Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. அம்பாறை மாவட்டத்தில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு : காரைதீவில் சிவில் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் ! kugenOctober 4, 2024 (வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (4) வியாழக்கிழமை இரவு காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர். ஆசன ஒதுக்கீடு சின்னம் பற்றி ஓரிரு நாளில் தெரியவரும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள் , அம்பாறை மாவட்ட நிலைமையில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு தமது சம்மதத்தை தெரிவித்திருந்தனர் . கூட்டம் தொடர்பாக தமது கட்சி தலைமைகளுக்கு தெரியப்படுத்துவதாக கட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர். கொள்கை அளவில் இணங்கிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் தொடரந்து ஒரு மணி நேரம் இடம் பெற்றது. கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட பொது கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இ.விக்னேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர் கண.வரதராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.. இன்றைய கலந்துரையாடல் முதற்கட்ட வெற்றியாகும் . அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு தமிழ் ஆசனத்தை காப்பாற்றும் வகையில் தமிழ் கட்சிகளை ஓரணியில் போட்டியிட வைக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனும் பேசி வருகின்றோம். இன்றைய அம்பாறைக்கான கலந்துரையாடலில் தமிழ் தேசிய பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள். முதற் கட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது . அடுத்து சின்னம், ஆசன பங்கீடு தொடர்பாக விரைந்து ஒரு கலந்துரையாடல் மூலம் ஒரு இணக்கப்பாட்டை எடுக்கும் முயற்சியில் எமது சிவில் சமூக கட்டமைப்பும் ,தமிழ் மக்கள் பொதுச்சபையும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதால் மாவட்டத்தில் ஆசனம் இழக்கபடும் என்பதால் தமிழ்க் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் காரைதீவில் இடம் பெற்றது என்றனர். இங்கு பங்குபற்றிய தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேர்தல் கூட்டில் தமிழ் தேசிய பரப்புக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைக்க வேண்டாம் என தங்கள் கருத்தை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுத்தும் கலந்து கொள்ளவில்லை என்று இணைப்பாளர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில். எமக்கு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி கிடைத்தது. அதாவது சங்கு சின்னத்தில் பொது வேட்பாளருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானதாகும். நாம் தமிழர்கள் ஒன்றாகவே இருக்கிறோம் என்பதை உலகிற்கு சொல்லியிருக்கிறோம். அதே ஒற்றுமையை இந்த பாராளுமன்ற தேர்தலிலும் ஒன்றாக பயணிப்போம் என்பதை கூறவேண்டும். திருகோணமலையிலும் இதே ஒற்றுமை ஆயர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆரம்பம் வெற்றி. இனி பொதுச் சின்னம் மற்றும் ஆசன பங்கீடு தொடர்பில் ஓரிரு நாட்களில் கலந்து பேசி முடிவுக்கு வரவுள்ளோம். என்றார். https://www.battinews.com/2024/10/blog-post_64.html
  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் - சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ வீடு! Vhg அக்டோபர் 03, 2024 முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் அவர் இறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தியோகபூர்வ இல்லம் அமைச்சரவையின் அனுமதியுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த வீட்டை மீண்டும் அரசாங்கத்திடம் பெறுவதற்கு முன்னைய அமைச்சரவை முடிவை மாற்றி புதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதித்துறை மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆட்சி மாற்றத்தால் கைநழுவிப்போன வாய்ப்பு.... இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை மீண்டும் அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அன்றைய அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சு கையளித்த போதிலும், ஆட்சி மாற்றத்துடன் தாபினட் அங்கீகாரம் நிறுத்தப்பட்டதாக அறியமுடிகிறது. புதிய அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச ஐம்பத்திரண்டு நாட்கள் அரசாங்கத்தின் பிரதமரானார், ஆனால் அவர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு திரும்பினார், எனினும் சம்பந்தனுக்கு அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்து இருக்க வாய்ப்பளித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், 2019 பெப்ரவரி 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவராக இருக்கும் வரை அந்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார். இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கத்தினால் ஏற்கப்படுவதாகவும், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் சம்பளம் அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு அந்த வீட்டின் மராமத்து பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தார். https://www.battinatham.com/2024/10/blog-post_3.html
  3. தமிழ்த் தேசிய அரசியலில் இன்று நிராகரிக்க முடியாத தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்கிறார் கஜேந்திரகுமார் தமிழ்த் தேசிய அரசியலில் இன்று நிராகரிக்க முடியாத ஒரே ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியே உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02) மாலை மாங்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளர் தவபாலன் தலைமையில் இடம்பெற்றது நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வன்னி தேர்தல் தொகுதி வேட்ப்பாளர்கள் வன்னி தேர்தல் தொகுதியின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இங்கு சமகால அரசியல் நிலைமைகள் எதிர்வரும் தேர்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு வன்னி தேர்தல் தொகுதியில் தேர்தலுக்காக பணியாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது https://thinakkural.lk/article/310267
  4. பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் பலி October 3, 2024 லெபனான் தலைநகரின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ நிலையத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மத்திய பெய்ரூட் மீது இந்த வாரம் இஸ்ரேல் மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் அதிகளவிற்கு பெய்ரூட்டின் தென்பகுதி புறநகர் பகுதிகளை இலக்குவைத்தே தாக்குதல்களை மேற்கொண்டுவந்துள்ளது. ஏவுகணை செல்லும் சத்தத்தையும் பின்னர் அது விழுந்து வெடிக்கும் சத்தத்தையும் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கட்டிடமொன்று தீப்பிடித்து எரிவதையும் மக்கள் தப்பியோடுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் பல துணை மருத்துவ பணியாளாகள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் 14 துணை மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டனர்,திங்கட்கிழமை பெக்காவில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் இவர்கள் அனைவரும் இஸ்லாமிய சுகாதார அமைப்பை சேர்ந்தவர்கள் . https://eelanadu.lk/பெய்ரூட்டின்-மத்திய-பகுத/
  5. மோடியின் செய்தியுடன் நாளை இலங்கை வருகிறார் ஜெய்சங்கர் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 4ஆம் திகதி) இலங்கை வரவுள்ளார். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இந்நாட்டுக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி இவராவார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட புதிய அரச தரப்பினருடனும், தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடனும் மற்றும் சிவில் சமூகத்தினருடனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார். இந்த விஜயத்தின்போது டில்லி வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை, ஜனாதிபதி அநுரகுமாரவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கையளிக்கவுள்ளார். http://www.samakalam.com/மோடியின்-செய்தியுடன்-நாள/
  6. ரணிலை ஆதரித்தவர்கள் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க முடிவு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இயலும் சிறிலங்கா மாநாட்டில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கையெழுத்திட்டிருந்தன. http://www.samakalam.com/ரணிலை-ஆதரித்தவர்கள்-பொது/
  7. இது ஒரு சமூகச் சீரழிவை வெளிக்கொண்டுவரும் மஞ்சள் பத்திரிகைச் செய்தி. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகத்திற்கு விடுமுறையில் போகும் ஒரு சிலர் தமது பகட்டாலும், பணத்தை வீசிச் செலவழித்தும் இவ்வாறு நடப்பது தொடர் செய்திகளாக வருகின்றது. அடுத்த சம்மர் சீஸனிலும் இன்னும் அதிகரிக்கும்!
