Everything posted by கிருபன்
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
சிற்றின்பம் மற்றும் உணர்திறன் ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி , அசுரர்களின் அரசனான வ்ரிஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையின் தோழி ஆவாள். ஒருநாள், அவர்கள் தோழியருடன் வனத்தில் இருந்த குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது அடித்த காற்றில் அவர்களின் ஆடைகள் கலந்து விட்டன. தவறுதலாக , இளவரசி சர்மிஷ்டை , தேவயானியின் உடைகளை அணிந்துகொண்டாள். இதை கண்ட தேவயானி ஒரு சீடனின் மகள் எவ்வாறு குருவின் மகளின் ஆடைகளை அணியலாம் என விளையாட்டாக கேட்டாள். இதனால் கோபம் அடைந்த சர்மிஷ்டை , ” என் தந்தை அளிக்கும் பிச்சையில் வாழ்பவரின்மகள் தானே நீ ? “ என அவளை அவமானப்படுத்தினாள். தான் விளையாட்டாக சொன்னது வினையானதை எண்ணி அவளை சமாதானப்படுத்த தேவயானி செய்த முயற்சிகள் வீணாகின. மேலும் மேலும் கோபம் அடைந்த சர்மிஷ்டை ,தேவயானியை அறைந்து அங்கிருந்த நீரற்ற கிணற்றினுள் தள்ளி , அங்கிருந்து தனது மற்ற தோழியருடன் சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து அப்பக்கம் வந்த யயாதி என்னும் மன்னன், தேவயானியின் குரல் கேட்டு அவளை கிணற்றிலிருந்து காப்பாற்றினான். ப்ராமண பெண், ஷத்ரிய வம்சத்தை சேர்ந்த ஒரு ஆணை மணப்பது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தாலும், தனது வலது கரத்தை பிடித்து காப்பற்றியதால், தன்னை அவன் மணக்க வேண்டும் என தேவயானி வற்புறுத்த அவனும் அதற்கு இசைந்தான். தன் தந்தையிடம் பேசி திருமணத்திற்கு ஒப்புதலும் வாங்கினாள். அது மட்டுமில்லாது , சர்மிஷ்டை அவரை பிச்சைக்காரர் என கூறியது தவறு என்று கூறி அதை சரி செய்ய சர்மிஷ்டை , அவளது தோழியாக தன்னுடன் அனுப்பப்படவேண்டும் எனவும் வாதாடினாள். சுக்ராச்சாரியாரும், தனது சீடனும் அரசனும் ஆன வ்ரிஷபர்வாவிடம் இந்த கோரிக்கையை வைத்தார். என்ன நடந்தது என அறியாத அரசனும், குருவின் வார்த்தையை மீற முடியாத காரணத்தினால் இதற்கு இசைந்தான். நாட்கள் செல்ல செல்ல, சர்மிஷ்டையும், யயாதியும் நெருங்கி பழகத் துவங்கினர். தேவயானிக்கு தெரியாமல் ரகசியத் திருமணமும் செய்துகொண்டனர். ஒருநாள், அவர்களின் திருமணம் பற்றி தெரியவர, தேவயானி தன் தந்தையிடம் சென்று முறையிட்டாள். கோபம் கொண்ட சுக்ராச்சாரியாரும், அரசன் தனது இளமையை இழந்து உடனடியாய் முதுமை அடைவான் என சாபமிட்டார். இதனால், பயம் கொண்ட யயாதி, சாபத்தை திரும்பப் பெறுமாறு அவரிடம் கெஞ்சினான். என்ன இருந்தாலும் மருமகன் என்பதால், ” அரசனே ! சாபத்தை திரும்பப் பெற இயலாது என்றாலும் , உனது முதுமையை யாராவது பெற்றுக் கொள்ள சம்மதித்தால் , நீ அவர்களின் இளமையை அடையலாம்” என ஒரு விமோசனம் கூறினார். விரைவிலேயே முதுமை அடைந்த யயாதி, தொடர்ந்து ஆட்சி செய்தான், இருந்தாலும் அவனது உணர்வுகளை அவனால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவனது ஐந்து மகன்களை அழைத்து ஒவ்வொருவரிடமும் தனது முதுமையை பெற்றுக் கொள்ள கூறினான். மேலும் அதற்கு ஈடாக அவன் முதுமையை ஏற்போரை அரசனாக்குவதாகக் கூறினான். அனைவரும் அதற்கு மறுத்துவிட, அவனின் இளைய மகன் புரு , தந்தையின் முதுமையை ஏற்றுக் கொள்வதாகக் கூறினான். அதன் பின் , முதுமையை ஏற்ற புரு அரசனாக ஆட்சி புரிய, இளமையை அடைந்த யயாதி அனைத்து இன்பங்களையும் அனுபவித்தான். அது போதாதென்று குபேரபுரி சென்று அங்கும் இன்பம் அனுபவித்தான். இவ்வாறு பல வருடங்கள் சென்றபின் எத்தனை வருடம் எத்தனை விதமாய் இன்பம் அனுபவித்தாலும் இச்சைகளை திருப்தி செய்ய இயலாது என்பதை உணர்ந்தான். அதன் பின், தன் நாட்டிற்கு திரும்பியவன், புருவிற்கு இளமையை திரும்பி அளித்துவிட்டு , முதுமையை ஏற்று அரசாட்சி புரியத் துவங்கினான். அவனுக்குப் பின், புரு அரசபீடத்தை அடைந்தான். அவனின் வம்சத்தவர்களே மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்கள் ஆவர். சாபக்காலத்தில் கிடைத்த வரம் அரசனாக பதவியேற்றப் பின் பாண்டு, பல்வேறு நாடுகளுக்கு திக்விஜயம் செய்து அந்நாடுகளை வென்று தன் சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். பாண்டுவின் இந்த செயல், பீஷ்மரின் பொறுப்பை குறைத்ததுடன், பாரதவர்ஷம்* முழுவதும் குரு வம்சத்தின் வலிமையை பரப்பியது. தன் திக்விஜயம் முடிந்தபின் தன்னிரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரியுடன் வனப்பகுதிக்கு சென்று இனிமையாக பொழுதுபோக்கினான் பாண்டு. அளவற்ற சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் தங்கள் நேரத்தை அங்கே செலவழித்தனர். ரிஷியின் சாபம் அதே காட்டில் ரிஷி ஒருவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் பெற்ற வரத்தின் காரணமாய் அவர் விரும்பிய வடிவு எடுக்கும் வல்லமை பெற்றவர். ஒருநாள் அவரும் அவர் மனைவியும் மானாக மாறி இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பக்கம் வந்த பாண்டு மானைக் கண்டு அம்பெய்தினான். அவரது அம்பு பட்டு அந்த ரிஷி மரண காயம் அடைந்தார். அவர் அடிபட்டவுடன் அவரது மனைவியும் அவரும் மனித உருவை அடைந்தனர். பாண்டுவின் மேல் கோபம் கொண்ட ரிஷி ” பாண்டுவும், அவன் மனைவியுடன் சேரும் சமயத்தில் அவன் இறக்க நேரிடும்” என சாபம் அளித்தப் பின் இறந்து விட, சோகத்தால் தாக்கப்பட்ட அவரது மனைவியும் அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு அப்பாவிகளை கொன்றது அவன் மனதை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனே தன் மனைவிகளுடன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தவன், இருவரிடமும் நடந்ததை விவரித்தான். அதனால் அவன் பெற்ற சாபத்தை பற்றியும் கூறினான். இந்த சம்பவத்தால், ஆசைகள் நீங்கியவன் அதற்கு மேல் தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. தூதுவனை அழைத்து நடந்ததை பீஷ்மருக்கும் நாட்டு மக்களுக்கும் விளக்குமாறு கூறியவன் , அவனுடன் தனது பரிவாரங்கள் மற்றும் அவனிடம் இருந்த நகைகள் முழுவதையும் குடுத்து அனுப்பினான். மாத்ரி மற்றும் குந்தியும் அவர்களிடம் இருந்த அரச உடைகளை கொடுத்தனுப்பி விட்டு சாதாரண உடைகளை அணிந்தனர். குந்தியின் வரம் அதன் பின் மூவரும் காட்டினுள் சாதாரண வாழ்க்கை வாழத் துவங்கினர். சிறிது காலத்திற்கு பின் , தனக்கு வாரிசு உண்டாக்க முடியாமல் போனது குறித்து பாண்டுவிற்கு வருத்தம் உண்டாகியது. இதை பற்றி அறிந்த குந்தி, அவள் கன்னிப் பெண்ணாக இருந்த பொழுது , மகரிஷி துர்வாசர் அவளுக்கு கூறிய புனித மந்திரங்களை பற்றி பாண்டுவிற்கு கூறினாள். எந்த கடவுளை நினைத்து சொல்கிறோமோ, அந்தக் கடவுளின் குணங்களுடன் கூடிய குழந்தையை அளிக்க வல்லது அம்மந்திரம். இதைக் கேட்டு மகிழ்ந்த பாண்டு, அந்த மந்திரங்கள் மூலம் குழந்தை பெற சம்மதம் கூறினான். முதலில் தர்ம தேவதையை வேண்டி, யுதிஷ்டிரரையும் , பின் வாயு தேவனை வேண்டி பீமனையும் பின் மழைக் கடவுளான இந்திரனை வேண்டி அர்ஜுனனையும் பெற்றாள். குந்தியிடம் இருந்து மந்திரங்களை கற்றுக் கொண்ட மாத்ரி மருத்துவக் கடவுளான அஸ்வினி தேவர்களை வேண்டி நகுல சகாதேவர்களை பெற்றெடுத்தாள். காட்டினுள் முனிவர்களின் கண்காணிப்பில் இளவரசர்கள் நன்கு வளர்ந்து வந்தனர். இளவரசர்களுக்குண்டான வாழ்வில்லை என்ற போதும் அங்கே மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனால் அத்தகைய மகிழ்வான வாழ்வு எப்பொழுதும் நீடித்து இருப்பதில்லையே.. ஒரு நாள் மாத்ரியுடன் இருந்தபொழுது , அங்கிருந்த சுற்றுப்புறங்களும் காலமும் பாண்டுவை தூண்ட அவன் மாத்ரியை அணுகினான். சாபத்தின் விளைவாய் தன் உயிரையும் விட்டான். குந்தி வந்தவுடன், மாத்ரி நடந்ததை அவளுக்கு விளக்கி விட்டு, பாண்டுவின் இறப்பிற்கு தானும் ஒரு காரணம் என்று கூறி , அவனுடன் உடன்கட்டை ஏறிவிட்டாள். இளவரசர்கள் ஐவரையும் வளர்க்கும் பொறுப்பு குந்தியின் மேல் விழுந்தது. நீதிபதிக்கு வழங்கப்பட்ட நீதி ஒருமுறை , அரசரின் காவலர்கள் ஒரு திருட்டுக் குழுவை துரத்தி கொண்டு சென்றனர். அந்த திருடர்கள் காட்டிற்குள் புகுந்தனர். அங்கே மரத்தின் கீழே ஒரு முனிவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்ததை கண்டு அங்கே இருந்த அவரது ஆசிரமத்தில் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை பாத்துக்க வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின் அங்கே வந்த காவலர்கள், ரிஷியிடம் அந்த கொள்ளையர்களை பற்றி விசாரித்தனர். அப்பொழுதுதான் தியானத்தில் இருந்து எழுப்பப்பட்ட ரிஷிக்கு அங்கே நடந்த எந்த விஷயமும் தெரியவில்லை எனவே அவர்களின் கேள்விக்கு அவர் எந்த பதிலும் தரவில்லை. அதற்குள் அவர் ஆசிரமத்தை சோதனையிட்ட காவலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அங்கே பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு, கொள்ளைக் கூட்ட தலைவன்தான் ரிஷி வேடம் போட்டிருப்பதாக எண்ணி அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அரசனின் முன் விசாரணைக்கு இது வந்தபொழுது, அரசன் அந்த ரிஷியை கழுவில் ஏற்ற உத்தரவிட்டான். அதைத் தொடர்ந்து ரிஷி மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டார். ஆனாலும் அவரது தவ வலிமையால் உயிர் இழக்கவில்லை . இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மற்ற ரிஷிகள் அங்கு கூடத் துவங்கினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட மன்னனும் அங்கே விரைந்தான். அங்கே சென்ற பின் விஷயத்தை முழுவதும் அறிந்த மன்னன், தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு ரிஷியை கழுவில் இருந்து விடுவித்து மீண்டும் மன்னிப்புக் கேட்டான். மன்னன் மேல் எந்த கோபம் இல்லாத ரிஷியும் அவரை மன்னித்தார். ஏனெனில் மன்னனாக அவன் தன் கடமையை செய்ததாக அவர் கருதினார். ரிஷி, தனக்கு ஏன் இந்த நிலை வந்தது என அறிய விரும்பினார் , அதற்காக அவர் தர்மராஜனை காண சென்றார். ” நான் இது வரை எந்த உயிரினத்தையும் துன்புறுத்தியதில்லை. அப்படி இருக்க , இத்தகையதுன்பத்தை நான் அனுபவிக்க என்ன காரணம் ” ? என தர்மராஜனிடம் அவர் வினவினார். ” ரிஷிகளில் சிறந்தவரே ! நீங்கள் சிறுவனாக இருந்த பொழுது நிறைய பூச்சிகளையும் , புழுக்களையும் கொன்று மகிழ்ந்துள்ளீர்கள். அதன் விளைவே, நீங்கள் இந்த துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது ! “ இதைக் கேட்டவுடன் மிக கோபம் கொண்ட ரிஷி ” ஓ தர்மராஜா ! அறியா வயதில் தெரியாமல் செய்த தவறுகளுக்கு இத்தகைய கொடிய தண்டனையா ? தர்மராஜனே , நீ தர்மத்தை அறிவாயோ ? நீ மீண்டும் பூமியில் பிறக்கவேண்டியவன் . எனவே மனித பிறவி எடு” என தர்மராஜனுக்கு சாபம் இட்டார். மேலும், அப்பொழுதில் இருந்து சிறு வயதில் சிறுவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள் கர்மப் பலனில் சேராது என்றும் கூறினார். ரிஷி மாண்டவ்யரின் சாபத்தின் விளைவாய், தர்மராஜா , வேத வ்யாஸருக்கும் அம்பாலிக்காவின் வேலைக்காரிக்கும் மகனாக பிறந்து ” விதுரன் ” என அறியப்பட்டார். திருதராஷ்டிரனின் அமைச்சராக இருந்த விதுரன், எல்லா காலத்திலும் தர்மத்தின் பக்கமே இருந்தார். பாஞ்சாலி அரசவையில்அவமானப்படுத்தும் பொழுது அதன் பின்விளைவுகளை அறிந்த விதுரர் , இளவரசர்களை கட்டுப்படுத்த திருதராஷ்டிரனிடம் கெஞ்சியும் பலனின்றி போனது !!! https://solvanam.com/2025/01/12/பல்லாயிரம்-ஆண்டுகளுக்க-2/
