Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி! February 15, 2024 — கருணாகரன் — நீண்டகால இழுபறி, தாமதங்களுக்குப் பிறகு, தமிழரசுக் கட்சியின் தலைவராக (21.01.2024) சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டு, அவர் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அமர்க்களமான முறையில் அதைக் கொண்டாடினாலும் அந்தக் கட்சிக்குள் கொந்தளிப்புகள் அடங்கவில்லை. முக்கியமாக, தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுக்குப் பிறகு சம்பிராயபூர்வமாக நடக்க வேண்டிய பதவியேற்பு மற்றும் தேசியமாநாடு போன்றவை நடத்தப்படாமலே நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கட்சிக்கு வெளியே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் என்ற அடிப்படையில் கனேடிய, பிரித்தானிய, இந்தியத் தூதர்களைச் சந்தித்திருக்கிறார் சிறிதரன். அவர்களும் புதிய தலைவருக்கான வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதைப்போல தமிழக முதல்வருக்கும் புதிய தலைவர் என்ற அடிப்படையில் சிறிதரன், ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதியாக இருந்து விடுதலையாகி சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உதவும்படி கடிதமொன்றை எழுதியுள்ளார். இப்படி கட்சிக்கு வெளியே தலைவராகச் செயற்படும் சிறிதரனால், கட்சிக்குள்ளே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் (யாப்பின் பிரகாரமும் நடைமுறையிலும்) கொண்டுவர முடியவில்லை. இதற்குப் பிரதான காரணம், செயலாளர் குறித்த பிரச்சினையே. இந்தப் பிரச்சினையை (பிணக்கினை) கையாள்வதில் சிறிதரனுக்குள்ள தடுமாற்றமேயாகும். இதுவே செயலாளர் பிரச்சினை மேலும் நீடித்துச் செல்லக் காரணமாகியுள்ளது. தெரிவின் அடிப்படையில் செயலாளராகக் குகதாசனை ஏற்றுத் தன்னுடைய தலைமையில் தேசிய மாநாட்டைக் கூட்ட முற்பட்டிருந்தால் இந்தளவு சிக்கலுக்குள் சிறிதரன் சிக்கியிருக்க மாட்டார். தமிழரசுக் கட்சியும் சீரழிவு நிலைக்குள்ளாகியிருக்காது. இதனால்தான் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படாமலும் பதவியேற்பு நிகழ்வு நடைபெறாமலும் தள்ளிப்போகின்றன. இவற்றைத் தீர்மானிப்பதில் இன்னும் பழைய தலைவரான மாவை சேனாதிராஜாவின் கரங்களே வலுவானதாக உள்ளன. அதாவது இப்படி இவை தள்ளிப் போவதால் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இன்னும் மாவை சேனாதிராஜாதான் உள்ளார் என்ற ஒரு தோற்றப்பாடு தொடர்ந்தும் நிலவுகிறது. அவ்வாறே சத்தியலிங்கமே இன்னும் பதில் செயலாளர் என்றமாதிரியும் தோன்றுகிறது. புதிய செயலாளர் விவகாரம் பற்றிய விடயத்தை சத்தியலிங்கத்தின் வீட்டில் வைத்துப் பேசியது இதற்கொரு உதாரணம். சட்டப்படி (யாப்பின்படி) பொதுச்சபையின் வாக்கெடுப்பில் திருகோணமலையைச் சேர்ந்த திரு. குகதாசன் (27.01.2024) தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில் கட்சிக்குள் ஒருபிரிவினர் தொடர்ந்தும் எதிர்த்தும் மறுத்தும் வருகின்றனர். செயலாளர் பதவியைக் குறிவைத்திருக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஸ்ரீநேசனைச் சமாளிப்பதற்கு சிறிதரன் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக வவுனியாவில் கடந்த வாரம் இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாட்டை எட்டும் வகையிலான சந்திப்பொன்று நடந்தது. அதில் முதலாண்டு குகதாசனும் அடுத்த ஆண்டு ஸ்ரீநேசனும் பதவி வகிப்பது என்று உடன்பாடு காணப்பட்டது. அதற்குப் பின்பும் தமிழரசுக் கட்சிக்கான செயலாளர் யார் என்பது இன்னும் மங்கலான – குழப்பமான நிலையிலேயே உள்ளது. இந்தப் பத்தி எழுதப்படும் 15.02.2024 மாலைவரையில் இந்த நிலைமையே நீடிக்கிறது. மட்டுமல்ல, இப்போது தேசிய மாநாட்டை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதி மன்றத்தில் தடையுத்தரவு கோரி வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குகதாசனை ஏற்றுக் கொள்ள முடியாது. பதிலாக ஸ்ரீநேசனையே செயலாளராக அமர்த்துங்கள் என்று சிறிதரனுக்கு ஸ்ரீநேசனின் ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக யாப்பை முன்னிறுத்திச் சிறிதரனால் பதிலளித்திருக்க முடியும். அதுதான் சரியானதும் கூட. அப்படிச் செய்திருந்தால் இந்தளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்காது. இதை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எம். ஏ. சுமந்திரன் தெளிவாகக் கூறியிருக்கிறார். யாப்பின்படியும் பொதுச்சபை உடன்பாட்டுடனும் பகிரங்க வெளியில் நடந்த விடயங்களை மறுத்துச் செயற்படுவதும் யாப்பை மீற முயற்சிப்பதும் பாரதூரமான விடயங்களை உருவாக்கும் என்று சுமந்திரன் எச்சரித்திருக்கிறார். ஆனாலும் சிறிதரனோ இதற்குத் தீர்வு காண முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். மாவை சேனாதிராஜா, சம்மந்தன் என மூத்த தலைவர்களை முன்னிறுத்தி இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கலாம் என்று முயற்சிக்கிறார் போலுள்ளது. இதனால் கட்சிக்குள் குழப்பங்கள் தொடர்கின்றன. சிறிதரனின் ஆதரவாளர்களே இப்பொழுது சலித்துப் போகின்ற அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது. இது சிறிதரனின் ஆளுமைப் பிரச்சினையாகும். இதுவரையிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், எந்தப் பொறுப்பும் இல்லாமல் அதிரடிப் பேச்சை மட்டும் வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தவர் சிறிதரன். இப்பொழுதுதான் அவருக்குப் பொறுப்புக் கிடைத்துள்ளது. அதுவும் தலைமைப்பொறுப்பு. அதை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிதரன் தன்னைத் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். சிறிதரன் தலைமைப் பதவிக்குத் தெரிவாகும்போதே பிரச்சினை உருவாகி விட்டது. வழமைக்கு மாறாக தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு, இந்தத் தடவை போட்டியின் மத்தியில் நடைபெற்றது. மட்டுமல்ல, தொடர்ந்து செயலாளர் தெரிவும் போட்டியில்தான் நிகழ்ந்தது. அப்படி நிகழ்ந்த பிறகும் அது தீராப் பிரச்சினையாகத் தொடருகிறது என்றால் சிக்கலின் மத்தியில்தான் சிறிதரனின் தலைமைப் பொறுப்பு உள்ளது. இதற்கு சிறிதரன் கடுமையாக உழைக்க வேண்டும். மிக நிதானமாகச் செயற்பட வேண்டும். தன்னுடைய அணியை மட்டுமல்ல, எதிரணியினரையும் திருப்திப்படுத்த வேண்டும். அதற்கான உபாயங்களை வகுத்துக் கொள்வது அவசியம். அவை நீதியான, நேர்மையான முறையில் அமைய வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் பேணப்படுவது முக்கியமானது. ஆனால், சிறிதரனின் குணவியல்பும் அணுகுமுறையும் (Character and attitude) எப்போதும் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஏற்றதல்ல. அவர் எப்போதும் எதையும் தடாலடியாகப் பேசுகின்றவர். அப்படியே செயற்படுகின்றவர். முன் யோசனைகளின்றி வார்த்தைகளை விடுகின்றவர். பின்னர் அதை ஏற்றுக் கொள்ளாமல் அப்படித் தான் சொல்லவே இல்லை என்று மறுப்பவர். பொய்ச் சத்தியம் செய்கின்றாரே என்று சிலரைச் சொல்வார்களே, அப்படியான ஒருவராகவே சிறிதரன் இருந்திருக்கிறார். இவ்வாறான செயற்பாடுகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து, படித்து, பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியபோதும் அவருடன் கூடப்படித்த, இணைந்து பணியாற்றியவர்களில் பாதிக்கு மேற்பட்டோரைக் கையாள முடியாமல் எதிர்நிலைக்குத் தள்ளியிருக்கிறார். ஒட்டுமொத்தமான கிளிநொச்சிச் சமூகத்தை இரண்டாகப் பிளவுறச் செய்தே தன்னுடைய அரசியலை முன்னெடுத்து வந்திருக்கிறார். அரசியலுக்கு அப்பால் இணைந்து செயற்பட முடியாத ஒரு நிலையை கிளிநொச்சியில் சிறிதரன் உருவாக்கியிருப்பது பகிரங்கமான உண்மை. விவசாய அமைப்புகள், கலை, இலக்கியத் தரப்புகள், கூட்டுறவாளர்கள், கல்விச் சமூகத்தினர் என அனைத்திலும் இந்தப் பிளவைக் காணலாம். கிளிநொச்சியில் உள்ள அளவுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள பிற மாவட்டங்களில் இந்த மாதிரிப் பிளவுகளும் மோதல்களும் இல்லை. பலரும் இந்த நிலையைக் குறித்துக் கவலை கொண்டுள்ளனர். தேர்தல் மேடைகள் தொடக்கம் இலக்கியக் கூட்டங்கள் உட்பட பொது இடங்கள் வரையிலும் பிறரை அவமதித்தும் தூற்றியும் வந்திருக்கிறார் சிறிதரன். அவரை அடியொற்றி அவருடைய அடுத்த நிலையில் உள்ளவர்களும் இதைத் தொடருகின்றனர். இந்தளவுக்கு (இப்படியான ஒரு அரசியலை) வேறு எந்தத் தமிழ் அரசியற் தரப்பினரும் இப்போது செயற்படுவதில்லை. துரோகி – தியாகி என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் வெளியைப் பிளவுறுத்தி வைத்திருப்பவர்கள் இருவர். ஒருவர் உதயன் பத்திரிகையின் பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சரவணபவன். மற்றவர் சிறிதரன். சரவணபவன் கட்சியிலிலும் அரசியலிலும் மிகப் பின்னடைந்து விட்டார். சிறிதரன் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது துரோகி – தியாகி என்ற அடிப்படையில் தன்னுடைய கட்சிக்குள்ளேயே ஆட்களை நோக்க முடியாது. அப்படிக் கையாளவும் முடியாது. ஆனால் அவருடைய உளம் தியாகி – துரோகி என்ற வகையில்தான் சிந்திக்கிறது. அவருடைய ஆதரவாளர்களும் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். இதனால்தான் அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகிய பின், 2009 க்கு முன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் செயற்பட்டதைப்போன்ற ஒரு நிலையை உருவாக்கப் போகிறேன் என்றபோது பலரும் சிரித்தனர். மட்டுமல்ல, இதை மறுதலிப்பதாக, அப்படி ஒற்றுமை வேண்டுமென்றால் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று சுரேஸ் பிரேமச்சந்திரனும் சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் மறுத்துரைத்தனர். இதற்குக் காரணம், கடந்த காலத்தில் இந்தத் தரப்பினரை ஒட்டுக்குழுக்கள் (துரோகிகள்) என்ற வகையில் சிறிதரன் நோக்கி வேலை செய்ததாகும். ஆகவே அவர் வைத்த எல்லா முட்களும் இப்பொழுது காலில் குத்தத் தொடங்கியிருக்கிறது. முன்னர் இருந்ததைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஒற்றுமைப்படுத்துவேன் என்று சொன்னவருக்கு தன்னுடைய கட்சியையே ஒற்றுமைப்படுத்த முடியாத நிலை வந்திருக்கிறது. இப்பொழுது கட்சி நீதிமன்றப் படிக்கட்டில் நிற்கிறது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற த்ரில்லர் படத்தைப்போல அடுத்தடுத்த காட்சிகளுக்காக பலரும் காத்திருக்கின்றனர். அதாவது தமிழரசுக் கட்சி இன்றொரு வேடிக்கைப் பொருளாகி விட்டது. ஆம், புதிய தலைமையின் கீழ் கட்சி இரண்டாகப் பிளவுண்ட நிலையில் சந்திக்கு வந்துள்ளது. https://arangamnews.com/?p=10474
  2. ஐந்து மாதத்திற்குள் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய செந்தில் தொண்டமான்! kugenFebruary 16, 2024 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ,வீடுகள் இன்றி இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரச அதிபர்,திருக்கோயில் பிரதேச செயலாளர், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஐந்து மாதக் காலத்திற்குள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து அம்மக்களிடம் கையளித்துள்ளார். திருக்கோவில் மக்கள் தங்களது கோரிக்கையை குறுகிய காலத்தில் நிறைவேற்றியமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருக்கோயில் பிரதேச செயலாளருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர். https://www.battinews.com/2024/02/blog-post_767.html
  3. திருக்குறள்-822 கூடா நட்பு: இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
 மனம்போல வேறு படும். கலைஞர் விளக்கம்: உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.
