Everything posted by கிருபன்
-
சைப்ரஸ் சென்ற இலங்கையர்கள் பெரும் நெருக்கடியில்
சைப்ரஸ் சென்ற இலங்கையர்கள் பெரும் நெருக்கடியில் December 19, 2024 10:36 am சைப்ரஸில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சைப்ரஸில் பணிபுரியும் இந்நாட்டு தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து சமூக பாதுகாப்பு நிதியாக பெறப்படும் பணம் அவர்களுக்கு மீள வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி உரிய பணத்தை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=197518
-
ஞானசாரருக்கு பிடியாணை
ஞானசார தேரரை கைது செய்யுமாறு பிடியாணை December 19, 2024 10:57 am இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (19) அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் இந்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கட்சிக்காரருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியாமல் போனதாக ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இதன்படி ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=197519
-
100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு
100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு December 18, 2024 10:16 pm யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று (18) அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார். நேற்று (17) தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்குத் தொடர்பான கட்டாணை வழங்குவது தொடர்பாக யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. இதன் போது வழக்காளி சார்பில் சட்டத்தரணி த.தினேசசன் அனுசரனையுடன், சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் ஏற்பாடாகியிருந்தார். வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு ஆவதூறாக எதிராளி வைத்தியர் இராமநாதன் அசர்ச்சுனாவினால் செல்லப்பட்ட விடயங்கள் மற்றும் 09.12.2024 அன்று இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஏதிராளியான இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்திக்கு எதிராக, அவருடைய மாண்பு மற்றும் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை தொரிவிப்பதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது. அவரால் கூறப்படும் கருத்துக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதோடு அடிப்படை அறமற்ற நபர் ஒருவருடைய கருத்தாகும் என்று வழக்காளி சத்தியமூர்த்தி தனது சத்தியக்கூற்றிலே தெரிவித்திருந்தமை தொடர்பில் சட்டத்தினையும், நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி நீண்ட சமர்ப்பனம் வழக்காளி தரப்பில் மன்றில் முன்வைக்கப்பட்டது. மேலும் வழக்காளியானவர் தனது சத்தியக் கூற்றிலேயே தனது நோக்கம் எதிராளியான இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே, குடிமகன் என்ற வகையிலே அல்லது பொது நிறுவன்களை பொறுபுக் கூற வைக்க வேண்டும் என்ற நியாயமாக செயற்படும் இடத்து, அவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் பொய்யான வகையிலும், அவதூறான வகையிலும் அவரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கட்டளையாக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. குறித்த விடயங்களை செவிமடுத்த நீதிபதி வழக்காளியால் கோரப்பட்டவாறு, அவருக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் எதனையும் தெரிவிக்க கூடாது என எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஒரு முகமாக வழக்காளி தரப்பை மட்டும் கேட்டு வழங்கப்படும் கட்டாணை என்பதால், இது தொடர்பான அறிவித்தல் எதிராளிக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்டாணை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வலிதாக இருக்கும். அன்றைய தினம் அதனை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானத்தினை நீதிபதி எடுப்பார். இது தொடர்பில் எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கட்டளையின் பிரதியையும், அறிவித்தலையும் வழங்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197502
-
முப்பட்டைக்கண்ணாடியினூடே - ஜெயமோகன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2 jeyamohanDecember 18, 2024 ( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால் உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம் ஆகிய நான்கு அம்சங்கள் கொண்ட நவீனத்துவ இலக்கிய வடிவம் அவனுக்கு தன்னுடைய அகத்தை தன் பார்வையில் வெளிப்படுத்துவதற்கு போதுமானதல்ல என்று தோன்றலாம். ஏனெனில் அவன் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருந்த சூழல் முற்றிலும் அதற்கு பொருந்தாததாக மாறிவிட்டிருந்தது. அவன் வாழ்ந்த அந்தக் காலகட்டத்தில் மார்க்சியம் போன்ற கோட்பாடுகள் சிதைந்து விழுந்து கொண்டிருந்தன. உலகை ஆட்சி செய்த பெரும் லட்சியக்கனவுள் அதிகார அமைப்புகளாக மாறி தங்களை இறுக்கமான கற்கோபுரங்களாக நிலைநிறுத்திக்கொண்டிருந்தன. ஆன்மிகம் மதம் ஆகியவற்றைப்பற்றியும் அவனுக்கு அதே எதிர்ப்பும் ஒவ்வாமையும் இருந்தது. ஒட்டுமொத்தமாக அவன் பெருங்கட்டுமானங்களை சிதைக்கவும், உறுதியான அமைப்புகளை மீறிச்செல்லவும், வழிநடத்தப்பட்டு பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும் விரும்புபவனாக இருக்கக்கூடும். விளைவாக பிறிதொன்றுக்கான தேடல் அவனுக்கு இயல்பிலேயே வந்தமைகிறது. அவன் நவீனத்துவக் கூறுகளான நான்கையும் கடந்து செல்ல முயலும்போது இயல்பாகவே பின்நவீனத்துவ அம்சம் அவனில் குடியேறுகிறது. அவ்வகையில் தொண்ணூறுகளில் தங்கள் முதன்மைப்படைப்புகளுடன் தமிழில் வெளிப்பட்ட முக்கியமான எழுத்தாளர்கள் அனைவரிலுமே பின்நவீனத்துவ அம்சம் வெவ்வேறு வகையில் வெளிப்பட்டது. கோணங்கி தமிழ்ப் புனைகதையின் சீரான,ஒழுங்கான, செறிவான மொழி என்பதை மீறிச்சென்று கட்டற்று நனவோடை முறையிலோ அல்லது படிமப்பெருக்காகவோ வெளிப்படும் ஒரு மொழியை உருவாக்கிக்கொண்டார். யுவன் சந்திரசேகர் கட்டமைப்புள்ள, செறிவான கதை எனும் வடிவத்தை கதைகளுக்குள் கதைகளுக்குள் கதை எனும் கதை விளையாட்டு அல்லது கதை ஊடுருவல் வழியாக மாற்றி அமைத்தார். எஸ்.ராமகிருஷ்ணன் தன் தொடக்ககாலக் கதைகளில் எதார்த்தவாதத்தின் இறுக்கமான நடைமுறைச்சித்தரிப்பை மிகுபுனைவினூடாக கடக்க முயன்றார். சாரு நிவேதிதா தன் புனைவுகளில் பொதுச்சூழலின் உளவியல் எல்லைகளை மீறிச்சென்று கூறப்படாத பக்கங்களை விவரித்து அதை உருவாக்கினார். நான் என் படைப்புகளில் நவீனத்துவத்தின் எல்லா அம்சங்களையும் செவ்வியல் சார்ந்த அழகியலைக்கொண்டு மீற முயன்றேன். ஆனால் பழைய செவ்வியலை திரும்ப நிகழ்த்த முடியாது ஏனெனில் அதை நவீனத்துவம் கடந்துவிட்டிருந்தது. ஆகவே நவீனத்துவம் கடந்த ஒரு செவ்வியலுக்கான முயற்சியில் ஈடுபட்டேன், அது பின்நவீனத்துவ கூறுகள் கொண்டதாக என் படைப்புகளை மாற்றியது. குறிப்பாக விஷ்ணுபுரம் எனும் பெருநாவல். தமிழில் நிகழ்ந்த முதற்பெரும் பின்நவீனத்துவ படைப்பென்றும் வேறொரு கோணத்தில் பின்நவீனத்துவத்தைக் கடந்து ட்ரான்ஸ் மாடர்னிஸம் அல்லது மீநவீனத்துவம் என்றும் விஷ்ணுபுரத்தை சொல்லமுடியும் அது நவீனத்துவத்தின் எதிர்மறைத்தன்மை, செறிவு, செதுக்கப்பட்ட மொழி, வடிவ ஒருமை போன்ற பலவற்றை தாண்டி செல்கிறது. செவ்வியலுக்குரிய நாற்புறமும் கிளைவிட்டு பரவும் வடிவமும், ஒன்றுக்கொன்று மறுத்தும் ஒன்றுக்கொன்று பிணைந்தும் செல்லும் கதைகளைக்கொண்ட மரபான காவிய வடிவமும், தன்னைத்தானே புனைந்துகொண்டும் தன்னைத்தானே மறுத்துக்கொண்டும் முன்செல்லும் பின்நவீனத்துவ கூறுகளும் கொண்டதாக அந்நாவல் திகழ்கிறது. ஆகவே தான் அந்நாவல் வெளிவந்தபோது அன்று தீவிரமான பின்நவீனத்துவ கருத்துகளை முன்வைத்துக்கொண்டிருந்த ரமேஷ் பிரேதன் போன்றவர்கள் அதை ஒரு முதன்மையான கலைநிகழ்வென்று மதிப்பிட்டனர் இரா.முருகன் இந்தப் பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட, தன்னியல்பான படைப்புத்தன்மையுடன் வெளிப்பட்ட தமிழ் எழுத்து மரபில் முக்கியமானவர் என்று வரையறுக்கலாம். அவ்வகையில் கோணங்கி, நான், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோரின் வரிசையைச் சேர்ந்தவர் அவர். எவ்வகையிலும் பின் நவீனத்துவ எழுத்துக்கு அவர் முயன்றவர் அல்ல. எந்தக் கோணத்திலும் இலக்கியத்தில் வடிவ சோதனைக்குத் தான் முயன்றதில்லை என்று அவர் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார். மெய்யாகவே அவர் அதற்கு முயன்றதில்லை என்பதற்கு அவரது நூல்களே சான்று பின்நவீனத்துவ வடிவங்களை சோதனை செய்த எழுத்தாளர்கள் எழுதும் படிமங்கள் மேல் படிமங்களை அடுக்கி உருவாக்கப்படும் செயற்கை இறுக்கம் கொண்ட நடை, அதை மேலும் செறிவாக்கும் பொருட்டு புள்ளி வைக்காமல் பல சொற்றொடர்களை இணைத்து ஒற்றைச் சொற்றொடராக எழுதுதல், சிடுக்கான சொற்றொடர்களை அமைத்தல், கதைகளை அல்லது உரையாடல்களை ஒன்றுடன் ஒன்று கலந்து கால-இட குழப்பத்தை உருவாக்குதல் போன்ற எதையும் இரா.முருகன் செய்ததில்லை. அவருடைய படைப்புகள் உண்மையில் மிக நேரடியாக, ஒரு மரபான கதை சொல்லி தன்னியல்பாக எப்படி கதை சொல்வாரோ அப்படி எழுதப்பட்டவை. அவை ஒரு நவீன இலக்கிய திறனாய்வாளனின் கண்ணில் மாய எதார்த்த தன்மை கொண்டவை. நேர்கோடற்ற கதை சொல்லும் முறை கொண்டவை. தற்பெருக்குத் தன்மை கொண்டவை. தன் மறுப்புத்தன்மையும் கொண்டவை. இன்னொரு கோணத்தில் ஒரு தொன்மையான சிற்றூரில் பழைய இல்லம் ஒன்றின் திண்ணையில் ஓய்வாக அமர்ந்து நன்கு தெரிந்த நான்கு பேரிடம் நினைவில் வரும் நான்கு பேரிடம் நினைவில் வரும் கதைகளை அந்த அடுக்கிலேயே சொல்லிச் செல்லும் ஓர் எளிய கதைசொல்லியின் விவரிப்பாக எடுத்துக்கொண்டால் மிகச்சரியாக அது பொருந்துவதையும் காணமுடிகிறது. இரா.முருகன் முயன்றது இரண்டாவது வெளிப்பாட்டை. தன்னியல்பாகவே அதற்கு அத்தனை பின் நவீனத்துவ கூறுகளும் அமைந்து வந்திருக்கின்றன. ஒரு இந்தியக் கதைசொல்லியின் கதையில் கறாரான புறவய எதார்த்தம் எப்படி இருக்க முடியும்? அவ்வண்ணம் நிகழ்ந்ததை நிகழ்ந்தபடியே சொல்லும் ஒரு மரபு மூவாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இருந்திருக்கிறதா? அப்படி ஒரு கதைசொல்லியையாவது நாம் நமது இளவயதில் எங்கேனும் சந்தித்திருக்கிறோமா? நம் சூழலில் சொல்லப்படும் எந்தக் கதையிலுமே தன்னியல்பாக ஒரு மாய அம்சம் வந்து சேர்ந்துவிடுகிறது. குழந்தைகளாக இருக்கும்போதே பானைக்குள் மடித்து பரணில் வைக்கப்பட்ட பாட்டிகளைப்பற்றி, நள்ளிரவில் கதவைத்தட்டி சோறு கேட்கும் குலதெய்வத்தைப்பற்றி, கைக்குழந்தை அருகே காவலுக்கு வந்தமர்ந்த செத்துப்போன மூதாதையரைப்பற்றியெல்லாம் கேட்டுதான் நாம் வளர்ந்திருக்கிறோம். கதைகளை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு முற்றிலும் தர்க்கபூர்வமாக நகரும் ஒழுங்கில் அமைப்பதென்பது செவ்வியலிலக்கியம் உருவாக்கிய நவீனப் புனைவுமுறையே ஒழிய பேச்சுமொழி கதைசொல்லலில் அது இருந்ததில்லை. பேச்சுமொழி கதை ஓர் ஆறுபோல தனக்கான வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. இரண்டு விசைகள் தான் அதன் திசையைத் தீர்மானிக்கின்றன ஒன்று அது செல்லும் நிலம். இன்னொன்று அதன் நீரின் அளவு. வாய்மொழிக்கதைகள் கதைசொல்லியின் உளநிலை, கேட்பவரின் உளநிலை ஆகிய இரண்டும் கலந்து உருவாகின்றன. கேட்பவருக்கு என்ன தெரியும் என்பது மிக முக்கியமானது. இக்கதைகள் சட்டென்று ஒரு நினைவில் முட்டி இன்னொரு பக்கம் திரும்புகின்றன. எதிரிலிருக்கும் ஒருவர் சொல்லும் ஒரு குறிப்பிலிருந்து அதற்கான வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றன. ஒரு கதை கைதுடைக்கும் தாள் அதன் பெட்டியிலிருந்து இன்னொன்றை கொண்டு வருவதுபோல் இன்னொரு கதையை தன்னில்பாக எடுத்துக்கொண்டு வருகிறது. ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்குமான தொடர்பென்பது முற்றிலும் தற்செயலாக நடந்ததாகத் தான் இருக்கிறது. இரா.முருகன் அவருடைய கதைகளில் முயன்ற வடிவம் இந்த வாயாடியான கிராமத்துக் கதை சொல்லி என்னும் உருவகம் தான் அவருக்கு நன்கு அகத்தில் பதிந்து இயல்பாக அமைந்துவிட்டிருந்த இக்கதை சொல்லி வெளிப்படுவதற்கு நவீனத்துவ கதைசொல்லல் முறை தடையாக இருந்தமையால் மட்டுமே அவர் அதை மீறினார். எந்த இலக்கிய கோட்பாட்டின் வழிகாட்டுதலினாலும் அல்ல. நவீனத்துவத்தை மீறியதாலேயே அதில் பின்நவீனத்துவ கூறுகள் இடம் பெற்றன. தமிழில் பின்நவீனத்துவ வெளிப்பாட்டின் மிகச்சிறந்த உதாரணங்களில் ஒருவராக அவரை நிலைகொள்ளச் செய்தன. ( 3 ) இரா.முருகனின் நடையும் வடிவமும் உருவாகித் திரண்டு வந்த விரிந்த சித்திரத்தை நாம் சென்ற முப்பதாண்டுகால தமிழ் இலக்கிய வளர்ச்சியின் வெவ்வேறு கூறுகளைக் கருத்தில் கொண்டு ஆராயலாம். அவருடைய புனைவுலகின் முதன்மையான செல்வாக்குகளில் ஒன்று எழுத்தாளர் சுஜாதா. தமிழ் நவீன இலக்கியத்திற்குள் சுஜாதாவின் முதன்மையான கொடைகளில் ஒன்று இரா.முருகனின் முன்னோடிகளில் ஒருவராக அமைந்ததே. இரா.