Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34940
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு பயணத் தடை November 11, 2020 மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளது. உடனும் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்ப்படுத்தப்பட்ட இந்தத் தடையானது எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து மக்கள் வௌியேறவோ அல்லது உள்நுழையவோ எவருக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நாளாந்த கொவிட் செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி கருத்துரு தொிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். #மேல்மாகாணம் #பயணத்தடை #தனிமைப்படுத்த https://globaltamilnews.net/2020/152930/
  2. கொவிட் அச்சத்தில் சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரியது - சுகாதார அமைச்சின் பேச்சாளர் (எம்.மனோசித்ரா) கொவிட் அச்சத்திற்குள்ளான சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும். எவ்வித அறிகுறிகளும் அற்ற தொற்றாளர்களில் 80 சதவீதமானோர் குணமடைந்துள்ளதைப் போன்று அறிகுறிகளுடன் இனங்காணப்பட்ட பலரும் முழுமையாக குணமடைந்துள்ளார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , உடல் நலக்குறைவு அல்லது ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருந்துவிடக் கூடாது. உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். கொவிட் தொற்று தொடர்பான அச்சத்தில் சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும். இது செய்யக் கூடாததும் இடம்பெறக்கூடக் கூடாததுமாகும். அவ்வாறு அச்சமடைய வேண்டிய தேவை கிடையாது. கொரோனா தொற்றுக்குள்ளாகி எவ்வித அறிகுறிகளும் இன்றி காணப்பட்டோரில் 80 சதவீதமானோர் இலங்கையில் குணமடைந்துள்ளனர். அறிகுறிகளுடன் தொற்றுக்குள்ளானவர்களும் அதிலிருந்து குணமடைந்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் அருகில் இருந்தாலும் முகக் கவசத்தை முறையாக அணிந்திருந்தால்; ஏனையோர் தொற்றுக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும். கொவிட்டுடன் வாழ்வதற்கு இந்த அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/94144
  3. நாட்டில் இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று – பொலிஸ் ஊடக பேச்சாளர் மேல்மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நாட்டில் இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 6 பொலிஸ் அதிகாரிகள் குணமடைந்துள்ளதுடன் 250 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் 355 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/நாட்டில்-இதுவரை-460-பொலிஸ்-அ/
  4. முடக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உள் நுழையவோ, வெளிச் செல்லவோ தடை! (எம்.எப்.எம்.பஸீர்) நாடளாவிய ரீதியில் இன்று முதல் முற்றாக முடக்கப்பட்டுள்ள, 25 பொலிஸ் பிரிவுகள் உட்பட 32 பிரதேசங்களுக்கு உள் நுழைவதும், அங்கிருந்து வெளிச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். தொழில் உள்ளிட்ட எந்த காரணத்துக்காகவும் முடக்கப்பட்ட பகுதிக்குள் உள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டிய அவர், அதனை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக சுட்டிக்காட்டினார். நேற்று மாலை விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, தனிமைபப்டுத்தல் ஊரடங்கு நிலை நீக்கப்பட்ட பின்னர், இன்று அதிகாலை 5.00 மணி முதல் அமுல் செய்யப்படும் விஷேட முடக்க நிலையின் போது நடந்துகொள்ள வேண்டியது எப்படி என தெளிவு படுத்தும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, கொழும்பு மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவுகள், அதாவது மட்டக்குளி, முகத்துவாரம், புளூமெண்டல், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், கரையோரப் பொலிஸ், ஆட்டுப்பட்டித்தெரு, மளிகாவத்தை, தெமட்டகொட, வெல்லம்பிட்டி, பொரளை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது முடக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை தவிர கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, பேலியகொடை, கடவத்த, றாகம, நீர்கொழும்பு, பமுனுகம, ஜாஎல மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய 8 பொலிஸ் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை மற்றும் இங்கிரிய ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளும், குலியாபிட்டிய பொலிஸ் பிரிவும் முடக்க்பபட்டுள்ளன. கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் முடக்க நிலை இருக்கும். இந்த 25 பொலிஸ் பிரிவுகளுக்கு மேலதிகமாக, பாணந்துறை - வேகொட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவையும், குருநாகல் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி, கொழும்பின் மெத்சந்த செவண, மிஹிஜய செவண, முகத்துவாரம் ரன்மிண செவண, மத்தேகொட சிரிசந்த உயன தெமட்டகொட, மாளிகாவத்தை என்.எச்.எஸ். குடியிருப்பு தொகுதிகளும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட பொலிஸ் பிரிவுகள், ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறவோ வெளியிடங்களை சேர்ந்தவர்கள் இந்த பொலிஸ் பிரிவுகளுக்குள் பிரவேசிக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. குறித்த பொலிஸ் பிரிவுகளில் இருப்பவர்கள் தொழில் நிமித்தம் கூட அங்கிருந்து வெளியேற முடியாது. முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமது நிறுவன ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை நிறுவங்கள் தவிர்க்க வேண்டும். ஆபத்து மிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளே முடக்கப்பட்டுள்ளன. எனவே ஆபத்தான இடங்களில் இருந்து ஊழியர்களை சேவைக்கு அழைப்பது மிக அபாயகரமானது. எவ்வாறாயினும் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விநியோக நிலையங்கள், பல்பொருள் வர்த்தக நிலையங்கள் மருந்தகங்கள், வீடுகளுக்கே சென்று பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதிகளுக்கு வெளியில் இருந்து விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க இதுவரை அனுமதியில்லை. அது தொடர்பில் இன்று ஆராயப்படும். அரச ஊழியர்கள், பொலிஸார், ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய சேவைகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்களும் அதே பகுதிகளில் தங்கியிருக்க வேண்டியது அவசியமாகும். எவ்வாறாயினும், ஏதேனும் சுகாதார தேவை மற்றும் அத்தியாவசிய தேவை அல்லது கொரோனா தொற்று அல்லாத வேறு நோய்களுக்காக மருந்தை பெற வேண்டிய அவசியம் காணப்படின் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்வதற்கான அனுமதியளிக்கப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் இருதய நோயாளர்கள் போன்றோருக்கு இந்த அனுமதி கிடைக்கும். இவையல்லாத வேறு ஏதேனும் காரணங்களுக்காக வெளியில் செல்லும் தேவையுடையவர்கள், தமது பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலையம், சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதனைவிட இன்று முதல் ஊரடங்கு நிலைமைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட அல்லது முடக்கப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்திச்செல்ல முடியாது. பிரதான வீதிகள் முடக்கப்பட்ட பகுதிகளை அண்மித்து காணப்படும் பட்சத்தில் அந்த பகுதிகளை ஊடறுத்து பயணிக்க முடியும். ஆனால் நிறுத்த முடியாது. ரயில்களும் அவ்வாறே. மேல் மாகாணத்துக்குள் நுழையும் அதி வேகப் பாதைகள் திறக்கப்பட்டாலும், அதன் நுழைவாயில்களில் பொலிஸார் விஷேட கண்காணிப்பு பணிகளில் அமர்த்தப்படுவர் என தெரிவித்தார் https://www.virakesari.lk/article/93977
  5. மேல் மாகாணத்தில் 235 பொலிஸாருக்கு கொரோனா Published by J Anojan on 2020-11-08 11:31:09 மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மொத்தம் 235 பொலிஸ் அதிகாரிகள் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அதன்படி தற்போது சிகிச்சை பெறும் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 229 ஆகும். இது தவிர தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு குறைந்தது 300 பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் சுய தனிமைப்படுத்தலில் 1,425 பொலிஸார் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/93927
  6. ஹொரணை ஆடைத் தொழிற்சாலையில் 159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 5600 க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் ஹொரணை, குருகொட ஆடைத் தொழிற்சாலையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் 81 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இவ் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. மேலும் 2,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகளின் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஹொரணை நிர்வாக பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, சில தினங்களுக்கு முன் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் புளத்சிங்கள யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அந்த ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டு ஊழியர்களுக்கு பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில் நேற்றைய தினம் வரை 68 பேருக்கு கொரோானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://www.virakesari.lk/article/93885