-
‘கூலி’ விமர்சனம்
என்னதான் வறுத்தாலும் நாம தலீவர் படத்தை அகன்ற வெண்திரையில் பார்ப்போம்! ஞாயிறு ஷோ புக்கிங் ரெடி😍 ஆன்ரிகளின் விசில் காதில் விண் கூவும்😁 ஆயிரம் கோடியை அள்ள ‘கூலி’ என்ற பெயரையே கெடுப்பதா? -பிரகாஷ் தேவேந்திரன் 75 வயதிலும் துடிப்பான ரஜினிகாந்த்! ஈர்ப்பைத் தரும் ஸ்டைல் நடிப்பு, அதிரடி சண்டைகள், ரத்தம் சொட்டும் வன்முறை, கணக்கு வழக்கில்லாமல் நடக்கும் கொலைகள்.. என அதகளம் காட்டும் படத்தில் கதை இருக்கிறதா? நல்ல மெசேஜ் இருக்கிறதா? குழந்தைகள், பெண்கள் என குடும்பத்தோடு பார்க்க முடியுமா? ஒரு அலசல்; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம், அவரது திரையுலக பயணத்தில் 50-ம் ஆண்டை நிறைவு செய்யும் திரைப்படமாக வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகிறது என்றாலே, அது வொரு திருவிழா போல அமைந்துவிடுகிறது அவரது ரசிகர்களுக்கு.. சன் பிக்சர்கஸ் தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படம் இயக்குகிறார் என்ற அறிவுப்பு வெளியாகிய உடனேயே, மக்கள் மத்தியில் பற்றிக் கொண்டு விட்டது ஒரு எதிர்பார்ப்பு. ஆடியோ ரிலீஸ்சில் ரஜினிகாந்த் பேசிய அந்த வார்த்தைகள், தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சில் இன்னமும் நெகிழ்வாக நின்றுகொண்டிருக்கிறது. அதாவது, “என்னை வாழ வைக்கும் தமிழ்நாட்டு மக்களின் பாதங்களில் என் தலையை வைத்து எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்பது தான் அது. சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் டைரக்டராக உயர்ந்திருக்கிறார், லோகேஷ் கனகராஜ் என்று புகழாரங்கள் சூட்டப்படுகின்றன. கூலி திரைப்படத்திலும் அதே ஃபார்முலா தான். கத்தி, கோடாரி, வெட்டு குத்து ரத்தம், கொடூரமான கொலைகள்.. அப்பப்பா.. ஜீரணிப்பதற்கு காலம் தேவைப்படுகிறது. இந்தப் படத்தின் கதையை வித்தியாசமாக அமைக்கலாம் என்ற முடிவில், திரைக்கதைக்குள் பல ட்விஸ்ட்டுகளை வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ். அவை பெரிதாக எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். க்ரிமேட்டர் மெஷின், அதாவது இறந்த உடலை மின்சாரம் பாய்ச்சி சில நொடிகளில் அதனை சாம்பலாக்கும் நவீன இயந்திரம். அந்த க்ரிமேட்டர் மிஷினை உருவாக்கும் சத்யராஜை கொண்டு, தங்களால் கொலை செய்யப்பட்ட ஒரு இருபது பேரின் உடல்களை அழிக்கச் சொல்கிறார் வில்லன் நாகார்ஜுனா. சத்தியராஜ் அதை செய்யவில்லை என்றால், அவரது மூன்று இளம் மகள்களை அழித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததால், அவர் அதை ஒப்புக் கொண்டு செய்து வருகிறார். இங்கு தொடங்கும் கதை, நாகார்ஜுனாவின் கையாள் சோபின் ஷாஹிரால் சத்தியராஜ் கொல்லப்பட, தனது உற்ற நண்பனும் மைத்துனனும் ஆன சத்தியராஜின் கொலைக்கு பழி வாங்குவதற்காக உள்ளே வருகிறார் ரஜினிகாந்த். திரைப்படத்தின் கதையை முமையாக சொல்வது சரியல்ல. ஆனால், இந்த படத்தின் கதையில் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. அதே கமர்ஷியல் கதை தான். கதைக் களம் துறைமுகத்தில் நிற்கும் கண்டைனர் கப்பல்கள் மற்றும் கடல் அலைகள் பின்னணியோடு நகர்கிறது. திரைப்படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் ஹீரோ அறிமுகம், அதைத்தொடர்ந்து ஹீரோ அறிமுகப் பாடல். முக்கால் மணிநேரம் முடிவதற்குள், மூன்று ஃபைட், மூன்று பாடல்கள் முடிந்து விடுகிறது. ஒருமணிநேரத்துக்குள் ஐந்து பாடல்கள், ரத்தம் சொட்டச் சொட்ட ரணகளமான கொலைகள். ஒரு இருபது பேர் உடல்களை, காவல்துறை கண்களுக்கு தெரியாமல் மறைப்பதற்கு சத்யராஜின் க்ரிமேட்டர் தொழில் நுட்பத்தை அணுகும் வில்லன் நாகார்ஜுனா, அதற்கு பிறகு நிகழும் கேட்பாரற்ற, சுமார் நூறு கொலைகளை எப்படி மறைத்தார் என்று தெரியவில்லை. பழைய பாடல்களை ஒலிக்க விட்டு, நிகழும் சண்டை காட்சிகள், தலைமறைவாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்னாள் வீரர்கள் (கேங்க்ஸ்டர்ஸ்), அப்பா மகள் செண்டிமெண்ட் என்று எல்லாமே லோகேஷின் ட்ரெண்டில் கூலி திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேமரா பதிவுகளும், எடிட்டரின் ஒட்டு-வெட்டுகளும் நன்றாக இருக்கிறது. சாண்டி மாஸ்டரால் இதில் இவ்வளவு தான் செய்ய முடியும். அனிருத்தின் பாடல்கள் ஓகே ரகம். பிண்ணனி இசையில் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டும். ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சோபின், சார்லி, லொள்ளு சபா மாறன் என்று எல்லோரும் திறமையான நடிகர்களே. உபேந்திராவுக்கு நடிக்க ஒன்றும் இடமில்லை. இதில், ஸ்ருதிஹாசனின் பெர்ஃமார்மன்ஸ் அபாரமாக இருக்கிறது. வாழ்த்துகள் ஸ்ருதி.. அமீர்கான் எப்போது வருவார் என்று ஆடியன்ஸ் மத்தியில் பெரிய எதிர்பார்பையே ஏற்படுத்திவிட்டார்கள். கடைசியில், படம் முடிவதற்கு பத்து நிமிடங்கள் முன்பாக வருகிறார் அவர். வந்தவுடன் என்ன..? டமால் டுமீல் தான்.. ஒரு முப்பது பேர் காலி. அவருடைய கெட்-அப் நன்றாக இருந்தாலும், அவரைப் போய் இப்படியா பயன்படுத்துவது என்று சலிப்பு மேலோங்குகிறது. நல்ல திறமையான நடிகரை முற்றிலும் வீணடித்துவிட்டார்கள். படம் முழுக்க லாஜிக் அவுட்டுகள் நிறைய இருக்கின்றன. சுத்தியலால் ஓங்கி மண்டையில் அடித்தும் சாகாமல் நின்று பேசுவது, சவக்குழியில் அதுவும் ஈர மண்ணில் புதைக்கப்பட்டவர் உயிரோடு எழுந்து வருவது, சோபினின் காதலி சொல்வதை உண்மை என்று நம்பும் கண்ணா ரவி கதாபாத்திரம் என்று, சொல்லிக் கொண்டே போகலாம். ரஜினியும், சத்யராஜும் உயிருக்கு உயிரான நண்பர்களாக சொல்லப்பட்டாலும், ஒரேயொரு முறை தான் இருவரும் இணைந்திருக்கும் காட்சி அமைக்கப்பட்டிருப்பது ஏனென்று கேள்விகள் எழுகின்றன. இன்னொன்றை வெகுவாக பாராட்டியாக வேண்டுமென்றால், நமது AI தொழில்நுட்பம் தான்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நாற்பது வருடத்திற்கு முந்தைய இளமைத் தோற்றத்தையும், பேச்சையும் அப்படியே படக்குழு கொண்டுவந்து விட்டது. சூப்பர்ப்..! தொலைக் காட்சிகளில் ஓடும் முப்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில், எதில் பார்த்தாலும் எல்லா கதாபாத்திரங்களும் பெரும்பாலும் நின்று கொண்டே பேசிக் கொண்டிருக்கும். படப்பிடிப்புக்கு வசதியாக டிவி தொடர் இயக்குபவர்கள் அதை செய்கிறார்கள். ஆனால், லோகேஷ் கனகராஜுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.. அவரும் அந்த பாணியை கையாண்டிருப்பது போல தோன்றுகிறது. இதில் இன்னொன்றையும் சொல்லவேண்டுமென்றால், கலாநிதி மாறனுக்கு தனது சொந்த நிறுவனமான சன் பிக்சர்ஸில் படம் எடுத்தால் மட்டுமே அதனை தனது தொலைக்காட்சியில் வெளியிட முடியும் என்ற நிலைமை இருப்பதையும் மறுக்க முடியாது. ஏனென்றால் இன்றைய படங்கள் எல்லாமே ‘ ரெட் ஜெயண்ட்டு’க்கு தானே சொந்தமாகிறது..! படுபயங்கர வன்முறைக் காட்சி காரணமாக படத்திற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதை 18 வயதுக்குள்ளானவர்கள் பார்க்க முடியாது. ரஜினி படத்திற்கான நகைச்சுவை, பன்ச் டயலாக், குழந்தைகள், பெண்களை கவரும் காட்சி அமைப்பு இல்லை என்பது பல ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. இந்தப் படம் LCU இல்லை என்று சொல்லிவிட்டாலும், ICU இருக்கிறது. படத்திற்கு இல்லை.. படத்தில் அடியாட்களாக வரும் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களுக்குத் தான்.. FDFS – First Day First Show பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் ஒருபக்கம் காசை கத்தைகத்தையாக செலவழிக்க துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், முன்னூறு நானூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி. மொத்தத்தில், கூலி திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான திருவிழாவாக அமைந்திருக்கிறது. ரசிகர்களின் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும்..! திரை விமர்சனம்; பிரகாஷ் தேவேந்திரன் https://aramonline.in/22486/coolie-rajinikandh/
-
“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி August 15, 2025 11:20 am “இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். இந்தியா முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “ நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். 1947-ம் ஆண்டு, எல்லையற்ற சாத்தியக்கூறுகளுடனும், எண்ணற்ற ஆயுதங்களின் வலிமையுடனும், நமது நாடு சுதந்திரம் பெற்றது. ஆனால் சவால்கள் இன்னும் அதிகமாக இருந்தன. இந்த சுதந்திர தினத்துக்காக செங்கோட்டையில் கூடியிருக்கும் ‘மினி இந்தியா’வை நான் காண்கிறேன். நமது துணிச்சலான வீரர்களின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்று குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் மூலம், நமது வீரர்கள், எதிரிகளை கற்பனைக்கு அப்பாற்பட்ட பலத்துடன் பதிலளித்தனர். ஏப்ரல் 22-ம் திகதி. எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களை அவர்களின் மதத்தை கேட்ட பிறகு கொன்றனர். இதனால் முழு தேசமும் கோபமடைந்தது. அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால், அது இனி பொறுத்துக் கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப் படைகள் தங்கள் விருப்பப்படி, அவர்கள் விரும்பும் நேரத்தில், அவர்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதன் மூலம் பதிலடி கொடுக்கும். பொருத்தமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்.” – என பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார். https://oruvan.com/we-will-no-longer-tolerate-the-threat-of-nuclear-weapons-prime-minister-modi-vows-in-independence-day-speech/
-
தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு
தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு August 15, 2025 இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி அத்தியாவசிய செய்திகளை அறிக்கையிடுவதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது. முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை இலங்கை பாதுகாப்பு தரப்பு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு கோரியுள்ளது. அதனூடாகவே, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்ற முடியும் என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பெஹ் லிஹ் யி (Beh Lih Yi) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதானது, ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என்றும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, மனித உரிமை குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஊடகச் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு தனித்துவமான வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது. https://www.ilakku.org/protest-against-threats-against-tamil-journalists/
-
பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் - இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு
பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் - இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு Published By: Rajeeban 15 Aug, 2025 | 11:28 AM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும் என தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஜெரூசலேம் மற்றும் மாலே அடுமின் பகுதிகளிற்கு இடையிலான குடியேற்ற திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் வீடுகளை அமைப்பது மேற்கு கரையை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலேத்திலிருந்து முற்றாக துண்டிக்கும். இது பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக இல்லாமல் செய்யும் என தெரிவித்துள்ள இஸ்ரேலின் நிதியமைச்சர் அங்கீகரிப்பதற்கும் எதுவும் எவருமில்லை என தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களின் கீழ் குடியேற்றம் என்பது சட்டவிரோதமானதாக காணப்படுகின்றது. மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான விவகாரத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இது காணப்படுகின்றது. மேற்குகரையிலும் கிழக்குஜெரூசலேத்திலும் உள்ள 160 குடியேற்றங்களில் ஏழு இலட்ச்சம் யூதர்கள் வசிக்கின்றனர். இது பாலஸ்தீனியர்கள் எதிர்கால சுதந்திர தேசத்திற்கான கோருகின்ற நிலம். பலவருடகால சர்வதேச அழுத்தம் மற்றும் முடக்கங்களிற்கு பின்னர் நாங்கள் மரபுகளை மீறி மாலே அடுமிமை ஜெரூசலேத்துடன் இணைக்கின்றோம் என இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இது சியோனிசத்தின் சிறந்த வடிவம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222596
-
கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்துக்கு 2026 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி உறுதி
கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்துக்கு 2026 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி உறுதி Published By: Vishnu 15 Aug, 2025 | 02:25 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலத்தை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பதற்கு எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவு திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (13.08.2025) இடம்பெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுயளித்துள்ளார். மேலும் இப்பாலம் அமைக்கப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன், சுற்றுலாத்துறையும் மேம்படும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஜனாதிபதிக்கு இந்தப் பாலத்தை அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியதையடுத்து, இப்பாலத்தை அமைப்பதற்கு அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222581
-
மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு – சி.வி.கே. சிவஞானம்
மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு – சி.வி.கே. சிவஞானம் Published By: VISHNU 15 AUG, 2025 | 03:19 AM மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை (14) காலை 12 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்களின் எழுச்சி போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் தீவில் இயற்கைச் சூழலில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வு ஆகியவை தொடருமானால் மன்னார் பிரதேசத்தினுடைய வாழ்வியல் சூழல் மிகவும் பாதிக்கப்படும் என்பதை வெளிப்படுத்தி இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது இடம்பெற்று வருகின்ற போராட்டம் அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இப்போராட்டம் வெற்றியளிக்க வேண்டும். இப்போராட்டம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீளாய்வின் அடிப்படையில் மக்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயற்கையுடன் கூடிய மன்னார் அழிவிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் உரிய சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அந்த வகையிலே மக்களினுடைய போராட்டம் வெற்றி அளிக்க வேண்டும் என்பதை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் என்கின்ற வகையில் எனது ஆதரவையும்,இலங்கை தமிழரசுக்கட்சியின் முழுமையான ஆதரவையும் இப்போராட்டத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார். மன்னாரில் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் புதன்கிழமை (13) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட இறுதி முடிவுகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்படாத நிலையில் குறித்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த 12 வது நாள் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார். https://www.virakesari.lk/article/222583
-
முத்தையன்கட்டு சம்பவம் - ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
முத்தையன்கட்டு சம்பவம் - ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Published By: Rajeeban 15 Aug, 2025 | 10:37 AM முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்,ஆனால் அதற்கான தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்,ஹர்த்தால் என்றாலும் சரி இல்லாவிட்டாலும் எங்களால் வேறு எதனையும் செய்ய முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம், ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அதற்காக அங்கே எவரும் ஹர்த்தாலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாங்கள் இந்த சம்பவத்தினை இன மத அடிப்படையில் பார்க்ககூடாது,குற்றங்கள் இடம்பெற்றால் பொலிஸார் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக அவர்களின் பின்னணியை கருத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பார்கள்,கடந்த சில மாதங்களாக நாங்கள் இதனையே செய்கின்றோம் என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222594
-
யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025!
யாழ் சர்வதேச புத்தகத் திருவிழா இன்று ஆரம்பம் 15 August 2025 யாழ்ப்பாணம் - சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. தொழில்துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை இரண்டாவது தடவையாக நடத்தப்படுகிறது. அதற்கமைய, இன்று (15) முதல் நாளை மறுதினம் (17) வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இம்முறையும் நாடு முழுவதிலுமிருந்து பல முன்னணி புத்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளன. சிறந்த தரம் வாய்ந்த புத்தகங்கள், பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு விலைக்கழிவுகளுடன் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன. சர்வதேச புத்தகத் திருவிழாவில் பல்வேறு அறிவுசார் மற்றும் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/414671/jaffna-international-book-festival-begins-today
-
ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு - கர்தினால் கவலை தெரிவிப்பு
ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு - கர்தினால் கவலை தெரிவிப்பு நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார் அரசாங்கத்தால் 'அக்கமஹா பண்டிதர்' கௌரவப் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கர்தினால் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்புத் திருத்தத்தில் மனித உரிமைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmec8v7pv02kfqp4k3icdgqxs
-
மன்னார் காற்றாலை மின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
மன்னார் காற்றாலை மின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். 2ஆம் கட்ட காற்றாலை அபிவிருத்தி் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் மக்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். அந்த சந்திப்பில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி, அந்த காலப்பகுதியில் அதன் சாதக பாதகங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கும், மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmecd842d02klqp4kir09iie9
-
‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன
‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சியில் ஜே.வி.பி.யின் ‘மணி’ சத்தம் அதிகமாகி தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ தவறாகத் திசை காட்டத் தொடங்கியுள்ளதால் ‘மாற்றம்’ என்ற கோஷம் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பு,நம்பிக்கை பொய்த்துப்போகத் தொடங்கியுள்ளது.இதனை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தவே கடந்த வாரப் பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி ஒரு ஆக்ரோஷமான உரையை நிகழ்த்தி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருந்தார். ஜனாதிபதியின் இந்த ஆக்ரோஷமான உரைக்கு எதிர்க்கட்சிகள் தனது ஆட்சிக்குக் கொடுக்கும் குடைச்சல்கள் மட்டும் காரணமின்றி, ராஜபக்ஷக்களின் ‘மொட்டு’க்கு நாட்டில் மீண்டும் அதிகரித்துவரும் மக்கள் ஆதரவும் அது தொடர்பில் அரசுத் தரப்புக்குக் கிடைத்துள்ள புலனாய்வு எச்சரிக்கைகளுமே நாட்டிற்குள் அல்லது வெளியே இருந்து யாராவது இந்த நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தைச் சதித் திட்டங்கள் மூலம் நாசப்படுத்த முயன்றால், அவர்களைத் தோற்கடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்போம்.எனவே, “ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் தீட்டும் எண்ணம் வந்தாலும், அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என பேச வைத்துள்ளது. ராஜபக்ஷக்களின் குடும்பம் மீது குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தையும் இலக்கு வைத்து அனுரகுமார அரசு முன்னெடுத்து வரும் விசாரணை,கைது, விளக்கமறியல்,வழக்குகள் போன்ற விடயங்களும் அனுரகுமார அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது ஊழல். மோசடி எனக் கூறிக்கொண்டு அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதுமே அனுரகுமார அரசை வீழ்ச்சிப் பாதைக்கும் ராஜபக்ஷக்களை எழுச்சிப் பாதைக்கும் கொண்டு வரத் தொடங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் தான், ராஜபக்ஷக்களின் ‘ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’வின் முன்னாள் அமைச்சரும் முக்கிய உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கையில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்கள் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அடையாளம் கண்டுள்ளன. சமீபத்திய தூதரக விஜயர்களின்போது, நாம் சந்தித்த பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள், ராஜபக்ஷக்களின் அரசியல் எதிர்காலம் குறித்து இதேபோன்ற எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நாமல் ராஜபக்ஷ உங்கள் தலைவர், அடுத்த ஜனாதிபதி என்று எம்மிடம் கூறினர். அதுமட்டுமன்றி, பொதுமக்கள் கலந்துரையாடல்கள், குறிப்பாக, கிராம மட்டத்தில், ராஜபக்ஷக்களுக்கு குறிப்பாக நாமல் ராஜபக்ஷவுக்குஆதரவு அதிகரித்து வருகின்றது. ஒரு கட்சியாக, நாமல் ராஜபக்ஷவின் பயணம் சிறப்பாக முன்னேறி வருவதாக நாங்கள் நம்புகிறோம். அடுத்த ஜனாதிபதியாக அவர் வருவதைப் பற்றி கிராம மக்கள் ஏற்கெனவே பேசத் தொடங்கி விட்டனர். நாமல் ராஜபக்ஷவின் அதிகரித்து வரும் செல்வாக்கு குறித்த அச்சம் காரணமாகவே, தற்போதைய அரசாங்கம் பொய்க் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி ராஜபக்ஷவினரை அவமதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்குப் பயமாக இருக்கும்போது, அவர்கள் வழக்குகளைத் தாக்கல் செய்து அவரை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். நாமல் ராஜபக்ஷ வருகிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். இது குறித்து புலனாய்வுப் பிரிவுகள் “ஏற்கெனவே தமது அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளன” என்று கூறியுள்ளார்.