Everything posted by கிருபன்
-
திருகோணமலையில் நாற்பதாயிரம் ஏக்கருக்கு மேல் மக்களின் காணிகள் அபகரிப்பு: ச.குகதாசன் எம்.பி
திருகோணமலையில் நாற்பதாயிரம் ஏக்கருக்கு மேல் மக்களின் காணிகள் அபகரிப்பு: ச.குகதாசன் எம்.பி August 6, 2024 அரசின் ஓர் அங்கமான வனத் துறை திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் ஏக்கர் நிலைத்தையும் தொல்பொருள்துறை 2600 ஏக்கர் நிலைத்தையும் கையகப் படுத்தி வைத்துள்ளனர் என திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (06)தனது முதலாவது கன்னியுரையின் போதே இவ்வாறு தெரிவித்த ச.குகதாசன், தொடர்ந்தும் உரையாற்றுகையில், திருக்கோணேச்சரம் வரலாற்று புகழ்மிக்க ஒரு புனிதத் தலம் இக்கோவிலுக்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்கள் இந்த இடத்தின் அழகைக் கண்டு களிக்க விரும்புகின்றனர். சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கடைகள் இதற்குத் தடையாக உள்ளன. மேலும் இக்கடைகளினால் கோவிலின் புனிதத் தன்மை கெடுவதோடு இங்கு சில சமூக விரோதச் செயல்பாடுகளும் இடம் பெறுகின்றன. எனவே இக்கடைகளை வேறு ஒரு தகுந்த இடத்திற்கு மாற்ற வேண்டும் என 2019 மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப் பட்டது எனினும் இம்முடிவு இது வரையிலும் செயற்படுத்தப்பட வில்லை இந்த முடிவை விரைந்து செயற்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது நாட்டின் குடியரசுத் தலைவரும் அரசும் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். எனினும் அரசின் ஓர் அங்கமான வனத் துறை திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் ஏக்கர் நிலைத்தையும் தொல்பொருள்துறை 2600 ஏக்கர் நிலைத்தையும் கையகப் படுத்தி வைத்துள்ளனர். இந்தக் காணிகள் 1985ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் பயிர் செய்த நிலங்கள் ஆகும். 1985ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் பயிர் செய்த நிலங்கள் விடுவிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறிய பொழுதும் அது நடைபெறவில்லை. இந்தக் காணிகளை விடுவிக்க அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். வனத்துறை கையகப்படுத்தி வைத்துள்ள பகுதிக்குள் 80 சிறு குளங்கள் உள்ளன. வனத்துறை இந்த நிலங்களை விடுவித்து இக்குளங்களை திருத்தி அமைப்பதன் மூலம் சில ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை நெற்செய்கையின் கீழ் கொண்டுவர முடியும். இவற்றின் மூலம் நாட்டின் நெல் உற்பத்தியை பெருக்குவதோடு உழவரது பொருண்மிய நிலையையும் மேம்படுத்தலாம். மூன்றாவதாக திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள கடற் தொழிலாளர் எதிர்கொள்ளும் சிக்கல்களை பற்றி தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். இந்த மாவட்டத்தில் ஏறத்தாழ 23,000 ஆயிரம் குடும்பங்கள் கடற் தொழிலை நம்பி வாழ்கின்றனர் எனினும் நவீன மீன்பிடி முறைமைகள் எதுவும் பின்பற்ற படுவதில்லை. பன்னாள் மீன்பிடிப் படகு வைத்திருக்கும் மீனவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். பெரும்பாலும் ஓர் எந்திரம் பூட்டிய படகில் சென்று மீன் பிடிப்பவர்களே மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களால் அதிக மீன்களையும் பிடிக்க இயலவில்லை கடலுக்குச் செல்லும் பொழுது அடிக்கடி காணாமலும் போகின்றனர். அப்படி துன்பப் பட்டு போராடிப் பிடித்த மீன்களுக்கு சரியான விலையும் கிடைப்பதில்லை பெரும்பாலும் இடைத் தரகர்களே இலாபம் ஈட்டுகின்றனர். இதற்கான தீர்வாக ஏழை மீனவர்களுக்கு பன்னாள் மீன்பிடிப் படகு கொள்வனவு செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன் கொடுக்கும் திட்டங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும். மேலும் பன்னாள் மீன்பிடிப் படகுத் துறைகள் திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் துறை முகத்துவாரம், சம்பூர் மற்றும் சல்லி ஆகிய மீன்பிடி கிராமங்களில் நிறுவப்பட வேண்டும். இதனால் மீன் பிடியையும் மீனவர் பொருண்மியத்தையும் கூட்ட இயலும் என்பதோடு கடலில் காணாமற் போவோரின் எண்ணிக்கையும் குறையும். அதுமட்டுமின்றி படகுககள் காணாமற் போகுமிடத்து அப்படகுகளை வானூர்திகள் மூலம் தேடும் நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும். திருக்கோணமலை மாவட்டக் கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மற்றுமொரு சிக்கல் சுருக்குவலையில் மீன் பிடிப்பதாகும் . இதன் காரணமாக கடல் வளம் வரம்பை மீறிச் சுரன்டப் படுவதோடு 100 ஏழை மீனவர் பிடிக்கும் மீன்களை ஒரே ஒரு பெரும் முதலாளியின் சுருக்குவலை படகு பிடிக்கின்றது. சுருக்குவலை சிக்கலுக்குத் தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அவற்றை முழுவதுமாக அமுல்படுத்தப்பட வேண்டும். நான்காவதாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் நிலவும் கல்வி தொடர்பான சிக்கல்களை தங்கள் மேலான பார்வைக்கு கொண்டு வருகின்றேன் இம் மாவட்டத்தில் 166 தொடக்க கல்வி ஆசிரியர் பற்றாக்குறையும் 116 கணித ஆசிரியர் பற்றாக்குறையும் 53 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் 60 அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறையும் 52 கணினி ஆசிரியர் பற்றாக்குறையும் 53 தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையும் ஆக மொத்தம் 500 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.இதனால் மாணவர்களது கல்வி மிகவும் பாதிக்கப் படுகிறது எனவே ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு போதிய ஆசிரியரை மாவட்டதிற்கு ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். இப்பொழுது உள்ள முறையில் ஆசிரியர் வளப் பங்கீடு சரியான முறையில் அமையவில்லை மாகாணங்களுக்கு ஆசிரியர் நியமிக்கும் பொழுது பெரும்பாலான ஆசிரியர் திருக்கோணமலை மாவட்டத்திற்கு வருகின்றார்கள். வந்த சில காலங்களில் தத்தம் மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுகொண்டு சென்று விடுகின்றனர். இந்தச் சிக்கலைத் தீர்பதற்குக் கல்வியல் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் பொழுது பிரதேச செயலாளர் மட்டத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்தால் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம். உள்நாட்டு அமைச்சு கிராம அலுவலர்களை நியமிக்கும் பொழுது பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களுக்கு. அவ்வவ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளவர்களையே நியமிக்கின்றார்கள் இதே முறையை கல்வி அமைச்சும் பின் பற்றினால் ஆசிரியர் பற்றாக்குறைச் சிக்கலுக்கு தீர்வு காணலாம். மேலும் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. கல்வித் துறைக்கு 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 1.3% நிதி மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 1.5% ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் குறைந்தது 5% ஆவது உயர்த்தப்பட வேண்டும். மேற்கு நாடுகள் தமது வரவு செலவுத் திட்டத்தில் 5% க்கும் கூடுதலான தொகையை கல்விக்கு ஒதுக்குகின்றன என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். அடுத்ததாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் மாவட்ட மருத்துவமனையில் 54 மருத்துவர் பற்றாக்குறையும் 9 துறைசார் மருத்துவ நிபுணர் 7 செவிலியர் பற்றாக்குறையும் 3 மருந்தாளர் பற்றாக்குறையும் 39 சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையும் 3 சாரதிகள் பற்றாக்குறையும். மேலும் மாகாண அரசின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 40 துறைசார் மருத்துவ நிபுணர் பற்றாக்குறையும் 21 மருத்துவர் பற்றாக்குறையும் 27 செவிலியர் பற்றாக்குறையும் 22 மருந்தாளர் பற்றாக்குறையும் 6 மிகைஒலி ஊடுகதிர் தொழில்நுட்பவியலாளர் பற்றாக்குறையும் 100 சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆவன செய்யுமாறு உரிய அமைச்சரைக் கேட்டுக் கொள்கின்றேன். திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் ஒரு பகுதி கட்டப்பட்ட நிலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளன. இப்பிரிவில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால், நோயாளிகளை நிர்வகிக்க போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது. இக்கட்டடத்தை கட்டி முடிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் திருக்கோணமலை மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரிவு ஒன்று இல்லை இதனால் இம் மாவட்ட மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சிகிச்சைக்காகச் செல்கின்றனர். இதன் விளைவாக இம்மக்கள் பணச் செலவு, போக்குவத்து, நேரம், மொழி, தங்குமிட வசதி முதலிய சிக்கல்கள்களை எதிர்நோக்குகின்றனர். இவற்றை தீர்ப்பதற்கு புற்றுநோய் பிரிவு ஒன்றை இம்மாவட்ட மருத்துவமனையில் நிறுவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அடுத்ததாக திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் விளையாட்டு அரங்கு இல்லாமல் இருப்பதே ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள முதன்மையான மிகச் சிறந்த பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய Mc.Heizer விளையாட்டு அரங்கு நீண்ட காலமாக மறுசீரமைக்கப் படாமல் புதர் மண்டிபோய் உள்ளது. இதை மறுசீரமைப்பதன் மூலம் திருக்கோணமலையில் விளையாட்டு துறையில் சாதிக்க எண்ணும் பல நூற்றுக்கணக்கான இளையோர்கள் முன்னேறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதோடு பன்னாட்டு விளையாட்டு போட்டிகளை இங்கே நடத்தமுடியும் இதன் வழியாக நாட்டிற்கு அந்நிய நாணய மாற்று வருவாயை கொண்டு வர முடியும். அடுத்ததாகத் துறைமுக அதிகார சபையானது, பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதினொரு கிராம அலுவலர் பிரிவில் உள்ள 5572 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தியுள்ளது. இதில் 1868 ஏக்கர் நிலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வாழ்கின்றார்கள்.துறைமுக அதிகார சபையின் கையகப் படுத்தல் காரணமாக மக்கள் தங்கள் நிலத்தில் எந்தவித செயற்பாடுகளையும் செய்ய இயலாமல் உள்ளது ஆகவே இவ்விடங்களை அங்கு வாழும் மக்ககளுக்கு கையளிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்ததாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ 10,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன இவர்கள் போதிய படிப்பறிவு, பட்டறிவு மற்றும் வினைத்திறன் அற்றவர்களாக காணப்படுகின்றனர் ஆகவே இவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை கொடுத்து கமத்தொழில், கைத் தொழில், கால்நடை வளர்ப்பு, சேவைத் துறை முதலியவற்றில் சுயதொழில் செய்வதற்கு ஆவன செய்யப்பட வேண்டும். திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகள் தெளிவாக இல்லை இதனால் அதிகாரிகளும் பொது மக்களும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இந்த எல்லைகளை தெளிவு படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, நான் இதுவரையில் திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், நோயாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்த உயரிய அவையில் கவனத்திற்கு கொண்டு வந்து உள்ளேன் இவற்றைத் தீர்ப்பதற்கு உரிய அமைச்சர்கள் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் என்றார். https://www.ilakku.org/திருகோணமலையில்-நாற்பதாய/
-
பருத்தித்துறை- அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர்: நோயாளர்கள் அலைக்கழிப்பு!
பருத்தித்துறை- அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர்: நோயாளர்கள் அலைக்கழிப்பு! August 6, 2024 மருத்துவர் ஒருவர் அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்புவதற்காக, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்களை அலைக்கழித்து காக்கவைக்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்களினால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டு காக்கவைக்கப்பட்டே அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட நான்கு நோயாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட்-02) அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த விடுதிகளில் இருந்து சக்கர நாற்காலிகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயங்கும் புதிய கட்டிடத்தின் கீழ் தளத்திற்கு அன்றைய தினம் மதியம் 2.00 மணியளவில் கொண்டுவரப்பட்டிருந்தனர். இருதய பாதிப்பு காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் அவசர நோயாளர் காவு வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் மற்றைய நோயாளர்களும் அதில் ஏற்றப்பட்டிருந்தனர். சிறிது நேரத்தில் இருதய நோயாளி தவிர்நத ஏனைய நோயாளர்கள் அவசரமாக அதிலிருந்து இறக்கப்பட்டனர். மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளம் யுவதி ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாகவே அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட வேண்டியிருந்ததால் அவ்வாறு அவர்கள் இறக்கப்பட்டதற்கான காரணம் அங்கிருந்த ஊழியர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்றைய அவசர நோயாளர் காவு வாகனத்தின் வந்து கொண்டிருப்பதாகவும் வந்த உடன் அதில் ஏற்றி அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய அவசர நோயாளர் காவு வாகனம் உடனடியாகவே வந்திருந்த போதிலும் காக்கவைக்கப்பட்ட நோயாளர்களை விடுதிக்கு அழைத்து சென்று விடுமாறும் மாலை 4 மணிக்கு பின்னரே அவசர நோயாளர் காவு வாகனம் புறப்படும் எனவும் அவசர நோயாளர் காவு வாகனத்தில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான பெண் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏனைய சிற்றூழியர்கள் அதிருப்தியை வெளிக்காட்ட முடியாது புறுபுறுத்தவாறே நோயாளர்களை விடுதிக்கு கொண்டு சென்றிருந்தனர். இந்நிலையில் திடீரென உடனடியாக நோயாளர்களை பழைய வெளிநோயாளர் பிரிவு வாசல் பகுதிக்கு கொண்டு வருமாறு சிற்றூழியர்களுக்கு அறிவுறுத்தல் வந்துள்ளது. இதையடுத்து 06 ஆம் இலக்க விடுதியில் இருந்த நோயாளியை மீண்டும் சக்கர நாற்காலி மூலமாக அழைத்துச் சென்று அவசர நோயாளர் காவு வாகனத்தில் ஏற்றிய நிலையில் புதிய கட்டிட பகுதியில் வைத்து ஏனைய இரு நோயாளிகளும் அன்று பிற்பகல் 03.30 மணியளவில் ஏற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு ஏற்றப்பட்ட போதிலும் அவசர நோயாளர் காவு வாகனம் புறப்படாது காத்திருந்துள்ளது. ஏற்கனவே ஒரு அவசர நோயாளர் காவு வாகனத்தில் ஏற்றி இறக்கப்பட்டதுடன் மீளவும் விடுதிக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்த நிலையில் அவதியுற்ற நோயளிகள் மேலும் ஏற்பட்ட காலதாமத்தினால் அதிருப்தியடைந்து அவசர நோயாளர் காவு வாகனத்தின் சாரதியிடம் தாமதத்திற்கான காரணத்தை வினவியபோது கடும் தொனியில் அதிருப்தியுடன் இதோ வாறா.. அவவிடமே கேளுங்கள் என்பதாக அவசர நோயாளர் காவு வாகனத்தில் சாதரண உடையில் ஏறிய பெண்ணை காட்டி கூறியிருந்தார். அத்துடன் அவர்கள் ஏதோ கேக்கினம் அதுக்கு பதில் சொல்லுங்கோ அதுக்கு பிறகு எடுக்கிறன் என குறித்த பெண்ணிடம் சாரதி தெரிவித்திருந்தார். குறித்த பெண் எதுவும் நடக்காதவர் போன்று அமைதியாக இருக்க சுமார் நான்கு மணியை நெருங்கும் நேரத்தில் அம்பியுலன்ஸ் புறப்பட்டது. சாதாரண உடையில் தாமதமாக வந்து ஏறிய அவசர நோயாளர் காவு வாகனத்தில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான பெண் உத்தியோகத்தரை புத்தூர் சந்திக்கு அண்மித்த பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு நோயாளர்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோக்கி பயணித்தது அவசர நோயாளர் காவு வாகனம், அவசர நோயாளர் காவு வாகனத்தில் நோயாளர்களை அனுப்பும் விடயத்திற்கு பொறுப்பான சிற்றூழியரான குறித்த பெண் உத்தியோகத்தர் தனது கடமை நேரம் முடிந்த பின்னர் அவசர நோயாளர் காவு வாகனத்திலேயே வீடு திரும்பும் நோக்கிலேயே மதியம் 2.30 மணிக்கு அனுப்பவேண்டிய நோயாளர்களை 4.00 மணி வரை காத்திருக்க வைத்து அலைக்கழித்துள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது. தனது சொந்த தேவைக்காக நோயாளர்களை காக்கவைத்து அலைக்கழித்துள்ளதுடன் அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பியுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செய்றபாடுகளாகும். குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வாறான தவறுகள் மீளவும் நடைபெறாதென்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். https://www.ilakku.org/பருத்தித்துறை-அவசர-நோயா/
-
ஹமாஸின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர்
ஹமாஸின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹமாஸ் இயக்கம், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. காசாவின் எல்லையோரத்தில் உள்ள இஸ்ரேலின் நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் போர் தொடர்ந்து வருகிறது. இதனிடையே ஈரானில் கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த அமைப்பின் இராணுவப் பிரிவுத் தலைவர் முகமது டேயிஃபும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்நிலையில் ஹமாஸின் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் நியமிக்கப்பட்டுள்ளார். யேஹ்யா சின்வர் பொதுவெளிகளில் அதிகம் தோன்றாவிட்டாலும், ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். முகமது டேயிஃபியின் நெருங்கிய நண்பரான இவர், அமைப்பின் இராணுவப் பிரிவை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.S https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஹமாஸின்-புதிய-தலைவராக-யேஹ்யா-சின்வர்/50-341738
-
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம் இந்தியாவின் நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. கடந்த வருடம் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த வாரம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தமானில் இருந்து நாக்கை வந்த ‘சிவகங்கை கப்பல்’ நாளை மறுநாள் இலங்கைக்கு சோதனை பயணமாக வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன https://newuthayan.com/article/காங்கேசன்துறை_–_நாகப்பட்டினம்_கப்பல்_சேவை_மீண்டும்_ஆரம்பம்
-
காங்கேசன் துறைமுகத்தில் கண்வைக்கிறது இந்தியா!
காங்கேசன் துறைமுகத்தில் கண்வைக்கிறது இந்தியா! 30 ஆண்டு குத்தகைக்கு இலங்கையிடம் கோரிக்கை காங்கேசன்துறை துறை முகத்தின் அபிவிருத் திக்காக 62 மில்லியன் அமெரிக்க டொலரை மானியமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் துறைமுகத்தை 30 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்துக்கொள்ளவும் இந்தியா முயற்சிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . ஆரம்பத்தில், காங்கேசன்துறை துறை முகத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசாங்கம் கடன் வழங்க எண்ணியது. எனினும், தற்போதைய பொருளாதார நிலை காரணமாக இலங்கையில் திட்டங்களை முன்னெடுப்பதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. ஆயினும், இந்தியாவின் மானிய உதவியின் கீழ் குறித்த துறைமுக அபிவிருத்திக்கான முன்மொழிவுக்கு இலங்கை அண்மையில் அனுமதி வழங்கியது. ஆரம்பகால முன்மொழிவுகளின்படி இந்தியக் கட்டமைப்பாளர் ஒருவர் குறித்த திட்டத்தை நிறைவேற்றுவார் என துறை முகங்கள்,கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் செயலர் கே.டி. எஸ்.ருவன்சந்திரா தெரிவித்துள்ளார். "இந்தியா 30 ஆண்டுகள் குத்தகையில் அதன் வணிகச் செயற்பாடுகளை காங்கேசன்றை துறைமுகத்தில் முன்னெடுக்க முயன்றது. எனினும், குறித்த விடயம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை” என்றும் கே. டி. எஸ்.ருவன்சந்திரா மேலும் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/காங்கேசன்_துறைமுகத்தில்_கண்வைக்கிறது_இந்தியா!
