Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34940
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. திருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள் -ஜோன் கென்னி (தமிழாக்கம்: டிசே தமிழன்) நீ அதற்கான மனோநிலையில் இருக்கின்றாயா?………………………………….நான் இருக்கின்றேன்.பிள்ளைகளை நித்திரைக்கு அனுப்பு.இலேசான ஓர் இரவுணவு.குளியல்.அவ்வளவு போதையேறாத குடி.அத்துடன் வேறு எவருடனும் செய்வதைவிட உன்னோடு செய்ய விரும்பும்அந்த 'விடயம்'படுக்கையில் சாய்ந்தபடி எங்களின் ஐ-போன்களைப் பார்ப்பது. http://kanali.in/john-kenney-poems/?fbclid=IwAR1HWFpg-uTF2Dtg1QHtQNtyEkD_KNTXwSETDaYd_LPYOVDGDlqBoOejNW4
  2. புங்குடுதீவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் புங்குடுதீவில் கடந்த 5 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க. மகேசன் தெரிவித்தார். கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது. அதனடிப்படையில் புங்குடுதீவு பகுதியானது இன்று காலையிலிருந்து தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் கேட்டுள்ளார். அப்பகுதிக்கு சென்று வரும் பொது மக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், புங்குடுதீவு தொடர்ந்து சுகாதாரப் பிரிவினரால் கண்காணிக்கப்படும் எனவும் கூறினார். https://www.virakesari.lk/article/92515
  3. கொரோனா அச்சம் – வவுனியா பொது வைத்தியசாலை இன்று தற்காலிகமாக மூடப்பட்டது கொரோனா நோயாளிகளை வவுனியா பொது வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லும் அம்புலன்ஸ் காரணமாக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், இன்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் எந்தவொரு வெளி நேயாளியையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் வைத்தியசாலை வைத்தியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் மாத்திரமே சுகாதாரப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை இன்றையதினம் வவுனியா பொது வைத்தியசாலை முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இராணுவத்தால் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையை முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.இதனால் இன்று முதல் வெளிநோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.(15) http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-அச்சம்-வவுனியா-பொ/
  4. சசிவர்ணத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 இன்றைய பொழுது இனிமையாக இருக்கட்டும்🍻
  5. கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு மினுவாங்கொடை பெண் காரணமல்ல… October 14, 2020 தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு மினுவாங்கொடை பெண் காரணமல்ல எனத் தெரிவித்த ஜே.வி.பியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத், தற்போது காணப்படும் நிலைமைகளால் எதிர்வரும் தினங்களில் இன்னுமொரு கொத்தணி உருவாகக்கூடுமெனவும் எச்சரித்தார். பத்தரமுல்லயில் உள்ள ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், கொரோன வைரஸ் பரவலை கட்டுப்படுத்திவிட்டதாக மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலேயே, கடந்த காலங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்பட்டனவெனவும் உண்மையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட்டிருந்தமையாலேயே இரண்டாவது அலையொன்று உருவெடுத்துள்ளதெனவும் சாடினார். கொரோனா வைரஸ் பரவலை சாதகமாக கட்டுப்படுத்திய இரண்டாவது நாடு என்ற பெருமை இலங்கைக்கு கிடைத்துள்ளதென அரசாங்கம் மார்த் தட்டிக்கொண்டதாகத் தெரிவித்த அவர், மறு திசையில் முன்பு இருந்ததை விடவும் உக்கிரமாக கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறதெனவும் சாடினார். இவ்வாறிருக்க பிரெண்டிக்ஸ் கொத்தணியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட பெண்ணால் கொரோனா வைரஸ் பரப்பட்டதென ஊடகங்களில் சில தகவலை கட்டமைக்க முற்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்நேரத்தில், அந்தப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கவில்லை என்ற உண்மையை சுகாதார துறையினர் தற்போது வெளிப்படுத்தியுள்ளனரெனவும் கூறினார். “இவ்வாறிருக்க இந்தியாவுக்குச் சென்று வந்த பிரெண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் 14 பேர் தங்களுடைய மேற்பார்வையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கவில்லை என பொது சுகாதார அதிகாரிகளின் சங்கம் தற்போது அறிவித்துள்ளது. இவ்வாறான நிலைமைகளால் எதிர்வரும் தினங்களில் இன்னுமொரு கொத்தணி உருவாகக்கூடும்” எனவும், விஜித்த ஹேரத் எச்சரித்தார். https://globaltamilnews.net/2020/151824/
  6. மன்னிக்கவும். மன்னிக்கவும் இதை சொல்வதற்குள் எனக்கு 38 வயது ஆகி விட்டது. மன்னிக்கவும் முலை விடாத வயதில் உனக்கு உலகத்திலேயே யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு காட்பரீஸை மென்றுக்கொண்டே சித்தப்பா என்று சொல்லியிருக்க கூடாது தான். மன்னிக்கவும் அன்று ஏதோ சடங்குக்கு ஊருக்குப் போன சித்தியுடன் கூடவே தொற்றிக் கொண்டு போகாமல் யாருமில்லாத வீட்டில் தனியே யிருக்க ஒத்துக்கொண்டது என் கவனக்குறைவு தான். மன்னிக்கவும் இரவில் பாதி தூக்கத்தில் சித்தப்பா அருகில் வந்து படுத்ததை அறியவில்லை அவரின் கைகள் அவ்வளவு நீளம், அதன் நகங்கள் அவ்வளவு பதம் என்பதை என் ஜனன உறுப்புகளை அவர் தொடும்வரை அறியவில்லை. மன்னிக்கவும் …………………………. …………………………. மன்னிக்கவும் குடும்பம் என்பது கூடு குடும்ப ஆண்கள் பாதுகாவலர்கள் குடும்பத்துக்குள் என்ன நடந்தாலும் வெளியே சொல்லக்கூடாது குடும்ப மானம் குடும்ப பெண்களின் கைகளில் தான் இருக்கிறது என்ன இருந்தாலும் அவர் என் சித்தப்பா. மன்னிக்கவும் அவ்வப்போது ஆவென திறந்து ஓலமிடும் சித்தப்பா என்ற காயத்தில் கசிவது ரத்தம் அல்ல விந்தும் அல்ல கண்ணீரும் அல்ல அது ஒரு நிறமில்லா திரவம் நம்பிக்கை என்ற அழுகிய பிணத்தின் வாசனை அடிக்கும் திரவம். மன்னிக்கவும் இது உங்களைக் காக்க வைத்து சொல்ல வேண்டிய செய்தியில்லை தான். மன்னிக்கவும் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய சமயத்திலேயே சொல்லியிருந்தால் இன்று என் மகளை சித்தப்பா தொட்டிருக்க மாட்டார். – லீனா மணிமேகலை http://kanali.in/mannikkavum/
