Everything posted by கிருபன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரபா மீது இஸ்ரேல் விரைவில் படை நடவடிக்கைக்கு திட்டம் பொது மக்களை வெளியேற்ற கூடாரங்கள் அமைப்பு maheshApril 25, 2024 காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் ரபா மீது இஸ்ரேல் இராணுவம் ‘மிக விரைவில்’ படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதோடு அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தையும் அது முன்னெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீன பொதுமக்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்களை இஸ்ரேல் வாங்கி இருப்பதாக இஸ்ரேலிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த அரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போர் காரணமாக எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் ரபாவில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது. இங்கு எஞ்சியுள்ள ஹமாஸ் படைப் பிரிவுகளுக்கு எதிராக படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. எனினும் அவ்வாறான படை நடவடிக்கை பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன. இங்குள்ள அகதிகள் எகிப்தின் சினாய் பகுதிக்குள் ஊடுருவுவதற்கு அனுமதிப்பதில்லை என்று எகிப்து குறிப்பிட்டிருக்கும் நிலையில் இந்த மக்கள் எங்கு செல்வார்கள் என்ற கவலையும் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவுடன் பல வாரங்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், ரபாவில் இருந்து வெளியேற்றப்படும் பலஸ்தீனர்களுக்காக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளது. இதில் ஒவ்வொன்றிலும் 10 தொடக்கம் 12 பேர் வரை தங்க முடியுமாக உள்ளது என்று இஸ்ரேலிய அரச தரப்பு தெரிவித்துள்ளது. ரபாவில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கான் யூனிஸ் நகரில் வெள்ளை நிறத்திலான சதுர வடிவ கூடாரங்கள் வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவியுள்ளது. இந்த கூடாரம் அமைக்கப்பட்ட நிலம் ஏப்ரல் 7 ஆம் திகதியன்று வெற்றி நிலமாகக் காணப்படுவது செய்மதி நிறுவனமான மக்சார் எடுத்த படங்கள் காட்டுகின்றன. இது தொடர்பில் கருத்துக் கூற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு மறுத்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் கால அமைச்சரவை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கூடி பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஒப்புதல் அளிக்க திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேலிய அரச வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. ரபா படை நடவடிக்கையின் முதல் கட்டமாக பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் நெதன்யாகு அலுவலகம் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவுடனான பிரச்சினைக்கு மத்தியில் பல வாரங்கள் பிற்போடப்பட்ட ரபா நடவடிக்கை ‘மிக விரைவில்’ இடம்பெறும் என்று இஸ்ரேலிய அரச தரப்பை மேற்கோள் காட்டி இஸ்ரேலில் அதிகம் விற்பனையாகும் ஹயோம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் ஏனைய செய்திப் பத்திரிகைகளும் இதனையொத்த செய்தியை வெளியிட்டுள்ளன. ரபா மீதான படை நடவடிக்கை ஒன்றுக்கான சமிக்ஞையை இஸ்ரேல் இராணுவம் அண்மைக் காலத்தில் வெளியிட்டு வருகிறது. ‘வடக்கில் ஹமாஸ் கடுமையாக தாக்கப்பட்டது. காசா பகுதியின் மத்தியிலும் அது தீவிரமாக தாக்கப்பட்டது. ரபாவிலும் கூட விரைவில் கடுமையாக தாக்கப்படும்’ என்று காசாவில் செயற்படும் 162 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் இட்சிக் கோஹன், இஸ்ரேலின் அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார். ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. தெற்கு ரபா நகரில் வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. ஏற்கனவே இடம்பெயர்ந்து ரபாவை அடைந்திருக்கும் பலஸ்தீனர்கள் மற்றொரு வெளியேற்றம் கடுமையானதான அமையும் என்று அஞ்சுகின்றனர். பாடசாலை ஒன்றில் தனது குடும்பத்துடன் தற்காலிக முகாமில் இருக்கும் 30 வயதான அயா என்பவர், பெரும் ஆபத்து பற்றி அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். துறைமுகப் பகுதியான அல் மவாசியில் இருந்து அண்மையில் இந்த முகாமுக்கு வந்த சில குடும்பங்கள் வசிக்கும் கூடாரங்களுக்கு அருகில் ஷெல் குண்டுகள் விழுந்ததை அடுத்து அவை தீப்பற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ‘ரபாவில் இருந்து வெளியேறுவது தொடர்பில் நாம் முடிவு ஒன்றை எடுக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் ஆக்கிரமிப்பு திடீரென்று இடம்பெறக் கூடும் என்பதோடு நாம் தப்பிப்பதற்கு நேரம் இருக்காது என்று நானும் எனது தாயும் அஞ்சுகிறோம்’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டார். ‘நாம் எங்கு போவது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார். காசாவில் 201 ஆவது நாளாகவும் நேற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்தன. அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் 200 ஆவது நாளை எட்டிய நிலையில் ஹமாஸ் ஆயுதப் பிரிவு பேச்சாளர் அபூ உபைதா கடந்த செவ்வாயன்று (23) வெளியிட்ட உரை ஒன்றில், ‘இந்த போரில் இஸ்ரேல் அவமானத்தையும் தோல்வியையும் மாத்திரமே சந்தித்துள்ளது’ என்றார். இதேவேளை இஸ்ரேலிய படை வாபஸ் பெற்ற கான் யூனிஸ் நகரின் நாசர் மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை தற்போது 300ஐ தாண்டியுள்ளது. இந்த புதைகுழி தொடர்பில் அமெரிக்கா கவனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விபரத்தை தரும்படி இஸ்ரேல் அரசை அமெரிக்க அதிகாரிகள் கேட்டுள்ளனர். காசா போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் தீவிரம் அடைந்திருப்பதோடு வடக்கு ஹெப்ரூனில் நேற்றுக் காலை இஸ்ரேலிய படையினால் 20 வயது யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்தே இந்தப் பெண் சுடப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தலையில் சுடப்பட்ட அந்தப் பெண்ணின் உடலை தமது பிடியில் வைத்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.thinakaran.lk/2024/04/25/world/56718/ரபா-மீது-இஸ்ரேல்-விரைவில/
-
நாசகாரப் பேச்சு! நடு நிலை தவறும் தேர்தல் ஆணையம்..!
இந்திய பிரதமர் மோடி பேச்சுக்கு எதிரான புகார் மீதான ஆய்வை தொடங்கியது தேர்தல் ஆணையம் 25 Apr, 2024 | 10:26 AM இந்தியபிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகரிக்கும் அழுத்தத்துக்கு இடையே தேர்தல் ஆணையம் ஆய்வைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனித்தனியே தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரில் பிரதமரின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாக தவறானதாக. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிவைப்பதாக இருப்பதாகக் கூறியிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போதுஇ “தேர்தல் ஆணையம் எங்களின் புகாரை ஆராய்ந்து உடனடியாக மோடிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர் சார்ந்த பாஜகவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத துவேஷங்களை ஏற்படுத்துதல் வெறுப்பை விதைத்தல் போன்ற குற்றங்களுக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையி பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மவுனம் காப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில் அதிகரிக்கும் அழுத்தங்களுக்கு இடையே தேர்தல் ஆணையம் புகார்களை ஆய்வு செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடி என்ன பேசினார்? - முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பேசிய பிரதமர் மோடி “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதே அதற்கு சாட்சி. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்? என நினைவுகூர்வோம். “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார். அப்படியென்றால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பார்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று மோடி பேசியிருந்தார். இதுவே இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/181905
-
அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது - அமெரிக்க அதிகாரிகள் தகவல்
அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது - அமெரிக்க அதிகாரிகள் தகவல் Published By: Rajeeban 25 Apr, 2024 | 10:36 AM அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஸ்ய படையினருக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச்சில் அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கிய உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியின் ஒரு பகுதியான இந்த ஏவுகணைகள் இந்த மாதமே உக்ரைனை சென்றடைந்துள்ளன. இந்த ஏவுகணைகளை ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது உக்ரைன் பயன்படுத்தியுள்ளது - கிரிமியாவில் நிலை கொண்டுள்ள படையினருக்குஎதிராக பயன்படுத்தியுள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க முன்னர் ஏடிசிஎம்எஸ் ஏவுகணைகளை உக்ரைனிற்கு வழங்கியிருந்தது எனினும் அந்த ஏவுகணையை விட வலுவான ஏவுகணையை வழங்க தயக்கம் கொண்டிருந்தது. எனினும் உக்ரைனிற்கு நீண்டதூர ஏவுகணைகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி இரகசியமாக அனுமதி வழங்கியுள்ளார். இந்த ஏவுகணைகள் 300 கிலோமீற்றர் செல்லக்கூடியவை. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடியும் என இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். உக்ரைன் தனது நடவடிக்கை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விடயத்தினை பகிரங்கப்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டதால் அமெரிக்கா இதனை பகிரங்கப்படுத்தவில்லை. அமெரிக்கா எத்தனை ஏவுகணைகளை அனுப்பியுள்ளது என்பது தெளிவாகவில்லை எனினும் இந்த ஏவுகணைகள் போர்முனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவன் தெரிவித்துள்ளார் அவை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆனால் நான் முன்னர் சொன்னதை போல இலகுவான தீர்வுகள் எவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் கிரிமியாவில் உள்ள விமானதளத்தை தாக்குவதற்கு புதிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தியுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181908
-
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய கைது தொடர்பில் வவுனியா மனித உரிமை ஆணைக்குழு பொலிஸார், வனவளத் திணைக்களத்திடம் விசாரணை
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய கைது தொடர்பில் வவுனியா மனித உரிமை ஆணைக்குழு பொலிஸார், வனவளத் திணைக்களத்திடம் விசாரணை Published By: Vishnu 25 Apr, 2024 | 09:25 AM வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மனிதவுரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு புதன்கிழமை (24) அழைக்கப்பட்ட நெடுங்கேணிப் பொலிசார், வனவளத் திணைக்களத்தினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வாக்கு மூலமும் பெறப்பட்டது. இதன்போது, வனவளத் திணைக்களத்தினர் தாம் அங்கு சென்று பார்த்த போது தமது வனப் பகுதிக்குள் தீ மூடப்பட்டிருந்ததாகவும், பிளாஸ்ரிப் பொருட்கள், சமையல் கழிவுகள், ஆலய பூசைப் பொருட்கள் அங்கு கொட்டப்பட்டிருந்ததாகவும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தனர். பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கும் போது தொல்பொருள் திணைக்களத்தின் கடிதத்தின் பிரகாரமும், வனப் பகுதிக்குள் தீ மூட்டப்பட்டமை காரணமாகவும் கைது செய்யதாக தெரிவித்ததுடன், தாம் எவர் மீதும் தாக்குதல் நடந்த வில்லை எனவும், வேட்டியை கழற்றி அரை நிர்வாண நிலையில் கொண்டு செல்ல வில்லை எனவும் தெரிவித்தனர். விசாரணைகளின் முடிவில் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தினர், கடந்த மாதம் 8 ஆம் திகதி சிவாரத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை நெடுங்கேணி பொலிசார் கைது செய்து எம்மை சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து எமது உறவினர்கள் வவுனியா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய 8 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு விசாரணைகள் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்றது. இதன்போது நாம் அங்கு நடந்த சம்பவங்களை தெளிவாக பதிவு செய்ததுடன், பொலிசார் சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்து பலவந்தமாக அங்கு இருந்தவர்களை வெளியேற்றி கைது செய்தமை மற்றும் கைது செய்த போது வேட்டியை கழற்றி அரை நிர்வாணமாக கொண்டு சென்றதுடன் தாக்கியது தொடர்பிலும் சுட்டிக் காட்டியிருந்ததோம். அத்துடன் ஆலய வழிபாட்டுக்கு அனுமதிக்காமை, ஆலயத்திற்குள் குடிநீர் கொண்டு செல்ல விடாமை உள்ளிட்ட விடயங்களையும் சுட்டிக்காட்டினோம். இவை தொடர்பில் கருத்துக்களை கேட்டறிந்த மனிதவுரிமை ஆணைக்குழுவினர், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குளம் அவை தொடர்பான சான்றுகள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு எம்மிடம் கோரிருந்தனர். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிசாரால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதையும் சுட்டிகாட்டியிருந்தோம். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கனை மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யுமாறும் மனிதவுரிமை ஆணைக்குழுவினர் தெரிவித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/181896
-
போரட்டத்துக்கு தயாராகும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்!
