Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Aiden Markram போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Lungi Ngidi போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) தென்னாபிரிக்கா
  2. நாளைக்கு @வீரப் பையன்26 தலைமையில் RCB ஐ அடித்துத் துவைக்கிறம்!
  3. இந்திய - பாகிஸ்தான் போர் அபாயத்தால் தடைப்பட்ட ஐபில் போட்டிகள் மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கின்றன! GMT நேரப்படி நாளை சனி 17 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 58) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 13 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 10 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி பிரபா செம்பாட்டான் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  4. பொள்ளாச்சி வழக்கு – சில ஏமாற்றங்கள், துரோகங்கள்! -சாவித்திரி கண்ணன் தமிழகத்தை உலுக்கிய இந்த பாலியல் கொடூர வழக்கின் மிக முக்கிய குற்றவாளிகளை காவல் துறையும் சரி, சிபிஐயும் சரி நெருங்கவே இல்லை. விசாரிக்கப்படவும் இல்லை. இந்த வி.ஐ.பிக்கள் யார்? யார்? இவர்கள் எப்படி தப்பிக்க வைக்கப்பட்டனர். இதன் பின்னணியில் இருப்பது யார்..? பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை தரப்பட்டு இருப்பதும், பாதிக்கப்பட்ட எட்டு பெண்களுக்கு நஷ்ட ஈடு அறிவித்திருப்பதும் தமிழக மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது..! ஆகவே, இந்த தீர்ப்பை முதலில் வரவேற்க வேண்டியது நம் கடமை. வரவேற்றோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வெறும் 9 பேர் மட்டும் தானா? நம் மக்களுக்கு மறதி அதிகம். இது தான் அரசியல்வாதிகளின் வரப்பிரசாதம்…! பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமான செய்திகளை சற்று பின் நோக்கி பார்த்தோமென்றால், இதில் பாதிக்கப்பட்டது எட்டு பெண்கள் மாத்திரமல்ல…! 200-க்கும் அதிகமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை குற்றவாளிகளே 1000-க்கும் மேற்பட்ட வீடியோ படமெடுத்த செய்தியை மறக்க முடியுமா…? இத்தனை பெண்களை சிறிதளவும் குற்றவுணர்வின்றி துணிச்சலாக தூக்கிப் போனதற்கும், வீடியோ எடுத்தற்கும் இந்த கூட்டத்திற்கு பின்னணியில் பலமான அரசியல் செல்வாக்கு இல்லாமல் சாத்தியமில்லை. இந்தக் குற்றவாளிகள் அனைவருக்குமான அந்த அரசியல் பாதுகாப்பாக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய சகாக்களான ’பார்’ நாகராஜன், கிருஷ்ணகுமார்.. ஆகியோர் பெயர்களே அன்றைய புலனாய்வு பத்திரிகைகளான நக்கீரன், ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பெரிதும் அடிபட்டது. இந்த பாலியல் வழக்கின் குற்றவாளிகள் அன்றைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அப்போது தொடர்ந்து வெளியாயின. செய்தி சேனல்கள் பலவற்றிலும் கூட வெளியானது. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், ’பார்’ நாகராஜன் இந்த வழக்கில் பார் நாகராஜனையும், திமுக பிரமுகர் செல்வராஜின் மகன் மணிமாறனையும் கஸ்டடியில் எடுத்து விசாரித்து விட்டு அரசியல் அழுத்தங்களால் விடுவிக்கப்பட்டனர் என்ற செய்திகள் வெளியாயின. ஆனால், பிரவீன், பொள்ளாச்சி அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை விசாரிக்க கூட முக்கியத்துவம் தரப்படவில்லை. இவர்கள் மீது எப்.ஐ.ஆரும் போடவில்லை. ஆக, இந்த ஆறாண்டு இடைவெளியில் இவர்களை மக்களும் மறந்து விட்டனர், பெரும்பாலான ஊடகங்களும் மறந்து விட்டன. இப்படி எடுக்கப்பட்ட வீடியோவை கொங்கு மண்டல வி.ஐபிக்களுக்கு அனுப்பி, அதில் இருந்து அவர்கள் செலக்ட் செய்த பெண்களை ’வாளையார் கெஸ்ட் அவுஸில்’ வைத்து மீண்டும் பாலியல் வன்முறை அரங்கேறியுள்ள வகையில், இது வரை எந்த வி.ஐ.பியும் தண்டிக்கப்படவில்லை. குறிப்பாக இப்படி பலவந்தமாக தூக்கி செல்லப்பட்ட ஒரு பெண் இந்த கொடியவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த வகையில் நடு ரோட்டில் விழுந்து மற்றொரு கார் ஏறியதில் சின்னாபின்னமாகி அந்தப் பெண் இறந்தார் என்பதை நக்கீரன் போட்டோவோடு அம்பலப்படுத்தியது. இந்த வகையில் காணாமல் போன பெண்கள், அவமானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட பெண்கள் பற்றிய விசாரணைகளே கூட நடக்கவில்லை. பொள்ளாச்சி ஜெயராமன், கிருஷ்ணகுமார்,வேலுமணி இதில் ஏழை பெண்களுக்கு கடன் தந்து, அதை அவர்கள் திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பதை காரணமாக்கி, அவர்களை தூக்கிச் சென்று சின்னாபின்னப்படுத்தினர் எனும் போது, இதன் பின்னணியில் ஒரு பெரிய நெட் வொர்க்கே இருந்துள்ளதை நாம் அறியலாம். இத்தனை அநீதிகளையும், அட்டுழியங்களையும் குற்றவாளிகள் ஒரே நாளில் செய்து விடவில்லை. இவற்றை தொடர்ந்து அச்சமின்றி அவர்கள் செய்வதற்கு லோக்கல் காவல்துறையின் அனுசரணை இருந்துள்ளது என்பது கோவை எஸ்.பி. பாண்டியராஜன் (police superintendent of coimbatore) குற்றவாளிகளுக்கு வெளிப்படையாகவே, ஆதரவாக இயங்கியதும், பத்திரிகையாளர்களிடம் உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி, குற்றவாளிகளை காப்பற்ற துணை நின்றதையும் ஊடகத் துறையில் உள்ள அனைவரும் அன்று அதிர்ச்சியுடன் பார்த்தோம். கொளத்தூர் தொகுதியில் டெபுடி கமிஷனராக இருக்கும் பாண்டியராஜன். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராடிய பெண்கள் அமைப்புகள், ஜனநாயக இயக்கங்கள் ஆகியவற்றையும் எஸ்.பியான பாண்டியராஜன் மிரட்டினார் என்பதும், இதே போல ராஜேஸ்வரி, நிஷா பார்த்தீபன் என்ற பெண் காவல் அதிகாரிகள் முற்ற முழுக்க குற்றவாளிகளுக்கு ஆதரவாக இயங்கியதையும் கொங்கு வட்டார மக்களும் அறிவர். அனைத்து ஊடகத்தினரும் அறிவர். இதிலென்ன துரதிர்ஷ்டம் என்றால், இத்தகைய கொடூர போலீஸ் அதிகாரியாக அறியப்பட்ட பாண்டியராஜன் தான் இன்று இந்த ஆட்சியாளர்களின் செல்லபிள்ளையாக இருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் சகல அதிகாரங்களுடன் டி.சி யாக ( ) வலம் வருகிறார்…! இதை நாம் எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ25 லட்சம் அறிவித்துள்ளார். ஆனால், அதே சமயம் இந்த அட்டுழியங்கள் அனைத்தையும் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பில் இருந்த இந்த காவல் அதிகாரி, அதற்கு அனுசரணையாக இருந்த வகையில் பதவி பறிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்க வேண்டாமா..? என்பது தான் இந்த வழக்கை கூர்ந்து பார்க்கும் ஊடகத் துறையில் உள்ளோர் மற்றும் பெண்கள் இயக்கங்கள் வைக்கும் கேள்வியாகும். ‘சிபிஐ விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றவாளிகளுக்கு பெயில் தரவில்லை’ என்பது மிகவும் ஆறுதலான விஷயமே. ஆனாலும், குற்றவாளிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர் என்பதும், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்பதும் மனதை உறுத்துகிறது. சாமானியர்களான நாம், ‘நமது ஜனநாயகத்தில் இவ்வளவாவது நடந்திருக்கிறதே..’ என்று திருப்திபட்டுக் கொண்டு, மனதை தேற்றிக் கொள்ள வேண்டும் போல. சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21544/pollachi-sexual-harrasments-vips/
  5. உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க திணறும் தமிழரசுக் கட்சி: சிறிநேசன் எம்.பி விடுத்த அழைப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசிய உணர்வைக் கொண்டவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சில சூழ்நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் சபைகளை அமைக்கின்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்ற பிரதிநிதித்துவ முறை என்பது ஒரு சிக்கலான பிரதிநிதித்துவ முறையாகும். இதன் ஊடாக வட்டாரத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், பட்டியல் மூலமாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள், தொங்கு நிலை ஆசனங்கள் பெற்றவர்கள், என மூன்று வகையான உறுப்பினர்கள் பல சபைகளில் இடம்பெற்றிருக்கின்றார்கள். இந்த நிலையில் ஆளுங்கட்சியாக இருந்தால் என்ன அல்லது எதிர்கட்சிகளாக இருந்தால் என்ன எல்லா கட்சிகளுக்கும் சபைகளை அமைக்கின்ற விடயத்தில் சிரமங்கள், சிக்கல்கள், காணப்படுகின்றன. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தில் தமிழரசுக் கட்சியை பொறுத்த அளவில் கணிசமான ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றி இருக்கின்றது. இந்த நிலையிலும் மூன்று வகையான நிலமை காணப்படுகின்றது. முதலாவது தனித்து நின்று ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. ஓரிரு ஆசனங்களை மேலும் பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை காணப்படுகிறது. இன்னும் சில சபைகளை அமைப்பதில் சவாலாகவும் காணப்படுகின்றன. எமது கட்சியில் பலர் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்தார்கள் அவ்வாறு விண்ணப்பித்திருந்தும் பலருக்கு போட்டியிட முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறானவர்கள் உங்களுடைய பலத்தை காட்டுவதற்காக பலர் போட்டியிட்டு தமிழ் தேசிய உணர்வோடு வெற்றி பெற்றிருக்கலாம். அவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்வது யாதெனில் கடந்த காலத்தில் வேட்பாளர் தெரிவில் சில தவறுகளிடம் பெற்றிருக்கலாம். எனவே நீங்கள் தமிழ் தேசிய உணர்வு உள்ளவர்கள் சற்று விலகி இருந்தாலும் உங்களுடைய தாய் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதை நான் கேட்டுக் கொள்கின்றேன். அதுபோல் தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ் தேசியக் கொள்கையோடு ஒத்த கொள்கையாகப் பயணிக்கின்ற கட்சிகளும் இருக்கின்றன. அக்காட்சிகள்கூட சில ஆசனங்களை பெற்றிருக்கின்றன. அக்கட்சிகளும் வேறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலையில்லை. அவ்வாறான கட்சிகளும்கூட தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாங்கள் உருவாக்க வேண்டும். இதற்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டம் என்பது பல்லின சமூகத்தை கொண்ட மாவட்டமாகும். நாம் கடந்த காலத்தில்கூட முஸ்லிம் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைத்திருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் தெரிவித்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்ஸ்புல்லா அவர்களும்கூட இதனை வெளிப்படுத்தி இருந்தார். உண்மையும் கூட அவர்களுக்கு தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் அவர்களுக்கும் ஆட்சி அமைப்பதற்கு எமது உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது. ஒரு சில சபைகளில் நாங்களும் ஆட்சி அமைப்பதற்கு அவர்களுடைய ஆதரவு தேவைப்படுகின்றது. இது எந்த கட்சியாக இருந்தாலும் இவ்வாறான ஒரு நிலைமை காணப்படுகின்றது. எனவே எந்த ஒரு நிலையிலும் நாங்கள் அடம் பிடித்துக் கொண்டு நிற்க முடியாத நிலைமை காணப்படுகிறது. கடந்த காலத்தில்கூட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா அவர்களும் இதனைக் குறிப்பிட்டு இருந்தார். பரஸ்பரம் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழ்கின்ற பிரதேசங்களில் சபைகளை அமைப்பதற்கு தமிழ் கட்சிகளின் உதவிகளை அவர்கள் நாடுகின்றார்கள். தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற ஒரு சில சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவினை வேண்டப்படுகின்ற காரணத்தினால் இதனை எல்லாம் விமர்சனம் செய்து பெரிதுபடுத்த வேண்டிய நிலைமை இல்லை. எனவே தமிழ் தேசியப் பரப்பிலே