முருகன் அவருடைய தொடக்க கால கவிதை ஒன்றை (ஒரு கிராமத்துப்பெண்ணின் தலைப்பிரசவம்) எழுதியபோது அதை அடையாளம் கண்டு கணையாழி இதழில் அதைப்பற்றி எழுதி அவரை கவனத்திற்கு கொண்டு வந்தவர் சுஜாதா. சுஜாதாவின் நடை மீது இரா.முருகனுக்கு மிகத்தீவிரமான ஈர்ப்பு ஒன்று இருந்திருக்கிறது. சுஜாதாவின் நடையை அவர் நகல் எடுத்தார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. அந்த நடை இயல்பாகவே அவரில் பிரதிபலித்து, மேலும் புதிய களங்களைக்கண்டடைந்து தன்னை விரிவாக்கிக்கொண்டதென்றே தோன்றுகிறது. இலக்கியத்தில் மிக இயல்பான ஒன்று அது. தன்னுடைய நடைக்கு முன்னோடி இல்லாத ஒரு படைப்பாளி கூட ஒரு மொழியிலும் திகழமுடியாது. ’இவருக்கு முன்னோடிகளே இல்லை’ என்று சொல்வது ஓர் எளிய புகழ்மொழி. ஆனால் அவ்வண்ணம் ஒன்று இயலாதென்பது இலக்கிய விமர்சனத்தில் அடிக்கோடிடப்படவேண்டிய கருத்துகளில் ஒன்று. எங்கிருந்து அச்செல்வாக்கு என்று மட்டுமே உண்மையில் விமர்சகர் தேடவேண்டும். செல்வாக்கை அஞ்சுதல் என்று ஹெரால்ட் ப்ளூம் ஒரு கருத்தை முன்வைக்கிறார். முன்னோடிகளின் செல்வாக்கு தன்னில் நிகழ்ந்துவிடக்கூடாதென்று அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் கவனம் கொள்கிறார்கள். ஆகவே அவர்கள் முன்னோடிகளிலிருந்து திட்டமிட்ட முறையில் தங்களை விலக்கிக்கொண்டு, அல்லது உருமாற்றிக்கொண்டு, புதிய வடிவங்களை அடைகிறார்கள் என்று அவர் கூறுகிறார். முன்னோடிகளின் செல்வாக்கும் அச்செல்வாக்கிலிருந்து விலக முயல்வதும் இரண்டுமே ஒரு நடையின் உருவாக்கத்தின் அடிப்படை விசைகள்தாம் என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் எனது பார்வையில் அந்த திட்டமிட்ட விலகல் என்பது பெரும்பாலும் பிழையாக முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒரு படைப்பாளி அவர் உண்மையிலேயே இலக்கியத்திறன் கொண்டவராக, தனக்கென வாழ்வும் தனக்கென உணர்வும் தனக்கென்ற அகமொழியும் கொண்டவரென்றால் அவரில் முன்னோடி ஒருவரின் நடை அல்லது உளநிலை அப்படியே திரும்ப வெளிப்பட வாய்ப்பே இல்லை ஆகவே இலக்கியத் திறன் மெய்யாகவே கொண்ட படைப்பாளி ஒருபோதும் செல்வாக்குக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. செல்வாக்குக்கு அஞ்சுவதென்பதே ஒருவர் தன்னுடைய புனைவுத்திறன் மீது கொண்டுள்ள ஐயப்பாடு மற்றும் தன்னம்பிக்கைக் குறைவைத்தான் காட்டுகிறது. என் அகம் எத்தனை புறப்பாதிப்புகளுக்கு அப்பாலும் தன் தன்னியல்யுடன் தான் இருக்கும் என்று உணர்வு இருக்கும் படைப்பாளி அவ்வண்ணம் அஞ்ச மாட்டான் என்று தான் நான் நினைக்கிறேன். தன்னியல்பில் ஒருபோதும் நான் எனக்கு அச்சமோ தயக்கமோ உருவானதில்லை. எந்த ஒரு செல்வாக்கையும் என்னிலிருந்து அகற்றும் பொருட்டு நான் எதையும் செய்து கொண்டதும் இல்லை. என்னில் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோருடன் சுஜாதாவின் செல்வாக்கும் உண்டென்று நான் அறிவேன். என் முதல் தொகுதியின் முன்னுரையிலேயே அச்செல்வாக்குகளை நானே குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அச்செல்வாக்கினூடாக என்னுடைய அகமொழி திரண்டு எனக்குரியதாக வந்து என்னுடைய தனித்த நடையாக நிலைகொள்கிறது என்பதை இன்று நான் காண்கிறேன். சுஜாதாவின் நடை இரா.முருகனில் நீடித்தது என்பது ஓர் எளிய கூற்று. சுஜாதாவின் நடை அதனுடன் உரையாடும் ஓர் அம்சத்தை இராமுருகனின் உள்ளத்தில் கண்டடைந்து அதை முளைத்தெழுந்து வளர ஊக்குவித்தது என்று சொல்வது சரியானதாகும். இரா.முருகனின் அகத்தில் நிலைகொண்டு, சுஜாதாவின் நடையை தொட்டு அடைந்த அந்த அம்சம் எது என்பது தான் ஓர் இலக்கிய விமர்சகன் தேடி கண்டடையக்கூடிய ஒன்றாக இருக்கும். அது என்னுடைய பார்வையில் ’நாத்திறம் கொண்ட கதை சொல்லி’ என்பதாகவே இருக்கும். சுஜாதா கதைகளை எழுதுவதில்லை, சொல்கிறார். அவருடைய எல்லாக் கதைகளுமே சுஜாதா என்ற கதைசொல்லியால் சொல்லப்படுபவை. கதையின் நிகழ்வுகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்களின் உரையாடல் கூட சுஜாதாவின் நாத்திறம் வெளிப்படக்கூடியதாக இருக்கும். நையாண்டி, நுண்ணிய பிரதி ஊடாட்டம், செவிஉணர் மொழி நுட்பங்கள் ஆகியவை கொண்டது சுஜாவின் நடை. சுஜாதா என்னும் கதைசொல்லி தன் கதைகளை விழிப்புடன் வித்தாரமாக சொல்லி நிலைநிறுத்துகிறார். தமிழின் நவீனத்துவ இலக்கியப்புலத்தில் வித்தாரம் என்பது முற்றிலும் எதிர்மறைத்தன்மை கொண்ட, நிராகரிக்கப்படவேண்டிய ஓர் அழகியல் கூறாகவே கருதப்பட்டது. ’தளுக்கு’ ’வித்தாரம்’ என்பதை முழுமையாக நிராகரித்தபடியே தான் அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும், அவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்த க.நா.சுப்பரமணியமும் இலக்கியப்படைப்புகளை பார்த்திருக்கிறார்கள் என்பது தமிழில் இலக்கிய வாசகர்கள் உணர்ந்த ஒன்றாகவே இருக்கும். சுஜாதாவை தமிழ் தீவிர இலக்கியத்தரப்பு நிராகரித்தது அந்த வித்தாரம் என்னும் அம்சத்திற்காகத்தான். அந்த வித்தார அம்சம் மிகக்குறைவாக உள்ள கதைகள் சீரங்கம் கதைகள் என்ற பெயரில் அவர் எழுதிய தன் வரலாற்றுத்தன்மை கொண்ட சில கதைகளும், மத்யமர் வரிசை என்ற பெயரில் அவர் எழுதிய கதைகளில் சிலவும் மட்டுமே. அவை மட்டுமே தமிழ் இலக்கிய வாசகர்களால் ஏற்கப்பட்டுள்ளன. அவ்வித்தாரம் உரையாடல்களில் தன்னை வெளிக்காட்டிக்கொண்டாலும் கூட சுஜாதாவின் நாடகங்களே அவருடைய முதன்மையான படைப்புகள் என்று நான் எண்ணுகிறேன். இந்த வித்தாரமான படைப்புக் குரல், கதைசொல்லியின் நாத்துடிப்பு இரா.முருகனைக் கவர்ந்திருக்கலாம். இரா.முருகனின் ஆளுமையை அறிந்தவன் என்கிற வகையில் இது ஒரு புன்னகையை என்னில் உருவாக்குகிறது. ஏனெனில் தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட பேசவே தெரியாத ஒருவராகவே அவர் எனக்குத் தெரிந்திருக்கிறார். அவருக்குள்ளிருந்து பேசத்தவித்த ஒரு கதைசொல்லி சுஜாதாவை கண்டடைந்திருக்கிறார். கதை சொல்லும்போதே கதைமாந்தர் மேலும் கதைச்சூழல் மேலும் கதைக்களத்துக்கு அப்பால் உள்ளவற்றின்மேலும் தன் கருத்துக்களை சொல்லிக்கொண்டே தாவிச்செல்லும் ஒரு கதை சொல்லி. ஒன்றை சொல்லும்போதே பத்து விஷயங்கள் முண்டியடித்து நாவில் குடியேறும் கதைசொல்லி. கதைசொல்லியென தன்னை ஒரு கணமும் விலக்கி நிறுத்தி ஒரு நிகழ்வை சொல்ல முடியாதவர். அத்தகைய ஒரு கதைசொல்லி இரா.முருகனிடத்திலிருந்து சுஜாதாவால் எழுப்பப்பட்டு தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்தார். சுஜாதா துப்பறியும் கதைகளிலும்,பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அறிவியல் புனைகதைகளிலும் வெளிப்படுத்திய அந்தக் கதைசொல்லியை வரலாறு சார்ந்து பேசும் ஒருவராக இரா.முருகன் உருவாக்கிக்கொண்டார். இரா.முருகனின் அந்தக் கதைசொல்லி தனக்கான மொழிநடையை சுஜாதாவிலிருந்து உருவாக்கிக்கொண்டார். மூன்று அம்சங்களை அவ்வாறு அவர் எடுத்துக்கொண்டார் என்று வரையறுக்கலாம். வரலாறு மற்றும் வெவ்வேறு மொழிபுகளிலிருந்து தன்னுடைய தரவுகளையும் நடைகளையும் திரட்டிக்கொண்டு முன்வரும் தன்மை. சொல்லும் சாத்தியத்திற்குள் மட்டுமே சித்தரிப்பை நிறுத்திக்கொண்டு கதையை விரைந்து நிகழ்த்திச்செல்லும் தன்மை கதையின் ஒழுக்குக்குக் கட்டுப்படாமல் நினைவுகளின் அடுக்கில் நிகழ்வுத்தொடர்களின் தற்செயல்களின் வழியாக கதையை பல்வேறு தாவல்களினூடாக நிகழ்த்திச் செல்லும் தன்மை. இம்மூன்று அம்சங்களும் தொடர்ந்து இரா.முருகனைப்படிக்க வருபவர்களுக்கு இது சுஜாதா என்று தோன்றச் செய்கின்றன. ஆனால் தன்னுடைய அடிப்படையான தேவையால் சுஜாதாவை மிக எளிதாக கடந்துசென்று தன் உலகை நிகழ்த்திக்கொள்கிறார். இரா.முருகன் சுஜாதாவை கடந்து செல்லும் இடங்கள் வழியாகவே அவருடைய ஆளுமை உருவாகி வந்திருக்கிறது. இரா.முருகனின் தொடக்ககாலச் சிறுகதைகள் சுஜாதாவின் நடையில் தமிழகத்தின் சிவகங்கை அல்லது பாலக்காடு சார்ந்த சிற்றூர்களின் சித்திரங்களை அளிப்பவையாகவோ அல்லது இராமுருகன் புழங்கிய கணிப்பொறித்துறை சார்ந்த உலகின் கார்ப்பரேட் வாழ்க்கையின் சித்திரங்களை அளிப்பதாகவோ இருப்பதைக் காணலாம். விஷ்ணுபுரம் போன்ற அவரது தொடக்க கால கதைகளில் அவர் சுஜாதாவின் நடையுடன் ஒரு கிராமத்துச் சித்திரத்தை எழுத முயல்கிறார். சுஜாதாவின் இயல்பான நையாண்டி கலந்த பார்வை, சுருக்கமான சொல்வழிச் சித்தரிப்பு, கதாபாத்திரங்களை உரையாடல் வழியாகவே நிகழ்த்திக்காட்டும் தன்மை ஆகியவை அக்கதைகளில் இருந்தன. அக்கதைகளிலேயே பின்னர் உருவாகி வந்த இரா.முருகனின் அம்சங்கள் எல்லாமே திகழ்ந்திருந்தன. பின்னர் இக்கதைகளில் உள்ள சிறந்த தருணங்கள் வழியாகத் தன்னைக் கண்டடைந்துகொண்டு அரசூர் வம்சம் வழியாகவே இரா.முருகன் தன்னைச் சரியாக வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார். கோவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த இதழ் ஒன்றில் இரா.முருகன் ஒரு நீண்ட விடுமுறைக்காலத்தில் லண்டனில் வைத்து கப்ரியேல் கார்சியா மார்க்யூஸ் உட்பட லத்தீன் அமெரிக்க மாயயதார்த்த கதாசிரியர்களின் நாவல்களை தொடர்ந்து தீவிரமாக பயின்றதை ஒரு குறிப்பாக எழுதியிருந்தார். இந்த வாசிப்புக்குப் பிறகே அவர் அரசூர் வம்சம் போன்ற ஒரு படைப்பை எழுத முற்படுகிறார். அப்போது அத்தனை விரைவாக அவர் மாயயதார்த்த நாவல்களை படித்ததாகச் சொன்னதை அன்றைய உதிரி அறிவுஜீவி எவரோ நையாண்டி செய்திருந்ததை நினைவுகூர்கிறேன். அந்தத் தீவிரமான வாசிப்பென்பது ஒருவர் தனக்கான மொழி அல்லது வடிவத்தைத் தேடிக்கொண்டிருக்கும்போது அதைக் கண்டடையும் தருணத்தில் உருவாகும் வீச்சு என்பதை அவரைப்போன்ற மேலோட்டமான வாசிப்பாளர்களால் புரிந்துகொள்ள முடியாது லத்தீனமெரிக்க மாயயதார்த்தவாதம் இரா.முருகனை ஒரு மாயப்பேய் என தழுவிக்கொண்டது. அது உருவாக்கும் சாத்தியக்கூறுகளை அவர் தொடர்ந்து கற்றுக்கொண்டார் ஆனால் தமிழில் லத்தீனமெரிக்க மாய யதார்த்தத்தின் நேரடிச் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள் அதைத் திரும்ப எழுத முயன்று உருவாக்கிய அபத்தமான எழுத்துகளை அவர் உருவாக்கவில்லை. அவருடைய எழுத்தில் மாலுமிகளும் டாலியாப்பூக்களும் கடல்நோயும் எல்லாம் திகழவில்லை. மாறாக அவர் நன்கு அறிந்திருந்த அவருடைய ஐந்தாம் தலைமுறைக் குடும்ப பின்புலத்தில் அவர்கள் வாழ்ந்த வெவ்வேறு வரலாற்றுக்களங்களில் கதையை நிகழ்த்திச் செல்வதற்கு தேவையான அளவுக்கு மட்டுமே அந்த மாய யதார்த்தவாதம் அவருக்கு உதவியது. வரலாற்றை தன்மயப்படுத்திக்கொள்வதற்காக மாய யதார்த்தத்தை முருகன் பயன்படுத்தினார் என்று சொல்லலாம். வரலாறெனும் களிறை தனக்கு உகந்த முறையில் வசப்படுத்திக்கொள்வதற்கான மந்திரமாக அவருக்கு மாய யதார்த்தவாதம் பயன்பட்டது. மாய யதார்த்தவாதமும், சுஜாதாவின் மொழி நடையும் இணைந்த ஒரு புனைவுலகம் என்று இரா.முருகனை அழகியல்ரீதியாக வரையறுக்க முடியும். அப்புனைவுலகத்தின் பேசுபொருள் என்பது வரலாறு. இப்புள்ளிகளினூடாக இரா.முருகனை தொகுத்துக்கொள்வது வாசகர்களுக்கு எளிதாக இருக்கும். (மேலும்) https://www.jeyamohan.in/209053/
-
முப்பட்டைக்கண்ணாடியினூடே - ஜெயமோகன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே jeyamohanDecember 17, 2024 (1) அண்மையில் எகிப்து சென்றிருந்தபோது அங்கிருக்கும் பிரம்மாண்டமான ஆலயங்களினூடாக நடக்கும் நேரத்தில் எண்ணிக்கொண்டேன். அவை வெறும் ஆலயங்கள் மட்டும் அல்ல. மாபெரும் நூல்களும் கூட. காவியங்கள் என்றே சொல்லத்தக்க அளவுக்கு பிரம்மாண்டமானவை. அவற்றின் சித்திர எழுத்துக்கள் முழுமையாகவே படிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மானுடத்தின் தொல்வரலாறு குறித்து நமக்கிருக்கும் விரிந்த சித்திரமே அங்கிருந்து உருவாகி வந்ததுதான். ‘அழியாத சொல்’ எனும் சொற்சேர்க்கை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அவை கல்லில் பொறிக்கப்பட்டமையால் அழிவற்றதாகின்றனவா? இல்லை. எந்த நூலிலும், எங்கும் எழுதப்படாததனாலேயே கூட இந்திய வேதங்கள் அழிவின்மையை அடைந்து இன்று வரை ஒலிபிசகாமல் நீடிக்கின்றன. அழிவின்மை என்பது அச்சொற்களுக்கு மானுடம் அளிக்கும் இடத்தில் உள்ளது. நகரங்கள் இடிந்தழிகின்றன. மலைகள் கூட கரைந்து மறைகின்றன. ஆனால் இலக்கியத்தை மானுடன் நெஞ்சோடணைத்து பேணி கொண்டு யுகங்களைத் தாண்டி வந்துகொண்டே இருக்கிறான். எழுதப்பட்டவை எவையும் அழிவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவை ஒருவேளை நேரடியாக நினைவில் நின்றிருக்காமல் ஆகலாம். மறைந்து போய்விட்டவை என்று அவற்றைப்பற்றி ஆய்வாளர்கள் சொல்லலாம். மறைந்துவிட்டவை, அழிந்தவை அல்ல. அவை உருகி மறுவடிவை அடைந்தன, மறுபிறப்பு கொண்டன என்றே என்னால் சொல்லமுடிகிறது. அழிவின்மை என்பது சொல்லில் உறையும் உண்மைக்கு மானுடம் அளிக்கும் எதிர்வினை. மானுடன் சொல் அழிவதை விரும்புவதில்லை. சொல் அவனுடைய தெப்பம். அதைப் பற்றிக்கொண்டே அவன் மிதக்க முடியும். அது எந்நிலையிலும் மூழ்கிவிடலாகாது. அந்த அளவுக்கு சொல்லுக்கிருக்கும் பங்களிப்பு தான் என்ன? இப்படித் தோன்றுகிறது, மானுடவாழ்க்கை இங்கு தன்னியல்பான விரிதலுடன் முட்டி மோதி பெருக்கெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இது உருவான ஊற்றும் அறியக்கூடுவதல்ல. செல்லும் திசை அறியக்கூடுவதல்ல. இதன் எந்தத் தருணமும் ஏதேனும் ஒரு வடிவ ஒழுங்குக்குள் நிற்பதும் அல்ல. முற்றிலும் சிதறுண்டதென்பதுதான் வாழ்க்கைக்கு