Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. பலர் கலந்துகொண்டால்தான் சுவாரசியமாக இருக்கும்! இந்த முறை சறுக்கு மரம் எப்படி வேலை செய்கின்றது என்று பார்ப்போம்😂
  2. ரணில் விக்கிரமசிங்க: One Man Government April 4, 2024 — கருணாகரன் — இலங்கை அரசியலில் One Man Government ஆகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. மட்டுமல்ல, அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரே ஆளாகியுள்ளார். ரணில் என்ன நினைக்கிறாரே அதுவே நடக்கிறது. அதுவே நடக்கக் கூடிய சூழலும் உள்ளது. அவரை மீறி எதுவும் இல்லை என்ற நிலை. இதைக் கட்டுப்படுத்தவோ இடையீடு செய்யவோ முடியாமல் எதிர்க்கட்சிகள் படுத்து விட்டன. எதிர்ப்பு அரசியல் என்பது காணாமலே போய் விட்டது. அங்கங்கே மெல்லிய தொனியில் அனுங்கலாகக் கேட்கும் குரலைத் தவிர, வேறெதுவும் இலங்கையில் இல்லை. நெடுங்காலமாக இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் உடைந்து, சிதறிச் சிறுத்து விட்டன. ஐ.தே.க உடைந்து ஒரு பகுதி ஐக்கிய மக்கள் சக்தி என சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்குகிறது. மற்றப்பகுதி ரணில் விக்கிரமசிங்கவோடு. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுண்டு ஒரு அணி பொதுஜன பெரமுன என ராஜபக்ஸக்களின் செல்வாக்கோடு செயற்படுகிறது. மற்றது மைத்திரிபால சிறிசேனவின் கீழ். அதிலும் ஒரு துண்டு தனியாகச் செயற்படவுள்ளதாக சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆயுதப்போராட்ட அரசியல், தேசிய நீரோட்ட அரசியல் என்ற பாராளுமன்ற ஜனநாயக அரசியல் ஆகிய இரண்டு வழி அனுபவங்களையும் கொண்ட ஜே.வி.பி ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் குழந்தையாகத்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதனால் எழுந்து நடக்க முடியவில்லை. தமிழ்த்தரப்பின் அரசியற் குரலைக் காணவே இல்லை. அது ஆழக்கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பதைப்போல யாருக்குமே பெரிதாகக் கேட்பதில்லை. அதற்குள் ஆயிரத்தெட்டுப் பிரிவினைகள். ஒரு காலம் ஈழ விடுதலை இயக்கங்கள் பெருகிக் கிடந்ததைப்போல இப்பொழுது தமிழ்த்தேசியக் கட்சிகள் பெருகிக் கிடக்கின்றன. ஈழவிடுதலை இயக்கங்களிலிருந்து பெற்ற அனுபவமோ என்னவோ தெரியவில்லை. இப்பொழுது தமிழ் மக்களும் தமிழ் அரசியற் குரலைப் பெரிதாகக் கவனத்திற் கொள்வதில்லை. அதற்கு உருவேற்றுவதற்குச் சிலர் உடுக்கடிகாரர்களைப்போல எப்படியெல்லாமோ முயற்சிக்கிறார்கள். ஆனால், சனங்கள் சன்னதங்கொள்வதைக் காணோம். பட்டறிவாக இருக்கலாம். பதிலாகப் பலரும் தம்மை விட்டாற் காணும் என்ற நிலையில், இன, மத பேதமின்றி நாட்டை விட்டுத் தப்பியோடுகிறார்கள். உயர் பதவியிலுள்ளவர்கள் கூட பதவியாவது மண்ணாவது என அரசு வழங்கியிருக்கும் ஐந்தாண்டுகள் ஊதியமற்ற விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு வெளியே பறக்கிறார்கள். போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியோரின் தொகையை விட இப்பொழுது வெளியேறுவோரின் தொகை அதிகம் என்று சொல்கின்றன புள்ளிவிவரங்கள். உண்மையும் அதுதான். கடவுச் சீட்டுப் பெறும் அலுவலகமும் வெளிநாட்டுத் தூதுவரகங்களும் சனங்களால் நிரம்பி வழிகின்றன. எஞ்சியிருப்போரில் பலரும் இனியும் காலத்தைக் கடத்த முடியாது என்று இலங்கைத் தேசிய அரசியலில் கலந்தும் கரைந்தும் போகிறார்கள். இதனால்தான் அங்கயன் ராமநாதன், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), டக்ளஸ் தேவானந்தா போன்றோர் அதிகூடிய வாக்குகளைப் பெறுகிறார்கள். நாடு யுத்த நெருக்கடியிலிருந்து மீண்டு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் தேசியப் பிரச்சினைகளில் ஒன்றான இனவாதம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை விட்டுத் தொலைப்பதற்கு யாரும் தயாரில்லை. அரசியல் கட்சிகளும் சரி, அரசியல் ஆய்வாளர்கள், பத்தியாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், மத பீடங்கள், புத்திஜீவிகள், அறிவு மையங்கள், விளிம்புகள் என எல்லா இடங்களிலும் எல்லாத் தரப்புகளிலும் இனவாதம் தாராளமாக ஊறிப்போய்க் கிடக்கிறது. மூன்றுவேளை சாப்பாட்டைப் போல இனவாதம் பலருக்கும் அவசியமான – பழக்கமான ஒன்றாகி விட்டது. அதை விட்டால் உயிரே போய் விடும் என்று எண்ணுகிறார்கள். சமாதானத்தை விட, அமைதியை விட, சுபீட்சமான எதிர்காலத்தை விட, அந்நிய தலையீடுகள், ஆக்கிரமிப்புகளை விட, பிற சக்திகளிடம் முழந்தாழில் நின்று கையேந்துவதை விட, நாடு கடனில் மூழ்குவதை விட, அரை வயிறு பட்டினி கிடப்பதை விட இனவாதம் ருசிக்கிறது எல்லோருக்கும். இந்த மாதிரி மூடத்தனம் வேறில்லை. என்னதான் சொல்லுங்கள். நாங்கள் மூடர்களாகவும் முட்டாள்களாகவும் இருந்து விட்டுப் போகிறோம். நம்முடைய முயலுக்கு ஒன்றரைக் கால்தான் என்பதிலிருந்து எவரும் முன்னகரத் தயாரில்லை. இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு எந்த வைத்தியமுமில்லை. இந்தச் சூழலில்தான் தான் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. அரசியல், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வந்த ஆபத்பாந்தகர். இனவாதத்துக்கு எதிரான பேர்வழி. அமைதியின் நேசன். மூழ்கும் நாட்டை மீட்க வந்த ஒரேயொரு மாலுமி என்று தோற்றம் காட்டுகிறார் ரணில் விக்கிரமசிங்க. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியிலிருக்கும் ரணில் இன்று சர்வ வல்லமை பொருந்திய பெருந்தலைவர். 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தாராளமாகக் கை கொடுக்கிறது. சர்வதேச நாடுகளின் ஆதரவு ஒரு பக்கம் அவருக்குக் கிடைக்கிறது என்றால், சர்வதேச நாடுகளை லாவகமாகக் கையாளும் அவருடைய கலை இன்னொரு பக்கமாகக் கைகொடுக்கிறது. இதனால் ரணில் விக்கிரசிங்கவை எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. பலருக்கும் அவர் மீது பொருமல்கள் உண்டு. ஆனால், அடுப்படிக்குள் புகைவதைப்போல அடிவயிற்றில் புகைவதோடு எல்லாம் அடங்கிப் போகின்றன. அறுதிப் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் வைத்திருக்கின்ற ராஜபக்ஸக்களின் ‘பொது ஜன பெரமுன’ கூட ரணிலை எதுவும் செய்ய முடியாதுள்ளது. மட்டுமல்ல, ரணிலுக்குச் சவால் விட்டுக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி, ஒரு பெரும் அணியாகத் திரண்டிருக்கும் சஜித்தின் கூட்டணியினாலும் ரணிலை ஆட்ட முடியவில்லை. இவ்வளவுக்கும் இந்தச் சீமான் ஒரு வாக்கைக் கூட, தான் இப்பொழுது வகிக்கும் பதவிக்காகப் பெற்றவரில்லை. ஏன், இதற்காக நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலிலேயே போட்டியிட்டதுமில்லை. ஆனால், அவரே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி – நாட்டின் அதிபராகி ஆட்டுவிக்கிறார். இலங்கை அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதிக்கே உச்ச அதிகாரமுண்டு. அமைச்சரவையும் பாராளுமன்றமும் முப்படைகளும் என முழு நாடுமே ஜனாதிபதிக்குக் கீழேதான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தனக்கு எதிரான திசையிலிருந்தவர்களை வைத்தே வெற்றிகரமாக ஆட்சியை நடத்துகிறார். அமைச்சரவையில் உள்ள அத்தனை பேரும் எதிரணியைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் ரணிலுக்குக் கட்டுப்பட்ட பெட்டிப் பாம்புகளாகவே இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், இவர்கள் அனைவரும் பலவீனமான நிலையில், கடந்த காலத்தில் தவறுகளை இழைத்தவர்களாக இருப்பதேயாகும். இந்தத் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால், தவிர்க்க முடியாமல் ரணிலை ஆதரித்தே ஆக வேண்டும். அவருடைய கால்களைப் பிடித்தே ஆக வேண்டும். ராஜபக்ஸக்களைக் காப்பாற்றி வைத்திருப்பதே ரணில்தான். இந்த நிலையிலிருந்து நாடு மீள்வதென்றால், பல காரியங்கள் நடக்க வேண்டும். முதலில் பொருளாதார நெருக்கடி தீர வேண்டும். இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதற்கு அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும். அதற்கு மக்களின் மனதிலும் அரசியற் கட்சிகள் – அரசியல்வாதிகளின் மனதிலும் மதவாதிகளின் தலைக்குள்ளும் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு ஏற்றமாதிரிப் பல தரப்பிலும் வேலைகள் நடக்க வேண்டும். சமாதானத்தின் மீதும் தீர்வின் மீதும் விருப்பமும் உறுதிப்பாடும் வேண்டும். ஜனநாயக ரீதியான – மாண்புடைய தேர்தல் நடக்க வேண்டும். இப்படிப் பலவும் நடப்பது அவசியம். பொருளாதார நெருக்கடியை வைத்தே ரணில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ரணிலை விட்டால் பொருளாதார நெருக்கயைக் கையாளக் கூடிய வேறு ஆட்களில்லை என்றமாதிரியே நாட்டின் பெரும்பான்மையான சனங்கள் எண்ணுகிறார்கள். ஏன் அரசியற் கட்சிகள், பிற தலைவர்களுக்கும் கூட அப்படியான எண்ணம்தான். ஆனாலும் ரணில் விக்கிரசிங்கவை வீழ்த்தி விட வேண்டும் என்றே ஒவ்வொருவரும் யோசிக்கிறார்கள். இதற்காக அவர்கள் குறுக்கு வழியில் பயணிப்பதைப்போல தேர்தலை எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் நடந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சிந்திக்கிறார்கள். இதுதான் சிரிப்புக்கிடமான சங்கதி. ஒரு தேர்தல் அல்ல ஒன்பது தேர்தல் நடந்தாலும் பிரச்சினைகள் தீராது. ஏனென்றால் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தேர்தல் மூலமாகத் தீர்வைக் காணவே முடியாது. தீர்வு காண வேண்டிய வேலைகளில் தேர்தல் மூலமான அதிகார மாற்றமும் ஒன்றாக இருக்கலாமே தவிர, அதுதான் தீர்வைப் பெற்றுத்தரும் என்று சொல்வதற்கில்லை. இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடந்திருக்கின்றன. பல விதமான வாக்குறுதிகளின் மத்தியில்தான் அந்தத் தேர்தல்களும் அவற்றின் வெற்றியும் அமைந்தது. மக்களும் பெரும் எதிர்பார்ப்புகளோடுதான் வாக்களித்திருக்கிறார்கள். ஆட்சி பீடம் ஏறியவர்கள் மாபெரும் பிரகடனங்களோடு கதிரையில் அமர்ந்தனர். இரண்டு மாதம் சென்றதும் பழையபடி வேதாளம் முருங்கையில் ஏறிய கதையே நிகழ்ந்தது. அதிகம் ஏன், யுத்தம் முடிந்தபோது நாட்டிலுள்ள பெரும்பான்மையோரிடம் இனிப் பிரச்சினை இல்லை என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. ஆனால் நடந்தது என்ன? அதற்குப் பிறகுதான் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளும் பொருளாதார நெருக்கடியும் அந்நியத் தலையீடுகளின் அதிகரிப்பும். இன்று நாடு இருக்கின்ற நிலை? தேர்தலினால் சிலவேளை ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிக்கலாம். நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது நடக்கும் என்றில்லை. அதற்கு ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல பல காரியங்கள் நடக்க வேண்டும். அதற்கான திடசங்கற்பம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும். அதற்கு நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒரு பண்பு உருவாக வேண்டும். அரசியல் வணிகத்திலிருந்து கட்சிகளும் தலைவர்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளரும் விடுபட வேண்டும். தனி நலனை விட பொது நலன் என்ற சிந்தனை எழ வேண்டும். தேசப்பற்றும் மக்களின் மீதான மதிப்பும் ஒரு அலைபோல மேற்திரள வேண்டும். இதை முன்னெடுக்கும் ஒரு அணி அல்லது தலைமை உருத்திரள வேண்டும். இப்போதிருப்பவை சவலைகள். இவற்றினால் எதையுமே செய்ய முடியாது. இதை அவை நன்றாக நிரூபித்துள்ளன. இவற்றை விட இருக்கின்ற One Man Army அல்லது One Man Government பரவாயில்லை. இதை நான் சொல்லவில்லை. சனங்கள் சொல்கிறார்கள். 00 https://arangamnews.com/?p=10600
