-
Posts
34948 -
Joined
-
Days Won
173
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கிருபன்
-
இங்கிலாந்து வெல்ல 72% சந்தர்ப்பம் இருக்கு. இது 7 ஆவது ஓவரில்!
-
பலர் கூகிள் ஷீற்றைப் பயன்படுத்தி பதில்களை பிரதி பண்ணித் தந்தது தரவேற்ற இலகுவாக இருந்தது. இன்னும் 6 நாட்களே இருப்பதால் கலந்துகொள்ள விரும்புவோர் விரைவில் பதில்களைத் தாருங்கள். பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம். https://docs.google.com/spreadsheets/d/19dYGkovsPpyS2IH8C5wOzAXJYRCxvRX1PnogvrMnaLQ/edit?usp=sharing குழு நிலைப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களுக்கு வரும் நாடுகளைத் தெரிவு செய்ய உதவிகள் கூகிள் ஷீற்றில் உண்டு. எனினும் பதிலை போட்டியாளர் விரும்பியபடி தெரிவு செய்யலாம். பின்வரும் வர்ணப் பெட்டிகளில் உள்ளவற்றை விரும்பிய குழுநிலை போட்டிகளில் வெற்றிபெறும் நாடுகளின் பெயர்களை சுருக்கிய வடிவில் தந்தால், ஆட்டமிழக்கும் நிலைப் போட்டிகளில் உள்ள கேள்விகள் தானாகவே விளையாடக் கணித்த நாடுகளைக் காட்டும். எனினும் பதில்களை போட்டியாளர் விரும்பியபடி தெரிவு செய்யலாம். கூகிள் ஷீற் பதில்களின் அடிப்படையில் வேலை செய்வதால் வெறும் கணிப்புக்கள்தான். போட்டியாளர் தான் விரும்பிய நாடுகளை ஆட்டமிழக்கும் நிலைப் போட்டிகளில் தெரிவு செய்யலாம். row58: #A1 - ? (2 புள்ளிகள்) A1 #A2 - ? (1 புள்ளிகள்) A2 row 67: #B1 - ? (2 புள்ளிகள்) B1 #B2 - ? (1 புள்ளிகள்) B2 ஒருவர் எடிற் பண்ணும்வேளை இன்னொருவரும் எடிற் பண்ணினால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, பதில்களை பிரதி பண்ணி யாழில் ஒட்டிய பின்னர் column G ஐ வெறுமையாக்கிவிடுங்கள்.
-
உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்கும் அமெரிக்கா! தீவிரமடையும் போர் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. ஆனாலும் உக்ரைன் இராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,238 கோடி) மதிப்புடைய .ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இதனை தெரிவித்துள்ளார்.புதிதாக வழங்கப்படும் இந்த இராணுவ உதவி தொகுப்பில் முதல் முறையாக அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்பு, ரஷ்யாவுக்கு எதிரான தனது பதில் தாக்குதலில் உக்ரைன் வெற்றிகரமாக பயன்படுத்தி வரும் ஹிமார்ஸ் எனப்படும் அதீத சக்தி கொண்ட பீரங்கி ராக்கெட் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உக்ரைனுக்கு வழங்குவதற்காக தென்கொரியாவிடம் இருந்து சுமார் 1 லட்சம் ஹோவிட்சர் பீரங்கி குண்டுகளை அமெரிக்க வாங்க இருப்பதாகவும், இது தொடர்பாக அமெரிக்கா-தென்கொரியா அரசுகள் சிலகாலமாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://akkinikkunchu.com/?p=230656
-
தமிழர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது - அமைச்சர் டக்ளஸ் By Digital Desk 2 13 Nov, 2022 | 09:33 AM (ஆர்.ராம்) கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச அளவிலான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்தவருடத்திற்குள் தீர்வு காண்பதற்காக அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தரப்புடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதில் மிகமுக்கமானது இந்திய, இலங்கை ஒப்பந்தமாகும். துரதிஷ்டவசமாக தமிழ்த்தலைவர்களும் விடுதலைப்புலிகளும் அதனை எதிர்த்தார்கள். அதன்விளைவால் தமிழ் சமூகம் முப்பது ஆண்டுகள் பின்னடைவைச் சந்திக்குமளவுக்கு நிலைமைகள் மோசமடைந்து விட்டன. இவ்வாறான நிலையில், தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தினை தற்போதுள்ள தமிழ்த் தலைவர்களாவது சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது. சமகால நிலைமைகளின் பிரகாரம், தென்னிலங்கையில் உள்ள தலைவர்களில் விடயங்களை நடைமுறைச் சத்தியமாக்ககூடிய அளவிற்கும், குறைந்தபட்ச நியாயத்துடனும் அணுகுமுறைகளைச் செய்யவல்ல ஒரேதலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். இதன் காரணத்தாலேயே, பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின்போது ஈ.பி.டி.பி.தமாக முன்வந்து ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தது. எம்மைப்பொறுத்தவரையில், நெருக்கடியான நிலைமைகளில் பதவியைப் பெற்றுக்கொண்ட அவரை முழுமையாக ஆதரித்து தோள்கொடுத்தோம். அதன்ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்று நம்பிக்கையும் கொண்டிருந்தோம். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பகிரங்கமான அறிவிப்பை விடுத்துள்ளார். இதனைவிட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைச்சரவை உபகுழுவொன்றையும் அமைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் தமிழர்களுக்கு மிகச்சாதகமானதாக உள்ளதென்பதே எமது நிலைப்பாடாகும். இவ்வாறானதொரு சூழல் எதிர்காலத்தில் ஏற்படுமா என்பதையும் கணிக்க முடியாது. ஆகவே, இந்தச் சூழலே அதியுச்ச சந்தர்ப்பமாக தமிழ் மக்கள் கொள்ள வேண்டும். குறிப்பாக, தமிழர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது - அமைச்சர் டக்ளஸ்எதிர்ப்பு அரசியலைச் செய்து வருகின்ற தமிழ்தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனடிப்படையில் அவர்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும். நாம் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்துவதையே நோக்காக கொண்டிருக்கின்றோம். சந்தர்ப்பங்கள் கிடைக்காது விட்டால் சந்தர்ப்பங்களை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்துவதும் எமது மூலோயமாகும். அந்தவகையில், ஜனாதிபதி ரணிலை ஆதரித்ததன் மூலம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்துள்ளோம். தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் முயல்வோம் என்றார். https://www.virakesari.lk/article/139837