ஆட்சி மாற்றத்துக்காக 2029ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில் அது நடக்கலாம். அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ என்பது மக்களின் கருத்தாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்து, அனுரகுமார அரசுக்கு கலக்கத்தைக் கொடுத்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பேச்சாளரான முன்னாள் எம்.பி. சஜ்ஜீவ எதிரிமான்ன கூறுகையில், “அடுத்த ஜனாதிபதி யார்? என்ற கருத்தாடல் சமூகத்தில் உருவாகியுள்ளது. அனுரதான் அடுத்த ஜனாதிபதி என்றோ அல்லது பிரதான எதிரணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றோ சமூகத்தில் கருத்துகள் இல்லை. நாமலைப் பற்றிதான் தேடப்படுகின்றது. நாமல்தான் அடுத்த ஜனாதிபதி என்ற கருத்தை நாம் உருவாக்கவில்லை. அது சமூகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது.இயற்கையாகவேதான் அந்த கருத்தாடல் உருவாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன என்பது உச்சபட்ச கால எல்லை . எனினும், அதற்கு முன்னர் ஆட்சியை மாற்றலாம். இலங்கையில் இதற்கு முன்னர் அப்படி நடந்தும் உள்ளது. பதவி காலம் முடியும்வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்கும் என்பதற்குரிய அறிகுறிகள் இல்லை. அரசியலமைப்பு ரீதியாகக்கூட ஆட்சி மாற்றம் இடம்பெறலாம். ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் நிகழக்கூடும் என தெரிவித்துள்ளார். அடுத்த அரசாங்கத்தை உருவாக்க வல்ல பரம்பரையை அணி திரட்ட ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் எம்.பியுமான நாமல் ராஜபக்ஷவும் ,ஏமாற்றத்தைப் பொறுத்தது போதும், இனி அதிலிருந்து எழுவோம். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே எம்முடைய கட்சி உழைத்தது. நாம் பௌத்தர்கள் மாறாக இனவாதிகள் அல்ல. இளைஞர், யுவதிகளின் புதிய பரம்பரைக்கு ஏற்ற அரசியலை உருவாக்க நாம் தயார். பொய்யுரைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கமாக அனுர அரசாங்கம் மாறியுள்ளது.எம்மை அரசாங்கம் அதிகம் தாக்குகின்றது. அதற்கு காரணம் எம்மை பார்த்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அஞ்சுகின்றது. காரணம் நாம் கொள்கை அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றோம். எம்முடைய கட்சி நாட்டை சேதப்படுத்தும் கட்சி அல்ல. மாறாக பயங்கரவாத்தை நிறைவுக்குக் கொண்டு வந்து ஆசியாவில் விரைவாக அபிவிருத்தி அடையும் நாடாக ஆக்கிய கட்சியே எம்முடைய கட்சி .அடுத்த ஜனாதிபதி எம்முடைய கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் என ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இவ்வாறான சூழலில், தமிழ்த் தேசிய அரசியலின் புது வரவும் சர்ச்சைக்குரியவருமான அர்ச்சுனா இராம நாதன் எம்.பியும் ‘நாமல் ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி. அவர் ஜனாதிபதியாக நான் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். இதனை நான் அவரிடம் நேரிலும் தெரிவித்துள்ளேன். அவரின் தந்தை, சித்தப்பாமார் தமிழ் மக்களுக்குச் செய்த வேலைகளை அவர் தமிழ் மக்களுக்குச் செய்யக்கூடாது என்றும் நேரடியாகக் கூறியுள்ளேன்.அதற்கான உத்தரவாதத்தை அவர் எனக்கு வழங்கியுள்ளார்’’ என சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து ‘அடுத்த ஜனாதிபதி நாமல்’ என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளார். இலங்கையிலே குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது பெருமளவுக்கு பண்டாரநாயக்க குடும்பத்துடனேயே அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்துவந்தது. ஆனால் அதனை ராஜபக்ஷக்கள் மாற்றி ‘ராஜபக்ஷ குடும்ப ஆட்சி’ என்ற வரலாற்றை எழுதினர். அவர்களின் குடும்ப ஆட்சி எந்தளவுக்கு அவர்களுக்கு பலத்தைக் கொடுத்ததோ, அதுவே பின்னர் பலவீனமாகவும் மாறி அவர்களின் குடும்ப ஆட்சியை விரட்டியது. அதன்பின்னர் மக்கள் மாற்றமான ஆட்சி ஒன்றை எதிர் பார்த்த நிலையில்தான் அதனைப் பயன்படுத்தி தமது பிரசார ஆயுதத்தின் மூலம் அனுரகுமார தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் ஏறியது. ஆனால், அவர்கள் ‘வாய்ச் சொல் வீரர்’களாக மட்டுமே இருக்கின்றனர். இதனால் இவர்கள் மீது ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்றவாறாக மக்களுக்கிருந்த மயக்கம் தெளிந்து வருகின்றது. இவ்வாறான நிலையில், இலங்கை அரசியலில் மாற்று அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ரணில் அணி, சஜித் அணி என பிளவுண்டு மீண்டும் அணி சேர வாய்ப்பில்லாத நிலையில், இருப்பதால் மக்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தயாரில்லை. அதனால் தான் ராஜபக்ஷக்கள் என்னதான் ஊழல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் தான் யுத்தத்தை முடித்து வைத்தவர்கள். நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டுவந்தவர்கள். அவர்களின் ஆட்சிக்குப் பின்னர் நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறவில்லை, மக்களுக்கு விமோசனமும் கிடைக்கவில்லை என்ற கருத்துக்கள் மீண்டும் வலுப்பெற்று வரும் நிலையில்தான் தற்போது மீண்டும் ‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷக்களின்-அலை-அடிக்கத்-தொடங்கும்-அறிவிப்புக்கள்-விடப்படுகின்றன/91-362923
-
13 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை கடத்தல் தலைவன் கைது
13 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை கடத்தல் தலைவன் கைது சென்னை - மத்திய போதை தடுப்பு பிரிவு பொலிஸான என் சி பி அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி, மதுரைக்கு செல்ல இருந்த ரவிக்குமார், மாலினி தம்பதியினரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பைகளில்33 கோடி ரூபாய் மதிப்புடைய 3.3 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையைச்சேர்ந்த முகமது முனாவர் என்பவர் தான், இந்த போதைப் பொருளை தங்களிடம் கொடுத்து, மதுரையில் உள்ள மற்றொரு, இலங்கை நபரிடம் கொடுக்கப்படி கூறினார். அதற்காக முகமது முனாவர் எங்களுக்கு, ரூ.10,000 கொடுத்தார் என்றும் கூறினர். இதை அடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள், கணவன் மனைவி இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு, கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மனைவிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த போதைப் பொருளை கொடுத்து அனுப்பிய, முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான இலங்கையை சேர்ந்த முகமது முனாவர், கைது செய்யப்படாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் முகமது முனா வரை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக, மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் அறிவித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் இருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும், பிரபல போதை கடத்தல் கும்பலின் தலைவனான முகமது முனாவரும், இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்திருந்தது அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்த பொழுது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து சட்டநடவடிக்கள் மேற்கொள்வதற்காக மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, பிரபல போதை கடத்தல் கும்பலின் தலைவன், இலங்கையில் இருந்து சென்னை வந்த போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/13-ஆண்டுகளாக-தேடப்பட்ட-இலங்கை-கடத்தல்-தலைவன்-கைது/175-362950
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குமாரசாமி ஐயா 🎉🎂🎊
-
இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி!
இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி! Vhg ஆகஸ்ட் 13, 2025 இலங்கை அரசாங்கம் முதல் முறையாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கஞ்சா பயிரிட அனுமதித்துள்ளது. இதன் முதன்மை நோக்கம் மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் கஞ்சா சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணியை ஈட்டுவதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி இந்தத் திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 37 விண்ணப்பங்களில், தகுதிவாய்ந்த 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 6 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவர்களின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து எதிர்காலத்தில் பயிர்செய்கை காலம் நீட்டிக்கப்படும். இந்தத் திட்டத்தைத் தொடங்க, ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகச் செய்ய வேண்டும். மேலும் இலங்கை மத்திய வங்கியில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை வைப்பு செய்வது கட்டாயமாகும். இந்தத் தகவலை ஆயுர்வேதத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் டொக்டர் தம்மிக்க அபேகுணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பயிர்ச் செய்கைக்காக மீரிகம பகுதியில் 64 ஏக்கர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்தப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, பயிர்செய்கை செய்யப்பட்ட நிலத்தைச் சுற்றி வலுவான பாதுகாப்பு வேலி அமைப்பதோடு மட்டுமல்லாமல், விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை காவல்துறையிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவதும் கட்டாயமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் வளர்க்கப்படும் கஞ்சா இலங்கையில் பயன்படுத்தப்படாமல் முழுவதுமாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அதோடு கஞ்சா செடியின் எந்தப் பகுதியையும் (விதைகள், இலைகள், வேர்கள்) வெளிப்புறச் சூழலுக்கு வெளியிடாமல் அழிக்க சட்டங்களும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபை, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் ஆயுர்வேதத் துறை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை மேற்பார்வையிட இணைந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.battinatham.com/2025/08/blog-post_324.html
-
தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்.!
தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்.! Vhg ஆகஸ்ட் 14, 2025 மட்டக்களப்பு வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் (Ananda Wijepala) பங்குபற்றுதலுடன் நேற்று (13.08.205) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல காணியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருக்கிறது என்றும், அந்த காணியினை விடுவித்து மக்கள், அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது கோரியிருந்தார். எனினும், அந்த காணியினுள் நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு துயிலுமில்லம் இருந்ததிற்கான அடையாளங்கள் இல்லையென்றும், விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரி ஒருவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், முழுமையாக இல்லாவிட்டாலும் குறித்த காணியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒருபகுதியினை விடுவிக்குமாறு கோரியுள்ளார். இதன்படி, நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு காணியின் ஒருபகுதியினை விடுவிப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2025/08/blog-post_458.html
-
‘கூலி’ விமர்சனம்
விமர்சனம் : கூலி! 14 Aug 2025, 5:18 PM எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘கூலி’? ’ஆயிரம் கோடி வசூலை நிச்சயம் தமிழ் திரையுலகில் இருந்து நிகழ்த்தும்’ என்ற எதிர்பார்ப்பைப் பெருக்கியது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் உருவான ‘கூலி’. அனிருத்தின் இசை, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு மற்றும் சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், நாகார்ஜுனா, அமீர்கான், ஷ்ருதிஹாசனின் இருப்பு எனப் பல அம்சங்கள் அதற்குத் துணை நின்றன. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘கூலி’, இன்று (ஆகஸ்ட் 14) தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ‘கூலி’ எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவானது? பழிக்குப் பழி! விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடத்தல் வேலைகளைச் செய்து வருகிறார் சைமன் (நாகார்ஜுனா). அவரிடத்தில் வேலை செய்யும் கூலியாட்களில் காவல் துறையைச் சேர்ந்த உளவாளிகள் இருப்பதாகத் தகவல் தெரியும்போதெல்லாம், அவர்களைக் கண்டறிந்து கொடூரமாகக் கொல்கிறார் அடியாள் தயாள் (சௌஃபின் ஷாஹிர்). ஒருநாள் தங்கள் தொழிலுக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாதவரான ராஜசேகர் (சத்யராஜ்) என்பவரை நாடுகிறது சைமன் கும்பல். அதனைச் செய்யாவிட்டால், அவரது மூன்று மகள்களையும் கொலை செய்வதாக மிரட்டுகிறது. அதனால், வேறு வழியில்லாமல் அவர்கள் செய்கிற குற்றங்களுக்குத் துணையாக இருக்கிறார் ராஜசேகர். இந்த நிலையில், திடீரென்று ராஜசேகர் மரணமடைகிறார். இந்தத் தகவல் சென்னையில் இருக்கும் அவரது உயிர் நண்பரான தேவாவுக்குத் தெரிய வருகிறது. ராஜசேகரின் இறுதிச்சடங்குகளில் தேவா கலந்துகொள்வதை, அவரது மூத்த மகள் ப்ரீத்தி ஏற்கவில்லை. ‘நீங்க ஏன் இங்க வந்தீங்க’ என்று அவரை விரட்டுகிறார். ஆனால், அதே தேவா ப்ரீத்திக்கு உதவிக்கரம் நீட்டுகிற சூழல் உருவாகிறது. ராஜசேகர் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மையைக் கண்டறிகிறார் தேவா. அவர் சைமனிடத்தில் வேலை செய்தார் என்பதை அறிந்து, ப்ரீத்தி உடன் துறைமுகத்திற்குச் செல்கிறார். அங்கு தயாளின் இன்னொரு முகம் அவருக்குத் தெரிய வருகிறது. அதன்பிறகு என்ன ஆனது? நண்பனைக் கொன்றவரைத் தேவா கண்டறிந்தாரா? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கூலி’யின் மீதி. ’நண்பனைக் கொன்றவரைப் பழி வாங்காமல் விட மாட்டேன்’ என்று எதிரியின் கோட்டைக்குள் நுழைகிற ஒரு ஐம்பது ப்ளஸ்களில் இருக்கிற ஒரு ‘முன்னாள்’ கூலியின் ‘ஆக்ஷன் எபிசோடு’ தான் இப்படத்தின் ஆதார மையம். பெரிதாக பஞ்ச் டயலாக்குகள், ஹீரோவுக்கான காதல் காட்சிகள், காமெடி ட்ரூப் கலாட்டாக்கள் இல்லாமல், சீரியசாக கதை சொல்கிற பாணியில் இப்படத்தின் காட்சியாக்கத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆக்ஷன் படம் எனில் சஸ்பென்ஸ் அல்லது சர்ப்ரைஸ் ஆகச் சில விஷயங்கள் சொல்லப்படும். இதிலும் அப்படியொரு விஷயம் இருக்கிறது. அது ‘ஊமை விழிகள்’, ‘எல்லாமே என் காதலி’, ‘காக்கிசட்டை’ எனப் பல படங்களில் நாம் பார்த்ததுதான்.. படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கவும் அதுவே காரணமாக உள்ளது. ரஜினியின் ‘கெட்டப்’! வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்களில் காட்சியாக்கம் ‘புதிதாக ஏதோ ஒன்றை’க் கண்ட உணர்வை ஏற்படுத்தும். விஎஃப்எக்ஸும் டிஐயும் அதில் முக்கியப் பங்கு வகிக்கும். இதிலும் அப்படியே. ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், தயாரிப்பு வடிவமைப்பாளர் சதிஸ்குமார், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அதனைச் சாதித்திருக்கிறது. அனிருத்தின் இசையில் ‘சிக்குடு’, ‘மோனிகா’ பாடல்கள் எளிதாக ஈர்க்கின்றன. பின்னணி இசை சில காட்சிகளில் பிரமாண்டத்தை உணர வைக்கிறது; ஆனாலும் பல இடங்களில் இரைச்சல் அதிகம். இப்படத்தின் எழுத்தாக்கத்தைச் சந்துரு அன்பழகனோடு இணைந்து கையாண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படத்திலும் கிளாசிக் திரையிசைப் பாடல்களைப் புகுத்துகிற வேலையைச் செய்திருக்கிறார் இயக்குனர். ‘வா வா பக்கம் வா’ என ‘தங்கமகன்’ படத்தின் பாடல் ஒலிக்கிற அந்த இடைவேளைக்கு முன்பான காட்சி மண்டைக்குள் ‘ஜிவ்வ்..’வென்ற உணர்வை ஏற்படுத்துகிறது. போலவே, இடைவேளை ‘ப்ளாக்’கில் ரஜினியின் ஸ்டைலான நடிப்பு அசத்தல். அதேநேரத்தில், ‘இதேமாதிரி படம் முழுக்க விஷயங்களைக் கொட்டினா இன்னாவாம்’ என்று ரசிகர்கள் புலம்புகிற வகையில் இதர காட்சிகள் இருக்கின்றன. அந்த காட்சிகளைக் காண்கிறபோது வேறு கதாசிரியர்கள், திரைக்கதையாசிரியர்களின் பங்களிப்பைப் பெறலாமே என்ற எண்ணம் மனதில் விஸ்வரூபம் எடுக்கிறது. நட்சத்திர அந்தஸ்து உள்ள நாயகர்களைத் திரையில் காட்டுகிறபோது, முந்தைய படங்களில் அவர்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்த விஷயங்களையும் தொட்டுச் சென்றாக வேண்டும். அதோடு தனது கதை சொல்லலையும் இணைத்து சமநிலையை உருவாக்குவதில் தடுமாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணியில் இருக்கிற ஒரு நாயகனாக ரஜினியின் ஸ்டைல், ஆக்ஷன் பில்டப் எல்லாம் வழக்கமானதாக அமைந்திருக்கின்றன. அவற்றைத் தாண்டி, மிகச்சில இடங்களில் அவரது நடிப்பு சிரிக்க வைக்கிறது. ஒரு ‘பவர்ஹவுஸ்’ ஆக படத்தைத் தாங்கி நிற்கிறது. இந்த படத்தில் வில்லன்கள் என்று சிலர் வந்து போகின்றனர். அவர்களில் இயக்குனர் முதன்மையாக முன்னிறுத்துவது ‘கிங்’ என்று தெலுங்கு சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் நாகார்ஜுனா. ஆனால், அவர் சண்டையிடும்போது ‘வில்லனாக’ நம் கண்களுக்கு தெரிவதே இல்லை. அது இப்படத்தின் தலையாய ‘மைனஸ்’களில் ஒன்று. தனது இருப்பால் அந்தக் குறையைச் சமன் செய்திருக்கிறார் மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர். ‘தயாள்’ ஆக வந்து மிரட்டியிருக்கிறார். ரக்ஷிதா ராம், கண்ணா ரவி வருகிற காட்சிகள் புதிதாக இல்லை; அதேநேரத்தில், அவை சில ரசிகர்களை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்குகின்றன என்பதை மறுக்க முடியாது. சத்யராஜுக்கு இதில் பெரிதாகக் காட்சிகள் இல்லை. அதேநேரத்தில், கதையின் அச்சாணிப் பாத்திரமாக வந்து போயிருக்கிறார். ஷ்ருதிஹாசன் இப்படத்தில் ஆங்காங்கே வருகிறார். அவரது சோகமே உருவான பாவனைகள் நம்மை அயர்ச்சியுறச் செய்கின்றன. உபேந்திரா, அமீர்கான் இருவரும் ‘கேமியோ’வாக வந்து ‘கைத்தட்டல்’களை அள்ள முயற்சித்திருக்கின்றனர். இரண்டாமவர் அதனை எளிதாகச் சாதித்திருக்கிறார். இதுபோக மகேஷ் மஞ்ச்ரேகர், சார்லி, பாபுராஜ், காளி வெங்கட், தமிழ், ரிஷிகாந்த், திலீபன், ரொபா மோனிகா, மோனிஷா ப்ளெஸ்ஸி, மாறன் எனச் சிலர் இப்படத்தில் உண்டு. அவர்களது காட்சிகளில் பெரிதாக அதிருப்தி இல்லை. அதேநேரத்தில், அவர்களில் பலருக்குத் தனித்துவமான பாத்திர வார்ப்பு அமையாதது ‘மைனஸ்’ தான். ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்திய ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் அதிகமாக இடம்பெறாதது, ரஜினி – சத்யராஜ் நட்பு பிணைப்பைத் திறம்படக் காட்டாதது, இதற்கு முன்பான ‘லோ.க.’ படங்களில் உள்ள சில விஷயங்கள் இதிலும் ‘ரிப்பீட்’ ஆகியிருப்பது என ‘கூலி’யில் சில குறைகளைப் பட்டியலிட முடியும். அவற்றைக் கடந்து ‘ஓகே’ எனும்படியான திரையனுபவத்தைத் தருகிறது இப்படம். ’ஆஹா..’, ‘ஓஹோ..’ எனப் புகழும்படியாக ‘கூலி’யை உருவாக்கியிருந்தால், ரஜினியின் ஐம்பதாண்டு காலத் திரைப் பங்களிப்பை இன்னும் ‘அபாரமாக’ கொண்டாடலாம்.. அந்த வாய்ப்பினைத் தவறவிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே சொன்னது போல, ‘ஆயிரம் கோடி வசூல்’ இலக்கை எட்டுகிற ரேஸில் ‘கூலி’ அடைகிற இடம் என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஒருவேளை அந்த இலக்கு இல்லாமல் களமிறங்கியிருந்தால் கூட வெற்றி எளிதாக வாய்த்திருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது இப்படம் தருகிற திரையனுபவம்..! https://minnambalam.com/rajinikanth-coolie-movie-review/
-
ஐநாவைக் கையாள்வது ? - நிலாந்தன்
ஐநாவைக் கையாள்வது ? - நிலாந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளன. தமிழரசுக் கட்சியின் கையெழுத்து இல்லை என்பது அடிப்படையில் ஒரு பலவீனம். அதேசமயம் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்ற முடிவை அறிவித்த பொழுது சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின்படி தமிழரசுக் கட்சியானது மனித உரிமைகள் பேரவையோடு தனிக் கட்சியாக என்கேஜ் பண்ணப் போகிறது என்று தெரிகிறது. இந்த நிலைப்பாடு, தன்னை ஒரு பெரிய அண்ணனாகக் கருதும் மனோ நிலையில் இருந்துதான் தோன்றுகிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி அவ்வாறான மூத்த அண்ணன் மனோநிலையைத் தொடர்ந்து பேணி வருகிறது. கடந்த 16 ஆண்டு காலத்தில் தமிழ் அரசியலில் ஏற்பட்ட தேக்கங்களுக்கும் தோல்விகளுக்கும் அதுதான் பிரதான காரணம். கடிதத்தில் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு அவர்கள் வேறு காரணங்களைக் கூறக்கூடும். உதாரணமாக முன்னணி தான் ஒரு கடிதத்தைத் தயாரித்து விட்டு அதில் கையெழுத்து போடுமாறு தங்களைக் கேட்டது என்ற ஒரு குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச் சாட்டு, கடிதத்தின் வரைவை முன்னணி கட்சித் தலைமைக்கு அனுப்பியதோடு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அனுப்பியதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சிக்கு மாறாக முடிவு எடுக்கத் தூண்டும் உள்நோக்கம் அவர்களிடம் இருந்தது என்ற சந்தேகம். மூன்றாவது குற்றச் சாட்டு, கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையெழுத்திடுமா இல்லையா என்ற விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் உள்நோக்கம் முன்னணியிடம் இருந்தது என்ற சந்தேகம். அந்த சந்தேகத்தை பலப்படுத்தும் விதத்தில் முன்னணியின் மேடைப் பேச்சுகளும் சமூகவலைத்தள உரையாடல்களும் காணப்பட்டமை. அதாவது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்களுடைய கோரிக்கைகளுக்கு எதிராகத் துரோகம் செய்யும் ஒரு கட்சியாகச் சித்தரிக்கும் விதத்தில் விமர்சனங்களை முன்வைத்தமை என்ற குற்றச்சாட்டு. இக் குற்றச்சாட்டுகளில் ஓரளவுக்கு உண்மை உண்டு. ஆனாலும் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு பிரதான காரணம் கடந்த 16 ஆண்டுகளாக இருந்துவரும் அதே காரணம்தான். அதாவது தானே பெரிய கட்சி, தானே முதன்மைக் கட்சி என்ற நினைப்பு. அவ்வாறு நினைக்கத்தக்க பெரும்பான்மை அவர்களிடம் உண்டு என்பது உண்மை. ஆனால் தமிழ்த் தேசிய அரசியலானது கட்சி போட்டிகளுக்கூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய வழமையான,தொழில்சார் மிதவாத அரசியல் அல்ல. மாறாக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் அரசியல். இதில் வெளி உலகத்தை அணுகும் பொழுது தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றாக நிற்க வேண்டியது அவசியம். இந்த விடயத்தில் முதன்மைக் கட்சியாகவும் பிரதான கட்சியாகவும் காணப்படும் தமிழரசுக் கட்சிக்குத்தான் அந்தப் பொறுப்பு உண்டு. அவர்கள் தான் அந்தப் பொறுப்பை உணர்ந்து ஒரு மூத்த அண்ணனை போல ஏனைய கட்சிகளுக்கு வழிகாட்ட வேண்டும். ஐநாவைக் கையாளும் விடயத்தில் தாங்களே முன்கை எடுத்து விவகாரங்களைக் கையாள வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறிய ஒரு பின்னணிக்குள்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சிவில் சமூகங்களும் அந்த விவகாரத்தைக் கையில் எடுத்தன. அதைவிட முக்கியமாக 2015 ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையிலும் தமிழரசுக் கட்சி அந்த விடயத்தைப் பிழையாகக் கையாண்டது என்ற அனுபவம் உண்டு. ஐநாவின் 30/1 தீர்மானத்தின் பிரகாரம் நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டு தமிழரசுக் கட்சி, நிலைமாறு கால நீதியின் பங்காளியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செயற்பட்டது. ஆனால் அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று பின்னர் 2021இல் சுமந்திரன் கூறினார். எனவே தமிழரசுக் கட்சி ஐநாவைக் கையாள்வதில் ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயம் தமிழரசுக் கட்சி தவறு விடுகிறது என்று கூறிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உருப்படியாக எதையும் செய்திருக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதும்போது அந்தக் கடிதத்தின் பிரதான கோரிக்கைகளை முன்மொழிந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். பொறுப்புக் கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பது முதலாவது பிரதான கோரிக்கை.