Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34940
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. கரும்புலிகள் ஒரு வரலாற்று அபூர்வம்! July 5, 2019 இன்று கரும்புலி நாள். எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்யேண்டிய நாள். இன்றைய நாள்குறித்த சிறப்புக் கட்டுரையே இது. ஒருமுறை பொறுமையோடு இதனை நோக்குவோம்…! தத்துவங்கள் எல்லாம் தலைகீழாகி விட்டன. வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டங்கள் பல இடையில் வெம்பிப் பழுத்தவை போலாகிவிட்டன. அமைதி என்ற மாயத்திரைக்குள் சமரசங்களும் இயலாமையும் தாண்டவமாடுகின்றன. இப்படியான இன்றைய உலகிலே பனிப்போர் கால கட்ட நெருக்கடிகளையும் தாண்டி புதிய உலக ஒழுங்கினுள்ளும் புகுந்து அதன் அழுத்தங்கட்கும் முகம் கொடுக்கத் தயாராகும் விடுதலைப்புலிகள்; இயக்கம் ” கரும்புலிகள் ” எனும் படையணியைப் போராட்ட வரலாற்றின் புதுவிசையாக அறிமுகம் செய்துள்ளது. தன்னலத்தை தனிநபர் சுதந்திரம் என்றும், மனித விழுமியகங்கள் அற்ற மேற்குலக அதிநவீன இயந்திர வாழ்க்கை முறையை ” அறிவியல் வெளிப்பாடு ” என்றும் கருதி தற்போதைய புதிய முதலாளிய பொருண்மிய ஒழுங்கின் கவர்ச்சியில் இருந்து விடுபட முடியாதோருக்கு இச் செய்தி ஏற்க முடியாத, ஏன் நம்ப முடியாத செய்தியாகத்தான் இருக்கும். ஏனேன்றால் மனித குலம் காணத மனித ஈகத்தின் அதி உயர் உச்ச வடிவமல்லவா இது ! இன்று கரும்புலிகள் போராட்ட வடிவத்தின் வரைவிலக்கணம் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. முன்னர் சீனப் புரட்சியின் போது மாவோ, பாரிய மரபுவழி இராணுவங்களிற்கு எதிராகப் போரிட எவ்வாறு |கெரில்லா| போராட்ட முறையில் பல்வேறு உத்திகளைச் சூழ்நிலைக்கேற்ப புகுத்தினரோ, அவ்வாறு இன்று நவீன போர்முறைகட்கு எதிராகப் போராடும் ஒரு சிறிய தேசிய இனம் தனது ஆன்மீக பலத்தை மட்டும் நம்பிப் புகுத்திய புது வடிவம்தான் ” கரும்புலி ” படையணியாகின்றது. ” தன்னை இழந்து எதிரிகளில் பலரையோ அல்லது எதிரியின் பலம் மிக்க இலக்கினையோ அழிக்கும் படையணியை ” உருவாக்கும் எண்ணத்தை தலைவர் திரு வே. பிரபாகரன் தொடக்ககாலம் தொட்டே தனது மனதில் அடைகாத்து வந்துள்ளார். எண்ணிக்கை, படைபலம், கருவிகள் போன்றவற்றில் எதிரியைவிட அளவில் குறைந்த ஓரு போராட்ட அணி வெற்றியடைவதற்கு வெறும் வீராவேசத்திற்குப் பதிலாக விரக்தியையும், வீரத்திற்குப் பதிலாக மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட போர்த்திட்டமொன்றையும் அதேவேளை தன்னை இழப்பதன் முலம் இலக்கை வெற்றி கொள்ளும் உத்தியையும் இணைத்தே தலைவர் திரு வே.பிரபாகரன் கரும்புலிகள் என்ற புதிய போராயுதத்தை வடிவமைத்துள்ளார் என்பது வரலாறு சொல்லும் செய்தியாகும். எனவே மனித குலத்தின் உன்னத விழுமியமாக, உயரிய ஈகமாக பிறர்காகத் தன்னை அழித்தல் எனும் தற்கொடைப் பண்பாளர்களைக் கொண்ட படையணியை வரலாற்றில் சமகாலத்திலோ அல்லது முன்னரோ வேறேங்கும் காணமுடியாது. ” விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் ” பற்றி ஆய்வு செய்வோர் இதன் தோற்றுவாயைப் பழந்தமிழரின் மறவர் போர்ப் பரம்பரையில், யப்பானிய போர் மரபுகளில் தொட்டுகாட்ட முனைகின்றார்கள். யப்பானிய நிலமானிய முறைச் சமுதாய காலகட்டத்தில் யப்பானிய சக்கரவர்த்திகளின் முழு நம்பிக்கைக்குரிய போர் மரபுவழிப் பண்பாட்டைப் பின்பற்றும் ” சமுராய் ” எனப்படும் போர்வீரர்கள் தமக்குரிய போர் மரபாக தமக்கிட்ட ஆணைகளைச் செய்து முடிக்க முடியாத போது தமது மன்னர் தோல்வியைத் தழுவும் போது தாமும் தம்முயிரை மாய்ப்பது வழக்கம். இது அக்காலகட்ட நிலவுடமைச் சமுதாய மரபாக இருந்த போதும் யப்பானிய சமூகத்தில் இன்றும் தற்கொலை செய்யும் பழக்கம் ஒன்று நிலவுகின்றது. செப்படு| என்றும் பொது வழக்கில் ‘தராசி” என்றும் அழைக்கப்படும் பண்டைய போர் மரபின் தற்கொலைச் செயற்பாடு இன்று அழுத்தங்களிலிருந்து விடுபட யப்பானியர் பின்பற்றும் அவல நிலையாகிவிட்டது. எனவே இதனை விடுதலைப் புலிகளின் பண்பாட்டோடு ஒப்பிட முடியாது. 