  7. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ முதல் வித்து 2ம் லெப். மாலதி.! 1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன. அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின. சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது. “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூஈpக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம், “என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார். அவர் சொன்னபடியே ஆயுதம் பத்திரமாக கொண்டுவரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் தயாரானது. இயல்விலே புத்துணர்வும் துடிப்பும் நிறைந்த மாலதி சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தோடு ஒன்றிப்போனவர். அதனால் ஒவ்வொரு ஆயுதங்களின் பெறுமதியையும், வெற்றி நோக்கிய நகர்விலே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். அதேபோல தாய் மண்ணிலே ஆழ்ந்த பற்றுக்கொண்டு உழைத்த மாலதியின் நினைவோடு இலட்சியத்தைச் சுமந்து நடக்கிறான போரணிகள். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப். மாலதி வழிகாட்டிச்சென்ற பாதையில் அதே நேசிப்போடு எமது பயணம் தொடர்கிறது. அவர் தம் உயிரிலும் மேலாக நேசித்த ஆயுதமும், இந்த தேசமும் அவரின் இந்த வரலாற்றைச் சுமந்திருக்க, மன்னார் மகளின் நாமத்தைத் தாங்கியே படையணியாய் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” -2ம் லெப். மாலதி படையணி தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/3dcfeb8d-47c5-45bb-be95-75b9c4bda675
  8. கந்தளாயில் யுவதிக்கு கொரோனா தொற்று உறுதி ; 41 மாணவர்கள் தனிமைப்படுத்தல் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு,41 பேர் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும்,மேலும் ஐவர் பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார். கந்தளாய் பிரதேசத்தின் கொரோனா தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று(9) கந்தளாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இந்த தகவலை தெளிவுபடுத்தினார். இவை தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையில், கந்தளாய் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொடர்பாக முரணான தகவல்கள் பரப்பப்பட்டதையடுத்தே ஊடகங்கள் ஊடாக உண்மையான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலே கந்தளாய் பிரதேச கொரோனா குழு ஊடாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்த எண்ணியதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார். கொரோனா இரண்டாம் அலை மூலமாக கந்தளாய் பிரதேசத்தில் யூனிட் 11,கந்தளாவ பகுதியைச் சேர்ந்த யுவதியொருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மற்றும் 41 பாடசாலை மாணவர்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும்,இம் மாணவர்கள் கந்தளாய் பகுதியிலிருந்து கம்பஹா பகுதிக்கு தனியார் வகுப்புக்கு சென்றவர்கள் என்றும் ஐந்து பேர் பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் இச்செயற்பாடுகளை கந்தளாய் பொதுச் சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தினார். கந்தளாயில் பொது மக்களை முகக்கவசம் அணியுமாறும் அனைத்து பொது இடங்களிலும் பொது மக்களுக்காக வேண்டி கைகளை சுத்தப்படுத்துவதற்கான உபகரணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,கந்தளாய் பொலிஸார்,சிவில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுத்து வருவதாகவும் இதன் போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/91686
  9. மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை மினுவாங்கொடை கொரோனா கொத்தணியை அண்மித்த பகுதிகளில் சுமார் 4,000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இவர்கள் தொடர்பாகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.தொற்றுக்குள்ளானோருடன் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் மேலும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/மினுவாங்கொட-பகுதியைச்-சே/
  10. ‘லொக்டவுன்’ என்பது மக்களின் பிழைப்புக்கான அடக்குமுறை… October 6, 2020 ´லொக்டவுன்´ என்பது எளிதான முறை, ஆனால் அது இலங்கை மக்களளின் பிழைப்புக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார கொழும்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இன்று (06.10.20) இணைந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டதுடன் உடனடியாக நாட்டை முடக்குவது முக்கியமானதல்ல எனவும் மாறாக குறித்த தொற்றாளியை இனம் கண்டு அதனூடாக சமூக பரவலை தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி கூறினார். முதல் தொற்றாளரான பெண் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவுடன் மூன்று காவற்துறைப் பிரிவுகளை உள்ளடக்கி காவற்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்தப் பகுதிகளில் இருந்து அதிகமான மக்கள் வேலைக்கு சமூகமளிப்பதனை கருத்தில் கொண்டே மூன்று காவற்துறைப் பிரிவுகளுக்கு மாத்திரம் இவ்வாறு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே அந்தப் பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார். ´குறித்த ஆடை தொழிற்சாலையில் 1400 பேர் தொழில் புரிகின்றனர். 400 பேர் துப்புரவு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களில் 495 பேரைத் தவிர மற்ற அனைவரும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ளனர். மீதமுள்ள 495 பேர் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். ஆகவே அவர்களின் தொழிலை இடைநிறுத்தினால் பாதிப்பு ஏற்படும். தொழிற்சாலை பகுதிகளை விட்டு வெளியேறியவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, நேற்றிரவு முதல் 125 க்கும் மேற்பட்டவர்களை இராணுவத்தினால் பராமறிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் இந்த பகுதியில் வசிக்கின்றனர். அதன் காரணமாகவே நாம் இது போன்ற ஒரு சூழ்நிலையில் முழு முடக்கத்தை அமுலாக்கவில்லை. அதனை செய்வது மிகவும் எளிதானது, ஆனால் அது நாடு முன்னேறும் வழியாக அமையாது´ எனக் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2020/151404/
