Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34999
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் வெற்றியாளர்களே! என்ன நிலைகள் முன்னுக்குப் பின்னர் நிற்கும்😄 அடுத்த போட்டி நடாத்த வாய்ப்பிருந்தால் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும்! வெற்றியாளர் எடுத்த புள்ளிகளில் அரைவாசிக்கு மேலாவது எடுக்கவும் முயற்சிக்கலாம்😂
  2. யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டி 2022 இறுதி நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கல்யாணி 106 2 நீர்வேலியான் 100 3 ஈழப்பிரியன் 93 4 எப்போதும் தமிழன் 92 5 முதல்வன் 87 6 தமிழ் சிறி 86 7 நுணாவிலான் 81 8 புலவர் 80 9 கிருபன் 77 10 அகஸ்தியன் 76 11 வாதவூரான் 72 12 கறுப்பி 72 13 வாத்தியார் 70 14 ஏராளன் 70 15 சுவைப்பிரியன் 69 16 நிலாமதி 69 17 சுவி 68 18 பிரபா 68 19 குமாரசாமி 57 20 பையன்26 56 21 கந்தையா 51 உலகக்கோப்பை கால்பந்தாட்டம் 2022 இல் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும், குழுநிலைப் போட்டியில் முன்னணியில் நின்ற @கிருபன் ஐயும், பின்னைய போட்டிகளில் பல நாட்கள் முன்னணியில் நின்ற @முதல்வன் ஐயும், இறுதிப் போட்டிவரை முன்னணியில் நின்ற @நீர்வேலியான் ஐயும் பின்னுக்குத் தள்ளி யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டம் 2022 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் கல்யாணிக்கு (@kalyani) மனமார்ந்த வாழ்த்துக்கள்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், இடையில் யாழ்களம் தடங்கலுக்கு உட்பட்டு பல பக்கங்கள் காணாமல் போயிருந்தும் சளைக்காமல் திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
  3. உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள் தொடர்பான கேள்விகளும் யாழ்களப் போட்டியாளர்களின் பதில்களும் கீழே தரப்படுகின்றன. கேள்விகள் 81) இலிருந்து 88) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும்: ---------------------------------------------------------- 81) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kylian Mbappe (FRA) - 8 கோல்கள் சரியாகக் கணித்தவர்கள்: நுணாவிலான், தமிழ் சிறி, கறுப்பி போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Lionel Messi சுவி Antoine Griezmann வாத்தியார் Cristiano Ronaldo பிரபா Serge Gnabry முதல்வன் Karim Benzema கந்தையா Kevin De Bruyne ஏராளன் Lionel Messi சுவைப்பிரியன் Cristiano Ronaldo நுணாவிலான் Kylian Mbappe கல்யாணி Robert Lewandowski கிருபன் Karim Benzema தமிழ் சிறி Kylian Mbappe புலவர் Cristiano Ronaldo அகஸ்தியன் Karim Benzema வாதவூரான் Cristiano Ronaldo நிலாமதி Cristiano Ronaldo பையன்26 Neymar எப்போதும் தமிழன் Neymar குமாரசாமி Neymar கறுப்பி Kylian Mbappe நீர்வேலியான் Lionel Messi 82) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 81 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) Kylian Mbappe (FRA) - 8 கோல்கள் சரியாகக் கணித்தவர்கள்: பிரபா, முதல்வன், நுணாவிலான், கிருபன், நீர்வேலியான் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் ARG சுவி ARG வாத்தியார் POR பிரபா FRA முதல்வன் FRA கந்தையா BEL ஏராளன் ARG சுவைப்பிரியன் GER நுணாவிலான் FRA கல்யாணி POL கிருபன் FRA தமிழ் சிறி POR புலவர் POR அகஸ்தியன் BEL வாதவூரான் POR நிலாமதி POR பையன்26 BRA எப்போதும் தமிழன் BRA குமாரசாமி BRA கறுப்பி POR நீர்வேலியான் FRA 83) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Lionel Messi (ARG) - தொடரின் சிறந்த வீரர் சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன், வாத்தியார், கல்யாணி, தமிழ் சிறி, புலவர், வாதவூரான், எப்போதும் தமிழன், கறுப்பி, நீர்வேலியான் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Lionel Messi சுவி Cristiano Ronaldo வாத்தியார் Lionel Messi பிரபா Kylian Mbappe முதல்வன் Kylian Mbappe கந்தையா Neymar ஏராளன் Kylian Mbappe சுவைப்பிரியன் Antoine Griezmann நுணாவிலான் Karim Benzema கல்யாணி Lionel Messi கிருபன் Neymar தமிழ் சிறி Lionel Messi புலவர் Lionel Messi அகஸ்தியன் Vinicius Junior வாதவூரான் Lionel Messi நிலாமதி Antoine Griezmann பையன்26 Neymar எப்போதும் தமிழன் Lionel Messi குமாரசாமி Neymar கறுப்பி Lionel Messi நீர்வேலியான் Lionel Messi 84) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 83 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) Lionel Messi (ARG) - தொடரின் சிறந்த வீரர் சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன், கல்யாணி, தமிழ் சிறி, புலவர், எப்போதும் தமிழன் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் ARG சுவி FRA வாத்தியார் BRA பிரபா FRA முதல்வன் FRA கந்தையா BRA ஏராளன் FRA சுவைப்பிரியன் ENG நுணாவிலான் FRA கல்யாணி ARG கிருபன் FRA தமிழ் சிறி ARG புலவர் ARG அகஸ்தியன் FRA வாதவூரான் FRA நிலாமதி FRA பையன்26 BRA எப்போதும் தமிழன் ARG குமாரசாமி BRA கறுப்பி BRA நீர்வேலியான் BRA 85) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kylian Mbappe (FRA) - 8 கோல்கள் சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன், பிரபா, முதல்வன், கல்யாணி போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Kylian Mbappe சுவி Lionel Messi வாத்தியார் Cristiano Ronaldo பிரபா Kylian Mbappe முதல்வன் Kylian Mbappe கந்தையா Harry Kane ஏராளன் Cristiano Ronaldo சுவைப்பிரியன் Xherdan Shaqiri நுணாவிலான் Lionel Messi கல்யாணி Kylian Mbappe கிருபன் Lionel Messi தமிழ் சிறி Cristiano Ronaldo புலவர் Cristiano Ronaldo அகஸ்தியன் Lionel Messi வாதவூரான் Antoine Griezmann நிலாமதி Lionel Messi பையன்26 Neymar எப்போதும் தமிழன் Lionel Messi குமாரசாமி Thomas Muller கறுப்பி Cristiano Ronaldo நீர்வேலியான் Harry Kane 86) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 85 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) Kylian Mbappe (FRA) - 8 கோல்கள் சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன், பிரபா, முதல்வன், கல்யாணி, கிருபன், கறுப்பி, நீர்வேலியான் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் FRA சுவி POR வாத்தியார் POR பிரபா FRA முதல்வன் FRA கந்தையா ENG ஏராளன் POR சுவைப்பிரியன் CRO நுணாவிலான் ARG கல்யாணி FRA கிருபன் FRA தமிழ் சிறி POR புலவர் POR அகஸ்தியன் BRA வாதவூரான் ESP நிலாமதி GER