Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஈரோடு கிழக்கு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்… திமுக வேட்பாளர் காட்டம்! 8 Feb 2025, 3:00 PM நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம் என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ள திமுக வேட்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 08) காலை முதல் நடைபெற்று வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து, திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஒன்பது சுற்றுகள் முடிவில் திமுகவின் சந்திரகுமார் 61,880 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 13,456 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 48,424 வாக்குகளாக உள்ளது. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் சென்னை அண்ணா அறிவாலயத்திலும், ஈரோடு கிழக்கு தொகுதியிலும் ’பெரியார் வாழ்க’ என கோஷமிட்டு திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். திமுக முதலிடத்தில் உள்ளது! இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேசுகையில், “இந்த நேரத்தில் எங்கள் தலைவர் ஸ்டாலின் சொன்னதையே சொல்கிறேன். ‘உதிரிகளை களத்தில் இறக்கியிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார். அதுதான் நடந்துள்ளது. எங்களுக்கு எதிரியே இல்லை என்று நான் நினைக்கவில்லை. தேர்தலில் 46 பேர் போட்டியிட்டோம். அதில் முதல் கட்சியாக பெரும் வாக்கு வித்தியாசத்தில் திமுக முதலிடத்தில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சி ஒன்று தங்களது கட்சியில் உள்ளவர்களுக்கு சில கட்டளைகள் விதித்ததாக கருதுகிறோம். அதேநேரத்தில் நோட்டாவுக்கு வாக்குகள் அதிகரித்ததால் தேர்தலை புறக்கணித்துள்ளார்கள் என்று சொல்ல முடியாது. திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்தது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாத போது, நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்; திமுக யாரைக் கண்டும் அஞ்சியதில்லை. அஞ்சப்போவதும் இல்லை” என்று சந்திரகுமார் தெரிவித்தார். https://minnambalam.com/political-news/ntk-gets-accidental-votes-dmk-attack/
  2. டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி! 8 Feb 2025, 3:24 PM புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (பிப்ரவரி 08) தோல்வியடைந்தார். டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. பாஜக 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 2 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பின்னடைவை சந்தித்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதும், பின்னடைவை சந்திப்பதுமாக இருந்தார். இறுதியில், 14-வது சுற்று முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் 25,999 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாகிப் சிங், 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் 30,088 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டெல்லியில் தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், தோல்வி அடைந்திருப்பது அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கெஜ்ரிவால் தோல்வி தேசிய அளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்! தோல்வியை அடுத்து கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மக்களின் தீர்ப்பை நாங்கள் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பாஜகவை வாழ்த்துகிறேன். மேலும் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்புத் துறையில் நாங்கள் நிறைய பணிகளைச் செய்துள்ளோம். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக மட்டுமல்லாமல், மக்களிடையே இருந்து அவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம்” என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/arvind-kejriwal-lost-delhi-assembly-election/
  3. @suvy ஐயா, நீங்கள் உங்கள் உடல்நிலையில் கவனம் எடுங்கள். மற்றையவை எல்லாம் தேக ஆரோக்கியத்திற்குப் பின்னர்தான்.🙏🏽
  4. கடையை இழுத்துப் பூட்டலாம் என்று நினைக்கின்றேன்🙃
  5. வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’ February 8, 2025 12:00 pm உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம்(C3S) நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி ஜனவரி 2025 உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது. 2025 ஜனவரியில் உலக வெப்பநிலையை தணிக்கக் கூடிய ‘லா நினோ’ வளிமண்டலப் போக்கு நிலவினாலும், புவியின் வெப்பநிலை இதுவரை எந்தவொரு ஜனவரி மாதமும் இல்லாத அளவில் பதிவாகியுள்ளது 2025 ஜனவரி மாதத்தில் சராசரி வெப்பநிலை, தொழில்துறை புரட்சிக்கு முன் (1850 க்கு முன்) பூமியின் சராசரி வெப்பநிலையை விட 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. 1991-2000 ஜனவரி சராசரி வெப்பநிலையை விட 2025 ஜனவரி சராசரி வெப்பநிலை 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. ஆர்க்டிக் கடல் பனி ஜனவரி மாதத்திற்கான மிகக் குறைந்த அளவை எட்டியது. இது சராசரியை விட 6% குறைவாகும். “ஜனவரி 2025 விசித்திரனமான மாதம்” என்று C3S இன் துணை இயக்குநர் சமந்தா பர்கெஸ் தெரிவித்துள்ளார்.. https://oruvan.com/january-is-the-warmest-month-in-history/
