Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. மாவீரர் துயிலுமில்லத்தில் புதிய தலைவர் சிறிதரன் 2024 ஜனவரி 22 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரான சிறிதரன் எம்.பி தனது பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து இன்று ஆரம்பித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துக்கோரிய பயணத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக எனக்குரித்தாக்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து, கொள்கைரீதியில் ஒருமித்திருப்போரை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ள பலம் மிக்க பயணத்தை கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திலிருந்து இன்று ஆரம்பித்தோம்.” R https://www.tamilmirror.lk/வன்னி/மாவீரர்-துயிலுமில்லத்தில்-புதிய-தலைவர்-சிறிதரன்/72-331933
  2. ஒட்டுசுட்டான் உப காவல்துறை பரிசோதகருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் adminJanuary 21, 2024 ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தில் கடமையாற்றும் உப காவல்துறை பரிசோதகர் காவல் நிலைய பொறுப்பதிகாரியை தவறாக வழி நடத்தி , அப்பகுதி மக்களை வஞ்சித்து வருவதாக , புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஒட்டுசுட்டான் பகுதியில் பண்ணை ஒன்றினை நடாத்தி வருகிறோம். அதேவேளை பண்ணையில் வைத்து நாம் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் செய்து வருகின்றோம். இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி ஒட்டுசுட்டான் காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வந்த காவல்துறையினர் எமது பண்ணைக்குள் அத்துமீறி நுழைந்து காணியின் உரிமையாளரை விசாரணைக்கு உட்படுத்தினர். பின்னர் என்னிடம் நீ புலி கட்சியா ? உதவிகளை புலி கட்சி ஊடாகவா செய்கிறாய் என மிரட்டி விசாரணைகளை முன்னெடுத்தனர். என்னிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டது, உப பொலிஸ் பரிசோதகரான சுபேசன் எனும் தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தரே .. என்னிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் எமது அனுமதியின்றி , அத்துமீறி எமது அலுவலகத்தினுள் புகுந்ததுடன் சப்பாத்து கால்களுடன் , சாமியறைக்குள் புகுந்து சாமி படங்களை தூக்கி சோதனை செய்தனர். அறைக்குள் இருந்து எமது கட்சியான “புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி” எனும் பெயர் பொறிக்கப்பட்ட பதாகையை , ஏதோ பயங்கர ஆயுதம் ஒன்றினை மீட்டு வருவது போன்ற பீடிகையுடன் வந்து , அதில் உள்ள பெயரை முழுமையாக பொறுப்பதிகாரிக்கு மொழி பெயர்ப்பு செய்யாமல் , விடுலைப்புலிகள் என எழுதி இருப்பதனை மட்டும் மொழி பெயர்த்தார். அதனை அடுத்து என்னை காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்றனர். நான் ஏற மறுத்த போது கைவிலங்குடன் வந்து என்னை மிரட்டி வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். நான் மறுத்த போது , மீண்டும் எமது அலுவலகத்தினுள் புகுந்து , மேற் கூரைகளுக்குள் ஏறி சோதனை இட்டனர். அதனை எனது மனைவி காணொளி எடுத்தார். நான் எனக்கு தெரிந்த ஊடகவியலாளர்கள் , காவல்துறை உயர் அதிகாரிகள் ,உள்ளிட்ட தரப்புகளுக்கு இந்த விடயத்தை உடனே தொலைபேசி ஊடாக தெரிவித்தேன் அலுவகத்தை சோதனையிட்டவர்கள், மீண்டும் என்னிடம் வந்து காவல் நிலையம் போக வேண்டும் வாகனத்தில் ஏறு என மிரட்டினார்கள் , நான் காவல்துறை வாகனத்தில் வர மாட்டேன். எனது மோட்டார் சைக்கிளில் வருகிறேன் என்றேன். நீண்ட இழுபறியில் பின்னர் சிவில் உடை தரித்த காவல்துறையினர் எனது மோட்டார் சைக்கிளை செலுத்த என்னை பின்னால் ஏறி அமருமாறு கூறி அழைத்து சென்றனர். நான் காவல் நிலையம் செல்ல முன்னர் , நான் அறிவித்த ஊடகவியலாளர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் எதற்காக அவரை கைது செய்தீர்கள் என வினவிய போது , தாம் கைது செய்யவில்லை. விண்ணப்ப படிவம் ஒன்றினை நிரப்பவே காவல்நிலையத்திற்கு அழைத்தோம் என பதில் அளித்தார் ஆனால் , காவல்துறையினர் விண்ணப்ப படிவம் தொடர்பில் எதுவும் என்னிடம் கூறவில்லை. காவல் நிலையத்தில் என்னை தடுத்து வைத்திருந்த வேளை மேலிடங்களில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்களை அடுத்து , காவல்துறை பொறுப்பதிகாரி என்னை அழைத்து , உங்கள் கட்சி பற்றி இப்ப தான் தெரியும்.என கூறி என்னை சமரசப்படுத்தி , இனி ஏதாவது உதவிகள் செய்யும் போது காவல்துறையினரின் உதவிகள் தேவை எனில் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கூறி என்னை அனுப்பி வைத்தார். இதன் பின்னர் காவல்நிலைய பொறுப்பதிகாரியை பிழையாக வழி நடத்திய உப காவல்துறை பரிசோதகர் தொடர்பில் ஊரவர்களிடம் விசாரித்த போது , குறித்த உத்தியோகஸ்தர் தனக்கு வேண்டாதவர்கள் , தன்னுடன் தர்க்க படுபவர்களை பொய் வழக்குகள் தொடர்ந்து சிறைகளில் அடைத்து உள்ளமை தெரிய வந்துள்ளது. இவரால் ஒட்டுசுட்டான் காவல்துறைபிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பல பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எங்கே சென்று யாரிடம் முறையிடுவது என தெரியாமல் உள்ளனர். மக்களுக்கு உள்ள மொழி பிரச்னையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி , பொறுப்பதிகாரியை பிழையாக வழிநடத்தும் குறித்த உத்தியோகஸ்தருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை பொலிஸ் திணைக்களம் எடுக்க வேண்டும். ஊடகங்கள் ஊடாக அனைத்து தரப்பிடமும் கேட்டு கொள்வது , குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் தொடர்பில் புலனாய்வு பிரிவுகளை சேர்ந்தவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து , பாதிக்கப்பட்ட மக்களில் வாக்கு மூலங்களை பெற்று , அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். தாங்கள் நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என மனநிலையில் பல காவல்துறை உத்தியோகஸ்தர்கள் உள்ளனர். என மக்களுக்கு அநீதி இழைத்து பல பொய் வழக்குகளை தொடுத்துள்ள இந்த உப காவல்துறை பரிசோதகருக்கு காவல்துறை திணைக்களம் கொடுக்கும் தண்டனை ஏனைய காவல்துறைஉத்தியோகஸ்தர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/199982/
  3. அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி! adminJanuary 22, 2024 தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22.01.24) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று(22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரை இலக்கு வைத்து பச்சை நிற கெப் வண்டியில் வந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2024/199996/
  4. யாழ்கள உறுப்பினர்கள் out of touch ஆக இருக்கினம்! ஆனால் எல்லாம் தெரிந்தவர்களாக காட்டுவதில் விண்ணர்கள்!😜
  5. “தமிழரசு கட்சி தேர்தலில் முறைக்கேடு: 13 பேரின் பெயர்கள் நீக்கம்” கனகராசா சரவணன் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்காக, மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு சென்ற தான் உட்பட 13 பேருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் தாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் தெரிவித்தார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது. இந்த தேர்தலுக்கு கட்சியின் உறுப்புரிமை கொண்ட கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 350 பேருக்கு வாக்களிப்பதற்கான தகுதி செய்யப்பட்டு அவர்களுக்கான வாக்களிப்புக்கு பெயர்பட்டியல் அனுப்பப்பட்டிருந்தது இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தைச் 50 பேர் சென்றிருந்த நிலையில் வாக்களிப்பதற்கான பெயர் பட்டியலில் மகளிர் அணி செயலாளராகிய எனது பெயர் உட்பட 13 பேரின் பெயர்கள் வெட்டப்பட்டிருந்தன. வாக்களிக்க உட்செல்ல எங்களை அனுமதியளிக்கவில்லை. இது தொடர்பாக மாவட்ட தலைவருக்கு அறிய படுத்தியும் அவர் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேவேளை கொழும்பில் இருந்து கட்சியிலையோ, கட்சி கிளையிலையோ, மாவட்டகிளையிலையோ உறுப்புரிமை இல்லாத சிங்காரவேல் மலர்விழி என்பவரின் பெயர் பட்டியில் இடப்பட்டு அவர் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு அவர் வாக்களித்துள்ளார். அதேவேளை அங்கு வாக்களிப்பதற்காக சென்றிருந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ரவிராஜ் சசிகலாவின் பெயர் உட்பட 7 மாவட்டங்களில் பலரது பெயர்கள் விடுபட்டிருந்தன. இதன் போது அங்கு அந்த மாவட்ட தலைவர்கள் செயற்பாட்டினையடுத்து சசிகலா உட்பட விடுபட்டிருந்த 7 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வாக்களிக்க அனுமதி வழங்கினர். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் 13 பெயர்களை வெட்டி வாக்களிக்க அனுமதியளிக்காமை தொடர்பாகவும் யார்? எங்கள் பெயரை வெட்டினார்கள் என பல கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டோம் அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை என்றார். . அதேவேளை, அங்கிருந்த நாங்கள் ஸ்ரீ தரனுக்கு ஆதரவானவர்கள் என்பதால் உங்கள் பெயர் வெட்டப்பட்டுள்ளதாக ஒருவர் இரகசியமாக தெரிவித்தார் இவ்வாறான நிலையில் வாகளிப்பு முடிவுற்று முடிவு தெரிவிக்கப்பட்டது இது தொடர்பாக கட்சி முன்னால் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நிர்வாக செயலாளர் கணநாயகம் ஆகியோரிடம் எங்களது வாக்களிக்கும் உரிமையை மறுத்தமை தொடர்பாக முறையிட்டுள்துடன் இது ஒரு ஜனநாயக தேர்தலா? மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு வாக்களிப்பதற்காக சென்று வாக்களிக் அனுமதி மறுத்தமை பெரும் ஏமாற்றமானதும் கவலையானதுமாகும் என அவர் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமழரச-கடச-தரதலல-மறககட-13-பரன-பயரகள-நககம/73-331912
  6. ஜூடோ - ப.தெய்வீகன் அமெரிக்காவின் அரிசோனா சிறை வளாகத்தில் கைதிகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் ஏற்பாடாயிருந்தன. அன்றைய தினம்தான் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஈழத்தமிழ் கைதியான ரொக்ஸி சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அதிகாரிகளின் கட்டளைப்படி கிறிஸ்துமஸ் உணவுக்கான வரிசையில் நின்றான். பல வகையான உணவுகள் பரிமாறப்பட்ட மேசைக்கு அருகில் சென்றபோது, ரொக்ஸிக்கு முன்னால் சென்றவன் கடதாசித் தட்டை எடுத்துக் கொடுத்தான். வறுத்த சோற்றையும் அதற்கு மேல் வார்க்கப்பட்ட குழம்பையும் எடுத்துக்கொண்டு, அவன் பின்னாலேயே ரொக்ஸியும் நடந்தான். வேறு கைதிகள் இல்லாத இடத்தில் இருவரும் குந்தினார்கள். பாதி வறண்ட வழிகள், பள்ளத்தில் வற்றிப்போன கன்னங்கள், தடித்த உதடுகள். தனது பெயர் ஜூடோ என்று கூறினான். ரொக்ஸி அவனிடம் கேட்டான். “உன்னுடைய வழக்கு என்ன, எத்தனை வருஷ தண்டனை?” ஜூடோவின் முகம் அமைதியாயிற்று. ரொக்ஸியின் கேள்வியால் அவன் சினமடையவில்லை. மாறாக இத்தனை வருடங்களில் சக கைதியொருவனின் நெருக்கத்தை மனத்தளவில் உணர்ந்தான். குற்றங்களுக்கு அப்பால் அவர்களைப் பிணைக்கும் ஒரு நேசமிருப்பதாக உணர்ந்தான். “என் முழுக்கதையையும் சொல்வதற்கு உனக்கு விதிக்கப்பட்ட ஏழு வருடங்களே போதாது” என்று புன்னகை புரிந்த ஜூடோ தன் கதையைச் சொல்லத் தொடங்கினான். 2 ஆஸ்திரேலியாவை ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் துண்டுதுண்டாகத் தின்றுகொண்டிருந்த காலம். வடமுனையிலுள்ள கரமில பெருநகரம் முடிந்தளவு எதிர்த்துப் போரிட்டபோதும், ஈற்றில் ஆக்கிரமிப்பாளர்களிடம் வீழ்ந்தது. கரமில நகரின் தொல்குடிகள் அனைவரும் முழுநிலா இரவன்று ஒதுக்குப்புறக் கிராமத்திற்கு வேட்டை நாய்களின் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டனர். கற்றைகளாக வெட்டி எரிக்கப்பட்ட வலபிப் புற்களைச் சுற்றித் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டனர். லோகன் என்ற பெருங்காட்டின் வழிகாட்டி, தனது மனைவி பாபராவுடனும் ஒரு வயது மகனோடும் அச்சத்தில் தன் செவ்விழிகளை உருட்டியபடி கூட்டத்தில் நடுவிலிருந்தான். ஊற்றுப்பாளையில் செய்த குடுவையில் எடுத்துவந்த தண்ணீரை, பாபரா களைத்திருந்த மகனுக்குப் பருக்கிவிட்டாள். தீ ஒளியில் தெரிந்தன முகங்கள். தொல்குடிகள் அச்சத்தில் தங்கள் குல மிம்மி தெய்வத்தைத் தடித்த உதடுகளால் உச்சரிப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கேட்டது. இருளிலும் வெள்ளை நாகம்போலத் தெரிந்த உயரமான ஒருவன் நீண்ட கடதாசியுடன் எல்லோருக்கும் முன் வந்துநின்றான். ‘கலப்படமற்ற குருதி பாயும் கரியவர்களே! இந்த இருட்டில் உங்களை இனம் காண்பதே பேரிடராயுள்ளது. அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். இந்த விலங்கு நிலத்தைச் சுத்திகரிப்பதற்கும் உங்கள் வருங்காலத் தலைமுறையை எங்களைப் போல உருவாக்குவதற்கும் இங்கு நாம் வந்திருப்பதை நீங்கள் பூரணமாய் அறிவீர்கள். காடுறை வாழ்வும் கரியதோலும் கொண்ட உங்களின் மீது ஒட்டியுள்ள அழுக்குகள் இனியாவது ஒழியவேண்டும். அவை உங்கள் அடுத்தத் தலைமுறைகளுக்கு வேண்டாம். இந்தத் திருமுழக்கத்தை உங்களின் முன்னால் கூறி, இறைச் சத்தியமான எங்களது காரியத்தை ஆரம்பிக்கிறோம். உங்கள் குழந்தைகளை நிரந்தரமாய் எங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறோம். அவர்கள் இனி எங்கள் பண்ணைகளில் பணிபுரியட்டும். மானிடம் போற்றும் வெண்சரும மேனியர்களாக வளரட்டும்” என்று படித்து முடித்தான். வாகனங்களிலிருந்து இறங்கிய சீருடைக்காரர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து, எல்லோருடைய குழந்தைகளையும் வேக வேகமாக இழுத்துப் பறித்தனர். தொலைவில் நின்றுகொண்டிருந்த பச்சைப் படங்கு போர்த்திய நீண்ட வாகனத்துக்குள் கொண்டுசென்றனர். தாய்மார் பாய்ந்து தடுத்தபோது, உதைத்து வீழ்த்தப்பட்டார்கள். ஆண்கள் சிலர் ஆவேசத்துடன் தங்களது குழந்தைகளைப் பறிக்க முற்பட்டபோது, துப்பாக்கிப் பிடிகளால் தரையில் சரிக்கப்பட்டார்கள். சிலர் ஓடிச்சென்று எரிதணலை எடுத்து வீசி, ஆக்கிரமிப்பாளர்களைத் தாக்கினார்கள். குழந்தையை இறுகப் பற்றியபடி தரையோடு மடிந்திருந்த பாபரை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் பாய்ந்த லோகன், இருள் காட்டிய திசையில் பறந்தான். பல மாதங்களாகக் காடுகளில் பதுங்கி அலைந்து நெடும்பயணத்தைத் தின்று செமித்தனர். நியூ சவுத் வேல்ஸ் மாநில கிஞ்சலா நதிப்பக்கமாக வந்துசேர்ந்தபோது, மூவரும் உருமாறிப் போயிருந்தனர். லோகன் குடும்பத்திற்கு சுஸானா என்ற வெள்ளைப் பெண்ணொருத்தி தஞ்சமளித்தாள். 