பையன்26 BRA எப்போதும் தமிழன் ARG குமாரசாமி GER கறுப்பி FRA நீர்வேலியான் FRA 87) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Emiliano Martinez (ARG) சரியாகக் கணித்தவர்கள்: கல்யாணி, எப்போதும் தமிழன் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Steve Mandanda சுவி Manuel Neuer வாத்தியார் Ederson பிரபா Manuel Neuer முதல்வன் Alisson கந்தையா Manuel Neuer ஏராளன் Alisson சுவைப்பிரியன் Manuel Neuer நுணாவிலான் Alisson கல்யாணி Emiliano Martinez கிருபன் Alisson தமிழ் சிறி Alisson புலவர் Manuel Neuer அகஸ்தியன் Alphonse Areola வாதவூரான் Manuel Neuer நிலாமதி Manuel Neuer பையன்26 Alisson எப்போதும் தமிழன் Emiliano Martinez குமாரசாமி Manuel Neuer கறுப்பி Alisson நீர்வேலியான் Alisson 88) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 87 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) Emiliano Martinez (ARG) சரியாகக் கணித்தவர்கள்: கல்யாணி, நிலாமதி, எப்போதும் தமிழன், நீர்வேலியான் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் FRA சுவி GER வாத்தியார் BRA பிரபா GER முதல்வன் BRA கந்தையா GER ஏராளன் BRA சுவைப்பிரியன் ENG நுணாவிலான் BRA கல்யாணி ARG கிருபன் FRA தமிழ் சிறி BRA புலவர் GER அகஸ்தியன் BRA வாதவூரான் GER நிலாமதி ARG பையன்26 BRA எப்போதும் தமிழன் ARG குமாரசாமி GER கறுப்பி FRA நீர்வேலியான் ARG
  4. இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா அணியும் பிரான்ஸ் அணியும் ஆட்டநேர முடிவில் தலா இரு கோல்கள் போட்டமையால் சமநிலையில் இருந்தன. பின்னர் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டைமையால் சமநிலையிலேயே இருந்தன. எனவே வெற்றி சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்பட்டது. சமன்நீக்கி மோதலில் ஆர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை 4 - 2 என்ற கணக்கில் வெற்றியீட்டியது. ஆர்ஜென்டினா 3 - 3 பிரான்ஸ் சமன்நீக்கி மோதல் முடிவு: ஆர்ஜென்டினா 4 - 2 பிரான்ஸ் ஆர்ஜென்டினா வெல்லும் எனக் கணித்த @ஈழப்பிரியன், @kalyani, @Eppothum Thamizhan, @நீர்வேலியான் ஆகியோருக்கு தலா ஆறு புள்ளிகள் கிடைக்கின்றன! ஏனையோருக்கு புள்ளிகள் கிடையாது. இறுதிப் போட்டி முடிவில் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (சாதனை படைத்த வீரர்கள்/நாடுகளுக்கான பதில்கள் பின்னர் தரப்படும்): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நீர்வேலியான் 87 2 கல்யாணி 85 3 ஈழப்பிரியன் 79 4 எப்போதும் தமிழன் 78 5 முதல்வன் 77 6 அகஸ்தியன் 76 7 தமிழ் சிறி 75 8 நுணாவிலான் 74 9 புலவர் 73 10 கிருபன் 71 11 ஏராளன் 70 12 சுவைப்பிரியன் 69 13 சுவி 68 14 வாதவூரான் 68 15 வாத்தியார் 66 16 நிலாமதி 66 17 கறுப்பி 61 18 பிரபா 58 19 குமாரசாமி 57 20 பையன்26 56 21 கந்தையா 51 இன்னும் இருக்கு! போட்டி நிர்ணயித்த நேரத்தில் முடியாததால் பார்ட்டி ஒன்றுக்குப் போகவேண்டியதாகிவிட்டது. எனவே பதிவுகள் போடமுடியவில்லை! இறுதி நிலைகளை இனித்தான் கணக்கிடவேண்டும். @Eppothum Thamizhan, எப்போதும் கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் வல்லுநராக இருப்பதால் பிழைகள் விடாமல் நடாத்தமுடிகின்றது😎
  5. ஊரில் தினமும் விளையாடிய காலம் இருந்தது. இந்திய இராணுவத்தின் ரவுண்டப் காலையில் தொடங்க பாடசாலைக்கு அல்லது வேறிடங்களுக்கு ஓடி பின்னேரங்களில் வந்து விளையாடினோம் நண்பர்களுக்குள் சணல் பறக்க செந்தமிழும் அடிபாடுகளும் இருந்தது! ஒட்டகப்புலத்திற்கு இரண்டு தடவை “புக்கை” கட்டவும் போயிருந்தேன்! புலம்பெயர்ந்த பின்னர் இரு வருடங்களுக்குள்ளேயே விளையாடும்போது வலது முழங்காலில் அடிபட்டு அதன் பின்னர் விளையாடுவதில்லை!
  6. வியாபார அரசியலா? விரும்பத்தக்க அரசியலா? - சாவித்திரி கண்ணன் வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர், விநியோகஸ்தர்! நடிகர்! வசீகரமான இளைஞர்! பழகுவதற்கு இனிமையானவர்! ஆனால், அவரது அரசியலின் நோக்கம் என்ன? இது வரையிலான அவரது செயற்பாடுகள் உணர்த்துவது என்ன? கடந்த கால அரசியல் காட்டும் தோற்றம் என்ன..? தமிழக மக்கள் உதயநிதியிடம் எதிர்பார்ப்பது என்ன? வாரிசு அரசியலாகத் தான் உதயநிதியின் அமைச்சர் பதவி ஏற்பு நடந்துள்ளது என்றாலும், இது அதிர்ச்சி தரவில்லை. அதிரடியாக நிகழ்ந்ததாகக் கருத இடமுமில்லை. எதிர்பார்த்த ஒன்றே! எனினும், வாய்ப்புக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கிறாரா? இல்லை, தந்தையைப் போல தடுமாறப் போகிறாரா? என்பதைத் தான் பார்க்க வேண்டும். 50 ஆண்டுகளாக கலைஞருடன் அரசியலில் இருந்தும், ஸ்டாலின் தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் ஸ்டாலினுக்கு பொறுப்புகள் வழங்குவதில் கருணாநிதி அதீத காலதாமதம் காட்டினார். ‘அந்த தயக்கம் சரியானதே’ என்பதைத் தான் இன்றைய ஸ்டாலின் ஆட்சி நிருபித்து வருகிறது. உதயநிதியை பொறுத்த வரை அரசியலில் கால் பதித்து ஐந்தே ஆண்டுகளுக்குள் அமைச்சர் பதவியை அடைந்து விட்டார். இதற்கு காரணம், அவரது அம்மா துர்கா ஸ்டாலின், தன் கணவருக்கு தந்த நெருக்கடிகளே. இன்னும் சொல்வதென்றால், ‘ஸ்டாலின் முதல்வராக பொறுப்பு ஏற்கும் போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவிதர வேண்டும்’ என குடும்பத்தில் அழுத்தம் இருந்ததாக செய்திகள் அப்போதே கசிந்தன! ஆகவே, ‘அவர் தான் இந்த கட்சி மற்றும் ஆட்சியின் எதிர்காலம்’ என்பது அந்தக் கட்சியின் உயர்மட்டம் தொடங்கி அடிமட்டம் வரை ஆழமாக உணரப்பட்டுவிட்ட நிலையில் நாம், ‘வாரிசு அரசியல் செய்கிறீர்கள்’ என வசை பாடிப் பயனில்லை. அந்தக் கட்சிக்குள் அந்த உணர்வு இயல்பாக எழாத வரை, வெளியில் இருந்து பேசுவதெல்லாம் வீழலுக்கு இறைத்த நீர் தான்! அப்படியான உணர்வு அந்தக் கட்சிக்குள் தோன்றாத அளவுக்கு அரசியலின் தரமும், சூழல்களும் உள்ளன என்பதையும் கவனத்தில் கொண்டே இதை அணுக வேண்டியுள்ளது. இன்று இந்தியா முழுக்க வாரிசு அரசியல் வளர்ந்து, வியாபித்துள்ள நிலையில், மக்களுமே கூட அறச் சீற்றத்திற்கு ஆளாகாமல் வேடிக்கை பார்க்கப் பழகிவிட்டனர். நாம் அவதானித்த வகையில், உதயநிதி இது வரை அணுகுவதற்கு எளிதானவராகவே இருந்துள்ளார். மூத்தோரிடம் மரியாதையுடன் பழகும் பண்பும் அவரிடம் வெளிப்பட்டு உள்ளதை மறுப்பதற்கில்லை. ”பழகுவதற்கு இனிமையானவர்” என பலரும் சொல்கிறார்கள். கட்சி இளைஞர்களிடம் அவருக்கு ஒரு செல்வாக்கு இருக்கிறது. எல்லாம் சரி தான்! மகிழ்ச்சி! ஆனால், இது போதுமானதா? தன்னை தகவமைத்துக் கொண்டாரா? ‘தாத்தா தமிழகத்தின் மாபெரும் தலைவர்’ என்ற போதிலும், அவர் உயிரோடு இருந்த வரை அரசியலில் ஆர்வமே காட்டவில்லை உதயநிதி ஸ்டாலின்! குறைந்த பட்சம் கலைஞரின் பேச்சுக்களை