Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஆம். ஆசான் அச்சுப்பிழை என்று சொல்லியுள்ளார்!
  2. காலம் கோருவது வெறும் கருத்து உருவாக்கிகளை அல்ல, களப்பணியாளர்களையே May 16, 2024 — கருணாகரன் — “முள்ளிவாய்க்கால் கஞ்சி“ யை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை – மூதூரில், மூன்று பெண்களைப் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட முறை மிகத் தவறானது. இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின்போதும் இது சமர்ப்பிக்கப்படலாம். இரவு வேளையில் வீட்டில் அணிந்திருக்கும் ஆடைகளோடு கிரிமினல் குற்றவாளிகளைப் போல குற்றம்சாட்டப்பட்ட பெண்களை ஆண் பொலிஸார் கொற இழுவையாக இழுத்துச் செல்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் இந்தக் கைதுக்கு முறைப்படியான நீதிமன்ற ஆணை பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. பெண் பொலிசார் அங்கே சென்றபோதும் ஆண் பொலிசாரே பெண்களைக் கைகளில் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். இந்த நடவடிக்கையைத் தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்கள், மலையக மக்கள், சிங்களவர்கள் என நாட்டிலுள்ள அனைவரும் வேறுபாடின்றிக் கண்டிக்க வேண்டும். மட்டுமல்ல, மனித உரிமைவாதிகள், ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இந்த விடயத்தில் கூடிய அக்கறையைக் கொண்டு செயற்படுவது அவசியம். இந்த நாட்டிலே நீதியும் அமைதியும் முன்னேற்றமும் கிட்ட வேண்டும் என்போர் அனைவரும் இதற்கு எதிராகப் போராட வேண்டும். ஏனென்றால், பொலிஸ் அராஜகத்தை எந்த நிலையிலும் யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. பொலிஸ் அராஜகம் வளர்ந்தால், அது தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்றெல்லாம் பார்க்காது. எல்லோரிலும் தயக்கமின்றிக் கை வைக்கும். கஞ்சி கொடுக்கும் அரசியலைப் பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். முள்ளிவாய்க்காலில் இறுதி வரையிலிருந்து உயிர் தப்பி வந்தவர்களில் ஒருவரான லதா கந்தையா இந்த அரசியலைப் பற்றிய தன்னுடைய அனுபவத்தையும் பார்வையையும் சொல்கிறார். “முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் தேங்காய்களுமில்லை. தேங்காய்ச்சிரட்டைகளும் இல்லை. இதற்கென தயார்படுத்தப்பட்ட அரசியல்வாதிகளும் சாமிகளும் ஆசாமிகளும் அடக்கம். ஒரு போராட்டத்தின் முடிவு சிரட்டை ஏந்த வைத்ததென்பதை வெளிப்படுத்துவதும், இறந்தவர்களின் அர்ப்பணிப்பை இழிவுபடுத்துவதுமான குறியீடு இது” என்று. இதை ஒத்ததாக இன்னொருவரான அன்பழகி சொல்கிறார், “நானும் மனம் வருந்தினேன். சிலர் சிரட்டையை அடையாளப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். தலைவர் (பிரபாகரன்) கடைசியாக சிரட்டையேந்த வைத்தார் என நாசூக்காக பரப்பி இறந்தோரை, உயிர்த்தியாகங்களை இழிவுநடுத்துகிறார்கள்”என. இறுதிப் போர்க்காலத்தில் அங்கேயிருந்து மீண்டவர்களில் ஒருவராக நானும் சொல்வேன், “முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றிய என்னுடைய பார்வையும் நிலைப்பாடும் வேறு. கஞ்சி வழங்குவதாலோ கஞ்சி குடிப்பதாலோ உள ஆற்றுப்படுத்தல் நிகழ்கிறது எனவும் நான் கருதவில்லை. அதை ஒருசிலர் முன்னெடுத்து, இன்று பலரும் பின்பற்றுகிறார்கள். ஆகவே அது அந்த நெருக்கடி நாட்களை நினைவு கொள்வதற்கான சமூக நிகழ்வாக உள்ளது. அந்த நெருக்கடி, அதன் பின்னணி பற்றிய பல பார்வைகள் உண்டென்பதையும் அறிவேன். ஆனாலும் மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட நெருக்கடி, வன்முறை, அழிவு என்பது மறுக்கப்பட முடியாது. ஆகவே அந்த மக்கள் அதை நினைவிற் கொள்ளவே முயற்சிப்பர். அந்தக் கொடிய நினைவுகளைக் கடந்து செல்வதற்கு இலங்கைத் தீவின் ஆட்சிமுறையும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. உண்மையான ஆற்றுப்படுத்தலை தீர்வின் மூலம் அரசாங்கம் செய்திருக்க வேண்டும். அதுவரையிலும் கொந்தளிக்கும் மனநிலையுடைய மக்கள் இப்படித்தான் தங்கள் நினைவுகளை மீட்டுக் கொண்டிருப்பர். அதை பிற சக்திகள் வாய்ப்பாகக் கையாண்டு கொண்டேயிருக்கும்”. முள்ளிவாய்க்கால் கஞ்சியை முன்னெடுப்போரோ “இதொரு நினைவு கூரல் செயற்பாடு”என்கிறார்கள். அதனைத் தடுக்க முடியாது என்பது அவர்களுடைய வாதம். அது ஒரு போராட்ட வழிமுறையாகவோ போராட்டத்துக்கான ஒரு அடையாளமாகவே இருக்கலாம். அதை போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகமே தீர்மானிப்பது. இப்படிப் பல்வேறு பார்வைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அது வேறு விடயம். இதை அரசியல் ரீதியாகவே அரசாங்கம் அணுக வேண்டும். நினைவு கூரலுக்கு எந்தத் தடையும் இல்லை என்றே கடந்த ஆண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துமிருந்தார். அடிப்படையில் இதொரு அரசியற் செயற்பாடு என்றே முன்னெடுக்கப்படுகிறது. இப்பொழுது காட்சி மாறியுள்ளதா? சரி இது குற்றம்தான் என்றாலும் அதைச் சட்டரீதியாக – முறைப்படிதானே அரசாங்கம் அணுக வேண்டும். இப்படி வெறித்தனமாக இல்லையே! எப்பொழுதும் தனக்கு வெளியே உள்ள எத்தகைய அரசியற் செயற்பாட்டையும் அரசு அரசியற் கண்கொண்டு பார்ப்பதை விட சட்டத்தின் துணைகொண்டு அடக்க முயற்சிப்பதே அதனுடைய இயல்பு. அதிகாரத் தரப்பின் வழமை இது. அதனால் அது அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது. அதற்குப் பொலிஸையும் படையையும் பயன்படுத்துகிறது. போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் கைது செய்யப்படுவதுண்டு. பொலிஸ் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை என பின்னர் அவர்களும் உறவினர்களும் அலைவார்கள். தலைவர்களும் ஆலாசகர்களும் ஊடக முதலாளிகளும் அவற்றை அரசியலாக்கிக் கொள்வர். இது ஒரு வகையில் அயோக்கியத்தனம். பிற நாடுகளில் தலைவர்களும் கருத்துருவாக்கிகளுமே முதலில் களத்தில் நிற்பர். அவர்களே முன்னணிப்படையாகச் செயற்படுவர். இங்கோ தலைவர்களும் ஆலோசகர்களும் கருத்துருவாக்கிகளும் பாதுகாப்பு வலயங்களில் (Safty Zoon) சௌகரியமாக இருந்து விடுகிறார்கள். ஒடுக்குமுறை அரசும் அதனுடைய படைக்கட்டமைப்பும் எப்போதும் மக்களுக்கு எதிராகத்தான் செயற்படும். இதொன்றும் புதியதல்ல. இன்னும் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளத் தயாரில்லாத அரசும் ஆட்சியும்தான் நடைமுறையில் உள்ளது. ஆகவே, ஒரு போராட்டத்தை அல்லது போராட்ட வடிவமொன்றைத் திட்டமிடும்போது, அதை நிச்சயமாக அரசும் அதனுடைய படைக்கட்டமைப்பும் எதிர்க்கும். முறியடிக்க முயற்சிக்கும். ஒடுக்கும். இதெல்லாம் வன்முறையினாலேயே மேற்கொள்ளப்படும் என்ற புரிதலும் முன் எச்சரிக்கையும் நமக்கு வேண்டும். இதுதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது என்ற அனுபவமும் அறிவும் நமக்கு உண்டல்லவா! அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால், அதாவது அரசு இப்படி நடக்க முற்படாமல் இருக்க வேண்டுமானால் இவ்வாறான அடாவடி, அத்துமீறல், முறையின்மைகளுக்கு எதிராகப் பல ஆயிரக்கணக்கான மக்களாக நாம் திரண்டு நிர்வாக முடக்கம், பொலிசுக்கு எதிராக போராடுவதாக இருக்க வேண்டும். அதுவே அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். ஆகவே இதை எப்படி எதிர்கொள்வது, முறியடிப்பது என்று முன்திட்டமிடல் இருந்திருக்க வேண்டும். அதாவது திட்டம் 1, திட்டம் 2, திட்டம் 3 என தொடர் போராட்டத்துக்கான திட்டமிடலாக. இன்னும் இதை தெளிவாக விளக்க வேண்டுமென்றால், கஞ்சி கொடுக்கும்போது படைகள் எதிர்த்தால் அல்லது தடுத்தால் அல்லது கைது செய்தால், அடுத்த கட்டமாக என்ன செய்வது? அதை ஒரு பெருமெடுப்பிலான மக்கள் எதிர்பாக வளர்த்தெடுப்பது எவ்வாறு? அதில் எல்லோரையும் எப்படிப் பங்கெடுக்க வைப்பது? தாம் அதில் எப்படி இணைந்திருப்பது என்றெல்லாம் தெளிவாகத் திட்டமிட்டிருக்க வேண்டும். அப்படியில்லாமல்தான் பல போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் “பலிக்கடா”க்களாவது மெய்யான உணர்வோடு போராட்டக்களத்தில் குதிக்கின்ற மக்கள் அல்லது மாணவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய குடும்பங்களே பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்ட பல பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் பின்னர் பலருக்கு தெரியாமல் போய் விடுகிறது. இதற்குக் காரணம், போராட்டங்களுக்கு ஐடியா கொடுக்கின்ற ஐயாமணிகளுக்கு அதன் தாற்பரியம் தெரியாது. அவர்கள், இராணுவத்தையோ பொலிசையோ, சிறைச்சாலையையோ, ஏன் போராட்டக்களங்களையோ வாழ்நாளில் கண்டதும் இல்லை. எதிர்கொண்டதும் இல்லை. அவர்களுடைய நோக்கமெல்லாம் அரசாங்கத்தையும் படைகளையும் சீண்டுவது மட்டும்தான். அதிலே தங்களுக்கான உயிர்ச் சூட்டைத் தக்க வைத்துக் கொள்வது. அவ்வளவுதான். கைது செய்யப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இவர்கள் தங்களுடைய குடும்ப விடயங்களை மிகக் கச்சிதமாகக் கவனித்துக் கொள்வார்கள். பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிச் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளைப் பிரத்தியேக வகுப்புகளுக்குக் கொண்டு செல்வார்கள். வலு சந்தோசமாகப் பிறந்த நாள் கொண்டாட்டங்களைச் செய்வார்கள். தொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்களைப் பார்ப்பார்கள். வகுப்புகளைத் தொடர்ச்சியாக நடத்துவார்கள். வருமானத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்…. இதையெல்லாம் செய்து கொண்டே மாலையில் அல்லது முன்னிரவில் அல்லது விடுமுறை தினங்களில் (தங்களுடைய வருமானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சி நிரலும் கெட்டுவிடாமல் பார்த்துக் கொண்டு, ஓய்வு நேர) அரசியலைச் செய்வார்கள். அந்த அரசியல் கூட மக்களுக்கானதாக இருக்காது. பிறத்தியாரைத் திருப்திப்படுத்துவதற்காகவே இருக்கும். சில தூதரகங்களின் நிகழ்ச்சி நிரல், அதற்கான அனுசரணை, நிதியூட்டம் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டே இந்த விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அதாவது சொந்த மக்களை பிறத்தியாருக்காகப் பலி கொடுக்கிறார்கள். இதொன்றும் ஊகநிலைத் தகவல்களில்லை. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்ற வலிமையான கருத்துகள். தாங்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் இறங்காமல், முன்னிற்காமல் பிறரைத் தூண்டி விடுவதன் மூலம் இதெல்லாம் நிகழ்த்தப்படுகிறது. என்பதாலேயே தமிழ்ச்சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் வரவரப் பலவீனப்பட்டு, தமிழ்த்தேசிய அரசியலே வங்குரோத்தான நிலைக்கு வந்திருக்கிறது. போராட்டத்துக்கு தூண்டுகின்றவர்கள், ஆலோசனைகளை வழங்குவோர் அவற்றுடன் கூட நிற்க வேண்டும். அதற்கு விழுகின்ற ஒவ்வொரு அடிடையும் தாங்கத் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் போராட்டங்களும் அந்த அரசியலும் பலமாகுமும். திருகோணமலையில் நடைபெற்ற கைதுகளுக்கு அறிக்கை விடுவது, ஆவேசமாகப் பேசுவதற்கு அப்பால், இந்தப் பெண்களை விடுவிக்கச் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை மீட்டெடுக்க வேண்டும். அப்படி எடுப்பதோடு, பொலிசின் அராஜகத்துக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தை நடத்த வேண்டும். இந்தக் கைதுக் காணொலியையே இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் (சிங்களர், முஸ்லிம்கள், தமிழர்கள், மலையக மக்கள்) பகிர்ந்து ஜனநாயக உரிமைக்கு எதிரான ஒரு அரச வன்முறை என்பதை உணர வைக்க முடியும். அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள ஜனநாயகச் சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள், அவ்வாறான அமைப்புகளுக்கு பகிர்ந்து, அவர்களுடன் இது தொடர்பாக உரையாடி ஒரு தூண்டலையும் அழுத்தத்தையும் கொடுக்கலாம். பல்லாயிரக்கணக்கான மக்களாகத் திரண்டு பொலிஸ் நிலையங்கள், அரச பணிமனைகள் போன்றவற்றை அமைதி வழியில் முற்றுகையிட்டிருக்கலாம். தொடர் மக்கள் போராட்டமாக அதை விரித்திருக்க முடியும். இதற்கு திட்டமிடலும் கடுமையான உழைப்பும் களத்தில் நிற்கக் கூடிய அர்ப்பணிப்பு உணர்வும் தேவை. அதற்கு யார் தயார்? கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களும்(?) இப்படித்தான் தொடங்கப்பட்டது. இப்படித்தான் சூம்பிப் போனது. நாளை சூம்பிப்போன…போராட்டங்களாகவும் சூம்பிப்போன தமிழ்த்தேசியமாகவும்தான் எல்லாம் இருக்கும். https://arangamnews.com/?p=10751
  3. புலிகளும் எலிகளும் May 15, 2024 — கருணாகரன் — ஈழத் தமிழர்களின் “விடுதலைக்கான அரசியல்” இப்பொழுது வெறுமனே “தேர்தலுக்கான அரசியலாக” ச் சுருங்கி விட்டது. அப்படிச் சுருங்கியதன் விளைவுகளே இப்போது நடக்கும் தடுமாற்றங்களும் குத்துக் கரணங்களுமாகும். தேர்தலுக்கான அரசியல் என்பது தனியே தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாகக் கொண்டதாகத் தமிழ்த் தரப்பினரால் ஆக்கப்பட்டு விட்டது. இதை தமிழ் ஊடகவியலாளர்களும் அரசியற் பத்தியாளர்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரித்துச் செயற்படுகிறது. சரியாகச் சொன்னால், இந்தத் தரப்புகளும் தேர்தல் அரசியலில்தான் தங்களுடைய அடையாளங்களையும் இருப்பையும் பேணிக் கொள்கின்றன. (இதைப்பற்றி அடுத்த கட்டுரையொன்றில் விரிவாகப் பார்க்கலாம்). தேர்தல் அரசியலையே தமது வழிமுறையாகவும் வாழ்முறையாகவும் கொண்ட தரப்புகள் இதில் ஈடுபடுவது வேறு. விடுதலைக்கான அரசியலில் ஈடுபட்ட, இரத்தம் சிந்திய போராட்ட வழிமுறையில் வந்தவர்கள் ஈடுபடுவது வேறு. முதலாவது தரப்பினர் காலாகாலமாகத் தமிழ் வாக்காளர்களைக் கவரும் தந்திரோபயங்களில் கைதேர்ந்தவர்கள். அதற்கேற்றவாறு அவர்கள் அவ்வப்போது எடுபடக் கூடிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளைச் செய்வார்கள். பிரகடனங்களை விடுப்பார்கள். பிறகு அந்தப் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் தாமே மறந்தும் மீறியும் செயற்படுவார்கள். 1977 இல் “தமிழீழத்தில்தான் அடுத்த தேர்தல்” என்று தொடங்கிய வீரப்பிரகடனம் இப்பொழுது “சர்வதேச சமூகத்துக்கு தமிழ் மக்களின் அபிலாஷையை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்”, “தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்”என்பது வரையில் வந்துள்ளது. “இதற்காகத்தான் 2024 செப்ரெம்பரில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும்” என்று இப்பொழுது சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு என்ன சொல்வார்களோ! இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 1977 இல் “தமிழீழத்தில்தான் அடுத்த தேர்தல்” என்றவர்கள், இப்பொழுது எங்கே தேர்தலில் ஈடுபடுகிறார்கள்? என்பதை. இதையிட்டெல்லாம் இவர்கள் வெட்கப்படுவதேயில்லை. இப்போதுள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களும் இதையெல்லாம் கேள்வி கேட்பதில்லை. 