  3. பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும் — ராகவன் — கடந்த மார்ச் 30-31 இல் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் அறிமுகங்கள் அத்துடன் பாலஸ்தீனப் பிரச்சனை, இன முரண்பாடு, மலையக மக்கள், பால் நிலை வேறுபாடுகள், LGBTQ, சாதியம் போன்ற பல்வேறு விடய தானங்கள் பேசப்பட்டன. விவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டாம் நாள் மாலை நிகழ்விற்கு நாலு பேர் புதிதாக வந்திருந்தனர். அவர்கள் நால்வரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். ஒருவர் யோகு அருணகிரி. மற்றவர் கார்வண்ணன். மூன்றாமவர் நெய்தல் நாடன். மற்றவர் பெயர் தெரியாது. டெலோன் மாதவன் என்ற இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பிரான்ஸு நாட்டு அறிஞர் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் புவியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ் மொழி அவருக்கு தெரிந்திருப்பினும் அவரது மொழியாளுமை பிரஞ்சு மொழியில் தான். அவரது தாய் மொழி பிரஞ்சு மொழி என்றே கூறலாம். புவியியலில் மானிட புவியியல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் நிலப்பரப்புக்குமான உறவுகளை ஆய்வது. அதுவே மாதவனின் துறைசார் தேர்ச்சி. தனக்கு முடிந்தளவில் தமிழில் ஒர் அறிமுகத்தை அவர் செய்தபின் நிர்மலா அவரது ஆய்வை தமிழில் வாசித்தார். அவரது ஆய்வுக்கட்டுரை புலம்பெயர் தமிழ் இனப்பிரதேசங்களின் இயக்கவியல் பற்றியது. கோலாலம்பூர், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்கள் தமது கலாசார பாரம்பரியங்களை நிலைநாட்ட முயற்சிப்பது, அதன் விளைவான புவியியல் மாற்றங்கள் போன்ற விடயங்களை ஆய்வு செய்த கட்டுரை அது. அது தவிர 2002 சமாதான ஒப்பந்த காலத்தில் அவர் இடப்பெயர்வு சம்பந்தமான சமூக, புவியியல் ஆய்வொன்றையும் யாழ் குடா நாட்டில் மேற்கொண்டிருந்தார். சாதிய அடையாளத்தை வைத்து ஒதுக்கும் முறை ஒழிந்து கொண்டு வரும் நிலை இருப்பினும், சாதிய அமைப்பு முறை ஒழிந்ததால் சாதிய யதார்த்தம் அருகிவிட்டதென பொருள் கொள்ள முடியாது. அகமணம், சாதிப்பற்று போன்ற காரணிகள் சாதியத்தை நிலை நிறுத்துகின்றன. அத்துடன் புலம் பெயர்ந்தோரிடமிருந்து வரும் பணம் சாதிய பிரிவினைக்கான உந்து சக்தியாக தொழிற்படுகிறது என்கிறார் அவர். மாதவன், தமிழர்களிடம் உள்ள மதம், சாதி இந்த இரண்டு விடயங்களையும் முன்வைத்து, அவை எவ்வாறு தொழிற்படுகின்றன என்ற தனது கள ஆய்வை மேற்கொண்டார். அதில் அவர் குறிப்பிடுவதானது – அடிமை குடிமை முறை கொண்ட சாதிய அமைப்பு முன்னர் இருந்தது. அத்துடன் சாதிய அமைப்பு ஆழமாக யாழ்ப்பாணத்தில் இருந்தது. ஆனால் தேசிய விடுதலை போராட்டம் காரணமாக நிகழ்ந்த இடப்பெயர்வு, விடுதலைப்புலிகள் சாதிய வேறுபாடுகள் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு குந்தகமானவை என்ற கருத்தியலை கொண்டிருந்தமை, சாதிய வேறுபாடுகளை எதிர்க்கும் சட்டங்களை கொண்டுவந்தமை, விடுதலைப்புலிகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் இணைந்தமை போன்ற விடயங்களால் சாதிய வேறுபாடுகள் அற்ற நிலை ஒன்று தோன்றியது. அத்துடன் தொழில் சார் சாதிய அமைப்பு முறையிலிருந்த மாற்றங்களும் சாதியத்தை ஆட்டம் காண வைத்தன. ஆனால் விடுதலைப்புலிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி சமாதான சூழல் ஒன்று உருவாகையில் சாதியம் மீண்டும் தலையெடுத்தது என்பதாகும். அதற்கான முக்கிய காரணங்களாக இரண்டு விடயங்களை அவர் பார்க்கிறார். ஒன்று அகமணமுறை. – இளைஞர்கள் நிகழ்ந்த மாற்றங்களினால் சாதிய வேறுபாடுகளை பொருட்படுத்தா நிலை ஏற்பட்ட போதிலும் திருமணம் என்று வரும் போது பெரும்பாலும் பெற்றாரின் சொற்கேட்டு சாதிக்குள் திருமணம் செய்வது. மற்றது யுத்ததால் பெரும்பாலான வெள்ளாளர்கள் புலம்பெயர்ந்து வெளி நாடுகளில் உழைத்த பணத்தை உற்றார் உறவினர்களுக்கு அனுப்பியதால் சமாதான காலத்தில் மீண்டும் தமது இருப்பை உறுதி செய்ய ஆதிக்க சாதியினர் குறித்த பகுதிகளில் காணிகள் வாங்கி வீடுகள் கட்டி வாழ்வதால் ஏற்பட்ட சமூக புவியியல் மாற்றங்கள் பற்றி அவர் ஆய்வு செய்தார். நளவர்களில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து சென்றதால் அவர்களது சமூக பொருளாதார முன்னேற்றத்தையும் அவர் குறிப்பிடுகிறார். பள்ளர், பறையர் போன்றவர்களின் பொருளாதார நிலை காரணமாக அவர்களின் சமூகங்களிலிருந்து புலம் பெயர்ந்தோர் பெரிதும் இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். தேசிய விடுதலைப்போராட்டத்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும் சாதியத்தின் நீடிப்பு தொடர்கிறதென்றும் குறிப்பிட்டார். முடிவில், யுத்தத்திற்கு முன்னரான சாதிய அமைப்பு யுத்தத்திற்கு பின்னராக மாறி வருகிறது. காதல் திருமணங்கள் மற்றும் சாதி சார் தொழில்கள் மாறிவருதல் போன்றவற்றால் சாதி ரீதியான புவியியல் சார்ந்த சாதிய ஒதுக்கல்கள் படிப்படியாக மறைந்து வருகின்றதென அந்த ஆய்வுக்கட்டுரையை முடிக்கிறார். அவரது ஆய்வை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. முக்கியமாக சாதி சார்ந்த தொழில்கள் அருகுவதால் சாதியம் விரைவில் ஒழிந்துவிடும் என்ற கருதுகோளை அவர் முன்வைப்பதில் சில பிரச்சனைகள் உண்டென்பதே எனது பார்வை. இது சமூக அறிவியல் ரீதியாக விவாதிக்கப்படவேண்டிய விடயம். ஆனால் ஒரு துறை சார் ஆய்வை ஒருவர் மேற்கொள்ளும் போது, அவரது உழைப்பை மதிப்பது அவசியம். அத்துடன் அவரது ஆய்வை உள்வாங்கி அதற்கான விமர்சனங்களை முன்வைப்பதே அறிவார்ந்த செயல். அவரது ஆய்வு பற்றிய எவ்வித அறிவார்ந்த பார்வையும் இன்றி, எவ்வித வாசிப்பும் இன்றி வந்தவர்களில் ஒருவரான நெய்தல் நாடன் அவரைப்பார்த்து சாதி அடிமை முறை இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள்; அதற்கான ஆதாரம் என்ன என்று கேட்டார். மாதவன் அடிமைமுறை சமகாலத்தில் இருப்பதாக சொல்லவில்லை. அத்துடன் மாதவனுக்கு தமிழ் புரிவது கடினம். எனினும் அவர் யாழ்ப்பாணம் பற்றிய மற்றவர்களின் ஆய்விலிருந்து தான் எடுத்தேன் என்றார். கார்வண்ணா எழுந்து தேசியம் பற்றி எழுதாமல் சாதியம் பற்றி எழுதியது தேசியத்தை வீழ்த்தும் சதி என்றவகையில் கூக்குரல் இட்டார். தேசியம் சமாதானத்துக்கு போன காலகட்டத்தில் சாதியம் மீண்டும் தலைதூக்கும் காரணிகளையே மாதவன் கண்டறிந்தார். அவரது ஆய்வானது சமூக புவியியல் மாற்றம் பற்றியது. எனவே தேசியம் பற்றி ஆய்வு செய்யவில்லை என கூக்குரல் இடுவது தற்குறித்தனமே. அதிருக்க அவர்கள் நான்கு பேரும் அவை நாகரீகத்துக்கு எவ்வித மதிப்பும் கொடுக்காமல் மற்றவர்களின் ஜனநாயக உரிமை பற்றி கரிசனை ஏதுமற்று தொடர்ந்து இடைமறிப்பு செய்து அவர்களது அறியாமையை வெளிப்படுத்தினர். அதனை பெரும் வீரமாகவும் நினைத்து புளங்காகிதம் அடைந்தனர். உண்மையில் மாதவன் விடுதலைப்புலிகளின் சாதி ஒழிப்பு சட்டங்களால் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றே ஆய்வில் கண்டறிந்தார். ஒருவகையில் விடுதலைப்புலிகளின் சாதிய ஒழிப்பு நடவடிக்கைகளை விதந்துரைத்தார். இது பற்றி எவ்வித வாசிப்போ அறிவோ அற்று,ஒரு இரண்டாம் தலைமுறை புகலிட அறிவாளியை அவமானப்படுத்துவதாக நினைத்து அவர்கள் தம்மையே அவமானப்படுத்திக்கொண்டனர். சமாதான காலத்தில் சாதியம் மீளுருவாக்கம் அடைவதன் காரணிகளைத்தான் அவர் ஆய்ந்தார். இதனைக்கூட விளங்கமுடியா தற்குறிகளாகத்தான் இவர்களது நடவடிக்கை இருந்தது. அதன் பின்னர் சாதியம் பற்றிய கள நிலை உரை ஒன்றை தேவதாசன் ஆற்றினார். ஜேசிபி இயந்திரம் மூலமான தேர் இழுப்பிலிருந்து நல்லிணக்கபுர மதில் வரை விடயங்கள் பேசப்பட்டன. உரை முடிந்தவுடன் ஜேசிபியால் தேர் இழுத்ததற்கான காரணம் குடும்ப சச்சரவு என்று கார்வண்ணா கதை அளந்தார். இலக்கிய சந்திப்பில் இலக்கியத்தை பேசுவதை விடுத்து சாதி பற்றி எதற்கு பேச்சு என்று தனது அறியாமையை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் இவர்கள் குறுக்கே குரல் எழுப்புவதை நிறுத்துமாறும் கைகளை உயர்த்தினால் ஒழுங்கு முறையில் அவர்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும் எனவும் பல முறை கூறிய போதும் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து கூச்சல் இட்டு தமது அறியாமையை நன்கு வெளிப்படுத்தினர். ஒன்று மட்டும் தெரிகிறது. வந்தவர்கள் நால்வரும் எந்த இயக்கப்பக்கமும் தலை வைத்தும் படுக்காமல் வெளி நாட்டில் இருந்து கொண்டு வீரம் பேசும் முக நூல் போராளிகள். விடுதலைப்புலிகளின் மோசமான அரசியலை மாற்றுக்கருத்தாளர்கள் கடுமையாக விமர்சித்தபோதும் விடுதலைப்புலிகளிற்கும் மற்றைய இயக்கங்களுக்கும் தமிழ் தேசிய கருத்தியலை வரித்துச் சென்றவர்களில் பெரும்பாலும் ஒரு பண்பு இருக்கும். அவர்கள் சேர்ந்து