Everything posted by கிருபன்
-
தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் : டக்ளஸ் தேவானந்தா !
தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் : டக்ளஸ் தேவானந்தா ! By kugen தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (14 ) காலை கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொழும்பில் ஏன் நீங்கள் போட்டி போடுகின்றீர்கள் என சிலர் கேட்டிருந்தார்கள் . நீண்டகாலமாக ஐக்கியபட வேண்டும். தமிழ்மக்களின் ஒற்றுமையை தென்னிலங்கைக்கு, இந்தியாவிற்கு, சர்வதேசத்திற்கு காட்டவேண்டும் அப்போதுதான் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கலாம் என கூறிகொண்டிருக்கிறார்கள். இது நேற்று இன்றில்லை 1974ஆம் ஆண்டு தொடக்கம் மக்களை உசுப்பேத்தி விடுவதற்காக கோஷங்களாக அரசியலில் திட்டங்களாக, கருத்தாக இருந்திருக்கின்றது. ஆனால் 74ஆம் ஆண்டில் இருந்து இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான பிரச்சனைகள் தீர்ந்ததாக இல்லை. தீரா பிரச்சினையாக, பிரச்சினை அதிகரித்துதான் இருக்கின்றது. இடப்பெயர்வு, சொத்துக்கள், உயிர்களை இழக்கவேண்டி வந்திருக்கின்றது. அங்கவீனம், இரத்தம் சிந்துதல் இவ்வாறு பல துன்பங்களுக்கு மத்தியிலே இந்த கோஷங்களை எழுப்பியிருக்கின்றார்கள். இது ஒரு பிழையான சுயநலமான கோஷமாக தான் இருந்திருக்கின்றது. தமிழரசு கட்டிசியினை எடுத்தால் அது இன்று மூன்று கட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழரசுகட்சி, ஜனநாயக தமிழரசுகட்சி,சுஜேட்சை என பிரிந்திருக்கிறார்கள். தமிழரசு கட்சி என இருப்பவர்களே இரண்டு அணியாக பிரிந்து செயல்படுகின்றார்கள். ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் .அதுதான் அடிப்படை ஆனால் இங்கு நல்ல நோக்கத்திற்காக அந்த சுதந்திரத்தினை பயன்படுத்தாமல் அவர்கள் தம் சுயலாபத்திற்காக தான் பயன்படுத்துகின்றார்கள். அதனைவிட தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் இன்று சங்கை ஊதிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த சின்னத்தில் இருப்பவர்கள் கூறியிருக்கின்றார்கள். நேற்றைய தின தமிழரசு கட்சியின் கலந்துரையாடலில் சங்கு சின்னத்தை கொண்டுவாறவர்கள் கொலை, கொள்ளை, வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என அதனாலே நாம் வெளியில் விட்டோம் என ஆனால் அது உண்மை அல்ல, சுயலாபத்திற்காகவே இருக்கின்றார்கள். ஆனால் ஈபிடிபி அப்படி அல்ல ஈபிடிபி அதில் இருந்து மாறுபட்டது. ஈபிடிபி கொள்கைகளை நீண்டகாலமாக முன்வைத்து அதனை அடைவதற்கான வேலைத்திட்டங்களை முன்வைத்து வருகின்றது. இன்றும் அதை நோக்கியே செயற்பட்டு வருகின்றது. ஈபிடிபிக்கு போதிய ஆசனங்கள் இல்லை போதிய ஆசனங்கள் இருக்குமாக இருந்தால் மக்களுடைய அபிவிருத்திக்கான, அரசியல் உரிமைக்கான தீர்வு என மூன்று வகையான பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். எது எவ்வாறு இருந்தாலும் தேசிய நல்லிணக்கத்தினூடாகவே இணக்க அரசியலின் ஊடாக தான் நாம் முன்னெடுப்போம். என்னுடைய முகநூலில் கொழும்பு வேட்பாளர் பட்டியல் பற்றி விமர்சனம் ஒன்று ஒருவர் எழுதியிருந்தார். அவர் கூறியிருந்தார் நீங்கள் விமர்சனத்திற்கு அப்பால் மக்களுக்கு சிறந்த சேவையாற்றிருக்கின்றீர்கள் அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால் ஏன் புத்தபிக்குகளை கொழும்பு பட்டியவில் சேர்த்திருக்கிறீர்கள் என கேட்டிருந்தார். ஈபிடிபி 1987 கட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இது கல் மண் சுண்ணாம்பு , சீமெந்து இது சேர்ந்த கொங்கிறீட் கலவை இது இறுகினால் உருக்காகத்தான் இருக்கும்.அப்பிடிதான் ஈபிடிபி இருக்குமே ஒளிய அது உதிர்ந்து போகாது என கூறியிருந்தேன். இலங்கை அரசியல் ஊடாக மங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்திருக்கின்றோம். இன்னும்பல பிரச்சினைகள் இருக்கின்றது . அதற்கு தீர்வு காண வேண்டியிருக்கின்றது. எங்களுக்கு போதிய ஆசனங்கள் இல்லை . ஆகவே இம் முறை நான் எதிர்பார்கின்றேன் 5 ஆசனங்கள் கிடைக்க வேண்டும் கிடைத்தால் இரண்டு வருடத்திற்குள் பிரச்சினைகளை தீர்க்கமுடியும். எமக்கு 5ஆசனங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.இன்று கூறுகின்றார்கள் டக்ளஸ் தேவானந்தாவின் வாக்கு அசையாது என ,வேட்புமனுதாக்கல் செய்து விட்டு எல்லா கட்சிகளும் முடிவுகளுக்காக காத்திருந்த போது சிலர் கதைத்தார்கள் யாழ் மாவட்டத்தில் 6 ஆசனங்கள் அதில் ஒன்றை தவிர மற்றையது யாருக்கென தெரியாது நான் அதை நம்பவில்லை. எம் உழைப்பு, சேவையூடாக எங்கட கொள்கை ஊடாக மக்கள் அணிதிரண்டு எம்முடன் பயணிக்கவேண்டும் என கேட்டுகொள்கின்றேனே தவிர வாக்குகளை அபகரிக்க முன்வைக்கவில்லை. வேறு கட்சியில் இருபவர்களில் ஒரு உறுப்பினர் ஜனாதிபதியினை சந்தித்திருக்கிறார். அவர் சாராய பார் எடுத்ததாக கதை. அதே கட்சியில் இருக்கும் பிரதான உறுப்பினர் ஜனாதிபதியிடம் கேட்டிருக்கின்றார். பட்டியலை வெளியிடசொல்லி அப்போது சாராய பார் லைசன்ஸ் எடுத்தவர் ஜனாதிபதியிடம் சொல்லியிருக்கின்றார் பட்டியலை வெளியிட வேண்டாம் என ஆனால் எங்களுக்கும் அரசாங்கத்துக்கும் கடந்த காலத்தில் இருந்த உறவு மக்கள் நலன் சார்ந்து கொள்கை நிலப்பாட்டிலையே இருந்தது. 1997ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசாங்கம் தங்களுக்கு ஆதரவினை கேட்ட நேரம் எமக்கு அமைச்சு பதவி, பணம் தருகின்றோம் ஆதரவு தரவேண்டும் என ஆனால் நான் எமக்கு பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என அரசியல் தீர்வு சம்பந்தமாக தீர்வுவேண்டும் என கூறியிருந்தேன் என்றார். https://www.battinews.com/2024/10/blog-post_980.html
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் - பிரதான தமிழ் கட்சியாக இருப்பது இலங்கை தமிழரசு கட்சி மட்டுமே : எம்.ஏ.சுமந்திரன் ! kugenOctober 14, 2024 ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரை திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுகவிழா நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1956 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பிரதான தமிழ்க் கட்சியாக இருப்பது இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமே. வேறு எவருக்கும் எங்களுடைய மக்கள் ஜனநாயக ஆணையைக் கொடுக்கவில்லை. இனியும் கொடுக்கப் போவதுமில்லை. தமிழ் மக்கள் ஒரு தனித் தேசம் என்று அறிவித்து இதுவரை காலமும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற கட்சி தான் பலமான அணியாக பாராளுமன்றத்திற்குள் செல்லவேண்டும். மத்தியிலே ஆட்சி அமைத்திருக்கக்கூடிய கட்சிக்கு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலே ஒரு ஆசனம் கிடைக்குமாக இருந்தால் அவர்கள் இங்கிருக்கும் மக்கள் எங்களையும் பிரதிநிதியாக ஏற்றி இருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள். அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலோடு ஒரு ஆபத்து வந்திருக்கின்றது. பல தடவைகள் நாங்கள் அபாய சங்கை ஊதினோம் அது கைமீறிவிட்டது. பொதுவான சின்னத்தையும் திருடி விட்டார்கள். சின்னத்தை திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை திருடினார்கள். ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம்பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி கூட்டமைப்பிற்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. கட்சிப் பெயரை திருடினார்கள். மக்களுக்கு பொய்யான நம்பிக்கையை ஊட்டி அந்த சின்னத்தையும் திருடி விட்டார்கள். 23ஆம் திகதி நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சின்னத்தை நாம் பயன்படுத்த மாட்டோம் என்று. அவர்களுக்கு தங்களின் கையெழுத்தின் பெறுமதி தெரியவில்லை. சின்னத்தை திருட மாட்டோம் என்று கையெழுத்திட்டவர்கள் ஒரு சில மணித்தியாலங்களுக்கு உள்ளேயே குத்துவிளக்கை கைவிட்டு சங்கைத் தருமாறு தேர்தல் திணைக்களத்திற்கு கடிதம் கொடுத்தார்கள். இவ்வாறான கள்ளருக்கு இம்முறை மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். மாம்பழ திருடர்களுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். எங்கள் கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவர் அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலை உரிமம் கொடுத்தேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய இந்த அரசாங்கம் இரண்டு விடயங்களில் தடுக்கி விழுந்து கொண்டிருக்கின்றது. ஒன்று ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான செலவீனங்களை தேர்தல் திணைக்களத்திற்கு இதுவரை கொடுக்கவில்லை. மற்றையது மதுபான அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் விவரங்களை மூன்று நாட்களுக்குள் வெளிப்படுத்துவோம் என கூறினார்கள். மூன்று வாரமாகிவிட்டது இன்னும் வெளிப்படுத்தவில்லை. நான் பகிரங்கமாக அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் மதுபான அனுமதிப் பத்திரத்தை பெற்றவர்களின் விபரங்களை வெளிப்படுத்துங்கள். எங்களுடைய கைகள் சுத்தமாக உள்ளது. எங்களை விட்டு வெளியேறிச் சென்றவர்களின் உண்மை முகத்தை மக்களிடம் வெளிக்காட்ட உதவியாக இருக்கும். ஏன் எங்களை விட்டு வெளியேறினார்கள் என்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கும். தமிழரசு கட்சியின் உடைய வேட்பாளர் தெரிவிலே நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். இளையவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கின்றோம். மக்கள் கேட்கின்ற மாற்றத்திற்கு நாங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதற்கு ஈடுகொடுக்கமுடியாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். தேர்தலில் ஆசனங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக தேர்தல் காலங்களில் வெளியேறியிருக்கிறார்கள். கொள்கைப்பிடிப்பில் வெளியேறுவதெனில் தேர்தல் காலத்தில் வெளியேறாமல் வேறு நேரத்தில் வெளியேறிருக்கலாம். தேர்தல் காலங்களில் வெளியேறுவர்களை குறித்து மக்களுக்கு அவதானம் இருக்கின்றது. அதனை நாம் மக்களுக்கு சொல்லத் தேவையில்லை. அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கருத தேவையில்லை என தெரிவித்தார். https://www.battinews.com/2024/10/blog-post_756.html
-
பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்
தேசியத்தில் அசலும் போலியும்! October 14, 2024 போலித் தேசியவாதிகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை கட்சியின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்திருக்கின்றார். இது போலி – இது அசல் என்பதை எவ்வாறு வரையறுப்பது- யார் வரையறுப்பது – எப்படி வரையறுப்பது? இந்தக் கேள்விகளுக்கு பதிலிருந்தால் மட்டும்தான் எது போலி – எது அசல் என்பதை ஒருவர் அறிந்து கொள்ள முடியும்? ஒரு குறிப்பிட்ட சூழலில் சிலர் இணைந்து பணியாற்றுகின்றனர். அவ்வாறு பணியாற்றுகின்றபோது, அவர்கள் அனைவருமே தேசியவாதிகளாகவே தங்களை முன்னிறுத்திக் கொள்கின்றனர். அவர்கள் சில காரணங்களால் பிரிந்துவிடும் சந்தர்ப்பத்தில் திடீரென்று ஒருவரை மற்றவர் போலித் தேசியவாதி என்கிறார் – இதன் மூலம் தானே சரியானவன் என்கிறார். நேற்றுத் தேசியவாதிகளாக தெரிந்தவர்கள் திடீரென்று எவ்வாறு போலித் தேசியவாதிகளாக மாற்றமடைய முடியும்? உண்மையில், தமிழ் சூழலில் இடம்பெறும் தேசியம் பற்றிய உரையாடல்கள் சலிப்பூட்டுபவர்களாகவே இருக்கின்றன. தேர்தல் காலத்தில் தேசியம் என்பதும் பின்னர் அடுத்த தேர்தல் வரையில் அமைதியாக இருப்பதும்தானா – தேசியம் பற்றிய கரிசனை என்னும் கேள்வி எழுகின்றது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் பரவலான நம்பிக்கை நிலவியது. ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக் கிட்டியது. தமிழ் மக்கள் பொதுச் சபை என்னும் அடிப்படையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால் வடக்கு, கிழக்கின் அதிக ஆசனங்களை கைப்பற்றும் அமைப்பாகத் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு வெளிப்பட்டிருக்கும். ஆனால், ஒரு சில சிவில் சமூகக் குழுக்களின் அரசியல் அறியாமையின் காரணமாக நிலைமைகள் சில தினங்களிலேயே தலைகீழானது. இதன் விளைவாக, தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாக பயணிக்கும் நம்பிக்கையுடனிருந்தவர்கள் சிதற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் பொ.ஐங்கரநேசனும் ஒருவர். அவர் இப்போது போலித் தேசிய வாதிகளை நிராகரிக்குமாறு கூறுகின்றார். நேற்று வரையில் தான் யாரோடு இணைந்து செயல்பட்டாரோ அவர்களை நோக் கியே கல்லெறிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். இதுதான் தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் இடம்பெறும் சிக்கலான உரையாடல். கடந்த பதினைந்து வருடங்களாக இதுதான் நடக்கின்றது. ஐங்கரநேசன் போன்றவர்களை இவ்வாறான நிலைக்கு தள்ளிவிட்டமைக்கான பொறுப்பை தமிழ் மக்கள் பொதுச் சபை என்னும் பெயரில் ஒன்றுபட்ட சிவில் சமூகக் குழுக்களும் அவர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த புத்திஜீவிகளுமே காரணமாவர். ஆனால், இன்றுவரையில் அவர்கள் தங்களின் பொறுப்பின்மைக்கு இதுவரையில் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாடு தங்களுக்கு உண்டு என்று கூட உணராமல் இருப்பதுதான் தவறானது. https://eelanadu.lk/தேசியத்தில்-அசலும்-போலிய/
-
பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் தமிழரசுக் கட்சி! யாழ்.நீதிமன்றில் மீண்டுமொரு வழக்கு
பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் தமிழரசுக் கட்சி! யாழ்.நீதிமன்றில் மீண்டுமொரு வழக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிராளிகளாக, இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் மற்றும் சேவியர் குலநாயகம் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்போது, வழக்கை தொடர்ந்துள்ள மார்க்கண்டு நடராசா முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன, 1 முதல் 3 வரையான எதிராளிகள் 27.01.2024இற்குப் பின்னராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டியமையும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்புக்கு முரணானவை என்ற வகையில் வெற்றும் வெறிதானவையும் என்ற கட்டளைக்கும் தீர்ப்புக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். https://newuthayan.com/article/பெரும்_நெருக்கடிக்குள்_சிக்கும்_தமிழரசுக்_கட்சி!_யாழ்.நீதிமன்றில்_மீண்டுமொரு_வழக்கு
-
வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
வணக்கம் சின்னக்குட்டியர்! கண்டு கனகாலம்! இதுவும் நீங்கள்தானே?👇🏿 https://yarl.com/forum3/profile/1456-sinnakuddy/
-
பதவி விலகுவதாக ஹிருணிகா அறிவிப்பு
பதவி விலகுவதாக ஹிருணிகா அறிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். ஆனாலும் கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் பணியாற்றுவதாகவும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் விரக்தி ஏற்பட்டதா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். எவ்வாறாயினும்,திர்வரும் தேர்தலில் பொது மக்கள் தன்னை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்வார்கள் என நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய மக்கள் கூட்டணின் சார்பில் ஹிருணிக்கா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். https://oruvan.com/sri-lanka/2024/10/13/hirunika-resigns-from-sjb-womens-organization-post
-
தமிழரசின் பித்தலாட்டங்களுக்கு நவம்பர் 14 தீர்ப்பு - சபா குகதாஸ் காட்டம்!
