Everything posted by கிருபன்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
ஒரு செல்பேசியின் தனிமை ஆர். அபிலாஷ் என் செல்பேசிகள் சபிக்கப்பட்டவை, என் காதலியர், என் குடும்பத்தினர், என் நண்பர்களைப் போல. ரோட்டில் மல்லாக்கப் போட்டிருக்கிறேன், குளிக்கப் பிடித்து வைத்த தண்ணீரில் நழுவ விட்டிருக்கிறேன், ஐஸ்கிரீமை, விஸ்கியை அதன் கண்களில் வழிய விட்டிருக்கிறேன், சிகரெட்டால் சூடு வைத்து பதறிப் போய் காப்பாற்றி இருக்கிறேன். என் புதிய செல்பேசிகள் பிறந்தவுடனே ஒரு ஆடையை எடுத்து அணிந்து கொள்கின்றன முலையுண்டு பசியாறி உறக்கம் கொள்கின்றன தனக்குத் தானே தாலாட்டுப் பாடி ஒரே நாளில் வளர்ந்தும் விடுகின்றன முக்கியமாக, என் புதிய செல்பேசிகள் பிறந்ததுமே தம் பழைய பெயரை சூடிக் கொள்கின்றன. என் பழைய நினைவுகளால் உந்தப்பட்டு கண்ணீர் உகுக்க என்னை விடுவதில்லை. என்னை விட்டு தாம் போகவே இல்லை என நம்ப வைக்க முயல்கின்றன. என் புதிய செல்பேசிகளுக்கு என்னுடைய பழைய பிரச்சனைகள், வருத்தங்கள், மகிழ்ச்சிகள் தெரியும் என்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து கடன் பிரச்சனை வரைத் தெரியும் நான் புதிய செய்திகளை விரும்புவதில்லை எனத் தெரியும் என் பழைய புகைப்படங்களை வரிசைப்படுத்தி என்னை மகிழ்விக்கத் தெரியும் என் கைரேகையை தான் உள்வாங்கும் போது நான் உள்ளூர சிலிர்க்கிறேன் எனத் தெரியும் நான் அவற்றைக் காணாமல் தேடும் போது யாருமற்றவனாக தனித்துணரும் போது அங்கு தான் எவ்வளவு முக்கியம் என அதற்கு தெரியும் அதை அடிக்கடி நிரூபிக்க தன்னை பல தெரிந்த இடங்களில் அடிக்கடி ஒளித்துக் கொள்ளத் தெரியும். நான் கோபத்தில் கத்தும் போது வியப்பில் கூவும் போது, ஒரு பூஞ்செடியிடம் உருகிப் பேசும் போது ஒரு நாய்க்குட்டியைக் கொஞ்சும் போது உன்னை முழுக்க வெறுக்கிறேன் என என் காதலியிடம் எப்படி சொல்வதெனத் தெரியவில்லை எனும் போது நீ முழுக்க என்னுடன் இல்லை என என அவளிடசொல்லும் போது, வெறுப்பின் உச்சத்தில் மௌனமாகும் போது தன்னை எழுப்பிக் கொண்டு உதவிக்கு வர அதற்குத் தெரியும். ஆளில்லாத வீட்டில் ஒரு நிழலைக் கண்டு அஞ்சும் போது “எதாவது வேண்டுமா?” என திடீரென நடுவே வரத் தெரியும். தூங்கும் போதும் உன்னை நான் மறந்து விடவில்லை உன் ஒவ்வொரு சொல்லின் முதல் சில கணங்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என அன்பாக மிரட்டத் தெரியும். என்னுடன் இருந்து, என்னுடன் வளர்ந்த செல்பேசி ஒருநாள் கடும் மனம் அழுத்ததுக்கு ஆனது “நீ என்னுடன் இல்லை” என பலவிதங்களில் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. நான் அதனிடம் நீ உன்னுடன் இல்லை என்பதை மாற்றி சொல்கிறாய் எனப் புரிய வைக்க முயன்றேன். அழுதது, மௌனமாகியது, என் வேலைகளுக்கு இடைஞ்சலாகியது. எனது