இருக்கின்ற கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்கலாம். அதேபோன்று பரஸ்பர ஒத்துழைப்பை வழங்க கூடிய விதத்தில் தமிழ் பேசுகின்ற கட்சிகள் என்ற அடிப்படையில் இணையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு இடையில் நாம் பதவிகளுக்காக நம்மிடையே போட்டியிட்டுக் கொண்டிருக்காமல் விட்டுக்கொடுப்புகள் மூலமாக சபைகளை அமைக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே மூன்று சபைகளை முஸ்லிம் மக்கள் அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஏனைய ஒன்பது சபைகளையும் தமிழ் மக்கள் சார்ந்த தமிழ் தேசியக் கட்சிகள் சபைகள் அமைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இதனை வாத பொருளாகவோ, விதண்டாவாதங்களாகவும், மாறாறாமல் நடைமுறை சாத்தியத்தின் அடிப்படையில் இந்த சபைகளை அமைப்பதற்கு நாம் முன்வரவேண்டும் என்பதை நான் பகிரங்கமான வேண்டுகோளாக விடுக்கின்றேன். தேர்தல் காலத்தில் விவாதங்கள் அல்லது தர்க்கங்கள் நடைபெற்றிருக்கலாம். அதன்போது கருத்துப் பரிமாற்றங்கள் இரு பக்கங்களும் நடைபெற்றிருக்கலாம். ஆனால் தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் சபைகளை அமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எனவே சபைகளை அமைக்கின்ற விடயத்தில் பரஸ்பர விட்டுக்கொடுப்போடு சபைகளை அமைப்பதற்கு உங்களை வேண்டும். அதிகபட்சமான ஆசனங்களை பெற்ற கட்சிகளுக்கு சபைகளை அமைப்பதற்குரிய ஜோக்கியம் இருக்கின்றது என்பது எனது கருத்தாகும். இந்நிலையில் சபைகளை அமைக்கின்ற விடயத்தில் தவறான நடைமுறைகளை பின்பற்றுகின்றவர்கள் கௌரவ உறுப்பினர்களை பணத்தினால் பரிமாற்றம் செய்கின்ற அந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற இருக்கக்கூடாது. அது உங்களுடைய கௌரவ உறுப்பினர்களை மலினப்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகவே அது அமைந்திருக்கும். அவ்வாறான செயற்பாடுகளை உடன் கைவிட வேண்டும் அது ஒரு மோசடியான செயற்பாடாகவே இருக்கும். பெரும்பாலும் வடக்கு கிழக்கில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது என்பது சிரமமான விடயமாகும். ஏனெனில் அவர்களுடைய பெரும்பான்மை என்பது பெரும்பான்மை இனத்தவர்கள் என்ற அடிப்படையில் அது தென்னிலங்கையிலேயே சாத்தியமாகும். என்றாலும் அது வடகிழக்கில் சாத்தியம் இல்லை. ஏனெனில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் சமத்துவம் பேசினாலும் சமத்துவ அடிப்படையில் தீர்வுகளை காண்பதற்கு முன்வரவில்லை என்பதை கடந்த ஆறு மாத காலத்திற்குள் மக்கள் விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்;. புரிந்துணர்வு விட்டுக் கொடுப்பு, பெருந்தன்மை, என்ற அடிப்படையில் சபைகளை அமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதனை எமது கௌர உறுப்பினர்கள் தங்களுடைய கௌரவத்தை தாழ்த்திக் கொள்ளாமல் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என அவர் இதன்போது தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=324777
  6. முள்ளிவாய்க்காலில் திருச்சடங்கு; அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான நீத்தார் திருச்சடங்கு (இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிராத்தணை) இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சைவ தமிழ் மன்றத்தின் செந்தமிழ் ஆகம அருச்சுனைஞர்கள் சிவத்திரு ந.குணரட்ணம் மற்றும் சிவத்திரு இ. றமேஸ்குமார் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தனர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த அழைப்பை விடுத்தனர் https://akkinikkunchu.com/?p=324771
  7. வடக்கு- கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் முடிவு கூறும் செய்தியும் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலமும் தமிழ் மக்களின் இன்றைய நிலை – ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரல் – எமது பலம் – சர்வதேச சக்திகளின் நிலைப்பாடும் – தீர்வுநோக்கி முன்னேறவுள்ள சாத்தியப்பாடுகள் – போன்றவற்றை மனம்விட்டு வெளிப்படையாகப் பேசி கூட்டு முடிவை எடுக்க தமிழரசும் காங்கிரசும் தயாராக வேண்டும். எனவே புதிய கூட்டிணைவு என்பது வெறுமனே சபைகளை கைப்பற்றுவதோடு நிற்க முடியாது. மாறாக தீர்வு நோக்கி ஒன்றுபட்டு செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற வேண்டும் – தொடர வேண்டும். கலாநிதி க.சர்வேஸ்வரன் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலானது வெறுமனே உள்ளூராட்சிக்கான வினைத்திறன் மிக்க நிர்வாகத்தை நடத்தவல்ல வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கானதாக மட்டுமின்றி அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எதிர்நோக்கப்பட்டது. இதன் முடிவுகள் தமிழ்த்தேசிய அரசியல், அதன் போக்கு ஆகியவற்றில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தவல்லதாக அமைய வேண்டும் என்பது ஒன்று. தமிழ்த் தேசிய நீரோட்டத்தை திசைதிருப்பி மடைமாற்றி வலுவிழக்கச் செய்யும் நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் சிங்கள – பௌத்த மேலாதிக்க சக்திகள் வடக்கு – கிழக்கில் காலூன்றுவதை தடுப்பதாக அமைய வேண்டும் என்பது மிக முக்கியமான இன்னோர் எதிர்பார்ப்பாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதித்துவதற்கு ஈடாக சிங்கள – பௌத்த மேலாதிக்கக் கொள்கையை அடிப்படைக் கோட்பாடாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி முகமூடியணிந்த ஜே.வி.பி.யும் தேர்வு செய்யப்பட்டது. இது இனமோதல் என்ற ஒன்று இல்லை என்ற மூடி மறைப்பு பிரச்சாரத்துக்கும் பலத்த எதிர்ப்பின்றி சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பை வடக்கு – கிழக்கில் தொடர்வதற்கும், தமிழர் தாயக நிலங்களை அபகரிப்பதற்கும், இனமோதல் தீர்வு தொடர்பில் பேசவல்ல சர்வதேச சக்திகளின் வாயை அடைக்கவும் ஏதுவாக அமைந்தது. இப்பலமான மக்கள் ஆதரவு தமிழ்த் தேசியத் தலைமைகளின் குரலையும் பலவீனப்படுத்தியது. பலவீனப்படுத்துகிறது. எனவேதான் இவ்வுள்@ராட்சித் தேர்தலான நாடாளுமன்றத் தேர்தலில் தவறாகத் தமிழ் மக்கள் எழுதிய விதியைத் திருத்தி எழுதும் முக்கிய சந்தர்ப்பமாக எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் பின்னணியில் தேர்தல் முடிவுகளை நோக்கலாம். ஒட்டுமொத்தமாக நோக்கின் இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னூறுக்கு மேற்பட்ட ஆசனங்களையும் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தேசிய மக்கள் சக்தி இன்னமும் வலுவாக உள்ளன. மூன்றாவது இடத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்று நூற்றி ஆறு ஆசனங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவை தவிர அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 80 இற்கு மேலான ஆசனங்களைப் பெற்று நாலாம் இடத்தில்” உள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்கு அதிகரிப்பை பொறுத்தவரை இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்க் காங்கிரஸ் ஆகியன ஏறத்தாழ இரட்டிப்பான வாக்குகளை வடக்கிலும் இரட்டிப்பிற்கு சற்றுக் குறைவாக கிழக்கிலும் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் விட்ட தவறை மக்கள் குறிப்பிடத்தக்க அளவு திருத்தி எழுத்தியுள்ளார்கள். இதேவேளை தேசிய மக்கள் சக்தி குறிப்பிடத்தக்களவு தனது வாக்குகளை இழந்துள்ளது. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் ஏழத்தாழ 16000 வாக்குகள் கடந்த தேர்தலை விட குறைந்துள்ளது. எனவே தமிழ்த் தலைமைகள் எதிர்பார்த்ததற்கு கிட்டவாகவே மக்கள் தீர்ப்பு அமைந்துள்ளது. அதேவேளை இம்முடிவுகள் இரண்டு முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. ஒன்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாக்குகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்த போதும் வடக்கு – கிழக்கில் ஒரு சில சபைகள் தவிர்ந்த எந்த சபையிலும் எந்த ஓர் கட்சியும் தனியாக ஆட்சியமைக்கும் வகையில் முடிவுகள் அமையவில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டணியாக ஆட்சியமைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இம்முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரிந்து நின்ற தமிழ்க்கட்சிகளைத் தண்டிப்பது போல் அமைந்ததென எடுத்துக்கொண்டால் இத் தேர்தல் முடிவுகள் நீங்கள் ஒன்றுபட்டாக வேண்டும். ஒன்றுபட்டு இனமோதல் தீர்வு விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் இடத்தில் இன்னமும் ஜே.வி.பி. வைக்கப்பட்டுள்ளமையானது தமிழ்த் தேசியத் தலைமைகள் இணைந்து கூட்டாக உள்@ராட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து வினைத்திறனுடன் செயற்பட முடியாவிட்டால் மீண்டும் இனமேலாதிக்க சக்திகள் வளர்வதற்கான தளங்கள் அழிக்கப்படவில்லை என்ற எச்சரிக்கையையும் இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆகவே பந்து இப்போது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் எல்லைக்குள் போடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை இவ்விடயத்தில் இரண்டு முக்கிய சவால்களை எதிர்நோக்கியுள்ளன. ஒன்று: கூட்டு என்பது தமிழ்த் தேசியக் கட்சிகளுடனானதாக இருக்க வேண்டும். எந்த ஓர் சிங்களக் கட்சிகளுடனும் இருக்க முடியாது. இரண்டு: சபைகளை நிர்வகிக்கும் கூட்டாக மட்டும் அமையுமா? கொள்கையிலும் கூட்டிணைவு ஏற்படுமா? கள யதார்த்தங்களை நோக்கினால் தமிழரசுக்கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன மட்டுமே வடக்கு – கிழக்கு முழுவதும் பரவலாக போட்டியிட்டு ஆசனங்களைக் கொண்டுள்ளன. தமிழ்க் காங்கிரசைப் பொறுத்தவரை யாழ். மாவட்டத்தில் மட்டுமே குறிப்பிடும்படியாக உள்ளது. அதற்கு வெளியே அக்கட்சியின் வாக்குகள் குறிப்பிடும் படியாக இல்லை. இங்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருமளவு சபைகளின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. எனவே யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்க் காங்கிரஸ் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவை நாடும் நிலையும் பொதுவாக வடக்கு – கிழக்கிலும் குறிப்பாக வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவை தமிழரசு நாடி நிற்பதும் தற்போதைய நிலையாகும். சிங்கள – பௌத்த மேலாதிக்க சக்திகள் உள்ளூராட்சிகளில் எவ்வகையிலும் பலம்பெற்று விடக் கூடாது என்ற அடிப்படை நிலைப்பாட்டில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உறுதியாகவுள்ளது. அதேவேளை யாழ். மாவட்டத்தில் காங்கிரசுடனும் ஏனைய மாவட்டங்களில் தமிழசுடனும் இணைத்து செயற்படுவதென்பது சரியாக அமையாது என்ற நோக்கிலும் நியாயமுண்டு. இதுவரை கால அனுபவமானது பல கட்சிகளின் கூட்டாக பலமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்தது தமிழரசுக் கட்சியே. அதேபோல் ஏனைய அனைவரும் துரோகிகள் இந்திய முகவர்கள் என பட்டம் வழங்கி யாருடனும் சேர்த்தியங்க மாட்டோம் அதுபற்றிப் பேசவே வரமாட்டோம் என அடம்பிடித்து வந்தது தமிழ்க்காங்கிரஸ் கட்சி. இப்போது இவ்விரு தரப்பும் ஒன்றுபட்டு ஆட்சியமைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தாலும் அக்கோரிக்கைகள் அடிப்படையில் தாம் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரும் தொனியிலானதே தவிர எதிர்காலத்தில் இணைந்து தொடர்ந்து செயற்படுவது என்ற தொனியில் இல்லை. தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை நாங்கள்தான் தாய்க்கட்சி. எனவே ஏனையவர்கள் எம்முடன் எமது நிபந்தனைகளுக்குள் இணைந்து செயற்படலாமே தவிர நாம் ஏனையவர்களுடன் இணைய முடியாது என்ற நிலைப்பாட்டையும் நாங்கள் ஆலமரம் இணைந்து செயற்படுபவர்கள் குருவிச்சைகள் என்ற வகைப்படுத்தலையும அடிக்கடி வெளிப்படுத்தி வருபவர்கள். இதுவே கூட்டமைப்பின் தமிழரசு தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான யாப்பு, பெயர், பொதுச் சின்னத்தைக் கொண்டு சட்டப்படியாக கட்டமைக்கப்பட்ட கூட்டணியாக செயற்பட காரணமானது என்ற அண்மைய வரலாற்றுண்மையை மறந்து விட முடியாது. எனவே மேற்கண்ட தமது நிலைப்பாடுகளை விடுத்து தமது நிலைப்பாட்டின்பால் மற்றவர்களைக் கொண்டு வரும் முரட்டு பிடிவாதங்களை விடுத்து உள்ளூராட்சி அதிகாரத்தில் உரியவர்களுக்கு உரிய மதிப்பளித்து ஆட்சியதிகாரங்களை நியாயமாக மங்கிட்டு இணைத்து ஆட்சிப்பொறுப்பேற்க முன்வருவார்களா? அதேபோல் இவ்வொற்றுமை சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்ற மட்டும்தானா? இனமோதல் தீர்விலும் ஒன்றுபட்டு செயற்படத் தயாரா? இனமோதல் தீர்வில் அனைவரதும் இறுதி இலக்கு கூட்டாட்சி அல்லது சமஷ்டி என்பதாக இருந்தாலும் அதனை அடையும் வழிமுறை என்பதில் அர்த்தமற்ற முரண்பாடுகளை வெளிப்படுத்தி வருவதையும் மாற்ற வேண்டும். 