வாழப்பழகியவர்கள். அத்துடன் ஒரு கட்டுப்பாட்டை பேணியவர்கள். இவ்வாறு கூச்சலிட்டு குழப்பும் பண்பு அவர்களிடம் பெரும்பாலும் காணப்படுவதில்லை. என்னிடம் பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமது அரசியல் தஞ்ச கோரிக்கைக்காக வந்திருக்கின்றனர். மிகவும் பண்பாக நடப்பர். அதேபோல் தான் மற்றைய இயக்கங்களிலிருந்து வந்த பலரும். இந்த சந்திப்புக்கு விடுதலைப்புலிகளில் அங்கத்தவராக இருந்து விடுதலைப்புலிகளை இப்போதும் விட்டுக்கொடா நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அவர் நிகழ்ச்சி முடியும் வரை கண்ணியமாக இருந்தார். தனக்கு தரப்படும் நேரத்தில் அவர் கேள்விகளையும் கேட்டார். இந்தப்பண்பு தேசியம் என்று கூக்குரலிட்டவர்களிடம் இருக்கவில்லை. பிரபாகரன் மிக மோசமான சர்வாதிகார அமைப்பாக புலிகளை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கி அதனை ஒரு அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றிருப்பினும் அவர் சாதிய சமூக அமைப்பு தவறானதென்ற பார்வையை கொண்டிருந்தார். சாதி ஒழிப்பிற்கான சமூக நீதி அரசியலை விடுதலைப்புலிகள் எடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, விடுதலைப்புலிகள் அமைப்பு சாதியத்துக்கெதிரான சட்டங்களை கடைப்பிடித்தது. விடுதலைப்புலிகளின் காலத்தில் சாதியம் இல்லாவிட்டால் அவ்வாறான சட்டங்களின் தேவை ஏற்பட்டு இருக்காதென்பதை ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும். அத்துடன் பிரபாகரன் ‘வெள்ளாள சோசலிசம்’ என்று ஆதிக்க சாதிகள் சோசலிசம் பேசுவதை நகையாடினார். அவருக்கு சாதியம் சம்பந்தமான ஆழமான தேடல் இல்லை எனினும் சாதிய வேறுபாடு வெள்ளாள ஆதிக்கம் என்பது பற்றிய புரிதல் இருந்தது. வெள்ளாளர்கள் எவ்வாறு தொழில்வாய்ப்பு விடயங்களில் கரையாரை ஒதுக்கினார்கள் என தனது மாமா தனக்கு சொன்னதாக என்னிடம் கூறி இருக்கிறார். அத்துடன் வெள்ளாளரை வேரறுக்க பிறந்த பரசுராமன் நானே என்றும் ஒருமுறை எனக்கு சொன்னார். அதே போல் புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவையிடம் நண்பர் ஒருவர் சாதியம் பற்றி கேட்க அவர் சொன்னாராம் : சாதி வசை செய்வோருக்கு குண்டியில் அடிச்சு பிரயோசனமில்லை ; அது மண்டையில் இருக்கு என்று. யோகுவும் கார்வண்ணனும் புலியில் அங்கத்தவர்களாக இருந்து கொண்டு சாதி இப்போது இல்லை ; ஜேசிபி இயந்திரத்தை வைத்து ஆதிக்க சாதியினர் தேர் இழுத்தது வடம் பிடித்தால் தீட்டு என்பதற்காக இல்லை என கூறி இருப்பார்களாயின் அவர்களுக்கு ஆறு மாசம் சமையல் செய்ய பனிஸ்மண்ட் கிடைத்திருக்கும். அதன் பின்னும் தொடர்ந்தால் சீட்டு கிழிக்கப்பட்டிருக்கும். இலக்கிய சந்திப்புக்குழு இவர்களை வெளியேற்றாமல் தொடர்ந்து கத்தவைத்தது ஒரு நல்ல விடயம். இவர்களது உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர்களின் முக நூல் பக்கம் சென்று பார்த்தால் இவர்களது அவதூறுகள், பெண்வெறுப்பு என்பவை வெள்ளிடை மலை. இலக்கிய சந்திப்பு காணொளியில் இவர்களது தற்குறித்தனத்தை காணலாம். https://arangamnews.com/?p=10597
  4. @பையன்26 தவிர மற்றவர்களுக்கு உற்சாகத்தைக் காணவில்லை!
  5. யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றார். நன்றி @ரசோதரன்
  6. கார்த்திகைப் பூ விடுதலைப்புலிகளின் இலச்சினை அல்ல அது தமிழ்த் தேசியஇனத்தின் தாயகச்சூழலின் அடையாளம் -பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!! (மாதவன்) கார்த்திகைப்பூவை சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் இலச்சினையாகவே பார்க்கிறது. இதனாலேயே தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்றை அழகுபடுத்துவதற்காகக் கார்த்திகைப்பூவை வடிவமைத்த மாணவர்கள் காவல்துறையினால் அறிவிலித்தனமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப்புலிகள் தேசிய மலராகத் தெரிவு செய்திருந்தார்கள் என்பதற்காக அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ அல்ல. அது தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்று கார்த்தகைப்பூவின் உருவத்தை உருவாக்கி வைத்திருந்தமையால் மாணவர்கள் சிலரும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்கள் சுற்றுச்சூழலைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாக வகுத்து இயற்கையோடு இசைந்த வாழ்வை மேற்கொண்டு வந்தவர்கள், சங்கத் தமிழர்களால் காந்தள் என அழைக்கப்பட்ட கார்த்திகைப்பூ இப்போதும் தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. சங்கக்கவி கபிலர் தொடங்கி தாயகக்கவி புதுவை இரத்தினதுரை வரை கார்த்திகைப் பூவைப் பற்றிப்பாடாத புலவர்களே இல்லையென்னும் அளவுக்குத் தமிழ் வாழ்வியலில் கார்த்திகைப்பூ மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் தமிழ்நாடு கார்த்திகைப்பூவைத் தனது மாநில மலராகத் தேர்வு செய்துள்ளது. சிறிலங்கா அரசு தனது பௌத்த பண்பாட்டுச் சூழலுக்கு அமைவாகத் தேசிய மலராக நீலோற்பலத்தையும் தேசிய மரமாக மெசுவா எனப்படும் நாகமரத்தையும் தெரிவு செய்துள்ளது. இலங்கைக் காடுகளில் ஒருபோதும் காணப்படாத சிங்கத்தைத் தேசியக் கொடியில் வாளேந்த வைத்த பின்னர் அதனால் இதுவரையில் இலங்கைக்குரிய தேசிய விலங்கொன்றைத் தெரிவு செய்ய முடியவில்லை. இலங்கைத் தேசிய அடையாளங்கள் தமிழ் மக்களை உள்வாங்காது பௌத்த, சிங்களப் பெரும் தேசியவாதத்தின் குறியீடுகளாக அமைந்ததன் விளைவாகவே விடுதலைப்புலிகள் தேசிய மலராக ஈழத்தமிழ்ச் சூழலின் அடையாளமாக விளங்கும் கார்த்திகைப்பூவைத் தெரிவுசெய்ய நேர்ந்தது. கார்த்திகைப்பூச்செடியிலுள்ள கொல்கிசின் என்னும் நச்சு இரசாயனம் அருமருந்துகளின் தயாரிப்பில் பயன்படுகிறது. இதன் பொருட்டுத் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்படும் கார்த்திகைப் பூச்செடியால் பலகோடி ரூபாய்கள் அந்நியச் செலாவணியாகக் கிடைத்து வருகிறது. ஆனால், கார்த்திகைப் பூச்செடியின் சிறப்புகளை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதாலேயே கார்த்திகைப்பூவுக்கு உத்தியோகப்பற்றற்ற தடையைப் பேணிவருகிறது. இயற்கை அதன் பரிணாமப்பாதைக்குக் குறுக்காக நிற்கும் எதனையும் தூக்கியெறிந்து தன் பல்லினத்தை நிலைநிறுத்தும் பேராற்றல் பெற்றது என்பதை சிறிலங்கா அரசு நினைவிற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். (ஏ) https://newuthayan.com/article/கார்த்திகைப்_பூ_விடுதலைப்புலிகளின்_இலச்சினை_அல்ல;
  7. தேர்தலுக்குள் கச்சதீவை மீட்டால் எங்கள் வாக்கு பா.ஜ.கட்சிக்கே – நாம் தமிழர் சீமான் April 3, 2024 தேர்தலுக்குள் கச்சதீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அத்துடன், அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பவன் நான் மட்டுமே. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறினார். தேனியில் பிரசாரத்தில் “சின்னம் முடக்கப்பட்ட போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படை யில் அவர்கள் கொடுத்த சின்னத்துடன் களத்தில் நிற்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்கபயப் படுகின்றனர். “கச்சதீவை மீட்காமல் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் இதுபற்றி பா.ஜ.க. பேசி வருகிறது. நான் 13 ஆண்டுகளாக கச்சதீவை பற்றி பேசி வருகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு இது குறித்து கடிதம் எழுதினேன். தேர்தலுக்குள் கச்சதீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கிறோம்” என்றும் அவா் தெரிவித்தாா். https://www.ilakku.org/தேர்தலுக்குள்-கச்சதீவை-ம/
  8. “மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்” கனகராசா சரவணன் ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும். எனவே இவர்களை உடன் கைது செய்து விசாரணை நடத்துமாறு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கருணா படையணி என்பது வழமையான செயற்பாடு. தேர்தல் நெருங்குகின்றது தேர்தலுக்கான நாடகம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண அதிகாரத்துடன் மீட்டுத்தருவதாக கூறி, தமிழ் தேசிய மக்களுக்கு வாக்களிக்க இருந்த மக்கள் எல்லாம் தன்பக்கம் திசைதிருப்பி வாக்குகளை சிதறடித்து அந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதி நிதி ஒருவர் வராமல் செய்து முஸ்லீம் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க செய்த பெருமை செய்தவர். 2019 ம் ஆண்டு இடம்பெற்ற குண்டுதாக்குதல் தொடர்பாக தற்போது பலரின் வாயில் வித்தியாசமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசகராக இருந்து சுவிஸ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆசாத்மௌலான சனல் 4 ஊடகத்தில் பிள்ளையானை குற்றவாளி என தெரிவித்துள்ளார். ஆனால் பிள்ளையான் இன்று குண்டு தாக்குதலை வைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார். இதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன காலத்தில் இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றது. அவர் அப்போது வாய்திறக்காமல் ஜனாதிபதி பதவி இழந்து நீண்ட காலத்தின் பின் தற்போது வாயை திறந்து தனக்கு சூத்திரதாரியை தெரியும் என்று தெரிவித்துள்ளார். ஆகவே சட்டத்தின் மத்தியில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டாலும் குற்றம். இந்த சாட்சியம் ஏற்கனவே சொல்லப்படாது இருந்தது பாரிய குற்றம். ஆகவே அவர் மீது தீவிரமான விசாரணை நடாத்தப்பட்டு சரியான தகவலை தரவில்லை எனில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதவிர ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலான பிள்ளையான் தொடர்பாக தெரிவித்ததையும் பிள்ளையான் புத்தக வெளியிட்டுள்ளது தொடர்பாக கருணா கருத்து தெரிவித்துள்ளார் எனவே இவர்கள் எல்லோரும் கூட்டாக விசாரிக்கப்படவேண்டும் ஏதே ஒன்று இவர்களுக்குள் மறைந்திருக்கின்றது எனவே இந்த கருத்;துக்களை வெளியிட்டு குற்றம் சாட்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், ஆகிய 3 பேரை அரசாஙகம் கைது செய்து சரியாக விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி கைது செய்யப்படுவார். இது யார் என்பதை அறிய முடியும் எனவே ஜனபதிபதி விசேட குழு ஒன்றை அமைத்து அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசையும் ஜனாதிபதியையும் கோட்டுக் கொள்கின்றேன் என்றார். https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மூவரையும்-கைது-செய்தால்-உண்மை-வெளிவரும்/73-335493
