Everything posted by கிருபன்
-
ஐ.நா. அறிக்கையை நிராகரிக்கும் இலங்கை – கடுமையான பதிலடி கொடுக்கவும் திட்டம்
ஐ.நா. அறிக்கையை நிராகரிக்கும் இலங்கை – கடுமையான பதிலடி கொடுக்கவும் திட்டம் May 21, 2024 வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக் கூறலைக் வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல் முடிவுக்கு வருவதற்கு முன்னதாக அறிக்கை வெளியிடப்பட்ட நேரம் குறித்தும் இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் “இலங்கையில் பலவந்தமாக காணாமல் போனவர்களுக்கான பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பில் 45 பக்க அறிக்கையை வெளியிட்டது. “இலங்கையில் தொடரும் பொறுப்புக்கூறல் பற்றாக்குறை” பற்றிக் குறிப்பிட்டு, உள்நாட்டு மட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தது. குற்றவியல் நீதி மற்றும் பிற தொடர்புடைய செயல்முறைகள். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் இலங்கையுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்றும், உலகளாவிய அதிகாரவரம்பு அல்லது பிற அதிகார வரம்புகளைப் பயன்படுத்தி விசாரணைகள் மற்றும் வழக்குகளைத் தூண்டுதல் மற்றும் இலக்குத் தடைகள் தேவை என்றும் அறிக்கை கோருகிறது. அறிக்கை வெளிவந்த நேரம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குற்றச்சாட்டுகள் முழுவதையும் அரசியலாக்குவது போல் தெரிகிறது என்று, வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார். மூத்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக இதுபோன்ற “ஆதாரமற்ற, தெளிவற்ற மற்றும் பக்கச்சார்பான” அறிக்கையை வெளியிட்ட ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் எந்த ஐ.நா உறுப்பு நாடுகளாலும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார். ஐ.நாவுக்கான (ஜெனீவா) தூதுவர் ஹிமாலி அருணதிலகா, உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கு கடிதம் எழுதவுள்ளார், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான அவரது ஒருதலைப்பட்ச முன்முயற்சி மற்றும் புறம்பான நலன்களுக்கு சேவை செய்வதற்கான ஆணை அல்லது அதிகாரம் இல்லாதபோது அதன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தின் நெறிமுறை மீறல் குறித்து மற்ற உறுப்பு நாடுகளுடனும் அவர் பேச உள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக மூன்று தசாப்தங்களின் இறுதிக் கட்டங்களில் போர்க்களத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்த நீண்ட ஆயுத மோதலில் இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் இலங்கையின் வடக்கிலும் மேற்குத் தலைநகரங்களிலும் புலம்பெயர் இலங்கையர்களின் ஒரு பிரிவினரால் நினைவு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வரும் வேளையில் அதற்கு முந்தைய நாள் குறித்த நேரப் பிரச்சினையை பேச்சாளர் எழுப்பினார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் தற்போதுமனித உரிமை மீறல்கள் பற்றிய தெளிவான விபரங்கள் வெளிருகையிலும், “உலகில் வேறு பகுதிகளில் மொத்த மனித உரிமை மீறல்கள் நடக்கும் நேரத்தில்” இலங்கையை குறிவைக்கும் ஐ.நா. முகமையின் முயற்சியே இது என்றும் பேச்சாளர் கூறினார். https://www.ilakku.org/ஐ-நா-அறிக்கையை-நிராகரிக்/
-
தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்!
தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்! adminMay 20, 2024 இலங்கையில் நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் மனுவானது, இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (International Centre for Prevention and prosecution of Genocide (ICPPG)) என்ற அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுமான மனுமயூரன் கிருபானந்தா மனுநீதி, சசிகரன் செல்வசுந்தரம், கஜானன் சுந்தரலிங்கம், றோய் ஜக்சன் ஜேசுதாசன், துஷானி இராஜவரோதயம் மற்றும் சுபமகிஷா வரதராஜா ஆகியோர் சமர்ப்பித்தனர். இந்த மனுவில், கனடாவில் இடம்பெற்றதை போல, பிரித்தானிய பாராளுமன்றமும் சிறிலங்காவால் இழைக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது மனுவானது, இலங்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடுகடந்த உறவுகளின் சங்கத்தினரால் (Association of Exiled Relatives of the Enforced Disappearances in Sri Lanka – United Kingdom (AERED-UK)) கையளிக்கப்பட்டது. இம் மனுவிலும் இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும்படியும், இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா, முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்ஷ மற்றும் கோத்தபாய ராஐபக்ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை பின்பற்றி பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கபட்ட பின்னரும் FDCO நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு எமாற்றத்தை தருவதாகவும் அத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகத்துடன் அண்மையில் பாதிக்கபட்ட தமிழர்களிற்கு சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்திதருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனுவினை, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பி்ரித்தானியா வாழ் உறவுகள் கையளித்தனர். குறிப்பாக, 18 மே 2009 வெள்ளைக்கொடியுடன் வண.பிதா.பிரான்சிஸ் தலைமையில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான தமிழீழ காவல்துறையின் இரண்டாவது பொறுப்பாளரான மாதவன் மாஸ்டர் (சிவபாலசுந்தரம் சிவசிதம்பரம்)அவர்களின் மகனான கோகுலன் சிவசிதம்பரம், தளபதி ஜெரி (விக்டர் விமலசிங்கம் அமரசிங்கம்) அவர்களின் மகனான புகழினியன் விக்டர் விமலசிங்கம், நீதிநிர்வாகதுறை பொறுப்பாளர் பரா (இளையதம்பி பரராஜசிங்கம்) அவர்களுடைய பேரனாகிய ஈஸ்வரன் ஜெனார்த்தனன், கேணல் கண்ணன் (ஞானச்செல்வம் உதயராஜா) அவர்களின் மகனான உதயராஜா பவசுதன், போராளியான யூக்சின் வினோஜினி அந்தோனிப்பிள்ளை அவர்களின் சகோதரியாகிய மேரி யூலியானா சசிகரன் மற்றும் அஹிதர் பாலசுப்பிரமணியம் அவர்களின் தம்பியான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் கையளித்தனர் பிரித்தானியா புலம் பெயர் தமிழர்களின் இரண்டாவது வாழ்விடமாக திகழ்கின்ற போதிலும், இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் பிரிட்டனால் முன்னெடுக்கப்படாமை கவலையளிக்கின்றது. அதை நிவர்த்தி செய்யும் வகையில், கடந்த 2021 இல் சீனாவின் உர்கர் மக்களுக்கு இனஅழிப்பு நடைபெற்றதை பிரித்தானியா முறையாக ஏற்றது போன்று, சிறிலங்காவின் தமிழின அழிப்பையும் பிரித்தானிய பாராளுமன்று ஏற்க வேண்டும்” என்றும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 1,40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமுற்றதுடன் பலர் இடம்பெயர்ந்த போது 58 ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தக்குற்றவாளிகளை தடை செய்ய பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/203205/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்னும் 10 நாட்கள் உள்ளன! போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
எல்லோருக்கும் இனாமாக 70 புள்ளிகள் கிடைத்ததுதானே! மனிசருக்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் சத்தமில்லாமல் வாங்குவினம்! ஆனால் ஒரு சதம் எடுத்தாலும் பிலாக்கணம் வைப்பினம்!😂 மைனஸுக்கு கிட்ட வரும்! ஆனால் கீழே போகாது! ஒருத்தராலும் சாத்திரம் பார்க்கமுடியாது! நடப்பதுதான் நடக்கும்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நாளை செவ்வாய் (21 மே) முதலாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 04) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) KKR எதிர் SRH மூன்று பேர் KKR வெல்லும் எனவும் ஒரே ஒருவர் SRH வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சரியாகக் கணித்தவர்களுக்கு (ருக்கு) 3 புள்ளிகள் கூட்டப்படும். மற்றையவர்களுக்கு 3 புள்ளிகள் குறைக்கப்படும்! போட்டியாளர் பதில் வீரப் பையன்26 CSK முதல்வன் CSK சுவி SRH ஏராளன் RR நிலாமதி RR அஹஸ்தியன் RR ஈழப்பிரியன் RR கல்யாணி KKR கந்தப்பு CSK கறுப்பி CSK எப்போதும் தமிழன் CSK வாதவூரான் RR கிருபன் RR நீர்வேலியான் RR கோஷான் சே RR நுணாவிலான் KKR புலவர் KKR
-
தமிழரசுக் கட்சி வழக்கு தொடர்பில் சுமூகமான முடிவை எட்ட முயற்சி – சட்டத்தரணி கே.வி.தவராசா
தமிழரசுக் கட்சி வழக்கு தொடர்பில் சுமூகமான முடிவை எட்ட முயற்சி – சட்டத்தரணி கே.வி.தவராசா May 20, 2024 தமிழரசுக் கட்சி தொடர்பில் சுமூகமான முடிவுகள் எட்டப்படவேண்டும் என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகள் அமைந்துள்ளன என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. இதன்பின்னர் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்- “திருகோணமலை நீதிமன்றில் உள்ள வழக்கை முதல் திகதியிலேயே முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் செயற்ப்பட்டோம். இது ஒரு பொதுநல வழக்கு. தற்போது நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. இறுதியாக நாம் ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளோம். வழக்காளியின் சட்டத்தரணிகளுடனும், வழக்காளியுடனும் பேசி இந்தவிடயத்தினை இணக்கப்பாட்டிற்கு கொண்டு வந்து, வழக்கை முடிவுறுத்துவதற்கான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மத்தியகுழு உறுப்பினர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் மீண்டும் பொதுக் குழுவைக் கூட்டி சுமூகமாக முடிவு எட்டப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது செயற்பாடுகள் அமைந்தன” என்று தெரிவித்தார். இதேவேளை குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனும், கே.வி.தவராசாவும் மத்தியகுழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத்தெரிவிக்கப்படுகின்றது. https://www.ilakku.org/தமிழரசுக்-கட்சி-வழக்கு-த/
