Everything posted by கிருபன்
-
யாழ். வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றத்தில் ஒருவர் கைது
யாழ். வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றத்தில் ஒருவர் கைது 20 Dec, 2024 | 10:46 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். போதனா வைத்தியசாலை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர், நோயாளர் விடுதிக்குள் செல்ல முற்பட்ட நபரை வைத்தியசாலை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது, காவலாளிகளுடன் தர்க்கப்பட்டு, அவர்களில் ஒருவரை கடித்துள்ளார். அதனை அடுத்து ஏனைய காவலாளிகள் ஒன்றிணைத்து கடித்த நபரை மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து, அவரை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் அதேவேளை கடிகாயங்களுக்கு உள்ளான நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/201711
-
எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் - டக்ளஸ் தேவானந்தா
எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் - டக்ளஸ் தேவானந்தா 20 Dec, 2024 | 11:14 AM எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தலில் எமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்க அரசியலில் தற்காலிக ஓய்வு என்றும் கூறலாம். அமைச்சராக இருந்த போது, தலைக்கு மேலாக வேலை இருந்தது. தற்போது அது இல்லை. இதனால் கட்சிக்குள் உள்ள குறைப்பாடுகளை நீக்க அது தொடர்பில் ஆராய்கிறோம். குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கட்சியின் கொள்கை தொடர்பில் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மிக விரைவில் கட்சியின் தேசிய மாநாட்டையும் நடாத்த உள்ளோம். டக்ளஸின் வீழ்ச்சிக்கும், அநுராவின் எழுச்சிக்கும் சமூக வலைத்தளங்களே காரணம். சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர். தற்போது சமூக ஊடகங்கள் குடிசை கைத்தொழில் போன்று பலருக்கும் வருமானம் ஈட்டிக்கொடுக்கிறது. என்னுடைய பெயரை பயன்படுத்தி அவர்கள் வருமானம் பெற்றுக்கொள்வதால், அவர்களின் வருமானத்தை தடுக்க விரும்பாததால், அவர்களின் வீடியோக்களை பெரிது படுத்தவில்லை. முன்னைய காலங்களில் செய்திகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் ஊடாகவே பார்க்க முடியும். தற்போது கையில் போனுடன், மலசல கூடம் முதல் படுக்கையறை வரையில் சென்று வீடியோக்களை பார்க்க கூடிய நிலைமை இருப்பதால், அது இலகுவில் மக்கள் மத்தியில் சென்றடைகிறது. அவ்வாறான சமூக ஊடகங்கள் ஊடாகவே என் மீது அவதூறுகள் பரப்ப பட்டன. குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் எனக்கு எதிராக அவதூறுகளை பரப்பினார். அவர் நாவற்குழி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசத்தை நிரப்பி அங்கு ஒரு பெற்றோல் செட் போட முனைந்தார். அதற்காக என்னிடம் உதவி கோரினார். அந்த இடத்தை நிரவினால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதுடன், அது பெற்றோல் செட் போடுவதற்கு உகந்த இடமில்லை என்பதனால் , அதற்கு நான் அனுமதி பெற்றுக்கொடுக்க உதவவில்லை. அதேவேளை, கட்சியின் நிதி தேவைக்காக அவருடன் சில வர்த்தக உறவுகளையும் பேணி வந்தேன். ஆனால் அவர் நேர்மையற்றவராக முறைகேடுகளில் ஈடுபட்டமையால், அவருடனான வர்த்தக உறவை கைவிட்டேன். அதனாலேயே, அவர் என் மீது தேர்தல் காலத்தில் அவதூறுகளை பரப்பினார். அது கூட என் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்றார். https://www.virakesari.lk/article/201713
-
பிரித்தானியத் தொழில் அமைச்சர் பங்களாதேஷில் ஊழல் மோசடி!
பிரித்தானியத் தொழில் அமைச்சர் பங்களாதேஷில் ஊழல் மோசடி! பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷில் ஊழல் மோசடிகளை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். பங்களாதேஷில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் ஊடாக அவரது குடும்பத்தினர் 3.9 பில்லியன் பவுண்ட்கள் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய திறைசேரியின் பொருளாதார செயலாளராக நாட்டின் நிதிச் சந்தைகளில் ஊழலைக் கையாள்வதற்கான பொறுப்பை வகித்தபோது அவர், 2013ஆம் ஆண்டு ரஷ்யாவுடனான ஒப்பந்தம் ஊடாக பங்களாதேஷின் அணுமின் நிலையமொன்றுக்கான செலவினை அதிகரிக்கப்படுத்தியதாக துலிப் சித்திக் மீது குற்றம் சாட்டப்படுகிறது. பங்களாதேஷின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட துலிப் சித்திக்கின் உறவினரான ஷேக் ஹசீனா மீது பங்களாதேஷின் ஊழல் தடுப்பு ஆணைக்குழு நடத்திய விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, குறித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் மற்றும் ஷேக் ஹசீனாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய அமைச்சர் துலிப் சித்திக் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.hirunews.lk/tamil/391299/பிரித்தானியத்-தொழில்-அமைச்சர்-பங்களாதேஷில்-ஊழல்-மோசடி
-
முன்னாள் எம்.பி திலீபன் கைது
முன்னாள் எம்.பி திலீபன் கைது முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் இன்று(20) காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளாரும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி(EPDP) சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான கிறிஸ்டோபர் டினேஸ் என்பவரை நேற்றைய தினம் (19) இரவு வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினர் காசோலை மோசடி முறைப்பாட்டில் கைது செய்திருந்தனர். வர் வழங்கிய வாக்குமூலத்தை தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினர் அவரிடம் விசாரனைகளை முன்னெடுத்த பின்னர், இன்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.hirunews.lk/tamil/391313/முன்னாள்-எம்-பி-குலசிங்கம்-திலீபன்-கைது
-
ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் விளக்கம்
ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் விளக்கம் December 20, 2024 07:36 am முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்பட்ட விதம் குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அனைத்து விண்ணப்பங்களுக்கும் பணம் செலுத்தப்பட்டதாகவும், அதற்காக 1515 மில்லியன் ரூபாவும், 2023 இல் 839 மில்லியன் ரூபாவும், 2024 செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் நோயாளர்களுக்கான மருத்துவ உதவியாக சுமார் 450 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், ஒரு கோரிக்கையை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளுக்கும் ஜனாதிபதி நிதியத்தின் பொது நடைமுறைகளை பின்பற்றி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை ஜனாதிபதி நிதியத்தில் வைக்கப்பட்டிருந்த 7,000 மில்லியன் ரூபாவை பணத்திற்காக, பல்வேறு கொடுப்பனவுகள் இருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை 11,000 மில்லியன் ரூபாவைத் தாண்டிய மீதியை பேணுவதற்கு தாம் நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கடந்த 11 மாதங்களில் தனது பாதுகாப்புச் செலவுகளுக்காக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=197555
-
இந்திய எண்ணெய் குழாய்கள் இலங்கைக்கு வருகிறதா?
இந்திய எண்ணெய் குழாய்கள் இலங்கைக்கு வருகிறதா? December 20, 2024 11:08 am ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, இலங்கையில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியா மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் குறித்து அமைச்சர் இங்கு தெரிவித்தார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உடன்பாடு எட்டப்பட்டது என்றார். அதை விடுத்து இலங்கையில் எண்ணெய் குழாய் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக செய்திகளை உருவாக்குவது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். https://tamil.adaderana.lk/news.php?nid=197564
-
“Clean Sri Lanka” தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல்
“Clean Sri Lanka” தொடர்பில் வௌியான வர்த்தமானி அறிவித்தல் December 20, 2024 08:03 am வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் “Clean Sri Lanka” வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (19) வெளியிடப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் இந்த ஜனாதிபதி செயலணிக்கு பெயரிடப்பட்டுள்ளனர். இந்நாட்டு மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதன் மூலம் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய பணியை தொடங்குவதே இதன் நோக்கமாகும். மேலும், சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைத்தன்மை மற்றும் அரசு இயந்திரங்களை வலுப்படுத்த ஒரு மாற்றும் முயற்சி தேவைப்படுவதால், அவற்றை அடைவது இதன் மற்றொரு நோக்கமாகும். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “Clean Sri Lanka” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. https://tamil.adaderana.lk/news.php?nid=197556
-
உருவாகின்றது புதிய கூட்டணி
உருவாகின்றது புதிய கூட்டணி கடந்த பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அதன் சில பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், 28 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர உள்ளிட்ட தரப்பினர் விரைவில் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/உரவகனறத-பதய-கடடண/175-348997
-
மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக அதிகரிப்பு!
மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக அதிகரிப்பு! அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரசு பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆக குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது https://newuthayan.com/article/மருத்துவர்களின்_ஓய்வு_வயது_63ஆக_அதிகரிப்பு!
-
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு! கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களான, ஆசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை இல்லாமலாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், அதை தமது தொழிலையும் தாண்டிய ஒரு தேசியப் பொறுப்பாகக் கருதி செயற்படுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். கன்னங்கராவின் கல்விச் சீர்திருத்தங்களினால் ஏற்பட்ட கல்விப் புரட்சிக்கு அப்பால் விரிவான கல்வி மாற்றமொன்று தேவைப்படுவதாகவும், அதனை நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இதன்போது தெரிவித்தார். தேசிய கல்வி முகாமைத்துவ முறைமையின் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் எதிர்கால சந்ததியினரை அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய நவீன தொழிநுட்ப உலகிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/கல்விச்_சீர்திருத்தங்கள்_தொடர்பில்_விசேட_அறிவிப்பு!
-
முப்பட்டைக்கண்ணாடியினூடே - ஜெயமோகன்
முப்பட்டைக்கண்ணாடியினூடாக-3 jeyamohanDecember 19, 2024 (4) இரா.முருகனின் வரலாற்றுச் சித்திரம் 21ம் நூற்றாண்டில் உருவான முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை வெளிப்படுத்துகிறது. வரலாறு என்பது நம்மில் பொதுவாக பலர் எண்ணுவது போல எப்போதும் புறவயமான கட்டமைப்பு கொண்ட ஒன்றல்ல. மலைகளைப்போல மரங்களைப்போல வெளியே பருவடிவமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒன்றல்ல. அது நமது அகத்தின் வெளிப்பாடே. நமது நம்பிக்கைகள் கொள்கைகள் ஏற்புகள் ஆகியவற்றின் விளைவாகவே வரலாறு ஒவ்வொரு காலமும் கட்டமைக்கப்படுகிறது. இதைக் குறித்து விரிவாக பலரும் எழுதி உள்ளனர். வரலாற்றெழுத்து என்பது பொதுவாக மூன்று காலகட்டங்களைக் கொண்டதென்று கூறப்படுகிறது. தொல் வரலாற்றெழுத்து என்பது வரலாறு நிகழும் காலத்திலேயே அரசர்களாலோ அல்லது மதத்தாலோ அல்லது கல்வி நிலையங்களாலோ நேரடியாகப் பதிவு செய்யப்படுவது. அதை நிகழ்வுக்குறிப்புகள் (cronicles) என்றும் புகழ்மொழிகள் அல்லது மெய்கீர்த்திகள் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். அரசரின் அல்லது ஓர் அமைப்பின், ஒரு நகரின் அன்றாடத்தை விரிவாகத் தொடர்ச்சியாகப் பதிவு செய்வது நாட்குறிப்புத் தன்மை கொண்ட வரலாற்று எழுத்து. திருவரங்கம் கோயிலொழுகு அல்லது ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்புபோன்றவை உதாரணமாக சுட்டிக்காட்டத்தக்கவை. வீரர்கள், சான்றோர்கள் போன்றவர்களின் செய்திகளையும் அவர்களின் மரபையும் விரிவாகப் பதிவு செய்வது புகழ்மொழி வரலாறு. இது பெரும்பாலும் வம்ச பரம்பரை செய்திகளால் ஆனதாக உள்ளது. இவ்விரு கோணங்களிலுமே வரலாறு எப்போதும் தொல்காலங்களில் எழுதப்பட்டுள்ளது. நவீன ச்செவ்வியல் வரலாறு என்பது அதன் முன்னோடியாகிய கிப்பனின் ரோமப்பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற பெருநூல் வழியாகத் தொடங்கியதென்பார்கள். தமிழில் அதற்கான சிறந்த உதாரணமாக அமையத்தக்கவை நீலகண்ட சாஸ்திரி எழுதிய நூல்கள். இவை அதுவரைக்குமான தொல்லியல் தடயங்கள் நூல் சான்றுகள் மற்றும் புறத்தடயங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து வரலாற்றை ஒரு பெருமொழிபாக எழுதி உருவாக்குகின்றன. ராஜராஜ சோழனின் வரலாறு அல்லது ஒட்டுமொத்தமாக தமிழ் வரலாறு என்று இவை ஒரு பெருஞ்சித்திரத்தை உருவாக்குகின்றன. இந்த சித்தரிப்புகள் தனித்தனியாக எழுதப்பட்டாலும் மிகச்சரியாக ஒன்றுடன் ஒன்று பொருந்தி ஒட்டுமொத்த உலகப்பெருவரலாறாக ஆகும் தன்மை கொண்டவை. எந்நிலையிலும் உலக வரலாற்றின் ஒருபகுதியாக கால வரிசைப்படியும், பார்வையின் அடிப்படையிலும், சித்தரிப்புகளின் இணைப்புகள் வழியாகவும் தொகுக்கப்படத்தக்கவை. ஒன்றுடன் ஒன்று மிகச்சரியாக இணைந்துகொள்ளும் தன்மையே செவ்வியல் வரலாற்றின் மிகச்சிறந்த அம்சம் என்று சொல்லலாம். இவ்வாறு எழுதப்பட்ட செவ்வியல் வரலாறுகளே தேசங்களை உருவாக்கின. பண்பாடுகளை வரையறுத்தன. நவீன காலகட்டத்தில் மதங்கள் கூட செவ்வியல் வரலாறுகளாலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. இன்றைய மனிதனின் உள்ளமென்பது செவ்வியல் வரலாற்றால் உருவாக்கப்பட்டதென்று சொன்னால் மிகையில்லை. தமிழக வரலாறென்பது சங்ககாலம் முதல் இன்று வரையிலான ஒரு பெருமொழிபாக நமக்கு நீலகண்ட சாஸ்திரியிலிருந்து குடவாயில் பாலசுப்ரமணியம் வரையிலான பேரறிஞர்களால் தொகுத்து தரப்பட்டுள்ளது. அந்த ஒட்டுமொத்த வரலாற்றின் ஒரு சுருங்கிய வடிவம் இன்று தமிழ்கத்தில் ஓரளவு கல்வி கற்ற அனைவருள்ளும் வந்துள்ளது. நம்முடைய கல்வி முறை வழியாகத் தொடர்ந்து அது பயிற்றுவிக்கப்படுகிறது. அது அதிகார பூர்வ வரலாறாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதை நான் நம்முடைய பெருமிதமாக சுட்டுகிறோம். நம்முடைய குறைகளைக் கண்டடையவும் அதையே பயன்படுத்துகிறோம். நம்முடைய அடையாளத்தேடல்கள் அனைத்துமே அந்த வரலாற்றில் தான் சென்று முடிகின்றன. நம் விழுமியங்கள் அனைத்தும் அந்த வரலாற்றால் தான் சான்றுரைக்கப்படுகின்றன, நிறுவப்படுகின்றன. மூன்றாவதான வரலாற்று எழுத்து என்பது நவீனத்துவ காலத்தை ஒட்டியது அது சமூகவியல் வரலாறு, அரசியல் வரலாறு, பொருளியல் வரலாறு என வெவ்வேறு வரலாற்று எழுத்துகளை செவ்வியல் வரலாற்றெழுத்திலிருந்து தனியாக வளர்த்து பிரித்து விரிவாக்கிக்கொள்வது என்ற வகையில் திகழ்ந்தது. அதிகமும் 18-19ம் நூற்றாண்டின் அண்மைக்கால வரலாற்றிலேயே பொருளியல் வரலாற்றையும் சமூகவியல் வரலாற்றையும் விரித்தெழுதும் போக்கு உருவாயிற்று. அவ்வகையில் முனைவர் அ.கா.பெருமாள், ஆ.சிவசுப்ரமணியன் போன்ற முன்னோடிகளும் அவ்வரிசையில் மிகத்திறன் வாய்ந்த வரலாற்றாசிரியரான ஆ.இரா.