  8. தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவரும் முயற்சிகளை ஜனாதிபதி கைவிடவேண்டும் தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவரும் முயற்சிகளை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க கைவிடவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் கடும் போக்குடைய சிங்கள பௌத்த தேசியவாதிகளை; கவரும் முயற்சியில் ஈடுபட்டால் தேசிய மக்கள் சக்தி புதிய ராஜபக்சாக்களாக மாறும் என தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் இடம்பெறுகின்ற விடயங்களை பார்க்கும் நல்லாட்சி 2 என்ற உணர்வும்,முன்னர் நடந்ததை மீண்டும் அனுபவிக்கின்ற உணர்வும் எனக்கு ஏற்படுகின்றது. ஜனாதிபதி வெற்றியடையவேண்டும்,தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்ற பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன். அது நடைபெறாவிட்டால் கூட்டணி அரசாங்கமே ஒரேயொரு சாத்தியப்பாடாகயிருக்கும். தேசிய மக்கள் சக்தி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என என்னால் ஊகிக்க முடியாது,மேலும் இலங்கை கூட்டணி அரசாங்கங்கள் விடயத்தில் சிறந்த வரலாற்றை கொண்டிருக்கவில்லை. மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தவறுகள் இழைக்கப்படுவதை தூண்டுகின்றன.நல்லாட்சியில் இடம்பெற்ற விடயங்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதற்காக விமர்சனங்களை முன்வைக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது. ஜனாதிபதியை விமர்சிப்பவர்களை தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் நியாயமற்ற விதத்தில் தாக்குவதும் கண்டிப்பதும் ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் வாக்களிக்காதவர்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தப்போவதில்லை. தேசிய மக்கள் சக்தி கருத்துவேறுபாடுகளை பொறுத்துக்கொள்ளாத வழிபாட்டு மனப்பான்மை உள்ள குழு என்ற எண்ணங்களை இது வலுப்படுத்தப்போகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற சிங்கள வாக்காளர்களை கவரவேண்டும் என தேசிய மக்கள் சக்தி நினைப்பதை நான் புரிந்துகொள்கின்றேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி மூலோபாய ரீதியில் செயற்படவேண்டும்,நம்பவைக்ககூடியவற்றில் மாத்திரம் கவனம் செலுத்தவேண்டும். ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் தேசிய மக்கள் சக்தி வித்தியாசமானது என கருதுபவர்கள் விலகிச்செல்லும் நிலையை ஏற்படுத்தக்கூடாது. கடும் போக்குடைய சிங்கள பௌத்த தேசியவாதிகளை வசீகரித்தால் தேசிய மக்கள் சக்தி புதிய ராஜபக்சாக்களாக மாறும். வித்தியாசமானதாக அல்லது சிறுபான்மையினத்தவர்கள் நம்பக்கூடிய சக்தியாக விளங்காது. 1994 -2001- மற்றும் 2015ம் ஆண்டுகளில் அதிகாரத்திலிருப்பவர்களுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்த சிவில் சமூகம் முறைசாரா ஆலோசகராக மாறியது,அல்லது நிழலில் செயற்பட்ட குழுக்களாக ,காணப்பட்டதுடன் செல்வாக்கு செலுத்தியது,சட்டங்களை கூட உருவாக்கியது. 2022 இல் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றபோது ராஜபக்சாக்களை விமர்சித்த சில சிவில் சமூக குழுவினர் ரணில்விக்கிரமசிங்கவை ஆதரித்ததுடன்,அவர் மனித உரிமைகளை மீறியதுடன், ஏதேச்சதிகாரிபோன்று ஜனநாயக விரோதமான முறையில் செயற்பட்டவேளை அதனை நியாயப்படுத்தியிருந்தன. இது ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் இடம்பெறுவதை காண்கின்றோம். சிவில் சமூகத்தின் சில பிரிவினர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை விமர்சிக்ககூடாது அது அவரை பலவீனப்படுத்தும் அவருக்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும். இவர்கள் அவர்களின் தவறுகளை நியாயப்படுத்துகின்றனர்,அல்லது அலட்சியம் செய்கின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தின் போது மத்தியவங்கி பிணைமுறி மோசடி,யுத்தத்திற்கு பிந்தைய விவகாரங்களிற்கு தீர்வை காணதவறுதல் போன்றவை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டவேளை இதேபோன்ற கருத்துக்கள் வெளியாகியிருந்தன. நல்லாட்சி அரசாங்கத்தை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த தவறியதன் காரணமாகவே ராஜபக்சாக்கள் மீண்டும் துரிதமாக ஆட்சிக்கு வரமுடிந்தது. தற்போது அதுபோன்ற நியாயப்படுத்தல்களை காணமுடிகின்றது. உதாரணத்திற்கு தனிப்பட்ட தொடர்புகள் இருப்பதற்காக உரிய தகுதியற்றவர்கள் குறிப்பிட்ட பகுதிகளிற்கு நியமிக்கப்படுதல் அதிகாரத்திற்கு நெருக்கமாகயிருப்பதை மாத்திரம் முக்கிய பரப்புரை தந்திரோபாயமாக கொண்டிருக்கும் சில சிவில் சமூகத்தினர் எவ்வாறான அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றனர். இது அனைத்தையும் உடனடியாக மாற்றமுடியாத இடைக்கால அரசாங்கம் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் உணர்ந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.