தமிழரசின் பித்தலாட்டங்களுக்கு நவம்பர் 14 தீர்ப்பு - சபா குகதாஸ் காட்டம்! விடுதலைப் புலிகளின் தியாகத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009 ஆண்டின் பின்னர் தமிழ் மக்கள் சார்பில் நியாயமான அரசியல் தீர்மானங்களை எடுக்காது தமிழ்த் தேசிய அபிலாசைகளை பலவீனப்படுத்தி கூட்டுநாடாளுமன்ற பிரதிநித்தித்துவத்தை சிதைத்து 2023 ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து 2024 ஆம் ஆண்டில் பல மிதவாத தலைவர்களதும் பொது மக்களதும் அர்ப்பணிப்பில் வளர்க்கப்பட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பல துண்டுகளாக உடைத்து ஒற்றுமை என்ற இலக்கை சிதைத்துள்ளனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த கால தென்னிலங்கையின் அரச நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கு சாவு மணி அடித்துள்ளனர் தமிழ் அரசுக் கட்சியினர். தாயகத்தில் ஒற்றுமையை பலவீனப் படுத்திய சமநேரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேச நீதி வேண்டிய போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் வகையில் விடுதலைப் புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவைக்கு அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பலவீனப்படுத்தியுள்ளனர். தமிழினத்தின் ஒற்றுமை மற்றும் நீதிப் பொறிமுறையை சிதைத்து விட்டு சுயலாப நோக்கில் போலித் தேசியம் பேசி மக்களை மீண்டும் ஏமாற்ற தயாராகும் தமிழ் அரசுக் கட்சிக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நவம்பர் 14 திகதி தீர்ப்பு வழங்குவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. (ப) https://newuthayan.com/article/தமிழரசின்_பித்தலாட்டங்களுக்கு_நவம்பர்_14__தீர்ப்பு -_சபா_குகதாஸ்_காட்டம்!
-
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி தமிழரசு ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடவில்லை என்பதால் வேட்பாளர் தெரிவில் நீக்கினார்கள் - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்! தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு சலாம் போடாத காரணத்தினாலும் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட விடாமல் தடுத்தார்கள் எனவும் தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை செயலாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில், தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் எனக் கூறுபவர் தமிழரசு கட்சியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பெண்களை தேடினோம் பலரும் பின்னடிக்கிறார்கள் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டார். அவரது கருத்தை நான் முற்றாக மறுக்கிறேன் தமிழரசு கட்சியில் ஆளுமை மிக்க பெண்கள் இருக்கும்போது எங்கோ எல்லாம் தேடி இரு பெண்களைப் பிடித்து வந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இறக்கி உள்ளனர். தமிழரசு கட்சியில் இருக்கும் என்னைப் போன்ற பெண்கள் ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடும் பெண்களாகவோ அல்லது தலையாட்டும் பெண்களாகவோ இருக்காத காரணத்தினால் எம்மை தேர்தலில் நிறுத்தவில்லை. நான் முப்பது வருடங்களுக்கு மேலாக தனியார் காப்புறுத்துறையில் பல பதவி நிலைகளை வசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளையில் பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு பதவி நிலைகளை வகித்தவள். தமிழரசு கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாத நிலையில் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி விக்னேஸ்வரனே தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணியில் மான் சின்னத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறேன். தமிழரசு கட்சியினுடைய தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஆளுமை உள்ள பலரை தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரேரித்த நிலையில் அது நடைபெறவில்லை அதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினேன் என வெளிப்படையாக பேசி இருந்தார். ஒரு தலைவரால் கட்சியில் செயல்பட முடியாத அளவுக்கு ஒரு சிலரின் செயற்பாடு அத்து மீறிய நிலையில் அந்தக் கட்சிக்குள் இருப்பது தவறு என நினைத்து என்னைப் போன்ற பலர் வெளியேறினர். தமிழ் தேசிய உணர்வுடன் தமிழரசு கட்சிக்குள் பயணித்தவர்கள் கட்சிக்குள் இடம்பெறும் விரும்பத்தகாத செயற்பாடுகள் காரணமாக கட்சியை இருந்து விலகுவதாக எழுத்து மூலம் கடிதங்களை அனுப்பி உள்ளனர். அது மட்டுமல்லாது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தமிழரசு கட்சியிலிருந்து விலகுவதற்கான தீர்மானங்களை எடுத்த வருகின்றனர். ஆகவே தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான கட்சியாக இனியும் செயல்பட முடியாத நிலையில் தமிழரசு கட்சியின் கொள்கைகளை மாற்றியவர்கள் நிச்சயம் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/சலாம்_போடாததால் வேட்பாளர்_தெரிவிலிருந்து_நீக்கம்!
-
பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்
பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம் adminOctober 13, 2024 மக்கள் நாணயமானவர்களுக்கும், கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக உழைப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுக்கட்டமைப்பை சேர்ந்த நிலாந்தன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலை கையாண்ட போன்று, மற்றைய தேர்தல்களை கையாள முடியாததால் நாடாளுமன்ற தேர்தலில் விலகி இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் பாவித்த சங்கு சின்னத்தை பாவிக்க வேண்டாம் என கோரினோம். கட்சிகள் விரும்பி இருந்தால் சங்கு சின்னத்தை எடுக்காது இருந்து இருக்கலாம். அதனையும் மீறி எடுத்துள்ளார்கள். சங்கு சின்னத்திற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும், பொது கட்டமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழ் மக்கள் பேரவையின் கூர்ப்பாகவே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும். பொதுச் சபை அடுத்த கூர்ப்புக்கு போன பின்னரே தேர்தல்களை எதிர்கொள்ள முடியும். தமிழ் மக்கள் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தலில் தேச திரட்சியை எதிர்பார்த்து, அதில் வெற்றியும் பெற்றோம். அது சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புடன் மீள சிதறியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பலம் தமிழ் மக்கள் பொதுச்சபையிடம் இல்லாததால், அதில் இருந்து விலகி இருக்கிறோம். எனவே மக்கள் நாணயமானவர்களுக்கும் கறைபடியாதவர்களுக்கும் தேச திரட்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். சங்கு சின்னம் புனிதமானது இல்லை. அதற்கு யாரும் உரிமை கோர முடியாது. அது ஒரு பொது நிலைப்பாட்டிற்கான குறீயிடு. பொதுக்கட்டமைப்பில் இருந்த பலர் வெளியில் நிற்கும் போது சிலர் மட்டும் அதனை பயன்படுத்துவது அறமில்லை. சங்கு சின்னத்திற்கு, நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுபவர்கள் மட்டும் உழைக்கவில்லை. பலரின் உழைப்பு அதில் உண்டு. தேர்தல் பிரச்சாரத்திற்கு பலர் முன்னரங்கில் வந்து உழைக்காமல் பின்னின்று உழைத்தவர்களும் உண்டு. தேச திரட்சியை உருவாக்க முயன்று வெற்றி கண்டு சில நாட்களில் அது சிதறுண்டு போயுள்ளது. அதற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம். அத்துடன் பொதுக்கட்டமை தற்போது இல்லை என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/207468/
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….?
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….? October 13, 2024 — அழகு குணசீலன் — மலிந்தால் எல்லாம் சந்தைக்கு வரும் என்று சொல்வார்கள். அதுதான் தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய போலி அரசியலுக்கு நடந்திருக்கிறது. சகல தமிழ்த்தேசிய போலிகளும் தனித்தும், கூட்டாகவும் கொள்ளி கொத்துவது போன்று கொத்து…கொத்து…எனக் கொத்தி குறுக்காகவும், நெடுக்காகவும் பிளந்து தமிழரசுக்கு கொள்ளி வைக்கும் நிலைக்கு கொண்டு வந்து சந்திச்சந்தையில் விட்டிருக்கிறார்கள். ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பிரிந்த பழைய கதையை விடுவோம். அதற்கு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட ஒரு நியாயமான காரணம் வெளியில் சொல்லுவதற்கு இருந்தது. அண்மைய கடந்த 20 ஆண்டுகளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தில் இருந்து பார்த்தால் புலிகள் இருக்கும் வரை அவர்களின் அனைத்து அடாவடித்தனங்களையும் தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தியவர்கள் தமிழரசுக்கட்சி/தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர். அறவழிப் போராட்டம் தோற்றது அதனால் ஆயுதப்போராட்டம் என்றார்கள். அதுவும் முள்ளிவாய்க்காலில் முடிந்த பின்னர். போராட்டம் ஓயாது அதன் வழிமுறைகள்தான் மாறும் என்று பாராளுமன்ற அரசியலுக்கு திரும்புகிறோம் என்று கூறினார்கள். அந்த வழியில் இதுவரை ஒரு எள்ளளவும் சாதித்ததில்லை. ஒன்றை மட்டும் கின்னஸ் சாதனையாகச் சொல்லலாம், அதுதான் தமிழ்த்தேசிய கட்சி அரசியலில் பிரிந்து, கட்சிக்குள் பிரிந்து சாதனை படைத்திருப்பது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கதிரைக்கணக்கும், கனவும் எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது. தமிழ்தேசிய ஊடகவியலாளர்கள் சிலர் மனனம் செய்து ஆரம்பப்பள்ளி சிறுபிள்ளைகள் போன்று வாத்தியாருக்கு முன்னால் ஒப்புவித்த “ஊடகப்பாணி” தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழர்திரட்சி, தமிழ்தேசிய திரட்சி, தேசத்தின் திரட்சி , அரசற்ற மக்கள், தேசியத்தை கட்டி எழுப்பதல் போன்ற மாயமந்திர வார்த்தைகள் அடிபட்டு போய்விட்டன. ஆனாலும் வீழ்ந்தோம் என்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பொதுவேட்பாளரின் முற்றுமுழுதான தோல்விக்கு வியாக்கியானம் வேறு சொல்கிறார்கள். உண்மையும், நேர்மையும், சுய விமர்சனமும் அற்ற இவர்களின் செயற்பாடுகளும் தமிழ்த்தேசிய அரசியலின் இன்றைய நிலைக்கு காரணம். சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் சபை, தமிழ்த்தேசிய பொதுக் கூட்டமைப்பு, P2P, காவி, வெள்ளை மேலங்கி சாமியார்கள் எல்லோரும் தமிழரசுக்கட்சியின் இன்றைய அவலத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள். பௌத்த பிக்குகள் அரசியலில் தலையிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டிக்கொண்டு தாங்களும் தங்கள் இருப்பை காப்பாற்ற மத ஒழுக்க நெறிகளுக்கு மாறாக அரசியல் செய்கிறார்கள் இந்த தமிழர் மத ஆசாமிகள். கிறிஸ்தவ மதத்தையே தமிழ், சிங்களம் என்று பதவிக்காக பிரித்தவர்கள் இவர்கள். அன்று மக்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு பலி கொடுத்தவர்கள். இன்று போலித்தேசியத்தை வழிநடத்தி, கட்சிகளை சிதைத்து, தென்னிலங்கை கட்சிகள் வடக்கு, கிழக்கில் குடியேற வீட்டுக்கதவை திறந்து விட்டிருக்கிறார்கள் . தமிழரசுக்கட்சி சின்னா பின்னமாகப் போனதற்கு முன்னாள் பா.உ. சுமந்திரன் மட்டும்தான் காரணமா? இல்லை, புலிகளின் தோல்விக்கு பின்னரான ஒட்டு மொத்த அரசியலும் வெறும் கதிரை அரசியலாக மாறியது காரணமா? உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது “பொறிமுறை” என்ற சுமந்திரனின் வார்த்தை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாகக் காரணமானது. திருகோணமலை கட்சி மாநாட்டில் இடம்பெற்ற தலைவர் தேர்வு சுமந்திரன், சிறிதரன் என்ற இரு அணிகளை உருவாக்கியது. பொறிமுறை பற்றி பேசிய அதே வாய்கள் தலைவர் தேர்வில் “ஜனநாயக வாக்கெடுப்பு” என்றன. ஆனால் நடந்தவை அனைத்தும் ஜனநாயகத்திற்கு முரணானவை. இறுதியில் இந்த பதவிச்சண்டை தமிழரசுக்கட்சியை குற்றக் கூண்டில் ஏற்றியிருக்கிறது. ஆக முதலில் ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளிட்ட ஒரு அணியும், கஜேந்திரகுமார் அணியும் பிரிந்தன. இது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்ட இரட்டைக்குட்டிகள். பின்னர் விக்கினேஸ்வரன் பிரிந்து தமிழ் மக்கள் முன்னணியை அமைத்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்ட அடுத்த குட்டி இது. குத்து விளக்கில் இருந்து சங்காக மாறியிருப்பது கூட்டமைப்பு போட்ட நான்காவது குட்டி. ஜனாதிபதி தேர்தல் வந்தது. வந்ததும் வந்தார் பொதுவேட்பாளர், அவருக்கு பின்னால் நின்றது தமிழ்ப்பொது அமைப்பு. இது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான போட்டியின் பிரதிபலிப்பு. சம்பந்தர் -சுமந்திரன் அணி பொதுவேட்பாளரை நிராகரித்தது. சிறிதரன் அணி பொதுவேட்பாளரை ஆதரித்தது. மாவை எல்லாப்பாட்டுக்கும் பாடினார். மண்கௌவியும், மீசையில் மண்ஒட்டவில்லை என்று ஊடகச்சந்திப்புக்களில் மக்களுக்கு கதை விடுகின்ற தமிழ் பொதுக்கூட்டமைப்பும், ஊடகவியலாளர்களும், பொதுவேட்பாளரும் கூட தமிழரசின் தற்போதைய உடைவுக்கு காரணமானவர்கள். பொதுவேட்பாளர் விடயம் “கௌரவப்பிரச்சினையாகி” சுமந்திரன் அணியும், பொதுஅமைப்பு, சிறிதரன் அணியும் விட்டுக்கொடுக்காததினால் ஏற்பட்ட விரிசல் அதிகரித்து வேட்பாளர் தேர்வில் பிரதிபலித்துள்ளது. கே.