-
Posts
34939 -
Joined
-
Days Won
173
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கிருபன்
-
அர்ஜுன் அண்ணருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்??
-
தலைவரோடு நிற்பவர் நான் இணைத்த படத்தில் தலைவருக்கு இடப்பக்கமாக முதலாவதாக நிற்பவரா? இரண்டாவதாக நிற்பவரா? அதுதான் எனது கேள்வி.
-
தலைவருக்கு இடப்பக்கமாக முதலாவதாக நிற்பவரா? இரண்டாவதாக நிற்பவரா?
-
ஈழப்பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?
-
தந்தை தன் மிகச்சிறிய பகுதியையே மைந்தர்களிடம் காட்டமுடியும். அந்தச் சிறிய பகுதியைக்கொண்டு அவர் உருவாக்கும் தன்னுரு மிகப்பொய்யானதே. மைந்தர்கள் அந்தப்பொய்யுருவை இளமையில் நம்புகிறார்கள். பின்னர் அதை உடைத்துப்பார்க்க ஒவ்வொரு தருணத்திலும் முயல்கிறார்கள். ஏனென்றால் அந்தப்படிமை மைந்தனுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. பிழைகளோ கீழ்மைகளோ அற்றது. தன் பிழைகளையும் கீழ்மைகளையும் அறியத் தொடங்கும் வயதில் தந்தையை உடைத்து அவரிலும் அவற்றைக் காணவே மைந்தர் விழைகிறார்கள். அந்தமோதலே மைந்தரின் வளரிளமைப் பருவத்தில் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் இடையே எங்கும் நிகழ்கிறது. ஆனால் முழுமையாக உடைபட்டதுமே தந்தை இரக்கத்துக்குரிய முதியவராக ஆகிவிடுகிறார். எப்போது தந்தையை எண்ணி மைந்தர் சிரிக்கத் தொடங்குகிறார்களோ அங்கு அவர்களுக்கிடையேயான உறவு மீண்டும் வலுப்படுகிறது. தந்தை மைந்தனாகிவிடுகிறார். தனயர்கள் பேணுநர்களாகி விடுகிறார்கள். - வெண்முரசு
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுப.சோமசுந்தரம் அண்ணா. ? இன்றைய நாள் இனிதாக அமையட்டும்?
-
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சாந்தி அக்காவுக்கும் தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!???
-
அட ஹொலிடேயா! ரஷ்யாவுக்கு ஃபுட்போல் பார்க்கப் போயிருப்பாரோ? அவர் திரும்ப வந்தவுடன் பழையபடி “நவீன யாழ்” களமாகிவிடும்?
-
நவீனன் செய்திகளை ஒட்டுகின்ற மாதிரித் தெரியவில்லை என்பதால் நான் வாசித்த செய்திகளை/விடயங்களை நேற்றும் இன்றும் அளவாக ஒட்டியுள்ளேன்? நவீனன் யாழை அம்போ என்று விட்டுவிட்டுப் போகாமல், முக்கியமாக உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் சேவையை தொடர்ந்தால் நல்லது!
-
காணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்… வயவையூர் அறத்தலைவன் காணரும் வீரனின் 33ஆம் ஆண்டு நினைவுகளுடன்… வீரவேங்கை அன்பு (மூத்ததம்பி தனபாலசிங்கம்) வீரச்சாவு 16/04/1985 வீரப்பிறப்பு 20/05/1960 நல்லூர் என்றால் தியாகி திலீபன் நினைவில் வருவது போல, மாமாங்கம் என்றால் அன்னை பூபதி நினைவில் வருவது போல, அடம்பன் என்றால் பெருவீரன் லெப்.கேணல் விக்டர் நினைவில் வருவது போல, நெல்லியடி என்றால் கரும்புலி கப்டன் மில்லர் நினைவில் வருவது போல, வடமராட்சி கிழக்கு என்றால் முதலில் ஓடி வந்து நிற்பது அன்பு அண்ணரின் தியாக(வீர)வரலாறுதான்! மானிப்பாய் பகுதியில் தனது சக போராளிகளை காப்பாற்றி தன் உயிர் கொடுத்த வீரவேங்கை அன்பு அவர்களும் செம்மொழி பேசும் எம்மினத்தில் தியாகத்தின் எல்லைகளை மாற்றி அமைத்தவர். 16/04/1985 அன்று தனது உயிரைக்கொடுத்து அன்றைய யாழ்மாவட்ட தளபதியான கேணல்.கிட்டுவை காத்தருளியவர்தான் இந்த அன்பு. கைக்குண்டு ஒன்றின் பாதுகாப்பு நெம்புகோல் தவறுதலா கழன்று அடுத்த கணம் வெடிக்கும் நிலையை அடைந்தது. இந்த இக்கட்டான நிலையில் அதை தூர வீசவும் முடியாத சூழ்நிலையில் எல்லோருமே ஆபத்தில் சிக்கிய கணப்பொழுதில் மின்னலெனச் செயற்பட்டார் வீரவேங்கை அன்பு. ஆம்,அக்குண்டின் மேல் தானேபடுத்து, குண்டுச் சிதறல்களைத் தானே வாங்கி,தன்னைத் தானே சிதைத்து, தன் இனிய தோழர்களைக் காத்தருளி தியாக வேள்வியின் ஆரம்பகாலங்களில் ஆகுதியானார். முன்னாள் கனரக ஆயுத பயிற்சியாளரான வீரவேங்கை அன்பு தமிழர்தம் நவீன வீரவரலாற்றில் தனக்கென ஓர் தனியிடம் பெற்ற ஓர் பெரும் வீரன். அன்பு அண்ணாவின் தியாகத்துக்கு பின்னர் இவரது குடும்பத்தில் பலர் தம்மை போராளியாக்கி தாய்நிலத்தின் பல பாகங்களில் உலா வந்தார்கள். அவர்களில் கப்டன் அன்பானந்தன் முதன்மையானவன். அவர்களுடன் பழகுவதற்கு அடியேனுக்கு வாய்ப்புக் கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். வடமராட்சி கிழக்கின் முதலாவது போராளியாகிய வீரவேங்கை அன்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாவது பயிற்சி அணியில் பயிற்சிபெற்றவர். சோழர்கள்(செம்பியர்கள்) தரையிறங்கிய வடமராட்சி கிழக்கிலிருந்து அதிகளவான போராளிகளை 1983ஆம்,1984ஆம்,1985ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைத்த வீரன் வீரவேங்கை அன்பு ஆவார்! வடமராட்சிகிழக்கின் முதலாவது மாவீரரும் இவரேதான்! முப்படை கண்ட தமிழர் சேனையின் போராட்டவரலற்றில் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்த இவ் வீரனை #தியாகசீலன்_அன்பு என தமிழர்தம் வரலாறு பெருமையுடன் பதிவு செய்துள்ளது! இப்பெரும் தியாகியை என்றென்றும் நன்றியுடன் நினைவில் கொள்வோம்! http://vayavan.com/?p=7279
-
தூய அறிவென்று ஏதுமில்லை. அறிவதெல்லாம் நம்முள் சென்று அகங்காரமாகவே மாறுகிறது. அறத்தால் வழிநடத்தப்படும் அறிவு மட்டுமே மனிதனுக்கு பயன் தரக்கூடியது. - வெண்முரசு
-
தேசம் துவண்டநாள் 20-05-2008 மரபுவழி தாக்குதலின் வெற்றி நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர்” என்று தேசியத்தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர். ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பு என்பவற்றின் ஊடாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர். வெற்றி நாயகனாய் வலம் வந்த அந்த தளபதி வித்தாகி மூன்று ஆண்டுகள் மறைந்து விட்டாலும் அவருடன் நீண்டகாலமாக பயணித்த அந்த நாட்களின் நினைவுகள் என்றைக்குமே அழியாதவை. ஒவ்வொரு கணமும் வந்து போகும் அவரைப்பற்றிய நினைவுகள், தொடர் துன்பங்களால் துவண்டுபோன உணர்வுகளின் அடிநாளத்தை உரசிச் செல்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய கரையோரக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய்தான் வீரத்தளபதி பால்ராஜ் அவர்களை எமக்குக் கொடுத்தது. ஒருபக்கம் பெருங்கடல் மற்றைய பக்கம் சிறுகடல் சூழ்ந்திருக்க, வயல் வெளிகள் தென்னைத்தோப்புகள் அதனைத் தொடர்ந்து காடு என அழகான அமைதியான அந்தக் கிராமத்தில் கந்தையா கண்ணகி தம்பதியினருக்கு 1964 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ம் திகதி (தமிழீழ மாவீரர் தினம் கொண்டாடும் நாள்) பிறந்த இவர் ஆரம்பகல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் புல்மோட்டையிலும் படித்தார். அவரது வாழ்வியல் சூழல் இளவயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக ஆக்கியது. அதனால் அப்பகுதி காடுகள், பிரதேசங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார். வேட்டையாடுவதற்கு தேவையான அடிப்படை விடயங்களான அவதானிப்பு, கடுமையான முயற்சி, கடினங்களை தாங்கும் தன்மை, அலைந்து திரிதல், மிருகங்களின் தன்மைகளுக்கேற்ப தந்திரோபாய ரீதியல் வேட்டையாடல், பொறுமை, மிருகங்களின் தடையங்களை பின்தொடர்ந்து செல்லுதல் போன்ற பண்புகள் சிறுவயது முதல் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் வேட்டைக்கு சென்றால் ஒருபோதும் வேட்டையில்லாமல் திரும்பமாட்டார் என்னுமளவிற்கு ஓர்மம் மிக்க குணாதியசம் கொண்டவர். இவர் பிறந்து வளர்ந்த மணலாறு என அழைக்கப்படும் சிலோன் தியட்டர், மண்கிண்டிமலை முந்திரைக்குளம், கென்பாம், டொலர்பாம் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற தொழில் வாய்ப்புள்ள, வளம் மிக்க விளைநிலங்களை கொண்ட பகுதிகளில் இருந்த தமிழ்மக்களை விரட்டியடித்து, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்குடன் இலங்கை அரசானது செயற்பட்டது. இதனால் அவரது குடும்பம் உட்பட அங்கு வாழ்ந்த மக்களும் அவரது உறவினர்கள் பலரும் வாழ்விடங்கள் சொத்துக்களை இழந்து ஓரிரவில் அகதிகளாக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக ஆயுதப் போராட்டத்தினுடாகவே எமது பிரதேசங்களை பாதுகாக்க முடியும் என்று முடிவெடுத்தார். இவரது போக்கை உணர்ந்த தந்தையார் “நீ போராட தீர்மானித்தால் பிரபாகரன் இயக்கத்தில் இணைந்து போராடு, அந்த இயக்கம் தான் சரியான வழியில் போராடும்” என சொல்லி வழிகாட்டியதை பால்ராஜ் அவர்கள் நினைவுகூருவார். அவர் 1983ம் ஆண்டு விடுதலைப் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டார். கொக்குத் தொடுவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருக்கு மணலாறு, தென்னமரவடி, புல்மோட்டை உள்ளடங்கலாக அப்பிரதேசங்கள் முழுதும் பரீட்சயமாக இருந்தது. ஆரம்பத்தில் உள்ளுர் பயிற்சியுடன் வழிகாட்டியாகத் தனது பணியை செய்து கொண்டிருந்த காலத்தில் 1984ம் ஆண்டு ஒதியமலையில் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது இலங்கை இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் லெப் காண்டிபன் உட்பட 09 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதில் தோள்பட்டையில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அதன் பின்னர் இந்தியா-09 பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். மேஜர் பசீலன் அவர்களுடன் நாடு திரும்பிய அவர் வன்னி அணியுடன் இணைந்து அணிக்கான சமையல் பணிகளை செய்து வந்தார். இவரது பல்வேறுபட்ட திறமைகளை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட தளபதியாகவிருந்த பசீலன் அவர்கள் முல்லைத்தீவு அணியுடன் இணைந்து பணியாற்ற அழைத்துச் சென்றார். அவரது செயற்பாடுகளினால் சில நாட்களிலேயே பசீலன் அவர்களின் நம்பிக்கைக்குரியவரானார். முந்திரிகைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல், கிளிநொச்சி திருநகர் முறியடிப்புத் தாக்குதல், என பல தாக்குதல்களில் பசீலன் அண்ணையுடன் பங்கெடுத்திருந்தார். அது மட்டுமன்றி இந்திய இராணுவத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் கோப்பாயில் நடந்த சமரில் ஆர்.பி.ஜி யால் டாங்கி ஒன்றை தகர்த்து பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார். 1987 ம் ஆண்டு முல்லைத்தீவு முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டிருந்த போது பசீலன் அண்ணை வீரச்சாவடைந்தார். தளபதியை இழந்த நிலையில் உடனடியாக அக்களமுனை கட்டளையை பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள், தனக்கேயுரிய தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தி தாக்குதலைத் தொடர்ந்து வழிநடத்தினார். பல சண்டைகளில் தனது சண்டைத்திறனை வெளிப்படுத்தினாலும் இச்சண்டையே அவரது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலையும் சண்டைத்திறனையும் தலைவருக்கு வெளிக்காட்டியது. தளபதி பசீலன் அண்ணையின் இழப்பினால் துயரமும் கோபமும் அடைந்த தளபதியும் போராளிகளும், பசீலன் அண்ணைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாக்குதல் ஒன்றை செய்யும் நோக்குடன் ஓய்வின்றி திரிந்தனர். அவர்களின் முயற்சி வீணாகவில்லை. பழம் நழுவி பாலில் விழுவதைப்போல பசீலன் அண்ணையின் இழப்பிற்கு காரணமான இருந்த இந்திய அணியே தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் தாக்குதல் எல்லைக்குள் வந்தது. கோபத்துடன் இருந்த போராளிகள் அனைவரும் ஆவேசமாக தாக்குதலை மேற்கொண்டு வந்த படையை நிர்மூலமாக்கினர். அத்துடன் உதவிக்கு வரும் அணியையும் அழிக்க வேண்டும் என பொருத்தமான இடத்தில் நிலையெடுத்துக் காத்திருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே உதவிக்கு வந்த அணியையும் அழித்து மொத்தமாக இருபந்தைத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தை கொன்று இழந்த தளபதிக்கு அஞ்சலியைச் செலுத்தினார்கள். பசீலன் அண்ணை “எல்லோரையும் மிரளவைக்கும் துணிச்சல்காரன், சிறந்த திட்டமிடலான பல தாக்குதல் உத்திகளையும் அவரிடம் அறிந்து கொண்டேன் அவருடனிருந்த நாட்கள் பசுமையானவை” என பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கூறுவார். தலைவருடன் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பால்ராஜ் அவர்கள் இந்தியப்படையினர் மணலாற்றுக் காட்டை முற்றுகையிட்டு தலைவரை குறிவைத்துப் பல இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தபோது தலைவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலும், தலைவரைச் சந்திக்க வருபவர்களை முற்றுகைக்குள்ளால் நகர்த்தும் பணிகளையும் செய்து வந்தார். இச்சமயத்தில், தலைவர் காட்டிலிருப்பது பாதுகாப்பில்லை எனவே வெளியேறி வேறு நாட்டுக்கு செல்லுமாறு சில விடுதலை விரும்பிகள் கேட்;டபோது “என்ர இனத்தின்ற கௌரவத்தையும் என்னையும் விற்கவேண்டாம் எனக்கு என்ன நடந்தாலும் அது இங்கேயே நடக்கட்டும் பிரபாகரன் தப்பி ஓடியதாக இருக்கக்கூடாது போராடி வென்றான் அல்லது வீரமரணமடைந்தான் என்றுதான் வரலாற்றில் இருக்க வேண்டும்” என்ற செய்தியை சொல்லும்படி தலைவர் ஆக்ரோசமாக கூறியதை போராளிகளுடன் பகிர்ந்து கொள்வார். வன்னிப்பிராந்திய தளபதியாக முல்லைத்தீவு, நெடுங்கேணி பாடசாலையில் அமைந்திருந்த இந்தியப்படையினர் முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி லெப்.