-
Posts
34939 -
Joined
-
Days Won
173
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கிருபன்
-
From the album: கிருபன்
-
From the album: கிருபன்
-
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா..
கிருபன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
யூரியூப்பில் உள்ளதுதானே. விரைவில் பார்க்கின்றேன்😀 -
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா..
கிருபன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
இன்னும் ஒரு தடவைகூடப் பார்க்கவில்லை. நேற்று காதலிக்க நேரமில்லை படத்தைப் பற்றிய குறிப்பை நானும் வெட்டி ஒட்டியிருந்தேன்.😀 -
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா🎉🎉🎉
-
From the album: கிருபன்
-
From the album: கிருபன்
-
படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் சேரன் பட மூலம், UK Tamil News படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது ஒளியின் ரசாயனம் அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை அது பதிவு செய்யாது சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி எழுந்த ஒரே ஒரு அவலக் குரல் ஆகாயத்தில் மிதந்த சாக்குருவியினுடையது சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் அனைவரது பெயர்கள் அறிவோம் ஊரை அறிவோம் கனவுகள் அறிவோம்; ஏமாற்றங்கள் அறிவோம் நெருங்கிய உணர்வின் கையறு நிலை அறிவோம் சினந்தெழுந்தவரின் இறுதிக் கண்வீச்சை அறிவோம் மற்றவர் அறியா மொழி அது எனினும் இவை உங்களுக்கு உதவாது நீங்கள் அடையாள அட்டையைக் கேட்கிறீர்கள் பிறப்புச் சான்றிதழைக் கேட்கிறீர்கள் எழுத்துமூலமான் பதிவை வலியுறுத்துகிறீர்கள் இனப்படுகொலைக்கோ உயிராதாரம் உண்டு கண்ணீர் எரிந்து உணர்வெழுதும் நுண் சாட்சியம் உண்டு கதை கதையாய்க் கொலை கொலையாய் உறங்காத மொழியிலும் உலராத வரலாற்றிலும் நினைவுகள் உண்டு தரலாம். பெறுவதற்கு யாருமில்லை சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் குருதி, மழை, சேறு. சேரன் https://maatram.org/?p=7916
-
From the album: கிருபன்
-
இலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப் .கேணல் நீலன் ஒரு கட்டுப்பாடான இயக்கத்துடன் முரண்படுவோர் எந்த நிலைக்குச் செல்வர். என்பதைக் கருணாவின் பிளவு நமக்கு வெளிப்படுத்தியது. அதன் மோசமான விளைவுகளில் ஒன்று லெப்.கேணல் நீலனின் படுகொலை. இயக்கத்தில் இணைந்து கொண்டோர் இலட்சியத்திற்கும், இயக்கத்திற்கும், அதன் தலைமைக்கும் விசுவாசமாக நடந்து கொள்வேன் என சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர். அதன்படி என்றுமே தலைமைக்கு விசுவாசமாக இருந்தார் நீலன். அதுவே அவரது இழப்புக்கும் காரணமாகியது. துரோகம் செய்யப் புறப்படுபவன் தனிப்பட்ட நட்பையும் பொருட்படுத்த மாட்டான் என்பதை நிரூபித்தார் கருணா ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நீலன். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் புலிகளின் பிரதான தளங்களுள் ஒன்றாக விளங்கியது. ஆரையம்பதி வரை இக்கிராமத்திலிருந்து நூற்றுக்கு மேற்பட் டார் பேர் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றனர். தென் தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் அனித்தாவும் இந்த ஊரைச் சேர்ந்தவர்தான். போராளிகளுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அவர்களைக் காப்பாற்ற இந்த மக்கள் துடிக்கும் துடிப்பு என்றுமே மறக்க முடியாதவை . அவ்வாறான சம்பவங்களின் பட்டியல் மிக நீண்டது. அன்னை பூபதியின் உண்ணா விரதப் போராட்டங்களில் போது இந்தக் கிராமங்களின் பங்களிப்பும் கணிசமாக இருந்தது. திருமதி. நிர்மலா நித்தியானந்தன் சிறையிலிருந்து மீட்கப்பட்ட போதும் இந்த ஊருக்குத்தான் முதலில் கொண்டு வரப்பட்டார். யாழ்ப்பாணத்துக்குப் பயணமாகும் வரை அவரைப் பத்திரமாக பாதுகாத்தனர் இந்த மக்கள். உயர் கல்விமான்கள், வணிகர்கள் , படகோட்டிகள் , இளைஞர்கள், யுவதிகள் என சகல தரப்பு மக்களும் போராட்டத்துக்குக் கை கொடுத்தனர். நீலன் பங்களிப்புக்கள் அனைத்தும் வெளியிடப்பட முடியாதவை ஏனெனில் அவர் புலிகளின் புலனாய்வுத்துறையைத் சேர்ந்தவர் இலங்கையின் தலைநகரிலும் புலிகளின் நடவடிக்கைகள் சிலவற்றுக்கு அவர் தலைமை தாங்கியிருந்தார். கருணா பிரிந்து செல்ல முடிவெடுத்த போது முதலில் இவரையே கைது செய்ய முடிவெடுத்தார். கைதாகியிருந்த போதும் பிரபாகரன் மீதான விசுவாசம் குறையாமலே இருந்தார் இவர். இந்திய அரசுடன் தொடர்ப்பு கொண்டு இவரைக் கையளித்து சில அனுகூலங்களைக் அடைய முயன்றார் கருணா. ராஜீவ் காந்தி கொலையுடன் இவருக்குச் சம்பந்தமிருக்கிறது என்று கூறினார். ஆனால் இந்திய விசாரணையாளர்கள் இதனை ஏற்கவில்லை . இவர் இந்தியாவில் இருந்தார்தான் ஆனால் அவருக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்பந்தமில்லை வேறு பணிகளுக்காகவே வந்திருந்தார். போய் விட்டார் என பதிலளித்தனர். கருணாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. தனது முதலாவது பேரம் பேசலே தோல்வியில் முடிந்தது குறித்து ஆத்திரமடைந்தார். மட்டக்களப்பை விட்டு போகும் போது நீலனுக்கு மரணதண்டனையை உறுதிப்படுத்தினார். அதன்படி கருணாவின் சகாவான துமிலன் தலைமையிலான குழு நீலனை கைகள் கட்டப்பட்ட நிலையில் மருதம் முகாமிலிருந்து கூட்டிக் கொண்டு செல்லும் வழியில் 12/04/2004 அன்று சுட்டுக் கொன்றனர். 1984ம் ஆண்டு புலிகளின் ஐந்தாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர் நீலன். திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தந்தை . நீலனை மட்டுமல்ல 1.கப்டன் நம்பி (தர்மலிங்கம் பத்மநாதன்) கல்முனை, வீரச்சாவு: 10.04.2004 2.கப்டன் பார்த்தீபன் (யூட்) (பவளசிங்கம் ஜெயகரன்) 2ம் குறிச்சி, தம்பிலுவில், வீரச்சாவு: 09.10.2004 3.கப்டன் நிதர்சன் (நடேசன் தர்மகுணானந்தன்) குரவயல், உடையார்கட்டு, முல்லைத்தீவு வீரச்சாவு: 06.05.2004 4.கப்டன் சசிக்குமார் (கணபதிப்பிள்ளை திருப்பாதம்) வள்ளுவர்மேடு, பளுகாமம், வீரச்சாவு: 04.04.2004 5.கப்டன் வாமகாந் (கணேசன் லிங்கநாதன்) கிரான், வீரச்சாவு: 04.04.2004 6.லெப்டினன்ட் வினோரஞ்சன் ( செல்லையா மோராஜ் )காயங்குளம், செங்கலடி, வீரச்சாவு: 04.04.2004 7.மேஜர் தமிழீழன் (சதாசிவம் திருக்கேதீஸ்வரன்) மகிழவெட்டுவான், ஆயித்தியமலை,வீரச்சாவு: 07.04.2004 8.லெப்டினன்ட் பொதிகைவேந்தன் (வேலு பாண்டியன்) கிந்துக்குளம், கரடியானாறு, வீரச்சாவு: 09.04.2004 9.2ம் லெப்டினன்ட் சங்கொளியன் (கந்தசாமி அருட்செல்வம்) கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, வீரச்சாவு: 09.04.2004. 