  9. ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார் இலங்கை புறப்பட்டனர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் மூவரும் இன்று இலங்கைக்கு புறப்பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பை சென்றடையும் மூவரையும் அவர்களது உறவினர்கள் வரவேற்க காத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் திகதி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏராளமான தமிழ்நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களும் (இலங்கை தமிழர்களும்) கைது செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய தமிழ்நாட்டு தமிழர்களும் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் என இலங்கைத் தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அதேநேரத்தில் ஈழத் தமிழர்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் வெளிநாட்டவர் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த 4 பேரையும் உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்; அவர்கள் சொந்த மண்ணில் உறவினர்களுடன் இணைய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றன. இவ்வழக்கு விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாந்தன், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஆவணங்களையும் இலங்கை தூதரகம் வழங்கியது. இதனடிப்படையில் இன்று ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு புறப்பட்டனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் மூவரையும் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் தமது சமூக வலைதளப் பக்கத்தில், எனது அன்பு அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களுக்கு.. இன்றைய பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களின் வாழ்க்கை வரலாற்று நூலான 'விடுதலைக்கு விலங்கு' எழுதிய காலங்களில் இன்று விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை அன்று இல்லை. சிறைக்குள் இருந்து கொண்டே உங்கள் தாய் மண்ணைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தீர்கள். உங்கள் நிலத்திலிருந்து நீங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் உங்கள் உதட்டோரம் ஈழத்துத் தமிழை சற்றே தேக்கி வைத்திருந்தீர்கள். ஒரு நாள் என் தாய் மண்ணிற்கு திரும்புவேன் என்கிற உங்களது நம்பிக்கையை எழுத்தில் வடித்த உரிமையோடு இந்த இரவில் இன்பமுருகிறேன்.ஆம். உங்கள் நம்பிக்கையுடன் கலந்த என் எழுத்து நிஜமாகிவிட்டது. இவற்றையெல்லாம் நாம் சிந்தித்த நாட்களில் இதுவெல்லாம் நடக்குமா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு மன உறுதி கொண்ட தீர்க்கதரிசி போல நீங்கள் விடுதலை நாளொன்றின் பொன் கிரகணங்களுக்காக காத்திருந்தீர்கள். உங்கள் மீது அது இன்று படும் பொழுதில் நான் கண்கலங்க உங்களை என் நினைவுகளால் முத்தமிடுகிறேன். சொந்த ஊருக்கு சென்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். நம் மூதாதை உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பார். படையல் போடுங்கள். பரவசமாய் இருங்கள். பழையன கழித்து புது வாழ்வு ஒன்றை புத்துணர்ச்சியோடு வாழுங்கள். உங்கள் வலி துயர் தியாகம் ஆகியவற்றை உணர்ந்த எல்லாம் வல்ல தெய்வங்கள் உங்களை காப்பார்கள் என்று எழுதியுள்ளார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ராபர்ட்-பயஸ்-முருகன்-ஜெயக்குமார்-இலங்கை-புறப்பட்டனர்/150-335560
  10. @பையன்26, அணியைக் குறிப்பிடவேண்டும். RCB என்று எடுக்கவா அல்லது வேறு அணியைப் போடவா?
  11. ஆடுஜீவிதம்: அசல் மலையாள சினிமா ஜெயமோகன் அண்மையில் திரையரங்கில் நான் தீவிரமான உணர்வெழுச்சியுடன் பார்த்தபடம் ஆடுஜீவிதம் (Goat Life) இதுதான் மெய்யான மலையாளப்படம். (தமிழில் மோசமான டப்பிங், ஆங்கிலத்தில் மோசமான சப்டைட்டில் என்று சொன்னார்கள். நான் பார்த்தது மலையாள மூலம்) 1954 ல் நீலக்குயில் என்னும் மலையாளப்படம் வெளிவந்தது. அதுதான் மெய்யான மலையாளப்பட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி. அந்தப்படத்தின் தாக்கத்தால் தமிழ் இலக்கியச் சூழலில் நீலக்குயில் என்னும் சிற்றிதழும் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை மலையாள பொதுரசனைச் சினிமாவுக்கு ஒரு மரபு உள்ளது. பி.பாஸ்கரன், கே.எஸ்.சேதுமாதவன், ஏ.வின்செண்ட், பி.என் மேனன், எம்.டி.வாசுதேவன் நாயர், பரதன், பத்மராஜன், ஏ.கே.லோகிததாஸ், மோகன், ஐ.வி.சசி,சிபி மலையில் என ஒரு நீண்ட ஆளுமைநிரை அதிலுண்டு. அவர்கள் உருவாக்கிய படங்கள் அனைத்துக்கும் பொதுவான ஒரு தன்மை உண்டு. அவை எளியவர்களின் வாழ்க்கையை நுணுக்கமாகச் சித்தரித்தவை. அன்றாடத்தின் இயல்புநிலையை மிகையில்லாமல் காட்டியவை. நாடகத்தனத்தை உதறி காட்சித்தன்மையை நோக்கிச் சென்றவை. மானுடவாழ்க்கையின் போராட்டம், அவலம், மானுடத்தின் உச்சநிலைகள், வெற்றிகள் ஆகியவற்றை பேசியவை அவை. அத்தகைய நூறு சிறந்தபடங்களை ஒரு நல்ல ரசிகன் சொல்லிவிடமுடியும் – நான் ஏற்கனவே ஒரு பட்டியல் இட்டிருக்கிறேன். கீழ்மையில் திளைத்து, கீழ்மையை கொண்டாடும் படங்களும் மலையாளத்தில் வந்ததுண்டு. அவை தமிழில் பெருவெற்றி பெற்றதுமுண்டு. ஆனால் அவை மலையாளப்படங்கள் அல்ல. மலையாளப்படம் என்றால் அந்த நூறுதான். அந்த வரிசையில் வரும் படம் ஆடுஜீவிதம். அசலான படம். மகத்தான படம். இன்னும் பலதலைமுறைக்காலம் மலையாளச் சினிமாவின் செவ்வியல்படைப்புகளில் ஒன்றாக இது கருதப்படும். நான் முன்வைப்பது மலையாளத்துவம் என இப்படத்தில் நான் சுட்டிக்காட்டும் சில கூறுகள்தான். இதை உலக சினிமாப்பரப்பிலேயே மலையாளத்தின் அடையாளம் என்று முன்வைக்க முடியும். மலையாளத்துவம் என இந்தப்படத்தில் உள்ளவை எவை. மிக எளிமையாக மூன்று விஷயங்களைச் சுட்டிக்காட்டுவேன். அ.சமரசமற்ற யதார்த்தம். இன்று இந்திய சினிமாக்களில் மலையாளம் தவிர்த்து எதிலும் இந்தப் படம் காட்டுவதுபோல கலைரீதியான முழுமைகொண்ட யதார்த்தத்தை எடுக்க முடியாது. முன்பு வங்கப்படங்களில் இந்த யதார்த்தம் இருந்தது. இன்று அந்த வங்கப்பட மரபு இந்தி ஆதிக்கத்தால் அழிந்துவிட்டது இந்த யதார்த்தத்தை இன்று மலையாளம் தவிர பிறமொழிகளில் கொண்டுவர முயன்றால் ரசிகர்கள் ஏற்பார்களா என்ற ஐயம் விவாதநிலையிலேயே எழும். அந்த ஐயம் மிகமிக நியாயமானதும்கூட. எந்த யதார்த்தம் என்றாலும் அதில் கொஞ்சம் கேளிக்கையை கலந்தாகவேண்டும் என்னும் கட்டாயம் இங்கே உண்டு. சமநிலை அம்சம் (Balancing element) என்று அதை திரைக்கதை விவாதத்தில் சொல்வோம். அவ்வாறு இங்கே சேர்க்கப்படும் கேளிக்கை அம்சம் மூன்று. ஒன்று, காதல் அல்லது கிளுகிளுப்பு. அது நம் மெல்லுணர்வை சீண்டுவது. இரண்டு தீவிரமான நேரடியான சவால்விடும் காட்சியும் அதனுடன் இணைந்த வன்முறைமுறையும். அது நம் அட்ரினலை தூண்டுவது. மூன்று செயற்கையான சில திருப்பங்கள். அது நம் தர்க்கத்தை தூண்டிவிளையாடுவது. இவை ஏதும் இல்லாமல் கதையோட்டம் நிகழும் என்றால் ‘கதை ஒரே போல போய்க்கொண்டிருக்கிறது’ என நம் சாமானிய ரசிகன் நினைப்பான். இந்தப்படத்தை தமிழில் எடுத்திருந்தால், இரண்டாம் பகுதியின் இருபதாம் நிமிடத்தில் பார்வையாளன் எதிர்பாராத ஒன்று நிகழும். புதிய ஒரு கதாபாத்திரம் நுழையும். அது ஒரு முக்கியமான நடிகராகவும் இருந்தால் தமிழ் ரசிகன் இரண்டாம் பகுதி ‘பிக்கப் ஆகிவிட்டது’ என்று சொல்வான். ஆனால் கலைரீதியாக சினிமா அங்கே தோற்றுவிடும். படம் உணர்த்த முயல்வது எதுவோ அதிலிருந்து திசைதிரும்பிவிடும். ஆடுஜீவிதத்தை தமிழில் அல்லது தெலுங்கில் அல்லது எந்த இந்திய மொழிகளிலும் இப்படியே எடுக்கவே முடியாது. படம் சலிப்பூட்டுகிறது, ஒரே துக்கமாக இருக்கிறது, கதை பரபரப்பாக நகரவில்லை, இரண்டாம் பாதியில் புதியதாக ஒன்றும் நிகழவில்லை, பாலைவனத்தை மட்டுமே காட்டுகிறார்கள் என்றெல்லாம் தமிழ் ரசிகன் உடனே சொல்லிவிடுவான். ஒரு படத்தின் உண்மையான தொடர்புறுத்தல் என்பது கதைச்சம்பவங்கள் வழியாகவோ, திருப்பங்கள் வழியாகவோ நிகழ்வது அல்ல. காட்சிவழியாக, அதாவது பார்வையாளனின் கண்வழியாக நிகழ்வது. அவ்வாறு நிகழவேண்டுமென்றால் கதைச்சம்பவங்கள் பெரிதாக இருக்கலாகாது. திருப்பங்கள் நிகழக்கூடாது. அவை காட்சிகளில் இருந்து பார்வையாளனை வெளியே விலக்கிவிடும். ஆனால் கண் வழியாக சினிமாவை உணரமுடியாத தொடக்கநிலை ரசிகன் காட்சிகளை நீண்டநேரம் பார்க்கமாட்டான், ஏதாவது நிகழவேண்டும் என எதிர்பார்ப்பான். ஏமாற்றத்தால் சலிப்புறுவான் ஆனால் இந்த சமரசமே அற்ற யதார்த்தம்தான் உண்மையான மலையாள சினிமா. இரண்டாம் பகுதியில் நம்மைச் சூழ்ந்துகொள்ளும் காட்சிகள் அளிக்கும் அழுத்தமும் அவை நம் கண் வழியாக கனவுக்குள் நுழைவதும்தான் மெய்யான சினிமா அனுபவம். நாம் உண்மையில் என்ன அனுபவத்தை அடைந்தோம் என்றே அப்போது உணரமாட்டோம், ஆனால் நீண்டநாள் நினைத்திருப்போம். ஆ. மானுடமேன்மை இந்தப் படம் மானுடனின் வற்றாத அக ஆற்றலைச் சித்தரிப்பது. எத்தகைய சூழலிலும் தன்னுள் இருந்து உருவாகும் ஆற்றலால் மானுடன் வென்றெழுவதைக் காட்டுகிறது இது. நட்பினூடாக, தாக்குப்பிடிப்பதனூடாக உருவாகும் மகத்தான மானுடத்தருணங்களை சித்தரிக்கிறது. மலையாளப் பெரும்படைப்புகளில் அத்தகைய மகத்தான மானுடத் தருணங்கள் பல முன்னரும் வெளிவந்துள்ளன. அந்த தருணத்தை நம்பி, அதையே உச்சகட்டமாக அமைத்து, அமைதியான முடிவுடன் படத்தை எடுப்பது இன்று மலையாளமன்றி இன்னொரு மொழியில் இயல்வதல்ல. எம்.