  11. தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த பன்னிரு வேங்கைகள். 1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது. இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள். சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை. தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர். அதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர். அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின. இன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி பல ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது. ஆனால், சிறிலங்கா அரசோ, சர்வதேசமோ கடந்த கால சமாதான காலத்திலும் சரி, அதற்கு முற்பட்ட காலங்களிலும் சரி தமிழ் மக்களின் மீதும் நிராயுதபாணிகளாக உள்ள போராளிகள் மீதும் தமது நடவடிக்கைளை மேற்கொண்டு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கையிலேயே முனைப்புடன் செயற்படுகின்றன. தற்போதைய நில ஆக்கிரமிப்பு, மக்களின் மீதான வான், எறிகணைத் தாக்குதல்கள் இதனையே சுட்டிக் காட்டி நிற்கின்றன. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/38dd4219-7305-4883-97f0-877cd7bfd108
  12. தமிழீழ வரலாற்றில் அழியா பெயர் லெப்.கேணல் புலேந்திரன்... லெப்.கேணல் புலேந்திரன்(திருமலை மாவட்ட தளபதியும் மத்தியகுழு உறுப்பினரும்) குணநாயகம் தருமராசா பாலையூற்று, திருகோணமலை. வீரப்பிறப்பு:07.06.1961 வீரச்சாவு:05.10.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய – சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு அன்பின் புலேந்திரன், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தானே நம்பியிருக்கவேண்டும் என்ற உண்மையைக் கருப்பசாமி வாயிலாக அன்று இந்தியா உணர்த்தியது. பின்னர் அதே செய்தி உனது மரணம் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. உனது மரணம் தமிழீழத்தையே உலுக்கியது. மாபெரும் வரலாற்றுக் துரோகமல்லவா அது. தமிழீழ வரலாற்றில் உனது பெயர் அழியாஇடத்தைப் பெற்றதல்லவா? முதன் முதன் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் (1981 இல் காங்கேசன்துறை வீதிச் சம்பவம் ) பங்கு பற்றியவர்களில் சீலன், ரஞ்சன் ஆகியோர் வீரச்சாவெய்திய பின் நீ தானே எஞ்சியிருந்தாய். கடைசியில் நம்பிக்கை துரோகத்துக்கல்லவா நீ பலியாகியிருக்கிறாய். தமிழீழ விடுதலைப் போரின் பல வரலாற்றுப் பதிவுகள் உனது வீரச்சாவால் ஸ்தம்பிதமாகிவிட்டனவே. நான் இந்தியப் படைகளின் சிறையில் இருந்த காலத்தில் எனது மனைவி எனது மகளின் நிலையைப் பற்றி ஒரு செய்தி சொன்னாள். வீதியில் தமது தகப்பனுடன் செல்லும் குழந்தைகளை வெறித்தபடி பார்ப்பாளாம். தனது பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை வேறெதையும் பார்க்கமாட்டாளாம், பேசமாட்டாளாம், இச் செய்தியைக் கேட்டதும், தந்தை அருகில்லாதது ஒரு குழந்தைக்கு எப்படியான ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்பதை உணர முடிகிறது. கூடவே உனது ஞாபகம் என்னை வாட்டியது. எனது மகள் என்றோ ஒருநாள் தனது தந்தையைக் கண்டவள். இனி மேலும் அந்த வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் உனது மகன் பிறக்கும்போதே ‘இன்னும் இல்லை இனி எப்போதும் இல்லை’ என்ற நிலையல்லவா ஒ…எவ்வளவு விலை கொடுத்திருக்கிறோம் எமது தாயக விடுதலைக்கு. கூடவே எம் இயக்கத்தின் சக்தியையும் கணக்கிட்டுக் கொள்கின்றேன். இதையெல்லாம் தாங்கும் வலிமையை எபப்டிப் பெற்றுக் கொண்டோமென்று . இயக்க ரீதியாக என்பதை விட தனிப்பட்ட முறையிலும் எமது கிராமத்து மக்களின் இதயத்தைப் பொருத்தவரை நீ அவர்களது தத்துப்பிள்ளை பாடசாலை மாணவர்கள் என்ற போர்வையில் பொட்டுவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த அந்த நாட்களை நினைத்துக் கொள்கிறேன். மீள வருமா அந்த நாட்கள் “புலேந்திரன், புலேந்திரன்” என்று உருகி வழிந்தர்களே எனது கிராம மக்கள்! எங்கள் எல்லோருக்கும் இடையில் உன்னிடம் மட்டும் அப்படியென்ன சக்தியிருந்தது? விஷேசமான கறிகள் சமைத்தாலோ, கோயில் விஷேசங்களின் பிரசாதங்கள் என்றாலோ உனது பெயரைச் சொல்லி விசாரித்துக் கொண்டுவந்து ஒரு பங்கை தருவார்களே அது ஏன் ? அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நடந்த மரண ஊர்வலங்களில் பிரேதத்தைச் சுமக்கும் தோள்களில் ஒன்று உன்னுடையது. மங்கள காரியங்கள் நடைபெறும் வீடுகளில் அலங்கார வேலைகளுக்கிடையே உனது குரல் தனித்துக் கேட்கும். குடும்பத்தில் முரண்டு பிடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் உனது வார்த்தைகள் நாணய கயிறு, மாலை நேரத்தில் சனசமூக நிலையை மைதானத்தில் நீ தான் உதைபந்தாட்டப் பயிற்சியாளன். அயலிலுள்ள மாணவர்களுக்கு இலவசக்கல்வி போதனையாளன். இன்னும் எத்தனை எத்தனை? இந்தச் சம்பவங்களையெல்லாம் எனது கிராம மக்கள் ஞாபகப்படுத்திச் சொல்கையில் அவர்களது கண்கள் கலங்கும். தொண்டை அடைத்துக் கொள்ளும். மீண்டும் பிறந்து வரமாட்டாயா? என்ற ஏக்கம் பிறக்கும். ‘சுப்பர்சொனிக்’ அது தான் நாங்கள் உனக்கு இட்ட பட்டப் பெயர். எங்கும் எதிலும் வேகம் காட்டும் உனது போக்கு – மிதிவண்டி தொடங்கி எந்த வாகனத்திலும் உன்னுடன் நாம் வரப் பயப்படுவது உனது வேகத்தைப் பார்த்துதான். எங்கே பொய் அடிபட்டாலும் இறுதியில் நொண்டுவதும் நாங்கள் தான். நீ சிரித்தபடியே எழும்பி வருவாய் அப்படியான சர்ந்தப்பங்களில் ஒரு போதுமே நீ உனது தவறை ஒத்துக்கொள்வதில்லை “நானென்ன செய்யிறது திடீரெண்டு வந்திட்டான் – திடீரெண்டு வளைவு வந்திட்டுது” என்றெல்லாம் நீ சொல்லும் பொது நாங்கள் வழியை மறந்து சிரிப்போம். பயிற்சியின் போது ஒழுங்காகச் செய்வதற்காக நாங்கள் தண்டனை பெறும்போது நீ மேலதிகமாகச் செய்ததற்காகத் தண்டனை பெறுவாய். அந்த கடுமையான பயிற்சி முடிந்தும் நாங்கள் தரையில் கிடந்தது தத்தளிக்கும் போது நீயோ சிரித்தபடியே துள்ளித் திரிந்தாய் மீண்டும் வருமா அந்த நாட்கள்? நாங்கள் செம்மணியிலிருந்து