Everything posted by கிருபன்
-
கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர்- அமெரிக்க இராஜாங்க திணைக்களம்
கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர்- அமெரிக்க இராஜாங்க திணைக்களம் Published By: Rajeeban 13 Aug, 2025 | 10:25 AM கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது. 2024 ம் ஆண்டு சர்வதேச அளவில் காணப்பட்ட மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை நிலவரம் குறித்த அறிக்கையில் சட்டவிரோத படுகொலைகள் குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்த வருடம் முழுவதும் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பொலிஸாரின் பிடியிலிருந்தவேளை பலர் கொல்லப்பட்டனர். விசாரணைகளிற்காக சந்தேகநபர்களை குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் கொண்டுசென்றவேளையிலேயே பல சம்பவங்கள் இடம்பெற்றன. விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் தங்களை தாக்கினார்கள் அல்லது தப்பியோட முயன்றனர் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் ஏழுபேர் பொலிஸாரினால் கைதுசெய்ய்ப்பட்டிருந்தவேளை உயிரிழந்தனர் என தெரிவித்தது. கடந்த வருடம் முழுவதும் 103 இலக்குவைக்கப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.2023 இல் இது 120 ஆக காணப்பட்டது , 2024 இல் குறைவடைந்துள்ளது. மல்வத்துகிரிப்பிட்டிய என்ற இடத்தில் பௌத்தமதகுருவொருவரை கொலை செய்தமைக்காக முன்னாள் இராணுவ கொமாண்டோ கலகர டில்சான் என்பவர் கடந்த வருடம் மார்ச் பத்தாம் திகதி கைதுசெய்யப்பட்டார்.மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்காக தாங்கள் அந்த நபரை அழைத்து சென்றவேளை அவர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்;கியால் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார். , பொலிஸார் திருப்பி தாக்கியவேளை காயமடைந்த அந்த நபர் வத்துபிட்டிவல மருத்துவமனையில் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். சிவில் சமூகத்தினர் இவ்வாறான மரணங்கள் பொலிஸாரின் சட்டவிரோத படுகொலைகள் என்பதற்குள் பொருந்துகின்றன என தெரிவிக்கின்றனர். இவ்வாறான பல சம்பவங்கள் காரணமாக இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு 2023 டிசம்பர் மாதம் பொலிஸாரிற்கு வழிகாட்டுதல்களை வழங்கியது. https://www.virakesari.lk/article/222458
-
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல் 13 Aug, 2025 | 10:49 AM மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது. இந்நிலையில், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவுக்கான ஆயத்த கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பங்குபற்றுதலுடன் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னாயத்த நடவடிக்கைகள் வருடா வருடம் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழமை. இதற்கமைய, வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் தொடர்பில் அழைக்கப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், நீர் மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது. அதேவேளை, சட்டம் ஒழுங்கை பின்பற்றும் வகையில் முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் 06ஆம் திகதி மருத மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,15 ஆம் திகதி திருவிழா திருப்பலி கூட்டுத்திரு பலியாக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் அருட்தந்தை, இராணுவம், பொலிஸார், கடற்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/222459
-
கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் பலி
கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் பலி 13 August 2025 https://cdn.hirunews.lk/Data/News_Images/202508/1755055895_189253_hirunews.jpg கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 513 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் பட்டினியால் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 குழந்தைகள் உட்பட 227 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/414332/89-people-killed-in-israeli-strikes-on-gaza-in-past-24-hours-while-waiting-for-food
-
மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்
மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் 13 August 2025 சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். அதற்கமைய, இந்த விவகாரத்திற்கு இன்று காத்திரமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். அதேநேரம், காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது. https://hirunews.lk/tm/414322/mannar-wind-farm-issue-special-discussion-with-the-president-today
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
ஹர்த்தால் ஒத்திவைப்பு: 18ஆம் திகதியே நடக்கும்! ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால், ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுமந்திரன் அறிவித்துள்ளார். தமிழர்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் நிலைகொண்டுள்ள அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்றும், முத்துஐயன் கட்டுப் பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலில் உயிரிழந்ததாக் கூறப்படும் இளைஞரின் இறப்புக்கு நீதிகோரியும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஹர்த்தாலை நடத்துவதற்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்று மன்னார் மடுத்திருத்தலப் பெருவிழா நடைபெறவுள்ளது. இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் திருவிழா நாளில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு பல தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். குறிப்பாக, ஹர்த்தாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மன்னார் மறைமாவட்டம் வெளிப்படையாக அறிவித்தது. அத்துடன், நல்லூர் உற்சவத்தைக் காரணமாகக் குறிப்பிட்டும், ஹர்த்தாலை பிறிதொரு தினத்துக்கு மாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே, ஹர்த்தால் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/ஹர்த்தால்_ஒத்திவைப்பு:_18ஆம்_திகதியே_நடக்கும்!#google_vignette
-
புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய
புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய adminAugust 12, 2025 புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளாா். காவல்துறை மா அதிபா் பிரியந்த வீரசூரியவை நியமிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த நவம்பர் 2023 ம் ஆண்டு முதல் பதில் பொறுப்பில் பணியாற்றி வருகின்ற வீரசூரிய இலங்கையின் 37வது காவல்துறை மா அதிபா் என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/219167/
-
மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்!
மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் இயங்கும் - அமைச்சர் நம்பிக்கை adminAugust 12, 2025 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க, தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் ஆர்.எச் .உபாலி சமரசிங்க , நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் உபுல் டி சில்வா, பிரதம ஆலோசகர் சாந்தா ஜெய ரட்ண ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள். இக்கலந்தரையாடலில் முன்னதாக வரவேற்பு உரையாற்றிய மாவட்ட செயலர், மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையமானது ரூபா 198.80 மில்லியன் செலவில் நிர்மாணக்கப்பட்டும் தற்போது இயங்காத நிலையில் உள்ளது. யாழ்ப்பாண பொருளாதார வளர்ச்சியில் இந் நிலையம் ஓர் மைல்கல்லாக அமைய வேண்டும். இதனை மீள ஆரம்பிப்பதன் ஊடாக விவசாயம் சார் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். அதற்கு அமைச்சர் முன் வந்து நடவடிக்கை எடுப்பது வரவேற்க்கத்தக்கது என தெரிவித்தார். அதனை தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் மீள ஆரம்பிப்பது மற்றும் அதனை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடவே யாழ்ப்பாணம் வந்துள்ளேன் . இலங்கையை பொறுத்தவரை 18 பொருளாதார மத்திய நிலையங்கள் காணப்படுகிறது. அதில் 14 இயங்கி வருகிறது. வடக்கில் அண்ணளவாக ரூபா. 200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயங்கவில்லை. இந் நிலையம் மக்களுக்கு பொருத்தமான பாதையாக காணப்படவில்லை. பிரதேச செயலகத்தின் கீழ் செயற்பாடுகள் நடைபெறுகிறது. அமைச்சின் கீழ் எந்தவொரு செயற்பாடும் காணப்படவில்லை. இந் நிலையத்ததை மீள அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இக் கலந்துரையாடலில் பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.இக் கலந்துரையாடலுக்கு முன்னராக அமைச்சர் தலைமையிலான குழுவினர் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219192/
-
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்! 12 Aug 2025, 10:19 AM இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழா ஆகியவற்றில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3-ந் தேதி இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இங்கிலாந்தில் பல்கலைக் கழக நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ‘கலைஞர் இருக்கை’ தொடக்க விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இதன் பின்னர் சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சியுடன் இணைந்தது. நீதிக் கட்சியே பின்னர் திராவிடர் கழகமாக மாறியது; திராவிடர் கழகத்தில் இருந்து திமுக உருவானது. பெரியார் அன்று உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், திராவிடர் இயக்கம் குறித்த ஆய்வை மேற்கொள்ள ஒரு முனைவர் பட்ட ஆய்வு மாணவருக்கான Fellowship வழங்குவதற்கான நிதி மூலதனம் (endowment) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நல்கை கலைஞர் பெயரால் வழங்கப்படும். இதற்கான நிதியை முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலினும், அவரது கணவரும் தொழில்முனைவோருமான சபரீசனும் வழங்கியுள்ளனர். இந்த இரு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து லண்டன் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இங்கிலாந்து நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். பின்னர் ஜெர்மன் சென்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். செப்டமப்ர் 15-ந் தேதிக்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு திரும்புவார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். https://minnambalam.com/cm-mk-stalin-to-take-part-in-dravidian-movement-events-at-oxford-and-cambridge-universities-in-uk/
-
கற்பனையில் தமிழ்ச்சமூகம்! — கருணாகரன் —
கற்பனையில் தமிழ்ச்சமூகம்! August 11, 2025 — கருணாகரன் — தமிழ்த்தேசியவாத அரசியல் இன்று இரு கூறாக உள்ளது. (இன்று மட்டுமல்ல, முன்பும் அப்படித்தான். ஆனால் இப்பொழுது அது மிகத் துல்லியமாக முன்வைக்கப்படுகிறது) 1. “மாகாணசபை முறையைத் தீர்வுக்கு ஆரம்பமாக எடுத்துக் கொள்வது. அதுதான் சாத்தியமானது. அதற்கே இந்தியாவின் அனுசரணை அல்லது ஆதரவு இருக்கும். இந்தியாவின் ஆதரவைப் பெற்று, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுத்து, மாகாணசபையின் அதிகாரத்தை முழுமைப்படுத்துவது. குறிப்பாக 13 திருத்தத்தை முழுமையான அமுல்படுத்துவது. அதிலிருந்து படிப்படியாக மேலதிக அதிகாரத்தை – தீர்வை நோக்கிப் பயணிப்பது. இதொரு அரசியற்தொடர் செயற்பாடாகும்..“ என்று வாதிடுவது. 2. “மாகாணசபை என்பதே சூதான ஒரு பொறி. அதனால்தான் விடுதலைப்புலிகள் இயக்கமும் அதனுடைய தலைவர் பிரபாகரனும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அது தமிழ் மக்களின் நலனுக்காகச் செய்யப்படவே இல்லை. இந்திய நலனை முதன்மைப்படுத்திச் செய்யப்பட்ட ஒன்று. இதை அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட 29.07.1987 இலிருந்து சரியாக ஐந்தாவது நாளான 04/08/1987 அன்று, யாழ்ப்பாணம் – சுதுமலையில் வைத்துப் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் பிரபாகரன் சொல்லியிருக்கிறார். தம்முடன் கலந்தாலோசிக்கப்படாமலே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று. அதனால்தான் அந்த ஒப்பந்தத்தையும் மாகாணசபையையும் புலிகள் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அது மட்டுமல்ல, 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கையில் வலியுறுத்தப்பட்ட வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபையோ, அன்று மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களோ இன்று இல்லை. அவற்றில் ஒரு பகுதியை 1990 இல் பிரேமதாச பிடுங்கி விட்டார். புலிகள் இல்லாமலாக்கப்பட்ட 2009 க்குப் பிறகு, மிஞ்சிய அதிகாரத்தைக் கொண்டு, கடந்த 16 ஆண்டுகளில் ஏன் மாகாணசபை முறைமை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை? 