Everything posted by கிருபன்
-
உங்கள் மாவட்டத்தில் எத்தனை எம்.பிக்கள்?
உங்கள் மாவட்டத்தில் எத்தனை எம்.பிக்கள்? எதிர்வரும் 2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கைப்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும், மாவட்டத்தில் இருந்து மொத்தம் 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வேட்புமனுத் தாள் ஒன்றுக்கு தேவையான வேட்பாளர்களின் எண்ணிக்கையையும் ஆணைக்குழு விவரித்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/உங்கள்-மாவட்டத்தில்-எத்தனை-எம்-பிக்கள்/175-344481
-
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்! September 25, 2024 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24) திகதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற செயற்குழு கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற போது கட்சியின் பொதுசெயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாகவும், கிழக்கு மாகாணத்தை நேசக்கின்ற அனைவரும் ஒரே கூரையின் கீழ் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்பியிருப்பதால் ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை வழங்கி தற்போதைய ஜனாதிபதியை வெற்றிபெற செய்துள்ளனர். தமிழ் அரசு கட்சியில் இருந்து பிரிந்த அனைவரும் ஒன்று சேர்ந்து கிழக்கில் ஒருமித்து பயணிக்க முன்வர வேண்டும். கிழக்கு மாகாண மக்களின் நன்மைக்காக எம்முடன் சேர்ந்து பயணிக்க விருப்பமுடைய எவரும் எம்முடன் இணைய முடியும். மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டும். மக்கள் கடந்த காலங்களில் விட்ட பிழைகளை மீண்டும் விடாது. இம்முறை எமது கட்சி மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களிலும் போட்டி போடவுள்ளது, அனைவரும் ஒருமித்து எம்முடன் சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும். எமது கட்சியின் ஊடாக 3 பிரதிநிதித்துவத்தை பெற முடியும் அதனூடாக கிழக்கு மக்களின் நலனுக்காக ஒரே கூரையின் கீழ் நாம் பயணிப்போம். அதனடிப்படையில் பொதுவான சிந்தனையில் அனைவரும் ஒன்று சேர முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைப்பதாக தெரிவித்தார். மக்களுக்கு தெரியும் தமிழரசுக் கட்சி சுக்குநூறாக உடைந்து 4 பக்கமாக நிற்கின்றது, அது மட்டுமல்லாது தற்போது பொது கட்டமைப்பு எனும் பேரில் இனி மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. இதை மக்களும் நன்கு அறிவார்கள் என்றார். https://www.supeedsam.com/205744/
-
கைது செய்வதில் தடுமாறும் அநுர
புரட்சிகர மாற்றங்கள் என்றாலும் ஒரே இரவில் மாற்றுவது பாரிய எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, கொஞ்சம் நெகிழ்வாக இருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் இராணுவ ஆட்சிகூட ஏற்படலாம்!
-
வடக்கு மாகாண ஆளுநர் பதவி விலகல் குறித்து வெளியிட்ட அறிவிப்பு
தேவையற்ற வதந்திகளை பகிராது இந் நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் ! ShanaSeptember 25, 2024 தேவையற்ற வதந்திகளை பகிராது இந் நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டுமென, வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் ஆளுநராக செயற்பட்டு வந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (24) அவரது பதிவியை இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், பி.எஸ்.எம். சார்ள்ஸின் நிழற்படத்தை முன்னிலைப்படுத்தி, சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன. அந்த செய்தியில், முன்னாள் ஆளுநர் ஒருவர் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்து, விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சமூக ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் தகவல்களை பகிரும்போது, செய்திக்கு பொருத்தமான நிழற்படங்களை பகிரவும், தேவையற்ற வதந்திகளை பகிராது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். https://www.battinews.com/2024/09/blog-post_329.html
-
நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச !
நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ! ShanaSeptember 24, 2024 இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்சேவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாகவும், அவரை நேபாளத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணம் அரசியலை விட தனிப்பட்ட மற்றும் குடும்பம் சார்ந்தது. ராஜபக்சே இன்று ஜாம்சிகேலில் உள்ள ஹோட்டல் விவாண்டாவில் தங்குகிறார். இலங்கையில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. பின்னர் இலங்கை திரும்பினார். இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மார்க்சிச சார்பு கொண்ட அனுரகுமார திஸாநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். https://www.battinews.com/2024/09/blog-post_268.html
-
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?
இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் எமது சகோதர ஊடகமான டெய்லி மிரர் பிரத்தியேகமாக அறிந்து செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று அவர் உட்பட நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது. டெய்லி மிரர் பிரத்தியேகமாக பெற்ற பட்டியலின்படி, ஜனாதிபதி திஸாநாயக்க சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதவிகளை வைத்திருப்பார், அதே நேரத்தில் பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக இருப்பார். NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் தலா பல அமைச்சுகளுடன் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர். கொழும்பு தேர்தல் தொகுதியில் அனுரகுமார திஸாநாயக்கவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நிபுன ஆராச்சி நேற்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பரில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும், ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்த பிறகு, எப்போது வேட்புமனுக்கள் கோரப்படும் என்ற திகதியை அவர் நிர்ணயிப்பார் என்றும் NPP முகாம் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த திகதிக்கு பிறகு, வேட்புமனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு 10 முதல் 17 நாட்கள் கால அவகாசம் வழங்கும். ஜனாதிபதி திஸாநாயக்க பாராளுமன்றத்தை கலைத்த பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றம் எப்போது கூடும் என்ற திகதியையும் அவர் அறிவிப்பார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நேற்றுக் காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்க, முப்படைத் தளபதிகளையும் அதன் பின்னர் தனது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். பின்னர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று ஆசிர்வாதம் பெற்று தனது வயதான தாயாரை தரிசனம் செய்வதற்காக தம்புத்தேகம நோக்கி பயணித்தார். இன்று இரவு அவர் பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் NPP பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக டெய்லி மிரர் அறிகிறது. டிசம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் NPP வெற்றி பெற்றால், தனது வாக்காளர்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அதிக ஆதரவைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என்று டெய்லி மிரர் அறிகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/இன்று-இரவு-பாராளுமன்றம்-கலைக்கப்படும்/175-344354