2ம் உலகப் போரின் போது 1941ம் ஆண்டு மார்கழியில் அமெரிக்க கடற்ப்படைக் கப்பல்களைப் பேர்ள் துறைமுகத்தில் தாக்கியழிக்க விமானமோட்டி யோருவர் தனது விமானத்தைப் போர்கப்பலுக்குள் செலுத்தியமைப் போன்று அபூவமான சம்பவங்கள் யப்பானிய வரலாற்றில் உண்டு. ஆனால் தற்கொலை வீரர்களைக் கொண்ட ஒரு படையணியை அதன் தொடர்ச்சியான செயற்பாட்டை அங்கு காணமுடியாது. இது போலவே பழந்தமிழர் போர்ப்பரம்பரையானது மறவர் பரம்பரையின் அரசனுக்காக தன்னை ஈகம் செய்யும் போர்மரபாக் கொள்ளப் பட்டதாக அறிய முடிகின்றது. உண்மையான தமிழ்பண்பாடு எதுவேன அறிய முயன்ற தமிழறிஞர்கள் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இரத்தம் சிந்திப் போர் புரியும் வீரப் பண்பாட்டையே தமிழர் பண்பாடாக விதந்துரைக்க நேரிட்டது. வீரப் போரில் வீரச்சாவடைவதே ஆண்மகனின் கடமையேன இளவயதிலேயே கற்பிக்கும் வீரத்தாய்ப் பண்பாடு, போரில் புறமுதுகு காட்டாது போரிட்டு உயிரை இழந்தோரை நடுகற்களால் நினைவு கூர்ந்து அவர்களைத் தெய்வங்களாக மதித்து வருவது போன்றன பழந்தமிழர் பண்பாடாகும். அதுபோலவே தமது அரசின்மேல் கொண்ட பற்றுறுதி காரணமாகத் தம்மை இழக்க முன் வருவதும் அவர் தோல்வியைத் தழுவும் போதும் இறக்கும்போதும் தாமும் ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க” இறத்தலும் அத்துடன் அவிப்பலி, தன்னை வெட்டல் என்பன பல போர் ஒழுக்கங்களாகவும் அந்தப் போர் மரபு பேணப்பட்டிருந்தது. அதேபோல போரில் தமது சேனைத் தலைவன் வெற்றியீட்ட வேண்டும் என்பதற்காக “கொற்றவை” க்குத் தனது தலையைத் தாமே வெட்டிப் பலி கொடுக்கும் வழக்கமும் இருந்தது. அத்தோடு போரில் தோல்வி, சிறைப்பட நேரும் அவமானம் போன்றவை ஏற்படும் போது அரசனானவன் உண்ணாநோன்பிருந்து உயிரை விடும் “வடக்கிருத்தல்” எனும் போரோழுக்கமும் இருந்திருக்கின்றது. இதனை யப்பானிய மரபோடு ஆய்வாளர் ஒப்பிடுவர். ஆனால் தற்கொடை என்பதை இத்தகைய சூளுரைத்தல், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் அவமானத்தில் இருந்து விடுபடல் என்கிற நிலைகளிருந்து விடுவித்து, அதையொரு பரந்த அடிப்படையில் மக்களுக்கான போராட்ட அணியாக்கியமை இங்கே பாரிய குணாம்ச வேறுபாடாகின்றது. ஏனேன்றால் இத் பழந்தமிழர் பண்பாடெல்லாம் இடையில் பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டு. வந்தவனெல்லாம் எமது இனத்தை அடிமைப் படுத்தி அடிமை வாழ்வே தமிழர் பண்பாடாகிய வரலாறும் தமிழர்க்குரியது அல்லவா ? இது முன்னைய காலம். சமகாலத்தை நோக்கும் போது உலகில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தற்கொடைப் போராளிகளின் தாக்குதலை அவதானிக்க முடியும். குறிப்பாக லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் அமெரிக்க படைத்தளம் மீது வாகனத் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமையைக் குறிப்பிட முடியும். இப்போது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்லாமிய கமாஸ் இயக்கப் போராளிகள் சில தற்கொடைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இத்தாக்குதல்கள் ‘கொலைக்கு கொலை என்கின்ற வகையில் உடனடியாக எழும் பழிவாங்கல் உணர்வின் காரணமாகத் தூண்டப்படுவதால் பல தடவைகளில் எதிர்பார்த்த விளைவுகளைத் தராமல் தாக்கங்களை விளைவிக்காமலேயே போய்விட்டன. முழுமையான போர்த்திட்டமொன்றின் பகுதியாக அல்லாமல் தனித்தனி உதிரிச் சம்பவங்களாக இவை அமைவதால் இவை தோற்றுவிக்க வேண்டிய பாரிய அச்ச உணர்வு, ஆழமான தாக்கங்கள் இஸ்ரேல் தரப்பில் ஏற்படவில்லை. இப்போராளிகளின் ஈகத்தைப் போற்றும் அதே வேளை, எமது கரும்புலிகள் போராட்ட வடிவம் எத்தகைய தாக்கத்தை எதிரியின் தரப்பில் எற்படுத்தியுள்ளது என்பதையும் கருத்தில் எடுக்க வேண்டும். சிங்கள இராணுவத்தரப்பில் தோற்றுவிக்கப் பட்டுள்ள பெரும் பீதி உணர்வு இத்தாக்குதல்களை என்ன பாடுபட்டாலும் தடுக்க முடியாது என்கிற அவநம்பிக்கை உணர்வு என்பவற்றை