  7. வத்தளையில் உள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 119 பேருக்கு கொரோனா November 6, 2020 வத்தளை பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா பரவியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 119 பேருக்கு ஒரு கொரானா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலையில் 697 பேர் வேலை செய்வதாகவும் இவர்களில் சுமார் 400 வரையிலான அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர. பரிசோதனையின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/86644
  8. கொரோனாவும் – இலங்கையும்… November 6, 2020 கொழும்பில் 2000ற்கு மேற்பட்டோருக்கு கொரோனா… கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன இன்று தெரிவித்தார். இதேபோன்று தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டது இதற்கமைவாக கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் என குறிப்பிடப்பிட்டுள்ளார். COVID-19 வைரஸ் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட்டுள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு நிவாரணத்தை வழங்குவதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக பிரதமர் அலுவலகத்தின் மூலம் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதற்கமைவாக அனைத்து குடும்பங்களுக்கும் இந்த நிவாரண உதவியை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொள்ளாது ஒரு குடும்பத்திற்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டு உலர் உணவுப்பொருட்களை வழங்குமாறு 13 பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் அதாவது இரண்டு வாரங்களுக்கு போதுமான ரூபா 10,000/= பெறுமதியான பொருட்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பத்தில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின் கிராம உத்தியோகத்தவர் மூலம் அது தொடர்பாக உறுதிப்படுத்தப்படவேண்டும் அவர்களுக்கு தனித்தனியாக உணவு பொருள் பொதி வழங்கப்படும். சுகாதார அதிகாரி அல்லது இந்த தனிமைப்படுத்தல் குடும்பங்களின் நலன்களைப் பேணுவதற்காக ஒவ்வொரு காவல் துறைப் பிரிவிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடிக்கடி வீடுகளுக்கு அருகில் காணப்படுவார். அவருடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிக்கு இதுதொடர்பான தகவலை வழங்கினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கே வந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வார். அப்படியும் இல்லாதபட்சத்தில் இதற்கென உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கொழும்பு பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு உங்களது உலர் உணவுப் பொதியை பெற்றுக் கொள்ள முடியும். அதற்கான தொலைபேசி இலக்கம் வருமாறு 011 236 9139 பிரதேச செயலாளர் இது தொடர்பாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன மேலும் தெரிவித்தார். வத்தளையில் 115க்கு கொரோனா… வத்தளையில் உள்ள விளையாட்டுத் தொழிற்சாலையில் 115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. ராகம காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு (ஓஐசி) கொரோனா… ராகம காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு (ஓஐசி) கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியாகி உள்ளது. நேற்றைய தினம் (05.11.20) 383 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் (05.11.20) 383 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும், மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்படையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 92 ஆக உயர்வடைந்துள்ளது. அதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து 765 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து நாளொன்றில் அதிகளவானோர் குணமடைந்த நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கையுடன், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக மரணங்கள் நேற்று(05) பதிவாகின. நேற்றைய நாளில் 5 மரணங்கள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணரத்னவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையுடன், நாட்டில் இதுவரையில், கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மரணித்த 5 பேரில், மூன்று பேர் வீடுகளிலேயே மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2020/152722/
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார் ஐயா!🎉🎉🎉
  10. யாழ். உடுவிலில் 9 வயதுச் சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி! உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மேலும் 9 வயதுச் சிறுமி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். உடுவில், சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் இன்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனையில் நட்சத்திர விடுதியில் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று திரும்பிய நிலையில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகளும் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் நால்வரிடமும் பி.சி.ஆர் மாதிரிகள் நேற்று பெறப்பட்டன. அவர்களில் 9 வயதுச் சிறுமிக்கே இவ்வாறு கோவிட் -19 தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார். தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு முதல் பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி – உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/93590
  11. யாழ் மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவது முற்றாக தடை யாழ்ப்பாண மாநகர முதல்வர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இணைந்து இன்றைய தினம் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு மற்றும் அரசினால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் நடைமுறைப்படுத்தினர்.குறித்த செயற்பாட்டின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள அனைத்து கடைகள்,பேருந்து நிலையம் நவீன சந்தை தொகுதி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியில் சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் அரசினால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினர். இந்நிலையில் மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாக இடைநிறுத்த வேண்டும் என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்ட் அறிவித்துள்ளார்யாழ்.மாநகர சபையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ்.மாவட்டத்தில் கொரோனா மிக மோசமடைவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. யாழ்.மாவட்டத்திற்கு வெளியே இருந்து வருபவர்கள் தொடர்பாக, இன்றும் மத்திய அரசாங்கம் இறுக்கமான நடைமுறைகளை அறிவித்துள்ளது. யாழ்.மாவட்டத்திற்குள் வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிடின், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்குள் உட்படுத்தப்படுவார்கள்.மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். யாராவது வந்தால், உரிய அதிகாரிகளிடம் அறிவித்தல்விடுக்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளார்.வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும், பேருந்துகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம். எமது பேருந்துகளைப் கூட கட்டுப்படுத்தியிருக்கின்றோம். எதிர்வரும் நாட்களில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம்.யாழ்.நகரப் பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு எந்தத் தடையையும் நாங்கள் தற்போது விதிக்கவில்லை. உணவகங்களில் மக்கள் அமர்ந்திருந்து உண்ணுவதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் தயாரித்த உணவை,பொதிகள் மூலம் வழங்குவதற்க வேண்டும் என யாழ்.மாநகரசபை சகல உணவக உரிமையாளர்களுக்கும் ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது.உணவக உரிமையாளர்கள் இந்த நடைமுறைக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பொது மக்கள் உணவகங்களில் அமர்ந்திருந்து உண்ணுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும், இந்த நடைமுறைகளைப் கண்காணிப்பதற்கு, பொலிஸ் அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மாநகரத்திற்குற்பட்/
  12. காலவரையறையின்றி மூடப்பட்டது சிகிரியா சுற்றுலாத்தலம் Published by T. Saranya on 2020-11-02 11:28:50 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக சிகிரியா காலவரையறையின்றி மூடப்படுவதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது. சிகிரியா தொடர்பாக போலி செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளதோடு, சிகிரியா அருங்காட்சியகத்திற்கு நுழைய அனுமதிக்கப்படாது என்றும் சிகிரியா திட்ட மேலாளர் துசிதா ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கலாசார நிலையத்துக்கு சொந்தமான சிகிரியா திட்ட அலுவலகத்தின் அன்றாட நடவடிக்கைகள் எவ்வாறாயினும் செயல்படும் என தெரிவித்துள்ளார். சிகிரியாவைப் பார்வையிட உல்லாசப் பிரயாணிகளின் வருகை குறைந்துள்ளதால் அதிக வனவிலங்குகள் நடமாடுவதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/93446