  4. பெப் 19 நடைபெறவிருந்த மாநாட்டுக்குத் தடை. சிறிதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பொதுச்சபைக் கூட்டங்களும் யாப்பின்படி முரணானவை என்று வழக்குப் போடப்பட்டுள்ளது. முன்னாள் பா. உ. பா.அரியநேத்திரன் வாட்ஸப்பில் பகிர்ந்தது.. ——— இன்று தமிழரசுக்கட்சிக்கு எதிராக இரண்டு வழக்குகள் விபரம். 1)இது திருகோணமலை வழக்கு முழுவிபரம்.. இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை விதித்து கட்டானையொன்றினை பிறப்பித்துள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற் குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் ஆஜராகினர். கடந்த 21 மற்றும் 27ம் திகதிகளில் நடை பெற்ற பொதுச் சபை கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றது என வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே குறித்த இரண்டு பொதுச் சபை கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் அமைப்பு விதி அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச் சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெரிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால் குறித்த கூட்டம் சட்டமுரணானது எனவும் இதன் போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்காலை தடை உத்தரவு விதித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கினை திருகோணமலை சாம்பல்தீவு -கோணேசபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவர் சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் ஊடாக இவ் வழக்கினை தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா, சி.ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2)யாழ்பாண நீதிமன்ற வழக்கு! அடுத்து யாழ்பாணம் நீதிமன்றில் வழக்கு இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு உறுப்பினர் பீற்றர் இழஞ்செழியன் சட்டத்தரணி குருபரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையே இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு தடை உத்தரவு வழங்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளுக்கும் பின்னணியில் ஒருதரப்பே உள்ளது என்பதுதான் உண்மை.! தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை! இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால தடைவிதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார். மேலும் தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ். நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1369933
  5. நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து? தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரகாரம் பொதுச்சபைக் கூட்டத்தில் 161 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எத்தனை பேர் கலந்து கொள்ள வேண்டும் என யாப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் திருகோணமலையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் 300 இற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். பொதுச் செயலாளருக்கான தேர்தலில் 320 பேர் வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே மேலதிகமாக வாக்களித்த உறுப்பினர்கள் எங்கிருந்து எப்படி வந்தார்கள். இந்த உறுப்பினர்களின் அதிகரிப்பு தொடர்பாக யாப்பில் குறிப்பிடப்படாததன் நோக்கம் தொடர்பாக கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டே பொதுச்சபைக் கூட்ட முடிவுகள் யாப்பிற்கு முரணானவை என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பொதுச்சபையைக் கூடுவதற்கான விதி முறைகள் தொடர்பாக விபரிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலைனைக்கு உட்படுத்திய நீதிபதி, கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார். பொதுச்சபைக் கூட்டத் தீர்மானங்களை மையமாகக் கொண்டே தேசிய மாநாடு நடத்தப்படுவது வழமை. ஆனால் யாப்பின் பிரகாரம் பொதுச்சபைக்கூட்ட முடிவுகள் யாப்புக்கு முரணாக இருப்பதால், தேசிய மாநாடும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை யாப்பின் பிரகாரம் சிறிதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் சரியானதா அல்லது முரணானதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஏனெனில் குறித்த மனுவில் கட்சி தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட எஸ்.சிறிதரன், ஜனாதிபதி சட்டத்தரணி, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் எதிராளியாக காண்பிக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது பொதுச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமும், அதற்கு முன்னதாக இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பும் யாப்பு விதிகளுக்கு முரணானவை என்ற பொருள் விளக்கம் மனுவில் இருப்பதாக திருமலை நீதிமன்ற வட்டாரங்கள் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தன. தலைவர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பின் பிரகாரம் சிறிதரனுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 184, சுமந்திரனுக்கு 137 வாக்குகள். ஆகவே இங்கும் வாக்களித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. அதாவது மத்தியகுழு உறுப்பினர்கள் 43 பேரும், மேலதிகமாக 9 பேரும், தொகுதிவாரியாக 280 பேர் உட்பட 332 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிந்தனர். ஆனால் 321 பேர் வாக்களித்துள்ளனர். இந்தநிலையில் பொதுச் செயலாளர் தெரிவில் பொதுச்சபைக் கூட்ட எண்ணிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் சிறிதரனின் தலைமைப்பதவி தெரிவிலும் சட்ட விளக்கங்கள் எழுகின்றன. ஆகவே நீதிமன்ற விசாரணையில் சிறிதரனின் தலைவர் பதவிக்கான வாக்கெடுப்பும் யாப்பிற்கு முரணானதா அல்லது இல்லையா என்ற வாதங்கள் முன்வைக்கப்படலாம். ஆனாலும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்புத் தொடர்பாகவும் அது தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் விளக்கமுமே இறுதி முடிவாக இருக்கலாம். எவ்வாறாயின் இந்த மனு பின்னரான நிகழ்வுகள் ஏனைய அரசியல் கட்சிகளுக்கு படிப்பினையைக் கொடுத்துள்ளன. அதேவேளை யாப்பின் உப விதிகளின் பிரகாரம் உறுப்பினர்களின் காலத்திற்கு காலம் மாறலாம் எனவும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். 1948 இல் பொதுச் சபை உறுப்பினர் எண்ணிக்கை 160 என்றால் 74 வருடங்களின் பின்னர் அது 350 ஆக உயர்வடை வாய்ப்பு உள்ளது என்ற வாதத்தை எமது செய்திச் சேவைக்கு சுட்டிக்காட்டினார். https://oruvan.com/sri-lanka/2024/02/15/trinco-court-order-to-iatk
  6. வாசிக்க ஆர்வம் இருந்தால் நேரம் ஒரு பிரச்சினையேயில்லை! நான் 2017 இல் வாசிக்க ஆரம்பித்தேன்! Kindle பதிப்பாக வந்த பின்னர் வாசிப்பது இலகுவாகிவிட்டது. ஆனாலும் 6வது நாவலாகிய “வெண்முகில் நகரம்” வாசிக்க ஆரம்பித்தபோது வெண்முரசு படிப்பதைக் கைவிடலாமா என்று யோசித்தேன்! எனினும் ஒரு இடைவேளைக்குப் பின்னர் ஆரம்பித்து வருடத்திற்கு 4 வெண்முரசு நாவலாவது படிக்க முயல்கின்றேன். இனி எல்லாம் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் என்பதால் வாசிப்பதில் நிறைய ஆர்வம் இருக்கும்😁 யாழுக்கான கதையை முதலில் எழுதுங்கள் சுவி ஐயா! நீலம் பிள்ளைத்தமிழில் எழுதப்பட்டது. எனக்கு ஆரம்பத்தில் கிருஷ்ணரை (அவர் ஒரு மனிதர், கடவுளாக பின்னர் மாற்றப்பட்டவர்) பிடிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து படிக்கும்போது கிருஷ்ணரின் மீது பெரு விருப்பம் வருகின்றது. எந்த நிலையையும் புன்னகையுடன் எதிர்கொள்வது காரணமாக இருக்கலாம். வெண்முரசு இலவசமாகப் படிக்க; https://venmurasu.in/?utm_source=www&utm_medium=jeyamohan&utm_campaign=blog வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு MeenaJanuary 30, 2024 அன்புள்ள நண்பர்களுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தின் மறுஆக்கமான வெண்முரசு வெளிவந்த நாள் முதல் அதன் அனைத்துத் தொகுதிகளும் வாங்கக் கிடைக்குமா என்னும் கோரிக்கை இருந்துகொண்டிருக்கிறது. வெண்முரசு கடந்த பத்தாண்டுகளாகவே அச்சிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது, ஆனால் முழுத்தொகுதிகளும் உடனே கிடைக்கும் நிலை உருவானதே இல்லை. காரணம் இந்நூல் பெரியது என்பதனால் அச்சிட்டு தயாரிப்பது பெரும்பணி. கிட்டங்கியில் சேமிக்கவும் நிறைய இடம் தேவை. ஆகவே ஓரிரு நூல்கள் விற்பனைக்கு வரும்போது ஏற்கனவே வெளிவந்தவை விற்கப்பட்டு முடிந்திருக்கும். முதல்முறையாக இப்போது வெண்முரசின் எல்லா தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக வெளியிடும் பெருந்திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளோம். வெண்முரசு மொத்தம் 26 பாகங்கள் கொண்டது. ஓவியர் ஷண்முகவேல் வரைந்த 500க்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களும் ஏறத்தாழ 21000 பக்கங்களும் கொண்ட இந்நீண்ட நாவல் தொகுப்பு செம்பதிப்பாக விஷ்ணுபுரம் வெளியீடாக இந்த ஆண்டு ஜுலை மாதத்தில் வெளிவரவுள்ளது. தனித்தனி புத்தகங்களாக அச்சிடுவதில் ஏற்படும் விலை உயர்வை இந்த மொத்தப்பதிப்பில் தவிர்க்க முடியும் என நம்புகிறோம். நூல்களை மொத்தமாக தங்கள் நூலகத்திற்காக வாங்குபவர்கள், அன்பளிப்பாக பிறருக்கு அளிக்க விரும்புபவர்களுக்கும் இது உதவியாக இருக்கும். வெளிவரவிருக்கும் வெண்முரசு முழுத்தொகுப்பின் விலை ரூ.38000/-. முழுத்தொகுப்பு வேண்டுவோர் ரூ.15000/- கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜுன் மாதம் 15ம் தேதிக்குள் முழுத்தொகையும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். முழுத்தொகையும் செலுத்திய பிறகே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். தமிழகத்திற்குள் மட்டும் தபால் செலவு இல்லை. பிற மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு தபால் செலவு தனி. வெளிநாடுகளில் இருந்து வாங்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் அல்லது வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொள்ளவும். நூலகங்களுக்கு அல்லது முதியோர் இல்லங்களுக்கு நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள் அளிக்கலாம். அவர்களின் பெயர் நூலில் எழுதப்பட்டு ஆசிரியர் கையெழுத்துடன் அளிக்கப்படும். நூல்களில் ஆசிரியர் கையெழுத்து வேண்டுவோர் பெயர் குறிப்பிடவும். மூத்தவர்களுக்கு பரிசாக அளிக்க விரும்புபவர்கள் அதை குறிப்பிட்டால் பரிசுப்பொட்டலமாக உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தங்களிடமிருப்பதில் விடுபட்ட நூல்களை முன்பதிவு செய்து பெற விரும்புபவர்கள் venmurasubooking@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தனியாக எழுதலாம். புத்தங்கள் அனைத்தும் ஜுலை முதல் வாரத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும். முன்பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 15, 2024 முன்பதிவு விவரங்கள்: முழுத்தொகுப்புக்கான மொத்தத்தொகையும் முன்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டு அதன் ஸ்க்ரீன்ஷாட் அல்லது Ref No, தங்கள் முகவரி மற்றும் கையொப்பம் பெற வேண்டிய பெயர் விவரங்களை venmurasubooking@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவேண்டும். பணம் பெற்றுக்கொண்ட இரண்டு நாட்களுக்குள் தங்களது பதிவு எண் கொடுக்கப்படும். *** ரூ 15000 செலுத்தி முன்பதிவு செய்ய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியபின் அதன் விவரம் (Reference No, Screenshot) பணம் செலுத்தியவர் பெயர், முகவரி, வாட்ஸப் எண் ஆகிய தகவல்களுடன் venmurasubooking@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பணம் பெற்றுக்கொண்ட இரண்டு நாட்களுக்குள் பதிவு செய்து கொண்டதற்கான பதிவு எண் அனுப்பி வைக்கப்படும். Curr Acc Name: VISHNUPURAM PUBLICATIONS Curr Acc No: 214205001589 Bank: ICICI Bank Ltd IFSC: ICIC0002142 Branch: Vadavalli, Coimbatore, Tamilnadu Ph: 9080283887 *** B No Book Name MRP Net 1 முதற்கனல் 1500 1350 2 மழைப்பாடல் 2500 2250 3 வண்ணக்கடல் 2000 1800 4 நீலம் 1100 990 5 பிரயாகை 2600 2340 Round off -30 மொத்தம் 9700 8700 *** B No Book Name MRP Net 6 வெண்முகில் நகரம் 1800 1620 7 இந்திரநீலம் 1700 1530 8 காண்டீபம் 1400 1260 9 வெய்யோன் 1700 1530 10 பன்னிரு படைக்களம் 2000 1800 Round off -40 மொத்தம் 8600 7700 *** B No Book Name MRP Net 11 சொல்வளர்காடு 1900 1710 12 கிராதம் 2200 1980 13 மாமலர் 1700 1530 14 நீர்க்கோலம் 2000 1800 15 எழுதழல் 1700 1530 Round off -50 மொத்தம் 9500 8500 *** B No Book Name MRP Net 16 குருதிச்சாரல் 1600 1440 17 இமைக்கணம் 1000 900 18 செந்நா வேங்கை 1700 1530 19 திசைதேர்வெள்ளம் 1700 1530 20 கார்கடல் 1800 1620 Round off -20 மொத்தம் 7800 6300 *** B No Book Name MRP Net 21 இருட்கனி 1300 1170 22 தீயின் எடை 1100 990 23 நீர்ச்சுடர் 1200 1080 24 களிற்றுயானைநிரை 1500 1350 25 கல்பொருசிறுநுரை 1500 1350 26 முதலாவிண் 400 360 மொத்தம் 7000 6300 *** மேலும் விவரங்கள் அறிய 9080283887 என்ற (வாட்ஸப்) எண்ணில் தொடர்பு கொள்ளலாம் நன்றி மீனாம்பிகை விஷ்ணுபுரம் பதிப்பகம் https://www.jeyamohan.in/195700/