கேணல் நவம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இதன் பின்னர் பால்ராஜ் அவர்களை அழைத்த தலைவர் “இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை மேலும் பரவலாக்கும் போது தான் கூடுதலாக இராணுவத்தை மணலாற்றை நோக்கி ஒன்று சேர்க்கமுடியாது. அது தான் மணலாற்றை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள்ளிருந்து தளர்த்துவதற்கான வழிமுறை” எனவே முல்லைத்தீவில் மட்டுமல்ல வன்னியெங்கும் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் எனக்கூறி, வன்னி பெருநிலப்பரப்பின் தளபதியாக நியமித்தார். பால்ராஜ் அவர்கள் பசீலன் அண்ணையிடம் கற்றுக்கொண்ட சண்டை அனுபவம் மற்றும் தலைவருடன் இருந்த காலத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட தலைமைத்துவம், சண்டைத் தீர்மானங்கள், நிர்வாகம், அரசியல், போன்றன அவரின் தலைமைத்துவத்தை மேலும் செம்மைப்படுத்துவதற்கு வாய்ப்பளித்தது. பொறுப்பை ஏற்ற தளபதி பால்ராஜ் அவர்கள் முதலில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்குடன், அம்மாவட்டங்களில் இருந்த போராளிகளை சந்தித்து தலைவரின் எண்ணத்துடன் புதிய தாக்குதல் உத்திகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக நடைப்பயணம் ஒன்றை மேற்கோண்டார். ஆனாலும் வெறும் நடைப்பயணம் என்ற நோக்கைத் தாண்டி சென்ற இடங்களிலெல்லாம் தென்படும் இராணுவத்தின் மீது உடனடி தாக்குதல்களை மேற்கொண்டார். இத்தாக்குதல்கள் போராளிகளுக்கு மேலும் தெம்பைக் கொடுத்தது. பால்ராஜ் அவர்களை தனது போர் ஆசானாக கொண்ட தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதல் பற்றி தெரிவிக்கும் போது “மணலாற்றில் தலைவரிடத்தில் இருந்து வந்து மூன்று மாவட்டங்களிற்கும் நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்தி, தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து, தலைவரின் கட்டளைகளையும் வழங்கி ஒரு பம்பரம் போல் சுழன்று திரிந்தார். அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பேசுவது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வோ களைப்போ தெரிவதில்லை. படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து – திட்டமிட்டுத் தாக்குவது வழமை. எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம். ஆனால் இது கடினமானது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து”. என்று கூறியுள்ளார். இந்திய கொமாண்டோக்களின் பதுங்கித் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் தளபதி பால்ராஜ் அவர்களைப் பொறுத்தவரையில் சண்டைகளை சவாலாக எடுத்துச் செய்வது இயல்பு. மணலாற்றை இந்திய இராணுவம் இறுக்கமான முற்றுகைக்குள் வைத்திருந்த காலப்பகுதியில் முக்கிய பயணம் ஒன்றை மேற்கொண்டு நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சிறு அணியுடன் சென்று கொண்டிருந்தார். நகர வேண்டிய காட்டுப்பாதையில் இருந்த தடயங்களை வைத்து இந்தியப்படையின் விசேட கொமாண்டோக்களின் தடையம் என்பதை ஊகித்துக் கொண்டார். நாங்கள் செல்ல வேண்டிய பாதையில் ஏதோ ஒரு இடத்தில் எதிரி நிலையெடுத்திருப்பான் என்பதை புரிந்து கொண்ட தளபதி பயணத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தாக்குதலை மேற்கொள்பவனுக்கெதிராக தாக்குதலை மேற்கொள்வோம் என முடிவெடுத்தார். எதிரியின் பதுங்கித்தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் உடனடித்திட்டம் ஒன்றை வகுத்தார். அதன்படி அணிகளை இரண்டாக பிரித்து, முன்னே லெப்.கேணல் நவநீதன் தலைமையில் ஒரு அணியும் குறிப்பிட்ட இடைவெளியில் மறுஅணியும் நகர வேண்டும். எதிரி எந்தப்பக்கத்திலிருந்தும் தாக்குதலை மேற்கொள்ளலாம். எனவே எதிரி தாக்குதலை மேற்கொண்டால்; முன்னால் செல்லும் அணி தாக்குதலை எதிர்கொள்ள மறு அணி பக்கவாட்டால் காட்டுக்குள் இறங்கி, வளைத்து பின்பக்கத்தால் தாக்க வேண்டும் என்பதை விளக்கிவிட்டு, எதிரியின் தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டு அவதானமாகவும் மெதுவாகவும் நகரத் தொடங்கினார்கள். திடீரென, இயல்புக்கு மாறாக இருந்த பற்றைகள் மரங்ககளிற்கிடையில் எதிரி நிலையெடுத்திருப்பதை லெப்.கேணல் நவநீதன் திடீரென்று நின்று அவதானித்ததை குறிப்புணர்ந்த தளபதி மறுஅணியை பக்கவாட்டால் வளைக்குமாறு சைகை காட்ட, நவநீதன் தனக்கு அருகே இருந்த இராணுவத்தை சுட்டுக்கொண்டு வேகமாக எதிரிக்குள் நுழைந்து தாக்குதலை தொடர, மறு அணியும் பக்கவாட்டால் வளைத்து பின்பக்கமாக தாக்குதலை செய்தனர். எதிரி சுதாகரிப்பதற்குள் முழு இராணுவத்தையும் அவர்கள் நிலையெடுத்திருந்த இடங்களிலேயே கொன்று மயிர்கூச்செரியும் தாக்குதலை நடாத்தி முடித்தனர். இந்திய இராணுவத்தின் பதுங்கித்தாக்குதலை முறியடித்த சண்டையானது பால்ராஜ் அவர்களினது துணிவு, போர் உத்தி, சண்டையிடும் திறனை வெளிப்படுத்திய முக்கியமான சண்டைகளில் ஒன்று. குறிப்பாக இந்திய இராணுவத்தை அதிர்ச்சி, வியப்புக்குள்ளாக்கிய சண்டையாகும். ஏனெனில் பதுங்கித்தாக்குதலை மேற்கொள்ளும் போது நகரும் பாதை, எதிராளிகளின் ஆயுதபலம், ஆட்கள் தொகை போன்ற தகவல்களின் அடிப்படையில் பதுங்கித்தாக்குதல் திட்டமிடப்படும். பின்னர் தாக்குதலிற்கான கொலைவலயத்தை உருவாக்கி, பொருத்தமான ஆயுதங்களுடன் உருமறைத்து, நிலையெடுத்து தாக்குதலை மேற்கொள்வதுதான் தாக்குதலிற்கான அடிப்படை உத்தி. அத்துடன் உலகத்தின் நான்காவது வலிமையான இராணுவம் தனது சிறப்புப்படைகளை வைத்து திட்டமிடும் பதுங்கித்தாக்குதலை சாதாரண விடயமாக எடுத்து விட முடியாது. பல பதுங்கித் தாக்குதல்களை வெற்றிகரமாக செய்த அனுபவம் மிக்க பால்ராஜ் அவர்கள் அதிலிருக்கும் ஆபத்தை உணர்ந்து அப்பாதையைத் தவிர்த்து வேறுபாதையால் சென்று இருக்கக்கூடிய வாய்ப்பிருந்தது. அப்படியிருந்தும் இந்தசந்தர்ப்பத்தில் பதுங்கித்தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை செய்வோம் என்று (அவருடைய மொழியில் இன்டைக்கு ரென்டில ஒன்டு பாப்பம் அவனா? நானா? எண்டு) தீர்க்கமாகவும் தற்துணிவாகவும் முடிவெடுத்து அப்பதுங்கித் தாக்குதலுக்கான முறியடிப்புத் தாக்குதலை எதிர்கொண்டு, வென்று காட்டி தனக்கென்று ஒரு தனிமுத்திரை பதித்தார். இத்தாக்குதல் நடவடிக்கை விடுதலைப்புலிகள் மீது இந்திய இராணுவத்திற்கு மேலும் அச்சத்தை கொடுத்ததுடன் போராளிகளுக்கு மேலதிக தெம்பையும் உத்வேகத்தையும் கொடுத்தது. இது போன்ற பல தாக்குதல் நடவடிக்கைகள் பால்ராஜ் அவர்களை சிறந்த தளபதியாக தனித்துவமாக அடையாளம் காட்டின. இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர், வன்னியின் இராணுவம், அரசியல், அபிவிருத்தி போன்ற எல்லா பணிகளையும் ஒருங்கிணைத்தார். இந்திய இராணுவ காலத்தில் தங்களுக்கு உதவி செய்த வீடுகளுக்கெல்லாம் சென்றதுடன் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து இயன்றளவு அவர்களிற்கு உதவிகள் செய்தார். மக்களின் பிரச்சனைகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து உதவி செய்தார் அந்தளவிற்கு மக்களை நேசித்த தளபதியவர். கொக்காவில் முகாம் வலிந்ததாக்குதல் இலங்கை இராணுவத்துடனான ஈழப்போர்-02, 1990 ம் ஆண்டு மத்தியில் தொடங்கியது. முதலில் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அம்முகாமின் ஒரு பகுதி வீழ்ந்தாலும் சண்டையை தொடர்ந்து நடாத்துவதிலுள்ள பாதக நிலையை உணர்ந்து உடனடியாக சண்டையிலிருந்து பின்வாங்கினர். பின்னர் கிளிநொச்சி படைமுகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியும் கைகூடவில்லை. தொடர்ந்து முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இந்த முகாம்கள் அழிக்கப்படாவிட்டால் வன்னி பெருநிலப்பரப்பின் மேலாதிக்கம் விடுதலைப்புலிகளிடம் இல்லாமல் போவது மட்டுமல்லாமல் மக்களும் பாரிய சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி நேரிடும். அத்துடன் ஏற்கனவே மூன்று முகாம் தாக்குதல்களும் வெற்றியளிக்காத நிலையில் இந்த முகாமை எப்படியும் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற உறுதியான முடிவுடன் கொக்காவில் முகாமைத் கைப்பற்றுவதற்காக தாக்குதலை ஆரம்பித்தார். முதல் நாள் கடுமையான சண்டை, சில பகுதிகள் கைப்பற்றப்பட்டது அதேவேளை துணைத்தளபதியாகவிருந்த தளபதி தீபன் அவர்களும் வேறு சில தளபதிகளும் காயமடைந்திருந்தனர். கடுமையான சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. நிலைமையினை உணர்ந்த பால்ராஜ் அவர்கள் ஏற்கனவே மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு முகாம்களை கைப்பற்றமுடியவில்லை, இதிலும் தோல்விகண்டால் போராளிகளின் உளவுரண் பாதிப்படையலாம். அதுமட்டுமன்றி இராணுவத்தின் உளவுரண் அதிகரிக்கலாம். அத்தகைய வாய்ப்பை வழங்கக்கூடாது என்ற உத்வேகத்துடன் போராடினார். கொக்காவில் முகாமை எப்படியாவது கைப்பற்றியே தீர வேண்டும் என்ற தீர்மானமான முடிவிலிருந்தார். தளபதி தீபன் அவர்கள் காயமடைந்ததுடன் களமுனைக்கே சென்று அணிகளை மீள் ஒழுங்குபடுத்தி, கட்டளைகளை வழங்கிக் கொண்டு தானும் ஒரு பக்கமாக இறங்கி சண்டையில் ஈடுபட்டார். பால்ராஜ் அவர்களும் இறங்கி சண்டையிடுகின்றார் என்றவுடன் போராளிகள் மேலும் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொள்ள, சில மணிகளில் முகாம் முற்றாக அழிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதன்முதலாக கைப்பற்றி அழிக்கப்பட்ட முகாம் தாக்குதலாக அது பதிவாகின்றது. மாங்குளம் முகாம் வலிந்ததாக்குதல் இதனைத் தொடர்ந்து மாங்குளம் முகாமை மீள தாக்கியழிக்க வேண்டும் என்று நோக்குடன் களப்பணிகளை முடுக்கிவிட்டார். ஏற்கனவே தாக்குதலை மேற்கொண்டு பின்வாங்கிய முகாம் என்பதால் அடுத்த முயற்சி தோல்வியடையக்கூடாது என்ற முடிவுடன் தாக்குதல் திட்டம் தயாரிக்கப்படுகின்றது. அம்முகாமின் இரு முனைகளில் தாக்குதலை நடாத்தி எதிரியை பலவீனப்படுத்தி கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு முகாமை கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகின்றது. பசீலன் ஷெல் தாக்குதலுடன் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலின் முகாமைச் சுற்றியிருந்த காவலரண்கள் முதலில் வீழ்ச்சியடைந்தன. அதன் பின்னர் கரும்புலித் தாக்குதலை கரும்புலி லெப்.கேணல் போர்க் மேற்கொள்ள, காவலரண்களையும் மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய அணிகள் பிரதான முகாமிற்கு அருகிலிருந்த ‘வானூர்தி’ இறங்குதளத்திற்கு அருகில் பலமான எதிர்த்தாக்குதலுக்கு முகம்கொடுத்தன. ஏனெனில் வானூர்தி தளத்தை தாம் இழந்தால் மேலதிக உதவியை எடுக்க முடியாமல் அழிந்துவிடுவோம் என்ற நிலைப்பாட்டில் இராணுவம் மூர்க்கத்தனமாக மோதியது. அதேவேளை முகாமின் தென்பகுதி வயல் வெளியால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் இழப்பின் காரணமாக பின்வாங்கப்படுகின்றது. அகோர விமானத்தாக்குதல்களிற்கு மத்தியிலும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. இழப்புகளின் அளவும் கணிசமாக உயர்ந்து கொண்டிருந்தது. நிலைமைகளை அறித்த தலைவர் விரைவாக முகாமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். சண்டையின் வியூகத்தை மாற்ற நினைத்த தளபதி, துணைத்தளபதி தீபன் அவர்களை கட்டளைமையத்தில் சண்டையை ஒழுங்குபடுத்தும்படி விட்டு விட்டு, வானூர்தித் தளத்தில் சண்டையிடும் எதிரியை சுற்றி வளைத்து தாக்கியழிக்க வேண்டும் என முடிவெடுத்தார். லெப்.