போரட்டத்துக்கு தயாராகும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்! இனியபாரதி. யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை(29) போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்தனர். மேலும் தெரிவிக்கையில்; எங்களால் மேற்கொள்ளப்படவுள்ள ஜனநாயக அடிப்படையிலான போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனத்தை ஈர்ப்பதுடன் எங்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இலங்கையில் மிக நீண்ட காலமாக பட்டதாரிகளுக்கான வேலையில்லா பிரச்சனை நிலவி வரும் சூழலில் அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும். இலங்கையின் கல்வித் திட்டத்தின் கீழ் 20 வருடங்கள் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறி பின்னர் சாதாரண கூலித் தொழிலுக்கே சென்று வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வேண்டிய மனச் சங்கடமான நிலையினையே எதிர்கொள்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் தமது எதிர்கால கனவுக்காக படித்து பட்டதாரிகளாகி இன்று எவ்விதத்திலும் பயனற்றவர்களாக வேலையில்லா பட்டதாரிகள் என்ற பெயரோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான எமது அவல நிலைமை எதிர்கால மாணவர்களுக்கும் கல்வி மீதான விரக்தியையும் பட்டப்படிப்பு மீதான அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் இலங்கையின் கல்வி அறிவு மற்றும் வளர்ச்சியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இவற்றை அறிந்தும் அறியாமலும் உள்ள அரசாங்கத்தின் அசமந்தபோக்கானது நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய கல்வி கற்ற இளைஞர்களை பயந்தவர்களாக வாழ வைத்துள்ளது. இதன் விரக்தியாலும் மன அழுத்தத்தாலும் நாடு தழுவியரீதியில் பட்டதாரிகள் அனைவரும் ஜனநாயக அடிப்படையில் அமைதியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் வடமாகாண பட்டதாரிகளாகிய நாமும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கவனவீர்ப்பை மேற்கொள்ளவுள்ளோம். 1. பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் போட்டிப்பரீட்சைகள் நிராகரிப்பு செய்ய வேண்டும் 2. ஏற்கனவே அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மீண்டும் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையில் கொண்டு வருதல் நியாயமற்றது .அது வேலையற்ற பட்டதாரிகளை பாதிக்கின்றது. 3. வடமாகனத்திலுள்ள சிறப்பு தேவையுடைய பட்டதாரிகளின் வாழ்வியல் தொடர்பிலான அரசாங்கத்தின் கரிசனை என்ன? 4. வேலையற்றப்பட்டதாரிகளும் சமூகத்தில் எதிர்கொள்ளும் அவமானங்களும் சவால்களும் அதன் ஊடாக ஏற்படும் மன அழுத்தங்கள் மற்றும் பட்டதாரிகளின் எதிர்காலம் குறித்தும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் என்ன ? இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தாது ஜனநாயக முறையிலான கவனவீர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து நமது கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவினை ஆளுநரினூடாக அரசதலைவருக்கு கையளிப்பதுடன் வடக்கு மாகணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்குமான மனு கையளிப்பு இடம்பெறவிருப்பதால் வடக்கு மாகாண பட்டதாரிகள் உங்கள் நேரங்களை ஒதுக்கி இம் மாதம் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு "நமக்காய் நாமே" என்னும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் கலந்து கொள்ளுங்கள் - என்றனர். மேலும் இது தொடர்பிலான சந்தேகங்கள் மற்றும் தெளிவுபடுத்தலுக்கு 0773539992 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச) https://newuthayan.com/article/போரட்டத்துக்கு_அழைப்பு_விடும்_வேலையற்ற_பட்டதாரிகள்_சங்கம்!
-
தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களின் துணைகொண்டு சாதித்துக்கொள்ள நினைப்பது நீதியான செயற்பாடு அல்ல!
தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களின் துணைகொண்டு சாதித்துக்கொள்ள நினைப்பது நீதியான செயற்பாடு அல்ல! (இனிய பாரதி) தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களின் துணைகொண்டு சாதித்துக்கொள்ள நினைப்பது நீதியான செயற்பாடு அல்லவென வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் வெளிவரும் வலம்புரி பத்திரிகையில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி பிரசுரமாகிய ஆசிரியர் தலையங்கம் தொடர்பில், ஆளுநர் செயலகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் இன்றைய தினம் (23/04/2024) பிரசுரமாகிய வலம்புரி பத்திரிகையின் முதற்பக்கத்திலும், ஊடகங்களின் சுதந்திரத்தை ஆளுநர் கேள்விக்குள்ளாக்குவதை போன்று தலைப்பிடப்பட்டு செய்தி பிரசுரமாகியுள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்கள் அதன் தாற்பரியம் அறிந்து செயற்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கணக்காளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு தனது நியாயப்பாடுகளை சமர்பிக்க பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, கடந்த 22 ஆம் திகதி வாக்குமூலம் வழங்க அவர் சென்றிருந்தார். விடயம் தொடர்பான முறைப்பாடு ஆளுநர் செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதில் ஆளுநரின் எவ்வித தலையீடுகளும் இல்லை என்பதை இந்த ஊடக அறிக்கையினூடாக கூறிக்கொள்கின்றோம். வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக செயற்படும் நல்லையா விஜயசுந்தரம் என்பவர் ஓர் அரச உத்தியோகத்தர். ஆசிரியர் நியமனம் பெற்றுள்ள இவர், சுமார் 15 வருடங்கள் கடமை நிறைவேற்று அதிபராக செயற்பட்டு வந்துள்ளார். இந்த காலப்பகுதியில் பல தடவைகள் அதிபர் தரத்திற்கான போட்டி பரீட்சைகள் நடத்தப்பட்ட போதிலும், இவர் உள்ளிட்ட சில கடமை நிறைவேற்று அதிபர்கள் பரீட்சையில் சித்தியடைய தவறியுள்ளனர். இந்நிலையில், அண்மையில் அதிபர் சேவைக்கான போட்டி பரீட்சை நடத்தப்பட்டு வழங்கப்பட்ட அதிபர் நியமனத்தின் போதும், சில கடமை நிறைவேற்று அதிபர்கள் உள்வாங்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் கடமை நிறைவேற்று அதிபர் சங்கத்தால் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆளுநரிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சிடமும் தமது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் தீர்மானம் கிடைக்கும் வரை, கடமை நிறைவேற்று அதிபர்களாக செயற்பட அனுமதிக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைய, மத்திய அமைச்சின் தீர்மானம் வரும் வரை அவர்கள் கடமை நிறைவேற்று அதிபர்களாக செயற்பட ஆளுநர் அவர்களினால் அனுமதி வழங்கப்பட்டது. எனினும், இவர்களின் கோரிக்கையை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விடயங்கள் ஆளுநரின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது என்பது தொடர்பில் கடமை நிறைவேற்று அதிபர் சங்கத்திற்கு தெளிவுப்படுத்தப்பட்டபின் புலத்தில், வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்களின் செயலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும், ஆளுநர் அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும், கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் “ஆளுநருக்கான அவசர மடல்” என்ற தலைப்பின் கீழ் விமர்சிக்கப்பட்டிருந்தது. அமைச்சின் செயலாளர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக கூறியுள்ள போதிலும், அதன் உண்மைத்தன்மையை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆதாரங்களுடன் எமக்கு அறிவித்திருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதனை விடுத்து மக்களை குழப்பும் வகையில் செய்திகளை பிரசுரிப்பது எந்த வகையில் ஊடக தர்மத்திற்கு பொருத்தமானது? இதேவேளை “சிங்களவர் ஒருவர் வடக்கின் ஆளுநராக இருந்தால்”... என்றும் அவர் தனது ஆசிரியர் தலைப்பில் எழுதியிருந்தார். இதனூடாக இன நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் அவர் எழுதுகிறாரோ என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டி உள்ளது. மேலும் அரசதலைவரின் நேரடி பிரதிநிதியாக நியமிக்கப்படும் ஆளுநர்கள் தொடர்பிலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஆளுநர்களின் செயற்பாடுகளை உதாரணம் காட்டி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆளுநர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்கு உட்பட்டு அவர் தனது பணியை சிறப்புற முன்னெடுத்துவரும் நிலையில், இவ்வாறான அவதூறான செய்திகளை பிரசுரிப்பது பொருத்தமற்ற செயல் என நாம் கருதுகின்றோம். வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர், அரச நியமனம் பெற்ற ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு இவ்வாறு தனது தனிப்பட்ட விடயங்களுக்காக, ஊடகத்தை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் தற்போது காணப்படும் சட்டங்களுக்கு அமைய, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியரான நல்லையா விஜயசுந்தரம் என்பவர் அரச உத்தியோகத்தர் என்ற அடிப்படையில், அவர் தொடர்பான பணிமனை மட்ட ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்வதற்கான முன்னோடியாகவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை தவிர ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நிர்வாக சமநிலையை சீர்குலைக்கும் வகையிலும், இன, மதங்களுக்கு இடையில் பங்கம் ஏற்படும் வகையில் அவர் செயற்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம். பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஊடகங்கள் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும். அரச சேவையை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் சிக்கலை எதிர்நோக்கும் பட்சத்தில் ஊடகங்கள் அவற்றை எமக்கு அறிவிக்க முடியும். அதைவிடுத்து விமர்சனம் என்ற போர்வையில் ஊடக தர்மத்திற்கு எதிராக ஊடகங்கள் செயற்படக்கூடாது என்பதே எமது அவா. ஊடக சுதந்திரத்தில் ஒருபோதும் நாம் தலையிடுவதில்லை என்பதுடன் ஊடகங்களுடன் இணைந்து மக்கள் பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் கூறிக்கொள்கிறோம் - என்றுள்ளது.-(ப) https://newuthayan.com/article/தனிப்பட்ட_விடயங்களை_ஊடகங்களின்_துணைகொண்டு_சாதித்துக்கொள்ள_நினைப்பது_நீதியான_செயற்பாடு_அல்ல!
-
தமிழரசு நிர்வாகத் தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
தமிழரசு நிர்வாகத் தெரிவு வழக்கு ஒத்திவைப்பு ஏ.எம்.கீத்., ஏ.எச்.ஹஸ்பர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கருத்துரைக்கையில், 07 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 2ஆம்,4ஆம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர்களுக்கு சார்பாக ஆஜராகினேன். சுமார் மூன்று மணி நேரம் இவ்வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது. கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி வழகுகல் தாக்கல் செய்யப்பட்டு 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை. குறிப்பாக சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம். ஆனால், காலம் செல்லும், இதனால் வழக்கை காலம் சென்ற நிலையில், வெற்றி கொண்டால் தோல்வியாகவே கருதப்படும். வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, இதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்கவேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றில் தெரிவித்தேன் என்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழரசு-நிர்வாகத்-தெரிவு-வழக்கு-ஒத்திவைப்பு/175-336301
-
போரில் 5 இலட்சம் இராணுவ வீரர்களைப் பறிகொடுத்த உக்ரேன்
உக்கிரேன் 1/2 மில்லியன் இராணுவத்தை இழந்திருந்தால், ஏன் ரஸ்யா இன்னும் டொன்பாஸுக்குள் தடக்குப்பட்டுக்கொண்டு நிற்கின்றது?