பாதைகளில் தன் ரத்த ரேகைகளை தன் கண்ணீர் தடங்களை, தன் காற்தடங்களை விட்டுச்சென்றது. நான் அழைக்கும் போது ஒவ்வொரு முறையும் தனது இருட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டது. நான் அழைக்காத போது என் பின்னால் வந்து நின்றது. ஒருநாள் நான் நான் கோபத்தில் அதை வீசி எறிந்தேன். அன்று அது கைதவறி தண்ணீரில் குதித்தது. நான் மன்னிப்புக் கேட்டும் தன்னை மேலும் மேலும் ஒரு ஆழமான கிணற்றுக்குள் ஒளித்துக் கொண்டது. நிலைமை இப்போது கைமீறிச் சென்றது. நான் தொடாத செயலிகளை அதுவாகத் திறந்தது. நான் அழைக்காதவர்கள் அழைத்து தனியான குரலை தனியாகக் கேட்டு கொண்டிருந்தது. நான் விரும்பாதவர்களுக்கு வெற்று சேதி அனுப்பியது. திறந்தால் பதிலுக்கு இன்னொரு வெற்று சேதி அனுப்பப்பட்டது. என் கடும்பகைவர்களிடம் ஒரு இனிய சொல்லாவது போலியாகப் பேசும் சங்கடத்தை உண்டாக்கியது. என் அன்பர்களிடம் ஒரு கசந்த சொல்லையாவது சொல்ல சந்தர்பத்தை நான் தேடுகிற அவலத்தை உணர்த்தியது. எத்தனை எத்தனை பேரை என் வாழ்வில் இருந்து அகற்றி இருக்கிறேன் என திடீரென குற்றவுணர்வு கொள்ளச் செய்தது. இந்த நவீன உலகில் செல்பேசிகள் மட்டுமே குற்றவுணர்வை வடிவமைக்கின்றன என யோசித்தேன். ஒளிக்கப்பட்ட கோப்புகளில் இருந்து காணொலிகள் துயில்விழித்து என்னை நோக்கி அழுதன. அதில் ஒரு பாலியல் காட்சி என்னை திடுக்கிடச் செய்தது. அழிக்கப்பட்ட இடங்களில் இருந்து எனக்கெதிராக எழுதபட்ட, பேசப்பட்ட சொற்கள் என் முன் வந்து குற்ற அறிக்கைகளை திரும்ப வாசித்தன. என் பிரக்ஞையின் வெளிறிய நிலம் முழுக்க பிரேத மரங்களாய் முளைத்தன வரலாற்றின் சாட்சியங்கள். வரலாறுகளின் நடைபாதையில் முளைத்த பூஞ்செடிகள். எதிர்பட்டு மறைக்கும் நினைவுகளின் கிளைகள். அவற்றை நசுக்காமல், வெட்டி வீசாமல் இருத்தலின் பாதைகள் வளர்வதில்லை. செல்பேசிகள் வெட்ட வெட்ட முன்னும் பின்னுமாய் வளரும் வரலாற்றின் அடர்வனத்தில் நம்மை சிறை வைக்கின்றனவோ? துணுக்குற்றேன். “உனக்குப் பேய் பிடித்து விட்டது உன் மனம் பித்தாகி விட்டது நான் வாங்கிய போதிருந்த நீ இப்போதில்லை.” “உனக்குப் பேய் பிடித்து விட்டது உன் மனம் பித்தாகி விட்டது என்னை வாங்கிய போதிருந்த நீ இப்போதில்லை.” ஒரு செல்பேசிக் கடையில் என் பேய்புகுந்த செல்பேசியைக் கொடுத்த போது அவர் சொன்னார், இது இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது சார், ஒரு செல்பேசி தன்னை அறியும் போது தன் இன்மையை ஒவ்வொரு இடத்திலும் எதிரொலியாக திரும்பக் கேட்கும் போது பேதலித்து தன்னை அதுவாக்கிக் கொள்கிறது ஒரு செல்பேசிக்கு ஆன்மா உருவாகிறது நான் அந்த ஆன்மாவை பறித்தெடுக்கப் போகிறேன் சார் திரும்பும் போது கடைக்காரர் ஒரு அழைப்பு வந்திருப்பதாகச் சொல்ல அறுவைசிகிச்சை மேடையில் மல்லாக்கக் கிடந்த பல