கொடிகாமம் வரை ஓடிப் பயிர்சியெடுப்பது எதுக்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் எமது கிராமத்து இளைஞர்கள் ” நாங்களும் வாறம் ” எனத் துணைக்கு ஓடி வருவது ” எந்த இடத்து றேசுக்கு ஓடிப்பழகுறீங்கள் ? ” என்று சாவகச்சேரி காவல் நிலையக் காவலர்கள் கேட்பது. இவற்றில் நான் எதை நினைப்பது? எதை மறப்பது அன்று எமது வியர்வையை தாங்கிக் கொண்ட அந்த வீதி அந்த வீதியால் செல்லும் பொது உதிரும் கண்ணீரையும் ஏற்றுக்கொள்கிறது. உனது மகன் வளரட்டும் இந்தப்பாதையெல்லாம் கூட்டிச் சென்று ” இதால தானடா கொப்பரும் நாங்களும் ஓடிப்பழகினது ” என்று காட்டுகிறேன். புலேந்திரன் நீ நடத்திய தாக்குதல்கள் ஒவ்வொன்றுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறீலங்காவின் சகல படைகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தியிருகிறாய். குடியேற்றம் மூலம் எனது பாரம்பரிய பிரதேசங்களைக் கபளீகரம் செய்ய முனைந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு நீ சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தாய். அதனால் தான் உன்னை பணயமாக வைத்து தமது சிப்பாய்களைக் கேட்க முனைந்தது சிறீலங்கா அரசு. மணமாகி மூன்று மாதங்கள் உனது வரிசைச் சுமக்கும் உனது மனைவி இந்த நிலையிலும் அடிபணிய மறுத்தாய்.”சிறீலங்கா இராணுவத்தினர் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டவர்கள். நாம் சமாதான காலத்தில் கைது செய்யபப்ட்டவர்கள்” என்றாய். முடிவில் சயனைட் உட்கொண்ட நிலையிலும் கைகள், கால்கள் பற்களால் யுத்தம் நிகழ்த்தினாய். உனது உடலில் தெரிந்த காயங்கள் சிங்களப்படை உன்மீது எவ்வளவு ஆத்திரம் கொண்டு இருந்தது என்பதைப் புலப்படுத்தின. “இந்தியா எமக்குச் செய்த பாவத்தைக் கழுவ புனித கங்கை நீர் போதாது” என்று ஒரு வரலாற்றறிஞர் குறிப்பிட்டதை நினைவு கூறுகின்றேன். திலீபனின் மரணம், உனது மரணம் எமது மக்களுக்கெதிரான போர் இவற்றைக் குறித்தே அவர் அவ்வாறு கூறினார். லெப் கேணல் புலேந்திரன் பற்றிய சில குறிப்புகள்… விடுதலைப்புலிகளின் மத்தியகுழு உறுப்பினரான லெப் கேணல் புலேந்திரன் திருகோணமலை மாவட்டத் தளபதியாகவும் பொறுப்பு வகித்தார். இவர் பங்கேற்ற முக்கிய தாக்குதல்கள் : * 15.10.1981 அன்று முதன்முதலாக சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதலான யாழ். காங்கேசன்துறை வீதித் தாக்குதல். * 27.10.1983 அன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல். * 18.02.1983 அன்று பருத்தித்துறையில் பொலிஸ் ‘ஜீப்’ மீதான தாக்குதல். * 29.04.1983 அன்று சாவகச்சேரி ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் முத்தையா மீதான தாக்குதல். * 18.05.1983 அன்று கந்தர்மடம் தேர்தல் சாவடியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல். * 23.07.1983 அன்று திருநெல்வேலித் தாக்குதல். * 18.12.1984 அன்று பதவியா – புல்மோட்டை வீதி சிரீபுரச் சந்தியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல். * 09.01.1985 அன்று அச்சுவேலி சிறீலங்கா இராணுவ முருகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல். * 14.02.1985 அன்று கொக்கிளாய் சிறீலங்கா இராணுவ முற்றுகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல். * திருமலை – கிண்ணியா வீதியில் இராணுவத்தின் கவசவாகனம் மீதான தாக்குதல். * திருமலை – கிண்ணியா வீதியில் விமானப்படையினர் மீதான தாக்குதல். * முள்ளிப்பொத்தானை சிறீலங்கா இராணுவ முகாம் மீதான தாக்குதல். * பன்மதவாச்சி சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல். வெளியீடு :– தீருவில் தீ ( 05,10.1992 ) எனும் நூலிலிருந்து மீள் வெளியீடு : வேர்கள் இணையம்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் https://www.thaarakam.com/news/4be5c12d-d32b-4133-bb18-f7458e6eaf0e
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா🎉🎉🎉
  14. நன்றி சண்டமாருதன். ஜான் மாஸ்ரரின் கட்டுரையை pdf இல் இருந்து கொப்பி பண்ணி சுரதா converter மூலம் பாமினியில் இருந்து ஒருங்குறிக்கு மாற்றி செம்மைப்படுத்தி இணைத்திருந்தேன். அண்மையில் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை! தோழர் ரகுமான் ஜானின் மூன்று தடிமனான புத்தகங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன. அவற்றில் இருந்து சில பகுதிகளை தட்டச்சு செய்து இணைக்கும் நோக்கம் இருக்கின்றது.
  15. ராசவன்னியன் அண்ணா, கூகிள் குரோமில் படமாகத் தேடிக் கண்டிபிடித்தேன். கீழே இருக்கின்ற இணைப்பில் இருந்து நேரடியாகக் கொப்பி பண்ணி ஒட்ட படமாகவே காண்பிக்கின்றது. இணைப்பைக் காட்ட ஒரு இடைவெளியை // அடுத்து விட்டுள்ளேன் “https:// img2.dreamies.de/img/641/b/trmfk15ltcq.gif”
  16. ராசவன்னியன் அண்ணா, ஒரு லிங் தாருங்கள். நானும் முயற்சித்துப் பார்க்கின்றேன்.
  17. எனது workarounds: வீரகேசரி இணையத்தில் வரும் படங்களை ஐபோன் மூலமாக இணைக்கும் முறை: Right click செய்து கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். அந்த இணைப்பில் உள்ள http என்பதை https என மாற்றினால் error வராமல் இணைக்கலாம். தினக்குரல் இணையத்தில் உள்ள படங்களை இணைக்கும் முறை: தினக்குரல் படங்கள் https இணைப்பாக மாற்றினாலும் வேலை செய்யாது. ஆனால் Right click செய்து கொப்பி பண்ணிவிட்டு Chrome browser இல் image search ஆக தேடினால் அதே படம் https இணைப்பை support பண்ணும் சில தளங்களில் கிடைக்கலாம். இது hit and miss என்றாலும் hit க்கு சாத்தியங்கள் கூட. மீண்டும் கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்து அந்த இணைப்பில் உள்ள http என்பதை https என மாற்றினால் error வராமல் இணைக்கலாம்.
  18. நான் வாசித்த/வாசிக்கும் சில புத்தகங்களில் இருந்து சிலவற்றை பதிகின்றேன். அவை இணையத்தில் இல்லாததால் தட்டச்சு செய்துதான் பதியவேண்டும்!
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ்🎉🎉🎉
  20. எனக்கும் இந்தப் பிரச்சினை இருக்கின்றது. பாதுகாப்புக் காரணமாக https links ஐ மட்டும்தான் அனுமதிக்கின்றது போலுள்ளது. ஆனால் பல தமிழ் தளங்கள் இன்னும் https ஐ முழுமையாக பாவிக்காததால் படங்கள் இணைப்பதில் பிரச்சினை உள்ளது.