2009 க்குப் பிறகு தமிழர்களின் பிரநிதிகளாகச் செயற்பட்ட – மக்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை முறைமையையோ இந்தியாவின் அனுசரணையையோ மறுக்கவில்லையே. அதை நடைமுறைப்படுத்துமாறுதானே கேட்டது. மட்டுமல்ல, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு, அதிகாரத்தைப் பெற்று அதை நடைமுறைப்படுத்தியும் பார்த்ததே! இப்போது கூட மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள். அதிகாரங்களைப் பகிருங்கள் என்று கேட்கப்படுகிறது. ஆனால், அதற்கு அரசாங்கம் தயாரில்லையே. இந்த நிலையில் எப்படி மாகாணசபை முறைமையை நாம் ஏற்றுக் கொள்வது? இந்தப் பலவீனமான – வஞ்சகத்தனமான மாகாணசபை முறையை ஏற்றுக் கொண்டால், தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கான பெறுமதியை இழந்ததாக ஆகிவிடும். அது மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் எமது மக்களின் அரசியல் உரிமையைப் பற்றியோ எமக்கான தீர்வைப் பற்றியோ கவனிக்காது. ஆகவே நாம் மாகாணசபை முறையை ஏற்றுக்கொள்ளாமல், தமிழ் மக்களுடைய அபிலாஷையை நிறைவு செய்யக் கூடிய தீர்வைப் பற்றியே பேச முடியும். அதற்காகவே போராட வேண்டும்” என விவாதிப்பது. இந்த இரண்டு வாதங்களையும் கேட்கும்போது சரிபோலவே தோன்றும். அல்லது ஒவ்வொன்றும் சரிபோலிருக்கும். என்றபடியால்தான் இரண்டு நிலைப்பாட்டுக்கும் ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால், இந்த இரண்டு வாதங்களையும் அல்லது இந்த இரண்டு விடயங்களையும் குறித்து விளக்கமளியுங்கள் என்றால், பலரும் தெளிவற்றுக் குழப்பமடைகிறார்கள். அல்லது திருதிருவென விழிக்கிறார்கள். இந்தத் தெளிவற்ற நிலையும் விளக்க முடியாத தடுமாற்றமும் மக்களுக்கு மட்டுமல்ல, இந்த நிலைப்பாடுகளுக்குத் தலைமையேற்றிருக்கும் அரசியல் தலைவர்களுக்குமில்லை. அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளோருக்கும் இல்லை. அப்படி இருந்திருக்குமானால் அவர்கள் இதுவரையில் அதைத் தெளிவாக முன்வைத்திருப்பர். அப்படி எங்கும் காணவில்லை. மாகாணசபை முறைமையை ஓரளவுக்கு வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிவந்தோராகும். சுரேஸ் பிரேமச்சந்திரனின் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், சுகு ஸ்ரீதரன் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கலாநிதி விக்னேஸ்வரன் – கோபாலகிருஸ்ணன் தரப்பின் கிழக்குத் தமிழர் ஒன்றியம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) போன்றவை வெளிப்படையாகவே மாகாணசபை முறைமையை ஆதரிக்கின்றன. ஏற்கின்றன. இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றுக்குமிடையிலும் வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால், இவை மாகாணசபை முறைமையை ஏற்கின்றன. அதிலிருந்து முழுமையான தீர்வுக்குப் பயணிக்க வேண்டும். அதுவே சாத்தியம் என வலியுறுத்துகின்றவை. இவற்றோடு செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், உதயராசாவின் தலைமையிலான சிறி ரெலோ போன்றவையும் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் தரப்புகளே. தமிழரசுக் கட்சியும் ஏறக்குறைய மாகாணசபை முறைமையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அதை வெளிப்படையாக – உறுதியாகச் சொல்வதற்கு அதனால் முடியவில்லை. அப்படிச் சொன்னால், அது வலியுறுத்தி வரும் சமஸ்டி கோரிக்கைக்கு என்ன நடந்தது என்று எதிரணிகள் (குறிப்பாக ஏனைய தமிழ்க்கட்சிகள்) தலையில் குட்டத் தொடங்கி விடுவார்கள் என்ற அச்சத்தினால் இந்த விடயத்தில் பட்டும்படாமல் உள்ளது. மாகாணசபை முறைமையை முன்தொடக்கமாக ஏற்றுக் கொள்ளலாம். அதுவே சாத்தியமான தொடக்கம் என்று வலியுறுத்தும் தரப்புகள் புலம்பெயர் சூழலிலும் உண்டு. ஆனால், அவை அங்கே வலுவானவையாக இல்லை. அல்லது அந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தக் கூடிய அளவுக்கு அவை வேலைகள் எதையும் செய்வதில்லை. அந்த நிலைப்பாட்டுடன் தாயகத்தில் உள்ள தரப்புகளைப் பலப்படுத்துவமில்லை. தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரையிலும் ஒன்றிரண்டு ஊடங்களில் மட்டும்தான் மாகாணசபை முறைமை அல்லது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்து எழுதப்படுகிறது; பேசப்படுகிறது. இதேவேளை மாகாணசபை முறைமையை வெளிப்படையாக ஆதரிக்கும் தரப்புகளை இந்தியாவின் ஆட்கள் (உளவாளிகள், சார்பு நிலைப்பட்டவர்கள், இந்தியாவின் ஏஜென்டுகள்..) என்று குற்றம்சாட்டப்படுகிறார்கள்; பழித்துரைக்கப்படுகிறார்கள்; சந்தேகிக்கப்படுகிறார்கள். ஆனால் யதார்த்தமான அரசியல் என்பது மாகாணசபையிலிருந்தே தொடங்க முடியும் என்பதுதான். ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கான அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும். இந்தியா அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்வோர், மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்வதற்கு அதனுடைய சக பங்காளித்தரப்பான முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை; பேசுவதுமில்லை. முஸ்லிம்களைச் சேர்த்துக் கொள்ளாத அல்லது அவர்களும் இணைந்து கோராத மாகாணசபை முறைமை வெற்றியளிக்கப்போவதில்லை. மாகாணசபை முறைமையை வெற்றிகரமாக்குவதற்கு இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உள்ள சக்திகளுடைய ஆதரவையும் திரட்ட வேண்டும். குறிப்பாக மலையக அரசியற் சக்திகளையும் மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் – அதை வேண்டும் என்று கருதும் சிங்களத் தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இது இலகுவானது மட்டுமல்ல, சாத்தியமானதும் கூட. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொடக்கம் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வரையில் பலர் மாகாணசபையின் வழியாகவே அரசியலில் நுழைந்தவர்கள். இன்றைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர் கூட மாகாணசபையின் வழியாகப் பயன்களைப் பெற்றவர்களே. ஆகவே, இதையெல்லாம் புரிந்து கொண்டு, அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்ப்பது – மறுதலிப்பது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தரப்பு. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் இயங்கும் இந்தத் தரப்பு, ஒரு நாடு இரு தேசம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. ஏறக்குறைய இது அதிதீவிர நிலைப்பாட்டைக் கொண்டது. விடுதலைப்புலிகளின் அரசியல் தொடர்ச்சியாக தம்மை அடையாளப்படுத்துவது. இதை ஒத்ததாகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடக்கம் தேசமாகத் திரள்வோம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட சில அணிகளும் உள்ளன. புலம்பெயர் மக்களில் பெரும்பாலானோர் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களாகவும் பிரபாகரனை நேசிப்பவர்களாகவும் இருப்பதால் இந்த நிலைப்பாட்டை வெற்றியடைய வைக்க வேண்டும் என்பதற்காக உழைக்கின்றார்கள், பாடுபடுகிறார்கள். பொருளாதார ரீதியாகவும் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள். அதாவது தாம் எதை நம்புகிறோமோ அதற்காகத் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், அதைச்செய்கிறார்கள். கோட்பாட்டளவில், இந்த நிலைப்பாடு பலருக்கும் ருசிகரமாகவே இருக்கும். அதற்குக் காரணமும் உண்டு. சிங்கள ஆதிக்கத்தரப்பின் நடைமுறை மற்றும் சிந்தனைகள் தரும் வரலாற்றுப்படிப்பினை அவர்களை இப்படித்தான் சிந்திக்க வைக்கும். இந்தியாவும் மாகாணசபை முறைமையை வலுவாக்கம் செய்யவில்லை. இலங்கை அரசும் அதைத் தட்டிக் கழிக்கும் மனோநிலையில் உள்ளது என்பதால், அவர்கள் அதற்கு மாறான பிரிந்து செல்லும் – தனியாக நிற்கக் கூடிய தீர்வொன்றைப் பற்றியே சிந்திக்கின்றனர். ஆனால், அதை அடைவதற்கான சாத்தியங்களைக் குறித்து இவர்களிடம் தெளிவில்லை. இருக்கின்ற நம்பிக்கை எப்படியானதென்றால், இலங்கை அரசாங்கம் செய்த இன ஒடுக்குமுறைக் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்காத போக்கும் என்றோ ஒருநாள் சர்வதேச சமூகத்தை ஈழத்தமிழ்ச்சமூகத்தின்பால் திருப்பும் என்பது மட்டுமேயாகும். அதற்காக தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிங்களத் தரப்பைத் தொடர்ச்சியாக எதிர்க்க வேண்டும் என்று சிந்திக்கின்றன; நம்புகின்றன. சர்வதேச சமூகம் என்பதை இவை மேற்குலக நாடுகள் என்றே வரையறையும் செய்துள்ளன. இலங்கையின் இனப்பிரச்சினையில் தமிழ் மக்களின் நிலை குறித்து கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் கிடைக்கின்ற வரையறுக்கப்பட்ட அளவிலான ஆதரவை தமக்கான முழுமையான நம்பிக்கையாகக் கொள்கின்றன. இந்த ஆதரவு காலப்போக்கில் ஏனைய மேற்கு நாடுகளின் ஆதரவாக மாறும் என்று நம்புவோர் இதில் அதிகமுண்டு. என்பதால் முடிந்த முடிவாக பிரிவினை என்ற மனநிலையில்தான் இவர்கள் உள்ளனர். யதார்த்தத்தைப் பற்றி இவர்கள் சிந்திப்பதாகவே இல்லை. யதார்த்த நிலையே பிராந்திய ஆதிக்கத்தைக் கடந்து சிந்திக்கக் கூடிய நிலை இன்னும் உருவாகவில்லை. பிராந்தியம் என்பது இந்தியாவும் சீனாவும் இணைந்த நிலையே. இரண்டு நாடுகளையும் தமிழர்கள் தமது அரசியற் தொடர்பு வலயத்திலோ வலையமைப்பிலோ கொண்டு, அதற்கான பொறிமுறைகளை வகுத்துச் செயற்படவில்லை. ஏன் மேற்குலகைக் கையாளக் கூடிய பொறிமுறைகள் (இராஜதந்திர நடவடிக்கைகள்) எதையும் இவை மட்டுமல்ல எந்தத் தரப்பும் மேற்கொள்ளவில்லை. இந்தப் பலவீனமான நிலையில்தான் தமிழ்ச்சமூகத்தின் அரசியல் உள்ளது. ஜனநாயக அரசியலில் பல்வேறு நிலைப்பாடுகளும் போக்குகளும் இருக்கும். அதற்கு இடமும் உண்டு. ஆனால், தமக்கென ஒரு நிலைப்பாட்டை அல்லது கோட்பாட்டை முன்னெடுக்கும் தரப்புகள் அவற்றின் நடைமுறைச் சாத்தியம் என்ன? அதற்கான கால வரையறை (உத்தேசமாக) என்ன? அதற்கான உத்தரவாதம் என்ன? அதை முன்னெடுக்கும் வழிமுறை – சாத்தியப்படுத்தும் பொறிமுறை – என்ன? என்றெல்லாம் மக்களுக்குக் கூற வேண்டும். அது முக்கியமான கடப்பாடு. இங்கே தமிழ் அரசியல் தரப்பில் அந்தக் கடப்பாடு என்று எதுவுமே கிடையாது. ஏனெனில் இங்கே நடந்து கொண்டிருப்பது, தேர்தலை மையப்படுத்திய அரசியலாகும். தேர்தல் வெற்றிக்காக எதை முன்னே வைக்க வேண்டும். எதை முதலீடாக்க வேண்டுமோ அதையே அவர்கள் செய்கிறார்கள். இதற்கு அப்பால், தாம் முன்னிறுத்தும் அல்லது தாம் நம்பும் கோட்பாட்டை அல்லது நிலைப்பாட்டை மெய்யாகவே வெற்றியடைய வைக்க வேண்டும் என்றால், அதற்காக அவை பாடுபட வேண்டும். அதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேணடும். அதாவது அதைச் செயற்படுத்த வேண்டும். இங்கே கற்பனைக் குதிரைகளே அதிகம். அவை நிஜமாக ஓடுவதுமில்லை. நிஜமாகக் கனைப்பதுமில்லை. நிஜமாக வெற்றியடைவதுமில்லை. பாவம் தமிழ் மக்கள். இல்லை இல்லை. மன்னிக்க வேண்டும். இன்னும் தண்டனை பெற வேண்டும் தமிழ் மக்கள். ஏனென்றால், இவ்வளவு பட்ட பிறகும் இன்னும் புத்தி தெளியாமல் இருந்தால், அதற்கான தண்டனையைப் பெறத்தானே வேண்டும்!. ஆகவே தொடர்ந்தும் சிங்கள மேலாதிக்கத் தரப்புக்கு வெற்றிகளைக் குவிக்கிறார்கள் தமிழ் மக்கள். https://arangamnews.com/?p=12248
-
‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு
‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு August 12, 2025 12:57 pm ‘மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்துவோம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மோட அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளாள கடந்து வந்துகிட்டே இருக்கோம். வர 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாம முழு பேச்சில் தயாராகிட்டு வர்றோம். இந்த சூழலில் நம்முடைய இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லோருக்கும் தெரிந்ததுதான். முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போரில் அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதுதான் இந்த மாநாடு. அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன்வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்து கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி. மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராகும் மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்’ எனத் தெரிவித்துள்ளார். https://oruvan.com/we-are-not-an-alternative-force-we-are-the-primary-force-vijays-invitation-to-the-madurai-conference/
-
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம்
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம் August 12, 2025 10:28 am காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் அல் ஜசீரா நிருபர் ஒருவர் மற்றும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். முக்கிய இலக்கான அல் ஜசீரா நிருபர் அனஸ் அல்-ஷெரிப், ஹமாஸ் பயங்கரவாதப் பிரிவின் தலைவர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. ஊடக உரிமைக் குழுக்களும் கத்தார் உட்பட பல நாடுகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கின்றனர். காசா நகரில் உள்ள அவர்களது கூடாரத்தின் மீது இலக்கு வைக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்லைனில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரிப் ஆவார். எல்லைகளற்ற ஊடக ஆர்வலர் குழுவான Reporters Without Borders, ஷெரிப்பின் கொலையை கடுமையாகக் கண்டிப்பதாகக் கூறியது. மேலும் பல ஊடகக் குழுக்கள் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. https://oruvan.com/un-strongly-condemns-journalists-killed-in-israeli-attack/
-
ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!
ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி! ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே உருவாகியுள்ள மோதல் நிலைமைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை தானாகவே பதவி விலகச் செய்து தமது பிரதமரை நியமித்துக்கொள்ள ஜே.வி.பியினர் திட்டமிடுகின்றனர் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது என்னைப் பற்றி கூறியதுடன், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மையில் அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மிகவும் அதிருப்தி நிலையில் இருந்து உரையாற்றுவதை போன்றே இருந்தது. ஜனாதிபதி கூறுவதை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியாக கூறுவது அரசாங்கத்தின் குறைபாடுகளையும், மோசடிகளையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தால் நான் மறைந்து அல்லாமல் வெளிப்படையாகவே அதனை செய்வேன். நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம். இதேவேளை கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சுப்ரீம் சட் செயற்கை கோள் திட்டமானது வெளிநாட்டு முதலீடே தவிர இலங்கையினதோ, ராஜபக்ஷக்களினதோ முதலீடு அல்ல என்று கூறியிருந்தார். இந்நிலையில் அந்த கருத்து தவறு என்று பிரதமரின் அரசாங்கத்தில் உள்ள கனிஷ்ட அமைச்சரான வசந்த சமரசிங்க கூறியிருந்தார். அவ்வாறு பிரதமரின் கருத்து தவறு என்றால் பிரதமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அதனை திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கனிஷ்ட அமைச்சரால் அதனை திருத்த முடியாது. வசந்த சமரசிங்க பிரதமரை உலகின் முன்னால் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார். அது அரசாங்கத்திற்குள் உள்ள திசைக்காட்டி ஜே.வி.பி மோதல் வெடித்துள்ளது என்பதனை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. கூடிய விரையில் அமைச்சரவை மறுசீரமைப்பொன்று இடம்பெறுமென்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மே மாதத்தில் கூறியிருந்தார். அப்போதே நாங்கள் இந்த முறுகல் நிலைமை தொடர்பில் கூறியிருந்தோம். இப்போது ஹரிணியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி ஜே.வி.பியின் பிரதமராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஏன் ஹரிணியை நீக்கக்கூடாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி 6 காரணங்களை வெளியிட்டுள்ளார். அதாவது அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெருமளவானவை ஜே.வி.பிக்கு உரியது அல்ல. திசைக்காட்டியின் தலைவராக ஹரிணியே இருக்கின்றார். அத்துடன் அரசாங்கத்தின் மேற்குலக நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதியாக ஹரிணியே இருக்கின்றார். அடுத்ததாக பிரபுக்கள் தரப்பு, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதியாகவும் அவரே இருக்கின்றார். புத்திஜீவிகள் தொழில்வல்லுனர்கள் துறையிலும் பிரதமரே பிரதிநிதியாக இருக்கின்றார். இதனால் இப்போதைக்கு இவை அனைத்துக்கும் பிரதிநியான ஹரிணியிடமே அந்தப் பதவி இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் ஜே.வி.பி தலைவர்கள் பிரதமரை அதிருப்திக்குள் தள்ளி அவரை பதவி விலகச் செய்யவே முயற்சிக்கின்றனர் என்றார். https://akkinikkunchu.com/?p=336592
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னாரில் கடும் பதற்ற நிலை - குவிக்கபட்டுள்ள பொலிஸார்.! Vhg ஆகஸ்ட் 12, 2025 மன்னார் பஜார் பகுதியில் சற்று முன் (செவ்வாய் நள்ளிரவு) பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் ஏற்றி வரப்பட்டு கொண்டிருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் பாதுகாப்பு தற்போது குறித்த வாகனம் மன்னார் நீதி மன்ற பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சற்று வரை இந்த போராட்டத்தில் இணைந்திருக்கின்றார்கள். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிசார் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் இந்த வாகனம் கொண்டு செல்ல முடியவில்லை. தொடர்ந்தும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிசாரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும் அருகாமையில் அமைதியாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2025/08/blog-post_80.html
-
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 26 பேர் காயம்.!
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதிய பேருந்து – 26 பேர் காயம்.! Vhg ஆகஸ்ட் 12, 2025 கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா பட்டுஓயா பகுதியில் நடந்த வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மதுருஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து இன்று (12.08.2025) அதிகாலை 3 மணியளவில் டிப்பருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்து குறித்து மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.battinatham.com/2025/08/26.html
-
தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது- ரஜீவ்காந்
தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது- ரஜீவ்காந் Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 10:51 AM தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- முத்தையன் கட்டு குளத்திலே இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அங்கிருந்த ஊர்மக்கள், அந்த இளைஞனின் உறவினர்களின் தகவலின்படி அவர்கள் இராணுவத்தினரால் முத்தையன்கட்டு பிரதேசத்தில் இருக்கின்ற இராணுவமுகாமிற்கு சில விடயங்களிற்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர்கள் அந்த இராணுவமுகாமில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு,அங்கு சென்ற ஐவரில் நால்வர் தப்பியோடிவந்த பொழுது,ஒருவர் அன்று மாலையிலிருந்து காணாமல்போயிருந்தார். அன்று முழுவதும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அன்று முழுவதும் அவர் கிடைக்காத காரணத்தினால் அடுத்த நாள் காலைவரை காத்திருந்தார்கள். அடுத்த நாள் காலையிலே முத்தையன் குளத்திலே அவர் சடலமாக மிதந்துகொண்டிருந்தார், அந்த சடலத்தின் முகத்தில் பலத்த காயங்கள்,இரத்தம் காணப்பட்டது. இதன் பிற்பாடு இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் எதற்காக எடுக்க சென்றார்கள்? பொருளை எடுக்க சென்றார்களா?விற்க சென்றார்களா? இராணுவத்தினருடன் நட்பாக இருந்தார்களா? இதெல்லாம் அவசியமில்லை. இங்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை, ஒரு நாட்டிலே மக்கள் வாழ்கின்ற இடத்திலே இராணுவத்தின் பிரசன்னம் அவசியமற்றது.சிவில் செயற்பாடுகளிற்குள் இராணுவம் தலையிடக்கூடாது. எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இராணுவம் ஆயுதபூர்வமான ஒரு அமைப்பு,நாட்டின் எல்லை பிரச்சினை,நாட்டில் ஏற்படுகின்ற அசாதாரண பிரச்சினைகளின் போது பயன்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆயுத அமைப்பே இராணுவம். இந்த இராணுவத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகளவில் கொண்டதாக இன்று வடக்குகிழக்கு காணப்படுகின்றது. இராணுவத்துடன் ஏற்கனவே எங்களிற்கு பலத்த பிரச்சினைகள் உள்ளன,இராணுவத்திற்கு எதிராக நீதி கோரி போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, இந்த போராட்டம் எவற்றிற்கும் நீதி வழங்காத நிலையில் வடக்குகிழக்கில் அதிகளவில் இராணுவமுகாம்களை வைத்திருக்கின்றார்கள். எதற்காக இந்த இராணுவ முகாம்களை வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்வி எமக்குள்ளது. ஏன் என்றால் இந்த இராணுவமுகாம்களால் தான் பிரச்சினைகள். இராணுவமுகாம் இருந்திருக்காவிட்டால் இன்று இந்த இளைஞர் உயிரிழந்திருக்கமாட்டார். இன்று அந்த குடும்;பத்திற்கு உழைத்துக்கொடுத்துக்கொண்டிருந்த ஒருவர் இல்லை. ஒன்பது மாத குழந்தை தந்தையற்றதாக போயுள்ளது. என்ன காரணம் தேவையற்ற விதமாக இராணுவத்தினரை இந்த பிரதேசங்களில் வைத்திருப்பதுதான் பிரச்சினை. வடக்குகிழக்கிலிருந்து இராணுவத்தை படிப்படியாக அகற்றுவோம் என தெரிவித்தவர்கள் கூட இன்று அதனை செய்கின்றார்கள் இல்லை என்ற குற்றச்சாட்டினை நான் முன்வைக்கின்றேன். தெற்கிலே 77 சூட்டுசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, வடக்குகிழக்கிலே அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எதற்காக இவ்வளவு இராணுவத்தை அங்கு குவித்துவைத்துக்கொண்டிருக்கின்றார்கள்? இன்று தென்பகுதியில் எல்லா இடங்களிலும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 12000க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்திலே வாழ்கின்றனர்.ஆனால் அவர்களில் ஒருவர் கூட கடந்த 15 வருடங்களில் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவம் குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது, இராணுவத்தினரால் இடம்பெறும் சிக்கல் என்பது அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றார்கள், ஹோட்டல் விடுதி சாப்பாட்டுக்கடை நடத்துகின்றார்கள்,மக்கள் செல்கின்ற இடமெல்லாம் ஆயுதத்துடன் திரிகின்றார்கள்,வீடு கட்டி கொடுக்கின்றார்கள், பிரதம அதிதிகளாக செல்கின்றார்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்றார்கள்,எந்தவொரு நாட்டிலும் இது இடம்பெறாது. ஜனநாயகபூர்வமான இடத்திலே இராணுவத்தின் இடம் எந்தளவிற்கு இருக்கவேண்டும் என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனவே முத்தையன்கட்டிலே உயிரிழந்த கபில்ராஜிற்கு நீதிவேண்டும் என்ற ஒரு கோரிக்கையும்,இராணுவ குவிப்பு, இராணுவமயமாக்கல் என்பது நிறுத்தப்படவேண்டும் இராணுவத்தினர் அகற்றப்படவேண்டும் என்ற அரசியல் கோரிக்கையையும் நாங்கள் இன்று முன்வைக்கின்றோம். https://www.virakesari.lk/article/222376
-
ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை
ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை லக்ஸ்மன் ஜெனிவாவில் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு, “தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?” என்ற கேள்வி ஒன்று தற்போது தமிழ்த் தேசிய அரங்கில் பேசப்படுகின்ற விடயமாக மாறியிருக்கிறது. கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் நடைபெற்ற சந்திப்பு மற்றும் தயாரிக்கப்பட்ட கடிதம் தொடர்பிலேயே இந்தக் கருத்து வெளிவருகிறது. தமிழர்களுக்கு நீதி வேண்டி, அனைத்துலகை விசாரணைப் பொறிமுறையைக் கோரும் தமிழர் தரப்பு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஐ.நாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது. அந்தக் கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கடிதத்தை அனுப்பும் வகையில், அதற்கான தயாரிப்பு வேலைகளுக்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றருந்தது. ஆனால், அந்தச் சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி சமூகமளிக்கவில்லை. இந்த நிலையில்தான் இந்தத் தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்? என்ற கேள்வி உருவாகியிருக்கிறது. தமிழரசுக் கட்சி இதில் இணைந்துக் கொள்ளவில்லை என்பது உண்மையாக இருந்தாலும் இணைத்துக் கொள்ளாமல் என்ற சொற் பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவித தீர்மானத்துடன், பிடிவாதத்துடன், தனிக்காட்டு ராஜா நிலைமையில் செயற்படுவதே தெரிகிறது. இருந்தாலும், அவர்களால் உருவாக்கப்படும் மாயைத் தோற்றத்தை உண்மையாக்கும் செயற்பாடுகள் தமிழர் தளத்தில் நடைபெறுகிறது என்றே இந்தக்கருத்தினை அடிப்படையில் கொண்டு பார்க்க முடியும். அதே போன்றதொரு நிலையே விடுதலைப்புலிகளின் தலைமையின் முழுமையான பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கலைத்த பெருமை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இருந்தாலும் முழுப் பழியும் கூட்டமைப்பில் இணைந்திருந்த மற்றைய கட்சிகளின் மீதே சுமத்தப்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி தாமாக விலகிக் கொள்ள முடிவெடுத்திருந்தாலும், அது தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய அரசியல் பிழை என்பதை யாரும் கடுமையாகச் சொல்வதற்கல்ல சாதாரணமாகக் கூறுவதற்குக் கூட தயாரில்லை. தனிப்பட்ட ஒருவருடைய, ஒரு கட்சியினுடைய விடயங்கள் எழுந்தமானமாக, ஏகபோகத்தனத்துடன் மேற்கொள்ளப்படுவது யாராலும் கேள்விக்குட்படுத்தப்படாதிருப்பது என்வோ சரியாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் பொதுவான விடங்களில் எழுந்தமானமாகச் செயற்படுவது பொருத்தமானதாக இருக்காது என்பது ஒரு கட்சிக்குப் புரியாதிருக்கையில் பொதுமைப்படக் கருத்துக்கள் வெளியிடப்படுவது ஒன்றும் முதல் தடவையல்ல என்ற வகையில் திருத்த வேண்டியவர்களைத் திருத்தியாகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமிழ் மக்கள் வாந்தாகவேண்டும். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா.வுக்கு எழுதப்பட்ட கடிதத்தை தயாரிப்பதற்கான ஆரம்பப்பணியை மன்னாரைச் சேர்ந்த சிவகரன் தொடங்கியிருந்தார். அதன்பின் ஒவ்வொருவராக இணைந்து முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றது. இரண்டாவது சந்திப்பு வவுனியாவில். மூன்றாவது சந்திப்பு மீண்டும் கிளிநொச்சியில் நடைபெற்று ஒரு கூட்டுக்கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் பிரதானமாக இனப்பிரச்சினைத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான பொறிமுறையை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொண்டிருக்காமல் பன்னாட்டு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இரண்டாவதாக, போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு பொறிமுறையை உருவாக்கினால், அதற்குக் காலவரையறை இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. இதனைத் தீர்மானிப்பதற்குப் பல வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்திருந்தது. வடக்கு, கிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 12 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து சர்வதேசத்துக்கு ஒற்றுமையாக முதன் முதலில் எழுதியக் கடிதமாக இது அமைந்திருந்தது. அந்தக் கடிதத்தினால் சாதகமான விளைவேதும் கிடைக்கவில்லை. பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்கள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கியே இருக்கிறது. சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புத் திறமையாகச் செயற்பட்டதா என்ற சந்தேகம் இருக்கிறது. அந்தக் கட்டமைப்பு இலங்கைக்குள் வருகைதந்து செயற்பட இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், இந்தச் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐ.நா. கூட்டத் தொடருக்கு முன்னதாக தமிழ்த் தரப்பு மீண்டும் ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது பாராட்டத்தக்கதே. யானைக்கு மணியைக் கட்டுதல் என்கிற விடயம் நடைபெறாதிருக்கையில் யாரேனும் மணியைக் கட்டியானால் பிரச்சினை என்கிற தோரணை உருவாக்கப்படுவது தவறாகும். எல்லோருடைய நோக்கமும் ஒன்றாக இருக்கையில் யார் மணியைக் கட்டினால் என்ன என்று சிந்திக்கின்ற நேர்மை இல்லாமலிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 1948 தொடங்கி, ஐக்கியத் தேசியக் கட்சி அரசாங்கத்தினால் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் கையாளப்பட்டிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் கையாளப்பட்டிருக்கிறது. இவை இரண்டும் இணைந்து கையாண்டிருக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கையாண்டிருக்கிறது. இப்போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தமிழர் பிரச்சினைக் கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போயிருக்கும் ஒரு பின்னணியில் இந்தக் கூட்டுக் கடிதத் தயாரிப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழ் மக்கள் சர்வதேச நீதிப் பொறிமுறையைக் கோரிக் கொண்டிருக்கையில், புதிதாக ஆட்சியிலுள்ள அரசாங்கமும் உள்நாட்டுப் பொறிமுறைக்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் கருத்துக்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இல்லாதிருக்கின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறையின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்துவதாகக் காணப்படுகிறது. எனவே, உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்தும் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தவேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அக்கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டுக் கடிதத் தயாரிப்பில் கலந்து கொள்ளாத நிலையில், அக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நடத்திய ஊடகச் சந்திப்பில், தமது கட்சி கடிதம் ஒன்றை ஐ.நாவுக்கு அனுப்பியதாகவும், உள்நாட்டுப் பொறிமுறையைத் தாம் கோரவில்லை என்று கூறியிருக்கிறார். இதைப் பொறுப்புள்ள ஒரு தமிழ்த் தேசியக் கட்சியாக அவர் கூறுவதற்குக் காரணம் என்ன. கூட்டுக் கடிதத் தயாரிப்பில் கலந்து பங்குகொள்ளாதிருந்ததுடன், அவர் அதனைக் கைவிட்டிருக்கலாம். ஆனால், தம்முடைய அரசியலை செய்வதற்காக இதனைச் சொல்லியிருக்கிறார் என்பது மாத்திரம் வெளிப்படை. தமிழ் மக்களின் ஏகபோக அரசியல் தரப்புத் தாங்களே என விடுதலைப் புலிகள் தங்களை அறிவித்துக் கொண்டிருந்து பின்னர்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்காக உருவாக்கிக் கொண்டனர். ஆனால், ஆரம்பத்தில் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் யுத்த மௌனிப்பின் பின் ஒவ்வொன்றாக விலகிக் கொண்டன. விலக்கப்பட்டதாகக் கொள்ளலாமா என்பது இப்போதும் சந்தேகமானது. அத்துடன் விலக்கப்பட்டனவா, விலகிக் கொண்டனவா, விலகுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டதால் அது ஏற்பட்டதா என்பது இன்னமும் யாராலும் புரிதலுக்குட்படுத்தப்படவில்லை என்பது வேறு விடயம். இந்த நிலையில், ஒவ்வொரு விடயத்திற்கும் வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுவது நடைபெறுகிறது.இவற்றினை ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் விளங்கிக் கொள்வதும், நடைபெற்றுவரும் தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கென்று செயற்படுகின்ற கட்சிகள் தாய்க் கட்சி, தந்தை கட்சி, ஏக தரப்பு என்றெல்லாம் நடந்து கொள்வது சர்வதேச தரப்புகளை அணுகுகின்ற வேளைகளிலும் தேவைதானா என்பதுவே கேள்வியாக இருக்கிறது. தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளைப் பேசுவதற்குத் திறக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கம் ஐ.நா. என்ற வகையில், இதனைப் பலவீனமான நிலையுடன் அணுகுவதால் பயன் ஒன்று விளையுமா என்பதனை விளங்கிக் கொள்வது முக்கியமானது. ஆனால், பொறுப்புக்கூறலை அனைத்துலகை நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு இனப்படுகொலையைத் திட்டமிட்டவகையில் நடத்தி வந்த ஒரு நாட்டில் இருந்து கொண்டு ஒற்றுமையின்மையுடன் அரசியல் நடத்துவதால் பயன் விளையுமானால் நல்லதே. ஈழத் தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் அனைத்துலக அரங்கில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக்கொள்ள, ஈர்த்துக் கொள்ளப் பரந்துபட்ட வேலைத் திட்டங்களில்லாத நிலையில், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய விதத்தில் ஐ.நா. நகர்ந்துவரும் சூழலில் தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மை மேலும் பயனற்ற எதிர்காலத்தையே கொண்டுவரும் என்பதனை யாரும் மறந்துவிடக் கூடாது. இது தமிழரசுக் கட்சிக்கும் புரிய வேண்டும். இல்லாதுவிடின் மக்களால் புரியவைக்கப்படுதலே நல்லது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஓற்றுமையின்மையே-தமிழரின்-இயலாமை/91-362706
-
மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்!
மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்! யாழ் - மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். யாழ். மவட்டத்தின் தென்மராட்சி பிரதேச செயலக எல்லைகுட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் 2022 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20 திகதி அன்று அன்றைய பிரதமர் மகிந்தராஜபக்சவினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறாத நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இவ் விஜயத்தின் போது யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க,இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். https://newuthayan.com/article/மட்டுவிலில்_அமைந்துள்ள_பொருளாதார_மத்திய_நிலையத்தை_பார்வையிட்ட_அமைச்சர்!
-
சைபர் குற்ற மையங்கள்; பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்!
சைபர் குற்ற மையங்கள்; பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்! கிழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை நடைபெறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐடி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய ஐந்து சைபர் குற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் போலி வேலை விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களில், இத்தகைய மோசடி மையங்களுக்கு 11 இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் வசிப்பவர்களுக்கு அப்பால், டுபாயில் பணிபுரியும் இலங்கையர்களும் ஐடி வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில் இம்மையங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்களுக்கு பதிலளிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. https://www.samakalam.com/சைபர்-குற்ற-மையங்கள்-பாத/