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா வீட்டிற்கு தீ வைப்பு! Aug 06, 2024 14:12PM IST வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அவாமி லீக் கட்சியின் எம்.பி-யுமான மஷ்ரஃப் பின் மோர்தசா வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் புகுந்த மாணவர்கள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மேலும், அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளை குறிவைத்து மாணவர்கள் தாக்கி வருகின்றனர். இந்தநிலையில், நரில் தொகுதி அவாமி லீக் எம்.பி-யும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான மஷ்ரஃப் பின் மோர்தசா வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அவரது வீட்டிற்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் நடந்தபோது, மஷ்ரஃப் பின் மோர்தசா அவரது வீட்டில் இருந்து தப்பிச்சென்றார். டி20, ஒருநாள், டெஸ்ட் என 117 போட்டிகளில் மஷ்ரஃப் பின் மோர்தசா வங்கதேச அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 36 டெஸ்ட் மேட்ச், 220 ஒருநாள் போட்டிகள், 54 டி20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மஷ்ரஃப் பின் மோர்தசா, அவாமி லீக் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து நரில் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். https://minnambalam.com/political-news/protesters-set-ex-bangladesh-cricketer-mashrafe-mortaza-house/
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
தமிழ் பொது வேட்பாளர்; தமிழரசின் முடிவுக்கு காத்திருப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு தமிழரசு கட்சியின் சம்மதம் கிடைக்க பொறாமை காரணமாக பொது வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான நீண்ட கலந்துரையாடல் சில மாதங்களாக இடம் பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஏழு தமிழ் கட்சிகளும் ஆறு சிவில் அமைப்புகளும் இணைந்து தமிழ் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி பொது வேட்பாளர் தொடர்பான தெரிவை முன்னெடுப்பதற்கான உப குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ் பொது வேட்பாளராக தமிழரசு கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியனேத்திரன் ஆகியோரின் பெயர்கள் இறுதி முடிவுக்காக பரிசீலனையில் எடுக்கப்பட்டது. இருவரும் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் தமிழரசு கட்சிக்குள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சார்பு அணி பொது வேட்பாளருக்கு ஆதரவாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆதரவு அணி பொது வேட்பாளருக்கு எதிராகவும் இருப்பதால் தமிழரசு கட்சியின் சம்மதம் கிடைக்கப்பெறாமல் உள்ளது. இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு இல்லாமல் இருவருடைய பெயர்களில் ஒருவரை தெரிவு செய்வதில் சிக்கல் காணப்படுவதாலேயே பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://akkinikkunchu.com/?p=286936
-
2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன்
2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்கவேண்டும். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயமாகும். அந்த வாக்கினை இன்னாருக்கு அளியுங்கள் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்குகளை யாருக்கு அளிக்கவேண்டும் என்பது குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அவ்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்கவேண்டும். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயமாகும். இதுகுறித்து அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். இந்த வேட்பாளருக்குத்தான் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கினை அளிக்கவேண்டும் என்று நான் எந்தவொரு கோரிக்கையையோ அல்லது ஆலோசனையையோ முன்வைக்கவில்லை. ஊடகவியலாளர்களால் பல கேள்விகள் முன்வைக்கப்படும்போது, எமது அடிப்படைக் குறிக்கோள்களை நாங்கள் சிதைத்திருப்பதாக எனது பதில்களைத் திரித்து வெளியிடும் பழக்கம் சில ஊடகவியலாளர்களுக்கு இருப்பதைக் காணமுடிகின்றது. ஆனால் அவை என்னுடைய கருத்துக்களன்று. நான் சில காலத்துக்கு முன்னர் தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று கூறியது உண்மைதான். இப்போதும் இந்த ஜனாதிபதித்தேர்தலினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து நான் அஞ்சுகிறேன். எந்தவொரு சிங்கள வேட்பாளரினாலும் 50 சதவீத வாக்குகளைப் பெறமுடியாமல்போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலைவரம் கவலைக்கிடமாகலாம். பல தீயசக்திகள் நாட்டில் குழப்பநிலையைத் தோற்றுவிக்க முனையலாம். சீனா தனது படையை நாட்டுக்கு அனுப்பவிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இது சிறுபான்மையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். நாட்டின் பொருளாதார நிலைவரத்திலும், ஸ்திரத்தன்மையிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். வெளிநாட்டு ஊடுருவல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கலாம். இவையனைத்தையும் கருத்திற்கொண்டே தேர்தலை பிற்போடுவது சிறந்தது என்று நான் கூறினேன். அதேவேளை நாட்டின் நலன்கருதி மூன்று பிரதான வேட்பாளர்களும் இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கலந்தாலோசிக்கலாம் எனவும் கூறினேன். அவ்வாறு கூறியதை மனதில் வைத்துத்தான் சில ஊடகங்கள் நான் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு தமிழ் மக்கள் 2 ஆவது விருப்பு வாக்கினை அளிக்கவேண்டும் என்று கூறியதாக தவறாக செய்தி வெளியிட்டிருக்கின்றார்கள். நாட்டின் நலன்கருதி நான் கூறியதற்கும் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவில் எனது திடமான முடிவுக்கும் உறவமைத்து கூறியமை பத்திரிகையாளர்களின் ஊகமாகும். தமிழ் பொதுவேட்பாளருக்கே தமிழ் மக்கள் தமது முதல் வாக்கினை அளிக்கவேண்டும். 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையாகும். இன்னாருக்கு அதனை அளியுங்கள் என்று எந்தத் தருணத்திலும் நான் கூறவில்லை. கூறவும் மாட்டேன் என்றார். https://akkinikkunchu.com/?p=286956
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா இலண்டன் செல்கிறார்… August 6, 2024 தெற்காசியாவில் 17 கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தில் 15 ஆண்டு கால ஷேக் ஹசீனாவின் ஆட்சியை மாணவர்களின் ஒரு மாத கால போராட்டம் முடிவுக்கும் கொண்டுவந்துள்ளது. கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 300- பேர்வரையில் உயிரிழந்துள்ளனர். மேலும் போராட்டம் வெடிக்க காரணமாக அமைந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்தான் நீக்கியது. ஆனாலும், தொடர்ந்த போராட்டம் அரசுக்கு எதிரானதாக மாறி ஒரு கட்டத்தில் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரும் கிளர்ச்சியாக மாறிவிட்டது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா லண்டனுக்கு புறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த நிலையில், வங்கதேச கலவரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து வங்கதேசத்தின் முன்னணி வார இதழான `பிளிட்ஸ்’ ஆசிரியர் சலா உதின் சோகிப் சவுத்ரி எழுதிய தலையங்க கட்டுரையில் கூறியிருப்பதாவது: வங்கதேச மாணவர்கள் போராட்டத்தை 157 பேர் ஒருங்கிணைந்து நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிஎன்பி கட்சிக்கு முக்கிய தொடர்பு உள்ளது. பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் டேவிட் பெர்க்மான் போராட்டத்தை தூண்டினார். பிரிட்டனுக்கு தப்பியோடிய பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரகுமான், அங்கிருந்து கொண்டு வங்கதேச போராட்டத்தை வழிநடத்தினார். இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் ஆவார். வங்கதேச மாணவர் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும் இருக்கிறது. மாணவர்களின் பெயர்களில் ஏராளமான தீவிரவாதிகளும் களமிறங்கி, போராட்ட களத்தை போர்க்களமாக மாற்றினர் என்று மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதே நேரம் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/இந்தியாவில்-தஞ்சம்-அடைந்/
-
இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் படுகொலைகளின் விளைவுகள் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ்
இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் படுகொலைகளின் விளைவுகள் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ் August 6, 2024 பாலஸ்த்தீன இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் மேற்கொண்ட ஏவுகணைத்தாக்குதலில் 12 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக லெபனான் மீது பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் நிகழ்த்தலாம் என எதிர்பார்க் கப்பட்ட போதும் இஸ்ரேலின் எப்-35 ரக தாக்குதல் விமானங்கள் லெபனான் மீது மேற் கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பிராந்திய தளபதிகளில் ஒருவரான பேட் சுஹிர் கொல்லப்பட்டிருந்தார். இந்த தாக்குதல் இடம் பெற்ற 24 மணி நேரத்திற்குள் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்குமான போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் தொடர் பேச்சக்களில் ஈடுபட்டிருந்த ஹனியே கொல்லப்பட்டது என்பது அமைதிக்கான முயற்சிகளை சீர்குலைத்து போரை மேலும் விரிவாக்கம் பெறவைக்கும் என்ற கருத்துக்களையே தற்போது உருவாக்கியுள்ளது. அமைதி முயற்சியில் நடுவராக செயற்பட்ட ஒருவரை ஒரு தரப்பு படுகொலை செய்யும் போது அமைதி எவ்வாறு சாத்தியமாகும் என கேள்வி எழுப்பியுள்ளார் கட்டாரின் வெளிவிவகார அமைச்சர். ஈரானின் புதிய அதிபர் மசூட் பெஸஸ் கியானின் பதவியேற்பு விழாவில் செவ்வாய்க் கிழமை(30) கலந்துகொண்டுவிட்டு ஈரானின் தலைநகர் தெஹிரானின் வடக்கு பகுதியில் உள்ள அரச விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த சமயம் ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள் ளார். கட்டாரின் டோகாவில் தங்கியிருந்த கனியா அங்கிருந்தே ஈரான் சென்றிருந்தார். அவரின் படுக்கை அறையினை அதிகாலை 2 மணியளவில் ஏவுகணை துல்லியமாகத் தாக்கி யதாகவும், இந்த சம்பவத்தில் அவரும் அவரின் மெய்பாதுகாப்பாளரும் கொல்லப்பட்டதாகவும் ஈரானின் புரட்சிகர இராணுவம் தெரிவித்தள்ளது. ஆளில்லாத தாக்குதல் விமானத்தின் மூலம் ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக ஈரானின் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். ஒரே ஒரு வெடிப்பதிர்வு கேட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து சமூகவலைத்தளங்களில் கூட அதிக செய்திகள் பகிரப்படவில்லை. இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் பொதுச் செயலாளர் சியாட் அல் நகலாவும் அவரின் அணியினரும் கனியாவின் கட்டிடத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் தங்கியிருந்தபோதும் அவர்கள் இந்த தாக்குதலில் இருந்து தப்பியுள்ளனர். இந்த சம்பவம் என்பது ஈரானின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கேள்விகளை எழுப்பியுள் ளதுடன், ஈரான் தனது நாட்டுக்குள் நிகழ்ந்த தாக்குதலுக்கு பதிலடியை கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்களையும் தோற்றுவித்துள்ளது. தனது நாட்டுக்குள் இடம்பெற்ற இந்த தாக்குதல் குறித்து ஈரான் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் முறையிட்டுள்ளது.அதேசமயம் தனது சிறப்பு படைப்பிரிவான காட் படைப்பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் அவசரமான பாதுகாப்பு மாநாட் டையும் நடத்தியுள்ளது. இந்த கோழைத்தனமான கொலை குறித்து இஸ்ரேல் கவலைப்படும் நிலையை ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ள ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் ஈரான் தனது ஆட்புல ஒருமைப்பாடு,கௌரவம் ஆகியவற்றை பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவரின் கொலைக்கு பழி வாங்குவது ஈரானின் கடமை என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளமை மத்திய கிழக்கை முழு மையான ஒரு யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள் ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத் தின் மத்திய கிழக்கு விவகாரங்களிற்கான பேராசிரியர் நடெர் ஹசேமி குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் தலைவரின் படுகொலை முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு மத்திய கிழக்கை முழுமையான யுத்தத்தை நோக்கி நகர்த்தியுள்ளது என அவர்தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்த தாக்குதல் குறித்து தமது அமைச்சர்கள் யாரும் கருத்துக்க ளைத் தெரிவிக்கக்கூடாது என்ற உத்தரவை இஸ் ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத் தனியாகு பிறப்பித்துள்ளார். மேலும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதால் இஸ்ரேலின் சில பகுதிகளில் வான்போக்கு வரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து தமக்கு அதிக தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது அமெரிக்கா. அதே சமயம் இஸ்ரேல் மீது தாக்குதல் இடம்பெற்றால் அமெரிக்கா உதவிக்கு செல்லும் என அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கான உரிமையை இஸ் ரேல் கோராதுவிட்டாலும், இதனை இஸ்ரேல் தான் மேற்கொண்டது என ஈரான் மற்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் ஆரம்பமாகிய பின்னர் கொல்லப்பட்ட ஹமாஸின் இரண்டாவது அரசியல் பிரிவுத் தலைவர் இவராவார். கடந்த ஜனவரி மாதம் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸின் அரசியல் பிரிவின் நான்காவது நிலைத் தலைவரான சாலே அல் அருhரி கொல்லப்பட்டிருந்தார். அந்த தாக்குதலின் பின்னர் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஹமாஸின் எல்லாத் தலைவர்களும் இவ்வாறு கொல்லப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித் துள்ள ரஸ்யா இந்த அரசியல் படுகொலையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. கட்டார் துருக்கி, பாகிஸ்தான், சீனா ஜோர்டான் உட்பட பல நாடுகள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் என்பது மத்தியகிழக்கில் அமைதி ஏற்படுவதை பாதிப்பதுடன் போர் மேலும் விரிவாக்கம் பெறவே வழிவகுக்கும் என பல நாடுகள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஊடகமான சிஎன்என்னும் அதனைத் தான் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஹமாஸின் நடவடிக்கைகளை இந்த தாக்குதல் பாதிக்காது என இஸ்ரேலின் பாதுகாப்புச் சபையின் முன்னாள் தலைவர் கொய்ரா எய்லான்ட் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மற்றும் லெபனான் அமைப்புக்களுக்கு தலைவர்களை இழப்பது ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல. 1992 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பின் நிறுவுனரும் தலை வருமான சயித் அபாஸ் முசாவியையும் அவரின் குடும்பத்தினரையும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு படுகொலை செய்திருந்தது. ஆனாலும் அதன் பின்னர் பதவியேற்றிருந்த தற்போதைய தலைவர் சயீட் ஹசான் நஸ்ரல்லா அந்த அமைப்பை மேலும் வலுவான நிலைக்கு உயர்த்தியிருந்தார். ஹமாஸ் அமைப்பும் பல தலைலவர்களை இழந்துள்ளது ஆனாலும் அடுத்த தலைமுறை போராட்டத்தை வழிநடத்தவே செய்கின்றது. இருந்தபோதும் இஸ்ரேலின் இந்த நடவடிக் கையின் பொருள் என்னவென்றால் மிகப்பெரும் போர் ஒன்று எற்படும் அபாயம் அருகில் வந்துள்ளது. ஒரு மிகப்பெரும் போரின் ஊடாகவே மத்திய கிழக்கில் அமைதி திரும்பும் வாய்ப்புக்கள் உள்ளது. ஆனால் இந்த போரில் பெருமளவான அப்பாவி மக்கள் பலியாகப்போவது தான் வருத்தமானது. https://www.ilakku.org/இஸ்ரேல்-மேற்கொள்ளும்-தொட/
-
திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம்; குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி
திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம்; குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி திருக்கோணமலை மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த சந்திப்பு திருகோணமலை நகராட்சி மன்ற பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றது. இதன் போது வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், மக்களுடைய காணிகள் விடுவிப்பு, மக்கெய்சர் விளையாட்டு அரங்கு தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. அத்துடன் இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். https://thinakkural.lk/article/307386
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
’உள்ளாடைகளை’ அள்ளிய வன்முறையாளர்கள் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை சூறையாடிய வன்முறைக் கும்பல் அவரது வீட்டில் இருந்த உள்ளாடைகளையும் கூட அள்ளிச் சென்றது. ஒரு சிலரோ ஷேக் ஹசீனா வீட்டில் கொள்ளையடித்த சேலைகளை அங்கேயே அணிந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடிய மாணவர்கள் பெயரிலான கும்பல்தான் இத்தகைய அட்டூழியங்களை செய்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா , 16 ஆண்டுகள் அந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். வங்கதேச விடுதலைக்கு போராடியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு மாணவர்களின் பெயரில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இந்த புரட்சிதான் ஷேக் ஹசீனாவின் ஆட்சியையே கவிழ்த்துவிட்டது. கடந்த சில மாதங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. பாதுகாப்புத் தரப்பில் பலர் கொல்லப்பட்டதால் ஈவு இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் உச்சகட்டமாக ஷேக் ஹசீனா தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஷேக் ஹசீனாவின் மாளிகையை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் வன்முறை கும்பல் முற்றுகையிட்டதால் உயிர் தப்பி இந்தியாவுக்கு ஓடி வந்தார். முதலில் திரிபுரா சென்ற ஷேக் ஹசீனா பின்னர் இந்திய விமானப் படை பாதுகாப்புடன் டெல்லி அருகே உள்ள காசியாபாத் விமான படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டார். இதனிடையே டாக்காவில் ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்த வன்முறை கும்பல் அங்கிருந்த அத்தனை பொருட்களையும் ஒன்றுவிடாமல் கொள்ளையடித்துச் சென்றது. இதில் படுகேவலமாக ஷேக் ஹசீனா மாளிகையில் இருந்த உள்ளாடைகளையும் விட்டுவைக்கவில்லை. R https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உள்ளாடைகளை-அள்ளிய-வன்முறையாளர்கள்/50-341669
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
சிசுவின் தலையை சுவரில் மோதினேன்; கொல்லப்பட்ட குழந்தையின் தாய் ஒப்புதல்! அளவெட்டியைச் சேர்ந்த 45 நாள் சிசு உயிரிழந்த விவகாரத்தில், சிசுவின் தலையைச் சுவருடன் மோதிக் கொடூரமாகத் தாக்கியதை விசாரணையில் தாய் ஒப்புக்கொண்டுள்ளார் . கடந்த சனிக்கிழமை தாய்ப்பால் அருந்திவிட்டு, தூங்கிய சிசு அதிகாலையில் நினைவற்றிருந்ததையடுத்து, அளவெட்டி பிரதேச மருத்துவமனைக்கு சிசு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டது என்று தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர். அளவெட்டியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற 45 நாள் சிசுவே உயிரிழந்தது. வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபால்சிங்கம் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார். சிசுவின் உடலில் காயங்கள் காணப்பட்டதை அடுத்து சிசுவின் இறப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிசுவின் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. உடற்கூற்றுப் பரிசோதனையில் சிசுவின் கால் எலும்பில் முறிவு இருந்ததும், தலைக்குள்ளும்,காது. வாய் என்பவற்றின் உட்புறங்களிலும் காயங்கள் இருந்தமையும் கண்டறியப்பட்டது. தாயிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிசு பால் அருந்தாததால் கால்களை முறுக்கினேன் என்று தெரிவித்திருந்தார். விசாரணைகளை அடுத்துத் தாய் கைது செய்யப்பட்டார். தாயிடம் பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரணைகளில், சிசுவைக் கடுமையாகத் தாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். சிசு தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்ததால் தலையைச் சுவரில் மோதித் தாக்கியமையையும், காதுக்குள் பிரம்பை விட்டு குத்தியமையையும் தாய் ஒப்புக் கொண்டுள்ளார். சிசுவின் கால் எலும்பு முறிவு நாட்பட்டதாகக் காணப்படுகின்றது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. தாய் தனது வாக்குமூலத்தில் சிசுவின் காலை மிதித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் ஏற்பட்ட எலும்புமுறிவை அடுத்தே சிசு தொடர்ச்சியாக அழுதிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. தாயிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 7 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாயை மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை குற்றத்தடுப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/article/சிசுவின்_தலையை_சுவரில்_மோதினேன்;_கொல்லப்பட்ட_குழந்தையின்_தாய்_ஒப்புதல்!
-
பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்
பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம் வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். 13 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான குழப்ப நிலை இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும், சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிவர்பூல் மற்றும் சவுத்போர்ட் பகுதிகளில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு கலவரங்களும் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர். 17 வயதுடைய சந்தேக நபரான Axel Rudakubana, 17, பிரித்தானியாவில் பிறந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குடியேற்ற எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வன்முறை, தீவைப்பு மற்றும் கொள்ளையில் இறங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். லிவர்பூல், பிரிஸ்டல், ஹல் மற்றும் பெல்ஃபாஸ்ட் ஆகிய இடங்களில் வன்முறை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையை தடுக்க முற்பட்ட பொலிஸார் இதன் போது காயமடைந்துள்ளனர். லிவர்பூலில் குறைந்தது இரண்டு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன மற்றும் சூறையாடப்பட்டுள்ளன. தென்மேற்கு நகரமான பிரிஸ்டலிலும் இதுபோன்ற சம்வபங்கள் பதிவாகியுள்ளன. பெல்ஃபாஸ்டில், சில வணிக நிலையங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை சவுத்போர்ட்டில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. நகரங்கள் முழுவதும் கூடுதல் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு பாரிய கலவரம் ஏற்பட்டிருந்தது. லண்டனில் ஒரு கறுப்பினத்தவரை பொலிசார் சுட்டுக் கொன்றதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கியதால், மிகப்பெரிய வன்முறை வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=286694
-
தமிழ் சினிமாக்களில் ஏன் இந்த கொலைவெறி?
