்லை.'' என அவர் குறிப்பிடுகின்றார். தொடர்ந்து பேசிய அவர், ''இவ்வாறான சந்தர்ப்பங்களில் மருத்துவர்களின் அனுமதியுடனான மருந்துகள் அல்லது அனுமதியற்ற மருந்துகள் அல்லது ரசாயன பொருட்களாக இருக்கக்கூடும். பார்ட்டி நிகழ்வுகளிலேயே அதிகளவானோர் இதனை பயன்படுத்துகின்றனர். அவ்வாறான இடங்களில் பாதுகாப்பற்ற உடலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறான இடங்களில் பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகளவில் காணப்படுகின்றது'' என்கிறார். மேலும், ''அதிகளவில் தெரிவு செய்யப்பட்ட குழுக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி தெளிவூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையில் இது தொடர்பான தரவுகளை சேகரிக்கும் திட்டமொன்று இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.'' என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். ஆண், பெண் உறவின் போது உடலுறவு செயற்பாடுகளை அதிக நேரம் செய்வதற்கு மற்றும் அந்த செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு போதைப்பொருள் பயன்பாடு ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தினால் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி வெளியான அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக தன்பாலின சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் இந்த கெம்செக்ஸ் பாலியல் செயற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக போதைப்பொருள் பயன்பாட்டிற்கு உட்படுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய எச்.ஐ.வி. தொற்றாளர்களில் 43 வீதம் ஆண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையில் உடலுறவு செயற்பாடுகளில் ஈடுபடுவோர் என எச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒன்றிணைந்த வேலைத்திட்டமான 'UNAIDS'-னால் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுவோர் இடையில் கெம்செக்ஸ் அதிகரித்துள்ளதுடன், ஏனைய தரப்பினரும் இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' தனது முன்னாள் காதலனால், தான் முகம் கொடுத்த அனுபவங்கள் குறித்து நயோமி, பிபிசி சிங்கள சேவையுடன் பகிர்ந்துக்கொண்டார். ''எனது முன்னாள் காதலன் வெளிநாட்டில் இருந்த ஒருவர். அவர் வெளிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு பழகியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் அவர் இலங்கைக்கு வந்தவுடன் ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தியிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் இருவரும் நண்பர்களை போன்று பழகினோம்'' ''இந்த சந்தர்ப்பத்தில் எனது முன்னாள் காதலனை நேசித்த பெண் திடீரென வேறொரு திருமணத்தை செய்து கொண்டுள்ளார். அந்த சம்பவத்தை அடுத்து மனஅழுத்தத்திற்கு உள்ளானமையினால் மீண்டும் ஐஸ் போதைப்பொருளை அவர் பயன்படுத்த முற்பட்டார்.'' ''நான் அவருடைய சிறந்த நண்பி என்பதனால், அவரை அந்த பழக்கத்திலிருந்து வெளியில் கொண்டு வர முயற்சி செய்தேன். அவருடைய மனதை சரி செய்யும் அதேவேளை, மெதுவாக இதனை நிறுத்துமாறு மனதை மாற்றினேன். இவ்வாறு சிறிது காலம் செல்லும் போது எங்களுக்கு இடையில் காதல் ஏற்பட்டது'' ''நான் குறிப்பாக போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றை ஏற்கனவே பயன்படுத்தி இருந்தாலும், ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தியிருக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் முயற்சி செய்து பார் என அவரே எனக்கு ஐஸ் போதைப்பொருளை ஒரு நாள் வழங்கினார். எனக்கிருந்த ஆர்வத்தினால் நான் அதனை முயற்சி செய்தேன்.'' என அவர் கூறுகின்றார். Getty Images 'நான் அவருடைய சிறந்த நண்பி என்பதனால், அவரை அந்த பழக்கத்திலிருந்து வெளியில் கொண்டு வர முயற்சி செய்தேன்' என்கிறார் நயோமி போதைப்பொருளின் விளைவுகள் ஐஸ் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதன் பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது தனக்கு இதற்கு முன்னர் ஏற்படாத உணர்வொன்று ஏற்பட்டதாகவும், சோர்வின்றி இருந்ததாகவும், தான் அதற்கு பின்னர் தொடர்ச்சியாக இதை பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ''நானும், காதலனும் சந்திக்கும் போது நாங்கள் பயன்படுத்த பழகியிருந்தோம். அவர் வீட்டிலிருந்து வரும் போது அதனை தேடி எடுத்துக்கொண்டு வருவார். நாங்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய பின்னர் செக்ஸ் செய்யும் போது ஏற்படும் உணர்வில் மாற்றம் இருந்தது.'' ''எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செக்ஸ் செய்ய முடிந்ததுடன், பல தடவைகள் செக்ஸ் செய்ய முடிந்தது. அதனை எடுத்துக்கொண்டு செக்ஸ் செய்யும் போது ஒரு பலம் இருந்தது.'' ''நாங்கள் ஒரு வருட காலத்திற்கு அண்மித்த காலம் ஐஸ் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு செக்ஸில் ஈடுபட்டோம். இறுதியாக நாங்கள் இருவரும் சந்திக்கும் வரை, இந்த போதைப்பொருள் இல்லாமல் முடியாதிருந்தது'' ''சிறிது காலத்தில் பின்னர் போதைப்பொருளை எனது காதலனுக்கு கண்டுபிடிக்க முடியாது போகும் போது, எனக்கு அந்த தொடர்பு இருந்தது. இறுதியாக அவரை காப்பாற்ற வந்த நானே, அவருக்கு அதனை வாங்கிக் கொடுக்கும் இடத்திற்கு தள்ளப்பட்டேன்.'' ''போதைப்பொருளை வாங்குவதற்காகவே என்னை அவர் தேடி வருகின்றார் என்பதை சிறிது காலம் செல்லும்போதே நான் உணர்ந்தேன், ஏனென்றால், இறுதியில் அதனை தேடிக்கொள்ள முடியாத இடத்தில் அவர் இருந்தார்.'' என அவர் குறிப்பிடுகின்றார். Getty Images 'நாங்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய பின்னர் செக்ஸ் செய்யும் போது ஏற்படும் உணர்வில் மாற்றம் இருந்தது' என்கிறார் நயோமி 