நாம் அளிக்கும் அறுதியான வரையறை. அவ்வளவு பேருருவம் கொண்ட இவ்வாழ்க்கை நமக்கு வசப்படாத காட்டு விலங்கு. அதை முழுக்க நாம் நம் ஆளுகைக்குள் கொண்டு வர முடியாதெனினும் அதன்மேல் ஏறியே ஆகவேண்டும். அது நம் எல்லைக்குள் காலத்திற்குள் சற்றேனும் நமக்கு துணை நின்றாக வேண்டும். அந்தப்பெருங்களிற்றை பழக்கப்படுத்துவதற்கு அதை வென்று நிறுத்துவதற்கு அதற்கிணையான பெருங்களிறொன்று நமக்குத் தேவையாகிறது. களிறே எப்போதும் களிற்றைப் பிடித்து பழக்கி அளிக்கிறது. இந்த இரண்டாவது பெருங்களிறே இலக்கியம். இது பிறிதொருவனத்தில் நாம் நமது பெருந்தவத்தால் பிடித்து பழக்கி வசப்படுத்தி ஏறிக்கொண்ட ஒரு விலங்கு. மொழியெனும் காட்டில் துளித்துளியாக தொட்டுச் சேர்த்து புனைந்து புனைந்து நாம் உருவாக்கிக்கொண்டது இது. இதன் பேருருவம் இங்கு பிரபஞ்ச வெளி நிகழ்த்தும் வாழ்வெனும் பேருருவத்திற்கு நிகராக நிற்க முடியுமென்று நாம் அறிந்தோம். ஆகவே இதை நம் முதன்மை பெரும் செல்வமென யுகங்கள் தோறும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். வாழ்வின் ஒழுங்கின்மையின், இலக்கின்மையின், வடிவின்மையின் அராஜகத்திற்கு எதிரான ஒன்று இலக்கியம் என்பதனால் ஒழுங்கு, வடிவம், நோக்கம் ஆகியவை என்றும் இலக்கியத்தின் இயல்புகளாக இருந்து வந்துள்ளன. பெருங்காவியங்கள் மொத்த வாழ்க்கையையுமே ஒழுங்கும் நோக்கமும் வடிவும் கொண்டவையாக ஆக்கும் துடிப்பில் இருந்து உருவானவை. ஆகவே அவை வாழ்வளவுக்கே பெரியவை. சொல்லிச் சொல்லி ஒவ்வொன்றுக்கும் நாம் பொருள் அளிக்கிறோம். பொருள்களை அளித்து நோக்கங்களை அமைக்கிறோம். பொருளும் நோக்கமும் பொருந்தி அமையும் வடிவத்தை எழுதியும் பேசியும் பாடியும் பொருளாய்ந்தும் மெல்ல மெல்ல சமைத்துக்கொண்டிருக்கிறோம். இலக்கியத்தின் அடிப்படையான இந்த நோக்கத்திலிருந்து எந்நிலையிலும் அது விலக முடியாதென்றே நான் எண்ணுகிறேன். வாழ்விற்கு பொருளை சமைத்தளிப்பதே இலக்கியத்தின் பிறவி நோக்கம். ஒரு வீச்சில் இதுவரையிலான மானுட இலக்கியத்தை பார்த்தால் என்னென்ன வகையாக அது வாழ்க்கைக்கு பொருள் அளித்திருக்கிறது என்பதை அதன் வெவ்வேறு காலகட்டங்களை அழகியலை வரையறை செய்யும் கூறு என்று தோன்றுகிறது. வீரயுகம் என்று ஒன்றை வரையறுத்தோமெனில் வீரமே மானுட வாழ்வின் பொருள் என்றும், வாழ்வு இங்கு நிகழ்வதின் நோக்கம் என்றும் அது வரையறுத்திருப்பதைக் காணலாம். மகாவீரம் என்று மெய்ஞான பயணத்தை அது குறிப்பிடுகிறது. பின்னர் அறம் தேர்வதும், அறம் நிலை கொள்வதும் இலக்கியத்தின் நோக்கம் என்று ஆயிற்று. இறை ஒன்றை அறிதலும், அகம் கொள்ளுதலும் பின்னர் இலக்கியத்தின் நோக்கமும் பொருளும் என வடிவம் கொண்டது. மானுடப்பெரும் லட்சியங்களை அறிவதும் ஆக்கிக்கொள்வதுமாக நவீன காலச்செவ்வியல் தன்னை முன் வைத்தது. அப்பெரும் கனவுகளுக்கு நிகராகவும் மாற்றாகவும் தனி மனித அகம் எனும் ஒன்றை முன்வைத்தது நவீனத்துவ இலக்கியம். இவ்வாறு பொருள் புனைதல், நோக்கம் கண்டடைதல் என்றே இலக்கியம் இதுகாறும் நிகழ்ந்து வந்துள்ளது. பின் நவீனத்துவ காலகட்டத்தில் அந்நோக்கத்தை ஐயப்படுதல், அந்தப்பொருளை மறுத்தல், அவ்வடிவத்தை சிதறடித்தல் ஆகியவை இலக்கியத்தின் இயல்புகளில் ஒன்றாக வடிவமைத்தனர். மையங்களை அழித்தல் என்று அதற்கு பெயர் சூட்டினர். பின்நவீனத்துவத்தின் நோக்கமென்பது நிலை கொண்டுவிட்ட பெரும் கட்டுமானங்களின் அடித்தளத்தை நொறுக்குவது தான். பெருங்கதையாடல்களின் மறுப்பென்பது அதன் அடிப்படை இயல்புகளில் ஒன்று. தமிழில் இவ்விரு கோணங்களிலுமே பின்நவீனத்துவம் அறிமுகமாயிற்று. பின்நவீனத்துவத்தின் பிறிதொரு முதன்மைக்கூறாக இருந்த (Sublime) அல்லது உன்னதம் இங்கு எவ்வகையிலும் பின் நவீனத்துவத்தால் பொருட்படுத்தப்படவோ பேசப்படவோ இல்லை. அதற்கான காரணங்களை தனியாக ஆராய வேண்டும். இங்கு மதம் அரசியல் ஆகியவற்றினூடாக பெருங்கதையாடல் ஒன்று நிகழ்ந்து, அதனூடாக ஆதிக்க அதிகாரம் நிலைநிறுத்தப்பட்டிருப்பது மட்டுமே ஒரு பொருட்படுத்தத்தக்க விஷ்யமாக இங்கு வந்தபோது பின் நவீனத்துவம் உணர்ந்திருக்கலாம். அதை தலைகீழாக்குவதும் கட்டுடைப்பதுமே தன் நோக்கம் என்று அது கொண்டிருக்கலாம். உன்னதம் அல்லது Sublime இங்கு ஆன்மிகத்திலும் செவ்வியல் இலக்கியத்திலும் கலைகளிலும் ஏற்கனவே நிகழ்ந்திருப்பதை பிறிதொருவகையில் நிகழ்த்திக்கொள்ள தேவையில்லை என்பதற்கான காரணமாக அது எண்ணிக்கொண்டிருக்கலாம். எவ்வகையிலேனும் இங்கு பின் நவீனத்துவம் வந்தபோது அது ஒரு நிலைகுலைவை உருவாக்கும் நோக்கம் மட்டுமே கொண்டிருந்தது. கலகம் என்றே தன்னை முன் வைத்தது. பின்நவீனத்துவம் தமிழகத்தில் இரண்டு தளங்களில் அறிமுகமாகியது ஒன்று அறிவுத்துறையில் இலக்கியக் கோட்பாடுகளாக. ஒருவகையில் அமைப்புவாதத்தை தமிழில் அறிமுகம் செய்த எஸ்.வி.ராஜதுரை, தமிழவன் ஆகிய இரண்டு முன்னோடிகளும் தமிழில் அமைப்புவாதம் வழியாகப் பின் நவீனத்துவம் உள் நுழைவதற்கான முதல் திறப்பை நிகழ்த்திய முன்னோடிகள் எனலாம். அவர்கள் இங்கிருந்த நவீனத்துவ, முற்போக்கு இலக்கிய முகாம்களுடன் நிகழ்த்திய மோதலும் உரையாடலும் ஒரு சிந்தனை மாற்றத்தை நிகழ்த்தின. தொடர்ந்து பின் நவீனத்துவ சிந்தனைகள் இங்கு இலக்கிய கருதுகோள்களாக ரமேஷ் பிரேம், நாகார்ஜுனன், க.பூர்ணசந்திரன், நோயல் இருதயராஜ், ராஜ் கௌதமன் போன்றவர்களால் முன்வைக்கப்பட்டன. அவை கல்வித்துறைகளில் ஓரளவுக்கு செல்வாக்கைச் செலுத்தின. குறிப்பாக கல்வித்துறை சார்ந்த மொழியியல் ,நாட்டாரியல், சமூகவியல் பாடத்திட்டங்களில் அவை சிறிய மாற்றங்களை உருவாக்கியிருப்பதை இப்போது காண முடிகிறது. இக்கோட்பாட்டாளர்கள் பெரும்பாலும் சிற்றிதழ்களில் தங்கள் கருத்தை முன் வைத்தனர். தீவிரமான, முழுமையான மறுப்பாக இக்கருத்துகள் முன்வைக்கப்பட்டமை சிற்றிதழ் சூழலில் ஒரு சலனத்தை உருவாக்கியது. தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான பெரும்படைப்பாளிகளை ஒற்றை வரியில் நிராகரித்தபடி இக்கருத்துகள் பேசப்பட்டமையால் இவற்றுக்கு எதிரான எதிர்வினைகளும் உருவாயின. இந்த விவாதங்களின் வழியாக பின் நவீனத்துவத்தை நோக்கிய சிந்தனைத்தள நகர்வு ஒன்று இயல்வதாகியது. ஆனால் இன்று ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கையில் இவர்களின் பங்களிப்பு மிகக்குறைவானதென்றே தோன்றுகிறது. இவர்கள் தங்களுடைய சிந்தனைகளை ஒட்டுமொத்த தமிழிலக்கியத்தையோ உலக இலக்கியத்தையோ கருத்தில் கொண்டு விரிவாகவும் தெளிவாகவும் முன்வைக்கவில்லை. தமிழ் இந்திய பண்பாட்டுச் சூழலின் பிரச்னைகளை எதிர்கொண்டு அவற்றுக்குப் புதிய பார்வைக்கோணங்களை உருவாக்கவும் இல்லை. ஒற்றை வரியில் சொல்வதென்றால், சாமானிய தமிழ் வாசகன் ஒருவன் தமிழ் இலக்கியங்களை ஏற்கனவே வாசித்து உருவாக்கிக்கொண்ட கருத்துகளுக்கும் புரிதல்களுக்கும் அப்பால் ஒரு சிறு தனிப்புரிதலைக்கூட, ஒரு சிறிய திறப்பைக் கூட இவர்களால் உருவாக்க இயலவில்லை. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் மரபார்ந்த பண்பாட்டு ஆய்வாளர்கள் துல்லியமான தரவுகளுடன் உருவாக்கிய பார்வைகளுக்கு அப்பால் புதிய எதையுமே இவர்களால் சொல்ல முடியவில்லை, எளிய சில கேலிகளைத் தவிர. ஆகவே பின் நவீனத்துவத்தை நோக்கிய ஒரு பார்வை திருப்புதலுக்கு இவர்கள் காரணமாயினர் என்பதற்கு அப்பால் இவர்களுக்கான சிந்தனை சார்ந்த பங்களிப்பென்பது ஒட்டுமொத்தமாக குறிப்பிடும்படி இல்லை என்றே சொல்லவேண்டியுள்ளது. ஆனால் பின் நவீனத்துவக் கூறுகள் தமிழ் இலக்கியத்தில் வெவ்வேறு வகையில் தங்கள் செல்வாக்கை செலுத்தின. அச்செல்வாக்கு இக்கோட்பாடுகளினூடாக நிகழ்ந்தது அல்ல. மாறாக பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட மேலைநாட்டுப் புனைவிலக்கியங்கள் இங்கு வாசிக்கக் கிடைத்து அவற்றிலிருந்து உருவான அழகியல் தாக்கத்தினால் அத்தகைய பின் நவீனத்துவ படைப்புகள் இங்கு உருவாக வழி அமைந்தது. தமிழில் நேரடியாக செல்வாக்கை செலுத்திய பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட மேற்கத்திய புனைவுகள் எனச் சில உண்டு. கப்ரியேல் கார்சியா மார்க்யூசின் ’தனிமையின் நூறு ஆண்டுகள்’ உம்பர்ட்டோ ஈக்கோவின் ’ரோஜாவின் பெயர்’ மற்றும் மிலோரட் பாவிக்கின் ’கசார்களின் அகராதி’ போன்றவை உதாரணம். இப்படைப்புகளின் வடிவத்தைப் பற்றி தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் விதந்து பேசிக்கொண்டதை நினைவுகூர்கிறேன். அவ்வாறு தமிழிலக்கியத்தின் வடிவமும் உருமாற்றமும் அடைந்தாக வேண்டுமென்ற எண்ணம் உருவாகி அது அன்று பரவலாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்த நவீனத்துவ நாவலில் இருந்து பிறிதொருவகை நாவலை நோக்கி எழுத்தாளர்கள் நகர்வதற்கான அடிப்படை தூண்டுதலாக அமைந்தது. என்னைப் பொறுத்தவரை இம்மூன்று நாவல்களையும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே நான் பயின்றிருந்த போதிலும் முதல் இரண்டு நாவல்களும் என்னில் தீவிரமான ஒரு பாதிப்பை செலுத்தின. கசார்களின் அகராதி வெறும் அறிவுப்பயிற்சி, ஆழமற்றது என்ற எண்ணமே உருவானது இன்றும் அவ்வெண்ணமே நீடிக்கிறது. அத்தகைய அறிவுப்பயிற்சி என்பது எழுத்தெனும் அடிப்படையான அகத்தேடலுக்கு எதிரான ஒன்றென்ற எண்ணமும் எனக்கு வலுவாக உண்டு. வரலாற்றில் மெய்யாகவே உள்ள இடைவெளிகளை நிரப்பிக்கொண்டு எழும் கற்பனை என ரோஜாவின் பெயர் நாவலைச் சொல்லலாம். வரலாற்றை உதறிவிட்டு எழும் கற்பனை என தனிமையின் நூறு ஆண்டுகளைச் சொல்லலாம். இரண்டுமே முன்னோடியான கலைப்படைப்புக்கள். இவ்வாறாக தமிழில் பின்நவீனத்துவ புனைவிலக்கியத்தில் உருத்திரண்டு வந்தது. அவ்வாறு வருவதற்கு எந்த வகையிலும் தமிழில் இங்கு பேசப்பட்ட பின்நவீனத்துவ கோட்பாடுகள் உதவவில்லை என்பது மட்டுமல்ல, அவை புனைவிலக்கியத்தின் பாய்ச்சலுக்கு எதிராகவே இருந்தன. இங்கிருந்த பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களால் பின்நவீனத்துவத்தின் புனைவிலக்கிய வெளிப்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தாங்கள் மேலைக்கோட்பாளர்களிடமிருந்து கற்று இங்கே திருப்பிச் சொன்ன கருத்துகளை அப்படியே தாங்களும் ஏற்று திருப்பி சொல்லும் எழுத்தாளர்களே பின்நவீனத்துவப் படைப்புகளை உருவாக்க முடியும் என்று நம்பினர். உண்மையில் அது தன்னளவில் பின்நவீனத்துவத்துக்கு எதிரான ஒரு நம்பிக்கை. பின்நவீனத்துவம் என்பது சர்வதேச தன்மையை ஏற்றுக்கொள்வதல்ல. வட்டாரத்தன்மையையே முன்நிறுத்தக் கூடியது. ஒவ்வொரு அலகிலும் முற்றிலும் தனித்தன்மையோடு வெளிப்படும் ஒன்றே இலக்கியம் என்று வாதிடுவது. ஆகவே மேலைப் பின்நவீனத்துவத்தை இங்கு திரும்ப நிகழ்த்த வேண்டுமென்று எண்ணிய இங்குள்ள பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களால் இங்குள்ள புனைவிலக்கியத்தில் அது நிகழ்ந்தபோது அதை அடையாளம் கண்டுகொள்ளவோ ஏற்கவோ இயலவில்லை. மட்டுமல்ல, அது பின்நவீனத்துவமே அல்ல என்றும், பின்நவீனத்துவத்திற்கென்று இவ்வண்ணம் இலக்கணங்கள் உண்டென்றும், அந்நெறி இங்கு நூல்களில் பேணப்படவில்லை என்றும், சொல்லி புதிய இலக்கியங்களுக்கு எதிராக மிகப்பெரிய தடையை அவர்கள் உருவாக்கினார்கள். அவர்களுடைய ஏளனங்களையும் எதிர்ப்புகளையும் வழக்கம்போல இலக்கியம் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. அவர்களும் காலப்போக்கில் தங்கள் குரல்கள் மதிப்பிழக்க வெறும் பெயர்களாக பின்நகர்ந்து விட்டிருக்கின்றனர். அப்படைப்புகள் வரலாற்றில் தன்னை நிறுவிக்கொண்டிருக்கின்றன. தமிழில் பின்நவீனத்துவம் நிகழ்ந்தபோது இரண்டு வகையில் அதன் வெளிப்பாடு அமைந்தது. ஒன்று பின்நவீனத்துவத்தின் வடிவம் சார்ந்த மீறல்கள் அல்லது கலகங்கள் நேரடியாகவே நிகழும் புனைவுகள். இவை பின்நவீனத்துவம் எனும் இலக்கிய அலையால் உலகமெங்கும் உருவாக்கப்பட்ட சிதைவுற்ற சிதறடிக்கப்பட்ட தன்னைத்தானே மறுபுனைவு செய்து கொள்கிற தன்னைத்தானே மறுக்கிற இலக்கிய வடிவங்களை உருவாக்கின. அவை முழுக்க முழுக்க வடிவச் சோதனைகள். அத்தகைய மேலையிலக்கிய வடிவங்களை தமிழ்ச் சூழலில் செயற்கையாக திரும்ப உருவாக்கும் முயற்சிகள் தமிழில் எப்போதும் உண்டு என்றாலும் அவை பின்நவீனத்துவச் சூழலிலேயே அதிகம் நிகழ்ந்தன. அதற்கு புகழ் பெற்ற உதாரணம் என்று எம்.ஜி.சுரேஷை சொல்லவேண்டும். தன்னுடைய நாவல்களுக்கு வெவ்வேறு பெயர்களைப்போட்டு, அந்த வடிவத்துக்கான உதாரணமென்றே அவற்றை அறிவித்துக்கொண்டு ,அவர் தன் படைப்புகளை எழுதினார். அவை அந்த வடிவத்திற்கு எந்தவகையிலும் நியாயம் செய்யவில்லை என்பதுடன் எவையுமே புனைவாக உருவாகவும் இல்லை. இன்று அவற்றை எவர் பொருட்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. படைப்புகள் வடிவங்களை அடைவதென்பது அப்படைப்பு உருவாக்க நினைக்கும் விளைவை ஒட்டியது. அந்த விளைவை இலக்காக்காமல் வடிவத்தை எழுத முயல்வேன் என்பது மிக எளிய மாதிரி வடிவங்களை உருவாக்குவதாகவே அமையும். மலைகளுக்கான மாதிரி வடிவங்களை உள்ளங்கையில் நிற்குமளவுக்கு செய்வது போல அம்முயற்சி என்று சொல்லலாம். இன்னொரு பக்கம் மேலைப்படைப்புகளின் வடிவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அவற்றினூடாக தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்றையும் மெய்யியலையும் எவ்வகையிலேனும் மறுஆக்கமோ விசாரணையோ செய்யமுடியுமா என்று முயன்ற படைப்பாளிகளைக் குறிப்பிடவேண்டும். அவர்களில் முதன்மையானவர் இருவர் ரமேஷ் பிரேதன் மற்றும் பா.வெங்கடேசன். அவர்களின் படைப்புகளுக்கு அவர்கள் கையாண்ட வடிவம் புதுமையையும் செறிவையும் அளிக்கிறது. அவ்வடிவத்தினூடாக அவர்கள் தமிழக அரசியலையும் வாழ்வையும் பண்பாட்டையும் ஆயும்போது சென்றடையும் சில புதிய கோணங்களும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆனால் அவை வடிவமாகவே முன்னிற்பவை. இந்த இரண்டு பிரிவுகளுக்கும் அப்பாற்பட்ட இன்னொரு வகை பின்நவீனத்துவ எழுத்து என்பது எந்த வகையிலும் பின்நவீனத்துவ கருதுகோளாலோ பின்நவீனத்துவ வடிவங்களாலோ ஈர்க்கப்படாதவர்கள், தங்களை அறியாமலேயே பின்நவீனத்துவ வண்ணங்களை தங்கள் புனைவுகளில் அடைந்தவர்கள், தன்னியல்பாக உருவாக்கியது. அவர்களைப் பொறுத்தவரை எந்த இலக்கியக் கொள்கையும் இலக்கியத்தை வழிநடத்துவதற்கு தகுதி கொண்டது அல்ல. கொள்கையின் விரிவாக்கமாகவோ, நிரூபணமாகவோ இலக்கியப்படைப்புகளை எழுதுவது செயற்கையானது. இலக்கிய வடிவம் என்பது ஒரு புனைவை உருவாக்கும்போது தன்னியல்பாக உருவாகி வரவேண்டியதே ஒழிய வடிவத்தை அடையும்பொருட்டு இலக்கியம் எழுதப்படலாகாது. வடிவச் சோதனைகளில் அவர்கள் ஈடுபடுவதும் இல்லை. ஆனால் அவர்கள் புனைவை உருவாக்கும்போது தன்னியல்பாகவே பின்நவீனத்துவ அம்சம் அவற்றில் வந்தமைகிறது. அந்த பின்நவீனத்துவ அம்சம் என்பது உண்மையில் இங்குள்ள வாழ்க்கையில், இங்குள்ள சிந்தனைப்போக்குகளில், இங்குள்ள கலை இலக்கிய சூழலில், பின்நவீனத்துவ அம்சம் குடியேறியிருப்பதனால் அங்கிருந்து அவர்களுக்குத் தன்னியல்பாக வந்ததாகவே உள்ளது. இந்த இரண்டாவது வகைமையைச் சேர்ந்தவர் இரா முருகன். (மேலும்) https://www.jeyamohan.in/209048/