தமிழ் சினிமாக்களில் ஏன் இந்த கொலைவெறி? -தயாளன் என்னதான் ஆயிற்று தமிழ் சினிமாவிற்கு? ரத்தம் தெறிக்கும் கொலைகள், மனதை பதற வைக்கும் கொடூர வன்முறைகள் இல்லையென்றால் படமே பார்க்கமாட்டோம் என தமிழ் சினிமா ரசிகர்கள் சபதம் செய்துவிட்டார்களா? நல்ல சினிமாவை நோக்கிய நகர்வில் தமிழ் சினிமா எப்படி திசைமாறியது என ஒரு அலசல்; தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் ஒரு காட்சி. கொலைகளை செய்து விட்டு வரும் தனுஷை அவரது தங்கை நீர் ஊற்றி குளிப்பாட்டுவார். தண்ணீர் முழுவதும் இரத்தமாக ஓடும். இது போல பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு நானும் நன்கு ஆற அமர குளித்தேன். நீர் சிவப்பாக மாறவில்லை எனினும், உடல் முழுக்க இரத்த வாடையும், வெட்டுப்பட்ட சதைகளின் குவியலுமாகவே மனம் முழுக்க நிரம்பி இருந்தது. மனம் முழுக்க இரத்த சகதி தெறித்தது போன்ற உணர்வு. இந்தப் படத்தின் இயக்குனரும் நடிகருமான தனுஷிடம் “ஒய் திஸ் கொலை வெறி?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது. சண்டைக் காட்சிகளைக் கூட ரசனையாக அணுகிக் கொண்டிருந்த தமிழ் சினிமா வன்முறை, ஆபாசம், இரத்த ஆறு ஓடும் கொலைகார சினிமாவாக மாறி நிற்பது ஏன்? சமீபத்தில் வெளிவந்த பெரும்பாலான சூப்பர் ஸ்டார் படங்கள் அனைத்துமே வன்முறை, குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல், போதைப் பழக்கத்தை இயல்பாக்கும் காட்சிகள் என்பதாகவே உள்ளன. விக்ரம், மாஸ்டர், ஜெயிலர், லியோ, மஹாராஜா என்று தொடர்ந்து தற்போது ராயன் அதன் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. பெரும் வெற்றி இயக்குனர்களாக அறியப்படும் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், நித்திலன் ஆகியோரது வரிசையில் மிகச் சிறப்பான நடிகரான தனுஷும் இந்த வெறியாட்ட ஜோதியில் கலந்திருக்கிறார். நல்ல சினிமாவை நோக்கிய பாய்ச்சலில் தமிழ் சினிமா இடறி அதல பாதாளத்தில் விழுந்தது எப்படி? சற்று தமிழ் சினிமாவின் வரலாற்று இயங்கியலை திரும்பிப் பார்த்தால் ஓரளவுக்கு நமக்கு பிடிபடக்கூடும். ஆரம்ப கால சினிமாவில், எம் ஜி ஆர் சிவாஜிக்கு இணையான வில்லன் பாத்திரங்களில் நடிக்க அற்புதமான நடிகர்கள் இருந்தனர். எம். என். நம்பியார், அசோகன், டி எஸ். பாலையா, எம். ஆர். ராதா, ஆர். எஸ். மனோகர், செந்தாமரை ஆகியோரின் வில்லன் பாத்திர வடிவமைப்புகள் ரத்தம் தெறிக்கும் வன்முறையை அடிப்படையாக கொண்டு அமையவில்லை. பெரும்பாலான படங்களில் வில்லன் மனம் திருந்திவிடக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களை மன்னித்து ஏற்கக் கூடிய நாயகர்களின் பாத்திரங்கள் இருந்தன. வில்லன்கள் “அபூர்வமாகவே” கொல்லப்பட்டனர். திரையில் இரத்தம் பீய்ச்சி அடிக்கும் காட்சிகள் இல்லை. எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நம்பியார் மோசமான வில்லத் தனத்தை செய்தாலும் இறுதிக் காட்சியில் மனந்திருந்தி மன்னிப்பு கோருபவராகவே இருந்தார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் வில்லனாக வந்த பாலாஜி மற்றும் நம்பியார் ஆகியோர் தங்கள் தவறுகளுக்காக மனந்திருந்தி வருந்துபவர்களாகவே இருந்தனர். அப்படத்தில் சிவாஜியின் பாத்திரம் ஹீரோ எனினும், தன் காதலியை உடனுக்குடன் சந்தேகிக்கும் அவரது கறுப்பு பக்கத்தையும் இயக்குனர் காட்டத் தவறவில்லை. எம்.ஆர்.ராதா, டி. எஸ். பாலையா, பி.எஸ்.வீரப்பா, அசோகன், மனோகர் போன்றவர்களின் வில்லத்தனத்தில் குரூரத்தை விட, மெல்லிய குசும்புத்தனமும் இருந்தது. நாடகங்களிலிருந்து சினிமாக்களுக்கு வந்தவர்கள் என்பதால், இவர்களின் வில்லத்தனத்தில் நாடகத்தனம் அதிகம் இருந்தது. ஶ்ரீதர், பாலசந்தர் ஆகியோரின் வருகைக்கு பிறகு படங்களின் வில்லன்கள் புதிய பரிமாணம் எடுக்கத் தொடங்கினர். காதலிக்க நேரமில்லை படத்தில் டி எஸ் பாலையாவின் நகைச்சுவை வில்லன் பாத்திரம் இன்றளவும் ஒரு சாதனையே. திரைக்கதை, எதிர்பார்த்ததையும் கோரியதையும் கச்சிதமாக செய்தனர் அந்தக் கால வில்லன்கள். 1970களுக்கு பிறகான புதிய அலை இயக்குனர்களின் வரவால், ஹீரோ – வில்லன் என்ற இயங்கியல் புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியது. யதார்த்தவாத வில்லன்களின் அகவுலகை இயக்குனர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, தேவராஜ் மோகன், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களின் படங்களில் ஹீரோ வில்லன்களின் பரிமாணம் புதிய கட்டத்தை அடைந்தது. வில்லன் ரஜினிகாந்த் ஹீரோவானார், ஹீரோ ஜெய்சங்கர் வில்லன் ஆனார். ஹீரோவின் பண்புகளும் வில்லனின் பண்புகளும் புதிய வடிவத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன. உதிரிப் பூக்கள் படத்தில் விஜயன் ஏற்று நடித்த பாத்திரம் ஆழமான உளவியல் சிக்கல் கொண்ட வில்லனை நமக்கு அறிமுகம் செய்தது. அந்த வில்லன் பாத்திரத்தின் வன்மத்தை காட்சிப் படிமங்களால் நமக்கு கடத்தினார் இயக்குனர் மகேந்திரன். 1980களின் பிற்பகுதியில் உருவான நாயக பிம்ப கதைகள் வில்லனுக்கு வேறொரு பரிமாணத்தை தந்தன. நாயகன், தளபதி, தேவர்மகன், அமரன் போன்ற படங்களில் இடம் பெற்ற வன்முறை காட்சிகள் தமிழ் சினிமாவில் முதல் முதலாக இரத்தம் தெறிக்கும் கொடுர அனுபவத்தை தரத் தொடங்கின. நாயகனில் போலீஸ் அதிகாரியை நாயகன் அடித்தே கொலை செய்யும் காட்சி, தளபதி படத்தில் கையை வெட்டி கொலை செய்யும் காட்சி, தேவர் மகனின் இறுதிக்காட்சியில் நாசர் தலை துண்டித்து கொல்லப்படும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. 1990களில் தொடங்கிய இந்தப் போக்கு மெதுவாக வளர்ச்சியடைந்து, 2000 ஆண்டுகளின் பிற்பகுதியில் வெளிவந்த பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் படங்களில் முக்கியமான திருப்பத்தை அடைந்தது. பருத்தி வீரன் மிகச் சிறந்த கல்ட் கிளாசிக் என்றாலும், அதன் கிளைமாக்ஸில் காட்சிப்படுத்தப்பட்ட பாலியல் வன்முறைக் காட்சியும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் பேரதிர்ச்சி மதிப்பீடுகளை கொண்டிருந்தன. வன்முறை எப்படி காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதின் தார்மீக அடிப்படையைக் கூட இப்படம் நிராகரித்திருந்தது. சுப்பிரமணியபுரம் படத்திலும் வில்லன் கழுத்தறுத்து கொல்லப்படும் காட்சியில் ரசிகர்கள் பதறுவதற்கு பதில் “கொல், கொல்,” என்று ஆவேசமாக கத்துவதை பார்க்க முடிந்தது. துரோகத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் எல்லை மீறி இருந்தது. கலைக்கப்பட்ட தலைமுடி, லுங்கி, மதுரை வட்டார வழக்கு, நட்புக்காக கொலை கூட செய்வார்கள் என்ற கிளிஷே என இது போல பல படங்கள் வர ஆரம்பித்தன. 2010களுக்கு பிறகு, குறும்படங்கள் எடுத்து இயக்குனர்கள் ஆனவர்கள் சினிமாவிற்குள் நுழைந்தனர். இது தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பீட்சா, பத்மினியும் பண்ணையாரும், சூது கவ்வும் போன்ற படங்கள் பெரும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கினர். ஆனால், தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததோ தலை கீழான சம்பவங்கள். குறும்பட இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் சூப்பர் ஸ்டார் படங்களை இயக்குவதிலும் பெரும் சம்பளம் பெறுவதிலும் மட்டுமே குறியாக இருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பி வழிந்தது. சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு கதை தயார் செய்யும் நோக்கத்தில் தங்களது படைப்புத் திறனை வன்முறைக் காட்சிகளை விதம்விதமாக படமாக்குவதில் இவர்களுக்கு வெறியே வந்து விட்டது. மாஸ்டர் படத்தில் அதுவரை ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி கொடூர வில்லனாக நடித்தார். ஈவிரக்கம் இல்லாமல் இரத்த வெறி கொண்ட வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதன் பின்பு மிகப் பெரும் நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்திலும் போதை, இரத்த வெறி கொண்ட வன்முறைக் காட்சிகள், தலை துண்டிக்கப்பட்டு சாகடிக்கப்படும் பெண் கதாபாத்திரங்கள், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படும் மனிதர்கள் என்று பெரும்பாலான காட்சிகள் வன்முறை வெறியாட்டத்தையும் போதை கலாச்சாரத்தையும் முன்வைத்தன. அது போலவே லியோ படத்திலும் குழந்தைகளை பாலியல் வன்முறை செய்ய முயலும் தேவையற்ற பாத்திரங்கள், நூற்றுக்கணக்கானோரை வெட்டிச் சாய்க்கும் ஹீரோ, பெற்ற மகளை நரபலி கொடுக்க தயாராகும் வில்லன் என்ற எல்லா கேடுகெட்ட தனங்களையும் லியோ படம் தனக்குள் வைத்திருந்தது. அசுரன், வட சென்னை படங்களை இயக்கிய வெற்றி மாறனும் இந்த வன்முறை காட்சிப்படுத்தலில் சளைத்தவர் இல்லை. விடுதலை படத்தில் இடம்பெற்ற பெண்களை சித்திரவதை செய்யும் காட்சியிலும், ஒரு பெண் தலை முண்டமாக விழும் காட்சியிலும் வன்முறையை ஒரு ரசனையாக வளர்த்தெடுப்பதில் நிபுணத்துவம் கொண்டவர்களாக மாறி வருகிறார் வெற்றி மாறன். சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் நல்ல மன நிலையோடு இருப்பவர்களை நிலை தடுமாறச் செய்யக் கூடியவை. விஜய் சேதுபதி நடித்த மஹாராஜா படமும், குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யும் வில்லன் பாத்திரங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. வில்லன் என்பவன் கொல்லப்பட்டே ஆக வேண்டும். அந்த கொலையை ரசிகர்கள் விரும்பும் அளவு வில்லன்களின் குற்ற செயல் கொடூரமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தே திரைக்கதை எழுதப்படுகிறதா என்ற ஐயம் நமக்கு எழாமல் இல்லை. தற்போது வெளியாகி உள்ள ராயன் திரைப்படத்தின் கதையே வன்முறை மட்டும் தான். முதல் காட்சியில் துவங்கும் கொலை வெறி இறுதிக் காட்சி வரை வெட்டப்பட்ட தலைகளாகவும், அறுக்கப்பட்ட சதைத் துண்டுகளாகவும், ஆறுகளாக ஓடும் இரத்த ஓட்டங்களாகவும் படம் முழுக்க வன்முறை, வன்முறை. மிகச் சிறந்த நடிகரான தனுஷ் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதால் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. பார்வையாளர்களை துணுக்குறச் செய்யும் ட்விஸ்ட்களை உருவாக்குவதற்காக அப்பட்டமான கொலைவெறி தாண்டவம் ஆடியிருக்கிறார் தனுஷ். ஏன்? எதற்கு என்று தெரியாமல் எதிர்ப்படும் அத்தனை பேரையும் வெட்டிச் சாய்க்கிறார். தங்கையை பாலியல் வன்முறை செய்த வில்லனை கொலை செய்வதன் மூலம் வன்முறைக் காட்சிக்கான நியாயத்தை பார்வையாளர்களிடம் உருவாக்குகிறார். நமக்கு படம் பார்க்கும் போதெல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. இவையெல்லாம் எந்த ஊரில் நடக்கிறது. அங்கு காவல்துறை என்ற ஒன்று இருக்காதா? நீதிமன்றங்கள் இருக்காதா? ஊடகங்கள் இருக்காதா? நாமெல்லாம் ஏதேனும் வேற்று கிரகத்தில் வாழ்கிறோமா என்ற ஐயம் எழுகிறது. குறிப்பாக, இந்த படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரங்களின் தன்மை தான் சிக்கலான அம்சமாக மாறுகிறது. கதையோட்டத்தில் நாயகன் அல்லது நாயகியுடன் ஏற்படும் முரண் காரணமாக வில்லன் பாத்திரம் வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த வன்முறைப் படங்களில் வில்லன் எடுத்த எடுப்பிலேயே சமூக விரோத கும்பல் தலைவனாகவோ அல்லது போதைப் பொருள் அல்லது கடத்தல் கும்பல் தலைவனாகவோ இருக்கிறான். வில்லன் பாத்திரத்தின் மீது இன்னும் தீவிரமான வெறுப்பை உருவாக்குவதற்காக சிறுமிகளையோ, குழந்தைகளையோ பாலியல் வன்முறை செய்பவனாக உருவாக்கம் செய்யப்படுகின்றன. ஏனென்றால், இந்த வில்லன் திருந்துபவன் அல்ல; இவனையெல்லாம் திருத்த முடியாது, கொல்வதைத் தவிர, ஹீரோவுக்கு வேறு வழியே இல்லை என்ற தீர்மானத்தை பார்வையாளரின் மனதில் உருவாக்கவே இந்த வகையான வினோத வில்லன்கள் உருவாகிறார்கள். ஜெயிலரின் வில்லன் பாத்திரத்தில் நடித்த விநாயகன் என்கிற அற்புதமான நடிகரை கோமாளி வில்லனாக சித்தரித்திருந்தார் நெல்சன். விக்ரமில் விஜய் சேதுபதி போதை பயன்படுத்தியவுடன் அவருக்கு அசுர பலம் வருவது போல் காட்சிப்படுத்தி இருந்தார் லோகேஷ். இவர்கள் நாயகன் வாழ்வில் குறுக்கிடும் போது அவரால் கொல்லப்படுகிறார்கள். மற்றபடி இந்த வகை வில்லன்கள் சமுக விரோதிகள் இவர்கள் எதிர் நாயகர்கள் அல்ல. பார்வையாளர்களின் ஆர்கசத்தை தூண்டி வன்முறையால் கொல்லப்பட்டு, அதுவும் குரூரமான முறையில் நாயகனால் கொல்லப்படுவதற்காக உருவாக்கப்படும் பிம்பங்கள். வன்முறை கதைக்களம் எடுக்கவே கூடாது என்பதல்ல, அதை எப்படி காட்சியாக முன் வைக்கிறோம் என்பதில்தான் இயக்குனர்களின் கலை ஆளுமையும், பொறுப்பும், கடமையும் அடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற Zone of interest சினிமாவும் வன்முறை குறித்த சினிமா தான். ஆனால், அப்படம் கலை நேர்த்தியுடனும் பொறுப்புணர்வோடும் எடுக்கப்பட்டு உள்ளது என்பதை புரிந்து கொண்டால் தமிழ் சினிமா முன் வைக்கும் வன்முறைக் காட்சிகள் எவ்வளவு அறுவெறுப்பானவை என்பது புரியும். சினிமா, கலை என்ற பெயரில் இவர்கள் ஆபாசத்தையும், வன்முறையையும் விற்பனைச் சரக்குகளாக்குகிறார்கள். வன்முறையை ருசிகரமான பண்டமாக மாற்றுகிறார்கள். ஆழ் மனங்களில் புரையோடிப் போயிருக்கும் போலியான கலைஞர்கள் தான் இது போன்ற சினிமாக்களை எடுப்பார்கள். இன்னும் அடுத்தடுத்து இது போன்ற சினிமாக்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. சென்சார் போர்டு சில சமயங்களில் இது போன்ற சினிமாக்களுக்கு யு சான்றிதழ் அளிக்கிறது என்பது வேதனையான செய்தி. கன்னடத்திலும் மலையாளத்திலும் வரும் நல்ல சினிமாக்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட துவங்கியிருக்கிறார்கள். எனவே, ரசிகர்கள் வன்முறையை விரும்புகிறார்கள் என்ற சாக்கு போக்குகள் இனி செல்லாது. இந்த போக்கு தமிழ் சினிமாவை அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி. தமிழ் சினிமா இயக்குனர்களே “என்று தணியும் இந்த கொலை வெறி? சினிமாவை பார்க்கும் மென்மையான மனம் படைத்த குழந்தைகள், பெண்கள், மூத்தவர்கள்.. இவர்களை ஒரு நிமிடம் உங்கள் மனங்களில் நிறுத்திப் பாருங்கள். கலை என்பது மனித நேயத்தை வளர்ப்பதற்கு மாறாக மனித மனங்களில் வெறுப்பை,வன்மத்தை விதைத்து விடக் கூடாதல்லவா? கட்டுரையாளர்;- தயாளன் ஆவணப்பட இயக்குனர் https://chakkaram.com/2024/08/03/தென்னிந்திய-தமிழ்-சினிமா/
-
தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு
தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு July 31, 2024 — கருணாகரன் — தோல்வி ஒரு போதுமே பெரிதல்ல. தோற்றுக் கொண்டேயிருப்பதுதான் பெரிது. அதுவே மிகப் பெரிய துயரமும் அவலமும். 00 ஈழத் தமிழரின் அரசியல், தோற்றுக் கொண்டேயிருக்கும் ஒன்றாகி விட்டது. அதனால்தான் தமிழர்கள் எப்போதும் தோற்றப்போன நிலையில் இருக்கிறார்கள். – ஆயுதப் போராட்டத்துக்கு முந்திய அரசியலும் தோற்றுப்போனது. – ஆயுதப்போராட்ட அரசியலும் தோற்றுப்போனது. – ஆயுதப்போராட்டத்துக்குப் பின்னான தற்போதய அரசியலும் தோற்றுப் போனதாகவே உள்ளது. இதிலும் இரண்டு வகை உண்டு. – ஒன்று நம்மைப் பிறர் – எதிராளர்கள் – தோற்கடிப்பது. – மற்றது, நம்மை நாமே தோற்கடிப்பது. அநேகமான சந்தர்ப்பங்களிலும் நம்மை நாமே தோற்கடிப்பதே நடந்து கொண்டிருக்கிறது. அப்படித்தானுள்ளது, “தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்” என்று ஜனாதிபதித் தேர்தலையொட்டிச் சிலர், “சாகிறோம் பந்தயம் பிடி” என்ற மாதிரி, விடாப்பிடியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் தேர்தற் திருவிழா ஏற்பாடுகளும். (இதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகை எழுதிக் கொண்டிருக்கும் நகைச்சுவைகள் ஏராளம்). அதற்குத் தோதாக தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு என்று கிழமைக்குக் கிழமை ஒவ்வொரு அமைப்புகளின் உருவாக்கமும் நடக்கிறது. இப்படி இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கு (தமிழ் மக்கள் பேரவை, P 2 P… போன்றவைக்கு) என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது. இந்த வார வெளியீடான தமிழ்த்தேசியக் கட்மைப்பின் அடுத்த கூட்டம் எப்படி நடக்கும்? அதில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்றே தெரியாது. அந்தளவுக்குக் குழப்பங்கள் ஒவ்வொருவருக்குள்ளும். இருந்தாலும் இழுத்துப் பிடித்து தலையைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள் (களப்புலிகள்) இராப்பகலாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 2005 இல் ஜனாதிபதித் தேர்தலின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு நிகரானதே, இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பொது வேட்பாளர் விவகாரமும். அதற்குப் பரிசாக முள்ளிவாய்க்கால் முடிவுகள் கிடைத்தன. இதற்குப் பரிசாக…!? நிச்சயமாக இதற்கான எதிர்விளைவுகளையும் தமிழ்ச்சமூகம் சந்திக்கத்தான் போகிறது. “கெடுகுடி சொற் கேளாது” என்பார்களே! அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எப்போதும் சாவுடன், அழிவுடன், பின்னடைவுடன், தோல்வியுடன் விளையாடிப் பார்ப்பது. தமிழ்ச் சமூகத்தின் உளக்குறைபாடு அல்லது சிந்தனைக் கோளாறுதான் இதற்குக் காரணமாகும். எதையும் தவறாகக் கணிப்பிடுவது. அல்லது எதையும் பிழையாகப் பார்க்க முற்படுவது. ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார், “பிழையாகக் கணக்கைச் செய்தால் விடையும் பிழையாகத்தான் வரும்” என்று. இதை உணர மறுத்து, தவறைப் பிறர் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்வதே தமிழர்களின் வேலையாக (அரசியலாக) உள்ளது. அநேகமான தமிழர்கள் எப்பொழுதும் சொல்லிக் கொள்ளும் தலையான வசனம் ஒன்றுள்ளது, “அரசு எங்களை ஏமாற்றி விட்டது” என. “காலா காலமாக ஏமாற்றப்பட்டோம். இனியும் அப்படி ஏமாற முடியாது” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும் திருவாய் மலர்ந்துள்ளார். சேனாதிராஜா மட்டுமல்ல, பொதுவேட்பாளரை நிறுத்த வேணும் என்று அடம்பிடிக்கின்ற எல்லோரும்தான் அப்படிச் சொல்கிறார்கள். ரணில் ஏமாற்றி விட்டார். ராஜபக்ஸக்கள் ஏமாற்றி விட்டனர். மைத்திரி ஏமாற்றி விட்டார். அதற்கு முன்பு – சந்திரிகா, விஜயதுங்க, பிரேமதாச, ஜே.