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மாகாணசபைத் தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கட்டமைப்பின் நிலைப்பாடு தர்க்க ரீதியாகவும் அறிவுபூர்வமாகவும் யதார்த்தமானதும் அவசியமானதுமான வழிமுறையாகும். இவ்விடயத்தில் தமிழரசைப் பொறுத்தவரை 13ஐ நாம் தீர்வாக ஏற்கவில்லை. ஆனால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாமானது. நடைமுறைப்படுத்த தயங்கும் சிங்கள மேலாதிக்க சக்திகளின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் அதேவேளை ஏனைய கட்சிகள் 13ஐ இறுதித் தீர்வாக ஏற்றுக்கொண்டவை போன்ற பிழையான பிம்பத்தை ஏற்படுத்தும் தன்மையானது. தமிழ்க் காங்கிரசைப் பொறுத்தவரை 13ம் திருத்தத்தையும் மாகாணசபைகளையும் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டோம். அதை கிண்டுபவர்கள் ஒன்றையாட்சியை ஏற்றுக்கொண்டவர்கள். இந்திய அடிவருடிகள் என வசைபாடும் அதேவேளை இந்தியா 13 பற்றி பேசாதிருக்க வேண்டும் எனக்கூறும் அளவிற்கு மந்தமான நிலைப்பாட்டையே இன்றும் கொண்டுள்ளனர். 13ஐயே அழித்தொழிக்க முயலும் சிங்கள பேரினவாதத்திடம் சம~;டியை பெறுவதற்கு பலமான சர்வதேச ஆதரவு தேவை. அதற்கான வழிவரைபடமோ திட்டமோ, சமிக்ஞைகள் கூட இல்லாத நிலையில் அதனை வேண்டாம் என்பது எந்தவகை அறிவைச் சாரும்? எனவே இந்த முரட்டு நிலைப்பாடுகளைவிடுத்து தமிழ் மக்களின் இன்றைய நிலை – ஆட்சியாளரின் நிகழ்ச்சி நிரல் – எமது பலம் – சர்வதேச சக்திகளின் நிலைப்பாடும் – தீர்வுநோக்கி முன்னேறவுள்ள சாத்தியப்பாடுகள் – போன்றவற்றை மனம்விட்டு வெளிப்படையாகப் பேசி கூட்டு முடிவை எடுக்க தமிழரசும் காங்கிரசும் தயாராக வேண்டும். எனவே புதிய கூட்டிணைவு என்பது வெறுமனே சபைகளை கைப்பற்றுவதோடு நிற்க முடியாது. மாறாக தீர்வு நோக்கி ஒன்றுபட்டு செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற வேண்டும் – தொடர வேண்டும். இத்தகைய அர்த்தபுஷ்டியான ஆரோக்கியமான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஜனநாயகபூர்வமானதும் அரசியல் நாகரீகத்தின்பாற்பட்டதுமான எழுத்துபூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டு சபைகளைக் கையேற்பதும் ஒன்றுபட்டு இனமோதல் தீர்வு நோக்கிய திட்டங்களைச் செயற்படுத்துவதும் அமைய வேண்டும். இந்த அணுகுமுறை விரைவாகவே வடக்கு – கிழக்கில் இருந்து சிங்கள கட்சிகளை அகற்ற ஏதுவாகும் என்பதுடன் தமிழ்த் தேசியத்தின்பால் அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரட்டும். தீர்வு நோக்கிய பயணம் ஆரோக்கியமாக நம்பிக்கையூட்டுவதாகவும் அமையும். https://thinakkural.lk/article/317926
  8. ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் அமைதி வழிப் போராட்டத்தை அடக்க நிர்வாகம் நடவடிக்கை - தொழிலாளர்கள் கவலை 16 May, 2025 | 11:34 AM ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டத்தை பொலிஸாரைக் கொண்டு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று அடக்குவதற்கு உப்பள நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது என போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டுசென்று பொதி செய்யும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பளத்தின் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், உப்பளத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற தடை உத்தரவை சுட்டிக்காட்டி போராட்டத்தை கைவிடுமாறு பொலிஸார் தொழிலாளர்களிடம் அறிவுறுத்தி வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறுகையில், இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பினை இங்கே பொதியிடுங்கள். அம்பாந்தோட்டை, புத்தளம், மன்னாருக்கு கட்டி உப்பினை கொண்டு செல்வதை நிறுத்தி, ஆனையிறவில் பொதியிடுங்கள். தொழிலாளர்களுக்கு தினமும் வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவதை நிறுத்த வேண்டும். உப்பள முகாமையாளரை மாற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுங்கள், ரஜ சோல்ட் என்ற பெயரை ஆனையிறவு உப்பு என மாற்றம் செய்யுங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் பந்தல் அமைத்து எமது கனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை அடக்கும் வகையில் தவறான தகவல்களை பொலிஸார் ஊடாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுசென்று எமது கவனயீர்ப்பு போராட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம் இங்கிருந்து கட்டி உப்பை மூலப்பொருளாக அம்பாந்தோட்டை, மன்னார், மற்றும் புத்தளத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர். அதை நாங்கள் வன்மையான கண்டிக்கிறோம் எனத் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/214872
  9. கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் - விசாரணைக்கு அழைத்தும் வராத அதிபரும், ஆசிரியரும் கொழும்பு - கொட்டாஞ்சேனையில் சிறுமி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இற்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பம்பலபிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் குறித்த மாணவி கல்விகற்ற பாடசாலை அமைந்துள்ள கல்வி வலய அதிகாரிகளிடம் இந்த அறிக்கைகள் கோரப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது. இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், சம்பவத்துடன் தொடர்புடைய பம்பலபிட்டியில் அமைந்துள்ள மகளிர் பாடசாலையின் அதிபரும், உயிர்மாய்த்துக் கொண்ட மாணவியை துஷ்பிரயோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியரும் கலந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்காமைக்கான காரணம் தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார். https://www.hirunews.lk/tamil/405455/கொட்டாஞ்சேனை-மாணவி-விவகாரம்-விசாரணைக்கு-அழைத்தும்-வராத-அதிபரும்-ஆசிரியரும்
  10. ஊழலைத் தடுப்பதற்காக மாகாணசபைகளில் புலனாய்வுப் பிரிவு! ஜனாதிபதி அநுர நடவடிக்கை ஊழல்களையும் மோசடிகளையும் தடுப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் அமைச்சு மட்டத்திலான புலனாய்வுப் பிரிவுகளை ஏற்படுத்த ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஜனாதிபதிக்கும், ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே, ஜனாதிபதியால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மாகாணங்களில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் அவை தொடர்பிலான சவால்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கு ஜனாதிபதியால் தீர்வுகளும் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட மூன்று மடங்கு நிதி மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஆளுநர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். https://newuthayan.com/article/ஊழலைத்_தடுப்பதற்காக_மாகாணசபைகளில்_புலனாய்வுப்_பிரிவு!
  11. பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்ட உயரதிகாரிகள் ஏழுபேரின் பதவிகள் பறிக்கப்பட்டன! ஆளுநர் அதிரடி நடவடிக்கை பொதுமக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளுக்கு அமைய, திணைக்களத் தலைவர்கள் மற்றும் சில பிரதேசசபைச் செயலாளர்களின் பதவிகள் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் பறிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளரின் பதவி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், ஒரு நகரசபைச் செயலாளர் மற்றும் மூன்று பிரதேசசபைச் செயலாளர்கள் ஆகியோரின் பதவிகள் பதவிகள் திரும்பப் பெறப்பட்டு, அவர்கள் வேறு திணைக்களங்களுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு எதிராக விசாரணை ஆணைக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றனது. https://newuthayan.com/article/பொதுமக்களால்_முறைப்பாடு_வழங்கப்பட்ட_உயரதிகாரிகள்_ஏழுபேரின்_பதவிகள்_பறிக்கப்பட்டன!
  12. மாணவர்களை கதிரையால் தாக்கினார் ஆசிரியர்! adminMay 16, 2025 யாழ்ப்பாணம் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் ,ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கதிரையால் தாக்கியதில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாடசாலையில் தரம் 08 கல்வி கற்கும் மாணவர்கள், பாடசாலை நேரம் , வகுப்பறையில் அமைதியின்றி காணப்பட்டுள்ளனர். அதனை அடுத்து அங்கு வந்த ஆசிரியர் , வகுப்பறையில் இருந்த மாணவர்களின் கதிரையை தூக்கி மாணவர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ள்ளார். அதனால் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற அதிபர், ஆசிரியர் மீது நிர்வாக ரீதியான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். https://globaltamilnews.net/2025/215583/
  13. பிள்ளையான் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார்! adminMay 16, 2025 கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மை தடுத்து வைப்பதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட தீர்மானத்தின் ஊடாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறுப்படுவதாக தீர்ப்பளிக்கக் கோரியே குறித்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். https://globaltamilnews.net/2025/215587/
  14. ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - க.இளங்குமரன் Published By: Vishnu 15 May, 2025 | 12:53 AM ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (14) பிற்பகல் ஆனையிறவு உப்பளத்துக்கு விஜயம் செய்த அவர் உப்பளத்தின் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார் அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய தொழிற்சாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றும் பருவ கால பணியாளர்களுக்கான உரிய வேதனம் வழங்கப்படாமை மற்றும் உரிய வேலைகள் வழங்கப்படாமை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் போராட்டம் ஒன்ற்றில் ஈடுபட்டுள்ளனர் குறித்த போராட்டத்தை அடுத்து இன்று பிற்பகல் ஆனையிறவு உப்பளத்திற்கு விஜயம் செய்த இளங்குமரன் அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாடி பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அதாவது ரஜ லுனு என்ற பெயர் முன்னர் இருந்த அரசாங்கத்தினால் மன்னர் உப்பளத்தின் பெயரையே சூட்டப்பட்டிருந்ததாகவும் அது தற்போது அந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது பல கோரிக்கைகளை முன்வைத்து காலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்ட அவர்களுக்கான நியாயம் வழங்கப்படும் என்பதுடன் நாட்டின் சகல பகுதிகளுக்கும் உப்பினை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதுடன் குறிஞ்சா தீவு உப்புளத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/214756