அதற்கு மக்கள் ஆணையில்லை மேலும் அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குழப்பங்களை உருவாக்கலாம். அரசாங்கம் செய்யவேண்டிய செய்யக்கூடாத சில விடயங்கள்- உங்களுடைய தனிப்பட்ட தொடர்புகளிற்காக உரிய தகுதியற்றவர்களை பதவிகளிற்கு நியமிக்கவேண்டாம் -ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு மருத்துவர் நியமனம். ஏற்கனவே இல்லாத புதிய பதவிகளை உருவாக்கி உங்களுடன் தனிப்பட்ட தொடர்பில் உள்ளவர்களை அதற்கு நியமிக்கவேண்டாம். ராஜபக்சாக்களின் தோல்வியடைந்த பேரழிவு கொள்கைகளை போற்றியவர்களை பதவிகளிற்கு நியமிக்கவேண்டாம். ஜனாதிபதி நிறுவனங்களின் செயற்பாடுகளை பொறுப்பேற்ககூடாது,மற்றும் சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்ட எல்லைகளிற்கு வெளியே செயற்படக்கூடாது-ஊழலிற்கு எதிரான விசாரணைகளிற்கு தலைமை தாங்ககூடாது அதில் தன்னை ஈடுபடுத்தக்கூடாது. போலியானது மனித உரிமை மீறல்களிற்கு வழிவகுத்தது என நிரூபிக்கப்பட்டுள்ள யுக்திய போன்ற செயற்பாடுகள் கொள்கைகளை நிறுத்துங்கள் . நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் சில விடயங்களை புதிதாக ஆரம்பிக்கவேண்டாம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இருந்து ஆரம்பியுங்கள் -அரசமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டாம்,ஆனால் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்ததிலிருந்து ஆரம்பியுங்கள். தமிழர்களின் நம்பிக்கையை பெறவிரும்பினால் சிங்கள பௌத்த தேசியவாதிகளை கவருவதை நிறுத்துங்கள் தமிழர்களை சொல்லிலும் செயலிலும் சமமான பிரஜைகளாக நடத்துங்கள். யுத்த குற்றங்களி;ல் ஈடுபட்டார்கள் என கருதப்படுபவர்களை உயர்பதவிகளிற்கு நியமிப்பது சிறந்த ஆரம்பமில்லை. https://akkinikkunchu.com/?p=293723
  9. பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார் October 2, 2024 ஆயுதம் ஏந்திய அனுபவம், புதிய ஜனாதிபதியால் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கான தகுதியாக தமிழ் துணை இராணுவக் குழுவின் தலைவர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் என்ற அடிப்படையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். “தேர்தல் முடிந்த பின்னர், அந்த வெற்றிக்கு பின்னர் ஆட்சியில் இருக்கின்றவர்களோடு கலந்துரையாடி, ஏனென்றால் அவர்களும் உங்களுக்குத் தெரியும் ஒரு ஆயுத போராட்டத்தின் ஊடாகத்தான் இன்று தேசிய நீரோட்டத்தில் ஜனநாயக வழிக்கு வந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். அதேபோல் நாங்களும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். கொள்கை எனப் பார்க்கையில் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் கொள்கையில் வேறுபாடுகள் இல்லை. அதாவது அவர்கள் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள். ஈபிடிபியும் ஒரு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தது. அந்த வகையில் எங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு இருக்கின்றது.” டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் ஆகியோர் மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த 2004 இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்னர் புதிய அரசாங்கத்துடன் இணையும் சாத்தியம் குறித்தும் ஈபிடிபி தலைவர் அதிக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். “தேர்தலுக்கு பின்னர், இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் ஈபிடிபியின் வீணை சின்னத்தின் வெற்றியின் பின்னர் நிச்சியம் அது நிறைவேறும் என்பதை கூறிக்கொள்கிறேன்.” அரசாங்கத்திற்கு ஆதரவான ஆயுதக் குழுவாக செயற்பட்ட ஈ.பி.டி.பிக்கு எதிரான கடத்தல், சித்திரவதை, கப்பம் பெறுதல், கொலை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை எந்த அரசாங்கமும் விசாரிக்கவில்லை. அந்த கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா 1994 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.supeedsam.com/206232/
