Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம் புறக்கணிப்பு! adminJune 6, 2024 “பொது நிலைப்படும் – பொது வாக்கெடுப்பும்” நிகழ்வு எதிர்வரும் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் மாலை 02.59 மணிக்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை யாழில் நடாத்தவுள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிவித்து இருந்த நிலையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை பொது வேட்பாளர் விடயத்தை முன்னெடுப்பவர்களில் சிவில் சமூகத்தினர், தாம் இந்நிகழ்வுக்கு செல்ல போவதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/203920/
  2. “தமிழ் மக்கள் பொதுச்சபை” அங்குரார்பணம்! வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு “தமிழ் மக்கள் பொதுச்சபை” என மாற்றம்! adminJune 6, 2024 தமிழ் மக்கள் பொதுச் சபையின் அறிக்கை குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் 30.04.2024 வவுனியாத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் 05.06.2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அதில், இதுவரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் சமூகத்தின் கட்டமைப்பை இனிமேல், “தமிழ் மக்கள் பொதுச்சபை” என அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்து முடித்தவுடன் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி செயற்படுவது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டல் குழுவும் இருபத்தி ஐந்து பேரை உள்ளடக்கிய தலைமை ஒருங்கிணைப்புக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. தலைமை ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து தமிழ் மக்கள் சபைக்குரிய செயற்குழுக்கள் தெரிவுசெய்யப்படும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் மக்கள் பொதுச்சபை கூடி தேவையான முடிவுகளை எடுக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பங்கேற்ற அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் ஒப்பம் 1. சமூக அபிவிருத்தி அமைப்பு – மட்டக்களப்பு 2. நல்லோர் உலகை கட்டி எழுப்பும் அமைப்பு – மட்டக்களப்பு 3. இளைஞர் அமைப்பு மட்டக்களப்பு 4. மீன்பிடி சங்கம் திருப்பெருந்துறை – மட்டக்களப்பு 5. கிழக்கு பல்கலைகழக தமிழ் மாணவர் ஒன்றியம் 6. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 7. தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் 8. பண்னையாளர் சங்கம் 9. “சன்ரைஸ்” அமைப்பு 10. குரலற்றவர்களின் குரல் அமைப்பு 11. வடக்கு கிழக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் 12. “மக்கள் மனு” வடக்கு கிழக்கு சிவில் சமூகம் 13. தமிழர் கலை பண்பாடு மையம் 14. சமூக விஞ்ஞான ஆய்வு மையம் 15. “எம்பவர்” நிறுவனம் – திருகோணமலை 16. தமிழ் சிவில் சமுக அமையம் 17. தளம் அமைப்பு – திருகோணமலை 18. போராளிகள் நலன்புரிச்சங்கம் 19. ஒருங்கிணைந்த தமிழர் கூட்டமைப்பு 20. கால்நடை சமாசம் – மட்டக்களப்பு 21. வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் 22. க.இராசலிங்கம் – வாகரை சிவில் சமூச செயற்பாட்டாளர் 23. தவத்திரு அகத்தியர் அடிகள்- தென்கைலை ஆதீனம் – திருகோணமலை 24. சி.அ.யோதிலிங்கம் – சமூக விஞ்ஞான ஆய்வுமையம் 25. அருட்திரு.ப.யோ.ஜெபரட்ணம்- குருமுதல்வர் யாழ் மறைமாவட்டம் 26. கி.ஜெயக்குமார் – மறைக்கோட்ட முதல்வர் இளவாலை 27. சி.மதன்பாபு – இணையம் அமைப்பு 28. இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் 29. சே.ஞானமலர் – இரணைமடு டி-8 கமக்கார அமைப்பு 30. யாழ் வணிகர் கழகம் 31. ந.பரந்தாமன் – பேராசிரியர் துரைராஜா அறிவியல் வளர்ச்சிப் பேரவை 32. சி.சயந்தன் – பேராசிரியர் துரைராஜா அறிவியல் வளர்ச்சிப் பேரவை 33. வி.குயிலன் – பேராசிரியர் துரைராஜா அறிவியல் வளர்ச்சிப் பேரவை 34. ஏ.பெனடிக்ட் குரூஸ் – நப்சோ அமைப்பு மன்னார் 35. எஸ். மகாலிங்கம் – இணைச்செயலாளர் தனியார் பேருந்து (788) 36. ஆ.மோகன் பிரசாந் – பேராசிரியர் துரைராஜா அறிவியல் வளர்ச்சிப் பேரவை 37. த.சிறி – சமூக செயற்பாட்டாளர் 38. தம்பாட்டி கிராமிய கடன் நலன்புரிச்சங்கம் 39. எம்.கம்சன் – சமூக செயற்பாட்டாளர் 40. இரணைமடு கமக்கார அமைப்பு 41. கி.ஆறுமுகம்- சமுக செயற்பாட்டாளர் 42. வணபிதா.சதீஸ்டானியல் தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனம் 43. வேலன்சுவாமிகள் – P2P மக்கள் பேரெழுச்சி இயக்கம் 44. பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் – அரசறிவியல்துறை தலைவர் – யாழ் பல்கலைக்கழகம் 45. அருட்தந்தை பிரான்சிஸ் யூட் ஞானராஜ் 46. அ.அன்னராசா – அகில இலங்கை மீனவ அமைப்பு 47. அ.யதீந்திரா – மக்கள் மனு வடக்கு கிழக்கு சிவில் சமூகம் 48. ச.இளங்கோ – சமூக சமுர்த்தி நல்லூர் பிரதேச மட்டத்தலைவர் 49. அகரம் மக்கள் மையம் – திருகோணமலை 50. சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கம் – யாழ்ப்பாணம் 51. யாழ் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் – யாழ்ப்பாணம் 52. கால்நடை கூட்டுறவுச் சங்கம் – யாழ்ப்பாணம் 53. பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கம் – யாழ்ப்பாணம் 54. கிராமிய வங்கி நுகர்ச்சி கூட்டுறவு சங்கம் – யாழ்ப்பாணம் 55. விவசாய சங்க கூட்டுறவுச் சங்கம் – யாழ்ப்பாணம் 56. யாழ்ப்பாணம் வணிகர் கழகம் 57. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு 58. வடமாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் 59. அகில இலங்கை மீனவ மக்கள் பொதுச்சங்கம் 60. அனலைதீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் 61. ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் நலன்புரிச் சங்கம் 62. மெலிஞ்சிமுனை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் 63. எழுவைதீவு கிராம அபிவிருத்திச் சங்கம் 64. நாரந்தனை வடக்கு சனசமூக நிலையம் 65. வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசம் 66. புங்குடுதீவு நசரத் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் 67. தம்பாட்டி நலன்புரிச் சங்கம் 68. ஜே98 சிவில் சமூக குழு 69. சி.பூஜா – சமூக செயற்பட்டாளர் மட்டக்களப்பு 70. ம.செல்வின் – சமூக செயற்பட்டாளர் 71. செ.கிரிசாந் – ஊடகவியலாளர் 72. இ.பாரதி – ஊடகவியலாளர் 73. மட்டக்களப்பு சிவில் சமூகம் – வணபிதா.ம.லூக்யோன் 74. சிவசிஸ்ரீ.வீ.கே. சிபாலன்குருக்கள் 75. ம.நிலாந்தன் – சமூக செயற்பாட்டாளர் 76. விஜயகுமார் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் 77. உதயராஜ் – யாழ் மாவட்ட தனியார் பேருந்து இணையம் 78. காரைநகர் தனியார் பேருந்து சங்கம் 79. யாழ்மாவட்ட பாரதி ஊர்திகள் சங்கம் 80. இந்திரன் ரவீந்திரன் – சமூக செயற்பாட்டாளர் 81. கால்நடை பண்ணையாளர் அமைப்பு – மயிலத்தமடு மாதவனை 82. தமிழ் ஊடகத் திரட்சி (நிமிர்வு) 83. அருட்பணி லூக் ஜோன் – மட்டக்களப்பு சிவில் சமூகம் https://globaltamilnews.net/2024/203917/
  3. கென்யா, ஸிம்பாப்வே இரண்டும் கிரிக்கெட்டில் உகண்டாவை முன்னே வரவிட்டுவிட்டு தூங்குகின்றன.💤
  4. மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன் adminJune 5, 2024 எதிர்காலத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகள் இன்றி, ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்த அனைத்து தலைவர்களுக்கு சிலைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழப் போராட்ட வரலாற்றில் உயிர் தியாகம் செய்த முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு இன்றைய தினம் , யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள சிவகுமாரனின் நினைவு சதுக்கத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து , சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் , அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் எனப் பலரும் நினைவுகூரப்பட வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களது நினைவேந்தல்களை செய்வதற்கான ஏற்பாடுகளும் குறிப்பாக அவர்களது நினைவுச் சிலைகள் நிறுவப்படுவது அவசியமாகும். இதில் கட்சி பேதங்களோ இயக்க வேற்றுமைகளோ இருக்கப்போவதில்லை. பொன் சிவகுமாரனது உருவச்சிலை தற்போதுள்ள உருவச்சிலை நிறுவப்படுவதற்கு முன்னர் மூன்று தடவைகள் உடைத்தெறியப்பட்டது. இதற்கு சரியான புரிதல் இன்மையே காரணம் என்று நினைக்கின்றேன். ஆனால் 1999 களில் அன்றைய அரசுடன் எமக்கிருந்த நல்லுறவு, எமது தேசிய நல்லிணக்க வழிமுறை என்பவற்றுடன் எமக்கிருக்கும் தற்துணிவுமே இந்த சிலையை அமைப்பதற்கும் தலைநிமிர்ந்திருக்க முக்கிய காரணமாக உள்ளது. அதுபோலதான் யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்திலுள்ள மன்னர்களது சிலைகள், முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன் சிலை, யாழ்.மடத்தடியிலுள்ள தனிநாயகம் அடிகளார் சிலை போன்றனவும் நிறுவப்பட்டன. இதேநேரம் பொன் சிவகுமாரனது நினைவு நாளான இன்று தமிழர் அரசியல் பரப்பில் உள்ள பல கட்சியின் தலைவர்கள் முக்கியஸ்தரக்ள் பிரமுகர்கள் என ஒன்றாக கூடியிருப்பதானது இந்நாளை அனைவரும் எமது இனத்தின் ஒரு பொதுவான நாளாக அடையாளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இருப்பவைகளை பாதுகாத்துக்கொண்டு இழந்தவைகளை ஈடுசெய்யும் வகையில் முன்னோக்கி நகரவேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்துவதை போல, எமது மக்களின் உரிமைசார் விவகாரங்களிலும் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புக்களை அனைத்து தரப்பினரும் இணைந்து முன்னெடுக்க முடியும். அதேபோன்று, எமது மக்களின் இருப்புக்கள் மற்றும் வரலாறுகள் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான முயற்சிகள் அனைத்திற்கும் நாம் முழுமையான ஒத்துழைப்புகளுடன் முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்” என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/203869/
  5. பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (06 ஜூன்) நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 9) முதல் சுற்று குழு C : வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG எதிர் UGA 13 பேர் பபுவா நியூகினி அணி வெல்லும் எனவும் 10 பேர் உகண்டா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பபுவா நியூகினி வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தமிழ் சிறி புலவர் P.S.பிரபா நுணாவிலான் கிருபன் அஹஸ்தியன் கந்தப்பு எப்போதும் தமிழன் நீர்வேலியான் கல்யாணி உகண்டா ஈழப்பிரியன் சுவி தியா பிரபா USA வாதவூரான் ஏராளன் ரசோதரன் வாத்தியார் நந்தன் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA அனைவரும் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா அல்லது முட்டையா? 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA எதிர் PAK இருவர் மாத்திரம் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனவும் ஏனைய 21 பேரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்கா ஈழப்பிரியன் கோஷான் சே இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்? 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM எதிர் SCOT ஐவர் நமீபியா அணி வெல்லும் எனவும் ஏனைய 18 பேரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நமீபியா P.S.பிரபா வாதவூரான் அஹஸ்தியன் கந்தப்பு நீர்வேலியான் இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்குப் புள்ளிகள் கிட்டும்?