-
ஜனாதிபதி ரணிலை சந்திக்கவுள்ள ரெலோ 2022-11-13 10:55:53 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு எம்.பி.க்களுடன் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளர். இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் தீர்வு சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பு நடைமுறையில் சாத்தியப்பட வேண்டும் என்று ரெலோ தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலாநன் தெரிவித்துள்ளார். அதேநேரம், இனப்பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமான பேச்சுவர்த்தைகள் முன்னெடுகின்றபோது கிழக்கு மாகாணத்தினை புறக்கணிக்க முடியாது. ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு உறுப்பினர்களுடன் சந்திக்கும் அதேநேரம் கிழக்கு உறுப்பினர்களின் பிரசன்னம் அவசியமாகின்றது. வடக்கை தனியாகவும் கிழக்கைத் தனியாகவும் பார்க்கமுடியாது. அதேநேரம், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக இருந்தால் அது இணைந்த வடக்கு கிழக்கிலேயே அமைய வேண்டும் என்பது எமது நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. அவ்வாறான நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது கிழக்கு உறுப்பினர்களையும் உள்ளீர்க்க வேண்டியது அவசியமாகின்றது. இதனால் ஜனாதிபதியைச் சந்தித்து நேரில் கோரிக்கை விடுப்பதென தீர்மானித்துள்ளோம். பெரும்பாலும் இந்தச் சந்திப்பானது அடுத்தவார பாராளுமன்ற அமர்வில் இடைப்பட்ட நேரத்தில் முன்னெடுப்பதற்கு திர்மானித்துள்ளளோம் என்றார். https://www.virakesari.lk/article/139845
-
பேச்சுக்கு முன்னர் உத்தரவாதம் தேவை: ஜனாதிபதி ரணிலைக் கோரும் சம்பந்தன், விக்கி, கஜேந்திரகுமார் By Digital Desk 2 13 Nov, 2022 | 10:55 AM * மீண்டும் ஏமாற்றமடைய முடியாது: சம்பந்தன் * ஏக்கிய அடிப்படையில் பேசமுடியாது: விக்கி * பிணையெடுப்பதற்கு உதவமுடியாது: கஜன் (ஆர்.ராம்) வடக்குமக்கள் எதிர்கொண்டுள்ள தேசிய இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ள பிரதான தமிழ் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்களை முன்னெடுக்க முடியாத நிலையில் அதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த ஒருவருடத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்தவாரம் முதல் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளதாக கடந்த வியாழக்கிழமையன்று பாராளுமன்றத்தில் வைத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். இரா.சம்பந்தன் குறித்த அறிவிப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வீரகேசரியிடம் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான நியாயமான தீர்வினை வழங்குதை மையப்படுத்திய பேச்சுக்களை எந்தத் தரப்பினருடனும் முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம். எனினும், எம்முடன் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று பலதடவைகள் கூறப்பட்டாலும் அவை இதய சுத்தியுடன் இடம்பெற்றாதாக இல்லை. ஆகவே வெறுமனே பேச்சுவார்த்தையென்ற விடயம் உதட்டளவில் இல்லாது, நடைமுறையில் செயல்வடிவம் பெறுவதாக அமைய வேண்டும். அதேநேரம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார். இதுவரையில் அதற்கான உத்தியோக பூர்வமான அழைப்புக்கள் எவையும் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் எடுத்துவருகின்ற முயற்சிகளையும் அறிவிப்புக்களையும் வரவேற்கின்றோம். ஆனால் அது உடனடியாக செயல்வடிவம் பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், புதிய அரசியலமைப்பொன்றின் ஊடாகவே தேசிய இனப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைக் காண முடியும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அதற்காக 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டு வழிநடத்தல்குழு ஸ்தாபிக்கப்பட்டு ஒரு இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது. எனினும் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டு விட்டது. குறித்த செயற்பாட்டில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தபோதும் இறுதியில் ஏமாற்றுப்பட்டோம். மீண்டும் அவ்வாறான நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தயாரில்லை. ஆகவேரூபவ் உதட்டளவில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்களுக்கு செயல்வடிவம் அளிப்பதற்கான நடவடிக்கைகள் தாதமின்றி முன்னெடுக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டு அவை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார். சி.வி.விக்னேஸ்வரன் இதேவேளைரூபவ் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும்ரூபவ் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கரூபவ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் அம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பேச்சுக்களை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார்.