  10. பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான் Vhg அக்டோபர் 02, 2024 எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளராக கருணா அம்மான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/10/blog-post_87.html
  11. பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்! Vhg அக்டோபர் 02, 2024 யாழ்ப்பாண பகுதியில் வசித்து வந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் 47 வயதான கனடா தமிழ் குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தலைமறைவான மாணவியின் தந்தையின் நெருங்கிய நண்பர் என தெரியவருகின்றது. கனடா செல்வதற்கு முன்னரே வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இருவரும் பாடசாலை நண்பர்களாகவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து சென்ற சந்தேக நபர் தனது பாடசாலை நணபனான மாணவியின் தந்தையுடன் பல இடங்களுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந் நிலையிலேயே சந்தேக நபர் தனது நண்பனின் மகளுடன் தற்போது தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காணாது தேடி மாணவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதே மாணவி தான் சந்தேக நபருடன் குடும்பம் நடாத்திவருவதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னைத் தேட வேண்டாம் எனவும் தனது தாயாருக்கு கூறியதாகத் தெரியவருகின்றது. சந்தேக நபரான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தங்கியிருந்த அக்காவின் வீட்டுக்குச் சென்ற தந்தை அங்கு கலவரத்தில் ஈடுபட்டதுடன் சந்தேக நபரின் பொருட்களை அடித்து உடைத்து அட்டகாசம் செய்ய முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது. https://www.battinatham.com/2024/10/blog-post_2.html
  12. தமிழரசு கட்சி எங்கு செல்லுகின்றது? மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தனது முகநூலில் நேற்று 01 ஆம் திகதி அவருடைய புகைப்படத்துடன் பதிவிட்ட விடயம் பலருடைய கவனத்திற்கு வந்துள்ளது. அதில் அவர் குறிப்பிட்டுள்ள விடயம் என்னவென்றால், “உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நோக்கிய தமிழர் தாயகம்” என்ற கருத்து பட அவர் இதனை கூறியிருக்கின்றார். தமிழரசு கட்சி ஆரம்ப காலம் முதல் அபிருத்தியை இரண்டாமிடத்திற்கு வைத்து, தமிழ் தேசியத்தை முன்னுரிமை படுத்தியே இதுவரை காலமும் எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கூட தமிழ் தேசியத்தை உறுதிப்படுத்துவதாக கூறியே சஜித்திற்கு ஆதரவாக அவர்கள் செயற்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீரென சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் அபிவிருத்தியையும் சேர்த்திருப்பது பல கேள்விகளை எழுப்பி நிற்கின்றது. தமிழரசு கட்சி தமிழ் தேசியத்தை கைவிட்டுள்ளதா? அல்லது தமிழ் தேசியம் இப்பொழுது தேவையில்லாத விடயம் என்று அவர்கள் கருதுகின்றார்களா? ஏனைய கட்சிகள் கூறுவதை போலவும், இலங்கையிலே இருக்கின்ற பெரும்பான்மை தேசிய கட்சிகள் கூறுவதை போலவும் அபிவிருத்தியை நாங்கள் எட்டிவிட்டால் இனப்பிரச்சனை தானாக தீர்ந்துவிடும் என்கின்ற சித்தார்ந்தத்திற்கு துணைபோகின்றதாக அமைகின்றதா? அல்லது இப்போதைக்கு தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதால் அபிவிருத்தியையும் கொண்டுவந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இடங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழரசு கட்சி செய்யும் முயற்சியா என்ற கேள்விகள் எல்லாம் மக்கள் மத்தியில் எழுந்து நிற்கின்றது. தமிழர் தேசியத்தை அடிப்படையாக கொண்டு இதுவரை காலமும் செயற்பட்டு வந்த தமிழரசு கட்சி திடீரென உரிமையுடன் கூடிய ஒரு விடயத்தை முன்வைக்கின்ற பொழுது இது தமிழரசு கட்சி எடுத்த முடிவா என்று கேட்ட தொன்றுகிறது. அத்தோடு தமிழரசு கட்சி இது தொடர்பில் யாருடன் கலந்துரையாடியுள்ளது, மக்களிடம் இது தொடர்பான அபிப்பிராயம் பெறப்படதா என்பது போன்ற கேள்விகளெல்லாம் கேட்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே சாணக்கியன் தன்னுடைய முகநூல் புத்தகத்தில் பதிவிட்ட தேசியத்தையும், அபிவிருத்தியையும் சமமாக பார்க்கின்ற அல்லது ஒன்றையொன்று குறைத்து மதிப்பிட்டு பார்க்கின்ற இந்த நிலைமைக்கு என்ன பதில் சொல்ல போகின்றார். https://battinaatham.net/?p=91440
  13. தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுவுக்குள் சுமந்திரன் சார்பானவர்கள் அதிகம். சிறிதரனை பொதுத்தேர்தலில் நிற்காமல் பண்ணும் அளவிற்கு போக முயற்சிக்கின்றார்கள். சிறிதரன் சுயேட்சைக்குழு ஊடாக தேர்தலில் நிற்கவேண்டி வரலாம் என்று செய்திகள் உலாவுகின்றன.