கேணல் நவநீதன் தலைமையில் சிறப்பு அணியொன்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு சென்றார். பகல் வேளையாக இருந்த போதிலும் பொருத்தமான இடத்தில் தாக்குதலை மேற்கொண்டு வானூர்தித் தளத்தை கைப்பற்றினார். வானூர்தி தளம் கைப்பற்றப்பட்டவுடன் தமது தோல்வியை உணர்ந்த எஞ்சியிருந்த இராணுவத்தினர் பின்வாங்கி வவுனியாவில் அமைந்திருந்த இராணுவ முகாம் நோக்கி தற்பாதுகாப்புத் தாக்குதலை மேற்கொண்டு கொண்டு ஓடத்தொடங்கினர். அவர்களும் ஆங்காங்கே கொல்லப்பட்டனர். இச்சமரில் பெருந் தொகையான இராணுவத்தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக 50 கலிபர் துப்பாக்கி முதன்முதலில் இத்தாக்குதலின் போது கைப்பற்றப்பட்டது. சாள்ஸ் அன்ரனி படையணியின் தலைமைத் தளபதியாக இரண்டாம் கட்ட ஈழப்போரில் இவரது தாக்குதல் வெற்றிகள் இராணுவ ரீதியில் பரிமாண வளர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்ததுடன் போராளிகளின் உளவுரன், மனோதிடத்தை வளர்த்து சிங்களப்படையை கதிகலங்க வைத்தது. அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவத்தை ஒர் மரபுவழி இராணுவமாக வளர்த்தெடுக்க தீர்மானித்த தலைவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது மரபுவழிப்படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையை 1991 ம் ஆண்டில் உருவாக்கினார். சண்டைகளின் தன்மைகளிற்கேற்ப புதிய புதிய உத்திகளை வகுக்கும் பண்பு, சண்டையிட்டுக்கொண்டே தாக்குதலை தலைமை தாங்கும் தலைமைத்துவப்பண்பு, தாக்குதலின் போது எல்லா களச்சூழல்களையும் தனக்கு சாதகமாக மாற்றும் திறமை, சிறந்த வேவு ஆற்றல், திட்டமிடல், நிர்வாகம் போன்றன அடிப்படை ஆற்றல்களைக் கொண்ட பால்ராஜ் அவர்களை சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதியாக்கினார். துணிவு, தந்திரம், கடும்பயிற்சி போன்றவற்றை தாரக மந்திரமாக கொண்டு தலைவரின் எதிர்பார்ப்பிற்கமைவாகவும், ஆலோசனைக்கமைவாகவும் வலிமை மிகுந்த படையணியாக உருவாக்க தலைவரது சிந்தனைகளையும் தனது போர் அனுபவங்களையும் போராளிகளுடன் பகிர்ந்து, சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியை ஒரு வலிமை மிகுந்த படையணியாக உருவாக்கினார். மரபுவழிப்படையணியாக உருவாக்கிய அப்படையணியிடம் இருந்த இலகு மற்றும் கனரக ஆயுதங்களை மட்டும் வைத்தே பல வெற்றிகரமான தாக்குதல்களையும் புதிய உத்திகளுடன் கூடிய மூலோபாயத் தாக்குதல்களையும் செய்து காட்டினார். குறிப்பாக வன்னி விக்கிரம எதிர்தாக்குதலில் 50 கலிபர் துப்பாக்கியை பயன்படுத்தி உலங்குவானூர்தி அழிக்கப்பட்டது. 1991 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினால் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல் நடவடிக்கையான ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கையில் கிளிநொச்சி உப்பளப்பக்கத்தால் தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக செய்து முடித்தார். பின்னர் மணலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மின்னல் எதிர்ச்சமர், அளம்பில் ஒப்பிறேசன் 7 பவர் எதிர்ச்சமர், கொக்குத்தொடுவாயில் இருந்து முன்னேறிய இராணுவத்தை தாக்கி பின்வாங்க வைத்ததுமல்லாமல் முதன்முதலில் ஆர்.சி.எல் கைப்பற்றிய சமர் போன்ற பல சமர்களை வெற்றிகரமாக நடாத்தினார். மூலோபாயத் தாக்குதல்கள் தலைவர், தளபதியிடம் சண்டைகள் பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கும் போது “இப்படியே ஒவ்வொரு காவலரணாக மட்டும் தாக்கியழித்துக் கொண்டிருந்தால் எப்படி நாம் இராணுவத்தை அப்புறப்படுத்த முடியும். பாரியளவில் இராணுவத்தை தாக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்” இதனை புரிந்து கொண்ட தளபதி கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியில் இருந்த இராணுவ காவலரண்களை வேவு பார்த்தார். இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகளை விரைவாக தாக்குவதற்கான புதிய மூலோபாயத்தை வகுத்து அதனடிப்படையில், இருபத்துநான்கு காவலரண்களைத் தாக்கியழிப்பதற்கான திட்டத்தை வகுத்து பயிற்சிகளை வழங்கினார். இத்தாக்குதலுக்கு செல்வதற்கு முன் போராளிகளை சந்தித்த தலைவர் அவர்கள் “புதிய மூலோபாயத்திட்டத்தில் தாக்குதலை ஒன்றை செய்யப் போகின்றீர்கள் இத்தாக்குதல் வெற்றி எதிர்காலத் தாக்குதல்களிற்கு அடிப்படையாக அமையும்” என்று கூறி வாழ்த்தியனுப்பினார். தாக்குதல் திட்டத்தின்படி இரகசிய நகர்வை மேற்கொண்டு நகர்ந்த அணிகள், எதிரியின் காவலரணுக்கு மிக அண்மையாகச் சென்று தாக்குதலை தொடங்கின. தாக்குதல் ஆரம்பித்த வேகத்திலேயே வேகமாக காவலரண்களை ஊடறுத்து பின்பக்கமாகச் சென்று இராணுவத்தை அழித்து ஆயுதங்களையும் கைப்பற்றினர். அத்தாக்குதல் உத்தியானது, குறைந்த இழப்புடன் விரைவாக எதிரியைத் தாக்கியழிப்பதற்கான மூலோபாய வெற்றியையும் நம்பிக்கையும் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் நடந்த பல தாக்குதல் வெற்றிகளுக்கு அந்த உத்தி அடிப்படையாக அமைந்தது. 1991ம் ஆண்டு கரைநகர் பொன்னாலை பிரதான பாதையில் அமைந்திருந்த காவலரண்களை தாக்கியழித்த சமர் இன்னுமொருவகையான புதிய தாக்குதல் உத்தியாகும். ஏனெனில் காவலரண் வீதியில் அமைந்திருந்தது. வீதியின் இரண்டு பக்கமும் கடல். தாக்குதலை மேற்கொள்ள எந்த விதமான காப்பும் மறைப்பும் இல்லாத குறைந்த தண்ணீர் உள்ள கடற்பிரதேசம், அக்காவலரணை தாக்கி அழிக்க வேண்டும் என முடிவெடுத்து மேஜர் கிண்ணியின் தலைமையில் வேவு பார்த்து, தண்ணீருக்குள்ளால் காவலரணின் பின்பக்கமாக அணிகளை நகர்த்தி வெற்றிகரமாகத் தாக்குதலை செய்து முடித்தார். எப்போதுமே சவாலான சண்டைகளை தேர்ந்தெடுத்து வெற்றி கொள்வதும் இறுக்கமாக போர்க்களங்களில் செயற்பட்டு வெல்வதும் இவருடைய குணாதிசயங்களில் ஒன்று. அதன் பின்னர் 1992 ன் ஆரம்பகாலப்பகுதியில் பூநகரி முகாமின் முன்னணி காவலரண்களில் அறுபத்து நான்கு காவலரண் தாக்கியழித்த தாக்குதல், அதனைத் தொடர்ந்து 1992 ன் பிற்காலப்பகுதியில் பலாலி வளலாய் பகுதியில் 150 காவலரண்களை அழித்த தாக்குதல் போன்றவற்றை தலைமையேற்றுச் செய்தார். குறிப்பாக 1992 ம் ஆண்டு பயிற்சித் தேவைகளுக்காக தலைவரிடம் ரவைகள் வேண்டும் என தளபதிகள் கேட்டபோது “சண்டைகளுக்கு மட்டுமே ரவைகள் இருக்கு, இப்ப உங்களுக்கு தேவையான ரவைகள் இராணுவத்திட்ட இருக்கு, அங்க போய் எடுங்கோ என கூறினார்” இதுவே பலாலி – வளலாயில் இருந்த 150 காவலரண்களை அழித்து ஒன்றறை இலட்சத்திற்கும் மேற்பட்ட ரவைகள் பல ஆயுத, வெடிபொருட்;களையும் கைப்பற்றி அடிப்படையானது. காவலரண்களை உடைத்துக் கொண்டு உட்சென்று பின்பக்கத்தால் தாக்குதலை நடாத்தும் முறை, தரையால் படைகளை நகர்த்தும் சமநேரத்தில் கடலாலும் படைகளை நகர்த்தி எதிரியின் விநியோகம், ஆதரவுப்படைகளை அனுப்பும் வழிகளை தடுத்தல் கட்டளைமையங்கள் தகர்த்தல், தரைவழித் தாக்குதல் படையணிகள் உள் நுழைவதற்காக காவலரண்களை பின்பக்கத்தால் தகர்த்து பாதையேற்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஈரூடக தாக்குதல் முறை மூலம் எமது தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அழித்தொழிக்க முடியும் என்ற உத்தியை தனது முன்னுதாரணமான செயற்பாட்டினூடாக வெளிப்படுத்தினார். 1990 ஆண்டு ஈழப்போர் – 02 ஆரம்பித்திலிருந்து 1992 ம் ஆண்டு வளலாய் தாக்குதலை வரை தலைவரின் இராணுவ சிந்தனைக்கு உரியவடிவமும் அதற்கு பொருத்தமான மூலோபாயங்களையும் உத்திகளையும் வகுத்து பல பாதுகாப்பு, வலிந்த தாக்குதல்களை செய்து விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தை மேன்மைப்படுத்தினார். இதுவே இவரை விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவின் துணைத்தளபதியாக 1992 ம் ஆண்டு தலைவர் நியமிக்க காரணமாகியது. யாழ்தேவி முறியடிப்புத் தாக்குதல் பின்னர் 1993 ல் பூநகரி முகாம் வேவு நடவடிக்கைகளை விசேட வேவு அணியை வைத்து செய்து முடித்தார். தொடர்ந்து அதை கைப்பற்றுவதற்கான தாக்குதல் திட்டத்தை வகுத்து, அணிகளை ஒன்றிணைத்து பயிற்சிகளையும் அதற்கான ஏனைய ஒழுங்குபடுத்தல்களை தயார்ப்படுத்துவதில் தீவிரமாக செயற்படடுக்கொண்டிருந்தார்;. இச்சமயத்தில் யாழ் குடாநாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்குடன், ஒரேயொரு போக்குவரத்து பாதையாக இருந்த கிளாலி கடற்கரை பாதையை மூடுவதை இலக்கு வைத்து ஆனையிறவிலிருந்து இராணுவம், ‘யாழ்தேவி’ என்ற இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்போகின்றது என்ற செய்தி கிடைக்கின்றது. தலைவரின் ஆலோசனைக்கமைவாக, தயார்ப்படுத்துவதற்கு கிடைத்த குறுகிய நேரத்தில் தந்திரோபாயத் தாக்குதல் திட்டத்தை வகுத்து, இராணுவத்தின் நகர்வை தடுப்பதற்கான தாக்குதலை மேற்கொண்டார். இராணுவத்திற்கெதிரான தாக்குதல் மிக மூர்க்கத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது களமுனையிலிருந்து தொடர்களில் சிக்கலடைந்தது. இச்சமயத்தில் நேரடியாக களமுனைக்குச் சென்று தாக்குதலை வெற்றி நோக்கி வழிநடத்தியபோது காலில் காயமடைந்தார். இந்த நடவடிக்கையில் படுதோல்வியுடன் இராணுவம் பின்வாங்கியது. காயத்திலிருந்து மீண்டாலும் காலில் பாதிப்பிருந்தது. அப்படியிருந்தும் மீண்டும் தனது இராணுவப் பணிகளைத் தொடர்ந்தார். மண்டைதீவு தாக்குதலுக்கான வேவு, கொக்குத்தொடுவாய் 05 முகாம்களின் தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கான களத்தலைமை, முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதல், சூரியகதிர் ஒன்று தாக்குதல் நடவடிக்கை என பல இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். முல்லைத்தீவு முகாம் வலிந்ததாக்குதல் 1996ம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து தந்திரோபாய ரீதியில் பின்வாங்கி வன்னி பெருநிலப்பரப்பிற்குள் புலிகள் வந்த தருணத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமை தொடர்பான பல வினாக்கள் முன்வைக்கப்பட்டன. சிங்களப்படைகள் விடுதலைப்புலிகளை விரைவில் அழித்துவிடுவோம் என மார்தட்டிக் கொண்டிருந்தவேளை விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை மீளநிரூபித்து இராணுவ வெற்றியினூடாக சிங்களத்திற்கு பதில் சொல்ல தீர்மானித்த தலைவர், முல்லைத்தீவு முகாமை அழிக்க முடிவெடுத்தார். இத்தாக்குதல் நடவடிக்கையை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து தாக்குதலுக்கான மூலோபாயத்தையும் வகுத்துக்கொடுத்தார். தலைவரின் சிந்தனைக்கமைவாக அத்தாக்குதல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். துல்லியமான திட்டமிடலுடன் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. வேகமாக கடற்கரைப்பகுதி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது பிரதான திட்டங்களில் ஒன்று. அதன்படி வெற்றிகரமாக நடைபெற்றதுடன் 122 கனரகப் பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன, இருப்பினும் கடற்கரைப் பிரதேசத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கடற்கரையில் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே தம்மால் உதவியை பெற முடியும் என்பதால் தேவாலயம் அமைந்திருந்த கடற்கரைப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவம் கடுமையாகப் போரிட்டது. அப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் தாக்குதல் நடவடிக்கைகள் முனைப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அளம்பிலில் இராணுவத்தை தரையிறக்கி, முகாமிற்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் படையினருக்கு உதவ இராணுவம் முயன்றது. இச்சந்தர்ப்பத்தில் களத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்ட பால்ராஜ் அவர்கள் தலைவரிடம் நிலைமையும் உடனடித்திட்டத்தையும் தெரிவித்தார். தலைவர் அவர்கள் தளபதி பிரிகேடியர் பானு அவர்கள் தலைமையில் மேலதிக அணியை அனுப்பி வைத்தார். அத்திட்டத்தின்படி தேவாலயத்தின் முன்பக்கமாக நிலையெடுத்திருந்த படையினர் மீது விடுதலைப்புலிகளிடம் இருந்த டாங்கியால் தாக்குதலை ஆரம்பிக்க எதிரி நிலைகுலைந்தான், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய படையணி எதிரியின் பகுதியில் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு, கடற்கரையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. அத்துடன் அளம்பிலில் தரையிறங்கிய இராணுவமும் எதிர்த்தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாரிய இழப்புகளுடன் கடல்வழி தப்பி ஓடியது. சத்ஜெய முறியடிப்புப் தாக்குதல் முல்லைத்தீவு படைமுகாம் வீழ்ச்சியை தொடர்ந்து ஆனையிறவில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவம் சத்ஜெய ஒன்று இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் பகுதியை கைப்பற்றியது. முன்னேறிய சிங்களப்படையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைக்கான தலைமையை தலைவர் பால்ராஜ் அவர்களிடம் கொடுத்தார். உடனடியாகப் படையணிகளை வேகமாக நிலைப்படுத்தினார். அத்துடன் இராணுவம் எமது நிலைகளை உடைத்து நகர்ந்தால் உடையும் பகுதியில் உள்ள படையணிகளை மட்டும் மீள் ஒழுங்குபடுத்தி, காவலரண்களை மீளக் கைப்பற்றினால் உடைத்த பாதையால் உள்வரும் இராணுவம் எமது பிடிக்குள் அகப்படும் இதனால் எதிரிக்கு பாரிய இழப்பை ஏற்படுத்த முடியும் என்ற திட்டத்தை வகுத்து, படையணிகளுக்கு விளக்கி, பயிற்சி கொடுத்து தயார்நிலையில் வைத்திருந்தார். சிங்களப்படை சத்ஜெய இரண்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. ஏ-09 பாதைக்கு வலதுபக்கமாகவும் இடதுபக்கமாகவும் தாக்குதலை தொடங்கிய இராணுவத்தின் தாக்குதல் முனையாக ஏ-09 பாதைக்கு வலதுபக்கம் பிரதானப்பட்டிருந்தது. டாங்கிகளுடன், துருப்புக்காவிகளில் இராணுவத்தை நகர்த்தி முன்னேறிய இராணுவம் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து உள்நகர்ந்தது. நிலைமையை உணர்ந்த தளபதி, லெப்.