  6. தூதர்களாக அரசியல் நியமனங்கள் – கடுமையாக எதிர்க்கும் இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் February 8, 2025 10:06 am உலகின் முக்கிய நாடுகளுக்கான தூதர்களாக அரசியல் நியமனங்களை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை வெளிநாட்டு சேவைக்குள் அனுபவம் வாய்ந்த, தொழில்முறை வெளிநாட்டு சேவை அதிகாரிகள் இருக்கும்போது, இராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் வழங்கப்படுவதை கண்டித்து இலங்கை வெளியுறவு சேவை சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு சேவையாளர் சங்கம் என்பது நாட்டின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்ட ஒரு சேவை என்பதை அந்த அறிக்கை நினைவு கூர்ந்தது. இதேவேளை, தொழில்முறை வெளியுறவு சேவை அதிகாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல் நியமனங்களை மேற்கொள்வதன் மூலம் இராஜதந்திர சேவை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தூதரகங்களுக்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்வது, தேர்தலின் போது அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கு முரணானது என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தலின் போது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கையில், தொழில் இராஜதந்திரிகளின் தொழில்முறை சிறப்பை அடிப்படையாகக் கொண்ட புள்ளிகள் முறையின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இராஜதந்திர சேவைக்கான அரசியல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரிடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அத்தகைய கலந்துரையாடலை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://oruvan.com/sri-lanka-foreign-service-association-strongly-opposes-political-appointments-as-ambassadors/
  7. மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்! மேற்குலகைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிப்பதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கினார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். போர் முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வந்தனர். அமெரிக்காவில் இருந்தும் குழுவொன்று வந்தது. போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம் அவர்கள் வலியுறுத்தினர். ஏனெனில் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல முயற்சித்தனர். அவர்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். 1987 வடமராட்சி சமரின்போது இந்தியா பருப்புப் போட்டவேளை, ஜே.ஆர். ஜயவர்தன போரை நிறுத்தினார். அன்று போரை நிறுத்தி இருக்காவிட்டால் 4, 5 நாட்களில் போர் முடிந்திருக்கும். வெளிநாடுகளுக்குப் பணிந்து அன்று போரை நிறுத்தினர். மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை. மேற்குலகைப் பகைத்துக்கொண்டு போரை முடிக்க அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார். அதனால்தான் மகிந்தவுடன் மேற்குலகம் பகையாக உள்ளது. தமிழ்ப் பிரிவினைவாத டயஸ்போராக்களும் அவர்மீது பகை வைத்துள்ளனர். இதனால் மகிந்தவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=311429
  8. பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்; வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு – சீமான் கண்டனம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில், அந்த வேதனை செய்தி மறைவதற்குள் மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது. நாள்தோறும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத்தவறி, சட்டம் ஒழுங்கை முற்றுமுழுதாக சீரழித்துள்ள தி.மு.க. அரசின் நிர்வாகத் திறனற்ற அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் வார்த்தைகளால் சொல்லிமாளக்கூடியதல்ல. அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி கலைஞர் பேருந்து நிலையம் வரையில் பெண்கள் எங்குமே பாதுகாப்பாகச் செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் கொடுஞ்சூழல் நிலவுகிறது.கடந்த 23.12.24 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை, 01.02.25 அன்று சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உதவி கேட்டு வந்த 13 வயது சிறுமிக்கு மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் பாலியல் தொல்லை, 14.01.25 அன்று மதுரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 18.01.25 அன்று கரூரில் பள்ளி மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை, 21.01.25 அன்று திருப்பூரில் அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 24.01.25 அன்று திண்டுக்கல் நத்தம் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை, 18.01.25 அன்று தென்காசி வீராணத்தில் காவலர்களால் இளம்பெண் பாலியல் துன்புறுத்தல், 25.01.25 அன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் மகிழுந்தில் பயணித்த பெண்களை வீடுவரை விரட்டி சென்ற கொடுமை, 03.02.25 சேலம் தலைவாசலில் பள்ளி மாணவிக்கு முதியவர் பாலியல் தொல்லை, 05.02.25 கிருஷ்ணகிரி பர்கூர் அருகே பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, 05.02.25 அன்று கள்ளக்குறிச்சியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தூண்டுதலில் பெண் கிராம நிர்வாக அலுவலர் முகத்தில் சாணியை வீசி கீழே தள்ளி கொடுந்தாக்குதல், 05.02.25 அன்று கலைஞர் பேருந்து நிலையத்தில் நின்ற 19 வயது பெண் பாலியல் துன்புறுத்தல், 05.02.25 அன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 8 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, 06.02.25 அன்று மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி 4-ம் வகுப்பு சிறுமிக்கு ஆசிரியர், தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை, 06.02.25 அன்று சேலம் அரசு பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை, 18.11.24 அன்று திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே 3-ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை, 21.11.24 அன்று நாகர்கோவிலில் பள்ளி மாணவிக்கு அரசு பேருந்தில் நடத்துநர் பாலியல் தொல்லை, 07.12.24 அன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை, 21.12.24 அன்று சங்கரன்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, 26.12.24 அன்று ராஜபாளையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை என தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது பெருங்கொடுமையாகும். கடந்த 31.12.22 அன்று சென்னை, விருகம்பாக்கத்தில் கனிமொழி பங்கேற்ற தி.