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு 20 May, 2024 | 10:52 AM ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளது. அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார். இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஹெலிகொப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். https://www.virakesari.lk/article/184010
-
ஞானசாரதேரருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - ஜனாதிபதிக்கு பௌத்த மததலைவர்கள்கடிதம்
ஞானசாரதேரருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - ஜனாதிபதிக்கு பௌத்த மததலைவர்கள்கடிதம் 20 May, 2024 | 11:12 AM வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் என பௌத்த மததலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய ஐக்கியம் சமூக ஆதரவு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் ஞானசார தேரர் வழங்கியபங்களிப்பை கருத்தில் கொண்டு மன்னிப்பு வழங்கவேண்டும் என பௌத்தபீடங்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றைஎழுதியுள்ள பௌத்தமததலைவர்கள் மார்ச்28 ம் திகதி ஞானசாரதேரருக்கு நான்குவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். சமூகத்தில் தீவிரவாதசக்திகளின்செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கும் நடவடிக்கையில் ஞானசாரதேரர் ஈடுபட்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள பௌத்தமததலைவர்கள் பாதுகாப்பு படையினருக்கு ஆதரவளித்தார் இலங்கையில் சில தீவிரவாத சக்திகள் தங்கள் நடவடிக்கைகளை விஸ்தரிப்பதை தடுக்க உதவினார் இதன் காரணமாக தீவிரவாதிகள் தொடர்பான பல சம்பவங்கள் தடுக்கப்பட்டன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/184015
-
தேர்தல் புறக்கணிப்பே தமிழினத்துக்குப் பலம்! முன்னணி அறிக்கையூடாக தெரிவிப்பு
தேர்தல் புறக்கணிப்பே தமிழினத்துக்குப் பலம்! - முன்னணி அறிக்கையூடாக தெரிவிப்பு முன்னணி அறிக்கையூடாக தெரிவிப்பு ஒற்றையாட்சி அரசமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசமைப்பு கொண்டுவரப்படல் வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் தமிழர் ஒற்றுமையாக நிறைவேற்றப்போகும் இந்த அரச தலைவர் தேர்தல் புறக்கணிப்பினூடாக அரசியல் ரீதியாகவும் இராஜதந்திரரீதியாகவும் ஏற்படுத்தப்படப்போகும் அழுத்தமானது தமிழினத்துக்கே மிகப்பெரிய பலத்தை வழங்கும் என்ற உண்மையை விளங்கிக் கொண்டு செயற்படவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிக்கையூடாக தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், புறக்கணிப்பும் பின்னணியும் : தமிழர் தேசத்தில் இன்றும் சிங்கள பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், ஊடாக கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் தமிழர் தேசத்தைச் சிறிலங்கா அரசு எதிரி தேசமாகவே கருதி செயற்பட்டுவருகின்றது. ஒற்றையாட்சி அரச கட்டமைப்பினுள் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் தமது கைகளில் இருக்கும்வரை தமிழர்களால் அரசுக்கு எந்தவொரு நெருக்கடியையும் ஏற்படுத்த முடியாதெனக் கருதும் சிறிலங்கா அரசு தமிழ் மக்களைத் தனது மக்களாகக் கருதாமல் எதிரிகளாகக் கருதி சிங்கள தேசத்தின் நலன்களை மட்டுமே பேணிச் செயற்பட்டுவருகின்றது. அவ்வாறான அரச தலைமைத்துவத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற காத்திரமான செய்தி வெளிப்படுத்தப்பட வேண்டுமாயின் அரச தலைவர் தேர்தலை நிராகரிப்பதே தமிழ் மக்களுக்குள்ள ஒரே தெரிவாகும். இதன்மூலம் தமிழர்களுடன் கட்டாயமாகச் சமரசத்துக்கு வரவேண்டிய அரசியல், இராஜதந்திர நெருக்கடிகளை அரசுக்கு ஏற்படுத்த முடியும். பொருளாதார வீழ்ச்சியும் இனப்பிரச்சினையும் : தமிழ் மக்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள், அதியுச்சப் பலத்திலிருந்த காலத்தில் சிறிலங்கா அரசு சந்தித்த பொருளாதார வீழ்ச்சியை விடவும் தற்போது சிறிலங்காவின் பொருளாதாரம் பன்மடங்கு அடிமட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப்பெரியதொரு வீழ்ச்சியை ஏற்படுத்துகின்ற போதுதான், சிறிலங்கா இனவாத அரசு தமிழ்மக்களின் கோரிக்கைகளை கருத்திலெடுக்கும் என்பதாலேயே 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிறிலங்காவின் பொருளாதார இலக்குகளைக் குறிவைத்து அதன் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதனால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலேயே அரசு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு உடன்பட்டிருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னருங்கூட 75 ஆண்டுகளாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் தீவிரமடைந்து வருகின்றன. அவ்வொடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் தமிழர்கள் தொடர்ந்தும் போராடிவருகின்றனர். இதனால் குறைக்கமுடியாமல் காணப்படும் அதிகரித்த பாதுகாப்புச் செலவினம், இனவாதத்தை மூலதனமாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆட்சியாளர்களின் ஊழல், பிராந்திய மற்றும் பூகோள ஆதிக்கப் போட்டி என்பவை நாட்டின் பொருளாதாரத்தை அடிமட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளன. மகாவம்ச புனைவுக்குள் சிங்கள மக்கள் மூழ்கியிருப்பதனால் இனவாதத்தை மூலதனமாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்களை சிங்கள மக்களால் ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. இலங்கையின் ஒட்டுமொத்த அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும் ஊதியத்தில் 48 சதவீதமான கொடுப்பனவுகள் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடுவோருக்கே வழங்கப்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் சுமையாக உள்ளது. இந்நிலையில் பாதுகாப்புத் துறைக்கு வருடாந்தம் ஒதுக்குகின்ற நிதியைக் குறைத்தேயாக வேண்டுமென பன்னாட்டு நாணய நிதியமும் வலியுறுத்திவருகின்றது. ஆனால் சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாத நிலையில் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் கொதித்தெழும் போதெல்லாம் ஆயுதப்படைகளையும் சிறிலங்கா பொலிஸாரையும் பயன்படுத்தியே தமிழ் மக்களை அடக்குகிறார்கள். இந்த அணுகுமுறை தொடரும்வரை பாதுகாப்புச் செலவினத்தை ஒருபோதும் குறைக்கவே முடியாது என்பதுடன் அதனை அதிகரித்தே செல்லவேண்டியிருக்கும். ஓர் அரசின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதனூடாகவும், ஏற்றுமதியை அதிகரிப்பதனூடாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். உற்பத்தியையும் ஏற்றுமதியையும் மேம்படுத்தாமல் பொருளாதாரத்தில் நிலைத்து நிற்கக்கூடிய முன்னேற்றத்தை எந்த வகையிலும் உறுதிப்படுத்த முடியாது. நாட்டின் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டுமாயின் வெளிநாட்டவர்களின் முதலீடுகள் அவசியமானதாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ளவதற்கு முன்னர் நாட்டின் உறுதிப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துவர். எதிர்காலத்தில் குழப்பம் வரக் கூடியதொரு நாடாக சிறிலங்கா நோக்கப்படுகின்ற நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யப் பின்னடிக்கின்றார்கள். அந்த நிலையை மாற்றி வெளிநாட்டு முலீட்டாளர்களது மூதலீடு செய்வதற்கான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டுமாயின் பொருளாதார உறுதித்தன்மை ஏற்படுத்தப்படல் வேண்டும். அதனை ஏற்படுத்துவதற்கு இனப்பிரச்சினையைத் தீர்த்தே ஆக்வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும். இவ்வாறானதொரு சூழலில் இலங்கையில் 75 வருடங்களாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு இரண்டு வழிமுறைகளே உள்ளன. 1. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளைக் கைவிடச் செய்து, பேரினவாத்துக்கு அடிமையாக வாழ்வதற்குத் தயாராக்குவது. அல்லது 2. தமிழ் மக்களது அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் நேர்மையாகச் செயற்பட்டு தமிழர் தேசத்தின் நிரந்தர இருப்பைப் பாதுகாக்கக்கூடிய தீர்வு நிலைப்பாடுகளை முன்வைத்து - சிறிலங்கா அரசுடன் பேரம்பேசல்களைச் செய்து தீர்வைப் பெற்றுக் கொடுப்பது. என்பனவாகும். இனவழிப்பு மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளது போராட்டம் மௌனிக்கப்பட்ட நாளிலிருந்து மேற்சொன்ன முதலாவது வழிமுறையை சிறீலங்கா அரசு கையிலெடுத்தது. அந்த முயற்சிகள் அனைத்துக்கும் பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளும் - 2009 ற்குப் பின்னர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வடக்குக் கிழக்குப் பிரதிநிதிகளும் கூட்டிணைந்து முழுமையான ஆதரவு வழங்கிச் செயற்பட்டிருந்தார்கள். இனப்படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத்தினரை பன்னாட்டுக் குற்றவியல் விசாரணைகளில் சிக்கவிடாமல் பாதுகாத்தவாறு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியவாறு - கைதுகள் சித்திரவதைகளை தொடர்ந்தபோதும், சிறிலங்கா அரசின் இனவழிப்பு போரால் பேரழிவுகளைச் சந்தித்த தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளினர். தமிழ் மக்களுக்குள் சோர்வு மனப்பான்மையை அதிகரிக்கச்செய்து - தாங்களாகவே உரிமைகளைக் கைவிடுவதற்குரிய சூழமைவுகளை உருவாக்கி - அடிமைத்தனமான ஒரு அரசியல் கலாசாரத்துக்குப் பழக்கப்படுத்துவதன் மூலம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை ஏற்று - அதற்கு அடிபணிந்து வாழும் நிலையை உருவாக்கும் முயற்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவந்தது. எனினும் அத்தகைய சதிமுயற்சிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் அவ்வப்போது அம்பலப்படுத்தி வந்தமையால் தமிழ்த் தேசியக் கொள்கையுடன் பயணிக்கும் எமது மக்களதும் - முன்னாள் போராளிகளதும் - புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களதும் ஒத்துழைப்புடன் சதிகளை முறியடித்து, எம் மக்களைத் தோல்வி மனப்பான்மையிலிருந்து ஓரளவுக்கேனும் மீட்டெடுத்து, இலட்சிய உறுதியுடன் போராடச் செய்யும் வரலாற்றுக் கடமையை எமது அரசியல் இயக்கமே முன்னகர்த்திவந்தது என்பதுடன் இன்றும் அதே வழியில் பயணித்துவருகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்;வும் நேர்மையான பேரம்பேசல்களும் : இனவாதிகளது ஊழல், பூகோள ஆதிக்கப்போட்டி, தமிழர்களது தொடர்போராட்டம் ஆகியவற்றால் ஏற்படும் நெருக்கடி நிலையை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழ் மக்களது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் பேரம்பேசும் நிலைமையை ஏற்படுத்த வேண்டியது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய முக்கிய கடமையும் பொறுப்புமாகும். நேர்மையான பேரம் பேசல்கள் நடைபெற்றனவா? போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களுக்குத் தங்கள் உரிமைகள் சார்ந்து முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் எத்தனையோ பேரம்பேசும் சந்தர்ப்பங்கள் அமைந்திருந்தன. அச்சந்தர்ப்பங்களை தமிழ் மக்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்கக்கூடிய வாய்ப்புக்கள், வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களிடம் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றிருந்த தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினருக்குக் கிடைத்திருந்தது. அவ்வாறாக சிறிலங்கா அரசுடன் பேரம் பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டபோதெல்லாம், அந்தப் பேரம் பேசும் சூழல்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருந்தது. எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கருத்துக்களை முற்றாகப் புறந்தள்ளி, மக்களது எதிர்பார்ப்புக்களுக்கு நேரெதிராகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு செயற்பட்டிருந்தது. சிறிலங்காவில் ஆட்சிப் பீடம் ஏறியவர்கள் முற்றுமுழுதாகத் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாக இருந்தனர். அவர்களில் இந்திய மேற்குல நாடுகளுக்குச் சார்ந்து செயற்படும் ஆட்சியாளர்களைத் தமிழ் மக்களது மீட்பர்கள்போன்று சித்தரித்து - தமிழ் மக்களை ஏமாற்றி - அவ்வாறான அரசாங்கத்துக்கு தமிழ் மக்களது ஆதரவைத் திரட்டிக் கொடுத்திருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிப்பீடத்தில் ஏறிய இனவாத அரசின் கோரமுகத்தை மூடிமறைத்து, நிபந்தனைகள் எதுவுமின்றி ஆட்சியாளர்களுடன் இதயத்தால் இணைந்துள்ளதாகவும் எழுத்துமூலமான உடன்பாடுகள் தேவையில்லை என்றும் கூறி - நல்லாட்சி என்ற போர்வையைப் போர்த்தி - ஒடுக்குமுறையாளர்களையே தமிழ் மக்கள் விரும்பி ஆதரிக்கும் நிலையைத் தோற்றுவித்தார்கள். 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழர் நிராகரித்த சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு, ஒடுக்குமுறைச் சின்னமாகிய சிங்கக் கொடியை ஏந்திப்பிடித்தார்கள். ஐ.நா மனித உரிமைகள் பேரவை வரை சென்று பன்னாட்டு விசாரணையைத் தடுத்து, உள்ளக விசாரணைக்குள் முடக்கி இனப்படுகொலை செய்த ராஜபக்சேக்களையும் இராணுவத்தினரையும் குற்றவியல் விசாரணைகளிலிருந்து பாதுகாத்தார்கள். இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய அரசமைப்பின் மூலம் நிரந்தர அரசியல்த் தீர்வு என்ற போர்வையில் ஏக்கியராச்சிய அரசமைப்பை மைத்திரி – ரணில் அரசுடன் இணைந்து உருவாக்கியதுடன் வடக்கு கிழக்கு இணைப்பை கைவிடுவதற்கும், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஸ்டிக் கோரிக்கையைக் கைவிடவும் சம்மதம் தெரிவித்தார்கள். தீர்வுக்கான தொடக்கப்புள்ளி என்னும் போர்வையில் 13ஆம் திருத்தைத்தையும் ஒற்றையாட்சியையும் ஏற்றுக் கொண்டார்கள். நாட்டின் பொருளாதாரம் கோத்தாபய தலைமையிலான ஆட்சியின்போது அதலபாதாளத்தில் வீழ்ந்தது. அச்சந்தற்பத்தில் மக்களது ஆணையில்லாமலே அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். அவர் இந்திய மேற்குலகின் நலன்களைப் பேணிச் செயற்படும நபர் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ் மக்களது நலன்களைப் பாதுகாக்கும் எந்தப் பேரம்பேசல்களோ நிபந்தனைகளோ இல்லாமல் 'நாடே முதன்மை என்ற கோசத்துடன், அரச தலைவர் ரணில் கூட்டிய அனைத்துக் கூட்டங்களிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தவிர்ந்த ஏனைய வடக்குக் கிழக்கைச் சேர்ந்த 16 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். அவ்வாறு கலந்து கொண்டதன் மூலம், தமிழ் தேசத்தின் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பை நிறுத்தாது தீவிரப்படுத்தியவாறே, பன்னாட்டு நிதி உதவிகளைத் திரட்டிக்கொள்வதில் ரணில் - ராஜபக்ச அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்தார்கள். அத்துடன் இனப்படுகொலையாளிகளான ஆயுதப்படைகளையும் அவர்களுக்குக் கட்டளைகளை வழங்கிய ராஜபக்சக்களையும் பன்னாட்டுக் குற்றவியில் விசாரணைகளிலிருந்தும் தொடர்ந்தும் பாதுகாத்துவருகின்றார்கள். இவ்வாறு சோரம்போன தமிழ் அரசியல் தரப்புக்களை நம்பி தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாறுவதென்பது, எமது அரசியல் அபிலாசைகளை நாமே கைவிடுவதற்கும் - சிறிலங்காவின் சிங்கள தேசத்துக்குள் தமிழ்த் தேசத்தை அடகுவைப்பதற்கும் - எதிர்கால தமிழ்ச் சந்ததிகளை அடிமைகளாக்குவதற்குமே வழிவகுக்கும். எனவே பிராந்திய, சர்வதேச வல்லரசுகளதும் மற்றும் சிறிலங்கா அரசினதும் முகவர்களாகச் செயற்படும் தமிழ் அரசியல் தரப்புக்களது பொய் வாக்குறுதிகளையும் பசப்பு வார்த்தைகளையும் நம்பி, இனியும் தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது. தமிழ் மக்களுக்கு சிறிலங்காவின் அரச இயந்திரத்தில் நம்பிக்கையில்லை என்பதையும் - இனவாத சிறிலங்கா அரசைத் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றார்கள் என்ற செய்தியையும் பட்டவர்தனமாக வெளிப்படுத்துவதன் ஊடாகவும் - தமிழ் மக்கள் தங்கள் உரிமை சார்ந்த பயணத்தில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையும் - சிறிலங்கா அரசின் மிகப்பெரிய அழுத்தங்கள் ஒடுக்குமுறைகள் தொடர்கின்றபோதும்கூட, தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்காக கொந்தளித்துக் கொண்டேயிருக்கின்றார்கள் என்பதையும் - தமிழ் மக்கள் அடக்குமுறைகளுக்கு அஞ்சி தங்கள் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்ற செய்தியையும் வெளிப்படுத்துவதற்குரிய ஒரேயொரு வழிமுறை சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதேயாகும். இந்த அரச தலைவர் தேர்தல் புறக்கணிப்பானது எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலத்திலுங்கூட பேரம்பேசலுக்கான ஒரு அணுகுமுறையாகப் பின்பற்றப்பட்டிருந்தது. இன்று ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலிலும் - எமது மக்கள் தமது சுய முடிவின் அடிப்படையில் அரச தலைவர் தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவுக்கு வருகிறார்கள் என்பதும் - அரச தலைவர் தேர்தல் புறக்கணிப்பதன் மூலம், தமிழ் மக்கள் தமது அடக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியான புரட்சிகர மனப்பான்மையை வெளிப்படுத்தும் நிலைக்குச் செல்கிறார்கள் என்பதும் சிறிலங்கா அரசுக்கு வழங்கும் காத்திரமான செய்தியாக அமையும். மேற்கூறிய நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான வேறுவழிகள் ஏதுமின்றி தமிழ்மக்களுடன் ஒரு சமரசத்துக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற நிலையை சிறிலங்கா அரசுக்கு ஏற்படுத்த வேண்டும். இத்தகையை நிலையை உருவாக்குவதற்கே தமிழ் மக்கள் செயலாற்ற வேண்டும். அதற்கு, ஜனநாயக முறையில் – வன்முறைகளுக்கு இடமளிக்காத வகையில் - அதேநேரம் மிக ஆழமான ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும். தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாதொழித்து, சிங்கள பௌத்த விரிவாக்கத்தை முன்னெடுக்கும் சிறிலங்கா அரச கட்டமைப்பைத் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர்; என்ற செய்தியையும் - தமிழ் மக்களுடைய உரிமைகள் அங்கீகரிக்கப்படாதவரைக்கும் - தமிழ் மக்களுக்கு நன்மை எதுவும் கிடைக்காத வரையில் - தமிழ்த் தேசத்தின் மீதான சிங்கள மயமாக்கலையும், பௌத்த மயமாக்கலையும் தீவிரப்படுத்திவரும் ஆட்சியாளர்களைத் தெரிவு செய்யும் தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற செய்தியை இலங்கை அரசுக்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கும் வழங்கவேண்டியது தமிழ் மக்களின் மிகமுக்கிய கடமையாகும். பேரினவாதக் கட்சிகளும் சிங்கள வேட்பாளர்களும் : சிறிலங்காவில் எந்தவொரு அரச தலைவர் தேர்தலிலும் சிங்கள பௌத்த வேட்பாளர்களே வெற்றிபெறக் கூடிய நிலையில் - அவர்கள் தமது வெற்றிக்காக - சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் சிங்கள பௌத்த