கேணல் தனம், லெப்.கேணல் ராகவன் தலைமையில் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி இரண்டு பக்கத்தாலும் எமது காவலரண் பகுதியால் தாக்குதலை தொடுத்து மீண்டும் பாதுகாப்பு நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இராணுவம் பாரிய இழப்பை சந்தித்துப் பின்வாங்கியது. விடுதலைப்புலிகளின் காவலரண்களுக்கு முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் டாங்கிகள் அழிக்கப்பட்டு இருந்தது இந்த தாக்குதல் தந்திரோபாய, மனோதிட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும். கிளிநொச்சி நகர் வலிந்த தாக்குதல் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த இலங்கை இராணுவம் மாங்குளத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. அதேவேளை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்துடன் இணைந்து கொள்ள குறிப்பிட்ட தூரமே இருந்தது. இந்த நேரத்தில் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்ற தலைவர் முடிவெடுத்தார். இத்தாக்குதல் திட்டத்தில், கிளிநொச்சி நகரப்பகுதியை கைப்பற்ற வேண்டுமாயின் இராணுவத்திற்கு உதவி வருவதையும் இராணுவத்தின் பின்வாங்கி செல்வதையும் தடுக்க வேண்டும் என்பது பிரதான திட்டமான இருந்தது. எனவே பரந்தனுக்கும் கிளிநொச்சி நகரத்திற்க்குமிடையில் ஊடறுத்து மறிப்பு நடவடிக்கையை செய்யும் பொறுப்பை பால்ராஜ் அவர்களிடம் ஒப்படைத்த தலைவர் “உனது நடவடிக்கை தாக்குதலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போகின்றது. அத்துடன் இது உனக்கு ஒரு பரீட்சார்த்த தாக்குதல் நடவடிக்கையும் கூட” என தெரிவித்தார். தாக்குதல் நடவடிக்கையை பொறுப்பொடுத்த தளபதி மிகத்துல்லியமாகத் திட்டமிட்டு கடுமையாக பயிற்சிகளைக் கொடுத்து படையணிகளைத் தயார்ப்படுத்தினார் ஏனெனில் காவலரண்களை ஊடறுக்கின்ற சமநேரத்தில் கிளிநொச்சியிலிருந்து எதிரி ஓடாமலும் பரந்தனிலிருந்து எதிரியின் ஆதரவு கிடைக்கமாலும் இருக்கக்கூடிய வகையில் அணிகளை நிலைப்படுத்தி தாக்குதலுக்கு முகங்கொடுக்கின்ற அதேவேளை, அணிகளை நிலைப்படுத்தும் பகுதிக்கிடையில் இருக்கும் மினிமுகாம்கள், சிக்குப்படும் படையினரை அழித்து அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தயார்நிலையில் நிற்க வேண்டும். மற்றும் கிளிநொச்சி வெற்றியின் பிரதான பங்கு இவரது நடவடிக்கையில் தங்கியிருந்தது. தாக்குதல் தொடங்கியவுடனேயே ஏ-09 வீதிக்கு அருகில் அதாவது களத்தில் மையத்திற்கு சென்ற பால்ராஜ் அவர்கள் அங்கிருந்து தாக்குதலை நெறிப்படுத்தினார். ஆனையிறவு பரந்தன் பகுதியிலிருந்த இராணுவத்தினர் கிளிநொச்சியில் சிக்குண்ட படையினருக்கு உதவ பல புதிய படையணிகள் டாங்கிகள் சகிதம் கடும் முயற்சியை மேற்கொண்டனர். முயற்சிகள் எதுவும் பலனளிக்காது போனது. மற்றும் தளபதி பால்ராஜ் தங்களிற்கு பின்னால் வந்து மறித்து நிற்கின்றார் அதனால் உதவி கிடைக்கவில்லை. இச் செய்தி கிளிநொச்சி நகரப்பகுதியில் சண்டையிட்ட சிங்களத்தளபதிகளுக்கு கிடைக்கின்றது. திகைத்த தளபதிகள் தப்பியோடுவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தனர். இராணுவம் எந்த வித ஒழுங்குபடுத்தலுமின்றி தப்பியோட தொடங்கியது. அங்கு ஓடும் இராணுவத்தை தடுக்கும் நோக்குடன் நிலைப்படுத்தப்பட்ட அணிகளின் உக்கிர தாக்குதலை எதிர்கொண்டது. இத்தாக்குதலை எதிர்பார்க்காத இராணுவம் முன்செல்பவர்கள் சாகச்சாக தப்பியோடும் முயற்சியில் மட்டும் ஈடுபட்டனர். குடாரப்பு ஊடறுப்புத்தாக்குதல் வத்திராயன் பெட்டிச் சண்டையைப்பற்றி தளபதி கூறும் போது “ஆனையிறவுக்கான சண்டையை நீதான் நடத்தப்போகிறாய், நீ சண்டியன், எத்தனையோ சோதனைகளை உனக்குத் தந்திருக்கிறேன் இது நான் உனக்கு வைக்கின்ற பெரிய சோதனை இதற்கான பரீட்சார்த்தத்தை ஏற்கனவே கிளிநொச்சியில செய்து பாத்திட்டேன். எனவே நீ இதையும் வென்று தருவாய் என நம்பிறேன் 1500 பேருடன் தரையிறங்கி கண்டி வீதியை மறிச்சு விநியோகத்தை தடுத்து நிறுத்து, ஆனையிறவு தானாக விழும். சூசை உன்னை கடலால் இறக்கி விடுவான் நீ தரையால் தான் திரும்பி வரவேண்டும்” என்ற தலைவரின் திட்டத்தை நிறைவேற்றி ஆனையிறவின் வெற்றிக்கு வழிவகுத்தார். வத்திராயன் பெட்டிச் சண்டை என்பது தமிழ்மக்களின் வீரத்தின் வெளிப்பாடு உலக வரலாற்றில் முதன்மைத் தரையிறக்கச் சண்டையாக பதிவு செய்யுமளவிற்கு, உலக இராணுவ வல்லுனர்களையே வியக்க வைத்தது குடாரப்பு தரையிறக்க தாக்குதல் நடவடிக்கை ஆகும். இலங்கை இராணுவத்தின் ஆகாய விமானங்கள், நவீன கடற்படை, கனரக ஆயுதங்கள், டாங்கிகள் போன்றவற்றைக் கொண்ட பலம் வாய்ந்த 40,000 சிங்களப்படைகளின் நடுவே 1500 போராளிகளுடன் 34 நாட்கள் எதிரியை ஊடறுத்து நின்று துவம்சம் செய்தனர். சிங்களத்தின் முக்கிய இராணுவத்தளபதிகளையும் அவர்களின் தந்திரோபாயங்களையும் வெறும் இலகு, கனரக ஆயுதங்கள் மற்றும் ஆட்லறி பிரங்கிகளின் ஆதரவுச்சூட்டுடன் மட்டும் எதிர்கொண்டு வெற்றி பெற்று, தமிழ்மக்களின் போரிடும் ஆற்றலின், துணிச்சலின், வீரத்தை சர்வதேசம் வியக்கும் வகையில் வெளிப்படுத்தினார். இது தமிழ்மக்களின் வீரத்திற்கும் போர்க்குணத்திற்கும் கிடைத்த மகுடமாகும். சுனாமி ஆழிப்பேரலையின் 2004 ம் ஆண்டு வாகரையில் அமைந்திருந்த கடற்கரை முகாமில் இருந்தார். திடீரென கடல் உள்வாங்கப்பட்டு அலைகள் உயர்ந்து வேகமான வருவதை பார்த்த பால்ராஜ் அவர்கள், ஏதோ ஆபத்து வரப்போகின்றது என்பதை உணர்ந்து, உடனடியாக வானத்தை நோக்கிச் சுடுமாறு போராளிகளிடம் சொன்னார். திடீரென துப்பாக்கிச் சத்தத்தை கேட்ட மக்கள் பலர் வீட்டுக்கு வெளியே வந்து பார்க்க கடல் உள்நோக்கி வருவதை கண்டு ஓடித்தப்பினர் இதனால் பலர் காப்பாற்றப்பட்டனர். அதேவேளை கடற்கரையில் உள்ள முகாமில் நின்ற அவர் கடல் அலைகளுடன் கடுமையாக போராடி உயிர்தப்பினார். அத்துடன் உடனடியாக போராளிகளை ஒழுங்குபடுத்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளை செய்தார். பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கு பால்ராஜ் அவர்கள் எப்போதும் களமுனையில் ஒவ்வொரு காவலரணுக்கும் சென்று போராளிகளிற்கு சண்டையிடும் முறையை சொல்லிக்கொடுப்பார், அடிக்கடி அவர்களை சென்று சந்தித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைத்து போராளிகளை எப்போதும் உச்ச மனோதிடத்துடன் வைத்திருப்பார். இதனால் பால்ராஜ் அவர்கள் சண்டையை பொறுப்பெடுக்கின்றார் என்றால் போராளிகளிற்கிடையே தனித் தெம்பு ஏற்படுமளவிற்கு நம்பிக்கையான தளபதியாக விளங்கினார். திட்டமிட்ட சண்டைக்கான வேவு நடவடிக்கையை முழுமைப்படுத்த முன் வேவுகள் அனைத்தையும் நேரடியாக பார்த்தே தலைவரிடம் சண்டைத்திட்டத்தை கொடுப்பார். குறிப்பாக அவரது கால் சீராக இயங்காத போதும் கைத்தடியுடன் எதிரியின் முட்கம்பி வரை சென்று இந்த இடம் சண்டைக்கு பொருத்தமானதா? என முடிவெடுப்பது அவரது வழக்கம். சிலர் அவரிடம் ஏன் நீங்கள் போய் பார்க்கிறீர்கள் நாங்கள் பார்த்து வருகிறோம் என்றால் அதற்கு அவர் “சண்டையை தலைமைதாங்கும் போது தாக்குதலிடங்களும் தாக்குதல் பிரதேசம் தொடர்பான பூரண விளக்கம் மற்றும் நிலவரம் தெரிந்தாலே சண்டைக்கான கட்டளையை துல்லியமாக வழங்கலாம், அடுத்தது நான் நினைப்பதைப்போல ஒவ்வொரு தாக்குதல் இடமும் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றதா! என எனக்கு தெரியவேண்டும். பாரிய படையை கொண்டு செல்லும் பாதையில் என்னை கொண்டு செல்ல முடியாது என்றால் எப்படி படையணிகளை சரியாக கொண்டு செல்வீர்கள்? அத்துடன் நான் உறுதிப்படுத்தி முடிவுகளை தலைவருக்கு சொல்லவேண்டும் எனவே நானும் பார்க்கவேண்டும்” என்பதே போர் அனுபவமும், போரியலில் மாற்றத்தையும் ஏற்படுத்திய தளபதியின் பதிலாக இருக்கும். தளபதி பால்ராஜ் அவர்களைப்பற்றி அவருடைய பல தாக்குதல்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தேசியத்தலைவர் அவர்களால் என்னையும் விஞ்சிய போராளி என்று பாராட்டப்பட்ட தளபதி, உலக இராணுவ வல்லுனர்களின் தந்திரோபாயங்களை எல்லாம் வத்திராயன் பெட்டிச்சண்டையில் நிர்மூலமாக்கியவர் மற்றும் பால்ராஜ் ஒரு இடத்தில் வந்து இருந்திட்டால் அவரை வீழ்த்துவது அல்லது அப்புறப்படுத்துவது கடினம் என சிங்களப்படைகளின் மனோதிடத்தையே பலவீனப்படுத்திய தளபதி, போர்க்கலை வல்லுனர் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். இந்நினைவு நாளில் தமிழ்மக்களின் கவனத்திற்காக…. தழிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் பல வீரத்தளபதிகளும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். பல வியக்கத்தக்க மகத்தான போரியல் சாதனைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்தது. போர்க்குணம் மிக்க தமிழினத்தின் வெற்றிகளே இவையாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் பின்னடைவு என்பது சர்வதேச நாடுகள் வழங்கிய தொழில்நுட்ப உதவி, ஆயுத வெடிபொருள் உதவி, மறைமுக இராணுவ உதவி மற்றும் புலனாய்வு உதவிகளின் விளைவாகவும், பூகோள அரசியல் போட்டி காரணமாக சிங்களத்திற்கு கிடைத்த உதவிகளின் அடிப்படையிலும் ஏற்பட்ட பின்னடைவே அன்றி, சிங்களம் தனித்து நின்று விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை. அவர்களால் அழிக்கவும் முடியாது. மேற்குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் தாண்டி இப்பின்னடைவின் அடிப்படை வெடிபொருள் விநியோகம் தடைப்பட்டமையும் மலிந்து போன துரோகத்தனங்களுமே ஒழிய வேறு ஒன்றுமல்ல. தாயக விடுதலையையும், தமது உயிர்களை விடுதலைக்காக நம்பிக்கையுடன் அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் கனவுகளையும், மக்களின் பேரிழப்புகளையும் மனதில் நிறுத்தி நம்பிக்கையிழக்காமல், எம்மால் முடியும்! எமது அரசியல் விடுதலைக்காக இறுதிவரை உழைப்போம் என சிந்தனையில் நிறுத்துவதே இந்நாளில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிற்கும் மற்றும் மாவீரர்களிற்கும் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களிற்கும் ஆத்மார்த்தமாக வழங்க வேண்டிய வாக்குறுதி. அபிஷேகா http://www.paristamil.com/mobile/details.php?newsid=27390
-
பிரிகேடியர் சொர்ணம் - உதிக்கும் திசையில் உதித்த ஆதவன் இரத்தினம் கவிமகன் தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மணலாறு காட்டிடை மேவிய தளபதி பிரிகேடியர் சொர்ணம் தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள் சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்கிகள் எதிரியின் வரவை எதிர்பார்த்து விழித்திருந்தன. சோதியா படையணி போராளிகள் மட்டுமல்லாது மணலாறு கட்டளைப்பணியக போராளிகள், தலைமைச் செயலக “மணாளன்” சிறப்பு தாக்குதலணி மற்றும் பூநகரி படையணி போராளிகள், எல்லைப்படை மற்றும் காவல்துறைப் படையணி என பல படையணி போராளிகளை உள்ளடக்கிய போராளிகளணி. இதன் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் பணியாற்றினார். வான் நிலாவின் அழகை ரசித்தபடி சுடுகலன்களை தயாராக வைத்து காத்திருக்கிறது அந்த அணி. அதில் பல புதிய போராளிகள் இருந்தாலும், அவர்கள் விசுவாசமாக சண்டையை எதிர் கொண்டதும் எதிரிகளை திணறடித்ததும் அங்கு பதிவாகிய வரலாறு. அவர்களுக்கான அணித்தலைவர்கள் அனுபவம் மிக்க சண்டையணிப் போராளிகள் என்பதால் சண்டையை சீராக செய்ய கூடிய நிலை இருந்ததும் அங்கு பெறுமதியான பதிவாக மணலாறுக் களமுனை அன்று நிமிர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் போராளிகள் தயார்நிலையில் இருந்த அதே வேளை, களமுனையின் எல்லை வேலி இந்திரன் முகாமில் இருந்து மிக அருகில் சிங்கள இராணுவமும் அதை தாண்டிய ஜீவன் முகாமருகில் போராளிகளுமாக நீண்டு சென்றது. மிக அருகில் ஜீவன் முகாமில் பிரிகேடியர் சொர்ணம் தனது கட்டளை பணியகத்தை (Commanding station ) அமைத்து இருந்தார். அவருக்கு ஜீவன் முகாமின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்க்கும் போதெல்லாம் 1987 ஆம் ஆண்டு கால நினைவுகள் மனதை விட்டு மறையாது இருக்கும். இந்திய இராணுவத்தின் வருகை விடுதலைப்புலிகளையும் தேசியத்தலைவரையும் மணலாறுக் காட்டுக்குள் கொண்டு சென்ற