  21. புலி வீரர்களின் வாழ்வுக்கு கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் ஒரு பாடம். கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்) சுப்பிரமணியம் நாதகீதன் அரியாலை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:15.11.1975 வீரச்சாவு:29.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் “சுப்பர்டோறா” அதிவேகபீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு அவன்ஒரு குழந்தை.வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான் இறக்க சிந்தையும், உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள் . பக்கத்து வீட்டு அம்மா வந்து “தம்பி ஒருக்கா அந்தக் கடைக்குப் போட்டு வாறியா அப்பன்?” என்றால், சொந்த வீட்டு வேலையைப் பாதியிலேயே போட்டுவிட்டு எழுந்துபோய் விடுகின்றவன் அவன். ஊரில் எவருடைய வீட்டிலாவது, ஒரு நல்லது கேட்டது என்றால், அங்கு அந்தச் சிறுவன் ஏதாவது எடுபிடிவேலைகள் செய்து கொண்டிருப்பான். சப்பாத்து கட்டாயம் அணியவேண்டிய அவனது பள்ளிகூடத்தில் ஏழை நண்பனொருவன். “அம்மா காசுக்கு கஸ்ரபடுறா….” என்று மனவேதனைப்பட்ட போது, அப்பா ஆசையாக வாங்கித் தந்த சப்பாத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, வெறுங்காலோடு வீட்டிற்கு வந்தவன் அவன். குடும்பத்தின் ஏழ்மை நிலையைச் சொல்லி, “காலையில கூடச் சாப்பிடேல மச்சான் ….” என்று விம்மிய உற்ற நண்பனிடம், அவன் அடியோடு மறுமறுக்க கையில் கிடந்த தங்கச் சங்கிலியையே கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தவன்தான புவீத்திரன். ஒரு மென்மையான் உள்ளம் அவனுடையது. அவன் கோபமடைந்ததை நாங்கள் கண்டதில்லை. அப்படித்தான், சுய கட்டுப்பாட்டை மீறிக்கோபம் வந்தாலும் அது விநாடிக் கணக்கில் கூட நீடித்ததில்லை. அவனுடைய உதடுகள் கேட்ட வார்த்தைகளை உச்சரித்ததை ஒரு நாள்கூட நாங்கள் கேட்டதில்லை. வீட்டில் அக்கா தம்பியோடு என்றாலும் சரி. பிற்காலத்தில், இயக்க நண்பர்களோடு என்றாலும் சரி, சாதாரண சிறு சச்சரவு வந்தாலும் அவன் தன்னைத்தானே நோந்துகொல்வானே தவிர, மற்றவர்களை அல்ல. சரி எது பிழை எது என்பதெல்லாம் அவனுக்கு தெரியும்; ஆனால், நியாயம் கதைக்க மாட்டான். பொய் ஒரு மூலையில் இருந்து விக்கி விக்கி அழுதுகொண்டிருப்பான். அது பாசத்தால் பிணைந்திருந்த ஒரு குடும்பம். அக்காவிலும் தம்பியிலும் அன்பு நிறைந்த சகோதரனாக அவன் இருந்தான். அப்பாவுக்கு எல்லாமே குழந்தைகள் தான், குழந்தைகளுக்கு எல்லாமே அம்மாதான். அவனுக்கு 12 வயதே இருக்கும்போது அந்தத் துயரம் நிகழ்ந்தது திருகோணமலையிலிருந்த உறவினர்களிடம் போன அம்மா திரும்ப வரவில்லை; அந்தக் குழந்தைகள் பார்க்க முடியாத இடத்திற்கு இந்தியர்கள் அம்மாவை அனுப்பிவிட்டார்கள். இனி எப்போதும் அவள் வரமாட்டாள். புவீந்திரன் அழுதான், அப்போது அவனுக்கு அது மட்டும்தானே தெரியும். ஆனால், அம்மாவின் இழப்பு அந்த பிஞ்சு உள்ளத்தில்ஆழமான ஒரு வடுவை ஏற்படுத்தியது. ஓய்வாக இருக்கும் கருக்கள் பொழுதுகளில் அப்பா குழந்தைகளுக்கு ஆங்கிலப்படக் கதைகள் சொல்லுவார் சுதந்திரத்தை நோக்கிய எழுட்சிகளைத் தழுவியதாக அவை இருக்கும். வியட்நாம், கியூபா, தென்னாபிரிக்கா என அது நீளும். புவீத்திரன் மட்டும் ஆர்வத்தோடு இருந்து கேட்டான். ஏற்கனவே ஏழைகளுக்காகவும் பாதிக்கபடுகின்றவர்களுக்காகவும் இரங்குகின்ற அந்த மனம், படக்கதைகளைக் கேட்கும்போது, ஒடுக்கப்படும் பரிதாபப்படும். அவர்களின் அவலங்களை மனத்திரையில் போட்டுப் பார்த்துக் கொதிக்கும். அந்த போராட்டங்களின் நியாயத் தன்மையைப் புரியும். அடக்குகின்றவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணரும். அந்த மக்களோடு எங்களினத்தை ஒப்பிட்டு பார்த்து விழிக்கும் எங்கள் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தானும் ஈடுபட வேண்டுமென இருக்கும். கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன் வீரவணக்க நாளில் வேர்கள் இணையம் மீள் வெளியீடு செய்கின்றது இந்த விழிப்புணர்வோடும், மனவுறுதியோடும், இதயத்தை பிழியச்செய்கிற அம்மாவினுடைய நினைவுகளும் சேர்ந்துதான்; அவனை இயக்கத்திற்குப் போகவும் உந்தியிருக்ககூடும். புவீந்திரன் ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தான். உறவினர் ஒருவரும் வந்திருந்தார் ஒரு தந்தைக்கு இயல்பாகவே இருகின்ற பிள்ளைப்பாசம் வெளிப்பாடு கண்டபோது, வந்தவர் அப்பாவிடம் சொன்னதை, அப்பா மகனிடம் கேட்டார். “தம்பி… வெடிபட்டு உனக்கு காலும் ஏலாது…. இனி விட்டிட்டு வந்து … வீட்டோட நிக்கலாம் தானே?….” அப்பா இழுக்க, மெல்லிய ஒரு சிரிப்போடு விழிகளை உயர்த்தி, ஓர் அரசியல் மேதையைப் போல அவன் விளக்கினான். “இயக்கத்திற்க்கு போனது, விலத்திக்கொண்டு வாரத்துக்கில்லை; நான் போனது நாட்டுக்காகப் போராட… திரும்பி வீட்டிற்கு வாறதுக்கில்லை. இந்தப் போராட்டத்திலை நான் சாகவும் கூடும், அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை.…” வந்தவருக்கும் அப்பாவும் மெளனித்துப் போனார்கள். கூடித்திரிந்த பழைய நண்பர்கள் நீண்ட காலத்தின் பின் சந்தித்தார்களாம். ஏதேதோவெல்லாம் கதைத்தபின் பிரிகின்ற நேரத்தில், “நீ இப்ப நொண்டி தானேடா…… இனி உனக்கு ஏன் மச்சான் இயக்கம்…. விட்டுட்டு வாவன்ரா….” கேலி செய்தார்களாம். ஒரு மணித்துளி திகைத்துப்போனவன், நின்று திரும்பி நிதானமாக சொன்னான். “எனக்கு கால்தான் நொண்டி, என்ர மனம் நொண்டியாகேல்லை. ஒரு உறுப்புத்தான் ஊனமாய் போச்சுதே இல்லாம, உள்ளம் எப்பவும் உறுதியாய் தான் இருக்கின்றது. அங்கங்கள் போனதைப்பற்றி எனக்குக் கவலையில்லையடா….. மனதில் உறுதிதான் வேணும். எனக்கு அது நிறைய இருக்கு. நான் சும்மா இருந்து சாகமாட்டேன். பெரிய சாதனை ஒன்றை செய்துதான் சாவேன்……” அந்த நண்பர்களுக்கு அது அப்போது புரியவில்லை; சிரித்துக்கொண்டு போனவர்கள்; ஆனால், இப்போது வியத்து நிற்கின்றார்கள். “பிரபல கரும்புலி போறார்” இப்படித்தான் தோழர்கள் அவனுக்குப் பகடி சொல்லுவார்கள். ஆனையிறவில் வெடிபட்டு நரம்பறுந்து சூம்பிப் போனதால், ‘பெல்ட்’ போட்டுக் கட்டியிருக்கும் இடது காலை இழுத்து இழுத்து, ஒரு புன்சிரிப்போடு புவீந்திரன் போவான். அவனை ஒரு “கரும்புலிப் பைத்தியம்” என்று சொல்லலாம். அவனது நினைவுகள் கனவுகள் எல்லாமே, ஒரு கரும்புலித் தாக்குதலைச் சுற்றித்தான் இருந்தன. எவருமில்லாத தனியறையொன்றில், ஏதாவது ஒரு கடற்கரையோர வரைபடத்தை விரித்து வைத்து விட்டு, நீண்ட மெல்லிய ஒரு தடியோடு புவீந்திரன் அருகில் நிற்பான். தன்னைத் தளபதியாகவும், அருகில் வீரர்கள் நிற்பதைப் போலவும் உருப்படுத்திக் கொண்டு, வரைபடத்தைத் தடியால் தொட்டுக்காட்டி, அவன் காற்றுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருப்பான். “…..டோறா இதாலதான் வரும்……” “…..உங்கட வண்டிகள் இந்த மாதிரி வியூகத்தில அதைக் குறுக்கால மறிச்சு அடிக்கும்…..” ” ….அந்த நேரம், இந்த விதமாகப் பக்கவாட்டில், உச்ச வேகத்தில வந்து புவீந்திரன் இடிப்பான்….” “…..டோறா புகையாகும்……” ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கும், அவனைப் பார்க்க சிரிப்புதான் வரும். புவீந்திரன்! அவன் ஒரு வித்தியாசமான போராளி மட்டுமல்ல; வித்தியாசமான மனிதனும் கூட. அவன் அமைதியானவன்; ஆனால் சொம்போறியல்ல, உற்சாகமானவன். ஆனால் குளப்படிக்காரனல்ல. அவனோடு வாழக்கிடைத்த நாட்கள் எங்களுக்கு வரப்பிரசாதம். அவனுக்குமட்டுமே உரிய சில உயர்ந்த பண்புகள் இருந்தன. இவற்றை அவனிடத்தில் மட்டுமே தான் காணமுடியும். இயல்பாகவே அவனுக்கிருக்கின்ற இயற்கைக் குணம். அடுத்தவர்கள் அவனில் இரக்கப்படும் விதமாக அவனை இயக்குவிக்கும். இயலாத காலோடும்கூட சில சமயங்களில் எங்களது நெஞ்சுருகும் விதமாக அவன் செயற்படுவான். கிணற்றடியில் உடுப்புத் துவைத்துக் கொண்டிருக்கும் நண்பன், அவசர வேலை ஒன்றிற்கான அழைப்பின் பெயரில், துவைப்பதைப் பாதியில் விட்டு விட்டு அவதிப்பட்டு போனானென்றால், அவன் திரும்பி வரும்போது அவனது உடுப்புகள்முற்றத்து வெளியில் உலர்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்டவன்தான் புவீந்திரன். முகாமிற்கு யாராவது வெளியாட்கள் வந்துவிட்டால், அவர்களை உபசரிக்க, அன்றைய ‘முறை ஆளை’த் தேடித்திரிந்து, பின் மூலையில் போய்ப் பிடித்துவந்து விடுவதற்கிடையில்…… வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு, அவன் பேணிகளை கழுவிக்கொண்டிருப்பான். அதுதான் புவீந்திரன். ஆனையிறவில் வெடிபட்டுக்காயம் மாறி வந்தவனுக்கு, யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலகத்தில் தட்டச்சுப் பொறிப்பது பணி. அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுத்துக்களைத் தேடித்தேடிக் குத்திக்கொண்டிருந்தவன். கொஞ்ச நாட்களில், மற்றவர்கள் மெச்சக்கூடிய அளவுக்கு அதில் தேர்ச்சி பெற்றான். அறிக்கைகள், கடிதங்கள், விபரக்கோவைகள், அது இது என்று. நாளாந்தம் அவனுக்கு வேலைகள் குவிந்துபோய்க் கிடக்கும். அப்படி இருக்கும் போதும், கவிதை, கட்டுரைகளை எழுதிக்கொண்டு வந்து, “இதையும் ஒருக்கால்….” என்று கெஞ்சுகின்ற நண்பர்களிடமும் முகம் சுளிக்காமல் வாங்கி சட்டைப்பைக்குள் மடித்து வைப்பான் காலை மாலை இரவு என இழுபட்டு நள்ளிரவு கடந்து 1அல்லது 2 மணிவரை இருந்து கூட தனக்குரிய வேலையை முடிக்கின்ற அந்தப் போராளி, அதன் பிறகும் விழித்திருந்து, நண்பர்களுடையதையும் அடித்துக் கொடுக்கின்ற நண்பன். புவீந்திரன்! புலி வீரர்களின் வாழ்வுக்கு நீ ஒரு பாடம். உன்னோடு வாழ்ந்த நாட்கள், எக்காலத்திலும் தேயாத பசுமையான நினைவுகள். சூம்பிக் கிடக்கும் காலோடும் உன்னைத் தூக்கிக்கொண்டு போய் கடலில் இறக்கிவிடும் போதெல்லாம், சிறு பிள்ளை மாதிரித் தத்தளித்து கையைக் காலை வயசுக்கு விசுக்கி, ஓயாத முயற்சியோடு அலைகளோடு போராடி நீ நீந்திப் பழகினாய். “பயிற்சிக் காலம் போதாது. ஒருத்தன் கூட சரியாய் அடிக்கமாட்டான்….” என்று சொன்னவர்களிடம் சவால் விட்டு, பயிற்சி முகாமிலிருந்து அத்தனை பேருக்கும் சாள்ஸ் அண்ணன் “ரச்” தந்த போது, வெடிபட்ட காலை அவரே சரியாய் எடுத்து விட்டு, ரைபிள் பிடித்துச் சொல்லித்தர, நீ மட்டுமே ஒரு “புல்”லும், ஒரு “நைனும்” அடித்து, சாள்ஸ் அண்ணனின் பெயரைக் காத்தாய். எதுவுமே தெரியாத அப்பாவிக் குழந்தையான உன்னிடம். நல்லதற்ற ஒரு வார்த்தையச் சொல்லி “இன்னாரிடம் கேட்டுப் பார் அர்த்தம் சொல்லுவார்……” என்று அனுப்பிவிட்டால், அங்கு சென்று நல்ல கிழி வாங்கிக்கொண்டு வந்து, விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு முன்னால் அசடு வழிய நிற்பாய். கால் இயலாமல் இருந்தும். மெல்ல மெல்ல படகோட்டப் பழகி, கிளாலிக் களத்தில் எதிரிகளைக் கலைத்து விரட்டும் சண்டைகளில், அலைகளைக் கிழித்துச் செல்லும் எங்களது சண்டைப்படகுகளிற்கு ஒட்டியாய் இருந்தாய். இன்னும்…. இன்னும்….. இவையெல்லாம், எக்காலமும் ஓயாமல் எங்கள் இதயங்களில் நினைவலைகளாய் மோதும். புவீந்திரன் ! சாதனையொன்றைச் செய்துதான் சாவேன் என்றாயா? சாகும் போது