மேலாதிககத்தை உறுதிப்படுத்தும் ஒற்றையாட்சி அரசமைப்பைப் பேணிப்பாதுகாத்தல் என்ற கொள்கையை முன்கொண்டு செல்வதில் 'யார் வல்லவர்' என்னும் போட்டியில் ஈடுபடுகின்றனர். பிரதான வேட்பாளர்களது இனவாதக் கொள்கை நிலைப்பாட்டை தமிழ்த் தரப்புக் கருத்திற் கொள்ளாமல், அந்த மூன்று 'வேட்பாளர்களுள் சிறந்தவர்களைத் தெரிதல்' என்ற மாயைக்குள் சிக்கி, தமிழர் நலன்களுக்கு எதிரான சிங்கள பௌத்த இனவாதக் கொள்கைக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் செல்கின்றமையானது, இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடாக இருப்பதை தமிழ் மக்கள் ஆணை வழங்கி அங்கீகரித்துள்ளார்கள் என்பதாகவும் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை நோக்கி நியாயமாக நடந்துகொள்கின்றார்கள் என்பதாகவும் உண்மைக்குப் புறம்பான செய்தியை மட்டுமே பன்னாட்டுச் சமூகத்துக்கு வெளிப்படுத்தும். இந்த ஆபத்து நிலைமையை தமிழ் மக்கள் மாற்றியமைக்காதவரை தமிழினம் அடக்குமுறைக்குள் தாமே சிக்கிக்கொள்வதாகவும் - அவற்றிலிருந்து மீண்டெழமுடியாத நிலைமையும் தொடரும். தமிழ்ப் பொதுவேட்பாளரும் பின்னணியும் : தேர்தல் புறக்கணிப்பு பொருத்தமற்றதெனவும், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்றும் சில தரப்புக்கள் கங்கணம்கட்டி நிற்கின்றார்கள். அவ்வாறு கூறுபவர்கள், தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை சிங்கள வேட்பாளர்களுக்கு வழங்கக் கூடாதென்றும் - தமிழ் மக்களது அரசியல் வேணவாவை பன்னாட்டுச் சமூகத்துக்கு வெளிப்படுத்துவதற்காகப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் கூறி மக்களை ஏமாற்ற முற்படுகின்றார்கள். தமிழ் மக்களது அபிலாசைகளைச் பன்னாட்டுச் சமூகத்துக்கு வெளிப்படுத்துவதற்காகவே பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டுமெனக் கூறுபவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் எவ்வாறு நடந்துகொண்டார்கள்? கடந்த 2010 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஸ்டித்தீர்வு மற்றும் இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி என்ற நிலைப்பாட்டுக்கு ஆணை கோரிப் போட்டியிட்ட தரப்புக்கு ஆதரவாக, தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்து அறுதிப்பெரும்பான்மை ஆணையை வழங்கிப் 15 ஆசனங்களை வழங்கியிருந்தார்கள். அந்த ஆணைக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை நோக்கி தீர்வு விடயத்தில் இனநல்லிணக்கம் ஏற்பட மகிந்த ராஜபக்ச அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் தமிழ் மக்களது அபிலாசைகள் நிறைவு செய்யப்படும் என்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக விசாரணையையுமே வலியுறுத்தியிருந்தார்கள். கடந்த 2015ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக இனப்படுகொலைக்கு ஆதாரமில்லை என்றார்கள். ஐநா மனித உரிமைகள் பேரவையில் பொறுப்புக்கூறல் தொடர்பில் பன்னாட்டு விசாரணையைக் கைவிட்டு உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குச் பன்னாட்டு நீதி வேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையில் இலங்கை அரசுடன் இணைந்து காணாமல்போனோர் அலுவலகத்தை உருவாக்கி உள்ளகப் பொறிமுறைக்குள் முடக்கும் அரசின் கபட முயற்சிக்குத் துணைபோயிருந்தார்கள். இனப்பிரச்சினையைத் தீர்த்தல் என்ற போர்வையில் 'ஏக்கிய இராச்சிய' அரசமைப்பு வரைபை ரணில் - மைத்திரி அரசுடன் இணைந்து உருவாக்கி தமிழ் மக்களுக்கு வரலாற்றுத் துரோகமிழைத்தார்கள். போர் காலத்தில் தமிழ் மக்கள் தமது வரலாற்று வாழ்விடங்களிலிருந்து வன்முறைகள் மூலம் பலாத்காரமாக சிறீலங்கா அரசால் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். ஆனாலும் போர் முடிவுக்குப் பின்னர் அந்த நிலங்களில் தமிழர்களை மீளக்குடியமர அனுமதி மறுக்கப்பட்டதுடன் அப்பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். அவ்வாறு குறியேற்றப்பட்ட சிங்களவர்களுக்;குக் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வுகளை அரசு முன்னெடுத்தபோது அந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துகொண்டதன் மூலம் - திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் நிகழ்ச்சி நிரலை மூடிமறைப்பதற்கும், அது இயல்பான மீள்குடியேற்ற நடவடிக்கை அல்லது அபிவிருத்திச் செயற்பாடு என்றவாறான தோற்றப்பாட்டை அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் காண்பிக்கத் துணைபோனார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் - மைத்திரி அரசாங்கத்தில் இதயத்தால் இணைந்திருந்த காலத்திலேயே - மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் மாதுறு ஓயா வலது கரை அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதேவேளை அங்கு முழுமையான சிங்கள பௌத்த மயமாக்கலை ஏற்படுத்தும் நோக்கில் அந்த மேய்ச்சல் தரைப்பகுதியிலிருந்து தமிழ்ப் பண்ணையாளர்களை விரட்டியடித்து - மூன்று இலட்சம் கால்நடைகளை அழிவுக்குள் தள்ளி - சோளம் மற்றும் சிறுதானியப் பயிர்ச் செய்கையில் பெரும்பான்மையினத்தவர்களை அத்துமீறி ஈடுபடுத்தியபோதும் நல்லாட்சி என்ற பெயரில் ரணில் - மைத்திரி அரசுக்கு தொடர்ந்தும் முட்டுக்கொடுத்ததால் அப்பகுதியை ஆக்கிரமிக்கும் அரசின் செயற்பாட்டிற்குத் துணைபோயிருந்தார்கள். இனப்படுகொலையாளி கோத்தாபய ராஜபக்ச நிறைவேற்று அதிகார அரச தலைவராக பதவியிலிருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தை 15ஆம் நாள் 'ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டிருந்த பொறுப்புக்கூறல் விவகாரத்தை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த ஏதுவாக, ஐ.நா. செயலாளரை வலியுறுத்துமாறு கோரி' - ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்குத் தமிழ்த் தரப்புக்களால் கூட்டாகக் கையொப்பமிட்டு கடிதம் எழுதப்பட்டது. அக்கடிதத்தை மறுதலிக்கும் விதமாக அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே எனத் தெரிவித்து, உள்ளக விசாரணையை வலியுறுத்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானம் எந்த வடிவத்திலேனும் நிறைவேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தி - பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக விசாரணைத்தீர்மானத்தை வலிந்து கோரியதன் மூலம் தமிழ் மக்கள் கடந்த 2020 இல் நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கிய ஆணைக்கு எதிராகச் செயற்பட்டு இனப்படுகொலையாளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டார்கள். ஓற்றையாட்சி முறையும் இனப்பிரச்சினையும் : இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் - ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களாக வாழ்வதற்குரிய – இறைமை, சுயநிர்ணய உரிமை கொண்ட சமஷ;டித் தீர்வே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையாகவும், புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான அரசியல்த் தீர்வாகவும் அமையமுடியும். 2009 இல் தமிழினவழிப்பு நடைபெற்றுள்ளதுடன், இன்றும் கட்டமைப்புசார் இனவழிப்பு செயற்பாடுகள் திட்டமிட்டு, வேண்டுமென்றே சிங்கள பௌத்த பேரினவாதத்தால் தொடர்ந்துவரும் நிலையில் - ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு முறைமையும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கருதமுடியாது. ஆனால் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய எம்மைத் தவிர்ந்த ஏனைய அரசியல் தரப்புக்கள் - 1987 இல் தமிழ் மக்களால் நிராக்கப்பட்டிருந்த ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தத்தையே, பன்னாட்டுச் சமூகத்தின் மத்தியில் தமிழருக்கான தீர்வாக 2009 இன் பின்னர் வலியுறுத்தி வந்துள்ளதுடன், கடந்த 2022ஆம் ஆண்டு தை 18 ஆம் நாள் - இந்திய தலைமை அமைச்சர் மோடிக்கும், அந்த நிலைப்பாட்டையே வலியுறுத்தி எழுத்துமூலமான கடிதத்தை அனுப்பி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்குத் துரோகமிழைத்திருந்தார்கள். கடந்த காலங்களில் இவ்வாறு துரோகமிழைத்தவர்கள்;தான் மீண்டும் இன்று தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறிவருகிறார்கள். தமிழ் பொது வேட்பாளர் என்ற பின்னணியின் உண்மையை உரசிப் பார்போமானால் - இரண்டாவது விருப்பு வாக்கை சிங்களப் பேரினவாத வேட்பாளர் ஒருவருக்கு செலுத்துவதற்காகவே தயார்ப்படுத்துகின்றார்கள். இந்த உண்மையை கிளிநொச்சியில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தனது உரையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தார். இரண்டாவது வாக்கை சிங்கள வேட்பாளருக்கு வழங்குவதென்பதும் சிங்கள வேட்பாளர் ஒருவரை அரச தலைவர் தேர்தலில் நேரடியாக ஆதரிப்பதாகவே அமையும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியாயின் - தொடர்ச்சியாக தேர்தல்களில் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணைகளுக்கு மாறாக, ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வையும் உள்ளக விசாரணையையும் வலியுறுத்திவரும் தமிழ்த் தரப்புக்கள் கூட்டிணைந்து தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துதற்கு மேற்கொள்ளும் முயற்சியானது உண்மையாகவே தமிழரின் அபிலாசைகளை வெளிப்படுத்த எடுக்கப்படும் முயற்சியா? அல்லது சிங்கள வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதற்காக பின்கதவால் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியா? என்பதிலும் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும். சிங்கள ஆட்சியாளர்கள் மீது முற்றுமுழுதாக வெறுப்படைந்து - விரக்தியடைந்து – அரச