Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34940
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. யாழ் களத்தை கலக்கும் குமாரசாமி ஐயாவுக்கும், கிறுக்கல்களால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புத்தன் அங்கிளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  2. எல்லாவற்றையும் மறந்துவிடலாம் சேரன் பட மூலம், Newsexpress எல்லாவற்றையும் மறந்துவிடலாம் இந்தப் பாழும் உயிரை அநாதரவாக இழப்பதை வெறுத்து ஒருகணப் பொறியில் தெறித்த நம்பிக்கையோடு காலி வீதியில் திசைகளும், திசைகளோடு இதயமும் குலுங்க விரைந்தபோது, கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில் வெளியே தெரிந்த தொடை எலும்மை, ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில் எங்கோ ஒரு புள்ளியில் நிலைத்து இறுகிப்போன ஒரு விழியை, விழியே இல்லாமல், விழியின் குழிக்குள் உறைந்திருந்த குருதியை, ‘டிக்மண்ட்ஸ்’ ரோட்டில் தலைக் கறுப்புகளுக்குப் பதில் இரத்தச் சிவப்பில் பிளந்து கிடந்த ஆறு மனிதர்களை, தீயில் கருகத் தவறிய ஒரு சேலைத் துண்டை, துணையிழந்து, மணிக்கூடும் இல்லாமல் தனித்துப்போய்க் கிழந்த ஒரு இடது கையை, எரிந்துகொண்டிருக்கும் வீட்டிலிருந்து தொட்டில் ஒன்றைச் சுமக்க முடியாமல் சுமந்துபோன ஒரு சிங்களக் கர்ப்பிணிப் பெண்ணை எல்லாவற்றையும், எல்லாவற்றையுமே மறந்துவிடலாம் ஆனால், உன் குழந்தைகளை ஒளித்துவைத்த தேயிலைச் செடிகளின் மேல் முகில்களும் இறங்கி மறைத்த அந்தப் பின் மாலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த கொஞ்ச அரிசியைப் பானையிலிட்டுச் சோறு பொங்கும் என்று ஒளிந்தபடி காத்திருந்தபோது பிடுங்கி எறிபட்ட என் பெண்ணே, உடைந்த பானையும் நிலத்தில் சிதறி உலர்ந்த சோற்றையும் நான் எப்படி மறக்க? https://maatram.org/?p=8650
  3. மீண்டும் வருவான் மேஜர் மில்ரன்…. “தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” அவனது பள்ளித் தோழி விமலா இப்படித்தான் நினைவு கூருகிறாள். அவனது, அம்மாவின் மொழியில் கூறுவதானால், “அவனோட ஆரெண்டு இல்லை – எல்லோரும் வந்து ஒட்டிக்கொள்ளுவினம். அவன் ஊரில இருந்து ஓமந்தைப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போகேக்க ஊர் பெடி, பெடிச்சியள் எல்லாரையும் அவன்தான் சாச்சுக்கொண்டு போறவன்.” அவனது கறுத்த முகத்தில் அப்படி ஒரு வசீகரம் என்று சொல்வதைவிட உள்ளார்த்தமாக உண்மையாக, நேர்மையாக, உள்ளார்த்த அன்புடன் பழகிய அவனது உள்ளத்து அன்பே வசீகரத்தின் காரணமெனலாம். அவன் பிறந்து வளர்ந்த அவனது சொந்தக் கிராமத்தின் மூட நம்பிக்கைகளும் அவனுடன் சேர்ந்தே வளர்ந்திருந்தாலும், தன் பதினெட்டு வயதில் தேர்ந்தெடுத்த விடுதலைப் பாதை அவனுள் முற்போக்கான எண்ணங்களிற்கு வழிகாட்டியதென்றே கூறவேண்டும். அவன் போராளியாகி பொறுப்பாளனாகி சீ.டி -125 உந்துருளியில் வீட்டுக்குப் போனால், அங்கு இன்னமும் பழமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் அம்மா, அப்பாவுடன் புதுமை பற்றிய விவாதங்கள்தான். “உந்தக் காட்டைக் கட்டிப் பிடிக்கிறதை விட்டுட்டு றோட்டுக்கு வாங்கோ” அவனது வீடு ஏ-9 வீதிக்கருகில் வருவதற்கு அவனது வாதம்தான் காரணமாயிற்று. தொடக்கத்தில் விவாதங்கள் இருப்பினும் பிற்காலத்தில் அவனது கட்டளையின் கீழ் ‘வீடு’ வந்ததென்றே கூறல் வேண்டும். அவனது கட்டளைகளில் முதன்மையானது “வீட்டுக்கு வாற போராளிகளுக்கு தேநீர் கொடுத்து, சாப்பாடு கொடுத்து அனுப்பவேணும். அவையளும் உங்கட பிள்ளைகள்தான்.” இந்த உணர்வானது இயக்கத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே அவனிடம் குடிகொண்டிருந்தது. 1989 அவன் இயக்கத்துக்கென வந்து ஆண்டு ஒன்று கடந்திருந்தது. பாலமோட்டை, கொந்தக்காரக்குளப் பகுதியில் அணி ஒன்றின் பொறுப்பாளனாய் அவன் நடமாடும் செய்தி, உறவினர் வாயிலாக பெற்றோரின் காதுகளை எட்டியது. ‘இந்தியப் படைகளினது கண்களில் மண்ணைத் தூவி நடமாடும் தன் பிள்ளையைப் பார்ப்பது அவ்வளவு உசிதமல்ல’ என்று தெரிந்தும் பெற்றோரின் மனசு அதற்கு இடங்கொடுக்கவில்லை. தமது வசதிக்கேற்ப சிறு பலகாரப் பொதியுடன் அவன் நடமாடும் கிராமங்களில் அவனைத் தேடினர் பெற்றோர். சில வாரங்கள் கழித்து அவர்களிடம் அவன் வந்தான். “அம்மா, நீங்கள் என்னைத் தேடித் திரியிறது எனக்கு எப்பவோ தெரியும். என்னைக் காணவில்லை என நீங்கள் போவியள் எண்டு நினைச்சன். ஆனால் நீங்கள் என்னைக் கண்டுதான் போறதெண்ட முடிவோட நிக்கிறியள்… அம்மா, என்னைப்போலதான் என்னோட நிற்கிற பெடியளும் தங்கட அம்மா, அப்பாவைப் பார்க்காமல் நிக்கினம்… என்னை மட்டும் பார்க்க வந்திருக்கிறது சரியில்லை அம்மா. அதுவும் நான் இரு அணிக்குப் பொறுப்பாக இருக்கிற இந்நிலையில்… நினைக்கவே மனம் ஏற்குது இல்லையம்மா.” அவனது முதிர்வான சில நிமிடப் பேச்சு அம்மாவை கண்கலங்கி நிற்கவைக்க… “அம்மா நான் போயிற்று வாறன் – உந்தப் பலகாரப்பொதி எங்கள் எல்லோருக்கும் போதாது – இனி சந்தர்ப்பம் கிடைச்சா எல்லோருக்கும் சேர்த்துச் செய்து வாங்கோ” அவன் சென்று அடர்ந்த காட்டினுள் முழுமையாக மறையும்வரை அம்மா பார்த்துக் கொண்டேயிருக்க, “அவன் போராட என்று புறப்பட்டவன், தன்ர கடமையை முடிச்சு வீட்டுக்கு வருவான்” என அப்பாதான் அம்மாவின் கையைப் பிடிச்சு கூட்டிவந்தார். அம்மா சந்திச்சு சில மாதங்களின் பின்பு, “கொந்தக்காரகுளப் பகுதியில இந்தியனாமிக்கும், எங்கட பெடியளுக்குமிடையில சண்டையாம், பெடியளிலையும் இழப்பாம்” அயலவரின் செய்தியால் அம்மா ஒடிந்துபோனா. அம்மாவை நிமிர்த்தும் செய்தி சிலவாரங்கள் கழித்துத்தான் வந்தடைந்தது. அந்தச் சம்பவம் பற்றி அவன் இப்படித்தான் விபரிப்பான், “சுடலைக்குள்ள கிடந்தால் ஆரும் வரமாட்டாங்கள் எண்டு சுடலைக்க கிடக்கப் போய், இந்தியன் ஆமி ‘பிறன்’ எல்.எம்.ஜீ யால போட்டானே ஒரு போடு. சன்னம் ஒண்டு என்ர கையை முறிச்சுக்கொண்டு போயிற்று. அதில இருந்து இந்தியன் ஆமிக்கு நாங்கள் வைச்ச சங்கேதப் பெயர் (CODE NAME) ‘சுடலைப்பேய்.’ அந்த நேரத்தில், அடர்ந்த காட்டினுள் உள்ள முகாம்களுக்கான வழங்கல்கள் அனைத்தும் நகருக்குள்ளிருந்து, கிராமப்புறத்துக்காகி அங்கிருந்து முதுகுச் சுமையில்தான் காட்டினுள் செல்லும். நிலத்தில் கொட்டும் தானியங்களை காட்டுக்கோழி அல்லது மயில் பொறுக்காது விடின், ஐம்பது கிலோ அரிசிக்காகக்கூட இரத்தம் சிந்தவேண்டிய அபாயகரமான சூழலில் அவனது முள்ளந்தண்டும் நூற்றுக்கணக்கான மூட்டைகளைச் சுமந்து போராளிகளுக்கான வழங்கல்களை எடுத்துச் சென்றிருந்தது. இறுக்கமான அந்தப் போர்ச் சூழலில் ஊருக்குள் நடமாடும்போது அசாதாரணமான மறைப்பிடமே வாழ்விடமாக மாறும். நான்கு அடி சதுர இடத்தினுள் ஆறடி உடலை மறைத்து துயிலவேண்டிய நிர்ப்பந்தம் எழும். அப்பொழுதுகளில் எல்லாம், “ஆம்பிளப்பிள்ளை எண்டால் காலை நீட்டி நிமிர்ந்து படுக்கவேணும் எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.” “இப்ப அப்பா வந்து பார்த்தார் எண்டால் ‘ஆம்பிளப் பிள்ளையெண்டால் குறண்டிப் படுக்கவும் பழகவேணும்’ எண்டு சொல்லுவார்.” என முடிப்பான். கடினமான வாழ்வை, இக்கட்டான ஆபத்தான நிலைமையை, தளம்பாது மகிழ்வுடன் ஏற்றுக்கொள்பவனே போராளி என்ற தகுதியைப் பெறுவான் என்ற அடிப்படையில் அவனிடமும் ‘அது’ நிரம்பியே காணப்பட்டது. அதனால்தான் மாங்குளம், கனகராயன்குளம், பன்றிக்கெய்தகுளம் என தன் அணியை வழிநடத்தி இந்தியப் படையினருடன் போரிட அவனால் முடிந்தது. இந்தியப் படைகள் எமது மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்ட 1990களில் புலனாய்வுத்துறைக்குள் உள்வாங்கப்பட்ட போராளிகளினுள் அவனும் ஒருவன். இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் கைக்கூலிகளாய்ச் செயற்பட்டோர், இன்னும் செயற்பட இருப்போரை களைந்து போராட்டத்தை வீறுகொள்ள வைக்கவேண்டிய பாரிய பொறுப்பு புலனாய்வுத்துறையின் மிக முக்கிய பணியாகியபோது, அவை சார்ந்த பணிகளே அவனுக்கு தொடக்கத்தில் வழங்கப்பட்டதெனினும், அவன் தன்னை போர்க்குணம் மிக்க போராளியாக உருவாக்கியிருந்தமை, புலனாய்வுத்துறைச் சண்டை அணித் தளபதிகளில் ஒருவனாக அவனை மாற்றியது. போர்க்குணத்துடன் (MORALE) உற்சாகத்துடன் போராளிகளை வைத்திருந்து வழிநடத்துவது, என்பதில் லெப்.கேணல் கோபியைப்போல் அவனும் பேசப்பட வேண்டியவனே. இந்தியப் படையுடனான போர்க் காலத்தில் எதிரியின் வரவை எதிர்கொள்வதற்காய் துப்பாக்கியின் விசை வில்லினுள் சுடுவிரலை வைத்தபடியே நடமாடும் அவனது விழிப்புணர்வு அவனது வாழ்வில் தொடர்கதையே. “துப்பாக்கியை விட்டுட்டு விலகக்கூடாது… “படுக்கும்போது துப்பாக்கி எடுக்கக் கூடிய வகையில் இருத்தல் வேண்டும்…” போன்ற கட்டளைகளுடன் கோல்சர் கட்டும் முறை, துப்பாக்கி வைத்திருக்க வேண்டிய முறை, அதன் தூய்மைப்படுத்தல், பயிற்சிகள், ஒறுப்புக்கள்(தண்டனைகள்) என தனது போராளிகளை எப்போதும் வழிப்புடனேயே வைத்திருப்பான். இந்தியப் படையினரின் பதுங்கித் தாக்குதலில் தன் துப்பாக்கியை இழந்த ஆனந்தன்- பிறிதொரு நாள் இந்தியப் படையினரிடமிருந்து துப்பாக்கி ஒன்றினை கைப்பற்றுவதற்காகத் தன் உயிரையே இழந்த கதையை, அவன் தன் போராளிகளுக்கு அடிக்கடி நினைவு படுத்துவான். இந்தியப் படையினருடனான சண்டையில் முறிந்த கை வீங்க வீங்க சக போராளிகளுடன் இணைந்து பங்கர் வெட்டுவது தொடக்கம் சமையல் வரை போராளிகளுடன் ஒருவனாக நிற்பான். எதிரி ‘எவ்வாறெல்லாம்’ நகருவான் நாம் ‘எவ்வாறெல்லாம்’ பதிலடி கொடுக்கவேண்டும், அவை பற்றிய கதைகளைத் தவிர அம்முகாமில் வேறு கதைகள் வருவது மிகக்குறைவு. போராளிகளுக்குரிய நேரத்திட்டமிடலை அவனேதான் போட்டுக் கொடுத்து, அவர்களுடன் நின்று பணியினைக் கவனிக்கும் அவனது செயல், லெப்.கேணல் கோபியின் வழிகாட்டலில் கற்றுக் கொண்டதொன்று. புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாதுகாப்பு அணியினை வழிநடத்தும் பொறுப்பினை எடுத்து சில வாரங்களின் பின், ஒருநாள் அவரிடம் ‘வேண்டிக் கட்டிக்கொண்டு’ இப்படித்தான் என்னிடம் கூறினான். “ஒவ்வொரு போராளியும் பொறுப்பாளராய் வருமுன் சில மாதங்களேனும் – அவருக்குப் பக்கத்தில நிற்கவேணும் – அப்பதான் அவருடைய எதிர்பார்க்கையை விளங்கிக்கொண்டு பெடியளையும் வழிநடத்துவினம், தங்களையும் வழிநடத்துவினம்.” அவனின்ர ஊர்தி ஓட்டத்தைப் பற்றியும் சொல்லத்தான் வேண்டும். ஊர்தி வலம், இடம் என சின்ன ஆட்டத்தோட வேகமாய் வருகுதெண்டால் அவன்தான் ஓடிவாறான் என்று ஊகிக்கிறது அவ்வளவு சிரமமான விடயமல்ல. “மாட்டின்ர நாணயத்தைப் பிடித்த கை ‘ஸ்ரேறிங்’ஐப் (STEERING) பிடித்தால், இப்படித்தான் ஊர்தி ஆடி ஆடி வரும்” எண்டு லெப்.கேணல் கோபி கிண்டலடித்தால் “ப்பூ… இதை இன்னொருத்தர் சொன்னால் கேட்கலாம்” என மறுத்தான் போட்டு விடுவான். ஒரு சமயம் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அவனது கிராமப் பக்கம் வந்தவேளை அவனது வீட்டில்தான் மதியச் சாப்பாடு. இந்தச் செய்தியை அவனது காதில் நான்தான் போட்டது. “அம்மா நல்லாச் சமைச்சவவே, உறைப்பை சற்று கூடுதலாய்ப் போட்டவாவே, சோறு என்ன அடிப்பிடிக்காமல் இருந்திச்சோ?” அவனது ஆதங்கம் எனக்கும் புரிய அதிகநேரம் எடுக்கவில்லை. உண்மையில என் வாழ்நாளில் அவனது அம்மாவின் கைபட்ட சமையலைவிட சுவையான உணவை இன்னும் கண்டதில்லை. எண்டாலும் “சமையல் அவ்வளவு வாய்ப்பில்லைத்தான்” என்ற பொய்யை வேண்டுமென்றே அவனுக்குச் சொன்னேன். “நீ இயக்கத்துக்குப் போய்த்தான் சமையல் படிச்சனி. நீ பிறக்கிறதுக்கு முதலே நான் சமையல் படிச்சனான்” இப்படித்தான் தாயிடம் பின்னொரு நாளில் அவன் வேண்டிக் கட்டியதாய்க் கேள்வி. பிற்காலத்தில் புலனாய்வு நிர்வாகப் பணிகளினுள் உள்வாங்கப்பட்டான். வன்னிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையேதான் அவனது பணி. அச்சமயம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த வன்னியைச் சொந்த இடமாகக்கொண்ட ஒரு போராளி, வன்னியில் உள்ள தன் தங்கையை பாடசாலை ஒன்றில் சேர்ப்பதற்குக் கதைத்துவிட்டு வாருங்கள் என்பதை மட்டுமே சொல்லிவிட, அவளைப் பாடசாலையில் சேர்த்துவிட்டு அந்தச் செய்தியை தொலைத்தொடர்பு சாதனத்தினூடாக அறிவித்த அவனது செயல் போராளிகளுடனான நேசத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. 1995, யாழ். இடம்பெயர்வின் பின் எதிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவும் – புலிகளின் பலம் எதுவென நிரூபிக்கவும் – நீண்ட கடற்றொடர் ஒன்றினைக் கைப்பற்றவும் திட்டமிடப்பட்ட முல்லைச் சிங்களப் படைத்தளம் மீதான ஓயாத அலைகள் – 01 தாக்குதல் நடவடிக்கைக்கான பயிற்சிகள் தொடங்கியிருந்த வேளை. இரகசிய பயணம் ஒன்றிற்கான ஆவணங்களை தயார்செய்து கொண்டிருந்த அவனும் சண்டையின் முக்கியத்துவம் கருதி, புலனாய்வுத்துறைத் தாக்குதல் படையணியினுள் உள்வாங்கப்பட்டான். ‘பயிற்சி’ நினைச்சுப் பார்க்க முடியாத அப்படி ஒரு கடும் பயிற்சி. சில மாதங்கள் நீண்ட பயிற்சி. பல படைணிகள் ஒன்று சேர்ந்திருந்த தளத்தில் புலனாய்வுத்துறைப் படையணியும் பயிற்சியில் முன்னணிவகிக்க ஊக்கியானவர்களுள் அவனும் ஒருவன். வட்டுவாகல் பாலத்தின் வலதுபக்க முன்னணி காவலரணின் தடையுடைத்து உட்புகும் அணி ஒன்றின் பொறுப்பாளர் அவன். 18.07.1996 அதிகாலை முதலில் சண்டையைத் தொடங்கும் அணிகளில் அவனது அணியும் ஒன்று. களம் திறந்த பொழுதில் எதிரியின் கடும் எறிகணை வீச்சில் – எறிகணை ஒன்று அவனருகே வெடிக்க அவன் எடுத்துச் சென்ற ‘ரோப்பிற்ரோ’ (Torpedo) அவனுடன் வெடிக்க தடைகளுடன் அவனது உடலும் தகர்ந்து போயிற்று. வெற்றிக்காக உழைத்து – அந்தச் செய்தியைக் கேட்குமுன் வீரச்சாவினைத் தழுவிய ஆயிரமாயிரம் மாவீரர்களினுள் அவனும் ஒருவன் ஆனான். அவனது உடல் அடையாளமின்றிப் போனதால், அவன் உயிர்நீத்த இடத்திலிருந்து இடுப்புப்பட்டி, கோல்சர், இன்னும் சிதறல்களை தேடித்தேடி எடுத்த அவனது தந்தை ‘அவன் போராட என்று புறப்பட்டவன் தன் கடமையை முடித்து வீடு வருவான்’ என்ற நம்பிக்கையுடன் இருக்க, அவனது படத்துக்கு விளக்கேற்றச் சென்றால், பல்லி சொல்லித் தடுப்பதாக அம்மா சொல்லுறா. ‘குறி’ சொல்பவன் ஒருவன் அண்ணன் உயிருடன் இருப்பதாகவும் மற்றொருவன் ‘இல்லை’ எண்டும் மாறிமாறி சொல்வதாக அன்புத் தங்கை சொல்கிறாள். அவன் இன்னமும் அவர்களுள் ஒருவனாக வாழ்கின்றான் . அதனால்தான் இன்னும் அவர்களால் அவனது இழப்பை ஏற்க முடியவில்லை. நான், மாவீரர் நாள் அன்று அவனது உடலை விதைத்த, கிளிநொச்சி துயிலும் இல்லம் சென்றேன் – அவனுக்கு விளக்கெரிக்க நிறையப்பேர் நின்றார்கள். அவனது பெற்றோரைத் தவிர. நினைவுப்பகிர்வு –சி.மாதுளா. விடுதலைப்புலிகள் இதழ் 2004 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/142714
  4. புலிகளின் ஆற்றல் மிகு கடற் போர்த் தளபதி. லெப்.கேணல் நரேஸ் Last updated Jul 16, 2020 தலைவரை பிரமிக்கச்செய்த அவரது தலைசிறந்த படைவீரர்களுள் ஒருவன். புலிகளின் ஆற்றல் மிகு கடற் போர்த் தளபதி. கிளாலிக் கடற்சமர் அரங்கில் மாவீரன் சாள்ஸ் களப்பலியாகிய பின்னரே, கடற்புல்களின் தாக்குதற் படைத் தளபதியாக பொறுப்பேற்ற போதிலும். கடற்புலிகளின் சரித்திரத்தில் மிகப்பெரும் பகுதியோடு, நரேஸ் பின்னிப் பிணைந்தவனாகவே உள்ளான். “கடற்புலிகளின் சிறப்புத்தளபதி போல இயங்கியவன் அவன்தான்” என்கிறார் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி. கண்களில் நீர்வழிய நீர்வழிய நாங்கள் மண் அள்ளித் தூவி விதை குழியலிட்ட அந்தத் தோழன். ஐந்தாண்டுகளுக்கு முன்பு “ஈரோஸ்” அமைப்பு புலிகளோடு சங்கமித்த போது கடற்புலியாகியவன். அதன் பிறகு அவனில்லாமல் கடலில் புலிகள் பாய்ததாகச் சரித்திரமே இல்லை. அவனுடைய கதை ஒரு நீண்ட காவியம். அது முழுமையாக எழுதுகிறபோது உலகப் புகழ் பூத்த புலிகள் இயக்கத்தின் கடற்போர் வரலாறாய் விரியும்…. காங்கேசன்துறைப் “புலிப் பாய்ச்சல்” வரையும். “எட்டாண்டுகளுக்கு முந்திய வடமராட்சித் தாக்குதலை விடவும் உயர்ந்த இராணுவ பரிமாணத்தைக் கொண்டது” என வர்ணிக்கப்பட்ட “முன்னோக்கிப் பாய்தல்” விடுதலைப் போராட்டத்தின் அத்திவாரத்திற்கு வைக்கப்பட்ட குறி. “மைய யாழ்ப்பாணமே, பாய்ந்து முன்னேறுவதன் இலக்கு” என்று, படைத் தளபதிகள் பறைசாற்றிக் கொண்டார்கள்… பல அரசசியல் மேலாண்மைகளை எய்தும் சந்திரிக்கா அரசுத் தலைமையின் உள் நோக்கத்திற்காக நகர்த்தப்பட்ட படையெடுப்பு மூன்று நாட்களில் முன்னூறு மக்களைப் படுகொளைசெய்த்து முன்னேறி வந்தது. “திறமையின்மையாலும், பலவீனத்தாலும் சிங்கள தேச வீரர்களின் போராற்றலுக்கு எதிர் நிற்க முடியாமல், புலிப் பயங்கரவாதிகள் யாழ்ப்பாணத்தை விட்டுத் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று சிங்களத் தளபதிகள் கொழும்பில் மார்தட்டிக் கொண்டார்கள். ‘முன்னோக்கிப் பாய்தல்’ புலிகள் இயக்கத்தின் போரியல் வல்லமைக்கு விடப்படும் பெரும் சவாலாகவும் பரிமாணம் பெற்றது. பகைவனுக்குப் படுதோல்வியைப் பரிசளிக்க, தலைவர் முடிவெடுத்தார். தரையிலும் வானிலும் கடலிலும், முப்படைகளுக்கும் அதனைப் பகிர்ந்தளிக்கவும் எண்ணினார். அவரது எண்ணங்கள் பகைவனின் மடியில் நிதர்சனமாகின. ‘முன்னோக்கிப் பாய்தல்’ மீது நிகழ்ந்தது ‘புலிப் பாய்ச்சல்’! படை எடுப்பின் ஒவ்வொரு அங்கத்திலும் விழுந்தது அடி. நிலவழியாக நகர்ந்த தரைப்படையை எதிர்த்து முறியடிக்கும் சம நேரத்தில், வான் வழியால் துணை சேர்க்கும் விமானப்படையின் முதுகெலும்பை உடைக்கும் அதேவேளையில், படையெடுப்பின் உயிர் நாடியென இயங்கிய கடல் வழி விநியோகத்திற்கும் அடி கொடுக்க வேண்டிய தேவையும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. குறுகிய காலத் தயார்ப்படுத்தல். ‘முன்னோக்கிப் பாய்தல்’ சமர்முனைக்குப் புதிய துருப்புக்கள் அனுப்பப்பட்டு, சிங்களப் படையணிகளுக்கு புத்தூக்கம் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், படையெடுப்பு முனைக்கு இடையறாது மேற்கொள்ளப்பட்ட படைக் கல வழங்கலை நிறுத்துவதற்கும் மட்டுமன்றி குடாநாட்டை முற்றுகையிட்ட பேரபாயத்தை உடைத்தெறியவும், மக்களைப் பிடித்த பய பீதியைத் தகர்த்து எறியவும் என திடீரென ஒழுங்கமைக்கபட்ட ‘புலிப்பாய்ச்சல்’ தாக்குதல் திட்டத்தின் ஒரு அங்கமாகவும் நிகழ்த்தப்பட்ட முன்னேற்பாடுகள் செய்யப்படாத அதிரடி. காங்கேசன்துறை கடற்படைத் தளம் வடபிராந்தியத்தில், சிங்களக் கடற்படையின் நிர்வாகச் செயலகமான காரைநகருக்கு அடுத்தபடியான ஒரு தளமாகவே இருப்பினும் கூட வடக்குப் போர் அரங்கின் தனி ஒரு வழங்கற் பாதையான கடல்வழி மூலம், முப்படையினருக்குமான விநியோகத்தை மேற்கொள்ளும் பிரதான இறங்குதுறை என்றவகையில், அது கேந்திர முக்கியத்துவம் பெற்று தனித்துவமானது. மிக மிகப் பலத்த பாதுகாப்புக்கு உட்பட்ட அந்தப் படைத்தளத்தின் கடற் பரப்பிற்குள் ஊடுருவித் தாக்குதலை நிகழ்த்துவது என்பது, ஒரு சுலபமான காரியமல்ல என்பதும் எமக்குத் தெரிந்திருந்த போதும்…… யாழ். குடாநாட்டிற்குள் உருவாகியிருந்த நெருக்கடியான இராணுவச் சூழல் காரணமாக, காங்கேசன்துறைத் தளம் மீதான ‘புலிப் பாய்ச்சல்’ தவிர்க்க முடியாததாகியிருந்தது. இழப்பைக் கொடுத்தல், படையெடுப்பிற்குத் தடங்களை ஏற்படுத்தல், எதிரிகளைத் திகைப்பிற்குள் ஆழ்த்துதல் போன்ற போர்த் தந்திரோபாய ரீதியான நோக்கங்களிற்காக மட்டுமன்றி, எம் நீண்டகால குறியான ஒரு கட்டளைக் கப்பலை மூழ்கடிக்கும் இராணுவ இலக்கை எய்வதற்காகவும் தான் தாக்குதல் மையமாக, காங்கேசன்துறையே தேர்ந்தெடுக்கப்பட்டது. மின்காந்த அலை அதிர்வியக்கம் மூலம் தள்ளிளையிளிருந்து வானூர்திகள், கலலூர்திகள் முதலியவற்றின் நிலைகளைக் கண்டறியும் ஆற்றல்மிகு ‘தொலைநிலை இயக்க மானிகள்’ பொருத்தப்பட்ட ‘எடித்தார’, ‘அபிதா’, ‘விக்கிரம’ ஆகிய பெயர்களைக் கொண்ட மூன்று பாரிய கப்பல்கள் மேற்கு, வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களான சிங்களக் கடற்படையின் கட்டளைப் பீடங்களாகச் செயற்பற்படுகிறன. புலிகளுக்கு எதிரான கடற் சண்டைகளில் ஈடுபடும் போர்ப்படகுகளின் மூளையாகச் செயற்பட்டு, அவற்றை வழிநடாத்தும் கட்டளைப் பணியை, இந்தத் தாய்க் கப்பல்களே ஆற்றுகின்றன. அந்த வகையில் ஒரு கட்டளைக் கப்பலை மூழ்கடிப்பதானது ஒரு இமாலய சாதனையும், இராணுவ ரீதியான ஒரு பேரு வெற்றியுமாகும். 1990ம் ஆண்டு யூலை 10ம் நாள் காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய கடற்கரும்புலி வீரர்கள் தாக்க முனைந்ததிலிருந்து, 1991ம் ஆண்டு ஏப்ரல் 5ம் நாள் சிதம்பரம், ஜெயந்தன் ஆகிய கடற்கரும்புலி வீரர்கள் தாக்கியது ஊடாக, 1994ம் ஆண்டு ஆவணி 16ம் நாள் காங்கேசன்துறையில் அங்கையற்கண்ணி ஊடுருவித் தாக்கியதுவரை, எங்கள் போராட்டத்தின் சரித்திரத்தில், பொன் எழுத்துக்களால் பொறித்து வைக்கப்படவேண்டிய ஒரு வரலாற்றுச் சாதனையாகும். ‘நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள்’, ‘சுலோஜன் நீரடித் தாக்குதற் கரும்புலிகள்’, ‘சாள்ஸ் சிறப்புக் கடற்படையணி’, ;நளாயினி சிறப்புக் கடற்படையணி’ ஆகிய கடற்புலிகளின் நான்கு தாக்குதற் பிரிவுகள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. கடற்புலிகளின் உயர் தளபதிகளினது நெறிப்படுத்தலின் கீழ், லெப்.கேணல் மாதவி, தாக்குதலில் பங்கேற்ற பெண்கள் படைப்பிரிவுகளை வழி நாடாத்தினார். லெப்.கேணல் நரேஸ், களமுனைக் கொமாண்டராக முழுத்தாக்குதலையும் வழிநடாத்தினார். மாதவி. கடற்புலிகள் மகளிர் படையணியை நளாயினி விட்டுப் போன இடத்திலிருந்து தொட்டு வளர்த்தெடுத்த அதன் சிறப்புத்தளபதி.‘அங்கயற்கண்ணி நீரடித் தாக்குதல் பிரிவு’, ‘நளாயினி சிறப்புக் கடற்படையணி’, ‘மங்கை படகுக் கட்டுமானப் பிரிவு’ என, கடற்புலிகளின் அணி கிளை பரப்பியது அவளுடைய காலத்தில் தான். விடுதலைப் புலிகளின் கடற்படைக்காக, அவளது வழிபடுத்தலின் கீழ், ‘மங்கை படகுக் கட்டுமானப் பிரிவு, வடிவமைத்த 40 அடிக்கு மேலான நீளம் கொண்ட ஒரு புதிய வகைச் சண்டைப் படகு, ஒரு அருமையான உருவாக்கம். நேரடியாகப் பரீட்சித்துப் பார்த்து தலைவர் அவர்கள் பாராட்டியது, வெறுமனே பண்புக்காக அல்ல; கடற்சண்டைகளில் அவை சிறந்த பயன்பாட்டைத் தரும் என்ற நம்பிக்கையிலும் தான். தனது ஓய்வற்ற உழைப்பின் பயனாக கடற் பெண்புலிகளை, தனித்துச் சண்டையிடும் இன்னொரு வளர்ச்சிக் கட்டத்திற்கு பரிணமிக்கச் செய்த பெருமைக்குரியவள். ஆண்கள் துணையின்றி தனித்த படகுகளில், தனித்த பிரிவாக, கடற் சண்டைகளிலும் பெண்கள் ஈடுபடுகின்ற இன்றைய காலம் மாதவி தோற்றுவித்தது தான். மண்டைதீவில் அப்படித்தான். காங்கேசன்துறையிலும் அப்படித்தான். யூலைத் திங்கள் 16ம் நாள் அதிகாலை 1.00 மணி, துறைமுகத்தின் உள்ளே ‘எடித்தாரா’ கட்டளைக் கப்பலோடு, 3 தரையிறங்கு கலங்கள், மேலும் ஒரு கப்பல் என்பன இராணுவத் தளபாடங்களை இறக்கிக் கொன்டிருந்தன. துறைமுகத்தின் வெளிப்பகுதியில் போர்க்கலங்கள் பலம் வாய்ந்த வியூகமிட்டு வளைத்து நின்றன. ‘டோறா’ அதிவேகத் தாக்குதற் படகுகள் எட்டு; ‘சங்கே’ பீரங்கிப் படகுகள் மூன்று. இரும்புக் காவல். அலைமடியில் தவழ்ந்து அமைதியாக நெருங்கின புலிகளின் படகுகள். ‘சுலோஜன் நீரடித் தாக்குதற் பிரிவின்’ வீரர்களான நீயூட்டனும், தங்கனும் வெடிகுன்டுகளோடு ‘எடித்தாரா’வை அன்மித்தார்கள். ஆரம்பித்தது உக்கிரமான சண்டை. காங்கேசன் கடற்பரப்பு போர்க்களமாய் மாறியது. எம் போராட்ட வரலாறு தன்னில் பதித்துக்கொண்ட மிகப்பெரும் கடற்சமர். ‘எடித்தாரா’ வின் அடித்தளத்தை, வெடிகுண்டுகளோடு அணைத்து கரும்புலிகள் சிதறடித்தார்கள். அது நான்கு வரிகளில் எழுதிவிடும் சம்பவம் அல்ல; நாற்பதாண்டு காலச் சரித்திரத்தை மாற்ற அவர்கள் புரிந்த அரும்பெரும் செயல்! இராப்பகலாய் பட்ட கஸ்ரங்களின் பெறுபேறு; வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளப்பரிய உயிர்த்தியாகம். பெண் கரும்புலிகளின் ஒரு வெடிகுண்டுப் படகு, தரையிறக்கும் கலம் ஒன்றை நெருங்கியது. அசுர வேகம். மிக அண்மைய…! போர்க்கலங்கள் அபூர்வமானவை. அவற்றின் பொதுவான இயல்பு என்னவெனில், நினைத்துப் போவது நிகழாமல் போகும்; நிகழ்ந்துவிடுவது நினையாததாய் இருக்கும். வெடிகுண்டுப் படகு சன்னங்கள் பாய்ந்து செதப்பட்டுவிட தரையிரங்குகலம் தாக்கப்படவில்லை. ஐந்துமணி நேரச் சரித்திரச் சமர் முடிந்து விடியும்பொழுதில் எங்கள் தாக்குதலணிகள் களத்தைவிட்டு வெளியேறின. நரேஸ் உயிரோடு வரவில்லை… மாதவியின் உடல்கூட வரவில்லை.. நியூட்டன், தங்கன், தமிழினி வரவில்லை. தோளோடு தோள் நின்று களமாடிய பதினோரு தோழர்கள் வரவில்லை. பூநகரிச் சமரின்போது நாகதேவன்துறையில் கைப்பற்றிய விசைப்படகு ஒன்றும் மூழ்கிப்போனதால் திரும்பி வரவில்லை…..! வெளியீடு: விடுதலை புலிகள் இதழ் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/142280