3 சுஸானா இங்கிலாந்திலிருந்து பொலீஸ் உத்தியோகத்திற்காகக் கணவரோடு ஆஸ்திரேலியா வந்தவள். வேட்டையில் மிகுந்த ஆர்வமுடைய சுஸானா, கங்காருகளைத் தேடிக் காட்டுக்குள் சென்றபோது, அவளது கணவர் சர்ப்பம் தீண்டி இறந்துபோனான். சுஸானா கிஞ்சலா பகுதியில் தனியாக வசித்தாள். தன் வீட்டுப்பக்கமாக ஒதுங்கிய லோகன் குடும்பத்தினை சுஸானா பிரியத்துடன் அணைத்தாள். லோகன் – பாபரா தம்பதிகளின் மகனுக்கு சுஸானா தானே பெயரைச் சூட்டினாள். பாபராவின் முதுகில் குழந்தையை இறுக்கமான துணியில் கட்டியபடி, பகல் நேரத்தில் மூவரும் காட்டுக்குள் நெடும்பயணம் போய் வந்தார்கள். லோகனும் பாபராவும் காண்பித்த ஆழ்வனத்தின் அதரங்கள் சுஸானாவுக்குள் பல உலகங்களாய் விரிந்தது. மனிதர்களைவிட மரங்களை அதிகம் தெரிந்திருந்த லோகனின் கால் தடங்களைப் பற்றியபடி வேட்டைத் துப்பாக்கியோடு அலைந்தாள் சுஸானா. குட்டிப்பையன் முதல் தடவையாகக் காட்டுக்குள்தான் நடை பயின்றான். பாபரா அவன் விரல்களைப் பற்றியபடி – குழந்தைக் குரலில் பாடுவாள். சிறு கணங்களையும் மகிழ்வோடு கொண்டாடும் அவர்களைப் பார்த்து சுஸானா பரவசமடைந்தாள். இருண்ட வனத்தின் ஆழத்தில எதிர்ப்படும் குளிர்ச்சுனைகளில் நீராடினாள். இயற்கையோடு குழந்தையை வளர்ப்பதில் சுஸானாவும் அதிகப் பிரியம் கொண்டாள். கிஞ்சலாக் காடுகளுக்குள் திரிந்த புதியவர்களின் சத்தம், காடுகளைத் தாண்டிப் பல காதுகளை எட்டியது. பூர்வகுடிப் பெற்றோர்களிடம் குழந்தைகளைப் பறிக்கின்ற துப்பாக்கிகள் கிஞ்சலா பகுதியை வந்தடைந்தன. விடிகாலைப் பொழுதொன்றில் வேட்டைக்குப் போவதற்கு முன் சுஸானாவின் வீடு ராணுவ வாகனங்களால் சூழப்பட்டது. பேரச்சத்தின் கருகிய வாசனை வீட்டுக்குள் எட்டியது. லோகனும் பாபராவும் மகனைத் தூக்கிக்கொண்டு பின் வளவினால் பாய்ந்தார்கள். மூன்று நான்கு வேட்டொலிகள் அதிகாலையை உலுப்பியது. லோகனும் பாபராவும் முறிந்து விழுந்தார்கள். மகன் எழுந்து நின்று வானத்தைப் பார்த்தான். பின்னர், தரையில் விழுந்துகிடந்த தாயைப் பார்த்தான். அவன் பார்த்த முதல் குருதி. பின் கதவைத் திறந்து ஓடிவந்த சுஸானா சடலங்களுக்கு நடுவில் விழுந்து குழறினாள். இருளின் பாதைகளையெல்லாம் மின்னலாக ஓடிக்கடந்த லோகன், வெளிச்சத்தின் பொறியில் சிக்கிச் சாய்ந்து கிடந்ததைக் கண்டு கதறியழுதாள். திறந்திருந்த அவன் கண்கள் பாபராவைப் பார்த்தபடியிருந்தன. சப்பாத்தொலிகள் சூழ்ந்தன. ஒருவன் எஞ்சியிருந்த சிறுவனைத் தூக்கினான். அவனோ பிடியிலிருந்து திமிறி அலறினான். சினத்தோடு எழுந்த சுஸானா துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தவர்களின் நெஞ்சில் ஒங்கி அறைந்தாள். “நானும் ஒரு வெள்ளைக்காரிதானே, என்னிடம் அந்தச் சிறுவனை தாருங்களேன்.” “இவர்களுக்கு நாங்களே பயிற்சி கொடுக்கவேண்டியுள்ளது சுஸானா. உன் கணவரைப்போல நாங்களும் அரசு உத்தரவுகளைத்தான் நிறைவேற்றுகிறோம். குறுக்கே வராமல், தள்ளு.” அதிகாரி ஒருவன் சொன்னான். சீருடைக்காரர்களின் கால்களைக் கட்டியபடி சுஸானா கதறிக்கொண்டிருக்க, அந்தச் சிறுவனை ஜீப்பின் முன்னால் ஏற்றினார்கள். வாகனம் விரைந்தது. சுஸானா காடதிர அவனதுப் பெயரைச் சொல்லி அழைத்தாள் – “ஜூடோ…” 4 பல நூற்றுக்கணக்கான தொல்குடிச் சிறுவர்களை அடைத்து வைத்திருந்த தொழுவமொன்றில் ஜூடோ சேர்க்கப்பட்டான். தடிகளால் அமைக்கப்பட்ட தனிக்கூடுகளில் அவர்கள் வெளியே பார்த்தபடி ஏக்கத்தோடு நின்றார்கள். எல்லோர் கன்னங்களும் கண்ணீரால் நொதித்திருந்தன. தொழுவத்திற்குள் வந்த வாகனங்கள், சிறுவர்களைத் தரம் பிரித்து ஏற்றிச்சென்றன. நீண்ட துப்பாக்கிகளும் வட்டத்தொப்பிகளும் அணிந்த பொலீஸார் பாதுகாப்பிற்காக நின்றுகொண்டிருந்தார்கள். தடிக்கூடுகளுக்கு வெளியே கூட்டிச்செல்லப்பட்ட உயரமான சிறுவர்களை வைத்து, அந்த வளவுக்குள்ளேயே பொலீஸார் ஒரு விளையாட்டை நடத்தினார்கள். ஒரு சிறுவனைத் தொழுவத்தின் வெளி மைதானத்தில் நிறுத்திவைத்து, பத்து சிறுவர்களை வரிசையில் சென்று அவனது முகத்தில் ஒருதடவை குத்தச் சொன்னார்கள். பத்து குத்துகளையும் சளைக்காமல் வாங்கிக்கொண்டு வலி பொறுத்த சிறுவர்கள், பாறை பிளக்கும் வேலைக்கு அனுப்பப்பட்டார்கள். தொழுவத்தின் பாதுகாப்பிலிருந்த தடித்த தொப்பை விழுந்த மரியோ என்ற பொலீஸ்காரன், அன்று இருள் கவிழ்ந்ததும் ஜூடோவைத் தனது ஜீப்பில் கூட்டிச்சென்றான். இரண்டு மரங்களுக்கு மத்தியில் உயரமாக அமைக்கப்பட்டிருந்த தனது தனி வீட்டிற்கு ஏணி வழியாக ஜூடோவை ஏற்றிப்போனான். ஜூடோவைப் பிரம்புக் கதிரையொன்றில் இருக்க உத்தரவிட்டான். தொழுவத்திலிருந்து மீண்டுவந்த திருப்தி ஜூடோவுக்குக் கண்களில் தெரிந்தது. தனது அறைக்குள் சென்று எடுத்துவந்த சிவப்புநிறக் குளிர்பானத்தை மரியோ, குடுவையொன்றில் ஊற்றி ஜூடோவுக்குக் கொடுத்தான். இதுவரை சுவைத்திராத இனிமையும் குளிர்மையும் சேர்ந்த அப்பானம் ஜூடோவின் தொண்டையின் வழியாகச் சிலிர்த்தபடி இறங்கியது. ஜூடோவின் கண்களில் தெரிந்த திருப்தியை மரியோ ரசித்தான். அவனது கண்களைப் பார்த்து புன்னகை செய்தான். ஜூடோவின் குளிர்ந்த உதடுகளை வருடினான். பின்னர், ஜூடோவின் முன்னால் மரியோ நிர்வாணமாய் எழுந்து நின்றான். அந்த வீட்டிற்குள்ளும் தொழுவத்தைப் போன்ற தடிகளாலான கூடிருந்தது. அது இலைகுழைகளால் மூடிக்கட்டப்பட்ட இருள் கரப்பு. பகலில் வெளியே போகும் மரியோ, ஜூடோவை அந்தக் கூட்டுக்குள் தள்ளிப் பூட்டிவிட்டான். மாலை வேளைகளில் வந்து ஜூடோவுக்குக் குளிர்பானத்தைக் கொடுத்தான். அவன் முன்னால் எழுந்து நின்றான். ஜூடோவின் குறியைத் திருகி, அவன் கதறியபடி கெஞ்சுகின்ற கண்களைப் பார்த்து ரசித்தான் மரியோ. ஒருநாள் காலை மரியோ எழுந்திருக்கவில்லை. இருண்ட கூட்டுக்குள் அங்குமிங்கும் தனது உடலைப் புரட்டி ஒலியெழுப்பிய ஜூடோவுக்கு எதுவும் புரியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியே வாகனச் சத்தங்கள் கேட்டன. படுக்கையில் பிரேதமான மரியோவின் உடலைப் பொலீஸார் எடுத்துப்போனார்கள். கூட்டுக்குள்ளிருந்து சத்தமிட்ட ஜூடோவை அச்சத்தோடு திறந்து பார்த்த பொலீஸார் அதிர்ச்சியானார்கள். துப்பாக்கிப் பிடியால் அடித்து வெளியில் இழுத்துப் போட்டார்கள். அவனை விலங்கிட்டுத் தங்களது ஜீப்பில் தூக்கி ஏற்றினார்கள். மரியோவைப் புதைக்கும்போது அதனை ஜூடோ நேரில் கண்டான். அந்தப் பிரேதக்காட்டில் பணிபுரிபவனிடம் ஜூடோவை விட்டுச்சென்ற பொலீஸார், பிறகு வந்து வேறிடத்துக்கு மாற்றுவதாகச் சொன்னார்கள். ஜூடோ அங்கு எட்டு வயதுவரை பிரேதங்களைப் புதைக்கும் தொழிலைச் செய்தான். காட்டின் வேலியைத் தாண்டுவதற்கு அவன் எக்கணமும் எண்ணியதில்லை. பிரேதங்களோடு வருகின்ற பொலீஸார் கொடுக்கின்ற பழங்களையும் கிழங்குகளையும் தனது ஓலைக்கொட்டிலில் உள்ள பெட்டியில் போட்டுவைத்துத் தின்றான். ஒருநாள் தனது கணவரின் பிரேதத்தைப் புதைப்பதற்காக உயர் பொலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி பிரேதக்காட்டுக்கு வந்தாள். அவளைப் பார்த்த ஜூடோ மிரண்டான். நீண்ட ஆடையோடு வந்த வெள்ளைத்தோலுடைய அந்தப் பெண்மணி கையுறைகள் அணிந்திருந்தாள். இதுவரை பார்த்திராத அந்த உருவம் ஜூடோவைத் தொந்தரவு செய்தது. பிரேதக்குழிக்கு அருகில் நின்று ஜூடோ அவளையே பார்த்தான். அவள் விம்மிய சத்தம், ஜூடோ இதுவரை கேட்டிராத புதிய ஒலியாக அவன் காதுகளில் ஒழுகி நுழைந்தது. அந்தப் பெண், தன்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் யாரென்று பொலீஸாரிடம் கேட்டாள். பிறகு, தன் கணவரின் நினைவாக ஜூடோவைத் தன்னோடு அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தாள். 5 தனது இரண்டு குழந்தைகளோடும் ஜூடோவைப் பாடசாலைக்கு அனுப்பினாள் ஒலிவியா. ஜூடோவின் மனம் நிச்சயம் மாறும் என்று நம்பினாள். அவனது கடந்தகாலங்களில் கணிசமானவற்றை மறக்கச் செய்தாள். ஜூடோ ஒழுங்காகத் தூங்கி எழுந்தான். மாத்திரைகளின் வழியாகப் பழைய நினைவுகளின் வேர்கள் அறுக்கப்பட்ட ஜூடோ, பாடசாலை சென்று வந்தான். ஒலிவியாவின் அன்பும் அரவணைப்பும் அவனைப் பரிதாபத்தின் வழியாகவே தீண்டிக்கொண்டிருந்ததால் வருடங்கள் போகப் போக அந்த அன்பு அவனை மேலும் சிதைத்தது. அவனது தலைதாழ்ந்த பாடசாலை வாழ்க்கையைப் போதைப்பொருட்கள் மீட்டன. அவனுக்குள் கேட்ட கூச்சல்களுக்கு அது விடையளித்தது. நிமிர்ந்து நடந்தான். வீடு அவனுக்கு அந்நியமானது. அச்சத்தில் ஒலிவியா தனது இரண்டு பிள்ளைகளோடு வேறொரு நகரில் சென்று குடியேறினாள். போதைச் சரைகளுக்குப் பணமில்லாத ஜூடோ, திசைக்கொரு திருட்டுக்களில் ஈடுபடுவது பொலீஸாருக்குத் தெரியவந்தது. தேடுவதற்குச் சிறப்புப் படையமைக்குமளவுக்கு ஜூடோ நியூயோர்க் வீதிகளில் பிரபல குற்றவாளியாக மிளிர்ந்தான். சுற்றி வளைக்கும்போதெல்லாம், பொலீஸிடமிருந்து தப்பியோடுவதில் ஜூடோ மிகத் தேர்ந்தவனாக, நகரின் எல்லாப் பாதைகளையும் கால்நுனியில் அணிந்திருந்தான். திடமேறிய ஜூடோவுக்குப் புறநகரிலுள்ள “ஸ்னெய்ல்ஸ்” களியாட்ட விடுதி பல தேவைகளுக்கு இரவில் நிழல் கொடுத்தது. வயதான பெண்கள் அதிகம் வருகின்ற அந்த விடுதி, வார இறுதிகளில் போதையில் தள்ளாடும். அங்கு வந்த பெண்களுக்கு ஜூடோவின் சரீரம் இளமையை மீட்டுக்கொடுத்தது. அங்கு ஜூடோவின் நடமாட்டத்தை அறிந்த பொலீஸார் ஒருநாள் அவனைக் காரொன்றுக்குள் நிர்வாணமாக வைத்து மடக்கினார்கள். விலங்கிட்டுக் கொண்டுசென்றபோது, ஜூடோ பொலீஸ் துப்பாக்கியைப் பறித்து ஒருவனைச் சுட்டுவிட்டு இருட்டுக்குள் பாய்ந்து மறைந்தான். பொலீஸ் கொலையாளி ஜூடோவின் படங்கள் நியூயோர்க் நகரெங்கும் விநியோகிக்கப்பட்டன. கண்டவுடன் தகவல் தரும்படி பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டது. ஜூடோவின் பின்னணியைப் படிக்கத் தொடங்கிய அமெரிக்கப் பொலீஸ், ஒலிவியாவிடம் சென்று விசாரணை செய்தது. ஆஸ்திரேலிய பொலீஸாருக்கும் தகவல் அனுப்பியது. ஒரு விடிகாலை வேளை “ஸ்னெய்ல்ஸ்” விடுதிப்பக்கமாக உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் சிகரெட்டு வாங்குவதற்கு, தலையில் குல்லா அணிந்தபடி வந்த ஜூடோவைக் காலில் சுட்டுப்பிடித்தார்கள் பொலீஸார். கொலைக்குற்றசாட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டான். பதினைந்து வருடங்களாக அரிசோனா நீதிமன்றில் நடைபெற்ற ஜூடோ மீதான வழக்கில், இறுதியில் அவனைக் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, மரணத் தண்டனை வழங்கித் தீர்ப்பெழுதினார். 6 கிறிஸ்துமஸ் இரவுணவின்போது ரொக்ஸியிடம் தனது கதையைக் கூறிய நான்காவது நாள், ஜூடோவுக்குரிய மரணத் தண்டனை உறுதியானது. கைதிகள் அனைவரும் அவரவர் அறைகளில் பூட்டப்பட்டிருந்த நள்ளிரவு நேரம், ஐந்தாறு அதிகாரிகள் ஜூடோவின் அறைக்கதவைத் தட்டி எழுப்பினார்கள். சாவு தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்துகொண்ட ஜூடோ திருப்தியோடு எழுந்து கதவைத் திறந்தான். அதிகாரிகள் அவனது கை கால்களுக்கு விலங்கிட்டு அழைத்துப்போனார்கள். தரையில் விலங்கு ஊர்கின்ற ஒலி கேட்ட கைதிகள், இருளின் சத்தத்தை கிழித்துக்கொண்டு கத்தினார்கள். அறைக்கதவில் ஓங்கி உதைத்தார்கள். தங்களில் ஒருவனைச் சாவின் மேடைக்கு இழுத்துச் செல்பவர்களை நோக்கிக் கொதிச் சொற்களை உமிழ்ந்தார்கள். கண்ணாடி அறையொன்றிற்குள் அழைத்துச் செல்லப்பட்ட ஜூடோவை மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்தார். அவனைச்சுற்றி நின்றுகொண்டிருந்த அத்தனை அதிகாரிகளுக்கும் அச்சத்தில் விழிகள் சரிந்திருந்தன. சாவை ஏற்றுக்கொள்பவனின் கண்களை உலகில் எவரால்தான் எதிர்கொள்ள முடிந்தது! அந்தக் கணம் ஜூடோவின் அருகில் நின்றுகொண்டிருந்த அத்தனை அதிகாரிகளும் அவனது கைதிகள்போல உணர்ந்தனர். விருப்பமான கடைசி உணவை சிறைச்சாலை அதிகாரிகள் கேட்டார்கள். சிவப்புநிறக் குளிர்பானம் மாத்திரம் ஒரு குவளையில் தந்தால் போதும் என்றான் ஜூடோ. திடீரெனத் தூக்கத்திலிருந்து எழுந்த ரொக்ஸி தடித்த சிறைக்கண்ணாடிகளுக்கு வெளியே செந்நிறப் புதிய ஒளிக்கோளமொன்றைச் சில கணங்கள் கண்டான். அது வீசிய கசங்கிய ஒளி, விட்டுவிட்டுத் தன் அறைக்குள்ளே வெளிச்சம் சிந்திவிட்டு அணைவதை உணர்ந்தான். இறுக்கிக் கட்டப்பட்ட படுக்கையில் ஜூடோவுக்கு நச்சு ஊசி செலுத்தப்பட்டது. செவிகளை வருடிய ஆதிக்குரலொன்று தாலாட்டாய் தொடர்ந்து. ஜூடோவின் விழிகள் சிவந்து தழும்பியது. வலபிப் புற்களுக்கு நடுவிலிருந்து ஜூடோவை அவனது அன்னை அணைத்தெடுத்தாள். வானமில்லாப் பெருவெளியில் எறிந்து பிடித்தாள். ஜூடோ சிரித்தபடி அவள் கைகளில் விழுந்தான். அவனது தடித்த கன்னமெங்கும் மெல்லக் கடித்து முத்தம் வைத்தாள். ஜூடோ மெய்கூசிப் பெரிதாகச் சிரித்தான். பாபரா தன் கைகளெங்கும் குருதிகொட்ட ஜூடோவை மீண்டும் தன் கருவறையில் புதைத்தாள். எங்கும் இருள். கரிய மலர்க் கிடங்குகளில் ஜூடோ எடையற்றுப் புரண்டான். நிர்மலமான புதிய காற்று. தனக்கு மேல் இன்னொரு இதயம் துடிக்க ஜூடோ துயிலடைந்தான். இன்னொரு தொல்குடியை அவர்கள் கொன்றார்கள். https://tamizhini.in/2024/01/17/ஜூடோ/
  7. போதமும் காணாத போதம் – 15 கரியன் காயப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வந்தது. சைக்கிளை உழக்கிப் பறந்தேன். இயக்கத்தில் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் நான்காவது தடவை காயப்பட்டுள்ளான். இதற்கு முன்பு மன்னாரில் நடந்த மோதலில் முதுகில் காயமடைந்திருந்தான். “முதுகில் காயப்படுகிறதெல்லாம் அவமானம் கரியா, புறமுதுகு காட்டி ஓடினவனென்று அர்த்தம்” என்றேன். “நெஞ்சைக்காட்டி ஓடியிருந்தால் நான் மிஞ்சிவந்து இப்ப கதைச்சிருக்க மாட்டேன்” என்றபடி தோடம்பழத்தை உரித்தான் கரியன். இந்தத் தடவை கடுமையான தீக்காயமென்று அறிந்தேன். நான் மருத்துவமனைக்குள் நுழைந்து காயப்பட்ட போராளிகளை வைத்திருக்கும் பகுதிக்கு சென்றேன். உள்ளே செல்வதற்கு அனுமதியில்லையென கூறினார்கள். அதன் பொறுப்பதிகாரியாக இருந்தவரிடம் கெஞ்ச வேண்டியிருந்தது. உள்ளே வலி பொறுக்கவியலாது கதறுங்குரல்களை கேட்கவே வேடிக்கையாகவிருந்தது. போர்க்காயங்களைப் பார்ப்பதில் ஆர்வம் கூடியிருந்தது. சொற்ப நிமிடங்கள் மட்டும் ஒதுக்கித் தந்தனர். உள்ளே போனதும் கரியனின் இயக்கப்பெயரைச் சொல்லி எங்கே இருக்கிறார் என்று கேட்டேன். மருத்துவப் பிரிவுப் போராளி என்னை கரியனிடம் கூட்டிச் சென்றார். உடல் முழுக்க எரிந்துலர்ந்திருந்தது. தீமிதிக்கும் கிடங்கில் சாம்பலுக்கு மத்தியில் கங்குகள் ஒளிர்வதைப் போல ஊண் சிவந்து தகித்தது. அரை உயிரோடு நெருப்பிலிருந்து ஊர்ந்து சென்ற சாரைப் பாம்பை ஞாபகப்படுத்துவதைப் போல கட்டிலில் கிடந்தபடி கைகளை அசைத்தான். பக்கத்தில் நின்று “ நான் ஸ்பார்ட்டகஸ் வந்திருக்கிறேன். எப்பிடி இருக்கிறாய்” கேட்டேன். கண்களைத் திறந்து பார்த்து “மச்சான், இந்த ஆர்மிக்கார பு**யாண்டியளால எல்லாமும் நாசமாய் போய்ட்டுது “ என்றான். கரியனிலிருந்து நான்காவது கட்டிலில் படுத்திருந்தவரின் கால் நீக்கப்பட்டிருந்தது. அவர் சத்தமாக என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டார். “அவனுக்கு இப்ப தான் மெல்ல மெல்ல மயக்க மருந்து தெளியுது. காலமையிலிருந்து ஒரே சத்தம் தான். பச்சைத் தூஷணத்தில எல்லாரையும் திட்டுறான்” கரியன் சொன்னான். சிகிச்சை அளிப்பதற்காக மயக்க மருந்து வழங்கப்பட்ட போராளிகள் இப்படித்தான் பேசுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்றுதான் முதன்முறையாக அனுபவிக்கிறேன்” என்றேன். “இவனெல்லாம் பரவாயில்லை. நேற்றைக்கு இம்ரான் பாண்டியன் படையணிக்காரர் ஒருவர் இஞ்ச இருந்தவர். அவருக்கு அடிவயிற்றில பெரிய காயம். இரவு முழுக்க ஒரே கச்சேரிதான். எல்லாருக்கு ஏச்சுத்தான். இயேசுவை சுடவேணுமெண்டு சொல்லுறார். மகாத்மா காந்திக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று என்னவெல்லாமோ கதைச்சார். ஒரே சிரிப்புத்தான் எங்களுக்கு. அதிகாலையில தான் இஞ்ச இருந்து ஆள் போனது” “எங்க , மெடிஸ்க்கு மாத்திட்டாங்களோ” “இல்லையில்லை. ஆளுக்கு பஞ்சு. அதிகாலை நாலு மணியிருக்கும் ஒரு பெரிய சத்தம். மூச்சை வானுக்கு எறிஞ்சு நிலத்தில விழுத்திற எத்தனத்தோட ஒரு மூர்க்கம். அப்பிடியே கையைத் தொங்கவிட்டுட்டார்” “அய்யோ, வீரச்சாவே!” “பின்ன, அவ்வளவு பெரிய மூச்சை விட்டால்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இன்னொரு கட்டிலில் இருந்து சத்தம் எழுந்தது. “அன்பார்ந்த தமிழீழ மக்களே! நான் மரணத்தைப் பார்த்துவிட்டேன். அதனுடைய பாறை மேல் அமர்ந்திருந்து தவளையைப் போல உலர்ந்திருக்கிறேன். மரணம் அவ்வளவு மர்மானதொன்றுமில்லை. எங்களுடைய வேவு அணிக்காரர்கள் போல கண்டறியமுடியாததும் இல்லை. பயத்தின் நுகத்தடியில் அது பிணைக்கப்பட்டிருக்கிறது. மரணத்தின் நுழைவாயிலில் நின்று மிழற்றும் என் காற்றுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனாலும் ஒன்றைச் சொல்கிறேன், நான் மரணத்தினாலும் மீதம் வைக்கப்படுவேன். நன்றி. வணக்கம்” என்று உரையை முடித்தார். “இவன் அரசியல்துறையில இருந்து படையணிக்கு போயிருப்பான் போல, தமிழ்ச்செல்வண்ணையை விட வித்துவமாய் கதைக்கிறான்” என்றான் கரியன். அந்தப் பகுதி முழுக்கவே போர்க்களத்தில் காயப்பட்டு வந்திருந்த போராளிகள் மட்டுமே சிகிச்சைக்காக தங்க வைப்பட்டிருந்தனர். சிறிய காயங்களோடு இருந்தவர்கள் ஏனையோருக்கு ஒத்தாசை புரிந்தனர். கையில் ஒரு விரல் மட்டும் இல்லாமல் போயிருந்தவரைப் பார்த்து பெரிய காயக்காரரொருவர் “ எடேய் உந்தச் சுண்டுவிரல் இல்லாமல் போனத காயமெண்டு சொல்லி களத்த விட்டு வந்திருக்கிறியே. உனக்கு வெக்கமா இல்லையோ” என்று கேட்டதும் எல்லோரும் சிரித்தார்கள். சுண்டுவிரல் காயக்காரன் கைகள் இரண்டையும் மேல்நோக்கித் தூக்கி, நாளை நான் களத்திற்குச் சென்றுவிடுவேன். ஆனால் இந்தச் சுண்டுவிரலுக்கும் ஒரு பெறுமதி இருக்கெண்டு உங்களுக்கு சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது” என்றான். அன்றைக்கு மாலையிலேயே சின்னக்காயங்களோடு வந்தவர்கள் மீண்டும் களமுனைக்குச் செல்ல ஆயத்தமாகினார்கள். கரியனோடு களமுனையில் இருந்த போராளியொருவன் நெற்றியில் சிறியக் காயப்பட்டிருந்தான். அவனும் என்னோடு வந்தமர்ந்து கொண்டான். “உனக்கு என்ன மச்சான் நடந்தது. உடம்பெல்லாம் அடி வாங்கியிருக்கிறாய். என்ன ஏதேனும் புகைக்குண்டுக்குள்ள மாட்டுப்பட்டனியோ” கேட்டேன். “அதைச் சொன்னால் வெக்ககேடு. உன்னை நம்பிச்சொல்லமுடியாது. நீ வன்னியில இருந்து பி.