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
இலங்கை வந்தார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி Published By: Digital Desk 3 24 Apr, 2024 | 11:02 AM உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். ஈரானுக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக மத்தல சர்வதேச விமான நிலையத்தை ஈரான் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் வந்தடைந்துள்ளனர். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைசாத்திடப்படவுள்ளது. அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகைதந்துள்ள ஈரான் ஜனாதிபதி, அங்கிருந்து உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித்திட்டத்தை திறந்துவைத்துவிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கொழும்பை வந்தடையவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு சந்திப்பை நடாத்தவுள்ள ஈரான் ஜனாதிபதி, பின்னர் நாடு திரும்பவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதே ஈரானிய ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமாகும். உமா ஓயா பல்நோக்குத்திட்டம் 2011 ஆம் ஆண்டு ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கியின் கடனுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் அதனைத்தொடர்ந்து பூகோள அரசியல், பொருளாதாரத்தடைகள் ஈரானில் தாக்கங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, உமா ஓயா திட்டத்துக்கான நிதி உள்நாட்டு திறைசேரி ஒதுக்கீடுகளுக்கு மாற்றப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் புஹல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து சேகரிக்கப்படும் நீர், 4 கிலோமீற்றர் சுரங்கப்பாதையின் ஊடாக டயரபா நீர்த்தேக்கத்துக்குச் செல்கிறது. அங்கிருந்து 15.5 கிலோமீற்றர் சுரங்கப்பாதை ஊடாக எல்ல, கரந்தகொல்ல பகுதியில் உள்ள 2 நிலத்தடி விசையாழிகளுக்குச் செல்கிறது. இவ்விசையாழிகள் ஒவ்வொன்றும் 60 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், அவை தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். https://www.virakesari.lk/article/181820
-
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அடுத்த வாரம் கூடும் – மாவை அறிவிப்பு
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அடுத்த வாரம் கூடும் – மாவை அறிவிப்பு April 24, 2024 இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்த நிலையில் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று இடம்பெறவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதனால் கட்சி உறுப்பினர்கள் அங்கு செல்லவுள்ளதாகவும் இதனால் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/தமிழரசுக்-கட்சியின்-மத்த/
-
மைத்திரிபால இராஜினாமா?
மைத்திரிபால இராஜினாமா? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் தலைவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார். தற்போதும் கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு பதில் தலைவர்களின் பெயர்களைக் கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கையளித்துள்ளனர். இந்த நியமனங்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மைத்திரிபால-இராஜினாமா/150-336230
-
நாசகாரப் பேச்சு! நடு நிலை தவறும் தேர்தல் ஆணையம்..!
நாசகாரப் பேச்சு! நடு நிலை தவறும் தேர்தல் ஆணையம்..! -ஹரி பரந்தாமன் அக்கிரமமான பேச்சுக்கள்! பொய், வெறுப்பு, பித்தலாட்டம் செய்யும் பிரதமர்! தொடர்ந்து நடுநிலை தவறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம். குஜராத்தின் சூரத்திலோ எதிர்த்து போட்டியிட்ட எல்லோரையும் விலைபேசி, தேர்தலுக்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி..? என்ன தான் நடக்கிறது நாட்டில்..? – ஹரி பரந்தாமன். ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசிய வன்ம பேச்சு விவாத பொருளாக ஆகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நிதானமின்றி, தன் உள்ளத்தின் அடி ஆழத்தில் உறைந்திருக்கும் வெறுப்பு அரசியலை வெளிப்படுத்தி உள்ளார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த நாட்டின் சொத்துகளில் முதன்மை உரிமை முஸ்லிம்களுக்குத்தான் உள்ளது என்று சொன்னாராம்! இப்படி கதைவிட்டுள்ள மோடி, இதற்கு விளக்க உரையும் நல்கியுள்ளார்! ”இதற்கு அர்த்தம் என்ன? காங்கிரஸ் யாருக்கு சொத்துகளை பிரித்துக் கொடுப்பார்கள்? யார் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களோ, யார் இந்த நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமித்தார்களோ அவர்களுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுப்பார்கள்; நீங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? இந்த நகர்ப்புற நக்சல்கள், நமது தாய்மார்களின், சகோதரிகளின் தாலிக் கொடிகளில் உள்ள தங்கத்தைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவற்றையும் பறித்து முஸ்லிம்களுக்கு தந்து விடுவார்கள்…” என்றெல்லாம் மிகவும் கொந்தளிப்பாக பேசியிருக்கிறார். 2006 ஆம் ஆண்டில் தேசிய வளர்ச்சி குழுவில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் உண்மையில் பேசியது இது தான்; “நமது கூட்டு முன்னுரிமைகள் மிகத் தெளிவாக உள்ளன. விவசாயம், நீர்வளங்கள், கல்வி, கிராமப்புற முதலீடுகள்.. ஆகியவற்றுடன் தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளின் நலன்களே நமது முன்னுரிமை. வளர்ச்சியின் பலன்கள் சிறுபான்மை மக்களுக்கும் சேரும் வகையில் பொருத்தமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இவர்கள் நமது வளங்களில் முன்னுரிமை பெறுகின்றனர்” என்று தான் பேசி இருக்கிறார். அன்று மன்மோகன் சிங் பேசியதைத் தான் தற்போது இப்படி திரித்துக்கூறியுள்ளார் மோடி. நாட்டின் வளர்ச்சியின் பயன்கள் அனைத்து பிரிவினருக்கும் சேர வேண்டும். இந்தியாவின் வளங்களில் இந்த எளியோருக்கே முன்னுரிமை உண்டு என்று தான் மன்மோகன் சிங் பேசி இருக்கிறார். ஆனால், இந்தியாவின் அனைத்து வளங்களிலும் இஸ்லாமியருக்கே முன்னுரிமை இருக்கும் என்று மன்மோகன் சிங் பேசியதாக அவரது பேச்சை திரித்து முழு பொய்யை பேசியுள்ளார் மோடி. இப்படி தொடர்ந்து அவர் மதத்தை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தாலும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இந்த அக்கிரம பேச்சை கண்டிக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமரின் இச் செயல் சட்ட விரோதமானது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானது. இந்திய தண்டனைச் சட்டத்தின் படி அவரது பேச்சு – இரு மதப் பிரிவினர் இடையே பகைமையை உண்டாக்கும் அவரது பேச்சு – குற்றச் செயலாகும். இதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தண்டிக்க முடியும். இதனால் தான் பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. ”பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்தும் இது வரை நடவடிக்கை இல்லை. அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. புகார் அளித்த பின் அந்த குழுவில் இருந்த அபிஷேக் சிங்வி ஊடகங்களிடம் பேசினார். ”இந்த புகாரின் மீது தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா என்பதை தீர்மானிக்க இயலும்” என்றார். காங்கிரஸின் அகில இந்திய தலைவர் மல்லிகாஜுன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களின் ஒருவரான வேணுகோபால் ஆகியோர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லாததை எல்லாம் எவ்வாறு பொய்யாக மோடி பேசி உள்ளார் என்பதை விவரமாக ஊடகங்களிடம் கூறியுள்ளனர். மேலும் 2006 இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை திரித்து ,மதவாத அரசியலை -குறிப்பாக வெறுப்பு அரசியலை -மோடி பேசி உள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் சீதாராம் எச்சூரி அவர்களும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் செய்துள்ளார் .மேலும், அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் டெல்லியில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மற்ற அரசியல் கட்சிகளும் மோடியின் மதவாத வெறுப்பு அரசியல் பேச்சை கண்டனம் செய்துள்ளன. பிரதமர் மோடியிடமும், பாஜக விடவும் வெறுப்பு அரசியலை தவிர்த்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வியை பொருளாதார நிபுணர் பரகால பிரபாகர் எழுப்பியுள்ளார்? அவர் சமீபத்தில் சென்னையில் பேசிய ஒரு கூட்டத்தில், ”மோடியின் அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை. மேலும், பாஜக ஆட்சி செய்யும் குஜராத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இஸ்லாமியர் எவரும் இல்லை. இந்த மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியர் எவரும் பாஜகவின் சார்பில் வேட்பாளராகவே கூட நிறுத்தப்படவில்லை” என்பதை எல்லாம் சுட்டிக்காட்டினார். மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் தொகையில் 1% பேர் 22 % தேசிய வருமானத்தை பெறுவதும், மக்கள் தொகையில் 1% பேர் இந்திய சொத்து மதிப்பில் 44% சொத்து மதிப்பை வைத்துள்ள நிலையும் இருப்பதாக சுட்டிக்காட்டினார் பரகலப்பிரபாக்கர். எனவே, பட்டியலினத்தவரும் பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்டவர்களும், சிறுபான்மையினரும், பெண்களும் குழந்தைகளும் நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்க வேண்டும் என்ற மன்மோகன் சிங்கின் பேச்சை திரித்துப் பேசாமல் எப்படி இருப்பார் மோடி.? மேலும், பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பல தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் தரப்பில் மட்டுமின்றி பல தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படும் என்ற எண்ணம் பொதுவாக இல்லை. தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பேசியதை பகிர்ந்து, “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” என்று சூசகமாக பதிவிட்டுள்ளார். பொதுவாக கிராம பஞ்சாயத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் வார்டுகளுக்கான தேர்தலில் கூட எவரும் போட்டியின்றி வெற்றி பெறுவது அரிதிலும் அரிது. ஆனால், குஜராத் மாநிலத்தில் சூரத் பாராளுமன்ற தொகுதியில் எந்த போட்டியும் இன்றி பாஜக வின் வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக சான்றிதழை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியும் அவருக்கு வழங்கியுள்ளனர். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் குர்பானியின் வேட்பு மனுவும் ,அவருக்கு டம்மியாக காங்கிரஸ் தரப்பிலானவரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டதாலேயே பாஜக வேட்பாளரின் வெற்றி சாத்தியமானது. அந்த வேட்பு மனுக்களை முன்மொழிந்தவர்கள், அவர்களின் கையொப்பங்களை போடவில்லை என்று தேர்தல் அதிகாரியின் முன் அபிடவிட் தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி , பகுஜன் சமாஜ் கட்சி உட்பட நான்கு கட்சிகளின் வேட்பாளர்களும் அவர்களின் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர்!. சுயேச்சைகள் 4 பேரும் கூட வேட்டுமனுக்களை திரும்ப பெற்றனர்!. எதிர்க்கட்சியின் சட்டசபை உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விலை கொடுத்து வாங்குவது பாஜகவின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் சர்வ சாதாரணமான நிகழ்வாக இருந்தது. சூரத்தில் தேர்தலுக்கு முன்னரே குதிரை பேரம் நடந்திருக்கலாம் என்பது பொதுவான கருத்து. இல்லையென்றால் போட்டியிலிருந்து எட்டு நபர்கள் விலகுவார்களா என்பதை சிந்தித்தாலே உண்மை விளங்கும். காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை முன்மொழிந்தவர்கள் அடித்த அந்தர்பல்டிக்கு பின்னால் என்ன நடந்தது என்பதை எவரும் யூகித்து அறியலாம். அதாவது, ‘அறமற்ற வழியில் தேர்தலில் வெற்றி பெற பாஜக தயங்காது’ என்பதற்கான சான்றாகவே சூரத் நிகழ்வை பார்க்கலாம். தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பாஜக அணியில் போட்டியிட்ட பாமகவிற்கு மாம்பழம் சின்னம் , டிடிவி தினகரனின் அ.ம.முகவிற்கு குக்கர் சின்னம், வாசனின் தமாகா விற்கு சைக்கிள் சின்னம் என்று சின்னங்களை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், திமுக தலைமையிலான எதிர் அணியில் இருந்த மதிமுக விற்கு பம்பரம் சின்னத்தையும் விசிக-வினருக்கு பானை சின்னத்தையும் ஒதுக்கவில்லை. தனித்துப் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் விவசாயி சின்னத்தை ஒதுக்கவில்லை தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் பானை சின்னம் அளிக்க மறுத்தாலும், விசிக – வின் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரத்தில் வேறு எந்த வேட்பாளரும் பானை சின்னத்தை கேட்காததால் அவருக்கு பானை சின்னம் கிடைத்தது. அதேபோல, விசிக சார்பில் விழுப்புரத்தில் ரவி குமாருக்கும் பானை சின்னம் கிடைத்தது. மதிமுகவும், விசிக-வும் நீதிமன்றம் சென்றும் அவர்களுக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் மூலம் பெற இயலவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலைமையுடன் செயல்படுகிறதா? என்பதற்கு மேற் சொன்ன நிகழ்வு உரிய பதிலாக அமையும். வெறுப்பு அரசியலை தொடர்ந்து பிரதமர் மோடி பாஜகவின் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசி வந்தாலும் அவர் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்க தேர்தல் ஆணையம் முன் வரவில்லை. எனவே, அவர் வெறுப்பரசியலை தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ்நாட்டில் சேலம் நகரில் 18.3.2024 அன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, காங்கிரசும் திமுகவும் இந்துமதத்தை அவமரியாதை செய்வதாகவும், ஆனால் மற்ற மதங்கள் விவகாரங்களில் வாய்மூடி இருப்பதாகவும் வெறுப்ப ரசியலைப் பேசினார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, ”முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை” என்று பேசினார் மோடி. ”பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் அயோத்தி ராமருக்கும் எதிராக இருப்பது ஏன்?’’ என்று மதவாத வெறுப்பரசியலை தொடர்ந்து பேசினார் மோடி அவர்கள் .அதாவது பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டி அரசியல் செய்த பாஜகவின் செயலுக்கு காங்கிரஸ் ஆதரவு தராததையே ராமருக்கு எதிரானவர்களாக காங்கிரசை சித்தரித்து மதத்தை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் பிரதமர் மோடி. நாடாளுமன்றத்துக்கான ஏழு கட்ட தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் மாடல் கோட் ஆப் கான்டக்ட் (model code of conduct) அமுலுக்கு வந்தது. அதன்படி அனைத்து மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட அனைத்து மாநில அரசு இயந்திரங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தேர்தல் ஆணையம் பல அதிகாரிகளை -மாவட்ட ஆட்சியர்களையும் காவல்துறைய அதிகாரிகளையும்- மாற்றல் செய்து உத்தரவிட்டது. ஆனால் ஒன்றிய அரசின் அமைப்புகளான வருமான வரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ ஆகிய அமைப்புகளை கட்டுக்குள் வைக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது . இந்த அமைப்புகள் எதிர்க்கட்சியினரை தேர்தல் நேரத்திலும் வேட்டையாடுகிறது என்பதும் குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் இதை தெளிவாக்கும் தேர்தல் ஆணையம் -மோடி அரசால் நியமிக்கப்பட்ட மூன்று தேர்தல் ஆணையர்கள் -நடுநிலையுடன் செயல்பட்டு ஜனநாயகத்தின் மீது இந்திய மக்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் நடப்பார்களா..? என்பது கேள்விக் குறியே! கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன் ஓய்வு பெற்ற நீதிபதி சென்னை உயர் நீதிமன்றம் https://aramonline.in/17612/discrimination-of-e-c/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
125 விராட் அடிப்பாரா?