வெங்கடாசலபதியும் தமிழில் குறிப்பிடத்தகுந்தவர்கள். இந்த வரலாற்றெழுத்து பழைய வரலாற்றெழுத்தின் அடிப்படைகளை மறுக்காமல் விரிவாக்குவதன் வழியாக அதைக் கடந்து செல்வதாகும். தமிழ் பெருவரலாற்றின் ஒரு பகுதியிலேயே ஆ.இரா.வெங்கடாசலபதி சித்தரிக்கும் பின்னி ஆலைப்போராட்டமோ வ.உ.சி கப்பலோட்டிய வரலாறோ வந்து இணைந்து கொள்கிறது. ஆகவே செவ்வியல் வரலாற்றைக்கொண்டு இதைப் புரிந்துகொள்ள முடியும். இதைக்கொண்டு செவ்வியல் வரலாற்றை விரித்தெடுத்துக்கொள்லவும் முடியும். உலகெங்கும் நவீனத்துவ வரலாறு மிக ஆழ்ந்த கருத்தியல் செல்வாக்கை செலுத்தியிருக்கிறது குறிப்பாகப் புனைவிலக்கியத்தை மிகப்பெரிய அளவில் நவீனத்துவ வரலாறு ஊடுருவியிருக்கிறது என்றே சொல்லலாம். நவீனத்துவ வரலாற்றின் உச்சம் என்றோ அடுத்தகட்டத்திற்கான தொடக்கமாக அமைவது என்றோ ரணஜித் குகா போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட விளிம்புநிலை வரலாற்றை சொல்லலாம். அது வரலாற்றை பெருமரபுகளால் முற்றிலும் ஒதுக்கப்பட்ட புறநடையாளர்களின் வரலாற்றை எழுதுவதனூடாக வரலாற்றுக்கு ஒரு மாற்றுச்சித்திரத்தை உருவாக்குவது. வரலாற்றில் எப்போதும் பொருட்படுத்தப்படாதவர்களாகிய ஒடுக்கப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள், மாற்று பண்பாடு கொண்ட மக்களின் வரலாற்றை அவர்களின் வாழ்வு முறைகளைக் கொண்டும் தொன்மங்களைக் கொண்டும் மீட்டுருவாக்கம் செய்வது இது. தமிழகத்தில் நாட்டாரியல் வலுப்பெற்ற து ஓரளவுக்கு நிகழ்ந்தது, அருந்தததியர் வாழ்வு பற்றிய மார்க்கு எழுதிய நூலும் கரசூர் பத்மபாரதி திருநங்கையர் பற்றியும் நரிக்குறவர்கள் பற்றியும் எழுதிய நூல்களும் ஒருவகையான வரலாறுகளே. அவை மரபான வரலாற்றின் மீதான வலுவான ஊடுருவல்கள் மறுப்புகள். அவற்றையும் நவீனத்துவ வரலாற்றின் உச்சகட்ட வெளிப்பாடுகள் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் அவையே பின்நவீனத்துவ கால புதிய வரலாற்று முறை ஒன்றிகான தொடக்கத்தையும் உருவாக்கின பின் நவீனத்துவ வரலாறு என்பது ஒருவகையில் வரலாறு மறுப்பே. எல்லா வரலாறும் புனைவே என்றும், வரலாறு என்பது ஒரு பெருங்கதையாடல் என்றும், வரலாற்றுக்கு எதிரான செயல்பாடே வரலாற்றை சரியான வகையில் கையாள்வதாக ஆகமுடியும் என்றும் கூறுவது. வரலாறு வாழ்க்கையை ஒருகுறிப்பிட்ட முறையில் தன்னை கட்டி எழுப்பி முன்வைக்கிறது எனில் அக்கட்டமைப்பை குலைப்பதே வரலாற்றை பயன்படுத்துவதும் கையாள்வதுமாகும் என்று பின் நவீனத்துவர்கள் சொல்கிறார்கள். எல்லாவகையான பெருங்கதையாடல்களை மறுப்பதும், பெருங்கதையாடல்களை சிறு உபகதைகளாகவும் உள்முரண்களாகவும் சிதைத்துப்பார்ப்பதும் அதன் வழி. ஏனெனில் பின்நவீனத்துவம் என்பது எல்லாவகையான பெருமொழிபுகளையும் நிராகரிக்கிறது. தொகுத்து பெருஞ்சித்திரத்தை உருவாக்குவது என்பது பேரதிகாரத்தை உருவாக்குவதாகவே அது பொருள்கொள்கிறது. அறிவுச் செயல்பாடென்பது எப்போதுமே ஆதிக்கச்செயல்பாட்டுக்கு அல்லது தொகுப்புச் செயல்பாட்டுக்கும் எதிரானதாகவே இருக்கும் என்று அது வரையறை செய்கிறது. அதிகாரம் ஆதிக்கம் ஆகியவை மனிதனுடைய இயல்பால் தன்னியல்பாக உருவாகிவரக்கூடியவை. அறிவுச் செயல்பாடென்பது திட்டமிட்டு அதற்கு எதிராக நிலைகொள்வதாக இருக்கவேண்டும் என்று பின்நவீனத்துவம் வரையறை செய்கிறது ஆகவே தனக்கு முந்தைய எல்லாவகையான வரலாற்று உருவகங்களையும் பின் நவீனத்துவம் நிராகரிக்கிறது. அதைச் சிதைப்பதும் கலைப்பதுமாக தனது விளையாட்டு வரலாற்றை எழுதிப்பார்க்கிறது. பின்நவீனத்துவ வரலாறு என்பது தமிழ் வரலாற்றுத்துறையில் அநேகமாக எந்த செல்வாக்கையும் செலுத்தவில்லை. இத்தனைக்கும் தமிழ்ச்சூழலிலேயே பின்நவீனத்துவம் சார்பான ஒரு வரலாற்றெழுத்திற்கு மிகத்தொன்மையான ஒரு முன்னோடி நிகழ்ந்திருக்கிறார். பின்நவீனத்துவக் கருத்துகள் இங்கு அல்லது எங்கும் உருவாவதற்கு மிக நெடுங்காலம் முன்னரே அவர் அதற்கான ஒரு முன்வரைவு ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். பண்டித அயோத்திதாசர் இந்திய வரலாறென்பதே இந்துக்களால் ,உயர்சாதியினரால் உருவாக்கப்பட்ட ஒரு பெரும்புனைவே என்று கண்டடைகிறார். அதற்கு நிகராக ஒரு மாற்று வரலாற்றை அல்லது ஒரு மாற்றுப்புராணத்தை செவ்வியல் நூல்களிலுள்ள தரவுகளைப் பயன்படுத்தியும் அதனுடன் கற்பனைகளை இணைத்துக்கொண்டும் தான் உருவாக்குகிறார். அவருடைய இந்திரர் தேச சரித்திரம் ’ என்ற நூல் ஒரு பின்நவீனத்துவ மாற்றுக் கதையாடல் என்று சொல்லலாம். அத்தகைய மாற்று வரலாறுகளை மிகப்பெரிய அளவில் திரும்ப உருவாக்கும் முயற்சிகள் எதுவும் தமிழில் அல்லது இந்திய அளவிலேயே எதுவும் நிகழவில்லை. ஏனெனில் அதற்கு ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்க்கைகளிலிருந்து தரவுகளை மிகப்பெரிய அளவில் சேர்க்கவேண்டியிருக்கிறது. அவற்றை தமிழ் மரபிலக்கியத்திலும் தொல்லியல் சான்றுகளிலுள்ள தரவுகளுடன் இணைத்து ஒருபெரும் சித்திரத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதை இன்றைய சூழலில் தனிநபர் ஒருவர் முழுமையாக செய்து முடிப்பது இயலாது. இவ்விரு பணிகளும் அறிவுத்தளத்தில் ஏற்கனவே விரிவாக நிகழ்ந்துவிட்டிருந்தால் அவற்றைக்கொண்டு ஒரு புதிய வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் அவ்வாறான பணிகள் தலித் ஆய்வுகள் தளத்தில் இப்போது தான் மிகத்தீவிரமாக நிகழ்ந்து வருகின்றன. எதிர்காலத்தில் அவர்களின் ஆய்வுகளும் நாட்டாரியல் தரவுகளும் பிறவும் இணைந்து ஒரு மாற்று வரலாற்று நிகழ்வு இங்கு நிகழ்ந்தால் வியப்பதற்கில்லை. ஆனால் தரவுகளை நம்பத்தேவையற்ற புனைவிலக்கியத் தளத்தில் வரலாற்றில் மறுப்புவரலாறு மிக எளிதாக இயல்வதாகியது. வரலாற்றை கற்பனையின் துணை கொண்டு ஊடறுத்தும் சிதைத்தும் மாற்றி அடுக்கியும் மாற்று வரலாற்றை உருவாக்குவது தமிழ் இலக்கியத்தில் வெவ்வேறு கோணத்தில் நிகழ்ந்தது. ஒரு வகையில் விஷ்ணுபுரம் இந்திய வரலாற்றையும் இந்திய தத்துவ வரலாற்றையும் ஒட்டுமொத்தமாகவே முற்றிலும் புதிய கோணத்தில் திருப்பி எழுதும் புனைவுதான். அது விஷ்ணுவிலிருந்து புத்தருக்கும், அங்கிருந்து பழங்குடி தெய்வத்துக்கும் திரும்பிச்செல்லும் ஒரு தலைகீழ் வரலாற்றுருவாக்கத்தை மேற்கொண்டிருக்கிறது. கொற்றவை அவ்வாறே தொல்அன்னை நோக்கி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. மிக விரிவான கோணத்தில் வெண்முரசும் அவ்வாறே. மகாபாரதப் பெருங்கதையாடலில் விடப்பட்டுள்ள புள்ளிகள் அனைத்தையும் விரிவுபடுத்தி எழுதப்பட்ட மறுபுனைவு அது. வரலாற்றை அவ்வாறு புனைவுகளினூடாக ஊடறுப்பதை ரமேஷ் பிரேதன், பா.