பி.சிக்கு செய்தி அனுப்புவாய்” கரியன் சிரித்தான். எடேய், சும்மா சொல்லு. “இது என்ன இயக்க ரகசியமே. மறைக்கிறதுக்கு. நாளைப்பின்ன நீ வீரச்சாவு அடைந்தால் ஊருக்குள்ள சொல்லித்திரிய கதை வேண்டாமே” என்றேன். ஸ்பார்ட்டகஸ் உன்னை நம்பி சொல்லுறது தான் தயக்கமாய் இருக்கு. ஆனாலும் வேற ஆரிட்டையும் சொல்லக்கூடாது. சத்தியம் பண்ணு” என்று கையை நீட்டினான். ஆர் மேல சத்தியம் செய்யவேண்டுமெனக் கேட்டேன். உனக்குப் பிடிச்ச ஆளோட பெயரைச் சொல்லி செய் என்றான். “என்ர நண்பன் கரியன் மேல சத்தியமாய் ஆரிட்டையும் சொல்லமாட்டேன்” என்றேன். “என்ர சாவைப் பார்க்கிறதில உனக்கு என்ன விருப்பமோ. சரி நடந்ததைச் சொல்லுறன். கேள்.” என்றான். பத்து நாளைக்கு முன்னால கடுமையான சண்டை. எங்கட இரண்டு கிலோமீட்டர் பகுதியை இராணுவம் கைப்பற்றியது. எங்களில இருபதுக்கு மேற்பட்டோர் வீரச்சாவு. மூண்டு பேருடைய வித்துடல் அவங்களிட்ட விடுபட்டு போச்சுது. பெரிய சோர்வும் கொந்தளிப்புமாய் ஆகிட்டுது. எங்கட தளபதிக்கு அதுவொரு கெளரவ பிரச்சனை ஆகிட்டுது. தக்க வைச்சிருக்கிற இடத்தை இழந்திருக்க கூடாதெண்டு எல்லாருக்குள்ளையும் ஒரு கருத்திருந்தது. பிறகு தளபதி ஒரு திட்டம் போட்டு, வலிந்து ஒரு தாக்குதல் செய்ய முடிவெடுத்தார். நாங்கள் நினைச்ச மாதிரி சண்டையில்லை. அது வேற. கட்டளைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால், எதிரிக்கு பேரிழப்பு நிகழ்ந்தபடியிருந்தது. ஒருநாள் நள்ளிரவு தொடங்கிய சண்டையில் முன்னணி போர்முனையிலிருந்து தாக்குதலைச் செய்த அணியில் நானுமிருந்தேன். துவக்கின் வாய்முனை தகித்து பூத்தது. என்னோடிருந்த போராளி “மொஸ்கோ” துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்து வைத்திருந்தபடி “என்னால ஒருத்தனையும் நோக்கிச் சுட ஏலாமல் கிடக்கு. ஆனால் என்னைச் சுடமுடியுமெண்டு நினைக்கிறேன்” என்றான். “மொஸ்கோ உனக்கேதும் விசரா. துவக்கை கீழ போட்டுட்டு சும்மா இரு. நான் சண்டை செய்கிறேன்” என்றேன். அவன் துவக்கை கீழே போட்டான். ஆனால் அதற்கு முன்பாகவே ஒரேயொரு தடவை தன்னுடைய டிகரை அழுத்தி தாடைக்கு கீழிருந்து பாய்ச்சினான். அவன் தற்கொலை செய்து கொண்டதை எல்லோரிடமும் மறைத்தேன். அவன் வீரச்சாவு என்ற செய்தியை நானே கட்டளைப்பணியகத்துக்கு அறிவித்தேன். “அது பிழையான விஷயமில்லையே” “ஒருத்தன் களத்தில் ஆயுதமேந்தி சண்டை செய்து, ஏதோவொரு நாள் தன்னால எதிரியைச் சுட முடியேல்ல எண்டு சொல்லி தன்னைத்தானே அழிக்கிறான். அவனும் வீரன்தான். அவனும் வீரச்சாவுதான். எல்லாத்துக்கும் மேல அவனோட உயிர்போன முகத்தைப் பார்த்தன். நல்ல செழிப்பு. ஏதோவொன்றை சாதித்துவிட்ட இளைப்பாறல்” என்கிற கரியனைப் பார்த்து வியந்தேன். “சொல்லுறத கேள்” “ஓம், சொல்லு” “அவனுடைய வித்துடலை எடுத்துக் கொண்டு பின்னால போய்ட்டாங்கள். ஆனால் அவன்ர துவக்கு என்னட்டத்தான் இருக்கு. நான் அதை வைத்துக் கொள்வதாக அறிவித்தேன். இராணுவம் நினைத்ததைப் போல எங்களை ஒன்றும் செய்ய முடியாமல் விழி பிரட்டி நின்றது. தளபதிக்கு உற்சாகமான களமாக அது மாறியது. இராணுவம் மெல்ல மெல்ல பின்வாங்கத் தொடங்கியது. நீயும் நானும் பனம்பழம் பொறுக்கப் போவமெல்லே, அப்ப ஜெயக்கொடியோட பனந்தோப்பில பழங்கள் விழுந்து கிடக்கிற மாதிரி வெளிமுழுதும் இராணுவத்தின் பிணங்கள். போராளிகள் முன்னேறினோம். இராணுவத்தின் பைகளைப் பிரித்து அவர்களது உணவுகளை எடுத்தேன். பிஸ்கட் பை, பணிஸ் என்று நிறைய இருந்தது. சிகரெட் பெட்டியும் இருந்தது. ஒன்றை அடித்தால்தான் என்ன என்று தோன்றியது. “அய்யோ, கெடுவானே ஆராவது பார்த்தால் சுட்டிருப்பாங்களே” “ஆருக்கும் தெரியாமல் எடுத்து பொக்கெற்றுக்குள்ள வைச்சிட்டன். கொஞ்ச நேரத்தில் பிடிச்ச பகுதியில அரண் அமைச்சு இருந்தம். சண்டை ஓய்ந்திருந்தது. ஆனால் நூறுக்கும் மேற்பட்ட ஆர்மிக்காரர்களோட சடலங்கள் இப்ப எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கு. எனக்கு ஒரே வேடிக்கையா இருந்தது. பாவம் செத்துப்போன ஆர்மியள். சம்பளம் வாங்கி சாக வந்தவங்களை நினைச்சு கவலைப்பட்டும் பிரியோசனம் இல்லை என்று தோன்றியது. களமுனையில் ஆசுவாசம் கொள்ளும்படியாய் காற்று எழுந்தது. கந்தக நெடில் ஒருபக்கம் தலை சுற்றியது. மின்மினிகள் ஏனென்று தெரியாமல் அபத்தமான வெளிச்சம் அடித்து திரிந்தன.” “எடேய், இன்னும் நீ காயப்பட்ட கதைக்கு வரேல்ல” ம். பிறகு நான் கொஞ்சம் காலாற நடந்து வரவிரும்பினேன். எங்கே நடப்பது? மொஸ்கோ தற்கொலை செய்து கொண்டவிடத்திற்குச் சென்று விட்டு திரும்புவதாக உத்தேசித்தேன். பொக்கேற்றுக்குள் இருக்கிற சிகரெட்டை எடுத்து கைக்குள் திணித்தேன். ஒரு வீட்டின் சிறிய கிணறு வடிவாய் இருந்தது. சக போராளிகளின் நடமாட்டம் எதுவுமில்லை. மெல்ல அதற்குள் இறங்கி, படியில் அமர்ந்து சிகரெட்டை ஊதினேன். இவ்வளவு சுதியான சிகரெட். அருமையான வாசனையும், உறைப்பும் விறுவிறுத்து தொண்டைக்குள் இறங்கியது. வேக வேகமாய் படிக்கட்டில் ஏறி மேலே வந்தேன். தற்கொலை செய்து கொண்ட இடத்தை அடைந்ததும், அவனுடைய ரத்தம் காய்ந்திருந்ததைப் பார்த்தேன். அது ஒரு சிறிய செந்தழல் பூவாக நிலமீது ஊர்ந்து என்னை நோக்கி வந்தது. கண்களை கசக்கியபடி மீண்டும் பார்த்தேன். காய்ந்த ரத்தம். பிறகு நிலமீது ஊர்ந்து வரும் பூ. அங்கே நிற்கவே ஏதோவொரு நடுக்கம் தோன்றியது. அவன் இறுதி நாளன்று பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. “துவக்கை விடவும் விடுதலையை எங்களிடம் கூட்டிவர வேற வழியில்லையோ. அல்லது நாங்கள் இன்னும் அதை யோசிக்கலையோ” “மொஸ்கோ, துவக்கோ, தடியோ எங்களைக் காப்பாற்றிவிடுமெண்டு நாங்கள் நம்பேல்ல. ஆனால் எங்களை அழிக்கத் துடிச்சவனை ஆயுதத்தால தான் பயமுறுத்த முடியும், இல்லையே” “ஆனால், எதிரியைப் பயப்பிடுதுறது வேலை இல்லையே, விடுதலை தானே வேணும்” “அதுக்குத்தான் நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுறம். நீ இத்தனை வருஷமாய் சண்டை செய்கிறதுக்கு அதுக்குத் தானே” “உயிர் எடுத்தல் – கொடுத்தல் இந்த இரண்டு பாதையிலும் விடுதலையை சந்திக்க இயலுமே” “மொஸ்கோ, நீங்கள் கனக்க படிச்சனியள். எனக்கு மூத்த போராளி. உங்கட பட்டறிவுக்கு முன்னால் என்ன பதில் சொல்லியும் என்னால உங்களைத் திருப்தி படுத்த ஏலாது” “அப்ப உயிர் கொடுக்கிறதில, எடுக்கிறதில விடுதலை வராது எண்டு ஒத்துக்கொள்ளுறியள், அப்பிடித்தானே” எனக்கு தலையில் ஒருவித சுழிப்பு மின்னல் அடிக்கத் தொடங்கியது. மெல்லிய தந்திகள் அதிரும் தோரணையில் உள்ளிருந்து ஏதோவொரு சத்தம் கேட்கத் தொடங்கியது. வேகவேகமாய் முன்னரங்குக்கு ஓடினேன். சடலங்கள் மீது இலையான்கள் அமைதியாக அமர்ந்திருந்தன. வானத்தை பார்க்க மறுத்து குப்புறக் கவிழ்ந்து கிடக்கும் இராணுவச் சீருடைகளைப் பார்க்கையில் பரவசம் எழுந்தது. ஒருவனின் சடலம் மட்டும் வானத்தைப் பார்த்திருந்தது. அவனது முகத்தில் கறுப்பு வண்டொன்று ஏறியது. அதனைப் பிடித்து தூக்கி எறிந்து, முகத்தை துடைத்துவிட்டேன். நல்ல வடிவான பெடியன். அவனுக்கு நெஞ்சில் வெடி விழுந்திருக்கிறது. கைகள் ரத்தத்தில் பதிந்திருக்கின்றன. ரத்த வெடுக்கு வீசும் குரோட்டன் செடியைப் போலவிருந்த அவனது கையை எடுத்து உடலில் வைத்தேன். கண்கள் ஒளியிழந்து தலை சுற்றத் தொடங்கியது. களமுனையில் மீண்டும் சத்தம் கேட்கத் தொடங்கியது. ஓடிச் சென்றேன். போராளிகள் மீண்டும் தாக்குதலை தொடங்கினர். அது மெல்ல மெல்ல சூடு பிடிக்கும். இன்றைக்கு மிச்சப்பகுதிகளையும் மீட்டுவிடுவதென திட்டம். ஆனால் இராணுவமும் தாக்குதலை திறனாக எதிர்கொண்டது. நாங்கள் கடுமையான வியூகங்கள் அமைத்து சண்டையிட்டோம். எதிர்த்தாக்குதல் மெல்லப் பலமிழந்து பின்வாங்கல் தொடங்கியது. போராளிகள் முன்னகர்ந்தோம். மீண்டும் இராணுவ அணியினர் உயிரிழக்க வேண்டியதாயிற்று. உக்கிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. கால்களுக்கடியில் இறைஞ்சும் சொற்கள் நசிபட முன்னேறி ஓடினோம். ஒரு இராணுவத்தினன் கனரக ராக்கெட் ஆயுதத்தோடு சாவடைந்திருந்தான். அவனுடைய ஆயுதத்தை அப்படியே கைப்பற்றினேன். என்னுடைய கால்கள் அந்தரத்தில் மிதப்பதை உணர்கிறேன். போர்க்களம் கானல் அலையென கண்களுக்குள் பொங்கியெழ ஆட்லறிகளும், துப்பாகிகளும், எதிரிகளும், போராளிகளும் சின்னஞ்சிறு மீன் குஞ்சுகளைப் போல நீந்தி விழுகின்றனர். இராணுவத்தின் தாக்குதல் திடீரென பலங்கொண்டு கனைத்தது. போராளிகள் திடுதிடுமென திணறத் தொடங்கினர். பல்குழல் எறிகணைகள் வெளிமுழுதும் சொரிந்து விழுந்து வெடித்தன. என்னுடைய அணியில் இருந்தவர்கள் நான்கிற்கு மேற்பட்டவர்கள் வீரச்சாவு அடைந்தனர். என்ன செய்வதெனத் தெரியாமல் கண்கள் சொருகின. மயக்கமா? மரணமா? உடல் முழுதையும் சோதனை செய்கிறேன். எங்கேனும் காயப்பட்டு ரத்தம் போய்விட்டதா என்கிற சந்தேகம். உடலில் எங்கும் எதுவுமில்லை. நன்றாகவேயுள்ளேன் என்ற உறுதிப்பாடு. கையில் கிடந்த ராக்கெட் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு முன்னரங்கில் இருக்கிற மண் அணைக்கு மேலே ஏறிச்சென்று எதிரிகளின் திசை நோக்கி வீசினால் என்னவென்று நீதான் என்னிடம் சொன்னாய் ஸ்பார்ட்டகஸ். “நானா, உனக்கு மூளையும் எரிஞ்சு போச்சு போலகிடக்கு” ஸ்பார்ட்டகஸ். நீதான் சொன்னாய். என்னை நம்பு. உன்னுடைய கதையைக் கேட்டு மண் அணைக்கு மேலே ஏறி நின்று, ராக்கெட்டை இயக்கினேன். அது புறப்படும் போது வெளித்தள்ளிய நெருப்புச் சுவாலை என்னை இப்படியாக்கிவிட்டது. நான் மண் அணையிலிருந்து தூக்கி வீசப்பட்டேன். பிறகு சுயநினைவற்று எரிகாயத்தோடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறேன். இனிக் காயம் மாறியதும் இயக்கம் தண்டனை வழங்குமென நினைக்கிறேன்” “உனக்கெதுக்கு தண்டனை. நீதான் சண்டை செய்து காயப்பட்டிருக்கிறியே” “அதுசரி, ஆனாலும் போதை மருந்து புகைச்சது இயக்க ஒழுக்கத்திற்கு எதிரானது தானே” “போதை மருந்தா, எது சிகரெட்டா” “அது சிகரெட் மாதிரி கொடுக்கப்பட்ட போதை மருந்தாம். இராணுவத்தில இருக்கிறவங்கள் பயம் தெரியாமல் சண்டை செய்ய கொடுக்கப்படுகுதாம்” என்றான் கரியன். “அப்ப, நீ வெறியில தான் ஏறி அடிச்சனியோ” “பின்ன, நான் அண்டைக்கு தன்னைச் சுட்டுச் செத்தானே மொஸ்கோ அவனை மாதிரி என்ன வீரனே?” எதுவும் சொல்லாமல் கரியனையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிரித்தபடி “உன்னட்ட ஒண்டக் கேக்க வேணும்” என்றான். “என்ன” “அவன் செத்த இடத்தில் ஒரு பூ ஊர்ந்து வந்தமாதிரி இருந்ததே, அது என்னெண்டு நினைச்சனி” “உனக்கு வெறியில அப்பிடி தெரிஞ்சிருக்கு” “அதுதான் இல்லை. அது மொஸ்கோவின்ர மூளை. வீரனோட மூளை, போர்க்களத்தில பூ மாதிரி கிடக்கிறத சொன்னால் நீங்கள் நம்பமாட்டியள். நான் போதைவஸ்த புகைச்சது தான் காரணமெண்டுவியள்” “சரி. அது வீரனோட மூளைதான். ஒத்துக்கொள்கிறேன். இப்ப நீ படு. நான் நாளைக்கு வருகிறேன்” என்று புறப்பட்டேன். அப்போது என்னுடைய கையைப் பிடித்துச் சொன்னான் “ இந்த விஷயத்தை ஆரிட்டையும் சொல்ல மாட்டனெண்டு எனக்கு சத்தியம் செய்திருக்கிறாய் மறந்திடாத” “சத்தியமாய் சொல்லமாட்டன்” என்று விடைபெற்றேன். கரியன் சில மாதங்கள் மருத்துவ விடுமுறையில் இருந்தான். அவனை பராமரித்து வந்த மருத்துவ முகாம் காட்டுப் பகுதிக்குள் இருந்ததால் போராளிகளைத் தவிர எவராலும் போக முடியாது. உடல் நிலை தேறி, நேராகவே களமுனைக்குச் சென்றான். போர்க்களத்தில் நிறையப் பாராட்டுக்களைப் பெற்றான். எதிரிகளை கொன்று குவிப்பதில் பெயர் பெற்றான். ஒருவேலையாக கிளிநொச்சிக்கு வந்திருந்த சமயம், என்னை வீதியில் கண்டு வாகனத்தை நிறுத்தினான். ஓடிவந்து அணைத்துக் கொண்டான். “ஸ்பார்ட்டகஸ். நிலமூர்ந்து வரும் பூக்கள் களத்தில் நிறையவே மலர்கின்றன. அவர்கள் வீரர்கள்” “இப்படி ஏன் நடக்கிறது. எதைக் கண்டு அஞ்சுகிறார்கள்” கேட்டேன். “தெரியவில்லை ஸ்பார்ட்டகஸ். ஆனாலும் அடிக்கடி அப்படி நடந்து விடுகிறது. மொஸ்கோவைப் போல இதுவரைக்கும் பத்துப் பேர், நிலமூர்ந்து வரும் பூக்களை மண்ணில் விதைத்து விட்டார்கள்” “நாளாந்த கள அறிக்கையில் இதனை அழுத்தம் திருத்தமாக எழுதி அனுப்பி. தளபதி பார்க்கட்டும்” “ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ளாதே, தளபதியே நேற்று அப்படியொரு முடிவை எடுத்து தப்பியிருக்கிறார்” “அய்யோ என்ன சொல்லுகிறாய். அவருக்கே இப்படித் தோன்றுகிறதா” “எனக்கும் தோன்றிவிட்டது ஸ்பார்ட்டகஸ்” “விசரா உனக்கு. மொஸ்கோவைப் போல அழித்துக் கொள்வதெல்லாம் வீண்சாவு. அதனைச் செய்யாதே. ஒரு மதிப்புமிருக்காது” என்றேன். கரியன் சிரித்தபடி வாகனத்தில் ஏறினான். விடுப்பில் வருகிறபோது சந்திக்கலாம் என்று புறப்பட்டான். இரண்டு நாள் கழித்து மேஜர் மொஸ்கோவாக வீட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்த வித்துடலின் தலைப்பகுதியை ஓடிச்சென்று பார்த்தேன். நிலமூர்ந்து போகும் பூ கரியனிடமே இருந்தது. கரியன் வீரன். https://akaramuthalvan.com/?p=1608
  8. தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்? மு.இராமநாதன் ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர் காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதி வரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால், திருத்தணி முதல் தென்குமரி வரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை. பான் அட்டை விண்ணப்பத்தில் இரண்டு பெயர்கள் கேட்டார்கள். முதற்பெயர் (first name) ஒன்று. குடும்பப் பெயர் (surname) மற்றொன்று. தமிழர்களுக்கு ஆக உள்ளது ஒரு பெயர்தான். இரண்டில் ஒன்றிற்கு அதை எழுதினார்கள். மற்றதற்குத் தந்தையார் பெயரையோ கணவர் பெயரையோ எழுதினார்கள். ஆதார் அட்டையைத் தயாரிக்கிற பணி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே கிடைத்தது. ஒருவருக்கு ஒரு பெயர் மட்டும் இருக்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். முன்னொட்டாக ஒரு தலைப்பெழுத்தையும் (initial) இணைத்துக் கொண்டார்கள். ஆக, பான் அட்டையில் இரண்டு பெயர்கள்; ஆதார் அட்டையில் ஒற்றைப் பெயர், தலைப்பெழுத்து தனி. தமிழர்களின் இரண்டு அட்டைகளும் ஒட்டாமல் போனது இப்படித்தான். பலர் ஆக்ஞையை நிறைவேற்றப் பல மாதங்கள் இதன் பின்னால் ஓடினார்கள். தமிழன் துறந்த சாதிப் பெயர் உலகின் பெரும்பாலான நாட்டவர்களுக்கும், இந்தியாவில் தமிழகம் நீங்கலான பிற மாநிலத்தவர்களுக்கும் அவர்களது பெயர்களில் குறைந்தபட்சம் இரண்டு பகுதிகள் இருக்கும் - முதற்பெயர், குடும்பப் பெயர். இவை தவிர நடுப் பெயர் உள்ளவர்களும் உண்டு. குடும்பப் பெயர் பொதுவாகக் குழுவை அல்லது பரம்பரையைக் குறிக்கும். இந்தியாவில் அது மிகுதியும் தொழிலையோ சாதியையோதான் குறிக்கும். இந்த இடத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஆண்டு: 2019, இடம்: மும்பை, பாத்திரங்கள்: நால்வர்- நானும் எனது ஒரு சாலை மாணாக்கர் ஒருவரும் ஆக இரண்டு தமிழர்கள், இரண்டு மராட்டிய நண்பர்கள். பேச்சு, தமிழகமும் மராட்டியமும் இந்தியாவில் பல அலகுகளில் முன்னணியில் நிற்பதைப் பற்றித் திரும்பியது. அப்போது தமிழ் நண்பர் சொன்னார் : ‘தமிழகம், இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களைக் காட்டிலும் 90 ஆண்டுகள் முன்னால் நிற்கிறது.’ அது என்ன 90 ஆண்டுக் கணக்கு? நண்பர் 1929இல் நடந்த செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டை முன்னேற்றத்தின் தொடக்கப் புள்ளியாகக் குறிப்பிட்டார். அந்த மாநாட்டில்தான் சாதிப் பெயரைப் பின்னொட்டாக வைத்துக்கொள்வதற்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. ‘ஈ.வெ. ராமசாமி நாயக்கராகிய நான் இன்றுமுதல் ஈ.வெ. ராமசாமி என்று அழைக்கப்படுவேன்’ என்று பெரியார் அறிவித்தது அந்த மாநாட்டில்தான். அந்தத் தீர்மானமும் அந்த அறிவிப்பும் அந்த மாநாட்டோடு நின்றுவிடவில்லை. அது தமிழ்ச் சமூகமெங்கும் பரவியது. தமிழர்கள் சாதிப் பெயரைக் களைந்தார்கள். நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன். ‘சாதி, பெயரில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேட்பாளர்கள் சாதி பார்த்துத்தானே நிறுத்தப்படுகிறார்கள்? திருமணங்கள் சாதிக்குள்தானே நடக்கின்றன? நம்மில் பலருக்கும் சாதி உணர்வு இருக்கத்தானே செய்கிறது?’ நண்பரிடம் பதில் இருந்தது. ‘இருக்கலாம். ஆனால் பெயரில் சாதியைத் துறப்பதற்கும் ஒரு மனம் வேண்டுமல்லவா? தமிழர்களிடம் அது இருந்தது. இப்போதும் தமிழகத்தில் பொதுவெளிகளில் சாதியைக் கேட்பதற்கும் சொல்வதற்கும் பலரும் கூச்சப்படவே செய்கிறார்கள். இன்றுகூட இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள பலரால் சாதிப் பெயர்களைச் சுட்டும் குடும்பப் பெயர்களைத் துறப்பதைச் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாது.’ மராட்டிய நண்பர்கள் ஒப்புக்கொண்டார்கள். தமிழ்ப் பெயர்களின் தனித்துவம் சாதிப் பெயர்களைக் கைவிட்டதில் மட்டுமல்ல, பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவதிலும் தமிழர்கள் தனித்துவமானவர்கள். குடும்பத்தின் பெரியவர்கள் பெயர்களைப் பிள்ளைகளுக்கு விடும் வழக்கம் நம்மிடமுண்டு. அதிலிருந்துதான் தலைவர்களின் பெயர்களைச் சூட்டும் வழக்கமும் வந்திருக்க வேண்டும். காந்தி, நேரு, போஸ் என்று நம்மவர்கள் சூட்டி மகிழ்ந்த பெயர்கள் அந்தத் தலைவர்களின் குடும்பப் பெயர்கள். தமிழர்கள் உணர்ச்சிமயமானவர்கள். தத்தமது ஆதர்சத் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவார்கள். ஸ்டாலின் பெயரை மகனுக்குச் சூட்டியது கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல, அவரது தலைமுறையைச் சேர்ந்த ராஜாங்கமும் குணசேகரனும் கூடத்தான். சமீபத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் பெயர் ஜெயகாந்தன். பொதிகைத் தொலைக்காட்சிச் செய்திப்பிரிவின் இயக்குநராக இருந்தவர் அண்ணாதுரை. சாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பாரதிதாசன். கல்லல் என்கிற ஊரின் காவல்துறை ஆய்வாளராக இருந்தவர் பெயர் ஜோதிபாசு. தமிழ்ப் பெண்களின் படங்களை அச்சொட்டாக வரைந்த ஓவியர் இளையராஜா. ரியாத்தில் என்னுடன் பணியாற்றிய ஓர் இளம் பொறியாளரின் பெயர் பாரதிராஜா. 2012இல் சத்தீஸ்கார் மாநிலத்தின் ஒரு மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அவர் பெயர் அலெக்ஸ் பால் மேனன். செய்தி வெளியானதும் அவர் மலையாளி என்று நினைத்தேன். அவர் தமிழர், பாளையங்கோட்டைக்காரர், வி.கே.கிருஷ்ண மேனன் மீதிருந்த ஈடுபாடு காரணமாக அவரது தந்தை சூட்டிய பெயரது. ஒரு முறை ரயிலில் என்னோடு பயணம் செய்தவரின் பெயர் கேப்டன் நாயர் என்று பட்டியலில் கண்டிருந்தது. வந்தவர் பட்டாளக்காரரல்லர், மலையாளியுமல்லர். திருச்சிக்காரர். அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர், பெயர்க் காரணம் எனக்குப் பிடிபட்டது. இப்படி அபிமானத் தலைவர்களின், மேலதிகாரிகளின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவது ஒரு புறமிருக்க, மறுபுறம் வடமொழிப் பெயர்களின் மீதான மோகத்தையும் இப்போது பார்க்க முடிகிறது. நான் சமீபத்தில் பார்த்த ஒரு விளம்பரம் எடுத்துக்காட்டாக அமையும். அந்த விளம்பரத்திற்கு நன்மரண அறிவிப்பு என்று தலைப்பிடப்பட்டிருந்தது. கனிவு ததும்பும் ஒரு மூதாட்டியின் படமும் இருந்தது. அது நல்ல மரணம்தான். அவருக்கு வயது 102. மூன்று தலைமுறை அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தது. பிள்ளைகளின் பெயர்கள் நாராயணன், சந்திரசேகரன், விசாலாட்சி, பார்வதி என இருந்தது. பேரப் பிள்ளைகளின் பெயர்கள் சதீஷ், சபிதா, சந்தோஷ், பிரவீன், ராகுல் என்று கொஞ்சம் ‘நவீன’மாகியிருந்தது. இந்தப் பேரப்பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களோடு ஓர் ஒவ்வாமை இருக்க வேண்டும். அது அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டிய பெயர்களில் இருந்து புலனாகியது. மூதாட்டியின் கொள்ளுப் பேரர்களின் பெயர்கள் அனிஷா, பிரமோத், லக்‌ஷிதா, திரிஷாணா, அனோன்யா, சரித், தனுஷா என்கிற ரீதியில் இருந்தது. இருபெயரொட்டு இன்னல்கள் குடும்பத்தின் பெரியவர்கள் பெயர், அரசியல் தலைவர்கள் பெயர், அபிமான நட்சத்திரங்கள் பெயர், வடமொழிப் பெயர்- இப்படி விரும்பிய வண்ணம் பெயரிடுவது தமிழர்களுக்குச் சாத்தியமாகிறது. அதற்கு இந்த முதற்பெயர் - குடும்பப் பெயர் கலாச்சாரம் இல்லாததுதான் காரணமாக இருக்க வேண்டும். இப்படி பெயர் சூட்டும் வழக்கத்தை உலகின் பிறபகுதிகளில் காண முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இப்படி திறந்த மனத்துடன் பெயரிடுவதற்காகவும் சாதிப் பின்னொட்டைக் கைவிட்டதற்காகவும் தமிழர்களுக்கு யாரும் பாராட்டுக் கூட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை. மாறாக இன்னல்கள்தாம் வருகின்றன. இந்த முதற்பெயர்- குடும்பப் பெயர் ஆகிய இரு பெயரொட்டுத் தொடர்பான தமிழர்களின் இன்னல்கள் இரண்டு அட்டைகளின் வடிவத்தில் வந்தது. அது அத்தோடு முடிவதில்லை. திரைகடல் தாண்டும் எல்லாத் தமிழர்களும் இந்த இரு பெயரொட்டுப் பிரச்சினையை நேரிட்டிருப்பார்கள். அந்தச் சிக்கல்களுக்குள் போவதற்கு முன்னால் இது தொடர்பான சில சர்வதேச நடைமுறைகளைப் பார்க்கலாம். மேலை நாடுகளில் குடும்பப் பெயர் வெளிநாடுகளில் ஒருவருக்குக் குடும்பப் பெயர் தந்தை வழியாகவோ கணவர் வழியாகவோ வரும். ஆகவே, அது ஆண்பால் பெயராகவே இருக்கும். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்பின் தாத்தா பிரெடரிக் டிரம்ப், ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தவர். டிரம்ப் என்பது ஜெர்மனியில் வழங்கும் ஒரு குடும்பப் பெயர். அதிபரின் அப்பா பிரெட் டிரம்ப், அம்மா மேரி ஆன் டிரம்ப், மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப், ‘எங்கள் குடும்பம் எப்படி உலகின் அதிபயங்கர மனிதனை உருவாக்கியது?’ என்கிற நூலின் ஆசிரியர் மேரி டிரம்ப், அதிபரின் அண்ணன் மகள். குடும்பப் பெயருடன் திருவாளர், செல்வி, முனைவர் போன்ற மரியாதை முன்னொட்டுகளைச் சேர்க்க வேண்டும். முதற்பெயருக்கு மரியாதை விளி தேவையில்லை. நேர்ப்பேச்சுகளில் மின்னஞ்சல்களில் முதற்பெயரையும், சம்பிரதாயமான கூட்டங்களில் அலுவல்ரீதியான கடிதங்களில் குடும்பப் பெயரையும் பயன்படுத்துவார்கள். வயதில் மூத்தவர்களையும்கூட அணுக்கமானவர்களெனில் முதற் பெயரில் விளிக்கலாம். வயதில் குறைந்தவர்களானாலும் குடும்பப் பெயரைப் பயன்படுத்துகிறபோது மரியாதை முன்னொட்டைச் சேர்க்க வேண்டும். உங்கள் மேலதிகாரியின் பெயர் டோனி பிளச்சர் என்று வைத்துக்கொள்ளலாம். அவரை நீங்கள் டோனி என்று நேர்ப்பேச்சில் விளிக்கலாம். மின்னஞ்சலில் அன்புள்ள டோனி என்று எழுதலாம். அவர் கோபிக்கமாட்டார். ஆனால் சம்பிரதாயமான கடிதங்களில், பொதுக்கூட்டங்களில் மிஸ்டர் பிளச்சர் என்றுதான் அழைக்க வேண்டும்; அந்த இடத்தில் டோனி என்று அழைப்பது தவறு. மிஸ்டர் டோனி என்றழைப்பதும் பிழை. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் வரும் வீட்டின் சொந்தக்காரர் திருமதி ஹட்சன் வீட்டையும் பராமரிப்பார். எல்லாக் கதைகளிலும் ஷெர்லக் ஹோம்ஸ் அவரைத் திருமதி. ஹட்சன் என்றுதான் அழைப்பார். ஹாரி பாட்டர் தனது நண்பனின் பெற்றோரை திருவாளர் வெஸ்லி, திருமதி. வெஸ்லி என்றுதான் அழைப்பான். (உறவினர் அல்லாதவரை அங்கிள், ஆன்ட்டி என்றழைக்கும் வழமை ஆங்கிலேயரிடத்தில் இல்லை). சீனர்களின் குடும்பப் பெயர் சீனர்களுக்கும் இப்படியான சம்பிரதாயங்கள் உண்டு. ஆனால் ஐரோப்பியர்களைப் போலச் சீனர்கள் குடும்பப் பெயரைப் பின்னால் எழுதமாட்டார்கள். முன்னால் எழுதுவார்கள். சீன அதிபரின் பெயர் ஷி ஜிங்பிங். இதில் ஷி என்பதுதான் குடும்பப் பெயர். மா சேதுங்-இன் குடும்பப் பெயர் மா. ஹாங்காங் பன்னெடுங்காலம் பிரிட்டிஷ் காலனியாக இருந்ததால் அவர்கள் ஓர் ஆங்கிலப் பெயரைக் கூடுதல் முதற்பெயராக வைத்துக்கொண்டார்கள். ஹாங்காங்கின் ஜனநாயகப் போராட்டங்களின்போது செயலாட்சித் தலைவராக இருந்தவர் கேரி லாம் செங் யூட்-கோர். இதில் ‘லாம்’ என்பது கணவரின் குடும்பப் பெயர். ‘செங்’ என்பது தந்தையாரின் குடும்பப் பெயர். பலரும் திருமணமான பின் தந்தையாரின் குடும்பப் பெயரைத் துறந்து கணவரின் குடும்பப் பெயரை வைத்துக்கொள்வார்கள். இவரது குடும்பப் பெயர் இப்போது ‘லாம்’ என்றாலும், திருமணத்திற்கு முன்பிருந்த ‘செங்’ எனும் பெயரையும் களையாமல் வைத்திருக்கிறார். ‘யூட்-கோர்’ என்பது சீன முதற்பெயர். அதை உச்சரிப்பதற்கு ஆங்கிலேயர்களுக்குச் சிரமமாக இருக்குமென்பதால், கேரி எனும் கிறிஸ்தவப் பெயரொன்றையும் முதற்பெயராகச் சூடிக்கொண்டிருக்கிறார். காலனிய ஆட்சியாளர்களின் வசதிக்காகப் பலரும் செய்துகொண்ட ஏற்பாடுதான் இது. (பழனியப்பன் அமெரிக்கா போனதும் பால் ஆவதோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம்). செயலாட்சித் தலைவருக்கு அணுக்கமானவர்கள், அவரைக் கேரி என்றழைப்பார்கள்; மற்றவர்கள் லாம் தாய் என்று அழைப்பார்கள்; திருமதி லாம் என்று பொருள். அவரது கணவரை லாம் சாங் என்று அழைப்பார்கள்; திருவாளர் லாம் என்று பொருள். எல்லாக் குடும்பப் பெயர்களும் மரியாதைப் பின்னொட்டோடுதான் அழைக்கப்பட வேண்டும். ஆண்டாண்டுக் காலமாக இப்படி முதற்பெயர், குடும்பப் பெயர் கலாச்சாரத்தோடு வளர்ந்தவர்களுக்கு நமது ஒற்றைப் பெயர் கலாச்சாரம் புரிபடுவதில்லை. என் கதை 1995இல் நான் ஹாங்காங்கிற்குப் புலம்பெயர்ந்தபோது எனக்கு இந்தக் கதையொன்றும் தெரியாது. அலுவலகத்தில் என்னை ‘ராமா’ என்று அழைத்தார்கள். சீன உச்சரிப்பிற்கு அது இசைவாக இருந்ததே காரணம். வேலையில் சேர்ந்த சில நாட்களில் ஒரு திட்டப்பணி தொடர்பான கூட்டத்திற்குப் போனேன். கட்டிடக் கலைஞர்களும் பொறியாளர்களும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள். ஓர் இளம்பெண் சிரத்தையாகக் குறிப்பெடுத்தார். அடுத்த நாள் அது தொலைநகலில் வரும். பங்கேற்றவர்களின் பெயர்-விவரம், குறிப்பின் முதல் பக்கத்தில் இருக்கும். கூட்டம் முடிந்ததும் அந்தப் பெண் நேராக என்னிடம் வந்தார். ‘உங்கள் முதற்பெயர் ராமா, குடும்பப் பெயர் நாதன், அப்படித்தானே?’ என்று கேட்டார். என் மீதமுள்ள வாழ்நாளின் மிக முக்கியமான கேள்வியை எதிர்கொள்வதை நான் அறிந்திருக்கவில்லை. தவறான பதிலைச் சொன்னேன், ‘இல்லை, என் பெயர் ராமநாதன்; ஒரே சொல், சேர்த்துத்தான் எழுத வேண்டும்’. அவர் அடுத்தபடியாக, ‘அப்படியானால் உங்கள் பெயரின் முன்னால் வருகிற எம் என்பது என்ன?’ என்று கேட்டார். ‘அது தலைப்பெழுத்து’ என்றேன். தொடர்ந்து, ‘அப்படியானால் அதுதான் உங்கள் குடும்பப்பெயராக இருக்க வேண்டும்’ என்றார். ‘இல்லை, அது என் தகப்பனார் பெயரின் முதலெழுத்து’ என்றேன். ‘அப்படியானால், ராமநாதன் என்பதுதான் உங்கள் குடும்பப் பெயராக இருக்க வேண்டும்’ என்றார். ‘இல்லை, அது என்னுடைய பெயர்’ என்றேன். அம்மணி அத்துடன் கேள்விகளை நிறுத்திக்கொண்டார். ஆனால் இதே கேள்விகளை 25 ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் எதிர்கொண்டுவருகிறேன். கடவுச்சீட்டு வாங்கப்போனால் முதற்பெயரும் கடைசிப் பெயரும் கேட்பார்கள். கடவுச்சீட்டு அலுவலர்களும் முகவர்களும் தமிழர்களிடம் தகப்பனார் பெயரைக் குடும்பப் பெயர் என்று எழுதச் சொல்வார்கள். எனக்கும் அப்படியே சொன்னார்கள். ஆனால், அதில் ஒரு சிக்கல் வந்தது. என் தகப்பனார் பெயர் எனது குடும்பப் பெயராகிவிடும். என்னுடைய பெயர் என் மனைவி மக்களின் குடும்பப் பெயராகிவிடும். அதாவது, ஒரே குடும்பத்தில் இரண்டு குடும்பப் பெயர்கள் வரும். ‘இது எப்படி சாத்தியம்?’ என்று ஹாங்காங்கில் பலரும் என்னிடம் கேட்டார்கள். அதற்காக நான் ஒரு யுக்தி செய்தேன். என் தகப்பனார் பெயரை எனது முதற்பெயராகவும், எனது பெயரைக் குடும்பப் பெயராகவும் மாற்றிக்கொண்டேன். இப்போது மொத்தக் குடும்பத்திற்கும் ஒரே குடும்பப்பெயர் கிடைத்தது. ஆனால், இதைவிட எளிய வழிகள் இருந்தன என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. பெயரைக் கூறு போடலாம் அ.முத்துலிங்கத்தின் ‘முழு விலக்கு’ என்கிற கதையை அப்போது நான் படித்திருக்கவில்லை. நாயகன் கணேசானந்தன் ஆப்பிரிக்காவுக்குப் போவான். போகிற இடமெல்லாம் குடும்பப் பெயர், நடுப்பெயர், முதற்பெயர் என்று கேட்பார்கள். ‘தாமோதிரம்பிள்ளை கணேசானந்தன்’ என்று இவன் விஸ்தாரமாக எழுதி முடிப்பதற்கிடையில் அவர்கள் தங்கள் சுருண்ட தலைமுடியை பிய்த்துக் கொண்டு நிற்பார்கள். கடைசியில் ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடிப்பான். ‘கணே சா நந்தன்’ என்று தன் பெயரை மூன்றாகப் பிரித்துவிடுவான். முத்துலிங்கம் இந்தக் கதையை 1995இலேயே எழுதிவிட்டார். நான் பல ஆண்டுகள் கழித்துத்தான் படித்தேன். அதற்குள் காலம் கடந்துவிட்டது. கடவுச் சீட்டு, ஹாங்காங் அடையாள அட்டை, தொழிற் பட்டயங்கள், வங்கிக் கணக்குகள் எல்லாவற்றிலும் என் பெயருடன் தகப்பனார் பெயரும் இரும்பால் அடிக்கப்பட்டுவிட்டது. முன்னதாக இந்தக் கதையைப் படித்திருந்தால் 1995இல் என்னிடம் கேள்வி கேட்ட பெண்மணியிடம் ‘ஆம், ஆம்’ என்று பதிலளித்திருப்பேன். இணைய வெளியிலும் இரட்டைப் பெயர் இந்த இரட்டைப் பெயர் இன்னல் பான் அட்டையிலும் கடவுச்சீட்டிலும் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் தொடர்கிறது. இந்தத் தளங்களில் கணக்குத் தொடங்க வேண்டுமென்றால் முதற்பெயரையும் கடைசிப் பெயரையும் உள்ளிட வேண்டும். தலைப்பெழுத்தை மட்டும் எழுதினால் இணையம் ஒப்புக்கொள்ளாது. ஆக தமிழகத்திற்குள் நிலவும் ஒற்றைப் பெயர், இணையவெளியிலும் கடவுச்சீட்டிலும் பான் அட்டையிலும் வெளிநாடுகளுக்குப் போகிறபோதும் இரண்டு பெயர்களாகிவிடுகின்றன. பெயரைப் பிரித்து எழுதலாம் என்கிற யோசனை முத்துலிங்கத்திற்கே காலங்கடந்துதான் தோன்றியிருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அவரது பெயர் அப்பாதுரை முத்துலிங்கம் என்றுதான் இருக்கிறது. உள்ளூரில் விளையாடுகிறபோது வி.ஆனந்தாக இருந்தவர் சர்வதேச அரங்கிற்குப் போனதும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகிவிடுகிறார். நோபல் விருது பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சிதம்பரத்தில் பிறந்தபோது ஆர்.வெங்கட்ராமன் என்றே அறியப்பட்டிருப்பார். 2020 செப்டம்பர் மாதம் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரும் வெளியுறவு அமைச்சரும் கலந்துகொண்டார்கள். முன்னவர் உள்நாட்டு ஊடகங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் ராஜ்நாத் சிங் என்றே அழைக்கப்பட்டார். பின்னவரின் பெயர் உள்நாட்டில் எஸ்.ஜெய்சங்கர் எனவும் வெளிநாட்டு ஊடகங்களில் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் எனவும் குறிப்பிடப்பட்டது. ஏனெனில் வெளிநாட்டு ஊடகங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பெயர்கள் இருக்க வேண்டும் என்று நம்புகின்றன. என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்? பலரும் செய்வதுபோலத் தலைப்பெழுத்தை விரித்தெழுதி அதுதான் முதற்பெயரென்றோ குடும்பப் பெயரென்றோ சொல்லிக் கொள்ளலாம்; அல்லது பெயரைப் பிரித்தெழுதி ஒரு பாதி முதற் பெயர் என்றும் மறுபாதி குடும்பப் பெயர் என்றும் சாதிக்கலாம். ஆனால் இவையெல்லாம் குறுக்கு வழிகள். நமக்கு பான் அட்டை வேண்டும், கடவுச்சீட்டு வேண்டும், சமூக வலைதளங்களில் கணக்கு வேண்டும்; அதற்காக ஒற்றைப் பெயருள்ள நாம் இரண்டு பெயர்கள் உள்ளதாக அபிநயிக்கிறோம். தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று முழங்குவதோடு நிறுத்திவிடாமல், அந்தத் தனிக்குணங்களில் ஒன்றுதான் சாதிப்பெயரைத் துறந்தது, அதன் நீட்சியாகத் தமிழன் ஒரு பெயரோடுதான் நிற்பான் என்று சொல்ல வேண்டும். தமிழக அரசும் தமிழ் அறிவாளர்களும் இதை ஒரு பிரச்சினையாகக் கருதி முன்னெடுக்க வேண்டும். முதற்கட்டமாக பான் அட்டையிலும் கடவுச்சீட்டிலும் தமிழர்கள் தலைப்பெழுத்துடன் தங்கள் ஒற்றைப் பெயர்களைப் பதிவுசெய்ய அனுமதி பெற வேண்டும். அடுத்த கட்டமாக இணையத்திலும் அதற்கு வகை செய்யப்பட வேண்டும். எல்லாப் பெயர்களையும் முதற்பெயர் - குடும்பப் பெயர் என்று பார்க்கும் வெளி நாட்டவர்க்கும் வெளி மாநிலத்தவர்க்கும் இதைப் புரிந்துகொள்வது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும். அவர்கள் அதை அங்கீகரிப்பதற்குத் தாமதமாகலாம். ஆனால், நாம் மற்றவர்களுக்காக வலிந்து இல்லாத குடும்பப் பெயரை உருவாக்கிக்கொள்வதைவிட ஒரு சமூகமாக எழுந்து நின்று தமிழர்களுக்கு ஒற்றைப் பெயர்தான் என்று சொல்ல வேண்டும். மனத்தடைகளைக் கடந்துவருகிறபோது அவர்களுக்கும் ஒற்றைப் பெயர் பழக்கமாகும். அதன்பிறகு அவர்கள் தமிழர்களுக்கு எழுதுகிற மின்னஞ்சல்களிலும் சம்பிரதாயமான கடிதங்களிலும் ஒற்றைப் பெயரைப் பயன்படுத்துவார்கள். வெளிநாட்டு ஊடகங்களில் வி.ஆனந்த், ஆர்.வெங்கட்ராமன், அ.முத்துலிங்கம், எஸ்.ஜெய்சங்கர் போன்ற பெயர்களைப் பார்க்கிற காலமும் வரும். https://www.arunchol.com/mu-ramanathan-article-on-tamilians-family-name இது பற்றி நான் முன்னர் எழுதியது..