டி வாசுதேவன் நாயர் மற்றும் லோகிததாஸின் கிளாஸிக்குகள் போல நிறைய மலையாளப்படங்கள் ஒரே வசனத்தில் படத்தின் உச்சம் நிகழ்பவை. இந்தப்படமும் அப்படித்தான். செயற்கையான இறுதிப் பரபரப்பு, மிகையான உணர்ச்சிவெளிப்பாடு ஆகியவை இல்லாத உச்சகட்டம் கொண்டது ஆடுஜீவிதம். மானுடம் வெளிப்படும் ஒரு மௌனத்தருணம், அவ்வளவுதான். அதுதான் படம். இ. தொழில்நுட்பம் நம்மில் பலர் பெருஞ்செலவில் எடுக்கப்படும் பிற இந்தியத் திரைடங்களின் தொழில்நுட்ப நேர்த்தி குறைவான செலவுள்ள மலையாளப் படங்களில் இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள். அது உன்மை அல்ல. அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்ற கலைப்பட இயக்குநர்களின் மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களில்தான் ஒளிப்பதிவின் அற்புதங்கள், படத்தொகுப்பின் புதிய பாய்ச்சல்கள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் மலையாள நடிகர்களின் ஊதியம் மிகக்குறைவு என்பதனால் படத்திற்குச் செலவழிப்பது மிகுதி. ஆகவே பெரிய நிபுணர்கள் பணியாற்றமுடியும். அத்துடன் அந்த தொழில்நுட்பத்தை ஆடம்பரத்தைக் காட்டுவதற்குப் பதிலாக யதார்த்தத்தை உருவாக்க பயன்படுத்துவார்கள். மலையாளப்படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவு மேதைகள், படத்தொகுப்பு மேதைகள், மகத்தான இசையமைப்பாளர்கள் பலர் உண்டு. (மார்க்கஸ் பட்லே, மெல்லி இரானி, பாலு மகேந்திரா, அசோக் குமார் முதல் சந்தோஷ் சிவன் வரையிலான ஒளிப்பதிவாளர்கள், ரிஷிகேஷ் முகர்ஜி முதலான படத்தொகுப்பாளர்கள்; சலீல் சௌதுரி, பாம்பே ரவி போன்ற இசையமைப்பாளர்கள் ; தேவதாஸ், ரசூல் பூக்குற்றி போன்ற ஒலித்தொகுப்பாளர்கள், கிருஷ்ணமூர்த்தி போன்ற கலை இயக்குநர்கள்) மலையாளப்படம் இந்திய திரையுலகின் உச்சகட்ட தொழில்நுட்ப சாத்தியங்களை நிகழ்த்தியது என்பதே உண்மை. ஆடுஜீவிதமும் அப்படிப்பட்ட படம்தான். ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, கலையமைப்பு என எல்லா தளத்திலும் இது ஒரு சாதனை. பிசிறற்ற தொழில்நுட்பம் துருத்திநிற்காமல் கதையுடன் இணைவதே சிறந்த சினிமாவை ஆக்குகிறது. இதுதான் மெய்யான மலையாளப்படம். மலையாளிகளுக்கென ஓர் ஆளுமை உண்டு. great explorers and survivers அவர்களைச் சொல்லலாம். அந்த உளநிலையை காட்டியமையால் ஒரு மகத்தான மலையாளப்படமாக திகழ்கிறது ஆடுஜீவிதம். https://www.jeyamohan.in/198730/
  12. கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது. கடந்த 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நீண்ட காலமாக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சித்ரவதை செய்வதும், சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதையடுத்து கச்சத்தீவை மீண்டும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர. ஒவ்வொரு பாாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போதும் கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகள் கையில் எடுத்து பிரசாரம் செய்து வருகிறது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திலும் இந்த பிரச்சனை எதிரொலித்து இருக்கிறது. இந்த நிலையில் சச்சத்தீவு தொடர்பாக அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆவணங்களை பெற்ற அண்ணாமலை அதில் கூறப்பட்டுள்ள தகவலை பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 1969-ம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை கொடுக்க எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது இந்திரா காந்தி இலங்கையுடன் நல்ல நட்புணர்வுடன் இருக்க விரும்பினார். 1968-ம் ஆண்டு அப்போதைய இலங்கை பிரதமர் டட்லி சேனா நாயக்கா இந்திரா காந்தியுடன் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். 1973-ம் ஆண்டு கொழும்பில் நடந்த வெளியுறவு செயலர் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது. 1974-ம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் மூலம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கச்சத்தீவுக்கு இலங்கை உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்றும் கேவல் சிங் தெரிவித்தார். அந்த சமயம் கச்சத்தீவை இலங்கை உரிமை கோரிய நிலையில் ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது என்ற ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை. இறுதியாக 1974-ம் ஆண்டு கச்சச்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்ட பதிலில் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு தொடர்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கச்சத்தீவை பற்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறோம். 1968-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியும், இலங்கை பிரதமராக இருந்த செனாயும் போட்ட ரகசிய ஒப்பந்தம்தான் கச்சத்தீவு. 1948ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1974ம் ஆண்டு கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. எதற்காக கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்ற ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றுள்ளோம். இதை படித்தால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும். நேரு பிரதமராக இருந்தபோது பைல் நோட்டிங் எழுதுகிறார். இந்த குட்டி தீவுக்கு நான் எந்தவிதமான மரியாதையும் தரப்போவதில்லை. வேறு ஒரு நாட்டிற்கு தர தயாராக இருக்கின்றேன். இது 10-5-1961 ல் நேரு எழுதிய பைல் நோட்டிங். முழுமையாக கச்சத்தீவு நம்மிடம் தான் இருக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தும், இலங்கையில் அரசியல் சூழ்நிலை சரியில்லை என்பதால் இந்த பிரச்சனையை தள்ளி போட்டுக்கொண்டே சென்றார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. நாளை இதன் இரண்டாம் பகுதி வெளியாகும் போது கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேசுவோம். நாட்டின் எல்லையை சுருக்கியது காங்கிரஸ் கட்சி. 1960-ல் இருந்து ஒவ்வொரு செங்கல்லாக பிரித்து கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரை வார்த்துவிட்டது. இன்று வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முதல் பகுதி மூலம் காங்கிரஸ் எப்படி துரோகம் செய்துள்ளது என்பது தெரிய வருகிறது. நாளை வெளியாகும் இரண்டாவது பகுதியில் கலைஞர் கருணாநிதி செய்த துரோகம் என்ன என்பது தெரியும். ஆர்ட்டிக்கிள் 6 ன் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டாலும் இந்திய மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கலாம் என தெரிவிக்கிறது. ஆனால் தற்போது ஆர்ட்டிக்கிள் 6 இல்லாத காரணத்தினால் மீனவர்கள் தற்போது கச்சத்தீவுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நாளை மக்களின் பார்வைக்காக இரண்டு பகுதியாக வெளியாகி உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் தருகிறோம். கச்சத்தீவை இலங்கைக்கு எப்படி தாரை வார்த்து கொடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் முதலில் கச்சத்தீவை எப்படி கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது எல்லையை நம் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். கச்சத்தீவை தாண்டி நெடுந்தீவு வரை நாம் சென்றோம்… ராமநாத சுவாமி கோவில் சிவபெருமானுக்கு நெடுந்தீவிலிருந்து பால் கொண்டுவரப்பட்டது. கச்சத்தீவை மீட்பது எங்கள் கோரிக்கை மட்டுமல்ல. கண்டிப்பாக மீட்போம் என கங்கணம் கட்டியுள்ளோம். 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டி எல்லாம் சுற்றி இருக்கிறேன். ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். https://akkinikkunchu.com/?p=272571
  13. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- ‘உடனே பதவி விலக வேண்டும்’ பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது. டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது. டெல்அவிலில் இன்று அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே இன்று மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை எகிப்தில் தொடங்குகிறது. https://akkinikkunchu.com/?p=272568
  14. தமிழ்ப் பொது வேட்பாளர்: யாரால்? யாருக்கு? யாருக்காக ? - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன்பு வடமராட்சி கட்டை வேலி கிராமத்தில் ஒரு மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கிலான அச்சந்திப்பின் போது, வளவாளர் அங்கு வந்திருந்த மக்களை நோக்கி பல்வேறு கேள்விகளையும் கேட்டார். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்? ஏன் வாக்களிக்க விரும்புகிறார்கள்? என்றும் கேட்டார். கேள்விகளின் போக்கில் அவர் ஒரு கட்டத்தில் கேட்டார், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அவருக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? என்று. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஏறக்குறைய ஒரே குரலில் ஆம் என்று பதிலளித்தார்கள். அதில் யாரோ ஒரு பெண் ரகசியமான குரலில் சொன்னார் “அந்தப் பொது வேட்பாளர் தமிழ் ஈழம் கேட்டால் சந்தோஷமாக வாக்களிப்போம்” என்று. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, சில மாதங்களுக்கு முன்னரே ஈபிஆர்எல் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் முன் வைத்தார். அதன் பின் அவர் அங்கம் வகிக்கும் குத்துவிளக்குக் கூட்டணி அதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. அதன்பின் விக்னேஸ்வரன் அவ்வாறு ஒரு பொது வேட்பாளராக நிற்பதற்குத் தான் தயார் என்று அறிவித்திருந்தார். இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு ஒருமித்த முடிவை எடுக்க முடியாதபடி அக்கட்சி நீதிமன்றம் ஏறிக்கொண்டிருக்கிறது. எனினும், தமிழரசுக் கட்சிக்குள் தேர்தல் நடப்பதற்கு முன்பு, சாணக்கியன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அதேசமயம் அண்மையில் டான் டிவி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சிவில் சமூகம் ஒழுங்குபடுத்திய ஒரு கருத்தரங்கில் பேசிய சிறீதரன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்துரைத்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழமை போல தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போகின்றது. இதனிடையே, புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர் ஒருவருடைய தூதுவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர், சில மாதங்களுக்கு முன், தமிழ்க் கட்சிகள் சிலவற்றோடு உரையாடியிருக்கிறார். குறிப்பிட்ட முதலீட்டாளர் தென்னிலங்கையில் உள்ள இரண்டு கட்சிப் பதிவுகளை விலைக்கு வாங்கி வைத்திருப்பதாகவும், அதில் ஒரு கட்சியின் பதிவின் கீழ் தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது. அத்தமிழ்ப் பொது வேட்பாளர், தமிழ் வாக்குகளை ஒன்று திரட்டி ரணில் விக்ரமசிங்கவை நோக்கித் திருப்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது ரணிலை வெல்ல வைப்பதற்கே அந்த முயற்சி என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் அக்கோரிக்கைக்கு இணங்கவில்லை என்றும் தெரிகிறது. அதேசமயம் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட டான் டிவி ஒரு சிவில் சமூகத்தை முன்னிறுத்தி, தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கை சில கிழமைகளுக்கு முன் நடத்தியது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஏனைய பெரும்பாலான கட்சிகள் அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தன. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவை தமிழ் மக்கள் பேரவை கையில் எடுத்தது. அது வெற்றி பெறவில்லை. இப்பொழுது குத்துவிளக்குக் கூட்டணி, புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர், டான் டிவியின் சிவில் சமூகம் போன்றன அதைக் கையில் எடுத்திருக்கின்றனவா? இந்த விடையத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவை ஏன் வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு விடை முக்கியம். அன்றைக்கு அந்த முயற்சிக்கு சம்பந்தர் ஆதரவாக இருக்கவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தது. ஆனால் ஏனைய கட்சிகள் தயக்கத்தோடு தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க முன்வந்தன. அவ்வாறு ஆதரித்த கட்சிகளை ஒன்று திரட்டி அதை ஒரு அரசியல் செய்முறையாக பரிசோதிப்பதற்கு பேரவையால் முடியவில்லை. அதற்குத் தேவையான பலமும் கட்டமைப்பும் தமிழ் மக்கள் பேரவையிடம் இருக்கவில்லை. இப்பொழுதும் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தத் தேவையான பலம், அது பற்றி உரையாடுபவர்களிடம் உண்டா? இது ஏறக்குறைய கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியின் மறு வடிவம்தான். அதை இன்னும் தெளிவாகச் சொன்னால், ஜனாதிபதி தேர்தல் என்ற ஒர் அரசியல் நிகழ்வை முன்வைத்து தமிழ் ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவது; தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதுதான். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அதைச் செய்யத்தான் தமிழ் பரப்பில் ஆட்கள் இல்லையே? தமிழ்க் கட்சிகளை ஒன்றாக்குவதற்கு ஏதாவது ஒரு பலம் இருக்க வேண்டும். கட்சிகளைக் கூப்பிட்டுக் கருத்தரங்கை வைக்கலாம். ஆனால் கட்சிகளை ஒன்று திரட்டி இதைச் செய்யுங்கள் என்று நெறிப்படுத்த ஒரு பலமான அரசியல் கட்டமைப்பு வேண்டும். அது தமிழ் மக்களிடம் உண்டா? இல்லையென்றால் தமிழ் ஐக்கியத்தைப் போலவே தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவும் நெருக்கடிக்கு உள்ளாகும். உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் ஆதரவளிக்காவிட்டால் அது வெற்றி பெறாது என்ற கருத்து குத்துவிளக்கில் உள்ள சில கட்சிக்காரர்களிடம் உண்டு. இதில் தன்னம்பிக்கை குறைவும் தாழ்வுச் சிக்கலும் உண்டு என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். தன் சொந்தப் பலத்தில்; சொந்த உழைப்பில்; தான் சரியென்று கருதும் ஒன்றை வெற்றிபெறச் செய்வதற்கான திடசித்தம் குத்துவிளக்குக் கூட்டுக்குள் எத்தனை கட்சிகளிடம் உண்டு? தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது. அது நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் வரையிலும் இந்த நிலைமை தொடரும். இவ்வாறு அக்கட்சி இரண்டாகி நிற்பது தென்னிலங்கை வேட்பாளர்களுக்குச் சாதகமானது. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தை தமிழ் மக்கள் உருப்படியாகச் செய்து முடிப்பார்கள் என்று தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு வேட்பாளரும் நம்பவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழுவோடு உரையாட சஜித் பிரேமதாச முயற்சித்தார். அவருடைய மனைவி “ஜெட் விங்” ஹோட்டலில் தங்கியிருந்து அதற்கான அழைப்பையும் எடுத்தார். இம்முறை சஜித் அந்த விடயத்தைப் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது. சுமந்திரனும் சாணக்கியனும் தனக்குச் சாதகமாக தமிழ் வாக்குகளைத் திரட்டுவார்கள் என்று அவர் நம்புகிறார் போலும். மனோ கணேசன், ரவூப் ஹக்கிம் போன்றவர்கள் தமிழ் வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும் தன்னை நோக்கிச் சாய்க்கலாம் என்றும் அவர் நம்புவதாகத் தெரிகிறது. அதனால், தமிழ்ப் பொது வேட்பாளரைக் குறித்து அவர் அலட்டிக் கொள்ளவில்லை. அப்படித்தான் ரணிலும் ஜேவிபியும். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் சிங்கள வேட்பாளர்களுக்குப் பதட்டத்தை ஏற்படுத்தும் ஒரு வளர்ச்சிக்கு இன்னும் வரவில்லை. அதை நோக்கி தமிழ்க் கட்சிகள் கட்டமைப்பாக ஒன்றிணைையவில்லை. அவ்வாறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசுவது என்ற தெரிவை முதன்மைப்படுத்துவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவதாக அமையலாம். ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகள் தொடர்பாக குத்துவிளக்குக் கூட்டணியோ அல்லது சிவில் சமூகமோ இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகள் சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசக்கூடியவைகளாக அமைய வேண்டும் என்று குத்து விளக்குக் கூட்டணிக்குள் உள்ள சில கட்சிகள் கருதுவதாகத் தெரிகின்றது. அவ்வாறு சிங்கள வேட்பாளர்களை நோக்கித் தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகளை வளைப்பது என்பது, 13 ஐ அமல்படுத்துவது வரையிலும் போக முடியும். ஆனால்,தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி வளைப்பதற்கு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தேவையில்லை. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதற்குத்தான் அது தேவை. தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு எனப்படுவது பேரம் பேசலுக்கானது என்பது அதன் முதன்மை நோக்கம் அல்ல. முதன்மை நோக்கம் எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதும் தமிழ் மக்களின் ஐக்கியத்தை உலகத்துக்குக் காட்டுவதும் தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளுக்குரிய ஆகப் பிந்திய மக்கள் ஆணையை பெறுவதும்தான். தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுவது தமிழ் ஐக்கியத்தின் குறியீடு. தமிழ் மக்களை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பும் ஒரு தெரிவு. தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலை ஒரு மறைமுக பொதுசன வாக்கெடுப்பாகப் பயன்படுத்தும் ஒரு தெரிவு. தேர்தல் முடிவை தமிழ் மக்களின் ஆகப் பிந்திய மக்கள் ஆணையாக உலகத்துக்கு காட்டப்படலாம். மாறாக,பேரம் பேசுவதை அடிப்படையாக வைத்து சிந்தித்தால், அது தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்களை நோக்கி வளைப்பதில்தான் போய்முடியும். மேலும், பொது வேட்பாளர் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்தால் பேரம் பேசலுக்கான வாய்ப்புக் குறைந்து விடும். எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் அவரோடு பேரம் பேசி தனக்குரிய சிங்கள பௌத்த வாக்குகளை இழக்கத் தயாராக இருக்க மாட்டார். அதேசமயம், தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆணையைப் பெறுவதற்குரிய மறைமுக வாக்கெடுப்பாக ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்தி அதில் தோல்வி கண்டால், அது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை என்பதை வெளியுலகத்திற்கு நிரூபித்து விடும் ஆபத்தும் உண்டு. எனவே ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு எடுத்தால், அதற்காகக் கூட்டாக உழைக்க வேண்டும். அர்ப்பணிக்க வேண்டும். அது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கான உழைப்பு என்பதைவிட, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உழைப்பு என்பதே சரி. https://www.nillanthan.com/6668/
  15. ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு - குடல் வெடித்து உயிரிழந்த ஊழியர் Vhg மார்ச் 30, 2024 தென்னிலங்கை தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விளையாட்டு வினையானது கடந்த திங்கட்கிழமை (25-03-2024) பிற்பகல், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உயிரிழந்த ஊழியரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரத்தின் குழாயை பிடித்துள்ளனர். இதன்போது, குழாய் செருகுப்பட்டு, உடனடியாக அகற்ற முடியாமல் போனது. அத்துடன், அதிக அழுத்தத்தில் காற்று உட்செலுத்தப்பட்டதால் குடல் வெடித்து ஊழியர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த ஊழியரின் பிரேத பரிசோதனை நேற்று (29ம் திகதி) ராகம வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://www.battinatham.com/2024/03/blog-post_604.html