  5. சிங்கள படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன் லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) Last updated Jul 14, 2020 “அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள் போல…….” லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி புனிதமரியாள் வீதி, திருகோணமலை வீரப்பிறப்பு:11.12.1960 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு “அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள் போல…….” 1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது. அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின் இராணுவக் கூலிப்படைகள், அந்தச் சிறிய கிராமத்தைச் சுற்றிவளைக்கின்றன. கச்சாய் வீதியுடன் இணையும் அல்லாரை மீசாலை வீதியை, அரச படைகளின் வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன. ஒரு மினி பஸ், இரண்டு ஜீப், ஒரு இராணுவ ட்ரக் வண்டி. நொஈஉ பேருக்கு மேல் சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிராடிப் படையினர். அந்தக் கிராமம் சிலிர்த்துக் கொள்கிறது. கல்லும் மணலும் கலந்த குச்சு ஒழுங்கைகளுக்கூடாகா, நான்கு இளைஞர்கள் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தனர். ஒரு துரோகி காட்டிக் கொடுத்தால் சிங்கள இராணுவம் தங்களது மறைவிடத்தைச் சுற்றிவளைப்பதை உணர்ந்து, அந்த கிராமத்தை விட்டு வெளியேற விரையும் அந்த நான்கு இளைஞர்களும், அதோ அந்த அல்லாரை மீசாலைத் தார் வீதியைக் கடந்து கொண்டிருக்கிறார்கள். வீதியின் ஒரு புறம் சுடலையருகேயும் மறுபுறம் நெசவுநிலையத்திற்கருகிலும் நின்று கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இளைஞர்கள் கடந்த ஸ்தலத்தை நோக்கிச் சடுதியாக விரைகின்றன அந்த ஸ்தலத்தில் இராணுவ வண்டிகள் குலுங்கிக்கொண்டு நிற்கின்றன. இராணுவத்தின் குண்டு துளைக்கும் எல்லைக்குள் அந்த இளைஞர்கள் விரைந்து கொண்டிருக்குறார்கள். மினிபஸ்ஸில் இருந்த இராணுவத்தினர் இறங்கி ஓடிப் பனை வடலிக்குள் பாதுகாப்பான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொள்கின்றனர். மொத்த இராணுவத்தினரில் முப்பதுக்கு மேற்ப்பட்டோர் பனை வடலிக்குள் குழுமுகின்றனர். தார் வீதியைக் கடந்த இளைஞர்கள் துரதிர்ஸ்டவசமாக இப்போது நின்று கொண்டிருப்பது, வெறும் பொட்டல் வெளியில். சுற்றிலும் சூழ்ந்து கொண்டுவிட்ட அரச படைகளை உறுத்துப் பார்கிறான், அந்த இளைஞர்களின் தலைவன். அவன் தான் – சீலன் ! அரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன். ஆசீர் – சீலன் – இதயச்சந்திரன் – ஆகிய பெயர்களில் அரச படைகள் வெறிகொண்டு தேடும், லூக்காஸ் சார்ல்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவுத் தலைவன். Fire ! “சுடுங்கள்” கட்டளை பிறப்பித்த சீலனின் இயந்திரத் துப்பாக்கி சடசடக்கிறது மற்ற இளைஞர்களும் விரைந்து துப்பாக்கிகளை இயக்குகின்றனர். வெட்டவெளியில் அந்த வீரமகன் சீலன். அவனுக்கருகில் ஆனந்த் என்னும் அருள் நாதன். உடலும் உள்ளமும் வைரம் பாய்ந்தவன். அவனோடு இன்னுமொரு வீரன். ஆபத்தின் எல்லைக்கப்பால் அடுத்த வீரன் உறுதி, நிதானம், வேகம், லாவகம் களத்திலே புலிகள். இளைஞர்களின் எதிர்த்தாக்குதல் சிங்களக் கூலிபடைகளைத் திணறச் செய்கிறது. ஆனாலும் பாதுகாப்பான பனை வடலிக்குள் பதுங்கிக் கொண்டு அந்தக் கூலிகளும் தொடர்ச்சியாகத் தாக்கிகின்றனர். வெட்டவெளியில் தொடர்ந்து முன்னேறவோ, பின்வாங்கவோ முடியாத இக்கட்டான நிலையில் அவர்கள் சிக்கிக்கொண்டு விட்டனர்… ஆனாலும் ஆயுதங்களோடு அரச படைகளின் கையில் சரணடையும் கோழைகளல்ல இவர்கள் ! பிரபாகரனின் கைகளிலே வளர்ந்தவர்கள். எதிரிகளின் கைகளில் பிடிபடுவதை விட மானத்தோடு சாவது மேல், என்ற வீர மரபில் பயிற்றப்பட்டவர்கள். இறுதி மூச்சி வரை இந்தப் புலிகள் போராடத் திடங்கொண்டனர். சுற்றிலும் குவிந்து நிற்கும் கூலிப்பட்டாளம்! வெளியைத் துளைக்கும் சன்னங்கள். மண் தரையில் புழுதி கிளப்பும் குண்டுகள். சீலனின் எந்திரத் துப்பாக்கி தொரர்ந்து சடசடக்கிறது.! ஆனால் கூலிபடையின் துப்பாக்கிச் சன்னம் ஏற்கனவே பெற்றிருந்த சீலனின் வீரத்தழும்புகளைக் கிழித்துக்கொண்டு மார்பில் பாய்கிறது. ரத்தம் பீறிடச் சீலன் தள்ளாடுகிறான். இரண்டு முறை முன்னரே களத்தில் குருதி சிந்திய அந்த வீரன், தன்னுயிர் போகவில்லை என்பதை உணர்கிறான். உயிரோடு அகப்பட்டால் கடித்துக் குதரக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் சுற்றிலும் ! “என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் பின் வாங்குங்கள்” என்று, சீலன் கட்டளையிடுகிறான். படைத்தலைவனின் கட்டளை. பணிக்கப்பட்ட இளம் வீரனோ திகைத்துப்போய் நிற்கிறான். பனை வடலிக்குள் வசதியாகப் பதுங்கி நிற்கும் இராணுவ வேட்டை நாய்களின் தொடர் வேட்டு மழை. சீலனின் கட்டளையை நிறைவேற்றுவதா? ஒரு பாசம் மிக்க தோழனின், ஒரு வீரம் மிக்க போராளியின் மரணம் தன்னால் நிகழ்வதா? அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா? வினாடி நேரத்தில் விடை காணவேண்டிய நிர்ப்பந்தம் அந்த வீரனுக்கு. “என்னைச் சுட்டா சுடு” – சீலனின் கண்டிப்புடன் கூடிய கட்டளை மீண்டும் பிறக்கிறது. நெஞ்சில் வழியும் ரத்தம்; முகத்தில் துளிர்க்கும் வியர்வை. சீலன் தல்லாயவாறு கண்டிப்புடன் மீண்டும் கட்டளையிடுகிறான். லட்சியத் தணலிலே புடம் போட்ட அந்த வீரனின் நெஞ்சில், உறுதி பிறக்கிறது. காண நேரத்திற்குள் சீலனின் தலையில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்கிறன. புரட்சி வீரன் சீலனின் உடலை மீசாலை மண் அணைத்துப் பெருமை தேடிக்கொள்கிறது. அதற்குள், குறி பார்த்துச் சுடுவதற்கு வாகன – வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட ஆனந்த் குண்டு பட்டுச் சாய்கிறான். ஆனந்த் உயர்ந்தவன் – உயரத்தில், தன்மானத்தில், வீரத்தில். “என்னையும் சுட்டு விடு” – ஆனந்தின் வேண்டுகோள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தூய்மைக்கு முத்திரை பதிக்கும் ரத்தச் சாட்சிகள். பிரபாகரனின் பயிற்சிக் களத்திலே வளர்ந்த வேங்கைகள். ஆனந்தின் தன்மானம் காக்கிறான் அந்த இளம் வீரன். மீசாலை மண்ணின் இரண்டு மாணிக்கங்கள் தரையில் சரிந்தும் இராணுவக் கூலிப்படை கும்மாளமிட்டது. வீழ்ந்துபட்ட வீரர்களின் துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு, மற்றுமிரு வீரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இறந்து கிடப்பவர்கள் யார்? இராணுவ மிருகங்கள் நெற்றியைச் சுழிக்கின்றன. தங்களின் கைவசமுள்ள ‘தேடப்படுபவர்களின்’ புகைப்படக் குவியலில் இவர்களின் புகைப்படங்கள் இல்லையே! அந்தக் கூலிப்படையின் மேஜர் ஒருவன் சீலனின் சாரத்தை உயர்த்தி, வலது காலைப் பார்க்கிறான். வலது காலின் முழங்கால் மூட்டுக்கு மேற்பகுதியில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த தழும்புகள். அந்த மேஜர் உரத்துக் கத்துகிறான்: “இவன்தான் சீலன்!” சீலன் இருபத்து மூன்று வயது கூட நிரம்பாத இளைஞன், அழகான முகம், அழகாய்ச் சிரிப்பான். அவனுடைய பேச்சிலே மழலை சொட்டும். பலகுவதிலே அவன் குழந்தை. யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகரம் அவனுடையது. ஓரத்தில் உதட்டைக் கடித்துக் கொண்டு, கண்களைச் சுருக்கிக் கொண்டு அவன் சிரிக்கும் அழகு அவனுக்கேயுரியது. இவனோட பழகக் கிடைத்தவர்கள் அதிஸ்டசாலிகள், தான் மட்டுமல்ல தன்னோடு இருப்பவர்களையும் எப்போதும் சிரிக்கவைத்துக் கொண்டிருப்பான். கூச்ச சுபாவம் உள்ளவன். ஆனால் பழக ஆரம்பித்தால் மிகவும் இனிமையாகப் பழகுவான். அன்பு செலுத்தத் தெரிந்த இவன் அன்பைப் பிரியமாக ஏற்றுக் கொள்வான். பிரியமானவர்கள் விளையாட்டுக்காகக் கோபித்தால் கூட அதனை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. போலித்தனம் இவனுக்குத் தெரியாது. ஆர்ப்பாட்டமே இல்லாதவன். ஆயுதப்படைகளுக்கு எதிரான அதிரடித்தாக்குதலென்றால் யுத்த சன்னதனாகக்களத்தில் குதிக்கும் இவன், சாதாரணப் பொழுதுகளில் தென்றலாகத் தெரிவான். அவன் ஆத்மாவை விற்கத் தெரியாத புரட்சிக்காரன். பிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் நக்கீரன். தமிழீழத்தை நோக்கிய அவனது சிந்தனைகளும் செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில், சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தான். பிரபாகரனின் நேர்மையிலும் தூய்மையிலும், திறமையிலும் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில், ஒரு தலைமறைவு இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுவதில் சீலன் காட்டிய சிரத்தை, அசாதாராணமானது. அந்த அவகியில் தலைவர் பிரபாகரனின் பூரண நம்பிக்கைக்கும், அன்பிற்கும் சீலன் பாத்திரமாக இருந்தான். ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத சுயநலமிகளும், கூட இருந்தே இயக்கத்திற்குக் குழிபறித்து விட்டு ஓடிய தொரோகிகளும், பிளவுவாத நடவடிக்கையில் ஈடுபட்டு தூய்மையான இயக்கத்தை உடைக்க முயன்றபோது, இயக்கத்தின் கட்டுக்கோப்பைத் தளரவிடாது காப்பதில் பிரபாகரனுடன் உறுதியாக நின்றவர்களில், சீலன் முதன்மையானவன். பதவி இறக்கப்பட்டதற்க்காக இயக்கத்தை விட்டு ஓடியவர்களைப் பார்த்து சீலன் சிரித்திருக்கிறன. அந்தச் சிரிப்பில் சினமும் தோய்ந்திருக்கும். இயக்கத்தின் ரத்த நாளமாகவே சீலன் திகழ்ந்தான். தான் நம்பியவர்கள் எல்லோரும் பதவிப் பித்தர்களாயும், சுயனலமிகளாயும் வேடங்கட்டித் திரிந்ததைப் பார்த்து பிரபாகரன் விரக்தி கொண்ட கணங்களில், சீலனே இயக்கத்திற்குப் புதிய ரத்தம் பாய்ச்சுவதில் துணை நின்று பெரும் பணியாற்ரியிருக்கிறான். சீலன் இராணுவப் படிப்புப் படித்தவன் அல்லான். வெளிநாடுகளில் போர்ப்பயிற்சி பெற்றவனுமல்லன். போர் மூலமாகவே போரை அறிந்தவன். இயக்கத்தின் இராணுவப் பிரிவுத் தலைமை வகித்து இவன் நடத்திய வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்கள், இயக்கத்திற்கு வலிமையைச் சேர்த்து, விடுதலைப் போராட்டத்தையும் முன்னேடுத்ததையும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறது. தமிழீழத்தின் போராட்ட வராலாற்றில் முதன்மைவாய்ந்த கெரில்லா வீரன் சீலன். படைத் தலைவன் என்பவன் ஆணை பிறப்பிப்பவன் மட்டுமல்ல தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்து போரை வழி நடத்துபவன் என்பதற்கு, சீலனே ஒரு இலக்கணம். ஒரு கெரில்லாத் தாக்குதலை மேற்கொள்ளுமுன் அதற்கான தகவல்களைத் திரட்டுவதிலும், அதன் செயற்பாடு, விளைவு, தாக்கம் என்பதனை ஆராய்வதிலும், அவன் கடுமையாக உழைத்தவன். கவனப்பிசகால் எந்தவிதமான தீங்கும் ஏற்பட்டுவடாது பார்த்துக் கொள்வதிலும் அவன் மிகவும் விழிப்புடன் இருப்பான். அசாத்தியமான துணிச்சலும், எதிரிகளின் பலவீனங்களை ஆராய்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்கும் நுண்ணிய அறிவுமே, குறுகிய காலத்தில் இராணுவப் பிரிவின் தலைவனாக அவனைப் பதவிவகிக்கும் நிலைக்கு உயர்த்தியது. “ஒரு கெரிலாப் போராளியின் வீரம் அவனது எந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில்தான் இருக்கிறது” என்பது, சீலனின் அனுபவ வாசகம். அவனது மனவலிமை அபாரமானது. சாவுக்கு அவன் வாழ்க்கை ஒரு சவால். துப்பாக்கிப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது முதன்முறை நெஞ்சிலே குண்டு பாய்ந்தது. ரத்தம் பீரியடிக்க விழுந்து கிடாந்த நிலையிலும் கூட… அந்த வீரனின் முகத்தின் புசிரிப்பு மிளிர்ந்ததை இயக்கத் தோழர்கள் என்றும் நினைவு கூர்வர். மூச்சு விடவும் திராணியற்ருப்போன நிலையிலும் அவன் திணறித் திணறித் சொன்ன வார்த்தைகள்; “இயக்கத்தைக் காட்டிக் கொடுத்திடாதீங்க” பிறகும் பேசுவதற்கு மூச்சு இடந்தந்த போது அவன் சொன்னான்; “இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டு பொய் பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்” மரண அவஸ்தையிலும் அந்த மாவீரன், இயக்கம் குறித்து மட்டுமே உதிர்த்த வார்த்தைகள் கண்ணீரோடு மட்டுமல்ல பெருமிதத்தோடும் நினைவுகூறத்தக்கவை. உணமைதான். சாவுக்குச் சவால் விட்ட அந்த விடுதலை வீரனை இறுதியில் சாவு அணைத்த போது, அவன் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்திடவும் இல்லை இயந்திரத் துப்பாக்கியைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுவைக்கவும் தவறவில்லை. சீலன் திருமலையின் வீர மண்ணிலே விளைந்த நல்ல முத்து. சிங்கள இனவெறியாட்சியாளர்களின் நேரடியான ஒடுக்குமுறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகொனமையின் நடைமுறை அனுபவங்களை அவன் கண் கூடாகக் கண்டவன். சிறீலங்காவின் திட்ட மிட்ட சிங்கள குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்குமுறைகளும் சிங்களக்காடையர்கள், இராணுவம், போலிஸ் ஆகியோரின் அரவணைப்புடன் தமிழ் மக்களைத் துன்புறுத்தும் கொடுமைகளும் திருமலையில் ஏராளம். இந்த ஆக்கிரமிப்பிற்கு இடங்கொடுத்து வந்தால்தான், திருமலை மண்ணையே சிங்களவர்களுக்குப் பறிகொடுக்கும் நிலை வந்தது என்று சீலன் கொதிப்பான். கல்லூரி நாட்களிலேயே இனவெரிபிடித்து சிங்கள் ஆளும்வர்க்கத்திர்க்க்ர்தினான போறான்ன உணர்வு கண்டவனாகச் சீலன் திகழ்ந்தான். 1978ம் ஆண்டு ஆவணி மாதம் கொண்டுவரப்பட்ட சிறீலங்கா ஐனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஐநாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினைத் தமிழீழ மண்ணில் அமர்க்களமாகக் கொண்டாட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அம்பலப்படுத்த, பாடசாலை மாணவனான சீலன் முன்வந்தான். இந்த வைபவத்தினையோட்டித் திருமலை இந்துக் கலூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சீலன் தனக்கேயுரியதான நுட்பமான அறிவைப் பயன்படுத்தி, ‘பொஸ்பரஸ்’ என்னும் இரசாயனத்தை அத்தேசியக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தான். தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு, சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப்பட்டான். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவன் காட்டிக் கொடுக்கவில்லை. கொள்கையிலே உறுதிக்கொண்டவர்களைச் சிறைச்சாலைகளும், சித்திரவதைகளும் என்ன செய்துவிடமுடியும்? தனிமனிதரீதியிலான எதிர்ப்புணர்வால் அரச இயந்திரத்தை அழித்து விடமுடியாது என்ற அனுபவத்தையும், இவை சீலனுக்குப் போதித்தன. இந்த அனுபவமே சீலன் தண்ணி ஒரு புரட்சிகர இயக்கத்தில் இணைத்துக்கொள்ள, உந்துசக்தியாக உதவியது. ஆயுதந்தாங்கிய அடக்குமுறையை ஆயுதப் போராட்டத்தின் மூலமே தகர்க்க முடியும் என்ற நம்பிக்கையே சீலனை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலே இணைத்தது ‘ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழம்’ என்ற ராஜபாட்டையில் சீலன் கம்பீரமாகவே நடந்திருக்கிறான். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ – கை நிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவனையே நம்பி அன்றாடம் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. வளமான வாழ்க்கையை அல்ல; வரியா குடும்பமொன்றின் எதிர்பார்க்கைகளை நிர்த்தாட்சண்யமாகத் தூக்கி வீசிவிட்டுவரும் பெரும் மனத்திடமும், இலட்சியப்பிடியும் சீலனிடம் இருந்ததன. சாக்குப் படகுகளால் மறைக்கப்பட்ட சிறிய குச்சு வீடு; வேலையோ, நிரந்தரமான வருமானமோ இல்லாத தந்தை வீடுகளில் சமையல் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் தாய்; இரண்டு அண்ணன்மார்; இரண்டு அக்காமார்; ஒரு தங்கை. சீலன் உணவில்லாமலே வாடிய நாட்கள் ஏராளம். சிந்திக்கும் திறன் கொண்ட சீலன் தனது குடும்பம் மட்டுமல்ல, எத்தனையோ குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாடுவதைக் கண்டு, நொந்திருக்கிறான். சீலனின் வாழ்நிலை புரட்சிகரச் சிந்தனைகளின் விளைநிலமானது. மார்க்ஸியச் சிந்தனையில் அவன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டான். மார்க்ஸிய ஒளியில் தேசிய இனப் பிரச்சினையையை அவன் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தான். உலகெங்கும் நடக்கும் விடுதலைப் போராட்டங்களை ஆர்வத்துடன் அவதானித்து வந்தான். பெண் விடுதலை பற்றிய இவனது அபிப்பிராயங்கள் சுயசிந்தனையின் பாற்பட்டதாகவும் வியக்கத்தக்க வகையில் முற்போக்கானதாகவும் இருந்தன. இத்தகைய அரசியற் பிரக்ஞை கொண்ட சீலன் இராணுவப் பிரிவுத் தலைவநாத் திறனோடு செயற்ப்பட்ட காலம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பெருமிதம் கொள்கிறது. குறுகிய காலத்தில் சீலன் சாதித்தவை மகத்தானவை. 1981 ஐப்பசி மாதம், பிரிகேடியர் வீரதுங்க சிறீலங்கா அரசால் பதவி உயர்வு பெற்று, இராணுவக் கொமானடராக நியமிக்கப்பட்டபோது, தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக சிறீலங்கா இராணுவக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலை வெற்றிகரமாகத் தொடங்கி, இரண்டு வீரர்களைச் சுட்டு விழ்த்திய பெருமை சீலனுக்குரியது. 1982 இல் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக யாழப்பனத்திர்க்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா, விஜயம் செய்வதையொட்டி, காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படை வீரர்களின் ட்ரக் வண்டிகளைச் சிதைக்கும் கெரில்லா நடைவடிக்கையும் சீலனின் தலைமையிலேயே நடந்தது. துரதிர்ஷ்டவசமாக சிறீலங்கா கடற்படைக்கூலிகள் இத்தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொண்டனராயினும்,இத்தாக்குதல் நடவடிக்கை சிறீலங்கா அரசை நடுக்கமுறச் செய்தது. 1982 ஐப்பசி 20ம் திகதி, பாசிஸ வெறியன் ஜே.ஆர் ஜெயவர்த்தனா, மீண்டும் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டான். பொலிஸ் நிலையத்திற்குச் சற்று தள்ளி ஒரு மினிபஸ் நிக்கிறது. மினி பஸ்ஸில் இருந்து இராணுவ உடைதரித்த விடுதலைப் புலிகள், சீலனின் தலைமையில் உப இயந்திரத் துப்பாக்கி (S.M.G), தானியங்கித் துப்பாக்கிகள் சகிதம் மின்வெட்டும் வேகத்தில் பொலிஸ் நிலையத்தினை ஆக்கிரமிக்கின்றனர். எதிர்த்தாக்குதல் நடத்த முனைந்த இரண்டு பொலிஸ்காரர்கள் சுடப்பட்டனர். அந்த அதிகாளியின் அமைதியைக் கிழித்துக்கொண்டு துப்பாக்கி வேட்டுக்கள் தொடர்ச்சியாகத் தீர்க்கப்படுகின்றன. சார்ஜ் ரூம் சிதைக்கப்படுகிறது. பயம் அறியாத – சாவறியாத சீலன் முன்னின்று மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிரடிப்படியின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கானான் வலது காலின் முழங்கால் முட்டிற்குச் சற்று மேலே ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்தன. பொலிஸ் நிலையக் கொம்பவண்டிற்குள் கொண்டுவரப்பட்ட மினிபஸ்ஸிற்குள் ஆயுதங்கள் அனைத்தும் துரிதமாக ஏற்றப்படுகிறன. காலைக் கெந்திக் கெந்தி இழுத்துக் கொண்டு தனது S.M.G யுடன் எதிரியின் துப்பாக்கியையும் இழுத்துக்கொண்டு மினிபஸ்ஸிற்கருகில் வந்து சக போராளிகளின் கைகளில் கொடுத்துவிட்டு, தள்ளாடுகிறான் சீலன், மயக்கமடைகிறான். இதற்க்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் துப்பாக்கிப் பயிற்சியின்போது நெஞ்சிலே குண்டு பாய்ந்தது, ஆஸ்பத்திரியில் சிகிட்சைபெற்று ஓரளவு உடல் தேறியிருந்த சீலனுக்கு, இது இரண்டாவது காயம். இந்தத் துப்பாக்கிக் காயம் சீலனை மிகவும் பலவீனப்படுத்தியது. காயம்பட்டுவிட்டால் சீலனை வைத்துப் பராமரிப்பது சிறிய கஷ்டம் தான். “நோவுது, நோவுது” என்று தொடர்ச்சியாய் முனகிக்கொண்டிருப்பான். முதலாவது காயத்தின்போது நோவைத் தணிப்பதற்காக ‘பெதற்றின்’ மருந்து கொடுக்கப்பட்டு, சீலன் அதற்க்குக் கொஞ்சம் பழகிப்போனான். “எனக்குத் தாங்க முடியாது பெதற்றின் தாங்கோ” என்று கெஞ்சும்போது, இந்த விடுதலைப்புலி ஒரு குழந்தையாகும். ஓரிடத்தில் கிடைக்கமாட்டான். புரண்டு புரண்டுகொண்டேயிருப்பான். ஒரு முறை, காயத்தின் நோவிலிருந்து மீள மன ஆறுதலுக்கு கடவுளை நினைத்துக் கொள் என்று சீலனிடம், வைத்தியசாலியில் அவனைக் கவனித்துக் கொண்ட நண்பன் சொன்னபோது, அவன் தீர்க்கமாக மறுத்து விட்டான். ஆனால் பின்பொருமுறை, தனது நெருக்கமான அரசியல் நண்பன் உணர்ச்சிச் சுழிப்பு பிரவகித் தோடியிருந்தது. அவன் ஓரளவு குனமாகியிருந்தாலும் கெந்திக் கேந்தித்தன் நடப்பான். ஐந்து மாத இடைவெளியில், நெஞ்சிலும் காலிலுமாக அவன் வாங்கிய துப்பாக்கிக் குண்டுகளின் காயங்களில் இருந்து நலம்பெற்று, அவன் தன்னம்பிக்கையோடுதான் செயற்பட்டான். நெஞ்சிலே காயம்பட்டு சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும்போது, ஆஸ்பத்திரியில் நின்ற நாட்களில் அன்பாய் அவனைப் பார்த்துக் கொண்ட நேர்ஸ் அவனிடம் கேட்டாள்: “நீங்கள் குணமானது உங்களின் தன்னம்பிகையினாலா? நண்பர்களினாலா? மருத்துவரினாலா? அல்லது கடவுளின் கிருபையினாலா?” அந்த நேர்ஸ் என்ன பதிலை எதிர்பார்க்கிறாள் என்பது, சீலனுக்குத் தெரியும். விடைபெறுகின்ற நேரத்தில், அவள் எதிர்பார்க்கும் அந்தப் பதிலைச் சீலன் சொல்லிவைக்கலாமே என்று, பக்கத்தில் இருந்த நாண்பர்கள் மனதில் நினைத்துக்கொள்கின்றனர். அவளுடைய திருப்திக்காகத் தான் ஏற்றுகொள்ளாத ஒரு பதிலை சொல்ல, அவன் தயாராக இல்லை. சிகிச்சை பெற்று ஐந்து மாதம் கூடத் தரிக்காமல் அவன் மீண்டும் தமிழீழத்தின் போராட்டக் களத்தில் இறங்கினான். 1983 வைகாசி மாதம் 18ம் திகதி, சிறீலங்கா அரசு நடாத்தும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் ஊறிப்போன கட்சிகள் தேர்தலில் திளைத்தன. யாழ்.மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், நவசமசமாஜக் கட்சி ஆகியனவும் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருந்தன. யாழ். உள்ளூராட்சித் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் பணியில் இயக்கம் தீவிரமாகச் செயற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சர்ந்தப்பவாத சமரசத் தலைமைகளால் தமிழ் மக்களுக்கு விடிவேற்படாது என்பதை நன்குணர்ந்திருந்த சீலன், அவர்களை மக்களுக்கு இனம் காட்டுவதில் முன்னின்றான். இனவாத அரசின் தேர்தல் மாயையிலிருந்து தமிழீழ மக்கள் விடுபட வேண்டும் என்று, இயக்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தபோது, தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சார வேலைகளுக்காக இரவு பகலாக, அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் சீலன் உற்சாகத்துடன் பணியாற்றினான். பாசிஸ இனவெறியன் ஜே.ஆரின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் இயங்கிய மூவர்மீது, சித்திரை 29ம் திகதி இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சீலன் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டன. வைகாசி 18ம் திகதி, தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பு பந்தோபஸ்து கருதி சிறீலங்கா அரசு யாழ்.குடாநாடு முழுவதும் ஆயுதப்படைகளைக் குவித்தது. ஒவ்வொரு தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் ஐந்து ஆயுதம் தாங்கிய பொலிசாரும் ஐந்து ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரும், பாதுகாப்பிற்காக உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதனை விட, ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை பொலிசாரும் இராணுவத்தினரும் ரோந்துப் பார்த்துக் கொண்டிருந்த வண்ணமாக இருந்தனர். வைகாசி 18ம் திகதி மாலை 4.15 மணி. கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலத்தின் வாக்களிப்பு நிலையத்திற்கருகில், மூன்று சைக்கிள்களில் இளைஞர்கள் வந்திருந்திறங்குகிரார்கள். காலைக்கெந்தியவாரு ஒரு சைக்கிளின் பாரிலிருந்து எந்திரத் துப்பாக்கியுடன் இறங்கும் சீலனின் தலைமையில், கட்டளை பிறக்கிறன. பாதைகள் மறிக்கப்பட்டு, வாகனங்கள் திருப்பி அனுப்பபடுகிறன. வீதியைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தபின் இராணுவக் கூலிகளுடன் சீலன் நேருக்கு நேர் நின்று நடத்திய தாக்குதல் சாவைத் துச்சமாக மதித்த ஒருவனின் துணிச்சலுக்கு சாட்சி. இந்தத் தாக்குதல் சம்பவம்பற்றிச் சிங்கள நூலாசிரியர் ஒருவர் விபரிக்கையில், “விடுதலைப் புலிகளோடு பாதுகாப்புப் படையினர் நின்று தாக்குப்பிடிக்ககூடியவர்கள் அல்லர் என்று மக்கள் புலிகளின் இராணுவத் திறமையை மெச்சினர்” என்று குறிப்பிடுகிறார். கந்தர்மடச் சம்பவம் நடைபெற்று இப்போது ஒன்றரை மாதமாகிவிட்டது. ஜூலை 05ம் திகதி. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. கொக்குவில் தாவடியில் ஒரு வீட்டுக்குள் சீலன் இராணுவ உடையில் எந்திரத் துப்பாக்கியுடன் நுழைகிறான். அந்த வீட்டுக்கரனைத் தட்டி எழுப்பி, தாங்கள் குருநகர் இராணுவ முகாமிலிருந்து வந்திருப்பதாகவும், தாவடிச் சந்தியில் தங்கள் ஜீப் பழுதாகி நிற்பதாகவும் வேனைத் தந்துதவுமாறும் கேட்கிறான். அந்த வீட்டுக்காரரும் பவ்வியமாக தனது வேனைக் கொடுக்கிறார். நள்ளிரவைத் தாண்டி 2.30 மணியளவில், சீலனின் பிற விடுதலைப் போராளிகளும் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிட்சாளையருகில் இந்த வானை நிறுத்திவிட்டு, ஆயுதங்காளோடு தொழிட்சாலைக்குள் நுழைகின்றனர். துப்பாக்கி முனையில், வாசலில் நின்ற காவலாளிகளையும் நேரப்பதிவாளரையும் கட்டி வைத்துவிட்டு, களஞ்சியப் பொறுப்பாளரின் சாவிகளை எடுத்துக்கொள்கின்றனர். ஐந்தே நிமிடங்களில் நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் பிற தேவையான உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு, தொழிட்சாலையை விட்டு வெளியேறுகின்றனர். அதிகாலை 4.30 மணியளவில், தாங்கள் பெற்றுக்கொண்ட டெலிக்காவானை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கிறார்கள். மிகத்திறமையாக சீலன் இயக்கத்துக்கு தேடித்தந்த தகர்ப்புக் கருவிகள், பிற்பட்ட காலத் தாக்குதல் நடவடிக்கைகளின் வெற்றிக்குப் பெருந்துணை புரிந்துள்ளன. ஆனால், இவற்றைத் தேடித்தந்த பின் பத்து நாட்களே சீலன் வாழ்ந்திருந்தான். 1979ம் ஆண்டின் ஆரம்பப் பளுதியில் இயக்கத்தில் சேர்ந்த சீலன், 1981ம் ஆண்டிலிருந்து அரச படைகளால் தேடப்பட்டு வந்தான். இதன் பின், தலைமறைவு கெரில்லா வாழ்க்கையை மேற்கொண்ட சீலனின் புகைப்படங்கள் எதுவுமே அரச படைகளின் கைகளில் சிக்காமையினால் இவன் மக்கள் மத்தியில் வெவ்வேறு பெயர்களில் அரசியல் பணிகளை மேற்கொள்ளவது சாத்தியமா இருந்தது. அரச படையினால் தேடப்பட ஆரம்பித்ததும், தனது வீட்டுக்குப் போவதை பூரணமாக நிறுத்திக்கொண்டு விட்டான். ஆஸ்பத்திரியில் நெஞ்சில் துப்பாகிக் காயத்திற்காக சிகிட்சை பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில்தான், அவனது தந்தை இறந்த செய்தி சில நாட்கள் கழித்தி அவனுக்குத் தெரிய வந்தது. தந்தையும் இல்லாத நிலையில், தன் தாய் பொறுப்பு மிகுந்த அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற கஷ்டமுற்றிருப்பாள் என்று, சீலன் நினைக்காமல் இருந்திருப்பான் எனாச் சொல்ல முடியாது. தனது குடும்பப் பிரச்சினைகள் குறித்து நெருங்கிய நண்பர்காளிடம் மிக அபூர்வமாகவே கதைத்திருக்கிறான். சீலன் லூக்காசிற்கும் செபமாலைக்கும் மட்டுமே தான் சொந்தமானவன் அல்லன் என்று உணர்ந்திருந்தான். சீலன் இவன்தானா என்று அடையாளம் காணத் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண ஆஸ்பத்திரியின் சவச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட சீலனின் தாய், ஆடாமல் அசையாமல் நின்றால், நெற்றிப்போட்டிலே பாய்ந்த துப்பாக்கிச் சன்னத்தால் தலை சிதைந்த நிலையிலே, தான் பெற்ற அழகுச்செல்வன் கிடத்தப்பட்டிருப்பதை அவள் கண்ணீர் திரையிட உற்று நோக்குகிறாள், நான்கு வருடங்களுக்கு முன் மெல்லியவனாக வீட்டை விட்டு வெளியேறிய மகன், வாட்டசாட்டமாக வளர்ச்சி கொண்டவனாக – அடையாளமே கண்டுபிடிக்க முடியாத அளவு மாறிப்போய் கிடத்தப்பட்டிருக்கிறான். அந்த மச்சம், உதடுகள், சிதைவுக்கூடாகவும் முழுமை காட்ட முயலும் முகம், பெற்றவள் இணங்காண்கிறாள். அது அவளுடைய செல்வந்தான். அரைமணி நேரமாக அவள் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். துயரன்தொந்த அந்தத் தாயின் பக்கத்திலே சீலனின் அண்ணன் அந்த உடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அமைதியை இராணுவப் படையில் ஒருவன் குலைக்கிறான். “இது ஒண்ட மகனா?” கொச்சைத் தமிழில் கேட்கிறான். கண்ணீர் வழிய தாய் தலையசைக்கிறாள். தன் மகனின் உடலைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அந்தத் தாய் அங்கு நின்ற மேஜரிடம் வேண்டுகிறாள். அவனோ வெறுப்பை உமிழ்கிறான். அந்தச் ‘செல்வமகனின்’ உடல் அந்தத் தாய்க்குச் சொந்தம் – இது தர்மம். அந்த ‘விடுதலை வீரனின்’ உடல் அரசுக்கு சொந்தம் – இது சட்டம். தான் பெற்ற மகனைக் கெளரவமாக அடக்கம் செய்ய நினைத்த அந்த ஏழைத் தாயின் உரிமையைத், ‘தார்மீக’ அரசின் பயங்கரவாதம் நெரித்தது. சீலன் உயிரோடிருந்ததைவிட அவன் மரணித்தபோதுதான் அரசுக்குப் பெரும் சவாலானான். புரட்சிவாதிகளின் வாழ்க்கை சாவுக்குப் பிறகுதான் ஆரம்பமாகிறது. அவனுடைய சடலம் கிடத்தப்பட்டிருந்த வைத்தியசாலை பலமான இராணுவக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அதற்குப்பின் அந்த தாய்க்கு அந்த வீரமகனின் சடலத்தை பார்க்க முடியவில்லை. லட்சோப லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களிலே அணையாத புரட்சித் தீயாக ஒழி வீசிக்கொண்டிருக்கும் சீலனின் சடலம், யாருக்கும் தெரியாமல் அவசரகாலச் சட்டத்தின் கிழ் இராணுவ மிருகங்கள் சூழ்ந்து நிற்க எரிக்கப்பட்டது. விடுதலைக்காகவே வாழ்ந்த அந்த வீரமகனை தலைவர் பிரபாகரன் கண்ணீருடன் நினைவு கூர்கிறார். “எவ்வளவு அற்புதமானவன் என் சீலன் !” “ஆசையாகவல்லவா நான் அவனுக்கு இதயச்சந்திரன் என்று பெயர் வைத்தேன்….!” “இவ்வளவு சீக்கிரமா என்னை விட்டுப் போனான்?” “அவனது மரணச் செய்தி பொய்யாகப் போய்விடாதா என்று என் மனம் நடுங்கியதே…” “எவ்வளவு கஷ்டங்களில் உயிருக்குயிராய் துணை நின்றான்…” “காடுகளில் அவனோடு திரிந்த காலங்கள் தான் எத்தனை மகத்தானவை…” “லட்சியங்களோடு காத்திருந்தானே…” “ஏன் தீடிரென இப்படி இல்லாமல் போனான்?” “மீண்டும்…. மீண்டும்….. நினைவிற் சுழல்கிறது – அது. அந்த அழகு முகம். அந்த மழலைச் சிரிப்பு. அந்தப் பாட்டு. அன்று – இரவு சூழ்ந்துவிட்டது. சலசலக்கும் காட்டு மரங்கள். சருகுகளின் ஓசை, சில்வண்டுகளின் ரீங்காரம். காற்றின் வருடலில், கனலும் தீக்கங்குகள், குழுமியிருக்கும் விடுதலை இளவல்கள். அவர்களிடையே பல்சுவை நிகழ்ச்சி. அது சீலனின் முறை. அவனுக்கு பாட்டு. அதோ சீலன்! எப்போதும்போல் கட்டமிட்ட சட்டை; கணுக்காலுக்கு மேல் மடித்துவிட்ட ஜீன்ஸ். அவனிடம் கூச்சம். சிரித்துச் சமாளிக்கின்றான். நண்பர்களின் தூண்டுதல். பாட்டின் ஆரம்பம். ஆரவாரமான வரவேற்பு. உற்சாகமடைகிறான். கைகளை அகலவிரித்து கம்பீரமாகப் பாடுகிறான்.” “அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல…….” – நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டு நூலிலிருந்து https://www.thaarakam.com/news/142102