போது, ஜீவன் முகாம் பல வருடங்களாக தேசியத் தலைவரை தாங்கி நின்ற வரலாற்று நிமிர்வு மிக்கதான ஒரு முகாம். வானுயர்ந்த மரங்களின் போர்வைக்குள் எதிரியின் நுழைவுகளை தடுக்கும் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு நிமிர்ந்து நின்றது ஜீவன் முகாம். ( முன்னாளில் உதயபீடம் என்று அழைக்கப்பட்ட இந்த முகாம் தான் தலைவரின் பிரதான தங்ககம்) அது மட்டுமல்லாது, நீதிதேவன் (நீதி வழங்கல்), காமதேனு ( வளங்கல் பிரிவு) விடியல் (மகளிர் படையணி), வைகறை (மகளிர் படையணி) அமுதகானகம் (மருத்துவபிரிவு) என பல முகாம்கள் அங்கு நிமிர்ந்து நின்றன. பின்நாட்களில் அவை குறியிடு பெயர்கள் மாற்றப்பட்டு மாவீரர் பெயர்களை தாங்கி நின்றது வரலாறு. அங்கு தான் ஜொனி மிதிவெடியின் உயர் பயனை விடுதலைப்புலிகளும் எம் வெடிபொருள் உற்பத்தி அறிவினை இந்திய இராணுவமும் அறிந்த நாட்கள் அமைந்திருந்தன. தேசியத்தலமையை தன்னுள் பல காலங்களாக சுமந்து நின்ற இந்த முகாம்களின் வடிவமைப்பின் போது விடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்குரிய பொது மகன்கள் சிலரையும் நாம் நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 – செப்டம்பர் 16, 1931 மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார். ) என்று அன்பாக விடுதலைப்புலிகளால் அழைக்கப்படும் லெப் கேணல் டடி அல்லது நவம் என்ற மாவீரனை பெற்ற தந்தை அதில் முக்கியம் பெறுபவராவார். அவர் மூலமாகவே அதுவரை வவுனியா மன்னார் காடுகளில் வாழ்ந்த விடுதலைப்புலிகளுக்கு மணலாறு காடு பற்றிய அறிவும் பரீட்சயமும் கிடைத்தது. அவரால் தான் மணலாறு காடு பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் வாழ்விடமாகியது. அவரின் அனுபவமும் திறணும் மணலாறு காட்டினுள் பல இடங்களில் வாழ்விடங்களாகவும் கிணறுகளாகவும் நிமிர்ந்து நின்றதை நாம் மறுக்க முடியாது. இங்கு மிக முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டியது அவசியம். மணலாறு காட்டினுள் இருந்த இந்திரன் முகாமில் நிலத்தடி மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதாவது சாதாரண பதுங்ககழி போல் அல்லாது நிலத்துக்கு கீழாக ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க கூடிய அளவில் நிலத்தடி மருத்துவமனை ( Underground Hospital ) அமைக்கப்பட்டு போராளிகள் பராமரிக்கப்பட்டார்கள். இது கட்டுவதற்கும் இவரின் பங்கு மிக முக்கியமானதாக வரலாறு பதிவாகியிருக்கிறது. அதைப் போல தேசியத் தலைவனின் மிக நெருக்கத்திக்குரிய பாதுகாவலனாக இருந்த ஆதவன் அல்லது கடாபி என்று அழைக்கப்படும் மூத்த தளபதியின் தந்தை காட்டுக்குள் சமையல் கூடங்கள் மற்றும் வெதுப்பகம் என்பவற்றை உருவாக்குவதில் வெற்றி கண்டு எம் வரலாற்றில் முக்கியம் பெறுகிறார் . ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் அசைவில் எழும் இன்னிசைகளில் இந்த நினைவுகள் எல்லாம் வந்து போன போது அந்த நாட்களை தன் விழி முன்னே கொண்டு வந்து நினைவு கொள்வார் பிரிகேடியர் சொர்ணம். கெரில்லா போராளிகளாக இருந்த காலத்தில் தான் எவ்வாறு பயணித்தார் என்பதை அடிக்கடி நினைவூட்டிக் கொள்வார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சியின் பின் இன்று மரபுவழி இராணுவக் கட்டமைப்பாக நிமிர்ந்து நின்றாலும் மணலாறு காட்டைப் பொறுத்தவரை கெரில்லா போர்முறையே சரியான தெரிவாக இருக்கும் என்பது அவரது தெரிவாக இருந்தது. ஏனெனில் 1991ஆண்டு ஆகாய கடல் வெளி என்ற பெரும் வலிந்து தாக்குதலை செய்து விடுதலைப்புலிகளின் போரியல் ஆற்றலை சிங்களத்துக்கு புகட்டிய எம் அமைப்பு அது முடிந்த சில நாட்களில் இதே மணலாறு காட்டினுள் மின்னல் நடவடிக்கை சிங்களத்தால் செய்யப்பட்ட போது, அதை எதிர்கொள்ளும் திடத்தை பெற்றிருந்ததை மறுக்க முடியாது. சிங்களம் மணலாறு காட்டுக்குள் மின்னல் படைநடவடிக்கையை செய்து காட்டுக்குள் வந்திருந்தாலும் அதை அவர்களால் பாதுகாக்க முடியவில்லை. உடனடியாகவே அந்த நடவடிக்கையை விட்டு வெளியேறிச் சென்றது. காரணம் அப்போதெல்லாம் சிங்கள இராணுவத்திற்கு போதிய அளவு காட்டு நடவடிக்கைகள் பரீட்சயம் இல்லாமல் இருந்தது. இவ்வாறான படை நடவடிக்கைகளின் தோல்விக்கு பின்னான காலங்களில் “ஜெயசிக்குறு” என்ற படை நடவடிக்கையை சிங்களம் செய்த போது அமெரிக்காவின் Green parrot என்ற படையணியின் மூலமாக முற்று முழுதான காட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டே வந்தன. ஆனாலும் அவர்களும் எமது படையணிகளிடம் பல முறை அடி வாங்கி சிதைந்து போனது வரலாறு. இது இவ்வாறு இருக்க, ஒரு மரபுவழி இராணுவக் கட்டமைப்பால் அந்த காட்டுக்குள் நின்று உணவு மருத்துவம் என்று எந்த தேவைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது என்பதே அவரது கணிப்பாக இருந்தது. அதற்காக அவரின் போரியல் முறையில் சில வேவு அணிகளை தயார்ப்படுத்தி எல்லை வேலிக்கு முன் நகர்த்தி இருந்தார். அவர்கள் கெரில்லா முறைத் தாக்குதல்களை செய்ய பணிக்கப் பட்டார்கள். இவ்வாறாக அந்த களமுனை இறுதிக் கட்ட சண்டையை மிக மூர்க்கமாக எதிர்கொண்டிருந்த காலத்தில் தான் சில இடங்களில் சிதைந்திருந்த எம் எல்லையை சீராக்கி FDL (Forward Defense Line இதை பேச்சுவழக்கில் லைன் (line) என்று குறிப்பிடுவார்கள். ) முன்னகர்த்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் எழுகிறது. இதற்காக திட்டமிட்டு 2008 சித்திரை 27 ஆம் நாள் அணிகளை நகர்த்துகிறார். பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் திட்டம் எதிரிக்கு கசிந்து விட்டதாலோ என்னவோ சண்டை எம் அணிகள் நினைத்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதனால் மறுபடியும் சித்திரை 29 ஆம் நாள் பெரும் முயற்சி எடுக்கப் படுகிறது. அந்த சண்டை எமக்கு சாதகமாக இருந்த போதும் நாம் புதிய சிக்கல் ஒன்றை எதிர் கொள்ள நேர்ந்தது. விடுதலைப்புலிகள் மீண்டும் தொடர் தாக்குதல்களை செய்யலாம் என்று எதிர்பார்த்த சிங்களம் இரவு முழுவதும் ஓயாத எறிகணை தாக்குதல்களை செய்கிறது. அந்த எறிகணையின் சிதறல்கள் கட்டளைச்செயலக பகுதிகளையும் தாக்குகிறது. பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் பாதுகாப்பு போராளிகள் பதுங்ககழிக்குள் வருமாறு பல தடவை அழைத்தும் உள்ளே செல்லாது பதுங்ககழிக்கு மேலே படுத்திருந்தார். அந்த சிதறல்களில் ஒன்று சொர்ணம் அவர்களின் கழுத்திலும் இன்னொன்று கண்ணுக்கு மேல் உள்ள புருவத்திலும் தாக்குகின்றன. இரத்தம் சீறிப் பாய்கிறது. களமருத்துவப் போராளி உடனடி இரத்தக் கட்டுப்பாட்டை செய்துவிட்டு அருகில் இருந்த குட்டுவன் என்ற முகாமில் மருத்துவ முகாமை அமைத்து தங்கி நின்ற இராணுவ மருத்துவர் தணிகை மற்றும் மருத்துவப்பிரிவு பொறுப்பாளர் ரேகா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப் படுகிறது. அவர்களோடு மருத்துவ நிர்வாக போராளி நம்பியும் உடனடியாக ஜீவன் முகாமுக்கு வருகிறார்கள். காயத்தின் நிலை கொஞ்சம் சிக்கலாக இருந்ததால் அருகில் இருக்கும் ஏதோ ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை உணரப்படுகிறது. மருத்துவர் தணிகையும் பொறுப்பாளர் ரேகாவும் அதை எடுத்து கூறுகிறார்கள். உள்ளே தங்கி விட்ட எறிகணைத் துண்டை வெளியில் எடுக்க வேண்டிய தேவையை அவர்கள் அவருக்கு உணர்த்த முனைகிறார்கள். ஆனால் தான் அந்த இடத்தை விட்டு ஒரு போதும் பின்நகரப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் தளபதி சொர்ணம். ஆனால் எவ்வாறாயினும் அவரை புதுக்குடியிருப்புக்கு நகர்த்தி விட துடித்தனர் இரு மருத்துவ பிரிவு போராளிகளும். தம்மிடம் இப்போது மயக்க மருந்து குடுத்து சத்திரசிகிச்சை செய்ய உபகரணங்கள் இல்லை அதனால் கப்டன் கீர்த்திகா இராணுவ மருத்துவமனைக்கு போய் சத்திரசிகிச்சை பெற்று உடனே திரும்பலாம் என்பதை வலியுறுத்துகிறார்கள். அவரோ மறுக்கிறார். அவர்களுக்கு களமுனையில் மயக்க நிலையில் மூத்த தளபதி ஒருவரை வைத்திருக்கும் அபாயம் கண்முன்னே நின்றது. அதை விட சொர்ணம் அவர்கள் ஒரு நீரிழிவு நோயாளி அவருக்கு தகுந்த வசதிகளற்று சிகிச்சை அளித்து அதனால் விளைவுகள் பாதகமானால் ? என்ற வினா எழுந்து நின்றது. ஆனால் அவர் அதை ஏற்க வில்லை மயக்க மருந்து போட தேவை இல்லை லோக்கல (Local Anesthesia/அனஸ்தீசியா) போட்டு சிதறிய எறிகணைத் துண்டை எடுக்கும் படி கேட்கிறார். அவர்கள் மறுக்கிறார்கள். அப்போது இவ்வளவு பேர சண்டைல விட்டிட்டு இந்த ஒரு காயத்துக்கு சிகிச்சை என்று என்னால் பின்னுக்கு போக முடியாது என்கிறார் தளபதி சொர்ணம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் மருத்துவர்கள். ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அவரை புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயல்கின்றனர். சத்திரசிகிச்சைக் கூடம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்றார்கள். அதற்கும் பதில் தந்த தளபதி சொர்ணம் எங்கட பெடியள் எத்தின பேருக்கு பங்கருக்க வைச்சுத் தான் தான் உயிர் காத்தனிங்கள் என்னை மட்டும் ஏன் இப்பிடி செய்கிறீர்கள்? என்னால் இவ்வாறான நிலையில் அண்ணைய பார்க்க முடியாது. புதுக்குடியிருப்பு போனால் அவர சந்திக்காமல் வர முடியாது அதனால் நான் பின்னால் வர மாட்டேன். அவர் உறுதியோடு இருந்தார். சண்டை எப்ப தொடங்கும் என்று தெரியாத நிலை. இதுக்குள் நான் எப்பிடி பெடியள விட்டிட்டு பின்னால வாறது என்னால முடியாது. என்று மறுக்கிறார். அவரின் உறுதியும் இறுதியான கட்டளையும் மருத்துவர் தணிகைக்கு எதையும் செய்ய முடியாத நிலையை உருவாக்குகிறது. கிடைத்த வளங்களை வைத்து அந்த சத்திரசிகிச்சையை செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்திருந்தது. பதுங்ககழிக்குள் வைத்து சிகிச்சை செய்ய அழைத்த போதும் அதை மறுத்து வெளியில் வைத்தே சிகிச்சை செய்ய தளபதி சொர்ணம் அவர்களால் பணிக்கப்படுகிறார் மருத்துவர். பெரிய வெளிச்சத்தை பாச்ச முடியாத சூழலில் சூரிய விடியலின் சிறு வெளிச்சத்தைக் கொண்டு இரத்த அழுத்தம்(Blood Pressure ) பரிசோதிக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் சரியான நிலையில் இருந்த போது அனஸ்தீசியா ( Local Anesthesia) போடப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. வெடிபொருள் சிதறல்கள் அகற்றப்பட்ட பின் உடனடியாகவே சண்டைக்கு தயாராக வோக்கியை கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்த குரலை கேட்ட போது இராணுவ மருத்துவர் தணிகையின் விழி கலங்காமல் இல்லை. உண்மையில் ஒரு பெரும் தளபதி தன் காயத்தை கூட பொருட்படுத்தாது, களமுனை நிலவரத்தை மனதில் கொண்டு களமுனை விட்டு நகர மாட்டேன் என கூறியது எம் போராட்ட வரலாற்றை மீண்டும் பெறுமதியாக்கி சென்றது. எம் தளபதிகள் இறுதி வரை இவ்வாறே வாழ்ந்தார்கள். தம் சாவுக்கு மேலாக மக்களை நேசித்தார்கள். அவர்களின் குடும்பங்களை பற்றி சிறிதளவு கூட சிந்திக்காது தலைவனை பற்றிச் சிந்தித்தார்கள். கவிமகன்.இ 23.12.2017 https://www.facebook.com/eelapriyan.balan/posts/2332800863416148
-
ஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.! விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் நேசித்தார்கள்? இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.! இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாகப் பதிவு செய்கின்றேன். நான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே மடிந்த உன்னத வீர்கள். மடி சுரந்த பால்போல, மனம் தூய்மை யானவர்கலென்பதைக் கூறுவதற்கே. சமீபகாலமாக இணையத்தில் எம் வீரர்களை இழிவுபடுத்தும் முயற்சிகள் திட்டமிட்டு விதைக்கப்படுகின்றது. புதிய தலைமுறையிடம் பிழையான வரலாறு போய்ச் சேரக்கூடாதென்பது மட்டுமே எனது நோக்கம். இந்த சம்பவம் புத்தளத்தை அண்டி, எதிரி பிரதேசத்தில் நடந்த சம்பவம். சில காரணங்களுக்காக சம்பவம் நடந்த இடத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன். ஒரு நடவடிக்கை நிமித்தம், ஒரு அணியொன்று 1997களின் நடுப்பகுதியில் கொழும்புக்கு நகர்த்தப்பட்டிருந்தது. அந்த இலக்கை அழிப்பதற்கான நாள் நெருங்கி வரும் நேரம், எமது ஆதரவாளர் ஒருவரின் கைதின் மூலம் இந்த நடவடிக்கையாளர்கள் சிங்கள உளவுத்துறையால் இனம் காணப் பட்டனர். இதனால் இவர்களின் உயிர் ஆபத்தை கருத்தில் கொண்டும், வேறு சில காரணங்களுக்காகவும் இவர்களை தளம் திரும்பும்படி கட்டளையிப்பட்டிருந்தது. அன்றைய நேரத்தில் பல நாட்கள் நடந்தே, எமது அணி கொழும்புக்கு பயணபட்டுக்கொண்டிருந்தது. இதற்காக பல பாதைகள் பயன்பாட்டில் இருந்தது. அது போல நகர்வுக்கு, வேறு பல முறைகளும் இருந்து பாவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது வில்பத்து காட்டின் ஊடான பயணதின் போது. அதன்படி இவர்களுக்கான வழி காட்டிகள் துணையுடன், குறிப்பிட்ட இடமொன்றிலிருந்து வழிகாட்டி, மற்றும் ஒரு கரும்புலி வீரனுடன் சேர்த்து ஐந்து போராளிகள் நகர ஆரம்பித்தனர். அதன்படி ஆரம்ப இடத்திலிருந்து நடந்தும், வாகனத்திலுமாக புத்தளம் தாண்டி "தபோவ" என்ற இடத்தை சென்றடைந்தனர். அங்கிருந்து இந்த அணியை பெரும் காடு உள்வாங்கியது. அது வரை பயணத்தின் போது மிக எச்சரிக்கையாகவே பயணப்பட்டனர். இராணுவ காவலரண்கள், மினிமுகாம்கள், காவல் நிலையங்கள், ரோந்து அணிகள், அத்தோடு தமிழரை விரோதியாக பார்க்கும் சிங்கள குடிமக்கள் என, அனைத்து கண்ணிலும் மண்ணை தூவி, ஓரளவு பாதுகாப்பான இடம் ஒன்றை வந்து சேர்ந்திருந்தது அந்த அணி. அந்த இடத்தின் பாதுகாப்பான இடமொன்றில், கொண்டு வந்த உலர் உணவை பங்கிட்டு உண்டபின், சிறிய ஓய்வின் பின் தமது பயணத்தை ஆரம்பித்தனர். மூன்றுநாட்கள் பயணத்தின் பின் "பலகொள்ளகம" (balagollagama) என்ற இடத்தை அண்டி இந்த அணி நகர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு மலை நேரம். காடுகளின் ஊடக அணி நகர்ந்து கொண்டிருந்த போது, யாரோ உரையாடும் சத்தம் கேட்டது. உடனே போராளிகள் பாதுகாப்பான இடம் தேடிப்பதுங்கினர். இப்படி காடுகளின் ஊடான பயணத் தின் போது போராளிகள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை, ஒன்று, சிங்கள வேடைக்காரர்களால் கட்டி வைக்கப்படும் வேட்டை துவக்கு. இரண்டாவது, "சிங்கள அரசின் நடமாடும் சிறப்பு படையணியான SF" என்று சுருக்கமாக அழைக்கப்படும் உந்துருளிப்படையணியாகும். ஏனெனில், இந்த அணிகள்(போராளிகளுக்கு) நகரும் போது இவர்களது கையில் உள்ள வரைபடத்தில் எல்லா விபரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கேற்றால் போலவே இவர்கள் பயன்படுவார்கள். ஆனால், இந்த "நடமாடும் SF" எங்கு, எப்போது வருவார்கள் என்று தெரியாது. எங்காவது ஒரு இடத்தில் போராளிகளுடன் முட்டுப்படும் போதே அது தெரியும். இப்படியான ஒரு அவதானத்துடன் செல்லும் போது தான் அந்த சத்தம் கேட்டது. இப்போது அந்த சத்தம் இவர்களை நெருங்கி வந்தது. போராளிகளின் இதயத்துடிப்பும் வேகம் பெற்றது. இப்போது அந்த குரல்கள் தெளிவாக கேட்டது. அது மூன்று பெண்களின் உரையாடல் சத்தம்.! அந்த மூன்று இளம் பெண்களும் 22வயதிற்கு குறைவான இளம் வயதினர். தமது வீட்டு தேவைக்கான விறகு வெட்டிச் செலவதற்காக வந்திருந்தனர். அவர்கள் காய்ந்த விறகை தேடி நகர்ந்தபடி, போராளிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கினர். அப்போது போராளிகள் பயந்தது போலவே இவர்களைக் கண்டு விட்டனர் அந்த சிங்களப் பெண்கள்.! ஒரு நாட்டின் சிறப்பு படையணி வீரர்கள், எதிரி பிரதேசத்தினுள், நடவடிக்கை நிமித்தம் நகரும் போது, எப்படி எல்லா காலநிலைக்கும் தாக்குப்பிடித்து, கிடைப்பதை உண்டு உயிர்வாழ கற்றுக்கொடுக்கப்படுகின்றதோ, அது போலவே மிக முக்கியமானது இப்படியான நேரத்தில் யாராவது இவர்களது நடமாட்டத்தை கண்டால், அவரை கொன்று, அந்த உடலை மறைத்து பின் நகரவேண்டும். அது பொதுமக்களுக்கும் பொருந்தும்.! இந்த முறையையே பொதுவாக எல்லா நாட்டு சிறப்பு இராணுவப் படையணியினரும் கையால்கின்றனர்.! புலிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இது மரபுவழி இராணுவமாக இருந்த புலிகளின் சிறப்பு அணிகளுக்கும் பொருந்தும்.! யுத்தத்தில் இது தவிர்க்க முடியாதது.! அப்படி ஒரு சந்தர்ப்பம் தான், புலிகளின் சிறப்பு அணியினருக்கும் அன்று ஏற்பட்டிருந்தது.! அந்த நேரத்தில் சிங்கள இராணுவத்தினரின் சீருடையில் இருந்த புலிகள், உடனே பற்றையினுள் இருந்து வெளிவந்து, ஆயுத முனையில் அந்த பெண்களை தமது கடுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். குடிமனைகளில் இருந்து தொலைவில் இருந்தமையால் அது இலகுவாக்கி விட்டிருந்தது. அப்போது அந்த அணியின்பொறுப்பாக வந்த போராளி சரளமாக சிங்கள பேசக்கூடியவர். அவர்களுடன் உரையாடி அவர்கள் வந்த நோக்கத்தையும் அவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டனர். உரையாடலின் போதே அந்த பெண்களுக்கு இவர்கள் யாரென்று தெரிந்து விட்டது. மூவரும் அழ ஆரம்பித்தனர். அப்போது இவர்களைக் கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம் இவர்களை உயிரோடு விட்டால், அடுத்த சில மணி நேரத்தில் சிங்கள உந்துருளிப்படையணியால் சுற்றி வளைக்கப் பட்டு, கொல்லப்படுவார்கள் என்பது புலிகள் ஐந்து பேருக்கும் தெரியும். ஆகவே, கொல்வதற்கு ஆயத்தப்படுத்தும் போது, தங்களுக்கு நிகழப்போவதை உணர்ந்த, அந்த சிங்களப்பெண்கள் விழுந்து, தொழுதபடி கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது அழுதபடியே தங்களை "எது வேண்டுமானாலும் செய்யும் படி கூறி" தங்களை உயிரோடு மட்டும் விட்டு, விடும் படி மண்ராடினர்.! பல வருடங்கள் சிங்கள நாகரீகத்தை கரைத்து குடித்த அந்த அணித் தலைவனுக்கு, அவர்களின் வேண்டு கோளின் அர்த்தம் புரியாமல் இல்லை. சிறு புன்னைகையின் ஊடே அவர்களின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தபின், அடுத்த கட்டத்துக்கு ஆயத்தமான போது, அந்த அணியிலேயே வயது குறைந்த, ஒரு இளைய போராளி, அண்ணை கொஞ்சம் பொறுங்கோ... எனக்கு இவையளை பார்க்க பாவமா இருக்கு. இவர்களை இங்கேயே கட்டி போட்டு விட்டு போவம் என்றான். அதற்கு அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அந்த அணியில் இருந்த இனொரு போராளியும் அந்த இளைய போராளிக்கு உதவிக்கு வந்தான். தொடந்து அணித்தலைவர் மறுப்பு சொன்னபோது, அதுவரை அமைதியாக இருந்த, இவர்களுடன் பயணப்பட்ட கரும்புலிவீரனும் அவர்களுக்கு உதவிக்கு வந்தான். அப்போது அந்த மூன்று போராளிகளின் வற்புறுத்தல், அந்த அணித் தலைவனின் மனதை கரைத்து. வேறு வழி இல்லாது, அரைமனதுடன் அவர்களை உயிரோடு விட சம்மதித்தான்.! இராணுவ விதிமுறையை மீறினால், அதன் பின் விளைவு என்ன என்பது அந்த அணியினருக்கு நன்கு தெரிந்திருந்தது. எந்த நிமிடமும் இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். பெரும்பாலும் எல்லோரும் மரணிக்கலாம்.! அவர்கள் அதற்கு தயாராகவே இருந்தனர்.! அதன் பின் அந்த மூன்று பெண் களையும் இவர்களுடனேயே இன்னும் சில km தூரம் கூட்டி சென்றனர். பின் அவர்கள் மூவரையும் கை,கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு, அந்த பெண்கள் கூறிய நன்றியை காதில் வாங்கியபடி புலிகள் நகர ஆரம்பித்தனர். அந்த பெண்களுக்கும், அவர்களின் உறவினருக்கும் மட்டுமே, அன்று ஒரு உண்மை புரிந்திருக்கும்! புலிகளை எந்தளவு தூரம் "ஒழுக்கமாணவர்களாக" தலைவன் வளர்த்திருந்தாரென்று.! இந்த சம்பவத்தின் பின் அந்த அணியினருக்கு, தமது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை எழுந்தது. ஏனெனில் இந்த பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு போய்ச் சேராது போனால், இவர்களை தேடி, இவர்களது உறவினர்கள் வருவார்கள். எப்படியோ சில மணி நேரங்களில், எல்லோருக்கும் தகவல் கிட்டும். ஏதோ ஒரு இடத்தில் இவர்கள், சிங்கள SF படையணியுடன் முட்டுப்படுவார்கள். அதை உணர்ந்து ஒட்டமும் நடையுமாக தங்கள் பயணப்பதையை மாற்றிச் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பயந்தது போலவே, அடுத்த நாள் இவர்களை இனம் கண்ட எதிரி தாக்குதலை தொடுத்தான். இதில் அந்த இளைய போராளி கால் துடையில் காயமடைந்தான். அந்த போராளியையும் தூக்கிக் கொண்டு பெரும் காட்டை நோக்கி நகர்ந்தனர். உடனே எதிரி இவர்கள் முன்னோக்கி ஓடுவார்கள் என்றே கணிப்பார்கள் என்பதை உணர்ந்த அணித்தலைவர், காயமடைந்த அந்த இளைய போராளியுடன் பின்னோக்கி நகர்ந்தனர். ஒரு பாதுகாப்பான இடம் ஒன்றை அடைந்து அங்கு தங்க முடிவெடுத்தனர். அப்போது இவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடும் இருந்தது. அதோடு இன்னும் கடக்கவேண்டிய தூரமோ மிக அதிகம். அதனால் காயமடைந்த போராளியை தூக்கி சுமப்பதும் சிரமம். அப்படி தூக்கி சென்றாலும் வேகமாக நகர முடியாது.! அதனால், மீண்டும் எங்காவது முட்டுப்பட வேண்டி வரலாம்? அப்படி தூக்கி சுமந்தாலும் இரத்த போக்கு காரணமாக அந்த போராளி எம்மை விட்டு போவது தவிர்க்க முடியாது. அதனால் என்ன செய்வதென்று எல்லோருக்கும் குழப்பம். அப்போது அந்த போராளியை சுமந்து செல்வதற்கு முடிவெடுத்து, படுக்கை ஒன்றை தயார் செய்ய ஆரம்பித்த போது அந்த இளைய போராளி அதை தடுத்தான். அப்போது அவன் "அண்ணை நான் கன நேரம் உயிரோடு இருக்க மாட்டன்" என்னை காவி நீங்களும் அடி வேண்ட வேண்டி வரும், அந்த கரும்புலி வீரனை காட்டி "அவரது உயிர் முக்கியம்" நீங்கள் "தப்பி போங்கோ" என்றான் தீர்க்கமாக. அவனது வார்த்தையில் இருந்த உண்மை, அவனது கோரிக்கைக்கு எல்லோரையும் செவிசாய்க்க வைத்தது. அப்போது அந்த இளைய போராளி தன்னை கிடங்கு கிண்டி தாட்டு விட்டு செல்லும் படி கோரிக்கை வைத்தான். ஆகவே அதற்கான கிடங்கை கிண்டும் படி கூறினான். அதன்படியே ஏனைய போராளிகள், பெரும் மனச்சுமையுடன் தடியின் உதவியுடன் கையால் கிடங்கொன்றை கிண்ட ஆரம்பித்தனர். அது ஒரு மணல் பிரதேசம் என்பதால் அந்த வேலை இலகுவாக முடிந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த போராளி தனக்கு தாகமா இருக்கென்று கேட்டு, ஒரு குளிர்பான கானை உடைத்து சிறிது குடித்தான். சிறிது குடித்ததும் "அண்ணை எனக்கு போதும் இதை நீங்கள் பங்கிட்டு குடியுங்கோ, சாகப்போற எனக்கு எதுக்கு" என்றான்.! எல்லோரும் கண்ணீருடன் அவனை பார்த்த போது, தனது வலியை மறந்து எல்லோரையும் சிரிக்க வைக்க முயட்சி செய்து தோற்றுப்போனான்.! சிறிது நேரத்தின் பின் தன்னை அந்த கிடங்கில் தூக்கி வளர்த்தும் படி கூறினான்.! அதை யாரும் செய்ய முன்வரவில்லை.! சிறிது நேரத்தின் பின் தூரத்தில் எதிரியின் உந்துருளியின் சத்தம் கேட்டு எல்லோரிடமும் பதட்டம் தொற்றியது. அப்போது அந்த போராளி அங்கிருந்த படியே குப்பியை(சயனைட்) கடிக்க ஆயத்தமான போது, அதை தங்களால் பார்க்க முடியாதென்ற போராளிகள், அவனை தூக்கி அந்த கிடங்கில் வளர்த்தினர்.! எல்லோரும் கண்ணீருடன் அவனிடம் விடை பெற்ற போது, அவன் புன்னகையுடன் அதை ஏற்றான்.! தொடர்ந்து, இவர்களைப் பதுகாப்பாக சென்றுவிடும்படி கேட்டபின், அந்த அணித்தலைவனிடம், தனது மரண செய்தியை இவனே தனது பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தான். அத்தோடு என்ன காரணத்துக்காக தான் மரணமடைந்ததையும், தன் தாயிடம் கூறும்படி கூறினான்.! ஏனெனில், அந்த இளைய போராளிக்கு இரண்டு பெண் சகோதரிகள் இருந்தார்கள்.! ஆகவே, தனது உணர்வை அவனது தாயால் உணரமுடியுமென்றும், அவரது மனம் அதனால் சாந்தியடையுமென்றும் வேண்டினான். அப்போது அந்த அணித்தலைவன், அவனிடம் கூறினான், நான் எடுத்த ஒரு தவறான முடிவால் உன்னை இழந்துவிட்டேன் என்றபோது, இல்லை அண்ணை நீங்கள் எடுத்தது தான் சரியான முடிவு. அவர்கள் என் சகோதரிகள் போல இருந்தார்கள் என்றான்.! அது போலவே ஏனைய போராளிகளுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தது, தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பெண்களை காப்பாற்றியதற்கு. ஆனால், எல்லோருக்கும் பொதுவான ஒரு காரணம் இருந்தது.! எவ்வளவு தூரம் எமது மக்களை இந்த போராளிகள் நேசித்தர்களோ, அந்தளவு தூரம் எதிரியின் மக்களையும் நேசித்தார்கள்.! இவர்கள் தான் எங்கள் போராளிகள்.! சில நிமிடங்களின் பின்,மரணித்த அந்த வீரனுக்கு, உளமார தங்கள் வீரவணக்கத்தை செலுத்திய பின், தமது இருப்பிடம் நோக்கி நகர ஆரம்பித்தனர். அதன் பின் பல ஆபத்துகளைக் கடந்து எதிரியின் தாக்குதல்களையும் முறியடித்து, பல நாட்கள் தாமதமாக உணவில்லாது, கிடைத்தவற்றை உண்டு, தமது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர்.! ஒரு வாரத்தின் பின் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்த அவனது வீட்டுக்கு சென்ற அந்த அணித் தலைவனால், சில நிபந்தனைகளுடன் அவனது பெற்றோருக்கு வீரச்சாவுச் செய்தி அறிவிக்கப்பட்டது. அந்த போராளிக்கு ஒரு நடுகல் கூட இல்லாது, ஊரறியாது, தங்கள் சோகங்களை மறைத்து வாழ்ந்தது அந்த குடும்பம். பின்னைய நாளின் அந்த அணித் தலைவனின் குடும்பமானது அந்த குடும்பம், அவனை மகனாகவும், சகோதரனாகவும் ஏற்றது அந்த குடும்பம்.! ஒரு வெளித்தெரியாத வீரனின் வரலாற்றை, பெருமை, பெயர்,புகழ், கல்லறை, மாவீரர் குடும்பம் என்ற கௌரவம், என எல்லாவற்றையும் துறந்து, தங்களை, தங்கள் நாட்டுக்காக அர்ப்பணித்த குடும்பங்களில் அந்த இளைய போராளியின் குடும்பமும் ஒன்று.! இது தான் எங்கள் மக்கள்.! இவர்கள் தான் எங்கள் வீரர்கள்.!! From Facebook
-
தமிழீழத் தாயக விடுதலைக்காக போராடி வீரமரணமடைந்த போராளிகளுக்கும், ஆயுதப் போரின்போது மரணித்த பொதுமக்களுக்கும் அஞ்சலிகள்.