1977 இல் அடுத்த தேர்தல் தமிழீழத்தில்தான் என்ற தமிழரசியற் தலைவர்கள், 1981 இல் அதை மறந்து விட்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிடத் துணிந்தனர். இந்த ஏமாற்றை உணர்ந்த அன்றைய இளைஞர்கள் அப்போதைய தமிழரசியற் தலைவர்களை எதிர்த்தனர். அதற்குப் பிறகு நடந்த ஆயுதப்போராட்டத்தில் தமிழரசியற் தலைவர்களின் இடம் இல்லாமற்போனது. அல்லது மங்கலாக இருந்தது. ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு எழுச்சியடைந்த மிதவாதத் தமிழரசியற் தலைமை மறுபடியும் தேர்தலுக்கான அரசியலில் மையங்கொண்டது. அதற்காகத் தனது பழைய பாணியிலான மக்களை ஏமாற்றும் அரசியற் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செய்யத் தொடங்கியது. 2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சில பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செய்தது. 1. சர்வதேச ரீதியிலான போர்க்குற்ற விசாரணை. 2. காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்குத் தீர்வு. 3. அரசியற் கைதிகளை விடுவித்தல். 4. படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களை மீட்டெடுப்பது. 5. இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படுதல். 6. இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு. 7. பொருளாதார ரீதியாக எம்மை நாமே கட்டியெழுப்புதல் 8. நாமொரு தேசமாக எழுதல் இப்படிப் பல. ஆனால் இவை எதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்வந்த 15 ஆண்டுகளிலும் நிறைவேற்றவில்லை. இவற்றைப் பற்றிப் பாராளுமன்றத்திலும் மாகாணசபை, உள்ளுராட்சி சபைகளிலும் பேசியதோடு சரி. மட்டுமல்ல, மாகாணசபை, பிரதேச சபைகளின் மூலம் செய்யக் கூடிய, செயற்படுத்த வேண்டிய பணிகளைக் கூடச் செய்யாமல், அங்கெல்லாம் இந்தப் பிரகடனங்களைத் தீர்மானமாக்கி நிறைவேற்றுவதையே தொழிலாகக் கொண்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும்தான். போதாக்குறைக்கு “சில பிரகடனங்களைப் பற்றிப் பேசுவதற்காக ஜெனீவாவுக்குச் செல்கிறோம்” என்று வருடாவருடம் படையெடுத்துப் போகிறார்கள். அப்படியே உலகம் சுற்றுகிறார்கள். அப்படியே தங்களை நன்றாக வளர்த்துக் கொள்கின்றனர். ஆனால் போராட்டத்தில் இணைந்து நின்று, அளப்பரிய தியாகங்களைச் செய்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலையோ மிகப் பரிதாபமானதாக இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதை மேலுயர்த்திக் கொள்வதற்கோ அல்லது பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்புதற்கோ யாருமே முன்வரவில்லை. எங்கும் எவரும் மக்களோடு நின்ற எத்தகைய களப்பணிகளையும் ஆற்றவில்லை. அதற்கு இன்னும் தயாராகவும் இல்லை. இதைப் பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கிறார் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான எம்.ஏ. சுமந்திரன். இது தொடர்பாக அவர் 11.05.2024 இல் விடுத்துள்ள அறிக்கையில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அதனுடைய சாராம்சம் இதுதான்,“கடந்த 15 வருட காலத்தில் எங்களுடைய அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக நாம் மேற்கொண்ட அணுகுமுறைகள் வெற்றியளித்துள்ளனவா என்ற கேள்வியின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வது அவசியம் எனக் கருதுகிறேன்” என்று. ஆனால், இன்று தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் இயங்குகின்ற பத்துக்கு மேற்பட்ட கட்சிகளில் எத்தனை கட்சிகள் இத்தகைய சுயவிசாரணைக்குத் தயாராக உள்ளன? அல்லது அவற்றில் இயங்கும் பல நூற்றுக்கணக்கானே அரசியலாளர்களில் எத்தனை பேர் இப்படித் துணிவோடு தம்மைச் சுயவிசாரணைக்குட்படுத் தயாராக உள்ளனர்? அரசியற் கட்சிகள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, எதிர்ப்பு அரசியலை அல்லது விடுதலை அரசியலுக்கான தமிழ்த்தேசியவாதக் கருத்தியலை வலியுறுத்துகின்ற அரசியற் பத்தியாளர்கள், ஊடகங்கள், அவ்வப்போது அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், தமிழ்ச்சிவில் அமைப்புகள் என எந்தத் தரப்புமே தம்மைத் திரும்பிப் பார்க்கத் தயாரில்லாத நிலையிற்தான் உள்ளன. பதிலாக, தொடர்ந்தும் தமது விருப்பங்களையும் கனவுகளையும் மக்களின் மீது சுமத்துவதிலேயே தீவிரமாக உள்ளன. இதற்கெல்லாம் மக்களே பரிசோதனை எலிகள். இது எவ்வளவு அநீதியானது? அப்படியான ஒன்றுதான் இப்போது மேற்கொள்ளப்படுகின்ற தமிழ்ப்பொது வேட்பாளர் விடயமும். 2010 க்குப் பிறகு நடந்த மாகாணசபைகளுக்கான தேர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என ஒவ்வொரு தேர்தலின்போதும் இதேபோன்ற வெற்றுப் பிரகடனங்களுக்கு அலங்காரப் பூச்சுகளைச் செய்து மக்களிடத்திலே உலாவ விடப்படுகிறது. அட, குறைந்த பட்சம், தாம் வலியுறுத்துகின்ற, தாம் பிரகடனப்படுத்தும் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செயற்படுத்துவதற்காவது பாடுபட வேண்டாமா? அந்தப் பொறுப்புணர்வு கூட இவர்களுக்கில்லை. உண்மையில் இவர்கள் தாங்கள் எழுதிய ஒவ்வொரு வரிகளையும் ஒவ்வொரு பத்திகளையும் திரும்ப எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு கட்சியும் கடந்த காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் மக்களின் முன்னே வைத்த பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் அமர்ந்திருந்து வாசித்துப் பார்க்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் வெறும் வரிகளும் வெறும் வார்த்தைகளும் இல்லை. அவை மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள். சத்திய வார்த்தைகள். ஆகவே வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுவதும் சத்திய வார்த்தைகளை மீறிச் செல்வதும் மிகப் பெரிய தவறு. துரோகம். அப்படித்தான் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும், மாணவர்களாகிய தங்களுடைய வரையறை என்ன? பொறுப்பென்ன? செயற்பாட்டுப் பரப்பென்ன? என்பதை அறிவது நல்லது. (இதைக் குறித்தும் அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்). தொகுத்துச் சொன்னால், முதலில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு உண்மையாக இருங்கள். போராடிய மக்களுக்கும் தியாயகங்களைச் செய்த மக்களுக்கும் விசுவாசமாயிருங்கள். அவர்களுக்கு மேலும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் அபிலாஷைகளுக்கு நீங்கள்தான் முதலில் முன்னின்று உழைப்பவர்களாக இருக்க வேண்டும். அந்த உழைப்பே பிறருக்கு வழியைக்காட்டுவதாக இருக்க வேண்டும். அதன் பிறகே மக்கள் உங்களைப் பின்தொடர்வர். இதற்கு மக்கள் மத்தியில் களப்பணிகள் அவசியமாகும். அரசியலை நடைமுறைப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொள்ள முயற்சிப்பதாகும். நடைமுறைகள் உருவாகும்போதே அரசியல் வெற்றிகளை அடையலாம். பதிலாக ஊடக மையங்களில் கூடுவதோ, தங்கள் தங்கள் அலுவலங்களில் இருந்து கொண்டு அறிக்கை விடுவதோ, நான்குபேர் சேர்ந்து கொண்டு புதுப்புது அமைப்புகளை உருவாக்குவதோ, அப்படி இப்படி என நான்கு, ஆறு அமைப்புகள் இணைந்து கொண்டு அறிக்கைகளைத் தயாரிப்பதோ, தூதுவரங்களுக்குக் காவடி எடுப்பதோ இல்லை. தெற்கிலே பொதுஜன பெரமுனவும் ராஜபக்ஸவினரும் இப்படித்தான், தங்களோடு 100 க்கு மேற்பட்ட அமைப்புகள் இணைந்திருக்கின்றன என்று அரசியல் செய்ய முற்பட்டார்கள். அந்த அரசியலின் பெறுமதியை உலகம் நன்கறியும். அதை வரலாறு பழித்துரைக்கிறது. விடுதலைக்கான அரசியல் என்பது வேறு. தேர்தலுக்கான அரசியல் என்பது வேறு. இரண்டையும் இணைத்துச் செய்வதும் செயற்படுத்தும் செல்வதும் வேறு. அது அதுக்கென அடிப்படைகளும் வேறுபாடுகளும் உண்டு. இதற்கான அரசியற் கணிதங்களை நாம் அறிய வேண்டும். விடுதலை அரசியலுக்கு நாம் யாராக இருக்கிறோம் என்பது, நம்முடைய செயல்களின் மூலமே அடையாளப்படுத்தப்படும். வார்த்தைகளின் மூலமாக அல்ல. இதற்கு அண்மைய செழிப்பான உதாரணம், தமிழ் மக்கள் பேரவையாகும். மிக ஊக்கத்துடன், உற்சாகமாகத் தொடங்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை மூன்று ஆண்டுகளால் காணாமற்போனவைகளின் பட்டியலில் சேர்ந்து கொண்டது. தமிழ் மக்கள் பேரவையின் தோல்வியை மறைப்பதற்காக அதன் உற்பத்தியாளர்கள் வேறு மார்க்கங்களில் முயற்சிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பொதுவேட்பாளர் பற்றிய அறிவிப்புமாகும். இப்பொழுது நடந்து கொண்டிருப்பது எலிகள் பல சேர்ந்து வளையெடுக்கும் முயற்சிகள். ஆம் புலிகளின் காலம் முடிந்தது. இது செயற்படும் எலிகளின் காலமாகியிருக்கிறது. செயற்படுவோரின் காலம் போயொழிந்தது. செயற்படாதோரின் அரங்கு திறந்திருக்கிறது. என்பதால்தான் தாய் மண்ணை விட்டு ஆயிரமாயிரமாய்த் தினமும் வெளியேறிச் செல்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். இந்தச் சீரில்தான் “தேசமாய்த் திரள்வோம்” என்று கனவு கண்டு கொண்டிருக்கிறோம். https://arangamnews.com/?p=10741
  4. டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல் Vhg மே 17, 2024 புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் தமிழ் அர்ச்சகர் நேற்று முன்தினம் கடுமையானமுறையில் தாக்கப்பட்டுள்ளார். டென்மார்க் கோவிலில் தமிழில் வழிபாடுகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த தம்பிரான் சுவாமிகள் மிதே இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் அறங்காவலருடைய வேண்டுதலுக்கு இணங்க அவர் கோவிலில் தங்கியிருந்தபோதே, நள்ளிரவில் கோவில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த நான்குபேர் அர்ச்சகர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. கடுமையான காயங்களுக்கு உள்ளான அர்ச்சகர் தற்போது வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். https://www.battinatham.com/2024/05/blog-post_468.html
  5. நினைவு கூறலை தடுப்பது என்பது பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் adminMay 17, 2024 வடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கையின் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிக்கின்றன என தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு, இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள் வடக்கு – கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்புக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டு நினைவு கூறும் உரிமைகள் மறுக்கப்படும் வன்செயல்கள் அரங்கேறி வருகின்றமையை மாணவர் சமூகமாக கூர்ந்து நோக்குகின்றோம். அண்மையில் திருகோணமலை சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினைப் பரிமாறி போரில் இனப்படுகொலைக்கு உள்ளானவர்களை நினைவு கூர்ந்த மக்கள் சிறிலங்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கிய பொதுமக்கள் சிறிலங்கா காவல்துறையினால் அச்சுறுத்தப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியும் உள்ளன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பென்பது ஆள்புல மற்றும் குடிசன ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகள் சிறிலங்கா படைத்தரப்புக்களினால் கண்காணிப்புக்கள், அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கப்படுவதோடு, அவற்றினைத் தடுக்கும் செயற்பாடுகளில் தீவிரத் தன்மையுடன் ஈடுபடுகின்றமையினை அண்மைக்காலங்களில் நோக்கக் கூடியதாகவுள்ளது. அனைத்துலகச் சமூகத்தில் நினைவு கூறல் என்பது மனித உரிமைகளாக மதிக்கப்படும் நிலையில், 2009 ஆண்டு ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவேந்தும் வகையில் மே 18 – முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களினை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஈழப்போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு முறையான உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தல்களேதும் வழங்கப்படாதவொரு நிலையில் போரின் வடுக்களிலிருந்தும் அதன் கொடூர முகங்களிலிருந்தும் விடுபடுவதற்கான உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கான மாற்றாக நினைவேந்தல் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன. சிறிலங்காவின் படைத்தரப்புகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி என்பது சாத்தியமற்றுப் போய் சிறிலங்கா நீதிக்கட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் அண்மைக்காலங்களில் நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் முன்னெடுப்பவர்களை அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் யாவும் தொடர்ந்தும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை உளநெருக்கடிகளிற்கு உள்ளாக்குகின்றன. நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொதுமக்களை ஆங்காங்கே அச்சுறுத்தித் தடுப்பது மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அப்பாவிப் பொதுமக்கள் மீது பிரயோகிப்பதனூடாக நினைவேந்தல் செயற்பாடுகளிலிருந்து தமிழ் மக்களை விலக வைப்பதற்கு சிறிலங்கா அரசு முழுவீச்சில் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக, மக்களின் நினைவுகளினை அழிப்பதற்கு முயல்வதனால் சிறிலங்கா அரசும் அதன் படைத்தரப்புக்களும் தமிழ் மக்கள் தமது உரிமைகளிற்காக கூட்டுச் சேர்வதனையும் தம்மீது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயன்முறைகளிற்கு எதிரான துலங்கல்களை வெளிப்படுத்தவும் முடியாதவொரு நிலையினை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. தமிழ் மக்களின் வலிகள் கூறும் நினைவுத் தூபிகளை அழித்தல் மற்றும் தமது போர் வெற்றிச் சின்னங்களை நிறுவுவதன் ஊடாக தமிழ் மக்களின் நினைவுகளை அழிப்பதில் பெரிதாக எதையும் சாதித்திராத சிறிலங்கா அரசு, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயலென்பது தமிழ் மக்களிடையே முன்னரை விட எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனைத் தடுப்பதனூடாக தனது ஆக்கிமிப்பை சாதித்து விட முனைகின்றது. இதுபோன்ற நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுவதோடு, சிறிலங்கா அரசின் இதுபோன்ற செயல்கள் யாவும் அனைத்துலகச் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயங்கள், பிரகடனங்களை மீறுவதோடு, சிறிலங்காவின் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிக்கின்றன. – என்றுள்ளது https://globaltamilnews.net/2024/203057/
  6. இதுவரை இரண்டு பேர்தான் போட்டியில் குதித்துள்ளனர்! எங்கே மற்றவர்கள்?