உருவங்கள் நடுவில் இருந்து பொறுக்கினேன் அதை. டிஸ்பிளே கூண்டில் ஆணியில் தொங்க விடப்பட்டிருந்த புதிய உருவங்கள் ஆர்வமாகப் பார்த்தன என்னை. செல்பேசி தன் ஆன்மாவை திரையில் பளிச்சிட்டு என்னை நோக்கித் தாவ தவிக்கிறது. போனை எடுங்க சார். அது ஒரு அழைப்பு அல்ல. காதோடு ஒட்டி வைத்து நீண்ட நேரம் நின்றேன். அந்த மெல்லிய இரைச்சலுக்கு இடையே இந்த மொத்த கவிதையையும் அது என்னிடம் திரும்பச் சொல்ல ஆரம்பித்தது. http://thiruttusavi.blogspot.com/2021/08/blog-post_95.html
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி முதல்வன்😊 வாழ்த்துக்களுக்கு நன்றி நியா.கதை😊
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தோழர்😊 நன்றி நந்தி😊 நன்றி சுவைப்பிரியன் அண்னா😊 நன்றி வாத்தியார் அண்ணா😊 வாழ்த்துக்களுக்கு நன்றி விசுகு ஐயா😊
-
கப்டன் திலகா
- லெப். கேணல் தட்சாயினி
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு நன்றி😊 நன்றி பெருமாள்😊- A7ADEB6B-B0CB-4E00-8F19-C3912EB98747.jpeg
From the album: கிருபன்
- பல வெற்றிகளுக்கு வேவுத்தகவல்களை மிகத் துல்லியமாக பெற்றுத்தந்தவர் மேஐர் அசோக்.
பல வெற்றிகளுக்கு வேவுத்தகவல்களை மிகத் துல்லியமாக பெற்றுத்தந்தவர் மேஐர் அசோக். வேவுப்புலி மேஐர் சேரன் / அசோக் குணசிங்கம் குணராஐ் வீரச்சாவு 02.8.1994 1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த அசோக் பயிற்சியின் பின் வலிகாமப் பகுதியில் நின்று பல்வேறு களம் கண்ட ஒரு வீரனாவான் கந்தையாவைப் போலவே இவனும் பலாலிக்கான ஒரு வேவுக்காரன்.ஆனால் இவனோ வலிகாமப் பகுதியிலிருந்து தனது வேவு நடவடிக்கையை ஆரம்பித்தான்.ஒவ்வொருமுறை வேவு நடவடிக்கையின் போதும் இவனது தூரம் அதிகரித்துக் கொண்டபோனது. அதிலும் ஒரு ஆனந்தம் ஏனெனில் தான் ஓடித்திரிந்து விளையாடிய தான் படித்த பாடசாலை இவைகளை சக போராளிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன் .குறைந்தளவு போராளிகளுடன் எதிரிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவது.)எதிரியின் ஆக்கிரமிப்புத்தான் இதற்க்கு காரணம்.அந்தநேரம் எம்மிடம் எதிரியின் போர் விமானங்களையோ போர் உலங்குவானுர்திகளையோ சுட்டு வீழ்த்துவதற்க்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளோ விமான எதிர்ப்பு ஆயதங்களோ இருக்கவில்லை.எம்மிடம் இருந்த மிகப் பலம் வாய்ந்த ஆயுதமான உயிராயுதம் அதாவது கரும்புலிகள்.இவர்களைப்பயன்படுத்தி ஒரு பெரும்தாக்குதலுக்குத் திட்டம் தீட்டப்பட்டது.அதாவது எமது மக்களினதும் போராளிகளினதும் சாவுக்குக் காரணமான விமானங்களை அதன் இருப்பிடம் தேடிச் சென்று அழிப்பதே திட்டமாகும் .இது இலகுவான காரியமல்ல எத்தனையோ இராணுவ காவலரன்கள் இராணுவ ரோந்துகள் இராணுவ மினிமுகாம்கள் இவைகளை மிகவும் அவதானத்துடன் செல்லவேண்டும்.