-
பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் - பாலியல் துஸ்பிரயோகம்
பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் - பாலியல் துஸ்பிரயோகம் Vhg ஏப்ரல் 23, 2024 யாழில் கும்பல் ஒன்று பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரின் தாய் தந்தை மரணமடைந்ததையடுத்து, குறித்த பெண்ணும், அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம், பெண்ணின் மூத்த சகோதரி உயிரிழந்த நிலையில், இவரது சகோதரன் இவரை தனது இல்லத்திற்கு அழைத்து சென்று இருந்தார். சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை ஐனவரி மாதம் வீட்டில் ஆட்களற்ற வேளை உள்நுழைந்த கும்பல் ஒன்று போதைப் பொருளை வழங்கி, அதனை பலவந்தமாக நுகர வைத்து, அடித்து துன்புறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் குறித்த பெண் தங்கி நின்ற வேளை அங்கும் குறித்த கும்பல் சென்று, பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி, தாக்கி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் காயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தடவைகள் 10 பேரை உள்ளடக்கிய கும்பல் போதைப் பொருளை கட்டாயப்படுத்தி நுகர வைத்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்து தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தனர் என தெரிவித்துள்ளார். பெண்ணின் வாக்குமூலத்தை முறைப்பாடாக பதிவு செய்துள்ள பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.battinatham.com/2024/04/blog-post_413.html
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
முட்டையில்லை! முட்டைக்கும் கீழே!😩
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்று சென்னையில் CSK அணி 210 ஓட்டங்கள் எடுத்தும் LSG இடம் தோற்றுவிட்டது. மார்கஸ் ஸ்ரொயின்ஸ் 124 ஓட்டங்களை விளாசித்தள்ளியிருந்தார். 14 ஆவது கேள்வியில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் எடுப்பவர் விராட் கோலி என்று பதிலளித்தவர்களுக்கு மைனஸில் புள்ளிகள் போகலம்!😱 விராட் 124க்கு மேல் அடிக்கவேண்டும் எனது லெமூரியன் முதல்தாதையை வேண்டுகின்றேன்🫥
-
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் எழுதும் வாக்குமூலம் தொடர் அரங்கம் மற்றும் “அக்கினிக்குஞ்சு” தளங்களில் வாசிப்பதுண்டு. சில விடயங்களை உறைக்க எழுதுவார். ஆனாலும் புலி எதிர்ப்பு இந்தப் பத்திகளில் தூக்கலாக இருக்காது. இன்று அரங்கத்தில் வாசித்தபோது யாழில் பதிவோமா விடுவோமா என்று யோசித்தேன். எத்தனை பேர் படிப்பார்கள் என்று சோதிக்கப் பதியலாம் என்று போட்டுவிட்டேன்! இன்னும் பலர் படிக்கவில்லைப் போலிருக்கு!
-
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!) April 22, 2024 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் உலாவரும் அனேகமான ஊடகங்கள் அவை அச்சு ஊடகங்களாயினும் சரி மின்னூடகங்களாயினும் சரி அவற்றில் கட்டுரைகள் எழுதும் அரசியல் ஆய்வாளர்-பத்தி எழுத்தாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் அநேகம் பேர் (சிலவேளை ஆசிரிய தலையங்கங்களில் கூட) முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு வரை இலங்கைத் தமிழர்களுடைய அரசியலில் எல்லாமே சரியாக நடந்து வந்தது போலவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இலங்கைத் தமிழர் தரப்பு அரசியல் குழம்பிப்போய்விட்டது போலவுமே கருத்துக்களைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்கள். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கோலோச்சிய காலத்தில் தமிழர் அரசியலில் எல்லாமே ஒழுங்காகவும் சரியாகவும் நடைபெற்றது போலவும் வழமையான சொல்லாடலான ‘புலிகளின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட பின்பு’ தமிழர் அரசியல் தலைகீழாக மாறிவிட்டது போலவுமே எழுதியும் வருகிறார்கள். தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசியவாதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளும்கூட இப் போக்கிற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. இத்தகைய தமிழ் ஊடகங்களிடமும்-அரசியல் ஆய்வு மற்றும் பத்தி எழுத்தாளர்களிடமும்-‘தமிழ்த் தேசியக் கட்சி’ களிடமும்-‘தமிழ்த் தேசியவாதி’களிடமும்-பத்திரிகாசிரியர்களிடமும்கூடப் பின்வரும் கேள்விகளைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்-சொல்லித்தான் ஆக வேண்டும். இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பெற்ற 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் சகோதர இயக்கங்களைத் தடைசெய்து அவற்றின் மீது நிகழ்த்திய தாக்குதல்கள்-மாற்றுச் சிந்தனையாளர்களையும் கருத்தாளர்களையும் போட்டுத் தள்ளியமை-அப்பாவிச் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைத் தாக்குதல்கள் என்பவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு, 1987 க்கு பின்னர் நடைபெற்ற விடயங்களை மட்டுமாவது சொல்லி ஆகவேண்டியுள்ளது. கேட்டுத்தான் ஆகவேண்டியுள்ளது கேள்விகள் இதோ. * இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தது அல்லது அனுசரித்துப் போகாமை சரியா? * தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரச படைகளுடன் இணைந்து அவர்களுடைய ஆதரவுடன் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஆதரித்த சகோதரப் போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களைத் தேடித் தேடிப் போட்டுத் தள்ளியமை சரியா? * தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் கூட்டு வைத்துக்கொண்டு, இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் பிரசன்னமாகியிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் மீது போர் தொடுத்தது சரியா? * இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் வாயிலாக அமைந்த வடகிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த மாகாண அரச நிர்வாகத்தை ஆயுத நடவடிக்கைகள் மூலம் சீர்குலைத்ததும் செயலிழக்கச் செய்ததும் சரியா? *தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக விளங்கியவரும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போவதில் உறுதியாகவிருந்தவருமான அ. அமிர்தலிங்கம் அவர்களைக் கொழும்பில் வைத்து 13.07.1989 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றது சரியா? * இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் துணிவோடு செயற்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ பி ஆர் எல் எஃப்) செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபா அவர்களையும் அவருடன் இணைந்த ஏனைய பன்னிரண்டு தோழர்களையும் இந்திய மண்ணில்-சென்னையில் வைத்து 19.06.1990 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா? * இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிதாமகரான இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய தமிழ்நாட்டு மண்ணில் வைத்துத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் 21.05.1991 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா? இவ்வாறு நீலன் திருச்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் போன்றோரின் படுகொலைகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான கொலை முயற்சித் தாக்குதல் என்று பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய செயற்பாடுகளால் இலங்கைத் தமிழர்கள் அடைந்த நன்மைகள் என்ன? தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இவ்வாறான அரசியலற்ற ஆயுத நடவடிக்கைகள்தானே தமிழ் மக்களுக்கு இறுதியில் முள்ளிவாய்க்காலில் பேரழிவை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இவற்றை நுணுகி ஆராய்ந்து பிழை எங்கே இருக்கிறது என்று அறிவு பூர்வமாகத் தேடும் உளவியலை இலங்கைத் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வளர்த்துக் கொள்ளாதவரை தமிழர்களுடைய அரசியல் மேலும் மேலும் பின்னோக்கியே செல்லும்; குழப்பமடைந்தே செல்லும். புலிசார் உளவியலிலிருந்து தலைவர்களும் விடுபட வேண்டும். மக்களும் வெளியேற வேண்டும். சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுவதென்றால் இலங்கைத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படுவதும் அவசியமானதும் ‘புலி நீக்கம்’ செய்யப்பட்ட புதியதோர் அரசியல் கலாசாரம் ஆகும். புலி நீக்கம் செய்யப்பட்ட தமிழர்களுடைய அரசியலையே தென்னிலங்கையின் முற்போக்குச் சக்திகளும்-வடகிழக்கு மாகாணத்தின் இளைய தலைமுறையும்-இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசான இந்தியாவும்-இலங்கைத் தமிழர்களின் மீது அனுதாபம் கொண்டுள்ள சர்வதேச சக்திகளும் ஆதரிக்கும். இவற்றின் ஆதரவு இல்லாமல் தமிழர் தரப்பு அரசியலை (தமிழ்த் தேசிய அரசியலை) முன் கொண்டு செல்ல முடியாது. நீண்ட காலமாக 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளாலும் 2009க்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகவர்களாலும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழ்ச் சமூகம் இதிலிருந்து விடுபடுவது அல்லது அவர்களை விடுவிப்பது கஷ்டமான காரியம்தான். ஆனாலும், அதுதான் இன்றைய தேவைப்பாடாக உள்ளது என்பதே அறிவுபூர்வமான அரசியல் யதார்த்தம். இதனைச் சொல்லித்தான் ஆகவேண்டும். 1) மேலும், ‘புலி நீக்க’ அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரானதல்ல. எனவே ‘புலி நீக்க’ அரசியலென்பதைத் தமிழ்த் தேசிய நீக்க அரசியலென்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது 2) இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்ஜேவி செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களே தமிழர் தாயகம்-சுய நிர்ணய உரிமை- ஈழத் தமிழர் இறைமை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கருத்தியலைக் கட்டமைத்தார். 3) தந்தை செல்வாவினால் அறிமுகம் செய்யப்பட்டு அவரது தலைமையில் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியலானது, அடிப்படையில் யாழ்குடா நாட்டில் அதிகாரம் செலுத்திய மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன்களைப் பேணும் வர்க்க குணம்சத்தைத் தனது பலவீனங்களில் ஒன்றாகக் கொண்டிருந்த போதும்-தமிழ் மக்களுக்குக் குறிப்பிடத்தக்க சமூக பொருளாதார அரசியல் அடைவுகள் எதனையும் பெற்றுத்தராத ஏட்டுச் சுரக்காய் அரசியலாக இருந்த போதும் இலங்கை அரசாங்கங்களின் பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்க ஒடுக்கு முறைக்கு எதிர் வினையாற்றி இலங்கைத் தமிழர்கள் தமது சமூக பொருளாதார அரசியல் இருப்பைப் பேணிப் பாதுகாப்பதற்கும் தமது இன மொழி அடையாளங்களை இழக்காமல் இருப்பதற்கும் அது காலத்தின் தேவையாக மாறியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. 4) ஆனாலும், தந்தை செல்வா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியலினதும் அவரின் மரணத்தின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் அ. அமிர்தலிங்கம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளினதும் அவற்றின் பக்க விளைவாகத் தமிழ் இளைஞர்களின் மத்தியிலே தோற்றம் பெற்ற அனைத்து ஆயுதப் போராளி இயக்கங்களும் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்த இராணுவ அழுத்தங்களினதும் ஒட்டுமொத்த விளைவுதான் 1987 இந்திய சமாதான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களுடைய போராட்ட அரசியலுக்குக் (அதன் பலம் பலவீனங்களுக்கும் அப்பால்) கிடைத்ததோர் இராஜதந்திர வெற்றியாகும். 5) ஆனால், இந்த வெற்றியினால் விளைந்திருக்கக்கூடிய அனுகூலங்களைத் தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாதபடி அதனைப் போட்டுடைத்துச் சீரழித்தது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே. தந்தை செல்வாவினால் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பலம் மற்றும் பலவீனங்களுடன் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியத்தைப் பிரபாகரன் ‘தமிழ்ப் பாசிச’ மாகப் பிறழ்வடையச் செய்தமைதான் இலங்கைத் தமிழினம் இதுவரை அடைந்த/அடைந்து கொண்டிருக்கும் பேரழிவுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணமாகும். 6) இதிலிருந்து இலங்கைத் தமிழ்ச் சமூகம் விடுபட்டுச் சரியான அரசியல் செல்நெறியில் தடம் பதிக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசிய அரசியலில் கருத்தியல் ரீதியாகப் -கோட்பாட்டு ரீதியாகப் ‘புலி நீக்கம்’ அவசியமாகும். அப்போதுதான் தமிழர் அரசியலில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு. “உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்” —– லெனின் https://arangamnews.com/?p=10663
-
கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்!
கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு: இனிப்பும் கசப்பும் கலந்த நினைவுகள்! April 22, 2024 — எம்.எல்.எம். மன்சூர் — அமெரிக்காவின் ‘Time’ சஞ்சிகை அதன் 1954 மே 3 ஆம் திகதி இதழில் ‘Ambassadors with Bulldozers’ என்ற தலைப்பில் ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. சிவில் பொறியியல் கட்டுமானப் பணிகளில் 1912 தொடக்கம் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த Morrisons – Knudson International என்ற அமெரிக்க கம்பெனியின் தலைவர் Harry Morrison இன் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து ‘ஆறுகளை மறித்தவர் – மலைகளை நகர்த்தியவர்’ என்ற வாசகங்கள் அதன் கீழ் பொறிக்கப்பட்டிருந்தன. அவருடைய கம்பெனி 1949 – 1951 காலப் பிரிவில் பட்டிப்பளை ஆற்றை மறித்து, இரண்டு மலைகளை இணைக்கும் விதத்தில் உருவாக்கிய கல்லோயா அணைக்கட்டும், 35 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய நீர்த் தேக்கமான சேனாநாயக்க சமுத்திரமும் இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விவசாய – பொறியியல் துறை சாதனைகள். 1957 டிசம்பர் மாதம் கிழக்கில் இடம்பெற்ற பெரு மழையின் போது கல்லோயா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்க முடியும் என்ற விதத்தில் ஒரு பாரிய அச்சம் நிலவியது. அச்சந்தர்ப்பத்தில் கல்லோயா அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் சபை நிலைமையின் தீவிரத்தை விளக்கி, அக்கம்பெனிக்கு ஓர் அவசரத் தந்தியை அனுப்பி வைத்தது. ‘Galboard’ என்ற தந்தி முகவரிக்கு உடனடியாக கிடைத்த பதில் இது: “அணைக்கட்டின் இருபுறங்களும் இணைக்கப்பட்டிருக்கும் மலைக் குன்றுகளின் வலிமையை பரீட்சித்துப் பார்க்கவும்” (Check the strength of the two rocks to which the dam is connected to). தம்மால் நிர்மாணிக்கப்பட்ட அணைக்கட்டின் வலிமை குறித்து Morrisons – Knudson கம்பெனி வழங்கிய மறைமுகமான உத்தரவாதம் அது. 1949 இல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு, கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர இலங்கையின் முதலாவது மிகப் பெரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமான “கல்லோயா திட்டம்” இவ்வாண்டில் அதன் 75 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூருகிறது. நிதி அமைச்சின் செயலாளராக இருந்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிவில் சேவை அதிகாரியான Huxham என்பவர் 1949 – 1952 காலப் பிரிவில் கல்லோயா அபிவிருத்திச் சபையின் (GODB) தலைவராக இருந்து வந்தார். ஆனால், அத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட வேகத்திற்கும், அதனுடன் சம்பந்தப்பட்டிருந்த பாரிய சவால்களுக்கும் அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. அந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து பிரதமர் டி எஸ் சேனாநாயக்க (அப்பொழுது காணிகள் ஆணையாளராக பணிபுரிந்து வந்த) கே கனசுந்தரத்தை தனிப்பட்ட முறையில் அழைத்து ‘நீங்கள் கட்டாயமாக இப்பணியை பொறுப்பேற்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்வதன் மூலம் தனது அரச சேவை ஓய்வூதியத்தை இழக்க வேண்டி நேரிடும் என்பதனை நன்கு அறிந்திருந்த போதிலும், பிரதமரின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் கனகசுந்தரம் அப் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். அது பிரதமர் டி எஸ் சேனாநாயக்கவின் அரசியல் தலைமையின் கீழும், கனகசுந்தரம் என்ற தமிழ் சிவில் சேவை அதிகாரியின் நிறைவேற்றுத் தலைமையின் கீழும் முன்னெடுக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான முயற்சி. சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் மலே ஆகிய இனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமின்றி, பெருந்தொகையான வெளிநாட்டு சிவில் பொறியியலாளர்கள், அணைக்கட்டு வல்லுனர்கள், வனவளம் தொடர்பான நிபுணர்கள், கட்டடக் கலைஞர்கள், இயந்திரப் பொறியியலாளர்கள் ஆகிய பன்முகத் திறன்களை கொண்டிருந்த ஓர் அணியின் கூட்டு உழைப்பு அது. அத்திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் (அப்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிட்டத்தட்ட 1400 சதுர மைல் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்ததுடன், அப்பிரதேசம் முழுவதும் நேரடியாக கல்லோயா அபிவிருத்திச் சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அந்நிலப்பரப்புக்குரிய அரசாங்க அதிபரின் அதிகாரங்கள் மட்டுமன்றி, இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றுக்குரிய அதிகாரங்களும், கருமங்களும் இச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அந்த விதத்தில் அச்சபையின் தலைவர் என்ற முறையில் கனகசுந்தரம் அபரிமிதமான அதிகாரங்களைக் கொண்டிருந்தார். பாரம்பரியமாக தமிழ் மொழி பேசும் இரு சமூகங்கள் செறிந்து வாழ்ந்து வந்த (அப்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிசனவியல் தொகுப்பை (Demographic Composition) சிதைத்து, கிழக்கை சிங்களமயமாக்கும் பேரினவாத செயல்திட்டத்தின் ஒரு பாகமாகவே பொதுவாக “கல்லோயா திட்டம்” சிறுபான்மை சமூகங்களால் நோக்கப்பட்டு வந்திருக்கின்றது. 1952 இல் ஒரு நாள் கொழும்பு – மட்டக்களப்பு ரெயில் வண்டியில் எஸ் ஜே வி செல்வநாயகம் கே. கனகசுந்தரத்தை தற்செயலாக சந்தித்த பொழுது கூறிய பின்வரும் வார்த்தைகள் அந்தக் கண்ணோட்டத்தின் ஒரு பிரதிபலிப்பாகும்: “Young man – Do you realize that you are driving a dagger into the hearts of the Tamil people?” அக்கேள்விக்கு GODB தலைவர் பின்வருமாறு பதிலளித்ததாக கூறப்படுகிறது – “அப்படி இல்லை……. நான் கேகாலையில் உதவி அரசாங்க அதிபராக பணியாற்றிய காலத்தில் கண்டிய சிங்களவர்களின் கடும் வறுமையையும், காணிப் பிரச்சினையையும் நேரில் பார்த்திருக்கிறேன். கல்லோயாவில் புதிய குடியேற்றங்கள் அமைக்கப்படவிருக்கும் பிரதேசங்கள் மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பிரதேசங்கள். புராதன காணிகள் (Purana Lands) என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் கிராம விஸ்தரிப்புக்கென தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் போதிய நிலப்பரப்புக்கள் இருந்து வருகின்றன.” கே கனகசுந்தரத்தின் புதல்வரான அஜித் கனகசுந்தரம் “60 ஆண்டுகளுக்குப் பின்னர் கல்லோயா திட்டம் குறித்த ஒரு மீள் பார்வை” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் விரிவான கட்டுரை (சன்டே ஐலன்ட், 2016 செப்டம்பர் 18, 25) பெருமளவுக்கு சர்ச்சைக்குரிய இந்தத் தலைப்பு தொடர்பாக முன்முடிவுகள் எவையுமின்றி, நிதானமான ஒரு பார்வையை முன்வைக்கின்றது – “அநேகமாக இப்பொழுது எவரும் கல்லோயா திட்டத்தை நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் சுமார் 20 வருட காலம் அது நவீன சுதந்திர இலங்கையின் முகத்தோற்றத்தை வெளியுலகுக்கு பிரதிபலித்து வந்திருக்கிறது. பின்னர் பல நூறு கோடி ரூபாய் செலவில் அமுல் செய்யப்பட்ட மகாவலி திட்டம் போன்ற பிரமாண்டமான திட்டங்கள் கல்லோயா திட்டத்தின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்க செய்தன. ஆனால், ஏனைய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மதிப்பிடப்பட வேண்டிய தர நியமத்துக்கான உரைகல்லாக கல்லோயா திட்டமே இன்னமும் இருந்து வருகின்றது.” “………. இலட்சிய ரீதியாக காரியங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான உதாரணம் கல்லோயா திட்டம். அது முழுக்க முழுக்க தேசிய நிதி வளங்களை பயன்படுத்தி, உள்நாட்டு நிர்வாகிகளால் நிறைவேற்றப்பட்ட ஒரு திட்டம். காடுகளை துப்புரவு செய்தல், குடியேற்றவாசிகளை குடியமர்த்துதல், புதிய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குதல் என்பன எல்லாமே திட்டமிட்ட அதே விதத்தில் உரிய காலகெடுவுக்குள் துல்லியமாக நிறைவேற்றப்பட்டன. இங்கு முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயம் உபகரணங்களின் கொள்வனவுக்கென பல கோடி ரூபாக்களை செலவிட வேண்டியிருந்த போதிலும் திட்டம் முழுவதிலும் ஊழல், மோசடி, முறைகேடுகள் என்பன குறித்த எத்தகைய குற்றச்சாட்டுக்களும் எழுப்பப்பட்டிருக்கவில்லை என்பதாகும்.” “………..எனது தந்தை கே கனகசுந்தரம் கல்லோயா அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்த காலத்தில் (1952 – 1957) கொழும்பில் ஒரு வீட்டை கட்டினார். அச்சந்தர்ப்பத்தில் கட்டடப் பொருட்களுக்கான கொள்வனவு கட்டளைகளை அவர் ஒருபோதும் தனது பெயரில் அனுப்பி வைக்கவில்லை. அவ்வாறு செய்தால் வழங்குனர்கள் தனக்கு நியாயமற்ற விலைக் கழிவுகளை பெற்றுத்தர முடியும் என அவர் அஞ்சினார்…….” “டி எஸ் சேனாநாயக்க சிங்களவர்களுக்கு சார்பானவர்; ஆனால் தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல. சரியாக சொல்வதானால் அவரிடமிருந்தது ஒரு விதமான கொவிகம / வெள்ளாளர் சாதி அபிமானம்” என்கிறார் அஜித் கனகசுந்தரம். இக்கட்டுரை வரலாற்றாய்வாளர் மைக்கல் ரொபர்ட்சின் “Thuppahi” இணையதளத்தில் மீள் பிரசுரம் செய்யப்பட்ட பொழுது அதற்கு எதிர்வினையாற்றிய பேராசிரியர்கள் சந்திரா விஜேவர்தன மற்றும் ஜெரால்ட் பீரிஸ் ஆகியோர் முன்வைத்திருந்த பின்னூட்டங்களும் முக்கியமானவை – “மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறிப்பதற்கென 1948 இல் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளின் போது ஒரு சில வடபுல தமிழ் அரசியல்வாதிகளும், கண்டிய சிங்கள பிரதானிகளுமே முதன்மையாக காய்களை நகர்த்தினார்கள். அச்சட்ட வரைவின் தயாரிப்பில் (அப்போது பாதுகாப்பு மற்றும் வெளி விவகார அமைச்சின் நிரந்தரச் செயலாளராக இருந்து வந்த) கந்தையா வைத்தியநாதன் முக்கியமாக பங்களிப்புச் செய்திருந்தார்.” “பெருந்தோட்டங்களில் இடதுசாரிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்துவதும், குறிப்பாக லங்கா சமசமாஜ கட்சி மலையகத்தில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றும் ஒரு நிலை தோன்றுவதை தடுத்து நிறுத்துவதுமே அவர்களுடைய அசல் நோக்கமாக இருந்து வந்தது” – சந்திரா விஜேவர்தன. கல்லோயா திட்டத்தின் 42 குடியேற்ற அலகுகளில் 9 அலகுகள் இடதுகரை