-
கியேவ் இல்லாத ஒப்பந்தம் இறந்த முடிவுகளுக்கு சமம் - செலென்ஸ்கி
கியேவ் இல்லாத ஒப்பந்தம் இறந்த முடிவுகளுக்கு சமம் - செலென்ஸ்கி 11 August 2025 ரஸ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் கியேவும் இடம்பெற வேண்டும் என்று ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை அலஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சந்திப்பை நடத்தவுள்ளார். இதற்கு முன்னோடியாகவே இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையகத் தலைவர்கள் கூட்டாக இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர். யுக்ரைன் ஜனாதிபதியும் பங்கேற்கும் வகையில் சந்திப்பை நடத்துவதற்கு ட்ரம்ப் தயாராகவே உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இப்போதைக்கு, ரஸ்ய ஜனாதிபதி ஆரம்பத்தில் கோரியபடி, அது ட்ரம்ப்-புடின் உச்சி மாநாடாகவே நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். புட்டினை பொறுத்தவரையில், செலேன்ஸ்கியை நேரடியாக சந்திக்க விரும்பாமையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கியேவ் இல்லாத எந்தவொரு ஒப்பந்தமும் இறந்த முடிவுகளுக்கு சமம் என்று யுக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி கூறியுள்ளார். https://hirunews.lk/tm/413993/agreement-without-kiev-is-tantamount-to-dead-ends-zelensky
-
காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்
இஸ்ரேலின் திட்டங்களுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் 11 August 2025 காசா நகரத்தை "கட்டுப்பாட்டில் கொண்டு வரும்" இஸ்ரேலின் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கான, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர். எனினும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான "சிறந்த வழி" இது மாத்திரமே என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில் திட்டமிட்ட தாக்குதல் நகர்வு மிக விரைவில் ஆரம்பிக்கும் என்றும் அது நகரும் என்றும் "காசாவை ஹமாஸிடமிருந்து விடுவிக்கும்" என்றும் நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளே பட்டினியால் வாடுகின்றனர். மாறாக இஸ்ரேல்,காசா மக்களை பட்டினியில் வைத்திருப்பதாக கூறப்படுவதை அவர் மறுத்துரைத்தார். இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அவசரக் கூட்டத்தில் இஸ்ரேல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் இந்த திட்டத்தினால், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளன. இஸ்ரேலின் இந்த திட்டம், பணயக்கைதிகளை பாதுகாக்க எதுவும் செய்யாது, மேலும் அவர்களின் உயிருக்கு மேலும் ஆபத்தையே விளைவிக்கும் என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன. எனினும் அமெரிக்கா இஸ்ரேலைப் பாதுகாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், தமது நாடு அயராது உழைத்து வருவதாக அமெரிக்க தூதர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்த திட்டம், பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளனர். https://hirunews.lk/tm/413994/various-countries-condemn-israels-plans
-
முத்துஐயன்கட்டுக் கொலை: சுமந்திரன் கண்டனம்
முத்துஐயன்கட்டுக் கொலை: சுமந்திரன் கண்டனம் முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் இது தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் தெரிவித்தார். இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் கடந்த சனிக்கிழமை காலை தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஐந்து பேர் முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நால்வர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள். ஒருவர் காணாமல்போயிருந்தார். அவரின் சடலம்தான் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது. முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாகத் தாக்கினார்கள் என்று தப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும், பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். இவ்வாறான நிலையில் சனிக்கிழமை மாலை ஒட்டுசுட்டான் பொலிஸாரினால் ஒருசில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அந்தப் பிரதேச மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றார்கள். இதற்குச் செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/முத்துஐயன்கட்டுக்-கொலை-சுமந்திரன்-கண்டனம்/175-362663
-
தமிழ்த்தேசியப் பயணத்துக்கு தமிழரசு இணக்கப்பாடில்லை! - கஜேந்திரகுமார்
தமிழ்த்தேசியப் பயணத்துக்கு தமிழரசு இணக்கப்பாடில்லை! ஐ.நா.வுக்கான கடித விவகாரத்தில் பொய்யுரைப்பு; கஜேந்திரகுமார் தெரிவிப்பு! ஐ. நா.வுக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியே பொய்யுரைத்துள்ளது. தமிழ்க் கட்சிகளிடையே இப்போது இணக்கப்பாட்டை ஏற்படுத்தத் தவறினால் தமிழ்த் தேசியம் அழியும் நிலை ஏற்படும். இணக்கப்பாட்டை ஏற்படுத்த நாங்கள் தொடர்ந்தும் முயற்சிப்போம். இவ்வாறு யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடத்திய ஊடக சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி தமிழ்த் தேசியக்கட்சிகள், சிவில் அமைப்புகள் எனப்பலரும் ஒன்றிணைந்து இணக்கத்துடன் கடிதத்தைத் தயாரித்து ஐ.நா.வுக்கு அனுப்பியுள்ளோம். இந்தக் கடிதத்தில் உள்ள விடயங்களில் தமிழரசுக் கட்சியும் இணக்கம் தெரிவித்து தாமும் கையொப்பம் வைப்பதாகத் தெரிவித்திருந்தது. அதற்கமைய ஆரம்பகட்டப் பேச்சுகளும் நடைபெற்றன. எனினும் இறுதியில் தமிழரசுக் கட்சி பொய்களைக் கூறியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இந்தக் கடிதத்துடன் தான் இணங்குவதாகவும் கட்சித்தலைவரே குழம்புகிறார் என்றும் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட் டத்தில் பேசி ஒரு முடிவுக்குக் கொண்டுவருவோம் என்றும் அந்தக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் கூறினார். அதன்படி, இந்தக் கடிதத்தை மேலும் பலப்படுத்துவதாக இருந்தால் பரவாயில்லை எனவும் அதில் வெட்டித் திருத்தம் செய்வதென்றால் தாமதம் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் கடிதத்தின் தரத்தைக் குறைக்க முடியாது, தரத்தைக் கூட்டுவதாக இருந்தால் தாமதித்தாலும் பரவாயில்லை என எமது தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் நடத்திய ஊடக சந்திப்பின் போது இதுவரையும் எங்ளுக்குள் பேசப்பட்ட விடயங்களுக்கு மாறாக அப்பட்டமான பொய்களை சுமந்திரன் சொல்லியுள்ளார். அதற்குப் பிற்பாடும் 7ஆம் திகதி கொழும்பில் 5 மணிக்கு எனது இல்லத்தில் சந்திக்க இணங்கியிருந்தோம். தொடர்ந்தும் சந்திக்க விருப்பம் என்றால் அடுத்த வாரம் யாழில் சந்திக்கலாம் என்றும் நாங்கள் கூறினோம். நாங்கள் வெளிப்படைத்தன்மையாக நேர்மையுடன் இயங்க விரும்புகிறோம். ஆனால் அவர்களே திட்டமிட்ட பொய்களைக் கூறி வருகின்றனர். தமிழ்த்தேசியம் பாதுகாக்கப்பட்டு முன்னோக்கிப் பயணிக்கவேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சி உட்பட நாம் அனைவரும் கட்டாயம் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்றார். https://newuthayan.com/article/தமிழ்த்தேசியப்_பயணத்துக்கு_தமிழரசு_இணக்கப்பாடில்லை!#google_vignette
-
முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து
முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு! உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு! adminAugust 11, 2025 முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் காவற்துறை பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 07ஆம் திகதி இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த 32வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் (09.08.25) முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் காவற்துறையினரால் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டது. யாழ் போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்திற்கான தெளிவான காரணம் குறிப்பிடப்படாமல் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேலதிக பகுப்பாய்வுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளது. https://globaltamilnews.net/2025/219108/
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1 கார்த்திக் டிசம்பர் 22, 2024 மூலம் : யமுனா ஹர்ஷவர்த்தனா தமிழாக்கம் : கார்த்திக் திருமதி. யமுனா ஹர்ஷவர்த்தனா அவர்கள் எழுதி கிரி ட்ரேடிங் நிறுவனம் வெளியிட்ட ” Once upon a Time Thousands of years ago “ என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. மஹாபாரத கதைகளின் தொகுப்பே இந்த நூல். ஆனை முகத்தோனுடன் ஓர் ஒப்பந்தம் உலகின் தலைச்சிறந்த காவியத்தை எழுதுவதற்கான நேரம் அது , வரலாற்றை சந்ததியருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேரம். மீனவப் பெண்ணான சத்யவதிக்கும், பராசர முனிவருக்கும் பிறந்த கரிய நிறத்தை கொண்ட ரிஷி கிருஷ்ண த்வைபாயனா அந்தப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார். பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகுத்து மூன்றாக வகைப்படுத்தியதால் வேத வியாசர் என்றழைக்கப்படும் கிருஷ்ண த்வைபாயனா இந்த மிகப் பெரிய வேலையை எப்படி செய்து முடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். வரலாறு மிக நீண்டதாக ஐந்து தலைமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது;விவரிப்பு மிக கடினமானதாக நூற்றுக்கணக்கான நபர்கள் மிக முக்கிய பாத்திரங்களில் கொண்டதாகவும் இருந்தது. கதாபாத்திரங்களின் உளவியல், சூழ்நிலைகளின் உளவியல் ; விவரிப்பின் மூலம் சொல்லப்படவேண்டிய சூழ்நிலைகள் என அவர் முன் இருந்த பணி கடினமாய் இருந்தது. கதை விவரிப்பு சுருக்கமாய் கச்சிதமாய் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எதையும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், இந்த காவியம் , மனிதர்களை என்றும் வழிநடத்தக் கூடியது , இந்தக் காவியத்தில் இருக்கும் எண்ணற்ற பாத்திரங்களின் மூலம் ஒவ்வொருவரும் தன்னை மீட்டெடுப்பர், இந்த கதை, ஒருவரின் வாழ்வின் பாதையையே மாற்றக் கூடிய ஒன்றாகும். முன்னிருந்த வேலை