Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! adminJune 20, 2025 வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறப்பு அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், விசேட அதிதியாக வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் வாழ முடியாது என்ற மனோ நிலை எமது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். மறுபுறத்தில் பிறப்புவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.1981 காலப்பகுதியில் 8 இலட்சத்துக்கு மேல் இருந்த யாழ்.மாவட்ட சனத்தொகை தற்போது 6 இலட்சம் வரைதான் உள்ளது. முன்னர் 11 எம்.பிக்கள் இருந்தனர். இன்று யாழ்.மாவட்டத்தில் ஆறு எம்.பிக்களே தெரிவாகின்றனர். அடுத்த தேர்தலின்போது இது மேலும் குறைவடையக்கூடும். ஏனெனில் புலம்பெயர்வு அதிகரித்துள்ளது. வடக்கை முன்னேற்றுவது பற்றி, விவசாயம் உள்ளிட்ட தொழில்துறைகளை மேம்படுத்துவது பற்றி கடந்த காலங்களில் கவனம் செலுத்தப்படாமையும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தி உருவாக காரணமாக அமைந்தது. இந்நிலைமையை மாற்றியமைக்கவே நாம் வந்துள்ளோம். வடக்கு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்கள பற்றி சிந்திக்கக்கூடிய தலைவர் நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார். அதனால்தான் பாதீட்டில்கூட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும்போது யாழில் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் நிர்மாணங்கள் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே, தமிழ் மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்;. மக்கள் கைவிட்டால்கூட, மக்களுக்காக செய்ய வேண்டிய திட்டங்களை நிச்சயம் நாம் செய்வோம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/217092/
  2. இனி வருமா sudumanal காஸா படுகொலைக்குப் பின் உலகம் பூராவும் இஸ்ரேல் மீதான மக்களின் வெறுப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. காஸா இனப்படுகொலையை எதிர்த்து பல பேரணிகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரான்ஸ், பிரித்தானியா, இப்போ ஜேர்மனி என ஆட்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஏதோ முனகுவதற்கு இந்த எதிர்ப்புப் போராட்டங்கள்தான் காரணம். அது அவர்களின் பிழைப்புவாதமாக இருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் போற்றத் தக்கவை. அவை ஏற்கனவே பலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்து வருபவை. ஐரோப்பிய ஒன்றியத்தில் அயர்லாந்து காஸா படுகொலையை எதிர்த்தும் சியோனிச இஸ்ரேலை கண்டித்தும் அரசியல் ரீதியாக கிழித்து தொங்கவிட்டுக் கொண்டே இருப்பவர்கள். ரசியாவுக்கு விதித்த 27000 பொருளாதாரத்தடையுடன் இன்னும் இன்னுமாய் 17, 19 என கொசுறு கொசுறாய் கூட்டுகிற இந்த ஒன்றியம் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தடையைத் தன்னும் ஏவியதில்லை. மாறாக இஸ்ரேல் தன்னை பாதுகாக்கும் உரிமை உடையது என காஸா மக்களின் புதைகுழிமேல் நின்று சங்கு ஊதுவது இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்போ இஸ்ரேல் ஈரான் மீது வலிந்து தொடுத்த தாக்குதலின்போது ஈரான் தன்னை பாதுகாக்கும் உரிமை கொண்டது என்பதை சொல்ல அவர்கள் தயாராக இல்லை. மாறாக ஏதோ ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கிறதாக மாற்றி மொழிபெயர்த்து, அதனடிப்படையில் இஸ்ரேல் தன்னை பாதுகாக்கும் உரிமை உடையது என அதே சங்கை மீண்டும் ஊதுகிறார்கள். இதுதான் அவர்களின் மேக் அப் ஜனநாயகம். ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், ஹவுதி அமைப்புகளை சுட்டிக் காட்டி ஈரான் பயங்கரவாதிகளை வளர்ப்பதாகவும், மத அடிப்படைவாதிகளை வளர்ப்பதாகவும் சொல்லும் மேற்குலகமும் அதன் இரைச்சலுக்குள் அகப்பட்டவர்களும் ஒன்றை மறைக்கிறார்கள். அந்த மூன்று அமைப்புகளும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருப்பவர்கள். மத அடிப்படைவாதிகளல்ல. யார் மத அடிப்படைவாத அமைப்பினராக வெறியாட்டம் ஆடியவர்கள்/ஆடுபவர்கள் என்ற உண்மையை ஏன் மறைக்கிறார்கள். அல் கைடா, ஐஎஸ்ஐஎஸ், பொக்கோ கராம் போன்ற மத அடிப்படைவாதிகள்/பயங்கரவாதிகளை உருவாக்கியவர்கள் அமெரிக்காவும் பிரித்தானியாவும்தான் என்பது வரலாறு. இவர்களே ஏகாதிபத்தியத்துக்கு விளக்கு பிடித்தவர்கள். பிறகு இந்த வளர்த்த கடாவில் ஒரு பட்டி ஆடுகள் இந்த தோற்றுநர்களின் மார்பில் பாய்ந்த கிளை வரலாறும் உண்டு. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மண்ணின் விளைபொருள் ஹமாஸ். இஸ்ரேலின் லெபனான் மீதான ஆக்கிரமிப்பின் விளைபொருள் ஹிஸ்புல்லாஹ். அவர்களது செயற்பாட்டில் விமர்சனங்கள் இருக்கலாம். இருக்கும். அது அவர்களை பயங்கரவாகிகள் எனவோ மத அடிப்படைவாதிகள் எனவோ அவதூறு சொல்ல போதுமானதல்ல. 1993 இல் ஐநா சபையால் 160 நாடுகளுக்கு மேல் வாக்களித்த two state (பலஸ்தீனம், இஸ்ரேல்) தீர்வை இஸ்ரேல் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக பலஸ்தீன மண்ணை மட்டுமன்றி சிரியா, லெபனான் நாடுகளின் எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்து அகண்ட இஸ்ரேல் என்ற one state தீர்வினை சாதிக்க வெறியாட்டம் ஆடிவருகிறது. ஈரானும் ஹமாஸ் உம் மறுபக்கத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்க தயாராக இல்லை. இந்தப் போக்கை இரு தரப்பும் தொடர்ந்தால் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமே இல்லை. பெரியண்ணனின் நிழலில் மத்திய கிழக்கின் சண்டியனாக வெறியாட்டம் ஆடிய இஸ்ரேலின் பிம்பத்தை எவரும் எதிர்பாராத விதத்தில் ஈரான் அடித்து நொருக்கியிருக்கிறது. இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்கு எதிரான உலக மக்களின் குரல் பல நாடுகளின் ஆட்சியாளர்களால் உதாசீனம் செய்யப்பட்ட தொடர் கோபத்திலிருந்த மக்கள் இஸ்ரேலின் மீதான ஈரானின் உச்சந்தலை அடியை கொண்டாடுகிறார்கள். இது நசுக்கப்பட்ட அல்லது அரசுகளால் செவி மடுக்கப்படாத தமது மனிதாபிமானம் சார் குரலினதும் மனித அறத்தினதும் தோல்வியிலிருந்து எழுந்திருக்கிற உளவியல். ஈரான் இந்த ஆதரவினதும் தமது அதி தாக்குதல் பலத்தினதும் நியாயமான திமிருடன் two state தீர்வை முன்வைத்து மேசைக்கு வர வேண்டும். உலக நாடுகள் ஐநா இனால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட two state தீர்வின் அடிப்படையில் பேச இஸ்ரேலை மேசைக்கு இழுத்து வர வேண்டும். இல்லையேல் ஈரானின் தாக்குதல் வெற்றிப் படியில் ஏறப் போவதில்லை. இந்த சந்தர்ப்பம் இனி வருமா தெரியாது. இரு நாடுகளும் தரைப்படை கொண்டு மோத நிலத் தொடர்பு இல்லை. எனவே இராணுவ ரீதியாக எவரும் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. மூலைமுடுக்கெல்லாம் (சுமார் 750) இராணுவத் தளங்களையும் ஈரானைச் சுற்றி மத்தியகிழக்கு நாடுகளில் அடிவருடிகளையும் கொண்டுள்ள பெரியண்ணன் புகுந்தால் எல்லாம் நாசமாகும். அண்ணனுக்கு நிலத் தொடர்பு எதுவும் தேவையில்லை என்பதை கவனம் கொள்ள வேண்டும். இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரல் வழி அண்ணன் ஈராக்கினுள் உள்ளட்டதைப் போல, ஈரான் அணுகுண்டுக்கு திரி வைப்பதுதான் பாக்கி என சொல்லி உள்ளட நேரமாகாது. எனவே ஈரான் காலத்தைக் கைப்பற்ற வேண்டும். பொருளாதார வீழ்ச்சியும், 2027 இல் சீனாமீது போர் தொடுப்பதற்கான தயாரிப்புகள் காய்நகர்த்தல்கள் எனவும் சிக்குப்பட்டு நிற்கும் அமெரிக்கா நெத்தன்யாகுவின் இந்தப் போருக்குள் உள்ளடுமா என்ற சந்தேகத்தையும் சொல்லி வைக்க வேண்டியிருக்கிறது. அதேநேரம் இஸ்ரேலின் அழிவை அது ஒருபோதுமே சகித்துக் கொள்ளாது என்பதால் ஈரானின் இராஜதந்திர நகர்வு அவசியமானது. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றெல்லாம் ஈரானின் தாக்குதலைக் காட்டி உசுப்பேத்தும் கதைகள் ஒன்றுக்குமே உதவாது!. ravindran.pa https://sudumanal.com/2025/06/19/இனி-வருமா/#more-7187