ஆர். ஜெயவர்த்தன, சிறிமா பண்டாரநாயக்க எல்லாம் ஏமாற்றி விட்டார்கள் என்று. போதாக்குறைக்கு இந்தியா ஏமாற்றி விட்டது. சர்வதேச சமூகம் ஏமாற்றி விட்டது என்றும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி எல்லோரும் ஏமாற்றி விடக் கூடிய அளவுக்குத்தான் நம்முடைய தமிழ்த் தலைமைகளும் தமிழ் அரசியலும் உள்ளது. ஒரு புள்ளியிற் கூட அவர்களைத் தோற்கடிக்கக் கூடிய – வெல்லக் கூடிய – அரசியலே முன்னெடுக்கப்படவில்லை. ஒரு தலைமைகூட சிங்களப் பேரினவாதப் போக்கைக் கட்டுப்படுத்தக் கூடியவாறு தமிழ் அரசியலை – தமிழ் பேசும் மக்களின் அரசியலை மேற்கொள்ளவில்லை. காரணம், தோற்றுப் போகும் சிந்தனையை – தோற்கடிக்கக் கூடிய அரசியல் வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதேயாகும். அதாவது ஒற்றைப்படைத்தன்மையான அணுகுமுறை. கறுப்பு – வெள்ளைச் சிந்தனை. முக்கியமாக உணர்வு சார்ந்த உணர்ச்சிகரமான அரசியல் முன்னெடுப்பே இதுவாகும். இது அறிவுக்கு எதிரானது. என்பதால்தான் அறிவுசார் அரசியலை மொழிவோரையும் முன்னெடுப்போரையும் உணர்வாளர்கள், துரோகிகள் என்று எடுத்த எடுப்பிலேயே குற்றம் சாட்டி நிராகரித்துத் தள்ளி விட முயற்சிக்கிறார்கள். அறிவுசார் அரசியலை நிராகரித்தால் அதற்குப் பிறகு எங்கே இராஜதந்திரம் (Diplomacy), தந்திரோபாயம் (strategy), புதிய அணுகுமுறைகள் (New Approaches), மீள் பரிசீலனைகள் (Reconsiderations), திருத்தங்கள் (corrections), மாற்றங்கள் (changes), வளர்ச்சி (Development), புத்தாக்கம் (Innovation) எல்லாம்? இவையெல்லாம் அரசியலின் அடிப்படைகள். அரசியல் ரீதியான விளைவுகளுக்கானவை. இவற்றை நிராகரித்து விட்டுத் தமிழ்ச்சமூகம் தனக்குள் சுருங்கிக் கொள்கிறது. குறைந்த பட்சம் அது இலங்கைத்தீவில் தமிழ்பேசும் சமூகங்களாகக் கூடத் திரள முடியாமல் திணறுகிறது. இந்த லட்சணத்தில்தான் அது பிராந்திய சக்தியாகிய இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் தன்வயப்படுத்தப்போகிறதாம்! இதெல்லாம் நடக்கிற காரியமா? கற்பனைக் குதிரைகள் ஓடுவதுமில்லை, களைப்பதுமில்லை. என்பதால்தான் நிரந்தரத் தோல்வியைத் தமிழ்ச்சமூகம் பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் வரவேயில்லை என்று சொல்ல முடியாது. அந்த வாய்ப்புகளைச் சரியாகக் கையாளக்கூடிய நம்பிக்கையும் திறனும் நம்மிடம் இல்லாமலிருந்ததே உண்மை. இன்னும் இந்தத் தடுமாற்றம் நீடிக்கிறது. இதை எத்தனை தடவை சொன்னாலும் புரிந்து கொள்ள மறுப்பதே நிகழ்கிறது. காரணம், நிலைமையைப் புரிந்து கொள்ளாத, உண்மையை விளங்க மறுக்கின்ற, யதார்த்தத்தை உணரத் தவறும் அதி தீவிரம், அதி புத்திசாலித்தனம், அதி தூய்மைவாதம், அவநம்பிகை என்ற பொருந்தாக் குணங்களே. இது தொடரும் தோல்விகளை உண்டாக்குகிறது. தொடரும் தோல்விகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பலரும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இந்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றலோ – வல்லமையோ – புத்திசாலித்தனமோ, அரசியல் நடவடிக்கையோ எவரிடத்திலும் இல்லை. குறைந்த பட்சம் கட்சிகளை – அரசியலாளர்களை – ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரக் கூடிய திறனும் உணர்வும் யாரிடத்திலும் இல்லை. அப்படி ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு இரண்டு வழிகள் – இரண்டு அடிப்படைகள் – உண்டு. 1. கொள்கை ரீதியாக ஒன்றிணைவது (Unity on principle) 2. பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் விதத்தில், அவற்றுக்குத் தீர்வு காணும் அடிப்படையில் ஒன்று திரள்வது (Based on the issues) இவை இரண்டின் அடிப்படையிலும் ஒன்றிணையவோ, அரசியலை முன்னெடுக்கவோ, மக்களுக்கான பணிகளைச் செய்யவோ யாரும் தயாரில்லை. பதிலாக அவ்வப்போது எதையாவது சொல்லித் தண்ணி காட்டுவதற்கே முயற்சிக்கின்றனர். இது மேலும் மேலும் தோல்விகளைத் தமிழ்ச்சமூகத்துக்குக் கொடுக்கப்போகிறது. இதனால் நிரந்தரத் தோல்விக்கு தமிழ்ச்சமூகம் தள்ளப்படப்போகிறது. என்றபடியால்தான் தமிழ்ச்சமூகத்தையும் விட பின்தங்கிய நிலையில் இருந்த ஏனைய இலங்கைச் சமூகத்தினர் இன்று தம்மை முன்னேற்றியுள்ளனர். தமிழர்கள் அவர்களைப் பார்த்து உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் அளவுக்கே நிலைமை உள்ளது. அப்படிப் புகைந்து கொண்டிருப்பதால் பயனில்லை. அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி தாம் முன்னேறிக் கொள்ள வேண்டியதே அவசியம். அதை விட்டுவிட்டு இப்படியே அடுத்தவரில் பழி சொல்லிக் கொண்டும் உள்ளே புகைந்து கொண்டுமிருந்தால் அதிமுட்டாள்தனமாக வரலாற்றில் முடிவடைய வேண்டியதுதான். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு மட்டுமல்ல, அந்த வழியிற் சிந்திக்கும் அனைத்து முடிவுகளும் அப்படித்தான் உள்ளது. எவர் ஒருவர் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி மாறுகிறாரோ அவரிடம்தான் மாற்றத்தைப் பற்றிப் பேச முடியும். அவருடன் மட்டுமே மாற்றத்துக்காக இணைந்து செயற்பட முடியும். தலைமுறை தலைமுறையாக ஒரு மாற்றமும் பெறாதவர்கள், மாற்றத்தை உருவாக்குவதைப்பற்றிச் சிந்திக்காதவர்கள், தமக்குள் வளர்ச்சியடையாதவர்கள்தான் மாற்றங்கள் குறித்து அதிகமாகப் போதனைகளைச் செய்கிறார்கள். பொருளாதாரம், பதவி போன்றவற்றைத் தவிர, இவர்களுடைய வாழ்விலும் சிந்தனையிலும் பழக்கத்திலும் எந்த மாற்றமுமில்லை. ஆனால் இவர்கள்தான் வழிமறித்து, மாற்றம் பற்றி தீவிரமாகப் போதிக்கிறார்கள். உன்னை, உன் வாழ்வை உன்னால் மாற்ற முடியவில்லையெனில் எதனை நீ மாற்றுவாய்? என்று நாம் கேட்க வேண்டும். இப்போது இன்னொரு வாய்ப்பான காலம் வந்துள்ளது. 9 ஆவது ஜனாதிபதித் தேர்தல் அந்த வாய்ப்பைக் கொண்டு வந்திருக்கிறது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான கூர்மையான அவதானிப்போடு, முறையான உரையாடல்களை நிகழ்த்தி, நிதானமான இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும். அப்படி எடுக்க முடியும். சிங்களத் தரப்பிலும் தமிழ்த்தரப்பை நோக்கி இறங்கி வரக்கூடிய – வரவேண்டிய – சூழல் இது. அதற்கான சாத்தியக் கதவுகளைத் திறந்து வைத்திருப்பது அவசியம். ஆனால், இங்கே நடந்து கொண்டிருப்பது, கதவுகளை மூடும் காரியமல்லவா! தமிழ்ப்பொது வேட்பாளர் என்பதே கதவுகளை மூடும் செயலன்றி வேறென்ன? உலகத்தில் இந்த மாதிரி முட்டாள்தனமான வேலையை வேறு எந்தச் சமூகமாவது செய்யுமா? தமிழ் மக்களைத் தமிழ்த் தரப்பினரே தோற்கடிக்கும் முட்டாள்தனத்தை (அவர்கள் இதை அதி புத்திசாலித்தனம், அதி விவேகம் என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்) இத்துடனாவது நிறுத்துவது நல்லது. தங்களைப் புத்திஜீகளாகக் கருதிக் கொண்டிருக்கும் இவர்கள் மெய்யாகவே புத்திஜீவிகள் தானென்றால் தமிழ்ச் சமூகம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் என்ற அடிப்படையில் வளர்ச்சியை எட்டுவதற்குப் பாடுபட வேண்டும். அதற்குரிய திட்டங்களை வகுத்துக் காட்ட வேண்டும். அதை விடுத்து, இந்த மாதிரி பழைய வாய்ப்பனை திரும்பவும் எண்ணைச் சட்டிக்குள் போட்டு எடுக்கத் தேவையில்லை. தோல்வி ஒரு போதுமே பெரிதல்ல. தோற்றுக் கொண்டேயிருப்பதுதான் பெரிது. அதுவே மிகப் பெரிய துயரமும் அவலமும். https://arangamnews.com/?p=11050
-
ஜனாதிபதித் தேர்தல் களம்: திரட்டுவதா சிதறடிப்பதா? - நிலாந்தன்
ஜனாதிபதித் தேர்தல் களம்: திரட்டுவதா சிதறடிப்பதா? - நிலாந்தன் “இம்முறை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எதிர்வுகூற முடியாதவை மட்டுமல்ல, ஊகிக்க முடியாதவைகளுந்தான்” என்று ஒரு மேற்கத்திய தூதராக அதிகாரி சொன்னார். இலங்கைதீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஜனாதிபதி முறைமை அமல்படுத்தப்பட்ட பின், ஒரு பிரதான வேட்பாளர் அதுவும் ஜனாதிபதியாக இருப்பவர், சுயேட்சையாக கட்டுப்பணம் செலுத்தியிருப்பது என்பது இதுதான் முதல்தடவை. முன்னெப்பொழுதும் தேர்தல் களத்தில் இந்த அளவுக்கு நிச்சயமின்மைகள் நிலவியதில்லை. இது எதை காட்டுகிறது ? போட்டி அதிகமாக இருப்பதை மட்டும் காட்டவில்லை. பெரும்பான்மையானவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்பதையும் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் தாமரை மொட்டு கட்சிதான் பலமாக உள்ளது. அதன் தயவில்தான் ஜனாதிபதி தங்கியிருக்கிறார். ஆனாலும் அவரை வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளராக நிறுத்த தாமரை மொட்டுக் கட்சி தயாரில்லை என்று தெரிகிறது. கடந்த பல மாதங்களாக அது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிகிறது. வெற்றியளிக்கவில்லை மட்டுமல்ல அவை முரண்பாடுகளை தவிர்க்க உதவவில்லை என்றும் தெரிகிறது. அண்மையில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் அதைத்தான் காட்டுகின்றன. ரணில், தமது கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார் என்ற பொருள்பட நாமல் கருத்து தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியதைப்போல அவர் தமது கட்சி பிரமுகர்களைக் கழட்டி எடுக்க முயற்சிக்கிறார் என்ற பொருள்பட நாமல் பேசியிருக்கிறார். கிடைக்கும் தகவல்களின்படி தாமரை மொட்டுக் கட்சியைச் சேர்ந்த பலர் ரணிலை நோக்கிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனோகணேசன் தனது முகநூற்பதிவில் கூறியதுபோல, ராஜபக்சக்கள் ரணிலை தமது வேட்பாளராக்கினால் தம்மைப் பாதுகாக்கலாம் ஆனால் கட்சியைக் காப்பாற்ற முடியாது. ரணில் கட்சியைச் சாப்பிட்டு விடுவார் என்பதே சரி. ஒரு சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கி வளர்ச்சிப் போக்கில் பல்வேறு தரப்புக்களின் பொது வேட்பாளராக அவர் மாறக்கூடிய நிலைமைகள் தெரிகின்றன. அதன் மூலம் ராஜபக்சக்களின் தவறுகளுக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லாத ஒரு வெற்றியைப் பெற அவர் முயற்சிக்கிறாரா? இப்போதுள்ள நிலைமைகள் இதேபோக்கில் தொடர்ந்தும் வளர்ந்து சென்றால் தேர்தல் களத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பிரதான வேட்பாளர்கள் நிற்க முடியும். சரத் பொன்சேகாவும் விஜயதாச ராஜபக்சவும் ஜனாதிபதியின் நோக்கங்களை நிறைவேற்றும் டம்மி வேட்பாளர்கள் என்ற ஒரு கருத்தும் தென்னிலங்கையில் உண்டு. சரத் பொன்சேகா அனுரவிற்குப் போகக்கூடிய படைத்தரப்பினரின் வாக்குகளை கவர்ந்து எடுப்பார். அவரும் விஜயதாச ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவின் போட்டியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை கவரும் நோக்கத்தோடு களமிறக்கப்பட்டார்களா என்ற சந்தேகங்களும் உண்டு. எதுவாயினும் தென்னிலங்கையில் தேர்தல் களம் முன்னெப்பொழுதையும்விட நிச்சயமற்றதாகக் காணப்படுகின்றது. இது சிங்கள வாக்காளர்களைக் குழப்பும்; சிதறடிக்கும். விளைவாக தெரிவு செய்யப்படப் போகும் ஜனாதிபதி பருமனில் கூடிய பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வருவாரா என்பதும் சந்தேகம்தான். அவருக்குக் கிடைக்கக்கூடிய சிங்களமக்களின் ஆணை ஒப்பீட்டளவில் பலவீனமாகவே இருக்கும். இந்தப்பின்னணியில் தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை கவர்வாராக இருந்தால் தெரிவு செய்யப்படப்போகும் ஜனாதிபதி மிகப்பலவீனமான ஆணையோடு பதவிக்கு வருவார். அவருக்கு தமிழ் மக்களின் ஆணையும் கிடைக்காது; கிடைக்கக்கூடிய சிங்கள, முஸ்லீம் மக்களின் ஆணையும் பலவீனமாக இருக்கலாம். இது அடுத்த ஆண்டு தென்னிலங்கை அரசியலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை வெற்றிகரமாக மீட்டெடுப்பது என்று சொன்னால் அதற்குப் பலமான ஒரு அரசுத் தலைவர் வேண்டும். ஆனால் ஒப்பீட்டளவில் பலவீனமான மக்கள் ஆணையோடு தெரிவு செய்யப்படக்கூடிய ஒரு ஜனாதிபதி பொருளாதார நெருக்கடி தொடர்பில் துணிகரமான முடிவுகளை எடுக்கக் கூடியவராக இருப்பாரா?அவ்வாறு பொருளாதாரத்தை சீர் செய்ய முடியாவிட்டால் நாடு இன்னும் கொதிநிலைக்கு போகும். இது முதலாவது விடயம். இரண்டாவது விடயம், அவ்வாறு ஒப்பிட்டுளவில் பருமன் குறைந்த ஒரு வெற்றியை பெறக்கூடிய புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத் தேர்தலும் உட்பட ஏனைய தேர்தல்களை உடனடியாக வைக்கக்கூடிய நிலைமைகள் இருக்குமா? ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போகும் கூட்டு ஒரு பொதுத் தேர்தலை நடத்தி அந்த வெற்றியை மேலும் உறுதிப்படுத்தவும் பலப்படுத்தவும் முயற்சிக்கும். ஆனால் தெரிவு செய்யப்பட போகும் ஜனாதிபதிக்கு கிடைக்க கூடிய வெற்றி ஒப்பீட்டளவில் பலமாக இல்லையென்றால் அந்தக்கூட்டு பொதுத் தேர்தலை வைத்து ஒரு விசப்பரீட்சையைச் செய்யுமா? அல்லது பருமனில் சிறியது ஆனாலும் அந்த வெற்றி அடுத்தடுத்த தேர்தல்களில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்பி தேர்தல்களை வைக்கக்கூடுமா? அல்லது அப்படிப்பட்டதோர் சூழலில் ஒரு தேர்தலை வைத்தால் பலமான பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படுமா? எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் தென்னிலங்கையில் இப்பொழுது காணப்படும் போட்டி நிலை எனப்படுவது அல்லது நிச்சயமற்ற நிலை எனப்படுவது அல்லது ஊகிக்கமுடியாத நிலை எனப்படுவது நாடு ஒரு நிச்சயமற்ற ஆண்டை நோக்கிச் செல்கிறது என்ற ஊகங்களைப் பலப்படுத்துமா? இதில் தமிழ்மக்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் நிர்ணயகரமானவைகளாக இருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழ்மக்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிகமாக வாக்களிக்கிறார்களோ அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் அதிகரிக்கும். அது அதன் தர்க்கபூர்வ விளைவுகளை தென்னிலங்கையில் ஏற்படுத்தும். இப்படிப்பட்டதோர் நிர்ணயகரமான அரசியல் சூழலில் தமிழ்மக்கள் என்ன செய்ய வேண்டும்? தென்னிலங்கை வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ்மக்கள் தென்னிலங்கை அரசியலுக்குப் பதில் வினையாற்றும் ஓர் அரசியலை தெரிந்தெடுப்பதா? அல்லது செயல் முனைப்புடன் இயங்கி தென்னிலங்கை வேட்பாளர்களை தங்களை நோக்கி வரச்செய்வதா? தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று கூறும் தமிழ் அரசியல்வாதிகள் அவர்களோடு பேரம் பேசலாம் என்று நம்புகிறார்கள். அப்படியென்றால் தென்னிலங்கை வேட்பாளர்களில் யாராவது ஒற்றை ஆட்சி முறைமையை மாற்றி சமஸ்ரியை ஏற்றுக் கொள்ளத் தயாரா? இல்லையென்றால் எது தொடர்பில் அவர்களோடு பேரம் பேசுவது? அடுத்தது, அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும்வரை காத்திருப்பது என்பது தென்னிலங்கையின் நகர்வுகளுக்காகக் காத்திருக்கும் ஒரு அரசியல். இது சரியா? அடுத்தது அவர்கள் எப்பொழுது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள்? பெரும்பாலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான். அப்பொழுது அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளில் பேரம் பேசக்கூடிய வாய்ப்புகள் இல்லையென்றால் என்ன முடிவை எடுப்பது? எந்த முடிவையும் எடுக்க முடியாது. யாரோ ஒருவருடன் ஏதோ ஒரு டீலுக்குப் போவதைத் தவிர. அதாவது தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவைப் பொறுத்தவரை டீலுக்குக் காத்திருப்பதுதான். இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்துப் பேரம் பேசுவதற்காக அல்ல. அவர்கள் தேர்தல் அறிக்கைகளுக்காக காத்திருக்கவில்லை. முடிவெடுக்காமல் காலத்தைக் கடத்துகிறார்கள் என்பதே சரி. தேசியவாத அரசியல் எனப்படுவது அதன் பிரயோக வடிவத்தில் பிறத்தியாரின் முடிவுகளுக்காக காத்திருப்பது அல்ல. தானே முடிவெடுத்து, அதற்காக உழைத்து பிறத்தியாரை தன்னை நோக்கி வரச்செய்வது. தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதுதான். ஆனால் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை பொறுத்திருந்து எடுக்க முடியாது. ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக சிதறிக் கொண்டு போகும் ஒரு மக்கள் கூட்டத்தை கூட்டிக்கட்டுவது என்ற முடிவை எப்பொழுதோ எடுத்திருந்திருக்க வேண்டும். அதை இனிமேல்தான் தென்னிலங்கை வேட்பாளர்களின் முடிவைக் கண்டு எடுப்பது என்பது தந்திரோபாயத் தவறு மட்டுமல்ல,தோல்விகரமானது. தங்களை ஒரு தேசமாகக் கருதும் தமிழ்மக்கள் வெளியாருக்காகக் காத்திருப்பதை விடவும் தங்களை செயல்முனைப்போடு கட்டியெழுப்பதுதான் தேசியவாத அரசியல். அதுதான் தமிழ்ப் பொது வேட்பாளர். எனவே தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்காக காத்திருப்பது என்பது திட்டவட்டமாக தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிப்பதுதான். தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிப்பது என்பது தமிழ் அரசியல் சக்தியை ஒரு மையத்தில் குவிக்கும் செயற்பாட்டுக்கு எதிரானதுதான். அதாவது தமிழ் மக்களை ஐக்கியப்படுத்திப் பலப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிரானது. இதை இன்னும் அதன் தர்க்கபூர்வ விளைவின் அடிப்படையில் கூறின் தமிழ் மக்களைச் சிதறடிக்கும் சக்திகளுக்குச் சேவை செய்வது. எவ்வாறெனில், ஒரு பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் சில அரசியல்வாதிகள் தமிழ் வாக்குகளை சஜித்தை நோக்கிச் சாய்த்துச் செல்வார்கள். இன்னொரு பகுதி குறிப்பாக ஆங்கிலம் தெரிந்த படித்த நடுத்தர வர்க்கும், ரணில் நாட்டின் பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் நிமிர்த்தியிருப்பதாகக் கருதி அவருக்கு வாக்களிக்கும். இன்னொரு பகுதி மாற்றத்தை வேண்டி அனுரவுக்கு வாக்களிக்கும். ஒரு பகுதி தேர்தலைப் பகிஷ்கரிக்கும். இவ்வாறு பலவாறாக தமிழ் வாக்குகள் சிதறும்போது ஒரு பகுதி தமிழ் வாக்காளர்கள் சலிப்படைவார்கள்; வாக்களிப்பில் ஆர்வமிழப்பார்கள். அதாவது ஒரு வாக்களிப்பு அலை எழாது. அது வாக்களிப்பில் கலந்து கொள்வோரின் தொகையைக் குறைக்கும் மொத்தத்தில் தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் அல்லாத எந்த ஒரு தெரிவும் தமிழ் வாக்குகளைப் பலவாகச் சிதறடிக்கும் இப்பொழுது மிக எளிமையான ஒரு கேள்வி தான் உண்டு. தமிழ் மக்களை சிதறு தேங்காயாகச் சிதறடிப்பதா? அல்லது ஒவ்வொரு நெல்மணியாகக் கூட்டிக் கட்டுவதா? https://www.nillanthan.com/6850/
-
தேர்தலின் பின் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் : சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு
தேர்தலின் பின் நாட்டில் கலவரங்கள் வெடிக்கும் அபாயம் : சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் கலவரங்கள் வெடிக்ககூடிய அபாயம் காணப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில்; நாட்டை பொறுத்தவரையில் இப்பொழுதும் எனக்கு ஒரு கரிசனை இருக்கிறது. அதாவது தேர்தலின் பின்னர் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என்ற நிலை இருக்கிறது. சிங்கள வேட்பாளர்களிடையே ஐம்பது சதவிகித வாக்கை பெறக் கூடியவர்கள் என்று எவரும் இல்லை. உண்மையில் அவர்கள் ஐம்பது சதவிகித வாக்குகளுக்கும் குறைவாகத்தான் பெறுவார்கள். ஆனால் இத்தேர்தலில் பலபேர் போட்டியிடுவதாக கூறினாலும் ரணில், சஜித், அனுர என்ற மூன்று போர் தான் முக்கியமானவர்கள். இந்த மூவருக்கும் இடையில் என்ன மாதிரியான போட்டி நடக்க போகிறது. இந்த தேர்தலில் மொட்டு கட்சியின் பங்கு என்னவென்று கேட்டீர்களானால் அந்தக் கட்சியில் இருப்பவர்கள் திரும்பவும் ஒரு தேர்தல் வந்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றே கருதுகிறேன். அதாவது தெற்கிலே இருக்கிற அவர்களுடைய ஆசனங்கள் எல்லாம் ஜே.வி.பி. கட்சிக்கு போய்விடும் என்பது என்னுடைய கருத்து. அந்தளவிற்கு இந்த நாட்டிற்கு இவர்கள் செய்த துரோகம் மக்கம் மனதிலே இருக்கின்றது. குறிப்பாக இந்த நாட்டை சூறையாடி இருக்கின்றார்கள், போர் போர் என்று போரின் காரணமாக தங்களை தங்கள் வளர்த்து கொண்டார்கள். இவை எல்லலாம் மக்ளுக்கு இப்போது நன்றாகத் தெரியும். ஆகவே எந்த விதத்திலும் தற்போது இருக்கிற நாட்டின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் பண்ணுவதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால தங்களுடைய கட்சியின் தனித்துவத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற முறையில் ஏதோ சில சில பேச்சுக்கள் எல்லாம் பேசி வருகின்றனர். அவர்கள் கட்டாயமாக ரணிலுக்கு ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்பது என்னுடைய கருத்தாக உள்ளது.இப்போது மொட்டு கட்சியில் உள்ள பலர் ரணிலுக்கு ஆதரவை தெரிவித்துள்ள அதேநேரத்தில் தங்களுடைய தனித்துவத்தை எடுத்து கட்டி வேறொரு வேட்பாளரை போடக்கூடும். ஆனால் அவர்களில் 92 பேர் ரணிலுக்கு ஆதரவு என்றால் மற்றையவர்களும் இதே மாதிரியான மனோ நிலையில் இருப்பார்கள் என்று தான் நான் நம்புகின்றேன். எனினும் முழுமையாக ரணிலிடம் தாங்கள் சரண்டைந்து விட்டோம் என்று காட்டுவது அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். இன்னும் மக்கள் ஆதரவுடனே இருக்கிறோம் என்று காட்டுவதற்க்கு பலதும் பேசுவார்கள். இப்போது அரசாங்கத்தோடு சேர்ந்திருப்பவர்கள் அதிகமாக ரணிலுக்கு ஆதரவை வழங்குவார்கள் என்றே நம்புகிறேன். ஏனெனில் ராஜபக்சாக்களோடு இருப்பவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்துவிட்டால் இதன் பின்னர் நாடாளுமன்றம் போக கூடிய நிலைமை பலருக்கு இல்லை என்பது என்னுடைய கருத்தாகும் . - என்றார். https://newuthayan.com/article/தேர்தலின்_பின்_நாட்டில்_கலவரங்கள்_வெடிக்கும்_அபாயம்_:_சி.வி.விக்னேஸ்வரன்_தெரிவிப்பு
-
பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
பௌத்த வினாவல் - 3, ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பகுதி இரண்டு - தர்மம் அல்லது கோட்பாடு (தொடர்ச்சி) பிரதித்ய சமுத்பாதாம் 168. புத்தருடைய கோட்பாட்டின் முழு ஆன்மாவையும் ஒரே வார்த்தையில் பிரதிநிதித்துவம் செய்ய முயற்சித்தால், எந்த வார்த்தையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்? தர்மம். 169. ஏன்? ஏனென்றால் ஒருபோதும் பிழைக்காத கர்ம விதிகளின் செயல்முறைப்படி எல்லா மனிதருக்கும் தங்கள் செயல்களுக்கேற்ப நற்பலன் அல்லது தண்டனை சரியான அளவில் கிடைக்கும் என அது கற்பிக்கிறது. எந்த நற்செயலும் அல்லது தீச்செயலும் அது எத்தனை முக்கியத்துவமற்றது மற்றும் எத்தனை ரகசியமாக செய்யப்படினும் கர்மத்தின் தராசிலிருந்து தப்பமுடியாது. 170. கர்மம் என்றால் என்ன? அறம், பௌதிகம் மற்றும் பல பரப்புகளில் செயல்படும் காரணகாரிய இயக்கம். மானுட விவகாரங்களில் அற்புதம் என சொல்லத்தக்க எதுவும் இல்லை என பௌத்தர்கள் கூறுகின்றனர்: வினை விதைப்பவன் வினை அறுப்பான். 171. பௌத்தத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்த பயன்படுத்தும் வேறு நல்ல வார்த்தைகள் என்ன? மெத்தா, கருணா, முதித்தா, உபேக்சா (அன்பு, கருணை, பிறர் மகிழ்வில் மகிழ்தல், சமநிலை) 172. எந்த கோட்பாடு பௌத்தத்தை மற்ற உலக மதங்களின் மத்தியில் தனித்து உயர்த்திக் காட்டுகிறது? மெத்தா அல்லது மைத்ரேயா - அன்பு. இனி வரவிருக்கும் புத்தருக்கு ’மைத்ரி’ (கருணையானவர்) என்னும் பெயர் கொடுக்கப்படுவதன் மூலம் இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் மேலும் வலியுறுத்தப்படுகிறது. 173. நீங்கள் விளக்கிய இந்த கோட்பாடுகள் ஆனைத்தும் புத்தரால் போதி மரத்தின் அருகே தியானித்து அறியப்பட்டவையா? ஆம், இதுவும், மேலும் பெளத்த நூல்களில் நாம் படிக்கும் பலதும். பௌத்தத்தின் ஒட்டுமொத்த அமைப்பும் அவர் மகாஞானம் அடைந்தபோதே அவருடைய மனதில் உதித்தது. 174. எத்தனை காலம் புத்தர் போதி மரத்தின் அருகிருந்து நீங்காது இருந்தார்? நாற்பத்தி ஒன்பது நாட்கள். 175. புத்தர் போதித்த முதல் பிரசங்கத்தை நாம் எவ்வாறு அழைக்கிறோம், அதாவது தனது முன்னால் நண்பர்களுக்கு போதித்த முதல் பிரசங்கம்? தம்மசக்க-பவத்தனா சூத்திரம் - தம்மத்தின் விதிகளை வறையறுக்கும் சூத்திரம். சிங்கள பாலி அறிஞரான விஜேசிங்க முதலியார் இதை ”தம்மத்தின் ஆட்சியை ஸ்தாபித்தல்” என சொல்வது மேலும் சிறந்தது என்கிறார். ரைஸ்-டேவிட்ஸ் இதை “தர்மத்தின் ராஜ்ஜியத்திற்கான அடித்தளம்” எனக் குறிப்பிடுகிறார். 176. இந்தப் பிரசங்கத்தில் அவர் போதித்த பாடங்கள் என்னென்ன? “நான்கு உன்னத உண்மைகள்” மற்றும் “அஷ்டாங்க மார்க்கம்”. துறவிகள் உடலை மிகவும் வருத்துவதையும், மற்றொரு பக்கம் இல்லறத்தவர்கள் அதீத புலனின்ப நாட்டங்களில் ஈடுபடுவதையும் கண்டிக்கிறார். அஷ்டாங்க மார்க்கத்தை அந்த இரண்டு பாதைகளுக்கும் அல்லாத மத்திய பாதையாக பரிந்துரைத்தார். 177. புத்தர் உருவ வழிபாட்டை ஏற்றுகொண்டாரா? இல்லை, அவர் அதை எதிர்த்தார். கடவுள்கள், அசுரர்கள், மரங்கள் மற்றும் பல வழிபாடுகளையும் அவர் கண்டனம் செய்தார். புறவயமான வழிபாடுகள் நம்மை கட்டுக்குள் பிணைக்கும் தன்மையுடையவை. ஒருவர் முன்சென்று உயர விரும்பினால் அத்தகைய வழிபாடுகளைத் தகர்த்துவிட்டு செல்லவேண்டும். 178. ஆனால் பௌத்தர்கள் புத்தரின் சிலை மற்றும் அவரது குறியீட்டு வடிவங்களை வழிபடுகின்றனரே, மேலும் வழிபாட்டிடங்களும் கட்டுகின்றனர்? ஆம், ஆனால் இது உருவ வழிபாடு செய்பவர்களின் அதே தன்மையை போன்றதல்ல. 179. என்ன வேறுபாடு? நமது பௌத்த சகோதரர் தனது தெய்வ உருவங்களை கண்களுக்குப் புலனாகாத தெய்வத்தின் கண்களுக்கு புலனாகும் வடிவமாக மட்டும் எடுத்துக்கொள்வதில்லை. அவர் உயர்நிலை உருவவழிபாட்டாளர். ஆதாவது, அவர் தனது தெய்வ உருவத்தை வழிபடும் போது அந்த உருவமானது எங்கும் நிறைந்திருக்கும் இறை அம்சத்தின் ஒரு பகுதியை கொண்டுள்ள ஒன்றாகக் கருதி வழிபடுகிறார். 180. பௌத்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? பௌத்தர்கள் புத்தரின் சிலைகளையும், நீ சொல்லிய குறியீடுகளையும் இந்த உலக-காலத்தில் (கல்பம்) தோன்றிய உயரிய, அறிவார்ந்த, மிகவும் அன்பும் கருணையுமுடைய மனிதரின் நினைவுசின்னங்களாக மட்டுமே எண்ணுகின்றனர். எல்லா இனங்களும், எல்லா மக்களும் தங்களால் உயர்ந்தவர்கள் என்று எண்ணப்பட்ட ஆண் மற்றும் பெண்ணின் நினைவுசின்னங்களைப் பாதுக்காத்தும், பொக்கிஷீத்தும் வந்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரை புத்தர் துக்கத்தை அறிந்த ஒவ்வொரு மனிதராலும் வேறெவரையும் விட மிக அதிகமாக போற்றப்படுபவர், மதிக்கப்படுபவர். 181. இது குறித்து புத்தரிடமிருந்தே உறுதியாக ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா? நிச்சயமாக சொல்லப்பட்டுள்ளது. மஹாபரிநிர்வாண சூத்திரத்தில் ”அஷ்டாங்க மார்க்கத்தின் படி தூய வாழ்வை வாழ்வதன் மூலமே ஒருவர் விடுதலையை அடையமுடியுமே தவிர வழிபாடுகளால் அல்ல. என்னையோ, மற்றவைகளையோ, எந்த உருவங்களையோ வழிபடுவதால் அல்ல” என்கிறார். 182. சடங்குகள் குறித்து புத்தரின் மதிப்பீடு என்ன? தொடக்கம் முதலே அவர் சடங்குகள் மற்றும் புறவயமான சமய பழக்கங்களைக் கண்டனம் செய்துள்ளார். அவை அனைத்தும் நமது ஆன்மீகக் குருட்டுத்தன்மையை அல்லது அறியாமையை மேலும் அதிகரிப்பதுடன் ஜட உருவங்களின் மேல் அதீத பற்றுகொள்ளவும் செய்யும். 183. இதற்கு மாற்று என்ன? அவருடைய பல பிரசங்கங்களில் இந்த பழக்கவழக்கங்கள் பெருங்கேடு விளைவிக்கும் என வெளிப்படையாக மறுப்புதெரிவித்துள்ளார். கோட்பாடுகள் மற்றும் மீபொருண்மை நுண்மைகள் மீது விவாதம் நிகழ்த்தி தங்கள் உயரிய உள்ளுணர்வை தளரச்செய்தும் மற்றும் நேரத்தை வீணாக்கும் பிக்குகளுக்கு அவர் தவத்தைப் பரிந்துரைத்தார். 184. மந்திர உச்சாடனம், நல்ல நேரம் பார்த்தல், ஆவி நடனம் இவையெல்லாம் பௌத்தத்தில் உள்ளனவா? இவை பௌத்தத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானவை. இவை பேகன் மற்றும் அயல் மதங்களின் எஞ்சியிருப்பவை. பிரம்மஜத சூத்திரத்தில் புத்தர் இவைகளையும் பிற மூடநம்பிக்கைகளையும் பாகன், தாழ்ந்தவை, மற்றும் பொய்யானவை என வகைப்படுத்துகிறார். 185. பௌத்ததிற்கும் மதம் (religious) என்னும் பெயரில் உள்ளவைகளுக்குமான முதன்மையான முரண் என்ன? மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் பௌத்தம்: ஒரு கடவுளின் இருப்பின்றி உயரிய நன்மைகளைக் கற்பிக்கின்றது. வாழ்வின் சுழற்சியை மூடநம்பிக்கைகள், ’நித்யம்’ என்ற தன்னலக் கோட்பாடு, உடலை விட்டு நீங்குகின்ற ‘ஆத்மா’ ஆகியவை இன்றி கற்பிக்கின்றது. சொர்க்கம் என்ற குறிக்கோளின்றி மகிழ்ச்சியை கற்பிக்கின்றது. பிறரை காக்கும் ரட்சகர் இன்றி விடுதலையை கற்பிக்கிறது மீட்பர் இன்றி ஒருவன் தனக்கான முக்தியை அடைய கற்பிக்கிறது எந்தவிதமான சமய சடங்குகள், பிராத்தனைகள், கடும்தவங்கள், மதகுரு மற்றும் துறவிகளின் இடைபடலின்றி வீடுபேறு அடையும் முறைகளை கற்பிக்கின்றது. எல்லா உயிர்களிடத்தும் கருணைகொண்டு தூய தன்னலமற்ற வாழ்வை வாழும் அறிவைப் பெற்றால் இந்த வாழ்வில் இந்த உலகத்திலேயே நிர்வாணம் அடையலாம் என கற்பிக்கின்றது. 186. தியானத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளை சுட்டிகாட்டுங்கள், அதாவது ஆசையை அழித்து அறிவை எய்தும் முறை? சமதா மற்றும் விதர்சமா. சமதா: ஆசை தேய்வுறும்படி தூய வாழ்வை மேற்கொண்டு விடாமுயற்சியுடன் புலன்களை கட்டுக்குள் வைத்தல். விதர்சமா: தன்விழிப்படைவதன் மூலமாக உயர்நிலையிலான ஞானம் அடைதல். இவை ஒவ்வொன்றும் இருபது அம்சங்களை கொண்டுள்ளன. அவற்றை இங்கு குறிப்பிட தேவையில்லை. 187. ஒருவர் அடையவேண்டிய நான்கு வழிகள் அல்லது நிலைகள் என்னென்ன? சோதப்பன்னா- நான்கு உன்னத உண்மைகளை சரியாக புரிந்துகொண்ட பிறகு உள்ளே நுழைதல் அல்லது துவங்குதல். சகதகாமி - முழுமையாக காமம், வெறுப்பு மற்றும் மாயையை வென்றவரின் பாதை. இவர் மீண்டும் ஒருமுறை மட்டுமே உலகில் பிறப்பெடுப்பார். அநகாமி - சுயத்தை வென்றவரின் பாதை, இவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறப்பெடுக்க வேண்டியதில்லை. அராகதம் - மதிப்புமிக்க தூய அராகதர்களின் பாதை. இவர்கள் மறுபிறப்பெடுக்க வேண்டிய தேவையிலிருந்து விடுபட்டவர்கள். மேலும் இவர்கள் சரியான ஞானத்தை அனுபவிக்கும் திறனை அடைந்தவர்கள், அறியாமையும் துயரமும் கொண்டர்களிடம் பிணைப்பில்லாமல் இரக்கம் கொள்பவர்கள், மற்றும் எல்லா உயிர்களிடமும் அளவில்லா அன்பு கொண்டவர்கள். 188. வெகுவாக அறியப்பட்ட பௌத்தத்தில் ’உண்மை’யைத் தவிர வேறு எதுவுமே கிடையாதா? நூற்றாண்டுகளாக இருந்துவரும் மற்ற எல்லா மதங்களையும் போல இதிலும் நிச்சயமாக உண்மையுடன் பொய்களும் கலந்துள்ளன, பொன்னிற்குள் கசடுகள் கலந்திருப்பது போல. வெவ்வேறு காலகட்டங்களில் நிலங்களில் பௌத்தர்கள் கொண்டிருந்த கவித்துவ கற்பனைகள், வீரியம் (ஆற்றல்) மற்றும் பெளத்த பக்தர்களின் நீண்டகால நம்பிக்கைகள் ஆகியவை புத்தரின் உன்னத தர்ம கோட்பாடுகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொய்களை கலக்க காரணமாகின. அவை களையப்பட வேண்டியவை. அவற்றைக் களைவது நன்மைபயக்கும். 189. இத்தகைய திரிபுகளை கண்டடையும்போது அக்கறையுள்ள உண்மையான பௌத்தர் ஒருவரின் விருப்பம் என்னவாக இருக்கவேண்டும்? ஒரு உண்மையான பௌத்தர் உண்மையிலிருந்து பொய்களை கண்டறிந்து களையவோ அல்லது களைவதற்கு உதவவோ எந்நேரமும் தயாராக இருக்கவேண்டும், அவரால் இயலுமானால். சங்கத்தின் மூன்று பேரவைகள் புத்தரின் போதனைகளில் உள்ள தவறான திரிபுபட்ட இடைச்செருகல்களை களைவதற்காக நடத்தப்பட்டுள்ளன. 190. எப்போது? முதலாவது பேரவை சட்டப்பண்ணி குகையில் சரியாக புத்தரின் இறப்புக்கு பிறகு நடத்தப்பட்டது. இரண்டாவது வைசாலியிலுள்ள வலுகராமாவில். மூன்றாவது புத்தரின் மறைவுக்குப்பின் 235 ஆண்டுகள் கழிந்து பாடாலிபுத்திரத்திலுள்ள அசோகரம விகாரத்தில் நடந்தது. 191. எந்த பிரசங்கத்தில் இத்தகைய திரிபுகள் உண்மையான கோட்பாடுகளில் கலப்பதை நாம் எதிர்கொள்ள நேரிடும் என புத்தரே எச்சரிக்கிறார்? சம்யுத்த நிகாயத்தில் 192. பௌத்தத்தில் வரட்டு நம்பிக்கை ஏதேனும் உள்ளதா? இருப்பின் அதை நம்பி ஏற்கவேண்டுமா? இல்லை. நாங்கள் எந்த நம்பிக்கையும் அது நூல்களில் இருந்தாலோ அல்லது எங்கள் முன்னோர் சொல்லியிருந்தாலோ அல்லது ஞானிகள் சொல்லியிருந்தால் கூட ஏற்க வேண்டாம் என அக்கறையுடன் கட்டளையிடப்பட்டுள்ளோம். 193. அது புத்தரே கற்பித்த உன்னத விதியா? ஆம். ஒரு விஷயம் சொல்லப்பட்டிருப்பதாலேயே வெறுமனே அதை நம்பக்கூடாது; மரபை நம்பக்கூடாது, அது தொன்மையான காலத்தில் இருந்து தொடர்ந்து கையளிக்கப்பட்டு வருபவை; அது போன்று பரவிய பொய்களையும் நம்பக்கூடாது; ஒரு முனிவர் ஒன்றை எழுதிவிட்டார் என்பதாலேயே வெறுமனே அதை நம்பக்கூடாது; நமக்கு ஏற்படும் ஆன்மீக உளமயக்கம் ஒரு தேவனின் தூண்டுதலால் அளிக்கப்பட்டது என நாம் நினைத்து அதையும் நம்பக்கூடாது; நம்முடைய அரைகுறை ஊகங்களால் நாம் உருவாக்கும் அனுமானங்களை நம்பக்கூடாது; ஒப்பாய்வு செய்த முடிவுகளை நம்பக்கூடாது; நமது ஆசிரியர் என்பதால் அவர் சொல்லியவற்றை வெறுமனே நம்பக்கூடாது என்கிறார் புத்தர். 194. அப்படியானால் எப்போதுதான் நம்புவது? எழுதப்பட்ட அல்லது கேட்கப்பட்ட கோட்பாடுகள் நமது தர்க்க அறிவிற்கும் பிரக்ஞைக்கும் உடன்படும்போது நாம் நம்பலாம். இவ்வாறு சொல்லி அவர் நிறைவுசெய்தார்: “நீங்கள் கேட்டுவிட்டதாலேயே அதை வெறுமனே நம்புங்கள் என நான் உங்களுக்கு கற்பிக்கவில்லை. பிரக்ஞைபூர்வமாக உங்களுக்குள் நீங்களே உணரும் போது நம்புங்கள், பின்னர் அதற்கேற்ப செயல்படுங்கள்” (பார்க்க: அங்குத்தர நிக்கயத்திலுள்ள கலம சூத்திரம் மற்றும் மஹா பரிநிர்வாண சூத்திரம்) 195. புத்தர் தன்னை என்னவாக அறிவித்துகொள்கிறார்? தானும் மற்ற எல்லா புத்தர்களும் பாதையை சுட்டிக்காட்டும் உண்மையின் பரப்பாளர்கள் மட்டுமே என அறிவிக்கிறார். பயணிப்பதற்கான முயற்சியை நாம்தான் செய்ய வேண்டும் என்கிறார்.. 196. இது எங்கே சொல்லப்பட்டுள்ளது? தம்மபதம். அத்தியாயம் இருபது. 197. பௌத்தம் வெளிவேடத்தை எவ்வாறு எதிர்கொள்கிறது? தம்மபதம் “செய்கையில் காட்டாமல் ஒருவன் மதுரமாக மட்டும் பேசுவது, வாசனையற்ற அழகிய வண்ண மலர்போல பயனற்றவை” என்கிறது. (தம்மபதம் 4 - 51) 198. தீமைக்கு தீமை செய் என்று பௌத்தம் கற்பிக்கிறதா? தம்மபதத்தில் புத்தர் “ஒரு மனிதன் தனது மூடத்தனத்தால் எனக்கு தவறிழைக்கும் போதும் அவருக்கு என்னுடைய உட்பகையில்லாத அன்பான பாதுகாப்பையே திருப்பித்தருவேன். எத்தனை தீமை அவரிடமிருந்து வருகிறதோ அதற்குமேலான நன்மை என்னிடமிருந்து செல்லும்” இதுவே அராகதர்களின் பாதை. தீமைக்கு தீமை பௌத்தத்தில் நேர்மறையாக விலக்கபட்டுள்ளது. 199. பௌத்தம் இரக்கமின்மையை ஊக்குவிக்கிறதா? நிச்சயமாக இல்லை. ஐந்து கட்டளைகள் மற்றும் அவருடைய பல பிரசங்கங்களிலும் எல்லா உயிர்களிடத்தும் கருணையுடன் இருக்குமாறும், அவைகளை மகிழ்விக்கவும் அன்புடன் இருக்கவும் கற்பிக்கிறார். மேலும் உயிர் கொலை, அதற்கு துணைநிற்பது, அதை ஊக்குவிப்பது முதலானவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் புத்தர் கூறுகிறார். 200. எந்த பிரசங்கத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது? தம்மிக சூத்திரம் சொல்கிறது: “அவன் (இல்லறத்தான்) எந்த உயிரை அழிக்கவும் அல்லது அதன் அழிவிற்கு காரணமாகவும் வேண்டாம், அப்படி செய்பவரின் செயலை அனுமதிக்கவும் வேண்டாம். அவன் எந்த உயிருக்கும் ஊறுசெய்யவும் வேண்டாம்.” 201. மதுமயக்கத்தை அங்கீகரிக்கிறதா? அவருடைய தம்மிக சூத்திரத்தில் நாங்கள் மது அருந்துவதற்கும், மற்றவர்களை அருந்த தூண்டுவதற்கும், அருந்துபவரின் பழக்கத்தை அனுமதிப்பதற்கும் எதிராக எச்சரிக்கப்பட்டுள்ளோம். பஞ்சசீலத்தின் ஐந்தாவது சீலமும் இதை குறிப்பிடுகிறது. 202. மதுபழக்கம் நம்மை எங்கே இட்டுச்செல்லும் என சொல்லப்பட்டுள்ளது? தரக்குறைவு, குற்றம், பிறழ்வு மற்றும் அறியாமை - இதுவே மறுபிறப்பிற்கான முக்கிய காரணம். 203. திருமணம் குறித்து பௌத்தம் என்ன கற்பிக்கிறது? முழுமையான தூயஒழுக்கம் அல்லது பிரம்மச்சர்யம் நிறைவான ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் ஒரு பெண்ணுடனான திருமணமும் அவளுக்கு உண்மையாக இருப்பதும் ஒரு விதமான ஒழுக்கமாகவே கருதப்படும். பலதார மணங்கள் புரிவது அறியாமை மற்றும் காமத்தை உள்ளடக்கிருப்பதால் புத்தர் அதை பழிக்கிறார். 204. எந்த பிரசங்கத்தில்? அங்குத்தர நிக்காயம், அத்யாயம் 4, 55. 205. பிள்ளைகளிடத்து பெற்றோர்களின் கடமை என்னவென்று பௌத்தம் கற்பிக்கிறது? தீயஒழுக்கங்களிலிருந்து அவர்களை காக்கவேண்டும், நல்லொழுக்கங்களை பழக்க வேண்டும், கலை மற்றும் அறிவியல் கற்க செய்யவேண்டும், பொருத்தமான துணையை தேடித்தரவேண்டும், அவர்களின் வழியுரிமையை கொடுக்க வேண்டும். 206. பிள்ளைகளின் கடமையென்ன? பெற்றோரின் முதுமைப் பருவம் மற்றும் அவர்களுக்கு உதவிதேவைப்படும்போது உடனிருந்து உதவுதல், நியமிக்கபட்ட குடும்ப பொறுப்புகளை ஏற்றுநடத்துதல், குடும்ப சொத்துகளை பாதுகாத்தல், பெற்றோரின் வாரிசுகளாக தங்களை தகுதிப்படுத்திகொள்ளுதல், அவரின் மறைவுக்குப்பின் அவர்களை நன்மதிப்புடன் நினைவுறுதல். 207. ஆசிரியரிடத்து மாணவர்களின் கடமை என்ன? அவருக்கு மரியாதையளித்தல், அவரின் தேவைகளை கவனித்தல், கீழ்ப்படிதல், அவரின் அறிவுரைகளை கேட்டுநடத்தல். 208. மனைவியிடத்து கணவனின் கடமையென்ன? அவளை சந்தோசப்படுத்துதல்; அவளை மரியாதையுடனும் அன்புடனும் நடத்துதல்; அவளுக்கு உண்மையாய் இருத்தல்; அவளை பிறர் போற்றும்படி செய்தல்; அவளுக்கு தகுந்த நகைகள் மற்றும் துணிகள் வாங்கித்தருதல். 209. கணவனிடத்து மனைவியின் கடமையென்ன? அவனுடன் நேசமாக இருத்தல்; இல்லறத்தை சரியாக ஒழுங்குபடுத்துதல்; விருந்தினரை உபசரித்தல்; ஒழுக்கமாக இருத்தல்; சிக்கனமாக இருத்தல்; எல்லாவற்றிலும் திறமையும் சுறுசுறுப்பும் காண்பித்தல். 210. எந்த சூத்திரத்தில் இந்த விதிகள் கற்பிக்கபட்டன? சிகலோவாடா சூத்திரம் 211. மனிதனின் எதிர்கால மகிழ்ச்சிக்கு செல்வங்கள் உதவுமா? தம்மபதம் சொல்கிறது “ஒரு பாதை செல்வத்திற்கும் இன்னொரு பாதை நிர்வாணத்திற்கும் இட்டுசெல்கிறது”. (தம்மபதம் 5 - 75) 212. அப்படியென்றால் எந்த செல்வந்தனும் நிர்வாணம் அடையமுடியாதா? அவர் எதை அதிகம் விரும்புகிறார் என்பதை பொறுத்தது. அவருடைய செல்வத்தை துயருற்றவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அறியாமையிலிருப்பவர் என மானுட நன்மைக்காக உபயோகித்தால் அவரது செல்வம் அவருக்கு மதிப்பை பெற்றுத்தரும். 