Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம் April 29, 2024 யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள ரப்றோபானா சீ பூட் நிறுவனத்திற்கு நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எரிக் சொல்கெய்ம் உள்ளிட்ட நோர்வே குழுவினர் வருகை தருகின்றனர். நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் முதலீட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தின் பணிகளை ஆராய்தல் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே நாளை செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். இக்குழுவில் நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் சுற்றுச் சூழல் விவகார ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்முடன் நோர்வேயின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு வருகை தருகின்றனர். https://www.ilakku.org/யாழ்ப்பாணம்-வருகின்றார்/
  2. அமெரிக்க, ஜேர்மனி ஆய்வு கப்பல்கள் தடை ஏன்? பாதுகாப்பு அமைச்சு விளக்கம் April 29, 2024 அமெரிக்காவின் ஆய்வுக் கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. எனினும், எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக அந்த கப்பல் நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த மேற்படி கப்பல் 22 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சீனாவின் எதிர்ப்பை மீறி ஜெர்மனி ஆய்வுக் கப்பல் இரண்டாவது தடவையாகக் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக வார இறுதிப் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கப்பலுக்கு கடந்த மார்ச் மாதத்தில் முதலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி மீண்டும் அந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கப்பல் பணியாளர்களை மாற்றம் செய்யவும் எரிபொருள் உள்ளிட்ட சேவை வசதிகளைப் பெறவும் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தமது நாட்டிற்கு சொந்தமான கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதி வழங்கப்படாத நிலையில் சீனா எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு ஒரு வருட காலத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி கவனம் செலுத்துவதே இதற்குக் காரணமாகும். 2023 ஆம் ஆண்டு முதல் 14 மாதங்களுக்குள் 2 சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்தமையினாலேயே இரு நாடுகளும் இது தொடர்பிலான கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தது. https://www.ilakku.org/அமெரிக்க-ஜேர்மனி-ஆய்வு-க/
  3. இலங்கை வந்த ஈரான் அதிபா்! ரணில் வகுத்திருந்த திட்டங்கள் – அகிலன் April 28, 2024 மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் உலகை அதிரவைத்துக் கொண்டிருந்த பின்னணியில்தான் ஈரான் அதிபா் கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தாா். அவரது இந்த விஜயம் இறுதிவரையில் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. போா் ஒன்றில் யாராலும் வெல்லமுடியாத நாடு எனக் கருதப்படும் இஸ்ரேல் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியதன் மூலம், சா்வதேசத்தின் கவனம் இப்ராஹிம் ரைசி மீது திரும்பியிருந்தது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் முதலாவது எதிரியாக அவா் மாறியிருந்தாா். இதனால், அவரது ஒவ்வொரு நகா்வும் அவதானிக்கப்படுகிறது. போா் பதற்ற நிலை தீவிரமடைந்திருந்த நிலையில்தான் அவா் இலங்கை வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஈரானின் போா் நகா்வுகளின் பின்னணியில் பிரதான நபராக இப்ராஹிம் ரைசி இருக்கிறாா் என்பது இரகசியமானதல்ல. அதனால் அவரது பயணங்களும் இலகுவானதாக இருக்காது, ஆபத்துக்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதும் எதிா்பாா்க்கப்பட்டதுதான். ஆனாலும், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் கடந்த வார விஜயத்தை திட்டமிட்ட படி முன்னெடுத்தாா். எந்தச் சவாலையும் எதிா்கொள்ளும் திராணி தனக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் அவா் வெளிப்படுத்தியிருக்கின்றாா். அமெரிக்காவும், இந்தியாவும் அவரது வருகைகை்கு இராஜதந்திர ரீதயாக எதிா்ப்பை வெளியிட்டதாக செய்திகள் வந்தன. ஜனாதிபதித் தோ்தலை எதிா்கொண்டிருக்கும் ரணில் அதனை எதிா்கொண்டு இப்ராஹிம் ரைசியை வரவேற்றாா். இராஜதந்திர ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் இந்த விஜயம் றிஸ்க்கானது என்பது ரணிலுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால், இந்த விஜயத்தின் மூலம் ரணில் எதிா்பாா்த்த பலன்கள் அவற்றைவிட முக்கியமானது. பாதுகாப்பு அணிகள் இப்ராஹிம் ரைசியின் அவரது வருகைக்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே அவரது விஷேட பாதுகாப்பு அணிகள் இலங்கை வந்திருந்தன. அவா் வந்திறங்கிய மத்தள விமான நிலையம் உட்பட, அவா் பயணம் செய்யும் பாதைகள் அனைத்துமே கவனமாகப் பரிசோதிக்கப்பட்டன. மத்தளவிலிருந்து உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக மலைப்பாதைகள் ஊடாக பதுளைக்கு அவா் செல்ல வேண்டியிருந்தது. இந்தப் பயணத்துக்கு ஹெலிக்கொப்டா் ஏற்பாடு செய்யலாம் என இலங்கை தரப்பு ஆலோசனை முன்வைத்தது. ஆனால், ஈரான் அதிகாரிகள் அதனை நிராகரித்து தரைப் பாதையைத்தான் தெரிவு செய்தாா்கள் என்று சொல்லப்படுகின்றது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஈரான் அதிபர் மேற்கொண்ட இந்த விஜயம், பொருளாதார ரீதியாக மட்டுமன்றி அரசியல் இராஜதந்திர ரீதியாகவும் முக்கியமானது. தனித்துவமான “எண்ணெய்க்கான தேயிலை” ஒப்பந்தத்தால் குறிக்கப்பட்ட இந்த விஜயம், அதன் சாத்தியமான அரசியல் தாக்கங்கள் பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. வெளித்தோற்றத்தில் ஒரு பொருளாதார பரிமாற்றம் என்றாலும், வருகை உடனடி ஆதாயங்களுக்கு அப்பால் பல சா்வதேச பரிமாணங்களைக் கொண்டுள்ளது. வெளிநாட்டு கையிருப்பு குறைதல், சா்வதேசக் கடன்களின் அதிகரிப்பு மற்றும் தவறான பொருளாதார முகாமைத்துவம் போன்ற காரணிகளின் கலவையால் உருவாகிய இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மலிவு விலையில் எண்ணெய்க்கான அவசரத் தேவையை இலங்கைக்கு உருவாக்கியுள்ளது. இதற்கு இலங்கைக்கு கைகொடுத்த முக்கிய நாடுகளில் ஈரான் பிரதானமானது. பாரம்பரியமாக, எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை இந்தியாவை நம்பியிருந்தது. இருப்பினும், உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், ஈரானின் சலுகை கவர்ச்சிகரமானதாக மாறியது. “எண்ணெய்க்கான தேயிலை” ஒப்பந்தமானது, ஈரானுடனான கடனைத் தீர்ப்பதற்கும் எதிர்கால எண்ணெய் இறக்குமதியைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு அதன் மிக மதிப்புமிக்க ஏற்றுமதியான தேயிலையை பண்டமாற்று செய்ய அனுமதிக்கிறது. இந்த விஜயம் இரு நாடுகளின் மூலோபாய நகர்வை வெளிப்படுத்துகின்றது. அணுசக்தித் திட்டத் தடைகள் காரணமாக சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஈரானுக்கு, புதிய பொருளாதாரக் கூட்டாண்மைகளை உருவாக்க இது ஒரு வாய்ப்பாகும். இலங்கை, தனது வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்த முயல்கிறது, ஈரானை ஒரு நீண்ட கால ஆற்றல் வழங்குனராக பார்க்கிறது. மேலும், இந்த விஜயமானது வரலாற்று ரீதியாக இலங்கைக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கும் ஒரு தேசத்துடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. குறைந்த விலையில்.. அமெரிக்கா, இந்தியா போன்றவற்றின் அழுத்தங்கள் இஸ்ரேலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கு மத்தியிலும் தன்னை வரவேற்ற ரணில் துணிந்தது ஈரான் அதிபருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. அதற்கும் மேலாக இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டனான உறவைப் பலப்படுத்திக்கொண்டமையும் இன்றைய போா்ச் சூழலில் இப்ராஹிம் ரைசிக்கு அவசியமான ஒன்றாகவே இருந்தது. பாகிஸ்தானின் நிலைதான் இலங்கைக்கும் ஏற்படலாம் என உள்நாட்டில் அரசியல் சக்திகள் தெரிவித்த நிலையில் இப்ராஹிம் ரைசியை வரவேற்க ரணில் தீா்மானித்தமைக்கு சில காரணங்கள் இருந்தன. இப்ராஹிம் ரைசியுடனான பேச்சுக்களின் போது, சா்வதச சந்தை விலையை விட குறைந்த விலையில் எண்ணையை வழங்க ஈரான் அதிபா் சம்மதித்ததாகத் தெரிகின்றது. இதன் மூலம் இன்னும் சில வாரங்களுக்குள் உள்ளுா் சந்தையில் எரிபொருள் விலை குறையலாம். அதன் விளைவாக அத்தியவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளும் குறைவடையும். ஜனாதிபதித் தோ்தலில் தான் போட்டியிடுவதை அறிவிப்பதற்கு அது அவருக்குப் பொருத்தமான தருணமாக அமையும். ஈரானும் இவ்விடயத்தில் ரணிலுக்கு உதவும் மனப்பான்மையுடன்தான் உள்ளது. இலங்கையின் நெருங்கிய பிராந்திய பங்காளியான இந்தியா, இந்த நகா்வுகளை கவலையுடன் பார்க்கக்கூடும். இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் இந்தியா நீண்டகாலமாக ஒரு மேலாதிக்க நிலையைக் கொண்டுள்ளது. பலப்படுத்தப்படும் இலங்கை – ஈரான் உறவு இந்த நிலையைச் சிக்கலாக்கும். இந்தியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேண முயற்சிப்பதன் மூலம் இலங்கை எச்சரிக்கையுடன் நடந்துகொள்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் மிகுந்த இராஜதந்திரத்துடனும், மதிநுட்பத்துடனும் நடந்துகொள்கின்றாா். இந்தியா விரும்பாத ஒன்றைச் செய்யும் அதேவேளையில், இந்தியாவின் தேவைகள் சிலவற்றையும் செய்வதற்கான சமிஞையைக் கொடுக்கின்றாா். இவ்வாறான நகா்வுகளின் மூலம் புதுடில்லியை அவரால் சமாதானப்படுத்த முடிகின்றது. ரணிலின் எதிா்பாா்ப்பு பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வைக் கொண்டுவருகிறோம் எனக் கூறிக்கொள்ளும் தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை பாதுகாப்பதாக தன்னை சித்தரிக்க இந்த விஜயத்தை பயன்படுத்திக்கொண்டது. இது அவர்களின் இமேஜை உயர்த்தி, அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஸ்திரப்படுத்தும் என்பது ரணில் தரப்பின் எதிா்பாா்ப்பு. இருந்த போதிலும் இலங்கை – ஈரான் கூட்டாண்மையின் எதிர்காலத்தை பல சவால்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள் இலங்கைக்கு எண்ணெய் வர்த்தகத்தை கடினமாக்கலாம். இலங்கையில் அரசியல் நிலையற்றதாகவே உள்ளது, மேலும் தலைமையில் ஏற்படக்கூடிய எந்த மாற்றமும் “எண்ணெய்க்கான தேயிலை” ஒப்பந்தத்தின் தொடர்ச்சியை பாதிக்கலாம். ஈரானின் தொழில்நுட்பம் இவ்வாறான சவால்கள் இருந்தபோதிலும், அதற்கு அப்பால், ஒத்துழைப்புக்கான கதவுககள் சில விடயங்களில் திறந்தே இருக்கின்றது. ஈரான் விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்தத் துறைகளில் அறிவுப் பரிமாற்றம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நீண்டகாலத்தில் நன்மை பயக்கும். அதனை வழங்குவதற்கான உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம், முதன்மையாக பொருளாதாரக் கருத்தினால் உந்தப்பட்ட அதேவேளையில், கணிசமான அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது இலங்கையின் புதிய பங்காளிகளைத் தேடுவதையும், பரந்த பொருளாதார உறவுகளுக்கான ஈரானின் விருப்பத்தையும், பிராந்திய புவிசார் அரசியலின் சிக்கல்களையும் குறிக்கிறது. இந்த உறவின் நீண்ட கால தாக்கத்தை பார்க்க வேண்டும். ஆனால் இந்த விஜயம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. இந்த புதிய அத்தியாயம் எவ்வாறு அமையும் என்பதை சா்வதேச அரசியல், இராஜதந்திர நகா்வுகள்தான் தீா்மானிக்கப்போகின்றன. இதற்குள் இலங்கையும், ஈரானும் எவ்வாறு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். https://www.ilakku.org/இலங்கை-வந்த-ஈரான்-அதிபா்/
  4. கிலோ கணக்கில் தங்கம் மீட்பு; மூவர் கைது (யோகி) கிளிநொச்சியில் நேற்றிரவு 11 மணியளவில் சிறிய மகிழுந்து ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட (27) நான்கு கிலோ 170 கிராம் தங்க கட்டி மீட்கப்பட்டதுடன் மகிழுந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதி வழியாக வவுனியாவுக்கு குறித்த மகிழுந்தில் மேற்படி எடையுடைய தங்கம் கடத்தப்படுவது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த சிறப்பு தகவல்களின் அடிப்படையில் உடனடியாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்துக்கு அண்மையில் வைத்து வாகனத்தை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த தங்கத்தை மீட்டதுடன் சந்தேகத்தின் பெயரில் மகிழுந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவரைக் கைது செய்துள்ளனர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (ஏ) https://newuthayan.com/article/கிலோ_கணக்கில்_தங்கம்_மீட்பு;_மூவர்_கைது
  5. தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் (மாதவன்) தெற்குடன் இணைந்த வேட்பாளர் சாத்தியம் - சட்டத்தரணி சுவஸ்திகா தெரிவிப்பு அரச தலைவர் தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாராயின் சாத்தியமான நிலைமைகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார். தமிழ் மக்கள் எதிர்ப்பு வாக்கு அரசியலில் இருந்து மீள்வதுடன் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு எமது உரிமைகளை பெற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்தார். நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வல்லமை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் தேர்தல் காலங்களில் எவ்வாறு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுதல் தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்கள் இவ்வளவு காலமும் எதிர்பாபு வாக்குகளில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இனி வரும் காலங்களில் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு தமது உரிமைகளை பெற முடியும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது நானும் அதை வரவேற்பேன். ஆனால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்துவது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமற்ற விடயம். ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் அரச தலைவர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் ஆனால் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பது கேள்வியே. ஏனெனில் தமிழ் பொது வேட்பாளரை நியமிக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் தொடர்பில் சாதகமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும் ஆகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு வாக்கு அரசியலை முன்னெடுப்பதை நிறுத்தி தெற்கு மக்களுடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவார்களாயின் தமிழ் மக்கள் சார்ந்து பிரச்சினைகளின் சாதகமான நிலைப்பாட்டினை அடைந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். ( https://newuthayan.com/article/தமிழ்_பொது_வேட்பாளர்_குறுகிய_அரசியல்;
  6. நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை adminApril 28, 2024 தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற மனிதக்கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருந்த நான்கு காவல்துறைஅதிகாரிகளுக்கு 26 வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மனிதக்கொலை தொடர்பிலான சட்டவிரோத ஒன்றுகூடலின் பங்காளிகளாக இருந்தார்கள் என்ற குற்றசாட்டில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் நால்வருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு திருகோணமலை பாரதிபுரத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த 4 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை வழங்கப்க்கப்பட்டுள்ளது. வட மத்திய மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிட்டியவினால் இந்த தண்டணை வழங்கப்பட்டுள்ளது. தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தில் நிராயுதபாணியாக இருந்த 8 தமிழ் பொதுமக்கள் மீது ஒரு குழுவினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு கொலை செய்தனர். குறித்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் சட்டவிரோத ஒன்றுகூடலில் இருந்ததாக இந்த நான்கு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 4 காவல்துறை அதிகாரிகளில், காவல் நிலைய பொறுப்பதிகாரி, காவல்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு சார்ஜன்ட்கள் உள்ளடங்குகின்றனர். 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு திகதியில் இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். https://globaltamilnews.net/2024/202118/
  7. யாழ்ப்பாணத்தில் அரிசி விநியோகம்! adminApril 28, 2024 யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் குறித்து யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 131652 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் கடந்த 20ஆம் திகதி முதல் கிராம அலுவலர் பிரிவு ரீதியாகவும், கிராம அலுவலர் பிரிவு கொத்தணி ரீதியாகவும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. யாழ். மாவட்டத்தின் மொத்த சனத்தொகையோடு ஒப்பிட்டு நோக்குகின்ற போது 62.66 வீதமான குடும்பங்கள் மேற்படி அரிசி விநியோகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தில் அரிசி வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்த, பதிவு செய்யப்பட்ட 17 அரிசி ஆலைகளூடாக அரிசி விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், 110220 குடும்பங்களுக்கான அரிசி, குறித்த அரிசி ஆலைகள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 98175 குடும்பங்களுக்கு பிரதேச செயலாளர்களால் கிராம மட்ட அலுவலர்களூடாக அரிசி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொடர்ச்சியாக அரிசியை பொதுமக்களுக்கு விநியோகிக்கின்ற நடவடிக்கையினை பிரதேசசெயலாளர்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மூலம் முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை, நெடுந்தீவு, காரைநகர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/202122/
  8. எனது விருப்பமும் அதுதான். எனக்கு பல இன நண்பர்கள் இருக்கின்றார்கள். ஆனால் உந்த சிங்கள இனத்தில்தான் “ஹாய்” என்று சொல்லுவதற்குக்கூட ஒருவருமில்லை. இனியும் எவரையும் சேர்ப்பேன் என்றும் நினைக்கவில்லை. இந்தத் திரியில் அலசப்பட்ட எல்லா கருத்துக்களையும் வாசிக்கவில்லை. எனினும் தமிழர்கள் ஒற்றையாட்சிக்குக் கீழே வாழுவதை ஏற்றுக்கொள்ளும் நிலை இன்னும் வரவில்லை. கையாலாகாத தமிழ்த் தேசிய அரசியல் கோமாளிகளால் மக்களின் ஆதர்சனமான அரசியல் விருப்பங்கள் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியத்தை நலிவுபெறச் செய்து இலங்கைத் தேசியத்தை ஏற்றுக்கொள்ளவைக்க பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. தமிழ்த் தேசிய முன்னெடுப்பு என்பது தோல்வி தழுவிய கோஷம் என்பதும், பொருளாதார அபிவிருத்தியே போதும் என்பதும், மக்கள் கொண்டாட்டத்தையும், கேளிக்கைகளையும் விரும்புவதால் அவற்றுக்கான வெளிகளை திறந்துவிடுவதன் மூலம் தேசிய உணர்வை மழுங்கடிக்கலாம் என்றும் பல வேலைத்திட்டங்கள் நடக்கின்றன. ஆனால் சிங்கள இனம் தமது ஒடுக்குமுறை அரசியலில் இருந்து ஒரு இம்மிகூட நகரவில்லை. வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பும், பொருளாதார நடவடிக்கைகளில் இறுக்கமான பிடியும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. தேசிய அரசியலை முழுமையாக நீர்த்துப்போகச் செய்ய தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தி அவர்களை நீதிமன்றுக்கு ஏறச் செய்தாயிற்று. தாயகத் தமிழரை புலம்பெயர் தமிழரிடம் இருந்து பிரிக்கும் வேலைத்திட்டங்களும் நடக்கின்றன. நிலாந்தனின் கட்டுரையைப் படித்தால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடியும். 👇🏾