  7. மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அதாவுல்லாவுக்கு என்ன வேலை- இரா.சாணக்கியன் எம்.பி பிப்ரவரி 15, 2024 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா வந்து கலந்து கொண்டு மாவட்ட பிரச்சினைகளை பேச விடாது தடுக்கிறார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், அதாவுல்லா எவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவராக தெரிவு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை இவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக எதுவும் தெரியாது. கடந்த கால கூட்டங்களில் ஒவ்வொரு தலைப்பிலும் பேசி ஆராயப்படும் அதாவது கல்வி, சுகாதாரம், விவசாயம் என வரும் அதன் ஒழுங்கில் கூட்டத்தில் ஆராயப்பட்டு தீர்வு காணப்படும். ஆனால் தற்போதைய கூட்டத்தில் சரியான ஒழுங்கில் கூட்டம் இடம்பெறாது அவர்களுக்கு ஏற்றாற்போல் கூட்டத்தை நடத்துகின்றார்கள். இல்மனைட் அகழ்வினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி புதுப்பிக்க கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர் அதனை கதைப்பதற்கு நேரம் வழங்குகின்றார்கள் இல்லை. மென்டிஸ் கம்பனியின் கழிவுகள் நீர்நிலையில் கலந்து மீன்கள் இறந்தது, விவசாயிகளுக்கு சரியான முறையில் நஷ்டஈடு வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கதைக்க நேரம் வழங்கவில்லை. மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகள் கொல்லப்படுவது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கதைப்பதற்கும் நேரம் வழங்கவில்லை . மாவட்டத்தில் யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதனை கட்டுப்படுத்த செயற்பாடுகளை முன்னெடுக்காது மட்டக்களப்பில் யானைகள் சரணாலயம் அமைப்பதற்கு முன்மொழியப்படுகின்றது. மாந்தீவில் சிறைச்சாலை அமைப்பதற்கு முன்மொழியப்படுகின்றது அதனை நிறுத்த வேண்டும் என கடிதம் அனுப்பவேண்டும் என கேட்டபோது அதனை சிறைச்சாலைக்கு கொடுத்தால் என்ன என சந்திரகாந்தன் கூறுகின்றார். கிரான் குளம் பகுதிகளில் உள்ள அரச நீர்ப்பாசன காணிகளை நிரப்பி அபகரிக்கின்றார்கள் அவற்றிற்கான ஒரு தீர்வுகள் எட்டப்படுவதற்கு ஒரு முன்னெடுப்புகளையும் செய்ய முடியாத நிலை. பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் சரியான முறையில் இன்னமும் இடம்பெறவில்லை ஆனால் கூட்டம் இடம்பெறாத பகுதிகளில் பல பிரச்சனைகள் காணப்படுகின்றது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்று முடிவடைந்த தன் பிற்பாடு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நடத்துகின்றார்கள். இராணுவ முகாம்கள் அகற்றும் விடயம் தொடர்பாக கதைத்தால் அதற்கு ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் என கேட்டால் அதனை என்னால் முன்வைக்க முடியாது என சந்திரகாந்தன் கூறுகின்றார் இவ்வாறு செயற்படுவதாயின் எதற்கு இந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம். https://www.battinatham.com/2024/02/blog-post_264.html
  8. ரஷ்ய போர்க் கப்பலை அழித்த உக்ரைன் ராணுவம்! christopherFeb 15, 2024 07:25AM ரஷ்ய ஆக்கிரமிப்பு ரிசார்ட் நகரமான அலுப்காவின் கரையோரத்தில் கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பலை அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று (பிப்ரவரி 14) உக்ரைன் படையினர் கருங்கடலில் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர் என தெரிவித்துள்ளது. உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் இந்தக் கப்பலை சீசர் குனிகோவ் என்று அடையாளம் கண்டுள்ளனர், அதில் சுமார் 87 பணியாளர்கள் இருக்க முடியும். ரஷ்ய ஆக்கிரமிப்பு ரிசார்ட் நகரமான அலுப்காவின் கரையோரத்தில் கருங்கடலில் இந்த கப்பல் இருந்ததாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகமும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. https://minnambalam.com/india-news/ukrainian-military-destroys-russian-warship-in-black-sea/
  9. இலங்கையில் 03 சர்வதேச பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை கல்வியில் சர்வதேச அனுபவமுள்ள நிபுணர்களின் அவதானத்திற்குப் பின்னர் அரச பல்கலைக்கழகங்கள் மூலம் பல்துறைப் பட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 03 சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மூன்றாவது பல்கலைக்கழகமும் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும். கண்டியில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (indian institutes of technology) ஆரம்பிக்கப்பட உள்ளது. ஏனைய இரண்டு பல்கலைக்கழகங்களும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தை மையமாக கொண்டு அவற்றின் இரண்டு கிளைகள் திறக்கப்படவுள்ளதுடன் அவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் தயாராக உள்ளோம். விஜயதாச ராஜபக்ஷ குழுவின் அறிக்கை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் குழு அறிக்கையை இணைத்து புதிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. குழுவின் தலைவர் பதவிக்கு, முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான சட்டக் கட்டமைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு, சட்ட வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரச பல்கலைக்கழகங்களில் பல்துறை பட்டங்களை வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இலங்கைக்கு வருகை தருமாறு அவுஸ்திரேலிய உயர்கல்வி அமைச்சருக்கு அவுஸ்திரேலிய தூதரகத்தின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ன், சிட்னி பல்கலைக்கழகம் உட்பட 10 பல்கலைக்கழகளுடன் தொடர்புள்ள நிபுணத்துவ அறிவுள்ள வேந்தர்களும் இலங்கைக்கு வருகை தர உள்ளனர். எமது கல்வி நிலைமையை ஆய்வுசெய்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனியார் உயர்கல்வித் துறையை முறைப்படுத்த வேண்டும். ஆனால் கல்வித்துறையை விற்பனை செய்வதற்கு நாம் தயாரில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/291890
  10. சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் ஸ்ரீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும் இணைந்து, கொழும்பிலுள்ள இல்லத்தில் இரா.சம்பந்தனை, செவ்வாய்க்கிழமை (13) சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நிருவாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளை பொதுச்சபை அங்கீகரிக்காதவிடத்து, அல்லது அத்தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து,தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடாத்தி, அன்றையதினமே மாநாட்டையும் நடாத்துமாறு அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/சூழ்ச்சிகளை-முறியடித்து-மாநாட்டை-நடத்துக/175-333232
  11. ஹரிஹரன் இசை நிகழ்ச்சி - குழப்பம் - குற்றச்சாட்டு - விளக்கம் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு யார் காரணமென விளக்கமளித்துள்ள நொதேர்ண் யுனியின் (NORTHERN UNI) தலைவர் இந்திரகுமார் பத்மநாதன், பணம் செலுத்தி இசை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் விரும்பினால் பணத்தை மீளப்பெற முடியும் என்று அறிவித்துள்ளார். https://newuthayan.com/article/ஹரிஹரன்_இசை_நிகழ்ச்சி_-_குழப்பம்_-_குற்றச்சாட்டு_-_விளக்கம்
  12. வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்” ஆசான் ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன். குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம் மூன்று முறை செல்லும் தூதுகளையும், தம் மைந்தரையும், கொடிவழியினரையும் போரின் மூலமாக இழக்காமல் பாதுகாக்க முயலும் பாண்டவ, கெளரவ தரப்பு அரசியர்களின் முயற்சிகளையும் “குருதிச்சாரல்” நாவல் விரித்துச் செல்கின்றது. முன்னர் வெறும் பெயர்களாக அறியப்பட்ட அரசியர்களின் - தேவிகை (தருமர்), விஜயை (சகாதேவன்), பிந்துமதி (பீமன்), கரேணுமதி (நகுலன்), பலந்தரை (பீமன்), துச்சளை (கெளரவர்களின் சகோதரி - சிந்து நாட்டரசன் ஜயதத்ரனின் அரசி) , பானுமதி (துரியோதனன்), அசலை (துச்சாதனன்), தாரை (விகர்ணன்), விருஷாலி (கர்ணனின் சூத அரசி), சுப்ரியை (கர்ணனின் ஷத்திரிய அரசி) - ஆளுமைகளும், உளநிலைகளும், அகத்தளத்தில் இருந்து வெளியே வந்து அரசசூழ்தலில் (ராஜதந்திரங்களில்) அவர்கள் பங்குகொள்ளுவதும் நாவலை நகர்த்துகின்றது. துரியோதனனின் அஸ்தினபுரியைத் தலைநகராகக் கொண்ட குருநிலம் முழுவதையும் ஆளவேண்டும் என்ற மண்ணாசையை தடுக்கமுடியாத புத்திர பாசத்தில் திருதராஷ்டிரர் இருக்கின்றார். அவர் அசலை, மற்றைய அரசியர்களின் வேண்டுதலாலும், தூண்டுதலாலும் மைந்தர்களையும், கொடிவழியினரையும் காக்க அணுக்கன் சஞ்சயன் மூலமாக பாண்டவர்களிடம் ‘போர் நிகழலாகாதென்று. எந்நிலையிலும் பாண்டவர்கள் படைக்கலம் எடுக்கலாகாது. அனைத்தையும் இழக்க நேரிட்டாலும்கூட’ என்ற ஆணையை மன்றாட்டாக வைக்கின்றார். சஞ்சயன் தூதுச்செய்தியை தெரிவித்தபோது திரெளபதி தான் துகிலுரியப்பட்டவேளை உரைத்த வஞ்சினத்தை துறந்துவிட்டதாகச் சொன்னாள். சகாதேவன் பாண்டவர் கொண்டுள்ள வஞ்சம் இப்புவியில் எழுந்த அத்தனை பெண்டிருக்காக எனவும் தனியே திரெளபதிக்கு மாத்திரமல்ல எனவும், போரைத் தவிர்த்தல் என்பது அவ்வஞ்சத்தை துறந்து மீளவும் கானேகுவதை ஏற்பதில் முடியும் என்றான். எனினும் மூத்த தந்தையான திருதராஷ்டிரரின் ஆணையை பாண்டவர்கள் தட்டாமல் ஏற்கின்றனர். கிருஷ்ணர் முதலாவது தூதில் கெளரவரின் அரசவைக்குச் சென்று, நால்வேதத்தின் காவலனாக நிற்பதாகச் சொல்லும் துரியோதனனிடம் அவன் முன்னர் கொடுத்த சொல்லுறுதியாகிய அஸ்தினபுரி அரசின் மேற்குநிலம், பாதிக் கருவூலம், இந்திரப்பிரஸ்தம் ஆகியவற்றை பாண்டவர்கள் சார்பில் கேட்கின்றார். பாண்டவர்கள் நாடாளும் தகுதியற்றவர்கள் என துரியோதனன் அக்கோரிக்கையை மறுதலித்தும், தந்தை திருதராஷ்டிரரை விலக்கியும், தன்னை கலிதேவனுக்கு முழுதளிக்கின்றான். போருக்கு ஒருங்கும் ஷத்திரிய அவைக்கு இரண்டாம் முறையாகத் தூது வந்த கிருஷ்ணர் அஸ்தினபுரி நாட்டின் வடகிழக்கெல்லைக் காட்டின் அருகே ஐந்து ஊர்களை பாண்டவர்களுக்காகக் கோருகின்றார். பாண்டவர்கள் ஷத்திரியர் அல்ல, அவர்கள் நாலாம் வர்ணமாகிய சூதர்களே என்று பாண்டவர்களின் பிறப்பை இழிவுசெய்து, குந்தி அவைக்கு வந்து பாண்டவரின் தந்தையர் எவர் எனக் கூறவேண்டும் எனவும் துரியோதனன் சிறுமை செய்கின்றான். அஸ்தினபுரியின் ஒரு பருமணலையும் கொடுக்கமுடியாது என கிருஷ்ணரை வெறுங்கையுடன் திருப்புகின்றான். போரின் வெற்றிக்காக துரியோதனன் ஏற்பாடு செய்த புருஷமேத யாகத்தின் (யாகங்களில் உச்சமாக தூய அந்தணனை எரிகுளத்தில் அனலுக்கு பலிகொடுப்பது!) வேத அவைக்கு மூன்றாவது தூதுடன் சாந்தீபினி குரு நிலையின் ஆசிரியராக வந்த கிருஷ்ணர், ஷத்திரியர் வேலிகட்டிப் பாதுகாக்கும் நால்வேதங்களை மட்டுமல்ல, அசுரவேதம், நிஷாதவேதம் என இன்னும் பலவேதங்களின் நற்கூறுகளை எடுக்கும் வேதமுடிபே தூயது என்று வேத அவையில் வேதியரோடும், முனிவர்களோடும் தத்துவவிசாரணைகளில் ஈடுபடுகின்றார். எனினும் எவரும் வேதமுடிபை ஏற்காததால் தோல்வியே வருகின்றது. இந்த தத்துவ விசாரணைகளின்போது கிருஷ்ணர், துரியோதனனால் வேள்வியின் துணைக்காவலனாக இருத்தப்பட்ட கர்ணனை அவன் சூதன் என்பதால் ஷத்த்ரியர்களையும், அந்தணர்களையும் கொண்டே அகற்றச் சூழ்கை செய்கின்றார். வரவிருக்கும் போரில் கர்ணன் போர்த்தளபதியாக ஆகமுடியாத நிலையை இது உருவாக்குகின்றது. கிருஷ்ணர் வேள்வியை ஏற்காமல் அவையிலிருந்து வெளியேறும்போது துரியோதனனிடம் கொடையாக பாண்டவர்களை அஸ்தினபுரியின் குடிகள் என ஏற்று அவர்களுக்கு ஐந்து வீடுகளைக் கோருகின்றார். அதனையும் துரியோதனன் தொல்வேதங்களின் நெறிகளைக் காரணம்காட்டி மறுக்கின்றான். இவ்வாறாக, கிருஷ்ணர் மூன்று தூதுகளிலும், வேதமுடிபை ஏற்கச் செய்வதிலும் தோல்விகளைத் தழுவி அஸ்தினபுரிக்கும், அரசகுடிக்கும் தான் இனி பொறுப்பல்ல என்று கூறித் திரும்பும்போது, திருதராஷ்டிரர் அவர் முன்னர் பாண்டவர்கள் தன்மைந்தரை களத்தில் எதிர்கொள்ளலாகாது எனக் கொடுத்த ஆணையைத் திரும்பப் பெறுவதாகக் கிருஷ்ணருக்குச் செய்தி அனுப்புகின்றார். போருக்கான தடைகள் இல்லாமல் போவதோடு, கிருஷ்ணரின் மூன்று தூதுகளினூடாக பாண்டவர்கள் ஒருபோதும் போரை விரும்பவில்லை என்பதும், துரியோதனனின் மண்மீதான பேராசையும் உறுதிப்படுத்தப்படுகின்றன. நாவலில் போரைப் பற்றிய பீஷ்ம பிதாமகரின் கூற்று. “ போர் என ஒன்று எழுமென்றால் நாம் ஆடைகளை என நாம் பெற்றும் கற்றும் உற்ற அனைத்தையும் கிழித்துவீசிவிட்டுத்தான் முன்செல்வோம். தந்தையர் நெஞ்சில் உதைப்போம். ஆசிரியர்களின் முகத்தில் உமிழ்வோம். உடன்பிறந்தார் தலைகளைக் கொய்வோம். இளமைந்தர் குருதியில் குளித்துக் களியாடுவோம்.” மனித உரிமைகளும், மனித நேயமும் நிலவுவதாகச் சொல்லப்படும் இந்நவீன உலகில் நடக்கும் போர்களில் இழைக்கப்படும் அநீதிகளும், போர்க்குற்றங்களும் அன்றைய குருஷேத்திரப் போருக்குச் சற்றும் குறைவானதல்ல!