  6. எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இந்தியா வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @goshan_cheக்கு புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 14 2 குமாரசாமி 14 3 தமிழ் சிறி 14 4 பிரபா USA 14 5 ஏராளன் 14 6 ரசோதரன் 14 7 அஹஸ்தியன் 14 8 கந்தப்பு 14 9 எப்போதும் தமிழன் 14 10 நந்தன் 14 11 நீர்வேலியான் 14 12 வீரப் பையன்26 12 13 சுவி 12 14 நிலாமதி 12 15 தியா 12 16 புலவர் 12 17 P.S.பிரபா 12 18 நுணாவிலான் 12 19 வாதவூரான் 12 20 கிருபன் 12 21 வாத்தியார் 12 22 கல்யாணி 12 23 கோஷான் சே 12
  7. விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி விநாயகம் காலமானார்! June 5, 2024 தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் மூத்த தளபதியான விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி (வயது 60) நேற்று செவ்வாய்க் கிழமை காலமானார். யாழ்ப்பாணம் – தென்மராட்சி – வரணியை சொந்த இடமாகக் கொண்ட இவர், புலம் பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். தமிழீழ விடுதலை புலிகள் முன்னெடுத்த பல தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இவர் புலனாய்வுக்கு தலைமை தாங்கியிருந்தார். அத்துடன், பல புலனாய்வு போராளி களை உருவாக்கியிருந்தார். கட்டுநாயக்கா விமான படைத்தளம் மீதான தாக்குதலில் இவரின் பங்களிப்பும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/senior-commander-of-the-ltte-vinayagam-passed-away/
  8. போலி மருத்துவரிடம் பெண்களின் அந்தரங்கப்படங்கள் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்ட போலி மருத்துவரின் அலைபேசியில் பல பெண்களின் அந்தரங்க காணொலிகள், ஒளிப்படங்கள் இருந்தமையும் அவற்றை வைத்து மிரட்டி பணம் பெற்றுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி வந்துள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்களுடனும் காதல் தொடர்புகளை பேணி அவர்களை மிரட்டி, பல இலட்ச ரூபாக்களைப் பெற்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞன் தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்தி, அதற்கான போலியான ஆவணங்களையும் தயாரித்து வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களை இலக்கு வைத்து பல இலட்ச ரூபா மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இளைஞனை நேற்று திங்கட்கிழமை யாழ். நகரத்தில் அதிசொகுசு மகிழுந்தில் இளைஞன் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வேளை இளைஞன் 15 பவுண் நகையை அணிந்திருந்ததுடன், 5 இலட்ச ரூபா பணத்தை செலவுக்கு என வைத்திருந்துள்ளார். அத்துடன் 5 அதிநவீன அலைபேசிகள , பல வங்கி அட்டைகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டு இருந்தனர். இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல போலி உறுதி முடிப்புக்கள், காணி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. இளைஞன் தனித்து மோசடிகளில் ஈடுபடவில்லை எனவும், இவருக்கு பின்னால் பெரும் கும்பல் ஒன்று மோசடிக்கு உதவி புரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. அதேவேளை இளைஞனின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை ஆராய்ந்து , இளைஞன் யார் யாருடன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பண பரிமாற்றங்களில் ஈடுபட்டார் என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து, தொடர்புடைய நபர்களை விசாரணை வளையத்துக்குள் எடுத்து விசாரணை செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. (அ) https://newuthayan.com/article/போலி_மருத்துவரிடம்_பெண்களின்_அந்தரங்கப்படங்கள்
  9. வெற்றிடங்களை நிரப்பினாலே தேசிய வைத்தியசாலையாக மாற்றலாம்! adminJune 5, 2024 யாழ். போதனா வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு ஆளனிகள் தேவையாகயுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவ்வாறு தெரிவித்தார். இலங்கையின் 04 வது தேசிய வைத்தியசாலையாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவதாக தெரிவிக்கபட்டிருந்தபோதிலும் அதன் தேவைகள் நிலைப்பாடு பற்றி சுகாதார அமைச்சிடம் அறிவித்திருக்கின்றோம். 1350 படுக்கைகளுடனான விடுதியும், 325 வைத்தியர்களும், 680 தாதியர்களுமாக மொத்தமாக 2,150 நபர்கள் கடமைபுரிந்து வருகின்றனர். தேசிய வைத்தியசாலையாக்குவதற்கு 200 மேலதிக தாதியர்கள் ஆளணியும், 100 வைத்தியர்கள் ஆளணியும் தேவையாகயுள்ளது. இவ்வாறு அதிகரிப்பு செய்யப்படும் போது தேசிய வைத்தியசாலையாக மாற்ற சந்தர்ப்பம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ். போதனா வைத்தியசாலையில் 320 வைத்திய நிபுணர்கள் சேவையாற்றி வருகின்றனர். வைத்திய வெற்றிடங்கள் அனேகமான நிரப்பட்டுள்ளது. மேலும் சில நிபுணர்களும் பற்றாக்குறையாக காணப்படுகின்றது. சிறப்பு பிரிவுகளுக்கு குறைந்தது நூறு வைத்தியர்கள் தேவையாகயுள்ளது. இருதய சிகிச்சைப்பிரிவு, இருதய சத்திர சிகிச்சைப்பிரிவு போன்ற வைத்திய துறைக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. அதற்கான ஆளனி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய சுகாதார அமைச்சு முழுமையான பங்களிப்பினை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2024/203849/