  13. பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களை குறித்து ச.பொட்டு அம்மான் அவர்கள் கூறுகையில்.! தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு. சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் உரையாற்றுகிறார், அவரது உரையில் தமிழன் சார்ந்த பெருமிதம், தமிழினம் சுதந்திரம் பெறத்தகுதியான இனமாக, வீரமுள்ள இனமாக வளர்ந்துவிட்டது என்ற நிம்மதி. எல்லோரும் மகிழ்ச்சியிலும், பெருமிதத்திலும் கலந்திருந்தோம். உணவுக்காகக் காத்திருந்த வேளையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வன் உணவுண்ண தாமதிப்பது நல்லதல்ல என தலைவர் சங்கடப்பட்டு அவசரப்படுகிறார். தனக்கென தனியாக அவசரமாகத் தருவிக்கப்பட்ட உணவைப் புறக்கணித்து, “எமது வான்புலிகளைச் சிட்டுக்குருவிக்கு ஒப்பிடுவதா? அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா?” எனத் தலைவரின் உரையை மீள எடுத்துச் சொல்லி பெருமிதமும் பாராட்டும் இழையோட வான்புலிகளுடன் அன்பும், பம்பலுமாக தமிழ்ச்செல்வன் கேலி பேசுகிறார். கதைத்து – காத்திருந்து – உணவுண்ட பின்னரும் கதைத்திருந்தோம். நிகழ்வின் மகிழ்விலும், உணவின் சுவையிலும் இருந்த உரையாடல் தலைவரைப் பற்றியும், அவரது பாதுகாப்பு, ஆரோக்கியவாழ்வு என்பன பற்றியதாகவும் அமைந்து விடைபெற்றபோது நாம் அறிந்திருக்கவில்லை அதுதான் எங்களது கடைசிச் சந்திப்பு என்று, ***** **** ****** எல்லாவற்றிலும் மாற்றம்வரும். ஆனால் சிலது மாறாது. காலமும், கோலமும் நவீனமானாலும், அறிவும் ஆற்றலும் மேம்பட்டு வளர்ந்தாலும், உடையிலும் பேச்சிலும் மெருகு பெற்றாலும், உள்ளத்தாலும் இன்னும் பலவற்றினாலும் மாறாமலிருந்தான் தமிழ்ச்செல்வன். தலைவருக்கு இப்போது தமிழ்ச்செல்வன் இளவயது மெய்க்காப்பாளனோ அல்லது இளம் போர்த் தளபதியாகவோ அல்ல. அவன் அரசியல் தலைவன். மக்களை வழிநடத்தும் மக்களின் தலைவன். ஆனால் இவனோ இப்பொழுதும் அண்ணையின் குழந்தையாகவே தன்னை நினைப்பான். தன் திருமணத்தின் போது அண்ணை வரவேண்டும். ஆட்கள் வந்தால் அண்ணை வரமாட்டார். தமிழ்ச்செல்வனது திருமணச்செய்தியை நாம் கேள்விப்பட, அதற்கிடையில் தமிழ்ச்செல்வனது கடிதம் திருமணஅழைப்பு என்றும் இல்லாது, செய்தியென்றும் இல்லாது வாழ்த்தும், ஆசியும் வேண்டி, சேதிசொல்லும் கடிதம். மடல்கிடைத்து நாம் அங்குபோகையில் பாலாஅண்ணை வீட்டில் தலைவரின் முன்நிலையில் திருமணம்முடிந்து தம் வீட்டில் இருக்கிறார்கள் மாப்பிள்ளையும், பொம்பிளையும். ஒருநாள் கடற்கரையில் கடலலை கால்தொட பேரலையின் சத்தத்தில் பயந்துபோனாள் குழந்தை, “ஐயோ பெரியப்பா” என்று சொல்லி தலைவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாளாம் தமிழ்ச்செல்வனின் மகள் அலை, “என்னடா உன்ரை மகள் அலை கடலலைக்குப் பயப்படுகிறாள்” என பம்பலாய் சொன்ன தலைவரின் வார்த்தை தமிழ்ச்செல்வனுக்கு வேதம் – சவால் – செய்தி. சிலநாட்கள் கழித்து ரேகா சொன்னான், “அலைக்கு இப்போ வீட்டில் கிணற்றடித் தொட்டியில் நீர்நிறைத்து நீச்சல்ப்பயிற்சி நடக்குது.” உலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி. கதைத்துப்பேசி வாகாக உரையாடக்கூடிய ஆற்றலுள்ள பெரியமனிதன். ஆனால் இவனோ இந்தியஇராணுவ காலத்திலும், ஆனையிறவுக் களத்திலும், இன்னும்பல களங்களிலும் சுழன்றாடிய போராளி. எம்விடுதலைக்கு வழிவிடாது எம்மக்களைக் கொன்றுகுவிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வெஞ்சினம் கொண்ட அதேபோராளி. தமிழ்ச்செல்வன் தங்கள்பக்கம் வருகிறார் என எங்காவது ஓரிடத்தில் அல்லது ஒருமுகாமில் தடல்புடல் உணவு தயாராகியிருக்கும். ஆனால் இவனோ இந்தியன் ஆமிக்காலத்தில் அம்மை வருத்தக்காரரைச் சுகமாக்கித் தருகிற ஆச்சியிடம் – மந்துவில் ஆச்சியிடம் – பழஞ்சோற்றுக்குழையலுக்குப் போயிருப்பான். முக்கிய சந்திப்பில் வெளிஆட்கள் வந்துபேசி, பேசிமுடித்து உணவுநேரம், ஆடம்பர மேசையில் அறுசுவை உணவு காத்திருக்கும். கதைக்க இனி விடயம் இல்லையென்ற நிலையிலிருந்து, சந்தர்ப்பமும் சரியாக அமைந்துவிட்டால், வனவள சத்தியின் இடத்தில் கூழ் – அதுவும் மட்டுவில் தலைவரின் கைவண்ணத்தில் கூழ் – நினைவுக்குவந்து ஆளை அங்கு இழுத்துப்போகும். ஆண்டின் முதலாம்நாள் – தன்மனதில் நினைத்த சிலவற்றை தலைவர் பகிர நினைக்க – எனக்குக் கிடைத்தது வாய்ப்பு ‘தலைவரிடமிருந்து காலைவேளை அழைப்பு’ தலைவர் தனதுஎதிர்பார்ப்புக்களினை, எண்ணங்களினை எடுத்துச் சொல்கிறார். உரையாடலுக்கிடையில் செய்தி, “தமிழ்ச்செல்வன் பிள்ளைகளுடன் வந்துள்ளார்.” தமிழ்ச்செல்வனது மகன் ஒளிவேந்தனது பிறந்தநாள். தலைவரின் ஆசிவேண்டி பெரியப்பாவிடம் பிள்ளைகளை அழைத்து வந்திருந்தான். திடீர்வருகை, பிள்ளைகளுக்குப் பொருத்தமான உணவில்லை. பெரியவர்களின் உணவுதான். பேச்சுவாக்கில் தமிழ்ச்செல்வன் சொல்லிவிட்டார், “அலைக்கு இடியப்பம் அவ்வளவு விருப்பமில்லை, சாப்பிடமாட்டாள்.” ஆனால் பிள்ளையோ இடியப்பத்தை விரும்பிச் சாப்பிட்டாள். நா ஊறுபட்டுவிடக்கூடாது, கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். “வீட்டில் அப்பா தாற இடியப்பம் வேறை, இது பெரியப்பா தாற நல்ல இடியப்பம்” என்றுசொல்லி தலைவர் பிள்ளையைக் கொஞ்ச தமிழ்ச்செல்வனின் புன்சிரிப்பு அசட்டுச்சிரிப்பாகி, “இனி இடியப்பம் அவிக்கவும் இஞ்சைதான் பழகவேணும்” என்று சொல்லிச்சிரித்தான். எல்லாம் சரிதான் தலைவருக்கு விட்டுக்கொடாமல் தமிழ்ச்செல்வன் போட்டிக்கு நிற்கும் வேளையும் ஒன்றுண்டு. அது கைத்துப்பாக்கிச் சூட்டுக்களம். தலைவர் சுடுவார். அநேகமாய் ரவைகள் பத்தும் பத்தில்(மையம்-புள்) படும். சிலவேளை ஒன்பது அல்லது எட்டு ரவை மையத்தில்பட்டு மீதிரவை சற்றுவிலகிப் பட்டுவிட்டால் தொடங்கும் போட்டி. “நீ ஒருக்கா சுட்டுப்பார்” என்று தமிழ்ச்செல்வனை அழைக்க, சிலவேளைகளில் அவன் பத்து ரவையையும் மையத்திற்குச் சுட்டு துப்பாக்கியில் பிழையில்லை என்று நிரூபிப்பான். அடுத்த சுற்றில் நான் சுடுகிறேன்பார் என்று தலைவர் தயாராக, கைத்தடியைப் பின்பக்கமாக முட்டுக்கொடுத்து காலை நிலத்தில் ஊன்றி தமிழ்ச்செல்வன் போட்டிக்குச்சுட களைகட்டும் போட்டி. அலெக்ஸ், ஆதவன் (கடாபி) என சூட்டு விற்பன்னர்களுடன் களைகட்டும் போட்டி, இருள் சூழ்ந்த வேளையில் முடிவதும், அல்லது இருள் சூழ்ந்த பின்னரும் மின்சூழ் வெளிச்சத்தில் தொடர்வதுமாய் நடந்து முடியும் போட்டி. தமிழ்ச்செல்வன் அடிப்படைப்பயிற்சி முகாமில் அடையாளம் காணப்பட்டதே அவனது சூட்டுத்திறனால் என்பர். உடற்பயிற்சியில் எல்லோரும் ஓடிப்பயிற்சி செய்ய, பயிற்சிப்பொல்லுடன் நடந்தே மைதானத்தை வலம் வருவார் தமிழ்ச்செல்வன். பயிற்சி நிறைவு நாளன்று சூட்டுப்பயிற்சியின்போது சுடக்கொடுத்த ஒரேயொரு ரவையை மையத்திற்குச் சுட வியந்தார் பொன்னம்மான். அது குருட்டாம் போக்கில் பட்டிருக்குமோ என்று அடுத்தது கொடுக்க அதுவும் மையத்தில் பட அடுத்தடுத்து ஒவ்வொன்றாகக் கொடுக்க அத்தனை ரவைகளும் மையத்தில்பட, ‘இனி உனக்கு ரவையில்லை ஓடடா’ என பொன்னம்மான் செல்லமாய், பெருமையாய் ஓட விரட்டியதில் அடையாளம் காணப்பட்டான் தமிழ்ச்செல்வன். அதன்பின்னர், பொன்னம்மான் தலைவருக்கு தமிழ்ச்செல்வனை அறிமுகம்செய்ததும், சிலகால மருத்துவப்பணிகளின் பின்னர் தலைவரின் உதவியாளராக ஆனதும் பழையகதை. அடிப்படைப்பயிற்சிமுகாமில் செய்யாத அல்லது செய்யத்தவறிய உடற்பயிற்சிகளை தலைவரின் கவனிப்பில் செய்ய வேண்டி வந்தது இன்னொரு பம்பல்கதை. பயிற்சிமுடித்து சொர்ணம், இம்ரான் ஆகியோரின் பொறுப்பிலிருந்த தலைவரின் மெய்க்காப்பாளர் அணியில் செயற்பட்டதுமாக இருந்த அவன் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய போது யாழ்ப்பாணத்தில். 1987 இன் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து தலைவர் நாடுதிரும்பி, வேலைகளை மேற் பார்வையிட்டு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார். யாழ்மாவட்டத்தில் மகளிர்பிரிவானது “சுதந்திரப்பறவைகள்” எனும் பெயரில் அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்தது. மகளிர் பிரிவினருக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவப் பயிற்சிகளை வழங்க முடிவெடுத்தபோது அதற்காக தலைவரின் நெறிப்படுத்தலில் ஆரம்பப்பணிகளை முன்னெடுத்தது தமிழ்ச்செல்வன்தான். தென்மராட்சிப் பொறுப்பாகவிருந்த கேடில்சின் வீரச்சாவைத் தொடர்ந்து தென்மராட்சிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதில் அடையாளப்படுத்தப்பட்டது தமிழ்ச்செல்வனது ஆளுமை. ஆளுமையும், அறிவும், அதிகாரமும் உயர்ந்து முன்நின்ற போதும் உள்ளிருந்த ஆத்மா அவனாகவேயிருந்தான். அதுவே தமிழ்ச்செல்வனது பெருமை. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். நாம் திட்டமிடுவதற்கு அவகாசம் எதையுமே எமக்குத்தராத திடீர்நெருக்குதல். தேசத்தின் விடுதலைக்கான பற்றுறுதி, எதற்காகவும் விடுதலைப்போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் முன்நிறுத்திய முடிவுகள். யாழ்ப்பாணம் கொக்குவில் எமது தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அவரைக் கொன்றுவிடும் முடிவில் தரையிறங்கினர் இந்திய இராணுவ அதிரடிப் பராத்துருப்பினர். இன்னொரு தளத்தில் நின்று விடுதலையை வழிநடாத்தவேண்டியது தலைவரின் கட்டாயமானது. தலைவரிடமிருந்து மனைவியாரும், பிள்ளைகள் இருவரும் பிரிந்து, தனித்திருப்பது தவிர்க்கமுடியாத தானபோது அவர்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றது தமிழ்ச்செல்வன். ஆரம்பசிலநாட்கள் அவன் ஒழுங்கு செய்து கொடுத்த வீடுகளில் மாறிமாறி நின்ற போதும், இந்தியப்படை வெறியாட்டமாடி மக்களை அச்சுறுத்தி, தலைவரது குடும்பமென குறிப்பிட்டு தேடத்தொடங்க, மதியக்காவும், பிள்ளைகளும் மிகவும் சிரமப்பட்டனர். மூன்றுவயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவருடன் தம்மையே குறிவைத்துநடந்த பெரும்தேடுதல்களில் சரியான உணவுமின்றி வீடுகளில், வயல்களில், ஆளில்லாக் காணிகளில் என்று அவர்கள் அக்காலப் பகுதியில் ஆருமின்றி அலையும்நிலை வந்தது. எல்லாஊரையும் ஒரே வேளையில் வளைக்கும் பெரும்படை முற்றுகை. ஏதாவதொரு ஊருக்குள் தலைவரின் குடும்பம் சுற்றிவளைக்கப்பட இன்னொரு ஊருக்குள் அதேமாதிரி தமிழ்ச்செல்வனும் அகப்பட்டிருப்பான். இந்த நேரம் பார்த்து அந்தப்பகுதியில் இந்தியப் பத்திரிகை நிருபர்கள் இருவர் ஆண் பெண்ணாக நடமாட, அது தலைவரும், அவரது மனைவியும்தானென எண்ணி இந்தியப்படை தம் தேடுதலை உச்சமாக்க தலைவரின் குடும்பத்தினர் பட்டபாடு கொஞ்சமல்ல. மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டின் தகவலறிந்து சென்றனர் இந்தியப் படையினர். ஆட்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் உண்மையான தகவலொன்றை அறிந்துவிட்டனர். தலைவரின் மகள் குழந்தை துவாரகா நோயுற்றிருந்த தகவல் அது. அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட தீவிரநோயுற்ற பிள்ளையும், தாயும் தப்பிவிட்டதை அறிந்த படையினர் செய்தி வெளியிட்டு விட்டனர். வயிற்றோட்டத்தால் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இந்தியா வெளியிட்ட செய்தியின் உண்மை – பொய் தெரியாது கலங்கிநின்றது தேசம். எல்லோருடனும் எல்லாத்தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்த நேரமது. பலநாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனின் சிறுக டிதக் குறிப்பிலேயே தன் மகள் உயிருடனிருப்பதை அறிந்தார் தலைவர். அக்காவும், பிள்ளைகளும் மட்டுவில் சென்ற பின்னர் காணிக்கை அண்ணரின் வீட்டடியைச் சுற்றியே சுழலும் தமிழ்ச்செல்வனின் மனம். ‘எம் நாட்டின் தலைவரின் வீட்டாரை காப்பாற்றித்தந்த பெருந்தகை காணிக்கை அண்ணர்’ தலைவரது மனைவியும், பிள்ளைகளும் அங்கேதான் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தித் தெரிந்தபின் அவர்களை நோக்கிய இந்தியத் தேடுதல் அதிதீவிரமான போதும் நெஞ்சுரத்துடன் கைகொடுத்த நாட்டுப்பற்றாளர் அவர். தமது தேடுதலிலிருந்து தலைவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி அனுப்பியது அவர் தானென்று தெரிந்த போது இந்தியப் படையினர் தமது கைக் கூலிகளை ஏவிவிட்டு காணிக்கை அவர்களைச் சுட்டுக் கொன்றிருந்தனர். கிராமத்துச் சுற்றிவளைப்பில் இந்தியப்படை முற்றுகைக்குள் மதியக்காவும், பிள்ளைகளும் – முற்றுகைக்கு வெளியே நெஞ்சுபதறக் காத்திருப்பான் தமிழ்ச்செல்வன். ‘அவன் அவர்களைச் சந்திப்பதும் பிரச்சனை’ அவர்களை அடையாளம் காட்டுவதாய் அமைந்துவிடும். விலகியே இருப்பான். ஆனால் விலகாமல் இருப்பான். “தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த வேளையில் அலெக்ஸ் போல்” – அந்தக் காலத்தில் அவனது நம்பிக்கைக்குரிய போராளி வின்சன் – கெங்காதரன் மாஸ்ரரின் மகன் – மட்டுவில் சென்று மதியக்காவையும், பிள்ளைகளையும் பார்த்து விட்டு வரவேண்டும். இப்போது வந்துசேர்ந்திருக்க வேண்டுமே? காணவில்லையே? வின்சனுக்கு என்னவானது? அக்காவிற்கு, பிள்ளைகளுக்கு என்னவானது? நெஞ்சுபதற அன்று தமிழ்ச்செல்வன் மனம் துடித்து நின்றதை இன்றும் மறக்கமாட்டார்கள் அவனது நண்பர்கள். ஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி!. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார். அக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன். வின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை. இனி வேறு வழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்க முடியாததானது. இந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக் கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம் போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர். தலைவரின் குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. மிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றி வளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள். மட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி வருவார்கள் இவர்கள். சாதாரண கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து போனமைக்காகவே தமிழர்களைக் கொல்வதற்காக பீரங்கிகளை இயக்க உத்தரவிடும் இந்தியப்படை அதிகாரிகள் போராளிகளிடம் ஏமாந்தால் விட்டு விடுவார்களா என்ன? போராளிகள் தப்பிவிட்டதனால் ஏற்பட்ட களைப்பும், கோபமும் எம்மக்கள் மீது திரும்பும். இந்தியப் படையினரால் எமது தாய் நாடு முழுவதும் பட்டபாட்டிற்கு தென்மராட்சியும் விதி விலக்காகவில்லை. எந்தவொரு யுத்த முனைப்புமில்லாத சூழல். சாவகச்சேரி நகரத்து நவீன சந்தை. 1987 ஒக்ரோபர் 27 பகல் பட்டப்பகல் பதினொரு மணி| சந்தையில் திரளாகக் கூடிநின்ற எம்மக்கள்மீது உலங்குவானூர்தி மூலம் குண்டுவீசி ஆரம்பித்தது தென்மராட்சிக்கான படுகொலைப்படலம். காலை சாவகச்சேரி சந்தையில், அங்கேயே அன்றிரவு பஸ்சில், நுணாவில், கைதடியில், பளையில், மிருசுவிலில் என தென்மராட்சியின் நிலமெங்கும் எமதுமக்களது குருதிதெறிக்க வைத்தனர் இந்தியப்படைகள். எங்களது நாட்டிற்கு ஏனிவர்கள் வந்தார்கள்? ஏன் எம்மைக் கொல்கிறார்கள்? என்ற வினாக்களுக்கு விடைதெரியாமலேயே சாகும் எமதுமக்களுக்காக அழுது கொதிப்பார்கள் தமிழ்ச்செல்வனும், அவனது தோழர்களும். அவர்களது கொதிப்பும், துடிப்பும் இந்தியப்படையினருடனான களங்களில் வெடிக்கும். இந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பி வைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக் கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான். யாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத் தரும்” என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக் கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்ற விடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப் பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும் தென்னை மரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்ல பாதுகாப்பைத் தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது. அங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத் துப்பாக்கிகளுக்கும் ஓய்வு கொடுத்து பெரிய சுடுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பல மாத காலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோ மென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம். வரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உணவுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்லவுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி (இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுநிற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம் செறிந்த நாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்க முடியாத நாட்கள் அவை. வடமராட்சி நெல்லியடியில் டேவிட்டின் அணி பிறண் இலகு இயந்திரத் துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றிவிட்டது. மகேந்தியிடமிருந்து சில நாட்களில் பெருமிதத்துடன் தொலைத்தொடர்பு நடை பேசியில் ஒரு செய்தி. குணாவின் அணி கனகம்புளியடியில் பிறண் இலகுஇயந்திரத் துப்பாக்கி ஒன்றை எடுத்துள்ளது. தினேஸ் என்றபெயர் எதிரிகட்கு தெரியுமென்பதால் அவனோடு எப்போதுமிருக்கும் மகேந்தியின் பெயரில்தான் தமிழ்ச்செல்வனின் தொடர்புகள். தமிழ்ச்செல்வனது திட்டப்படி வாகனமொன்றில் சென்றஅணி வெற்றிகரமான தாக்குதலைச் செய்திருந்தது. தக்காளி என்ற உறுப்பினர் பெண்உடையில் சென்றிருந்தார். பொம்பிளை உடுப்புப்போட்டு தக்காளி நடந்ததையும், தக்காளியை பெண் என நினைத்து எதிரிகள் ஏமாந்ததையும் கதைக்க வெளிக்கிட்டால் சோறு தண்ணி தேவையில்லை. நுணாவிலிலும் இப்படித்தான் கண்ணிவெடி வைக்கமுற்பட அதை இந்தியப்படை கண்டுபிடித்துவிட்டது. அப்போதைய கண்ணிவெடிநிபுணர் பரணியை களத்திலிறக்கிவிட்டான் தமிழ்ச்செல்வன். கண்ணிவெடியை வைத்துவிட்டு வந்ததையும்,எதிரிக்குத் தகவல்சொல்பவர் இவராகவும் இருக்கலாம் என்று நம்பிய ஒருவரிடம், “கண்ணிவெடி வைத்திருக்கு. ஒருவரிடமும் சொல்லவேண்டாம். கொஞ்சம் விலகியிருங்கோ கவனம”| எனச் சொல்லிவிட்டு வந்ததையும், மேஜர் தாப்பா என்ற அதிகாரியும், இன்னும் பலபடையினருமாக சூழ்ந்துவந்து எடுக்க, எதனைச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ அதனை அந்தக் கண்ணிவெடி செய்துமுடித்ததையும் அதாவது எடுக்க வெடித்ததையும் கூறும் போது அந்தஇடம் கலகலத்து அதிரும். “சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம். “ஜீன்சிற்கு