-
பலர் யாழில் உறுப்பினர்களாகச் சேராமல் முகநூல் ஊடாக வருகின்றார்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் முகநூலில் புரொபலை மாற்றினால் யாழும் காட்டுது போலிருக்கு.
-
குரு(தி)ஷேத்திரம் - கரும்பறவை பங்குனி, வைகாசி 1992 சிரித்திரன் இதழில் கரும்பறவை எழுதிய உண்மைச்சம்பவம் இது. மட்டக்களப்பில் தமிழ் இளைஞர் பேரவையை உருவாக்கியவர்களில் ஒருவரும், சட்டத்தரணியும், போராளியுமான பொன்.வேணுதாசின் துணைவி ஜமுனாவின் படுகொலை பற்றிய பதிவு இது. தனது பெயரின் முதலெழுத்தான 'P'என்பதை ஒரு தாளில் எழுதி அந்தப் பவுடர் ரின்னில் ஓட்டினான் பிரசாத். விளையாட்டாக தான் அப்படி ஒட்டிய பவுடர் ரின்தான் பின்னர் தடயப் பொருளாக அமையப்போகிறதென்பது அப்போது அவனுக்குத் தெரியவில்லை. என்ன இருந்தாலும் இளைஞன் தானே அவன்? காலையிலும் மாலையிலுமாவது பவுடர் போட்டுக்கொள்ள வேண்டுமென்று அவனுக்கொரு ஆசை. ஆனால் அதற்கு வசதியில்லை. ஜமுனாக்கா வேணு அண்ணாவைச் சந்திக்க வரும்போது தனது கைப்பையில் பவுடர் கொண்டு வருவார். அப்படி வரும் சமயங்களில் அந்தப் பவுடரை இவன் எடுத்துப் பூசுவதுண்டு. அதனால் 'ஜமுனாக்கா வந்தா பவுடர் பூசலாம்' என்று இவன் அடிக்கடி கூறுவதுண்டு. மட்டக்களப்பு நகர மக்கள் வங்கிக் கிளையில் பணியாற்றும் ஜமுனாக்கா தனது கணவரான பொன்.வேணுதாசைச் சந்திப்பதென்றால் சுலபமான காரியமல்ல. எத்தனையோ இராணுவக் காவலரண்களைத் தாண்டி வரவேண்டியிருக்கும். சில சமயங்களில் தனது குழந்தைகள் அபராஜிதா, பிரவீனா இருவரையும் கூட்டிக்கொண்டு வந்து அவருக்குக் காட்டுவதுமுண்டு. இவ்வளவு சிக்கலுக்குள்ளால் பன்குடாவெளிக்குப் போகவேண்டுமென்பதால் அதைப் பெரும்பாலும் அவர் தவிர்த்து வந்தார். போகும் போது எதாவது விபரீதம் நடந்தால்... இதற்காகவே அதனைத் தவிர்த்து வந்தார். குழந்தைகளைக் காண தந்தை ஏங்குவார் என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் என்ன செய்வது? மட்டக்களப்பு நகரினுள் இராணுவம் நுழைந்ததற்குப் பின்னர் வேணு அண்ணர் பன்குடாவெளிப் பகுதியிலேயே இருந்தார். போராளிகள், ஆதரவாளர்கள், இயக்கத்திலிருந்து விலகியோர், பொதுமக்கள் எல்லோருமே அப்பகுதியில் ஒன்றாகத்தான் இருந்தனர். எந்த வித்தியாசமும் இல்லை. *** அது மழைக்காலம். 22.12.1990 அன்று இரவு ஜமுனாக்கா பன்குடாவெளிக்கு வந்தார். வழக்கமாக அவரைச் சந்திக்கும் வீட்டில் எல்லோரும் அவருடன் கதைத்துக்கொண்டிருந்தனர். நகரத்தில் உள்ள நிலமைகளை அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் பிரசாத்தின் ஆடைகளைக் கவனித்தார். 'டேய்..... பிரசாத்.. அடுத்த முறை நான் வாற போது உனக்கு சாரனும் சேட்டும் வாங்கிற்று வாறன் ' *** 23.12.1990 அன்று காலை ஜமுனாக்கா வீட்டுக்குப் புறப்பட்டார். 'அக்கா இரவு நான் கண்ட கனவு சரியில்ல.. கலங்கின தண்ணி, வெள்ளம் கண்டால் நல்லமில்ல எண்டு சொல்லுவாங்கள். நீங்கள் இண்டைக்கு நிண்டுத்துப் போகலாமே? என்ன அவசரம்?' என்று கேட்டான் ரொமேஷ். 'இல்லடா வருஷக் கடைசி.... வேலை கூட. அதோட வாழைச்சேனைக்கு வேலை மாறுற சம்பந்தமாக கொஞ்ச அலுவல் இருக்கு. அதோட இன்னொரு பிரச்சினை - வருஷக் கடைசியில நேர்சறியில நடக்கிற கலை நிகழ்ச்சிக்கு எல்லாப் பெற்றோரும் போனவை. நாங்கள் தான் போகல்ல. அப்பா இல்லாத இடத்துக்கு நானாவது போயிருக்கவேணும். எனக்கு நேரம் கிடைக்கல்ல. நியூ இயருக்காவது பிள்ளைகளோட நான் இருக்கவேணும். இல்லாட்டி பிள்ளைகளுக்கு மனசில ஏக்கமாய் இருக்கும். எங்கட பிள்ளைகள் என்ன அப்பா அம்மா இல்லாத அநாதைப் பிள்ளைகளா?' என்று கேட்டார். இவ்விதம் கேட்கும் போது அவரது முகத்தில் பெருமிதம் தெரிந்தது. மகேந்திரன் என்பவன் அக்காவை வழியனுப்பக் கூட்டிக்கொண்டு போனான். அப்போது சற்றுத் தள்ளியிருந்த சுரேஷ் என்பவன் சொன்னான், 'மகேந்திரன் அக்காவ கொம்மைக்கு குடுக்கக் கூட்டித்துப் போறான்!¨ - அவன் மீது பிரசாத் சீறிப் பாய்ந்தான். 'டேய்.... அப்படியொண்டும் சொல்லாத!' *** கொடுவாமடு சந்தியில் அனைவரும் காத்திருந்தனர். செங்கலடியிலிருந்து ஒருவரும் வரவில்லை. இந்தப் பக்கமிருந்து வேறு யாரும் செல்லும் அறிகுறியும் இல்லை. மக்கள் நடமாட்டம் இருந்தால் தான் அந்தப் பாதை வழியாக அனுப்பலாம். எனவே மயிலவெட்டுவான் வழியாகச் சென்று சித்தாண்டிக்குச் செல்லத் தீர்மானித்தனர். வழியில் மூன்று வயோதிபர்கள் வந்தனர். அவர்கள் செங்கலடிப் பாதை வழியாக மட்டக்களப்புக்குச் செல்வதாகக் கூறவே அவர்களுடன் அக்காவை அனுப்பி வைத்தனர். பிள்ளைகளைச் சந்திக்கும் வரை அக்காவுக்கு மனதில் அமைதி இருக்காது. பிள்ளைகளை நினைக்கும் போது கூடிய நடையின் வேகம் இராணுவத்தினரின் காவலரண்களை நெருங்கும் போது படிப்படியாகக் குறைந்தது. சிறிது நேரத்தில் வேட்டொலிகள் கேட்டன. இவர்களை அனுப்பிவிட்டுக் காத்திருந்த அனைவருமே திடுக்கிட்டனர். மகேந்திரன், சுரேஷ், பிரசாத், ரொமேஷ், வேணு அண்ணன் மனதில் அந்த வசனம் எதிரொலித்தது - 'அக்காவைக் கொம்மைக்கு குடுக்கப் போறான்!' *** எல்லோரும் மீண்டும் கொடுவாமடுவுக்கு ஓடி வந்தனர். ஜமுனா அக்காவுடன் போன மூன்று வயோதிபர்களில் ஒருவர் மட்டும் ஓடி வந்தார். அவருக்குச் சூடு பிடித்திருந்தது. அக்காவைக் காணவில்லை. முதலில் இவருக்கு மருந்து கட்டுவோம் என்றெண்ணி அவரைக் கூட்டிக்கொண்டு சென்றனர். விஷயத்தைக் கேட்பதற்கு முன்பே வயோதிபர் சொன்னார், 'சுட்டுப் போட்டானுகள் தம்பி! செங்கலடி ஆஸ்பத்திரிக்குக் கிட்ட இருந்த வஸ் கோல்டில ஆமிக்காரனுக்கள் நிண்டானுகள். எங்களைக் கண்டு திரும்பிப் போகச் சொல்லிக் கையைக் காட்டினானுகள். திரும்பி நடக்கத் துடங்க சடசட வென்று சுட்டானுகள். என்னோட வந்தரெண்டு பேரும் செத்துப் போயிற்றினம். - மகேந்திரன் அவசரப்படுத்தினான். 'அக்காவுக்கு என்ன நடந்தது?' இளைத்தபடியே அவர் சொன்னார். 'அந்தப்புள்ள எண்ட கையைப் புடிச்சிக்கொண்டு ஓடிவந்தது. முருகா முருகா என்னைக் காப்பாத்து எண்டு சொல்லிக்கொண்டு ஓடி வந்தது.... அப்படி ஓடி வரக்குள்ள வெடிப்பட்டுத்து. என்னைத் தூக்கிக்கொண்டு போங்க என்று கத்திச்சு அந்தப்புள்ள. நான் தூக்கிறத்துக்குக் குனிஞ்சன். அப்பதான் எனக்குச் சூடுபட்டது. என்னால - முடியல்ல ஓடி வந்திட்டன்' என்றார். வயோதிபரை அனுப்பிவிட்டு தொடர்ந்தும் அங்கே காத்திருந்தனர். காந்தன், வேணு அண்ணன், மகேந்திரன், பிரசாத், சுரேஷ், ரொமேஷ் உடன் வேறுசிலர். மழை பெய்துகொண்டிருந்தது. நனைந்தபடியே காந்தனிடம் வேணு அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தார். 'ஜமுனா எப்பிடியும் தப்பியிருக்கும். இந்த மழைக்குள்ள எதாவது ஒரு மரத்துக்கு கீழ நிக்கும். காந்தன்!... நான் கலியாணம் முடிச்சுக் குடும்பம் நடத்தினன் எண்டு பேர்தான். எனக்கு இத்தினை வயதாச்சு... கடையில உடுப்பு எடுக்கக் கூடத் தெரியாது. எல்லாமே அவள்தான். நான் சட்டத்தரணியா வந்ததே அவளால தான். எல்லாம் அவளின்ர ஆசைதான்... அவளுக்கு ஒரு முறை மச்சான் இருந்தான். அவனுக்கு இவளைத்தான் சாணக்குறி போட்டது. அவன் இவளைக் கட்டுவான் எண்டுதான் காத்திருந்தினம். ஆனா அவன் படிச்சு சட்டத்தரணியானதுக்குப் பிறகு இவளைக் கலியாணம் செய்ய விரும்பல்ல. அவனுடைய தகுதிக்கு இந்தக் குடும்பத்தில கலியாணம் செய்ய அவனுக்கு கஷ்டமா இருந்தது. அவன் வேற இடத்தில கலியாணம் செய்திட்டான். – ஆனால் இவள் துவண்டு போகல்ல. வாழ்க்கையைச் சவாலா எடுத்துக் கொண்டாள். அந்த நிலையில அவள் ஒரு சபதம் எடுத்துக்கொண்டாள். தான் முடிக்கிற ஆளைக் கலியாணத்துக்குப் பிறகு சட்டத்தரணி ஆக்கிறதெண்டு. அவளின்ர விருப்பத்துக்காகத்தான் சட்டத்தரணி ஆனன். என்னுடைய விருப்பத்துக்குத் தமிழில சத்தியப்பிரமாணம் செய்தன். அண்டைக்குச் சத்தியப்பிரமாணம் செய்ததில 17 பேர் தமிழர். இதில நானும் பொன்.பூலோகசிங்கமும் தான் தமிழில சத்தியப்பிரமாணம் செய்தம். அண்டைக்கு அவள் பட்ட சந்தோசம்! அவள் என்ர மனுஷியாக நடக்கல. என்ர அம்மா மாதிரி நடந்தாள். நாங்கள் கலியாணம் முடிச்சதில இருந்து குடும்பமா இருந்த நாள்கள் மிகக் குறைவு. ஜெயிலில இருந்தும் தலைமறைவாகியும் இருந்ததால எங்கட பிள்ளைகள் கூட அப்பாட அரவணைப்பில்லாமல்தான் வளந்ததுகள். அப்படியிருந்தும் என்னுடைய போக்கை மாத்தைச் சொல்லிக் கேக்கல. இண்டைக்கு அவள் வெடிப்பட்டுக் காயத்தோட மழைக்கு நனைஞ்சு கொண்டு நிக்கிறாள்' மழைக்கு போட்டியாக அவர் கண்களும் நீரைச் சொரிந்துகொண்டிருந்தன. *** அன்று முழுக்க சம்பவம் நடந்த பகுதியை நோக்கிப் போகமுடியவில்லை. அனைவரும் பன்குடா வெளிக்குத் திரும்பினர். இதற்கிடையில் வலையிறவுப் பக்கமாக ஒருவரை நகரத்துக்கு அனுப்பினார்கள். அக்கா போய்ச் சேர்ந்திட்டாரா என்பதை அறிந்து வரச் சொன்னார்கள். இல்லாவிடில் செஞ்சிலுவைச் சங்க மூலமாக அக்காவின் நிலையை அறியுமாறு சொல்லி அனுப்பினார்கள். அன்று காந்தன் நித்திரைக்குப் போவதற்கிடையில் ஆயிரம் தடவை வேணு அண்ணன் சொல்லி இருப்பார், 'ஜமுனா எப்படியும் தப்பியிருக்கும். ஆற்றை வீட்டிலயாவது ஒளிச்சிருந்திட்டு வரும்'. நகரத்தில் தகவலைத் தெரிவித்தவரிடம் வேணு அண்ணாவின் மூத்த மகள் அபராஜிதா வினவினாள். 'அப்பாவைச் சுட்டதா? அம்மாவைச் சுட்டதா? அப்பாவைத்தான ஆமி தேடினவன்? அப்ப அம்மாவை ஏன் சுட்டான்' குழந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை அவருக்கு. 'உன்ட அம்மாவைப்போல ஆக்களைச் சிங்களவன் சுடுறதைத் தடுக்கத்தான் அந்தக் காலத்தில தமிழ் இளைஞர் பேரவை அமைச்சவர் உன்ட அப்பா' என்று சொல்லுமளவுக்கு அரசியல் தெரிந்தவரில்லை அவர். *** நித்திரை செய்த நேரம் குறைவுதான். நேரத்துடன் கண்விழித்து விட்டான் காந்தன். பக்கத்தில் படுத்திருந்த வேணு அண்ணாவைக் காணவில்லை. எங்கே போயிருப்பார் என்றெல்லாம் சிந்திக்கவில்லை. நேரே கொடுவாமடுச் சந்திக்கு வந்தான் பக்கத்தில் போன காந்தனிடம் அவர் சொன்னார்.... 'ஜமுனா செத்துப் போச்சு! அதில சந்தேகம் இல்லை. அவளின்ர (B)பொடியை எடுக்க வேணும்' இண்டைக்கு எப்பிடியும் எடுத்திடவேணும்'- உறவால் அவருக்கு மருமகனாக இருந்தாலும் 'அண்ணன்' என்றே காந்தன் அழைப்பது வழக்கம். அந்த வழக்கத்தில் 'ஓம் மண்ணன் .... இண்டைக்கு எப்பிடியும் எடுப்பம்' என்றான் அவன். நகரத்துக்குச் சென்றவர் ஜமுனாக்கா அங்கு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். நேரம் போய்க்கொண்டிருந்தது. அன்று செங்கலடிப் பாதை வழியாக மக்கள் பன்குடாவெளி வருவதற்கு அனுமதித்திருந்தனர் இராணுவத்தினர். அவ்வாறு வந்தவர்களிடம் ஜமுனாக்காவைப் பற்றி விசாரித்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவலைச் சொன்னார்கள். 