  13. நீண்ட கால சிறை வாசம்: இலங்கை திரும்பும் சாந்தன்! இந்திய அரசு கொடுத்தது அனுமதி சாந்தன் என்கிற தில்லையம்பலம் சுதேந்திரராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான அனுமதியை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் வழங்கியுள்ளன. இதனால், தனது முதுமைக் காலத்தில் மகனுடன் இணைந்து வாழ வேண்டும் என்கின்ற சாந்தனின் தாயாரின் கனவும் நனவாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர் உள்ளிட்ட ஏழு பேரையும் இந்திய உச்சநீதிமன்றம் விடுவித்திருந்தது. இதே வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, நீதியரசர்கள் பி.ஆர் கவாய் மற்றும் பி.வி நாகரட்ணா ஆகியோர் சாந்தன் உட்பட அனைவரையும் விடுவித்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தனர். சாந்தன் இலங்கை திரும்பிச் செல்வதற்கான தற்காலிக பயண ஆவணத்தை சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் இந்த மாதத்தின் முற்பகுதியில் வழங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து, அவரது பயணத்திற்கான அந்த மூல ஆவணம், தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மேலும், அவரை நாட்டிற்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு துணைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. “இந்த பயண ஆவணம் கிடைக்கப்பெற்றதென்பதை நீங்கள் தெரிவித்தால் நன்று, மேலும் அவரை விரைவாக நாடு கடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்து, அது குறித்த விபரங்களை எமக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் உயரதிகாரி தமிழக அரசுக்கு எழுதியிருந்தார். தற்போது, திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான பயண ஆவணமானது இந்திய மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர். முன்னதாக, வயதான தனது தாயாருடன் வசிக்க வழியேற்படுத்தும் வகையில் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென சாந்தன் இந்திய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். அதேவேளை, அவரது தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரியும் இந்தியப் பிரதமர் நரேந்தி மோடிக்கு கண்ணீர் மல்க நேரடியாக ஒரு வேண்டுகோளை காணொளி மூலம் விடுத்திருந்தார். சாந்தனின் மனுக்கு உரிய பரிந்துரையுடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மத்திய அரசுக்கு மாநில அரசால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமிலிருந்த சாந்தனின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி அரச பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன. அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு மூச்சிழுப்பு இருந்ததோடு வயிற்றில் திரவம் நிரம்பி கால்கள் வீக்கமடைந்திருப்பதாகவும், அவருக்கு உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை தேவைப்படும் எனவும், அவரது உடல்நிலை ஸ்திரமடைந்த பின்னர் அதை செய்யலாம் எனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர். இதேவேளை, அவரது சட்டத்தரணி பாண்டியன் புகழேந்தி, அவரது உடல்நிலை சிறிது முன்னேறியுள்ளதாகவும் அவரால் பயணிக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=268497
  14. அரச தலைவர் தேர்தல் 2024இல் நடந்தே தீரும் ஆதவன் பொதுத்தேர்தல் அடுத்த வருடமே அரச தலைவரின் ஊடகப்பிரிவு உறுதி இந்த வருடத்தில் உரிய காலப்பகுதியில் அரச தலைவர் தேர்தல் இடம்பெறும். அடுத்தவருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் என்று அரச தலைவர் ஊடகப்பிரிவு நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. . அரச தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஏற்று அங்கம் இகழ்பெறுவதாகவும், இதன் ஓர் அங்கமாகவே நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமையை நீக்குவது பற்றி தற்போது பேசப்படுகின்றது எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வந்த நிலையிலேயே அரச தலைவர் ஊடகப்பிரிவு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. அத்துடன், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான நிதி, 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசு இணைந்து செயற்படும் எனவும் அரச தலைவர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் அரச தலைவருக்குரிய பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். எனவே, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 18ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (எ ) https://newuthayan.com/article/அரச_தலைவர்__தேர்தல்_2024இல்_நடந்தே_தீரும்
  15. பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பை நியமிக்க முடிவு! adminFebruary 14, 2024 பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோவின் கட்சிகள் ஆட்சி அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த வாரத் தேர்தலுக்குப் பிறகு பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு நவாப் ஷெரீப்பின் கட்சிக்கு தேவையான ஆதரவை வழங்குவதாகக் பூட்டோவின் கட்சி கூறியிருந்தது. தேர்தலில் நவாப் ஷெரீப்பின் கட்சி 75 இடங்களிலும், பூட்டோவின் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும் தேர்தலில் தங்களுக்கு எதிராக மோசடி நடந்துள்ளதால், தேர்தல் முடிவுகளை சவாலுக்கு உட்படுத்தவுள்ளதாக இம்ரான் கானும் அவரது கட்சி உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். அவர்களின் கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. https://globaltamilnews.net/2024/200548/
  16. சுமந்திரனின் சுயபரிசோதனை February 12, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் தனது தோல்விக்கு முக்கியமான காரணத்தை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த வாரம் யூரியூப் தமிழ் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விளக்கிக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. தலைவர் தேர்தலுக்கு பின்னரான தனது நிலைப்பாடுகள் குறித்து விரிவாகக் கூறிய அவர், நேர்காணலின் இறுதிப்பகுதியில் தேர்தல் முடிவு தொடர்பில் செய்த சுயபரிசோதனை அல்லது உள்முகச் சிந்தனை பற்றி மனந்திறந்து பேசினார். கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபாட்டுன் உழைத்த உங்களுக்கு எதிராக கட்சிக்குள் ஏன் இந்தளவு எதிர்ப்பு என்று நேர்காணலைக் கண்ட பத்திரிகை ஆசிரியர் சுமந்திரனிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு ; ” நீங்கள் கேட்கின்ற விடயம் குறித்து நான் நிறையவே யோசித்தேன். ஒரு கருத்து எனது மனதில் இப்போது பதிகிறது. நான் கட்சிக்கு என்ன செய்தேன், எவ்வாறு செயற்பட்டேன் என்பதைப் பற்றிச் சொன்னால் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், நான் எவ்வளவுதான் செய்தாலும் கூட, எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவை தீர்க்கப்படாமல் இருக்கும் வரை என்னுடைய அணுகுமுறை எமது மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருகின்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கவில்லை. ” இது ஏனென்று சொன்னால், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் சர்வதேச மட்டத்தில் சந்திப்புக்களையும் நடத்துகின்ற நான் சில விடயங்களை, சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாது. அதற்கேற்ற வண்ணமாக நான் சில நகர்வுகளைச் செய்யவேண்டும். நானும் தமிழ்த் தேசியத்தைப் பகிரங்கமாகப் பேசுகிறேன். ஆனால், நான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் தரப்புகளுக்கு ஒரு முகத்தையும் கட்சிக்கும் எமது மக்களுக்கும் வேறு ஒரு முகத்தையும் காட்டுவதில்லை. அவ்வாறு காட்டவும் முடியாது. ” பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு வழி வந்திருந்தால், மக்களுடைய நிலைப்பாடு வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால் பிரச்சினை தீராமல் இருக்கும்போது, நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது குறைந்தது தங்களது உணர்ச்சிகளையாவது வெளியில் சொல்லவேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம். ஆனால், நான் அவ்வாறு சொல்கிறவன் அல்ல என்கிற ஒரு ஆதங்கம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அது ஒரு காரணமாக இருக்கலாம். “இந்த நேரத்தில் எங்களுடைய உணர்வை தென்னிலங்கைக்கு வெளிப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக எமது மக்கள் உணருகின்றார்கள் என்று நான் நினைக்கிறேன். “திருகோணமலையில் தலைவர் தேர்தல் முடிந்து கொழும்பு திரும்பியபோது பல கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. வியப்பாக இருக்கிறதே என்று என்னிடம் கூறினார்கள். எங்களுடைய பிரச்சினை கள் தீர்க்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம். தோல்வியடைந்த ஒருவனாகவே என்னை எமது மக்கள் நோக்குகிறார்கள். உங்களுடன் பேசி எந்தப் பிரயோசனமும் இல்லை. அதுவே உண்மையான நிலைமை. நீங்கள் பிரச்சினையை தீர்க்காமல் இருக்கும் வரை எமது மக்கள், பிரச்சினைதான் தீராமல் விட்டாலும் சரி, தங்களுடைய உணர்ச்சிகளையாவது வெளிப்படுத்துகின்ற ஒருவர் தேவை என்று இந்த தேர்தல் மூலம் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். “நான் அந்த உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்திப் பேசியவனல்ல. அவ்வாறு இனிமேலும் செய்யப்போகிறவனும் இல்லை. அது என்னுடைய சுபாவமும் இல்லை. அரசியலுக்காக, கட்சித் தலைமையைப் பெறவேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்படப்போகிறவனும் அல்ல. ஆனால், சிறிதரன் அடைய நினைக்கின்ற அதே இலக்கை அடைவதற்காகவே நானும் இவ்வளவு காலமும் பாடுபட்டிருக்கிறேன். அதை அவரும் இணங்கிக்கொள்வார். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். “ஆனால், எமது மக்களுக்கு இப்போது முக்கியமாக தேவைப்படுவது தங்களுடைய உணர்வுகளை வெளியுலகத்துக்கு குறிப்பாக தென்னிலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே. அதனால் அவர்கள் சிறிதரனை தெரிவு செய்திருக்கிறார்கள். நல்லது. அதற்குப் பின்னால் நான் முழு மூச்சையும் கொடுத்து ஒத்துழைப்பேன்.” இறுதியாக கட்சியின் பொதுச்செயலாளர் உட்பட நிருவாகிகள் தெரிவு குறித்து கிளம்பிய சர்ச்சை தொடர்பாக பேசியபோது பதவி விலகும் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் யாப்பின் பிரகாரம் சகல விடயங்களையும் கையாளமுடியாது என்று கூறியதை நேர்காணலில் ஒரு கட்டத்தில் சுட்டிக்காட்டிய சுமந்திரன் அந்த யாப்பை தானே நீதிமன்றத்தில் காப்பாற்றிக் கொடுத்தாகவும் இப்போது அவர்கள் அதற்கு அப்பால் செயற்பட முனைவதாகவும் குறிப்பிட்டார். தமிழரசு கட்சி சமஷ்டி முறையிலான அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பதன் மூலமாக நாட்டுப் பிரிவினையை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்று கூறி களனிப்பகுதியைச் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் 2014 மார்ச்சில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 2017 ஆகஸட் 4 வழங்கப்பட்டது. அதில் தமிழரசு கட்சிக்காக சுமந்திரனே வாதாடினார். அன்றைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் நீதியரசர்கள் உபாலி அபேரத்ன, அனில் குணரத்ன ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பது இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாகவோ நாட்டுப் பிரிவினையைக் கோருவதாகவோ அமையாது என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அந்த வழக்கில் தமிழரசு கட்சியின் யாப்பை நியாயப்படுத்தி சுமந்திரன் செய்த வாதம் தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவர் வழங்கிய முக்கியமான பங்களிப்பாக பரவலாக நோக்கப்படுகிறது. அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியலமைப்பு வழிமுறையின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண முயற்சிகளை முன்னெடுத்த சகல தமிழ்த் தலைவர்களுக்கும் இறுதியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையே தனது குறுகிய கால அரசியல் வாழ்வில் சுமந்திரனும் சந்திக்கவேண்டியேற்பட்டது. அரசாங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சமுதாயம் காலங்காலமாக கடைப்பிடித்த ஏமாற்றுத்தனமான அணுகுமுறைகள் தமிழ் மிதவாத தலைவர்களை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்திய வரலாறு ஒன்று இருக்கிறது. அரசாங்கங்களுடன் தாங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளை நியாயப்படுத்தி தங்களது மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக இடைக்காலத்தில் குறைந்தபட்ச பயன்களையாவது காண்பிப்பதற்கு தமிழ் தலைவர்களினால் முடியுமாக இருந்ததில்லை. அந்த நிலைவரத்துக்கு காரணமான அரசாங்கங்களின் அணுகுமுறைகளும் செயற்பாடுகளுமே தமிழ் மக்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனை கொண்ட சக்திகள் செல்வாக்கு பெறுவதற்கு வழிவகுத்து வந்திருக்கிறது. இந்த