வெங்கடேசன் ஆகியோர் தங்கள் நூல்களினூடாக நிகழ்த்தினர். பிறிதொரு வகையில் அதையே கோணங்கி தனது பாழி பிதுரா போன்ற நூல்களில் செய்திருக்கிறார். வரலாற்றை வெறும் மொழி வெளிப்பாடாகவே பார்த்து அந்த மொழியைச் சிதைத்து கலைத்து அடுக்குவதனூடாக இன்னொரு வரலாற்றை உருவாக்குவதற்கான முயற்சி என்று கோணங்கியின் நாவலை வரையறுக்கலாம். இந்த வரிசையில் சமகால வரலாற்றை முழுமையாகவே கலைத்து ஒரு கலவைப்பெருஞ்சித்திரமாக ஆக்கியவர் என்று இரா.முருகனைக் கூறலாம். அவ்வகையில் பின்நவீனத்துவ வரலாற்றுச் சித்திரங்களில் மிக முக்கியமானதும் மிக முதன்மையானதும் இரா.முருகனின் புனைவுலகமே. விஷ்ணுபுரம் முதல் வெண்முரசு வரையான நாவல்களில் வரலாற்றை தத்துவக்கோணத்தில் மறுஆக்கம் செய்வதென்பது ஒரு பின்நவீனத்துவக்கூறு என்றாலும் அப்போக்கு செவ்வியல் அழகியலுக்குள் தன்னை முழுமையாக நிறுத்திக்கொள்கிறது. பின்நவீனத்துவத்தை கடந்து ஒரு மறுதொகுப்புக்கும் அதனூடாக புதிய விழுமிய உருவாக்கத்திற்கும் செல்கிறது என்ற வகையில் மீநவீனத்துவம் அல்லது ட்ரான்ஸ் மாடர்னிஸம் என்று வரையறுக்கத்தக்கது. இரா.முருகன் பின்நவீனத்துவர்கள் வரலாற்றைப்பற்றி கூறும் எல்லா வரையறைகளையும் முழுமையாகக் கொண்ட படைப்புகளை எழுதியிருக்கிறார். அரசூர் வம்சம் முதல் மிளகு வரையிலான நாவல்கள் அனைத்துமே வரலாற்றின் மீதான ஊடுருவல்கள். வரலாற்றை தலைகீழாக்கம் செய்யும் தன்மை கொண்டவை. விழுமியங்கள் சார்ந்தும், கட்டுக்கோப்பு சார்ந்தும், மையப்பார்வை சார்ந்தும் மரபான வரலாறு உருவாக்கும் அனைத்தையுமே முழுமையாக அவை தலைகீழாக்கம் செய்கின்றன. அத்தலைகீழாக்கத்தை எந்தத் தத்துவத்தின் துணைகொண்டும் நிகழ்த்தாமல் முழுக்க பகடி வழியாகவே அவை நிகழ்த்திச் செல்கின்றன. அந்தப் பெருஞ்சித்திரத்தினூடாக மையமென்றும், தரிசனமென்றும், விழுமியமென்றும் எதுவுமே திரளாமல் சிதைத்து விழிதொடும் தொலைவு வரை முற்றிலும் பரப்பி வைக்கும் பணியை அவை செய்திருக்கின்றன. ஆகவே தமிழின் முழுமையான பின் நவீனத்துவ வரலாற்றுக் கதை சொல்லி என்று இராமுருகனை வரையறை செய்ய முடியும். ( 5 ) பின்நவீனத்துவ மாற்று வரலாற்றுப் பரப்பு என்று வரையறுக்கத்தக்கவை இரா.முருகனின் பெருநாவல் தொடர்கள். அரசூர் வம்சம் முதல் மிளகு வரையிலான அவருடைய அத்தனை நாவல்களையும் இணைத்து ஒற்றைப் பெருநாவலாகக் கூட வாசிக்க முடியும். ஒரு நாவலின் குறிப்பு பிறிதொரு நாவலில் வேறொரு வகையில் நீள்கிறது. பலசமயம் ஒரே கதைமாந்தர்களே வெவ்வேறு காலகட்டங்களிலாக இந்நாவல்களில் அனைத்திலும் வாழ்கிறார்கள். காலம் கடந்து நினைவுகளினூடாகவோ அல்லது மாயப்புனைவு வழியாகவோ பிற வரலாற்றுக்களங்களில் தோன்றுவதும் அவரது கதாபாத்திரங்களுக்கு இயல்வதாகிறது. அனைத்திலுமுள்ள புனைவுமொழியும் பார்வையும் ஒன்றே அவருடைய புனைவுகளின் அடிப்படையான சில கூறுகளை ஒரு விமர்சகனாக வகுத்துக்கொள்ள விரும்புகிறேன். முதன்மையாக அவை முற்றிலும் உலகியல் சார்ந்தவை. ஒருவேளை தமிழில் மிகப் பிடிவாதமான உலகியல் தன்மை கொண்ட படைப்பாளி என்று இரா.முருகனை மட்டுமே கூற முடியும். உலகியல்த் தன்மை என்பது கண்கூடாக விரிந்திருக்கும் பருப்பொருள்வெளியுடன் மட்டுமே தன் சித்தத்தை இணைத்துக்கொள்வது. புலன்களால் அறியப்படாத எதையுமே ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது. இங்கே அன்றாடத்தில் நிகழ்ந்தவை, நிகழ்பவை, நிகழச்சாத்தியமானவற்றிற்கு அப்பால் கற்பனையால் எவ்வகையிலும் எழாமலிருப்பது. மாயங்கள் கூட அன்றாடத்தில் இருந்து எழுந்து வந்து செவிகளை அடைபவையாக இருப்பது.. புனைவில் அந்த உலகியல்த் தன்மை வெவ்வேறு கூறுகளால் மீறப்படுகிறது. இலட்சியங்கள், கனவுகள் ஆகியவை உலகியலுக்கு அப்பாற்பட்டவை. ஆன்மிகமும் மெய்யியலும் உலகியலைக் கடந்து செல்பவை. உணர்ச்சி நிலைகளின் தீவிரம் கூட உலகியல் சார்ந்த அன்றாடத்தன்மை எல்லையை மீறும்போது ஒரு லட்சியவாதத் தன்மையை அடைந்து உலகியலைக் கடந்து செல்கிறது. இந்தக்கூறுகளால் தான் தமிழின் பிற படைப்பாளிகள் உலகியல் பற்றுடன் இருக்கையிலேயே அவர்களின் ஒருபகுதி உலகியலைக் கடந்து செல்கிறது. உதாரணமாக சொல்லத்தக்க சில படைப்பாளிகளை எடுத்துப் பார்க்கலாம். நீல.பத்மநாபன், அசோகமித்ரன் போன்றவர்கள் லௌகீகத்தின் எளிமையை அன்றாடத்தின் துல்லியத்தை தங்கள் புனைவுகளினூடாக நிகழ்த்தியவர்கள். அவ்வெல்லையைக் கடந்து செல்ல எவ்வகையிலும் முயலாதவர்கள். ஆனால் அசோகமித்திரனின் படைப்புகள் வாழ்க்கையை ஏதோ ஒருகணத்தில் ஒரு முடிவின்மையுடன் இணைத்துக்கொள்ள முயல்கின்றன. அவ்வகையிலாக அவை தத்துவமும் மெய்யியலுமாக உருக்கொள்கின்றன. தண்ணீரில் யமுனாவுடன் பேசும் அந்தப் பக்கத்து வீட்டு மாமியோ, விடுதலை நாவலில் ஐயர் கண்டடையும் அகமோ, புலிக்கலைஞன் கதையில் அக்கதையினூடாக கதை சொல்லி முன்வைக்கும் லட்சியமோ அவ்வாறு உலகியலைக் கடந்து செல்வதுதான். நீல. பத்மநாபனின் நாவல்கள் முற்றிலும் உலகியல் ஒன்றையே சொல்லி ஆனால் ஒன்றுடன் ஒன்று இணைத்து இணைத்து ஒட்டுமொத்த சித்திரம் ஒன்றை உருவாக்குகையில் உலகியலுக்கு அப்பால் உள்ள லட்சியம் ஒன்று வந்து முன் நிற்கிறது. உதாரணமாக உறவுகள் ஒரு மரணத்தை ஒட்டி சந்திக்கும் உறவுகளின் சித்திரங்களால் மட்டுமே ஆனது. எளிதாக குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற ஒற்றை வரியின் விரிவாக்கமாக அந்த நாவலைப்படிக்க முடியும் ஆனால் உறவுகளின் வலையினூடாக மனிதம் இங்கு ஒரு திரளென திகழும் சித்திரத்தை அளிப்பதனூடாக அது ஒரு லட்சியவாதத்தை நிகழ்த்திவிடுகிறது. அவ்வகையாக உலகியலை கடந்து செல்கிறது. உலகியல் சார்ந்தவர் என்று எளிதாக சொல்லத்தக்க ப.சிங்காரம் படிமங்களினூடாக அதைக் கடந்து செல்வதைக் காணலாம். உதாரணமாக பாண்டியன் மைதானிலிருந்து ரங்கூனுக்கு கப்பலில் வரும் காட்சியின் உள அலைகள். இப்படி தமிழின் முன்னோடிப்படைப்பாளி ஒவ்வொருவரை தொட்டு எடுத்தாலும் அவர் உலகியல் கடந்து செல்லும் தருணங்களால் தான் அவரது உச்சம் நிகழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது. எனது வாசிப்பில் இப்போது இரா.