வரலாற்றில் வேறேங்கும் கரும்புலிகளின் தற்கொடைத் தாக்குதல்கள் தோற்றுவித்தமை போல் காண முடிவதில்லை. அத்தோடு இன்றைய நவீன உலகில் போர்முறைகளும் வெகு நவீனமாகின்றன. இனிவரும் போர்முறைகளில் இயந்திர மனிதன், கணணிகள் என்பனவே மிகக் கூடிய பங்கினை வகிக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால் எந்த உயர் தொழில் நுட்பத்தாலும் கரும்புலித்தாக்குதல் முறையைத் தடுக்க முடியாது என்பதே உண்மை நிலையாகும். ஏனேன்றால் உணர்வும் ஈகமும் மட்டுமல்லாமல் மனிதக் கணணியாகும் அல்லவா கரும்புலிகள் செயற்படுகின்றனர். இம்மியளாவும் இலக்கு பிசகாத, நேரம் தவறாத இடியோசை போல், சூறாவளி போல் மேற்கொள்ளப்படும் கரும்புலித் தாக்குதல்கள் இவ்வுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டன. எனவே இத்தகையதொரு வியத்தகு மனோபலத்துடன் மேற்கொள்ளப்படும் கரும்புலித் தாக்குதல்கள் உலக வரலாற்றில் மிக அப+வமாகத் தெறிக்கும் ஒளிக்கீற்று என்பதே என்றும் வரலாறு சொல்லும் செய்தியாக இருக்கப் போகின்றது. விடுதலைப் புலிகளின் புதிய போர் மரபாக தோற்றுவிக்கப்பட்ட கரும்புலிப்படையணி தமிழ் இனத்தின் விடுதலை வெகு தூரத்தில் இல்லை என்பதை கட்டியமாகின்றது. இச் சிறிய தேசத்திற்குள்ளிருந்து தோன்றிய இப்படையணியின் பேரொளி எதிரியைக் குருடாக்;கி விடுவதோடு இதனைப் புரிய முடியாத எம்மவரையும் வரலாற்று குருடராக்கிவிடும் அபூர்வத்தன்மை கொண்டது. காலிக் கீழ் நசுக்கப்பட்ட இனத்தின் இதயத்தில் இருந்து தோன்றிய தீப்பழம்பாகத் கனன்று ஏரியும் விடுதலைத் தீ தான் ”கரும்புலிகள் ” ஆகும். – உயிராயுதத்திலிருந்து….. http://www.errimalai.com/?p=6158
  2. இன்னும் ஒரு தடவைகூடப் பார்க்கவில்லை. நேற்று காதலிக்க நேரமில்லை படத்தைப் பற்றிய குறிப்பை நானும் வெட்டி ஒட்டியிருந்தேன்.😀
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா🎉🎉🎉
  4. படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் சேரன் பட மூலம், UK Tamil News படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது ஒளியின் ரசாயனம் அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை அது பதிவு செய்யாது சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி எழுந்த ஒரே ஒரு அவலக் குரல் ஆகாயத்தில் மிதந்த சாக்குருவியினுடையது சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் அனைவரது பெயர்கள் அறிவோம் ஊரை அறிவோம் கனவுகள் அறிவோம்; ஏமாற்றங்கள் அறிவோம் நெருங்கிய உணர்வின் கையறு நிலை அறிவோம் சினந்தெழுந்தவரின் இறுதிக் கண்வீச்சை அறிவோம் மற்றவர் அறியா மொழி அது எனினும் இவை உங்களுக்கு உதவாது நீங்கள் அடையாள அட்டையைக் கேட்கிறீர்கள் பிறப்புச் சான்றிதழைக் கேட்கிறீர்கள் எழுத்துமூலமான் பதிவை வலியுறுத்துகிறீர்கள் இனப்படுகொலைக்கோ உயிராதாரம் உண்டு கண்ணீர் எரிந்து உணர்வெழுதும் நுண் சாட்சியம் உண்டு கதை கதையாய்க் கொலை கொலையாய் உறங்காத மொழியிலும் உலராத வரலாற்றிலும் நினைவுகள் உண்டு தரலாம். பெறுவதற்கு யாருமில்லை சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் குருதி, மழை, சேறு. சேரன் https://maatram.org/?p=7916
  5. இலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப் .கேணல் நீலன் ஒரு கட்டுப்பாடான இயக்கத்துடன் முரண்படுவோர் எந்த நிலைக்குச் செல்வர். என்பதைக் கருணாவின் பிளவு நமக்கு வெளிப்படுத்தியது. அதன் மோசமான விளைவுகளில் ஒன்று லெப்.கேணல் நீலனின் படுகொலை. இயக்கத்தில் இணைந்து கொண்டோர் இலட்சியத்திற்கும், இயக்கத்திற்கும், அதன் தலைமைக்கும் விசுவாசமாக நடந்து கொள்வேன் என சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர். அதன்படி என்றுமே தலைமைக்கு விசுவாசமாக இருந்தார் நீலன். அதுவே அவரது இழப்புக்கும் காரணமாகியது. துரோகம் செய்யப் புறப்படுபவன் தனிப்பட்ட நட்பையும் பொருட்படுத்த மாட்டான் என்பதை நிரூபித்தார் கருணா ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நீலன். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் புலிகளின் பிரதான தளங்களுள் ஒன்றாக விளங்கியது. ஆரையம்பதி வரை இக்கிராமத்திலிருந்து நூற்றுக்கு மேற்பட் டார் பேர் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றனர். தென் தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் அனித்தாவும் இந்த ஊரைச் சேர்ந்தவர்தான். போராளிகளுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அவர்களைக் காப்பாற்ற இந்த மக்கள் துடிக்கும் துடிப்பு என்றுமே மறக்க முடியாதவை . அவ்வாறான சம்பவங்களின் பட்டியல் மிக நீண்டது. அன்னை பூபதியின் உண்ணா விரதப் போராட்டங்களில் போது இந்தக் கிராமங்களின் பங்களிப்பும் கணிசமாக இருந்தது. திருமதி. நிர்மலா நித்தியானந்தன் சிறையிலிருந்து மீட்கப்பட்ட போதும் இந்த ஊருக்குத்தான் முதலில் கொண்டு வரப்பட்டார். யாழ்ப்பாணத்துக்குப் பயணமாகும் வரை அவரைப் பத்திரமாக பாதுகாத்தனர் இந்த மக்கள். உயர் கல்விமான்கள், வணிகர்கள் , படகோட்டிகள் , இளைஞர்கள், யுவதிகள் என சகல தரப்பு மக்களும் போராட்டத்துக்குக் கை கொடுத்தனர். நீலன் பங்களிப்புக்கள் அனைத்தும் வெளியிடப்பட முடியாதவை ஏனெனில் அவர் புலிகளின் புலனாய்வுத்துறையைத் சேர்ந்தவர் இலங்கையின் தலைநகரிலும் புலிகளின் நடவடிக்கைகள் சிலவற்றுக்கு அவர் தலைமை தாங்கியிருந்தார். கருணா பிரிந்து செல்ல முடிவெடுத்த போது முதலில் இவரையே கைது செய்ய முடிவெடுத்தார். கைதாகியிருந்த போதும் பிரபாகரன் மீதான விசுவாசம் குறையாமலே இருந்தார் இவர். இந்திய அரசுடன் தொடர்ப்பு கொண்டு இவரைக் கையளித்து சில அனுகூலங்களைக் அடைய முயன்றார் கருணா. ராஜீவ் காந்தி கொலையுடன் இவருக்குச் சம்பந்தமிருக்கிறது என்று கூறினார். ஆனால் இந்திய விசாரணையாளர்கள் இதனை ஏற்கவில்லை . இவர் இந்தியாவில் இருந்தார்தான் ஆனால் அவருக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்பந்தமில்லை வேறு பணிகளுக்காகவே வந்திருந்தார். போய் விட்டார் என பதிலளித்தனர். கருணாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. தனது முதலாவது பேரம் பேசலே தோல்வியில் முடிந்தது குறித்து ஆத்திரமடைந்தார். மட்டக்களப்பை விட்டு போகும் போது நீலனுக்கு மரணதண்டனையை உறுதிப்படுத்தினார். அதன்படி கருணாவின் சகாவான துமிலன் தலைமையிலான குழு நீலனை கைகள் கட்டப்பட்ட நிலையில் மருதம் முகாமிலிருந்து கூட்டிக் கொண்டு செல்லும் வழியில் 12/04/2004 அன்று சுட்டுக் கொன்றனர். 1984ம் ஆண்டு புலிகளின் ஐந்தாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர் நீலன். திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தந்தை . நீலனை மட்டுமல்ல 1.கப்டன் நம்பி (தர்மலிங்கம் பத்மநாதன்) கல்முனை, வீரச்சாவு: 10.04.2004 2.கப்டன் பார்த்தீபன் (யூட்) (பவளசிங்கம் ஜெயகரன்) 2ம் குறிச்சி, தம்பிலுவில், வீரச்சாவு: 09.10.2004 3.கப்டன் நிதர்சன் (நடேசன் தர்மகுணானந்தன்) குரவயல், உடையார்கட்டு, முல்லைத்தீவு வீரச்சாவு: 06.05.2004 4.கப்டன் சசிக்குமார் (கணபதிப்பிள்ளை திருப்பாதம்) வள்ளுவர்மேடு, பளுகாமம், வீரச்சாவு: 04.04.2004 5.கப்டன் வாமகாந் (கணேசன் லிங்கநாதன்) கிரான், வீரச்சாவு: 04.04.2004 6.லெப்டினன்ட் வினோரஞ்சன் ( செல்லையா மோராஜ் )காயங்குளம், செங்கலடி, வீரச்சாவு: 04.04.2004 7.மேஜர் தமிழீழன் (சதாசிவம் திருக்கேதீஸ்வரன்) மகிழவெட்டுவான், ஆயித்தியமலை,வீரச்சாவு: 07.04.2004 8.லெப்டினன்ட் பொதிகைவேந்தன் (வேலு பாண்டியன்) கிந்துக்குளம், கரடியானாறு, வீரச்சாவு: 09.04.2004 9.2ம் லெப்டினன்ட் சங்கொளியன் (கந்தசாமி அருட்செல்வம்) கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, வீரச்சாவு: 09.04.2004. 10. வீரவேங்கை மலர்க்குமரன் (தங்கராசா குகன் (மாவளையான்) கரடியானாறு, வீரச்சாவு: 09.04.2004 11.கப்டன் மாலேத்தன் திருநாவுக்கரசு புவனேஸ்வரன் இறால்ஓடை, காயங்கேணி, மாங்கேணி, வீரச்சாவு: 10.04.2004 12.