கேட்பதிலோ, அவரது எழுத்துக்களை படிப்பதிலோ கூட அவர் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 45 வயதாகும் உதயநிதி தன் நாற்பதாவது வயதில் தான் அரசியலில் காலடியே எடுத்து வைத்தார். தமிழகத்தின் முதன்மையான அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தும், உதயநிதி அரசியலில் இருந்து, நாற்பது வயது வரை விலகியே இருந்துள்ளார் என்பது கவனத்திற்குரியது. கல்லூரி படிப்பு முடித்ததும் ‘ஸ்நோ பவுலிங்’ என்ற ஒரு விளையாட்டு கூடத்தை தான் நடத்தி வந்தார். அப்போது அவர் ஒரு பிளே பாயாக அறியப்பட்டிருந்தார். பிறகு சினிமா தயாரிப்புகளில் இறங்கினார். சினிமா விநியோகத்திலும் இறங்கினார். இந்த காலகட்டத்தில் ஜெயலலிதா அரசின் சில கெடுபிடிகளை எதிர்கொண்டார். திடீரென்று நடிக்க ஆரம்பித்தார். அதில் சில படங்கள் கமர்சியல் ரீதியாக வெற்றி தந்தன! சினிமாவிலும் கூட கலா பூர்வமாவோ, கருத்தியல் தளத்திலோ முத்திரை பதிக்கும் எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. ஆனால், வெற்றிகரமான வியாபாரியாக வலம் வந்தார். 2021 -ல் ஆட்சிக்கு வந்தததும், ஆட்சி அதிகார பலத்தை திரைத் துறையில் செலுத்தி, சில அத்துமீறல்களை நிகழ்த்தவும் அவர் தயங்கவில்லை. விநியோகத்துறையில் பல்லாண்டுகளாக சாதாரணமாக வளைய வந்த சிறு விநியோகஸ்தர்கள் அனைவரையுமே அனேகமாக சினிமா துறையில் இருந்தே அப்புறப்படுத்திவிட்டார்! இன்றைக்கு ஒரு ‘மோனோபாலியாக’ தமிழ் சினிமா விநியோகத்துறையை ஆக்கிரமித்துள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களில் எம்.எல்.ஏ என்ற வகையில் சட்டமன்ற விவாதங்களில் பல்வேறு வகைகளில் பேசி இருக்கலாம், விவாதங்களில் பங்கெடுத்து இருக்கலாம். ஆனால், அப்படியான ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை. தமிழக மக்கள் பிரச்சினைகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளவாவது ஆர்வம் காட்டி உள்ளாரா? நேர்மையான அரசியலை தர விரும்புவரா? மதவாத பாஜகவை எதிர்க்கும் எண்ணமுண்டா? அரசியலில் பயிற்சி பெறுவதற்காவது ஆர்வம் காட்டினாரா..? தமிழகத்தின் பிரதான பிரச்சினைகளில் அவரது புரிதல் என்ன? பார்வை என்ன? என்பதற்கு எல்லாம் நமக்கு விடை இல்லை. தன்னை எதிர்காலத் தமிழகமாக கருதி மரியாதை தந்து கொண்டிருக்கும் கட்சிக்காரர்களின் நம்பிக்கைக்கு மரியாதை தரும் விதத்திலாவது அவர் குறைந்தபட்ச அளவிலேனும் செயற்பட்டிருக்கலாம். ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக அவர் கவனம் முழுமையும் சினிமாவிலேயே குவிந்திருந்தது. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை; தற்போது, தன் இயல்பிற்கு ஏற்ப அதிக சிரமம் தராத ஒரு துறையை அவர் கேட்டு பெற்று இருக்கிறார். இளைஞர் நலன் எனும் போது விளையாட்டுகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவது, பொது மைதானங்களை, ஸ்டேடியங்களை அமைப்பது, உடற்பயிற்சி கூடங்களை அமைப்பது என்பது சிறப்பான அணுகுமுறை தான்! ஆனால், அதைக் கடந்து இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரும் வேலை வாய்ப்புகளுக்கும் அவர்களை தயார்படுத்தலாம். இன்றைக்கு பெரும்பாலான தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புகளுக்கே தயாரற்ற நிலையில் உள்ளனர்! இதனால் தான் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வட நாட்டு இளைஞர்கள் இங்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இந்தப் பின்னடைவுகளுக்கு அரசே மும்முரமாக நடத்தும் டாஸ்மாக் மதுக் கடைகளே முக்கிய காரணம் என்பதை உதயநிதி உணர்வாரா எனத் தெரியவில்லை. ஆனால், டாஸ்மாக்கின் வீரியத்தை மட்டுபடுத்தாமல், இளைஞர் நலனை பற்றி இங்கே யோசிக்கவே முடியாது. உதயநிதி ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் ஏற்பட செயல்புரிவார் என நாம் நம்பத் தயாரில்லை! தற்போது வரம்பு மீறி போய்க் கொண்டிருக்கும் திமுக அரசின் ஊழல்களோடு அவரும் ஒன்றிணையாமல் தனித்து நிற்பார் என நம்பவும் வழியில்லை. இவர் அமைச்சரானதால் கள்ளக்குறிச்சி வழக்கில் மர்ம மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதி கிடைத்துவிடும் என யோசிக்கவே முடியவில்லை. விஸ்வரூபமெடுத்து வரும் மதவாத பாஜகவிற்கு எதிர்நிலை அரசியலை துணிச்சலோடு எதிர்கொள்வார் என்பதிலும் நம்பிக்கை இல்லை. இப்படி நடந்தால், அது பேராச்சரியம் தான்! ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் ஆவதற்கு படிப்பும் உண்டு, பயிற்சியும் உண்டு என்றால்.., அரசியல்வாதியாக – அதுவும் ஆட்சியாளராவதற்கு – கண்டிப்பாக அனுபவப் படிப்பும், பயிற்சியும் வேண்டும். ஆனால், இதெல்லாம் தேவையில்லை. மரபு ரீதியிலான உரிமையே போதுமானது என்ற ரீதியில் பொறுப்புக்கு வருவது மன்னராட்சி காலகட்டத்திலும், பாரம்பரிய குடும்ப வியாபாரத்திலும் தான் நடக்கும்! ஜனநாயக யுகத்தில், அரசியலில் இது போன்று நடப்பது ஏற்புடையதல்ல! இருந்த போதிலும், குறைந்தபட்சம் டாஸ்மாக் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூறையாடி வருவதில் இருந்து அவர்கள் மீட்க உதயநிதி கொஞ்சம் அக்கறை காட்டினாலே, தமிழ்ச் சமூகம் அவர் அமைச்சரானதை கொண்டாடும் நிச்சயம்! டாஸ்மாக் வீரியம் மட்டுப்படாத வரை இளைஞர் நலன் எனப் பேசுவதும், செயல்படுவதும் பெரிய அளவு பலனைத் தராது. இது தவிர அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களின் சிறப்பு திட்ட செயலாக்கத்தை மேற்பார்வையிடும் அதிகாரமும் அவருக்கு தரப்பட்டு உள்ளதால், அவர் அரசியல் பயிற்சிக்கு நல்ல வாய்ப்பு தரப்பட்டு உள்ளது. ஆனால், இந்த வாய்ப்பை அனைத்து துறைகளிலும் பொருளாதார ரீதியாக ஆதாயம் பார்க்கும் விதமாக கையாளவும் முடியும். உதயநிதி எவ்வாறு செயல்படப் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும். இந்தச் சமயத்தில் முதலமைச்சர் குடும்பத்தில் தற்போது ஒரு மறைமுக அதிகார மையமாக செயல்பட்டு வரும் சபரீசனைப் பற்றி பேசாமல் கடக்க முடியாது. கடந்த 15 ஆண்டுகளாக சபரீசன் ஒரு மறைமுக அதிகார அரசியலில் கோலோச்சி வருகிறார்! கிட்டதட்ட நிழல் முதல்வராகவே செயல்படுகிறார். ஜெயலலிதாவிற்கு சசிகலா எப்படி இருந்தாரோ, அதைப் போல ஸ்டாலினுக்கு இவர் இருக்கிறார் என்ற வலுவான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. முதலில் சபரீசனிடம் இருந்து விலகி நின்ற உதயநிதி, தற்போது கைகோர்த்து விட்டதாகவும் தெரிகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். உதயநிதி செய்யப் போவது சபரீசனுக்கு போட்டியான வியாபார அரசியலா? அல்லது விரும்பத்தக்க அரசியலா? சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ் https://aramonline.in/11588/udhayanithi-stalin-minister/
  7. ஆட்டம் ஆரம்பிக்கமுன்னரே கோப்பையை கொடுக்கலாம் போலிருக்கே @ராசவன்னியன் ஐயா!