மாற விரும்புவோர் வாருங்கள்” என்று சொல்ல அங்கிருந்த அணியில் கையை உயர்த்தியவர்கள் இரண்டு பேர் தான். கொஞ்ச நாட்களாக ஜீன்ஸ் போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப் பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாக ஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப் படலை ஒன்றை படாத பாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேற முடியாத கடைசிஆள் பதறிப் போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம். கச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன் உடலெல்லாம் தோய, திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும் போதும் அந்த இடமெல்லாம் சிரிப்பில் அதிரும். தமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக் கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல். இந்தியப்படைகளுடன் சேர்ந்து எமதுமக்களைக் கொன்றுகொண்டிருந்த கைக்கூலிகள் மீது புகையிரத நிலையத்தடியில், சங்கத்தானையில், உசனில் என பற்பல தாக்குதல்கள் நடந்திருந்தன. மேலும் ஆங்காங்கே இந்தியப்படையை எதிர்கொண்டு சுட்டதும். தேடிப்போய்ச் சுட்டதுமான பல தாக்குதல்கள் இருந்தாலும்கூட தென்மராட்சியில் தமிழ்ச்செல்வன் அணிக்கு மகுடமாய் அமைந்தது மிருசுவிலில் அமைந்திருந்த இராணுவநிலையைத் தாக்கி அழித்ததுதான். மிருசுவில் – கண்டிவீதி நெடுஞ் சாலையில் – தேவாலய சுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படை நிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம் பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்து சென்றான் தமிழ்ச்செல்வன். அவனது தலைமையில் பார ஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்க வில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்ல வேளையாகபக்க உதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மாவின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது. நாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுடன் சேர்ந்துவந்தது வெற்றிச் செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமது தரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்கு நின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச் சுடமுடியாமல் இறந்து போனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவ அதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணி கரத்தையும் புரிந்துகொள்ளலாம். அதில் கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால் கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்ற முடியாமல் போனது தான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன். மிருசுவிலில் நண்பர்களான இளைஞர்களைப் பிடித்து இந்தியப் படையினர் சுட்டுக்கொன்றிருந்தனர். அதிலொருவர் சிவஞானசுந்தரம் – சிவரஞ்சன் என்பவர். அக்காலப்பகுதியில் இந்தியப் படையினர் அப்பாவி இளைஞர்களை இவ்வாறு கொல்வது அவர்களது வழமையான நடவடிக்கையாகவே இருந்தது. இதில் வழமையில்லாமல் நடந்தது என்னவென்றால் படுகொலைக்குள்ளான இளைஞனது அண்ணனான சிவசோதி தமிழ்ச்செல்வனைச் சந்தித்ததுதான மாணவனாக இருந்த தனது தம்பியின் படுகொலைக்காக பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தான் சிவசோதி என்ற இளைஞன். அவனைத் தயார்செய்து, இந்தியப்படையினரது பலவீனமான நிலையைக் கண்டறிந்து, வேவுபார்க்கவென கற்பித்து அந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைத் தானே தயாரித்ததுடன், தானே நேரடியாக தலைமைதாங்கிக் களத்தில் இறங்கினான் தமிழ்ச்செல்வன். அதுவுமல்லாமல் தனதுசுடுகலனை வேறொரு போராளியிடம் கொடுத்துவிட்டு கையெறி குண்டுகளுடன் எதிரியின் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி (LMG) நிலைக்குள் பாய்ந்துசென்று, அதனைச் செயலிழக்கச் செய்தவுடன் தனதுசுடு கலனைப் பெற்றுத்தாக்குதல் செய்தான். பதினைந்து பேரளவில் பங்குகொண்ட இந்தத்தாக்குதலில் தமிழ்ச்செல்வனுடன் பரணி, சிறி, ரூபன், வீமன், கந்தண்ணை, செல்ரன், ராகுலன், சேது, அம்மா, ரவிஅண்ணை, ரேகா, பாப்பா ஆகியோருமிருந்தனர். தனது சகோதரனது படுகொலைக்குப் பழிவாங்கவென இயக்கத்தைத்தேடி தமிழ்ச்செல்வனைச் சந்தித்த சிவசோதி, பின்னர் சிறந்தபோராளியாக, ஆற்றலுள்ள வேவுவீரனாக தமிழ்ச்செல்வனால் வளர்த்தெடுக்கப்பட்டான். நன்கு அறியப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் படைஅதிகாரிகள் மீதானதாக்குதலில் பங்குகொண்டு பரிசுபெற்ற அணியை வழிநடத்திச் சென்றவன், அன்று சிவசோதியாக பின்னாளில் பீற்றர் அல்லது கார்வண்ணன் என அறியப்பட்ட போராளியே. யாழ்மாவட்டப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் மருத்துவப்பிரிவை விரிவாக்குவதிலும், மருத்துவர்களை உள் வாங்குவதிலும் தமிழ்ச்செல்வன் காட்டிய ஆர்வம் முக்கியமானது. ஜெயசிக்குறுக்களத்தில் எம்மை அழித்துவிடலாம் என்ற மமதையுடன் சிங்களம் பெரும்போரைத் தொடுத்தது. இடைவிடாது தொடர்ந்துநடந்த இச்சமர்களில் காயமடையும் போராளிகளின் எண்ணிக்கை, நூறுகளைத் தாண்டி ஆயிரங்களாக அமைந்தது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையாக காயமடைந்த போராளிகளை இவர்கள் எவ்வாறு பராமரித்துக்கொள்கிறார்களோ என சிங்களஆட்சியாளர்களும், ஆய்வாளர்களும் ஆச்சரியப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு எமது மருத்துவப்பிரிவின் பணியானது அக்காலப்பகுதியில் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது. தமிழ்ச்செல்வன் தான் வீரச்சாவடைவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் ரேகாவிற்குச் சொன்னானாம், “வைத்தியைக் காப்பாற்றியிருக்கலாம். அவனுக்குப் பொருந்திப்போகும் இரத்தவகை இருப்பில் இருக்கவில்லை” என. பூநகரிப்பெருந்தளம் மீதான எமது தாக்குதலின்போது எதிரியின் விமானக் குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் பாரிய காயமடைந்தவேளை அவரைப் பாதுகாக்கும் முயற்சியில் காயமடைந்து வீரச்சாவடைந்த போராளிதான் வைத்தி. சிறந்தபோராளியாக, மிகச்சிறந்த மெய்ப்பாதுகாவலனாக தனது கடமையைச்செய்து தமிழ்ச்செல்வனின் உயிரைக் காப்பாற்றினான் அவன். பதின்நான்குவருடங்கள் கடந்தபின்னரும் மறவாதநினைவுடன் மருத்துவப்பிரிவின் தேவைபற்றியும், தன்னைக் காப்பாற்றி உயிர்கொடுத்த தோழனைப்பற்றியும் ஒருங்கேநினைக்கும் மனத்துடன் இருந்தான் என்பதுதான் தமிழ்ச்செல்வனை சராசரி மனிதர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்வானபோராளியாக நினைக்கவைப்பதாகும். பல்முனைஆற்றல்கொண்ட தமிழ்ச்செல்வனின் ஆளுமையின் இன்னொரு வெளிப்பாடாக சூரியக்கதிர் நடவடிக்கைக்குப் பின்னான யாழ்ப்பாணச் செயற்பாடுகளைச் சொல்லலாம். எதிரியின் முற்றுகைக்குள் இருந்த யாழ்ப்பாணத்திற்குள் தேர்ந்தெடுத்த போராளிகளை நிலைப்படுத்திச் செயற்படுத்தினான். யாழ்ப்பாணத்திற்குள் வெற்றிகரமாக நின்றுபிடித்த அவனது போராளிகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக வரலாற்றில் பதிவாகிவிட்ட இராணுவவெற்றிகளைக்கூட ஈட்டினர். அதற்குமேலாக மக்களையும், மாணவர் சமூகத்தையும் ஒருங்கிணைத்து வெகுசனப்போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தமையானது தமிழீழவிடுதலை வரலாற்றில் இன்னொரு மைல்கல்லாக பதிவான வெற்றியாகும். இந்த எழுச்சியானது எமதுவிடுதலைப்போரை பயங்கரவாதமாக உலகின்முன் சித்தரிக்கமுனையும் சிங்களஅரசை நிலைகுலையச் செய்தது. மக்கள் அணிதிரண்டு பொங்கிப்பிரவாகித்த இந்நிகழ்வுகள் இலங்கைத்தீவையும் தாண்டி உலகஅரங்கையே ஒருகணம் எம்மக்களை நோக்கித் திருப்பியதெனலாம். தமிழ்ச்செல்வனின் பல்வேறு அரசியல், நிர்வாக, சமூகப்பொறுப்புகளின் மத்தியில்கூட தெரிவுசெய்யப்பட்ட அவனது போராளிகளின் மூலமாக நாம் பெற்ற இவ்வெற்றிகள் அவனது முதிர்ந்த அனுபவத்தினதும், ஆளுமையினதும் வழி நடத்தலின் பெறுபேறே. தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமதுமக்களிடையேயும்கூட தமிழ்ச்செல்வனின் தொடர்புகளும், அணுகுதல்களும், கருத்தூட்டல்களும் எமது விடுதலைப்போருக்கான பயனுள்ள பின்புலத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதும் எப்போதும் நினைவில் கொள்ளப்படத்தக்கதாகும். அது 1991 ஆ.க.