லெப்டினன்ட் வர்ணகீதன் (மாணிக்கவேல் சபாரத்தினம்) கழுவங்கேணி, மட்டக்களப்பு வீரச்சாவு: 10.04.2004 13.துணைப்படை வீரவேங்கை மோகன் (காளிக்குட்டி சந்திரமோகன் )கண்ணகிபுரம், வாழைச்சேனை, வீரச்சாவு: 10.04.2004 14.லெப்டினன்ட் ராமரதன் : (செல்வன் ராஜேந்திரன்) கதிரவெளி, நாவற்காடு, வீரச்சாவு: 10.04.2004. 15.லெப்.கேணல் : நீலன் : (சீனித்தம்பி சோமநாதன் )ஆரையம்பதி, 12.04.2004. 16.2ம் லெப்டினன்ட் : தாரணன் (செல்வநாயகம் சந்திரகுமார்) நெல்லிக்காடு, ஆயித்தியமல வீரச்சாவு: 24.04.2004 17.கப்டன் தியாகேஸ்வரன் (நடராசா சுரேஸ்) தளவாய், ஏறாவூர், வீரச்சாவு: 25.04.2004. 18.லெப்டினன்ட் டனிசன் (செல்லத்துரை ஜெசிதரன் ) மாங்கேணி, வீரச்சாவு: 25.04.2004 19. 2ம் லெப்டினன்ட் செல்வவீரன் (சேதுநாதப்பிள்ளை பிரபா) : 4ம் குறிச்சி, சித்தாண்டி, வீரச்சாவு: 25.04.2004 20.மேஜர் நேசராஜ் (தாமோதரம் சூரியா) கதிரவெளி, வாகரை, வீரச்சாவு: 01.05.2004. 21.மேஜர் : பகலவன் ( சிவானந்தன் சிறிமுரளி )நொச்சிமுனை, வீரச்சாவு: 06.05.2004 22. 2ம் லெப்டினன்ட் றோகிதன் (பரமானந்தம் புனிதலிங்கம்) முனைக்காடு, வீரச்சாவு: 20.05.2004. 23. மேஜர் அன்புநேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.07.2004. 24.லெப்.கேணல் : சேனாதிராசா (இராமலிங்கம் பத்மசீலன் )ரமேஸ்புரம், செங்கலடி வீரச்சாவு: 13.07.2004 25.லெப்.கேணல்: பாவா (தயாசீலன்) (செல்வராசா ஜெகதீஸ்வரன்) கள்ளியதீவு, திருக்கோவில், வீரச்சாவு: 20.08.2004. 26. லெப்.கேணல் யோகா (நாகலிங்கம் ஜீவராசா) : வெல்லாவெளி, வீரச்சாவு: 20.08.2004. 27.கப்டன் வந்தனன் பாலசிங்கம் புவிராஜ் : அரசடித்தீவு, வீரச்சாவு: 26.08.2004 28. கப்டன் வர்ணரூபன் (மகேஸ்வரன் ருசான்குமார்) வாழைச்சேனை, வீரச்சாவு: 17.11.2004 குறிப்பிட்ட போராளிகளை பழிவாங்கியிருந்தார் கருணா. இதே போல் தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்ததற்காக மாமனிதர் ஜோசெப் பரராசசிங்கம், பேராசிரியர் தம்பையா, ஊடகவியலாளர் G.நடேசன் இவர்களையும் பலிவாங்கினார் கருணா. அதுமட்டுல்ல கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஜனாவின் பின் முடிவெடுத்தவர்களின் ஒருவராகவும் விளங்கினார். ஜனா தலைமையேற்ற போது ஆரையம்பதியைச் சேர்ந்த விஜி என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். கருணா குழு 29.01.2006 அன்று வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக்குக் கழகத்தைக் பணியாளர்கள் பயணித்த வாகனத்தைக் கடத்தியது வட்டக்கட்சியைச் சேர்ந்த செல்வி .பிறேமினி தனுஸ்க்கோடி என்ற யுவதி இவ்வாறு கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளானார். கருணாவின் மகள் ...... வயதை அடையும்போது தான் இந்தக் கொடூரத்தைக் செய்தமை குறித்து சிந்திப்பார். நீண்ட காலம் அவருக்கு நண்பனாக இருந்த நீலனைக் கொல்ல முடிவெடுத்தவர்க்கு இந்த விடயத்தைக் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது . கருணாவின் பிரச்சினைக்கு பிறகு மட்டக்களப்பில் ஒருவர் சொன்னார் அம்மானுக்கு ஒரேயொரு தெரிவு தான் இருக்கும் எந்த நேரமும் போதையில் இருப்பதுதான் அது. அவருடைய மன சாட்சி அவரைக் குத்திக் கொண்டுத்தான் இருக்கும். http://www.battinaatham.net/description.php?art=19267
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி ஐயா🎉🎉🎉
  7. கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று! AdminMay 4, 2019 கடற்கரும்புலி சிதம்பரம நிறையப் படிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் நிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிற்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பிவருவான். முற்றத்தில் நிற்கும் வேப்ப மரத்தில் ஏறி பூ கொய்துகொண்டு வந்து கொடுத்து…. “இதிலை ஏதாவது செய்யணை….. சாப்பிடுவம்” என்று சொல்வான். சிதம்பரம் ஏற்கனவே கலகலப்பானவன். துன்பம் வாட்டுகின்றபொழுது , அவனது முகத்தில் அதைக் கண்டு கொள்ளமுடியாது, எல்லோரையும் சிரிக்கவைத்து தானும் சிரிப்பான். சந்திரனாக இருந்தவன் தான்…., 1989 இன் இறுதிக் காலத்தில் சிதம்பரமானான். ஆரம்ப நாட்களில்….. பலாலியில் சிங்கள முப்படைகளின் கூட்டுத்தளத்திற்கு எதிரில், ஒரு பிறன் எல்.