213. அவர் செல்வத்தை விரும்பினால்? அவர் செல்வத்தை விரும்பி அதை பேராசையுடன் பதுக்கி கையகப்படுத்தினால் அது அவரின் அறவுணர்வை நலியச்செய்து தீமையை தூண்டி இந்த வாழ்வில் பெரும்சாபத்தைக் கொண்டுவரும், அதன் விளைவுகள் அவரின் அடுத்த பிறப்பிலும் உணரப்படும். 214. அறியாமையைப் பற்றி தம்மபதம் என்ன சொல்கிறது? அந்த அழுக்கு ஒரு மனிதன் தன்மேல் போட்டுக்கொள்ளும் அனைத்து அழுக்குகளில் மிக மோசமான அழுக்கு. (தம்மபதம் 18 - 243) 215. மற்றவர்களிடம் காட்டும் கடுமையை பற்றி பௌத்தம் என்ன சொல்கிறது? மற்றவர்களின் தவறுகளை எளிதாக கண்டுகொள்ளலாம், ஆனால் ஒருவர் தன்னுடைய தவறுகளை தானே காண்பது சிரமம். மனிதன் தன் சுற்றத்தாரின் தவறுகளை உமியை புடைத்து களைவதுபோல கண்டுவிடுகிறான், ஆனால் தன்னுடைய தவறுகளை சூதாட்டத்தில் சூதாடியிடமிருந்து அதிர்ஷ்டமில்லாத சீட்டை மறைப்பதுபோல் தந்திரமாக மறைத்துவிடுகிறான் என்கிறது. 216. இல்லாதவர்களுக்கு மனிதன் செய்யக்கூடிய கடமைகள் பற்றி புத்தர் நமக்கு கூறும் அறிவுரை என்ன? அவர் மனிதனின் மொத்த வருமானமும் நான்காக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பங்கு முழுமையாக தர்ம காரியங்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்கிறார். 217. எந்த ஐந்து தொழில்கள் மிகவும் தாழ்ந்த மற்றும் கீழானவை என்று சொல்லப்படுகிறது? மது விற்பனை, கொல்வதற்கு விலங்குகளை வளர்த்து விற்றல் மற்றும் விஷம், கொலைக்கருவிகள், அடிமைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில்கள். 218. யாரெல்லாம் ஆன்மீக வளர்ச்சியடைய திறனற்றவர்கள்? பெற்றோர் மற்றும் புனித அராகதர்களை கொன்றவர்கள், சங்கத்திற்குள் வேற்றுமையை விதைக்கும் பிக்குகள், புத்தரை ஒத்த மனிதரை காயப்படுத்துதல், எதிர்கால இருத்தலின்மீது தீவிர மறுப்புவாத கொள்கையுடையோர் மற்றும் தீவிர புலனின்பநாட்டம் உடையவர்கள். 219. தீய மனிதர்களின் கர்மவினை அவர்கள் இவ்வுலக வாழ்வை நீங்கியபின் அவர்களை இட்டுச்செல்லும் இடம் பற்றி அல்லது அவர்களை வதைக்கும் நிலைகள் பற்றி பௌத்தம் குறிப்பிடுகிறதா? ஆம். அவை: சஞ்சிவா, கலசுத்ரா, சங்கதா, ரெளரவா, மஹா-ரௌரவ தபம், பிரதாபா, அவிச்சி. 220. அந்த வதை முடிவில்லாததா? நிச்சயமாக இல்லை. அதன் காலம் ஒருவரின் கர்மவினையின் அளவை பொருத்தது. 221. புத்தரின் மீது நம்பிக்கையற்றவர்கள் அவர்களது அவநம்பிக்கையின் பொருட்டு முடிவில்லா தண்டனைக்குரிய நரகத்தில் வருந்துவர் என பௌத்தம் அறிவிக்கிறதா? இல்லை. நற்செயல்களின் விழைவால் அவர்கள் சிறிதுகாலம் மகிழ்ச்சியாய் வாழக்கூடும். ஆனால் அவர்களின் தணியாத தன்ஹா (வேட்கை) மீண்டும் மறுபிறப்பை கொண்டுவரும். மறுபிறப்பிலிருந்து மீள ஒருவர் கண்டிப்பாக அஷ்டாங்க மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டும். 222. பௌத்தர்கள் மத்தியில் பெண்களின் ஆன்மீக நிலையென்ன? எங்கள் மதத்தை பொறுத்தவரை பெண்கள் ஆண்களுக்கு சமமாக நிற்கக்கூடியவர்கள். சுல்லவேதலா சூத்திரத்தில் புத்தர் சொல்கிறார் “ பெண் ஆணுக்கு சாத்தியமான உயர்ந்த புனிதத்தன்மையான அராகதர் தன்மையை அடையக்கூடும்”. 223. பெண்கள் மீது பௌத்தம் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி ஒரு நவீன விமர்சகர் என்ன சொல்வார்? “வேறெந்த சமயத்தைவிடவும் பௌத்தம் பெண்களுக்கு மகிழ்ச்சியையும் உரிமையையும் அளித்துள்ளது” என்கிறார் சர் லெபெல் கிரீஃபின் (Sir Lepel Griffin) 224. சாதியை பற்றி புத்தர் என்ன கற்பித்தார்? செயலாலன்றி பிறப்பின் அடிப்படையில் ஒருவர் சாதியை அடைவதில்லை, அது தாழ்ந்தநிலையிலுள்ள பறையரானாலும் அல்லது மேலுள்ள பிராமணனானாலும். அவர் சொல்கிறார் “செயலின் மூலமாகவே ஒருவன் தாழ்ந்தநிலை அடைகிறான், செயலின் மூலமாகவே ஒருவன் பிராமணனாகிறான்” (பார்க்க வாஸ்ஸலா சூத்திரம்). 225. இதை விளக்கும் ஒரு கதையை சொல்லுங்கள்? புத்தரின் சீடர் ஆனந்தர் கிணற்றோரமாக நடந்து செல்கையில் தாகம் ஏற்பட்டு அங்கிருந்த மாதங்கா என்ற தாழ்ந்த சாதி பெண்ணிடம் தண்ணீர் தர கேட்டார். அந்த பெண் தான் தாழ்ந்த சாதியென்றும் தன்னிடம் நீர் பெறுவதால் அவர் அசுத்தம் அடையக்கூடும் என்று சொன்னாள். அதற்கு ஆனந்தர் “நான் உன் சாதியை கேட்கவில்லை தண்ணீர்தான் கேட்டேன்” என்றார். அப்பெண் மனமகிழ்ந்து அவருக்கு அருந்த நீர் கொடுத்தாள். புத்தர் அச்செயலுக்கு அவளை வாழ்த்தினார். 226. வாஸ்ஸலா சூத்திரத்தில் புத்தர் தாழ்ந்த குலத்தை சேர்ந்த சோபகாவை பற்றி என்ன சொல்கிறார்? சோபகா தனது நற்செயல்களால் உச்ச புகழ்பெற்றார், சத்திரியர்களும், பிராமணர்களும் அவருக்கு சேவை செய்தனர். அவருடைய இறப்புக்குப்பின் பிரம்மலோகத்தில் பிறந்தார். மற்றொருபுறம் பல பிராமணர்கள் தீசெயல்களால் நரகத்தில் பிறந்தனர். 227. ஆன்மாவின் அழிவின்மையை பௌத்தம் கற்பிக்கிறதா? “ஆன்மா” - பொய்யான ஒரு கருத்தை குறிப்பிட அறிவிலிகளால் பயன்படுத்தப்படும் சொல் அது என்கிறது பௌத்தம். அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது. அப்படியென்றால் அதில் மனிதனும் அடங்குவான், அவனுடைய எல்லா பௌதிக பகுதிகளும் மாற்றத்திற்கு உட்படவேண்டும். எது மாறுதலுக்கு உட்பட்டதோ அது நிரந்தரமானதல்ல, ஆதலால் மாறுகின்ற பொருளிலிருந்து எஞ்சுகின்ற அழியாத தன்மை கொண்ட எதுவும் இல்லை. (ஆன்மாவிற்கு இணையான கிரேக்க சொல்லான ‘சூக்கி’ (Psuche) என்பதும் இங்கு விமர்சிக்கப்படுகிறது.) 228. ”ஆன்மா” எனும் சொல்லில் அப்படியென்ன ஆட்சேபனை? மனிதன் பிற எல்லாவற்றிலிருந்தும் பிரபஞ்சத்தின் மொத்த இருப்பிலிருந்தும் தனித்தது என்னும் கருத்து அதில் அடங்கியுள்ளது. இந்த தனியிருப்பு கருத்து பகுத்தறிவிற்கானது அல்ல, தர்க்கத்தால் நிரூபிக்க கூடியது அல்ல, அறிவியலுக்கு ஏற்றதல்ல. 229. அப்படியானால் தனியான “நான்” அல்லது ”எனது” என்று எதுவும் இல்லையா? ஆம் மிகச்சரியாக. 230. தனிப்பட்ட மனித ”ஆன்மா” என்னும் கருத்து நிராகரிக்கப்பட வேண்டுமென்றால், எது மனிதனில் அவன் ஒரு நிரந்தரமான ஆளுமை என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது? தன்ஹா அல்லது இருத்தலின்மீது நிறைவுறாத ஆசை அல்லது வேட்கை. இதன் மூலம் அவ்வுயிர் எதிர்காலத்தில் வெகுமதிக்கோ தண்டனைக்கோ நிச்சயமாக உட்படுத்தப்படும். தன்ஹாவை கொண்டிருப்பதால் அவ்வுயிருக்கு கர்மவினைகளின் தாக்கத்தின் மூலம் மறுபிறப்பு கிடைக்கும். 231. எது பிறப்பெடுக்கிறது? இறக்கும் மனிதனில் கடைசியாக தோன்றும் எண்ணங்களால் ஏற்படும் புதிய ஆளுமை அல்லது ஸ்கந்தங்களின் சேர்க்கை. 232. எத்தனை ஸ்கந்தங்கள் உள்ளன? ஐந்து. 233. அவைகளின் பெயரென்ன? ரூபம், வேதனா, சன்னா, சம்கரா மற்றும் விஞ்ஞான. 234. சுருக்கமாக அவைகளை விளக்குங்கள்? ரூபம் - பௌதிக குணங்கள் வேதனா - உணர்வு சன்னா - அருவ கருத்துக்கள் சம்காரா - மனப்போக்கு விஞ்ஞானம் - மனோபலம் அல்லது பிரக்ஞை. இவைகள் மூலமே நாம் உருவாகிறோம். இதன் மூலமே இருத்தலை உணர்கிறோம், உலகுடன் நம்மைபற்றி தொடர்பேற்படுத்துகிறோம். 235. மற்ற தனிஉயிர்களிடம் இருந்து ஒவ்வொரு தனிஉயிரையும் வேறுபடுத்தி உருவாக்குவது ஐந்து ஸ்கந்த கலவைகளின் மாறுபாடு. இந்த ஸ்கந்த கலவை மாறுபாட்டிற்கு காரணமாவது எது? தனிஉயிர் ஒன்றுடைய முற்பிறப்புகளின் கர்மா. 236. கர்மத்தின் வழிக்காட்டலுடன் புது உயிர்களை பிறப்பிக்கும் விசையாற்றல் எது? தன்ஹா - இருத்தலுக்கான விழைவு. 237 எதனடிப்படையில் மறுபிறப்பு கோட்பாடு நிறுவப்பட்டது? தர்மம், சமவயம், இணக்கம் ஆகியவை இயற்கையின் பிரபஞ்ச அமைப்பிலேயே உள்ளடங்கியுள்ளது என்னும் பார்வையில் இருந்து நிறுவப்பட்டது. ஒரு மனிதனின் செயல்களுக்குண்டான வெகுமதி அல்லது தண்டனையை தீர்ப்பதற்கு ஒரு பிறவி போதும் என பௌத்தர்கள் நம்பவில்லை, அந்த பிறவி நூறு வருடங்கள் அல்லது ஐநூறு வருடங்கள் நீடித்தாலும்கூட போதாது. மாபெரும் மறுபிறப்புச்சுழற்சி ஒரு தனிஉயிருடைய வாழ்க்கைகளின் தூய அல்லது தூய்மையற்ற செயலுக்கேற்ப விரைவாகவோ அல்லது மெதுவாகவோ கடந்துசெல்லும். 238. ஸ்கந்தங்களின் புதிய சேர்க்கையுடன் அதாவது புதிய ஆளுமையுடன் பிறப்பெடுக்கும் உயிர் முற்பிறவியின் அதே உயிர்தானா? முற்பிறவியின் தன்ஹாவே அந்த உயிரை மீண்டும் இருப்புக்கு கொண்டுவருகிறது, ஆகவே பிறப்பெடுப்பது அதே உயிரா? ஒரு விதத்தில் ’புது உயிர்’, வேறொரு விதத்தில் ’புது உயிர் அல்ல’. பாலியில் இதை “நச்சா ஸோ நச்சா அந்நோ” என்பார்கள், இதற்கு அர்த்தம் “அதுவல்ல அதுவல்லாததும் அல்ல”. இந்த வாழ்கையில் ஸ்கந்தங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. உளவியல் சார்ந்து சொல்வதென்றால், மனிதனின் உடல் ஒவ்வொரு ஏழு வருடங்களுக்கு ஒருமுறை முழுவதுமாக மாறுகிறது. நாற்பவதாவது வயதில் ஒருவர் தன்னுடைய தனித்தன்மையில் தன் பதினெட்டு வயது இளம்பருவத்தை ஒத்திருந்தாலும், உடலின் தொடர்ச்சியான வளர்சிதை மாற்றங்களாலும் மனம் மற்றும் குணங்களின் மாற்றங்களாலும் அவர் ஒரு புதிய உயிர்தான். எப்படி ஒருவர் தன்னுடைய முதிய வயதில் தன்னுடைய முந்தைய கால செயல்கள் மற்றும் எண்ணங்களின் விளைவாக துயரத்தை பெறுகிறாரோ, அதுபோலவே மறுபிறப்பெடுக்கும் புதிய உயிர் முந்தைய உயிர்தான் என்றாலும் புது உருவில் அல்லது புது ஸ்கந்தங்களின் சேர்க்கையில் முற்பிறப்பின் செயல்கள் மற்றும் எண்ணங்களின் விளைவுகளை அனுபவிக்கும். 239. ஆனால் முதிய மனிதன் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கிடையில் அவருடைய இளமை பருவ நிகழ்வுகளை நினைவுகூற முடிகிறது. பின்னர் ஏன் நம்முடைய முந்தைய பிறப்புகளின் நினைவுத்தொகுப்பு இப்பிறப்பிற்கு கடத்தப்படவில்லை? ஏனென்றால் நினைவுகள் ஸ்கந்தங்களுக்குள் அடங்கியுள்ளன. புது பிறப்பில் ஸ்கந்தங்கள் மாற்றமடைந்துள்ளதால் புதிய நினைவுத்தொகுப்பும் அதனை சார்ந்த பதிவுகளும் மட்டுமே வளர்ச்சியுறும். எனினும் இப்புவி வாழ்கையின் முந்தய பதிவுகள் அனைத்து எஞ்சியிருக்கும். இளவரசன் சித்தார்த்தன் புத்தனானபோது அவருடைய முந்தைய பிறப்புகளின் தொடர்வரிசையை காணமுடிந்தது. முந்தைய நிகழ்வுகளின் தடம் இல்லையேல் அவரால் காண்பதற்கு எதுவுமே இருந்திருக்காது. தியானத்தின் நான்காம் நிலையை (மனதை உள்நோக்கி காணும் நிலை) அடையும் எவரும் தங்களின் முற்பிறவி தொடர்ச்சியை காணமுடியும். 240. இப்படி தொடர்ந்து மாற்றமடையும் உருவங்களின் அறுதி குறிக்கோள் என்ன? நிர்வாணம். 241. நிர்வாணம் அடையும் எண்ணத்துடன் நாம் நற்செயல்கள் செய்யவேண்டும் என பௌத்தம் கற்பிக்கிறதா? இல்லை. பணம், பதவி அல்லது புலனின்பத்திற்கான எதிர்பார்ப்பை போல இந்த எண்ணமும் முழுமையான சுயநலம்தான். நிர்வாணம் இவ்வகையில் அடைய முடியாதது, இவ்வாறு எதிர்பார்க்கும் அறிவிலி ஏமாற்றமே அடைவார். 242. இதை மேலும் தெளிவுபடுத்துங்களேன்? நிர்வாணம் தன்னலமற்ற சொல்லுக்கு நேர்பொருளாகும், அனைத்து சுயநல நாட்டமும் உண்மையிடம் சரணடைதல். அறியாமையால் மனிதன் அதன் இயல்பறியாமல் நிர்வாண இன்பமடைய ஆசைப்படுகிறான். சுயநலமின்மையே நிர்வாணம். புத்தர் கட்டளையிட்ட உன்னத வாழ்க்கை நல்லதை செய்து வெகுமதிகளை எதிர்பார்க்கவோ அல்லது புனித வாழ்வின் வழியாக சொர்க்கலோக மகிழ்ச்சியை அனுபவிக்க அல்ல. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உன்னத வாழ்வு வாழப்படவேண்டும் அதுவே உயர்ந்த வாழ்வு. உலகில் வாழும்போதே ஒருவர் நிர்வாண நிலையை அடையமுடியும். 243. முன்னேற்ற பாதையிலுள்ள பத்து மாபெரும் தடைகள் அல்லது சன்யோஜனம் என்னும் தடங்கல்கள் என்னென்ன? சுய அடையாளக் காட்சிகள் - சக்காயா தித்தி நிச்சயமற்ற தன்மை, சந்தேகம் - விசிகிச்சா கட்டளைகள், நடைமுறைகள், மூடநம்பிக்கைகளை பற்றிக் கொள்ளுதல் - சிலப்பத பரமாசம் புலன் மற்றும் உடல் இன்பங்கள் - காம ராகம் வெறுப்பு, நோய்மை உணர்வுகள், எதிர்ப்பு - வியாபாதா உலகவாழ்வுக்கான ஆசை - ரூப ராகம் சொர்கலோக வாழ்வுக்கான ஆசை - அரூப ராகம் அகந்தை - மானா தன்நேர்மையுணர்வு - உத்தக்கா அறியாமை - அவிஜ்ஜா (அவித்யை) 244. அராகதர் ஆவதற்கு இதில் எத்தனை தடைகளை கடக்க வேண்டும்? அனைத்தும். 245. ஐந்து நிர்வாரனங்கள் அல்லது இடையூறுகள் என்ன? பேராசை, காழ்ப்பு, மந்தம், செறுக்கு மற்றும் சந்தேகம். 246. ஏன் புத்தர் கற்பித்தவைகளில் உணர்வுகள், ஆன்மீக தூண்டுதல்கள், மனதின் செயல்பாடுகள், தடைகள் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுபவை போன்றவைகளின் மிக நுட்பமான பிரிவுகள் அதிகம் வருகின்றன? இது புதியவரை மிகவும் குழம்பச்செய்கிறது. இது நமக்கு நம்மை பற்றிய அறிவை அடைய உதவும், எல்லா தளங்களிலும் ஆழ்ந்து சிந்திக்க நம் மனதை பழக்குவதன் வழியாக இதை அடையலாம். இந்த சுயபரிசோதனை முறையை பின்பற்றுவதன் மூலம் நாம் இறுதியாக அறிவை அடைகிறோம், உண்மையை உள்ளது உள்ளபடி காண்கிறோம். இதுவே ஒவ்வொரு சிறந்த ஆசிரியரும் தங்களுடைய சீடர்களின் மனம் வளர்ச்சியடைய முன்வைக்கும் பாடத்திட்டமாகும். 247. புத்தருடைய நேரடி சீடர்களில் எவ்வளவு பேர் தங்களின் மேம்பட்ட குணங்களுக்காக புகழ்பெற்றவர்கள்? எண்பது சீடர்கள் அவ்வாறு தனித்துவம் வாய்ந்தவர். அவர்கள் ’அஸிதி மஹா சாவகர்கள்’ எனப்படுகின்றனர். 248. புத்தரின் ஞானம் எத்தகையது? அவருக்கு அறியக்கூடியவை மற்றும் அறிய இயலாதவைகளின் இயல்பு தெரியும். சாத்தியமானவை மற்றும் சாத்தியமற்றவை தெரியும். தகுதி மற்றும் தகுதியின்மையின் காரணமும் தெரியும். உயிர்களின் எண்ணங்களை அவரால் படிக்க இயலும். இயற்கையின் விதிகளை, புலன்களின் மயக்கத்தை அறிந்தவர். ஆசைகளை கட்டுக்குள் வைக்கவும் தெரிந்தவர். தனிமனிதர்கள் மற்றும் எல்லா உயிர்களின் பிறப்பையும் மறுபிறப்பையும் வேறுபடுத்தி அறியக்கூடியவர். 249. ஒட்டுமொத்தமாக புத்தர் கற்பித்தவை எந்த அடிப்படை கொள்கையை அடித்தளமாக கொண்டு ஒட்டி கட்டி எழுப்பப்பட்டது? அது பிரதித்ய சமுத்பாதா. 250. அது எளிதாக உள்வாங்ககூடியதா? அது மிகவும் கடினமானது. உண்மையில், அதன் முழு அர்த்தமும் விரிவும் சரியாக பக்குவப்படாத மனதின் திறனுக்கு அப்பாற்பட்டது. 251. மகத்தான உரையாசிரியர் புத்தகோஷர் அதைப்பற்றி என்ன சொன்னார்? இந்த விரிந்த சிந்தனை கடலில் அவர் கடலின் நீரோட்டங்களில் அடித்து செல்லப்படுவதுபோல கைவிடப்பட்ட நிலையிலிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 252. பின்னர் ஏன் புத்தர் பரிநிபாண சூத்திரத்தில் “ஒரு ஆசிரியர் தன் கைக்குள் எதையும் ஒளித்துக்கொள்வதில்லை, தனக்கு பின்னால் எதையும் மறைத்து வைப்பதில்லை” என்று சொன்னார்? அவர் கற்பித்தவை அனைத்தும் எல்லோருக்குமானது மற்றும் யாராலும் உள்வாங்க கூடியது என்றால், ஏன் மகத்தானவரும் நன்கு கற்றவருமான புத்தகோஷ் அந்த சிந்தனை உள்வாங்க கடினமானது என அறிவிக்கவேண்டும்? இதில் புத்தர் தான் கற்பித்தவைகள் அனைத்தும் எல்லோருக்குமானது என வெளிப்படையாக சொல்கிறார். அதேசமயம் இதற்கு இணையாகவே, தர்மத்தின் மெய்யான உள்ளடுக்குகளை தன்னுடைய அறிதல் திறனை நிறைவாக வளர்த்தெடுதவராலேயே புரிந்துகொள்ளமுடியும் என்று சொன்னதும் நிஜமே. ஆகையால் சராசரிகளாலும் அகஒளியில்லாதவர்களாலும் அதை புரிந்துகொள்ள முடியாது. 253. புத்தர் கற்பித்தவைகள் இந்த கண்ணோட்டத்தை எப்படி ஆதரிக்கிறது? புத்தர் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் நன்கறிந்து, கேட்பவரின் தனிப்பட்ட குணத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஏற்றவாறே போதித்தார். அடிக்குறிப்பு: கர்மம்: கர்மம் என்பது ஒரு மனிதனுடைய செயல்களின் ஒட்டுமொத்தம். காரண-காரிய விதி ‘பிரதித்ய சமுத்பாத தர்மம்’ என அழைக்கப்படுகிறது. அங்குதார நிகயத்தில் புத்தர் "என்னுடைய செயல்களே என்னுடைய உடமை; என்னுடைய செயல்களே என்னுடைய வழியுரிமை; என்னுடைய செயல்களே என்னை பெற்றெடுக்கும் கருவறை; என் செயலகளே என் உறவினர்; என் செயல்களே என் புகலிடம்" என்று கற்பிக்கிறார். அராகதர்கள்: அராகதர்கள் என்பவர்கள் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டம் வழியாக ஆன்மீகத்திலும் அறிவிலும் உச்சநிலையை அடைந்தவர்கள். அராகதர்களை பொதுவாக இரண்டாக பிரிக்கலாம் - சமதயானிகர்கள் மற்றும் சுக்க விபாசகர்கள். சமதயானிகர்கள் உணர்ச்சிகளை முற்றாக அழித்து அறிவு அல்லது மறைஞான உள்ளுணர்வை முழுமையாக வளர்த்துக்கொண்டவர்கள். சுக்க விபாசகர்கள் முழுமையான உணர்ச்சியை அடைந்தவர்கள், மன ஆற்றலை அவ்வளவாக அடையாதவர்கள். தீக நிகாயத்தில் புத்தர் இவ்வாறு சொல்கிறார் “சுபத்ரா, கேள்! இந்த உலகம் அராகதர்கள் இல்லாமல் இருக்காது, எனது சங்கத்திலுள்ள பிக்ஷுகள் எனது போதனைகளை சரியாகவும் உண்மையாகவும் கடைபிடித்தார்கள் என்றால்”. பிரதித்ய சமுத்பாதா: இது பாலியில் நிதானா என அழைப்பக்கடுகிறது. இதற்கு காரணகாரிய தொடர் என்று பொருள். பன்னிரெண்டு நிதானங்கள் உள்ளன. அவை அவித்யா - அறியாமை சம்ஸ்காரா - காரணகாரிய செயல், கர்மம் விக்ஞானா - தன்னுணர்வு நாமரூபா - மன-உடல் தொகுப்பு சதாயதானா - ஆறு அறிவுகள் பாசா (ஸ்பர்ஷம்) - தொடர்பு, தொடுதல் வேதனா - உணர்ச்சி தன்ஹா - வேட்கை உபாதனா - பற்று பாவா - இருப்பு ஜாதி - பிறப்பு ஜராமரணா - வயதடைதல், இறத்தல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி ஹென்றி ஸ்டீல் ஆல்காட் விஷ்ணுகுமார் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார். இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார். இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும் அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. https://www.kurugu.in/2024/07/blog-post_29.html
-
திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம்