வி. தவராஜா தலைமையிலான தற்போதைய வெளியேற்றம் -ஜனநாயக தமிழரசுக்கூட்டமைப்பின் தோற்றம். இது தமிழரசு/ தமிழ்த்தேசிய கூட்டமைப்பு போட்ட ஐந்தாவது குட்டி. இதற்கு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் நியமனம் உடனடிக்காரணமாக அமைந்தாலும் இந்த முரண்பாடு நீண்ட கால பின்னணியைக் கொண்டது. தமிழரசுக்கட்சிக்குள் ஒரு குழுவும் அந்த குழுவின் வாதங்களும் முன்னுரிமை பெற்று இருந்தது வெளிப்படை. இதற்கு இரா.சம்பந்தர் போனாலும் போவேன் ஆனால் பதவியை கட்டிக்கொண்டுதான் போவேன் என்று கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை சவப்பெட்டிக்குள் போகும்வரை கட்டிப்பிடித்து கொண்டு படுத்த படுக்கையாய்க்கிடந்ததும் ஒரு காரணம். சம்பந்தர் நினைத்ததைச் செய்துவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டார். தனக்கு பின்னர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இருக்காது, தலைமைத்துவமும் இருக்காது. தீர்க்கதரிசனம் மிக்க தமிழ்த்தேசிய தலைமை ஒன்றின் செயலா இது? தமிழரசுக்கட்சியின் இந்த நிலைக்கு சம்பந்தர் தான் முழுப்பொறுப்பு என்றால், செத்தவர் மீது பழியைப்போடுகிறான் என்று “கொடுக்குக்கட்டுவார்கள்”. எம்.ஏ. சுமந்திரன் அப்போது சம்பந்தரை இராஜினாமாச் செய்ய கோரியபோது அதற்கு எதிராக குரல் கொடுத்த மாவை, சிறிதரன், தவராஜா, யோகேஸ்வரன்,சிறிநேசன், சிவஞானம், துரைராசசிங்கம் …. போன்ற பலரும், மௌன விரதம் பூண்டவர்களும் தமிழரசின் இன்றைய நிலைக்கும் பொறுப்பானவர்கள். இவர்கள் சம்பந்தர் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை செயற்றிறனுடன் செய்ய முடியாது என்று தெரிந்தும் முதுமை, பாரம்பரியம், மரியாதை போன்ற அரசியல் சாரா மனிதாபிமான வார்த்தைகளை பயன்படுத்தி வெறுமனே சுமந்திரன் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியினால், சுமந்திரனுக்கு அந்த பதவி கிடைத்துவிடும் என்ற அச்சத்தினால் எதிர்த்தவர்கள். இந்த சுய இலாப நட்ட கணக்கு தான் தமிழரசை இன்றைய நிலைக்கும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த நாடுகளில் அண்மைக்காலமாக ஒரு விடயத்தை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. அதுதான் புலி எதிர்ப்பு முன்னாள் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சுமந்திரனின் நிலைப்பாட்டை ஆதரிப்பதும், புலிகளின் கடும்போக்காளர்கள் சுமந்திரனை எதிர்ப்பதுமாகும். புலிகளால் துரோகி பட்டம் சூட்டப்பட்டு, தடைசெய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் சுமந்திரனை ஆதரிக்கிறார்கள். புலிகளின் தேசபக்த புனிதர்கள் சுமந்திரனை எதிர்க்கிறார்கள். ஆதரிப்பதற்கு ஒரு காரணம் சுமந்திரன் புலிகளை பயங்கரவாத அமைப்பாக கருதுவதும், இனவழிப்பை கேள்விக்குட்படுத்துவதும், கொழும்பு, டெல்கி, சர்வதேசத்தோடு ஒத்தோடுவதுமாக இருக்க முடியும். தீவிர தமிழ்த்தேசிய டயஸ்போரா சுமந்திரனை விமர்சனம் செய்யலாம், சிறிதரன் போன்ற தேசபக்கர்களை கொண்டு சுமந்திரனுக்கு குறுக்கே நிறுத்தலாம், தேர்தலில் சுமந்திரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம் ஆனால் தீர்மானம் எடுக்கும் சக்தியாக இன்னும் சுமந்திரனே இருக்கிறார். சுமந்திரன் தன்னைச் சூழ ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கிவிட்டார். இதற்கு காரணம் தமிழரசுக்கட்சியின் பலவீனமான யாப்பு -நிர்வாகக்கட்டமைப்பும், ஒப்பீட்டளவில் சுமந்திரன்,சாணக்கியனை விடவும் எல்லாவகையிலும் பலவீனமான எம்.பி.க்களும் கட்சி முக்கியஸ்தர்களும். இவர்கள் “பட்டியாக” பின்னால் போகிறார்கள். கே.வி. தவராஜா கூட இவ்வளவு காலமும் செய்ய வேண்டியதை செய்யாமல் இப்போது வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதால் களத்தில் நிற்கிறார். ஆனால் காலம் கடந்து பிறந்த ஞானம் இது. சுமந்திரன் பஸ்சை கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக கோ பைலட் இன்றி தனியாக ஓட்டுகிறார். அப்போது விபத்து ஏற்படும் என்று தெரிந்தும் இவர்கள் அனைவரும் அந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்தவர்கள். இப்போது பஸ் அடிபட்டுக்கிடக்கிறது இறங்கி ஓடுகிறார்கள் . இருக்க சீற் இல்லையாம். மீண்டும் சீற் கிடைத்தால் இறங்கியவர்கள் அனைவரும் முண்டியடித்து ஏறத்தயங்க மாட்டார்கள். 2020 பாராளுமன்ற தேர்தலில் நடந்த சில நிகழ்வுகளுக்கு 2024 தேர்தல் வேட்பாளர் நியமனத்தால் பதிலளிக்கிறார் சுமந்திரன். 2020 ல் கொழும்பில் இருந்து தனக்கு வேண்டிய இரு பெண்களை வேட்பாளர்களாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் நியமிக்க சுமந்திரன் திட்டம் தீட்டினார். ஆனால் பல்வேறு தரப்பாலும் காட்டப்பட்ட எதிர்ப்பினால் அது தடைப்பட்டது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் காக்காவின் கடும் எதிர்ப்புக்கு சுமந்திரன் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஒரு இலட்சம் விருப்பு வாக்குகளை பெறுவேன் என்ற சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகளின் எதிர்ப்பிரச்சாரம் அரைவாசியாகக் குறைத்தது. 2020 யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சசிகலா ரவிராஜ் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். சுமந்திரனால் இதைத்தடுக்க முடியவில்லை. ஆனால் மட்டக்களப்பில் ஞா.சிறிநேசன், மா.உதயகுமார் ஆகியோரின் ஆதரவுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த மங்களா சங்கருக்கான நியமனவாய்ப்பை சுமந்திரனாலும்,சாணக்கியனாலும் தடுக்க முடிந்தது. வேறு வழியின்றி தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவில் தேர்தலில் பேட்டியிட்டார் மங்களா. இதே நிலைதான் இன்று சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளது. சுமந்தினால் தவிர்க்கப்பட்ட அவர் வேறு வழியின்றி சங்கு அணியில் போட்டியிடுகிறார். தவராஜா அணியினர் சற்று துரிதமாக செயற்பட்டிருந்தால் சசிகலாவின் சின்னம் சங்குக்குப்பதிலாக மாம்பழமாக இருந்திருக்கும். 2020 இல் தவராஜா கொழும்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் மனோகணேசனுடன் சுமந்திரனுக்கு இருந்த டீல் அதைத்தடுத்தது. இம்முறையும் அவர் யாழ்ப்பாணம் இல்லையேல் கொழும்பை விரும்பினார் என்று கூறப்படுகிறது. கொழும்பில் யாழ்ப்பாணம் போன்று ஒரு பாராளுமன்ற அங்கத்துவம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மனோ கணேசனின் தேர்வை அது கேள்விக்குள்ளாக்கும் என்பதால் அதுவும் ஒரு டீலில் கைவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பில் தமிழரசுக்கட்சி போட்டியிடும் என்று அறிவித்த சுமந்திரன் சஜீத்- மனோ – ஹக்கீம் கூட்டணிக்கு சார்பாக கொழும்பில் போட்டியிடும் முடிவைக் கைவிட்டார். கே.வி.தவராஜா தமிழ்த்தேசிய அரசியலில் 1970 களில் இருந்து ஈடுபாடுடையவர். கொழும்பு தமிழ் இளைஞர் பேரவையில் உமாமகேஸ்வரன், பால சிறிதரன், ஊர்மிளா காலத்தில் இருந்து சட்டக்கல்லூரியில் கற்கும்போதே செயற்பட்டவர். அப்படி இருந்தும் 2010 தேசியப்பட்டியலில் தமிழ்த்தேசிய போராட்ட இழப்போ,பங்களிப்போ இன்றி சம்பந்தரால் புலிகள் இல்லாத நிலையில் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர். சசிகலாவுக்கும் ஒரு போராட்டவரலாற்று தொடர்பு இருக்கிறது. யாழ்.பல்கலைக்கழகத்தில் புலிகளின் ஜனநாயக மறுப்புக்களை கண்டித்து ஒரு உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது. அன்றைய நிலையில் இதை புளோட் முன்னின்று நடாத்தியது. உண்ணாவிரதத்தை குழப்பும் வகையில் புலிகள் உண்ணாவிரதம் இருந்த பல்கலைக்கழக மாணவிகளை கடத்தி இந்தியாவுக்கு கொண்டு சென்றனர். அன்று உண்ணாவிரதம் இருந்து சசிகலாவுடன் கடத்தப்பட்ட மற்றவர் மதிவதனி. இவர்தான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி. இந்த வரலாற்று நிகழ்வுகளையும், கடந்த கால தமிழ்த்தேசிய வரலாற்று சுவடுகளையும் மறுத்து செயற்படும் ஒருவராக சுமந்திரன் தொடர்ந்தும் செயற்படுவார். இந்த சுவடுகள் தனக்கு தடையாக அமையும் என்று அவர் கருதுகிறார். அதனால் தட்டவேண்டிய இடத்தில் தட்டி வழியை கிளியர் பண்ணுகிறார். ஆனாலும் தமிழரசு நிர்வாகம் சுமந்திரனுக்கு பின்னாலேயே நிற்கிறது. தமிழரசை வருகின்ற தேர்தலில் மக்கள் சுமந்திரனிடம் இருந்து மீட்கப்போகிறார்களா ………? அடவு வைக்கப்போகிறார்களா…? https://arangamnews.com/?p=11330
-
அநுரகுமார அலை என்ன செய்யும்?
அநுரகுமார அலை என்ன செய்யும்? October 13, 2024 — கருணாகரன் — அனுரகுமார திசநாயக்கவின் வெற்றி, புதிய அலையொன்றை அல்லது புதிய சூழலொன்றை உருவாக்கியுள்ளது. அது சிங்களம், முஸ்லிம், தமிழ், மலையகம் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் நாடுமுழுவதிலும் உருவாகியிருக்கும் புதிய அலையாகும். இதனால் சிங்களத் தேசியம், தமிழ்த்தேசியம், முஸ்லிம்தேசியம், மலையகத் தேசியம் என்பவற்றைக் கடந்து பெருவாரியான மக்கள் NPP எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரளும் நிலை உருவாகியிருக்கிறது. சரியாகச் சொல்வதென்றால், அனுரவின் பக்கமாகத் திரள்கிறது என்பதே சரியாகும். ஏனெனில் இந்த அலையோ, இந்தத் திரட்சியோ JVP அல்லது NPP என்பவற்றின் சித்தாந்தத்தைப் புரிந்து கொண்டு எழுந்ததில்லை. இதுவரையிலான அரசியற் செல்நெறியில் ஒரு மாற்றம் வேண்டும், அதை அனுர தரப்புச் செயற்படுத்தும், அதற்கொரு வாய்ப்பைக் கொடுத்துப் பார்ப்போம் என்ற நம்பிக்கையினால் ஏற்பட்டிருப்பது. இதையே பெரும்பாலான அனுர ஆதரவாளர்கள் வெளிப்படையாகக் கூறுகிறார்கள். ஜனாதிபதித் தேர்தலின்போது “நாடு அனுரவோடு” என்ற வாக்கியத்தைக் கொண்ட சுவரொட்டிகள் நாடெங்கும் காணப்பட்டன. அது உண்மையோ என்று யோசிக்கக் கூடிய அளவுக்கே தற்போதைய சூழல் உள்ளது. வரலாறு சிலவேளை இப்படியான வரலாற்றுப் பாத்திரங்களின் வழியாக அதிசயங்களை நிகழ்த்துவதுண்டு. “அனுர” என்ற இந்த வரலாற்றுப் பாத்திரம், அப்படியான அதிசயத்தை உருவாக்குகிறது போலும். அல்லது வரலாற்றுப் பாத்திரமாக அனுர மாறவும் கூடும். இந்த மதிப்பீட்டுக்கு நாம் இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும். அனுரவின் மூலம் தேசிய மக்கள் சக்தி (NPP) க்கு இதுவரையில்லாத அளவுக்குப் பேராதரவு பெருகியிருக்கிறது என்பது உண்மையே! இன்னொரு நிலையில் இது தமிழ், முஸ்லிம், மலையக, சிங்களத் தேசியங்கள் என்ற அடையாளக் கோடுகளைத் தகர்த்து, ஐக்கிய இலங்கை என்ற பொதுப் பரப்பிற்குள் சொல்லாமற் கொள்ளாமல் எல்லோரையும் இழுத்து விடப்பார்க்கிறது. இது, இதுவரையிலும் ஆட்சியிலிருந்தோர் ஐக்கிய இலங்கைக்குள் – ஒன்று பட்ட இலங்கைக்குள் – அனைத்துத் தேசிய இனங்களையும் கட்டிப்போடுவது எனச் சூழ்ச்சிகளின் மூலம் மேற்கொண்ட முயற்சிகளை விட இலகுவாக அனுர விக்கெற்றுகளை வீழ்த்தியிருக்கிறார் எனலாம். இதை விளங்கியோ விளங்காமலோ தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்கள் அனுர அலையில் உள்ளீர்க்கப்படுகின்றன. இதற்கு இன்னொரு காரணம், தெற்கிலே உள்ள ஏனைய அரசியற் சக்திகள் தோற்றதைப்போல தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் தோற்றுப் போனதுமாகும். அதாவது அவற்றின் நம்பகத்தன்மை குறைவடைந்தமையாகும். இதனால் தற்போது உருவாகியிருக்கும் NPP க்கு ஆதரவான அலையைக் குறித்தோ அல்லது NPP ஐப் பற்றியோ யாரும் விமர்சிக்கவும் முடியாது. மதம், அரசியல், கலை போன்றவற்றில் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, அது தீவிரப் பற்றாக வளர்ச்சியடைந்து பேரபிமானமாக மாறிவிடுவதுண்டு. இந்த