எம்.ஜி உடன் காவலிருந்த சிதம்பரத்தின் பணி, பிற்காலத்தில் ஒரு கடற்புலி வீரனாகத் தமிழீழ அலைகளின் மீது தொடர்ந்தது. இப்போது சிங்களப் படையின் பீரங்கிக் குண்டினால் அரைவாசி இடிந்து நொறுங்கிய அவர்களுக்குச் சொந்தமில்லாத வீடொன்றின் ஒருபக்க மூலையில், கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயலாத நிலையில் , கட்டிலில் இருந்து கொண்டு சிதம்பரத்தின் ஏழைத்தாய் தன் வீரமைந்தனை நினைவு கூறுகின்றாள் ….. “அவனொரு இருட்டுக்குப் பயந்த பெடியன் மோனை… சின்ன வயதில அவன் மீன்பிடிக்கப் போகேக்க, நான்தான் அவனை படகுவரை கூட்டிக் கொண்டு போய்விடவேனும்…. அப்பத்தான் போவான்….. அவனுக்கு அவ்வளவு பயம். ….. அந்த மாதிரி பயந்துகொண்டு இருந்தவன் தான் தம்பி இயக்கத்துக்குப் போய் போராடி, அதே கடலில்… இப்ப இவ்வளவு வீரனாய்….” அந்தத் தாய் கண்ணீரோடு பெருமைப்படுகிறாள். தளபதி சூசை அவர்கள் , தனது கண்களுக்குள் நிழலாடும் அந்த இறுதி நாட்களைப் பற்றிச் சொல்கிறார். “நடுக்கடலில் நின்று கொண்டு எங்களுக்கு சவாலாக இருந்த, சிங்களக் கடற்படையின் “அபித்தா” என்ற கட்டளைக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டோம். அதற்காக இரண்டு கரும்புலிகள் தயார் செய்யப்பட்டனர். அதில் ஒன்று ஜெயந்தன், மற்றது இன்னொரு போராளி. கடைசி நேரத்தில், அந்தப் போராளியை தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் அனுப்பமுடியாமல் போய்விட்டது. என்ன செய்யலாமென நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது, அருகில் நின்று நிலைமையைப் புரிந்து கொண்ட சிதம்பரம் தானே முன்வந்து, ‘நான் போறேன் அண்ணை’ என்று சொன்னான். சிதம்பரம் ஏற்கனவே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தான். ஆனாலும் திடீரென ஒரு தேவை ஏற்பட்டபோது தானே விரும்பி முன்வந்து கரும்புலித் தாக்குதலில் இறங்கியதை, என்னால் மறக்க முடியாது. அபிதா கடற்படைக் கப்பல் மீது 04.05.1991 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலைப் பற்றி கதைத்தபொழுது மேலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பின்வருமாறு சொன்னார். இறுதி நேரத்தில் கடலில் ….. சிதம்பரம், ஜெயந்தன் காட்டிய உறுதியை என்னால் மறக்க முடியாது. இப்போதும் அது என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன. அது ஒரு முன்னிரவு நேரம். எமது கரும்புலித் தாக்குதலின் இலக்காகிய “அபிதா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் கரையிலிருந்து சுமார் எட்டுமைல் தொலைவில் நின்றது. இக்கப்பலைத் தேடி திசையறி கருவியின் உதவியுடன் கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொண்டு கதைத்தார்கள். “நாங்கள் கதைக்கிறது விளங்குகிறதா…?” எனக் கேட்டோம். “நீங்கள்….. கதைப்பது….. தெளிவாகக்…. கேக்கிறது.” என எந்த வித சலசலப்புமில்லாமல் உறுதியுடன் அறிவித்தார்கள். மேலும் சில நிமிடங்கள் சென்றன…… சிதம்பரமும், ஜெயந்தனும் சென்ற வெடிமருந்துப் படகு சுமார் 4 மைல் கடந்திருக்கும். அப்போது…… ‘எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம்’ ‘எங்களுடைய இலக்கை கண்டுவிட்டோம்….’ என உற்சாகம் பொங்க படகிலிருந்து அறிவித்தனர். குரலில் பதட்டமோ அல்லது தயக்கமோ தென்படவேயில்லை. கரையில் நின்ற தோழர்களின் நெஞ்சுதான் பதை பதைத்துக்கொண்டிருந்தது. மேலும் சில நிமிடங்கள் சென்றிருக்கும் … ‘திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’ ‘ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’, என்ற குரல் கடல் இரைச்சலையும் கிழித்துக்கொண்டு எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது. கரையில் நின்ற போராளிகள் அனைவரும் கண்வெட்டாது கடலையே பார்த்துக்கொண்டு, தொலைத்தொடர்பு சாதனத்திற்கு காதைக் கொடுத்துக்கொண்டு நின்றார்கள். அப்போது சிதம்பரமும், ஜெயந்தனும் சேர்ந்து தொலைத்தொடர்பு சாதனம் ஊடாக…… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரக்கக் கத்தினார்கள். அதைத் தொடர்ந்து கடலுக்குள் பெரு வெளிச்சம், சில வினாடிகளில் பெரும் வெடியோசையும் கரையை உலுக்கியது. “அபிதா” கப்பல்……………………………. அடுத்த நாள் பகல் ஒருபக்கம் சாய்ந்தபடி, சேதமடைந்த நிலையில் இருந்த “அபிதா” கப்பலை கட்டியிழுத்துச் செல்ல கடற்படையினர் முயன்று கொண்டிருந்தனர். சில ‘டோரா’ விசைப்படகுகள் கடலில் எதையோ தேடியோடிக்கொண்டிருந்ததன. பல வருடங்களாக எமது போராளிகள் பலரின் உயிர்களை விழுங்கக் காரணமாக இருந்த ஒரு கடலரக்கனைக் கொன்று சிதம்பரமும், ஜெயந்தனும் வீரசாதனை புரிந்துவிட்டார்கள். உயிராயுதத்திலிருந்து… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” http://www.errimalai.com/?p=39888
  8. தோழர் புரட்சிகர தமிழ் தேசியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
  9. எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! தீபச்செல்வன்.. April 19, 2019 ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாடு எத்தகைய நீதியில் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் அன்னையர்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். தெருவில் வீழ்ந்து புரண்டழும் இந்த தாய்மாரைப் பார்த்தும் இலங்கை அரசும் உலகமும் நீதியை வழங்காமல் மௌனித்து அநீதி காக்கிறது.அன்னையர்களின் கண்ணீருக்கு பதில் அளிக்காதிருக்கும் மனிதாபிமானமற்ற கொடிய முகத்தையே நாம் உணரவேண்டியுள்ளது. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். அன்னையர்கள் தவித்து வாழும் தேசங்களில் வடக்கு கிழக்கு தமிழ் தேசமும் ஒன்று. ஈழம் முழுக்க முழுக்க அன்னையர்களின் தவிப்பாலும் கண்ணீராலும் ஏக்கத்தாலும் காத்திருப்பினாலும் மூழ்கியதொரு தேசம். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொடரும் நிலையிது. ஈழத்தில் இப்போது நடக்கும் போராட்டங்களைப் பார்க்கும்போது அர்ஜன்டீனா அன்னையர்களின் போராட்டமே நினைவுக்கு வருகிறது. அந்நாட்டில் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டபோது, அவர்களை மீட்க அன்னையர்கள் தெருவுக்கு வந்து போராட்டங்களை நடத்தினர். சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதை நினைவுபடுத்தி, கடதாசிச் சைக்கிள்களை செய்து வைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் துயரமும் மனித மாண்புக்கு இழிவு சேர்க்கும் செயலுமாக, போராட்டத்தில் ஈடுபட்ட அன்னையர்களையும் காணாமல் ஆக்கப்பட்டனர். ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக அன்னையர்கள் தம்மை உருக்கி காணாமல் போனபடி போராட்டத்தை நடத்துவதற்கு ஒப்பானதொரு செயலே இது. இன்று தியாகி அன்னை பூபதியின் நினைவுநாள். ஏப்ரல் 19 1988ஆம் ஆண்டு இந்தியப் படைகளுக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தவர் அன்னை பூபதி. இவர் பத்துப் பிள்ளைகளின் தாய். ஆனாலும் தன் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். இவர் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் அன்னையர் முன்னணியின் முதன்மைச் செயற்பாட்டாளர். இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அன்னையர் முன்னணி சார்பில் போராட்டத்தை மேற்கொண்டார். அன்னையர் முன்னணியின் கோரிக்கைக்கு இந்தியப் படைகள் செவிசாய்க்கவில்லை. அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. 