நீங்கள் படைத்தது ஒரு சாதனையல்ல; அது சாதனைகளின் ஒரு குவியல். “கனோன்” எடுத்து சாதனை. அது இரண்டாக இருந்ததும் ஒரு சாதனை. ஒரே தாக்குதலில் இரண்டு “பிப்ரி” எடுத்தது இன்னொரு சாதனை. டோறா ஒன்றை முழுமையாக் நொறுக்கியது அடுத்த சாதனை. ஒரு கடற்தாக்குதலில் அதிக படையினர் கொல்லப்பட்டது வேறொரு சாதனை . “ஆசிரீல ட்ரெயினிங் தரேக்கை நாங்கள் ஒரு டோரா அடிக்க வேணும் என்று சாள்ஸ் அண்ணன் சொல்லுறவர்….” என்று அடிக்கடி. கூறும் நீ, “இப்ப நாங்கள் அடிக்கப் போறம். ஆனால், அதைப் பார்க்கிறத்துக்கு அவர் தான் இல்லை” என்று கவலைப்படுவாய். அந்தத் தாக்குதல் திட்டம் உருவாக்கப்பட்டது. கோட்டைக்காட்டிலிருந்து…., பலாலிக்கு ரோந்து செல்லும் டோறாவை, பருத்தித்துறைக்கு மேலே இடைமறித்து மூழ்கடிக்க வேண்டும். கட்டைக்காட்டிலிருந்து 18 மைல் தூரத்திலும், காங்கேசன் துறையிலிருந்து 16 மைல் தூரத்திலும் அந்த தாக்குதல் மையம் இருந்தது. மணியரசனும் நீயும் தலைவரிடம் போனீர்கள். உங்கள் வாழ்வின் உச்ச உயர் நாள் அதுவாகத்தான் இருந்திருக்கும். உள்ளப் பூரிப்பின் சிகரங்களைத் தொட்டிருக்கக் கூடிய அந்த நாளில் உங்கள் மனவுணர்வுகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது. சோகம் பரவிய முகத்தோடு, உன்னைக் கைதொட்டுத் தடவி, “எந்தக் காலிலையப்பன் வெடி பிடிச்சது?….” என்று, அக்கறையோடு தலைவர் விசாரித்தபோது, மெய் சிலிர்த்து நின்று சிரித்தாயாம். எல்லாமே தயார். தக்கைவண்டி, சண்டைப்படகுகள், தாக்குதற் கருவிகள், தாக்கும் வீரர்கள், மணியரசன், நீ …. எல்லாமே….., ஏறக்குறைய பதினைந்து நாட்கள். அவனுக்காக கடல் மடியில் நீங்கள் காத்திருந்தீர்கள். நள்ளிரவிலேயே நிலைக்குப் போய்விடவேண்டும். இருளை ஊடறுத்து உங்கள் விழிகள் பகைவனைத் தேடிக்கொண்டிருக்கும். மறுநாள் மதியமோ, மாலைவரையோ அந்தத் தேடல் நீடிக்கும். எதிரி வரமாட்டான், ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தோடு திரும்பி வருவீர்கள். உற்சாகம் குன்றாமல், உறுதி குலையாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் போனீர்கள். 29.08.1993 அன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிடுந்தவன் கடலில் வந்தான். பொங்கியெழும் எங்கள் கடலில் பகைவன் உலா வரவா? காத்திருந்த வேங்கைகளின் ஆவேசமான பாய்ச்சல். தனியறையில் “வரைபடத்தை விரித்துவைத்து, நீ காற்றுக்கும் விளங்கப்படுத்துகிற அதே தாக்குதல் திட்டம்” எங்கள் கண்ணெதிரே கடலில் நடந்து முடிந்தது . அப்போது நாங்கள் சிரித்தோம். இப்போது…. இரண்டு “கனன் பீரங்கி”களையும், இரண்டு “பிப்ரி கலிபர்” களையும் மூழ்கிக்கொண்டிருந்த “டோறா” விலிருந்து தோழர்கள் எடுத்துக்கொண்டு வந்தார்கள் . புவீந்திரன் வரமாட்டான்……! மணியரசனும் வரமாட்டான்….! வெளியீடு :- (1993 கடற் புலிகள் சிறப்பிதழ்) விடுதலைப்புலிகள் இதழ் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/e25a5fab-21be-4768-b83f-c3d60bdc884e
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் 🦀 🦀 🦀 🎉🎉🎉
  23. கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும் 24 ஆகஸ்ட் 2020 தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தோண்டப்பட்ட இடத்திலேயே முதுமக்கள் தாழி. கீழடித் தொகுதியில் நடந்து வரும் அகழாய்வில் நுண்கற்கால கருவிகள், கரிமயமாகிப்போன நெல்மணிகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பது ஆய்வாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுக்க நடந்துவரும் ஆய்வுகளில் ஆயிரக்கணக்கான தொல் பொருட்களும் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது கீழடி தொகுதிகள், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகள் எந்த நிலையில் உள்ளன, கிடைத்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார். கீழடி பகுதியில் தற்போது நடந்துவரும் அகழாய்வில் உருளை வடிவ பானைகள், உலை, கால்நடை எலும்புகள், இரும்புப் பொருட்கள், விலைமதிப்பற்ற கற்களால் ஆன மணிகள், எடை கற்கள், முத்திரைகள் உள்ளிட்டவை கிடைத்திருக்கிறன. க - ய என்ற தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடும் கிடைத்திருக்கிறது. கொடுமணல் பகுதியில் கண்டறியப்பட்ட இரும்பு உலை அதேபோல, வடமேற்கு இந்தியாவின் தற்போதைய மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய பகுதிகளில் பரவலாக காணப்படும் அகேட், சூது பவளம் போன்ற மணிகளும் கிடைத்திருப்பதால், இங்கு தொழில், வணிகத் தொடர்புகள் சிறப்பாக நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பஸால்ட் வகை கற்களால் ஆன எடை கற்கள், சுடுமண்ணாலான முத்திரை ஆகியவையும் கிடைத்துள்ளன. கூம்பு வடிவத்திலான இந்த முத்திரையின் நடுப்பகுதியில் ஆமை வடிவம் இடம்பெற்றிருக்கிறது. கீழடியை அடுத்துள்ள கொந்தகை முழுமையாக ஈமச்சின்னங்கள் நிறைந்துள்ள பகுதி என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்தது. இங்கிருந்து இதுவரை 40 முதுமக்கள் தாழிகளும் 17 மனித எலும்புக் கூடுகளும் 2 கால்நடை எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நுண் கற்காலக் கருவிகள், எரிந்த நெல் மணிகள் கீழடிக்கு அருகில் உள்ள மற்றொரு பகுதியான அகரத்தில் நடத்தப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வில் பல முக்கியமான தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். "இங்கு