10. வீரவேங்கை மலர்க்குமரன் (தங்கராசா குகன் (மாவளையான்) கரடியானாறு, வீரச்சாவு: 09.04.2004 11.கப்டன் மாலேத்தன் திருநாவுக்கரசு புவனேஸ்வரன் இறால்ஓடை, காயங்கேணி, மாங்கேணி, வீரச்சாவு: 10.04.2004 12.லெப்டினன்ட் வர்ணகீதன் (மாணிக்கவேல் சபாரத்தினம்) கழுவங்கேணி, மட்டக்களப்பு வீரச்சாவு: 10.04.2004 13.துணைப்படை வீரவேங்கை மோகன் (காளிக்குட்டி சந்திரமோகன் )கண்ணகிபுரம், வாழைச்சேனை, வீரச்சாவு: 10.04.2004 14.லெப்டினன்ட் ராமரதன் : (செல்வன் ராஜேந்திரன்) கதிரவெளி, நாவற்காடு, வீரச்சாவு: 10.04.2004. 15.லெப்.கேணல் : நீலன் : (சீனித்தம்பி சோமநாதன் )ஆரையம்பதி, 12.04.2004. 16.2ம் லெப்டினன்ட் : தாரணன் (செல்வநாயகம் சந்திரகுமார்) நெல்லிக்காடு, ஆயித்தியமல வீரச்சாவு: 24.04.2004 17.கப்டன் தியாகேஸ்வரன் (நடராசா சுரேஸ்) தளவாய், ஏறாவூர், வீரச்சாவு: 25.04.2004. 18.லெப்டினன்ட் டனிசன் (செல்லத்துரை ஜெசிதரன் ) மாங்கேணி, வீரச்சாவு: 25.04.2004 19. 2ம் லெப்டினன்ட் செல்வவீரன் (சேதுநாதப்பிள்ளை பிரபா) : 4ம் குறிச்சி, சித்தாண்டி, வீரச்சாவு: 25.04.2004 20.மேஜர் நேசராஜ் (தாமோதரம் சூரியா) கதிரவெளி, வாகரை, வீரச்சாவு: 01.05.2004. 21.மேஜர் : பகலவன் ( சிவானந்தன் சிறிமுரளி )நொச்சிமுனை, வீரச்சாவு: 06.05.2004 22. 2ம் லெப்டினன்ட் றோகிதன் (பரமானந்தம் புனிதலிங்கம்) முனைக்காடு, வீரச்சாவு: 20.05.2004. 23. மேஜர் அன்புநேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.07.2004. 24.லெப்.கேணல் : சேனாதிராசா (இராமலிங்கம் பத்மசீலன் )ரமேஸ்புரம், செங்கலடி வீரச்சாவு: 13.07.2004 25.லெப்.கேணல்: பாவா (தயாசீலன்) (செல்வராசா ஜெகதீஸ்வரன்) கள்ளியதீவு, திருக்கோவில், வீரச்சாவு: 20.08.2004. 26. லெப்.கேணல் யோகா (நாகலிங்கம் ஜீவராசா) : வெல்லாவெளி, வீரச்சாவு: 20.08.2004. 27.கப்டன் வந்தனன் பாலசிங்கம் புவிராஜ் : அரசடித்தீவு, வீரச்சாவு: 26.08.2004 28. கப்டன் வர்ணரூபன் (மகேஸ்வரன் ருசான்குமார்) வாழைச்சேனை, வீரச்சாவு: 17.11.2004 குறிப்பிட்ட போராளிகளை பழிவாங்கியிருந்தார் கருணா. இதே போல் தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்ததற்காக மாமனிதர் ஜோசெப் பரராசசிங்கம், பேராசிரியர் தம்பையா, ஊடகவியலாளர் G.நடேசன் இவர்களையும் பலிவாங்கினார் கருணா. அதுமட்டுல்ல கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஜனாவின் பின் முடிவெடுத்தவர்களின் ஒருவராகவும் விளங்கினார். ஜனா தலைமையேற்ற போது ஆரையம்பதியைச் சேர்ந்த விஜி என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். கருணா குழு 29.01.2006 அன்று வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக்குக் கழகத்தைக் பணியாளர்கள் பயணித்த வாகனத்தைக் கடத்தியது வட்டக்கட்சியைச் சேர்ந்த செல்வி .பிறேமினி தனுஸ்க்கோடி என்ற யுவதி இவ்வாறு கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளானார். கருணாவின் மகள் ...... வயதை அடையும்போது தான் இந்தக் கொடூரத்தைக் செய்தமை குறித்து சிந்திப்பார். நீண்ட காலம் அவருக்கு நண்பனாக இருந்த நீலனைக் கொல்ல முடிவெடுத்தவர்க்கு இந்த விடயத்தைக் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது . கருணாவின் பிரச்சினைக்கு பிறகு மட்டக்களப்பில் ஒருவர் சொன்னார் அம்மானுக்கு ஒரேயொரு தெரிவு தான் இருக்கும் எந்த நேரமும் போதையில் இருப்பதுதான் அது. அவருடைய மன சாட்சி அவரைக் குத்திக் கொண்டுத்தான் இருக்கும். http://www.battinaatham.net/description.php?art=19267