மு.க. நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருந்த பெண் காவலர் ஒருவருக்கு தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்தது முதல் நேற்று முன்தினம் (05.02.25) தமிழ்நாடு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கல்பனா நாயக் அவர்களே தம்மை கொல்ல சதி நடப்பதாக புகார் கூறியது வரை பெண் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற மிக மோசமான சூழல் தமிழ்நாட்டில் உள்ள நிலையில் தி.மு.க. ஆட்சியில் சாதாரண பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? வீட்டை விட்டு வெளியில் சென்ற பெண் குழந்தைகள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா? என்று பெற்றோர் ஒவ்வொரு நாளும் பரிதவிக்கும் கொடுமையான நிலைக்கு தமிழ்நாட்டு மக்களைத் தள்ளிவிட்டுள்ளது தி.மு.க. அரசு. பெண்களுக்கு எதிரான இத்தனை கொடுமைகளையும் தடுக்கத் தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு, பெண் சுதந்திரம், பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என்றெல்லாம் பேசுவதற்கு வெட்கி தலைகுனிய வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமலாக்கி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலமாக மாற்றி இருப்பதுதான் தி.மு.க. அரசின் நான்கு ஆண்டு காலச் சாதனையா? இதுதான் உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் வேளையில் காவல்துறையை தனது நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள் பற்றி துளியும் கவலையின்றி, திருநெல்வேலியில் அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட்டுகொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம். இனியும் இத்தகைய மெத்தனப்போக்கு தொடர்ந்தால் பெண்களும், குழந்தைகளும், பெற்றோரும் அல்லற்பட்டு ஆற்றாது சிந்தும் வேதனைக் கண்ணீரின் வெப்பத்தில் தி.மு.க. ஆட்சி அழிவது உறுதி! ஆகவே, போச்சம்பள்ளி, மணப்பாரப்பட்டி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெற்ற மகள்போல போற்றிப் பாதுகாக்க வேண்டிய பிஞ்சு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிச் சிதைக்கும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மிகக்கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடராவண்ணம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்கிவிட வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=311356
  9. இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்! இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கோரி, இந்திய நாடாளுமன்றத்துக்கு முன்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மீனவர் பிரச்சினையை ஒரு பிராந்திய பிரச்சினையாக கருதக் கூடாது எனவும், இது ஒரு தேசிய பிரச்சினையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இந்திய மீனவர்கள், கைது செய்யப்பட்டு உயிரிழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள போதிலும் மத்திய அரசாங்கம் அதற்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தவறியுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இதேவேளை, மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/396138/இந்திய-இலங்கை-மீனவர்-பிரச்சினைக்கு-நிரந்த-தீர்வு-கோரி-இந்திய-நாடாளுமன்றத்துக்கு-முன்பாக-ஆர்ப்பாட்டம்
  10. இஸ்ரேலின் 3 கைதிகளுக்காக 183 பலஸ்தீன கைதிகள் விடுதலை! இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பகுதியாக, 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகள் காசாவில் விடுவிக்கப்பட உள்ளனர். மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கைதிகள் 5 ஆவது தடவையாக விடுவிக்கப்படவுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் 12,000க்கும் மேற்பட்ட சடலங்களில் சில இஸ்ரேலிய கைதிகளின் எச்சங்கள் இருப்பதால், அவற்றை ஒப்படைக்க முடியாமல் போகலாம் என்று ஹமாஸ் கூறியுள்ளது. மேலும் இஸ்ரேல் பளு அதிகமான உபகரணங்கள் என்கிளேவ் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்று காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 6.75 பில்லியன் டொலர் மதிப்புள்ள குண்டுகள், வழிகாட்டுதல் கருவிகள் மற்றும் உருகிகள், 660 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஹெல்ஃபயர் ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்வதில் அமெரிக்க வெளியுறவுத்துறை கையெழுத்திட்டுள்ளது https://www.hirunews.lk/tamil/396124/இஸ்ரேலின்-3-கைதிகளுக்காக-183-பலஸ்தீன-கைதிகள்-விடுதலை
  11. அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது - சத்தியலிங்கம் எம்.பி நாட்டில் உள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்தமைக்கு வெறுமனே ஊழல் மாத்திரமே காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டார். எனவே இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு உள்ளதாகவும் பத்மநாதன் சத்தியலிங்கம் கூறினார். தற்போது நாட்டின் பொருளாதார பிரச்சினையைத் தான் முதலில் தீர்க்க வேண்டும் எனவும் அதற்குரிய வழிவகைகளையே மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் கூறியிருக்கின்றமை பாரதூரமான விடயம் என சத்தியலிங்கம் சுட்டிக்காட்டினார். அரசியல் தீர்வு,புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இப்போதைக்கு சிந்திக்கவில்லை எனக் கூறுவதும் பாரதூரமான விடயம் எனக் குறிப்பிட்டார். இன்றைய தினம் சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான காணொளி கீழே.. https://www.hirunews.lk/tamil/396126/அரசியல்-பிரச்சினையைத்-தீர்க்காமல்-ஒருபோதும்-பொருளாதாரத்தைக்-கட்டியெழுப்ப-முடியாது-சத்தியலிங்கம்-எம்-பி
  12. கடவுச்சீட்டு விவகாரம் - யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி! கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது ,தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/கடவுச்சீட்டு_விவகாரம்_-_யாழ்_மக்களுக்கு_காத்திருக்கும்_நற்செய்தி!