தலைவர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பதால் பயனெதுவும் ஏற்படப்போவதில்லை என்ற மனோநிலையே மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. எந்தவொரு பெரும்பான்மையின அரச தலைவர் வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட்டும் அவருக்கு வாக்களியுங்கள் என்று கோர முடியாத அளவுக்கு அனைத்து சிங்களக் கட்சிகள் மீதும் வேட்பாளர்கள் மீதும் தமிழ் மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் - பிராந்திய வல்லரசினதும் அதனுடன் கூட்டிணைந்து தமது பூகோள நலன்களை முன்னிலைப்படுத்திச் செயற்படும் பன்னாட்டு வல்லரசுகளதும் நலன்களைப் பேணுவதற்காக - ஒத்திசைந்து செயற்படக்கூடிய வல்லரசுகள் விரும்பும் வேட்பாளர் ஒருவரை வெற்றிபெற வைப்பதனை இலக்காகக் கொண்டு, அந்த உண்மை நோக்கத்தை மக்களுக்கு மறைத்து, தமக்குத் தேவைப்படும் சிங்கள வேட்பாளருக்குத் தமிழ் மக்கள் தமது இரண்டாவது விருப்பு வாக்கைச் செலுத்த வைப்பதற்கான கபட முயற்சியையே 'தமிழ் பொது வேட்பாளர்' என்ற நாடகம் மூலம் அரங்கேற்ற முயல்கின்றார்கள். வரவிருக்கும் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளைப் பெறாமல் எவருமே வெல்லமுடியாத சூழலே உள்ளது. ஆனால், இப்படியான நிலையிருந்தும் எந்தவொரு அரச தலைவர் வேட்பாளரும் தமிழ் மக்களுக்காக எதுவுமே செய்யத் தயாரில்லை என்பதே களயாதார்தமாகும். தமிழ் மக்களுடைய வாக்கில்லாமல் எவருமே வெல்லமுடியாத ஒரு சூழலில் - தமிழ் மக்களின் வாக்குகளே 'யாரை வெல்லவைப்பது?, யாரைத் தோற்கடிப்பது?' என்றவொரு நிலை உள்ளபோது - தமிழ் மக்களைக் கணக்கில் எடுக்கவே தயாரில்லாத இந்தச் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பின் ஊடாக மட்டுமே மிகச்சிறந்த செய்தியை தமிழ் மக்களால் வழங்கமுடியும். சனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பும் விளைவுகளும் : அரச தலைவர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிப்பதன் மூலம் மூன்று விதமான செய்திகள் உணர்த்தப்படும். 1. இத் தேர்தல் மூலம் அரச தலைவராக வருபவர், தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்ததன் விளைவாகவே தன்னால் அரச தலைவராக வெற்றிபெற முடிந்தது என்ற நிலைமையையும் - தோற்றவர்கள், தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக நம்பிக்கையை கொடுத்திருந்தால் தங்களால் வென்றிருக்க முடியும் என்ற ஏக்கத்தையும் உருவாக்கும். 2. தேர்தலில் வென்றவருங்கூட, தமிழ்மக்களின் வாக்குகள் இன்றி எதிர்காலத்தில் தன்னால் வெற்றிபெறமுடியாமல் போகும் என்ற உண்மையை விளங்கிக் கொண்டு செயற்படவேண்டிய அச்சத்தையும் உருவாக்கும். 3. தமிழ் மக்கள் தமது வாக்குகளைத் தங்கள் இனநலன் சார்ந்தே இனிப் பயன்படுத்துவார்கள் என்பதும், இனியும் தமிழ் மக்களை வாக்களிக்கும் எடுபிடிகளாகப் பயன்படுத்த முடியாது என்ற காத்திரமான செய்தி பிராந்திய வல்லரசுக்கும் அதனுடன் இணைந்து செயற்படும் பூகோள ஆதிக்க சக்திகளுக்கும் அவர்களின் உள்ளூர் முகவர்களுக்கும் தெட்டத்தெளிவாக வழங்கப்படும். எனவே ஒற்றையாட்சி அரசமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசமைப்பு கொண்டுவரப்படல் வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் தமிழர் ஒற்றுமையாக நிறைவேற்றப்போகும் இந்த அரச தலைவர் தேர்தல் புறக்கணிப்பினூடாக அரசியல் ரீதியாகவும் இராஜதந்திரரீதியாகவும் ஏற்படுத்தப்படப்போகும் அழுத்தமானது தமிழினத்துக்கே மிகப் பெரிய பலத்தை வழங்கும் என்ற உண்மையை விளங்கிக் கொண்டு செயற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். (அ) https://newuthayan.com/article/தேர்தலை_புறக்கணிப்பே_தமிழனத்துக்குப்_பலம்!
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் வெளிநாட்டுப்பிரஜை கைது! (ஆதவன்) போலிக்கடவுச்சீட்டு, போலி வைப்பகப்புத்தகம், போலி ஆவணங்கள் என்பவற்றைத் தயாரித்தமை, ஆள்மாறாட்டம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நெதர்லாந்துப் குடியுரிமையைக் கொண்ட ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அவரது சகோதரி செய்த முறைப்பாட்டுக்கமையவே மேற்படி 42 வயதுடைய பெண்மணி கைது செய்யப்பட்டு நீதிவான் இல்லத்தில் முற்படுத்தப்பட்டு மருத்துவக்காரணங்களைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார். சகோதரியினுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டை சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு தயாரித்துள்ளார். அந்தக் கடவுச்சீட்டை தவிர்த்து வேறு கடவுச்சீட்டில் நெதர்லாந்துக்குச் சென்று அங்கு குடியுரிமையும் பெற்றுள்ளார். இதேவேளை, சகோதரி 2019ஆம் ஆண்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது அவரது பெயரில் முன்னரே கடவுச்சீட்டு எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. சகோதரி வெளிநாட்டில் இருந்தமையால் அவர் நாடு திரும்பிய பின்னர் நடவடிக்கை எடுப்பதற்காக சகோதரி காத்திருந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி வைப்பகப்புத்தகம் பெற்றமையையும் சகோதரி அறிந்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் தாயாரின் இறுதிக்கிரியைகளுக்காக நெதர்லாந்திலிருந்து சகோதரி யாழ்ப்பாணத்துக்கு இந்த மாதம் வந்துள்ளார். இதையடுத்து யாழ். மாவட்ட சிறப்பு குற்றவிசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன்பிரகாரம் சந்தேக நபரை யாழ். மாவட்ட சிறப்பு குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்ற நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் நேற்று முற்படுத்தினர். இதன்போது மருத்துவக் காரணங்களால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு இன்று மீண்டும் அழைக்கப்படவுள்ளது. (ச) https://newuthayan.com/article/சகோதரியின்_பெயரில்_ஆள்மாறாட்டம்_செய்த_வெளிநாட்டுப்பிரஜை_கைது!
-
தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது : மாவை, சுமந்திரனிடம் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் சம்பந்தன்
பொதுவேட்பாளர்: இழுத்தடிக்கும் போக்கில் தமிழரசு! நேற்றைய மத்தியகுழுக் கூட்டத்திலும் முடிவில்லை (ஆதவன்) எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இழுத்தடிக்கும் போக்கையே இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்கின்றது. அந்தக் கட்சியின் மத்திய குழுவில் இந்த விடயம் நேற்று ஆராயப்பட்ட போதும் முடிவு எதையும் எடுக்காமல் ஒத்திவைத்துள்ளது. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் பொதுவெளியில் தெரிவித்திருந்தனர். குறிப்பாக கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்தார். ஆனால் பொதுவேட்பாளரை ஆதரிக்கக் கூடாது என கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் பொதுவேட்பாளர் தொடர்பில் ஆராயும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, இது தொடர்பில் மத்திய குழுவில் முடிவு எடுத்து அறிவிப்பதாக இருவாரகால அவகாசம் கோரியிருந்தார். அதற்கு அமைவாக மத்திய குழுக்கூட்டம் நேற்றுக் கூட்டப்பட்டிருந்தது. கூட்டத்தில் பொது வேட்பாளர் விடயம் ஆராயப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தலைவருமான மாவை.சோ.சேனாதிராசா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேந்திரன், அரசதலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசா ஆகியோர் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்டோர் அதற்கு எதிராக கருத்துத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் கருத்துத் தெரிவித்த சிறீதரன், “சம்பந்தர் சொன்னதைப்போல ஒஸ்லோ அறிக்கையை எந்த அரசதலைவர் வேட்பாளர் ஏற்றுக்கொள்கின்றாரோ அவரை ஆதரிக்கலாம்" எனக் குறிப்பிட் டுள்ளார். அதனை பொதுவேட்பாளரை எதிர்த்ததரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனாலும் இதை உத்தியோக பூர்வமுடிவாக அறிவிக்கவில்லை. பொதுவேட்பாளர் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றே உத்தியோக பூர்வ நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டது. இதேவேளை, 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குறித்த ஒஸ்லோ அறிக்கையில், 'தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் சுயாட்சி அதிகாரம் வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் அரசும் புலிகளும் ஆராய்வர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/தமிழ்ப்_பொதுவேட்பாளர்_விவகாரம்:_இழுத்தடிக்கும்_போக்கில்_தமிழரசு!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahasthiyan க்கு மூன்று புள்ளிகள் கூட்டப்படும். மற்றையவர்களுக்கு மூன்று புள்ளிகள் குறைக்கப்படும். மூன்றாவதும் நான்காவதும் இடங்களை ஒருவருமே சரியாகக் கணிக்கவில்லை. எனவே அனைவருக்கும் மூன்றாம் இடத்திற்கான தலா இரண்டு புள்ளிகளும், நான்காம் இடத்திற்காக தலா ஒரு புள்ளியும் குறைக்கப்படும். மூன்றாவது கேள்விக்கான பதிலை @வீரப் பையன்26 மாத்திரமே சரியாகக் கணித்துள்ளதால், இரண்டு புள்ளிகள் கூட்டப்படும். மற்றையோருக்கு இரு புள்ளிகள் குறைக்கப்படும். மூன்று கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டதன் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நிலாமதி 70 2 அஹஸ்தியன் 68 3 வீரப் பையன்26 62 4 முதல்வன் 62 5 சுவி 62 6 ஏராளன் 62 7 கல்யாணி 62 8 கந்தப்பு 62 9 எப்போதும் தமிழன் 62 10 வாதவூரான் 62 11 கிருபன் 62 12 நீர்வேலியான் 62 13 நுணாவிலான் 62 14 புலவர் 62 15 ஈழப்பிரியன் 58 16 கோஷான் சே 58 17 கறுப்பி 54