ஈர்ப்பு அமைப்புகள், கட்சிகளிடம் மட்டுமல்ல, தனி நபர்களில் மீதும் உருவாகும். அப்படி உருவாகி விட்டால் அதற்குப் பிறகு அந்த அமைப்பையோ, அந்தத் தலைவரையோ யாரும் கேள்வி கேட்கவும் முடியாது, விமர்சிக்கவும் முடியாது. அப்படி விமர்சித்தால் அல்லது கேள்வி கேட்டால், விமர்சிப்போரும் கேள்வி கேட்போரும் துரோகிகளாகவே நோக்கப்படுவர். இப்படியான ஒரு நிலை இப்போது உருவாகியுள்ளது. அந்தளவுக்கு NPP மீதான பேரபிமானம் சகல தரப்பு மக்களிடமும் மேலோங்கியுள்ளது. இந்த அபிமானம் நாட்டிற்குள் மட்டுமல்ல, நாட்டுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையர்களிடத்திலும் பரவியுள்ளது. இதனால் பாராளுமன்றத் தேர்தலில் NPP ஐ வெற்றியடைய வைப்பதற்குக் களப்பணியாற்றுவதற்கென்று இலங்கைக்குப் பயணித்துக் கொண்டுள்ளனர். இந்தப் பேரார்வத்துக்குக் காரணம், இலங்கையில் மாற்றம் நிகழ்த்தப்பட வேண்டும். புதிய அரசியற் பண்பாடொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற விருப்பமேயாகும். இந்த விருப்பம் நீண்ட காலமாகப் பலருடைய மனதிலும் நிறைவேறாமலிருந்த மாபெரும் கனவாகும். அந்தக் கனவை நனவாக்குவதற்கான வரலாற்றுத் தருணம் இதுவெனப் பலரும் கருதுகின்றனர். ஆகவேதான் அதற்கான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று செயலாற்ற விளைகின்றனர். இந்த நிலையை உருவாக்கியது கடந்த காலத்தில் ஆட்சியதிகாரத்திலிருந்த தரப்புகளேயாகும். அவற்றின் கூட்டுத் தவறுகளே “அரகலய” (எழுச்சி). அதுவே NPP க்கான மாபெரும் ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது. இப்போது NPP எதிர்பாத்திராத அளவுக்கு இந்த அலை உச்சமடைகிறது. NPP சும்மா இருக்கவே வேலை நடக்கிறது என்று சொல்வார்களல்லவா, அப்படிச் சொல்லுமளவுக்கான நிலைமை – சூழல் – NPP க்குச் சாதகமாக உருவாகியுள்ளது. பேராளுமைகள் அல்லது வரலாற்றுச் சூழலைக் கையாளத் தெரிந்த ஆற்றலர்கள் எழுச்சியடையும்போது இவ்வாறான “மாற்றச் சூழல்” (Condition of Change)அமைவதுண்டு. இது எப்படி அமையும் என்பது NPP யின் அடுத்த கட்ட நகர்வைப் பொறுத்தே தெரியும். ஏனென்றால், NPP யோ அனுரவோ புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. தேர்தல் ஜனநாயக விதிமுறைகளின் வழியாகவே – சட்ட வரம்புக்குட்பட்டே (Legal definition) – ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆகவே அந்த விதிகளின்படி, அந்த வரையறைகளுக்குட்பட்டே மாற்றங்களை நிகழ்த்த முடியும். அதற்குக் கால அவகாசமும் வரையறுக்கப்பட்ட மட்டுப்பாடுகளும் இருக்கும். ஆனாலும் தமக்குக் கிடைத்த வரலாற்றுத் தருணத்தை அனுரவும் NPP யும் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்போகின்றன? எவ்வாறு மதிப்பைக் கூட்டப்போகின்றன என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். இதற்கு அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற வேண்டும். இப்போது அனுர தலைமையிலான மூவர் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் அதிரடியாகச் சில வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றக் கலைப்பு, அமைச்சரவை நியமனம், அமைச்சுச் செயலாளர்கள் நியமனம், இழுபறியிலிருந்து பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம், சுற்றுலாப்பயணிகளுக்கு விசா பெறுவதில் இருந்த நெருக்கடிகளை மாற்றியமைத்தமை, அநாவசியச் செலவுகளைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள், மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எரிபொருள் விலைக்குறைப்பு, உர மானியம் போன்றவற்றை வழங்குவதற்கான ஏற்பாடு போன்றவற்றைப் புதிய அமைச்சரவை செய்துள்ளது. இது NPP க்கு மேலும் ஒரு சிறிய கவர்ச்சியையும் நம்பிக்கையையும் உண்டாக்கியிருக்கிறது. ஆனாலும் எதிர்பார்க்கப்பட்ட ஊழல்வாதிளின் மீதான நடவடிக்கை, ஈஸ்டர் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகளைக் கண்டறிவதும் நடவடிக்கை எடுப்பதும் போன்றவற்றில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. அதைப்போல வடக்குக் கிழக்கில் உள்ள படைத்தரப்பின் உயர்பாதுகாப்பு வலயத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல் போன்றவற்றிலும் எந்த மாற்றமும் முன்னேற்றமும் நிகழவில்லை. அதைப்பற்றி அனுர – NPP யின் நிலைப்பாடு என்னவென்றும் தெரியாது. ஏனென்றால் அதைப்பற்றிய பேச்சுகளே அந்தத் தரப்பின் வாயிலிருந்து வரவில்லை. பதிலாக பௌத்த பீடங்களிடம் ஆசி வாங்கும் அனுசரணையைப் பெறும் காட்சிகளே வெளியாகின்றன. இது அனுரவும் NPP யும் மக்களை முன்னிலைப்படுத்துவதை விடவும் பௌத்த பீடங்களைக் குளிர்ச்சியடையச் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் பிரயத்தனத்தைக் காட்டுகிறது. அப்படியானால் மாற்றம் எந்த அடிப்படையில் நிகழப்போகிறது? அதனுடைய எல்லைகள் எப்படியாக இருக்கப்போகின்றன என்ற ஒரு தெளிவான காட்சியை இப்பொழுதே நாம் உணரக் கூடியதாக உள்ளது. ஆனாலும் இதையெல்லாம் கடந்து இப்பொழுது பலருடைய வாயிலும் உச்சரிக்கப்படும் பெயராக அனுரகுமார திசநாயக்க மாறியிருக்கிறார். “AKD” என்று அனுரவைச் செல்லமாக – உரிமையோடு அழைக்கிறார்கள். தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரைப்போல அல்லது நெருங்கிய நண்பரைப்போல அனுரவைப் பற்றி நெருக்கமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் அவருடைய Profile ஐ தேடி அறிந்து கொண்டிருக்கிறார்கள். அனுரவின் வீடிருக்கும் “தம்பேத்கம” என்ற சிறிய – ஆழக் கிராமத்தை நோக்கி YouTuper’s குவிகின்றனர். சமூக வலைத்தளங்களில் அனுரவின் படங்களும் நிகழ் காட்சிகளும் செய்திகளுமே நிறைந்து கிடக்கின்றன. ஒரு YouTupe காட்சியில் அவருக்கு MakeUp போடுகின்ற காட்சியைக் கூடப் பார்க்கக் கூடியதாக இருந்தது. சினிமாக் கதாநாயகர்களுக்கிருக்கும் கவர்ச்சிக்கு நிகரானது இது. தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் ஜனாதிபதியாகியது மட்டுமல்ல, ஒரே நாளில் பெரியதொரு கதாநாயகனாகவே அனுரகுமார திசநாயக்கவின் பிம்பம் மேலெழுந்துள்ளது. ஆம், இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக உச்சமான செல்வாக்கைப் பெற்ற தலைவராகியிருக்கிறார் அனுர. இப்படி அனுர புகழடைந்த அளவுக்கு அவருடைய தேசிய மக்கள் சக்தி அறிமுகமாகிருக்கிறதா? புகழடைந்திருக்கிறதா? அதனுடைய கொள்கை தெளிவாக்கப்பட்டிருக்கிறதா? என்றால், இன்னுமில்லையென்றே சொல்ல வேண்டும். இன்னும் அதற்கு நாடு முழுவதிலும் கட்டமைக்கப்பட்ட செல்வாக்கு மண்டலம் உருவாகவில்லை. இன்னும் அதைப்பற்றிய தெளிவான சித்திரம் பலருக்கும் தெரியாது. ஆக இதொரு திடீர் வீக்கமாகவே உள்ளது. என்னதான் ஆதரவு அலை NPP க்கு உருவாகியிருந்தாலும் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு அது பொருத்தமான ஆட்களை தேடிக்கொண்டேயிருக்க வேண்டிய நிலை. இதனால் வடக்குக் கிழக்கிலும் மலையகத்திலும் அரசியலே என்னவென்று தெரியாதவர்களும் சில பிரமுகர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். தெற்கில் ஓரளவுக்குச் சமாளிக்கக் கூடியதாக இருந்தாலும் வடக்குக் கிழக்கில் தகுதியான ஆட்களைத் தேடுவதில் அதற்குப் பிரச்சினை உண்டு. இதனால் வடிகட்டலைச் செய்ய முடியாமல் போய் விட்டது NPP க்கு. ஆக அனுரவின் மூலம், அவருடைய வெற்றியின் வழியே இப்பொழுது தேசிய மக்கள் சக்தி (NPP) பரவலாக அறியப்பட்டு வருகிறது. அதாவது ஏற்கனவே அது பெற்றிருந்த அறிமுகப் பரப்பை விட இப்போழுது அதனுடைய பரப்பெல்லை விரிவடைந்துள்ளது என்பது உண்மையே. பலரும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு முற்படுகின்றனர். இதனால் அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அது எந்தளவுக்கு என்பதை இப்பொழுது சரியாக மதிப்பிட முடியாது விட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெறும் என்பது உறுதி. அதில் வடக்குக் கிழக்கு வாக்குகளும் சேரக் கூடிய சூழலுண்டு. இது வடக்குக் கிழக்கில் தமிழ்த்தேசியவாதச் சக்திகளைப் பின்னுக்குத் தள்ளக் கூடியதாக அமையும். ஆகவே NPP ஆட்சியை வலுப்படுத்தக் கூடிய நிலையை நோக்கி நகர்கிறது எனலாம். அப்படி அமைந்தால் அது எப்படியான நிலை இலங்கையில் உருவாகும்? என்ற கேள்வி முக்கியமானது. “வலுவான ஆதரவுத் தளம் இருந்தால்தான் NPP குறிப்பிட்டதைப்போல அல்லது திட்டமிட்டிருப்பதைப்போல மாற்றத்தை நோக்கிய முழுமையான ஆட்சியை வழங்க முடியும். மாற்று அரசியல் பண்பாடொன்று எழுச்சியடையும். ஊழல்வாதிகளின்மீது துணிந்து நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும். அப்படி அமையவில்லை என்றால், பலவீனமான அரசாங்கத்தினால் எதையும் செய்ய முடியாது போய்விடும். இழுபறிகளே தொடரும். அது இலங்கைக்கு நல்லதல்ல. பதிலாகப் பிராந்திய சக்திகளுக்கும் வல்லரசுகளுக்குமே (பிற சக்திகளுக்கு) மிக வாய்ப்பாகி விடும். இதை நோக்கியே இந்தியாவும் அமெரிக்காவும் காய்களை நகர்த்துகின்றன” என்பது ஒரு சாராருடைய கருத்து. இதில் உண்மையுண்டு. இப்போதே பிராந்திய சக்திகளும் சர்வதேச வல்லரசுகளும் அதைச் செய்யத் தொடங்கி விட்டன. இதற்கு மாற்றுப் பார்வையுமுண்டு. NPP க்குப் பேராதரவு கிடைக்குமாக இருந்தால் அது இரண்டு விதமாக நிலைமையை உருவாக்கும். ஒன்று, 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்குக் கிடைத்த பலத்தைப்போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தும். அதற்குப் பிறகு கேள்விக்கிடமில்லாத வகையில் அது தனக்கேற்ற வகையில் அனைத்துத் தீர்மானங்களையும் அனைத்துத்திட்டங்களையும் தனித்து முன்னெடுக்கும். அதை விமர்சிக்கவோ தவறெனில் தடுத்து நிறுத்தவோ பிற சக்திகளால் இயலாமற் போய் விடும். இதனால் ஜனநாயகச் சூழல் கெட்டுவிடும். NPP யின் வரலாறு என்பது ஜே.வி.பியினுடைய வரலாறாகும். ஜே.வி.பி என்பது ஆயுதம் தாங்கியதோர் அமைப்பு. ஆயுதம் தாங்கிய அமைப்பில் என்னதான் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசினாலும் அதற்கப்பால் அதற்குள் ஒரு மூடுண்ட நிலை எப்போதுமிருக்கும். ஜே.வி.வி ஆயுத அரசியலை விட்டுப் பல ஆண்டுகளாகினாலும் அதனிடத்தில் இன்னும் அந்தக் கூறுகள் நிறைய உண்டு. அதாவது ஆயுதமேந்திய இயக்கம் என்ற உள்ளுணர்வு. தன்னையே புனிதத் தரப்பாகக் கட்டமைத்துக்கொள்ளும் தன்மை. தாம் திட்டமிடுவதும் தீர்மானிப்பதுமே சரி. மற்றதெல்லாம் தவறு என்ற உணர்வு அவர்களிடம் எப்போதுமுண்டு. இதனால்தான் அது எவரோடும் கூட்டு வைத்துக் கொள்ளாமல் தனித்தே நிற்கிறது. தன்னைத்தூய்மையானதாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. இதெல்லாம் ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் தரப்பினருக்கு (கட்சியினருக்கு) பொருத்தமானதல்ல. ஆனாலும் இதைப் புரிந்து கொண்டு தம்மை விரித்துக் கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தியினால் முடியாதிருக்கிறது. இந்த நிலையைக் கடக்க வேண்டிய யதார்த்தை NPP எதிர்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வெளியே நின்று பேசுவது இலகு. ஆட்சியில் செயற்படுவது கடினம் என்ற உண்மையை NPP இப்பொழுது உணர வேண்டும். இதேவேளை இப்பொழுது நாட்டில் இரண்டு வகையான அரசியல் போக்கு உருவாகியுள்ளது. NPP யின் எழுச்சி அல்லது அலை. இந்தப் போக்கே இனிச் சில காலத்துக்குத் தொடரும். அடுத்த தேர்தலிலும் இந்த அடிப்படையிலான தேர்வே உண்டு. எப்படியென்றால் – ஊழல்வாதிகள் – நேர்மையானோர் சரியானவர்கள் – தப்பானவர்கள் நல்லவர்கள் – கெட்டவர்கள் கறுப்பு – வெள்ளை தனித்துத் தனித்துவமாக நிற்போர் – கூட்டு வைத்திருப்போர் கூட்டணிகள் என. இந்த எதிரொலிப்பு நாடு முழுவதிலும் பரவியுள்ளது. இதனால்தான் பல தலைவர்கள் தேர்தலிலேயே போட்டியிடாமலே ஒதுங்கியிருக்கின்றனர். மிஞ்சியோர் தேர்தல் மூலமாக ஓரங்கட்டப்படுவர். தமிழ்ப்பரப்பிலும் NPP யின் தாக்கத்தை உணர முடிகிறது. மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரன் போன்றோர் ஒதுங்கியதும் இந்தத் தாக்கத்தினால்தான். இப்போது தமிழ்த்தேசியக் கட்சிகளே NPP யைக் கண்டு அஞ்சுகின்றன. நிச்சயமாக பொதுத் தேர்தலில் இதனுடைய பிரதிபலிப்பைக் காணலாம். அடுத்த வரப்போகிற மாகாணசபை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் எப்படியான தெரிவை மக்கள் செய்யப்போகிறார்கள்? என்பதே இலங்கையின் – NPP யின் – அனுரவின் வெற்றி – தோல்வியை முழுதாகத் தீர்மானிக்கும். https://arangamnews.com/?p=11327
-
சங்கு சின்னமும் அரசியலில் அறமும்!