கடினமானது. மீண்டும் நினைவுப்படுத்தி, நியாயப்படுத்தி தொகுத்து அதை எழுதுவது என்பது மனிதனால் ஆகக் கூடிய விஷயமில்லை என்பது வியாசருக்கு தெரியும். எனவே தெய்வத்தின் உதவியை நாட முடிவு செய்து ஆனைமுகனை பிரார்த்தித்தார். ” கணேசா ! பிரணவ வடிவானவனே ! என்னுடைய தாழ்மையான வணக்கங்களை ஏற்றுக்கொள். மனிதகுலத்தின் நன்மைக்காக , மஹாபாரதம் எழுதப்பட்டு காப்பற்றப்படவேண்டியது நம்மின் கடமையாகும். இதற்காய் , உன் உதவி வேண்டி வந்துள்ளேன். கருணை வடிவானவனே ! மஹாபாரதம் எழுத ஒப்புக் கொண்டு என்னை சிறப்பிப்பாயாக…” “வ்யாஸா ! நீ என்னிடம் இந்த உதவி கேட்டதற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால்,எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், உன் குடும்பக் கதையை உன்னருகில் உட்கார்ந்து நீ சொல்வதாய் என்னால் காத்திருக்க இயலாது, எனக்கு அவ்வளவு நேரமும் இல்லை ” என்றார் கணேசர். சிறிதும் இடைவெளி இன்றி கதையை சொல்லி செல்ல இயலாது. ஏனெனில் வரிகளை யோசிக்க அவருக்கு நேரம் வேண்டும் என வியாசர் அறிவார். விக்னேஸ்வரன்* மிகக் கடினமான நிறைவேற்றுவதற்கு கடினமான நிபந்தனையை விதிக்கிறார் என்பதையும் வியாசர் அறிவார். ஆனால் பல வருட தவத்தின் பயனாக கிடைத்த இந்த வாய்ப்பை வீணடிக்க அவர் விரும்பவில்லை. எனவே அவர் விநாயகரிடம் வேண்டினார், ஞான ஸ்வரூபனே நீ இல்லாமல் உலகில் ஞானம் என்பது இல்லாமல் போய்விடும். உங்கள் ஞானத்தின் உதவியால் நான் வரிகளை தொகுத்து சொல்கிறேன். இந்த எளியவன் சொல்வதை நீங்கள் புரிந்து கொண்டு எழுதும் வரையில் நான் இடையில் நிறுத்த மாட்டேன் என உறுதி அளிக்கிறேன். கஜானனர் இதற்கு ஒத்துக்கொண்டார். வியாசர் சொல்ல சொல்ல, அவர் தந்தத்தை ஒடித்து அதை எழுதுகோலாகக் கொண்டு பனை ஓலைச் சுவடிகளில் எழுதத் துவங்கினார். இடையில் வியாசர் கொஞ்சம் கடினமான வரிகளைக் கோர்த்து தர அதை புரிந்து கொண்டு விநாயகர் எழுத ஆகும் இடைவெளியில் அடுத்த அடுத்த வரிகளை அமைத்துக் கொள்ள வியாசருக்கு உதவியது. இதைப் புரிந்து கொண்ட விநாயகரும் சிரித்துக் கொண்டே எழுதினார். நாம் இன்று படித்து, கேட்டு கற்று மகிழும் மஹாபாரதம் இந்த விதமாகத்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வியாசர் மூஷிக வாகனனுக்கு சொல்லி எழுதப்பட்டது. ஞானத்தின் அதிபதி மற்றும் வேதத்தை தொகுத்த ரிஷியின் இந்த கூட்டணி நமக்குள் ஒத்துழைப்பு மற்றும் இரக்கத்தின் விதைகளை தூவட்டும். மிக சரியான மனிதர் அக்காலத்தில் முனிவர்கள் எல்லோரும் கடுமையான தவங்கள் மூலம் மிக பெரிய பேறு அடைய விரும்பி தவம் இருந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் பிறக்கும் பொழுதே எல்லாவகையிலும் சிறந்தவராக பிறந்தார் , சுகர், வியாசரின் மகனான இவர் பிறப்பிலேயே பிரம்மத்தை பற்றிய ரகசியத்தை அறிந்திருந்ததால் சுக ப்ரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார். ஒருநாள் , உலகத்தின் அறிவு பொக்கிஷத்தை காப்பாற்ற தனக்கொரு மகன் வேண்டுமென உணர்ந்த வியாஸர் சிவனை நோக்கி தவமிருக்கத் துவங்கினார். அதே சமயத்தில் விண்ணுலகத்தில் இருந்து ஓர் கிளி அங்கே பறக்க அதை அவர் பார்த்தார். அதன் மூலம் அக்கிளி , மிக அழகான அதே சமயம் தெய்வீக களைப் பொருந்திய ஒரு குழந்தையை தந்தது. அந்தக் குழந்தை சுக தேவர், கிளிகளின் கடவுள் என அழைக்கப்பட்டது. சுகருக்கு , வியாஸர் வேதங்களையும் மற்ற விஷயங்களையும் கற்றுத் தர துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் சுகர். மகனை, தந்தையே பரிட்சித்து சான்று அளிக்க முடியாத காரணத்தால், மிதிலையின் அரசராக இருந்த ஜனகரிடம் 1 அவரை அனுப்பி வைத்தார் வியாசர் . சுகர் வரப்போவதை முன்பே தனது ஞான திருஷ்டியால் அறிந்த ஜனகர், தனது கோட்டை காவலாளிகளை அழைத்து, அவர் சொல்லும் வரை சுகரை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என கட்டளையிட்டார். அதேபோல், கோட்டை வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட சுக ப்ரம்ம ரிஷியும், மூன்று நாட்கள், உணவையோ, சொட்டு நீரோ மற்றும் துறக்கமோ இன்றி காத்திருந்தார். நான்காம் நாள், ஜனகரே கோட்டை வாயிலுக்கு வந்து பிரம்மாண்ட ஊர்வலமாய் அவரை அழைத்து சென்றார். உள்ளே அழைத்து வரப்பட்ட சுக பிரம்மத்தை சிறந்த அழகிகள் குளிப்பாட்டி அவருக்கு அறுசுவை விருந்தும் அளித்தனர். இவை எதையும் சிந்தையில் கொள்ளாத இளம் ரிஷி தனக்களிக்கப்பட்ட விருந்தை ஏற்றுக்கொண்டார். இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஜனகர் ” மகனே ! இப்பொழுது என்னுடன்அரசவைக்கு வருவாயாக ! ” என அழைத்தார். ஜனகரின் அரசவை வளர்ந்து வரும் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிப்பது போல் இருந்தது. மிக அழகான நாட்டியப் பெண்மணிகள் நாட்டியமாடிக் கொண்டும் அருமையான பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தனர். அரசர் , சுகர் கையில் ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதன் விளிம்பு வரை எண்ணையை ஊற்றி , அரசவையை சுற்றி வந்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சொன்னார். அமைதியாக , அந்த கிண்ணத்தை கையில் ஏந்தி ஒரு சொட்டு எண்ணையும் சிந்தாமல் சென்று அங்கிருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். அதைக் கண்டு மகிழ்ந்த ஜனகர் , சுகரை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ” என்னருமை மகனே ! இனி நீ கற்பதற்கு என்ன உள்ளது ? கஷ்டங்களோ , அரண்மனையின் செல்வச்செழிப்போ இல்லை உணர்வுகளை தூண்டு விஷயங்களோ உன்னை தீண்டவில்லை. நீ ஏற்கனவே ஒரு ப்ரம்மஞானி2 ” எனக் கூறினார். சுகர் எப்பொழுதும் இந்த உலக பிரஞை அற்று இருந்ததால் அவரை வியாசர் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஒருமுறை சுகர் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வியாசரும் அவரை பின்பற்றி சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு சில இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். சுகர் சென்றபொழுது அவர்கள் நாணம் அடையவில்லை. மாறாக அவர்கள் தங்கள் குளியலை தொடர்ந்தனர். ஆனால், அவரை தொடர்ந்து வியாசர் வந்தபொழுது , அவர்கள் உடனடியாக குளத்தில் மூழ்கி தங்களை மறைத்துக் கொண்டனர். இதைக் கண்ட ரிஷி ஆச்சர்யம் அடைந்து ”அழகான இளம் வாலிபன் நிர்வாணமாக நடந்தது உங்கள் உணர்வுகளை சீண்டவில்லை. ஆனால் முழுவதும் உடையணிந்த வயோதிகனான நான் வரும்பொழுது , வெட்கம் கொண்டு உங்களை மறைத்துக் கொண்டீர்களே.. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா ” என வினவினார். அதற்கு அவர்கள் ” தவ ஸ்ரேஷ்டரே ! அவர் முழு ஞானம் அடைந்தவர் . ஆண் பெண் பாலின பேதத்தை கடந்து விட்டார். ஆனால் தாங்கள் அப்படி இல்லையே ! நாங்கள் எவ்வாறு வெட்கம் கொள்ளாமல் இருக்க இயலும் ” என பதில் உரைத்தனர். சுகர்தான், பின்பு மஹாபாரத்தையும் , ஸ்ரீமத் பாகவதத்தையும் உலகிற்கு பரப்பினார். இவ்வுலகிற்கு தேவையான ஞானத்தை காத்து மற்றவர்களுக்கு அளித்தார். ஜனகர் : சீதையின் தந்தை அல்ல. அவ்வம்சத்தில் வந்த அனைவருக்கும் இந்த பட்டம் உண்டு. எனவே இவர் அவ்வம்சத்தில் வந்த மற்றொரு அரசர் ப்ரம்மஞானி : பிரம்மத்தை கற்றறிந்தவர். சஞ்சீவனி – உயிர் தரும் மந்திரம் இது பாண்டவ / கௌரவர்களின் காலத்திற்கு மிக முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆகும். தேவர்களும் அசுரர்களும் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போரில் அசுரர்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே வந்தனர். காரணம், அவர்களுடைய குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்த உயிர்களை மீட்டுத் தரும் சஞ்சீவனி மந்திரம் தெரிந்திருந்தது. அந்த மந்திரம் அறிந்தாலொழிய இப்போரில் வெற்றி பெறுவது என்பது இயலாது என்பதை அறிந்த தேவர்கள் பலத்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் குரு பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவனை சுக்ராச்சாரியாரிடம் அனுப்பி இம்மந்திரத்தை கற்று வரக் கூறினர். கசன், சுக்ராச்சாரியாரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொண்டான். பிரகஸ்பதியின் மேல் இருந்த மரியாதை மற்றும் கசனின் பணிவான நடவடிக்கையின் காரணமாய் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சுக்ராச்சாரியார். ஒரு சீடனாய் தன் கடமைகளை சுக்ராச்சாரியாரின் விருப்பத்திற்கேற்ப செய்து வந்தான். நாளடைவில் அவரது மகள் தேவயானிக்கும் மிக நெருக்கமாகிவிட்டான் கசன். வஞ்சக எண்ணம் கொண்ட அசுரர்கள் கசனின் நோக்கத்தை சந்தேகிக்க துவங்கினர். அதனால் சுக்ராச்சாரியார் அறியாமல் அவனை கொல்லவும் முடிவெடுத்தனர். ஒருநாள், அவனை கடத்தி சென்று கடலில் மூழ்கடித்து அவனது பிணத்தை சுக்ராச்சாரியார் முன் கொண்டுவந்து கிடத்தினர். அவர் கேட்டபொழுது எதோ ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் அவர்களது கெட்ட எண்ணத்தை அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார், சஞ்சீவனி மந்திரம் ஜெபித்து அவனை உயிர்ப்பித்தார். அடுத்த முறை அவனை கொன்று அவனது உடலை நாய்க்கு உணவாக இட்டனர் அசுரர்கள். இதை அறிந்த தேவயானி, சுக்ராச்சாரியாரிடம் முறையிட, மீண்டும் அவர் சஞ்சீவனி மந்திரம் ஜெபித்தார். இம்முறை நாயின் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிவந்தான் கசன். மூன்றாம் முறை அசுரர் அவனை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்தனர். பின்பு அந்த சாம்பலை, மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கு அளித்தனர். அதை குடித்தப்பின் தான், நடந்ததை உணர்ந்தார். இப்பொழுது அவருக்கு தேவர்களின் தந்திரமும் புரிந்தது. சாம்பலாய் மதுவில் கலந்து அவரது வயிற்றில் இருந்த கசனுக்கு அவர் சஞ்சீவனி மந்திரத்தை போதித்தார்.பின் கீழே படுத்து அவர் அம்மந்திரத்தை ஜபிக்க , அவரது வயிற்றை கிழித்துக் கொண்டு உயிர் பெற்று வந்தான் கசன். அவனது குணத்திற்கு , அவனை உயிர் பெற்றவுடன் முதல் காரியமாய், அவனை உயிர்ப்பித்த குருவை சஞ்சீவனி மாத்திரம் ஜபித்து உயிர்பித்தான். பின்பு தேவர்களிடம் சென்று சேர்ந்தான். இதன் பின், சுக்ராச்சரியாரின் சாபத்தால் மது அருந்துபவர்கள் அவர் பட்ட கஷ்டம் போலவே அனுபவிப்பார்கள். சுக்ராச்சாரியாரின் உதிரத்தில் உயிர்பித்ததால், கசன் தேவயானிக்கு சகோதரன் முறை ஆகிவிட்டான். எனவே அவனை விடுத்து யயாதி என்ற மன்னனை மணமுடித்தாள் தேவயானி. இந்த யயாதியே பாண்டவர் / கௌவரவர்களுக்கு முன்னோடி ஆவான். https://solvanam.com/2024/12/22/பல்லாயிரம்-ஆண்டுகளுக்கு/
-
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