  7. கதையின் நோக்கம் மரண தண்டனையின் கொடூரத்தை விபரித்து மரணதண்டனைக்கு எதிரான உணர்வை உருவாக்குவதுதான் என்று இமிழ் பற்றிய நீண்ட கட்டுரையில் ஷோபாசக்தி சொல்லியிருந்தார். ஹமிடாவின் பாரதூரமான குற்றங்களை கதையில் சொல்லாமல் விட்டது ஒரு உத்திதான். ஹமிடாவின் குற்றங்கள் என்ன என்று கேட்பவர்கள் மரணதண்டனைக்கு உள்ளுறைந்த ஆதரவைக் கொண்டிருப்பவர்கள்! கண்ணன்.எம் அவர்களின் மேலான கவனத்திற்கு! May 7, 2024 ஷோபாசக்தி 51-வது இலக்கியச் சந்திப்புக் கதைமலர் ‘இமிழ்’ தொகுப்புக்கு கடந்த வாரயிறுதியில் யாழ்ப்பாணத்திலும், சென்னையிலும் விமர்சனக் கூட்டங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. இரண்டு கூட்டங்களிலும் உரையாற்றிய விமர்சகர்கள் அனைவருமே தொகுப்பை முழுமையாகப் படித்துவிட்டு விரிவாக உரையாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. இமிழ் தொகுக்கப்பட்ட முறை குறித்து நேர்மறையான, எதிர்மறையான இரண்டு வகை விமர்சனங்களுமே முன்வைக்கப்பட்டன. இதுவரை உலகத்தில் வெளிவந்துள்ள எல்லாத் தொகுப்புகளையும் போலவே இமிழிலும் விடுபடல்கள் உள்ளன. கதைத் தேர்வுகளைப் பொறுத்தவரை, நான் முன்பே விளக்கியிருப்பதைப் போன்று கதைகளைத் தேர்வு செய்யாமல் எழுத்தாளர்களையே தேர்வு செய்து கதைகளைக் கோரியிருந்தோம். கௌரிபாலன், கலாமோகன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் தொடக்கம், பிரமிளா பிரதீபன் போன்ற இளைய எழுத்தாளர்கள்வரைக்கும் தொகுப்புக்குள் அடக்கவே முயற்சித்துக் கதைகளைக் கோரியிருந்தபோதும், அது நிகழாமல் போனது வருத்தமே. தொகுப்பிலுள்ள கதைகளின் மீதான நேர்மறைக் கருத்துகளை மட்டுமல்லாமல், தொகுப்பிலுள்ள கதைகளின் வகைமை போதாமை, கச்சிதமின்மை, கலையமைதி இன்மை போன்ற எதிர்மறைக் கருத்துகளையும் விமர்சகர்கள் தங்கள் தங்களது பார்வையிலிருந்து முன்வைத்திருக்கிறார்கள். விமர்சனங்களைக் கூர்ந்து கவனித்துக்கொள்வோம். இலக்கிய விமர்சனம் இல்லாமல் இலக்கிய வளர்ச்சி கிடையாது. கதைகள் மீதான விமர்சனங்களைப் பொறுத்தவரை, இலக்கிய விமர்சகர்களின் பாதையில் நான் குறுக்கிடுவதே இல்லை. ஏனெனில் ‘என்னுடைய கதையில் சொல்ல முடியாத எதையுமே கதைக்கு வெளியே என்னால் சொல்லிவிட முடியாது’ என்ற ஜெயகாந்தனின் வாக்கே எனக்கு எப்போதும் முன்மாதிரி. இதை நான் ஏற்கனவே பலதடவைகள் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், பற்றுறுதியோடு கடைப்பிடித்தும் வருகிறேன். எனவே, விமர்சகர்களின் கருத்துகளைக் கூர்ந்து கவனித்து மனதில் பதிய வைத்துக்கொள்கிறேனே தவிர அவற்றுக்குப் பதிலளிப்பதில்லை. அந்த விமர்சனங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டவையின் பிரதிபலிப்பு என்னுடைய அடுத்த கதையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் நான் தவறுவதில்லை. எனினும், சென்னையில் நிகழ்ந்த விமர்சனக் கூட்டத்தில் உரையாற்றிய ஆய்வாளர் கண்ணன்.எம் (பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்) தனது விமர்சன உரையிலும், தொடர்ந்து நடந்த கலந்துரையாடலிலும் சில கேள்விகளை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல், அதற்கான பதில்களையும் எதிர்பார்க்கிறார். அத்தோடு நிற்காமல், ‘எழுப்பப்படும் கேள்விகளுக்குப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பதிலளிக்காமல் மவுனம் சாதிக்கிறார்கள்’ என்றொரு பதைபதைக்கும் குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார். மவுனம் என்பது சாவுக்குச் சமமல்லவா. இந்தக் குற்றச்சாட்டு புலம்பெயர்ந்த எழுத்தாளன் என்ற முறையில் என்னை நோக்கியும்தானே முன்வைக்கப்படுகிறது. ஆகவே, கண்ணன் அவர்களின் மேலான கவனத்திற்குச் சில குறிப்புகளை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. பத்திரிகை நேர்காணல்களிலும், காட்சி ஊடகங்களிலும், கட்டுரைகளிலும், இலக்கியக் கூட்டங்களிலும், என்னுடைய புத்தக வெளியீடுகளிலும் எப்போதும் நான் ஓயாமல் பதில்களைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன். எனவே, கண்ணனின் ‘மவுனம்’ என்ற குற்றச்சாட்டு எனக்குப் பொருந்தாது. கண்ணன் எழுப்பிய ‘வாழ்பனுபவம்’, ‘இலக்கிய முன்மாதிரி’ போன்ற எல்லாக் கேள்விகளும் ஏற்கனவே கேட்கப்பட்டு என்னால் தமிழ், சிங்களம், மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் பதில் சொல்லித் தீர்க்கப்பட்டவையே. அந்தப் பதில்களையெல்லாம் நீங்கள் வேறெங்கும் தேடித் திரிய வேண்டியதில்லை. அவற்றில் ஒரு பகுதியை என்னுடைய இதே வலைத்தளத்தில் தொகுத்து வைத்திருக்கிறேன். இங்கிருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட என்னுடைய நேர்காணல்களிலேயே அவற்றைக் கண்டு கொள்ளலாம். அத்தோடு, சமூக வலைத்தளங்களில் இதுவரை குறைந்தபட்சம் ஆயிரம் கேள்விகளுக்காவது பதிலளித்திருப்பேன். இதற்கு மவுனம் என்றா பெயர்? அவதூறுக் கைகளின் ஆயிரம் கேள்விகளுக்கு நான் பதிலளிக்காமல் தவிர்த்திருப்பேன். ஆனால், கண்ணன் போன்ற ஒருவரின் ஒரேயொரு கேள்விக்குக் கூட நான் பதிலளிக்காமல் விட்டதில்லை. இதைக் கண்ணன் கவனத்தில் குறித்துக்கொள்ள வேண்டும். நிறுவனங்களின் கோட்டை மதில்களுக்குள் அமர்ந்திருந்து எப்போதாவது ஒருமுறை பொதுவெளியில் வாய் திறக்கும் கண்ணன் போன்ற ஆய்வாளர்களுக்கு, காலம் முழுவதும் எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் பொதுச் சமூகத்திடம் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் குரல் ‘மவுனம்’ என்பதாகத் தெரிகிறதென்றால் இதெல்லாம் ‘எலிட்’ மனநிலைக் கோளாறு என்பதாக மட்டுமே என்னால் பொருள்கொள்ள முடியும். தன்னுடைய உரையில் என்னை நோக்கி அப்படி என்னதான் கண்ணன் புதுமையான கேள்விகளைக் கேட்டுவிட்டார்? தொகுப்பில் இடம்பெற்றுள்ள என்னுடைய ‘மரச் சிற்பம்‘ கதையில் என்னுடைய வாழ்பனுவம் எங்கேயிருக்கிறது என்ற அவருடைய கேள்வியைப் பரிசீலித்துவிடலாம். கண்ணன் தன்னுடைய உரையை ‘வாழ்பனுபவம் மட்டும்தான் இலக்கியமாக மாற முடியும்’ என்று அழுத்தமாகச் சொல்லியே ஆரம்பிக்கிறார். இலக்கியம் குறித்த இவரது இந்தப் புரிதலே அடிப்படையில் தவறானது என்று நான் கருதுகிறேன். கண்ணன் தன்னுடைய உரையில் சிறப்பான கதைக்கு உதாரணமாகச் சுட்டும் ‘சிற்பியின் நரகம்’ கதையில் புதுமைப்பித்தனின் வாழ்பனுபவமா பதிவாகியிருக்கிறது? ‘பரபாஸ்’ நாவலை எழுதிய பெர் லாகர்குவிஸ்ட் ஈராயிரம் வருடங்களுக்கு முன்பு ஜெருசலேமில் வாழ்ந்த வாழ்பனுவத்தால் அந்த நாவலை எழுதினாரா? சமகாலத்தில் எழுதப்பட்ட மைக்கல் ஒந்தாச்சி, அனுக் அருட்பிரகாசம் ஆகியோருடைய நாவல்கள் அவர்களது சொந்த வாழ்பனுபவமா? அவ்வளவு ஏன், கண்ணன்.எம் பிரெஞ்சு மொழியில் பதிப்பித்த ‘வாடிவாசல்’ நாவலை எழுதிய சி.சு. செல்லப்பா எந்த ஜல்லிக்கட்டில் இறங்கி மாடு பிடித்தார்? அவர் மாடு பிடிக்கும் வீரராக அல்லாமல், வத்தலகுண்டு பார்ப்பன சங்கத்தின் தலைவராக இருந்தவர். அந்த வாழ்பனுபவமா வாடி வாசல்? வாழ்பனுபவங்களின் வழியே எழுதப்படும் புனைவுப் பிரதிகள் அதற்கான வலிமையையும் பெறுமதியையும் கொண்டுள்ளன என்பது உண்மைதான். அதேவேளையில் வாழ்பனுபவத்தை மட்டும் நம்பியே எழுதப்படும் கதைகள் இலக்கியரீதியாகத் தோல்வியுறுவதுமுண்டு. நாஸிப் பிரதிகளாக மாறுவதுண்டு. ஈழத்துச் சூழலிலேயே கூட இவ்வாறு மோசமான எழுத்துகளுண்டு. அது குறித்து நான் எழுதிய கட்டுரைகளும் என்னுடைய இதே வலைத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. படித்துக்கொள்ளலாம். நேரடியான வாழ்பனுபவம் இல்லாவிட்டாலும் தேடுதல் – அறிதல் மூலம் எழுதப்படும் பிரதிகளும், முற்று முழுவதுமாகக் கற்பனையால் மட்டுமே உருவாக்கப்படும் பிரதிகளும் கூட மிகச் சிறப்பான இலக்கியப் பிரதிகளாக மிளிரக்கூடும் என்பதற்குத் தமிழிலிருந்தும் உலக இலக்கியங்களிலிருந்தும் எஸ்.பொன்னுத்துரை, மகாஸ்வேதா தேவி, ஜோர்ஜ் ஆர்வெல் என என்னால் ஆயிரம் உதாரணங்களைச் சொல்ல முடியும். இமிழ் தொகுப்பிலுள்ள கதைகள் எவற்றிலும் இரத்தமும் சதையுமான வாழ்பனுபமே இல்லை என்று கண்ணன் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை. போர் நிலத்தில் முப்பது வருடங்களாகச் சிக்குண்டு வாழ்ந்தவர்கள் போரைப் பற்றி எழுதியிருப்பதும், முஸ்லீம் எழுத்தாளர்கள் தங்களது சமூகத்தை, பண்பாட்டு வாழ்க்கையைக் குறித்து எழுதியிருக்கும் கதைகளும், தமிழகத்தில் ஈழ அகதி வாழ்க்கை குறித்து தொ.பத்திநாதனும் செந்தூரனும் எழுதியிருப்பதும் வாழ்பனுபவம் இல்லாவிட்டால் எதுதான் இரத்தமும் சதையுமான வாழ்பனுபவம்? சி.சு. செல்லப்பா மாடு பிடிப்பதா? ஜி. நாகராஜன் அவ்வப்போது சென்றுவந்த குறத்தி முடுக்கா? இமிழ் தொகுப்பிலுள்ள ‘மரச் சிற்பம்’ கதையில் ஷோபாசக்தியின் வாழ்பனுபவம் எங்கேயிருக்கிறது என்று கேட்டால், அவர் தன்னுடைய இலங்கை வாழ்பனுவத்தை ‘கொரில்லா’ என்று எழுதத் தொடங்கி பிரான்ஸ் வாழ்பனுபவத்தை ‘ஸலாம் அலைக்’ வரை பக்கம் பக்கமாக எழுதிக் கொட்டிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது முற்றுமுழுதாகக் கற்பனையின் வழியே அவர் அந்திக் கிறிஸ்து, அரம்பை, யாழ்ப்பாணச் சாமி போன்ற கதைகளையும் எழுதியிருக்கிறார். ‘இச்சா’ நாவலில் கற்பனையாக ஒரு நாட்டை மட்டுமல்லாமல் ‘உரோவன்’ என்ற மொழியையும் உருவாக்கியிருக்கிறார். ஓர் எழுத்தாளர் எவ்வளவு வீச்சாக மூச்சடக்கிக் கற்பனைக் கடலில் மூழ்கினாலும், மூச்சுவிட மேலே வரும்போது வெளிப்படும் மூச்சுக்காற்று வாழ்பனுபவத்தின் கீற்றாகவே இருக்கும். அதனால்தான் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கற்பனைகளும் தம்மளவில் வேறுபடுகின்றன. அவர்களது அக்கறைகளும் வேறுபடுகின்றன. வாழ்பனுபவம் என்பது சாக்கு மூட்டையல்ல சுமந்து செல்வதற்கு. ஒருவருக்கு வாழ்க்கையின் ஒவ்வொருநொடியும் வாழ்பனுபவங்களே. எழுத்தாளருக்கு உறக்கத்தில் வரும் கனவும் வாழ்பனுபவமே. அதை இலக்கியமாக மாற்ற அவருக்குத் தெரியும். என்னுடைய ‘மரச் சிற்பம்’ சிறுகதை மரணதண்டனையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு கதை. ‘மரணதண்டனையோடு உனக்கு வாழ்பனுபவம் இருக்கிறதா?’ என்று கண்ணன் கறாராக என்னை நோக்கிக் கேள்வி கேட்காததற்கு அவரது கருணையுள்ளம் மட்டுமே காரணமாக இருக்கும் என நம்புகிறேன். எனினும், என்னுடைய பிரான்ஸ் வாழ்பனுபவம் ஏன் கதைகளாக மாறவில்லை என்று கண்ணன் கேட்கிறார். அதெல்லாம் நிறையவே எழுதியிருக்கிறேன் என்று சொல்லி என்னால் தப்பிக்க முடியாது போலிருக்கிறது. ஏனெனில், பிரெஞ்சு மொழிக்கும் மனிதர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் என்ன? பிரெஞ்சுப் பண்பாட்டின் செழுமையை நான் உள்வாங்கியிருக்கிறேனா? என்று கண்ணன் கேள்விமேல் கேள்வியாகக் கேட்கிறார். இவையும் எனக்குப் புதிய கேள்விகளல்ல. அய்ந்து வருடங்களுக்கு முன்பாக பிரெஞ்சுக் குடியுரிமை கேட்டு நான் விண்ணப்பிக்கும்போது, திரும்பத் திரும்ப இதே கேள்விகளைத்தான் (பிரெஞ்சு பண்பாடு, பிரெஞ்சு மொழி) என்னிடம் காவற்துறை அதிகாரி கேட்டார். ‘ஒரு பண்பாட்டுச் செழுமை மயிரும் என் கண்களுக்குத் தெரியவில்லை அய்யா, நான் பிரெஞ்சுச் சமூகத்தில் மனிதர்களுடன் கலந்துவிடத் தயாராகவேயுள்ளேன்… ஆனால், அவர்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளத் தயாரில்லை’ என்று நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டாலும், பிரஞ்சுப் பண்பாட்டுச் செழுமை குறித்துப் பத்து நிமிடங்கள் நான் உரையாற்றி வெற்றிகரமாகத் தேர்வை முடித்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கேயும் என் கற்பனைத் திறன் என்னைக் கைவிடவில்லை. கண்ணன் பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் முக்கியமான பதவியிலிருப்பவர். இதன் வழியாக அவர் பிரெஞ்சுப் பண்பாட்டுச் செழுமை குறித்து அறிந்திருக்கலாம். பிரெஞ்சு மனிதர்கள் குறித்து அறிந்திருக்கலாம். நானோ பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு, போலிப் பாஸ்போர்ட்டில் இலக்கில்லாமல் தற்செயலாகப் பிரான்ஸை சென்றடைந்த அரசியல் அகதி. என்னை விமான நிலையத்தில் பிரெஞ்சுப் பண்பாடு அடித்து உதைத்தே வரவேற்றது. அகதியாகத் தெருவில் விட்டது. இன்றுவரை அந்நியனாக வைத்திருக்கிறது. நிற வேற்றுமை பாராட்டுகிறது. எந்த நேரத்திலும் குடியுரிமையைப் பறித்துவிட்டு திரும்பவும் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பலாம் என்ற சட்டக் கத்தி தலைக்கு மேல் தொங்குகிறது. எனவே பிரெஞ்சுப் பண்பாடு பற்றிய எனது பார்வையும் வாழ்பனுபவமும் பிரெஞ்சு நிறுவன ஆய்வாளர் கண்ணனின் பார்வையும் ஒன்றாக இருக்க வாய்ப்பேயில்லை. இதையெல்லாம் ஏதோ ஒரு இதுக்காக நான் இட்டுக்கட்டிச் சொல்கிறேன் என நினைத்துவிடாதீர்கள். பிரெஞ்சு மொழியில் வெளியான எனது சுயசரிதை Shoba – Itinéraire d’un réfugiéநூலில் இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக விபரித்துள்ளேன். பிரான்ஸின் முக்கிய பதிப்பகமான Le livre de poche வெளியிட்டுள்ளது. அடுத்ததாக ஆட்சிக்கு வெள்ளை இனவாதியான மரி லூபென் வந்தால் வழக்கு வரவும் எல்லா வாய்ப்புகளுமுள்ளன. அவர் ஆட்சிக்கு வருவது சாத்தியமற்ற ஒன்றல்ல. ஏற்கனவே மாகாண அளவில் ஆட்சியிலிருக்கிறார். கடந்த தேர்தலில் பிரெஞ்சுப் பண்பாட்டுச் செழுமையின் வழியே 35 விழுக்காடு மக்கள் அவருக்கு வாக்களித்திருந்தார்கள். மிகுதிப் பண்பாடு கடைந்தெடுத்த வலதுசாரி இம்மனுவல் மக்ரோனுக்கு வாக்களித்து இடதுசாரிகளை செயின் நதியில் தள்ளிச் சமாதி கட்டியது. அகதிகள், வெளிநாட்டவர்கள் மீது போடப்பட்டுக்கொண்டேயிருக்கும் புதிய சட்டங்கள், குடியேறும் வெள்ளையர்களற்ற மனிதர்கள் நாய் போல தெருக்களில் அவ்வப்போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுவது, புதிய அகதிகளுக்குக் கதவடைப்பு, கடல் கடந்த மாகாணங்கள் (France d’outre-mer) என்ற பெயரால் இன்றுவரை காலனிகளை வைத்திருப்பது என்று பிரஞ்சின் பண்பாட்டுக் கதவுகள் மூடப்பட்டுக்கொண்டே வருகின்றன. அந்தக் கதவில் இறுகிய பூட்டைப் போடுவதற்கு வெள்ளை இனவாதிகள் காத்திருக்கிறார்கள். ஓர் அகதி மனிதனாக எனக்கு இது ஆபத்தான பண்பாடு. பிரெஞ்சுச் சமூகத்தில் கலக்காமல் அகதிகள் தனித்த தீவாக இருக்கிறோமா? அப்படியெல்லாம் இருந்து என்னதான் சாதிக்கப் போகிறோம்! எங்களுக்குப் பிரெஞ்சுச் சமூகத்தில் கலக்க ஆசையில்லையா என்ன? என்னைப் பொறுத்தவரை அதற்கான எல்லா முயற்சிகளும் எடுத்திருக்கிறேன். அவர்களுடன்தான் வேலை செய்கிறேன். அவர்களுடன்தான் சினிமாக்களில் நடிக்கிறேன். அவர்களுடன்தான் தேசிய நாடக அரங்கத்தில் பிரெஞ்சு மொழியில் நாடகம் நடிக்கிறேன். என்னுடைய புத்தகங்களை மொழிபெயர்ப்பில் அவர்களுக்குக் கொடுக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்காக நடத்தப்படும் கூட்டங்களில் முகம் சுழியாது கலந்துகொண்டு, பிரெஞ்சுப் பண்பாட்டின் வழியே புன்னகையுடன் குரல் உயர்த்தாமல் பொறுமையாகக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். ஆனால், இங்கே நான் அந்நியன்தான். பிரெஞ்சுச் சமூகம் தன்னுள்ளே நுழைய என்னை அனுமதிக்கவில்லை. ஓர் அகதியாக, முன்னாள் போராளியாக என்னுடைய அனுபவங்களும் ஒரு கலைஞனாக என்னுடைய திறனும் மட்டுமே அவர்களுக்குப் போதுமானது. பிரான்ஸில் வாழும் வெள்ளையரல்லாத எந்த எழுத்தாளரிடமும் கலைஞரிடமும் வந்து கேட்டாலும் நான் சொல்வதையே சொல்வார்கள். இதுதான் எங்களின் வாழ்பனுபவம். வெள்ளை இனவாதிகள் திரும்பவும் நாஸி காலத்திற்குத் திரும்பிச் செல்லத் தீவிரமாக முயற்சிக்கிறார்கள். இதன் வழியாகத்தான் என்னுடைய ‘மரச் சிற்பம்’ கதை உருவாகியது. இந்த வாழ்பனுபவம் போதுமானதா இல்லையா? சொல்வதற்கு இன்னும் நிறையவே உள்ளன. ‘மரச் சிற்பம்’ கதை நிகழும் காலம் 1977. அப்போது நான் பிரான்ஸுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கதையில் இடம்பெறும் சம்பவத்தில் எனக்கு நேரடியாக அனுபவம் கிடையாது. எனக்கு மட்டுமல்ல, அந்த மரணதண்டனை இரத்தச் சடங்கு நிகழ்த்தப்பட்ட முறை குறித்து அந்தக் கொடிய சடங்கில் கலந்துகொண்ட முப்பது பேர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. பிரெஞ்சுப் பண்பாட்டை விளங்கிக்கொண்ட, விளங்கிக்கொள்ளாத யாருக்குமே தெரியாது. இந்த மரணதண்டனை நிகழ்ந்து 36 வருடங்களுக்குப் பின்புதான், எவ்வாறு கொடிய முறையில் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது சடங்கை முன்நின்று நடத்திய நீதிபதியின் இரண்டு பக்கக் கடிதம் வழியாக 2013-ல் பிரெஞ்சு பொதுச் சமூகத்திற்குத் தெரிய வந்தது. நல்லவேளையாக அப்போது நான் பிரான்ஸில் இருந்தேன். அந்த இரண்டு பக்கக் கடிதம் எனக்குள் ஏற்படுத்திய உணர்வும், தற்கால பிரெஞ்சு அரசியல் செல்நெறியும்தான் எனது இருபது பக்கக் கதை உருவாகக் காரணமாக இருந்தன. ஆனால் ‘விக்கிபீடியாவில் ஒரு சொடுக்குச் சொடுக்கினால் இந்தக் கதை தெரிந்துவிடும்’ என்கிறார் ஆய்வாளர் கண்ணன். விக்கிபீடியாவில் சொடுக்கினால் எதுதான் தெரியாது? எல்லாமேதான் உள்ளன. விக்கிபீடியாவில் புத்தரைப் பற்றி ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தத் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஹேர்மன் ஹெசேயின் ‘சித்தார்த்தா’ போன்றதொரு நாவலை எழுதிவிட முடியுமா என்ன! ஆய்வுக் குறிப்புகளும், தேடுதல்களும் கூட முழுமையாக உதவப் போவதில்லை. இந்தத் தரவுகளின் மேல் கட்டி எழுப்பப்படும் கற்பனையும் உணர்ச்சிகரமான சித்திரிப்புமே புனைவுப் பிரதிக்கு மிக அடிப்படையானது. ‘மரச் சிற்பம்’ கதையில் கில்லட்டினால் தலை வெட்டப்படுபவன் ஒரு துனிஷியா நாட்டு இளைஞன். அவன் தன்னுடைய பிரெஞ்சுக் காதலியைக் கொன்றதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. அவன் குற்றவாளி என்று அழுத்தமாகவே நான் கதையில் குறிப்பிடுகிறேன். ஆனால் ‘கொலையுண்ட பெண்ணுக்குக் கதையில் ஏன் இடமில்லை?’ என்ற கேள்வியைக் கண்ணன் எழுப்பியிருக்கிறார். இந்தக் கேள்விதான் ஓர் ஆய்வாளருக்கும் ஓர் எழுத்துக் கலைஞனுக்குமுள்ள இடைவெளியின் தூரமோ என்று எனக்கு அய்யம் ஏற்படுகிறது. நான் நூற்றுக்கணக்கான மரணதண்டனைகளை என் தாய்நிலத்தில் பார்த்துவிட்டு, போரிலிருந்து தப்பித்து பிரான்சுக்கு வந்தவன். எனக்குள் மரணதண்டனை குறித்த கேள்வி எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். என்னுடைய பல கதைகளிலும் நாவல்களிலும் கட்டுரைகளிலும் இது குறித்து நான் விசாரணை செய்துகொண்டேயிருப்பவன். பிரான்ஸில் 1977-ம் வருடம் வரை கில்லட்டின் கொலைக் கலாசாரம் நீதியின் பெயரால் சட்டமாக இருந்ததை அறிய வந்தபோது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்தச் செய்தியை அறிந்ததிலிருந்து என்னுடைய பல பிரெஞ்சு நண்பர்களிடம் இது குறித்து விசாரித்தேன். எல்லோருமே அறிவுத்துறை சார்ந்த நண்பர்கள்தான். ஒரேயொருவருக்கு மட்டுமே 1970-கள் வரை கில்லட்டின் கலாசாரம் பிரான்ஸில் நடைமுறையில் இருந்தது தெரிந்திருந்தது. அவருக்கும் அதற்கு மேல் விபரங்கள் தெரியவில்லை. பிரான்ஸில் நிகழ்ந்த அந்தக் கடைசி கில்லட்டின் கொலை குறித்து பிரெஞ்சு இலக்கியங்களில் ஏதும் பதிவிருப்பதாகத் தெரியவில்லை. அநேகமாக அந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதப்பட்ட முதலாவது சிறுகதை என்னுடைய கதையாகத்தான் இருக்கும். இனி இந்தக் கதை பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானால்தான், பிரெஞ்சுப் பண்பாடு தன்னுடைய கடைசி மரணதண்டனையின் கொடூரச் சித்திரம் குறித்துத் தெரிந்துகொள்ளும் என்றே நினைக்கிறேன். ‘குற்றத்தை விடத் தண்டனையே வெறுக்கத்தக்கது’ என்ற ஒற்றை வாக்கியத்தில்தான் என்னுடைய கதை கட்டியெழுப்பப்பட்டது. இந்த வாக்கியத்தைச் சொன்னவர் விக்டர் ஹியூகோவா, அல்பேர் கமுயுவா அல்லது வேறொருவரா என்பது என் ஞாபகத்திலில்லை. ஆனால், அந்த வாக்கியம் மட்டும் என் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ளது. ‘காந்தியாரின் கொலையைக் கண்டிக்கும் அதே வேளையில், கோட்சேக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனையையும் நாம் கண்டிக்க வேண்டும்’ என்று அ.மார்க்ஸ் ஒருமுறை எழுதினார். மேற்கண்ட இந்தக் கருத்துநிலைகளில் நின்று எழுதப்பட்டதுதான் ‘மரச் சிற்பம்’. குற்றவாளியால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஏன் கதையில் இடமில்லை? ஏனெனில், இது அவரைப் பற்றிய கதையில்லை. அவரைப் பற்றி இன்னொரு கதையில் எழுதலாம். இந்தக் கதையோ ‘குற்றத்தைவிடத் தண்டனையே வெறுக்கத்தக்கது’ என்பதைச் சொல்ல எழுதப்பட்ட கதை. கண்ணனைப் போல் இன்னொரு ஆய்வாளர் ‘கில்லட்டினை இயக்கிய தொழிலாளியின் மனநிலை ஏன் கதையில் பதிவாகவில்லை?’ என்றும் கேட்கலாம். அதற்கு மேலுமொரு கதை எழுதவேண்டும். ஒரே கதையில் எல்லாக் குரல்களும் பதிவாகவில்லை என்றால் அது மற்றைய குரல்களை நிராகரிப்பதாக அர்த்தமாகாது. அந்தக் குரல்களுக்கு இன்னொரு கதையில் இடமிருக்கும். அந்தப் பெண்ணைப் போல சித்திரவதை செய்து கொல்லப்பட்ட எத்தனையெத்தனையோ பெண்களை எனது கதைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள். குறிப்பாக, ‘ஆலா’வை மறந்திருக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஆய்வாளர்கள் வேண்டுமானால் ஒரு சிறுகதைக்குள்ளேயே அனைத்துக் குரல்களையும் தரிசிக்க ஆசைப்படலாம். அது இலக்கிய வடிவரீதியாக எழுத்துக் கலைஞருக்குச் சாத்தியப்படாது. அவ்வாறு சாத்தியப்பட்டதொரு சிறுகதை இதுவரை உலகில் எங்கும் எழுதப்பட்டதில்லை. மரண தண்டனையின் கொடூரத்தைப் பேசும் போது, ‘குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பார்க்க வேண்டாமா?’ என்ற கேள்விகளை நாம் கடந்த காலங்களில் அதிகமாக எதிர்கொண்டிருக்கிறோம் அல்லவா. குறிப்பாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்தக் குரல்கள் அதிகமாகக் கேட்டன. மரண தண்டனை விஷயத்தைப் பொறுத்தவரை இந்த வகைக் கேள்விகளில் உள்ளுறைந்திருப்பது மரண தண்டனை ஆதரவே. அதற்காக கண்ணன் மரண தண்டனை ஆதரவாளர் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால், அவரது கேள்வியின் தொனி இந்த இடத்திற்குத்தான் அவரை இழுத்து வருகிறது. ‘இந்தக் கதையை கேள்வி அனுபவத்தால் எழுதினால் ஆயிற்றா? இதில் எங்கேயிருக்கிறது ஷோபாசக்தியின் வாழ்பனுபவம்?’ என்ற கண்ணனின் கேள்விக்கு இலக்கிய உலகத்திலே ஏதாவது பொருளிருக்கிறதா எனத் தெரியவில்லை. அவர் கதைகளை அல்லாமல் சுயசரிதைகளையே இலக்கியம் என்று நம்பிக்கொண்டிருக்கிறரா? ஓர் உதாரணத்தால் இதற்குப் பதிலளிக்கலாம் என நினைக்கிறேன். கவிஞர் பப்லோ நெருடா இலங்கையில், சிலி நாட்டின் ‘கொன்ஸலேட்’ அலுவலகத்தில் பிரதிநிதியாக இருந்த காலத்தில், அவரது வீட்டில் பணி செய்த ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தார். இது நாற்பத்து மூன்று வருடங்களுக்குப் பின்பு, 1974-ல் பப்லோ நெருடாவின் சுயசரிதை வெளியாகும்வரை வெளியுலகத்திற்குத் தெரியாது. சுயசரிதை நூலில் கூட அரைப் பக்க அளவுக்குத்தான் இது குறித்து நெருடா எழுதியிருப்பார். அந்தப் பெண்ணின் பெயர், ஊர் விபரங்கள் எல்லாம் அந்தக் குறிப்பில் கிடையாது. இந்த அரைப் பக்கக் குறிப்பை வைத்துக்கொண்டே சிங்களத்தில் ஒரு சிறுகதை எழுதப்பட்டது. இதை வேறொரு கோணத்தில் அணுகிய இயக்குனர் அசோக ஹந்தகம ‘அல்போராடா’ என்றொரு திரைப்படத்தை எடுத்தார். இவை இரண்டுமல்லாத இன்னொரு பார்வையில் நான் கருங்குயில்என்றொரு கதையை எழுதினேன். எங்கள் மூவரிடமுமிருந்தது பப்லோ நெருடா எழுதிய வெறும் அரைப் பக்கக் குறிப்புத்தான். என்னுடைய தேடுதல் வழியாக, அந்தப் பெண் பழைய டச்சுக் கால்வாய்க்கு அருகேயிருந்த ‘பம்பலவத்த’ என்ற குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்திருக்கிறார், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர், பேராசிரியர் க. கைலாசபதி வெள்ளவத்தையில் குடியிருந்த வீட்டுக்கு அருகிலிருந்த வீட்டில்தான் பப்லோ நெருடா வசித்திருக்கிறார் போன்ற குறைந்தபட்சத் தகவல்களே எனக்குக் கிடைத்தன. அதற்கு மேல் கற்பனையால்தான் நான் கதையை வளர்த்துச் சென்றேன். இந்தக் கதையைப் பொறுத்தளவில் சிங்களத்தில் கதையெழுதிய திஸ்ஸ தேவேந்திராவுக்கோ திரைப்படமெடுத்த அசோக ஹந்தகமவுக்கோ எனக்கோ சுத்தமாக வாழ்பனுபவம் கிடையாதுதான். ஆனால், இவ்வாறு குறிப்புகள், வாய்வழிச் செய்திகள் வழியாக அறிந்து எழுதப்படும் கதைகளுக்கு இலக்கியத்தில் இடமில்லையா என்ன! உலக இலக்கியம் முழுவதிலுமே இவ்வகையாக எழுதப்படும் கதைகள் உள்ளன. இவ்வகையாக உருவாக்கப்படும் நாடகங்களும், திரைப்படங்களும் உள்ளன. பிரசன்ன விதானகேயின் Death on a Full Moon Day திரைப்படம் கூட இதற்குச் சிறந்த உதாரணம். ஒரு துண்டுப் பத்திரிகைச் செய்தியிலிருந்து அவர் ஆகச் சிறந்த திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். உங்களுக்குப் போரைப் பற்றி என்ன தெரியும்? நீங்கள் இராணுவத்தில் இருந்தீர்களா? வாழ்பனுபவம் இல்லாமல் எப்படி உங்களால் படம் எடுக்க முடியும்? என்றெல்லாம் பிரசன்ன விதானகேயிடம் கோணல்தனமாகக் கேட்டால் ‘கட்ட வாப்பாங்’ என்றுதான் அவர் சொல்வார். ‘இமிழ் தொகுப்பில் எழுதியிருப்பவர்கள் எல்லோருமே பாப்புலர் நடையில் எழுதும் சுஜாதாவையும் சுந்தர ராமசாமியையும் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையுமே பின்பற்றியிருக்கிறார்கள்’ என்று கண்ணன் ஒற்றை வார்த்தையில் சொல்லிச் செல்வதெல்லாம் இலக்கியத் திறனாய்வு கிடையாது. சுஜாதாவின் எழுத்துநடை பாப்புலர் நடை என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்காது. ஆனால், மற்றைய மூவரையும் பாப்புலர் நடையில் எழுதுபவர்கள் எனச் சொல்வதெல்லாம் வெறும் சீண்டலே தவிர திறனாய்வு கிடையாது. அதேவேளையில் ‘பாப்புலர் நடையை நான் குறைத்து மதிப்பிடவில்லை’ என்று வேறு கண்ணன் தன்னுடைய உரையில் சொல்கிறார். அந்த நடை இலக்கியத்திற்கு ஆகாது என்றும் சொல்கிறார். ஒரு குழப்பமான உரைதான் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். கண்ணனுடைய உரையைத் தொடர்ந்த கேள்வி -பதில் நிகழ்வில் ‘இலங்கைத் தமிழர்கள் சாதி குறித்துப் பேசவே மறுக்கிறார்கள்’ என்று கூடுதலாக ஒரு குற்றச்சாட்டையும் கண்ணன் வைத்திருந்தார். அதாவது, அவரது ஆய்வு நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைப் பேராளர்கள் சாதி குறித்துப் பேசவே மறுத்ததாக ஆதாரமும் சொன்னார். இது ஆய்வு நிறுவனத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும் கிணற்றுத் தவளைப் பார்வை. கொஞ்சம் வெளியே வந்தும் கண்ணன் கண்திறந்து பார்க்க வேண்டும். இலங்கையிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வெளியான சிறுபத்திரிகைகளைக் கண்ணன் படித்ததில்லையா என்ன? சாதியக் கொடுமை குறித்து எழுதப்பட்ட நூல்களை, தன்வரலாறுகளைப் படித்ததில்லையா? கதைகளைப் படித்ததில்லையா? புலம்பெயர் நாடுகளில் ‘தலித் மாநாடுகள்’ நடத்தப்பட்டது அவருக்குத் தெரியுமா தெரியாதா? சாதியப் பிரச்சினைகளை முன்வைத்து ‘இருள்வெளி’, ‘சனதருமபோதினி’, ‘கறுப்பு’ போன்ற இலக்கியத் தொகுப்புகள் வந்ததை அவர் அறியமாட்டாரா? பிரான்ஸில் ‘தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ என்றொரு அமைப்பு பல வருடங்களாக இயங்கிவருவதை அவர் அறியவில்லையா? ஒவ்வொரு இலக்கியச் சந்திப்பிலும் முக்கிய நிகழ்வாக ‘சாதிய விடுதலை’ குறித்த அமர்வு நிகழ்வதை அறியாரா? இமிழ் வௌியிடப்பட்ட 51-வது இலக்கியச் சந்திப்பில் கூட ‘இலங்கையில் சாதியம்’ என்றொரு அமர்வு நடத்தப்பட்டதே. இதையெல்லாம் கண்டுகொள்ளாமலிருக்குமாறு அவரது ஆய்வுக் கண்கள் எந்த வன்மத்தால் கட்டப்பட்டிருக்கின்றன? இறுதியாக, என்னுடைய எழுத்துநடை சுஜாதாவைப் பின்பற்றிய பாப்புலர் நடை என்றொரு கண்டுபிடிப்பை கண்ணன் வெளியிட்டிருக்கிறார். கடந்த முப்பது வருடங்களாக யாருமே செய்யாத ஆய்வுக் கண்டுபிடிப்பு இது. அதாவது கண்ணனின் கூற்றுப்படி, பாப்புலர் நடையென்றால் கதையை வாசகனுக்கு விரிவாகப் புகட்டும் நடையாம். இந்த விமர்சனம் என்னைக் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டியது உண்மையே. நான் எப்போதுமே கதைகளை மிக விரிவான சித்திரிப்புகளோடும் தரவுகளோடும் எழுதுபவன். கண்ணனுக்கு முன்பாக, இதே கூட்டத்தில் உரையாற்றிய அழகியபெரியவன் எனது இந்த அம்சத்தை எனது எழுத்தின் சிறப்பாகக் குறிப்பிட்டார். ஆனால், இதே அம்சம் கண்ணனுக்குக் குறையாகத் தெரிகிறது. இதைப் பாப்புலர் நடை என்கிறார். இந்த முறையில் எழுதுவது உள்ளே விசயங்களைப் பொதிந்து வைக்காது என்கிறார். உள்ளே பொதிந்து வைக்க நான் என்ன கள்ளக் கடத்தலா செய்கிறேன்? என்னுடைய ஒவ்வொரு சொல்லும் உணர்வும் வாசகர்களுக்குச் சிறு சேதமுமில்லாமல் கடத்தப்பட வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். ஆரம்ப காலங்களில் சில இருண்மையான கதைகளை எழுதியிருந்தாலும், இப்போது மிக விரிவாகவும் தெளிவாகவும் எழுதவே நான் விரும்புகிறேன். ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் தான் நூல்களை மொழிபெயர்த்திருப்பதின் அனுபவத்தின் வாயிலாகத் தன்னுடைய கருத்தைச் சொல்வதாகக் கண்ணன் குறிப்பிட்டார். அதே மொழிகளில் என்னுடைய நூல்களும் கதைகளும் வெளியாகியிருக்கும் அனுபவம் என்னுடைய எழுத்துநடை பிசகற்றது என்று எனக்குச் சொல்கிறது. பொதிந்து வைத்து எழுதாமல் விரித்து எழுதுவதால் என்னுடைய எழுத்துகளில் வாசகருக்கு இடமில்லை என்று கண்ணன் சொல்கிறார். பொடி வைத்து எழுதுவதால், பொதிந்து வைத்து எழுதுவதால், திருகி எழுதுவதால்தான் கதையில் வாசகருக்கு இடமிருக்கிறது என்று நான் நம்பவில்லை. என்னுடைய உணர்ச்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு முற்று முழுதாக வாசகரிடம் தெளிவாகக் கடத்திவிடுதாலேயே கதையில் வாசகருக்கு இடம் கிடைக்கிறது, கதை முடிந்த பின்பும் அவர் அதைத் தொடர்ந்து சென்றபடியிருக்கிறார் என்பதே எனது நம்பிக்கை. எழுத வந்த நாளிலிருந்தே ‘என்னுடைய கதைகள் அளவில் பெரிதான அரசியல் துண்டுப் பிரசுரங்களே’ எனப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்து எழுதிக்கொண்டிருப்பவன் நான். இதுவரை பேசப்படாத – சிக்கலான விடயங்களை எழுதுபவன். சமூகத்தின் கூட்டு நம்பிக்கைகளுக்கு எதிரான நிலையில் நின்று உண்மைகளைச் சொல்பவன். எனவே, என்னுடைய இந்தத் தெள்ளத் தெளிவான வெளிச்சமிடும் மொழிநடையே, எனது நோக்கத்தை எட்டுவதற்கான கூர்மையான கருவியாக எனக்குக் கைகொடுக்கிறது. இமிழ் விமர்சனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியதற்காக தொகுப்பின் பதிப்பாசிரியர் என்ற முறையில் கண்ணன். எம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு இங்கே நிறுத்திக்கொள்கிறேன். கண்ணன் விரும்பினால் தொடர்ந்து உரையாட நான் தயாராகவேயுள்ளேன். https://www.shobasakthi.com/shobasakthi/2024/05/07/கண்ணன்-எம்-அவர்களின்-மேல/
  8. நேற்று படித்தேன்! பாஸ்போர்ட்டில் எண் சும்மா மாறாது. ஆசான் கிழித்துவிட்டார் போலிருக்கு!