  13. நாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்தாகியுள்ளது adminFebruary 8, 2025 நாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்தாகியுள்ளது . ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான தனிநபர் பிரேரணை, இன்று (7) பிற்பகல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/210964/
  14. நான் ஊரில் இரண்டு தவணை ஏ எல் படித்தேன். ஹாட்லியில் கணேசலிங்கம் மாஸ்ரரிடம் தூய கணிதம், உடுப்பிட்டி பீக்கோன் ரியூசனில் நல்லையா மாஸ்ரரிடம் தூயகணிதம், பிரயோக கணிதம், தில்லையம்பலம் மாஸ்ரரிடம் தூயகணிதம் என்று எல்லோரையும் போல ஓடுப்பட்டுப் படித்தேன். ஓ எல் ரிசல்ட்ஸ் தந்த செருக்கும், கூவிற வயசில் இருந்ததாலும் ஏ எல் படிப்பில் அக்கறை காட்டவில்லை. கெமிஸ்ற்றி, பிஸிக்ஸ் படிக்க வந்த பெண்பிள்ளைகள் மேல்தான் முழு நாட்டமும் போனது!🥰 பாடசாலையில் முதல் வரிசையில்தான் இருப்பேன். கணேசலிங்கம் மாஸ்டர் வந்து முதல்நாளே மற்றைய இடங்களில் படிப்பிக்காத தூயகணிதத்தில் கடினமான graph sketching (தமிழ் இப்ப தெரியாது) கேள்விகளைத் தந்தார். சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரித்தான் இருந்தது. பின்னால் திரும்பி அவரிடம் ரியூசனில் படிக்கும் நண்பனை எப்படிச் செய்வது என்று கேட்டேன். அவன் மெதுவாக சொல்ல ஆரம்பிக்க, கணேசலிங்கம் மாஸ்ரர் எனது மேசையை நோக்கி வந்தார். கன்னம் பழுக்கப்போகின்றது என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வந்து எனது மேசையில் சோக்கால் இரண்டு கோடுபோட்டுவிட்டு கரும்பலகைக்குப் போய் ஒரு கேள்வியை விளங்கப்படுத்தினார். அதை அவர் எனக்காகத்தான் செய்தார் என்று புரிந்துகொண்டேன். மிச்சக் கேள்வி எல்லாவற்றையும் நான் கிறுகிறுவென்று செய்து முடித்தேன்😎 அவர் சொல்லித்தந்த method ஐ நான் இன்னமும் மறக்கவில்லை. பலருக்குச் சொல்லிக்கொடுத்திருக்கின்றேன், எனது வாரிசுகள் உட்பட! கணிதத்தில் இன்றுவரை குன்றாத காதலுக்கு ஓ எல் வரை படிப்பித்த சர்வானந்தா மாஸ்ரர், நம்ம ஊர் அரசன் வாத்தி, ஏ எல்லில் குறுகிய காலம் என்றாலும் கணேசலிங்கம் மாஸ்டர், நல்லையா மாஸ்டர், தில்லையம்பலம் மாஸ்டர் ஆகியோர் எனது ஆசான்கள். அதே போல இலண்டனிலும் இரண்டு ரீச்சர்கள் எனது மதிப்புக்குரிய ஆசான்களாக இருந்ததால் 100க்கு கீழே இலண்டன் ஏ லெவலில் எடுத்ததில்லை!
  15. தேர்தல் முடிந்து விட்டதுதானே.. பிரச்சாரத்திற்குப் போனவர்கள் எல்லாம் வீட்டுக்குப் போய் நாலு நாட்கள் ஆகிவிட்டது!😃 @வீரப் பையன்26ஐ இன்னமும் காணவில்லை! போட்டி விதிகளின்படி பத்துப் பேருக்கு மேலே கலந்துகொண்டால்தான் யாழ் களத்தில் போட்டி தொடரும்😁
  16. கணேசலிங்கம் மாஸ்ரரிடம் ஏ லெவல் படித்தவர்களுக்கும் இப்படியான அனுபவம்தான்.. கணிதம் நன்றாக ஓடவில்லை என்றால் தொடையில் மயிர் முளைத்திருந்தாலும் அவருக்குப் பயந்து அரைக்காற்சட்டையுடன் வகுப்புக்குப் போனதாக எனது அண்ணாவின் வகுப்புத்தோழன் (நமக்கு நண்பன்!) சொல்லியிருந்தான்!