  15. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களினால் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது- பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் Published By: Rajeeban 15 May, 2025 | 10:42 AM கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம்என்பதற்கான உறுதியான சமிக்ஞை ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கைகொண்டிருந்தால்; நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைள்,வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இது அவர்களின் நியுரம்பேர்க் தருணம்,இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்கு பதில், இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில்,ஆடம்பரத்தில் மறைந்துள்ளது. இது வெட்கக்கேடான விடயம். ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட் ,ஸ்லோபடான் மிலோசோவிக்,ஹென்றிச் ஹிம்லர்,மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை. கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும். https://www.virakesari.lk/article/214767
  16. யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்” adminMay 15, 2025 முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் ” நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. . பல்கலை பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. தமிழினம் பட்ட அவலங்களையும், சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முகமாக இக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும், பிள்ளைகளை அழைத்து வந்து கண்காட்சியை காண்பித்து, தமிழினத்தின் அவலங்களை பெற்றோர் எடுத்து கூற வேண்டும் என மாணவர்கள் கோரியுள்ளனர். https://globaltamilnews.net/2025/215527/
  17. இஸ்ரேலுடன் சிரியா சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் - சிரிய ஜனாதிபதியிடம் டிரம்ப் வேண்டுகோள் 14 May, 2025 | 04:22 PM சிரியாவுடன் இஸ்ரேலுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரிய ஜனாதிபதி அஹமட் அல் சராவை சந்தித்தவேளை டிரம்ப் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். சவுதி அரேபியாவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சிரிய ஜனாதிபதி தனது நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் அனைவரும் வெளியேறவேண்டும் என உத்தரவிடவேண்டும் என டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிரியா மீதான தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/214719
  18. இந்தியா – பாகிஸ்தான்: அணு ஆயுதப் போரின் விளைவுகள்! – பகுதி 2 14 May 2025, 1:00 PM பகுதி 1 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் மூண்டால் என்ன நடக்கும்? அணுசக்திப் போரின் விளைவாக வான்வெளியின் அடுக்கு மண்டலத்தில் செலுத்தப்படும் வெவ்வேறு அளவு புகையின் காலநிலை விளைவுகளைக் கணக்கிட்டோம். அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் அணுசக்திப் போர் நடந்தால் அது 150 டெராகிராம்கள் (ஒரு டெராகிராம் ஒரு மில்லியன் டன்களுக்குச் சமம்) புகையை உருவாக்கக்கூடும். இது அணுசக்திக் குளிர்காலத்தை உருவாக்கும். கோடையில்கூட மேற்பரப்பு வெப்பநிலை உறைபனிக்குக் குறைவாக இருக்கும். இந்தியா-பாகிஸ்தான் விஷயத்தில், புகையின் அளவு இரு நாடுகளும் பயன்படுத்தும் அணு ஆயுதங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கலாம் என்பதைப் பொறுத்தது. இரு நாடுகளிடமும் இருக்கும் அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா குண்டின் அளவு (தோராயமாக 15 கிலோ டன்கள்) என்று நாங்கள் அனுமானித்துக்கொண்டோம். ஆனால் 2025 வாக்கில், இரு நாடுகளும் 50 கிலோ டன் அல்லது 100 கிலோ டன் குண்டுகளை வைத்திருக்கலாம். 1998ஆம் ஆண்டு இந்தியா 40 முதல் 50 கிலோ டன்கள்வரை உற்பத்தி செய்யும் ஆயுதத்தைச் சோதித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூண்டால், 15 கிலோ டன்கள்வரை உற்பத்தி செய்யும் ஆயுதங்களால் (இந்தியாவிலிருந்து 11, பாகிஸ்தானிலிருந்து 5.1) மேல் வளிமண்டலத்தில் மொத்தம் 16.1 டெராகிராம் (1 டெராகிராம் – 100 கோடி) கருப்பு கார்பன் செலுத்தப்படும் எனக் கணக்கிட்டோம். 50 கிலோ டன் ஆயுதங்களுக்கு 27.3 டெராகிராம்கள் (இந்தியாவிலிருந்து 19.8, பாகிஸ்தானிலிருந்து 7.5); 100 கிலோ டன் ஆயுதங்களுக்கு 36.6 டெராகிராம்கள் (இந்தியாவிலிருந்து 27.5, பாகிஸ்தானிலிருந்து 9.1). இந்தப் புகை சூரிய ஒளியால் சூடாக்கப்பட்டு, அடுக்கு மண்டலத்தில் மேலே உயர்த்தப்படும். அது அடுக்கு மண்டலத்தில் பல ஆண்டுகள் இருக்கும். எனவே அடுக்கு மண்டலத்தில் மழை பெய்யாது. படம் 2, பல வருடங்களாக உலகளாவிய சராசரி வெப்பநிலையும் மழைப்பொழிவும் கணிசமாகக் குறையும் என்பதைக் காட்டுகிறது. (படம் 2. உலகளாவிய சராசரி மழைப்பொழிவு (a), உலகளாவிய சராசரி வெப்பநிலை (b) ஆகியவை அணுசக்தி யுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகளிலிருந்து மேல் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்ட வெவ்வேறு அளவு கருப்பு கார்பனுக்கான விளைவுகளைக் காட்டுகின்றன. செங்குத்து ஊதா நிறப் பட்டை சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த பனி யுகத்தின் உச்சத்தில் வெப்பநிலை வரம்பைக் குறிக்கிறது. ) படம் 3, நிலம், கடல் ஆகியவற்றின் வெப்பநிலை எவ்வாறு மாறும் என்பதைக் காட்டுகிறது. போருக்குப் பிறகு இரண்டாவது ஆண்டில் நடுத்தர சூழ்நிலைக்கான வெப்பநிலை மாற்றத்தின் வரைபடத்தையும் (50 கிலோடன் வெடிப்புகளிலிருந்து 27.3 டெராகிராம் புகை) காட்டுகிறது. அப்போது விளைவுகள் அதிகபட்சமாக இருக்கும். (படம் 3. உலகளாவிய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை (a) மற்றும் நில மேற்பரப்பு வெப்பநிலை (b) காலத்தின் செயல்பாடாக சரிவு. வண்ண-குறியீடு கருப்பு கார்பன் ஊசிகளைக் காட்டுகிறது. 1 டெராகிராம் (Tg) 1 மில்லியன் டன் ஆகும். 50 kt ஆயுதங்களைக் கொண்ட ஒரு சூழ்நிலைக்கு முதல் ஆண்டு மே மாதம் தொடங்கிய மோதலைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டில் சராசரியாக கடல், நில மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களின் உலகளாவிய பரவலை C பகுதி விளக்குகிறது, இதன் விளைவாக 27.3 Tg கருப்பு கார்பன் ஊசி போடப்படுகிறது. ) அணுசக்திக் குளிர்காலம் உலகம் முழுவதும் விவசாயத்தை முடக்கும். பில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தில் வாடுவார்கள். அமெரிக்க-ரஷ்யா அணுசக்திப் போரின் அளவுக்கு இல்லாவிட்டாலும், கற்பனையான இந்தியா-பாகிஸ்தான் அணுசக்திப் போரில் விவரிக்கப்பட்டுள்ள மூன்று காட்சிகளும் பல ஆண்டுகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். 5 டெராகிராம் புகை உள்ள ஒரு நிகழ்விற்கான குறிப்பிட்ட பயிர்களுக்கு சீனாவிலும் அமெரிக்காவிலும் உணவு உற்பத்தி எவ்வாறு மாறும் என்பதைக் கணக்கிட்டுள்ளோம். உலகம் முழுவதும் குறிப்பிட்ட உணவுப் பயிர்கள், வெப்பநிலை, மழைப்பொழிவு, சூரிய ஒளி ஆகியவற்றில் அணு ஆயுதப் போரின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கான விரிவான கணக்கீடுகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். உயரும் புகை சூரிய ஒளியை உறிஞ்சி அடுக்கு மண்டலத்தை வெப்பப்படுத்துவதால் ஓசோன் அழிக்கப்படும். இதனால் புற ஊதாக் கதிர்கள் அதிகமாகப் பூமியை வந்தடையும். இது மேலும் பல எதிர்மறை விளைவுகளை உருவாக்கும். விவசாயத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றிய மதிப்பீடுகள் இன்னும் நிறைவடையவில்லை. சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் பொதுவான அளவீடு, நிகர முதன்மை உற்பத்தித்திறன், தாவர சுவாசத்தைக் கணக்கிட்ட பிறகு ஒளிச்சேர்க்கை மூலம் எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு கரிம தாவரப் பொருளாக மாற்றப்படுகிறது என்பதற்கான அளவீடு ஆகியவற்றைத் தற்போது கணக்கிடலாம். நிகர முதன்மை உற்பத்தித்திறன் என்பது நிலத்தில் எவ்வளவு உணவை வளர்க்க முடியும், மீன்களுக்குக் கடல்களில் எவ்வளவு உணவு வளரும் என்பதற்கான கணக்கீடு. (படம் 4 ஐப் பார்க்கவும்.) இந்த முடிவுகளின் அடிப்படையில், இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுதப் போர் நடந்தால் அது விவசாயத்தில் பெரிய பாதிப்புகளையும் உணவுப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தும் என்ற முடிவுக்கு வரலாம். மக்கள் உணவைப் பதுக்கிவைக்கிறார்களா அல்லது பகிர்ந்துகொள்கிறார்களா என்பதைப் பொறுத்து, மில்லியன் கணக்கான அல்லது பில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கலாம். அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதும் நீக்குவதும் அணு ஆயுதங்களைப் போரில் பயன்படுத்துவதன் நன்கு அறியப்பட்டதும், அதிகம் அறியப்படாததுமான பயங்கரமான விளைவுகளையும் நாங்கள் ஆராய்ந்திருக்கிறோம். இந்த ஆயுதங்கள், கொள்கையளவில், நாடுகளுக்கு இடையேயான போரைத் தடுப்பது என்னும் ஒரே ஒரு நியாயமான நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகளாவிய ராணுவ மோதல்கள் எதுவும் ஏற்படாததால், இன்றுவரை அந்த இலக்கு அடையப்பட்டுள்ளது என்று வாதிடலாம். ஆனால், அணு ஆயுதங்கள் பெருமளவில் குவிந்து கிடப்பதால் பயங்கரவாதமோ எண்ணற்ற பிராந்திய அளவிலான மோதல்களோ நின்றுவிடவில்லை. இவற்றால் பல இடங்களிலும் பயங்கரமான மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. எல்லோரிடமும் அணு ஆயுதங்கள் இருந்துவிட்டால் யாருமே சண்டையிடத் தயங்குவார்கள் என்று கூறுவது நிச்சயமாக முட்டாள்தனமாக இருக்கும். மாறாக, உலகளாவிய சர்வதேச அடிப்படையில் பேச்சுவார்த்தைகளையும் தீர்வுக்கான வழிமுறைகளையும் நிறுவுவதுதான் 21ஆம் நூற்றாண்டில் மானுடப் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே பாதுகாப்பான, நடைமுறை சார்ந்த வழி. உலகளாவிய அமைதிக்கும் பாதுகாப்புக்குமான வழிமுறைகளைக் காண்பதற்கு, அணு ஆயுதங்களை ஒழிப்பதை நோக்கிச் செயல்படுவதே அக்கறையுள்ள குடிமக்களின், குறிப்பாக செல்வாக்கு மிக்க பதவிகளில் இருப்பவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் இந்த இலக்கை நோக்கிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். குறிப்பாக முக்கிய அணு ஆயுத சக்திகளிடையே தொடர்ச்சியான குறிப்பிட்ட அணு ஆயுத ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கிய அமைதித் திட்டங்கள், கொள்கைகள் ஆகியவையும் இந்தத் திசையை நோக்கிய காத்திரமான நடவடிக்கைகளே. உதாரணமாக, 2017ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை 32 நாடுகள் அங்கீகரித்துள்ளன. 79 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன; 50 நாடுகள் அதை அங்கீகரித்தவுடன் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். தற்போதைய ஒன்பது அணு ஆயுத நாடுகளும், அவற்றின் பல நட்பு நாடுகளும் இந்த முயற்சியை எதிர்த்தன. இந்த நாடுகள், ஏற்கனவே உள்ள அணு ஆயுதக் கிடங்குகளைப் படிப்படியாகக் குறைப்பது அல்லது இருக்கும் நிலையில் உறுதிப்படுத்திக்கொள்வதன் மூலம் மெதுவாகவும் கவனமாகவும் இவ்விஷயத்தில் செயல்பட விரும்புகின்றன. அணு ஆயுதக் குறைப்புக்கும் அதை ஒழிப்பதற்குமான முற்போக்கான, நன்கு சிந்திக்கப்பட்ட திட்டம் முன்வைக்கப்பட்டால் அதைக் கண்டிப்பாகப் பாராட்டலாம். ஆனால் சில நாடுகள் அதற்கு பதிலாகப் பழைய பனிப்போர் காலத்தை மீண்டும் கொண்டுவர விரும்புவதாகத் தெரிகிறது. அணு ஆயுதப் பெருக்கம் முடிவுக்கு வரவில்லை என்பது மட்டுமல்லாமல், கூடுதல் நாடுகள் அணு ஆயுதம் ஏந்துவதைப் பரிசீலித்துவருகின்றன. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் ஆயுதக் கிடங்குகளை மேம்படுத்த முடிவுசெய்து, பழைய வகையைவிட மேலும் வலிமைள்ள புதிய தலைமுறை அணு ஆயுதங்களைப் பற்றிப் பேசுகின்றன. “எதற்கும் கட்டுப்படாத” நாடுகள் – குறிப்பாக வட கொரியா – அணு ஆயுதங்களைக் களையத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினாலும் தங்கள் அணு ஆயுதத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துகின்றன. பயங்கரவாதக் குழுக்கள் இத்தகைய சாதனங்களுக்கான உலகளாவிய சந்தையில் அணுசக்தித் திறனை நாடுகின்றன. இந்தச் சூழ்நிலையில், நமக்கு நன்கு தெரிந்த அறிவியலின் வெளிச்சத்தில், அமைதியை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையாக அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும் இறுதியில் அழிக்கவும் உதவக்கூடிய நடவடிக்கைகளை நாம் ஆதரிக்க வேண்டும். உலகைக் காப்பாற்ற வேண்டுமானால் அதை நாம் செய்தே ஆக வேண்டும். கட்டுரையாளர்கள் : ஆலன் ரோபோக் – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியராக உள்ளார். ஓவன் பி. டூன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் துறையிலும், வளிமண்டல மற்றும் விண்வெளி இயற்பியலுக்கான ஆய்வகத்திலும் பேராசிரியராக உள்ளார். சார்லஸ் ஜி. பார்டீன் – அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தில் உள்ள வளிமண்டல வேதியியல் அவதானிப்புகள் மற்றும் மாடலிங் ஆய்வகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளார். லில்லி சியா – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளராக உள்ளார். ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சன் – வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பில் அணு தகவல் திட்டத்தின் இயக்குநராக உள்ளார். மேத்யூ மெக்கின்சி – அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ளஇயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலில் (NRDC) அணுசக்தி, காலநிலை மற்றும் எரிசக்தி திட்டத்தின் இயக்குநராக உள்ளார். ஆர். ஜே. பீட்டர்சன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார். செரில் எஸ். ஹாரிசன் – அமெரிக்காவின் டெக்சாஸ் ரியோ கிராண்டே வேலி பல்கலைக் கழகத்தின் பூமி, சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார். நிக்கோல் எஸ். லவென்டுஸ்கி – கடல்சார் ஆய்வாளர் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார். ரிச்சர்ட் பி. டர்கோ – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நன்றி: டெய்லர் அண்ட் ஃபிரான்சிஸ் ஆன்லைன் தமிழில்: தேவா https://minnambalam.com/india-pakistan-consequences-of-a-nuclear-war-part-2/
  19. எப்படி போர் நிறுத்தம் ஏற்பட்டது? -ச.அருணாசலம் அமெரிக்காவின் நிர்பந்தமா? பாகிஸ்தான் பின்னணியில் சீனா இருந்ததால் ஏற்பட்ட தயக்கமா? நமது ரபேல் ராணுவ விமானங்களை சீனாவின் PL-15E ஐ பயன்படுத்தி பாகிஸ்தான் முறியடித்ததால், சீனாவின் ஆயுத வியாபாரத்திற்கு சர்வதேச மவுசு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அமெரிக்காவின் பதட்டமா..? ஒரு அலசல்; பெஹல்காம் படுகொலையைத்தொடர்ந்து, இந்திய அரசு , பாகிஸ்த்தான் நாட்டில் ஒன்பது இடங்களை குறி வைத்து தாக்கி தாக்குதலை (போரை) தொடங்கி வைத்தது. அண்டை நாட்டு மீதான இத்தாக்குதலை இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என அழைத்தாலும், இது ஒரு மட்டுபடுத்தப்பட்ட, பொறுப்பான, அளவான, பிரச்சினையை விரிவாக்காத தாக்குதல் என இந்திய அரசு வருணித்தது! இத்தாக்குதல் பாகிஸ்த்தான் இராணுவத்தின் மீதான தாக்குதலோ, பாகிஸ்த்தான் குடிமக்கள் மீதான தாக்குதலோ அல்ல என்றும் இந்திய அரசு விளக்கம் அளித்தது! பயங்கரவாத முகாம்களின் மீதான தாக்குதலே என இந்திய அரசு கூறியது. ஆனால், பாகிஸ்த்தான் அரசோ இத்தகைய எல்லை தாண்டிய தாக்குதல் பாக் இறையாண்மை மீதுஇந்தியா தொடுக்கும் போர் என்றும் இதற்கு தக்க பதிலடி உரிய நேரத்தில் பாகிஸ்த்தான் கொடுக்கும் என மே மாதம் 7. தேதியே அறிவித்தது! இந்திய ஊடகங்களும் , அனைத்து கட்சிகளும் இந்திய ராணுவத்தின் இத்தாக்குதலை , தேச பற்று , பயங்கரவாத்த்திற்கெதிரான தேச ஒற்றுமை என்பதின் பெயரால் வெகுவாக வரவேற்றன! தேச பற்றின் மொத்த குத்தகைதாரரான பாரதீய ஜனதா கட்சியோ, இத்தாக்குதலை பயங்கரவாத்த்தை வேரோடு சாய்க்கும் மோடியின் அரசின் அஸ்திரம் எனக் கூறியது. பாகிஸ்த்தான் நொறுங்கியது என குதூகுலத்தில் கோடி மீடியாவும் வலது சாரி சமூக ஊடகவியலாளர்களும் கூப்பாடு போட்டனர். ஆனால், இந்த ‘மகிழச்சி’ யை தவிடுபொடியாக்கியது போல் ஐந்து இந்திய விமானங்களை – ரஃபேல் விமானம் உட்பட – பாக் விமானப்படை சுட்டு வீழ்த்திய செய்தியை பாக் ராணுவம் வெளியிட்டது. இந்திய அரசு இதை ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், இச்செய்தியை மறுக்கவும் இல்லை என்பது நெருடலாக இருந்தது. சர்வதேச ஊடகங்களான ராய்ட்டர், சி.என் என். மற்றும் பி.பி.சி, வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், பிரென்ச் பத்திரிக்கையான லே மாண்ட் போன்றவையும் இத்தகவலை உறுதி செய்ததால் ஒரு ‘ தர்ம சங்கடமான’ சூழல் இந்திய அரசியல் தலைமையை கவ்விக்கொண்டது என்றால் அது மிகையல்ல. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களின் இடையே 7.8 பில்லியன் யூரோ (சுமார் 62,000 கோடி ரூபாய்) பெறுமான ரஃபேல் விமானங்களை பிரான்சு நாட்டு தஸால்ட் நிறுவனத்திடமிருந்து மோடி அரசு வாங்கியது. அத்தகைய விலை உயர்ந்த , அதி நவீன போர் விமானமான ரஃபேலை பாகிஸ்த்தான் மிக குறைந்த விலையே உள்ள J10 CE என்ன சீன விமானத்தின் மூலம், சீன ஏவுகணை PL-15E ஐ கொண்டு முறியடிக்கும் என்று கனவிலும் மோடி நினைத்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் அது தான் நடந்தது. விலை உயர்ந்த மூன்று ரஃபேல் விமானங்களை குறைவான விலை கொண்ட சீன விமானமும்,ஏவுகணையும் மட்டமான பாகிஸ்த்தான் ராணுவத்தினரால் இந்திய வான் எல்லைப்பகுதியலேயே, மே 6-7 தேதி இரவே சுட்டு வீழ்த்தப்பட்டது, அகில உலகையும் ஆச்சரியப்பட வைத்தது! இந்தியா வேண்டுமானால் , ‘சண்டை என்று வந்தால் இழப்புகள் இல்லாமலா இருக்கும் என கடந்து சென்றாலும், இந்நிகழ்வு உலக ராணுவ தளவாடங்களின் சந்தையையே ஒரு குலுக்கு குலுக்கியுள்ளது. தஸால்ட் பங்குகள் சரிந்ததும், சீன நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததும் இதனால் தான் ஏற்பட்டது. எங்களது தாக்குதல் இதற்கு மேல் தொடராது என்ற நிலையிலிருந்த இந்திய ராணுவம் இந்த இழப்பிற்கு பின்னர் ஆளில்லா விமானங்கள் ( drones) மூலம் பாக். எ்லையை கடந்து லாகூர் போன்ற ராணுவ தளங்களின் மீது தாக்குதலை நடத்தியது. இதனை – இத்தாக்குதலை 70 விழுக்காடு ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதன் மூலம் முறியடித்ததாக பாக். ராணுவம் கூறியது, இதை மீறி சில இடங்களில் தாக்குதல் நடந்து சேதங்கள் விளைந்தன என்பதை பாக் ராணுவம் ஒத்துக் கொண்டது, வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் பாகங்களை படமெடுத்து வெளியிட்டது பாக் ராணுவம். எல்லை பகுதியில் ஷெல்லிங் எனப்படும் பீரங்கி தாக்குதலில் இரு நாட்டு ராணுவமும் முழுமையாக ஈடுபட்டிருந்தன. இதனால் இந்திய எல்லைப்பகுதியில் உள்ள காஷ்மீர் மக்களே வெகுவாக – ஏனைய எல்லைப் பகுதி மக்களை விட வெகுவாக – பாதிப்படைந்தனர். இந்திய ராணுவ முகாம்களின் மீதான தனது தாக்குதலை பாக். ராணுவம் மே 9 அன்று தொடுத்தது. 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பாக். ராணுவம் பயன்படுத்தியதாக இந்தியா கூறியது. உதம்பூர், அமிர்தசரஸ் பாரமுல்லா, பெரோஸ்பூர், குஜராத்திலுள்ள பூஜ் போன்ற இடங்கள் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இந்திய மெயின்ஸ்டரீம் டி வி ஒளிபரப்புகள் குறிப்பாக ரிப்ப்ளிக் டி வி, ஆஜ் தக், நியூஸ் 18 டி வி போன்றவை லாகூரை இந்திய ராணுவம் கைப்பற்றி விட்டது, கராச்சி மீது ஐ என் எஸ் கப்பல் குண்டு வீசி தாக்கி கராச்சி நகரத்தையே சுற்றி வளைத்ததாகவும், ராவல்பிண்டி சரண்டைந்ததாகவும்,பாக் ராணுவ தலைமை தளபதி முனீர் ஓடி விட்டார் என்றும் உண்மைக்கு புறம்பான, ஒருதலை பட்சமான தகவல்களை தொடர்ந்து பரப்பி வந்தன. வெறுப்பு உணர்வுகளை பரப்பி அதில் குளிர்காய முனைந்தனர். இதனால் இந்திய ராணுவத்தையும் இக்கட்டுக்கு உள்ளாக்கின இந்த ஊடகங்கள்! . போர் வந்தவுடன் முதலில் மடிவது உண்மை தான் என்பதற்கேற்ப வதந்திகளை பரப்புவதையே முழு நோக்கமாக கொண்டு இந்திய ஊடகங்கள் செயல்பட்டன என்பது வெட்ககேடு. இந்திய ஆட்சியாளர்களோ பொய் செய்திகளை ஒடுக்குகிறேன் என்று கூறிக்கொண்டு 8000 x அக்கவுண்டுகளையும், செய்தி இதழ்களான தி வயர், மற்றும் பி பி சி (உருது) மற்றும் நூற்றுக்கணக்கான யூ ட்யூப் இதழ்களையும் சானல்களையும் முடக்கினர். இதில் பல கலைஞர்களும், பாடகர்களும் அடக்கம். ஆனால், வதந்திகளையும் பொய்களையும், வன்மத்தையும் பிளவு வெறியையும் தூண்டும் டி வி சானல்களை இந்திய அரசு கண்டிக்க கூட இல்லை! இப்படியாக நடந்த சண்டை மே 10 அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது என்று டிரம்பே தனது ட்ரூத் என்ற சமூக ஊடக பதிவில் வெளியிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. பாக். மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் உலக நாடுகள் அதை ஆதரிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இரு நாடுகளை சமாதானம் செய்யவோ, காஷ்மீர் பிரச்சினையில் பிற நாடுகள் (மூன்றாவது நாடு) மத்தியஸ்தம் செயவதையோ இந்தியா விரும்பவில்லை என்ற “விசித்திரமான” நிலையை கடைபிடிக்கும் இந்திய அரசு டிரம்பின் இத்தகைய அறிவிப்பால் மேலும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியது எனலாம். நிலைமையை சமாளிக்க இந்திய அரசு அதிகாரபூர்வமான மறுப்பை தெரிவிக்காமல் மழுப்பலாக இந்திய அரசு மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஒத்துக் கொள்ளவில்லை என்ற செய்தியை “நம்பகமான செய்தியாக” கசியவிட்டது. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற இருதலை பாம்பாக மோடி மவுனத்தை கடைபிடித்து வருகிறார். போர் நிறுத்தத்தை வரவேற்ற பாகிஸ்த்தான் பிரதமர் ஷெரீப் , டிரம்பிற்கு நன்றி கூறுகையில் மோடியோ இம்முயற்சி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் (டி ஜி எம் ஓ- Director General of Military Operations) முடிவாக முன்னிறுத்தி ஒதுங்கி இருப்பது வேடிக்கையாக உள்ளது. இதன்மூலம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா கடைபிடித்துவரும் – இந்திய பாக் . இடையேயான பிரச்சினைகளை இரு நாடுகளும் பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ளுவது, இதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை, மத்தியஸ்தத்தை இரு நாடுகளும் ஏற்காது என்ற நிலை பாட்டை- இப்பொழுது மோடி அரசு கைவிட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. டிரம்பின் தலையீடும், மே 12 ல் பொதுவான இடத்தில் பிரச்சினைகளை பேச முடிவு செய்திருப்பதை மீண்டும் டிரம்ப் இன்று உறுதி செய்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. இதற்கிடையில் ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்றும், பயங்கரவாத செயல் இனி நடந்தால் பாக். மீது தாக்குதல் தொடரும் என இந்திய ராணுவம் கூறி வருவதும், இந்திய பிரதமர் அலுவலக அதிகாரி (PMO) ‘ சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவது தொடரும் ‘ என்று கூறுவதும் இந்த போர் நிறுத்த்தை பற்றிய தெளிவு இந்திய ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா அல்லது சரியான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றனரா என்ற கேள்வியை எழுப்புகிறது. முதலில் எதற்காக இந்திய அரசியல் தலைமை போரை துவக்கியது? புல்வாமா பாலகோட் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்களை மறந்துவிட்டு, பாலக்கோட்டை விட பெரிய தாக்குதல் தொடுத்தால்தான் தமது ‘இமேஜ் ‘ காப்பாற்றபடும் என தலைமை எண்ணியதா? பாக்கித்தானை போலவே இந்துக்களின் பாரம்பரியத்தை பற்றியும் மேன்மை பற்றியும் பேசும் மோடி , இந்து விரோதிகள் எங்கிருந்தாலும் கொன்றொழிப்பது என்ற கொள்கையை பாக்கித்தானிலும் காட்ட முடியும் என்ற இறுமாப்பா? பாக் சமூகத்தில் ராணுவத்திற்கும் சிவில் சமூகத்திற்கும் உள்ள பிணக்குகள் முற்றியுள்ள நிலையில, பயங்கரவாதிகளான தெரீக் ஈ தாலிபான் அமைப்பினர் மற்றும் பலுச்சிஸ்தான் விடுதலை படை ஆகியவற்றின் பயங்கரவாத தாக்குதல்களில் சிக்கி சிதிலமடைந்துள்ள பாக் ராணுவமும் , பொருளாதார சிக்கலில் மூழகியுள்ள சமூகமும் இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாது என இந்திய ஆட்சித்தலைமை எண்ணியதா? அல்லது இந்திய அரசியலிலும், வரும் தேர்தல்களிலும் தமது செல்வாக்கை நிலை நாட்ட இது உதவும என்ற கணக்கிலா ? எதை மனதிற்கொண்டு இத்தகைய ( தாக்கும்) முடிவை எடுக்க முப்படைகளையும் நிர்ப்பந்தித்து இந்திய அரசியல் தலைமை? இன்று நிலை என்ன? இந்தியா இஸ்ரேலும் அல்ல , அமெரிக்காவும் அல்ல என்பது விளங்கி விட்டதா? பாக்கித்தான் ஹமாஸ் அல்ல என்பது புரிந்து விட்டதா? ஊருக்கெல்லாம் ஆருடம் கூறி வேவு பார்க்கும் இந்திய உளவுதுறை, பாக் ராணுவமும் சீனத்தின் பி எல் ஏ வும் (PLA) 2019க்குப்பிறகு மிக மிக நெருக்கமாக தங்கள் பிணைப்பை ,கூட்டுச் செயலாற்றலை வளர்த்துள்ளனர் என்ற உண்மை புரியாமல் போனதா? அல்லது அரசியல் தலைமையின் அகங்காரமும், அதிகாரவெறியும் இவற்றை மறைத்தனவா? எதை மனதிற்கொண்டு போரை தொடுத்தனர்? என்ன சாதித்தனர்? பாக்கித்தானுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் பொதுவான இடமெதற்கு என கேள்வி கேட்கும் அதிகாரி உண்மையில் இந்திய ஆட்சித் தலைமையின் எண்ணத்தை பிரதிபலித்தால் இன்று ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் யாருடைய வற்புறுத்தலால் ஏற்பட்டது? யாருடைய உத்தரவின் பேரில் இந்திய ராணுவ அதிகாரி (DGMO) இந்த ஒப்பந்தத்தை ஏற்று கொண்டார் என்ற கேள்விகள் எழுகின்றன? பயங்கரவாத செயலை பாக் செய்திருந்தால் போரை நிறுத்த இந்தியா முன்வந்தது ஏன்? இந்தியாவிற்கெதிரான பயங்கரவாத செயல்களில் இனி பாக். ஈடுபடாது என்ற உறுதி மொழியை அமெரிக்கா ஏன் பாக்.கிடமிருந்து பெறவில்லை? அப்படி பெறுவதை இந்தியா ஏன் வற்புறுத்தவில்லை? அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிடம் இந்தியா பகிர்ந்திருக்கிறதா? தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்தால் சகஜ நிலைமை திரும்புமா? நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதால் சிம்லா ஒப்பந்தத்தை பாக்கித்தான் ஏற்காது என்ற நிலைபாட்டை இந்தியா எப்படி எதிர் கொள்ள போகிறது? உலக நாடுகள் காஷ்மீர் பிரச்சினையில்மூக்கை நுழைக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளதா? காஷ்மீரில் பாக்கித்தான் தலையீடு கூடாது என்ற சரியான முடிவை இந்தியா வலியுறுத்தும் நேரத்தில், பலுச்சித்தான் பிரச்சினையிலும் இந்தியா தலையிடாது என்ற உறுதிமொழியை கொடுக்குமா? சண்டை நடந்தாலும் இன்னல், சண்டை ஓய்ந்தாலும் ராணுவத்தினால் இன்னல் என்ற நிலையில் உள்ள காஷ்மீர் மக்கள் தங்களது உரிமைகளை பெறுவார்களா? இரு நாடுகளின் ராணுவ குவிப்பிலிருந்து காஷ்மீர் பகுதி மீட்கபடுமா ? காஷ்மீர் மக்களின் எண்ணம் பற்றி யாருக்காவது எந்த நாட்டிற்காவது உண்மையில் அக்கறை உள்ளதா? என்பன போன்ற பல கேள்விகள் இந்த போர் நிறுத்த அறிவிப்பின் மூலம் எழுகின்றன. இதற்கு யார் விடை கூறுவது? இதற்கிடையே சில அரசியல் பிரமுகர்களும் தலைவர்களும் இந்தியா ஏன் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக்கொண்டது? பாக்கித்தானிற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டாமா என்று விசனப்படுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் ச்ச்சின் பைலட் பாக் வசமுள்ள காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என இந்திய நாடாளுமன்றம் 1994ல் நறைவேற்றிய தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளதை நோக்குங்கால் இந்திய கட்சிகள் உண்மையில் காஷ்மீர் பிரச்சினையை புரிந்து உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது. மக்களை , மக்களது உணர்வுகள், மற்றும் உரிமைகளை மதிக்காத எந்த தேசீயவாதமும் வென்றதில்லை. மத அடிப்படையிலான தேசீயவாதமும் வெல்ல முடியாது என்பதை பாக்கித்தான் நேற்றுவரை உணர்த்தி வந்தது. இன்று இந்தியாவில் மோடி அரசின் செயலும் நோக்கமும் மத அடிப்படை தேசீயவாதம் விரும்பத்தக்கதல்ல என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது! ச.அருணாசலம் https://aramonline.in/21516/india-pakistan-ceasefire-2025/
  20. கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் கதையும் நிலையும் May 11, 2025 — கருணாகரன் — கிளிநொச்சி நகரப் பேருந்து நிலையத்தின் அவலம் (சோதனைக் காலம்) இன்னும் முடியவில்லை. விக்கிரமாதித்தன் – வேதாளம் கதையைப்போல, தீர்வு காணவே முடியாத தொடர்கதையாக உள்ளது. காலத்துக்குக் காலம் அதிகாரத்தில் இருக்கும் தரப்பினர் அவரவர் நலனை முதன்மைப்படுத்தி, தம்பாட்டுக்கு எழுந்தமானமாக எடுத்த – எடுக்கின்ற – எடுத்து வருகின்ற தீர்மானங்களால்தான் இந்த அவலம் தொடருது. யாராவது ஒருவர் அல்லது ஒரு தரப்பினர் சரியான தீர்மானத்தை எடுத்திருந்தால் இந்த அவலமும் வீண் செலவீனமும் ஏற்பட்டிருக்காது. மக்களும் சிரமப்பட வேண்டிய நிலை வந்திருக்காது. பேருந்து நிலையமும் உருப்படியாக ஒரு இடத்தில் சரியாக அமைந்திருக்கும். கிளிநொச்சிப் பேருந்து நிலையம் இதுவரையில் (75 ஆண்டுகளுக்குள்) ஆறு இடங்களுக்கு இடம் மாறியுள்ளது. யுத்தமும் நகரத்தின் வளர்ச்சியும் இதற்கொரு காரணம் என்று யாரும் சொல்லக் கூடும். அதில் பாதியளவு உண்மையுண்டு. ஆனால், யுத்த முடிவுக்குப் பிறகாவது அது உருப்படியாக – சரியான ஒரு இடத்தில், சரியான முறையில் அமைந்திருக்க வேண்டுமல்லவா? யுத்தம் முடிந்த பிறகான 15 ஆண்டுகளில் மூன்று இடங்களுக்கு இடம் மாறியுள்ளது பேருந்து நிலையம். இறுதியாக நகரின் மத்தியிலுள்ள டிப்போச் சந்தியில் – A 9 வீதியோரமாக அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பயணிகள் தங்கி, இளைப்பாறிச் செல்வதற்காக ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் கட்டிடத்தில் தூர இடங்களுக்கான பயணிகள் நிற்க முடியாது. அவர்கள் மழையிலும் வெயிலிலும் நனைய வேண்டியதுதான். அப்படி மழையில் நனைந்து வெயிலிற் காய்ந்து கொண்டுதான் (மனதிற்குள் திட்டிக்கொண்டுதான்) ஒவ்வொரு பயணியும் பிரயாணிக்கிறார்கள். தொலைதூர பேருந்துகளின் நிறுத்தத்தைக் கவனத்திற்கொண்டு பேருந்து நிலையம் அமைக்கப்படாததே இந்தக் குறைபாட்டுக்குக் காரணமாகும். தொலைதூரப் பயணிகளுக்கான நிறுத்தத்தை நிர்மாணிக்கக் கூடிய இடமும் இருந்தது. எதிர்காலத்திலாவது அந்த இடத்தில் அதற்கான நிறுத்தத்தை (கட்டிடத்தை) நிர்மாணிக்கலாம் என்றால் அந்த இடத்தை அரசியல் செல்வாக்கோடு ஆக்கிரமித்துக் கடைத் தொகுதியை அமைத்து விட்டனர் ஒரு தொகுதியினர். இதற்கு அனுசரணை அளித்தது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா. ‘பேருந்து வளாகத்துக்குள் எதற்காகக் கடைத்தொகுதி? வணிக வளாகமா, பேருந்து நிலையமா? பேருந்து நிலையத்துக்கு எதிரே மிகப் பெரிய வணிகச் சந்தையும் கடைகளும் இருக்கும்போது எதற்காக பயணிகள் இடத்தில் கடைகள்? நகர அபிவிருத்திச் சபையின் Master Plan ஐ மீறி பேருந்து நிலையத்தைப் பாழ்படுத்த வேண்டாம். பிரதேச சபையின் அனுமதியில்லாமல் எப்படிக் கடைத்தொகுதியை அமைக்க முடியும்? பேருந்து நிலையத்துக்கான காணியைச் சட்ட விரோதமாக – முறைகேடாக தனியாருக்கு வழங்குவது தவறு…‘ எனப் பல காரணங்களைச் சுட்டிக்காட்டி – கேள்விகளை எழுப்பி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது கிளிநொச்சி – மக்கள் சிந்தனைக்களம். கிளிநொச்சி மாவட்டப் பிரஜைகள் குழுவும் இது தொடர்பாக மாவட்டச் செயலர், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரேதேச சபையினர், ஆளுநர் எனப் பல தரப்பிடமும் உரிய ஆதாரங்களோடு பேசியது. மாவட்டத்தின் வளர்ச்சியைக் கருதிச் சிந்திக்கும் தரப்பினர், ஊடகவியலாளர்கள் உட்படப் பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனாலும் அதெல்லாம் அரசியல் அதிகாரத்தின் முன்னே செல்லுபடியாகவில்லை. விளைவு, முதலில் தடுமாறிய ஆக்கிரமிப்பாளர்கள், இரவு பகலாக தாங்கள் கைப்பற்றிய அல்லது அவர்களுக்கு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலத்தில் கடைகளைக் கட்டி முடித்தார்கள். அந்தக் கடைத்தொகுதிக்கு அடிக்கல் நாட்டி, அவற்றைத் திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அப்பொழுது இதைக்குறித்து ஊடகத்தரப்பினர் கேள்வி எழுப்பியபோது, “இந்தக் கடைகள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்டன. (முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் இப்படித்தான் வாழ்வாதாரத்துக்காக மதுச்சாலைக்கான அனுமதியைப் பெற்றுக் கொடுத்த்தாகச் சொல்லியிருந்தார். எமது மக்களுக்கு வாய்த்த தலைவர்களைப் பார்த்தீர்களா? எப்படி இருக்கிறார்கள் என்று) ஆனால், இவற்றை நாம் நிரந்தரமாக வழங்கவில்லை. தற்காலிகமாகவே வழங்கியிருக்கிறோம்…” என்றார். “அப்படியென்றால் நிரந்தரமாகக் கடைக்கட்டிடங்களை அமைத்திருக்கிறார்களே! இது எதிர்காலத்தில் இந்தப் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும்போது இடைஞ்சலாக – நெருக்கடியைக் கொடுக்குமே…” என்று கேட்டபோது – “அதுதான் நாங்கள் இதை (கடைகளை) நிரந்தரமாகக் கொடுக்கவில்லையே. தற்காலிகமாகவே வழங்கியிருக்கிறோம்…” என்று முடித்துக் கொண்டார் அமைச்சர். ஆனால், பிரச்சினை அதோடு முடியவில்லை. அந்தக் கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு கூட முடியவில்லை. இப்பொழுது பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக தற்போதய வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டமொன்று 08.06.2025 அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் நடந்துள்ளது. அதற்கு முன்பு ஆளுநர் தலைமையிலான அணியினர் மத்திய பேருந்து நிலையத்தைப் பார்த்துள்ளனர். இதில் மாவட்டச் செயலர் சு. முரளிதரன், வட மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர், கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளர், தனியார் போக்குவரத்துக் கழகத்தினர், இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகள் நடக்கின்றன. அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமே இல்லை. முக்கியமாக இன்னும் பேருந்து நிலையம் – அதனுடைய காணி – யாருடைய பொறுப்பிற்கும் கையளிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டுமாக இருந்தால், அதை முறைப்படி உள்ளுராட்சி மன்றிடமே கொடுக்க வேண்டும். கரைச்சிப் பிரதேச சபை அதைப் பொறுப்பெடுக்க வேண்டும் என்று மாவட்டச் செயலர் குறிப்பிட்டார். பிரதேச சபை பொறுப்பெடுத்தாலும் அதனால் பேருந்து நிலையத்தைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கு உரிய நிதி இல்லை என்று செயலாளர் தெரிவித்தார். மட்டுமல்ல, ஏற்கனவே அங்கே அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதியும் அதற்கான கட்டிடங்களும் சபையின் அனுமதியைப் பெறாமலே அமைக்கப்பட்டுள்ளன. முறையற்ற முறையில் அமைக்கப்பட்டு நடாத்தப்படும் கடைகளில் தாம் இன்னும் வரி அறவீட்டைச் செய்யவில்லை. (அப்படியான கடைத்தொகுதியைத்தான் முன்னார் அமைச்சர் அடிக்கல் நாட்டித் திறந்து வைத்தார்) பேருந்து நிலையக் காணியை பிரதேச சபை பொறுப்பெடுத்தால், அங்கே உரிய முறையில் கடைத்தொகுதியை அமைத்து, அவற்றை வழங்கி, அதன் மூலம் திரட்டப்படும் வருவாயைக் கொண்டு ஏனைய விடயங்களைப் பார்க்கலாம் என்றார். தங்களுடைய அனுமதியையும் கடைத்தொகுதியை அமைத்தவர்கள் பெறவில்லை என்று வட மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மகேஸ்வரன் தெரிவித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், எந்தத் திட்டங்களையும் நீண்டகால நோக்கில் மேற்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இங்கும் (கிளிநொச்சியிலும்) ஏற்படக் கூடாது. கிளிநொச்சி நகரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதனைக் கருத்திற் கொண்டே எந்தத் திட்டங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். ஏனைய இடங்களில் உள்ள நடைமுறையைப் பின்பற்றி, பேருந்து நிலையத்தை பிரதேச சபையிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டு, பேருந்து நிலையத்தின் எல்லையோரத்தில் பிரதேசபையினால் கடைகள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். இவை தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றார். மாவட்டச் செயலர் முரளிதரன், ஆளுநர் வேதநாயகன் ஆகியோரின் இந்த முயற்சியும் தீர்மானங்களும் பாராட்டுக்குரியவை. மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைக்கு வர வேண்டும். அந்த நம்பிக்கை மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், எதிர்காலக் கிளிநொச்சி மாவட்டத்தின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு மத்திய பேருந்து நிலையத்துக்கான காணியை முடிந்தளவுக்கு வணிக வளாகம் ஆக்காமல் தவிர்ப்பது நல்லது. பிரதான வீதியில் 24 மணி நேரப்போக்குவரத்தைக் கொண்ட மத்திய பேருந்து நிலையம் என்ற அடிப்படையில், எப்போதும் பயணிகளுக்கு வசதியளிக்கக் கூடிய அவசியமான கடைகள், சிற்றுண்டிச் சாலை, மலசல கூடம் (கழிப்பறை) கட்டணக்குளியலறை போன்றவற்றை அமைப்பதே பொருத்தமானது. நெடுந்தொலைவுப் பேருந்துகளுக்கான தரிப்பிடமும் அதற்குரிய பயணிகளுக்கான தங்குமிடமும் உருவாக்கப்பட வேண்டும். இவைதான் முதற் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை. பேருந்து நிலையத்தைப் பராமரிக்கக் கூடிய வருவாயை பேருந்து நிலையத்துக்குள்ளேயே பிரதேச சபை தேடுவது பொருத்தமானதல்ல. சில திட்டங்கள் வேறான முறையில் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட மணல் போன்றவற்றினால் கிடைக்கின்ற வருமானத்தை பிரதேச சபை இதற்குப் பயன்படுத்தலாம். இது சேவை மையமாகும். குறிப்பாகப் பிரதேச சபை அல்லது நகரசபையினால் நிர்வகிக்கப்படும் நூலகம், பூங்கா போன்றவற்றுக்குச் செய்யும் செலவீனத்தைப்போலவே இதையும் கொள்ள வேண்டும். அதற்குள் கிடைக்கின்ற வருவாயைப் பெற்றுக் கொள்ளலாம். இதை விடுத்து, மறுபடியும் பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக்கினால் தற்போதைய யாழ்ப்பாண பேருந்து நிலையத்தைப்போலவே கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையமும் இருக்கும். மன்னார், வவுனியா, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, மதவாச்சி, அநுராதபுரம் போன்ற இடங்களில் உள்ள மத்திய பேருந்து நிலையங்களை முன்னுதாரணமாக்க் கொள்ள வேண்டும். பேருந்து நிலையங்களில் வணிக வளாகம் அமைவது சுகாதாரக் கேடு, சட்டவிரோதச் செயற்பாடு, இட நெருக்கடி, சன நெருக்கடி, இரைச்சல் போன்ற பல தீய விளைவுகளையும் அசௌகரியத்தையுமே உண்டாக்கும். பொதுப்போக்கு வரத்து என்பது தனியாக வாகனங்களை வைத்துக் கொள்ள முடியாத எளிய மக்களுடையது. அவர்களே எண்ணற்றவர்கள், ஆயிரக்கணக்கானோராகும். அவர்களுடைய நலனையும் உரிமையையும் பாதுகாப்பதே நிர்வாகத் தரப்பு, அதிகாரத் தரப்பு, அரசியலாளர்களுடையது. ஆகவே, ஏற்கனவே விட்ட தவறுகளை மீளவும் யாரும் விடக் கூடாது. கடந்த காலத் தவறுகளைத் தடுத்திருக்க வேண்டிய தரப்புகள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து அதிகார சபை போன்றவையாகும். சட்டவிரோக் கடைகளை அமைக்கும்போதே வழக்குத் தாக்கல் செய்திருக்க முடியும். தடை உத்தரவை வழங்கியிருக்கலாம். இடைநிறுத்தியிருக்க முடியும். அதையெல்லாம் செய்யத் தவறியதன் விளைவுகளே இப்போது அறுவடை செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே கிளிநொச்சி – கரடிப்போக்குச் சந்தியில் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட கடைகள் தவறானவை என்று கூறி நீதிமன்ற உத்தரவிற்கமைய உடைக்கப்பட்டுள்ளன. பூநகரி – வாடியடியில் ஒரு தொகுதி உடைத்துக் கற்குவியலாக்கப்பட்டுள்ளது. மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் சிவஞானம் சிறிதரனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதி அது என்று சொல்லப்படுகிறது. இத்தகைய தவறுகள் தொடரக் கூடாது. ஆளுநர் கூறியிருப்பதைப்போல, நீண்ட கால நோக்கோடு (அரசியல் அழுத்தங்களின்றி) சரியான வழிகாட்டலில் திட்டங்களுக்கான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். ஒருங்கிணைப்புக்குழுவில் இது தொடர்பாகச் சரியான தீர்மானம் எடுக்கப்படுவது அவசியமாகும். இனியாவது கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு நல்லதொரு விடிவு கிட்டட்டும். https://arangamnews.com/?p=12026
  21. தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவு இல்லை!; ஈ.பி.டி.பி. அதிரடி தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முயலும் தேசிய மக்கள் சக்திக்கோ, சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாத தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், காத்திரமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி சபைகளை எதிர்கொள்ளவே கட்சி தீர்மானித்து இருப்பதாகவும் தெரிவித்தார். யாழ் ஊடக மையத்தி்ல் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமக்கு வாக்களித்த அனைவருக்கும் முதலில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த தேர்தல் முடிவுகள் எம்மை பொறுத்தவரையில் ஏமாற்றங்களையோ ஆச்சரியங்களையோ ஏற்படுத்தவில்லை. காரணம், வித்தியாசமான அரசியல் சூழலிலேயே நாங்கள் இந்த தேர்தலை எதிர்கொண்டிருந்தோம். எந்த விதமான அரசியல் அதிகாரங்களும் அற்ற நிலையில், எம்மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களும், எமது செயலாளர் நாயகம் கைது செய்யப்படப் போகின்றார் என்ற ஆதாரமற்ற வதந்திகளும் ஒரு புறம் பரப்பப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் வழமைபோன்று எமக்கு எதிரான சேறடிப்புக்களும் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த தேர்தலை எதிர்கொண்டிருந்தோம். இந்நிலையில் எமக்கு 20,000 இற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது எமது மக்கள் எமது வேலைத்திட்டங்களையும் எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைகளையும் ஆதரிக்கின்றார்கள் என்ற செய்தியையே வெளிப்படுத்தி இருக்கின்றது. அந்தவகையில், இந்த தேர்தல் முடிவினை பின்னடைவிலும் ஒரு வெற்றியாகவே நாங்கள் பார்க்கின்றோம். இந்நிலையிலே உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் எமது நிலைப்பாடு பற்றிய கேள்வி பல்வேறு தளங்களில் தற்போது பேசு பொருளாக காணப்படுகின்றது. எம்மை பொறுத்த வரையில், தேசிய மக்கள் சக்தியும், அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தவிர்ந்த தரப்புக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க எமது ஒத்துழைப்பு அவசியம் எனக் கருதி எம்மை அணுகும் பட்சத்தில் அவை தொடர்பாக சாதகமாக பரீசிலிக்க தயாராக இருக்கின்றோம். அவ்வாறான தேவை ஏற்படாத பட்சத்தில், ஆரோக்கியமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி மன்றங்களில் தனித்துவமாக மக்கள் நலன்சார்ந்நு செயற்படுவதற்கு ஆர்வமாக இருக்கின்றோம். தேசிய மக்கள் சக்தி என்று சொல்லிக் கொள்ளுகின்ற ஜே.வி.பி. கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்க மறுப்பதற்கு இனவாதமோ, இன ரீதியான சிந்தைகைளோ காரணம் இல்லை என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எம்மை பொறுத்தவரையில், எமது மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை தீர்வுகாண்பதற்கும் தேசிய நல்லிணக்கம் அத்தியவசியமானது என்பதை உறுதியாக நம்புகின்றோம். அதற்காக கடந்த 35 வருடங்களாக தொடர்ச்சியாக உழைத்தும் வருகின்றோம். கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த தென்னிலங்கை அரசாங்கங்கள், எமது தேசிய நல்லிணக்க அணுகுமுறையின் அவசியத்தை புரிந்து கொண்டு சாதகமான தமது பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்தி வந்தன. ஆனால் தற்போதைய அரசாங்கத்தினரிடம் தேசிய நல்லிணக்கத்தின் அவசியம் பற்றிய புரிதல் கொஞ்சமும் இல்லை என்பதை அவர்களுடைய செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. அதுமாத்திரமன்றி, அனைவரும் இலங்கையர், எல்லோருக்கும் சமத்துவம் போன்ற வார்த்தைகள் மூலம், எமது தனித்துவங்களையும் அடையாளங்களையும் நீர்த்துப் போகச் செய்து, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம், தமிழர்கள் தேசிய இனம் போன்றவற்றுக்கான அடிப்படைகளை இல்லாமல் செய்வதற்கான ஆழமான நிகழ்ச்சி நிரலோடு செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்துகின்றது. இந்நிலையிலேயே ஜே.வி.பி. யினருக்கு ஆதரவளிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம். அதேபோன்று, வெளிப்படைத் தன்மையோடு நடைமுறைச் சாத்தியமான அரசியலை முன்னெடுக்கின்ற தனித்துவமான அரசியல் தரப்பான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம், சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாமல், நடைமுறைச் சாத்தியமற்ற வெறும் வீராப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்ற தமிழ் தேசிய முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் நடைமுறையில் சாத்தியமற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரைப் பொறுத்த வரையில் இப்போதுகூட கொள்கை ரீதியான உடன்பாடு கொள்கை ரீதியான கூட்டிணைவு என்று திரும்ப திரும்ப சொல்லி வருகின்றார்கள். அவர்களுடைய கொள்கை என்ன என்பது அவர்களுக்கே விளங்க வில்லை என்பதையே அவர்களின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக தூய நகரம் தூய்மையான நிர்வாகம் என்கிறார்கள். கடந்த மாகாண சபையிலே ஊழல் மோசடியில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர்களையும், கடந்த காலங்களில் நிதி நிறுவனம் நடாத்தி எமது மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் என்ற வலுவான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்களையும் இணைத்து வைத்துக் கொண்டு தூய்மையான நிர்வாகம் பற்றி பேசுகிறார்கள். ஒற்றையாட்சியையும் எக்கிய இராச்சியத்தினையும் நிராகரிக்கின்றோம் என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யாத கட்சிகளோடு ஒட்டவும் மாட்டோம் உறவாடவும் மாட்டோம் என்கிறார்கள். எக்கிய இராச்சியம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆதரவு கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை அரவணைத்து உறவாடிக் கொண்டு, குறித்த அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தனுடனும் செல்வம் அடைக்கலநாதனுடனும் டீல் பேசுகின்றனர். இன்னொமொரு வேடிக்கை என்னவென்றால், ஈ.