Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34940
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்! Last updated Jan 15, 2020 கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். போராட்ட வரலாறு தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார். 1983இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவில் கிட்டு இடம்பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9 இல் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். 1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. 1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் ‘குவேக்கர்ஸ்’ இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார். வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால், தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன. கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர் அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமை களைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்று ணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரை யொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர் வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 1979ல் ஆரம்ப காலப் பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம், சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும், வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர், தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது. வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில், துரதிஸ்ட வச மாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண் ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள். துப்பாக்கி ரவை களைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர, பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவற வில்லை. சாரதி காயப்பட வாகனம் செய லற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல , ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவ வாண்டின் இறுதிக் காலத் தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண் டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவ முகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங் கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவ வாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரி வடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார். தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. 1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்து ரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்துவைத் திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு அப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். ‘களத்தில்’, ‘எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு, விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்று றுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது. தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள். கேணல் கிட்டுவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப் புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப் பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். “கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார். இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில்கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன. கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரி யற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம். ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண் டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட் டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம். சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது. எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றி ருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது. “கிட்டு ஒரு தனிமனித சரித்திரம், நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ஒரு காலத்தின் பதிவு” எனக்கூறும் தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களோடு ஒன்றிணைந்து கேணல் கிட்டுவை நெஞ்சிலேற்றுவோம். அவர் நினைவு தினத்தில் உறுதியெடுத்துக்கொள்வோம் நன்றி எரிமலை https://www.thaarakam.com/news/45615
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராசவன்னியன் ஐயா!🎉🎉🎉
  3. உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் கேணல் சாள்ஸ்.! Last updated Jan 5, 2020 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும். கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி. யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்ஸ். சிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த நியாய விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். பின்னர் வடமராட்சியில் “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடி பிற்பாடு விலகி மீண்டும் மில்லரின் புதிய சகாப்தத்துடன் உள்நுழைந்து சாதனை படைத்தார். இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார். உண்மையில் நீண்டகாலமாக தென்னிலங்கையில் நின்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை குறிப்பாக சிறிலங்காப் படையின் கூட்டுப்படைத் தலைமையகம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களை தலைமையேற்று வழிநடத்தி அங்கு சிறிலங்காப் படைகனளால் தேடப்படும் போது மட்ட்க்களப்பைத் தளமாக வைத்துக்கொண்டு பல வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு வழிநடத்தினார். 2001 ஆம் ஆண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் எந்தவொரு பொதுமகனும், வெளிநாட்டுப் பிரயாணியும் பாதிப்படையாத வகையில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினை தகர்த்து எறிவதற்காக கரும்புலி அணிக்கான நீண்டகாலப் பயிற்சியினை வழங்கி, தாக்குதலை வழிநடத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த உத்தமவீரன். ஆனால் எங்கள் மக்களுக்கு அவர் முகம் தெரியாத ஒரு தளபதி. தொடக்க காலத்தில் தான் சார்ந்திருந்த துறையில் இருந்து கொண்டு கடற்புலிகளையும் வடக்கு-கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் தெற்கிலும் பாரிய தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் சில மறைமுக கடற்கரும்புலிகளை உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுத்துறையில் பணிகளை முன்னெடுத்த அதேநேரம் ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு ஊடாக சிறிலங்காவின் காலி கடற்படைத்தளத்தை மறைமுக கடற்கரும்புலிகளைக் கொண்டு தகர்ப்பதற்காக பல ஆண்டுகளாக அப்பணியைத் தொடர்ந்து, அத்தாக்குதல் நடைபெறுகின்ற நேரம் தொடர்புகளைப் பேணி வழி நடத்திய தளபதி இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் கண்டிப்பாக அவரின் கனவுகளை சுமந்து இப்போரியலை முன்னெடுத்துச் செல்வர். சாள்ஸ் எல்லோரோடும், தலைவர் அவர்களுடனும் நட்பு உரிமையுடன் பழகுகின்றவர். இவர் தனித்துவமாக தெற்கில் மட்டும் தகாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. யாழ். குடாநாட்டிலும் தாக்குதலை முன்னெடுத்து புதிய படைய புலனாய்புப் போராளிகளைக் கொண்டு முகமாலை முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேறுகின்ற நடவடிக்கையிலும் அணியை வழிநடத்தியவர் இன்று இல்லை. இன்றை சூழ்நிலையில் இவரின் இழப்பு விடுதலைப் போராட்த்திற்கு பாரிய இழப்பாகவும் உள்ளது. எமது விடுதலைப் போராட்டம் பல தளபதிகளையும் துறைசார் பொறுப்பாளர்களையும் இழந்து நிற்பினும் படிப்படியாக பல வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது. இழப்புக்களை தாங்கிக்கொள்வது கடினம். ஆனால் இழப்புக்கள் இல்லாமல் விடுதலையை பெற்றுவிட முடியாது. நிச்சயமாக சாள்சின் கனவினையும் விடுதலைப் போராட்டத்தின் எண்ணத்தையும் முன்னெடுத்து எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவோம் என்றார் அவர். கேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் 06.01.2008 அன்று கேணல் சூசை ஆற்றிய உரையில் இருந்து …! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/107102 கேணல் சாள்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.! Last updated Jan 4, 2020 கேணல் சாள்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டத்தில் 05.01.2008 அன்று பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) லெப்டினன்ட் வீரமாறன், லெப்டினன்ட் காவலன், லெப்டினன்ட் சுகந்தன் ஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! https://www.thaarakam.com/news/107119
  4. அக்னியஷ்த்ராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  5. போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணி பூநகரிப் படையணி! Last updated Dec 31, 2019 தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல புகழ்பூத்த படையணிகள் பற்றியும் அவற்றின் நீண்ட போரியல் வரலாறு பற்றியும் நாமறிவோம். ஆயினும் பல்வேறு காலகட்டங்களிலும் தேவைகருதி உருவாக்கப்பட்டு பின்னாளில் வேறு படையணிகளுடன் அல்லது பிரிவுகளுடன் இணைக்கப்பட்ட படையணிகள், பிரிவுகள் இப்போராட்ட வரலாற்றில் இருந்தன என்பது நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அடுத்த தலைமுறைக்கு அவைபற்றி எதுவுமே தெரியாமல் போகலாம். அந்தந்த காலகட்டங்களில் அவ்வப் படையணிகள், பிரிவுகள் ஆற்றிய போராட்டப் பங்களிப்புகள் வரலாற்றில் பதியப்படவேண்டிய மிகவும் தார்மீகக் கடமையாகும். அந்தவகையில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் தொலைநோக்குடன் கூடிய முயற்சியில் தோற்றம்பெற்ற பூநகரிப் படையணி பற்றி் சற்றுக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். பூநகரிக் கட்டளைப் பணியகம் என பூநகரிப் பகுதியில் நிலைகொண்டிருந்த அரசியல்துறைப் போராளிகள், ராஜன் கல்விப்பிரிவுப் போராளிகள் மற்றும் புதிய போராளிகள் எனப் பல்வேறு தரப்புப் போராளிகளுடன் 2007 இல் இப் படையணி உருவாக்கப்பட்டது. அப்போது படையணியின் சிறப்புத் தளபதியாக லெப்.கேணல் ஈழப்பிரியனும் தளபதியாக கேணல் கீதனும் துணைத்தளபதியாக வேந்தனும் நியமிக்கப் பட்டனர். மிக அதிகளவான புதிய இளம் போராளிகளைக் கொண்டதொரு படையணியாக இருந்த போதும் இப்படையணி களங்களில் காட்டிய வீரமும், ஈகமும், உணர்வுவெளிப்பாடும் மிக உன்னதமானவை. இருபது வயதைக்கூட எட்டாத அந்த இளைய தலைமுறையின் உறுதியும் தாங்குமாற்றலும் உயர்வானவை. பூநகரியைத் தளமாகவும் முக்கொம்பன் மற்றும் செம்மண்குன்று ஆகிய பகுதிகளை பயிற்சித் தளமாகவும் இப்படையணி கொண்டிருந்தது. மிகத் தாக்கமான பயிற்சிகள், சிறந்த தெளிவூட்டல், பொறுப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் இடையேயான சிறந்த உறவு நிலை, புரிந்துணர்வு என்பன மிகக் குறுகிய காலத்தில் படையணியின் வளர்ச்சிக்கு வித்திட்டன. மன்னார் களமுனையில் மிகக் கடுமையான சண்டைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், இப்படையணி அங்கு அழைக்கப்பட்டது. இப்படையணியின் ஆண், பெண் போராளிகள் அங்கு நிலைப்படுத்தப்பட்டனர். அடம்பனைக் கைப்பற்ற படையினர் மேற்றுக்கொண்ட பல முன்னேற்ற நடவடிக்கைகள் இப்போராளிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்படடன. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மன்னார் பரந்தவெளிகளில் எதிரியின் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள், ‘ராங்கி’ என்னும் கவச ஊர்தித் தாக்குதல்கள், பதுங்கிச்சூட்டுத் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு மட்டுமன்றி இயற்கையின் இரக்கமற்ற பெரும் தாக்குதல்களுக்கும் இவர்கள் தாக்குப் பிடிக்கவேண்டியிருந்தது. ஆறடி உயர மண்ணணை அரையடியாகக் கரைந்த நிலையிலும், நகர்வகழிகளில் மார்பளவு நீர் நிறைந்திருந்தபோதும் அந்தக் களமுனையில் அவர்கள் நிலைத்திருக்க வேண்டியிருந்தது. இரவுபகலின்றிப் பெய்த பெரு மழையில் விடியவிடிய நனைந்தபடி குளிரில் உடல் விறைக்க, அதிகாலையில் அலையெனவரும் எதிரியுடன் மோதவேண்டியிருந்தது. இப்படையணியில் ஆண்போராளிகளுக்கு நிகராகப் பல சமயங்களில் அதற்கு மேலாக பெண் போராளிகள் செயற்பட்டனர். பல களமுனைகளில் ஆண் போராளிகளை, பெண் போராளிகள் வழிநடத்திச் செயற்பட்ட வரலாறுகளும் உண்டு. மன்னாரில் மட்டுமன்றி, மணலாறு, முகமாலைப் பகுதிகளிலும் இப்படையணி எதிரிகளுடன் சமரிட்டது. படைகளிலிருந்து விட்டோடுதல் பொதுவானது எனினும், இப்படையணியில் அது மிக மிக அரிதாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிற்கொருவர் என இணைக்கப்பட்ட போராளிகளே இப்படையணியில் அதிகம் இருந்த போதும் பற்றுறுதியிலும் வீரத்திலும் தாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இவர்கள் நிரூபித்தே வந்துள்ளனர். விடுமுறையில் சென்றாலும், காயம்பட்டு மருத்துவமனை சென்றாலும் விரைந்து களம் திரும்பவேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் என்றும் மேலோங்கியே நின்றது. இப்படையணியின் ஒருவருட நிகழ்வில் களங்களில் திறமையாகச் செயற்பட்டவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிப்பேசிய முதுநிலைத்தளபதிகள் பிரிகேடியர் பானு ,பிரிகேடியர் தீபன் ஆகியோரின் கருத்துக்கள் இவற்றிற்குச் சான்றாக அமைந்தன. அதுமட்டுமன்றி, இப்படையணியின் செயற்பாடுகளை அவதானித்து வந்த தேசியத்தலைவர் மிக இறுக்கமான காலச் சூழ்நிலையிலும் இந்த இளம் போராளிகளை சந்தித்து அளவளாவியது அவர்களுக்கு கிடைத்த மற்றொரு சிறப்பாகும். அனுபவம் மிக்க மூத்த போராளிகளாகவோ அல்லது அகவை அதிகம் கொண்டவர்களாகவோ இவர்களில் அநேகர் இல்லையாயினும், உணர்விலும் துணிவிலும் இவர்கள் என்றும் குறைந்து போய்விடவில்லை. “ராங்கி” கவச ஊர்திகளால் காவலரண்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டபோதும், தளராது நிலைத்து நின்று முறியடித்த இளம் போராளிகள்…… ஒற்றையாளாக நின்று காப்பரண் காத்தவர்கள்…… பக்கவாட்டுக் காவலரண் எதிரியால் கைப்பற்றப் பட்டபோதும் வாரக்கணக்கில் நிலைத்து நின்று போரிட்டவர்கள…… காயமடைந்தும் களம் விட்டகலாதவர்கள்….