  3. கிளிநொச்சி நகரினை அபிவிருத்தி செய்வதற்கு இராணுவத்தினரிடம் உள்ள காணிகளை, கட்டடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்; கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை 20 JUN, 2025 | 09:56 AM (எம்.நியூட்டன்) கிளிநொச்சி நகரினை அபிவிருத்தி செய்வதற்கு இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள காணிகள் கட்டடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேளமாலிகிதன் கோரிக்கை விடுத்துள்ளார். கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக பதயை பொறுபேற்றுக்கொண்ட தவிசாளர் வேளமாலிகிதன் தலைமையிலான உப தவிசாளர் உறுப்பினர்கள் வியாழக்கிழமை (19) வடக்குமாகாண ஆளுநரை யாழ்ப்பாண அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கையில், கரைச்சி பிரதேச சபையானது கிளிநொச்சி நகரத்தை கொண்ட பிரதேசமாக இருப்பதால் அதனை உள்ளடக்கிய வகையில் பல்வேறு அபிவிருத்திகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக கிளிநெச்சி சுற்றுவட்ட பாதை புனரமைக்கப்படவேண்டும். குறித்த காணி பகுதி இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளது இதனை விடுவித்து பாடசாலை மாணவர்களுக்கான பாதையை சீர்செய்ய வேண்டும். கிளிநொச்சி பொது நூலக கட்டுமானங்கள் முடிவுறுத்தப்படவேண்டும். இதற்கான மேலதிக நிதி தேடல் மற்றுப் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள கட்டடங்களை விடுவித்தல் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடியதுடன் எமது பிரதேச சபையில் ஆளனிகள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. அனுமதிக்கப்பட்ட ஆளனிக்கு குறைவானவர்களே கடமையில் உள்ளார்கள் குறிப்பாக 138 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளனியாக இருந்தும் தற்போது 78 பேரே கடமையில் இருக்கின்றார்கள். இவை தொடர்பிலும் மேலும் கடந்த காலத்தில் 15 வீதிகள் அமைப்பதற்கு அனுமதி கிடைத்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கிறவல்கள் போட்டு நிறைவுசெய்த நிலையில் அவை முழுமைப்படுத்தபடாத நிலையில் அவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வீதி புனரமைப்பிற்கேன புதிதாக 15 வீதிகளுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இவை தொடர்பில் ஏற்கனவே செப்பனிடப்பட்ட வேலைகளை செய்து முடிப்பதற்கான அனுமதி மற்றும் அதன் சாதக பாதக நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். இதனை விரிவாக கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு சாதகமான விடயங்களை விரைவுபடுத்துவோம் என்றார். https://www.virakesari.lk/article/217961
  4. உகந்தையில் இருந்து கதிர்காம பாதயாத்திரை: காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு! Published By: DIGITAL DESK 2 20 JUN, 2025 | 10:33 AM ஜூலை 26ஆம் திகதி நடைபெறவுள்ள கதிர்காம முருகன் ஆலயத்தின் கொடியேற்ற விழாவை முன்னிட்டு, பக்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளனர். பக்தர்களுக்காக அமைந்துள்ள லகுகலை – உகந்தை வன பாதையின் கதவு, இன்றையதினம் காலை 6.00 மணியளவில் உகந்தை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். “ஆரோஹரா” கோஷங்களுடன் பக்தர்கள் தங்களது காட்டுப்பாதை பயணத்தை இன்று தொடங்கினர். கதிர்காம திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை, இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2025 ஜூலை 4ஆம் திகதி முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217969
  5. தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது விசாரணை General20 June 2025 தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கிய இரண்டு தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால், இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக சம்பாதித்ததாக நம்பப்படும் பணத்தைப் பயன்படுத்தி பல அரசியல்வாதிகள் சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், பாதுகாப்புத்துறையின் முன்னாள் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/407729/investigation-against-28-people-including-tamil-politicians
  6. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முக்கிய முடிவு! ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடுவதா? இல்லையா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்வார் என வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகளுக்கு கணிசமான வாய்ப்பு இருப்பதாக அவர் நம்புவதாக வௌ்ளை மாளிகை மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருப்பதாகவும் இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் சர்வதேச அணு சக்தி நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இந்த சூழலில் ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை கடந்த 13-ம் திடீர் திடீர் தாக்குதலை நடத்தியது. கடந்த 7 நாட்களாக இஸ்ரேல், ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 20 அணு சக்தி தளங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன. மேலும் ஈரானின் 14 அணு சக்தி விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டு உள்ளனர். அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட்டு,சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்கா திரைமறைவில் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சரண் அடையும் பேச்சுக்கேஇடமில்லை என்று ஈரான் மதத் தலைவர் அயதுல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் களமிறங்கினால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழலில் சர்வதேச அளவில் இஸ்ரேல், ஈரானுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் அணி திரண்டு வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி,கனடா, அவுஸ்திரேலியா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டை பாதியில் ரத்து செய்துவிட்டு அமெரிக்கா திரும்பினார். ஈரான் மீது நேரடியாக போர் தொடுப்பது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரான் மீது போர் தொடுக்க விரும்பவில்லை. எனினும் ஈரானின் அணு சக்தி திட்டத்தை அழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நான் என்ன செய்வேன் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த வாரம் மிகப்பெரிய சம்பவங்கள் நிகழும்" என்று தெரிவித்தார். இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாக கருதப்படுகிறது. புளூம்பர்க் ஊடகம் வெளியிட்ட செய்தியில், “அடுத்த சில நாட்களில் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கக்கூடும். இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கில் சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையே நேரடி மோதல் நிலவுகிறது. அந்த வகையில் சன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் விவகாரத்தில் மென்மையான போக்கை பின்பற்றி வருகின்றன. ஈரான் ஆதரவு நாடுகள்: ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா,வடகொரியா, வெனிசூலா, ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகள் செயல்படுகின்றன. துருக்கி, அஜர்பைஜான் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள் ஈரானுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதலை நடத்தினால் பாகிஸ்தான் நேரடியாக போரில் களமிறங்கும். இஸ்ரேல் மீது பாகிஸ்தான் இராணுவம் அணு குண்டுகளை வீசும் என்று ஈரான் இராணுவ மூத்த அதிகாரி மோசென் ரீஸி அண்மையில் கூறினார். ஆனால் ஈரானின் கருத்தை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜாமுகமது ஆசீப் உடனடியாக மறுத்தார்.“ஈரானுக்கு நாங்கள் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. அணு சக்தி ஒப்பந்தங்களை நாங்கள் கண்டிப்புடன் பின்பற்றுகிறோம். பாகிஸ்தான் மண்ணையும், மக்களையும் காப்பாற்ற மட்டுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்" என்று அவர் விளக்கம் அளித்தார். ஈரானுக்கு ரஷ்யா ஆதரவு: உக்ரைனுக்கு எதிரான போரின்போது ரஷ்யாவுக்கு, ஈரான் பல்வேறு வகைகளில் ஆயுத உதவிகளை வழங்கியது. குறிப்பாக ஈரானின் அதிநவீன ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டன. தற்போதைய இக்கட்டான சூழலில் ஈரானுக்கு க்ராசுகா 4 என்ற ஏவுகணை தடுப்பு சாதனத்தை ரஷ்யா வழங்கியிருக்கிறது. இந்த மின்னணு தடுப்பு சாதனம் மூலம் இஸ்ரேலின் அதிநவீன ஏவுகணைகள் நடுவானில் திசை திருப்பப்படுகின்றன. இதன்காரணமாக இஸ்ரேலிய ஏவுகணைகள் மீண்டும் இஸ்ரேலுக்கே திருப்பி சென்று அந்த நாட்டை தாக்குகின்றன. இது இஸ்ரேலுக்கு பேரதிர்ச்சியாக அமைத்திருக்கிறது. இதனிடையே ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செர்ஜி ரயாப்கோவ், மாஸ்கோவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர்தொடுத்தால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும் போது, “ஈரான், இஸ்ரேல் இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்த சமரச பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது.எங்களது சமரச திட்டத்தை ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் விளக்கி உள்ளோம். ஈரான், ரஷ்யா இடையே பொருளாதார, ராணுவரீதியாக மிக நெருங்கிய உறவு நீடிக்கிறது" என்று தெரிவித்தார். ஈரானின் அணு சக்தி தளங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரஷ்ய நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடக்கூடாது என்று அமெரிக்கா, இஸ்ரேலிடம் ரஷ்யா ஆணித்தரமாக எடுத்துரைத்து உள்ளது. சீனா எச்சரிக்கை: சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், பெய்ஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் சீனா மிகக் கடுமையாக எதிர்க்கும். சர்வதேச சட்டவிதிகள் மீறப்படுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்" என்று தெரிவித்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங் அண்மையில் கூறும்போது, “ஈரான், இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா தலையிடக்கூடாது" என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். வடஅமெரிக்க நாடான வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறும்போது, “ஈரானுக்கு ரஷ்யா, சீனா, துருக்கி, பெர்சிய வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில், இஸ்லாமிய நாடுகள், குளோபல் சவுத் நாடுகள் பகிரங்கமாக ஆதரவு அளிக்க வேண்டும். அப்போதுதான் இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்" என்று அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியாவில் தீவிர ஆயுத உற்பத்தி: இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மிக முக்கிய முடிவை எடுத்து உள்ளார். வடகொரியாவின் ஆயுத உற்பத்தியை பலமடங்கு அதிகரிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரே நேரடியாக ஆயுத ஆலைகளுக்கு சென்று மேற்பார்வை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு சுமார் 20,000 கன்டெய்னர்களில் வடகொரியா ஆயுதங்களை அனுப்பி வைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. இதேபோல வடகொரியா தரப்பில் ஈரானுக்கும் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய சூழலில் இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஒருவேளை உலகப்போர் மூண்டால் பேரழிவு ஏற்படும் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmc483ybi004nqp4k2fe0j575
  7. 2029 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றமா? ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றாமல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார். 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு புலமைப்பரிசில் நடத்துவது குறித்து 2028 ஆம் ஆண்டில் பரிசீலிக்க ஒரு குழு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். இன்றைய (20) பாராளுமன்ற அமர்வில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். பரீட்சை அழுத்தத்தைக் குறைப்பதற்கான திட்டத்தை பரீட்சை திணைக்களம் தற்போது தயாரித்து வருகிறது. பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை படிப்படியாக நீக்கவும், புலமைப்பரிசில் காரணமாக மாணவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmc4cepxm004sqp4kze43qw61
  8. செம்மணிப் புதைகுழிக்காக நீதிகோரி இன்று போராட்டம்! யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதை குழிக்கு நீதிகோரி இன்று போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில், செம்மணிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித என்புத்தொகுதிகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டிருந்தன. அந்தப் புதைகுழியை, 'மனிதப் புதைகுழி' என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றமும் அறிவித்துள்ளது. எனினும், புதைகுழிகள் தொடர்பில் வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் வைத்து இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே, செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி இன்று போராட்டம் இடம்பெறவுள்ளது. https://newuthayan.com/article/செம்மணிப்_புதைகுழிக்காக_நீதிகோரி_இன்று_போராட்டம்!