  9. நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….! Veeragathy Thanabalasingham on January 18, 2024 Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக இருந்த காலப்பகுதியை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் ‘நரகத்தில் இடைவேளை’ (Interval in the Hell) என்று வர்ணித்திருந்தது. தற்போது புதுவருடம் பிறந்த நிலையில் வரி அதிகரிப்புகளின் விளைவாக பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் மக்களினால் தாக்குப் பிடிக்கமுடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அந்த வர்ணனை எவ்வளவு கச்சிதமானது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. பெறுமதிசேர் வரியை (வற்) அரசாங்கம் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்ததுடன் ஏற்கெனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த பெருவாரியான பொருட்களும் அந்த வரிவிதிப்பு வீச்சுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து (ஏற்கெனவே, வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கு பல்வேறு சிக்கன உபாயங்களை கடைப்பிடித்துவந்த) பெரும்பாலான மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். செலவினங்களைக் குறைத்து அரச வருவாயை அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்திருக்கும் நிபந்தனைகளை அரசாங்கம் மக்களுக்கு நேரக்கூடிய இடர்பாடுகளைப் பற்றி சிந்திக்காமல் நடைமுறைப்படுத்துவதே இதற்குக் காரணமாகும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைத் தொடர்ந்து பெறுவதற்கு அதன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. பிச்சைக்காரர்களுக்குத் தெரிவு இல்லை. இந்த வருடம் தேர்தல் ஆண்டாக இருந்தாலும் கூட முன்னரைப் போன்று அரசியல் கட்சிகளிடம் இருந்து இனிப்பான பொருளாதார நிவாரண உறுதிமொழிகளைப் பெரிதாக எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால், முக்கியமான எதிரணி கட்சிகளும் கூட ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒத்துழைத்துச் செயற்படப் போவதாகவே கூறுகின்றன. நிபந்தனைகளை குறித்து நாணய நிதியத்துடன் மீள் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக அந்த கட்சிகள் கூறினாலும் அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்ற கேள்வி இருக்கிறது. எதிர்காலத்தில் பதவிக்கு வரக்கூடிய எந்த அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்துடனான உதவித்திட்டத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தமுடியும். ஆனால், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு தற்போது முன்னெடுக்கப்படும் பாதையையே தொடர்ந்து பின்பற்றவேண்டியிருக்கும் என்று சில தினங்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார். “தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாதையில் இருந்து விலகினால் சர்வதேச ஆதரவு கிடைக்காமல் போகும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டம் கடந்த வருடம் செப்டெம்பர் முதலாம் திகதி தொடங்கியது. கடனுதவியின் முதலாவது தவணைக் கொடுப்பனவு வழங்கப்பட்ட பிறகு அடுத்த தவணைக் கொடுப்பனவுக்கு முன்னதாக எமது கடப்பாடுகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது அடுத்த நான்கு வருடங்களுக்கு எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும், காலப் பொருத்தமான முறையில் கொள்கைகளில் மாற்றத்தைச் செய்வதற்கு மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். “பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு இதே திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியது அவசியம். அந்த விளக்கப்பாட்டின் அடிப்படையில்தான் வெளிநாடுகளின் அரசாங்கங்களும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களும் கடன் நிவாரணத்துக்கு இணங்கியிருக்கின்றன. இதே கடன் மறுசீரமைப்பு பாதையில் அடுத்த பத்து வருடங்களுக்கு பயணம் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. “இதில் மாற்றத்தைச் செய்தால் அவர்களும் கடன் நிவாரணம் தொடர்பான தீர்மானத்தை மாற்றிவிடலாம். அதனால் தற்போதைய பாதையில் இருந்து விலகினால் தங்களால் தொடர்ந்து ஆதரவை வழங்கமுடியாது என்று அவர்களால் கூறமுடியும். அதற்கு பிறகு வருடாந்தம் நாம் 600 கோடி அமெரிக்க டொலர்கள் கடனைத் திருப்பிச்செலுத்தவேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார். இலங்கை அகப்பட்டிருக்கும் சிக்கலின் பாரதூரத்தன்மையை கலாநிதி வீரசிங்கவின் விளக்கம் தெளிவாக உணர்த்துகிறது. புதிய வருடத்தில் கடுமையான இடர்பாடுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறியிருந்தார். பொருளாதார நிலைவரம் தொடர்பில் மக்களுக்கு பொய் கூறவிரும்பவில்லை என்றும் மக்களால் விரும்பப்படாத தீர்மானங்களை எடுப்பதற்கு தயங்கப்போதில்லை என்றும் கூறுவதன் மூலமாக அவர் தன்னை ஒளிவுமறைவற்ற தலைவராக காட்டிக்கொள்ளலாம். ஆனால், வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவான சுமையை சாதாரண மக்களினால் எவ்வளவு காலத்துக்கு தாங்கிக் கொள்ளமுடியும்? அந்த சுமை சமுதாயத்தின் சகல பிரிவுகள் மீதும் ஒப்புரவான ஒரு முறையில் பகிரப்படுவதாகவும் இல்லை. மறைமுகமான வரிகளின் விளைவான சுமை சாதாரண மக்களையே கடுமையாக அழுத்துகிறது. நிலவர அறிக்கை இத்தகைய பின்புலத்தில், குடிசன மதிப்பு, புள்ளி விபரவியல் திணைக்களம் கடந்தவாரம் வெளியிட்ட அறிக்கையை நோக்குவது அவசியமானதாகும். நாட்டின் தற்போதைய நிலைவரம் மாத்திரமல்ல எதிர்கால நிலைவரமும் கூட இருள் கவிழ்ந்ததாகவே இருக்கப்போகிறது என்பதை அறிக்கை தெளிவாகப் புரிந்து கொள்ளவைக்கிறது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் 4.70 சதவீதமாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் இரண்டாவது காலாண்டில் 5.20 சதவீதமாக அதிகரித்தது. இன்று ஒரு குடும்பத்தின் அடிப்படை மாதாந்த வேதனம் 40 ஆயிரம் ரூபாவுக்கும் 50 ஆயிரம் ரூபாவுக்கும் இடைப்பட்டதாக இருக்கிறது. அது வெறுமனே உணவுத் தேவைக்கு மாத்திரமே போதுமானது. பிள்ளைகளின் கல்வி, உடை, மருத்துவ பராமரிப்பு, பயணங்கள் மற்றும் பொழுதுபோக்கு செலவினங்களுக்கு புறம்பாக பணம் தேவை. தாய், தந்தையையும் இரு பிள்ளைகளையும் கொண்ட ஒரு குடும்பத்தின் உணவுச் செலவுக்கு சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது. 60.5 சதவீதமான குடும்பங்களின் மாதாந்த சராசரி வருமானம் கடுமையாகக் குறைந்துவிட்டது. அதேவேளை, 91 சதவீதமான குடும்பங்களின் மாதாந்த செலவின மட்டம் கடுமையாக உயர்ந்துவிட்டது.பொருளாதார நெருக்கடியின் காரணமாக 22 சதவீதமான குடும்பங்கள் வங்கிகளிடம் அல்லது தனியாரிடம் கடன் வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. 75.2 சதவீதமான குடும்பங்களின் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 97.2 சதவீதமான குடும்பங்கள் செலவினங்களைச் சமாளிக்க பல்வேறு உபாயங்களைக் கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. அதேவேளை 46.4 சதவீதமான குடும்பங்கள் சேமிப்பைக் குறைத்திருக்கின்றன அல்லது சேமிப்புக்களை அன்றாட தேவைக்கு செலவு செய்கின்றன. 2019ஆம் ஆண்டுக்கு பிறகு வறியவர்களின் தொகை சுமார் 40 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக அதிகரித்திருக்கிறது. சனத்தொகையில் 31 சதவீதத்தினர் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. கொழும்பில் இயங்கும் ‘லேர்ண்ஏசியா’ என்ற சிந்தனைக்குழாம் கடந்த வருடம் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் சனத்தொகையில் மூன்றில் ஒரு பிரிவினர் அல்லது 33 சதவீதமானோர் தினம் ஒருவேளை உணவைத் தவிர்ப்பதாகவும் 47 சதவீதமானவர்கள் உணவின் அளவுகளைக் குறைத்திருக்கும் அதேவேளை வயது வந்தவர்களில் 27 சதவீதமானவர்கள் பிள்ளைகளுக்குத் தேவை என்பதற்காக தங்களது உணவை கணிசமாகக் கட்டுப்படுத்திக்கொள்வதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. குறைந்த வருமானம் காரணமாக போதுமான உணவுப் பொருட்களைப் பெறமுடியாததால் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்ற சவால்களை சமாளிக்க பல குடும்பங்கள் உணவைக் குறைத்திருப்பது மாத்திரமல்ல, வழக்கமாக சாப்பிடுகின்ற உணவு வகைகளைக் கைவிட்டு மலிவான வேறு வகை உணவுகளை நாடியிருப்பதாக சில சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொண்ட ஆய்வுகள் கூறுகின்றன. வழமையான உணவு வகைகளை வாங்குவது கட்டுப்படியாகாது என்பதால் குடும்பங்கள் கிரமமான உணவுளைத் தவிர்ப்பதாகவும் தங்களது அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்பது தெரியாத நிலையில் சிறுவர்கள் வெறுவயிற்றுடன் படுக்கைக்கு செல்கிறார்கள் என்றும் யுனிசெவ் அமைப்பின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் ஜோர்ஜ் லாறியீ அட்ஜே 2022 ஆகஸ்டில் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். சிறுவர்கள் மத்தியிலான மந்தபோசாக்கைப் பொறுத்தவரை தெற்காசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்ததாக இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்றும் அறிக்கைகள் கூறின. இது இவ்வாறிருக்க, இவ்வருடத்தின் முதல் காலாண்டின் இறுதியில் மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையில் 75 சதவீதம் குறைவடையக்கூடியதாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ கடந்த வாரம் கூறியிருக்கிறார். அரசியல்வாதிகள் உறுதிமொழிகளை அளிப்பார்கள். பிறகு அவற்றை நிறைவேற்றமுடியாமல் போய்விட்டால் அதற்கும் காரணங்களை தயாராகவே வைத்திருப்பார்கள். வாழ்க்கைச் செலவுச் சுமையில் 75 சதவீதக் குறைப்பு எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது முக்கியமான கேள்வி. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியில்லாமல் அரசாங்கத்தினால் எதையும் செய்யமுடியாமல் இருக்கலாம். ஆனால், அதனால் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகளை நிறைவேற்றுகின்றபோது அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் கடுமுனைப்பான நடவடிக்கைகள் சமூக அமைதியின்மையை தோற்றுவிக்கக்கூடியவை. அறகலயவைப் போன்ற மக்கள் கிளர்ச்சி மீண்டும் மூளுவதற்கு சாத்தியம் இல்லை என்று அரசாங்கம் மெத்தனமாக நினைக்கிறது போலும். அவ்வாறு மூண்டாலும் கூட படைபலம் கொண்டு ஆரம்பத்திலேயே அடக்கிவிடலாம் என்று அதற்கு நம்பிக்கை இருக்கக்கூடும். சர்வதேச நாணய நிதியத்தின் இறுக்கமான கடனுதவி நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் மூண்ட அரசியல் – சமூக எழுச்சிகளில் இருந்து எமது அரசாங்கம் மாத்திரமல்ல நாணய நிதியமும் பாடத்தைப் படிக்கவேண்டும். லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க பிராந்திய நாடுகளிலும் அத்தகைய எழுச்சிகள் ஏற்பட்டன. எமது பிராந்திய நாடான பாகிஸ்தானும் அதே பிரச்சினையை எதிர்நோக்குகிறது. மனித உரிமை மீறல்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் அசமத்துவத்தை அதிகரித்து அமைதியின்மையை தூண்டுவதாக பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கடுமையான விமர்சனங்களை்முன்வைத்திருக்கின்றன. “சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் மீதான அரசாங்கத்தின் செலவினக் குறைப்பும் பிற்போக்கான பெருமளவு வரிவிதிப்புகளும் மனித உரிமைகளை மலினப்படுத்தியிருக்கின்றன என்பதற்கு வரலாற்றில் தாராளமான சான்றுகள் இருக்கின்றன. வறுமையையும் அசமத்துவத்தையும் மேலும் தீவிரப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் மலினப்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கும் கொள்கைகளை சர்வதேச நாணய நிதியம் நாடுகள் மீது திணிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் சொந்த உள்ளக ஆய்வுகளே அதன் கொள்கைகள் நாடுகளின் கடன்களைக் குறைப்பதில் பொதுவில் பயனுறுதியுடைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதைப் புலப்படுத்துகின்றன. 2023 ஏப்ரலில் வெளியிடப்பட்ட நிதியத்தின் ‘உலகப் பொருளாதார நோக்கு’ என்ற அறிக்கையில் சிக்கனத் திட்டங்கள் கடன் விகிதங்களை ஒரு சராசரி அடிப்படையில் குறைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) ‘சர்வதேச நாணய நிதியம்; சிக்கன கடன் நிபந்தனைகளினால் உரிமைகள் மலினப்படுத்தப்படும் ஆபத்து – அதிகரிக்கும் அசமத்துவம் குறைபாடுடைய நிவாரண முயற்சிகளும்’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது. சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது அரசாங்கங்களும் நிதி நிறுவனங்களும் மனித உரிமைகள் மீதான தாக்கம் குறித்து மதிப்பீட்டைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வழிகாட்டல் கோட்பாடுகள் கூறுகின்றன. ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளும் நிபந்தனைகளும் அந்தக் கோட்பாடுகளுக்கு இசைவானவையாக இல்லை என்பதை அனுபவங்கள் உணர்த்துகின்றன. ஐ.எம்.எவ். கலகங்கள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்ற ஏனைய நாடுகளின் அனுபவங்களில் இருந்து இலங்கை அரசாங்கம் படிப்பனைகளைப் பெற்று நிதானமாக நடந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அந்த நாடுகளில் மக்கள் மத்தியில் தோன்றிய அமைதியின்மையை ‘சர்வதேச நாணய நிதியக் கலகங்கள்’ (IMF Riots) என்றே அழைக்கப்படுகின்றன. இலங்கையும் அத்தகைய கலகம் ஒன்றைக் காணுமா இல்லையா என்பது அடுத்து வரும் நாட்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலேயே முற்றிலும் தங்கியிருக்கிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/?p=11215
  10. வாட்ஸப்பில் வந்த தமிழரசுக்கட்சியின் தேர்தல் முடிவுகள்! 1. சிவஞானம் சிறிதரன்: 184 2. எம்.ஏ.சுமந்திரன்:137 3. சீ.யோகேஷ்வரன்:00 நிராகரிக்கப்பட்ட வாக்குகள்:42 தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்! மாவையர் நடு நிலமை. வாக்களிக்கவில்லை. யாழ்கள கருத்த்துக்கணிப்பில் எவருமே சிறிதரனை தெரிவு செய்யவில்லை! இதுவே புலம்பெயர் டயஸ்பொறா தமிழர்களுக்கும் தாயகத் தமிழர்களுக்கும் அரசியல் ரீதியில் பாரிய சிந்தனைவேறுபாடு உள்ளது என்பதற்கான ஒரு சாம்பிள்!
  11. வாட்ஸபில் இருந்து 1. சிவஞானம் சிறிதரன்: 184 2. எம்.ஏ.சுமந்திரன்:137 3. சீ.யோகேஷ்வரன்:00 நிராகரிக்கப்பட்ட வாக்குகள்:42 தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்
  12. தமிழரசுக்கட்சியை பக்குவமாக வழிநடத்தக்கூடிய தலைவர் சிறிதரன் - இரா.சம்பந்தன் தெரிவித்தார் Vhg ஜனவரி 21, 2024 இலங்கைத்தமிழரசுகட்சி தலைவராக பக்குவமாக தமிழ் மக்களை கூட்டிணைத்துக்கொண்டு வழிநடத்தக்கூடிய தலைவர் சிவஞானம் சிறிதரனே அவருக்கே எனது முழு ஆதரவும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும், திருகோணமலை எம் பியுமான இரா .சம்பந்தன் நேற்று(20-01-2024) தெரிவித்தார். தமிழ்சுகட்சி தலைவர் பதவிக்காக இன்று(21-01-2024) திருகோணமலையில் உங்கள் மாவட்டத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பில் உங்கள் ஆதரவு யாருக்கு என ஊடகவியலாளர் அவரின் கொழும்பு இல்லத்திற்கு சென்று நேரடியாக கேட்டபோது இதனை கூறினார் அது தொடர்பாக மேலும் அவர் கருத்து கூறுகையில். தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கு என்றுமில்லாத வகையில் மூன்றுபேர் போட்டியிடுகிறார்கள் இந்த நிலமை கட்சிக்கு உகந்தது இல்லை என்பதை கடந்த (10), ம் திகதி என்னை சந்திக்க வந்த சிறிதரன், சுமந்திரன் யோகேஷ்வரன் மூன்று பேருடனும் கூறினேன் அவர்கள் பேசி ஒருவருக்கு விட்டுக்கொடுப்பதா கூறினார்கள் ஆனால் அந்தவிதமாக அவர்கள் செய்யவில்லை இருந்தபோதும் யோகேஷ்வரன் சிறிதரனுக்கு விட்டுக்கொடுப்பேன் என என்னிடம் கூறியிருந்தார் அது நல்ல விடயம். மற்றப்படி ஏனய சிறிதரன் சுமந்திரன் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுக்கவில்லை என்பது வருந்த தக்க சம்பவம். இருந்தபோதும் பொதுச்சபையில் உள்ளவர்கள் அவர்களுக்கு பொருத்தமான ஒருவரை வாக்களித்து தலைவராக தெரிவார்கள்.அது அவர்களின் உரிமை. என்னைப்பொறுத்தவரையில் சிறிதரன் தமிழ் மக்களை கூட்டிணைத்து கருமங்களை வடக்கு கிழக்கு முழுவதும் செய்யக்கூடிய பக்குவம் அவருக்கு இருக்கிறது தமிழ் மக்களை கொள்கைரீதியாக அரவணைக்கும் பக்குவமும் உள்ளது அதை அவருடைய செயல்பாடுகளில் இருந்து அவதானித்துள்ளேன். இன் நிலையில் சிறிதரனே தலைவராக வரவேண்டும் என நான் நினைக்கிறேன் இருந்தபோதும் எனக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் இல்லாதபோதும் தமிழரசுகட்சி் பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் நின்று சிறிதரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும் நிலைப்பாடும் என்றார். https://www.battinatham.com/2024/01/blog-post_864.html
  13. வடக்குக்கான இந்திய ஒத்துழைப்பு தொடரும் ! இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வை , வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது ஆளுநரால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிபுரியும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். https://thinakkural.lk/article/288889
  14. வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு வாக்கெடுப்பு முடிவடைந்து, வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளன. திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21) காலை கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆரம்பமாகிய நிலையில் தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், S. ஶ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர். தலைவரை தெரிவு செய்வதற்காக தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதல் தடவையாக நடைபெற்ற வாக்கெடுப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/288895