வாட்ஸப் குழுமம் ஒன்றில் எனது தாயக நண்பனுக்கும் அரியத்தாருக்கும் நடந்த உரையாடலில் இருந்து.. அரியம் வீட்டுக்கு புள்ளடி இடு என்று போட்ட பதிவு.. நண்பன்: *வீட்டுக்கு புள்ளடி இடு* என்று வந்திருக்க வேண்டுமா *வீட்டுக்கு புள்ளடி இடாதே* என்று வந்திருக்க வேண்டுமா. தயவுசெய்து சரியாக சொல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் சங்கு சின்னத்துக்கு ஊதினோம். இப்ப சங்குக்கு ஊதுறதா வீட்டுக்கு ஊதுறதா? அரியம்: சங்கு சின்னம் ஜனாதிபதி தமிழ் பொதுவேட்பாளருக்காக நான் எடுத்த சின்னம்.. அதை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாவிப்பதற்கு நான் கொடுக்கவும் இல்லை.. என்னிடம் இருந்து அவர்கள் பெறவும் இல்லை.. சின்னத்தை கொடுத்தது தேர்தல் ஆணைக்குழு.. எனவே நான் ஜனாதிபதி தேர்தலுக்காக சுயேட்சை சின்னமாக பாவித்ததை அரசியல் கட்சி ஒன்று தன்னிச்சையாக பெற்றதால் அதை நான் ஆதரிக்கவேண்டும் என்று இல்லை.. அதனை பற்றி எனக்கு விரல் நீட்ட எவருக்கும் உரிமை இல்லை..! புரிந்தால் நல்லது ஐயா.. ! நண்பன்: நன்றி. நல்லது. ஆனால் பாரம்பரியமாக தமிழரசு கட்சியிலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலோ இருந்தீர்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்பது நியாயமானதா?. பொது சின்னத்தில் போட்டியிட்ட நீங்கள் ஏன் எல்லோரும் ஒன்று படுத்துவதற்கு ஒரு முயற்சியை செய்யக்கூடாது? அரியம்: இதை கேட்கவேண்டியது பொதுகட்டமைப்பு என்ற அமைப்பு பிரமுகர்களிடமே.. நான் பொதுக்கட்டமைப்பு உறுப்பினரும் இல்லை, அந்த ஏழுகட்சி அங்கத்தவனும் இல்லை. நான் தமிழரசுகட்சி உறுப்பினர் மட்டுமே.. ஒரு கொள்கையின் அடிப்படையில் பலருடைய அன்பு கட்டளைகளை மதித்து ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கி அந்த தேர்தல் முடிவு அறிவித்ததன் (22/09/2024) பின்னர் எனது பணி நிறைவடைந்துவிட்டது.. அந்த 83, சமூக அமைப்புகள் 07, தமிழ்தேசிய கட்சிகள் செய்த ஒப்பந்தம், பேசிய விடயங்கள் என்பன தொடர்பாக எனக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இன்னொரு நண்பன்: இது ஒரு நிறைவான பதிலாகத்தெரியவில்லை. பின்னர் அரியம் தனது நம்பரைக் கொடுத்து அதற்கு கோல் எடுத்தால் நிறைவான பதிலைத் தருவதாகச் சொன்னார்! எனது அப்பாவின் பேச்சுவழக்கில் அரியம் ஒரு உலக்கை அல்லது ஒரு போடுதடி (அது என்ன சாமான் என்று அப்பா விளக்கம் தரவில்லை! அவர் இருக்கும்போது நான் கேட்கவும் இல்லை)
-
7cfa931f-37c4-4527-9c29-8faff9b78c3b.jpeg
From the album: கிருபன்
-
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்தினால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஒதுங்கிய பெருவாரியான அரசியல்வாதிகள்
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்தினால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஒதுங்கிய பெருவாரியான அரசியல்வாதிகள் October 13, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — நாட்டின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்டவர்களையும் பொதுவாழ்வில் ஊழல் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் தூய்மையைப் பேணவேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவர்களையும் தங்களது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யவேண்டும் என்று முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் அக்கறை அதிகரித்திருக்கும் ஒரு நேரத்தில் இந்தத் தடவை பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பது முக்கியமான ஒரு மாற்றமாகும். தவறான ஆட்சி முறையையும் ஊழல் முறைகேடுகளையும் ஒழித்து புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாக வாக்குறுதி அளித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவிடம் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பழைய பிரதான அரசியல் கட்சிகளை நிராகரித்து எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒரு இடதுசாரி இயக்கத் தலைவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்குக் கொண்டு வந்ததன் மூலமாக மக்கள் வெளிக்காட்டிய மாற்றத்துக்கான வேட்கையை உரியமுறையில் புரிந்துகொண்டு தனது நிருவாகத்தை நடத்தவேண்டிய பாரிய பொறுப்பை ஜனாதிபதி திசாநாயக்க கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னால் உள்ள சவால்கள் மிகவும் பாரதூரமானவை. பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மகத்தான வெற்றியைத் தருவதன் மூலமாக உறுதியான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பைத் தரவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பதவிக்கு வந்த பின்னரான மூன்று வாரங்களில் அவரது அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஊழலற்ற நிருவாகம் ஒன்றை நடத்துவதில் அவருக்கு இருக்கும் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுவனவாக அமைந்திருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவுக்கு அளித்த ஆதரவையும் விட கூடுதலான ஆதரவை மக்கள் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவதற்கு தயாராகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் பெருமளவுக்கு தெரிகின்றன. தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்குமா இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்களும் மூண்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவுக்கும் மற்றைய இரு பிரதான வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைப்பது சாத்தியமில்லை என்று கூறியவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை, தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தால் அது ஆபத்தாக அமையும் என்று வேறு சிலர் எச்சரிக்கையும் செய்கிறார்கள். ஆனால், தற்போதைய அரசியல் நிலைவரத்தை நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா இல்லையா என்பது அவர்கள் சகல மாவட்டங்களிலும் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களை மக்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதிலேயே பெருமளவுக்கு தங்கியிருக்கிறது. கடந்த வெள்ளிக் கிழமையுடன் நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நிறைவடைந்து விட்டன. சிறந்த கல்வியையும் அனுபவத்தையும் கொண்ட ஊழலற்ற வேட்பாளர்களையே சகல தேர்தல் மாவட்டங்களிலும் தாங்கள் நிறுத்தியிருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி. ) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறினார். “நாம் களமிறக்கியிருக்கும் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரையில் அரசியலில் ஈடுபடாதவர்கள். புதிய பாராளுமன்றம் புதிய முகங்களையும் வித்தியாசமான அணியையும் கொண்டதாக அமையும். அவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். எமதுவேட்பாளர் பட்டியல்கள் கல்விமான்களையும் தொழில்சார் நிபுணர்களையும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களையும் கொண்டதாக இருக்கின்றது” என்று அவர் மேலும் கூறினார். இதுவரையில் பொதுவெளியில் தெரிந்திராத புதுமுகங்கள் பெரும் எண்ணிக்கையில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு மக்கள் அமோக ஆதரவை வழங்குவார்களா என்ற கேள்வியும் எழவே செய்கிறது. ஆனால், இதுவரை காலமும் பதவிகளில் இருந்த அரசியல்வாதிகள் மீது மக்கள் கடுமையான வெறுப்படைந்திருக்கும் சூழ்நிலையில், புதியவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்வதில் கூடுதல் முனைப்பை அவர்கள் காட்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனலாம். பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்தப் போவதாக சூளுரைத்திருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க மீதான நம்பிக்கையை வெளிக்காட்டும் முறையிலேயே மீண்டும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் நடத்திய காடைத்தனங்களையும் மக்கள் மனதில் நிச்சயம் வைத்திருப்பார்கள். சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களை அனுமதிப்பதை சபாநாயகர் இடைநிறுத்திய ஒரு காலகட்டமும் இருந்தது. மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையானவர்கள் பிறகு அவற்றை உற்பத்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு பெரும்பணம் சம்பாதித்து இறுதியில் பாராளுமன்றத்திற்குள்ளும் வந்துவிட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு தடவை கூறியது நன்றாக நினைவிருக்கிறது. மக்கள் தங்களை நிச்சயம் நிராகரிப்பார்கள் என்ற பயத்தில் பல அரசியல் வாதிகள் இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவர்களில் முப்பத்தைந்துக்கும் அதிகமானவர்கள் மீண்டும் போட்டியிட முன்வரவில்லை. அதேவேளை, சிலர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, சம்பிக்க ரணவக்கவின் ஐக்கிய குடியரசு முன்னணி போன்ற கட்சிகள் தேர்தலில் இருந்து முற்றாகவே ஒதுங்கிவிட்டன. வயதுமுதிர்ந்தும் கூட அரசியலில் இருந்து ஓய்வுபெறவிரும்பாத சில அரசியல்வாதிகள் மாத்திரமல்ல, இளைய அரசியல்வாதிகள் சிலரும் கூட தங்களது கட்சிகளின் தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு மீண்டும் வருவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி பெருமளவில் புதிய வேட்பாளர்களை களமிறக்கியதால் ஏனைய அரசியல் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்கள் தெரிவில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டன. ஆனால், பழைய பாரம்பரிய கட்சிகளினால் பெருமளவுக்கு புதியவர்களை களமிறக்கக்கூடியதாக இருக்கவில்லை. புதியவர்கள் அந்த கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பத்தைக் காண்பிக்கவில்லை. அதனால் அந்த கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் பெருமளவுக்கு பழைய முகங்களால் நிறைந்தவையாகவே இருக்கின்றன. ஊழல் மிகுந்த அரசியல் கலாசாரத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு மக்கள் உறுதிபூண்டிருப்பதால் பாராளுமன்ற தேர்தலில் தரம்வாய்ந்த வேட்பாளர்களை களமிறக்காவிட்டால் பிரதான கட்சிகள் மக்களினால் முற்றாக நிராகரிக்கப்பட்டு வரலாறாகிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருந்தன. தேர்தல்களில் போட்டியிடுவதற்கு நேர்மையான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து இப்போதுதான் வருகிறது என்றில்லை. முன்னரும் மக்கள் அவ்வாறே விரும்பினார்கள். ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களின் விருப்பத்தை மதிக்கவில்லை. பொதுவாழ்வுக்கு பொருத்தமில்லாதவர்களையும் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் அவர்கள் திரும்பத் திரும்ப வேட்பாளர்களாக நியமித்து பாராளுமன்றத்தின் தரத்தை குறைத்தார்கள். கொலைக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும் சில அரசியல்வாதிகள் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானதை நாம் கண்டிருக்கிறோம். பணபலமும் அடியாள் பலமும் கோலோச்சுகின்ற அரசியலில் பழிபாவத்துக்கு அஞ்சாத அத்தகைய பேர்வழிகள் கட்சிகளின் தலைவர்களுக்கு தேவைப்பட்டார்கள். பாதாள உலகக் கும்பல்களுக்கு அரசியல் உயர்மட்டத்தில் செல்வாக்கு இருப்பதற்கு அதுவே அடிப்படைக் காரணம். நாட்டின் அதியுயர் சட்டவாக்க சபையான பாராளுமன்றத்தில் அண்மைக்காலத்தில் அங்கம் வகித்தவர்களில் பலர் சபையில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்களை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாகவும் பாராளுமன்ற விவாதங்களில் உருப்படியான பங்களிப்பைச் செய்ய இயலாதவர்களாகவும் இருந்தனர். வெறுமனே அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதிகள் மீதான குருட்டுத்தனமான விசுவாசம் காரணமாகவே சட்டங்களுக்கு ஆதரவளித்தார்கள். கடந்த இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்புச் செய்வதற்கும் அதிகரிப்பதற்கும் என்று மாறிமாறி கொண்டு வரப்பட்ட ஐந்து அரசியலமைப்பு திருத்தங்களையும் மனச்சாட்சியின் உறுத்தலின்றி ஆதரித்த பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் கண்டோம். அவர்களில் சில சட்டமேதைகளும் இருந்தார்கள். நாட்டின் மிகவும் உயர்ந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்த பிறகு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் அரசியலில் ஈடுபடும் ஒரு தரந்தாழ்ந்த நடைமுறையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2015 பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பித்துவைத்தார். அதற்கு பிறகு இன்னொரு முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும் 2020 தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு வந்தார். தற்போது நாட்டில் ஐந்து முன்னாள் ஜனாதிபதிகள் இருக்கிறார்கள். அவர்களில் திருமதி குமாரதுங்க பதவியில் இருந்து இறங்கிய பிறகு அரசியலில் ஆர்வம் காட்டினாலும் கூட பாராளுமன்றத்துக்கு வருவதற்கு ஒருபோதும் அவர் முயற்சிக்கவில்லை. மற்றையவர்களில் எவருமே இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. மகிந்த மாத்திரமல்ல, சுமார் இருபது வருடங்களுக்கு பிறகு ராஜபக்ச சகோதரர்களில் எவருமே களத்தில் நிற்காத தேர்தலாகவும் இது அமைகிறது. 2022 மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு கிடைத்த முதல் வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் நல்ல பாடத்தை புகட்டியதன் காரணமாகவே இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மீண்டும் பாராளுமன்றத்துக்கு வரும் ஆசையை அடக்கிக் கொண்டார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மேலும் பல அரசியல்வாதிகள் தங்களது ஓய்வை அறிவிப்பார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். தங்களது எதிர்காலத்தைப் பாழாக்காத ஒரு பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதில் மக்கள் இந்த தடவை மிகவும் விவேகத்துடன் நடந்துகொள்ளவேண்டும் . தங்களது தவறான ஆட்சிமுறைக்கு அரசியல்வாதிகள் மக்களைக் குறை கூறியதும் உண்டு. மக்கள் கிளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் 2022 ஜூன் 9 ஆம் திகதி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த முன்னாள் நிதியமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாபகருமான பசில் ராஜபக்ச தங்களுக்கு வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். தங்களது தவறுகளுக்காக மக்கள் மீது ஊழல்தனமான அரசியல்வாதிகள் பழிசுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றபோதிலும், மீண்டும் மீண்டும் மக்கள் தவறான ஆட்சியாளர்களை தெரிவுசெய்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான காலப்பகுதியில் மக்களின் அரசியல் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றத்தை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தெளிவாகப் பிரதிபலித்தன. அதன் பின்புலத்தில், மக்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெருமளவுக்கு விவேகமான முடிவை எடுப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. நேர்மையானவர்களை மாத்திரமல்ல, கொள்கை வகுக்கும் செயன்முறைகளில் பயனுறுதியுடைய பங்களிப்புகளை வழங்கக்கூடியதாக பாராளுமன்ற விவகாரங்களில் அறிவைக் கொண்டவர்களையும் மக்கள் தெரிவுசெய்ய வேண்டும். சட்டமூலங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதையோ அல்லது சபையில் விவாதிக்கப்படும் விடயம் என்ன என்பதையோ விளக்கிக்கொள்ள முடியாதவர்களும் மக்கள் பிரதிநிதிகளாக சலுகைகளை அனுபவித்துக்கொண்டு இருந்தார்கள். வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களுக்கு எடுபடுகின்ற போக்கில் இருந்து மக்கள் முற்றாக விடுபடவேண்டும். பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்துவதற்கு படிப்படியாக முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளில் மக்கள் விவேகமான முறையில் தங்கள் பங்களிப்பை வழங்குவதற்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்த தடவை பாராளுமன்ற தேர்தல் அமைகிறது. (ஈழநாடு ) https://arangamnews.com/?p=11324
-
திருகோணமலை: புனித பூமி என்ற போர்வையில் ஜனாஸாவை அடக்கம் செய்ய விடாமல் பௌத்த பிக்கு அட்டகாசம்!