பின்புலத்திலேயே தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் சிறிதரனின் வெற்றியையும் சுமந்திரனின் தோல்வியையும் நோக்கவேண்டும். தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ஒருவரே தேவை என்பதால் சிறிதரனை கட்சியின் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்தார்கள் என்பதையும் தன்னால் அவ்வாறான அரசியலைச் செய்யமுடியாது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கும் சுமந்திரன் புதிய தலைவருடன் முழுமையாக ஒத்துழைப்பதாக கடந்த மூன்று வாரங்களிலும் பல தடவைகள் உறுதியளித்தார். ஆனால், தலைவராக தெரிவுசெய்யப்பட்ட தினம் முதலாக சிறிதரன் வெளிப்படுத்திவரும் கருத்துக்களும் அணுகுமுறைகளும் சுமந்திரனைப் போன்றவர்களைப் பொறுத்தவரை அவருடன் ஒத்துழைத்து அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக உணர்த்துகின்றன. கட்சியின் நிருவாகப் பதவிகளுக்கு தெரிவுகளைச் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் மூண்ட சர்ச்சையை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட மகாநாட்டை விரைவில் கூட்டி தலைவர் பதவியை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் சிறிதரனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு இன்னமும் அவர் பதில் அனுப்பியதாகத் தெரியவில்லை. இது இவ்வாறிருக்க, தலைவர் தெரிவுக்கு பிறகு சிறிதரன் வெளிப்படுத்திருக்கும் கொள்கை நிலைப்பாடுகளை சுருக்கமாகப் பார்ப்போம். திருகோணமலையில் ஜனவரி 28 நடைபெறவிருந்த கட்சியின் மகாநாட்டில் முறைப்படி பதவியை ஏற்றுக்கொண்டு சிறிதரன் தனது கொள்கை நிலைப்பாடுகளையும் எதிர்கால அணுகுமுறைகளையும் விளக்கிக்கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சாத்தியமாகாமல் போய்விட்டது. அண்மையில் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சிறிதரன் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தீர்வாக அமையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஒற்றையாட்சி வரையறைக்குள் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யப்போவதில்லை என்று கூறிய அவர் தமிழ் மக்களின் பயணம் சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நோக்கியதே என்று குறிப்பிட்டார். தமிழர்களின் நிலம், மொழி மற்றும் கலாசார அடையாளங்களை அங்கீகரிக்கக்கூடிய வகையில் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தீர்வொன்றைக் காண்பதுவும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரு அரசியல் பாதையை வகுப்பதற்கு உதவுவதுமே தங்களது இலட்சியம் என்றும் அவர் கூறினார். மேலும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் ஐக்கியப்படுத்தி அரசியல் பாதையொன்றை வகுப்பதில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் இணைவது முக்கியமானது என்று தமிழ் கார்டியனுக்கு கூறிய அவர், தமிழ் கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் தேசியவாத சக்திகளை ஐக்கியப்படுத்துவதிலும் சகல தமிழர்களுக்குமான ஒரு பாதையை வகுப்பதிலும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு முக்கியமான வகிபாகம் இருக்கிறது என்றும் தெரிவித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களது பயணம் ஈழத்தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து தொடங்கவேண்டும் என்று அவர் கூறியது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை குறிப்பாக அவர்கள் மத்தியில் இருக்கும் தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட சக்திகள் உட்பட கடுமையான தேசியவாத உணர்வுடைய தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலேயே அவர் அந்த கருத்துக்களை வெளியிட்டார் என்பதில் சந்தேகமில்லை. தலைவராக தெரிவு செய்யப்பட்ட உடனடியாகவே கூட அவர் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது வெற்றிக்கு செய்த பங்களி்ப்புக்காக நன்றி தெரிவித்தார். நடந்துமுடிந்திருப்பது ஒரு உட்கட்சித் தேர்தல் மாத்திரமே. தற்போதைய சூழ்நிலையில் சிறிதரனின் நிலைப்பாடுகள் குறித்து பரந்துபட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில் இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியின் தலைவராக வந்திருக்கும் சிறிதரனுக்கு தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள சவால்களை முறையாக விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தலையாய பொறுப்பு இருக்கிறது. தமிழர்களின் மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தலைவர்களையும் போராளிகளையும் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவது என்பது வேறு. கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடனேயே தமிழ் மக்களைக் கட்டி வைத்திருக்கக்கூடிய அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சிந்தனை அந்தப் போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு மாறிவரும் சூழ்நிலைக்கு பொருத்தமான முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை (அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல்) அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான தந்திரோபாயங்களை வகுப்பதற்கு வழிகாட்டுவதாக அமையவேண்டும். வெறுமனே உணர்ச்சிவசமான கற்பிதங்களுடன் கடந்த காலத்தைக் காவியம் போன்று நினைவுபடுத்திக் கொண்டிருப்பதில் உள்ள பொருந்தாத்தன்மையில் இருந்து தமிழரசு கட்சியின் தலைவர் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மை புரிந்து கொள்ளப்படவேண்டும். மண்ணில் நிலவும் உண்மையைப் பற்றிய பிரக்ஞை இன்றி நடைமுறைக்கு ஒவ்வாத தீவிரவாதச் சிந்தனையுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இயங்கும் குழுக்களின் (இத்தகைய குழுக்களில் ஒன்றுதான் துவாரகா வீடியோ நாடகத்தையும் தயாரித்து ஒளிபரப்பியது) நிகழ்ச்சி நிரலுக்கு வசதியாக அமையக்கூடிய சூழ்நிலைகளை வடக்கு, கிழக்கில் தோற்றுவிக்கும் வகையிலான அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கெனவே கட்டுப்படியாகாத போர் ஒன்றைக் கடந்து வந்து இன்னமும் கூட வழமை வாழ்வுக்கு திரும்புவதற்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீண்டும் இடர்பாடுகளுக்குள் தள்ளிவிடக்கூடாது. https://arangamnews.com/?p=10465
  17. உலக சாதனை மரதன் வீரர் கிப்டுன் உயிரிழப்பு damithFebruary 13, 2024 ஆடவர் மரதன் ஓட்டப்போட்டியில் உலக சாதனை படைத்துள்ள கென்யாவின் 24 வயது கெல்வின் கிப்டுன் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். மேற்குக் கென்யாவில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற வீதி விபத்தில் அவருடன் அவரது பயிற்சியாளரான ருவண்டா நாட்டின் கர்வைஸ் ஹகிசமானாவும் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டத்தில் 42 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணி மற்றும் 35 விநாடிகளில் பூர்த்தி செய்து கிப்டுன் உலக சாதனை படைத்திருந்தார். இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான மரதன் அணியில் அவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/02/13/sports/42019/உலக-சாதனை-மரதன்-வீரர்-கிப/
  18. போதமும் காணாத போதம் – 18 சொந்தக்கிராமத்திற்கு செல்வதென முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் அதிகாலைக்கு முன்பாகவே சைக்கிளில் புறப்பட்டேன். இடம்பெயர்ந்து வீதிகளின் இருமருங்கிலுமுள்ள வயல்களில் சனங்கள் கூடாரம் அமைத்து உறங்கியிருந்தனர். வட்டக்கச்சியையும் தர்மபுரத்தையும் இணைக்கும் பாதையில் சைக்கிளை வேகமெடுத்து உழக்கினேன். குன்றிலும் குழியிலும் துள்ளிப்பாய்ந்தது. வீட்டில் என்னைத் தேடும் போது, நான்கைந்து நாட்களாக கடுமையான மோதல் நடைபெற்ற உக்கிரமான போர்க்களமாயிருக்கும் சொந்தக்கிராமத்திற்குள் புகுந்துவிடுவேன். எல்லையிலேயே போராளிகள் மறித்து திருப்பியனுப்பக்கூடும். வட்டக்கச்சியை ஊடறுத்து இரணைமடுவை அடைந்தேன். அங்கிருந்து இன்னும் அரைமணி நேரம் செல்ல வேண்டியிருந்தது. சூனியம் எழுப்பிய புழுதியில் வெறுமை குடித்திருந்தது ஊர். போராளிகளின் நடமாட்டம் தெரிந்தது. கனரக ஆயுதத்தைத் தாங்கிய வாகனமொன்று விரைவொலியோடு போனது. எறிகணைகளால் சேதமுற்ற மரங்களில் புள்ளினங்கள் இசைத்தன. போராளிகள் இருவர் மரங்களடர்ந்த பகுதியில் அமர்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் சைக்கிளை நிறுத்தினேன். “எங்கே போகிறீர்கள்?” என்று அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே போகுமிடம் சொன்னேன். “கடுமையான சண்டை நடக்கிற இடம். இஞ்சையெல்லாம் வரக்கூடாது. திரும்பிப் போங்கோ” என்றனர். “இப்போதுதான் சண்டை நடக்கவில்லையே, கொஞ்சத்தூரம் தானே இருக்கிறது. போய்விட்டு மதியத்திற்குள் திரும்புகிறேனே” என்றேன். இல்லை நீங்கள் உள்ளே செல்லமுடியாது என்று அழுத்தமாகச் சொன்னார். சைக்கிளைத் திருப்பினேன். எனக்குத் தெரிந்த ஒரு கள்ளப்பாதையிருக்கு, அதால போனால் முறிகண்டிக்கு கிட்டவா போய்டலாம் என்று தோன்றியது. மணல் அடர்ந்திருந்த பாதை. சைக்கிளை உழக்கமுடியாது போனது. நடக்க ஆரம்பித்தேன். திரும்பி வரும்போது சைக்கிளை எடுக்கலாமென புதருக்குள் மறைத்து வைத்தேன். நான் சொந்தக்கிராமத்திற்குள் நுழையும் போது விடிந்தது. கோயில் கிணற்றில் நீரள்ளிக் குடித்தேன். நாவல் மரத்தின் கீழிருந்த வீரபத்திரர் பீடத்தில் வண்ணத்துப்பூச்சிகள் குழுமிப்பறந்தன. அணில்கள் இரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. “போரைச் செவி கொள்ளாத உயிரினங்களின் நித்தியம் முறையீடற்று புலருகிறது போலும்!”. இன்னும் இரண்டு குச்சி ஒழுங்கைகள் தாண்டினால் அவளுடைய வீடு வந்துவிடும். நான் நடக்கத் தொடங்கினேன். நினைவென்னும் தீத்தாழியில் கால்கள் பதிகின்றன. உடல் மீது காட்டுத்தீயின் சுவாலை. இதயம் சக்கராவக புள்ளாய் வருந்துகிறது. எங்கள் வீட்டின் முற்றத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்து பள்ளமொன்று தோன்றியிருந்தது. அந்தப் பள்ளத்தினுள்ளே இறங்கி நான்கு குட்டிகளை ஈன்றிருக்கும் நாயின் தாய்மை வாசம் போர்முனையின் கந்த நெடியை அற்றுப் போகச்செய்திருந்தது. வீட்டின் அடுப்படி பகுதி மிச்சமிருந்தது. ஏனைய பகுதிகளை தீயுண்டிருந்தது. பள்ளத்திலிருந்த நாய்க்குட்டிகளைப் பார்த்தேன். கண்விழித்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும். வாயில் கறுப்பு விழுந்த வெள்ளைக்குட்டியொன்று தலையுயர்த்தி என்னையே பார்த்தது. துக்கத்தில் வெந்து தகிக்கும் வீட்டிற்குள் நுழையவே மனம் ஒப்பவில்லை. ஆசை ஆசையாக அம்மா வளர்த்த மல்லிகைப் பந்தலின் அஸ்தியில் துவக்குச் சன்னத்தின் வெற்றுக்கோதொன்று கிடந்தது. அதுதான் நம்நிலத்தின் விதிமலர். பற்றுவதற்கு எந்தத் துரும்புமற்று எங்ஙனம் இந்த ஊழியைக் கடப்போமோ! “கடப்போமா?” மீண்டும் என்னையே கேட்டுக் கொண்டேன். எங்களுடைய வீட்டிலிருந்து பிரதீபாவின் வீட்டுக்கு ஒரு ஒழுங்கை தாண்டவேண்டும். அங்குதான் போகவேண்டும். அதற்காகவே இவ்வளவு தூரம் வந்தேன். என்னைப் போராளிகள் யாரேனும் கண்டுவிட்டால் முதலில் சந்தேகப்படுவார்கள். அரச ஆழ ஊடுருவும் படையணிச் சேர்ந்தவர் என சுற்றிவளைத்துப் பிடிக்கவும் செய்வார்கள். எது நேர்ந்தாலும் சந்திப்பேன். எது நேர்ந்தாலும் தாங்குவேன். பிரதீபா! கிளிநொச்சி முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற கலைவிழாவொன்றிலேயே பிரதீபாவை முதன்முறையாக சந்தித்தேன். கரம் சுண்டல் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். இரட்டைப் பின்னலோடும் சிறுத்த நெற்றியில் பிறை போன்றதொரு பொட்டும் தரித்திருந்த அவளுடைய கண்கள் நித்திய அதிருப்தியால் சோர்ந்திருந்தன. எதுவும் கைகூடாத நலிவின் பாரத்தில் அவளது முகம் அழுந்தியிருந்தது. படபடப்பில் தத்தளித்து வெளியேற்றும் மூச்சை விடவும் சிரமப்படுகிறாள் என்றே தோன்றியது. அவளோடு கதைக்க விரும்பியும் சூழல் தரிக்கவில்லை. பெற்றோல் மாக்ஸ் விளக்கு வெளிச்சம் சற்று மங்கிப் போனது. அதற்கு காற்று அடிக்கவேண்டுமென சொன்னேன். “அப்பா வருவார்” என்றாள். எனக்குப் பின்னால் வந்தவர்களும் கரம் சுண்டல் வாங்கிச் சென்றனர். பிரதீபாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு ஏதோ குழப்பமும், யோசனையும் இருந்தது. “உங்களுக்கு என்ன வேணும்” கேட்டாள். “இஞ்ச என்ன றியோ ஐஸ்கிரீமா விக்கிறியள். கரம் சுண்டல் தானே!” என்றேன். “இவ்வளவு நேரம் இதில நிண்டு, இதைத் தான் கண்டுபிடிச்சனியளோ” சீண்டினாள். “இல்லை, நிறையவற்றை கண்டுபிடிச்சனான் ஆனால் இதைமட்டும் தான் சொல்ல ஏலும்” என்றேன். தன்னுடைய ஆடையை ஒருமுறை திருத்தம் பார்த்தபடி, “இதில இப்பிடி நிக்காதையுங்கோ, கொஞ்ச நேரம் பாப்பன் இல்லாட்டி காவல்துறையிட்ட போய் சொல்லிப்போடுவன்” என்றாள். முற்றவெளி மைதானத்தில் தமிழீழ இசைக் குழுவினர் பாடல் இசைத்துக் கொண்டனர். பாடகர் சுகுமார் தன்னுடைய கம்பீரக்குரலால் திரண்டிருந்த சனங்களின் ரத்த நாளங்களில் இனமானம் ஏற்றிக்கொண்டிருந்தார். இரவு ஏக்கமுற்று கொண்டாடிக் களிப்புறும் சனங்களைப் பார்த்தது. இங்கிருந்து போகிறீர்களா இல்லையா