அவ்விதமாக விடுக்கப்பட்ட அறிவிப்பை நாம் வரவேற்கின்றோம். ஆனால் இதுவரையில் உத்தியோக பூர்வமான அழைப்பு கிடைக்கவில்லை. எனினும், அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருவருடத்திற்குள் தீர்ப்பதற்கு முயற்சிகளை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான நிலையில் முக்கியமானதொரு விடயத்தினை கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இலங்கையில் மாறிமாறி வந்த ஆட்சியாளர்களுடன் தமிழ்த் தலைவர்கள் பலரும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். அவ்வாறு பேச்சுக்களை நடத்தி களைத்துவிட்டார்கள். நாமும் அவ்வாறு பேச்சுக்களை நடத்தி களைத்துவிட்டோம். எதுவுமே நடைபெறவில்லை. ஆகவே, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாக இருந்தால் ஒற்றையாட்சி முறைமையிலிருந்து அரசியலமைப்பை விடுவிக்கச் செய்வதற்கு தென்னிலங்கை தலைவர்கள் முன்வரவேண்டும். ஒற்றையாட்சி அடிப்படையில் தான் அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்து தென்னிலங்கைத் தலைவர்களும் சிங்கள மக்களும் வெளியில் வந்தால் தான் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தமான தீர்வினைக் காணமுடியும். ஆகவே, ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பது ‘எக்சத் ராஜ்ஜிய’ ஆக மாறவேண்டும். ஏனெனில் ஏக்கிய’ என்ற நிலைமை நீடித்தால் அது தனியே பெரும்பான்மை மக்களை மையப்படுத்தியதாகவும் அவர்களுக்கே அதிகாரங்களும் உரித்துக்களும் உரியதாகவும் காணப்படுகின்றது. எனவே தான் ‘எக்சத்’ என்று மாற்றம் அடைகின்றபோது அனைவருக்கு சமத்துவமான நிலைமையும் அந்ததந்தப்பகுதிகளை அவர்களே ஆளும் நிலைமைகளும் உருவாகும். ஆகவே, இதனடிப்படையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பைக்கு வெளியில் வந்து பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகினாலேயே பேச்சுவார்த்தைகளினால் பலன்கள் கிட்டும். அதேநேரம், ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டி முறைமைக்கு அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு மாற்றப்படும் சமஷ்டி எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி தாராளமாக பரந்துபட்டுப் பேச்சுக்களை நடத்தலாம். அதனை விடுத்து பேச்சுவார்த்தை மேசையில் ஒவ்வொரு விடயங்களையும் நீண்டநேரம் விவாதித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை. எனவே, ஒற்றையாட்சி நீக்கம் பற்றி உத்தரவாம் முதலில் தேவையாக உள்ளது என்றார். கஜேந்திரகுமார் அதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், எம்மைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தவேண்டிய கட்டாயமான சூழலொன்று ஏற்பட்டுள்ளது. அவர் அரசியல் ஸ்திரத்தன்மையை சர்வதேசத்திற்கு காண்பிக்க வேண்டுமாக இருந்தால் சகல தரப்புக்களுடனும் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டியது தவிர்க்க முடியாத விடயமாகின்றது. அவ்வாறு அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் தான் சர்வதேச நாணயநிதியத்தின் கடன் உதவிகள் உட்பட இதர நாடுகளின் நன்கொடைகளும் கடன் மறுசீரமைப்புக்களும் கூட சாத்தியமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், தான் அவர் தமிழ்த் தரப்புக்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முன்வந்துள்ளார். எம்மைப்பொறுத்தவரையில், இதுதான் எமக்குள்ள மிகப்பெரும் ‘பிடி’ஆகும். ஆகவே அதனை எமது மக்களின் அபிலாஷைகளை முழுமையாக வென்றெடுப்பதை மையப்படுத்தியே பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகின்றது. அந்தவகையில், பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக ஒற்றையாட்சி முறைமையின் கீழாக பேச்சுக்களை முன்னெடுக்க முடியாது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டு அதனைக் கைவிடுவதற்கான உத்தரவாதத்தினை வழங்கவேண்டும். அவ்வாறான எந்த உத்தரவாதமுமின்றி பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சர்வதேசத்திடம் பிணை எடுத்துவிட வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் எமக்கு இல்லை. இதேநேரம், இந்தவிவகாரம் சம்பந்தமாக எமது மத்தியகுழுவானது நாளை திங்கட்கிழமை கூடவுள்ளது. அதன்போது உத்தியோகபூர்வமான தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/139849
-
அல்ஹைதாவுடன் தொடர்புவந்திருந்த இலங்கை வர்த்தகரை நீண்டகாலமாக புலனாய்வு பிரிவுகள் கண்காணித்தன- By Rajeeban 13 Nov, 2022 | 10:26 AM அல்ஹைதாவிற்கு நிதி வழங்கியதாக அமெரிக்க அதிகாரிகளால் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை வர்த்தகர் இலங்கை புலனாய்வு பிரிவினரால் நீண்டகாலம் கண்காணிக்கப்பட்டார் ஆனால் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. பேருவளையை சேர்ந்த வர்த்தகர் முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசார் அல்ஹைதாவை சேர்ந்த நபருக்கு உதவினார் என அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளதுடன் அவருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. வெளிநாட்டு சொத்துக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் பட்டியலில் உள்ள அஹமட் லுக்மான் தலிப் என்ற தனது வர்த்தக சகா மற்றும் உறவினருக்கு உதவினார், தலிப் அல்ஹைதாவின் வெளிநாட்டு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதிலும் நிதி சார்ந்த விடயங்களிலும் ஈடுபட்டிருந்தார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை வர்த்தகரை கண்காணித்த இலங்கையின் புலனாய்வு