இரண்டாவது, உருவாக்கப்படும் விசாரணை பொறிமுறையானது காலவரையறைக்குட்பட்டு இயங்க வேண்டும் என்பது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளிலும் இந்தக் கோரிக்கைகளை நோக்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த அளவுக்கு உழைத்திருக்கிறது? மனித உரிமைகள் பேரவைக்குள் இருந்து இலங்கை இனப்பிரச்சினையை ஐநா பொதுச் செயலர் மீண்டும் பொதுச் சபைக்கு பாரப்படுத்தி, அங்கிருந்து அதை பன்னாட்டு நீதிமன்றங்களுக்கு பாரப்படுத்தப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாகும். ஒரு கடிதம் எழுதினால் மட்டும் அதை ஐ நா செய்து விடாது. மாறாக ஐநாவில் தீர்மானங்களை எடுக்கும் நாடுகளை நோக்கி லொபி செய்ய வேண்டும்.அதற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த விடயத்தில் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது? இதுதான் பிரச்சினை. தமிழரசுக் கட்சி போகிற வழி பிழையானது என்றால் சரியான வழியைக் காட்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அந்த வழியில் தன்னையும் கட்டியெழுப்பி தமிழ் மக்களையும் கட்டியெழுப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை எனவே ஐநாவைக் கையாளும் விடயத்தில் இரண்டு பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளும் வெவ்வேறு விகிதத்தில் பிழை விட்டிருக்கின்றன. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒப்பீட்டளவில் சரியான விளக்கங்களோடும் சரியான கொள்கை முடிவுகளோடும் காணப்படுகின்றது.ஆனால் அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களிடம் உழைப்பு இல்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பும் விடயம் விவகாரமாக மாறியது.இந்த விடயத்தில் சிவில் சமூகங்களின் பங்களிப்பைப் பற்றியும் சொல்ல வேண்டும். சிவில் சமூகங்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியிடம் ஒருவித ஒவ்வாமை உண்டு. இது சம்பந்தரின் காலத்தில் இருந்தே தொடங்குகின்றது. அதற்கு ஆழமான ஒரு காரணம் உண்டு. 2010இல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின் அப்பொழுது காணப்பட்ட சிவில் சமூகங்கள் பெருமளவுக்கு முன்னணிக்கு ஆதரவாகக் காணப்பட்டன.எனவே அதன் தர்க்கபூர்வ விளைவாக அவை சம்பந்தருக்கு எதிராகவும் காணப்பட்டன. இந்தப் போக்கை இன்னும் ஆழமாகப் பார்த்தால் அப்பொழுது காணப்பட்ட சிவில் சமூகங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பலப்படுத்தும் நோக்கிலானவை என்றுதான் கூறலாம். மறைந்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களை இணைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் சிவில் சமூக அமையம்,2015ல் இருந்து செயற்பட்ட தமிழ் மக்கள் பேரவை போன்றவற்றை இங்கு சுட்டிக்காட்டலாம். இதனால் சிவில் சமூகங்கள் தொடர்பில் சம்பந்தரிடம் ஒருவித ஒவ்வாமை உணர்வு இருந்தது.2013ஆம் ஆண்டு முதன்முதலாக கூட்டமைப்பையும் முன்னணியையும் ஒரே அரங்கினுள் கொண்டு வந்த, மன்னாரில் இடம் பெற்ற சந்திப்பின்போது அதற்குத் தலைமை தாங்கிய முன்னாள் மன்னார் ஆயரை நோக்கி சம்பந்தர் என்ன சொன்னார்? “பிஷப் நீங்கள் சொல்லுங்கோ. ஆனால் முடிவெடுக்கப் போறது நாங்கள்தான்” என்று சொன்னார். இந்த நிலைப்பாடுதான் இன்றுவரை தமிழரசுக் கட்சியிடம் உள்ளது. குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் பொது வேட்பாளரின் விடையத்திலும் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் சுமந்திரன் அணியானது பொது வேட்பாளரை ஒரு பொது எதிரிபோல பார்த்தது.பொது வேட்பாளரை முன்னிறுத்திய சிவில் சமூகங்களை ஒவ்வாமை உணர்வோடு மட்டுமல்ல பகை உணர்வோடு அணுகியது.சுமந்திரன் பகிரங்கமாக மேடைகளில் சிவில் சமூகத்தைத் தாக்கிப் பேசினார். இத்தனைக்கும் அவர் மேடை ஏறி ஆதரித்த சஜித் பிரேமதாச ஐநா மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு எதிரான நிலைப்பாட்டோடு காணப்பட்டார். சிவில் சமூகங்கள் தங்களுடைய பெரிய அண்ணன் மனோநிலையை கேள்விக்கு உள்ளாக்குகின்றன என்று தமிழரசுக் கட்சி நம்புகின்றது. மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பலவீனமடையும் பொழுது சிவில் சமூகங்கள் முன்னணியைப் பலப்படுத்துகின்றன என்றும் தமிழரசுக் கட்சி கருதுகின்றது. 2019இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் பேரவை ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கியது.ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கனவு அப்பொழுதுதான் செய்முறைக்கு வந்தது.ஆனால் அந்தச் சுயாதீனக் குழுவை சம்பந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை மட்டுமல்ல, யாழ்ப்பாணம் சின்மயா மிஷினில் நடந்த ஒரு சந்திப்பின்போது சிவிகே சிவஞானம்,சிவில் சமூகப் பிரதிநிதிகளைப் பகை உணர்வோடு அணுகினார். எனவே தமிழரசுக் கட்சி கடந்த 16 ஆண்டுகளிலும் சிவில் சமூகங்களை சந்தேகத்தோடு பார்க்கின்றது.அவை தன்னுடைய முதன்மையைக் கேள்விக்குள்ளாக்கி, முன்னணியைத் தமக்கு எதிராகப் பலப்படுத்துகின்றன என்ற பயம் அவர்களுக்கு உண்டு.அதே பயந்தான் கடந்த வாரம் அனுப்பப்பட்ட கடித விடயத்திலும் அவர்கள் எடுத்த முடிவின் மீது அதிகம் செல்வாக்கு செலுத்தியதா? ஒரு பெரிய கட்சி,மூத்த கட்சி சிவில் சமூகங்கள் தொடர்பாக அவ்வாறான ஒவ்வாமை உணர்வோடும் விரோத உணர்வோடும் காணப்படுவது என்பது தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிந்த போக்கைக் காட்டுகின்றது.பொதுவாக சிவில் சமூகங்கள் ஏன் அரசியலில் நேரடியாகத் தலையிடும் நிலைமை ஏற்படுகின்றது? அரசியல் கட்சிகள் தங்களுக்குரிய பொறுப்பை உணர்ந்து வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளத் தவறும் போதுதான், சிவில் சமூகங்கள் கட்சிகளின் மீது தார்மீகத் தலையீட்டைச் செய்ய வேண்டி வருகிறது. ஆனால் அந்தத் தார்மீகத் தலையீட்டை தமிழரசுக் கட்சி ஒரு தொந்தரவாக,ஒரு வில்லங்கமாக ஏரிச்சலோடு பார்க்கின்றதா? https://www.nillanthan.com/7636/
-
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் முற்பகுதியில் திறப்பு
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் முற்பகுதியில் திறப்பு August 14, 2025 11:35 am வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வரும் செப்ரெம்பர் முற்பகுதிக்குள் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான திருத்தப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவுறுத்தப்படும் என்று வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக அமைச்சர் நேற்று பார்வையிட்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். ‘ கடந்த 8வருடங்களுக்கு முன்பு வவுனியாவில் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீட்டில் அமைக்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் இதுவரை இயங்காமலுள்ளது. எனவே இம்மாத இறுதிக்குள் இதில் செய்யவேண்டிய திருத்தப் பணிகளைச் செய்துவிட்டு எதிர்வரும் மாதம் முற்பகுதிக்குள் அதனைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே வவுனியா மொத்த வியாபாரச் சந்தையில் உள்ள 35வியாபாரிகளுக்கு மத்தியநிலையத்தில் உள்ள கடைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மிகுதி 15 கடைகள் விவசாய அமைப்புகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்- எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். https://oruvan.com/vavuniya-economic-center-to-open-in-early-september/
-
இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள மயிலிட்டி வரசித்தி விநாயகருக்கு 35 ஆண்டுகளின் பின்னர் பொங்கல்
இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள மயிலிட்டி வரசித்தி விநாயகருக்கு 35 ஆண்டுகளின் பின்னர் பொங்கல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, இடித்தழிக்கப்பட்டு தற்போதுவரை விடுவிக்கப்படாதுள்ள மயிலிட்டி அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு, இராணுவ முடகம்பி வேலிக்கு முன்பாக 35 ஆண்டுகளின் பின்னர் பொங்கல் பொங்கி படையலிடப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் மீது 1990ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டி கிராமம் உள்ளிட்ட பல கிராம மக்கள் இரவோடு இரவாக தமது பூர்வீக இடத்தை விட்டு அகதிகளாக துரத்தியடிக்கப்பட்டனர். இதன்போது வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் என கோடான கோடி ரூபா பெறுமதியாக சொத்துகளை விட்டது விட்டவாறே மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். அவ்வாறே பருத்தித்துறை-பொன்னாலை பிரதான வீதியோரமாக ஐந்து தளங்களைக் கொண்ட இராசகோபுரத்துடன் அமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மயிலிட்டி அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயமும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படாதுள்ளது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காலத்தில் குறித்த ஆலயம் முற்றிலுமாக இடித்தழிக்கப்பட்டு அந்த பகுதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய தீர்த்தக் கிணறு மட்டும் சிதைவுகளுடன் எஞ்சியுள்ள நிலையில் இராணுவத்தின் முள்வேலிக்கு முன்பாக அண்மையில் ஆலயத்தின் பழைய தோற்றத்துடன் கூடிய பதாகை வைக்கப்பட்டு அதற்கு முன்பாக பிள்ளையார் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த ஆலயத்தின் பூசகராகச் செயற்பட்டு வந்தவரை தேடிப்பிடித்து அழைத்துவந்து கடந்த செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. தங்கள் இஷ்ட தெய்வமான வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடம் மிகவிரைவில் விடுவிக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பூசை வழிபாடுகளில் பங்கேற்றிருந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://newuthayan.com/article/இராணுவ_ஆக்கிரமிப்பிலுள்ள_மயிலிட்டி_வரசித்தி_விநாயகருக்கு_35_ஆண்டுகளின்_பின்னர்_பொங்கல்#google_vignette
-
மயிலிட்டித் துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களால் வடக்கு மீனவர்கள் அந்தரிப்பு