  9. இன அழிப்பின் குறியீடே முள்ளிவாய்க்கால் கஞ்சி யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆ.குழு தெரிவிப்பு! (ஆதவன்) வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் 3 தசாப்தங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப்போரின் ஒரு முக்கியமான குறியீடே முள்ளிவாய்க்கால் கஞ்சி என்று யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:- யுத்தம் முடிந்து, சரணடைவுகளின் பின் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தவர்களது எண்ணிக்கை 3 இலட்சத்து 70 ஆயிரமாக இருந்தது. இவர்கள் இராணுவக் கட்டுப்பட்டுக்குள் வரும் வரை தமது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வர உதவியது அந்த மக்கள் தம் உடைமைகளில் வைத்திருந்த அரிசி, தேங்காய் போன்றவற்றைப் பகிர்ந்து காய்ச்சிய கஞ்சிதான். இதனால்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி இவர்களது உயிர் காத்த கஞ்சியாகவும் வரலாற்றுச் சிறப்புப் பெறுகின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் குறிப்பாக வடக்கு - கிழக்கில் வாழும் தமிழர்கள் எதிர்கொண்ட மிகவும் மோசமான துன்பங்களையும் இலட்சக்கணக்கான மக்கள் காவு கொள்ளப்பட்டமையையும் நினைவுகூருவது தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற்றம். உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும். தற்போது பல்வேறு இடங்களில் இடம்பெற்று வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சிப்பரிமாற்ற நிகழ்வுகளை ஆட்சியாளர்கள் தடுக்க முயல்வது குறிப்பாக கிழக்கில் சம்பூர் பகுதியில் இந்நிகழ்வுகளில் பங்கெடுத்தவர்கள் இரவிரவாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது மிக மோசமான மனித உரிமை மீறலாகும். சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை யில் இடம் பெற்றுவரும் சிறுபான்மையினருக்கெதிரான மனித உரிமை மீறல்களை தொடக்கத்திலிருந்தே சுட்டிக்காட்டி வருவது நாமறிந்ததே. இவ்வாறிருக்கையில் மன்னிப்புச்சபையின் செயலாளர் அக்னஸ் கலமார்ட் இலங்கைக்கு வந்து குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் பங்கெடுப் பதை நாம் வரவேற்கின்றோம் - என்றுள்ளது. ( https://newuthayan.com/article/இன_அழிப்பின்_குறியீடே_முள்ளிவாய்க்கால்_கஞ்சி_-
  10. மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்! கையறு உலகம்! -ச.அருணாசலம் வாழும் இடத்தையும், உடமைகளையும் துறந்து இழப்பதற்கு ஏதுமற்று, அகதிகளாக வாழும் பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ள காசா மீது கணக்கற்ற குண்டுமழை பொழிந்த வண்ணமுள்ளது இஸ்ரேல்! 35,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்ற பிறகும், அவர்களின் கொலைவெறியை யாராலும் தடுக்க முடியவில்லையே, ஏன்? தற்போது காசா பகுதியின் தென் கோடியில் உள்ள நகரமான ரஃபா விற்குள் இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து, அங்குள்ள அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கிறது! போக்கிடம் ஏதுமின்றி மூட்டை முடிச்சுகளுடன் லட்சக்கணக்கான பாலத்தீனிய மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர். கடந்த அக்டோபர் 7 ல் ஹமாஸ் இஸ்ரேலியர்கள் மீது நடத்திய தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல் அரசு, காசா பகுதியின் மீது – அப்பாவி பாலத்தீனிய பொதுமக்கள் மீது குண்டு மழை பொழிந்து அனைத்து இருப்பிடங்களையும், கட்டிடங்களையும் தரைமட்டமாக்கினர். ஹமாஸ் “தீவிரவாதிகளை“ அழித்து ஒழிப்பதும், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதுமே எங்களது இரட்டை நோக்கம் என்று கூறி, இஸ்ரேல் ராணுவம் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காசா வாழ் பாலத்தீன மக்கள் மேல் நடத்தியது. இந்த இன ஒழிப்பை, மனிதகுல விரோத பயங்கரத்தை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும்- அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தவிர – மற்ற நாடுகள் அனைத்தும் – கண்டனம் செய்தன! தென்னாப்ரிக்க நாடு இஸ்ரேலின் மீது, மனித குலத்திற்கெதிரான “போர்குற்றத்திற்காக“ சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஐ.நா சபையின் பொதுச் செயலாளரும், மற்ற நாடுகளும் இஸ்ரேல் நாட்டு ராணுவத்தின் அட்டூழியத்தை வன்மையாகக் கண்டித்தன. போர் நிறுத்தத்திற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகள் செய்தன. மனித உரிமைகளை மதிக்க வேண்டும். அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு வீசி, பேரழிவை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்ரேல் நாட்டை எச்சரித்தனர் உலக மக்கள். இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு தரும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் மக்கள் வீதிகளில் திரண்டு, இஸ்ரேலின் மனிதகுல விரோத தாக்குதலை கண்டித்ததோடு, இத்தகைய அட்டூழியங்களுக்கு துணை போகும், தங்கள் நாட்டு அரசுகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். அமெரிக்காவிலும் கூட பொது மக்களும், இளைஞர்களும் இஸ்ரேல் ராணுவம் பாலத்தீன மக்கள் மீது நடத்தும் காட்டுமிராண்டித் தாக்குதலை எதிர்த்து கண்டனக் கூட்டங்களும், பேரணிகளும் நடத்தினர் . இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்க அரசின் கொள்கைகளை எதிர்த்து வீதிகளுக்கு வந்தனர். இந்த வகையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி யில் உள்ள இளைய தலைமுறையினர் இஸ்ரேலின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு ஆதரிக்க கூடாது என்று அதிபர் பைடனுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். அமெரிக்காவில் காசா வாழ் மக்களை காப்பாற்றக் கோரும் போராட்டம். காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி ஏழு மாதங்கள் கடந்தும் , 35,000 மக்களை – பெரும்பாலும் குழந்தைகளும்,மகளிரும் – கொன்றொழித்த பின்னரும், அனைத்து கட்டிடங்களையும் தரைமட்டமாக்கிய பின்னரும் அங்குள்ள மக்களுக்கு உணவு, சுகாதாரம் போன்ற உதவிகள் செய்துவந்த ஐ.நா அலுவலக அமைப்புகளை நிர்மூலமாக்கி, அதில் பணியோற்றுவோரைக் கூட கொன்ற பின்னரும் இஸ்ரேலினால் தனது இரட்டை இலக்குகளை – பிணைக் கைதிகளை விடுவித்தல், ஹமாசின் படைபலத்தை முறியடித்தல் – ஆகிய லட்சியத்தை அடைய முடியவில்லை. முதலில் காசா தலைநகரான காசா நகரத்தை முற்றுகையிட்டு , அங்கு தீவிர குண்டுவீச்சிற்கு பின்னர், ராணுவத்தை அனுப்பி கணமூடித்தனமாக தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ராணுவம். இதனால், பல லட்சக்கணக்கான பாலத்தீனர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தெற்கு நோக்கி விரட்டப்பட்டனர். அப்படி விரட்டப்பட்ட மக்கள் ஜெபாலியா நகரில் அமைந்துள்ள அகதிகள் முகாமை தஞ்சமடைந்தனர். ஆனால் அங்கும் ஹமாசை ஒழிக்கிறேன் என்று கூறி இஸ்ரேல் ராணுவம் அப்பாவி மக்களை கொன்றொழித்தது. ஹமாசின் “சுரங்க பாதை அமைப்புகளை “ தகர்க்கிறேன் என “அல் ஷிஃபா மருத்துவமனைகளில் தொடங்கி அனைத்து மருத்துவமனைகளையும் தகர்த்து தரைமட்டமாக்கினர். இதனால் எண்ணற்ற இளங்குழந்தைகள் “இன்குபேட்டர்களிலேயே மாண்டனர்! அடுத்து கான் யூனிஸ் என்ற நகரையும் தரைமட்டமாக்கி, பாலத்தீன மக்கள் எந்தவித சுகாதார வசதிகளுமின்றி, குழந்தைகள் மகளிர், முதியோர் என்ற பேதமின்றி, கூடாரங்களிலும்,வெட்ட வெளிகளிலும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். முதலில், ஆயுதந்தாங்கிய ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகவே இந்த ராணுவ நடவடிக்கை என இஸ்ரேல் தெரிவித்தாலும், விரைவில் காசா பகுதி முழுவதையும் பட்டினி போடும் நோக்கில் முற்றுகையிட்டு , ஒவ்வொரு நிமிடமும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்திற்கு “பொதுமக்கள் உயிரிழப்பை தவிர்ப்பது” என்றால், அதன் கணக்கு வேறானது ஆகும் . ஒரு ஹமாஸ் போராளியை கொல்வதற்கு எத்தனை அப்பாவிகளை கொல்லலாம் என்ற அவர்களது”உள்நாட்டு கணக்கு” அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு ஹமாஸ் போராளியைக் கொல்ல 50 அப்பாவி பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டாலும் அது “ஏற்றுக்கொள்ளக்கூடியதே” என இஸ்ரேல் ராணுவம் நினைத்தது. ஆனால் இந்த கணக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது என்பதை, அவர்களது கூட்டாளியும் “காட் ஃபாதருமான” அமெரிக்க அரசே சுட்டிக்காட்டியுள்ளது. “இஸ்ரேல் தாக்குதல் நடத்து முன் பொதுமக்கள் நலனை முதன்மையாக கருத வேண்டும்” என அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது. அதில் தவறினால் இஸ்ரேல் “தனிமைப்படும்” என எச்சரிக்கை வேறு விடுத்துள்ளது அமெரிக்கா. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு “ நாங்கள் தனியாக நின்றாலும் பரவாயில்லை, தாக்குதல் தொடரும்” என கூறியுள்ளார். ஆனால், வெட்கங்கெட்ட அமெரிக்கா இன்னும் ஆயதங்கள் அளிப்பதை நிறுத்தவில்லை. இங்கிருக்கும் சென்னை முதல் பாண்டிசேரி வரையிலான ஒரு பகுதியை கற்பனை செய்து பாருங்கள் . இந்தப் பகுதியில் ஒருபுறம் கடலும், மற்ற மூன்று பகுதிகளும் நிலத்தால் சூழப்பட்டிருப்பதாக நினைத்தால் , பாண்டிசேரியை ரஃபா நகரமாக கற்பனை செய்து பாருங்கள். சென்னை பகுதி மக்கள் அனைவரையும் அடித்து விரட்டி, சின்னஞ்சிறு பாண்டிச்சேரியில் குவித்தால் என்ன நிலை ஏற்படுமோ, அதே நிலை தான் காசா பகுதியின் தென்கோடி நகரமான ரஃபாவிற்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் கூட்டத்தினூடே குண்டு மழை பொழிவதும் உணவு, உடை, சுகாதார தேவைகளை மறுத்து அடைத்து வைப்பதும் இஸ்ரேல் ராணுவத்தால் தொடரப்படுகிறது. உணவு, தண்ணீரின்றி சுகாதாரக் கேடுகளுடன், தொற்று நோய்களுடன் பாலத்தீன மக்கள் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். 1,70,000 பேர்கள் வாழத் தகுதியான இடத்தில் இன்று 17 லட்சம் மக்கள் இருக்க வேண்டியுள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள். இஸ்ரேல் ராணுவம், இம் மக்களிடையே ஷெல் அடிப்பதும், கிளஸ்டர் குண்டுகளை வீசுவதும், துப்பாக்கி சூடுகளை கண்மூடித்தனமாக நடத்துவதும் அதிகரித்துள்ளது. ஒருபுறம் கடலும், மறுபுறம் இஸ்ரேலும், தென்பகுதியில் எகிப்து நாடும் சூழ்ந்துள்ள ரஃபா நகரம் இன்று இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சதுர கிமீ பகுதியில் 22,000 மக்கள் எந்தவித குடியிருப்பு வசதிகளின்றி கூடாரங்களிலும், கடற்கரைகளிலும்,வெட்ட வெளிகளிலும் முண்டியடித்து வாழுகின்றனர். இவர்களை இங்கு இப்படி கொடுமையாக குவித்துவிட்டு, இன்று ஹமாஸ் போராளிகளை பிடிக்கிறேன் என்று கூறி, மீண்டும் குண்டுகளை வீசி அவர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறச் செய்கிறது இஸ்ரேல் ராணுவம். குண்டு வீச்சால் தகர்க்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி! இதன்மூலம் என்ன சாதிக்க விரும்புகிறது இஸ்ரேல்? பாலத்தீன விடுதலை வீர்ர்களான ஹமாசை முற்றிலும் முறியடிப்பதே இஸ்ரேலின் எண்ணம் . அடுத்து பிணைக் கைதிகளை விடுவிப்பது என்று இஸ்ரேல் கூறுகிறது. வடக்கு மற்றும் மத்திய காசா பகுதியை(காசா நகரம்,கான் யூனிஸ் நகரம், ஜெபாலியா முகாம் ) முற்றிலும் தரைமட்டமாக்கி விட்டு ஹமாசை வீழ்த்திவிட்டோம் என்று கூறியது இஸ்ரேல் ராணுவம் . ஆனால், இன்றோ, மீண்டும் ஹமாசை முறியடிக்க, பிணைக் கைதிகளை விடுவிக்க ரஃபா நகரை முற்றுகை இடுகிறோம் என்று இஸ்ரேல் கூறுவது அதன் தோல்வியைத் தான் காட்டுகிறது. எகிப்து நாடும் கத்தார் மற்றும் அமெரிக்க நாடும் இணைந்து இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட பல முயற்சிகள் செய்தன. இதை முதலில் ஹமாஸ் எதிர்த்தாலும், இறுதியில் தனது சம்மதத்தை தெரிவித்தது. இதன் பின்னரும் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. கண்மூடித்தனமான தாக்குதல்களை பாலத்தீனர்கள் மீது மட்டுமின்றி ஊடகத்தினர் மீதும் ஐ. நா. ஊழியர்கள் மீதும் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. நேற்று இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி, தற்போது ஐ.நா. அமைதிக்குழுவில் உள்ள திரு. வைபவ் அனில் காலே என்ற ‘கர்னல்’ இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் . ஐ. நா சின்னம் பொறித்த வாகனத்தில் அவர் பயணித்தாலும் இஸ்ரேல் ராணுவம் அதை பொருட்படுத்தாமல் அவ்வாகனத்தையும் தாக்கியுள்ளது! இத்தகைய அத்துமீறல்களை, அட்டூழியங்களை மனித குல விரோத போர்க் குற்றங்களை உலக நாடுகள் கண்டிக்கின்றன. எகிப்து நாடும் தென்னாப்ரிக்க நாட்டுடன் இணைந்து இஸ்ரேல் மீதான “போர்க் குற்றத்தை” ஆமோதிக்கிறது. ஆனால், இந்தியாவோ – மோடி அரசோ- வாய்மூடி மௌனியாக உள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது. 1948 இஸ்ரேல் நிறுவப்பட்ட பொழுது 7 லட்சத்து 50 ஆயிரம் பாலத்தீனர்களை இஸ்ரேல் இன ஒழிப்பு மூலம் (ethnic cleansing) அவர்களது உடமைகள், நிலங்களை பிடுங்கி விட்டு விரட்டியடித்தனர். அப்படி சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டவர்கள் காசா பகுதியில் குடியேறினர். 1967 யுத்தத்தின் போது, காசா பகுதியை எகிப்து நாட்டிடமிருந்து இஸ்ரேல் பறித்துக் கொண்டது. சொந்த இடங்களை விட்டு விரட்டப்பட்ட பாலத்தீனர்களின் வம்சாவளியினர் தான் இன்றைய காசா பகுதி பாலத்தீன மக்கள் . 2005 முதல் (கேம்ப் டேவிட் ஒப்பந்தம் மூலம்) காசா பகுதி பாலத்தீனர்களின் தன்னாட்சியின் கீழ் உள்ளது . ஹமாஸ் அமைப்பு காசா பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகும் இவர்கள் நகர சிவில் நடவடிக்கைகளை (கல்வி,சுகாதாரம், தற்காப்பு) கண்காணித்து வந்தனர் . தொடர்ந்து ஐந்து தலைமுறைகளுக்கு மேல் ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் இம்மக்கள் தங்கள் விடுதலைக்கும், தற்காப்பிற்கும் ஏற்றார் போல் பூமிக்கடியில் சுரங்கப் பாதைகள் வெட்டி தங்களது தற்காப்பினை , விடுதலையினை உறுதிப்படுத்தி வந்தனர் .இதில் முன்னணியில் திகழ்ந்தது ஹமாஸ் அமைப்பு. மீன் பிடிப்பதற்கு கூட இஸ்ரேல் ராணுவத்தின் அனுமதி தேவை என்ற நிலையில், தங்கள் விடுதலையை திட்டமிட அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், ஆதிக்கவாதிகளுக்கும், காலனியாளர்களுக்கும் இந்த விடுதலை வேட்கை உணர்வு புரியாது. இஸ்ரேலின் கூட்டாளிகளான ஆதிக்க மனப்பான்மை மிக்க அமெரிக்கர்களையும் ‘இந்துத்துவ’ கும்பலையும் என்ன வென்று அழைப்பது? போர் நிறுத்தமும், நிரந்தர தீர்வும் பாலத்தீனர்களுக்கு மறுக்கப்பட்டால், தனிமைப்பட போவது பாலத்தீனியர்கள் அல்ல, இஸ்ரேல் நாட்டு ஜியோனிஸ்டுகள் தான் ! https://aramonline.in/17888/gaza-war-isrel-killing-people/
  11. கோயில் தேரோடும் வீதியில் சைக்கிள் ஓடக்கூடாது என்று நினைக்கின்றேன். அத்தோடு மணலாக இருந்ததா இல்லையா என்று நினைவில் இல்லை!