… காவலரணை விட்டு வெளியேற மறுத்து இறுதிவரை இலக்குச் சொல்லி இல்லாமல் போனவர்கள்….. காதலனை, காதலியை களத்தில் இழந்தபோதும் கடுகளவும் கலங்காது தம்பணி தொடர்ந்தவர்கள்…… இப்படையணியின் தளபதிகளாக, பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் அவரவர் பணிகளை முன்மாதிரியாகவும் பொறுப்புணர்வுடனும் முன்னெடுத்துச் சென்றனர். அந்த வகையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தளபதிகளான லெப்.கேணல் ஈழப்பிரியன், கேணல் கீதன் மற்றும் களங்களில் போராளிகளை வழிநடத்திய லெப்.கேணல் ரகு, லெப்கேணல் ஜெரோம், லெப். கேணல் மாறன், லெப். கேணல் செஞ்சுடர், மேஜர். குமரதேவன், மேஜர். கலைச்சோழன், கப்டன். ஆதிரை, சிறப்பு நடவடிக்கை அணிக்குப் பயிற்சி அளித்த லெப்.கேணல் நிசாந்தன் ஆசிரியர் உள்ளிட்ட பலர் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். போர் இறுதிக்கட்டத்தை அண்மித்த காலக்கட்டத்தில் இப்படையணியின் ஆண் போராளிகள் இம்ரான் பாண்டியன் படையணியுடனும், பெண் போராளிகள் வேறு படையணிகள், பிரிவுகளுடனும் இணைக்கப்பட்டனர். அதன்பின்னர், திரு.வேலவனைச் சிறப்புத் தளபதியாகக் கொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியாக லெப்.கேணல் ஈழப்பிரியனும் துணைத்தளபதியாக கேணல்.கீதனும் நியமிக்கப்பட்டனர். பூநகரிப் படையணியின் போராளிகள் வேறு படையணிகளில், பிரிவுகளில் உள்வாங்கப்பட்டபோதும் அவர்கள் தமது தனித்துவமான பண்புகளுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்தும் பயணித்தனர். பூநகரிப்படையணியின் செயற்பாட்டுக் கால அளவு குறுகியதாயினும் அதன் செயற்றிறனும் வீரமும் அர்ப்பணிப்புகளும் மிக வீரியமானவை. அந்த வகையில் அதன் மாவீரர்களும் போராளிகளும் நினைவில் கொள்ளப்பட வேண்டியவர்களே. (இந்த எழுத்துருவாக்கம் இப்படையணியின் ஒரு முழுநிறைவான செயற்பாட்டுப் பதிவல்ல. இது மிகச் சுருக்கமான ஒரு நினைவுப்பதிவே. இன்னும் சொல்லப்பட வேண்டிய விடயங்கள் அநேகம் உண்டு. அவற்றை தெரிந்தவர்கள், சம்பந்தப் பட்டவர்கள் பதிவிடலாம். அறியத்தரலாம். தொடர்புடைய ஒளிப்படங்கள் இருப்பின் பதிவிடலாம் அல்லது தந்துதவலாம்.) *** குறிப்பு:- தமிழன் வன்னிமகன் மேஜர் கடலரசன், பூநகரிக் கட்டளைப் பணியகம்: மன்னார் அடம்பன் களமுனை! மன்னார் களமுனையின் அடம்பன் பகுதி. ”KP 02” எனக் குறிக்கப்பட்ட காவலரண் பகுதியில் எதிரியின் தாக்குதல் முன்னகர்வொன்று திடீரென ஆரம்பிக்கிறது. ‘ராங்கி’ மற்றும் கடுமையான எறிகணைச் சூட்டாதரவு என்பவற்றுடன் அந்த முன்னகர்வு ஆரம்பமாகிறது. ஒரு குளத்தின் மண்தடுப்பணையில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் காப்பரண் எமக்கு முக்கியமானதொன்று. அந்தக் காப்பரண் விடுபட்டால் அந்தப் பகுதியையே நாம் இழக்க வேண்டிவரும். நிலைமைகள் கட்டளைப் பீடத்திற்கு அறிவிக்கப்படுகிறது. சூட்டாதரவு, மீள்வலுவூட்டல் நடவடிக்கைகளுக்குத் தேவையான கால அவகாசம்வரை தாக்குப் பிடிக்க உடனடி ஆதரவு அவசியமாகிறது. ”KP 02′ இற்கு உடனே இரும்பை அனுப்புங்கோ,” என்று கட்டளைப்பீடத்தில் இருந்த கேணல் கீதன் மாஸ்ரரிடமிருந்து பகுதிப்பொறுப்பாளருக்கு தகவல் பரிமாறப்படுகிறது… “நான் அங்கேதான் நிக்கிறன் K7, சரமாரியான சூட்டொலிகள்.. எறிகணை வெடிப்புகளுக்கிடையே அவனது குரல் தொலைத்தொடர்புக் கருவியூடாகத் தெளிவாகக் கேட்கிறது.” இவ்வளவு வேகமாய் எப்படிப் போனான்.. இப்படி கள நிலைமையை புரிந்துகொண்ட அவன் விரைந்து செயற்படுவது இது முதல்தடவை அல்ல என்பதை தளபதி அறிந்தே இருந்தார். அவர் மட்டுமல்ல; அங்கிருந்த அனைத்துப் போராளிகளும் அறிந்தே இருந்தனர். நாங்கள் அவனை இரும்பு என்றுதான் அழைப்போம். எனக்கு இவன் முதலில் அறிமுகமானது 2008இன் ஆரம்பப் பகுதியிலேயே. பூநகரிப் படையணி ஆரம்பிக்கப் பட்டபின் தனது கன்னிக் கள நடவடிக்கைகளுக்காக அடம்பன், பாலைக்குளி ஆகிய பகுதிகளில் நிலைகொள்ளத் தயாரானது. இந்த அணியில் அவனும் உள்ளடங்கியிருந்தான். நல்ல உயரம்… உறுதியான உடலமைப்பு… குத்து வரியில் தனது கனரக ஆயுதத்துடன் கம்பீரமாக நின்றிருந்தான். சித்திரை மதம் 2008 அதிகாலை ‘வேட்டையா முறிப்புப்’ பகுதியில் எதிரியின் முன்னேற்ற நடவடிக்கை தொடங்கியது. எமது கட்டளைத் தளபதி லெப்.கேணல் ரகு (இப்போது மாவீரர்) அவர்களால் அழைக்கப்பட்டேன். “சுருதியின் காப்பரண் பகுதியில் தொடர்பில்லை.. இரும்பை உடனடியாக ‘மோட்டார் சைக்கிளில்’ கொண்டு அங்கு இறக்கிவிட்டு வா,” என்று எனக்குக் கட்டளை வழங்கப்பட்டது. அவன் தனது முழு ஆயத்தநிலையில் அங்கு நின்றிருந்தான். அவனையும் மற்றுமொரு போராளியையும் ஏற்றிக்கொண்டு சண்டை நடக்குமிடத்திற்கு விரைகிறேன். “வேகமாப்போ …! வேகமாப் போ..!” என சத்தமிட்டபடி வருகிறான். சண்டை நடக்கும் பகுதியை அண்மித்ததும் நிறுத்தும்படி கூறியவன் ‘”இஞ்ச விட்டுட்டு நீ போ” என்கிறான். “நானும் உங்களோட வாறன் கடல்,” என்று நானும் அவனுடன் புறப்பட, “அங்க ‘ரோமியோ-2’ இன் இடத்தில அவசரத்துக்கு ஆக்கள் இல்ல, நீ திரும்பிப் போ, கவனம்,” என்று கூறிவிட்டு, எதிரியை மறித்துத் தாக்குவதற்காக விரைகிறான். நெடுநேரம் இடம்பெற்ற இச் சண்டை முடிவுக்கு வந்தபோது எமது காப்பரண் பகுதிகள் மீட்கப்பட்டதுடன், எதிரியின் படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன. இச்சண்டையில் கடலரசனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இப்படித்தான் முன்னணிக் காப்பரண் வரிசையில் கடலும் அவனது PKLMG உம் எதிரியை மறித்துத் தாக்குதல் நடத்துவதிலும் விடுபட்ட நிலைகளை மீட்பதிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்தன. கடலைப் பொறுத்தவரை PK இனை மட்டுமல்ல, RPG எனப்படும் உந்துகணைச் செலுத்தியையும் மிகத் துல்லியமாகக் கையாளக்கூடிய திறமையைக் கொண்டிருந்தான். பலமுறை அவனது RPG தாக்குதலும் எதிரியின் நகர்வுகளை முறியடிப்பதற்கு உதவியாய் அமைந்திருந்தத. மல்லாவி களமுனைக்கு எமது அணிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. மல்லாவி மத்திய கல்லூரியை அண்டிய பகுதியில் படையினரின் பெருமெடுப்பிலான நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது. மிகவும் கடுமையான சண்டை மூண்டது. “ஒரு ரீமோட கடலை உடனே அனுப்புங்கோ,” என்று பிரிகேடியர் பானுவிடமிருந்து கட்டளை பறந்தது. கடலரசன் அந்தச் சிறு அணியுடன் விரைகிறான். எதிரிகளை முறியடித்து அவனது அணி முன்னேறுகின்றது. எதிரியிடமிருந்து அங்கு கைப்பற்றிய RPG இனை அவன் எதிரிகளை நோக்கி இயக்குகிறான்… இன்னுமொரு இலக்கு… விரைந்து முன்னேறி இலக்குப் பார்த்தவனின் தொடைப் பகுதியில் எதிரியின் குண்டொன்று ஆழத் துழைத்தது! இச்சமரில் பல ஆயுதங்களும் எதிரியின் வாகனங்களும் கைப்பற்றப்படுகின்றன. ஆனால் எங்கள் கடலை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. களமெங்கும் கனன்று, விழுப்புண் பலதாங்கி, வீரம் விதைத்த இம் மாவீரன் மல்லாவி மண்ணில் விதையாகிப் போனான். “தம்பி டேய், நான் வீரச்சாவடஞ்சா என்னப்பத்தி நாலுவரி எழுதுவியா..” அவனின் குரல் இன்றும் என்னுள் ஒலிக்கிறது… https://www.thaarakam.com/news/106254
  6. எல்லோருக்கும் கடைசிப்பிள்ளை லெப். கேணல் ஈழப்பிரியன்.! Last updated Dec 31, 2019 பிரியா என் அன்பு நண்பனே…! உனக்கு…… என் வீரவணக்கங்கள்..! ஈழப்பிரியன், ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். மெய்ப்பாதுகாவலனாக, தனிப்பட்ட உதவியாளனாக, கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக, அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக, வினியோக அணி பொறுப்பாளனாக, முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக, இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்… கிளிநொச்சி உருத்திரபுரம் தான் அவனது பெற்றோர் வீடு என நினைக்கின்றேன் அப்பா ஓர் சாதாரண அரச ஊழியர்.. அவனது தம்பி திருமணம் முடித்துவிட்டான்.. அதனால் ஈழப்பிரியனுக்கு கொஞ்சம் கோபம்.. கோபம் வந்தால் அவனது முகம்.. பழுத்த மிளகாய் போல் இருக்கும்..கோபம் வந்தால் கதை வராது மாறாக கொன்னைக்கதைதான் வரும்… கண்ணை மூடிவிடுவான்.. போ..போ.. என சொல்லிவிட்டு தலையினை ஒருபக்கம் திருப்பி விட்டு.. சென்றுவிடுவான்.. கதைக்கவே மாட்டான்.. இப்படி ஒரு சில மாதங்கள் என்னுடன் பேசாமல் இருந்தான்.. நான் வேணும் என்று அவனுக்கு ஆத்திரமூட்டுவதற்காக கிட்ட கிட்ட செல்வேன்.. அவனுக்கு இன்னும் இன்னும் கோபம் வரும்.. ஆனால் ஒரு நாள் என்னிடம் வந்து சொறி சொன்னான்.. ஏனென்றால் அவன் என்னிடம் ஆத்திரப்பட்டதற்கு எந்தக்காரணங்களும் இருக்கவில்லை. உயரம் குறைவு, உருண்டு திரண்ட உடல்.. கிட்டத்தட்ட புறூஸ்லி மாதிரி உடல்கட்டமைப்பு.. அதற்கேற்ப எப்போதும் பயிற்சியும் ஓட்டமும் தான்.. உடல்வாகுவையும் உயரத்தினையும் பார்த்து நாங்கள் எல்லோரும் பண்டிக்குட்டி என்று அழைப்போம்.. ஆனால் அவனுக்கு அப்படி கூப்பிட்டால் கோபம் வராது. எந்தப்பணி ஆனாலும் தெரியாது, அல்லது செய்ய மாட்டேன், என சொல்லமாட்டான். அதேபோல பணி செய்வதற்கு தனக்கு என்னென்ன தேவை என்றும் கேட்கமாட்டான்.. எல்லாம் தானே உருவாக்கி கொள்வான் அல்லது தேடிக்கொள்வான். ஒரு பொறுப்பாளனாக தன்னை ஈழப்பிரியன் நினைப்பதே இல்லை.. எல்லோருக்கும் கடைசிப்பிள்ளைபோலவே இருப்பான் என்ன வேலை சொன்னாலும் என்ன உதவி கேட்டாலும் செய்வான். அதனைவிட அரசியல்துறை மற்றும் இயக்க முக்கிய பொறுப்பாளர்கள் எங்கு இருக்கினம், எப்படி தொடர்பு கொள்ளலாம் என்ற விபரம் அவனின் சுண்டு விரலில் இருக்கும்.. அதனால் தமிழ்ச்செல்வன் அண்ணர் அவனை எங்கு சென்றாலும் கூட்டிக்கொண்டு போவார். குறிபிட்ட ஒருவரை தமிழ்செல்வண்ணர் கூட்டிவரச்சொன்னால்.. அடுத்த கணத்தில் எப்படியாவது ஆட்களை கொண்டுவந்து சேர்த்திடுவான். கூடவே கூட்டிவாறவர்களுக்கு உடுப்பு பாக் உடன் வரட்டாம் என்று பேதியும் குடுப்பான். தமிழ்ச்செல்வண்ணரால் குந்தி இருந்து டொய்லட் போகமுடியாது.. (விழுப்புண் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் பின்னர்) ஆகவே கொமட் தேவை. ஆனால் வெளியே செல்லும் போது கொமட் இருக்காது அதனால் எப்போதும் ஓர் உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட முக்காலி ஒன்று வாகனத்தில் இருக்கும்.. அதுபோல டயபற்றிக்ஸ் மருந்தும் கட்டாயம் தேவை. ஈழப்பிரியன் தனக்கு உடுப்பு, பிறஸ் எடுக்காமல் மறந்து போனாலும் மேற்கூறிய கொமட் மற்றும் டயபற்றிஸ் மருந்துகளை எப்போதும் மறக்கவே மாட்டான்.. இவ்வாறு பொறுப்பாளர்களின் முக்கியத்துவத்தை மட்டும் அன்றி தன் சக போராளிகளின் தேவைகளைக்கூட பூர்த்தி செய்த பின்னர்தான் தன்னைப்பற்றி சிந்திப்பான் இந்த போராளி. எல்லோரையும் சாப்பிட்டுவிட்டீர்களா? குளித்துவிட்டீர்களா.. என கேட்டுக்கொண்டே இருப்பான் அதன் பின்னர்தான் தான் சாப்பிடுவான். நிர்வாகத்தில் மட்டுமல்ல சண்டை, பயிற்சி, சூட்டுப்பயிற்சி, ஒழுக்கம், சுகாதாரம், எல்லாவற்றிலும் திறமையானவன்.. இத்தனைக்கும் மத்தியில் அவன் பெரிதாக படிக்கவில்லை.. ஆனால் உண்மையில் சக போராளிகளுக்கு அவன் ஓர் சமூக பல்கலைக்கழகம் என்றே கூறலாம். சிலவேளை அவனின் கதைகள் மிகப்பெரிய பொறுப்பாளர்கள், அல்லது பெற்றோர்கள் போலவும் இருக்கும். இயக்கத்தை விட்டு விலத்தப்போறேன் என்று கூறும் போராளிகள், பொறுப்பாளரின் நடவடிக்கைகளால் மனம் உடைந்து போன போராளிகள் ஆகியோர்களிடம் இவன் பேசும்போது பார்த்தால்.. உண்மையில் ஓர் முதிர்ச்சியடைந்தவர்கள் பேசுமால் போல் விளக்கங்கள் கொடுப்பான். இந்த சின்ன வயதில் இவற்றையெல்லாம் .. இந்த உளவியல் பயிற்சிகளை எங்கு கற்றான் என்று எனக்குள் கேட்டுக்கொள்வேன்.. ஏனென்றால் அவன் புத்தகங்கள் வாசிப்பதனை நான் பார்த்ததே இல்லையே. அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவடையும் போது அவன் பூனகரி பகுதியில் முன்னணி காப்பரண் கண்காணிப்பு பொறுப்பாளராக இருந்தான்… அரசியல் துறைப்பொறுப்பாளர் வீரச்சாவு அவனை பெரிதும் பாதித்திருந்தது.. என்றாலும் அவனின் பொறுப்புணர்ச்சி, கடமை, உறுதி, போராளிகளை வழி நடத்தும் பக்குவம், தற்துணிவு, ஆகியவற்றை கவனத்தில் கொண்டு.. எங்கள் ஈழப்பிரியனை முழுமையாக ஓர் தளபதியாக்கினார் தேசியத்தலைவர்.. அப்போது நான் அங்கு இல்லை.. என்றாலும் எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.. அவன் தளபதியான செய்தி.. ஏனென்றால் அவன் சாதிக்கப்பிறந்தவன். முன்பு என்றால் அவன் எங்களை பகிடி பண்ணுவான்.. என்ன அண்ணர் நீங்கள் எல்லாம் படிச்சனிங்கள்.. உங்களுக்கு நிறையப்பணிகள் கதைக்கவே மாட்டீங்கள் போல .. (பகிடிக்குத்தான்)… ஆனால் அவன் தளபதி ஆனதும்… நாங்கள் கடிக்க வெளிக்கிட்டுவிட்டம்.. என்ன தளபதி இனி நீங்கள் இனிமேல் கதைக்கமாட்டீங்கள் என்று.. இனி எப்படி கூப்பிடலாம் தளபதி