-
Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்
உழைக்கும் போது செலுத்தும் வரி குறைப்பு – ஜனாதிபதி அதிரடி அறவிப்பு December 18, 2024 1:20 pm குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறிவிடும் முறைமையை சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்பட எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ”2028ஆம் ஆண்டுமுதல் நாம் கடனை மீள செலுத்த வேண்டும் கருத்தொன்றை சமூகத்தில் பரப்பி வருகின்றனர். சில பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். 2028ஆம் ஆண்டாகும் போதும் எமது அரசாங்கம்தான் இருக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2022, 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான நிலைமையை மீண்டும் ஒருபோதும் ஏற்பட நாம் அனுமதியளிக்க மாட்டோம். 12.5 பில்லியன் சர்வதேச கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் 11.5 பில்லியன் டொலர் 2015 மற்றும் 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட கடனாகும். ஆலோசனைகள் கூறுபவர்கள் அப்போது அவர்களுக்கு கூறியிருக்க முடியும். 2028 ஆம் ஆண்டளவில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும். உழைக்கும் போது செலுத்தும் (PAYE) வரி விலக்கு வரம்பை ரூகப 100,000 முதல் 150,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் உடன்படிக்கைக்கு வந்துள்ளது. இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மீளாய்வு தொடர்பாக ஐ.எம்.எப். உடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, வருமான வரி வரம்பை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. புதிய வரி திருத்தங்களின் பிரகாரம் தனிநபர் வருமானமாக ரூ. 500,000 முதல் ஒரு மில்லியனை பெறுபவர் வரியின் முதல் கட்டத்தில் உள்ளடகப்பட்டுவதுடன், அவர் 6 வீத வரி விகிதத்திற்கு உட்படுவார். 150000 ரூபாவுக்கு குறைவான வருமானத்தை பெறுபவர்கள் முழுமையாக வரி விலக்குக்கு உட்படுவர். 2 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவருக்கு 71 வீதம் விரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, ரூ.250,000 வரை வருமானம் பெறுபவருக்கு 61 வீதமும், 300,000 ரூபா வரை வருமானம் பெறுபவருக்கு 47 வீதமும், 350,000 ரூபா வரை வருமானம் பெறுபவருக்கு 25.5 வீதமும் அளிக்கப்பட்டுள்ளது. வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் குறைவான வருமானம் பெறுபவர்களுக்கு அதிகமான வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைவான வரியும் காணப்பட்டது. தற்போது, குறைவான வரி பெறுவோருக்கு குறைவான வரியும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரியும் அறவிடும் முறை உருவாகியுள்ளது. தடுத்து வைக்கும் வரி 5 வீதத்திலிருந்து 10 வீதமாக அதிகரிக்கப்படும். சேவைகள் ஏற்றுமதிக்கான வரியை 30 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்க சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தனியார் வாகங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி முதல் போக்குவரத்து மற்றும் விசேட தேவைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஊடாக மீண்டும் டொலர் நெருக்கடிக்கு நாடு முகங்கொடுக்காது. அதற்கான மாற்று வழிகள் உருவாக்கப்பட்டள்ளது. வாகன சந்தையும் அதை சார்ந்த தொழில்துறையும் மிகவும் பெரியது. நீண்டகாலம் இதனை மூடி வைத்திருக்க முடியாது. இதுவேளை, அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத மற்றும் அதற்கு தகுதியுள்ளவர்கள் தொடர்பில் மீண்டும் மறுபரிசீலமை செய்யப்படும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்கும் வகையில் விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். வங்கிக் கணக்கை திறக்க முடியாது 67ஆயிரம் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டையின்றி வங்கிக் கணக்கை திறப்பதற்கான அனுமதியை வழங்க மத்திய வழங்கியுடன் நடத்திய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒன்றரை வருட நிலுவை தொகையுடன் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும். இதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கப்பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு 6ஆயிரம் ரூபா வவுச்சர் ஒன்றை பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ள வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனவரி முதல் குறித்த வவுச்சர்கள் வழங்கப்படும். அதேபோன்று அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காது குறித்த வவுச்சர்களை பெற்றுக்கொள்ள தகுதியுடைய மாணவர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார். https://oruvan.com/income-tax-reduction-presidential-action-plan/
-
அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சைப் பேச்சு : முடங்கியது நாடாளுமன்றம்!
அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சைப் பேச்சு : முடங்கியது நாடாளுமன்றம்! christopherDec 18, 2024 12:45PM அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று (டிசம்பர் 18) அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே அவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சி எம்.பிக்களை நோக்கி, “’அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்” என விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடைபெற்று வரும் வேளையில், அமித் ஷாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்னையாகத்தான் தெரிவார்” என தெரிவித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடியதும் ’அம்பேத்கரை அவமதித்து பேசியதற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி, ‘அம்பேத்கர், ஜெய்பீம்’ என்றும், ’அம்பேத்கரை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது’ என கோஷம் எழுப்பினர். அப்போது அவையில் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “காங்கிரஸ் கட்சி எப்போதும் அம்பேத்கரை அவமதிப்பதாகவும், லோக்சபா தேர்தலில் அவரது தோல்வியை உறுதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளியால், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அம்பேத்கரின் புகைப்படத்துடன் நடாளுமன்ற வளாகத்திற்கு வந்த திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், அமித் ஷா மன்னிப்பு கேட்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். https://minnambalam.com/political-news/amit-shahs-controversial-speech-on-ambedkar-parliament-paralyzed/
-
இந்தியா உட்பட 39 நாடுகளுக்கு இலவச விசா – விரைவில் வர்த்தமானி வெளியாகும்
இந்தியா உட்பட 39 நாடுகளுக்கு இலவச விசா – விரைவில் வர்த்தமானி வெளியாகும் December 18, 2024 11:03 am இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”புதிய அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சாதகமான உறவுகளை விரும்புகிறது ஒரு புதிய அரசாங்கமாக சீனாவுடனும், இந்தியாவுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தக உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இலங்கையின் முதல் முன்னுரிமை அதன் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான அதன் கடன் தொகுப்பை மறுசீரமைப்பது மற்றும் புதிய சுற்றுலா வரவுகளை ஊக்குவிப்பதாகும். இலங்கை சுற்றுலாத் துறையில் மூன்று தொடர்ச்சியான பாதிப்புகளை கடந்த காலத்தில் சந்தித்தது. 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், 2020-21 இல் கோவிட் தொற்றுநோய், மற்றும் 2022 இல் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாமை என்பனவே அந்தப் பிரச்சினைகள். எமது பொருளாதாரத்தை பலப்படுத்த இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்க உள்ளோம். இதற்கான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும். இதேவேளை, இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை தமது அரசாங்கம் பரிசீலனை செய்யும். 1980களில் வன்முறையால் தப்பி ஓடிய அகதிகளில் பலர், இந்தியாவில் குடியுரிமை பெற தகுதியற்றவர்களாகவும் இலங்கையில் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்களாகவும் உள்ளனர். அவர்களை திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தீவுக்குத் திரும்ப விரும்பவில்லை. தகவல்களின்படி, தமிழ்நாட்டில் 104 முகாம்களில் சுமார் 57,000 இடம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வசிக்கின்றனர், அதே நேரத்தில் சுமார் 34,000 பேர் முகாம்களுக்கு வெளியே மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் குடியேறியுள்ளனர்.” என்றார். https://oruvan.com/free-visa-for-39-countries-including-india-gazette-to-be-released-soon/
-
‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’
‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’ வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் முஸ்தஃபா தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நேற்று டிசம்பர் 16ஆம் திகதி தொலைபேசிவழி பேசிய அவர், தாம் கடந்த பல ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ள இத்தகைய ஐந்து மனிதக் குவியல் புதைகுழிகளில் சிரியா தலைநகருக்கு 40 கிலோமீட்டர் வடக்கே உள்ள அல் குட்டேஃபா பகுதியும் ஒன்று என்றார். “இந்த ஐந்து இடங்களைத் தவிர வேறு பல மனிதக் குவியல் புதைகுழிகளும் நிச்சயம் இருக்கும். அவற்றில் சிரியா நாட்டு மக்களைத் தவிர அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களும் இன்னும் வேறு பல வெளிநாட்டவரும் இருப்பார்கள்,” என்றார் முஸ்தஃபா. முஸ்தஃபாவின் குற்றச்சாட்டுகளை ராய்ட்டர்ஸ் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. தமது ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக திரு அசாத் பேரளவில் சிவில் போர் தொடுத்து வந்ததில் 2011ஆம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான சிரியர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. மனித உரிமை மீறல்களைத் தமது அரசாங்கம் செய்யவில்லை என்று திரு அசாத் தொடர்ந்து மறுத்து வந்ததுடன் தமது எதிராளிகளைத் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டார். அசாத் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றதை அடுத்து முஸ்தஃபா சிரியாவைச் சென்றடைந்தார். சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்தோரின் உடல்கள் இராணுவ மருத்துவமனைகளிலிருந்து வெவ்வேறு உளவுத்துறை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு பின்னர் மனிதக் குவியல் புதைகுழி ஒன்றுக்கு மாற்றப்படும் என்றும் இதற்கு சிரியா ஆகாயப் படையின் உளவுத்துறைப் பிரிவு பொறுப்பாக இருந்தது என்றும் முஸ்தஃபா பேட்டியின்போது கூறினார். பாதுகாப்பற்ற இந்தப் புதைகுழி இடங்கள் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்று கவலை தெரிவித்த திரு முஸ்தஃபா, விசாரணைக்கு ஆதாரங்களைக் காக்க வேண்டும் என்றார். https://akkinikkunchu.com/?p=303657
-
ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்?
ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? கந்தையா அருந்தவபாலன் ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறழ்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணமாக ஒரு பணியாளரை நியமிப்பதற்கு அல்லது இடமாற்றம் செய்வதற்கு மேலதிகாரி ஒருவர் பெறுவது. ஊழலும் இலஞ்சத்தினுள் அடங்கும் நிலைமைகளும் உண்டு.ஊழல் பெரும்பாலும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனத் தலைவர்களுடன் தொடர்புபட்டிருக்க இலஞ்சம் ஆட்சியாளர் தொடக்கம் அடிமட்ட அரச ஊழியர் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. ஊழல்கள் பல கோடிகளுடன் தொடர்புபட இலஞ்சம் நூறு ரூபா தொடங்கி கோடிகள் வரை செல்லும். சிலவேளை இதனுள் மதுவிருந்து, மாது விருந்தும்கூட அடங்கும். இலங்கையில் இவை தீர்க்க முடியாத ஒரு நோயாக இன்று எல்லாவிடத்திலும் புரையோடிப் போயுள்ளது. ஏதாவது கொடுத்தால்தான் கருமம் நடக்கும் அல்லது விரைவாக நடக்கும் என்பதால் இலஞ்சம் என்பதை தவிர்க்க முடியாத ஒரு நியதியாக மக்கள் இன்று ஏற்கப் பழகிவிட்ட நிலைமையே நாட்டில் பல இடங்களில் காணப்படுகிறது. இலங்கையின் இன்றைய பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குக் குறிப்பாக நாடு கையறு நிலைமைக்குத் தள்ளப்பட்டமைக்குரிய பிரதான காரணிகளில் ஊழலும் இலஞ்சமும் பிரதான காரணிகளென தேச, சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலஞ்சம், ஊழல் என்பன உற்பத்தி திறனைப் பாதிப்பதுடன், உற்பத்திச் செலவு, விலை என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதால் தேசிய, சர்வதேசிய சந்தைப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதனால் நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்பு வீழ்ச்சியடைவதால் வறுமை நிலை அதிகரிக்கிறது. வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. நாட்டின் நலன்புரிச் சேவைகளின் அளவும் தரமும் வீழ்ச்சியடைகிறது. அரச படுகடன் உயர்கிறது. ‘ரான்ஸ்பரன்சி இன்டநாஷனல்’ நிறுவனத் தரவுகளின்படி இலங்கையின் இலஞ்ச உணர் சுட்டியின் அளவு ( corruption perception index ) 2023 இல் 34 ஆக இருந்தது. இச்சுட்டி 0 தொடக்கம்100 வரையான புள்ளிகளைக் கொண்டது. 0 மிக மோசமான இலஞ்ச நிலையையும் 100 இலஞ்சமற்ற நிலையையும் காட்டும். இது 2020 இல் 38 ஆக இருந்தது என்பதிலிருந்து வருடாந்தம் இலங்கையின் இலஞ்ச நிலைமை கூடிக்கொண்டு செல்வதை அறிய முடியும். 180 நாடுகளைக் கொண்ட இக்கணிப்பீட்டில் இலங்கை 115 ஆம் இடத்தில் இருப்பது இலங்கை உயர்மட்ட இலஞ்ச நிலை கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இவ்வாறான ஒரு நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பீடம் ஏறியுள்ளது என்பதற்கப்பால் அதுவே அவர்களை ஆட்சிப் பீடம் ஏறவும் வழிவகுத்தது. அதுவே அவர்களுக்குப் பெரும் சவாலாகவும் இருக்கப் போகிறது. நோயாளி ஒருவரின் உடலெங்கும் பரவி விட்ட புற்றுநோயைக் குணப்படுத்துவது எவ்வளவு கடினமானதோ அதுபோன்ற ஒரு நிலையே புதிய ஆட்சியாளருக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள இலஞ்சமும் ஊழலும். இதனை ஜனாதிபதி நன்குணர்ந்தவராகவே உள்ளார் என்பதை அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் அவராற்றிய உரை வெளிப்படுத்துகிறது. எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அதனைக் கையாள்பவர்கள் நேர்மையாகவும் சரியாகவும் கையாளாவிட்டால் அச்சட்டங்களினால் எவ்வித பயனும் கிடைக்காது. இலங்கையில் சட்டங்கள் சிலந்தி வலையைப் போன்றுள்ளது. அதில் சிறிய விலங்குகள் சிக்கி விடுகின்றன: பெரிய விலங்குகள் அதைக் கிழித்துக் கொண்டு சென்று விடுகின்றன. அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவதன் மூலமே இலஞ்ச ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியதுடன், 2021 இல் தாக்கல் செய்யப்பட்ட 69 வழக்குகளில் 40 உம் 2022 இல் தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 உம் மீளப்பெறப்பட்டதற்கான காரணத்தை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வெளியிடவேண்டும் என்றும் கேட்டுள்ளமை நாட்டில் புரையோடிப் போயுள்ள இலஞ்ச, ஊழலை அகற்றுவது அவ்வளவு இலகுவானதொன்றல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி இவ்வாறான ஆணைக்குழுக்கள் மற்றும் நாட்டின் நீதித்துறை என்பன எவ்வளவுதூரம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது. இலஞ்ச, ஊழல் முறைகேடுகளை அகற்றுவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என முக்காலத்துக்குமுரிய சவால்கள் காத்திருக்கின்றன. தேர்தல் காலத்தின்போது தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஊழலற்ற அரசாங்கத்தை அமைப்போம் என்பது மட்டுமல்ல கடந்தகாலத்தில் ஊழல் செய்தோரை நீதிக்கு முன் நிறுத்துவோம் என்பதுவும் அடக்கம். நிகழ்கால, எதிர்கால ஊழல்களை அகற்றுவதற்கு கடந்த ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதும் அவசியமானது. கடந்த காலத்தைப் பொறுத்தவரை 2010 ஆண்டுக்குப்பின் மகிந்தவின் ஆட்சிக்காலத்திலும் மைத்திரி-ரணில் ஆட்சிக்காலத்திலும் கோதாபயவின் குறுகிய ஆட்சிக்காலத்திலும் பாரிய ஊழல் மோசடிகள் நடந்துள்ளன. ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட’ முறைகேடு தொடக்கம் ‘போட் சிற்றி’ ஊழல் மற்றும் உகண்டாவுக்கு தனி விமானத்தில் பணம் அனுப்பிய வரை பல முறைகேடுகளின் சூத்திரதாரிகளான ராஜபக்ஷ குடும்பத்தினரையும் மத்திய வங்கியின் பாரியளவிலான பிணைமுறி மோசடிக்காக மைத்திரி, ரணிலையும் பாரியளவிலான சீனி வரி மோசடிக்காக கோதாபயவையும் நீதிக்கு முன் நிறுத்தவேண்டிய கடப்பாடு தேசிய மக்கள் சக்திக்குண்டு. இவை இலகுவான விடயங்களன்று. திட்டமிட்டு திருடுபவர்கள் இயன்றவரை இயன்றவரை தடயங்களை விட்டு வைக்கமாட்டார்கள். அவ்வாறே ஏதாவது இருந்தாலும் அக்கோப்புகள் காணாமல் போய்விடும். ஏனெனில் செய்யப்பட்ட களவுகள் தனியே அவர்களால் செய்யப்பட்டவையல்ல. அவை யாவும் மேல்மட்ட கூட்டுக்களவுகள். அந்தக் கூட்டுக்களவாணிகள் இப்போதும் அரச பணியில் ஆங்காங்கே இருக்கின்றனர் எனபதுடன்அவற்றை மூடிமறைக்கக்கூடிய வல்லமையுடனும் இருக்கின்றனர். அவற்றையும் மீறி தடயங்கள் கண்டெடுக்கப்படும்போது சம்பந்தப்பட்ட நபர்கள் நாட்டிலிருக்கமாட்டார்கள். அர்ஜுனா மகேந்திரா சிங்கப்பூர் வீதிகளில் சுற்றித் திரிவார். ஆனால் அவரின் முகவரி கிடைக்காததால் நீதிமன்றக் கட்டளையை வழங்க முடியவில்லை என சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் அறிவிப்பர். ஏலவே பஷில், கோதாபய பாதுகாப்பாக வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டார்கள். தேவையேற்படின் இங்குள்ள சம்பந்தப்பட்டவர்களும் பறப்பது கடினமானதல்ல. போதாக்குறைக்கு அவர்களிடம் வெளிநாட்டுக் குடியுரிமையுமுண்டு. இந்த இலட்சணத்தில் இந்தப் பெருச்சாளிகளை அனுரவினால் இலகுவாக நீதிக்கு முன் நிறுத்த முடியுமா? சரி, கடந்த காலத்தை விடுவோம். நிகழ்காலத்தில் நிலைமை சாதகமாக உள்ளதா? ஊழல், இலஞ்சத்தில் புரையோடிப்போன இலங்கையின் நிர்வாக, நீதிக் கட்டமைப்புகள் இன்னும் அவ்வாறே உள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சர்களும் அவர்களின் செயலாளர்களும் மட்டுமே மாறியுள்ளனர். செயலாளர்கள் கூட ஏற்கனவே அரச துறைகளில் இருந்த அதிகாரிகள்தான். வானத்திலிருந்து கொண்டவரப்பட்டவர்களல்லர். கோதாபயவுடனும் பின்னர் ரணிலுடன் இருந்த ஆலோசகர்கள், அதிகாரிகள் சிலர் இன்னும் அனுரவுடனும் இருக்கிறார்கள். ஜனாசாக்களை கட்டாயம் எரிக்கவேண்டும் என்று கோதாபயவுக்கு குழல் ஊதிய ஒருவரை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்தமைக்கு முஸ்லிம் மக்களிடமிருந்து கண்டனங்கள் இப்போதே எழத்தொடங்கிவிட்டன. போலிப்பட்டம் தொடர்பாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கப் போவதாக பொதுஜன பெரமுன கச்சையைக் கட்டுகிறது. இதில் நகைச்சுவை என்னவென்றால் தனியறையில் மோசடியான முறையில் சட்டப் பரீட்சையெழுதிப் பட்டம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிற நாமல்தான் அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர். அதுமட்டுமன்றி பல இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் பதவியுயர்வுடன் இன்னும் உயர்பதவிகளை அலங்கரித்து வருவதையும் காணமுடிகிறது. அனுரவினதும் அவர் தோழர்களதும் கைகள் மட்டும் சுத்தமாக இருந்தால் மட்டும் போதுமா? சம்பந்தப்பட்ட அனைவரதும் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டுமல்லவா? அது மிகக்கடினம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு போக்குவரவு கண்காணிப்புக் காவல் துறையினரின் நாளாந்த வருமானத்தில் எவ்வித வீழ்ச்சியுமேற்படவில்லை என்பது. நிகழ்காலத்தில் இவ்வளவு சவால்களுக்கும் முகம் கொடுத்துக்கொண்டு எதிர்காலம் தொடர்பிலும் புதிய அரசாங்கம் கவனஞ் செலுத்தவேண்டியுள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தில் அவர் சுட்டிக்காட்டியது போல அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவதன் மூலமே இதனை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி எதிர்பார்ப்பது தெரிகிறது. இங்கு எழக்கூடிய நியாயமான ஐயங்களில் ஒன்று தற்போதிருக்கும் அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது உடனடிச் சாத்தியமாகுமா? மற்றது அவ்வாறு கட்டமைப்பு முழுமையாக மாற்றப்பட்டால்கூட இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் முற்றாக மறைந்துவிடுமா என்பது. புதிய அரசாங்கம் தனது பதவிக்காலம் முழுவதும் முயன்றால்கூட அரச கட்டமைப்பை முழுமையாக மாற்றுவது கடினம். ஜனநாயக நாடுகளில் இது நீண்டதொரு செயன்முறை. இதில் உள்நாட்டுக் காரணிகள் மட்டுமன்றி வெளிநாட்டுக் காரணிகளும் தாக்கத்தைச் செலுத்தும். அதேபோல ஐனாதிபதி கூறியது போல இலஞ்ச, ஊழல் முறைகேடுகளை சட்டங்களால் மட்டும் தடுத்துவிட முடியாது. அவை தவறானவை என்ற மனப்பாங்கு நாட்டு மக்களின் பண்பாட்டுக் கூறுகளிலொன்றாகவும் உருவாக்கப்படவேண்டும். அது குடும்பம், பாடசாலை, வழிபாட்டிடங்கள் போன்ற சமூக நிறுவனங்களால் சிறுபராயத்திலிருந்து வளர்த்தெடுக்கப்படவேண்டும். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள் இதற்கும் பொருந்தும். முன்னைய அரசாங்கங்களின் தவறான அணுகுமுறைகளால் படுத்துவிட்ட இலங்கைப் பொருளாதாரத்தைச் சீர்படுத்தி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே அதிக முயற்சிகளை எடுக்கவேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள புதிய அரசாங்கம் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை களையவேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதை அதன் முன்னெடுப்புகள் காட்டுகின்றன. அதில் முழுமையாக வெற்றிபெறாவிடினும் மக்கள் திருப்தியடையும் வகையிலான முன்னேற்றம் ஒன்றை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அதில்தான் தேசிய மக்கள் சக்தியின் மீதான மக்களின் நம்பிக்கையும் நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கையும் தங்கியுள்ளன. https://thinakkural.lk/article/313893
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு! சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வினை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 39 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதுடன், 65 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களுடன் 3,503 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 707 ஓட்டங்களையும் பெற்றுள்ளதுடன், இருபதுக்கு 20 போட்டிகளில் 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார். https://www.hirunews.lk/tamil/391108/சர்வதேச-கிரிக்கெட்-போட்டிகளிலிருந்து-அஷ்வின்-ஓய்வு
-
Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்
Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம் December 18, 2024 12:32 pm பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது Paye tax தொடர்பில் அவர் வௌியிட்ட விடயம் கீழே தரப்பட்டுள்ளது. "நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது. மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது. மேலும், தனிநபர் வருமான வரியின் 1ஆவது வகையின் திருத்தத்தை 500,000 முதல் 10 இலட்சம் ரூபா வரையில் 6% வரிக்கு உட்பட்டதாக மாற்ற முடிந்தது. அதன்படி, மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100% வரி விலக்கு. 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 250,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 61% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 300,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 350,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 25.5% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த நிவாரணம் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக நிவாரணம் என நாம் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தத்தில் வெற்றி பெற்றோம்." https://tamil.adaderana.lk/news.php?nid=197474
-
ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு
ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு மாற்றும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த அரசாங்கம் இந்த அலுவலகங்களை இடமாற்றம் செய்ய திட்டமிட்டதுடன், இதன் மூலம் அவற்றின் தற்போதைய கட்டிடங்கள் கொழும்பு பாரம்பரிய கட்டிடங்களாக சுற்றுலாத்துறைக்காக அபிவிருத்தி செய்யப்படுவதற்காக எத்தனிக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த திட்டம் தற்போதைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான மாற்றுத் திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த அரசாங்கம் மாதிவெலவில் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் புதிய ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தது. இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த ஆட்சியில் அதனை மீள்பரிசீலனை செய்து அதை முன்னெடுத்து செல்ல முடிவெடுக்கும் வரை சந்திரிக்காவுக்குப் பின் வந்த அரசாங்கங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நன்கு அறிந்த ஒரு தரப்பு, குறித்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு பறவைகள் பூங்காவிற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினார். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இதேபோன்ற சில திட்டங்களை புதிய அரசாங்கம் கைவிட்டுள்ளதுடன், நுவரெலியாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலாவிற்கு பயன்படுத்துவதற்கான திட்டமும் இதில் ஒன்றாகும். அதனை தபால் திணைக்களத்தின் பிரத்தியேக பாவனைக்காக தக்கவைக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், புதிய அரசாங்கம், அரச பங்களாக்களை அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாக ஒதுக்காமல் பொருளாதார பயன்பாட்டிற்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-மாளிகையை-இடமாற்றும்-திட்டம்-ஒத்திவைப்பு/175-348901
-
யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் விபத்து - ஐவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் விபத்து - ஐவர் படுகாயம்! கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4மணியளவில் ஏ-9 வீதி, மிருசுவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்; கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பேருந்தும், அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சென்ற சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும், பேருந்தின் நடத்துனருமே படுகாயம் அடைந்துள்ளதுடன், குறித்த பேருந்தின் முன் பகுதி முற்றாக சேதமடைந்ததால் சாரதி மற்றும் பேருந்தில் இருந்தவர்களை, பொதுமக்கள் சேர்ந்து ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் பின்னரே மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/யாழ்ப்பாணம்_ஏ-9_வீதியில்_விபத்து_-_ஐவர்_படுகாயம்!