  6. தமிழீழ விடுதலைப் புலிகளின் இளம் கெரில்லா வீரன் வீரவேங்கை ஆனந் Last updated Jul 14, 2020 வீரவேங்கை ஆனந் இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:25.01.1964 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும் அருள்நாதன் உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன். நெஞ்சில் வழியும் இரத்தத்தோடு ‘என்னைச் சுடு’ என்று சீலன் பிறப்பித்த கட்டளையை ஏற்றுப் பக்கத்திலே நின்ற மற்றுமொரு கெரில்லா வீரனின் துப்பாக்கிச் சன்னங்கள் சீலனின் தலையிலே பாய்வதைப் பார்க்கின்றான் ஆனந்த். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சிங்களக் கூலிப்படைகளின் துப்பாக்கிச் சன்னங்கள் ஆனந்தையும் வீழ்த்துகின்றன. சீலனோ அந்தக் கெரில்லாப் படைத் தலைவர் அரசபடையால் வலைவீசித் தேடப் படுபவன்இ சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தாக்குதல் சம்வபவத்தில் சீலனின் தலைமையிலே அந்தக் கெரில்லாத் தாக்குதல் நடைபெற்றது. என்பதைச் சிங்களக் கூலிப்படைகள் தெரிந்து வைத்திருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த அங்கத்தவன் – சிங்களக் கூலிகளின் கரங்களில் அந்தக் காளை பிடிபடவே முடியாது. சீலனுக்கு தன்னை மாய்த்துக் கொள்ளும் மனப்பாக்குவம் சிந்திப்பதற்கு அனுபவம் துணை புரிந்திருக்க வேண்டும். ஆனால்இ இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் பியிற்சி பெற்று ஏழுமாதங்கள் கூட நிரம்பாத நிலையில்இ இயக்க ரகசியத்தைக் காத்துக் கொள்வதற்குத் தன்னையும் சுட்டுவிடுமாறு சக வீரனைப் பணித்த ஆனந்தின் இலட்சியத் தூய்மைஇ நம்மைச் சிலிர்ப்படையச் செய்கிறது. விடுதலைப் புலிகளின் புரட்சிகர ஆயுதப் பாதையில் நம்பிக்கையோடும் உறுதியோடும் கால் பதித்த அந்த இளைஞன் எத்தனையோ யுத்த களங்களைக் காண ஆசைப் படிருப்பான். ஆனால் அந்தச் சாதனைகளை எல்லாம் செயலில் காட்ட அந்த வீரமகனின் சின்ன ஆயுள் இடம் கொடுக்க வில்லை. பத்தொன்பது வயதிற்குள்ளேயே ஆனந்த் சாவை அணைத்துக் கொள்ள நேர்ந்தது துரதிர்ஷ்டமே. ஆனந்திற்கு வயதை மீறிய வாட்ட சாட்டமான உடம்பு. அரும்பு மீசை மேவித்தான் தலையிழப்பான். அடித் தொண்டையில்தான் கதைப்பான். யாரோடும் கோபிக்க மாட்டான். நண்பர்களோடு விட்டுக் கொடுக்கும் சுபாவமுடையவன். எந்த வேலையையும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் செய்பவன். சமையல் செய்வதிலிருந்து கிணறு வெட்டுவது வரை அலுப்பில்லாமல் எதையும் செய்ய முன்நிற்பான். மெல்லிய நீலநிறத்தில் ஆடைகள் அணிவதில் அவனுக்கு விருப்பம் அதிகம். மயிலிட்டி மண் ஈந்த வீரமைந்தன் ஆனந்த் நீர்கொழும்பில் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றான். பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிஇ மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்றான். க.பொ.த. உயர்தரப் பிரிவில் விஞ்ஞானம் பயின்ற ஆனந்த் அரசியலைப் பின்னாளில் வாழ்க்கையாக வரித்துக் கொண்டான். பாடசாலைக் காலங்களில் ஆனந்த் சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தான். பாடசாலை உதைபந்தாட்ட அணியில் சிறந்த கோல் காப்பாளராகப் பிரபல்யம் பெற்றிருக்கிறான். சிறந்த கிரிக்கெட் வீரனுமாவான். கராத்தேயும் கற்றிருந்தான். சகலவிதமான வாகனங்களையும் நேர்த்தியாகச் செலுத்தும் திறமை கொண்டவன். தனது குறுகிய ஆயுதப் பயிற்சிக் காலத்திலும் ஆயுதங்களின் நுட்பங்களை நிறையத் தெரிந்து வைத்திருந்தான். வெடிகுண்டுகள் தயாரிப்பதிலும் அவனுக்குப் போதுமான இரசாயண அறிவிருந்தது. துப்பாக்கிப் பயிற்சியின் போது மிகக் குறைந்த நேரத்தில் கூடிய இலக்குகளை குறிபார்த்து அடிக்கக் கூடியவன். சரியாக இலக்குக் குறிவைத்து அடித்துவிட்டான் என்றால்இ ‘ ஹாய்’ என்று கைகளை உயர்த்திக் குலுங்கிச் சிரிக்கும்போதுஇ ஒரு பாடசாலை சிறுவனின் பெருமிதமே வெளிப்படும். (குறி தப்பாது சுடுகின்ற ஒரு கெரில்லா வீரனின் திறமையயை சாகஸங்கள் என்று கொச்சையாக அர்த்தப் படுத்திக் கொண்டு நாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை) பலம் மிகுந்த அடக்குமுறை இராணுவத்திற்கு எதிராகக் குறைந்த அளவு ஆயுதங்களுடன் தொடுக்கப்படுகின்ற கெரில்லாத் தாக்குதலின்போதுஇ இத்தகைய திறமை வாய்ந்த கெரில்லா வீரர்கள் தனிமுக்கியம் வகிக்கின்றார்கள். வடக்கில் புலிகளை அடக்கிவிட்டோம் என்று ஜே.ஆர் ஐயவர்த்தனா கொக்கரித்தபோது ஒரு கொரிலலப் போராட்டத்தினை அவ்வாறு அடக்கிவிட முடியாது என்பதை 1982 மீ மாதம் நெல்லியடியில் அரசபடையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் தொடுத்த வெற்றிகரமான தாக்குதல் தெளிவாக எடுத்துக் காட்டியது. சிறீலங்கா சிங்கள அரசபடைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலையடுத்து தமிழீழ மக்கள் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையின் நல்லதொரு வெளிப்பாடாக ஆனந் அமைந்தான். 1982 ஜீன் மாத ஆரம்பத்தில் ஆனந் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டான். ஆயினும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்வதற்கு முன்னரேயே ஆனந் பிற சிடுதளைக்குழுக்களைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களது இயக்க நடவடிக்கைகளைக் கேட்டறிந்திருக்கிறான். பலர் வாய்ச்சொல் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். பலர் பொய்யான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் போலிகள் என்பதை உணர்ந்தே ஆனந் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தான். தங்களது அணியின் அங்கத்தவர்களது இலட்சியத் தூய்மை குறித்தும் அர்ப்பணிப்பு குறித்தும் எங்கள் இயக்கம் பெருமிதம் கொள்கிறது. வளமான குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்தின் உள்ளத்திலே கனன்றெழுந்த புரட்சித் தீதான் அவனுக்குத் தமிழீழத்தின் போராட்ட வரலாற்றிலே நிரந்தரமான இடத்தைத் தேடிக்கொடுத்தது. இரு தமக்கையரையும் இரு தமையன்மாரையும் கொண்ட ஆனந்தின் இதயம் விடுதலையை நாடி நிற்கும் லட்சக்கணக்கான மக்களுக்காக விசாலமாகத் திறந்திருந்தது. 1983 ஜீலை 5ம் திகதி காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்குள் சீலனின் தலைமையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் சகிதம் நுழைகிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில் காவலாளிகளையும், டைம்கிப்பரையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்கள். சிங்கள வெறியன் சிரில் மாத்தி யூவின் அமைச்சில் அடங்கும் இந்த சீமெந்துத் தொழிற்சாலையின் காவலாலிகல் அனைவரும் சிங்களவர்கள். நீர்கொழும்பில் நீண்ட காலம் வாழ்ந்ததால் சரளமாகச் சிங்களம் பேசும் ஆற்றல் கொண்ட ஆனந் நடுநடுங்கிக் கொண்டிருந்த காவாலாளிகளை நோக்கிச் சிங்களத்தில் கதைத்தான். “நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரிகள் இல்லை. சிங்கள அரசின் அடக்குமுறையைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். நாங்கள் சிங்களவர்களுக்குத்தான் எதிரிகள் என்றால் உங்களை வெடிவைத்துத் தீர்க்க எங்களுக்கு அதிக நேரம் எடுக்காது” சிங்களவர்களின் நாளாந்த அடக்குமுறைக்கும் அடாவடித் தனத்திற்கும் இலக்கான நீர்கொழும்பு போன்ற பகுதியில் வாழ்ந்த, வளர்ந்த ஆனந்திற்கு சிங்களவர்களை நோக்கிய ஒரு வெறுப்பு வளர்ந்திருந்ததால் கூட நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை பற்றி அவன் மிகத் தெளிவான கருத்துக்கள் கொண்டிருந்தான். விடுதலைப்புலிக இயக்கத்தின் கொரில்லா வீரர்களில் சிங்கள நண்பர்களுடன் கூடிய பரிச்சயம் கொண்டவம் ஆனந். இது ஆனந்தின் சிறப்பம்சம். வெற்று மேடைப் பேச்சின் கூச்சங்க்களால் இவன் தமிழீழ அரசியலுக்கு ஈர்க்கப்படவில்லை. வேறு சிலரிடம் காணப்படுகின்ற குடா நாட்டுக் குறுகிய மனோபாவத்தின் சாயல் கூட இவனிடம் இல்லை. நீர்கொழும்பில் சாதாரணச் சிங்கள மக்களுடன் ஆனந் நிறையப் புழங்கியிருக்கிறான். அவன் சிங்களம் போசும்போது மிக இயல்பாக சிங்களவர்கள் பேசுவது போல இருக்கும் என்று அவனுடைய நெருங்கிய நண்பர்கள் கூறியிருகிறார்கள். தமிழ் மக்களின் தேசிய சுய நிர்ணய உரிமைக்காக களத்திலே குதித்த ஆனந் சிங்களத் துவேஷியாக இருந்ததில்லை. காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இருந்து எக்ஸ்புளோடர்களையும் மற்ற உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு விடுதலைப்புலிகள் நள்ளிரவைத் தாண்டிய அந்தப் பொழுதில் கொக்குவிலுக்கருகில் டெலிக்கா வானிலவந்து கொண்டிருந்தபோது வானில் பின் சில்லுக்குக் காற்றுப் போய்விட்டது. இந்நேரம் காங்கேசன்துறைத் தொழிற்சாலையிலிருந்து பொலிஸ் நிலையங்களுக்கு இந்தச் சம்பவம் அறிவிக்கப்பட்டிருக்கும். எக்ஸ்புளோடர்களைத் தங்களது இருப்பிடத்திற்குக் கொண்டுபோய் சேர்த்துவிட்டு, டெலிக்கா வானை அதன் சொந்தக்காரரிடம் கொண்டு போய்ச் சேர்த்தாக வேண்டும். ஜாக் அடித்து டயரைக் கழற்றி மாற்ற ஏதுமில்லை. “இத்தனைபேர் இருக்கிறோம். ஆளுக்கு ஆள் வானைத் தூக்கிப் பிடியுங்கள். நான் டயரை மாற்றிவிடுகிறேன்” என்று சொல்லி முன் வருபவன் ஆனந். ஆம், சில நிமிஷங்களில் புதிய டயரைப் பொருத்திக் கொண்டு வான் மின்னலாய் விரைந்து மறைகிறது. 1983 மே மாதம் சிறீலங்கா அரசு நடத்திய உள்ளூராட்சித் தேர்தல்களைப் பகிஷ்கரிக்கும் பணியில் சீலனோடு துணை நின்று செயற்பட்டான் வீரன் ஆனந். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிட முன்வந்த மூன்று வேட்பாளர்கள் மீது இயக்கம் இராணுவ ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஆனந்திற்குப் பெரும் பங்குண்டு. ஆனந் இறந்தபிறகு அவனை இன்னாரென அடையாளம் கண்டுவிட்ட இராணுவ மிருகங்கள் ஆனந்தின் தந்தையைக் கண்டு சினந்தன. “பிசாசு போலப் பிள்ளை பெற்றிருக்கிறாய்?” என்று சிங்களத்தில் அந்த மிருகங்கள் கத்தின. “பிறக்கும் போது அவன் அப்படியில்லை” என்று அமைதியோடு பதில் சொல்கிறார் ஆனந்தின் தந்தை. சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காலில் குண்டு பாய்ந்து காலை இழுத்து இழுத்துக்கொண்டு திரிந்த சீலனை ஆனந்தான் தனது சைக்கிளில் வைத்துக்கொண்டு திரிவான். அந்த சீலனோடு சாவிலும் இணைந்து போனான் ஆனந். இயக்கத்திலே ஆனந் இணைந்த காலம் சொற்பமானாலும் இறுதிவரை உருக்குப் போன்ற மன உறுதியுடனும், உயிர் கொடுத்தான் இயக்கத்தின் இரகசியத்தைப் பேணும் திடத்துடனும் அவன் செயற்பட்டிருப்பது கெரில்லாப் போராளிகளுக்கு முன் மாதிரியாகவே அமைந்திருக்கிறது. ஆனந்! உனக்கு வயது பத்தொன்பது தான். ஆனால்…. நீயோ புரட்சி கனலும் உள்ளங்களிலே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய்! வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி 1984) https://www.thaarakam.com/news/142110
  7. கப்டன் ரஞ்சன் (லாலா) நீங்காத நினைவில் …… Last updated Jul 13, 2020 கப்டன் லாலா ரஞ்சன் கனகநாயகம் ஞானேந்திரமோகன் ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.09.1960 வீரச்சாவு:13.07.1984 நிகழ்வு:யாழ்ப்பாணம் தொண்டமானாற்றுப் பகுதியில் சிறிலங்கா அதிரடிப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு ” மக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் நேரடியாக பொதுமக்களைத் கலந்து கொள்ளும் இராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன். பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத் தாக்குதல் மூலம் “இதுவும் மக்கள் போராட்டம் தான் புரிந்து கொள்ளுங்கள் ! ” என பாடம் புகட்டியவன் ரஞ்சன். இன்று இந்த மக்கள் எழுச்சிகளைக் காணும் போது உனது தியாகங்கள் வீண்போகவில்லை நாளைய தமிழீழ வரலாற்றில் உனது பெயரில் இன்றைய சிறுவர்களால் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டும் போல இருக்கும், கண்ணெதிரே நீ இல்லாவிட்டாலும் என் எண்ணங்களை என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள என்றுமே நான் தயங்குவதில்லை. ஒவ்வோர் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியும் உன்னை எனக்கு ஞாபகப்படுத்தியே தீரும், இயக்கத்தின் முழுநேர போராளியாக எழுபத்தி எட்டாம் ஆண்டில் நீ அடியெடுத்து வைத்த நாள் அது தானடா. 78ஆம் ஆண்டு மார்கழியில் இயக்க ரீதியாக அறிமுகமான நீ துண்டுப் பிரசுரம் கொடுத்தல், இயக்கத்திற்கு ஆட்சேர்த்தல், எதிரியின் நடமாட்டங்களை எமக்குத் திரட்டி தருதல் போன்ற வேலைகளை அதுவரையில் செய்து வந்தாய். சிறு அசைவைக்கூட மிகவும் திட்டமிட்டே நடைமுறைப்படுத்த வேண்டிய அந்தக் காலகட்டத்தில் உனது பணி இயக்கத்திற்கு மிகவும் தேவையாக இருந்து. கட்டையான கறுவலான உனது உருவத்தை காணுபவர்கள் உன்னை இயக்கத்தைச் சேர்ந்தவன் என ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். உனது உருவஅமைப்பு இரகசியமான வேலைகளை உன் முலம் செய்து கொள்ளுவதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. விடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக இணைந்துகொண்ட ஆரம்ப காலத்தில் நீ பட்ட கஷ்டங்களை இன்று விடுதலைப் பாதையில் காலடி எடுத்து வைக்க எண்ணும் அத்தனை போராளிகளும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள், அப்போது தான் சுதந்திரத்தின் பெறுமதி எத்தகையது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நீயும் நானும் குறிப்பிட்ட அக்காட்டில் கொட்டில் அமைத்து பண்ணை வேலைகளை செய்வதற்காகப் புறப்பட்டோம். யாழ்பாணத்தில் இருந்து வாளியில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் அங்கே சென்றோம். மழையினாலும் புயலினாலும் அந்தப் பாதையில் சீர்குலைந்து காணப்பட்டது பலத்த சிரமத்தின் மத்தியில் எமது பிரயாணத்தை மேற்கொண்டோம். எமது பிரயாணத்தின் கடைசி எட்டு மைல்களையும் நடந்தே போகவேண்டியிருந்து இவ்வளவு தூரம் நடந்து போவது உனக்கு பழக்கமில்லாத விடயமாக இருந்தாலும் உனது ஆர்வம் கையில் வாளியையும் பொருட்களையும் மாறி, மாறித் துக்கிச் சென்று எமது பிரயாணம் முடியும் இடம் வரை கொண்டுபோக வைத்து. இரவு பத்து மணியளவில் நாம் சந்திக்க வேண்டியவரின் வீட்டுக்குச் சென்றதும் ‘அப்பாடா’ என்று நிம்மதியுடன் எமது நோக்கத்தைத் தெரிவித்தோம். ஆனால் நாம் எதிர்பாத்துச் சென்றவர் மனதில் என்னதான் குடியிருந்ததோ? கையை விரித்து விட்டார். மீண்டும் திரும்பி எட்டு மைல்கள் நடந்துவந்து பஸ் மூலம் யாழ்ப்பாணம் திரும்பி வந்தோம். பளையில் கிடுகு வாங்கிக்கொண்டு மீண்டும் அங்கே சென்றோம்.போக்குவரத்து மேற்கொள்ளவது சிரமமாகவே இருந்து. எமது பிரயாணம் முன்று நாட்கள் தொடர்ந்தது, இரவில் நடைபாதையே எங்கள் மஞ்சம். கொட்டும் மழையும் கிடுகிடுக்கும் பனியும் எங்கள் இலட்சிய உணரவை மீண்டும் பட்டை தீட்டின. வாகனப் பிரயாண முடிவில் எட்டு மைல் தூரமும் மாறிமாறி கிடுகுக் கட்டைத் தூக்கிக்கொண்டு சென்றோம். எமக்கென ஒரு கொட்டில் போட்டு அதனுள்ளேயே படுத்து உறங்கிய அன்று ஏற்பட்ட உணர்வு அலாதியானது தான். ஒரு ஏக்கர் காணியை திருத்தத் தொடங்கினோம். இடையில் இயக்கத்தின் வேறு அலுவல்களுக்காக நான் யாழ்பாணம் வந்துவிட்டேன். உனக்குப் பின் வந்த வேறு சிலருடன் நீ இணைந்து நீ அந்தக் காணியை சிறந்ததொரு பண்ணையாக்கினாய். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு மிளகாய்ச் செய்கையைப் ப்ற்றி படிப்பிக்கக் கூடியளவு அனுபவம் உன்னை ஆக்கிவைத்தது. ‘சித்தாந்த வேறுபாடு’ என்ற பெயரில் இயக்கத்தை நாசஞ் செய்யப் புறப்பட்ட குழு உன்னையும் இயக்கத்தை விட்டு பிரிக்க பெருமுயற்சியெடுத்தது. நீ அவர்களுக்கே புத்திசொல்லி வந்த நீங்கள் வடிவாகச் சாப்பிட்டுவிட்டுப் போங்கோ என்று சாப்பாடு கொடுத்து அனுப்பிவைத்தாய். இவனுக்காக இவ்வளவு தூராம் அலைந்தோமே என்று புறுபுறுத்து விட்டுச் சென்றனர் அவர்கள். ‘தம்பி’யின் மீது நீ கொண்டிருந்த நம்பிக்கை தொடர்ந்து இயக்கத்தில் உன்னை இயங்க வைத்தது. மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் மாயமான போராட்டத்தில் இடையே வேடிக்கைப் பொருளாகக் கொண்டு வந்தனர் கூட்டணியினர். கிராம யாத்திரை என்ற பெயரில் அவர்களது நாடகம் ஆரம்பமாயிற்று. கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர் குழப்பவாதிகள், அரசின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தினர் பதில் சொல்லத் தெரியாத கூட்டணியினர். நீயும் சங்கரும், சீலனும் உங்களுக்குத் தெரிந்த வழியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள்.S.S.O பதவிகளுக்காகவும் வேலை வங்கிப்படிவத்துக்காகவும் ஏங்கித் திரிந்த கூட்டணியின் தொண்(குண்)டர்கள் சீலனைக் கட்டிப்பிடித்தனர். கட்டிபிடித்தவரின் பின்னால் சென்று உனது சிலிப்பரை தூக்கி முதுகில் வைத்துக் “ஹான்ஸ் அப்” என்று நீ சொன்னதும் நிலை குலைந்தனர் அந்த வீராதிவீரர்கள். நீ வைத்திருப்பது என்ன என்பதை திரும்பியும் பார்க்காமல் தமது எஜமானர்களை நோக்கி ஒடித்தப்பினர். உனது சமயோசித புத்தி அன்று சீலனைக் காப்பாற்றியது. நீரவேலி வங்கிப் பணத்தைக் காப்பாற்றுவதில் நீ எடுத்துக் கொண்ட சிரமங்கள் எழுத்தில் வடிக்கமுடியாதவை இராணுவத்தினர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் அதற்குக் கொஞ்சநேரம் முன்தான் நீ அங்கிருந்து அவற்றை அகற்றியிருப்பாய். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக இராணுவத்தினர் மீதான தாக்குதலை மேற்கொண்ட மூவரில் ஒருவன். மக்கள் நடமாட்டம் நிறைந்த யாழ் நகரில் சீலனின் தலைமையில் கைத்துப்பாக்கியுடன் அச்சாதனையைப் புரிந்தீர்கள். இராணுவத்தினரின் றைபிளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி வந்தபோது பக்கத்து வீட்டு அக்கா “சம்பவம் முடிந்து பெடியன்கள் சென்ற போது நான் கண்டேன்” என்று சொன்னா. என்னமாதிரி சம்பவம் நடந்தது என்று எதுவும் அறியாதது போல விசாரித்துத் தெரிந்துகொண்டாய். நல்லவேளை அவ பதற்றத்தில் இருந்ததாலும் நேடியாகக் காணாததாலும் அந்த இடத்தைவிட்டு மாறவேண்டிய நிலமை ஏற்படவில்லை. பயிற்சிக்காக இந்தியா சென்றாய், பயிற்சி முகாமின் ‘கொத்துரோட்டி ஸ்பெசலிஸ்ட்’ நீ. ஏற்கெனவே உன்னிடம் இருந்த சுறுசுறுப்பு, துணிவு என்பவையும் கராட்டித்திறமயும் பயிற்சி முகாமில் உனது திறமையில் பளிச்சிட வைத்தன. மீண்டும் புலேந்திரனுடன் தமிழீழம் வந்தாய், வரும் போது வள்ளக்காரர் உங்களைப் பேசாலைக் கரையில் இறக்கி விட்டனர். கரை இறங்கிய உங்களை அங்கே குடியிருந்த சிங்களக் காடையர் பிடித்துக்கொண்டனர். எமது மண்ணில் அண்டிப் பிழைக்க வந்தவர்கள் எம்மையே அதிகாரம் செய்து இந்த மண்ணிற்குச் சொந்தக்காரர்களான எம்மை அடிமைகளாக நடத்துகிறார்களே என அனைவரும் குமுறினோம். சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் 30 காபைன் சகிதம் புகுந்து விளையாடினாய். தாக்குதல் முடிந்து வரும் போது காயமுற்ற ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து அழுதாய் உனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப பெருகியதை அன்றுதான் முதன்முறையாகக் கண்டேன். உமையாள்புரத் தாக்குதல், கந்தர்மடத்தாக்குதல் என்பனவும் உன் திறமையைப் பளிச்சிட வைத்தன. யாழ் கச்சேரியில் இராணுவத்தினருக்கும், கூட்டணியினரும் பாதுகாப்பு மகாநாடு கூட்ட இருந்த சமயத்தில் முதல் நாளிரவு மகாநாடு நடக்க இருந்த மண்டபத்திற்கு குண்டு வைத்துப் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அன்று மண்டபத்தின் உட்சுவர்களில் பூவரசம் இலைகளாலும் பூக்களாலும் “பாதுகாப்பு மகாநாடு யாரை பாதுகாக்க” என்று எழுதியிருந்தாய், உனது கேள்வி மக்களைச் சிந்திக்க வைத்து பத்திரிகைகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அன்று பாதுகாப்பு மகாநாடு கூடிய கூட்டணியினர் நீண்டகால இடைவெளிகளின் பின்னர் மெல்ல மெல்ல வந்து பதுங்கு குழியில் பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர். உள்ளூராட்சித் தேர்தலில் பருத்தித்துறையில் ஐ.தே கட்சியின் தலைமை வேட்பாளராக இருந்த இரத்தினசிங்கம் உனது ஆசிரியர். ஆனாலும் உனது பார்வையில் துரோகி என்றே இருந்தது. உரிய இடத்திற்கு அனுப்புவதற்கு உனது பங்கையும் வழங்கினாய். மீசாலையில் சீலனை இழந்த வேதனை சில நாட்களாக உன்னுள்ளத்தில் குடிகொண்டிருந்தது. உனது உணர்வுகளுக்கு வாய்ப்பளிக்க ‘திருநெல்வேலித் தாக்குதல்’ சந்தர்ப்பமளித்தது. மதிலுக்கு மேல் நடப்பது உனக்குத் தெரியாமலிருக்கும் என்பதற்காக சீமேந்துக் கற்களை உனது உயரத்திற்கு ஏற்றவாறு அடுக்கினாய் தனியே நின்று தலைவருக்கு அடுத்ததாக நின்றது நீ தான். தலைவருக்கு அருகில் கிறனைட் வீழ்ந்ததும் பதறி விட்டாய். தமிழ் மக்களின் அதிர்ஷ்டம் கைக்குண்டு சக்தியிழந்தது. அன்றைய தாக்குதலில் சுறுசுறுப்பாக எல்லா இடமும் திரிந்தாய். ஒரு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது அம்மானை இழந்ததால் இந்த வெற்றியினை நினைத்து பூரிக்கும் நிலையில் நாம் இல்லை. தொடர்ந்து வந்த இனக்கலவரம் ஆயிரக்கணக்கில் இளைஞர்களை போராட்டத்தில் உள்வாங்கியது. கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சில நூறு பேரை மட்டுமே நாம் எம்முடன் இணைத்துக் கொண்டோம். அப்போது நடந்த இரண்டு பயிற்சி முகாம்களில் முதாவதற்கு பொன்னம்மானும், இரண்டாவதற்கு நீயும் பொறுப்பாக விளங்கினீர்கள் பயிற்சி முகாம் முடிந்து வந்ததும் அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை பருத்தித்துறையில் நடத்தினாய். பருத்தித்துறை பொலிஸ் நிலையம் வரை அதிரடிப்படையினரை ஒட ஒட விரட்டினாய். அதன் பின்னே பருத்தித்துறை பொலிஸ் நிலையம் உனது தலைமையிலான பொதுமக்களின் போராட்டத்தில் உன்னிடம் வீழ்ச்சியடைந்தது. ஆயுதங்கள் பொலிஸ் நிலைய ஆவணங்களுடன் நீயும் நானும் பொலிஸாரிடம் பறிகொடுத்த மோட்டார் சைக்கிளும் எமது கையில் கிடைத்தன. மோட்டார் சைக்கிள் பறிகொடுத்த அந்தச் சம்பவத்தை நினைக்கையில் உனது நிதானத்தை மேச்சிகொள்வேன். கடல்வழியாகப் பயணம் மேற்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீயும் நானும் பயணமானோம் வழியில் போலிஸாரிடம் மாட்டிக்கொண்டோம் எமது பையை சோதனையிட்ட போலிஸார் “இதென்னடா கிறனைட்டோ” என்றுகேட்டபடியே எடுத்த பொருள் கிறனைட்டாக இருக்கவே அதிர்ச்சியடைந்து நின்ற அந்தக் கணநேரத்தில் போலிஸாரிடமிருந்து பிலிம் றோஸ், படங்களை என்பவற்றை பறித்துக்கொண்டு”ஒடிவா” என என்னையும் கூட்டிக்கொண்டு ஒடினாய். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்தான் எம்மால் பறிகொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் எமது கையில் கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. போலிஸ் நிலைய ஆவணத்திலிருந்து கிடைத்த விபரங்களின் படி துரோகி நவரட்ணத்திற்கு உரிய தண்டனை வழங்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாய். ஆனால் உனது சேவை நீண்டகாலம் தமிழினத்திற்குக் கிடைக்கக் கூடாது என்ற துரிஷ்டமோ விதி உன்னையும் எம்மையும் பிரித்துவிட்டது. வாகனத்தில் சீலனின் போஸ்டரை ஏற்றிவந்து கிட்டுவின் காருக்கு வழிகாட்டியாக நீ மோட்டார் சைக்கிளில் விக்கியுடன் வந்துகொண்டிருந்தாய், தொண்டமானாற்றில் அதிரடிப்படையினர் உன்னை வழி மறித்த போது நீ அவர்களை போக்குக் காட்டிவிட்டு தப்ப முயன்றாய் ஜீப்பினால் அதிரடிப்படையினர் உன்னை மோத முயன்றனர். வெட்டவெளிப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை நீ திருப்பி அது எதிர்பாராமல் சேற்றினுள் சிக்கியது. சேற்றிலிருந்து எழும்பி தப்பியோடினீர்கள். அதிரடிப்படையினர் சுட்டனர் தப்பி ஒடிய நீங்கள் ஒரு சைக்கிளை எடுத்தபோது சைக்கிள் உரிமையாளர் தடுத்தார். நிலைமையை விளக்கியபோதும் கொடுக்கவில்லை. முடிவு உங்களை நெருங்கி வந்தது. அதிரடிப்படையினர் துப்பாக்கி வேட்டுகளுக்கு நீ இரையானாய். உனது உயிரைக் கொடுத்து பின்னால் காரில் வர இருந்த அனைவரது உயிரையும் நீ காப்பாற்றினாய். உனது தியாகத்தை அர்த்தமுள்ளதாக்கி விட்டாய். உன் உயிரை பலியெடுத்த அதிரடிப்படையினர் நெடிய காட்டில் எமது கண்ணிவெடியில் பலியாகி விட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய நாட்குறிப்பொன்றில் உன்னைச் சுட்டது தானே என ஒருவன் குறிப்பிட்டிருந்தான். அனைவரது இதயத்திலும் “கட்டைக்கறுவல்” ரஞ்சன் நீக்கமற நிறைந்திருக்கிறான். நினைவுப்பகிர்வு:- அஜித் வெளியீடு :களத்தில் இதழ் ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ https://www.thaarakam.com/news/141753
  8. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்; இராணுவத் தளபதி July 11, 2020 வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரையில் 6000 இற்கும் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதியளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://thinakkural.lk/article/53655