வெ. சமரின் ஒரு கடினமான கட்டம். கடலால் இறங்கி தரையால் நகர்கின்ற எதிரியை வழிமறித்துச் சண்டையிடுகிறது தமிழ்ச்செல்வனின் அணி. கனரகவாகனம் – ஆயுதங்களுடன் நகரும் எதிரியை இலகுரக ஆயுதங்களுடன் வழிமறித்து நிற்கும் கடினமானசண்டை அது| வீரர்கள் வீழ்ந்துவிட்டனர். வியூகம் உடைந்துவிட்டது. பின்வாங்கவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலைமை. அங்கு தமிழ்ச்செல்வன் அப்போது தினேஸ் – தினேசாக இல்லை. ஆவேசநிலையில் தன்நிலை உணராது, எதிரியை எதிர்ப்பதில் மட்டும் குறியாகநின்று போரிடும் தினேஸ். “தினேஸ் பின்வாங்க மறுக்கிறார்” என்று நடைபேசியில் செய்திவந்ததும், வரமாட்டேன்….. வரமாட்டேன்….. என்று குழறக்குழற ஆளைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக்கொண்டுவந்து சேர்த்ததும் மாறாதநினைவுகள். களத்தில் தனது நுரையீரலைத் துளைத்தரவையின் வலியையும் உணராது ரவைபட்டதே தெரியாமல் அவனைக் கட்டிவைத்ததுதான் என்ன? இதனை விளங்கிக்கொண்டால்தான் தமிழீழ அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை விளங்கிக்கொள்ளலாம். தமிழனின் அடிமைவாழ்வை மாற்றியமைக்க சரியான அரசியல் தலைமை இல்லாமல் போனதே எம்மினத்தின் இன்றுவரையான அவலநிலைக்கான காரணம். எம்மினத்தின் அடிமைவாழ்வை உணர்ந்தும், தெரிந்தும் இருந்த எமது இனத்தின் மூத்த தலைவர்கள் கூட நிலைமையை மாற்றியமைக்க சரியான, துணிவான முன்முயற்சிகளை செய்யத்தவறினர். கொடுங்கோலர்களால் புரிந்துகொள்ளமுடியாத அகிம்சைவழிப்போராட்டம் தோல்வி அடைந்து, தமிழர்களுக்கு உரிமை எதையும் வழங்கமுடியாதென்று சிங்களத் தலைமைகள் ஏமாற்றி மறுத்தபோது, தந்தை செல்வாகூட “தமிழினத்தை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என ஆற்றாமையுடன் தான் உரைத்தாரே தவிர எம்உரிமையைப் பெறத் தீவிரவழியிலோ அல்லது இராசதந்திரவழியிலோ காத்திரமாகப் போராடத்துணியவில்லை. “இந்த வல்வெட்டித்துறையிலிருந்து ஐம்பது இளைஞர்கள் முன்வாருங்கள்” என்று அங்கு சொன்னதுபோல் ஒவ்வொரு ஊரிலும் சொன்னார்கள். போராட்டத்தில் நாட்டை அமைப்பேன் என்றும் சொன்னார்கள். இயல்பாக கிளர்ந்த இளைஞர்களின் எழுச்சியைக்கூட வெற்றுக்கோசங்களால் திசைதிருப்பும் அரசியல் ஆக்கினார் அமிர்தலிங்கம். சுயாட்சி என்றும், ஐம்பதுக்கு ஐம்பது என்றும் தமிழரின் வாழ்வும் அரசியலும், பேச்சிலும் எழுத்திலுமாக காலத்தைக் கழித்துவர – இனத்தை மாற்றியும், நிலத்தை விழுங்கியும், மொழியை, கல்வியை பாழ்படுத்தியும் சிங்களம் தன்னாதிக்கத்தைத் தொடர்ந்தது. தமிழர்கள் தூங்கினர். அல்ல, அல்ல தமிழ் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் தூங்கினர். கியூபா, வியட்நாம், பங்களாதேஸ் வரிசையில் தமிழீழமும் விடுதலை பெறக் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பைக் கைநழுவ விட்டனர். கையாலாகாத் தனத்துடனான எம்மவரின் கயமை அரசியலைக் கண்முன்னே பார்த்துப்பார்த்து பக்குவப்பட்டு தேர்ந்து தெளிந்த தமிழனால் – ஆம் எங்கள் தலைவரால் – விடுதலைக்கான அரசியலுக்கு அடித்தளம் அமைந்தது. வீரமும், செயலூக்கமும் கொண்ட ஆயுதப்போராட்ட அரசியல் உருவானது. உயிர் மீதான அச்சமே கோழைத்தனத்தை உருவாக்குகிறது என்றும், தேசத்தின் விடுதலையை நகர்த்த வேண்டிய பொறுப்பில் உள்ளோர் இந்த அச்சநிலையைக் கடந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் அடிக்கடி சொல்வார் தலைவர். இந்திய அரசு எம்மக்களது விடுதலையைப் பணயம்வைத்து ஆடிய நாடகத்தில் விட்டுக்கொடுத்து விடாமல் தலைவர் உறுதியாக நின்றதற்கு காரணம் உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கை அல்ல தேசத்தின் விடுதலை பற்றிய தெளிவு. தமிழீழ விடுதலைக்குரிய அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை அவனது துணிவுக் கூடாகவும், அர்ப்பணிப்புக் கூடாகவும் பார்த்தார் தலைவர்| தேசவிடுதலைக்கான அரசியல் பற்றிய பரந்துவிரிந்து விசாலமான தனதுகனவுகளை தமிழ்ச்செல்வனின் மனதில் பதியவைத்தார் தலைவர். மக்கள்மயப்பட்ட அரசியல்அலகுகள் பற்றிய தலைவரின் எண்ணங்களை செயல்ப்படுத்துவதில் தமிழ்ச்செல்வன் மூச்சாகச் செயற்பட்டான். வறுமைப்பட்ட மக்களின் குழந்தைகள் போசாக்கின்றி இருப்பதுபற்றி தலைவரும், தமிழ்ச்செல்வனும் கதைத்துக் கொண்டிருப்பர். கொஞ்சநாள்செல்ல மொழுமொழுவென்று அழகான குழந்தையொன்றின் புகைப்படத்தையும், மிகவும் மெலிந்த இன்னொரு குழந்தையின் புகைப்படத்தையும் ஒன்றாகக் காட்டுவார் தலைவர். இந்தப் பிள்ளையைத்தான் எமது சிறுவர் போசாக்குப்பூங்கா பொறுப்பேற்று மொழுமொழு பிள்ளையாய் தாயிடம் திரும்பப் பொறுப்புக்கொடுக்கிறது என்று சொல்லும்போது தலைவரின் சொல்லில் மகிழ்ச்சிபொங்கும். குழந்தைகளுக்குச் சிறுவர் போசாக்குப்பூங்கா என்றால் ஆதரவற்ற முதியவயோதிபர்களைப் பராமரிப்பதற்கென மூதாளர் பேணலகம் இன்னொரு தளத்தில் செயற்படும். இவ்வாறு ஒவ்வொரு வயதினருக்கும், சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்தினருக்குமென ஆரோக்கியம் – சுகாதாரம் – கல்வி என ஒவ்வொரு தளத்திலுமாகக் கட்டுமானங்களை உருவாக்கி அரசியல் பணிசெய்த தமிழ்ச்செல்வனது ஆளுமை விசாலமானது. யாழ்ப்பாணம் – வலிகாமத்தில் இருந்து ஒருபொழுதில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். நெருக்கடிகளைச் சந்தித்தோம் உண்மைதான். ஆனால் பட்டினிச்சாவோ அல்லது நோயுற்றதாலான சாவோ எதுவாயினும் ஒன்றேனும் நடந்ததாக யாரேனும் சொல்லமுடியுமா? முழுப்பிரச்சனைகளையும் எமது இயக்கமே பொறுப்பேற்று தீர்த்துவைத்தது என்று சொல்லமுடியாதுதான். எமதுமக்களும், நிறுவனங்களும், சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் சேர்ந்து சுமந்ததால் வந்தவெற்றிதான் இது. இல்லை என்று கூறமுடியாது. ஆனால் அதற்காக எம்சமூகத்தை ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தி, இரவுபகல் பாராது களத்தில் முன்நின்று வழிநடத்தி அரசியல் நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தினான் தமிழ்ச்செல்வன். அதுபோல்தான் தென்மராட்சியிலிருந்து வன்னிக்கும், வன்னிக்கு உள்ளேயுமான இடம்பெயர்வுகளுமாக எம்மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலைந்துதிரிந்த பொழுதெல்லாம் அவர்களுடன் நின்றனர் எம் அரசியல்ப்போராளிகள்: எம்மக்களுக்கு சிறப்பாக வாழ்வளிக்க முடியாதுபோனாலும் சீரழிந்து போகாமல் பார்த்துக்கொண்டோமென்றால் அது நிர்வாகசேவை, பொருண்மியமேம்பாட்டு நிறுவனம், தமிழீழ சுகாதாரசேவை, குழந்தைகள், பெண்கள் நலன்பேணல் அமைப்புகள் ஆகிய தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்திருந்த அரசியல் கட்டுமானங்களால்தான். கடல்பொங்கி ஆழிப்பேரலை கோரத்தாண்டவமாடியது. பாதிக்கப்பட்ட ஆசியாவின் பலநாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் சந்தித்த அழிவு கொஞ்சமல்ல பேரழிவு. மீளஎழுந்தோம். பேரினவாதஅரசு ஆழிப்பேரலை மீள்கட்டுமானத்திட்டத்தை செயற்படவிடாமல் முடக்கித் தடைசெய்த போதும் மீளஎழுந்தோம். விரைவான அனர்த்த முகாமைத்துவத்திற்காக உலக அரங்கில் நாம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களானோம் என்றால், அதுவும் உலக உயர்மட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டு முறையாகப் பாராட்டப்படும் வகையில் செயற்பட்டுக் காட்டினோம் என்றால், எல்லா வளங்களும் கொண்ட நாடுகளை விட சிறப்பாக, வேகமாக இங்கு அவசர புனர்வாழ்வு மற்றும் சுகாதார, ஆரோக்கியப் பிரச்சனைகளைக் கையாண்டுள்ளோமென்றால் மேற்படி எமது தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்த சமூக, அரசியல் கட்டுமானங்களால் தான். போரின் உச்சநெருக்கடியிலும்கூட, எதிரியின் பொருண்மியத் தடைகளின் போதும்கூட பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட எம்மண்ணில் காணமுடியாதபடிக்கு சமூக மட்டத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றால் அரசியல் வேலைத்திட்டங்களின் வீச்சைப்புரிந்துகொள்ளலாம். எமது அரசியல் வேலைத்திட்டங்களின் பின்னணியில் தலைவரது சிந்தனையும். வழிநடத்தலும் இருந்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் தலைவரது எண்ணங்களின் செயல்வடிவங்கள்தான் இவை என்பதும் உண்மைதான்; ஆனாலும் தலைவரின் எண்ணங்களையும், வழி நடத்தலையும் புரிந்து, தெளிந்து செயலில் நடைமுறைப் படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, அறிவு, திறமை, ஆளுமை என்பன ஒருங்கே பெற்ற ஆற்றலோனாகத் தமிழ்ச்செல்வன் மிளிர்ந்து, செயற்பட்டான் என்பதே உண்மை. விடுதலைக்கான அரசியல்பணி ஒருவகையில் சவாலானது. இறைமையுள்ள நாடு என்ற சொற்பதமானது ஆக்கிர மிப்பாளர்களது எல்லாக் கொடுமைகளுக்குமான கவசமாக அமைந்துவிடும். அதேவேளை விடுதலை வேண்டிப் போராடும் இனத்தின் தற்காப்பிற்கான போராட்டமானது பயங்கரவாதமாக முறையிடப்படும். இராசதந்திர அழுத்தத்திலிருந்து நாகரீகமற்ற நேரடி அச்சுறுத்தல்வரை பல பேச்சுமேசைகளில், பல படிமுறைகளில் இந்தியா எம்மை பணியவைக்க முயன்ற படிப்பினைகளையும், சிங்கள அரசு பேச்சுக்களின்போது எம்மை ஏமாற்ற முயலும் தொடர்ச்சியான அணுகுதல்பற்றியும் தலைவரிடமும், தேசத்தின்குரல் பாலா அண்ணை அவர்களிடமும் நிறையவே கற்றறிந்து புடம்போடப்பட்டவனாக இருந்தான் தமிழ்ச்செல்வன். எம்மக்கள் மத்தியில் இருந்த மெத்தப் படித்தவர்களது வலிமையற்ற பேச்சுக்கள், அதாவது சரணாகதிக்கான சமாளிப்புகள் இராசதந்திரமாகக் கூறப்பட்டது ஒருகாலம் தமது இனத்தையே அடிமைகொள்ளவைக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோய் காட்டிக்கொடுப்பதை இராசதந்திரமாகக் கூறப்பட்டது இன்னொருபக்கம். விடுதலைக்கான நியாயத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலும் சரி, அதேவேளை உரையாடலைச் சிறப்பாக முன்னெடுத்து சபையின் நிலையை தனது ஆளுமைக்குள் எடுப்பதிலும் சரி தமிழ்ச்செல்வன் தேர்ந்த இராசதந்திரியாகச் செயற்பட்டான். மறுத்துரைக்க முடியாதபடி முன்வைக்கப்படும் அவனது கருத்துக்களுடன், உலகம் முழுவதும் அறியப்பட்டு விட்டதான அவனது புன்சிரிப்பும் சேர்ந்து அவனைச் சந்திப்பவர்களைக் கட்டிப்போடும். ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவன் கையாண்ட விதமும்கூட தேர்ந்துமுதிர்ந்த அரசியல் தலைவனாக அவனை உலகிற்கு அடையாளம் காட்டிநின்றது. எமதுமக்களின் துயரங்களைக் கருத்திலெடுக்கக்கூடாது என்ற தீர்மானமான முன்கூட்டிய முடிவுடன் வருபவர்களைத் தவிர மற்றெல்லோரும் தமிழ்ச்செல்வனின் சொல்வன்மையினால் கட்டுண்டு எம் நியாயங்களை உணர்ந்துசென்றனர் என்பதே உண்மை. தலைவர் உணர்வூட்டியது பாதி மற்றும் பாலா அண்ணையிடம் கேட்டறிந்ததும், தானாக கற்றுணர்ந்ததும் மீதியாக முதிர்ந்த அரசியல்தலைவனாக, இராசதந்திரியாக, பேச்சுவார்த்தையாளனாக தமிழ்ச்செல்வன் பரிணமித்தான். தமிழ்ச்செல்வனது இராசதந்திரத் திறனானது அவனது சிறப்பாற்றலினதும், நேர்மையான விடுதலைப் பற்றினதும் வெளிப்பாடு என உறுதியாகக் கூறலாம். ஈழத்தமிழினத்து வரலாற்றில் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டு விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் சார்பிலும்கூட தமிழ்ச் செல்வனது இராசதந்திரத் திறனும், அணுகுதலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதாகும். தலைவர் அரசியல்பொறுப்பாளராக தமிழ்ச்செல்வனை மிக உயர்வாக மதித்தார். தமிழ்ச்செல்வனது கருத்தறியாது தலைவர் செயற்படுத்தும் விடயங்கள் அரிதாகவே இருக்கும். அதேவேளை நிர்வாக விடயங்களில் அல்லது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் தவறு நிகழும்போது கண்டிக்கவும் தவறமாட்டார். பொதுமக்களுக்கு எங்காவது தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவோ, எம்மால் தீர்க்கப்படக்கூடிய குறைபாடுகள் கவனிக்கப்படாமல் இருப்பதாகவோ, நிர்வாக விடயங்களில் நியாயமின்மை நிகழ்ந்ததாகவோ முறைப்பாடுகள் கிடைக்கும் வேளையில் தலைவரது கோபம் வெளிப்படும். தலைவரது இந்தக் கண்டிப்பை யாராவது வேறுவிதமாக விளங்கி தமிழ்ச்செல்வனை குறைசொல்லி அவனது பணிகளைப் பங்கப்படுத்த முற்பட்டாலும் உடனே தலைவருக்குக் கோபம்வரும். தமிழ்ச்செல்வனது செயற்பாடுகளின் தாக்கத்தையும், அவரது சாதனைகளையும் எடுத்துக்கூறவும் தயங்கமாட்டார் தலைவர். அன்பும், கண்டிப்பும், உறவும், உரிமையும், கோபமும், பாசமும் கொண்ட அவர்களது உறவு அற்புதமானது. எங்காவது, யாராவது ஒருபோராளி அல்லது பணியாளர் தவறுசெய்து அதுவொரு விடயமாக ஆகிவிட்டதென்றால் தலைவரிடம் வரும்போது சங்கடத்துடனும், சஞ்சலத்துடனுமிருப்பான் தமிழ்ச்செல்வன். தலைவரிடம் கதைத்துத் தெளிவுபடுத்தியபின் புறப்படும்போது, “இடைக்கிடை பேச்சுவாங்கித் தெளிந்தால்தான் நல்லது” என சிரித்துக்கொண்டே சொல்வதைக் காணலாம். எம் இன விடுதலைவேண்டி உலகம் முழுக்க ஒலித்த அவனது குரல்… இன்னும் ஓயவில்லை, இனியும் ஓயாது, எம் விடுதலைவரை ஓயாது. வாழ்ந்தபோது செய்ததையே அவன் வீழ்ந்தபோதும் செய்தான். கைத்தடி தாங்கிய அந்தப் புன்னகைச் செல்வனின் முகம் உலகின் மனச்சான்றின் முன்னே, உலகத் தமிழினத்தின் முன்னே எழும்பிய வினாக்களுக்கான விடையை, சிங்களம் சொல்லும்காலம் வரும். தமிழ்ச்செல்வன் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பது எவ்வளவுதூரம் உண்மையோ, தமிழ்ச்செல்வன் எம்மை விட்டுப் பிரியமாட்டான் என்பதும் அதேயளவு உண்மை. தமிழீழம் பற்றிய கனவாக, அந்தக்கனவின் செயல் வடிவத்திற்கான நிர்வாக அலகுகளாக, அந்த நிர்வாகங்களை இயக்குகின்ற ஆளுமைகளாக வாழ்கிறான், வாழ்வான். என்றும் வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான். நினைவுப்பகிர்வு:- ச.பொட்டு அம்மான் (புலனாய்வுத்துறை பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகள்) “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/5ad186a3-d2e9-4524-a085-bb802041e999
  14. ஊரடங்கு நீடிப்பு குறித்து முழுவிபரம்! (எம்.மனோசித்ரா) மேல் மாகாணத்தில் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே கடந்த இரு தினங்களும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்நிலையைக் கருத்திற் கொண்டு மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இம்மாதம் 9 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறையினர் மற்றும் ஏனைய தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். விசேட அறிவித்தலொன்றின் மூலம் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , கடந்த 29 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதனை 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நீக்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த இரு தினங்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு திங்களன்று ஊரடங்;கை நீக்காமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கமைய இம்மாதம் 9 ஆம் திகதி காலை 5 மணி வரை மேல் மாகாணம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் தொடர்புகள் குறித்து ஆராய்ந்து பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பேலியகொடை, கேகாலை, குருணாகல் மற்றும் குளியாபிட்டி ஆகிய பகுதிகளிலும் இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். மேல் மாகாணம் மாத்திரமன்றி இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்கும் , குருணாகல் நகரசபை எல்லைக்கும் , குளியாபிட்டிய பொலிஸ் பிரிவிற்கும் இதே போன்று 9 ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும். ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மக்களை அனைவரும் தத்தமது வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வேறெந்த தேவைக்காகவும் வெளியிடங்களுக்குச் செல்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கப்பட மாட்டாது. தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதோடு தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய முதலாம் மற்றும் ஏனைய தொடர்பாளர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவர். தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவு பொருட்கள் நிவாரணம் வழங்கப்படுவதோடு , ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு கடந்த முறையைப் போன்று 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக குறித்த பகுதிக்குள் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றார். அத்தோடு கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்களுக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/93428 கிளிநொச்சி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் கிளை கொத்தணிகள் உருவாகலாம் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை (எம்.மனோசித்ரா) நாட்டின் 24 மாவட்டங்களிலும் கொவிட் கிளை கொத்தணிகள் ஏற்படக் கூடிய எச்சரிக்கை நிலவுவதாக தெரிவித்துள்ள சுகாதார தரப்பு மேல் மாகாணம் அதிகளவு தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடிய பகுதி என்பதால் அதனை தொடர்ந்தும் முடக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பாதுகாப்பு துறையினரும் தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் அதிகரித்துள்ளது. மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகள் தொடர்ந்தும் காணப்படுகின்ற நிலையில் அவற்றுக்கு சமாந்தரமான வேறு கொத்தணிகள் பிரிதொரு இடத்தில் உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு ஏற்பட்டால் எம்மால் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமையே ஏற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பெருமளவானோர் சமூகத்திலிருந்தே இனங்காணப்படுகின்றனர். தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அல்ல. இவ்வாறான நிலைமையை சீராக்குவதற்கு துதிரமான செயற்பாடுகளை முன்னெடுத்தால் மாத்திரமே எதிர்காலத்தை சிறந்ததாக்கலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். 125 பொலிஸ் அதிகாரிகளுக்கு தொற்றுறுதி இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 125 ஆக உயர்வடைந்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்தார். அத்தோடு 2400 பொலிஸ் அதிகாரிகள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை. எனினும் கொழும்பு விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாம்களில் சமையலறையில் உள்ளவர்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் வாங்குவதற்கு சென்றதையடுத்தே பொலிஸ் அதிகாரிகளும் தொற்றுக்குள்ளாகினர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேல்மாகாணத்திலிருந்து சென்ற 550 பேர் தனிமைப்படுத்தலில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் மேல் மாகாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்குச் சென்ற 550 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களின் கணிகாணப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/93425
  15. சந்தைகளை மூட நடவடிக்கை - நல்லூர் பிரதேச சபை தவிசாளர் சுகாதார நடைமுறைகளை, விதிகளை பின்பற்றாமல் அசண்டையீனமாக நடந்து கொண்டால் சந்தைகளை மூட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த. தியாக மூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழில் உள்ள பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில் சந்தை ஆகியன நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது. குறித்த சந்தைகளுக்கு தினமும் பெருமளவான மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனோ தொற்று அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக எமது ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் விதிகளையும் பின்பற்றுமாறு கோரி வருவதுடன் எமது சபையின் உத்தியோகஸ்தர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும் பெருமளவான வியாபாரிகள் , பொதுமக்கள் சுகாதார நடைமுறைகள் விதிகளை மீறி செயற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று உள்ளன. தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் வியாபாரிகள் , பொதுமக்கள் ஈடுபட்டால் எமது ஆளுகைக்குள் உள்ள திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில் சந்தை என்பவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/93405