  10. தேர்தல் முடிவுகள் சொல்லும் படிப்பினைகள்! -சாவித்திரி கண்ணன் பத்தாண்டுகள் மக்கள் விரோத, படுபாதக ஆட்சி நடத்தியும், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது! எதிர்கட்சிகள் மீது மக்கள் முழு நம்பிக்கை கொள்ள முடியாமல் இருக்கும் காரணங்கள் என்ன..? தனிப்பட்ட முறையில் ஒரு மக்கள் தலைவருக்கான எதிர்பார்ப்புகளை ராகுல் உணர்ந்துள்ளாரா..? தற்போதுள்ள ஒரே ஆறுதல் தனிப் பெரும் மெஜாரிட்டி பாஜகவிற்கு கிடைக்கவில்லை! கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும், காங்கிரஸ் கொஞ்சம் முன்னேறி இருக்கிறது என்றாலும், பாஜக வென்ற தொகுதிகளில் பாதி அளவைக் கூட காங்கிரஸ் எட்ட முடியவில்லை. இந்தியாவிலேயே பாஜகவை ஒரு தொகுதிக்கும் வாய்ப்பில்லாமல் படு தோல்விக்கு தள்ளிய ஒரே மாநிலம் தமிழகம் என நாம் பெருமைப்பட முடிந்தாலும், குறிப்பிட்ட சில தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, பாஜக இரண்டாம் இடம் வந்திருக்கிறது என்பது இந்த தேர்தல் தந்திருக்கும் அபாய மணி எச்சரிக்கையாகும். குறிப்பாக சென்னையிலும், கோவையிலும் பாஜகவிற்கு கிடைத்துள்ள வாக்குகள் ஆளும் திமுக ஆட்சியாளர்களின் முறைகேடுகளால் ஏற்பட்ட விளைவுகளாகும். மோடியின் அராஜக பேச்சுக்கள் வெற்றி வாய்ப்பை கூட்டியதா..? குறைத்ததா? காங்கிரஸ் மக்கள் நம்பிக்கையை பெரிய அளவில் வென்றெடுக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்களை அலசிப் பார்த்தால், அது அந்தந்த மாநிலங்களில் சரியான மாநிலத் தலைமையை தேர்வு செய்வதில்லை. காமராஜருக்கு பிறகு மக்கள் செல்வாக்கான தலைவர் ஒருவரை தமிழக காங்கிரஸ் கண்டடையவில்லை. ஆந்திராவில் பல்லாண்டுகள் பட்டொளி வீசிப் பறந்த காங்கிரஸின் கொடி ஏறத்தாழ இன்று காணாமல் போய்விட்டது. ஒரிசாவில் கிட்டதட்ட ஒரம் கட்டி வைத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தை ஆளும் வாய்ப்பை பெற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியை அங்கு ஈட்ட முடியவில்லை. பிரஜ்வால் ரேவண்ணா போன்ற இளம் பெண்களை சூறையாடிய கயவர்களைக் கூட தோற்கடிக்க முடியாத நிலையில் காங்கிரஸ் இருப்பது பேரவலம். கேரளாவிலும், தெலுங்கானாவிலும், ரஜஸ்தானிலும் காங்கிரஸ் காப்பாற்றப்பட்டு வருவதும் கூட இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் எனத் தெரியவில்லை. உத்திரபிரதேசத்தில் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு கூட காங்கிரசுக்கு பெரிதாக உதவவில்லை. காங்கிரஸ் அங்கு 17 தொகுதிகளில் நின்றாலும், ரேபரலி, அமேதி போன்ற ஒரு சில தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்வதில் அக்கறையே காட்டவில்லை. அதனால், சமாஜ்வாதிக்கு கிடைத்தது போன்ற வெற்றி உ.பியில் காங்கிரஸுக்கு சாத்தியப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடையே அதிக அறிமுகம் இல்லாத மல்லிகார்ஜுன கார்கேவை அகில இந்திய தலைவராக்கியது காங்கிரசின் வெற்றி வாய்ப்பை கணிசமாக குறைத்துள்ளது. சொந்த மாநிலத்திலேயே அவருக்கு செல்வாக்கு பெரிதாக இல்லை. ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தால், தற்போது கிடைத்துள்ள தொகுதிகளைக் காட்டிலும் இன்னும் 50 இடங்களில் அதிகமாக காங்கிரஸ் வெற்றி அடைந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த நம்பிக்கையை மக்களுக்கு தருவதில் அவருக்கு என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் உள்ள திறமையாளர்களை, நல்லவர்களை அடையாளம் காண்பதிலும், தீயவர்களைக் களை எடுப்பதிலும் அவருக்கு போதுமான தீவிரத் தன்மையோ, முதிர்ச்சியோ இல்லை என்றே தோன்றுகிறது. இந்தியா கூட்டணிக்கே வித்திட்டவரான நிதிஸ்குமாரை தக்க வைத்துக் கொள்ளத் தவறியதால் பீகாரில் காங்கிரஸ் ஒரு பின்னடவைக் கண்டுள்ளது. மாத்திரமல்ல, இன்று பாஜக ஆட்சி மத்தியில் அமைப்பதையே தடுத்திருக்கலாம் நிதீஸ்குமாரை இழக்காமல் இருந்திருந்தால்! இந்தியா கூட்டணியை சிந்தாமால், சிதறாமல் கட்டிக் காத்திருந்தால் மேற்கு வங்கத்தில் இன்னும் சில தொகுதிகளில் பாஜக தோல்வியை கண்டிருக்கும். காங்கிரசுக்கும், டி,எம்.சிக்கும் கூடுதல் எண்ணிக்கை கிடைத்திருக்கும். மம்தாவின் மமதையும் இதற்கு ஒரு காரணமாகும். பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் கைக் கோர்த்து இருந்தால் பாஜகவின் வெற்றி வாய்ப்பை குறைத்து இன்னும் சில தொகுதிகளில் வென்று இருக்கலாம். மத்திய பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையுமே பாஜகவிடம் தாரை வார்த்துள்ளன எதிர்கட்சிகள்! ஜோதிராதித்திய சிந்தியா என்ற துடிப்பான இளம் தலைவரை விரக்திக்கு ஆளாக்கி, பாஜகவிடம் தள்ளிய கமல்நாத் காங்கிரசை இன்று படுகுழியில் தள்ளியுள்ளார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த தொகுதிகள் போதுமானதல்ல. சிவசேனாவையும், தேசியவாத காங்கிரசையும் பிளந்து துரோகம் செய்தவர்களை மக்கள் பெரிய அளவில் தண்டிக்கவில்லை. டெல்லியில் ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு கடுமையான நெருக்கடியை பாஜக தந்தது. அரவிந்த் கேஜ்ரிவால், மணீஸ் சிசோடியா பொன்ற முன்னணி தலைவர்களை சிறையில் அடைத்தது. இந்தச் சூழலில் ஆம் ஆத்மி மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்பட்டிருக்க வேண்டுமே… என்னானது? இத்தனைக்கும் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் கைகோர்த்தும் ஏழு தொகுதிகளையும் பாஜகவிடம் இழந்துள்ளார்களே.. ஏன்? ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.