என்றா என கடிப்போம்.. ஆனால் அவன் மண்ணாங்கட்டி… என்று அங்கால தூசணத்தால்.. ஒன்று விடுவான். பெண்போராளிகளுக்கு ஏதாவது செய்தி கொண்டு போய் சொல்வதே அவனுக்கு மிகப்பெரிய கஸ்டமான பணியாக இருந்திருக்கும்.. அவ்வளவு வெட்கம்.. பெண் போராளிகள் முகாம் வந்தால் அல்லது ஏதாவது கேட்க வந்தால் ஈழப்பிரியன் எஸ்கேப். இறுதிக்கட்ட போரில் ஈழப்பிரியன் தனது கொம்பனியுடன் நாச்சிக்குடா பக்கமும் , பூனகரி கடற்கரையோரமும் லைன் போட்டு நிலை கொண்டிருந்தான்.. அப்போது எம்முடன் பேசினான். யாழ்ப்பாணத்தால இறங்க விடமாட்டேன்.. கடலால இறங்க விடமாட்டேன் என்றான்… உண்மைதான்.. அவன் இறங்கவிடவில்லை.. ஆனால் மன்னாரில் இருந்து வந்த படையணிகளில் ஒன்று ஆனைவிழுந்தான் பகுதிக்கால் முன்னேறி வந்துவிட்டதால் பூனகரி, நாச்சிக்குடா பகுதிகள் துண்டிக்கப்பட்டது. இதன் பின்னர் கிளி நொச்சி, கரடிப்போக்கு பகுதிக்கு வந்து அங்கே லைன் போட்டு கிளி நகரை பாதுகாக்கும் வியூகத்தில் வடபகுதி காவலரண்களுக்கு பொறுப்பாக நின்றான். அப்போதும் பேசினான். அவன் சொன்ன வார்த்தைகள் இதுதான்.. இந்த முன்னணிக் காவலரண்களை இராணுவம் உடைக்க விடமாட்டேன் அப்படி சில வேளை நடந்து இராணுவம் உள் நுழைந்தால் அது என் வெற்றுடல் மீதுதான் நடக்கும் என்றான். ஈழப்பிரியனின் உயிர் இருக்கும் வரை இந்த லைனை உடைக்க விடமாட்டேன் என்றான். ஆனால் எனக்கு அவன் சொல்வதனை கேட்டு உண்மையில் பயம்தான் வந்தது.. ஏனென்றால் அவன் எப்போதும் சொல்வதனை நிறைவேற்றுவான்.. சண்டையின் போக்கை பார்த்தால் கிளி நொச்சி வீழ்ப்போவதற்கு சில நாட்களே இருக்கலாம்.. ஆனால் கிளி நொச்சி முக்கியமல்ல எங்களுக்கு ஈழப்பிரியனே வேண்டும்.. ஏனென்றால் அவன் இயக்கத்திற்கு.. எம் தலைவரிற்கு.. எம் போராளிகளுக்கு தேவை.. அதனால் தான் எங்களுக்கு பயம்.. கடவுளே அவன் சொன்னது போல .. நடந்துவிட்டதே..! எங்கள் அன்பின் பண்டிக்குட்டியை நாங்கள் பார்க்க மாட்டோம்….. டேய் பண்டிக்குட்டி நீயும் உன்னைப்போன்ற எம் வீரர்களும் வலிமையுடையவர்கள்.. எங்களை விட வலிமை உடையவர்கள்.. உங்கள் மூச்சு உங்கள் இலட்சியம் அடையும் வரை .. எங்களை சுற்றிக்கொண்டே இருக்கும்.. மீண்டும் பிறந்து வாருங்கள்.. எங்களையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள்.. நாம் சென்ற பாதை, செல்கின்ற பாதை , செல்லப்போகின்ற பாதை.. எல்லாமே ஒன்றுதான் மாற்றமாட்டோம்.. நண்பனே….! நினைவுப்பகிர்வு:- பாசறை நண்பர்கள் உமை… ‘வேலன்’. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/106382
  7. ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎉🎉
  9. இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ் 28வது ஆண்டு நினைவு ( 11.12.2019 ) மீள் பதிவு பொன் . வேணுதாஸ் அவர்களைப்பற்றி நாம் எழுதமுனையும் பொழுது மட்டக்களப்புப்பற்றியும் மாவட்ட அரசியல்பற்றியும் எழுதுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அன்னியர் ஆதிக்கத்தால் இழந்துபோன ஈழத்தமிழருக்கான இறமையுள்ள தாயகத்தை இலங்கையின் வடகிழக்கே நிறுவவேண்டுமென்ற இலட்சியத்தை சொல், செயல், சிந்தனை மூலம் பள்ளிப்பருவத்திலிருந்து ஆரம்பித்த இவருடையபணி எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கு நீண்டகால ஆதரவாளராக செயல்பட்டவர்கள் என்றவரிசையிலும் உள்ளடக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணம் என்றழைக்கப்படுகின்ற தென்தமிழீழம் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழர்நிலமாகும். 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்பு வாதிகளின் நிலப்பறிப்பு நடவடிக்கையினால் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களின் இனவிகிதாசாரம் மாற்றப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தமிழர்பெரும்பான்மையாக வாழும் நிலைமை இன்றுள்ளது. ஆங்கிலேயர்களால் இலங்கைத் தீவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரம் உண்மையில் சிங்களவர்களுக்குத்தான் கிடைக்கப்பெற்றது. தமிழர்கள் அன்றிலிருந்து சிங்களஆக்கிரமிப்புக்குள் கொண்டுவரப்பட்டனர். 1972 ம் ஆண்டு புதிய அரசியலமைப்பின் உருவாக்கமும் தமிழ் மாணவர்களுக்குகெதிரான கல்வியில் தரப்படுத்தல் சட்டமும் தமிழ் மாணவர் பேரவை உருவாக்கத்திற்கு அடிகோலியது .1948 ம் ஆண்டிலிருந்து சிங்கள அரசுகளின் நிலப்பறிப்பு மொழிச்சிதைப்பு என்பவற்றால் தமிழ் மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மட்டக்களப்பு நகரத்தில் 05 . 11 .1952 அன்று பிறந்த மேஜர் வேணுதாஸ் உயர் கல்வி மாணவராக இருந்தகாலத்தில் கொண்டுவரப்பட்ட கல்வியில் தரப்படுத்தல் சட்டம் தமிழ் மாணவர்களை மிகவும் பாதித்தது. இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தமிழ் மாணவர் பேரவை ஈடுபட்டது. தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத 1972 ல் உருவாக்கப்பட்ட புதிய அரசியிலமைப்பின் மே 22 குடியரசு தினக்கொண்டாட்டங்களையும் தமிழ் மாணவர் பேரவை உட்பட முழுத் தமிழர்களும் புறக்கணித்தனர். இப்போராட்டங்களில் மாணவராக மேஜர் வேணுதாஸ் மற்றும் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் முதல் மாவீரர் லெப்.பரமதேவா போன்றவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் மூலம் மேஜர் வேணுதாஸ் தமிழ் மக்களின் விடுதலை சார்ந்த அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த ஆரம்பித்தார். அன்றுதொடக்கம் இவர் வீரச்சாவடைய மட்டும் இவருடைய பணி தமிழ்மக்களின் விடுதலையையொட்டியதாகவே இருந்தது. பள்ளிக்கூட நாட்களில் மாணவ தலைவனாகவும் இல்லத்தலைவனாகவும் பின்பு தமிழ் மாணவர் பேரவை தமிழ் இளைஞர் பேரவை போன்றவற்றின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராகவும் இவர் செயற்பட்டத்தை இன்று எண்ணிப்பார்க்கின்றபோது இவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்காது என எண்;ணத்தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் மட்டக்களப்புத் தமிழ்மக்களுக்கு அரசியலில் ஒரு உண்மை உணர்வுமிக்க தலைவனும் கிடைத்திருப்பார். அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் எமது மக்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலை கடந்தகாலங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட சம்பவங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் விடுதலையில் எவ்வித சுயநலப்போக்குமில்லாத விடுதலை அமைப்பையும். அதன் தலைமையையும் ஏற்றுக்கொண்டு எமது தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தீவிர ஆதரவாளராக இருந்து பின்பு உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார் . தமிழ்மக்களின் விடுதலையில் தீவிரமாக இளைஞர்கள் செயல்பட ஆரம்பித்தகாலத்தில் உருவாக்கம்பெற்ற தமிழ் இளைஞர் பேரவையில் தீவிர செயல்பாட்டாளராக தன்னை மாற்றிக்கொண்டார். இவருடன் இணைந்து செயல்பட்டவர்களில் லெப். பரமதேவா, லெப். சரவணபவான், மேஜர். சந்திரன் (வள்ளுவன்) (காசி ஆனந்தன் தம்பி), லெப் ரஞ்சன் (சைமன்) பொத்துவில் ,பன்னீர்ச்செல்வம் (கல்முனை), மேஜர் கோவிந்தசாமி ஐயா (வந்தாறுமூலை) போன்றவர்களையும் குறிப்பிடமுடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் மட்டக்களப்பில் செயல்படத்தொடங்கியவேளையில் வேணுதாஸ் அவர்களின் ஒத்துளைப்பு அவர்களுக்கு பூரணமாகக்கிடைத்தன. மட்டக்களப்பு நகரில் போராளிகள் தங்குவதற்கு மறைவிடத்தை ஒழுக்கு படுத்தியதிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பயிற்சிப் பாசறைக்கு மட்டக்களப்பிலிருந்து போராளிகளை அனுப்புவதற்கு குறிப்பிடத்தக்கவர்களை இணைத்து விட்டதிலிருந்து இவருடையபணி ஆரம்பமானது. இவரைப்போன்றவர்களைத்தான் மட்டக்களப்பில் நீண்டகால தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று நாம் குறிப்பிட முடியும். அது மட்டுமல்லாமல் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு மறைவிடத்தில் வைத்து சிகிச்சையளிப்பதற்கு வைத்தியர் ஒருவரையும் ஒழுக்கு படுத்திக்கொடுத்தார். இவ்வாறு பல்வேறு வழிகளில் இயக்கத்தின் போராளிகளுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்தார். உள்ளுராட்சித் திணைக்களத்தில் எழுதுனராகப் பணியாற்றிய வேணுதாஸ் சட்டம் பயின்று சட்டவாளரானார். இவருடைய மனைவி ஜமுனாதேவி அரச வங்கியொன்றில் பணியாற்றினார் அவருக்கும் குடும்பத்துக்கும் வசதியான வாழ்வு கிடைத்தும் தமிழ் மக்கள் விடுதலை பெற்று தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்பதில் தீவிரமாக அவருடைய எண்ணங்கள் இருந்ததால் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அப்போதைய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் தேவையான சந்தர்ப்பத்தில் ஆலோசகராகவும் செயல்பட்டதனால் இவர்களின் வழிநடத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உருவாக்கம் பெற்றது. இந்தியப்படையின் வருகையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான அவர்களின் போரும் தமிழ் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது. தமிழ் மக்கள் தங்களுடைய தேசியவீரர்களான தமிழீழவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கெதிரான இந்தியப்படையின்போர் நிறுத்தப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது. இப்போராட்டத்திற்கான ஆதரவையும் ஆலோசனையையும் வேணுதாஸ் அவர்கள் வழங்கி வந்தார் இதனால் வேணுதாஸ் அவர்களின் வீட்டுக்குச் சென்ற இந்தியப் படையினர் அவரை மிகவும் கடுமையாகத் தாக்கினர். அகிம்சைப் போராட்டத்தின் பிறப்பிடமாகச் சொல்லப்படுகின்ற காந்தி பிறந்த மண்ணிலிருந்து தமிழீழ மண்ணுக்கு வந்திருந்த இந்தியப்படையினர் அகிம்சைப் போராட்டத்தை மதிப்பதற்கு தவறியதால் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த அன்னை பூபதி அவர்கள் தற்கொடைச்சாவைத்தழுவினார். தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இந்தியப்படையின் ஆக்கிரமிப்புக்கெதிராக அகிம்சைப் போராட்டத்தில் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த லெப். கேணல் திலீபன் அவர்களைத்தொடர்ந்து தமிழ்க் குடும்பபெண்ணான அன்னை பூபதி அவர்களின் தற்கொடைச்சாவு அப்போதைய இந்திய அரசின் உண்மையான எண்ணங்களை தமிழீழ மக்கள் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தன. இக்காலகட்டத்தில் வேணுதாஸ் அவர்கள் மீண்டும் இந்தியப்படையினரால் கைதுசெய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இரகசியமானமுறையில் கொலை செய்வதற்குமுயற்சித்த போது அங்கிருந்து தப்பினர். ஆனால் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1990 ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலை செய்யப்பட்ட வேணுதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி வந்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தொழிற்சங்க சம்மேளனச் செயலாளராகக் கடமையாற்றிய இவர் 1990 ம் ஆண்டு மட்டக்களப்பு நகரில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தை ஒழுங்கு செய்து இருந்தார். இக் கூட்டத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். மற்றும் மட்டக்களப்பு நகரின் மாவட்டத்தின்நாலாபுறமிருந்து மக்கள் திரண்டு வந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்த பிரமாண்டமான கூட்டஒழுங்குகளிலும் இவருடைய பணி குறிப்பிடத்தக்களவு இருந்தன. மேஜர் வேணுதாஸ் வரலாறு காணத மக்கள் கூட்டம் மட்டக்களப்பு நகரில் கூடியதும்இதுவாகத்தான் இருக்க முடியும் என நம்புகின்றோம். இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானவுடன் வேணுதாஸ் போராளிகளுடன் இணைந்து மயிலவட்டுவான் பிரதேசத்துக்குள் சென்று அங்கு மக்களுடனும் போராளிகளுடனும் தங்கியிருந்தார். இந்த வேளையில்தான் அவருடைய வாழ்க்கையில் சோகமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சின்ன ஊறணி தொடக்கம் ஓட்டமாவடி வரையிலான மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராம்மக்கள் எல்லாம் தங்களுடைய இருப்பிடங்களைவிட்டு வயலப்பிரதேசங்களில் வாழ்ந்தநேரம் மக்களும் விடுதலைப் புலிகளும் ஒரே இடத்தில் ஒன்றாக தங்கியிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்கும் பாதுகாப்பற்ற பயணம் நிலவிய நேரம் ஜமுனாஅவர்கள் வவுணதீவு பாதைவழியாக மிதிவண்டியிலும் வயல்வரம்புகளில் நடந்தும் நரிபுல்தோட்டத்துக்கு வந்தடைந்தார். பின்பு பன்குடாவெளி வருவதற்காக தோணி மூலம் குறுக்கே ஓடுகின்ற மட்டக்களப்பு வாவியை கடந்து சிரமமான ஒரு பயணத்தின் மூலம் தனது கணவரைச் சந்தித்து பின்பு பிள்ளைகள் தனியாக உறவினர்களுடன் இருப்பதால் அவசரமாக செல்வதற்காக 23.12 . 