  9. @கந்தப்பு போட்டியை நடாத்துங்கள்😀 வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பல நாட்கள் நான் விடுமுறையில் இருப்பதால் யாழுக்கு வருவதே குறைவாக இருக்கும்
  10. மதில் மேல் பூனை sudumanal மத்தியகிழக்கை மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா ‘மதில்மேல் பூனையாக’ இன்னும் எவளவு காலம் இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிக்ஸ் இன் தோற்றுவாயாக இருந்த முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு தென் ஆபிரிக்காவும் இணைந்து பிரிக் (BRIC) என்பது பிரிக்ஸ் (BRICS) என்றாகியது. இப்போ ஈரானும் அதில் ஒரு புதிய அங்கத்துவ நாடு. ஒற்றைத் துருவ அரசியலை புரட்டிப்போடும் வலுவான பொருளாதார அமைப்பாக பலம்பெறுகிறது பிரிக்ஸ். பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்ட ஈரானின் மீதான இந்த யுத்தம் பிரிக்ஸ் இன் பொருளாதாரத்தை பாதிக்க வல்லது. அதனால் பிரிக்ஸ் நாடுகள் இந்த யுத்தத்தை விரும்பாதது மட்டுமல்ல, அமைதியான வழியில், ஓர் அரசியல் தீர்வை நோக்கிய வழியில் உடனடியான போர்நிறுத்தம் பற்றி வெளிப்படையாக பேசுகின்றன. பல காலமாக இஸ்ரேலுக்கு விளக்குப் பிடித்து மீண்டுவந்த சவூதி கூட, ஈரான் மீதான இஸ்ரேலின் வலிந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஆனால் இந்தியா..? எஸ்.சி.ஓ (SCO- Shanghai Cooperation Organisation) இன் ஓர் அங்கத்துவ நாடாகவும் இந்தியா இருக்கிறது. 2001 இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரசியா, பாகிஸ்தான், பெலாரூஸ், கஸஹஸ்தான், கிர்ஹிஸ்தான் உற்ஸ்பெஹிஸ்தான் இருந்தன. 2003 இல் இந்தியாவின் அனுசரணையின் கீழ் ஈரானும் இணைந்துகொண்டது. இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்தியா இணைந்து கொள்ள மறுத்துள்ளது. ஈரான் மீதான வலிந்த தாக்குதலை இந்த அறிக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. ஈரானின் இறைமைக்கு எதிராக இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அது சுட்டிக் காட்டுகிறது. அத்தோடு இந் நடவடிக்கை பிராந்திய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்கிறது அந்த அறிக்கை. இதில் இந்தியாவின் குரல் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது. 2024 இல் இருமுறை வலிந்த தாக்குதலை இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்டது. ஈரானும் எதிர்த் தாக்குதல் செய்தது. ஆனால் இம் முறை நடந்த தாக்குதல் இன்னும் வீரியமான விளைவுகளை ஈரானுக்கு ஏற்படுத்தியுள்ளன. தாக்குதலில் (இதுவரையான கணக்கின்படி) 70 க்கு மேற்பட்ட மக்களை மட்டுமல்ல, அணு விஞ்ஞானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், உயர்நிலை இராணுவ அதிகாரிகள் என்பவர்களும் இவ் எதிர்பாராத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது ஒரு நாட்டின் இறைமையை மோசமாக மீறிய செயலாகும். அத்தோடு பேரழிவை ஏற்படுத்தவல்ல அணுச் சக்தி நிலையங்கள் மீதும் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் தொடுத்துள்ளது. ஒன்று புரியவில்லை. இன்று அணுவாயுதங்களை வைத்திருக்கிற இஸ்ரேல் உட்பட்ட நாடுகள் யாரிடம் அனுமதி வாங்கி அதை சாதித்தன. பெருமை வேறு கொண்டாடின. ஈரானுக்கு மட்டும் அதை மறுக்க அமெரிக்காவோ இஸ்ரேலோ யார்?. உண்மையில் சிறிய நாடுகள் மீதான அச்சுறுத்தல்களுக்கு அணுகுண்டு ஒருவகையில் பாதுகாப்பு அளிக்க வல்லது என்ற கருத்து ஒன்று உண்டு. அது ஏவியவர் உட்பட மனித குலத்தையே அழிவுக்கு உள்ளாக்கும் வலு கொண்டது. அதனால் அதை எடுத்த எடுப்பிலே பாவிக்க முடியாதபடியான அதி எச்சரிக்கைத் தன்மையையும் அந்த வலு உள்ளடக்கியுள்ளது எனலாம். தாம் அணுகுண்டை தயாரிக்கவில்லை அதற்கான நோக்கமும் இல்லை என்கிறது ஈரான். அது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்ரேலின் இருப்புக்கு ஈரான் அணுவாயுத செயல்முறை அச்சுறுத்தலை தரலாம் என நியாயப் பூழல் சொல்லி ஈரானை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதுவரை 5 தடவைகள் பேசியுமாயிற்று. முன்னேற்றகரமாக இருக்கிறது என இரு தரப்பும் பேசிக்கொண்டிருக்க இஸ்ரேல் ஈரானுக்குள் நுழைந்து வெறியாட்டம் ஆடுகிறது. இதெல்லாம் பெரியண்ணனுக்கு தெரியாமலா நடக்கும் என்பதை ஊகிக்க கடினமேதுமில்லை. இந்தத் தாக்குதலுக்கான இரகசிய ட்றோன் மறைவிடத்தை மொசாட் ஈரானுக்குள்ளேயே நிறுவி பதுங்கியிருந்ததானது ஈரானின் பாதுகாப்பு கவசத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. மொசாட் செய்திருக்கிற இந்த சதியில் இதுவரை ஈரானால் கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது இன்னொரு பக்கத்தில் அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் றோ சம்பந்தப்பட்டதா என்பது தெரியாது. காஸா படுகொலை நடந்து கொண்டிருக்கிறபோது கூட, மோடி அரசு இஸ்ரேலுக்கு தமது ஆயுத விற்பனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டுக் கொலை, பட்டினிக் கொலை என்பவற்றின் மீதான மனிதாபிமானத்தையும், இனப்படுகொலையையும் கோடிப்புறத்துள் ஒளித்துவைத்து நடத்தும் இராசதந்திரம் ஜனநாயக அரசு எனப்படுகிற ஒரு நாட்டின் அசிங்கத்தையே வெளிப்படுத்தக் கூடியது. இந்த இஸ்ரேல்-ஈரான் திடீர் யுத்தம் குறித்து அவசரமாகக் கூடிய ஐநா பொதுச்சபையில் உடனடியானதும் நிபந்தனை ஏதுமற்றதுமான நிரந்தரமான போர் நிறுத்தம் குறித்த வரைவின் மீது நடந்த வாக்கெடுப்பிலும் இந்தியா நடுநிலை வகித்து வாக்களிக்கவில்லை. இரு தரப்பும் போர்நிறுத்தம் செய்யக் கேட்பதில்கூட என்ன நடுநிலை வேண்டிக் கிடக்கிறதோ தெரியவில்லை. இக் கூட்டத்தில் ரசியா சீனா உட்பட பல நாடுகள் கறாராக தமது கருத்துகளை முன்வைத்து விவாதித்தன. இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல் நடந்தபின் இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் “இந்த சம்பவம் குறித்த சர்வதேச சமூகத்தின் ஆழமான அக்கறையை பகிர்ந்துகொள்கிறேன்” என்றார். கழுவுற சட்டியில் நழுவி ஓடும் மீனாக இந்த வார்த்தைகள் நெளிகின்றன. அத்தோடு, இந்த பதட்டநிலையை தவிர்க்க அவசரமாக வேண்டுகோள் விடுப்பதாகவும், விரைந்த இராசதந்திர நகர்வை எடுக்கும் படியும் கோரியிருந்தார். இவையெல்லாம் அவர் ஈரானுடன் தொலைபேசிவழி ஓடவிட்ட வார்த்தைகள். இதைத்தானே ஐநாவும் வரைபாய் முன்வைத்து வாக்கெடுப்புக்கு விட்டது. ஏன்தான் வாக்களிக்காமல் நழுவியது இந்தியா? அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள் இந்த வருடம் இந்தியா வந்திருந்தபோது ஒன்றைக் குறிப்பிட்டார். இந்தியாவை பல பரிமாணங்களிலும் ஏற்று, விதந்துரைத்த அவர், “ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்கிறேன். சீனாவுடனான முரண்பாட்டை அமைதியாக இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து அமெரிக்காவின் விளையாட்டை நீங்கள் விளையாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். (Don’t play American’s game). இதைச் சொல்வதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்” என்றார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் கடற்படைப் போருக்குச் சாதகமாகவும் அந்த