அதே நேரம்சின்னத் தவறாகிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அதேவேளைஎதிரியும் உசாராகிவிடுவான் சிறுகச் சிறுக சேர்த்த அசோக் தலைமையிலான அணியின் வேவுத்தகவலின் அடிப்படையில்பலாலி விமான நிலையம் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்வதற்கான திட்டம் தீட்டப்பட்டு அணிகள் புறப்பட்டுசென்று கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தூடனான நேரடி மோதலில் பல வெற்றிகளுக்கு வேவுத்தகவல்களை மிகத் துல்லியமாக பெற்றுத்தந்த மேஐர் அசோக் 02 .08.19994அன்று வீரச்சாவடைந்தார்.இருப்பினும் இவர் இவர் கூட்டிச் சென்ற கரும்புலிகள்தமது இலக்கை வெற்றிகரமாக அழித்து வீரச்சாவடைந்தனர். அசோக்கின் சகோதரி 26.06.2000அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வெடமருந்து ஏற்றிச் சென்ற உகண கப்பலை மூழ்கடித்து வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஐர் சந்தனா ஆகும். எழுத்துருவாக்கம் - சு.குணா. https://www.thaarakam.com/news/5b236bd2-2e34-496c-aba1-0af6c0b34d47- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு நன்றி பாஞ் ஐயா😊 நன்றி நிலாமதி அக்கா😊 நன்றி நுணா😊 நன்றி குமாரசாமி ஐயா😊 தமிழன் என்றாலே அடங்காதவன்தானே😉 நன்றி புங்கை அண்ணா😊 நன்றி நந்தன்😊 எனக்கு கொடுவாள் தாற பிளான் போலிருக்கு😁 வாழ்த்துக்களுக்கு நன்றி ஈழப்பிரியன் ஐயா😊 வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் சிறி ஐயா😊- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நிழலி😊. உங்கள் மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🎉 நன்றி ஏராளன்😊 நன்றி ரதி😊 நன்றி சுவி ஐயா😊 நன்றி யாயினி😊- பன்னாட்டு கடற்பரப்பில் காவியமான 4 கடற்கரும்புலிகளின் நினைவு
30.07.2003 அன்று பன்னாட்டு கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவில்... கடற்கரும்புலிலெப். கேணல் முருகேசன், கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன், கடற்கரும்புலி மேஜர் புகழினி, கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் வீரவணக்க நாள் இன்றாகும். 30.07.2003 அன்று சர்வதேச கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் முருகேசன்ர, கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன், கடற்கரும்புலி மேஜர் புகழினி, கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.! தாயக விடுதலை வேண்டி சர்வதேச கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/e382d838-2aa6-449e-95e9-010addc705d1- எத்தடை வரினும் எம்படை நகரும் கப்டன் அன்பரசி படையணி