  12. இது இன்னமும் மாறவில்லையா! ஊரில் இருக்கும்போது ஒரே ஒரு முறை திருவிழா இல்லாத, ஆளரவம் அற்ற நாள் ஒன்றில் சிவனுக்கும் அம்மனுக்கும் பொதுவான வீதியில் சைக்கிளை உருட்டிக்கொண்டு போகும்போது திடீரென்று ஒருத்தர் வந்து சேர்ட்டைக் கழட்டச் சொன்னார்! நான் கோவிலுக்குள் போகவில்லை; வீதியால்தானே போகின்றேன் என்று சொன்னபோது, மிரட்டல் பார்வையுடன் சேர்ட்டைக் கழட்டித்தான் போகவேண்டும் என்றார்! சரி ஏன் பிரச்சினை என்று சேர்ட்டைக் கழட்டிவிட்டு, சாரத்துடன் சைக்கிளை உருட்டினேன். வீட்டில் இருந்து காற்சட்டையோடு வெளியே போனால் அம்மா தூர இடம் போகின்றான் என்று கண்டுபிடித்துவிடுவார். அதனால் ஊர் உலாத்தப்போகும்போது சாரத்தை எப்பவும் காற்சட்டைக்கு மேலால் போட்டுக்கொண்டு போவதுண்டு!
  13. தள்ளிப் போகும் பேரறிவாளன் திருமணம்? கண்ணீர் மல்கப் பேசிய அற்புதம் அம்மாள் தமிழ்நாட்டில் அற்புதம் அம்மாள் என்றால் தெரியாதவர்கள் இல்லை. அவரது மகனைச் சிறையிலிருந்து மீட்பதற்காக 31 வருடங்கள் சட்டப் போராட்டத்தைச் சலிக்காமல் நடத்தியவர். எந்தக் கட்டத்திலும் சோர்ந்து போகாமல் இறுதிவரை உறுதியாக நின்று தனது மகனைச் சட்டத்தின் மூலம் விடுதலை பெற்றுத் தந்தவர். பேரறிவாளன் 1991 ஆம் ஆண்டு கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தனது மகன் ஒரு அப்பாவி. விசாரணை என்று அழைத்துப் போன காவல்துறை, அவனை ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைத்துவிட்டது என்று கூறி, இடைவிடாமல் போராடி வந்தார் அற்புதம். அதன்பின்னர் இவரது தூக்குத்தண்டனை 2014இல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் 2022 மே 18 அன்று உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். பேரறிவாளன் வெளியே வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் மேலாகிவிட்டது. அவரது தாய் அன்னையர் தினத்தை ஒட்டி ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், தனது மகனின் எதிர்காலம் குறித்த கவலைகளை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். பேரறிவாளன் விடுதலை ஆனதில் எனக்கு முழு மகிழ்ச்சி இல்லை. அவனுக்கு என்று ஒரு குடும்பம் அமைய வேண்டும். அப்போதுதான் முழு மகிழ்ச்சியை நான் அடைவேன். அவன் வெளியே சுற்றிக் கொண்டிருப்பதால் நான் மகிழ்ச்சி அடைந்துவிடவில்லை' என்று ஒரு தாயின் ஏக்கத்தை அந்தப் பேட்டியில் அவர் பதிய வைத்துள்ளார். மேலும் தனது மகனைப் பற்றி அற்புதம் அம்மாள் பேசுகையில், "ஒவ்வொரு முறையும் சிறையில் என் மகனை சந்திக்கும்போது எல்லாம், 'என்னப்பா இந்த முறையும் உன் விடுதலை தள்ளிப் போய்விட்டதே?' என்று வேதனையோடு சொல்வேன். அவன் மனம் தளராமல், 'அடுத்த முறை சரியாகிவிடும் அம்மா. நீ நம்பிக்கையோடு போய் வா' என்பான். அந்தளவுக்கு அவனது மன உறுதியை நான் பார்த்திருக்கிறேன். அப்போதுதான் எனக்கு நம்பிக்கையே வரும். எப்படியாவது நம் மகனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று ஒரு வைராக்கியம் பிறக்கும். அப்படித்தான் என் மகனை மீட்பதற்காக 31 ஆண்டுகள் போராடினேன். ஒரு நாள் கூட என் குடும்பத்தைப் பற்றி நான் நினைத்ததே இல்லை. இந்த 31 ஆண்டுகள் நானும் என் வாழ்க்கையை இழந்திருக்கிறேன். என் மகன் சிறைக்குப் போகும் போது என் 2 மகள்களுக்கும் திருமணம் நடக்கவில்லை. ஒரு கொள்கைப் பிடிப்புள்ள ஒருவர் என் மகளை வந்து திருமணம் செய்து கொள்வதற்காகப் பார்த்துவிட்டுச் சென்றார். அடுத்த சில நாள்களிலேயே என் மகன் வழக்கில் சிக்கிக் கொண்டான். பேரறிவாளன் செங்கல்பட்டு சிறையிலிருந்தான். நான் போய் விசயத்தைச் சொன்னேன். அவன், 'திருமணத்தை மட்டும் நிறுத்தி விடாதீங்க. நிறைய புகைப்படங்கள் எடுங்கள். நான் வெளியே வரும்போது அவற்றைப் பார்த்துக் கொள்கிறேன்' எனத் தைரியம் கொடுத்தான். அந்த முடிவுதான் என் குடும்பத்தைக் காப்பாற்றியது. என் மகள்கள் இன்று நல்ல நிலையில் உள்ளனர். என் மகன் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, அவனுக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. பலரிடம் என் அடுத்த வேலையே அதுதான் என்று சொல்லி வந்தேன். ஆனால், மகனின் விருப்பம் வேறாக உள்ளது. அவன் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறான். 'என் மனைவியை அடுத்தவர்கள் காசில் வாழ வைக்க நான் விரும்பவில்லை. நான் சம்பாதித்து வருபவரைக் காப்பாற்ற வேண்டும்' என்கிறான். அறிவுக்கு 52 வயதாகிவிட்டது. என் மகள்கள் அவரவர் தனித்தனியாக வாழ்கிறார்கள். இவனைப் பார்த்துக் கொள்ள ஒரு துணை வேண்டும். நாளை நானும் இல்லை என்று வரும்போது என் மகன் தனித்து நிற்பான். அந்த ஏக்கம் என் மனதில் இருக்கிறது. வருத்தம் இருக்கிறது. அறிவு இப்போது 2 ஆம் ஆண்டு படித்து வருகிறான். அவனது படிப்பு முடிய இன்னும் 1 வருடம் உள்ளது. அதன்பிறகு அவன் திருமணம் செய்வான் என நினைக்கிறேன். அவன் எனக்கு ஏதாவது ஒரு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என விரும்பினால், அது அவன் திருமணம் செய்து கொள்வதில்தான் உள்ளது" என்றபடி கண் கலங்கி பேசி இருக்கிறார். இந்தச் சந்திப்பில் தனது அம்மாவைப் பற்றி பேரறிவாளன் பேசுகையில், "பொதுவாகவே தாய் அன்பு என்பது சிறந்ததுதான். ஆனால், அதை நிரூபிப்பதற்காக வாய்ப்புகள் பலருக்கும் கிடைக்காது. அந்த வகையில் எனக்காக எவ்வளவு தூரம் போராட முடியுமோ அதுவரை போராடி நிரூபித்தவர் என் அம்மா. அவரை வழக்கமாக நான் நேருக்கு நேராகப் புகழ்ந்து பேசியதில்லை. அப்படி ஒரு பழக்கம் இருந்ததில்லை" என்று பேசிய அவர் தனது தாய்க்கு அன்புப் பரிசாக ஒரு புடவையை வாங்கி பரிசளித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/தள்ளிப்-போகும்-பேரறிவாளன்-திருமணம்-கண்ணீர்-மல்கப்-பேசிய-அற்புதம்-அம்மாள்/175-337361
  14. பெண் காவலர்கள் பாதுகாப்பில் திருச்சி அழைத்துச் செல்லப்படும் சவுக்கு சங்கர் KaviMay 15, 2024 12:01PM பெண் காவலர்கள் பாதுகாப்பில் சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார். பெண் காவலர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய விவகாரத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சவுக்கு சங்கர். அவர் மீது சென்னை, கோவை, தேனி என பல்வேறு மாவட்டங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முசிறி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் யாஸ்மின் அளித்த புகாரின் பேரிலும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் திருச்சி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில், பாலின சமத்துவமின்மை இல்லாமல் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியான அந்த வீடியோ தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்தார்.சங்கர் பேசியதை வேண்டுமென்றே ஃபெலிக்ஸ் ஜெரால்ட் வெளியிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் நேற்று திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி சிறையில் பெலிக்ஸ்… நீதிமன்றத்தில் நடந்தது என்ன? இந்நிலையில் இவ்வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். வாகனம் முழுவதும் பெண் காவலர்கள் மட்டும் அடங்கிய பாதுகாப்பு குழுவோடு சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார். பெண் காவலர்களை இழிவாக பேசிய விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த, பெண் காவலர்களால் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. https://minnambalam.com/tamil-nadu/savukku-shankar-goes-to-trichy-court-under-the-protection-of-women-police/
  15. காசாவின் ரபா, ஜபலியாவில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: கடும் மோதல் உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலியர் தீ வைப்பு maheshMay 15, 2024 வடக்கு காசாவின் ஜபலியா நகரில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேலியப் படை அங்குள்ள வெளியேற்ற பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்களை சுற்றிவளைத்திருப்பதோடு தெற்கில் ரபா நகரில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. காசாவின் தெற்கு மற்றும் வடக்கில் மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் காசாவெங்கும் நேற்றும் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தியது. கடந்த திங்கட்கிழமை (13) நள்ளிரவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மத்திய காசாவின் நுஜைரத் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் சிறுவர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று மாடிகள் கொண்ட கட்டடத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தக் கட்டத்தில் சுமார் 100 பேர் வரை தங்கி இருந்திருப்பதோடு அண்மையில் ரபாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும் இங்கே அடைக்கலம் பெற்றிருந்துள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதாக அஞ்சப்படும் நிலையில் அவர்களை காப்பற்ற போதுமான உபகரணங்கள் இல்லை என்று மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜபலியா அகதி முகாம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கடும் பலத்துடன் தொடர்ந்து படை நடவடிக்கையை முன்னெடுப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலிய டாங்கிகள், புல்டோசர்கள் மற்றும் கவச வாகனங்கள் அங்குள்ள வெளியேற்ற பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்களை சுற்றிவளைத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலைகளே தற்காலிக முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறைந்தது மூன்று வெளியேற்ற மையங்களை இஸ்ரேலிய டாங்கிகள் சுற்றிவளைத்துள்ளன. அங்கு சிக்கி உள்ள மக்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திடம் உதவி கோரி அழைப்பு விடுத்துள்ளனர். ஜபலியா நகரில் ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டதாக இஸ்ரேல் பல மாதங்களுக்கு முன்னரே குறிப்பிட்ட நிலையிலேயே அங்கு மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கில் உள்ள காசா நகரின் செய்தூன் பகுதியில், புறநகர் பகுதி ஊடாக டாங்கிகள் செல்வதற்கு புதிய பாதையை அமைக்கும் வகையில் அங்குள்ள வீடுகளை புல்டோசர்கள் தகர்த்து வருகின்றன. 75 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இந்த பரந்து விரிந்துள்ள ஜபலியாவுக்குள் ஆழ ஊடுருவ முயற்சி மேற்கொள்ளும் இஸ்ரேலியப் படை கடும் செல் தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மறுபுறம் கிழக்கு ரபாவுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் ஆழ ஊடுருவி வருவதோடு அந்த டாங்கிகள் அல் ஜினைனா, அல் சலாம் மற்றும் அல் பிராசில் பகுதிகளுக்குள் நுழைந்திருப்பதாக அங்குள்ள குடியிருப்பாளர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘இந்த டாங்கிகள் இன்று (14) காலை சலாஹுதீன் வீதியின் மேற்காக பிராசில் மற்றும் ஜினைனா பகுதிகளுக்குள் நுழைந்தன’ என்று குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார். ‘அவை வீதிகளில் நிலைகொண்டிருப்பதோடு மோதல்களும் இடம்பெற்று வருகின்றன’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரம் எகிப்துடனான ரபா எல்லை கடவையை கைப்பற்றி மக்களை வெளியேறும் உத்தரவை பிறப்பித்த நிலையில் இதுவரை சுமார் 450,000 பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ‘மக்கள் தொடர்ந்து சோர்வு, பசி மற்றும் பயத்தை எதிர்கொள்கின்றனர்’ என்று அந்த ஐ.நா நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது. ‘எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை. உடன் போர் நிறுத்தம் ஒன்றே ஒரே நம்பிக்கையாக உள்ளது’ என்றும் அது வலியுறுத்தியுள்ளது. ரபாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கை போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார். கிழக்கு அல் சலாம் பகுதியில் அல் யாஸின் 105 ஏவுகணையை பயன்படுத்தி இஸ்ரேலிய வாகனம் ஒன்றை தாக்கி அழித்ததாகவும் சிலர் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்திருப்பதாகவும் ஹமாஸ் ஆயுதப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு இஸ்ரேல் தயாராக வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் முழு அளவில் படையெடுப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கு ரபா நகர எல்லையில் இஸ்ரேலிய இராணுவம் போதுமான துருப்புகளை குவித்து வைத்திருப்பதாக அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் ரபா மீது படையெடுத்தால் இஸ்ரேலுக்கான ஆயுதங்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருக்கும் சூழலில் அவ்வாறான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பதில் உறுதியற்ற சூழல் இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை ரபா நகருக்கு அருகில் ஐரோப்பிய மருத்துவமனைக்கு பயணித்த ஐ.நா. வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா. பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்தது தொடக்கம் அங்கு சர்வதேச பணியாளர் ஒருவர் கொல்லப்பட்ட முதல் சம்பவமாக இது இருப்பதோடு இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், முழுமையான விசாரணை ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும் போர் வலயத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 234 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் 35,173 பேர் கொல்லப்பட்டு மேலும் 79,061 பேர் காயமடைந்திருப்பாக அந்த அமைச்சு கூறியது. காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முடக்கி வரும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை ஊடாக ஜோர்தானில் இருந்து காசாவுக்கு செல்லும் மனிதாபிமான உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ‘ஜோர்தானில் இருந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக காசா செல்லும் இந்த வாகனத் தொடரணிகள் தாக்கி கொள்ளையடிக்கப்பட்டிருப்பது மூர்க்கத்தனமானது’ என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலிவான் சாடியுள்ளார். https://www.thinakaran.lk/2024/05/15/world/60567/காசாவின்-ரபா-ஜபலியாவில்/