1990 அன்று காலையில் செங்கலடி வழியாக சிலருடன் பயணித்தபோது இராணுவத்தினரின் துப்பாக்கி தாக்குதல் இவர்களை நோக்கி இடம்பெற்றதையும் அதற்கு பிறகு இவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அடுத்தநாள் காலையில் ஆரையம்பதியை சேர்ந்த றம்போ என்றழைக்கப்பட்ட போராளி பிரசாத்துடன் சென்ற குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் தேடியபோது செங்கலடி வைத்தியசாலை வளவு கிணற்றினுள் அணிந்திருந்த நகைகள் அபகரிக்கப்பட்டு குரல்வளை அறுக்கப்பட்ட நிலையில் முதுகில் துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய காயத்துடன் கண்டெடுத்த அவரின் உடலை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குளிருந்த பன்குடாவெளிக்கு கொண்டுவந்தனர். சிங்கள இராணுவத்தினர் மாத்திரமே தங்கியிருந்த செங்கலடியில் இவ்வாறு சென்றுவருவது என்பது மிகவும் பயங்கரமான செயலாக இருந்தும் பிரசாத் அவர்களின் துணிவு அதனை சாதித்தது. சம்பவம் நிகழ்ந்த அன்றிரவு முழவதும் வேணுதாஸ் நித்திரையின்றி ஜமுனா அவர்களைப்பற்றி கதைத்துக் கொண்டிருந்தார் . எனது வீட்டில் எல்லா விடயங்களையும் கவனித்துக்கொண்டு பிள்ளைகளையும் பராமரித்து அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் . நான் அரசியல் தமிழ் மக்களின் விடுதலை என்று வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டபோதும் ஜமுனா எந்தவித விமர்சனமு மில்லாமல் எனது செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட நல்லுள்ளம் கொண்ட ஒரு குடும்ப பெண்ணாக இருந்தார் என்று மிகவும் கவலையடைந்து கொண்டிருந்தார். இச் சம்பவம் அவருடைய கவலையை மேலும் விரிவடைய வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அர்ப்பணிப்புகள் எல்லோருடைய மனதிலும் அழியாத நினைவுகளை ஏற்படுத்தினாலும் தாயும் தந்தையுமின்றி பெண் பிள்ளைகள் வாழும் நிலை எமது பண்பாட்டைப் பொறுத்தவரை தாக்கமானதொன்றுதான். என்றாலும் இவர்களுடைய உறவினர்கள் அதையும் தாங்கிக் கொண்டார்கள். மட்டக்களப்பு நகரத்தில் தங்கியிருந்த இவர்களுடைய 7 வயதிலும் 4 வயதிலும் உள்ள பெண்குழந்தைகளால் தாயின் இறந்த உடலை பார்க்க முடியவில்லை. தந்தையின் அரவணைப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை இவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் வேணுதாஸ் அவர்களின் அர்ப்பணிப்பு அமைந்திருந்தது. இவருடன் சட்டக்கல்லூரியில் பயின்ற நண்பன் ஒருவர் வெளிநாட்டிலிருந்து இவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனைவியை இழந்த நீ பிள்ளைகளுக்காக வெளிநாடு வருவது பற்றி முடிவு எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட கருத்தையிட்டு வேணுதாஸ் அவர்கள் கூறியவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம். இந்த விடுதலைப் போராட்டத்தில் எனது குழந்தைகள் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இந்தநிலை ஏற்பட்டுள்ளது. இன்நிலையிற்தான் எனது மனைவியையும் நான் இழந்திருக்கின்றேன். இனிமேல் நான் ஏன் வெளிநாடு செல்லவேண்டும் எனது மனைவி இறந்ததுபோல் இந்தமண்ணில் மக்களுடன் வாழ்ந்து மடியவே நான் விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டார். இவ்வாறு நீண்டகாலமாக தமிழ்மக்களின் விடுதலைக்காக செயல்பட்ட வேணுதாஸ் தான் நேசித்த மண்ணிலேயே தன்னை அர்ப்பணித்தார். மனைவியைப் பிரிந்தபோதும் இரண்டு பிள்ளைகள் இருந்தும் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முழுநேரமாக இணைத்துக்கொண்டார். நாட்டுப்பற்று இனப்பற்று மொழிப்பற்று இனத்திற்கான விடுதலை வேட்கை என்பன வேணுதாஸ் அவர்களையும் ஒரு மாவீரராக வரலாற்றில் பதிவு செய்தது. தாயும் தந்தையுமின்றி எதிர்காலத்தில் வாழப்போகும் அவருடைய இருபெண்பிள்ளைகளைப்பற்றியும் நாம் எண்ணிப்பார்க்கின்றபோது இவ்வாறான அர்பணிப்புக்களும் எமது மண்ணில் நிகழ்ந்துள்ளது என்பதை எமது மக்கள் அறிந்துகொள்ளுவதற்கு இப்பதிவு உதவும் எனவும் எதிர்பார்க்கின்றோம். மயிலவட்டுவான் என்கின்ற அழகிய எழில் கொஞ்சும் சிற்றூர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்பட்ட வட்டத்தில் அமைந்திருந்ததால் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினரின் சந்திப்பு இடமாகவும் அது விளங்கியது. ஆறும் வயலும் சூழ்ந்த இவ்வூரில் சுமார் 50 குடும்பங்கள் நிரந்தரமாக வாழ்த்துவந்தன. எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும் இவ்வூரை என்றும் எம்மால் மறக்கமுடியாது. இங்கு நாம் அநேகமான போராளிகளுடன் உறவாடி வாழ்ந்திருக்கின்றோம். களுவாஞ்சிக்குடி என்னும் ஊரைச்சேர்ந்த கப்டன் முத்துசாமி என்பவருடன் இவ்வூர்மக்கள் ஒட்டி. உறவாடியதையும் இச்சந்தப்பத்தில் நினைவுகூருகின்றோம். 11 . 12 . 1991 ம் ஆண்டு அது ஒரு காலைப்பொழுது மயிலவட்டுவானில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினருடான சந்திப்பு ஒன்றுக்காக மாவட்ட அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் சத்துருக்கன் அவர்களுக்கான மொழிபெயர்ப்புச்செய்வதற்காக மேஜர் வேணுதாஸ் அவர்களும் புகைப்படப்பிடிப்புப் போராளி 2 வது லெப். ராஜா சத்துருக்கன் அவர்களின் உதவியாளர் வீர வேங்கை பிரசாந் ஆகியோர் காத்திருந்தனர். எப்போதும் மயிலவட்டுவானில் காலைவேளைகளில்; சன நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். ஏனெனில் பட்டிகளிலிருந்து பால்கொண்டு வருபவர்கள் வயலுக்குச் செல்பவர்கள் என எல்லோரும் அப்போதுதான் இவ்வழியாக வருவார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்தனர். சில நாட்களுக்கு முன் சந்தனமடு குடாவட்டை போன்ற வயல் வட்டங்களில் சிங்கள இராணுவத்தினரின் நடவடிக்கையினால் மக்களின் குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டிருந்தன. இச்சம்பவத்தை பார்வையிடுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரை அழைத்துக்கொண்டுசென்ற சில நிமிடங்களின் பின்பு வெடிச்சத்தங்கள் கேட்டன. சிவத்தப்பாலத்திற்கு அருகாமையில் பதுங்கியிருந்த சிங்கள இராணுவத்தினர் திடீரென தாக்கியதில் நான்கு பேரும்வீரச்சாவைத் தழுவியதாக எமக்குச் செய்திகிடைத்தது . சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினரின் வாகனம் திரும்ப மயில வட்டுவானுக்கு வந்து சேர்ந்தது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் என்னுமிடத்தைச் சேர்ந்த மட்டு அம்பாறை மாவட்டத்தின் முதல் பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்துக்கொண்ட கப்டன் சத்துருக்கன் மட்டக்களப்பு நகரில் மக்களுக்கெல்லாம் அறிமுகமான சட்டத்தரணி வேணுதாஸ் இருதயபுரம் என்னுமிடத்தைச் சேர்ந்த ராஜா பன்குடாவெளி என்னும் ஊரைச் சேர்ந்த பிரசாந் ஆகியோருடைய வீரச்சாவும் உறுதிப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழநாதம் நாளிதழில் மேஜர் வேணுதாஸ் அவர்கள் பற்றிய கட்டுரையைப்பார்த்த பின்புதான் எமது தேசியத் தலைவர் அவர்கள் வேணுதாஸ் அவர்களின் வீரச்சாவினை அறிந்துகொண்டார். அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட போராளிகளை அழைத்து வேணுதாஸ் அவர்களைப் பற்றி எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டுகூறியதை இங்கு பதிவு செய்கின்றோம். வேணுதாஸ் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலையைப்பற்றி நான் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலே அவரும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் பயணத்தின் பாதைகள் வேறாக இருந்தபோதும் இறுதியில் சரியானபாதையை தெரிவுசெய்து எம்முடன் இணைந்துகொண்டார். இவரைப் பற்றியும் இவருடையவாழ்வு பற்றியும் போராளிகளாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும். என்று கூறியதோடு தாயையும் தந்தையையும் இழந்த இந்த பிள்ளைகளை நாம்தான் பாதுகாக்க வேண்டும் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று தெரிவித்தார். இச்சந்தப்பத்தில் இன்னோர் கருத்தையும் குறிப்பிட்டார். ¨போராட்டத்தின் விளைவினால் பெற்றோரை இழக்கின்ற பிள்ளைகள் என்றும் அனாதைகள் இல்லை. நான் இருக்கும் வரை இவர்கள் எல்லோரும் நன்றாகப் பராமரிக்கப் படுவார்கள்¨. இதிலிருந்து தேசியத் தலைவர் அவர்களின் தொலை நோக்குப்பற்றி நன்றாகப் புரிந்துகொண்டு செயற்படுவதற்கு முன் வரவேண்டும். இவ்வாறு இலக்குத் தவறாத தமிழீழ தாய் நாட்டின்விடுதலைக்கானா இலட்சியப்பயணத்தில் வேணுதாஸ் அவர்களும் இணைந்துகொண்டார். இவர் காலத்தில் வாழ்ந்த எமது நெஞ்சினில் இவருடைய நினைவுகளும் என்றும் நிலைத்துநிற்கும். இல்லாதவர் இன்று இருக்கவேண்டிய இடம்.இருப்பவர்கள் இல்லாமல் இடம் தெரியாமல் இருக்கவேண்டிய காலம். ஆனால் காலம் நம்பிக்கை வைத்து இருக்கவிட்டுள்ளது.காலத்தின் நம்பிக்கைக்குதுரோகம் செய்யாமல் கடமையைச் செய்யவேண்டிய கட்டாயம் நண்பர்களுக்கு உண்டு.நண்பர்களான நாம் எம்மை நாம் சுயசுத்திகரிப்புசெய்வது இனத்திற்குச் செய்யும் பெரும்பணியாகும். நடந்துவந்த பாதை உணர்வும்,உறுதியும் இணைந்த பயணம் குடும்பமும்,உறவும் களைந்த கொள்கை உயிரையும் மிஞ்சிய துணிவான இலட்சியம் என்பதை வாழ்ந்து காட்டிய ஓர் போராளியின் புனித பயணம்தான் பதிவு மட்டக்களப்பின் அரசியல் தலைமைத்துவத்தில் நாம் இழந்த தன்னினப்பற்றாளர் மட்டக்களப்புத் தமிழர்களால் ஆழமாக நேசிக்கப்பட்டவர் பற்றியபதிவு இன்றையநிலையில் அறிவதும்,புரிவதும் தேடலும் இன்றியமையாத ஒன்றாகும்.கிழக்கின் அரசியல்வானில் கிழக்கைமீட்கும் நண்பர் கோபாலகிருஷ்ணன் தமிழரசின் வழிநடத்தர் நண்பர் துரைராஜசிங்கம் ஆகியோர் இவருக்கும் நண்பர்கள் நண்பரின் பயணம் நண்பர்களுக்கும் வழிகாட்டட்டும். ஏழுகதிர் http://www.battinaatham.net/description.php?art=22753
  10. இப்படி உங்கட மூத்த பிள்ளை சொன்னதா? இல்லாட்டி கடைப்பிள்ளை சொன்னதா தமிழ் சிறி ஐயா?😂🤣
  11. இன்று தமது பிறந்தநாளைக் கொண்டாடும் ரஞ்சித் என்ற ரகுநாதனிற்கும், வல்வை சகாறா அக்காவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  12. தலைவனுக்கும் தாயகக் கனவுடன் தலைவன் வழி சென்ற மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்...
  13. நினைவழியா நிகழ்வுகள்..மாவீரர் நாளும் பாடலும் (நவ. 27 மாவீரவர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...” மாவீரர்நாள் பாடல். மாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார். 1992 மாவீரர் நாள் நினைவேந்தலின்போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன் இப்பாடலைப் பாடினர். அச்சமயம் அங்கு நின்ற போராளி ஒருவர், இப்பாடல் குறித்து “வெளிச்சம் இதழில்” இக்கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது.) 1992 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் பிறக்கப் போகின்றது. இந்த நாளின் பிறப்பின்போது, நாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்க வேண்டும். இதற்காககச் சென்று கொண்டிருக்கிறோம். பகலிலேயே எங்கோ ஒருவரைத்தான் காணக்கூடியதாக இருக்கும் இராசபாதையில் நள்ளிரவிலும் ஒரே மக்கள் கூட்டம். இந்த வீதியிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் இன்னும் கூடுதலான மக்கள் திரள்திரளாகச் செல்கிறார்களே.... இவர்கள் கிளாலியை நோக்கிச் செல்லும் மக்கள் கூட்டமல்ல... நல்லூர் திருவிழா முடிந்ததும் கடலைக் கடைகளுக்கும் ஐஸ்கிறீம் கடைகளுக்கும் வேடிக்கை பார்க்கும் கூட்டமுமல்ல... அனைவருமே உணர்ச்சிப் பிளம்புகளாய் காட்சியளிக்கிறார்கள். சத்தியம் செய்யும் அந்தக் கூட்டத்தினூடேதான் போய்க் கொண்டிருக்கிறோம். இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின்போதும் மனதுள் ஏதோ ஒன்று... அதை விபரிக்க முடியவில்லை. “என்ரை ராசா... கிளியண்ணை வந்திருக்கிறார் ஒருக்காப் பார் ராசா...”, ஒரு மாவீரனின் சமாதியில் அவர் தாய் அழுதுகொண்டே சொல்லும் வார்த்தைகள் எமது நெஞ்சைப் பிழிகின்றது. கண்ணீர் முட்டுகிறது. கூட வந்தவர்களுக்குத் தெரியாதபடி துடைத்துக் கொள்கிறேன். இப்போதே அழத் தொடங்கினால்.... கஷ்டப்பட்டு கண்ணீரைச் சிக்கனப்படுத்திக் கொள்கிறேன். பின்பு தேவையல்லவா. வழியில் இந்த ஆண்டு மாவீரர் தினம் பிறக்கும் வேளையில் மணியோசைக்குப் பின் ஒலிக்கவிருக்கும் மாவீரர் பாடலைப் பாடவிருக்கும் வர்ணராமேஸ்வரன் வருகிறார். “ராமேஸ்வரன் எனக்குப் பக்கத்தில நில்லுங்கோ... நீங்கள்தான் எனக்குப் பக்கத்தில நிண்டு பாடுறது.”, உரிமையுடன் கட்டளையிடுகிறார் புதுவையண்ணா. இப்படித்தான் நாங்கள் எங்கள் மக்களை வசப்படுத்திக் கொண்டிருக்கிறோம். சுற்றுமுற்றும் பார்க்கிறேன். மாவீரர் சமாதியில் ஊதுவர்த்திகளைக் கொழுத்தியும் மலர் வைத்தும்... எந்த ஒரு ஆலயமும் இந்த மாதிரியான புற அகத் தூய்மையோடு காணப்படுவதில்லை... கண்ணீரைக் கட்டுப்படுத்த சிரமமாயிருக்கிறது. சாதாரணமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளச் சிரமப்படுகிறேன். ஒவ்வொரு விநாடியும் செல்லச் செல்ல மயிர்க்கால்கள் குத்திடுகின்றன. மாவீரர் துயிலுமில்லத்தில் முதலாவது சுடர் ஏற்றப்படும் இடம் - அந்த நேரத்தை எதிர்பார்த்தபடி மனம் எதையோ தேடுகின்றது. 