  15. நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஜனாதிபதி சாகல ரத்நாயக்க! எதிர்கட்சிகள் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டை முன்னேற்றும் போது சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுக்களைத் தௌிவூட்டும் வகையில் நேற்று (19) கொழும்பு தாமரை தடாகம் கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் முன்னேற்றத்திற்கு சட்டதையும் சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அதேபோல் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உகந்த சூழலையும் உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியின் பாதுகாப்பிற்கும் சட்டமும் சமாதானமும் வலுவூட்டப்பட வேண்டியது அவசியமாகும். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் சட்டம், சமாதானம் தொடர்பிலான வெளிப்படைத் தன்மை காணப்படுகிறது. அதற்கு அவசியமான மூலதனம், மனித வளம், தொழில்நுட்பம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது. நாம் அதே நிலைக்குச் செல்ல வேண்டும். பொருளாதாரம் சரிவடைந்து கிடந்த நிலையிலேயே நாம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். இரு வருடங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலைமையை பலரும் மறந்துவிட்டனர். நாட்டுக்குள் எரிபொருள் வரிசை காணப்பட்டது. எரிவாயுவுக்கு வரிசை காணப்பட்டது. மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. ஆனால் இன்று நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பொருளாதார ரீதியில் நெருக்கடிகள் இருந்தாலும் அடுத்த நாளை எவ்வாறு கடத்துவது என்ற கேள்விக்குரியான நிலைமை இல்லாமல் போயுள்ளது. தற்போது நிலைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்திருக்கிறது. அதற்கமைய முதல் இரு வருடங்களும் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக செலவிடப்பட்டது. நாட்டு மக்களும் அதற்கு பெருமளவில் பங்களிப்பு செய்தனர். அந்த பயணத்தின் அடுத்த கட்டத்தையும் கவனமாகவே தொடர வேண்டும். நெருக்கடிகளை எதிர்கொண்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்துள்ளோம். சரிவடைந்த விவசாயத்துறையை மீள கட்டியெழுப்பும் வகையில் உரக் கொள்கைளை மாற்றியுள்ளோம். இவ்வாறான பல்வேறு பொருளாதார மறுசீரமைப்புக்களை நாட்டுக்குள் முன்னெடுத்துள்ளோம். அன்று 5 சதவீதமாக இருந்த நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை 16 சதவீதமாக அதிகரிக்கும் இயலுமை கிட்டியுள்ளது. சுற்றுலாத்துறையை நாம் இலகுவாக அபிவிருத்தி செய்யலாம். இன்றளவிலும் சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்துள்ளது. 25 இலட்சம் சுற்றுலா பயணிகள் இவ்வருடத்தில் இலங்கைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா அபிவிருத்திக்காக அன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்று பலனளிக்கின்றன. அதனால் அந்நியச் செலாவணியும் அதிகமாக கிடைக்கிறது. அதேபோல் துறைமுக அபிவிருத்தி, இறங்குதுறை மற்றும் இடைமாற்ற சேவைகளை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான திட்டங்களும் தயாரிக்கப்படுகின்றன. திட்டங்களுக்கு மேலாக நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும் உள்ளது. கொழும்பு துறைமுகத்தின் இறங்குதுறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எமது நாட்டின் இளம் சமூகத்தினர் தொழில்நுட்ப துறையில் உயர்வான நிலையில் உள்ளனர். அதனூடான வெளிநாட்டு வருமானத்தைப் பெறுவதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படுகிறன. எமது நாட்டுக்கும் இளைய சமுதாயத்தினருக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. ஆனால் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மத்தியில் நம்பிக்கை இல்லாதபோது நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகள் நாட்டுக்கு மிகவும் அவசியமாகும். நாடு மீண்டும் பொருளாதார சரிவைச் சந்திக்க இடமளிக்க கூடாது. எதிர்க்கட்சிகள் எவ்வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கள், மக்களுக்கு பலனளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சர்வதேசத்திற்கு எமது நாடு தொடர்பிலான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் நாட்டின் முன்னேற்றத்திற்கான வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியப்படுகிறது. அதேபோல் நாடு முன்னேற்றம் அடையும் போது சமூகத்திலிருந்து போதைப்பொருள் ஒழிக்கப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தைப் பொறுப்பேற்க வேண்டிய இளம் சமூகத்தினர் போதைப்பொருள் பாவனையினால் அழிக்கப்படுகின்றனர். அதனை கண் முன்னே காண்கிறோம். அதற்காகவே “யுக்திய” முன்னெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனை உலகத்தையே உலுக்குகிறது. அவற்றை ஒழிக்க வேண்டும். அதற்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். போதைப்பொருள் ஒழிப்புக்காக பொலிசார் உள்ளிட்ட பாகாப்புத் தரப்பினர் அர்பணிப்புடன் செயற்படுகின்றனர்.” என்று தெரிவித்தார். http://www.samakalam.com/நாடு-இயல்பு-நிலைக்குத்-த/
  16. உலக நீதி : காசாவும் முள்ளிவாய்க்காலும் - நிலாந்தன் “அனைத்துலக நீதியின் மாண்பு தராசில் தொங்கிக்கொண்டிருக்கிறது” இவ்வாறு அனைத்துலக நீதிமன்றத்தில் வைத்துக் கூறியிருப்பவர் தென்னாபிரிக்காவின் பிரதிநிதி. காசாவில் இஸ்ரேல் புரியும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கின் தொடக்கத்தில் மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது. உலக நீதி மட்டுமல்ல மேற்கு நாடுகளின் அரசியல் அறமும் கூட தராசில் வைக்கப்பட்டிருக்கிறது. முழு உலகத்துக்கும் ஜனநாயகம் மனித உரிமைகள் போன்றவற்றின் மாண்பைக் குறித்து வகுப்பெடுக்கும் மேற்கு நாடுகளின் அரசியல் அறத்தை மிக இளைய ஜனநாயகங்களில் ஒன்று ஆகிய தென்னாபிரிக்கா கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. காசாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் பொழுதே, ரத்தம் காய முன்பே, தென்னாபிரிக்கா வழக்குத் தொடுத்திருக்கின்றது. அதுபோல ஏற்கனவே மற்றொரு ஆபிரிக்க நாடாகிய காம்பியா மியான்மரில் ரோஹிங்கா முஸ்லிம்களுக்காக நீதி கேட்டு 2019 ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. அனைத்துலக நீதிமன்றம் எனப்படுவது ஐநாவின் ஆறு பிரதான உறுப்புகளில் ஒன்று. ஐநாவின் நீதி பரிபாலனக் கட்டமைப்பு அது. ஐநாவின் ஏனைய உறுப்புக்கள் நியூயோர்க்கில் உள்ளன. ஆனால் அனைத்துலக நீதிமன்றம் நெதர்லாந்தின் தலைநகரமான ஹேக்கில் அமைந்துள்ளது. ஐநாவின் சுயாதீனமான உறுப்பாக அது கருதப்பட்டாலும் அதன் தீர்ப்புக்களின் அடுத்தடுத்த கட்டங்களைத் தீர்மானிப்பது ஐநா பொதுச் சபையும் பாதுகாப்புச் சபையுந்தான். பாதுகாப்புச் சபையில் சக்திமிக்க நாடுகளுக்கு வீற்ரோ அதிகாரம் உண்டு. எனவே அங்கு விவாதிக்கப்படும் தீர்ப்புகளின் மீது சக்தி மிக்க நாடுகள் வீற்ரோ வாக்கைப் பிரயோகிக்க முடியும். ரோஹியங்கா முஸ்லிம்களின் விடயத்தில் மியான்மருக்குச் சார்பாக சீனா அவ்வாறு வீற்ரோ வாக்கைப் பிரயோகித்திருக்கிறது. அதுபோலவே இஸ்ரேலுக்கு எதிரான ஐநா தீர்மானங்களின் போதும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தன்னுடைய வீற்ரோ அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. ஐநாவின் வரலாற்றிலேயே அமெரிக்கா அதிகம் எண்ணிக்கையிலான வீற்ரோ வாக்குகளைப் பிரயோகித்தது இஸ்ரேலுக்கு ஆதரவாகத்தான் என்று ஒரு கணக்கு உண்டு. எனவே ஐநாவின் உறுப்புக்களில் ஒன்று என்ற அடிப்படையில் அனைத்துலக நீதிமன்றம் ஐநாவுக்குள்ள எல்லா வரையறைகளையும் பலவீனங்களையும் இயலாமைகளையும் கொண்டிருக்கும். இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே, குறிப்பாக மியான்மருக்கு எதிராக கம்பியா தொடுத்த வழக்கின் கடந்த நான்கு ஆண்டுகால அனுபவத்தின் பின்னணியில் வைத்தே தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக தொடுத்திருக்கும் வழக்கையும் விளங்கிக் கொள்ள வேண்டும். ரோஹியங்கா முஸ்லிம்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பொருத்தமான நீதி வழங்கப்படவில்லை. ஐநா உருவாக்கப்பட்டதிலிருந்து அது பெருமளவுக்கு இனப்படுகொலைகளின் பார்வையாளராகத்தான் இருந்து வந்துள்ளது. ஐநாவின் இயலாமையை,கையாலாகத்தனத்தை நிரூபிக்கும் ஆகப்பிந்திய இனப்படுகொலைக் களந்தான் காசா. தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கின்மூலம் பலஸ்தீனர்களுக்கு நீதி கிடைக்குமா? அல்லது அந்த வழக்கு ஐநாவின் கையாலாகத்தனத்தை மீண்டும் ஒரு தடவை நிரூபிக்குமா ? ஏனெனில், உலகில் தூய நீதி என்று எதுவும் கிடையாது இருப்பதெல்லாம் அரசியல் நீதிதான். நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் நீதியாக நடக்கலாம். ஆனால் அந்த நீதியை நடைமுறைப்படுத்தப் போவது அரசுகள்தான். அரசுகள், நலன்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கும். அரசியலில் அறம் நீதி என்பவையெல்லாம் கிடையாது. நிலையான ராணுவப் பொருளாதார நலன்கள்தான் உண்டு. அது சார்ந்த முடிவுகள்தான் உண்டு. அதனால்தான் அமெரிக்க அறிஞராகிய நோஆம் சொம்ஸ்கி பின்வருமாறு சொன்னார். அரசியல் அறத்தைக் கடைப்பிடிக்கும் காலம் வரும்வரை இனப்படுகொலை என்ற சொல்லை அகராதியில் இருந்து எடுத்துவிடுவதே நல்லது என்று. தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கு இஸ்ரேலுக்கு மட்டும் எதிரானது அல்ல. இஸ்ரேலை ஆதரிக்கும் எல்லா மேற்கு நாடுகளுக்கும் எதிரானதுதான். அனைத்துலக நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும்பொழுது அதில் முக்கிய பங்களிப்பை நல்கியது அமெரிக்காவும் பிரித்தானியாவுந்தான். அதே நாடுகள் இப்பொழுது தென்னாபிரிக்காவின் நகர்வை ஆதரிக்கவில்லை. எந்த ஒரு மேற்கத்திய நாடும் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அனைத்துலக நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கை ஆதரிக்கவில்லை. ஆனால் அதே மேற்கு நாடுகள்தான் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன. இதை எப்படி விளங்கிக் கொள்வது? இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் தென்னாபிரிக்காவும் மியான்மருக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் காம்பியாவும் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ளன. இந்த நாடுகள் எவையும் உக்ரைனில் ரஷ்யா முன்னெடுக்கும் ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து வழக்கு தொடுக்கவில்லை. அது மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆபிரிக்க நிலைப்பாடு. ரஷ்யா ஆபிரிக்க கண்டத்தை அதிகம் அரவணைத்து வைத்திருக்கின்றது. அங்குள்ள முன்னால் பிரெஞ்சுக் கொலனிகளில் நடக்கும் ராணுவச் சதிப் புரட்சிகளின் பின்னணியில் ரஷ்சியாவின் மறைகரங்கள் இருப்பதாக ஊகங்கள் உண்டு. அதேசமயம் காசாவில் நடப்பது இனப்படுகொலை என்று சொல்லாத மேக்கு நாடுகள், அதற்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் தென்னாபிரிக்காவை ஆதரிக்காத மேற்கு நாடுகள், ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்யா இனப்படுகொலை செய்வதாகக் குற்றம் சாட்டின. போர் தொடங்கிய குறுகிய காலத்துக்குள்ளேயே அமெரிக்கா அதை இனப்படுகொலை என்று சொன்னது. அது ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடு. பேரரசுகள் மட்டுமல்ல சிறிய அரசுகளும்கூட அறம் சார்ந்து அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை. உதாரணமாக தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிய பொழுது, பலஸ்தீனம் தமிழ் மக்களுடன் நிற்கவில்லை. பாலஸ்தீன அதிகார சபையானது மஹிந்த ராஜபக்சவின் நண்பனாகத்தான் காணப்படுகின்றது. 2009க்கு பின்னர் 2014ஆம் ஆண்டு பாலஸ்தீனம் மகிந்தவிற்கு அந்த நாட்டின் உயர் விருதாகிய “பலஸ்தீன நட்சத்திரம்” என்ற விருதை வழங்கியது. அங்குள்ள வீதி ஒன்றுக்கும் அவருடைய பெயரைச் சூட்டியது. அதாவது ஈழத் தமிழர்களால் இனப்படுகொலை தெரிந்தவர் என்று குற்றச்சாட்டப்படும் ஒருவருக்கு பலஸ்தீனம் நாட்டின் உயர் விருதை வழங்கியிருக்கிறது. இதை எப்படி விளங்கிக் கொள்வது? அப்படித்தான் கியூபாவும். ஒரு காலம் போராடும் இயக்கங்களுக்கு அது முன்மாதிரியாக இருந்தது. ஈழப் போராட்ட இயக்கங்கள் சில தமது பொறுப்பாளர்களுக்கு கஸ்ட்ரோ என்று பெயர் வைத்தன. ஆனால் 2009க்கு முன்னரும் பின்னரும் குறிப்பாக ஐநாவில் கியூபா யாருடைய பக்கம் நிற்கின்றது? ஐநா தீர்மானங்களின் போது கியூபா அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தான் வாக்களித்து வருகின்றது. இதை எப்படி விளங்கிக் கொள்வது? அதாவது மேற்கண்டவைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது தெளிவாக தெரிவது என்னவென்றால், சக்தி மிக்க நாடுகளோ அல்லது சிறிய நாடுகளோ எவையானாலும் அறத்தின் பாற்பட்டோ நீதியின் பாற்பட்டோ முடிவுகளை எடுப்பது குறைவு. பெருமளவுக்கு நிலையான அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் அவை முடிவுகளை எடுக்கின்றன. இப்படிப்பட்டதொரு குரூர உலகில் பலஸ்தீனர்களுக்கு அனைத்துலகை நீதிமன்றம் எப்படிப்பட்ட ஒரு நீதியை வழங்கும்? தென்னாபிரிக்காவின் நகர்வை, ஆபிரிக்கக் கண்டத்தில் தற்பொழுது மேலோங்கிக் காணப்படும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும் விளங்கிக் கொள்ளலாம். எனினும் எல்லாவிதமான வாதப்பிரதிவாதங்களுக்கும் அப்பால் அது இனப்படுகொலைக்கு உள்ளாக்கி கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது. தாங்கள் தனித்துவிடப்படவில்லை என்ற உணர்வை அது அவர்களுக்கு கொடுக்கும். இந்த விடயத்தில் பலஸ்தீனர்கள் ஈழத் தமிழர்களை விடவும் பாக்கியசாலிகள் என்று கூறலாமா? ஏனெனில், இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில் தமிழ்மக்கள் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார்கள். யாரும் உதவிக்கு வரவில்லை. எந்த ஒரு நாடும் உத்தியோகபூர்வமாக அவர்களை ஆதரிக்கவில்லை. தென்னாபிரிக்கா ஆதரிப்பதாகக் கூறப்பட்டாலும் நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை. தனது சேவைக் காலத்தில் தான் கண்ட மிக மோசமான நரகம் அதுவென்று அப்பொழுது ஐ.சி.ஆர்.சியின் தென்னாசியாவுக்குப் பொறுப்பான அதிகாரி கூறினார். உதவிக்கு யாரும் வராத அந்த ஒடுங்கிய கடற்கரையில் தனித்து விடப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கு எதிராக உலகின் பெரும்பாலான நாடுகள் ஒன்றாக நின்றன. அல்லது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தரப்புக்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டுச் சேர்ந்திருந்தன. ஐநா போரில் நேரடியாகத் தலையிடாமல் விட்டதன்மூலம் இனப்படுகொலையை மறைமுகமாக அங்கீகரித்தது. இந்தியாவும் சீனாவும் பிராந்தியத்தில் ஒன்றுக்கொன்று நட்பு நாடுகள் அல்ல. ஆனால் இரண்டு நாடுகளுமே ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரே கோட்டில் நின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் பிராந்தியத்தில் எதிரிகள். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரே கோட்டில் நின்றன. சீனாவும் அமெரிக்காவும் உலக அளவில் நடப்பு நாடுகள் அல்ல. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இரண்டும் ஒன்றாக நின்றன. உலகில் பிராந்திய மட்டத்திலும் உலகளாவிய மட்டத்திலும் தங்களுக்கு இடையே பகைவர்களாகக் காணப்படும் நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒன்றாக நின்றன. அப்பொழுது எந்த ஒரு நாடும் அதை இனப்படுகொலை என்று கூறவில்லை. இப்பொழுதும் எத்தனை நாடுகள் கூறுகின்றன? அனைத்துலக நீதியின் மீது நம்பிக்கையிழந்த பின்னரும்கூட கடந்த 15 ஆண்டுகளாக விடாமல் போராடும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வழக்குத் தொடுக்க இக்கொடிய உலகில் யாருண்டு? https://www.nillanthan.com/6487/
  17. காதலின் மேன்மையை சொல்லும் கவித்துவ சினிமா! -சாவித்திரி கண்ணன் & பீட்டர் துரைராஜ் ‘காதல் the core’ காதலின் உன்னதத்தை இப்படியும் சொல்லலாமோ..! ஒரு சண்டை சச்சரவு இல்லை! இருவரும் பரஸ்பர மரியாதையும், அன்பும் கொண்டுள்ளனர். எனில், இப்படிப்பட்ட தம்பதினர் ஏன் விவாகரத்து கோருகின்றனர்! பேசவியலாத விஷயத்தைக் கூட, சூட்சுமமாக காட்சி மொழியில் கடத்துவதே படத்தின் வெற்றி: இயக்குனர் ஜோ பேபி இயக்கியுள்ள இந்த மலையாளப் படம் பேசாப் பொருளை நுட்பமாகப் பேசுகிறது! இயக்குனரின் நயத்தக்க நாகரீக அணுகுமுறையாலும், மம்மூட்டி, ஜோதிகாவின் பண்பட்ட தேர்ந்த நடிப்பாலும், விவாதமாக வேண்டிய ஒரு கதையை அனைவரும் ஏற்கும்படி படைத்துள்ளனர். மாத்யூவும், ஓமனாவும் ஞாயிற்றுக் கிழமை கோவிலில் வேண்டிக் கொள்வதில் கதை தொடங்குகிறது. மாத்யூ, கிறிஸ்தவக் குடும்பத்தைச் சார்ந்தவன். வசதி உள்ளவன். அப்போது நடைபெற உள்ள வார்டுக்கான இடைத் தேர்தலில் அவனை நிற்க வைக்க விரும்புகிறது சிவப்புக்கட்சி. நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பேசுபவனை கட்சி பயன்படுத்திக் கொள்ள விரும்புவது இயல்புதானே ! சிவப்புக் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளராக மேத்யூ களம் இறங்குகிறான். கல்லூரியில் படிக்கும் பெண் வீட்டிற்கு வந்த அன்றே தந்தையிடம் சொல்லாமல் மீண்டும் விடுதிக்கு செல்கிறாள். மகளுக்கும் தாய்க்கும் நெருக்கமான பிணைப்பு ஏனோ இல்லை. அந்த ஊரில் வாடகை டாக்சி ஓட்டும் தங்கனை ஊர் மக்கள் கிண்டல் செய்கிறார்கள். இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பல சம்பவங்கள் முதல் பாதியில் வருகின்றன. வெகுநேரம் கடந்தும் கதை ஓட்டம் நமக்குப் புரிவதில்லை. கேரளாவின் இயற்கை எழில் சூழ்ந்த சிற்றூர் ஒன்றில் நடக்கும் கதையில் தென்படும் அத்தனை கதாபாத்திரங்களும் அவரவர்களின் இயல்பு மாறாமல் வாழ்ந்து செல்கின்றனர். மம்மூட்டி மாத்யூவாக நடிக்கிறார் என்றால், அவருக்கு சமதையாக ஓமனாவாக ஜோதிகா நடிக்கிறார். இருவருக்கும் திருமணமாகி இருபது ஆண்டுகள் முடிந்து விட்டன. ஓமனா எப்போதோ போட்ட விவாகரத்து வழக்கு இப்போது விசாரணைக்கு வருகிறது. தேர்தல் நேரத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதால் அவர்களின் அந்தரங்கம் பொது வெளிக்கு வருகிறது. இப்போது அதிகாரத்தில் இருக்கும் மூவர்ண கட்சி முதலில் வீடு வீடாகத் தனியாகவும், பிறகு பகிரங்கமாகவும் மாத்யூவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசுகிறது. அவன் சொந்த வாழ்க்கைப் பற்றி எங்களுக்கென்ன என்று எதிர்க் கேள்வி கேட்கிறார் ஒரு வாக்காளர். இப்படித் தான் அரசியல் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக இயக்குநர் இந்த காட்சியை வடிவமைத்து இருக்கலாம். விவகாரத்து வழக்கு தொடுத்த மனைவியே – பொதுவெளியில் கணவனின் கெளரவத்தை காப்பாற்ற – அவனுக்காக வீடுவீடாக பிரச்சாரம் செய்வது அந்தப் பெண் கதாபாத்திரத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. தேர்தல் நேரம் என்பதால் இப்போது வழக்கை திரும்பப் பெற்று விடு என்று நிர்பந்திக்கப்படுவதை ஓமனா ஏற்க மறுக்கிறாள். அவர்கள் ரோமன் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவர்கள். அதைச் சார்ந்த மதகுரு இருபது ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு இப்படி ஒரு விவாகரத்து வழக்கு தேவையா என ஆலோசனை கூறுகிறார். தன் மகளைப் போல நேசிக்கும் மருமகளை வழக்கை திரும்பப் பெறும்படி மாமனார் கூறுகிறார். அவளது மகளின் திருமணம் என்னவாகும் என்பதை யோசிக்கும்படி கூறும் அவளது சகோதரன் கூறுகிறான். சகோதரன், தந்தை, உறவினர், மதம், அரசியல் கட்சி போன்றவைகள் எடுக்கும் நிலைபாடுகள் திருமணம் என்கிற நிறுவனத்தை எப்படி பாதிக்கின்றன என்று நாம் பொருள் கொள்ளலாம். அவள்படும் துயரம் வெளியில் சொல்ல முடியாதது! தனிநபர்களுக்கு யார் பொறுப்பு ! அப்படியானால் அவர்கள் எவ்வளவு பொறுப்போடு கருத்து சொல்ல வேண்டும்; நடந்துகொள்ள வேண்டும். தன்பாலின ஈர்ப்பு குறித்த படத்தில் நடிக்க மம்மூட்டியைப் போன்ற ஒரு மூத்த நடிகர் ஒத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமானது. அதுவும் குற்றவுணர்வுடனே வாழுகின்ற ஒரு கேரக்டர்! இயல்பான நடிப்பால் மம்மூட்டி அசத்துகிறார். கண்ணியமும், கடமை உணர்வுமிக்க குடும்பத் தலைவியாக வரும் ஜோதிகா இறுதியில் மிகத் துணிச்சலாக முடிவெடுக்கும் அசாத்திய துணிச்சல் மிக்கவராக வெளிப்படுகிறார். மாத்யூ தேர்தலில் நிற்பதை, அதே வீட்டில் இருக்கும் தந்தைக்கு சொல்லவில்லை; மனைவி மூலமாக சொல்லச் சொல்கிறான். தந்தையும் மகனும் ஒரு வார்த்தைகூட நேரடியாக பேசிக் கொள்வதில்லை. ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கு இடையில் அப்படி என்ன மனஸ்தாபம் இருக்க முடியும் ..? என்றெல்லாம் நாம் குழம்பித் தவிக்கையில் அதற்கான விடையும் கடைசில் வருகிறது. “நான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாலும், ‘ஒரு கல்யாணம் நடந்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என என்னை திருமண பந்தத்தில் இணைத்தீர்களே..பார்த்தீர்களா..?” என மம்முட்டி ஒரு காட்சியில் கதறி அழும் போது, தந்தையும் சேர்ந்து அழுகிறார்! ஆக, மகனின் பலவீனத்தை மறைத்து தந்தை அவனுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார். இது தன் பாலினத்தவர்களால் இயல்பான திருமண வாழ்க்கைக்குள் ஒரு போதும் வாழ இயலாது என்ற யதார்த்தத்தை பொட்டில் அடித்தது போல உணர்த்தும் காட்சியாகும். தன் பாலினத்தவர்களின் பெற்றோர்கள் பெற வேண்டிய பாடமாகவும் இந்த படத்தை கருதலாம். அரசியல் கட்சிகளுக்கு உள்ள பொறுப்பையும் இயக்குநர் கேள்விக்கு உட்படுத்துகிறார். பொதுவாழ்வோடு தொடர்பற்ற, தனிப்பட்ட வாழ்வை தேர்தலில் கேள்விக்கு உள்ளாக்கலாமா? மூவர்ண கட்சி கேள்வி கேட்டு தவறு செய்கிறது? சிவப்புக் கட்சியோ அதிகாரப்பூர்வமாக ஆதரவளிக்காமல் தவறு செய்கிறது. இப்படி நுட்பமான பல செய்திகள் வருகின்றன. வழக்கு நடக்கும் நீதிமன்றத்திற்கு கணவன் மனைவி இருவரும் ஒரே காரில் பயணிக்கின்றனர். சாட்சி சொல்கையில் ஓமனாவின் கைப்பையை மாத்யூதான் வாங்கி வைத்துக்கொள்கிறான். விவாகரத்து என்பது ஏதோ பாவமானது என நாம் நினைக்க வேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் வெறுக்காமல் வாழ்வதற்காக கூட விவாகரத்து நடக்கலாம். அவர்களுக்கு இடையில் எத்தனை முறை உடலுறவு நடந்தது என யாருக்குத் தெரியும்? ஏன் தெரிய வேண்டும்.? நீதிபதி கேட்டதால் மட்டுமே அதையும் அவள் தன் வழக்கிற்காகக் கூறுகிறாள்! இதில் தான் அவள் தரப்பு நியாயம் துல்லியமாக வெளிப்படுகிறது. நேர்மையாக நடப்பதாக காட்டப்படும் மாத்யூ, தன் மனைவியிடம் நேர்மையாக இருக்கிறானா..? இப்படி இயக்குநர் பல அடுக்குகளில் கேள்வி எழுப்புகிறார். இவர்களுக்கு ஆதரவாக வாதிடும் இரண்டு பேரும் பெண்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆத்திரமூட்டாமல் வாதிடுகிறார்கள். ஒருவேளை இப்படித் தான் உண்மையை வெளிக் கொண்டு வர வழக்கறிஞர்கள் இணைந்து பேச வேண்டுமோ! இத்தகைய ஆரோக்கியமான காட்சிகள் வேறு படத்தில் வந்ததில்லை. கிறிஸ்தவத் திருமணம் என்பது சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் வருவது ! அதன்படி விவாகரத்து கிடைப்பது எளிதல்ல. கிறிஸ்தவ தம்பதியினரை தேர்ந்தெடுத்தற்கு ஏதும் சிறப்பான காரணம் இருக்குமோ ! பிரைம் தளத்தில் ஓடும் இந்த இரண்டு மணிநேர படம் ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற பழமொழிக்கு ஒப்ப சிக்கலான விவகாரத்தை மிக நேர்மையாக கையாள்கிறது. அதனால் மரணம் நிகழவில்லை. இருவரும் பிரிவதற்கு முன்பான அந்த கடைசி இரவில் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி அழுகிறார்களே..! இந்த ஒரு காட்சி போதாதா.. இருவரது காதலின் மேன்மையை விளக்க! பாலியல் காட்சிகள் ஏதுமின்றி, ஒரு ஆழமான கதையை சித்தரித்த இயக்குநரை பாராட்ட வேண்டும். குடும்ப பெண்ணின் வலியைக் கூறும் தி கிரேட் இந்தியன் கிச்சனை இயக்கிய ஜோ பேபிதான் பெண்ணுரிமையை உரக்க பேசும் இந்தப் படத்தையும் இயக்கி உள்ளார். ஆபாசமான வசனங்களும் இல்லை; காட்சிகளும் இல்லை. படத்தின் முடிவு அனைவருக்கும் ஏற்ற வகையில் இசைவாக இருப்பதற்காக யாரையாவது ஒருவரை மரணிக்கக் கூட வைத்திருப்பார்கள் சராசரி இயக்குனர்கள்! ஆனால், அதிர்ச்சி தரக்கூடிய முடிவென்றாலும், இப்படிப்பட்டவர்கள் இந்த முடிவைத் தான் எடுக்க முடியும் என்பதை ஏற்க வைக்கிறார் இயக்குனர். இப்படிப்பட் படைப்புகள், நாம் பார்க்க மறுக்கும் வாழ்வின் இருட்டான பக்கங்களை நமக்கு பார்க்கவும், உணரவும் கற்றுக் கொடுக்கிறது ஒரு கலைப் படைப்பின் மேன்மை என்பதே மனித மனதை இன்னும் பண்படுத்துவதில் தானே அடங்கியிருக்கிறது. திரை விமர்சனம்; சாவித்திரி கண்ணன் & பீட்டர் துரைராஜ் https://aramonline.in/16413/kadhal-the-core-review/