வன்னித்தம்பிரான் வழிபாடு தி. செல்வமனோகரன் அறிமுகம் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த ஆதிகாலத்தில் இருந்து விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மனிதர்களின் முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. குறிப்பாகத் தமிழகச் சூழலில் உருவான திணைக்குடிகள் இதற்குச் சான்றாகின்றன. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்; அதுவே விவசாயத்தின் பூர்வீகம் என்று கூறப்பட்டாலும் முல்லை நிலமும் குறிஞ்சியும் கூட குறித்த காலகட்டத்தின் பின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தவிர்க்க முடியாத தொழில்சார் இணங்கு முறையை உடையன என்பது முக்கிய விடயமாகிறது. தமிழகத்து முல்லை நிலம் காடுகளை, அவற்றை ஒட்டியமைந்த மேய்ச்சல் நிலப் பகுதிகளைக் கொண்டவை; கால்நடை வளர்ப்புக்கு உகந்தவை. காலப்போக்கில் சிறுவேளாண்மை நிலங்கள் உற்பவிக்கப்பட்டன. வரகு, தினை முதலான தானியங்கள் நிறைவாக உற்பத்தி செய்யப்பட்டன என கலித்தொகை (53: 22: 108:3) பல இடங்களில் எடுத்துரைக்கிறது. எருது வளர்ப்பவர்கள் அண்டர்கள் எனப்பட்டனர் (குறுந்தொகை 117:3). ஆயர் எனப்படுவோர் கோட்டினத்தாயர் (எருமை வளர்ப்பவர்), கோவினத்தாயர் (பசு வளர்ப்போர்), புல்லினத்தாயர் (ஆட்டிடையர்) என வகைப்பட்டிருந்தனர். இடையர் பல வகையினராக இருந்தனர் (குடவர், கோவலர், பூழியர், பொதுவர்). விவசாயம், கால்நடை இணைந்த வாழ்வு திணை மரபில் இருந்து மாறிய புதுவாழ்வை அளித்தது. பிற்கால இந்தியக் கால்நடை வளர்ப்போர் மேய்ச்சல் நிலம் தேடி இடம் பெயர்ந்து சென்றனர் எனவும் அதில் ஒரு பகுதியினர் இலங்கையினை வந்தடைந்து வாழ்ந்தனர் எனவும் கருதப்படுகிறது. மனிதர், வேட்டையாடல் – உணவுதிரட்டல் வாழ்க்கைமுறையில் இருந்து வேளாண்மை சார் வாழ்க்கைமுறைக்கு மாறியபோது, அனைத்துத் தொல்பண்பாடுகளிலும் வழக்கில் வந்த கால்நடைகளை வளர்த்தல், பேணுதல், உணவாகப் (இறைச்சி) பயன்படுத்தல் ஆகிய செயல்முறைகளின் கூட்டுத்தொழில் கால்நடை வளர்ப்பு எனப்பட்டது. இது வேளாண்மையின் துணைத்தொழிலாகிவிட்டது. கால்நடை வளர்ப்பானது, பண்பாட்டுக்குப் பண்பாடு, காலத்துக்குக் காலம் மாறிவருவதோடு, தனித்துவமான பண்பாட்டு, பொருளியல் பாத்திரத்தையும் வகிக்கிறது. எது எவ்வாறாயினும் கால்நடை வளர்ப்போரை இடையராகவோ, ஆயராகவோ கருதும் நிலை மாறியது. அது விவசாய நிலம் சார் மக்களின் தொழிலாயிற்று. பெருங்குடி வேளாளர், சிறுகுடி வேளாளர்களின் தொழிலாயிற்று. காலனிய காலத்தில் எல்லா மக்களும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். ஆயினும் ‘பட்டி’ வளர்ப்பு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தாரால் தான் இன்றுவரை மேற்கொள்ளப்படுகிறது. மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் சிறுகுடி வேளாளர் மாடு வழி தவறிச் செல்லாதிருக்கவும், நோய் நொடியின்றி பட்டி பெருகவும் பல தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். பிராந்திய அடிப்படையில் வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு வழிபாட்டு முறைகள் காணப்படினும் அவற்றின் அடிக்கட்டுமானம் ஒன்றாக இருப்பதைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக சிறுகுடி வேளாளரின் பொதுநிலைத் தெய்வமாக அண்ணமார் காணப்படுகிறார். அவருக்குப் ‘பொல்லு’ வைத்து (தடி) வழிபடும் மரபே காணப்படுகிறது. அதையொத்து பூநகரிப் பிராந்தியத்தில் வழிபடப்படும் குறிப்பன் துவரந்தடி (பொல்லு) வைத்தே வழிபடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கால்நடை வளர்ப்பாளர்களின் நம்பிக்கை மிகுந்த இன்னொரு தெய்வமாக வன்னித் தம்பிரான் என்கின்ற வன்னித்தெய்வம் விளங்குகிறது. இதேபோல மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமார், குமாரர், முன்னடித் தம்பிரான் வழிபாடுகளும் காணப்படுகின்றன. இந்த ஆய்வுக்காக திருகோணமலையில் இத்தெய்வம் பற்றிய தரவுகளை நேரே சென்று திரட்ட திசானி, டிலக்சனா, கஸ்தூரி ஆகியோர் உதவினர். அதேபோல முல்லைத்தீவில் அபிஷேகன், கனுசியா போன்றோரின் உதவி கிடைத்தது. வன்னித்தம்பிரான் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வதனமார்களில் ஒருவரான வன்னித் தம்பியே வன்னித் தம்பிரான் என வழங்கப்படுவதாக அறியமுடிகிறது. வேளாள சமூகத்தின் ‘வன்னியர்’ தெய்வ வழிபாடு இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படுகிறது. அவ்வழிபாடும் இவ்வன்னித் தம்பிரான் வழிபாடும் ஒன்றா என்பதைச் சரிவர அறியமுடியவில்லை. தம்பிரான் என்பதற்கு பெரியவர், தலைவர், மதிப்பிற்குரியவர் என்ற பொருள்கள் உண்டு (உதாரணம் பெரியதம்பிரான், நாகதம்பிரான்). வன்னியர்களின் தலைவனாகவோ அல்லது வன்னியர்களின் வழிவந்த வழிபடு தெய்வமாகவோ வன்னித்தம்பிரான் வழிபாடு வந்திருக்கலாம். 1) வதனமார்களும் வன்னித் தம்பிரானும் ‘வதனமார் குழுமாடு கட்டு அகவல்’ எனும் நூலில் (ஈழத்துப் பூராடனார்: 2000) “சுவாதியம்மனின் மகனார் மங்கலனார், வதனமார் பதின்மரோடும் யானை, காலி (குழுமாடு/ குழுவன்) பிடிக்கின்ற செயலுக்காய் வில்லம்பு, செல்லை, வெளுக்கயிறு, கோடாலி, கிருசவடி, மேல்வளைந்த கோடரி (கோடரி), எல்லையில்லாப் பொல்லு என்பவற்றை எடுத்துக்கொண்டு, அவர்களது நாடான அயோத்தியில் இருந்து புறப்பட்டு ‘இராவணனாராண்ட’ இலங்கையை வந்தடைந்தனர்” எனக் கூறப்படுகின்றது. அவர்களுள் ஒருவரே வன்னித் தம்பிரான் என கிழக்கிலங்கை மக்களால் நம்பப்படுகிறது. 2) மாருதப்புரவீகவல்லியும் வன்னித்தம்பிரானும் தமிழ்நாட்டிலிருந்து மாருதப்புரவீகவல்லி என்னும் இளவரசி, தன்னைப் பீடித்திருந்த நோயைத் தீர்ப்பதற்காக இலங்கையின் வடபகுதிக்கு வந்தார். அந்நோய் தீர்ந்தபின், வன்னி என அழைக்கப்படும் அடங்காப்பற்றுப் பகுதியை ஆண்டுவந்த உக்கிரசிங்கசேனன் என்பவரை மணந்து இலங்கையிலேயே தங்கிவிட்டார். வையாபாடல், இவர்களுக்குப் பிறந்த மகனின் திருமணத்துக்காக, மதுராபுரியில் இருந்து பெண் ஒருவரை அழைத்துவந்தபோது, அவளுடன் 60 வன்னியர்கள் வந்ததாகக் கூறுகின்றது. இவர்கள் அடங்காப்பற்றுக்கு அனுப்பப்பட்டு அப்பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டபோது இலங்கைக்கு மேலும் பல வன்னியர்களை இவர்கள் அழைத்து வந்துள்ளனர். முல்லைத்தீவில் குடியேறிய முல்லை மாலாணன், சிவலை மாலாணன், சருகி மாலாணன், வாட்சிங்கராட்சி போன்ற வன்னியர்களின் பெயர்கள் வையாபாடலில் கூறப்பட்டுள்ளன. வன்னி – அடங்காப்பற்றின் பூர்வகுடிகளினால் ஏற்பட்டு வந்த தொல்லைகளின் காரணமாக, அவர்களை அடக்குவதற்காகவும், தமிழ்நாட்டிலிருந்து பல வன்னியர்கள் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். வையாபாடலில், ‘கறுத்தவராயசிங்கம், தில்லி, திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், வாகுதேவன், மாதேவன், இராசசிங்கன், இளஞ்சிங்கவாகு, சோதையன், அங்கசிங்கன், கட்டையர், காலிங்கராசன், சுபதிட்டன், கேப்பையினார், யாப்பையினார், ஊமைச்சியார், சோதிவீரன், சொக்கநாதன், இளஞ்சிங்கமாப்பாணன், நல்லதேவன், மாப்பாணதேவன், வீரவாகு, தானத்தார், வரிப்பத்தார்’ ஆகிய 24 பேர் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் பளை, கரைப்பற்று, கச்சாய், கருவாட்டுக்கேணி, கட்டுக்குளம் போன்ற இடங்களில் குடியேற, வேறு பலர் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டப் பகுதிகளிலும் குடியேறினர். யாழ்ப்பாணத்திலும் சிலர் குடியேறினர். இன்னும் சில வன்னியர் கணுக்கேணி, முல்லைத்தீவு, தனிக்கல்லு, கிழக்குமூலை, மேற்குமூலை ஆகிய இடங்களில் ஆட்சிசெலுத்தி வந்த பல்வேறு பூர்வகுடிச் சாதியினரைத் தோற்கடித்து, அப்பகுதிகளைத் தாங்களே ஆண்டு வந்துள்ளனர். 3) திருகோணமலையில் வன்னித் தம்பிரான் பற்றிய கதைகள் வதனமார் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்ததாகவும் இலங்கையில் திருகோணமலையில் முதலில் இறங்கியதாகவும் சொல்லப்படும் அதேவேளை, இவர்களின் பொழுதுபோக்காக யானை, குதிரைகளை அடக்குதல் என்பன இருந்து வந்துள்ளன. அவர்களில் மொத்தமாக ஏழு பேர் இருந்துள்ளனர். அவர்களில் வன்னித்தம்பி என்ற ஒருவர் பாலை மரத்தில் தேனைக் கண்டு அதனை தான் மட்டும் குடித்துவிட்டார். அவ்வேளை இவரைக் காணாது தேடி வந்த மற்ற ஆறு பேரும், இவர் தான் மட்டும் தேனை அருந்தியிருப்பதைக் கண்டு கோபமுற்று, இங்குள்ள கால்நடைகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், பாதிப் பழமோ அல்லது பாக்கோ வைத்தால் கூட, அதனையும் ஏற்றுக்கொண்டு நன்மை செய்ய வேண்டும் என்றும் அவருக்குச் சாபமிட்டனர் (பூசாரி நல்லையா தவராசா). இவ்வழிபாடானது கிருஷ்ண அவதாரத்துடன் இணைத்துப் பேசப்படுகின்றது. அதாவது கிருஷ்ணவதாரத்தில் எவ்விதம் கிருஷ்ணர் பசுக்களைக் காத்து வந்தாரோ அதனைப் போல தங்களுடைய கால்நடைகளையும் பாதுகாப்பவராக இவர் கருதப்பட்டு வழிபடப்படுகின்றார். பசுக்கள் பெருகுவதற்காக வழிபடப்படும் இவரிடமே எருமை மாடுகள், பசுமாடுகள் என அனைத்தும் இருந்துள்ளன. இவர் காளை மாடுகளைச் சாந்தமாக்குதல், காட்டு மாடுகளைப் பிடித்து வைத்தல் போன்றவற்றினைச் செய்பவராகவும் கருதப்படுகின்றார். நம் மக்கள் எல்லாம் பால் கறப்பதில்லை. பால் வேண்டுமெனில் ஏனத்தைக் (பாத்திரத்தை) கொண்டு சென்று மாடுகள் உள்ள வழியில் வைப்பர். பின்னர் ‘கூ’ என்ற சத்தம் கேட்கும். சிறிது நேரம் கழித்துச் சென்று பார்த்தால் ஏனத்தில் பால் நிறைந்திருக்கும். இவ்வாறு இருக்க, ஒரு சமயம் வண்ணார் குலத்தைச் சார்ந்த ஒருவரும் மற்றொருவரும் பால் கறப்பவர் யார் என்பதனை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏனத்தை பசுக்கள் செறிந்துள்ள இடத்தில் வைத்துவிட்டு, காட்டில் ஒளிந்திருந்து பார்த்தனர். சிறிது நேரத்தில் அந்த ஏனத்தில் பால் நிரம்பி வழியத் தொடங்கியது. அவ்வேளையில் ஒளிந்திருந்த அவ்விருவரும் போதும் என்று சொன்னதால் பாலுடன் ஏனமும் இல்லாமல் போனது. அன்றிலிருந்து பால் கொடுப்பதில்லை. அப்போதுதான் இவர் தனிப்பட காட்டிற்குச் சென்று இந்தப் பூசையைச் செய்கின்றார். ஏனெனின் அவரின் அம்மாசுவாதி அம்மன் ‘நீ அங்கே, இங்கே போய் ஒன்றும் கேட்கக்கூடாது. பிறரின் பட்டியில் போய் பாலும் எடுக்கக்கூடாது. முழுப்பேரும் கொண்டு வந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் உனக்குப் பரமுதம் செய்து தருவார்கள். அதை இல்லையென்று சொல்லாமல், அங்கே போய் பரமுதத்தைச் செய்துட்டு, சாப்பிட்டு வா’ என உரைத்ததாக நம்பப்படுகிறது. தினகரன் பத்திரிகையில் 2014.11.16 அன்று வெளிவந்த தாழை செல்வநாயகம் என்பவர் எழுதிய ‘கிளிச்சிறாம்பி’ எனும் சிறுகதையில் உயிர்களைக் காப்பாற்றும் தெய்வமாக வன்னித்தம்பிரான் குறிப்பிடப்படுகின்றார். வன்னித்தம்பிரான் வழிபாடு இன்று வன்னித் தம்பிரான் வழிபாடு திருகோணமலையில் சம்பூர், கிளிவெட்டி முதலான ஊர்களில் செல்வாக்குப்பெற்றுக் காணப்படுகிறது. வன்னித் தெய்வம் என்ற பெயரில் முல்லைத்தீவில் குமுழமுனை, ஆண்டாங்குளம் பகுதியில் உள்ள காட்டில் இவ்வழிபாடு