மயிலிட்டித் துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களால் வடக்கு மீனவர்கள் அந்தரிப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் சரமாரிக் குற்றச்சாட்டு மயிலிட்டித் துறைமுகத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அதீத ஆக்கிரமிப்புக் காரணமாகவும், நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய றோலர்களாலும் தாம் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாக வடமாகாண மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தெல்லிப்பழை பிரதேசசெயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, மயிலிட்டித் துறைமுகம் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாகவும், அதைத் தம்மால் பயன்படுத்த முடியாதுள்ளதாகவும் வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் மீனவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- மயிலிட்டித் துறைமுகத்தை சீரமைத்துத்தரும் போது, அதன்மூலம் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். வடக்கு மீனவர்களின் பொருளாதாரம் உயரும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், அந்தத் துறைமுகத்தின் முழுப் பயனையும் தென்னிலங்கை மீனவர்கள்தான் அனுபவிக்கின்றனர். வடக்கு மீனவர்களின் படகுகள் கட்டுவதற்குப் போதிய இடமில்லை. மிகச்சிறிய இடமொன்றே வழங்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்களின்போது அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட றோலர் படகுகளும் அங்கே கட்டப்பட்டுள்ளன. அவையும் எமது சிறிய படகுகளுடன் மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன - என்றனர். இதையடுத்து, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் முடிந்ததும், மயிலிட்டித்துறை முகத்துக்குக் கண்காணிப்புப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள களநிலைமைகளைப் பார்வையிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். இதற்கு அமைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும். நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வலிகாமம் வடக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு வின்தலைவருமான ஸ்ரீபவானந்தராஜா, வலிகாமம் வடக்குப் பிரதேசசபையின் தவிசாளர் சோ.சுகிர்தன். தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் திருமதி சி.சுதீஸ்னர், வலிகாமம் வடக்குப் பிரதேசசபையின் செயலாளர் சி.சிவானந்தன், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் தெல்லிப்பழைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் நேரடியாகக் களவிஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தனர். https://newuthayan.com/article/மயிலிட்டித்_துறைமுகத்தில்_தென்னிலங்கை_மீனவர்களால்_வடக்கு_மீனவர்கள்_அந்தரிப்பு
-
பிள்ளையானின் துப்பாக்கி நண்பர் காத்தான்குடியில் கைது!
பிள்ளையானின் துப்பாக்கி நண்பர் காத்தான்குடியில் கைது! adminAugust 14, 2025 பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை காத்தான்குடியில் வைத்து குற்றப் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று புதன்கிழமை (13.08.25) மாலை சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்பிரல் ஏழாம் திகதி கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித்தை அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து nசன்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்டவர் கடந்த 2024 ஜூன் 17ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தார். இதனையடுத்து அவரை கைது செய்து மூன்று நாள் காவற்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரிடமிருந்து அந்த கைதுப்பாக்கியை மீட்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/219270/
-
எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்!
எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்! Vhg ஆகஸ்ட் 13, 2025 (-பசீர் காக்கா -) "ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது." இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ் .எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம். இதனைச் சொன்னால் பரபரப்புச் செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே உருவாக்கி விட்டது.இதனையே நாமும் செய்வதில் என்ன தவறு? என இன்றைய youtube காரர்கள் கேட்கக்கூடும். இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்கு கேற்றவகையில் பெறும் கூலி, காணி உரிமை,பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எட்டிய தூரத்திலேயே மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டு சிவம் அண்ணரின் போராட்டப் பங்களிப்புக் குறித்து அவரது இறுதிச் சடங்கு முடியும் வரை அமைதி காப்பதே எமது கடமை என முடிவெடுத்தேன். பொதுவாக 1990 க்குப் பின் பங்களித்தவர்கள் தங்களது ஊகங்கள், சந்தேகங்களை உண்மையானவை என நிறுவ முயன்று வரலாற்றைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். அவர்களாவது பங்களித்தவர்கள் என்ற வகையில் விடலாமென்றால் போராடத் துணிச்சல் அற்று களத்திலிறங்கத் தயாரில்லாமல் தேவலோக வாழ்க்கை தேடித் திரிந்தவர்களும் சிவமண்ணரின் வரலாற்றில் குழப்பத்தை உருவாக்க முயல்கின்றார்கள். அதனால்தான் 78 ல் இயக்கத்தில் இணைந்து (76 அல்ல ) பின்னர் விலகிய பின் தனிப்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்ட (சாவகச்சேரி பகுதியில் ) சிவம் என்பவரின் வரலாற்றுப் பெட்டியை சிவம் அண்ணர் என்ற போராட்ட இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள். அதேபோல சிவத்தான் என்ற பெயரில் மட்டக்களப்பு அணியிலிருந்து வடக்கில் கணிசமான பங்களிப்பை செய்த பின் கருணா அம்மானுடன் போனவரின் வரலாற்றை இதே இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள் 1990 பின் பங்களித்தவர்கள். தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் தங்களது பங்களிப்பை செய்ய முனைந்தவர்களை அவதானித்தால் அவர்கள் பொதுவாக 17 வயது முடிந்த பின் போராட வேண்டுமென முடிவெடுத்திருப்பார்கள். தாம் எதிர்பார்த்த வகையில் எல்லாம் நடக்கவில்லை என்பதாலோ, வேறு பல்வேறு காரணங்களாலோ 33- 34 வயதில் போரா ட்டத்திலிருந்து விலகி விடுவார்கள். பின்னர் அவர்கள் சொந்த வாழ்க்கையில் கூடிய கவனமெடுப்பர். எங்கள் சிவமண்ணாவோ அந்த 34 வயதில் போராளியானவர். 1983 ல் இந்தியா வழங்கிய இரண்டாவது முகாமில் பயிற்சி பெற்றவர். 1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைக் தொடர்ந்து தமிழர் தாயகமே தமிழர்களுக்குப் பாதுகாப்பு என எண்ணி மலையகம் – பசறையிலிருந்து வடகிழக்குக்கு இடம் பெயர்ந்தோர்களில் இவரும் ஒருவர். இவர் குடியேறிய இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான புல்லுமலை. எப்போதுமே நாம் ஓடிக்கொண்டிருக்கமால் எதிர்த்து நின்று போராட வேண்டும் என்ற தீர்மானத்தை செயற்படுத்த அவர் தேர்ந்தெடுத்த இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள். சிறையிலிருந்து தப்பிப்பது என்பது வேறு சிறையை உடைத்து அங்கிருந்து கைதியை விடுவிப்பது என்பது வேறு. வெலிக்கடைப் படுகொலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிர்மலாவை மீட்டெடுத்ததையே சிறையுடைப்பு என்று சொல்லலாம். 1.துவிச்சக்கர வண்டியில் சென்று மேற்கொள்ளப்பட்ட சிறையுடைப்பு என்ற நடவடிக்கை என்று உலகில் வேறுறெதனையையும் சுட்டிகாட்ட இயலாது. 2. இரண்டே இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. 3.மீட்கப்பட்டவரை துவிச்சக்கர வண்டியிலேயே கொண்டு சென்றமை என்ற வரலாறு இந்த நடவடிக்கைக்கு உண்டு. மட்டக்களப்பு சிறைக்குள் சென்ற நாலு போராளிகளில் ஒருவரான சிவமண்ணார் தனது பலத்தை திரட்டி காலாலேயே உதைத்து இக் கதவை உடைத்து நிர்மலா வெளியில் வர உதவினார். நிர்மலா எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த போது தன்னை அடையாளம் காட்டும் வகையிலான நடவடிக்கையை நிர்மலா மேற்கொண்டார். இந் நடவடிக்கைக்காகத் திட்டமிடும்போது சிறைக்காவலருக்கான சீருடை அணிவதற்குப் பொருத்தமான உடற்கட்டுடையவராகவும், சிங்களம் தெரிந்தவராகவும் இருந்ததனால் இவரையே முதன்மையானவராக கொண்டு திட்டமிடப்பட்டது சிறைக் கதவைத் திறக்க முன்னர் அதிலுள்ள சிறு ஓட்டைவழியாக உள்ளிருந்து வெளியே பார்ப்பார்கள்.அவ்வேளை வேறு சிறையிலிருந்து கைதிகளைக் கொண்டு வருபவர் போல ஒருவர் தோற்றமளிக்க வேண்டும். தனக்கான பணியை இவர் மிடுக்குடன் மேற்கொண்டார். கதவு திறக்கும் வேளையில்தான் நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்டு கதவைமூட முயன்றனர் சிறைக்காவலர்கள்.எனினும் அந்த போராட்டத்திலும் சிவமண்ணன் தனது பங்கை காத்திரமாக வெளிப்படுத்தினார். இவ் வேளையில் தான் சிறையிலிருக்கும் நிர்மலாவை மீட்க்கத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர்ந்த கடமையிலிருந்த பொறுப்பதிகாரி நிர்மலாவின் அறைக்கதவின் திறப்பை எடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார். சிவமண்ணர் உட்பட உள்ளே சென்ற நால்வரும் உடனடியாக செயலில் இறங்கினர்.பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க எடுத்த முயற்சி முடியடிக்கப்பட்டது. தொடர்ந்து சிவமண்ணரின் உதையின் வேகம் ,பலம் என்பன வெளிப்பட காரியம் கை கூடியது. தொடர்ந்து பின்னாளில் நடைபெற்ற களுவாஞ்சிக்குடி மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதல்களிலும் தனது காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தினார் சிவம் அண்ணர். மட்டக்களப்பு - அம்பாறைமாவட்டப் போராளிகள் இவர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். தன்னை விட மிகக் குறைந்த வயதினையும் அனுபவத்தையும் உடைய போராளிகளையும் மதித்தே நடந்து கொண்டார். பல்வேறு துறை நடவடிக்கைகளிலும் இவர் பங்களித்தார் . வாழ்வில் எல்லோருக்கும் ஏற்றம் இறக்கம் உண்டுதானே. எக்காலத்திலும் திமிராகவோ, துவண்டுபோகாமலோ பணியாற்றியவர் என்றால் இவரையே உதாரணம் காட்டலாம் . பிற்காலத்தில் கோப்பாவெளி கிராமத்தில் வாழ்ந்த போது கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம் போன்றவற்றில் தலைவராக விளங்கினார் என்றால் இவரது கடந்த கால வரலாறு பற்றி மக்கள் இவர் மீது கொண்ட பெரும் மதிப்புதான் காரணமாகும். தனது போராட்ட வரலாறு பற்றி இவர் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அவரின் பங்களிப்பு பல்வேறு துறைகளிலும் இருந்தது. என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா? பெறுமதியான எடுத்துக் காட்டான வாழ்வல்லவா அவருடைய வரலாறு. https://www.battinatham.com/2025/08/blog-post_76.html
-
காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு
காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு August 13, 2025 9:59 am தனது காதலனை கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இந்தியா சென்ற இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த பெண் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் அகதியாக வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். தொடர்ந்து மத்திய, மாநில உளவு பிரிவு பொலிஸார் அவரிடம் தீவர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணை தகவல்களின் அடிப்படையில், குறித்த பெண் இலங்கை மன்னார் ஆண்டகுளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா (வயது 25) என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே தனது தாய், தந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்ததும் தெரியவந்தது. அப்போது அவர், ஒரு இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்தமையும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விமானத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி இந்தியா வர விதுர்ஷியாவுக்கு விசா கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது. எனினும், தான் காதலித்த வாலிபரை கரம்பிடிக்க தமிழகம் வருவது என அந்தப் பெண் முடிவெடுத்து உள்ளார். இதற்காக அப்பெண் தனது நகையை விற்று இரண்டு லட்சம் ரூபாய் (இலங்கை பணம்) திரட்டி படகோட்டியிடம் கொடுத்து அவரது ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ஏறி அரிச்சல்முனைக்கு தப்பி வந்ததாக தெரிவித்து உள்ளார். அந்த பெண்ணை இறக்கிவிட்டு படகோட்டி மீண்டும் இலங்கையை நோக்கி தப்பிச் சென்றுவிட்டதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அந்த பெண் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டார். https://oruvan.com/woman-who-left-sri-lanka-for-love-detained-in-refugee-camp/
-
வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.!