முருகன் மட்டுமே முற்றிலும் உலகியலானவர் என்று தோன்றுகிறது. அவருடைய உலகியல் எல்லா வகையான லட்சியவாதங்களையும் நையாண்டியால் கடந்து செல்கிறது. எந்த உணர்ச்சி நிலையையும் புனைவிற்குள் நிகழ்த்த முடியாத அளவிற்கு அவருடைய புனைவு மொழியிலேயே தாவிச்செல்லும் ஒரு கேலி உள்ளது. வரலாற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து ஒரு மையம் நோக்கிக் கொண்டு செல்லவோ ஒரு விழுமியமாகத் திரட்டிக்கொள்ளவோ ஒரு லட்சியமாகக் கூர்மைப்படுத்தவோ அவருடைய புனைவுலகம் முயல்வதே இல்லை. ஆகவே முற்றிலுமாக இங்கே நிகழ்வன, நிகழ்வன என எண்ணிக்கொள்ளப்படுவன, நிகழ் வாய்ப்புள்ளவை, நிகழ்வனவற்றுக்கு நேர்தலைகீழானவை என்று மட்டுமே அவருடைய படைப்புலகம் இயங்குகிறது. இந்த உலகியல் தன்மையே தமிழில் தொடர்ந்து இலக்கியம் படித்துக்கொண்டு வரும் வாசகனுக்கு சிலசமயம் இப்படைப்புகள் சோர்வளிக்கவும் காரணமாகிறது. திரும்ப திரும்ப அன்றாடத்தையே வித்தாரமாக சிதைத்தும் விளையாட்டுப்பொருளாக மாற்றியும் இக்கதைகள் சொல்லிச் செல்கின்றவோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏழு கழற்சிக்காய்களை இருகைகளிலுமாக வைத்து ஆடும் ஒரு கலைஞனின் திறமை போன்று இப்புனைவு தோற்றமளிக்கிறது. அக்கழற்சிக்காய்கள் அவனிலிருந்து விடுதலை பெற்று தன்னியல்பாக காற்றில் சுழன்று நடனமாடும் சித்திரத்தை நமக்கு அளித்து வியப்புக்குள்ளாக்கினாலும் கூட அவை மொத்தமே ஏழுதான் என்ற எண்ணம் நமக்குத் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது போல. ஆனால் இந்த உலகியல் தன்மை தமிழ் இலக்கியம் உருவாக்கிய ஒட்டுமொத்த சித்திரத்திற்கும் நேர் எதிராகத் தன்னை நிலை நிறுத்துக்கொண்டிருக்கிறது என்பது ஒரு முக்கியமான இலக்கியச் சாதனை என்று நான் நினைக்கிறேன். இதைக் கருத்தில் கொள்ளாமல் தமிழ் இலக்கியத்தின் ஒட்டுமொத்தத்தை இன்று வகுத்துவிட முடியாதென்பதும் இரா.முருகனின் இடத்தை உறுதிப்படுத்தும் அம்சமாகும். (மேலும்) https://www.jeyamohan.in/209060/
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
மதுபானசாலை அனுமதியில் அரசியல் இலஞ்சம் : அநுர அரசிற்கு சுமந்திரன் அழுத்தம் By Raghav 11 hours ago இலஞ்சம் ஊழல் என்பவற்றை முற்றுமுழுதாக ஒழிப்போம் என பதவிக்கு வந்த அநுர அரசு மதுபானசாலை விவகாரத்தில் சற்று பின்னிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூரிய அநுர அரசு அந்த விடயத்தில் இருந்து பின்வாங்குவது என்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (19.12.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுடார். மேலும், இந்த வருடத்தில் 361 மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கியதாக அநுர அரசாங்கம் அறிவித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். எனினும் அநுர அரசு குறித்த விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார் அந்த வகையில் எமது பிரதேசத்தை பொறுத்தவரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தாம் சிபாரிசு செய்து ஒத்துக் கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளி காணலாம் https://ibctamil.com/article/liquor-store-anura-gov-m-a-sumanthiran-1734605036#google_vignette
-
ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி
ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி December 19, 2024 1:32 pm உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்களம் கண்டுள்ள சமார் 100க்கும் மேற்பட்ட வடகொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்யூன் இன்று தெரிவித்துள்ளார். “டிசம்பரில், வட கொரிய துருப்புக்கள் போரில் ஈடுபட்டதாகவும், இதன் போது குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்,” என்று தென் கொரியாவின் உளவு நிறுவனம் அளித்த விளக்கத்திற்குப் பின்னர் லீ தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான தனது போர் முயற்சிகளுக்கு உதவ ரஷ்யா சுமார் 10,000 வட கொரிய வீரர்களை நியமித்ததாக மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரைன் படைகளின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா, குர்ஸ்க் பகுதி உட்பட ரஷ்யப் படைகளை வலுப்படுத்த வட கொரிய துருப்புக்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும, “காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று லீ மேலும் கூறினார். இந்நிலையில், ரஷ்யாவில் இழப்புகள் இருந்தபோதிலும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஒரு புதிய சிறப்பு நடவடிக்கைப் படைக்கு பயிற்சி அளிக்கத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இறந்த வட கொரிய வீரர்களின் முகங்களை ரஷ்யா எரிக்கிறதா? குர்ஸ்க் பிராந்தியத்தின் முன்னணியில் உள்ள பல கிராமங்களில் ரஷ்யாவிற்காகப் போராடும் வட கொரிய துருப்புகள் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாகவும் கடந்த திங்களன்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அளவிலான வட கொரிய இழப்புகளை உக்ரைன் விவரித்தது இதுவே முதல் முறை ஆகும். உயிரிழந்த வடகொரிய துருப்புகளின் உடல் குர்ஸ்க் பகுதியில் அடக்கம் செய்வதற்கு முன்பு அவர்களின் அடையாளங்களை மறைக்க ரஷ்ய வீரர்கள், உயிரிழந்தவர்கள் முகங்களை எரிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் தெரிவித்திருந்தார். ரஷ்யா, வட கொரிய வீரர்களின் இருப்பை மறைக்க முயற்சிப்பதாகவும், பயிற்சி மற்றும் தயாரிப்புகளின் போது கூட அவர்கள் தங்கள் முகங்களைக் காட்டுவதைத் தடை செய்வதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார். இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர், வட கொரியப் படைகளிடையே கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் தகவல்கள் அமெரிக்காவிடம் இருப்பதாக உறுதிப்படுத்தினார். https://oruvan.com/100-north-korean-soldiers-killed-fighting-for-russia/
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு!