திருகோணமலை: புனித பூமி என்ற போர்வையில் ஜனாஸாவை அடக்கம் செய்ய விடாமல் பௌத்த பிக்கு அட்டகாசம்! October 13, 2024 திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியது. குறித்த சம்பவம் இடம்பெற்ற்றுள்ளது. புல்மோட்டை பொன்மலைக்குடா பகுதியில் முஸ்லீம் பெண் ஒருவர் மரணமாகியிருந்த நிலையில் குறித்த ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்காக குறித்த பகுதியில் மயானத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியில் ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்காக குழி தோண்டப்பட்டது. இதன்போது புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி குறித்த காணி “பூஜா பூமி” என புல்மோட்டை காவல்துறை சிலரை அப்பகுதிக்கு அனுப்பி ஜனாஸா நல்லடக்கத்தை தடை செய்திருந்தார். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் தோன்றியது. பின்னர் குறித்த விடயம் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து குறித்த 2 ஏக்கர் காணியானது மயானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி எனவும் குறித்த பகுதியில் ஜனாஸாவை நல்லடக்கம் செய்யுமாறு பிரதேச செயலாளர் தெரிவித்ததையடுத்து குறித்த பகுதியில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றப்பட்டு அப்பகுதியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த பகுதியை நீண்டகாலமாக மையவாடியாக தாம் பயன்படுத்தி வருவதாகவும் இதில் பல ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியில் உள்ள மக்களுடைய காணிகளை பூஜா பூமி என்றுகூறி அரிசிமலை விகாராதிபதி அபகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். https://www.ilakku.org/திருகோணமலை-புனித-பூமி-என/
-
சுமந்திரனால் காலியாகும் “வீடு” – அகிலன்
சுமந்திரனால் காலியாகும் “வீடு” – அகிலன் October 13, 2024 “வீட்டிலிருந்து வெளியே வர எமக்கு விருப்பமில்லை. ஆனால், அங்கு இப்போது ஒரு தனிநபரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக் கின்றது. அந்த ஒருவரால் பலா் வெளியேறிக் கொண்டிருக்கின்றாா்கள். இறுதியாக கட்சித் தலைவா் மாவை சேனாதிராஜா கூட பதவியைத் துறந்துவிட்டாா்.” இது யாழ். மாவட்ட முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினா் ஈ.சரவணபவனின் கூற்று. தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனநாயக தமிழரசுக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை அமைத்து யாழ். மாவட்டத்தில் களமிறங்கியுள்ள இந்தக் கட்சிக்கு பிரபல சட்டத்தரணி கே.வி.தவராஜா தலைமைதாங்குகின்றாா். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை இக்கட்சியின் சாா்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னா் சரவணபவன் தெரிவித்த கருத்துதான் இது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவா் ஐங்கர நேசசனும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளாா். பொதுத் தோ்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் வீட்டிலிருந்து முக்கிய பிரமுகா்கள் பலரும் வெளியே வந்திருப்பதைக் காணமுடிகின்றது. தமிழரசுக் கட்சிக்குள் இப்போது, சுமந்திரனுக்கு குடைச்சல் கொடுப்பவராக இருக்கும் ஒரேயொருவா் சிறீதரன் மட்டும்தான் பொதுத் தோ்தலின் முடிவுதான் தமிழரசுக் கட்சித் தலைமைக்கான போட்டியின் அடுத்த கட்டம் எவ்வாறிருக்கும் என்பதை வெளிப்படுத்தும். தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பொறுப் புக்களிலிருந்தும் விலகுவதாக அதன் தலைவா் மாவை சேனாதிராஜா அறிவித்திருப்பதும் சுமந்திரனின் செயற்பாடுகளால்தான். ஒரே அணியில் சுமந்திரனும், சிறீதரனும் களமிறங்கியிருப்பதும், தமிழரசிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளா் குழு தனியாகக் கள மிறங்கியிருப்பதும் அரசியல் களத்தை இந்த வாரம் பரபரப்பாக்கிய செய்திகள். இதன் அடுத்த கட்டம் எவ்வாறானதாக அமையும் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி! கடந்த சுமாா் 10 வருடங்களாக மாவை சேனாதிராஜாதான் கட்சியின் தலைவராக இருக்கின்றாா். பெயரளவுக்குத்தான் தலைவராக இருக்கின்றாா் என்பது பகிரங்கமானதுதான். அனைத்து விடயங்களையும் கையாள்பவராக, முக்கிய தீா்மானங்கள் எடுப்பவராக சுமந்திரன்தான் இருக்கின்றாா். கட்சிக்குள் சுமந்திரனின் ஆதிக்கத்துக்கு செக் வைக்கக்கூடியராக சிறீதரன்தான் கருதப் பட்டாா். இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையின் கூட்டத்தில் சுமந்திரனைத் தோற்கடித்து சிறிதரன் கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டபோது, சுமந்திரனின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்றே பலரும் கருதினாா்கள். பொதுச் சபைக்கூட்டத்தில் இடம்பெற்ற தெரிவுகள் நீதிமன்றத்துக்குச் சென்று, தெரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டபோது, இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. நீதிமன்ற விசாரணைகள் தொடரும் நிலையில், தெரிவுகள் மீண்டும் நடைபெறவேண்டும் என்ற நிலைதான் உருவாகியிருக்கிறது. அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு இன்னும் சில மாதங்கள் செல்லலாம் என்ற நிலையில், கட்சி இரண்டாக அல்லது மூன்றாகப் பிளவுபடுவது தவிா்க்கமுடியாத ஒன்றாகிவிடலாம் என்பதுதான் தற்போதைய நிலை. சிறிதரனும், சுமந்திரனும் ஒரே அணியில் இப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டி யிடுகின்ற போதிலும், தோ்தல் முடிவுகளின் பின்னா் பிளவு பகிரங்கமாகலாம். இப்போது தமிழரசுக் கட்சியின் பட்டியலில் இருவரும் உள்ள போதிலும், ஒருவரை மற்றவா் தோற்கடிப்பதற்கான உபாயங்களுடன்தான் செயற்படுகின்றாா்கள். தமிழரசுக் கட்சியால் அமைக்கப்பட்ட வேட்பாளா் தெரிவுக்குழுவின் 11 பேரில் ஒன்பது போ் சுமந்திரனின் ஆதரவாளா்கள். அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தன்னுடைய ஆதரவாளா்களையே சுமந்திரன் யாழ்ப்பாணப் பட்டியலில் போட்டிருக்கின்றாா் என்று அதிருப்தியாளா்கள் குற்றஞ்சாட்டுகின்றாா்கள். இந்த வேட்பாளா் தெரிவில் மாவையும் ஓரங்கட்டப்பட்டுள்ளாா். அவா் செல்லாக்காசாகவே வேட்பாளா் தெரிவுக் குழுவில் இருந்தாா். வேட்பாளா்களே வேட்பாளா் தெரிவுக்குழுவிலும் இருந்தாா்கள் என்பதும் தவறான ஒரு முன்னுதாரணம். வேட்பாளா் தெரிவு இடம்பெறும் நிலையில் இரண்டு விடயங்களை சுமந்திரன் தெரிவித்தாா். கட்சியின் தீா்மானத்தை மீறி பொது வேட்பாளரை ஆதரித்தவா்கள், கடந்த தோ்தலில் தோல்வியடைந்தவா்களுக்கு இடமளிக்கப்படாது என்பதுதான் அந்த அறிவிப்பு. அதேவேளையில், புதியவா்கள், பெண்களுக்கு இடமளிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா். பொது வேட்பாளரை ஆதரித்த சிறிதரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், சசிகலா ரவிராஜ் போன்றவா்களை ஓரங்கட்டுவதுதான் இதன் உள்நோக்கம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல. அதில் மாவையும், சரவணபவனும், சசிகலாவும் கடந்த தோ்தலில் தோல்வியடைந்தவா்கள். சிறிதரன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவா் என்பதால் அவரையும் போட்டியிலிருந்து விலகுமாறு சுமந்திரன் கோரினாா். ஆனால், சிறிதரன் மறுத்துவிட்டாா். கடந்த மூன்று பொதுத் தோ்தல்களிலும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தோ்தல் மாவட்டத்தில் வெற்றிபெற்றவா் சிறிதரன். அதனைவிட, அதிக விருப்பு வாக்குகளை தமிழரசுக் கட்சியில் பெற்றவராகவும் அவா்தான் இருக்கின்றாா். சிறிதரனுக்கு கணிசமான – நிரந்தரமான வாக்கு வங்கி ஒன்றுள்ளது. இந்த நிலையில், அவரை வெளியே விடுவது ஆபத்தானது என்பதும் சுமந்திரனுக்குத் தெரிந்திருந்தது. தன்னுடைய வெற்றிக்கும் சிறிதரனின் வாக்கு வங்கி உதவும் என்பதும் சுமந்திரனுக்குத் தெரியும். சிறிதரனை தம்முடன் அரவணைத்துக் கொள்வதற்கு பெருமளவு முதலீட்டுடன் புதிதாக உருவாகும் கட்சி ஒன்று உட்பட வேறு சில கட்சிகளும் தயாராக இருந்தன. இதனால், சிறிதரனை தமிழரசுக் கட்சிக்குள் வைத்தே தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் சுமந்தரனின் திட்டமாக இப்போதுள்ளது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இம்முறை இங்கு ஆறு ஆசனங்கள்தான் உள்ளன. அதில் ஐந்து உறுப்பினா்கள் விகிதாசாரப் படி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் எம்.பி.க்களாகத் தெரிவு செய்யப்படுவாா்கள். அதிக வாக்குகளைப் பெறும் கட்சிக்கு போனசாக ஒரு ஆசனம் கிடைக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டிருப்பது, தமிழரசுக் கட்சியிலிருந்து பலா் வெளியேறியிருப்பது போன்றன தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியை கணிசமாகப் பாதித்திருக்குகிறது. அத்துடன், மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாகச் சொல்லிக்கொள்ளும் அநுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியும் ஒரு ஆசனத்தையாவது பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள அதிருப்தியால் அவா்கள் அநுரவின் கட்சிக்கு அல்லது டக்ளஸின் கட்சிக்கு வாக்களிக்கும் மனப்பான்மையில் இருக்கின்றாா்கள். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஒரு ஆசனத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொடா்ச்சியாக வெற்றிபெற்றுவரும் சித்தாா்த்தனுக்கு தனிப்பட்ட முறையில் வாக்கு வங்கி உள்ளது. அதனைவிட, சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதித் தோ்தலில் யாழ்ப்பாணத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்றவா். பொதுத் தோ்தலிலும் ஒரு ஆசனத்தையாவது பெற அவா்கள் கடுமையாகப் போராடுவாா்கள் என்று எதிா்பாா்க்கலாம். விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் முதன்மை வேட்பாளராக களமிறங்கியிருக்கு யாழ். மாகநர முன்னாள் மேயா் வி.மணிவண்ணனுக்கும் தனிப்பட்ட முறையில் செல்வாக்குள்ளது. அவரது வருகை கஜேந்திரன்களின் தமிழ்க் காங்கிரஸை அதிகம் பாதிக்கும். இந்த நிலையில் தமிழரசுக் கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள்தான் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகின்றது. வாக்காளா்கள் முதலில் கட்சிக்கு வாக்களித்துவிட்டு பின்னா் அதில் மூவருக்கு தமது விருப்பத் தெரிவு வாக்கை வழங்கலாம். தன்னுடைய ஆதரவாளா்களான ஏழு பேரை களமிறக்கியதன் மூலம், அவா்கள் தமக்கும் சோ்த்து வாக்குச் சேகரிப்பாா்கள் என்பது சுமந்திரனின் கணக்கு. அதன்மூலம் தனது வெற்றியை உறுதிப்படுத்த அவா் முயல்கிறாா். தப்பித்தவறி தோல்வியடைந்தால், தேசியப் பட்டியல் மூலமாக வருவது அவரது திட்டம்! அதனால்தான், பொது அமைப்புக்கள், சமூகப் பெரியவா்களின் வேண்டுகோளையும் புறக்கணித்து அம்பாறையில் தமிழரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்பதில் அவா் உறுதியாக இருக்கின்றாா். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருமலையில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட இணங்கியது. மறுபுறம் அம்பாறையை தமக்குத் தருமாறு கேட்டது. இப்போது அம்பாறையிலும் இரு அணிகளும் களத்தில் இறங்குவதால், தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் ஆபத்து உருவாகியிருக்கின்றது. தேசியப்பட்டியலுக்குத் தேவையான வாக்குகளைச் சேகரிக்க அம்பாறையை மீண்டும் பறிகொடுக்க தமிழரசுக் கட்சி தயாராகியிருக்கின்றது. இணக்கத்தை ஏற்படுத்த தொடா்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுக்கள் தோல்வியடைந்திருக்கின்றது. இந்த நிகழ்வுகள் அனைத்திலும் பாா்வையாளராக இருந்துவரும், கட்சியின் தலைவா் மாவை சேனாதிராஜா, தொடா்ந்தும் தாம் தலைவராக இருப்பதில் அா்த்தமில்லை என்ற நிலையில்தான் பதவியைத் துறக்கும் முடிவை அறிவித்திருக்கின்றாா். சிறிதரனைத் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அவா் அழைத்திருக்கின்றாா். ஆனால், தமிழரசுக் கட்சியின் தெரிவுகள் அனைத்துக்கும் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்விடயத்தில் தமது அடுத்த நகா்வு பொதுத் தோ்தலின் பின்னா் இடம்பெறும் என்று சிறிதரன் தெரிவித்திருக்கின்றாா். நவம்பா் 14 ஆம் திகதி நடைபெறப்போகும் பொதுத் தோ்தலைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாணத் தோ்தல் களம் முக்கியத்துவம் பெற்றிருப்பதற்குக் காரணம் தமிழரசின் அதிகாரத்துக்காகப் போராடும் இருவா் இங்கு களமிறங்கியிருப்பதுதான். யாழ்ப்பாணத் தோ்தல் களத்தை சூடாக்கியிருப்பது இந்த இருவருக்கும் இடையிலான விருப்பு வாக்குப் போட்டிதான்! தோ்தல் முடிவின் பின்னா் வீட்டில் உள்ள மற்றவா்களும் வெளியே வரும் நிலை உருவாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்! https://www.ilakku.org/சுமந்திரனால்-காலியாகும/
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலை - புதிய அரசு நடவடிக்கை Vhg அக்டோபர் 13, 2024 ஊடகவியலாளர் தராகி சிவராமின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உட்பட ஏழு முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு பதில் காவல்துறை மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தொடர்புடைய காவல்துறை பிரிவுகளுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பதில் காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார். சிவராமின் மரணம் வர்த்தகர் தினேஸ் சாஃப்டரின் மரணம் மற்றும் 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் மற்றும் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பம்பலப்பிட்டி காவல்துறைக்கு அருகில் கடத்தப்பட்டு, மறுநாள் நாடாளுமன்றத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர் தராகி என்ற சிவராமின் மரணம் மற்றும் 2006 இல் கொழும்பில் வைத்து கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதேவேளை, மாத்தறை வெலிகமவில் டபில்யூ 15 ஹோட்டல் ஒன்றுக்கு அருகில், கடந்த டிசம்பரில் இடம்பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் மரணம் தொடர்பிலான விசாரணையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தல்துவ கூறியுள்ளார். https://www.battinatham.com/2024/10/blog-post_89.html
-
சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளின் பின் வெள்ளம்!
சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளின் பின் வெள்ளம்! October 12, 2024 ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனத்தில் அண்மையில் அங்கு பெய்த திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, இந்த திடீர் கனமழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. திடீர் மழை வெள்ளத்தால் நிரம்பிய இரிக்கி ஏரியின் காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது. தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 100 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளதாகவும் மொரோக்கோ வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது. https://eelanadu.lk/சஹாரா-பாலைவனத்தில்-50-ஆண்ட/
-
ரணில் 26 மாதங்களில் 24 நாடுகளுக்கு பயணம்!