சீனக் கடற் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்குடனும் உருவாக்கப்பட்ட QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பதே அவரது தூர நோக்காகும். நான் விரும்பிப் பார்க்கும் பிரபல இந்திய செய்தியாளர் பல்கி சர்மா உடனான நேர்காணல் அது. மேற்குலகு குறித்து மிகக் கூர்மையாக செய்தியிடும் பல்கி சர்மா, அதற்கு மாறாக ஸக்ஸ் வெளிப்படுத்திக் காட்டும் கூற்றினுள் அமெரிக்க நுண்ணரசியலை புரிந்துகொள்ளாமல் அல்லது புரிய மறுத்து “சீனாவுடனான முரண்பாட்டை நாம் (இந்தியா) எமது பாணியில் சந்திப்போம்” என பதிலளித்திருந்தார். அவர்கூட அண்மையில் தனது F. செய்தித் தளத்தில் “இந்த யுத்தத்தில் இந்தியா தனது நடுநிலையை எவளவு தூரத்துக்கு தக்கவைக்கும் என்பது கேள்வி” என்றார். இந்த உண்மையை மோடி அரசு எப்போ புரிந்துகொள்ளப் போகிறது. அமெரிக்காவின் எதிரியாக இருப்பதைவிட பேரழிவு தரக்கூடியது அமெரிக்காவின் நண்பனாக இருப்பது என கென்றி கிஸிங்கர் சொன்னதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். எல்லா பிரச்சினைகளிலும் நடுநிலை என்பது ஓர் இராஜதந்திர அணுகுமுறை அல்ல. கோட்பாட்டு ரீதியில் ‘நடுநிலை’ என்பது ஒடுக்குபவர்களின் பக்கம் சாய்ந்து நிற்பதுதான். எங்கள் வீட்டு வாசல்படி வரை ஆபத்து வந்தபின் கத்திக் குளறி பிரயோசனமில்லை. யாரும் கண்டுகொள்ள மாட்டார். இதை அனுபவப்பட்டு உணரவேண்டும் என்பதில்லை. மோடி அரசு புரியாமலிருக்கலாம். ஆனால், விமர்சனங்களைக் கொண்டிருக்கிற போதும், பூகோள அரசியலில் நழுவல் போக்கு இன்றி நேரு, இந்திராகாந்தி போன்ற கறாரான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி நின்ற தலைவர்களைக் கண்ட இந்திய நாடும், -பார்ப்பனிய சிந்தனைக்கு வெளியில்- சிந்திக்கக் கூடிய இந்திய மக்களும் புரியாத விடயமல்ல, https://sudumanal.com/2025/06/16/மதில்-மேல்-பூனை/#more-7180
  11. நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது - ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் PrashahiniJune 19, 2025 இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களமிறங்குமா என்ற கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சி படை உள்ளது. இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்து வந்தார். இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களமிறங்குமா என பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். “அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். ஆனால், நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது. நான் அந்த கேள்விக்கு பதில் அளிப்பேன் என நீங்கள் எண்ணியிருக்க வாய்ப்பு இல்லை. ஈரானுக்கு நிறைய பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார்கள். நீங்கள் ஏன் இரண்டு வாரத்துக்கு முன்பு இதை செய்யவில்லை என கேட்டேன். நீங்கள் அதை செய்திருக்கலாம். உங்கள் தேசம் இருந்திருக்கும் என சொன்னேன்” என சிரித்தபடி ட்ரம்ப் தெரிவித்தார். அவரது இந்த கருத்து மூலம் அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக களம் இறங்குமா? இறங்காதா? என்ற யூகத்தை உலக நாடுகளின் இடையே எழுப்பியுள்ளார் ட்ரம்ப். https://www.thinakaran.lk/2025/06/19/breaking-news/136324/நான்-என்ன-செய்வேன்-என்று/#google_vignette
  12. செம்மணி மனிதபுதைகுழி - உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்- மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி அவசியம் என தெரிவிப்பு Published By: RAJEEBAN 19 JUN, 2025 | 10:39 AM செம்மணி மனித புதைகுழியில் சமீபத்தில் குழந்தைகளின் உடல்கள் உட்பட பல உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமிக்கு கடிதமொன்றை எழுதியுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இந்த புதைகுழி குறித்த விசாரணைக்கு சர்வதேச சகாக்களுடன் இணைந்து பிரிட்டன் ஆதரவளிக்கவேண்டும் மனித என தெரிவித்துள்ளார் மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி இலங்கைக்கு அவசியம் என அந்த அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு துணை செயலாளரின் பதில் மே 15 ம் திகதி கிடைத்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் அந்த பதிலில் அவர் இலங்கையின் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி மற்றும் உண்மை நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் வலியுறுத்தும் என அவர் தெரிவித்திருந்தார். இலங்கையின் யுத்தத்தின் முடிவில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி நிலைப்பாட்டப்படவேண்டும் என்பதற்கான உங்களின் தனிப்பட்டஆதரவிற்கும் நான் நன்றியுடையவளாக உள்ளேன். இலங்கையின் வடபகுதியில் மூன்று குழந்தைகளின் உடல்களுடன் சமீபத்தில் மற்றுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரம்,இந்த அட்டுழியங்கள் எவ்வளவு புதியவை என்பதை அதிர்ச்சியூட்டும் நினைவுபடுத்தல்களாக காணப்படுகின்றன. 2024 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் உடல்களை தோண்டுவதற்கான போதிய வளங்கள் இலங்கையிடம் இல்லை என தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்காக சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டிருந்தது. இந்த அடிப்படையிலும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் நீதி ஆகியவற்றிற்கான பிரிட்டனின் ஆதரவின் அடிப்படையிலும் இலங்கைக்கு இந்த விடயத்தில் பிரிட்டனின் ஆதரவு குறித்த தற்போதைய அல்லது திட்டமிடப்பட்ட திட்டங்களை நீங்கள் வெளிப்படுத்தவேண்டும். இலங்கை அரசாங்கத்துடனான இரு தரப்பு ஈடாட்டங்களின் போது உங்கள் திணைக்களம் - அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் - இந்த விடயத்தை நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக தக்கவைத்துக்கொண்டால் அதற்கும் நன்றியுடையவளாகயிருப்பேன். மார்ச் மாதம் நீங்கள் தடைகளை அறிவித்தவேளை சர்வதேச அளவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்,பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளிற்காக குரல்கொடுக்கும் தொழில்கட்சியின் நீண்டகால பாரம்பரியத்தை நீங்கள் பின்பற்றினீர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தது போன்று ,யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்தவேண்டும் என்ற எனது வேண்டுகோளை நீங்கள் கருத்தில் எடுப்பீர்கள் என கருதுகின்றேன். உயிர்பிழைத்தவர்கள்,பதிலை தேடும் குடும்பங்கள் ,இந்த குற்றங்களின் நிழலில் வளர்ந்த அடுத்த தலைமுறை நாங்கள் கடன்பட்டுள்ளோம். https://www.virakesari.lk/article/217877