அவமானத்தால் ஓய்வு முடிவை அறிவித்திருக்கலாம்- அஸ்வினின் தந்தை அதிர்ச்சித் தகவல்! இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்தப் போட்டியானது வெற்றிதோல்வி இன்றி முடிவடைந்தது. 3ஆவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது சக வீரர்கள் உள்பட இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அஸ்வின் ஓய்வு குறித்து முன்னாள் ,தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டித் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். அவுஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் இரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என அவரது தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் - இந்திய டெஸ்ட் அணியின் முதல்தரச் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக விளையாடிய போதும் அணியில் இடம் கிடைக்காததால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம். இந்திய அணியில் விளையாடிய போது அஸ்வின் அவமானப்பட்டு இருக்கலாம். கிரிக்கெட் விளையாட்டின் உச்சத்தில் இருக்கும் போது திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது தனிப்பட்ட முடிவு அதனால் அதில் தலையிட முடியாது. என அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் கூறினார். https://www.hirunews.lk/tamil/391254/அவமானத்தால்-ஓய்வு-முடிவை-அறிவித்திருக்கலாம்-அஸ்வினின்-தந்தை-அதிர்ச்சித்-தகவல்
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு தீர்மானங்களுக்குத் தடை கோரி வழக்கு தாக்கல்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு தீர்மானங்களுக்குத் தடை கோரி வழக்கு தாக்கல்! இலங்கை தமிழரசுக் கட்சியின்; யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் தீர்மானங்களுக்குத் தடை உத்தரவொன்றைப் பிறக்குமாறு கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்தியகுழு உறுப்பினருமான வைத்தியர் சி.சிவமோகனினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியச் செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பத்மநாதன் சத்தயலிங்கம் முற்பட்டபோது, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வருகை தராமல் கூட்டத்தை நடத்தக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கூறியிருந்தார். எனினும், அவர் தலைவர் பதவியிருந்து விலகிவிட்டார் எனவும் அவரின் தலைமையில் கூட்டத்தை நடித்த முடியாது எனவும் சிலர் கோரியிருந்தனர். எவ்வாறாயினும், தமது நிலைப்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் விடாப்பிடியாக இருந்தமையினால் நீண்டநேரமாகக் கூட்டம் ஆரம்பிக்கப்படாமல் அமைதியின்மை நிலவியது. பின்னர் கூட்டத்துக்கு மாவை சேனாதிராஜா வருகைதந்தபோது, பதவி விலகியவர் தலைமையில் கூட்டத்தை நடத்த முடியாது எனச் சிலர் தெரிவித்தனர். அதேநேரேம், பதவி விலகலை மாவை சேனாதிராஜா மீளப் பெற்று விட்டதாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், மாவை சேனாதிராஜாவின் பதவி விலகலை மீளப்பெற அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி அடுத்த மத்தியக் குழுக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிமுறைகளை மீறி மத்தியக் குழு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும், தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் கொள்கைகளை வகுப்பதும், செயற்திட்டங்களை வகுப்பதும் கட்சியின் பரிபாலனமும், தலைவர் தெரிவும் பொதுச்சபையின் ஆணைக்கு உட்பட்டவை என்றும், அவ்வாறான தீர்மானங்களைக் கட்சியின் மத்தியக் குழுவினால் எடுக்க முடியாது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.hirunews.lk/tamil/391264/இலங்கை-தமிழரசுக்-கட்சியின்-மத்தியக்-குழு-தீர்மானங்களுக்குத்-தடை-கோரி-வழக்கு-தாக்கல்
-
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது - டக்ளஸ்
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது adminDecember 19, 2024 இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் வினவவுள்ளேன் என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இலங்கை – இந்தியா இடையே கடற்றொழிலாளர்கள் விடயம் தவிர இணக்கம் காணப்பட்ட அல்லது கைச்சாத்திடப்பட்ட ஏனைய விடயங்கள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை வலுவூட்டியதாகவே அமைந்துள்ளது. அதனடிப்படையில் குறித்த செயற்பாட்டை நான் வரவேற்கின்றேன். இதேவேளை கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகளில் எதுவிதமான தீர்வுகளையும் குறித்த பயணத்தின்போது எட்டப்பட்டதாக தெரியவில்லை. இதேநேரம் மனிதாபிமான அடிப்படையில் குறித்த விடயத்தை அணுக வேண்டும் என்ற நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறாயின் மனிதாபிமான நிலைப்பாடு என்பது என்ன என்பதே இன்றுள்ள கேள்வியாக இருக்கின்றது. அதாவது இலங்கையின் கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடியாளர்கள் வந்து மீன்களை பிடித்து செல்வதற்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யாதிருக்க வேண்டும் என்பதே இந்த மனிதாபிமான நிலைப்பாடாக இருக்க வேண்டும். ஆனால் எனது நிலைப்பாடு அன்றும் சரி இன்றும் சரி எமது கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக இந்திய மீன்பிடியாளர்கள் உள்நுழைந்து மீன்களை பிடிக்கவோ எமது வளங்களை அபகரிக்கவோ ஒரு வினாடி கூட இடமளிக்க கூடாதென்பதாகவே இருக்கின்றது. இதை நான் பொது வெளியிலும் பல தடவைகள் கூறியிருக்கின்றேன். அதுமட்டுமல்லாது கடந்தகாலம் நான் ஆட்சியில் இருந்தபோது இலங்கை இந்திய வெளிவிவகார உயரதிகாரிகள் கலந்துகொண்ட கலந்துரையாடிலின்போது சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அப்போதும் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்தவகையிலும் இந்திய சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்க முடியாதென நான் கூறியிருந்தேன். அந்தவகையில் தற்போது சிலர் ஊடகங்களில் கூறுவது போன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது கடல் வளத்தையோ கடற்பரப்பையோ இந்திய மீன்பிடியாளர்களுக்கு இடங்கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுப்பதற்கு இடமளிக்கவில்லை என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/209422/
-
அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு 37வருட சிறை
அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு 37வருட சிறை adminDecember 19, 2024 அவுஸ்திரேலியாவில் அவரது பிள்ளைகளின் முன்னால் , மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதுடைய தினுஷ் குரேரா என்ற நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடா்பான விபரங்கள் நேற்றையதினம் விக்டோரியா மாநில உயர் நீதிமன்றத்தில் விவரிக்கப்பட்ட நிலையில் 30 வருடங்களுக்குப் பின்னரே தினுஷ் குரேராவுக்கான மன்னிப்பு குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி அமண்டா ஃபாக்ஸ் கூறியுள்ளார். சுமார் 2வருடங்களுக்கு முன்பு, குரேரா தனது மனைவியும் மூன்று பிள்ளைகளின் தாயான 43 வயதுடைய நெலோமி பெரேராவை கோடரியால் தாக்கி கொலை செய்திருந்தார். நெலோமி , கணவரை பிரிந்து செல்ல தயாராகி இருந்ததாகவும் நீதிமன்றத்திற்கு தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2024/209434/
-
கருணா அம்மான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
கருணா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை adminDecember 19, 2024 கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாா். கடந்த 2006ம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவா் இவ்வாறு இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாா் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர், கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, இனம் தெரியாத ஆயததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தாா்.. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், இன்று கருணா கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணா , தன்னிடம் உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளாா் https://globaltamilnews.net/2024/209439/
-
‘சாகித்ய அகாடமி விருது… வ.உ.சி தான் காரணம்’ : ஆ.இரா.வேங்கடாசலபதி மகிழ்ச்சி!