  18. தமிழரசுக்கட்சியின் தலைமைக்காக போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுக்கும் ஒரு திறந்த மடல் Vhg ஜனவரி 20, 2024 தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுக்கும் ஒரு திறந்த கடிதம் எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் ம.செல்வின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினைத் தெரிவு செய்யும் தேர்தல் நாளை ஞாயிற்றுக்கிழமை (21-01-2024) திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினைத் தெரிவு செய்யும் போட்டியில் குதித்துள்ள மதிப்பிற்கும் அன்புக்குமுரிய மூவருக்கும் அன்புடனும் நட்பார்ந்த உரிமையுடனும் நெருக்கடிமிகு தருணத்தில் தமிழர் தேசத்திற்கான கடமையாகவும் எண்ணி இந்த திறந்த கடிதத்தை வரைகின்றேன். இதனை ஒரு ஆலோசனையாகவும் வேண்டுகோளாகவும் தேசமக்கள் மனநிலையாகவும் நீங்கள் கொள்வீர்கள் என நானும் என்னையொத்த கருத்துடையவர்களும் முழுமையாக நம்புகின்றோம். ஈழத்தமிழரின் இறைமையுடன் கூடிய அரசியல் விடுதலைக்கான பயணத்தை கால்கோளிட்டு தொடங்கியது தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக்கட்சி என்ற இயக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. இலங்கையின் அரசியல் செயன்முறைக்குள் தன்னை முழுமையாகவும் சனநாயக வழியிலும் அர்ப்பணிப்பதற்காக இலங்கையின் தேர்தல் சட்டங்களுக்கமைய ஒரு தேர்தல் கட்சியாகவும் பதிந்துகொண்ட தமிழரசுக்கட்சி தனது தேர்தல் அபிலாசைகளுக்கும் அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் வேட்கைகளை வென்றெடுக்க பல்வேறு வழிமுறைகளையும் காலத்திற்கு காலம் முன்னெடுத்து அதனூடாக பல சாதகமான விளைவுகளை தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது. இங்கு நான் தமிழரசுக்கட்சியின் வரலாற்றினையோ ஈழத்தமிழ்மக்களின் போராட்டங்களை வீரியம் மிக்கதாக மாற்றிய பல்வேறு தேசிய விடுதலை அமைப்புக்களின் வரலாற்றையோ பேச முனையவில்லை. ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கு ஜனநாயக பண்புகளும் அறிவும் புலமையும் மக்கள் மீதான பற்றும் கொண்ட தலைமைத்துவங்களால் தமிழரசுக்கட்சி ஆற்றிய பங்கும் தொடர்ச்சியும் இருப்பும் என்றும் முதன்மையானதாக அமைகின்றது. இத்தகைய சூழ்நிலையில் மிக நீண்டகால தேக்கநிலைக்குப்பின் தமிழரசுக்கட்சி தனக்குரிய தலைமைத்துவத்தினை தேடுவதும் அதனை தொலைநோக்குடன் கையாளுவதும் மிகவும் முக்கியமாக உள்ளது. இதனை வெறுமனே ஒரு அரசியற் கட்சியின் உள்ளகப் பிரச்சனையாகவோ தாயகத்திலும் புலத்திலும் வாழும் சுமார் இருபத்தைந்து இலட்சம் மக்களில் வெறுமனே ஒரு நான்காயிரம் பேரினை அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சிறு அரசியல் குழுவினரின் தனியுரிமையான விடயமாகவோ கருதி ஈழத்தமிழ்ச்சமூகத்தின் அரசியல் விடுதலையிலும் பொருண்மிய மேம்பாட்டிலும் பண்பாட்டுச்செழுமையிலும் இச்சமூகத்தை பூகோளத்தின் முதன்மைச் சமூகங்களில் ஒன்றாக நிலைநிறுத்த பேரவாக்கொண்ட எவரும் ஒதுங்கி நின்றுவிடமுடியாது என்பது எனது உறுதியான கருத்து. எனினும் இந்த நெருக்கடியான நிலைமையில் யாரையும் விமர்சிப்பதற்குரிய தருணமாக இதனை மாற்றுவது மிகவும் அபத்தமானதாகவே இருக்கும். தற்போது உங்கள் மூவருக்கிடையில் உக்கிரமடைந்துள்ள போட்டியும் அதன்காரணங்களினால் முனைப்படைந்துள்ள பிரச்சார முயற்சிகளும் கருத்துப்பரவல்களும் மிகவும் ஆபத்தான கீழ்நிலை நோக்கி கட்சியினை இழுத்துச் செல்வதனை தெளிவாக என்னால் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இது உங்களுடைய தலைமைத்துவத்தை வேண்டிநிற்கும் ஆதரவுச்சிந்தனை கொண்ட கட்சியின் அங்கத்தவர்களிடையே நிரந்தரமான பிளவினையும் கூர்மையான முரண்பாடுகளையும் உருவாக்கி வருகின்றது என்பதனை நீங்களும் கூட முழுமையாக அறிவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சி அத்துடன் இத்தகைய நிலைமையில் கட்டற்ற சுதந்திரத்துடனும் பொறுப்புக்கூறல் கடப்பாடுகள் ஏதுமற்ற இலத்திரனியல் சமூக ஊடகங்களில் நிரம்பியுள்ள வக்கிரமான சிந்தனைகொண்டவர்களுக்கும் ஈழத்தமிழரின் அரசியல் வேட்கையினை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கும் உங்களுக்கிடையிலான போட்டியின் உக்கிரம் 'வெறும் வாய்க்கு அவலாக' மாறியுள்ளது. இவற்றினால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈழத்தமிழ் சமூகம் தனது சக்தியை பெருமளவில் விரயமாக்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் அகத்திலும் புலத்திலும் இந்த நெருக்கடியை மிகவும் சாதுரியமாக கடந்து செல்லவேண்டியுள்ளது. அதனை ஈழத்தமிழர்கள் எவ்வாறு கடந்து செல்லப் போகின்றார்கள் என்பதனை எம்மவர்கள் மட்டுமல்ல எம்மில் அக்கறை கொண்ட சர்வதேச சமூகமும் எம்மைப் பலவீனப்படுத்தி அழிக்கநினைக்கும் சக்திகளும் துல்லியமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலைமையில் தான் நான் ஒரு திறந்த கடிதம் ஒன்றை தங்களுக்கு வரைந்து பின்வரும் விடயங்களில் தங்களது ஆக்கபூர்வமான முயற்சியை கோருகின்றேன். நான் இக்கடிதத்தில் உங்கள் மூவரின் பெயரினை குறிப்பிடும்போது இருக்கக்கூடிய ஒழுங்கும் கூட சிலவேளையில் தவறான ஊகத்திற்கு வித்திடலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே போட்டியிடும் மூவர் என உங்களை விளித்துள்ளேன். 1. இந்த வருடத்திலும் (2024) அடுத்த வருடம் 2025 இலும் கூட சிறீலங்காவின் அரசியலில் தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு தீர்வுதரக்கூடிய எந்தவொரு அரசியல் முனைப்பும் உருவாகப்போவதில்லை என்பது கண்கூடு. 2. இத்தகைய தேக்கநிலை அடுத்த ஒரு தசாப்தத்திற்காவது நிச்சயமாக தொடரும் வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச அவதானிப்புகள் தொடர்ச்சியாக பதிவுசெய்து வருகின்றன. அவர்களது கவனம் முழுவதும் சிறீலங்காவினை பொருளாதர நெருக்கடிக்குள்ளிருந்து மீட்பது தொடர்டபாகவே அமைந்துள்ளது. 3. இந்தியாவும் கூட புதிதாக எழுந்துள்ள மாலைதீவு - சீன கூட்டுறவின் தாக்கமும் படிப்பினைகளினதும் காரணமாக சிறீலங்காவினையும் மிகவும் அவதானமாக கையாளும் மென்போக்கு இராசதந்திர முயற்சிகளில் தான் தன் கவனத்தை செலுத்தும். அத்துடன் இவ்வாண்டு (2024) இந்தியாவின் தேசிய அரசியக்கான தேர்தல் ஆண்டாகவும் உள்ளது. 4. இத்தகைய தேக்க நிலை சிறீலங்காவிலும் இந்தியாவிலும் சர்வதேசத்திலும் தொடர்நதாலும் தமிழின அழிப்புக்கான கட்டமைக்கப்பட்ட முயற்சிகள் எவ்வித தளர்வுமில்லாமல் மறைகரங்களாக ஒரு நூற்றாண்டிற்கு மேலாக இயங்கும் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனாவாதிகளினால் விரைவுபட்டதாக தொடர்ந்து கொண்டேயிருக்கும். 5. மேற்கூறிய நிலைமையில் 2024 - 2025 ஆண்டுகள் ஈழத்தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கியமானமாக இருக்கின்றது. அரசியல் வேட்கைகளை மாற்றங்களின் நியதிகளுக்கு இசைவாக மீளுருவாக்கத்திற்கு உட்படுத்தி தேசநிர்மாணத்தை முன்னெடுக்கக்குகூடிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக எம்மக்களை ஒன்றிணைக்கவேண்டியுள்ளது காலத்தின் தேவையாக உள்ளது. 6. இந்தச் சூழ்நிலையில் தமிழரின் விடுதலையின் வரலாற்றுத் தொடர்ச்சியை சனநாயக அரசியல் வழிமுறைகள் ஊடாக தொடரும் தமிழரசுக்கடசியினை சிதைக்கும் முயற்சிகளும் உள்ளக முரண்பாடுகளும் தொடர் தேக்கநிலையும் அனுமதிக்கப்படமுடியாதது. மலையக தலைவர்களை நேரில் சந்தித்து பேசிய இந்திய தூதுவர் திறந்த வேண்டுகோள் இக்காரணங்களால் தங்கள் மூவரிடமும் ஒரு திறந்த வேண்டுகோளினை சமர்ப்பிக்கின்றேன். அ) தற்போது தமிழரசுக்கட்சியும் தமிழ்மக்களும் அனுபவிக்கும் கட்சியின் தலைமைத்துவ தேக்கநிலை உடனடியாக உடைக்கப்படவேண்டும். அதனைத் தொடரவோ அல்லது அதன் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக செயற்படவோ அனுமதிக்ககூடாது. ஆ) தவிர்க்க முடியாமல் தமிழரசுக்கட்சியின் யாப்பின்படி புதிய தலைவர் தெரிவுக்கான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை இடைநிறுத்துவதோ அல்லது மீள்பரிசீலனைக்கு உட்படுத்துவது என்ற பெயரில் தற்போதைய தலைமை தொடர வாய்ப்பளிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இ) அதேவேளையில் தலைமைப்பதவிக்கான போட்டியில் வெல்வதற்காக கட்சியின் பெறுமதியான அங்கத்தவர்கள் தங்களுக்குள் சேறுவாருவதும் ஆதரவாளர்கள் குழுநிலையாக பிரிவதும் சகிக்கப்படமுடியாத விடயங்கள். ஈ) உங்கள் தேர்தல் போட்டியின் முடிவுகளின் பின் ஒருவரின் கையோக்குவதாகவோ மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவோ ஒதுக்கப்படுவதாகவோ நிலைமைகள் காணப்படாது என்று போட்டியாளர்களாகிய நீங்கள் வாக்குறுதியளித்தாலும் ஊமைக்காயங்கள் ஆழமானதாகவும் பின் விளைவுகள் கட்சியின் வாக்கு வங்கியிலும் தமிழரசுக்கட்சியின் எதிர்கால பங்களிப்பிலும் கடுமையான தாக்கத்தை செலுத்துவதுடன் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ இடைவெளி பாரியதாக மாற்றமடையும் என்பதனையும் நீங்கள் மறுக்கமாட்டீர்கள். இத்தகைய நிலைமையில் உங்களுக்குள்ள தெரிவுகளில் ஒன்று யாதெனில் நீங்கள் மூவரும் ஒரு கனவான் உடன்பாட்டிற்கு வருவதுதான் மிகப்பொருத்தமானது. அந்த உடன்பாட்டின்படி பின்வரும் விடயங்களை செய்யலாம். 1. தற்போதைய நிலையில் தமிழரசுக்கட்சியை மீள் கட்டமைப்புக்குள் கொண்டுவரவேண்டியுள்ளது. கடசியின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையினை திட்டமிட்டு அதிகரித்து பலம்பெறச் செய்யவும் கிளைகளைப் புனரமைத்ததில் கடந்த காலத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் அவசியமும் கால அவகாசமும் தேவையாக உள்ளது. தற்போதுள்ள தலைமைத்துவத்தின் கீழ் அது சாத்தியமில்லை என்பது வெளிப்படை. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (ஒரு வருடம்) தற்காலிக தலைவர் ஒருவரின் கீழ் கட்சியை முழுமையாக கட்டமைக்கவேண்டும். 2. தேர்தலில் கூர்மையடைந்துள்ள போட்டி இருமுனைப் போட்டியாக வெளிப்பட்டுள்ள நிலையில் நீங்கள் இருவரும் உங்கள் போட்டி நிலையிலிருந்து பின்னிறங்கி கிழக்கு மாகாண போட்டியாளரை தலைவராக வாக்களிக்கும்படி உங்கள் ஆதரவாளர்களை கோருவதன் ஊடாக தற்காலிக தலைவராக யோகேசுவரன் தெரிவுசெய்யப்படுவதனை உறுதிசெய்து கட்சியின் ஏனைய போறுப்பான பதவிகளான செயலாளர், சர்வதேச தொடர்பாளர் ஆகிய பொறுப்புக்களை நீங்கள் இருவரும் பொறுப்பேற்பதன் மூலம் கட்சியை இணைந்து பலப்படுத்தலாம். 3. நீங்கள் இருவரும் கூர்வாட்களாக தொடர்ந்து இருந்தால் கட்சி என்னும் ஒரு உறையுள் இரண்டு வாட்களையும் வைத்திருக்கமுடியாது. ஆனால் இரண்டு கம்பீரமான குதிரைகளாக நீங்கள் கட்சியையும் தமிழர்தேசத்தின் செல்நெறியையும் முன்நோக்கி விரைந்து இழுத்துச்செல்லலாம். 4. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 14வருடங்கள் கடந்த நிலையில் ஏற்பட்டுள்ள ஏமாற்றங்களும் தடுமாற்றங்களும் நிறைந்த இச் சூழ்நிலையில் உங்கள் இருவரினதும் ஆளுமையினையும் ஆற்றல்களையும் செயலாற்றல் திறன்களையும் குறைத்து மதிப்பிடுவதோ அல்லது தமிழினம் இழந்து போவதோ மிகவும் பாரதூரமானது. அவ் இடைவெளியை நிரப்புவதும் குறுங்காலத்தில் சாத்தியமற்றது. 5. குறித்த ஒரு வருடத்தினுள் தமிழரசுக்கட்சி தன்னை முழுமையாக சீரமைத்து வலுப்படுத்தியபின்பு உங்களுக்குரிய பொறுப்புக்களை பரஸ்பரம் தீர்மானித்து தலைமைத்துவத்தினை கூட்டுப்பொறுப்புக்களுடன் தொடரமுடியும். இந்த வேண்டுகோளும் ஆலோசனையும் காலத்தின் தேவை கருதியும் ஈழத்தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் கருதியும் தங்களிடம் முன்வைக்கப்படுகின்றது என்பதனை அன்புடனும் நட்புடனும் உரிமையுடனும் தெரிவித்துக்கொள்கின்றேன் ”என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.battinatham.com/2024/01/blog-post_388.html
  19. இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் அட்டகாசம்? adminJanuary 20, 2024 மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (19.01.24) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவவற்துறையினர் சம்பவ இடத்தில் மக்கள் மீது கடுமையாக தாக்கி விபத்தை ஏற்படுத்திய பேருந்தையும்,அதன் சாரதியையும் காப்பாற்றிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,பள்ளமடு வைத்தியசாலையில் இல் இருந்து சற்று தொலைவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,, -சிறிய ரக பேருந்து –மன்னார் யாழ் பிரதான வீதியூடாக பயணித்த போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது குறித்த பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. -இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து இடம்பெற்ற பகுதி அடம்பன் காவற்துறைப் பிரிவுக் குற்பட்டதாக காணப்பட்ட போதும், இலுப்பைக்கடவை காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உண்மை நிலையை அறிந்து கொள்ளாது உயிரிழந்த மற்றும்,படு காயமடைந்தவர்களின் உறவினர்கள் அவ்விடத்தில் கூடிய போது அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதோடு,விபத்தை ஏற்படுத்திய தனியார் போரூந்தையும்,அதன் சாரதியையும் மீட்டு இலுப்பைக்கடவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்தில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்ப இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். -இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அடம்பன் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இலுப்பைக்கடவை காவற்த்துறையினரின் நடவடிக்கை குறித்து விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட வில்லை எனவும்,இலுப்பைக்கடவை காவற்துறை பிரிவில் மணல் மண் கடத்தல் காரர்களிடம் பாரிய அளவில் லஞ்சம் பெற்று மணல் வியாபரத்திற்கு அனுமதியை இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க வழங்கி வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2024/199945/ @Cruso அவர்களே, இந்த அட்டகாசத்தை இல்லாமல் செய்ய ஏதாவது வழிவகைகள் உண்டா?
  20. நயினை அம்மனுக்கு தங்க குடம் adminJanuary 20, 2024 நயினாதீவு நாக பூசனிஅம்மன் திருக்குடமுழுக்கிற்காக தங்கத்திலான திருக்குடம் ஆலயத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த தங்க திருக்குட பவனி இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்று , திருக்குடமுழுக்கிற்காக கங்காதரணி தீர்த்தக் கேணியில் இருந்து தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. பிரதிஷ்டா கிரியைகள் கடந்த தினம் புதன்கிழமை ஆரம்பமாகி கிரியைகள் இடம்பெற்று வருகின்றன. நாளை மறுதினம் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07 மணி முதல் , மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 05 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும். அதனை தொடர்ந்து மறுநாள் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். https://globaltamilnews.net/2024/199954/
  21. ஒரே மூச்சில் படித்துவிட்டேன்! Page turner வகையான ஆர்வத்தத்தை தூண்டும் எழுத்து. ஜேர்மனியில் சித்திரவதை செய்துவிட்டு தப்பலாம் என்று முட்டாள்தனமாக முகம்மது நினைத்திருக்கின்றார்! உங்களின் படத்தை மூனா ஐயா வரைந்தால் மோனாலிஸா சிரிக்கிறீங்களா சிரிக்கவில்லையா என்று ஆராய்ச்சி செய்வதிலேயே எங்கள் வாழ்க்கை ஓடிவிடும்🤪
  22. அம்பிகா அக்கா தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இருக்கின்றாரா என்று தெரியவில்லை! அவர் மனிதாபிமானப் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபடுகின்றார். இப்போது சிறிலங்காவின் யுக்திய நடவடிக்கைக்கு எதிராக தினமும் X (ருவிற்றரில்) பொங்கிக்கொண்டு இருக்கின்றார்.! அம்பிகா அக்கா தமிழரசுக் கட்சியின் தலைவராக வரும்போது நானும் வேலையில் இருந்து நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு தமிழர் பகுதிகளில் போஸ்ரர் ஒட்டுகின்ற வேலையாவது செய்வேன்😃