  9. காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன். கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் யோகராசா கோணேஸ்வரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:10.09.1971 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன். 1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால், அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான். இருந்தபோதும், சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. 1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான். காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர், வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை, காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது. தலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார். அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும். ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர். அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ…” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. “அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர்.” என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் … அப்பா, அம்மா இல்லாம, சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம, படிக்க வசதி இல்லாமல், எவ்வளவோ ஏக்கங்களோடையும், துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை, நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை….” “நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து, அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. ” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ட்சியைக் கொடுத்தது. அவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து காந்தரூபனின் நினைவாக அதனை என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிபோயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார். அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம், கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம். எண்டு பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாக சோர்ந்துபோய் வந்தார். வீட்டுக்குள்ள வந்தவர், எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் என்று சொல்லிப் போட்டு அழுதார். யோகராசா அண்ணரும், மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் (காந்தரூபன்) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின், அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் …. காந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிரதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி எழுதக் கற்றுக் கொடுப்பாள். ‘அ’ எழுதி ‘ஆ’ எழுதி ‘இ’ எழுதும் போது….., “இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். அப்படிப்பட்டவன் பிறகு இயக்கத்திற்குப் போய் கொஞ்சக் காலத்தில திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. பெரியம்மா தொடர்ந்து சொன்னார். கப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். ‘தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ’ என்றான். கொடுத்தேன். வாங்கிக் குடித்தான். நான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே ?…. என்று ஆலோசனை சொன்னேன். “…. இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்…. கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்…” என்றான். “சரி தம்பி ….. சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா” என்று நான் சொல்ல, அவன் திரும்பிச் சொன்னான்….. “சுகமாய் போவேன் பெரியம்மா….. அதில பிரசினையில்ல….. ஆனா….. திரும்பி வாறதென்கிறது தான்….. சரிபார்ப்பம்…. என்றான். அதற்க்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டார். https://www.thaarakam.com/news/141196
  10. முதலாவது கடற்கரும்புலிகளின் தாக்குதல் 10.07.1990… எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990….! பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான். எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு. விநியோகங்களும், போக்குவரத்திற்கும், வெளி உலகத் தொடர்பிற்கும் இக்கடலே பிரதான பாதையாக இருந்துவருகின்றது. இதை நன்கு அறிந்த சிங்கள அரசு கடற்பயனங்களைத் தடுத்து விடுதலைப் போராட்டத்தை நசுக்கத் திட்டமிட்டது. அதன் பிரகாரம் 1984ம் ஆண்டு திரு.லலித் அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பின் , இந்தக் கடல் எமதும் எமது மக்களினதும் பாவனையிலிருந்து தடைசெய்யப்பட்டது. ‘கடல் கண்காணிப்பு வலையம்’ என்ற பெயரில் தமிழீழக் கடல் சிங்களக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்பு வலையத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தமிழக் கடலில் நிரந்தரமாகச் சில கப்பல்கள் நங்கூரமிட்டன. இவை தாய்க்கபல்கள் அல்லது கட்டளைக் கப்பல்கள் என அழைக்கப்பட்டன. சாதாரண சரக்குக் கப்பல்களைக் கடற் கண்காணிப்புக்கு ஏற்றபடி சிறு மாற்றங்களை செய்து, சில சாதனங்களையும் பொருத்தி அவற்றைக் கட்டளைக்கப்பல்களாக சிங்கள அரசு மாற்றியுள்ளது. றேடார் சாதனங்களும், சிறுரக பீரங்கிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களின் பணி, கடலில் தமிழர்களின் படகுகள் எவையாவது தென்படுகின்றனவா என்பதை வேவு பார்ப்பதும் அப்படித் தென்பட்டால் அந்தச் செய்தியை கடற்படையின் அதிவேக விசைப்படகுகளுக்கு அறிவித்து குறித்த படகுகளை முழ்கடிப்பதுமாகும். இவ்விதம் இக்கட்டளைக் கப்பல்கள் தமிழீழக்கடலில் நங்கூரமிட்டபின், கடலில் பயணம் போன நூறுக்கும் மேற்ப்பட்ட விடுதலைப்புலிவீரர்கள் கடலிலே வீரச்சாவடைந்தனர். 14.04.1985 அன்று விடுதலைப்புலிகள் இயக்கம் கடலிலே தனது முதலாவது இழப்பைச் சந்தித்தது. அதில் 14 விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்தனர். அத்துடன் பல நூற்றுக்கணக்கான மீனவர்களும், பிரயாணம் செய்த மக்களும் கடலிலே பலியானார்கள். இந்த இழப்புக்களுக்கெல்லாம் யாழ் குடாநாட்டைச் சூழவுள்ள கடலில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கட்டளைக் கப்பல்களே மூலகாரணியாகும். “அபித்தா”, “எடித்தாரா” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று காங்கேசன்துறைக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் உள்ள கடலில் நிறுத்தப்பட்டிருக்கும். மற்றையது வெற்றிலைக்கேணிக்கு நேரே நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு கப்பல்களையும் அப்புறப்படுத்தாவிட்டால் தொடர்ந்தும் விடுதலைப்புலிவீரர்களை இழக்க நேரிடும் என்பதுடன், போராட்டப் பணிகளும் பெருத்த சிரமங்களையும் தடைகளையும் தடைகளையும் எதிர்கொள்ளும். ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருக்கும் சிறிய படகுகளின் உதவியுடன் இக்கட்டளைக் கப்பல்களை அடித்து விரட்ட முடியாது. எனவேதான் கரும்புலித் தாக்குதல்கள் மூலம் அந்த, “கடல் திமிங்கிலங்களை” அகற்ற விடுதலைப்புலிகள் தீர்மானித்தனர். 10.07.1990 அன்று, வடமராட்சிக் கடலில் நங்கூரமிட்டிருந்த “எடித்தாரா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் மீது, ஒரு கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகிய கரும்புலிகள் பங்கேற்று கட்டளைகப்பலுக்கு சேதத்தை ஏற்ப்படுத்தி வீரச்சாவடைந்தனர் வெளியீடு – உயிராயுதம் பாகம் 01 https://www.thaarakam.com/news/141192
  11. மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு தாகத்தில் திரியும் கோபங்கள்! நெஞ்சினிலே பஞ்சுவைத்து எண்ணையிட்ட நெருப்பு நில்லெனவே சொல்வதற்கு யாருமில்லை எமக்கு சாகவென்று தேதிசொல்லிப் போகும்புயல் கறுப்பு நாளைபகை மீதினிலே கேட்குமெங்கள் சிரிப்பு புதிய திசையொன்றின் புலர்வு தினம். ஆதிக்கக் கதிரைகள் அச்சத்தில் உறையும் நாள். நெல்லியடியில் மில்லர் தொடக்கி வைத்த சொல்லியடிக்கும் திருநாள். “கரும்புலிகள்” மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு தாகத்தில் திரியும் கோபங்கள். தேகத்தில் தீமூட்டும் போதும் சோகத்தின் திரைமூடாத திருமுகங்கள். ஆழத்திற் கிடக்கும் இவரின் அனல்வேர்களை எந்த ஆய்வாளர்களாலும் அளவெடுக்க முடிவதில்லை. அழுதழுது வரும் வார்த்தைகளாற் கூட இவர்களை எழுதிவிட முடியாது. கரும்புலிகளைப் பாடும் போதுதான் கவிஞர்கள் தோற்றுப்போகின்றனர். வெடித்த புயல்களுக்கு எழுதிய கவிதைகளை இருக்கும் கரும்புலிகள் படிக்கும்போதுதான் எழுத்தின் இயலாமை தெரியவருகிறது. தூரிகை எடுத்து ஓவியம் தீட்டலாம் வர்ணங்கள் தோற்றும்போகும் இறுதியில். முலைகொடுத்த தாயர்கள் கூட மலைகளை நிமிர்ந்து பார்க்கலாமே தவிர அவர் உள்ளக்கிடக்கையை உணர்ந்துகொள்ள முடியாது. சாவொன்றின் முன்னேதான் அதிகமானோர் சகலதையும் இழக்கின்றனர். விஞ்ஞானத்தால் சாவுக்குத் தேதிவைக்க முடியுமெனில் அச்சத்தில் அந்தரித்துப் போகும் உலகு. இந்தப்புயல்கள் மட்டும் தேதிவைத்த பின்னர்தான் சந்தோசத்தை தலையில் வைத்துக் கூத்தாடுகின்றனர். நகம் வெட்டும்போது தசை கிள்ளுப்பட்டாலே வேர்த்து விறுவிறுத்துப்போகும் இனத்தில் இந்த உற்பவங்கள் எப்படி சாத்தியமானது? விதி வழியேதான் சாவுவருமென நம்பும் சமூகத்தில் இந்தப் புதுவிதிகள் பிறப்பெடுத்தது எப்படி? வீதியிற் காணும்போது அமுக்கமாகவும் வீட்டுக்கு வரும்போதில் வெளிச்சமாகவும் குதித்துக்கொள்கின்றன இந்தக் குளிரோடைகள். நாளை இவர்களா வெடிக்கப்போகின்றனர்? நம்ப முடியாமல் இருக்கும் சிலவேளைகளில். சத்திரசிகிச்சை என்றாலே நாங்கள் பாதி செத்துவிடுகிறோம். சாகப்போகும் நேரத்திலும் இவர்களால் எப்படித் தலைவார முடிகிறது? எல்லா உயிர்களையும் இருந்து பார்க்கும் இயமன் இவர்களின் உயிரைமட்டும் எழுந்து பார்ப்பானாம். கரும்புலிகளின் பிறப்பின் சூத்திரம் உயர்மலையொன்றின் உச்சியிலிருக்கிறது. இவர்களின் நதிமூலம் தலைவனின் நம்பிக்கைப் புள்ளியில் ஊற்றெடுக்கிறது. வழி தவறாத பயணியென நம்பியே கரும்புலிகள் கந்தக வெடியாகின்றனர். இவர்கள் வரலாறு திருப்பும் பொழுதுகளில் பூப்பூத்துக்கொள்கின்றன வாசல் மரங்கள். மிதித்துச்சென்ற முட்செடிகள் கூட போய் வருவோருக்குப் புன்னகை எறிகின்றன. பயணம் சொல்லிப்போன காற்தடங்களை பவுத்திரப்படுத்திக் கொள்கிறது காற்று. தரையில் கடலிலும் மறைவிலும் அதிரும்வெடி ஒவ்வொன்றும் காற்றில் கலந்து கரைவதில்லை உளிவரும் திசையில் வரையப்படுகின்றன. அறிந்தழும் தாயரின் குரல்கூட அடித்தலறி ஒப்பாரி வைப்பதில்லை மௌனமாக மாரடித்துக்கொள்கிறது. கரும்புலிகள் எங்கள் காவற்தெய்வமென நாளை வரும் இளைய உருத்தாளர் பூட்டனுக்கும், பெத்தாச்சிக்கும் கோயிலெழுப்புவர். வெடியம்மன் கோயிலென விளக்கேற்றுவர். பேச்சியம்மனும் பிடாரியம்மனும் இன்றிருப்பதுபோல வெடியம்மன் நாளை விளங்குவாள். வாழ்வின் அர்த்தம் புரியாமல் நாங்கள் வெறும்வெளியில் வழக்காடுகிறோம். எவரையும் நிகழ்காலம் தீர்மானிப்பதில்லை இல்லாத காலத்தில் எதிர்காலமே தீர்மானிக்கிறது. வாழும்போதில் வாழ்வதுமட்டும் வாழ்வல்ல சாவின் பின்னர் வாழ்வதுதான் வாழ்வாகிறது. முன்னோர்கள் இதைத்தான் சொர்க்கமெனச் சொன்னார்கள். கரும்புலிகள் வானத்திலில்லை பூமியிலேயே வாழ்வார்கள். சாவுடன் முடியும் சரித்திரமல்ல இவர்கள் தீயுடன் எரியும் ஜீவன்களல்ல இவர்கள். வரலாற்றில் வாழ்தலென்பது செய்யும் தியாகத்தால் வருவது. சந்தனமாய்க் கரையும் வாழ்விலிருந்து விரிவது. கரும்புலிகளின் வாழ்வு கோடிதவம் பூர்வ புண்ணிய வரம். ஆணென்றும் பெண்ணென்றும் பேதமின்றி இந்த அனற்குஞ்சுகளின் பிறப்புக்கு உலகம் ஒருகாலம் தலைசாய்க்கும் ஈழத்தமிழருக்கான விடுதலையை எவர் தரமறுத்தாலும் அவரைக் கரும்புலிகளின் கறுப்பு அச்சமூட்டும். கறுப்பே அழகு கறுப்பே வலிமை கறுப்பே வர்ணங்களின் கவிதை கறுப்புத்தான் உலகின் ஆதிநிறம். அதனாற்தான் ஆதிமனிதனான தமிழனும் கறுப்பாய் விளங்குகிறான். கரும்புலிகள் காலமெழுதிகள் எழுதும் காலத்தின் எல்லைக்கற்கள். எல்லையைக் கடந்து எதிரிகள் வராமல் இந்த இடியேறிகள் காவலிருக்கின்றனர். கரும்புலி போகும் திசையினையெந்த மனிதரும் தெரிவதில்லை – அந்தக் கடவுளென்றாலும் இவர்களின் வேரை முழுவதும் அறிவதில்லை அழகிய கனவும் மெழுகிய அழகும் இவரிடம் பூப்பதில்லை – இந்த அதிசய மனிதர் உலவிடும் பூமி பகையிடம் தோற்பதில்லை. கவியாக்கம் : வியாசன் http://www.errimalai.com/?p=54240
  12. வாசஸ்தலம் தூய் தமிழ் இல்லையே! எனவே “யோ” என்று கேள்வியாகக் கேட்கக்கூடாது. அதற்கு கேள்விக்குறியும் வேண்டும்😎
  13. தொகை மதிப்பீட்டுக்கு வீட்டுக்கு வருபவருக்கு உதவுங்கள் என்ற விளம்பரம்😄 சனத்தொகை மதிப்பீடு ஒவ்வொரு பத்தாண்டுகளும் நடைபெறும். கடைசியாக ஒழுங்காக நடந்தது என்றால் 1981 ஆம் ஆண்டாகத்தான் இருக்கும். தூய தமிழாகத் தெரியவில்லையே தோழர்.😃 தொகை மதிப்பீட்டாளர் உங்கள் வாசஸ்தலத்திற்கு வருவார் என்று விளம்பரம் சொல்கின்றது.
  14. வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்.! On Jun 28, 2020 தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்த சிரமங்கள் ஏராளம். அவர்கள் சந்தித்த எந்தத் துயர்மலையாலும் துளிகூட அவர்களை நிலைகுலையச் செய்யமுடியவில்லை. ஒவ்வொரு வீரனின் உள்ளமும் உறுதியால் இழைக்கப்பட்டு தேசப்பற்றினால் உரம் பெற்றிருந்தது. எவ்வளவு கடினத்திற்குள்ளும் விடுதலைக்காக உழைக்கும் அவர்களின் உழைப்பு வீச்சுள்ளதாய் இருந்தது. அத்தனை வீரத்தையும் விடுதலைப்பற்றையும் தலைமுறைப் பற்றையும் ஊட்டியிருந்தான் அவன். காட்டு மரங்களும் மேட்டுநிலங்களும் ஆறுகளும் சதுப்புவெளிகளும் முகம் மறக்காமல் அறிந்துவைத்திருப்பது அவனைத்தானே. எதிரியுங்க்கூட அவன் பெயரை நன்கு அறிந்து வைத்திருப்பான். எதிரிக்குப் பலதடவை இழப்புகளை ஏற்படுத்தியவனை, முகாமுக்குள் முடக்கிவைத் திருந்தவனை எதிரி தன் எதிர்பார்ப்பை நிறைவேற்றமுடியாமல் தடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தவனை எப்படி எதிரி அறியாதிருக்கமுடியும். ஒவ்வொரு உள்ளமும் உதடும் சேர்ந்து உச்சரிக்கும் பெயர்தான் கில்மன்… கில்மன்…. எப்படியிருப்பான்? ! கில்மன் என்ற பெயர்கொண்ட விடுதலை நெருப்பின் தோற்றம் இப்படித்தானிருக்கும், சரித்து வாரப்பட்ட தலைமுடி. செந்தளிப்போடு அனைவரையும் வசீரகிக்கும் பரந்த முகம். கருணையையும் கண்டிப்பையும் பிரதிபலிக்கும் பார்வை. சராசரியான உயரம். கம்பீரத்தோடு கூடிய நிமிர்வான தோற்றம். எப்போதும் அமைதியான சிந்தனை. இதுதான் அவனின் வெளித்தோற்றம். அவனுக்குள் கிளர்ந்தெழும் உணர்வுகளை எழுத்தில் வடிக்கமுடியாது. அந்த உயர்ந்த காட்டிற்குள் போராளிகள் ஒவ்வொருவருக்கும் அருகிலிருந்தபடி அவர்களை வீரராகவும் சகிப்புணர்வுள்ள விடுதலைப் போராளிகளாகவும் வளர்த்துக்கொண்டிருந்தான் கில்மன். போராளி ஒருவரே ஒய்வுறக்கம் இல்லாது செயற்படவேண்டிய அந்த நாட்களில் அந்த அணியின் ஒட்டு மொத்தத் தேவைகளையும் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகளையும் நிறை வேற்றவேண்டிய பணிகளையும் சிந்தித்துச் செயற்படவேண்டிய தளபதியின் உழைப்பு எத்தனை கனதியானதாக இருக்கும்! கடினம் நிறைந்ததாக இருக்கும்! திருமலைக் காட்டிற்குள் வரலாற்றைக் காப்பாற்ற வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் வீரர்களை வழிநடத்தும் தளபதியாக இருந்தான். அந்த அணி அங்கு நகர நினைத்ததே தன்மேலுள்ள பெரிய வரலாற்றுப் பணியொன்ற நிறைவேற்றத்தான். எங்கள் வரலாற்றுப் புகழ்மிக்க தலைநகர் திருமலை சிங்களக் குடியேற்றக் கறையான்களால் அரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது, நகரங்களிற் படிப்படியாகச் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கும் அரச படைகளிடம் திருமலைக் காட்டுப் பிரதேசமும் ஏறத்தாழப் பறி போன நிலையிலிருந்தது. காடுகளை இழக்க நேர்ந்தால் அந்த மாவட்டத்தில் பின்பு சிறு தாக்குதல் செய்யவே சிரமமாயிருக்கும். கால்வைக்கவே அதிகமான உயிர்விலை கொடுக்கவேண்டியிருக்கும். தலைநகருக்கான தாக்குதல் தளத்தை இழந்து போய்விடுவோம். தொடர்ச்சியான எமது பாரம்பரிய நிலம் துண்டாடப்படுகின்றது. எனவே, காட்டையும் காட்டின் கரையோரங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்ற தேவை ஏற்பட்டது. அந்தப் பணியினை நிறைவேற்றவெனத் தெரிவுசெய்யப்பட்ட படையணி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி. சீலன் பிறந்த மண்ணில் அவனது பெயர் தாங்கிய படையணி தாக்குதல் நடவடிக்கைக்காகப் புறப்பட்டது. அங்கே எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகள் ஏற்கனவே கணிக்கப்பட்டன. நிலையான பாதுகாப்புள்ள முகாமோ நிலமோ கட்டுப்பாட்டில் இல்லை, உணவு முதற் கொண்டு மருத்துவம் ஈறாக எந்த விநியோகங்களிலும் நம்பிக்கையில்லை. தங்கிடங்கள் இல்லாமையினால் மழையும் வெயிலும் அச்சுறுத்தும். அதிகமானவர்களுக்குப் பழக்கப்படாத புதிய சூழல். இப்படி, தொடராக இருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு தேடினால் அது கில்மனிடம் தான் கிடைக்கும் என்றே தலைவர் உணர்ந்திருக்கவேண்டும். கில்மன்தான் அந்த அணிகளை வழிநடத்துவதற்கு ஏற்றவனாய் இருந்தான். இவர்கள் செல்லப்போகும் காலச்சூழலில் அணிகளைத் தொடர்ச்சியாகப் பயிற்சியில் ஈடுபடுத்தவும் பொருத்தமான புதிய திட்டங்களைக் கையாளவும் தொடர் வேவிலும் ரோந்திலும் ஈடுபட்டுத் தகவல்களைப் பெறக்கூடிய அணியைச் சிறப்பான முறையில் அழினடத்தவும் எதிர்கொள்ளப்போகும் சிக்கல்கள் அனைத்தினையும் சுமந்தபடி போராளிகளின் உணர்வுகளைக் கட்டிக்காத்து நிர்வகிக்கவும் சிறந்த ஆளுமை உள்ள ஒருவர் தேவைப்பட்டார். கில்மன் தான் பொருத்தமானவன் எனத் தலைவர் முடிவுசெய்தார். அத்தனை வினாக்களுக்கும் விடைகாணக்கூடிய ஆளுமை பொருந்திய தளபதியாக அவனே அவரது எண்ணத்தில் இடம்பிடித்தான். சாள்ஸ் அன்ரனிப் படையணி தோற்றம் பெற்றபோது இவன் பயிற்சி ஆசிரியனாகக் கடமையாற்றினான். சகல ஆயுதங்களின் தன்மைகளையும் பயிற்சி நுட்பங்களையும் நேரடினான அனுபவத்தில் நன்கு அறிந்திருந்தான். வேவு அணிக்குப் பொறுப்பாக இருந்து பல இடங்களிலும் வேவுத் தகவல்கள் திரட்டிய பட்டறிவும் இருந்தது. அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் அவன் படித்த நாட்களிற் கற்றுக்கொண்ட நிர்வாகம் தொடர்பான அறிவும் தந்திரம் தொடர்பான அறிவும் இருந்தன. தாக்குதல்களுக்குத் தலைமையேற்றிருந்த அனுபவமும் சமர்களில் விநியோகத்தை வழிநடத்திய தேர்ச்சியும் அவற்றிற்கு மேலாகப் போராளி ஒவ்வொருவரின் மனத்தையும் கனிவுடன் அரவணைக்கும் தன்மையும் இருந்தன. இவையெல்லாம் அவனே அப்பணிக்கு ஏற்றவன் என்பதைக் காட்டின. கில்மன் சகலதுறை வல்லமையும் அனைவரையும் வழிநடத்தும் ஆளுமையும் கொண்டவனாக இருந்தான் நெருக்கடி நிறைந்த களச்சூழலுக்குள் தாக்குதல் இலக்கு ஒன்றைத் தெரிவுசெய்வது, வேவு பார்த்துத் திட்டம் தீட்டுவது, அணிகளை ஒன்றாக்கிப் பயிற்சி கொடுப்பது, தாக்குதலுக்கு நகர்வது, காயக்காரர்களையும் கைப்பற்றிய ஆயுதங்களையும் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்ப்பது, மருத்துவ ஏற்பாடு செய்வது, களஞ்சியப்படுத்துவது இப்படி பலவற்றையும் ஒவ்வொரு தாக்குதலுக்கு முன்பும் பின்பும் கருத்திற்கொள்ளவேண்டும். எப்போதும் எதிரியின் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டிய அச்சுருத்தல்களுக்குள்ளே அதை முறியடித்துவிடும் விழிப்புனர்வுடனேயே அவர்களின் பணிகள் ஒவ்வொன்றும் நிறைவேறின. ஒரு களத்தில் நேரடியாக நின்று வழிநடத்துவதை விடவும் எப்போதும் ஆபத்து நிறைந்த எதிரியின் ஆக்கிரமிப்புப் பிரதேசப் போர்க்களச் சூழலிற்குள்ளேயே வாழ்ந்தபடி, ஒவ்வொரு இலக்காகத் தெரிவுசெய்து, அதை வேவுபார்த்து அதற்கான ஆயுத ஏற்பாடுகளை ஒழுங்க்குசெய்வதும் தாக்குவதும் சுலபமானதல்ல. அதைச் சவாலாக எடுத்தான் கில்மன். ஒவ்வொரு தாக்குதல் முயற்சியையும் நிறைவேற்றத் தொலைத்தொடர்புக் கருவியிற் கதைத்தால் எதிரி எமது தங்குமிடத்தைக் கண்டுவிடுவான் என்பதால் நேரடியாகவே ஒவ்வோருவரிடமும் சென்று கவனிக்கவேண்டிய வேலைகளைக் கவனிப்பான். ஒவ்வோர் அணிகளுக்குமிடையே கிலோமீற்றர்க் கணக்கில் நீண்டு விரிந்திருக்கும் காட்டை ஊடறுத்து நுழைவதற்கு அவனது கால்களைத்தவிர வேறு எந்த வாகனத்தையும் பயன்படுத்த வசதியில்லை. அவன் பயன்படுத்த்துவதும் இல்லை. அனைத்து இடங்களிற்கும் ஓயாது நடந்து செல்வான். வியர்வை சிந்த, மூச்சு வாங்க வாங்க அவனது நடை தொடரும். அந்தக் காட்டுப் பகுதியில் அவன் சுவடு படாத இடம் இல்லையென்றே சொல்லலாம். படையணி திருமலைக்குச் சென்றபின் சண்டை தொடங்கும்வரை வேவுக்காகவும் இடங்களை அறியவும் நடந்து திரிவான் கில்மன். அவனது ஓயாத உழைப்பு ஒவ்வொரு போராளியிலும் பிரதிபலித்தது. சிறுசிறு தாக்குதல்களைச் செய்து எமது கால்களைத் திருமலைக் காட்டில் வலுவாகப் பதிக்கவே அணிகள் எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடிகளும் பெருகின. அந்த இறுக்கமான சூழலில் ஒவ்வொரு வேளை உணவுக்கும் காத்திருக்கவேண்டியதாகவும் உணவை எடுத்துச் சென்றே சண்டையிடவேண்டியதாகவும் இருந்தது. எனினும் கில்மனின் அன்பும் அரவணைப்பும் போராளிகள் ஒவ்வொருவரையும் உறுதியான உளவுரனோடிருக்கச் செய்தன. எப்போதும் எளிமையாய் உடையணிந்துகொண்டு எல்லோருடனும் அன்பாய்ப் பழகும் கில்மன் குறுகிய காலத்தில் அந்தப் பிரதேசத்திற் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான். ஆங்காங்கே எதிரிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. திரமநியோடு சண்டைசெய்த வீரர்களை இதய நிறைவோடு பாராட்டி அடுத்த சண்டைக்கு அனைவரையும் தயார்படுத்துவான். பெருஞ்சிரமத்தின் பின் கிடைக்கின்ற அளவுச் சாப்பாட்டிற்காகக் கில்மனும் அம்ற்றவர்களோடு சமையற்கூடம் வந்து காத்திருப்பான். கையில் ஒரு கோப்பையோடு, ஒரு மரக்குற்றியில் அமர்ந்தமபடி எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பான். மரக்குற்றியில் அமர்ந்திருக்கும் அவனது நெஞ்சின் ஒரு முலையில் பழைய நினைவுகளும் உட்கார்ந்திருக்கும். சிலவேளைகளில் தள்ளாடும் முதியவரின் நடையைப்போல தளர்ந்த நடையில் அவை உலாவத்தொடங்கும். அவன் இந்தப் போராட்டத்திற் பங்களிப்புச் செய்த ஆரம்ப நாட்களும் ஊருக்குள் அந்தக் கதை கசிந்தபோது அவன் எதிர்கொள்ள வேண்டியிருந்த அச்சுறுத்தலும் எங்கோ தூரத்தில் ஒரு நாடகம் நடப்பதைப்போல அவனை உணரவைக்கும். உறவுகள் ஒவ்வொன்றின் குரலும் தொலைவில் இருந்து கேட்பதுபோலிருக்கும். சின்னவயதிலேயே அவன் இயக்கத்தின் ஆதரவாளனாகத் தீவிரமாய் உழைத்தபோது இந்திய இராணுவம் அவனைப் பின்தொடர ஆரம்பித்தது. அவனும் அவனது குடும்பமும் எதிர்கொண்ட துன்பங்கள்…. எண்ணிலடங்கா. அனைத்துத் துயர்களுக்கும் தீர்வுகானவேண்டுமென்ற இலட்சியத்தோடு 13.07.1990ல் போராட்டத்தில் இணைந்தான். பயிற்சிப் பாசறையில் ஒவ்வொரு பயிற்சியிலும் அவன் காட்டிய ஆர்வமும் திறமையும் அவனது விடுதலைப்பற்றை வெளிக்காட்டின. எதிர்காலத்தில் தளபதியாக வரப்போகும் அந்த விதை ஆரம்பத்திலேயே வீரிய முள்ளாகவே இருந்தது. அவனுக்குக் கிடைத்த சர்ந்தப்பங்களில் அவன் காட்டிய திறமையும், தொடர்ந்து வந்த களவாழ்வில் வெளிப்பட்ட அவனது தனித்தகமையும், பயிற்சியாசிரியனாய், பின் விநியோகப் பொறுப்பாளனாய், வேவு அணிகள் வழினடத்துனனாய் அவன் வளர்ச்சியடைய வழிவகுத்தன. அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் படிப்பு முடிந்து வந்ததும் அவன் ஏற்றுக்கொண்ட ‘பலவேகய – 2’ இற்கான விநியோக நடவடிக்கை அவனை ஒரு தளபதி என்று கூறக் கூடியளவுக்கு அவனது ஆளுமையை வெளிப்படுத்தியது. 1992ம் ஆண்டு மாவீரர் நாளுக்கு முந்திய சமராக அமைந்த வளலாய்த் தொடர் காவலரண் மீதான தாக்குதல் நடவடிக்கையில் ஒருபகுதிக்கு அணிப் பொறுப்பாளராகக் கில்மன் நியமிக்கப்பட்டபோது, அந்தச் சமரின் முடிவில் அவனது போர்த்திறமையும், கட்டளை வழங்கும் ஆற்றலும் சந்தேகத்திற்கு இடமற்றவாறு நிரூபிக்கப்பட்டன. மூத்த தளபதிகளால் பேசப்படுபவனாகக் கில்மன் மாறினான். படிநிலை வளர்ச்சியின் உயர்வாய், தலைவரின் நம்பிக்கையின் வெளிப்பாடாகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாகக் கில்மன் நியமிக்கப்பட்டான். தலைநகர்க்காடுகளில் அவன் கால்கள் நடந்தன. ஓய்வறியாத அவன், வரைபடத்தை விரித்துப் பார்த்தபடியோ எழுதுவதற்கும் வாசிக்கவும் தெரியாத போராளிகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தபடியோ இருப்பான். அங்கே எதிர்கொண்ட தாக்குதல்கள் ஒவ்வொன்றிற்கும் பின்னல் கில்மனின் முகமே சிரிப்போடு தெரியும். எதிரியின் வசமிருந்த காடு சிறிது சிறிதாக எமது கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது அதனால் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சிக்கல்களை எதிரி உணர்ந்தான். திருமலை வந்திருக்கும் எமது தாக்குதல் அணிமீது தாக்குதல் தொடுப்பதற்காகக் காடுகளை நோக்கிப் பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஒன்றிற்குத் திட்டமிட்டான். 31.05.1995 ‘ராமசக்தி -03’ என்ற இராணுவ நடவடிக்கை எமது வசமிருந்த காடுகளை நோக்கி அலைபுரண்டு வந்தது. கில்மன் இதனை முன்னுணர்ந்து இருந்தானோ என்னவோ உடனே செயலில் இறங்கினான். தனது அணிகளை எதிர்ச்சமரிற்குத் தயாராக்கினான். செயன்முறைத் தாக்குதல் திட்டத்தை வகுத்து அதனை விளங்கவைத்தான். முன்னேறி வந்த எதிரிக்கு மூக்குடைத்து அனுப்பும் மூர்க்கத்தோடு அணிகளை வழிநடத்தினான் கில்மன். அலைபுரண்டதுபோல் காடுகளில் முன்னேறிய எதிரிப்படை துவண்டுபோய்ப் பின்வாங்கியது. தனது கேணல் தர அதிகாரி உட்படப் படையினர் பலரை இழந்ததுடன் உடல்களையும் ஆயுதங்களையும் கைவிட்டு அவமானத்தைக் கையிலேந்தியவாறு ஓடித்தப்பியது சிங்களப்படை. அரசதரப்புத் தம்மிற் 17 பேர் கொல்லப்பட்டு 35 பேர் காயமடைந்ததாகவும் பலர் காணாமற் போயுள்ளதாகவும் கூறி விடயத்தைச் ‘சடைய’ முனைந்தது. சிறிய அணி பெரியசமர் சாதாரனமானதன்று. சீலனின் பெயர் தாங்கிய படையணியைத் தலைவனின் எதிர்பார்ப்புக்கு அமைய தலைநகரில் வெற்றிநடை போடவைத்து எம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருந்த கில்மன் எதிரிமீது தாக்குதல் நடத்த முயன்றபோது வெடிவிபத்து ஏற்பட்டு 28.06.1995 அன்று வீரச்சாவடைந்தான் என்ற கொடிய செய்தி இடியென வந்தது. அவனை அறிந்தவர்களுக்கு இடிவிழுந்தது போலிருந்தது. இனிக் கில்மன் என்றொருவன் இல்லை…. அந்த வெடிமருந்து பொய்த்துப்போயிருந்தால்….. எவ்வளவு நன்றாக இருக்கும்!…. மனம் நப்பாசையில் துடித்தது. வெளியீடு :நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டு நூல் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/139224