'நீலச் சீலையுடுத்த பொம்பிளை ஒண்டின்ர (B)பொடி கிடக்குது' - 'ஒரு (B)பொடிய காகம் கொத்துது' - இதற்கு மேலால் வேணு அண்ணனால் தாங்க முடியவில்லை. 'காந்தன்.... ஜமுனாவின்ர (B)பொடியில ஒரு துண்டை எண்டாலும் எடுத்துக் கொண்டந்து எரிக்க வேணும்' என்றார். ஒரு குழு தேடுதலுக்குப் புறப்பட்டது. முன்னே பிரசாத்தும் மகேந்திரனும் சென்றுகொண்டிருந்தார்கள். முதலில் வயோதிபர்கள் இருவரது உடல்களும் அகப்பட்டன. அக்காவைப் பற்றிய தடயங்களைக் காணவில்லை. முதல் நாள் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிய வயோதிபர் மீண்டும் வரவழைக்கப்பட்டார். அவர் ஜமுனாக்கா சூடு பட்டு விழுந்த இடத்தை அடையாளம் காட்டினார். அந்தப்பகுதியில் தொடர்ந்து தேடினர். அப்போது பிரசாத்தின் கண்ணில் அகப்பட்டது ஒரு பவுடர் ரின். அதைப் புரட்டிப் பார்த்தபோது அவன் ஒட்டிய 'P' என்னும் எழுத்து காணப்பட்டது. *** நிலமட்டத்துக்குக் கிட்டத் தண்ணீர் கொண்டிருந்த கிணற்றை எட்டிப் பார்த்தான் மகேந்திரன். ஜமுனா அக்காவின் பிரேதம் மிதந்துகொண்டிருந்தது. 'பிரசாத் அண்ண!.. ஜமுனாக்காட (B)பொடி கிடக்குது' என்று கத்தினான். ஓடி வந்த பிரசாத்தும் அவனுமாக பிரேதத்தை எட்டித் தூக்கினார்கள். ஒரு சாக்கில் கிடத்தித் தூக்கிக் கொண்டு வந்தனர். காந்தனுக்குப் பக்கத்தில் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்த வேணு அண்ணன் அப்போது தான் கவனித்தார். ஜமுனா அக்காவின் கை நிலத்தில் இழுபட்டபடி வந்து கொண்டிருந்தது. 'ஜமுனா..... கை முட்டுது' உரக்கக் கத்தினார் வேணு அண்ணன். அந்தக் கணத்தில்தான் ஜமுனா அக்கா இல்லாத உலகம் தன்னெதிரில் இருப்பது புரிந்தது. இவ்வளவு நேரமும் அடக்கிக்கொண்டிருந்த அழுகை பீறிட்டெழுந்தது. கரத்தையொன்றில் ஜமுனா அக்காவின் சடலம் கிடத்தப்பட்டது. கொட்டும் மழைக்கிடையில் கரத்தையைப் பிடித்தபடி சென்றுகொண்டிருந்தார் வேணு அண்ணன். இந்தக் காட்சியை எப்படிச் சகிப்பது என்று திண்டாடிக்கொண்டிருந்த காந்தனிடம், 'காந்தன்... தொந்தரவு செய்யிறதா நினைக்காத. புதுச்சீலை யொண்டும் சட்டையொண்டும் வேணும் 'என்றார் அவர். பிரசாத்துக்குப் புது உடுப்பு எடுத்துக்கொண்டு வருவதாகச் சொன்ன அக்காவுக்குப் புது உடுப்பு எடுக்க வேண்டிய நிலை - சாக்கினால் சுற்றப்பட்ட அவரது உடல் - இதை நினைக்கக் காந்தனுக்குத் தலை கிறுகிறுத்தது. ஆனாலும் ரவையாய் விரைந்தான். புறப்பட்டு விட்டானேயொழிய அவன் மனதில் ஒரு கேள்வி, 'இந்த இடத்தில புதுச் சீல சட்டைக்கு எங்க போறது?' எள் என்றால் எண்ணெயாய் நிற்பவர்கள் தானே மட்டக்களப்பு மக்கள். ஜமுனா அக்காவின் உடல் வருகின்றது என்பதை கேள்விப்பட்டவுடன் தனது மகளுக்கென வாங்கிய ஒரு புதுச் சேலையை வெளியில் எடுத்து அதற்கு ஏற்ற வகையில் சட்டை தைத்துக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. (பங்குடாவெளியைச் சேர்ந்த பாக்கியம்பா என்ற பாக்கியவதி) காந்தனைப் பொறுத்தவரை திருப்தி. ஜமுனா அக்காவுக்கு ஒரே ஒரு சூட்டுக்காயம். முதுகில் பட்ட ரவை வயிறு வழியாக வெளியேறியிருந்தது. வைத்தியம் செய்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். கழுத்தில் தெரிந்த காயம் காப்பு, சங்கிலி போன்ற ஆறு பவுணுக்கு மேற்பட்ட நகைகளைக் கைப்பற்றத்தான் இவரைக் கொன்றிருக்கின்றார்கள் என்பதைத் தெட்டத் தெளிவாகக் காட்டியது. புகைப்படப் பிடிப்பாளனான சுரேஷ் ஜமுனா அக்காவின் சடலத்தை படமெடுக்க முயன்றான். அதனைத் தடுத்து விட்டார் வேணு அண்ணண். 'நான் உயிரோட இருக்கு மட்டும் அவளின்ர உருவம் மட்டும் எப்பவும் எனக்கு நினைவில இருக்க வேணும், அவள் இந்த உலகத்தில இப்ப இல்ல எண்டு காட்டுற ஆதாரம் எதுவும் இருக்கக்கூடாது. தயவுசெய்து படமெடுக்காதீங்க' என்றார் வேணு அண்ணண். காந்தனைத் தனியாக அழைத்த சுரேஷ் 'நான் அழிவுகள், உயிரிழப்புக்கள் நடந்தால் அந்த இடத்துக்குப் போய் எத்தனையோ புகைப்படங்கள் எடுத்திருக்கிறன். ஆனா இந்த இடப்பெயர்வுக்குப் பிறகு எங்களுக்கு ருசியாச் சமைச்சுத் தந்த ஜமுனாக்காவைப் படம் எடுக்க முடியலையே' என முணுமுணுத்தான். சடலம் எரிந்துகொண்டிருந்தது. நகரத்திலிருந்து வந்த லொறி அந்த இடத்தை வந்தடைந்தது. அதில் வேணு அண்ணருக்கு அவரது உறவினர் ஒருவர் அனுப்பிய கடிதம் வந்தது. அவர் கலங்காமலிருப்பதற்காக அது எழுதப்பட்டது. 'ஜமுனா உயிரோடதான். விசயத்தை வெளியில விடவேண்டாம். எப்படியும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் முயற்சித்து ஆளை வெளியில் எடுக்கலாம்' ஓர் இரு நாட்களில் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டனர் அபராஜிதாவும் பிரவினாவும். பிரவினாவுக்கு வயது நாலு. அவள் பெரிய மனிசி என்ற தோரணையில் புறுபுறுத்துக்கொண்டிருந்தாள். 'அப்பா வேலைக்கு போவார் - ஆமிக்காரன் புடிச்சுக்கொண்டு போவான், அம்மா வேலைக்குப் போவா. ஒவ்வொரு நாளும் கொள்ளையா நேரம் காத்திருக்க வேணும் நாங்கள். இப்ப செத்துப்போயிற்றா - எரிஞ்சுபோனா - எப்ப திரும்பி வருவாவோ தெரியாது' ....... *** மேஜர் வேணு 11.12.1991. அன்று சிவப்புப் பாலத்தடியில் புளொட், டெலோ, இராணுவம் கூட்டாக மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவெய்தினார். இதில் குறிப்பிடப்படும் பிரசாத் குருநாகலில் பொலிசாரால் கைதாகி இருந்தார். இவரைப் பற்றிய விபரம் அறிந்த இராணுவத்தினர் இவரைக் கையேற்க வந்த சமயத்தில் சைனட் உட்கொண்டு சாவைத் தழுவினார். http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=55d6804d-b054-4074-9e5b-886dc082d198
-
கருத்துக்களைக் கருத்துக்களால் வெல்லமுடியாமல், குதர்க்கம் பேசுபவர்களால் விவாதத்தில் வெல்ல முடியுமே தவிர ஒருவரின் கருத்தியலை வெல்லமுடியாது!
-
துருச்சாமி சுவி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
-
நான் கண்ட நாய்கள் -முகமூடி நான் கண்ட நாய்கள் பலவிதம். நேற்றுப் பிறந்த குறிதெரியாத "இள"ம்நாய்களிலிருந்து.. விரைவீங்கித் தொங்கும் வாலிப வயோதிக நாய்கள் வரை.. நான் கண்ட நாய்கள் பலவிதம். சில நாய்கள் கொள்கைக்காகக் கத்துவதாய் சொல்லிக் கொள்கின்றன. கொள்கை குறித்தி விசாரிக்கப் போனால் கத்துவதை விடுத்து கடியையே பதிலாக தருகின்றன... அந்நாய்களின் கொள்கைகளைக் அவைகளே தீர்மானிப்பதில்லை என்பதைக்கூட அறியாமலேயே வாழும் நாய்ப்பாடு பெரும்பாடு... தனக்குக் கொள்கையில்லை என்ற பிரகடனத்துடன் தன் உள்மன அழுக்குகளையெல்லாம் கொள்கையாக்கிக் கத்துகிற நாய்கள் சில இங்குண்டு. இன்னும் சில நாய்கள் பொறாமையில் கத்தும்.. சில நாய்கள் அரசியல் சார்பில் அடியாட்களாய்க் கத்தும்... ஜாதிகள் இல்லையென்று கொக்கரிக்கும்சில நாய்கள் பின்னொருநாள் ஜாதிக்கட்சிகளை நக்கி மகிழும். அந் நக்கலை நியாயப்படுத்த ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். என்றாலும் பெண் துவாரம் தேடும்போது ஜாதியை மறந்துவிடுகிற இவை தன் ஜோடியை தேடும்போது மட்டும் ஜாதியை மறக்காத சுபாவத்தை இயற்கையிலேயே கொண்டிருப்பவை.. இலக்கியச் சேவையென்று கத்துகிற நாய்கள் சில உண்டு.. எதிரே இல்லாத பிடிக்காத எழுத்தாளனை பாய்ந்து பிடுங்குவதாய் வேஷம் கட்டும் அவற்றை அவற்றின் கோஷத்தை வைத்தே எளிதில் அடையாளம் காணலாம்... பதவிக்காகக்கத்துகிற நாய்களும் சில இங்குண்டு. இந்நாய்களின் குரலில் எஜமானன் மீதான நன்றியுணர்ச்சி வழியும். பதவி கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாய் பரம்பரை பழக்கத்தில் இவை கத்திக் கொண்டிருக்கின்றன. இவை சில நேரங்களில் எஜமானனுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு எஜமானன் சொல்லாமலே கத்தி உபத்திரவங்கள் கொண்டு வருவதுமுண்டு. இனச்சேவை, மொழிச்சேவை என்ற பெயரில் இருப்பை காட்ட கத்தும் சில நாய்கள். சினிமா சான்ஸு என்ற பெயரில் சில்லரைக்காக கத்தும் சில நாய்கள். தன் குரல் தானே கேட்கிற மகிழ்ச்சியில் குயிலென்று நினைத்துக் கொண்டு தொடர்ந்து கத்துகின்ற நாய்களும் உண்டு. பெரிய நாய்களோடு சேர்ந்து கத்தினால் கவனிக்கப்படுவோமென்று கத்துகிற குட்டிநாய்களும் உண்டு. தனியாகப் பார்க்கும்போதுவாலைக் குழைத்து நெளிந்து வளைந்து பின் - கூட்டத்தில் தைரியமாகக் கத்துகிற நாய்களும் உண்டு. தன் குரலின் அருமை அறியாமல் அடிக்கடிக் கத்திக் கல்லடி வாங்குகிற நாய்களும் உண்டு. கத்துவதற்கு நேரமில்லை பின்னர் வருகிறேன் என்று சொல்லிப்போகிற நாய்களும் உண்டு. நாய்ப்பெருமை பேசித் திரியும் இந்நாய்களை யாரும் நாயென்று விளித்துவிட்டால் இவற்றுக்குப் பிடிக்காது. "யார் நாயென்று" தன்னினம் தாழ்த்தித் தானே கத்துகிற சிந்தனைத்திறம் பெற்றவை இவை. இருட்டில் வாழ்கிற இந்நாய்கள் வெளிச்சத்துக்கு ஏங்குபவை. ஆனால் வெளிச்சத்தைக் கண்டால் அஞ்சுபவை. அதனால் - திருடர்களின் துணைகொண்டு வெளிச்சக் கம்பங்கள்மீது சிறுநீர் கழித்துச் சிரிக்கின்றன. பின்னெழுகிற கோபத்தில் சிலநேரங்களில் தங்கள் கண்களுக்குள் தங்கள் சிறுநீரைப் பீச்சிக் கொண்டு வெளிச்சத்தைத் துரத்திவிட்டதாய் ஆனந்தப்படுவதுமுண்டு. தான் தின்றதைத் தான் கக்கிப் பின் தானே நக்கித்தின்னும் நாய்கள் அல்ல இவை. எஜமானர்களின் ஏவலுக்கேற்ப அவர்கள் சொல்லும் கக்கலை அதிசுவாரஸ்யமாய் நக்கித் தின்பவை. இவ்வாறுஇந்நாய்கள் இருப்பை நியாயப்படுத்த தொடர்ந்து கத்துகின்றன. என்றாலும் - தன்வீட்டைத் தாண்டிவந்து பொதுமைதானத்தில் பூனையுடன் சண்டைபோடுகிற தைரியத்தைக்கூட தம் விரைகள் தமக்கு வழங்காத வருத்தம் இந்நாய்களுக்கு உண்டு. தன் குறியைத் தான் விறைத்து தனக்குமுன்னே ஆட்டிக்காட்டி அவ்வருத்தம் போக்கிக் கொள்ளும் இந்நாய்கள். குரலையும் இரவல் வாங்கிக் கத்துகிற இந்நாய்கள் சுயமாய்க் கத்துகிற வக்கில்லாதவை. கத்தலையே குரைத்தல் என்று கற்பனையில் திளைப்பவை என்றாலும் - தங்களை நாய்களென்று உணராதிருப்பதாலும் பெரும்பாலான நேரங்களில் தம்பெட்டையைத் திருப்திபடுத்த மட்டுமே பிறர்மீது பாய்ந்துபிடுங்குவதாலும் இந்நாய்களை நேசிக்கலாம் நாம்... http://mugamoodi.blogspot.co.uk/2006/05/blog-post_21.html?m=1
-
நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்?
-
புலவருக்கும், பகலவனுக்கும் மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
-
பாஞ்ச் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
-
ராஜன் விஷ்வாவுக்கும் சுமேரியர் ஆன்ரிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???
-
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.? அத்துடன் அண்மையில் பிறந்ததினத்தைக் கொண்டாடிய ராசவன்னியன் ஐயாவின் பேரனுக்கும் பிந்திய பிறந்ததின வாழ்த்துக்கள்?