  17. சுவி ஐயாவின் கதை ஒரு மார்க்கமாகப் போகின்றது. தொடருங்கள்.. நம்ம பாஷையில் ஜவுளிக்கடையை புடவைக்கடை என்றுதானே சொல்வது?🥹
  18. மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம் கையளிக்கும் - டிரம்ப் 07 Feb, 2025 | 11:05 AM காசாவில் மோதல்கள் முடிவடைந்ததும் அந்த பகுதியை இஸ்ரேல் அமெரிக்காவிடம் கையளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப் தெரிவித்துள்ளார். காசாவை அமெரிக்கா கையகப்படுத்துவது குறித்த டிரம்பின் கருத்திற்கு மாறாக அவரது நிர்வாகத்தின் அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். சண்டை முடிவடைந்ததும் இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கினை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என தெரிவித்துள்ள அவர் பாலஸ்தீனியர்களை வேறு பகுதிகளில் மீள்குடியேற்றும் தனது திட்டத்தினை மீள வலியுறுத்தியுள்ளார். இதற்கு அமெரிக்க இராணுவத்தினர் அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206044
  19. பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 07 Feb, 2025 | 09:16 AM பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக பலாலியில் மேலும் நிலத்தை அரசாங்கம் அபகரிக்கப் போவதாக தினக்குரல் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக உள்ளது. தற்போது பலாலி ஓடுபாதை 1,300 மீற்றராகவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3,400 மீற்றராகவும் ரத்மலானை விமான ஓடுபாதை 1700 மீற்றராகவும் உள்ளது. தற்போது உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள உள்ள பலாலி விமான நிலையத்திற்கான விமான ஓடுபாதையை மேலும் 2,400 மீற்றர் வரை நீடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இரத்மலானை விமான ஓடுபாதையின் அளவை விட அதிகமானதாகும். அரசாங்கம் மேலும் காணிகளை அபகரிக்கும் நோக்கில் செயற்படுவதால் பலாலி பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்காக காத்திருக்கும் பலாலி மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று கூறியிருந்தாலும், உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் பலாலி பகுதிக்குள் விமான ஓடுபாதை நீடிப்புக்காக மேலும் காணிகளை அபகரிக்க இந்த அரசாங்கம் சிந்திக்கின்றது. இந்த விடயங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் கலந்துரையாடப்பட வேண்டும். யாழ்ப்பாண மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும். எங்களுக்கும் கருத்துகள் உள்ளன. நீங்கள் உண்மையில் மிகவும் திறமையான சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கப் போகிறீர்கள் என்றால் உண்மையில் யாழ்ப்பாணம் பொருத்தமற்ற இடமாகும். அது ஒரு மூலையில் உள்ளது. வன்னியில் எங்காவது கட்டலாம். வவுனியாவில் அல்லது அனுராதபுரத்தில் அமைக்கலாம், கிழக்கில் அமைக்கலாம். மத்திய பகுதி யொன்றில் அமைக்கவேண்டும். ஏதோ ஒரு மூலையில் அமைக்கத் தேவையில்லை. எனவே இவை விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகும். மேலும், பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, அரசாங்கம் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/206030
  20. மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளை யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்துவிட்டார்கள் -இராமநாதன் அச்சுனா ! ShanaFebruary 7, 2025 யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள் சக்தியின் மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளை யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்துவிட்டார்கள் இந்த மூன்று கத்தரித்தோட்ட வெருளிகளினால் யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை. யாழ்ப்பாணத்தில் பிறக்காத அமைச்சர் சந்திரசேகர் தான் சண்டித்தனம் செய்து என்னை ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கலாம் 44 ஆயிரம் போராளிகள் உயிர் கொடுத்த எங்களின் தேசியத்தலைவரின் வழியில் நின்ற என்னை அச்சுறுத்தலாம் என நினைப்பது மிகவும் நகைச்சுவையானது என யாழ் மாவட்ட சுயேட்சை உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (6) நடைபெற்ற புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நான் உரையாற்றும் போது அமைச்சர் சந்திரசேகர் சபையில் இருப்பார் என நினைத்தேன். அவருக்கு தெளிவாக ஒன்றை சொல்கின்றேன். நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன். தேசியத் தலைவன் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையை பார்த்து வளர்ந்தவன். நாங்கள் சர்க்கஸ் கூடாரம் வைத்தாலும் அங்கு கழுதைகள், குதிரைகள் வந்த நின்றாலும் அவற்றுடன் சேர்ந்து படம் எடுப்பதற்கும் தயாராகத்தான் இருக்கின்றோம். ஆனால் அவ்வாறான கழுதைகளை எங்களின் தலைவராக ஏற்றுகொள்ள யாழ் மண்ணில் பிறந்த எந்த தமிழரும் தயாரில்லை. யாழ்ப்பாணத்தில் பிறக்காத அமைச்சர் சந்திரசேகர் சண்டித்தனம் செய்து என்னை ஏதாவது செய்யலாமா என யோசிக்கலாம். 