-
யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்!
யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்! adminDecember 18, 2024 யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் , அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போது, மாவட்டச் செயலகத்தில் கடந்த11 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி நிலைய மற்றும் குழு வகுப்புச் செயற்பாடுகளை மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்காகவும், அறநெறிசார் செயற்பாடுகளக்காகவும், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இத் தீர்மானமானது மாவட்டத்தின் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டதாகவும். பிள்ளைகளின் நலன்கருதி தனியார் கல்வி நிறுவனங்களின் அமைவிடங்கள், வகுப்பறைக் கட்டமைப்பு மற்றும் வசதிகள் தொடர்பிலும் நிறுவன உரிமையாளர்கள் கூடுதலான கவனம் செலுத்துமாறும் மாவட்ட செயலர் கேட்டுக்கொண்டார். அத்துடன், தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆகவே தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் / நிர்வாகிகள் இதற்கான சரியான பொறிமுறையினை மேற்கொண்டு போக்குவரத்து நெருசலை கட்டுப்படுத்த வேண்டும். இந்த பொறிமுறையினை தாமாக நடைமுறைப்படுத்த தவறும் தனியார் கல்வி நிறுவனங்கள்; தொடர்பில் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ப்படும். மேலும் பிரதேச செயலாளர்கள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் தமது பிரதேசங்களில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்களை தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் எனவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், யாழ் மாவட்ட தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2024/209395/
-
கோப் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!
கோப் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்! adminDecember 18, 2024 பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். https://globaltamilnews.net/2024/209401/
-
சூது கவ்வும் 2: விமர்சனம்!
சூது கவ்வும் 2: விமர்சனம்! SelvamDec 14, 2024 21:02PM உதயசங்கரன் பாடகலிங்கம் சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல! ’மிர்ச்சி’ சிவா நடிக்கும் படங்கள் என்றாலே, தமிழ் சினிமாவை ‘ஸ்பூஃப்’ செய்கிற சில வரி வசனங்களாவது இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடத்தில் நிறைந்திருக்கிறது. காரணம், அவரது முந்தைய படங்கள் தான். அதிலிருந்து அவர் விலகி நிற்க முயற்சிகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை. இந்த நிலையில்தான், ‘சூது கவ்வும்’ இரண்டாம் பாகத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அடுத்தடுத்து பல அப்டேட்கள், டீசர், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி, இதோ இப்போது தியேட்டரில் படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியிருக்கிறார். ‘மார்க் ஆண்டனி’, ‘குட் பேட் அக்லி’ என்று எழுத்தாக்கத்தில் இவர் பங்களித்திருக்கிற படங்களின் எண்ணிக்கை கணிசம். மேற்சொன்ன விஷயங்களே, இப்படம் நம்மை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும். காரணம், ‘சூது கவ்வும்’ படம் தந்த அனுபவம். சரி, எப்படியிருக்கிறது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ படம்?! அதே ‘பார்முலா’! ஒரு அமெச்சூர் திருட்டுக் கும்பலின் தலைவன் குருநாத் (சிவா). அவரிடம் எடுபிடிகளாக இருக்கிற இரண்டு அப்பாவி அல்லக்கைகள் (கல்கி & கவி). மூவரும் சேர்ந்து சின்னச் சின்னதாக ஆள் கடத்தலில் ஈடுபட்டு, ஆயிரங்களில் பணம் கறக்கின்றனர். பெரிய கடத்தலில், பெரிய மனிதர்களோடு மோதலில் ஈடுபட இக்கும்பல் தயாராக இல்லை. காரணம், இவர்களது கொள்கைகள் அப்படி (முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கிளாஸ் எடுப்பது நினைவில் இருக்கிறதா, அதே பாயிண்ட்கள் தான்). வங்கியில் பணம் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிச் சிறை சென்று திரும்பியவர் குருநாத். அந்த வழக்கிற்காக, அவரைக் கைது செய்யும்போது போலீஸ் அதிகாரிகளான பிரம்மாவும் (யோக் ஜேபீ) தேவநாதனும் (கராத்தே கார்த்தி) காயமடைகின்றனர். காவல் துறையில் இருந்து விலக்கப்படும் நிலைக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில், குருநாத் கும்பலைப் பழி வாங்குகிற வாய்ப்பைப் பெறுகிறார் தேவநாதன். பிரம்மாவோ, நிதியமைச்சராக இருக்கும் அருமைப்பிரகாசத்தின் (கருணாகரன்) மோசடிகளை அம்பலப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். அத்தனைக்கும் நடுவே, எந்தச் சம்பந்தமும் இல்லாமல் அருமைப்பிரகாசத்தைக் கடத்த முடிவெடுக்கிறார் குருநாத். காரணம், அவருக்கு மட்டுமே புலப்படுகிற ஒரு மாயப்பெண். அவரது பெயர் அம்மு (ஹரிஷா ஜெஸ்டின்). குருநாத்தின் மூளையில் ஏற்படுகிற ‘ஹாலுஷினேஷன்’ காரணமாகவே, அந்த உருவம்அவருக்குத் தென்படுகிறது. இது அவரது சிஷ்யர்களுக்கு மட்டுமே தெரியும். ’டேவிட்டால் எப்படி கோலியாத்தை வீழ்த்த முடியும்’ என்ற நினைப்பு, சிலநேரங்களில் தவிடுபொடியாகும். அப்படித்தான், அருமைப்பிரகாசத்தைக் குருநாத் கும்பல் கடத்திச் செல்கிறது. அவர்களைத் துரத்திப் பிடிக்க பிரம்மா, தேவநாதன் இருவரும் வெறி கொண்டு திரிகின்றனர். இதற்கு நடுவே, அருமைப்பிரகாசம் கடத்தப்பட்ட சம்பவம் ஆட்சி மாற்றத்திற்கே காரணமாகிறது. அது எப்படி நிகழ்ந்தது? இறுதியில், இத்தனை சிக்கல்களும் என்னவாகின? இக்கேள்விகளுக்குச் சிரிக்கச் சிரிக்கப் பதிலளிக்கிறது ‘சூது கவ்வும் 2’வின் மீதிப்பாதி. முதல் பாகத்தில் வந்த சில கதாபாத்திரங்கள், அவற்றின் சிறப்பம்சங்கள், பலவீனங்கள், சில காட்சி அமைப்புகள், திருப்பங்கள் அனைத்தும் இரண்டாம் பாகத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அதே போன்றில்லாமல் வேறுவிதமாக இருக்கின்றன. ஆதலால், இதுவும் ‘சூது கவ்வும்’ முதல் பாகத்தின் பார்முலாவில் அமைந்த படம் எனலாம். சிரிப்பூட்டுவதே நோக்கம்! ’சூது கவ்வும்’ ஒரு கிளாசிக் ஆக நோக்கப்படுகிற ஒரு திரைப்படம். அதன் தாக்கம் இன்றுவரை இந்தியாவில் வெளியாகிற பல மொழி சினிமாக்களில் தென்படுகிறது. அப்படியிருக்க, அதன் இரண்டாம் பாகம் என்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். அதனை நன்குணர்ந்திருக்கிறது படக்குழு. அதனாலேயே, ‘சூது கவ்வும் 2 ஒரு பொழுதுபோக்கு நகைச்சுவை படம் மட்டுமே’ என்று ‘புரோமோஷன்’ நிகழ்வுகளில் சொல்லி வந்தது. அதையும் மீறி, முதல் பாகம் போன்றே இதில் ரசிகர்களைக் கவரும் திரைக்கதை திருப்பங்கள், ஐடியாக்கள் ‘கொஞ்சமாக’ இருக்கின்றன. அதேநேரத்தில், படத்தில் பெரும்பாலான காட்சிகள், வசனங்கள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. அந்த வகையில் ‘சிரிப்பூட்டுவதே எங்கள் நோக்கம்’ என்று இயங்கியிருக்கிறது எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கும் இயக்குனர் அர்ஜுன், டி.யோகராஜா இணை. ‘சூது கவ்வும்’ மாதிரியான திரைக்கதை ட்ரீட்மெண்டை கையாண்டிருந்தாலும், காட்சிகள் உண்டாக்கும் தாக்கம் வேறுமாதிரியாகத்தான் இப்படத்தில் தெரிகின்றன. சீரியசான கதை சொல்லல் திரையில் மிளிர, படம் பார்க்கும் ரசிகர்கள் தன்னை மறந்து சிரிக்க வேண்டும். அதற்கேற்ப, பாத்திரங்களின் உணர்வுகளுக்கு, அசைவுகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறது கார்த்திக் தில்லையின் ஒளிப்பதிவு. ’சூது கவ்வும்’ கதை நிகழும் காலகட்டத்திற்கு முன்னதாகத் தொடங்கி, அதன் பின்னர் தொடர்வதாக அமைந்துள்ளது திரைக்கதை. அந்த கால மாற்றத்தை உணராத அளவுக்கு, அதேநேரத்தில் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ற பின்னணியை உருவாக்கித் தந்திருக்கிறது சுரேந்திரனின் கலை வடிவமைப்பு. இக்னேஷியஸ் அஸ்வின் படத்தொகுப்பானது திரையில் கதை சொல்லல் சீராக நிகழச் செய்திருக்கிறது. அதேநேரத்தில், ’ஈயடிச்சான் காப்பி’யாக முதல் பாகம் போன்றே இரண்டாம் பாகத்திலும் ‘பிளாஷ்பேக்’ மூலமாகக் கதை முடிச்சுகள் அவிழ்க்கப்படுவது ஏற்புடையதாக இல்லை. பின்னணி இசை அமைத்த ஹரி எஸ்.ஆர் பங்களிப்பு, திரையில் வரும் காட்சிகளைப் பார்த்து நாம் சிரித்து மகிழ்வதில் அடங்கியிருக்கிறது. எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையில் பாடல்கள் ஓகே ரகத்தில் உள்ளன. முதல் பாகத்தில் நடித்தவர்களில் ராதாரவி, கருணாகரன், அருள்தாஸ், யோக் ஜேபீ, எம்.எஸ்.பாஸ்கர், அவரது மனைவியாக நடித்தவர், நம்பிக்கை கண்ணனாக நடித்தவர் என்று சுமார் அரை டஜனுக்கும் மேற்பட்டோர் இதிலும் தலைகாட்டியிருக்கின்றனர். அதே போன்றதொரு நடிப்பை நாம் சிரிக்கும் வண்ணம் தந்திருக்கின்றனர். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக்செல்வன், ரமேஷ் திலக், சஞ்சிதா கூட்டணிக்குப் பதிலாக இதில் மிர்ச்சி சிவா, கல்கி, கவி, ஹரிஷா ஜெஸ்டின் நடித்துள்ளனர். ஹரிஷா பாத்திரம் முதல் பாகத்தில் வந்த சஞ்சிதாவைப் பிரதிபலித்தாலும், அவரது நடிப்பு எரிச்சலூட்டுவதாக இல்லை. கல்கியும் கவியும் மிகச்சாதாரண பாத்திரங்களாகத் தொடக்கத்தில் தென்படுகின்றனர்; ஆனால், ஒருகட்டத்திற்குப் பிறகு அவர்கள் உதிர்க்கும் வசனங்கள் அனைத்தும் சிரிப்பூட்டுவதாக உள்ளன. மிர்ச்சி சிவா இதில் குருநாத் ஆக நடித்திருக்கிறார். இதற்கு முன்னர் வந்தது போன்று தமிழ் பட நாயகர்களை ‘ஸ்பூஃப்’ செய்யாமல், கொஞ்சம் ஒரிஜினலாக நடிக்க எண்ணியிருக்கிறார். அதற்குத் திரையில் பலன் கிடைத்திருக்கிறது. வாகை சந்திரசேகர் பாத்திரம் இப்படத்தில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறது. யோக் ஜேபீ பாத்திரத்தின் இன்னொரு பிரதிபலிப்பாக, இதில் கராத்தே கார்த்தியைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். முதல் பாகத்தின் திரைக்கதையைப் போலவே, இந்தப் படத்தின் பின்பாதியில் சில காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில அம்சங்கள் ரசிக்க வைக்கின்றன. கொஞ்சம் முயன்றிருந்தால், கிச்சுகிச்சு மூட்டுவதையும் தாண்டி இதையும் ‘கிளாசிக்’ ஆக மாற்றியிருக்க முடியும். ஏனோ, அதனை வலிந்து தவிர்க்க முயன்றிருக்கிறது படக்குழு. இரண்டுக்குமான ஒப்பீடு தவறான திசையில் தள்ளக்கூடும் என்று நினைத்திருக்கலாம். நீரோட்டம் போன்று இயல்பானதாகத் திரைக்கதையில் காட்சிகள் இடம்பெறாதபோதும், அவற்றின் ஓட்டம் ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை. அதேநேரத்தில், வயிறு வலிக்கச் சிரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அதனைச் சாதிப்பது சாதாரண விஷயமல்ல. அஜித்குமாரின் ‘பில்லா’ வந்தபோது எப்படியொரு பாராட்டை இயக்குனர் விஷ்ணுவர்தன் பெற்றாரோ, கிட்டத்தட்ட அதே போன்றதொரு வரவேற்பைப் பெறத் தகுதியானவர் இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன். வெவ்வேறு வயதுகளில், பின்னணியில் உள்ள ரசிகர்களை ஒருசேரச் சிரிக்க வைக்கிற வித்தை வெகுசிலருக்கு மட்டுமே கைவரும். அது அவருக்கு வாய்த்திருக்கிறது என்பதை இப்படத்தின் வெற்றி சொல்லும். மற்றபடி, இதிலும் ‘அறம் தோற்றிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது’ என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. அதனைச் சரிக்கட்ட, ‘தர்மம் வெல்லும்’ என்று மூன்றாம் பாகம் எடுக்க வேண்டியதிருக்கும்! https://minnambalam.com/cinema/soodhu-kavvum-2-movie-review-a-trick-that-makes-audiences-of-different-ages-laugh-together-by-udhyasankaran-padagalingam/
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன் December 17, 2024 11:35 am பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது, அதனை தற்போது நிரூபிக்க முடியாது என்பதால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அது நல்லதொரு விடயம். அதை நான் வரவேற்கின்றேன். இதேபோன்று மற்றவர்களும் மற்ற மற்ற விடயங்களுக்காக விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம்தான். பார் போமிட் எடுத்தவர்களும் தாமாகவே விலகுவார்களாக இருந்தால் அதுவும் நல்ல விடயம். விக்னேஸ்வரன் ஐயா தான் பார் போமிட் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்து அவர் தேர்தலில் போட்டியிடமால் கொழும்புக்குப் போய் விட்டார். ஒவ்வொரு இடங்களிலும் நிறையப் பார் போமிட் கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது. அதைச் சிபார்சு செய்தவர்கள் யார் என்ற தகவல் இன்னும் வரவில்லை. அந்தத் தகவல் வருகின்றபோது சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியமை போன்று விலக வேண்டும். அதனைச் சந்தோசமாக வரவேற்போம்.” – என்றார். https://oruvan.com/those-who-recommended-granting-of-parole-should-also-resign-like-the-speaker-sumanthiran/
-
சமஷ்டி தீர்வே தமிழரின் இலக்கு : ஸ்ரீநேசன்