  23. முடிவிலாத வெளியில் இரை தேடும் பறவைகள் January 18, 2024 — கருணாகரன் — புலம்பெயர்தோர் வாழ்வைக் குறித்த வேறுபாட்டதொரு புரிதல் மந்தாகினி குமரேஷின் ‘இரை தேடும் பறவைகள்’ கவிதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. புலம்பெயர்தலின் வலியையும் புதிய (பனித்) திணையில் (நிலத்தில்) ஒட்டிக் கொள்ள முடியாத அந்தரிப்பையும் இந்தத் தொகுதியிலுள்ள முதற் கவிதை தொடக்கம் பலவும் சொல்கின்றன. புலம்பெயர் தமிழ்ப்பரப்பின் பெரும்பாலான உணர்வலை இதுதான். கூடவே தாய்நிலம் மீதான நினைவுகளாகவும். ஆனாலது வெறுமனே நினைந்துருகுதல் என்றில்லாமல் விடுதலை வேட்கையாக. இவ்வாறான புலம்பெயர்தல் அல்லது புதிய திணையில் வாழ நேர்தல் இன்று உலகளாவிய ரீதியில் ஏற்படும் ஒன்று. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி, பலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், மியன்மார், ஆபிரிக்க நாட்டினர் என உலகத்தின் பல திசைகளிலிருந்தும் அகதிகளாகிப் பெயர்ந்து ஏதோவொரு நாட்டில் தஞ்சமடைந்து கொண்டிருக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டில் 117.2 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்து அல்லது நாடற்றவர்களாக உள்ளனர் என UNHCR இன் மதிப்பீட்டறிக்கை சொல்கிறது. இவர்களிற் சிலருக்கு திணைகள் அதிகம் பிரச்சினையாக இருப்பதில்லை. அவர்கள் பனியோடும் வெயிலோடும் கூடிய திணையைச் சேர்ந்தவர்கள் என்பதால். இலங்கை, பர்மா போன்ற நாடுகளைச் சேர்ந்தோருக்கு பனியும் குளிரும் கூட ஒரு தீராப் பிரச்சினை. மற்றும்படி மொழி, உணவு, தொழில், பழக்க வழக்கங்கள் எனப் பண்பாட்டுப் பிரச்சினைகள் புலம்பெயர்ந்த அனைவருக்கும் உண்டு. இதெல்லாம் புலம்பெயர்வுகளின் தொடர் பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள். இருந்த போதும் அவர்கள் இவற்றை எவ்வாறு நோக்குகிறார்கள்? தங்களுடைய இலக்கிய எழுத்துகளிலும் சினிமா, ஓவியம், நாடகம் போன்ற கலை வெளிப்பாடுகளிலும் இதை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அவ்வாறான எழுத்துகளும் கலை வெளிப்பாடுகளும் தமிழுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். குறைந்த பட்சம் அவைபற்றிய அறிமுகங்களையாவது செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நம்மைப் போன்ற சக புலம்பெயரிகளின் (அகதிகளின்) பிரச்சினை எப்படியாக உள்ளது? அவர்கள் அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களுடைய உணர்நிலைகள் எவ்வாறுள்ளன என்று தெரியும். 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு நாடுகாண் பயணங்களின் மூலமும் வெவ்வேறு காரணங்களுக்காகவும் புதிய நாடுகளுக்குச் சென்று குடியேறி வாழ நேர்ந்தவர்களின் பிரச்சினைகளும் அனுபவங்களும் எப்படியிருந்திருக்கும்? ஆக்கிரமிப்புக்காகச் சென்றோராகட்டும் வணிகம் மற்றும் தேசாந்தர நிலையில் யாத்திரீகமாகச் சென்றவர்களாகட்டும், அனைவரும் இதை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? அன்று இன்றுள்ள அளவுக்கு தொடர்பாடல் தொடக்கம் அனைத்து வசதிகளும் சீராக இருந்திருக்காது. இந்த நிலையில் புதிய திணையில் இணங்கிக் கொள்வதற்கு நிச்சயமாக அவர்களுடைய மனமும் உடலும் மிகச் சிரமப்பட்டிருக்கும். அதைப்பற்றிய விவரங்கள் சரியாகத் தெரியவில்லை. வரலாற்றில் எங்கும் அத்தகைய பதிவுகள் பெரிதாகக் காணப்படவில்லை. இப்படி இலங்கைக்கு வந்து சேர்ந்திருந்த Robert Nocks என்பவர் தான் இலங்கையில் இருந்த அனுபவங்களை (1659 -1680) An Historical Relation of the Island Ceylon என்ற நூலாக எழுதியுள்ளார். இது தமிழில் ‘இலங்கைத் தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு“ என்ற பெயரில் ஒரு நூலாக வெளிவந்துள்ளது. அதில் அவருடைய அனுபவங்கள் வேறாக இருந்தாலும் புதிய திணையில் எதிர்கொண்ட நெருக்கடிகள் ஓரளவுக்குப் பேசப்பட்டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் அவர்கள் எல்லாவற்றையும் கடந்து இணங்கியும் துணிச்சலாடு எதிர்கொண்டும் வாழ்ந்திருக்கின்றனர். அதற்கான மனத் தயாரிப்பு அவர்களிடம் இருந்துள்ளது. புலம்பெயர்ந்து இன்னொரு நிலத்துக்குச் சென்றால், அதனோடு இணங்கியே தீர வேண்டும். வேறு வழியில்லை. அதுவும் கதியற்றவர்களாகச் சென்று விட்டால், அனைத்து நிர்ப்பந்தங்களையும் ஏற்றுத்தானாக வேண்டும். ஏற்றே நிமிர வேண்டும். கல்லில் துளிர் விடும் விதையைப்போல. மந்தாகினி குமரேஷ், ஈழத்தமிழர் நிலைநின்று புலம்பெயர்வைப் பற்றி எழுதுகிறார். இன்னும் கூர்மையாகப் பார்த்தால், ஈழப்போராட்டப்பரப்பிலிருந்து புலம்பெயர நேர்ந்த நிலைமைகளைக் குறித்து எழுதுகிறார் எனலாம். அதனோடு இணைந்த கனவுகளையும் நினைவுகளையும் அவை உண்டாக்கும் உணர்வலைகளையும். உட்குமைவும் விடுதலை வேட்கையின் தவிப்பும் மிஞ்சித் துடிக்கும் கனவுகளும் மந்தாகினியின் கவிதைகளில் பொருண்மைப்பட்டிருக்கின்றன. ஈழப்போராட்டத்துடன் ஐக்கியப்பட்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் மந்தாகினி. ஈழப்போராட்டம் மிகுந்த சிக்கலையும் பேரவலப்பரப்பையும் கொண்டது. இந்தச் சிக்கல்களும் பேரவலமும் ஈழப்போராட்டத்துடன் இணைந்திருந்தவர்களையும் கடுமையாகப் பாதித்தது. மந்தாகினியின் குடும்பத்துக்கும் இது நேர்ந்தது. ஆனாலும் அவர்கள் அதைத் தாக்குப் பிடித்தே நின்றனர். ஈழப்போரின் முடிவு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நாட்டை விட்டு வெளியேறச் செய்து புலம்பெயர வைத்தது. களத்தில் அடிபட்டுச் சேதங்களோடும் வலிகளோடும் குடும்பத்தோடு புலம்பெயர்ந்தவர்களில் ஒருவராகினார் மந்தாகினி. இன்னொரு திணையில் – புதிய நிலைகொள்ளலில் – அவர்கள் இணங்கித் தீரவேண்டிய காலக்கட்டாயம். அந்த வாழ்க்கையே இந்தத் தொகுதியின் சாராம்சமாகும். “மழை நனைத்த சிறகுகள் போல் கனத்த மனதுகள் காலைக் கடிவாளமிட வலிந்து வைத்த காலடியின் வேதனைச் சுவட்டோடு சிலர் வந்தோம்…” (இரைதேடும் பறவைகள்) ஈழத்திலிருந்து கனடாவுக்குச் சென்ற நிலையை இந்தவரிகள் சொல்கின்றன. அதற்குப் பின்னர் அங்கே எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகளும் அவை உண்டாக்கிய உணர்வலைகளும் சில கவிதைகளில் பேசப்படுகின்றன. இன்னொரு தொகுதிக்கவிதைகள் இந்தப் புலப்பெயர்வுக்கு முன்னரான காலத்தையும் களத்தையும் கொண்டுள்ளன. “எங்கள் தெருக்கள் அப்போது குன்றும் குழியுமாய் மூடிக்கிடந்தன. நாங்கள் உறவுகளேதுமற்று தனித்திருந்தோம். இருபது நாள் வயதுடைய கடிதங்களே உறவுகளாய் கண்டபோதில் உவகை கொண்டும் நின்று கழிக்க நேரமின்றி உருண்டோடின காலங்கள்…” (உறவு) மந்தாகினி புலம்பெயர்ந்து புதிய திணையில் ஏதோ வகையில் வாழ்வைக் கட்டமைத்தாலும் அவருடைய மனம் அதிலிருந்து வெளியேறி தாய் நிலத்திலும் அதனுடைய கனவிலும் (அது தாயக விடுதலைக் கனவு) தத்தளிக்கிறது. அப்படித் தத்தளிக்க வைக்கும் வகையிலேயே நிகழ்ச்சிகளும் அமைந்து விடுகின்றன. ‘மனிதம் காத்திருந்தது’ என்ற கவிதை இதற்குச் சான்று. ஈழப்போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட போராளிகளின் ஒளிப்படங்கள் இணைய வெளியில் வெளிவந்து ஈழத்தமிழர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமுள்ள நீதியைக் குறித்துச் சிந்திப்போர் அனைவரையும் கலங்கடித்தது. அது மந்தாகினியையும் தத்தளிப்புக்குள்ளாக்குகிறது. “வலைத்தளங்களில் உலாவிய அப்படங்கள் உண்மையா? கருகிஇ உறுப்பிழந்து உயிரிழந்து உடலும் இழந்து சிதறி.. வேறுபாடற்று.. குழந்தைகள், பெண்கள்,ஆண்கள் வயோதிபர் என வேறுபாடற்று.. விறகடுக்கினால் போல் அடுக்கிடந்த அவர்கள் பற்றிய படங்கள் உண்மையா? நாணம் மறைத்த ஆடையிழந்து பேய்க் கூட்டம் வன்புணர்ந்த இன்னிசைகளின் தோற்றஉரு உண்மையா? மாயமா?….” தேச விடுதலை என்பது இவ்வாறான அவலப்பரப்பில் சென்று முடிந்த யதார்த்தத்தை, கொடுமையை, உலகத்தின் கையறு நிலை அல்லது அதனுடைய தந்திரத்தைக் குறித்த விமர்சனத்தை இந்தத் தத்தளிப்பின் வரிகள் சொல்கின்றன. தாய் நிலம் மீதான கனவுக்கு ‘காத்திருப்பு’ என்ற கவிதை இன்னொரு சான்று. இது ஒரு குறியீடாக, மண்ணுக்குள் புதையுண்டு போன வீரர்களின் நினைவைப் பேசுவனூடாக உணர்த்தப்படுகிறது. “காட்டோர இல்லங்களில் துயிலும் நீங்கள் விதையாய் மண்ணில் உறைந்து விழுதாய் வருவீர் எழுந்து கார்த்திகை மலரும் காந்தள் போலென்று இன்றும் நம்புகிறோம்…” போராட்டம் போராகி, அதுவும் தோற்கடிக்கப்பட்ட நிலையில் முடிவுற்றாலும் மனம் அடங்கவில்லை. அது மேலும் நம்பிக்கையோடு காத்திருக்கிறது. இந்த மாதிரியான உணர்வலையுடன், நம்பிக்கையுடன் எழுதப்படும் ஈழக்கவிதைகளும் கதைகளும் அபுனைவுகளும் அதிகம். அதற்குக் காரணம், ஈழ விடுதலை என்பது அந்தளவுக்கு ஆழ்விருப்புக்கொண்டது. லேசில் கலைந்து கரைந்து விடாத மாபெரும் கனவு. என்பதால்தான் உலகம் முழுவதிலுமுள்ள ஈழத்தமிழர்கள் இன்னும் விடுதலை வேட்கையைக் குறித்துப் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டுமுள்ளனர். மந்தாகினியும் தன்னுடைய பாத்திரத்தை ஏற்கிறார். இப்படிப் பலரும் தமது பாத்திரத்தை ஏற்றுச் செயற்படும்போது அதிலிருந்து எப்படித் தன்னுடைய குரலால் – கவிதைகளினால் – வேறுபட்டுத் தெரிகிறார்? என்று நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு கவிதைக்குரல் தனித்துவமாக ஒலிப்பதைக் கொண்டே அதனுடைய கவனமும் தாக்கமும் வரலாற்றில் இருக்கும். இலக்கியத்தின், கலையின் அடிப்படைக் கூறுகளில் இது முக்கியமானது. மந்தாகினியின் தனித்துவம் அல்லது வேறுபாடு என்பது, ‘நான் யார்?’ என்ற கவிதையில் ஓரளவுக்குத் தெரிகிறது. அவர் பெரும்பாலான பெண் கவிஞர்களைப்போல பெண்ணியத்தை உரத்த தொனியில் பேசும் கவிஞரல்ல. அதேவேளை தன்னடையாளத்தைக் குறித்துச் சிந்திக்காமல் விடவுமில்லை. “என் வண்ணமென்ன?” என்ற கேள்வியே அதுதான். “அலைமோதும் வண்ணக் கலவை கொண்டேன் ஆத்திரம் கொண்டு சிவப்பானேன் துயர் தந்த போர்வையினுள் முடங்கும்போது கறுப்பானேன் துரோகங்கள் என்னைப் பழுப்பாக்கின அன்பும் காதலும் என்வாழ்வை அரவணைக்கும் வேளை பச்சைப் புல்வெளியாய் பசுமை கொண்டேன் நல்லது நடக்க நீலம் என் மண்ணிறத்து மேனியில் ஊதா ஊர்வலம் போனது… இப்படி விரிந்து கொண்டே செல்லும் கவிதை, “கணனியெழுத்துகள் நீ பிரித்தானிய அடியென்றது கடவுச்சீட்டு கனடியன் என்றது! அலமலந்து போனேன். நான் யார்? என் வண்ணமென்ன? ஆகாச வெளியில் அசைந்தாடும் வெற்றிடம் நான்” எனக் கவிதை முடியும்போது ஒரு கணம் அதிர்ச்சியாக வெறுமை ஏற்படுகிறது. மறுகணம் பெருந்துயர் கவிகிறது. அகதி நிலை என்பது மற்ற எல்லா அடையாளங்களைக் குறித்துச் சிந்திப்பதையும் விட மேவி, தான் யார் எனத் தேடுகிறது. மந்தாகினியின் கவிதைகளில் இந்த அகதிக்குரலே தொடர்ந்தும் ஒலிக்கிறது. தன்னுடைய இளமைக்காலத்தை நினைவில் மீட்டும்போதும் அகதி நிலை மறைதொனியில் ஒலிக்கிறது. ஆகத் தன்னைத் தக்க வைப்பதற்கான எத்தனமே மந்தாகினியின் கவிதைகள். அது அவர் தன்னை மட்டும் தக்க வைப்பதற்கான குரல் அல்ல. தன்னை என்பதன் மூலமாக தான் சார்ந்தோரை, தன்னினத்தோரை என விரிந்து அமைகிறது. பெயர்தலும் அகதியாதலும் என்பது தனியே ஒருவருக்கு நேரும் நிலைமை அல்ல. அது பலருக்குமானது. குறிப்பாக தமக்கான வாழும் உரிமைகளைப் பற்றிப் பேசுவோருக்கு நிகழ்வது. அதையே மந்தாகினி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். யாருடனும் உரையாடலைத் தொடங்கக் கூடிய எளிய கவிதைகளே மந்தாகினியினுடையவை. பயண வழியில் சந்திக்கின்ற மனிதர்களோடு பேசுவதைப் போல, பகிர்வதைப்போல எளிமையானவை. ஆனாலும் அதற்குள்ளும் தகிக்கும் வெம்மையை உணரலாம். “வலுவான தக்கைகொண்டு அடைக்கப்பட்ட வளிக்குமிழ்களாய் உணர்வுகள்.. மறுக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் முளையாகக் கிள்ளப்பட்ட ஆசைகள் முட்டி மோதின உள்ளே. அமுக்கம் தவிர்க்க வெடிக்க நினைக்கும் கண்ணாடிக் குடுவையாய் மனம்…” (எல்லைகள்) இந்தக் குமுறல் சாதாரணமானதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் பெண்ணின் ஆழ்மனத் தவிப்பும் வெடிப்புமாகும். ‘சொல்லாத சேதிகளில்’ தொடங்கிய இந்த வெடிப்பு தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. மந்தாகினியைக் கடந்தும் எத்தனை தலைமுறைகளுக்கு இது நீளும் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு நம் தமிழ்ச்சமூகத்தின் அசைவு – முன்னேற்றம் அல்லது மாறுதல் மிக மெதுவாக நத்தைப்பயணமாகவே நிகழ்கிறது. இது எதிர்பார்ப்புக்கு எதிரானது. அது உண்டாக்கும் சலிப்பும் கோபமும் சாதாரணமானதல்ல. இப்படிப் பன்முகமாக வெளிப்பாடடையும் மந்தாகினியின் கவிதைகள், தன் காலத்தின், தன் வாழ்களத்தின் பிரதிபலிப்பாகவே உள்ளன. அனுபவத்துக்கும் அறிதலுக்கும் முதன்மை அளிக்கும் எழுத்துச் செயற்பாட்டில் அல்லது அவ்வாறான எழுத்து முறையில் இது நிகழ்வதுண்டு. அப்படியென்றால் இவை வெறுமனே காலப்பதிவுகள் அல்லது கால வெளிப்பாடுகள்தானா? என்று யாரும் கேட்கக் கூடும். காலத்தையும் களத்தையும் உதறி விட்டு அல்லது அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என புனைவொன்றில் இயங்கக் கூடிய மனது வாய்த்தவர்கள் வேறு புனைவுகளை உருவாக்கக் கூடும். அவர்களுக்குப் புனைவென்பது மகிழ்ச்சிக்கான ஒரு கலை வெளியாக இருக்கும். அல்லது புனைவின் பரிமாணங்களை வெவ்வேறு விதமாக நிகழ்த்திப் பார்க்கும் விருப்புடையோராக இருக்கும். கலையிலும் இலக்கியத்திலும் எதற்கும் சாத்தியங்கள் உண்டு. அவற்றிற்கு எல்லைகளே இல்லை. எனவே அதை ஏனையவர்கள் செய்யலாம். மந்தாகினி தன்னனுபவங்களையும் தான் அறிந்தவைகளையும் எழுத்தில் முன்வைக்க விரும்புகிறார். அது தன்னுடைய கடமைப்பாடு என்பது அவருடைய எண்ணம். நம்பிக்கை. அத்தகைய படைப்புச் செயல்வழியே அவருடையது. நாளை இதிலிருந்து அவர் மீறியோ மாறியோ செல்லலாம். புதிய யோசனைகள் வரலாம். வரலாற்றில் அப்படியான மாற்றங்களும் மீறல்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், இப்பொழுது ஈழப்படைப்பாளிகள் பலரையும்போல மந்தாகினியின் கால்களும் மனமும் மண்ணில் வேர் கொண்டவையாகவே உள்ளன. கால்களும் மனமும் என்பது புறமும் அகமும் என இங்கே அர்த்தப்படுத்தப்படுகிறது. மந்தாகினி ஈழப்போராட்டப்பரப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய புறமும் அகமும் அரசியல் மயப்பட்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மந்தாகினியை 1990 இன் இறுதிப்பகுதியிலிருந்து அறிவேன். ஈழப்போர்ச் சூழலில் சமூகச் செயற்பாட்டியக்கத்தில் மக்களுக்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தார். இடையிடையே கவிதைகளையும் கதைகளையும் எழுதிக் கொண்டிருந்தார். “தொடர்ந்து எழுதுங்கள்” என்று ஊக்கப்படுத்தினேன். ஆனால், அவருடைய பணிகளும் வாழ்க்கைச் சூழலும் அவற்றில் தீவிரமாக இயங்க இடமளிக்கவில்லைப் போலும். பிறகு போர். அது அவரையும் நெருக்கடிக்குள்ளாக்கியது. இறுதியில் புலம்பெயர்ந்து கனடாவுக்குச் சென்றார். ஆனாலும் அவருக்குள்ளிருக்கும் படைப்பு மனம் ஓயாமல், அலையடித்துக் கொண்டேயிருக்கிறது. அதன் விளைவானவையே இந்தக் கவிதைகள். இவை தணிய மறுக்கும் அனற் காற்று. வற்ற மறுக்கும் துயர ஊற்று. உலக மனச்சாட்சியைத் தட்டியெழுப்ப முனையும் நியாயக் குரல். கால சாட்சியம். வரலாற்றின் முகத்தில் எழுதப்படும் கண்டன வார்த்தைகள். துயர்ப்பதிவு. உலகத்தை கோமாளியாக்கி வேடிக்கை பார்க்கும் துயரம் தின்னியின் சத்திய வார்த்தைகள். மந்தாகினி இன்னொரு காலடியோடு மேலும் புதிய பயணங்களை நிகழ்த்தட்டும். https://arangamnews.com/?p=10377 யாழ் களத்திலும் இருந்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன் https://yarl.com/forum3/profile/10632-manthahini/content/?type=forums_topic&change_section=1
  24. சுவாரஸ்யமடையும் தேர்தல் களம்! சுமந்திரன் ஆதரவாளர்களின் முடிவில் திடீர் மாற்றம் தமிழ்த்தேசியத்தில் உறுதிக்கொண்ட தலைவர் ஒருவரை நியமிப்பதில் சுமந்திரன் ஆதரவாளர்களின் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பிரதேசத்தில் இருக்கக்கூடிய இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை தலைவர் தவராசா சர்ஜீன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்தேசியத்தின் பால் உள்ள பற்றுறுதியை கொண்டு செயற்படும் ஒருவரை நியமிப்பதில் உறுப்பினர்கள் தீவிரமாக உள்ளனர். தமிழ் தேசிய பற்றுள்ள தலைவர் அந்த வகையில், வாக்கெடுப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை பொறுத்தமட்டில் தமிழ்தேசியத்தின் பால் உள்ள பற்றுறுதியை கொண்டு செயற்படும் சிறீதரன் அவர்களையே தெரிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். கட்சி மீதான பல திட்டங்களை மையப்படுத்தியே தற்போது வாக்குகளை வழங்க தீர்மானித்துள்ளதுடன், சிறீதரன் அவர்களே சிறந்தவர் எனவும் உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிபர் சட்டத்தரணியாக சட்டத்துறையில் சிறந்து விளங்குபவர் சுமந்திரன். ஆனால் தற்போது அவர் தலைமை பதவிக்கு வருகின்றார் என்ற போது பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச சார்ந்த விடயங்களில் சுமந்திரன் அவர்கள் பல விடயங்களை கையாண்டு வந்துள்ளதுடன், அவருக்கு கட்சியில் உள்ள முக்கிய பதவிகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=266078
  25. மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான் Vhg ஜனவரி 18, 2024 மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அநாகரிமாக நடந்துகொள்வதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் அணிதிரள்வதன் மூலமே எமது பலத்தினை வெளிப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயம் இன்று(18-01-2024) மட்டக்களப்பு கல்லடியில் திறந்துவைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், கட்சியின் உபதலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான ஜெய சரவணா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு கட்சி தலைமையகம் திறக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கட்சி முக்கியஸ்தர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர், எங்களுடைய கட்சி இன்று ஆரம்பித்து ஏழு வருடங்கள் முடிவடைந்து இருக்கின்றது 2017 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 11-ம் தேதி எங்களுடைய கட்சியை நாங்கள் ஆரம்பித்தோம் அன்று அதற்கு பெரிய வரவேற்பை பெற்றிருந்தோம் முதல் முதலாக சுயேட்சையாக போட்டியிட்டு பிரதேச சபை தேர்தலில் 7 வட்டாரங்களை எமது கட்சி கைப்பற்றி இருந்தது அதனை நாங்கள் பாடிய வெற்றியாக பார்க்கின்றோம். இரண்டாவதாக வந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு இன்று 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை இந்த மக்கள் நமக்கு அள்ளி வழங்கியிருந்தார்கள் உண்மையிலேயே அவர்களின் நன்றியை ஒருபோதுமே மறக்கப் போவதில்லை இருப்பினும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் என்னால் அன்று பாராளுமன்றம் செல்ல முடியாமல் போய்விட்டது அன்று இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் பாரிய மாற்றங்களை செய்து இருக்கலாம் அதனை அந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அம்பாறை மாவட்ட மக்கள் எமது கட்சிக்கு பாரிய அத்திவாரம் இட்ட மக்கள் என்பதனை நாங்கள் மறந்து விடக்கூடாது இன்று 72 வருட வரலாற்றிலே முதன் முதலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்தவன் என்று பெருமையை நாங்கள் அம்பாறை மாவட்டத்திலேயே நிருபித்து காட்டினோம் அந்த அளவிற்கு அந்த மக்கள் நமக்கு ஒத்துழைத்தார்கள். பொதுவாக உங்களுக்கு தெரியும் பழமொழி ஒன்று இருக்கின்றது நிறைவாகும் வரை மறைவாக இரு என்று நாங்கள் கடந்த காலங்களில் எம்மை தயார் படுத்துவதற்காக உண்மையிலே மறைவாக இருந்தது உண்மையான விடயம் தற்போது எங்களின் தேவையை மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் அது உங்களுக்கு தெரிந்த விடயம் இன்று அந்த வகையில் மீண்டும் நமது தலைமைச் செயலகத்தை ஆரம்பித்திருக்கின்றோம் இதில் அரசியல் பணிகளை தீவிரமாக விஸ்தரிப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம். கடந்த வரலாற்றிலே எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள் அவர்களுடைய செயற்பாடுகள் உங்களுக்கு நன்றாக தெரியும் அனைவரையும் குறிப்பிடவில்லை பாராளுமன்றம் என்பது தனிப்பட்ட குரோதங்களை விவாதிப்பதற்கான களமாக தான் அவர்கள் பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார்களே தவிர பாராளுமன்றத்தின் வளங்களை கொண்டு வருவதற்காக அல்லது அங்குள்ள எம்முடைய மக்களின் தேவைகளை பூர்த்தியாவதற்குரிய செயல்பாடுகளை பாராளுமன்றத்தில் ஏற்படுத்தி அந்த வளங்களை கொண்டு வருவதற்காக அவர்கள் முயற்சிப்பதாக இல்லை. மாறாக பார்க்க போனால் எல்லா மாவட்டங்களையும் விட எங்களுடைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் அநாகரிமான முறையில் பாராளுமன்றத்தில் சண்டையிடுவதும் கூச்சிடுவதும் தனிப்பட்ட விரோதங்களை பாராளுமன்றத்தில் பகிர்ந்து கொள்வது மாத்திரமே இவர்களது வேலையாக இருக்கின்றது இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள். ஆகவே எதிர்காலத்தில் சிறந்த தகுதியான பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் பாராளுமன்றம் என்பது உங்களுக்கு தெரியும் மிக உயர்ந்த சபை ஒரு நாட்டிலே அந்த சபையின் ஊடாக மாறிய வேலை திட்டங்களை நாங்கள் முன் எடுக்க வேண்டும் அதனை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கின்றோம் கடந்த காலங்களில். அவ்வாறான ஒரு நிலையை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம் அதற்காக நாங்கள் பறந்து பட்ட அடிப்படையிலே வடக்கு கிழக்கு பிரதேசம் மாத்திரம் அல்ல இலங்கையில் இருக்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்குமான எங்களுடைய குரல் ஒலிக்கும் அதில் முக்கியமான ஒரு விடயத்தை இன்று உண்மையிலேயே எங்களுடைய துரதிஷ்டம் என்னவென்றால் கட்சிகள் அனைத்தும் பிரிந்து இருப்பதே உண்மையிலே ஒரு குடையின் கீழ் தமிழ் கட்சிகள் அனைத்தும் அனைத்து இரண்டு வருமாக இருந்தால் ஒரு பெரிய பலத்தை நாங்கள் ஏற்படுத்திக் காட்ட முடியும். ஆகவே எங்களுடைய பலவீனங்களை தான் எதிரிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் இன்னும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு தான் இவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் ஆகவே தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய காலம் இது பதவி பட்டங்களை தூக்கி எறிந்து விட்டு அனைத்து மக்களும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எங்களுடைய தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் தமிழ் மக்களின் இருப்பை தக்க வைக்க முன் வர வேண்டும் என்பதனை இவ்விடத்தில் நான் அன்பாக வேண்டிக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களின் ஒத்துழைப்புக்கள் தேவை பலர் எங்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் ஆகவே வருகின்ற காலங்களில் எங்களுடைய மாவட்ட அமைப்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்களின் ஊடாக பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம். https://www.battinatham.com/2024/01/blog-post_767.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.