என்பதைப் போல சைகையால் கேட்டாள். இதற்கு மேலும் நின்றால் காவல்துறையிடம் சென்று சொல்லக்கூடுமென அஞ்சினேன். அங்கிருந்து விலகத்தயாரானேன். “நீங்கள் எந்த இடம்?” கேட்டேன். “ஏன் வீட்ட வந்து எதுவும் நிவாரணம் தரப்போறியளோ” “இல்லை, சும்மா கேட்டனான்” “ஒருத்தற்ற ஊரையோ, வீட்டையோ சம்பந்தமில்லாம கேக்கிறது சரியில்லை. உங்களுக்கு நாகரீகம் தெரியாதோ” “இல்லை எனக்கு நாகரீகம் தெரியாது, நீங்கள் எந்த இடம்” என்று மீண்டும் கேட்டதும் சிரித்துவிட்டாள். “நாலாம் கட்டை. முறிகண்டி அக்கராயன் ரோட்டில இருக்கு” என்றாள். அப்பிடியா! அங்குதான் எங்களுடைய புதுவீடும் இருக்கு. அடுத்த கிழமை குடிபூருகிறோம்” என்றேன். “அங்க எங்க”? “நாலாம் கட்டை சேர்ச் இருக்கல்லோ. அதுக்கு பின்னால இருக்கிற குடியிருப்பு” “இயக்க குடியிருப்பு, அதுதானே” என்றாள். ஓமென்று தலையசைத்தேன். அங்கிருந்து ஒரு ஒழுங்கை தாண்டினால் எங்களுடைய வீடு என்றாள். அந்த வீட்டிற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். பிரதீபாவின் கொட்டில் வீட்டுக்கு முன்பாக சிவலைப் பசு செத்துக் கிடந்தது. குண்டுச் சிதறல் கிழித்த வயிற்றை இன்னும் அலகால் கிழிக்கும் காக்கைக் கூட்டம் கரைந்து கரைந்து பொருதின. வீடு அப்படியே இருந்தது. போரில் சேதமற்றுக் கிடக்கும் வீட்டைப் பார்ப்பது தொந்தரவானது. எஞ்சுதலின் சுகம் சுமையானது. வீட்டிற்குள் நுழைந்தேன். பரணில் ஒரு கோழி பதுங்கித் தூங்கியது. வீட்டின் வலது மூலையில் அடைகிடக்கும் கோழி இன்றோ நாளையோ குஞ்சுகளைக் கண்டுவிடும். வீட்டின் வெளியே கரம் சுண்டல் வண்டி சாய்த்துவைக்கப்பட்டிருந்த பிலா மரத்தின் கீழே அரணைகள் ஓடிச் சென்றன. அவளுக்குப் பிடித்தமான கடதாசிப் பூ மரம் சடைத்து மலர்ந்திருந்தது. உதட்டில் எப்போதும் வைத்து பூசிக்கொள்ளும் சிவந்த பூக்கள். வீட்டின் பின்னே ஒற்றையடிப்பாதை வழியாக நடந்து சென்றேன். “பிரதீபா! இப்படித்தான் யாருமற்ற பூமியில் நீயும் நானும் வாழவேண்டுமென ஆசைப்பட்டாய் அல்லவா?” எவ்வளவு அபத்தச் சூனியமந்த ஆசை. நீயுறங்கும் திசையோடி வருகிறேன். உன் மீது கனமாய் ஏறியிருக்கும் மண்மேட்டின் அருகமைந்து கதைக்கலாமென தவிக்கிறேன். கணக்கற்ற நம் கூடல் பொழுதுகளை பிரிவு பழிக்கிறது. ஆழ் துயிலில் என் தலை அறுபடும்வரை ஓர் கனா நீள்கிறது. நீயே! பரந்த பகலும் இரவும். உன்னுடைய சவத்தின் மீது அழுது புரண்டது நானல்ல. என்னுயிர். அது உன் மூச்சற்ற உடலில் பூசப்பட்ட வாசனைத் திரவியம். அவளைப் புதைத்த மேடு, கொஞ்சம் மண்ணிறங்கி இருந்தது. அதன் மீது படுத்துக் கொண்டேன். அவளை மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டேன். அவளருளாலே அவள்தாள் வணங்கினேன். அவள் நாமம் மறந்திலேன். பிரதீபா! உன்னுடைய மகிமையைப் பாடியும், பரசவமாய் ஆடியும் யாருக்கும் சொல்ல விரும்பேன். நீ என்னுடைய மலையில் ஊறிய சுனை. உன்னால் குளிர்ந்தவன். எப்போதும் நீ சொல்வதைப் போலவே நீயற்றுப் போன இத்தனை நாட்களில் என்னை நானே எரித்துக் கொண்டிருக்கிறேன். முகில் கிழித்து எனை அணைக்கும் ரகசிய மழை நீ. இவ்வளவு போர் பிரகடனங்களுக்கு மத்தியில் உன்னுடல் மீது புரண்டு படுப்பதில் வெறுமை அழிகிறது. ஆறுதல் பெருகுகிறது. உளத்தில் தந்திகள் அதிர்ந்து உடலில் ஸ்வரம் தொனிக்கிறது. பிறவிச் சுமையென எம்மைப் பீடித்திருக்கும் இந்தப் போரிடம், நாம் தோற்றுப் போகோம். உண் புதைமேட்டில் நான் வருவதற்கு முதற்கணம் வரை ஒரு வண்ணத்துப்பூச்சி இருந்து பறந்தது. அந்த வண்ணத்துப் பூச்சியை நான் அடையாளம் கண்டேன். அன்றைக்கு நாம் பாலைப் பழக்காட்டிற்குள் உதிர்ந்திருந்த போது உன்னுடைய இடது முலைக் காம்பில் வந்தமர்ந்த மஞ்சள் நிறப் வண்ணத்துப்பூச்சி! இதோ இப்போது துளிர்த்து இறங்கும் மழையின் துளிகள் அன்றைக்கும் பெய்தவை தானே! உனக்கு நினைவிருக்கிறது அல்லவா? அது காமம் எறிந்த அந்திப்பொழுது. நறுமணத்தின் கனிச்சுளைகள் காற்றில் உரிந்து கரைந்தன. உன்னுடையவை என்றோ, என்னுடையவை என்றோ எதுவுமற்ற சரீரங்கள். இலைகளால் சடைத்த தருக்களின் அசைவுகளில் ஒரு லயம். என்னை உன்மீது உருகுமொரு மெழுகுவர்த்தியாய் ஏற்றினேன். நீயொரு சுடர் விரும்பி. என்னைத் தீண்டி தீண்டி ஒளி பெருக்கினாய். அழுத்தங்கள் அழிக! இறுக்கங்கள் மாய்க! போர் ஒழிக! என்றெல்லாம் நானே சொல்லிக்கொண்டேன். என்னுடைய வாயை இறுகப்பொத்தி இப்போது எதையும் எதிர்மறையாகச் சொல்லாதே! எல்லாமும் துளிர்க்கும் நேரமிது என்றாய். எங்கிருந்து வந்த வண்ணத்துப்பூச்சி என்று தெரியாது. உன் இடது முலைக்காம்பில் வந்தமர்ந்தது. “அடேய் கள்ளா! வாய்க்குள் வண்ணத்துப்பூச்சியை வைத்து, விளையாட்டு காட்டுகிறாய் “ என்றாய். “இல்லை, இது பாலைப்பழக் காட்டிற்குள் இருந்து வந்திருக்கிறது. நம்மை அது ஆசிர்வதிக்கிறது” என்றேன். அவள் முலைவிடுத்துப் பறந்த தன் கால்களில் ஏந்தியிருந்தது உருகும் ஒளி உருகாது அணையும் சுடர் அணையாது நின்ற அந்தப் பொழுதை. “ இப்படி இருவரும் ஒன்றாக இருப்பது ஆனந்தமாக ஆறுதலாக இருக்கிறது. ஆனால் இது பிழையல்லவா” நீ கேட்டாய். “பிழைதான், ஆனால் போரைவிடவும் எவ்வளவோ சரி” என்றேன். புதைமேட்டில் படுத்துக்கிடந்தேன். கொஞ்சத்தூரத்தில் துவக்குச் சத்தம் கேட்கத் தொடங்கியது. எறிகணைகளை கூவி வீழ்ந்தன. சண்டை மூண்டுவிட்டது. போராளிகளின் பக்கத்திலிருந்தும் தாக்குதல்கள் தொடங்கின. நான் கடதாசிப் பூக்களை ஆய்ந்து வந்து அவளது புதைமேட்டில் வைத்து அலங்காரம் செய்தேன். எறிகணைகளும், போர் விமானங்களும் தாக்குதல் நிகழ்த்துகின்றன. இக்கணமே இவ்விடமே என்னுயிர் போகட்டுமே! அன்றைக்கு மதியம் வரை கடுமையான மோதல் நடைபெற்றது. போராளிகள் பாதுகாப்புச் சமர் செய்தனர். ஆனால் கடுமையான இழப்புக்களைச் சந்தித்திருக்கவேண்டும். வாகனங்கள் திகில் பிடித்த காட்டு மிருகங்களைப் போல வீதியில் போயின. காயக்காரர்களாக இருக்கலாம். ஒருதொகை போராளிகளின் புதிய அணி களமுனை நோக்கி நகர்த்திச் செல்லப்படுவதைப் பார்த்தேன். படுத்து உறங்கினேன். என்னுடைய வலது கண்ணைத் தொட்டு மஞ்சள் வண்ணத்துப் பூச்சியொன்று புதைமேட்டில் அமர்ந்தது. கண்களை விழித்தேன். குப்புறப்படுத்த என்னுடைய அடிமுதுகை இரண்டு கைகளாலும் யாரோ பற்றியிருப்பது போலிருந்தது. திடுமென புரண்டு எழுந்தேன். நெஞ்செங்கும் மண் ஒட்டிக்கிடந்து. மஞ்சள் வண்ணத்துப்பூச்சி அங்கேயே தரித்தும் பாவியும் பறந்து கொண்டிருந்தது. திடுமென எறிகணைகள் பரவி வீழ்ந்து வெடித்தன. களமுனையின் பின்தள வழங்கல்களை கட்டுப்படுத்தும் முகமாக நடைபெறும் தாக்குதல் என்று விளங்கிக்கொண்டேன். நான் எங்கும் நகரவில்லை. பிரதீபாவின் புதைமேட்டின் அருகிலேயே அமர்ந்திருந்தேன். என்னருகிலேயே குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சியும் நானும் பிரதீபாவோடு இருந்தோம். போர் தனித்திருந்தது. “இப்பிடி சண்டை நடக்கிற இடத்தில வந்து தனியா இருந்தது பிழையல்லவா” என்று கேட்டார், விசாரணை செய்த போராளி. “பிழைதான் அண்ணா, ஆனால் போரை விடவும் எவ்வளவோ சரி” என்றேன். அந்தப் போராளி என்னைத் தன்னுடைய பதுங்குகுழிக்கு அழைத்துச் சென்றார். சண்டை ஓய்ந்ததும் பின்னால் போய்விடு என்றார். அன்றிரவு சண்டைக்கான நிமித்தங்கள் எதுவும் இல்லை. போவென்று வழியனுப்பினார். புதருக்குள் கிடந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பதுவதற்கு முன்பாக மீண்டுமொருமுறை புதைமேட்டிற்குப் போனேன். காரிருளில் மொய்த்துக் கிடக்கும் மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகளின் தாலாட்டில் புதைமேடு மலர்ந்திருந்தது. நிலம் சிலிர்க்க வண்ணத்துப் பூச்சிகள் அவளின் உலராத இதழ்களில் துடிதுடித்தன. பிரதீபா…. என்றழைத்தேன். நிசிக்காற்றின் விழி விரிய புதைமேட்டிலிருந்து அவள் குரல் தோன்றியது. நான் தலையாட்டிக்கொண்டிருந்தேன். அந்த இரவில் நிலவு தேயவில்லை. ஆனால் போர் துயின்று விட்டது. https://akaramuthalvan.com/?p=1743
  19. இன்று லீவு என்பதால் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன்! தொடருக்கான உத்திகளை நன்றாகவே கையாள்கின்றார் மூனா ஐயா! நல்லதோர் துப்பறியும் கதை போல இருந்தது. டானியல்தான் என்று அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே தெரிந்துவிட்டது! தமிழ்வாணன் கதைகள் படித்த அனுபவம்தான்🤓 ஒவ்வொரு புதன் கிழமையும் அத்தியாயங்களைப் போட்டிருக்கலாம்!
  20. பாளையங்கோட்டையின் வரலாற்றுத் தகவல்களை நுணுக்கமான அறியக்கூடியதாக இருக்கின்றது. தொடருங்கள் முனைவர் @சுப.சோமசுந்தரம் ஐயா அவர்களே! சுலோச்சன முதலியார் பாலம் மூழ்குமளவிற்கு பொருநையில் (தாமிரபரணி ஆற்றில்) வெள்ளம் பெருகியிருக்கின்றது!
  21. பெம்பிளைப் பிள்ளையைப் பெத்து விட்டு விக்கித்து நிக்காமல் இருக்கத்தான் முந்தி பொத்திப்பொத்தி வளக்கிறவையாக்கும்!
  22. சினிமா வியாபாரத்திற்கு பாய்! பிழைப்புக்கு சங்கி! -சாவித்திரி கண்ணன் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ படத்தில் மத நல்லிணக்கம் பேசப்பட்டுள்ளது. இது அதிசயமல்ல, தமிழ் மண்ணில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தாத படம் வியாபாரம் ஆகாது! அதே சமயம், ‘பாஜகவின் காவி அரசியலுக்கு கை கொடுப்பதில்’ நிஜ வாழ்க்கையில் சமரசமே இல்லாத பயணத்தை ரஜினி உறுதிபடுத்தி வருகிறார்; ரஜினியே சொன்னது போல சினிமா என்றால் காசு, பணம்,டப்பு வரணும் என்ற கணக்கில் தான் அவர் மகள் ஐஸ்வர்யா லால்சலாம் படம் எடுத்துள்ளார்! முன்னதாக லால் சலாம் விழாவில் பேசிய ஐஸ்வர்யா, ”என்னுடைய அப்பாவை சங்கி என்று எல்லோரும் சொல்லும் போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன், என்னுடைய அப்பா சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால், அவர் என்னுடைய ‘லால் சலாம்’ படத்தில் நடித்திருக்க மாட்டார். அவர் மனிதநேயவாதி. இந்த படத்தில் அவரை தவிர அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள்”என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த பேச்சு குறித்து ரஜினியும் ஒரு விளக்கம் தந்து இருந்தார்; ”சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை. என்னுடைய மகள் சரியாகத்தான் பேசுகிறார். அப்பா ஆன்மீகவாதி அவரை ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்பது தான் என்னுடைய மகளின் ஆதங்கம்” என்று கூறி இருந்தார். லால் சலாம் படத்தில் காதர் மொய்தீன்பாய் ஒரு மனித நேயவாதியாக காட்டப்படுகிறார்! அப்படி இருக்க அந்த கேரக்டரில் நடிக்க ரஜினியைத் தவிர யாருமே அவ்வளவு தைரியமாக நடித்து இருக்க மாட்டாங்க என ஐஸ்வர்யா பேசுவதன் உளவியல் சிக்கலை நாம் பார்த்தால்.., இன்னைக்கு இருக்கும் சூழலில் ஒரு முஸ்லீம் பாயாக நடிப்பதே ஒரு சவாலான விஷயமாக அவர் பார்க்கிறார் என்று தான் தோன்றுகிறது. ஐஸ்வர்யாவே இங்கு ஒரு சங்கியின் மன நிலையில் குறிப்பாக தன் சார்ந்த பார்ப்பன சமூக மன நிலையில் இப்படி யோசித்து அந்தப்படியே பேசி இருக்கிறார். உண்மையில் இது படு அபத்தமான பேச்சு! இந்த கேரக்டரில் நடிக்க அனேகமாக எந்த தமிழ் நடிகருமே அச்சப்படமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, மிகவும் விரும்புவார்கள்! இந்த அடிப்படை புரிதல் கூட ஐஸ்வர்யாவுக்கு இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். ரஜினிக்கே இந்த கேரக்டரில் நடித்தற்காக ஏதோ ஒருவித பதற்றம் அடிமனதில் இருந்திருக்குமோ என்ற சந்தேகத்தை அன்றைய அவரது பேச்சு நமக்கு தோற்றுவித்தது! ஏனென்றால், அவர் வழக்கத்திற்கு மாறாக இந்து மதம் என்றால் என்ன என்பதற்கு வியாக்கியானம் தருகிறார். சனாதனம், புராதனம், வேதம், உப நிஷத்து, பகவத் கீதை, பரமாத்மா, ஜீவாத்மா என்றெல்லாம் பேசியதன் பின்னுள்ள உளவியலை நாம் கவனிக்க வேண்டும். இயற்கையிலேயே அவர் ஒரு ஆன்மீகத் தேடல் உள்ளவரென்றாலும் ஏதாவது குரு, சாமியார், சீடர் கதையைத் தான் பேசுவார்! ஆனால், சர்ச்சைக்குரிய சனாதனத்தை நியாயப்படுத்தும் விதத்தில் அவர் பேச முன்வந்ததை நாம் கவனிக்க வேண்டும். ரஜினி பேச்சை அப்படியே தருகிறேன்; எல்லா மதங்களுக்கும் ஸ்தாபகர்கள் இருக்காங்க. ஆனா இந்து மதத்திற்கு மட்டும் ஸ்தாபகர்கள் கிடையாது. ஏனென்றால், இது சனாதனம், சனாதனம் என்றால், புராதனம்! அதாவது பழசு. ஆதி! அப்ப வந்து ரிஷிகள் வந்து மெடிடேசன் இருந்தாங்க. அப்ப அவங்க ஒரு டாச்க்கில இருந்த போது, அவங்களுக்கே தெரியாமல் சில சவுண்ட்ஸ் வருது! அது தான் வேதம். பிராக்குரிதி என்றால் நேச்சுரல். (இயற்கை) அந்த நேச்சுரலுக்குள் இறைவன் ‘புருஷா’ என்ற மனிதனை வைத்தான். அவனுக்கு ‘பஞ்ச இந்திரியங்களை’ கொடுத்தான். அதை அனுபவிக்க ‘மனசு’ என்ற புத்தியை வைத்தான். இது தான் வேதங்களில் இருக்கு… இதை புரிஞ்சுக்கிறது அவ்வளவு ஈசி கிடையாது. வேதத்துடைய ‘எசென்ஸ்’ தான் உப நிஷத்து! ‘தத்துவமசி’. ‘அதாவது, நீ ஒரு இந்த உடல் இல்லை, இந்த புத்தி இல்லை. அந்த பரம்பொருளின் அங்கம். அந்த யூனிவர்ஷலில் ஒருவன்’ இந்த உப நிஷத்தை புரிந்து கொள்வதும் அவ்வளவு எளிதல்ல, அதனால அதன் சாரம்சமாக வந்ததே பகவத் கீதை! கிருஷ்ணா என்பது ஒரு உருவமல்ல, டிவைன்! சூப்பர் கான்ஷியஸ். அர்ச்சுனா என்பது கான்சியஸ். பரமாத்மா ஜீவாத்மாவுடன் பேசுவது தான் பகவத் கீதை! அதுல பக்தி யோகா, கர்ம யோகா, ஞான யோகா..