1988இல் ஜனவரி 4ஆம் திகதி திருகோணமலையிலும் பெப்ரவரி 10ஆம் திகதி கொழும்பிலும் அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அன்னையர் முன்னணியின் கோரிக்கைகளை இந்தியப் படைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்த அன்னையர் முன்னணி தீர்மானித்தது. சாகும்வரையிலான போராட்டத்திற்கு பல அன்னையர்கள் முன்வந்தனர். எனினும் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது. இதன்படி குலுக்கல் முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். பெப்ரவரி 14 மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருந்தபோது அன்னம்மா டேவிட் கடத்தப்பட்டமை காரணமாக இவரது உண்ணாவிரதப் போராட்டம் தடைப்பட்டது. இதனையடுத்தே அன்னை பூபதி மார்ச் 19 போராட்டத்தில் குதித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை பூபதி “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” என்று கடிதம் எழுதி வைத்தார். நீர் மட்டும் அருந்தியபடி, உணவை விடுவித்து போராட்டத்தில் ஈடுபட்டார் அன்னை பூபதி. உண்ணா விரதப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள், அன்னை பூபதியின் பிள்ளைகள் கடத்தப்பட்டபோதும் இவரது உண்ணிவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இந்திய படைகளினால் இவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சரியாக ஒரு மாத்தின் பின்னர் ஏப்ரல் 19 அன்னை பூபதி உயிர் துறந்தார். இந்திய நாட்டின் அகிம்சை முகத்தை திலீபன் என்ற போராளி கிழித்தெரிந்த நிலையில் அன்னை பூபதியின் அறப்போராட்டம் ஊடாக ஈழப் பொதுமக்களால் இந்திய அரசின் அகிம்சை முகம் கிழிக்கப்பட்டது. அன்னைபூபதி ஈழத் தமிழ் மக்களின் அறப்போராட்டத்தின் முகம். இந்திய படைகளின் அராஜகங்களுக்கு எதிரான அற வழி ஆயுதம். ஜனநாயக வழிப் போராட்டத்தின் அடையாளம். இன்றைக்கு ஈழத்தில் தாய்மார்கள் தெருத் தெருவாக வீழ்ந்து புரண்டு போராட்டத்தில் ஈடுபடும்போது அன்னை பூபதியே நினைவுக்கு வருகிறார். இன்றைக்கு எங்கள் தெருவெல்லாம் அன்னை பூபதிகள் உள்ளனர். அன்னை பூபதி இந்திய அரசின் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே உண்ணா விரதம் இருந்து உயிர் துறந்தவர். போரை நிறுத்தி, தம் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமே அவரிடமிருந்தது. இன்று எங்கள் தெருவெங்கும் அன்னையர்கள் போராடுவதும் பிள்ளைகளுக்காகவே. காணாமல் ஆக்கப்பட்ட தம் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் அவர்களின் உண்மை நிலை என்ன என்று அறிவிக்க வேண்டும் என்று போராடுகின்றனர். தம்மை உருக்கி, தம்மை அழித்து மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கும் அன்னை பூபதியின் போராட்டத்திற்கும் மிக நெருக்கம் உண்டு. எங்கள் அன்னையர்கள் – அன்னை பூபதிகள் நடத்தும் போராட்டங்கள் இலங்கை அரசின் கொடிய இன ஒடுக்குமுறை முகத்தை அம்பலம் செய்கிறது. அன்னை பூபதியின் 29 ஆண்டு நினைவுநாள் என்பது அன்னையர்கள் இத் தீவில் மூன்று தசாப்தங்களாக இருக்கும் புத்திர விரத்தின் அடையாளத்தையும் ஈழச் சனங்களின் வாழ்வையும் உணர்த்தும் ஒரு நாளாகும் அன்னைபூபதி அம்மாவின் நினைவு நாட்களின் முதல்நாள் ஈழநாதம் பத்திரிகையில் அவரது ஒளிபட இணைப்பு வரும். ஈழம் முழுதும் பெப்ருவரி 10 முதல் மார்ச் 19 வரை அவரது நினைவில் மூழ்கியிருக்கும். பள்ளிக்கூடத்திலும் தெருவிலுமாக எங்கள் வாழ்வோடு அவரது நினைவு நாட்கள் கலந்திருந்தன. ஈழத் தாய் சமூகத்தின் குறியீடே அன்னை பூபதி. குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் http://globaltamilnews.net/2019/118610/
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா🎉🎊🎉
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்!
  12. களத்தில் மீண்டும் காண்பதில் சந்தோஷம். உடல்நிலையில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்.
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி, ராஜன் விஷ்வா (இந்தப் பக்கம் தலைக் கறுப்பைக் காணவில்லை!)🎉🎉🎉
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி💐
  15. பெண்களுக்கும் வாயுத்தொல்லை வருவதுண்டா!😤🤨 அப்படியென்றால் வயது போய்விட்டதாக்கும்!😲
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.