  8. சர்வகட்சிகளின் மாநாட்டின் ஊடாக 13 க்கு அப்பால் செல்வது சவாலானது - பாக்கியசோதி சரவணமுத்து By Digital Desk 2 18 Dec, 2022 | 09:45 AM (ஆர்.ராம்) தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் உட்பட இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக தீர்மானங்களை முன்னெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் மாநாட்டின் ஊடாக 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்வது சவலானது விடயமாகும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிகளின் மாநாட்டில் தமிழ்க் கட்சிகளின் பங்கேற்பு தொடர்பில் இருவேறு பிரதிபலிப்புக்கள் வெளிவந்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நோக்கத்தினையும் உள்ளடக்கி சர்வகட்சிகளின் மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு கிடைகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த வேண்டும். அந்தவகையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவறாக கொள்ள முடியாது. ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்பதன் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல், அதன் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல் காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கான தீர்வினை முழுமையாகப் பெற்றுக்கொடுபதற்கு அதியுச்சமாக முனைய வேண்டும். இதனைவிடவும் குறித்த மாநாட்டில் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக கரிசனை கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அது 13ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்தியதாகவே இருக்கும். அதாவது, அரசியலமைப்பில் உள்ளவாறு 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறே கோரமுடியும். அதற்கு, அப்பால் சென்று அதிகாரப்பகிர்வுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவை நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற சந்தேகம் எனக்குள்ளது. ஏனென்றால், தற்போதைய அரசாங்கம் மக்கள் அiணையை முழுமையாக பெறாதவொன்றாகும். அத்துடன், ஸ்திரமான நிலைமையிலும் இல்லை. ஆகவே, அவ்விதமான அரசாங்கமொன்றால் அரசியலமைப்பினை மாற்றியமைக்க வல்ல தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவது என்பது மிகக் கடினமானவிடயமாகும். அந்தஅடிப்படையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதே உசிதமானதாக இருக்கும் என்றார். https://www.virakesari.lk/article/143394
  9. இலங்கை தமிழரசு கட்சியின் 75 வது ஆண்டு தொடக்க விழா By Vishnu 18 Dec, 2022 | 11:34 AM இலங்கை தமிழரசு கட்சியின் 75 ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று (18-12-2022) பகல் 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது. நிகழ்வின் முன்னதாக விருந்தினர்களை வரவேற்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பாகி நடைபெற்றன. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவனபவன் சாந்தி சிறீஸ்கந்தராஜா இலங்கை தமிழரசு கட்சியின் செயற்பாட்டாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/143407
  10. இராணுவத்தாலும் தனி நபராலும் அபகரிக்கப்பட்ட துயிலும் இல்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம் ; காணியை விடுவிக்க தனிநபர் இணக்கம் By Vishnu 18 Dec, 2022 | 12:04 PM தமிழ் மக்களால் வருடம்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்,கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லம் ( டடிமுகாம்), அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் இறுதி யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம்,இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்,பச்சைப்புல்மோட்டை மாவீரர் துயிலும் இல்லம், இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் ஆகிய துயிலும் இல்லங்கள் மக்களால் புனித பூமியாக பேணப்பட்டு வந்தது. இந்நிலையில் 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் இந்த துயிலும் இல்லங்கள் இடித்தழிக்கப்பட்டு சில துயிலும் இல்ல காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இதில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம், ஆகியவை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இவற்றை விடுவிக்க கோரி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இவ்வாற பின்னணியில் அளம்பில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் மற்றும் ஒரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர். இதில் குறித்த தனியார் ஆக்கிரமித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது முன்னாள் வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான மாவீரர்களின் உறவினர் 4 பேருந்துகளில் சுமார் 400 பேரும் கிராம மக்களும் இணைந்து குறித்த இடத்திற்கு வந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் வாக்குவாதங்களை அடுத்து குறித்த பகுதியில் புதைகுழி அமைந்துள்ள பகுதியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/143411
  11. இலங்கையின் மறுசீரமைப்புக்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் - விக்டர் ஐவன் By Nanthini 18 Dec, 2022 | 11:45 AM இலங்கையின் மறுசீரமைப்புக்கு இதை விட சிறந்த சந்தர்ப்பம் எதிர்காலத்தில் அமையாது என்று அரசியல் ஆய்வாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பின் மக்கள் இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'இலங்கையின் மறுசீரமைப்புக்கான அம்ச கோரிக்கைகள்' அடங்கிய ஆவணத்தை அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு கையளித்து விளக்கமளிக்கும் செயற்பாடுகள் கடந்த வாரம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, 43ஆவது படையணி, தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைமைகளுடன் சந்திப்புக்களும் நடைபெற்றன. இந்த சந்திப்புக்களில் மறுசீரமைப்புக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் அழைப்பாளர் குழு உறுப்பினர்களான விக்டர் ஐவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த செயற்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையானது வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் விழுந்துள்ளது. அதேநேரம் பொருளாதார ரீதியாக மாத்திரமல்லாமல், சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இலங்கை பின்னடைந்தே காணப்படுகின்றது. இந்த எல்லா விடயங்களிலும் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டிய அவசியம் நிலவுகின்றது. இலங்கை இப்போது இருக்கும் நிலைமையில் இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததில்லை. இந்த சமகாலத்து பிரஜைகளான இலங்கையர்கள் அனைவருக்குமே பாரியதொரு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அது நாட்டில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பாகும். இலங்கைச் சமூகம் இன்னும் பழமைவாத எண்ணக்கருக்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவில்லை. இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள வர்த்தக நிலுவை, சென்மதி நிலுவையை சரிசெய்துவிடுவதனால் மாத்திரமே இந்த பழமைவாத சிந்தனைகளை சீர்செய்துவிட முடியாது. இதற்கு திறந்த கலந்துரையாடலும் உறுதியான தீர்வு முன்வைப்புகளும் வேண்டும். அத்தகைய உரையாடல் புள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய 13 அம்ச முன்மொழிவுகள் அடங்கிய ஆவணமொன்றை தயாரித்து, நாங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பேசி வருகிறோம். நாம் சந்தித்த அனைத்துக் கட்சிகளும் மறுசீரமைப்பு சார்ந்து நாங்கள் முன்வைக்கும் யோசனைகளை பரிசீலிக்க தயாராகவே உள்ளன. எனவே, இதுதான் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு சிறந்த தருணமாக நான் பார்க்கிறேன் என்றார். இதேவேளை எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/143403