என பல பாதைகள் இருக்கு. கவனித்தீர்களா? ஒரு முஸ்லீம் பாயாக நடித்ததற்கு பிராயசித்தமாக ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் அதாவது, ஒரு சங்கி என்ன பேசுவாரோ.., அந்தக் குரலாக ஒரு திரைப்பட விழாவில் கோடானு கோடி மக்களுக்கு பேசி பரப்புரை செய்துள்ளார் ரஜினி. ”அவர் பேசியது ஆன்மீகம் தானே! இதுல, எங்க சங்கியோட குரல் இருக்கு?” எனச் சிலர் கேட்கலாம். ‘இதுல எது ஆன்மீகம்? எது சங்கியின் குரல்’ என்பதை பார்ப்போம்; முதலாவதாக எந்த ஒரு மதமுமே ஆன்மீகத்திற்கான பாதையல்ல. மதம் என்பது பக்திக்கானது. ஆன்மீகம் என்பது மதங்களை கடந்த ஒரு அனுபவமாகும். ஆன்மீகத்தை அவரவரும் தன் சொந்த ‘அனுபூதி’ என்ற அனுபவத்தின் மூலமே உணர முடியும். ‘மதம்’ என்பது பக்தியின் வழியே இறை குறித்த ஒரு அச்சத்தை உருவாக்கி சமூக தளத்தில் மனிதனை ஒழுங்குபடுத்துவது அவ்வளவே! அதே சமயம் நடைமுறையில் அந்த மதத்தை வழி நடத்துவதன் மூலமும், சில கற்பிதங்களை உருவாக்குவதன் மூலமும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தன் பிழைப்பையும், தன் சமூக அதிகாரத்தையும் உருவாக்கி, உறுதிபடுத்திக் கொள்கிறது. அந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் எண்ணற்ற மதங்கள், இறைவழிபாடுகள் உள்ளன! சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளமாரம், காணபத்யம் இன்னும் சில இனக் குழுக்கள் மற்றும் பழங்குடிகளின் மதங்கள்.. என பல மதங்கள் உள்ளன! அதில், ஒரு இனக் குழுவான பிராமணர்கள் மட்டுமே பின்பற்றிய மதம் தான் சனாதனம் என்ற ஒன்று. எப்படி கர்நாடகத்தின் லிங்காயத்துகள் தங்கள் மதத்தை இந்து மதமல்ல, எங்களுடையது தனி மதம் என்கிறார்களோ..’ அது போல பிராமணர்களும், ”நாங்கள் இந்துக்கள் அல்ல, சனாதன தர்மத்துக்குரியவர்கள்” என்று 60வது, 70 வது வருடங்கள் முன்பு வரை சொன்னது தான் வரலாறு! தற்போது அனைத்து இந்திய மதங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்து மதம் என்பது உறுதியான நிலையில், இந்து மதத்தையே ‘சனாதனம்’ எனச் சொல்லி ஒட்டு மொத்தமாக தங்களுடையதாக்கப் பார்க்கிறார்கள் பிராமணர்கள்! இல்லை, இந்து மதம் என்பது யாக வேள்விகள், ஹோமங்கள் செய்யும் சனாதன மதமல்ல. அவரவர்களுக்கு பிடித்த ஒரு உருவத்தையோ அல்லது சூரியன் அல்லது குறிப்பிட்ட மரம் போன்ற இயற்கையையோ வழிபடும் மதம் என்பதே யதார்த்தம். சனாதனத்தில் சிவன் ,சக்தி, முருகன், பிள்ளையார், பெருமாள்..போன்ற எந்த தெய்வமும் இல்லை. அப்படியிருக்க, ‘சனாதனம் தான் இந்து மதம்’ என்றும், ‘இந்து மதத்திற்கு வேதங்கள், உப நிஷத்துக்கள், பகவத் கீதை ஆகியவையே அத்தாரிட்டி’ என்றும் ரஜினி கூறுவது அவரது சொந்தக் குரல் அல்ல, அவரை பேச வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ் – பிராமண சமூகத்தின் குரலே அது. வேதங்களாலும், பகவத் கீதையாலும் யாரும் ஆன்மீகத்தை பெற்றதாக வரலாறே இல்லை. அந்த அனுபவத்திற்கு அதில் இடமில்லை! யாகங்கள், வேள்விகள், ஹோமங்கள் நடத்துவது போன்ற சடங்குகள் ஆன்மீகமே அல்ல, அது தான் சனாதனம்! வேள்வி, யாகங்கள்,ஹோமங்கள்..என்ற சடங்குகளே சனாதனம்! இஸ்லாமிய பாயாக நடிப்பது சினிமா வியாபாரத்திற்காக என்றால், நடைமுறை வாழ்க்கையில் பிழைப்பையும், இருப்பையும் தக்க வைக்க சங்கி வேடம் போட்டுக் கொண்டுள்ளார் ரஜினி! இந்த விழாவில் ரஜினியின் பேச்சு முழுக்கவே பார்ப்பனர்களின் ஊது குரலாகவே ஒலித்தது. ஆக, நிஜ வாழ்க்கையில் ‘டபுள் ஆக்‌ஷன்’ வேடத்தில் கலக்குகிறார் ரஜினி! நன்றாக கவனியுங்கள், அந்த லால் சலாம் விழாவில் ரஜினி பேசுகிறார்; ஒரு ஒற்றையடிப் பாதையாம். இருவர் பயணிக்கிறார்களாம்! நல்லவர் இருவரும் எதிர் எதிரே வரும் போது, அந்தப் பாதை ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து மூன்று வழிப் பாதையாகிறது. அந்த ஒருவரில் ஒருவர் மட்டும் நல்லவராக இருக்கும் போது அந்தப் பாதை இரண்டு வழி பாதையாகிறது. இருவருமே பிடிவாதம் பிடிக்கையில், அங்கே அந்தப் பாதை யாருமே போகாமல் மூடப்பட்டு விடுகிறது. இன்றைக்கு இது தான் நடந்து கொண்டு இருக்கிறது! (அதாவது கடைசியில் சொன்னது. இவ்வாறு ரஜினி பேசி முடித்ததும் அந்தக் கூட்டத்தில் இருந்த நாமம் தரித்த பிராமணர் ஒருவர் கையை பலமாகத் தட்டியதை குளோசப்பில் காட்டினார்கள்.) ”அவரவர் பாதையில் அவரவர் போவோம் என இருந்தால் பிரச்சினை ஏது?” என ரஜினி முடித்தார்! ”பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்குவோம்” என சங்கீகள் கலவரங்கள் நடத்தி ஆயிரமாயிரம் உயிர்கள் பலியான போது நீங்கள் பேசவில்லை. இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட போதும், நீங்கள் பேசவில்லை. அங்கே ராமர் கோவில் கட்டப்பட்டதும் போகிறீர்கள்! தற்போது வாரணாசியில் ஞானவாபி மசூதியை கேட்கிறார்கள்! இந்துக்கள் உள்ளே நுழைந்து பூஜைகளும் நடக்கின்றன! நீங்கள் வாய் திறக்கவில்லை. அங்கே மசூதி இடிக்கப்பட்டு சிவன் கோவில் கட்டப்பட்ட்டதும் போவீர்களோ என்னவோ! அதே போல மதுராவிலும் மசூதியை குறிவைத்து கிருஷ்ணர் கோவில் கட்ட முயற்சிகள் நடக்கின்றன! ”இவை வேண்டாம். அவரவர் பாதையில் அவரவர் செல்வோம்” என நடைமுறை வாழ்க்கையில் உங்களால் சொல்ல முடிந்தால் மட்டுமே நீங்கள் உண்மையான ஆன்மீகவாதி! சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ் https://aramonline.in/16625/lalsalam-rajini-hindu-political-voice/
  23. மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம் February 11, 2024 — டி.பி.எஸ்.ஜெயராஜ் — கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார். தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள சகல ஐந்து மாவட்டங்களிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ்க் கட்சியாக தமிழரசு கட்சியே விளங்குகிறது. ‘சமத்துவமான கட்சிகளில் முதலாவது ‘ என்ற அந்தஸ்தை அனுபவித்துவந்த போதிலும், அந்த கட்சி அண்மைக்காலமாக நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டது. இந்த நிலைக்கு சேனாதிராஜாவின் சுயநல நடத்தை பெருமளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறது. மாவை சேனாதிராஜா மொத்தமாக ஒரு ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். பிறகு 20 பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவாகி 20 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மொத்தமாக 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். 2014 தொடக்கம் 2024 வரை பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். அதற்கு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார். தமிழரசு கட்சியின் தலைவர்கள் இரு பதவிக் காலங்களுக்கும் அதிகமாக பதவியில் தொடர்ந்து இருக்காத ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் தலைவராக வந்த முதுபெரும் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கினார். அவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா 2014 ஆம் ஆண்டு் தலைவரானார். இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து அவர் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு செய்யவில்லை. 2014 — 2024 காலப்பகுதியில் அவர் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தார். தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ச்சியாக பத்து வருடங்களாக நீடித்த ஒரே அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவே ஆவார். கட்சியின் தாபகத் தலைவரான மதிப்புக்குரிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தந்தை செல்வா ) கூட அவ்வாறு பல வருடங்கள் தலைவராக இருந்ததில்லை. தமிழரசு கட்சியின் மகாநாடு : =================== சுமார் ஒரு தசாப்தகாலமாக “நல்ல வழியோ, கெட்ட வழியோ எப்படியாவது” மாவை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்துவிட்டார். புதிய ஒரு தலைவர் கட்சியின் பொது மகாநாட்டில் வைத்து பொதுச் சபையினாலும் மத்திய செயற்குழுவினாலும் தெரிவுசெய்யப்படுவதும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மகாநாடு நடத்தப்படுவதும் வழமை. ஆனால், 2014 மகாநாட்டில் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பிறகு அடுத்த மகாநாடு 2019 ஆண்டில் மாத்திரமே நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலும் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவான பிறகு இன்னொரு ஐந்து வருடங்களாக 2024 வரை அவரால் மகாநாட்டை ஒத்திவைக்கக்கூடியதாக இருந்தது. 2024 ஜனவரியில் மகாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோது தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் ஒன்று நடக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தமிழரசு கட்சி தேர்தலைத் தவிர்த்து கருத்தொருமிப்பின் அடிப்படையிலான நடைமுறை ஒன்றே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த நிலையில் தலைவர் தெரிவுக்கு உட்கட்சி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை. போட்டித் தேர்தல் கட்சியைச் சிதறடித்துவிடும் என்ற அச்சம் கட்சி வட்டாரங்களில் நிலவியது. அந்த அச்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இந்த அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய மாவை சேனாதிராஜா இடைக்காலத் தலைவராக தானே பதவியில் தொடர்ந்துகொண்டு மகாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். அவரின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால் அவரது யோசனையை ஏற்பதற்கு எவரும் இருக்கவில்லை. அதனால் தி்ட்டமிட்டபடி ஜனவரி 21 தமிழரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இன்னொரு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை சிவஞானம் சிறிதரன் 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். அதற்குப் பிறகு புதிய மத்திய செயற்குழுவும் கட்சியின் புதிய நிருவாக உறுப்பினர்களும் ஜனவரி 27 ஆம் திகதி தெரிவு செய்யப்படவிருந்தனர். மறுநாள் மகாநாட்டின் பொதுகூட்ட்டத்தில் பழைய தலைவர் சம்பிரதாயபூர்வமாக பதவியில் இருந்து இறங்கவும் புதிய தலைவர் பொறுப்பை ஏற்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது. பொதுச்செயலாளர் உட்பட புதிய நிருவாகிகளும் அன்னறயதினம் அறிமுகம் செய்யப்படவிருந்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டவுடன் பழைய தலைவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் தன்னியல்பாகவே புதிய தலைவராகிவிடுவார். அடுத்த நாள் மகாநாட்டில் முறைப்படி பதவிப்பொறுப்பைக் கையளிப்பது என்பது வெறுமனே அடையாளபூர்வமான ஒரு சம்பிரதாய நிகழ்வு மாத்திரமே. ஆனால், ஜனவரி 27 தமிழரசு கட்சிக்குள் குழப்பம் மூண்டது. ஆரம்பத்தில் சிறிதரன் சுமந்திரனுக்கு நேசக்கரம் நீட்டி இருவரும் சேர்ந்து பணியாற்றும் நிலை தோன்றியது. ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டது. அடுத்து 2024 — 2026 காலப்பகுதிக்கான கட்சியின் புதிய நிருவாகிகள் பட்டியலும் இறுதிசெய்யப்பட்டது. பொதுச்செயலாளர் : ============= இந்த நிருவாகிகளில் முக்கியமான செயலாளர் பதவியும் அடங்குகிறது. 16 நிருவாக உறுப்பினர்கள் பட்டியலும் மத்திய செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பட்டியல் பொதுச்சபைக்கு ஒரு தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. புதிய தலைவர் சிறிதரனின் முன்மொழிவை குழு உறுப்பினரான பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து சில கலந்தாலோசனைக்கு பிறகு பொதுச்சபையும் அதை அங்கீகரித்தது. தலைவர்,செயலாளர் என்ற முக்கிய பதவிகளை வடக்கையும் கிழக்கையும் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்வது தமிழரசு கட்சியில் ஒரு நடைமுறையாகப் பின்பற்றுப்பட்டு வருகிறது. வட மகாணத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருந்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். கிழக்கு மாகாணத்தவர் தலைவராக இருந்தால் வட மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். சிறிதரன் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயலாளர் கிழக்கு மாகாணத்தவராக இருக்கவேண்டும். சிறிதரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் செயலாளர் பதவி மீது கண்வைத்திருந்தார். ஆனால் அவருடன் சிறிதரன் பேசி திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சி தலைவரான சண்முகம் குகதாசன் செயலாளராகுவதற்கு வழிவிட இணங்கவைத்தார். மதிய உணவுக்கு பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியபோது மனமாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டது போன்று தெரிந்தது. தானே செயலாளராக வரவேண்டும் என்று தனது நலன் விரும்பிகள் விரும்புவதால் குகதாசனை செயலாளராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சிறீநேசன் கூறினார். சுமந்திரனின் ஆதரவாளராக குகதாசன் தவறாக கருதப்பட்டதால் சிறிதரனின் பல ஆதரவாளர்களும் அவரை கண்டனம் செய்ததுடன் செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறினர். பொதுச்செயலாளர் உட்பட முழு நிருவாகிகள் பட்டியலும் ஏற்கெனவே மத்திய