பி ஸ்வாதிவால்மாலி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிலேயே வைத்து முதல்வரின் உதவியாளர் பிபவ்குமாரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவால் காட்டிய அலட்சியம் மன்னிக்க முடியாதது. அந்த சம்பவத்தின் அதிர்வும் கூட, இந்த தோல்விக்கு வித்திட்டிருக்க வாய்ப்புள்ளது. ராஜஸ்தானில் பெருந்தலைவர் அசோக்கெலாட்டும், இளம் தலைவர் சச்சின் பைலட்டும் ஒன்று சேர்ந்து உழைத்தது வீண்போகவில்லை. காங்கிரஸ் அங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்கள் தேர்தலில் பாஜகவிற்கு சரியான தண்டனையை தந்துள்ளனர். காஷ்மீருக்கு பாஜக அரசு செய்த தீமைகள் கொஞ்ச நஞ்சமல்ல, ஆயினும் அங்கு மூன்று தொகுதிகள் அங்கு வெற்றி பெற்றுள்ளது. மூன்று தொகுதிகளில் நிற்காமலே தவிர்த்துள்ளது. ஆயினும், காங்கிரஸ் காஷ்மீரில் ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பெற முடியவில்லை. இடதுசாரிகள் நிலைமை பெரிதும் கவலையளிக்கிறது. அடித்தள மக்கள் பிரச்சினைக்கு குரல் தரக்கூடிய அந்தக் கட்சி மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலுமே கூட முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டிருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கேரளாவிலோ தேய்ந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளாக மக்கள் விரோத அட்சி செய்யும் திமுகவை விமர்சிக்காமல் காட்டிய பொறுமையும், அடிப்படையில் தமிழக மக்களுக்கு பாஜகவின் மீதுள்ள கோபமும், திமுகவின் அபரிதமான பணபலமும் தான் இங்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா இரு தொதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பை தந்துள்ளது! பாஜகவிற்கு அனுசரணை காட்டிய பாரபட்ச தேர்தல் ஆணையர்கள்! திமுகவிற்கு கிடைத்த வெற்றிக்கு அந்தக் கட்சி பாஜகவிக்கு தான் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. மூன்றாண்டுகால திமுக ஆட்சியின் முறைகேடுகளை, அதிருப்திகளைக் கடந்து பாஜக என்ற ஆபத்தை தடுக்க தமிழக மக்கள் முன்னுரிமை தந்துள்ளனர். அந்த வகையில் தான் திமுக வெற்றி பெற்றது. மற்றொருபுறம் அதிமுகவானது தமிழகத்தில் திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி போராடும் திரானியை சுத்தமாக இழந்து நிற்கிறது. அந்த அளவுக்கு சென்ற ஆட்சியில் அதிமுகவினர் செய்த ஊழல்கள் அவர்களின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டுள்ளது! இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு திமுக எதிர்ப்பு அரசியலை வெற்றிகரமாக செய்வதன் காரணமாகத் தான் அண்ணாமலைக்கு மவுசு கூடியுள்ளது. பாஜகவும் தன் வாக்கு வங்கியை இரு மடங்காக்கியுள்ளது. தமிழகத்தில் நாற்பது தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியதானது அதன் பாஜக எதிர்ப்பின் வீரியத்திற்கு கிடைத்த வெற்றியே தானன்றி, திமுக ஆட்சிக்கு மக்கள் தந்த நற்சான்றிதழ் அல்ல. கடைசியாக ஒன்று. தேர்தல் ஆணையர்கள் மிகவும் பாரபட்சமாக நடந்து கொண்டனர். பிரதமர் மோடியின் வரம்பு மீறிய, வன்முறையத் தூண்டும் பேச்சுக்களை அவர்கள் கண்டுகொள்ளாமல் அனுமதித்தனர்! பாஜகவின் பணபலமும், அதிகார பலமும் கூட தேர்தல் வெற்றிக்கு பெரிதும் உதவியது. காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கியது என்பது எல்லாம் மறுக்க முடியாத உண்மைகளே! இது தேர்தலில் மக்கள் தீர்ப்பு குறித்த முதல் விமர்சனம் தான். அடுத்து விரிவாகப் பார்ப்போம். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/18084/election-result-gave-teachings/
  11. பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (05 ஜூன்) ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 8 ) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND எதிர் IRL 22 பேர் இந்திய அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் அயர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். அயர்லாந்து கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  12. ஏழாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நெதர்லாந்து அணி குறைந்த வெற்றி இலக்கை 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 12 2 குமாரசாமி 12 3 தமிழ் சிறி 12 4 பிரபா USA 12 5 ஏராளன் 12 6 ரசோதரன் 12 7 அஹஸ்தியன் 12 8 கந்தப்பு 12 9 எப்போதும் தமிழன் 12 10 நந்தன் 12 11 நீர்வேலியான் 12 12 கோஷான் சே 12 13 வீரப் பையன்26 10 14 சுவி 10 15 நிலாமதி 10 16 தியா 10 17 புலவர் 10 18 P.S.பிரபா 10 19 நுணாவிலான் 10 20 வாதவூரான் 10 21 கிருபன் 10 22 வாத்தியார் 10 23 கல்யாணி 10
  13. ஆறாவது போட்டியில் முதலில் ஸ்கொட்லாந்து துடுப்பாட்டத்தில் இறங்கியது. எனினும் இடையில் மழையால் தடைப்பட்டு, மீண்டும் ஆட வந்தபோது இரு அணிகளுக்கும் 10 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டன. ஸ்கொட்லாந்து 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ஓட்டங்களைப் பெற்றது. எனினும் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் இங்கிலாந்து அணி ஆடமுடியவில்லை. ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. முடிவு: முடிவில்லை! யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!
  14. தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணி 13703 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் மூன்றாமிடமும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா நான்காமிடமும் பெற்றுள்ளனர். விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 221257 பெற்று பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 228091 வாக்குகளுடன் முதலிடத்திலும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 96485 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 44712 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