  9. புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? - நிலாந்தன் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தாயகத்தில் கட்சிகளுக்குள் காணப்படும் அணிகளை புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பும் பிரதிபலித்தது. இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இரண்டு அணிகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர் தரப்பில் ஆதரவு அணிகள் உண்டு. எனினும் சிறீதரன் அணிக்கு ஆதரவானவர்கள் தனக்கு எதிராகச் செயல்படுவது குறித்து சுமந்திரன் அதிகம் எரிச்சலடைந்து இருப்பதாகத் தெரிகிறது. அதன் விளைவுதான் அவர் அண்மையில் வழங்கிய ஒரு நேர்காணல் ஆகும். ” கட்சிகள் விற்பனைக்கு உண்டு உங்களுக்கு வேண்டுமா? ” என்று என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியின் சார்பாக பேசிய ஒருவர் தன்னிடம் கேட்டதாக சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கின்றார். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் சிலர் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்த முற்படுவதை சுமந்திரன், கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஓர் அரசியல்வாதி புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பின் மீது இவ்வளவு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருப்பது இதுதான் முதல் தடவை. சுமந்திரன் கூறுவதுபோல புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களில் ஒருவர் இரண்டு சிங்களக் கட்சிகளின் பதிவுகளை வாங்கி இருப்பதாக ஒரு தகவல் ஏற்கனவே வெளிவந்தது. அந்த முதலீட்டாளரின் அலுவலர் என்று கருதப்படும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் சில கட்சித் தலைவர்களை சந்தித்து உரையாடியும் இருக்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த போகிறோம் அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைக்கப் போகிறோம் என்றும் அவர் கதைத்திருக்கிறார். ஏனைய கட்சிகளை ஒருங்கிணைப்பது அவருடைய நோக்கம் என்று ஊகிக்கப்பட்டது. எனினும் அந்த முயற்சி பின்னர் தொடர்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு கட்சிகளை வாங்குவது; கட்சிப் பிரமுகர்களுக்கு நிதி உதவி செய்வது; கட்சிப் பிரமுகர்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அழைத்துக் கொண்டாடுவது; அல்லது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரும் கட்சி பிரமுகர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்வது; தாயகத்தில் நிகழும் போராட்டங்களுக்கு நிதி அனுசரனை புரிவது; வெளிநாடுகளில் பிரகடனங்களை வெளியிடுவது… போன்ற பல்வேறு வழிகளிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தாயகத்து அரசியலின் மீது செல்வாக்குச் செலுத்த முற்படுகின்றது. இது தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சீக்கியர்கள், சில ஆப்பிரிக்க சமூகங்கள், ஆர்மீனியர்கள் போன்ற புலப்பெயர்ச்சி நடந்த எல்லாச் சமூகங்களிலும் இது ஒரு அரசியல் யதார்த்தம். புலம்பெயர்ந்த யூதர்கள் கடந்த நூற்றாண்டில், இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியதோடு நவீன அரசியலில் புலம்பெயர் சமூகங்களின் யுகம் துலக்கமான விதங்களில் மேலெழுந்து விட்டது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஈழப் போரின் காசு காய்க்கும் மரமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் காணப்பட்டார்கள். 2009க்கு பின்னரும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து தொடர்ந்து போராடுவது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான். நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் கூர்முனை போல காணப்படுவது அவர்கள்தான். ஐநா மைய அரசியலில் அவர்கள்தான் பிரதான செயற்பாட்டாளர்கள். அதுமட்டுமல்ல தாயகத்தில் உள்ள கட்சிகளுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிதி உதவிகளைச் செய்து வருகின்றது. 2009 க்கு பின் தமிழ் மக்கள் தமது சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டு எழுவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் சமூகமே உதவியது. நிதி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தாயகத்தில் உள்ள மக்களை தோல்விகளிலிருந்தும் காயங்களில் இருந்தும் அவமானத்திலிருந்தும் இழப்புணர்விலிருந்தும் மீட்டெடுத்ததில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துக்குக் கணிசமான பங்கு உண்டு. கடந்த 15 ஆண்டுகால அரசியலில் தாயகத்தில் இடம்பெற்ற பெரும்பாலான எழுச்சிகள் போராட்டங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமே உண்டு. எழுக தமிழ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்… போன்ற எல்லாவற்றின் பின்னணியிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் உண்டு. அதுபோல 2009 க்கு முன்பு சுனாமியின் தாக்கத்திலிருந்து தாயகம் மீள்வதற்கும் 2020 க்கு பின் பெருந்தொற்று நோய்க்காலத்திலும் அண்மை ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் பெருமளவுக்கு உதவியது. அதேசமயம் தாயகத்து அரசியல் நிலைமைகளின் மீது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ரிமோட் கண்ட்ரோல் செய்ய முற்படுகிறது என்ற குற்றச்சாட்டிலும் உண்மைகள் உண்டு. கள யதார்த்தத்துக்கு வெளியே பாதுகாப்பாக இருந்து கொண்டு, தாயகத்தில் தன்னியல்பாக எழுச்சி பெறும் செயற்பாட்டாளர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படுவது; காணாமல் ஆக்கப்பட்ட வர்களுக்காகப் போராடும் சங்கங்களுக்கிடையில் பிரிவுகளை ஏற்படுத்தியது; பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களை ரிமோட் கொண்ட்ரோல் செய்ய முற்படுவது; தாயகத்தோடு கலந்தாலோசிக்காமல் ஈழத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரகடனங்களை தயாரிப்பது… போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் புலம்பெயர்ந்த தரப்பில் உள்ள சில தனி நபர்களின் மீதும் சில நிறுவனங்களின் மீதும் உண்டு. சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறுவது போல புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பு தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கின்றது. அதற்கு முதலாவது காரணம், தாயகத்தை விட்டுப் பிரிந்து வாழ்வதால் ஏற்படும் பிரிவேக்கம். இரண்டாவது காரணம், புலம்பெயர்ந்த நாடுகளில் காணப்படும் ஒப்பீட்டளவில் சுதந்திரமான அரசியல் சூழல். மூன்றாவது காரணம் சீனச்சார்பு இலங்கை அரசாங்கங்களின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படும் மேற்கத்திய நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவிப்பது, வளர்த்து விடுவது. இது போன்ற காரணங்களால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தாயகத்தை விடவும் அதிகம் உணர்ச்சிகரமாகவும் எழுச்சிகரமாகவும் சுதந்திரமாகவும் போராடக் கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான தீவிர நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் சுமந்திரனை தேசிய நீக்கம் செய்யும் ஓர் அரசியல்வாதியாகப் பார்க்கிறார்கள். அவர் வெளி நாடுகளுக்கு வரும்போது அவருக்கு எதிர்ப்புக்கு காட்டுகிறார்கள். இப்பொழுது கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவில் அவர்கள் சுமந்திரனை ஒரு வில்லனாகப் பார்க்கிறார்கள். கட்சி சுமந்திரனை நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடும் ஆவேசத்தோடும் காணப்படுகிறார்கள். இவற்றால் சுமந்திரன் எரிச்சலடைந்ததன் விளைவே மேற்சொன்ன நேர்காணல் ஆகும். புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் முதலீடு செய்ய வரும்பொழுது அரச புலனாய்வுத்துறை அவர்களை கண்காணிக்கும். அக் கண்காணிப்பை மீறி அவர்கள் எதையும் செய்ய முடியாது. அவ்வாறு புலனாய்வுத் துறையின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் தமிழ் முதலீட்டாளர்கள் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறார்கள் என்று எடுத்த எடுப்பில் தீர்ப்புக் கூறுவது சரியா? இதே விதமான குற்றச்சாட்டுக்கள்தான் தடுப்பிலிருந்து வந்த முன்னாள் இயக்கத்தவர்கள் மீதும் வைக்கப்பட்டன. 2009க்குப் பின்னரும் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டில் சுதந்திரமாக முதலீடு செய்வதில் உள்ள அரசியல் ராணுவ வரையறைகளை அது உணர்த்துகின்றது. அது இன ஒடுக்குமுறையின் ஒரு பகுதி தான். இந்த இடத்தில் ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் கதைக்கலாமே தவிர ஒடுக்கப்படும் தரப்பு புலனாய்வுத் துறையின் முகவராக செயல்படுகிறது என்ற பொருள்பட யாரும் கதைக்க முடியாது. தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுத்தால் அது தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டும் என்பது சம்பந்தர் வழமையாகக் கூறும் ஒரு வாதம். இது எப்படியிருக்கிறது என்று சொன்னால், குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணைப் பார்த்து நீ வாய் காட்டியபடியால்தான் உன்னுடைய கணவன் உன்னைத் தாக்குகிறான் என்று கூறுவதைப் போன்றது. இங்கு குடும்ப வன்முறை பிழை என்ற நிலைப்பாட்டைதான் முதலில் எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இப்பொழுது தனிநாடு கேட்கவில்லை. தாங்கள் ஒரு தேசமாக இருப்பதற்குரிய அடிப்படைகளைத் தான் கேட்கிறார்கள். தாங்கள் ஒரு தேசமாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்பது குற்றமா? அப்படிக் கேட்டால் அது சிங்கள இனவாதிகளை உசுப்பேத்தும் என்று சொன்னால் சிங்கள இனவாதிகளை உசுப்பேத்தாமல் இருக்க எப்படிப்பட்ட அரசியலை தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும்? அதற்கு பெயர்தான் நல்லிணக்கமா? கடந்த 15 ஆண்டுகளிலும் சம்பந்தர் அப்படிப்பட்டதோர் அரசியலுக்குத்தான் தலைமை தாங்கினார். 