  13. தமிழரசு கட்சியின் உறுப்பினர் நீக்கம் ?? adminJune 19, 2025 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்ட பொன்னம்பலம் இராசேந்திரம் என்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், நேற்றைய தினம் புதன்கிழமை (18.06.25) மதியம் நடைபெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது கட்சியின் மிகத் தெளிவான அறிவுறுத்தலுக்கு மாறாக நீங்கள் நடுநிலைவகித்துள்ளீர்கள். ஆகையால் உடனடியாக அமுலுக்கு வரும்படியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து நீங்கள் இடை நிறுத்தப்படுகின்றீர்கள். தங்களது இந்த நடவடிக்கை சம்மந்தமான விளக்கம் ஏதும் இருப்பின் ஒரு வார காலத்திற்குள் எழுத்து மூலம் எனக்கு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என்ற அடிப்படையிலும் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கமாக இல்லாவிட்டாலும் கட்சியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவீர்கள் – என்றுள்ளது. https://globaltamilnews.net/2025/217021/
  14. மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர் இளைஞர்கள் குறிவைப்பு பருத்தித்துறையைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு மனைவி மற்றும் அறிமுகமானவர்களின் உதவியுடன் ஐஸ் மற்றும் கேரளக்கஞ்சா ஆகிய போதைப் பொருள்களைப் பெருமளவில் விநியோகித்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறைப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் ஊழல் சோதனைப் பிரிவால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பருத்தித்துறை, கட்கோவளத்தில் வசிக்கும் 29 வயது சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து சுமார் 12 கிராம் 40 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. குறித்த இளைஞர் சமூகத்தை குறிவைத்து செயற்பட்டு போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தாரென விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். https://newuthayan.com/article/மனைவியுடன்_ஐஸ்_விற்பனை;_பருத்தித்துறையில்_சிக்கிய_நபர்
  15. காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்! adminJune 19, 2025 காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசா ஏகமனதாக தெரிவாகியுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும், தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர். அந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது, தமிழ் மக்கள் கூட்டணி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை குழு ஆகியவை கூட்டிணைந்து ,சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசாவை முன் மொழிந்தனர். வேறு பெயர்கள் முன் மொழியப்படாததால் , கோவிந்தராசா தவிசாளராக ஏக மனதாக தெரிவானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில், ஆண்டிஐயா விஜயராசா தெரிவானர். அதேவேளை , சுயேச்சை குழு , தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தமக்கு இடையில் தவிசாளர் பதவியை 16 மாதங்கள் வீதமாக பகிர்ந்து கொண்டே ஆதரவு வழங்க உடன்பாட்டுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217018/
  16. வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்! adminJune 19, 2025 வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றது. இந்நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் வேட்பாளராக சோமசுந்தரம் சுகிர்தனும், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பத்மநாதன் சாருஜனும் போட்டியிட்டனர். தவிசாளர் தெரிவை பகிரங்க வாக்களிப்பு மூலமாக தெரிவு செய்ய 24 உறுப்பினர்களும் இரகசிய வாக்களிப்புக்கு 10 உறுப்பினர்களும், நடுநிலையாக ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர். அதனை அடுத்து பகிரங்கமாக நடைபெற்ற தெரிவில் சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளையும் பத்மநாதன் சாருஜன் 09 வாக்குகளையும் பெற்றதை அடுத்து சுகிர்தன் தவிசாளராக தெரிவானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில் பொன்னுத்துரை தங்கராசாவும் தெரிவானர் https://globaltamilnews.net/2025/217015/
  17. வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle) June 17, 2025 — மங்கள கௌரி விராஹநாதன் (இசைப்பட்டதாரி ஆசிரியை)— ஐரோப்பிய சங்கீதத்திலிருந்து நமக்கு கிடைத்துளள ஒரு இசைக்கருவியே வயலினாகும். இதற்கு பிடில் என்று பெயருண்டு. பண்டைக் காலத்தில் தனூர் வீணை என்ற பெயருடன் விளங்கியது எனவும் பின் வயலின் என்ற உருவில் அமைந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேல் நாட்டுக்கும் கீழைத்தேயத்தும் பொருத்தமான நரம்புக் கருவியாகும். ஓர் இடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய தந்தி வாத்தியமாகும். வயலின், வயலின் செலோ, வயோலா ஆகியன மேல்நாட்டு இசைக்கருவிகளென பொதுவாகக் கூறப்பட்டு வந்துள்ளது. (1786 – 1858) ஆண்டுகளில் கீழ்நாட்டில் வாசிக்கப்பட்டது. பழைய காலத்து பிடில்கள் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தன. 17ம் நூற்றாண்டில் தற்காலத்து வயலின் போல் காணப்பட்டது. இப்பொழுதுள்ள வடிவத்தில் முதன் முதலில் இக் கருவியைச் செய்தவர் (Stradivasius) ஸ்ட்ராடி வேரியஸாவார். பிலிப்பையின்ஸ் தீவுகளின் தலைநகரமாகிய மணிலாவில் மூங்கிலாலேயே பிடில் செய்து விற்றார்கள். குறுத் (Cruth) எனும் வயலினில் 6 தந்திகளுண்டு. Phono Violin (பொனோ வயலின்) என்பது அமெரிக்காவில் முற்காலத்தில் செய்யப்பட்ட ஒரு வித பிடிலாகும். கூம்பு வடிவத்தில் ஒரு குழாய் நாதப் பெருக்கியாக உபயோகிக்கப்படுகின்றது. ஆனால் இதில் கேட்கும் நாதம் சற்று குறைவாகவேயிருக்கும். ஸ்டிறிங் (Stringed Violin) 7 தந்திகளுடைய பிடிலாகும். இதில் 3 தந்திகள் இரட்டிக்கப்பட்டிருக்கும். பிடில் செய்வதற்கு சாரல்கள் உள்ள மரம் ஏற்றது. மேபிள் மரம், மிகவும் உத்தமமானதாகும். பிடில் முழுவதும் மரத்தினாலே செய்யப்பட்ட வாத்தியமாகும். ஸிகமூர், ஸில்வர் பைன் ஸிடர், ஸ்ப்பரூஸ் போன்ற மரங்களும் பிடில் செய்வதற்கு உபயோகப்பட்டது. நரம்புகளினாலும் உலோகங்களினாலும் செய்யப்பட்ட தந்திகள் இதில் உபயோகிக்கப்படுகின்றன. பிடில் முழு அளவு, முக்கால் அளவு அரையளவு வித்தியாசங்களுண்டு. நீளத்திற்கேற்ற வாலும் பிடில்களுக்குண்டு. குறிப்பிட்ட மரங்களை அளவாக வெட்டி பதப்படுத்தி நிழலில் உலர்த்தி உபயோகிக்கப்படுகிறது. இரண்டு நீண்ட சதுர மரத்துண்டுகளிலிருந்து மேற்பாகமும் அடிப்பாகமும் சமவளவாகக் குடையப்பட்டு விலாப்பலகையில் நடுவில் ஒட்டப்பட்டுள்ளது. சாதாரண பிடியிலுள்ள விலாப்பலகைகள் இதில் கிடையாது. இதில் சட்டம் (Bass bar) தனியாக ஒட்டப்படாமல் மேற்பலகையுடனேயே சேர்ந்துள்ளது. பிடிலில் அடிப்பலகை அழுத்தமாகவும் கெட்டியாகவுமிருக்கும். வயலினில் பேசும் தந்திகளின் நீளம் (Speaking lenth of the string) 13 அங்குலமாகவிருக்கும். விரல் பலகை பிரடைகள், தந்தி தாங்கி, மேல் மெட்டு முதலியவற்றிற்கு கருங்காலி மரத்தைப் பயன்படுத்துவார்கள். வில் (Bow) செய்வதற்கு பிறேஸில் ஸ்னேக் பயன்படுத்துவர். வில்லிலுள்ள நார்கள் மிருகங்களின் உரோமத்தினாலும் மரத்தினாலும் இணைக்கப்பட்டுள்ளன. வில்லு மிகவும் அவசியமானதாகும். தந்திகளின் மேல் வில்லொன்றைக் குறுக்காகச் செலுத்துவதன் மூலம் ஒலி எழும்புகின்றது. இத்தாலியர் இதனை உருவாக்கினர். 