-
புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்
புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் குறித்த அமைச்சரவை நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை மேற்படி அமைச்சரவை அமைச்சர்களின் பணிகள் தொடரும். எனினும், அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமைச்சரவையைக் கூட்டி பாராளுமன்றத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், மேலும் பல புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதன்படி, தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இன்று நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. R https://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய-அமைச்சரவை-இன்று-பதவிப்பிரமாணம்/175-344358
-
அனுரவின் வெற்றியும் தமிழ் அதிகார வர்க்கத்தின் பிதற்றலும்…
வாட்ஸப்பில் கண்டது….. அனுராவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தமிழ் அதிகார வர்க்கத்தினர் பலர் சமூக வலைத்தளங்களின் பிதற்றுகின்றனர். உங்களுக்கு ரணில் நல்லவர் சஜித் நல்லவர், சரத் பொன்சேகா நல்லவர் ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு நல்லவர். ஆனால் அனுரா இனவாதி.வடக்கு கிழக்கை பிரித்த கட்சியைச் சேர்த்தவர். என்னங்கடா உங்கட நியாயம் . ரணில் சஜித்,சரத் பொன்சேகா ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு எல்லோரும் வடக்கு கிழக்கிலே தேனும் பாலும் ஓடவிட்டவங்களா ? விடுதலை புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை வைத்துக்கொண்டு ,அது தவறு என்பதை புலிகள் ஏற்றுக்கொண்ட பின்பும் இன்றளவும் புலிகள் எங்களை இன சுத்திகரிப்பு செய்தவர்கள் பயங்கர வாதிகள் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது .உங்களுக்குள் யாரும் பிரதேச வாதிகள் இல்லையா ? சாதி வெறியர்கள் இல்லையா? ஸ்ரீலங்காவிலே முதல் தடவையாக இனவாதத்தை மூலதனமாக வைக்காமல் ஒருவர் தேர்தலிலே வென்றிருக்கிறார். சிங்கள இளைய தலை முறை மாற்றத்தை விரும்புகிறது . ஆனால் நீங்கள் ? மாறமாட்டோம் என்று அடம் பிடிக்கிறீர்கள் 1971 ல் நடத்திய ஆயுத போராடத்திலே அவர்கள் 13000 பேரை இழந்தார்கள். அதன் பின் மீண்டெழுந்து 1987-89 ல் நடத்திய ஆயுத போராட்ட த்திலே 60000 பேரை இழந்தார்கள் .அவர்களது தலைவர்கள் உயிருடன் எரிக்கப்படடார்கள்.அதன் பின்பும் அவர்கள் மீண்டுவந்தார்கள். ஆயினும் எங்களுக்குள் இருந்ததை போலச் சில புல்லுருவிகள் அவர்களுக்குள்ளும் ஆதிக்கம் பெற்றதால் தடம்புரண்டு விழுந்து எழும்பினார்கள் , பின்னர் தங்களது தவறுகளிலிருந்து படிப்பினைகளை பெற்று தங்களை மறுசீரமைத்துக்கொண்டு இன்று வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ....... நான் அவற்றை எழுத விரும்பவில்லை தற்போது அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ள கலாநிதி லயனல் போபகே தெரிவித்துள்ள கருத்துக்களை படித்துப் பாருங்கள். கலாநிதி லயனல் போபகே, ரோஹன விஜேவீர தலைமையிலான ஜேவிபி இன் முதலாவது பொதுச் செயலாளரக இருந்தவர் . இருவரும் சம காலத்தவர்கள் மற்றும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் இருவரும் 1947 பாராளுமன்றத் தேர்தலின்போது மாத்தறை மாவட்டத்தில் யுஎன்பி ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிப்புகளை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட் குடும்பங்களின் வாரிசுகள். 1960 களில் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் மாணவராக இருந்த போபகே ஜேவிபி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 1971 கிளர்ச்சியின்போது கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார் . பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தோற்றுவதற்கென 1972 இல் கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து அவர் பேராதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டும் 1983 இல் 'தமிழர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டினார்கள்' என்ற பொய் குற்றச்சாட்டின் பேரில் ஜே ஆர் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 21 இடது சாரி செயற்பாட்டாளர்களில் அவரும் ஒருவர். "கறுப்பு ஜூலை அட்டூழியங்கள் தொடர்பாகச் சிரில் மத்தியூ மற்றும் காமினி திஸாநாயக்க போன்றவர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்காமல் எங்களைக் கைது செய்தது ஏன்? யுஎன்பி யைத்தடை செய்வதற்குப் பதிலாக, ஜேவிபியை தடை செய்தது ஏன்" எனக் கேட்டு, அச்சந்தர்ப்பத்தில் போலிஸாருடன் வாதிட்டதை நினைவு கூருகிறார் போபகே. ஆனால், இரண்டு முதன்மையான விடயங்களின் அடிப்படையில் ரோஹன விஜேவீரவுடன் முரண்பட்டுக் கொண்ட அவர் 1983 இல் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து, ஜேவிபி இலிருந்து வெளியேறினார். சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்தமை மற்றும் ஜேவிபி மீண்டும் வன்முறையை ஓர் அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்திருந்தமை ஆகிய இரண்டு நிலைப்பாடுகள் தொடர்பாக விஜேவீரவுக்கும், அவருக்குமிடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் தோன்றின. அந்த நிலையில், கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை . அதன் பின்னர் தொடர்ந்து ஜேவிபி இன் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறார். தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் கலாநிதி லயனல் போபகே 'இலங்கையில் ஜனநாயகத்துக்கான குரல்' என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். இந்நாட்டில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலைச் சமூகங்கள் ஆகியோரின் அரசியல், கலாசார உரிமைகளுக்காக அந்த அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தற்போது நாடு திரும்பியிருக்கும் அவர் ஒரு யூடியூப் தளத்தில் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரியுடன் நடத்திய விரிவான உரையாடலொன்றில் இலங்கையின் இன்றைய அரசியல் நிலவரங்கள்குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். '' தேசிய இனப் பிரச்சினை தொடர்பான ஜேவிபி நிலைப்பாடு மற்றும் அதன் வன்முறைச் சாய்வு ஆகிய இரண்டு முக்கியமான விடயங்களின் அடிப்படையில் நீங்கள் 1983 ன் பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறி, அதன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இன்று ஜேவிபி யின் புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியை (NPP) ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். இது ஏன் என விளக்க முடியுமா''? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர் - ''தேசிய இனப் பிரச்சினை மற்றும் வன்முறை ஆகிய விடயங்கள் தொடர்பான என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று, சமத்துவமான பிரஜைகளாகக் கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சூழல் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே எனது அவா." "2016 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பிரச்சினைகள் தொடர்பான ஜேவிபி யின் அணுகுமுறையில் படிப்படியான ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதை அவதானித்திருக்கிறேன். இப்பொழுது அந்த அணி 'சுய நிர்ணய உரிமை' என்ற வார்த்தையை நேரடியாகக் கூறாவிட்டாலும் கூட, தமிழ் மக்களையும் உள்ளிட்ட இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன என்ற விடயத்தையும், அப்பிரச்சினைகள் ஒவ்வொன்றும் புறம்பான விதத்தில் கையாளப்பட வேண்டும் என்ற விடயத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது. "அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளை அவர்கள் விரிவாக விளக்கிக் கூறாவிட்டாலும் கூட அதுவே ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றம் என நான் நினைக்கிறேன்". "மேலும் இன்று தேசிய மக்கள் சக்தி பல முற்போக்கு அமைப்புகளையும், குழுக்களையும், பன்முகப்பட்ட தொழில்வாண்மையாளர் கழகங்களையும் உள்வாங்கிய ஒரு பரந்த முன்னணியாக எழுச்சியடைந்திருக்கின்றது." "மாகாண சபைகள் தொடர்பாக NPP இன்னமும் ஒரு சில மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தை அது ஏற்றுக் கொள்கின்றது. குறிப்பாக, தமிழ் தரப்புடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அது கருதுகிறது." என்று கூறினார். " 'பழைய ஜேவிபி இப்பொழுது என்பிபி என்ற முகமூடியுடன் களமிறங்கியிருக்கிறது. அது எந்த ஒரு நேரத்திலும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்க முடியும்' என ஒரு சில விமர்சகர்கள் கூறி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்" என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இலங்கை சமூகத்தின் அனைத்துத் தரப்புக்களையும் உள்வாங்கி ஒரு பாரிய மக்கள் இயக்கமாக எழுச்சியடைந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி இனிமேல் எந்தவொரு காரணத்திற்காகவும் வன்முறையை நாட வேண்டிய தேவை அறவே இருந்து வரவில்லை" என ஆணித்தரமாகக் கூறினார். "1987 - 1989 கிளர்ச்சியின்போது ஜேவிபி ஒரு தீவிர சிங்கள தேசியவாத நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அந்தப் பின்னணியிலேயே வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. "ஆனால், இன்றைய என்பிபி யில் அந்தக் கருத்தியலுக்கு இடமில்லை. என்கிறார் கலாநிதி போபகே. கடந்த 75 வருட நாடாளு மன்ற அரசியல் வரலாற்றில் தமிழினம் சந்தித்த இன்னல்களுக்குச் சிங்கள பெளத்தஇனவாத தலைவர்கள் மட்டுமல்ல அவர்களோடு திரை மறைவில் இரகசிய கூட்டு வைத்திருந்த தமிழ் தலைவர்களும் காரணமாகும்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் படுதோல்வியடைந்த தமிழர் தரப்பு ராஜதந்திரமும் கருத்துக் கணிப்புகளை மேற்கோள் காட்டி நான் எதிர்வு கூறியது போலவே ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அநுரவின் வெற்றியை உறுதி செய்ததுடன் எதிர்பார்க்கப்பட்ட படி இரண்டாம் நிலையில் சஜித் மற்றும் மூன்றாம் நிலையில் ரணில் ஆகியோரையும் உறுதி செய்தது. இதன் பின்னணியில் 'தமிழர் வாக்குகளுக்கு என்ன நடந்தது?' மற்றும் 'விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் தமது இருப்பைத் தக்கவைக்க எவ்வாறான வியூகத்தை வகுக்க வேண்டும்?' என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும். தேர்தல் வெற்றிக்கு எழுபதுக்கு எழுபது போதும். இலங்கையின் குடித்தொகையில் 70% க்கும் அதிகமாகச் சிங்களவர் காணப்படும் நிலையில், அவர்களில் 70% ஆனவர்கள் ஒன்று பட்டு வாக்களித்தாலே 50%க்கும் அதிகமான(74.9% X 70%) வாக்குகளைப் பெற்றுச் சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே வெற்றி பெற முடியும். 2019 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் ஒற்றுமைப்பட்டு சஜித்துக்கு வாக்களித்து இருந்தும் சிங்களவரில் 70% ஆனோர் கோட்டாபயவுக்கு வாக்களித்ததால் கோத்தபாயவினால் 50% க்குஅதிகமாக வாக்குகளை பெற்று வெற்றி பெற முடிந்தது. ஆனால் வாக்குகள் மூன்றாக அல்லது நான்காகப் பிரியும் போது 60% ஆன சிங்களவர்கள் ஒன்றுபட்டு வாக்களித்தலே வெற்றி பெற முடியும். அதுவே இம்முறை இடம் பெற்றுள்ளது. அதாவது சிங்களவரின் 60% வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளில் 42% (60%X 70%) பெற்றுள்ள அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிதறடிக்கப்பட்ட தமிழர் வாக்குகள். யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் அரியநேந்திரன் வெற்றி பெற்ற அதேவேளை வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் சஜித் அதிகமான வாக்குகளை பெற்று இருப்பதும், ரணிலும் இரண்டாம் நிலையில் கணிசமான வாக்குகளை வடக்கு கிழக்கில் பெற்று இருப்பதும் ஏற்கனவே நான் எதிர்வு கூறியபடி ஈழத் தமிழர்கள் ஒரு குழப்ப நிலையில் பல கூறுகளாகப் பிரிவடைந்து வாக்களித்து இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் மலையகத் தமிழர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் இஸ்லாமியத் தமிழர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் சஜித் வெற்றி பெற்று இருந்தாலும் இதே குழப்பநிலை இருப்பதை இம்முறை தேர்தல் பெறுபேறுகள் காட்டுகின்றன. அரசியலில் பழுத்த அனுபவமும் புத்திசாலித்தனமும் மிகுந்த ரவூப் ஹக்கீம் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தோல்வியடைந்துள்ள சஜித்தை ஆதரிக்க எடுத்த முடிவு சாணக்கியமானதா என்பதை எதிர்காலம் தான் உணர்த்த வேண்டும். பொருத்தமற்ற தமிழ் பொது வேட்பாளராக பலிக்கடா அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராகத் தன்னைப் பிரகடனப்படுத்திப் போட்டியிட்ட அரியநேந்திரன் யாழ்ப்பாணத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்று இருந்த போதிலும் கிழக்கில் மூன்றாவது இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் அவருடைய சொந்த மாவட்டமான மட்டக்களப்பிலும் அண்டைய மாவட்டங்களான திருகோணமலையிலும் அம்பாறையிலும் தோல்வி அடைந்துள்ளார். கிழக்கில் புலிகளது தளபதியாக இருந்த கருணா அம்மானின் நம்பிக்கைக்குரிய அரியம் என்ற அரியநேந்திரன், 2004 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் கருணா தரப்பின் ஊடாகக் கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டினைப் பெற்றுப் போட்டியிட்டிருப்பினும் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தவர் என்பதும் பின்னர் கிங்ஸ்லி ராசநாயகம் "இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு" அவர் தமது பாராளுமன்ற ஆசனத்தைத் தாமாகத் துறப்பதாக அறிவித்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே தெரிவு செய்யப்பட்டுப் பாராளுமன்றம் சென்றார் என்பதும் வரலாறு. 2010 இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அப்போதிருந்த அனுதாப அலையால் 16,504 வாக்குகளைப் பெற்று அரியம் மயிரிழையில் வெற்றி பெற்றிருந்தாலும் பின்னர் வந்த எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கவில்லை. தற்போதைய பெறுபேறுகளும் மக்கள் ஆதரவை ஒருபோதும் பெற்று இராத அரியநேந்திரன் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டது தவறு என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் "சர்வதேசத்துக்குத் தமிழ்மக்களின் ஒற்றுமையையும் எதிர்பார்ப்புகளையும் வெளிக்காட்டக் கூடிய வேட்பாளர்" என்று அடையாளப்படுத்தப்பட்டவர் ஆங்கிலத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவராகவும் பேச்சாற்றல் மிக்கவராகவும் இருந்திருக்க வேண்டும். ஆகக்குறைந்தது உள்ளூரில் நடைபெற்ற விவாத மேடையில் தமிழ் மொழியில் தமது தரப்பு நியாயங்களை நாட்டுக்குத் தெரிவிக்க வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாத இவர், 'ஐந்து இலட்சம் வாக்குகளைப் பெற்றால் வெட்டுவோம் விழுத்துவோம்' என்று கூவித் திரிந்த இந்தியக் கைக்கூலிகளும், பொதுவேட்பாளர் என்ற மாயமானைப் பலப்படுத்தப் பல இலட்சங்களை அனுப்பிய புலம்பெயர் தமிழர்களும் இரண்டு இலட்சம் வாக்குகளை மட்டுமே