2015 ஆம் ஆண்டிலிருந்து ஐநாவின் நிலை மாறுகால நீதிக்கான தீர்மானத்தின் பிரகாரம் சம்பந்தர் ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்து ஒரு புதிய யாப்பை உருவாக்க முயற்சித்தார். அதற்காக அவர் அதிகமாக விட்டுக் கொடுத்தார். அந்த உத்தேச யாப்பின் இடைக்கால வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா என்ன சொன்னார் தெரியுமா? சம்பந்தரைப் போல விட்டுக் கொடுக்கும் ஒரு தலைவரை இனிக் காண முடியாது. சம்பந்தரின் காலத்தில் ஒரு தீர்வைப் பெறவில்லை என்றால் பிறகெப்பொழுதும் பெற முடியாது என்ற பொருள்பட டிலான் பெரேரேரா நாடாளுமன்றத்தில் பேசினார். அதில் உண்மை உண்டு சம்பந்தர் அந்தளவுக்கு அடியொட்ட வளைந்து கொடுத்தார். ஆனால் அந்த விட்டுக்கொடுப்பின் விளைவாக கூட்டமைப்பு எதைப் பெற்றது? நிலைமாறகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதைக் காட்டிக்கொடுத்தார். 2018, ஒக்டோபர் மாதம் அவர் ஒரு யாப்புச்சதிப் புரட்சியில் ஈடுபட்டு நிலைமாறு கால நீதியைத் தோற்கடித்தார். இது தொடர்பாக 2021ஆம் ஆண்டு வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது சுமந்திரன் பின்வரும் பொருள்படக் கூறினார்… கடந்த ஆறு ஆண்டுகளாக (அதாவது 2015 இலிருந்து) ஒரு பரிசோதனையை முன்னெடுத்தோம். அதில் தோற்று விட்டோம்… என்று. அதுதான் உண்மை. சம்பந்தர் அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை மகிழ்விக்க முடியவில்லை. அதுதான் இலங்கைத்தீவின் யதார்த்தம். இப்படிப்பட்டதோர் பின்னணியில் ஒடுக்குமுறையைத்தான் விமர்சிக்க வேண்டுமே தவிர ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் மக்களின் தீவிரத்தையல்ல. இக்கட்டுரையில் முன் சொன்ன உதாரணத்தைப் போல குடும்ப வன்முறை சரியா பிழையா என்ற நிலைப்பாடு தான் இங்கு முக்கியம். மனைவி வாய் காட்டினாரா அல்லது ருசியாகச் சமைக்க வில்லையா என்பது இங்கு விவாதமே அல்ல. எனவே புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் ஒரு பகுதி தீவிரமான நிலைப்பாடுகளை எடுக்கிறது என்பதற்காகவோ அல்லது தாயகத்து அரசியலின் மீது அளவுக்கதிகமாக செல்வாக்கு செலுத்த விளைகிறது என்பதற்காகவோ அவர்களை தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குபவர்கள் என்று கூறுவது யாருக்கு இறுதியாகச் சேவகம் செய்யும்? தமிழ்த் தேசிய அரசியல் சமூகம் என்பது புலம்பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கியதுதான். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகத்தின் நீட்சியும் அகட்சியும் தான். அவர்களும் ஈழத் தமிழ் ரத்தம்தான். ஈழத் தமிழர்களுக்கு இரண்டு சிறகுகள் உண்டு. ஒன்று தமிழகம் மற்றது புலம்பெயர்ந்த தமிழ் சமூகம். இதில் ஒரு சிறகை வெட்டினாலும் ஈழத் தமிழர்கள் பறக்க முடியாது. தேர்தல் காலங்களில் கட்சிக்குக் காசை வாரி வழங்கியது போலவே கட்சிக்குள் அணிகள் தோன்றும் போது அந்த அணிகளையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கையாளப் பார்ப்பார்கள் என்பது ஒர் அரசியல் யதார்த்தம். கட்சி தனக்குள் உடையும் பொழுது புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல அரச புலனாய்வுத் துறையும் அதற்குள் புகுந்து விளையாடும். எனவே இதுவிடயத்தில் முதலில் விமர்சிக்க வேண்டியது புலம்பெயர்ந்த தமிழர்களை அல்ல. மாறாக, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு மூத்த கட்சியை இரண்டாக உடைத்த கட்சிக்காரர்களைத் தான் விமர்சிக்க வேண்டும். https://www.nillanthan.com/6725/
  10. “நான் கற்றுக் கொண்டதும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு போதுமே கற்றுக்கொள்ளாததும்” April 26, 2024 — குசல் பெரேரா — வடக்கில் தமிழர்கள் மத்தியில் மதத்தீவிரவாதம் வெளிக்கிளம்புவதற்கு யார் பொறுப்பு? மக்களின் உணர்வுகளை மதிக்காத — கொழும்பில் வாழ்க்கையைக் கொண்ட பொறுப்பற்ற தமிழ் தலைமைத்துவமே அதற்கு பொறுப்பு என்று நான் சொல்வேன். அநீதிக்கு எதிராகவும் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் எந்தளவுக்கு வெளிப்படையாகவும் பற்றுறுதியுடனும் நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதிலேயே அவர்களின் பலம் தங்கியிருக்கிறது. சிங்கள தெற்கில் பிரதான அரசியல் நீரோட்ட தலைவர்கள் பெரும்பான்மை இனத்துவ தீவிரவாதத்தை முன்னெடுக்கிறார்கள். போரின் முடிவுக்கு பின்னரான தமிழர் அரசியலில் பாரம்பரிய அரசியல் தலைவர்கள் தங்களது மக்களுடன் நிற்கத் தவறியதே மதத்தீவிரவாதத்தை அனுமதிக்கிறது. இது உண்மையில் எங்கிருந்து ஆரம்பித்தது? 2005 நவம்பரில் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ததுடன் இது ஆரம்பித்தது. சமாதானத்தைப் பேசுவதற்காக வடக்கு — கிழக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெருமளவில் வாக்களித்து 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் என்று அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக புலம்பெயர் தமிழ்ச்சமூகம் “தமிழ் ஈழத்தை” வென்றெடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தது. “தமிழர்களுக்கு சமாதானம் இல்லை” என்று உரத்துக் குரலெழுப்புவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையுடன் “தனியான தமிழ் அரசு” ஒன்றுக்காக மேற்குலகின் ஆதரவைத் திரட்டவும் வசதியாக “கடும்போக்கு சிங்கள பௌத்தவாதியான” ராஜபக்சவை பதவியில் அமர்த்துவதற்கு அந்த சமூகம் தீர்மானித்தது. இந்த கர்வத்தனமான சிந்தனை “தமிழ் ஈழம்” என்ற பிரபாகரனின் வெறித்தனமான அபிலாசையின் வழியில் அமைந்தது. விடுதலை புலிகளினால் தீர்மானிக்கப்பட்ட தேர்தல் பகிஷ்கரிப்பு 50.29 சதவீத வாக்குகளுடனும் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் சற்று அதிகமான பெரும்பான்மையுடனும் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தது. வடக்கு — கிழக்கில் மாத்திரம் 10 இலட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தார்கள். கடும்போக்கு சிங்கள பௌத்த தலைவர் ஒருவர் எந்தளவு செலவானாலும் அதைப் பொருட்படுத்தாமல் இறுதிவரை போரை முன்னெடுப்பார் என்பதை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தெரிந்திருக்கவில்லை. 2002 பெப்ரவரி போர்நிறுத்த உடன்படிக்கை போரில் ஈடுபட்டு நன்கு அனுபவத்தைப் பெற்ற விடுதலை இயக்கப் போராளிகளை “நிருவாகிகள்” பதிவிகளுக்கு மாற்றியது. வயதில் நாற்பதுகளின் நடுப்பகுதியிலும் ஐம்பதுகளின் முற்பகுதியிலும் இருந்த அவர்கள் போரில் சலிப்படைந்து சமருக்கு செயலூக்கத்துடன் தலைமைதாங்கும் ஆற்றல் இல்லாதவர்களாகவும் இருந்தார்கள். நியூயோர்க்கில் 9/11 தாக்குதல் அரசு அல்லாத ஆயுதக்குழுக்கள் சகலதையும் உள்ளடக்கியதாக “உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற சுலோகத்தின் கீழ் போர் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷூக்கு வாய்ப்பைக் கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்கவும் புலம்பெயர் தமிழர்கள் இருந்தார்கள். விடுதலை புலிகளும் விதிவிலக்காக இருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், வட அமெரிக்கா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட சுமார் 35 நாடுகளில் அந்த இயக்கம் தடைசெய்யப்பட்டது. 2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபோது உயிருடன் எஞ்சியிருந்த தமிழர்களுக்கு வன்னியின் மனித அவலமே மிச்சமாக இருந்தது. அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு அவர்களது எதிர்காலத்துக்கு எதையும் விட்டு வைக்கவில்லை. மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் விடுதலை புலிகளின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்கள் போருக்கு பின்னரான குழப்பநிலையில் ஒரு அரசியல் தலைமைத்துவம் கூட இல்லாதவர்களாக கையறு நிலையில் இருந்தார்கள். வெறுமனே பெயரளவில் மாத்திரம் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுக்கு ஒத்தூதிக்கொண்டே இருக்கவேண்டியிருந்தது. அதுவே போருக்கு பின்னரான வடக்கு — கிழக்கு. போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்களுக்காக ராஜபக்சாக்களைத் தண்டிப்பதற்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை விரைந்து பற்றிப்பிடித்துக் கொண்டது. அந்த தீர்மானங்களே தமிழ் மக்களின் “அதிமுக்கியமான அரசியல் தேவை” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரித்து நின்றது. அதேவேளை, போரின் முடிவுக்கு பிறகு சரியாக ஒரு வருடம் கழித்து ஜனாதிபதி ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு களத்தில் உள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட சகல பகுதிகளிலும் ஆணைக்குழ பொது விசாரணை அமர்வுகளை நடத்தியது. சிதறிப்போயிருந்த தமிழ்ச்சமூகத்தை ஒன்றுபடுத்தி அவர்களின உடனடி மனக் குறைகளுக்கு தீர்வைக் கோரும் வாய்ப்பு அதன் மூலமாக உள்ளூர் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கிடைத்தது. ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை: ———————————/ போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணவேண்டிய அவசியத்தை உணர்ந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2010 செப்டெம்பரில் சமர்ப்பித்த “இடைக்கால அறிக்கையில்” பல விடயங்களுக்கு மத்தியில் பின்வரும் முன்மொழிவுகளைச் செய்திருந்தது ; (1) நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் வழக்குகளை ஒவ்வொன்றாக ஆராய்வதற்கு ஒரு விசேட பொறிமுறை ( 2) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்படவேண்டும் (3) தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு அவ்வாறு விடுவிக்கப்பட்டதற்கான சான்றுப்பத்திரம் வழங்கப்படவேண்டும். மீண்டும் அவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படக்கூடாது (4) அரசாங்க ஆதரவுடனான குடியேற்றங்களுக்கு தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படாது என்று தெளிவான கொள்கை அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிடவேண்டும்.