  12. சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சிக்கு துணை போக வேண்டாம் - உறவினர்களிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரிக்கை By Vishnu 18 Dec, 2022 | 12:21 PM அரசாங்கங்களால் காலத்துக் காலம் அமைக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அரசாங்க ஆதரவு உடையவர்களின் வேலைவாய்ப்பையும் அவர்களுடைய வருமானத்தையும் அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காகவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குள் எமது உறவுகள் அகப்பட வேண்டாம் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவர் மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் ரஞ்சனா ஆகியோர் ஊடக சந்திப்பு ஒன்றை இன்று (18) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்தியிருந்தனர். இதன் போது கருத்து தெரிவித்தவர்கள் எதிர்வரும் திங்கள் (19),செவ்வாய்(20) ஆகிய நாட்களில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் மக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்கங்களால் காலத்துக் காலம் அமைக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அரசாங்க ஆதரவு உடையவர்களின் வேலை வாய்ப்பையும் அவர்களுடைய வருமானத்தையும் அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காகவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தொடர்பிலும் இங்கு கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/143417
  13. ஜனாதிபதியினுடனான பேச்சுவார்த்தைக்கு நிச்சயமாக செல்வோம்; சுமந்திரன் வி.ரி. சகாதேவராஜா ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றார். நிச்சயம் நாங்கள் அதில் கலந்து கொள்கின்றோம். அங்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரதீர்வு என்ன என்பதை தெளிவாக கூறவிருக்கிறோம் என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். காரைதீவில் நேற்று (17) இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பிலேயே இதை தெரிவித்தார் . தொடர்ந்து பேசுகையில், இன்று நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விதமான மன மாற்றம் தென்படுகின்றது. இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி எமது மக்களது பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் கனிந்து இருக்கின்றது. அரசுடன் பேசாமல் எதுவும் செய்ய முடியாது. அங்கு நமது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு பற்றி தெளிவாக எடுத்துரைப்போம். அதாவது வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் சரித்திரமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில் அதி உச்ச அதிகார பகிர்வு தரப்பட வேண்டும். இதுவே எமது தெளிவான தீர்க்கமாக முடிவாக இருக்கின்றது. இதனை நாங்கள் ஜாதிபதியிடம் நிச்சயம் தெளிவுபடுத்த இருக்கின்றோம். ரணிலை நம்புவதா நம்பாமல் விடுவதா என்பதெல்லாம் இப்பொழுது பிரச்சனை அல்ல. எமது தீர்வை அங்கு சொல்ல வேண்டும். அதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தான் இப்பொழுது பிரச்சனை. கடும் சிங்கள தேசியவாதம் உருவாகின்ற பௌத்த சம்மேளனம் போன்ற அரங்குகளில் நாங்கள் சமஷ்டி பற்றி பேசி இருக்கின்றோம். அவர்கள் அதனை மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள் . இந்த நாட்டிலே தேர்தல் மூலமாக மட்டுமே ஆட்சி மாற்றம் இடம் பெற்றது. தேர்தல் இன்றி எந்த ஆட்சி மாற்றமும் இதுவரை இடம் பெறவில்லை . ஆனால் அண்மையில் காலிமுகத்திடலில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் சரித்திரத்தில் இடம் பெற்றது. ஆம் அசைக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மேல் இருந்த கோட்டா முதல் மொட்டு அரசாங்கம் வரை கவிழ்த்து விட்டது. 1960 களில் இராணுவ புரட்சி இடம்பெற்றது. கைகூடவில்லை. 1971களில் ஜே.வி.பி. புரட்சி ஏற்பட்டது. அதுவும் கைகூடவில்லை.1988 களில் ஆயுதம் தூக்கி போராடினார்கள். அதுவும் கைகூடவில்லை. இடையிலே எமது இளைஞர்கள் பெருநிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் சில தசாப்தங்கள் வைத்திருந்து போராடினார்கள். அதுவும் கைகூட வில்லை . ஆனால் இந்த வருட நடுப்பகுதியில் கொழும்பிலே இடம்பெற்ற போராட்டம் என்பது பல வெற்றிகளை தந்து இருக்கின்றது . 2019 நவம்பரில் 69 லட்சம் வாக்குகளை பெற்று வந்த ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார் .அதன் பின்பு அந்த பொதுத் தேர்தலிலே 68 லட்சம் வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை அரசை அமைத்த அந்த அரசும் கவிழ்ந்தது .ஆகவே அந்தப் போராட்டத்தை நாங்கள் சாதாரணமாக நோக்கக்கூடாது . இது ஒரு பாடம். இலங்கைக்கு தேர்தல் மூலமாக இல்லாமல் ஒரு போராட்டம் மூலமாக ஆட்சி அமைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது. நான் பாராளுமன்றத்தில் இப்பொழுது சமஸ்டி பற்றி பேசுகின்றேன். யாரும் வாய்திறப்பதில்லை. அன்று சமஸ்டி என்றால் கூக்குரலிடுவார்கள். ஆனால் இன்று அதனை கூறுகின்ற பொழுது அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ ஒரு மௌனத்தோடு கவனிக்கிறார்கள். அவர்கள் மத்தியிலும் அந்த மாற்றம் தென்படுகின்றது. எனவே நம்பிக்கையோடு பேச்சுவார்த்தையை நாங்கள் எதிர்கொள்வோம். என்றார். நன்றியுரையை பிரமுகர் கணேசன் மதனன் கூறினார். R https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஜனாதிபதியினுடனான-பேச்சுவார்த்தைக்கு-நிச்சயமாக-செல்வோம்-சுமந்திரன்/71-309193
  14. எல்லாரும் ஏறிச்சறுக்கிய குதிரையில் சக்கடத்தார்? - நிலாந்தன் இராமநாதன் சகோதரர்களில் இருந்து தொடங்கி சம்பந்தர்கள் வரையிலும் சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்திருக்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் அது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இலங்கைத் தீவு சுதந்திரம் அடைய முன்னும் பின்னும் தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களோடு நடத்திய பேச்சுவார்த்தைகள்,சந்திப்புகள்,எழுதிய உடன்படிக்கைகள் எதுவுமே வெற்றி பெறவில்லை. ஆயுதப் போராட்டம் கொழும்பின் மீது நிர்ணயகரமான அழுத்தத்தை பிரயோகித்தது. அதனால் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் நிலைத்திருந்த இரண்டு உடன்படிக்கைகள் எழுதப்பட்டன.மூன்றாவது தரப்பொன்று தலையிட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.இவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தின் விளைவாக எழுதப்பட்ட இரண்டு உடன்படிக்கைகள் ஒப்பிட்டுளவில் நீண்ட காலம் நிலைத்திருந்தன. முதலாவது இந்திய இலங்கை உடன்படிக்கை. அடுத்தது ரணில் பிரபாகரன் உடன்படிக்கை. இது தவிர ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரும் எழுதப்பட்ட உடன்படிக்கைகள் எவையும் நீடித்திருக்கவில்லை.அவை சிங்களத் தரப்புகளாலேயே கிழித்து எறியப்பட்டன. ஆயுதப் போராட்டமானது இலங்கைத்தீவின் அரசியல் ராணுவ வலுச்சமநிலையை மாற்றக்கூடிய பலத்தோடு காணப்பட்டது.அவ்வாறு வலுச்சமநிலை மாறும்போதெல்லாம் சமாதான உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. அல்லது பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. ஆனால் 2009 க்கு பின் அவ்வாறு இலங்கை தீவின் அரசியல் வலுச் சமநிலையை மாற்றத்தக்க பேரபலம் தமிழ்த் தரப்பிடம் இல்லை. முதலாவதாக தமிழ்த்தரப்பு ஒரு திரண்ட சக்தியாக இல்லை. இரண்டாவதாக, தமிழ்த்தரப்பு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் தொடர்ச்சியான நிர்ணயகரமான போராட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை.தமிழ்த்தரப்பில் இப்பொழுது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மொத்தம் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. தலைக் கணக்கின்படி பார்த்தால் அது மிகச் சிறிய தொகை.தமிழ் மக்களின் அரசியல் இப்பொழுது தேர்தல் மைய அரசியலாகத்தான் காணப்படுகிறது. மக்கள் இயக்கம் கிடையாது. இந்நிலையில் பூகோள அரசியலைக் கையாளப் போகின்றோம் புவிசார் அரசியலை கையாள போகின்றோம், என்று தமிழ்க் கட்சிகள் கூறிக் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் அவ்வாறு புவிசார் அரசியலையோ அல்லது பூகோள அரசியலையோ கையாளத் தேவையான கட்டமைப்புகள் எவையும் தமிழ்க் கட்சிகளிடம் இல்லை. அதாவது தொகுத்துக் கூறின் 2009க்கு பின் தமிழ் அரசியல் எனப்படுவது “ரியாக்ட்டிவாகத்தான்”-பதில் வினையாற்றும் ஆரசியலாகத்தான் இருக்கிறதே தவிர “புரோஆக்டிவாக”-தனது செயல்களுக்கு ஏனைய தரப்புக்களை பதில் வினையாற்ற நிர்பந்திக்கும் அரசியலாக இல்லை. இப்பொழுதும்கூட பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் ரணில் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்.