'இதன் பாரதூரத்தை நானே உணர்ந்தேன்' சிறிது காலம் செல்லும் போது தனது காதலனின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அவரும், தானும் மனதளவில் மாத்திரமன்றி, உடலளவிலும் பாதிக்கப்பட்டதாகவும் நயோமி தெரிவிக்கின்றார். ''நானும், எனது காதலனும் போதைப்பொருள் உட்கொள்வதனால் பாதிக்கப்பட்டுவதை சிறிது காலம் சென்றே உணர்ந்தேன். அதனை பயன்படுத்தி ஒரு நாள் செல்லும் வரை எதனையும் உட்கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் மெலிவடைந்தோம்." "என்ன நடந்தது என நண்பர்கள் எங்களிடம் கேட்க ஆரம்பித்தார்கள். போதைப்பொருள் பயன்படுத்தி ஒரு வருடம் ஆகும் போது எனது காதலன் செக்ஸ் செய்ய கூட சிரமப்பட்டார். அதன் பின்னர் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையான மருந்துகளை கூட அவர் எடுத்துக்கொண்டார். செக்ஸ் செய்ய முடியாத இடத்திற்கு அவர் தள்ளப்பட்டார்.'' என்கிறார் நயோமி. தொடர்ந்து விவரித்த நயோமி, ''எனது காதலன் அவரது வீட்டிற்கு சென்று ஒரு வார காலம் அறையிலிருந்து வெளியில் வரவில்லை என நண்பர்கள் கூறும் போதே அதன் பாரதூரத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதன்பின்னர் நான் அது தொடர்பில் தேட ஆரம்பித்தேன். சில வேலைகளில் வானொலி கேட்பேன். இசைகளை கேட்க ஆரம்பித்தேன்.'' ''சிறிது காலம் செல்லும்போது எனது காதலனின் மூக்கில் ரத்தம் வடிய ஆரம்பித்தது. சில சந்தர்ப்பங்களில் 'மருத்துவரை நாடுவோம்' என கூறும் போது கூட இறுதி வரை அவர் அதற்கு இணங்கவில்லை. அவர் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். அவர் சண்டையிட்டார். சந்தேகப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் கூட கூறாமல் அவர் வெளிநாடு செல்ல தீர்மானித்தார். நான் மனோ வைத்திய ஆலோசனைகளை பெற்று தற்போது சிறியளவு வழமைக்கு திரும்பி வருகின்றேன்.'' எனக் கூறினார். Getty Images "இதைப் பயன்படுத்திய பிறகு, நீங்கள் ஒரு நாளைக்கு எதுவும் சாப்பிட முடியாது. நீ குடிப்பவை மட்டுமே உன் உடலுக்குள் நுழையும்" 'பாலியல் சார்ந்த நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகம்' ''போதைப்பொருட்களை பயன்படுத்துவோர், பின்னர் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதனூடாக ஹெபடைடிஸ் பி போன்ற பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகம்" என பாலியல் நோய் தொடர்பான விசேட மருத்துவர் டொக்டர் நிமாலி ஜயசூரிய பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''இலங்கைக்குள் இந்த செயற்பாடுகள் இருக்கின்றன என்பது தொடர்பான தகவல்கள் இருக்கின்றன. எனினும், எங்களுக்கு அது தொடர்பில் சரியாக தெரியாது. ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் போன்றல்ல, சிறந்த கல்வி அறிவை கொண்ட 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடையோர் ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது'' என அவர் குறிப்பிடுகின்றார். 'எனது தொழிலுடன் இதனை பழகிக் கொண்டேன்' தான் சில சந்தர்ப்பங்களில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் போது சில போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக 20 வயதான யோமால் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார். ''நான் பணியாற்றும் தொழிலுடன் பல சந்தர்ப்பங்களில் இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பேன். அந்த நிகழ்ச்சிகளில் மக்களுடன் உணர்வை எடுக்க வேண்டும் என்றால், சில போதைப்பொருட்கள் இருக்கின்றன. அவற்றை நான் பயன்படுத்தினேன்'' ''அந்த போதைப்பொருளை பயன்படுத்தி 30 நிமிடங்கள் ஆகும் போது, அந்த உணர்வு உடலுக்கு தெரியும். சில சந்தர்ப்பங்களில் 7 - 8 மணித்தியாலங்கள் ஆனாலும் ஆடிப்பாடி இருக்க முடியும். அதன் பின்னர் எனது காதலியுடன் நான் செக்ஸ் செய்துள்ளேன். அந்த சந்தர்ப்பத்தில் நான் அதிக நேரம் செக்ஸில் ஈடுபட்டுள்ளேன்'' என்கிறார் யோமால். ''எனினும், இந்த போதைப்பொருட்களை பயன்படுத்திய பின்னர், பல நாட்களுக்கு அதன் தாக்கம் எனக்கு இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நடுக்கம் ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில் எனது அருகாமையிலுள்ள நண்பர்களை கூட நான் தேடுவேன். போதைப்பொருளின் தாக்கத்தினால் காரணமாகவே அவர்களை தேடுவேன். இரண்டு நாட்களுக்கு உணவு உட்கொள்ள முடியாது" என யோமால் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். Getty Images "அந்த போதைப்பொருளை பயன்படுத்தி 30 நிமிடங்கள் ஆகும் போது, அந்த உணர்வு உடலுக்கு தெரியும்" 'நான் இதிலிருந்து மீண்டு வர முயற்சிக்கிறேன்' அதிக நேரம் உடலுறவில் ஈடுபடும் ஆர்வம் காரணமாக பல்வேறு போதைப்பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்ததாக 36 வயதான பெத்தும் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''நான் திருமணம் செய்து 8 வருடங்கள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். இதனை எடுத்துக்கொண்டால், அதிக நேரம் செக்ஸ் செய்ய முடியும் என எனது நண்பர் ஒருவனே தெரிவித்தான்'' ''எனது நண்பனுடன் ஒருநாள் நான் முயற்சி செய்தேன். அதன் பின்னர் ஸ்பா சென்றேன். அன்று அது உண்மை என்பதை புரிந்துக்கொண்டேன். அதன் பின்னர் மாதத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை பார்ட்டிகளில் பயன்படுத்துவேன். சில போதைப்பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தேன்" என்று கூறுகிறார். தற்போது அதனை நிறுத்துவதற்கு நான் பாரியளவில் முயற்சி செய்கின்றேன் என்று கூறிய அவர், "ஏனென்றால், நான் கதைக்கும் விதம் கூட மாறியுள்ளதை நான் உணர்கின்றேன். இதனை எடுத்துக்கொண்டால் தூக்கம் வராது. ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்று எனது மனைவி கேட்கின்றார். என்னை அவர் மருத்துவரிடம் அழைத்து செல்ல முயற்சிக்கின்றார். நான் போக மாட்டேன்.'' என்கிறார். ''நான் அவரிடம் சென்றால், நான் இவ்வாறானதை பயன்படுத்துவதே இதற்கான காரணம் என்பது சிறிது நேரத்தில் தெரியவரும. நான் இதிலிருந்து மீண்டு வர பாரியளவில் முயற்சி செய்கின்றேன்" என பெத்தும் கூறுகின்றார். Getty Images "எச்ஐவி மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து பெரும்பாலும் உள்ளது" பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா? மூட நம்பிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய கதைகள் காரணமாகவே உடலுறவை நீடிக்க போதைப்பொருள் பாவனைக்கு மக்கள் தூண்டப்படுகின்றார்கள் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மனோஜ் பெர்ணான்டோ பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவிக்கின்றார். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோர் போதைப்பொருளை பயன்படுத்துவது இலகுவான நிலைமை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ''வெற்று நம்பிக்கை காரணமாகவே போதைப்பொருளை பயன்படுத்த அதிகளவான மக்கள் முன்வருகின்றனர். பாலியல் சக்தி வலுவடையும் என எந்தவிதமான விஞ்ஞான ரீதியான உறுதிப்பாடுகளும் இல்லை. அனைத்து போதைப்பொருட்களுக்கும் இந்த கதையே இருக்கின்றது. ஹெராயின், ஐஸ் போன்ற போதைப்பொருளுக்கு அடிமையான போது மனிதனிடம் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. பாலியல் சக்தி அதிகரிக்கும், மகிழ்ச்சி இருக்கும் போன்ற கதைகள் சில இருக்கின்றன.'' ''சிலர் மனதளவில் ஏற்படுகின்ற அழுத்தங்கள் காரணமாக போதைப்பொருட்களை எடுக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு பிம்பத்தை இந்த போதைப்பொருட்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். திரைப்படங்களில் பார்க்கின்ற விடயங்கள் போன்றே போதைப்பொருள் பயன்பாட்டாளர்கள் பல்வேறு நடைமுறைகளை முன்னெடுக்கின்றனர். நண்பர்கள் ஏற்படுத்துகின்ற விடயங்கள் காரணமாக பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர்.'' என்கிறார் பெர்ணான்டோ. "மருந்துகளுக்கு பாலியல் செயல்முறையை நீட்டிக்கும் திறன் இல்லை. இந்த மாதிரியான போதைப்பொருளைப் பயன்படுத்துபவர் நீண்ட நேரமாக உடலுறவு கொள்கிறார் என்று நினைக்கிறார். அப்படி நடந்தாலும், தாங்கள் அந்தச் செயலில் நீண்ட நாட்களாக ஈடுபட்டுவிட்டதாக மனதளவில் நினைக்கிறார்கள்'' என அவர் குறிப்பிடுகின்றார். "மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது சிலர் தூக்கம் மற்றும் உயிரற்றதாக உணர்கிறார்கள். இந்த வகையான மருந்தை உட்கொள்பவர்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக மாற நீண்ட நேரம் எடுக்கும். எனவே, இந்த உயிர் சக்தியை அடைய எடுக்கும் காலப்போக்கில், அவர்கள் உடலுறவில் ஈடுபட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்." ஆனால் உண்மை என்னவென்றால், ஐஸ் அல்லது ஹெராயின் அல்லது பிற போதைப்பொருள்களால் பாலுறவு செயல்முறையை நீண்டதாக ஆக்க முடியாது' என பெர்னாண்டோ கூறினார். (இங்கு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர்களின் பெயர்கள் அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க மாற்றப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg0p993er9o?at_campaign=ws_whatsapp
-
சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா?
சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா? February 8, 2025 04:15 pm மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார். குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் காரியாலயத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக மாநட்டில் வைத்தே அவர் இதனை வௌிப்படுத்தியிருந்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கிருஸ்ணபிள்ளை வதனகுமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி எருவில் கிழக்கில் மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவலை பெற்றோம், இருந்த போதும் அவ்வாறு இல்லாத மைதானத்துக்கு நிதி ஓதுக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தோம். அதன் பின்னர் இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் சட்டமூலம் தகவலை பெற்ற போது எருவில் தெற்கு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில் முதலில் கிழக்கிலுள்ள மைதானத்துக்கு எனவும் பின்னர் இரண்டாவது முறை எருவில் தெற்கு மைதானத்துக்கு என எழுத்து மூலமாக தகவல் தந்தனர். இவ்வாறு முன்னுக்கு பின் முரணான தகவல்தரப்பட்டுள்ளன. அதேவேளை இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்துக்கு இரண்டு கோடி ரூபா ஒதுக்கப்பட்டதாக மாவட்ட செயலகம் தகவல் அறியும் சட்ட மூலமாக தெரிவித்திருந்தது. அது தொடர்பான மேலதிக தகவலை கேட்டிருந்த போது பிரதேச செயலாளர், அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். இருந்தும் கடந்த 3ம் திகதி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட தகவலின்படி மாவட்ட அரசாங்க அதிபரால் சில மாற்றங்கள் செய்துள்ளதாக தகவலை வழங்கியுள்ளனர். அதன்படி இராசமாணிக்கம் ஞாபகாத்த மண்டபம் என இருந்ததை அந்த மண்டபம் ஊடாக பிள்ளையர் ஆலய பரிபாலனசபைக்கு அந்த 2 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரச அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி கொண்டிருப்பதன் காரணத்தினால் பாரிய சந்தேகம் ஏற்படுகின்றது. மாவட்ட செயலகத்தில் இருந்து வருகின்ற ஒரு தகவல் அதேபோன்று பிரதேச செயலகத்தில் முதற்கட்டமாக ஒரு தகவல் பிறகு இல்லை எனவும் பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ளது