(5) அதிமுன்னுரிமைக்குரிய நடவடிக்கையாக சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்படவேண்டும். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினதும் வெளிநாட்டு நிதியுதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ராஜபக்ச விரோத அரசியலுக்கு இசைவான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனான தங்களது செயற்பாடுகள் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு சகல தீர்வுகளுடனும் கூடிய புதிய அரசியலைமைப்பு ஒன்றைத் தரும் என்று நம்பினார்கள். அதனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் இருந்த மிகவும் அவசரமானதும் முக்கியமானதுமான முன்மொழிவுகளை அவர்கள் முற்றுமுழுதாக அலட்சியம் செய்தார்கள். வடமாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அநாவசியமாக முரண்பட்டுக் கொண்டார்கள். மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன்னெடுத்து வடக்கு நிருவாகத்தை இராணுவமய நீக்கம் செய்வதற்கு அவர்கள் முதலமைச்சருக்கு ஆதரவை வழங்கி யிருக்கவேண்டும். முன்மொழிவுகளுக்கு முக்கியத்துவமில்லை: ——————————- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கும் 2011 டிசம்பர் 16 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதன் இறுதி அறிக்கைக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு 9 வது அத்தியாயத்தின் கீழ் 9.45 தொடக்கம் 9.74 வரையான பந்திகளில் காணப்பட்ட முன்மொழிவுகளை முற்றாக அலட்சியம் செய்தது. உனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டியவை என்று ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட அவதானங்களினதும் முன்மொழிவுகளினதும் ஒரு சுருக்கமாக அந்த பந்திகள் அமைந்திருந்தன. 8.193 பந்தியை கொழும்பு சிவில் சமூகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நிச்சயமாக வலியுறுத்தியிருக்கவேண்டும். “சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு சிவில் நிறுவனமே பொலிஸ் திணைக்களம். அதனால் அரசின் பாதுகாப்புக்கு பொறுப்பான ஆயுதப்படைகளுடனான தொடர்புகளில் இருந்து பொலிஸ் திணைக்களம் பிரிக்கப்படவேண்டும் என்று அந்த பந்தியும் சிவிலியன் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படைகளின் ஈடுபாடு படிப்படியாக நீக்கப்படவேண்டும் ; பாதுகாப்பு படைகளினால் தனியார் நிலங்கள் பயன்படுத்தப்படுவதை நியாயபூர்வமான கால எல்லை கொடுக்கப்பட்டு இல்லாமல் செய்யவேண்டும் என்று 9.171 பந்தியும் கூறுகின்றன. மேற்குலகில் பெரிய ஆரவாரம் செய்ப்பட்டபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் 14 வருடகால தீர்மானங்கள் வடக்கு — கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனையும் கொண்டுவரவில்லை. மாறாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசியமான தேவைகளுக்கு முக்கியமானதாக இருந்தபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் வடக்கு — கிழக்கு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கும் தாங்கள் எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் வேண்டி ஆர்ப்பாட்டம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். ராஜபக்சாக்களை தண்டிப்பதற்கு முன்னதாக “காணாமல்போன” தங்களது உறவினர் பற்றிய தகவல்கள் அந்த மக்களுக்கு அவசரமானவையாகும் முக்கியமானவையாகவும் இருந்தன. இழந்த தங்களது நிலங்களையும் அன்றாட வருமானத்துக்கான ஆதாரங்களையும் மீளப்பெறுவதில் அவர்கள் கடும் அக்கறை செலுத்தினார்கள். அன்புக்குரிவர்கள் எங்கே? காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைக் கோரி வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டம் செய்யும் தாய்மார்களுக்கும் மனைவிமார்களுக்கும் ஆதரவளிப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்தவொரு தலைவரும் ஒருபோதும் நினைக்கவில்லை. வடக்கு,கிழக்கில் சிவில் சமூகத்தை அரசியல் ரீதியில் அணிதிரட்டி அவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கவும் முயற்சிகள் செயயப்படவில்லை. 2,495 நாட்களுக்கு தொடர்ச்சியாக போராடுவது என்பது ஒன்றும் சாதாரணமான விடயம் இல்லை. “எங்களது அன்புக்குரியவர்கள் எங்கே?” என்ற கேள்வியுடன் 2023 டிசம்பர் இறுதிவரை தொடர்ச்சியாக ஆறு வருடங்களும் ஒன்பது மாதங்களும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது ஒன்றும் பகிடி இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த தாய்மாரையும் மனைவிமாரையும் மகிந்த ராஜபக்சவுக்கு பிறகு மூன்று ஜனாதிபதிகள் ஏழு வருடங்களுக்கும் கூடுதலான காலமாக அலட்சியம் செய்திருக்கிறார்கள். இந்த போராட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களில் 180 க்கும் அதிகமான தாய்மாரும் உறவினர்களும் கடந்த ஏழு வருடங்களில் இறந்துவிட்டதாக வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக ஐ.நா. பிரகடனம் செய்த கடந்த ஆகஸ்ட் 30 காணாமல்போனேரின் உறவினர்கள் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. அந்த ஏழு வருட காலத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் எங்கே போனார்கள்? தீர்வு காணப்படாத இந்த பிரச்சினைகள் எல்லாம் போதாது என்று கடந்த ஒரு தசாப்த காலத்தில் தமிழர்களின் நிலங்கள் சிங்கள சமூகத்தவர்களினால் ஆக்கிரமிக்கப்படும் போக்கும் தீவிரமடைந்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசு அலட்சியம் செய்திருக்கிறது அல்லது அரச ஆதரவுடன் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு அனுசரணை செய்கிறார்கள். மன்னாரிலும் வடபகுதி கடல் பரப்பிலும் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை தடுத்துநிறுத்த அரசாங்கம் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்காததால் நெருக்கடி தீவிரமடைந்திருக்கிறது. இடம்பெற்ற மோதல்களில் யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் பிரச்சினைகளும் மனக்குறைகளும் அதிகரிக்கின்றன. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கோ அல்லது வேறு எந்த அரசியல் தலைவருக்குமோ அவற்றைப் பற்றி அக்கறை கிடையாது. அரசியல் அலட்சியத்தின் விளைவுகள்: ———————————————— வெட்கக்கேடான இந்த அரசியல் அலட்சியத்தின் விளைவுகளை வடக்கு, கிழக்கு தேர்தல் முடிவுகளில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி தேர்தல்களில் சிங்கள தெற்கின் இரு பொது வேட்பாளர்களை ஆதரித்த பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 பாராளுமன்ற தேர்தலில் சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வைக்காணும் உறுதிமொழியுடன் கூடிய விஞ்ஞாபனத்தை முன்வைத்து போட்டியிட்டது. கூட்டமைப்பில் இருந்து கூடுதல்பட்ச எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்யுமாறு அதன் தலைவர் இரா. சம்பந்தன் வடக்கு,கிழக்கு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பெரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துடன் சமஷ்டித் தீர்வொன்றுக்கு உறுதியான ஆணையைத் தந்தால் தெரிவு செய்யப்படவிருந்த விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அனுகூலமாக இருக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூறினார்கள். சமஷ்டித் தீர்வைப் பிரதான சுலோகமாகக் கொண்டு கூட்டமைப்பில் இருந்து 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். பதிவுசெய்யப்பட்ட 884, 326 வாக்குகளில் மொத்தம் 470, 542 வாக்குகள் அவர்களுக்கு கிடைத்தன. 45 ஆயிரம் வாக்குகளுடன் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இருந்து ஒரேயொரு உறுப்பினர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் இருவருடன் சேர்த்து எல்லாமாக கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றார்கள். ஒவ்வொரு பிரச்சினையிலும் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பிரமையுடன் செயற்பட்ட சம்பந்தன் — சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மேலும் ஒரு ஐந்து வருடங்களை அதிகரித்துக் கொண்டிருந்த பிரச்சினைகளுடனும் வேதனையுடனும் தமிழ் மக்கள் கழித்தார்கள். மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசியல் அலட்சியத்துடன் செயற்பட்ட கூட்டமைப்பை 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்தார்கள். தெரிவுசெய்யப்பட்ட முன்னைய 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவரை இழந்த கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியல் மூலமும் ஒரேயொரு ஆசனமே கிடைத்தது. வேறு மூன்று தமிழ்க்கட்சிகளில் இருந்து நான்கு பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைத்தது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 327, 168 வாக்குகள் கிடைத்தன. 2020 ஆம் ஆண்டில் வாக்காளர்கள் தொகை பத்து இலட்சத்து 8 ஆயிரமாக அதிகரித்திருந்த போதிலும், 2015 தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வாக்குளையும் விட இது 143, 374 வாக்குகள் குறைவானதாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டபோதிலும் அதன் மக்கள் ஆதரவின் சரிவைத் தடு்க்க முடியவில்லை. தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தின் பொறுப்பற்ற அரசியல் போக்கை மாற்று அரசியல் அணியொன்று சவாலுக்கு உட்படுத்தாத நிலையில், சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவத்துக்கு ஒரு மாற்றாக இந்து சார்பு நகர்வொன்றின் மூலம் மாற்றம் பிரதிபலித்திருக்கிறது போன்று தோன்றுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியில் கூட “மக்கள் சார்பான” எந்தவொரு அரசியல் மாற்று அணியும் இருப்பதாக தெரியவுமில்லை. தமிழரசு கட்சிக்குள் நிலவும் தலைமைத்துவக் குழப்பத்தையும் தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரசியல் அணியான்று இல்லாத நிலையையும் அனுகூலமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்து தீவிரவாதம் செல்வாக்குப் பெறக்கூடிய ஆபத்து வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கையில் இந்து மதம் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என்றும் அதனால் நாட்டில் உள்ள இந்துக்களை ஓரணியில் திரட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் இந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் “சிவசேனை” என்ற உதிரி அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழரசு கட்சியின் சம்பந்தன் — சுமந்திரன் தலைமைத்துவம் தமிழ் மக்களை இரக்கமற்ற முறையில் அலட்சியம் செய்தமை அரசியல் மாற்று ஒன்று இல்லாமல் துடைத்தெறியக்கூடிய சிறிய ஒரு தவறு அல்ல. மதசார்பற்ற அரசியலை மதத்தீவிரவாதம் முந்திச்செல்வதற்கு முன்னதாக மிகவும் தீர்க்கமானதும் தெளிவான சிந்தனையுடன் கூடியதுமான அரசியல் தீர்மானம் ஒன்றை அது அவசரமாக வேண்டிநிற்கிறது. (பைனான்சியல் ரைம்ஸ்) https://arangamnews.com/?p=10677