ரணில் 26 மாதங்களில் 24 நாடுகளுக்கு பயணம்! செய்திகள் ரணில் விக்கரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையிலான 26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அவர் பதவியேற்ற 2022ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டில் 16 நாடுகளுக்கும் 2024ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 வருடாந்திர செயல்திறன் அறிக்கைக்கு ஏற்ப குறித்த ஆண்டுக்காக ஜனாதிபதி செயலகத்தால் அதி உயர் பிரமுகர்களுக்கான பயணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 62,178,000 ரூபாய் எனும் நிலையில் அதில் 59,020,000 ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது. அது ஒதுக்கப்பட்ட தொகையில் 95 வீதம் ஆகும். வெளிவிவகார அமைச்சின் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2023 வருடாந்திர செயல்திறன் அறிக்கைக்கு ஏற்ப அவ்வாண்டில் அதி உயர் பிரமுகர்களுக்காக பயணங்களுக்காக ஜனாதிபதி செயலகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 384,853,000 ரூபாய் என்பதுடன் அதில் 373,809,000 ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது. அது ஒதுக்கப்பட்ட தொகையில் 97 வீதம் ஆகும். 2024ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி செயலகம், அதி உயர் பிரமுகர்களின் பயணங்களுக்காக எவ்வளவு தொகையை செலவளித்துள்ளது என்பது தொடர்பிலான உறுதியான அறிக்கை காணப்படவில்லை. எனினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்களுக்கான விமானப் பயணச்சீட்டுக்கு செலவளித்த தொகை தொடர்பிலான அறிக்கை ஊடகங்களில் வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024ஆம் ஆண்டில் பயணித்த ஸ்விட்சர்லாந்து, உகண்டா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விபரங்கள் மாத்திரம் உள்ளடங்குவதுடன் 2024ஆம் ஆண்டு மே மாதம் பயணித்த இந்தோனியா பயணம் குறித்து எதுவித தகவல்களும் உள்ளடங்கவில்லை. அந்த அறிக்கையின்படி, சுவிஸ்லாந்து மற்றும் உகண்டாவுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கான விமான பயணச்சீட்டுகளுக்காக 16,825,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஆஸ்திரேலிய பயணத்துக்கு கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த தொகை ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணித்த ஏனையவர்களுக்கான தொகையும் அதில் உள்ளடங்குவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. -(3) http://www.samakalam.com/ரணில்-26-மாதங்களில்-24-நாடுகள/
-
சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்? - நிலாந்தன்
சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்?- நிலாந்தன். adminOctober 13, 2024 கடந்த 15 ஆண்டுகளில் எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து, திரண்டு வாக்களித்தார்கள். அங்கே ஒரு திரட்சி இருந்தது. அதேசமயம் ஏனைய தேர்தல்களில் குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களைத் திரட்ட முடியவில்லை. தமிழ் மக்கள் சிதறி வாக்களித்தார்கள். இம்முறை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவானது அந்தச் சிதறலை மேலும் அதிகப்படுத்துமா? நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய பொழுது “தேசமாகத் திரள்வோம்” என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளாகச் சிதறுவோம் அல்லது குழுக்களாகச் சிதறுவோம் அல்லது கட்சிக்குள் அணிகளாகச் சிதறுவோம் அல்லது சுயேச்சைகளாகச் சிதறுவோம் என்ற கோஷத்தை முன்வைக்க வேண்டி வருமா? நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்த்தேசிய அரசியல் களம் அப்படித்தான் காட்சி தருகின்றது. தேசியவாத அரசியல் என்பது மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது. மக்களை கூட்டுணர்வின் அடிப்படையில் ஒரு தேசமாகத் திரட்டுவது. ஆனால் கட்சிகள் மத்தியில் கூட்டுணர்வு இருந்தால்தான் அவை மக்களைக் கூட்டிக்கட்ட முடியும். கட்சிகள் மத்தியில் அது இல்லையென்றால் எப்படி மக்களைத் தேசமாகத் திரட்டுவது? உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி ஒரு தனிநபரின் கருவியாக மாறி அந்தத் தனிநபரை வெல்ல வைப்பதற்காக அவருடைய விசுவாசிகளை வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கின்றது. அந்த விசுவாசிகள் தமக்கு விசுவாசமான தலைவருக்காக வாக்குகளை சேகரித்துக் கொடுப்பார்கள். ஒரு மூத்த கட்சியானது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது என்னென்ன அளவுகோல்களை வைத்து அதைச் செய்திருக்க வேண்டும் ? ஆனால் அதைக் கேள்வி கேட்க வேண்டிய மூத்தவர்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரனும் என்ன செய்கிறார்கள்? சிறீதரனுடைய ஆதரவாளர்கள் ரஜினிகாந்தின் படத்தில் வரும் ஒரு பஞ் டயலாக்கை பரவலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். “சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாகத்தான் வரும். பன்றிகள்தான் கும்பலாக வரும்” என்ற வசனம் அது. அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி சிங்கங்களும் பன்றிகளுமாக,சிவஞானம் கூறுவதுபோல “அறுவான்களும் குறுக்கால போவான்களுமாக” சிதறிப்போகிறது என்று பொருள். அது தேசியக் கூட்டுணர்வோடு ஒரு திரட்சியாக இல்லை. வேட்பாளர் பட்டியல் வெளிவந்ததிலிருந்து கட்சிக்குள் மகளிர் அணியும் தவராசா அணியும் ஏனைய அணிகளும் நொதிக்கத் தொடங்கிவிட்டன. தவராசா அணி சுயேச்சையாகப் போட்டியிடுகின்றது. இவ்வாறு தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பூசல்கள் ஏற்கனவே தூர்ந்து போன கட்சியை மேலும் சிதைக்கக்கூடும். அவ்வாறு தமிழரசுக் கட்சி பலவீனமடையும் பொழுது அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேறு கட்சிகள் அல்லது வேறு கூட்டுக்கள் உண்டா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தேசியவாத அரசியல் குறித்த பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான தரிசனங்களைக் கொண்டிராத ஒரு கட்சி. தங்களைத் தியாகிகள் ஆகவும் புனிதர்களாகவும் காட்டுவதற்காக மற்றவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டும் ஒரு கட்சி. தன்னை புத்திசாலிகள், கொள்கைவாதிகளின் கட்சியாகக் காட்டிக்கொள்ளும் ஒரு கட்சி. தேசம் என்பது புனிதர்கள், தியாகிகள், கொள்கைவாதிகளை மட்டும் கொண்டதல்ல. திருடர்கள், அயோக்கியர்கள், சமானியர்கள் என்று எல்லா வகைப்பட்டவர்களினதும் திரட்சிதான் தேசம். முன்னணியின் அரசியல் பெருந்திரட்சிக்கு உரியதல்ல. அதனால் முதன்மைக் கட்சியாக மேலுயர முன்னணியால் இதுவரை முடியவில்லை. அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியமானவற்றுக்கூடாகத்தான் கொள்கையைப் பரவலாக்கலாம், மக்கள் மயப்படுத்தலாம், அதை ஒரு திரண்ட அரசியல் சக்தியாக மாற்றலாம். தூய தங்கத்தை வைத்துக்கொண்டு ஆபரணம் செய்ய முடியாது. அதில் செம்பு கலக்க வேண்டும். செம்பைக் கலக்காவிட்டால் தங்கம் பிரயோகநிலைக்கு வராது. அப்படித்தான் நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்காவிட்டால் கொள்கை மக்கள் மயப்படாது. இதுதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ள பிரதான பலவீனம். அவர்களால் தேசத்தைத் திரட்ட முடியாது. எனவே தமிழரசுக் கட்சி சிதையும்போது ஏற்படும் வெற்றிடத்தில் ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாக மாறி ஆசனங்களைக் கைப்பற்றத் தேவையான அரசியல் தரிசனமும் நெகிழ்வும் முன்னணியிடம் இல்லை. அடுத்தது குத்துவிளக்குக் கூட்டணி. அந்த கூட்டணி ஜனாதிபதித் தேர்தலின் பின் சங்குச் சின்னத்தை கைப்பற்றியதன்மூலம் சங்குக் கூட்டணியாக மாறியிருக்கிறது. அங்கேயே சர்ச்சைகள் உண்டு. ஒரு கூட்டு வெற்றியை அதன் பங்காளிகளில் ஒரு பகுதி மட்டும் சுவவீகரிக்கப் பார்க்கின்றது. சங்கு இப்பொழுது தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பின் சின்னம் அல்ல. ஏனெனில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு இப்பொழுது இல்லை. அதற்குள் இருந்த தமிழ் மக்கள் பொதுச்சபை தேர்தலில் ஈடுபடவில்லை. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் தமிழ் மக்கள் கூட்டணியும் அக்கூட்டுக்குள் இல்லை. எனவே சங்கு பொதுக் கட்டமைப்பின் சின்னமல்ல. சங்குக்கு விழுந்த 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளும் சங்கச் சின்னத்தை எடுத்து வைத்திருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்குமா? சங்குக்கு விழுந்த வாக்குகள் தேசத் திரட்சிக்கு விழுந்த வாக்குகள். அதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேசத் திரட்சி என்ற அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள். அரியநேத்திரன் ஒரு குறியீட்டு வேட்பாளர். ஏறக்குறைய ஒரு துறவிபோல அவர் தேர்தலில் நின்றார். அவருக்கு வாக்குத் திரட்டுவதற்காக மக்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் துறவிகளைப்போல சம்பளம் வாங்காமல் இரவு பகலாக வேலை செய்தார்கள். அவரை வேட்பாளராக முன்னிறுத்திய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கித்தான் உழைத்தன என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் பொது வேட்பாளரை நோக்கி அவர்கள் திரட்டிய வாக்குகள் பொதுவானவை. பொதுவான வாக்குகள் இப்பொழுது ஐந்து கட்சிகளின் கூட்டமைப்பாக உள்ள சங்குக் கூட்டணிக்கு மட்டும் கிடைக்குமா? கிடைக்காது. உதாரணமாக, கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி சங்குக்காக வேலை செய்தது. அது முழுமையாக வேலை செய்ததா இல்லையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அங்கு கிடைத்த வாக்குகளுக்குள் தமிழரசு கட்சியின் வாக்குகளே அதிகம் உண்டு. எனவே சிறீதரனா? சங்கா? என்று வரும் பொழுது சிறீதரனின் ஆதரவாளர்கள் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள். அப்படித்தான் மட்டக்களப்பிலும் அரிய நேத்திரனுக்காக சிறீ நேசனும் உட்பட பல மூத்த தமிழரசுக் கட்சிக்காரர்கள் ஒன்றாக நின்று உழைத்தார்கள். தங்களின் ஒருவருக்கு அவர்கள் பொதுவாக வாக்குத் திரட்டினார்கள். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடைய வாக்குகள் வீட்டுக்குத் தான் விழும். சங்குக்கு அல்ல. அப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அருண் தப்பிமுத்து திரட்டிய வாக்குகளும் சங்குக்கு விழாது. மேலும் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சரவணபவன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் உட்பட பலரும் சங்கின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் சங்கு கூட்டணிக்குள் நிற்கவில்லை. மாறாக தவராசாவின் சுயேட்சைக் குழுவாக களமிறங்குகிறார்கள். அவர்கள் சங்குக்கு திரட்டிய வாக்குகள் இனி அவர்களுடைய சுயேச்சைக் குழுவுக்குத்தான் அதிகமாக விழும். அப்படித்தான் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் சுயேச்சையாக நிற்கும் தமிழர் சம உரிமை அமைப்பும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்காக விசுவாசமாக உழைத்தது. அந்த அணி இப்பொழுது சுயேச்சையாகக் கேட்கின்றது. எனவே பொது வேட்பாளருக்காக அவர்கள் சேகரித்த வாக்குகள் அந்த சுயேச்சைக்கு விழுமா அல்லது சங்குக்கு விழுமா? தமிழ் மக்கள் சின்னத்தைப் பார்த்து மயங்குவார்களா? இதுதான் பிரச்சினை. ஒரு சன்னியாசி போல அரியநேத்திரன் தேர்தலில் நின்ற பொழுது தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு அவருக்கு வாக்களித்தார்கள். அதே கூட்டுணர்வோடு இப்பொழுது வாக்களிக்க மாட்டார்கள். கட்சி விசுவாசம், தனி நபர் விசுவாசம், பிரதேச விசுவாசம், ஊர் விசுவாசம் போன்ற பல காரணிகளாலும் வாக்குகள் சிதறடிக்கப்படும் ஆபத்து அதிகமுள்ள ஒரு தேர்தல் இது. மேற்சொன்ன அனைத்து விசுவாசங்களும் தேசியக் கூட்டுணர்வுக்கு விரோதமானவை. பொது வேட்பாளருக்கான தேர்தலில் பிரச்சாரப் பணிகள் தொடங்கிய போது “எமக்காக நாம்” என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் தேர்தலில் “எனக்காக நான்” என்பதுதான் நடைமுறையாக உள்ளது. அடுத்தது, விக்னேஸ்வரனின் கட்சி. அது இப்போதைக்கு பிரதான நீரோட்டக் கட்சியாக பலமாக எழும் என்று நம்பமுடியாத ஒரு கட்சிச் சூழல்தான் காணப்படுகிறது. நடக்கவிருக்கும் தேர்தல் அந்த கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியைக் காட்டும். தொகுத்துப்பார்த்தல், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சங்குக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜேவிபியின் கூட்டணி, சுயேச்சைக் குழுக்கள் என்று மொத்தம் 44 தரப்புகள் தமிழ் வாக்குகளைக் கேட்கப் போகின்றன. இதில் அனுர அலை எந்த அளவுக்கு வாக்குகளைக் கவரும் என்பதை இப்பொழுது மதிப்பிடுவது கடினம். இப்படி ஒரு நிலையை கிழக்கில் அனுமதித்தால், குறிப்பாக திருகோணமலையிலும் அம்பாறையிலும் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அங்குள்ள சிவில் சமூகங்களிடம் உண்டு. திருகோணமலையில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் இது தொடர்பில் தலையிட்டிருக்கிறார். அங்கே போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதனால் வாக்குகள் சிதறுவது தடுக்கப்பட்டு குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதித்துவமாவது பாதுகாக்கப்படலாம். ஆனால் அம்பாறையில் நிலைமை அவ்வாறில்லை. ஆகமொத்தம் வரும் நாடாளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்களை வாக்காளர்களாகச் சிதறடிக்கப் போகிறது. சில கிழமைகளுக்கு முன்பு தேசமாகத் திரள்வோம் என்ற கோஷம் ஜனாதிபதித் தேர்தலில் பலமாக ஒலித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளாகச் சிதறும் ஆபத்தே அதிகரித்து வருகின்றது. எனது நண்பர் ஒருவர் பின்வருமாறு கேட்டார் “இப்படியே சிதறிப்போனால் சனங்கள் தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்” என்று சலிப்படையக்கூடுமா? https://www.nillanthan.com/6934/
-
பிரம்படி படுகொலை நினைவேந்தல்!