44 ஆயிரம் போராளிகள் உயிர்கொடுத்த எங்களின் தேசியத்தலைவரின் வழியில் நின்ற என்னை வெருட்டலாம், அச்சுறுத்தலாம் என நினைப்பது மிகவும் நகைச்சுவையானது. எமது இனத்தை காத்த ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக இன்றுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம். அவரின் குழந்தைக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த அரசு கூட அவரை விடுதலை செய்யவில்லை. முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்த இராணுவத்தை பாதுகாக்கும் நிலைமிக்குத்தான் தேசிய மக்கள் சக்தி அரசு போயுள்ளது. படுகொலைகளுக்கான எந்த பொறுப்புக் கூறல்களும் இல்லை. யாழ்ப்பாணத்தில் 3000 வேலையில்லாத பட்டதாரிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்க உங்களினால் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க முடியுமா? எமது மக்கள் தவறுதலாக இந்த அரசின் 3 கத்தரித்தோட்ட வெருளிகளை தேர்வு செய்துவிட்டார்கள் இந்த 3 கத்தரித்தோட்ட வெருளிகளினால் யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்திருக்கின்றதா என்றால் இல்லை. மனம் போன போக்கில் இவர்கள் உள்ளார்கள். கடற்புலி படை, நிலப்படை,கரும் புலிப்படை, வான்படை என வைத்திருந்ததுதான் எமது தமிழீழம் .எமது தேசியத்தலைவர் பிறந்த வல்வெட்டித்துறைக்கும் எனக்கு உங்களிலும் விட அதி கூடிய வாக்குகளை வழங்கிய சாவகச்சேரிக்கும் ஜனாதிபதி போய் சர்க்கஸ் கூடாரத்தில் நின்று ஆடுவதற்கான தேவையை யாழ் மண் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் பாதையோர வியாபாரிகள், பஸ் நிலையம் என பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றீர்கள். நான் உங்களுக்கு ஆதரவாக இருந்தவன். ஆனால் ஒருங்கிணைப்புக்குழு கட்டத்தில் என்னை பங்கேற்க விடக்கூடாது என்பதற்காக 23 ஆம் திகதி நடந்த சம்பவத்திற்காக 29 ஆம் திகதி கைது செய்தீர்கள். முடிந்தால் அமைச்சர் சந்திரசேகரை வரச் சொல்லுங்கள் என்றார். https://www.battinews.com/2025/02/blog-post_835.html
  21. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முக்கிய வெளிநாட்டுப் பணிகளுக்கான அரசியல் நியமனங்களை செய்கிறது editorenglishFebruary 7, 2025 இலங்கை வெளிநாட்டுச் சேவையை அரசியலாக்குவது குறித்து கடந்தகால விமர்சனங்கள் இருந்தபோதிலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் முக்கிய தூதரகங்களுக்குத் தலைமை தாங்குவதற்கான அரசியல் நியமனங்களைச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், வெளிவிவகார அமைச்சு, அமெரிக்காவுக்கான தூதுவராக தொடர்ந்து பணியாற்றும் திரு.மகிந்த சமரசிங்கவைத் தவிர, ஏனைய அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட அனைத்து இலங்கை தூதுவர்களையும் திரும்ப அழைத்தது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிபெறும் செயன்முறைக்காகவே மகிந்த சமரசிங்க அவரது பணியைத் தொடர அனுமதிக்கப்படுகிறார் என தற்போதைய அரசாங்கம் கூறிவந்தது. இருந்தபோதும், முக்கியமான தலைநகரங்களில் இலங்கையின் தூதரகங்களுக்குத் தலைமை தாங்குவதற்கு மேலும் சில அரசியல் நியமனங்களைச் செய்ய அரசாங்கம் இப்போது முயன்றுள்ளமை தெரிய வருகின்றது. அவர்களில், டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலைவராக பேராசிரியர் ஜனக குமாரசிங்க பரிந்துரைக்கப்படுவார் என்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி உதேனி ராஜபக்ச தென்னாபிரிக்காவிற்காக பரிந்துரைக்கப்பட்டுவார் என்றும் கூறப்படுகிறது. நிமல் சேனாதீர ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகராக தெரிவு செய்யப்படுகிறார் என்றும் பேராசிரியர் அருஷா குரே ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்குப் பரிந்துரைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியான சோனாலி சமரசிங்கவை நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதுக்குழுவின் அமைச்சர் ஆலோசகராக நியமிப்பதாக அண்மையில் முடிவெடுக்கப்பட்டதாகவும் இராசதந்திரி மஹிசினி கொலோன், புதுடெல்லிக்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. https://globaltamilnews.net/2025/210846/
  22. ‘GovPay’ வசதி இன்று ஜனாதிபதியால் தொடக்கிவைக்கப்படுகிறது editorenglishFebruary 7, 2025 அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடக்க‌ நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வானது இன்று (7/2/2025) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக் கூடியவாறு இத்திட்டமானது அறிமுகப்படுத்தப் படுகின்றது. இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களானவை சீரமைத்து நவீனமயப்படுத்தப்படுமென‌ எதிர்பார்க்கப்படுகிறது. இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. தரவு அடிப்படையில் முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு, மிகவும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரசு சேவை வழங்கலுக்கு இந்தத் திட்டமானது வழிவகுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ண்சார் (டிஜிட்டல்) பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கருத்து வௌியிடுகையில், “இந்தக் கட்டண வசதி தற்போது 16 அரச சேவைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 30 சேவைகளுக்கு இச் சேவையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென எதிர்பாரக்கிறோம். எதிர்காலத்தில், இந்த முறை மூலம் பணம் செலுத்துவதற்கான செலவை 15 ரூபாவினால் குறைக்கவும் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.” https://globaltamilnews.net/2025/210843/