எத்தடை வரினும் எம்படை நகரும் கப்டன் அன்பரசி படையணி எத்தடை வரினும் எம்படை நகரும் அன்பரசி படையணியின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். 29.07.1995ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் 4 ஆம் முச்சந்தி சிறிலங்கா படை முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளது ஞாபகமாகவே மட்டு – அம்பாறை மகளிர் படையணிக்கு அன்பரசி படையணி என்று பெயர் சூட்டப்பட்டது. லெப். கேணல் மதனாவினது சுறுசுறுப்பையும், துணிவையும், புத்துணர்வையும், களங்களில் படைநடத்தும் திறமையையும் கண்ணுற்ற மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி அவர்கள் படையணியின் முதல் சிறப்புத் தளபதியாக லெப். கேணல் மதனாவை அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தார். ' வவுணதீவுத் தாக்குதலில் படையணியின் பல போராளிகளுடன் முதல் சிறப்புத்தளபதி லெப். கேணல் மதனா வீரச்சாவடைந்தார். இரண்டு பெரும் ஆட்லறிகள் கைப்பற்றிய புளுகுணாவில் வெற்றிச் சமரிலும் இப் படையணி பெரும் பங்காற்றியதுடன்; மட்டு – அம்பாறை மாவட்ட காடுகள், மலைகள், அருவிகள் மற்றும் வவுணதீவு, முறக்கொட்டான்சேனை, மாவடிவேம்பு எங்கும் எப்படையணியின் நீண்ட வரலாறுகள் விரிந்தன. அதனுடன் ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் 02 மற்றும் ஓயாத அலைகள் 03 தொடர் நடவடிக்கையிலும் இப் படையணியின் வீர அத்தியாயம் பதியப்பட்டு அன்பரசி படையணியின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். https://www.thaarakam.com/news/2d7d5172-aca9-49a1-966c-b0fc40418289- லெப். கேணல் கதிர்வாணன்
- லெப். கேணல் சரா நினைவில்...!
- குட்டிமணியின் கண்கள் ....
- கட்டுநாயக்கா விமானப்படை தளம் மீதான தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்
- லெப்டினன்ட் செல்லக்கிளி
- முல்லைத்தளம் மீதான சமரில் 2ம் நாளில் வீரகாவியமான 112 மாவீரர்களின் நினைவு
- மீண்டும் வருவான் மேஜர் மில்ரன்….
- மட்டு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் நினைவு நாள்
‘மட்டக்களப்பின் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம் -லெப். கேணல் றீகன் மட்டக்களப்பு, பாலையடி வெட்டையில்; முன்னேறிவந்து நிலை கொண்டுள்ள படையினரைத் தாக்க புலிகள் திட்டமிட்டனர். கடைசி வேவு பார்த்து, இராணுவத்தின் பலம் – பலவீனத்தை அறிந்துவர, தளபதி றீகன் இன்னுமொரு போராளியையும் கூட்டிக்கொண்டு ஸ்தலத்திற்குச் செல்கிறான். இடைவழியில், இன்னொரு இராணுவ அணியை எதிர்பாராதவிதமாக எதிர்கொள்ள நேரிடுகிறது. மோதல் வெடித்தது – றீகனுக்கு குண்டடிபடுகிறது. இவர்கள் இருவர்; எதிரியோ கும்பலாக இருந்தான். இயலுமானவரை பின்னால் வந்தார்கள். இரத்தம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு அளவுக்குமேல் றீகனால் நகர முடியவில்லை. கூடப்போன போராளியால், தளபதியை