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்றைய RR க்கும் KKR க்குமான போட்டி மழைகாரணமாக நடக்கவில்லை. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பச்சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் அணிகளின் நிலைகள்:
- IMG_7415.jpeg
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
விளையாட்டின் இடையில் பந்து பழுதானால் அல்லது உருவம் மாறினால், அந்த ஓவரளவு பாவித்த பழைய பந்துகளில் ஒன்றை அம்பயர் இரு அணிகளின் கப்டன்களின் ஒப்புதலோடு பாவிப்பார். புதிய பந்தை பாவித்தால் bowling க்கு சாதகமாகிவிடும். நேற்றைய போட்டியில் தோனி பந்தை மைதானத்தைவிட்டு வெளியே அனுப்பியது (110 மீற்றர் சிக்ஸ்) RCB க்கு சாதகமாகிவிட்டது என்று சொல்கின்றார்கள். வேறு பந்தைக் கொண்டுவந்ததால் பந்துவீச்சாளருக்கு இலகுவாகிவிட்டது!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
முதலாவது கேள்விக்கான புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. யாழ் களப் போட்டியாளர்களின் நிலைகள். நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 முதல்வன் 74 2 சுவி 74 3 ஏராளன் 74 4 நிலாமதி 74 5 அஹஸ்தியன் 74 6 கல்யாணி 74 7 கந்தப்பு 74 8 எப்போதும் தமிழன் 74 9 வாதவூரான் 74 10 கிருபன் 74 11 நீர்வேலியான் 74 12 நுணாவிலான் 74 13 புலவர் 74 14 வீரப் பையன்26 70 15 ஈழப்பிரியன் 70 16 கோஷான் சே 70 17 கறுப்பி 66
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
02) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) போட்டியாளர் #1 #2 #3 #4 வீரப் பையன்26 CSK RR KKR GT முதல்வன் RR CSK KKR SRH சுவி RR KKR CSK SRH ஏராளன் RR KKR CSK SRH நிலாமதி KKR RR DC SRH அஹஸ்தியன் RR SRH KKR CSK ஈழப்பிரியன் RR CSK KKR LSG கல்யாணி RR KKR CSK SRH கந்தப்பு RR CSK SRH KKR கறுப்பி MI GT CSK RR எப்போதும் தமிழன் RR CSK KKR SRH வாதவூரான் RR KKR CSK SRH கிருபன் RR KKR CSK SRH நீர்வேலியான் RR CSK KKR SRH கோஷான் சே RR KKR LSG CSK நுணாவிலான் RR KKR CSK SRH புலவர் RR CSK KKR SRH 03) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) போட்டியாளர் பதில் வீரப் பையன்26 MI முதல்வன் RCB சுவி RCB ஏராளன் RCB நிலாமதி RCB அஹஸ்தியன் RCB ஈழப்பிரியன் PBKS கல்யாணி RCB கந்தப்பு RCB கறுப்பி RCB எப்போதும் தமிழன் RCB வாதவூரான் RCB கிருபன் PBKS நீர்வேலியான் RCB கோஷான் சே PBKS நுணாவிலான் RCB புலவர் RCB
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்று புள்ளிகள் நிலவரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்! 01) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். போட்டியாளர் பதில் CSK DC GT KKR LSG MI PBKS RR RCB SRH வீரப் பையன்26 CSK GT KKR RR முதல்வன் CSK KKR RR SRH சுவி CSK KKR RR SRH ஏராளன் CSK KKR RR SRH நிலாமதி CSK KKR RR SRH அஹஸ்தியன் CSK KKR RR SRH ஈழப்பிரியன் CSK KKR LSG RR கல்யாணி CSK KKR RR SRH கந்தப்பு CSK KKR RR SRH கறுப்பி CSK GT MI RR எப்போதும் தமிழன் CSK KKR RR SRH வாதவூரான் CSK KKR RR SRH கிருபன் CSK KKR RR SRH நீர்வேலியான் CSK KKR RR SRH கோஷான் சே CSK KKR LSG RR நுணாவிலான் CSK KKR RR SRH புலவர் CSK KKR RR SRH
-
தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது : மாவை, சுமந்திரனிடம் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் சம்பந்தன்
சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது – சுரேஷ் May 19, 2024 சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது என அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றார் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அவரது அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- ‘கடந்த சில மாதங்களாக தமிழ்ப் பொது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தமிழ் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தமது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பெருமளவிலான தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரின் தேவையை உணர்ந்திருக்கின்றனர். இது தொடர்பாக பல்வேறுபட்ட கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளை இணைத்து இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு செயற்பாட்டுக்குழுவை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழரசுக் கட்சி ஒரு கட்சியாக முழுமையாக இணைந்து பணியாற்றுவதற்கு 19ஆம்திகதிவரை கால அவகாசம் கோரியிருந்தார்கள். வடக்கிலும் கிழக்கிலும் இருக்கக்கூடிய தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இதற்கான தமது சாதகமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழரசுக் கட்சியின் போஷகராக இருக்கக்கூடிய – மூத்த தலைவராக பேசப்படுகின்ற – சம்பந்தன் அவர்கள் பொது வேட்பாளர் ஒருவர் இப்பொழுது தேவையில்லை என்றும் உள்ளக சுயநிர்ணய உரிமை மூலம் சமஷ்டி ஆட்சிமுறையை உருவாக்குகின்ற ஒஸ்லோ பிரகடனத்தைக் கைவிட்டுவிடக்கூடாது என்றும் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் பொதுவேட்பாளர் தெரிவை அங்கீகரிக்கக்கூடாது என்றும் கூறினார் என சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஒரு பொது வேட்பாளர் தொடர்பாக தவறான – பிழையான – அதற்கு எதிரான – கருத்துகளைக் கொண்டிருக்கக்கூடிய சுமந்திரன் சம்பந்தன் இவ்வாறான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்று சொல்வது வலுவான சந்தேகங்களை உருவாக்குகின்றது. சம்பந்தன் வயதில் முதிர்ந்த ஒரு அரசியல் தலைவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவரது வயது முதிர்ச்சி என்பது அந்த முதிர்ச்சிக்கே உரிய பல்வேறுபட்ட உளவியல், உடலியல் மாற்றங்களுக்கு உட்பட்டிருப்பதுடன் அவர் பேசுவதை யாருமே புரிந்துகொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், சம்பந்தன் பொது வேட்பாளர் தொடர்பில் பல கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்பது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சம்பந்தன் நடமாட முடியாத சூழ்நிலையிலும், செயற்படும் திறனற்றவராகவும் இருக்கிறார் என்றும், அவர் நாடாளுமன்ற பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் சம்பந்தன் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தவர் சுமந்திரன் ஆவார். செயற்பட முடியாத – பேச்சாற்றல் குறைந்திருக்கக்கூடிய – ஒருவரின் கூற்றாக தனது தேவை கருதி அவற்றை முதன்மைப்படுத்தும் நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டு வருகிறார். தமிழ்ப் பொது வேட்பாளரின் தேவையையும் அவசியத்தையும் முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் எழுந்தமானமாக அது ஓஸ்லோ உடன்படிக்கையை கைவிட்டு விடுவதாக அமைந்துவிடும் என்று கற்பனை அடிப்படையில் கூறுவது தவறானதும் மக்களைத் தவறாக வழிநடத்துவதுமாகும். யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதினேழு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியது. இதில் ஓஸ்லோ உடன்படிக்கை குறித்து எதுவும் பேசப்படவில்லை. பின்னர் மைத்திரிபால சிறிசேன அவர்களது அரசாங்கத்தில் நான்கு வருடங்களாக ஒரு புதிய அரசியல் சாசனம் பற்றிப் பேசப்பட்டது. அப்போதும் ஓஸ்லோ உடன்படிக்கை குறித்து பேசப்படவில்லை. ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசம் எதிர்பார்க்கும் ஜனநாயக வழியில் நின்று வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் களத்தை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாகக் கையாள வேண்டும் என்ற நோக்கில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதானது ஓஸ்லோ உடன்படிக்கைகளுக்கு விரோதமானது என்ற கருத்தை பொதுவெளியில் குறிப்பிடுவதும் அதற்கு எதிராகச் செயற்படுமாறு தமிழரசுக் கட்சியினரைக் கோருவதும் தமிழரசுக் கட்சி இது தொடர்பாக ஒரு சாதகமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது. சுமந்திரன் அவர்கள் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் தவறானதும் பிழையானதுமான கருத்துகளை சரியான கருத்துகள்போல் பேசிவந்துள்ளார். உதாரணமாக ஐ.நா.சபையால் ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டு அந்தக்குழு ஓர் அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளரிடம் கையளித்திருந்தது. பின்பு அந்த அறிக்கை ஐ.