  16. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை : சம்பந்தன் அறிவிப்பு ! kugenMarch 31, 2024 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யார்யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பது சம்பந்தமாக உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை. அந்த அறிவிப்புக்கள் உறுதியாக வெளியானதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது தொடர்பிலான உரையாடல்கள் ஆரம்பமாகியுள்ள நிலையிலும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயத்தங்களை தேசிய கட்சிகள் முன்னெடுத்து வருகின்றமை நிலையிலும் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரலவலான ஆதரவு கிடையாது. அத்துடன், குறித்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சதகமான நிலைமைகளை உருவாக்கும் என்றும் நான் கருதவில்லை. தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழுவதற்காக ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். அவ்விதமான நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் களமிறக்கும் விடயத்தினை நான் ஆதரிக்கவில்லை. அதேநேரம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம். எம்மைப்பொறுத்தவரையில்ரூபவ் தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கோரிவருகின்றார்கள். அத்துடன் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்களின் வரலாற்று ரீதியான வாழிடங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான கோரிக்கைகளை ஆதரிப்பவர்கள் பற்றியே நாம் கருத்தில் கொள்ள முடியும் என்றார். https://www.battinews.com/2024/03/blog-post_640.html
  17. கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்! adminMarch 30, 2024 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் எனவும் முன்னாள் பிரதியமைச்சர் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இன்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அமைச்சர்களாக இருந்தும் மக்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கு மாறாக தாங்கள் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக இந்த வேலை திட்டங்களை கொண்டு வருகின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வீதிகள் இன்று அமைக்கப்பட்டாலும் அதில் பத்து வீதத்திற்கு மேற்பட்ட தரகுகள் வாங்கப்படுகின்றது இவ்வாறு செயல்பட்டால் எமது கட்டுமானங்கள் எந்த அளவிற்கு இஸ்திரத்தன்மையற்ற நிலையில் இருக்கும் என்பதனை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுவரையில் மயிலத்தமடு பிரச்சனைக்கு எதிர்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. அந்த மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர். இதே போன்று வடமாகாணத்தை பொறுத்தவரையில் மத திணிப்புகளும் மதவாதிகளால் ஏற்படும் பிரச்சனைகள் மீண்டும் இன குரோதங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை, தேவையற்ற விதத்தில் சில மதகுருமார்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் வெடுக்குநாரி மற்றும் குறுந்தூர் மலை போன்ற பிரச்சனைகள் உருவாகி உள்ளன. தமிழ் மக்களின் ஆலயங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் இன்று அதில் பலவந்தமாக புத்த கோவில்களை கட்டி மத திணிப்புகளை மேற்கொள்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றார்கள் இது போன்ற பல நடவடிக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் தமிழர்களின் அவிலாசைகளை தீர்ப்பதற்கு தமது கட்சியின் வேலை திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடி இருக்கின்றது. ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஸ இருந்த காலத்தில் நாடு ஒரு பாதாளத்தில் தள்ளி விடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் அதனால் தான் அவர் மக்களால் துரத்தி அடிக்க பட்டார் அவரின் அவ்வாறான செயற்பாட்டால் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்ததன் பிற்பாடு இன்று பல சிரமத்தில் மத்தியில் இருந்த எமது நாட்டை கட்டி எழுப்பியிருக்கின்றார். அதனை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று டொலரின் பெறுமதி எந்த அளவிற்கு குறைந்திருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும் அந்த அளவுக்கு இன்று நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது. தமது கட்சியை பொறுத்த அளவில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக தாங்கள் தீர்மானித்து இருப்பதாகவும், தமது கட்சியின் செயற்பாடுகளை பரவலாக முன்னெடுத்து வருவதாகவும், இறுதிக் கட்டத்தில் தாங்கள் கூட்டு சேர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை இறுதி கட்டத்திலே அறிவிக்க உள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் சிவாஜிலிங்கம் போன்றவர்களும் தேர்தலில் போட்டியிட்டு இருந்தார்கள் தமிழ் மக்களை மற்றும் தன்னை பொறுத்தவரையில் இலங்கை நாட்டிலே ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புகள் இல்லை ஏனென்றால் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட நாடாக இருக்கின்ற காரணத்தினால் யாரோ ஒரு சிங்கள தரப்பினர்தான் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழர்கள் பிரதமராக அல்லது அமைச்சர்களாக வருவது அது ஒரு வேறுபட்ட விடயம் ஆனால் ஜனாதிபதியாக வருவதற்கு அனைத்து மக்களுக்கும் அனைத்து கல்விச் சமூகங்களுக்கும் இடையிலான தெரிந்த விடயம் சிங்கள குடிமகன் தான் ஜனாதிபதியாக வருவார் ஆகவே அந்த வகையில் அதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் தமிழர்களுக்கு நன்மை தரக்கூடிய ஜனாதிபதியை நாங்கள் தெரிவு செய்வது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம். “தமிழர்கள் போட்டியிடுவதை வரவேற்கின்றோம் அது இலங்கை குடிமகன் யாராக இருந்தாலும் எங்கும் போட்டியிடலாம் அதனை வரவேற்கின்றோம்.” இது ஒரு நல்ல விடயம் ஆனால் அதனை முன் வைப்பதற்கு முன்னர் அனைத்து கட்சிகளும் கூடி கலந்தாலோசித்து அதில் ஒருமித்த கருத்தினை எடுத்து அனைத்து தமிழ் மக்களும் அந்த ஒருவருக்கு வாக்களித்து எதிர்ப்பினை காட்டுவார்களாக இருந்தால் உலக மத்தியில் பாரிய வரவேற்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது இதனை மறப்பதற்கு இல்லை. ஆனால் அந்த அளவிற்கு எந்த கட்சி ஒற்றுமையாக இருக்கும் என்பது வேடிக்கையான விடயம் ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவிலே இன்னமும் தீர்மானம் இல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தேசியம் கதைத்துக் கொண்டு தலைவர் தெரிவில் நீதிமன்றத்தை நாடி நிற்கின்றது என்றால் எவ்வளவு பிற்போக்குத்தனமாக அந்த கட்சி இருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் இந்த நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றாகுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயம். “இன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றது இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு இது தொடர்பாக தெரியும் என கூறுகின்றார் அதே நேரம் இந்த விடயம் தொடர்பாக இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றது. கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் பிள்ளையானும் புத்தகம் வெளியிட்டுள்ளனர். இதனை ஒரு முதலை கண்ணீர் வடிப்பதற்கு சமமாக தான் பார்க்கின்றோம். ஏனென்றால் அசாத் மௌலானா சிறந்த ஆதாரங்களை நிரூபித்து இருக்கின்றார். அவர் நீண்ட காலமாக அந்த கட்சியிலே ஒரு முக்கிய உறுப்பினராக செயலாளராக அல்லது பிரதம ஆலோசகராக செயல்பட்டவர் என்பது உண்மையான விடயம். ஏனென்றால் அவர் கூறிய விடயங்களை எவரும் மறுப்பதற்கு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்கின்ற கேள்வி எழுந்திருக்கின்றது. ஏனென்றால் இன்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புத்தகத்தையும் வெளியிடவில்லை. இதை ஏவியவர்களால் புத்தகம் வெளியிடப்பட்டது என்பது தங்களது பிரச்சினைகளை மறைப்பதற்காக அதாவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகதான் பார்க்கப்படுகின்றது. உண்மையிலே இதற்கான தீர்வு என்பது ஆண்டவரால் வழங்கப்படும். ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. தற்போது கடந்த கால ஜனாதிபதி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார் நான் அனைத்து ரகசியங்களையும் வெளியிடுவேன் என்று. அதனை நாங்கள் வேடிக்கையாக பார்க்க முடியாது ஏனென்றால் அவர் இலங்கையில் ஒரு பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதி அவர் கூறுகின்ற போது இதற்கு பின்னால் பாரிய உண்மைகள் இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் இது எதிர்காலத்தில் வெளிப்படையாக நிருபிக்கப்பட்டு இதற்குரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.” என கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரன் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2024/201410/
  18. ஜனாதிபதி ரணிலின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி! வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில், தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆரம்பித்திருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பல்லின சமூகமாக வாழும் நாடு என்ற வகையில் இலங்கை தற்காலத்தில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். எனவே, இலங்கையர்களாகிய நாம் எமது ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுடன், அதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு சக்திகளிடமும் சிக்கிக்கொள்ளாமல், அறிவுபூர்வமாக நாட்டின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்திக்காக அர்பணிக்க வேண்டியது அவசிமாகும். இலங்கை கிறிஸ்தவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் ஈஸ்டர் காலம் ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதலை கண்டிருந்தது. அந்த மோசமான நினைவுகள் எமது மனங்களில் இருந்து மறையாது. அதேநேரம் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் பாரபட்சம் இன்றியும் சட்ட அமுல்படுத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கியுள்ளதுடன் இனிவரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும் வகையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் அர்ப்பணிக்கும். அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் நாளாகட்டும் என பிராத்திப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/ஜனாதிபதி-ரணிலின்-உயிர்த்/
  19. கடைசிவரை இருப்பதில் பிரச்சினை இல்லை, ஆனால் குறைந்தது பத்துப் பேரை பங்குபற்ற வைக்கவேண்டும்!