என வருகின்றது. இவ்வாறு தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்படுகின்ற விடயங்கள் சரியானமுறையில் தகவலாக வழங்கப்படவில்லை. அதேபோன்று 400 மில்லியன் ரூபா நிதியில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது? எவ்வளவு நிதி திருப்பி அனுப்பபட்டுள்ளது? என்ற தகவலை கேட்ட போது மாவட்ட உதவி அரசாங்க அதிபர் இந்த சட்டத்தின் சரத்தின் 5 கீழ் இந்த தகவலை வழங்கமுடியாது என கடிதம் வழங்கியுள்ளார். எனவே இது தனிநபர் சார்ந்த விடயம் அல்ல சட்டத்தின் பிரகாரம் தகவல் வழங்கவேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும் சத்தியசாஜிபாபா சமுத்தி மற்றும் சக்தி இல்லத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளனர். இதில் சத்தியசாஜிபாபா சமுத்தி என்பது பாரிய நிதிவசதியை கொண்டது அவர்கள் இலவச மருத்துவம் உட்பட பல வேலைகளை செய்துவருகின்றனர். அதேவேளை சக்தி இல்லம் ஒரு தனியாரது இதுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவசர அவசரமாக வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக சரியான திட்டமிடல் இன்றி இந்த நிதியினை மோசடி செய்துள்ளனர் அவ்வாறே எருவில் தெற்கில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரியளவு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதுடன், தற்போது ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் ரூபா நிதியில் கிட்டத்தட்ட 27 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அதே தமிழரசு கட்சியினுடைய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காண்டீபன் பிரதேச செயலகம், மற்றும் மாகாண உள்ளுராட்சி மன்ற திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் செய்துள்ளார். இவ்வாறு மிக மோசமான முறையில் நிதிகள் ஒதுக்கப்பட்டு அவர்களுடைய ஆதரவாளர்கள் மூலம் அந்த நிதி சுரண்டப்பட்டு பிரச்சார வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், முறையான அபிவிருத்தி இடம்பெறவில்லை மக்களுடைய வரிப்பணம் மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவே இவ்வாறுனவர்களை மக்கள் தெரிவு செய்வதனால் எமது பிரதேசத்தில் இன்றும் மக்கள் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதனை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடங்கிய ஆவனங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இலங்கை கணக்காய்வாளர்கள் திணைக்களம், மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளதுடன், இந்த மோசடி தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார். https://tamil.adaderana.lk/news.php?nid=199871
-
டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!
கெஜ்ரிவால் ஃபார்முலாவை கையிலெடுத்த மோடி… ஆம் ஆத்மி தோல்விக்கு என்ன காரணம்? 8 Feb 2025, 6:35 PM கடந்த 2013ல் மகா கும்பமேளா நடந்தபோது, டெல்லியில் காங்கிரஸை தூக்கி எறிந்து ஆம் ஆத்மி ஆட்சியில் அமர்ந்தது. ஷீலா தீட்சித்தின் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் ஆம் ஆத்மிஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த பத்து ஆண்டுகாலம் வேகமாக நகர்ந்து, இப்போது மீண்டும் கும்பமேளா நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வென்றிருக்கிறது. 2013ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தபோதிலும் 48 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஒரு அமைப்பை உருவாக்கும் ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2015ல் நடைபெற்றத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. மீண்டும் முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால். 2020ல் நடந்த தேர்தலிலும் 62 இடங்களில் வெற்றி பெற்று முதல்வரானார். இருமுறை அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தும், இந்த முறை தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்? நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்… இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோதும், டெல்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தோல்வி மற்றும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஆகியவை ஆம் ஆத்மியின் தோல்விக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ‘டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து’ என்ற வாக்குறுதியைப் போலவே, அனைவருக்கும் குழாய் நீர் இணைப்பு வழங்கப்படும். பாரிசுக்கு இணையாக யமுனை நதி சுத்தம் செய்யப்படும். 20 லட்சம் வேலைவாய்ப்புகள் என பல கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்தது ஆம் ஆத்மி. ஆனால் அவை பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. இது ஆட்சிக்கு எதிரான உணர்வை மக்களிடத்தில் தூண்டியது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பாஜகவின் பிரச்சார உத்தி! காங்கிரஸை எதிர்த்ததைக் காட்டிலும் பாஜக ஆம் ஆத்மியை எதிர்த்தே அதிக பிரச்சாரம் செய்தது. காற்று மாசுபாடு, போக்குவரத்து நெரிசல், நகர்ப்புற வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுப் பாதுகாப்பு போன்ற டெல்லி மக்களை நேரடியாகப் பாதிக்கும் ஹைப்பர்-லோக்கல் பிரச்சினைகளில் பாஜக கவனம் செலுத்தியது. டெல்லியின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தை கொண்ட பூர்வாஞ்சலி சமூகத்தின் வாக்குகளை குறிவைத்து பாஜக தேர்தல் பணிகளை செய்தது. இது பாஜகவின் வெற்றிக்கும், ஆம் ஆத்மியின் தோல்விக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குடிசைவாசிகளின் வாக்குகள் மீதும் பாஜக கவனம் செலுத்தியது. அந்தவகையில் தேர்தலுக்கு முன்னதாக, நகரத்தில் ஜேஜே கிளஸ்டர்களில் வசிப்பவர்களுக்கான 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் இரண்டு நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. ஊழல் குற்றச்சாட்டுகள்! 