சமஷ்டி தீர்வே தமிழரின் இலக்கு : ஸ்ரீநேசன் December 17, 2024 “புதிய அரசமைப்பில் கூட்டாட்சி முறைமையிலான சமஷ்டி தீர்வே தமிழர்களுக்கு வேண்டும். அதுவே தமிழர்களின் இலக்கு. தமிழர்களின் இழப்புகளுக்கும், வலிகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் சமஷ்டி தீர்வே ஒரே வழி.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தேசிய இனப்பிரச்சினைக்குக் கூட்டாட்சி முறைமையிலான சமஷ்டி அடிப்படையிலான தீர்வே ஒரே வழி. அந்தத் தீர்வையே வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். சமஷ்டி தீர்வை வேண்டியே வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தார்கள். எனவே, எமது மக்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயற்படமாட்டோம். புதிய அரசமைப்பில் ஒற்றையாட்சித் தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம். மத்தியில் அதிகாரங்கள் குவிந்திருக்கும் இந்த ஒற்றையாட்சியால்தான் தமிழ் மக்கள் பேரவலங்களைச் சந்தித்தார்கள். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, புதிய அரசமைப்பை வரைவைத் தயாரிக்கும்போது எமது நிலைப்பாட்டை உதாசீனம் செய்ய முடியாது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த பல நாடுகளில் கூட்டாட்சி (சமஷ்டி) முறைமை வெற்றியளித்துள்ளது. எனவே, புதிய அரசமைப்பு ஊடாக இலங்கையிலும் இந்த முறைமை அமுலாக வேண்டும். அதிகாரங்கள் மீளப்பெற முடியாதவாறு பகிரப்பட வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லாமல் போகும்.” – என்றார். https://www.ilakku.org/the-goal-of-tamils-is-a-federal-solution-srinesan-mp/
-
பவளவிழா காணும் தமிழரசுக்கட்சியும்! பரிதாபமான தமிழ்த்தேசிய அரசியலும்! – பா.அரியநேத்திரன்
பவளவிழா காணும் தமிழரசுக்கட்சியும்! பரிதாபமான தமிழ்த்தேசிய அரசியலும்! – பா.அரியநேத்திரன் December 17, 2024 இந்தவாரம் எதிர்வரும் 2024, டிசம்பர்,18,ல் தந்தை செல்வா உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பவள விழா காண்கிறது. 1944, ஆகஷ்ட் 29ல் ஜீ ஜீ பொன்னம்பலத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக விலகிய முக்கிய தலைவர்களான தந்தை செல்வா, வன்னிய சிங்கம், நாகநாதன் ஆகியோர் 1949 டிசம்பர் 18 ம் திகதி கொழும்பு மருதாணையில் கூடி பேசி “இலங்கத்தமிழ் அரசுக் கட்சியை” ஆரம்பித்தனர் அதன் ஸ்தாபக தலைவராக தந்தை செல்வா நியமிக் கப்பட்டார். அன்று உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 75வது பவளவிழாவில் கால் பதிக்கிறது. அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் 1944ல் ஆரம் பித்தாலும் அந்த கட்சி தாய்க்கட்சி என்ற அந்தஷ்தை பெறவில்லை. இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை ஏன் தாய்க்கட்சி என அழைப்பது என்றால் தந்தை செல்வா தமிழரசுக்கட்சியை வெறும் தேர்தல் கட்சியாக மட்டும் ஆரம்பிக்கவில்லை. இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும். அதற்கு ஒரு வழி சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதுதான் என்ற நோக்கில் தமிழ் மக்களை அணிதிரட்டி பல்வேறுபட்ட அகிம்சை ரீதியிலான போராட்டங்களை வட கிழக்கு முழுவதும் மாவட்ட ரீதியாக பிரதேச வேறுபாடுகள் இன்றி முன்னெடுத்தார். அது தமிழ்பேசும் மக்கள் மத்தியில் தமிழ்தேசிய உணர்வுகளை தூண்டியது.தாயகத்தின் விடுதலைக் காக போராடும் இயக்கமாக தமிழரசுகட்சி தொடர்ந்து செயல்பட்டதால் தாய்க்கட்சி என்ற உயர் நிலை இதற்கு கிடைத்தது. இலங்கை தமிழரசுக்கட்சி தேர்தல் அரசியலில் முதலாவதாக 1952,மே,24ல் யாழ்ப்பாணத்திலும், திருகோண மலையிலும் ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு 2, தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த இரண்டு ஆசனங்களில் ஒன்று காங்கேசன்துறை (தந்தை செல்வா)அடுத்தது திருகோணமலை (இராஜவரோதயம்) மட்டும் வெற்றி பெற்ற தமிழரசுகட்சியின் தலைவர் தந்தை செல்வா சோர வில்லை அதன்பின்னர்தான் உத்வேகத்துடன் தமிழரசுகட்சியை மக்கள் மயப்படுத்தினார். 1956, ஏப்ரல்,05ல் இடம்பெற்ற மூன்றாவது பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் 14, தொகுதிகளில் தமிழரசுக்கட்சி வேட்பாளரை நிறுத்தி 10, தொகுதிகளில் வெற்றி பெற்று வர லாற்று சாதனை படைத்ததார். 1956ல், தந்தை செல்வா மட்டக்களப்பு தொகுதியில் செல்லையா இராசதுரையையும், பட்டிருப்பு தொகுதியில் சீ மூ இராசமாணிக்கத்தையும் கல்முனை தொகுதி யில் எம்.எஷ். காரியப்பரையும் உள்வாங்கி இணைந்த வடகிழக்கில் தமிழ்த்தேசிய அரசி யலுக்கு அத்திவாரம் இட்டார். அதில் இருந்து தமிழ்பேசும்மக்களின் அகிம்சை ரீதியிலான சகல போராட்ட அரசியலும் மேலும் கூர்மை பெற்றது.தமிழரும் முஷ்லிம்களும் இணைந்து தமிழரசு கட்சியின் கொள்கையில் செயல்பட்டனர். 1956ல் இருந்து எழுச்சி பெற்ற தமிழரசுக்கட்சியானது பல மகாநாடுகளை நடத்தி ஒற்றுமையாக தலைவர் உட்பட சகல நிர்வாகத் தெரிவுகளும் இடம்பெற்றன. இதுவரை நடந்த மகாநாடுகளும் ஒற்றுமையாக தெரிவு செய்யப் பட்ட தலைவர்களும்… 1951,ஏப்ரல்,13,14,15ல் திருகோணமலையில், தலைவராக தந்தைசெல்வா, 1953,ஜனவரி,01ல் யாழ்ப்பாணத்தில் தலைவராக தந்தைசெல்வா, 1955 ஏப்ரல்,16,17ல் திருகோணமலையில் தலை வராக கு.வன்னியசிங்கம், 1956,ஆகஷ்ட்,,17,18,19ல் திருகோணமலையில் தலைவராக கு.வன்னியசிங்கம், 1957,யூலை,27,28ல் மட்டக்களப்பில் தலைவராக கு.வன்னியசிங்கம், 1958,மே,23,24,25ல் வவுனியாவில் தலைவராக இராஜவோதயம், 1961,ஜனவரி,21ல் யாழ்ப்பாணத்தில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம், 1962,ஆகஷ்ட்,31ல் மன்னாரில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம் 1964,ஆகஷ்ட்,21,22,23ல் திருகோணமலையில் தலைவராக தந்தை செல்வா, 1966,யூன்,23,24,25ல் கல்முனையில் தலைவராக டாக்டர் நாகநாதன், 1969,ஏப்ரல்,07,08,09ல் யாழ்ப்பாணம் உடுவிலில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம், 1973,செப்டம்பர்,07,08,09ல் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் தலைவராக அ.அமிர்தலில்கம், 2010, ஜனவரி,13ல் யாழ்ப்பாணம் நல்லூரில் தலைவராக இரா.சம்பந்தன், 2012,மே,26,27ல் மட்டக்களப்பில் தலைவராக இரா.சம்பந்தன், 2014,செப்டம்பர்,06,07ல் வவுனியா தலைவராக மாவை சேனாதிராசா, 2019,யூன்,29,30ல் யாழ்ப்பாணத்தில் தலைவராக மாவை.சேனாதிராசா. ஆனால் 17, வது தேசிய மகாநாடு நடத்துவதற்காக 2023, ஜனவரி,21ல் தலைவர் தெரிவு பொதுச் சபையால் வாக்கெடுப்பு மூலம் தெரிவானது. வழமைக்கு மாறாக தேர்தலில் தலைவர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. இதுவே முதல்தடவை. அதில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 184 வாக்குகளை பெற்று தலைவராக ஜனநாயக ரீதியில் தெரிவானார். அவரை நேரடியாக எதிர்த்து போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மதியாபரணம் ஆபிராகம் சுமந்திரன் 137 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் பதவிக்காக வேட்பு மனுவை வழங்கிய நிலையில் அவரும் சிறிதரனின் வெற்றிக்காக உழைத்தார். இதன் எதிரொலியால் 2023.ஜனவரி, 27ல் இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்தில் தமக்கு பொதுச்செயலாளர் பதவி தரப் படவேண்டும். அப்போதுதான் இரண்டு அணி களாக பொதுச்சபை உள்ளதை ஒரு அணியாக செயல்படலாம் என பகிரங்கமாகவே சுமந்திரன் கூறினார், அவர் கிழக்கு மாகாணத்தை கணக்கில் எடுக்காமல் புறக்கணிப்பு நோக்கில் இந்த கருத்து அமைந்தது. அவரே இரண்டு அணிகள் என்ற சொல்லை உறுதிப்படுத்தினார். இந் நிலையில் மட்டக்களப்பில் தற் போதய பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் முன்மொழிந்தார், இவ் வாறான நிலையில் மத்தியகுழுவில் ஏட்டிக்கு போட்டியான கருத்துகள் இடம்பெற்று பின்னர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை பொதுச்செயலாளராக மத்தியகுழுவில் இணக்கம் காணப்பட்ட நிலையில் பொதுச்சபை உறுப்பினர்கள் அதனை ஏற்க மறுத்து ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக மகாநாடு நடத்தப்படவில்லை. அதனால் சுமந்திரன் அணியை சேர்ந்தவர்களான திருகோணமல் சந்திரசேகரம் திருகோணமலையிலும், முல்லைத்தீவை சேர்ந்த பீற்றர் இளம்செழியன் யாழ்ப்பாண நீதிமன்றிலும் மகாநாடு தொடர்பாக இரண்டு வழக்குகள் கடந்த 2023, பெப்ரவரி, 15ல் தாக்கல் செய்யப்பட்டதால் மகாநாடு நடத்தப்படவில்லை ஒரு வருடமாக வழக்கு நிறைவுக்கு வரவில்லை. இதேவேளை இன்னுமொரு வழக்கை மட்டக்களப்பு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசாவாலும் யாழ் நீதிமன்றில் கடந்த 2024,அக்டோபர்,10ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மூன்று வழக்குகள் முற்றுப்பெறாத நிலையில் தமிழரசுக்கட்சியின் 17,வது மாகாநாடு நடத்தப்படாமை ஒரு புறமும் 2024, டிசம்பர், 18ல் பவள விழாவை நடத்த முடியாத இக்கட்டான நிலைமையும் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு காரணமாக புதிய தலைவராக தெரிவான சிறிதரன் பதவி ஏற்கவில்லை, பழைய தலைவரான மாவை சேனாதிராசா தொடர்ந்தும் தலைவராக பெயர் அளவில் உள்ளார். தமிழரசுக்கட்சியானது தனித்து 1949 தொடக்கம் 1972, வரை. 23 வருடங்கள் மட்டும் ஆரம்பத்தில் செயல்பட்டது. பின்னர் 1972 ல் தமிழர் கூட்டணி என ஆரம்பித்து அது 1976, மே,14ல் வட்டுக்கோட்டை தமிழீழ தனியரசு தீர்மானம் தந்தை செல்வாவால் எடுக்கப்பட்டபோது தமிழரசுக்கட்சி மேலும் ஒரு கட்சியாக தமிழர் விடுதலைக்கூட்டணி உருவானது. இந்த காலத்தில் நடந்த தேர்தல்கள் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் 2001,வரை சுமார் 29, வருடங்கள் போட்டியிட்ட வரலாறே உண்டு. இந்த காலக்கட்டத்தில் ஈழவிடுதலைப்போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியது அதில் போராடிய 36, விடுதலை ஆயுத இயக்கங்கள் 1987,யூலை,29ல், இலங்கை இந்திய ஒப்பந்தம் வரை விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் போராட்டத்தை விட்டு ஒதுங்கினர், சிலர் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து தேர்தல் அரசியலில் முகம்கொடுத்தனர். 2001,அக்டோபர்,20 தொடக்கம் 2023, ஜனவரி,21 உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை தமிழ்தேசிய கூட்டமைப் பாக தமிழரசுகட்சி வீட்டுச்சின்னத்தில் களம் இறங்கிய கட்சிகள் கடந்த 2023, ஜனவரியில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சி சபை தேர்தல் கலப்பு முறை தேர்தல் காரணமாக ஏற் பட்ட முரண்பாட்டால் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் இருந்து ரெலோ, புளோட், விலகி ஈபிஆர்எல்எவ், மற்றும் ஜன நாயக போராளிகள், என சில சில்லறை கட்சிகளை சேர்த்து புளட் இயக்கத் தின் பங்காளி கட்சியான ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி என்ற கட்சியின் “குத்து விளக்கு” சின்னத்தில் தனியாக வேட்பு தாக்கல் செய்தனர். தமிழரசுக்கட்சியும் தனியாக “வீடு” சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர் ஆனால் அந்த தேர்தல் இதுவரை இடம்பெற வில்லை என்பது ஒருபுறம் இருக்க… கடந்த 2024, செப்டம்பர், 21ல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொதுவேட்பாளராக 83, சிவில் அமைப்புகள், 07 தமிழ்தேசிய கட்சிகள், பல புலம்பெயர் அமைப்புகள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப் பினரும் தமிழ்த் தேசியவாதியுமான பா.அரிய நேத்திரனை பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் நிறுத்தியபோது தமிழரசுக்கட்சி மத்தியகுழுவில் ஒருசாரார் அதனை எதிர்த்து சஜீத் பிரமதாசாவின் வரப்பிரசாரங்களைப்பெற்று அவரை ஆதரித்தனர். ஆனால் தமிழரசுகட்சி மத்தியகுழுவில் உள்ள தலைவரான மாவை சேனாதிராசா, புதிதாக தலைவராக தெரிவான சிறிதரன், ஶ்ரீநேசன், யோகேஷ்வரன், திருமலை மாவட்ட தலைவர் குகதாசன், அம்பாறை கோடீஷ்வரன், மன்னார் சாள்ஷ்நிர்மலநாதன், கொழும்புக்கிளை தலைவர் தவராசா, உட்பட பல பிரதேச மாவட்ட தொகுதி கிளை உறுப்பினர்கள் அரியநேத்திரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். ஏழு தமிழ்த்தேசிய கட்சிகள், 83, பொது அமைப்புகள், முன்னாள் போராளிகள், புலம்பெயர் தமிழ் உறவுகள், அமைப்புகள் எல்லோரின் பிரசாரத்தால் 226322, வாக்குகளை அரியநேத்திரன் பெற்று இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசிய கொள்கை உறுதியினை நிருபித்தார். குறிப்பாக வடமகாணத்தில் மட்டும் கிழக்கு மாகாணத்தை விட 119000 வாக்குகள் கிடைத்தது. இலங்கை வரலாற்றில் ஒரு தமிழன் ஐந்தாவது இடத்தை ஜனாதிபதி தேர்தலில் பெற்றார் என்பது இதுவே முதல்தடவை. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு பூரண ஆதரவை கொடுத்த யாழ்ப்பாண மாவட்ட தமிழ்மக்கள் ஏன் ஜனாதிபதி அநுராவின் “தேசிய மக்கள் சக்திக்கு” மூன்று ஆசனங்களை பெற வாக்களித்தனர் என்ற வினா பலரின் மத்தியில் இருந்தது. இதற்கான காரணமும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிமீது மக்கள் கொண்ட அதிருப்தியும், தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது கொண்ட வெறுப்பும் என்பதே உண்மை. அதேவேளை 2024,நவம்பர்,14ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரின் “சங்கு” சின்னத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தமது “குத்து விளக்கு” சின்னத்தை மாற்றிவிட்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போது வன்னியில் மட்டும் ஒரு ஆசனம் கிடைத்தது ஏனைய சகல மாவட்டங்களிலும் படு தோல்வியடைந்தனர் மக்கள் சின்னங்களை விட எண்ணங்களிலேயே குறியாக இருந்தனர். அதனால் பல போராட்ட அமைப்புகளின் கிழக்கு மாகாணத்தை விட எல்லோருடனும் ஏனைய அரச கைக்கூலிகளான டக்லஷ், அங்கயன், கருணா, பிள்ளையான், போன்றவர்களை முழுமையாக தோற்கடித்தனர். இது தமிழ்தேசிய அரசியலுக்கு எழுச்சியை கொடுத்தது, தமிழரசுக்கட்சியில் யாழ்மாவட் டத்தில் சிறிதரன் மட்டுமே கிளிநொச்சி மாவட்டத்து உணர்வுள்ள தமிழ்மக்களால் தமிழரசுக்கட்சியில் ஒரு ஆசனத்தை பெற முடிந்தது. வன்னி மாவட்டத்தில் ஒரு ஆசனமும், கிழக்கில் வழமை போன்று ஐந்து ஆசனங்கள் பெறப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே தேசிய மக்கள் சக்தி தோல்விகண்டது. மட்டக்களப்பு மாவட்டம் இம்முறை மட்டுமல்ல தொடர்ந்தும் 1989, தொடக்கம்2024, வரை ஒன்பது பொதுத்தேர்தல்களிலும் எந்த ஒரு பேரினவாதக்கட்சிகளும் முதன் நிலை பெறவில்லை. அந்த வரலாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்களிடம் தமிழ்தேசிய உணர்வு தொடர்கிறது. யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் தமிழ்தேசிய கொள்கைக்காக வாக்களிக்கும் பாரம்பரியம் தமிழ்த்தேசிய உணர்வு 1977, தொடக்கம் 2024, வரை 46, வருடங்களாக மட்டக்களப்பு தமிழ்மக்களிடம் உள்ளது. 75, வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த தமிழரசுக்கட்சி இந்த பவள விழா ஆண்டில் (2024) எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று இலங்கை நாடாளுமன்றில் மூன்றாவது பெரும்பான்மை கட்சியாக இருப்பது மகிழ்ச்சியான விடயமாக காணப்பட்டாலும் பவள விழாவை கொண்டாட முடியாத முட்டுக்கட்டையாக வழக்கு ஒருபுறம் யார் தலைவர் என்ற கேள்வி மறுபுறம், என்ற நிலைமையுடன் மௌனமாகவே பவள விழாவில் தமிழரசுக்கட்சி கடந்து செல்லும், ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. அதாவது தேசிய தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்தேசிய கூட்டமைப்பு அவரால் ஆணையிடப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற செய்தி ஏனைய தமிழ் கட்சிகளுக்கு இந்த தேர்தல் முடிவுகள் சொல்லப்பட்டுள்ளது. ஒரு குரலால் தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்த எதிர்வரும் 2025, ம் ஆண்டில் தமிழ்தேசிய அரசியலில் அனைவரும் ஒன்றாக பயணிப்பதே காலத்தின் தேவை.இல்லை எனில் தமிழ்தேசிய அரசியல் பரிதாபமாகவே கடக்கும். https://www.ilakku.org/பவளவிழா-காணும்-தமிழரசுக்/