நா. பொதுச் செயலாளரினால் மேல் நடவடிக்கைக்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் கையளிக்கப்பட்டது. இதனையே சுமந்திரன் அவர்கள் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும், இனி உள்ளக விசாரணைகள் மூலம் தண்டனை வழங்வது மட்டுமே மீதமுள்ள நடவடிக்கை என்றும் கூறிவந்திருக்கின்றார். ஆனால் இன்றுவரை யுத்தக்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்வது தொடர்பாக தமிழர் தரப்பு தொடர்ந்தும் போராடி வருகின்றது. இதனைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற ஒரு பொய்யான விடயத்தையும் அவர் கூறி வந்திருக்கின்றார். ஆகவே தமிழ் மக்களைப் பிழையான பாதையில் வழிநடத்தும் கைங்கரியத்தை அவர் தொடர்ச்சியாக செய்து வருகின்றார். அதன் இன்னொரு வெளிப்பாடாகவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அவரது கருத்துகள் அமைகின்றன. தற்போது களத்திலிருக்கக்கூடிய சிங்களத் தரப்பு வேட்பாளர்கள் யாரும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் காணி அபகரிப்புகள், சிங்கள குடியேற்றங்கள், பௌத்த சின்னங்களை நிறுவுதல், சைவஆலயங்களை இடித்து அழித்தல், மேய்ச்சல் நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுதல், தமிழ் மக்களின் பாரம்பரிய சின்னங்களை அரசுடைமை ஆக்குதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவிதமான கருத்துகளையும் கூறாமல் அதனை ஏற்றுக்கொண்ட பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்றும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையில் நாங்கள் எத்தகைய நகர்வுகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கருதுவது அபத்தமான செயற்பாடாகும். ஜனாதிபதி தேர்தல்களத்தில் ஒருவர் வெல்வதென்பது தமிழ் மக்களின் வாக்குகளிலும் தங்கியிருக்கின்றது. வடக்கு-கிழக்கில் இருக்கின்ற ஏறத்தாழ பன்னிரண்டு இலட்சம் வாக்குகள் என்பது ஒருவரின் வெற்றிக்கு மிகக் காத்திரமான பங்களிப்பைச் செலுத்தக்கூடியவை. இந்த நிலையில் யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் குறைந்தபட்சம் மாகாணசபைத் தேர்தலைக்கூட நடத்தாமல் கடந்த ஐந்து வருடத்திற்கும் மேலாக மாகாணசபையின் நிர்வாகமற்ற சூழலில் இந்த நாட்டில் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்றும் வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமே இருக்கின்ற தென்றும் பேசிவரும் சூழ்நிலையில் இவை எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதை முழுமையாக வெளிக்காட்டவும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு தேவை என்பதை சிங்கள அரசியல் சமூகத்திற்கும் இராஜதந்திர சமூகத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாகவும் தமிழ் வாக்குகளை தமிழர் ஒருவர் பெற்றுக்கொள்வதன் ஊடாக இதனை வெளிப்படுத்த முடியும் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு விளங்கும். இந்த நிலையில், தமிழ் தரப்புகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அனாவசியமான கருத்துகளை முன்வைத்து இந்த கோரிக்கைகளை முறியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதானது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை முறியடிப்பதாகவே அமையும். தமிழரசுக் கட்சி இந்த யதார்த்தங்களை உணர்ந்துகொண்டு இப்பொழுதாவது சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் என்று நம்புகின்றோம்” என்று உள்ளது. https://www.ilakku.org/சம்பந்தனின்-பெயரில்-சுமந/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
Viyaskanth gets a wicket! It's not a glamour bowled or stumped dismissal, but Viyaskanth, the 22yo legspinner from Jaffna has a wicket in the biggest franchise tournament in the world. What's more, its' the prized wicket of Prabhsimran. This will be wildly celebrated in his home town, and for good reason. It was a googly, following Prabhsimran down leg as he backed away, and having caught his pad it flicked glove on the way up, and Klaasen took a good catch. The batter reviewed, but that definitely looked like it brushed glove on review.
-
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு
முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு May 18, 2024 15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதற்காக இங்கிலாந்தின் Southend-on-Sea என்ற கடலோர நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் முந்நூறு தமிழர்கள் நேற்று (மே 17) அந்தி வேளையில் கடற்கரையில் வணக்க நிகழ்வொன்றை நடத்தினர். ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி தமிழர் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நடந்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். Shoebury East கடற்கரையின் வழக்கமான இரைச்சல் மற்றும் குதூகலச் சூழ்நிலையானது அமைதியான பிரதிபலிப்பு, மலர் அஞ்சலிகள், நினைவு உரைகள் மற்றும் கவிதைகளாக மாற்றப்பட்டு, நூற்றுக்கணக்கான மிதக்கும் நினைவு விளக்குகள் அலைகளில் மிதக்க விடப்பட்டது. அதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பங்கேற்பாளர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்கும் வழங்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் அதே தீங்கற்ற செயல்பாடு சிறிலங்கா அரசால் தடை உத்தரவுகள், கைதுகள் மற்றும் மிரட்டல்களுடன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. Southend-on-Sea நிகழ்வில் பங்கேற்றவர்களில் பலர் இன அழிப்பில் இருந்து தப்பியவர்கள். அவர்களில் ஒருவரான திருமதி நிஷாந்தினி சந்திரதாசன் கூறுகையில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இனப்படுகொலை நடந்த இடமும் முள்ளிவாய்க்கால் கடற்கரையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வுக்கு ஒரு கடற்கரையில் அமைந்தது பொருத்தமானது என்றார். நிகழ்வின் மிகவும் உணர்ச்சிகரமான தருணத்திற்கு முன் அவர் நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார். அதன் பின் அங்கு கூடியிருந்த அனைவராலும் நினைவு விளக்குகளும், மலர்களும் கடலில் காணிக்கையாக விடப்பட்டன. ஒளிரும் விளக்குகள் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவு சுமந்து ஆழ்கடல் நோக்கி மிதந்து சென்றன. மே 12 முதல் 18 வரை நடைபெறும் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் போது இந்த வகையான நினைவுச்சின்னங்கள் பரவலாகி, அனைத்து நாடுகளிலும் உள்ள பல கடற்கரைகளிலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை எமது மக்கள் அனுபவிக்கும் அவலங்களின் அடையாளமாக வருங்கால சந்ததியினர் மறந்துவிடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-படுகொ-7/
-
பதினைந்தாவது மே 18: குற்றமாகிய கஞ்சி? - நிலாந்தன்
பதினைந்தாவது மே 18: குற்றமாகிய கஞ்சி? - நிலாந்தன் 15 ஆண்டுகள் சென்றுவிட்டன. இப் 15 ஆண்டுகளில் தமிழரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? இருந்த பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. ஐநாவில் சான்றுகளைத் திரட்டும் ஒரு பலவீனமான பொறிமுறை இயங்கிக்கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பாக கனடாவில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில வெற்றிகள் எட்டப்பட்டிருக்கின்றன. அதேசமயம் இமாலயப் பிரகடனம் போன்ற பிரகடனங்களும் அங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன. இவற்றைவிட முக்கியமாக இறுதிக்கட்டப் போரின் பின், யார் உயிருடன் இருக்கிறார்கள்? யாருக்கு அஞ்சலி செய்யலாம்? செய்யக்கூடாது? என்ற விடயத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் இரண்டாக உடைந்திருக்கிறார்கள். அதாவது 15ஆண்டுகளில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது. இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் மிகத்தெளிவாக தெரியும் சித்திரம் என்னவென்றால், கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் உடைந்து கொண்டே போகிறார்கள். நினைவு கூர்தல்தான் தமிழ் மக்களை ஒரு உணர்ச்சி புள்ளியில் ஒன்றுகூட்டி வைத்திருக்கிறது. அதே நினைவு கூரும் விடயத்தில், தமிழ்ச் சமூகத்தில் உடைவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் கட்சிகளாய்; அமைப்புகளாய்; குழுக்களாய்; கொள்கைகளாய்; பிரகடனங்களாய்; ஊர்களாய்; சங்கங்களாய்; வடக்காய்; கிழக்காய்; சமயமாய்; சாதியாய் ;இன்ன பிறவாய் சிதறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை, நினைவு நாட்கள்தான் ஓரளவுக்காவது உணர்வுபூர்வமாக ஒன்றுகூட்டி வைத்திருக்கின்றன. அதனால்தான் அரசாங்கம் நினைவுகளைக் கண்டு பயப்படுகின்றது. நினைவின் குறியீடாக தமிழ் மக்களால் உருவகப்படுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியை அரசாங்கம் ஒரு குற்றப் பொருளாகப் பார்க்கின்றது. 15 ஆண்டுகளுக்கு முன் உணவு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்த களத்தில், கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு “தமிழ் சிவில்சமூக அமையம்” உணவையே நினைவுப் பொருளாக உபயோகித்தது. அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. இப்பொழுது அந்த உணவையே அதாவது, நினைவையே ஒரு குற்றமாக அரசாங்கம் பார்க்கின்றது. சில நாட்களுக்கு முன், திருகோணமலையில் உணவு ஒரு குற்றமாகக் காட்டப்பட்டது. இறுதிக்கட்டப் போரில் ஒடுங்கிய கடற்கரைக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த மக்கள் மத்தியில் கஞ்சி இருந்தது; போண்டா இருந்தது; ரொட்டி இருந்தது. இதில் கஞ்சியானது தமிழ்ப் பண்பாட்டில் வெவ்வேறு பண்பாட்டு நிகழ்வுகளோடு சம்பந்தப்படுகின்றது. அது மிக எளிமையான உணவு. ஆனால் தமிழ் வீடுகளில் காய்ச்சும் கஞ்சியும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் ஒன்று அல்ல.ஆனந்தபுரம் சண்டையோடு தேங்காய்க்குத் தட்டுப்பாடு வந்து விட்டது. எனவே அது ஒரு பால் இல்லாத கஞ்சி. அரிசியை கிடாரத்தில் போட்டு நீர் விட்டு, உப்புப் போட்டு வேக வைப்பார்கள். அரிசி வெந்ததும் அதில் இரண்டு பால்மா பக்கெட்டுகளை உடைத்துக் கரைத்து அதில் சேர்ப்பார்கள். அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. அது தேங்காய்ப் பாலற்றது. பயறு இல்லாதது. ருசியற்றது. அந்த ருசியின்மைக்குள் அதன் அரசியல் செய்தியிருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் ஒரு கொடிய போர்க்களத்தின் நினைவு இருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் இனப்படுகொலையின் பயங்கரம் இருக்கின்றது. அந்த ருசியின்மைக்குள் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நீதிக்கான தாகம் இருக்கிறது. அந்த ருசியின்மைதான் இனப்படுகொலையின் ருசி. அந்த ருசியின்மைதான் மரணத்தின் ருசி. கூட்டுக் காயங்களின் ருசி. கூட்டு மனவடுக்களின் ருசி. சுற்றி வளைக்கப்பட்டிருந்த; தனித்து விடப்பட்டிருந்த ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் கண்ணீரின் ருசி; ரத்தத்தின் ருசி.