வீரமுனை படுகொலையும் மறுக்கப்பட்ட நீதியும்.! கிருஷ்ணகுமார் ஆகஸ்ட் 13, 2025 வீரமுனை என்பது கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையானதும் பாரம்பரியமானதுமான பிரதேசமாகும். சோழ இளவரசிகளில் ஒருவரான சீர்பாத தேவியினால் 08ஆம் நூற்றாண்டில் அபிவிருத்திசெய்யப்பட்ட மிகவும் பாரம்பரியத்தினைக்கொண்ட கிராமமாகும். நூறு வீதிம் இந்துக்களைக்கொண்ட இக்கிராமத்தின் ஆலயமானது வரலாற்றுசிறப்பு மிக்கது மட்டுமல்ல கண்டியை தளமாக கொண்டு ஆட்சிசெய்த வாலசிங்கன் மன்னனின் மகன் இராஜசிங்கனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பொன் விளையும் விவசாய காணி பட்டயம் செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக சம்மாந்துறையினை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல சிங்கள பேரினவாதிகளுக்கும் இந்த ஆலயத்தின் மீது தொடர்ச்சியான பார்வையிருந்தேவந்தது. நானும் வீரமுனையை பிறப்பிடமாக கொண்டவன். 1990ஆம் ஆண்டுவரையில் வீரமுனையிலேயே இருந்துவந்தோம். வீரமுனை-சம்மாந்துறை எல்லைப்பகுதியிலேயே எங்கள் வசிப்பிடமிருந்தது. அதன்காரணமாக நான் அறிந்த காலம் தொடக்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்தோம். குறிப்பாக 1988ஆம் ஆண்டு ஒரு தடவை வீரமுனை தீக்கிரையாக்கப்பட்டபோது எங்களது வீட்டில் இருந்த பொருட்களை எங்களது வீட்டுக்கு அருகிலிருந்து சகோதர இனத்தவர்கள் அள்ளிச்சென்றதை கண்டதாக எனது தந்தையார் தெரிவித்தார். இதேபோன்று எனது தந்தையின் மோட்டார் சைக்கிளும் அவ்வாறே ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டது. நாங்கள் வீரமுனையில் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவந்த பிரச்சினையே 1990ஆம் ஆண்டு பூதாகரமான அழித்தொழிப்பாக அமைந்தது. 1989ஆம் ஆண்டுக்கும் 1990 ஆண்டுக்கும் இடையில் வீரமுனை மக்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்தார்கள். இரவோடு இரவாக பல தடவைகள் இடம்பெயர்ந்த அனுபவங்கள் எனக்கும் உள்ளது.வீரமுனையிலிருந்து காரைதீவுக்கு பல தடவைகள் இடம்பெயர்ந்திருக்கின்றோம். இதேபோன்று வீரச்சோலைக்கும் இடம்பெயர்ந்து சென்ற அனுபவம் இருக்கின்றது. அதிலும் 1990ஆம் ஆண்டு ஜுன்,ஜுலை,ஆகஸ்ட் மாதம் என்பது வீரமுனை மக்களினால் என்றும் மறக்கமுடியாத நாளாகும். அம்பாறையிலிருந்து இராணுவம் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தபோது பல்வேறு அட்டூழியங்களை செய்ததுடன் அதற்கு துணையாக முஸ்லிம் ஊர்காவல் படையினரும் மாறியிருந்தனர். வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் எங்கள் குடும்பம் இருந்தது. இதனைப்போன்று வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயம் மற்றும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றில் வீரமுனை,வீரச்சோலை,மல்வத்தை,வளத்தாப்பிட்டி,மல்லிகைத்தீவு ஆகிய பகுதிகளிலிருந்து தமது உயிரை பாதுகாப்பதற்காக அனைவரும் தஞ்சமடைந்திருந்தனர். முகாமிலிருந்த காலப்பகுதியில் தினமும் அழுகுரல்களே கேட்கும்.முகாமிலிருந்து தமது வீடுகளுக்கு சென்றவர்களை காணவில்லை,முகாமிலிருந்து வெளியில் சென்றவர்களை கொண்டுபோரார்கள் என்று தினமும் அழுகுரல்களே ஒலிக்கும். இரவு வேளைகளில் அழுகுரல்களே கேட்கும். அச்சம் நிறைந்த சூழலே காணப்படும். எங்களது முகாம்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் வந்துசெல்லும் செஞ்சிலுவை சங்கம் வந்துசென்றால் அதன் பின்னர் இராணுவ வாகனங்கள் ஊர்காவல் படையினர் சூழ வருகைதந்து முகாம் முற்றாக சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து இளைஞர்கள்,குடும்பதினர் என பஸ்களில் ஏற்றிச்செல்வார்கள். ஆனால் அவர்களில் யாரும் திரும்ப வரமாட்டார்கள்.எங்களது தந்தையை இரண்டு தடவை கொண்டுசெல்வதற்கு இராணுவம் முயற்சிசெய்தபோது அங்கிருந்த பெண்கள் தமது பாவடைகளுக்குள் மறைத்து எங்களை பாதுகாத்ததை இன்று நினைக்கும்போதும் அச்சம் ஏற்படும். இவ்வாறு பல தடவைகள் எங்களது முகாம்கள் சுற்றிவளைக்கப்பட்டு பஸ்களில் பலர் நூற்றுக்கணக்கானவர்கள் ஏற்றிச்செல்லப்பட்டபோதிலும் அதில் யாரும் திரும்பி வந்ததாக எனக்கு நினைவில் இல்லை. ஒரு தடவை எமது ஆலய வளாகத்திற்குள் மனித தலையொன்று எரிந்த நிலையில் கிடந்ததை இன்றும் மறக்கமுடியாத நினைவு இருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் இராணுவத்தினர் சுற்றிவளைப்புக்கு வரும்போது அவர்களுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் அதும் தமக்கு தெரிந்த நபர்கள் வந்திருப்பதாக அக்காலத்தில் பலர் பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன். வீரமுனை படுகொலை நடைபெற்றபோது விசேட அதிரடிப்படையினரின் உதவியுடனேயே முஸ்லிம் ஊர்காவல் படையினர் வந்ததாக அந்த முகாமிலிருந்த மக்கள் சாட்சி பகிர்ந்தனர். அதுவும் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு வீரமுனை ஆலயம் மற்றும் பாடசாலைகளுக்குள் புகுந்து வெட்டியும் சுட்டும் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்தாக இதனை நேரில் கண்டவர்கள் இன்றும் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த படுகொலைகளுக்கான நீதியான விசாரணைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லையென்பதே அனைவரது கவலையாகவும் இருக்கின்றது. குறிப்பாக இந்த படுகொலைகள் நடைபெற்ற நிலையில் வீரமுனை உட்பட முகாமிலிருந்த மிகுதியான மக்கள் திருக்கோவில்,தம்பிலுவில் போன்ற இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு அகதிமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் வீரமுனை உட்பட அனைத்து கிராமங்களும் முற்றாக சூறையாடப்பட்டது. வீரமுனை மக்கள் வீரமுனைக்கு வரும்போது எதுவும் இல்லாத நிலையிலேயே வந்து குடியேறினார்கள். இவ்வளவு அநியாயங்கள் வீரமுனை மக்களுக்கு அருகில் புட்டும் தேங்காய் பூவுமாக இருந்தவர்களின் உதவியுடன் நிகழ்த்தப்பட்டபோதிலும் அவர்கள் நடந்த அநியாயங்களுக்கு இதுவரையில் தமிழ் மக்களிடம் வருத்தம்கூட தெரிவிக்காத நிலையே இன்றுவரையில் இருந்துவருகின்றது. அதனையும் தாண்டி தமது கிராமத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படவிருந்த வரவேற்பு கோபுரத்தினையும் அமைக்கவிடாமல் தடுக்கும் சக்திகளே அன்று வீரமுனையின் அழிவுக்கு துணையாக நின்றவர்களாக இருக்கலாம் என்பது எனது எண்ணமாகும். வீரமுனை கிராமம் என்பது வெறுமனே வந்தேறுகுடிகள் அல்ல அந்த மண்ணின் பூர்வீக குடிகள். இரு இனங்களும் தங்களுக்குள் ஒன்றுபட்டு வாழ்வதன் ஊடாக எதிர்காலத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தமுடியும். வெறுமனே ஒரு இனத்தின் கலாசாரத்தினையும் பண்பாடுகளை புதைத்துவிட்டு தாங்கள் வாழ நினைத்தால் அது எவ்வாறான நிலைக்கு கொண்டுசெல்லும் என்பதை உண்மையான மனித நேயத்தினை மதிக்கும் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். வீரமுனை மக்கள் தங்களுக்கு நடந்த அநீயாயங்களை மறந்து தமது சக மதத்தவருடன் கடந்தகால கசப்புகளை மறந்துவாழும் நிலையில் தாங்கள் வரவேற்பு கோபுரம்போன்றவற்றிற்கு காட்டும் எதிர்ப்பானது எதிர்கால சமூகத்தின் மனங்கள் வடுக்களை ஏற்படுத்தும் என்பதை இனியாவது உணர்ந்துசெயற்படவேண்டும். தொடரும்…………………. https://www.battinatham.com/2025/08/blog-post_167.html