2013ல் ஆட்சிக்கு வர காங்கிரஸை வீழ்த்தி ஆம் ஆத்மி என்ன உத்தியை பயன்படுத்தியதோ, அதையே தற்போது பாஜக ஆம் ஆத்மிக்கு எதிராக செய்திருக்கிறது. 2013ல் கெஜ்ரிவால், யுபிஏ கால ஊழல்கள் மற்றும் காங்கிரஸின் வீழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்த நிர்பயா வழக்கு ஆகியவற்றைக் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தார். 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கெஜ்ரிவால் பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, சிறைக்கும் சென்று வந்திருக்கிறார். கெஜ்ரிவால் மட்டுமல்ல டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் சிபிஐ, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டனர். இது ஆம் ஆத்மியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது. அதோடு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் உள்கட்டமைப்புக்காகவும், மக்களுக்காகவும் எதுவும் செய்யவில்லை. மாறாக தன்னுடைய வீட்டை ஷீஷ் மகால் போல், அதாவது கண்ணாடி அரண்மனை போல் மாற்றியிருக்கிறார். சுமார் 40 கோடிக்கு தனது வீட்டுக்குள்ளேயே அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார் என்று குற்றம்சாட்டியது பாஜக. உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி மாநில பாஜக தலைவர் வரை பலரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஏன்… காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இதையே சுட்டிக்காட்டி ஆம் ஆத்மிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இது கெஜ்ரிவால் மீது இருந்த நம்பிக்கையை மக்களிடையே குறையச் செய்துள்ளது. பட்ஜெட் அறிவிப்பு! டெல்லி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, வெளியான மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வாக்காளர்களை கவரும் வகையில் வருமான வரிச் சலுகையை பாஜக அரசு அறிவித்தது. ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது தனது உரையில் அடிக்கடி இதை சுட்டிக்காட்டி பேசினார். மிகவும் நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட் என்று அவர் கூறியது ஆம் ஆத்மியின் வீழ்ச்சிக்கும், பாஜகவின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது. காங்கிரஸ் vs ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் மாநில சட்டப்பேரவையில் தனி தனியே போட்டியிட்டு ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தற்போது சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்பதையே டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டுவதாக இக்கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி மீது நம்பிக்கையை இழந்ததால் முக்கிய எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்ததும், ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இருப்பது குறித்து முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து பேசியதும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி தோல்விக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. https://minnambalam.com/political-news/what-is-the-reason-for-aaps-defeat/
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை!! அதிமுக, பாஜக போட்டியிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சமாவது யோசிக்கவேண்டாமா? ஈரோடு கிழக்கு : டெபாசிட்டை இழந்தது நாம் தமிழர் கட்சி 8 Feb 2025, 5:22 PM ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட்டை இழந்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குகள் இன்று (பிப்ரவரி 😎 எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதுமுதலே திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். குறிப்பாக 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், சந்திர குமார் 55,849 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 12,028 வாக்குகள் பெற்று பின்னடைவில் இருந்தார். அதேபோன்று 15வது சுற்றில் சந்திரகுமார், 1,02,480 வாக்குகளை பெற்ற நிலையில், சீதாலட்சுமி 21,802 வாக்குகளை பெற்றார். மோசமான சாதனை! அவர் டெபாசிட் பெற மொத்தம் 25,673 வாக்குகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 17 வாக்கு சுற்றுகள் முடிவில் சீதாலட்சுமி வெறும் 23,810 வாக்குகளை மட்டுமே பெற்று தனது டெபாசிட்டை இழந்துள்ளார். அவருடன் சுயேச்சையாக போட்டியிட்ட 44 பேரும் தங்களது டெபாசிட்டை இழந்தனர். இதன்மூலம் 2021 சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூரில் தோல்வியடைந்த சீமானை தவிர்த்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யாருமே இதுவரை தேர்தலில் டெபாசிட் பெற்றதில்லை என்ற பரிதாப சாதனை தொடர்கிறது. அதே வேளையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், 90,629 வாக்குகள் வித்தியாசத்துடன் மொத்தம் 1,14,439 வாக்குகள் பெற்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளார். https://minnambalam.com/political-news/ntk-seetha-failed-to-get-deposit/