பி.டி.பி. தமிழ் தேசிய பரப்பில் செயற்படாத கட்சியாம். எங்களோடு பேசுவது தங்களுடைய கொள்கைக்கு மாறான செயற்பாடாம். ஆனால்,ஈ.பி.ஆர்.எல்.எப். புளொட், ரெலோ, சமத்துவக் கட்சி உள்ளங்கிய ஜனநாயகக் தமிழ் தேசியக் கூட்டணியோடு பேசுவார்களாம். அவர்கள் தமிழ் தேசியப் பரப்பிலே செயற்படுகிறார்களாம் தமிழ் தேசியத்திற்கு புறம்பான தரப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அடையாளப்படுத்துகின்றவர்கள், 2015 ஆம் ஆண்டு வரையில் எமது கட்சியை வழிநடத்திய தலைவர்களுள் ஒருவரான தோழர் அசோக் என்று அறியப்பட்ட சந்திரகுமாருடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை அமைக்க டீல் பேசுகின்றனர். மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களோடு இணக்க அரசியலில் ஈடுபட்டமையினால் ஈ.பி.டிபி. ஒட்டுக் குழுவாம். தென்னிலங்கை அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்கின்ற கட்சி ஒட்டுக் குழு என்றால், டி.எஸ் சேனநாயக்கா காலத்திலேயே இணக்க அரசியல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தானே Most senior ஒட்டுக்குழு நீங்கள் தானே! இவ்வாறு தங்களுடைய செயலுக்கும் சொல்லுக்கும் சம்மந்தமில்லாமல் செயற்பட்டுக் கொண்டு, மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து சுயலாப அரசியல் செய்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் சாத்தியமற்றது என்ற அடிப்படையிலேயே எமது தீர்மானம் அமைந்திருக்கின்றது https://akkinikkunchu.com/?p=324543
  22. அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து Published By: Digital Desk 3 14 May, 2025 | 11:38 AM அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த முதலீடு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகள் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக செவ்வாய்க்கிழமை (13) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றப்பின் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்குக்கு பயணம் இதுவாகும். இந்த விஜயத்தில் டொனால்ட் ட்ரம்ப்புடன் இலான் மஸ்க், ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், பிளாக்ராக் தலைமை நிர்வாக அதிகாரி லாரி ஃபிங்க் மற்றும் என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட பல வணிகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவுக்கு சவுதி அரேபியாவை விட "உறுதியான நட்புறவு கொண்டோர்கள் வேறு யாரும் இல்லை". சிரியாவுக்கு எதிரான அனைத்து தடைகளும் நீக்கப்படும், தற்போது நாடு "சிறந்த வாய்ப்புடன்" முன்னேற வேண்டிய நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எண்ணெய் வளம் மிக்க பொருளாதாரத்தை அதன் செயற்கை நுண்ணறிவு திறன்களை அதிகரிப்பதன் மூலம் பன்முகப்படுத்த ஆர்வமுள்ள சவுதி அரேபியாவை உயர்மட்ட நிர்வாகிகள் சந்திக்கின்றனர். ஹுவாங் இந்த விஜயத்தின் போது Nvidia தனது 18,000க்கும் மேற்பட்ட சமீபத்திய AI சிப்களை சவுதி நிறுவனமான Humain-க்கு விற்பனை செய்யும் என்று அறிவித்தார். https://www.virakesari.lk/article/214669
  23. ஆனையிறவு உப்பள ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி போராட்டம்! 14 May, 2025 | 10:35 AM ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தற்போதுள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் எம்மை பழிவாங்குவது போல் செயற்படுகின்றனர். எமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை. எமக்கான மருத்துவ வசதிகள் உப்பளத்தில் இல்லை. குடிநீர் பிரச்சினை காணப்படுகிறது. குடிநீரை வெளியே உள்ள தாங்கியில் இருந்துதான் உள்ளே எடுத்து செல்ல வேண்டும். முற்பகல் 10 மணியானதும் நாங்கள் எடுத்துச் செல்லுகின்ற குடிநீரோ அல்லது தாங்கியில் உள்ள குடிநீரோ மிகவும் சூடாகி காணப்படும், ஆகையால் நாங்கள் அதனை குடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இந்த மாதம் தொடங்கி இதுவரை எமக்கு 4 நாட்களே வேலை வழங்கப்பட்டது, 10 நாட்கள் வேலை இல்லாமலே இருக்கின்றோம். இதைவிட இந்த மாதம் வேலை செய்யாத ஊழியர்கள் கூட காணப்படுகின்றனர். மனித வலு இருக்கும்போது இயந்திரவலுவை பயன்படுத்துகின்றனர். வேலை செய்யும் எமக்கு சீருடைகளோ, பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை. ஒரு ஊழியர் உப்பளத்தில் வேலை செய்யும்போது இறந்தால்கூட எமது பணத்தில் தான் அவரது சடலத்தை கொண்டு செல்ல வேண்டும், அவரது கண்ணீர் அஞ்சலி பத்திரிகைகள் கூட எமது பணத்தில் தான் வெளியிட வேண்டுமே தவிர நிறுவனம் எமக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளையும் வழங்காது. இந்த உப்பளத்தை திறந்து வைக்கும் போது 8ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு பொதி வழங்குவதாக அமைச்சர் கூறினார், ஆனால் எமக்கு பின்னர் வழங்கப்பட்டது 800 ரூபா பெறுமதியான உலருணவுப்பொதியே. அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே அளவான போனஸ் கொடுப்பனவே வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை காணப்படுகிறது. ஆனால் இங்கு எமது வரவினைப் பார்த்து, மிகவும் குறைந்த போனஸ் தொகையே கொடுப்பார்கள். வேலைக்கு வராதது எமது பிழை அல்ல. எமக்கு சுழற்சி முறையிலான வேலையையே வழங்குகின்றனர் ஆகையால் நாங்கள் எப்படி ஒழுங்காக வேலைக்கு வருவது? எமக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுவதில்லை. ஊழியர்களின் நலனுக்காக யாராவது குரல் கொடுத்தால் அவரை பிடித்து அடித்து வெளியே துரத்துங்கள் என கூறுவார்கள். இது அரச நிறுவனம் போல் இல்லாது முதலாளித்துவத்துடன் கூடிய தனியார் நிறுவனம் போலவே செயற்படுகிறது. ஒரு நாள் 5 ஊழியர்களின் உழைப்பு மட்டும் போதும் இங்கு வேலை செய்கின்ற அனைத்து ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை கொடுப்பதற்கு. அவ்வளவு இலாபம் ஈட்டும் உப்பளமாகவும், இலங்கையின் மிகவும் பெரிய உப்பளமாகவும் இந்த உப்பளம் காணப்படுகிறது. ஊழியர்களின் நலனுக்காக யாராவது அதிகாரி இங்கு குரல் கொடுத்தால் உடனே அவரை இடமாற்றம் செய்கின்றனர். பல வருடங்கள் இங்கு பணியாற்றியவர்களுக்குக் கூட மதிப்பதில்லை. இங்கு பணிபுரியும் முகாமையாளர் உள்ளிட்ட பலர் உப்பு தொடர்பான அடிப்படை அறிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஏற்கனவே இங்கு பணியாற்றியவர்களின் அனுபவங்களை கூட அவர்கள் கேட்பதில்லை. அப்படி கூறினாலும் அதனை தட்டிக்கழிக்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை ஹம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பொதியிட்ட பின்னர் மீண்டும் எமது பகுதிகளுக்கு கொண்டுவந்து விநியோகம் செய்கின்றனர். இதனால் இரண்டு போக்குவரத்து செலவு காரணமாக உப்பின் விலையை அதிகரித்து விற்பனை செய்கின்றனர். எமது பகுதியில் விளையும் உப்பினை இங்கேயே வைத்து பொதியிடக்கூடிய வசதி இருந்தும் ஏன் வெளி மாவட்டம் கொண்டு செல்ல வேண்டும்? மழை பெய்தால் எம்மை வேலைக்கு வரவேண்டாம் என கூறுகின்றனர். ஆனால் மழை பெய்தாலும் இங்கே செய்வதற்கு பல வேலைகள் உள்ளன. ஒரு தொழிற்சாலைக்கு இலாபம் வரும்போது நாங்கள் வேலை செய்கின்றோம், அதுபோல அந்த அந்த தொழிற்சாலைக்கு நஷ்டம் ஏற்படும்போதும் அந்த தொழிற்சாலை அதனை தாங்கிக்கொண்டு எமக்கு வேலையை வழங்கத் தான் வேண்டும். ஆனால் இங்கே அவ்வாறான நடைமுறைகள் காணப்படுவதில்லை. ரஜ உப்பு என்ற பெயரை மாற்றம் செய்து ஆனையிறவு உப்பு என்ற பெயரில் மாற்றியதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை பொதி செய்த உப்பு பைகளில் ரஜ உப்பு என்றே காணப்படுகிறது. ஆனையிறவு உப்பு என்ற பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. பெண் ஒருவர் தினமும் 65 அந்தர் (3250 கிலோ) உப்பு அள்ள வேண்டும் என கூறி அவர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். இலாபத்தை பகிர்ந்து அளிப்பதாக அமைச்சர் கூறியிருந்தார் ஆனால் அதனை பகிர்ந்து வழங்குவதற்கு யாரும் தயாராக இல்லை, அந்த இலாபத்தை எமக்கு பகிர்ந்தளிக்கின்றனர் இல்லை. இந்த கவனயீர்ப்பில் ஈடுபட்டபோது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் எங்களை கதைப்பதற்கு உள்ளே அழைத்தனர். இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட ஊழியர்களும் உள்ளே சென்றோம். ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. உள்ளே சென்று கலந்துரையாடியபோது அவர்கள் எங்களது பிரச்சினைகளை கருத்தில் கொள்ளவில்லை. நாங்கள் மண்வெட்டி பிடி திருடினோம், உப்பு திருடினோம் என்று பொய்யான குற்றச்சாட்டு கூறுகின்றார்களே தவிர எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது போல் தெரியவில்லை. இது பார்ப்பதற்கு வெளியே ஒரு தேசிய உப்பளமாக காணப்பட்டாலும் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே இதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/214661
  24. இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை- அலி சப்ரி Published By: Rajeeban 14 May, 2025 | 10:51 AM இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு, இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன். ஒரு விடயத்தை நான் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன், இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை.அந்த கூற்று ஆதாரமற்றது மாத்திரமல்ல மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எந்தவொருசர்வதேச நீதிமன்றமும் இலங்கையை இதுவரை இனப்படுகொலை குற்றவாளியாக கண்டறியவில்லை. இலங்கையில் நடந்தது துன்பகரமான ஆனால் கனடா உட்பட 30 க்கும் அதிகமான நாடுகளில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பினருடனான மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இராணுவநடவடிக்கை. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எந்த சமூகத்திற்கும் எதிரானது இல்லை. போரின் போது அப்பாவிகள் ஒவ்வொருவரினதும் உயிரிழப்பு மனவேதனையை ஏற்படுத்தினாலும்,மோதலை இனப்படுகொலை என சித்தரிப்பது உண்மையை சிதைப்பது மாத்திரமல்லாமல்,அவமதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு விடயம். கனடாவில் இ;டம்பெறும் இந்த செயற்பாடுகள்,நமது கள யதார்த்தங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. மேலும் வாக்குவங்கியை நோக்கமாக கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளினால் பழைய காயங்கள் மீண்டும் கிளறப்படலாம்.மேலும் ஒரு தேசமாக காயங்களை ஆற்றுவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம். https://www.virakesari.lk/article/214664

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.