  11. ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா April 27, 2024 ஆணைக்குழுக்களை அமைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அதன்போது சரத் பொன்சேகா மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 5 வருடங்களாகியுள்ளன. இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பேராயர் தனது வேதனையை வெளிப்படுத்தும் போது அவரை விமர்சிக்கின்றனர். அவ்வாறு நடக்கக் கூடாது. இதில் நீதி கிடைக்க வேண்டும். ஆணைக்குழுக்களை அமைத்து இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. பயங்கரவாதிகளை அவ்வாறான ஆணைக்குழுக்களால் அடையாளம் காண முடியாது. புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கே அதனை செய்ய வேண்டும். இது தொடர்பான பொறிமுறைகளும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கே தெரியும். அதன்படி அவர்களை அதற்கு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தில் பிரதான நபரான சஹரானுக்கு யார் சம்பளம் கொடுத்து வளர்த்துள்ளனர். அவரை உருவாக்கியவர்கள் யார்? சலே என்பவரே அவரை வளர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டிலேயே சஹரான் தொடர்பில் தகவல்கள் வெளியாகிய போதும் அவரை கைது செய்ய முடியாது போயுள்ளது. தமது கடமைகளை தவறியவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். நாடு இந்த நிலைமைக்கு வர காரணமானவர்கள் யார்? பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் அது தொடர்பில் தகவல்கள் தெரிந்தும் அதனை தடுக்காது தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். எவ்வாறாயினும் எனக்கு அதிகாரம் கிடைக்குமாக இருந்தால் அந்த நபரை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து தண்டனையை கொடுத்தே தீருவேன்” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தாா். https://www.ilakku.org/ஆணைக்குழுக்களை-அமைத்து-ஈ/
  12. வெடுக்குநாறிமலை பகுதியில் இரகசிய அகழ்வுப் பணி – கஜேந்திரன் April 27, 2024 வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் இரகசியமான முறையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுவதால் வரலாறு திரிவுபடுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரதேசத்தில் தற்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தை சார்ந்தவர்களால் அகழ்வுப் பணியொன்று இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்கத்துடன் இந்த அகழ்வுப் பணி நடக்கின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வடக்கு, கிழக்கில் மூத்த பேராசிரியர்கள், தொல்லியல் சார்ந்தவர்கள் இருக்கின்ற போது அவர்கள் எவரையும் இந்தக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தாமல் இரகசியமான முறையில் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன . யுனெஸ்கோவின் கண்காணிப்பிலேயே இந்தப் பணிகள் நடக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம். இல்லையென்றால் குரூந்தூர் மலையை போன்று வரலாறு திரிபுபடுத்தப்படும் ஆபத்து இருக்கின்றது. இதனால் யுனெஸ்கோவின் கண்காணிப்பில் அகழ்வுப்பணி நடக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்றார். https://www.ilakku.org/வெடுக்குநாறிமலை-பகுதியி/
  13. இலங்கையில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி Vhg ஏப்ரல் 27, 2024 இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்திலேயே இந்த ஆடு பிறந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளது. ஆட்டுக்குட்டி எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.battinatham.com/2024/04/blog-post_113.html
  14. படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல் எகிப்து உயர்மட்ட தூதுக்குழு இஸ்ரேல் விரைவு gayanApril 27, 2024 தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது தொடர்ச்சியாக செல் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தனது நாட்டு எல்லையில் அமைந்திருக்கும் ரபா மீதான படை நடவடிக்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சும் எகிப்து புதிய போர் நிறுத்த முயற்சியாக உயர் பட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீதான படையெடுப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் வலுத்திருந்தபோதும் அங்கு தரைவழி நடவடிக்கைக்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. இதற்கான சமிக்ஞையாகவே அங்கு தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. ரபா நகர கடற்கரையில் வேலை செய்துகொண்டிருந்த மீனவர் ஒருவர், இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. காசா கடற்பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளை செயற்படுத்தி வரும் இஸ்ரேலினால் அங்குள்ள மீனவர்கள் தொடர்ந்து தொந்தரவுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ‘நட்சரிட் இடைவழியில்’ செயற்படும் இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் கடந்த வியாழனன்று (25) மோட்டார் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக போர் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரபா மீதான படை நடவடிக்கைக்கு இஸ்ரேலிய படையினர் வெளிப்படையாக தயாராகி வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ரபா படையெடுப்பு தொடர்பில் சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில் இஸ்ரேல் இரு மேலதிக படைப்பிரிவுகளை அழைத்திருப்பதோடு, ரபாவுக்கு அருகில் கான் யூனிஸ் நகரில் பாரிய அளவில் வரிசையாக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பது செய்மதி படங்கள் காட்டுகின்றன. ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதற்கும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 133 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ரபா மீதான படை நடவடிக்கை அவசியம் என்று இஸ்ரேல் கூறி வருகிறது. எனினும் காசா விளிம்பில் உள்ள ரபா நகர் இடம்பெயர்ந்த மக்களின் கடைசி அடைக்கலமாக இருப்பதோடு அங்கிருந்து அவர்கள் எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களை வெளியேற்றவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டபோதும் அது நடைமுறை சாத்தியமற்றது என்று ஐ.நா. அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் வடக்கில் காசா நகரில் உள்ள அல் ஷபா குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலை அடுத்து ஒரு குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காசா நகரில் இயங்கும் கடைசி மருத்துவமனையான அல் அஹ்லி அரபு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இஸ்ரேல் இராணுவம் நடத்திய பாரிய சுற்றிவளைப்பில் அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை பேரழிவையும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கும் எகிப்து, உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. இழுபறி நீடிக்கும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் புதிய முயற்சியாக எகிப்து உளவுப் பிரிவு தலைவர் அப்பாஸ் கமால் தலைமையிலான குழு ஒன்றே இஸ்ரேல் விரைந்துள்ளது. இதில் ஹமாஸ் பிடியில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய கணிசமான எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிப்பது தொடர்பிலேயே பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவிருப்பதாக எகிப்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. எனினும் முழுமையான போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய படை வாபஸ் பெறும் தமது நிபந்தனையில் இருந்து பின்வாங்கப்போதில்லை என்று ஹமாஸ் கூறி வருவதோடு அந்த நிபந்தனைகளை இஸ்ரேல் மறுத்து வருகிறது. ஹமாஸ் முழுமையாக தோற்கடிக்கப்படுவது மற்றும் அதன்பின் காசாவில் பாதுகாப்பு நிலைப்படுத்தப்படும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறுகிறது. ரபாவையொட்டி இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எகிப்துடனான காசா எல்லையில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்படுவதற்கு அதிருப்தியை வெளியிடவும் இஸ்ரேல் சென்றிருக்கு எகிப்து தூதுக் குழுவினர் திட்டமிட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. ரபாவில் உள்ள பலஸ்தீனர்கள் எல்லை கடந்து எகிப்துக்குள் வர அனுமதிக்கப்போதில்லை என்று எகிப்து