-
From the album: கிருபன்
-
From the album: கிருபன்
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி ஐயா🎉🎉🎉
-
கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று! AdminMay 4, 2019 கடற்கரும்புலி சிதம்பரம நிறையப் படிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் நிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிற்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பிவருவான். முற்றத்தில் நிற்கும் வேப்ப மரத்தில் ஏறி பூ கொய்துகொண்டு வந்து கொடுத்து…. “இதிலை ஏதாவது செய்யணை….. சாப்பிடுவம்” என்று சொல்வான். சிதம்பரம் ஏற்கனவே கலகலப்பானவன். துன்பம் வாட்டுகின்றபொழுது , அவனது முகத்தில் அதைக் கண்டு கொள்ளமுடியாது, எல்லோரையும் சிரிக்கவைத்து தானும் சிரிப்பான். சந்திரனாக இருந்தவன் தான்…., 1989 இன் இறுதிக் காலத்தில் சிதம்பரமானான். ஆரம்ப நாட்களில்….. பலாலியில் சிங்கள முப்படைகளின் கூட்டுத்தளத்திற்கு எதிரில், ஒரு பிறன் எல்.எம்.ஜி உடன் காவலிருந்த சிதம்பரத்தின் பணி, பிற்காலத்தில் ஒரு கடற்புலி வீரனாகத் தமிழீழ அலைகளின் மீது தொடர்ந்தது. இப்போது சிங்களப் படையின் பீரங்கிக் குண்டினால் அரைவாசி இடிந்து நொறுங்கிய அவர்களுக்குச் சொந்தமில்லாத வீடொன்றின் ஒருபக்க மூலையில், கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயலாத நிலையில் , கட்டிலில் இருந்து கொண்டு சிதம்பரத்தின் ஏழைத்தாய் தன் வீரமைந்தனை நினைவு கூறுகின்றாள் ….. “அவனொரு இருட்டுக்குப் பயந்த பெடியன் மோனை… சின்ன வயதில அவன் மீன்பிடிக்கப் போகேக்க, நான்தான் அவனை படகுவரை கூட்டிக் கொண்டு போய்விடவேனும்…. அப்பத்தான் போவான்….. அவனுக்கு அவ்வளவு பயம். ….. அந்த மாதிரி பயந்துகொண்டு இருந்தவன் தான் தம்பி இயக்கத்துக்குப் போய் போராடி, அதே கடலில்… இப்ப இவ்வளவு வீரனாய்….” அந்தத் தாய் கண்ணீரோடு பெருமைப்படுகிறாள். தளபதி சூசை அவர்கள் , தனது கண்களுக்குள் நிழலாடும் அந்த இறுதி நாட்களைப் பற்றிச் சொல்கிறார். “நடுக்கடலில் நின்று கொண்டு எங்களுக்கு சவாலாக இருந்த, சிங்களக் கடற்படையின் “அபித்தா” என்ற கட்டளைக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டோம். அதற்காக இரண்டு கரும்புலிகள் தயார் செய்யப்பட்டனர். அதில் ஒன்று ஜெயந்தன், மற்றது இன்னொரு போராளி. கடைசி நேரத்தில், அந்தப் போராளியை தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் அனுப்பமுடியாமல் போய்விட்டது. என்ன செய்யலாமென நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது, அருகில் நின்று நிலைமையைப் புரிந்து கொண்ட சிதம்பரம் தானே முன்வந்து, ‘நான் போறேன் அண்ணை’ என்று சொன்னான். சிதம்பரம் ஏற்கனவே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தான். ஆனாலும் திடீரென ஒரு தேவை ஏற்பட்டபோது தானே விரும்பி முன்வந்து கரும்புலித் தாக்குதலில் இறங்கியதை, என்னால் மறக்க முடியாது. அபிதா கடற்படைக் கப்பல் மீது 04.05.1991 