பிரம்படி படுகொலை நினைவேந்தல்! adminOctober 13, 2024 யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை (12.10.24) முன்னெடுக்கப்பட்டது. பிரம்படி பகுதியில் அமைந்துள்ள நினைவு தூபியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தனர். https://globaltamilnews.net/2024/207454/
-
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை
கட்சி / சுயேட்சைக்குழு ஒரு உறுப்பினரை பெறுவதற்கான ஆகக்குறைந்த எண்ணிக்கையிலான வாக்கை தீர்மானிப்பது எப்படி?? (* திருத்திய பதிப்பு) // அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு தகுதியற்றதாக்கப்படும். எஞ்சிய செல்லுபடியான வாக்குகள், விகிதாசாரக் கணிப்பீட்டு அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்குவதற்காக, கணக்கில் எடுக்கப்படுகின்றன. \\ தேர்தல் மாவட்டமொன்றினை உதாரணமாக வைத்து இதைக் காண்போம்... • யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் (யாழ் -கிளி) கடந்த சனாதிபதித் தேர்தலின் போதிருந்த அதே வாக்காளர் தொகையே, பாராளுமன்ற தேர்தலின் போதும் மொத்த வாக்காளர் தொகையாகவிருக்கும் = 5,93,187 • பனங்கொட்டையர்கள் - வழக்கமாக 70% வாக்களிப்பு வீதத்தை தாண்டுவதில்லையாதலால், இத்தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் = 4,15,230 என்று எடுத்துக்கொள்வோம். • சனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணிகளின் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் = 6.4%. பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் 7.5% ஆவது இருக்கும். அதனால 31,142 போய்டும். இப்ப மிச்சம் : 3,84,087 • இப்ப செல்லுபடியான வாக்குகளில் மாவட்டத்திலேயே அதிக வாக்குகளை பெற்ற கட்சிக்கு, முதலாவது ஆசனம் வெளியெடுத்து வைக்கப்படும் - இதை ‘போனஸ் ஆசனம்’ என்ற பெயரில் புழங்கிக் கொள்கின்றோம். • தேர்தற்சட்டத்தில் சொல்லப்பட்ட அளிக்கப்பட்ட வாக்குகளில், 05%க்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சிகளின் தகுதியின்மை எண்ணிக்கையின்படி, 20,761 வாக்குகளுக்கு கீழ் பெற்ற கட்சிகள் / குழுக்கள் நீக்கப்படும். • இவர்கள் போட்டியிலிருந்து போகும் போது, தமது வாக்குகளையும் கொண்டே போவார்கள் என்பதால் சுமார் 85,000 வரையான வாக்குகள் கீயா மாயா! இப்ப மிச்சம் : 2,99,087 • ஒதுக்கப்பட்ட ஆறு ஆசனங்களுக்கு இந்த வாக்குகளை பிரித்தால், (ஏற்கனவே போனஸ் கொடுக்கப்பட்ட படியால் இத்தொகை ஐந்தால் பிரியும்) யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் ஒரு ஆசனத்துக்கான (கட்சிக்கு) குறைந்தபட்ச வாக்குகளின் எண்ணிக்கை = 59,814 அதாவது கட்சியின் / குழுவின் சின்னத்துக்கு சுமார் 59,000ற்கு மேற்பட்ட வாக்குகளை பெறும் கட்சி / குழுவே ஒரு ஆசனத்தை பெறும். தோராயமாக 60,000 வாக்குகள் = “ஒரு எம்.பி” இந்த முறை? கட்சி AA = 80,000 கட்சி BB = 70,000 கட்சி CC = 50,000 கட்சி DD = 48,000 கட்சி EE = 44,000 முதல் சுற்றில் கட்சி AA = 80,000 (போனஸ் ஆசனம் + 1 ஆசனம்) :: இரண்டாம் சுற்றுக்குரிய எஞ்சிய வாக்குகள் (80,000 - 60,000 = 20,000) கட்சி BB = 70,000 ( 1 ஆசனம்) :: இரண்டாம் சுற்றுக்குரிய எஞ்சிய வாக்குகள் (80,000 - 70,000 = 10,000) கட்சி CC = 50,000 ( முதல் சுற்றில் ஆசனம் இல்லை) :: இரண்டாம் சுற்றுக்குரிய எஞ்சிய வாக்குகள் (50,000) கட்சி DD = 48,000 ( முதல் சுற்றில் ஆசனம் இல்லை) :: இரண்டாம் சுற்றுக்குரிய எஞ்சிய வாக்குகள் (48,000) கட்சி EE = 44,000 (முதல் சுற்றில் ஆசனம் இல்லை) :: இரண்டாம் சுற்றுக்குரிய எஞ்சிய வாக்குகள் (44,000) • கட்டம் இரண்டு! இரண்டாம் சுற்று - முதற் சுற்றில் எஞ்சியிருக்கும் வாக்குகள் இறங்கு வரிசைப்படி கட்சிகள் அடுக்குப்படும். கட்சி CC (50,000) - 1 ஆசனம் கட்சி DD (48,000) - 1 ஆசனம் கட்சி EE (44,000) - 1 ஆசனம் கட்சி AA (20,000) - 🤭 கட்சி BB (10,000) - 🤭 கட்சியில் யார் போறது - “யார் கள்ளா” விளையாட்டு - கட்டம் 03! • அதெப்பிடி என்றால், இரண்டு ஆசனங்களை ஒரு கட்சி பெற்றிருந்தால், அந்தக் கட்சிக்கு அளிக்கப்பட்ட விருப்பு வாக்குகளில் முதலிரு இடங்களை பெற்றவர்கள் - இரண்டு பேர்தான் எம்.பி! ‘எண்ணித் துணிக, கருமம்!!’ https://www.facebook.com/share/p/Wyh5qQXhaLkYjsgV/?mibextid=WC7FNe
-
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு kugenOctober 12, 2024 தமிழ் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர். ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இம்முறை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் இதன்போது கருத்து தெரிவித்தனர். அந்த வகையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறுகையில், நீண்ட காலத்துக்கு பின்னர் தூய்மையான தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட வேட்பாளர்களைக் கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சி களமிறங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எமது வேட்பாளர்கள் சிறந்த வேட்பாளர்கள் என்ற கருத்து நிலவுகிறது. எமது கட்சியில் ஊழலற்ற, கடந்த காலத்தில் மோசடிகளில் ஈடுபடாதவர்களை எமது வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கியுள்ளோம். ஏனைய கட்சிகள் இது தொடர்பில் பேசமுடியாது. கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் அதிகளவில் ஈடுபட்டவர்கள் ஏனைய கட்சிகளில் போட்டியிடுகின்றார்கள். தமிழ் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர். ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஏனைய பிரதான கட்சிகளை பார்த்தால் தமிழ் பேசும் மக்களாகவே களமிறக்கப்பட்டுள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி இரண்டிலும் இரு இனங்களையும் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றார்கள். முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் எமது கட்சியின் வேட்பாளர் தெரிவின்போது சிற்சில விமர்சனங்கள் இருந்தன. ஆனாலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு தமிழரசுக் கட்சியை ஆதரிக்கக்கூடிய வகையில் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். கடந்த காலத்தில் போட்டியிட்ட இருவர் மட்டுமே இம்முறை போட்டியிடுகின்றோம். ஏனைய ஆறு வேட்பாளர்களும் புதிய முகங்களாக களமிறக்கப்பட்டுள்ளார்கள். கடந்த நான்கு வருட காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தாலும் கூட இலஞ்சம், ஊழல் மோசடி, காணி அபகரிப்பிலேயே அவர்களின் காலங்களை கடத்தியிருந்தார்கள். இன்னுமொருவர் இதுதான் நான் இறுதி முறை என்று தேர்தலில் போட்டியிட்டு அவரது கூடுதலான காலத்தினை இலண்டனில் கழித்துவிட்டு தேர்தலில் குதித்திருகின்றார். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியும் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்ற ஒரேயொருவர் நான். மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் எனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை பெறவேண்டும் என்பதற்காகவே உழைத்துக்கொண்டிருக்கின்றோம் என்றார். https://www.battinews.com/2024/10/blog-post_801.html
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது adminOctober 12, 2024 கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கி வருகின்றேன். அதனால் தான் எனது அனுபவமும் தூரநோக்குள்ள சிந்தனையும் இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில் – ஒருவருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம். அந்த சிறப்பான அனுபவம் எம்மிடம் இருக்கின்றது. தற்போது மாற்றம் என்ற கருப்பொருளை மையப்படுத்தியே அநேகமானோர் பரப்புரைகள் செய்கின்றனர். குறிப்பாக மக்கள் விரும்பும் மாற்றம் என்பது அரசியல் மாற்றமாகவே இருக்கின்றது. அந்த மாற்றம் தற்போது மத்தியில் ஏற்படுள்ளது. அந்தவகையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் அந்த மாற்றம் வரவுள்ளதாக கணிக்கப்படுகின்றது. இதேவேளை எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது. அந்த அனுபவத்தினூடாகத்தான் இம்முறை மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரசியல் மாற்றம் ஈபிடிபியின் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தும் என நம்புகின்றேன். அத்துடன் ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கின்றது. அதனால்தான் மத்தியில் உள்ள அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கெடுப்பதற்கு நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் வழங்குகின்ற ஆணையின் பலமே அடிப்படையானது என வலியுறுத்தி வருகின்றேன். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் பிரதேச பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் புரிந்துகொள்ளும் வகையில், கட்சியினால் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரைகள் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பமாகும். அதற்கான கடின உழைப்பு மிக அவசியம் எனவும் வலியுறுத்தினார். https://globaltamilnews.net/2024/207434/
-
டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர்
டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர் தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடி செய்து மாகாண சபையில் அமைச்சராக இருந்து இடைநிறுத்தப்பட்டவரே தற்போது வன்னி வேட்பாளரெனவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் (S. Sivamohan) குற்றம்சாட்டியுள்ளார். குறித்த விடயத்தை இன்று (12) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை தேர்தலில் தமிழரசுக்கட்சி வன்னியிலும் யாழிலும் ஆறு ஆசனங்களை வெல்லக்கூடிய சூழல் இருந்தது ஆனால் இன்று சுயநலவாதிகளின் டம்மி விளையாட்டால் ஒரு ஆசனம் பெறுவதே பெரும் போராட்டமாக மாறியுள்ளது. தேர்தல் நியமனக் குழு எமது கட்சியின் தேர்தல் நியமனக் குழுவானது கடந்த 2018 இல் தேர்வுசெய்யப்பட்டது அதில் சட்டத்தரணி தவராசா (K.V Thavarasha), சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan), ஈ.சரவணபவன் (E. Saravanapavan), நான் உட்பட நான்கு பேர் அந்த குழுவில் இருந்தோம். இந்தநிலையில், திடீர் என நிகழ்ச்சி நிரல் இல்லாமல் எமது நான்கு பேரின் பெயர்களையும் வெட்டிவிட்டு புதிதாக சாணக்கியன் (Shanakiyan Rasamanickam), சேயோன் (Seyon) மற்றும் ரஞ்சினி (Ranjini) ஆகியோர் சேர்க்கப்பட்டனர் இதனாலேயே இந்த மோசமான நிலை கட்சிக்கு ஏற்பட்டது. வன்னியில் வெல்ல வேண்டும் என்ற டம்மி விளையாட்டே இது எனவே பதில் பொதுச்செயலாளருக்கு நான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளேன். இவர்களை இப்படியே விட்டால் கட்சிக்கு இன்னும் பல கேடுகளை செய்வார்கள் இவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் அத்தோடு தோல்வியடைந்தவர்களை வேட்பாளராக போடுவதில்லை என்று கட்சி ஒரு போதும் முடிவெடுக்கவில்லை. அப்படி ஒரு தீர்மானம் பொதுக்குழுவிலும், மத்தியகுழுவிலும் இல்லை அத்தோடு கட்சியை வெட்டிவிட்டு ஒரு சிலர் வெல்லலாம் என்பது மிகவும் மோசமான செயல் எப்படி இந்த சதிவேலையினை திட்டமிட்டுள்ளார்கள் என்று பாருங்கள் தலைவராக இருந்தும் நியாயமான முறையில் வேட்பாளர் நியமனங்களை செய்ய முடியவில்லை என்பதாலும் மற்றும் நியமனக்குழுவில் இருந்த ஏனையவர்களை இணைக்க முடியாமல் போனதாலும் மாவை சேனாதிராஜா (Mawai Senadhiraja) பதவி விலகினார். வேட்பாளர்கள் டம்மிகள் நீ இங்கு வென்றால் மட்டும் காணும் நானும் யாழ்பாணத்தில் வென்றால் காணும் என்று சத்தியலிங்கமும் (Sathyalingam) மற்றும் சுமந்திரனும் (M. A. Sumanthiran) கருதுகிறார்கள். தமிழரசுக்கட்சி அதுவல்ல இவர்களால் இன்று ஒரு அணியே பிரிந்து சென்றுள்ளது ஒருவரை தவிர இவர்கள் போட்ட அனைத்து வேட்பாளர்களுமே டம்மிகள் இவர்களால் எப்படி வெல்ல முடியும். செயலாளர் பதவி தரம் தாழ்ந்தது இன்று வன்னியில் புதிதாக போடப்பட்ட வேட்பாளரான ரவீந்திரகுமார் மாவட்டக் குழுவில் விண்ணப்பம் தராதவர் மற்றும் அவுஸ்ரேலியாவில் நிரந்தர வதிவுரிமை கொண்டவர். வேட்பாளராக என்னை தெரிவு செய்யுமாறு நான் ஒரு போதும் கோரவில்லை எனக்கு பதிலாக புதுக்குடியிருப்பு பிரதேச கிளையின் செயலாளரான விமலதாசையே (Vimaladas) நான் பரிந்துரை செய்தேன். கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி இவர்கள் செயற்ப்பட்ட விதமானது தமிழரசுக் கட்சியினை இன்று கீழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. பொதுச்செயலாளர் பதவி என்பது விட்டுக்கொடுப்புடன் அனைவரையும் அரவணைத்து ஒன்றாக இணைத்துச் செல்லும் ஒரு பதவி தமிழரசுக்கட்சியின் தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் போன்றோர் இந்தப்பதவியினூடாக தங்களுக்குள்ளேயே விட்டுக் கொடுத்து செயற்ப்பட்டிருந்தனர். நியமனக்குழுவின் வேலை ஆனால் அந்த பதவி இன்று டம்மியான புல்லுருவிகளால் நாசமாக்கப்பட்டுள்ளதுடன் தேசியபட்டியல் வழங்க விடோம் தேர்தலில் போட்டியிட வரமாட்டேன் என்று சொல்பவர்களை வாருங்கள் தேசியப்பட்டியல் தருகிறோம் என்று அழைக்கிறார்கள். இதுவா தேர்தல் நியமனக்குழுவின் வேலை உங்களுக்குள்ளேயே பிரித்துக் கொள்ளவா இந்தக்குழுவை போட்டோம் தேர்தலில் போட்டியிட இருந்தவர்கள் நியமனக்குழுவில் இருந்து விலத்தியிருக்க வேண்டும் என்று கேட்டோம். அது நடக்கவில்லை ஆனால் தேசியப்பட்டியல் ஆசனம் எக்காரணம் கொண்டும் தோற்றவர்களுக்கு கொடுக்க கூடாது தோற்றவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாவிட்டால் அதனைமட்டும் எப்படி கொடுக்க முடியும். யாழ்ப்பாணத்தில் தான் தோற்றால் தனக்கு ஒரு தேசியபட்டியலாம் என்று அங்கு ஒருவர் இங்கால ஒருவர் அது தனக்காம் என்கிறார் கட்சி என்ன றோட்டில் விக்கிற அப்பமா நீங்கள் பிய்த்துக் கொண்டு போறதுக்கு. பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கே தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்படவேண்டும் மாகாணசபையில் ஊழல் செய்தார் ஊழல்வாதிகளை அகற்றுவேன் என்றே அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) ஆட்சிக்கு வந்தார். தமிழரசுக் கட்சி தெரிவு செய்தவர்கள் ஊழல் மோசடிக்காரர்கள் மாகாண சபையில் ஊழல் என்று சொல்லி நிரூபிக்கப்பட்டு முதலமைச்சரால் இடைநிறுத்தப்பட்டவர். ஊழல் மோசடி பின்னர் நீதிமன்றிற்கு சென்று தாங்கள் நியாயவாதிகள் என்று இன்று வரை நியாயப்படுத்த முடியாதவர் இவர்கள் தான் ஊழல்வாதிகள் அவர் வன்னியில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார். முல்லை மாவட்டத்தில் போடப்பட்ட மூவரும் ஏதோ ஒரு விதத்தில் அப்படியானவர்கள் ஒருவர் தேர்தல் கேட்பதற்கே பொருத்தமில்லாதவர் இரட்டை பிரஜா உரிமை கொண்டவர் நாடாளுமன்றுக்கு செல்லமுடியுமா. அடுத்தவர் புலிகள் காலத்தில் ஊழல் மோசடிக்காக அடைத்து வைக்கப்பட்டவர் இன்னொருவர் பகிரங்கமாகவே ஊழல் மோசடியில் சிக்கியவர் இன்று அவர்கள் எல்லாம் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள். நல்லதே நடக்கட்டும் நிச்சயமாக நான் குற்றப்பத்திரிகையினை தனித்தனியாக தாக்கல் செய்வேன் செயலாளரால் நீதிமன்றுக்கு சென்ற கட்சி இன்று கட்சியானது சரியான தீர்மானம் எடுக்க முடியாமல் வழக்கில் சிக்கியுள்ளது எதனால் அது ? கட்சியின் மாநாடு நடப்பதற்கு முன்னர் அல்லது பொதுக்குழு கூடுவதற்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடாத்தப்பட வேண்டும். அந்த கூட்டத்தில் தான் பிரச்சனைகள் இல்லாமல் பொதுக்குழுவை எப்படி வழிநடத்துவது என்று தீர்மானிப்பது பதவிகளில் யாரை போடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதும் அந்த கூட்டதிலேயே. அதுவே ஆலோசனைக் குழுவின் பணி அந்தக்கூட்டம் வாக்கெடுப்பிற்கு முதள்நாள் திருகோணமலையில் (Trincomalee) நடப்பதாக இருந்தது நாங்கள் அதற்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. பதில்செயலாளர் சுகவீனம் அந்தக்கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது சத்தியலிங்கம் ஐயா நிமோனியாவாலோ கொரோனாவாலோ படுத்துக்கிடக்கிறார் என்றார்கள் அதனால் கூட்டம் ரத்தாகியது அந்த பதில் செயலாளர் உண்மையில் சுகவீனமுற்றுத்தான் கூட்டத்திற்கு வரவில்லை என்றால் அவர் எந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் விபரங்களை தரவேண்டும். ஊடகங்களுக்குப் பொறுப்பு உள்ளது நீங்கள் போய் அவரிடம் கேட்டுபாருங்கள் மக்களுக்கு அதனை வெளிப்படுத்த வேண்டும் அப்படி இல்லாது விடில் இது நடத்தப்பட்ட சூழ்ச்சி. அந்த சூழ்ச்சியினாலேயே அந்த தெரிவுகள் போட்டிக்கு சென்றது பின்னர் நிர்மூலமாக்கப்பட்டது செயலாளரும் மற்றும் பேச்சாளரும் விலகினால்தான் விடிவு எனவே பதில்செயலாளர் சகல பொறுப்புக்களையும் ஏற்று கட்சியினை உருக்குலைத்ததையும் ஏற்றுக்கொண்டு பதவி விலக செய்யவேண்டும். அடுத்தது ஊடகப்பேச்சாளராக ஒருவர் இருப்பதாக இருந்தால் கட்சி எழுதிக்கொடுப்பதை மாத்திரமே சொல்லவேண்டும் தனிப்பட்ட கருத்தை அவர் சொல்லமுடியாது. ஊடகப்பேச்சாளர் அந்த தர்மத்தை மீறியபடியால் அவரும் நீக்கப்பட வேண்டும் நாம் பயந்தவர்கள் அல்ல கடைசிவரை தமிழரசுக்கட்சிக்கு உள்ளே இருந்து குரல் கொடுப்போம் உயிர் இருக்கும்வரை தமிழரசுக்கட்சியோடு தான் பயணிப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/sivamohan-allegation-regarding-post-secretary-itak-1728730477