ஏற்கனவே உறுதியாக குறிப்பிட்டுள்ளது. காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு எகிப்துடன் கட்டார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் ரபா மீதான படையெடுப்பு இந்த பேச்சுவார்த்தையை முறிக்கும் என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ‘ரபாவில் இஸ்ரேல் எதிர்பார்த்ததை அடையாது’ என்று மூத்த ஹமாஸ் அதிகாரியான காசி ஹமாத் தெரிவித்தார். ஏழு மாத போரில் ஹமாஸை ஒழிப்பது அல்லது பணயக்கைதிகளை விடுவிப்பது ஆகிய எந்த இலக்கையும் இஸ்ரேல் அடையவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். காசா போர் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு இடையில் மோதலை தூண்டி இருக்கும் சூழலில் அது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று நடத்திய தாக்குதலில் பொதுமகன் ஒருவன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. கபர் சுபா மலைப் பகுதியில் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளை பயன்படுத்தி மேற்கொண்ட சிக்கலான அதிரடி தாக்குதலில் இரு இஸ்ரேலிய வாகனங்களை அழித்ததாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டது. இது தொடர்பில் இஸ்ரேல் நேரடியாக பதில் அளிக்கவில்லை. தெற்கு லெபனானில் ஷெபா கிராமத்தைச் சூழ ஹிஸ்புல்லா இலக்குகளை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதாக அது குறிப்பிட்டது. இதில் பல வீடுகளும் சேதமடைந்திருப்பதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா மோதல்களில் லெபனானில் குறைந்தது 380 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இதில் 252 ஹிஸ்புல்லா போராளிகளும் அடங்குவதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இந்தக் காலப்பகுதியில் 11 இஸ்ரேலிய படையினர் மற்றும் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/04/27/world/56907/படையெடுப்பை-நெருக்கும்-இ/
  15. கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது? 2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்? Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
  16. வெள்ளை மாளிகைக்கு அருகில் பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 26 Apr, 2024 | 11:18 AM அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக மாணவர்கள் வோசிங்டனில் ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திற்கு அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காசா யுத்தத்தின் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில் தங்களுக்கு உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்காகவும் வோசிங்டனை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் அங்குகுழுமியுள்ளனர். அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழகங்களை போல ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழக மாணவர்களிற்கான எங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவும் அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழக மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவும் நாங்கள் இங்குவந்திருக்கின்றோம் என அனா வெசெல்ஸ் என்ற மாணவி அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கும்இராஜாங்க திணைக்களத்திற்கும் அருகில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தலைநகரில் நாங்கள் எதனையாவது செய்யாவிட்டால் நாங்கள் எங்கள் தார்மீக கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை என்பதே அர்த்தம் என மாணவி வெசெல்ஸ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181994
  17. கடற்றொழிலை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் ஜப்பான் 26 Apr, 2024 | 11:08 AM கடற்றொழில் அமைச்சுடன் இணைந்து உள்நாட்டு கடற்றொழில்துறையை வலுப்படுத்தவும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஜப்பானிய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை வழங்கியுள்ளது. 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சமூகத்தால் இயக்கப்படும் நான்கு சிறு குஞ்சு பொரிப்பகங்களை நிறுவி, ஐந்து NAQDA மீன்வளர்ப்பு அபிவிருத்தி நிலையங்களை மேம்படுத்தி, இனவிருத்தி மற்றும் வளர்ப்புத் திறனை அதிகரிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் மீன்வளர்ப்புகளை அதிகரிக்கவும் நீர்த்தேக்கங்கள், இனப்பெருக்க அலகுகளுக்கு அடைகாக்கும் வளர்ப்பு மற்றும் மீனவ சமூகங்களிடையே முட்டை வளர்ப்பிற்கான கூண்டு வளர்ப்பு முறையை ஊக்குவித்தல். ஓராண்டுத் திட்டமானது NAQDA விற்கு மீன்குஞ்சுகளை ஏற்றிச் செல்வதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து உள்நாட்டு மீன்பிடித்தலுக்கும்ரூபவ் அதிகாரிகள் மற்றும் மீனவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கும் உற்பத்தி, முகாமைத்துவம், பதப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு மீன்வளத்தின் பெறுமதி சேர்த்தல் ஆகியவற்றிற்குமாக 3 நேரடி மீன் போக்குவரத்து லொறிகளை வழங்கும். ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி தனது உரையில், “ஜப்பானும் இலங்கையும் இரண்டு தீவு நாடுகளும் நமது பொருளாதாரங்கள் மற்றும் கலாசாரங்களில் மீன்வளத்தின் முக்கியத்துவத்திற்கான ஆழமான வேரூன்றிய பாராட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த பகிரப்பட்ட முக்கியத்துவத்தை உணர்ந்து, ஜப்பான் 2023 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் மீன்பிடி அபிவிருத்திக்கு, குறிப்பாக கடல்சார் துறையில் ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பில் உறுதியாக உள்ளது. எமது தொடர்ச்சியான முயற்சிகளுடன் இந்த புதிய செயற்திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம், இலங்கையின் மீன்பிடித் துறையை வலுப்படுத்த ஜப்பான் உறுதிபூண்டுள்ளது. அதன் மூலம் உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்படும்ரூஙரழவ் என்று குறிப்பிட்டார். “இலங்கையின் உள்நாட்டு மீன்பிடித் துறையானது வரலாற்று ரீதியாக அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது” என கடற்றொழில் அமைச்சராகிய டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். “இருப்பினும் சமீபத்திய நிதி சவால்கள் துறையில் தேவையான வளங்களை இழந்து, உள்நாட்டு மீனவ சமூகங்கள் மற்றும் கிராமப்புற மக்களிடையே கஷ்டங்களை அதிகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டம் இத்துறையை புத்துயிர் பெறச் செய்வதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான நன்மைகளை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கிய படிமுறையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார். சுமார் 3,000 உள்நாட்டு மீனவர்கள், சிறு குஞ்சு பொரிக்க வைத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள 40 விவசாயிகள் மற்றும் மீன் தீவனம் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 20 விவசாயிகளுக்கு நேரடியாக ஆதரவளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், குடும்ப உறுப்பினர்கள், நுகர்வோர், கருவாடு உற்பத்தியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் பங்குதாரர்கள் உட்பட மறைமுக பயனாளிகள் மீது இது நேர்மறையான தொடர் விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற கூட்டாண்மைகள் நிலையான அபிவிருத்தியை உந்துவதில் கூட்டு நடவடிக்கையின் தாக்கத்தை நிரூபிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில், சமூகங்களுக்கு அதிகாரமளிக்கும் மற்றும் உள்நாட்டு மீன்பிடி போன்ற முக்கியமான துறைகளை வலுப்படுத்தும் ஒத்துழைப்புகளை வளர்ப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த திட்டத்தின் மூலம், நாங்கள் உணவு பாதுகாப்பை மட்டும் மேம்படுத்தவில்லை. கிராமப்புற வாழ்வாதாரங்கள், இலங்கையின் கிராமப்புற சமூகங்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம் என்று இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃப்ரான்ச் கூறினார். உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிப்பதன் மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது என்று இலங்கைக்கான குயுழு பிரதிநிதி விம்லேந்திர ஷரன் தெரிவித்தார். இந்தத் திட்டம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாது கிராமப்புற சமூகங்களின், குறிப்பாக உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, மீளெழுச்சியை வலுப்படுத்துவதும் ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்த்தேக்கங்களில் தன்னிறைவான வளர்ப்புமுறை சார்ந்த மீன்வளத்தை மேம்படுத்துவது வெறுமனே தேவையானது மட்டுமன்றிரூபவ் இச்சமூகங்களின் மேம்பாட்டிற்கு இது இன்றியமையாததாகும். இலங்கையின் கிராமப்புற சமூகங்களில் உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் மீளெழுச்சி ஆகியவற்றில் நீடித்த நேர்மறையான தாக்கங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டில் குயுழு உறுதியாக உள்ளது. https://www.virakesari.lk/article/181996
  18. ஏ9 வீதியில் விபத்து – இராணுவ சிப்பாய் பலி ! 9 பேர் காயம்! முல்லைத்தீவு – முறிகண்டி ஏ9 வீதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் 9 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் முறிகண்டி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்குச் சென்ற கெப் ரக வாகனமும் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 39 வயதுடைய இராணுவ சிப்பாயின் சடலம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://thinakkural.lk/article/300269