பிரிவினர் அவர் குறித்த விபரங்களை நீண்ட காலத்திற்கு முன்னரே பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் நிசாரின் உள்நாட்டு வர்த்தக சகாக்கள் அவரது நடவடிக்கைகளில் தொடர்பட்டவர்கள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர். நிசார் வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடத்திவந்தார் ஆள்கடத்தல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்றவற்றி;ல் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன. வடக்குகிழக்கில் வீதிகட்டுமான மற்றும் கட்டுமானத்தில் நிசார் ஈடுபட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலனாய்வு தகவல்கள் அவர் மடகாஸ்கர் வர்த்தகருடன் இணைந்து இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கின்றன. அவர் தற்போது இலங்கையில் வசிக்கவில்லை துபாயில் வாழ்கின்றார் என தகவல்கள் கிடைத்துள்ளன. https://www.virakesari.lk/article/139850
-
மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தம்! By Vishnu 13 Nov, 2022 | 10:56 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கூட்டத் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சந்தா்ப்பத்தில் பொதுஜன பெரமுன அரசியல் கூட்டங்களை நடத்துவது பொருத்தமற்றது என கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று சுட்டிக்காட்டியதால் இந்தக் கூட்டத் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. முதலில் கட்சியை ஒழுங்கமைத்து, பின்னர் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கூட்டங்களை நடத்துவதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது. ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவைச் சந்தித்தபோது இதனை சுட்டிக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/139858
-
317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..!
கிருபன் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
”ஐநா எங்களை பொறுப்பேற்க வேண்டும்” கனடா நோக்கி சென்று கொண்டிருந்த போது, வியட்நாம் கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர். தங்களை கனடாவுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளனதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் வியட்நாம் அதிகாரிகளினால் இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பிபிசி ஊடகத்திற்கு தெரிவிக்கையில், ”நாங்கள் வியட்நாம் அகதி முகாமில் இருக்கின்றோம். இலங்கையில் இருந்து வந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருந்தோம். எங்களை அழைத்து வந்தவன் எம்மை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டான். நாங்கள் சர்வதேச கடலில் தத்தளித்த போது ஜப்பான் நாட்டு கப்பல் வந்து எங்களை காப்பாற்றியது. அவர்கள் எம்மை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க இருந்த போது, வியட்நாம் கடற்படை எம்மை அழைத்து வந்துள்ளது. எங்களை எப்படியாவது காப்பாற்றவும். எமக்கு இலங்கை வேண்டாம். இலங்கையில் இருக்க முடியாது என்று காரணத்தால்தான் நாங்கள் வந்தோம். இலங்கைக்கு எமது ஆண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகவே முடியாது. ஆகவே, அரசாங்கம் மற்றைய அனைத்து நாடுகளும் இணைந்து எம்மை காப்பாற்றவும்” http://www.samakalam.com/ஐநா-எங்களை-பொறுப்பேற்க-வ/ -
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஐசிசி அறிவித்த அதிரடி மாற்றம்! christopherNov 12, 2022 14:46PM இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஐசிசி ஆட்ட விதிகளில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாதமாக கொண்டாடப்பட்டு வரும் டி20 உலகக்கோப்பை திருவிழா நாளை (நவம்பர் 13) நடக்க இருக்கும் பாகிஸ்தான் – இங்கிலாந்து இறுதிப்போட்டியுடன் நிறைவு பெற இருக்கிறது. பயம் காட்டும் மழை! மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி) நடக்க இருக்கும் இந்த மாபெரும் யுத்தத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது மழை தான். அங்கு 80 சதவீதம் அளவிற்கு நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஐசிசியின் முதல் திட்டம்! இதற்கு முன்கூட்டியே திட்டங்களை தீட்டி வைத்திருந்த ஐசிசி, ஒருவேளை போட்டியன்று மழை குறுக்கீடு செய்து ஆட்டம் தடைபட்டால், அதற்கு மறுநாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டு, ஆட்டம் கைவிடப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றும் இடியுடன் கூடிய 80 சதவீத மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து திங்கள்கிழமையும் (நவம்பர் 14) மழை பெய்து ஆட்டம் கைவிடப்படும் பட்சத்தில், உலகக்கோப்பையானது இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று ஐசிசி முன்னதாக கூறியிருந்தது. திட்டத்தை மாற்றிய ஐசிசி! இந்நிலையில் இறுதிப்போட்டியில் எப்படியாவது முடிவு கிடைக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக உள்ள ஐசிசி, தற்போது ஒரு மிகப்பெரும் மாற்றத்தினை கொண்டுவந்துள்ளது. அதன்படி, ரிசர்வ் நாளில் அதாவது திங்கள் கிழமையன்று விளையாடும் நேரத்தை இரண்டு மணிநேரத்தில் இருந்து நான்கு மணி நேரமாக அதிகரிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. லீக் சுற்றுகளில் மழை பெய்தால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டத்தின் முடிவை அறிவிப்பதற்கு 5 