  15. இந்தப் போட்டியில் என்னை ஒருத்தரும் வெல்லமாட்டினம் போல இருக்கு! வென்றால் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் நன்றி!
  16. முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா June 4, 2024 தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின. இவ்வாறானதொரு கற்பித்தலை செய்திருக்கும் நினைவேந்தலைக் குழப்புவதற்கு இலங்கை அரசு பல வேலைகளை முன்னெடுத்தது. அதில் முதன்மையானது, நினைவேந்தல் விடயத்தில் வடக்கு, கிழக்கு எனத் தனித்தனியாகக் கையாண்டமை. கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களும் மிகுந்த விசுவாசத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கிழக்கில் கட்டுப்படுத்திக்கொடுத்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியவர்களை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். நினைவேந்துவோரை களத்தில் இறங்கி அச்சுறுத்தினர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குசெய்த நினைவேந்தல் நிகழ்வைக் காலால் தட்டிவிட்டுக் குழப்பியடித்தனர். ஆனால் வடக்கில் இந்த அடக்குமுறையை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகினர். இறுதி நாள் நினைவேந்தலில் கூட வடக்கு, உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சீருடையணித்த பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ காணமுடியவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிழக்குப் பக்கமாகவோ,இலங்கைத் தீவுக்குள் வடக்குத் தவிர்த்து தமிழர்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களுக்குள்ளோ பரவவிடாது தடுத்துவிட்டனர். நினைவேந்தல் விடயத்தில் வடக்கை தனியாகவும், கிழக்கை தனியாகவும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு தேசமாகத் தமிழர்கள் நினைவேந்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கக்கூடும். இம்முறை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் அம்னெஸ்டி இன்டர்நெனல் அமைப்பின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல்நாள் மாலையே முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த அம்மணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். “சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது என்ன உணர்கிறீர்கள்” என்றவகையறாக் கேள்விகளை சந்தித்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மறுநாள் அதாவது நினைவேந்தல் அன்று, வட்டுவாகல் பாலத்தில் இறங்கி நடந்தார். நினைவேந்தல் மையத்திற்கு வருகைதந்து, இனப்படுகொலையானவர்ககளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார். அவரைக் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தம் சகோதரியைப் போல அழைத்துவந்தனர். ஊடகங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அம்மணியைக் கட்டியணைத்து அழுவார்கள், தம் வலியைச் சொல்வார்கள், அந்நேரம் ஏதாவது ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் காத்திருந்தன. ஆனால் அவ்வாறான எவ்வித “அசம்பாவிதங்களும்” ஏற்படாதபடிக்கு, 17ஆம் திகதி காலையே முல்லைத்தீவுக்கு வருகைதந்துவிட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் “கவனித்துக்கொண்டார்கள்”. அம்மணியின் வருகையை அமைதியாக வழிநடத்தினர். நினைவேந்தல் மையத்திற்கு வெளியே வந்த அம்மணி, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எந்தப் பதிலிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தப்பித்தவறிகூட அந்த வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். அவ்விடத்தில் அவர் அளித்த பதில்கள் மிக நுணுக்கமானவை. இம்முறை நினைவேந்தலில், ஏ.பி, ஏ.எவ்.பி, கெட்டிஇமேஜஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் கலந்துகொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் சிதறிக் கிடக்கும் போரின் எச்சங்கள் தொடக்கம், இடிந்து கிடக்கு கட்டடஙகள் வரையில் அனைத்தையும் ஒளிப்படம் எடுத்தன. நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டன. எவ்விடத்திலும், எந்தக் கெமராவும், தமிழினப்படுகொலை என்ற பாதகையைக்கூட ஒளிப்படமெடுக்கவில்லை. தமது ஊடகச் செய்தி அறிக்கைகளில் அந்த வார்த்தையையோ, அந்த வார்த்தையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களையோ வெளியிடவில்லை. “தமது ஊடகம் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை” என வெளிப்படையாகவே சொன்னார் ஒரு வெள்ளைக்கார ஊடகர். இதன்காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் வாசிக்கப்பட்ட அறிக்கையை எந்த சர்வதேச ஊடகங்களும் வெளியிடவுமில்லை. இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகளில் மதம் சார்ந்த சில சலசலப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டன. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பினை அது ஏற்படுத்தும். நினைவேந்தலுக்கு மூன்று நாட்கள் மீதமாக இருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தாது, அதனை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்கு நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழு தயாராகவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மதவாத சக்திகள் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகளுக்குள் தலையிடுவதைத் தடுக்க முடியும். இம்முறை நினைவேந்தலில் அவதானிக்கப்பட்ட மிகமுக்கியமான விடயங்களில் ஒன்று, நினைவேந்தல் இடம்பெறும் காணி சம்பந்தமானது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் வளாகமானது, அரசுக்கு சொந்தமானது. அந்தக் காணியைக் கரைச்சி பிரதேச சபையின் கீழ் கொண்டுவந்து, நினைவேந்தல் மையமாகப் பிரகடனம் செய்வதற்கான பணிகள், வட மாகாண சபை இயங்கும் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அதிக கவனமெடுக்காமை காரணமாக, எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவி்ல்லை. தற்போது, பிரதேச சபைகள் செயலற்றிருக்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையம் நிலஅளவைத் திணைக்களத்தின் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. எனவே குறித்த நினைவேந்தல் மையத்தினை அரசு தன் நிலம் என வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அபகரித்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் குறியீடாக இன்றும்எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக் கட்டடம் மாத்திரமே. பதுங்குகுழியின் எச்சங்கள், துப்பாக்கி ரவை பதிந்த சுவர்கள், போராளிகளின் ஆடைகள், பொதுமக்களின் பாவனைப்பொருட்கள் என அந்தச் சூழலில் இனப்படுகொலையை நினைவுபடுத்துகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மாவீரர் மண்டபமாகவும் அந்தச் சந்தைக் கட்டடத்தொகுதி செயற்பட்டிருக்கின்றது. எனவேதான் அதனையாவது இனப்படுகொலையின் நினைவாக அப்படியே பேணிப்பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அவசியமானதாகும். ஆனால் அந்தக் கட்டடத்தை இடித்துப் புதிய சந்தைத்தொகுதியொன்றை அவ்விடத்தில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையன்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகள் இறுதிப்போர் காலத்தில் முக்கியமான இடங்களாக இருந்தன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும், இனப்படுகொலையான தமிழர்களின் புதைகுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் போர்க்காலத்தை நினைவுபடுத்துகின்ற பொருட்கள் சிதறிக்கிடந்தன. இறுதியா உணவு உண்ட உணவுப் பாத்திரம் தொடக்கம், பதுங்குகுழிக்கு பயன்படுத்திய உடுபுடவைகள் வரைக்கும் அந்நிலமெங்கும் சிதறிக்கிடந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் அகற்றப்பட்டிருக்கின்றன. தெற்கிலிருந்து வருகைதரும் இரும்பு வியாபாரிகளுக்கு அப்பொருட்களை உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்துவிட்டனர். காணிகளைத் துப்பரவு செய்கிறோம் என்கிற பெயரில், அங்கு கிடந்த துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரித்துவிட்டனர். தன் வரலாற்றைச் சரியாகப் பேணவும், ஆவணப்படுத்தவும் தெரியாத இனமாகத் தமிழர்கள் இருக்கின்றமையும், இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கின்றமையுமே இதற்குப் பிரதான காரணமாகும். உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் இதுபோன்ற விடயங்களை பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மிகப்பெரிய இனப்படுகொலையின் பின்னர் இஸ்ரேலியர்கள் தமக்கான நாட்டைக் கட்டமைத்துக்கொண்டாலும், தம் மீது ஜேர்மனியர்கள் நடத்திய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் ஆவணங்களை, ஆவணக்காப்பகங்களில் இன்றும் வைத்திருக்கின்றனர். உலகப் போர்க்காலத்தில் அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் அந்தப் பாதிப்பின் எச்சங்களை இன்றும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர். உலகம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட யுகத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்று, அதற்கான ஆவணங்களைத் தவறவிட்டிருப்பது எவ்வளவு துயரமானது? அடுத்து வட்டுவாகல் பாலம். இறுதிப் போரின் நாட்களை நினைவுகூறும் எவராலும் வட்டுவாகல் பாலத்தைத் தவிர்க்க முடியாது. பாலத்தைக் கடந்த பலர் இன்று உயிரோடில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டு விட்டனர். பாலத்தில் இறுமருங்கிலும் இராணுவத்தால் சுடப்பட்ட நிலையில் இறந்து மிதந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இவ்வளவு பெறுமதிமிகு நினைவுகளைக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலம் மிக விரைவில் மீளப் புனருத்தானம் செய்யப்படப்போகின்றது. அந்த பாலத்தை நீக்குவிட்டுப் புதிய பாலமொன்றை அமைத்துத் தரும்படி உள்ளூர் மக்களே அரசைக் கோரியிருக்கின்றனர். இப்படியாக தமிழ் இனப்படுகொலையின் பௌதீக சாட்சியங்களாக இருக்கின்ற பல விடயங்களும் விரைவாகவே அழிக்கப்பட்டு வருகின்றன. அனேகமாகத் தமிழினப் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் செய்யும் மேற்குறித்த எந்த நினைவேந்தல் எச்சங்களும் முள்ளிவாய்க்காலில் இருக்கப்போவதில்லை. சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும், தமிழர்களும் முள்ளிவாய்க்கால் எனப்படும் தமிழினப் படுகொலையின் குறியீட்டு நிலத்தை எப்படி மாற்றிவருகின்றனர் என்பதற்கான சில விடயங்கள்தான் இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நிலம் அமைதியாகக் கிடந்து எதிர்கொள்ளும் சவால்கள், சதிகள் பலநூறு. https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-நிலம்/