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. sudumanalNovember 4, 2023 அமெரிக்க ஜனநாயகத்தின் இழிநிலைகளில் ஒன்று இப்போ காஸா குறித்து ட்றம்ப் முன்மொழிகிற திட்டம். ஒருவரது பூர்வீக நாட்டை போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் திட்டமிட்ட குடியேற்றத்தாலும் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற காலனிய அதிகார மமதைதான் அது. அது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா என்ற நாடே அப்படித்தான் உருவாகியது. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என வேறும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. காஸாவின் இடத்தில் அதன் பூர்வீக மக்களை துடைத்தழித்து இஸ்ரேலை அகலக் கால்பதிக்க வைப்பதும் அதே காலனிய முறைமைச் சிந்தனைதான். இன்னும் ஒருபடி போய் காஸாவின் கடல்சார் பகுதியை அண்டி அதை உல்லாசப்பிரயாண நிலமாக (மத்திய கிழக்கின் rivera வாக) ட்றம்பின் றியல் எஸ்ரேற் மருமகன் (யறெட் குஸ்னர்) இன் திட்டத்துக்கான நிலமாக மாற்ற முயற்சிக்கிற இழிநிலை அது. இது பல்கட்சி ஆட்சிமுறை ஜனநாயகத்தை செழிக்கப் பண்ணும் என்ற விதியை கேலிசெய்வதாக அமைகிறது. காஸா மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலமாம். வாழத் தகுதியில்லாத நிலமாம். துயர நிலமாம். அழிவுகளின் கூடாரமாம். அமெரிக்கக் குண்டுகளினால் இடிபாடாக்கப்பட்ட நிலத்தைப் பார்த்து அமெரிக்க சனாதிபதி இப்படியெல்லாம் சொல்கிறார். குண்டுகள் தானாக அமெரிக்க களஞ்சியத்திலிருந்து பறந்து வந்துதானே மக்களைக் கொன்றது! இவளவு இஸ்ரேலியக் குண்டுவீச்சுக்குள்ளும் மனிதவதைகளினுள்ளும் உணவு, நீர், மின்சாரம் என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி வதைத்தும், கூட்டமாக ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு காஸாவுக்குள் துரத்தி அலையவிட்டும்கூட இன்னமும் அந்த மண்ணில் மக்கள் வாழ்கிறார்கள். வாழ்வை மீண்டும் கட்டியமைக்க அவர்கள் கட்டியமைக்கும் நம்பிக்கையோடு இடப்பெயர்வுகளிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எமது நிலம். இங்கிருந்து போக மாட்டோம் என்கிறார்கள். அது வாழத் தகுந்த நிலமா இல்லையா என்பதை அவர்கள் இரத்த சாட்சியாக உலகத்தின் முன் நிரூபித்திருக்கிறார்கள். அதை அமெரிக்காவோ இஸ்ரேலோ தீர்மானிப்பது ஜனநாயகமா என்ன. ஐநா உட்பட உலகின் பெரும்பான்மை நாடுகளும் சமூகப் புத்திஜீவிகளும் இந்த பழைய காலனிய ஒழுங்கின் மீள்வரவை எதிர்த்து கருத்துச் சொல்லியபடி இருக்கிறார்கள். ஜேர்டானும் எகிப்தும் இந்த 2 மில்லியன் பலஸ்தீன மக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ட்றம் கட்டளையிடுகிறார். அந் நாடுகள் மறுத்திருக்கின்றன. நெத்தன்யாகுவோ சவூதி அரேபியாவிடம் பெரும் தரிசு நிலங்கள் இருப்பதாகவும் அங்கு பலஸ்தீன நாட்டை அமைத்துக் கொள்ளலாம் என இன்னொரு கோமளித்தனத்தை முன்வைக்கிறார். இவ்வாறு ட்றம்ப் இன் அறிவித்தல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி தன்னும் இதற்கு எதிராக மூச்சு விடவில்லை. இது ஏன்?. பல்கட்சி ஆட்சிமுறை என்பது ஜனநாயகக் கட்டமைப்பில் அவசியமான ஒரு முறைமைதான். அது deep state நிலவுகிற அமெரிக்கா போன்ற நாடுகளில் எதையும் பிடுங்காது. ஏனெனில் அந்த deep state தான் வெளிநாட்டுக் கொள்கையை மாறாமல் வைத்திருக்கவோ அதன்வழியில் இற்றைப்படுத்தவோ செய்கிறது. அரசாங்கங்கள் அல்ல. அது பலம்படைத்த உளவு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள், சியோனிச லொபிகள், இலுமினாட்டிகள், இனமேலாதிக்க புத்திசீவிகள் போன்றவர்களால் state என்பது deep state வடிவம் எடுக்கிறது. அமெரிக்கா உலகம் பூராக நடத்திய போர்கள் இரு கட்சிகளாலும் நடத்தப்பட்டன. பல கட்சி ஆட்சிமுறையின் பன்மைத்துவம் என்பதை அந்த அரசு வடிவம் பொய்மையாக்கிவிடுகிறது. சுவிஸ் போன்ற நாடுகளில் பல்கட்சி ஆட்சிமுறை மேன்மைப்பட்ட நிலையில் இருப்பதற்குக் காரணம் இந்த deep state அற்ற தன்மைதான். 7 பேர் கொண்ட உயர் சபைதான் சுவிஸை ஆள்கிறது. அதுவும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு தலைவராக தேர்வு அடிப்படையில் வருகிறார்கள். மக்களுக்கான நேரடி ஜனநாயகம் கொண்டதாகவும் இருக்கிறது. சில விமர்சனங்கள் இருக்கிறபோதும் அந்த முறைமை பயனளிக்கும் வகையிலேயே செயற்படுகிறது. இந்த deep state முறைமைதான் இருபெரும் வல்லரசாக இருந்த அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு இடையில் சமாதானம் என்பதை நிலைநாட்டிய கெனடியைக் கொன்றொழித்தது. 1962 இல் சோவியத் யூனியனின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் துருக்கியில் அமெரிக்கா நிறுவிய (அணுவாயுதம் உட்பட்ட) தளத்துக்கு எதிர்வினையாக சோவியத் யூனியன் கியூபாவில் அணுவாயுத்தை நிறுவியது. அப்போது அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க சிஐஏ கெனடியை வற்புறுத்தியோது அதை அவர் மறுத்தார். சமாதான முயற்சியை முன்வைத்தார். அவரும் குருச்சேவ் உம் பேசித் தீர்த்துக் கொண்டார்கள். துருக்கியிலிருந்தும் கியூபாவிலிருந்தும் அணுவாயுதங்கள் திரும்பப் பெறப்பட்டன. அது அமெரிக்க deep state இனை மீறிய செயலாக அமைந்ததால் அவர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதுமான ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள், தலைவர்களை கொலை செய்தல் என இயங்குகிற deep state இன் முக்கிய தூண்கள் சிஐஏ உம் எப்.பி.