  15. நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.! On Jun 26, 2020 கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை 10.2000 விடுதலைப் போர்களத்திற் புலிகள் இயக்கம் தீக்குளித்த நாட்களுள் அன்றைய நாளும் ஒன்று. ஆனையிறவை முற்றுகையிட்டிருந்த புலிகளின் இத்தாவிற் போர்க்களம் அது. அமைதியாகவே விடிந்திருந்த அந்தப் போர்க்களத்தைச் சிறிது நேரத்திலேயே பெரும் எரிமலைபோல் வெடிக்கச் செய்தான் எதிரி. புலிகளை மட்டுமல்ல, தமிழனின் வீரம்பேசி எழுந்துநின்ற அந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்தையே பூமியிலிருந்து உடைத்தெறிந்துவிடப்போவதுபோல் எறிகணைகளை ஆயிரமாயிரமென இடைவிடாது துப்பின எதிரியின் பீரங்கி வாய்கள். எம் தாய்மண்ணை ஏறி மிதித்த ராங்கிகள் உள்ளிட்ட கவச வாகனங்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு எம் வீரர்களை மூன்று திசைகளாலும் சூழ்ந்துகொண்டு களமிறங்கின. 30,000 எதிரிகள் நடுவே நிற்கும் நூற்றுக்கணக்கிலான புலிவீரர்களை மட்டுமே அவை எதிர்கொண்டன. ஆயினும், எதிரியை முறியடித்தேயாக வேண்டிய நிலை. ஆனையிறவை வீழ்த்துவதற்கான அடுத்தகட்டப் படைநகர்த்தல் அன்றைய சண்டையின் முடிவிலேயே தங்கிநின்றது. தன் போராளிகளின் மனவுறுதியை அதிகம் நம்பினார் தலைவர். போராளிகளோடு போராளியாகக் களத்தில் நின்று சமரை வழிநடத்தினார் தளபதி பிரிகேடியர் பால்ராஜ். அவருக்குத் துணையாய் களத்தின் மையத்தில் நின்றான் ராஜன். 1990 இன் முற்பகுதியில் மன்னார் மாவட்டப் போர்க்களங்களிற் சிறிய அணிகளுடன் களமிறங்கி, முப்பத்தைந்திற்கு மேற்பட்ட போர்க்களங்களில் அணிகளை வழிநடத்தி, பெரும் போர்வீரனாய் உருவெடுத்து நின்ற எங்கள் தளபதி ராஜனின் களவாழ்வின் அத்தியாகத்தைப் புகழ்பூத்த இத்தாவிற் (கண்டி வீதி) போர்க்களத்திலிருந்து தொடங்குவதுதான் பொருத்தமானது. நண்பகலைத் கடந்துவிட்ட நேரம். களத்தின் மேற்கு முனையில் யாழ்ப்பாணப் பக்கமாகக் கண்டிவீதியை மூடியிருந்த காவலரண்களிற் கணிசமானவை எதிரியிடம் வீழ்ந்துவிட்டன. “றோமியோ, றோமியோ” என ராஜனின் ‘சங்கேத’ப் பெயரை அழைத்த அலைவரிசைகளே எங்கும் நிறைந்திருந்தன. ஒவ்வொன்றிற்கும் பதில்சொல்லி, தளபதி பால்ராஜின் கட்டளைகளை நிறைவேற்றி, முறியடிப்பு அணிகளை வழிநடத்திக்கொண்டிருந்தான் ராஜன். அந்தச் சிறிய களப்பகுதியில் ஏற்கனவே சூழ்ந்துவிட்ட எதிரிகள் நடுவே, கணக்கின்றி எதிரி ஏவிய எறிகணைகள், ரவைகளுக்கிடையே ஏனையவர்களுடன் இணைந்து விபரீதம் ஏதுமின்றி செய்து முடித்த அந்தப் பனி அவ்வளவு இலகுவானதன்று; எந்தவொரு போரியலாளனையும் அது வியக்கவைக்கும். அணிகள் களமிறக்கப்பட்டன. பறிகொடுத்த காவலரண்களை ஒவ்வொன்றாக எம் வீரர்கள் மீட்க, எரிமலை நடுவே நின்று அணிகளை நகர்த்தினான் ராஜன். எதிரியின் நடவடிக்கை முழுமையாக முரியடிக்கப்படவிருந்த கட்டம்; எதிரி அவமானம் அடையத் தொடங்கிய நேரம்; மீண்டும் ஆனையிறவுத் திசையிலிருந்து மூன்று முனைகளால் எம் அரண்களை உடைத்தான் எதிரி. நிலைமை சிக்கலாகியது. களநிலை மீண்டும் எதிரிக்குச் சாதகமாய் மாறிவிட்டது. நிலைமைகளைக் கணிப்பிட்ட தளபதி பிரிகேடியர் பால்ராஜ், மேற்கு முனைச் சண்டைகளை அப்படியே நிறுத்திவிட்டுக் கிழக்கு முனையில் – ஆனையிறவுப் பக்கமிருந்து முன்னேறிய எதிரியை முறியடிப்பதற்கு முடிவுசெய்தார். அதைச் செய்துமுடிக்கக் கூடியவர்களுள் ராஜனும் இருந்தான். அவனுக்கு அதற்கான கட்டளை வந்தது. சுழன்றடித்த புயலைப்போல் பல மணித்தியாலங்கள் ஓய்வற்று நீண்டு சென்றது அந்தச்சமர். நள்ளிரவை எட்டிய நீண்ட சமரின் முடிவில் எதிரியின் கிழக்குமுனை நகர்வை முழுமையாய் முறியடித்துத்தன் போராளிகளின் வீரத்தையும் போராற்றலையும் நிரூபித்தான் ராஜன். மேற்குமுனையில் எதிரி கைப்பற்றிய சில அரண்களிலிருந்து சிறிது தூரம் பின்வாங்கிப் புதிய நிலைகளை அமைப்பதற்கு முடிவுசெய்யப்பட்டது. விடிவதற்கிடையில் அது செய்துமுடிக்கப்பட்டேயாகவேண்டும். அப்பணி ராஜனிடமே விடப்பட்டது. அன்று முழுவது போராளிகளும் ராஜனும் ஓயவேயில்லை. ஆனையிறவின் தலைவிதி அவர்கள் கையிலேயே இருந்தது.மறுநாள் விடிந்ததும் ‘புலிகளால் இனிமேலும் நின்று பிடிக்க முடியாது’ என்ற அசையாத நம்பிக்கையோடு கைப்பற்றிய பகுதியிலிருந்து மீண்டும் புதிய அணிகளைக் களமிறக்கினான் எதிரி. அன்றைய சண்டையின் முடிவு, ராஜனின் ஓய்வற்ற உழைப்பிற்கும் அவனது போராற்றலுக்கும் சாட்சியமாய் முடிந்தது. பேரிழப்புடன் எதிரி முடங்கினான். பெரும் படைப்பலம் ஒன்றாற் சின்னா பின்னமாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அபாயகரமான அதேகளத்தில் வைத்தே அத்தனை வேகமாய்ச் சீர்செய்து முடிக்கப் புலிகளால் எப்படி முடிந்தது? களத்தில் நிற்கும் ராஜனை முழுமையாக அறிந்தாலே இதற்கு விடைகிடைக்கும். “அண்ணை ஒண்டும் யோசிக்காதேங்கோ, நான் எல்லாம் செற்றப்பண்ணிப் பிடிச்சுத் தருவேன்” இறுக்கமான கட்டங்களில் ராஜனிடம் இருந்துவரும் அந்த வார்த்தைகளை மூத்த தளபதிகள் எல்லோரும் ஒருங்குசேர நினைவுகூருகின்றனர். நெருக்கடியான எத்தனையோ கட்டங்களிற் புத்துணர்ச்சியளித்த அவனது இந்த வார்த்தைகள் நம் எல்லோருக்குள்ளும் இன்னமும் பசுமையாய் ஒலிக்கின்றன. வன்னிக்களத்தின் உச்சமாய் அமைந்த “ஜசிக்குறு” எதிர் நடவடிக்கைக் காலம். புலிகளை நெருக்கடிக்குள் தள்ளவந்தவர்களைப் புலிகள் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் விந்தையை உலகம் வியப்புடன் பார்த்திருந்தது. களத்தில் எதிரி நினைப்பதை அடையமுடியாத படி தடுத்து நாம் நினைத்தபடி எதிரியை ஆட்டுவித்த நுட்பமான போரரங்கைத் தலைவர் நெறிப்படுத்திக் கொன்றுந்தார். களத்தில் நின்ற போராளி ஒவ்வொருவரது கைகளிலும் அன்று எம் தேசத்தின் வாழ்விருந்தது. எதிரிதான் நினைத்ததை அடைந்துவிடும் எந்தவொரு கட்டமும் போரரங்கில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவந்துவிடும் அத்தகைய களத்தில் ராஜன் சந்தித்த சண்டைகள் பல. அதுவும் வன்னியின் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக இரணைமடுவினூடான பாதிமட்டுமே இருந்தது. அதை இராணுவம் கைப்பற்றுவது சண்டையிற் பாரிய திருப்பங்களை ஏற்படுத்தும். ஒருநாள் எதிரிக்குச் சாதகமாய் மாறியிருந்தது களநிலை. அதைத் தலைகீழாய் மாறிவிட்ட சண்டையில் ராஜன் என்ற புசல் சுழன்றடித்த விதம் இப்போதும் அவனை வழிநடத்தியவர்களின் கண்களில் நிற்கிறது. “அன்று 1998 ஆனி 04ம் திகதி. கிளிநொச்சி முனையில் எதிரி பெரும் படையெடுப்பைச் செய்தான். எமது பாதுகாப்பு நிலைகளை உடைத்து எதிரி வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் எமது பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். பல மணித்தியாலங்களாகச் சண்டை தொடர்ந்தது. எதிரிதன் இலக்கை (இரணைமடுவை நோக்கியது) ஏறத்தாழ அடைந்துவிட்டக்கூடியதாகவே காலநிலை இருந்தது. எப்படியாயினும், அன்றைய நடவடிக்கையை முறியடிப்பதே எமது இறுதி முடிவு. முன்னணியில் நின்ற அணிகள் கணிசமான இழப்பைச் சந்தித்திருந்தன. இந்நிலையில் அந்த முறியடிப்பை எப்படிச் செய்து முடிப்பது? பல மைல்களுக்கப்பால் நிலைகொண்டிருந்த ‘றோமியோ’ வின் அணியைத்தான் நான் அழைத்தேன். எதிரி உறுதியாய் நிலையெடுக்கமுன் ‘றோமியோ’ வின் அணியைச் சண்டைமுனைக்கு வேகமாய் நகர்த்துவது கடினமானது. அவனுக்கு நான் கட்டளையிட்டபோது அவனிடமிருந்துவந்த நம்பிக்கையும் துடிப்பும் நிறைந்த பதில் எனக்குத் தெம்பூட்டியது. எவரும் நினைத்துப்பார்க்காத வேகத்தில், பல மைல்கள் ஓட்டத்தில் எதிரியின் எறிகணைகளைக் கடந்து சண்டைமுனையில் தன் அணியுடன் வந்தவுடனேயே அவன் முறியடிப்புச் சமரைத் தொடங்கவேண்டியிருந்தது. கடைசிவரை இறுக்கமாகவே தொடர்ந்தது சண்டை. அப்போது ‘அண்ணை நான் விடமாட்டன் பிடிச்சுத்தருவன்’ என்ற அவனது நம்பிக்கை தரும் குரலையே நான் கேட்டேன். சோர்ந்து போகாது தன் அணியை வழிநடத்திய றோமியோவின் விடாமுயற்சி இறுதியில் எதிரியை ஆட்டிவைத்தது. அன்றுதான் றோமியோவிற்குள் இருந்த அத்தனை பெரிய ஆற்றல்களை நான் முழுமையாக இனங்கண்டுகொண்டேன். அன்றைய சண்டையில் றோமியோவும் அவனது வீரர்களும் வெளிப்படுத்திய அபாரமான வீரமும் தீரமிக்க தாக்குதலும் என்றைக்குமே எம் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டியவை” என அன்றைய நினைவுகளை ராஜனின் சாவின்பின் நினைவு கூர்ந்தார் தளபதி பிரிகேடியர் தீபன். அன்றைய வெற்றியைத் தமிழினம் பெருமையுடன் கொண்டாடியது. எதிரிக்கோ தன் வெற்றிச் செய்திக்குப் பதிலாகப் பேரிழப்பின் கணக்குகளை மட்டுந்தான் தன் எஜமானர்களுக்கு அனுப்பமுடிந்தது. இந்த வெற்றியின் பின்னால் எவருக்கும் வெளித்தெரியாது ராஜன் இருந்தான். இவையெல்லாம், ‘ஓயாத அலைகள் – 02′ இன் பின்னாற் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியாய் அவனை உயர்த்தின. வன்னிக்களத்திற் பெரும்புயலின் நடுவே நின்று எம் தமிழீழத் தாயின் வாழ்வை அவள் புதல்வர்களால் எப்படிக் காக்க முடிந்தது? நிச்சயமாக உயிர் அர்ப்பணிப்புக்களால் மட்டுமே அது நிகழவில்லை. உயிரையே வெறுக்கவைக்கும் அந்தக் கடினமான காலங்களில் உயிர் வாழ்ந்து அந்த உயிரை வைத்தே எம் வாழ்நாளின் இறுதி மணித்துளிகளிலும் உழைத்தார்கள் எம் மாவீரர்கள். அவர்களின் உன்னதமான வாழ்வின் அந்த மணித்துளிகளில்தான் அந்த இரகசியத்தைத் தேசமுடியும். இந்தக் களத்தில் ஒரு ‘செக்கன்’ அணித்தலைவனாய் இருந்து ஒரு படையணியின் துணைத் தளபதியாக உயர்ந்த ராஜன் ஒரு பொறுப்பாளன் என்ற வகையில் எவ்வளவு சுமைகளைச் சுமந்திருப்பான்! தன் உயிரைவைத்து இருப்பையே உருக்க அவன் உழைத்த உழைப்பின் மணித்துளிகளின் நீட்சி எத்தனை பெரியது! அவனது வாழ்வின் நீண்ட பக்கங்களை உணர்வுகுலையாது பக்குவமாய்ச் சொல்லிவிடத்தான் முடியுமா? அவை ‘ஓயாத அலைகள் -03′ இற்கு முற்பட்ட நாட்கள். வன்னிக்களத்தில் ஒரு வருடமாகப் புலிகளின் மௌனத்தின் இரகசியம் புரியாது எல்லோரும் திணறிக்கொண்டிருந்தனர். “முதலிற் பாதுகாப்புப் போர்முறையில் நிறைய அனுபவங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் போர்த்திறனை எதிரிக்குப் புரியவையுங்கள். அடுத்த கட்டத்தை நான் பிறகு சொல்கிறேன்” என்று தலைவர் அவர்கள் கூறியபோது ஓர் இளநிலைத் தளபதியாய் நின்ற ராஜன் தன் ஆளுமையையும் வீரத்தையும் மெருகேற்றவேண்டியிருந்தது. ஏனைய தளபதிகளுடன் சேர்ந்து தன் வீரர்களின் சண்டைத்திறனை வளர்ப்பதற்காக அவன் உழைக்கவேண்டியிருந்தது. ‘ஓயாத அலைகள் -03′ இன் முழுமைப்படுத்தப்பட்ட அத்தியாயத்தில் ராஜன் தனது அழியாத தடயங்களைப் பதித்தான். அதுதான் அவனைப் போரியலில் மேலும் வளர்த்து விட்டது. அதுதான் ராஜனை எமது இயக்கத்திற்கு அப்பால் வெளியே அறிமுகமாக்கியது. அதிலும் சில இறுக்கமான கட்டங்களில் ராஜன் ஆற்றிய பணிகள் அவனை எம் வரலாற்றில் என்றைக்குமே வாழவைக்கும் வலிமை வாய்ந்தவை. ஒட்டுசுட்டான். ‘ஓயாத அலைகள் – 03′ இன் வாசற்படி அதுதான். எப்போது எம் வாழ்வை சிங்களத்திடம் தொலைத்துவிடப் போகிறோமோ என வன்னி மக்கள் யுறும் அளவிற்கு எதிரி களச்சூழலை மாற்றியிருந்த காலம் அது. எங்கே, எம் போராட்டம் மீளமுடியாத நெருக்கடிக்குள் போய்விடபபோகின்றதோவென எம் அனுதாபிகள் எல்லாம் ஏங்கிக்கொண்டிருன்தனர். “இயக்கம் சும்மா விட்டிட்டு இருக்காது” என்ற உறுதியான நம்பிக்கையும் எம்மக்களிடம் வேரூன்றியிருந்தது. எல்லாமே அந்த வாசற்படிக்கான முதலுடைப்பின் வெற்றியில்த்தான் தங்கியிருந்தன. அதற்காக ஆராய்ந்து, நிதானித்துத் திட்டமிட்ட தலைவர் பொருத்தமான காலத்தைத் தெரிவுசெய்து அதன் பணிகளைப் போராளிகளிடம் ஒப்படைத்திருந்தார். அப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்தவன் லெப்.கேணல் ராகவன். “உன்னை நம்பித்தான் ஓட்டுசுட்டானுக்குள்ள இறங்கிறன்” என்று கூறித் தலைவர் அவர்கள் அவனிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தபோது, தலைவர் சொன்னதையே நினைத்துத் திரிந்த அந்தத் தளபதியின் அருகிருந்து “பிரச்சினை இல்லை அண்ணை அதெல்லாம் சுகமா செய்து முடிச்சுப்போடலாம்” என்று நம்பிக்கை வார்த்தை கூறுவான் எங்கள் ராஜன். சண்டைக்கு முந்தி ய நிமிடங்கள்; மிகப்பெரிய திட்டம் என்பதால் எல்லோருள்ளும் படபடப்பு, இறுதி நிமிடங்கள் நெருங்க நெருங்க தவறுகள் எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற தவிப்பு. எல்லாம் நிதானத்துடன் நகர்ந்தன. மற்றைய முனையில் திட்டமிட்டபடியே சண்டை தொடங்கப்பட இந்த முனையில் இன்னும் சண்டை தொடங்காததால் பரபரப்பானது களம். நிலைமையைச் சீர்செய்ய முன்சென்ற தளபதி ராகவன் குண்டுபட்டு வீழ்ந்துவிட்டான். அணிகளை ஓரளவு சீற்படுத்தியபடி எதிரி அரண்களுக்குள் மூர்க்கமாய் நுழைந்த லெப்.கேணல் நியூட்டன் ஓரிரு காவலரண்களை வீழ்த்தி நிலைமையை மாற்ற முயலவே அடுத்த இடி நியூட்டனும் குண்டுபட்டு வீழ்ந்தான். குறுகிற நேரத்தில் அனுபவம் வாய்ந்த களமுதல்வர்கள் இருவர் வீழ்ந்துவிட்டதால் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு முன் கேள்விக்குறிகள் எழுந்தன. ஒட்டுசுட்டான்…… கரிப்பட்ட முறிப்பு…. மாங்குளம்……. கனகராயன்குளம்….. புளியங்குளம்…. எனச் செய்துமுடிக்கவேண்டிய பாரிய படைநகர்த்தல்கள் மனக்கண்முன் நின்றன. பதிலாய் எழுந்து அணிகளை ஒழுங்கமைத்து வழிநடத்தத் தொடங்கினான் ராஜன். “ஒன்றும் யோசிக்காதேங்கோ நான் பிடிச்சுத்தருவன்” எப்போதும் ஒலிக்கும் அந்த வார்த்தைகள் தான் இப்போதும் வேண்டும். ஆனால், இப்படியான பெரிய பொறுப்புக்களை இதுவரை சுமந்திராத ராஜனால் அதைச் செய்துமுடிக்க முடியுமா என்ற ஐயம் எல்லோருள்ளும் இருக்கவே செய்தது. அவ்விடத்தில் ராஜனைத்தவிர வேறு எவரும் இல்லை. இறுதியில் எல்லோர் புருவங்களும் உயரும்படி படைநகர்த்தினான் ராஜன். வெற்றிச் செய்திகள் ஒவ்வொன்றாய் எம்மக்களைக் குதூகலிக்க வைக்க, எதிரிகள் தலையில் அவை பேரிடியாய் இறங்க, ராஜன் தலைவரின் திட்டங்களைச் செயற்படுத்தினான். அந்தக் களந்தான் ராஜனின் ஆற்றலைத் தலைவருக்கு இனங்காட்டியது. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாய் அவனை உயர்த்தியது. ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் மூன்று. பரந்தன் ஆக்கிரமிப்புத்தளம் புலிகளின் வரவை நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்தது. ஒன்றன்பின் ஒன்றாய் இறுக்கமாக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்துள் அது இருந்தது. ஆக்கிரமிப்பாளர்களின் போர்மூலோபாயத்தின் முது கெலும்பாய் ஆனையிறவு இருந்ததென்றால் ஆனையிறவின் பாதுகாப்பின் முதுகெலும்பாய் பரந்தனும் இருந்ததெனலாம். அத்தகையதொரு களத்தில் எதிரிக்குச் சவால் விடுவதாய்ப் பகற்பொழுதில் ஒரு சமருக்கு ஏற்பாடாயிருந்தது. மூன்று முனைகளில் திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டத்திற்கு ஒரு சமருக்கு ஏற்பாடாகியிருந்தது. மூன்று முனைகளில் திட்டமிடப்பட்ட தாக்குதல் திட்டத்திற்கு ஒரு முனையின் தளபதியாய் ராஜன் நியமிக்கப்பட்டான். பரந்தனின் கிழக்குப்புறக் காவலரண் வரிசையைக் கைப்பற்றி எதிரியின் பாதுகாப்பு வியூகங்களைச் செயலிழக்கவைக்கும் பணி அவனுடையது. திட்டத்தின்படி எல்லாவற்றையும் அவன் திறம்படச் செய்துமுடித்தான். எதிர்பார்க்கப்பட்டதைவிட ராஜன் அதிகமாகவே அங்கு சாதித்தான். அங்கு ராஜனின் இடைவிடாத உழைப்பும் தந்திரமான சில செயற்பாடுகளுந்தான் எதிரியை நிலைகுலைய வைத்தன. போராளிகளை அரவணைப்பதிலும் வர்களின் தேவைகளைக் கவனிப்பதிலும் ராஜன் அதீத அக்கறை செலுத்துபவன். அவர்களின் அன்னையாய், தந்தையாய்….. என எல்லாமாயும் அவன் இருப்பான். சண்டைக்களம் பரபரப்புடன் இருக்க, அடுத்த கட்ட ஏற்பாடுகளில் எல்லோரும் தீவிரமாய் ஈடுபட்டிருக்க, ஓய்வற்ற வேலைகளின் நடுவேயும் களைத்திருக்கும் தன் போராளிகளுக்காகச் சோடாவும் உலருனவும் கேட்டுத் தளபதியுடன் சண்டை பிடித்துக் கொண்டிருப்பான். தொடர்சண்டைகள் நடந்துகொண்டிருக்க ராஜனின் கட்டளை அரணிற் போராளிகளுக்கு அனுப்புவதற்காக ஏதாவது கறியும் தயாராகிக்கொண்டிருக்கும். இப்படித்தான் எல்லா விடயங்களிலும் ராஜன் தன் போராளிகளைக் கவனித்தான். ராஜனின் இத்தகைய இயல்பு இருமுறை தலைவரின் முன்னாள் அவனைக் கூச்சத்தோடு தடுமாற வைத்த காட்சி இப்போதும் கண்டவர் கண்களில் முன் அழியாது தெரிகிறது. கண்டிவீதி – இத்தாவிற் போர்க்களத்திற் சண்டைகளுக்கு ஓய்வே இருக்காது. தொடர் சண்டைகளாற் சோர்ந்துபோகும் உடலைவைத்துப் போரிடுவதற்குப் போராளிகளுக்கு அதித மன உறுதி தேவைப்படும். அக்காலத்திலும் போராளிகளை உற்சாகமாய் வைத்திருந்தான் ராஜன். அங்கு நடக்கும் கடுமையான சண்டைகள் சற்றுத் தணிந்துவிட்டால் ராஜன் ஆட்டுக் கறிக்குத் தயார்பண்ணத் தொடங்கிவிடுவான். போர்க்களமும் கரிக்கலமும் ஒன்றாகவே அங்கு நடக்கும். அந்தக் களமுனையின் ஒரு பகுதியிற் கட்டாக்காலி ஆடுகள் திரிவது வழக்கம். அந்தக் களப் பகுதியில் உள்ள போராளிகளுக்கு ராஜன் வோக்கியில் அறிவிப்பான். “இஞ்ச கொஞ்சம் தணிஞ்சுபோய் இருக்கு, வகுப்பு எடுக்கலாம் போலகிடக்கு, நிண்டால் ஒரு மாஸ்ரரை அனுப்புங்கோ.” ‘மாஸ்ரர்’ என்பது ஆட்டுக்கிடாய் என்று அவர்களுக்கு மட்டும் புரியும். அது அவர்களுக்கிடையினான மொழி. மாஸ்ரர் – அதுதான் கிடாய் ஆடு. ராஜனிடம் போவார் அவனது கட்டளை போலவே ஒவ்வொரு காவலரணுக்கும் கறியும் போகும். ஒருமுறை சண்டை தனிந்திருப்பதாகவும் மாஸ்ரரை வகுப்பெடுக்க அனுப்புமாறு ராஜன் அறிவித்தபோது பதில் வந்தது, “இஞ்ச மாஸ்ரர் ஒருத்தரும் இல்ல, வகுப்ப இண்டைக்குக் கைவிடுங்கோ”. “ஒரு மாஸ்ரரும் இல்லையோ?” “மாஸ்ரர் இல்ல ரீச்சர் நிக்கிறா அனுப்பவோ” ராஜனுக்குப் புரிந்துவிட்டது. ரீச்சரெண்டு அவங்க மறியாட்டைச் சொல்லுறாங்களெண்டு. “ஒ ஒ ஒ ரீச்சரெண்டாலும் பரவாயில்லை வகுப்பெடுத்தாச் சரி” இந்த ரீச்சர்ப் பகிடி இயக்கத்திற் பரவலாக எல்லா இடமும் பரவத் தொடங்கியது. சண்டை முடிந்து அடுத்த சண்டைக்குப் புறப்பட இருந்த நேரம். போராளிகளைச் சந்திப்பதற்காகத் தலைவர் வந்திருந்தார். அவர் புறப்படும்போது “தம்பியாக்கள் இனிச்சனங்களின்ர இடங்களுக்குள்ள போகப்போறியள். அங்க சாமானுகள் எதிலும் கைவைச்சுப்போடக்கூடாது. ஆடு, மாடு, கோழிகளையுந்தான் சொல்றன்” அன்று கூறிவிட்டு அருகிலிருந்த ராஜனைப் பார்த்துப் பெரிதாகச் சிரித்தபோது கூச்சப்பட்டு அந்தரப்பட்டுச் சிரித்தான் அவன். எல்லோருக்கும் அவனைப் பார்க்கச் சிரிப்பு வந்தது. எல்லாம் முடிந்து வந்தபின்னர் அவன் சொன்னான் “நாங்கள் எங்கட பிரச்சினையை மட்டும் போகிரம், பாவம் அண்ணை எவ்வளவு பிரச்சினைகளைப் பார்க்க வேணும்”. கட்டளை இடுவதிலும் ராஜனுக்கென்றொரு தனித்துவமான பாணி இருந்தது. எந்தவொரு கட்டத்திலும் பதர்ரமடையாத அவனது கட்டளைகளிலும் அரவணைப்பு இருக்கும். அதிற் கண்டிப்பு, ஆலோசனை, நம்பிக்கை, உற்சாகம் என எல்லாமே கலந்திருக்கும். அவனது அன்பான வார்த்தைகளுக்கு இருந்த அத்தனை பெரிய ஆளுமை அவனுக்கேயுரியது. இப்படியே நீண்டு செல்லும் ராஜனின் ஆளுமையை அவனது போர் வாழ்வின் கதையை இங்கு முழுமையாய் எழுதி முடிப்பது அவ்வளவு இலகுவானதன்று. ஆனையிறவை வீழ்த்துவதற்கான இறுதிக்கட்டம். உலகப் போரியல் வரலாற்றில் முக்கிய பதிவாய்த் தலைவர் பிரபாகரன் அவர்கள் நிகழ்த்திய விந்தைமிகு படைநகர்த்தல். அந்த இத்தாவிற் போர்க்களத்தில்தான் ராஜனின் குரல் அதிகமாய் ஒலித்தது. அங்குதான் அவனது பெயர் அதிகமாகப் பேசப்பட்டது. அங்கிருந்த ஒவொரு தொலைத்தொடர்புச் சாதனமும் ‘றோமியோ’ என்ற அவனது ‘சங்கேத’ப் பெயரையே அதிகமாய் உச்சரித்தும் கேட்டும் இருக்கும். புலிகள் இயக்கம் நிகழ்த்திய அந்த வரலாற்றுச் சாதனைக் களத்தில் ராஜன் பங்கெடுத்த ஒவ்வொரு சண்டையுமே அவனை எம் வரலாற்றில் உயர்த்தியது. ஆனையிறவை வீழ்த்தும் எம் தலைவரின் போர்த்திட்டத்தின் அத்திவாரத்தை அசையாது காத்த அந்த வெற்றிகளின் பின்னால் ராஜனின் உழைப்பு மதிப்பிட முடியாதது. கண்டி வீதியூடாகப் பயணித்துப் பளையைக் கடந்து இத்தாவிலிற்குப் போகும்போது நிலமெல்லாம் கிளறியெறியப்பட்டு, மரங்களெல்லாம் குதறப்பட்டு சுடுகாடாய்க் கிடக்கும் ஒரு சிறிய நிலப்பரப்பு. அந்த வீதியிலிருந்து வலதுபுறமாய்ச் சில நூறு மிற்றர் தொலைவிலிருக்கும் அந்த உருக்குலைந்த சிறிய வளவுதான் ராஜனின் கட்டளை மையம். அதை எதிரி எறிகணைகளால் உலுப்பியெடுத்து ஒவ்வொரு தடவையும் அதற்குளிருந்துதான் ராஜன் சிரித்தபடி படைனடத்தினான். உறுதியாக, நிதானமாக முடிவெடுக்க முடியாதவாறு மனித மூளையைக் கலங்கவைக்கும்படி எதிரியால் மாற்றப்பட்டிருந்த அந்த நரகலோகத்திலிருந்தே தளபதி ராஜன் செயற்பட்டான். தன் கறுத்தமேனி கருகி மேலும் கறுப்பாய் மாற, மெலிந்த அவன் உருவம் வாடிவற்றிப்போக அந்தக் களத்தில் அவன் செய்தவை அளப்பரியவை. பங்குனி 27, இத்தாவிலுக்குள் புலிகள் புகுந்த மணித்தியாலங்களில் விடிந்துவிட்டது அன்றைய காலைப்பொழுது. புலிகளால் உறுதியாக நிலைகொண்டிருக்க முடியாது என எண்ணிய பகைவன், அவசர அவசரமாகச் சண்டையைத் தொடங்கினான். பலப்படுத்தப்படாத அரண்களிலிருந்தே எமது போராளிகள் சண்டையிட வேண்டியிருந்தது. எதிரியின் கையே களத்தில் மேலோங்கியிருந்தது. களத்தின் மையத்தில் நின்று எல்லாவற்றையும் செய்விக்க வேண்டியவர்களுள் ராஜன் முக்கியமானவன். எறிகணை மழை நடுவே அவனது பாதுகாப்பிற்கென இருந்தது சிறியதொரு தண்ணீர்த் தொட்டிதான். ராஜனின் கட்டளை அலைவரிசைகள் மூலம் அவன் இருக்கக்கூடிய இடத்தைக் கணிப்பிட்டு எறிகணைகளை எதிரி பொழிந்து கொண்டிருந்தான். அவனைக் குறிவைத்த எறிகணைகளும் ரவைகளும் தோற்றுப்போக ராஜன் வெற்றிகரமாய் எல்லாவற்றையும் செய்துமுடித்தான். மூன்று தினங்களில் மருமொரு படையெடுப்பு. அன்றும் எதிரிக்கே சாதகமாக மாறியிருந்தது களநிலை. உச்சக்கட்டச் சண்டையை நடத்திக்கொண்டிருந்தான் ராஜன். முன்னிலையில் நின்ற அணித்தலைவர்களின் தொடர்புகள் அறுந்துபோக எதிரி மூன்று திசைகளாலும் சூழத் தொடங்கினான். ராஜனின் சுமை களத்தில் அதிகரித்துக் கொண்டேபோனது. திடீரென்று ஒரு தடவை அவனது கட்டளை அரண் அதிர்ந்து குலுங்க அதன் வாசலில் வீழ்ந்து வெடித்தது எறிகணை. அதன் அதிர்வு எல்லோரையும் உலுப்பிவிடக் கந்தக நெடியும் புகையும் அரனை மூடியது. அப்போது ராஜனின் கட்டளையிடும் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. அங்கிருந்த தோழன் தன் உடையால் விசுக்கி விசுக்கிப் புகையை விளக்க முனைந்து கொண்டிருக்க நிலைகுலையாது தொடர்ந்தும் சண்டையை நடத்திக்கொண்டிருந்தான் ராஜன். அன்றைய வெற்றியால் ஆனந்தமடைந்த மண்மாதா தன் புதல்வன் ராஜனின் போராற்றலை எண்ணிப் பெருமிதமடைந்திருப்பாள். சித்திரை 02ம் நாள். இருநாள் இடைவெளிக்குள்ளேயே அடுத்த பாரிய படையெடுப்பு. ‘வெலிகதர’ எனப் பெயரிட்டிருந்தான் எதிரி. இம்முறை ராஜனின் பகுதியை விடுவித்து வேறொரு பகுதியிற் சண்டை மூண்டது. உள்ளிருந்த எமது அணிகளை முழுமையாக முற்றுகையிட்டு “புலிகளின் தளபதி பால்ராஜும் அவர் தோழர்களும் உயிருடன் பிடிபடப்போகிறார்களா? அல்லது அழியப்போகிறார்களா” எனச் சிங்களத் தலைமை ஆவலுடன் பார்த்திருக்குமலவிற்குக் கடுமையான சண்டையது. முறியடிப்பில் உறுதிகொண்டு தளபதி பால்ராஜ் நடத்திய புலிகளின் வீரம் செறிந்த சண்டையது. மறுமுனையில் நின்ற ராஜன் தளபதி பால்ராஜால் சண்டை முனைக்கு அழைக்கப்பட்டான். அந்தக் களமெங்கும் எதிரி அமைத்த எறிகணை வேலிகளைக் கடந்து, மேஜர் றோயின் அணியுடன் ஓடோடிச்சென்று, ஏனையவர்களுடன் இணைந்து அன்றைய புகழ்பூத்த முறியடிப்பு செய்துமுடித்தான் எங்கள் ராஜன். அன்றும் தமிழர் சேனை வெற்றிக்கொடி நாட்டியது. ”ஓயாத அலைகள் – 03″ இல் ஆனையிறவிற்கான சண்டைகள் முடிந்து இத்தாவிலில் நின்ற ராஜனுடன் கைகுலுக்கச் சென்ற அவன் தோழர்கள் கண்டது பழைய ராஜனையல்ல. ஆனையிறவின் வெற்றிக்காக எம் போராளிகள் வாழ்ந்த கடினவாழ்வைப் பிரதிபலித்த புதிய ராஜனைத்தான். வாடி வதங்கிய அந்த முகத்திற்கூட எவரையும் வசீகரிக்கும் அவனுக்கே உரிய கவர்ச்சிமட்டும் அப்படியே இருந்தது. நாங்கள் எப்போதும் அவனுடன் கூடவேகாணும் அந்த அழகான சிரிப்புங்கூட அப்படியேதான் இருந்தது. காய்ந்து வறண்ட அவனின் தொண்டையிலிருந்து வந்த கரகரத்த குரலிலும் எப்போதும் இருக்கும் குழைவுமட்டும் மாறாமலிருந்தது. பெரும் சாதனையைச் செய்துமுடித்ததும் தளம் வந்தவன் தலைவரைச் சந்தித்தான். தன் வீரர்கள் சாதித்தவற்றை அவருக்குத் தெரியப்படுத்தினான். தலைவருடன் தன் போராளிகளைச் சந்திக்கவைத்தான். ராஜனை மீண்டும் களம் அழைத்தது. அது ‘ஓயாத அலைகள் – 03′ இன் இறுதிக்கட்டம். தளபதி பிரிகேடியர் சொர்ணத்திற்க்குத் துணையாய் நின்ற தளபதிகளில் ஒருவனாகத் தன்பணிகளைத் தனக்கேயுரிய இயல்பான திறமைகள் மூலம் செய்துமுடித்தான். அங்கு சண்டைகள் முடிந்ததும் அடுத்தகட்டச் சண்டைகளுக்கான பயிற்சிக்காக ராஜனும் அவனது போராளிகளும் தலைவரால் அழைக்கப்பட்டனர். ராஜனின் சண்டைப் பட்டியல் நீண்டுகொண்டே போனது. உயிர்ப்பசிகொண்ட யுத்தக் களங்களிற்குள்ளேதான் எங்கள் ராஜன் நிதமும் வாழ்ந்தான். ஆயினுங்கூட அந்தக் களங்களில் ராஜனுக்கென்றொரு சாவு இருக்குமென நாங்கள் நம்பவில்லை. அந்தளவிற்கு அவனது துணிவிலும் தந்திரத்திலும் துடிதுடிப்பிலும் நாங்கள் அத்தனை பெரிய நம்பிக்கை கொண்டிருந்தோம். ராஜனால் உயிருடன் திரும்பமுடியுமா? என நாங்கள் ஐயுற்ற எத்தனையோ களங்களிலிருந்து அவன் மீண்டுவந்துள்ளான். 1993 இல் புலோப்பளைச் சமரிலும் பின்னர் ‘ஜெயசிக்குறு’ எதிர் நடவடிக்கைகளிலுங்கூட அவனுக்கு நேராய் வந்த ரவைகளால் அவனது கால்களிலும் இடுப்பிலுமாக வெறும் தசைகளையும் எலும்புகளையும் மட்டுமே துளைத்துச் செல்ல முடிந்தது. 1997 ஆனையிறவு, பரந்தன் சமரின்போது கூட ராஜனுக்கு நேராய் வந்த ரவியால் அவனது மண்டையை வெறுமனே துளைத்துச் செல்லத்தான் முடிந்தது. நிச்சயமாக இவற்றிலெல்லாம் ராஜன் உயிர்தப்பியதும் அவனிடமிருந்த நினிவாலும் நம்பிகையாலுந்தான். எங்கள் தளபதி இன்னும் களங்கள் காணுவான். வளர்ந்து, முதிர்ந்து அனுபவமிக்க தளபதியாக அவன் எம் தலைவரின் சுமைகளை இன்னும் இன்னும் பகிர்ந்து கொள்வான் என நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனி மாதம் 26ம் திகதி, மறுநாள் தன் வீரர்களுடன் களமுனை ஒன்றிற்குப் புறப்பட இருப்பதாய் ராஜன் சொல்லியிருந்தான். அதற்கு முன் தன் தோழர்களோடு குளிப்பதற்காக இரணைமடு சென்றான். திடீரென அன்று மாலை எல்லோரையும் விரிக்க வைத்த அந்தச் செய்தி பரவியது. “ராஜனுக்குச் சாவு…” அந்தப் பெருவீரனின் சாவு மட்டும் வெறுமையாய் நின்றது. சாவுக்குள் வாழ்ந்தவனிடம் தோற்றுப்போன சாவு தண்ணீருக்குள் ஒழிந்துகொண்டது. தமிழீழப் போர்க்களங்களில் அதிகம் பேசப்பட்ட எங்கள் வீரனுக்குச் சாவில் மட்டும் அங்கு இடமில்லாமற் போனது. “றோமியோ சண்டையிற் செத்திருந்தாலும் மனம் ஆறுதலாக இருந்திருக்கும்” அவனை அறிந்த போராளிகள் எல்லோரும் அதையேதான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில், அதைச் செரித்துக்கொள்ள முடியாமலிருக்கிறது. நினைவுப்பகிர்வு:- அ.பார்த்தீபன். வெளியீடு :நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டு நூல் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/139043