11ம் நூற்றாண்டில் பிரென்சு (பிரித்தானியா) மன்னன் 9வது சாள்ஸ் 1560ம் ஆண்டில் 24 வயலின்கள் செய்வதற்கு ஆணையிட்டதாகக் கூறப்பட்டது. பிடிலின் பாகங்களில் அடிப்பலகை மேற்பலகை, 6 விலாப்பலகைகள் f – holes (Sound holes) இவை க வடிவத்தில் அதாவது மேற்பலகையில் நடுவில் குதிரை எனப்படும் பாலம் (Bridge) இரு பக்கங்களையும் தாங்கிப்பிடித்திருக்கும். இரு பக்கங்களையும் சரியான நிலையில் வைத்திருக்கும். குதிரைக்கு இருபக்கங்களிலும் மேல் பலகையில் துளைக்கப்பட்ட நாதரந்திரங்களிருக்கும். மேல் பாகத்திலுள்ள தந்தி தாங்கி (Tail Piece) உள்ளது. இதன் நீளம் 4 ½ அங்குலமாயிருக்கும். தந்தி தாங்கியின் பாகம் ஒரு நரம்பின் உதவியினாலோ அல்லது ஒரு செப்புக் கம்பின் உதவியினாலோ பிணைக்கப்பட்டுள்ளது. இதனை (End pin) முடிவுத்தாங்கிப் பகுதி என அழைப்பர். மோவாய் தாங்கிப் பலகையாகும். 4 தந்திகள் சுருதியை நன்றாகச் சேர்த்துக் கொள்வதற்குப் பயன்படும் திருகாணிகளாகும். (Tail Piece) முடிவுப் பகுதியின் துவாரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும். பிடிலின் கழுத்துப் பாகத்தை எடுத்துக் கொண்டால் விரல்பலகை (Top nut) இது அடிப்பாகத்திலுள்ள சிறுமரத்துண்டு. இதிலுள்ள 4 காடிகளின் மேல் 4 தந்திகளும் சென்று பிரடைகளில் சுற்றப்பட்டிருக்கும். பிரடைகளின் நீளம் சுமார் 3 அங்குலமிருக்கும். நாதத்தைக் குறைப்பதற்காக குதிரையின் மேல் செருகி வைத்திருப்பார்கள். மேலே கூறிய பாகங்கள் யாவும் கண்களால் நேரே பார்க்கக்கூடிய ஸ்தூல பாகங்களாகும். உட்பாங்களான நாதக்குச்சி (Sound Post) சுமார் 2 ½ அங்குல உயரமிருக்கும். இது சரியாக இருந்தால்தான் நாதம் சுருதியுடனிருக்கும். மேல்நாட்டு சங்கீதமானது 3 ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு 12 சமவளவுள்ள அரை ஸ்வரங்களாகப் பிரிக்கப்பட்ட மேளங்களைக் கொண்டது. சுருதிக்கேற்றவாறு சாரீரத்தை மாற்றுவது போல வாத்தியத்திலும் சுருதியை மாற்றுவார்கள். பிடிலை சுருதி வாத்தியம், லய வாத்தியம், சங்கீத வாத்தியம், சாதக வாத்தியம், பிரதான வாத்தியம், அயனவாத்தியம், ஸ்திர வாத்தியம், சர வாத்தியம், கச்சேரி வாத்தியம், தேவாலய வாத்தியம் யுத்த களத்தில் உபயோகிக்கப்பட்ட வாத்தியம் பாமரஜனகான வாத்தியம் விளம்பர வாத்தியம், பிரதர்சன வாத்தியம், குருட்டு வாத்தியம், பக்க வாத்தியம் என்று பல பெயர்களுண்டு. வில் போட்டு வாசிக்கப்படும் தந்தி வாத்தியம் முதன் முதலில் இந்தியாவில்தான் உற்பத்தியாயிற்று என்பதை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள். ராவணா அஸ்திரம் என்று கூறப்பட்ட இது வில்லைக் கொண்டு வாசிக்கப்பட்டது. கர்நாடக இசையை வயலின் வாத்தியத்தில் வாசிக்க முடியும் என்று கண்டுபிடித்தவர் பாலஸ்வாமி தீட்ஸிதராவார். மேல்நாட்டு இசையைக் கற்று பின்னர் கீழ்நாட்டு இசையிலும் தேர்ச்சி பெற்றார். கர்நாடக இசைக்கச்சேரிகளில் இன்றியமையாத பக்கவாத்தியமாகவும், தனி இசை (Solo) வாத்தியமாகவும் இருந்து வருகிறது. பெண்களின் குரலுக்கும் ஆண்களின் குரலுக்கும் தகுந்தவாறு சுருதி கூட்டி வாசிக்க முடியும். மேல்நாட்டார் தமது முகவாயைப் பிடிலில் பொருத்தியுள்ள கருவியுடன் இணைந்து நின்று வாசிப்பார்கள். வயலின் வாசிப்பில் பிடி வாத்தியம், ஜாரு வாத்தியம் என இரு வகையுண்டு. விரலடியே பிரதானமாக உபயோகிக்கப்படுவது பிடி வாத்தியமாகும். ஜாரு வாத்தியம் வாசிப்பதற்கு பல வருடங்கள் சாதகம் (பயிற்சி) பண்ண வேண்டும். ஜாருவும் பிடியும் ஓரளவுடன் கலந்துள்ள வாசிப்பே மனோகரமாயிருக்கும். வயலின் ஒரு பகுத்வனி வாத்தியமாகும். 2 ஸ்வரங்களை ஒரே சமயத்தில் இதில் இசைக்கலாம். கேள்வி ஞானமும் ஞாபக சக்தியும் மிக அவசியம். ஸ்வரஸ்தான அடையாளமின்மையால் செவியினால் கேட்டே கண்டுபிடிக்க வேண்டும். ஸ்வரங்களை காதினால் கேட்டு விரல் பலகையில் ஸ்வரஸ்தானங்களைப் பிடித்து வாசிக்க முடியும். கர்நாடக இசையில் வயலின் வாத்தியத்தை தரையிலிருந்து வாசிக்க வேண்டும். இடது காலை வலது தொடைப்பகுதிக்குள்ளே மடக்கி வலது காலை சிறிது மடக்கி நீட்டி நிமிர்ந்து சரியாக உட்கார வேண்டும். வயலினை எடுத்து மேல்ப்பகுதியை இடது தோள் மேல் சாத்திக் கொண்டு தன் தாடையில் தங்க வைத்து பின் இடது பக்க குதிகால் மேற்பிடித்துக் கொண்டு விரல்பலகையில் இடது கை விரல்களால் இணைத்து தந்திகளுக்கு அழுத்தம் கொடுத்து சுருதி சேர்த்து வில்லினை பாலத்திற்கும் விரல்பலகைக்குமிடையிலுள்ள தந்திகளில் குறுக்காகப் போட்டு வாசிப்பார்கள். வில்லிற்கு றொசின் எனப்படும் ஒரு திரவக்கட்டியினால் பூசிப்பாவிக்கப்படுகின்றது. வயலின் வாத்தியம் வாசிக்கும் முறையை பயிலுபவர்களுக்கு செய்கை முறை மூலம் நேரடியாகக் காண்பித்தால்தான் விளக்கம் புரியும். எழுத்து மூலம் எல்லோருக்கும் புரியாது. வயோலா, செல்லோ மிகப் பெரியது. சிறு நாற்காலியிலிருந்து தலைகீழாக வைத்து வாசிக்க வேண்டும். ஆரம்பத்தில் வயலின் வாத்தியம் வில் போட்டு வாசிக்க வேண்டும். ஆரம்பம் கஷ்டமாக இருந்தாலும் சுருதி ஸ்வரஸ்தானங்களை அவதானித்து நன்கு பயிற்சி பண்ண பின்னர் இலகுவாகவிருக்கும். இந்தியாவில் வயலின் வாத்திய மேதைகளான லால்குடி ஜெயராமன், எம்.எஸ் அனந்தராமன், எம்.எஸ் கோபாலகிருஷ்ணன், மைசூர் சௌடையா, ஜே.ஆர்.கிருஷ்ணன், டி.என் கிருஸ்ணன், குன்னக்குடி வைத்தியநாதன், கன்னியாகுமாரி கண்டதேவி விஜயலக்சுமி, மணிபாரதி இன்னும் பலருள்ளனர். இசைஞானி இளையராஜா தனது இசையமைப்புகளுக்கு நிறைய வயலின் வாத்தியத்தை கையாண்டார். இந்தியாவில் வடிவேலுப்பிள்ளை புதுக்கோட்டை நாராயண ஸ்வாமிஐயர் சீர்காழி நாராயண ஸ்வாமிப்பிள்ளை திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், பிடில் வெங்கோபராவ், திருச்சி கோவிந்தசாமிப்பிள்ளை வயலினில் தீவிர சாதகம் பண்ணி திறம்பட வாசித்து கல்பித சங்கீதத்தையும் விமரிசையாக வாசிக்கலாம் என்பதை ஸ்தாபித்தார்கள். பயிற்சி சாதகம் பண்ணப் பண்ணத்தான் வாத்தியங்களில் நாதம் வந்து கொண்டே இருக்கும். இந்தியாவிலும் இலங்கையிலும் இப்போ இசைக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. முறையாகக் கற்று சாதகம் பண்ணினால் சிறுபராயத்திலிருந்தே மிகவும் திறமையாக பிடிலை வாசிக்க முடியும். முன்பெல்லாம் இலங்கையிலுள்ளவர்கள் இந்தியா சென்றே இசையைக் கற்றார்கள். வசதி வாய்ப்பு கிடைக்காதவர்கள் இலங்கையிலே கற்கலாம். எதற்கும் பயிற்சி முக்கியமாகும். வாய்ப்பாட்டும் தெரிந்திருந்தால் வாத்தியத்தில் பாடுவது போலவே இருக்கும். இலங்கையில் கர்நாடக இசை வயலின் வித்துவான்கள் எனப்படுவோர் டி.வி. பிச்சையப்பா, வி.கே குமாரசாமி, சண்முகானந்த சர்மா, சங்கரய்யர், தனதேவி, மித்ரதேவி, ஏ.சிவநாதன், ராதாகிருஷ்ணன், சந்தான கிருஷ்ணன், பாக்கியலக்சுமி, ஜீவன் யோசப் அருளானந்தம், விநாயகமூர்த்தி ஆகியோர் பிரபலமானவர்கள். வயலின் மேதைகள் பலர் இவ்வுலகைவிட்டு மறைந்தாலும் அவர்களது மாணவ மணிகள் வழி வழியாக இவற்றை இசைத்து வருகிறார்கள். 1824ம் ஆண்டில் எட்டயபுரம் சமஸ்தான வித்துவான் (Stringed instrument) தந்திகளான வயலின் இசைக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். கி.பி 19ம் நூற்றாண்டிலிருந்து வயலின் இன்றியமையாத கருவியாகவுள்ளது. தற்போது இருவயலின்கள் சேர்ந்தமாதிரியும், 7 தந்திகளுடனும் மின்சார வயலின்களும் (Electric Violin) உள்ளன. புதுவடிவங்களில் பிடில் உருவாக்கப்பட்டு இசைக்கப்பட்டு வருகின்றன. வயலின் சுருதிகள் எத்தனை கூட்டினாலும் 3 ½ ஸ்தாயில் வைத்து வாசிக்கும்போது மிக இனிமையாக இருக்கும். பாடகர்களுக்கு பக்க வாத்தியம் வாசிப்பதற்கு வேறாக ஒரு பிடிலையும் தனியாக வாசிப்பதற்கு ஒரு பிடிலையும் பாவிப்பது நல்லது. வயலின் பெட்டிகள் (கறுப்பு நிறம்) அதற்கேற்றவாறு அமைந்திருப்பதைக் காணலாம். பிடில் வாத்தியத்தை பிடி கொடுத்து இசைத்தால் என்றும் இனிமையாகவிருக்கும். ‘வாழ்வு சிறிது வளர்கலை பெரிது’ https://arangamnews.com/?p=12098