அரியநேந்திரன் பெற்ற நிலையில் மௌனமாக இருக்கிறார்கள். இவர்களுடைய "தமிழர்களின் ஒற்றுமை" என்ற போலிச் சாயம் விரைவில் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வெளுக்கும். அரியநேந்திரனுக்கு ஆதரவளித்த சித்தார்த்தன் தோல்வியை நேர்மையாக ஏற்றுக் கொள்ளாமல் கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதாக பேட்டி ஒன்றில் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். தோல்வியடைந்த இந்திய சூழ்ச்சிகள் பல முனைகளிலும் தனது வேட்பாளர்களான ரணில் அல்லது சஜித்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு இந்தியா பல்வேறு சூழ்ச்சிகளை செய்து கொண்டிருந்தது. குறிப்பாகத் தனது முகவர்கள் மூலமாகத் தமிழ்ப் பொது வேட்பாளரைக் களம் இறக்கி அரச எதிர்ப்பு வாக்குகளை அனுரவுக்குச் செல்லவிடாமல் அரியநேந்திரனுக்குத் திசை திருப்பியது, புள்ளடி இடுவதைத் தடுத்து விருப்பு வாக்களிக்குமாறு கோரியது, 'இலங்கைத் தேர்தல் சட்டங்கள் தேர்தலுக்கு 48 மணிநேரம் முதல் அனைத்து பரப்புரைகளும் நிறுத்தப்படவேண்டும்' என்று கோரிய நிலையில் இலங்கை ஊடகங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நேர்மையற்ற முறையில் இந்திய ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மூலமாக இறுதிவரை தான் ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தூண்டியது, யாழ் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் அனாமதேய ஊடக அறிக்கைகளை வெளியிட்டது உட்படப் பல உதாரணங்களை குறிப்பிடலாம். தனது முதல் திட்டம் தோல்வி அடைந்துள்ள நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் தனது கட்டுப்பாட்டில் உள்ள வேட்பாளர்கள் மூலம் பெரும்பான்மைப் பலத்தை பெறத் தொடர்ந்து இந்தியாவினால் பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும். குழம்பிய குட்டையில் வரும் பாராளுமன்ற தேர்தல் பொது வேட்பாளரை ஆதரித்த சித்தார்த்தன் "பாராளுமன்ற தேர்தலைத் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக எதிர்கொள்வதற்கு இதுவரை திட்டம் எதுவும் இல்லை" என்று தெரிவித்து இருப்பது தமிழர்களின் ஒற்றுமைக்காகத் தமிழ் பொது வேட்பாளர் என்று தெரிவித்து இருந்ததை கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் சிங்கள தேசம் நான்காகப் பிரிந்துள்ள நிலையில் வரும் இந்தத் தேர்தலில் தமிழர் தேசம் ஒற்றுமையாக 20 ஆசனங்களை ஆவது பாராளுமன்றில் பெற்றுக்கொண்டால் பேரம் பேசுவதன் மூலமாக முன்னெப்போதும் இல்லாத அளவு நன்மைகளைத் தமிழர்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் துண்டு துண்டாக உடைந்து கிடக்கும் தமிழரசுக் கட்சி, இந்தியாவின் கைக்கூலிகளாகச் செயல்படும் ஏனைய பல தமிழ் கட்சிகள், மற்றைய கட்சிகளுடன் இணைய மறுக்கும் தமிழ் காங்கிரஸ் ஆகியவை "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்னும் தமிழரின் எதிர்கால நம்பிக்கையை சிதைத்துள்ளன. ஒட்டுண்ணிக் குழுக்களின் இறுதிக் கட்டம் "குற்றச்செயல்களில் ஈடுபட்ட (பட்டுவரும்) ஒட்டுக் குழுக்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை" என்று தேசிய மக்கள் சக்தி அறிவித்து இருப்பது வரவேற்க கூடிய ஒரு விடயமாகும். இந்தக் ஒட்டுக் குழுக்கள் தமது கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளை நிறுத்தி உண்மையான ஜனநாயக செயல்பாடுகளை முன்னெடுப்பார்களா என்பது விரைவில் தெரியவரும். எப்படியாயினும் ஒட்டுக் குழுக்கள் அடாத்தாகக் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மற்றும் தனிநபர்களின் சொத்துக்களை மீட்கக்கூடியதாக இருந்தால், தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி மூலமாகத் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் இன்னொரு நன்மையாக இதை கருதலாம். தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் பாரிய சவால்கள் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டாலும் அந்த வெற்றியானது குடித்தொகை அடர்த்தி கொண்ட சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் அடையப்பட்டதனால் இலங்கை வரைபடத்தில் பாரிய நிலப்பரப்பு தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத இடங்களாக இருக்கிறது. அதுவே தேசிய மக்கள் சக்தியின் பலவீனத்தையும் எதிர்கொள்ளும் சவால்களையும் வெளிப்படுத்தி உள்ளது. குறிப்பாக 'சிங்களவர் அல்லாத மக்களின் நம்பிக்கையை பெற தவறினால் தேசிய சக்தியாக மாற முடியாது' என்ற உண்மையை அவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தனது பிரச்சாரங்களில் உறுதியளித்த அரசியலமைப்பு மாற்றங்களை கொண்டு வருவதாயின் அதற்குப் பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை அல்லது 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 150 பேரின் ஆதரவு தேவை. இரு மாதங்களில் வர இருக்கும் தேர்தலுக்கு முன்னர் பல மாவட்டங்களில் மக்கள் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதில் தேசிய மக்கள் சக்தி பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதைவிடத் தேர்தல் அண்மித்ததும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளக்கூடிய ரணிலின் அறிவிப்புகளை மக்களின் எதிர்ப்பின்றி நீக்க வேண்டிய சவாலை அனுர எதிர்கொண்டுள்ளார். குறிப்பாக 2025 க்கு அறிவிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புப் போன்றவை மக்களின் உணர்வை தூண்டக் கூடியவை. அதை விட அடுத்த வருடத்துக்கான புதிய பாதீட்டை இந்தப் பாராளுமன்றம் கலைக்கப்படுவதன் முன்னர் நிறைவேற்றுவது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்குக் கடன் வழங்குவோரைத் திருப்திப்படுத்தி இலங்கை நாணயத்தைச் சரியவிடாது ரணிலினதும் அவரது எசமானர்களினதும் சூழ்ச்சிக்குள் அகப்படாது செயல்படுவது மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் விரைவாக ஏற்படாவிட்டால் மக்களுக்குத் தேசிய மக்கள் சக்தி மீதும் சலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. முடிவாக, தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தமிழர்களுக்கு ஒரு சாதகமான நிலையை தோற்றுவித்துள்ள போதிலும் தமிழரின் ஒற்றுமையின்மை மிகப் பெரிய பலவீனமாக மாறியுள்ளது. இதேவேளை தனக்கு மண்டியிடாத இலங்கைத் தலைமைகளை நீக்கித் தனது சுரண்டல்களைத் தொடர்வதற்கு இந்திய வல்லரசும் அதன் கைக்கூலிகளும் பாராளுமன்ற தேர்தலையும் பொருளாதாரப் பிரச்சினைகளையும் பயன்படுத்துவார்கள் என்பதை உணர்ந்து நாம் பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 23.9.2024 https://www.facebook.com/share/p/uKoHuwG6mbatKcdC/?mibextid=WC7FNe
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை! வெளிநாடு செல்வதை தடுப்பதற்காக 30 பேரின் பெயர்ப்பட்டியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியையும் ,ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைத்து வரும் தேர்தலில் போட்டியிடவைத்து, நாடாளுமன்ற பலத்தை அனுரவுக்கு வழங்காதிருக்க முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்ட்டு வருகிறது. நாடாளுமன்றக் கலைப்புக்குப் பின்னர் ஊழலுடன் தொடர்புபட்ட கைதுகள் அடுத்தடுத்து இடம்பெறலாம்? அவ்வாறான செயற்பாடு இடம்பெற்றால் ஜனாதிபதித் தேர்தலை விட கூடுதல் ஆதரவை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர தரப்பு பெற்றுவிடும். வரும் நாட்களில் படைத் தளபதிகளில் இருந்து நாட்டில் பல மாற்றங்கள் நிகழவுள்ளதாக கொழும்பு உயர்மட்டத்த தகவல்கள் தெரிவிக்கின்றன https://newuthayan.com/article/வெளிநாடு_செல்வதை_தடுக்கும்_நடவடிக்கை!