  16. வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம்கலி On Jun 27, 2020 விடுதலைக்கான வீரமிகு போராட்டம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் போராடி, இழந்த தமது தாய் நாட்டை மீட்டெடுத்து தம்மைத்தாமே ஆட்சி செய்த வெற்றிமிகு போராட்டம் ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் ஒன்றைத்தவிர வேறு எவ்விதமான ஆசையும் எமது மாவீரர்களுக்கு இருந்ததில்லை. இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் நாம் படிக்க வேண்டும் அதனுடாக விடுதலைப் பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும். என்பதுதான் பற்றோடு வாழ்கின்ற அனைத்து தமிழர்களின் பெரு விருப்பாகும். வித்தாக வீழ்ந்த கிரான் மண்ணின் வீரமறவன் கப்டன் ஜிம்கலி. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் முதல் கப்டன் ஜிம்கலி, பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது, வீழ்ந்தது கிரான் என்கின்ற தமிழர் வரலாற்றின் வீரமிகு ஊராகும். நூற்றுக்கணக்கான மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஈன்றெடுத்த கிரான், விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு வரலாற்றுப் பதிவுகள் சிலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நெஞ்சினில் விடுதலை நெருப்பை ஏந்தி, காலம் எமக்குத் தந்த வரலாற்றுத் தேசியத் தலைவன் ஆணையில் களமாடி, சிங்களத்தை சிதறடித்த நூற்றுக்கணக்கான மாவீரர்களின் நினைவுகள் எமது நெஞ்சினில் அழியாது நிறைந்துள்ளது. இவற்றில் ஒருவரான கப்டன். ஜிம்கலி வரலாற்றில் மட்டக்களப்பு கல்குடாத் தொகுதி கிரானில் முன்னிலைப்படுத்தப்பட்ட போராளியாக தென்படுகின்றார். கிரான் தமிழன்னை இம் மாவீரர்களைப் பெற்றதிலிருந்து உயர்ந்த இடத்தில் வரலாற்றில் நிமிர்ந்து நிற்கின்றாள். இதனை இம் மாவீரர்கள் சார்பாக உறுதியாகக் குறிப்பிடமுடியும். தளம்பாது, தடம்புரளாது, நீண்ட விடுதலைப் போரட்டத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் அழியாத பதிவையும் விடுதலை வரலாறு கொண்டுள்ளது. கப்டன். ஜிம்கலி அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக எம் கண்முன்னே, காற்றோடு காற்றாக கலந்து நிற்கின்றார்கள். இவர்களை எம்மால் மறக்க முடியாது, மறப்பதும் சரியான அர்த்தமாகாது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது பாசறையில் படைத்துறைப் பயிற்சி பெற்றுக்கொண்ட கப்டன். ஜிம்கலி அவர்களின் சொந்த ஊரான கிரானில் விடுதலைப் போராட்டத்திற்கு முந்திய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்ற வரிசையிலும் ஜிம்கலி இருந்தார். ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழ்மக்கள் திரண்டெழுந்த போது, பேரூந்து எரிப்பு, சிங்கள எழுத்துக்கள் அழிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றத்திற்கு எதிரான போக்கு என்பவற்றில் ஜிம்கலியின் பங்கு அதிகமாகவே இருந்தது. வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்கின்ற போது எமது மண்ணிலிருந்து கிளர்தெழுந்த தமிழ் இளைஞர் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நாம் அறிந்து கொள்ளவேண்டிய பல சம்பவங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. எந்த சுயநலமுமில்லாது தமிழ்மக்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என்று எழுந்தவர்கள் தான் இந்த வீரமறவர்கள், நாம் வசதியோடு, வளமாக வாழ நினைக்கின்றோம் ஆனால் இவர்கள் வீரத்தோடும் தன்மானத்தோடும், தங்களை தாங்களே ஆட்சி செய்து தமிழ்மக்கள் வாழவேண்டும் என்று விரும்பினார்கள் அதனால் தங்களை தமது மண்ணுக்கு உரமாக்கினார்கள். மட்டக்களப்பு – திருமலை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கின்ற கிரான் என்ற ஊர் தமிழர்களின் போராட்டத்தில் முக்கியத்துவம் பெற்றது. கிரானிலிருந்து மேற்கு திசையாக பயணிக்கின்ற போது எமது பார்வையில் படுகின்ற ஒவ்வொரு ஊரும், விடுதலைப் போராட்டத்தில் முக்கிய, அழியாத நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. புலிபாய்ந்தகல், கோராவெளி, பொண்டுகள் சேனை, குடும்பிமலை, பள்ளத்துச்சேனை,தரவை ,வடமுனை, கள்ளிச்சை மியான்கல்குளம், கூளாவடி. வாகனேரி என இன்னும் பல வயல்சார்ந்த ஊர்கள் தமிழ்மக்களுக்கு படியளக்கும் பசுமை நிறைந்த இடமாகவும் காணப்படுகின்றன. தமிழீழத்தின் எல்லையை நோக்கிச் செல்கின்ற ஒவ்வொரு இடமும் தமிழர்களின் பெயர் சொல்லும் தமிழர்களின் வாழ்வாதார இடமாகவும் அமைந்திருக்கின்றன. கொஞ்சம் குடியிருப்புகள் கொஞ்சம் வயல்நிலங்கள், கொஞ்சம் காடுகள் என கலந்திருக்கின்ற இவ்வூர்கள் அனைத்தும் எமது விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் வாழ் விடங்களாகவும் மாறியிருந்தன. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு என்ற அடிப்படையிலும் எம்மால் காணக்கூடியதாகவும் இருந்தது. மேற்கு புறத்தின் எல்லையில் அகல வாய் திறந்திருந்த சிங்கள ஆக்கிரமிப்பையும் வடமுனையில் தடுத்து நிறுத்தியதாகவும் விடுதலைப் புலிகளின் போர் அமைந்திருந்தது. ஒவ்வொரு குடியேற்றத்திற்கும் ஒவ்வொரு காரணம் வைத்திருக்கும் சிங்கள அரசு மேற்கூறப்பட்ட தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த வைத்திருந்த காரணம் மகாவலி c வலயமாகும். போராளிகளின் வாழ்விடங்களாக மாறிய இவ்விடங்களில் வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் விடுதலைப் புலிகள் இருந்தனர். வீரம் செறிந்த விடுதலைப் போரை சந்தித்த இடங்களாகவும் இவை விளங்கின. புலிபாய்ந்தகல், இவ்வூர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் முதல் வரலாற்றுப்பதிவு ஒன்றைக் கொண்டதால் சிறப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் இரகசியமான முறையில் இயங்க ஆரம்பித்த வேளையில் பண்ணைமுறையிலான மறைவிடங்களை தமிழீழ மெங்கும் ஆங்காங்கே வைத்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 1978 ம் ஆண்டு காலப்பகுதியில் முதலாவது பண்ணை இயங்கியது, புலிபாய்ந்தகல் ஊரில்தான் என்பதையும், இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். ஒரு சில தமிழ் இளைஞர்கள் தங்கியிருந்த இப் பண்ணையின் மூலமாக முதல் அத்தியாயத்தை விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வூர் பெற்றிருக்கிறது. அதற்குப் பின்பு பல போர் நிகழ்வுகளையும், மற்றும் வழிமறிப்புத் தாக்குதல்களையும், பரந்து விரிந்த இடத்தில் வாழ்ந்த போராளிகளின் எல்லைப்பாதுகாப்பு அரண் ஊராகவும், சிங்கள ஆக்கிரமிப்பு படையினர் ஒவ்வொருவரும் அறிந்து கொண்ட இடமாகவும் இது விளங்கியது. கப்டன்.ஜிம்கலி, பயிற்சியை முடித்தவுடன் தமிழ்நாடு மாநிலத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது பயிற்சி முகாமில் உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றினார். அதன் பிறகு தாய் மண் திரும்பிய வேளையில் யாழ்ப்பாண ஸ்ரீலங்கா காவல் நிலைய அழிப்பு தாக்குதலிலும் ஈடுபட்டார். மட்டக்களப்பு நோக்கி வருகிற வழியில்வன்னிபெருநிலப்பரப்பில் பல நடவடிக்கைகளில் போராளிகளுடன் இணைந்து செயலாற்றினார். முல்லைத்தீவின் கொக்கிளாய் என்ற இடத்தில் அமைந்திருந்த சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதலில் ஈடுபட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதல் சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதல் என்ற வரலாற்று பதிவிலும் இடம்பெற்றார். இத் தாக்குதலில் கிரான் ஊரின் முதல் மாவீரர் கென்னடி என்பவரும் வீரச்சாவடைந்தார். விடுதலைப் புலிகளின் இந்தியாவின் இரண்டாவது பாசறையில் பயிற்சி பெற்ற கென்னடி கிரான் ஊரில் விடுதலையை நேசித்த குடும்பங்களில் ஒன்றிலிருந்து புறப்பட்டவர். திருகோணாமலை மாவட்டத்தில் குச்சவெளி என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருந்த சிங்களக்காவல் நிலையம் மீதான தாக் குதலிலும் கப்டன் ஜிம்கலி பங்கேற்றுக் கொண்டார். 1985 ம் ஆண்டு மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தளபதி அருணா தங்கியிருந்த ஈரளக்குளம் மதுரையடி முகாமில் கப்டன். ஜிம்கலி அவர்களும் இணைந்திருந்தார். இம் முகாமில் வைத்து திட்டமிடப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல் நிலையத்தாக்குதலில் கப்டன். ஜிம்கலி அவர்களின் பங்கு அளப்பெரியதாக இருந்தது. 2 . 9 . 1985 ம் ஆண்டு அன்று இத் தாக்குதல் நடந்த வேளையில் சிங்கள அதிரடிப்படையினர், கல்லடி, கும்புறுமுலை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர். இத் தாக்குதல் நடக்கின்றபோது ஏறாவூர் சிங்கள காவல் துறையினருக்கு உதவிக்கு வரவிருக்கும் கும்புறுமூலையில் நிலை கொண்டிருந்த சிங்கள அதிரடிப்படையினரை தடுத்துத் தாக்கும்பணி கப்டன். ஜிம்கலி தலைமையிலான குழுவினருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இக் குழுவில் மட்டு – அம்பாறை முதல் பாசறையில் பயிற்சி பெற்ற மட்- இருதயபுரத்தைச் சேர்ந்த கப்டன்.சபேசன்,கிரான் ஊரைச் சேர்ந்த கங்கா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கப்டன். ஜிம்கலி குழுவினரின் தீவிர தாக்குதலால் நிலைகுலைந்த சிங்கள அதிரடிப்படையினர் முகாமுக்கு திரும்பி ஓடினார்கள். அன்றிலிருந்து கப்டன். ஜிம்கலி கும்புறுமூலை அதிரடிப் படையினருக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்துகின்ற ஒரு வீரனாகக் காணப்பட்டார். கிரான் ஊரிலிருந்து விடுதலைக்காக திசைமாறிய இளைஞர்கள் எல்லாம் சரியான திசையில் கப்டன் ஜிம்கலி அவர்களின் பின்னால் அணிதிரண்டனர். இவர்களுடன் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிருந்தும் இணைந்துகொண்ட இளைஞர்களையும் வைத்து மாவட்டத்தின் இரண்டாவது பயிற்சிப் பாசறையை பள்ளத்துச்சேனை என்ற பழந்தமிழ் வயல்சார்ந்த ஊரில் தனது மேற்பார்வையில் திறம்பட நடத்தினார். இப் பாசறையில் பயிற்சி பெற்று, பூநகரி சிங்கள இராணுவ படைத்தளம் மீதான தாக்குதலில் 16 . 11 . 1993 . அன்று வீரச்சாவடைந்த மேஜர். ரூபன் பல களங்களை கண்ட வீரமான ஓர் போராளியாகும். மட்டக்களப்பு வடக்கு பொறுப்பாளராகப் பணியாற்றி பலசாதனைகளை விடுதலைக்காக நிகழ்த்திக்காட்டியவர் என்பதையும் இச் சந்தர்பத்தில் நினைவு கூருகின்றோம். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தளபதியாக லெப். கேணல் குமரப்பா பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடந்து, வரலாற்று சிறப்புமிக்க கோயிலைக் கொண்டிருந்த கோராவெளி ஊரில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தங்குமிட முகாமுக்குப் பொறுப்பாளராக கப்டன். ஜிம்கலி நியமிக்கப்பட்டிருந்தார். கப்டன்.ஜிம்கலி அவர்களின் திட்டமிடலிலும், தலைமையிலும் வாகனேரி என்ற ஊரில் 1986 ம் ஆண்டு ஒரு கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டும், பல இராணுவத்தினர் காயமடைந்தனர். 27 . 06 1986 அன்று அதிகாலையில் கப்டன் .ஜிம்கலி முகாம் சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டது. நீண்ட காலமாக வேவுபார்க்கப்பட்டு மிகவும் நேர்த்தியாகத் திட்டமிட்டு இப் பாரிய தாக்குதலை சிங்கள இராணுவத்தினர் மேற்கொண்டிருந்ததாக பின்பு அறியப்பட்டது. காலை இரண்டு குண்டு வீச்சு விமானங்கள், உலங்குவானுர்தி என தாக்குதலுக்கு மேலதிக பாதுகாப்பைக் கொடுத்ததாக நடவடிக்கை அமைந்திருந்தது. இம் முகாமுக்கு குறிப்பட்ட தூரத்தில் தங்கியிருந்த தளபதி லெப்.கேணல் குமரப்பா கப்டன். ஜிம்கலி அவர்களுடன் தொடர்பை எடுப்பதற்கு முயன்று முடியாததால் போராளி கங்கா அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சிங்கள இராணுவத்தினரின் தாக்குதல் பற்றியதை அறிந்துகொண்டு, எல்லோரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம் எனக் கூறினார். இதற்கேற்ப குறிப்பிட்ட சில போராளிகளை குழுவாக ஒரு பக்கம் அனுப்பிவைத்து, இன்னொரு பக்கம் அவர்களும் சண்டையில் ஈடுபட்டனர். மேஜர்.ரூபன் , கப்டன்.தரன் ஆகிய குழுவினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிங்கள இராணுவத்தினர் சிதறி ஓடினர். இதன் பின்பு முகாமுக்குள் நுழைந்து தேடிய போதுதான் கப்டன். ஜிம்கலி உட்பட பத்து பேர் வீரச்சாவடைந்தது தெரியவந்தது. இதில் தாக்குதல் நடத்தப்பட்ட முகாமை விட்டு வெளியேறிய நிலையில் குண்டு வீச்சு விமானத்தாக்குதலில் கங்கா வீரச்சாவடைந்திருந்தார். துப்பாக்கி சூட்டுக்காயத்துடன் சயனைட் அருந்திய நிலையில் கப்டன். ஜிம்கலி அவர்களின் வித்துடல் எடுக்கப்பட்டது. அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவருடன் இருக்கவில்லை.இவ் ஆயுதம் சிங்கள இராணுவத்தினரால் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அப்போது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் இவ் விடத்தில் சில ஆண்டுகளின் பின்பு ஒரு மரப் பொந்துக்குள் மறைத்து வைக்கபட்டிருந்ததை அங்கு வாழ்ந்த மக்களில் ஒருவர் கண்டெடுத்து போராளிகளிடம் ஒப்படைத்தார். இது ஜிம்கலி வைத்திருந்தது என தெரியவந்தது. தனது உயிரை விட தமிழ் மக்களைப் பாதுகாக்கின்ற ஆயுதம் மேலானது என்ற உணர்வு கப்டன்.ஜிம்கலி அவரிடமிருந்ததை எம்மால் உணரமுடிந்தது. அக் காலங்களில் ஒவ்வொரு போராளியும் ஆயுதத்தைப் பாதுகாப்பதற்கு தமது உயிரை அர்பணித்தார்கள் என்பதை எமது போராட்ட வரலாறுகளின் மூலம் அறிந்திருக்கின்றோம். இச் சம்பவத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தங்கள் புலனாய்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இப் புலனாய்வு நடவடிக்கையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முதல் பாசறையில் பயிற்சி பெற்ற கறுவாக்கேணி ஊரைச் சேர்ந்த கப்டன். சங்கர் ஈடுபட்டிருந்தார். இவருடைய திறமையினால் கோராவெளி முகாம் தாக்கப்பட்ட விடயம் தொடர்பாக விரிவாக அறிய முடிந்தது . மாடுவளர்ப்பு அதிகமாகக் காணப்பட்ட இப் பகுதிகளில் மாடு வாங்குபவர்கள் போல் வந்து முகாம் அமைவிடத்தை துல்லியமாக அறிந்து கொடுத்ததால் சிங்கள இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதை சம்பந்தப்பட்டவர்கள் மூலமாக கப்டன். சங்கர் தெரிந்து கொண்டார். இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற பலவீனத்தைப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு அன்றிலிருந்து ஆக்கிரமிப்புவாதிகள் ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இன்றும் எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. தமிழர்களுடைய வீரத்தையும் தன்மானத்தையும் என்றும் அழிக்கமுடியாது. வீரர்கள் விதைக்கப்பட்ட இம் மண்ணில் விடுதலைக்கான ராகம் ஒலித்துக்கொண்டேயிருக்கும். https://www.thaarakam.com/news/139092
  17. ஈழப்பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  18. Jeff Thompson ஐயும் Graeme Swann ஐயும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை. Jeff Thompson ஐ முன்னர் ரிவியில் பார்த்த நினைவும் இல்லை! இந்தப் புதிரை முடித்து வைத்ததற்கு நன்றி வாலி😀
  19. நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.! Last updated Jun 9, 2020 எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ நாங்கள் உணர்ந்ததில்லை. எல்லாவற்றையும் தனக்குள் பூட்டிவைத்தது போன்ற அமைதி. தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கின்ற பண்பு. தான் நெருங்கிப் பழகுகின்ற ஒரு சில போராளிகளுக்கும் மட்டுமே தன்னைப்பற்றி வெளிப்படுத்திய சில தருணங்கள். அவற்றுக்குள்ளே அவளது உறுதியையும் வேகத்தையும் மிகுந்த துணிச்சலையும் மட்டும் அறிந்துகொண்டோம். அதுதான் அவளைக் கரும்புலியாச் சாதிக்கவைத்ததோ. யாழினியின் அக்கா 2ம்.லெப் தர்சினி இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின்போது வீரச்சாவடைய, அக்காவின் பாதையில் தானும் போகவேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த யாழினி, போராட்டத்தோடு தானும் இணைந்து கொண்டாள். மணலாற்றில் அரசபடைகளின் கஜபார இராணுவ நடவடிக்கையை முறியடிக்க நாம் அமைத்த சண்டைக்களம் இவளது முதற்களம். அந்தச் சண்டையின்போது அவள் மணலாற்றுக் காட்டிலே நின்றாள். ஆரம்பப்பயிற்சி ஆரம்பித்து ஏழு நாட்கள்தான் முடிவுற்ற நிலையில் இவர்களுக்கு காவும் குழுவேலை கொடுக்கப்பட்டது. இறுதிநேரச் சண்டை எதிர்பார்த்ததைவிட அமர்க்களமாக நடந்ததால் அதுவே இவளுக்கு பெரிய அனுபவமாக இருந்தது. மணலாற்றிலிருந்து புகைப்படப்பிரிவிற்குவந்து, புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டிருந்த போதுதான் கரும்புலியாகப் போகவேண்டும் என்பதே அவளின் மூச்சாகிப்போனது. அங்கிருந்தபடியே மாதத்திற்கு குறைந்தது ஒருதடவையாவது தலைவருக்குக் கடிதம் எழுதுவாள். அதன்படி அவள் கரும்புலியாகத் தெரிவுசெய்யப்பட்டு, வேவுப்பயிற்சி அளிக்கப்பட்டு, வேவுகளில் ஈடுபட்டாள். ஒருமுறை இயக்கச்சிப்பகுதியில் வேவு எடுக்கச்சென்ற சமயத்தில் நாரிப்பகுதியில் அவளுக்குப் பலமான காயம். அந்தக் காயத்தினால் சிறிதுகாலம் நாரிப்பகுதியில் உணர்வின்றி இருந்தாள். அந்த நாட்களிலும் கரும்புலியாகப்போய் சாதிக்கவேண்டும் என்ற உறுதிமட்டும் குலையவில்லை. அந்தச்சம்பவம் எங்களுக்குள் இன்னும் அவளது ஆற்றலை, செய்துமுடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைப் பதியவைத்த சம்பவமாகும். சூரியக்கதிர் – 1 இராணுவ நடவடிக்கை நடந்து கொண்டிருந்த நேரம். அது ஒரு நிலவுநாள். வலிகாமம் மேற்கில் ஒருபகுதியில் வேவு எடுத்துவரவேண்டும். எல்லோரும் போய் சிக்கல்பட்டு திரும்பிக்கொண்டிருந்த நேரம். “நான் போய் எடுத்துவாறன்” என்று உறுதியளித்தபடி யாழினி போனாள். சொன்னபடியே பகல்போல நிலவு எறிந்த அந்த இரவில் மின்சார வெளிச்சங்களும், தேடொழியும் சேர்ந்து இரவைப்பகலாக்க, மண் அணைதாண்டி உட்சென்று அவள் எடுத்துவந்த வேவு அவள்மீது எல்லோருக்கும் அசையாத நம்பிக்கையைக் கொடுத்தது. அவளது கடைசி நாட்களில் அவள் இலக்குக்குப் போகின்ற கடைசி நேரம்வரை அவளுக்குக் காய்ச்சல். இலக்குக்கான மாதிரிப் பயிற்சியையும் காய்ச்சலுடன்தான் செய்து முடித்தாள். விரைவாகத் தனக்குக் கிடைத்த சர்ந்தப்பம் நழுவிப்போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் தனது இயலாமையைக்கூட வெளிப்படுத்தாது இரவிரவாக கடுமையான மாதிரிப் பயிற்சிகளைச் செய்து முடித்த பின்பே தனது இலக்குக்குச் சென்றாள். “தற்செயலாய் இலக்கை அடையமுதல் அங்கே காயப்பட்டால் கூட, குறோஸ் இழுத்தாவது இலக்குக்குப் போவன்” அதுதான் யாழினி சொல்லிவிட்டுச் சென்ற கடைசி வார்த்தை. அவளது இலக்கு தான் மடிகின்ற இடம் தனது சொந்த ஊர்தான் என்பதில் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவளின் இலக்குக்கான நீண்டநேர நடைப்பயணத்தின் இறுதியாக அவளது உறவினர் வீட்டுக்கு அண்மையாகச் சென்றுகொண்டிருந்த நேரம் என்ன நினைத்தாளோ? “ஒரு நிமிடம்” என ஓடிச்சென்று தனது ஜீன்ஸ் பொக்கற்றினுள் வைத்திருந்த கடிதத்தை எடுத்து, வெறிச்சோடிப் போயிருந்த தனது வீட்டுக்குள் புகுந்தாள். சில நாட்களாகக் கிழிக்கப்படாதிருந்த நாட்காட்டியினுள் வீட்டினருக்கான தனது இறுதிக் கடிதத்தை வைத்த கடைசி நிமிடத்தில், கூடச் சென்றவர்களின் விழிகள் ஈரத்தில் பளிச்சிட்டன. அடுத்தநாள் வீடு பார்க்கச் சென்ற உறவினர்கள், கடிதத்தை எடுத்து அவளது தாயிடம் கொடுத்தார்களாம். கரைந்து போகின்ற அந்த இறுதி நிமிடங்களில் அவசரத்தில் கிறுக்கிச்சென்ற அவளது வார்த்தைகளில் அவனைத் தேடித்தேடி அவளது பெற்றோர் அழுதனர். அவள் போயே விட்டாள். 1997.06.10 அன்று ஜெயசிக்குறுய் படையினரின் முதுகெலும்பு உடைக்கப்பட, அதில் இவள் பங்கும் பெரியதாக அமைந்தது. சண்டையின் முக்கியமான கட்டத்தில் அவளுக்குரிய கட்டளை கிடைக்க, சண்டைக்கெனச் சென்றிருந்த எல்லோரும் பார்த்திருக்க பெரிய தீப்பிழம்போடு மேஜர் யாழினியும், கப்டன் நிதனும், கப்டன் சாதுரியனும் சிதறிப் போனார்கள். தெறித்த தசைத் துணுக்குகளுடன் ஒருகணம் அதிர்ந்து குலுங்கிய சேமமடு மண்ணுக்குள் வீசுகின்ற மெல்லிய தென்றலுக்குள் எங்கள் தலைவர் கூறுகின்ற மொறாலுக்குரியவள் போய்விட்டாள். வெளியீடு:களத்தில் இதழ் 1997 https://www.thaarakam.com/news/136403
  20. லெப். கேணல் மகேந்தி போராளி என்பதற்கு மேலாக, “விடுதலைப் போராட்ட ஞானி” Last updated Jun 9, 2020 மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமாதான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழுதில் எம்மை வந்தடைந்தது. செய்தி உண்மையா? பொய்யா? என்ற ஆதங்கத்துடன் உறுதிப்படுத்த முற்பட்ட வேளையில், இல்லை அது உண்மைதான் என்ற கசப்பான யதார்த்தம் உறுதிப்படுத்தப்பட்டு வந்துவிட்டது. மகேந்தி எமது போராட்ட வரலாற்றில் வித்தியாசமானவன். பல்லாயிரம் பேர் போராடிய இந்த மண்ணில், பல்லாயிரம் வீரர்கள் வீரச்சாவடைந்துவிட்ட இந்த மண்ணில், விடுதலைப் போரில், அவர்கள் எல்லோருடனும் பொதுவான இணைப்பில் இணைத்துப்பார்த்துவிட முடியாத அளவிற்கு மகேந்தி வித்தியாசமானவன். மக்களுடன் பழகுவதில் அவன் தனித்தன்மை கொண்டிருந்தான். எல்லோராலும் நினைக்கப்படும் கலகலவென்ற சிரித்தமுகம், எவருடனும் அதிர்ந்து பேசாத, முரண்பட்டுவிடவோ அல்லது முறைத்துப் பார்க்கக்கூடவோ தெரியாத கனிவான முகமும், பழகும் பாங்கும் மகேந்தியின் சொத்துக்களாக இருந்தன. அவன் பிறந்து வளர்ந்ததும், போராட்ட காலத்தில் பெரும் பகுதியை கழித்ததுமான யாழ்ப்பாணம், தென்மராட்சி மண்ணில் அனைத்து மக்களுக்கும் அறிமுகமானவன். அனைவரிடமும் அன்புடன் உறவு கொண்டாடும் மனிதனாக மகேந்தி இருந்தான். இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், யாழ் மாவட்டத்தில் மகேந்தி எனக்கு அறிமுகமாகியிருந்தான். அக்காலப்பகுதியில் தென்மராட்சிப் பொறுப்பாக இருந்த தமிழ்ச்செல்வனின் (அப்போதைய தினேஸ்) நம்பிக்கையான உதவியாளர்களில் ஒருவனாக மகேந்தியும் இடம் பெற்றிருந்தான். தென்மராட்சியில் இருந்த விடுதலைப் போராட்ட அணிகளுக்குள் மகேந்தியும் அவனது மூத்த சகோதரனான ரவியண்ணனும் இடம்பெற்றிருந்தார்கள். மகேந்தியின் குடும்பமே விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபட்டிருந்தது. அக்காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் நெருக்கடிகளுக்கும், கெடுபிடிகளுக்கும் ஆளாகியிருந்த விடுதலைப் போராட்டத்தில் பற்றுள்ள குடும்பங்களில் மகேந்தியின் குடும்பமும் ஒன்றாக இருந்தது. நான் யாழ். மாவட்டத்தைப் பொறுப்பேற்ற வேளையில் எனக்கான அணிகளை இணைத்துக் கொள்வதற்காக, ஆங்காங்கே இருந்த போராளிகளை என்னிடம் அழைத்திருந்தேன். அவ்வேளையில் அண்ணணும் தம்பியுமாக ஒரே அணியிலிருந்த மகேந்தியும், ரவியண்ணணும் ஒரே அணியில் இருப்பதைவிட யாராவது ஒருவர் என்னிடம் வருவது பொருத்தமாக இருக்கும் என்று நானும் தமிழ்ச்செல்வனுமாக முடிவெடுத்ததும், அவ்வேளையில் மகேந்தி தமிழ்ச்செல்வனுடன் நிற்க ரவி அண்ணன் என்னுடன் வந்து நிதிப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதும் இன்றும் நினைவிற்கு வருகின்றது. மகேந்தியின் இன்னொரு சகோதரனான சூட்டியும் அக்காலப் பகுதியில் இயக்கத்தில் இணைந்திருந்து ஆனையிறவுச் சமர் காலப்பகுதியில் வெற்றிலைக்கேணி தரையிறக்கத்தைத் தடுக்கும் சண்டையில் வீரச்சாவடைந்திருந்தார். சிறப்பான ஆயுதப் பயிற்சிகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட போராளிகளை நாம் மணலாற்றுக்குத் தலைவர் அவர்களது தளத்திற்கு அனுப்பினோம். அதில் துப்பாக்கி சுடுவதில் சிறந்த குறி வல்லுநராக இருந்த மகேந்தியும் தெரிவுசெய்யப்பட்டுச் சென்று, பயிற்சி நிறைவுபெற்று வந்தது இன்றும் அவன் தொடர்பாக நினைவிற்கு வரும் ஆரம்பகால நிகழ்வுகள். போராட்டச் சக்கரத்தின் நீண்ட காலச் சுழற்சியில் மகேந்தியும் இணைந்தே சுழன்றான். போராட்ட காலத்தில் அறிமுகமான குடும்பம் ஒன்றிலிருந்து தனது காதல் மனைவியைக் கரம் பிடித்ததும், குழந்தைகள் பெற்று குடும்பகாரனாகியதுமான அவனது வாழ்வு தொடர்ந்தது. சண்டைக் களங்களில் மிகவும் துணிச்சலுடன் செயற்படுபவனாக மகேந்தி பெயர் பெற்றிருந்தான். நிறையச் சண்டைக் களங்களில் அவன் நிறையத் தடவைகள் விழுப்புண்ணடைந்து மீண்டும் மீண்டும் களத்திற்குத் திரும்பும் ஒருவனாகவே இருந்தான். மகேந்தியின் போராற்றலின் மீதும், போர்க்களச் செயற்பாடுகளின் மீதும் எதிரி எப்போதும் அச்சமே கொண்டிருந்தான். உள்ளதை உள்ளபடி எவ்வேளையும் எவருக்கு முன்பும் கதைக்கும் பண்பு கொண்டவன் மகேந்தி. அவனது மனதில் இருந்த விடுதலைப் பற்றுணர்வு சார் பண்பினாலும், இயல்பான அவனது நெஞ்சுரத்தினாலும் ஏற்பட்ட பழக்கமாக இதனைக் கொள்ளலாம். இவ்வாறு நெற்றிக்கு நேரே எதனையும் கதைக்கும் பண்பு அவனது பலமாகவும் சில இடங்களில் பலவீனமாகவும் இருந்தது. விடயத்தை மனதில் வைத்திருக்காமல் நேரடியாகக் கதைக்கும் பண்பினால் அவன் சில பொறுப்பாளர்களுடன் முரண்பட்டுவிட வேண்டியிருந்ததையும் நான் அறிவேன். ஆனாலும் அவர்கள் தமது மனதில் மகேந்தி பற்றிக் குறைவாக நினைத்துவிடவோ, அல்லது நிரந்தரமான கசப்புணர்வுடன் இருந்துவிடவோ முடியாதபடி மகேந்தியின் விமர்சனங்களில் நேர்மைப் பண்பு இருந்தது. மகேந்தியின் போராற்றல் திறன் எதிரிக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியது. எமது விடுதலை இயக்கத்திற்கு நலல் வெற்றிகளைப் பெற்றுத்தந்தது. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் பின்னர் யாழ் மாவட்டத்தை ஆக்கிரமித்திருந்த படையினர் மத்தியில் வெற்றிகரமாக நிலைத்துநின்று படையினருக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்துவதில் மகேந்தி வெற்றிகண்டிருந்தான். படையினரின் நெருக்கமான படை வேலிகளுடன் இணைந்த ஆக்கிரமிப்புக் கொடுங்கோல் ஆட்சிக்கு உள்ளே நிலைபெற்றிருந்தான். அங்குள்ள மூத்த சந்ததியினரால் அடைக்கலம் வழங்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு, இளம் சந்ததியினரை அணிதிரட்டிப் போரிட வைத்தது மகேந்தி தனது இராணுவத் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. சிறிலங்கா அரசிற்கு உண்மையான அச்சுறுத்தலை வழங்கிய மகேந்தியைப் போர் அரங்கிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு எதிரி பெரிதும் முயன்றான். சமாதான காலப்பகுதியில் எமது தாயகத்தில் கனன்று எரிந்துகொண்டிருந்த விடுதலைப் போர்த்தீயின் மீதும், முற்றுகை வேலிகள் மீதும் சமாதானப் போர்வைப் போர்த்தப்பட்டிருந்த காலத்தின் ஒரு வேளையது. அவ்வேளையில் எமது பொறுப்பாளர்களில் ஒருவர் பரபரப்பான செய்தியொன்றுடன் என்னிடம் வந்தார். மகேந்தி தென்கிழக்காசிய நாடொன்றில் நிற்கின்றார் என்ற செய்தியே அது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் மகேந்தியின் நண்பர்களாகவும் எமது ஆதரவாளர்களாகவும் இருந்த சிலரிடம் மகேந்தி சில உதவிகளை எதிர்பார்த்து தொலைபேசியில் உரையாடியுள்ளார். தென்கிழக்காசிய நாடு ஒன்றில் நிற்கின்றார். மேலும் ஐரோப்பிய நாடுகளின் உதவிகளை எதிர்பார்க்கின்றார் என்ற வகையிலான போராளியின் கருத்தானது மகேந்தி எங்கேயோ விலகிச் சென்று கொண்டிருக்கின்றார் என்ற செய்தியை மறை முகமாகச் சொல்வதாகவே இருந்தது. உண்மையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து மகேந்தியுடன் உரையாடியவர்கள் அவசரமாக அச்செய்தியை எனக்கு அனுப்பியதின் உள் அர்த்தமும் அதுவென்றே நினைக்கின்றேன். விடயத்தைக் கேட்ட நான் உடனடிப் பதிலாகவே மகேந்தியுடன் தொலைபேசியில் உரையாடும்போது எனது சுகசெய்தியைச் சொல்லுமாறும் மகேந்தியிடம் சுகம் விசாரிக்குமாறும் பணித்ததுடன், ஐரோப்பிய நாடுகளில் உள்ள மகேந்தியின் நண்பர்களிடம் அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்குமாறும், அவரது தேவைகளை நிறைவு செய்து கொடுக்குமாறும் கூறியிருந்தேன். பின்னர் தலைவர் அவர்களுடன் உரையாடக் கிடைத்த வேளையில் மகேந்தி தென்கிழக்காசிய நாடு ஒன்றில் நிற்பது தொடர்பாகவும், அவரது நிலை தொடர்பாகவும் உரையாடிய வேளையில் மகேந்திக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்குமாறே தலைவர் அவர்களும் கூறியிருந்தார். அவரது மனதில் மகேந்தி பற்றிய உயர்வான மதிப்பின் வெளிப்பாடாகவே அதனை நான் பார்க்கின்றேன். ஓரிரு நாட்கள் கழித்து தகவல் கசிந்து சிறிலங்காவின் தகவல் ஊடகங்கள் ஆரவாரம் செய்யத்தொடங்கின. சிங்கள இராணுவ ஆய்வாளர்கள் தமது பத்தி எழுத்துக்களில் மகேந்தியைப் பற்றிக் கூறத்தொடங்கினார்கள். மகேந்தி தென்கிழக்காசிய நாடு ஒன்றில் நிற்பதனைக் கண்டறிந்து எழுதியிருந்தார்கள் அவர் இயக்கத்தில் இருந்து விலகி ஓடிவிட்டதாகவும் அதனால் இயக்கம் இனிவரும் காலங்களில் இராணுவ ரீதியாக வெல்லப்படக் கூடியதாக ஆகிவிடும் என்ற வகையிலுமாக, சிங்கள ஆய்வாளர்களின் கட்டுரைகள் நீண்டு அவர்களது கனவுலகில் விரிந்துசென்றது. சிங்கள தேசத்திற்கு மகேந்தியின் போராற்றல் அந்த அளவிற்கு அச்சுறுத்தலாக இருந்ததை வெளிப்படுத்தி உணர்த்திய சம்பவமாக அது அமைந்தது. வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவுடன் மகேந்தியும் நானுமாக சிறிலங்கா அரசின் மேற்படி செய்திகளையும், வெளிநாட்டிலிருக்கும் வேளையில் மகேந்தியுடனான எமது தொலைபேசித் தொடர்புகளையும் நகைச்சுவையுடனும், நெகிழ்ச்சியுடனும் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டதே அவனுடன் எனது கடைசிச் சந்திப்பாக நினைவில் பதிந்துள்ளது. சென்ற நினைவுகள் இன்றும் மாறாத பசுமையான நினைவுகள் ஆகிவிட்டன. எமது மனங்களில் குறிப்பாக எனது மனதில் மகேந்தி எங்கிருந்தாலும் எந்த வேளையிலும் போராட்டத்தின் தளத்திலேயே நிற்பவன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தான். அதற்குக் காரணமான சம்பவம் இவ்வேளையில் மனதை அழுத்தும் நினைவாக நிற்கின்றது. 1990களின் ஆரம்ப கட்டத்தில், எமது மக்களையும் எம் எல்லோரது நெஞ்சையும் பதற வைக்கும் உள் துரோகத்தை நாம் சந்தித்திருந்தோம். தலைவர் அவர்கள் தனது போராட்ட வரலாற்றில் தாண்டிவந்த உட் துரோகங்கள் அதிகம். ஆனாலும் எமது காலத்தில், ஆயிரக்கணக்கான போராளிகளாக போராட்டம் விரிவு பெற்றுவிட்ட வேளையில் சந்தித்த இப்பிரச்சினையால் நாம் எல்லோரும் நிலைகுலைந்துதான் போனோம். புலனாய்வு பற்றியதும், உட் துரோகம் பற்றியதுமான விரிவான பார்வை எமக்கு இல்லாமல் இருந்த நேரம் அது. நல்லவர் கெட்டவர் என பகுத்துப் பார்க்க முடியாத குழப்பம் சூழ்ந்த நேரம். தலைவர் அவர்களையும் எமது போராட்டத்தையும் பாதுகாத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் ஒரு பக்க முடிவாக அல்லாமல் பலபக்க முடிவாக உட் துரோகத்தைக் கையாண்டுகொண்டு இருந்த நேரம் அது. அந்த குழப்பமான நேரத்தில் மகேந்தியும் விசாரணைக்கு உள்ளாக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மகேந்தியும் விசாரிக்கப்பட்டான். நான் இதில் விபரிக்க விரும்பாத அளவிற்கு கடுமையாகவே விசாரணையை மகேந்தி சந்திக்க வேண்டிவந்துவிட்டது. “கடுமையான சூழலது” அந்த நிலையிலிருந்தும் மகேந்தி மீண்டு வந்தான். கடுமையான சூழலைச் சந்தித்து மீண்டு வந்தபோதும் அவன் உறுதி குலையாத போராளியாக மீண்டு வந்தான். சாதாரணமான மனிதனுக்குப் போராட்டத்திலிருந்து ஒதுங்குவதற்கு சாதாரணமான காரணங்களே போதுமானதாக இருப்பதைக் கண்டுள்ளோம். ஆனால் மகேந்திக்கு போராட்டத்திலிருந்து விலகிச் செல்வதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. ஆனாலும் அவனும் அவனது குடும்பத்தினரும் தலைவர் மீது வைத்திருந்த பற்றும் நம்பிக்கையும் அவனை இந்தப் போராட்டத்துடன் இறுகப் பிணைத்து வைத்திருந்தது. கடுமையான சூழலைத் தாண்டிவந்தும் குழம்பாமல் இருந்தமை மகேந்தி உறுதியான போராளி என்பதைக் காட்டி நின்றது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது மனதில் பாரச்சுமையை ஏற்றும் விடயம் என்னவென்றால், மகேந்தி எம்மை அதன் பின்னர் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சிரித்த முகத்துடன் எதிர் கொண்டதுதான். அவனுக்கு முன்னால் நாம் சங்கடப்பட்டு நின்ற வேளையில் எல்லாம், அவன் எம்மைச் சங்கடப்படுத்திவிடக் கூடாது என்ற நோக்குடன் கவனமாகப் பழகுவான். எங்களைச் சந்திப்பதிலோ எங்களுடன் அன்பாகப் பழகுவதிலோ அவன் பின்நிற்பதே இல்லை. எம்முடனான உரையாடல்களின் போது அவன் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்து விடயங்களை எமக்கு நினைவூட்டும் வகையிலான எந்த ஒரு சொல்தானும் வெளிவந்துவிடாது நடந்துகொள்வான். அவன் மட்டுமல்ல அவனைச் சார்ந்த உறவுகள் கூட எம்மைச் சங்கடப்படுத்தும் வகையிலான எந்தவொரு வெளிப்பாட்டையும் காட்டியதே இல்லை. மகேந்தி திட்டமிட்டு கவனமாகத்தான் எம்முடன் அவனது தடுத்துவைப்புக் காலப்பகுதி பற்றிக் கதைப்பதைத் தவிர்க்கின்றானா? அல்லது அவனது இயல்பே அதுவாகிவிட்டதா? என நாம் மனதிற்குள் மலைத்து நிற்போம். மகேந்தி ஒரு போராளி என்பதற்கு மேலாக இவ்விடயத்தில் மிக உயர்ந்த ஒரு மனிதனாக, ஒரு போராட்ட ஞானியாக தன்னை வெளிப்படுத்தினான் என்றே நினைக்கின்றேன். அவனது இந்தப் பண்பு இயல்பிலேயே வந்ததா? அல்லது தலைவர் மீதும் எமது விடுதலைப் போரின் மீதும் வைத்த பெரும் நம்பிக்கையில் விளைந்ததா? என்பது என்னால் விடை காண முடியாத கேள்வியாக இன்றும் தொடர்கின்றது. மகிந்த ஒரு சிறந்த பொறுப்பாளராக, போராளியாக இருந்ததை விட மேற்கண்ட பண்பால் ஒரு ஞானியாக எம் மனங்களில் நீங்காத இடம்பெற்று வாழ்கின்றான். தமிழீழம் உள்ளவரை வாழ்வான். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவுப்பகிர்வு: ச.பொட்டு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். https://www.thaarakam.com/news/136357