‘சாகித்ய அகாடமி விருது… வ.உ.சி தான் காரணம்’ : ஆ.இரா.வேங்கடாசலபதி மகிழ்ச்சி! christopherDec 19, 2024 09:12AM வ.உ.சி குறித்து எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி தெரிவித்துள்ளார். இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுடன் ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. தற்பொழுது 21 மொழிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகியவற்றுக்கு விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908 ஆய்வு’ நூலுக்கு 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வ. உ.சி குறித்து எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என ஆ.இரா.வேங்கடாசலபதி தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி அளிக்கிறது! அவர் கூறுகையில், “ வ. உ.சி குறித்து எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் வரலாற்று ஆய்வாளராக மாறியதற்கு வ.உ.சி தான் காரணம். தொழிலாளர் இயக்கத்துக்கு வ. உ.சி. முன்னோடியாகத் திகழ்கிறார். இடஒதுக்கீட்டுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். சித்த மருத்துவத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அவர் ஒரு பேராளுமை. வ.உ.சி குறித்த பல தகவல்கள் ஆவணப்படுத்தப்படவில்லை. இந்நூலுக்கு ஆய்வறிஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் உதவினர். அவர்களுக்கு நன்றி. பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இது எனது சக்திக்கு மீறிய பணி” என்று தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்த ஆ.இரா.வேங்கடாசலபதி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வறிஞர்களில் ஒருவர். சமூக வரலாறு, கலாச்சார வரலாறு தொடர்பான ஆய்வுகளில் மிக ஆழமாக ஈடுபட்டு வரும் இவர், இதுவரை ‘அண்ணல் அடிச்சுவட்டில்’, ‘தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை’, ‘ஆஷ் அடிச்சுவட்டில்’, வ.உ.சியும் பாரதியும் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். https://minnambalam.com/tamil-nadu/sahitya-academy-award-voc-is-the-reason-a-ira-venkatachalapathy-is-happy/
-
வடக்கில் சில அரச அதிகாரிகளுக்கு ஏழைகளின் குரல் கேட்காத நிலைமை – ஆளுநர் வேதநாயகன் வேதனை
வடக்கில் சில அரச அதிகாரிகளுக்கு ஏழைகளின் குரல் கேட்காத நிலைமை – ஆளுநர் வேதநாயகன் வேதனை December 19, 2024 11:18 am ஏழைகளின் குரல் சில அரச அதிகாரிகளுக்குக் கேட்காத நிலைமையே இப்போது இங்கு இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார். ‘தர்மம்’ அமைப்பின் ஏற்பாட்டில் செவிப்புல சவால் உடையோரின் சைகைமொழி உரிமை மற்றும் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வு கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. ‘இலங்கையில் சைகை மொழி அங்கீகரிக்கப்பட வேண்டும், அரச நிறுவனங்களை இலகுவாக அணுகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்ட இந்த நிகழ்வில், இது தொடர்பான கோரிக்கை மனுவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிப்பதற்காக வடக்கு மாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஆளுநர் தனது உரையில், இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இங்கு நீங்கள் திரண்டிருப்பதன் மூலம் உங்கள் உரிமையை நிலைநாட்ட எவ்வளவு அக்கறையாக இருக்கின்றீர்கள் என்பதை உணர முடிவதாகக் குறிப்பிட்டார். உங்களின் குரல்கள் மாத்திரமல்ல ஏழைகளின் குரலும் அரச திணைக்களங்களிலுள்ளவர்களால் கேட்கப்படுவதில்லை என ஆளுநர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மனுவை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பேன் என்று குறிப்பிட்ட ஆளுநர், மாற்றாற்றலுடையோர் நிவாரணங்கள் கேட்டு வருவதில்லை மாறாக தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கே விரும்புகின்றனர் என்பதை தான் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவதாகக் கூறினார். தான் மாவட்ட செயலராகக் கடமையாற்றிய காலத்தில் அங்கு சைகை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இருந்தமையால் உங்களில் பலரின் தேவைகளை தன்னால் இலகுவாக நிறைவேற்ற முடிந்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், அவ்வாறான ஒருவர் ஏனைய திணைக்களங்களிலும் இருந்தாலும் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் தர்மம் அமைப்பின் நிறுவுநர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். https://oruvan.com/governor-vedanayagan-is-distressed-that-some-government-officials-in-the-north-are-not-listening-to-the-voices-of-the-poor/
-
அநுர – மோடி கூட்டறிக்கையில் ’13’ஏன் இல்லை; ‘ இந்து பத்திரிகை ‘கேள்வி
அநுர – மோடி கூட்டறிக்கையில் ’13’ஏன் இல்லை; ‘ இந்து பத்திரிகை ‘கேள்வி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க இந்தியாவுக்குமேற்கொண்டிருந்த விஜ யத்தின் போ து பாரதப்பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மாகாண சபைகளுக்கு சுயாட்சியை வழங்கும் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை என்று ‘ இந்து’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது . ”திரும்பவும் அதுவே: இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம்” என்று மகுடமிட்டு நேற்று புதன்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ள அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கை ஜனாதிபதி அநு ரகுமார திசா நாயக்கவின் இந்தியவிஜய மானது பாரம்பரியத்திற்கு அமைவான அவரது முதலாவது வெளிநாட்டுப் பயணமாகும் .இந்தவிஜயம் இந்தியா-இலங்கை இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியைக் குறிக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது சந்திப்பின் பின்னரான கூட்டறிக்கையானது , 2023 இல் அவரது முன்னோடியான ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்திற்குப் பின் வெளியிடப்பட்டிருந்த கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தவை போன்ற அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது . இலங்கை தனது ஆ ட் புல எல்லையை இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதகமான முறையில் பயன்படுத்தஎந்தவிதத்திலும் அனுமதிக்காது என்ற திசாநாயக்கவின் உறுதிமொழியானது மேலோட்டமாகப் பார்க்கையில், கொழும்பின் நீண்டகாலநிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவது போல் தோன்றுகிறது. ஆனால் திசாநாயக்கா வின் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஒரு இடது-சார்பு சீனா சார்பு கட்சி என்ற அபிப்பிராயத்தை கருத்தில் கொள்கையில் இது குறிப்பிடத்தக்கதொன்றாக இருந்தது. அடுத்த மாதம் முடிவடையவுள்ள அனைத்து “வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள்” பயணங்களுக்கும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஓராண்டு தடைக்காலம் (இந்தியாவின் கவலைகளுக்குப் பிறகு) என்பதன்அடிப்படையில் , இலங்கைக்கு வருகை தரும் சீனக் கப்பல்களுக்கான அனுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே அவரது அவதானிப்பை இந்தியா கருதுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், சீனக் கப்பல்கள் அடிக்கடி வருவது இருதரப்பு உறவுகளில் எரிச்சலை ஏற்படுத்தியது. விக்கிரமசிங்கவின் ஆட்சி “சீனாவை மட்டும் தடுக்க முடியாது” என்று ஆறு மாதங்களுக்கு முன்பு நிலைப்பாடொன்றை எடுத்திருந்த நிலையில் இந்தியாவின் கவலைகளுக்கு ஆட்சி முறைமையானது எவ்வளவு தூரம் உணர்திறன் கொண்டதாக இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது . மேலும் அதானி குழுமத்தின் திட்டங்களின் நிலைமை பற்றி எதிர்பார்க்கப்பட்டிருந்தநிலையில் இரு தலைவர்களின் அறிக்கைகளோ அல்லது கூட்டறிக்கையோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வில்லை. விவசாயம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இலங்கைக்கு உதவுவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு குறித்து கூட்டறிக்கையில் பேசப்பட்டுள்ளது. விவசாயம் தொடர்பான கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கதாகும் . முன்மொழியப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது . அதுகுறித்து இதுவரை 14 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. மீன்பிடி பிரச்சனையில், இரு தரப்பினரும் வெளிப்படையாக தங்கள் நிலைப்பாட்டில் நின்றதாக தென்படுகிறது , ஆனால் இரு நாடுகளிலும் உள்ள மீனவர் சங்கங்களுக்கிடையில் ஒரு விரைவான சந்திப்பை எளிதாக்குவதற்கு கொழும்பு உதவ வேண்டும். மிக முக்கியமாக, கூட்டாகஇடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மோடியின் அறிக்கையின் ஆங்கிலத்திலான பதிப்பினை பொறுத்தவரை , ஒரு நுணுக்கமான மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. நல்லிணக்கம்,இலங்கை தனது அரசியலமைப்பை “முழுமையாக அமுல்படுத்துவதற்கான ” கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம்,மாகா ணசபைகளுக்கு தேர்தலைநடத்துதல் போன்ற விடயங்களை மோடி உள்ளடக்கியிருந்த போதிலும், மாகாண சபைகளுக்கு சுயாட்சியை வழங்கும் இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் பற்றி எந்த குறிப்பும் இல்லை. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக, திருத்தத்திற்கு எதிராக ஜே.வி.பி ஒரு கடுமையான போராட்டத்தை மேற்கொண்டிருந்தது . நவம்பர் 14 பாரா ளுமன்றத் தேர்தலில்திசாநாயக்கா தலைமையிலான கூட்டணி நாடு முழுவதும் பாரிய ஆணையைப் பெற்றுள்ளதால், இந்தியாவுடனான உறவுகளுக்கு ஒரு புதிய திசையைக் காண்பிக்கக்கூடிய சவுகரியமான நிலையில் அவர் உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே யான கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதற்கு இதுவொரு வாய்ப்பாகும். https://akkinikkunchu.com/?p=303831