  18. ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்கள்;- இஸ்ரேலுடன் இணைகின்றது அமெரிக்கா 18 JUN, 2025 | 06:41 AM ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைந்துகொள்வதற்கு அமெரிக்கா தயராகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என சர்வதே ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர்டோ உட்பட ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான உத்தரவில் டிரம்ப் கைச்சாத்திடுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பில் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்கள் மத்தியில் முழுமையான உடன்பாடில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/217770
  19. இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 10:49 AM இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை செவ்வாய்க்கிழமை (18) முதல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. எரிமலை வெடித்து சிதறி வானத்தில் கோபுரம் போன்று 10 கிலோ மீற்றர் உயரத்துக்கு அதன் சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் அவுஸ்திரேலியாவுக்கான ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் விமான சேவைகளும் அடங்கும். ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜுன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக பாலியின் சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது. புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்படும் பல உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன. லெவோடோபி லக்கி-லக்கி எரிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் எரிமலை சாம்பல் மழை பொழிந்துள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை ஒரு கிராமத்திலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி பல முறை வெடித்து சிதறியது.இதன்போது ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதனால் சுற்றுலாத் தளமான பாலிக்கான ஏராளமான சர்வதேச விமான வேகைள் இரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தோனேசிய மொழியில் "ஆண்" என்று பொருள்படும் லக்கி-லக்கி, அமைதியான எரிமலையுடன் "பெண்" என்பதை குறிக்க இந்தோனேசிய வார்த்தையான லக்கி இரண்டு முறை சேர்க்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்ட நாடானது, பசிபிக் "நெருப்பு வளையத்தில்" அதன் நிலை காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுகிறது. https://www.virakesari.lk/article/217777
  20. மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள் Published By: RAJEEBAN 18 JUN, 2025 | 10:36 AM மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம், நல்லாட்சி ,அரசமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் என இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை மீதான உரையாடலிற்காக இணைத்தலைமை நாடுகளின் சார்பில் இங்கிலாந்தின் மனித உரிமைகளிற்கான தூதுவர் எலினோர் சான்டெர்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது= இலங்கை குறித்த உங்கள் அலுவலகத்தின் பணிகள் குறித்து நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம். இலங்கையில் மேமாதம் தேர்தல்கள் நடாத்தப்பட்டதை நாங்கள் வரவேற்பதுடன்,2009ம் ஆண்டு ஆயுதமோதலின் போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவது இம்முறை அமைதியான விதத்தில் இடம்பெற்றதை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். அதேவேளை மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம், நல்லாட்சி ,அரசமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கீட்டிற்கு அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் மேலும் ஊடகவியலாளர்கள்,மனித உரிமை பாதுகாவலர்கள், சிவில் சமூகத்தினர் சுதந்திரமாக பாதுகாப்பாக செயற்படகூடிய நிலையை ஏற்படுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறை பாதிக்கப்பட்ட மக்களின் நம்பி;க்கையை பெறுவது மிகவும் முக்கியமானது. அரசாங்கம் பயங்கரவாத தடைச்;சட்டத்தை நீக்குவதே தனது நிலைப்பாடு என தெரிவித்துள்ள போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் கரிசனைகொண்டுள்ளோம். மேலும் காணாமல்போனோர் அலுவலகத்தை மீண்டும் வலுப்படுத்துவதன் மூலம் பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்க்கப்படாத விடயங்களை தீர்க்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம். https://www.virakesari.lk/article/217782
  21. பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எடுத்த முடிவால் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி பிள்ளையான் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தின் எஸ். துரை ராஜா, மேனகா விஜேசுந்தர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை சமர்ப்பித்து, மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் கோரினார். அதன்படி, வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க பிரதிவாதி தரப்பினருக்கு இரண்டு வார கால அவகாசம் அளித்த நீதியரசர்கள் அமர்வு, அந்த திகதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யுமாறும் மனுதாரர் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmc0ubopq000rqp4k2jga3qjm
  22. கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை! பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, மேற்கண்ட முடிவு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மாறாகச் செயல்பட்டால், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. போதுமான எரிபொருள் இருப்பு இருந்தபோதிலும், நுகர்வோர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி இவ்வாறு செயல்படுவதால், பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmc1gv0nb001aqp4k559tu6se

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.