ஐ உம் ஆகும். இப்பே ட்றம்பின் வருகைக்குப் பின் ஒரு சுவாரசியமான முரண் எழுந்துள்ளது. ட்றம் deep state க்கு எதிரானவராக இருக்கிறார். state என்ற வடிவத்தை அவர் பேண விரும்புகிறார். அதேநேரம் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை முழு அளவில் தனது கையில் மட்டுமே வைத்திருக்க விரும்புகிறார். சிஐஏ இலிருந்து பலரை வேலைநீக்கம் செய்திருக்கிறார். அந்த கட்டமைப்பினுள் ஊழல் நிலவுவதாகவும் பெருமளவு நிதியை அது விழுங்குகிறது என்றும் வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார். தனது முதலாவது ஆட்சிக் காலத்தின்போது தன்னை சுயாதீனமாக இயங்க விடாமல் செய்தது என்கிறார். இருந்தபோதும் அதையும் மீறி இந்த deep state வடிவத்துக்கு எதிராக அவரது முதல் ஆட்சிக்காலத்திலும் இருந்திருக்கிறார். அதனால் அவர் போர் எதையும் செய்யவில்லை. புட்டினோடு உறவாக இருந்தார். வடகொரியாவுக்கு விஜயம் செய்தார். இம்முறை ட்றம் கையில் எடுத்திருப்பது பொருளாதாரப் போரைத்தான். சீனாவினதும் ப்ரிக்ஸ் அமைப்பினதும் வளர்ச்சி அமெரிக்க பொருளாதாரத்தை சாய்த்துவிடலாம் என்ற அச்சம் அது. மீண்டும் அமெரிக்காவை மேல்நிலையில் நிறுத்துவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். இந்தப் பொருளாதாரப் போர் அரசியல் போர்களில்தான் முடியும் என பொருளாதார நிபுணரும் அரசியல் விஞ்ஞானியுமான ஜெப்ரி சக்ஸ் கூறுகிறார். சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்த ட்றம்ப் தாய்வானை இன்னொரு உக்ரைனாக மாற்றும் நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. deep state இனை மறுத்து, அதற்கு பதிலீடாக தனிப்பெரும் தலைவராக தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து ட்றம்ப் செயற்படுவதும்கூட ஒன்றும் ஜனநாயகப் பெறுமதியைத் தரப்போவதில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான். பொருளாதாரப் போர் அரசியல் போராக பரிணமிக்கும நிலைக்கு சாத்தியம் இருப்பதால், deep state முறைமைக்கும் ட்றம்ப் க்குமுள்ள முரண்பாடுகள் புஸ்வாணமாகியும் போகலாம். கனடா, மெக்சிக்கோ, சீனா என தொடங்கும் மோசமான வரிவிதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வந்தடையலாம் என ஏற்கனவே தயார்ப்படுத்தல்கள் ஆரம்பமாகிவிட்டன. டென்மார்க்கின் கிர்ின்லாண்ட் இனை வாங்க அல்லது அழுத்தம் கொடுத்து தனதாக்க ட்றம் புற்பட்டிருக்கிறார். பனாமாக் கால்வாயை மீள எடுக்கப் போகிறோம் என்கிறார். யமேய்க்கா BRICS இல் சேர தடைவிதிக்கிறார். தென்னாபிரிக்காவில் காணிச் சீர்திருத்த சட்டத்தை பயங்கரமானது என வர்ணித்து அந்த அரசுக்கு எச்சரிக்கை விடுகிறார். ட்றம்பின் வலதுகையும் தென்னாபிரிக்காவில் பிறந்தவருமான எலான் மஸ்க் இந்தச் சட்டத்தை இனவெறிச்சட்டம் என கேலிக்குரிய வியாக்கியானம் கொடுத்திருக்கிறார். 7.7 வீத வெள்ளையர்கள் தென் ஆபிரிக்காவின் 78 வீதமான விவசாய நிலங்களை சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர். நெல்சன் மண்டேலா சாதித்த அரசியல் விடுதலை காலத்திலிருந்து இன்றுவரை காணி மீள் பகிர்தல் என்பதை எந்த தென்னாபிரிக்க அரசும் சாத்தியமாக்க முடியாமல் திண்டாடுகிறது. அந்தளவுக்கு வெள்ளையின அதிகாரம் தென்னாபிரிக்க அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில் இப்போ தென்னாபிரிக்க அரசு கொண்டுவந்திருக்கிற காணிச் சீர்திருத்தச் சட்டத்தை இனவெறிச் சட்டம் என்று மஸ்க் சொல்வதையெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. https://sudumanal.com/2025/02/07/கேட்டுத்-தொலைக்க-வேண்டிய/
-
DeepSeek அதிரடி வெற்றியும் ஆயிரம் கேள்விகளும்
DeepSeek அதிரடி வெற்றியும் ஆயிரம் கேள்விகளும் பிப்ரவரி 7, 2025 -சைபர் சிம்மன் உலகம் முழுவதையும் கிழக்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சீனாவின் ‘டீப்சீக்’ செயலி. அதோடு, செயற்கை நுண்ணறிவுத் துறையின் (AI – ஏஐ) எதிர்காலம் தொடர்பான விவாதத்தில் சீனாவை மையத்துக்குக் கொண்டுவந்துள்ளது. டீப்சீக் (DeepSeek) ஏற்படுத்திய அதிர்வலைகள் பல மட்டத்தில் தொடர்கின்றன. கூடவே, பலவிதமான கேள்விகளும் தொடரவே செய்கின்றன! அறிமுகமான வேகத்தில் டீப்சீக் பெற்றுள்ள வெற்றி, ஏஐ துறையில், குறிப்பாக ஏஐ திறன் கொண்ட சாட்பாட்கள் (Chatbots) பிரிவில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சரியான போட்டியாகவும் அதிர்ச்சி வைத்தியமாகவும் பேசப்படுகிறது. அமெரிக்கப் பங்குச்சந்தையில் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளுக்கு ஏற்பட்ட இரத்தக்களரி நிலையில் இருந்தே டீப்சீக்கின் தாக்கத்தை உணரலாம். மேலும், ‘அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான எச்சரிக்கை மணி இது’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருப்பதில் இருந்து, இதன் அரசியல் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளலாம். சீனப் போட்டி: ஏஐ துறையில் சீனாவின் போட்டி தொடர்பான விவாதங்கள் புதிதல்ல என்றாலும், அதிகம் அறியப்படாத சீன புத்தாக்க நிறுவனமான டீப்சீக் தனது ‘ஆர்1’ சாட்பாட் (R1 Chatbot) மூலம், அமெரிக்க ஏஐ ஆதிக்கத்துக்கு எதிரான சவாலை உறுதிசெய்துள்ளது, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன், சராசரிப் பயனாளிகள் முதல் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் வரை பலதரப்பினரும் டீப்சீக் மூலம் சீனாவின் கை ஓங்குவதற்கான வாய்ப்பு பற்றிப் பரபரப்பாகப் பேசிவருகின்றனர். ‘சாட்ஜிபிடி’ (ChatGPT), ‘கிளாடு’ (Claude), ‘கூகுள் ஜெமினி’ (Google Gemini), ‘கிராக்’ போன்ற இன்னொரு ஏஐ சாட்பாட் தான் என்றாலும், டீப்சீக் வேறு எந்த ஏஐ சாட்பாட்டும் பெறாத கவனத்தைப் பெற்றுள்ளது. தடையும் செலவும்! இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஏஐ ஆய்வில் சீனா முன்னிலை பெற்றுவிடக் கூடாது என்னும் நோக்கத்தில், அந்நாட்டுக்கு அதிதிறன் வாய்ந்த ஏஐ சிப்களை விற்பனை செய்ய அமெரிக்கா தடை விதித்திருந்தது. ஏஐ செயலிகளை உருவாக்க வேண்டும் என்றால், பெரும் ஆற்றல் கொண்ட சிப்கள் அவசியம் எனக் கருதப்படுகிறது. இத்தகைய சிப் தயாரிப்பில் அமெரிக்காவின் என்விடியா (NVIDIA) நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. ஆனால், இந்தத் தடையை மீறி, முன்னணி ஏஐ சாட்பாட்களுக்கு நிகரான சாட்பாட்டை டீப்சீக் சத்தம் இல்லாமல் உருவாக்கிக் காண்பித்துள்ளது. இரண்டாவது காரணம், டீப்சீக் உருவாக ஆன