12.00 மணி. யாழ். மாவட்ட விசேட தளபதி தமிழ்ச்செல்வன் முதலாவது சுடரை ஏற்றுகிறார். எங்கும் ஆலய மணியோசை. தீபத்தில் ஏற்றப்படும் ஒளியைத் தொடர்ந்து எனது கண்கள் எனது கட்டுப்பாட்டை இழக்கின்றன. ஆலய மணியின் ஓசை ஒலிக்கு மட்டும் மௌனமாக நின்று அஞ்சலிக்கின்றோம். ராமேஸ்வரன் பாடுகிறார். இதே பாடல் ஒலிபெருக்கியிலும்... நாம் உறுதியெடுத்துக் கொள்கின்றோம்... “வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி. விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி. இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி.” நான் ஏன் அழுகின்றேன்... இழப்புகளினால் உரமேறிய தேசமல்லவா... எனது தேசம். ஐயாயிரத்துக்கும் மேலும் சில நூறு பேர்களை இழந்து விட்டோம். இன்னுமா மாறவில்லை. சீலனது வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. “போராளிகள் மென்மையான மனமுடையவர்கள். மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் சகிக்க முடியாதவர்களே போராளியாகின்றனர். அதைத் தாங்கிக் கொண்டு சாதாரணமாக இருக்கக்கூடியவர்கள்தான் போராட்டத்துக்கு வெளியில் நிற்கிறார்கள்.”, எவ்வளவு அச்சொட்டான வார்த்தைகள் இவை. சூழவுள்ள மக்களைப் பார்க்கிறேன். எத்தனை எத்தனை ஆயிரம் சொந்தங்கள் எமக்கு. எல்லோரும் எம்மவர்கள்... ஆனால் அன்று நீயும் ஆனந்தும் எரிக்கப்படும்போது உங்களுக்குப் பக்கத்தில் ஒருவருமே இல்லையே... உனது வீரச்சாவுச் செய்தி கேட்டு திருமலையிலிருந்து பறந்து வந்த உனது அம்மா உனது உடலைத் தரும்படி எவ்வளவு மன்றாடியிருப்பார் சிறீலங்கா இராணுவத்திடம். அவர்கள் உனது உடலைக் கொடுக்கவில்லையே... பௌத்த தர்மம் அதற்கு இடமளிக்கவில்லை... இன்று இந்தத் தேசமே சொந்தம் கொண்டாடுகிறது. நாங்கள் வளர்ந்துவிட்டோம்... எங்கும் போராளிகள் பொதுமக்கள்... ஒரு தாக்குதலுக்காக யாழ். நகரப் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கிறோம் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இராணுவத்தினர் இரண்டு வாகனங்களில் வந்து இறங்குகின்றனர். கம்பீரமான தோற்றத்துடன் தனக்குச் சொந்தமில்லாத மண்ணில் நடமாடுகின்றனர் இராணுவத்தினர். அப்போது நீ சொல்கிறாய், “இதைப் போல நாங்களும் ஆம்ஸைக் கட்டிக் கொண்டு சுதந்திரமா திரிய வேணும் அப்ப அது புதினமில்லாத மாதிரி சனம் போக வேணும்”, எவ்வளவு ஆசையாகச் சொன்னாய். இந்தப் போராட்டம் வெல்லும் நாங்கள் வளர்வோம் என்பதெல்லாம் நாம் எதிர்பார்த்ததுதான். ஆனால், இவ்வளவு விரைவாக... எனல்லாம் இன்றுபோல் இருக்கிறது. “உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்...” இதேநேரம் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏதோ ஒரு இடத்தில் அழுது கொண்டிருப்பார்கள் எனது குஞ்சம்மாவும், குஞ்சையாவும். எனது இளமைக் காலங்கள் நினைவுக்கு வருகின்றன. இவர்களின் மகன் நக்கீரன் (செந்தில்குமரன்) அப்போது பிறக்கவில்லை. (ஆறு பெண் பிள்ளைகளுக்குப் பின்னே இவன் பிறந்தான். ) ஒவ்வொரு பிள்ளையும் பிறக்கும்போது இது ஆண்பிள்ளையாக இருக்காதா என்ற எதிர்பார்ப்பாயிருக்கும். இனி ஆண் பிள்ளையே பிறக்காது. நமக்கு இறுதிக்கடன் செய்ய ஆண்பிள்ளை இல்லையே என்று குஞ்சையாவுக்கு ஒரு ஏக்கம். அதனால் அவர் என்னுடன் கூடியளவு பாசத்துடன் இருந்தார். ஒருநாள் எனக்குத் தேவையான பழவகைகளை வாங்கி வந்து “குஞ்சையாவுக்கு கொள்ளி வைப்பியா மனா?”, என்று கேட்டார். நானும் CV “ஓம்” என்றேன். அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதன் பிறகு எனது தேவைகளை நிறைவேற்றுமிடத்தை நான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு தடவையயும் அவர் என்னைக் கேட்பார் “குஞ்சையாவுக்கு என்ன செய்வாய்?”, “கொள்ளி வைப்பன்”, இதன் தாக்கம் விளங்காது பதில் சொல்லும் வயது. ஏழாவதாகச் செந்தில்குமரன் பிறந்தான். அவன் மீது பாசமாகக் கொட்டி வளர்த்தார்கள். நானும் வளர்ந்து விட்டேன். அப்போதெல்லாம் இந்தப் பழைய சம்பவத்தை எனது குடும்பத்தாரிடம் சொல்லிச் சிரிப்பேன். “இப்ப குஞ்சையா செத்து நான் கொள்ளி வைக்கப் போனால் குஞ்சையா பெட்டிக்குள்ளால எழும்பி “ஏன் நீ கொள்ளி வைக்கிறாய் செந்தில் எங்கை போட்டான்” எண்டு கோட்பார் என்று சொல்லிச் சிரிப்பேன். அவன் இயக்கத்துக்குப் போய் மாவீரர் ஆனதும் நான் அங்கே போனேன். அப்போது அவர், “டேய் நீ சின்னனாய் இருக்கேக்கை குஞ்சையாவுக்கு கொள்ளி வைப்பனெண்டெல்லோ சொன்னனீ... வைப்பாய்தானே...” என்றார். புரியாத வயதில் சொன்ன அந்த வார்த்தைகளில் இத்தனை அர்த்தமா...? இத்தனை தாக்கமா...? தொடர்ந்து பாடல் ஒலிக்கிறது. “.... .... அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்...” அடிபட்ட பந்தாக மீண்டும் சீலனை நோக்கி நினைவுகள்... சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத் தாக்குதல். மேல் மாடியில் காலில் காயப்பட்ட சீலன் காலை இழுத்துக் கொண்டு இயலாத நிலையில் றிப்பிட்டரைக் கொடுத்து விட்டு அந்த பொலிஸ் நிலைய வளவில் தேறங்கியிருந்த மழைத்தண்ணீரைக் குடிக்கிறான். தொடர்ந்து படுத்தபடியே அவனது உத்தரவுகள், “ஒண்டையும் விடக்கூடாது எல்லாத்தையும் ஏத்தவேணும்”, இயந்திரமாக இயங்குகிறோம். எல்லாவற்றையும் ஏற்றியதும் மினிபஸ் புறப்படுகிறது. அழுதபடியே ரஞ்சன் காயப்பட்ட எல்லாரையும் கொஞ்சுகிறான். (சீலன், புலேந்திரன்....) எல்லாரையும் காப்பாற்ற விரைவாக வாகனத்தை செலுத்துகிறான் சங்கர். அன்று மற்றவர்கள் காயப்பட்டதற்காக அழுத ரஞ்சன் உட்பட ஏனைய அனைவரையும் தொலைத்து விட்டு நிற்கிறோம். அதே வரிகள் மீண்டும். “.... .... அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்...” வரிசையாக நினைவுக்கு வருகின்றனர். “யாழ்ப்பாணத்த்துக்கு வெளியில அடிக்க வேணும்”, என்று அடிக்கடி கூறும் செல்லக்கிளியம்மான். உமையாள்புரத்தில் இராணுவத்தினர் ஓடும்போது சிரித்தபடியே “துரத்துங்கடா” என்றபடியே அவர்களின் ட்றக்கில் ஏறிய செல்லக்கிளியம்மான்... களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலில், “அம்மாட்டச் சொல்லுங்கோ நான் சண்டையிலதான் செத்தனெண்டு”, என்று சொன்ன பரமதேவா. ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது, “ரெலண்டு கிறனைட் தாங்கோ நான் உள்ளுக்கை போய்க் காட்டுறன்” என்று சொன்ன விசாகன். “அண்ணே ஒரு சக்கைக் கானைத் தாங்கோ நான் கொழுத்திக் கொண்டு போய் உள்ளுக்கை வைச்சிட்டு வாறன்” என்று சக்கைக்கானை வாங்கிக் கொண்டு துப்பாக்கி வேட்டுகளுக்கிடையே பொலிஸாருக்கு மத்தியில் அதை வைத்து விட்டு வந்த கமல்... இன்னும் எத்தனை... எத்தனை... “எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்” தவிக்கும் மனதின் வார்த்தைப் பிளம்பு இது. எனக்கு இதற்கும் மேல்... “ழ”கரம், “ல”கரம் வித்தியாசமில்லாமல் மழலையாக ஒலிக்கும் சீலனின் வார்த்தைகளைக் கேட்க வேண்டும் போல் இருக்கிறது. “நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகின்றோம்” பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைற் வேலை செய்யுமாவென்று, அடிக்கடி கேட்பான். “அண்ணை இது வேலை செய்யுமோ?” “அது வேலை செய்யும் நீ போடா”, வல்வெட்டித்துறைக்கு அனுப்பி வைப்போம். நாம் எத்தனை தரம் சொன்னாலும் அவனுக்குத் திருப்தியில்லை. ஒருநாள் நள்ளிரவு. களைத்துப்போய் வந்த நான் படுக்கப்போகிறேன்.. அப்போதும் கேட்கிறான். “அண்ணை இது வேலை செய்யுமோ?” - எனக்கு எரிச்சல். “வேலை செய்யாது போல கிடக்கு... உன்னிலதான் ரெஸ்ற் பண்ண வேணும்... போய்ப் படடா” அவன்தான் எமது இயக்கத்தில் முதன் முதல் சயனைற் உட்கொண்டவன். அந்தச் செய்தி கிடைத்ததும் நான்... இந்த வாயால இனி எதுவும்... “எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்” கண்ணால் காண முடியவில்லைத்தான். ஆனால், மனதில் அனைவரது முகங்களும்... அங்கிருந்து நகர்கிறேன். “உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் - அதை நிரை நிரையாக நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்.” என்ற வரிகளை மனதில் சுமந்தபடி அங்கிருந்து நகர்கிறேன். கடந்த வருடத்தைப் போலவே. அங்கு பலர் மயங்கி விழுகின்றார்கள். முதலுதவிப் படையினர் அழைக்கப்படுகின்றனர். அறிவிப்பாளரின் மொழியில் கூட சோகம்... உலகத்தில் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் இப்படியொரு காட்சியைக் காண முடியாது என்று என் மனது சத்தியம் செய்கிறது http://www.battinaatham.net/description.php?art=22550
  14. நினைவழியா நினைவுகள் ! மட்டுநேசன் ம் 1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் மட்டக்களப்பில் ஆரம்பித்தது. பொத்துவில் தொடக்கம் வாழைச்சேனை வரையான சகல பொலிஸ் நிலையங்களும் தாக்குதலுக்குஇலக்காகின . வடக்கில் இராணுவ முகாம்கள் முற்றுகைக்குள்ளாகின. யாழ். கோட்டை முகாமும் அவற்றில் ஒன்று. தொடராக நிகழ்ந்த தாக்குதல்களில் இம்முகாம் மீது 1990. 08. 05 ஆம் நாளன்று நடத்தப்பட்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதில் 31 போராளிகள் மாவீரர்களாகினர். ஒரே இயக்கப் பெயரைக் கொண்ட இரு போராளிகள் இத்தாக்குதல் முயற்சியில் பங்குபற்றினர். இந்த இருவரில் ஒருவர் வீரச்சாவடைந்தார். அவரது வித்துடலை மீட்க முடியவில்லை. மற்றவர் படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார். தாக்குதலின் முடிவில் வீரச்சாவடைந்தவர் எனக் காயமடைந்தவரைக் கருதினர். மாவீரர் பெயரில் அவரது விபரமே வெளியானது. உண்மையில் வீரச்சாவடைந்தவர் பற்றிக் கேட்டபோது அவர் சிகிச்சை பெற்று வருகிறார் எனப் பதிலளிக்கப்பட்டது. இரு குடும்பத்தவர்களை - அவர்களின் நம்பிக்கையைப் பொறுத்தவரை ஒரு பகுதியினருக்கு தமது மகன் மாவீரன் என்றும் மறுபகுதியினருக்கு விழுப்புண் அடைந்து விட்டான்; சிகிச்சை பெறுகிறான் என்ற நிலையே இருந்தது. இந்நிலையில் காயமுற்றவர் சிகிச்சை முடிந்து சில மாதங்களின் பின் நாடு திரும்பினார் தற்போது இருபகுதியினருக்குமே அதிர்ச்சி. அதில் ஒரு பகுதியினருக்கு இன்ப அதிர்ச்சி. உயிரோடு இருக்கிறான் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு அந்தப் பாதகமான செய்தி சொல்லப்பட்டது. அவர்கள் சூழ்நிலையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டனர். தமது விதியையே நொந்தனர். ஏனெனில் அவர்கள் இந்தப் போராட்ட கள மண்ணில் இருந்தவர்கள். அந்த மாவீரரின் தந்தை ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்துக்குச் சென்றார். விடயத்தைத் தெரிவித்துவிட்டு ஒரு விளம்பரம் போட்டார். தமது மனதை ஆற்றுப்படுத்துவதற்காகச் செய்யப்படும் மதச் சடங்கு மற்றும் நிகழ்வுக்கான அழைப்பு அது. அப்பத்திரிகை நிறுவனத்தினர் சட்டத்தரணி பொன். பூலோகசிங்கத்தின் நாட்குறிப்பின் உதவியுடன் தாம் தயாரித்து வந்த மாவீரர் பட்டியலில் இம்மாவீரனின் சொந்தப் பெயர், முகவரியை மாற்றினர். போராளிகளுக்கு இலக்கமும் வழங்கி அதனைத் தகட்டில் பொறித்துக் கட்டும் நடைமுறையை ஏற்படுத்துவதற்கான காரணங்களில் இந்த அனுபவமும் ஒன்று. *** தமிழரின் ஆயுதப் போராட்டத்தைப் பொறுத்தவரை, துணைப் படை, எல்லைப் படையினரின் பங்கும் பெருமைக்குரியது. அதனால்தான் அவர்களின் வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டன. பிரிகேடியர் முதல் வீரவேங்கை வரையிலான மாவீரர்களுக்குச் சமமாக எல்லைப் படையினரும் மதிக்கப்பட்டனர். அருகருகே விதைக்கப்பட்டனர். ஆனையிறவு முகாமின் வெற்றிக்கு முதுகெலும்பாக அமைந்தது குடாரப்பு தரையிறக்கமும் அதனைத் தொடர்ந்து இத்தாவில் பகுதியில் ஊடுருவி படையினருக்கான வழங்கல், மேலதிக படையினரை வரவழைத்தல் முதலான செயற்பாடுகளை மேற்கொள்ள விடாமல் ஆனையிறவு முகாமை தனிமைப்படுத்தியதும்தான். இதனை பிரிகேடியர் பால்ராஜ் வழிநடத்தினார். பிரிகேடியர் பானு ஒட்டுமொத்த நடவடிக்கையினதும் ஒருங்கிணைப்புத் தளபதியாக விளங்கினார். ஆனையிறவு முகாம் புலிகளின் கைகளில் வீழ்ந்தாயிற்று. பானு அங்கே தேசியக் கொடியை ஏற்றியுமாயிற்று. பெட்டி (box) வடிவில் களம் அமைத்து இத்தாவிலில் நிலைமையைத் தக்கவைத்துக் கொள்ளும் பால்ராஜின் அணியினருக்கும் ஆனையிறவு, இயக்கச்சியில் வெற்றிக்களிப்போடு நிற்கும் போராளிகளுக்கும் இடையில் (பளைப் பகுதியில்) இலங்கை இராணுவத்தினரின் ஒரு பகுதியினர் நின்றனர். பாக்குவெட்டிக்குள் அகப்பட்டுக் கொண்ட பாக்கைப் போன்று ஆனது அவர்களின் நிலை. போராடினால்தான் தமது உயிரைத் தக்கவைக்க முடியும் என அவர்கள் நம்பினர். இதனால் அவர்களின் எதிர்த்தாக்குதல் கடுமையாகவே இருந்தது. இந்நிலையில் புலிகளின் இரு அணியினரும் தமக்கிடையே கைகுலுக்கி வெற்றியை முழுமைப்படுத்தும் சந்தர்ப்பத்தை எல்லைப் படைக்கு வழங்கத் தீர்மானித்தார் பானு. சுட்டா தலைமையிலான எல்லைப் படை எதிர்பார்த்ததை விட வேகமாகவே தமது பொறுப்பை நிறைவேற்றினர். ஒவ்வொரு எல்லைப் படை வீரரும் தலையை நிமிர்த்தி அடையாளப்படுத்தி வரலாற்றில் இடம்பிடித்தனர். இவ்வாறான பெருமைக்குரிய எல்லைப்படையினரின் தொடர் நடவடிக்கைகளில் ஒரு சமயம் இருவரின் வித்துடல்கள் இனங்காண முடியாதளவுக்கு இருந்தன. இதில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர். மற்றவர் நெடுங்கேணியைச் சேர்ந்தவர். வித்துடல்களை மாற்றி குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்தாயிற்று. இனி இவை அந்ததந்தப் பகுதிக்குரிய துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட வேண்டும். யுத்தகளத்தில் வெயில் மற்றும் காரணங்களால் வித்துடல் சிதைவுற்றிருக்கும் என நெடுங்கேணியைச் சேர்ந்த மாவீரரின் குடும்பத்தின் கருதினர். வித்துடலுக்கு மலர் வணக்கம் செய்து, விழிநீரைச் சொரிந்து கொண்டிருந்தனர். அச்சமயம் அந்த இடத்துக்கு வந்த அவரது நண்பரும் உறவினருமான ஒருவர், “இது அவனில்லை”, எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ஆள்தான் நிதானம் இழந்திருந்தாரே தவிர, பார்வையில் தெளிவு இருந்தது. அவரது நடவடிக்கைகளைக் கண்ட அங்கு நின்ற பொறுப்பாளர் மனதில் ஏதோ ஒரு பொறி தட்டியது. அச்சமயம் அவரது தொலைத்தொடர்புக் கருவிக்கு ஒரு அழைப்பு வந்தது. மன்னாரில் உள்ள எலைப்படை மாவீரரின் குடும்பத்தினர், இது தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய வித்துடல் அல்லவென்றும், தமக்குரிய வித்துடலை வழங்குமாறும் கோருகின்றனர் என்பதே அந்த அழைப்பின் மூலம் வந்த செய்தி. நிலைமை புரிந்தது அவருக்கு. உடனே குறிப்பிட்ட ஒரு முகாமுக்கு அந்த வித்துடலைக் கொண்டு வருமாறு கோரினர். நெடுங்கேணியினரிடம் “ஒருக்கா கிளீன் பண்ண வேண்டியிருக்கு. வித்துடலை கொண்டுபோய் முகாமில் வைத்து செய்யவேண்டியவற்றை செய்துவிட்டுத் தருகிறோம்”, என்றார். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். சொன்னபடியே முகாமுக்குக் கொண்டு சென்று, சிறிது வேலைகள் செய்தபின் மன்னாருக்கு இந்த வித்துடல் அனுப்பப்பட்டது. அங்கிருந்து வந்த வித்துடலும் இதுபோலவே கவனிக்கப்பட்டது. நெடுங்கேணியில் ஒப்படைக்கப்பட்டது. அப்போதும் நிதானத்துக்கு வராத அந்த நண்பர் வந்தார். “ஆ... இதுதான் அவன்...! இயக்கத்தின்ர கிளீன் பண்ணுற வேலை எண்டால் சும்மாவே. என்ன மாதிரி இருக்குது பார்...” என்றார். அப்பாடா என்று பெருமூச்சு விட்டார் அந்தப் பொறுப்பாளர். அவர் எந்தப் பட்டமும் பெற்றவரல்ல. பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தி சுமார் இரண்டரை தசாப்தத்துக்கு மேலாக போராட்டக் களத்தில் நின்றவர். இன்று தானுண்டு தன் வேலையுண்டு என புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து வருகிறார். தனது குடும்பத்தினருக்காக மட்டுமல்லாது போராடியவர்களுக்காக தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டு அமைதியாக வாழ்கிறார். http://www.battinaatham.net/description.php?art=22409