  20. கூகிள் ஷீற்றில் பதில்களை நிரப்பி வெட்டி ஒட்டுவதில் சிரமம் இருந்தால் தெரிவியுங்கள் 😎
  21. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1euR00XGtw-7ovURFAh8ZuUNSqhvvbA1e8rjLSzkmM7g/edit?usp=sharing 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)
  22. போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் ஆரம்பத்தில் 70 புள்ளிகள் வழங்கப்படும்! அதிகபட்ச புள்ளிகள் 148 வீரர்களின் பெயர்களை ஆங்கிலத்திலும், அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும். முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும். மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். இறுதிப் போட்டியில் Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 26 மே 2024 அன்று சென்னையில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். Qualifier 1: 1st placed team v 2nd placed team Eliminator: 3rd placed team v 4th placed team Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
  23. யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 வணக்கம், இந்த வருடம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் முழுமையான போட்டிகளின் அட்டவணை போட்டிகள் ஆரம்பமாக முன்னர் வெளியிடப்படவில்லை. ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பித்த பின்னர் முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால், யாழ் கள ஐபிஎல் போட்டியை ஆரம்பச் சுற்றுப் போட்டிகளைத் தவிர்த்து Playoff கட்டத்தில் இருந்து உள்ள நான்கு போட்டிகளுக்கும் நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். எனினும் போட்டியாளர்கள் அனைவருக்கும் 70 புள்ளிகள் (ஆரம்பச் சுற்றில் 70 போட்டிகள்) முதலிலேயே வழங்கப்படும். கேள்விகளுக்கு சரியான பதில் வழங்கப்பட்டால் புள்ளிகள் கூட்டப்படும். தவறான பதிலாக இருந்தால் புள்ளிகள் குறைக்கப்படும்! போட்டி நடாத்துபவரைப் தவிர்த்து குறைந்தது பத்து பேராவது பங்குபற்றினால் மாத்திரமே போட்டி நடாத்தப்படும்! ஐபிஎல் 2024 போட்டிகள் பற்றிய விபரங்கள் 17வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2024 சீசன் மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கியுள்ளது. இறுதிப்போட்டி சென்னையில் மே 26ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) 1. Chennai Super Kings BATTERS: Ruturaj Gaikwad (c), Aravelly Avanish, Devon Conway, MS Dhoni, Ajinkya Rahane, Shaik Rasheed, Sameer Rizvi ALLROUNDERS: Moeen Ali, Shivam Dube, Rajvardhan Hangargekar, Ravindra Jadeja, Ajay Mandal, Daryl Mitchell, Rachin Ravindra, Mitchell Santner, Nishant Sindhu BOWLERS: Deepak Chahar, Tushar Deshpande, Mukesh Choudhary, Mustafizur Rahman, Matheesha Pathirana, Simarjeet Singh, Prashant Solanki, Shardul Thakur, Maheesh Theekshana 2. Delhi Capitals BATTERS: Rishabh Pant (c), Abishek Porel, Ricky Bhui, Swastik Chikara, Yash Dhull, Jake Fraser-McGurk, Shai Hope, Kumar Kushagra, Prithvi Shaw, Tristan Stubbs, David Warner ALLROUNDERS: Lalit Yadav, Mitchell Marsh, Axar Patel, Sumit Kumar BOWLERS: Khaleel Ahmed, Praveen Dubey, Kuldeep Yadav, Mukesh Kumar, Anrich Nortje, Vicky Ostwal, Rasikh Salam, Jhye Richardson, Ishant Sharma 3. Gujarat Titans BATTERS: Shubman Gill (c), David Miller, Wriddhiman Saha, Sai Sudharsan, M Shahrukh Khan, BR Sharath, Matthew Wade, Kane Williamson ALLROUNDERS: Azmatullah Omarzai, Abhinav Manohar, Rashid Khan, Vijay Shankar, Manav Suthar, Rahul Tewatia BOWLERS: Spencer Johnson, Kartik Tyagi, Josh Little, Sushant Mishra, Darshan Nalkande, Noor Ahmad, Sai Kishore, Mohit Sharma, Jayant Yadav, Umesh Yadav 4. Kolkata Knight Riders BATTERS: Shreyas Iyer (c), Srikar Bharat, Manish Pandey, Angkrish Raghuvanshi, Rahmanullah Gurbaz, Ramandeep Singh, Nitish Rana, Sherfane Rutherford, Phil Salt, Rinku Singh ALLROUNDERS: Venkatesh Iyer, Sunil Narine, Anukul Roy, Andre Russell, BOWLERS: Vaibhav Arora, Dushmantha Chameera, AM Ghazanfar, Harshit Rana, Chetan Sakariya, Mitchell Starc, Suyash Sharma, Varun Chakravarthy, Sakib Hussain 5. Lucknow Super Giants BATTERS: KL Rahul (c), Ayush Badoni, Quinton de Kock, Devdutt Padikkal, Nicholas Pooran, Ashton Turner ALLROUNDERS: Krishnappa Gowtham, Deepak Hooda, Arshin Kulkarni, Prerak Mankad, Kyle Mayers, Krunal Pandya, Marcus Stoinis BOWLERS: Arshad Khan, Matt Henry, Shamar Joseph, Amit Mishra, Mohsin Khan, Naveen-ul-Haq, Ravi Bishnoi, Shivam Mavi, Manimaran Siddharth, Mayank Yadav, Yash Thakur, Yudhvir Singh 6. Mumbai Indians BATTERS: Tim David, Ishan Kishan, Naman Dhir, Shivalik Sharma, Rohit Sharma, Vishnu Vinod, Nehal Wadhera, Suryakumar Yadav ALLROUNDERS: Hardik Pandya (c), Dewald Brevis, Piyush Chawla, Shreyas Gopal, Anshul Kamboj, Mohammad Nabi, Shams Mulani, Romario Shepherd, Tilak Varma BOWLERS: Jasprit Bumrah, Gerald Coetzee, Kumar Kartikeya, Akash Madhwal, Kwena Maphaka, Arjun Tendulkar, Nuwan Thushara, Luke Wood 7. Punjab Kings BATTERS: Shikhar Dhawan (c), Jonny Bairstow, , Harpreet Singh, Prabhsimran Singh, Rilee Rossouw, Jitesh Sharma ALLROUNDERS: Sam Curran, Rishi Dhawan, Liam Livingstone, Ashutosh Sharma, Shashank Singh, Shivam Singh, Sikandar Raza, Atharva Taide, Chris Woakes BOWLERS: Arshdeep Singh, Rahul Chahar, Nathan Ellis, Harpreet Brar, Vidwath Kaverappa, Harshal Patel, Kagiso Rabada, Prince Choudhary, Vishwanath Singh, Tanay Thyagarajan 8. Rajasthan Royals BATTERS: Sanju Samson (c), Jos Buttler, Shubham Dubey, Shimron Hetmyer, Yashasvi Jaiswal, Dhruv Jurel, Tom Kohler-Cadmore, Riyan Parag, Rovman Powell, Kunal Singh Rathore ALLROUNDERS: Abid Mushtaq, Ravichandran Ashwin, Donovan Ferreira, Tanush Kotian BOWLERS: Avesh Khan, Trent Boult, Nandre Burger, Yuzvendra Chahal, Navdeep Saini, Sandeep Sharma, Kuldeep Sen 9. Royal Challengers Bangalore BATTERS: Faf du Plessis (c), Anuj Rawat, Saurav Chauhan, Dinesh Karthik, Virat Kohli, Rajat Patidar ALLROUNDERS: Akash Deep, Manoj Bhandage, Tom Curran, Cameron Green, Will Jacks, Mahipal Lomror, Glenn Maxwell, Suyash Prabhudessai BOWLERS: Mayank Dagar, Lockie Ferguson, Alzarri Joseph, Mohammed Siraj, Rajan Kumar, Himanshu Sharma, Karn Sharma, Swapnil Singh, Reece Topley, Vijaykumar Vyshak, Yash Dayal 10. Sunrisers Hyderabad BATTERS: Abdul Samad, Mayank Agarwal, Anmolpreet Singh, Travis Head, Heinrich Klaasen, Aiden Markram, Rahul Tripathi, Upendra Yadav ALLROUNDERS: Abhishek Sharma, Wanindu Hasaranga, Marco Jansen, Nitish Kumar Reddy, Glenn Phillips, Sanvir Singh, Shahbaz Ahmed, Washington Sundar BOWLERS: Pat Cummins (c), Akash Singh, Fazalhaq Farooqi, Bhuvneshwar Kumar, Mayank Markande, T Natarajan, Jhathavedh Subramanyan, Umran Malik, Jaydev Unadkat போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே. Rank Team M W L T N/R PTS Net RR 1 Gujarat Titans (Q) 14 10 4 0 0 20 0.809 2 Chennai Super Kings (Q) 14 8 5 0 1 17 0.652 3 Lucknow Super Giants (Q) 14 8 5 0 1 17 0.284 4 Mumbai Indians (Q) 14 8 6 0 0 16 -0.044 5 Rajasthan Royals 14 7 7 0 0 14 0.148 6 Royal Challengers Bangalore 14 7 7 0 0 14 0.135 7 Kolkata Knight Riders 14 6 7 0 0 12 -0.239 8 Punjab Kings 14 6 8 0 0 12 -0.304 9 Delhi Capitals 14 5 8 0 0 10 -0.808 10 Sunrisers Hyderabad 14 4 10 0 0 8 -0.590 Most runs[edit] Main article: Orange Cap Player Team Mat Inns Runs High score Shubman Gill Gujarat Titans 17 17 890 129 Faf du Plessis Royal Challengers Bangalore 14 14 730 84 Devon Conway Chennai Super Kings 16 15 672 92* Virat Kohli Royal Challengers Bangalore 14 14 639 101* Yashasvi Jaiswal Rajasthan Royals 14 14 625 124 Source: IPLT20.com Most wickets[edit] Main article: Purple Cap Player Team Mat Inns Wkts BBI Mohammed Shami Gujarat Titans 17 17 28 4/11 Mohit Sharma Gujarat Titans 14 14 27 5/10 Rashid Khan Gujarat Titans 17 17 4/30 Piyush Chawla Mumbai Indians 16 16 22 3/22 Yuzvendra Chahal Rajasthan Royals 14 14 21 4/17 Source: IPLT20.com End of season awards[edit] Player Team Award Prize David Warner Delhi Capitals Team fairplay award ₹10 lakh (US$13,000) Mohammed Shami Gujarat Titans Purple cap (most wickets) ₹10 lakh (US$13,000) Rashid Khan Gujarat Titans Catch of the season ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Gamechanger of the season ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Most fours ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Player of the season ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Orange cap (most runs) ₹10 lakh (US$13,000) Yashasvi Jaiswal Rajasthan Royals Emerging player of the season ₹10 lakh (US$13,000) Faf du Plessis Royal Challengers Bangalore Most sixes ₹10 lakh (US$13,000) and trophy Faf du Plessis Royal Challengers Bangalore Longest six ₹10 lakh (US$13,000) and trophy Glenn Maxwell Royal Challengers Bangalore Super striker ₹10 lakh (US$13,000), trophy and a car கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.
  24. கலைஞர் சாய் பாபாவை தரிசிக்கப் போகவில்லை. பாபாதான் கலைஞரின் கோபாலபுரம் வீட்டுக்குப் போனார். படத்தை போடாமலே கலைஞரை பக்திமான் என்று நம்பும் கூட்டம் யாழில் இருக்கின்றது😜 https://mumbaimirror.indiatimes.com/news/india/sai-baba-meets-cm/articleshow/15674967.cms Sri Sathya Sai Baba's visit to Chennai that started on Saturday had a surprise element in it. Contrary to the usual practice of people going to Baba for darshan, it was Baba who decided to call on Tamil Nadu Chief Minister M Karunanidhi at his residence in Gopalapuram in the city. It all happened suddenly. Around 4.00 p.m. word spread that Baba was visiting Karunanidhi's residence at 4.15 p.m. The meeting went on for close to 45 minutes, during which they discussed the repair works of Telugu Ganga canal, carried out with financial assistance from Sathya Sai Trust, for bringing Krishna river water from Andhra Pradesh to Chennai for meeting the city's drinking water needs. Karunanidhi also presented Baba two books, an English translation of ancient Thirukkural and a Tamil book written by himself.
  25. கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.