காணப்படுகிறது. ஏலவே கூறியது போல மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமார் வழிபாடு காணப்படுகிறது. அத்தெய்வத்துக்கான வழிபாட்டு முறையும் வன்னித் தம்பிரான் வழிபாட்டு முறையும் ஒத்த தன்மையுடையவை. அதேபோல மட்டக்களப்பில் காணப்படுகின்ற ‘முன்னடித் தம்பிரான் வழிபாடு, குமார தெய்வ வழிபாடு’ என்பன வன்னித்தம்பிரான் வழிபாட்டுடன் முழுமையாக ஒத்தமைந்தமை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகச் சூழலில் இவ்வழிபாடு இருப்பதாகத் தெரியவில்லை. வன்னித் தம்பிரானுக்கெனத் தனிக்கோயில் எதுவும் இல்லை. காட்டின் ஒரு புறத்தில் பற்றைகள் வெட்டப்பட்டு ஒரு மரத்தை மையமாகக் கொண்டதாக இவ்வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. குறிப்பாக பாலைமரம் அல்லது ஆலமரம் முதன்மைப்படுத்தப்படுகின்றது. முல்லைத்தீவில் வெள்ளைக்கல் ஒன்று பாலை மரத்தடியில் வைத்து வழிபடப்படுகிறது. வழிபாட்டு முறைகள் வன்னித்தம்பிரானுக்கான சடங்குகளானது தை, மாசி, பங்குனி மாதங்களிலேயே பெரும்பாலும் செய்யப்படும். இவை கால்நடைகளுக்கு நோய் தாக்காது இருக்கவும் காணாமல்போன கால்நடைகளைத் திரும்பப் பெறுவதனையும் நோக்காகக்கொண்டு ஆற்றப்படுகின்றதெனலாம். மாடுகள் கன்று போட்டதன் பின்பு அவை கறக்கும் பாலினை வீட்டிற்குக் கொண்டு வந்து காய்ச்சி, அதிலிருந்து வருகின்ற பாலாடை, நெய் என்பவற்றினை எடுத்து, அதில் விளக்கேற்றி இச்சடங்குகள் ஆற்றப்படுகின்றன. அந்தக் காலத்தில் வரும் பாலினை விற்க மாட்டார்கள். வீட்டிற்குக் கொண்டுபோய் வன்னித் தம்பிரானுக்காக நெய் எடுத்து அதில் விளக்கேற்றி, உறி போட்டு, பாலை மரத்திற்கு அடியில் அந்த உறியில் முக்காலியைக் கட்டி, அதில் மடை வைத்து, பின்பு தேங்காய்ப் பாலில் பொங்கி, பானையை மூடி வைப்பர். அப்பானை திறக்கப்பட மாட்டாது. எனினும் தேங்காய்ப் பால் நன்கு பொங்கி வரும்வேளை, அதனை உறியில் வைத்து வெற்றிலை மடை மட்டும் வைக்கப்படுமேயன்றி வேறு மடைகள் பரப்பப்படமாட்டாது. பானையோடு தூக்கி முக்காலி மாதிரி உறியில் வைத்து கொஞ்ச நேரம் வெளியில் தள்ளி நின்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து, கற்பூரம் கொளுத்தி பூசை செய்து முடிப்பார்கள். அதுமட்டுமன்றி வன்னித் தம்பிரானுக்கு வீட்டில் இருக்கும் பறங்கி வாழையை நேர்ந்து கட்டுவதுண்டு. அந்த வாழை உரிய நேரத்தில் பெரிய குலை போடும் என்ற நம்பிக்கையும் உண்டு. மேலும் அந்த வாழைக்குலையிலிருந்த வரும் பழத்தைக் கொண்டுவந்து தான் இங்குள்ள மடையில் வைப்பார்கள். இங்கு படைக்கப்படும் எந்தப் பொருளும் வீடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட மாட்டாது. அதுமட்டுமன்றி பெண்கள் இவற்றினைச் சாப்பிடுவதும் கிடையாது (பூசாரி நல்லையா தவராசா). மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமாரில் ஒருவரான முன்னடித் தம்பிரான் தெய்வத்திற்கு பெரிதாக பந்தலினை அமைத்து, இலை-குழைகளினால் அலங்கரித்து வழிபாடியற்றப்படும். இதில் பச்சை அரிசியினையும் பாலினையும் சேர்த்துப் பொங்கல் செய்வர். அதில் வேறெந்தப் பொருளும் சேர்க்கப்படமாட்டாது. அகப்பையினைப் பயன்படுத்தாமல் பொங்கலைப் பொங்க வேண்டும். வாழைப்பழத்தினைக் குலையோடு பந்தலில் வைத்து வெற்றிலை, பாக்கு, பூக்கள் என்பவற்றினையும் மடையில் வைத்து வழிபாட்டினை ஆரம்பிப்பர். ஆண்டுதோறும், மாடு முதற் கன்று ஈன்றதும், பட்டிக்காரர்களால் இளங்கன்றுப் பால் எடுத்து பொங்கல் செய்யப்படும். இளங்கன்று வளர்ந்த பிற்பாடு அதன் பாலை எடுத்துச் சடங்கு செய்வர். இது ‘முதியான் கன்றுப் பால்’ எனப்படும். இரு தடவை செய்ய முடியாதவர்கள் ஒரு தடவை மாத்திரம் செய்யும் சந்தர்ப்பங்களும் உண்டு. பந்தல் போட்டு அப்பந்தலில் முக்காலி கட்டி அம்முக்காலியிலும் பொங்கல், பழம் என்பன படைக்கப்படும். இச்சடங்கானது முறையாகப் பூசாரியினால் செய்யப்பட்டால் முன்னடித்தம்பிரான் பூசாரியினுள் வெளிப்படுவார். பொங்கலைப் படைத்துவிட்டு காட்டிலேயே அதனை விட்டு வருவர். அதனை வீட்டிற்கு எடுத்து வரமாட்டார்கள். பின்னர், படைத்த பொங்கலை காட்டிற்குச் சென்றுதான் உண்ண வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை விதித்துள்ளனர். குறிப்பாக வீட்டிலுள்ள பெண்கள், குழந்தைகள் இப்பொங்கலை உண்ணக்கூடாது (ஈழத்துப் பூராடனார், 2000). இந்த அடிப்படையில் வன்னித் தம்பிரான் வழிபாடும் முன்னடித்தம்பிரான் வழிபாடும் ஒன்று என்றே கருதத் தோன்றுகிறது. குமுழமுனைப் பூசாரி தியாகசோதி சந்திரன், தை மாதத்தில் காடுவெட்டி நிகழ்த்தப்படும் வழிபாடாக இதனைக் குறிப்பிடுகின்றார். அவர் கூறுவதன்படி, அது பட்டிப்பொங்கலை அண்மித்து வருதலை அவதானிக்க முடிகிறது. உரிய பூசைத்தினத்திற்கு முதல்நாள் உரல், உலக்கை, சுளகு, நெல் உள்ளிட்ட நெல் குற்றலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் சென்று மஞ்சள் நீரினால் கழுவி, நெல்குற்றும் மரத்தடியைத் தூய்மைப்படுத்தி அவ்விடத்தில் வைத்துக் குற்றிய பின், அரிசியை அம்மரத்திலேயே பாதுகாப்பாகக் கட்டி வைத்துவிட்டு வருவர். பெண்கள் புழங்கிய (பயன்படுத்திய) பொருட்களைப் பயன்படுத்துவதில்லை அல்லது அவற்றை மஞ்சள் நீரால் தூய்மைப்படுத்தி எடுத்துச் செல்வர். இச்சடங்கிலும் வழிபாட்டிலும் பெண்களை எந்த வகையிலும் சம்பந்தப்படுத்த முடியாது – கூடாது என்பது இவ்வழிபாட்டின் நியதியாகக் காணப்படுகிறது. பட்டியில் உள்ள எருது, பசு என்பவற்றில் இருந்து பெறப்பட்ட பாலை நெய்யாக்கி, அதனையும் பாலையும், குற்றித் தீட்டிய அரிசியோடு சேர்த்துக் கட்டி, ஒரு வருடம் நிறைவுற்ற தேங்காயையும் சொட்டுகளாக்கி (துண்டுகளாக்கி), புனிதமாக்கப்பட்ட பானையில் இட்டுப் பொங்குவர். பொங்கலுக்கு நீர் விடப்படுவதில்லை. பானையில் அகப்பையிட்டுக் கிண்டாது இப்பொங்கல் நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இம்மக்கள் தங்கள் வயல்களையும் கால்நடைகளையும் காக்குமாறு வேண்டி வயல்களின் எல்லைகளிலும் மேய்ச்சல் நிலங்களின் – கிராமங்களின் எல்லைகளிலும் காஞ்சுரம் மரத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட வலிதான ஒன்றரைப் பாகம் (ஏறத்தாழ ஆறடி) கட்டையை (தடி) நிலத்தில் அடித்து நிறுத்துவர். பின் தென்னை மரத்தில் இருந்து பழுத்து விழுந்த தேங்காய் ஒன்றைத் தெரிவு செய்து மஞ்சள் நீரில் கழுவித் தூய்மைப்படுத்திய பின் திருநீறு, சந்தனம் இட்டு வன்னித் தம்பிரானுக்கு நேர்ந்து, இக்காஞ்சுரங் கட்டையில் கட்டிவிடுவர். இதன் வீரியம் ஒரு வருடத்திற்கு இருக்கும். ஒரு வருட நிறைவில், இத்தெய்வத்திற்கான பொங்கலில் இத்தேங்காயை உடைத்துத் துண்டுகளாக்கி இடுவர். பின்னர், மீளவும் நேர்ந்து தேங்காய் கட்டப்படும். இவ்வாறு தேங்காய் கட்டப்படுவதனால் தமது வயலும் பயிரும், கால்நடைகளும் பாதுகாக்கப்படுவதாக இன்றும் நம்பப்படுகிறது. இவ்வழக்கம் குமிழமுனையிலேயே காணப்படுகிறது. இந்தத் தெய்வத்துக்கான பூசையின் போது தெய்வமாடினும், குறி சொல்லும் வழக்கம் இல்லை. பூசையின் முடிவில் பூசாரி அடியவர்களுக்கு நெற்றியில் நீறிட்டு ஆசிர்வதிப்பார். முல்லைத்தீவு குமுழமுனையில் படையல்களைத் தட்டுவம் என்கிற பனையோலையில் படைப்பதும், தட்டுவத்திலிட்டே பிரசாதத்தை உண்பதுமான வழக்கம் காணப்படுகிறது. திருகோணமலையில் இலையில் படையலிடும் வழக்கமே காணப்படுகிறது. சில அவதானிப்புகள் வதனமார்களில் ஒருவராகவே வன்னித்தம்பிரான், முன்னடித்தம்பிரான் ஆகியோர் சுட்டப்படுகின்றனர். வதனமார், குமாரதெய்வச் சடங்குகளில் கட்டுக் கூறப்படும். வன்னித் தம்பிரான் தெய்வமேறினும் கட்டுக் கூறுவதில்லை. ஏனைய தெய்வங்களோடு வதனமார், குமார வழிபாடுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், வன்னித்தம்பிரான் வழிபாடு தனித்தே இன்றும் இடம்பெறுகிறது. குமார வழிபாடு, இல்லங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. வதனமார் தெய்வம் காளி, வைரவர், மாரி கோயில்களில் காவல் தெய்வமாக அமைந்துள்ளது. வன்னித்தம்பிரானோ இன்றும் காடுகளில் வைத்தே வழிபடப்படுகிறார். பூசைக்காலம் முழுவதும் மௌனமாகவே யாவரும் கலந்து கொள்ள வேண்டும். அதேவேளை பூசாரி வாய் கட்டிப் பூசை செய்தல் நீண்டகால மரபாக இருந்து வருகிறது. ஆயினும் முல்லைத்தீவு குமுழமுனை வன்னித்தம்பிரான் வழிபாட்டில் தற்போது வாய் கட்டிப் பூசை செய்யப்படுவதில்லை. அந்தரத்தில் முக்காலியோ, அன்றிச் சிறுபரணோ அமைத்துப் படையல் வைப்பதும், பொங்கலைப் பானையோடு வைத்தே படைப்பதும் பொதுப்பண்பாக உள்ளது. திருகோணமலைப் பிரதேசத்தில் வன்னித்தம்பிரான் முன்பு பரணிட்டு அதன் மேல் குழைகளைப் பரவி, அதன்மீது பெரிய காட்டிலைகளில் அல்லது வாழையிலைகளில் படையலை வைத்துப் படைக்க, முல்லைத்தீவில் பனையோலையிலான தட்டுவத்தில் வைத்துப் படைக்கின்றனர். பூசாரி படையலுணவை முதலுண்ணத் தொடங்குவார். ஏனையோர் அதன் பின் உண்ணத் தொடங்குவர். முழுவதும் உண்ணப்பட வேண்டும் என்பதோடு பூசாரி இடத்தைவிட்டு எழுந்த பின்பே ஏனையோர் எழமுடியும். ஆண்கள் மட்டுமே பங்குபற்றும் வன்னித்தம்பிரான் பூசையில் பெண்களுக்கு இடமில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் அளைந்த பொருட்களைப் பாவிக்கக்கூடாது; அன்றிப் புனிதப்படுத்திப் பாவிக்க வேண்டும். முடிவுரை ஈழத்தில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களில், குறிப்பாக திருகோணமலை, முல்லைத்தீவுப் பிராந்தியங்களில் காணப்படும் கால்நடை, விவசாய கலப்புத்தொழில் செய்கின்ற மக்களின் வழிபடு தெய்வமே வன்னித்தம்பிரான். இவர் வன்னித் தெய்வம் எனவும் சுட்டப்படுகின்றார். காடுகளில் வைத்து வழிபடப்படுகின்ற, உருவமற்ற மரங்களில் வீற்றிருக்கும் தெய்வமாக இது கருதப்படுகிறது. இதனால் படையல்களும் உயரமான இடத்தில் – அந்தரத்தில் வைத்தே வழிபடப்படுகின்றன. இது வதனமார் வழிபாட்டோடு இணைந்த கதையாடல்களையும் வழிபாட்டு மரபுகளையும் கொண்டு அமைவதோடு, முன்னடித்தம்பிரான் வழிபாட்டோடு ஒத்தமைந்ததாகவும் காணப்படுகிறது. ஒரேவிதமான அடிப்படையில் ஒன்றான இத்தெய்வம், பிராந்தியப் பண்பியலுக்கேற்ப மாறுபட்டுக் காணப்படுவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஈழத்துக்கான வன்னியர் மரபோடும் இது இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கால்நடையோடு இயைந்த விவசாயம் என்பது இன்று வேளாண்மையாகக் கருதப்படுவதற்கான முன்னோடி வாழ்வின் விளைவே வன்னித்தம்பிரான் வழிபாடு ஆகும். ஆயினும், இன்று நிலவியல்சார் பிரச்சினைகளால் கால்நடை வளர்ப்பு அருகி வருகிறது. கால்நடை வளர்ப்பில் உள்ள சவால்கள் (மேய்ச்சல் நிலமின்மை, அபகரிப்பு, குடியேற்றம்), ஆர்வமின்மை, நவீன வாழ்வு, இதனைத் தாழ்வாகக் கருதுதல் முதலான பல சிக்கல்கள் இதற்கு ஏதுவாகின்றன. இதனால் வன்னித் தம்பிரான் வழிபாடும் அருகி வருகின்றது. https://www.ezhunaonline.com/vannithampran-worship/