அதுகூட வெளி நிர்ப்பந்தமே காரணம். பொருளாதார நெருக்கடிக்கான நிதி உதவிகளும் இனப்பிரசினைக்கான தீர்வும் ஒரே பக்கேஜ்ஜுக்குள் வைக்கப்பட வேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்துவதாகத் தெரிகிறது. கடைசியாக நடந்த ஜெனிவா கூட்டத்தொடரில் இந்தியாவும் அதை வலியுறுத்தியது. எனவே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதுபோல ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு வெளித்தரப்புகளிடமிருந்து வரும் நிர்பந்தங்கள் காரணமாக அவர் பேச வந்திருக்கிறார். இந்த நிர்பந்தங்கள் காரணமாக தமிழ்த் தரப்பின் பேரம் ஒப்பீட்டளவில் அதிகரித்து இருக்கிறதுதான். ஆனாலும் தனது கோரிக்கைகளை முன் நிபந்தனைகளாக வைத்து பேச்சுவார்த்தைகளை தொடங்குமளவுக்கு தமிழ்த்தரப்பு பலமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை இங்கு முக்கியம். ஆயுதப் போராட்டத்தின் பேரபலம் காரணமாகத்தான் வெளித்தலையீடுகள் ஏற்பட்டன. மூன்றாவது தரப்புகளின் மேற்பார்வையின் கீழ் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதலாவது வெளிநாட்டு பேச்சுவார்த்தை திம்புவில் இடம்பெற்றது. அங்கிருந்து தொடங்கி ஒஸ்லோ வரையிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.வெளிநாடுகளில் நிகழ்ந்த எல்லா பேச்சுவார்த்தைகளுக்கும் காரணம் ஆயுத போராட்டந்தான். ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான மிதவாத அரசியலில் வெளியரங்கில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் என்று பார்த்தால் 2015 ஆட்சி மாற்றத்திற்காக நிகழ்ந்த சில ரகசிய சந்திப்புகளைத்தான் குறிப்பிடலாம். மற்றும்படி ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தபின் பேச்சுவார்த்தைகளை கொழும்புக்கு வெளியே கொண்டு போக முடியவில்லை. மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தரை கிட்டத்தட்ட 17தடவைகள் ஏமாற்றினார் என்று சம்பந்தரே கூறுகிறார். அதன்பின் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய யாப்புருவாக்கக் குழு 82 தடவைகள் சந்தித்தது.எல்லாவற்றையும் முடிவில் மைத்திரி குழப்பினார்.நிலைமாறுகால நீதியின் கீழ் ஒரு புதிய யாப்பை உருவாக்க முயன்ற ரணிலின் முயற்சிகளை மைத்திரி முறியடித்தார். அம்முயற்சிகளுக்கு ஐநா பின்பலமாக இருந்தது.ஐநாவின் 30/1 தீர்மானம் அதற்குரிய அடிப்படைகளை வகுத்துக் கொடுத்தது. ஆனாலும் ஐநா இலங்கைத்தீவில் சம்பந்தப்பட்ட தரப்புகளின்மீது அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடிய நிலைமை இருக்கவில்லை. ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்குரிய ஆணையும் இருக்கவில்லை.அதனால்தான் 2018ல் ஒக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூறலுக்கான உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக முறித்தார்.அதன்பின் ஆட்சிக்கு வந்த கோட்டாபய அரசாங்கம் மேற்படி பொறுப்புக் கூறலுக்கான ஐநா தீர்மானத்துக்கு முன்னைய இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகியது.அதாவது ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஒப்புக்கொண்ட கடப்பாடுகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியது. அனைத்துலக அரங்கில் தானும் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியும் என்பதற்கு அது ஆகப்பிந்திய உதாரணம் ஆகும். ஏற்கனவே இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தத்தை எந்த ஒரு ஜனாதிபதியும் முழுமையாக அமல்படுத்தவில்லை. மாறாக 13வது திருத்தத்தின் உள்ளடக்கத்தை படிப்படியாக உருவி எடுத்து விட்டார்கள். இப்பொழுது அது ஒரு கோறை. தான் பெற்ற பிள்ளையாகிய 13 வது திருத்தத்தின் உறுப்புகள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்ட பொழுது அதன் பெற்றோரில் ஒருவராகிய இந்தியா அதைப் பார்த்துக் கொண்டிருந்தது. 2009க்கு பின்னரும் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியா அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே கொழும்புடனான பேச்சுவார்த்தைகள் என்ற நூற்றாண்டு கால தோல்விகரமான அனுபவத்தின் பின்னணியில், குறிப்பாக 87 ஆம் ஆண்டுக்கு பின்னரான கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலான அனுபவங்களைத் தொகுத்துப் பார்த்தால்,தமிழ் மக்களுக்கு மிக கசப்பான பாடங்கள் கிடைக்கின்றன.பிராந்திய மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் எழுதப்பட்ட உடன்படிக்கைகளில் இருந்து இலங்கை அரசாங்கங்கள் பின்வாங்கியிருக்கின்றன.ஒரு பிராந்தியப் பேரரசாகிய இந்தியாவும் இந்தவிடயத்தில் அழுத்தத்தை பிரயோகிக்க முடியவில்லை.உலகப் பொது மன்றமாகிய ஐநாவும் அழுத்தத்தை பிரயோகிக்க முடியவில்லை.அவ்வாறு சம்பந்தப்பட்ட தரப்புக்களின்மீது நிர்ணயகரமான அழுத்தங்களை பிரயோகிக்கும் ஆணை ஐநா மனித உரிமைகள் பேரவைக்குக் கிடையாது. அப்படியென்றால் ஒரு மூன்றாவது தரப்பின் பிரசன்னம் எனப்படுவது வெறும் பிரசன்னமாக மட்டும் இருந்தால் போதாது. அதைவிட ஆழமான பொருளில் அழுத்தத்தை பிரயோகிக்கும் ஒரு பிரசன்னம் தேவைப்படுகிறது என்று பொருள். எரிக் சூல்ஹெய்ம் மார்ட்டி அஹ்ரிசாரி சமூக செயற்பாட்டாளராகிய செல்வின் சொன்னார்…நோர்வையின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகள் தோல்வியுற்றபின் ஒஸ்லோவில் நடந்த ஒரு சந்திப்பில் சிறப்புத் தூதுவரான சூல் ஹெய்ம் பின்வரும் தொனிப்பட கருத்து தெரிவித்திருக்கிறார்… “நோர்வே ஓர் அனுசரணையாளர் மட்டுமே. அனுசரணை என்பது,சந்திக்கும் இடங்களையும் சந்திப்பு நேரங்களையும் ஒழுங்குபடுத்துவது. சந்திப்புக்கான பயண ஏற்பாடுகளையும் தங்குமிட ஏற்பாடுகளையும் ஒழுங்குபடுத்துவது என்பவைதான்” என்று.அவர் இவ்வாறு கூறிய பின் நிகழ்ந்த மற்றொரு தனிப்பட்ட சந்திப்பில் பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியான மார்ட்டி அஹ்ரிசாரி-அவர்தான் பலஸ்தீனத்தில் பேச்சுவார்த்தைகளை ஒழுங்குபடுத்தியவர்-இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளை குறித்து பின்வரும் தொனிப்பட கருத்து தெரிவித்துள்ளார். “இரண்டு தரப்பும் சமாதானத்துக்கு தயாரில்லை என்றால், அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், இரண்டு பேரையும் வீட்டுக்கு அனுப்பியிருந்திருப்பேன். பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்திருக்க மாட்டேன்” என்று.ஏனெனில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தேவையான வளங்களை ஒழுங்குபடுத்துவது மட்டும் ஒரு மூன்றாந்தரப்பின் வகிபாகம் அல்ல என்ற பொருளில். சூல் ஹெய்ம் மற்றும் மார்ட்டி அஹ்ரிசாரி ஆகியோரின் கூற்றுக்களின் அடிப்படையிலும்,ஆயுதப்போராட்ட காலத்தில் நடந்த பேச்சுக்களில் தலையிட்ட மூன்றாந் தரப்புக்களான இந்தியா,நோர்வே(அமெரிக்கா)ஆகிய இரு தரப்புக்களுடனும் தமிழ்த் தரப்பு முரண்படும் ஒரு நிலை ஏன் ஏற்பட்டது என்ற அனுபவத்தின் அடிப்படையிலும் ஈழத்தமிழர்கள் தொகுக்கப்பட்ட ஓரு முடிவுக்கு வரவேண்டும். ஒரு மூன்றாந்தரப்பின் தலையீடு இன்றி இலங்கைத்தீவில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை,அதேசமயம் ஒரு மூன்றாவது தரப்பின் தலையீடு எனப்படுவது வெறுமனே பிரசன்னமாகவோ அல்லது நடுநிலை வகிக்கும் மத்தியஸ்தராகவோ அல்லது அனுசரணையாளராகவோ இருந்தால் மட்டும் போதாது.நீதியான சமாதானத்தை நோக்கி அழுத்தங்களைப் பிரயோகிக்குமளவுக்கு ஒரு மூன்றாவது தரப்பின் வகிபாகம் இருக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட மூன்றாவது தரப்பை உள்ளே கொண்டு வருமளவுக்கு தமிழ்த் தரப்பு பேரபலத்துடன் இல்லை என்பதால்தான் ரணில் மூன்றாவது தரப்பைக் குறித்து சீரியஸாக இல்லையா?அல்லது அவர் பேச்சவார்த்தையிலேயே சீரியஸாக இல்லையா? http://www.nillanthan.com/5804/
  15. உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டி: நாளை ஞாயிறு (18 டிசம்பர்) உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 80) போட்டி 64: இறுதிப் போட்டி: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? ஆர்ஜென்டினா எதிர் பிரான்ஸ் (Lusail Iconic Stadium, Lusail) - 6 புள்ளிகள் ARG எதிர் FRA நால்வர் ஆர்ஜென்டினா வெல்லும் எனவும், இருவர் பிரான்ஸ் வெல்லும் எனவும் கணித்துள்ளனர். வேறு நாடுகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் ARG சுவி FRA வாத்தியார் BRA பிரபா GER முதல்வன் BRA கந்தையா BRA ஏராளன் BRA சுவைப்பிரியன் GER நுணாவிலான் BRA கல்யாணி ARG கிருபன் BRA தமிழ் சிறி GER புலவர் GER அகஸ்தியன் BRA வாதவூரான் GER நிலாமதி GER பையன்26 BRA எப்போதும் தமிழன் ARG குமாரசாமி BRA கறுப்பி FRA நீர்வேலியான் ARG நாளைய இறுதிப்போட்டியில் யாருக்கு ஆறு புள்ளிகள் கிடைக்கும்?