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலைப் பற்றி கதைத்தபொழுது மேலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பின்வருமாறு சொன்னார். இறுதி நேரத்தில் கடலில் ….. சிதம்பரம், ஜெயந்தன் காட்டிய உறுதியை என்னால் மறக்க முடியாது. இப்போதும் அது என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன. அது ஒரு முன்னிரவு நேரம். எமது கரும்புலித் தாக்குதலின் இலக்காகிய “அபிதா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் கரையிலிருந்து சுமார் எட்டுமைல் தொலைவில் நின்றது. இக்கப்பலைத் தேடி திசையறி கருவியின் உதவியுடன் கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொண்டு கதைத்தார்கள். “நாங்கள் கதைக்கிறது விளங்குகிறதா…?” எனக் கேட்டோம். “நீங்கள்….. கதைப்பது….. தெளிவாகக்…. கேக்கிறது.” என எந்த வித சலசலப்புமில்லாமல் உறுதியுடன் அறிவித்தார்கள். மேலும் சில நிமிடங்கள் சென்றன…… சிதம்பரமும், ஜெயந்தனும் சென்ற வெடிமருந்துப் படகு சுமார் 4 மைல் கடந்திருக்கும். அப்போது…… ‘எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம்’ ‘எங்களுடைய இலக்கை கண்டுவிட்டோம்….’ என உற்சாகம் பொங்க படகிலிருந்து அறிவித்தனர். குரலில் பதட்டமோ அல்லது தயக்கமோ தென்படவேயில்லை. கரையில் நின்ற தோழர்களின் நெஞ்சுதான் பதை பதைத்துக்கொண்டிருந்தது. மேலும் சில நிமிடங்கள் சென்றிருக்கும் … ‘திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’ ‘ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’, என்ற குரல் கடல் இரைச்சலையும் கிழித்துக்கொண்டு எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது. கரையில் நின்ற போராளிகள் அனைவரும் கண்வெட்டாது கடலையே பார்த்துக்கொண்டு, தொலைத்தொடர்பு சாதனத்திற்கு காதைக் கொடுத்துக்கொண்டு நின்றார்கள். அப்போது சிதம்பரமும், ஜெயந்தனும் சேர்ந்து தொலைத்தொடர்பு சாதனம் ஊடாக…… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரக்கக் கத்தினார்கள். அதைத் தொடர்ந்து கடலுக்குள் பெரு வெளிச்சம், சில வினாடிகளில் பெரும் வெடியோசையும் கரையை உலுக்கியது. “அபிதா” கப்பல்……………………………. அடுத்த நாள் பகல் ஒருபக்கம் சாய்ந்தபடி, சேதமடைந்த நிலையில் இருந்த “அபிதா” கப்பலை கட்டியிழுத்துச் செல்ல கடற்படையினர் முயன்று கொண்டிருந்தனர். சில ‘டோரா’ விசைப்படகுகள் கடலில் எதையோ தேடியோடிக்கொண்டிருந்ததன. பல வருடங்களாக எமது போராளிகள் பலரின் உயிர்களை விழுங்கக் காரணமாக இருந்த ஒரு கடலரக்கனைக் கொன்று சிதம்பரமும், ஜெயந்தனும் வீரசாதனை புரிந்துவிட்டார்கள். உயிராயுதத்திலிருந்து… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” http://www.errimalai.com/?p=39888
-
தோழர் புரட்சிகர தமிழ் தேசியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
-
எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! தீபச்செல்வன்.. April 19, 2019 ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாடு எத்தகைய நீதியில் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் அன்னையர்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். தெருவில் வீழ்ந்து புரண்டழும் இந்த தாய்மாரைப் பார்த்தும் இலங்கை அரசும் உலகமும் நீதியை வழங்காமல் மௌனித்து அநீதி காக்கிறது.அன்னையர்களின் கண்ணீருக்கு பதில் அளிக்காதிருக்கும் மனிதாபிமானமற்ற கொடிய முகத்தையே நாம் உணரவேண்டியுள்ளது. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். அன்னையர்கள் தவித்து வாழும் தேசங்களில் வடக்கு கிழக்கு தமிழ் தேசமும் ஒன்று. ஈழம் முழுக்க முழுக்க அன்னையர்களின் தவிப்பாலும் கண்ணீராலும் ஏக்கத்தாலும் காத்திருப்பினாலும் மூழ்கியதொரு தேசம். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொடரும் நிலையிது. ஈழத்தில் இப்போது நடக்கும் போராட்டங்களைப் பார்க்கும்போது அர்ஜன்டீனா அன்னையர்களின் போராட்டமே நினைவுக்கு வருகிறது. அந்நாட்டில் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டபோது, அவர்களை மீட்க அன்னையர்கள் தெருவுக்கு வந்து போராட்டங்களை நடத்தினர். சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதை நினைவுபடுத்தி, கடதாசிச் சைக்கிள்களை செய்து வைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் துயரமும் மனித மாண்புக்கு இழிவு சேர்க்கும் செயலுமாக, போராட்டத்தில் ஈடுபட்ட அன்னையர்களையும் காணாமல் ஆக்கப்பட்டனர். ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக அன்னையர்கள் தம்மை உருக்கி காணாமல் போனபடி போராட்டத்தை நடத்துவதற்கு ஒப்பானதொரு செயலே இது. இன்று தியாகி அன்னை பூபதியின் நினைவுநாள். ஏப்ரல் 19 1988ஆம் ஆண்டு இந்தியப் படைகளுக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தவர் அன்னை பூபதி. இவர் பத்துப் பிள்ளைகளின் தாய். ஆனாலும் தன் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். இவர் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் அன்னையர் முன்னணியின் முதன்மைச் செயற்பாட்டாளர். இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் யுத்தம் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அன்னையர் முன்னணி சார்பில் போராட்டத்தை மேற்கொண்டார். அன்னையர் முன்னணியின் கோரிக்கைக்கு இந்தியப் படைகள் செவிசாய்க்கவில்லை. அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. 1988இல் ஜனவரி 4ஆம் திகதி திருகோணமலையிலும் பெப்ரவரி 10ஆம் திகதி கொழும்பிலும் அன்னையர் முன்னணிக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அன்னையர் முன்னணியின் கோரிக்கைகளை இந்தியப் படைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்த அன்னையர் முன்னணி தீர்மானித்தது. சாகும்வரையிலான போராட்டத்திற்கு பல அன்னையர்கள் முன்வந்தனர். எனினும் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது. இதன்படி குலுக்கல் முறையில் போராட்டத்தில் ஈடுபடுபவர் தெரிவு செய்யப்பட்டார். முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். பெப்ரவரி 14 மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருந்தபோது அன்னம்மா டேவிட் கடத்தப்பட்டமை காரணமாக இவரது உண்ணாவிரதப் போராட்டம் தடைப்பட்டது. இதனையடுத்தே அன்னை பூபதி மார்ச் 19 போராட்டத்தில் குதித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை பூபதி “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” என்று கடிதம் எழுதி வைத்தார். நீர் மட்டும் அருந்தியபடி, உணவை விடுவித்து