  14. பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் பாராளுமன்ற ஆசனங்களை இழப்போம்: செல்வம் எச்சரிக்கை October 2, 2024 நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நேற்று இந்திய தூதுவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இரு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன. தற்போதுள்ள ஜனாதிபதியின் செயற்பாட்டில் தாங்களும் இணைந்து செயல்பட போவதாக இந்திய தூதுவர் எடுத்துக் கூறினார். அடுத்து வடக்கில் அதிகமான அபிவிருத்தியை இந்தியா செய்ய இருக்கின்றது. அவ்வாறான அபிவிருத்தியின் போது அதன் பலன்களை தமிழ் மக்கள் அடைய வேண்டும் என்ற ரீதியில் அவருடைய கருத்துக்கள் இருந்தன. அது மாத்திரம் அல்ல தமிழ் தரப்பு ஓரணியிலே ஒன்றாக வேண்டும். பிரிந்து நிற்கும் செயற்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பது நல்லதல்ல. நல்லதொரு ஒற்றுமையான முடிவை எட்டி இந்த தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெற வேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் தமிழர் தரப்பில் உள்ளவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையில் ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் புதிய அரசாங்கத்தோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியும். அந்த வகையிலே நீங்கள் ஒற்றுமையோடு இருந்தால் தான் எல்லா விடயங்களையும் சாதிக்க முடியும். அதேபோல் இந்த அபிவிருத்தி பணிகளை நாங்கள் கூடுதலாக வடக்கிலே செய்ய இருக்கின்றோம். அந்த அடிப்படையில் தமிழர் தரப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதன் ஊடாகத்தான் அபிவிருத்தி பணிகளை மக்களிடம் சென்றடைய கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் எடுத்துக் கூறினார். இந்நிலையில் தமிழரசு கட்சியும் ஒன்றாக சேர வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றது. இந்நிலையில் நான் ஒரு ஆலோசனையை முன் வைப்பதற்கு விரும்புகின்றேன். இப்போதுள்ள கள நிலவரம் எங்களுடைய பிரதிநிதித்துவம் குறைகின்ற செயற்பாடாகத்தான் காணப்படுகிறது. அண்மையில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை காணக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தமிழரசு கட்சியிடம் கேட்டுக்கொள்கின்றோம் ஒரு பொதுச் சின்னத்திலே குறிப்பாக குத்துவிளக்கு சின்னத்திலும்கூட வலியுறுத்தாமல் எல்லோரும் இணைந்து ஒரு பொது சின்னத்திலே இந்த தேர்தலில் பங்குபற்றினால் அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவாக இருக்கும். அந்த வகையில் எங்களைப் பொருத்தமட்டில் ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம். விமர்சனங்கள் என்பது இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் வெளிப்படையாக சஜித்துக்கும் ரணிலுக்கும் செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்திலே பொது வேட்பாளராக களம் இறங்கிய அரியனேந்திரன் 2 லட்சம் வாக்குகளை பெற்றது என்பது சாதாரண விடயம் அல்ல. நாங்கள் இன்னும் முழுமையாக வேலை செய்திருந்தால் கூடுதலாக வாக்குகளை பெற்று இருக்கலாம் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது. இந்த காலத்திலே விமர்சனங்கள் மேலோங்கி இருக்கின்றது. தேசியத்தோடு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள தலைவர்களுக்கு விரலை நீட்டி அவருக்கு வாக்களியுங்கள் என்று சொன்ன நிலைமை காணப்பட்டது. அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கின்றது. அவை ஆராயப்பட வேண்டும். குறிப்பாக அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களிலே நாங்கள் பிரிந்து நின்றால் இருக்கின்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடும். அங்கு மட்டுமல்ல வன்னியிலும் எமக்கு பெரிய ஆபத்து உள்ளது. நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவோமாக இருந்தால் ஆசனங்கள் வேறு யாருக்கும் கிடைக்கின்ற வாய்ப்புகள் இருக்கும். மக்களின் கோபத்துக்கு உள்ளாக்கப்பட்டு நமக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டாக மாறுகின்ற நிலைமை ஏற்படும். ஆகவே வன்னியை பொருத்தவரையும் அது ஒரு அபாயகரமான நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. சிங்கள பிரதிநிதித்துவம் கூடி விடுமா என்கின்ற ஒரு அச்சம் காணப்படுகிறது. அது மாத்திரமல்ல எங்களுக்குள் பிரச்சனைகளை நாங்கள் வைத்திருப்போமாக இருந்தால் முஸ்லிம் சகோதரர்களுக்கும் பிரதிநிதித்துவத்தில் கூடுதலாக வருகின்ற நிலைமை காணப்படும். ஆகவே மக்கள் கோபப்படும் அளவிற்கு எமது செயற்பாடுகள் இருக்காது, இருக்கவும் கூடாது என கேட்டு கொள்வதோடு ஒரே அணியில் ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது தான் சாதகமாக இருக்கும் என்றார். https://www.ilakku.org/பிரிந்து-நின்று-செயல்படு/
  15. ’’அனுரவை 12 வயதில் பிக்குவாக்கக் கூறினர்’’: தாய் உருக்கம் “எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார். இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிராமமான தம்புத்தேகம எனும் பகுதியில் ஒரு சிறிய ஆஸ்பெட்டாஸ் கூரையினாலான வீட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தாயார் டி.எம். சீலாவதி (86) தனது மகள் ஸ்ரீயலதாவுடன் (62) வசித்து வருகிறார். இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இளம் பருவம் பற்றி தாயார் சீலாவதி அளித்த பேட்டி ஒன்றில் கூறியது: “எனது மகனுக்கு சிறுவயதில் காற்றில் பட்டங்களை பறக்க விட மிகவும் பிடிக்கும். தினமும் அருகிலுள்ள நீச்சல் குளத்திற்கு சென்று நீச்சலடிக்கவும் பிடிக்கும். அநுரவுக்கு எப்போதும் புத்தகங்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும். வீட்டின் எதிரே இருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து சப்தமாக படித்து கொண்டிருப்பது இன்னும் நினைவில் எனக்கு இருக்கிறது. சாப்பிடும் போதும் புத்தகமோ செய்தித்தாளோ வாசித்துக் கொண்டே சாப்பிடுவது அநுரவின் வழக்கமாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது அநுரவுக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு கொலை மிரட்டலும் வந்தது. அவர் நெருங்கிய தொடர்பிலிருந்த அவரது சிறிய தந்தையார் (தந்தையின் சகோதரர்) கொலை செய்யப்பட்டார். அநுர தலைமறைவாக இருந்த காலத்தில் 1992-ம் ஆண்டு அவரது அப்பா இறந்துபோது, அவரது இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை. 