  15. கீழடி தந்த வெளிச்சம் 2019 - மகுடேசுவரன் · கட்டுரை கீழடித் தொல்லியல் களத்தின் ஆய்வு முடிவுகள் அறியக் கிடைத்தவுடன் தமிழ்க் குமுகாயத்திற்குப் புத்துயிர் பெற்றதுபோல் ஆகிவிட்டது. வரலாற்றினை வைத்துப் பேசும்போது, நமது பழைய இலக்கியங்களிலிருந்தே பெரும்பான்மையான எடுத்துக்காட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தோம். அவற்றை முறையாய் நிறுவும் பருப்பொருள் சான்றுக்கு நம்மிடம் பற்றாக்குறைதான். எண்ணற்ற தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையைக் குறித்துப் பேசமுற்பட்டபோதெல்லாம் ‘அறிவியல் மட்டத்திலான ஆய்வுகளைக் கொண்டுவாருங்கள், களங்களைக் காட்டுங்கள்’ எளிமையாய் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். நூற்றாண்டுகட்கும் மேலாக நம் தமிழறிஞர்கள் தத்தம் முடிவுகளைத் தமக்குள்ளேயே அறிவித்துக்கொண்டு அடங்கினர் என்பதுதான் உண்மை. திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள். ‘திருவள்ளுவர் எப்போது பிறந்தார், திருக்குறள் எப்போது இயற்றப்பட்டது ?’ என்பது பேசுபொருளாக இருந்தது. திருக்குறள் கிபி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இயற்றப்பட்டது என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறிவந்தனர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள், சங்கம் மருவிய காலத்தில் தோன்றியது என்ற மட்டத்தில்தான் ஏற்றுக்கொண்டனர். அதனிலும் பல இடையூறுகள் இருந்தன. திருக்குறள் ஒருவரால் இயற்றப்பட்டிருக்க முடியாது என்றும் பல்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு நூல்தான் அஃது என்றும் கூறினர். ‘திருக்குறளில் பல வடசொற்கள் கலந்திருக்கின்றன, அதனாலேயே அதன் காலக்கணக்கினைப் பின்தள்ளியே எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றனர். இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் தமிழின் மாண்பினைக் கெடுக்கும் மணிப்பிரவாள நடைக்கு எதிரான இயக்கம் தோன்றியது. மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்தது. ‘கிறித்து பிறப்பதற்கு முப்பத்தோராண்டுகள் முந்திப் பிறந்தவர் திருவள்ளுவர்’ என்று மறைமலையடிகள், தெ.பொ.மீ., திரு.வி.க. ஆகியோர் கூடிய அவையில் முடிவு செய்யப்பட்டது. அதன்வழியே திருவள்ளுவர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. நம்முடைய தொன்மை அடையாளங்கள் எவ்வாறு அழிந்துபோயின என்பதைக் குறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரோடு உரையாடினேன். ‘அக்காலத்தில் இயற்கையைவிடவும் போர்களே பேரழிவுகளை நிகழ்த்தின’ என்றார். பகைமுதிர்ச்சி பெற்ற மன்னர்களில் ஒருவன் போரில் வெற்றி பெற்றவுடன் எதிரி நாட்டு நகரங்களைத் தரைமட்டமாக்கி ஏர்பூட்டி உழுது எள் விதைத்து எருக்கம்பால் தெளித்துவிட்டே அகன்றானாம். நம் அறநூல்கள் அதைத்தானே சொல்கின்றன? நெருப்பிலும் பகையிலும் சிறிதும் மீதம் வையாதே என்கின்றன. ஒவ்வொரு தலைநகரமும் இப்படித்தான் வீழ்த்தப்பட்டது. ஒவ்வோர் அரசும் இப்படித்தான் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டது. இவ்வழி மட்டுமின்றி வெளியார் படையெடுப்புகள், கொள்ளையிடல்கள், சூறையாடல்கள் என எங்கெங்கும் அழிவுச் செயல்கள். இவற்றோடு இயற்கையும் தன் பங்குக்கு வேண்டிய பேரழிவினைச் செய்தது. குணகடலின் (வங்காள விரிகுடா) கரையில் அமைந்திருந்த துறைமுகத் தலைநகரங்கள் கடல்கோள்களால் மூழ்கடிக்கப்பட்டன. கடல்கோள் என்றால் என்னவென்றே தெரியாதிருந்த நமக்கு, அண்மையில் நேர்ந்த ஆழிப்பேரலைப் பேரிடர்தான் உண்மையையே உணர்த்தியது. இன்றைக்கு நமக்கு மாமல்லையும், பூம்புகாரும், நாகையும், கபாடபுரமும் எப்படியெல்லாம் கடலலைகளால் விழுங்கப்பட்டிருக்கும் என்று கற்பனையில் காணத் தெரியும். சங்கம் வளர்த்த தமிழின் காலக் கணக்குகள் மயங்கி விழ வைக்கின்றன. தலைச்சங்கத்தின் காலம் ஏறத்தாழ, நான்காயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள். இடைச்சங்கம் நிலவிய காலம் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள். இடைச்சங்க காலத்தின் முடிவில்தான் கடல்கோளால் கபாடபுரம் நீரில் மூழ்கியது. கடலோரத்தில் தலைநகரம் இருப்பதால் ஏற்படும் அழிவை எண்ணி இன்றுள்ள மதுரைக்குப் பாண்டிய மன்னன் இடம்பெயர்ந்தான். இன்றைய மதுரையில் பாண்டியன் முடத்திருமாறனால் நிறுவப்பட்டதே கடைச்சங்கம் எனப்படுவது. அதன் காலம் ஏறத்தாழ, ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது ஆண்டுகள். தமிழின் முச்சங்கங்கள் நிலவிய காலக்கணக்கு பத்தாயிரம் ஆண்டுகளைத் தொடுகிறது. கடல்கோள் ஏற்பட்ட பகுதிகளில் அகழாய்வுகள் செய்வதற்கு நாட்டின் செல்வ வளமும் அறிவியற் கருவிகளின் மேம்பாடுகளும் தேவைப்படும். அது நடக்கும் காலமும் வரும். ஆனால், கடைச்சங்கம் கூடிய இன்றைய மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயன்றவரை அகழாய்வு செய்வதற்குத் தடையேதுமில்லை. முச்சங்கங்களின் காலக் கணக்குகள் இவ்வாறு இருக்கையில், அவற்றை நாம் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் வழியாகத்தான் தொடர்ந்து பற்றி வந்தோம். நம்மிடம் மீந்திருக்கும் தொன்மை நூல்கள் பலவும் வரலாற்றுக் காலத்தோடு தொடர்புடைய பேராக்கங்கள். வரலாற்றினை முந்திக்கொண்டு ஓரடி எடுத்துவைப்பதற்கு நமக்கு ஒரு பற்றுக்கோலும் கிடைக்கவில்லை. கீழடி அகழாய்வு முடிவுகளால் தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழரசுகள் குறித்த அனைத்துக் கருதுகோள்களும் ஒரே பாய்ச்சலில் வரலாற்றின் முடியேறி நிற்கின்றன. இந்திய வரலாற்றினை எடுத்தியம்பும் நூல்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தோன்றியிருக்கின்றன. அவற்றினை முனைந்து ஆக்குவதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொட்டு இன்றைய காலகட்டம்வரை பல்வேறு அறிஞர் பெருமக்களும் பேருழைப்பினைச் செலுத்தியிருக்கிறார்கள். வரலாறு என்ற தகுதியைக் கொடுத்து ஏற்றுக்கொள்வனவற்றுக்கு தொன்மைச் சான்றுகள் பலவும் துணை நிற்க வேண்டும் என்கிறார்கள். மொழிப் படைப்புகள் அவற்றின் பழைமை கருதியே பொருட்படுத்தத்தக்கன என்றாலும் அவையே போதுமானவையல்ல. அவர்களுக்குத் திடமான சான்றுகள், ஆதாரங்கள், அகழ்விடங்கள், எச்சங்கள் வேண்டும். உலக வரலாறு தோன்றியது முதற்றே தோன்றி இயங்கும் நகரங்கள் பலவும் தமிழ்நாட்டில் உள்ளன என்றாலும் அங்கே எஞ்சியிருப்பவை முற்காலச் சான்றுகள்தாம். மதுரையிலும் காஞ்சியிலும் இல்லாத வரலாறா? ஆனால், அங்கே எஞ்சியிருப்பவை வரலாற்றுக் காலத்தின் எச்சங்கள். அதற்கும் முன்தள்ளி ஒருநாள் எண்ணை இடுவதற்கு நாம் எதனையும் பெற்றிருக்கவில்லை. நிலைமை இவ்வாறிருக்கையில், கீழடியில் கிடைத்தவை யாவும் பல நூற்றாண்டுகட்குப் பின்னே போ என்று வழிகாட்டிவிட்டன. பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்ற வரலாற்று நூல்களை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்திய வரலாற்றின் காலம் மொகஞ்சதாரோ, அரப்பா என்றுதான் தொடங்கும். சிந்து ஆற்றங்கரையில் கண்டறியப்பட்ட ஒரு நாகரிகம் அதுநாள்வரை நாம் கருதியிருந்த வரலாற்றுக் காலத்திற்கு முன்னே கூட்டிச் செல்கிறது. அதன் நகர அமைப்புகள், கழிவுநீர் வடிகால் முறைகள், வீட்டுக் கட்டுமானங்கள், சித்திரச் செதுக்கல்கள், அறிதற்கரிய எழுத்து வடிவங்கள் ஆகியன அங்கே ஒரு வளவாழ்வு நிகழ்ந்த சுவடுகளை எடுத்துக் காட்டின. அவர்கள் அந்நிலத்தில் தோன்றி நிலைத்த குடிகளா, இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களா என்று அறிவதில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. உலகெங்கிலும் நதிக்கரைகளில் செய்யப்பட்ட அகழாய்வுகள் மனித வரலாற்றுக் காலத்தை மூவாயிரம் ஆண்டுகளேனும் பின்னகர்த்தி அறிவிக்கின்றன. மொகஞ்சதாரோ, அரப்பா என்று தொடங்கும் இந்திய வரலாறு அடுத்து கௌதம புத்தர், மகாவீரர் என்னும் சமயப் பெரியார்களிடம் வந்து நிற்கும். பௌத்தத்தோடும் சமணத்தோடும் தொடர்புடைய நூல்கள் பேரளவு காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன. இந்திய வரலாற்றில் இடம்பெறும் முதற்பேரரசர் மௌரியரான அசோகர் ஆவர். அசோகருக்கு முந்தி இந்நிலத்தில் மன்னர்கள் ஆண்டார்கள்தாம். ஆனால், அவர்களைப் பற்றிய தொன்மைச் சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. நந்தர்கள், மகதர்கள் மரபினில் பல அரசர்களை வரலாறு சுட்டிக்காட்டினாலும் அசோகரின் ஆட்சிக் காலத்துத் தொன்மைச் சான்றுகளால் அவரைப் பற்றிய செய்திகளை நிலைக்கச் செய்துவிட்டார். குப்தர்கள், அலெக்சாண்டர் படையெடுப்பு என அடுத்தடுத்து இந்திய வரலாறு தெளிவுபெற்று நடக்கிறது. காலவெள்ளத்தில் கரையாமல் இன்றுவரை எஞ்சியுள்ள கல்வெட்டுகளும் கட்டுமானங்களும் அம்மன்னர்களின் இருப்பினை வரலாற்றில் பதிய வைத்துவிட்டன. ஆனால், பத்தாயிரம் ஆண்டுத் தமிழ்ச்சங்க வரலாற்றினை உடைய தமிழினத்திற்கும் தமிழ் மன்னர்கட்கும் வரலாற்றின் முதற்பக்கங்களில் சிறு குறிப்பளவிலேனும் இடம் தரப்படவில்லை. கீழடியில் கிடைத்த சுவடுகள் அந்தத் தடையை உடைத்து நொறுக்குகிறது. புத்தர் பிறந்தது கி.மு. 563ஆம் ஆண்டு. கீழடியின் பழைமை கி.மு. ஆறாம் நூற்றாண்டைத் தொட்டு நிற்பதால் கீழடி தமிழினத்தின் வரலாற்றினை புத்தருக்கு முன்னதாக எழுதியாக வேண்டும். இந்திய வரலாற்றின் பாட வரிசை மொகஞ்சதாரோ, அரப்பா, கீழடியாம் மதுரை, புத்தர், மகாவீரர் என்று மாற்றியாகவேண்டும். அஜந்தா குகைகட்குச் சென்றிருந்தபோது அதன் பழைமையைக் கண்டு வாயடைத்துப் போனேன். ஒரு மலைவளைவைப் பயன்படுத்தி அதன் பக்கவாட்டுச் சுவரை முகப்பாகக் கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட குகைகள் குடையப்பட்டிருக்கின்றன. அதன் பழைமையான குகையினை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணிக்கின்றனர். அதிலிருந்து கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஒவ்வோர் அரசரும் தம் பங்களிப்பாக ஒரு குகையைக் குடைந்து வழங்கியிருக்கிறார். பௌத்த மதத் துறவிகள் அதில் வசித்திருக்கின்றனர். குகை என்றால், குனிந்து நுழைகின்ற சிறுவழி என்று நினைத்துக்கொள்ளாதீர். ஒவ்வொரு குகையும் இன்றைய திருமண மண்டபத்தளவுக்கு இருக்கும். உள்ளே பதின்கணக்கில் தனியறைகளும் கூடமும் தலைமையறையுமாக அவற்றைக் காண்பதற்கே மூச்சடைக்கும். தரையைத் தவிர்த்து மேல்கீழ் இடம்வலம் என எங்கெங்கும் சிறு இடைவெளியில்லாமல் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். காலப்போக்கில், வட இந்தியாவில் பௌத்தத்தின் செல்வாக்கு குன்றியதும் அக்குகைகள் கைவிடப்பட்டு பல நூற்றாண்டுகளாகக் கேட்பாரற்றுக் கிடந்தன. புலி வேட்டைக்கு வந்த ஆங்கிலேயர் ஒருவர் அக்குகைகளைக் கண்டறிந்தார். தமிழர் வரலாற்றில் அப்படி ஏதேனும் ஒரு குகையோ, குடைவரையோ, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கண்டறியப்பட்டால் நன்றாக இருக்குமே என்று கற்பனை செய்திருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலைச் சிற்றூரான மறையூரிலுள்ள கல்திட்டைகள் அத்தகைய தொல்லிடம்தான். சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு எடுப்பித்த ‘கண்ணகி கோட்டம்’ இன்றைக்கும் குமுளி மலைச் சிகரத்தில் கல்சரிந்து கிடக்கிறது. இவ்விரண்டைத் தவிர, அம்மலைத்தொடர்களில் தொன்மையானவை என்று கூறுவதற்கு எதுவும் என் நினைவுக்கு வரவில்லை. பேரியாற்றங்கரையில் சேரனின் முசிறித் துறைமுகம் வரைக்கும் பலப்பல அகழ்வுச் சான்றுகள் இருக்கலாம்தான். ஆனால், தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கும் அணைப்பரவல்களும் அச்சான்றுகளைப் பெயர்த்திருக்கக்கூடும். என் விருப்பத்திற்குக் கிடைத்த விடையாக அமைந்துவிட்டவைதாம் கீழடியின் வைகை ஆற்று வாழ்வுத் தடயங்கள். மேலே சொன்ன பேராசிரியர் கூறிய கூற்றொன்று இன்றும் நினைவிருக்கிறது. ‘தமிழ் மன்னர்களாம் சேர சோழ பாண்டியர்களைக் கற்பனை என்று நிறுவவும் வரலாற்றுப் புலத்தில் சில முணுமுணுப்புகள் எழுந்தன. அதனைத் தகர்த்தது ஒடியாவின் புவனேசுவரத்திற்கு அருகிலுள்ள உதயகிரிக் குன்றுகளில் கிடைத்த காரவேலனின் ஹாத்தி கும்பாக் கல்வெட்டுத்தான்’ என்றார், அவர். இந்திய வரலாற்றில் ஒரு கட்டுரை அளவுக்குக் கிடைத்த பெரிய கல்வெட்டு உதயகிரிக் குன்றத்தின் ஹாத்தி கும்பாக் கல்வெட்டுத்தான். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட பழைமையான கல்வெட்டு அது. உதயகிரிக் குன்றுகளிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் அசோகரின் தௌலிக் கல்வெட்டும் உள்ளது. காடு சூழ்ந்த இயற்கை நிலமான ஒடியாவில் ஹாத்தி கும்பாக் கல்வெட்டானது, யாரும் தொடமுடியாத உயரத்தில் ஒரு பாறையின் நெற்றிப்பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது. நேரில் சென்று அதனைக் கண்டபோது நானடைந்த பேருணர்ச்சிக்கு அளவே இல்லை. அவ்வெழுத்துகளைச் செதுக்குவதற்கு இராட்டிரகூடத்திலிருந்து எழுத்தறிஞர் ஒருவர் யானைமீது அமரவைத்து அழைத்து வரப்பட்டாராம். அதன் பொருள், அன்றைய ஒடியத்தில் எழுதத் தெரிந்தவர் பக்கத்து நாட்டில்தான் இருந்திருக்கிறார் என்பதே. கல்வெட்டு முழுக்க அந்நிலத்தின் அரசன் காரவேலனின் அருமை பெருமைகளாக இருக்கின்றன. காரவேலன் என்ற பெயரே தமிழ்த்தன்மையோடுதான் இருக்கிறது. காரவேலன், அவரை வென்றான் இவரை வென்றான் என்று செல்லும் அந்தக் கல்வெட்டின் ஒரு பகுதியாக வரும் சொற்றொடர்தான் ‘தமிர தேக சங்காத்தம்’ என்பது. ‘பதின்மூன்று நூற்றாண்டுகளாக யாராலும் வெல்ல முடியாத வலிமையோடு திகழ்ந்த தமிழ்மன்னர்களின் கூட்டணி’ என்று அதற்குப் பொருளுரைக்கிறார்கள். அந்தக் கல்வெட்டினால் தமிழ் நிலத்தில் மூவேந்தர்கள் ஆண்டதும் அவர்கள் ஆயிரத்து முந்நூறாண்டுகள் ஒற்றுமையாய் விளங்கியதும் நிறுவப்பட்டது. அந்தப் பதின்மூன்று நூற்றாண்டினை வெறும் பதின்மூன்றாண்டுகள் என்று எடுத்துக்கொள்வோரும் இருந்தனராம். கீழடியில் கிடைத்த சான்றுகள் தமிழ் மன்னர்களின் அமைதியான ஆட்சிக் காலத்தைப் பதின்மூன்று நூற்றாண்டுகட்குத் தங்குதடையின்றி நிறுவுகிறது. கீழடியில் கண்டறியப்பட்ட தமிழி எழுத்துகள்தாம் அனைத்திலும் உயர்வு. எழுதுவதற்கு வேறொரு நாட்டிலிருந்து எழுத்தறிஞர் அழைத்துவரப்பட்ட ஒடியப் பேரரசனுக்கு நானூறு ஆண்டுகள் முன்னமே கீழடித் தமிழர் ஒவ்வொருவரும் எழுத்தறிவு பெற்றிருந்தனர். அங்கே பானைகளில் கீறப்பட்டுள்ள பெயர்கள் ஒருவரே செய்ததுபோல் இல்லை என்பது ஆய்வு முடிவு. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கையெழுத்து முறை இருப்பதாக உறுதிப்படுத்துகிறார்கள். அந்தப் பானைக்கு உரியவர் எவரோ, அவரே தம் பெயரை எழுதியுள்ளார். பானை செய்யப்பட்டபோது பச்சை மண்ணில் எழுதப்பட்டிருந்தால் செய்வினைஞரே அதனைச் செய்தார் என்று கொள்ளலாகும். அப்படியில்லாமல், சுட்ட பானையின்மீது கீறப்பட்ட எழுத்துகள் அவை. இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகட்கு முன்னம் ஒரு பானையை உடைமையாகக் கொண்டவர் எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருந்திருக்கிறார். இதனோடு தொடர்புபடுத்திப் பார்த்தால், தலைச்சங்கத்தில் 4449 புலவர்கள் தோன்றிப் பாடினர் என்பதும் இடைச்சங்கத்தில் 3700 புலவர்கள் தோன்றிப் பாடினர் என்பதும் எவ்வளவு நெருக்கமான உண்மை! புலவர்க்கு ஒரு நூல் என்று கணக்கிட்டாலும் எட்டாயிரம் நூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டுமே. அழிந்துபோன நூல்கள், கடல்கொண்ட நூல்கள் என்று நாம் கொள்ளவேண்டியவை அவற்றைத்தாம். தொடர்ந்து இலக்கண நூல்களில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் அடிப்படையில் சொல்கிறேன். இலக்கண நூல்களுக்கு நிகரானவை அவற்றுக்கு எழுதப்பட்ட உரைகள். தமிழ் மரபில் முதல்நூல், வழிநூல், உரைநூல் என நூல் இயற்றுவதில் உரைநூல்களுக்கும் மதிப்பான இடம் தந்திருக்கிறோம். இலக்கணத்தின் திறவுகோல்கள்தாம் அவற்றுக்கு எழுதப்பட்ட உரைநூல்கள். நம் உரைநூல்களில் இலக்கணத்தை விளக்கும் பொருட்டு அடிக்கடி எடுத்துக் காட்டப்படும் பெயர்கள் ஆதன், சாத்தன், கொற்றன் போன்றவை. இந்த ஆதன் என்ற பெயர்க்கு உயிர் என்று பொருள். உயிரானவன். தமிழர்கள் தமக்குச் சூடிக்கொண்ட பெயர்களில் ஆதன் என்பதற்குத் தலையாய இடமுண்டு. சேரர்களும் தம் பெயர்களோடு ஆதன் என்று சேர்த்துக்கொள்வர். சேரலாதன் என்று சேர மன்னர்கள் பலரும் பெயர்கொண்டிருக்கின்றனர். சாத்தன் என்பதற்கு உண்மையானவர் என்ற பொருளைக் கற்பிப்பேன். சீத்தலைச் சாத்தனாரை அறிவோம். கீழடியில் காணப்பட்ட பானை உடைவுகளில் தமிழி எழுத்துகளில் ஆதன், குவிரன் முதலான பெயர்ச்சொற்களைக் காண்கிறோம். குவிரம் என்றால் காடு. காட்டுக்குரியவன் என்ற பொருள் தருவது குவிரன் என்ற சொல். அந்தப் பானையை வைத்திருந்தவன் ஆதன் என்பானும் குவிரன் என்பானும். ஆதன் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பெயர் மரபோடு அவ்வளவு நெருக்கமான தொடர்புண்டு. எம் தந்தை எந்தை என்று ஆகும். நும் தந்தை நுந்தை என்று ஆகும். ஆதன் தந்தை ஆந்தை என்றும் சாத்தன் தந்தை சாத்தந்தை என்றும் சேரும். பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆதனின் தந்தைதான் பிசிர் ஆந்தை எனப்பட்டவர். பிசிராந்தையார் என்ற புலவர் எழுதிய ஆறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் பிசிர் ஆந்தையாரின் மகன் வைத்திருந்த மட்கலமோ அது என்ற பேருவகை பெருகுவதைத் தவிர்க்க முடியவில்லை. கீழடிக் காலத்தை அன்றைய நிலைமையோடு தொடர்புபடுத்திப் பார்த்தால்தான் அதன் பெற்றி உணரப்படும். கிழக்கிலும் தென்கிழக்கிலும் மேற்கிலும் கண்மாய்கள் அமைந்த வளமான நிலத்தில் ஒரு நகரமைப்பும் தொழிற்கூடமும் இருந்திருக்கின்றன. வைகை ஆறு ஊற்றுத் தண்ணீருக்குப் பெயர் பெற்றது. வை கை என்ற தொடரே வைகை ஆயிற்று என்பர். வைகை ஆற்றில் வெள்ளம்போனால்தான் தண்ணீர் கிடைக்கும் என்றில்லை. வெள்ளம் வடிந்தபிறகும் அதன் மணற்பரப்பில் கையை வைத்தால் ஊற்றுத் தண்ணீர் கைக்குழியில் நிறைந்துவிடும். அப்படியொரு பஞ்சுப் படுகையைக் கொண்ட ஆறுதான் வைகை. இன்றுள்ள வைகை ஆற்றிலிருந்து கூப்பிடு தொலைவில் அமையப்பெற்றுள்ள கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் நம் நீர்மேலாண்மையைப் பறைசாற்றுபவை. மூன்றடி விட்டத்திற்குப் பன்னிரண்டு அடிகள் வரைக்கும் ஆழமாய் எடுக்கப்பட்ட கிணற்றிலிருந்து நிலத்தடி ஊற்றுநீர் பெருகிவர, அதனைக் காப்புச் செய்வதற்கு மட்பாண்ட அமைப்பினை வனைந்து கவிழ்த்து உறையிட்டிருக்கின்றனர். அதனால் நீர் நிறைந்ததும் குளிர்ந்துவிடும். நிறைநீரினால் கிணற்றின் ஓரச்சுவர்கள் அரிக்கப்படமாட்டா. ஊற்றாய்ப் பெருகிய நீர் ஓரச்சுவர்களால் உறிஞ்சப்படுவதும் தடுக்கப்படும். வேறுசில பானைகள் அளவான துளைகளோடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் கூழாங்கல், மணல் போன்றனவற்றை இட்டு நீரினை வடிகட்டியிருக்கிறார்கள். வேறொரு பானையிலும் கணக்கான துளைகள் உள்ளன. ஒரு விளக்கினை ஏற்றிவைத்து அவ்விளக்கினை அப்பானையைக் கொண்டு மூடிவிடுவார்கள். விளக்கின் சுடரானது காற்றில் அணையாமல் எல்லாத் திக்கிலும் சீரான ஒளியைக் கொடுக்கும் ஏற்பாடு. அவை மட்டுமின்றி, ஓரிடத்தில் பானை உடைவுகள் பெருங்குவியலாய்க் கிடக்கின்றன. அவ்விடத்தில் மட்பாண்டங்கள் வனையும் தொழிலகம் இருந்திருக்கும் என்பது துணிவு. தொல்மாந்தரின் கட்டுமான அறிவினில் மூன்று முறைகள்தாம் பெரிதாக வியக்கப்படுகின்றன. முதலில், இயற்கைக் குகைகளைத் தமக்கான இருப்பிடமாகக் கொண்டான். அடுத்து, குகையைக் குடையும் கலையையும் கற்றான். தன் தலைக்குமேல் பேரெடையை நிறுவிக்கொள்ளும் கூரை முறைகளில் திட்டமான இடத்திற்கு அவன் சேராததால் பாறைகளையும் மலைகளையும் குடைந்து பெற்ற வதிவிடங்களில் பாதுகாப்பாய் வாழ்ந்தான். மனித வாழ்வு பரவலாக்கம் ஆனபோது எல்லாவிடங்களிலும் பாறையையும் மலையையும் தேடமுடியாதே. அதனால் கற்களைச் சீராக அடுக்கும் முறையில் ஒரு கட்டுமானத்தைக் கண்டான். முறையான வடிவங்களில் உடைத்தெடுக்கப்பட்ட கற்களை அடுக்கிச் சுவர்களை நிறுத்தி அதற்கு மேற்கூரை வேயும் முறை அது. அந்த மேற்கூரைகள் கீற்றுகளாகவோ, ஓலைகளாகவோ, கற்பாளங்களாகவோ இருந்தன. கற்கள் கிடைக்காத இடத்தில் என்ன செய்வது? அங்கேதான் கட்டுமானத்திற்கு உதவும் கற்களைச் செயற்கையாக ஆக்கிக்கொள்ளவும் தொடங்கினான். வண்டலும் களிமண்ணும் சேர்ந்த கலவையை நன்கு பிசைந்தெடுத்து வேண்டிய வடிவில் பாளங்களாக வார்த்தெடுத்துச் சுட்டால் அதுதான் செங்கல். அவ்வாறு சுடப்பட்ட செங்கல் எடை தாங்கும் வலிமையோடு காலங்கடந்து நிற்கும். ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடித் தமிழனுக்குச் சுட்ட செங்கல்லின் ஆக்கமும் பயன்பாடும் தெரிந்திருக்கிறது. அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுவர்க் கட்டுமானங்கள் நல்ல திட்டமான வடிவத்தில் வார்த்தெடுக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. அப்படியானால், கட்டுமானக் கலையில் தமிழர்கள் உலகோர்க்கு முன்னோடியாக விளங்கியிருக்கிறார்கள் என்றே கொள்ளலாம். அந்தக் கட்டுமானப் பேரறிவு சுவரோடு நின்றுவிடுவதில்லை. கலம் கட்டுவது வரைக்கும் நீளும். உலோகங்கள் எனப்படுகின்ற மாழைப் பொருள்கள் கத்திகளாகவும் வாள்களாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆறாம் நூற்றாண்டுத் தமிழன் அம்பு, ஈட்டி என்று வைத்திருப்பான் என்று நினைத்தால் அவனுக்கு இரும்பு உருக்கு முறைகளும் கருவியாக்கங்களும் தெரிந்திருக்கின்றன. அந்நாள் தமிழணங்குத் தங்கப் பொருள்களை அணிகலன்களாக அணிந்திருக்கிறாள். தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட அருமணிகள் கிடைத்திருக்கின்றன. சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மண்மணிகளையும் கோத்து அணிந்திருக்கிறார்கள். கண்ணாடி மணிகள், பீங்கானைப்போன்ற உடைவுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நெய்வுக்குப் பஞ்சிலிருந்து நூல்கோக்கும் தக்களிப் பொருள்கள் பல கிடைத்திருக்கின்றன. எலும்பினால் செய்யப்பட்ட கீறுபொருள்களும் தந்தத்தினால் செய்யப்பட்ட வேறுபொருள்கள் சிலவும் காணக் கிடைக்கின்றன. ஓய்ந்த நேரத்தில் பகடை விளையாடியிருக்கிறார்கள். பகடைக்காய்கள் சுட்ட மண்ணால் செய்யப்பட்டிருக்கின்றன. இன்றைய சதுரங்க விளையாட்டினைப் போன்ற ஒரு விளையாட்டையும் விளையாடியிருக்கிறார்கள். அவ்விளையாட்டுக்குரிய காய்கள் கருங்களிமண்ணால் தனியாகச் செய்யப்பட்டுள்ளன. பாண்டி விளையாடுவதற்குப் பயன்படும் தட்டை வட்ட ஓடுகள் பலப்பல எடுக்கப்பட்டுள்ளன. எதனைச் சொல்வது எதனை விடுவது! அன்றைய தமிழரின் வளவாழ்வின் தடயங்களைக் காணுகையில் காலத்திடம் தொலைத்துவிட்ட தலைவாயிலின் தங்கத் திறவுகோலினைக் கண்டுபிடிக்கப்பட்டதைப்போல் உணர்கிறேன். கீழடித் தொல்லியல் சான்றுகள், தமிழர்களின் தொன்மையைக் ‘கனவுப்பொருள்கள் நினைவில் வந்ததைப்போல்’ மீட்டுக் கொடுத்திருக்கின்றன. அவற்றின் அருமையுணர்ந்து அவ்விடத்தைக் கண்போல் காக்கவேண்டும். அங்கே கண்டெடுக்கப்பட்ட ஐயாயிரத்திற்கும் மேலான பொருள்களை முறையாக அருங்காட்சியகப்படுத்த வேண்டும். ஆந்திர அரசாங்கம் கரும்பெண்ணை ஆற்றின் நாகார்ச்சுனசாகர் அணை நடுவில் ஒரு தீவுப்பகுதியை ஒதுக்கியிருக்கிறது. எதற்குத் தெரியுமா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவாகனப் பேரரசின் சான்றுகள் யாவற்றையும் அங்கே அருங்காட்சியம் ஒன்றைக் கட்டிக் காட்சிப்படுத்துவதற்காக. அங்குள்ள ஒரு சிலையைக்கூட நாம் படமெடுக்க முடியாதபடி கடுங்காவல் போட்டிருக்கிறார்கள். கீழடித் தொல்லகத்தையும் அவ்வாறு காவல் செய்யவேண்டும். கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் அனைத்தையும் ஆந்திர அரசு செய்ததைப்போன்று காட்சிக்கு வைக்கலாம். உணர்கருவிகள் போன்ற உயர்வகை அறிவியல் முறைகளைக்கொண்டு தமிழகத்தின் தொல்லியல் அகழ்வுக்கு வாய்ப்புள்ள இடங்கள் அனைத்தையும் முறையாக ஆய்வுசெய்து மேலும் பல புதிய திறப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவை யாவும் நிறைவேறுகையில் நாம் வரலாற்றின் உயர்முடிகளில் கொடிநாட்டிக்கொண்டிருப்போம். https://uyirmmai.com/article/கீழடி-தந்த-வெளிச்சம்/
  16. கீழடி காட்டுவது ஆரியமா, திராவிடமா, தமிழியமா? 2019 - இரா.முரளி · கட்டுரை கீழடி என்ற பெயர், தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டமாக மட்டுமின்றி தமிழர் உணர்விலும் பெரிய அதிர்வை உண்டாக்கியுள்ளது. பொதுவாக, இம்மாதிரி கண்டுபிடிப்புகள் வெளிவரும்போது புத்திஜீவிகள் வட்டாரத்தில் சற்று பரபரப்பாக பேசப்பட்டு அது தணிந்துவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை, கீழடியில் அகழ்வாய்வு கண்டுபிடிப்புகள் வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்திலும் அதிகமாகப் பேசப்படும் பொருளாக ஆகியுள்ளது. தமிழகத்தின் மொத்த வரலாற்றினையும் கீழடி அகழ்வாராய்ச்சி மாற்றப் போகிறது என்று ரொமிலா தாப்பர் கூறுகின்றார். ஆற்றங்கரை நாகரிகம் என்ற நிலையிலிருந்து, தமிழ் நாகரிகம் என்று பேசும் அளவிற்கு நகர்த்தப்பட்டு உள்ளது, கீழடி அகழ்வாராய்ச்சி. கிணறு தோண்ட பூதம் கிளம்பியது என்பார்கள். இங்கே 1974இல் கிணறு தோண்டியபோது வெளிப்பட்ட வரலாற்று பூதம்தான் இது. பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்கள் தன்னுடைய மாணவர்கள் தங்கள் பகுதியில் கிணறு தோண்டும்போது கிடைத்ததாக கூறிய தடயங்களைக் கண்டு வியந்து மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளார். ஆனால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. டாக்டர் கே.வி.ராமன் என்னும் தொல்லியல் அறிஞர், 1950இல் ஒரு தொல்லியல் நிலஅளவையை மதுரை, திருமங்கலம், மேலூர், பெரியகுளம் ஆகிய தாலுகாக்களில் தமிழகத்தில் மேற்கொண்டார். களஆய்வில், இப்பகுதிகளில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் நடத்த இடங்களும், தடயங்களும் அதிகமாக உள்ளன என்றார். பிறகு 2006இல் பேராசிரியர் ராமன் அவர்கள், தங்கள் மாணவர்களுடன் வைகை நதிக்கரையோரம் தொல்லியல் ஆய்வை மேற்கொண்டார். பின்னர் 293 இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கல்வெட்டுகள், ஈமத்தாழிகள், பானை ஓடுகள், புதைக்கப்பட்டவர்களின் எலும்புகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின்னர் அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையில் மத்திய தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. 2014 முதல் தொடங்கிய இந்த ஆய்வு, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மத்திய தொல்லியல் துறை சார்பாக நடத்தப்பட்டு பிறகு கைவிடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் எழுப்பப்பட்ட பலத்த எதிர்ப்பின் விளைவாக தமிழக அரசே மாநில தொல்லியல் துறை மூலமாக கீழடியில் அகழ்வாய்வைத் தொடரத் தொடங்கியது. 2017 முதல் இன்று வரை இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதியில் ஐந்தாம் கட்ட ஆய்வு நிறைவுபெறுகிறது. 