  16. மூன்றாமிடப் போட்டி: இன்றைய மூன்றாமிடப் போட்டியில் குரோசியா அணி மொரோக்கோ அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. முடிவு: குரோசியா 2 - 1 மொரோக்கோ யாழ்களப் போட்டியாளர்கள் எவருமே போட்டியில் உள்ள நாடுகளான குரோசியாவையோ, மொரோக்கோவையோ வெல்லும் எனக் கணிக்கவில்லை. எனவே ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! மூன்றாமிடப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றங்கள் எதுவுமில்லை): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நீர்வேலியான் 81 2 கல்யாணி 79 3 முதல்வன் 77 4 அகஸ்தியன் 76 5 தமிழ் சிறி 75 6 நுணாவிலான் 74 7 ஈழப்பிரியன் 73 8 புலவர் 73 9 எப்போதும் தமிழன் 72 10 கிருபன் 71 11 ஏராளன் 70 12 சுவைப்பிரியன் 69 13 சுவி 68 14 வாதவூரான் 68 15 வாத்தியார் 66 16 நிலாமதி 66 17 கறுப்பி 61 18 பிரபா 58 19 குமாரசாமி 57 20 பையன்26 56 21 கந்தையா 51
  17. உயரவாகு கனகா பாலன் ” நிலைக்கதவுப் பிள்ளையாருக்கு இந்தக் கண்ணியை வைத்து விடு “ சாமந்தியை நீட்டுகிறாள் அம்மா “லா.சா. ரா தி.ஜா கி.ரா வை வாசித்து நாளாகிவிட்டதாம்” பரணிலிருக்கும் புத்தகத்தை கீழிறக்கச் சொல்கிறார் அப்பா மாதமொரு முறை முகப்புக் காற்றாடித் துடைத்தெடுக்க பழுதடைந்த மின்பல்புகளை ஏணியின்றி எளிதில் பொருத்த அழுக்குப்பாசியடைந்த மொட்டைமாடி நீர்த்தொட்டியினுள் வெளுப்புக் காரமிட்டு தேய்த்துக் கழுவிவிடவும் தேடப்படுகிறேன் ஆயத்த உடை அளவு பொருந்தாமை பாதணிகளின் நீட்டுப் பத்தாமை முழங்கால் இடிக்கும் முன்னிருக்கையென ஒன்றிரெண்டு இம்சைகள் எனக்கு மட்டும்தான் உதவிக்கு நேர்ந்துவிட்டதுபோல் என் உயரவாகு எத்தனை தோதாயிருக்கிறது பிறருக்கு. https://solvanam.com/2022/12/11/உயரவாகு/ கவிதையில் பயன்படுத்திய படத்தில் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பக்கத்தில் நிற்கும் உயரமான போராளி யார்?
  18. ஃபின்லாந்து கல்வியில் ஆசிரியருக்கான முக்கியத்துவம் ஃபின்லாந்துக் கல்வித் துறையில் அடுத்து நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அம்சம், ஆசிரியர்களுக்கான அதிகாரம். ஃபின்லாந்தின் புகழ்பெற்ற அரசியலர்களில் ஒருவர் பேர் ஸ்டேன்பேக். 1979-1983இல் கல்வி அமைச்சராக இருந்தவர். சர்வதேச அளவில் 2015இல் போர்டோ ரிகோவில் நடந்த கல்வியாளர் மாநாட்டில் பங்கேற்ற அவரிடம், “ஃபின்லாந்து கல்வியின் வெற்றிக்கான ரகசியத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா?” என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில், “கல்விக்கும் ஆசிரியர்களுக்குமான மரியாதைக்குரிய பிணைப்பு; அதை நாங்கள் உருவாக்க 150 ஆண்டுகள் ஆனது!” கல்வித் துறையின் அதிகாரப்பரவலாக்கம் ஃபின்லாந்து கல்வித் துறை அதிகாரப் பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் கல்வித் துறையின் தன்னாட்சி உரிமைகள் உள்ளாட்சி வலையத்திற்குள் வருபவை. பள்ளிக்கூட நிர்வாகத்தில் உள்ளாட்சி அமைப்புகளே முக்கியப் பங்கு வகிக்கும். ஃபின்லாந்து உள்ளிட்ட நார்டிக் நாடுகளின் அதிகாரங்கள் இன்னும் கீழே இறங்கிபோய் ஆசிரியர்கள் இடத்தில் மிகுந்து இருப்பவை. ஃபின்லாந்தில், தேசியப் பாடத் தொகுப்பு (national curriculum framework) என்பது, 1970க்குப் பிறகு ஒரு வழிகாட்டியாக உண்டே தவிர, பள்ளிக்கூடங்களில் ஒரே மாதிரியான பாடங்கள் இருப்பதில்லை. அரசின் வழிகாட்டலை ஒரு திசைகாட்டியாக எடுத்துக்கொண்டு, அந்தந்தப் பகுதிகள், அவரவர் சூழல்களுக்கு ஏற்ப பாடங்களை ஆசிரியர்களே வகுத்துக்கொள்கிறார்கள். எந்தப் பள்ளியில் எம்மொழிகளில் பாடம் இருத்தல் வேண்டும், துணை மொழிப்பாடங்கள் எவையவை இருத்தல் வேண்டும், எந்த வயதில் எந்த மொழிகளுக்கான பயிற்சிகள் தொடங்க வேண்டும் என்பதை முடிவெடுக்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்தது ஆகும். உள்ளாட்சி அமைப்புகள் ஆசிரியர்களின் வழிகாட்டல்படி இந்த முடிவுகளை எடுக்கின்றன. குறிப்பாக, அரசியல் அதிகாரப்பரவலாக்கச் சீர்த்திருத்தங்கள் வலுவாகக் கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில், கல்விக்கான அதிகாரப்பரவலாக்க நடைமுறைகளும் இங்கே வலுவாகின. இதன் காரணமாக 320 உள்ளாட்சி அமைப்புகள் பள்ளிகளை நடத்தும் முழுமையான தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றன. உள்ளூர் பண்பாடு, உள்ளூர் மொழி, உள்ளூர் பொருளாதாரம் இவையெல்லாம் கல்வியில் பிரதிபலிப்பது முக்கியம் என்பதில் உறுதிபட இருக்கிறது ஃபின்லாந்து. இன்னும் சொல்லப்போனால், அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் பிற நாட்டினர், பிற மொழியினரையும் கருத்தில் கொண்டு, பள்ளியில் பயிலும் பல்வேறு நாட்டினருக்கும் ஏற்றார்போல கல்வி வழங்குகின்றனர். https://www.arunchol.com/vijay-ashokan-on-finland-social-welfare-schemes
  19. 2,500 ஆண்டு பழமையான சமஸ்கிருத இலக்கண புதிர்: விடை கண்டுபிடித்த இந்திய ஆராய்ச்சி மாணவர்.. கிமு 5 ம் நூற்றாண்டில் இருந்து சமஸ்கிருத அறிஞர்களால் தீர்க்க முடியாமல் இருந்த 2,500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத இலக்கண புதிருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படிக்கும் இந்திய பிஎச்டி மாணவர் ஒருவர் விடை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். சமஸ்கிருத மொழியின் தந்தை என போற்றப்படும் பாணினி, அந்த மொழிக்கான இலக்கண நூலை எழுதியுள்ளார். அவர் எழுதிய இலக்கணம் தொடர்பான புதிர் ஒன்று மொழியியல் அறிஞர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ரிஷி அதுல் ராஜ் போபட் என்பவர் பிஎச்டி படித்து வந்தார். சமஸ்கிருத மொழியில் காணப்படும் பல்வேறு புதிர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, பாணினி எழுதிய இலக்கண புதிர் குறித்து படித்தார். அந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க ரிஷி முயற்சி மேற்கொண்டார். துவக்கத்தில் எந்த முடிவும் கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து முயற்சித்து அந்த புதிருக்கு விடையை கண்டுபிடித்தார். இலக்கணப்படி சரியான சொற்களை உருவாக்கியதன் மூலம் அந்த அர்த்தத்தையும் அவர் தெரிவித்தார். இதன் மூலம், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய புதிருக்கு விளக்கம் கண்டுபிடித்து உள்ளார். சம வலிமை கொண்ட இரண்டு விதிகள் மோதும் போது, இலக்கணத்தின் தொடர் வரிசையில் பின்னர், தோன்றும் விதி மிகவும் துல்லியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனால், புதிய வார்த்தைகளை தோற்றுவிக்கும்போது, இரண்டு விதிகளில் எது பிந்தையதோ, அதை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற அல்காரிதத்தை ரிஷி அதுல் ராஜ் கண்டுபிடித்து 2,500 ஆண்டுகள் முந்தைய இலக்கண புதிருக்கு விடை கண்டுபிடித்து அசத்தி உள்ளார். https://akkinikkunchu.com/?p=232892