12 வயதிருக்கும்போது புத்த விகாரை ஒன்றின் தலைமை குரு ஒருவர், அநுரவை துறவறத்துக்கு அனுப்புமாறு கேட்டார். அதனை நான் மறுத்து விட்டேன். அநுர பிறந்து ஆறாம் மாதத்தில் அவரது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டியபோது, ’உங்கள் மகன் ஒரு நாள் அரசாள்வான்’ என்று அதிர்ச்சியோடு சொன்னார். எனது மகன் சாதாரண குடும்பத்திலிருந்து இன்று அதிபராகி உள்ளார். அவர் பொய் சொல்பவரோ, மோசடி செய்பவரோ கிடையாது. அனுராதபுரத்தில் உள்ள ஆலயங்களில் எனது மகனுக்காக பிரார்த்திக்க வேண்டும்” என தெரிவித்தார். சகோதரி ஸ்ரீயலதா கூறும்போது, “எனது தாயார் தினமும் இரவு தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்கிறார். செய்தியில் எனது சகோதரன் வரும்போதெல்லாம் என் மகனா என கேட்பார். மகனுடன் இருக்க அவர் விரும்புவார். என் சகோதரன் அநுரவும் இந்தப் பகுதிக்கு வரும்பொதெல்லாம் எங்களை பார்க்க வீட்டுக்கு வருவார். அவர் இந்த நாட்டின் இந்த பகுதிக்கு வரும்போதெல்லாம், எங்களை சந்திக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, அநுர காரில் தூங்கியதுதான் அதிகம். அவரது பதவியேற்பு ஆரவாரமின்றி நடைபெற்றது. அவர் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்” என தெரிவித்துள்ளார். யார் இந்த திசாநாயக்க? - இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968-ல் அநுர குமார திசாநாயக்க பிறந்தார். தனது பள்ளி படிப்பினை தம்புத்தேகவில் உள்ள கமினி மகா வித்யாலயா பள்ளியிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1988-ம் வருடம் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யில் இணைந்தார். 1995-ம் ஆண்டு அதன் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக ஆனார். 2004-ம் ஆண்டு அப்போதைய கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார். 2014-ஆம் ஆண்டு ஜேவிபியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார். மேலும், இலங்கையில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று ஜனாதிபதியானார். (நன்றி: தி ஹிந்து) https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அனுரவை-12-வயதில்-பிக்குவாக்கக்-கூறினர்-தாய்-உருக்கம்/91-344793
  16. இலங்கை தூதரகம் முன் முற்றுகைப் போராட்டம் இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சென்னையில் பாமக சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான இந்திய எல்லைக்கும், இலங்கை எல்லைக்கும் இடைப்பட்ட கடல் பரப்பு மிகவும் குறுகியது ஆகும். அதனால், தமிழ்நாட்டு மீனவர்களாக இருந்தாலும், இலங்கை மீனவர்களாக இருந்தாலும் எல்லையைக் கடக்காமல் மீன்பிடிக்க முடியாது. அதே நேரத்தில் அந்தப் பகுதிகளில் தான் இரு நாட்டு மீனவர்களும் காலம் காலமாக மீன் பிடித்து வருகின்றனர் என்பதால், அவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள மீனவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதை மதிக்காத சிங்கள கடற்படை, பல நேரங்களில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் கைது எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளும் அதிகரித்து வருகின்றன. சிங்களக் கடற்படையினரின் அண்மைக்கால கொடிய அத்துமீறல்களுக்கு எடுத்துக்காட்டு தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் தான். வங்கக்கடலில் இரு படகுகளில் சென்று ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கடல் நீரோட்டத்தின் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கைக் கடற்படை இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, அனைத்து மீனவர்களுக்கும் இலங்கை ரூபாய் மதிப்பில் தலா ரூ.3.5கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தாத வரை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டது. அபராதத்தை செலுத்த முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களையும் கைது செய்து 6 மாதங்கள், ஓராண்டு, ஒன்றரை ஆண்டு என சிறை தண்டனை விதித்து வருகிறது சிங்கள அரசு. இத்தகைய கொடூர அணுகுமுறை காரணமாக கடந்த ஜூன் 16&ஆம் தேதி மீன்பிடி தொடங்கிய பிறகு இன்று வரையிலான மூன்றரை மாதங்களில் மட்டும் 404 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 54படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இன்றைய நிலையில் மட்டும் இலங்கை சிறைகளில் 162 பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்ட மீனவர்களால் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, அவர்கள் பிடித்து வரும் மீன்களை சுத்தம் செய்தல், பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும் பத்து மடங்கு குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது தெரியவில்லை. மீனவர்களைக் காக்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் கடமையை முடித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியப் பொருளாதாரத்தின் ஓர் அங்கம் ஆவர். கடல் மீன்கள் ஏற்றுமதியால் மட்டும் மத்திய அரசு பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டுகிறது. அவர்கள் எல்லையில்லாமல் இலங்கைச் சிறைகளில் வாடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சென்னையில் பாமக சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி - பாமக பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கை-தூதரகம்-முன்-முற்றுகைப்-போராட்டம்/175-344804
  17. முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அநுரகுமார திசாநாயக ஜனாதிபதியாகியமை. அதைப்போலவே வடக்குகிழக்கில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றனர். அது புதியவர்களையும், இளையோரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்பதாகும். மக்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த மன மாற்றத்துக்கு நாம் தடையாக இருக்க முடியாது. அதற்கு வழிவிட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். மக்கள் மனங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதே அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்கவேண்டும். என்னுடையதும் ஏனைய சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களதும் போட்டியிடாதிருக்கின்ற முடிவு ஏனையவர்களும் உணர்ந்து முடிவெடுக்க உந்துதலாக அமையும் என கருதுகின்றேன். வன்னி மாவட்டத்தில் அரசியல் தெளிவுள்ள, ஆளுமைமிக்க இளம் தலைவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற மக்களின், இளைஞர்களின் விருப்பங்கள் நிறைவேற மக்கள் மனதறிந்து எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். க. அகரன் https://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-எம்-பி-வினோ-அதிரடி-அறிவிப்பு/175-344806