  23. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவது இலங்கைக்குச் சாதகமானது editorenglishFebruary 7, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார். இந்த மாதம் 24 ஆம் திகதி தொடங்கவுள்ள‌ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்த முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தீர்மானங்களை இயற்றுவதும் கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கான திட்டங்களைத் தொடங்குவதும் அமெரிக்காவே. இப்படியாக அமெரிக்காவின் முனைப்பில் கொண்டுவரப்படும் தீர்மானங்களிற்கு மேற்கத்தைய நாடுகள் ஆதரவளித்து வந்தன‌. அமெரிக்கா இந்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகிக் கொண்டால் அது இலங்கைக்கு நன்மைபயப்பதாகவே அமையும். நமது எதிர்கால மனித உரிமைகள் திட்டத்திற்கு இது நல்லதொரு தொடக்கமாகும். தேசிய திட்டத்தை நாமே சொந்தமாக முன்வைக்க முடியும். இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவு கிடைத்தால், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தை முறியடிக்க முடியும்” என கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/210840/
  24. பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில் ராஜபக்ச- கருணா பிள்ளையானை கொலை செய்ய திட்டமிடுகின்றார் என தெரிவித்த சுரேஸ்சாலே- டெய்லி மிரர் Published By: Rajeeban 06 Feb, 2025 | 04:41 PM nirmala kannakara உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய புலனாய்வு பிரிவிற்காக பணியாற்றிய முன்னாள் உயரதிகாரிகள் சிலருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலானவுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த அதிகாரிகள்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டiயை அனுபவித்தவேளை பிள்ளையான் சிறையிலிருந்தவாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என ஆசாத்மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சிக்கும் தெரிவித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். ஆசாத்மௌலானா தெரிவித்துள்ள விடயங்கள் சிஐடி அதிகாரி ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ள விடயங்களுடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது. 2024 ஜூன் 13ம் திகதி டெய்லிமிரருக்கு வழங்கிய விசேட பேட்டியில் தேசிய புலனாய்வு சேவையும் இராணுவபுலனாய்வு பிரிவினரும் சிஐடியினரை தவறாக வழிநடத்தியிருக்காவிட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக உள்ள செனிவிரட்ண தெரிவித்திருந்தார். தேசிய புலனாய்வு பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் சிஐடியினரை தவறாக வழிநடத்தாமல் சரியான தகவல்களை வழங்கியிருந்தால் நானும் எனது சிரேஸ்ட அதிகாரிகளும் தாக்குதலை தவிர்த்திருப்போம் என அவர் குறிப்பிட்டிருந்தார். 2018 நவம்பர் 30 திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸ்கான்ஸ்டபிள்கள் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் சிஐடியினரை தவறாக வழிநடத்தியிருந்தனர் என தெரிவித்திருந்தார். இதுவே ஜஹ்ரானின் நடவடிக்கைகளின் திருப்புமுனையாக அமைந்ததுடன்,ஐந்து மாதங்களின் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு காரணமாக அமைந்தது. இந்த கொலைகளிற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களே காரணம் என புலனாய்வு பிரிவினர் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டினார்கள்,இதன் மூலம் சிஐடியினர் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் செயற்பட்ட முஸ்லீம் அமைப்பின் மீது தமது கவனத்தை திருப்புவதை தடுத்தார்கள் என செனிவிரட்ண தெரிவித்திருந்தார். 2018 டிசம்பர் 5, 8 . 14ம் திகதிகளிலும், 2019 ஜனவரி 3ம் திகதியும் புலனாய்வு அமைப்புகள் பொய் அறிக்கைகளை சிஐடிக்கு அனுப்பியுள்ளன என ரவி செனிவிரட்ண தெரிவித்திருந்தார். உயிரிழந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை 2018 நவம்பர் 26ம் திகதி நினைவுகூரூவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமையினாலேயே முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள்இந்த கொலைகளை செய்தனர் என அந்த அறிக்கைகள் தெரிவித்தன. பல தடவை பிள்ளையானை விசாரணை செய்துள்ளதாக தெரிவித்துள்ள சிஐடியினர் இந்த சதி முயற்சியில் தொடர்புபட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கம் கொலை தொடர்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக ஜஹ்ரான் குழுவினரின் உதவியை பெறுவதற்கு பிள்ளையான் உதவினார் என பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்தார். பிரிட்டனை தளமாக கொண்ட சனல்4 2023 செப்டம்பரில் சர்ச்சைக்குரிய ஆவணப்படமொன்றை வெளியிட்டது.இந்த ஆவணப்படத்தில் பிள்ளையான் மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய முக்கிய பாதுகாப்பு அதிகாரியொருவர்ஜஹ்ரானையும் அவரது குழுவினரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை பிள்ளையான் செய்தார் என ஆசாத் மௌலானா தெரிவித்திருந்தார். 