ஓவர்கள் வீசப்பட்டிருப்பது அவசியம். ஆனால், நாக் அவுட் போட்டிகளில் அவ்வாறு முடிவு அறிவிப்பதற்கு 10 ஓவர்கள் தேவைப்படுகிறது. எனவே இறுதிப்போட்டியானது ரிசர்வ் நாளில் நடைபெறும் பட்சத்தில் ஐசிசி நிபந்தனைகள் (பிரிவு 13.7.3) படி, விளையாடும் நேரம் நான்கு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அதேவேளையில் லேசான மழை என்றால், தேவையான ஓவர்களைக் குறைத்து, திட்டமிடப்பட்ட போட்டி நாளில் அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று போட்டியை முடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். மேலும் ரிசர்வ் நாளுக்கு ஆட்டம் மாற்றப்படுகிறது எனில், போட்டியானது, இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு, நிறுத்தப்பட்ட ஆட்டத்தின் தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. https://minnambalam.com/sports/icc-changed-its-plan-on-t20-worlcup-final-in-pakvseng/
-
ராஜீவ் கொலையில் பழி சுமத்தப்பட்ட நளினி உட்பட்ட ஆறுபேர் விடுதலை
கிருபன் replied to valavan's topic in தமிழகச் செய்திகள்
சிறப்பு முகாமில் 4 பேர் தங்குவதற்கு எதிர்ப்பு! monishaNov 12, 2022 22:06PM ஷேர் செய்ய : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்று (நவம்பர் 12) சிறையிலிருந்து விடுதலையான இலங்கையைச் சேர்ந்த 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு மேலாகப் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர் பயாஸ் ஆகிய 7 பேர் 30 வருடங்களுக்கு மேலாகச் சிறையில் இருந்து வந்தனர். இவர்களில் பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள 6 பேரும் பேரறிவாளனை விடுதலை செய்தது போல் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று (நவம்பர் 11) நளினி உட்பட 6 பேரை விடுதலை செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் நாகரத்னா அமர்வு தீர்ப்பு அளித்தது. 6 பேர் விடுதலை 6 பேரும் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தாலும் விடுதலை தொடர்பான நீதிமன்ற உத்தரவு நகல் இன்று தான் வேலூர், புழல், மதுரை சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகே 6 பேரையும் இன்று சிறைத்துறை அதிகாரிகள் விடுதலை செய்தார்கள். 4 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்ட 6 பேரில் முருகன், சாந்தன், ராபர்ட் பாயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையர்கள். வெளிநாட்டவர்கள் இந்தியாவில் தங்க வேண்டும் என்றால் அவர்களிடம் சுற்றுலா விசா இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் மீது வழக்கு ஏதேனும் இருக்கிறதா என்பதை விசாரித்து, அப்படி வழக்கு ஏதேனும் இருந்தால் சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆனால் 4 பேரும் தற்போது தான் விடுதலையாகியுள்ளார்கள் என்பதால் அவர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக 4 பேரையும் அகதிகள் முகாமில் தங்கவைப்பது தான் சட்டம். முதல்வரிடம் வேண்டுகோள் இந்நிலையில் நேற்று விடுதலை பற்றிய உத்தரவு வெளியான பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜி.கே. முரளிதரன் மின்னம்பலத்திடம் பேசுகையில், ”6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விடுதலை செய்யப்பட்ட 6 பேரில் 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்” என்று கேள்வியும் எழுப்பியிருந்தார். 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்த தமிழர் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பழ. நெடுமாறன் முதல்வரிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அவர், “விடுதலையான 4 ஈழத் தமிழர்களால் இலங்கைக்கும் திரும்பிச் செல்ல இயலாது. அவர்களை முகாம்களில் தங்க வைக்காமல் அவர்களது உறவினர்களிடம் அனுப்பி வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். முகாமிற்குச் செல்லும் 4 பேர் இந்நிலையில், 4 இலங்கையர்களை என்ன செய்வது என்று சிறைத் துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் ஆலோசித்து ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதன்படி 4 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைப்பதற்காக காவல்துறையினர் அவர்களைத் திருச்சி இலங்கைத் தமிழர்கள் முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவதற்கு தற்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளன. “உச்சநீதிமன்றமே விடுதலை செய்த பிறகும் திருச்சி முகாமுக்குக் கொண்டு செல்வது அநீதியிலும் அநீதியாகும். முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு முகாமுக்குக் கொண்டு செல்வதைத் தடுத்து, அவரவர் விரும்பும் இடங்களில் தங்க அனுமதிக்க வேண்டும். விடுதலை காற்று சுவாசிக்கட்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் திருச்சி மத்தியச் சிறை மற்றும் முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பு இருப்பதாகவும் போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அந்த திருச்சி சிறப்பு முகாமிற்குத் தான் இவர்கள் 4 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். https://minnambalam.com/political-news/4-srilankans-are-taken-to-trichy-special-camp/ -
கோத்தபாய ஓடியதால் இப்படியான அடைமொழிகளை பூட்டினுக்குத்தான் பாவிக்கலாம். இன்னமும் “மேதகு” என்ற அடைமொழியை பாவிக்கவில்லை. அதையும் பாவிக்கலாம். எல்லாம் இலவசம்தானே.