  18. வடமாகாண சுற்றுலாத்துறை தொடர்பில் கலந்துரையாடல் adminOctober 2, 2024 மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் துறை சார்ந்தோர்களுடன் கலந்துரையிடலில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டார். ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை பணியக தவிசாளர், ஆளுநரின் ஒருங்ககிஇணைப்பு செயலாளர், பணிப்பாளர் சுற்றுலாப் பணியகம், சுற்றுலாத்துறை பணியாக அதிகாரி, நெடுந்தீவு பிரதேசசபை செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் யாழ்ப்பாணம், திணைகள உயர் அதிகாரிகள் கலந்துரையாடலை மேற்கொண்டனர். இதன்போது வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பான தற்போதைய நிலையினை கேட்டு அறிந்து கொண்ட ஆளுநர், நெடுந்தீவில் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாகவும் கேட்டு அறிந்து கொண்டார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலமாக வடக்கு மாகாண மக்கள் அதிகளவு வருமானத்தை ஈட்டுவதற்கு சாதாகமான நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர், சுற்றுலாத்துறையை பிரதேசங்களின் தன்மையை ஆராய்ந்து அபிவிருத்தி மேற்கொள்ளுமாறும், சுற்றுலாத்துறையின் விரிவாக்கம் மேற்கொள்ளும் பிரதேசங்களுக்கு ஏற்ற வகையில் மரநடுகை தொடர்பாகவும் முக்கியமான விடயங்களை தெரிவித்தார். அத்துடன் விரைவாகவும் வேகமாகவும் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் எனவும் பணிப்புரை விடுத்தார். உலக சுற்றுலா தினத்தை எமது பிரதேசங்களில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். https://globaltamilnews.net/2024/207102/
  19. யுத்தத்தில் உயிரிழந்தோருக்கு பொது நினைவு தூபி அமைக்க கோரிக்கை adminOctober 2, 2024 யுத்தத்தால் மரணித்தோருக்கான நினைவுத் தூபியை அமைப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க , இன வேறுபாடின்றி யுத்தத்தின் போது உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அரசாங்கம் நினைவுத்தூபியொன்றை அமைப்பதோடு, மே 19 ஆம் திகதியை நினைவு நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதனை கருத்தில் கொண்டு, இது யுத்தத்தினால் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் அனுபவித்த துன்பங்களை ஏற்று, அமைக்கப்படும் நினைவுத்தூபியானது முழு நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு நினைவேந்தலுக்கான அடையாளமாகவும் அமையும். மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இந்தச் சான்றிதழ்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களைத் தீர்க்க உதவுவதோடு, இழப்பீடு மற்றும் பிற வகையான ஆதரவை அணுகுவதற்கும் உதவும். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/207107/
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா🎉🎂🎊
  21. இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்! Iran Attacks Israel : ஈரான் இப்பொது இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி, வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Iran Attacks Israel : ஈரான் இப்பொது இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி, வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ஆதரவு போராளி ஹெஸ்பொல்லாவை குறிவைத்து, லெபனானில் நடத்தப்பட்ட தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் எரித்து, ஈரான் இப்பொது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக உடனடியாக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாக சில மணிநேரங்களுக்கு முன்பு தகவல் கிடைத்த நிலையில், இஸ்ரேல் மீது ராக்கெட் நடத்தியுள்ளது ஈரான் என்று, இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது இஸ்ரேல் பாதுகாப்பு படை. அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நட்பு நாடுகளும், கடந்த ஏப்ரலில் ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலை பாதுகாக்க உதவ முன்வந்தன. இது குறித்து அமெரிக்க அதிகாரி மேலும் பேசியபோது. "இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் நேரடி இராணுவ தாக்குதல், ஈரானுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தனர். நஸ்ரல்லாவின் கொலை இஸ்ரேலின் "அழிவை" கொண்டு வரும் என்று ஈரான் கூறியது, ஆனால் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் தெஹ்ரான், இஸ்ரேலை எதிர்கொள்ள ராணுவ வீரர்களை அனுப்பாது என்று கூறியது கூறியது. தெஹ்ரான் தான் ஈரான் நாட்டின் தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் இப்பொது ஈரான், இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதல், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் பிற உலக வல்லரசுகள் தவிர்க்க விரும்புவதாக கூறியுள்ள பரந்த பிராந்திய மோதலின் அச்சத்தை கடுமையாக கூட்டும் என்றும் நம்பப்படுகிறது. ஜனாதிபதி ஜோ பிடன் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், வடக்கு இஸ்ரேலைத் தாக்கும் ஹெஸ்பொல்லாவின் திறனைத் தகர்க்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை அமெரிக்கா எச்சரிக்கையுடன் ஆதரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் வெளியிட்ட செய்தியில் "மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்வுகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக" அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். "இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது" என்று பிளிங்கன் செவ்வாய்க் கிழமை காலை தனது மொராக்கோ பிரதிநிதி நாசர் பொரிட்டாவை வெளியுறவுத்துறையில் சந்தித்தபோது கூறினார். வாஷிங்டன் திங்களன்று மத்திய கிழக்கில் தனது படைகளை "சில ஆயிரம்" துருப்புக்களால் உயர்த்தி வருவதாகவும், புதிய பிரிவுகளைக் கொண்டு வருவதன் மூலம் ஏற்கனவே உள்ள மற்றவர்களை விரிவுபடுத்துவதாகவும் கூறியது. https://tamil.asianetnews.com/world/iran-rockets-attacked-israel-says-israel-defense-force-civilians-in-bomb-shelter-ans-skosu7