  21. தலைவரையும் , தமிழர்களையும் உயிருக்கும் மேலாக நேசித்த லெப் கேணல் சரிதா .! On Jun 8, 2020 மன்னார் பாலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. சிங்கள படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது. பெண்களை இளக்கமாக நினைத்த சிங்கள படைகளுக்கு அண்ணனின் புலித்தங்கைகள் சரியான படம் புகட்டிக்கொண்டு இருந்தார்கள் . குறைந்த அளவு பெண்போராளிகள் பலநூறு இராணுவத்துடன் போர்புரிந்துகொண்டு இருந்தார்கள். நேரம் சென்றுகொண்டு இருந்தது படைகளுக்கு சாதகமாக மாறிக்கொண்டு இருந்தது . அக்கா!… அல்பா பகுதியை உடைச்சுக்கொண்டு ஆமி வந்துட்டான். இது ஒரு பெண் போராளியின் குரல். நேரம் நண்பகல் பதினோரு மணியாக இருந்தது. எத்தனை நிலை (பொசிசன் ) உடைச்சிட்டான் ?… எவ்வளவவு ஆமி இருக்கும் ?… இது அந்த மகளிர் கட்டளை தளபதியின் குரல் … ஒரு … 60 – 70 பேர் இருக்கும் அக்கா. நீங்கள் எத்தனை பேர் ?…. என்னுடன் 3 பேர் அக்கா ஒரு பிரச்சனையும் இல்லை வலப்பக்கமும் இடப்பக்கமும் உடைக்க விடாமல் மற்ற பிள்ளைகள் சண்டை பிடிக்கினம். நீங்கள் 3 பேரும் உள்ளுக்குள் வர விடாமல் சண்டை பிடியுங்கோ. இப்ப ஒரு அணியை உங்களுக்கு உதவிக்கு அனுப்புகிறேன். அப்படியே சண்டை பிடியுங்கோ நாங்கள் உள்ளுக்கு வந்தவனை பொக்ஸ் அடிச்சு (பெட்டி வடிவ வியூகம்) ஒருத்தனையும் தப்பவிடாமல் கொல்லுவம் என்றாள். அந்த பெண் தளபதி சிறிதும் பதட்டம் இன்றி. உதவிக்கு அனுப்பப்பட்ட அணி சென்று சேரும் போது 2 பெண் போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் ஒரு போராளி மட்டுமே போரிட்டுக்கொண்டு இருந்தாள். களமுனை மிகக்கடுமையாக இருந்தது . இப்போது இராணுவமும் அதிக தூரம் போராளிகளின் நிலைகளுக்குள் வந்து விட்டான். நிலைமை கை மீறிக்கொண்டிருந்தது. அந்த நேரம் உதவி அணியும் வரவில்லை. உடனடியாக வெவ்வேறு நிலைகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட சிறிய அணியுடன் முறியடிப்பு சமரில் இறங்கினாள். சோதியா படையணியின் தாக்குதல் தளபதி லெப் கேணல் சரிதா /தர்மா சிங்கள படைகளின் அத்தனை ஆயுதங்களும் பெண் போராளிகளின் மன உறுதியின் முன் மௌனிக்க ஆரம்பித்தன சீற்றத்துடன் புறப்பட்ட சிங்கங்கள் தமிழ் பெண்புலிகளின் முன் மண்டியிடத் தொடங்கின. இன்னும் ஒரு காவலரண் தான் மீளக்கைப்பற்ற வேண்டி இருந்தது . சண்டை தொடர்ந்தது அந்நேரம். அந்த நிகழ்வு நடந்தது தர்மாவை எதிரியின் குண்டுச் சிதறல்கள் மிகப்பலமாக தாக்கியதில் தர்மா தூக்கி வீசப்பட்டாள். சில நிமிடங்களில் களமுனையில் சிங்களவனின் கை ஓங்கியது. ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை தர்மாவின் கட்டளை புலியின் உறுமலாய் ஒலித்தது அந்த உறுமல் ஒலித்த வேகத்தில் பெண்புலிகள் பாய்ந்து சென்றனர். ஓலமிட்டபடி சிங்கங்கள் கால் தெறிக்க இறந்த தமது சகாக்களையும் விட்டு விட்டு ஓடித்தப்பினர். களமுனை அமைதியானது. அன்றைய வெற்றியின் நாயகிகளாக பல பெண்புலிகள் வீரச்சாவு அடைந்து இருந்தனர். எராளமான சிங்கள படையினர் இறந்து இருந்தனர். அவர்களின் உடலங்கள் ஆங்கங்கே சிதறிக்கிடந்தன. அந்த வெற்றியை கண் ணுற்றவாறு. அந்த சமர்க்களத்தின் தளபதி லெப் கேணல் சரிதா மயக்கமுற்றாள். தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டடத்தில் அமைந்துள்ள வட்டுக்கோட்டை அதன் தெற்கே உள்ள அராலி மத்தியில்அமைந்துள்ள ஊரத்திக்கிராமம், மேற்கே காரைநகர் தொடக்கம் ஊர்காவல்த்துறை வரை ஆழம் குறைந்த கடல்ப்பகுதியையும் , தெற்கே பரந்த வயல் வெளியையும் கொண்டது மழைக்காலத்தில் பச்சை ஆடையில் அழகிற்கு அழகு சேர்ப்பாள் ஊரத்தி என பெயர் சூட்டப்பட்டது. 1991 அக்கிராமத்தின் மத்தியில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கோவில் அது அக்கோவில்தான் ஊரில் உள்ள அத்தனை பேரும் , ஒன்று கூடும் இடம். கோவில் அருகே சிறுவர் பாடசாலையுடன் இணைந்த வாசிகசாலை (இப்போது இடம் மாற்றப்பட்டுள்ளது) உள்ளது. அங்கே 1982ம் ஆண்டு காலப்பகுதியில் அப்பப்போ போராளிகள் வந்து சென்றார்கள். அப்போதுதான் தர்மாவுக்கு போராளி களுடன் தொடர்பு ஏற்ப்பபட்டது. ஈ பி ஆர் எல் எப் , புளொட் மற்றும் ரெலோவுடன் , அப்போது அவரின் வயது 12 வயது குறைவாக இருந்தாலும் நாட்டுபற்று அளப்பெரிதாக இருந்தது. இப்படி இருக்கும் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி லெப் சீலன் அண்ணா வீரச்சாவு அடைந்தார். அவர் நினைவாக தனது தம்பிக்கு சீலன் அண்ணாவின் பெயர் சூட்டினாள். இக்காலப்பகுதியில் ரஞ்சன் என்ற போராளியின் தொடர்பு ஏற்ப்பட்டது. அதன் பின்புதான் தர்மாவின் வாழ்வில் முதலான மாற்றம் ஏற்ப்பட்டது. தர்மா ரஞ்சன் என்ற போராளியிடம் தான் விடுதலைப் புலிகளில் (அக்காலப்பகுதியில் ரைகர். பெரிஸ் என்பார்கள்) இணையப்போவதாக கூறினாள். அதற்கு அவர் உங்களுக்கு வயது குறைவு அதோட எங்களின் அமைப்பில் பெண்கள் பிரிவு இல்லை நீங்கள் தொடர்ந்து படியுங்கோ காலம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். தர்மாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் அவளது இயக்க கனவு தொடர்ந்தது 1987ம் ஆண்டு இந்தியா ஆக்கிரமிப்பு படையினர் தமிழீழத்தினை முற்றுகையிட்டனர். மானிப்பாயின் சுதுமலையில் தமிழீழத்தேசியத்தலைவர் செய்த வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடனத்தில் தர்மாவின் குடும்பமே கலந்து கொண்டது. தர்மாவின் கரத்தை பற்றியவாறு நானும் நின்றேன். அன்று தான் என் வாழ்வில் கிடைத்தலுக்குரிய பேறு பெற்றேன் எங்கள் தமிழீழக் கடவுள் தலைவனை கண்டேன் . பிரகடனம் முடிந்து ஊர் திரும்ப வீதியில் ஏறினோம். இந்திய ஆமியின் வாகனங்கள் தொடராக சென்றன மக்கள் ஆரவாரமாகக் கை அசைத்தனர். நானும் எனது கைகளை தூக்கினேன். என்னை கை காட்ட விடாது தர்மா தடுத்துவிட்டார். நான் தர்மாவின் முகத்தை பார்த்தேன். அந்நேரம் அருகில் நின்ற போராளி ஒருவர் இப்ப கை காட்டுங்கோ பின்னர் வருவதை நீங்களே அனுபவியுங்கோ என்றார். தர்மாவின் தடுத்தலும் போராளியின் சொல்லும். இந்த இரண்டுக்குரிய அர்த்தமும் அப்போது எனக்கு விளங்கவில்லை பின்னர் புரிந்தது. (இந்திய இராணுவம் எமது மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்த போது) தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியது. பன்னிரண்டு நாட்களும் தர்மா திலீபன் அண்ணாவின் மேடையில் முன்றலில்த் தான் இருந்தாள். அவரின் வீரச்சாவின் பின் தர்மா விட்ட கண்ணீர் இப்போதும் என் மனக்கண்ணில். திலீபன் அண்ணாவின் வீரச்சாவை தொடர்ந்து தமிழீழத்தில் பதட்டம் அதிகரித்தது அந்நேரம் போராளிகளின் தொடர்பும் விட்டுப்போனது. ஆனாலும் தர்மாவின் போராட்ட செயல்பாடுகள் நிற்கவில்லை. அது தீவிரம் பெற்றது. 1987. 10.01 எனக்கு இன்றைக்கும் பசுமையாக அன் நிகழ்வு இருக்கின்றது. தர்மவைச்சுற்றி என் நேரமும் இருக்கும் சிறுவர் பட்டாளத்தை அவசரமாகக் கூட்டினாள். அவளின் முதலாவது சொல் இடியாகத் தாக்கியது சாவுக்கு பயந்தவர்கள் இக்குழுவில் இருந்து இந்த நொடியே வெளியேறுங்கள் , துணிந்தவர்கள் இருங்கள் என்றாள். எங்கள் சிறுவர் குழுவின் தலைவி தர்மா தான். நான் அதன் செயலாளராக இருந்தேன். அமைதிநிலவியது …. அங்கிருந்து சுமார் ஏழுபேர் வெளியேறினார். நான் அமைதியாக அவள் முகத்தை பார்த்தேன். என்னுடன் தர்மா உட்பட பதினைந்து பேர் இதில் ஒன்பது பெண்கள் தர்மா பேசத்தொடங்கினாள் : இதில் இருக்கிற பலர் ஏற்க்கனவே பல இயக்கத்துடன் தொடர்பாக இருந்தீர்கள் ஆனால் இப்ப எங்களுக்கு தெரியும். டைகர்ஸ் தான் உண்மையான இயக்கம் என்று. எனவே நாங்களா இப்படியே குழுவாக இருந்து டைகர்ஸ் போராளிகளின் தொடர்பு கிடைத்தவுடன் இப்படியே இணையவேண்டும். இதில் உங்களுக்கு சம்மதமா?…. என்றாள். ஒருமித்த குரல் எல்லோரும் ‘ ஓம் ‘ என்கிறார்கள். அங்கே கூடி இருந்தவர்கள் எல்லோரும் ஒருமனதாக அக் குழுவிற்கு தமிழீழ மக்கள் படை என்று பெயர் இட்டனர். சுருக்கமாக ரிபி என அழைத்தனர் ரிபியுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு தேவையான உதவிகளை ரிபியினர் செய்து கொடுத்தனர். ரிபி குழுவில் இருந்தவர்களின் வயதை நினைத்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் ! ஆக குறைந்த வயது எட்டு கூடிய வயது பதினெட்டு. தர்மாவின் வயது பதினேழு. தர்மாவைபற்றி எழுதும் எனது வயது பதினொன்று. தர்மாவின் சிறப்பான வழிநடத்தலில். நாங்கள் இயங்கிக்கொண்டு இருந்தோம். எங்களுக்கு ஆச்சரியம் ஊட்டும் விதமாக எமது இயக்கத்தின் தொடர்பு கிடைத்தது. உணவு வழங்குதல் இந்தியபடைகளுக்கு தெரியாமல் போராளிகளை கூட்டிச் செல்லுதல் இரண்டுமே தான் எங்களுக்கு போராளிகள் தந்தார்கள். அதன் பின்னர் இரவு காவல் கடமையிலும் எமது அமைப்பை இணைத்தனர். இந்திய படைகள் எமது மண் மீது அநியாயமான போரை தொடுத்தபோது தர்மா இயக்கத்தில் இணையும் தனது முடிவைத் தெரிவித்தபோது போராளிகள் மறுத்துவிட்டனர். இல்லை தங்கச்சி நீங்கள் இப்ப செய்யற பணியைச் செயுங்கோ நாங்கள் தேவையான போது உங்களை கூ ப்பிடுகி றோம் என்கிறார்கள். 1989 ஆண்டு தர்மாவுக்கு மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு வந்தது. படிப்பைத் தொடர்ந்த படித்து கொண்டு தனது போராட்டக் கடமைகளை தர்மா செய்தாள். தர்மாவின் குடும்பம் மிகவும் வறுமைப்பட்டது ஆனால் எந்நேரமும் போராளிகளை ஆதரித்து அவர்களுக்குத் தம்மாலான உதவிகளை செய்து கொண்டு இருப்பார்கள். தர்மாவின் குடும்பம் பெரிது செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் நான்காவது பிள்ளைதான் தர்மா. இவள் பின்னே மூவர் அவளது இயற்பெயர் இலங்கேஸ்வரி. வட்டுக்கோட்டை மத்திய கல்லுரியில் கபோத சாதராணம் ( O/L ) வரை கல்வி கற்றாள். மதம் என்ற முட்டாள் தனமான கருத்தை எதிர்ப்பாள். தர்மாவின் குறிப்பேட்டில் இருந்து 04/09 /1989 அராலி யாழ்ப்பாணம், மதம் தமிழனின் எழுச்சியை அடக்க அந்நியர்கள் விதைத்த அழகான விச விதைகள் மதம் தமிழை மெல்ல கொல்லும் விஷம் அந்நிய மோகத்தை விடு எங்கள் அன்னைத் தமிழே உயிரென தொழு… தர்மாவின் குறிப்பேட்டில் இருந்து பெறப்பட வரிகள் அவை. தர்மா 1995 ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்தாள். தனது ஆரம்ப பயிற்சியை வன்னிக்காட்டில் பெற்றாள். முல்லைத்தீவுப் படைத்தளத்தை வீழ்த்திய ஓயாத அலை ஒன்று தொடக்கம்… அவள் கண்ட களங்கள் ஏராளம்…. சத்ஜெய , கிளிநொச்சி ஊடறுப்புத் தாக்குதல் , ஜெசிக்குறு தொடக்கம் ஓயாத அலை இரண்டு ஓயாத அலை மூன்று இதில் ஆனையிரவுப் படைத்தளம் மீட்கப்பட்டது. உட்பட தீச்சுவாலை எதிர்ச்சமர். …. இப்படியே அவள் களம் நீண்டது…. தர்மா ஓய்வின்றி களத்தில் சுழன்றாள். ஒருமுறை இவளுடன் இரண்டு போராளிகள் ஜெசிக்குறு களமுனையில் பிறிதொரு காவலரண் நோக்கிச் செல்லும் போது , கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கி மூவரும் மயக்கம் அடைந்தனர் . இரண்டு நாட்கள் மயக்க நிலை, பல கருத்துக்கள் அங்கே நிலவிய போதும்…. மேஜர் சோதியா படையணி சிறப்புத்தளபதி பிரிகேடியர் துர்க்க அக்கா தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார். தர்மாவுக்கு ஆபத்து ஏதோ நடந்திருக்கு தேடிப்பருங்கோ என்று. எதேர்ச்சையாக அவ்வழியே வந்த ஆண் போராளிகளினால் இவர்கள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர் . தர்மாவின் குறிப்பேட்டில் இருந்து 10.03 1998 ஜெசிக்குறு களமுனை அப்பா ஆயிரம் அறிவுரைகளை ஊட்டினாலும் ஒன்றை ஆணித்தரமாய்க் கூறினாய் மனிதரை நேசி தமிழைச் சுவாசி. தர்மாவுக்கு தலைவரின் பணிப்பின் பேரில் துர்க்கா அக்காவினால் கள ஒய்வு வழங்கபட்டது. 2001 ஆண்டு ஓர் நாள் முகமாலையில் சண்டை ஆரம்பித்தது. புதுக்குடியிருப்பில் நின்ற தர்மா உடனே முகமாலை கள முனைக்குச் சென்றாள். அந்நேரம் அங்கே வந்த துர்க்கா அக்காவினால் அனுமதி இன்றி கள முனைக்கு வந்ததால். தண்டனையாக நடந்து புதுக்குடியிருப்புக்கு செல்லுமாறு பணித்தார். நடந்து வந்த தர்மாவை பளைப்பகுதியிலிருந்து வாகனத்தில் ஏற்றி வந்தார் துர்க்கா அக்கா. நான் கேட்டேன் ‘தர்மா அக்காவை ஏன் உங்களுக்கு தண்டனை வழங்க பட்டது’ ?… என்று. அதற்கு தர்மா அக்கா சொன்ன. ‘எங்கட குடும்ப நிலையை கருத்தில் கொண்டு தலைவர் என்னை சண்டைக்கு விட வேண்டாம் என்று சொன்னார். அதுதான் அனுமதி இல்லாமல் சண்டைக்கு போனதுக்கு அக்கா தண்டனை தந்தா’ என்றார் தர்மா. ‘இதுக்கு வருதப்படுகிரிங்களா ?’ என்று நான் கேட்ட போது. ‘அனுமதி இன்றி களமுனை செல்வது பிழை என்றால் இந்த பிழையை நான் தொடர்ந்து செய்வேன்.’ என்றா தர்மா. தர்மா எப்போதும் களமுனையில் வாழ்ந்தவள். ஒய்வின்றி உழைத்த போராளி, யுத்தத்தின் மூலமாக தமிழீழத்தை மீட்கலாம் என்ற அசையாத நம்பிக்கை கொண்டவள். தலைவரையும் நாட்டையும் தமிழர்களையும் உயிருக்கும் மேலாக நேசித்த போராளி. 08.05.2008 அன்று மன்னார் பாலம்பிட்டி களமுனையில் விழுப்புண் அடைந்து. 08.06.2008 அன்று கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையில் தனது தாயான சிவபாக்கியத்தின் மடியில் தலை சாய்த்திருந்து கதைத்துக் கொண்டுடிருக்கும் போது வீரச்சாவடைந்தாள். இறுதிவரை களமுனையே வாழ்வாக கொண்டு வாழ்ந்த தர்மா தனது அன்பு நண்பியும் சோதியா படையணி துணைத் தளபதியுமான லெப் கேணல் செல்வி வீரச்சாவடைந்து, சரியாக பதின்நான்காம் நாள் வீரச்சாவு அடைந்தாள். கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் லெப் கேணல் செல்வி அக்காவின் விதைகுழி வரிசையில் சரியாக பதின்நான்காவது ஆளாக விதைக்கப்பட்டாள் லெப் கேணல் தர்மாவாக. புனிதத்தின் சுவடாக ஒளிர்வாய் எம்மினத்தின் விடியலுக்காய் !…. என்றும் சோதியா படையணியின் தாக்குதல் தளபதி லெப் கேணல் தர்மாவிற்கு வீரவணக்கம் செய்து அவர் சுவட்டின் வழியில் நாமும் பயணிப்போம். https://www.thaarakam.com/news/136028
  22. மன்னாரில் 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் June 7, 2020 மன்னார்–பேசாலை மற்றும் வங்காலைப்பாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 57 பேர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தெரிவித்தார். கடந்த மாதம் 29 ஆம் திகதி சட்ட விரோதமாக நாட்டிற்குள் இந்தியாவில் இருந்து வருகை தந்த நபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களுக்கு நேரடியாக உதவி செய்த ஐந்து நபர்கள் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்களுடன் தொடர்புடைய பேசாலை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவைச் சேர்ந்த 12 குடும்பத்தைச் சேர்ந்த 52 நபர்கள் அவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த விடையம் தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவையில்லை. இது பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக நாங்கள் மேற்கொள்ளும் சாதாரண நடவடிக்கை. குறித்த நடவடிக்கை ஊடக இவர்கள் தொடர்ச்சியாக 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு அவதானிக்கப்படுவார்கள். இவ்வாறான செயற்பாடுகளின் போது பொது மக்கள் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. இவ்வாறான சட்ட விரோத ரீதியாக எமது நாட்டுக்குள் உற் பிரவேசிக்கும் மக்களை குறிப்பாக இந்தியாவில் இருந்து வரும் மக்கள் தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருந்து எங்களுடைய சுகாதார துறைக்கு உடனடியாக அறியத் தரும் பட்சத்தில் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் எங்கள் நாட்டுக்குள் இந்த கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கலாம் என்பதை நாங்கள் மக்களுக்கு தெரிவித்துக்கொள்ளுகின்றோம் என மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் மேலும் தெரிவித்தார். #மன்னார் #பேசாலை #தனிமைப் படுத்தல் #வைத்தியஅதிகாரி http://globaltamilnews.net/2020/144468/
  23. பிஸ்டல் காய் மேஜர் சுவர்ணன்.! Last updated May 28, 2020 29.05.2000 அன்று மன்னார் தீவு பகுதியில் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு தழுவிய மேஜர் சுவர்ணன் ஆகிய மாவீரரின் 20 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு – வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது உமையாள்புரம் இராணுவ முகாமைச் சூழ அவ்வப்போது ‘சில்லறைச் சண்டைகள்’ மூண்டு தணிந்து கொண்டிருந்தன. ஒருநாள் இரவு உமையாள்புரத்தில் புலிகளின் தாக்குதலணியொன்று எதிரி மீதான திகைப்புத்தாக்குலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அவ்விடத்தில் நிலைகொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மேஜர் சங்கர் தலைமையிலான ஒரு கொம்பனியே அந்தத் தாக்குதலுக்கான ஆயத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அது பெருமெடுப்பான நிலமீட்புத் தாக்குதலில்லை. எதிரிகள் சிலரைக் கடுமையான காயத்துக்குள்ளாக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் தாக்குதல். இவை யாவும் சுவர்ணன் தலைமையிலான அணியொன்றை மையமாக வைத்துத்தான் நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதல் திட்டம் நடைபெறப்போகும் நேரத்தில் சுவர்ணன் தனது அணியோடும் ‘பொருளோடும்’ இராணுவத்தின் முன்னணி நிலைகளைக் கடந்து தென்மராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்தான். 1996 ஆம் ஆண்டு ஆனிமாதத்தின் நடுப்பகுதியில் ஒருநாள். வன்னிக் காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நாங்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். வேறிடத்திலிருந்து கழற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த லக்சபானா மின்கோபுரமொன்றை காட்டுக்குள் ஓரிடத்தில் மீளப் பூட்டும் வேலைதான் அது. அதற்கான கற்றூணை நிலத்துள் நாட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆழக்கிண்டிய கிடங்கில் கற்றூணை இறக்கிவிட்டோம். இனி நிமித்திவைத்து மண்போட்டு மூடவேண்டும். கல்லோ தொன் கணக்கில் நிறையுடையது. மூன்றுபக்கமிருந்து கேபிள்கள் போட்டு இழுத்து நிமிர்த்திவைத்திருக்க ஒருவர் தூணில் கேடர்கள் பொருத்தி நிலைப்படுத்த வேண்டும். அதன்படி நாங்கள் மூன்றுபக்கமிருந்து இழுத்து தூணை நிமிர்த்திவிட்டநிலையில் கேடரைப் பூட்ட வேண்டிய சுவர்ணன் அதைச் செய்யாமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தூணை இழுத்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கைகடுத்தது. “டேய் சுவர்ணன்! என்ன மிலாந்திக் கொண்டிருக்கிறாய்? கெதியா கேடரைப் பூட்டு” இது ரகுவண்ணா. “சுவர்ணன் மாஸ்டர் எண்டெல்லோ கூப்பிடச் சொன்னனான்? அப்பிடிக் கூப்பிட்டு வேலையைச் சொல்லுங்கோ, செய்யலாம்.” இது சுவர்ணன். “டேய்! ஆளப்பார் தேவாங்கு மாதிரி இருந்துகொண்டு மாஸ்டரோ?…. பகிடியை விட்டிட்டு கெதியாப் பூட்டடா, கை கடுக்குது” ஒருபக்கத்தில் கேபிளை இழுத்துப்பிடித்திருந்த மைந்தன் கத்துகிறான். சுவர்ணன் அசைவதாயில்லை. செங்கோல் பிடித்த மன்னன் போல ஒருகையில் கேடரைப்பிடித்தபடி மறுகையை இடுப்பில் வைத்தபடி ஒயிலாக ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் வேறு ஆட்களுமில்லை. அடிக்கப் போவதென்றாலும் ஒருவர் கேபிளை விட்டுவிட்டுத்தான் போகவேண்டும். “சுவர்ணன் மாஸ்டர், அச்சா மாஸ்டரெல்லோ, ஒருக்கா கேடரைப் பூட்டிவிடுங்கோ மாஸ்டர்”… ஒருமுனையிலிருந்த குமுதன் கெஞ்சினான். அதன்பிறகுதான் சுவர்ணன் தனது வேலையைச் செய்தான். அன்றைய செயலுக்குப் பரிகாரமாக தேங்கிநின்ற சேற்றுநீரில் எங்களால் புரட்டியெடுக்கப்பட்டான். இப்படித்தான் இருப்பான் சுவர்ணன். எந்தநேரமும் ‘சீரியசாக’ பகிடி விட்டுக் கொண்டிருப்பான். தன்னை மாஸ்டர் என்றுதான் அழைக்க வேண்டுமென்று அடிப்படைப் பயிற்சி முடிந்து சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய காலத்திலேயே கதைக்கத் தொடங்கிவிட்டான். உச்சிவெயிலில் வாட்டியெடுக்கப்பட்ட நிலையில் கொட்டிலுக்கு வந்தால் சுவர்ணனின் சேட்டைகள் இன்னும் கொதியைக் கிழப்பும். அதுவும் கோபம் உச்சத்துக்கு வரும்போது திக்கத் தொடங்கிவிடும் ரகுவண்ணாவை வேண்டுமென்றே அவன் படுத்தும்பாடு சொல்லி மாளாது. தன்னை மாஸ்டர் என்று சொல்லச் சொல்லிச் நச்சரிக்கும் எந்தவிடத்திலும் சிறுபுன்னகைகூட அவனிடம் வராது. புதிதாக அவனோடு பழகுபவர்கள் அவன் சீரியசாகவே கதைப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அவன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். ஆனால் சுவர்ணன் சிரிப்பதில்லை. எல்லாவற்றையும் சீரியசாகவே கதைத்துக் கொண்டிருப்பான். யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக் காட்டுக்குள் வந்த புதிதில் சுவர்ணின் அணி பட்டபாடு சொல்லி மாளாது. மிகக்கடுமையான வேலைகள் எமக்கிருந்தன. கிணறு வெட்டுவது, காட்டுக்குள் பாதைகள் போடுவது, தளம் அமைப்பது, பதுங்கு குழிகள் வெட்டுவது என்று மிகமிகக் கடுமையான வேலைகள். அந்தநேரத்தில் சுவர்ணன் செய்யும் சேட்டைகள் சம்பந்தப்பட்டவர்களை விட மற்றவர்கள் வயிறு குலுங்கிச் சிரிக்குமளவுக்கு இருக்கும். ஒருகட்டத்தில் எமது கொம்பனி மறுசீரமைக்கப்பட்டது. அப்போது புதிதாக 50 கலிபர் ஆயுதத்துக்கான எட்டுப் பேர் கொண்ட அணியொன்று உருவாக்கப்பட்டது. அதில் சுவர்ணனும் ஒருவன். இவ்வளவுநாளும் சுவர்ணன் வேறு அணியிலிருந்ததால் அவனது குறும்புகளை ரசித்துக் கொண்டிருந்த எமக்கு இப்போது அனுபவிக்க வேண்டியிருந்தது. அதிலொன்றுதான் மேற்சொன்ன கற்றூணை நிறுத்தும் வேலையின்போது நடந்தது. இதுபோல் ஏராளம் சம்பவங்களுள்ளன. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது குறும்பு செய்துகொண்டிருப்பான். அவனது ‘மாஸ்டர்’ பம்பல் எத்தனை மாதமானாலும், எத்தனை தடவைகள் திரும்பத் திரும்ப நடந்தாலும் ஒவ்வொரு முறையும் மறக்க முடியாத நினைவாகவே பதிந்துவிடும். 50 கலிபர் அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றாலும் எமக்கான ஆயுதம் வழங்கப்படவில்லை. சும்மா ‘கலிபர் ரீம்’ என்ற பேரில் அலைந்துகொண்டிருந்தோம். உண்மையில் அது கனரக ஆயுதங்களுக்கான பிரிப்பாக இருக்கவில்லை, கனரக வேலைகளுக்கான அணிப்பிரிப்பாகவே அமைந்துவிட்டது. வேலைகள் பங்கிடப்படும்போது ஆகக்கடுமையாக வேலைகளே எமது 50 கலிபர் அணிக்கு வழங்கப்படும். அந்த வழியே வந்ததுதான் ரவர் பூட்டும் வேலையும். ‘உவங்கள் கலிபர் ஒண்டும் தரப்போறேல. உது சும்மா மடார் வேலை செய்யிறதுக்கு ஒரு ரீம் தேவையெண்டதுக்காக பிரிச்சதுதான்’ என்று எமக்குள் பம்பலாகப் பேசிக் கொள்வோம். இந்த ‘மடார்’ வேலைகளைச் செய்யும் அணியில் சுவர்ணன் இருப்பது எப்பேர்ப்பட்ட விளைவு? பின்னாளில் GPMG ஆயுதத்துக்கென ஓரணி பிரிக்கப்பட்டபோது அதிகம் மகிழ்ந்தது நாம்தான். எமது கொம்பனிக்கு நல்லதொரு கனரக ஆயுதம் கிடைக்கிறது என்பதற்காகவன்று, எமது சுமைகளைப் பங்கிட இன்னோர் அணி வந்த மகிழ்ச்சியே அது. எமது கலிபர் அணிக்கான கடின வேலைகள் அவர்களோடும் பங்கிடப்பட்டன. சுவர்ணின் நகைச்சுவையுணர்வு அலாதியானது. எமது கொம்பனியிலிருந்த அணிகள் காட்டுக்குள்ளிருந்த தளத்திலேயே தனித்தனிக் கொட்டில்களில் தங்கியிருக்க, எமது 50 கலிபர் அணி சற்றுத்தள்ளி வெட்டைக்கு அண்மையாகத் தங்கியிருந்தது. அதிகதூரம் எம்மை நடக்கவைத்த கடுப்பு எமக்குள் இருந்தது. ‘கலிபரைத் தந்திட்டு வெட்டைக்குப் பக்கத்தில விட்டாலும் அதில விசயமிருக்கு. இது சும்மா பேருக்கு ஒரு ரீமை வைச்சுக்கொண்டு வெட்டைக்குப் பக்கத்தில இருங்கோ எண்டா என்ன நியாயம்?’ என்று சுவர்ணன் பேசிக்கொண்டிருப்பான். அதுவரை அணியின் பெயரில் மட்டுமே கொண்டிருந்த கலிபர் ஒருநாள் இரவில் எமது கொட்டிலுக்கு வந்தது. அதற்கு முன்பு நாங்கள் 50 கலிபர் பார்த்திருக்கிறோம். அமைப்பில் இணையமுன்பும் பார்த்திருக்கிறோம், இணைந்தபின்னரும் பார்த்திருக்கிறோம். சிறப்புப் பயற்சி பெற்ற தளத்தில் 50 கலிபர் அணியொன்றும் பிறிம்பாகப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னும் நெருக்கமாக அவ்வாயுதத்தை அறிந்திருக்கிறோம். தூக்கிப் பார்த்திருக்கிறோம். அதுவரை நாம் பார்த்ததெல்லாம் பெல்ஜியத் தயாரிப்பான 50 கலிபர் ஆயுதம். நல்ல உருப்படி. நல்ல நிறையும்கூட. அதைத் தூக்குவதற்கும் இயக்குவதற்கும் மிகுந்த உடற்பலமும் பயற்சியும் தேவை. ஆயுதத்தைப் பார்த்தாலே ஒரு பயமும் மதிப்பும் தோன்றும். அதை இயக்குபவர்களை வித்தியாசமாகப் பார்க்கத் தோன்றும். ஆனால் இப்போது எமக்குத் தரப்பட்டிருப்பது அப்படிப்பட்ட ஆயுதமில்லை. அதை 50 கலிபர் என்று சொன்னபோது சிரிப்புத்தான் முதலில் வந்தது. 