கால்வாய் பகுதியில் (தற்போதைய) மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருந்ததாக கூறிப்பிடும் பேராசிரியர் ஜெரால்ட் பீரிஸ், அப்பிரதேசத்தில் சிங்களவர்களுக்கு காணிகள் எவையும் வழங்கப்படவில்லை எனச் சொல்கிறார். கே கே டி சில்வா ” The Galoya Valley Scheme and the People who made it a Reality” (மே 2022) என்ற நீண்ட கட்டுரையில் கல்லோயா திட்டத்தின் சுருக்கமான வரலாற்றை முன்வைப்பதுடன், அதற்குப் பங்களிப்புச் செய்த உள்நாட்டு / வெளிநாட்டு ஆளணியினர் குறித்த தகவல்களை விரிவாக பதிவு செய்கிறார். ஜே எஸ். கென்னடி என்பவர் மட்டக்களப்பு நீர்ப்பாசன பொறியியலாளராக இருந்த பொழுது கல்லோயா நீரேந்து பரப்பில் பட்டிப்பளை ஆற்றின் உள்ளார்ந்த அபிவிருத்தி ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதற்கென 1936 இல் ஒரு தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலகப் போர் காரணமாக இத்திட்டத்தின் அமுலாக்கம் தாமதப்படுத்தப்பட்டது. நீர்ப்பாசன பணிப்பாளர் பதவியை வகித்த முதலாவது இலங்கையர் (1951) டபிள்யு ரி ஏ அழகரத்தினம். அவர் 1940 களின் தொடக்கத்தில் மட்டக்களப்பு நீர்ப்பாசன பொறியியலாளராக பணியாற்றிய பொழுது காடுகளில் நடந்து சென்று, இங்கினியாகலயில் முகாம் அமைத்து தங்கி நின்று, இது தொடர்பான பூர்வாங்க மதிப்பீட்டாய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார். அது தவிர, மட்டக்களப்பு மாவட்டத்தை அரசாங்க சபையில் பிரதிநிதித்துவம் செய்த தமிழ் அரசியல்வாதிகள் பலரும் பட்டிப்பளை ஆற்று வடிநிலத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை குறித்து 1940 கள் நெடுகிலும் தொடர்ந்து குரலெழுப்பி வந்திருக்கிறார்கள். கல்லோயா அபிவிருத்திக்கான விரிவான திட்டங்களும், இங்கினியாகலையில் அமைக்கப்படவிருக்கும் அணைக்கட்டு மற்றும் நீர்த்தேக்கம் என்பன தொடர்பான பொறியியல் வடிவமைப்புக்களும் 1946 லேயே தயாரிக்கப்பட்டிருந்தன. இந்தப் பின்புலத்திலேயே இத்திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான முக்கியமான ஒரு அரசியல் தீர்மானத்தை பிரதமர் டி எஸ் சேனாநாயக்க 1949 இல் மேற்கொண்டார். அவ்வாண்டில் ஒரு பாரளுமன்ற சட்டத்தின் மூலம் கல்லோயா அபிவிருத்திச் சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், பலர் நம்புவதைப் போல, கல்லோயா திட்டம் டி எஸ் சேனாநாயக்கவின் கற்பனையில் உருவான ஒரு திட்டம் (Brainchild) அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு போதுமான விரிவான தகவல்களை தருகிறது கே கே டி சில்வாவின் கட்டுரை. 1956 ஜூன் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் நான்கு நாட்கள் அம்பாறையிலும், இங்கினியாகலயிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் கல்லோயா திட்டத்தின் தொடக்க கால வரலாற்றில் ஏற்பட்ட ஒரு பெரும் களங்கம். GODB இல் பணியாற்றிய தமிழ் ஊழியர்களை இலக்கு வைத்து இந்த வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. ஜூன் 5-ம் தேதி தமிழரசு கட்சி காலி முகத்திடலில் நடத்திய சத்தியாகிரகத்தின் போது பலர் தாக்கப்பட்டார்கள். அதனையடுத்து மட்டக்களப்பில் பத்தாயிரம் தமிழர்கள் கலந்து கொண்ட ஒரு எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டதுடன், அதன் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்தார்கள். பின்னர் மட்டக்களப்பு, காரைதீவு மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் சிங்களவர்களுக்கு எதிரான (சார்பு ரீதியில் சிறு அளவிலான) ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இச்சம்பவங்கள் குறித்த செய்திகள் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட வதந்திகளாக அம்பாறையை வந்தடைந்த பொழுது 11 ஆம் தேதி அங்கு வன்முறை வெடித்தது. புதிய குடியேற்றவாசிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு வன்முறைக் கும்பல் GODB வாகனங்களையும், வெடிபொருட்களையும் பலவந்தமாக கைப்பற்றி நிகழ்த்திய கொடூரங்களின் போது குறைந்தது 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பெருமளவுக்கு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அலுவலக ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரின் பங்களிப்புக்களுக்கு ஊடாக நிறைவேற்றப்பட்ட ஒரு திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் அந்த ஊழியர் அணியைச் சேர்ந்த சுமார் 100 பேரை கொலை செய்தார்கள் என்பது வரலாற்றின் பெரும் முரண்நகை. அம்பாறை வாடி வீட்டில் 85 GODB தமிழ் ஊழியர்கள் தமது குடும்பங்களுடன் தஞ்சம் புகுந்திருந்திருந்தார்கள். அவர்களில் கனகசுந்தரமும், அவரது மனைவியும் இருந்தார்கள். பத்மநாதன் என்ற பொலிஸ் அதிகாரி 5 (சிங்கள) பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த கனகசுந்தரம் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பத்மநாதனுக்கு கட்டளையிட்டார். அதனையடுத்து சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று நபர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்கள். ‘அதன் பின்னர் ஒரு சில நிமிடங்களில் அந்தக் கும்பல் மாயமாக மறைந்தது’ என எழுதுகிறார் அஜித் கனகசுந்தரம். 1956 வன்முறைச் சம்பவங்கள் கல்லோயா பள்ளத்தாக்கு நெடுகிலும் துளிர் விட்டுக் கொண்டிருந்த புதிய நம்பிக்கைகளை சிதைத்ததாக கூறும் கனகசுந்தரம், கல்லோயா அபிவிருத்திச் சபை ஈட்டிக் கொண்டிருந்த புதிய பொறியியல் திறன்களை பயன்படுத்தி, தமிழ், முஸ்லிம் விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய விதத்தில் புராதன கிராமங்களில் குறைந்த செலவில் ஒரு அணையை நிர்மாணிப்பதற்கென தயாரிக்கப்பட்டிருந்த திட்டங்களும் அதனுடன் இணைந்த கைவிடப்பட்டதாக சொல்கிறார். அதன் பின்னர் 1983 நிகழ்த்தப்பட்ட இன அழிப்புச் செயல்களுக்கான ஒத்திகையாகவே கல்லோயா வன்முறை இருந்து வந்தது என்பது அவருடைய கருத்து. 1983 வன்முறையின் மூலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறியவர்களில் அஜித் கனசுந்தரமும் ஒருவர். அப்பொழுது அவர் இலங்கை மத்திய வங்கியில் பணியில் இருந்தார். ஹோகந்தரையில் இருந்த அவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் பரப்பளவிலான கால்நடைப் பண்ணை முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டதுடன், கால்நடைகளும் கொல்லப்பட்டன. அதன் பின்னர் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த அவர் ஒரு சர்வதேச வங்கியில் நீண்ட காலம் உயர் பதவிகளை வகித்து வந்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அஜித் கனகசுந்தரம் “Tale of Two Countries: Sri Lanka and Singapore” (2018) என்ற மிக முக்கியமான நூலின் ஆசிரியர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அப்பொழுது பேராதனை பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பணியாற்றிய ஸ்டான்லி தம்பையா 33 மாணவர்களை (26 சிங்கள மாணவர்கள், 7 தமிழ் மாணவர்கள்) அழைத்துக்கொண்டு புதிய குடியேற்றவாசிகள் தொடர்பான சமூக – பொருளாதார ஆய்வொன்றை நடத்துவதற்காக இங்கினியாகலைக்கு சென்றிருந்தார். அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த துல்லியமான விவரங்களுடன் கூடிய ஓர் அறிக்கையை அவர் உபவேந்தர் ஐவர் ஜென்னிங்சிடம் சமர்ப்பித்திருந்ததுடன், பல்கலைக்கழகத்தின் பழைய ஆவணக் குவியல்களிலிருந்து அந்த அறிக்கை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. பிற்காலத்தில் அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சமூக மானிடவியல் துறை பேராசிரியராக பணியாற்றிய ஸ்டான்லி தம்பையா (1929 – 2014) எழுதிய “Buddhism Betrayed: Religion, Politics and Violence in Sri Lanka” (1992) என்ற நூல் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்த நவீன இலங்கை தொடர்பான மிக முக்கியமான ஒரு வரலாற்று ஆவணம். இன்றைய இலங்கையின் சிறுபான்மை சமூகங்களுக்கும், இடதுசாரிகளுக்கும், அதேபோல மிதவாத அரசியல் தலைவர்களுக்கும் பெரும் சவாலாக எழுச்சியடைந்திருக்கும் ‘Political Buddhism’ என்ற எண்ணக் கருவின் தோற்றத்தையும், அதன் பன்முக பரிமாணங்களையும் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய நூல் அது. 1956 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைகளிலும், அணுகு முறையிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. புதிய அரசாங்கத்தின் காணி, காணி அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சராக சி பி டி சில்வா பதவி ஏற்றார். அந்த அமைச்சின் கீழேயே கல்லோயா அபிவிருத்திச் சபை இருந்து வந்தது. கனகசுந்தரமும், சி பி டி சில்வாவும் நெருங்கிய நண்பர்கள். 1935 இல் இலங்கை சிவில் சேவைக்கு போட்டிப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஒன்பது பேரில் புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தில் இருந்தவர் கனகசுந்தரம் (இரண்டாம் இடம் – ஏ எம் ஏ அஸீஸ்; எட்டாவது இடம் – சி பி டி சில்வா ). ஆனால், துரதிர்ஷ்டவசமாக அமைச்சர் சி பி டி சில்வாவின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்தில் காரியங்கள் அரங்கேறின. 1957 இல் கனகசுந்தரம் GODB தலைவர் பதிவியிலிருந்து நீக்கப்படுகிறார். அதன் பின்னணி குறித்த அஜித் கனகசுந்தரத்தின் விளக்கம் – “பல ஆண்டுகளுக்குப் பின்னர் சி பி டி சில்வா நோய்வாய்ப்பட்டு, சிகிச்சைக்காக இங்கிலாந்து வந்திருந்தார். சிகிச்சை முடிந்து எங்கள் லண்டன் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த பொழுது எனது அப்பாவிடம் இப்படிச் சொன்னார்: கனகஸ் – என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிலிப் (குணவர்தன) பண்டாவிடம் (பிரதமர்) சொன்னார்: ‘கல்லோயா அபிவிருத்திச் சபை போன்ற உயர் அதிகாரங்களை கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தில் தமிழர் ஒருவர் தலைவராக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் உடனடியாக நீக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக நான் எனது தொழிற்சங்கங்களை களம் இறக்குவேன்’. மிகவும் பலவீனமான நிலையில் இருந்து வந்த பண்டாரநாயக்க அதற்கு உடன்பட வேண்டியிருந்தது. அதனால் தான் நாங்கள் உங்களை நீக்கினோம். ஆனால், அது தொடர்பாக குற்ற உணர்ச்சியில் இருந்த பண்டாரநாயக்க, பிரிட்டனுக்கான இலங்கை பிரதி உயர் ஸ்தானிகராக கனகசுந்தரத்தை அனுப்பி வைக்கிறார். அஜித் கனசுந்தரத்தை போலவே இன்னும் சிலர் – குறிப்பாக கல்லோயா திட்டத்தில் பணியாற்றிய வெளிநாட்டவர்களின் பிள்ளைகள் – 1950 களில் இங்கினியாகலயில் கழிந்த தமது பிள்ளைப் பருவ நாட்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார்கள். மாதிரிக்காக ஒரு சில நினைவுகள் கீழே – இரண்டாவது உலகப் போரின் போது அகதியாக இடம்பெயர்ந்த உக்ரேயின் நாட்டைச் சேர்ந்த சிவில் பொறியியலாளர் ரோமன் செகோவட்ஸ்கி 1950 – 1961 காலப் பிரிவில் கல்லோயா திட்டத்தில் பணியாற்றினார். அலுவலக கட்டடங்களையும், ஊழியர் குடியிருப்புக்களையும் வடிவமைத்தவர் அவர். 