சொன்னது நீதானா? சொல்,சொல் முதல்வரே..! -சுப. உதயகுமாரன் திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -3 ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ஸ்டாலின் என்னென்ன பேசினார்..! அந்தப் பேச்சுக்களை தற்போது மீளவும் பார்க்கையில் உண்மையிலேயே சிலிர்க்கிறது..! ‘நம்மை ஆட்சி செய்வது ஒரு தேவ தூதனோ.! இவர் நம்மை பொற்காலத்திற்கு கொண்டு செல்ல உள்ளாரோ’ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது; சில உதாரணங்கள்; கடந்த 2021-ஆம் ஆண்டு யூலை 9 அன்று தமிழக பொருளாதார வளர்ச்சிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் நாட்டில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி தான் ‘திராவிட மாடல்’ என்று விவரித்தார். “அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை” என்றும் அவர் தெரிவித்தார். மேற்படி கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. குழு உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் டிரெஸ், எஸ். நாராயணன், அப்போதைய தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அப்போதைய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, அப்போதைய நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது குறித்து அந்தக் குழு விவாதித்தது. “இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித் தன்மை வாய்ந்தவர்கள்” என்று புகழ்ந்த முதல்வர், “சமூக நலன் சார்ந்த வளர்ச்சி தான் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கிறது என்பதை இந்தக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். மேற்படிக் குழு உருவாக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கங்களாக சிலவற்றை முதல்வர் குறிப்பிட்டார்: * பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழி காட்டுதல்களை வழங்க வேண்டும். * சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள் தர வேண்டும். * பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்குச் சமமான வாய்ப்புரிமை வழங்க ஆலோசனைகள் வழங்க வேண்டும். * மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்க வேண்டும். * மாநிலத்தின் மொத்தமான நிதிநிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் தர வேண்டும். * மக்களுக்குச் சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும். * புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றக்கூடிய தீர்வுகளுக்கான ஒரு வலுவான ஆலோசனை மையமாக நீங்கள் திகழ வேண்டும். * எவ்வித பிரச்னைக்கும் ஆராய்ந்து சாத்தியப்படக்கூடிய சிறந்த சமூக, பொருளாதாரத் தீர்வுகளை வழங்க வேண்டும். தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்டக் கனவுகளைப் பட்டியலிட்ட முதல்வர், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும் அந்தக் “கனவுகள் சாதாரணமாக நிறைவேறி விடாது என்று எனக்கும் தெரியும்” என்று நேர்மையுடன் ஒத்துக் கொள்ளவும் செய்தார். திரு. எஸ். நாராயணன் எழுதிய “Dravidian Years” நூலை மேற்கோள் காட்டிப் பேசிய முதல்வர், “அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஒரு உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது” என்று கோடிட்டுக் காட்டினார். தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய்க் கடனில் இருக்கின்றன. நிதி ஆதாரம் என்பது விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில துறைகளின் மூலமாக மட்டும் தான் வருகிறது. வரி வசூலிலிருந்த மாநில உரிமைகளை ஒன்றிய அரசு ஜி.எ.ஸ்டி மூலமாகப் பறித்து விட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது. நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக்கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். அதற்கென உள்ள வழிமுறைகளைத் தமிழ்நாட்டு அரசுக்குக் காட்டுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார். “சமூக நீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப் பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக” என்று பெருமைப்பட்டுக் கொண்ட முதல்வர், “நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி – சமூக மாற்றம் – கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அது தான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!” என்று தெரிவித்தார். பின்னர் பிப்ருவரி 28, 2022 அன்று தன்னுடைய தன்வரலாற்று நூலை வெளியிட்டுப் பேசிய முதல்வர் “திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பதை தனது பணியாக மேற் கொள்ளவிருப்பதாகத்” தெரிவித்தார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை குறிக்கும் வகையில் பேசிய முதல்வர், “ஆளும் திமுக கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி எங்களது ஒன்பது மாத கால ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்” என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். “எனது தத்துவம் என்பதற்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர்” என்றறிவித்த முதல்வர், அது பற்றி மேலும் விவரித்தார்: “’மாடல்’ என்பது ஆங்கிலச் சொல் தான். அதைத் தமிழில் சொல்வதாக இருந்தால், ‘திராவிடவியல் ஆட்சிமுறை தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை. கல்வியில் – வேலை வாய்ப்பில் — தொழில் வளர்ச்சியில் — சமூக மேம்பாட்டில் — இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். பால் பேதமற்ற — ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு” என்றார். மேலும், விவரித்த முதல்வர், “அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பது தான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். அனைத்து மாநிலங்களும் சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்த திராவிடவியல் கோட்பாட்டை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இப்படியாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய திராவிட மாடலை இந்தியப் பெருவெளிக்கு எடுத்துச் சென்றார்: “ராகுல் காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று “India is a union of states” என்றும்; “BJP can never ever rule over the people of Tamil Nadu” என்றும் பேசியது, அவர் திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக உள் வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது. இத்தகைய மனமாற்றத்தை அகில இந்தியத் தலைவர்கள் அடைய வேண்டும் என்று தான் அண்ணாவும் கருணாநிதியும் விரும்பினார்கள். அவர்கள் காலத்தில் அடைய முடியாத மாற்றம் இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் – அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார். “மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது. அதைத் தான் ராகுல் காந்தி அவர்களும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தார். அதே போல், இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல் – சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக் கூட்டமைப்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது” என்று சொல்லி தன்னுடைய உரையை முடித்தார் முதல்வர். அண்மையில் (யூலை 2024) நடந்து முடிந்திருக்கும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர், “கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி இன்று வரை தொடரும் சமூகநீதித் திட்டங்கள், திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்கள் –- இவற்றுக்கு நற்சான்றிதழ் அளித்து திமுகவிற்கு மகத்தான வெற்றியை [மக்கள்] வழங்கி” இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். விக்கிரவாண்டி வாக்காளர்களை “திமுக நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று நேரில் சந்தித்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் சாதனைகளை” எடுத்துச் சொன்னதாக பெருமிதம் கொண்டார் முதல்வர். ஆனால், இந்த வெற்றிக்காக திமுக கொடுத்த விலை அதிகம். ஆக, தன்னுடைய ஆட்சிக் காலத்தைத் தான் முதல்வர் திராவிட மாடல் அரசு என்று குறிக்கிறார். முதல்வரைத் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் ‘திராவிட மாடல்’ பற்றிப் பேசுகிறார்கள். ஏப்ரல் 10, 2022 அன்று ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர் எ. வ. வேலு, “மக்களுக்கு என்ன தேவையோ அதனை பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறோம். மகளிருக்கு இலவச பஸ், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்டத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மேலும் கோவில்களில் கடகால் போடுவது முதல் கருவறை வரை வேலை பார்த்தவர்களை வெளியேப் போ என்பதை திராவிட மாடல் ஆட்சி எதிர்க்கிறது. இதனால் தான் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தோம்” என்றார் அவர். முதல்வரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் பரந்து பட்ட திராவிட அரசியலின் கூறுகளை கோடிட்டுக் காட்ட முயன்றாலும், பிறர் பேசும் கருத்துக்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்தையே நினைவூட்டுகின்றன. திராவிட மாடலின் தத்துவார்த்தப் பின்புலம், சமூக-பொருளாதார-அரசியல் வெளிப்பாடுகள், அன்றாடச் சேவை நடைமுறைகள் பற்றியெல்லாம் ஏராளமானக் கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. முதல்வர் ஸ்டாலின் பேசியவற்றுக்கும், தற்போதைய ஆட்சி நிர்வாகம் செல்லும் பாதைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்; [கட்டுரையிலுள்ள மேற்கோள்கள் அனைத்தும் திமுகவினர் நடத்தும் தினகரன் நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டவை.] கட்டுரையாளர் ; சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர். https://aramonline.in/18566/dravidian-model-stalin/
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஈரானியர்கள் பாரசீகர்கள். அரேபியர்கள் இல்லை. ஈரான் எதுவும் செய்யமுடியாது. ரஷ்யாவுடன் கூட்டுவைத்தாலும் இஸ்ரேலின் துல்லியமான தாக்குதல்கள் மூலம் முக்கியமானவர்களை தொடர்ந்தும் இழக்கத்தான் போகின்றது. போருக்கு வெளிக்கிட்டால் தெஹ்ரான் முல்லாக்கள் மூட்டைமுடிச்சோடு வெளியேறவேண்டிவரும். ஆனாலும் இஸ்ரேல் பலஸ்தீனிய பொதுமக்களை பாரிய அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும், பட்டினி போடுவதும், கேவலமாக நடத்துவதும் மிலேச்சத்தனமான செயல்கள். இவற்றை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ ஒருவரும் இல்லை!
-
யாழில். காணி மோசடி – நில அளவையாளர் உள்ளிட்ட மூவர் கைது!
யாழில். காணி மோசடி – நில அளவையாளர் உள்ளிட்ட மூவர் கைது! adminJuly 30, 2024 காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நில அளவையாளர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. வெளிநாடொன்றில் வசிக்கும் தம்பதியினர், மருதங்கேணி பகுதியில் உள்ள தமது காணி ஒன்றிக்கு ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு அற்றோணி தத்துவத்தை வழங்கியுள்ளார். குறித்த நபர் தனக்கு அற்றோணி தத்துவம் ஊடாக கிடைக்கப்பெற்ற காணியை சூழ உள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி நில அளவையாளர் ஊடாக காணி வரைபடத்தினை கீறி அற்றோணி தத்துவ காணியை பிறிதொரு நபருக்கு மோசடியாக விற்பனை செய்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, காணி மோசடியில் ஈடுபட்டவர், நில அளவையாளர் மற்றும் காணியை கொள்வனவு செய்த நபர் ஆகிய மூவரையும் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், அவர்களை நீதிமன்றில் முற்படுத்திய போது , அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. https://globaltamilnews.net/2024/205444/
-
திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம்
திராவிட அரசியலும், திரைத்துறை ஆதிக்கமும்! -சுப. உதயகுமாரன் திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் – 2 அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்த திராவிடத்தின் ‘திரையில் இருந்து தொடங்கிய அரசியல் பயணம்’ கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா..என வளர்ந்து, விஜயகாந்தை தொட்டுப் படர்ந்து துவண்டு, பிறகு சீமான், உதயநிதி, விஜய்..என மையம் கொண்டு களமாடுவதை அரசியல், சமூகப் பார்வையோடு விவரிக்கிறார் சுப.உதயகுமாரன்; தமிழகம் ஒரு மாபெரும் சமூக-பொருளாதார-அரசியல் திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறது. சாதி வெறி, மத வெறி, குடி நோய், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கைகள் என ஏராளமான சமூகப் பிரச்சினைகள் நம்மை பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்றன. ‘முன்னேற்றம்,’ ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் ஏராளமான அழிவுத் திட்டங்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன. கால நிலைச் சிதைப்பு, வளக் கொள்ளை, மாசுபாடு, வாழ்வாதார அழிப்பு, நிலத்தடிநீர் இழப்பு என்று உழன்று கொண்டிருக்கிறோம். அரசியல் அரங்கில் சர்வ தேசியம், இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் என நம் மண்சாரா, மக்கள்சாரா, மரபுசாரா விழுமியங்கள் சதிராட்டம் போடுகின்றன. பெருந் தலைவர்கள் யாருமற்ற அரசியல் வெற்றிடத்தை திரைத் துறையினர் சிலர் ஆக்கிரமிக்க கடிதில் முனைகின்றனர். தமிழக அரசியலில் திரைத் துறையின் ஆதிக்கம் உற்று நோக்கப்பட வேண்டியது. காங்கிரசுத் தலைவர் சத்தியமூர்த்தி சினிமாவை ஒரு பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்தலாம் என்றெண்ணினாலும், தி.மு.கழகம்தான் சினிமாவை முழுவீச்சில் கைக்கொண்டு களமிறங்கியது. புதினங்களும், நாடகங்களும் எழுதிய அறிஞர் அண்ணா வேலைக்காரி, நல்லதம்பி, ஓரிரவு, சொர்க்க வாசல் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். தாய் ஐந்தடி பாய்ந்தால் குட்டி பத்தடி பாயும் என்பது போல, கலைஞர் கருணாநிதி அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். நாளடைவில் தமிழ் மக்களின் கவனம் அறிவார்ந்த மூளையிலிருந்து அரிதாரம் பூசிய முகத்துக்குத் தாவியது. திமுக நட்சத்திரம் எம்.ஜி.ஆர். மொத்தம் 138 திரைப்படங்களில் நடித்தார். ஜெயலலிதா 140 படங்களில் நடித்தார். இருவரும் இணைந்து 1965–1973 கால கட்டத்தில் 28 வெற்றிப் படங்களை வழங்கினர். இளமையும், இனிமையும், ஆடலும், பாடலும், கிறுகிறுப்பும், விறுவிறுப்பும் ததும்பும் அந்த திரைப்படங்கள் இன்றளவும் பேசப்படுபவை. தன்னுடைய திரைப்படங்களில் அபலைப் பெண்களின் ஆபத்பாந்தவனாக, மது அருந்தாத, புகைப்பிடிக்காத ஒழுக்க சீலனாக, ஓர் உன்னத பிம்பத்தைக் கட்டமைத்து வளர்ந்தார் எம்.ஜி.ஆர். கட்சியில் களப்பணி ஆற்றியிருந்த அனுபவத்தையும் வைத்துக் கொண்டு, காற்றுள்ள போதேத் தூற்றிக் கொண்டார் அவர். கலைஞர்–எம்.ஜி.ஆர். உறவு கெடுவதற்கான காரணங்கள் பின்னவர் அரசில் பதவி கேட்டதும், கட்சியில் கணக்குக் கேட்டதும் மட்டுமல்ல, கலைஞர் தன்னுடைய மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக திரையுலகில் களமிறக்கியதும் தான். இம் மோதலின் விளைவாக 1972–ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கினார். பின்னர், அவரது கட்சியின் இல்லாத கொள்கையை அறியாத ஜெயலலிதா ஏகாந்தத்தில் பரப்புவதற்கு ஏதுவாக, அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் (கொ.ப.செ.) பதவியை வழங்கினார். புரட்சி நடிகராக இருந்தவர் ‘பட்ட உயர்வு’ பெற்று “புரட்சித் தலைவர்’ ஆனார். அவரை அடியொற்றி, ஜெயலலிதா ‘புரட்சித் தலைவி’ ஆனார். முன்னவர் காலமானதும், பின்னவர் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். எம்.ஜி.ஆரின் துணைவியார் வி. என். ஜானகியும் சினிமா நடிகை தான் என்றாலும், தமிழ் மக்கள் “சின்னவளை, முகம் சிவந்தவளை”த் தான் தலைவியாக விரும்பி ஏற்றார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமா ‘புரட்சி’ களமாகவும். ‘புரட்சி’ சினிமாத் தனம் கொண்டதாகவும் இருக்கின்றன. அதிமுகவிலிருந்து புரட்சியையும், திமுகவிலிருந்து கலைஞரையும் தேர்ந்தெடுத்து, தேசியம், திராவிடம், முற்போக்கு என்றொரு வினோத அவியலைச் சமைத்து விளம்பினார் ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த். அரசியல் மாற்றம் விரும்பிய தமிழ் இளைஞர்கள் அவரையும் வரவேற்றனர். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அவர் மட்டும் வென்றார். இரண்டாவது தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரானார். அரசின் கொள்கைகளை விவாதித்து, திட்டங்களை ஆய்வுசெய்து, மக்கள் பிரச்சினைகளைப் பேசி, திறம்பட இயங்கியிருந்தால் நிலைத்து நின்றிருக்கலாம். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? அடுத்து தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார், உலக நாயகன் இருவரும் தமிழ்நாட்டு அரசியலைக் கொஞ்சம் உருட்டினார்கள். முன்னவரிடம் கொள்கை என்று சொன்னால், அவருக்கு தலைச் சுற்றியது; பின்னவர் தன் கொள்கையைச் சொல்ல வந்தால் நமக்கு தலைச் சுற்றியது. முன்னவர் ஒதுங்கினார், பின்னவர் ஒதுக்கப்பட்டார். பெயரும், புகழும், பணமும், படையும், சக்தி வாய்ந்தோர் ஆதரவும், அனுசரணையும் மட்டுமே பொது வாழ்வுக்குப் போதாதென்று அண்மைய ரஜினி-கமல் காட்சிகள் தெளிவாக நிறுவுகின்றன. இது ஒரு நல்ல, மிக முக்கியமான, வரவேற்கப்படவேண்டிய விடயம். ‘புரட்சித் திலகம்’ சரத்குமார், டி.ராஜேந்தர், கார்த்திக், பாக்கியராஜ், குஷ்பு, விந்தியா, நமீதா, சீமான், உதயநிதி, விஜய் என ஏராளமான திரையுலகினர் பொது வாழ்க்கைக்கு வரிசை கட்டி வருகின்றனர். தங்களின் சினிமாப் புகழை பயன்படுத்தி அரசியல் அதிகாரம் பெற அவர்கள் முனைகிறார்கள். சனநாயகத்தன்மையைப் போற்றுவதாகப் பீற்றிக் கொள்ளும், தி.மு.க.வும், அதன் தலைமையும் தங்களின் அடுத்த தலைமுறைத் தலைவராக உதயநிதியை உருவாக்கிக் கொள்வதற்கு திரைத் துறையையே நாடினர். அவரைத் திட்டமிட்டு வலிந்து சினிமாவுக்குள் புகுத்தி, அவர் முகத்தை தமிழகமெங்கும் பிரபலமாக்கி, கடந்தத் தேர்தலில் பிரச்சார பீரங்கியாகக் களமிறக்கி, கழக உடன் பிறப்புக்களையும், தமிழர்களையும் மனதளவில் தயாரித்து, இப்போது கொல்லைப் புறம் வழியாக ‘மினி பட்டாபிஷேகம்’ ஒன்றையே அரங்கேற்றி வைத்திருக்கிறார்கள். உதயநிதியைவிட தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் வேறு யாருமே தி.மு.க.வில் இல்லையா? எல்லாப் பொறுப்புக்களுக்கும் தேர்தல் நடத்தும் தி.மு.க. ஏன் அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ். போல, ஆட்களை நியமனம் செய்கிறது? “நாங்கள் அடிப்படையில் சனநாயகவாதிகள், ஆனால், அவ்வப்போது சர்வாதிகாரிகள்” எனும் புதுவித அரசியலா இது? அறிஞர் அண்ணா தனது மூத்த மகன் டாக்டர் பரிமளத்தை கட்சியின் பொதுச் செயலாளராகவோ, தமிழகத்தின் முதல்வராகவோ நியமித்திருந்தால், திருக்குவளைக் குடும்பம் திசை தெரியாமல் போயிருக்குமே? சினிமா நடிகர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம், வரட்டும். ஆனால், மக்களைச் சந்திக்காமல், அவர்களின் பிரச்சினைகளை அறியாமல், அரசியல் அறிவு ஏதுமில்லாமல், சினிமாப் புகழை மட்டும் மூலதனமாக வைத்துக் கொண்டு முதல்வராக முயற்சிப்பது தான் பிரச்சினை. ஒரு நல்ல ஆசிரியராவதற்கு கல்வியியல் பாடம் படிக்கச் சொல்கிறோம். ஒரு நல்ல மருத்துவராவதற்கு ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் பாடங்களை கற்கச் சொல்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் முதல்வராவதற்கு மூன்று சினிமாவில் நடித்தால் போதும் என்றால், அந்த நாடு எப்படி உருப்படும்? தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவில் தொடங்கிய திராவிட அரசியல், கலைஞர் கருணாநிதியில் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, உதயநிதி என்று சினிமாக்காரர்களிடம் சிக்கி தொடர்வது காலத்தின் கோலம். குடும்ப அரசியல், வாரிசு அரசியல், தனிநபர் துதி, அடிமை மனோபாவம் என்றியங்கும் தி.