110 ஏக்கர் பரப்பளவுள்ள கீழடி மணலூர் போன்ற கிராமங்களில், இதுவரை சுமார் 4 ஏக்கர் பரப்பளவில்தான் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாய்வில், மக்கள் வளமாக வாழ்ந்து சென்றதற்கான சில புதிய தரவுகள் கிட்டியுள்ளன. இவை தமிழர்களுக்குத் தமிழ் வரலாற்றை அறிவதில் ஆர்வத்தை அதிகரித்துள்ளன. பெரும்பாலும் சங்க இலக்கியக் குறிப்புகளை மட்டுமே வைத்து தமிழர் வரலாற்றுச் சிறப்பை பேசிவந்த நிலை மாறி, தற்போது வரலாற்றுச் சான்றுகளை முன்வைத்து பேசக்கூடிய அளவிற்கு தமிழ்ப் பண்பாட்டின் பலம் கூடியிருக்கின்றது. இதுவரை, சுடுகாடு மற்றும் இடுகாடுகள்தான் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் இம்முறை, மக்கள் வாழ்விடம் கண்டெடுக்கப்பட்டுள்ளதே கீழடியின் சிறப்பாகும். இலக்கியத் தரவுகள், பல அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளுடன் ஒத்துப்போவதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். கீழடியில், முதல்முறையாக சங்ககால மக்கள் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் ஆதாரங்கள் கிட்டியுள்ளன. கட்டட அமைப்புகள், வீட்டுச் சுவர்கள், தரைத்தளம், வடிகால்கள், தொட்டிகள், கிணறுகள் என்று பலவகையான கட்டிட அமைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 200 செ.மீ தோண்டியபோது பொருட்களின் காலகட்டம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு. 353 செ.மீ அடிக்குமேல் தோண்டிய பொருட்களின் காலகட்டம் கி.பி.ஆறாம் நூற்றாண்டு என்று அறியவருகிறது. தோண்டத்தோண்ட வரலாறு மேலெழும்புகின்றது. புதிய கேள்விகளை அது உருவாக்குகின்றது. நம்முடைய அரசியல் கருத்தியல்களை கேள்விக்குள்ளாக்கும் சக்தி அவற்றிற்கு இருப்பதாகக் கருதுகிறேன் என்ன காரணத்தினாலோ, தமிழகத்தில் அதிக அளவு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பற்றிய அறிக்கையும் முழுமை பெறவில்லை. அவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரியளவில் ஏற்படவில்லை. ஆனால் கீழடியில் அகழ்வாய்வு தமிழகத்தைப் பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது. அவ்வூரில் பெரும் கட்டடங்கள் கட்டப்படாத நிலை உள்ளதால், ஆய்வு மேற்கொள்ள முடிந்திருக்கிறது. அதுவும் பனைமரத் தோப்புகள் அதிகம் உள்ளதால் அந்தப் புவிப்பரப்பு பாதிப்படையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது சிறப்பான அம்சம். 1001 பானை ஓடு எழுத்துகள் கிடைத்துள்ளன. கருப்பு-சிவப்பு வண்ணங்களில், மற்றும் கலை வடிவங்களுடன் கிட்டியுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பானையில் எழுத்துகளைப் பதிக்கவேண்டுமென்றால், பானை சுடுவதற்குமுன் எழுத்துகளை களிமண்ணில் எழுதி பின்னர் சுடவேண்டும். அப்போதுதான் பெயர் அப்படியே பொறிக்கப்படும். அப்படியானால் அதை பானை செய்தவர்களே செய்திருக்கவேண்டும். அப்படியாயின், குயவர்கள் எழுத்து அறிவு கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். இதில் 17 பானை மாதிரிகள் இத்தாலியைச் சேர்ந்த பைசா நகர் பல்கலைக்கழகத்திற்கு கரிம சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. கருஞ்சிவப்பு பானைகள் உருவாக்க 1100 டிகிரி செல்சியஸ் சூடு செய்யப்படவேண்டும். அப்போதுதான் கருப்பு-சிவப்பு பானை உருவாகும். அதைச் செய்யும் அளவிற்கு அவர்கள் திறனாளியாக இருந்திருக்கிறார்கள். கீழடியில் கால்தடம் பதிக்கும் இடமெல்லாம் பழங்கால பானை ஓடுகளைப் பார்க்க முடிகிறது. மக்கள் புழங்கிய இடம் என்று புரிகிறது. பதினைந்தாயிரம் பேர் இங்கு வாழ்ந்திருக்கக் கூடும் என்று அமர்நாத் கூறுகின்றார். ஹரப்பா நாகரிகத்தில் 30 ஆயிரம் பேர் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு பேர் வாழ்ந்திருந்தால், அது ஒரு நகர நாகரிகம்தான். வெளிநாட்டுப் பானைகளும் இங்கே காணப்படுவதாகத் தெரிகிறது.. இதிலிருந்து வேறுநாட்டுடன் வணிகம்சார்ந்த தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் யூகிக்கலாம். எழுபது வகை விலங்குகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுடுமண் சிற்பங்களில் மனித முகம் முதல் விலங்குகள் வரை காணப்படுகின்றன. தங்கம் இரும்பு, செம்பு என்று உலோகப் பொருட்களும் காணப்படுகின்றன. தங்க நகைகளும் தென்படுகின்றன. இவையெல்லாம் ஒரு வளமான நகர நாகரிகத்தின் எச்சங்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தற்போது கீழடியில் அகழ்வாய்வு நடைபெறும் இடத்திற்குச் சொந்தக்காரர் தமிழ்ப் பேராசிரியர் கரூர் முருகேசன் அவர்கள். முதல் கட்டத்தில், கிராமத்தில் இணைந்த மக்கள் பலர் இந்த அகழ்வாய்வு குறித்து அச்சப்பட்டார்கள். முருகேசன், தன் நிலத்தை தொல்லியல் துறைக்கு தானமாக வழங்கத் தயாராக உள்ளதாக, தெரிவித்தப் பிறகு, படிப்படியாக மக்கள் இந்த அகழ்வாய்வுத் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காது என்று புரிந்துகொள்ளத் தொடங்கி ஒத்துழைப்பும் தந்துவருகிறார்கள். ஏதென்ஸும் கீழடியும் சென்ற ஆண்டு நான் ஏதென்ஸ் நகருக்குச் சென்றிருந்தேன். அங்கு இம்மாதிரி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடம் பாதுகாக்கப்பட்டு அற்புதமான அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. கீழடி போன்றே நீர் வாய்க்கால்களும், பானை ஓடுகளும், கல்வெட்டுகளும், சிலைகளும் இன்னும் பல அம்சங்களைக் கொண்ட இடம் அது.. கீழடி போன்று பல தடயங்களைக் கொண்டுள்ள அந்த நிலப்பரப்பில்மேல் கண்ணாடி கூரை வேய்ந்து அதன்மீது நின்று பார்வையாளர்கள் கீழேயுள்ள தொல்லியல் எச்சங்களை காணக்கூடிய வாய்ப்பை அந் நாடு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் வாய்க்கால்களும், அடுக்கு கிணறுகளும் தனித்தனியாக பெயர்த்து கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வாய்ப்பு இருப்பின், அதேமாதிரி ஏதாவது ஒரு மியூசியத்தில் அருங்காட்சியகத்தின் மூலையில் அடுக்கப்படும். இல்லையெனில், இருட்டு குடோனில் மூட்டைகட்டி வைக்கப்பட வாய்ப்பு உண்டு. தமிழர் பண்பாட்டின் அபூர்வத் தரவுகளைப் பாதுகாத்து, வரும் தலைமுறையினர் தொடர்ந்து பார்க்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவது மிகமிக அவசியம். இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட உள்ளன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டட அமைப்புகள், மூட்டை கட்டப்பட்டு மூலையில் அடுக்கப்பட்டால், அதுவொரு வரலாற்றுத் துரோகமாகும். கீழடியைப் பொருத்தவரை மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. அதுபற்றிய உரையாடல்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவை கண்டிப்பாக தொல்லியல் துறைக்கும், இதர அதிகார அமைப்புகளுக்கும் பெரும் நெருக்கடியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் மறதி என்னும் நோய், திசை திருப்புதல் என்னும் செயல் மக்களின் வேகத்தைக் குறைக்கும் வேலையைச் செய்யும். இது ஒருபுறமிருக்கையில், சில முக்கிய விவாதங்களை கீழடி அகழ்வாய்வு ஏற்படுத்தியிருக்கிறது. பல பதில் சொல்ல இயலாத பல கேள்விகள் உண்டாகி வருகின்றன. ஆரியமா, திரவிடமா, தமிழியமா? கீழடி நாகரிகம் என்று சொல்லும்போது நாகரிகம் என்ற சொல் ஒரு பிரமாண்ட உணர்வை உண்டாக்குகிறது. தமிழர் நாகரிகம் என்று சொல்லும்போது மேலும் இனப் பெருமை உணர்வு அதிகரிக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்தப் பெருமை, இதுகாறும் பேசப்பட்டு வந்த திராவிடப் பெருமையை எதிர்ப்பதாக, திராவிடப் பெருமைக்கு சவால்விடுவதாக அமையும்போது இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற சிக்கல் திராவிடப் பாரம்பரியத்தை ஆதரித்துவந்த தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, ஆரிய நாகரிகத்தின் நீட்சியா இது என்று கேட்டால், மேலும் சிக்கல் அதிகரிக்கிறது. ஆரியமா, திராவிடமா, தமிழியமா என்ற கேள்விகள் பண்பாட்டு அரசியல் தளத்தில் இன்று மேலோங்கி நிற்கின்றன. அரசியல் அமைப்புகள் அவரவர் கருத்தியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு அம்சத்தை எடுத்துக்கொண்டு அதைப் போற்றுவதும் மற்ற இரண்டை நிராகரிப்பதுமான வேலையைச் செய்துவருவதையும் நாம் காணமுடிகிறது. இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதுபற்றி என்னுடைய கம்யூனிச தோழர் மதிவாணன் அவர்களிடம் உரையாடியபோது, அவர் சொன்ன பதில் யோசிக்கத் தக்கதாக இருந்தது. இந்தக் கால அளவுகளையும் கோட்பாடுகளையும் வைத்து புராதன கால, பண்டைக்கால வாழ்வியல் முறைகளையும், பண்பாட்டையும் புரிந்துகொள்ள முயற்சிப்பது தவறானதாகும் என்பதே அது. மேலும் ஆரியம், திராவிடம் என்ற சொற்கள் அல்லது பாகுபாடுகள் எவையும் இல்லாத காலகட்டத்தை தற்பொழுது இந்த வேறுபாடுகள் கொண்டு வகைபாடு செய்வது நியாயம்தானா என்ற கேள்வியும் அர்த்தமுள்ள கேள்விதான். மனித குலம் தோன்றிய வரலாறு என்பதோடுதான் எந்த ஒரு பண்பாட்டு அகழ்வாய்வையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்றார், அவர். அதற்கான முயற்சிகள் கீழடியில் முதல் அடியாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மூலமாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு மையத்துடன் இணைந்து மரபணு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. வழக்கமான தொல்லியல் ஆய்வுகள் மட்டுமே கீழடி பண்பாட்டை நாகரிகத்தை புரிந்துகொள்ள போதுமானதாக இருக்காது. மேலும் பல அறிவியல் ஆய்வுகள் தேவைப்படும். அப்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது அதன் முடிவுகள் கீழடியை மனிதகுல வரலாற்றின் மற்றுமொரு முக்கியப் புள்ளியாக உறுதிப்படுத்தும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட ஆதிமனிதன், இனக்குழுக்களாக ஆங்காங்கே நாடோடியாகத் திரிந்து வாழ்ந்தான் என்பதும் மானிடவியல் அம்சமாகும். அந்த வகையில், மரபணு ஆய்வு என்பது நம்முடைய வரலாற்றுப் பார்வையை மேலும் விசாலமாக்கும் ஆகும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில், எனக்கு ஆச்சரியமளித்த முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், அங்கு காணப்பட்ட ஒரு பெயர்தான். உதிரன், மடைச்சி குவிரன், அயனன், சாதன், சந்தனவதி, வேந்தன் போன்ற பெயர்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளபோதிலும், ‘ஆதன்’ என்ற பெயர் என்னை மிகவும் ஈர்க்கிறது. கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரம் ஆதன் நகரமாகத்தான் தமிழர்களால் பேசப்படுகிறது. கிரேக்கத்தில் ஆதன் என்ற சொல் சூரியன் என்று பொருள்படும். இங்கும் அப்படியே. இன்னும் பல மொழிக் குறியீடுகள் நமக்கு உலகளாவிய தொல்லியல் கண்டுபிடிப்பு குறியீடுகளை ஒத்திருப்பது ஆச்சரியத்தைத் தருகின்றன. தமிழர்கள், கடல்கடந்து வாணிகம் மேற்கொண்டதால் இம்மாதிரியான பொதுமைப் பண்புகளை இங்கு காணமுடிகிறது என்று அதற்கு ஒரு பதில் கூறப்படுகிறது என்றாலும் இன்னும் அறியப்படவேண்டிய வரலாற்று ரகசியங்கள் ஏராளமாக இருக்கக்கூடும். அவை தெரிய வரும்பொழுது இந்த நாகரிகங்கள் ஆரியமும் அல்ல திராவிடமும் அல்ல தமிழியமும் அல்ல, மானுடம் என்று உணரும்நிலையும் வரக்கூடும். மக்கள் தொல்லியல் தமிழினத்தின் தொன்மையை பறைசாற்றும் இந்த அகழ்வாய்வு, அரசியல் காரணங்களால் வீரியம் குறைக்கப்பட்டு, முடக்கப்படும் அபாயமும் உள்ளது. பேராசிரியர் ரத்தினகுமார் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல, தொல்லியல் தற்போது மக்கள் தொல்லியலாக மாறிவிட்டது. ஒரு கட்டத்தில், கீழடி அகழ்வாய்வு நிறுத்தப்படும் நிலை உண்டானபோது பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின என்பதும், மக்கள் விழிப்போடு போராடினார்கள் என்பதும், தனி ஒரு வழக்கறிஞர் வழக்குத் தொடுத்தார் என்பதும் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் இருந்தும் கீழடி அகழ்வாய்வை காண லட்சக்கணக்கான மக்கள் வந்துபோகிறார்கள் என்பதும் இது மக்கள்மயப்பட்ட தொல்லியல் ஆகிவிட்டது என்பதை புரியவைக்கிறது. பானையோடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்ட எழுத்துகளை ஏன், பிராமி என்று அழைக்கிறீர்கள். அது தமிழிதான் என்று தமிழ்தேசியவாதிகள் மட்டுமல்ல; பலரும் இன்று பேசுவது மொழி வரலாற்றில் மற்றும் ஒரு திருப்புமுனையாகும். தமிழகத்தில், தமிழுக்கே உண்டான சொல் கலைச்சொற்களை எழுத்து வடிவத்தில் வைத்திருப்பதற்குப் பெயர் தமிழியாகத்தான் இருக்கவேண்டும் என்று இனிவரும் தொல்லியல் அறிஞர்களுக்கு, இயக்கவாதிகள் வழிகாட்டி வருகிறார்கள். பொதுவாக தொல்லியல் அறிஞர்கள், அறிவியல் கோட்பாட்டை மட்டுமே நம்பி, தங்கள் ஆய்வை வெளிக்கொண்டு வருவது வழக்கம். ஆனாலும், அந்த ஆய்வு முறைகளில் பண்பாட்டுக் கூர்மை, நுணுக்கங்கள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்ற முக்கிய அம்சமும் தொல்லியல் ஆய்வு முறைகளில் சேர்க்கப்படும் நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சாதிகள் இருந்தனவா, வழிபாடுகள் இருந்தனவா என்ற கேள்விகளுக்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்தான் பதில் சொல்லமுடியுமே தவிர, இப்போது கிடைத்தவை போதாது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கீழடி ஆய்வு இடத்தை அரசு பாதுகாத்து அதை ஒரு தொல்லியல் அருங்காட்சியகமாக அமைக்கவேண்டும் என்பதற்காக அனைவரும் வேறுபடுகளின்றி குரல் எழுப்புவது அவசியம். https://uyirmmai.com/article/கீழடி-காட்டுவதுஆரியமாதி/
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள்மொழிவர்மன்🎉🎉🎉
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்🎉🎉🎉
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.