செயற்குழுவினாலும் பொதுச்சபையினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததனால் இப்போது அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ‘தேர்தலை’ நடத்திவைக்குமாறு பதவி விலகும் தலைலர் சேனாதிராஜாவும் புதிய தலைவர் சிறிதரனும் சுமந்திரனைக் கேட்டு்க்கொண்டனர். பட்டியலை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை பொதுச்சபை உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தி வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்கலாம் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார். ‘ஆம்’ என்ற வாக்குகளும் ‘இல்லை’ என்ற வாக்குகளும் வரிசை வரிசையாக எண்ணப்பட்டன. சுமந்திரன் கைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது சிறிதரனின் உறுதியான ஆதரவாளரான நாவலனும் தனியாக கணக்கெடுத்தார். இருவரதும் எண்ணிக்கைகள் ஒன்றாகவே இருந்தன. சண்முகம் குகதாசன் : ===========•== செயலாளர் சண்முகம் குகதாசன் உட்பட நிருவாகிகள் பட்டியலுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதன் மூலமாக தமிழரசு கட்சியின் புதிய செயலாளர் குகதாசன் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது. தமிழரசு கட்சியின் மகாநாடு மறுநாள் நடக்கவிருந்தது. புதிய தலைவரும் செயலாளரும் நிருவாகிகளும் பொதுமக்கள் முன்னிலையில் வைபவரீதியாக பதவிகளை ஏற்றுக்கொள்ளவிருந்தனர். தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கலைந்து சென்றுகொண்டிருக்கையில், பொதுச்சபை உறுப்பினர்களில் ஒரு குழுவினர் மாவை சேனாதிராஜாவை அணுகி குகதாசனை செயலாளராக தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் ஜனவரி 28 கட்சியின் மகாநாடு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினர். சேனாதிராஜா அப்போது “விசித்திரமான” முறையில் நடந்துகொண்டார். புதிய தலைவர் சிறிதரனைக் கலந்தாலோசிக்காமல் முன்னாள் தலைவர் மாவை அடுத்த நாள் நடைபெறவிருந்த மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். செயலாளர் பதவி தொடர்பில் தகராறு ஒன்று இருப்பதால் புதிய தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்குப் பிறகு மாத்திரமே மகாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறினார். இன்னமும் கூட தானே கட்சியின் தலைவர் என்ற மாயையில் மாவை இருக்கிறார் போன்று தெரிந்தது. மாகாநாட்டில் மாத்திரமே சிறிதரன் உத்தியோகபூர்வமாக பதவியேற்பார் என்று மாவை நினைத்தார் போன்று தோன்றியது. அதனால் மகாநாட்டை ஒத்திவைத்ததன் மூலம் அவர் தனது தலைவர் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படுவதாக நினைத்தார். சிறிதரனும் சுமந்திரனும் : =============== சிறிதரனும் சுமந்திரனும் ஜனவரி 28 சேனாதிராஜாவை சந்தித்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் உண்மை நிலைவரம் என்ன என்பதை ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் அந்த சந்திப்பில் சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார். ஜனவரி 27 மத்திய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு சேனாதிராஜா தலைவர் பதவியில் இல்லாமற்போய்விட்டார் என்று சுமந்திரன் சுட்டாக்காட்டினார். மகாநாடு நடத்தப்படுமோ இல்லையோ சிறிதரன் தான் இப்போது கட்சியின் தலைவர். அதனால் சேனாதிராஜாவினால் ஒருதலைப்பட்சமாக மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது செல்லுபடியாகாது. பொதுச் செயலாளராக குகதாசனின் தெரிவும் சட்டத்தில் செல்லுபடியாகும் என்றும் சுமந்திரன் வலியுறுத்திக்கூறினார். மத்திய செயற்குழு அதை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது. பொதுச்சபையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதனால், புதிய செயலாளரைத் தெரிவுசெய்யவேண்டியிருக்கிறது என்ற சாக்குப்போக்கில் மகாநாட்டை சேனாதிராஜா ஒத்திவைத்தது சரியானதல்ல. சுமந்திரனின் விளக்கத்தை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. தானே இன்னமும் கட்சியின் தலைவர் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். தனது மகனின் திருமணத்துக்காக சிங்கப்பூர் செல்வதாகவும் பெப்ரவரி 10 ஆம் திகதியே நாடு திரும்பவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு திரும்பியதும் பொதுச்சபையைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் கூறியது சிறிதரனுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிறீநேசனை ஆதரிக்கும் தனது ஆதரவாளர்களின் நெருக்குதலின் கீழ் சிறிதரன் இருந்தார். சேனாதிராஜாவின் யோசனை தமிழரசு கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சுமந்திரன் அப்போது கூறினார். அதற்கு சேனாதிராஜா “கட்சியின் யாப்பின் பிரகாரம் எல்லாவேளையிலும் நடக்கவேண்டும் என்றில்லை” என்று பதிலளித்தார். கட்சியின் யாப்பை மீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதனால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படலாம் என்றும் சுமந்திரன் கூறிவைத்தார். வார்த்தைகளில் கூறாமல் சிறிதரன் குறிப்பால் உணர்த்திய ஆதரவுடன் மாவை சுமந்திரனின் ஆலோசனையை அலட்சியம் செய்துவிட்டு சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார். சட்டரீதியான நிலைப்பாடு =============== அதைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய சட்டரீதியான நிலைப்பாட்டை விளக்கி சுமந்திரன் சிறிதரனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். சிறிதரனே தற்போது தலைவர் என்றும் சாத்தியமானளவு விரைவாக அவர் வைபவரீதியாகப் பதவியை ஏற்கவேண்டும் என்றும் சுமந்திரன் கடிதத்தில் வலியுறுத்தினார். கடிதம் ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டது. தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜாவுக்கு சுமந்திரன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றையும் வழங்கினார். ‘நெற்றிக்கண்’ அலைவரிசையில் ஒளிபரப்பான அந்த நேர்காணலில் அவர் தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் சட்டரீதியான நிலைப்பாட்டை மிகவும் விரிவாக விளக்கினார். அடிப்படை தமிழ் மொழியறிவும் கொஞ்சமேனும் பொது அறிவும் இருக்கும் எவரும் சுமந்திரனின் கடிதத்தையும் வாசித்து தொலைக்காட்சி நேர்காணலையும் பார்த்தால் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவு தொடர்பிலான தற்போதைய சட்ட அடிப்படையிலான நிலைப்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால் மாவை அநாவசியமாக பிரச்சினையைத் தேடிக்கொண்டார் போன்று தெரிகிறது. செயலாளர் பதவி தொடர்பிலான தகராறு நீண்ட ஒரு காலத்துக்கு தானே தலைவர் பதவியில் தொடருவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற மருட்சியில் அவர் இருக்கிறார். சாத்தியமானளவு காலத்துக்கு கட்சியின் அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதில் மாவைக்கு இருக்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவரது நடத்தை கண்டிக்கத்தக்கது என்றாலும் விளங்கிக் கொள்ளக்கூடியதே. ஒருதலைப்பட்சமான தனது நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகளை சேனாதிராஜா புரிந்துகொள்ளவில்லை. சட்டரீதியான தலைவராக இல்லாதபோது தமிழரசு கட்சியின் தலைவரின் அதிகாரங்களையும் கடமைப் பொறுப்புக்களையும் கையகப்படுத்துவது சாதாரண விடயம் அல்ல. தமிழரசு கட்சியின் யாப்பை மீறுவதற்கு தயாராயிருப்பது போன்று பேசுவது மேலும் மோசமானதாகும். இந்த கட்டத்தில் பெரிதாக ஊகங்களைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனால் சேனாதிராஜா பெரும்்ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். மகாநாட்டை திடீரென்று ஒத்திவைத்ததன் விளைவாக ஏற்கெனவே கட்சிக்கு பெரும் பணவிரயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல் மகாநாட்டை சட்டவிரோதமாக ஒத்திவைத்ததன் மூலமாக ஏற்பட்ட இழப்புக்களை பொறுப்பேற்கவேண்டிய நிலைக்கு மாவை தள்ளப்படலாம். மேலும் தலைவர் தெரிவு உட்பட கட்சியின் தேர்தல் முழுவதுமே செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்யப்படக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் அதற்கு மாவையே பிரதான காரணம். ஜனவரி 21 கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றபோது சேனாதிராஜாவே தலைவராக இருந்தார். மத்திய செயற்குழுவுக்கு மேலும் 18 உறுப்பினர்களை நியமிப்பதற்கு அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார். அது கட்சியின் யாப்புக்கு எதிரானது. ஆனால் கட்சி யாப்பின் விதிமுறைகளை பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லாத சேனாதிராஜா அந்த நியமனங்களை தன்னெண்ணப்படி அடாத்தாகச் செய்தார். மகன் கலையமுதன் : ============= மத்திய செயற்குழுவுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களில் சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் அவரது மாமியார் சசிகலா ரவிராஜும் அடங்குவர். சசிகலா கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியாவார். அவர்களின் மகள் பிரவீனாவையே கலையமுதன் மணம் முடித்திருக்கிறார். இரு முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகனுக்கும் மகளுக்கும் இடையிலான பந்தம் குடும்பத்தாருக்கு ஆதரவும் சலுகையும் அளிப்பதாக மாவைக்கு எதிராக குற்றச்சாட்டு கிளம்புவதற்கு வழிவகுத்திருக்கிறது. புதிய ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக சேனாதிராஜா தனது மகனை அரசியலில் ஊக்குவிக்கிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராக கலையமுதன் தெரிவுசெய்யப்பட்டார். அந்த பிரதேச சபையின் தலைவராக அவரைத் தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக கலையமுதனை கொண்டுவருவதற்கான இன்னொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டன. சேனாதிராஜாவும் சசிகலாவும் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடனர் எனினும் வெற்றிபெறவில்லை. கலையமுதன் வலிகாமம் வடக்கில் வீதியொன்றுக்கு தனது பெயரைச் சூட்டவைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. அரசியலில் சேனாதிராஜாவின் சுயநலச் செயல்களுக்கு பல சம்பவங்களைக் கூறமுடியும். 2020 பாராளுமன்ற தேர்தலில் உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனுடன் அணிசேர்ந்துகொண்டு தமிழரசு கட்சியின் சகபாடி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது அவற்றில் ஒன்று. ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு தனது சொந்த தமிழரசு கட்சியின் நலன்களுக்கு எதிராக சேனாதிராஜா அடிக்கடி துரோகத்தனமாகச் செயற்பட்டிருக்கிறார். இன்பதுன்பம் கலந்த நீண்டகால அரசியல் வாழ்வொன்றில் சேனாதிராஜாவுக்கு நிலையான நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. ஆனால், ஒரு சுயநலத்துடன் கூடிய நிலையான நலன்கள் இருக்கின்றன. மாவையின் கடந்த காலம் ========= தமிழரசு கட்சியில் மாவை சேனாதிராஜாவின் கடந்தகாலத்தை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது பகுதி அவரின் வாழ்வின் தொடக்ககாலத்துடன் தொடர்புடையது. இளைஞனாக பல போராட்டங்களில் பங்கேற்று அரசியல் காரணங்களுக்காக சிறைசென்ற அவர் கணிசமான தியாகங்களைச் செய்திருக்கிறார். இந்தியாவில் சுய அஞ்ஞாதவாசம் செய்த காலப்பகுதி பல்வேறு வழிகளில் கடுமையான இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அதை நான் நேரடியாக கண்டேன். அவரது வாழ்வின் இரண்டாவது பகுதி வித்தியாசமானது. இந்த பகுதியில் சேனாதிராஜா பழைய காலத்து இலட்சியவாதியாக நடந்துகொள்ளவில்லை. அரசியலில் உயர்மட்டத்தில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு சுயநல அரசியல்வாதியாக மாறினார். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்தை அடுத்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு தரவேண்டும் என்று கோரியது தொடக்கம் 2020 தேர்தல் தோல்விக்கு பிறகு தேசியப்பட்டியல் உறுப்பினராக வருவதற்கு அருவருக்கத்தக்க முறையில் மேற்கொண்ட முயற்சி வரை அரசியல் பதவியைப் பெறவதில் தனக்கு இருக்கும் சுயநல வேட்கையை சேனாதிராஜா வெளிக்காட்டினார். அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு கட்சியும் கட்சி உறுப்பினர்களும் ஏன் இடங்கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொறுத்துக் கொள்ளமுடியாத சுயநலத்தை ஏன் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்? அதற்கு பதில் சேனாதிராஜாவின் கடந்த காலமே. தியாகங்கள் நிறைந்த அவரின் இளமைக்காலப் போராட்ட வாழ்வை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டிக்கவோ விமர்சனம் செய்யவோ தயங்குகிறார்கள். தற்போது அவர் எவ்வாறு நடந்துகொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்த காலத்தைப் பற்றியே நினைக்கும் அவர்கள் தொடர்ந்தும் அவர் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இந்த கட்டுரையாளரும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை வரும்வரை “சேனாதி அண்ணை” மீது அன்புகொண்டிருந்தவர்களில் ஒருவரே! https://arangamnews.com/?p=10461

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.