  19. நடக்கப்போவது என்ன தேர்தல்? எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா பொதுத்தேர்தலா என கயிறுழுப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறத்தால் மீண்டும் நாட்டிலும் ஆட்சியிலும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கான திரை மறைவு வேலைகள் தீவிரம் பெற்று வருகின்றன. மொட்டை மீண்டும் மலர வைத்து ராஜபக்‌ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சி பீடமேற்ற தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார் 7 மூளைக்காரரான பசில் ராஜபக்‌ஷ. தேர்தல் மேகங்கள் கருக்கட்டியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்‌ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளதால், தங்களின் ஆட்சியை மீள உருவாக்க முடியும், அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் குறிப்பிட்டளவான அரசியல்வாதிகள் குதூகலித்து பசில் ராஜபக்‌ஷவின் மீள் வருகையைக் கொண்டாடுகின்றனர். 7 மூளைக்காரரென மொட்டுத் தரப்பினரால் கொண்டாடப்படும் பசில் ராஜபக்‌ஷவினால் மீண்டும் ராஜபக்‌ஷ சகோதரர்களை ஆட்சி அரியணையில் ஏற்ற முடியுமா? கருகிய மொட்டை மீண்டும் மலர வைக்க முடியுமா என்பதே இன்று பலரினதும் கேள்வியாகவும் சந்தேகமாகவும் உள்ளது. இதற்கான விடையை அறிய வேண்டுமானால் சில வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். இலங்கையில் கடந்த 2005ஆம் ஆண்டு ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆட்சி மலர்ந்தது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெற்றார். பின்னர் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் தடவையாகவும் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். மூன்றாவது தடவையாக 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தனது அரசில் அமைச்சராக இருந்தவரான எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்டதால் 2015ஆம் ஆண்டு ஜனவரி 9இல் ராஜபக்‌ஷ குடும்பத்தின் முதல் கட்ட ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. இதனால் அடிபட்ட பாம்பாகச் சீறிக்கொண்டிருந்த ராஜபக்‌ஷ சகோதரர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, அரியணையில் ஏற இனவாத ஆயுதத்தை கையில் எடுத்தனர். இதன் பெறுபேறாக மீண்டும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ தனது சகோதரரான பசில் ராஜபக்‌ஷவை நிறுவனராகக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு ஜனாதிபதியானார். இதன் மூலம் மீண்டும் ராஜபக்‌ஷ சகோதரர்கள் அரியணை ஏறினர். 2019ஆம் ஆண்டு இறுதியிலிருந்து, தம்பி கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணனான மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர், அடுத்த அண்ணனான சமல் ராஜபக்‌ஷ அமைச்சர், பிரதமர் அண்ணனின் மகனான நாமல் ராஜபக்‌ஷ அமைச்சர், அமைச்சர் அண்ணனின் மகனான சஷீந்திர ராஜபக்‌ஷ இராஜாங்க அமைச்சர், சகோதரியின் மகனான நிபுண ரணவக்க பாராளுமன்ற உறுப்பினர் என்று ராஜபக்‌ஷ குடும்பமே நாட்டை ஆளத் தொடங்கியது. 2005, 2010. 2019 ஜனாதிபதித் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்‌ஷவும் கோட்டபாய ராஜபக்‌ஷவும் ஜனாதிபதிகளாக வெற்றிபெற பல தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டவர் ராஜபக்‌ஷ சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்‌ஷ. இதனால்தான் அவரை அரச தரப்பினர் ‘7 மூளைக்காரர்’ என அழைத்துக் கொண்டாடினர். ராஜபக்‌ஷ குடும்பத்தை ஆட்சி அரியணையில் ஏற்றிய பசில் ராஜபக்‌ஷவினால் அந்த குடும்ப அரசில் கோலோச்ச முடியாத நிலை சட்ட சிக்கல்களினால் ஏற்பட்டிருந்தது. 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்‌ஷவின் அமைச்சரவையில் பொருளாதார அபிவிருத்திக்கான அமைச்சராக இருந்த பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்‌ஷ பதவியேற்ற ஆரம்பத்தில் அரசில் இருக்கவில்லை. இவ்வாறான நிலையில்தான், கோட்டபாய ராஜபக்‌ஷவின் தவறான கொள்கை, அரசியல் அறிவின்மை காரணமாக ஆட்சியும் நாடும் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தது. இதற்காகவே காத்திருந்த 7 மூளைக்கா ரரான பசில் ராஜபக்‌ஷ தனது விசுவாச அமைச்சர்கள், எம்.பிக்களை தன்னை தேசியப் பட்டியல் ஊடாக எம்.பியாக்குமாறு அழுத்தங்களை கொடுங்கள் என உசுப்பி விட்டார். இதனையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிகளைத் தீர்க்க வேண்டுமானால் பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் வந்து மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன. பசில் ராஜபக்‌ஷவை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக்க கோரி, ஆளும் கட்சியின் 113 எம்.பிக்கள் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தனர். அதேவேளை, தேசியப் பட்டியலில் பெயரில்லாத, மாவட்டப் பட்டியலில் பெயரில்லாத ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு பிரவேசம் செய்வதானது அரசியலமைப்புக்கு முரண் இதனைவிடவும், இறுதியாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது, பசில் ராஜபக்‌ஷ இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தமையால் அவ்வாறு நியமிக்கப்படுவதானது அரசியலமைப்புக்கு முரணானதென்ற எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் சட்ட நிபுணர்களிடம் இருந்து எழுந்தன. பசில் ராஜபக்‌ஷ அமைச்சரானால் தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்ற திட்டமிட்ட பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதால் மக்களும் நம்பத் தொடங்கினர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்ப்புக்களையெல்லாம் மீறி நாட்டை, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜயந்த கோட்டேகொட எம்.பி. பதவி விலக அதனூடாக 7 மூளைக்காரரான பசில் ராஜபக்‌ஷ எம்.பியாக்கப்பட்டு, நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், இவரது நிதி அமைச்சுப் பதவிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான நிர்வாகத்தின் காரணமாகவே நாடு கடனில் மூழ்கியது. ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடின. வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டு வரிசை யுகம் ஏற்பட்டு மக்கள் வாழ்வதற்காகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, அரசின் பங்காளிக் கட்சிகளுடனும் பசில் ராஜபக்‌ஷ நல்லுறவு வைத்திருக்கவில்லை. பங்காளிக் கட்சிகளை இல்லாதொழித்து, ஒரே கட்சியாகப் பெரமுனவை வளர்த்தெடுத்து அதன்மூலம், பங்காளிக் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை நிலைப்படுத்துவதே அவரின் திட்டமாக இருந்தது. இதனால் பங்காளிக் கட்சிகளுக்கு எதிராக பசில் ராஜபக்‌ஷ எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளித்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் அரசிலிருந்து வெளியேறின. இதனால் கோட்டபாய ராஜபக்‌ஷ அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அத்துடன், வரிசை யுகத்தினால் மக்களும் பொறுமையிழந்து கிளர்ச்சியில் ஈடுபட்டதனால் ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபாய ராஜபக்‌ஷவும் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷவும் விரட்டியடிக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, நிதி அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து பின்னர் எம்.பி. பதவியிலிருந்து பசில் ராஜபக்‌ஷவும் விலகவும் நேரிட்டதுடன், நாட்டிலிருந்து பின்கதவு வழியாக அமெரிக்காவுக்கும் தப்பிச் சென்றார். அத்துடன், இந்த 7 மூளைக்காரரான பசில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ராஜபக்‌ஷக்களைத்தான் உயர் நீதிமன்றமும் ‘‘பொருளாதார படுகொலையாளிகள்’’ என அண்மையில் அறிவித்துள்ளது. இவ்வாறு நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவராக இருந்து விட்டு, மக்கள் கிளர்ச்சியை அடுத்து, பின் கதவால் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தயவால் முன் கதவால் நாடு திரும்பியுள்ள பசில் ராஜபக்‌ஷ தான் நாட்டையும் பொருளாதாரத்தையும் காக்கப்போகும் காவலனாக மொட்டுக்கட்சியினர் ஊதிப் பெருப்பித்துக் கொண்டிருக்கின்றனர். பசில் ராஜபக்‌ஷவும் நாடு திரும்பியது முதல் தேர்தல்கள் தொடர்பில் தீவிர செலுத்தி வருவதுடன், ஊடகங்களை வரவழைத்துப் பரபரப்பு பேட்டிகளையும் வழங்கி, மொட்டு மீண்டும் மலர்கின்றது. என்றவொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். ஆனால், மக்கள் கடந்த காலத்தை மறக்கும் மறதி நோய்க்கு உட்படாதவரை மொட்டு மீண்டும் மலராது. இது ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கும் நன்கு தெரியும் என்பதனால், கடந்த காலத்தை மக்களை மறக்க வைப்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கற்றுக்கொண்ட பாடம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நடக்கப்போவது-என்ன-தேர்தல்/91-336329
  20. யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் adminApril 26, 2024 யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://globaltamilnews.net/2024/202016/
  21. வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக விற்ற யாழ்.வாசி விளக்கமறியலில் adminApril 26, 2024 வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார். அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன் , மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார். இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை , மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/202012/
  22. காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/
  23. ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -( http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
  24. அடுத்த வாரம் பார்ப்போம். ஜூன் 2 ஆரம்பம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.