  20. விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம் – கூட்டமைப்பிற்குள் மூண்டது சொற் போர்; சுமந்திரனுக்கு பதிலடி! உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள் எமது கட்சியின் முடிவுகளே. அவை ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல எனத் தெரிவித்த புளொட்டின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன், நாங்கள் ஒரு கட்டமைப்பாக இயங்குவோம். அந்தக் கட்டமைப்பில் செயற்பட விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம் என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு பதில் வழங்கியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்து சந்திக்க மேற்கொள்ளும் எத்தனங்கள் பற்றியும், கூட்டமைப்பை விட்டு எந்த தரப்பு பிரிந்து சென்றாலும், நாங்கள் கூட்டமைப்பாக செயற்படுவோம் எனவும் அண்மையில் கஜதீபன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் வழங்கிய சுமந்திரன், உள்ளூராட்சி தேர்தலில் அதிக வட்டாரங்களை வெல்ல தொழில்நுட்ப ரீதியாக ஆராய்வதாகவும், பங்காளி கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடியதாகவும், கஜதீபன் விடயம் தெரியாமல் கதைக்கிறார் என்றும் குறிப்பிட்டார். சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் கஜதீபன் பதில் வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “அடுத்த தேர்தலை பற்றி நினைப்பவர் சாதாரண அரசியல்வாதியாக மட்டுமே இருக்கலாம். ஆனால் அடுத்த தலைமுறையை பற்றி நினைப்பவர் சித்தார்த்தன். அவர் தான் எமது கட்சி தலைவர். ஆனபடியால், ஒரு ஆசனம் அங்கு கிடைக்கும், ஒரு ஆசனம் இங்கு கிடைக்கும் என மக்களின் நம்பிக்கையை பெற்று, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இவ்வளவு காலமாக வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டு செல்ல முடியாது. நாங்கள் ஒரு கட்டமைப்பாக இயங்குவோம். இந்த கட்டமைப்பில் விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம். எனக்கு தெரியாமல் நான் கதைக்கவில்லை. எமது கட்சி தலைவர் சித்தார்த்தனிற்கு அரசியல் ரீதியாக என்ன விடயம் தெரிந்தாலும், நான் உட்பட கட்சியிலுள்ள எல்லா முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடுவார். தனித்து போட்டியிடுவது பற்றி சுமந்திரன் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் வெளியானதை தொடர்ந்து, நான் சித்தார்த்தனின் வீட்டுக்கு சென்றேன். கட்சியின் முக்கியஸ்தர்களும் வந்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் இதைப்பற்றி கலந்துரையாடினோம். ஒரு சில தேர்தல் ஆதாயங்களிற்காக கட்டமைப்பை உடைக்க முடியாது. அடிமட்ட மக்களை குழப்பமடைய வைத்து விட்டு, மீண்டும் ஒன்று சேர்த்து செயற்படுவது சாத்தியமற்றது. நாங்கள் விரிவாக இன்னொரு விடயத்தையும் ஆராய்ந்தோம். 2018 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 30 வீதமான வாக்குகளைத்தான் பெற்றோம். நாங்கள் 50 வீதத்திற்கு அதிக வாக்குகளை பெற்றிருந்தால், சபைகளில் நெருக்கடியில்லாமல் ஆட்சியமைத்திருக்கலாம். அப்படியான பொறிமுறையை உருவாக்க நாங்கள் எல்லோரும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும். வாக்கு குறைந்ததற்கு என்ன காரணமென்பதை ஆராயாமல், வெறுமனே தொழில்நுட்ப ரீதியிலான காரணங்கள் என கூறி, தொழில்நுட்பத்தின் மீது பழியை போட்டு விட்டு நாங்கள் வேலை செய்ய முடியாது. நாங்கள் தேசியரீதியாக தேர்தல் முறையை மாற்ற வேலை செய்ய வேண்டும். அடிமட்டத்தில் இன்னமும் பலமான அடித்தளத்தை உருவாக்கி, மற்ற தமிழ் தேசிய கட்சிகளையும் இணைத்து செயற்பட வேண்டும். ஊர்காவற்துறையில் ஈ.பி.டி.பி தனித்து ஆட்சியமைத்ததைப் போல, பூநகரியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்த உதாரணங்கள் உள்ளன. நாங்கள் ஏனைய இடங்களிலும் தனித்து ஆட்சியமைக்கலாம். பல வட்டாரங்களில் ஒன்று இரண்டு வாக்குகளால்தான் வெற்றியடைந்துள்ளோம். சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை கூறிக்கொண்டு, சமூகத்தை தவறாக வழிநடத்திக் கொண்டு, பேச்சுவார்த்தைக்கு சென்றதே துரோகம் என கூறிக்கொண்டுள்ள தரப்புக்களை வளர்த்து விடும் ஏற்பாடுகளையே நாம் செய்யப் போகிறோம். அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் கட்சிகளும் வளர்ந்து விடும். நாம் அப்படி செயற்பட முடியாது. எங்களிற்கு பெரிய எதிர்பார்ப்புக்களில்லை. யாழ் மாவட்டத்தில் எமக்கு இரண்டு எம்.பிக்கள். கிளிநொச்சியை மையப்படுத்தி சிறிதரன் வாக்கெடுக்கிறார் என்றால், யாழ்ப்பாணத்தில் சித்தார்த்தனும், சுமந்திரனும் 2 பேர் தான். ஆனால் எமக்குள்ள பிரதேசசபை ஒன்று மட்டும்தான். சில வேளை நாம் இழக்கலாம். அல்லது இன்னும் பலவற்றை கைப்பற்றலாம். அதனால் எமக்கு பெரிய எதிர்பார்ப்புக்களில்லை. ஒற்றுமையை குலைக்கும் தவறான முன்னுதாரணங்களை அடுத்த தலைமுறைக்கு காண்பிக்கக்கூடாதென்பதற்காகவே, இப்படியான முன்மொழிவுகளை எதிர்க்கிறோம். எமது ஆட்களை பதவியில் இருத்த வேண்டுமென்பதாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல. நான் அறிவித்தது கட்சியின் முடிவுதான். நாங்கள் கட்சியாக ஆராய்ந்த பின்னரே அதன் முடிவை அறிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=232889
  21. பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் : மஹிந்த அமரவீர ! December 17, 2022 இலங்கையில் பயிரிடப்படாத அனைத்து விவசாய நிலங்களும் 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐந்து வருட காலத்திற்குள் காணி சுவீகரிக்கப்படும் என அமைச்சர் அமரவீர தெரிவித்தார். அந்தந்த பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்படவுள்ளது. நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தப்படும் என்றார். அடுத்த அறுவடைக் காலத்தில், விளைச்சலை அதிகரிப்பதற்காக குறுகிய காலத்திற்கு இளைஞர்களுக்கு கையளிப்பதற்காக பயிர் செய்யப்படாத நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். சுமார் 100,000 ஏக்கரில் நெற்செய்கைகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை எனவும், நெல் பயிரிடப்படாவிட்டால் ஏனைய பயிர்களை பயிரிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.battinews.com/2022/12/2023_3.html
  22. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, தந்தை, மகன் மீது வாள்வெட்டு! – யாழில் கொடூரம்! யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் (14) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, தந்தை, மகன் மீது வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அயல் வீட்டாருடன் இடம்பெற்ற முரண்பாடு கைகலப்பாகிய நிலையில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டில் படுகாயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலின் அடிப்படையில் பலாலி பொலிஸார், வாள்வெட்டினை மேற்கொண்ட ஒருவரை நேற்றையதினமும் மற்றைய இருவரை இன்றையதினமும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். https://newuthayan.com/52741/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.