  17. 11 மணி நிலவரம் தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி முன்னிலை நிலவரம் திமுக - 39 (முன்னிலை) அதிமுக - 0 பாஜக - 1 நாம் தமிழர் - 0 மற்றவை - 0 தருமபுரியில் பா.ம.க. சவுமியா அன்புமணி ஒருவர்தான் திமுக கூட்டணியைத் தவிர்த்து முன்னிலையில் நிற்கின்றார்
  18. திமுக+ 38 அதிமுக+ 1 பாஜக+ 1 நாதக 0 கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 19,869 வாக்குகள் பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 27,269 வாக்குகளுடன் முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 12,871 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி கலாமணி 3,678 வாக்குகளை பெற்றுள்ளார். தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 69960 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் ஆ.மணி 54882 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் 46332 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10271 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார். விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 43945 பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 41967 வாக்குகள் வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 17002 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 9446 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
  19. ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களின் அதிரடியான ஆட்டத்துடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய உகண்டா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 16 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. ஆப்கான் வீரர் Fazalhaq Farooqi 4 ஓவர்களில் 9 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்! முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.
  20. பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள்.
  21. திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ கண்டாமணி June 3, 2024 திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு 1000 கிலோ எடை கொண்ட கண்டாமணி லண்டன் வாழ் சைவமக்களின் பங்களிப்புடன் வழங்கிவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டது. மாதுமை உடனுறை திருக்கோணேஸ்வரர் பெருமான் திருத்தலத்திற்கு லண்டனில் வசிக்கும் திருவாளர் ம. ஜெயசீலன், பா. சுரேசன் மற்றும் ச.லிங்கேஸ்வரன் ஆகியோர் தலைமைப் பொறுப்பேற்று வெளிநாடுகளில் வசித்து வரும் ஈழநாட்டினை பூர்வீகமாக கொண்ட சைவ அடியார்களின் நிதி பங்களிப்புடன் செய்யப்பட்ட ஆயிரம் கிலோ நிறை கொண்ட காண்டாமணி வெள்ளிக்கிழமை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினரிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது லண்டன் மாநகர் வாழ் இந்து மக்களின் முன்னெடுப்பில் உலகெங்கும் பரந்து வாழும் இலங்கை இந்து மக்களின் பங்களிப்புடனும் , திருக்கோணேஸ்வரப் பெருமானுக்காக லண்டனில் தயாரிக்கப்பட்ட 1000 கிலோ நிறையுடைய நவீன முறையில் மின்சாரத்தில் தானாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காண்டா மணியானது வெள்ளிக்கிழமை பெருமானின் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலனசபையினரிடம் கையளிக்கப்பட்டது. https://www.ilakku.org/திருக்கோணேஸ்வரர்-பெருமா/
  22. நேபாளம் ஒல்லாந்தரை கலைச்சு அடிப்பாங்கள்! அதுக்கு ஸ்ரோங்காக முட்டை வேணும்தான்!
  23. பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (04 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 5) முதல் சுற்று குழு C : செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG எதிர் UGA அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். இப்போட்டியில் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா? 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG எதிர் SCOT 21 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் இரண்டு பேர் மாத்திரம் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து புலவர் நுணாவிலான் இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்? 7) முதல் சுற்று குழு D : செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED எதிர் NEP 19 பேர் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் நான்கு பேர் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் நிலாமதி நுணாவிலான் கிருபன் கல்யாணி இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?
  24. நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 77 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி குறைந்த வெற்றி இலக்கை 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். சிறிலங்கா வெல்லும் எனக் கணித்த @வீரப் பையன்26 க்கும் @வாதவூரான்க்கும் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 8 2 நிலாமதி 8 3 குமாரசாமி 8 4 தமிழ் சிறி 8 5 நுணாவிலான் 8 6 பிரபா USA 8 7 ஏராளன் 8 8 கிருபன் 8 9 ரசோதரன் 8 10 அஹஸ்தியன் 8 11 கந்தப்பு 8 12 எப்போதும் தமிழன் 8 13 நந்தன் 8 14 நீர்வேலியான் 8 15 கல்யாணி 8 16 கோஷான் சே 8 17 வீரப் பையன்26 6 18 சுவி 6 19 தியா 6 20 புலவர் 6 21 P.S.பிரபா 6 22 வாதவூரான் 6 23 வாத்தியார் 6

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.