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இலங்கை விமானப் படை நேற்று முன்தினம் (21) முதல் பலத்த பாதுகாப்பு வழங்கி வருவதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூலம் இதுவரையில் இலங்கை அரசியலின் பிரபுக்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக “தினமிண” சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் (21) பிற்பகல் 2.25 க்கு முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்திய விமான சேவையில் ஏ.ஐ-272 விமான சேவையில் இந்தியாவின் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார். இதேவேளை, நேற்று முன்தினம் (21) இரவு 11.15க்கு முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பங்கொக் நோக்கி எயார் ஏஷியா விமான சேவையில் எப்.டீ-141 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் மூலம் வெளியேறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்சவின் மனைவி அவருடைய தந்தை திலகசிறி வீரசிங்க நேற்று (22) காலை 3.30க்கு டுபாய் எமிரேட்ஸ் விமான சேவையில் ஈ.கே.-649 விமானத்தில் வெளியேறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவைகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் டுபாய் மூலம் அமெரிக்காவுக்கு சென்றிருக்கலாம் என விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக “தினமிண” செய்தி வெளியிட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=292562
-
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்
UNP-யுடன் இணையும் SJB ; ரணிலின் இராஜதந்திரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றதாக பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியை (SJB) இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (NPP) எதிராக ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் தலதா அத்துகோரள ஆகியோரும் கலந்துகொண்டனர். R https://www.tamilmirror.lk/செய்திகள்/UNP-யுடன்-இணையும்-SJB-ரணிலின்-இராஜதந்திரம்/175-344337
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தும்புக்கட்டு -சங்கு -குப்பைக்கூடை…..! September 23, 2024 — அழகு குணசீலன் — அ: அகிம்சை. ஆ: ஆயுதம். இ: இராஜதந்திரம். அன்றோருநாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் கூறிய அ,ஆ,இ…. அரிவரி அரசியல் வரிகள் இவை. அந்த வரிசையில் வந்ததுதான் இந்த பொதுவேட்பாளர் எண்ணக்கருவும், தமிழர் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு காட்டுகின்றதுமான இந்த “இ” : அரசியலும். இப்போது தமிழ் மக்கள் தங்கள் அபிலாஷை என்ன? என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தெட்டத்தெளிவாக சர்வதேசத்திற்கு காட்டியுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒட்டுமொத்த தமிழர் பெரும்பான்மை தமிழ்த்தேசிய தீவிர அரசியலை நிராகரித்திருக்கிறது. சிங்கள தேசிய சக்திகளுடன் இணக்க அரசியல் செய்வதற்கான விருப்பத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அரங்கம் அரசியல் ஆய்வுகள் பலவும் ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டது போல் தமிழ்த்தேசியம் அம்மணமாக சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. இதை விடவும் பொதுவேட்பாளர் கச்சையை உரிந்து சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது. அதேபோன்றே தேர்தல் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்த தமிழ்க்காங்கிரசும் அம்பலப்பட்டு நிற்கிறது. தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியின் டெலிபோன் ஒலி வடக்கு கிழக்கு மக்களின் காதுகளில் சங்கு ஒலியை விடவும் ஓங்கி ஒலித்திருக்கிறது. ஜே.வி.பி. அ -னாவில் இல்லாமல் ஆ -வன்னாவில் ஆரம்பித்து இ- னாவுக்கூடாக அ -வை எட்டியிருக்கிறது. கிழக்கில் இருந்து களமிறக்கப்பட்ட பொதுவேட்பாளர் அரியநேந்திரன் மூன்று மாவட்டங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் அனைத்திலும் அநுரகுமாரவினால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். வடக்கு,கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்ப்பொதுவேட்பாளர் தமிழ்மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் உட்பட எந்த ஒரு தேர்தல் மாவட்டத்திலும் அரியநேந்திரனுக்கு அதிகூடிய வாக்குகளைப் பெறமுடியவில்லை. அதிலும் வெட்கக்கேடு தனது சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் அனுரகுமார திசாநாயக்கா இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை மேலதிகமாக பெற்று அரியநேந்திரனை தோற்கடித்திருப்பது. பொதுவேட்பாளர் அரியநேந்திரன் பெற்ற வாக்குகள் 36,905, தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார பெற்ற வாக்குகள் 38,832. தமிழர் அடையாள அரசியலில் எந்தத் தும்புக்கட்டையை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெறுவோம் என்ற தமிழ்த்தேசிய அரசியலை அதே தும்புக்கட்டைக்கொண்டு மக்கள் துடைத்து துப்பரவு செய்திருக்கிறார்கள். மேலும் பொதுவேட்பாளர் அரியநேந்திரனின் சொந்த தொகுதி மட்டும் அன்றி, தனித்தமிழ் தொகுதி என்ற பெயரைக் கொண்ட பட்டிருப்பில் பொது வேட்பாளர் ஆக 12,356 வாக்குகளை (13%) மாத்திரமே பெற்றுள்ளார். மாறாக சஜீத்பிரேமதாச (40%), ரணில் விக்கிரமசிங்க (29%), அநுரகுமார திசாநாயக்க (07%) வாக்குகளை பெற்றுள்ளனர். இதன்படி அரியநேத்திரன் சொந்த தொகுதியிலும் சிங்கள தேசியத்தினால் (76%) தோற்கடிக்கப்பட்டுள்ளார். தமிழரசுக்கட்சியின் சாணக்கியன் அணி சஜீத்பிரேமதாசவையும், ரி.எம்.வி.பி. ரணில் விக்கிரமசிங்கவையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரித்திருந்தன. இது பாராளுமன்றத் தேர்தல் அல்ல வாக்குகள் பல்வேறு தமிழ் கட்சிகள், வேட்பாளர்களுக்கு இடையே பிரிந்து போவதற்கு. தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பினர் வார்த்தைகளில் சொன்னால் பொதுவேட்பாளர் ஒட்டு மொத்த தமிழினத்தின் அடையாளம். அரியநேத்திரன் வாயில் அவர் தமிழ் தேசியத்தின் “குறியீடு” அது உண்மையெனில் வடக்கு, கிழக்கில் இந்த வாக்களிப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும்?. தமிழ் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் அரியநேத்திரன் சிங்கள தேசிய வேட்பாளர்களை தோற்கடித்து முன்னணியில் நின்றிருக்க வேண்டும் அல்லவா? அம்பாறையிலும், திருகோணமலையிலும் ஆகக்குறைந்தபட்சம் மொத்த தமிழர் வாக்குகளில் அதிகமானவற்றை பெற்றிருக்கவேண்டாமா? தமிழ்த்தேசியப் போர் தொடுக்க சங்கை எடுத்து சங்கை கெட்டு நிற்கிறது தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பு. கடிதத்தலைப்பு 83 அமைப்புக்களும், 7 கட்சிகளும்.