-
டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி!
டியாகோ கார்சியாவில் பிரிட்டன் தமிழர்களை சட்டவிரோதமாக தடுத்துவைத்திருந்தது – பிரிட்டிஸ் நீதிபதி December 17, 2024 இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை பிரிட்டன் டியாகோகார்சியாவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்திருந்தது என பிரிட்டிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடம் ஒரு சிறைச்சாலை ஆரம்பத்திலிருந்தே சிறைச்சாலை என நீதிபதி மார்கிரெட் ஒபி தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/டியாகோ-கார்சியாவில்-பிரி/
-
தமிழ் தேசிய இனப்பிரச்சினை பிடிகொடாத முறையில் நகரும் ஆட்சித்தளம்
தமிழ் தேசிய இனப்பிரச்சினை பிடிகொடாத முறையில் நகரும் ஆட்சித்தளம் நடராஜ ஜனகன் தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகின்றது. இவர்கள் தேர்தல் மேடைகளில் முழங்கிய பல்வேறுபட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலை தொடர்கின்றன என்ற விமர்சனம் தற்போது அதிகம் பேசப்படும் நிலை காணப்படுகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பல்தேசிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை செவ்வனே நிறைவு செய்யும் போக்கும் தற்போது மேல்நிலை பெற்று வருகிறது. இதனுடன் இலங்கை மின்சார சபை தொழிலாளர்களுக்கான போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை, 13 லட்சம் அரச ஊழியர்களில் 7 லட்சம் பேர் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலையும் தற்போது மேல் வந்துள்ளது. எனவே தேசிய மக்கள் சக்தியின் சோசலிச பொருளாதார எதிர்பார்ப்புகள் பின்நிலைக்குச் செல்ல சந்தை பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுகள் முதலீட்டு உள் வருகைக்கான ஆயத்தங்கள் அனைத்துமே முன்னெடுக்கப்படும் நிலை அதிகம் காணப்படுகின்றன. எனவே இவை காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் பாராட்டுதல்கள், ஒத்துழைப்புக்கள் முதன்மை பெறும் நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு , மனித உரிமை மீறல்கள் தொடர்பான நகர்வுகள் மேற்படி தளங்களில் அடக்கி வாசிக்கப்படும் நிலை தோற்றம் பெற தொடங்கியுள்ளன. தற்போதைய இலங்கையின் ஆட்சித்தள நகர்வை பார்க்கின்ற போது சகலரும் எதிர்பார்த்த சோசலிச பொருளாதார நகர்வில் இருந்து விலகி முற்று முழுதாக நடைமுறை சார்ந்த பொருளாதார முறைமையை முன்னெடுக்கும் நிலை காணப்படுகிறது. 1970 காலப்பகுதியில் இந்த நாட்டின் பாரம்பரிய இடதுசாரிகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து முன்னெடுத்த சோசலிச பொருளாதார முன்னெடுப்புகள் பெரும் தோல்வியை வழங்கியவுடன். இவை காரணமாக ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த நிலையும் தோற்றம் பெற்றது. இவர்களின் ஆட்சி 17 வருடங்கள் இலங்கையில் நீடித்தது. எனவே இலங்கையின் எதிரணியாக காணப்படும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தியாக இருக்கட்டும் ஏனைய தரப்புகளாக இருக்கட்டும் இவர்களின் செயற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி நேர்த்தியாக முன்னெடுப்பதால் இவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலையே காணப்படுகிறது. மறுபக்கத்தில் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் களத்தில் நின்று செயல்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் என 50 க்கும் மேற்பட்ட அமைப்புகள் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் என்பவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மிகவும் மென்மையான முறையில் முன் வைத்திருக்கின்றன. இவர்கள் இது தொடர்பாக கவன ஈர்ப்பு போராட்ட செயற்பாடுகளுக்கு செல்ல தயார் இல்லாத நிலையும் காணப்படுகிறது. மேலும் முன்னைய அரசாங்கத்துக்கு எதிராக அனுதினமும் போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் தற்போது அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்தாத நிலையே காணப்படுகிறது. இந்த நிலை முன்னிலை சோசலிச கட்சி தளத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில் வாழ்க்கை செலவு சுமை அதிகரித்த வண்ணமே உள்ளது. அரிசி விலை தொடர்பாக சர்ச்சை நீண்டு கொண்டே போகின்றது. தேங்காய் உட்பட மரக்கறிகளின் விலையும் உயர்ந்து கொண்டே போகின்றது. இது போதாதென்ற நிலையில் சபாநாயகரின் தகுதி தொடர்பான சர்ச்சை மிகப்பெரிய விவாதங்களை தோற்றுவித்துள்ளது. மேலும் இயற்கை அனர்த்தமும் அதனால் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலையும் தொடர் கதையாக மாறி வருகிறது.இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற 70 லட்சம் மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் இதையும் காண முடியாத நிலை தொடர்கின்றது. தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பில் அதற்கான தீர்வு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் முகாம் அடக்கி வாசிக்கும் நிலையே காணப்படுகிறது. ஜனாதிபதியின் சிம்மாசன உரையிலும் அத்தகைய நிலையே காணப்பட்டது. தேசிய மக்கள் கட்சியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக கருத்துக்களை முன்வைப்பதை தவிர்த்தே வருகின்றனர். எனவே மாகாண சபைகள் வழமை போல் இயங்கும். அதற்கு எந்த தடையும் வராது. மூன்று வருடங்களுக்கு பின்னர் எம்மால் கொண்டு வரப்படவிருக்கும் புதிய அரசியல் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்ற உத்தரவாதம் மட்டும் தேசிய மக்கள் சக்தி தளத்தில் வாக்குறுதியாக இன்னும் காணப்படுகிறது. உண்மையில் தென்னிலங்கையில் அதிக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் தேசிய பிரச்சனை தீர்வு விடயம் மேல்வரும் போது அதற்கு எதிரான இனவாத போராட்ட நிலைமை சகலதையும் முடிவுக்கு கொண்டு வரும் நிலை வரலாற்று உண்மையாகும். பண்டா – செல்வா ஒப்பந்தம் , டட்லி – செல்வா ஒப்பந்தம் , சந்திரிகாவின் புதிய அரசியல் யாப்பு முயற்சி இதற்கு சிறந்த உதாரணங்களாகும். எனவே தான் தேசிய மக்கள் கட்சியினர் இந்த விஷப் பரீட்சைக்குள் சிக்காமல் தமிழ் மக்கள் தமிழ் தேசிய பிரச்சனையை கைவிட்டுள்ளனர் என்ற பகல் கனவில் மிதக்கின்றனர். டிசம்பர் மாதம் பத்தாம் தேதி வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் போரின் போது தமது உறவுகளை பறிகொடுத்தவர்கள் காத்திரமான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எப்படி மாவீரர்களை நினைவுகூர்ந்தனரோ அதேபோன்று காணாமல் போனவர்களுக்கு அரசே பதில் கூறு எனக் கேட்டு காத்திரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர். தென்னிலங்கை அரசு சார்பு ஊடகங்கள் இப் போராட்டங்கள் தொடர்பில் எத்தகைய செய்தியையும் வெளிப்படுத்தாமல் இருந்தமையையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மீளுருவாக்கம் செய்யும் பே ச்சுவார்த்தைகள் செயலுருவம் பெற்று வருவது சற்று ஆறுதல் தரும் விடயமாகும். இது தேர்தல் தொடர்பில் மட்டும் உருவாகாமல் முழு தமிழ் தேசத்துக்குமான அனைத்து விடயங்களிலும் சம்பந்தப்பட்டதாக அமைய வேண்டும். தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தமது அணி வாக்கு வங்கியின் பலத்தைக் கொண்டே கட்சிகளின் இணைப்பை பற்றி கவனம் கொள்ளும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார். இவரின் கருத்தை பார்க்கின்ற போது கொள்கை பலம் தொடர்பாக இவர்கள் அக்கறை கொள்ளவில்லையா என்ற கேள்விக்கு இவர்கள் என்ன பதிலை முன் வைக்கப் போகின்றார்கள். எனவே தேசிய மக்கள் சக்தி எமக்கு என்ன தரப் போகின்றது என்பதை தவிர்த்து எமது தேசத்திற்கு இன்றைய காலகட்டத்தில் எது தேவை எமது தேசம் எத்தகைய சவால்களை எதிர்கொள்கின்றது என்பது தொடர்பான கலந்துரையாடல்கள் அவை தொடர்பான போராட்ட செயற்பாடுகள் முன்னிலை பெற வேண்டும். தமிழ் தேசிய பிரச்சனையை தமிழ் மக்கள் கைவிட்டுள்ளனர், இதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை அவர்கள் வாக்குகளை வழங்கினர் என்ற தென்னிலங்கை தேசிய மக்கள் சக்தியின் முகாமின் நம்பிக்கைக்கு தமிழர் தேசம் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் பதிலை வழங்கும் நிலை வலிமை பெற வேண்டும். https://thinakkural.lk/article/313780
-
ரஷ்ய கதிரியக்க பாதுகாப்புப் படைத் தலைவர் ஒருவர் கொலை
ரஷ்ய கதிரியக்க பாதுகாப்புப் படைத் தலைவர் ஒருவர் கொலை December 17, 2024 11:54 ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகினர். ரஷ்யாவின் கதிரியக்க வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ கிரிலோஃப் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=197417
-
இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்...
இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்... மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையை மனிதாபிமான முறையில் அணுக இலங்கை ஜனாதிபதியுடன் விவாதிக்கப்பட்ட போது ஒப்புக்கொள்ளப்பட்டது. இராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்' என பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவது குறித்து, இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளதாவது: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி. இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்திய மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படும். மக்களுக்கான சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. நிதி நெருக்கடியை இலங்கை சந்தித்த போது, இந்தியா உதவி செய்தது. இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் மோடி கூறியதாவது: மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அணுக வேண்டும். ராமேஸ்வரம்- தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்தியா இலங்கை உறவு வலுப்படும். பெட்ரோலியம், எரிவாயு, சூரிய ஒளி, மின்சார துறைகளில் ஒத்துழைப்பு வலுப்படும். நமது திட்டங்கள் அனைத்தும் இலங்கையின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றன. காங்கேசன் துறைமுகத்தை புனரமைக்க நிதி உதவி அளிக்கப்படும். இயற்கை பேரிடரின் போதும் நிவாரணம் உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைப்பு அளிக்கப்படும். இலங்கையின் பால் வளம் மீன்வளத்துறை வளர்ச்சிக்கு இந்தியா நிதி உதவி அளிக்கும். என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/இராமேஸ்வரம்-தலைமன்னார்-கப்பல்-போக்குவரத்து-விரைவில்/175-348835
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
எம்.பி அர்ச்சுனா உள்நுழைய தடை யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் என்றும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது எனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு பிப்ரவரி 7, 2025 வரை ஒத்திவைக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு இணங்க, வைத்தியசாலை நிர்வாகம், நோயாளியாக தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வைத்தியசாலை வளாகத்திற்குள் அவர் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்று எம்.பி.யிடம் தெரிவித்துள்ளது. மேலும், உரிய அனுமதியின்றி உள்ளே செல்ல முற்பட்டால், யாழ்.பொலிஸாரிடம் எம்.பி.யை ஒப்படைக்குமாறு வைத்தியசாலை தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/எம்-பி-அர்ச்சுனா-உள்நுழைய-தடை/175-348838