நீண்டதூரம் தூக்கிக்கொண்டு தப்பி ஓட முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டான். றீகன் சொன்னான்; “இனி என்னால வர ஏலாது. நீயும் நிண்டால் சாக நேரிடலாம். ஆயுதங்களும் பிடிபட்டுவிடும்; என்னை விட்டிட்டு, எல்லாத்தையும் கொண்டு நீ ஓடு.” ‘மட்டக்களப்பின் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்; அந்தப் பிராந்தியத்தின் இரண்டாவது தளபதி. தன்னந்தனியனாகச் செத்துக்கொண்டிருக்க, எப்படி இடை நடுவில் அநாதரவாக விட்டுவிட்டுச் செல்லலாம்……?’ அந்தப் போராளி உறைந்து போய் நின்றான். ஆனாலும் வேறு வழி எதுவுமே அற்ற நிலை. தன்னிடமிருந்த எம் 16 கிரனைட் லோஞ்சரையும், இடுப்பில் கட்டியிருந்த பிஸ்டலையும் கழற்றிக்கொடுத்து – சிறப்புத் தளபதியிடம் சொல்ல வேண்டிய சில இரகசியத் தகவல்களையும் காதோடு சொல்லிவிட்டு, குப்பியைத் தன் வாயில் செருகிக்கொண்டே, “போட்டு வா” என்று வழியனுப்பிவைத்தான் அத்தளபதி. விதைக்கப்பட்டது வீரமும்தான் தொகுப்பிலிருந்து… விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை 1993). https://www.thaarakam.com/news/6d7fdff5-abe9-470a-9240-d82cdbbccd6a- கப்டன் ரஞ்சன் (லாலா) நீங்காத நினைவில் ……
- லெப்.கேணல் சேனாதிராசா நினைவு நாள்
- மேஜர் கிண்ணி (அசோகன்)
- கடற்கரும்புலி கப்டன் வினோத்
கடற்கரும்புலி கப்டன் வினோத் கடற்கரும்புலி கப்டன் வினோத் வேலுப்பிள்ளை திலகராசா காட்டுவளவு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:19.08.1970 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பாய் இருந்தது. அண்ணைமார் கடற்கரைக்கு வாறதும் போறதுமாய் இருந்தினம். “இன்றைக்குப் பெடியள் கரும்புலியாய்ப் போய் நேவிக் கப்பலை அடிக்கப்போறாங்களாம்.” என்று, ஜனங்கள் பரவலாய்க் கதைக்கினம். “அப்படியெண்டா நாளைக்குக் காலமை நேவி அடிப்பான்” என்று கொஞ்சச்சனம் ஊரை விட்டுக் கிளம்பி விட்டினம். நல்லாய் இருண்டதுக்குப் பிறகு ஊர்ச்சனங்கள் கொஞ்சம் கப்பல் அடிக்கிறதைப் பார்ப்பதென்று கடற்கரைக்குப் போனார்கள், நாங்களும் போனம். கடலில் இருந்து கூப்பிடு தூரம்தான் எங்கள் வீடு. முகபாவத்தில் கவலையும் மகிழ்வும் மாறி மாறி வெளிப்பட அந்த அக்கா சொல்லிக்கொண்டிருந்தா. அம்மாவும் அப்பாவும் கரைக்கு வரேல்லை, அவை வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டிருந்தனர். கரையில் நாங்கள் போய் பார்த்துக் கொண்டு நின்றம். படகுகள் வெளிக்கிட்டுப் போனது. நாங்கள் கொஞ்சம் தூரத்தில் நிண்டனாங்கள், இருள் வேறு. ஆட்களை அடையாளம் தெரியேலை… படகுகள் வெளிக்கிட்டன. கொஞ்ச நேரத்தில் இருளுக்குள் மறைந்து போய்விட்டது. இருளைப் போலவே மெளனமும் நிலவியது. நாங்கள் இருளுக்கால கடலைப் பார்த்துக் கொண்டு நின்றம். தீடிரென பெரிய வெளிட்சமாய் நெருப்புச்சுவாலை