மு.க. என்கிற கட்சியை வழிநடத்த உதயநிதி சரியானவராக இருக்கலாம், ஆனால், எட்டுக் கோடி தமிழக மக்களை வழிநடத்த அவர் தகுதியானவர்தானா..? என்கிற கேள்வி எழுகிறது. அந்த தகுதிகளை பெறுவதற்காகத் தான் இப்போது கட்சியிலும், அரசிலும் பதவிகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்று வாதிட்டால், அந்த முடிவின் அநியாயத்தை, அந்த செயல்பாட்டின் சனநாயகமற்றத் தன்மையை கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. கோபாலபுரம் குடும்பத்துக்குள் தான் ஆட்சி அதிகாரம் தக்க வைக்கப்பட வேண்டுமென்றால்கூட, உதயநிதியை விட அறிவும், ஆற்றலும், அனுபவமும் மிக்க கனிமொழி, தயாநிதி மாறன் போன்றோரில் ஒருவரைத் தேர்வு செய்திருக்கலாமே? சினிமாவை கலையாக, தொழிலாக, வணிகமாக மட்டும் பார்க்காமல், தலைவர்களை உருவாக்கும் தளமாகவும் பார்த்தால், தமிழினம் எந்தக் காலத்திலும் உருப்பட முடியாது. கேரளத்தின் புகழ்பெற்ற நடிகர் பிரேம் நசீர் (1950–1980) 520 படங்களில் கதாநாயகனாக நடித்தார். நடிகை ஷீலாவோடு மட்டும் 130 படங்களில் நடித்தார். அனைத்தும் வெற்றிப் படங்கள். ஆனால் இருவரும் ஒரு வார்டு கவுன்சிலராகக்கூடத் தேர்வாக முடியவில்லை. நவீன உலகில் நடிப்பும், அரசியலும் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. திரையுலகில் நடைபெறும் ஆதிக்கம், அணிசேர்ப்பு, ஏகபோகம் உள்ளிட்ட அரசியல், அரசியல்வாதிகள் அன்றாடம் கைக்கொள்ளும் கதை சொல்லல், வசனம், நடிப்பு போன்றவற்றை நாம் எல்லோரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம். “துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி” என்கிறது குறள். துன்பத்தில் ஒருவரின் நெஞ்சமே துணையாவது போல, தலைவர் எனப்படுபவர் மக்களுக்குத் துணையாக நிற்க வேண்டும். கோட்பாடுகள், நிலைப்பாடுகள், களப்பணி எதுவுமேயின்றி ‘கோடம்பாக்கத்திலிருந்து நேராக கோட்டைக்குச் செல்வேன்’ என்பதை ஏற்க இயலாது. ‘முற்போக்கு திராவிடம்’ பேசி விஜயகாந்த் நிரப்ப முயன்று தோற்ற அரசியல் வெளியில் கொஞ்சத்தை பிற்போக்கு தமிழ்த் தேசியம் பேசி சீமான் பிடித்தார். சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாட்டின் மீது கோபமுற்ற இளையோர், கட்டமைப்புக்களை மாற்ற விழைவோர், ஈழ இனப் படுகொலை கண்டு துடித்தோர் என பலரும் சீமானின் சினிமாத் தனப் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்ந்தனர். அன்பு, அறிவு, கருணை, சிந்தனையை விட, வெறுப்பு, வன்மம், கோபம், மூடத்தனம் வேகமாகவே விலை போகும். தான் பிடித்து வைத்திருக்கும் இடத்தை ‘தம்பி’ ஆக்கிரமித்து விடும் அபாயத்தைக் கண்டஞ்சும் ‘அண்ணன்’ கூட்டணிக்காகத் தூதுவிட்டுக் கொண்டிருக்கிறார். திரைப் புகழின் உச்சத்தி்ல் இருக்கும் விஜய் ஏராளமான அப்பாவி இளைஞர்களின் அன்பைப் பெற்றிருக்கிறார். “வள்ளுவன் தன்னை உலகினுக்கேத் தந்து வான்புகழ் கொண்ட” தமிழ் நாடாயிற்றே! விஜயை தலைவராக்காமல் விட்டு விடுமா? எந்த சினிமாச் சட்டியிலும் சீர்திருத்தச் சரக்குக் கிடையாதென்றுணர இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும். உதயநிதி, விஜய், சீமான் என்று உருப் பெற்றுக் (உருப்பட்டு அல்ல!) கொண்டிருக்கிறது தமிழ் நாட்டின் அரசியல் களம். தமிழகம் திறமைமிகு, தகைமைசால் அப்பனுக்காக, ஓர் அம்மைக்காக, ஏங்கிக் கிடக்கிறது. ஆனால், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல, கேட்பது ஒன்றும், கிடைப்பது வேறொன்றுமாக இருக்கிறது. ஸ்டாலினும் திரைப்படங்களில் நடித்துப் பார்த்தார், நடக்கவில்லை. கலைஞரின் பேச்சுத் திறன், எழுத்துத் திறன், கவிதைத் திறன், சினிமாத் திறன் ஏதுமற்ற நிலையில் கட்சியை, ஆட்சியைப் பிடித்து நிலைநிறுத்த ஒரு கொழுகொம்பு அவருக்குத் தேவைப்படுகிறது. பல்வேறு முனைகளிலிருந்தும் போட்டிகளும், நெருக்கடிகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதிமுகவின் தொடர்ச்சி, இந்துத்துவாக் கூட்டத்தின் வளர்ச்சி, நடிகர்களின் அரசியல் முயற்சி, தமிழ்த் தேசிய உணர்வின் எழுச்சி என்று களம் கடினமானதாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ கதையாடலைக் கையிலெடுக்கிறார். கட்டுரையாளர்; சுப. உதயகுமாரன் https://aramonline.in/18542/diravidam-cinema-politics/
-
தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள் - நிலாந்தன்
தமிழ்மக்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள் - நிலாந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தின் சுவர்களில் ஓர் அனாமதேயச் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில் “தேசமே பயப்படாதே” என்று வெள்ளை பேப்பரில் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தது. யார் ? யாருக்குப் பயப்படக்கூடாது? என்று யார் கூறுகிறார்கள்? இந்த சுவரொட்டி ஒட்டப்படுவதற்கு முன்பு, ஜேவிபி ஒரு பெரிய பலவண்ணச் சுவரொட்டியை ஒட்டியது. அதில் “எங்கள் தோழர் அனுர” என்று எழுதப்பட்டிருந்தது. அனுரவின் பெரிய முகம் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் சில நாட்களுக்கு முன்பு ”நாங்கள் தயார்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டி. அதுவும் பலவண்ணச் சுவரொட்டி. அதில் தென்னிலங்கையில் தன்னெழுச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட தலைவர்கள் மூவருடைய படங்கள் காணப்பட்டன. அதற்குக் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு சுவரொட்டியில் நற்செய்தி வருகிறது என்ற பொருள்பட எழுதப்பட்டிருந்தது. அது ஒட்டப்பட்ட அடுத்த அடுத்த நாள் ரணில் செய்வார் என்று இன்னொரு சுவரொட்டி வந்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் உதவிக்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றிருந்த ஒரு பின்னணியில் ஜனாதிபதி நாட்டுக்கு உரை நிகழ்த்தவிருந்தார். அதை முன்னிட்டு அந்தச் சுவரொட்டிகள் வெளிவந்தன. இக்கட்டுரை எழுதப்படுகையில் ஒரு சுவரொட்டி சில நாட்களுக்கு முன் ஓட்டப்பட்டது. அதில் “ரணிலை விரட்டுவோம்” என்று கறுப்பு வெள்ளையில் எழுதப்பட்டுள்ளது. நிச்சயமாக மேற்கண்ட சுவரொட்டிகள் யாவும் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஒட்டப்பட்டவை. இவ்வாறு யாழ்ப்பாணத்தின் சுவர்களில் வண்ணவண்ணச் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மையக் கட்சிகள், யாழ்ப்பாணத்து மக்களின் மனங்களில் என்ன ஒட்டப்பட்டு இருக்கிறது என்பதனை அறிந்திருக்கிறார்களா? தென்னிலங்கைக் கட்சிகள் மட்டுமல்ல, அந்தக் கட்சிகளுக்கு தமிழ்மக்களின் வாக்குகளை மடைமாற்ற முயற்சிக்கும் தமிழ் முகவர்கள், தமது சொந்த மக்களின் மனங்களில் எந்தக் கனவு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதனை அறிந்திருக்கிறார்களா? தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நிர்ணயகரமான தருணங்களில் கொள்கைகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.கொலனித்துவ ஆட்சிக்காலத்தில், இலங்கை பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட பின் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில், 1931ஆம் ஆண்டு தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள். அப்பொழுது இருந்த யாழ்ப்பாண வாலிபக் காங்கிரஸ் மகாத்மா காந்தியின் செல்வாக்குக்கு உட்பட்டு தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுத்த கோரிக்கையை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அங்கிருந்து தொடங்கி தமிழ்மக்கள் நிர்ணயகரமான தேர்தல்களில் நிர்ணயகரமாக முடிவெடுத்து வாக்களித்திருக்கிறார்கள். மிகப்பலமான உயர்குழாத்தைச் சேர்ந்த சேர்.பொன் ராமநாதன்,பொன்னம்பலம் குடும்பத்தின் வாரிசு ஆகிய மகாதேவாவை ஜி.ஜி.பொன்னம்பலம் 1947ஆம் ஆண்டு “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று கூறித்தோற்கடித்தார். அதே பொன்னம்பலத்தை பின்னர் கொள்கையின் பெயரால் செல்வநாயகம் தோற்கடித்தார். பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போதும் தமிழ்மக்கள் கொள்கைக்கு வாக்களித்தார்கள். அதன்பின் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைத் தீவில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ்மக்கள் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்ட ஈரோசுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள். இலங்கைத் தீவின் தேர்தல் வரலாற்றில் ஒரு சுயேச்சை குழு 13 ஆசனங்களை வென்றது அதுதான் முதல்தடவை. அந்த வெற்றி தமிழ்மக்களின் போராட்டத்தின் விளைவு. தமிழ்மக்கள் கொள்கைக்கு வாக்களித்தார்கள். அதன் பின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டு உருவாக்கப்பட்ட பின் நடந்த முதலாவது தேர்தலில், தமிழ்மக்கள் திரண்டு வாக்களித்திருக்கிறார்கள். அதாவது போராட்டத்தின் விளைவாக தோன்றிய கூட்டமைப்புக்கு கொள்கை அடிப்படையில் வாக்களித்தார்கள். 22ஆசனங்களை அள்ளிக்கொடுத்தார்கள். ஏன் அதிகம் போவான்?கடந்த 15 ஆண்டுகளிலும் ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ்மக்கள் எப்படி வாக்களித்தார்கள்? தங்களைத் தோற்கடித்த குடும்பத்துக்கு எதிராக பெருமளவுக்கு ஒன்றுபட்டு வாக்களித்தார்கள். எனவே தமிழ்மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டு முழுவதிலும் ஆகக்கூடியபட்சம் ஒரு பெருந்திரளாகத் திரண்டு ஒன்றுபட்டு வாக்களித்த பல தருணங்கள் உண்டு. ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்து வாக்களித்த தருணங்கள் பல உண்டு. ஆனால்,கடந்த 15 ஆண்டுகளிலும் அவர்கள் ஜனாதிபதி தேர்தல் அல்லாத ஏனைய தேர்தல்களில் வாக்காளர்களாக சிதறடிக்கக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் அவர்களை மீண்டும் ஒரு பெரிய மக்கள் திரளாகக் கூட்டிக்கட்ட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க மாட்டார்கள் என்று புள்ளி விபரங்களைக் காட்டிப் புலம்புவர்களும் பயமுறுத்துவோர்களும் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். கட்சி அரசியல் என்பது ஆகக்கூடிய பட்சம் வாக்குகளைத் திரட்டுவதுதான். அதிலும் குறிப்பாக தேசியவாத கட்சி அரசியல் என்றால், மக்களை ஆகப்பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அதைச் செய்யாத அல்லது செய்ய முடியாத அரசியல்வாதிகள் பொது வேட்பாளருக்கு வாக்குகள் கிடைக்காது என்று பயமுறுத்தப் பார்க்கிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு மட்டுமல்ல கட்சி அரசியலுக்கே லாயக்கில்லாதவர்கள். தமிழ்மக்களை வாக்காளர்களாகச் சிதறடித்ததில் அவர்களுக்கும் பொறுப்புண்டு. எனவே தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு தமிழ்மக்ககளை ஒன்றாக்குவது. தமிழ்ப் பலத்தை ஒன்று திரட்டுவது. தமிழ் அரசியல் சக்தியை ஒரு மையத்தில் குவித்து ஆகக்கூடியபட்சம் ஆக்க சக்தியாக மாற்றுவது. இந்த அடிப்படையில்தான் கடந்த திங்கட்கிழமை 22ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டது. ஏழு தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும், மக்கள் அமைப்பாகிய “தமிழ்மக்கள் பொதுச்சபை”க்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை அது. அந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு இரண்டு முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவது முக்கியத்துவம், கட்சிகளும் மக்கள் அமைப்பொன்றும் அவ்வாறு ஓர் உடன்படிக்கையை எழுதிக்கொள்வது நவீன தமிழ் வரலாற்றில் அதுதான் முதல் தடவை. தமிழ்மக்கள் பொதுச் சபையெனப்படுவது தமிழர் தாயகத்தில் உள்ள குடி மக்கள் சமூகங்கள்; செயற்பாட்டு அமைப்புக்கள்; மக்கள் அமைப்புக்கள் என்பவற்றின் கூட்டிணைவாக உருவாக்கப்பட்ட, ஒப்பீட்டளவில் பெரிய ஒரு மக்கள் கட்டமைப்பாகும். அந்த மக்கள் அமைப்பு, ஏழு தமிழ்த்தேசியக் கட்சிகளோடு எழுதிக்கொண்டு ஒர் உடன்படிக்கை அது. அந்த நிகழ்வில் உரையாற்றிய விக்னேஸ்வரன் கூறினார், வாக்களித்த மக்களும் அந்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்களும் எழுதிய உடன்படிக்கை அதுவென்று. உண்மையில் இரண்டும் இரு வேறு தரப்புகள் அல்ல. இரண்டுமே, ஒன்று மற்றதை இட்டு நிரப்பிகள்தான். ஆனால் அவ்வாறான இட்டு நிரப்பிகள் தங்களுக்கு இடையில் ஓர் உடன்படிக்கை எழுதவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? ஏனென்றால் கட்டமைப்பு ரீதியாக இயங்குவது என்று முடிவெடுத்து எழுதப்பட்ட ஒர் உடன்படிக்கை அது. ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்ட உடன்படிக்கை அது. இரண்டாவது முக்கியத்துவம், தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற விடயம் கட்டமைப்பு ரீதியாக முன்நகரத் தொடங்கியுள்ளது என்று பொருள். கடந்த 15 ஆண்டுகளாக ஒரு கருத்துருவாக்கமாக, சில கட்சிகளின் நடவடிக்கையாக, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு, இடையில் கைவிடப்பட்ட ஓர் அரசியல் நகர்வாகக் காணப்பட்ட ஒன்று, இப்பொழுது கட்டமைப்பு சார்ந்து அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கியிருக்கின்றது. இது மிக முக்கியமானது. தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ்ப் பொது வாழ்வில் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்கும் பாரம்பரியம் பலவீனமாக உள்ளது. கட்சிகளுக்குள் உரிய பொருத்தமான கட்டமைப்புகள் இல்லாத பின்னணிக்குள்தான் தனிநபர் ஓட்டங்களும் தனிநபர் சுழிப்புக்களும் இடம்பெறுகின்றன. இருக்கின்ற கட்டமைப்புகள் பலவீனமாக இருப்பதினால்தான் நீதிமன்றம் ஏற வேண்டியிருக்கிறது. கட்டமைப்புக்கு பொறுப்புக்கூறும் ஒரு நிலைமையை ஏற்படுத்தினால் முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும். அதில் ஒரு கூட்டுப் பொறுப்பும் இருக்கும். தமிழ் அரசியல் பரப்பில் விடயங்களை கட்டமைப்புக்கூடாக விளங்கிக் கொள்ளும் தன்மையும் குறைவு. அதனால்தான் யார் ஜனாதிபதி வேட்பாளர் ?அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் எது? யாரையாவது மனதில் வைத்துக் கொண்டு ஒரு வேட்பாளரைத் தேடுகிறோம் என்று பொய் சொல்லப்படுகிறதா? போன்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. அதற்கு ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படும்; அந்தக் கட்டமைப்பு கூட்டாக முடிவு எடுக்கும்; அந்த முடிவுகளின் அடிப்படையில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் ;அவருக்குரிய தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒரு கட்டமைப்பு எழுதும்… என்றெல்லாம் கூறப்பட்ட போதிலும், இதுபோன்ற கேள்விகள் திரும்பத் திரும்ப கேட்கப்படுகின்றன. இப்பொழுது ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலானது. இரண்டு தரப்பையும் சேர்ந்த ஏழு, ஏழு பேர் அதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 14 பேர். இந்த 14 பேர்களும் உபகுழுக்களை உருவாக்குவார்கள். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்க ஒரு உபகுழு, தேர்தல் விஞ்ஞாபனத்தை எழுத ஒரு உபகுழு, நிதியை முகாமை செய்ய ஒரு உபகுழு… என்று உபகுழுக்கள் உருவாக்கப்படும் என்று அப்பொதுக் கட்டமைப்பு கூறுகின்றது. நவீன தமிழ் அரசியலில் இது ஒரு புதிய நகர்வு. ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் தமிழ்த்தேசிய அரசியல் போக்கை கூட்டாக தீர்மானிப்பது என்பது. இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்குள் ஏழு கட்சிகள் உண்டு. எதிர்காலத்தில் இணையக்கூடிய கட்சிகளுக்காக அந்த உடன்படிக்கை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அந்த நிகழ்வில் கூறப்பட்டது. அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியமானவற்றில் இருந்துதான் சாத்தியமற்றவற்றை அதாவது அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்யலாம். சாத்தியமானவற்றிலிருந்துதான் அதைத் தொடங்கலாம். வானத்தில் எவ்வளவு உயரக் கோபுரத்தைக் கட்டுவதாக இருந்தாலும் நிலத்தில் கிடைக்கும் நிலப்பரப்பில்தான் அத்திவாரத்தைப் போடவேண்டும். அப்படித்தான் இந்த உடன்படிக்கையும்.சாத்தியமான வற்றுக்கிடையிலான ஒரு உடன்படிக்கை. எதிர்காலத்தில் இது விரிந்தகன்ற தளத்தில்,பரந்தகன்ற பொருளில் ஒரு தேசத் திரட்சியாகக் கட்டி எழுப்பப்படும் என்று இரண்டு தரப்பும் எதிர்பார்க்கின்றன. கடந்த 15 ஆண்டுகால தமிழரசியல் எனப்படுவது எதிர்த் தரப்புக்கு அல்லது வெளித் தரப்புக்கு பதில்வினை ஆற்றும் “ரியாக்டிவ் பொலிடிக்ஸ்”ஆகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது, அதை “ப்ரோஆக்டிவாக” மாற்றும். அதாவது செயல்முனைப்புள்ளதாக மாற்றும். தமிழ்த்தரப்பு இப்பொழுது ஒரு புதிய நகர்வை முன்னெடுக்கின்றது. இதற்கு இனி வெளித்தரப்புகளும் தென்னிலங்கைத் தரப்புக்களும் பதில்வினையாற்ற வேண்டிவரும். அதாவது வெளித் தரப்புகள் தமிழ்த்தரப்பை நோக்கி வரவேண்டியிருக்கும்.இவ்வாறு தமிழரசியலை “ப்ரோ ஆக்டிவாக”-செயல்முனைப்புள்ளதாக மாற்றும்பொழுது, தமிழ்மக்கள் தங்களுடைய சுவர்களில் வண்ணச் சுவரொட்டிகளை ஒட்டும் கட்சிகளுக்கு தாங்கள் யார் என்பதைக் காட்டுவார்கள். https://www.nillanthan.com/6841/
-
சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளுள் இலங்கை : ஃபோர்ப்ஸ் நாளிதழ் அறிக்கை !
சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளுள் இலங்கை : ஃபோர்ப்ஸ் நாளிதழ் அறிக்கை ! By kugen சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் நாளிதழின்படி, 2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்காக கிரீஸ் , மொரிஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன. இலங்கை மேடு பள்ளங்களுடன் மற்றும் கண்கவர் கடற்கரைகளுடன் காணப்படக்கூடிய தீவாக உள்ளதுடன் ஒப்பீட்டளவில் பாலி நாட்டைப் போன்ற ஈர்ப்பைக் கொண்டது. இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்காக அதிசொகுசு ரீதியிலான வசதிகள் இலங்கையினுள் காணப்படுகிறது. இயற்கை அழகை கண்டுகளிக்கும் விதத்தில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் கூறுகிறது. அதனுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை இவ்வாண்டில் சுற்றலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.battinews.com/2024/07/blog-post_394.html