-
யாழ் களத்தை செல்ல செழிப்பாய் வைத்து இருப்பது எப்படி
கிருபன் replied to வீரப் பையன்26's topic in தென்னங்கீற்று
உங்கள் வருகையை விரும்பவில்லை என்று பகிரங்கமாகச் சொல்லக் கூடியவர்கள் யாழ்களத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார்கள். இப்போது எழுதும் சொற்பத்தினர் ஒன்றில் RT போன்று பிரச்சாரம் செய்யும் நோக்கில் யாழைப் பாவிப்பவர்கள், அல்லது இப் பிரச்சாரங்களுக்கு எடுபடாத தெளிவுகொண்டவர்கள் அல்லது அரசியல் பற்றிய அக்கறை இல்லாத தமது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் எழுதுபவர்கள். யாழை உலகத் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக ஆரம்பித்த மோகன் “திருந்தாத கேசுகள்” என்று விட்டுவிட்டுப் போன பின்னர் மேலே நான் சொன்னவர்கள்தான் எஞ்சி இருக்கின்றார்கள். இன்னமும் குறையவேண்டாம் என்பதால் நீங்கள் தாரளமாக ரஷ்யாவின் கோயபல்ஸ் பிரச்சாரங்களைத் தொடரலாம். பூமி தட்டையானது அல்லது உருண்டையானது என்று சொல்லி நீங்கள் ஒரு கூர்மதியாளர் மற்றவர்கள் எல்லாம் சக்கட்டைகள் என்று சொல்லி மகிழலாம்.😎 -
உண்மைதான். யுத்தம் நிரந்தரமாக முடிவுக்கு வருவது ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட ரஷ்யாவின் கையில்தான் உள்ளது. வல்வளைப்பில் பிடித்த உக்கிரேனின் பகுதிகளில் இருந்து விலகினால் யுத்தம் தானாக நின்றுவிடும். ஆனால் சர்வாதிகாரி பூட்டின் தனது தோல்வியை விரும்பமாட்டார் என்பதால் யுத்தமும் உக்கிரேன் ரஷ்யாவால் அழிக்கப்படுவதும் தொடரும்.
-
உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!
கிருபன் replied to கிருபன்'s topic in உலக நடப்பு
ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பினால் வரும் மக்களின் அழிவுகளை யார் ரசித்துக்கொண்டிருக்கின்றார்கள் இந்த யாழ் களத்தில் வாசகர்களாக இருப்பவர்களுக்குத் தெரியும். ரஷ்யாவின் மூளைச் சலவைக்குள் உள்ளானவர்களும், அவர்களின் சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு பிரச்சாரம் செய்பவர்களும் உலகம் உருண்டை என்றுதான் நம்புகின்றார்கள். -
உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!
கிருபன் replied to கிருபன்'s topic in உலக நடப்பு
உங்களுக்கு எல்லாமே மாறித்தான் விளங்கும் என்பது வழமைதானே. மக்களின் அழிவுகளைப் பார்த்து கிஞ்சித்தும் இரக்கம் காட்டாமல் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முண்டுகொடுப்பதுதான் உங்கள் வாடிக்கை. நெடுக்கர் வேறு இன்னோர் திரியில் பிரான்ஸின் இருந்து யாழில் போய் 15 வயதுச் சிறுமியை திருமணம் முடிக்க முயன்றவர் பிரான்ஸில் மலிஞ்சிருக்கும் உக்கிரேன் பெட்டையளைப் போயிருக்கலாம் என்று வகுப்பெடுத்தவர். இப்படித்தான் மனிதாபிமானம் பொங்குபவர்கள் இருக்கின்றார்கள்! -
எனது பதில்கள்.. # Match # Question Team1 Team2 Hidden Prediction குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை. 1) போட்டி 1: ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor) QAT ECU DRAW ECU 2) போட்டி 2: திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan) ENG IRN DRAW ENG 3) போட்டி 3: திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor) SEN NED DRAW NED 4) போட்டி 4: திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) USA WAL DRAW DRAW 5) போட்டி 5: செவ்வாய் நவ 22 10am: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail) ARG KSA DRAW ARG 6) போட்டி 6: செவ்வாய் நவ 22 1pm: குழு 😧 டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan) DEN TUN DRAW DEN 7) போட்டி 7: செவ்வாய் நவ 22 4pm: குழு 😄 மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha) MEX POL DRAW DRAW 😎 போட்டி 8: செவ்வாய் நவ 22 7pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) FRA AUS DRAW FRA 9) போட்டி 9: புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor) MAR CRO DRAW CRO 10) போட்டி 10: புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan) GER JPN DRAW GER 11) போட்டி 11: புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor) ESP CRC DRAW ESP 12) போட்டி 12: புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) BEL CAN DRAW BEL 13) போட்டி 13: வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah) SUI CMR DRAW DRAW 14) போட்டி 14: வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan) URU KOR DRAW DRAW 15) போட்டி 15: வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha) POR GHA DRAW POR 16) போட்டி 16: வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail) BRA SRB DRAW BRA 17) போட்டி 17: வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL IRN DRAW WAL 18) போட்டி 18: வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor) QAT SEN DRAW SEN 19) போட்டி 19: வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan) NED ECU DRAW DRAW 20) போட்டி 20: வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor) ENG USA DRAW ENG 21) போட்டி 21: சனி நவ 26 10am: குழு 😄 துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) TUN AUS DRAW TUN 22) போட்டி 22: சனி நவ 26 1pm: குழு 😄 போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan) POL KSA DRAW POL 23) போட்டி 23: சனி நவ 26 4pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha) FRA DEN DRAW FRA 24) போட்டி 24: சனி நவ 26 7pm: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) ARG MEX DRAW ARG 25) போட்டி 25: ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) JPN CRC DRAW DRAW 26) போட்டி 26: ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) BEL MAR DRAW BEL 27) போட்டி 27: ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan) CRO CAN DRAW CRO 28) போட்டி 28: ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) ESP GER DRAW DRAW 29) போட்டி 29: திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah) CMR SRB DRAW SRB 30) போட்டி 30: திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan) KOR GHA DRAW KOR 31) போட்டி 31: திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) BRA SUI DRAW BRA 32) போட்டி 32: திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail) POR URU DRAW DRAW 33) போட்டி 33: செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor) NED QAT DRAW NED 34) போட்டி 34: செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan) ECU SEN DRAW DRAW 35) போட்டி 35: செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL ENG DRAW ENG 36) போட்டி 36: செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor) IRN USA DRAW USA 37) போட்டி 37: புதன் நவ 