சங்கே முழங்கு என்று மூச்சடக்கி சங்கூதிய தமிழ்த்தேசியத்தின் ‘திரட்சி’ ஊடகவியலாளர்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மக்கள் காத்திருந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினர் கட்சிகளான தமிழ்த்தேசிய கட்சிகளும், முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகளும் பிளவின்றி ஒரே அணியாக தென்னிலங்கையின் மூன்று வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்க தீர்மானித்லிருந்தால் அவர்கள் மேடைக்கு மேடை கூவிய தாங்கள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி என்பதை நனவாக்கி இருக்க முடியும். அநுரகுமார திசாநாயக்கவின் வாய்ப்பை தட்டிப்பறித்திருக்கவும் முடியும். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முஸ்லீம் வாக்குகள் சஜீத், ரணில், அரியம் என்று பிரிந்ததால் அதன் இறுதி நன்மையை அடைந்தவராகிறார் அநுரகுமார. இல்லையேல் குறைந்தது பத்து இலட்சம் வாக்குகளால் சஜீத் அல்லது ரணிலை ஜனாதிபதியாக்கியிருக்க முடியும். அப்போது அவர்கள் கூறிய ஜனாதிபதி யார்? என்பதை நிர்ணயித்தல் சாத்தியமாகியிருக்க வாய்ப்பு இருந்தது. இப்போது தமிழ்த்தேசிய சஜீத் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய ரணில் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய பகிஷ்கரிப்பு அணி தோற்றது. வடக்கு கிழக்கு சஜீத், ரணில் ஆதரவு முஸ்லீம் கட்சிகளும், அணிகளும் தோற்றன. ரணில் ஆதரவு இணக்க அரசியல் ஈ.பி.டி.பியும், ரி.எம்.வி.பி.யும் தோற்றுப் போயினர். சஜீத்தையும், ரணிலையும் ஒன்றிணைக்க முனைந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் தோற்றுப் போயினர். பொதுவேட்பாளரை நிறுத்த முயன்ற தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும் தோற்றன. சுமந்திரன் அணியை தன்பக்கம் இழுப்பதில் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும் தோற்றது. சஜீத் தோற்றார். ரணில் தோற்றார். அரியநேந்திரனும் தோற்றார். சிறுபான்மையினர் கட்சிகள் அனைத்தும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிபார்சுகளை செய்தவை. அந்த சிபார்சு அரசியலை மக்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், ஆனால் அது மக்களுக்கு நன்மையற்ற வகையில் தோற்றுப்போயிருக்கிறது. ஆக, வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்கள் பொதுவாகவும், சிறப்பாக பொது வேட்பாளருக்கு அளித்த வாக்குகளும் ஜனநாயக அரசியலில் ஆயுதமாகவோ, , இராஜதந்திரமாகவோ அன்றியும் அகிம்சை அரசியலுக்கும் பயனற்று குப்பை கூடைக்குள் வீசப்பட்டுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்புடன் ஒப்பிடுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியை கோடிட்டுக் காட்டமுடியும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் ஆக சுமார் மூவாயிரம் வாக்குகளை பொதுவேட்பாளர் மேலதிகமாக பெற்றுள்ளார். இது பகிஷ்கரிப்பு கோரிக்கையை நிராகரித்தவர்களின் வாக்காக இருக்க வாய்ப்புண்டு. வடக்கு, கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் அனைத்திலும் பொதுவேட்பாளர் 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் குறைவாகவே பெற்றுள்ளார். குறைவு என்பது ஒருசில ஆயிரம் வாக்குகள் அல்ல. வன்னி, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் பொது வேட்பாளர் சுமார் 50 வீதம் வாக்குகளை குறைவாகப் பெற்றுள்ளார். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வீழ்ச்சி சுமார் 75 வீதமாக இருக்கிறது. இதனால்தான் அநுரகுமார அரியத்தாரை மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்தக்கூடியதாக இருந்தது. இது முயலும், ஆமையும் நடாத்திய ஓட்டப்பந்தயத்தை நினைவூட்டும் பொதுவேட்பாளர் அரசியல் கோமாளித்தனம். ஆக, பொதுவேட்பாளர் கோமாளி வேடம் போட்டு தமிழ்த்தேசியம் சர்வதேசத்திற்கு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் காட்டியிருப்பது என்ன? * வட்டுக்கோட்டை பிரகடனத்தை மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள். அல்லது காலத்திற்கு பொருத்தமற்ற காலாவதியான ஒன்று என்று மீளப்பெற்றிருக்கிறார்கள். * இதன்மூலம் தமிழர் தாயகக்கோட்பாடு, தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, இணைந்த வடக்கு கிழக்கு அனைத்தும் மக்கள் மத்தியில் பலவீனமான கருத்தாடல்களாகிவிட்டன என்பது சர்வதேசத்திற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. *வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள்,ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் என்பதற்கும் அப்பால் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் இணக்கமாக வாழவிரும்புகின்றனர். *ஒரு நாடு, ஒரே மக்கள் இலங்கையில் எவரும் எங்கும் வாழலாம் எந்தப் பிரிவினருக்கும் என்று தனியான பிரதேசங்கள் இல்லை என்ற கோத்தபாயவின் நிலைப்பாட்டிற்கு ஜே.வி.பி. வடிவம் கொடுக்க வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் அநுரகுமாரவுக்கு வாக்களித்து உறுதிப்படுத்தியுள்ளனர். * மேலும் தமிழ்த்தேசிய மக்கள் திரட்சி, தாராள பொருளாதாரக் கொள்கை, பொருளாதார அபிவிருத்தி வேண்டி நின்ற தொடர்ச்சி, இந்திய, அமெரிக்க மேலாண்மை போன்ற வற்றையும் நிராகரித்து இருக்கிறார்கள் தமிழ்மக்கள் . * சுமந்திரன் அணி தமிழ்த்தேசியத்தை சிதைக்கிறது என்று தும்புக்கட்டுக்கு குஞ்சம் கட்டப்போய் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும், பொதுவேட்பாளரும் மூக்குடைபட்டு நிற்கிறார்கள். இனி என்ன?. வீழ்ந்தாலும் மீசையில் மண்ஒட்டாத அறிக்கைகள் நாளைவரும்……! https://arangamnews.com/?p=11267