  16. பொது வேட்பாளராகப் போட்டியிடுமாறு சுமந்திரனை கேட்கவேயில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன் May 15, 2024 “ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு எம்.ஏ.சுமந்திரனை நான் கேட்கவில்லை. இது வெறும் அப்பட்டமான பொய். அது அவரது அதீதமான கற்பனையின் வெளிப்பாடு” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கோப்பாயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – “இன்று ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. சுமந்திரனிடம் ஜனாதிபதி தமிழ் மொது வேட்ப்பாளராக போட்டியிடுமாறு யாராவது உங்களிடம் கோரினார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியிருக்கின்றார். அதில், உத்தியோகபூர்வமாக யாரும் தன்னிடம் கேட்க்கவில்லை. இருந்த போதும், சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னைச்சந்தித்து நீங்கள் நிற்பீர்களா என்று என்னிடம் கேட்டார் எனவும் தான் அதை மறுத்தார் எனவும் அவர் சொல்லியிருக்கின்றார். அது ஒரு உண்மையான விடயம் அல்ல. ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ஒரு பொது வேட்ப்பாளர் தொடர்பாக கருத்தை அவரிடம் கேட்டிருந்தேன் என்பது உண்மை. பொது வேட்பாளரது தேவையைப் பற்றி நான் கூறியிருந்தது மாத்திரமல்ல அவரது கருத்தையிம் நான் கேட்டருந்தேன் என்பது உண்மை. அந்த வேளையில், யார் வேட்பாளர் என்பது பற்றி நாங்கள் யோசிக்கவேயில்லை. அவ்வாறான வேளையில் நான் அவரைப் போய் பொது வேட்ப்பாளராக நில்லுங்கள் என்று நான் கேட்டேன் என அவர் கூறியிருப்பது, ஓர் அதீதமான கற்பனையின் வெளிப்பாடோ என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவ்வாறான ஒரு விடயத்தை நான் அவரிடம் கேட்கவில்லை என்பதை முதலாவதாக நான் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் பொது வேட்பாளர் தேவை என்பதில், ஈ.பி.ஆர்.எல்.எவ். மிகத் தெளிவாக இருக்கின்றோம். ஆகவே நான் சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரனிடம் நீங்கள் நில்லுங்கள் என்று கேட்டேன் எனக் கூறுவது இந்தப் பேச்சுக்களை, கலந்துரையாடல்களை குழப்புவதற்கான முயற்சியாக் கூட இருக்குமோ என்று நான் சிந்திக்கின்றேன். இவ்வளவு ஒரு குறுகிய நோக்கங்களை, சிந்தனைகளைக் கொண்டவராக இருக்கக் கூடாது என்பதும் எனது வேண்டுகோளாக இருக்கிறது. ஆகவே நடக்காத அல்லது பேசப்படாத விடத்தை பேசினேன் என்று அவர் சொல்லவது ஏற்புடைய விடயம் அல்ல. என்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் தமிழ் பொது வேட்பாளர் என்பது சுமந்திரனை விட பக்குவமான விசயங்களைக் கையாளக் கூடிய பல பேர் என்னைப் பொறுத்தளவில் கட்சிகளிலும் இருக்கின்றார்கள். அரசியல் கட்சிகளுக்கும் வெளியேயும் இருக்கின்றார்கள். எம்மைப் பெறுத்த வரையில் ஆரம்பத்தில் இருந்து ஒரு பொது வேட்ப்பாளர் என்பவர் கட்சி சாராதவராக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம். அந்த அடிப்படையில் பார்த்தால் கூட அவ்வாறான ஒரு கோரிக்கையை சுமந்திரனிடம் நான் வைக்கத் தேவையில்லை. ஆகவே அவ் விடயத்தில் அவர் ஒரு தவறான, பிழையான கருத்தைக் கூறியிருக்கிறார் என்பதை நான் வெட்ட வெளியில் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என்று சுரேஷ் மேலும் தெரிவித்தாா் https://www.ilakku.org/பொது-வேட்பாளராகப்-போட்டி/
  17. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் - சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்! Vhg மே 15, 2024 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலனின் மகள், இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் சசிதரன், மாவிலாறு அணையை மூடி இறுதிக் கட்டப் போருக்கு வழி வகுத்தவர் என்று இராணுவ வட்டாரங்களில் குறிப்பிடப்படுகின்றார். இறுதிக் கட்டப் போரின் போது அவர் இராணுவத்திடம் சரணடைந்ததாக எழிலன் மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்திருந்த போதும், இராணுவம் அதனை மறுத்திருந்தது. எனினும் எழிலன் தொடர்பில் அதன் பின்னர் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை. மேலும், காலங்களில் எழிலன் மனைவி அனந்தி, வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்திருந்தார். இந்நிலையில் தற்போது எழிலனின் மகள் நல்விழி LLB(Hons) in Law பட்டம் பெற்றுக் கொண்டுள்ளதுடன், உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணமும் செய்துகொண்டுள்ளார். https://www.battinatham.com/2024/05/blog-post_53.html
  18. குழந்தை பிரசவித்து தப்பித்த சிறுமி மீட்பு (ஆதவன்) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பிரசவித்த குழந்தையைக் கைவிட்டுத் தலைமறைவான பாடசாலைச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சிறுமியை தாய்மை அடையச்செய்த சந்தேகநபரும் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி - துன்னாலையைச் சேர்ந்த 15 வயது சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் அந்த பச்சிளம் சிசுவை அநாதரவாக விட்டுவிட்டு மறுநாள் சிறுமியும் அவரது தாயாரும் தலைமறைவாகியிருந்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டுக்கமைய விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சிறுமியை மீட்டதுடன் சிறுமியை தாய்மை அடையச் செய்யக் காரணமாகவிருந்த குற்றச்சாட்டில் மல்லாவியைச் சேர்ந்த 25 வயது உடைய இளைஞரையும் கைது செய்துள்ளனர்.(ஏ) https://newuthayan.com/article/குழந்தை_பிரசவித்து_தப்பித்த_சிறுமி_மீட்பு;_சந்தேகநபரும்_கைது
  19. நினைவுகூரல் உரிமை மறுதலிப்பு – ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்! adminMay 15, 2024 நினைவுகூரல் உரிமையை மறுதலித்து 3 பெண்கள் உட்பட 4 தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வன்மையான கண்டனம் வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், திருகோணமலை மூதூரிலுள்ள சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கின்றது நினைவு கூரல் என்பது ஒவ்வொரு மனிதனும் அடிப்படை உரிமையாகும். உலகளாவிய அனைத்து சர்வதேச சட்டங்களும் அதனை ஆழமாக வலியுறுத்துகின்றன. இந்நிலையில் திருகோணமலை சேனையூரில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் மிகுந்த வேதனையை ஒட்டுமொத்த தமிழ் மக்களிற்கும் ஏற்படுத்தி உள்ளது. சொல்லணாத்துயர் வலி சுமந்த இந்த நாட்களில் தங்கள் உறவுகளை நினைந்து பிரார்த்திப்பதற்கு அந்த நாட்களில் அவர்கள் பட்ட துயரத்தை கஞ்சி பருகி உயிரை பிடித்திருந்த அவலத்தை நீள நினைந்து தாமும் கஞ்சி காய்ச்சி குடிப்பதும் பரிமாறுவதும் குற்றமாக அரச இயந்திரத்தால் பார்க்கப்படுவது இலங்கையில் 15 ஆண்டுகளாகியும் பேரினவாத மனநிலையில் மாற்றம் வராத கொடூர முகத்தின் வெளிப்பாடாகும். இது தொடர்ந்தும் இனங்களிற்கு இடையேயான நல்லெண்ணத்தை ஆழமாக பாதிக்கும் செயற்பாடாகும். புனிதமான கோவிலில் உறவுகளை நினைந்து கஞ்சி காய்ச்சிய பெண் பிள்ளைகள் உள்ளிட்டோரை அஜாரகமாக கைது செய்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒருமித்து பாரிய எதிர்ப்பை வெளிக்காட்டி அரசின் கோர முகத்தை துகிலுரித்து அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழ் தேசியம் பரப்பில் வாழும் மூத்ததலைவர் திருகோணமலையை தற்போதும் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.இரா. சம்பந்தன் அவர்களுடைய மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதும் பிணை கூட வழங்கப்படாமல் பெண்பிள்ளைகள் உள்ளிட்டோர் விளக்கமறியலில் இரு வாரம் வைக்கப்பட்டிருப்பதும் மனதை வருத்துகின்றது. உடனடியாக அனைத்து தமிழ்தேசிய சக்திகளும் இவர்களின் விடுதலைக்கு சகல எத்தனங்களை செய்ய வேண்டுவதுடன் அனைத்து முற்போக்கு மற்றும் உலகளாவிய சக்திகளதும் கவனத்தை ஈர்த்து அரசிற்கு அழுத்தத்தை பிரயோகித்து நினைவுகூரலுக்கான உரிமையை உறுதிப்படுத்துமாறும் வலிசுமந்த இந்த நாட்களில் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது. https://globaltamilnews.net/2024/202918/
  20. வடக்கு கிழக்கில் தனி ஈழம் அமையும் என்கிறார் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர! May 15, 2024 தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐ. நா. சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளமை சாதாரண விடயமல்ல என்றார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (14.05.24) இடம்பெற்ற பலஸ்தீனத்தின் இனறைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கருத்து தெரிவித்த அவர், இஸ்ரேல் நாட்டில் இடம்பெற்ற பொது நிகழ்ச்சியின் மீது பலஸ்தீனம் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னரே இரு தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. யுத்தம் கொடுமையானது. யுத்தத்தின் போது இரு தரப்பிலும் இழப்புக்கள் நேரிடும்.அப்பாவி மக்களே கொல்லப்படுவார்கள். பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா,ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு செயற்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. 30 வருட கால யுத்தத்தின் போது இஸ்ரேல் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் வெட்டிக் கொலை செய்யும் போது புலிகளுக்கு எதிராக அமெரிக்கா எவ்வித பிரேரணைகளையும் கொண்டு வரவில்லை.அதேபோல் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரேரணைகளை கொண்டு வரவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு அப்பாவி மக்களை கொலை செய்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு,அரசியல் தீர்வு குறித்து ஆராயுமாறு அமெரிக்கா அழுத்தம் பிரயோகித்தது. விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்தார்கள். இந்த தியாகத்துக்கு தற்போது மதிப்பளிக்கப்படுகிறதா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது. இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார் . இது சாதாரணமானதல்ல. இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெளியக பொறிமுறை நீடித்தால் இலங்கையில் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும். தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றிப் பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.. https://globaltamilnews.net/2024/202921/
  21. சனிக்கிழமை பெங்களூரில் RCB எப்படியும் CSK ஐ வெல்லும்! Run rate இலும் மேலே போகும்! சென்னையில் pitch மாறிவிட்டது. அதிகமான ஓட்டங்களை எடுக்கத் திணறுகின்றார்கள். எனவே, இறுதிப் போட்டியில் KKR க்கு வாய்ப்பு அதிகம்
  22. போட்டி நடக்கும் இடத்தை இந்தியா தெரிவானால்தானே மாற்றுவார்கள்! BCCI பெரிய அதிகாரத்துடன் ICC க்குள் இருக்கின்றது என்று தெரிகின்றது. @ஈழப்பிரியன் ஐயாவைத் தவிர இன்னும் ஒருவரும் போட்டியில் குதிக்கவில்லை! இன்னும் 15 நாட்கள்தான் உள்ளன!
  23. வடக்கு, கிழக்கில் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்கு பணிந்து நீதிமன்றங்கள் செயற்படுகின்றனவா? - செல்வராசா கஜேந்திரன் ! By Shana வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா ? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற நிதிக்கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, எமது தமிழின தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகள் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எல்லை கடந்து செல்கின்றன. எமது தேசத்தின் மீது இலங்கை அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 15 ஆண்டுகள் கடந்துள்ளன .ஆனால் இன்றுவரை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கருணா, பிள்ளையான்,ஈ.பி.டி.பி. யினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அவர்களின் உறவுகள் இன்றும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறான நிலையில் மே 18 ஆம் திகதியை முன்னிட்டு எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவு கூர்ந்து அதற்கான நீதியினைக்கோரும் விதமாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த இனப்படுகொலை வாரம் அனுஷ்டிப்பதும் அந்த இனப்படுகொலை,2009 ஆம் ஆண்டில் உணவை ஆயுதமாகக் கொண்டு கோத்தபாய ராஜபக்சவும் அவரது அண்ணன் மஹிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிய போது தமிழ் மக்கள் கஞ்சி குடித்து உயிர் பிழைத்த வரலாறு உள்ளது. இதனை நினைவு கூறும் விதமாக மக்களுக்கு கஞ்சி கொடுக்கும் நிகழ்வை இந்த வாரம் நாம் அனுஷ்டிப்பது வழமை .அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கட்டைப்பறிச்சான் பகுதியில் புவன கணபதி ஆலயத்தில் கஞ்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்ற போது அந்த நிகழ்வில் ஈடுபட்டமைக்காக எமது கட்சியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இந்த நாட்டின் நல்லிணக்கம், பிற இனங்கள், மதங்களை மதிக்கும் பண்பு. ஆலயத்தில் கஞ்சி காய்ச்சப்பட்டமைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. அவர்கள் 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் பொதுமக்களை ஒன்று கூட்டுவதும் அவர்களுக்கு உணவு,கஞ்சி பரிமாறுவதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் எனக்கூறி பொலிஸார் கோரிய தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அப்படியெனில் எதிர்வரும் வெசாக் தினங்களில் ''தன்சல் ''உணவு வழங்கும் செயற்பாடுகளைச் சுகாதார சீர்கேட்டை காரணம் காட்டி தடுத்து நிறுத்துமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கோருவார்களா? அதனை ஏற்று நீதிமன்றங்கள் தடையுத்தரவு வழங்குமா? அவ்வாறான உணவு வழங்கலை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா? தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?இந்த இனவாத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துங்கள் என்றார். https://www.battinews.com/2024/05/blog-post_160.html
  24. முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு (புதியவன்) முல்லைத்தீவு, முத்தையன் கட்டில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை கையடக்க தொலைபேசியில் காணொலி எடுத்த இளைஞன் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் சிலர், புதுக்குடியிருப்பிலுள்ள தமது நண்பியொருவரின் வீட்டுக்கு சென்று, அவரின் உறவினர் வீடு அமைந்துள்ள முத்தையன்கட்டில் நீரோடும் வாய்க்காலில் மாணவிகள் குளித்துக் கொண்டிருந்த போது, உந்துருளியில் வந்த இரண்டு இளைஞர்கள் மாணவிகளுடன் ஆபாசமாக பேசியுள்ளனர். சிறிது தூரம் சென்று மீண்டும் உந்துருளியில் வந்த இளைஞர்கள் இருவரும், மாணவிகள் குளிப்பதை காணொலி எடுத்துள்ளனர். அந்தப் பகுதியில் சுற்றி வட்டமடித்து தொடர்ந்து காணொலி எடுத்துள்ளனர். இதன்போது, மாணவியொருவர் குளிப்பதற்காக கொண்டு வந்த அலுமினிய வாளியை இளைஞர்கள் மீது வீசியுள்ளார். உந்துருளியை செலுத்தி வந்தவரின் தலையில் வாளி பட்டு, இருவரும் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளனர். மாணவிகள் சத்தமிட்டபடி வீதிக்கு ஓடிவர, உந்துருளியை செலுத்தி வந்தவர் எழுந்து உந்துருளியுடன் ஓடிவிட்டார். பின்னாலிருந்து காணொலி எடுத்தவரை மாணவிகள் பிடித்ததுடன், இந்த களேபரத்தை அவதானித்த பிரதேச இளைஞர்கள் சிலர் வந்து அந்த இளைஞனை நையப்புடைத்தனர். அவரது கையடக்க தொலைபேசியில் காணப்பட்ட மாணவிகள் குளித்த காணொலிகள் அனைத்தும் அழிக்கப்பட்டதுடன் இளைஞனின் மேலாடைகள் களையப்பட்டு, நையப்புடைக்கப்பட்டார். மாணவிகளும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். (ஏ) https://newuthayan.com/article/யாழ்_பல்கலை_மாணவிகள்_குளிப்பதை_வீடியோ_எடுத்த_நபர்_நையப்புடைப்பு!!
  25. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: அம்பிகா சற்குணநாதனின் அறிக்கை! தமிழருக்கு எதிரான இன அழிப்பையும், மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையிலாக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளனர். எனவே நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் உயிரிழப்பிற்கு அரசாங்கம் காரணமில்லை என காண்பித்து வரலாற்றை அழிப்பதும் மறைப்பதுமே நினைவேந்தல்களை தடுப்பதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் ஒன்றுகூடுவதன் மூலமும் உணவை பரிமாறிக்கொள்வதன் மூலமும் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் வெசாக் தன்சல்களையும் தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்கட்சிகள் இதற்கு எதிராக குரல்கொடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். http://www.samakalam.com/முள்ளிவாய்க்கால்-கஞ்சி-வ/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.