  22. பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு இவ்வாறு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்டமைப்பினர் வெளியிடுள்ள அறிக்கையில், “இன்று தமிழ் தேசிய களத்தில் தூய்மையான மாற்றத்திற்கான மனிதர்களை மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இளையவர்களும் பெண்களும் நிபுணர்களும் இந்தகே குழுமத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்க விரும்புகின்றனர். அதேநேரம் தமிழ் தேசிய இனம் தன் உரிமைகளை இன்னும் இத்தீவில் பெற்று கொள்ளாத நிலையில் தியாக வேள்வியை கடந்து இன அழிப்புக்கு உள்ளாகி பரிகார நீதியையும் நிரந்திர சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் கோரி நிற்கின்ற சூழலில் கட்சி அரசியலைத் தாண்டி தமிழ்த் தேசியக் கொள்கை அரசியல் தளமே முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். முதிர்ந்த அரசியல் தலைவர்கள் வழிகாட்ட நிபுணத்துவமும் பல் பரிணாம ஆளுமையும் தமிழ்த் தேசிய பற்றுறுதியும் கொண்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அணி வடக்கு, கிழக்கில் களம் காண வேண்டும் என்பது இன்று தமிழர்கள் அனைவரது வேணவாக இருக்கின்றது. கோட்பாட்டுத் தளத்தில் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மக்கள் பொதுச் சபை என்பவற்றின் கருத்தாணைகளைத் தமிழ்த் தேசிய அரசியல் சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டு சமகால வாழ்வியல் விடயங்களையும் உள்வாங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர்கள் அணியினர் கொண்டிருப்பர். இதற்காக வடக்கு, கிழக்கு தழுவிய தூய தமிழ்த் தேசிய முகங்களை தொகுதி வாரியாக அனைத்து சமத்துவ பிரதிபலிப்புக்களுடன் கண்டறிய உதவுமாறு அனைத்து தமிழ் மக்களுக்கும் அறைகூவல் விடுகின்றோம். அனைத்து சிவில் சமுக பிரதிநிதிகள் பல்கலைகழக சமூகம் மாதர் அமைப்புகள் தொழிற்சங்கங்கள் அரசியல் இயக்கங்கள் இதில் தங்கள் பங்களிப்பை இதயசுத்தியுடன் ஆற்ற முன்வருமாறு வேண்டுகின்றோம். பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அடுத்த வாரம் எதிர்நோக்கி இருக்கின்ற இந்த தருணத்தில் வடக்கு, கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி, அம்பாறை தேர்தல் மாவட்டங்களை சார்ந்த ஊழலற்ற மது போதை வணிகங்களுடன் சமூக பிறழ்வு நடத்தைகளுடன் எவ்விதத்திலும் தொடர்புபடாத தமிழ்த் தேசியத்திலும் தமிழ் மக்கள் வாழ்வியல் மேம்பாட்டிலும் பற்றுதியான கறைபடியாத மாற்றத்திற்கான தூய தமிழ்த் தேசிய முகங்களை பரிந்துரை செய்யுமாறு வேண்டுகின்றோம். அவர்கள் மக்கள் மன்றில் வெளிப்படுத்தப்பட்டு தமிழ் சிவில் கட்டமைப்புக்களின் ஒப்புதலுடன் பட்டியல் இறுதியாக்கப்படும். அவர்கள் தமிழ்த் தேசிய நலனை முன்னிறுத்தும் பொது வேட்பாளர்களாக நாடாளுமன்ற தமிழ் மக்கள் பிரதிநித்த்துவத்திற்கான தேர்தலை எதிர்கொள்வர். கட்சி அரசியலைக் கடந்த இந்த திட்ட முன்மொழிவுக்கு அனைத்து தமிழர்களது ஆதரவையும் பங்குபற்றுதலையும் வேண்டி நிற்கின்றோம்.” – என்றுள்ளது. http://www.samakalam.com/பொதுத்-தேர்தலில்-தனித்து/
  23. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு ! October 1, 2024 புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத் தருகிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூலில் பதிவை விடுத்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்குடன் மக்களின் விருப்பத்திற்கு அமைய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தேன். அன்று தொடக்கம் இன்று வரை என்னால் முடிந்த அளவு தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்திருக்கிறேன். அத்துடன் எனது பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் என்னால் இயன்றவரை வழங்கியும் மக்கள் போராட்டங்களிலும் பங்கு பற்றி இருக்கிறேன். வன்னி மாவட்டத்தில் தேவையான என்னால் முடிந்த பல அபிவிருத்தி திட்டங்களையும் நான் முன்னெடுத்து இருக்கிறேன். தமிழ் மக்கள் எனக்கு இவ்வளவு காலமும் வழங்கிய ஆதரவிற்கும் கௌரவத்திற்கும் நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்முறை நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகிறேன். அதே நேரம் தமிழர்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக நான் உழைத்துக் கொண்டிருப்பேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன். எனக்கு தொடர்ச்சியான ஆதரவை இவ்வளவு காலமும் நல்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் உங்களுடன் நான் பயணிப்பேன் என்பதையும் கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/நாடாளுமன்ற-தேர்தலில்-போட/
  24. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சகல கொடுப்பனவுகளும் இரத்து October 1, 2024 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் வரபிரசாதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். மேலும் ‘மாதிவெல குடியிருப்பில் நவம்பர் 14 வரை மாத்திரமே வசிக்க முடியும். இராஜதந்திர கடவுச்சீட்டினை எவரும் பயன்படுத்த முடியாது. சாதாரண கடவுச்சீட்டினையே பயன்படுத்த வேண்டும்’ என குஷானி ரோஹனதீர தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியினால் ஒன்பதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு, வருகைக்கான கொடுப்பனவு உட்பட நிதி ஊடாக சகல கொடுப்பனவுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச வாகனங்களை கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் வாகனங்களை கையளித்துள்ளார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை மாதிவெல வீட்டுக்குடியிருப்பில் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச குடியிருப்புக்களை வழங்க முடியுமா என்று மக்கள் கேள்வியெழுப்ப முடியும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத சம்பளத்தை ஒதுக்கும் போது அவர்களின் குடியிருப்புக்களுக்கான தொகை அறவிடப்படும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் அரச குடியிருப்பில் வசிக்கும் போது முன்கூட்டியதாக ஒதுக்கப்பட்ட தொகை வைப்பில் இருந்து குடியிருப்புக்கான கட்டணம் அவறவிடப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை இனி பயன்படுத்த முடியாது. அவர்கள் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்த வேண்டும். புதிய பாராளுமன்றத்துக்கு தெரிவாகுபவர்களுக்கு மாத்திரமே இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்படும் என்றார். https://www.ilakku.org/முன்னாள்-பாராளுமன்ற-உறு-2/
  25. மன்னிக்கவும்.. @கந்தப்பு தான் தேர்தலுக்கு பொருத்தமானவர்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.