50 கலிபர் ஆயுதத்துக்கென எமது மனதிலிருந்த விம்பம் இவ்வாயுதத்தோடு பொருந்தவில்லை. இது மிகவும் நிறைகுறைந்த, ஒல்லியான ஓர் ஆயுதம். சீனநாட்டுத் தயாரிப்பு. வந்தவர்கள் இறக்கிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். நம்பமுடியாமல் குமுதன் குழல்விட்டத்தை அளந்தான். 12.7 mm வருகிறது, அப்போ சரிதான், இது 50 கலிபர் தான். முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான். மறுநாள் காலை ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு எமது தளத்தின் ஒன்றுகூடலுக்குச் செல்ல வேண்டும். இதைக் கொண்டுபோனால் 50 கலிபர் என்று யாரும் நம்பப்போவதில்லை. நம்பினாலும் எமக்கான மதிப்பு இருக்கப்போவதில்லை. ‘இதைவிட ஒரு PK LMG யே திறம் போல கிடக்கு’ என்று யாராவது நக்கலடிக்கக் கூடும். இதுவரை கட்டியெழுப்பியிருந்த விம்பம் கலைந்துபோய்விடும். சுவர்ணன் ஒரு திட்டத்தைப் போட்டான். ஆயுதத்தைப் பாய்களால் சுற்றி, பிறகு படுக்கை விரிப்பால் சுற்றி கொஞ்சம் பெரிய உருப்படியாக்கினான் சுவர்ணன். அடுத்துவந்த ஒருகிழமைக்கு எமது கொம்பனிக்கு அப்படி உருப்பெருப்பிக்கப்பட்ட உருப்படியைத்தான் எமது 50 கலிபர் என்று காட்டிக் கொண்டிருந்தோம். எமது கொட்டில்பக்கம் யாரையும் வரவிடாமலும் பார்த்துக் கொண்டோம். மீட்கப்பட்ட முல்லைத்தீவில் 1997 தைமாதம் 50 கலிபர் பயிற்சிக்காகப் போயிருந்தோம். அங்கும் அவனது சேட்டைகள் தொடர்ந்தன. கடற்புலி அணியிலிருந்து பயிற்சிக்கு வந்திருந்த சிலர் இவனை உண்மையிலேயே ஒரு பயிற்சியாசிரியர் என்று நினைக்க வைத்துவிட்டான். பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் தொடர்சூட்டுப் பயிற்சிக்கான நாள். பத்து ரவைகளைத் தந்து பனையில் கட்டப்பட்டிருக்கும் பட்டத்துக்குச் சுடச் சொன்னார்கள். ஒரு விசையழுத்தத்தில் எவ்வளவு குறைவான ரவைகளைச் செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு எம்மால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். ஒரு விசையழுத்தத்தில் அதிகபட்சம் மூன்று ரவைகளுக்கு மேல் சுடாமலிருப்பதே நல்ல பெறுபேற்றைப் பெற உதவும். அதேநேரம் மொத்தச் சூட்டு நேரமும் கவனிக்கப்படும். பத்து வினாடிகளுக்குள் பத்து ரவைகளையும் சுட்டிருக்க வேண்டும். நாங்களெல்லோரும் மூன்று அல்லது நான்கு விசையழுத்தங்களில் பத்து ரவைகளைச் சுட்டோம். ஓரளவு நல்ல பெறுபேறுதான். சுவர்ணனின் முறை வந்தது. ஒரே விசையழுத்தல்தான். பத்தும் பறந்து போனது. முக்காலியின் முன்கால் அப்படியே எழுந்து அந்தரத்தில் நின்றது. அந்த நிலையிலேயே எங்களைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். ‘எருமை!! எல்லாத்தையும் காத்தில பறக்கவிட்டிட்டு பெரிய றம்போ மாதிரி போஸ் குடுக்கிறான் பார்’. ரகுவண்ணா சொன்னார். சூட்டுப்பயிற்சிக்குப் பொறுப்பான பயிற்சியாசிரியர் முகத்தில் கடுப்பு. ஆனால் சுவர்ணனைப் பொறுத்தவரை எல்லாம் நல்லபடியாகவே நடந்தது போல் நடந்துகொண்டான். சுட்டுவிட்டு நேரே ஆசிரியரிடம் போன சுவர்ணன், நிறுத்தற் கடிகாரத்தைப் பார்த்தபோது அது இரண்டு வினாடிகள் சொச்சத்தைக் காட்டியது. ‘உது பிழை மாஸ்டர், பத்து ரெளண்ட்சும் ஒரேயடியா அடிக்க ஒரு செக்கனுக்கும் குறைவாத்தான் பிடிக்கும். நீங்கள் சரியான நேரத்தில அமத்தேல’ என்றான். வாத்தியாரின் முகத்தைப் பார்க்க வேண்டும். பயிற்சி முழுவதும் முடிந்து முல்லைத்தீவிலிருந்து எமது தளத்துக்குத் திரும்பியிருந்தோம். அப்போது புதிதாக வேறு படையணியிலிருந்து நூறுபேர் வரை எமது தளத்துக்கு வந்திருந்தார்கள். வேறோர் அலுவலாக சுவர்ணன் தவிர்த்து நாங்கள் சிலர் வெளியே ஒருகிழமை சென்றுவிட்டுத் தளம் திரும்பியபோது புதிதாக வந்த கொம்பனி ‘சுவர்ணன் மாஸ்டர்’ என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவுநாளும் அவன் பட்ட கஸ்டங்கள் வீண்போகாமல் தனது இலக்கை அடைந்திருந்தான் சுவர்ணன். நாங்கள் தலையிலடித்துக் கொண்டோம். இப்போது அவன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருந்தான். தான் ஒரு ‘பிஸ்டல் காய்’ என்று சொல்லவும் அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருந்தான். இந்தக் கொடுமைகளைச் சகித்துக் கொண்டு நாங்களும் பயணித்தோம். இயக்கத்தில் பிஸ்டல் என்பது தகுதியை நிர்ணயிக்கும் ஓர் ஆயுதமாக அப்போது இருந்தது. ‘பிஸ்டல் காய்’ என்றால் அவர் பெரிய தளபதி என்பது கருத்து. சுவர்ணன் தன்னை பிஸ்டல் காயாக பாவனை பண்ணத் தொடங்கியிருந்தான். இந்தப் புதுக்கொடுமை தொடங்கியதால் ‘மாஸ்டர்’ கொடுமையிலிருந்து நாங்கள் தப்பித்திருந்தோம். கணேஸ் தான் அதிகம் மாட்டுப்படுபவன். கணேஸ் தன்னுடைய மெய்க்காப்பாளன் என்று சொல்லிக்கொள்வான். ‘கணேஸ்! அண்ணனின்ர பிஸ்டலை ஒருக்கா எடுத்தா’ என்று கட்டளைகள் வரும். அந்தநேரத்தில் கையில் கிடைக்கும் கட்டைகளைத் தூக்கி எறிந்து ‘இந்தா உன்ர பிஸ்டல்’ என்று கணேஸ் பதிலளிக்கத் தொடங்கியபிறகு சுவர்ணன் தனது மெய்க்காப்பாளனை மாற்றிவிட்டான். முகத்தில் சின்னச் சிரிப்புக்கூட இல்லாமல் அவன் அடிக்கும் லூட்டிகள் அளவு கணக்கற்றவை. மிகமிக அவசரமாக அணியை வரச்சொல்லி அழைப்பு வந்திருக்கும். எல்லோரும் ஆயத்தமாகி வரிசையாக நிற்கும்போது சுவர்ணன் மட்டும் அங்கிங்கென்று ஏதோ தேடிக்கொண்டிருப்பான். ‘டேய் சுவர்ணன்! என்ன கோதாரியத் தேடுறாய்?’ ‘என்ர பிஸ்டலைக் காணேல. நீயே எடுத்தனீ?’ அணிமுழுவதிடமும் உதைவாங்கித்தான் அன்று வெளிக்கிடுவான். எதிர்பாராத சந்தர்ப்பமொன்றில் கொம்பனிப் பொறுப்பாளர் சுவர்ணனை அணித்தலைவராக்கிவிட்டார். நாங்கள் ஆனந்தக் கூத்தாடினோம். அப்பாடா! இனி உவனின்ர தொல்லைகள் இருக்காது என்று பெருமூச்சு விட்டோம். ஆனால் இரண்டு நாட்களின்மேல் அது நீடிக்கவில்லை. அவன் அடித்த பிஸ்டல் குழறுபடியில் மீண்டும் பழையபடி கலிபர் சூட்டாளனாகவே நியமிக்கப்பட்டான். இப்படியெல்லாம் பிஸ்டலை வைத்துக் கனவு விளையாட்டுக்களை நடத்தி எங்களை எரிச்சல்படுத்தியும் மகிழ்வித்தும் வைத்திருந்த சுவர்ணன் நிசமாகவே ‘பிஸ்டல் காய்’ ஆனான். அதுவும் தேசியத் தலைவரிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான். ஒன்றாக இருந்த நாம் காலவோட்டத்தில் பிரிந்து பணிகள் மேற்கொண்ட போது சுவர்ணன் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் கடமையாற்றினான். 2002 இல் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்படும்வரைக்கும் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரங்கமாகச் செயற்பட்டு வந்தது. இப்போது உமையாள்புரத்தில் ஆயத்தப்படுத்தப்பட்ட சண்டைக்கு வருவோம். ஆனையிறவைச் சூழவுள்ள பகுதிகளின் தாக்குதல் நடத்தப்படும்போது கடுமையான காயங்களுக்கு உள்ளாகும் படையினரை பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சிறிலங்கா வான்படையின் பெல் ரக உலங்கு வானூர்தியே பயன்படுத்தப்பட்டு வந்தது.. வரும்வழியிலோ அல்லது திரும்பிச் செல்லும்போதோ அவ்வானூர்தியைத் தாக்கியழிக்கும் விதமாக ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக, விமான எதிர்ப்பு ஏவுகணையைச் சுமந்தபடி ஓர் அணி தென்மராட்சிப் பகுதிக்குள் ஊடுருவி நிலையெடுத்திருந்தது. அந்த அணியின் தலைவனாகவும் ஏவுகணையை இயக்குபவனாகவும் சுவர்ணன் இருந்தான். வானூர்தியின் பாதையொழுக்கு ஏற்கனவே வேவு பார்க்கப்பட்டிருந்தது. சுவர்ணனுக்கான இலக்கை வரவைப்பதற்காகவே இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரணி மேஜர் சங்கரின் தலைமையில் களத்தில் இறங்குகிறது. ஆனால் அத்தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைக்காரணம் சிலரைத் தவிர வேறெவருக்கும் தெரியாது. உமையாள்புர இராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கான திட்டம் மட்டுப்படுத்தப்பட்ட அளவைக் கொண்டது. இராணுவத்தரப்பில் கடுமையான காயக்காரரை உண்டாக்குவதன் ஊடாக குறிப்பிட்ட உலங்கு வானூர்தியை வரவைப்பதே முதன்மை நோக்கம். திட்டத்தின்படி தாக்குதல் நடத்தப்பட்டு எதிரிக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடியே காயக்காரரை ஏற்ற உலங்குவானூர்தி வந்தது. வரும்போது தாக்குதல் நடத்தப்படவில்லை. திட்டம் தெரிந்தவர்களுக்கு பதட்டம். ஏவுகணையோடு நிலையெடுத்திருக்கும் சுவர்ணனின் வீச்செல்லையைத் தாண்டி வானூர்தி பயணித்தாலேயே திட்டத்தில் பிசகு ஏற்பட வாய்ப்புண்டு. அல்லது எதரியின் பகுதிக்குள் நிலையெடுத்திருக்கும் அணியை எதிரியணிகள் கண்டு தாக்குதல் நடத்தினாலும் பிசக வாய்ப்புண்டு. சுவர்ணனுடன் சீரான தொடர்பு இருந்தது. எல்லாம் சரியாக நடக்குமென்று தகவல் தந்துகொண்டிருந்தான். காயக்காரரை ஏற்றிக்கொண்டு பலாலி திரும்பிக் கொண்டிருந்த உலங்கு வானூர்தி எதிர்ப்பார்த்தபடியே சுவர்ணனின் எல்லைக்குள் வந்தது. அன்று அந்த இலக்கு சுவர்ணனால் அழிக்கப்பட்டது. அவ்வெற்றிகரத் தாக்குதலை நடத்தியதற்குப் பரிசாக கைத்துப்பாக்கியொன்று தேசியத் தலைவரால் சுவர்ணனுக்குப் பரிசளிக்கப்பட்டது. முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான். ஈழவிடுதலைக்கான போராட்டப்பயணித்தில் தொடர்ந்து லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பணியாற்றிய மேஜர் சுவர்ணன் பின்வந்த ஒருநாளில் தாயக விடுதலைக்காக தனது மூச்சை நிறுத்திக் கொண்டான். -அன்பரசன்- https://www.thaarakam.com/news/133895
  24. “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் குமலவன் / லவன் ஆகிய கரும்புலி மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள். பாவம் – அன்று அவன் முகத்தில் சிரிப்பில்லாது இறுக்கம் இருந்தது. உண்மையாகவே பேசினான். “இயக்கத்திற்குப் போனால் திரும்பி வரமாட்டன்” “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன்” இதைக்கேட்டதும் பெற்றவள் உள்ளம் பதறிப்போனாள். என்னென்றுதான் தாங்குவாள் தன் ஆசைமகனின் பிரிவை. நெஞ்சிற்குள் வெடித்த கலவரம் கண்களையும் கலங்கச்செய்ய அவள் எதையும் புரியாதவளைப்போல பாவனை செய்து பேசாதிருந்துவிட்டாள். அவனுக்கும் அம்மாவை விட்டுப் பிரிய விருப்பமில்லைத்தான். ஆனாலும் ஊரில் தினமும் நடக்கின்ற அவலங்கள் ஒவ்வொன்றும்தான் அவனின் நெஞ்சை மெல்ல மெல்லக் கலக்கின. பள்ளிக்கூடம் செல்கின்ற வேளைகளிலோ வயலிற்குள் வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுதுகளிலோ ஊரில் விளையாடிக்கொண்டிருக்கும் நேரங்களிலோ கேட்கின்ற அவலமான வெடியோசை அடுத்தகணம் நடுங்கிக்கொண்டு ஓடும் ஊர். உயிர்காக்க ஓடுபவர்களையே வழிமறித்து வெறித்தனம் புரியும் இராணுவங்கள், எல்லாம் சின்ன வயதினிலே இருந்து அவனின் மனதில் பதிந்த விடயங்கள். கிராமம் அமைதியாகத்தான் இருந்தும் அடிக்கடி சோகங்களும் அவலங்களும் ஆங்காங்கே தலையெடுக்கும். ஊருக்குள் நுழைகின்ற வாசலில் இருக்கும் பாலத்தடியில் வைத்து கிளைமோர் தாக்குதல்கள் ஏதாவது இயக்கம் செய்துவிட்டுச் சென்றால். அந்த இழப்பின் ஆத்திரத்தில் கிராமங்கள் மீது சிப்பாய்கள் குதிப்பார்கள். யாரும் எதுவும் பேசமுடியாது. கைகட்டி நடுங்கியபடி நிற்பார்கள். ஆத்திர வெறியோடு ஊருக்குள் நுழைகின்ற இராணுவம் சில உயிர்களை சுலபமாய் பறித்துச் செல்லும். ஊரே ஒப்பாரி வைக்கும், சோகத்தில் மூழ்கும். பின் வழமைக்குவர மறுபடி அவலம் வரும். அன்று பகல் பொழுது மயங்கிவிடும் ஒரு வேளை ஊரெங்கும் பரபரப்பு, பதட்டம். எல்லோரையும் கைதுசெய்து பாலத்தடிக்கு இழுத்து வந்தார்கள். திருதிருவென விழித்து விழிகளில் மருட்சியுடன் வந்தவர்களிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏற்கனவே பிடிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட இருவர் ஊர் மக்கள் முன்னிலையில் உயிரோடு ரயர் போட்டு எரிக்கப்பட்டார்கள். அந்த ஜீவன்களின் உயிர் வாழ்வதற்கான துடிப்பும்… அதில் இருந்து தப்புவதற்கு தவித்த தவிப்பும்… மெல்ல மெல்ல உடல் கருக உயிர் பிரிந்ததும் எல்லாரையும் கோபப்பட வைத்தது. ஆனால் எதுவும் செய்ய இயலாதவர்களாய் நின்றார்கள். அப்ப இவன் சின்னப் பொடியன். சிப்பாய் ஒருவன் வெறி நிறைந்த பார்வையோடு, “இப்படித்தான் ஒங்களிற்கும்” என்றுவிட்டு சிரித்தான். அட்டகாசமாகச் சிரித்தான். இந்த வரிகள்தான் அவன் இதயத்திலும் வானத்திலும் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. எங்களை நாங்களே பாதுகாக்க வேண்டும் என்ற முடிவுக்கு அந்தப் பிஞ்சுமனம் வருகின்றது. அதனால்தான் அவன் தன் பாசங்களை பிரிந்து மனதைக் கல்லாக்கி கசிகின்ற நினைவுகளோடு புலிகளின் பாசறைக்குள் புகுந்தான். குமழவன்… 1980.09.12இல் சிவப்பிரகாசம் கமலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வனாக பழுகாமத்தில் பிறந்தவன். ஒரு அண்ணணும் ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளும் அவனது உடன் பிறந்த உறவுகள். அழகான குடும்பம், வறுமையென்று சொல்வதற்கில்லை. நாட்டின் சூழ்நிலை அவனை போராடத் தூண்டியது. மட்டக்களப்பு காட்டு பயிற்சிப் பாசறை ஒன்றில் தன் பயிற்சிகளை முடித்த அவன், அடுத்தடுத்து மட்டக்களப்பில் நிகழ்ந்த மூன்று முகாம் தாக்கியழிப்புக்களில் கலந்துகொண்டான். வன்னி நோக்கி தாக்குதல் அணிகள் புறப்பட்டபோது இவனும் அணிகளோடு சேர்ந்து வன்னி வந்தான். களங்களில் ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த அவனது கால்கள் வலித்தாலும் அதைவிட சின்ன வயதிலே அவனது மனதில் பதிந்துபோன ஆக்கிரமிப்பாளர்கள் ஏற்படுத்திய காயங்கள் அதிகமாக வலித்தன. வயல் வேலை செய்து குடும்பம் நடத்திக்கொண்டிருந்த சித்தப்பா வயலுக்குள்ளேயே செல்லடிக்கு இறந்து போனமை, வீட்டில் விசேட கொண்டாட்டம் என்றால் ஊரிற்கு வெளியே இராணுவமுகாம் தாண்டிச் சென்று சந்தையில் பொருட்கள் வேண்டி வரவேண்டும். அண்ணன்தான் உடுப்புகளும் பொருட்களும் வேண்டுவதற்குப் போவான். இந்த நேரங்கள் எல்லாம் பிடித்து விசாரிப்பதும் அடிப்பதுமாக இராணுவம் தந்த வேதனைகள். எந்த நேரமும் நிம்மதி இழந்த பதட்டமும் இருக்கின்ற ஊர், இந்த நினைவுகளே அவனுக்கு பாரமாய் கனத்தன. அதுவே ரணமாய் வலித்தது, அவன் நெஞ்சில் அணையாது தீயாய் எரிந்தது. வன்னிக்கு வந்ததும் அவன் எண்ணத்தில் இருந்தவற்றை தலைவருக்கு எழுதினான். பதிலுக்காகக் காத்திருக்கும் நாட்களில ஜெயசிக்குறு நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் அணிகளோடு சேர்ந்து சமரிட்டான். எல்.எம்.ஜீ கனரக ஆயுதம்தான் இவனது ஆயுதம். அந்த ஆயுதத்தோடுதான் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் நடவடிக்கைகளில் அதிகமாய் ஈடுபட்டிருக்கிறான். ஜெயசிக்குறு எதிர்ச்சமர் களத்தில் ஒருநாள் எதரியின் பெரிய முன்னேற்ற நடவடிக்கை ஒன்றை முறியடிப்பதற்காய் ஒவ்வொரு போராளிகளும் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். சண்டையின் ஒரு கட்டத்தில் குமழவன் நிலை எடுத்திருந்த புற்றிற்கு அருகாக எறிகணைகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. பெரிய மரக்கொப்புகளும் மண்ணும் அவனை முழுமையாக மூடியிருந்தாலும் சில கணநேரம் இயங்க முடியாதுபோன அவனும் அவனது ஆயுதமும் மறுபடியும் இயங்கத் தொங்கின. அந்த இறுக்கம் நிறைந்த களச்சூழலில் அவனின் தளராது உழைப்பும் அன்றைய வெற்றிக்கு வழியமைப்பதாகவே இருந்தது. ஜெயசிக்குறு களமுனையிலேயே கள அறிக்கையாளனாக அவனது பணி மாற்றப்பட்டது. அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில்தான் அவன் இத்தனை நாள் காத்திருந்த கரும்புலி அணிகளுடன் இணைவதற்கான அனுமதி கிடைத்தது. சின்ன வயதில் இருந்தே நெஞ்சிற்குள் ஆழப்பதிந்துபோன சோகங்களிற்கும் அவலங்களிற்கும் முடிவு காணுவதற்காய் அயராது உழைத்தவன் 20.05.2000 அன்று ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர் வெற்றிக்காய் கோப்பாய் மண்ணிலே வீரகாவியமானான். ”இயக்கத்திற்குப போனா திரும்பி வரமாட்டன். ரங்கண்ணா மாதிரி கரும்புலியாத்தான் வெடிப்பன்”. சிறுவயதில் அவன் உரைத்த வரிகள் இப்போதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி 2004 – தை 2005) https://www.thaarakam.com/news/132496
  25. கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! Last updated May 20, 2020 மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரணமன் ஆகிய மாவீரரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பள்ளி, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற்குள்ளும் பதுங்கியிருந்த சிலரைத் தவிர. பச்சைக்கரைப் பாவாடையைப் போல வயலும் நீலத் தாவணிபோல வாவியும் கதிரவன் எழும்போதும் விழும்போதும் சிவக்கும் வானமுமாக கண்களுக்கு எப்போதுமே விருந்துவைக்கும் பழுகாமம், நாட்டுக் கலைகளுக்கும் நாவன்மை மிக்க பேச்சாற்றலுக்கும் நாவூறவைக்கும் மீன்கறி வகைகளுக்கும் பேர்போனது. அந்த ஊரின் வரலாற்றுத் தொன்மை பற்றி “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்”புகழுடன் பேசுகிறது. எமது தாயகத்தின் பண்பாட்டுத் தொட்டில்களில் ஒன்றான பழுகாமத்தின் இப்போதைய சிறப்பிற்கு கண்டுமணி மகாவித்தியாலயமும் காரணம். படுவான்கரையை முன்னேற்றுவதற்கு ஓயாது உழைத்து அந்தப் பாடசாலை உருவாவதற்கு அடித்தளமிட்ட கண்டுமணி ஐயாவின் பெயரே அந்தப் பாடசாலைக்கும் இடப்பட்டதில் ஊரில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியே. இப்போது அது கிழக்குப் புறமாக தாராளமான அளவில் ஒரு விளையாட்டுத்திடலும் இரண்டு மாடிக் கட்டிடங்களும் ஆய்வு கூடமும் அந்தப் பகுதியின் கொத்தணிப் பாடசாலை என்ற களையோடு இருந்தது. பழுகாமத்தில் இன்றிருக்கும் பெரியவர்களில் பலர் கற்றுத் தேர்ந்ததும் சமூக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் உழைத்த பலருக்கு எழுத்தறிவித்ததும் அதன் மேல் எழுதப்படாத பெருமைகள். அவற்றோடு சேர்த்து தாயக மீட்புப் போரிலும் பங்கேற்கப்போகும் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தப் பள்ளியை ஒரு உழுவூர்தி நெருங்கிக் கொண்டிருப்பதற்கான இரைச்சல் இப்போது கேட்கிறது. மதிலின் பின்னால் பதுங்கியிருக்கும் உருவங்கள் அசையாவிட்டாலும் ஒரு பரபரப்பிற்கு உள்ளாகின்றன. ஒரேயொரு உருவம் மட்டும் மெதுவாக தலையை நீட்டி நெருங்கும் உழுவூர்தியை உற்றுப் பார்க்கிறது. அதன் முகத்தில் நிறைவு தெரிய தலையை உள்ளே இழுத்த பின் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருந்த உருவங்களுக்கான சைகைகள் கிடைக்கின்றன. இப்போது மறைந்திருந்த உருவங்களின் கைகளில் ஆயுதங்கள் தெரிகின்றன. பெரும்பாலானவை கைக் குண்டுகள். தாக்குதல் ரைபிள்கள் இரண்டு. உழுவூர்தியின் பெரிய சில்லுக்களின் மீதான சுரிக்காப்புத் தகடுகளிலும் பெட்டியிலுமாக வந்துகொண்டிருந்த ஆட்களில் சிலர் சீருடை அணிந்திருந்தார்கள். சிலர் இயல்பான பொது உடையில் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் ஆயுதங்கள். அருகிலிருந்த முகாமிலிருந்து மனித வேட்டைக்காகக் கிளம்பி வந்துகொண்டிருந்த அவர்கள் முதல் நாளும் அதேபோல வந்து மனித வேட்டையை நடத்தியிருந்தார்கள். அவர்களின் வேட்டையில் குருத்துக்கள் முறிக்கப்பட்டன. எல்லா வயதுப் பெண்களும் சூறையாடப்பட்டார்கள். வயல் வாடிகளுக்குள்ளே உயிருடன் குடும்பங்கள் எரிக்கப்பட்டன. ஒவ்வொரு இரவும் உயிர் பிழைப்பதற்கான ஓய்வில்லாத ஒட்டமாக இருந்தது. பிய்த்தெறியப்பட்ட குடும்பங்கள் காடுகளிலும் வெளியூர்களிலுமாக கொடிய குற்றவாளிகளைப் போல ஒளித்தோடிக கொண்டிருந்தார்கள். மனித வேட்யைக்காரர்கள் தகப்பனுக்காக மகனையும் தமையனுக்காக தங்கையையும் குதறிக் கொண்டிருந்தார்கள். அவ்வகையான வெறியாட்டத்திற்காக வந்துகொண்டிருந்த அந்தக் கும்பல் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தை நெருங்கியபோது திடீரெனத் தோன்றிய ஒரு உருவம் கையிலிருந்த ரைபிளால் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து உழுவூர்தியைச் சுற்றிலும் தோன்றிய உருவங்கள் கைக்குண்டுகளாலும் ரைபிளாலும் தாக்கத் தொடங்க திருப்பிச் சுடும் திராணியற்றுச் செத்து விழுந்தது மனிதவேட்டைக் கும்பல. தலை தெறிக்கத் தப்பி ஓடியோர்போக விழுந்துகிடந்தவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டன. தாக்கிய உருவங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கிய பின் வெடிப்புகையும் இரத்தமுமாகக் கிடந்த சாலையில் விழுந்துகிடந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினரையும் துரோகிகளையும் ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு விடுபட்டுக் கிடந்த மேலுமொரு ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறிய கடைசி உருவம், ரமணன். அந்தச் சண்டையின் வேவு நடவடிக்கையைத் திட்டமிட்டதிலிருந்து கடைசியாக நின்று போராளிகளைப் பாதுகாப்பாக மறைவிடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது வரை தலைமை தாங்கி நடத்திய ரமணனின் அகவை அப்போது 21. பயிற்சி பெற்று ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது. கந்தையா உலகநாதன் என்ற இயற்பெயருடன் பழுகாமத்தில் பிறந்து கண்டுமணி மகாவித்தியாலயத்தில் கல்விகற்று 86ம் ஆண்டின் முற்பகுதியில் போராட்டத்தில் இணைந்து மட்டக்களப்பு 3ம் பாசறையில் பயிற்சி முடித்த ரமணனின் குடும்பம் விடுதலைக்காகச் செலுத்திய விலை சாதாரணமானதல்ல. ரமணன் இயக்கத்தில் இணைந்த சில நாட்களிலேயே அவரின் அண்ணனும் இணைந்து விடுகிறார். இன்னுமோர் அண்ணன் (கந்தையா மோகனதாஸ்) ஆரம்பத்தில் பிறிதொரு அமைப்பில் தனது விடுதலைப் பணியை ஆரம்பித்திருந்தாலும், தேசியத் தலைவரின் மகத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியப் படையாலும் துரோகிகளாலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர். அடுத்த தங்கையும் போராளியாக பல ஆண்டுகளை நிறைவு செய்தவர். இன்னுமொரு சகோதரர் போராளியாகவிருந்து தமிழீழக் காவற்றுறையில் பணியாற்றுபவர். போராட்டத்தை அன்றிலிருந்து இன்றுவரை வருடிக்கொடுக்கும் அவரின் தாயார் எதிர்கொண்ட துயரங்களும் கொஞ்சமல்ல. அடிக்கடி தேடிவரும் படைகளுக்கும் தொடரும் துரோகிகளுக்கும் ஈடுகொடுப்பதிலேயே அந்தத் தாயின் வாழ்கை கழிந்துகொண்டிருந்தது. அவ்வாறான ஒரு சம்பவத்தில் ஆத்திரமுற்ற எதிரிகள் அவரின் வீட்டைக் குண்டு வைத்துத் தரைமட்டமாகத் தகர்த்து விடுகிறார்கள். அவரின் தங்கை வீட்டில் தஞ்சமடைய, அந்த வீடும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இவ்வாறான சோதனைகள் சூழ்ந்த வாழ்க்கையினுள்ளும் எதிரி மீதான தனது தாக்குதல்களில் சற்றும் தளர்வைக் காட்டி யவரல்ல ரமணன். தனது வீட்டை எதிரிகள் நெருங்குவதை அறிந்து அங்கே வைக்கப் பட்டிருந்த மரங்களுக்குக் கீழே பொறி குண்டை அமைத்துவிட்டு விலகிச் செல்ல அங்கேவந்து அடாவடி செய்த படையினர் இருவர் கொல்லப்படுகிறார்கள். பலர் காயமடைகிறார்கள். தேசியத் தலைவரின் கெரில்லாத் தந்திரோபாயங்களுக்கு மிகச் சிறந்த முறையில் களநிலை வடிவம் தந்தவர்களில் ரமணனும் ஒருவர். எந்தப் பொருள் எப்போது வெடிக்கும் எங்கிருந்து சன்னங்கள் கிளம்பும் என்று இரவும் பகலும் எதிரியை ஏங்கவைத்த பெருமை ரமணனுக்கே உண்டு. நியுட்டன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்தபோது தனது புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாயத்தைத் துவக்கிய ரமணன், துரோகி ஒழிப்பிலும் ஊடுருவல் களை முறியடிப்பதிலும் தனது தனித்துவ முத்திரையை பதித்திருக்கிறார். ரமணனைக் கொல்வதற்கான பல சதிகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டிருந்த போதும் அத்திட்டங்கள் அனைத்துமே ரமணனின் நுட்பமான தகவற் கட்டமைப் பால் முறியடிக்கப்பட்டன. அவரின் தந்தி ரோபயச் செயற்பாடுகள் தாயகத்திற்கு வெளியிலும் நீண்டிருந்தன. ரமணனின் புலனாய்வுப் பேறுகளைப் பட்டியலிடுவது சிரமம். “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன். தேவை கருதி அவர் மாவட்ட மட்டத்தில் பணியாற்ற வேண்டியதாயிற்று,” என்கிறார் தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு. இந்தியப் படைகளின் ஆக்கிரமிப் புக் காலத்தில் தனித்துவமான திட்டங்களைத் தீட்டி தாக்குதல்களைத் தலைமை தாங்கி நடத்திய ரமணன் தம்பிலுவில் துரோகிகளின் முகாம் தகர்ப் பில் ஒரு பகுதித் தலைமையை ஏற்றுச் சமர் செய்தவர். அந்தச் சமரில் விழுப்புண்ணடைந்தவர். அதன் பின், பூநகரித் தவளைச் சமரிலும், ஆனையிறவுப் பீரங்கித் தளத்தின் மீதான தாக்குதலிலும் அணித் தலைமைப் பங்கேற்றுப் படை நடத்தியவர். ஜயசிக்குரு விஞ்ஞானகுளச் சமரின்போது விழுப்புண்ணடைந்தார். கேணல் ரமணனின் போராட்ட வாழ்வின் தொடக்க நாட்களில் இருந்தே அவரோடு நெருக்கமாகப் பழகியவரும் பல சமர்க்களங்களை அவரோடு பகிர்ந்துகொண்டவருமான கேணல் ரமேஸ் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, “ஒரு சமரிலே ரமணனின் சம்பந்தம் இருப்பதைப் போராளிகள் அறியும்போது அவர்களுக்கு நம்பிக்கையும் சிறிலங்கா படையினர் அறியும் போது அவர்களுக்குப் பயமும் ஏற்படு வதுண்டு. அந்தளவிற்கு ரமணனின் திட்ட மிடல்கள் புகழ்பெற்றவையாக இருந்தன.” என்றார். படைத்துறைச் செயற்பாடுகளைப் புலனாய்வுத் தன்மையோடு நகர்த்துவது ரமணனின் தனித்துவம். 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம். துரோகி கருணா எமது மாவீரர்களை அவமதிக்கும் வகையில் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நீசத்தனத்தில் இறங்கியபோது கொதித்தெழுந்த உள்ளங்களில் ரமணன் முக்கியமானவர். அவமானத்தில் இருந்தும் அழிவிலிருந்தும் எமது மக்களையும் போராளிகளையும் காப்பாற்றும் பணியில் மிகப் பழுவான பணியொன்றை விரும்பி ஏற்கிறார் ரமணன். மிகச் சில போராளிகளுடன் மட்டக்களப்புப் பகுதியைப் பின்புறமாக அண்மித்து உள் நுளைகிறார். ரமணன் வந்துவிட்ட செய்தி விடுதலையை விரும்பிய மக்களுக்குத் தேனாக, துரோகி கருணாவிற்கோ இடியாகக் கேட்கிறது. ஏற்கனவே வாகரையை இழந்துவிட்ட கருணா இப்போது மாவடி முன்மாரியையும் இழந்து கொண்டிருப்பதைக் காண்கிறான். இந்த நேரத்தில் ரமணன் தொடுத்த தந்திரோபாயத் தாக்குதலால் நிலை குலைந்துபோய் தனது கையாட்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கருணா தப்பியோட முயற்சிக்கிறான். முதல் அணியாக குடும்பிமலைப் பிரதேசத்திற்குள் நுழைந்து கருணாவினால் கடைசி நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட நீலனின் வித்துடலை மீட்ட அணி ரமணனுடையது. பழுகாமமும் அதற்குத் தலைப்பாகை கட்டி நிற்கும் ஒட்டிச் சதுப்பு நிலமும் ரமணனுடைய நினைவுகளைத் தன் ஆழங்களில் தாங்கி நிற்கின்றன. கண்ணாக் காடுகளின் சலசலப்பிலும் கொக்குப் பீச்சல் திடலில் ஓய்வு கொள்ளும் பறவையினங்களின் பாட்டிலும் ரமணனின் பெயர் நிச்சயம் சொல்லப்படும். தாயகப் பயணப் பாதையில் விழுமுன்னமே முளை விட்ட விருட்சமாகத் தனது தனித்துவமான போர் உத்திகளைத் தந்து சென்ற ரமணன் என்றும் அந்த உத்திகளின் வடிவத்திலும் நினைவுகளின் ஆழத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார். வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் 2006 https://www.thaarakam.com/news/132188
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.