2018 ஜனவரிமாதம் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வனாத்தவில்லுவில் உள்ள லக்டோவத்தை என்ற தென்னந்தோட்டத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது என ஆசாத் மௌலானா தெரிவித்திருந்தார். 2022 டிசம்பர் 30 ம் திகதி ஜெனீவாவில் ஆசாத் மௌலானா வழங்கிய அறிக்கையின் பிரதி எங்களிடம் உள்ளது ( டெய்லிமிரர்)சனல் 4வெளியிட்ட ஆவணப்படமும் உள்ளது. உள்ளக தகவல்களை வழங்கும் நபர் ஒருவர் தெரிவித்த விடயங்களை வைத்தே பின்வரும் விடயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பிணை வழங்குதல் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம்24ம் திகதி மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் பிள்ளையானிற்கு எவ்வாறு பிணை வழங்கியது என்பது குறித்த விபரங்களை தெரிவித்த உயர் அதிகாரியொருவர், ராஜபக்ச சகோதரர்களில் மேலும் ஒருவரை இலங்கையின் ஜனாதிபதியாக்குவதற்காக பிள்ளையான் செய்த உதவிக்காக பிள்ளையானிற்கு பிணை கிடைப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் நீதித்துறையை சேர்ந்த மூவரிடம் பசி;ல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்தார் என தெரிவித்தார். 2007 நவம்பர் 2ம் திகதி போலிகடவுச்சீட்டில் பிரித்தானியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த நாட்டில்கைதுசெய்யப்பட்டார். இலங்கையின் தேசிய புலனாய்வு சேவையே இந்த கடவுச்சீட்டை வழங்கியிருந்தது. கருணா அம்மானை அகற்றிவிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக பிள்ளையானை கொண்டுவருவதற்கு இலங்கையின் தேசிய புலனாய்வு அமைப்பு விரும்பியது. கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக விளங்கிய சுரேஸ்சாலே பிள்ளையானிற்கு தெரிவித்தார் என இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். கருணா அம்மானின் மெய்ப்பாதுகாவலர்களை பிள்ளையான் கொலை செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பிள்ளையானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது அவர் அதன் தலைவரானார். 2008 ஜனவரி 23ம் திகதி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது.அதன் முதல் கூட்டம் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் 2008 இல் இடம்பெற்ற கிழக்குமாகாண சபை தேர்தலில் பிள்ளையான் வெற்றிபெற்றார்.அதனை தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரை முதலமைச்சராக்கினார். ஆசாத் மௌலானா அவரின் ஒருங்கிணைப்பு செயலாளராக மாறினார். 2007 முதல் அதாவது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முதல் இராணுவபுலனாய்வு பிரிவினர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு மாதாந்தம் 3.5 மில்லியன் வழங்கி வந்ததாக ஆசாத் மௌலான தெரிவித்துள்ளார். பிள்ளையானின் உத்தரவின் பேரில் மௌலானவே இந்த பணத்தை இராணுவபுலனாய்வு பிரிவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார். 2015 இல் மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கூலிப்படைக்கு பணம் வழங்கப்படுவது தொடர்ந்தது என பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். எனினும் புதிய அரசாங்கத்தின் கீழ் மாதாந்த கொடுப்பனவுகள் எதிர்காலத்தில் சாத்தியமில்லை என சுரேஸ்சாலே பிள்ளையானிற்கும் ஒரு முறை தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு பிரிவே இதுவரை காலமும் அவர்களிற்கு மாதாந்தம் பணம் வழங்கி வந்தது இதனால் எதிர்வரும் காலத்தில் கொடுப்பனவுகள் சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புலனாய்வு பிரிவு கொடுப்பனவில் பதிவு செய்வதற்காக 15 பொய் பெயர்களை வழங்குமாறும் சாலே பிள்ளையானை கேட்டுள்ளார். பிள்ளையானின் உத்தரவுப்படி ஆசாத் மௌலானா 15 போலி பெயர்களை வழங்கினார் சாலே இராணுவபுலனாய்வு பிரிவினரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பிள்ளையானிற்கு உத்தரவிட்டார் என அந்தஅதிகாரி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/205993
  25. அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ? adminFebruary 6, 2025 ஊழலுக்கு, எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் அருச்சுனா இராமநாதன் , அண்ணன் மகனை வேலைக்கு அமர்த்தி , அவரின் சம்பளத்தையும் மோசடியாக தானே பெற்றுக்கொள்வது சரியா என கேள்வி எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை இதனால் தனக்கு கீழ் நியமிக்க வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது அண்ணன் மகன் ராமநாதன் அறிவன்பன் என்பவரை நியமித்து, அவருக்கு நாடாளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபா பணத்தை முழுமையாக அவரிடம் இருந்து பெற்றே தனது செலவீனங்களை ஈடுசெய்வதாக தெரிவித்திருக்கிறார். அதேவேளை தனது மகனின் பாடசாலை கல்வி செலவு , கொழும்பில் உள்ள வீட்டின் வாடகை செலவு என்பன உட்பட தனது ஆடைகளுக்காகவே 70 ஆயிரத்திற்கு மேல் செலவு உள்ளதாகவும். அதனால் தான் தனக்கு கீழ் நியமிக்கப்பட கூடிய ஆளணியில் அண்ணாவின் மகனை நியமித்து அந்த சம்பளத்தை முழுமையாக பெற்றுக்கொண்டாலும் தனது வாழ்க்கை செலவினை ஈடு செய்யமுடியாது திண்டாடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளமை தொடர்பில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் https://globaltamilnews.net/2025/210830/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.