30 3pm: குழு 😧 அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah) AUS DEN DRAW DEN 38) போட்டி 38: புதன் நவ 30: 3pm குழு 😧 துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan) TUN FRA DRAW FRA 39) போட்டி 39: புதன் நவ 30 7pm: குழு 😄 போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha) POL ARG DRAW ARG 40) போட்டி 40: புதன் நவ 30 7pm: குழு 😄 சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) KSA MEX DRAW MEX 41) போட்டி 41: வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) CRO BEL DRAW BEL 42) போட்டி 42: வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) CAN MAR DRAW MAR 43) போட்டி 43: வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) CRC GER DRAW GER 44) போட்டி 44: வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan) JPN ESP DRAW ESP 45) போட்டி 45: வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan) KOR POR DRAW POR 46) போட்டி 46: வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah) GHA URU DRAW URU 47) போட்டி 47: வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) SRB SUI DRAW DRAW 48) போட்டி 48: வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail) CMR BRA DRAW BRA குழு A: 49) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் QAT Select QAT Select ECU Select ECU ECU SEN Select SEN Select NED Select NED NED 50) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #A1 - ? (2 புள்ளிகள்) NED #A2 - ? (1 புள்ளிகள்) ECU குழு B: 51) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ENG Select ENG ENG IRN Select IRN Select USA Select USA Select WAL Select WAL WAL 52) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #B1 - ? (2 புள்ளிகள்) ENG #B2 - ? (1 புள்ளிகள்) WAL குழு 😄 53) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ARG Select ARG ARG KSA Select KSA Select MEX Select MEX MEX POL Select POL Select 54) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #C1 - ? (2 புள்ளிகள்) ARG #C2 - ? (1 புள்ளிகள்) MEX குழு 😧 55) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் FRA Select FRA FRA AUS Select AUS Select DEN Select DEN DEN TUN Select TUN Select 56) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #D1 - ? (2 புள்ளிகள்) FRA #D2 - ? (1 புள்ளிகள்) DEN குழு E: 57) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ESP Select ESP ESP CRC Select CRC Select GER Select GER GER JPN Select JPN Select 58) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #E1 - ? (2 புள்ளிகள்) GER #E2 - ? (1 புள்ளிகள்) ESP குழு F: 59) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BEL Select BEL BEL CAN Select CAN Select MAR Select MAR Select CRO Select CRO CRO 60) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #F1 - ? (2 புள்ளிகள்) BEL #F2 - ? (1 புள்ளிகள்) CRO குழு G: 61) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BRA Select BRA BRA SRB Select SRB SRB SUI Select SUI Select CMR Select CMR Select 62) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #G1 - ? (2 புள்ளிகள்) BRA #G2 - ? (1 புள்ளிகள்) SRB குழு H: 63) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் POR Select POR POR GHA Select GHA Select URU Select URU URU KOR Select KOR Select 64) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #H1 - ? (2 புள்ளிகள்) POR #H2 - ? (1 புள்ளிகள்) URU சுற்று 16 போட்டிகள்: சுற்று 16 போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும் 65) போட்டி 49: சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan) NED WAL NED 66) போட்டி 50: சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) ARG DEN ARG 67) போட்டி 52: ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha) FRA MEX FRA 68) போட்டி 51: ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor) ENG ECU ENG 69) போட்டி 53: திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah) GER CRO GER 70) போட்டி 54: திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha) BRA URU BRA 71) போட்டி 55: செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan) BEL ESP ESP 72) போட்டி 56: செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail) POR SRB POR கால் இறுதிப் போட்டிகள்: கால் இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும் 73) போட்டி 58: வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan) GER BRA BRA 74) போட்டி 57: வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) NED ARG ARG 75) போட்டி 60: சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha) ESP POR ESP 76) போட்டி 59: சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor) ENG FRA FRA அரை இறுதிப் போட்டிகள்: அரை இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும் 77) போட்டி 61: செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) ARG BRA ARG BRA 78) போட்டி 62: செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor) FRA ESP ESP FRA மூன்றாமிடப் போட்டி: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் 79) போட்டி 63: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan) ARG ESP ARG இறுதிப் போட்டி: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும் 80) போட்டி 64: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail) BRA FRA BRA உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்: 81) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Karim Benzema 82) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 81 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) FRA 83) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Neymar 84) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 83 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) FRA 85) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Lionel Messi 86) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 85 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) FRA 87) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Alisson 88) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 87 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) FRA
-
உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!