கிடைத்துள்ள தொல்பொருட்களில் நுண் கற்காலக் கருவிகள் கிடைத்திருப்பது கவனத்திற்குரியது. இந்த நுண் கருவிகள் இங்குதான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கரிமயமான நெல்மணிகளும் கிடைத்திருப்பது தொல்லியல் ரீதியில் மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்தார் பாண்டியராஜன். கொடுமணல் பகுதியில் கண்டறியப்பட்ட கல்வட்டம் இவை தவிர, அகரத்தில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட கல் கருவிகள், கறுப்பு - செவ்வண்ண பானை ஒடுகள், சுடுமண்ணாலான உருவங்கள், பொருட்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. கரிமயமான நெல்மணிகளைப் பொருத்தவரை, அவை 20 என்ற எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. அவற்றுக்கு அருகிலேயே கிடைத்த கற்கள் ஒன்றில் கிண்ணம் போன்ற குழி காணப்பட்டிருக்கிறது. இவை தவிர, பிற்காலத்தைச் சார்ந்த தங்க நாணயம், செலடான் வகை சீன மட்பாண்ட ஓடு, புகைப்பான்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூரில் 1876ல் முதல் முறையாக பெர்லின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஜோகோர் என்பவரால் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் உள்ள ஈமக்காடு கண்டறியப்பட்டது. 1903ல் அலெக்ஸாண்டர் ரீ இங்கு மிகப் பெரிய அளவிலான தொல்லியல் ஆய்வை நடத்தினார். மத்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையால் மீண்டும் இந்த இடத்தில் 2003-04ல் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. இந்த தொல்லியல் ஆய்வின் முடிவுகள் நீண்ட காலமாக சமர்ப்பிக்கப்படாத நிலையில், இங்கு தற்போது தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வைத் துவங்கியிருக்கிறது. ஈமக்காடாக உள்ள பகுதியிலும் வாழ்விடப் பகுதி எனக் கருதப்படும் பகுதியிலும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. வெளிக் கொணரப்பட்ட பத்து முதுமக்கள் தாழிகளில் இரண்டு மிக நல்ல நிலையில் உள்ளன. இவை தவிர, இரும்பாலான பொருட்கள் உட்பட 438 தொல்பொருட்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆதிச்ச நல்லூரில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ள சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளும் இடைக் கற்காலக் கருவிகளும் இப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்த்தியதையடுத்து இங்கும் அகழாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதுவரை 61 தொல் பொருட்களும் 31 முதுமக்கள் தாழிகளும் இங்கே கிடைத்துள்ளன. கொந்தகை பகுதியில் கிடைத்த இரு முழுமையான எலும்புக் கூடுகள் ஈரோடு மாவட்டம் கொடுமணல் நீண்ட காலமாகவே தொல்லியல் ரீதியில் கவனிக்கப்பட்ட பகுதியாக இருந்துவந்தது. இங்கு பண்டைய குடியேற்றத்தைக் கண்டறிதல், தமிழி எழுத்தின் வளர்ச்சியைக் கண்டறிதல் ஆகிய நோக்கத்துடன் மாநில தொல்லியல் துறை இங்கு ஆய்வு நடத்தி வருகிறது. அதில் பெரும் எண்ணிக்கையில் கருப்பு - செவ்வண்ண பானை ஓடுகளும் உலைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் கிடைத்துள்ளன. ஆகவே இந்தப் பகுதி ஒரு தொழில்சார்ந்த பகுதியாக இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. இது தவிர, தமிழி பொறிக்கப்பட்ட பானை ஒடுகளும் கிடைத்துள்ளன. ஒரு பானை ஓட்டில் ஆதன் என்ற பெயரும் மற்றொரு பானை ஓட்டில் 'ள்அகுர (வன்)" என்ற எழுத்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கருங்கல், சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கற்சுவர் ஒன்றும் வெளிக்கொணரப் பட்டிருக்கிறது. உலையும் எரிந்த களிமண் கொண்ட பகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தங்கத்தால் ஆன அணிகலன்கள், காசுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளின் மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தொடர்ச்சியாக ஆய்வுகளுக்காக குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொல் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் ஒன்றை அமைக்கும் பணிகளும் நடந்துவருவதாக அவர் கூறினார். இந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கும் தொல் பொருட்களை அறிவியல் ரீதியாக ஆய்வுசெய்ய இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் மாநிலத் தொல்லியல் துறை தெரிவிக்கிறது. குறிப்பாக புணேவில் உள்ள டெக்கான் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஹைதராபாதில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம், சர்மா மரபுசார் கல்வி மையம், இந்திய புவிகாந்தவியல் நிறுவனம், பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்ட்டிடியூட் ஆகியவை இந்த ஆய்வில் உதவவுள்ளன. கீழடி நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த கட்ட ஆய்வு முடிவுகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டிலிருந்து தொல்லியல் அகழாய்வு நடந்து வருகிறது. முதல் மூன்று அகழாய்வுகளை மத்தியத் தொல்லியல் துறை நடத்தியது. அதற்குப் பிறகு நான்கு, ஐந்து, ஆறாம் கட்ட ஆய்வுகளை மாநிலத் தொல்லியல் துறை நடத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வு முடிவுகள் தேசிய அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. https://www.bbc.com/tamil/india-53894008
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.