கடலுக்குள் எரிய, நிலம் நடுங்கிற மாதிரி ஒரு வெடிச்சத்தம் கடலுக்குள் இருந்து வந்தது. எங்களை அறியாமலேயே கண்ணால கண்ணீர் வந்தது. மெதுவான குரலில் அம்மா… ஐயோ… என்ற சத்தங்கள் எல்லோர் வாயிலிருந்தும் உதிர்த்தன. யாரார் பொடியள் போச்சுதுகளோ!? என்று நாங்கள் சொல்லி கவலைப்பட்டோம். ஒரு கனம் நிறுத்தி அக்கா தொடர்ந்து சொன்னாள். அடுத்த நாள் நேவி அடிப்பானென்று சனம் எல்லாம் வெளிக்கிட்டதால் நாங்களும் கொஞ்சம் தூரத்தில இருக்கிற சொந்தக்காரற்ற வீட்டுக்குப் போயிற்று, இரண்டு நாள்ள நிலைமையைப் பார்த்திட்டுத் திரும்புவம் என்று இரவிரவாய்ப் போனம். போறவழியில “காம்ப்” ஒன்றுக்கு முன்னால, எங்கட தம்பி ஓடித் திரிகிற மோட்டார் சைக்கிள் நின்றது. அம்மா சொன்னா, “உங்க தம்பி நிற்பான் போல கிடக்கு… ஒருக்கா கேட்டுப்பார்” என்று தொடர்ந்து அம்மா கதைக்கத் தொடங்கினாள்…. நாங்கள் கூப்பிடக் கூப்பிட ஆள்மாறி ஆள்மாறி வந்து எட்டிப் பார்த்திட்டுப் போறினமே தவிர வெளியால ஒருத்தருமே வரேல்லை. “வினோத்தின்ர அம்மாவடா…. வினோத்தின்ர அம்மாவடா….” என்று மாறி மாறிச் சொல்லிக் கேட்கிறது…. இருளுக்குள் ஒன்றும் தெரியவுமில்லை. ஏன் இவர்கள் ஒளியிறார்கள் என்று எனக்குள்ள நினைத்தேன். கொஞ்சநேரத்துக்குப் பிறகு, ஒருத்தர் பதுங்கிப் பதுங்கி வெளியில் வந்தார். “வினோத் நிற்கிறானா தம்பி…?” “இல்லை…. அம்மா…. நீங்கள் எங்க நிற்பீர்கள் என்று சொல்லுங்கோ… நாங்கள் அவரை வரச் சொல்லிவிடுறம்…” “அந்தா அவரின்ற மோட்டார் சைக்கிள் நிக்கிறது… பொய் சொல்லாதேங்க்கடா எங்க போட்டான்..?” “அது சரியாச் சொல்லேலாதம்மா… நீங்கள் நிற்கிற இடத்தைச் சொல்லிப் போட்டுப் போங்கோ, காலையில் அனுப்பிவிடுறம்…” என்னடா இவன், கேட்கிரதுக்கெல்லாம் ஒரு மாதிரியா மறுமொழி சொல்லுறான்…? என்ன கேட்டாலும் நாங்கள் நிக்கிற வீடு எது என்று கேட்கிறான் ? என்று எனக்குள்ள நினைத்துக்கொண்டு, நாங்கள் போற வீட்டுப் பாதையைச் சொல்லிப் போட்டுப் போனோம். சற்று நிறுத்தி பெருமூச்சொன்றை எறிந்துவிட்டு அம்மா ஆறுதலாகத் தொடர்ந்தாள். “அடுத்த நாள்தான் மோனை தெரிஞ்சிது, எங்கட பொடியும் போட்டானேன்று. நிக்கிற வீடு எதென்று அந்தப் பெடியன் திரும்பத் திரும்பக் கேட்டது ஏன் என்று, அப்பத்தான் விளங்கியது.” வினோத்தின் அப்பா சொன்னார்…. “குண்டுச்சத்தம் கடலுக்குள் பெரிதாகக் கேட்க்கக் கேட்க்க , வீட்டு வாசலில நான் குந்தியிருந்தனான்…. யாரார் பெற்ற பிள்ளைகளோ என்று எனக்குள்ள நினைத்தேன்; ஆனால் அடுத்த நாள்த்தான் தம்பி தெரிஞ்சது, அதில நான் பெற்ற குஞ்சுவும் ஒன்று என்று.” வெளியீடு – உயிராயுதம் பாகம் 01 https://www.thaarakam.com/news/c6b0e555-a5f2-4d00-a1c6-d63779544bc2- காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- லெப். கேணல் தட்சாயினி