-
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தேர்வானதைத் தொடந்து நாடாளுமன்ற விரைவில் கலைக்கப்படும். விருப்பு வாக்குகளின் இறுதி முடிவுகளின் பின்னர் உரையாற்றிய அனுரகுமார நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என சரியாக கூறாத நிலையில் விரைவில் கலைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். இதற்கமைய, நாடு விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லும் என்பது உறுதியாகிறது. தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரான பிமல் ரத்நாயக்கவும் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். தேர்தல் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க தனது முந்தைய அறிக்கைகளைப் பின்பற்றி இந்த வாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்தால், தேர்தலுக்கான காலக்கெடு நவம்பர் இறுதியில் இடம்பெறும். முன்னாள் தேர்தல் கண்காணிப்பாளர் ரஜித்ன் கீர்த்தி தென்னகோன் கருத்துப்படி, சட்ட கட்டமைப்பின் கீழ் எதிர்பார்க்கப்படும் காலக்கெடு பின்வருவனவற்றை பரிந்துரைக்கிறது: 01. நாடாளுமன்றம் கலைப்பு - செப்டம்பர் 25, 2024 02. நியமனக் காலக்கெடு - 2024 ஒக்டோபர் 04, அறிவிப்பு வெளியான பத்து நாட்களுக்குள், நியமனங்களுக்கு ஏழு நாள் கால அவகாசம் இருக்கும். 03. தேர்தல் திகதி தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு - 2024 ஒக்டோபர் 07ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது. 04. தேர்தல் நாள் - கலைக்கப்பட்ட 52 முதல் 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையின்படி, நவம்பர் 22 மற்றும் நவம்பர் 30 ஆம் திகதிகளுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம். https://oruvan.com/sri-lanka/2024/09/23/sri-lanka-parliamentary-election-at-the-end-of-november
-
ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்!
இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர பதவிப் பிரமாணம்! September 23, 2024 இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் 9 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், விருப்பு வாக்கு உள்ளடங்களாக 5,740,179 வாக்குகளைப் பெற்று, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. https://eelanadu.lk/இலங்கையின்-9ஆவது-நிறைவேற/
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
வருகின்ற எலக்சனில் அம்பிகா ஆன்ரி பாராளுமன்றம் போகவேண்டும். ☺️ அரியம் மட்டக்களப்பில் முழுக்க முழுக்க தமிழர்கள் உள்ள பட்டிருப்புத் தொகுதியில் கூட நான்காவதாகத்தான் வந்தார்! கிழக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசியம் முற்றாகவே காணாமல் போய்விட்டது. வன்னியிலும், வடக்கிலும் ஊசலாடுகின்றது. இப்போதைய அரசியல் தலைமை எப்படியும் விரைவில் கொள்ளி வைத்துவிடுவார்கள்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
யதீந்திராதான் எழுதிய வித்துவான்! https://www.facebook.com/share/JXanQwQr5LuWsQiY/?mibextid=WC7FNe
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
வாட்ஸப்பில் கண்டது.. எழுதிய வித்துவானைத் தெரியாது.. —- அனுரவின் வெற்றியும் தமிழரசுக் கட்சி ஆதரித்த சஜித்தின் தோல்வியும். அனுரகுமாரவின் வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதில் குத்திமுறிய ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே அனுர வெற்றிபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில், தமிழ் பொது வேட்பாளருக்கான திருகோணமலை கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். அது நடந்திருக்கின்றது. ஆனால் நாங்கள் கணித்தது போன்றே அனுரகுமார திசாநாயக்க ஜம்பது விகித ஆதரவில்லாமல் வெற்றிபெற்றிருக்கின்றார். இந்த அடிப்படையில், ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக அனுர பெரும்பாண்மையான மக்களின் ஆதரவை பெற்ற ஒருவரல்ல. ஒரு தோல்வியடைந்த வேட்பாளராகவே அவர் ஜனாதிபதியாகியிருக்கின்றார். எனவே அவரால் அதிகம் எதனையும் செய்துவிட முடியாது. முக்கியமாக அவர் தமிழ் மக்கள் விடயத்தில் எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்தப்போவதில்லை. ஒரு வேளை சஜித் வென்றிருந்தாலும் இதே நிலைமைதான். தமிழ் தேசிய நிலைப்பாடு, தேசமாக சிந்தித்தல் என்னும் நிலைப்பாட்டின் கீழ் நோக்கினால், தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு திருப்திகரமானதல்ல. சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகளை கூட்டினால் தமிழ் நிலைப்பாடு என்று, நாங்கள் குறிப்பிடும் விடயங்களுக்கு வெளியில்தான் அதிக மக்கள் இருக்கின்றனர். உண்மைகளை புறம்தள்ளி எப்போதும் சிந்திக்கக் கூடாது. ஆனால் பல்வேறு உள் எதிர்ப்புக்கள், உட் சதிகளுக்கு மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் திருப்தியை தருகின்றது. அனைத்து தமிழ்த் தேசிய தரப்புக்களும் ஒன்றிணைந்து, ஒரு இலக்கில் செயற்பட்டிருந்தால், நான்கு லட்சத்திற்கு மேலான வாக்குகளை தொட்டிருக்க முடியும். ஆனால் இது ஒரு படிப்பினை. அதே வேளை, இவ்வாறானதொரு அணுகுமுறை சாத்தியம் என்பதை, செயலால் நிரூபித்திருக்கின்றோம். ஆரம்பத்தில் எங்களுடைய முயற்சியை ஏளனமாக நோக்கிய ராஜதந்திர தரப்புக்களுக்கும் ஒரு செய்தி சொல்லப்பட்டிக்கின்றது. சஜித் பிரேமதாசவை ஆதரிக்கச் சொன்னவர்கள் மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றனர். ஏனெனில் தமிழ் பொது வேட்பாளரை தோற்கடிப்பதாக கூறிய சுமந்திரன் தரப்பு, இறுதியில் தென்னிலங்கையில் தோல்வியடையப் போகும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கூறியதில் என்ன புத்திசாலித்தனம் உண்டு? ஒரு கொள்கை நிலைப்பாட்டுக்காக வாக்குகளை தருமாறு கோரிய பொது வேட்பாளரரை நிராகரித்து, தோல்விடையும் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்ததில் என்ன பெருமையுண்டு. தமிழ் மக்கள் தொடர்ந்தும் முட்டாள்தனமாகத்தான் சிந்திப்பார்கள் என்பதைக் காண்பித்ததை தவிர வேறு என்ன நடந்திருக்கின்றது? தமிழரசு கடச்சியின் மத்திய