-
பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - ஜீவன் தொண்டமான்
பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - ஜீவன் தொண்டமான் 19 Dec, 2024 | 11:45 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பெருந்தோட்ட மக்கள் இலங்கை பிரஜைகளே தவிர பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரஜைகள் அல்ல, அரசாங்கத்தின் சலுகைகளை யாருக்கு வழங்க வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் தீர்மானிக்க முடியாது. ஆகவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. எவரையும் விமர்சித்து நான் அரசியல் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய விஜயத்தை மேற்கொண்டமைக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்த போது நானும் இந்தியாவுக்கு சென்றிருந்தேன். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மலையகத்துக்கான இந்திய வீட்டுத்திட்டம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக மலையகத்துக்கு 14 ஆயிரம் வீடுகள் கிடைக்கப்பெற்றன. இந்த திட்டம் தொடர்ந்து இழுபறி நிலையில் இருப்பதற்கு அரசாங்கங்களை மாத்திரம் குறை கூற முடியாது. 1948 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உரிமைகளுக்காகவே நாங்கள் போராடுகிறோம். ஒரே நாளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இதனை அரசாங்கமும் தற்போது விளங்கிக் கொண்டிருக்கும் என்று கருதுகிறேன். மலையக பகுதியில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் மீது மாத்திரமே குறை கூறப்படுகிறது. முதலில் உண்மையான குறைகளை கண்டுக் கொள்ள வேண்டும். பெருந்தோட்டங்களில் தோட்ட நிர்வாகங்களே ஆதிக்கம் கொண்டுள்ளன. ஒரு தோட்டத்தில் 100 குடும்பங்கள் வாழ்வார்களாயின் அவர்களின் 10 குடும்பங்கள் மாத்திரமே தோட்டங்களில் தொழில் புரிகிறார்கள். அரச சலுகைகள் வழங்கப்படும் போது தோட்ட நிர்வாகங்களே அவற்றை யாருக்கு வழங்க வேண்டும் அதாவது தோட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு வழங்க வேண்டுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கின்றன. அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் பெருந்தோட்ட மக்கள் அனைவரும் உள்ளடங்குகிறார்கள் என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. பெருந்தோட்ட பகுதிகளில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை அமுல்படுத்தும் போது பொதுவான கொள்கையை செயற்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். பெருந்தோட்டங்களில் தொழில் செய்பவர்களைப் போல், தொழில் செய்யாதவர்களுக்கும் அஸ்வெசும திட்டம் மற்றும் தற்போது பாடசாலை மாணவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ள 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். பெருந்தோட்ட மக்கள் இலங்கை பிரஜைகளே தவிர பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரஜைகள் அல்ல, அரசாங்கத்தின் சலுகைகளை யாருக்கு வழங்க வேண்டும் என்று பெருந் தோட்ட நிறுவனங்கள் தீர்மானிக்க முடியாது. ஆகவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். எவரையும் குறை கூறி, விமர்சித்து நான் அரசியல் செய்யவில்லை. நாங்கள் பரம்பரை பரம்பரையாக மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. சிறந்த மாற்றத்துக்காகவே மக்கள் புதியவர்களை தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே மக்களின் ஆணைக்கமைய செயற்படுங்கள். எமது மக்களின் முன்னேற்றத்துக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார். https://www.virakesari.lk/article/201627
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்! பாலஸ்தீனிய பிரஜை ஒருவரை கொலை செய்து அவரது உடலை இழிவுபடுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேலிய இராணுவ உத்தியோகத்தரான கெல் ஃபெரன்புக் (Gal Ferenbook) என்பவர் இலங்கையில் தங்கியுள்ளதாகத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மனித உரிமை குற்றங்களுக்கான நீதிக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஹிந்த் ரஜாப் என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த நபரைக் கைது செய்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது. ஏலவே அந்த நபருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த நபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையை விடுக்குமாறு இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறையினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஹிந்த் ரஜாப் அமைப்பின் வெளிப்படுத்தல் தொடர்பில் எமது செய்தி சேவை காவல்துறையினரிடம் வினவியது. இதற்குப் பதிலளித்த காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க, வேறு நாடொன்றில் குற்றச்செயல்களைப் புரிந்த ஒருவர் இலங்கைக்குள் நுழைந்திருப்பாராயின் அது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக காவல்துறையினருக்கு அறியப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார். எனினும் குறித்த இஸ்ரேலிய இராணுவ உத்தியோகத்தர் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எந்த தகவலையும் இதுவரையில் வழங்கவில்லை எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். https://www.hirunews.lk/tamil/391194/சர்வதேச-குற்றவியல்-நீதிமன்றில்-முறைப்பாடளிக்கப்பட்டுள்ள-இஸ்ரேலியர்-ஒருவர்-இலங்கையில்-தஞ்சம்
-
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி! உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்குத் தீர்வாகப் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் டன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை ஜனவரி 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்து உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் ஊடாக சந்தைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது https://www.hirunews.lk/tamil/391215/உப்பு-இறக்குமதிக்கு-அமைச்சரவை-அனுமதி
-
சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை!
சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை! சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்காக சலுகை விலையில் மதுபான வகையொன்று அடுத்த வருடம் முதல் தயாரிக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், மது வரி திணைக்களத்தின் இந்த வருடத்துக்கான வருமான இலக்கில் இதுவரையில் 210 மில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டுக்கான மதுவரித் திணைக்ககளத்தின் வருமான இலக்காக 232 மில்லியன் ரூபாய் என மதிப்படப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள வருமான இலக்கு எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் பெற்றுக் கொள்ள முடியும் என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா தெரிவித்துள்ளார். அதேநேரம், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சட்டவிரோதமான மதுபானங்கள் தற்போது மதுபானசாலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. அவ்வாறு விற்பனை செய்யப்படுகின்ற மதுபானங்களை கொள்வனவு செய்ய வேண்டாம். அவற்றில் நஞ்சு தன்மை காணப்படக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. இதனைக் கருத்திற் கொண்டு புதிய வகையான மதுபானம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா குறிப்பிட்டுள்ளார். https://www.hirunews.lk/tamil/391200/சட்டவிரோத-மதுபானங்களுக்கு-அடிமையானவர்களுக்கு-புதிய-மதுபான-வகை