போராட்டத்தில் ஈடுபட்டார் அன்னை பூபதி. உண்ணா விரதப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள், அன்னை பூபதியின் பிள்ளைகள் கடத்தப்பட்டபோதும் இவரது உண்ணிவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இந்திய படைகளினால் இவரது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் சரியாக ஒரு மாத்தின் பின்னர் ஏப்ரல் 19 அன்னை பூபதி உயிர் துறந்தார். இந்திய நாட்டின் அகிம்சை முகத்தை திலீபன் என்ற போராளி கிழித்தெரிந்த நிலையில் அன்னை பூபதியின் அறப்போராட்டம் ஊடாக ஈழப் பொதுமக்களால் இந்திய அரசின் அகிம்சை முகம் கிழிக்கப்பட்டது. அன்னைபூபதி ஈழத் தமிழ் மக்களின் அறப்போராட்டத்தின் முகம். இந்திய படைகளின் அராஜகங்களுக்கு எதிரான அற வழி ஆயுதம். ஜனநாயக வழிப் போராட்டத்தின் அடையாளம். இன்றைக்கு ஈழத்தில் தாய்மார்கள் தெருத் தெருவாக வீழ்ந்து புரண்டு போராட்டத்தில் ஈடுபடும்போது அன்னை பூபதியே நினைவுக்கு வருகிறார். இன்றைக்கு எங்கள் தெருவெல்லாம் அன்னை பூபதிகள் உள்ளனர். அன்னை பூபதி இந்திய அரசின் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே உண்ணா விரதம் இருந்து உயிர் துறந்தவர். போரை நிறுத்தி, தம் தாயகத்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமே அவரிடமிருந்தது. இன்று எங்கள் தெருவெங்கும் அன்னையர்கள் போராடுவதும் பிள்ளைகளுக்காகவே. காணாமல் ஆக்கப்பட்ட தம் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் அவர்களின் உண்மை நிலை என்ன என்று அறிவிக்க வேண்டும் என்று போராடுகின்றனர். தம்மை உருக்கி, தம்மை அழித்து மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கும் அன்னை பூபதியின் போராட்டத்திற்கும் மிக நெருக்கம் உண்டு. எங்கள் அன்னையர்கள் – அன்னை பூபதிகள் நடத்தும் போராட்டங்கள் இலங்கை அரசின் கொடிய இன ஒடுக்குமுறை முகத்தை அம்பலம் செய்கிறது. அன்னை பூபதியின் 29 ஆண்டு நினைவுநாள் என்பது அன்னையர்கள் இத் தீவில் மூன்று தசாப்தங்களாக இருக்கும் புத்திர விரத்தின் அடையாளத்தையும் ஈழச் சனங்களின் வாழ்வையும் உணர்த்தும் ஒரு நாளாகும் அன்னைபூபதி அம்மாவின் நினைவு நாட்களின் முதல்நாள் ஈழநாதம் பத்திரிகையில் அவரது ஒளிபட இணைப்பு வரும். ஈழம் முழுதும் பெப்ருவரி 10 முதல் மார்ச் 19 வரை அவரது நினைவில் மூழ்கியிருக்கும். பள்ளிக்கூடத்திலும் தெருவிலுமாக எங்கள் வாழ்வோடு அவரது நினைவு நாட்கள் கலந்திருந்தன. ஈழத் தாய் சமூகத்தின் குறியீடே அன்னை பூபதி. குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் http://globaltamilnews.net/2019/118610/
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா🎉🎊🎉
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்!
-
களத்தில் மீண்டும் காண்பதில் சந்தோஷம். உடல்நிலையில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்.
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி, ராஜன் விஷ்வா (இந்தப் பக்கம் தலைக் கறுப்பைக் காணவில்லை!)🎉🎉🎉
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி💐
-
பெண்களுக்கும் வாயுத்தொல்லை வருவதுண்டா!😤🤨 அப்படியென்றால் வயது போய்விட்டதாக்கும்!😲
-
வடை வேறு. வடகறி வேறு. இடியப்பத்துடன் வடையைச் சாப்பிடமுடியாது! ஆனால் வடகறியைச் சேர்த்துச் சாப்பிடலாம்😋