கிருபன் replied to கிருபன்'s topic in உலக நடப்பு
ரஷ்யா உக்கிரேனை ஆக்கிரமிக்கவில்லைத்தானே நெடுக்கர்?🤓 -
உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!
கிருபன் replied to கிருபன்'s topic in உலக நடப்பு
அப்ப கப்பித்தானும் நெடுக்கரும் ரஷ்யர்கள் கெர்சனை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள். இதன் பிறகு இங்கு குத்தி முறிய ஒன்றுமில்லை.. -
இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்களின் பதில்களைத் தரவேற்றியுள்ளேன். அவதானித்த விடயங்கள்: குழுநிலைப் போட்டிகளில் சமநிலை (DRAW) என்பதைத் பலர் தெரிவு செய்யவில்லை! முடிவை சரியாகக் கணிப்பவர்களுக்கு தலா ஒரு புள்ளிகள் கிடைக்கும் என்பதால் சமநிலை முடிவுகளையும் கருத்தில் கொள்ளலாம். கேள்விகள் 81) இருந்து 88) வரையானவற்றுக்கு பதிலளிக்கும்போது வீரரின் பெயரைக் கொடுத்தால் அவரின் நாட்டின் பெயரை கட்டாயம் அடுத்த கேள்விக்கான பதிலாகக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக, தங்கக் காலணி விருது பெறும் வீரர் மெஸ்ஸி என்று பதில் தந்தால் தங்கக் காலணி விருது பெறுபவரின் நாடு ஆர்ஜென்ரீனா என்று கட்டாயம் பதிலாகத் தரவேண்டிய அவசியமில்லை. புள்ளிகளை பெறும் வழியாக வேறு ஒரு நாட்டைத் தெரிவு செய்யலாம். இதன் மூலம் அதிஷ்டம் அடிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்! பதிந்தது நிலை போட்டியாளர் 1 1 ஈழப்பிரியன் 2 2 சுவி 3 3 வாத்தியார் 4 4 பிரபா 5 5 முதல்வன் 6 6 கந்தையா 7 7 ஏராளன் 8 8 சுவைப்பிரியன் 9 9 நுணாவிலான் 10 10 கல்யாணி
-
@சுவைப்பிரியன் அண்ணா, நீங்கள் மேலேயுள்ள கேள்விகளுக்கு விளையாடும் அணிகள் இரண்டின் பெயர்களைத் தந்துள்ளீர்கள். 65) இலிருந்து 80) வரையான கேள்விகளுக்கு வெல்லும் அணிகளை மட்டும் தாருங்கள்.
-
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2022 இன் இறுதிப் போட்டி நாளை ஞாயிறு (13 நவம்பர்) நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண், பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து PAK vs ENG 03 பேர் பாகிஸ்தான் வெல்வதாகவும், 04 பேர் இங்கிலாந்து வெல்வதாகவும், மற்றையோர் வேறு அணிகள் வெல்வதாகவும் கணித்துள்ளனர். பாகிஸ்தான்: நுணாவிலான் சுவைப்பிரியன் புலவர் இங்கிலாந்து: அகஸ்தியன் எப்போதும் தமிழன் கல்யாணி நீர்வேலியான் குறிப்பு: பிற அணிகள் வெல்வதாகக் கணித்த 12 பேருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் AUS பையன்26 AUS முதல்வன் IND சுவி NED அகஸ்தியன் ENG தமிழ் சிறி SRI பிரபா AUS குமாரசாமி AUS நுணாவிலான் PAK வாதவூரான் AUS வாத்தியார் IND கிருபன் AUS சுவைப்பிரியன் PAK ஏராளன் AUS புலவர் PAK எப்போதும் தமிழன் ENG கறுப்பி AUS கல்யாணி ENG நீர்வேலியான் ENG நாளைய இறுதிப் போட்டியில் 5 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிஸ்டசாலிகள் யார்?
-
இரண்டு பேரை நிப்பாட்டிப் பதிலுக்கு இரண்டு பேரை எடுப்பதில் பிஸி.. பலரின் CVக்களை பரிசீலிப்பதிலும் இன்ரவியூ செய்வதிலும் நேரம் போகின்றது. இதுக்குள்ள யாழிலும் போட்டியை நடாத்தவேண்டுமென்றால் ஒரு அஸிஸ்டெண்ட் தேவைதான். ஆனால் கூகிள் ஷீற்றில் formula எழுதத் தெரியாதவர்களை எடுக்க இயலாது😧
-
சரி. நானும் பங்குபற்றுகின்றேன் 😀 ஆனால் கூகிள் ஷீற்றில் தரவேற்ற நேரம் மட்டுமட்டாக இருக்கின்றது. கடைசி நிமிடத்தில் கலந்துகொள்பவர்களை சேர்க்காமல் விடவேண்டியும் வரலாம்!!!
-
உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!
கிருபன் replied to கிருபன்'s topic in உலக நடப்பு
கெர்சன் மக்கள் விரும்பவில்லை என்பதால் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் மானஸ்தர்கள்😛