1951 இல் இலங்கையில் பிறந்த அவருடைய மகன் அன்ட்றியாஸ் தொடக்கத்தில் இங்கினியாகல சிங்கள பாடசாலையில் சேர்ந்து படித்தார். பின்னர் கொழும்பு சென்ட் ஜோஸப் கல்லூரியில் அவர் தனது கல்வியை தொடர்ந்தார். 1950 களில் இங்கினியாகலயில் கழிந்த தனது பிள்ளைப் பருவ நாட்களை நினைவு கூரும் அவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் தான் தனது அப்பாவுக்கும், சிங்கள தொழிலாளர்களுக்கும் இடையில் உரைபெயர்ப்பாளராக பணியாற்றியதாக சொல்கிறார். இலங்கையிலிருந்து வெளியேறி 55 ஆண்டுகளின் பின்னர் 2016 இல் தனது சகோதரியுடன் இங்கு வந்த அவர் இங்கினியாகலைக்குச் சென்று தனது பிள்ளைப் பருவ நண்பரான ஜே பி லயனல் பிரேமசிரியை சந்தித்தார். அமெரிக்கரான Ron Utley இன் (2008) நினைவுப் பகிர்வு இது- “மொரிசன் – நட்சன் கம்பெனியில் வேலை செய்த எனது அப்பா கல்லோயா அணைக்கட்டை நிர்மாணிக்கும் பணியில் பங்கேற்றார். அப்பொழுது எனக்கு வயது 13. அப்பாவுடனும் , ஏனைய அமெரிக்க கட்டுமானத் தொழிலாளர்களுடனும் 18 மாதங்கள் நான் பிரதான முகாமில் தங்கியிருந்தேன். இந்த ஆண்டு எனக்கு 70 வயது நிறைவடைகின்றது. இங்கினியாகலயிலும், உஹனவிலும் கழித்த அந்த இனிமையான நாட்களையும், எனது வாழ்க்கையின் ஒரு பாகமாக இருந்து வந்த நண்பர்களையும் நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்…….” கல்லோயா திட்டத்தின் உருவாக்கத்திலும், அமுலாக்கலிலும் இன ரீதியான பாரபட்சம் (Ethnic Bias ) இருந்து வரவில்லை என அஜித் கனகசுந்தரம் மற்றும் கே கே டி சில்வா போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். அது சரியாக இருக்கலாம். ஆனால், மட்டக்களப்பு / அம்பாறை மாவட்டங்களின் குடிசனவியல் தொகுப்பில் அது எடுத்து வந்த மாற்றத்தையடுத்து, கிழக்கில் இன உறவுகளில் தொடர்ந்து பதற்ற நிலைமைகள் நிலவி வருவது அதன் எதிர்மறையான விளைவுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. கரையோர அம்பாறை மாவட்டம் தொடர்பாக முஸ்லிம் சமூகம் சார்பில் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையையடுத்து தென்னிலங்கையில் எழுந்த இனவாத எதிர்ப்பலை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்துக்கு புதிய நகர சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு இனவாதச் சக்திகள் தெரிவித்த கடும் ஆட்சேபனை என்பன ‘இலங்கை ஒரு பல்லின, பல் சமய ஜனநாயக நாடு’ என்ற விதத்தில் நிலவி வரும் பொதுவான நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட ஒரு பெரும் சவால். ‘தனி மாவட்டம் தரவும் முடியாது; சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் ஒரு மாவட்டத்திற்கு தமிழ் பேசும் அதிகாரி ஒருவரை அரசாங்க அதிபராக நியமனம் செய்யவும் முடியாது’ என்பதே இத்தரப்பின் நிலைப்பாடு. சிறுபான்மை அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுவது ஒரு விதத்தில் வெறுமனே ஒரு அலங்காரப் பெறுமதியாக (Ornamental Value) மட்டுமே இருந்து வர முடியும். ஒரு குறியீட்டு மதிப்புக்காக கூட அவ்வாறு செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. ‘எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புதிதாக மலரவிருக்கும் இலங்கையில்’ சிறுபான்மை சமூகங்களின் நியாயமான கோரிக்கைகள் – தர்க்க ரீதியில் நியாயப்படுத்தப்படக்கூடிய கோரிக்கைகள் – எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். https://arangamnews.com/?p=10659
-
அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை!
அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை! அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் காரணமாக இவ்வாறு குறித்த இரு பகுதிகளிலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய பகுதிகளில் சுமார் 3 இலட்சம் பேர் குடியேறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மெல்போர்ன் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை அவுஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தலைநகரங்களாகக் கருதப்படுகின்றன. மெல்போர்னின் மக்கள் தொகை 2022-2023 நிதியாண்டில் 166,000 அல்லது ஒரு நாளைக்கு சுமார் 455 பேர் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர அறிக்கைகளின்படி, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. சிட்னி இதற்கிடையில், சிட்னியில் கடந்த நிதியாண்டில், 142,600 பேர் புதிதாக குடிபெயர்ந்துள்ளனர். இதன்படி, நாளாந்தம் 391 பேர் கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக சிட்னிக்கு குடிபெயர்ந்துள்ளார்கள். இரண்டு நகரங்களிலும் ஓராண்டு காலத்துக்குள் அதிகளவானோர் புலம்பெயர்ந்தது இதுவே முதல்முறை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை மெல்போர்ன் 1850 மற்றும் 1905 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இருந்தது. மெல்போர்னின் தற்போதைய மக்கள் தொகை 5.1 மில்லியன் ஆகும். அதேவேளை, சிட்னியின் தற்போதைய மக்கள் தொகை 5.04 மில்லியன் எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=274497
-
தோ்தல் களநிலையில் ஜே.வி.பி. ஏற்படுத்தப் போகும் அதிா்வுகள் – யதீந்திரா
தோ்தல் களநிலையில் ஜே.வி.பி. ஏற்படுத்தப் போகும் அதிா்வுகள் – யதீந்திரா April 23, 2024 ஜனாதிபதித் தோ்தலை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கும் நிலையில், அரசியலில் புதிய கூட்டணிகள், கட்சி தாவல்கள் ஆரம்பமாகியுள்ளது. அதேவேளையில், ஜே.வி.பி. இம்முறை கணிசமான தாக்கத்தை தோ்தல் களத்தில் கொடுக்கலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகின்றது. இவை குறித்து பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா வழங்கிய நோ்காணல். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலில் இம்முறை ஜே.வி.பி. அதிகளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகின்றது. பிரதான வேட்பாளா்கள் எவரும் 50 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை இது ஏற்படுத்திவிடலாம் எனக் கருதப்படுகின்றது. இது குறித்து உங்கள் பாா்வை என்ன? பதில் – ஜனாதிபதித் தோ்தல் குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. உண்மையில் இந்தத் தோ்தலில் யாா், யாா் களமிறங்கப்போகின்றா்கள்? என்பன எல்லாம் குழப்பகரமானதாகத்தான் இருக்கின்றது. மே மாதத்துக்குப் பின்னா் இவை குறித்து தெளிவாகத் தெரியக்கூடியதாக இருக்கும். ஆனால், இப்போது தெளிவாகத் தெரியப் போவது அநுரகுமார திஸாநாயக்க ஒரு பிரதான வேட்பாளராகப் போட்டியிடப் போகின்றாா். அதில் சந்தேகம் இல்லை. அதேவேளையில், சஜத் பிரேமதாஸவும் போட்டியிடப்போகின்றாா் என்ற நிலையில்தான் அவரது கருத்துக்களும் அமைந்திருக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் அவா் என்ன அடிப்படையில் போட்டியிடப் போகின்றாா் என்பது இதுவரையில் தெளிவாகத் தெரியவில்லை. அவா் ஒரு பொது வேட்பாளராக நிற்பாா் எனச் சொல்லப்படுகின்றது. மகிந்த ராஜபக்ஷவுக்கு சாா்பான அணியில் நிற்பாா் டின்றும் செய்திகள் வெளிவருகின்றன. தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெறக்கூடிய ஒருவரைத்தான் பொது வேட்பாளா் என்று சொல்ல முடியும். 2015 இல் அவ்வாறுதான் இடம்பெற்றது. அப்போது ராஜபக்ஷ எதிா்ப்பு அணியினா் அனைவரும் இணைந்து அவரை வெற்றிபெறச் செய்தனா். அவ்வாறான ஒரு சூழல் மீண்டும் ஏற்படக்கூடும் என்ற ஒரு கணிப்பும் இருக்கின்றது. இவை எவ்வாறு இடம்பெறும் என்பதையிட்டு தெளிவாக – உறுதியாகச் சொல்லக்கூடிய ஒரு நிலை இல்லையென்றாலும், மேலே குறிப்பிட்டவா்கள் தோ்தலில் போட்டியிடுவாா்கள் என்பது தெரிகின்றது. பொது வேட்பாளா் என்று சொல்லக்கூடிய வகையில் இரண்டு வேட்பாளா்கள்தான் இப்போது உள்ளாா்கள். ஒருவா் ரணில் விக்கிரமசிங்க. மற்றவா் சஜித் பிரேமதாஸ. ஏனென்றால், இவா்கள்தான் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் ஆதரவுடன் தோ்தலில் நிற்கக்கூடியவா்கள். இவ்வாறான ஒரு நிலையில் அநுதகுமார திஸாநாயக்க இல்லை. அவா் பொதுவாக இலங்கையை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்று கூறுகின்றாரே தவிர, ஏனைய மக்களுடைய பிரச்சினைகள் குறித்து எதுவும் பேசுவதில்லை. அந்த நிலையில், சிறுபான்மையின மக்கள் அவரை ஆதரிப்பாா்களா என்பது கேள்விக்குறிதான். இந்த நிலையில்தான் ஜனாதிபதித் தோ்தல் களம் இப்போது சூடுபிடிக்கத் தொடங்குகின்றது. நிச்சயமாக இந்த ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெறப்போவது யாா் என்பது இப்போது எங்களுக்குத் தெரியாவிட்டாலும், இந்தப் போட்டிக்களம் ஒரு மும்முனைப் போட்டிக்களமாகவே தெரிகின்றது. அது ஒருவாறு இருமுனைப் போட்டியாக மாறினால் இந் 50 வீத பிரச்சினை உருவாகும் வாய்ப்பு இருக்காது. ஆனால், மும்முனைப் போட்டியென்றால், ஐம்பது வீதத்தை யாரும் பெறமுடியாத நிலை வரும்போது, இரண்டாவது நிலை வாக்கு எண்ணிக்கைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம். ஆனால், இவ்வாறு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஜனாதிபதித் தோ்தலை நோக்குகின்ற போக்கு பொதுவாக மக்கள் மத்தியில் இல்லை. உங்களுடைய இரண்டாவது விருப்பு வாக்கை யாருக்கு அளிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை கட்சிகள் முன்னெடுத்தால் மட்டுமே, மக்கள் அவ்வாறு வாக்களிப்பாா்கள். எப்படியிருந்தாலும், இது ஒரு குழப்பகரமான தோ்தலாக அமையலாம். கேள்வி – ஜே.வி.பி. இந்தத் தோ்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவாா்கள் என்று கணிப்புக்கள் சொல்கின்ற போதிலும், சிறுபான்மையின மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஜே.வி.பி. போதிய அக்களையைக் காட்டவில்லை. இதற்கு என்ன காரணம்? பதில் – ஜே.வி.பி.யின் ஆரம்பகால வளா்ச்சிக்கும் இப்போது அவா்கள் தொடா்பாகத் தெரிவிக்கப்படும் விடயங்களுக்கும் இடையில் கணிசமான வேறுபாடுகள் உள்ளன. கடந்த ஜனாதிபதித் தோ்தலில் 4 வீதமான வாக்குகளைப் பெற்றவா்கள், திடீரென்று 50 tீதமான வாக்குகளைப் பெறக்கூடியவா்களாக இருப்பதாக கணிப்புக்கள் சொல்கின்றன. இந்தக் கணிப்புக்கள் தொடா்பாகவும் மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கின்றன. ஆனால், ஏனைய பிரதான கட்சிகளைப் பொறுத்தவரையில் அவா்கள் அச்சப்படும் அளவுக்கு ஜே.வி.பி.யின் செல்வாக்கு இருக்கின்றது. இந்த ஜனாதிபதித் தோ்தலில் ஆட்சி அதிகாரத்தை நெருங்கிச் செல்லக்கூடிய ஒரு கட்சி என்ற வகையில் ஒரு பரிசோதனைக் களத்துக்குள் ஜே.வி.பி. செல்கின்றது. இந்தநிலையில் அவா்களுடைய பிரதான இலக்கு சிங்கள மக்களுடைய ஆதரவைப் பெறுவதுதான். பிரதான சிங்களக் கட்சிகளைப் போலவே அவா்களுடைய மனப்போக்கும் உள்ளது. இதனால், தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான அரசியல் தீா்வைப் பற்றிப் பேசினால், அது சிங்கள மக்கள் மத்தியில் வளா்ந்துவரும் தமது செல்வாக்கைப் பாதித்துவிடும். அல்லது எதிா்த் தரப்புக்கள் அதனைப் பயன்படுத்தி தமது பிரசாரங்களை முன்னெடுக்கலம் என்ற அடிப்படையில்தான் அவா்கள் திட்டங்களை வகுப்பது போன்று தெரிகின்றது. அதனால்தான் ஏனைய மக்களுடன் அவா்கள் சந்திப்புக்களை மேற்கொண்டாலும்கூட, எந்தவிதமான வாக்குறுதிகளையும் வழங்குபவா்களாகவோ அல்லது அவா்களுக்காக சில திட்டங்களை முன்வைப்பவா்களாகவோ அவா்கள் இல்லை. குறிப்பாக தமிழ் மக்கள் விடயத்தில் அவா்கள் மிகவும் நிதானமாக, இலங்கையா் என்ற நிலையை உருவாக்குவோம் எனப் பொதுவாகச் சொல்கின்றாா்களே தவிர, தேசியப் பிரச்சினை ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்பவா்களாகவோ, அதற்கான ஒரு தீா்வை வழங்க வேண்டும் என்பதில் அக்கறை இருப்பவா்களாகவோ எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் அவா்கள் இருக்கின்றாா்கள். அவ்வாறு சொன்னால், தென்னிலங்கையில் தமக்கு இருக்கும் செல்வாக்கை அது பாதித்துவிடும் என்ற அச்சத்திலிருந்துதான் அந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சிங்கள மக்களின் வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ளல் என்ற விடயத்தில் ஜே.வி.பி.யும் ஏனைய கட்சிகளும் ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டவையாகத்தான் உள்ளன. கேள்வி – பொதுஜன பெரமுனவும் தமது கட்சியின் சாா்பில் ஒருவா் களமிறக்கப்படுவாா் எனக் கூறியிருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷ கூட அண்மையில் இவ்வாறு தெரிவித்திருந்தாா். அதற்கான வாய்ப்புக்கள் எவ்வாறு இருக்கின்றது? பதில் – கோட்டாபயவின் வெளியேற்றத்தையடுத்து மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றவா்கள் என்ற நிலையிலிருந்து ராஜபக்ஷக்கள் பெருமளவுக்கு கீழறங்கிவிட்டாா்கள். இந்த சரிவிலிருந்து மேலெழுவதற்கு அண்மைக்காலத்தில் அவா்களுக்கு வாய்ப்புக்கள் இல்லை. அதனால், இந்தத் தோ்தலைப் பொறுத்தவரையில் தமக்கு நெருக்கடிகளைக் கொடுக்காத அல்லது தமக்கு சலுகைகளை வழங்கக்கூடிய ஒருவா் ஜனாதிபதியாக வருவதைத்தான் அவா்கள் முதலில் விரும்புவாா்கள். அவ்வாறு அமையாவிட்டால், தமக்கு இருக்கின்ற செல்வாக்கை ஏதாவது ஒரு முறையில் தக்கவைத்துக்கொள்வதற்கு முனைவாா்கள். அந்த வகையில்தான் அவா்கள் ஒரு வேட்பாளரை நிறுத்தக்கூடும் என்ற ஒரு கணிப்பு இருக்கின்றது. அவா்கள் இணக்கப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய ஒருவா் என்றால், அது நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான். ஏனெனில் சஜித் பிரேமதாஸவுடனோ, அநுரகுமாரவுடனோ அவா்கள் இணக்கப்பாட்டுக்குச் செல்ல முடியாது. அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஆனால், ரணிலுக்கும் சஜத்துக்கும் இடையில் ஒரு உடன்பாடு இறுதிக்கட்டத்தில் அவா்கள் ஒரு தரப்பாக நிற்கின்ற கட்டத்தில், ராஜபக்ஷக்களுக்கு வேறு தெரிவுகள் இருக்காது அவா்கள் நிச்சயமாக ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டியிருக்கும். அவ்வாறில்லாவிட்டால் அவா்கள் வேட்பாளா்களை நிறுத்தமாட்டாா்கள். https://www.ilakku.org/தோ்தல்-களநிலையில்-ஜே-வி-ப/
-
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு இன்று கூடுகின்றது
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு இன்று கூடுகின்றது April 23, 2024 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல் குழு இன்று கூடுகின்றது. எனினும், இன்றைய கூட்டத்தில் பல உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரியவருகின்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெறுவதாக இருந்தது. தமிழ் அரசுக் கட்சி தொடர்பில் திருகோணமலை நீதிமன்றில் நடக்கும் வழக்கு தொடர்பான விடயங்கள், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விவகாரம் குறித்து இந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. ஆனால், அந்தக் கூட்டம் இறுதிநேரத்தில் இரத்தானது. இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றைய தினம் இந்துக்கள் இறந்த தமது தாயாருக்காக விரதமிருக்கும் சித்திரா பௌர்ணமி தினம் என்பதால் பல உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கட்சியின் தலைமைக்கு அறிவித்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. எனினும், திருகோணமலை நீதிமன்றில் நாளை புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வருவதால் முன்னதாகவே மத் திய குழுவைக் கூட்டி ஆராய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன் றைய தினம் மத்திய குழுவை கூட்டுவ தற்கு முடிவு செய்யப்பட்டதாக அறிய வருகின்றது. இந்தக் கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளது. எனினும், இந்தக் கூட்டமும் சிலவேளைகளில் நடை பெறாது போக வாய்ப்புள்ளது என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. https://www.ilakku.org/இலங்கை-தமிழ்-அரசு-கட்சிய/
-
வடக்கில் இராணுவம் அமைத்த விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு வருடம்
விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் திங்கட்கிழமை (22) ஆரம்பமாகியுள்ளது . குறித்த சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (23) பௌர்ணமி வழிபாடுகள் விகாரையில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் முகாமாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இது இன்று பிற்பகல் வேளை நிறைவடையும் என தெரியவந்துள்ளது . பு.கஜிந்தன் https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/விகாரைக்கு-எதிரான-போராட்டம்-ஆரம்பம்/71-336226
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தால் இலங்கை நெருக்கடிக்குள் தள்ளப்படுமா? உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நாளை ஏப்ரல் 24 திகதி (புதன்கிழமை) கூட்டாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார். வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களில் இந்த தகவலை உறுதிப்படுத்த முடிந்தது. ஈரானின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இலங்கையின் தேசிய மின்கட்டமைப்பில் 120 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சேர்க்கப்படும். இத்திட்டம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 25,000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி தற்போது மூன்று நாள் பயணமாக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலை சீர்செய்வதற்காக இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, நேற்று ஏப்ரல் 22ஆம் திகதி (திங்கட்கிழமை), இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் பேச்சுகள் நடத்தினார். பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு ரைசி இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், ரைசி கொழும்பிற்கு ஒரு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு ஜனாதிபதிகளும் தனிப்பட்ட சந்திப்பை நடத்துவதற்கும், உமா ஓயா என பெயரிடப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்கும் திட்டமிட்டுள்ளனர். 529 மில்லியன் டொலர் மதிப்பில் ஈரானிய நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் முதலில் 2015 இல் முடிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் பல சிக்கல்கள் காரணமாக பல முறை இடைநிறுத்தப்பட்டு தற்போது இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் இந்தப் பயணம் அமைந்துள்ளதால் அமெரிக்கா ஏற்கனவே, ரைசியின் பயணம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கவலையை வெளிப்படுத்தியிருந்ததுடன், இராஜதந்திர ரீதியான அழுத்தங்களையும் கொடுத்திருந்தது. என்றாலும், இந்த எதிர்ப்புகளை மீறி ஈரான் ஜனாதிபதியின் பயணத்துக்கு இலங்கை ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டுள்ளது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணத்தின் பின் கடுமையான இராஜதந்திர நெருக்கடிகளை சந்திக்கும் நிலையை இலங்கை எதிர்கொள்ளலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். http://www.samakalam.com/ஈரான்-ஜனாதிபதியின்-விஜயத/
-
சஜித்துடன் விவாதத்திற்கு தயாரென அனுர அறிவிப்பு!
சஜித்துடன் விவாதத்திற்கு தயாரென அனுர அறிவிப்பு! ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 7, 9, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பியுள்ளது. திகதியை தெரிவு செய்ததன் பின்னர் நேரம், விவாதத்திற்கான காலப்பகுதி, இடம் மற்றும் விவாதம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி என்பன தொடர்பில் தீர்மானிக்க முடியும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஏதேனும் ஒரு வகையில் விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கவில்லை என்றால், அது தொடர்பாக உடனடியாக அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. -(3) http://www.samakalam.com/சஜித்துடன்-விவாதத்திற்க/