  16. மட்டக்களப்பு மாவட்டத்தில் 1592 குடும்பங்களை சேர்ந்த 3959பேர் தனிமைப்படுத்தல் November 1, 2020 மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தங்களின் விடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று என மருத்து பரிசோதனைகள் மூலம் உறுதியானவர்கள் மாவட்டத்தில் 35பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் இதில் கொறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 31பேரும் வெல்லாவெளி பட்டிப்பளை களுவாஞ்சிக்குடி ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவில் தலா ஒருவர் என அடையாளம் கானப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் மாவட்ட ஊடகப் பிரவுக்கு இன்று தெரிவித்தார். கொரோனா நோய் தொற்றுகாரனமாக தொழில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான 5000.00ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான நிதியினை அரசாங்க அதிபரின் துரித நடவடிக்கையினால் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல அவர்களினால் உடணடியாக நிதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுக்கு நேற்றுமுதல் உலர் உணவுப்பொதிகளை வழங்குவதற்கு அரசாங்க அதிபர் உத்தரவிட்டார். உலர் உணவு பொருட்களை வழங்கும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எதிர்காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அதிகமாக தொற்றாளர்கள் மற்றும் நோயாளர்கள் அடையளம் காணப்படுகின்ற பகுதியாக கொறளைப்பற்று மத்தி பிரதேசமே கானப்படுகின்றது இங்கு 1335பேர் தனிமைப்படுத்தலுக்கும் 31பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர் அதேபோன்று கொரோனா தொற்றாளர்கள் குறைவாக பதிவான பிரதேசமாக பட்டிப்பளை கானப்படுகின்றது இங்கு 11குடுப்பளை சார்ந்த 47பேர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் நோய்தொற்று உறுதியானவர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களில் தொழில் நிமிர்த்தம் சென்று வந்தவர்களாகவே உள்ளனர் இவர்களுக்கான மருத்துவ உதவிகளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் கண்காணிப்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்ப்படுத்தி வருகின்றனர் இதற்காக கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளரான வைத்திய கலாநிதி எம்.அச்சுதன் அவர்களின் சிறந்த மேற்பார்வையில் பணிகள் மக்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/85177
  17. இலங்கையில் “B.1.42” என்ற சக்திவாய்ந்த கொரோனா வைரஸ்… October 31, 2020 தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் ´B.1.42´ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க கொழும்பு ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இனங்காணப்பட்ட கந்தக்காடு மற்றும் கடற்படை கொத்தணிகளின் வைரஸ் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 குழுக்களுக்கு உட்பட்டவை என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வைரஸ் விஷேடமானது எனவும் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பரவக்கூடியது எனவும் அவருடைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது எந்த நாட்டில் இருந்து இலங்கைக்கு எப்படி வந்தது என்பது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் நிச்சயமாக இது இலங்கையில் இருந்த வைரஸ் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2020/152544/
  18. வட மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் உடுவிலில் தாய் மற்றும் 10 வயதுடைய மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாளிகாவத்தையில் வசிக்கும் பெண் தனது மகளுடன், உடுவில் அம்பலவாணர் வீதியில் உதயசூரியன் சந்தியில் வசிக்கும் தனது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்த வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நேற்று பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் அவை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு இன்றிரவு அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாளிகாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே பெண் தனது மகளுடன் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்கள் மூவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, வெள்ளவத்தையில் இயங்கும் யாழ்.ஹோட்டல் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையில் ஒருவர் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் என்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/93315
  19. யாழ் - பருத்தித்துறை வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களும் இடைநிறுத்தம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 ஆம் இலக்க வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன. கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது. கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்த பல தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்களாகப் பணியாற்றும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த நிலையில் அவர் கிராமத்தில் நடமாடியுள்ளார். இந்த நிலையில் ராஜ கிராமத்தில் 60 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த யாராவது தனியார் பஸ் சேவையில் கடமையாற்றினால் பயணிகளுக்கு தொற்று ஏற்படலாம். அதனால் தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையோரைக் கண்டறியும் வகையில் பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/93272
  20. யாழ் – கரவெட்டி இராஜகிராமம் முடக்கப்பட்டது யாழ்.கரவெட்டி – இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம் அமுல் படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும் போது இவ்வாறு தெரிவீத்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட மூவரில் ஒருவர் ராஜ கிராமத்தினைச் சேர்ந்தவர் என்பதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ராஜ கிராமத்தில் 70 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேபோல் பாசையூர் மேற்கு மற்றும் குருநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.(15 http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-கரவெட்டி-இராஜகிராம/
  21. மட்டக்களப்பில் மேலும் மூவருக்கு கொரோனா ! கிழக்கில் கொரோனா எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது By Sayan மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய போரதீவு பட்டபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக பி.சி.ஆர் பரிசோதனையில் இன்று வியாழக்கிழமை கண்டுப்பிடிக்கப்படதையடுத்து 31 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ..லதாகரன் தெரிவித்தார் . குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய குறித்த நபரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து குறித்த தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு கோட்டுக் கொண்டுள்ளார் http://www.battinews.com/2020/10/corona .html
  22. மூடப்பட்டது வவுனியாவின் மரக்கறி மொத்த வியாபர நிவையம் வவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாட்டுக்காக இன்று மூடப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலாளர் சமன் மந்துலசேனவின் வேண்டுகோளுக்கு அமையவே இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்திலும் 12 பேர் வரை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதனையடுத்து அதிகளவான மக்கள் செல்கின்ற இடமான வவுனியா மரக்கறி மொத்த வியாபர நிலையம் முழுமையாக மூடப்பட்டு தொற்று நீக்கும் செயற்பாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/92920
  23. நெடுங்கேணியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : இன்று மேலும் 07 பேருக்கு தொற்று உறுதி வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெடுங்கேணி பகுதியில், வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கு முதல் தடவையாக கொரோனாவுக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில் அங்கு பணியாற்றும் ஏனையவர்களிடமும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியாளர்களில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. https://www.virakesari.lk/article/92888
  24. மூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை! October 24, 2020 திருகோணமலை மத்திய மீன் சந்தையில் ஆறு பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மீன் சந்தை முழுமையாக மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/82779
  25. முன்னைய பக்கம் கடைசிப் பக்கம். தமிழ் சிறி அண்ணா, + பட்டனை அழுத்தினால் பல கருத்துக்களை மேற்கோள் காட்டமுடிகின்றதே.🤔
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.