தோல்வியின் ருசி; ஒரு யுகமுடிவின் ருசி. அந்த ருசியை தலைமுறைகள் தோறும் கடத்தும் பொழுது ஏன் அது ருசியாயில்லை என்ற கேள்வி வரும். அந்த ருசியின்மைக்குப் பின்னால் மேலும் பல கேள்விகள் அவிழும். ஒடுங்கிய சிறிய கடற்கரையில் ஏன் அந்த மக்கள் தனித்துவிடப்பட்டார்கள்?அருகில் இருந்த தமிழகம் ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? முழு உலகமுமே ஏன் அவர்களை காப்பாற்றவில்லை? உலகப் பெரு மன்றங்களான ஐநா போன்றவை ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? அவர்களை நோக்கி அனுப்பப்பட்ட” வணங்கா மண் “என்ற கப்பல் ஏன் வந்து சேரவில்லை? என்ற கேள்விகளை அந்த ருசியின்மை எழுப்பும். அந்த ருசியின்மையை தலைமுறைகள் தோறும் கடத்தும் போதுதான் நீதிக்கான போராட்டம் மேலும் வலுப்பெறும். மட்டுமல்ல, தமிழ் மக்கள் இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்ளவும் முடியும். அந்த ருசியின்மைக்குள் இருக்கும் கேள்விகளை வீடுகள் தோறும் கேட்டு அதற்கு பதில் கொடுக்க வேண்டும். மூத்த தலைமுறை அதைச் செய்ய வேண்டும். தமிழ் வீடுகளில் சாப்பாட்டு மேசைகளில்; பாடசாலைகளில்; பொது இடங்களில்; என்று எல்லா இடங்களிலும் அந்தக் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.அது நினைவுகளைக் கடத்தும் ஒரு பொறிமுறை மட்டுமல்ல, அதைவிட ஆழமாக அது ஓர் அறிவூட்டும் செய்முறை.அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தோற்காமல் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அது கொடுக்கும்.எனவே அந்த நினைவுகளைப் பரிமாற வேண்டும். தலைமுறைகள் தோறும் கடத்த வேண்டும். உலகில் பொதுவாக எல்லா மக்கள் கூட்டங்களின் மத்தியிலும் கதை சொல்லும் பாரம்பரியம் உண்டு. உறங்கும் நேரக் கதைகள்;பாட்டி செல்லும் கதைகள் என்று பலவாறாகக் கதை சொல்லும் பாரம்பரியங்கள் உண்டு. இவ்வாறு கூறப்படும் பல கதைகள் நீதிநெறிக் கதைகள். ஈழத் தமிழர்கள் அதைவிட மேலதிகமாக நீதிக்காகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் கதைகளை தமது அடுத்த தலைமுறைக்குக் கூறவேண்டும். நீதிக்கான போராட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்கள் எங்கே தேங்கி நிற்கிறார்கள்? என்பதனைச் சிந்திப்பதற்கு அவர்களைத் தூண்டவேண்டும்.எனவே கஞ்சியின்மூலம் கடத்தப்படும் நினைவுகள் அல்லது கேள்விகள் எனப்படுகின்றவை,ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகும். இவ்வாறு அடுத்த தலைமுறைக்கு இறந்த காலத்தின் நினைவுகளைப் பகிர்வது, கடத்துவது என்பது பழைய காயத்தை திரும்பத்திரும்பக் கிண்டி இரத்தம் பெருகச் செய்யும் வேலை என்று ஒரு பகுதியினர் குற்றம் சாட்டுவார்கள். காயங்களைக் கிண்டாதீர்கள். அயர் மூடிய காயங்களின் அயரை உரித்து அதை புதுப்பிக்காதீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்களிடம் திருப்பிக் கேட்க வேண்டும். காயம் எப்பொழுது ஆறியது? காயங்கள் ஆறவில்லை. அவை எப்பொழுதும் உண்டு. புதிய காயங்களும் உண்டு. மயிலத்தமடுவில் குருந்தூர் மலையில் வெடுக்கு நாறி மலையில் புதிய காயங்கள் உண்டு. ஓர் உணவை அதாவது நினைவை குற்றமாகப் பார்க்கும் அரசியல் காயங்களை ஆற விடாது.ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கூட்டுக் காயங்கள் ஆறாதவை. அவை ஆறாதவை என்பதனால்தான் அவற்றைக் குறித்து உரையாட வேண்டியிருக்கிறது. அவற்றை எப்படி சுகப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. பலஸ்தீன கவிஞர் ஒருவர் எழுதினார் “குணப்படுத்தவியலாத ஒரு காயமாக” நினைவைப் பேணுவது என்று. அதுதான் உண்மை. ஈழத் தமிழர்களின் கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும் குணப்படுத்தப்படாதவை. அதற்கான குணமாக்கல் செய்முறைகளை சிறு தொகை மருத்துவர்கள் மட்டுமே முன்னெடுக்கின்றார்கள். அதற்கும் போதிய அளவு மனநல மருத்துவர்கள் கிடையாது. அது மட்டுமல்ல,அது மருத்துவர்களால் மட்டும் சுமக்கப்படக்கூடிய ஒரு சுமை அல்ல. அது ஒரு கூட்டுச் சுமை. கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மன வடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சை தான் இருக்கலாம். தனிய மருத்துவர்கள் மட்டும் அதைச் சமாளிக்க முடியாது. தவிர்க்க முடியாதபடி அது ஓர் அரசியல் பண்பாட்டுச் செய்முறையாகத்தான் இருக்கலாம். அதற்குப் பொருத்தமான அரசியல் தலைமை வேண்டும். அத்தலைமையின் கீழ் குடிமக்கள்சமூகங்கள்; மதத்தலைவர்கள்; கருத்துருவாக்கிகள்; புத்திஜீவிகள்;படைப்பாளிகள் என்று எல்லாத் தரப்புக்களும் இணைக்கப்பட வேண்டும். கூட்டுச் சிகிச்சையானது மேலிருந்து கீழ் நோக்கியும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்யப்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி அது ஓர் அரசியல் தீர்மானமாக இருக்க வேண்டும். அது அரசியல் தீர்வாக அமைய வேண்டும். இனப் படுகொலைக்கு எதிரான நீதியாக அது அமைய வேண்டும். கீழிருந்து மேல் நோக்கி அந்தத் தீர்வை நோக்கி தமிழ்மக்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டம்தான் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுதலை செய்யும். தமிழ்மக்கள் இப்பொழுது சிதறிப் போய் இருக்கிறார்கள். ஒருவர் மற்றவரை நம்பாத ஒரு மக்கள் கூட்டமாக; ஒருவர் மற்றவரைச் சந்தேகிக்கும் ஒரு மக்கள் கூட்டமாக;எல்லாருக்கும் பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக; கட்சிகளாக; வடக்குக் கிழக்காக;சமயமாக; சாதியாக இன்னபிறவாக சிதறிப்போய் இருக்கிறார்கள். அதேசமயம் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு புலம்பெயரும் தமிழர்கள் மத்தியில் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள்,உயர் உத்தியோகங்களில் இருந்தவர்கள் என்ற வகையினரும் அடங்குவர். இவ்வாறாக மூளைசாலிகளும் தொழில் அனுபவம் மிக்கவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தைத் திரட்டுவது எப்படி? ஒருவர் மற்றவரை நம்பாமல் சமூகத்தைத் திரட்ட முடியாது. ஒருவர் மற்றவரை நம்புவதில் இருந்துதான் சமூகத் திரட்சி தொடங்குகின்றது. எனவே நம்பிக்கை முக்கியம். சமூகத்துக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். புலம்பெயரும் தலைமுறைக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு நம்பிக்கையைக் கொடுக்க யார் உண்டு? அந்தக் கூட்டு நம்பிக்கைதான் கூட்டுத்தோல்வி மனப்பான்மையிலிருந்தும்,கூட்டுக் காயங்களில் இருந்தும், கூட்டு மனவடுக்களில் இருந்தும் ஒரு மக்கள் கூட்டத்தை விடுதலை செய்யும். ஈழத் தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கிறார்கள். எல்லாப் பேரரசுகளுக்கும் அவர்கள் தேவை. தமிழ் மக்களின் இக்கேந்திர முக்கியத்துவத்தை தமிழ் மக்களே உணராதிருக்கிறார்கள். அனுமார் தன் பலத்தை தானே அறியாதிருந்ததுபோல. தமிழ் மக்களுக்கு அவர்களின் பலத்தை உணர்த்தி,அவர்களைப் பலமான திரளாக்கி,அவர்களை கூட்டு அவநம்பிக்கையிலிருந்து விடுவிப்பதுதான் கீழிருந்து மேல் நோக்கிய கூட்டுச் சிகிச்சையாக அமையும்.அதுதான் கூட்டுத் துக்கத்தை அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும்.அதுதான் உண்மையான நினைவு கூர்தலாக அமையும். https://www.nillanthan.com/6761/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்று பலருக்கு புள்ளிகள் இறங்குதிசையில் போகப்போகின்றது😂🤣
-
புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா்
புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா் May 18, 2024 அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தின் பெறுமதி 4 கோடியே 51 இலட்சத்து 5,064 ரூபா) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 எழுத்தாளர்களுக்கும் 12,500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்பெற்றுள்ளது. இதேவேளை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக சுகி கணேசானந்தன் தனது நாவலில் தெரிவித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு பிறந்த சுகி கணேசானந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஊடகவியலாளரும் ஆவார். கிராண்டா, தி அட்லாண்டிக் மந்த்லி மற்றும் த வோசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/புனைகதைக்கான-கரோல்-ஷீல்ட/
-
முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி!
முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி. 2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது. ரசாயனக் குண்டுகள், விஷவாயு குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், ஆட்லெறி குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர். விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’. இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு. மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?. மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தான். சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட தேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது. உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், த.வி.பு இனவிடுதலைப் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர். பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் நிலைபெறும். முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி. https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-அவர/