செலவு. அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பில்லியன் டொலர் கணக்கில் முதலீடு பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, டீப்சீக் வெறும் 5.6 மில்லியன் டொலரில் (இந்திய ரூ.48.77 கோடியில்) சாட்பாட்டை உருவாக்கியிருக்கிறது. ஏஐ சாட்பாட்களை இயக்கும் மொழி மாதிரிகளை உருவாக்கவும், அவற்றுக்குப் பயிற்சி அளிக்கவும் பெரும் பொருள்செலவு தேவைப்படும் எனக் கருதப்படும் நிலையில், சொற்ப முதலீட்டில் டீப்சீக் தயாராகி உள்ளது. ஆனால், அதன் ஆற்றலும் செயல்பாடும் சாட்ஜிபிடிக்கே சவால் விடுகிறது. ஏஐ உலகின் தற்போதைய நிலையைக் குலைக்க இந்த இரண்டு காரணங்களுமே போதுமானது. வன்பொருள் தடை, பெரும் முதலீடு தேவை ஆகிய இரண்டு சவால்களையுமே, தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான அணுகுமுறையால் டீப்சீக் வென்றெடுத்திருக்கிறது. டீப்சீக் நிறுவனர் லியான் வென்பென் (Liang Wenfeng), தன்வசம் இருந்த பழைய ஆற்றல் குறைந்த என்விடியா சிப்களைக் கொண்டே, ஏஐ சாட்பாட் செயல்பாட்டுக்குத் தேவையான செயல்திறனைச் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதேபோல, பயிற்சி செயல்பாடுகளுக்கும் தொழில்நுட்பப் புதுமையாக்கத்தின் மூலம் செலவைப் பல மடங்கு குறைத்து, முதலீடு ஒரு பொருட்டல்ல என உணர்த்தியிருக்கிறார். பொதுவெளித் தன்மை: பொதுவாக, புதிய தொழில்நுட்பச் சேவைகளின் செயல்பாடு ரகசியமாக வைக்கப்படும். ஆனால் டீப்சீக், தனது செயல்முறை தொடர்பான நுட்பங்களை மிக விரிவாக ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டு, சாட்பாட்டையும் பொதுவெளியில் ஓபன் சோர்ஸ் (Open Source) தன்மையில் வெளியிட்டுள்ளது. அத்துடன், டீப்சீக் சாட்பாட்டை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து, தங்கள் விருப்பம் போலப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்பாட் நுட்பங்களைப் பயன்படுத்தப் பலவிதமான கட்டணம் கட்டப்பட வேண்டிய நிலையில், டீப்சீக் இலவசமாகக் கிடைப்பது கவனிக்கத்தக்கது. தணிக்கை சர்ச்சை: சாட்ஜிபிடியுடனான ஒப்பீட்டில் டீப்சீக் அதிக மதிப்பெண்கள் பெறக்கூடியதாக இருந்தாலும், சர்ச்சைக்குரிய தலைப்புகள் தொடர்பான கேள்விகளுக்கான அதன் பதில்கள் அல்லது பதில் அற்ற தன்மை கவலையளிக்கிறது. உதாரணமாக, சீனாவின் டியான்மென் சதுக்கம் போராட்டம் தொடர்பான கேள்விக்கு இந்த சாட்பாட் பதில் அளிக்காமல் நழுவிச்செல்கிறது. இதேபோலவே, சீனா தொடர்பான எந்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் இதன் பதில்கள் தணிக்கைக்கு உள்ளாகியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் போன்ற கேள்விகளுக்கும் டீப்சீக் சேவையின் பதில்கள் இதே வகையில் அமைந்துள்ளன. இணைய உலகில், சீனாவின் ‘ஃபயர்வால்’ தடுப்புகள் நன்கு அறியப்பட்டவை என்பதால், அதேபோன்ற தணிக்கை கொண்ட டீப்சீக் எப்படிச் சிறந்த சேவையாக இருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது. அதேவேளையில், எல்லா சாட்பாட்களுமே பலவித சர்ச்சைக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கப் பயிற்சி அளிக்கப்பட்டவைதான். எனவே, தகவல் தணிக்கை என்பது சாட்பாட்களின் பொதுவான பிரச்சினை. ஆனால், டீப்சீக்கைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது, மற்ற ஏஐ செயலிகள் அளவுக்குத் தணிக்கை செய்யப்படவில்லை என்கிற கருத்தும் இருக்கிறது. அதேபோல சீனா சார்பில் டீப்சீக் தகவல்களைத் திரட்டலாம் எனும் தனியுரிமை சார்ந்த அச்சமும் இருக்கிறது. இந்தக் காரணத்தால் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் டீப்சீக் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறது. சாட்பாட்கள் உள்ளிட்ட ஏஐ சேவைகள் திரட்டும் தகவல்கள் தொடர்பான தனியுரிமைப் பிரச்சினை எல்லா சேவைகளுக்கும் பொதுவானதே. சீன செயலிகள் விஷயத்தில் இது கூடுதலாக இருப்பதாகக் கருதலாம். இதனிடையே டீப்சீக் பயிற்சிக்காகத் தனது மொழிமாதிரி நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இது காப்புரிமை மீறல் என்றும் ஓபன் ஏஐ (Open AI) குற்றம்சாட்டியுள்ளது. சாட்ஜிபிடி பயிற்சிக்கான தகவல் திரட்டலில், காப்புரிமை மீறல் புகார்களுக்கு இலக்காகியிருக்கும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டு முரண்நகை என்றாலும், ஏஐ பயிற்சியில் காப்புரிமை தொடர்பான கேள்விகளின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. இந்தியாவுக்கு வாய்ப்பு: டீப்சீக் தொடர்பான விவாதங்கள் இப்படிப் பலவிதமாக அமைந்தாலும், ஏஐ தளத்தில் இது ஓர் எச்சரிக்கை மணி என்னும் கருத்தை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒருவிதமான செய்தியை உணர்த்தும் எச்சரிக்கை மணி. உதாரணமாக, ஏஐ சேவைகள் உருவாக்கத்துக்குப் பெரும் தொழில்நுட்ப ஆற்றலும், மாபெரும் முதலீடும் தேவை என்னும் எண்ணத்தை இது தகர்த்திருக்கிறது. ஏஐ சந்தையை இது அகலத் திறந்திருக்கிறது. சொற்பமான முதலீட்டில் சீன நிறுவனத்தால், வெற்றிகரமான ஏஐ சாட்பாட்டை உருவாக்க முடியும் என்றால், மற்ற நாடுகளுக்கும் இது சாத்தியமே என்னும் நம்பிக்கையையும் அளிக்கிறது. குறிப்பாக, இந்தியா கவனிக்க வேண்டிய விஷயம் இது. ஆனால், ஏஐ சேவைகள் செயலாக்கம் இன்னமும் மின்சார வடிவில் பெரும் ஆற்றலைக் கோருவதாகவே இருக்கிறது. இது ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்கமும் கணிசமானது. இந்த அம்சத்தில் டீப்சீக் எப்படி என்பது தெரியவில்லை. ஏஐ சேவைகளை இயக்கும் தரவு மையங்களின் அகோர மின்பசி நிச்சயம் ஒரு முக்கியப் பிரச்சினை. ஆக, ஏஐ ஆய்வு – சேவைகள் தொடர்பான பிரச்சினைகள் மீது டீப்சீக் புதிய வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம்! -இந்து தமிழ் திசை 2025.02. https://chakkaram.com/2025/02/07/deepseek-அதிரடி-வெற்றியும்-ஆயிரம/