குழுத் தீர்மானம் முட்டாள்தனமானது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதில் குகதாசனுக்கு பங்கில்லை என்றால், அதனை பொது வெளிகளில் குறிப்பிடும் வல்லமையை காண்பிக்க வேண்டும். பொது வேட்பாளர் கணக்கிலெடுக்கப்படாத ஒருவராக இருப்பார் - இருக்க வேண்டும் என்று கூறியவர்கள் இனி எதைச் சொல்வார்கள்? அதே போன்று, முட்டாள்தனமாக சிந்திப்பதில் பிரபல்யமான கஜாக்களின் அணியான சைக்கிள் அணியினரின் தமிழ்த் தேசியமும் புஸ்வானமாகிவிட்டது. சஜித் பிரேமதாசவை ஆதரித்ததில் என்ன நன்மையுண்டு? பகிஸ்கரிப்புக் கதையில் என்ன நன்மையுண்டு? சஜித்திற்கு வாக்களித்த தமிழ் மக்கள் ஒரு வேளை, சஜித்தான் வெற்றிபெறப் போகின்றார் என்னும் எண்ணத்தில் வாக்களித்திருக்கலாம் ஆனால் ஒரு தோல்வியாளருக்கு வாக்களித்ததன் மூலம் மீண்டும் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதியற்றுப் போயிருக்கின்றது. அந்த வாக்குகளை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்திருந்தால், அந்த வாக்குகளுக்கு ஒரு பெறுமதியிருந்திருக்கும். சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் அரசியல் விழிப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. விடுதலைப் புலிகளை அழித்ததாக மார்தட்டிக் கொண்டிருந்த ராஜபக்ச குடும்பத்தை, சிங்கள மக்கள் இப்போது எந்த இடத்தில் நிறுத்தியிருக்கின்றனர்? தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய இடம் இதுதான். கட்சி மற்றும் தனிநபர்களை புறம்தள்ளி தமிழ் மக்கள் தங்களின் சொந்தப் புத்தியில் இயங்க வேண்டும். இந்தத் தேர்தல் முடிவுகள் எதனை உணர்த்துகின்றது? சிங்கள பெரும்பாண்மைக்குள் எழுச்சி ஏற்பட்டால் தமிழ் மக்களின் வாக்குகள் தேவையற்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. 2019இலும் இது நிரூபிக்கப்பட்டது. மீண்டும் 2024இல் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அனுரகுமார ஜம்பது விகிதத்தை பெறாத போதிலும் கூட, சிங்கள மக்களின் தனி ஆதரவில் வெற்றிபெற்றிருக்கின்றார். தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற சஜித்திற்கும் அனுரவிற்கும் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசம். தமிழ் மக்கள் பொதுச் சபை மற்றும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்பது சர்வலோக நிவாரணியல்ல – அனைத்தும் குறைபாடுகள் உள்ள அமைப்புக்கள்தான். யுத்தத்திற்கு பின்னர் தோற்றம் பெற்ற அனைத்து அமைப்புக்களும் குறைபாடுகள் உள்ளவைதான். முன்னர் இருந்தவையும் புனித அமைப்புக்கள் அல்ல. அங்கும்குறைபாடுகள் ஏராளம். ஆனால் முடிந்தவரையில் ஒரு விடயத்தை செய்வதற்காக ஒன்றுபடுதல் என்பதிலிருந்துதான் முன்னேற்றங்களை நோக்க வேண்டும். செயலால்தான் குறைபாடுகளை சரிசெய்ய முடியும். மனிதர்களால் உருவாக்கப்படும் அனைத்திலும் மனிதர்களின் பலவீனங்களின் நிழல் தொடரும்தான். அனுரவை ஆதரித்த சிங்கள மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துத்தான் திரண்டிருக்கின்றனர். இப்படித்தான 2019இலும் திரண்டனர் இறுதியில் ஏமாற்றமடைந்தனர். அந்த ஏமாற்றம் அவர்களுக்கு மீண்டும் கிடைக்குமா? அனுரவின் இலங்கைகையும் பார்ப்போம். அறகலயவில் கொடிபிடிப்பது இலகுவானது ஆனால் நாட்டை கொண்டு நடத்துவது?
-
இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமார திஸாநாயக்க
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து ! ShanaSeptember 22, 2024 நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியத் தலைமையின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன்,மக்கள் ஆணையை வென்றதற்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.battinews.com/2024/09/blog-post_598.html அனுரகுமாரதிசநாயக்கவிற்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்து ! September 22, 2024 ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அமெரிக்கா அனுரகுமாரதிசநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தங்கள் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்காக இலங்கை மக்களை பாராட்டுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். பகிரப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில் இணைந்து செயற்பட தயார் என அவர் தெரிவித்துள்ளார். https://www.battinews.com/2024/09/blog-post_278.html
-
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் - அநுர தரப்பு வெளியிட்ட தகவல்
“இது எம்மனைவரதும் வெற்றியாகும்“ பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. அதற்காக என்னால்உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும். இது எம்மனைவரதும் வெற்றியாகும். நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம்செய்துள்ளார்கள். எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம். எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன. இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம்! https://oruvan.com/sri-lanka/2024/09/22/its-a-win-for-all-of-us அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம்..
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
சஜித் வடக்கு-கிழக்கிலும் பதுளை, நுவரேலியாவிலும் முன்னணியில் வந்துள்ளார். சிறுபான்மையினர் அதிகமாக உள்ள பகுதிகள் அநுரகுமாரவுக்கு சாதகமாக அமையவில்லை. ஜேவிபியின் இனவாதம், இந்திய வெறுப்பை விட சிங்களவர்கள் ஒரு பாரிய மாற்றத்தை அவாவித்தான் சஜித்தையும், ரணிலையும் தவிர்த்து அநுரவுக்கு வாக்களித்துள்ளனர். சூட்டோடு சூட்டாக அநுர பாராளுமன்றத் தேர்தலையும் வைக்கக்கூடும்!
- IMG_9376.jpeg
- IMG_9375.jpeg
-
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் - அநுர தரப்பு வெளியிட்ட தகவல்
புதிய ஜனாதிபதியின் செய்தி.. பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை எந்த ஒரு நபரின் உழைப்பின் விளைவு அல்ல, ஆனால் மில்லியன் கணக்கான உங்களின் கூட்டு முயற்சி!
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ஆம். ரணிலுக்கு வாக்களித்தவர்கள் அனுரவை இரண்டாவதாக தெரிவு செய்ய வாய்ப்புக் குறைவு. பார்க்கலாம்.